2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, கனடா
வணக்கம்
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்கு ஆய்வுச் சுருக்கம் அனுப்ப மார்ச் 15, 2026 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
“நாம் ஏன் தொல்காப்பியத்தைக் கற்க, கற்பிக்க, கொண்டாட, பரவலாக்கம் செய்யவேண்டும்” என்பது தான் மாநாட்டுக் கருப்பொருள். இக் கருப்பொருளுக்குச் சிறப்பாகத் தெரிவுசெய்யப்படும் ஆய்வுரைகள் (10-15 பக்கங்கள்) புத்தக வடிவில் பரவலாக்கம் செய்யப்படும்.
பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் word file சமர்ப்பிக்கலாம் (Submit).
உங்கள் நண்பர்கள், ஆர்வலர்களுடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை தொடர்பான சுற்றறிக்கை பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி
முனைவர் இல. சுந்தரம்
ஒருங்கிணைப்பாளர்
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, கனடா