இன்னுமொரு நிகண்டு.

23 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Sep 1, 2025, 8:14:56 AM (4 days ago) Sep 1
to மின்தமிழ்

அன்புடையீர்,

தொடரடைவுக்காக நான் எடுத்துக்கொண்ட அடுத்த நிகண்டு நாமதீப நிகண்டு என்பதாகும். இது கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியக் கவிராயர் என்பவர் இயற்றியது. இவரது காலம் 1780-ஐ ஒட்டியது என்பர் இந்நூலின் பதிப்பாளர். இது 1930-இல் திரு.வையாபுரிப்பிள்ளை என்பராலும், பின்னர் 2007-இல் முனைவர் ஜெயதேவன் அவர்களாலும் பதிக்கப்பெற்றது. இதற்கு மூலமும் உரையும் கிடைத்ததால் சொற்பிரிப்புக்காக நான் வெகுவாகச் சிரமப்படவில்லை.

இந்நூலின் சூத்திரங்கள் வெண்பாவினால் ஆனவை. வெண்பாவின் இலக்கணம் மிகக் கண்டிப்பானது. எனினும் இப்பாவகையில் எழுந்த இலக்கியங்கள் மிக அருமையானவை.

காமர் கயல்புரள காவி முகைநெகிழத்

தாமரையின் செந்தேன் தளையவிழ  

  போன்ற அருமையான பாடல்களைக் கொண்ட நளவெண்பாவைப் போற்றாதவர் இருக்கமுடியாது.

ஆனால், இது ஓர் அகராதி நூல். சொற்கள், அவற்றின் பொருள் பற்றிக் கூறுவது. இதில் எதுகை, மோனை தவறாமல், சீர், தளை தட்டாமல் பாடல் இயற்றுவது ஒரு பிரம்மப் பிரயத்தனம். இதற்காக, சொற்களை வளைத்தும், ஒடித்தும் மடக்கியும் வெண்பா அடிகளில் அவற்றை ஆசிரியர் திணித்துவைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஒரு பெரிய சட்டையை, ஒரு சிறிய பெட்டிக்குள் அடைத்துவைத்தால், பின்னர் அதை எடுத்துப் பார்க்கும்போது அது மிகவும் கசங்கி இருக்கும். அதனைப் போடவேண்டுமானால் இஸ்திரிப் பெட்டிகொண்டு தேய்க்கவேண்டும்.

அப்படித் தேய்ப்பதில்தான் எனக்கு வெகுகாலம் பிடித்தது. ஓர் எடுத்துக்காட்டு இதோ.

பாடல் மூலம்

ஆளியறு கேபூட்கை வாளமுமாங் கேசரி

ராளிவய மாமிருக ராசனரி கோளரி

சீய முடங்குளைபஞ் சானனங்கண் டீரவந

காயுதம டங்கலுஞ்சிங் கம்

 

இதைச் சொற்களாகப் பிரித்தால், இப்படி வரும்

 

ஆளி றுகே பூட்கை வாளமும் ஆம் கேசரி

ராளி வயமா மிருகராசன் அரி கோளரி

சீயம் முடங்குளை பஞ்சானனங் கண்டீரவம்

காயுதம் மடங்கலும் சிங்கம்

 

பார்த்தீர்களா? இங்கே கராளி, நகாயுதம் ஆகிய சொற்கள் ஒடித்து மடக்கப்பட்டிருக்கின்றன. இது வெண்பா யாப்பு இலக்கணத்துக்காக.

 

இதை இப்படியாக முழுச் சொற்களாகப் பிரிக்கவேண்டும்

 

ஆளி அறுகே பூட்கை வாளமும் ஆம் கேசரி கராளி

வயமா மிருகராசன் அரி கோளரி

சீயம் முடங்குளை பஞ்சானனம் கண்டீரவம் நகாயுதம்

மடங்கலும் சிங்கம்.

 

சில மிக ருசிகரமான தகவல்களும் கிடைத்தன.

துணி துவைப்பது, தப்புவது என்பார் சிலர். இதைப் போய் தப்பிட்டு வாடா என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

தப்பல் துவைத்தல்

என்று ஒரு பொருள் இங்கு கூறப்பட்டுள்ளது.

சோத்துக்குக் கடிச்சுக்கிற வெஞ்சனம் இருக்கா என்பர் சிலர்.

வெஞ்சனம் கறிக்கூட்டு

என்கிறது ஒரு வெண்பா.    

சிற்றூண் அதாவது சிற்றுண்டி வகைகளில் இட்டவி என்ற பொருள் கூறப்படுகிறது.

இட்டவி சிற்றூண்

இதுதான் நம் இட்லியோ?

அப்ப வகைகளில் தோசை என்பதுவும் குறிக்கப்படுகிறது.

அப்பமே நோலை கஞ்சம் அண்டகை யூபம் தோசை

என்னைத் தூக்கிவாரிப்போட்டது இதுதான்.

கோதல் சிணுக்கறுத்தல்

எங்கள் வீட்டில் பெண்கள் தலைகுளித்து, முடியை ஓரளவு துவட்டி, பின்னர் அதை நன்றாகச் சிக்கெடுத்துக் காயவைக்க ஒரு உலோகக் கம்பியைப் பயன்படுத்துவார்கள். அதற்குச் சிணுக்கறுக்கி என்று பெயர்.

பாண்டி, அந்த சிணுக்கறுக்கியை எடுத்துட்டு வா என்று என் அம்மா கூப்பிடுவது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

தலைமுடியைக் கோதிவிடுவது சிணுக்கறுத்தல் எனப்படும் என்ற இந்த வெண்பா அடி என்ன மிகவும் கிறங்கடித்தது.

காடு மலைகளில் அலைந்து திரிவது காலையும் மேலையும் வருத்தினாலும், காணக்கிடைக்கின்ற இனிய காட்சிகளால் மனம் அடைகின்ற உவகைக்கு ஈடு இணை இல்லை.

அத்தகைய இனிய அனுபவங்கள் பலவற்றைத் தந்தது இந்த நாமதீப நிகண்டு.

இதற்கான தொடரைவு இப்போது தயார்.

இதனை என்னுடைய tamilconcordance.in என்ற இணையதளத்தில்

தொடரைவுகள் - > நிகண்டுகள் என்ற பகுதியில் காணலாம்.

இது எனது தொடரடைவுக்கான 110-ஆவது நூல்.

இனி அடுத்த நிகண்டினை முடித்துவிட்டுச் சந்திக்கிறேன்.

நன்றி,

ப.பாண்டியராஜா

 

 

 

சக்திவேலு கந்தசாமி

unread,
Sep 1, 2025, 9:32:24 AM (4 days ago) Sep 1
to mint...@googlegroups.com
உயரிய நோக்கோடு தமிழுக்கு நாளும் நற்சேவையாற்றிவரும் தங்களுக்கு நன்றி.  சுவையான பதிவு.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/af52c201-bc8f-49ef-9bf4-cbf5848d90cfn%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 1, 2025, 4:06:37 PM (4 days ago) Sep 1
to மின்தமிழ்
மிக்க மகிழ்ச்சி; நன்றி ஐயா  🙏🙏🙏

இளங்குமரன்

unread,
Sep 2, 2025, 11:51:40 PM (3 days ago) Sep 2
to mint...@googlegroups.com
அருமை ஐயா. வாழ்த்தி வணங்குகிறேன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
அன்புடன்
         ஐயா
எழுத்தேணி அறக்கட்டளை
 
Reply all
Reply to author
Forward
0 new messages