அன்று ரெ.கா கேட்ட கேள்விக்கு இதில் பதில் உள்ளது. அதாவது பனிப்பாறைகள்
உருகுவதால் நீர்மட்டம் உயர்வது மட்டுமல்ல, பிரபஞ்ச வெளிக்கு திருப்பி
அனுப்பப்படும் சூரிய ஒளியும் குறைகிறது. அதை நிறை செய்ய இப்படி எல்லோரும்
வீட்டுக்கு வெள்ளையடிக்கலாம். பெரும்பாலான கிரேக்க வீடுகள் இப்படித்தான்
உள்ளன.
க.>
2009/8/29 Kannan Natarajan <thar...@gmail.com>:
சூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள்
Visit: http://ta.wikinews.org
----- Original Message -----
From: "Kannan Natarajan" <thar...@gmail.com>
| *வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்! *

இவர்கள் கொட்டும் கழிவுச்சாயம் தென்னையில் ஏறி இளனி கலர், கலராக வருவதாக
ஒருமுறை கேள்விப்பட்டேன். Sewagae Treatment, Offshore/Ocean Sewage
Dumping இவையெல்லாம் மிகப்பெரிய சூழல் பிரச்சனைகள். இது குறித்து
தொடர்ந்து எங்கள் ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. கைவசம் ஒரு scientific
publication போய்கொண்டு இருக்கிறது. பிலிப்பைன்ஸ்ஸில் நடத்திய அறிவியல்
பட்டறையில் பாசிக் ஆற்றின் மூலமாக கடலில் கலக்கும் வேதிமங்களை
மாணவர்களுக்கு சோதனைகள் மூலம் சுட்டிக்காட்டினோம்.
திருப்பூர் ஜவுளித்தொழில் ஒரு பேராசையுடன் இயங்கும் தொழில். காசு, காசு
என்று காசு வந்து கொட்டினாலும், சூழலைக் கெடுத்துவிட்டு அரிசிக்குப்பதில்
காசைத் தின்னமுடியாது! தமிழனின் பொதுவான சூழல் அறிவைச் சுட்டும் ஒரு
பழக்கத்தைச் சொல்லலாம். வீட்டில் சுத்தி பண்ணி விருந்துண்டுவிட்டு இலையை
வெளியே தூக்கி எறிவது! சூழல் என்பது வீட்டின் ஒரு நீட்சியே என்பதை யாரும்
யோசிப்பதில்லை.
தமிழகமெங்கும் கடலில் கலக்கும் முன் சாக்கடை சுத்திகரிப்பு கட்டாயம்
செய்யப்பட வேண்டும்.
க.>
2010/2/20 Kannan Natarajan <thar...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயோ! தமிழகத்தில் ஓசை என்பதற்கு இலக்கணமே கிடையாதே!
பெண் பெரியவள் ஆனால் ஸ்பீக்கர் போட்டு இரைச்சல்.
அப்பத்தா செத்துப்போனால் ஸ்பீக்கர் போட்டு ஒப்பாரி.
ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டா ஸ்பீக்கர் போட்டு .ஐயோ! அப்பா! என்று கூக்குரல்.
புதிய சினிமா என்றால், அந்தப் பாடல்களை ஒலிபரப்பி கூச்சல்
ஒரு விசேஷமும் இல்லையென்றால், சும்மா, பழைய வசனங்களைப் போட்டு லவுட் ஸ்பீக்கர்.
மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருமுறை சொன்ன ஜோக் நினைவிற்கு வருகிறது.
`ஏன் தமிழர்கள் இப்படிச் சத்தமாகப் பேசுகின்றனர்` (தமிழ்நாடு = அரவநாடு)?
ரொம்ப வேர்வையினால் `கப்பு`. கிட்ட வந்து பேசமுடியாது. அதனால் தூர நின்று
உரக்கப்பேச வேண்டியுள்ளது!
பின் அதுவே பழகி, எங்கும் சத்தம், அதிலும் சத்தம் என்று.....
வெளிநாட்டில் கார் ஹார்ன் கூட யாரும் அடிப்பதில்லை...ம்..ம்ம். நாய் கூட
குறைப்பதில்லை! ம்ம்ம்ம்
க.>
ஒலி மாசுவின் விஸ்வரூபம்!
மாசில் வீணையைப் போல் ஹரிகியின் மாசிலா எண்ணத்தால் மாசு படிந்த சொற்களைப்
பற்றி மாசிலா"மணி"யான தினமணிக்கு சேர்கிறதோ இல்லையோ குழுமத்தில் மாசித்
திங்கள் நாளொன்றில் சேர்ந்துள்ளது:-)
மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணற்ற உயிரினங்களுக்கும் உறைவிடமாக திகழ்வது
பவளப்பாறைகள் தான். கடலின் அழகுக்கும், பாதுகாப்புக்கும் இதன் பங்கு
அவசியம். பவளப்பாறைகளின் உயிர் பகுதியாக, "பாலிப்"கள் உள்ளன.
http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_33661615849.jpg
இவை, "கோரல்லைட்" எனப்படும், கடின பகுதியில் அமைந்துள்ளன. "பாலிப்"கள்,
ஒருவித கோழையை சுரப்பதன் மூலம், கடல் நீரிலுள்ள நுண்ணுயிரிகளை பிடித்து
உண்கின்றன.
பவளப்பாறையின் உயிர் பகுதியான இவற்றுக்கும், "ஜூசாந்தெல்லே" என்ற
நுண்ணுயிர் பாசிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு தான், பவளப்பாறைகள் அதிக
உற்பத்தி திறனுக்கு காரணமாகின்றன. பவளப்பாறைகள் இருக்கும் இடத்தில்,
"ஜூசாந்தெல்லே" நிச்சயம் இருக்கும். பூமத்திய ரேகைக்கு அருகில் மிதவெப்ப
மண்டல நாடுகளின் கடற்பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
மத்திய இந்திய பசிபிக், கரீபியன் பகுதிகளில், அதிக உயிர் இனங்களை
உள்ளடக்கிய பவளப்பாறைகளிலும் உள்ளன. "ஜூசாந்தெல்லே", இந்தியாவில், 2,375
ச.கி.மீ., இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில்,
1. மன்னார் வளைகுடா
2. பாக் ஜலசந்தி
அந்தமான் நிக்கோபார் , இலட்சத்தீவுகளில் அதிகம் காணப்படுகின்றன.
உணவு, மருந்துக்கு பயன்படும் மீன்கள், சிப்பிகள், சங்குகள்
போன்றவற்றிற்கு புகலிடமாக உள்ள பவளப்பாறைகளின் உற்பத்தி திறனுக்கு இவை
காரணமாக இருப்பதால், கடற்பகுதியில் இருக்க வேண்டியது கட்டாயம்.
முறையில்லாத மீன்பிடி, இழு வலை உபயோகம் போன்றவற்றால் அழிவையும் இவை
சந்திக்கின்றன.
பவளப்பாறையை அறிந்த நம்மவர்களுக்கு, இந்த உயிரினத்தை பற்றி
அறிந்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
நன்றி:- தினமலர்
--
மார்ச்27ம்
தேதி ஒரு மணி நேரம் விளக்கை அணைக்க ஏற்பாடு
Tuesday , 16th March 2010
08:29:56 AM
பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
இயற்கையை பேணிகாக்கும் சர்வதேச நிதி அமைப்பு, உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு, பெருநகரங்களில் மார்ச் கடைசி சனிக்கிழமை அன்று இரவு, ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கக்கோரி வருகிறது. இதன் மூலம் கணிசமான மின்சாரமும் சேமிக்கப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த நடைமுறை துவங்கியது. 2008ம் ஆண்டில் விளக்கு அணைக்கும் நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட, 35 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரம் நகரங்களில் விளக்கு அணைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிகழ்ச்சியின் மூலம், டில்லியில் மட்டும் 700 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. ஒரு மணி நேர விளக்கணைப்பு நிகழ்ச்சியில் டில்லியும், மும்பையும் நம்நாட்டில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆண்டு வரும் 27ம் தேதி நடக்கவுள்ள விளக்கு அணைப்பு நிகழ்ச்சிக்கு, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆதரவளித்துள்ளார்.
வரும் 27ம் தேதி, வீட்டில் உள்ளவர்கள் இரவு நேர உணவை மெழுகுவர்த்தியின் ஒளியில் சாப்பிடும் படியும், ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒரு மணி நேரத்துக்கு விளக்கை அணைக்கும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், பூமியை காக்கும் விளக்கணைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உள்ளார். வரும் 27ம் தேதி படப்பிடிப்பின் போது விளக்கணைக்க வற்புறுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தினரும் இதை வற்புறுத்துவார்கள் என, அபிஷேக் தெரிவித்துள்ளார்.
டில்லி, மும்பையைத் தொடர்ந்து சென்னை, ஆமதாபாத், புனே, ஐதராபாத், பெங்களூரு, கோல்கட்டா நகரங்களும் வரும் 27ம் தேதி விளக்கணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.
இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கவும்,
இழப்பீடுகளை நிர்ணயிக்கவும் பசுமை நீதிமன்றங்கள் அமையவுள்ளதாக மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் இரமேஷ் இரு தினங்களுக்கு முன்
அறிவித்துள்ளார்.
இத்தகைய பசுமை நீதிமன்றங்களை அமைப்பதில் இந்தியா முதல் நாடாக இருக்கும்
என்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முதல் முறையாக நீதிமன்றத் தீர்வு
கிடைக்கவுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டாலும், இத்தகைய பசுமை
நீதிமன்றங்கள் ஏற்கெனவே பிலிப்பைன்ஸ் நாட்டிலும் (2008) சீனாவிலும்
(2007) நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இந்தியாவில் இத்தனை காலமாகப்
பேசப்பட்டு வந்த நிலை மாறி இப்போது தான் அதற்கான வடிவம் காணப்பட்டுள்ளது.
அதுவும்கூட நடைமுறைக்கு எப்போது வரும் என்பதும் தெரியவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு அமைப்புகளை உருவாக்கவுள்ளது.
ஒன்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்தத் தீர்ப்பாயம், சுற்றுச்சூழல்
பாதிப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து இழப்பீட்டை எவ்வளவு வழங்க
வேண்டும், பாதிப்பை எப்படி போக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறும்.
இரண்டாவதாக அமைக்கப்படவிருப்பது தேசீய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்.
இந்த ஆணையம் ஏறக்குறைய ஒரு கண்காணிப்பு அமைப்பு. சுற்றுச்சூழல்
விதிமீறல்களை கண்காணிப்பதும், நடவடிக்கை எடுப்பதும், கொள்கையைத்
தீர்மானிப்பதும், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி
வழங்குவதும் இந்த ஆணையத்தின் வேலை.
இந்தத் தீர்ப்பாயத்தின் வரையறைக்குள் காற்று, நீர், மண், காடுகள்,
கனிமங்கள் அனைத்தையும் மனித உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வகை
செய்தல், அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனை தருதல் ஆகியவை
அடங்கும் என்றாலும், இது உண்மையாகவே இன்னொரு நீதிமன்றமாக இருக்குமா
என்பது சந்தேகமே!
காவிரி தீர்ப்பாயத்தைப் போலவே, இதுவும் ஒரு தீர்ப்பாயம் மட்டுமே. இந்த
தீர்ப்பாயத்துக்கு தண்டனையை பரிந்துரைக்க முடியுமே தவிர, சட்டப்படி
தண்டனையை நீதிமன்றம் தீர்ப்பளிப்பதைப்போல அளிக்க முடியாது என்பது
சட்டத்துறை வல்லுநர்களின் வாதம். இந்தத் தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற
நீதிபதிகளும் அரசினால் நியமிக்கப்படும் அங்கத்தினர் இருவரும் விசாரணை
நடத்துவார்கள். ஏறக்குறைய நுகர்வோர் மன்றம் போலவே இதுவும் அமையும்
என்பதுதான் சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தனியாகச் செயல்பட்ட ஃபாரஸ்ட் பெஞ்ச்
கலைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசு,
அப்போது சொன்ன காரணம்:-
காடுகள், சுற்றுச்சூழல் பிரச்னைகளில் நிபுணத்துவம் இல்லாதவர்கள்
அளிக்கும் தீர்ப்பு அல்லது மேற்கொள்ளும் முடிவுகளால் பிரச்னைகள் தான்
ஏற்படுகின்றன. மேலும், இந்த ஃபாரஸ்ட் பெஞ்ச் சொல்லும் தீர்ப்புகளை மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்புடையதாகக் கருதாமல், மேல்முறையீடு
செய்கிறது. மேலும், இந்த காடுகள் என்ற வரையறை நிர்ணயிப்பதில் மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சகம் சொல்லும் அளவுகோலும், நீதிமன்றத்தின் அளவுகோலும்
வேறாக இருக்கின்றன என்பதுபோன்ற பல காரணங்கள் அடுக்கப்பட்டன. இப்போது
மட்டும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்
கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுமா?
உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு ஃபாரஸ்ட் பெஞ்ச் இருந்தால் பிரச்னை
ஏற்படுகிறது என்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்,
தாங்கள் நியமிக்கும் நீதிபதிகள் மற்றும் அங்கத்தினர்களைக் கொண்ட
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்பதும் கைவிடுவதும் அமைச்சகத்திற்கு
பிரச்னைகளோ கேள்விகளோ ஏற்படுத்தாதது என்ற நல்லெண்ணத்தினால் இப்படியாக ஒரு
பசுமைத் தீர்ப்பாயம் ஏற்படுத்துகிறார்களா?
சீனாவில் பசுமை நீதிமன்றங்கள் ஏற்பட்டதன் மிக அடிப்படையான காரணமே
தொழிற்சாலை மாசுகளால் குடிநீர் ஆதாரங்கள் பாழ்பட்டது தான். அந்நாட்டின்
பல்வேறு மாகாணங்களிலும் இந்தப் பிரச்னை பெரிதானபோது தவிர்க்க முடியாமல்
இந்த நீதிமன்றங்களை சீனா ஏற்படுத்தியது. இந்த நீதிமன்றத்தின் வரையறை
சுற்றுச்சூழல்சார்ந்த குடிமையியல், குற்றவியல், நிர்வாகவியல் வழக்குகள்
அனைத்தையும் விசாரிக்க அதிகாரம் பெற்றுள்ளது. மேலும் இதில் யாரும்
பொதுநலன் வழக்குகள் தொடுக்கவும்கூட சீன அரசு விதிமுறைகளில்
சட்டத்திருத்தம் செய்திருக்கிறது என்றால், அந்த நீதிமன்றத்துக்கு சீனா
அளித்துள்ள முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
பிலிப்பைன்ஸில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நீதிமன்றத்தின் அடிப்படைக்
காரணமும் குடிநீர் மாசுபடுவதைத் தடுப்பது தான்.
இந்தியாவில் நீர் ஆதாரங்களுக்கும் நிலத்தடி நீருக்கும் நிகழ்த்தப்பட்டு
வரும் மிகப்பெரும் அநீதியைப்போல வேறு எந்த நாட்டிலும் நடக்காது. குடிநீர்
மாசுபாடு ஒன்றுக்காக மட்டுமே தனி நீதிமன்றம் அமைக்கும் அளவுக்கு
பிரச்னைகள் மலிந்து கிடக்கின்றன. வேலை எனது அடிப்படை உரிமை, கல்வி எனது
அடிப்படை உரிமை என்பதைப் போல குடிநீரும் காற்றும் எனது அடிப்படை உரிமை
என்று கோர வேண்டிய அவலம் அரங்கேறியிருக்கிறது.
இந்த நிலைமையிலும், நீதிமன்றம் என்ற போர்வையில், நீதிமன்றத்தின் கீழ்
செயல்படும் தனிப் பிரிவாக இல்லாமல், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்
செயல்படும் அமைப்பாக பசுமைத் தீர்ப்பாயம் அமையும் என்றால், அரசியல்
தலையீடுகளும், நாணல் தீர்ப்புகளும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
இத்தகைய வழக்குகளை இப்போதைய நீதித்துறையின் கீழ், தனி நீதிமன்றம்
அமைத்து, அவர்கள் விரும்பினால் சுற்றுச்சூழல் ஆர்வலர் அல்லது அறிவியல்
அறிஞர்களைக் கொண்டு ஒரு குழுவிடம் பிரச்னையை விவாதித்து பிறகு தீர்ப்பு
வழங்கும் முறையை ஏற்படுத்தலாம். சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்களை
கண்காணிக்க வனத்துறையும், மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு
வாரியமும் இருக்கும்போது, தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் என்பது
இன்னொரு அதிகார அடுக்காக அமையுமே தவிர, வேறு எதற்கும் பயன்படாது.
மின்சாரத் தடை என்பதே சென்னையில் கிடையாதுமின்சாரமே கிடையாதுபிறகு எதற்கு தடைதினம்தோறும் தீபாவளி போல் தினம்தோறும் மின்தடை என்று கொண்டாடலாம்அன்புடன்தமிழ்த்தேனீ
சொல்ல முடியாம, அணைக்கட்டுல தேக்கிவைக்க இயலாம திறந்துவிட்ட அந்தச்சமயம் உட்பட--தினோம் மூணுலேந்து நாலுமுறை கோயிந்தோ. ஒவ்வொரு முறையும் ஒண்ணுல இருந்து ரெண்டு வரைக்கும் கோயிந்தோ.
என்று ஒரு சொல் வழக்கு உண்டு
அதுதான் நினைவுக்கு வருகிறது
அடிக்கடி பெங்களூருக்கு விஜயம் செய்யும் நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக
கவனித்து வருகிறேன்
முன்பெல்லாம் ரெயில் பெங்களூர் உள்ளே நுழையும்போதே குளிர் ஆரம்பித்துவிடும்,
பசுமையான காட்சிகளும் தென்பட ஆரம்பித்துவிடும்
சாலைகள எல்லாம் பூங்கா, மலர்ச் செடிகள் என்று பசுமை போர்த்தியிருக்கும்
கார்டன் சிட்டி என்றழைக்கப்பட்ட அந்த பெங்களூரை இனி காணமுடியாது
இப்போது வரண்டு கிடக்கும் பெங்களூரூ
பசுமை இல்லாத ஊரிலே மழையே வராது,மின்சாரம் மட்டும் எப்படி வரும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
19-3-10 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
>
> To unsubscribe from this group, send email to
> mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words
> "REMOVE ME" as the subject.
>
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழ்வனைத் தூக்கி மணையில் உட்காரவை
என்று ஒரு சொல் வழக்கு உண்டு
அதுதான் நினைவுக்கு வருகிறது
இந்த இழை பெங்களூருக்கும் தொடர்புள்ளதுதான்
சென்னைக்கும் தொடர்புள்ளதுதான்
மக்களுக்கு நன்மை செய்யவேண்டிய ஆக்கத்திட்டங்கள் எவ்வளவோ இருக்க
தேவையில்லாத திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற ஏதோ செய்துகொண்டிருக்கிறார்களே
என்னும் ஆதங்கத்தில் தான் அப்படி எழுதினேன்
பின் குறிப்பு (இன்று (பராமரிப்புக்காக) என்னும் பெயரில் காலை முதல்
மாலை ஐந்து மணி வரை மின்சாரம் இல்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ
19-3-10 அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
Every thing needs to be started at a small & simple level.
We always chide any organisation for an innovative step.
Atleast, we can cultivate an attitude of appreciation for a start!
There is always a way....Our heart needs to open up.....
Any worthwhile task requires appreciation - which does not equate to
adulation.
We sometimes lack the attitude to acknowledge even small steps,but
crave for more big things...
அன்புடன்
பார்த்தசாரதி
நாளுக்குநாள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீருக்கான தேவைகளும்
அதன்மூலம் ஏற்படும் விளைவுகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
சரி, இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?
மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில், யானை வந்தது,
பயிர்களை நாசம் செய்தது, மனிதர்கள் விரட்டினர், அவர்களை யானையும்
விரட்டியது, சிறுத்தை வந்தது, அதை வனத்துறையினர் பிடித்தனர்;
மிருகங்களின் அட்டகாசம் மக்கள் அச்சம்! என்ற செய்தி வராத நாளே இல்லை என்ற
நிலைக்கு நாம் வாழும் இந்த மாநிலப்பகுதி வெகுவிரைவில் வந்து
சேர்ந்துவிட்டது.
முறைமையில் திரிந்ததன் விளைவு இது.
மலைக்காடுகளில் போதுமான நீர் வசதி இல்லாததாலும், உணவுத்தேவை
ஏற்படுவதாலும் மிருகங்கள் தங்களின் வாழிடம் விட்டு மனிதர்கள் வசிக்கும்
பகுதிக்கு வந்துவிடுகின்றன என்ற விளக்கம் சரியாக இருந்தாலும், ஏன் நீர்
வசதி இல்லை?
மிருகங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவதைத்
தடுக்க இயலுமா?
காடுகளில் மட்டுமல்ல, முற்றிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் தான்
நீர் குறித்தான பற்றாக்குறை அம்சங்கள் கணக்கிலடங்காமல் பெருகிவிட்டன.
சுற்றிலும் தண்ணீரைத் தடைசெய்து தன்பலம் காட்டும் மனிதாபிமானமில்லாத
மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புற
வாழ வேண்டிய வழிமுறைகள் நீர் மேலாண்மையில் முழுமையாகக்
கடைப்பிடிக்கப்படவில்லை.
நமக்கு அளிக்கப்பட்டுள்ள - நமக்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நீர்
ஆதாரங்களையும், அதன் பாரம்பரியக் கட்டமைப்புகளையும் சிதிலமடையாமல்
பாதுகாப்பதும், சிதிலமடைந்தவைகளைப் புனரமைப்பதுமான கடமை நமக்கும்
இருக்கிறது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்று.
இயற்கையான நீர்வழிப் பாதைகளின் பாதுகாப்புக்கு அரசும், சம்பந்தப்பட்ட
பகுதிகளின் மக்களும்தான் காவலாளிகள்.
நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று நன்னீர் பெறுவது.
மேலும் நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நாம் தரக்கூடிய வெகுமதி சரியான,
தேவையான அளவு நீர்கிடைக்கச் செய்வதாகும்.
இது தலைமுறைகளின் தவிர்க்கவியலாத கடமை.
எனவே நீர் நிர்வாகத்தில் சற்றும் பின்தங்கி விடாத கொள்கையுடையவர்களாக
நாம் இருக்க வேண்டும்.
இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இவ்விதமாக இருப்பதுதான் இன்றுள்ள நீர் பற்றாக்குறையால் ஏற்படும்
சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உழவுத்
தொழிலுக்கு இயற்கையான நீர்வளம் போதாது எனும் நிலையில், அரசர்களால்
செயற்கையான நீர்வள அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
வெள்ளச்சேதம் நேராதவாறும், வேளாண் தொழிலுக்கு ஏற்ப பாய்ச்சலுக்கு நீர்
ஓடுமாறும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆறுகளுக்குக் கரைகள் ஏற்படுத்தலும், நீரைத் தேக்க வேண்டிய இடத்தில் அணை
கட்டுவதும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன.
பேராற்றின் மூலம் கண்ணாறும், கண்ணாற்றில் இருந்து கால்வாயும், கால்வாயில்
இருந்து வாய்க்கால் வெட்டலும் நிகழ்ந்தன.
இவை செய்ய இயலாத இடங்களில் ஏரி, குளங்களும் அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன.
கண்ணாறுகளும், கால்வாய்களும் பெரும்பாலும் சோழநாட்டில் உருவாக்கப்பட்டன.
ஏரி குளங்கள் அதிகமாகப் பாண்டிய நாட்டில் வெட்டப்பட்டன.
இவ்விதமாக உருவாக்கப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தகுந்த பயனைத் தந்தன.
வேளாண்தொழில் பெருமை தரும் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை வரலாறு
நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாக இருக்கிறது.
ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் 3ல் ஒரு பாகம்தான்
தமிழகத்தில் வாழும் குடிமகனுக்குக் கிடைக்கிறது.
தற்போதுள்ள நீர்வளத்தைச் செம்மையாகக் கையாளவும், பருவமழை காலங்களில்
கிடைக்கும் நீரை உரியமுறையில் சேமிக்கவும் தகுந்த திட்டங்களையும்
நடைமுறைகளையும் வகுக்க வேண்டும்.
வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி
வருங்கால சமுதாயத்துக்குக் காத்துத் தர வேண்டும்.
ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக்
கூடிய தாய்மடிகள். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்கிற
எண்ணம் வெறும் எழுச்சி முழக்கமாக மட்டுமே பார்க்கப்படும் நிலை மாற
வேண்டும்.
வேதனையைத் தீர்க்கும் மருந்து அரசிடம் மட்டுமே இருக்கிறது என்பது
ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கும் அதில் பங்கிருக்கிறது.
குளங்களும், ஏரிகளும், ஊருணிகளும், கண்மாய்களும் தனிநபர்களின்
இலாபநோக்கத்துக்காக, மெகா விளம்பரங்கள் மூலம் விலைக்குப்
பிரித்தளிக்கப்படும் ரியல் எஸ்டேட்டுகளுக்காக அமைக்கப்பட்டவை அல்ல.
அரசுத் துறைகளின் அட்டகாசமான அலுவலகங்கள் எழுவதற்குத் திட்டமிட்டு
உருவாக்கப்பட்டவைகளும் அல்ல. வேளாண்பெருக்கத்துக்கும், உழுதுண்டு
வாழ்வோரை உய்விக்கவும், மக்களின் நலன்மீது கொண்டுள்ள மேன்மையான
அக்கறையின் வெளிப்பாடாகவும் அமைக்கப்பட்டவை. வெட்டப்பட்டவை.
ஆனால் நமது மாநிலத் தலைநகரம் சென்னையில் ஏரிகளைத் தூர்த்து மேடாக்கிக்
கட்டப்பட்ட நகரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இதுபோலவே வளம்பல தந்த ஏரிகளும், குளங்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன!
கட்டடக் காடுகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தின்
1. மொத்தஆற்றுப்படுகைகள் - 33
2. மொத்த நீர்ப்பாசனத் தேக்கங்கள் 52
3. மொத்த ஏரிகள் 39,000
இதில்,
4. வானம் பார்த்த ஏரிகள் 25,600
5. 18,26,906 கிணறுகளில் - 13 இலட்சத்துக்கு மேற்பட்ட கிணறுகள்
மின்மோட்டார் வசதி கொண்டவை.
மேற்கண்ட நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள் 95 விழுக்காட்டுக்கு மேல் பருவ
மழையை மட்டுமே நம்பி உள்ளன.
பருவமழையால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு சராசரியாக 2,400 கோடி கனமீட்டர்.
அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வரும் நீரின்
அளவு சுமராக 1,200 கோடி கனமீட்டராக இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம்
தெரிவிக்கிறது.
வாய்ப்புள்ள மொத்த நிலத்தடி நீர் 2,640 கோடி கனமீட்டர்.
இதில் 1,320 கோடி கனமீட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு அபாயகரமாகக் குறைந்து கொண்டே வருகிறது.
ஆறுகளிலும், நீர் வழிப்பாதைகளில் ஓடிவரும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும்,
நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும்; நிற்கும் தண்ணீரை பூமியின் உள்ளே
செலுத்த வேண்டும் என்கிற செயல்முறைகளால் மட்டுமே நீர் பற்றாக்குறை
அபாயத்தில் இருந்து மீளமுடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்
மேலாண்மை ஆர்வலர்கள் குரல் கொடுப்பது எவ்வளவு பொருள் பொதிந்தவையாக
இருக்கின்றன.
ஆற்றில் வருகிற நீர் மற்றும் குளம், குட்டைகள், ஏரிகள் போன்ற இன்னபிற
நீர் ஆதாரக் கட்டமைப்புகளின் மீது அவசியமான அவசரமான, அலட்சியமற்ற கவனம்
கொள்ள வேண்டிய காலமிது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள காட்டு வளங்களை அதிகரிக்கச் செய்யத்
தேவையான திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
அத்திட்டங்களில் அப்பகுதி மக்களின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட
வேண்டும்.தமிழகத்தின் நதிகள் அனைத்தும் மேற்கு மற்றும் கிழக்குத்
தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தே இருக்கின்றன.
நீர்வளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் காடுகளைப்
பாதுகாப்பது, காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது என்பது தான் தேவைக்கு ஏற்ப
நீர் பெறுவதற்கான ஒருவழியாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்த்துச்
செயல்படுவது நல்லது.
ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு
தன்மையுள்ளதாக உருவாக்குவது, அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு
பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது, அரசு நிலங்கள் மட்டுமல்ல, தனியார்
நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக்
கூடிய சூழலை ஏற்படுத்துவது, மேலும் புதிய புதிய நீர் சேகரிப்பு
அமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது
மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும்.
வீடுகள், கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று; ஆங்கே,
எடுப்பதூஉம் எல்லாம் மழை" (15)
எனும் திருக்குறளும்,
"அமுதூறு மாமழை நீரதனாலே அமுதூறும்"
எனப் பேசிய திருமந்திரமும் தொடங்கி வைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில்
பயணிப்போம்.
மழை நீர் சேகரிப்புச் செயல்பாடுகளில் இயன்ற பங்களிப்பை நல்குவது,
இருக்கின்ற நீர்வள ஆதாரங்களை அழியாமலும் மாசடையாமலும் தடுப்பது போன்ற
செயல்களை வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வது நமது நல்வாழ்வுக்கு
உத்தரவாதமளிக்கும்.
புதிய வாழ்க்கை முறை, பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமது
நோக்கமாக இருக்க வேண்டும்; அது அவசியமும் கூட. இது அரசுக்கும் புரியும்;
எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''
ம.தென்னரசு
பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.
வானம் பார்த்த ஊர்களான சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே நகரத்தார் காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான, கோட்டையூர், தேவகோட்டை, ராங்கியம், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல் மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர்.
வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர். எல்லா வீட்டிற்குமே (மாடமாளிகையாய் இருந்தாலும்) கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராக கூம்பு குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு கூடல் (கூடறு) வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது, இடையில் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை கூடல்வாய்க்கு கீழே பெரிய பித்தளை (அகழி) அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது.
இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள்,தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரை சேமித்துவைக்கும் தொலை நோக்கு அவர்களுக்கு இருந்துள்ளது.எப்படி என்றால் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த செம்புரான் எனப்படும் பாறைக்கற்கலால் கட்டப்பட்டுள்ள குளங்கள் அங்கு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் எங்கு தேங்கி ஓடினாலும் கடைசியில் இந்த குளத்தில் கலக்கும் விதமாக கால்வாய்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன. மொத்தத்தில் நகரத்தார்கள் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம்.
மீனா
ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு
தன்மையுள்ளதாக உருவாக்குவது, அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு
பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது, அரசு நிலங்கள் மட்டுமல்ல, தனியார் நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக் கூடிய சூழலை ஏற்படுத்துவது, மேலும் புதிய புதிய நீர் சேகரிப்புஅமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும்.வீடுகள், கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.
புதிய வாழ்க்கை முறை, பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமதுநோக்கமாக இருக்க வேண்டும்; அது அவசியமும் கூட. இது அரசுக்கும் புரியும்;எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''
ம.தென்னரசு
நன்றி:- தினமணி
உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற
உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித
இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளைப் பெயர்த்திடவும், நதிகளை
நகர்த்திடவும், உயிர்ச் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடையச்
செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது.
இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களைப்
பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாகப் பரப்பிக் கொண்டே உள்ளது.
இப்பூவுலகில் தாவரங்கள் இன்றேல் மனிதன் வாழ இயலாது.
பறவைகள் இன்றேல் மனிதன்
வாழ இயலாது.
விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது.
ஏன், நுண்ணுயிர்
வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது.
ஆனால், மனிதன் என்ற இனம்
இவ்வுலகத்தில் இல்லாவிட்டால் மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக வாழ முடியும் -
வெறும் வாழ்வு அல்ல, மிக மகிழ்வாக வாழ இயலும்.
எனவே, மனித இனம்
இவ்வுலகில் ஓர் இன்றியமையாத அங்கமன்று.
மனித இனம் இயற்கை என்ற சிலந்தி
வலையில் ஓர் இழை.
இவ்விழை, தனித்து இருக்க முடியாது.
பிரிந்தால் பஞ்சுபோல்
பறந்து விடும்.
எனவே தான், நமது வளமான வாழ்வு, மற்ற உயிர் வகைகளின்
நலமான வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்ப கூரறிவுடன்
தமிழகத்துக்குத் தகுந்த இயற்கை மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு
நிறைவேற்றினால், அனைத்து உயிர்களின் வாழ்வு வளம் பெருகும். பல் உயிர்
ஓம்பல் திட்டம் மலைகள் நலம், மக்களின் வளம் அனைத்து உயிர்வகைகளின்
மகிழ்வான வாழ்வுதான், மனித இனத்தின் நலமான,வளமான வாழ்வுக்கு ஆதாரம். எனவே,
பல்லுயிர்களும் பரவலாக வாழும் மலைப்பகுதிகள்,வனப்பகுதிகளிலே இவைகளின்
மகிழ்வான வாழ்வை உறுதி செய்திடும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
மகரந்தச்
சேர்க்கை, விதைகள் பரவுதல் போன்ற இயற்கைப் பணிகளை அனுதினமும் செய்து வரும்
பறவைகள், பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள், பறவைகள் போன்ற விதைபரப்பும்
உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும், தேவையான அளவுக்கு, விருப்பமான உணவு தரும்
மரவகைகளைக் கண்டறிய வேண்டும். கண்டறிந்து, தமிழக கிழக்குத் தொடர்ச்சிமலை,
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொழில்நுட்ப அறிவுடன் திட்டம் தீட்டி
வளர்க்க வேண்டும். இதனால் மலைகளின் நலம் பெருகும்; பல இலட்சக்கணக்கான இளம்
தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மழைநீரை உறிஞ்சி வைத்து, சுனை நீராக
மாற்றிடும் மலைகளின் மறைந்து போன மாபெரும் திறன் மீண்டும் மீண்டு வரும்.
இதனால் சமவெளிகளில் நீர்வள ஆதாரம் பெருகும். எனவே நீர் உயரும்.
மேலும்,
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியானது இளம் தாவரங்களின் இலைப்பசுமை, காற்றிலுள்ள
கரியமிலவாயுவை, தற்போதைவிட இருமடங்கு அதிக அளவில் கிரகித்து,
தன்னகப்படுத்தும், அதிக அளவு பிராணவாயுவை வெளிவிட்டு, உலகம் வெப்பமாவதைக்
குறைத்திடும்.
அன்றாடம் அதிகரித்து வரும் பொருளாதார, கலாசார, தொழில்
வளர்ச்சியால் இணைந்து வளர்ந்து, விசுவரூபம் எடுத்துவரும் இயற்கைப்
பாதிப்பின், தெளிவான வெளிப்பாடு தான் உலகம் வெப்பமயமாதல் ஆகும்.
கடந்த
10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் உலகின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே
வருகிறது. இதனால் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளும், இமயமலை போன்ற
நெடிதுயர்ந்த மலைப்பகுதியில் அடர்ந்து, படர்ந்து படிந்துள்ள
பனிக்கட்டிகளும், மிக வேகமாக உருகிக் கரைந்து குறைந்து வருவது
கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகளில்
பெருமளவு கடல்கொள்ளும் என உலக அறிவியல் வல்லுநர்கள் அனுதினமும்
எச்சரித்துக் கொண்டே உள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைப்பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்கள், விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். தமிழகத்தில் உள்ள சுமார் 6.2 கோடி மக்கள்தொகையில் 2.9 கோடி மக்கள் 13 மாவட்டங்களின் கடற்கரைப் பகுதியில் வாழ்கிறார்கள்.
இந்தக் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 810 பேர் வாழ்கிறார்கள். இது தமிழகத்தின் சராசரி மக்கள்தொகையான 512ஐ காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். நாகை, கடலூர் மாவட்டங்கள் மிக அதிக சேதத்துக்கு உள்ளாகலாம்.
நாகை மாவட்டத்தில்
சுமார் 56 சதவீதம் பரப்பு கடல்மட்டத்துக்குத் தாழ்வான உயரத்தில் உள்ளது
குறிப்பிடத்தக்கது. அதுதவிர, தமிழகத்தில் மாறிவரும் பருவமழை, குறைந்த
மழைநாள்களில் நிறைந்த மழை பொழிந்திடும் பாதகத்தை ஏற்படுத்தும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது. வறட்சி அதிகரித்து, விளைநிலங்கள் பாலைநிலங்களாக
வருங்காலங்களில் மாறிவிடும் அபாயமும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்களின் மகசூல் குறைவதுடன் நோய் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும்,
அவைகளால் சேதாரமும் அதிகரிக்கும்.
இக்குறைகள் அனைத்தையும் மிக விரைவில்
கட்டுப்படுத்த, காற்றில் உள்ள கரியமிலவாயுவின் அடர்த்தியை இனியேனும்
அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்தவல்ல ஆக்கபூர்வமான திட்டங்கள்
செயலாக்கப்பட வேண்டும்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் ஒரு சராசரி
மனிதன் 14 டன் கரியமிலவாயுவை வான்வெளியில் பரப்பும் அளவுக்கு தனது
நாகரிக, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறான். இந்தியாவில்
சராசரி இரண்டு டன் கரியமிலவாயு மட்டுமே ஒரு சராசரி மனிதன் பயன்பாட்டினால்
வெளிப்படுகிறது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து
அதிகரிக்க தேவைப்படும் எரிசக்தி, மின்சக்திக்காக நிலக்கரி, பெட்ரோல்,
டீசல் போன்றவைகள் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படும் கட்டாயத்தால்,
அதிக அளவு கரியமிலவாயு வெளிப்படுத்தலை குறைக்க இயலாது.
ஆனால், இயற்கை
வளங்களான தாவரங்களைக் கொண்டு தமிழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்த அதிக
அளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறி வரும் பருவமழையையும், தொடர்ந்து
வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளைத் தாங்கி, சாதனை புரிய வல்ல
தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே.
வறட்சியைத் தாங்கி,
மிகவேகமாக வளர்ந்து அதிக அளவு மகசூல் வழங்கி, தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மூலப்
பொருளாகவும் உள்ளவை அவையே, மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும்
சாதனமாகவும், விவசாயிகளுக்கு அதிக லாபம் தர சாதகமான பல இன, இந்நாட்டு,
வெளிநாட்டு மரங்கள் தமிழகத்தின் வனத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
இவைகளைப்
பெருமளவில் வளர்த்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒவ்வொரு துளி மண்ணையும்
ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்து மாபெரும் சத்தியாக மாற்றலாம்.
அதைத்
தமிழக மக்களின் வளமான, நலமான வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும்
அமைத்திடலாம்.
இத்திட்டங்கள் பொருளாதார ரீதியில் வளமானதாகவும்,
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டுக்கான
மந்திரமாகவும் தமிழகத்தில் பரிமளிக்க வல்லவை.
தமிழக மக்களின்,
குறிப்பாக கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வின் தரத்தையும்,
வளத்தையும் உயர்த்த வல்ல வரம் தரும் மரம் நடும் திட்டத்துடன், நலம்
காத்திடும் நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்பூவுலகம்
நமது மூதாதையரிடமிருந்து பெற்ற சொத்து என்று கருதாமல், நமது
பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன் என்று கருதி, பொறுப்புடன், முதலுடன்
வட்டியையும் சேர்த்து, வளமிக்கதாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இயற்கையே
நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
நமது வருங்காலச் சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான, வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.
கட்டுரையாளர்:- கு. குமாரவேலு
முன்னாள் வனத்துறைத் தலைவர்
உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து வைக்குமாறு தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை - எவர்வின் பள்ளியில் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உலக வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடைபெறும் நிகழ்ச்சி. இங்கு ஆயிரம் மாணவர்களுக்கு மேல் கலந்துக் கொண்டாலும் கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு இருக்கின்றீர்கள். உங்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நீங்கள் சமுதாயத்திற்கும் உங்களுடைய பெற்றோர்களுக்கும் அதனை வலியுறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நாம் வாழ்கின்ற உலகம் சிறிது சிறிதாக வெப்பம் அடைந்து வருகிறது. நாம் பயன்படுத்துகிற வீட்டு மின் விளக்குகள், அதாவது, குண்டு பல்புகள் என்று சொல்லப்படுகிற டங்ஸ்டன் பயன்பாடும், இந்த வெப்பத்தை அதிகரிக்கிறது என்று தெரியவருகிறது. அதற்காகத்தான் எக்ஸ்னோரா போன்ற அமைப்புகள் இதுபோன்ற விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகின்றன.
மாநில அரசும், மத்திய அரசும் மக்களுக்கு தேவையான பலத் திட்டங்களை செயல்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கினாலும், மக்களின் ஈடுபாடு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றியடையாது. உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் மின்விளக்கு உட்பட அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி பாராட்டக் கூடியது. இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(

2010/8/1 வினோத்-VINOTH <vino...@gmail.com>பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(
நாம தான் ஆற்காட்டார் புண்ணியத்தில் தினமும் ஆறுமணிநேரம் பூமிதினம் கொண்டாடிகிட்டு இருக்கோமே?இந்த பத்து நிமிசம் எந்த மூலைக்கு...அடிச்சு ஆடுங்க ஆற்காட்டார் ஐயா..:-)
உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரவு 10 மணிக்கு 10 நிமிடங்கள் மின்விளக்கு உட்பட அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி பாராட்டக் கூடியது. இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.





இப்படியானும் மக்களுக்கு உதவலாமேனு நினைச்சிருப்பாங்க. 2010/8/1 செல்வன் <hol...@gmail.com>2010/8/1 வினோத்-VINOTH <vino...@gmail.com>பேசும் போதே இதையெல்லாம் கேட்க யாருக்கும் துணிச்சல் வரலியே... :(
நான் எதுவும் பேசலை. பேசலை.. :)))
--
--
இந்தியா போன்று கனிம, பிற இயற்கை வளங்களற்ற கொரியா இன்று பசுமை சக்தி
துறையில் முன்னோடியாக உள்ளது. அணுசக்தி அமைப்பை மத்திய கிழக்கில்
நிருவுவதில் முன்னோடியாக உள்ளது. தமிழகம் தடபுட வென்று அடிப்படை வசதிகள்
இல்லாமல் வளர்ந்துவிட்டது. சென்னையில் மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யு ஓடி
என்ன பயன்? ரோடு சரியில்லை, சாலை விதிகள் பராமரிக்கப்படுவதில்லை,
நடமாடும் மக்களுக்கு சரியான நடைபாதை வசதி இல்லை. பணம் எக்கச்சக்கமாகப்
புழங்குகிறது. எல்லோரும் கோடியில் பேசுகின்றனர்!! ஆனால் மின்சாரம்
முறையாய் வருவதில்லை.
உடனே சீர் செய்ய வேண்டியவை என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கு!
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/8/3 D Bala sundaram <balasun...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/8/3 செல்வன் <hol...@gmail.com>:
The Huffington Post
AUGUST 8, 2010
This is the print preview: Back to normal view »
Greenland Iceberg Four Times Bigger Than Manhattan Breaks Off Glacier
| 08/ 6/10 04:33 PM |
WASHINGTON — A giant ice island has broken off the Petermann Glacier
in northern Greenland.
A University of Delaware researcher says the floating ice sheet covers
100 square miles – more than four times the size of New York's
Manhattan Island.
Andreas Muenchow, who is studying the Nares Strait between Greenland
and Canada, said the ice sheet broke off early Thursday. He says the
new ice island was discovered by Trudy Wohlleben of the Canadian Ice
Service.
Not since 1962 has such a large chunk of ice calved in the Arctic, but
researchers have noticed cracks in recent months in the floating
tongue of the glacier.
2010/8/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
இத்தகைய சூழ்நிலை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்று
குறிப்பிட்டுள்ளனர்.
பூமியில் உள்ள வளங்களை மிகவும் அதிக அளவில் மனிதர்கள் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளனர் என்று வாழும் பூமி குறித்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை வளங்களின் நுகர்வு இரண்டு மடங்கு
அதிகரித்துள்ளது.
இதனால் பூமியின் வளம் பாதியாகக் குறைந்துவிட்டது.
தற்போதைய நிலை தொடருமானால் 2030ம் ஆண்டிற்குள் மேலும் ஒரு பூமி
மனிதனுக்குத் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வெப்ப மண்டல நாடுகளில் வன விலங்குகளின் வாழ்க்கைச் சூழல்
கேள்விக்குறியாகியுள்ளது.
இவற்றின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 60 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
புவியில் உள்ள வளங்களில் மிக அதிகமான அளவில் பிரிட்டன் மக்கள்
பயன்படுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல அனைவரும்
பயன்படுத்தத் தொடங்கினால் புவியில் உள்ள மக்கள் தொகைக்கு மேலும் ஒரு பூமி
தேவைப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
புவியில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் அளவு மற்றும் கரியமில வாயு
வெளியிடும் அளவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து பார்க்கும்போது பிரிட்டன்
31வது இடத்தில் உள்ளது.
பறவைகள் சரணாலயங்களாக உள்ள பல கிராமியப்பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திவரும்
- வெடியில்லா தீபாவளியை நகரப் பகுதிகளிலும் செயல்படுத்துவோம்;
- அதிர்வெடியால் ஏற்படும் குப்பைகளைத் தவிர்ப்போம்;
- உடல் மற்றும் மனநலனைப் பேணிக்காப்பதோடு பறவைகளையும், விலங்குகளையும் தீபாவளியன்று மகிழ்விப்போம்.
Rude(i)-culous idea:-)
who is going to follow such ridiculous ideas?
The author has campaigned for a clean & safe environ,which is the need
all around.
Alternative thoughts need to be listened to rather than being nipped
in the bud.
US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்
கூடாது.
125 டெசிபல் அல்லது 145 டெசிபல் (உச்ச அளவு) அளவுக்கு மேல் ஓசை எழுப்பும்
வெடிகளைத் தயாரிப்பது, விற்பது மற்றும் வெடிப்பது ஆகியவற்றுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பைத் தவிர்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை
பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
பொது இடங்களில் ஒலிபெருக்கி குழாய்கள் மூலம் விளம்பரப்படுத்தும் சப்தம்
10 டி.பி.ஏ-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள்ளாக எந்தவித சப்தம்
ஏற்படுத்தும் கொட்டு மேளங்களையோ, வேறு ஒலிபெருக்கி விளம்பரங்களையோ (அவசர
காலங்கள் தவிர) பயன்படுத்தக் கூடாது.
போக்குவரத்து நெரிசலான சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும்
நீதிமன்றங்கள் போன்ற அமைதிப் பகுதிகளில் வெடிக்கக் கூடாது.
திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாகப் பட்டாசுகளை
வெடிக்கலாம்.
வெடிகளை வெடிக்கும்போது காலணிகளை அணிந்துகொண்டு வெடிப்பது நல்லது.
தீக்காயங்கள் ஏற்படும்போது அதிகமான தண்ணீரை காயத்தின் மேல் ஊற்ற
வேண்டும்.
கண்ணில் ஏற்படும் தீக்காயங்களை அதிக தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்குக்
குறையாமல் கண்ணைக் கழுவ வேண்டும். பின்பு மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டும்.
குழந்தைகளின் சட்டைப் பையில் வெடிகளை வைக்க அனுமதிக்ககக் கூடாது.
பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத்
தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பட்டாசுகளுக்கு செலவிடும் பணத்தை ஏழைகளுக்குப் பாடப் புத்தகங்கள், ஆடைகள்
வாங்கிக் கொடுத்தால் நல்ல பலனைத் தரும்.
பட்டாசுகளுக்கு செலவிடும் பணத்தை ஏழைகளுக்குப் பாடப் புத்தகங்கள், ஆடைகள்
வாங்கிக் கொடுத்தால் நல்ல பலனைத் தரும்.
The author was'nt campaigning against celebrating Deepavali but to
avoid some fire-crackers that make noises more then the required
normal decibels:-)
புதிதாக ஏதாவது சொல்லு(எழுது)ங்கள் செல்வன் அவர்களே. மரம் வெட்டுவதைப்
பற்றி முன்பொரு முறை கூறியிருந்தீர்கள்:-)
மரத்திற்கு இருக்கும் பரிவை சற்று விலங்கினித்திடமும் காட்டலாமன்றோ:-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
We always assume & blame others:-)
> This is what he said வெடியில்லா தீபாவளியை நகரப் பகுதிகளிலும்
> செயல்படுத்துவோம்;
Certainly there is a difference between fire-crackers, பூச்சட்டி,
கம்பி மத்தாப்பு, சாட்டை, தரைச்சக்கரம்:-)
> Those were directed against the author of the article. Not you.
Any article needs to be discussed in two angles rather than by
statements.
I'm aware that your comments were directed against the author,but in
an educated group like MinThamizh - it would be worthwhile to analyse
the pro's & cons rather than join a chorus of either supporting or
admonishing an issue:-)
Certainly there is a difference between fire-crackers, பூச்சட்டி,
கம்பி மத்தாப்பு, சாட்டை, தரைச்சக்கரம்:-)
The sound of cap, oosi pattaasu do not cross the normal decibels
barrier like the major fire-crackers like 1000 vala.
அந்நிலை மாறிவருகிறது:-)
> உண்மையான விலங்கின அன்பு.
என்னவென்றும், எப்படியென்றும் விளக்கமளித்தால் "சர்வதேச உயிர்ப்பன்மம்
அப்படியா! அப்பண்ணைகள் செத்துபிழைப்பற்கு பறவைக் காய்ச்சல் (Avian
Influenza - Bird flu)) மற்றும் slack export demand என்று பல காரணிகள்
உள்ளன. புரட்டாசித் திங்கள் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம், மார்கழி
எதில் சேர்ப்பது? செல்வனின் கோழிப்பண்ணையிலா:-)
> இதனால் இயற்கையாக ஒரு கண்ட்ரோல் உருவாகிவிடுகிறது
செயற்கையாக நாம் இயற்கையை குறைகூறுவதில் நம்மை மிஞ்சியவர்கள் எவர்
உள்ளனர்:-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
he recent news item posted from Dinamani mentions the (125 டெசிபல்
அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிப்பதோ,
விற்கவோ கூடாது) the cut off limits of fire-crackers.
The author has provided the basics of decibel:-)
The recent news item posted from Dinamani mentions the (125 டெசிபல்
அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசுகளை தயாரிப்பதோ,
விற்கவோ கூடாது) the cut off limits of fire-crackers.
> If high decibel is illegal then they would not sell it.
That awareness is now being established:-)
அது சரி, கோழிப்பண்ணையாளர்கள் ஐயப்பன் விரதத்தால் தங்கள் முட்டை மற்றும்
கோழி விற்பனை குறைந்ததாக தெரிவிக்கும் செய்திகள் எங்குள்ளன?
தெரிவித்தால் நலம் பயக்கும்:-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Its like buying illegal or counterfeit products. Would you do that if
you are in a foreign country?
Well, its after all India is'nt it:-)
Who cares attitude has sunk deeply even to ask the question if sold -
then its legal:-(
அது சரி, கோழிப்பண்ணையாளர்கள் ஐயப்பன் விரதத்தால் தங்கள் முட்டை மற்றும்
கோழி விற்பனை குறைந்ததாக தெரிவிக்கும் செய்திகள் எங்குள்ளன?
தெரிவித்தால் நலம் பயக்கும்:-)
Its like buying illegal or counterfeit products. Would you do that if
you are in a foreign country?
Well, its after all India is'nt it:-)
Who cares attitude has sunk deeply even to ask the question if sold -
then its legal:-(
சான்று கிடைப்பது கடினமன்றோ:-)
நாம் இருப்பதோ 2010 - நீங்கள் எடுத்துக்காட்டிவுள்ளது 2005ஆம்
ஆண்டறிக்கை.
அண்மைக்கால ஆண்டறிக்கை ஏதாவது இருப்பின் நம் உரையாடலுக்கு
சாலப்பொருந்தும்:-)
ஆக, கோழிப்பண்ணையாளர்கள் "ஐயப்பன் விரத"த்தால் தங்கள் முட்டை மற்றும்
கோழி விற்பனை குறைந்ததாக தெரிவிக்கும் செய்தியை உங்களால் காட்ட
முடியவில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Most likely, the wrappings might denote - if not to check with the
respective shops.