கேள்வி -- "கொஞ்சு" என்பதற்கு ஈடான பிறமொழிச் சொற்கள் எவை?

452 views
Skip to first unread message

rajam

unread,
Jan 17, 2012, 2:45:34 AM1/17/12
to மின்தமிழ், tamilmanram
நம்ம தமிழ் இருக்கே, இது மிகப் பெரிய துயரம் தரும் மொழி. ஏனென்றால் இதை மிகத் துல்லியமாகப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. ஏனோ தானோ என்றுதான் எந்த மொழிபெயர்ப்பும் அமையும்.

அதை விடுங்கள். தமிழ் "உணர்வு" பற்றி நினைத்துப் பாருங்கள். நம் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் உணர்ச்சிகளைப் பிற மொழி பேசுவோரிடம் நம்மால் பகிர்ந்துகொள்ள முடிகிறதா? என்னால் முடிவதில்லை. 

எடுத்துக்காட்டாக ... "கொஞ்சு" என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன? வேற்று மொழி பேசும் ஒருவன் என்னைக் "கொஞ்ச" முடியுமா?
மருத்துவ நிலையில் ... என் முதுகெலும்புத் தண்டில் "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற உணர்ச்சி ஏற்படுவதைத் தமிழ் தெரியாத மருத்துவரிடம் எப்படி விளக்குவது? எப்படி விளக்கப் பார்த்தாலும் எந்த மருத்துவருக்கும் புரிவதில்லையே. 
இப்படிப் பல சிக்கல் உண்டு.
உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் தமிழில் இருப்பதைப்போல் எல்லாப் பிற மொழிகளிலும் சொற்கள் இருப்பதில்லை. ஒருவேளை, ஒவ்வோர் இனத்தவரிலும் அவரவர் உணர்வுகளும் செயல்களும் வேறுபடலாம். ரஷ்யன்/இரசியன் மொழியில் நம் தமிழ்போலவே உணர்வுகளை விளக்கும் சொற்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். 
நம்மவர் எங்கே வாழ்ந்தாலும், நம் வாழ்க்கை எப்படி அமைந்தாலும் ... மொழி தந்த உணர்ச்சித் தாக்கம் நம்மை விடவே விடாது!
அதெல்லாம் இருக்கட்டும். இப்போதைய என் கேள்வி ; 
"கொஞ்சு" என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன?  
:-) :-) :-)
அன்புடன்,
ராஜம்

N. Kannan

unread,
Jan 17, 2012, 3:04:57 AM1/17/12
to mint...@googlegroups.com
மிக, மிக அழகான மடல்.

என் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க முயன்றபோது இச்சிக்கலை உணர்ந்தேன்.

‘கொஞ்சு மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி!
வஞ்சகரை எதிர்த்திடவே வாளும் ஏந்த வேண்டுமடி!’

எனும் பழைய பாடல் நினைவிற்கு வருகிறது.

‘கொஞ்சுமொழி’ என்பதை ஒவ்வொரு மொழியிலும் வேறுவிதமாகச் சொல்வர் என்று தோன்றுகிறது!

நா.கண்ணன்

2012/1/17 rajam <ra...@earthlink.net>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Hari Krishnan

unread,
Jan 17, 2012, 3:09:15 AM1/17/12
to mint...@googlegroups.com


2012/1/17 N. Kannan <navan...@gmail.com>

கொஞ்சுமொழி’ என்பதை ஒவ்வொரு மொழியிலும் வேறுவிதமாகச் சொல்வர் என்று தோன்றுகிறது!

Endearing, endearingly கொஞ்சம்போல கிட்ட வந்து கொஞ்சலாமோ என்னவோ! :))

--
அன்புடன்,
ஹரிகி.

விஜயராகவன்

unread,
Jan 17, 2012, 4:46:31 AM1/17/12
to மின்தமிழ்
>
> மருத்துவ நிலையில் ... என்
> முதுகெலும்புத் தண்டில்
> "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற
> உணர்ச்சி ஏற்படுவதைத்
> தமிழ் தெரியாத
> மருத்துவரிடம் எப்படி
> விளக்குவது?


I have a tingling sensation in the backbone (exact spot)


>
> "கொஞ்சு" என்ற
> தமிழ்ச்சொல்லுக்கு ஈடான
> ஆங்கிலச் சொல் என்ன?

playful teasing

VCV

Innamburan Innamburan

unread,
Jan 17, 2012, 5:00:07 AM1/17/12
to mint...@googlegroups.com, innamburan88

மொழியின் துல்லியம், நுட்பம், உணர்வு, உரைத்தலில் நேர்த்தி ஆகியவற்றை பற்றி அருமை சாற்ற, ராஜத்தை விட நமக்கு ஆள் கிடைக்கப்போவதில்லை. யாமறிந்த/அறியாத மொழிகளிலே, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உன்னதமே. சமயத்தில் சொல்லிரவலுக்கு அதுவே காரணம். 'nuance'க்கு தமிழ் என்ன? 'குடைச்சலுக்கு' ஆங்கிலம் என்ன? ஹிந்தி/உருது நுட்பங்கள் அருமையும், பெருமையும் தருபவை ~ முக் & சேஹ்ரா: பொருள் ஒன்று; அர்த்தம் வேறு. )அடியை பிடிடா, பாரதபட்டா என்றானாம்!  ப்யார் வேறு; முஹப்பத் வேறு. See this: Touched to the quick, This touched my heart. Touch here.
அதெல்லாம் சரி. பேஃபார்ஸ் (Befaars) என்றால் என்ன? 'எனக்கு பேஃபார்ஸ்ஸா இருக்கு டாக்டர்.'
இன்னம்பூரான்

2012/1/17 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Jan 17, 2012, 5:01:04 AM1/17/12
to mint...@googlegroups.com
கொஞ்சுவதில் படிநிலைகள் பதினேழு.


2012/1/17 விஜயராகவன் <vij...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 17, 2012, 8:18:30 AM1/17/12
to மின்தமிழ்

On Jan 17, 2:01 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:


> கொஞ்சுவதில் படிநிலைகள் பதினேழு.
> இ
>

விஜயராகவனுக்கு,

ஊறுவது, ஊருவது - ற/ர வேறுபட்டால் பொருள் மாறும்.
எனவேதான் ற/ர வேண்டும். கொங்குநாட்டுத்தமிழில்
சீராட்டு, சீறாட்டு நேர் மாறான பொருள்கள் தரும்.

கணேசன்

> 2012/1/17 விஜயராகவன் <viji...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > > மருத்துவ நிலையில் ... என்
> > > முதுகெலும்புத் தண்டில்
> > > "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற
> > > உணர்ச்சி ஏற்படுவதைத்
> > > தமிழ் தெரியாத
> > > மருத்துவரிடம் எப்படி
> > > விளக்குவது?
>
> > I have a tingling sensation in the backbone (exact spot)
>
> > > "கொஞ்சு" என்ற
> > > தமிழ்ச்சொல்லுக்கு ஈடான
> > > ஆங்கிலச் சொல் என்ன?
>
> > playful teasing
>
> > VCV
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Kannan

unread,
Jan 17, 2012, 8:51:39 AM1/17/12
to mint...@googlegroups.com
கொஞ்சுவதைச் செல்லம் என்கிறோம். செல்லமான பெண்ணாக இருந்தால் செல்லம்மாள்.
இதற்கிணையான சமிஸ்கிருதச் சொல்லுண்டா? பேத்திக்கு பெயர் செல்லம்மாள்
என்று வைத்தால் ரொம்பப் பழைய பெயராக இருக்காம். செல்லம்மாள் எனும் பெயரை
எப்படி modernize செய்வது? :-)

நா.கண்ணன்

காளையும் கரடியும்

unread,
Jan 17, 2012, 9:17:06 AM1/17/12
to மின்தமிழ்
அருமையான கேள்வி!
இதைப் படிக்கும் போது,
"கொஞ்சம் நேரம் கொஞ்சும் நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?"
என்ற பாடலை எப்படி மொழி பெயர்ப்பது (ஆங்கிலத்தில்)?

"Intimate talk" என்று வைத்துக் கொள்ளலாமா?

"தூளியிலே தூக்கத்திலிருந்து விழித்து விட்டிருந்த மழலை, தனது
கண்களிரண்டையும் உருட்டி, உருட்டிப் பார்த்து, பொக்கை வாய்த் திறந்து
அம்மாவைப் பார்த்துச் சிரித்தது. அவள் ஒரு நாற்காலியை அருகிலிழுத்துப்
போட்டமர்ந்து, தனது தலையை தூளிக்குள் விட்டு, தூளியோடு குழந்தையை தன்னிரு
கைகளால் அள்ளியெடுத்து, "ம்மா,.. ப்பா,,," என்றெல்லாம் கொஞ்சிப் பேச
ஆரம்பித்தாள்"

இந்தக் கொஞ்சுதலை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது?

(ரூம் போட்டு யோசிப்பீகளா? :-) )

எனக்கு இன்னொன்னும் தெரிஞ்சாகனும்! (இவ்வளவு உரிமையோடு கேட்பதற்கு
மன்னிக்கவும்)

அறுசுவைகளில்
"துவர்ப்பு" என்பது எப்படி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது?

அன்புடன்,
பாபு கோதண்டராமன்

காளையும் கரடியும்

unread,
Jan 17, 2012, 9:21:00 AM1/17/12
to மின்தமிழ்
"... feel like something crawling up in my spine" என்று சொல்லலாமா?

பாபு கோதண்டராமன்

N. Ganesan

unread,
Jan 17, 2012, 9:34:25 AM1/17/12
to மின்தமிழ்

காளையும்கரடியும் மடலைப் படிக்கிறபோது,
அமெரிக்காவில் முதல் தமிழ்ச்சங்கம் - நியூ யார்க் தமிழ்ச்சங்கம் -
நிறுவியவர்களில் ஒருவர் டாக்டர் ப. குமரேசன் அழைப்பினால்
வாரியார் சுவாமிகள் வந்து ஆற்றிய சொற்பொழிவுகள் நினைவுக்கு
வந்தன. செல்வன் விரும்பலாம்.
“லஞ்சமும், வஞ்சமும், பஞ்சமும், கஞ்சமும் கொஞ்சமும்
இல்லாத நாடு” என்று அமெரிக்காவைப் புகழ்ந்தார்.

(அவர் தங்கியிருந்தது எல்லாம் டாக்டர் வீடுகளில்,
பயணம் கெடிலாக்ஸில்).பக்தி அனிமேசனில்
நிகரற்ற மேதை அவர். ஏர்போர்ட்டில் இருந்தபோது
சொன்னார்: ஆண்டாள் ‘கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ
நாறுமோ, செம்பவளத் திருவாய் தான் தித்திக்குமோ?”
என்பதெல்லாம் இங்கேதான் பார்க்கலாம். புருஷன்
விமானத்தில் வழியனுப்பும் போது செம்பவளத் திருவாய்
முத்தம் தித்திக்கிறதைப் பார்க்கலாம். செம்பவளத் திருவாய்
- லிப்ஸ்டிக். தனுர் மாஸம் முடிந்து நாச்சியார் பற்றி
எழுதினேன் என்றார் தேவ். அதனால் வாரியாரின்
செம்பவள வாய் வண்ணனை. ராஜாஜி 1942-ல் ஆண்டாள்
கற்பனை என்ற கட்டுரை எழுதியது தேவ் ஸாரிடம் உள்ளதா?

நா. கணேசன்

DEV RAJ

unread,
Jan 17, 2012, 10:55:18 AM1/17/12
to மின்தமிழ்
On Jan 17, 7:34 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> ராஜாஜி 1942-ல் ஆண்டாள் கற்பனை என்ற கட்டுரை ....<<<

மதமரபு சார்ந்த விஷயங்களில் தம் நிபுணத்வத்தை
ஒப்புக்கொள்ளவில்லை அம்மாமேதை,
'முதல் மூவர்' என்ற அவர்தம் கட்டுரைக்கு மறுப்பு
எழுந்தபோது. மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிச்
செல்வாக்கை உபயோகித்து ஒபினியன் போல் நடத்தவுமில்லை.
நம் தரத்துக்கு அவரை இழுக்க வேண்டாம்.
கருத்து வேறு; ஆராய்ச்சி முடிவாக நிறுவ
முயல்வது வேறு


தேவ்

Innamburan Innamburan

unread,
Jan 17, 2012, 11:06:52 AM1/17/12
to mint...@googlegroups.com
'நம் தரத்துக்கு அவரை இழுக்க வேண்டாம்.'
~ பாயிண்ட் வபையாக மேட், தேவ். நன்றி.


2012/1/17 DEV RAJ <rde...@gmail.com>

rajam

unread,
Jan 17, 2012, 11:34:04 AM1/17/12
to mint...@googlegroups.com
கணேசன்,
தயவு செய்யவும். இழையின் தலைப்பைத் திருப்பவேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Jan 17, 2012, 11:41:23 AM1/17/12
to mint...@googlegroups.com, Narayanan Kannan
"கொஞ்சும்" பொருளை/ஆளை ... "செல்லம்" என்கிறோம் என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்துகொள்கிறேன்.
ஆனாலும் "கொஞ்சு" என்ற செயலுக்கு/வினைக்கு என்ன மாதிரிச் சொல் எந்த அயல்நாட்டு மொழியிலாவது இருக்கிறதா என்று தேடுகிறேன்.

"செல்லம்மாள்" என்ற பெயர் பழைம்யாகத் தோன்றினால் ... "செல்சி" என்று வைக்கச் சொல்லுங்கள். க்லின்டனின் மகளுக்கு அதுதானே பெயர், பொருள் "செல்லம்" என்பதாக இல்லாவிட்டாலும்! நம்ம செல்லம்மா பேத்தி பிற்காலத்தில் எப்படியும் அமெரிக்கா வருவாள். அப்போது அவள் பெயரைச் சொல்ல இங்கே எல்லாருக்கும் எளிமையாக இருக்கும். அப்போது ஒருவேளை அமெரிக்கச் செல்சியும் ஜனாதிபதியாகலா! எது எப்படி நடக்கும் என்று தெரியாது! :-)

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Jan 17, 2012, 12:28:46 PM1/17/12
to மின்தமிழ், Innamburan Innamburan
நல்ல சொல்லுக்கு மிகவும் நன்றி!
இப்போதைக்குத் தமிழிலேயே நிற்க எனக்கு விருப்பம். "தமிழில் உள்ள சில சொற்களை/உணர்ச்சிகளை எப்படிப் பிறமொழி பேசுவோரிடம் வெளிப்படுத்துவது" என்பதே என் கவலை. அதுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன்.
நீங்க ஒரு வார்த்தெ அடுத்த மொழி பற்றிச் சொன்னா, இங்கெ இருக்ற ஒருத்தர் அதெப் பிடித்துக்கொண்டு என் இழையைக் குதறிவிடுவார். தயவுசெய்து அதற்கு வழிவைக்காதீர்கள்! :-) :-) :-)

Begin forwarded message:

செல்வன்

unread,
Jan 17, 2012, 1:49:10 PM1/17/12
to mint...@googlegroups.com
கொஞ்சுதல் என்பது பல பொருள்களில் பயனொபடுத்தபடுகிறது. அதன் ஒவ்வொரு பொருளுக்கும் ஆங்கிலத்தில் ஒவ்வோரு சொல் பயன்படுத்தபடுகிறது.

உதாரனமாக ஆங்கிலத்தில் பிலீவ், ஹோப், ஃபெய்த், ட்ரஸ்ட், கான்பிடன்ட் என உள்ல அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழில் உள்ள ஒரே சொல் நம்பிக்கை மட்டுமே.மேற்கண்ட ஆங்கில சொற்கள் ஒவ்வொன்றுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. கடவுள் மேல் ஃபெய்த் வைக்கலாம், வி.வி.எஸ் லட்சுமனனை ட்ரஸ்ட் செய்யலாம், ஒபாமா மேல் ஹோப் வைக்கலாம். ஆனால் தமிழில் கடவுளையும், லட்சுமனனையும், ஒபாமாவையும் நம்பதான் வேண்டும்.

Back to the question:

"கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்" என்பதில் உள்ள கொஞ்சுதல் என்பதன் பொருளை அளிக்கும் ஆங்கில வார்த்தை ஸ்வீட் டாக்

"பாலும் சோறும் உண்ண தந்து கொஞ்சி பேசும் அம்மா" என்பதில் வரும் கொஞ்சுதலுக்கு பேபிடாக் என பெயர்.

"கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா?" என்பதில் வரும் கொஞ்சுதலுக்கும் பேபிடாக் என்ற சொல்லே பயன்படுகிறது.


--
செல்வன்

"புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்




செல்வன்

unread,
Jan 17, 2012, 2:02:05 PM1/17/12
to mint...@googlegroups.com


2012/1/17 rajam <ra...@earthlink.net>

மருத்துவ நிலையில் ... என் முதுகெலும்புத் தண்டில் "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற உணர்ச்சி ஏற்படுவதைத் தமிழ் தெரியாத மருத்துவரிடம் எப்படி விளக்குவது? எப்படி விளக்கப் பார்த்தாலும் எந்த மருத்துவருக்கும் புரிவதில்லையே. 

I experience a tingling sensation in my back.

rajam

unread,
Jan 17, 2012, 2:06:21 PM1/17/12
to mint...@googlegroups.com, செல்வன்
கொஞ்சுதல் என்பது பல பொருள்களில் பயனொபடுத்தபடுகிறது. அதன் ஒவ்வொரு பொருளுக்கும் ஆங்கிலத்தில் ஒவ்வோரு சொல் பயன்படுத்தபடுகிறது.
இல்லை, இல்லை செல்வன்! "கொஞ்சு" என்ற மடிப்படைப் பொருள் மாறுவதில்லை. அடிச்சொல் (stem) பெயர்ச்சொல் ஆகவும் வினைச்சொல் ஆகவும் திரிந்து வழங்கப்படுகிறது. அவ்வளவே. 

"கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்" என்பதில் உள்ள கொஞ்சுதல் என்பதன் பொருளை அளிக்கும் ஆங்கில வார்த்தை ஸ்வீட் டாக்
அப்பிடியானால் ... "கொஞ்சுதல்" என்பது "sweet talking" என்று எடுத்துக்கொள்ளலாமா?.
நீங்கள் காட்டிய பிற இரண்டு உதாரணங்களும் "பேபிடாக் baby talk" என்று காட்டுகின்றன.
பார்ப்போம். மேற்கொண்டு நானும் நினைத்துக்கொண்டே இருப்பேன்.
நன்றியுடன்,
ராஜம்


Innamburan Innamburan

unread,
Jan 17, 2012, 2:14:06 PM1/17/12
to mint...@googlegroups.com
ரைட்டு. இந்த பிரச்னை நிஜமாகவே எழுந்தது. நடந்த உரையாடல்:
பேஷண்ட் மிகவும் தளர்ந்த நிலையில் அவசரசிகிச்சை மையத்தில்:
பெரிய டாக்டர்: என்ன பண்றதம்மா?
பேஷண்ட்: படப்படப்பா இருக்கு.
பெரிய டாக்டர், தமிழ் தெரியாத உதவி டாக்டரிடம்: 'She says she is tremulous. what will you do?
நான் அருகில் இருந்தேன்.
இன்னம்பூரான்

பி.கு. ஜார்ஜ் ஆர்வெல் வருவார். அதற்கு முன்னாலேயே ஊறும்!


2012/1/17 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Jan 17, 2012, 2:16:58 PM1/17/12
to mintamil


2012/1/17 rajam <ra...@earthlink.net>

அப்பிடியானால் ... "கொஞ்சுதல்" என்பது "sweet talking" என்று எடுத்துக்கொள்ளலாமா?.
நீங்கள் காட்டிய பிற இரண்டு உதாரணங்களும் "பேபிடாக் baby talk" என்று காட்டுகின்றன.
பார்ப்போம். மேற்கொண்டு நானும் நினைத்துக்கொண்டே இருப்பேன்.


ஸ்வீட் டாக்கிங் என்பது "காரியம் ஆக இனிமையாக பேசுதல்" என்ற பொருளில் பயன்படுத்தபடுகிறது அம்மா. மழலையிடம், காதலியிடம் பேசும் ஸ்வீட் நத்திங்க்ஸை பேபி டாக் என அழைப்பது வழக்கம்.

இதற்கு ஈடான வேறு சொற்களையும் இழையில் படிக்க ஆவலுடன் உள்ளேன்.

rajam

unread,
Jan 17, 2012, 2:34:30 PM1/17/12
to mint...@googlegroups.com
ஓஓஓ, அன்பான 'இ' சார்! என் அன்பான வேண்டுகோள்: பிறர் கதை வேண்டாம். இப்போதைக்கு இந்த இழையில் நம்ம பாயின்டுக்கு வாங்கோ.
1. முதுகுத் தண்டில் ஏதோ ஒன்று ஊறுவது போன்ற உணர்ச்சி
2. முதுகுத் தண்டில் ஏதோ ஒன்று ஊருவது போன்ற உணர்ச்சி 
எதுவானாலும் சரி. 
கேள்விகள்:

(i) மேலே குறித்த இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகளும் (ஊறுவது, ஊருவது) ஒன்றா, அல்லது வேறு வேறு உணர்ச்சிகளா?
(ii) அந்த உணர்ச்சிகளை எப்படி, எந்தச் சொற்களால் ஒரு மருத்துவரிடம் விளக்குவது?
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Jan 17, 2012, 2:42:11 PM1/17/12
to mint...@googlegroups.com

ஸ்வீட் டாக்கிங் என்பது "காரியம் ஆக இனிமையாக பேசுதல்" என்ற பொருளில் பயன்படுத்தபடுகிறது அம்மா.
எனக்கு அந்தப் பழக்கம் ("காரியம் ஆக இனிமையாக பேசுதல்") பற்றி ரொம்பவே தெரியும் -- அமெரிக்க அலுவலகங்களில் பணியாற்றியதால்! :-)  அந்தப் பழக்கம் இல்லாததால்தான் எனக்கு இழப்பு நேர்ந்தது. என்ன செய்ய.  

மழலையிடம், காதலியிடம் பேசும் ஸ்வீட் நத்திங்க்ஸை பேபி டாக் என அழைப்பது வழக்கம்.

பென்சில்வேனியாப் பல்கலைக்கழக ஆசிரியர் பில் லபாவ் (Bill Labov) மற்றும் பலர் இந்த மாதிரி ஆய்வு செய்திருக்கிறர்கள்.
எனக்கென்னமோ "ஸ்வீட் நத்திங்" என்ற கருத்தும் நம் அருமைத் தமிழின் "கொஞ்ச"லும் நேர்மைப்பட்டு வராது என்று தோன்றுகிறது.
என் தேடல் தொடரும். என் இழையையும் தொடருங்கள்.
அன்புடன்,
ராஜம்


Innamburan Innamburan

unread,
Jan 17, 2012, 2:46:17 PM1/17/12
to mint...@googlegroups.com

கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்குவதின் 17 படி நிலைகள்:


  1. ‘சொன்னா கேளுடா ராஜா’: நாய்குட்டியிடம்: சாக்ஷி: தமிழ்த்தேனி.
  2. ‘செல்லப்பொண்ணு! சக்கரைப்பொண்ணு! ஜாலிப்பொண்ணு: பேத்தியிடம் கொஞ்சல்.
  3. ‘கொன்னுப்புடுவேன்’: விட்டத்தில் ஊஞ்சலாடும் வாண்டு மகனோடு கொஞ்சல் கலந்தக் கெஞ்சல்;
  4. எனக்கு நாலு வயது. என் தங்கை ஜெம்பகத்துக்கு (அவள் இப்போது இல்லை) மூன்று வயது. அவ்வளவு அன்யோன்யமாம். கொஞ்சலில் தான் பேசிக்கொள்வோமாம். அம்மா சொல்லுவாள்.
  5. 12-13 வயதில் சிற்றாடைக்கும், தட்டாடைக்கும் ஒரு இனம் தெரியாத கவர்ச்சி இருக்கும். ரொம்பவும் சாக்கிரதையாக இருக்கணும். எதித்தாத்து காமுப்பாட்டி மோப்பம் பிடிச்சுடுவாள். மத்தவாளை ஏமாத்திடலாம். அதில் சூக்ஷ்மம் என்னவென்றால், சிற்றாடை, தட்டாடையை ‘டா’ போட்டுத்தான் கெஞ்சும். அதிலெ மஹா நுட்பம்: ‘என்னடா ராமு? நான் சொல்லிண்டே இருக்கேன்’ கண்ணில் நீர் சொட்டாது; கோர்த்துக்கொள்ளும்.  தட்டாடை: ‘என்னடீ இது? நான் தான் நீ கேட்ட ஜாங்கிரி வாங்கிண்டு வந்திருக்கேனே. அப்பா கணக்குக்கேட்டா வம்பு? இந்தா கனகாம்பரம்.’ 
  6. இதிலேயே ஆறாவது படி நிலை, அடுத்த வருடம்:

‘ நீ எனக்கு ஹோம் ஒர்க் பண்ணி வச்சுட்றா.’ ‘வச்சுட்டேண்டி, மண்டு. ஜாமிட்ரி சொல்லித்தரேன், வா.’ ‘என் விரலை பிடிச்சுக்கணும், உனக்கு, தெரியாதா, சண்டியர்’

(கொஞ்ச நேரம் மெளனம். அப்றம் கமெண்ட்: அப்பா! காரியத்திலே கண்ணு).

இன்னம்பூரான்

பி.கு. யாருமே பின்னூட்டம் போட்றதில்லை. இப்போதைக்கு இது போதும்.


2012/1/17 செல்வன் <hol...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 17, 2012, 2:50:14 PM1/17/12
to mint...@googlegroups.com
பி.கு.2: அந்த டாக்டர் விஷயம் சொந்த அனுபவம். வஸந்த்தா இருதய நோயினால் அவஸ்தைப்பட்டப்போது.


2012/1/17 Innamburan Innamburan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 17, 2012, 2:51:27 PM1/17/12
to mint...@googlegroups.com
படிச்சு ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த இழையிலே பேசுவது ரசனையாக உள்ளது.  நடுவில் குறுக்கிடாமல் ஓரத்தில் நின்னு பார்க்கிறேன்.

2012/1/17 Innamburan Innamburan <innam...@gmail.com>

rajam

unread,
Jan 17, 2012, 3:44:17 PM1/17/12
to mint...@googlegroups.com

On Jan 17, 2012, at 1:46 AM, விஜயராகவன் wrote:

>>
>> மருத்துவ நிலையில் ... என்
>> முதுகெலும்புத் தண்டில்
>> "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற
>> உணர்ச்சி ஏற்படுவதைத்
>> தமிழ் தெரியாத
>> மருத்துவரிடம் எப்படி
>> விளக்குவது?
>
>
> I have a tingling sensation in the backbone (exact spot)


No, I don't think that would be the sensation I want to describe to
the doctor.
They don't even want to look at the specific spot, because everything
here is so darn myopic.

Anyway, the expression "tingling sensation" didn't work. They just
sent me for blood tests! :-)


>
>
>>
>> "கொஞ்சு" என்ற
>> தமிழ்ச்சொல்லுக்கு ஈடான
>> ஆங்கிலச் சொல் என்ன?
>
> playful teasing


nope!


>
> VCV


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

Thevan

unread,
Jan 17, 2012, 4:48:53 AM1/17/12
to mint...@googlegroups.com
திரு விஜயராகவன் அவர்களே,

playful teasing என்பது

குழந்தையை கொஞ்சுவதற்கும் பொருந்துமா?

2012/1/17 விஜயராகவன் <vij...@gmail.com>
>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--


சிறு உளி கொண்டு வந்தான்

பெருமலை பெயர்த்தான்

அழகுச் சிலை வடித்தான்

என்ற இசை பெறட்டும் இவன்



Regards,

Thevan, 
Mumbai.

 


Hari Krishnan

unread,
Jan 17, 2012, 10:15:16 PM1/17/12
to mint...@googlegroups.com


2012/1/18 rajam <ra...@earthlink.net>

(i) மேலே குறித்த இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகளும் (ஊறுவது, ஊருவது) ஒன்றா, அல்லது வேறு வேறு உணர்ச்சிகளா?

அக்கம்மா தேவி,

அது ஊருவதா, ஊர்வதா? (மௌனராகம் படம் நினைவுக்கு வருகிறது.  ‘தொட்டா தொட்ட இடத்துல பூரான் ஊர்ற (ஊருகிற) மாதிரி இருக்கு’ என்று ரேவதி பேசுவதும்... கடைசிக் காட்சிக்கு கொஞ்சம் முன்வரையில் மோஹன் அந்த வார்த்தையை மனத்தில் ஒலி்ப்பதும், வாயால் சொல்வதுமாய் நகரும்.  ஊர்வதையும் சரி மௌன ராகத்தையும் சரி உணர்ந்தவர்கள் அறிவார்கள்!)

--
அன்புடன்,
ஹரிகி.

Thevan

unread,
Jan 17, 2012, 2:50:02 AM1/17/12
to mint...@googlegroups.com
அன்புக்குரிய அம்மா,

மொழி சும்மா வெறும் தகவல் தொடர்பு சாதனம்தான், உணர்வுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்களே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?


2012/1/17 rajam <ra...@earthlink.net>
நம்ம தமிழ் இருக்கே, இது மிகப் பெரிய துயரம் தரும் மொழி. ஏனென்றால் இதை மிகத் துல்லியமாகப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. ஏனோ தானோ என்றுதான் எந்த மொழிபெயர்ப்பும் அமையும்.

அதை விடுங்கள். தமிழ் "உணர்வு" பற்றி நினைத்துப் பாருங்கள். நம் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் உணர்ச்சிகளைப் பிற மொழி பேசுவோரிடம் நம்மால் பகிர்ந்துகொள்ள முடிகிறதா? என்னால் முடிவதில்லை. 

எடுத்துக்காட்டாக ... "கொஞ்சு" என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன? வேற்று மொழி பேசும் ஒருவன் என்னைக் "கொஞ்ச" முடியுமா?
மருத்துவ நிலையில் ... என் முதுகெலும்புத் தண்டில் "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற உணர்ச்சி ஏற்படுவதைத் தமிழ் தெரியாத மருத்துவரிடம் எப்படி விளக்குவது? எப்படி விளக்கப் பார்த்தாலும் எந்த மருத்துவருக்கும் புரிவதில்லையே. 
இப்படிப் பல சிக்கல் உண்டு.
உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் தமிழில் இருப்பதைப்போல் எல்லாப் பிற மொழிகளிலும் சொற்கள் இருப்பதில்லை. ஒருவேளை, ஒவ்வோர் இனத்தவரிலும் அவரவர் உணர்வுகளும் செயல்களும் வேறுபடலாம். ரஷ்யன்/இரசியன் மொழியில் நம் தமிழ்போலவே உணர்வுகளை விளக்கும் சொற்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். 
நம்மவர் எங்கே வாழ்ந்தாலும், நம் வாழ்க்கை எப்படி அமைந்தாலும் ... மொழி தந்த உணர்ச்சித் தாக்கம் நம்மை விடவே விடாது!
அதெல்லாம் இருக்கட்டும். இப்போதைய என் கேள்வி ; 
"கொஞ்சு" என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன?  
:-) :-) :-)
அன்புடன்,
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Jan 17, 2012, 10:29:03 PM1/17/12
to mint...@googlegroups.com


2012/1/17 காளையும் கரடியும் <babukoth...@gmail.com>

இந்தக் கொஞ்சுதலை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது?

(ரூம் போட்டு யோசிப்பீகளா? :-) )

Babble,  gibberish (முன்னது குதலை... பின்னது குழறல்)

எனக்கு இன்னொன்னும் தெரிஞ்சாகனும்! (இவ்வளவு உரிமையோடு கேட்பதற்கு
மன்னிக்கவும்)

அறுசுவைகளில்
"துவர்ப்பு" என்பது எப்படி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது?

Sour.  உப்புத் தண்ணீர் சவரடிக்குது என்று சொல்வது வழக்கம்.  (அந்த நாட்களில் மீனம்பாக்கம், ஆதம்பாக்கத்துத் தண்ணீருக்கு இந்த நாமகரணம் பிரசித்தம்.)  அந்த சவர், உண்மையில் savour என்ற சொல்.  ஆனால் உப்புத் தண்ணீருக்கு இணையான ஆங்கிலச் சொல் brackish.  துவர்ப்புச் சுவைக்கும் இந்த sour என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள்.  (ஐந்தாண்டுகள் சென்னை ட்ரைடன்ட் ஓட்டலின் தலைமைப் பொறியாளருக்கு உதவியாளனாக இருந்த சமயம் பெற்ற பட்டறிவு.)

ரூம் போட்டு யோசிக்கத் தேவையில்லை.  நான் இருப்பதே என்னுடைய தனி அறையில்தான்!  ஆகவே ரூம் எவ்வெப்போதும் போடப்பட்டே உள்ளது. :))

Hari Krishnan

unread,
Jan 17, 2012, 10:34:46 PM1/17/12
to mint...@googlegroups.com


2012/1/17 Thevan <apth...@gmail.com>

மொழி சும்மா வெறும் தகவல் தொடர்பு சாதனம்தான், உணர்வுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்களே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

அப்படிச் சொல்பவர்களுக்கு உணர்வு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஒன்பது ரசங்களும் வெளிப்படுவது மொழியின் மூலமாகத்தானே!  (கை, கால் அசைவு, அபிநயமும் துணைபுரிகிறது; மனிதக் குரலும் பெரும்பங்காற்றுகிறது.)  ம் என்று ஒற்றை எழுத்தை எழுதினால் என்ன உணர முடிகிறது?  குரல் மூலமாக இந்த ஒற்றை ஒலியால் ஊக்குவிக்கலாம் (ஊங்கொட்றது); வியக்கலாம்; ஆமோதிக்கலாம்; வேண்டாம் என்று ஒதுக்கலாம்; கோபத்தைக் காட்டலாம்; கொஞ்சலாம்; அதட்டலாம்; இன்னும் எத்தனை எத்தனையோ லாம்.  ம் என்பது ஒலியா மொழியா என்று ஒரு துணைக்கேள்வி எழுப்பிக்கொண்டு யோசித்துப் பார்த்தால்.... அட யோசித்துப் பாருங்களேன்... என்ன தோன்றுகிறது?

rajam

unread,
Jan 17, 2012, 11:43:40 PM1/17/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அந்தப் பெரிய டாக்டர் ஒரு மக்கு! "படபடப்பு" என்றால் tremulous இல்லை! அந்த டாக்டருக்கு ஆங்கிலமும் வரலைபோல!
"படபடப்பு" என்பது இதயத்தில் என்ற உடல் உறுப்பில் (in the physical organ) உண்டானால் அது "palpitation."
"படபடப்பு" என்பது மனதில் உண்டானால் அது "nervousness." 

பிற பின்னர்,
ராஜம்


On Jan 17, 2012, at 11:14 AM, Innamburan Innamburan wrote:

DEV RAJ

unread,
Jan 18, 2012, 12:10:19 AM1/18/12
to மின்தமிழ்
On Jan 17, 6:51 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> செல்லமான பெண்ணாக இருந்தால் செல்லம்மாள்.
இதற்கிணையான சமிஸ்கிருதச் சொல்லுண்டா? பேத்திக்கு பெயர் செல்லம்மாள்
என்று வைத்தால் ரொம்பப் பழைய பெயராக இருக்காம். செல்லம்மாள் எனும் பெயரை
எப்படி modernize செய்வது? :-) <<<


செல்லம் -
ஸம்ஸ்க்ருதத்தில் இதற்கிணைச் சொல்
ப்ரியதம, ப்ரியதமா ஆகலாம்.

ஹிந்தியில் இது 'ப்ரீதம்'( Preetam ) ஆகும்.
ப்ரீதம் என்றொரு திரைப்படம் 70 களில்,
ஷம்மி கபூர் நடித்தது.
ப்ரீதம் சக்ரபொர்த்தி - வங்கத்தைச்
சேர்ந்த இசையமைப்பாளர்.
அநிதா ப்ரீதம், ப்ரீதம் ராய், ப்ரீதம் படேல்
என்னும் பெயர்களையும் காணலாம்.
ப்ரீதம் இரு பாலருக்கும் பொதுப்பெயர்.

வேறு பெயர்களும் இருக்கக்கூடும்
வடமொழியில்


தேவ்

Hari Krishnan

unread,
Jan 18, 2012, 12:18:31 AM1/18/12
to mint...@googlegroups.com


2012/1/18 DEV RAJ <rde...@gmail.com>

செல்லம் -
ஸம்ஸ்க்ருதத்தில் இதற்கிணைச் சொல்
ப்ரியதம, ப்ரியதமா ஆகலாம்.

ஏதோ ஒரு பழைய சத்திஜித் ரே படத்தில் (பழையநாள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது) அந்த நாள் முறைப்படியான பால்ய விவாகத்தைக் காட்டியிருப்பார்.  ஒரு சிறு பெண்ணுக்கு நிச்சயம் நடந்திருக்கும்.  அந்தப் பையன் இந்தப் பெண்ணுக்குக் கடிதம் எழுதுவான்.  ப்ரியாதம் என்று தொடங்கும் கடிதம் அது.   தனி அறைக்கு எடுத்துக் கொண்டு ஓடி அதைப் படிப்பதும்.... ‘ப்ரியாதம்ம்ம்ம்ம்.... ப்ரியாஆஆதம்ம் ம்ம்ம்...’ என்றெல்லாம் உச்சரித்து, ‘என்ன அர்த்தம் என்று புரியவில்லை.  ஆனால் சொல்வதற்கு நன்றாக இருக்கிறது என்று அந்தக் குட்டிப்பெண் முணுமுணுத்துக் கொள்ளும்.  படத்தின் பெயர் முதலான எல்லா விவரங்களும் மறந்துவிட்டன.  இந்தக் காட்சிமட்டும் அழியமால் மனத்திரையில் நிற்கிறது.

ப்ரியாத்தம் என்பது செல்லம்மாவுக்கு இணைதானே?  (ஒரு அன்கன்ஃபர்ம்ட், செவிவழிச் செய்தி உண்டு.  செல்லம்மாவுக்குப் பெற்றோர் இட்ட பெயர் வள்ளியம்மாள்.  பாரதி வைத்த பெயர் செல்லம்மாள்.  எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது.  ஆனால் நெருங்கிய வட்டாரத்தார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.)
Message has been deleted

N. Ganesan

unread,
Jan 18, 2012, 12:23:08 AM1/18/12
to mintamil
On Jan 17, 9:10 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> On Jan 17, 6:51 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:>>> செல்லமான பெண்ணாக இருந்தால் செல்லம்மாள்.

> இதற்கிணையான சமிஸ்கிருதச் சொல்லுண்டா? பேத்திக்கு பெயர் செல்லம்மாள்
> என்று வைத்தால் ரொம்பப் பழைய பெயராக இருக்காம். செல்லம்மாள் எனும் பெயரை
> எப்படி modernize செய்வது? :-) <<<

> செல்லம் -
> ஸம்ஸ்க்ருதத்தில் இதற்கிணைச் சொல்
> ப்ரியதம, ப்ரியதமா ஆகலாம்.

> ஹிந்தியில் இது 'ப்ரீதம்'( Preetam ) ஆகும்.
> ப்ரீதம் என்றொரு திரைப்படம் 70 களில்,
> ஷம்மி கபூர் நடித்தது.
> ப்ரீதம் சக்ரபொர்த்தி - வங்கத்தைச்
> சேர்ந்த இசையமைப்பாளர்.
> அநிதா ப்ரீதம், ப்ரீதம் ராய், ப்ரீதம் படேல்
> என்னும் பெயர்களையும் காணலாம்.
> ப்ரீதம் இரு பாலருக்கும் பொதுப்பெயர்.

பஞ்சாபி எழுத்தாளர், கவிஞர்,
‘நாகமணி’ இலக்கியப் பத்ரிகாசிரியர்
அம்ரிதா ப்ரீதம்:
http://en.wikipedia.org/wiki/Amrita_Preetam

நா. கணேசன்

rajam

unread,
Jan 18, 2012, 12:28:20 AM1/18/12
to mint...@googlegroups.com, DEV RAJ, Narayanan Kannan
இஃது ஓர் அவசர மடல் ...
1. ப்ரியதம, ப்ரியதமா என்று பெயர் வைத்தால் அது stylish-ஆகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அது கழுதை தேய்ந்த கட்டெறூம்பாக ''ப்ரியா" என்று குறைந்துவிடும், உறுதி. என் மருமகள் ஒருத்திக்கு அவள் அம்மா (என் ஓர்ப்படி; இப்போது இல்லாமால் இறந்துவிட்டார்; மிக நல்ல அன்பானவர்) வைத்த பெயர் "ப்ரியதர்சனி." இப்போ அந்தக் குழந்தை வெறும் "ப்ரியா."
2. கண்ணனின் அக்கா செல்லம்மாவின் பேத்தியின் பெயரில் "செல்" என்ற முதல் அசையாவது இருக்கவேண்டும் என்பது எனது அவா!
 


rajam

unread,
Jan 18, 2012, 12:31:03 AM1/18/12
to mint...@googlegroups.com
நண்பர்களே,
இழை குதறுபடுகிறது. அன்புகூர்ந்து ... இழையின் தலைப்பைப் பார்த்துத் தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். உங்கள் பிறமொழி இலக்கியப் புலமை பற்றி எனக்குக் கவலையில்லை. வேறு இழை தொடங்கிக்கொள்ளுங்கள்.
நன்றியுடன்,
ராஜம்


rajam

unread,
Jan 18, 2012, 12:53:08 AM1/18/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
அது ஊருவதா, ஊர்வதா?
என்ன வெள்ளாட்டு/வெல்லாட்டு தம்பீயிது! "ரகர மெய்யின் மேலோர் உகரம் ஊரியதென்க!" :-)
1. ஊறுவது.  இதை இரண்டு வகையில் பார்க்கலாம், ஊறுவது, ஊருவது என. 
1a. ஊறுவது -- சுனை நீர் போல, ஒன்றன் உள்ளேயிருந்து இன்னொன்று ஊறி வெளியே வருவது. இது திரவ (== நீர்த்த, liquid) நிலையில் இருக்கும் ஒரு பொருள். ஊறுவது  என்ற சொல்லின் அடிப்படை வினையை/செயலை ஆங்கிலத்தில் "springing up" என்று விளக்கப் பார்க்கலாம்.  "B" comes out of / springs up from "A." 

1b. ஊறுவது -- ஊறுகாய் போல, ஒரு நீர்க் கலவையில் இன்னொன்று சுகமாய் ஊறிக் கிடப்பது.  இந்த வினையை/செயலை ஆங்கிலத்தில் "soaking" என்று சொல்லலாம்.  "B" is soaking in "A." இது ஒரு பொருள் இன்னொரு பொருளில் ஆழ்ந்து கிடப்பது. இது ஒரு திடப்பொருள் திரவத்தில் கிடந்து அதனால் தன் திட (solid) நிலையை இழந்து நொந்துபோய், நொய்மைத் தன்மை அடைவது. 

2. ஊர்வது -- இது ஒரு திடப் பொருளின்மேல் இன்னொரு பொருள் (அது திடமாக இருந்தாலும் சரி, நீர்த்த நிலையில் இருந்தாலும் சரி) தன் அசைவு பளிச்செனத் தெரியாதபடி, ஓசை எழுப்பாமல், மெல்ல மெல்ல நகர்வது. ஊர்வது என்ற சொல்லின் அடிப்படை வினையை/செயலை ஆங்கிலத்தில் "creeping/crawling" என்று விளக்கப் பார்க்கலாம்.  "B" is creeping on "A." "B" is crawling over "A."

முக்கியமான குறிப்பு: "Coming out of / springing up from" என்ற ஆங்கிலப் பயன்பாடு எல்லா இடத்திலும் "ஊறுவது" என்று மொழிபெயராது.  "Creeping/crawling"  என்ற ஆங்கிலப் பயன்பாடு எல்லா இடத்திலும் "ஊர்வது" என்று மொழிபெயராது. 
++++++++++++++++++++++++++++++
மருத்துவர்களிடம் நான் சொன்னது: 

"I get a creepy sensation sporadically in my spine."

"I get a tingling sensation sporadically in my spine."

மேற்சொன்ன இரண்டு கூற்றுகளும் இங்கே மருத்துவர்களுக்குப் புரியவில்லை. குருதிச் சோதனைமேல் சோதனை என அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழே, நீ உதவமாட்டாயா?
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Jan 18, 2012, 1:19:38 AM1/18/12
to mint...@googlegroups.com, Thevan, Hari Krishnan
ஹரிமொழி கருத்தை உடன்பட்டு, அதை ஒட்டி ஒரு சின்ன கருத்து. கூடுதல். 
உண்மை, "மொழி" என்பது வெறும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான். அதாவது அது ஒரு கருவி மட்டுமே. அதற்கு என்று தனி உணர்ச்சியில்லை. ஏனென்றால் ... வெறும்  மூச்சுக்காற்று பல பல வடிவத்தில் உடல் உறுப்புகள் பலவற்றின்வழியே வெளிப்பட்டு, பல பல பொருளாக உணரப்பட்டு "மொழி" என்ற பெயரைப் பெறுகிறது. அந்த "மொழியை"ப் பயன்படுத்துகிறவர்களின் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் செயலுக்கும் ஏற்றபடி அது ("மொழி") மாறும்.
முடிந்தால் ...  "உந்தி முதலா முந்துவளி தோன்றி ..." என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவைப் படிக்கலாம். மூச்சுக் காற்று எப்படி எழுத்துக்கு அடிப்படை ஆகிறது என்ற விளக்கம் கிடைக்கும்.  
அன்புடன்,
ராஜம்

rajam

unread,
Jan 18, 2012, 1:37:53 AM1/18/12
to mint...@googlegroups.com, Hari Krishnan

அறுசுவைகளில்
"துவர்ப்பு" என்பது எப்படி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது?

Sour.  உப்புத் தண்ணீர் சவரடிக்குது என்று சொல்வது வழக்கம்.  (அந்த நாட்களில் மீனம்பாக்கம், ஆதம்பாக்கத்துத் தண்ணீருக்கு இந்த நாமகரணம் பிரசித்தம்.)  அந்த சவர், உண்மையில் savour என்ற சொல்.  ஆனால் உப்புத் தண்ணீருக்கு இணையான ஆங்கிலச் சொல் brackish.  துவர்ப்புச் சுவைக்கும் இந்த sour என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள்.  
துவர்ப்பு --  இந்தச் சொல்லோடு நானும் பல காலம் போராடியிருக்கிறேன். நேரான ஆங்கிலச் சொல் கிடைக்கவில்லை. இப்போதைக்கு என் மொழிபெயர்ப்பு "astringent."
Sour
இது "புளிப்பு" என்பதைக் குறிக்கும்.


brackish
இது "தண்ணீரின் கடுப்புச் சுவை" என்று எனக்குத் தோன்றுகிறது.  

எனக்குத் தெரிந்ததும், நான் பயன்படுத்துவதும்:
இனிப்பு -- sweet 
புளிப்பு -- sour, tart 
கசப்பு -- bitter 
உப்பு -- salt(y)
துவர்ப்பு -- astringent 
உறைப்பு -- hot 
*********************************** 
கொசுறு: ஹரியின் தனியறைச் சுவர் விரியட்டும். மூடிய கதவு திறக்கட்டும். பிறரும் உள்ளே புகுந்து விளையாடட்டும்! இது என் கனவில் வந்து அக்கம்மா தேவி சொன்னதாக்கும்.
:-) :-) :-) 


விஜயராகவன்

unread,
Jan 18, 2012, 2:33:22 AM1/18/12
to மின்தமிழ்
On Jan 17, 10:48 am, Thevan <apthe...@gmail.com> wrote:
> திரு விஜயராகவன் அவர்களே,
>
> playful teasing என்பது
>
> குழந்தையை கொஞ்சுவதற்கும் பொருந்துமா?


முக்கியமாக குழந்தையை கொஞ்சுவதைதான் சொன்னேன்

வகொவி

விஜயராகவன்

unread,
Jan 18, 2012, 3:36:17 AM1/18/12
to மின்தமிழ்
On Jan 17, 9:44 pm, rajam <ra...@earthlink.net> wrote:
>
>
> >> "கொஞ்சு" என்ற
> >> தமிழ்ச்சொல்லுக்கு ஈடான
> >> ஆங்கிலச் சொல் என்ன?
>
> > playful teasing
>
> nope!

MTL says:

கொஞ்சு¹-தல் koñcu-
, 5 v. intr. [M. koñcu.] 1. To lisp, to prattle, as children;
மழலைபேசுதல். கொஞ்சிய வுன்சொற் கேட்டு (உத்தரரா. சம்புவ. 21). 2. To
talk

--------------------------------------------------------------------------------
2. கொஞ்சு koñcu : (page 1128)

(J.) 5. To sound sweetly; இனிதாய் ஒலித்தல். சிலம்பு கொஞ்சவே (பாரத.
அருச்சுனன்றவ. 148).

VCV

Raja sankar

unread,
Jan 18, 2012, 3:54:58 AM1/18/12
to mint...@googlegroups.com
மிகவும் எளிது.

ஊர்வது போல் என்றால் தொடுதலில் மூலமாக வருவது என்று சொல்லலாமா?
குறுகுறுன்னு ஏதோ ஊர்வது போல் என்று சொல்லலாமா?

அப்படியானால் tingling அல்லது creeping என்று சொல்லலாம். சுட்டியில் பார்க்க

http://www.rightdiagnosis.com/sym/back_tingling_paresthesias.htm
http://www.ncbi.nlm.nih.gov/books/NBK390/

மேலும் Hyperesthesia என்று ஒன்றை சொல்கிறார்கள். எந்தவித தொடுதலும் இல்லாமலே தொடுதல் போல் ஓர் உணர்ச்சி ஏற்படும்.  http://www.wisegeek.com/what-is-hyperesthesia.htm

இப்படியாக கொஞ்சம் தேடிப்பாருங்கள். நீங்கள் தேடும் சொல் கிடைக்கும்.

ராஜசங்கர்

2012/1/17 rajam <ra...@earthlink.net>
மருத்துவ நிலையில் ... என் முதுகெலும்புத் தண்டில் "ஏதோ ஒன்று ஊறுவது" போன்ற உணர்ச்சி ஏற்படுவதைத் தமிழ் தெரியாத மருத்துவரிடம் எப்படி விளக்குவது? எப்படி விளக்கப் பார்த்தாலும் எந்த மருத்துவருக்கும் புரிவதில்லையே. 

Nagarajan Vadivel

unread,
Jan 18, 2012, 8:45:20 AM1/18/12
to mint...@googlegroups.com
செல்லம்மாள் எனும் பெயரை எப்படி modernize செய்வது? :-)

1. selin
2. selina
3.selma

Nagarajan

2012/1/17 N. Kannan <navan...@gmail.com>
கொஞ்சுவதைச் செல்லம் என்கிறோம். செல்லமான பெண்ணாக இருந்தால் செல்லம்மாள்.
இதற்கிணையான சமிஸ்கிருதச் சொல்லுண்டா? பேத்திக்கு பெயர் செல்லம்மாள்
என்று வைத்தால் ரொம்பப் பழைய பெயராக இருக்காம். செல்லம்மாள் எனும் பெயரை
எப்படி modernize செய்வது? :-)

நா.கண்ணன்

விஜயராகவன்

unread,
Jan 18, 2012, 9:32:47 AM1/18/12
to மின்தமிழ்
On Jan 18, 2:45 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> செல்லம்மாள் எனும் பெயரை எப்படி modernize செய்வது? :-)
>
> 1. selin
> 2. selina
> 3.selma
>
> Nagarajan

சில தூர உறவுகள் செல்லு என கூப்பிட்டு கேட்டுள்ளேன்

வகொவி

(PS: This example also gives the non-applicability of Tholkappiyar
Tamil to the present day. Old Tamil ச is pronounced cha , wheas modern
Tamils pronounce it as sa .

Selvam far outnumbers Chelam in modern usage giving lie to the alleged
permanancy of Kanniththamiz )

Reply all
Reply to author
Forward
0 new messages