சிறுதெய்வ வழிபாடு: மாடன் சாமி

297 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 29, 2018, 9:59:27 AM7/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தமிழ்நாட்டில் பேய்த் தெய்வ வழிபாடு புகழ்பெற்றது. சங்ககாலத்தில் அணங்கு என்ற சொல்லால் குறிக்கப்படும் வழிபாடு. இன்று ஹார்வர்ட் பல்கலையில் தமிழ்ப் பீடம் அமைந்துவிட்டது என தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். 1960, 70களில் சங்க இலக்கியம் கூறும் சமயம், சமூக நிலை பற்றி ஹார்வர்டிலே விளக்கமாக ஆராய்ந்துள்ளனர். கேரளமும் தமிழ்நாடும் சேர்ந்த நிலம் பண்டைய தமிழகம் ஆகும். ஹிந்து சமய வளர்ச்சியால் பல சிறுதெய்வங்கள் மேல்நிலையாக்கம் என்ற தன்மையை அடைந்துவருகின்றன. Sanskritization, Upward mobility போன்றன தெளிவாக கேரளாவின் குட்டிச்சாத்தன் வழிபாடு (குறுப்புகள் பூசை), மாடன் சாமி வழிபாடு (தெற்குத் தமிழ்நாட்டில்) காணலாம். காவல் தெய்வம், மயானக் காவல் போன்றன மறைந்துவருகின்றன. மேனிலையான கதைகள் இந்த அணங்கு வழிபாட்டுக்கு ஏற்பட்டுவருவதும் பார்க்கலாம். இவர்றின் பழைய நிலைமை அறிய, திராவிட மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம் எழுதிய ராபர்ட் கால்ட்வெல் நூல்கள், ... போன்றன உதவும். அணங்கு வழிபாடுகளை விடுத்து பெருந்தெய்வமாகிய கிருஷ்ணன்/விஷ்ணு வழிபாட்டுக்கு பெருங்கோயில் சமயங்களுக்கு வாருங்கள் என்று ப்ரபந்ந ஜநகூடஸ்தர் என்னும் நம்மாழ்வார் அறைகூவல் விடுக்கும் அரிய பத்துப் பாசுரங்கள் உள்ளன.

தெற்குத் தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் உருவாகிவரும் சிறுதெய்வ வழிபாட்டைப் பார்ப்போம்.

2018-07-28 23:03 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
//மாடு +சாமி =மாட்டுச்சாமி என்று தான் புணரும்.
மாடம்+சாமி  தான் மாடசாமி ஆகும்.//

மாடன் என்றொருவனுக்கு நடுகல் எடுத்து வணங்கினால்,
மாடன்+சாமி=மாடசாமி (மாடன் ஆகிய சாமி, மாடன் என்னும் சாமி)
என்பதற்கு புணர்ச்சியில் இடம் இல்லையா?
சுந்தரம்.



வேடன் + சாமி = வேடசாமி கோவில் பல ஊர்களில் உள்ளது.
அதேபோல, மாடன் + சாமி = மாடசாமி.

சிறுதெய்வ வழிபாட்டில் அண்மைக் கால வளர்ச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களில்
இந்த மாடன், மாடசாமி வழிபாடு.

இதற்கும், கர்நாடகாவிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
அண்மைக்கால சிறு தெய்வம் இந்த மாடன் வழிபாடு.
தமிழ்நாட்டிலேயே தெற்கேதான். வட தமிழ்நாட்டிலோ, அதற்கும் வட மாநிலங்களிலோ இல்லை.

--------------------

பகவதியின் காவலனாக மாடன் சாமி.  
மாடன் சாமி என்பது மாட்டின் தலையைப் பொருத்தப்பட்டார் என்ற கதையினால் வரும் பெயர்.
மாடசாமி - பெயர்க்காரணம், புராணங்கள், வழிபாடு பற்றியெல்லாம் விரிவாக அறிய, முனைவர் பட்ட ஆய்வேடு:

-----------



திகிலூட்டும் சுடலை மாடசாமி வழிபாடு

மற்ற மாவட்டங்களில் இருப்பதை விட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் சுடலைமாட சாமி வழிபாடு அதிக அளவில் உள்ளது.


சுடலைமாட சாமி மீது பயம் கலந்த பக்தி இப்பகுதி மக்களுக்கு அதிகம். தவறாக நடந்து கொண்டால் சுடலை மாடசாமி தண்டிப்பார் என இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை அதிகம் உண்டு.

பார்ப்பதற்க்கு பயப்படும் தோற்றத்தில் இருப்பதால், சுடலை மாடசாமி கதைகளை சொல்லி சிறு குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பவர்கள் கிராமப்பகுதிகளில் அதிகம். 

சுடலை மாடனுக்கு உள்ள பல்வேறு பெயர்கள் இசக்கி மடன், இருளப்பசாமி, பூல் மாடன், சுடலை மாடன் சாமீ, சுடலை ஈஸ்வரன், மாடசாமி, மாடன், மகாராஜா, சுடலேஷ்வரன், சுடலையாண்டி, சுடலை முத்து, மாசான முத்து, முண்டன் சாமி, மயாண்டீஸ்வரர், மாண்டி, பலவேசகரன் சுவாமி, ஊசிக்காட்டு சுடலை, முத்து சுவாமி, பத்மா பரம ஈஸ்வரன், வெள்ளை பாண்டி, ,தளவாய் மாடசாமி இரட்டைசுடலை மாடசாமி, பண்றி மாடன், பூக்குழி மாடன், சங்கிலி மாடன், ஆகாச மாடன் ,உதிர மாடன், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்ததால் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு அலைய துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது.

அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதால் அதை இனியும் தேவலோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார் என்பது வரலாறு.

சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடைய பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது.

அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

விளக்கு எரிந்து திரி எரிந்துபோய் மங்கத் துவங்கியதும் சிவபெருமான் வேண்டும் என்றே அதன் திரியை பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு நாள் அது பார்வதியின் தொடையில் விழுந்து விட அவள் சதை தீ காயத்தினால் வீங்கி விட்டது.

ஆகவே சிவபெருமான் பிரம்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது.

அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி, அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார்.

ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.

அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான்.

சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.

சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிக்களரி என்ற வருடாந்திர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு.

அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை சுடலை மாட சாமி வேட்டைக்குப் போகுதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள்.

அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள்.

அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம்.

அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார்.

அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார்.

தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள்.

ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சுடலை மாடசாமி கோயில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

சுடலை மாடசாமி கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது.

சுடலை மாடன் அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் பெரும் பொருள் இருப்பதை மைமூலமாக அறிந்துகொண்ட காளிப்புலையன் என்னும் மலையாள மாந்திரீகன் சுடலை மாடன், அன்னையின் பணிக்கு வெளியில் சென்று இருந்தபோது கோவில் பொருளை கொள்ளை இட்டு சென்றானாம், இதை அறிந்த சுடலை காளிப்புலையணை வதைத்து குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து குடி கொண்டதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க இன்று சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்.

சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது.

தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மாவிடமாட்டான் என்பது இப்பகுதி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு. இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி என்ற உணவு இவருக்கு உண்டு.

இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம்


N. Ganesan

N. Ganesan

unread,
Jul 29, 2018, 11:45:49 AM7/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

தமிழ்நாட்டில் பேய்த் தெய்வ வழிபாடு புகழ்பெற்றது. சங்ககாலத்தில் அணங்கு என்ற சொல்லால் குறிக்கப்படும் வழிபாடு. இன்று ஹார்வர்ட் பல்கலையில் தமிழ்ப் பீடம் அமைந்துவிட்டது என தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். 1960, 70களில் சங்க இலக்கியம் கூறும் சமயம், சமூக நிலை பற்றி ஹார்வர்டிலே விளக்கமாக ஆராய்ந்துள்ளனர். கேரளமும் தமிழ்நாடும் சேர்ந்த நிலம் பண்டைய தமிழகம் ஆகும். ஹிந்து சமய வளர்ச்சியால் பல சிறுதெய்வங்கள் மேல்நிலையாக்கம் என்ற தன்மையை அடைந்துவருகின்றன. Sanskritization, Upward mobility போன்றன தெளிவாக கேரளாவின் குட்டிச்சாத்தன் வழிபாடு (குறுப்புகள் பூசை), மாடன் சாமி வழிபாடு (தெற்குத் தமிழ்நாட்டில்) காணலாம். காவல் தெய்வம், மயானக் காவல் போன்றன மறைந்துவருகின்றன. மேனிலையான கதைகள் இந்த அணங்கு வழிபாட்டுக்கு ஏற்பட்டுவருவதும் பார்க்கலாம். இவர்றின் பழைய நிலைமை அறிய, திராவிட மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம் எழுதிய ராபர்ட் கால்ட்வெல் நூல்கள், ... போன்றன உதவும். அணங்கு வழிபாடுகளை விடுத்து பெருந்தெய்வமாகிய கிருஷ்ணன்/விஷ்ணு வழிபாட்டுக்கு பெருங்கோயில் சமயங்களுக்கு வாருங்கள் என்று ப்ரபந்ந ஜநகூடஸ்தர் என்னும் நம்மாழ்வார் அறைகூவல் விடுக்கும் அரிய பத்துப் பாசுரங்கள் உள்ளன.

தெற்குத் தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் உருவாகிவரும் சிறுதெய்வ வழிபாட்டைப் பார்ப்போம்.


மாடன் என்ற பெயர் மாட்டின் தலையைப் பொருத்துதலான்.

தூத்துக்குடி மாவட்டச் சிறுதெய்வ வழிபாடு: ஓர் ஆய்வு
Title: Tuttukuti mavatta ciruteyva vazipatukal or ayvu
Researcher: Anitha K
Guide(s): Vaithiyanathan R
Keywords: Tamil
University: Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya
Completed Date: 2015
Abstract: None
Pagination: 238p.
URI: http://hdl.handle.net/10603/171821
Appears in Departments:Department of Tamil

kanmani tamil

unread,
Jul 29, 2018, 2:33:17 PM7/29/18
to mintamil
இந்த சுடலைமாடனும் , சேர்மன் சாமியும் , முத்துப்பட்டனும், மதுரை வீரன் போலவே 18/19ம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர்களாவர்.
அவர்கள் பற்றி இயற்கை இறந்த கூறுகளோடு பல கதைகளையும் புனைந்து மக்கள் வழிபடுகின்றனர்.
ஒரே சாமிக்கு சிறு சிறு மாறுதல்களோடு ஊர் ஊருக்கு ஒரு கதை இருக்கும்.
இத்தகைய நாட்டார் கதைகள் &வழிபாடுகள் தொடர்பான ஆய்வுக்கென்றே மைசூரிலும்,  பாளையங்கோட்டையிலும் தனித்த துறைகள் உள்ளன.
 கங்க நாட்டுக்கும் மாடசாமி வழிபாட்டுக்கும்  எந்தத் தொடர்பும் கிடையாது. .
கண்மணி    

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 29, 2018, 3:08:26 PM7/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-07-29 11:33 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இந்த சுடலைமாடனும் , சேர்மன் சாமியும் , முத்துப்பட்டனும், மதுரை வீரன் போலவே 18/19ம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர்களாவர்.
அவர்கள் பற்றி இயற்கை இறந்த கூறுகளோடு பல கதைகளையும் புனைந்து மக்கள் வழிபடுகின்றனர்.
ஒரே சாமிக்கு சிறு சிறு மாறுதல்களோடு ஊர் ஊருக்கு ஒரு கதை இருக்கும்.
இத்தகைய நாட்டார் கதைகள் &வழிபாடுகள் தொடர்பான ஆய்வுக்கென்றே மைசூரிலும்,  பாளையங்கோட்டையிலும் தனித்த துறைகள் உள்ளன.
 கங்க நாட்டுக்கும் மாடசாமி வழிபாட்டுக்கும்  எந்தத் தொடர்பும் கிடையாது. .
கண்மணி    


ஆமாம். மாட்டின் தலை பொருத்துவதால் இவனுக்கு மாடன் சாமி என்று பெயர். அண்மைக்கால சிறுதெய்வம்.
பல ஆய்வாளர்கள் எழுதியுள்ள செய்தி.

மூதா போன்ற பெயர்களை, முதிய பசுக்களுக்குச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
பிற்காலத்தில் முத்தரைசரு என்ற பெயர் மூதரையரு என்று வழங்கி, த்ராவிடச் சொல்
ஆகிய அரைசரு ராஜா என்று மொழிமாற்றம் ஆகும்போது மூதராஜா, மூதிராஜா என்று
சொன்னால், கி.பி. 1000-குப் பின் - மூதேவிக்கும் மூதி என்ற பெயர் உள்ளதால், வசைவழக்கு ஆகிவிடும்.

அதனால், மூதரையன்/மூதரசன் > மாதரசன் என்றாகியுள்ளது. Cf. மூட்டு > மாட்டு, ஊம்/ஓம் ‘yes' > ஆம், 

19,20 நூற்றாண்டுகளில் உருவாகிவரும் சிறுதெய்வம் மாடன்சாமி/மாடசாமிக்கும் பழைய
மூதரையர்/முத்தரையர்/மாதரசன் ஒரு தொடர்புமில்லை என நீங்கள் குறிப்பிடுவது சரியே.
தேமொழி மாடன் வழிபாடு பற்றிக் குறிப்பிட்டவுடன் நெல்லை அண்மைச் சிறுகடவுளுக்கும்
பழம்பெயர் மூதரையன்/மாதரையன் (”விருத்த ராஜா” - வடமொழியில் பெயர்) தொடர்பில்லை
எனக் குறிப்பிட்டுள்ளேன்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages