வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: இப்பொழுது, நேரிடைவாகவோ அல்லது
மறைமுகமாகவோ பலரின் மனங்களில் தாக்கத்தை, பயத்தை, கவலையை உருவாக்கி வரும்
பெயர்கள், மனிதர்கள் மற்றும் அவர்களது மனிதத்தன்மை பிறழ்ந்த
வாழ்க்கைநெறிகள்……. … … … இவர்களை எதோ மனித பிறழ்ச்சிகள், சீர்கேட்ட
பிறப்புகள் என்றெல்லாம் ஒதுக்கமுடியாது. இவர்களது செயல்கள் சிறுவர்கள் –
வளர்ந்துவரும் 19 வயதுள்ள பையன்கள்-பெண்கள், ஆண்-பெண் உறவுகள்,
முதலியவற்றைப் பற்றியது. எந்த பொறுப்புள்ள பெற்றோர்களோ, சமூக ஆர்வலர்கள்,
என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களை கவலை கொள்ளச் செய்வது. ஆனால்,
குழந்தைகள் உரிமைகள், மனித உரிமைகள், பெண்கள் உரிமை, மிருகங்களின் உரிமை
என்றெல்லாம் முழக்கமிடும் மறாவர்கள் மௌனம் காப்பது விந்தைதான்.
மதத்தீவிரவாதமும், சமூகத்தீவிரவாதமும்: மனிதனை மதத்தீவிரவாததால் ஜிஹாத் /
புனிதபோர் என்ற பெயரில் குண்டுகளை வைத்து கொல்லலாம், உடல்களை
சின்னாப்பின்னமாக்கலாம், அவற்றை பல திசைகளில் சிதறியடிக்கலாம், ரத்தத்தை
பீய்ச்சியடிக்கலாம். லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கன பெண்களை கொல்லலாம்,
அவர்களின் தாலிகளை அறுக்கலாம், விதவையாக்கலாம், குழந்தைகளை
அனாதைகளாக்கலாம்.. .. .. .. ஆனால் இந்த சமூகத்தீவிரவாதம் அதனையும்
கொடியது, கொடூரமானது, மனிதகுலத்தை அழிக்கவல்லது. கிருமிக்களைவிட,
வைரஸ்களைவிட பரவவல்லது. மக்களின் மனங்களில் உட்கார்ந்துகொண்டு பற்பல
அவர்களைப்போல அவதாரங்களை எடுக்கவல்லது.
தமிழ் ஊடகங்களின் “கும்பகர்ணத்தனம்”! தமிழ் பத்திரைக்கையளர்கள்,
நிருபர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்த குழந்தைள் பாலியல்
வன்முறைகளுக்குட்பட்ட விஷயத்தில் மெத்தனத்துடன் நடந்து கொண்டிருப்பதுடன்
அவற்றைப் பற்றிய செய்திகளே வரவிடாமல் தடுக்கின்றனர் அல்லது தங்களால்
முயன்றவரை முயன்று, வெற்றிக்கொண்டுள்ளனர் என்றே தெரிகின்றது. இதே மற்ர
விஷயங்களில் பார்த்தல் நான், நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு செய்திகளை
அள்ளிவீசிக்கொண்டிருப்பர். டிவி-செனல்கள் எல்லம் மணிக்கு மணி புதிய
அதிரடி செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். ஊடக
நிபுணர்கள், வித்துவான்கள், பண்டிதர்கள், விற்பன்னர்கள், வல்லுனர்கள்
தமக்கெயுரித்தான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பர். குறிப்பிட்ட
சமுதாயத்தை, ஜாதியை, மதத்தை சாடிக்கொண்டிருப்பர். ஆனால் இப்பொழுது
மௌனம்தான்!
அதிரடி-பரபரப்பு-மறுபக்கம்-பூதக்கண்ணாடி: எங்கேப்போயிற்று அவர்களுடையத்
துப்பறியும் தீரம், புலன்விசாரணை தன்மை, நுண்ணறிவான அறிக்கை, அதிரடி
செய்திகள், பரபரப்பு பேட்டிகள்……………நேராக மஹாபலிபுரத்திற்குச் சென்று
பாதிக்கப்பட்ட, வதைக்கப்பட்ட, பாலியில் வன்முறைகளுக்கு உட்படுத்தபட்ட 42
19வரையிலான குழந்தைககளையும் பேட்டிக்கண்டிருக்க வேண்டாமா? 2002இல் வயது
14 முதல் 19 வரையென்றால் இப்பொழுது 21 முதல் 26 வயதில் இருப்பார்களே?
அவர்களிடமிருந்து உண்மைகளைப் பெற்று பதிவு செய்திருக்கவேண்டாமா? மற்ற
குழந்தைகளுக்கு படிப்பினையாக இருக்கமே? ஆனால் யாரும் செய்யவில்லை!
நக்கீரத்தனமும் காணோம், பெரியார்தனமும் காணோம்: ஹியூமினுடைய மனைவி,
தாயார், நண்பர் என்று ஒரு அயல்நாட்டுக் கூட்டமே இருந்ததே? அவர்கள்
என்னவானர்கள்? அவர்களை ஏன் கைதுசெய்யவில்லை? இந்தியாவிலேயே இருக்கின்றனரா
அல்லது சென்றுவிட்டனரா? அவ்வாறு சென்றிருந்தால், எப்படி சென்றிருப்பர்?
இதில் சம்பந்தப்பட்ட பல துறைகளின் அதிகாரிகள் எப்படி ஒத்துழைத்தனர்?
ஊடக வல்லுனர்கள் அவர்கள் பின்னேயும் சென்று விவரங்களைத்
திரட்டியிருக்கலாமே? அயல்நாட்டவர் இந்தியாவிற்கு வருகை, தங்குதல்,
செயல்படும்தன்மை முதலிய பல விஷயங்கள் குடியேற்ற அதிகாரி முதல் போலீஸ்வரை
கண்காணிக்ககின்றனர். அவர்களையெல்லாம் பேட்டி கணிடிருக்கலாம்.
அண்ணாமலை ஜனகராஜிடம் பேசும்மாதிரியான காட்சி! எப்படி அவன் அப்படத்தில்
நடித்திருக்கமுடியும்? அதாவது திரைத்துறையில் யாருடைய அறிமுகத்தின் மூலம்
அல்லது பரிந்துரை வழியாக அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தது? அவ்வாறு
சிபாரிசு / பரிந்துரை செய்த அந்த கனவான், குணவான், தனவான் யார்?
நமது துப்பறியும் சீமான்கள் விஷயங்களை அறிய பாய்ந்து சென்றிருக்க
வேண்டாமோ? இல்லை, ஒன்றுமே செய்யவில்லை! நன்றாகத் தூங்கிக்
கொண்டிருந்தார்கள்! ஆனால் டில்லியிலிருக்கும் செனல்கள் அக்காட்சியை
ஒளிப்பரப்புகிறது!
• சரி, இத்தனையும் நடந்த பிறகும் ஏண் ஒன்றுமே நடக்காதமாதிரியும், ஒன்றுமே
தெரியாதது மாதிரியும், ஊடக முனைவர்கள் அமைதியாக இருக்கமுடியும்?
• அவர்கள் அவ்வாறு இருக்குமாறு யாராவது அறிவுறை தந்துள்ளனரா?
• அடக்கிவைத்துள்ளனரா?
• ஆணையிட்டுள்ளனரா?
• ஆணையிடப் பட்டுள்ளனரா?
• மிரட்டிவைத்துள்ளனரா?
• அப்படியென்றால் ஏன்?
• யார் அவ்வாறு செய்தது?
• அவர்களும் அந்த பாலியல் வன்முறை கொடுமைகள் நடந்திருப்பதுடன்
சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா?
• ஏன் இந்த பயம்?
• எந்த விஷயம் வெளியே வந்துவிடும் என்று பயப்படுகிறர்கள்?
• ஊடகத்துறையினர்க்கும் இதில் ஏதேனும் பங்கு உள்ளதா?
• ஒன்றுமே புரியவில்லையே?
2002 முதல் 2009 காலக்கட்டம்: சென்னையில் ஒருவர் தனியாக
இருக்கவேண்டுமானால் சராசரி குறந்தபட்சமாக ரூ.6000 முதல் 15,000/- வரை
வேண்டும். அப்படியென்றால் 30 வருடகாலமாக முதலில் குடும்பத்துடனும் பிறகு
சமீபகாலங்களில் தனியாக வாழ்ந்த இவனுக்கு லட்சக்கணக்கில் பணம்
வேண்டியிருக்கும். இல்லையென்றால் வீடுகளில் தங்கமுடியாது,
சாப்பிடமுடியாது. ஔ மட்டுமா, இவன், இவனது குடும்பம், நண்பகள்
அயல்நாட்டவர்கள் என்பதனால் கொஞ்சம் அதிகமாகவே செலவு
செய்யவேண்டியிருக்கும். அப்படியென்றால் பணம் எங்கிருந்து வந்தது? யார்
கொடுத்தார்கள், அனுப்பினார்கள்? ஒரு “சுற்றுலா பயணி” என்ற முறையில்
வந்தவனுக்கு இத்தகைய வசதிகள் செய்துகொடுத்து சந்தோஷமாக அதுவும் அதிக
ஆதுக்கத்தை-தாக்கத்தை கொண்டுள்ளவனாக இருக்கிறான் என்றால் இவனது பின்னணி
என்ன? இங்குதான் கிருத்துவ சம்பந்தம் வருகிறது. அதாவத்ய் “லிட்டி ஹோம்”
அந்த மஹாபலிபுரம் “அனாதை இல்லம்” வருகிறது! குழந்தைகள் இல்லம் எப்படி
காமக்களியாட்ட இல்லமாக மாறியது? காமக்கொடூரனின் கோட்டையாக
உருவெடுத்தது?
வேதபிரகாஷ்
20-11-2009 அன்று பதிவு செய்யப்பட்டது: