ஆத்ம சொரூபம் என்றால் என்ன?

488 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jan 19, 2014, 10:32:46 AM1/19/14
to மின்தமிழ்
இந்திய சமயங்களில் பெரும்பான்மை ஆன்மா இருப்பதை ஏற்றுக்கொள்கின்றன. ஆன்ம சொரூபம் என்ன? உயிர் உடலை விட்டுப் போன பின் நம் உறவுகள் யாவை? அங்கு நிகழ்வது என்ன? என்பதை விளக்கவே உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றியுள்ளன என்று தெரிகிறது. என் அம்மா போன்று விளங்கிய என் சகோதரி இறந்தது என்னை மிகவும் பாதித்து இந்த விஷயத்தைப் பற்றி அதிக அக்கறை கொள்ள வைத்தது. இச்சமயத்தில்தான் எனக்கு நத்தார் பரிசாக நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏபன் அலெக்ஸாண்டர் எழுதிய ‘விண்ணக வாழ்விற்கு சாட்சி’ எனும் நூல் கிடைத்தது. பசித்தவனுக்கு விருந்து போல் அமைந்தது. வைணவ சம்பிரதாயத்தில் கொஞ்சம் அறிமுகமுள்ள எனக்கு இந்த நூல் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களை தொட்டுச் செல்வதை அறியமுடிந்தது. திருக்கோஷ்டியூர் நம்பிகள் இராமானுஜரைப் பார்த்து, “நான் செத்த பின் வா!” என்றாராம். “நான்” எப்படி உயிரோடு இருக்கும் போது “சாகும்”? இந்த நூல் தெளிவாக, அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் வினாவாக இப்பிரபஞ்சப் பேரறிவு நிற்கிறது. அதை எப்படி நிரூபிப்பது? ஏபன் அலெக்ஸாண்டர் நிரூபிக்கும் வழிகளைக் கண்டுள்ளார். ஆன்மீகம், அறிவியலும் எதிர்முனைகள் அல்ல. ஒன்றையொன்று அறிந்து கொள்ள இயலும் எனும் நம்பிக்கைதரும் புத்தகமிது.

http://www.amazon.com/Proof-Heaven-Neurosurgeons-Journey-Afterlife-ebook/dp/B008AK8FHM

ஏபன் அலெக்ஸாண்டரின் நேர்காணல்Afterlife TV with Bob Olson . எனும் நிகழ்வாக இங்கு பதிவாகியுள்ளது. ஆர்வமுள்ளோருக்கு உதவும்.


நன்றி: ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.

நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Mohanarangan V Srirangam

unread,
Jan 19, 2014, 10:36:31 AM1/19/14
to min tamil
Excellent Kannan.! 

எனக்கு ஏன் ஐயா நன்றி? உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் சொன்னதால்தான் வீடியோ இருக்கிறதா என்று தேடினேன். 

இந்த ஆசிரியரை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா. 

ஆத்ம நிலையை விஞ்ஞானம் நெருங்கும் மிக அரிய தருணம். 

பகவான் ஸ்ரீ ரமணரின் விளக்கம் மிகக் கச்சிதமாகப் பொருந்துவதைப் பார்க்கிறேன். 


***



2014/1/19 N. Kannan <navan...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Mohanarangan V Srirangam

unread,
Jan 20, 2014, 12:57:49 PM1/20/14
to min tamil
நோயால் தாக்கப்பட்டு மூளையின் தான் என்னும் பதிவுகள் அனைத்தும் அற்றுப் போன நிலைக்கு வந்திருக்கிறார். மூளையே இயங்காமல் போன ஒரு வார காலம். மருத்துவ ரீதியாக இறப்பு என்னும் நிலையில். இனி திரும்பி வருதல் இல்லை என்று டாக்டர்கள், உறவினர் என்று அனைத்து தரப்பினரும் முடிவே கட்டிய நிலையில் திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்து, (அவருடைய தங்கையின் வார்த்தையின் படி, like a little Buddha) அனைவருக்கும் அருள் ததும்ப பார்வையால் ஆமோதிப்பு காட்டியிருக்கிறார் நரம்பியலில் பெரிய மருத்துவரான ஈபன் அலக்ஸாண்டர். அந்த ஒரு வார காலம் தம்முடைய நிலை, அனுபவம் என்பது மூளையின் இயக்கம் இன்றி நடைபெற்றது, எத்தகைய இயல்பு கொண்டது என்பதை வர்ணிக்கிறார். வர்ணனையும் விளக்கமுமாக அவர் எழுதிய நூலும், இந்த வீடியோவில் அவர் பேச்சும். 

நரம்பியல் மருத்துவரின் தமக்கு நேர்ந்த எதிர்பாராத அனுபவத்தின் நேர் சாட்சியால் வந்த முடிவு - 

ஆத்மா என்பது இருக்கிறது. உடலின் தொடர்பு இல்லாமலேயே. ஆத்மாவிற்கு இறப்பு இல்லை. அந்த நிலை பூரணமானது. அளவற்ற ஆனந்த நிலையானது. எல்லையற்ற அன்பே உருவானது. அந்தப் பெருநிலையின் மிகச்சிறிய எல்லைக்குட்பட்ட வடிகட்டிய குருட்டு நிலையே மூளையால் நாம் உணர்ந்து இயங்கும் இந்த உயிர் வாழ்க்கை நிலை.

***



2014/1/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 20, 2014, 3:11:21 PM1/20/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014/1/19 N. Kannan <navan...@gmail.com>

இந்திய சமயங்களில் பெரும்பான்மை ஆன்மா இருப்பதை ஏற்றுக்கொள்கின்றன. ஆன்ம சொரூபம் என்ன? உயிர் உடலை விட்டுப் போன பின் நம் உறவுகள் யாவை? அங்கு நிகழ்வது என்ன? என்பதை விளக்கவே உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றியுள்ளன என்று தெரிகிறது. என் அம்மா போன்று விளங்கிய என் சகோதரி இறந்தது என்னை மிகவும் பாதித்து இந்த விஷயத்தைப் பற்றி அதிக அக்கறை கொள்ள வைத்தது. இச்சமயத்தில்தான் எனக்கு நத்தார் பரிசாக நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏபன் அலெக்ஸாண்டர் எழுதிய ‘விண்ணக வாழ்விற்கு சாட்சி’ எனும் நூல் கிடைத்தது. பசித்தவனுக்கு விருந்து போல் அமைந்தது. வைணவ சம்பிரதாயத்தில் கொஞ்சம் அறிமுகமுள்ள எனக்கு இந்த நூல் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களை தொட்டுச் செல்வதை அறியமுடிந்தது. திருக்கோஷ்டியூர் நம்பிகள் இராமானுஜரைப் பார்த்து, “நான் செத்த பின் வா!” என்றாராம். “நான்” எப்படி உயிரோடு இருக்கும் போது “சாகும்”? இந்த நூல் தெளிவாக, அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் வினாவாக இப்பிரபஞ்சப் பேரறிவு நிற்கிறது. அதை எப்படி நிரூபிப்பது? ஏபன் அலெக்ஸாண்டர் நிரூபிக்கும் வழிகளைக் கண்டுள்ளார். ஆன்மீகம், அறிவியலும் எதிர்முனைகள் அல்ல. ஒன்றையொன்று அறிந்து கொள்ள இயலும் எனும் நம்பிக்கைதரும் புத்தகமிது.

http://www.amazon.com/Proof-Heaven-Neurosurgeons-Journey-Afterlife-ebook/dp/B008AK8FHM

ஏபன் அலெக்ஸாண்டரின் நேர்காணல்Afterlife TV with Bob Olson . எனும் நிகழ்வாக இங்கு பதிவாகியுள்ளது. ஆர்வமுள்ளோருக்கு உதவும்.


நான் ஏறக்குறைய 40 நிமிடங்கள் பார்த்தேன். ஆனாலும் எனக்கு நம்பக்கூடிய வகையில் இல்லை.

இவர் Egyptian Book of Death,  இன்னும் சில Life after death  வகை நூல்களையும் வாசித்து விட்டு, இந்திய மறுபிறவி ஞானங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு அதில் உள்ள வகையில் தனது அனுபவங்களை கொண்டு வந்து ஒரு கற்பனையை தன்னை அறியாமலேயே உருவாக்கிக் கொண்டு வாழ்கின்றாரோ என்ற எண்ணம் எழுகின்றது.

சுபா


 
நன்றி: ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.

நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Innamburan S.Soundararajan

unread,
Jan 20, 2014, 3:30:29 PM1/20/14
to mintamil
இத்தகைய சம்பவங்களை பற்றி செய்திகள், தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. சிலவற்றை நம்பாமல் இருக்க முடியாது. சிலவற்றை நம்பமுடியாது. சில நம்மை அலைக்கழிக்கும். மூன்று கருத்துக்கள் கீழே:

1. என் மகன் ஒரு மயக்குனர். கூடாரத்திலும் சிகிச்சை செய்வான். பெரிய ஆஸ்பத்திரியிலும். ஆய்வும் செய்பவன். கோமாவில் இருக்கும் நோயாளிகள் முன் கேலிப்பேச்சும், அவரது மரண நெருக்கடி பற்றியும் பேசக்கூடாது என்பான். அவர்களுக்கு கேட்கக்கூடும் என்ற ஐயமே.

2. மும்முறை நான் சாவின் விளிம்பில் இருந்திருக்கிறேன். வெளி விஷயங்கள் விவரிக்க முடியாத வரையில் சிறிதளவு குழப்பமாக புரியும். ஒரு முறை வரப்போகும் சாவு மிகவும் இன்ப அனுபவமாக இருந்தது. அந்த மென்மையான மணி ஓசை இன்றும் ஒலிக்கறது, நினைத்தால்.

3. எல்லாம் மூளை படுத்தும் பாடு என்று ஒரு கட்சி உண்டு. எதற்கும் டாக்டர் பென்ஃபீல்ட் அவர்களின் நாற்பது வருட ஆராய்ச்சி பற்றியும், டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் ஆராய்ச்சி பற்றி எழுதியிருக்கிறேன், மின் தமிழ் இழையில்

இன்னம்பூரான்.

seshadri sridharan

unread,
Jan 20, 2014, 8:45:53 PM1/20/14
to mintamil
Although as a philosophical word, shiva or puruśa is extensively used, in common parlance the word átmá [“soul” or “self”] is more extensively used in the same sense. Shiva means “witnessing consciousness”. So does puruśa – Pure shete yah sah puruśah, that is, “The witness-ship that lies quiescent in every entity is the puruśa.” And átman means “that which is omni-telepathic”.


The physical sense of the body is telepathized on the mental plate. In other words, the physical sense is awakened in the mental plate due to the reflection that follows the impact of the crude physical waves on the mental plate. Similarly, the sense of every crude object is awakened in the mental plate as soon as the reflection takes place following the impact of the waves of the objects on the mental plate. Identical mental waves hit the soul entity, causing the reflection of those mental waves, and this awakens in the unit a sense of its indivisibility from the soul. If, in the language of philosophy, mental waves, that is, thought, be called thought-waves, then the reflection of the mental waves on the soul-plate will have to be termed telepathic waves. And so in reference to the soul-plate, we may say that it is telepathic to the mind. All mundane objects, crude, subtle or causal, consist in mental waves or thought-waves, and so in the fullest accord with reasoning and logic, we may call the Soul omni-telepathic. It is because of this omni-telepathic Átman that the existences of all mundane objects, visible or invisible, large or small, find their factual substantiation and recognition. Had there been no Átman, the existence of everything would have been in jeopardy.

by Ananda murthii during 1962, Published in: Ananda Marga Philosophy in a Nutshell Part 2, Ánanda Sútram, : Chapter_1


2014/1/19 N. Kannan <navan...@gmail.com>

--

coral shree

unread,
Jan 20, 2014, 8:54:42 PM1/20/14
to மின்தமிழ்
//2. மும்முறை நான் சாவின் விளிம்பில் இருந்திருக்கிறேன். வெளி விஷயங்கள் விவரிக்க முடியாத வரையில் சிறிதளவு குழப்பமாக புரியும். ஒரு முறை வரப்போகும் சாவு மிகவும் இன்ப அனுபவமாக இருந்தது. அந்த மென்மையான மணி ஓசை இன்றும் ஒலிக்கறது, நினைத்தால்.
​//​

‘இ’ ஐயா சொல்வது மிகவும் சிந்திக்க வைக்கிறது. என் அம்மா ஒரு முறை மரணப்படுக்கையில் இருந்தபோது இதையேச் சொன்னார்கள். சற்று வித்தியாசமாக.. முகம் தெரியாத சில உருவங்கள் அன்புடன் வரவேற்றது, பின் திரும்ப வழியனுப்பியது என்பது போன்று நீண்டது அவர்களுடைய உணர்வுப்பூர்வமான பேச்சு. அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

எது எப்படியோ ஆன்மாவிற்கு சத்தியமாக அழிவில்லை!! அன்பு மட்டுமே அதைக் கட்டி வைக்கும் ஆயுதம். அதுவும் சத்தியம்.

அன்புடன்
பவளா


2014/1/21 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 20, 2014, 11:18:58 PM1/20/14
to மின்தமிழ்
//////என் அம்மா ஒரு முறை மரணப்படுக்கையில் இருந்தபோது இதையேச் சொன்னார்கள். சற்று வித்தியாசமாக.. முகம் தெரியாத சில உருவங்கள் அன்புடன் வரவேற்றது என்பது போன்று நீண்டது அவர்களுடைய உணர்வுப்பூர்வமான பேச்சு. ////

இறக்கும் தருவாயில் மூதாதையர் வந்து அழைத்துச் செல்வார்கள் என்பதை நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. என் தாத்தாவின் மரணப் படுக்கையின் போது, அவர் கூறிய சில சொற்களிலில் இருந்து இது நிஜம் என்று தான் இன்று வரை உறுதியாக நம்புகிறேன்..

உடல்நலமில்லாத என் உறவுக்காரத் தாத்தா, தன் இறுதி நேரம் நெருங்குகையில், அனைவரையும் சாப்பிடச் சொல்லி  அவசரப்படுத்தினார்..அனைவரும் சாப்பிட்டது தெரிந்ததும்..'உம், வா, நாம போலாம்..' என்று சொல்லி விட்டு வேரற்ற மரம் போல் சாய்ந்தார்...இப்படிப் பல நிகழ்வுகள்..

////எது எப்படியோ ஆன்மாவிற்கு சத்தியமாக அழிவில்லை!!////

சத்தியம்!!..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014/1/21 coral shree <cor...@gmail.com>
                         

N. Kannan

unread,
Jan 21, 2014, 1:09:13 AM1/21/14
to மின்தமிழ்
2014/1/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நான் ஏறக்குறைய 40 நிமிடங்கள் பார்த்தேன். ஆனாலும் எனக்கு நம்பக்கூடிய வகையில் இல்லை.

இவர் Egyptian Book of Death,  இன்னும் சில Life after death  வகை நூல்களையும் வாசித்து விட்டு, இந்திய மறுபிறவி ஞானங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு அதில் உள்ள வகையில் தனது அனுபவங்களை கொண்டு வந்து ஒரு கற்பனையை தன்னை அறியாமலேயே உருவாக்கிக் கொண்டு வாழ்கின்றாரோ என்ற எண்ணம் எழுகின்றது.

சுபா

புத்தகத்தை வாங்கி வாசித்தபின் ஒரு முடிவிற்கு வாருங்கள். பேட்டியின் சுவை புத்தக வாசிப்பிற்குப் பின் கூடுகிறது.

நா.கண்ணன் 

Subashini Tremmel

unread,
Jan 21, 2014, 3:39:36 AM1/21/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014/1/21 N. Kannan <navan...@gmail.com>
சரி கண்ணன். பேட்டியில் சொல்லாத விஷயங்களை நூல் சொல்லலாம்.
உடனே வாசிக்க இப்போது அவகாசம் நிச்சயமாக இல்லை. :-)

சுபா 

நா.கண்ணன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Kannan

unread,
Jan 21, 2014, 5:23:43 AM1/21/14
to மின்தமிழ்
2014/1/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

2014/1/21 N. Kannan <navan...@gmail.com>

2014/1/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நான் ஏறக்குறைய 40 நிமிடங்கள் பார்த்தேன். ஆனாலும் எனக்கு நம்பக்கூடிய வகையில் இல்லை.

இவர் Egyptian Book of Death,  இன்னும் சில Life after death  வகை நூல்களையும் வாசித்து விட்டு, இந்திய மறுபிறவி ஞானங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு அதில் உள்ள வகையில் தனது அனுபவங்களை கொண்டு வந்து ஒரு கற்பனையை தன்னை அறியாமலேயே உருவாக்கிக் கொண்டு வாழ்கின்றாரோ என்ற எண்ணம் எழுகின்றது.

சுபா

புத்தகத்தை வாங்கி வாசித்தபின் ஒரு முடிவிற்கு வாருங்கள். பேட்டியின் சுவை புத்தக வாசிப்பிற்குப் பின் கூடுகிறது.

சரி கண்ணன். பேட்டியில் சொல்லாத விஷயங்களை நூல் சொல்லலாம்.
உடனே வாசிக்க இப்போது அவகாசம் நிச்சயமாக இல்லை. :-)

நான் கூட உங்களைப் போல் சிந்தித்ததுண்டு. வேடிக்கை என்னவெனில் இவ்வவுலகம், அவ்வுலகம் எல்லாம் ஒரே டெம்பிளேட்டிலிருந்து வருவனதான். எனவே ஒற்றுமையிருக்க வாய்ப்புண்டு. இது கற்பனை இல்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். உண்மையில் அறிவியல் பூர்வமாக 9 வகைகளில் இதை விளங்கிக்கொள்ள முயன்று இல்லை என்பது தீர்மானமாகிறது. பேட்டியில் அதைச் சொல்கிறார்.

நா.கண்ணன் 

N. Kannan

unread,
Jan 21, 2014, 5:45:06 AM1/21/14
to மின்தமிழ்
2014/1/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

நோயால் தாக்கப்பட்டு மூளையின் தான் என்னும் பதிவுகள் அனைத்தும் அற்றுப் போன நிலைக்கு வந்திருக்கிறார்.

மூளை என்பது பூமி சார்ந்து நமக்கொரு அடையாளத்தைத் தருகிறது. அதுவே ஈகோ. `நான்` எனும் அடையாளம். இவருக்கு அந்த நினைவு அறுந்து போகிறது. `நான்` என்பது இல்லாத அனுபவம். தான் யார், எங்கிருக்கிறோம் என்பதே தெரியாத ஒரு அனுபவப்பதிவு. அங்குள்ள தேவ கன்னி தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று சொன்ன போது, `எங்கு திரும்ப வேண்டும்` என்பதே அவரது வினா. மேலும் இவரைக் கீழே கொண்டு வந்தது பூமியில் உள்ள உறவினர் செய்த பிரார்த்தனையும். இவர் கடைசிப் பயனின் வேண்டுதலும். இதுவொரு நங்கூரம் என்கிறார் பேட்டியில். இம்மாதிரி நிலைக்கு நினைத்த போது போகும் அருள் பெற்றவர் இராமகிருஷ்ணர். திரும்பி வருவதற்காக ஏதாவதொரு அல்ப ஆசையை வைத்துவிட்டு `சமாதி` நிலைக்குப் போவாராம். இதை அவர் யோகத்தின் வழியில் நரேனுக்குக்.காட்டுவதாகக் கதை. ஏபன் அலெக்ஸாண்டருக்கு இந்த சமாதி நிலை வந்திருக்கிறது. நோயின் காரணமாக நடந்தாலும், மீண்டும் வந்த பின் இந்த ஆழ்நிலை தியான நிலைக்குப் போகும் வழிகள் உண்டென புத்தகத்தில் சொல்கிறார். 

 
ஆத்மா என்பது இருக்கிறது. உடலின் தொடர்பு இல்லாமலேயே. ஆத்மாவிற்கு இறப்பு இல்லை. அந்த நிலை பூரணமானது. அளவற்ற ஆனந்த நிலையானது. எல்லையற்ற அன்பே உருவானது. அந்தப் பெருநிலையின் மிகச்சிறிய எல்லைக்குட்பட்ட வடிகட்டிய குருட்டு நிலையே மூளையால் நாம் உணர்ந்து இயங்கும் இந்த உயிர் வாழ்க்கை நிலை.

***

அங்கு காலம் என்பது வேறொரு நிலையில் இயங்குவதாகச் சொல்கிறார். உதாரணமாக ஒன்றுமற்ற ஜட நிலையில் யுகக்கணக்கா இருந்ததாகச் சொல்கிறார். பின் அழகிய ஒளியொன்று அவரை மேலே இட்டுச் சென்று உயர்நிலைகளையும், ஆத்ம ஞானத்தையும் வழங்கியிருக்கிறது. இந்த வருணனை வேதாந்தத்தில் உயிர் தோற்றம் பற்றி வரும் வருணனையுடன் ஒத்துப் போகிறது. வெறும் ஜடமாக, யுகயுகாந்திரங்களில் கிடக்கும் ஜீவனை உத்தாரணம் பண்ண வேண்டி இறைவன் கர்ணகளேபரங்களை உருவாக்கி ஆட்கொண்டு பிறப்பைத்தருகிறான் என்பது சித்தாந்தம்.

மேலும் நம் சமயம் சொல்லும் கந்தர்வர், அப்சரஸ் போன்ற வர்களையும், அங்குள்ள விண்ணுலக வர்ணனையும் ஒத்துப் போகிறது.

மிகவும் ஆச்சர்யமான வகையில் கிறிஸ்தவரான இவர் அங்கு போய் ஏசுவைப் பார்த்ததாகச் சொல்லவில்லை. ஆயின், பரபிரம்மம் ஓங்காரமாக இருப்பதாகச் சொல்லி. இறைவன் என்று சொல்லாமல், ~ஓம்~ என்றே அந்த காரணியை அழைக்கிறார்.

இப்படி வாசிக்க, வாசிக்க நிறைய ஒற்றுமைகள். (அன்பு என்பதே அகிலத்தின் ஜீவநாடி என்று சொல்வது உச்சம்). ஒன்று தெளிவாகிறது. இருப்பது ஒன்று. அனுபவங்கள் வேறு. நம்மாழ்வார் சொல்வது போல் 

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.

என்பதே உண்மை நிலை! ஏபன் அலெக்ஸாண்டர் வாழ்க!

நா.கண்ணன்

Kamala Devi

unread,
Jan 21, 2014, 5:54:03 AM1/21/14
to mint...@googlegroups.com
அருமையான இழை. தொடருங்கள்
க.

 


N. Kannan

unread,
Jan 21, 2014, 8:41:57 AM1/21/14
to மின்தமிழ்
2014/1/21 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

அருமையான இழை. தொடருங்கள்
க.

அட! கமலம்! வாங்க!!

இப்புத்தகம் தரும் இன்னொரு காட்சி ஆண்டாளோட வர்ணனையோடு ஒத்துப் போவது அதிசயம் (அதிசயம் இல்லையோ?).

ஆண்டாள் திருப்பாவையில் வருணிக்கிறாள், “ஊழி முதல்வன் போல் மெய் கருத்து” என்று. அலெக்ஸாண்டருக்கும் இதே காட்சி. அவர், Core என்றும் ‘ஓம்’ என்றும் சொலும் பரம்பொருள் கருமை வண்ணமாக இருப்பது! கருமை என்றால் மிரட்டும் கருமை இல்லை என்கிறார். நீல வண்ண சியாமளன் என்று நாம் கொஞ்சும் கருமை. ஆம் அதன் அழகை விரிவாக வருணிக்கிறார். ஆண்டாள் பாருங்கள் ஊழி முதல்வன் போல் மெய் கருத்து என்று ஒப்புமை காட்டுகிறாள். ஒரே காட்சி.

சரி, ஆனால் இறைவனை ஜோதி வடிவாக வள்ளலார் காண்கிறாரே என்றால்? இவருக்கும் அக்காட்சி கிடைக்கிறது. அந்த ஒளியின் தன்மையை வியந்து, வியந்து வருணிக்கிறார்.

இவ்வளவும் அவருக்கு அறிவியல் ரீதியாக உடல் செத்துப்போன பின் நடக்கிறது. மூளைச்சாவையே மரணம் என்கிறது அறிவியல். இதேயுணர்வு இரமணருக்கும் வந்ததை அவர் சரிதம் சொல்கிறது. பாடம் படித்துக் கொண்டிருந்த சிறுவன் (மதுரை மீனாட்சி கோயில் மேற்குக்கோபுர வாசல் வீடு) திடீரென தான் செத்துவிட்டதாக உணர்கிறான். என்ன செய்வது என்று தெரியவில்லை. விரைத்துப் போய் கொஞ்சம் நேரம் படுத்துக்கொண்டு இருக்கிறான். ஒன்றும் நிகழவில்லை. அண்ணாமலை போ! என்று உட்குரல். கள்ள டிக்கெட்டில் அருணாசலம் வந்து பூணூலைக் கழட்டி வீசி விட்டு, தியானித்து சமாதி நிலைக்குப் போய்விடுகிறார். 

ஏபன் அலெக்ஸாண்டருக்கு 10 மில்லியன் நபரில் ஒருவருக்கு வருகின்ற ஒரு ஈகோலை நுண் உயிர் தாக்கம் மூளையை அழித்துவிடுகிறது. ’தான்’ செத்து விடுகிறது! ஏபன் அலெக்ஸாண்டருக்கும் அதே உட்குரல். அந்த அனுபவத்தின் ருசி விடவில்லை. மூளை தாண்டி விண்ணுலகம் போகும் வழியொன்று இருப்பதைக் காண்கிறார். அது நமது மகேஷ் யோகி காட்டியுள்ள இசை/ஓசை மூலமான தியானமுறை. அது அவரை சமாதிக்குத்தள்ளுவதாகச் சொல்கிறார்.

இப்படி எத்தனை ஒற்றுமைகள்.

அலெக்ஸாண்டர் அமெரிக்கர் என்பதால் இதை அப்படியே பதிவு செய்து விட்டு. இது குறித்து மேல் ஆய்வு செய்துவிடுகிறார். இதற்கென ஒரு ஆய்வு மையத்தை நிறுவி வருகிறார். நாம், அவர் இங்கிருந்தால் வழிபட்டு இருப்போம். அவரும் பாவம்! சாமியார் ஆகியிருப்பார்! :-)

நா.கண்ணன் 

Innamburan S.Soundararajan

unread,
Jan 21, 2014, 8:52:50 AM1/21/14
to mintamil
ஸ்வாமி விவேகானந்தரின் சமகாலத்து துறவி, ஶ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடி
சிஷ்யன் சுவாமி அபேதானந்தா Life After Death
என்ற நூலை எழுதி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆயின. அதில் உயிர் பிரியும்
தறுவாயில் எடுத்த ectoplasm வெளியேறும் நிழற்படங்கள்
உளன. அந்த நூல் எனக்கு 'சமயம்' என்ற கட்டுரையை எழுதியதற்கு இரு வருடங்கள்
கிடைத்த பரிசுகளில் ஒன்று. அமெரிக்காவில்
என் மகள் அதை பாதுகாத்து வருகிறாள். அதை பார்க்கும் தருணம் கிட்டும்போது
மேலும் தகவல் அளிக்க இயலலாம்.
இன்னம்பூரான்










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


2014/1/21 N. Kannan <navan...@gmail.com>:

Madhurabharati

unread,
Jan 21, 2014, 9:15:13 AM1/21/14
to MinTamil

2014/1/21 N. Kannan <navan...@gmail.com>

கள்ள டிக்கெட்டில் அருணாசலம் வந்து

​இது சரியான தகவலா? நான் எழுதிய ‘ரமண சரிதம்’ நூலிலிருந்து:

ரயில்நிலையத்துக்கு வீட்டிலிருந்து ஒரு மைல் தூரம். நடந்து சென்றான். அங்கே திண்டிவனத்துக்கு ஒரு டிக்கட் வாங்கினான். அதன் விலை 2 ரூபாய் 13 அணா. (ஒரு ரூபாய்க்கு 16 அணா). பாக்கியிருந்த 3 அணாவை வேட்டியின் ஒரு நுனியில் முடிந்துகொண்டான். அங்கேயிருந்த பட்டியலில் மேற்கொண்டு படித்திருந்தால் திருவண்ணாமலைக்கே 3 ரூபாய்க்குச் சீட்டுக் கிடைக்கும் என்பதைப் பார்த்திருக்கலாம். இறைவன் திருவுளம் வேறாக இருந்தது. ஆனால் மதியம் பன்னிரண்டு மணிக்கே வந்திருக்கவேண்டிய ரயில் அன்றைக்கு அவனுக்காகத் தாமதமாக வந்ததால்தான் அவன் அதில் பயணிக்க முடிந்தது.

சிலபேர் ரயிலில் ஏறியதும் தூங்கிவிடுவார்கள். சீட்டுப் பரிசோதகர் வந்து தட்டி எழுப்பினால்தான் உண்டு. ஆனால் வெங்கடராமனோ ரயிலில் ஏறியதும் தனக்குள்ளே மூழ்கி லயித்துவிட்டான். தந்தையைப் பார்க்கப் போகும் ஆனந்தம் வேறு. யாரிடமுமே பேசவில்லை. எதிரில் ஒரு மவுல்வியார் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவர் இஸ்லாமியத் தத்துவங்களை விலாவாரியாக விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.

மவுனமாக இருக்கும் வசீகரமான அந்தண இளைஞனைப் பார்த்ததும் பேச்சுக் கொடுத்தார் மவுல்வியார்.

"சாமி எங்கிட்டுப் போறீய?"
"திருவண்ணாமலைக்கு"
"நாம்பளுந்தான்" என்றார் மவுல்வி.
"திருவண்ணாமலைக்கேவா?"
"இல்லை. பக்கத்துல திருக்கோவிலூர்."
வெங்கடராமனுக்கு ஆச்சரியம். "திருவண்ணாமலைக்கே ரயில் போகிறதா?"
"விசித்திரமான ஆளா இருக்கீகளே சாமி. போவுது. நீங்க எந்த ஊருக்குச் சீட்டு வாங்கினீக?"
"திண்டிவனத்துக்கு."
"அவசியமே இல்லையே. விழுப்புரத்துல இறங்கி ரயில் மாறினா திருவண்ணாமலைக்கு நேராப் போயிரலாமே!"

பயனுள்ள தகவல்தான், கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறது. இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போதே திருச்சிராப்பள்ளி வந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. நன்கு வயிறுமுட்டச் சாப்பிட்டுப் பழகியவனாயிற்றே. அரையணாவுக்கு பேரிக்காய் வாங்கினான். என்ன ஆச்சரியம், ஒரு விள்ளல் சாப்பிடுவதற்குள் வயிறு நிரம்பிய உணர்வு. சமீபத்தில் பழகிப்போன விழிப்பும் தூக்கமும் அல்லாத நிலையில் மீண்டும் மூழ்கினான்.

அதிகாலை மூன்று மணிக்கு ரயில் விழுப்புரத்தை அடைந்தது. இறங்கிச் சாலையை அடைந்தான். இங்கிருந்து திருவண்ணாமலைக்கு எப்படிப் போவது? அதிகாலை வேளை. கேட்க யாரும் இல்லை. இருந்தாலும் கூச்சம் விட்டிருக்காது. அங்கும் இங்குமாக நடந்த போது ஒரு கைகாட்டி மரம் 'மாம்பழப்பட்டு' என்று காட்டியது. அந்த வழியாகத்தான் திருவண்ணாமலைக்குப் போகவேண்டும் என்று வெங்கடராமன் அறிந்திருக்கவில்லை. விடிந்தும் போனது. வழிதெரியாமல் அலைந்ததில் பசிக்கத் தொடங்கிவிட்டது.

ஒரு ஹோட்டலை அடைந்தான். இன்னும் சமையல் ஆகியிருக்கவில்லை. கொஞ்சம் காத்திருக்கவேண்டும். அதில் என்ன கஷ்டம், மீண்டும் தன்னை மறந்த சமாதி நிலையில் ஆழ்ந்துவிட்டான். உணவு தயாராகும்போது மதியம் ஆகிவிட்டது. சாப்பிட்டாயிற்று. இரண்டணாவை எடுத்து நீட்டினான் வெங்கடராமன். சிவந்த மேனியும், கறுத்து அடர்ந்த கட்டுக்குடுமியுமாய் உட்கார்ந்திருக்கும் களையான இளைஞனைப் பார்த்தார் அந்த உணவுவிடுதிக்காரர்.

"எவ்வளவு காசு வைத்திருக்கிறாய்?"
"இரண்டரை அணா."
"காசை நீயே வைத்துக்கொள்."

உணவுக்கு அவர் காசு வாங்கவில்லை. மீண்டும் ரயில்நிலையத்தை நோக்கி நடந்த வெங்கடராமன் கையிலிருந்த இரண்டரை அணாவுக்குப் பயணச் சீட்டு வாங்கியதில் மாம்பழப்பட்டு வரையிலும்தான் கிடைத்தது. அந்த ஊரை அடையும்போது மாலைநேரமாகி விட்டது. மிச்ச தூரத்தை நடந்துவிடலாம் என்று தீர்மானித்து நடந்தான் வெங்கடராமன்.

சுமார் பத்து மைல் தூரம் நடந்திருக்கவேண்டும். ஒரு குன்றும், அதன்மேல் கோவிலும் தென்பட்டன. அது அறையணிநல்லூர் கோவில். அதிகம் நடந்து பழக்கம் இல்லை இவனுக்கு. கோவிலை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது. கோவிலில் யாரும் இல்லை. முன்புறம் காத்துக் கொண்டிருந்தான். கோவில் நடை திறந்ததும் உள்ளே போனவன் அப்படியே முன்மண்டபத்தில் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்தான். பொதுவாகவே இருண்டிருந்த கோவிலில் ஓரளவு விளக்கு இருந்தது அங்கேதான்.

தியானத்தில் இருக்கும்போது திடீரென்று ஒளிவெள்ளம் பொங்கி எங்கும் சூழ்வதை அவன் உணர்ந்தான். 'ஓ! இது இங்கிருக்கும் தெய்வத்தின் ஒளிதான்' என்று நினைத்து எழுந்துபோய் கர்ப்பகிருகத்தில் பார்த்தால், அங்கே சாதாரணமாகத்தான் இருந்தது. தான் பார்த்த ஒளி மூர்த்தியிலிருந்து புறப்பட்டதல்ல என்று புரிந்துகொண்ட வெங்கடராமன் மீண்டும் தியானத்தில் மூழ்கினான்.

"யாரப்பா அங்கே மண்டபத்திலே! வெளியே வா. கோயில் பூட்டணும்" என்ற குரல் கேட்டு நினைவு திரும்பிய வெங்கடராமன் வெளியே வந்தான். மீண்டும் பசித்தது. "கொஞ்சம் பிரசாதம் கிடைக்குமா?" என்று கேட்டான். "அதெல்லாம் ஒண்ணும் கிடையாது" என்று கறாரான பதில் வந்தது.

"பரவாயில்லை. நான் கோவிலிலேயே ராத்திரி படுத்துக் கொள்கிறேனே" என்றான்.

"இல்லையில்லை. யாரையும் இங்கே படுக்க விடமுடியாது" என்றார் குருக்கள்.

வெளியே வந்த வெங்கடராமன் மற்றவர்களுடன் சேர்ந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில், ஆற்றின் அக்கரையில் இருக்கும் கீழூருக்குப் போனான். அங்கேயிருக்கும் கோவிலில் பிரசாதம் கிடைக்கலாம் என்று யாரோ சொல்ல, அவர்களுடன் சேர்ந்து அவனும் வீரட்டேசுவரர் கோவிலுக்குப் போனான். போனவன் மீண்டும் சமாதியில் ஆழ்ந்துவிட்டான். எல்லோரையும் வெளியே அனுப்பப் பூஜாரி குரல் கொடுக்கவும்தான் விழித்தான். ஆனால் இங்கும் இவருக்குப் பிரசாதத்திற்கு பதிலாக கடுமையான பதில்தான் கிடைத்தது.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் கோவில் மேளக்காரர். "என் பங்கு பிரசாதத்தை அவருக்குக் கொடுங்களேன்" என்றார் அவர். இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ஒரு தட்டுப் புழுங்கலரிசிச் சோறு கையில் கிடைத்தது. தண்ணீருக்காகக் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த சாஸ்திரிகளின் வீட்டுக்கு இவனை மேளக்காரர் அழைத்துப் போனார். களைப்பும் பசியும் மிகுந்துபோகவே வெங்கடராமனுக்கு மயக்கம் உண்டாக்கியிருக்கவேண்டும். அப்படியே தூக்கத்தில் நடந்ததுபோலச் சென்றவன் கீழே விழுந்தான்.

சற்றுநேரம் கழித்து விழித்துப் பார்க்கையில் சுற்றிச் சிறிய கூட்டம் சேர்ந்திருந்தது. நல்லவேளை, அடி எதுவும் படவில்லை. கையிலிருந்த சாதத்தட்டு கீழே விழுந்திருந்தது. அதில் மீதமிருந்ததைச் சாப்பிட்டான் வெங்கடராமன். சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கியும் போனான்.

மறுநாள் ஆகஸ்டு 31, 1896. அன்று கிருஷ்ண ஜெயந்தி. திருவண்ணாமலைக்கு இன்னும் 20 மைல் தூரம் இருந்தது. எப்படிப் போவது என்று தெரியவில்லை. மீண்டும் பசியும் சோர்வும் வேறு வாட்டுகிறது. முதலில் ஏதாவது சாப்பிடவேண்டும். பின்னர் ரயிலைப் பிடித்தாக வேண்டும். "டிக்கட் வாங்கக் காசு ஏது?" என்று யோசிக்கும்போதே காதில் இருந்த சிவப்புக்கல் பதித்த தங்கக் கடுக்கன் நினைவுக்கு வந்தது. இருபது ரூபாய் பெறும், அதை அடகு வைக்கவேண்டியதுதான். யாரிடம் எப்படி அடகு வைப்பது, அனுபவம் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே எதிரில் இருந்த ஒரு வீட்டைப் பார்த்தான்.

முத்துக்கிருஷ்ண பாகவதரின் வீடு அது. "கொஞ்சம் சோறு கொடுங்கள்" என்று வாசலில் நின்றபடி கேட்டான் வெங்கடராமன். அவர் தன் மனைவியை அழைத்தார். கிருஷ்ண ஜெயந்தி தினமான அன்று இந்தக் களையான இளைஞன் தன் வீட்டுக்கு விருந்தினனாக வந்ததில் அந்த குணவதிக்கு மிகுந்த மகிழ்ச்சி. காலைநேரமாதலால் பழையசோறுதான் இருந்தது. அதைத் தாராளமாக அவனுக்குக் கொடுத்து முழுவதையும் சாப்பிடவேண்டும் என்று அன்பாக வற்புறுத்தினாள். இரண்டு கவளம்தான், பசி போன இடம் தெரியவில்லை. ஆனாலும் கட்டாயத்துக்காகச் சாப்பிட்டான்.

"யாத்திரை போகும் வழியில் கைச்சாமான் களவு போய்விட்டது. இந்தக் கடுக்கன்களை ஈடாக வைத்துக்கொண்டு நாலு ரூபாய் கொடுங்கள்" என்றான் வெங்கடராமன். வாங்கிப்பார்த்த பாகவதருக்கு அது நல்ல தங்கத்தில் செய்யப்பட்ட நகை என்று தெரிந்தது. இருபது மதிப்புள்ளதற்கு நான்கு ரூபாய்தானே கேட்கிறான். பார்க்கவும் நல்லபிள்ளையாகத் தெரிகிறான். பணம் கொடுக்கத் தீர்மானித்தார் பாகவதர். ஆனால் அவர் பேராசைக்காரரல்ல. ஊருக்குப் போய்க் கண்டிப்பாகப் பணத்தை அனுப்பி நகையைத் திருப்பிக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னார். வட்டி கிடையாது. வெங்கடராமனின் விலாசத்தை வாங்கிக் கொண்டு, ஒரு சீட்டில் தனது விலாசத்தைக் கொடுத்தார்.

இருவரும் மிகுந்த அன்போடு கோகுலாஷ்டமி விருந்தை வெங்கடராமனுக்குக் கொடுத்தார்கள். மாலையில்தான் பட்சணங்கள் கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்யப்படும் என்றாலும் அதைப் பொருட்படுத்தாது அந்த அம்மையார் தாய்மை நிரம்ப அதைப் பொட்டலமாகக் கட்டி வெங்கடராமனின் கையில் கொடுத்தார்.

பாகவதரின் வீட்டிலிருந்து புறப்பட்டவுடன் அவன் செய்த முதல் காரியம் அடகுமீட்புக்காக அவர் கொடுத்த சீட்டைக் கிழித்துப் போட்டதுதான். அவனுக்கு ஏது சொத்து, இந்தப் பிரபஞ்சமே அவன் சொத்தாக இருக்கும்போது. எதை மீட்பது. இப்போதைக்கு அந்த நாலு ரூபாய்க்கு வேலை இருக்கிறது, அது போதும்.

ரயில்நிலையத்துக்குப் போனால் மறுநாள் காலைவரையில் திருவண்ணாமலைக்கு வண்டி கிடையாது என்று தெரிந்தது. பயணத்தில் ஒவ்வொன்றும் நிர்ணயித்தபடியல்லவா நடந்துவருகிறது, சரியான தருணம் வராமல் அது எப்படி முற்றுப்பெறும்?

மறுநாள் காலையில் நான்கு அணாவுக்குப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையில் வந்து இறங்கினான் வெங்கடராமன்.​

***

அன்புடன்
மதுரபாரதி


N. Kannan

unread,
Jan 21, 2014, 9:43:21 AM1/21/14
to மின்தமிழ்
நன்றி ஐயா! முன்பு படித்த சேதியொன்றின் நினைவிலிருந்து எழுதினேன். விரிவாக தகவல் அளித்துள்ளீர்கள். அவர் இருட்டு சந்நிதி ஒன்றில் (திருவண்ணாமலை) சமாதி ஆகிவிட கரப்பான் பூச்சிகள் அவர் உடலை சுவைத்திருக்கின்றன என்றும் படித்த ஞாபகம். 


2014/1/21 Madhurabharati <madhura...@gmail.com>

coral shree

unread,
Jan 21, 2014, 9:59:28 AM1/21/14
to மின்தமிழ்
அன்பின் திரு மதுரபாரதி சார்,

ரமண சரிதம் மிக அருமையாக உள்ளது. இந்த நூல் பற்றி சொல்லுங்களேன். எப்போது எழுதினீர்கள், எந்த பதிப்பகம் என்று தெரிந்து கொள்ளலாமா? வாசிக்க ஆவலாக உள்ளது.

அன்புடன்
பவளா


2014/1/21 Madhurabharati <madhura...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Hari Krishnan

unread,
Jan 21, 2014, 10:03:28 AM1/21/14
to mintamil

2014/1/21 Madhurabharati <madhura...@gmail.com>

மறுநாள் காலையில் நான்கு அணாவுக்குப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையில் வந்து இறங்கினான் வெங்கடராமன்.​

***

அதெல்லாம் அவதாரங்கள் கள்ள டிக்கெட்டிலும் வரலாம் நல்ல டிக்கட்டிலும் வரலாம்.  எல்லா டிக்கட்டும் படிக்கட்டு என்பார்கள்.  இதெல்லாம் மின் உலகின் ஈகோ.  


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Tthamizth Tthenee

unread,
Jan 21, 2014, 10:04:15 AM1/21/14
to mint...@googlegroups.com
​மிக  எளிய நடையில் திரு ரமணரின் சரித்திரம்  படிப்பதற்கு மிகவும் இயல்பாக  இருக்கிறது.

ஒவ்வொரு அசைவிலும்   அவன் என்ன நிச்சயித்திருக்கிறானோ  அதுதான் நடக்கும்  என்பதற்கு   திரு ரமணரின் வாழ்க்கையைத் தவிர  வேறு உதாரணமே வேண்டாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2014/1/21 coral shree <cor...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 21, 2014, 10:05:22 AM1/21/14
to mintamil

2014/1/21 coral shree <cor...@gmail.com>

ரமண சரிதம் மிக அருமையாக உள்ளது. இந்த நூல் பற்றி சொல்லுங்களேன். எப்போது எழுதினீர்கள், எந்த பதிப்பகம் என்று தெரிந்து கொள்ளலாமா? வாசிக்க ஆவலாக உள்ளது.

கிழக்கு பதிப்பகம்.  திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் வைத்திருந்தார்கள்.  பார்த்திருக்கிறேன்.  மதுரபாரதி ஐயா அந்தப் புத்தகத்தை எழுத வித்திட்ட தொண்டில் எனக்கும் பங்குண்டு. :)

coral shree

unread,
Jan 21, 2014, 10:34:11 AM1/21/14
to மின்தமிழ்
ஓ, மிக்க மகிழ்ச்சி திரு ஹரிகிஜி. 

அன்புடன்
பவளா


2014/1/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Jan 21, 2014, 3:34:06 PM1/21/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014/1/21 Madhurabharati <madhura...@gmail.com>
அழகான விவரணை. வாசிப்பிற்கு விருந்து.

அருமை.

சுப
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Madhurabharati

unread,
Jan 21, 2014, 8:39:18 PM1/21/14
to MinTamil

2014/1/21 N. Kannan <navan...@gmail.com>

அறிவியல் ரீதியாக உடல் செத்துப்போன பின் நடக்கிறது. மூளைச்சாவையே மரணம் என்கிறது அறிவியல். இதேயுணர்வு இரமணருக்கும் வந்ததை அவர் சரிதம் சொல்கிறது. பாடம் படித்துக் கொண்டிருந்த சிறுவன் (மதுரை மீனாட்சி கோயில் மேற்குக்கோபுர வாசல் வீடு) திடீரென தான் செத்துவிட்டதாக உணர்கிறான். என்ன செய்வது என்று தெரியவில்லை. விரைத்துப் போய் கொஞ்சம் நேரம் படுத்துக்கொண்டு இருக்கிறான். ஒன்றும் நிகழவில்லை


​ரமணரின் மரண அனுபவம் (ரமண சரிதம் நூலிலிருந்து):

வெங்கடராமன் மதுரையில் இருந்த சமயத்தில் ஒருநாள் வீட்டிலிருந்த சேக்கிழார் எழுதிய 'பெரிய புராணம்' புத்தகம் கையில் கிடைத்தது. அதில் விவரிக்கப்பட்டிருக்கும் சிவனடியார்களின் அற்புத வாழ்க்கையைப் படிக்கப் படிக்க அவனுக்கு வியப்பும், ஆர்வமும், பக்தியும், நாமும் இவர்களைப் போல ஆகமுடியுமா என்ற ஆவலும் ஒருசேர உண்டாயின.

ரமணர் பிற்காலத்தில் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லுவார் "கையிலே புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போகையில், கடவுள் எங்கேயாவது தென்படுவாரோ என்று எதிர்பார்த்தபடியே வானத்தைப் பார்த்துக்கொண்டு போவேன். எனக்கு எப்படிப் படிப்பு வரும்?"
வெங்கடராமனுக்குப் பதினேழு வயது. அப்போது 1896ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் நடுப்பகுதி. அவனுக்கு ஒரு விசித்திர அனுபவம் ஏற்பட்டது. அந்த விசித்திர அனுபவத்தைப் பார்க்குமுன் இன்னொரு பின்னணியையும் பார்க்கவேண்டும்.

விளையாட்டுக்களிலும், குஸ்தியிலும் தேர்ந்திருந்த வெங்கடராமனை யாரும் கேலி செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. சரியான உதைவிழும். எனவே பயப்படுவார்கள். ஆனால், ஆசாமி தூங்கினால் கும்பகர்ணன்தான். எப்படித் தூங்குவான் என்பதை அறிய, திண்டுக்கல்லில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்போம். அவ்வூர்க்காரரைப் பார்த்ததும் பின்னாளில் ரமணர் இதை நினவு கூர்ந்தார்:

"உமது மாமா, எனது பெரியப்பா சேஷைய்யர், அப்போது திண்டுக்கல்லில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டில் ஏதோ விசேஷம். அது முடிந்ததும் எல்லோரும் இரவில் கோவிலுக்குப் போய்விட்டனர். வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். முன்னறையில் கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்தேன். பின்பு வாசற்கதவையும் ஜன்னல்களையும் மூடித் தாளிட்டுவிட்டுத் தூங்கிப்போய்விட்டேன். கோவிலிலிருந்து திரும்பியவர்கள் 'கதவைத் திற' என்று கத்திப் பார்த்துவிட்டுக் கதவை இடிஇடியென்று இடித்திருக்கிறார்கள். நான் எழுந்தால்தானே! கடைசியில் எதிர் வீட்டிலிருந்து ஏதோ சாவிகளை வாங்கி முயற்சித்துத் தாழ்ப்பாளை நெம்பித் திறந்திருக்கிறார்கள்."

அதுமட்டுமல்ல, உள்ளே வந்தபின்னும் கூட வெங்கடராமனை எழுப்ப முடியவில்லை. நையப் புடைத்திருக்கிறார்கள். ஊஹூம்.. அதற்கும் எழுந்திருக்கவில்லை. இதையெல்லாம் அவர்கள் காலையில் சொன்னபின்தான் தெரிந்திருக்கிறது. இன்னும் வேடிக்கையைக் கேளுங்கள்:
"நான் விழித்திருக்கையில் எந்தப் பயலும் கிட்டே வந்து என்னைத் தொட அஞ்சுவான். என்மேலே கோபம் என்றால் நான் தூங்கும்போது என்னை அலாக்காகத் தூக்கிகொண்டுபோய் இஷ்டப்படி அடித்து நொறுக்கிவிட்டு, மறுபடியும் படுக்கையில் கிடத்திவிட்டுப் போய்விடுவார்களாம். எனக்கெங்கே இதெல்லாம் தெரிந்தது. மறுநாள் காலையில் அவர்களே சொன்னபின்னால்தான் தெரியும்".

இப்படிச் சாதாரண மனிதர்களின் தூக்கத்துக்கு அப்பாற்பட்ட, தன்னை மறந்த நிலையை அப்போதே வெங்கடராமன் அடைந்ததுண்டு என்பது வரப்போவதன் அறிகுறியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், 1896இல் நடந்த அந்த விசித்திர, பூகம்ப அனுபவம், அதையும் ரமணரே பின்னாளில் நரசிம்ம சுவாமியிடம் இப்படி விவரித்தார்:

"மதுரையை முழுசா விட்டுப் புறப்படறதுக்கு சுமார் ஆறு வாரம் முந்தியிருக்கலாம். அப்போதான் அந்த மகத்தான மாறுதல் நடந்தது. திடீர் நிகழ்ச்சி அது! சித்தப்பா வீட்டின் முதல் மாடியில ஒருநாள் தனியா உக்காந்திருந்தேன். எப்பவும்போல சவுக்கியமாத்தான் இருந்தேன். வியாதின்னு எனக்கு எதுவும் வந்ததே கெடயாது. அன்னிக்கும் ஒண்ணுமில்லை. ஆனாலும் திடீர்னு ஒரு மரணபயம்! 'நான் செத்துடப் போறேன்' அப்பிடீன்னு வலுவான உணர்ச்சி. ஏன் தோணித்துன்னு சொல்லமுடியாது. அந்தச் சமயத்திலே எனக்கேகூட அது விளங்கலே. அதுக்குக் காரணம் கண்டுபிடிக்கணும்னும் தோணலே. சாகப்போறோம்னு தோணினதும், அதைப்பத்தி மேலே என்ன செய்யணுங்கறதிலேயே எண்ணம் போய்டுத்து. டாக்டரைக் கேக்கணும், பெரியவா இல்லேன்னா ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கலந்து ஆலோசிக்கணும்னு கொஞ்சமும் தோணல்லே. தனக்குத்தானே பிரச்னையை அங்கயே, அப்பவே தீத்துக்கணும்னு மட்டும்தான் தோணித்து.

"மரணபயத்தோட அதிர்ச்சியில மனசு உள்ளே பாத்துத் திரும்பிடுத்து. எனக்கு நானே சொல்லிக்கிறேன், மனசுக்குள்ளேயே, வார்த்தை கோவையா இல்லாம 'சரி, இப்ப சாவு வந்துடுத்து. வரட்டுமே! சாவுன்னா என்ன? சாகறது எது? இந்த உடம்புதான் மடியும்.' சாவுக்காட்சி அப்படியே ஒரு நாடகம் போல நடக்கிறது. கைகால்களை நீட்டி வெறப்பா வெச்சுண்டேன்--ஒரு சவத்தைப் போலவே! இன்னும் தத்ரூபமா இருக்கணும்னு மூச்சையும் அடக்கிண்டுட்டேன். பிணமாவே என்னைப் பாவிச்சுண்டேன். தப்பித் தவறிக்கூடச் சத்தம் கிளம்பிடாம உதட்டை அழுத்தி மூடிண்டுட்டேன். 'நான்'கிற சொல்லோ வேறே வார்த்தையோ வந்துடக்கூடாதுன்னு உத்தேசம். எனக்குள்ளே மவுனமாச் சொல்லிண்டேன் 'சரி, இந்த உடம்பு செத்துப்போச்சு. வெறச்சுப்போன இந்தக் கட்டையை பாடையில் கட்டி மயானத்துக்குக் கொண்டுபோய் எரிச்சுச் சாம்பலாக்கிடுவா. ஆனா இந்த உடம்பு செத்தா நான் செத்துடுவேனா? 'நான்'ங்கறது இந்த உடம்புதானா? உடல் மவுனமா, செயலில்லாத ஜடமா இருக்கு. ஆனால் இப்பக்கூட 'ஜீவஸ்வரூபம்' என்கிற ஒன்றின் முழுச்சக்தி வீச்சும் தெரியறதே! உடம்பு அல்லாமல், தனக்குள்ளேயே 'நான்'ங்கற சத்தம் கேட்குதே. ஆக, 'நான்' சரீரத்தைக் கடந்த உணர்வு. ஜடமான உடம்புதான் சாகிறது. அதற்கு அப்பாற்பட்ட ஜீவ ஆன்மாவைச் சாவு தொடமுடியாது. சாவில்லாத அந்த ஆன்மாவே 'நான்'--என்று எனக்குத் தானே புரிஞ்சுபோச்சு.

"இது புத்திபூர்வமா எழுந்த எண்ண வரிசை இல்லை. உயிர்ப்புள்ள சத்தியம். ஒருவித வாதமுமில்லாமல் உடனுக்குடன் கண்டுகொண்ட பரம சத்தியம்."

இங்கே என்ன நடந்தது? முதலில் சாவைப்பற்றிய அச்சம் வந்தது. அதற்கு எந்தக் காரணமும் கிடையாது. அதுவும், வெங்கடராமன் நோய் என்பதையே அறியாத, வலுவான தேகமுள்ள இளைஞன். இந்த அச்சம் முன்னறிவிப்பின்றி வந்தது.

சாதாரணமாக மனித மனம் தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில்--வெளியே இருக்கும் பொருள்களை அடைவதிலும், அதன் மூலம் திருப்தி கிடைக்குமா என்ற முயற்சியிலும்--ஈடுபட்டபடியே இருக்கும். ஆசை நிறைவேறுவதாகக் கற்பனை செய்யும், திட்டமிடும், அல்லது நடந்த அனுபவத்தை அசைபோடும். இதன் காரணமாக மேலும் மேலும் ஆசைகள் எழும். இப்படி எண்ணங்களும், அனுபவத்தின் பதிவுகளும் (இவற்றை 'விஷய வாசனை' என்று பெரியோர் சொல்வதுண்டு) ஆசை நிறைவேறுவதற்கான செயல்களில் நம்மை ஈடுபடுத்தியபடியே உள்ளது.
இப்போது வெங்கடராமனுக்கு காரணமில்லாமல் வந்த மரணபயம், அவன் மனதை வெளிப் பொருள்களைத் தேடி அலைவதை நிறுத்தி, உள்புறமாகத் திருப்பி நிறுத்திவிட்டது.

இனிமேல் அவனது மனம் அலையாது. அசையாது. ஏனென்றால் நோய்க்கும் சாவுக்கும் ஆளாகிற இந்த உடல் 'நானல்ல' என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. உடலின் வடிவம் அவனதல்ல, ஏனென்றால் அது அழியக்கூடியது; உடலின் செயல்கள் தனதல்ல, அவை தாற்காலிகமானவை; உடலுக்கு ஏற்படும் அவஸ்தைகள் தனதல்ல, அவை மாறக்கூடியவை; ஆகவே, உடல்தான் 'நான்' என்கிற பிரமை மாறிவிட்டது.

அவன் 'வெங்கடராமன்' அல்ல. அது அந்த உடலுக்கு இடப்பட்ட பெயர். அவன் முழுமையான, ஆனந்தமே உருவான, அழிவில்லாததொரு சத்தியம். அந்தச் சத்தியப் பொருளைப் பின்னாளில் காவியகண்ட கணபதி சாஸ்திரி என்பவர் 'பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி' என்று பெயரிட்டு அழைத்தார். உடலில் இருக்கும்வரை ஏதோ ஒரு அடையாளம் தேவையாக இருக்கிறதே!
 
காலிலே ஒரு முள் தைத்துவிட்டது. என்ன செய்கிறோம்? ஒரு ஊசியாலே அதை லாவகமாக அகற்றுகிறோம். ஊசி என்பது என்ன? ஓர் உலோகத்தாலான முள்தானே! அதைத்தான் 'முள்ளை முள்ளால் எடுப்பது' என்று சொல்கிறார்கள்.

அதைப்போல மரணபயத்தை, மரணபயத்தாலே வென்றான் வெங்கடராமன். அது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல. இந்த அனுபவம் எவ்வளவு நேரத்தில் நிகழ்ந்தது என்பதைப் பற்றி ரமணர் ஒருமுறை, "நான் ஞானம் அடைவதற்கு இருபத்தெட்டு அல்லது முப்பது நிமிடங்கள் ஆயின என்று சொல்கிறார்கள். அது தப்பு. ஒரு க்ஷணம் இருக்கலாம். அதுவும் சரியில்லை. டைம் எங்கே அதிலே?" என்று கூறினார்.​

Madhurabharati

unread,
Jan 21, 2014, 8:50:28 PM1/21/14
to MinTamil

2014/1/21 N. Kannan <navan...@gmail.com>

அவர் இருட்டு சந்நிதி ஒன்றில் (திருவண்ணாமலை) சமாதி ஆகிவிட கரப்பான் பூச்சிகள் அவர் உடலை சுவைத்திருக்கின்றன என்றும் படித்த ஞாபகம். 

​ரமணரைப்பற்றிப் பேசினால் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும். அவையோர் மன்னிக்க வேண்டும். இதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த கண்ணனாழ்வாருக்கு நன்றிகள். மேலே கூறியதுபற்றி ‘ரமண சரிதம்’ சொல்வது:

வீட்டை விட்டுக் கிளம்பிய நான்காம் நாளன்று காலை ரயிலிலிருந்து இறங்கி, ஓட்டமும் நடையுமாய் ஆவலோடு அருணாசலனை நோக்கி ஓடினான் மகன். அவன் வரவுக்கே காத்திருந்தாற்போல வரிசையாகக் கோவிலின் மூன்று சுற்றுக் கோபுர வாசல்களும் திறந்திருந்தன. உள்ளே கருவறைக் கதவும்தான். அதுமட்டுமல்ல மகன் தந்தையைக் காணச் சென்ற அந்த அற்புதக் கணத்தில் கோவிலில் யாருமே இல்லை. நேராகச் சென்ற வெங்கடராமன்--இனிமேல் ரமணன்--நெஞ்சாரக் கட்டித் தழுவினான் அருணாசல சிவத்தை. மரண அனுபவத்தில் தன்னறிவு ஏற்பட்ட அந்தக் கணத்திலிருந்து வெங்கடராமனின் உடலைத் தகித்துக் கொண்டிருந்த நெருப்பு அப்போதுதான் குளிர்ந்தது.

கோவிலை விட்டு வெளியே வந்தான். தன் கையில் இருந்த கோகுலாஷ்டமி பலகாரங்களைக் குளத்து நீரில் போட்டான். மீன்கள் தின்று பசியாறுமே. ஒரு நாவிதர் "சாமி, தலை சவரம் செய்யலியா?" என்றார். இதுவும் தந்தையின் சித்தம் போல இருக்கிறது என்று எண்ணியவாறே, தலையை மொட்டை அடித்துக்கொண்டான். நாவிதருக்குக் கொடுத்தது போக, மூன்று ரூபாய் சொச்சத்தை அய்யன்குளத்தில் வீசினான். இனி இந்தத் தவராஜனுக்குப் பணத்தைத் தொடும் அவசியம் இல்லை. அதற்குப் பிறகு பணத்தைத் தொடவும் இல்லை. பூணூலும் அதே வழியில் போயிற்று. இடுப்பிலிருந்த வேஷ்டியிலிருந்து ஒரு கோவணத்திற்கான துணியைக் கிழித்துக் கொண்டு மிச்சத்தைக் குளத்தில் போட்டான். அவ்வளவுதான், திட்டமிடாமலே ஒரு துறவுச் சடங்கு நிகழ்ந்தேறிவிட்டது.

தலை மழித்துக்கொண்டால் குளிக்க வேண்டுமே. 'இந்தக் கட்டைக்குக் குளியல் வேறு ஒரு கேடா?' என்று உடனே ஒரு எண்ணம் எழுந்தது. தவிர்த்துவிட்டுக் கோவிலை நோக்கி நடந்தான். ஆனால் ஒரே ஒரு தனித்த மேகம் வந்து அவனை நீராட்டியது. நிஷ்டையில் இருப்பதே தனது பணி என்று கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்ந்தவன்தான். சோறு, தண்ணீர் என்று எல்லாவற்றையும் மறந்து தன்னில் ஆழ்ந்துவிட்டான்.

பாதாள லிங்க நிலவறையில்

ஆனால் வேறு வகைப் பிரச்சனைகள் தலைதூக்கின. சடைமுடியும், நகமும் தன்னிச்சையாக வளர, எந்நேரமும் உடலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் நிஷ்டையில் இருந்த இளந்துறவியை அங்கிருந்த சில சிறுவர்கள் பைத்தியக்காரன் என்றே எண்ணத் தொடங்கினார்கள். சிறந்த ஞானியான சேஷாத்ரி சுவாமிகளும் அப்போது திருவண்ணாமலையில் இருந்தார். அவரும் பித்துப் பிடித்தாற்போலத்தான் சுயேச்சையாகத் திரிவார். காற்றுக்கு வேலியிட்டுக் கட்டி வைத்தாலும் அவரைக் கட்டிப் போடமுடியாது. அவரைப் போலவே தோற்றத்தைச் சட்டைசெய்யாமல், கண்மூடி அமர்ந்துவிட்ட இவனுக்கும் 'சின்ன சேஷாத்ரி' என்றே பெயரும் இட்டுவிட்டனர். அத்தோடு விடாமல், இவன் மீது கல், ஓட்டாஞ்சல்லி ஆகியவற்றை விட்டெறிவதில் அவர்கள் மிகுந்த உற்சாகம் காட்டினர்.

மதுரையில் நிகழ்ந்த அனுபவம் ஆன்மஞானத்தின் முதல் நிலை என்றால் அதன் இரண்டாம் நிலையாக இது அமைந்தது. மனது முழுதுமாய் உள்நோக்கித் திரும்பியதோடு மட்டுமல்லாமல் உடலின் உபாதைகளையும் அறவே புறக்கணித்தது. எனவே பொடியன்கள் வீசிய கல்லும், சல்லியும் அவனைத் துன்புறுத்தவில்லை. ஆனால் இதைப் பார்த்த சேஷாத்ரி சுவாமிகளின் மனது துன்பப்பட்டது. 'ஞானியை ஞானியே இனங்காண முடியும்' என்று சொன்னாற்போல, இந்த பிராமண சுவாமி லேசுப்பட்டவரல்ல என்று அவருக்குப் புரிந்தே இருந்தது. அவனுக்குத் தீங்கு வராமல் பாதுகாக்க விரும்பிய அவர் சிறுவர்களை விரட்டுவார். ஆனால் எப்போதும் காவல் இருக்க முடியுமா என்ன?

அங்கே ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு பாதாளலிங்கம் இருந்தது. அது ஒரு பெரியவரின் சமாதியின்மேல் வைக்கப்பட்ட லிங்கம். சுற்றியிருந்ததோ மண் தரை. தரைமட்டத்துக்குக் கீழே இருந்த லிங்கத்தின் இருப்பிடத்தைச் சூரியனின் கதிர்கள் எட்டிப்பார்த்ததே கிடையாது. ஆகவே அது எறும்பு, பூச்சிகள், கறையான், பூரான் இவற்றுக்குச் சவுகரியமான வசிப்பிடமாக இருந்தது. அந்த இடத்திற்கு மாறினார் 'பிராமண சுவாமி'.

யார்யாரோ ஏதோ கொண்டு வந்து ஊட்டுவார்கள், கொஞ்சம் வயிற்றுக்குள் போகும். ஆனால் அவரது தசையும் ரத்தமும் அங்கிருந்த புழு பூச்சிகளுக்குச் சுகமான விருந்தாகிக் கொண்டிருந்தன. அவர் பொருட்படுத்தாத அந்த உடல் புண்ணாகி அதில் ரத்தமும் சீழும் வடியத் தொடங்கியது. அந்த இடத்திலும் ரத்னம்மாள் போன்ற பக்தைகள் தினமும் உணவு தரத் தொடங்கினர். ஒருநாள் அவர் துவைத்த துணி ஒன்றைக் கொண்டுவந்தார். "சுவாமி, இதைக் கீழே விரித்துக் கொண்டால் புழு, பூச்சி கடிக்காமல் இருக்கும். அல்லது போர்த்துக் கொள்ளுங்கள்" என்று பலவாறாக வேண்டிக்கொண்டாள். ஆனால் பிராமண சுவாமியின் காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை. சரி, கண்விழிக்கும் போது பயன்படுத்தட்டும் என்று நினைத்து அங்கேயே துணியைக் கீழே வைத்துவிட்டுச் சென்றாள். மறுநாள் வந்து பார்த்தால் துணி அந்த இடத்திலேயே இருந்தது!

பாதாள அறையின் இருட்டுக்குப் பயந்த சிறுவர்கள், சற்றுத் தொலைவிலிருந்தே தமது வேலையைக் காட்டினர். சேஷாத்ரி சுவாமிகள் இயன்றவரை அவர்களைத் துரத்தினார். நல்ல வேளையாக நிலவறையின் ஒதுக்குப் புறமாக இருந்த இடத்தில் ரமணர் உட்கார்ந்ததால் அவர்மேல் கற்கள் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருநாள் வெங்கடாசல முதலியார் என்பவர் ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போனார். அங்கே கற்களும் ஓட்டாஞ்சல்லிகளும் சரமாரியாகப் பறப்பதைக் கண்டார். ஒரு கம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டினார். அந்தச் சமயத்தில் பாதாளலிங்கத்திலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் மேலே வருவதைப் பார்த்தார். அவருக்குக் கவலையாகிவிட்டது. "சுவாமி, உங்களுக்கு ஏதாவது காயம் பட்டுவிட்டதோ?" என்று விசாரித்தார்.

"ஊஹூம், எனக்கொண்ணுமில்லை. உள்ளேபோய் சின்ன சுவாமியைப் பார்" என்று சொல்லிவிட்டுக் காணாமல் போனார் சேஷாத்ரி சுவாமி.

கீழே இறங்கிப் போனால் ஒரே கும்மிருட்டு. கொஞ்ச நேரத்துக்கு எதுவும் தெரியவில்லை. கண் பழக்கப்பட்டபின் ஒரு சிறிய உருவம் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. முதலியார் நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு மௌன சுவாமி பிற சாதுக்களுடன் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அவர்களை அழைத்துவந்து, ரமணரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் கம்பத்து இளையனார் என்ற முருகன் கோவிலில் வைத்தார். ரமணரின் கீழ்த்தொடையிலும், பின்புறத்திலும் இருந்த சீழ்வடியும் புண்களைப் பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது அவர்களுக்கு. தேகத்தை ரமணர் உதிர்க்கும் வரையில் அந்தப் பகுதிகளில் தழும்புகளைக் காணமுடிந்தது என்கிறார் அவரது வரலாற்றை முதன்முதலில் மிகுந்த சிரமத்தின் பேரில் நமக்காகப் பலரிடமும் கேட்டுத் தொகுத்தெழுதிய பி.வி. நரசிம்ம சுவாமி.​

Megala Ramamourty

unread,
Jan 21, 2014, 9:05:14 PM1/21/14
to மின்தமிழ்
மதுரபாரதி ஐயா,

படிக்கப் படிக்கச் சிலிர்ப்பாகவும், பிரமிப்பாகவும் அல்லவா இருக்கிறது ரமண மகரிஷியின் சரிதம்! ஞானிகளுக்கான தேடலும், ஞானமும், வாழ்க்கை முறையும் சாமானியர்களால் நினைத்துப் பார்க்கவும் இயலாத ஒன்று என்பதில் ஐயமில்லை. இயலுமானால் அம்மகானின் உபதேசங்கள் சிலவற்றை அறியத் தாருங்கள்!

ரமண மகரிஷி குறித்த அற்புதமான தகவல்களைப் பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

அன்புடன்,
மேகலா


2014/1/21 Madhurabharati <madhura...@gmail.com>

--

coral shree

unread,
Jan 21, 2014, 9:12:57 PM1/21/14
to மின்தமிழ்
நானும் மேகலாவை வழி மொழிகிறேன். தயவுசெய்து ரமண மகரிஷி குறித்த அரிய செய்திகளை தொடருங்கள் ஐயா. நன்றி.

அன்புடன்
பவளா


2014/1/22 Megala Ramamourty <megala.r...@gmail.com>

Meena Muthu

unread,
Jan 21, 2014, 9:35:58 PM1/21/14
to mint...@googlegroups.com, MinTamil
என் பணிவன்பான வணக்கங்கள் தங்களுக்கு.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 21, 2014, 11:39:26 PM1/21/14
to மின்தமிழ், vall...@googlegroups.com
அன்பார்ந்த ஐயா!.. 

ஸ்ரீரமணரின் திவ்ய சரிதத்திலிருந்து அமுதத் துளிகளை அருமையாகத் தந்து வருகிறீர்கள்.. மனமார்ந்த நன்றி தங்களுக்கு!..

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் திவ்ய சரிதத்தில், இந்த நிகழ்வு கீழ்க்கண்டவாறு தரப்பட்டு இருக்கிறது...

"வெங்கடாசல முதலியார் ஒரு நாள் வழக்கம் போல் மத்தியானம் 12 மணிக்கு சிவகங்கையில் நீராடச் சென்றார். அப்போது அருகிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு ஆரவாரம் கேட்டது.. என்னவென்று கவனித்தார்.. ஐந்தாறு போக்கிரிச் சிறுவர்கள் மண்டபத்தின் மூலையிலுள்ள பாதாள ஈசுவரன் கோவிலுக்குள் கற்களை வீசி எறிந்து கொண்டிருந்தார்கள்.. இவர் கிட்ட நெருங்கினார்.. திடீரென்ரு ஹி..ஹி.. என்று இடிமுழக்கம் போல் சிரித்துக் கொண்டு, அவ்வாலயத்திலிருந்து  நம் ஸ்வாமி (சேஷாத்ரி ஸ்வாமிகள்) வெளியில் ஓடி வந்தார். திடீரென்று தோன்றியதால் முதலியார் பயந்து விட்டார்.

ஸ்வாமி அவரை, 'பயப்படாதே' என்று சொல்லிக் கீழே இருந்த ஆலின் கோலை எடுத்து, போக்கிரி சிறுவர்களைத் துரத்தினார். பிறகு முதலியாரிடம் வந்து, 'என் குழந்தை இதற்குள் தவம் செய்கிறான் பார்!' என்றார்.

முதலியார், 'ஸ்வாமி! உங்களுக்குக் குழந்தை ஏது?' என்றார். அதற்கு ஸ்வாமி, 'முன்பே உனக்கு நான் பார்வதி என்று சொல்லியிருக்கிறேனே.. மறந்து விட்டாயா(ஸ்வாமிகள், ஸ்ரீபராசக்தியின் சாக்ஷாத்காரம் பெற்றவர்.. அதனால் அவர் இவ்வாறு சொல்வது வழக்கம்)' என்றார்.

இப்படிச் சொல்லிக் கொண்டே முதலியார் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், கோயிலுக்குள் பார்க்கச் சொன்னார்... முதலியார் இரண்டு மூன்று படி கீழே இறங்கி அதன் உள்ளே கவனித்தார். சிவலிங்கத்தின் பின்புறம் யாரோ ஒருவருடைய தலை இருப்பது போல் அவருக்குத் தென்பட்டது.. இருளடைந்த அந்தக் கோயில் கர்ப்ப கிருகத்திற்குள் நுழைய, முதலியார் அச்சங்கொண்டு, வேறு சில ஜனங்களைத் துணைக்கழைத்தார். பிறகு  நாலைந்து நபர்களுடன் மெள்ள உள்ளே நகர்ந்தார். கவனித்தார். கண்டார் காக்ஷியை.. அங்கே நமது தவராஜர் ஸ்ரீரமணபகவான், கட்டை போல் சமாதி நிஷ்டையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அனைவரும் அவரைத் தாங்கி எடுத்து வந்தார்கள்.. நம் பகவானுடைய இரு துடைகளிலும் அரை அங்குலம் ஆழம் பூச்சிகள் அரித்து ரத்தம் சிந்திக் கொண்டிருப்பதையும் பார்த்தார்கள்.. அப்போழுது நமது ஸ்வாமி, வெங்கடாசல முதலியாரை முதுகில் அடித்து 'இப்போழுது பார்த்தாயா குழந்தை ஸ்கந்தனை' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.."

சேஷாத்ரி ஸ்வாமிகளைப் பற்றி ஸ்ரீரமணரிடம் யாரேனும் விசாரிக்கும் போது 'பெரிய சேஷாத்ரி எங்கே?' என்று விசாரிப்பது வழக்கம் என்று ஸ்ரீரமணரே    அருளியிருக்கிறார்..

மஹான்களைப் பற்றி சிந்திப்பதே பெரிய கொடுப்பினை.. நல்வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014/1/22 Madhurabharati <madhura...@gmail.com>

Madhurabharati

unread,
Jan 21, 2014, 11:54:25 PM1/21/14
to MinTamil

2014/1/22 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

சேஷாத்ரி ஸ்வாமிகளைப் பற்றி ஸ்ரீரமணரிடம் யாரேனும் விசாரிக்கும் போது 'பெரிய சேஷாத்ரி எங்கே?' என்று விசாரிப்பது வழக்கம் என்று ஸ்ரீரமணரே    அருளியிருக்கிறார்..


​ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சுழன்று சுழன்றடித்த சூறாவளி என்றால் ஸ்ரீ ரமணரோ ஒடுங்கிநின்ற சலனமற்ற தண்வளி. அதுவும் இதுவும் ஒன்றுதான்.

நன்றி அம்மா. இவர்தம் சரிதைகள் கேட்கக் கேட்க ஆனந்தம். பேரமைதி. உயர்வு. சுயவொடுக்கம்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 22, 2014, 12:08:07 AM1/22/14
to மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
///அதுவும் இதுவும் ஒன்றுதான்.///

அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!.. மிக்க நன்றி..தொடர்ந்த தங்கள் பகிர்வுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014/1/22 Madhurabharati <madhura...@gmail.com>

 

N. Kannan

unread,
Jan 22, 2014, 12:29:51 AM1/22/14
to மின்தமிழ்
2014/1/21 Hari Krishnan <hari.har...@gmail.com>


2014/1/21 Madhurabharati <madhura...@gmail.com>
மறுநாள் காலையில் நான்கு அணாவுக்குப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையில் வந்து இறங்கினான் வெங்கடராமன்.​

***

அதெல்லாம் அவதாரங்கள் கள்ள டிக்கெட்டிலும் வரலாம் நல்ல டிக்கட்டிலும் வரலாம்.  எல்லா டிக்கட்டும் படிக்கட்டு என்பார்கள்.  இதெல்லாம் மின் உலகின் ஈகோ.  


இந்த உள்குத்து அவசியமில்லாது. எதையோ நினைத்து எதையோ இடிப்பது இது. 

நீங்கள் ரமண மகரிஷிய்பார்க்கிறீர்கள். நான் வெங்கட்நாமன் என்ற சிறுவனைப் பார்க்கிறேன். அவர் சரிதம் முதலில் கல்கியிலோ, ஆனந்தவிகடனிலோ வந்தது. வீட்டை விட்டு கிளம்பிவிட்டது குழந்தை. கையில் காசு இருக்குமோ இருக்காதோ? ரயிலேறிப் போகத்தோன்றுகிறது. டிக்கெட்டிற்கு காசு உண்டா? என்று தெரியாது. இப்படியும் யோசிக்கலாம்தான். அப்படிப்படித்ததாக நினைவு.

ஆனால் அப்படியொரு வார்த்தை விழுந்ததால்தானே இப்போது ரமண சரிதம் வருகிறது ;-) வெறும் ஆத்ம தரிசனம் என்று எழுதும் போது வராத பின்னூட்டம் ஒரு தூண்டுதலால் வருகிறது என்றால் அது நன்மை என்றே கருத வேண்டும். மின்தமிழில் கட்சி கட்டுவதை, நம்மடவா? இவா, அவா! எனும் நினைப்பையும் தவிர்க்கவும். உங்கள் குற்றசாட்டுக்கு அந்த இடுகையில் ஏதேனும் காரணம் இருந்தால் காட்டி, பேசிப்பழகவும். அது இரமணரைப் புகழ்ந்து பேசும் இடுகை. துரியோதனப் பார்வை வேண்டாம் ;-)

நா.கண்ணன் 

Hari Krishnan

unread,
Jan 22, 2014, 12:36:52 AM1/22/14
to mintamil

2014/1/22 N. Kannan <navan...@gmail.com>

இந்த உள்குத்து அவசியமில்லாது. எதையோ நினைத்து எதையோ இடிப்பது இது. 

 :)))

குத்தா அது?  அப்படித் தோன்றினால் நான் என்ன செய்யமுடியும்!  காரியங்களுக்கு மூலத்தைக் காரணனே அறிவான்!

N. Kannan

unread,
Jan 22, 2014, 12:45:29 AM1/22/14
to மின்தமிழ்
2014/1/22 Madhurabharati <madhura...@gmail.com>


"மரணபயத்தோட அதிர்ச்சியில மனசு உள்ளே பாத்துத் திரும்பிடுத்து. எனக்கு நானே சொல்லிக்கிறேன், மனசுக்குள்ளேயே, வார்த்தை கோவையா இல்லாம 'சரி, இப்ப சாவு வந்துடுத்து. வரட்டுமே! சாவுன்னா என்ன? சாகறது எது? இந்த உடம்புதான் மடியும்.' சாவுக்காட்சி அப்படியே ஒரு நாடகம் போல நடக்கிறது. கைகால்களை நீட்டி வெறப்பா வெச்சுண்டேன்--ஒரு சவத்தைப் போலவே! இன்னும் தத்ரூபமா இருக்கணும்னு மூச்சையும் அடக்கிண்டுட்டேன். பிணமாவே என்னைப் பாவிச்சுண்டேன். தப்பித் தவறிக்கூடச் சத்தம் கிளம்பிடாம உதட்டை அழுத்தி மூடிண்டுட்டேன். 'நான்'கிற சொல்லோ வேறே வார்த்தையோ வந்துடக்கூடாதுன்னு உத்தேசம்.

இதைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது. rigor mortis என்பதும் தொடர் நினைவாக வருகிறது. ஏனென்று தெரியவில்லை. தொடராக வந்த ரமண சரிதத்தை முதலில் எழுதியது யார்?

அதைப்போல மரணபயத்தை, மரணபயத்தாலே வென்றான் வெங்கடராமன். அது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல. இந்த அனுபவம் எவ்வளவு நேரத்தில் நிகழ்ந்தது என்பதைப் பற்றி ரமணர் ஒருமுறை, "நான் ஞானம் அடைவதற்கு இருபத்தெட்டு அல்லது முப்பது நிமிடங்கள் ஆயின என்று சொல்கிறார்கள். அது தப்பு. ஒரு க்ஷணம் இருக்கலாம். அதுவும் சரியில்லை. டைம் எங்கே அதிலே?" என்று கூறினார்.​
 

இரண்டு ஒப்புமைகள். ஜே,கிருஷ்ணமூர்த்தியுடன் நிழல் போல இருக்கும் புப்புல் ஜெயகர் ஒருமுறை கேட்டாராம், ‘உங்களோடு இத்தனை வருடங்கள் இருக்கிறேன். ஏன் எனக்கு இன்னும் ஆத்ம ஞானம் வரவில்லை?’ என்று. அதற்கு அவர் பதில் சொல்லியிருக்கிறார், “அதற்கு ஏன் வருடங்கள் தேவைப்படுகின்றன. என்னை முழுமையாகக் கேட்டாய் எனில் ஒரு நொடி போதுமே!” என்று.

ஏபன் அலெக்ஸாண்டர் முழுமையான நரம்பியல் மருத்துவர். அறிவியல் சிந்தனை உள்ளவர். ஆத்ம ஞானத்தைத் தேடியவர் அல்லர். நோய், நொடியற்றவர். திடீரென்று இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய மூளைத்தாக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களில் நினைவு இழந்துவிடுகிறார். மருத்துவ நிலையம் அவரது மூளைச்சாவை புரிந்து கொள்கிறது. ஆயினும் அவரை ஒரு வாரம் IMC (Intensive medical care with life supportive system) வை வைத்திருக்கிறது. அலெக்ஸாண்டரைப் பொறுத்தவரை ‘காலம்’ என்பது அழிந்து விடுகிறது. அத்தோடு ‘நானும்’ அகன்றுவிடுகிறது (’நான்’ என்பதைக் காலம் என்று சொல்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி). ஒருவாரம் அவர் கோமாவில் இருந்தது பல யுகம் போல் அவருக்குத் தோன்றியிருக்கிறது.

நா.கண்ணன்

திவாஜி

unread,
Jan 22, 2014, 3:11:16 AM1/22/14
to mint...@googlegroups.com, மின்தமிழ்

Scientists Claim That Quantum Theory Proves Consciousness Moves To Another Universe At Death

A book titled “Biocentrism: How Life and Consciousness Are the Keys to Understanding the Nature of the Universe“ has stirred up the Internet, because it contained a notion that life does not end when the body dies, and it can last forever. The author of this publication, scientist Dr. Robert Lanza who was voted the 3rd most important scientist alive by the NY Times, has no doubts that this is possible.

http://tinyurl.com/l4tux8o


Geetha Sambasivam

unread,
Jan 22, 2014, 4:09:47 AM1/22/14
to மின்தமிழ்
.// தொடராக வந்த ரமண சரிதத்தை முதலில் எழுதியது யார்?//

ஆனந்த விகடனில் பரணீதரன் எழுதினார் என நினைக்கிறேன்.   அருணாசல மகிமை என்ற பெயரில் புத்தகமாகக் கூட வந்துள்ளது. படித்திருக்கிறேன். விகடனில் வந்தபோதும், பின்னர் புத்தகமாகவும்.


2014/1/22 N. Kannan <navan...@gmail.com>
2014/1/22 Madhurabharati <madhura...@gmail.com>

Madhurabharati

unread,
Jan 22, 2014, 8:35:12 AM1/22/14
to MinTamil

2014/1/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஆனந்த விகடனில் பரணீதரன் எழுதினார் என நினைக்கிறேன்.   அருணாசல மகிமை என்ற பெயரில் புத்தகமாகக் கூட வந்துள்ளது. படித்திருக்கிறேன். விகடனில் வந்தபோதும், பின்னர் புத்தகமாகவும்.


​மிகவும் சரி. ஆனந்தவிடனில் பரணீதரன் ‘அருணாசல மகிமை’ என்ற பெயரிலேயே தொடராக எழுதினார். அது ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், பூண்டி சுவாமிகள் எனப் பல ஞானியரை​ப் பற்றிய சரித்திரக் களஞ்சியம். ஒரு புகைப்படக்காரரோடு அவ்விடங்களுக்குச் சென்று மிகச் சிறப்பாக எழுதிய தொடர் அது. இதைச் செய்யப் பணித்தவர் காஞ்சி காமகோடிப் பெரியவர்கள். அக்காலத்தில் பத்திரிகை நிர்வாகமும் அதற்கு ஒத்துழைத்தது.

ரமணரின் அணுக்க அன்பர்களான தேவராஜ முதலியார், குர்ரம் சுப்பராமையா, நரசிம்மசுவாமி (இவர்தான் சென்னையில் ஷீரடி சாயி கோவில் கட்டியவரும்), ஆர்தர் ஆஸ்பார்ன் என எண்ணற்றோர் எழுதிய நூலகளின் சுரங்கம் ‘ரமண சரிதம்’ எழுத அனுகூலமாக இருந்தது. 

என்னையும் அவ்வருளாளர்கள் ஒருபொருளாகத் தாமே நினைவின்றி ஆண்டுகொண்டு இதனையும் எழுதியதைப் பெறும்பேறாகக் கருதுகிறேன்.

ஞானியரின் வாழ்வை எழுதுபவனையும் படிப்பவனையும் இறைவன் ஆசிர்வாதிக்கிறான் என்று கபீர்தாசர் கூறுவார். ’ரமண சரிதம்’ எழுதியது என் ஆன்மீக வாழ்வின் திருப்புமுனை.

அன்போடும் பணிவோடும்
மதுரபாரதி
Reply all
Reply to author
Forward
0 new messages