சுவாமி விபுலானந்தர்

2,460 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Apr 6, 2013, 6:22:17 PM4/6/13
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com

சுவாமி விபுலானந்தர்


பேராசிரியர் சி. மெளனகுரு

தினகரன் வாரமஞ்சரி, மார்ச்சு 31, 2013 
அறிமுகம்

1942ஆம் ஆண்டிலே மதுரையில் நடைபெற்ற இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி தலைமைப் பேருரை நிகழ்த்திய விபுலானந்த அடிகளார் பின்வருமாறு கூறினார்:

இரண்டரைக் கோடியென்னும் எண்ணினராகிய நம் தமிழ்க் குலத்தார் அனைவரும் பசியும் பிணியும் பகையும் நீங்கிப் பொருட் செல்வமும் செவிச்செல்வமும் அருட்செல்வமும் ஏற்ற பெற்றியெய்தப் பெற்று மண்ணக மாந்தர்க்கு அணி யெனச் சிறந்து வாழ்வார்களாக.

பந்த பாசங்களை துறந்து மனுக்குலத்துக்குச் சேவை செய்ய வந்த விபுலாநந்தர் தமிழ்க் குலத்தவர் பசியும் பிணியும் நீங்கி பொருட் செல்வம் முதலிய செல்வம் பெற்று வாழ வேண்டுமென்று கருதுவதும் ‘நம் தமிழ்க் குலம்’ என உளப்பாட்டுத் தன்மைப் பன்மையிற் கூறுவதும் ஏனைய சமூகங்களை விடத் தமிழ்ச் சமூகம் மேலாக வாழவேண்டும் என்று அவாவுவதும் துறவு பூண்ட போதிலும் தமிழரையும் தமிழர் சமூகத்தையும் துறக்காத விபுலாநந்தரின் உளப்போக்கையும் தமிழ்ப்பற்றை விடாத மனப்பாங்கையும் காட்டுவனவாயுள்ளன.

1948ஆம் ஆண்டிலே விபுலாநந்தர் மறைவையொட்டி திரு. க.க. முருகேசப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘ஈழமணி விபுலாநந்த நினைவு மலரில்’ விபுலாநந்தர் பற்றிக் கூறவந்த கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.

சங்கத் தமிழ் கேட்க வேண்டுமானால் இருவரிடம் கேட்க வேண்டும். ஒருவர் பெரும் பேராசிரியர் சாமிநாதர் மற்றொருவர் விபுலாநந்தர். நான் அவர்களைப் பார்த்து இருபத்திரெண்டு ஆண்டுகளாயின. ஆனால் அக்காலத்தில் அவர் உடல்மெலிந்தே வந்தது. தமிழ்த்துடிப்பு வலுவாய் இருந்தது. அந்தத் துடிப்பு இன்று பல்லாயிரம் தமிழர் நெஞ்சில் முரசடிக்கும் அடிகளார் பலருக்குத் தமிழ் வெறியேற்றினார்கள்.

துறவுக் கோலம் பூண்ட அடிகளாரைத் தமிழ் பற்றிக் கொண்டது. தமிழைத் துறக்க முடியாத துறவியானார் விபுலாநந்தர்.

விபுலாநந்தரை அறிந்து கொள்ள அவரைப் புரிந்து கொள்ள உடனடியாக எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தாம். எனினும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், சிறு குறிப்புக்கள், ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், அவருடன் தொடர்பு கொண்டோர் அவர் பற்றி எழுதிய குறிப்புக்கள் கிடைப்பின் சரியான கணிப்பீடுகளைச் செய்ய முடியும்.

விபுலாநந்தரின் வாழ்க்கைப் பின்னணி

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காரைதீவில் சாமித்தம்பியருக்கும் கண்ணம்மைக்கும் மகனாக 27.03.1892 அன்று விபுலாநந்தர் என்ற துறவுப் பெயரினைப் பின்னாளில் பெற்ற மயில்வாகனன் பிறந்தார். தனது சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், 1904 ஆம் ஆண்டில் கல்முனை மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும், 1907ஆம் ஆண்டில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கல்வி பெற்று அதே பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றினார். பின்னர் கொழும்பு அரசினர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியல் இரண்டாண்டுகள் பயிற்சி பெற்று மீண்டும் 1912இல் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இணைந்தார்.

இரண்டு ஆண்டுகள் இக்கல்லூரியில் கடமையாற்றிய பின்னர் கொழும்புப் பொறியியல் கல்லூரியில் கற்று டிப்ளோமா பட்டமொன்றினைப் பெற்றுக் கொண்டார். இதே நேரத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, இலங்கையிலேயே முதன் முதலாக பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் அறிவியல் துறை ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றிய காலத்தில் தனது சொந்த முயற்சியில் கற்று இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய விஞ்ஞானமாணித் (பி.எஸ்.சி) தேர்வில் 1919ஆம் ஆண்டு தேர்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமையாசிரியராகச் சில வருடங்கள் சேவையாற்றினார். இந்நிலையில் 1924 ஆம் ஆண்டு சென்னை சென்ற மயில்வாகனனார் அவ்வாண்டு சித்திரை மாதம் பெளர்ணமி நாளன்று துறவறம் பெற்று ‘சுவாமி விபுலாநந்தா’ எனும் நாமத்தைப் பெற்றார்.

1925ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய சுவாமி அவர்கள் இராமகிருஷ்ணமடம் சார்பில் தாம் பிறந்த காரைதீவில் பெண்களுக்கென சாராதா வித்தியாலயத்தையும் மட்டக்களப்புக்கு அருகேயுள்ள கல்லடி, உப்போடையில் சிவானந்த வித்தியாலயத்தையும் நிறுவினார்.

1931 இல் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட போது அதன் தமிழ்ப் பேராசிரியர் பதவியினை ஏற்குமாறு அண்ணாமலைச் செட்டியார் விடுத்த அழைப்பையேற்று அங்கு சென்று 1933 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.

இதைத் தொடர்ந்து 1943ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தினர் தமது தமிழ்த் துறைக்குத் தலைவராக வரும்படி சுவாமி அவர்களை அழைத்தனர். இவ்வழைப்பை ஏற்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் பதவியினைப் பொறுப்பெடுத்தார்.

அடிகளாரின் நீண்டநாள் ஆராய்ச்சியின் பயனாக நூலுருப் பெற்ற ‘யாழ்நூல்’ இன் அரங்கேற்ற விழா கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் 1947ஆம் ஆண்டு ஆனி மாதம் 20 மற்றும் 21இல் சிறப்பக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய அடிகளார் உடல்நலிந்து நோயுற்று கொழும்பில் 19.07.1947 அன்று காலமானார்.

(தொடரும்)

 

தினகரன் வாரமஞ்சரி ஏப்ரல் 7, 2013:

விபுலானந்தரின் ஆளுமைப்பின்னணி

விபுலானந்தரின் ஆளுமையை உருவாக்கிய முக்கிய ஐந்து பின்னணிகளைக் குறிப்பிடலாம். அவையாவன: மரபு வழித் தமிழ்க்கல்வி, ஆங்கிலக்கல்வி, விஞ்ஞான கணித அறிவு, வடமொழி அறிவு. இராமகிருஷ்ண மரபுத் தொடர்பு, பன்மொழி அறிவு.

மரபு வழித் தமிழ்க் கல்வி:

பண்டிதர் சா.மயில்வாகனம் (B. Sc. (Lond.) துறவறத்திற்கு முன் அடிகளார்.

விபுலானந்தரின் மரபு வழிக்கல்வி காரைதீவிலே ஆரம்பிக்கின்றது. தந்தையாரின் வழிகாட்டலின் கீழ் அவர் கல்வி பயில ஆரம்பித்தாலும் காரைதீவு வைத்திலிங்க தேசிகர், தென்கோவை கந்தையா பண்டிதர் கயிலாயபிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் 1912 வரை அதாவது 20 வயது வரை தமிழ்க்கல்வி பயின்றார். கயிலாய பிள்ளையிடம் சிலப்பதிகாரம் பயின்றர். இளமையிற் காரைதீவு கண்ணகி கோயிலில் வருடாவருடம் பாடக் கேட்ட கண்ணகி வழக்குரை மீதிருந்த ஆர்வம் சிலப்பதிகாரம் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இவ் ஆர்வம் அவர் மனதினுள் கிடந்து வளர்ந்ததன் விளைவாகவே அவரது இறுதிக் காலத்தில் யாழ்நூல் உருவாகியிருக்கலாம்.

ஆங்கில அறிவு

கல்முனையில் லீஸ் பாதிரியாரது மெதடிஸ்த பாடசாலையில் ஆங்கிலக் கல்வி கற்ற சுவாமியவர்கள், 1904ல் மட்டக்களப்பு மெதடிஸ்த ஆங்கிலக் கல்லூரியிலும் பின் 1906ல் புனித மைக்கல் கல்லூரியிலும் ஆங்கிலம் பயின்றார். 1906ல் யூனியர் கேம்பிரிஜ் பரீட்சை எழுதினார். 1909 -1910 வரை புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1915ல் கொழும்பில் ஆங்கில ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் கல்வி பயின்றார் இந்த ஆங்கில அறிவு தான் அவருக்குப் பரந்த உலகப்பார்வையை அளித்ததுடன், பன்நூற் புலமை பெறும் மனப்பாங்கையும் அளித்தது.

விஞ்ஞான கணித அறிவு :

1915ல் கணிதத்தில் இன்டமீடியட் சோதனையும் 1919ல் லண்டன் பி.எஸ்.ஸி. பரீட்சையும் எடுத்தார். அதில் பெளதிகத்தை ஒரு பாடமாக எடுத்துச் சித்தியடைந்தார். இரசாயன ஆசிரியராகப் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆய்வுகூடம் ஒன்றினையும் நிறுவினார்.

வடமொழி அறிவு:

வைத்திலிங்கத் தேசிகரிடம் வடமொழிக் கல்வி பயின்ற இவர் யாழ்ப்பாண வாழ்க்கையின் போது அதனை மேலும் வளர்த்திருக்க வேண்டும். ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் நிறுவியமை இவரது வடமொழிப் பற்றைக் காட்டுகிறது. இராமகிருஷ்ண மடத் தொடர்பும் இவரது வடமொழி ஆர்வத்திற்கு மேலும் ஊக்கமளித்திருக்கலாம்.

இராமகிருஷ்ண மடத் தொடர்பு:

1911-1912 காலங்களில் தமது 20 வயதில் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் இவருக்கு விவேகானந்த சபை உறுப்பினர்கள் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அதில் உறுப்பினருமானார். 1917 ல் கொழும்பில் சர்வானந்தாவால் கவரப்பட்டார். இதன் வளர்ச்சியாகத்தான் 1922 சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் பிரபோத சைத்தனயராகி 1924 சுவாமி விபுலானந்தர் என்ற துறவுத் திருநாமமும் பெற்றார். இராமகிருஷ்ண மடம் அவருக்கு வேதாந்த அறிவைத் தந்தது. அனைத்து ஆன்மாவையும் சமனாகக் காண்கின்ற போக்கிற்கு ஒரு தத்துவ பலத்தை அத்வைத வேதாந்தம் இவருக்களித்தது.

பன்மொழி அறிவு

விபுலானந்தருக்குப் பன்மொழி அறிவு இருந்தது. அவருக்கு லத்தீன், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்திருந்தன. இப்பன் மொழி அறிவு அவருக்கு நூல்களை அவற்றின் மூலத்திலேயே படித்தறியும் வாய்ப்பினைக் கொடுத்திருக்கலாம். பன்மொழி அறிவு பரந்துபட்ட பார்வையினையும் இவருக்குக் கொடுத்தது.

அடிகளாரும் அவர் மருமகனார் குழந்தை வடிவேலும்.

மேற்குறிப்பிட்ட பின்னணிகள் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய தமிழறிஞர்கட்கு ஒரு சேரக் கிடைக்காதவை. அவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் ஒன்றில் மரபு வழி வந்த தமிழறிஞர்களாயிருந்தனர். அன்றேல் சைவ சித்தாந்தக் கூட்டுக்குள் நின்று கொண்டு தமிழை அளந்தனர். அன்றேல் நவீன நோக்கற்றவராயிருந்தனர். பெரும்பாலும் தமிழ் வளர்த்தல் என்பது இவர்கட்கு பழைய இலக்கண இலக்கிய மரபைப் பேணுதல் அல்லது அதன் வழி வளர்த்தல் என்பதாகவே இருந்தது.

விபுலாநந்தர் இவர்களினின்று வேறுபடுகின்றார். ஆங்கிலக் கல்வி அவருக்கு ஆங்கிலக் கலை இலக்கிய ஆராய்வு உலகை அறிமுகம் செய்தது. வடமொழிப் புலமை அவருக்கு வடமொழிக் கலை இலக்கிய உலகைக் காட்டியது. வேதாந்த நெறி அனைத்தையும் பேதா பேதம் காட்டாது உள்வாங்கும் திறனையும், குணத்தையும் அளித்தது. விஞ்ஞான அறிவு புறநிலைநின்று ஆராயும் பண்பை அவருக்குத் தந்தது. இவற்றால் தன்கால மரபு வழித் தமிழறிஞர்களிடமிருந்து விபுலானந்தர் வேறுபடுகின்றார். அவரது சமூக, கலை, இலக்கிய நோக்கினை இவ் ஆறு பின்னணிகளும் நிர்ணயம் செய்வதனைக் காணலாம்.

இந்த அடித்தளத்தில் எழுந்த அவரது சிந்தனைகள் அகண்ட உலக நோக்கையும் அந்த உலகப் பரப்பில் தமிழனை ஒன்றாகக் காணும் தன்மையையும் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை உலக சமூகத்தில் தேடும் பார்வையையும் அவருக்கு அளித்தன.

விபுலாநந்தரின் சமூக நோக்கு

ஒருவரின சமூக நோக்கே அவரின் ஏனைய சிந்தனைகளுக்கான வாயிலாக அமைகின்றது. ஒருவரின் தத்துவ நோக்கைக் கூட சமூக நோக்கே நிருணயித்து விடுகிறது. சமூகம், ஏற்றத் தாழ்வுகள் மிக்க பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது. ஆசியாவில் சாதிகளாகவும் ஐரோப்பியாவில் வர்க்கங்களாகவும் உலகப் பரப்பில் இனங்களாகவும் சமூகம் பிளவுண்டு கிடக்கிறது. இதனால் சமமின்மை மன்பதையிடம் நிலவுகிறது. இப் பிரிவுகள் பற்றிச் சாதகமான அல்லது பாதகமான நோக்கு மனிதர் ஒவ்வொருவரிடமும் உண்டு. அந்நோக்கு ஒவ்வொருத்தரினதும் அறிவு, அனுபவம், தத்துவ நோக்கிற்கியைய உருவாகிறது.

விபுலானந்தரின் இளமைக்கால வாழ்க்கையும் மட்டக்களப்புச் சூழலும் இராமகிருஷ்ண மடத் தொடர்பும் வேதாந்தன ஞானமும் அவருக்கு சமூகப் பிரிவினைகளுக்கு எதிரான நோக்கையே கொடுத்தன.

‘மனிதன் உடலமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தாலும், குண வித்தியாசத்தினால் பலவகைப்படுவான்’ என்ற விபுலானந்தரின் கூற்றில் மனிதனை வித்தியாசப்படுத்துவது குலமல்ல குணம் என்ற தொனி தெறிக்கிறது. உடலமைப்பில் அனைவரும் ஒன்றுதான் என்ற இவர் கூற்றில் மனிதர் அனைவரும் பார்வையில் ஒன்று தான்; சமம் தான் என்றபொருளும் தொனிக்கிறதல்லவா?

மனிதர்கள் இரண்டு விதமாக வகுக்கப்படுவர். ஒருவிதம் பகவானிடத்தில் மனதைச் செல்லுத்தும் பக்தர்கள். மற்றொரு விதம் பொன் மீதும் பெண் மீதும் ஆசை வைத்திருக்கும் மானிடப்பக்தர்கள்.

மனிதனை இரண்டே இரண்டு சாதியாக பிரிக்கும் இவர் நோக்கில் ஔவையாரின் ‘இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என்ற தொனியின் சாயல் விழுகிறது. பக்தி உடையோர் இல்லாதோர் என்ற இரண்டு சாதிகளாகப் பிரிக்கலாமே தவிர வேறு சாதிகளாகப் பிரிக்க முடியாது என்பது அவர் கொள்கை.

பிராமணனுக்கு வியாக்கியானம் தரவந்த விபுலாநந்தர் அந்தணன் அறிஞனாய் இருந்தால் மாத்திரமே அவன் உண்மையான பிராமணன் என்று கூறுகிறார். பிறப்பால் சாதியில்லை. குணத்தால் தான் சாதி என்ற பாரதியின் கூற்று இங்கு பிரதிபலிப்பது போல உள்ளது. இதே கருத்தை என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் தன் நூலில் திரு. வி.க.வும் இக்கால கட்டத்தில் வெளியிடுவது குறிப்பிடற்குரியது.

1930ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் திருவேட்களத்தில் ஒதுக்கப்பட்ட ஆதித்திராவிடர்கள் வாழுகின்ற சேரிகளுக்குச் சென்று பாலர்கள் படிக்க பள்ளிகள் ஏற்படுத்தினார். வளர்ந்தோர் படிக்க இரவுப்பள்ளிகள் ஏற்படுத்தினார். இதனால் கல்வி அறிவு பெற வாய்ப்பில்லாது ஒதுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு கிடைக்க வழிகாட்டினார். அவருக்கு சிதம்பரம் தாலுகா வேட்களம் ஆதித் திராவிடர்களின் சார்பாக அளிக்கப்பட்ட பிரிவுரை வாழ்த்தில்,

தம் நலம் பேணும் பார்ப்பனர்களால் சண்டாளர்கள் என்றழைக்கப்படும் எங்களை அழைத்துத் தங்கள் வீட்டினுடனிருத்தி விருந்துண்ட காட்சியும் உவகையும் எங்கள் கண்களையும் மனதையும் விட்டு அகலுமோ?... எங்கள் முன்னேற்றத்திற்கெனத் தங்களால் தொடங்கப்பட்ட இரவுப் பள்ளி என்றும் வளர்ந்து ஓங்குவதற்குரிய வழியொன்று தாங்கள் தேடுவதோடு, ஈழத்தீவில் தங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் எங்குல மாணவர் பலரை சேர்த்துக் கொள்ளும் படியும் வேண்டுகிறோம்.

என்று வரும் ஆதி திராவிடர்களின் உளக் குறிப்புகள் விபுலானந்தர் மனதையும் சேவைகளையும் எமக்கு உணர்த்துவன. விபுலானந்தரின் சமதர்ம சிந்தனை வாய்ந்த இக் கல்வித் தொண்டு நாவலரின் கல்விப் பணிகளோடு ஒப்புநோக்கற்குரியது. நாவலரின் கல் விப் பணிகளைப் பல மடங்கு விஞ்சியது.

சமூக நோக்குப் பற்றி அவர் நோக்கு மென் மேலும் பரந்து விரிவதை 1942, 43ல் அவர் எழுதிய ‘தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வட நாட்டில் பரவிய முறை’ எனும் கட்டுரையில் காணலாம். சாதிபேதம் வர்ண பேதங்களின்றித் தொண்டர்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து இறை பணி செய்தமையை அதில் விரிவாகக் கூறுகிறார். கவுணிய குலத்தவரான சம்பந்தருக்கும் பாணராகிய நீலகண்டருக்கும் உள்ள உறவு, வேளாள அப்பரும் பிராமணரான சம்பந்தரும் கொண்ட உறவு, பாணர்குல திருப்பாணாழ்வாரை உலோக சாரங்க முனிவர் தன் தோள்மீது கொண்டு சென்றமை, அரச குலத்தவரான சேரமான் பெருமாள் திருநீற்றுச் செலவினைக் கண்டு வண்ணான் முன்னிலையில் தலை வணங்கியமை, நான்காம் குரவரான உமாபதி சிவாச்சாரியார் கொற்றவன் குடியில் வசித்ததுடன் அங்கு பெற்றான் சாம்பான் என்ற புலையனுக்கு தீட்சை கொடுத்தமை, இராமானுஜர் தீண்டத் தகாதோருக்கும் இராமநாத மந்திரம் ஓதித்தீட்சை தந்தமை, இராமானுஜரின் சீடரான இராமநந்தர் சமபந்தி போசனம் செய்தமை, இராமநந்தரின் சீடர்களாக சக்கிலியரான ரவிதாஸரும் நாவிதராகிய சோனரும் உழவராகிய தன்னரும் இஸ்லாமிய நெசவுகாரரான கபீர்தாஸரும் இருந்தமை என எண்ணற்ற உதாரணங்களைப் பழைய நிகழ்ச்சிகளினின்றும் எடுத்துக் காட்டுகிறார்.

‘குலம் தரும் செல்வம் தரும்’ என்ற திருமங்களை யாழ்வார் பாடலுக்கு உரைகண்ட பெரியவர்கள் ‘பண்டைக்குல மொழிந்து தொண்டைக் குலமாதல்’ என்றுரைத்த உரையை அழுத்திக் கூறுகிறார்.

பிரிவுகள் இல்லாத, சாதி பேதங்கள் இல்லாத வருண பேதங்கள் இல்லாத இன பேதங்கள் இல்லாத ஒரு மனித குலத்தையே விபுலாநந்தர் கனவு கண்டார் என்பதை அவர் எழுத்துகள் காட்டுகின்றன. இத்தகைய ஒரு சமூக நோக்கை அவருக்களித்ததில் வேதாந்த ஞானம் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். தமிழ் மக்களின் எதிர்கால எழுச்சி மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட அடிகளார் தமிழ்ச் சமூகம் தமக்குள் ஏற்றத் தாழ்வு அற்ற ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என்றே விரும்பி இருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்தப் பரந்த பார்வையினையே அவர் கலைகள் மீதும் இலக்கியங்கள் மீதும் செலுத்தினார்.

பேராசிரியர் சி. மெளனகுரு

Sri Sritharan

unread,
Apr 20, 2013, 10:45:33 PM4/20/13
to மின்தமிழ்

சுவாமி விபுலானந்தர்


விபுலாநந்தரின் கலை, இலக்கியப் பங்களிப்பு கலை இலக்கியங்கள் சம்பந்தமாக அவர் எழுதிய கட்டுரைகள் முதல் அவரது ஆராய்வின் கொடுமுடி எனக் கருதப்படும் யாழ்நூல் வரை தொகுத்து நோக்கின் உலகக் கலை இலக்கியங்களைத் தமிழருக்கு அறிமுகம் செய்வதும் இரண்டிற்குமிடையே காணப்படுகின்ற அபேதத் தன்மைகளை இனம் காட்டுவதும் உலக, கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கித்தமிழரை முன் தள்ளுவதும் அதே நேரம் தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய வளர்ச்சியை உணர்த்துவதுமே அவர் நோக்கங்களாயிருந்தன.

மதுரையில் நிகழ்ந்த முத்தமிழ் மாநாட்டின் இயற்பகுதிக்குத் தலைமை தாங்கி அடிகளார் உரையாற்றும்போது (01.08.1942)


விபுலாநந்தர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசியவாதம் வளர்ந்து வந்தமை முன்னரே குறிப்பிட்ட ஒரு விடயமாகும். தமிழ்த் தேசியம் பேசியோர் இருநிலைக்குள் அடங்கினர். ஒரு சாரார் இந்திய நாகரிகத்தின் ஒரு கூறாகவே தமிழ் நாகரிகத்தைக் கண்டனர். நீலகண்டசாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் இவ்வகையினர். இன்னொரு சாரார் தமிழர் நாகரிகத்தினையே இந்தியாவின் புராதன நாகரிகமாகக் கொண்டனர். பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கர், வீ. கனகசபைப்பிள்ள, ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் இவ்வகையினர், ஆனால் இரு சாராருமே தம்மால் முடிந்தளவு தமிழ்த் தொண்டு புரிந்தோரே. தமிழரின் தனித்துவத்தை வெளிக் கொணர மேற்சொன்ன இரு சாராருமே முயன்ற இந்த வேளையிலே ஒவ்வொரு துறையிலும் தமிழ் வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஏட்டிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரும் தமிழருக்குரிய தத்துவம் எனக் கூறிச் சைவ சித்தாந்தம் அதனோடு ஒத்த முருக வழிபாடு என்பதை அறிமுகம் செய்வதில் மறைமலை அடிகள், திரு. வி. க. முதலியோரும் தமிழருக்குரித்தான நாடகத்தைக் காணுதலில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், திரு. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள் போன்றோரும் தமிழரின் இசையைக் காண்பதில் ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலைச் செட்டியார் போன்றோரும் ஈடுபட்டனர். ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தகைய பின்னணியிலே தான் அரங்கிற்கு வருகிறார் விபுலாநந்தர். அவரும் தமிழரின் தனித்துவம் பற்றி, தமிழ்க்கலை இலக்கியம் பற்றித் தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு வகையில் அவரது கலை இலக்கியப் பணிகள் அன்றைய காலத்தின் தேவையுமாகும். அடிகளாரின் கலை பற்றிய அவரது நோக்கினையும் பணிகளையும் பின்வரும் மூன்று தலையங்கங்களின் கீழ் நோக்குதல் பயனுடையதாம்.

கலைகள் பற்றி நோக்கும் பணியும்:

கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகளை அறிய அவரது பின்வரும் கட்டுரைகள் உதவுகின்றன: நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், யவனபுரக் கலைச் செல்வம், மேற்றிசைச் செல்வம், ஐயமும் அழகும், உண்மையும் வடிவும், நிலவும் பொழிலும், மலையும் கடலும், கவியும் சால்பும், நாடும் நகரும்.

மட்டக்களப்பு காரைதீவில் முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள அடிகளார் பிறந்த இல்லம்


கலைவரலாறு இன்று பல்கலைக்கழகங்களில் ஒரு பாட நெறியாகியுள்ளது. தமிழர்களின் கலை வரலாறு இன்னும் ஒழுங்காக எழுதப்படவேயில்லை. பூர்வாங்க முயற்சிகள் ஆங்காங்கு நடைபெற்றுள்ளன. பேர்ஸி பிறவுண், ஸ்டெலா காமேஷ், சிம்மர், ஆனந்தக்குமாரசுவாமி ஆகியோர் இந்தியக் கலை வரலாற்றின் பல அம்சங்களை விரிவாக எழுதியுள்ளனர். இந்நிலையில் தமிழர்கலை வரலாற்றை எழுத முயன்றோருக்கு விபுலாநந்த அடிகளார் உலகக் கலை வரலாற்றை ‘நாகரிக வரலாறு’ எனும் கட்டுரையில் தொட்டுக் காட்டிச் செல்கின்றார். இன்று கலை வரலாறு, சரித்திரத்திற்கு முந்திய கலை வரலாறு, எகிப்திய கலை வரலாறு, கிரேக்க கலை வரலாறு, றோமானிய கலை வரலாறு, பைசாண்டிய கலைவரலாறு, மத்திய கால கலை வரலாறு, மறுமலர்ச்சிக் கால கலை வரலாறு, நவீன கலை வரலாறு எனப்பாகுபடுத்திப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏறத்தாழ இதே வரலாற்று அணுகு முறையைச் சுவாமிகள் கையாளுகிறார். பண்டைய நாகரிகமான பாரசீகம், அசிரியும், பபிலோனியா ஆகியவற்றின் நாகரிகங்கள், கலைகள் எடுத்துக் கூறப்படுகின்றன.

‘எகிப்திய நாகரிகம்’ எனும் கட்டுரையில் எகிப்தியரின் பிரமிட்டுக்கள் பற்றிக் கூறுகிறார். அந்நாகரிக காலத்தை கி.மு. 3335 (கலியுக ஆரம்பத்திற்கு 234 வருடத்திற்குமுன்) எனக்கணிப்பிட்டு அக்காலத்தில் கட்டப்பட்ட Lopero Hounit Temple at the Head of the Lake இனை குளத்தலை முற்றத்துக் கோயில் என அழைத்து அக்கோயிலின் அழகை பிரமிட்டுடன் ஒப்பிடுகிறார்.

மொசப்படேமியாவில் நடைபெற்ற அகழ்வாராய்வின் போது கண்டெடுத்ததும், பாக்தாத் நகரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுமான யாழ்க்கருவி பற்றிக் குறிப்பிடுகிறார். இக்கருவி பின்னாளில் இவர் தமிழரின் பண்டைய யாழ்களை அமைக்கும் முயற்சிக்கு உந்துதலை அளித்திருக்கலாம். 1922ல் எகிப்தில் துட்டங்காமனின் பிரமிட் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டமை உலகக் கலை வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். அதனைத் தனது கட்டுரையிற் குறிப்பிடும் அடிகளார் அங்கு காணப்பட்ட அழகு பொருந்திய கருங்காலிக் கட்டில்களையும் நவமணி இழைத்த ஆபரணங்களையும்பற்றிக் கூறுகிறார்.

எகிப்தினையடுத்து கிரேக்க நாகரிகமும் கலை வளமும் கூறும் அடிகளார், கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சியாக உருவான றோம நாகரிகம் பற்றியும் மத்திய கால நாகரிகம் பற்றியும் குறிப்பிடுகிறார். இக்கட்டுரைகளில் இரண்டு அம்சங்களைக் காண முடிகிறது. ஒன்று இத்தகைய பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களையும் கலைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்தல். இன்னொன்று பழைய அசிரிய, சுமேரிய பபிலோனிய மக்களுடன் தமிழ் மக்களையும் இணைத்து சுமேரியர் - தமிழர் ஒற்றுமையைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தமிழரின் பண்டைய பாரம்பரியத்தைத் தமிழருக்கு உணர்த்துதல்.

அடிகளாரின் பிறப்புச் சாட்சிப்பத்திரம்


தமிழர்கள், உலகக் கலை வரலாற்றை, நாகரிகத்தை அறிய வேண்டும். பண்டைய நாகரிகங்களுடன் தாமும் தொடர்பு உடையோர் என்று அறிய வேண்டும், தமக்கென்று தனித்துவமான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய வேண்டும் என்ற நோக்கு அவருக்கு 20 வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. இந்ந நோக்கு அவரது முதிர்ந்த வயதுகளில் மேலும் வளர்ந்து முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. அம்முதிர்ச்சியின் உதாரணங்களாகத் திகழ்வனவே 1942ல் மதுரையில் இயற்றதமிழ் மாநாட்டுக்கு தலைமை தாங்கி, அவர் ஆற்றிய உரையும் 1947ல் அவர் வெளியிட்ட யாழ்நூலும்.

மேலை நாட்டவரது செல்வப் பெருக்கத்திற்கான காரணங்களை ஆராய்ந்து விபுலாநந்தர் அவர்களது ‘அரசியல் முறையும் புலநெறி வழக்கமும் கலை பயில்மையும், பொருள் செயல் வகையும்’ தான் அதற்குக் காரணம் என்று கூறி அவர்களின் கலை வரலாற்றை, நாகரிகவரலாற்றைத் தமிழருக்குணர்த்துவதன் மூலம் தமிழரையும் முன்னேற்றலாம் எனக் கருதினார்.

அந்நிய நாகரிகம் என்று ஐரோப்பியக் கலைகளை ஒதுக்கினா ரல்லர் அடிகள். அங்கிருந்து நல்லன பெற்று தமிழர் கலைகள் தழைக்க வேண்டும் என்ற கோட்பாடே விபுலாநந்தரின் கோட்பாடாயிற்று. பரந்த உலகப் பின்னணியில் தமிழர் கலைகளை இனம் காண்பதும் அதை வளர்ப்பதும் அவரது பிரதான கலை நோக்கம் எனலாம்.

சிற்பம், ஓவியம், கட்டடக்கலைகள் பற்றி அவர் கூறிச் செல்லும் கருத்துக்கள் இக்கலைகள் பால் அவருக்கிருந்த அறிவைக் காட்டும். வண்ணமும் வடிவும், ஐயமும் அழகும் என்ற கட்டுரைகள் இதற்குச் சான்றுகளாம். ஓவியத்தை இரசித்தல் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.

‘நவிலும் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும்

பயிலுந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையாளர்

தொடர்பு போலவும் பார்க்குந்தோறும் அறிவுடையோனுக்கு

உவகையளிக்கும் ஓவியமே அழகிய ஓவியம்”

வெறும் காட்சியாக மாத்திரம் ஓவியத்தை இரசிக்க முடியுமா? காட்சிக்குப் பின்னாலுள்ள ஓவியனின் உள்ளத்தைக் காண முயல வேண்டுமென்பது ஓவிய ரசிப்பின் இன்றைய கொள்கையாகும். இதுவே இந்திய மரபின் ரசக் கொள்கையுமாகும். ஐயமும் அழகும் என்ற வியாசத்தில் வரும் “காட்சியில் ஐயம் மிக்கது. ஐயமே உண்மைப் பொருளை உணர்த்தும்” என்ற கூற்றில் கலை ரசிப்பின் நவீன நோக்குகள் விபுலாநந்தரில் தொனிப்பதைக் காண முடிகிறது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோயில், சிகிரியாக் குகை, அமராவதி ஆகிய இடங்களிற் காணப்படும் சிற்பம், ஓவியம் பற்றி அடிகளார் குறித்துச் சொல்வது அவரது சிற்ப, ஓவிய ஈடுபாட்டிற்கு உதாரணங்களாகும். இவ்வகைச்சிற்ப. ஓவியங்களையும், அவற்றை ரசிக்கும் முறையினையும் தமிழ் மக்களுக்கு ஊட்டுதலும் அடிகளாரின் கலை நோக்கினுள் அடங்கும்.

(தொடரும்)

பேராசிரியர்

சி. மெளனகுரு
 

நன்றி: தினகரன் வாரமஞ்சரி, ஏப்ரல் 14, 2013
 

இசை பற்றிய

நோக்கும் பணியும் விபுலாநந்தர் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் தமிழிசை இயக்கம் வேகம் பெற்ற காலமாகும். தமிழிசை பற்றி நடந்த முக்கிய ஆராய்ச்சிகளின்

பெறுபேறுதான் விபுலாநந்தரின் யாழ்நூல். 1929ல் அண்ணாமலையில் ‘அண்ணாமலைச் செட்டியார் இசைக் கல்லூரியை நிறுவியதிலிருந்து இவ்வியக்கம் வேகம் பெறுகிறது. இதற்கு முன்னரேயே தமிழரின் இசை ஆராய்ச்சி ஆரம்பமாகி விட்டது. 1907ல் கர்ணாமிர்த சாகரத் திரட்டு எனும் நூலையும், 1917ல் கர்ணாமிர்த சாகரம் எனும் நூலையும் ஆபிரகாம் பண்டிதர் வெளியிடுகிறார். இந்தப் பின்னணியிலே தான் விபுலாநந்தரின் இசை ஆர்வமும் உருவாயிற்று. யாழ்நூலை உருவாக்க முன்னரேயே அவர் இசை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தமையை அவரது இசை பற்றிய கட்டுரைகள் உணர்த்துகின்றன. 1940 இலிருந்து அவரது முழு நோக்கும் இசையின் பாற்திரும்பியிருக்க வேண்டும். வாக்கியம் (1942), சங்கீத பாரிஜாதம் (1942), நட்டபாடைப் பண்ணின் எட்டுக் கட்டளைகள் (1942), பாரிஜாத வீணை (1944), நீரரமகளிர் இன்னிசைப்பாடல், பண்ணும் திறனும் குழலும் யாழும், எண்ணும் இசையும், பாலைத்திரிபு சுருதிவீணை, இயலிசை நாடகம் போன்ற அவரது கட்டுரைகள் அவர் 1940 இலிருந்து இசைபற்றிச் சிந்தித்தமைக்கு உதாரணங்களாகும். இக்கட்டுரைக ளினூடாக வளர்ந்து வந்த இசை பற்றிய அவர் கருத்தே யாழ் நூலாக முழுமை பெற்றிருக்க வேண்டும்.

யாழ் நூல்

யாழ்நூல் பற்றிப் பல அறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். எனினும் முறையான மதிப்பீடு ஒன்றினை யாரும் இதுவரை செய்ய முயன்றாரில்லை. அடிகளார் மீது மற்றோர் கொண்டிருந்த மதிப்பும், பக்தியும் புற நிலையான ஆய்வுக்குத் தடையாக அமைந்திருக்கலாம். அல்லது இசை ஆய்வு ஒரு துறையாக இன்னும் தமிழரிடையே வளராமை ஒரு காரணமாயிருக்கலாம்.

யாழ்நூலைப் புரிந்துகொள்ளமூன்று வகை அறிவு, தேவைப் படுகிறது. அவையாவன: இசை அறிவு, கணித அறிவு, தமிழறிவு.

இசையைக் கணித மொழியில் விளக்க முனைந்த விபுலாநந்த அடிகளாரின் தமிழிசைக்கான பங்களிப்பு இசைக் கணிதமே எனலாம். இவ் யாழ் நூலில் அடிகளாரின் தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும், விஞ்ஞான (கணித) புலமையும், சங்கீதப் புலமையும் சங்கமிப்பதனைக் காணலாம்.

சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகா ரத்தையும் தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம் பரியத்தைத் தொடர்ச்சியாக இனங்காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், தேவராவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப்பியலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளை துணையாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோடயாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதீகவியலுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப் புக்கள் கூறப்பட்டு ஒலிகள் அளக் கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற்றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.

பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழா சிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்துரைக்கிறார் அடிகளார்.

* பேரி யாழ் (மலைபடு கடா அத்துட் கூறப்பெற்றது)

* மகர யாழ் (வருணன் ஊர்தி)

* பத்தர், கோடு, வறுவாய்

* ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த யாழ்க் கருவி

* மகர யாழ் (காமன் கொடி)

* சீறி யாழ்

* வில் யாழ்

* சகோட யாழ்

* மகர வெல்கொடி

யாழ் நூலில் குறிப்பிடப்படும் யாழ்களில் சில

பண்ணியல் எனும் அதிகாரத்தில் பண்களைப்பற்றிய தன் கருத்துக்களை முன் வைக்கின்றார். பிங்கலந்தை, சேந்தன் திவா கரம், சூடாமணி நிகண்டு ஆகிய நூல்களில் நின்றும் சூத்திரங்கள் காட்டப்படுகின்றன. நூற்று மூன்று பண்களைக் குறிப்பிட்டு அவற்றில் பாலை நிலைகளைச் சுருதி வீணையிலமைத்துக் காட்டும் முயற்சி இவ்வதிகாரத்தில் மேற்கொள் ளப்படுகிறது. இவ்வதிகாரத்தில் பழந்தமிழிசை மரபிற்கும் வட நாட்டிசை மரபிற்குமிடையே அமைந்த தொடர்பும் விளக்கப்படுகிறது. தேவாரவியல் எனும் அதிகாரத்தில் 4ம் திருமுறைக்கு யாப்பமைதி கூறப்படுகின்றது. தேவாரப் பண்ணின் உருவங்கள் ஆராயப்படுகின்றன. இந்தளம், காந்தாரபஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலாகிய பண்கள் பற்றிக் கூறப்படுகின்றன. ஒழிபியலில் கணிதத்திற்கும் இசைக்கு முள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. இசைக்கணிதம் இதில் வெளிப்படுத் தப்படுகிறது. அத்தோடு இவ்வியலில் குடுமியா மலை இசைக் கல் வெட்டுப் பற்றி விளக்குவதுடன் தமிழிசையின் சுருக்கமான வரலாறும் உரைக்கப்ப டுகிறது. குடுமியாமலை இசைக்கல் வெட்டு தமிழிசை பற்றியது என்று முதலில் விளக்க மளித்தவர் விபுலா நந்த அடிகளே என்று பேராசிரியை ஞானா குலேந்திரன் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட் டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத் தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.

01. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசையையும் வெளிக்கொணர்வதும்,

02. தமிழிசை வரலாற்றை விளக்குவதும்,

03. இசை ஆராய்ச்சிக்கு இன்றிய மையாத கணக்கு முறை களைக் கணித மூலம் விளக்குவதும்,

இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

தமிழரின் தனித்துவம் பற்றிய நோக்கைக் கொண்டிருந்த அடிகளார் தமிழரின் தனித்துவம் எனக் கருதப்பட்ட பண்ணிசையை வெளிக்கொணர்ந்த மையும் பழைய இசைக் கருவிகளை இலக்கிய உதவி கொண்டு மீளருவாக்கம் செய்தமையும் தமிழ் இசைக்குச் செய்த பணிகளாகும்.

பேராசிரியர்

சி. மெளனகுரு

நன்றி: தினகரன் வாரமஞ்சரி, ஏப்ரல் 21, 2013

 


2013/4/6 Sri Sritharan <ksth...@hotmail.com>

K. Loganathan

unread,
Apr 20, 2013, 11:05:06 PM4/20/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

மிக்க நன்றி. அடிகளாரின் 'யாழ் நூல்;' பற்றி கேள்விப் பட்டிருக்கின்றேன் ஆனால் பார்த்ததில்லை படித்ததில்லை,  அது இருக்க கீழே வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன

//இக்கட்டுரைகளில் இரண்டு அம்சங்களைக் காண முடிகிறது. ஒன்று இத்தகைய பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களையும் கலைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்தல். இன்னொன்று பழைய அசிரிய, சுமேரிய பபிலோனிய மக்களுடன் தமிழ் மக்களையும் இணைத்து சுமேரியர் - தமிழர் ஒற்றுமையைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தமிழரின் பண்டைய பாரம்பரியத்தைத் தமிழருக்கு உணர்த்துதல்.//

சுமேரிய-தமிழர் ஒற்றுமிகளை அடிகளார் பேசியுள்ளது உவப்பைத் தருகின்றது,. என்னைப் பொருத்த வரையில் சுமேருத் தமிழர்கள் முதற் சங்கத் தமிழர்கள் என்றே நினைக்கின்றேன்.

இப்பொழுது  மின் தமிழி வல்லமை போன்ற மடலாடு குழுமங்களிலும் இது தொடர்பான எனது ஆய்வினை பதிவு செய்த வண்ணம் இருக்கின்றேன்.

மேலும் விரைவில் தமிழக பலகலைகள் இந்த ஆய்வில் தீவிரமாக இறங்கவும் செய்யலாம். அந்த நன்னாளை எதிர்ப்பார்த்த  வண்ணம் இருக்கின்றேன்

உலகன்


2013/4/21 Sri Sritharan <ksth...@hotmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Sri Sritharan

unread,
Apr 21, 2013, 3:03:58 AM4/21/13
to மின்தமிழ்
 
உலகன் ஐயா வணக்கம்

சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூல் நூலக இணையத்தளத்தில் உள்ளது. அங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
 
http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D
 
தமிழ்.நெட் காலத்தில் இருந்து இணைய மின்குழுமங்களில் எழுதி வரும் தங்களை இப்போது மின்தமிழிலும் காண்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

அன்புடன்
சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com

 

Date: Sun, 21 Apr 2013 11:05:06 +0800
Subject: Re: [MinTamil] சுவாமி விபுலானந்தர்
From: k.ula...@gmail.com
To: mint...@googlegroups.com; vall...@googlegroups.com; meyk...@yahoogroups.com; tolkaa...@egroups.com

Subashini Tremmel

unread,
Apr 21, 2013, 12:10:48 PM4/21/13
to மின்தமிழ், Subashini Tremmel
முன்னரே சுவாமி விபுலானந்தர் பற்றி வாசித்திருந்தாலும் மீண்டும் வாசிப்பதற்கு அருமையாக அமைந்திருந்தது இக்கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

சுபா


2013/4/7 Sri Sritharan <ksth...@hotmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Innamburan S.Soundararajan

unread,
Apr 22, 2013, 7:29:41 AM4/22/13
to vall...@googlegroups.com, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
பூர்வாசிரமத்து மயில் வாஹனனும், பெரிய கோயில் வாத்தியாரும் ஆன சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் பாதார விந்தங்களில், 'அன்றொரு நாள் ஜூலை 19, 2013' இழையை, மீள்பதிவு செய்து, சமர்ப்பிக்கிறேன்.
இன்னம்பூரான்
22 04 2013
*

அன்றொரு நாள்: ஜூலை 19

     இன்று, தமிழுக்கும், இசைக்கும், சமுதாயத்திற்கும், கல்வித்துறைக்கும், மொழிகளுக்கும், இடைவிடாமல் தன் வாழ்நாட்கள் முழுதும் தொண்டு செய்த பெரிய கோயில் வாத்தியார் அமரரான தினம்: 1947. முற்றிலும் பற்றற்ற வாழ்நெறியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவராற்றிய தொண்டுகளில் எதை முன்வைப்பது என்ற ஐயம் தெளிய நேரம் மிக ஆனது. அவராற்றிய தொண்டுகள் யாவற்றையுமே முன்வைத்ததாக கருதுங்கள் என, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவருடைய இயற்பெயர்: மயில்வாஹனன். மார்ச் 17, 1892 அன்று காரைத்தீவில் ( ஈழத்தின் கிழக்குக் கோடி) பிறந்தவர்.லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரி. ஏற்கனவே,மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக, 1931 முதல், மூன்றாண்டுகளும், பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். தமிழினத்தைத் தட்டியெழுப்பும் பணியை, கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவி, அவை மூலம் செயலாற்றினார்."செந்தமிழ்" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். 

    இந்திய சேரிப்புறங்களில் பரிவுடன், கனிவுடன், பழகி தொண்டுகள் பலவற்றை செய்த, இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரை, பாமர மக்கள் "பெரியகோயில் வாத்தியார்" என்று உறவு கொண்டாடியது, பொருத்தமே.  சிந்தனையாலும், நடத்தையாலும், ஒரு சராசரி அறிஞராக இயங்காத மாமனிதரிவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதுடன், நலிவுற்ற மக்களிடையே சென்று, அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறி, ஏழை பங்காளனாகத் திகழ்ந்தார், இந்த துறவி. ஆம்.


     ஆம். மட்டக்களப்பு உப்போடையில் இவர் நிறுவிய சிவானந்த வித்தியாலயம், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தா அவர்களின் ஞாபகார்த்தமாக. 1922 இல் சென்னை ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு  அம்மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு "இராமகிருஷ்ண விஜயம்" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார், நமது "பெரியகோயில் வாத்தியார்" ஆன மயில்வாஹனன். 


     திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், தலைநகர் கொழும்பில் விவேகானந்த வித்தியாலயம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆசிரமங்களை நிறுவிய அருட்டிரு விபுலாநந்த அடிகளார் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். 


     அடிகளாரின் இலக்கியப்பணி பெரிது. அவர்களின் மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். அதை இணைய தளத்தில் படிக்கலாம். அவருடைய 127 இலக்கிய ஆக்கங்கள் தொகுப்பு நூலாக, மூன்று பகுதிகளில் உள்ளன. 1937 ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தர் நிறுவிய மாயாவதி ஆசிரமத்தில் தங்கி, அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். என் பாக்கியம், என் தந்தை அவற்றை வரவழைத்ததால், சிறு வயதில், அவற்றை, புரிந்தும், புரியாமலும், படித்திருக்கிறேன். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

     

     அடிகளாரின் இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விவரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் "யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது. 


     அதற்கு அடுத்த மாதமே 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள், அவர் விண்ணுலகம் அடைந்தார். சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட 


"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"


என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.


இன்னம்பூரான்

19 07 2011

7205‑28547‑vipula.gif

உசாத்துணை:

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலர் - PDF வடிவில் 

(தந்துதவியவர்: கனக சிறீதரன்)

யாழ் நூல் அரங்கேறிய 60 ஆண்டு நினைவில் பி.பி.சி தமிழோசையின் பெட்டக நிகழ்ச்சி

sk natarajan

unread,
Apr 22, 2013, 9:45:25 PM4/22/13
to vall...@googlegroups.com, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
பெரிய கோவில் வாத்தியார் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள உதவி புரிந்தமைக்கு நன்றி ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/22 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Sri Sritharan

unread,
Apr 27, 2013, 7:52:02 PM4/27/13
to மின்தமிழ்

சுவாமி விபுலானந்தர்


நாடகக் கலை பற்றிய நோக்கும் பணிகளும்

18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் படித்த மத்திய தர வர்க்கத்தினருக்கு ஊடாக ஐரோப்பிய நாடக மரபு தமிழுக்கு அறிமுகமாகின்றது. ஐரோப்பிய நாடகங்களை நேரடியாகவும் தழுவியும் படித்தவர்கள் அறிமுகம் செய்தனர். விபுலாநந்த அடிகள் சேக்ஸ்பியரை ‘மதங்கசூளாமணி’ மூலம் 1926ல் அறிமுகம் செய்யும் முன்னரேயே சேக்ஸ்பியர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டோ தழுவப்பட்டோ அறிமுகப்படுத்தப்பட்டு விட்டார்கள். இம் முயற்சிகளை 1880 இலிருந்து ஆரம்பித்து விட்டனர். 1882ல் ‘ரெம்பஸ்ற்’ காற்றுமழை என்ற பெயரில் விசுவநாதன் பிள்ளையால் மொழி பெயர்க்கப்படுகிறது.

இதே காலகட்டத்தில் இலங்கையிலும் தமிழ் நாடகத் துறையில் படித்த மத்திய தரவர்க்கத்தினரின் பங்களிப்பு ஆரம்பமாகிவிடுகிறது. 1931ல் கொழும்பில் லங்கா சுபோதசபை ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முக்கியஸ்தர் கலையரசு சொர்ண லிங்கமாவார். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை இவர் மேடையிட்டார். அவற்றுட் பல சேக்ஸ்பியரின் நாடகங்களின் தழுவல்களாகும். 1914ல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி சபையும் 1920ல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபையும் ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு சுகிர்த விலாச வித்துவான் சரவண முத்தன் விபுலாந்தரின் நெருங்கிய நண்பர். ஐரோப்பிய நாடகங்களும் சிறப்பாக கேக்ஸ்பியரின் நாடகங்களும் வடமொழி நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமான ஒரு பின்னணியில் மத்திய தரவர்க்கத்தவர்களும் கற்றோரும் இப்பணியிலீடுபட்ட காலையில் குறிப்பாக இந்நாடகங்கள் தமிழ் நாட்டில் பம்மல் சம்பந்த முதிலியார் போன்றோராலும் ஈழத்தில் அவரது ஏகலைவச் சீடரான கலையரசு சொர்ணலிங்கம் போன்றோராலும் மேடையிடப்பட்ட காலத்திலே தான் மத்திய தர வகுப்பினரும் ஆங்கில வடமொழி அறிவு பெற்றவருமான விபுலாநந்தர் மதங்கசூளாமணி எழுதுகிறார்.

விபுலாநந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற நாடகம் பற்றிய தமது நோக்கினை மதங்கசூளாமணியின் முகவுரையிற் குறிப்பிடுகிறார்.

கல்வியறிவில்லாதார் கண்ட கண்டவாறு நாடகங்களை அமைக்க முற்பட்டு நாடகத்துக்கே ஓர் இழிந்த பெயரையுண்டாக்கி விட்டனர்.

என்று கூறும் அவர் அக்காலத்தில் நாடகம் எழுதி, நாடகமாடிய பலரைப் போலி நாடகக் கவிகள் என்கிறார். போலி நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு போலி வைத்தியனால் நாட்டிற்கு விளைகின்ற கேட்டினைப் பார்க்கப் பல்லாயிரம் மடங்கு பெரிது என்று கூறுமவர், நாடகத்தை வெறுத்தொதுக்காது அதனை ஆராய்ந்து நல்ல நாடகங்களை அமைப்பது கற்ற வல்லோர் கடமை என்கிறார். மேலும்,

‘புதுநாடகமமைப்பதற்கு முற்படும் கவிஞருக்கு முறையறிந்த

மைப்பதற்கு உதவியாகிய கருவி நூலும் இல்லை”

என்கிறார். எனவே அவர் மதங்கசூளாமணி எழுத நேர்ந்தமைக்கான காரணங்கள் எமக்குத் தெளிவாகின்றன. போலி நாடகங்களை நீக்கவும் நல்ல நாடகங்களை அமைக்கவும் மக்கள் அதனால் பயன்பெறவும் நினைத்து அடிகள் கற்ற வல்லாருக்கு நாடகம் பற்றி அறிவூட்ட எண்ணி இந்நூலை எழுதுகிறார்.

மன்பதைக்குத் தொண்டு செய்தல் என்ற அவர் நோக்கு இங்கு தெரிகிறது. அனைத்து அறிவும் மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய அவர் அங்கு நாடகத்துறை மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என எண்ணுகிறார்.

‘நாடகவியலை ஆராய்கின்ற இச்சிற்றாராய்ச்சி’ என்றே தன் நூலைப் பற்றி விபுலாநந்தர் குறிப்பிடுகிறார். ‘விபுலாநந்தர் கூத்து (நாடக) தமிழில் இறவாப் புகழ் படைத்து நூல்கள் பல உருவாக்கினார்’ என்று பலர் கூறுவதைப் போலல்லாமல் நாடகத்தை ஆராயவே அவர் நூல் இயற்றினார். அவர் பல நாடகங்கள் எழுதியவருமன்று: தம் காலத்தில் வாழ்ந்த சம்பந்த முதலியார், சொர்ணலிங்கம் போன்று நாடகம் நடித்தவருமன்று; நாடக ஆராய்ச்சியாளர் மாத்திரமே. இக்கால நாடகக்காரர்களுடன் நாடக எழுத்தாளர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் கிடைப்பின் பிரயோசனமாகவிருக்கும்.

மதங்க சூளாமணி

செந்தமிழ் இதழில் தொடராக வந்து பின்னர் நூலுருப் பெற்ற மதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல்.

உறுப்பியலில் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரையினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத் தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.

இவ்வியலில் நாடக உறுப்புகள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு (Structure) என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டி னடியாக எடுத்துக் கூறப்படுகிறது.

இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின்நாடகங்களில் Lovers Labours Lost, King Lear, Romeo Juliet, Timon of Athens, The Tempest, Macbeth, Merchant of Venice, Julias Ceaser, Titus Andronics, As you like it, Thr Winters Tale Twelfth night ஆகிய 12 நாடங்களும் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந் நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம் இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவுநிலையாகிய ஒன்பது சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்.

இதற்காக அவர் 12 நாடகங்களையும் முற்றாக மொழி பெயர்த்தார் அல்லர். விபுலாநந்தர் சேக்ஸ்பிரியரின் நாடகங்களை மொழி பெயர்த்தார் என்று பலர் தெரியாது மொழிகிறார்கள். இந்நாடகங்களை அறிமுகம் செய்யும் போது தமது ஆராய்வுக்குத் தேவையான பகுதிகளை மாத்திரமே அவர் மொழி பெயர்த்தார் என்பதனை நாம் மனங்கொள்ளவேண்டும்.

இப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விஸ்தாரமாகக் காட்டிச்செல்லும் அவர் சிலவற்றின் கதைகளை மாத்திரமே கூறிச்செல்கிறார். அது அவரது முதற்கட்டச் சிந்தனைகள் மாத்திரமே போல் தெரிகிறது. இதனை விரிவுற எழுதும் எண்ணம் அவருக்கிருந்தமையை அவரது முன்னுரை காட்டுகிறது.

ஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தனஞ்சயனார் பரத நூல், நாட்டிய சாஸ்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகம். இதனால் வடமொழி நாடக இலக்கணங்களை ஒழிபியலில் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறார் எனலாம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக்கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல் மற்றும் அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.

இந்நூலை அடிப்படையாகக் கொண்டு விபுலாநந்தரின் நாடகப் பணியை நோக்குவோம். முதலாவதாக, தமிழில் நல்ல நாடகங்கள் தோன்ற வேண்டுமென் பதே அவரது முக்கிய நோக்கமாகும். அந்நாடகங்கள் நாடக இலக்கணங்கள் அமையப் பெற்றனவாகவும், மேற்கு நாட்டின் மதங்கசூளாமணியான (மதங்கர்- நாடகக்காரர், சூளாமணி - சிறந்தவர்) சேக்ஸ்பியர் நாடகங்கள் போல் அமைய வேண்டும் எனவும் அவர் ஆசையுற்றிருக்க வேண்டும். தம் காலத்தில் நடைபெற்ற அல்லது எழுதப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங்களும் சரியானபடி மொழி பெயர்க்கப்படவோ, நடிக்கப்படவோ இல்லை என்பது அவர் அபிப்பிராயம் போலும், மேற்குநாட்டு நாடகங்களை - சிறப்பாக சேக்ஸ்பியர் நாடகங்களை - தமிழ்நாடக, இந்திய நாடக இலக்கண முடிவுகளுக்குமைய ஆராய்ந்தமை சிந்தித்தற்குரியது. ஆராயலாமோ என்பதும் ஆராய்விற்குரியது.

இரண்டாவதாக, தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலாநந்தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமுகம் செய்வதுடன் வடமொழி நாடகமரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்பத் தமிழ் நாடகமரபையும் காட்டுகிறார். ஒருவகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந்ததென்பதை - அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாயிருந்திருக்கலாம். ஆனால் அத்தனித்துவம் வெறும் தனித்துவமாயில் லாது உலகின் வளர்ச்சியினை உள்வாங்கி வளரும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே அவர் கருத்து. தமிழ்த் தனித்துவம் - உலகளாவிய சிந்தனை என்ற இருமுரண்களையும் இணைத்து ஒன்றிலிருந்து ஒன்று பெற்று, சமரசம் கண்டு வளர வேண்டும் என்ற அவர் எண்ணமும் இங்கு தெரிகிறது.

 

 

மூன்றாவதாக, தமிழ் நாடகம் எழுதுவது, நடிப்பதை விடத்தமிழ் நாடக ஆராய்ச்சியே அவரது பிரதான நோக்குப் போலும். இன்று பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடகமரபு, ஆசிய நாடக மரபு பற்றிய மாணாக்கர் பயில்கின்றனர். இந்நிலையில் இற்றைக்கு 70 வரருடங்களுக்கு முன்னரே இது பற்றிச் சிந்தித்து விபுலாநந்தர் தூர நோக்குடைய மேதையாகக் காட்சியளிப்பதுடன், அவர் காலத்தில் நாடகத்துறையில் ஈடுபட்டவர் களிடமிருந்து நாடக ஆராய்ச்சியாளர் என்ற வகையில் வேறு பட்டும் காணப்படுகிறார்.

 

சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க நாடகங்களையும் ஆட்டுப் பாடலிலிருந்து அது தோன்றியமையையும் இணைத்து ஆட்டுப்பாடலைத் தமிழிரின் பண்டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல் பின்னோக்கிப் பார்க்கையில் புலப்படுத்துகிறது.

 
தொகுத்துக் கூறின் இசையில் தமிழ்த் தனித்துவம் கண்டது போல நாடகத்திலும் தமிழ்த் தனித்துவம் காணல், அதே நேரம் உலக, சமஸ்கிருத நாடக வளர்ச்சிக்கியைய எம்மை வளர்த்தல், நாடகத்தை ஆராய்ச்சி ரீதியாகக் கற்றல், நாடக அறிவு பெறல், இந்த அறிவை மன்பதைக்குப் பயன் தரக் கூடிய விதத்தில் பிரயோகித்தல் என்பன நாடகக் கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்குகளாகும்.

பேராசிரியர் சி. மௌனகுரு
நன்றி: தினகரன் வாரமஞ்சரி 28 ஏப்ரல் 2013
 


Date: Sun, 21 Apr 2013 18:10:48 +0200
Subject: Re: [MinTamil] சுவாமி விபுலானந்தர்
From: ksuba...@gmail.com
To: mint...@googlegroups.com
CC: ksuba...@gmail.com

K. Loganathan

unread,
Apr 27, 2013, 9:35:03 PM4/27/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

மிக்க நன்றி. நல்ல பல தகவல்களைக் கொண்ட  இடுகை. அடிகளாரின்  'மதங்க சூளாவணி ' பற்றி இன்று தான் அறிய வருகின்றேன். என்னிடம் 'தசரூபகம்' இருக்கின்றது.

பல ஆண்டுகட்கு முன்பு Gadamer எனும் ஜர்மானியரின் அற்புதமான Truth and Method  என்ற நூலைப் படித்தலிருந்து நாடகங்களில் ஆழ்ந்து கிடக்கும் தத்துவ உண்மைகளை  அறிந்து தெளிய வேண்டும் என்றும் அப்படிப்பட்ட அறிவு  இறைவனின் திருக்கூத்து தரிசனம் காண உதவும் என்றும் நினைக்கத் தொடங்கினேன் திருமூலர் திருகூத்துத் தொடர்பான பாடல்கட்கும் உரை எழுதி மகிழ்ந்தேன்

உலகன்


2013/4/28 Sri Sritharan <ksth...@hotmail.com>

--

Innamburan S.Soundararajan

unread,
Apr 28, 2013, 5:36:50 AM4/28/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அடிகளாருக்கு என் சமர்ப்பணமாக: ஜூலை 19, 2012
*

அன்றொரு நாள்: ஜூலை 19

     இன்று, தமிழுக்கும், இசைக்கும், சமுதாயத்திற்கும், கல்வித்துறைக்கும், மொழிகளுக்கும், இடைவிடாமல் தன் வாழ்நாட்கள் முழுதும் தொண்டு செய்த பெரிய கோயில் வாத்தியார் அமரரான தினம்: 1947. முற்றிலும் பற்றற்ற வாழ்நெறியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவராற்றிய தொண்டுகளில் எதை முன்வைப்பது என்ற ஐயம் தெளிய நேரம் மிக ஆனது. அவராற்றிய தொண்டுகள் யாவற்றையுமே முன்வைத்ததாக கருதுங்கள் என, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவருடைய இயற்பெயர்: மயில்வாஹனன். மார்ச் 17, 1892 அன்று காரைத்தீவில் ( ஈழத்தின் கிழக்குக் கோடி) பிறந்தவர்.லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரி. ஏற்கனவே,மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக, 1931 முதல், மூன்றாண்டுகளும், பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். தமிழினத்தைத் தட்டியெழுப்பும் பணியை, கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவி, அவை மூலம் செயலாற்றினார்."செந்தமிழ்" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். 

    இந்திய சேரிப்புறங்களில் பரிவுடன், கனிவுடன், பழகி தொண்டுகள் பலவற்றை செய்த, இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரை, பாமர மக்கள் "பெரியகோயில் வாத்தியார்" என்று உறவு கொண்டாடியது, பொருத்தமே.  சிந்தனையாலும், நடத்தையாலும், ஒரு சராசரி அறிஞராக இயங்காத மாமனிதரிவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதுடன், நலிவுற்ற மக்களிடையே சென்று, அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறி, ஏழை பங்காளனாகத் திகழ்ந்தார், இந்த துறவி. ஆம்.


     ஆம். மட்டக்களப்பு உப்போடையில் இவர் நிறுவிய சிவானந்த வித்தியாலயம், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தா அவர்களின் ஞாபகார்த்தமாக. 1922 இல் சென்னை ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு  அம்மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு "இராமகிருஷ்ண விஜயம்" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார், நமது "பெரியகோயில் வாத்தியார்" ஆன மயில்வாஹனன். 


     திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், தலைநகர் கொழும்பில் விவேகானந்த வித்தியாலயம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆசிரமங்களை நிறுவிய அருட்டிரு விபுலாநந்த அடிகளார் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். 


     அடிகளாரின் இலக்கியப்பணி பெரிது. அவர்களின் மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். அதை இணைய தளத்தில் படிக்கலாம். அவருடைய 127 இலக்கிய ஆக்கங்கள் தொகுப்பு நூலாக, மூன்று பகுதிகளில் உள்ளன. 1937 ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தர் நிறுவிய மாயாவதி ஆசிரமத்தில் தங்கி, அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். என் பாக்கியம், என் தந்தை அவற்றை வரவழைத்ததால், சிறு வயதில், அவற்றை, புரிந்தும், புரியாமலும், படித்திருக்கிறேன். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

     

     அடிகளாரின் இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விவரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் "யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது. 


     அதற்கு அடுத்த மாதமே 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள், அவர் விண்ணுலகம் அடைந்தார். சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட 


"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"


என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.


இன்னம்பூரான்

19 07 2011

coral shree <cor...@gmail.com>
7/19/11
to me
coral shree to thamizhvaasal
show details 5:41 PM (0 minutes ago)
அன்பின் ஐயா,

//"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"//


எத்துனை அருமையான, பொருத்தமான வரிகள்!........முற்றிலும் புதிய தகவல் ஐயா. இது போன்று குடத்திலிட்ட விளக்காக எத்துனை கவிஞர்கள்! கவிதைகள்! தமிழ் ஆர்வலர்கள்! தங்கள் பணி ஓங்குக ஐயா. நன்றி.

- Show quoted text -
--
Geetha Sambasivam <geetha...@gmail.com>
7/19/11
to mintamil
விபுலாநந்தரைப் பற்றிய விபரமான, விரிவான செய்திகளுக்கு நன்றி.  அவரைக் குறித்த தகவல்கள் யாவுமே எனக்குப் புதிது.  நன்றி.

2011/7/19 Innamburan Innamburan <innam...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages