யோக வாழ்க்கை விளக்கம்

187 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Nov 10, 2010, 2:26:54 AM11/10/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. எதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்றறிவது தன்னை அறிவதாகும். உன்னைப் பொறுத்தவரை அதுவே சத்தியம்பிரம்மம்.

ஆழ்ந்த மனம் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும்பொழுது மேலெழுந்தவாரியான மனம் அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுகிறது.

அர்த்தமற்ற அந்தச் சலனங்களும் ஆழ்ந்த மனத்தைப் பூர்த்தி செய்யவே முனைகின்றன. மேல்நிலையில் ஆழ்ந்த மனம் பூர்த்தியானால் மனிதன் உயர்ந்தவனாகிறான்.

தன்னையறிவதே உன்னைப் பொருத்தவரை சத்தியம். மனம் இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் சிருஷ்டிக்குண்டு. நம் வாழ்வு இரு பிரிவுகளாக உள்ளது. வீட்டில் உள்ளது ஒரு பகுதி. ஆபீஸிலும், வெளியிலும் உள்ளது அடுத்த பகுதி. இந்த இரு பிரிவுகளும் அவசியம். வீட்டிலிருப்பதைப் போல் வெளியில் இருக்க முடியாது. வெளியில் உள்ள வாழ்வில் ஓரளவு தோற்றம் கலந்திருக்கும். ஆனால் அந்த வாழ்வுதான் முக்கியம். அதற்காகத்தான் வீட்டில் நம்மைத் தயார் செய்து கொள்ளுகிறோம். நம் ஆழ்ந்த எண்ணங்களும், செயல்களும், உண்மையான உணர்ச்சிகளும், நம் அடிப்படைக் குறைகளும் வீட்டில்தான் வெளிப்படும். நம் வாழ்வின் பெரும்பகுதியும், முக்கியப் பகுதியும் வீட்டிலுள்ளது. வீட்டில் இவ்வளவு தயார் செய்வதும் வெளியில் சாதிப்பதற்காகத்தான். அதேபோல் மனம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள உண்மை வெளியில் அர்த்தமற்ற பல விஷயங்களில் கலந்து கொள்வதால் வீடு பயன் அடையும் என்பதால் மனிதன் அப்படி நடக்கின்றான்.

மனிதன் மிகவும் சுறுசுறுப்பானவன். தனக்கு நல்லது என்று புரிந்து கொண்ட விஷயத்தைத் தீவிரமாகவும், முழுமையாகவும் நாடுபவன். ஒன்றை நாடாத மனிதனில்லை. இறைவனை நாடுபவர் சிலர். அந்தஸ்தை நாடுபவர் பலர். பணத்தை அனைவரும் நாடுகின்றார்கள். அன்பை ஆர்வமாக மற்றவற்றை விடத் தேடுபவருண்டு. சோம்பேறித்தனத்தையும் இலட்சியமாகக் கொண்டவருண்டு. எதையும் தீவிரமாக நாடாத மனிதர் என்று ஒருவரில்லை. அவருடைய தீவிரம் பிறருக்குத் தெரியாமலிருக்கலாம், அவருக்கே தெரியாமலிருக்கலாம். எல்லா மனிதர்களும் பிரம்மம். உள்ளுறை பிரம்மம், பரப்பிரம்மத்தை இடையறாது நாடுகிறது. இது சிருஷ்டியின் அடிப்படை. பிரம்மம், பிரம்மமாக வெளிப்படுவதில்லை. இன்று நம் வாழ்வில் உள்ள அம்சமாக வெளிப்படும்.

எதை மனிதன் அதி தீவிரமாக நாடுகின்றானோ அதுவே அவனுக்குப் பிரம்மம், அதுவே சத்தியம். அத்துடன், அதிதீவிரமாக நாடுவதை அவன் நிச்சயமாக அடைவான் என்பதும் சிருஷ்டியின் அமைப்பு.

கர்மயோகி

http://www.karmayogi.net




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

வினோத்-VINOTH

unread,
Nov 11, 2010, 12:36:59 AM11/11/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. எதை நாம் நாடுகின்றோம்எந்த நிலையில் நாடுகிறோம் என்றறிவது நம்மை நாம் உணர்வதாகும்.

நாம் எதை நாடுகிறோமோ அதுவே நாம். நல்லவர்களுண்டு. நல்லவராக இல்லாமல் தம்மை நல்லவர் என நினைப்பவருண்டு. கெட்டவராக இருந்து தம்மை நல்லவராகக் கருதுபவருண்டு, தாம் கெட்டவர் என்று தெரிந்தும் பிறர் தம்மை நல்லவன் என்று நினைக்க வேண்டும் என்று பிரியப்படுபவருண்டு. சிலருக்குத் தம் உயர்வு தெரியாது. மற்றவருக்குத் தம் தாழ்வு தெரியாது. தன் நிலையை உண்மையாக உணர்ந்த பின்னரே முன்னேற்றத்திற்கு வழியுண்டு. தம்மைத் தாம் அறிய வேண்டுமானால், நாம் எதை நாடுகிறோம், எந்த முறையில் நாடுகிறோம் என்பதைக் கவனித்தால் அது நம் நிலையை விளக்கும்.

அத்தியாவசியமான உதவி தேவைப்பட்ட நேரம், ஆசை பூர்த்தியாக நல்ல சந்தர்ப்பம் கிடைத்த சமயம், இதுவரை வாழ்வில் கிடைக்காத பொருள், பதவி, நட்பு கிடைக்கும் நிலை ஏற்பட்ட சமயம் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம், எப்படி நினைத்தோம் என்று ஆராய்ந்தால், மனம் எதை நாடுகிறது என்பது தெரியும், எந்த முறையில் நாடுகிறது என்பது தெரியும். அதுவே நம் மனநிலை.

*******
கர்மயோகி

வினோத்-VINOTH

unread,
Nov 12, 2010, 2:14:07 AM11/12/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்

  1. மேலெழுந்த மனம் முதிர்ச்சியடைந்து ஆழ்ந்த நிலையை அடையும் வகை ஒருவருடைய சுபாவத்தை விளக்கும்.

சுபாவத்தால் மனத்தின் ஆழத்தை அடைகிறோம். சுபாவம் என்பதை நிதானம், அவசரம், பேராசை, ஆசைப்படாத மனநிலை, சிறிய புத்தி, பெருந்தன்மை, துரோகம், விஸ்வாசம், சலனம், நெறி போன்றவை குறிக்கும்.

மேலெழுந்த நிலையில் அவசரமுள்ளவர், அனுபவத்தால் பொறுமையானால், ஆழ்ந்த நிலையில் பொறுமை உற்பத்தியாகும். துரோகத்தால் ஆதாயம் தேடியவர் அனுபவத்தால் துரோகம் ஆதாயம் தாராது என்றறிந்து விஸ்வாசத்தை மேற்கொண்டால் சூழ்நிலையில் விஸ்வாசம் ஏற்படும். யாருக்கு என்ன பெரிய குணங்கள் உற்பத்தியாகின்றன என்பது அவரவர் சுபாவத்தை விளக்கும். இன்று விஸ்வாசத்தைப் பாராட்டுபவர் தாம் வாழ்வைத் துரோகத்தில் ஆரம்பித்து, அது பயன் தாராது என்றுணர்ந்து விஸ்வாசத்தை மேற்கொண்டுள்ளோம் என்பதை அறிவார். அதன் மூலம் தம் சுபாவத்தில் துரோகம் அன்றிருந்தது, இன்று விஸ்வாசம் பிறந்துள்ளது என்பதை அவர் அறிய முடியும்.

*******
கர்மயோகி

வினோத்-VINOTH

unread,
Nov 12, 2010, 11:09:42 PM11/12/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. எதை நாம் நாடுகிறோம் என்பது நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.

நாடுவதே நாம். நாம் நல்லவரா, கெட்டவரா என்றறிய முயல்வதைவிட நாம் யார் என்று அறிய முயன்றால் நல்லது. பழக்கத்தால் நாம் யார், சுபாவத்தால் நாம் யார், பரம்பரையால் நாம் யார், ஆபத்தான நிலையில் நம்முள்ளிருந்து எது கிளம்புகிறது, யார் கண்ணிலும் படமாட்டோம் என்றவுடன் மனம் முதலில் எதை நாடுகிறது, நிச்சயமாகத் தண்டிக்க ஒருவருமில்லை என்ற பின் எந்தக் காரியத்தை செய்யத் தயங்க மாட்டோம், அவசரம் எப்பொழுது புறப்படுகிறது, அயல்நாட்டிலிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் மனம் நினைக்கின்றது, நிர்ப்பந்தமேயில்லை என்றால் எந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வோம், எந்தக் கடமைகளைப் புறக்கணிப்போம் என்று தன்னையறிய முற்பட்டால் நாம் யார் என்பது நமக்கு விளங்கும். அதை நாம் நாடும் பொருள் விளக்கும். நம்மைப்பற்றி பிறர் சொல்வதைவிட, நம்மைப்பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நாம் நாடும் விஷயங்கள் நம் உண்மையை நமக்கு அறிவுறுத்தும்.

**********
கர்மயோகி

வினோத்-VINOTH

unread,
Nov 21, 2010, 5:52:51 PM11/21/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. எந்த விஷயத்திற்காக துடிப்பு இருக்கிறதோ, அது நாம் யார், நம் நிலைமையென்ன என்று நமக்கு விளங்கும்.

மனம் ஒரு விஷயத்தை ஆழ்ந்து நாடினாலும், அதையடைய தீவிர முயற்சி பலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது. தாம் விரும்புவதையே தீவிர ஆர்வத்துடன் அடைய முயற்சியுள்ளவராக அனைவரும் இருக்கமாட்டார்கள். நாம் யார் என்று நாம் அறிந்துகொள்ளும்பொழுது நம் முயற்சியின் அளவு நமக்குத் தெரிந்துவிடும்.

எதற்காக உடன் அணுக்கள் துடிக்கின்றனவோ, அதை மனிதன் அடைந்தே தீருவான். ஒருவர் அதுபோன்ற துடிப்புள்ளவர் என்று தம்மை அறிந்தவரானால், அவர் எதற்காகத் தாம் துடிப்புள்ளவராக இருக்கின்றார் என அறியமாட்டார். நாள் தவறினாலும், சீட்டாட்டம் தவறுவதில்லை என்பவரிடம் ''குழந்தைக்கு உடம்பு சரியில்லை டாக்டரிடம் போகவேண்டும், பையனை காலேஜில் சேர்க்கவேண்டும், முக்கியமான கல்யாணத்திற்குப் போக வேண்டும்' என்றால், அவற்றை இரண்டாம் பட்சமாகக் கருதுவார். ஏற்றுக் கொண்டாலும், சீட்டாட்டம் தவறாதபடி இக்கடமைகளை ஏற்றுக் கொள்வார். தமக்குச் சீட்டாட்டம் முக்கியம்; மற்றவை க்கியமில்லை என்று தம்மை அறிந்தவராக அவரிருக்கலாம். ஒருமுறை குழந்தைக்கு ஜுரம் தினமும் வருவதை டாக்டரிடம் காண்பித்தபோது, டாக்டர் இன்னும் 3 நாட்களுக்குப் பின் சொல்கிறேன் என்ற நாளில் அவர் சீட்டாட்டத்திற்குப் போவதை தம்மையறியாமல் மறந்துவிட்டார் என்றால், இவருக்குச் சீட்டாட்டம் முக்கியம்தான் ஆனால், மற்றவர்கள் மற்ற கடமைகளை நிறைவேற்றும்வரை சீட்டாட்டம் க்கியம். குழந்தைக்கு ஏன் ஜுரம் நிற்கவில்லை என்று டாக்டர் சொல்லவில்லை என்றவுடன் இவர் மனதில் கவலை ஏற்பட்டது. ஏதோ ஆபத்தாக இருக்கும் போருக்கிறது என்று பட்டவுடன், சீட்டாட்டம் மறந்துவிடுகிறது என்றால், ஆழ்ந்த துடிப்பு தம் குழந்தை மேருக்கிறது, சீட்டாட்டத்தின் மீதில்லை என்பது இவருக்கு இப்பொழுதுதான் புரியும்.

வாழ்க்கை ஒரு எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு சமயம் எல்லையைத் தாண்டி விடுகிறது. அப்பொழுது உத்தியோகத்திற்கு ஆபத்து, உயிருக்கு ஆபத்து, அந்தஸ்து ஆட்டம் கண்டுவிட்டது, மரியாதைக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும். அந்த நேரம் நாம் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகள், பண்புகள் நாம் எதிராக செயல்படுவதைத் தடுக்கும். நம்மால் அந்தத் துரோகத்தைச் செய்ய முடியாது என்று மனம் கூறும். புதிய ஆசைகள் திடீரென உற்பத்தியாகும். இதை எப்படி விட முடியும் என்று தோன்றும். அது போன்ற போராட்டம் மனதில் எழுந்த பின் ஆழ்ந்த துடிப்பு கொள்கைக்காக இருக்கிறதா, ஆதாயத்திற்காக இருக்கிறதா, ஆசைக்காக இருக்கிறதா என்று தெரியும். ஏற்கனவே நம் வாழ்வில் அது போன்ற நேரங்களை நினைவுபடுத்தினால், இன்றும் அத்துடிப்பு தெளிவாக நமக்கு அறிவுறுத்தும்.

எந்த விஷயத்திற்காக அத்துடிப்பு இருக்கிறதோ, அது நாம் யார், நம் நிலைமையென்ன என்று நமக்கு விளங்கும்.

*******
கர்மயோகி.நெட்

வினோத்-VINOTH

unread,
Nov 24, 2010, 4:50:08 PM11/24/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. வேதரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்கள். உடல் ஆன்மாவைப் பூரணமாக உணரும் சித்தி பெற்றவர்கள்.

உடல் பிரம்மத்தைக் கண்ட வேதரிஷிகள். சர்வம் பிரம்மம், நானே பிரம்மம் என்பதைக் கண்டவர்கள் சத்தியத்தைக் கண்டவர்கள். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்ததை விட, நியூடன் ஆகர்ஷ்ண சக்தியைக் கண்டுபிடித்ததை விட உலகுக்கு முக்கியமானது நம் முன்னோர் கண்ட சத்தியம் என்று கூறுகிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

மகத்தானதை அவர்கள் கண்டு கொண்டார்கள் என்றால் அதன் மகிமையைப் புரிந்து கொள்வது நல்லது.

இயற்கையோடு ஒன்றி அன்று மனிதன் வாழ்ந்ததை இன்று நாம் அனைவரும் போற்றுகிறோம். அதனால் மனிதன் நோய் நொடியின்றியும், சந்தோஷமாகவும் வாழ்ந்தான். இன்று இயற்கையினின்று மனிதன் விலகிவிடுவதால், புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மனம் வியாகூலமடைகிறது. அதனால் மனிதன் மீண்டும் இயற்கையோடு இணைந்து வாழ முன்வர வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

சுதந்திரத்திற்கு முன் ஆங்கில நீதிபதிகளும், அதிகாரிகளுமிருந்தனர். அவர்களுக்கு நேர்மையிருந்தாலும், நியாயம் வழங்க நம் நாட்டுப் பழக்கங்கள் தெரியாது. நீதிபதிகள் நம்மவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கே நம் பழக்கங்கள் தெரியும் என்று அன்று நாம் பேசினோம். தஞ்சாவூர் ஜில்லாவிருந்து கோயம்புத்தூரில் சம்பந்தம் செய்தால் பழக்கங்கள் முரண்பாடாக இருக்கின்றன. ஊர் மாறினாலும், அந்தஸ்து மாறினாலும், ஜாதி மாறினாலும், படிப்பு மாறினாலும், நாகரிகம் மாறினாலும் ஒத்து வருவதில்லை. அப்படியிருக்க இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழுதல் என்றால் என்ன? மண்ணும், தாவரங்களும், நதி, மலைகளும், விலங்குகளும் சேர்ந்தது இயற்கை. எப்படி மனிதன் இவற்றுடன் ஒன்றி வாழ முடியும்? இங்கு ஒருவரோடொருவர் சண்டையிடும் இந்தியர், அமெரிக்காவில் பஞ்சாபி, மலையாளி, தமிழன், வங்காளி என்ற வித்தியாசம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லோரும் இந்தியர் என்றுணர்ந்தால் ஒற்றுமை ஏற்படுகிறது. காடும், மலையும், நதியும் பிரம்மம் என்றுணர்ந்தால் அவற்றோடு இணைந்து வாழமுடியும். அவற்றின் தெய்வீகத்தை ஆன்மாவில் உணர்ந்தால் ஆன்மா அளவில் ஒற்றுமை ஏற்படுகிறது. ஆன்மா உடலும், உணர்விலும், அறிவிலும் உறைகிறது. உடல் ஆன்மாவை உணர்ந்தவன், மற்றதன் உடல் ஆன்மாவை உணர முடியும். வேதரிஷிகள் தங்கள் உடலை ஆன்மாவாகக் கண்டு, இயற்கையிலும் அதையே கண்டு அவற்றுடன் ஒன்றி வாழ்ந்தார்கள். அதனால் மலையை வணங்கினார்கள். நதியை கங்காதேவி என்றார்கள்.

இயற்கையைக் கல்லாகக் காணாமல், இமவான், கங்காதேவி என்று தெய்வமாகக் கண்டதால், காண முடிந்ததால், வேதரிஷிகளுக்கு உடல் அளவில் உலகத்தைப் பிரம்மமாகக் காண முடிந்தது. இது ஆன்மீகப் பூரணம். அதுவே அவர்கள் பெற்ற உயர்வு. இந்த உயர்வை உலகத்தின் மற்ற பகுதிகள் இன்றுவரை பெறவில்லை.

அன்றைய மனிதனுடைய உடலால் வாழ்ந்த வாழ்வு உணர்வும், அறிவும், ஆன்மீக உணர்வும் பிற்காலத்தில் உயர்ந்தன. உபநிஷத காலத்தில் அறிவும், கிருஷ்ணாவதாரத்தில் ஆன்மீக உணர்வும் தலையெடுத்தன. வேத காலத்திய வாழ்வு உடலால் வாழப்பட்டதென்றாலும் ஆன்மீகப் பூரணம் பெற்றது, அந்த அளவில் இயற்கையோடு ஒன்றியது.

உடலால் வாழ்ந்த மனிதன் உயர்ந்து எட்டினால் உடலால் பெற்ற பூரணத்தை, அறிவால் பெறுவது எளிதன்று. அறிவு உயர்ந்தது என்பதால், அதே பூரண நிலை அறிவில் ஏற்படுவது சிரமம். ஒரு குடும்பத்தில் சொத்து விஷயத்தில் ஒற்றுமை ஏற்படுவது கஷ்டம். உயர்ந்த குடும்பத்தில் அது இருக்கும். பணம், நகை, வீடு, நிலம் ஆகியவற்றில் சகோதரர்கள் மனம் ஒன்றி வேற்றுமையின்றி இருப்பார்கள். அதே வீட்டில் அடுத்த நிலையில் அதே ஒற்றுமையிருக்குமா என்றால், அது சிரமம். பொருள் விஷயத்தில் ஒற்றுமை ஏற்பட்ட பின்னரும், உணர்வு விஷயத்தில் ஒற்றுமை ஏற்படுவது கஷ்டம். 4 சகோதரர்களிருந்தால் ஒருவர் கரும்பு பயிரிடுவதை விரும்புவார். அடுத்தவர் நகரத்தில் குடி வைக்க வேண்டுமென்பார். மற்றொருவர் நெல் பயிரிட வேண்டுமென்பார். நாலாம் சகோதரர் படிப்பை முக்கியமாகக் கருதுவார். எப்படியோ விட்டுக்கொடுத்து தோற்றத்தில் ஒத்துப் போவார்கள். பொருளில் உள்ள ஒற்றுமை அடுத்த உயர்ந்த நிலையில் ஏற்படுவது சிரமம். 4 சகோதரர்களும் உணர்வாலும் ஒத்துப் போகிறார்கள் என்றால் அது உயர்ந்த குடும்பம். அனைவரும் பயிர் செய்யும் விஷயத்திலும், நகரத்திற்குக் குடி போவதிலும், படிப்பு விஷயத்திலும் அடுத்தவரைப் புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பது பெரிய விஷயம்.

அதற்கடுத்தது அறிவு நிலை. அங்கு ஒற்றுமை ஏற்படுவது அதைவிடச் சிரமம். அதனால் அது உயர்ந்தது. மனிதனுடைய நிலை உயர்ந்தால் அடுத்தவருடன் தான் உயர்ந்துள்ள நிலையில் ஒத்துப்போவது கடினம்.

வேதரிஷிகள் முதல் நிலையில் வாழ்ந்தவர்கள். உபநிஷத காலத்து ரிஷிகள் அறிவு நிலைக்கு உயர்ந்தவர்கள். அவர்களால் வேதரிஷிகள் கண்ட பூரணத்தைத் தங்கள் அறிவு நிலையில் காண முடியவில்லை. தங்களுடைய ஆன்மீக அறிவு நிலையை ஞானமாக உயர்த்திக் கொண்டு சிறப்படைந்தார்கள். பூரணத்தைக் காண முடியவில்லை. பாரத காலத்தில் ஆன்மீக உணர்வான பக்தி ஏற்பட்டது. கிருஷ்ணபரமாத்மா பக்திக்குரிய தெய்வமானார். அது மேலும் உயர்ந்த நிலை. அதை எட்டியதே பெரியது. அந்நிலையில் உலகத்தோடு பூரணம் பெறுதல் என்பது இயலாத காரியம். அது முடிய வேண்டுமானால் அதற்கு முந்திய அறிவு நிலையில் பூரணம் பெற்றிருக்க வேண்டும். அதுவே இன்றுவரை முடியவில்லை.

கிருஷ்ணபரமாத்மாவுக்கு அடுத்த நிலை ஆன்மீக நிலை , அதற்கடுத்தது சத்திய ஜீவநிலை. யோகம் வளர்ந்து அடுத்தடுத்த உயர்ந்த நிலைகளில் பூரணம் பெறவேண்டும். முடிவான நிலையில் பூரணத்தை எட்டுவதே பூரணயோக இலட்சியம்.

*******
கர்மயோகி.நெட்

வினோத்-VINOTH

unread,
Dec 4, 2010, 2:00:59 AM12/4/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. பூரண யோகம் உடலைப் போற்றுகிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம் உடல் பிரம்மம் சித்திப்பதைக் கண்டார்.

பிரம்மம் பரிணாம முடிவில் பகவான் உடல் சித்தித்தது. தல் நிலை உடலாகவும், அடுத்தது உணர்வாகவும், மூன்றாம் நிலை அறிவாகவும், முடிவான நான்காம் நிலை ஆன்மாவாகவும் நமக்கு அமைகின்றன. தெய்வத்தை அறிய மனிதன் முயலும்பொழுது நேரே காண முடியவில்லை என்பதால் நிஷ்டையில் காண யல்கிறான். நிஷ்டையை மேற்கொண்டால் உணர்வு வாழ்வு மூலம் நிஷ்டைக்குக் குந்தகம் விளைவிப்பதால், வாழ்க்கையைப் புறக்கணித்து நிஷ்டையை நாடுகிறான். அதேபோல் உடலையும் புறக்கணித்து நிஷ்டையை

நெடுநாள் மேற்கொண்டு இறைவனை எட்டித் தொட்டு தவத்தில் தரிசனம் கண்டு கொள்கிறான். ஒரு முறை கண்ட அனுபவத்தை நினைத்தபொழுதெல்லாம் காணமுடியும் என்ற நிலைக்கு வந்தால் அனுபவம், சித்தியாகிறது. தெய்வ தரிசனம் நிஷ்டையில் சித்திக்க, வாழ்வையும், உடலையும் தபஸ்வி ஒதுக்கிவிட்டான்.

பூரண யோகம் உடலைப் போற்றுகிறது. வாழ்வை ஏற்றுக்கொள்கிறது. ஒரு கிராமத்திலுள்ள புத்திசாப் பையனுக்கு வசதியிருந்தால் அவன் வெளியூர் சென்று பட்டம் பெற முடியும். தபஸ்வி நிஷ்டையில் தெய்வ தரிசனத்தைச் (பிரம்மத்தை) சித்திப்பதற்கு ஒத்தது இது. என் குடும்பத்தில் அனைவரும் பட்டம் பெற்றால்தான் நான் பட்டம் பெறுவேன் என்பது இயலாத காரியம். என் வயது ஒத்தவர் (சகோதரர், சகோதரிகள்) அனைவரும் பட்டம் பெற்றால்தான் நானும் பெறுவேன் என்பது தபஸ்வி வாழ்வை ஏற்றுக்கொள்வதற்குச் சமம். இதைச் சாதிக்க தான் மட்டும் உயர்ந்தால் போதாது, குடும்பத்திற்கே படிப்பின் உயர்வு தெரியும் அளவு உயர்ந்திருக்க வேண்டும்.

இதுவரை யோகிகளும், முனிவர்களும் உடலை ஒதுக்கினர். உடலைப் போற்றுவது பூரணயோகம். என் ஊரில் உள்ளவர் அனைவரும் பட்டம் பெற்றால் தான் நான் பட்டம் பெறுவேன் என்பதை ஒத்தது யோகத்தில் உடலைப் போற்றுவது. நிஷ்டையில் சித்தித்த பிரம்மம் கண் விழித்தால் மறைந்து விடும். பேசினால் விலகிவிடும். காரியங்களைச் செய்ய ஆரம்பித்தால் காத தூரம் செல்லும். பூரண யோகத்தில் சித்தி என்பது வாழ்வில் பெற வேண்டியது. தபஸ்வி நிஷ்டையில் பெற்றதை எல்லாக் காரியங்களையும் செய்யும்பொழுது பெறுவதே பூரணயோகம். அதில் மூன்று நிலைகளுண்டு. முதல் நிலையில் அறிவால் சித்தி பெறுகிறான். அடுத்தது உணர்வு, முடிவான மூன்றாம் நிலை உடலால் அறிவது. சங்கராச்சாரியார் முன் சண்டாளனாக வந்த சிவபெருமானைச் சண்டாளனாகக் கண்டது ஊனக் கண். பிரம்மமாகக் காண்பது ஞானக்கண்.

தான் ஏற்றுக் கொண்ட வாழ்வில் காண்பவற்றை பிரம்மமாகக் காண்பது ஞானசித்தி. இது முதல் நிலை. இனிமையாகப் பேசுபவரையும், எரிச்சல் மூட்டுபவரையும் பிரம்மமாக அறிவு தெரிந்து கொண்டாலும், உள்ளிருந்து எரிச்சல் வரும், உள்ளிருந்து எரிச்சல் வருவதற்குப் பதிலாக பிரம்மம் இனிமையாகவும், எரிச்சலாகவும் ஸ்பர்சிப்பதை உணர்வது அடுத்த உணர்வு நிலையில் பிரம்மம் சித்திப்பதாகும்.

கையால் மாம்பழத்தை எடுத்தால் பிரியமாக இருக்கிறது. மண்ணை எடுத்தால் பிரியமாக இல்லை. சகதியைத் தொட்டால் வெறுப்பாக இருக்கிறது. கை, தான் தொடும் மாம்பழத்தையும், மண்ணையும், சகதியையும் பிரம்மமாக உணர்ந்தால் பிரம்மம் உடல் சித்தித்ததாக அர்த்தம்.

நிஷ்டையில் பிரம்மம் சித்திப்பது ஆன்மீகச் சித்தி. அது முதிர்ந்து அறிவிலும், உணர்விலும், முடிவாக உடலும் சித்திப்பது உயர்ந்த அடுத்த நிலைகள். கீழிருந்து மேலே போகும்பொழுது உடல் முதல் நிலையிலும், ஆன்மா முடிவிலும் இருப்பதைப்போல், மேருந்து கீழே வரும்பொழுது ஆன்மா முதல் நிலையிலும் உடல்முடிவானநிலையிலும்அமைந்துள்ளன.

வினோத்-VINOTH

unread,
Dec 8, 2010, 1:16:34 PM12/8/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. சூட்சும உடல் என்பது  உண்மையான உடலிருந்து சற்று மாறுபட்டது.

உண்மையான உடல் என்பதைச் சூட்சும உடல் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு.

ஸ்தூல உடல், சூட்சும உடல் என உடலை இரண்டாகக் குறிப்பிடுவார்கள். மாடு தன் முதுகின் மீது உட்கார வரும் வண்டை உட்காருவதற்கு முன் வாலால் தட்டும்.

உடல் உட்காருவதற்கு முன், கண்ணால் பார்க்காமல் வண்டு வருவது மாட்டின் சூட்சும உடலுக்குத் தெரிகிறது. சர்க்கரையைக் கொண்டு வந்தவுடன் எங்கிருந்தோ எறும்பு அதைத் தெரிந்து வருகிறது. விலங்கினங்களுக்குச் சூட்சும உடல், சூட்சும உணர்வுண்டு. மனிதனுக்கு அறிவு வளர்ந்து விட்டதால், சூட்சுமக் குணங்கள் மறைந்து விடுகின்றன. ஓரளவு இருப்பதுண்டு.

குழந்தை பிறந்தவுடன் தெய்வாம்சத்துடனிருக்கிறது. சிறு வயதில் பொய், சூது தெரிவதில்லை. வளர வளர எல்லா வக்ரங்களையும் கற்றுக் கொள்கிறது. வக்ரங்களைக் கற்றுக் கொள்வதற்கு முன் குழந்தை மனம் உண்மையாக இருப்பதால் அதை உண்மையான மனம் என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். மனத்திற்கும், உடலுக்கிருப்பதைப் போல் சூட்சுமம் உண்டு. மனம் உண்மையாக இருப்பதாலும் சூட்சுமம் ஏற்படும். இது உயர்ந்த சூட்சுமம். எல்லாக் கரணங்களுக்கும் சூட்சுமம் உண்டு. எல்லாக் கரணங்களும் உண்மையாக இருப்பதால் உயர்ந்த நிலையில் சூட்சுமம் பெறுகின்றன, திருடன் திருடுவதற்குக் கூர்மையான புத்தியுடையவனாக இருக்கின்றான். போலீஸ்காரன் திருடனைக் கண்டுபிடிக்க கூர்மையான புத்தியைப் பெறுகிறான். இது உயர்ந்தது.

மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறது. உடல் சுயமாகச் செயல்படுவதில்லை, அறிவால் உடல் ஆளப்படுகிறது. அதனால் தன் உண்மையை இழக்கின்றது. அறிவு உடலுக்கு விடுதலையளித்தால் உடல் உண்மை உடலாகி விடும். எப்படி மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறதோ அப்படி உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை இழந்து உண்மையாகிறது. விபத்தில் உடல் தன்னை அதிசயமாகக் காப்பாற்றுவதைப் பார்க்கின்றோம். மனத்தின் ஆணையை மட்டும் செய்து வந்தவுடல், ஆபத்தில் தன்னை மனம் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்தவுடன், மனத்தை மீறி தன் உண்மையான சக்தியை வெளிப்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இந்தச் சக்தி பெரியது.

அதுவே உண்மை மனத்தின் சக்தி, அதற்குரிய சூட்சுமம் உயர்ந்த சூட்சுமம்.

உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை விட்டு விடுதலை பெற்று பெருந்திறன் பெறும்பொழுது உண்மை உடலாகிறது. விலங்கினங்களுக்குள்ள சூட்சும உடலுடன் இந்த உண்மை உடன் திறத்தை நாம் சேர்த்துப் பார்த்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. சூட்சுமம் தாழ்ந்த நிலையிலுள்ள விலங்கினத்திற்கு உண்டு. உயர்ந்த தெய்வ நிலையிலுள்ள உண்மை உடலுக்குண்டு. இது உச்சக்கட்ட சக்தி.

விலங்கு பெற்றுள்ளது சூட்சும உடல், இது மனம் வளர்வதற்கு முன் உள்ள திறன், மனம் வளர்ந்த பொழுது இந்த சூட்சுமம் மாறுகிறது. மனிதன் அதனால் இதை இழந்துவிட்டான். ஆனால் மனத்தின் பிடியை மீறி உடல் மீண்டும் பெறும் சூட்சுமம் விலங்கின் சூட்சுமத்தை விட உயர்ந்தது. அதை பகவான்  உண்மை உடல் என்கிறார்.

********

வினோத்-VINOTH

unread,
Dec 19, 2010, 2:22:26 PM12/19/10
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்

  1. சூட்சுமப் பார்வை

மூடிய கண்ணின் சூட்சுமப் பார்வை. புலன்கள் நுகர்ந்தாலும், அவை கருவிகளே, நுகர்வது மனம். மூளையில் பார்வைக்குரிய நரம்பும், கேட்பதற்குரிய இடமும் உண்டு. அவை பழுதானால் கண், காது, சரியாக இருந்தாலும் கண் பார்க்காது. காது கேட்காது. உண்மையில் மனமே ஐம்புலன்களின் வேலையைச் செய்கிறது. முனிவர் கண்ணை மூடிக் கொண்டு நிஷ்டையிருக்கும்பொழுது எதிரில் நடப்பதை அவர் பார்க்க முடியும்; கண் மறைவாக உள்ளதையும் பார்க்க முடியும். மனத்தின் புலன்கள் செயல்பட்டு கண்ணின் உதவியின்றி காட்சிகளைக் காண முடியும்.

மனத்திற்கு ஐம்புலன்களின் திறன் உண்டு. ஆதியில் 12 புலன்களிருந்ததாகவும் நாகரிகம் வளர்ந்த பின்

7 புலன்கள் மறைந்ததாகவும் பகவான் சொல்லுகிறார். இந்த 12 புலன்களும் மனத்திற்குண்டு. அதேபோல் உடலுக்கும் 12 புலன்களின் திறனுண்டு. எப்படிக் கண் மூடியிருக்கும்பொழுது மனம் பொருள்களைப் பார்க்க முடிகிறதோ, அப்படி உடலாலும் பார்க்க டியும். உடன் புலனுணர்வு விழித்தெழுவதே உச்ச கட்ட யோக சித்தி. ஸ்ரீஅன்னை அதுபோல் பொருள்களைக் காண்பதுண்டு. கண்ணைத் திறந்து கொண்டு எழுதும்போது எழுத்து நேராக இருப்பதில்லை, மூடிக் கொண்டு எழுதினால் நேராக இருக்கிறது என்று அன்னை கூறுகிறார்.


  1. சக்தியும், ஜீவியமும் பிரிந்துள்ளன. அவை யோகத்தால் தாமே சேர வேண்டும். ஜீவியத்தை, சக்தி வந்து செயல்படச் செய்தால், சத்தியம் பொய்யாகும்.

தானே சேர்வது மெய். வய சேர்ப்பது பொய். சச்சிதானந்தம் என்பது சத்து, சித்து, ஆனந்தம் ஆகும். சித்து என்பதே ஜீவியம், ஜீவியம் செயல்பட வேண்டுமானால் அது சக்தியாக வேண்டும்.

எனவே சக்தி ஜீவியத்திருந்து பிரிந்து வெளிவருகிறது. அதுவே சிருஷ்டிக்கு அடிப்படை. அதிருந்து ஏற்படுவனவே சத்திய ஜீவியம், தெய்வலோகம், மனம், வாழ்வு, ஜடம், இருள் ஆகியவை. ஜீவியத்திருந்து பிரிந்த சக்தி சிருஷ்டியாகச் சஞ்சாரம் செய்து முழு இருளாக மாறி மீண்டும் இருளிருந்து ஒளியாக வந்து கீழிருந்து யாத்திரையைத் தொடங்கி மீண்டும் படிப்படியாக உயர்ந்து, சித்தை அடைகிறது. இதன் மூலம் சிருஷ்டி பூர்த்தியடைகிறது. இதற்கு 30,000 ஆண்டுகளாகலாம். யோகத்தால் இதை 3000மாகவும் குறைக்கலாம், 30தாகவும் குறைக்கலாம் என்கிறார் பகவான்.

யோகத்தால் சிருஷ்டியைத் துரிதப்படுத்துவது சைக்கிளில் போவதை மாற்றி, பஸ்ஸில் போவதைப் போன்றது. அதிக வேகமுள்ள கருவியை நாடுவதால் விரைவாகச் செல்ல முடியும். வந்து செயல்படுவது என்பது சைக்கிளில் மோட்டாரை இணைத்து 50 மைல் வேகத்தில் போக முயல்வது போலிருக்கும். இதனால் சைக்கிள் உடைந்துவிடும். உயிருக்கு ஆபத்து.

வேகமாகப் போக வேண்டும் என்றால் கருவியை நாட வேண்டும். பழைய கருவியும், புதிய வேகமும் சேர்ந்தால் காரியம் கெட்டுப் போகும். சத்தியத்தை அடைய முயலும் யோகம், பொய்யை அடைய நேரிடும்.

வந்து செயல்பட விழைவது அகந்தை. அது பொய்யானது, பொய்யின் கருவியுமாகும். பொய்யின் கருவி மெய்யைத் தேடி வந்தால், அது மெய்யைக் கண்டுபிடிக்காது, பொய்யைக் கண்டு கொள்ளும். யோக சக்தி ஒளியாலானது. ஒளி சத்தியத்தைச் சேர்ந்தது. யோகத்தால் செயல்படும்பொழுது ஒளி வெளிப்படும். அது மெய்யைக் கண்டு கொள்ளும். சத்தியம் ஜெயிக்கும். இறைவனின் இலட்சியம் பூர்த்தியாகும்.



*******
கர்மயோகி.நெட்





வினோத்-VINOTH

unread,
Jan 19, 2011, 10:12:54 PM1/19/11
to தமிழ்நண்பர்கள், mutht...@googlegroups.com, mintamil, தமிழ் அமுதம், தென்றல்
  1. உடல்படும் துன்பம் உண்மையானதன்று.

ஒரு குடும்பத்தில் உடல் தகப்பனாரைப் போன்றது. மனம், உணர்வு பிள்ளைகளைப் போன்றன, குடும்பச் சொத்து எந்தப் பிள்ளையிடமிருந்தாலும் தகப்பனாருக்குக் கவலையில்லை. அது குடும்பத்தில் இருக்கும்வரை சரி. பிள்ளைகளுக்குள் போட்டி வரும். மனமும், உணர்வும் போட்டியிடும் தன்மையுடையவை. சில சமயங்களில் தகப்பனாரும் ஒரு பிள்ளையுடன் சேர்ந்து அடுத்த பிள்ளைக்குப் போட்டியாக நிற்பதுண்டு. அப்பொழுது போட்டியுணர்வு தகப்பனாருக்கும் வரும். அது உண்மையில் தகப்பனாருக்குப் போட்டி கிடையாது. போட்டியை ஏற்றுக் கொள்வதில் உண்மையில்லை.

பிரித்துப் பாகங்களாக்கும் பொம்மையுண்டு. பாகங்களைச் சேர்த்து முழுப் பொம்மையாக்குகிறோம். குழந்தை விளையாட வரும்பொழுது பொம்மையை முழுதாகக் கொடுக்கிறோம். விளையாடாதபொழுது பிரித்து வைக்கின்றோம். இதனால் குழந்தைக்கு எந்தச் சிரமமும் இல்லை. பொம்மையைப் பற்றி எதுவும் தெரியாத மற்றொருவர் பொம்மையைப் பிரித்தவுடன் பயந்து போய் உடைந்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டால், அதனால் குழந்தைக்கோ, விளையாட்டுக்கோ நஷ்டமில்லை. அவர் போய், குழந்தையிடம் உன் பொம்மை உடைந்து விட்டது என்று சொல் நம்ப வைத்துவிட்டால் குழந்தை அழுகிறது. அந்த அழுகை தேவையில்லை. ஏனெனில் அது விளையாட வரும்பொழுது மீண்டும் பொம்மை முழுதாக இருக்கும்.

உடலுக்கில்லாத துன்பத்தை மனம் உற்பத்தி செய்து உடலையும் துன்பப்படுத்துவது மனித வாழ்வு. அதில் உண்மையில்லை.

  1. உடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையின் வருத்தம் வளர்ந்தவருக்கு வாராது. அதுபோல் நாம் உடலால் படும் துன்பம் யோக முதிர்ச்சியுள்ளவர்க்கில்லை.


*******
karmayogi.net

வினோத்-VINOTH

unread,
Nov 9, 2011, 2:56:01 AM11/9/11
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. உடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையின் வருத்தம் வளர்ந்தவருக்கு வாராது. அதுபோல் நாம் உடலால் படும் துன்பம் யோக முதிர்ச்சியுள்ளவர்க்கில்லை.

யோகிக்குத் துன்பமில்லை.

*******

  1. மனித சுபாவம் நாய்வால் போன்றது. அதை நிமிர்த்த டியாது என்று கூறுவர். இர்க்ஹ் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் உடன் ஜீவியத்தை மாற்ற முயன்றால் மனித சுபாவமே எளிது என்று தோன்றும்.

நாய் வாலை விடக் கடினமான மனித சுபாவம்.

சுபாவம் என்பது உடன் பிறந்தது. பிறப்பில் ஏற்பட்டது என்று நாம் அறிவோம். தலைவிதியைப் போல் சுபாவத்தையும் மாற்ற முடியாது என்று முயன்றவர்கள் கண்டு கொண்டனர். யோக சக்தியால் சுபாவத்தையும் பல வருஷங்களில் மாற்ற முடியும் என்பதைப் பழைய யோகங்கள் சிலவற்றில் சொல்வதாக அன்னை சொல்கிறார். சுபாவத்தை மாற்ற முடியும், மாற்ற வேண்டும் என்பது அன்னையின் கொள்கை.

100 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அரவிந்தர் இலண்டனில் பயின்றார். இன்று அந்தப் பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் அவர் பெற்ற மார்க்குகளைக் குறித்த ரிஜிஸ்டர் இருக்கிறது. ஆராய்ச்சிக்காகப் போனவர்கள் படித்தார்கள். அது போன்ற ரிஜிஸ்டர்கள் ஐரோப்பாவில் 400 வருஷம், 500 வருஷத்தியவையும் இருக்கின்றன. ரிஜிஸ்டர் ஏற்பட்டு விட்டால் அவை நிலையாக இருக்கும். நூற்றுக்கணக்கான வருஷங்களாகவுமிருக்கும். அதில் மாற்றமில்லை என்பது சரித்திரம். 100க்கு 90 பங்கு அவை அழிவதில்லை. 90 பங்கு ரிஜிஸ்டர் அழிவதில்லை என்றால் கல்வெட்டுகள் 1 பங்கும் அழியாது. நூற்றுக் கணக்கான வருஷங்கள் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான வருஷங்கள் இருக்கக் கூடியவை அவை.

மனித சுபாவம் ரிஜிஸ்டரைப் போன்றது. உடன் சுபாவம் கல்வெட்டைப் போன்றது. மனமும், உணர்வும் சூட்சுமமானவை. சூட்சுமமான கரணங்களை மாற்றுவது நாய் வால்போல் என்றால் ஸ்தூலமான கரணமான உடலை எப்படித் தொட முடியும்? அன்னை அதையும் தொட்டார். அதுவும் மாறிற்று.

அதுவே அன்னை ஸ்ரீ அரவிந்தரைத் தாண்டிப் பெற்ற சித்தி. முழுவதும் முடியவில்லை என்பதே அன்னையின் குறை.

*******

வினோத்-VINOTH

unread,
Nov 18, 2011, 11:29:19 PM11/18/11
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்

  1. உயர்ந்த கருத்து அறிவை விசாலப்படுத்தும். ஆழ்ந்த உணர்வு ஜீவியத்தை மாற்றும். நிதானமான உணர்வு உடலையும் மாற்றும். தான் மாற விரும்பும் மனிதனால் பிறரை மாற்ற முடியும்.

மனிதன் தன்னை மட்டுமே மாற்ற வேண்டும். ஏகாதிபத்தியம் என்பதை விட்டு ஜனநாயகம் என்ற கருத்தை பிரிட்டன் ஏற்றுக் கொண்டதால் அது இந்தியாவுக்குச் சுதந்தரம் வழங்கியது இது பிரிட்டிஷ் சரித்திரத்தில் ஏற்பட்ட புரட்சி, கருத்தால் ஏற்பட்ட பெரிய மாறுதல்.

போர்க்களத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வு அசோகச் சக்கரவர்த்தியை அடியோடு மாற்றி அஹிம்சாவாதி ஆக்கியது. அறிவாலும், உணர்வாலும் உடலை மாற்ற டியாது. நிதானம் ஏற்பட்டால் உடலும் மாறும். எந்தச் செயலாலும் எரிச்சல் ஏற்படாமருப்பது நிதானமாகும். அதனால் மட்டுமே உடல் மாறக் கூடியது.

தாம் மாற எவரும் விரும்புவதில்லை. பிறரை மாற்ற அனைவரும் முயல்வார்கள். தான் மாறுவது என்பதே பெரிய கஷ்டம். விசால புத்தியாலும், ஆழ்ந்த உணர்வாலும் மாற்றிக் கொண்டால், அவரால் அடுத்தவரை மாற்ற முடியும். தான் மாறாமல் பிறரை மாற்ற முயல்வது கடையில் பணம் கொடுக்காமல் பொருள் வாங்க முயல்வதை ஒக்கும்.

********

karmayogi.net




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

தத்துவமுங்கோ: "தவறு என்பதை செய்ய தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்!


வினோத்-VINOTH

unread,
Nov 27, 2011, 12:27:59 AM11/27/11
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. சத்தியம் பொய்யாக மாறும் பாதையைக் கண்டு கொண்டால், பொய்யை மெய்யாக மாற்ற இயலும்.

பொய் மெய்யாவதும் மெய் பொய்யாவதும் முறை ஒன்றே.

ஒரு பொய் சொல்ல முடிவு செய்தபொழுது மனம் எப்படி மெய்யைப் பொய்யாக மாற்றுகிறது, எப்படி நம் இலட்சியத்தை விட்டுக் கொடுக்கிறது, எப்படிப் போராடும் மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்கிறது, எப்படி அதற்குரிய கதையை உடனே தயார் செய்ய நம் திறமையை உபயோகப்படுத்துகிறது, எங்ஙனம் நம் பழைய நல்ல நோக்கத்தைப் புதிய பொய்க்குத் தகுந்தவாறு க்ஷணத்தில் மாற்றிக் கொள்கிறது, அதைக் கேட்பவர் நம்புவதற்குத் தகுந்தாற்போல் எந்த விதத்தில் கத் தோற்றத்தையும், குரலையும், பாவனையையும், பாவத்தையும் மாற்றிக் கொண்டது என்பதை மனிதன் அறிவான். இவையெல்லாம் முயன்று செய்ய வேண்டியவை. மெய் சொல்ல எந்த முயற்சியும் தேவையில்லை. நெடு நாளாகப் பொய் சொல்லும் பழக்கம் இருப்பதால், இன்று முயன்று இந்தப் பொய்யான பழக்கத்தை விட்டு மெய் சொல்ல வேண்டுமானால் தான் என்ன செய்ய வேண்டும் என மனிதன் அறிவான். அதாவது பொய் சொல்ல எடுத்த முயற்சியை எடுக்கக் கூடாது. முயற்சி எடுத்து ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கண்டவற்றை நேராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சத்தியம் பொய்யாக மாறும் பாதையும், பொய் மெய்யாக மாறும் பாதையும் ஒன்றே. செல்லும் திசை எதிரானது.

********


karmayogi.net



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

தத்துவமுங்கோ: நீங்கள் உண்மையின் பக்கம் இருந்தீர்களானால் உண்மை எப்போதுமே கசப்பதில்லை. அவ்வாறு இல்லை எனில் உண்மை கசக்கவே செய்யும்.


வினோத்-VINOTH

unread,
Nov 29, 2011, 12:37:43 AM11/29/11
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்


  1. நம் வாழ்வின் துர் அதிர்ஷ்டங்களைத் தடுக்க நாமும் அதே போல் ஒரு சாதனத்தைத் தேடலாம். புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் சாதனங்களையும் தேடலாம்.

போரைத் தடுக்கும் சமாதான நகர். மனிதனுடைய வேகம், பொறாமை, எதிர்ப்புணர்ச்சி, அகந்தைகளால் போர் மூளுகிறது என்பதால் ஓர் இடத்தில் மனிதன் சேர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தன் அன்றாட வாழ்வில் வெல்ல முயன்றால், அதுவும் அன்னையின் சூழல் அதைச் செய்தால் அவ்வுணர்வுகள் கரைந்து விடும். அதனால் உலகத்தில் போர் மூளாது என்பது தத்துவம்.

ஒரு நகரத்தில் இலட்சிய மனிதர் ஒன்று கூடி தங்கள் தாழ்ந்த குணங்களை வெல்லும் வகையில் வாழ்க்கையை நடத்தினால் உலகில் மனிதனுடைய தாழ்ந்த குணங்கள் அழியும்.

கங்கா, யமுனா, காவேரி, சரஸ்வதி என்று ஒரு ஸ்லோகத்தைச் சிறு குழந்தைகளுக்குச் சொல் கொடுத்தார்கள். குழந்தைகள் தினமும் குளிக்கும் பொழுது இந்த ஸ்லோகத்தை ஆரவாரமாக அதிகமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. குழந்தைகளுடைய ஆசிரியர்கள் வெள்ளத்திற்கும் ஸ்லோகத்திற்கும் சம்பந்தமுண்டா என்று யோசனை செய்யும்பொழுது, ஸ்லோகத்தை எதற்கும்

நிறுத்துவோம் என்று கருதி நிறுத்திவிட்டார்கள். வெள்ளம் நின்றுவிட்டது.

நம் ஆபீஸ் வாழ்வில் சண்டையும் சச்சரவுமாக இருப்பதாக வைத்துக் கொண்டால், வீட்டில் சுமுகத்தை அதிகப்படுத்த முனையலாம். அதற்குரிய பலன் ஆபீஸிருக்கும். வளர்ந்த பையன் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை என்றால், அவன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் நேரத்தில் தவறாமல் செய்தால், பையன் நேரத்திற்கு வர ஆரம்பிப்பான்.

வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் ஏற்பட வேண்டுமானால், வீட்டில் உபயோகப்படக்கூடிய பொருள்களுக்குத் தகுந்த உபயோகம் ஏற்படுத்துவது நல்லது. யாரும் கவனிக்காத பொருள்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனிதர்கள், சந்தர்ப்பங்கள், கருத்துகளை இப்பொழுது பொருட்படுத்தி அவை பயன்படும் ஒரு வாய்ப்பை முயன்று உற்பத்தி செய்தால், புதிய வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்.

வினோத்-VINOTH

unread,
Feb 9, 2012, 12:46:25 AM2/9/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. ஆன்மா அசையும்பொழுது முகத்தில் அற்புதமான களை ஏற்படுகிறது.

களையாக மாறும் ஆன்மாவின் அசைவு. அசைவு பக்தியாலும் ஏற்படலாம், கோபத்தாலும் ஏற்படலாம். ஆன்மா முகத்தில் தெரியும்பொழுது எதனால் அசைவு ஏற்பட்டது என்ற பிரச்சினையில்லை.

பக்தி உயர்ந்தது, கோபம் தாழ்ந்தது என்பது மனிதனுடைய சட்டம். ஆன்மா அந்தச் சட்டத்திற்குப் புறம்பானது.

******

  1. பெரும் முகமாறுதல்கள் க்ஷணத்தில் ஏற்படுகின்றன.

பெரிய மாறுதல்கள் ஏற்பட அதிக நேரம் தேவை என்ற கருத்து ஆன்மாவைப் பொருத்தவரை சரியில்லை. ஆன்மாவின் அசைவால் ஏற்படும் முக மாறுதல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மாற்றம் க்ஷணத்தில் ஏற்படும்.

*******

19. சந்தேகத்தை ஏற்படுத்துவதே தீய சக்திகளின் கடைசி ஆயுதம். அதையும் தாண்டிய நிலையில் அவை நம் தன்னம்பிக்கையை அழிக்க முயலும்.

தீய சக்திகள் நம்பிக்கையை அழிக்கும். சந்தேகம் வந்தால் அதையே உணர வேண்டும். தன்னம்பிக்கைக் குறையும்பொழுது இது தீய சக்திகளின் வேலை என்று அறிந்தால் அவை பறந்துவிடும்.

சந்தேகத்தை அழிக்கும் எண்ணங்களைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளுதல் தீய சக்திகளை அண்டவிடாமல் செய்வதாகும்.

தன்னம்பிக்கையைத் தொடர்ந்து அதிகப்படுத்தும் காரியங்களில் இடைவிடாது ஈடுபடவேண்டும்.

*******


கர்மயோகி


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

தத்துவமுங்கோ: நீங்கள் உண்மையின் பக்கம் இருந்தீர்களானால் உண்மை எப்போதுமே கசப்பதில்லை. அவ்வாறு இல்லை எனில் உண்மை கசப்பது மட்டுமல்ல சுடவும் செய்யும்.


வினோத்-VINOTH

unread,
Feb 13, 2012, 2:56:13 AM2/13/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. பரிசு என்பது பொருள். உணர்வு பரிசைப் புனிதப்படுத்துகிறது.

புனிதமான உன்னத ஆன்மாவின் பரிசு வரம். உயர்ந்த எண்ணத்தால் அவ்வுணர்வு உன்னதமாகிறது. அடுத்த நிலையிலுள்ள ஆன்மா அப்பரிசை வழங்கும் திறனை அளித்து அதை வரமாக மாற்றுகிறது.

நாம் பழகும் இடங்களில் பரிசு கொடுக்கிறோம். அது நெருங்கிய இடங்களில் நல்லுணர்வால் பரிசு புனிதப்படுவதுடன் உறவையும் புனிதப்படுத்துகிறது. உணர்வின் பின்னணியிலுள்ள எண்ணம் உயர்ந்தால், பரிசும், உறவும், அதற்குக் கருவியான உணர்வும், புனிதமும், உன்னதமும் பெருகுகின்றன.

அறிவுக்கும், உணர்வுக்கும், பொருளுக்கும் சிகரமான நிலையில் ஆன்மா உள்ளது. ஆன்மா செயல்பட ஆரம்பித்தால் பரிசு வழங்கும் திறனை உற்பத்தி செய்யும். திறனை உயர்த்தி வரமாக மாற்றும். மனித உறவில் ஆன்மா செயல்பட்டால் வரமளிக்கும் திறனை உற்பத்தி செய்யும். தன்னையே பரிசாக உயர்ந்த எண்ணத்தோடும் நல்லுணர்வோடும் அளிக்க முன் வருபவருக்கு அவர் உறவையே வரமாக மாற்றும் அவருடைய ஆன்மா.

******

  1. சத்திய ஜீவனுடைய ஒளி மனதையும் உணர்வையும் தாண்டிய கடைசிக் கட்டத்தில் உடலைத் தொடும் பொழுது பொன்னொளியாகிறது.

வினோத்-VINOTH

unread,
Feb 14, 2012, 10:38:53 PM2/14/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. ஆழ்ந்த சொந்த உணர்ச்சிகளைக் கிளறினால் நாட்டின் நிலைமையை மாற்றும் சக்திகளும் வெளிப்படும்.

ஆழ்ந்த உணர்ச்சிகள் நாட்டை மாற்றும் திறனுடையவை. நாம் மேலெழுந்தவாரியாகச் செயல்படுகிறோம். ஆழ்ந்த சொந்த உணர்ச்சிகள் உள்ள இடத்தில் மனிதன் உலகத்தோடு இணைந்த நிலையிருப்பதால், அவற்றைக் கிளறினால் பெரிய சக்திகள் வெளிப்படுகின்றன.

ஓர் ஆபீஸில் ஏற்படும் சிறு தகராறுகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம். அல்லது ஆபீஸருக்கும் ஊழியருக்கும் வந்த தகராற்றை நடைமுறைச் சட்டப்படித் தீர்க்கலாம். இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தில் ஆபீஸருக்கும் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டால் அதைத் தீர்க்க முனையும்போது, எல்லா ஊழியருக்கும் உள்ள உரிமைகளைத் தொடும் நிலை ஏற்படும்.

*******

  1. அருள் அதிகரிக்கும்பொழுது அறியாமையும் அதிகரிக்கின்றது. ஏதோ ஒரு நிலையில் அருளும், அறியாமையும் ஒன்றன்றோ?

அருளும், அறியாமையும் ஒன்றன்றோ? உடன் ஒரு பகுதி வளர்ந்தால், அடுத்த பகுதியும் வளர்கிறது. ஏனெனில் ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு மொத்த உடன் வளர்ச்சி தேவை. எனவே முழு உடல் வளரும்பொழுது, அதனுள் உள்ள எல்லாப் பகுதிகளும் வளர்கின்றன. அருள் தெய்வத்தின் செயலானாலும் பிரம்மத்தின் ஒரு பகுதியாகும். ஒரு பகுதி வளர, முழுமையின் வளர்ச்சி தேவை, எனவே அடுத்த பகுதிகளும் வளர்கின்றன. அறியாமை ஒரு பகுதி என்பதால் அதுவும் வளர்கிறது.

அறியாமை, அறிவைவிட அதிக சக்தி வாய்ந்தது என்கிறார் பகவான், அறிவு என்பதே முதல் ஏற்பட்டது. அறிவு, சிருஷ்டியின் தேவைக்காக, தன்னை அறியாமையாக முயன்று மாற்றிக்கொண்டது. அந்த வகையில் அறியாமை அறிவைத் தாண்டிய நிலையிலுள்ளது. அடிப்படையில் அறியாமை என்பது அறிவிருந்து உற்பத்தியானது. ஆகையால் அறியாமை தன் வளர்ச்சி மூலம் தன் எல்லையை எட்டியபொழுது அறிவாக மாறிவிடும். அருள் செயல்படுவதால் அறியாமை அறிவாக மாறுவது இயற்கையன்றோ? இந்த இரு காரணங்களாலும் அருள் அதிகரிக்கும் பொழுது, அறியாமையும் அதிகரிக்கின்றது.

அதையும் தாண்டிய நிலையில் அருள் எதிருந்து புறப்பட்டதோ அதிருந்துதான் அறியாமையும் புறப்பட்டது என்பதால், அந்த ஒற்றுமையும் உண்டு.

******

s.bala subramani B+ve

unread,
Feb 14, 2012, 11:02:41 PM2/14/12
to mint...@googlegroups.com
இன்னும்  எழுதுங்கள் 
இன்றைய என் மன நிலைக்கு தேவை இது  

2012/2/15 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

வினோத்-VINOTH

unread,
Feb 15, 2012, 10:57:00 PM2/15/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. மாறுவது அவ்வளவு கடினமன்று. எங்கு மாற வேண்டும், மாற வேண்டியது எது என்று தெரியவே நாளாகிறது.

மாறுவதை விட, மாறும் நிலை சிரமம்.

நாம் உள்ள நிலையிருந்து அடுத்த (யோக) நிலைக்கு மாற வேண்டும் என மனிதனால் நினைக்க முடியவில்லை.

வானத்திருந்து குதிக்கும் விளயைட்டு ஒன்றுண்டு. விமானத்திருந்து பாராசூட் அணிந்து நூற்றுக்கணக்கானவர் குதித்து, தரையை அடைந்து மகிழ்வதைப் படங்களில் காணலாம். அவர்கள் எந்தத் தயக்கமுமில்லாமல் ஆர்வமாகக் குதிப்பதையும் காணலாம். நமக்குப் பார்ப்பதற்கே பயங்கரமானது, குதிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது. இதற்குரிய பயிற்சி ஆரம்பிக்கும்பொழுது 35 அடி உயரத்திருந்து தல் குதிக்கச் சொல்வார்களாம். 35 அடி உயரத்தில் நின்று தரையைப் பார்த்தவுடன் உடல் நடுங்கும். பலர் திரும்பிப் போய் விடுவார்கள். பயிற்சியின் ஆரம்பத்தில் 35 அடி உயரத்திருந்து கீழே பார்த்தால் வயிற்றைக் கலக்கும். பயிற்சியின் முடிவில் 35,000 அடி உயரத்திருந்து விளையாட்டாகக் குதிக்கின்றனர். ஆரம்பம் கடினம், குதிப்பதானாலும், தெரிந்து கொள்வதானாலும், ஆரம்பம் கடினம்.

புதிய நிலையை அடைய இன்றைய நிலையை விட்டு மாற வேண்டும் என்பதே தெரிவதில்லை. ஏனெனில் இருக்கும் இன்றைய நிலை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவுமிருக்கின்றது. இருக்கும் நிரந்தரச் சௌகரியத்தை விட வேண்டும் என்று எவருக்கும் தோன்றுவதில்லை. இருக்கும் சௌகரியம் சிறியதானாலும், இருப்பது சௌகரியமாக இருக்கும்பொழுது அடுத்ததைப் பற்றி மனம் தெரிந்து கொள்ள விழையாது. இதுவே இயற்கை.

*******

வினோத்-VINOTH

unread,
Feb 16, 2012, 10:00:21 PM2/16/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. பிரகிருதி மனத்தாலும் உணர்வாலும் செயல்படுகிறது. அதுவே செயல்களை நிர்ணயிக்கின்றது. நல்ல நிகழ்ச்சியானாலும், மற்றவையானாலும், சொந்த வாழ்க்கைப் பிரச்சினை என்றாலும், உலகத்துப் பிரச்னை என்றாலும், அவை பிரகிருதியின் உள்ளக் கிளர்ச்சியின் பிடியில் உள்ளன.

உள்ளக் கிளர்ச்சியிலுள்ளது உலகத்துப் பிரச்சினைகள்.

மனத்தின் அலைச்சலுடைய அந்தரங்கம் அதுவே, அதைத் தாண்டிய பின்னரே மனிதனுக்குச் சுதந்திரம் கிடைக்கும்.

மனிதன் என்றால் அவனுக்கு முக்கியமானவை என்று சில உண்டு. ஒருவருக்குக் குடும்பம் முக்கியம். அடுத்தவருக்குச் சொத்து முக்கியம். பணம் பலருக்கு முக்கியம். அந்தஸ்து, பணம், மரியாதை, பதவி, மானம், பாசம், பற்று ஆகியவை முக்கியமானவையாக இருப்பதுண்டு.

சொந்த விஷயமானாலும், பொது விஷயமானாலும் உயர்ந்த நல்ல காரியங்களிலும், ஆபத்து சேதம் விளைவித்தவையானாலும், இவை மனிதனைத் தொட்டு உலுக்குவதுண்டு. எந்த விஷயம் மனிதனைத் தொட்டாலும், அவனுக்கு முக்கியமான இடமே மனதில் தொடப்படுகிறது. அதற்கேற்பவே அவன் பாதிக்கப்படுகிறான். எந்த அளவு பாதிக்கப்படுகிறான் என்பதும், எந்த விஷயம் அவனுக்கு முக்கியமாக அமைந்துள்ளது, எந்த அளவுக்கு அந்த விஷயம் க்கியம் என்பதைப் பொருத்தேயிருக்கின்றது.

விஷயம் எதுவானாலும் தான் ஒருவர் பாதிக்கப் படுவது தம் மனத்தின் அமைப்பைப் பொருத்தே இருக்கின்றது. அம்மனத்தின் அமைப்பே அவருக்குரிய உண்மை. எந்த அளவுக்கு அவரை அது ஆட்டிப் படைத்தாலும், அம்மனமும், அதன் அமைப்பும்,  மேலெழுந்தவாரியான மனத்தையே அவை சேர்ந்தவை. இதன் பிடியில் உள்ளவரை மனிதன் அடிமை.

இதன் பிடியைத் தாண்டினால், மனிதன் ஆழ்ந்த மனத்தையடைகிறான். அதை அடைந்த மனிதனுக்குச் சுதந்திரம் உண்டு. ஆன்மீகச் சுதந்திரம் பெற அது முதற்படி.

********

வினோத்-VINOTH

unread,
Feb 17, 2012, 10:24:08 PM2/17/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. நம்மைப் பாதிக்காத விபத்துகள் நம் சூழ்நிலையில் ஏற்படுவதுண்டு. எதைக் காண உன் மனம் மறுக்கின்றதோ அதை வயுறுத்த இயற்கை நிகழ்த்துவன அவை. சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் விபத்துகள், உன்னைப் பிடித்து நிறுத்தி, அடி கொண்டு கிளறி, அருளைப் பார்க்கும்படி வயுறுத்துபவையாகும்.

விபத்தாக வரும் அருள்.

அறிவுள்ளவனுக்கு ஆபத்து அருகில் வருவதில்லை. அவனைத் தேடி வாய்ப்பு வருகிறது. அறிவு என்று இங்கு நான் குறிப்பிடுவது படிப்பறிவில்லை. வாழ்க்கையை அறியும் திறனை அறிவு என்று குறிப்பிடுகிறேன். அறிவுள்ளவனை வாழ்க்கை தேடி நல்லதைச் செய்கிறது. அறிவில்லாதவனுக்கு அறிவுறுத்த அவனைப் பாதிக்காத வகையில் அவன் பார்வையில் படும்படிக் காரியங்களை வாழ்க்கை நிகழ்த்துகிறது. இது ஏன் என் கண்ணில் பட்டது என்று அவன் சிந்தித்தால், அதற்குரிய முறையில் மாறிக் கொண்டால், அது போன்ற நிகழ்ச்சிகள் விலகும். அதைக் காண மறுத்தால், பின்னர் அவனைப் பாதிக்கும் வகையில் அதே விபத்து நடக்கும். தல்லாத சிந்தனை இப்பொழுது ஏற்பட்டால் இத்துடன் அது விலகும்.

******

வினோத்-VINOTH

unread,
Feb 18, 2012, 11:02:38 PM2/18/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. அருள் தன்னைச் சூழ்ந்துள்ளதை உணர்பவனுக்கு ஆபத்து வருவதில்லை. அருள் மீது நம்பிக்கையுள்ளவர் தம்முடன் விபத்து நிகழ முடியாத சூழலைக் கொண்டு வருவார்.

விபத்தை விலக்கும் அருளின் சூழல்.

அருள் தானே செயல்படும் தன்மையுடையது. பொதுவாக மனிதன் காரியங்களைச் செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருப்பான். தன் திறமையில் நம்பிக்கை வைத்து வேலை செய்வான். எதுவும் முடியாத நிலையில்தான் தெய்வத்தை நினைப்பான். நாம் பஸ் ஏறி ஊருக்குப் போகும் பொழுது டிக்கட் வாங்குவது, ஓர் இடம் பார்த்து உட்கார்வதுதான் நம் கடமை. பஸ் பத்திரமாகச் செல்வதில் எத்தனை மற்ற அம்சங்களிருக்கின்றன? அவையெல்லாம் சரியாக இருந்தால்தான் நாம் பத்திரமாகப் போக முடியும். நாம் அவற்றைப் பற்றி நினைப்பதில்லை. அவையெல்லாம் நம் கடமைகளில்லை என நினைக்கின்றோம். பஸ் பத்திரமாகப் போக வேண்டியவை நூறு அம்சங்கள். ரோட்டிலும், ரைவர் கையிலும், இன்ஜினிலும், ரோட்டில் நடக்கும் மற்றவர்களிடமுமாக ஏராளமான அம்சங்கள் கூடி வந்தால்தான் நாம் பத்திரமாக இருக்க முடியும். அவையெல்லாம் ஆண்டவன் கையிருக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக நடத்திச் செல்வது அருள். அருளின் செயலை நாம் அதுபோல் உணர்ந்தால் சூழல் அருளிருப்பதை உணர்ந்தவராவோம்.

பஸ்ஸில் ஓர் இன்ஜீனியர் வந்து உட்கார்ந்தால், இது புது இன்ஜின் ஆயில் போட்ட முதல் நாள், அதனால் புறப்படும்பொழுது அதிர்ச்சியில்லாமல் நகர்கின்றது என்றறிவார். நமக்கு அது தெரியாது. பஸ் முதலாளி ஒருவர் இந்தப் பஸ்ஸில் ஏறினால், 60 சீட்டும் நிரம்பியிருக்கிறது, நல்ல இலாபம் கிடைக்கிறது, அதனால்தான் பஸ்ஸை நன்றாக வைத்திருக்கின்றார்கள் என்று நினைப்பார். நம் அறிவுக்குச் சில விஷயங்கள் தாம் புலப்படுகின்றன. மற்றவை தெரிவதில்லை. பஸ்ஸுடைய ஒவ்வோர் அம்சத்தையும் உணர்ந்தவர்க்கு அந்த அந்த அம்சத்தின் விபரம் தெரியும். அருள் அத்தனை அம்சத்தையும் நடத்திச் செல்கிறது. நமக்கு இன்ஜின், வருமானம் போன்ற விவரங்கள் தெரியாமருக்கலாம். ஆனால் நாம் போகும் பஸ்ஸில் நாம் பத்திரமாக இருக்கத் தேவையானவை ஆயிரம் விஷயங்கள். அத்தனையும் நம் கையில்லை என்பது தெரியும். அவை இறைவனின் அருளால் நடக்கின்றன என உணர முடியும். நாம் அதை உணர்ந்தவுடன் அருள் அதிகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அதனால், பல நல்லவை நடக்கும். கெட்டவை நடக்க முடியாது. விபத்திற்கு வழியில்லை.

அவ்வருள் மீது முழு நம்பிக்கையுள்ளவர் சூழல் அருள் இடைறாது செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அங்கு விபத்து ஏற்படுவதில்லை.

*****

வினோத்-VINOTH

unread,
Feb 20, 2012, 1:36:59 AM2/20/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்

  1. மனிதனுக்கு விஸ்வாசமில்லை. நம்முள் உள்ள தெய்வ அம்சத்தாலேயே விஸ்வாசத்தை உணர முடியும்.

விஸ்வாசத்தை உணர முடியாத மனிதன். ஒரு தொட்டியில் நீரை நிரப்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். ஊற்றிய நீரை எடுத்த பின் தொட்டி காயாகும். கிணற்றில் நீரை எடுத்தால் நாம் எடுத்த அளவு நீர் சுரந்து மீண்டும் கிணறு நிரம்பும். தொட்டியில் ஊற்றில்லை. மனிதன் தொட்டி போன்றவன். அவன் உடலைக் காப்பாற்றினால் உடலுக்கு விஸ்வாசமில்லை. நன்றி சொல்லத் தெரியாது. அவனுக்கு அறிவைப் புகட்டினால் மனத்திற்கு விஸ்வாசமில்லை. அவன் உடலும், உணர்வும், அறிவும் தொட்டி போன்றவை. அவனுடைய ஆன்மாவுக்கு விஸ்வாசமுண்டு. அதில் நன்றி சுரக்கும். உடலைக் காப்பாற்றினால் ஆன்மா நன்றி சொல்லும், உயிரைக் கொடுத்தால் ஆன்மா நன்றி சொல்லும், அறிவைக் கொடுத்தாலும் ஆன்மா நன்றி சொல்லும். ஆன்மாவுக்கு மட்டுமே விஸ்வாசம் உண்டு. அதில் மட்டுமே நன்றி சுரக்கும்.

வினோத்-VINOTH

unread,
Feb 20, 2012, 7:13:44 PM2/20/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்
  1. செயல்கள் முழுமையானவை, நம் விருப்பங்களால் கட்டுப்படாதவை. அன்றாட வாழ்விலும் அவற்றைக் காணலாம். ஒரு பிள்ளையைப் புறக்கணித்து, மற்றொரு பிள்ளையைச் செல்லமாகக் கருதி அவனுக்கு மட்டும் கொடுக்க தகப்பனார் விரும்பியது, புறக்கணித்த பிள்ளை வாழ்வில் பூர்த்தியாவதைக் காணலாம். இது தலை கீழாகவும் நடக்கும். காங்கிரஸால் சுதந்திரம் பெற்றது. ஆயுள் முழுவதும் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் நாட்டை ஆள்வதைக் காண்கிறோம். இந்த அம்சத்தைப் புரிந்து கொள்வது ஞானம்.

புறக்கணிக்கப்பட்டவர் பெறும் அதிர்ஷ்டம். ஓர் ஊரில் நல்லவர்கள் சிலரும், கெட்டவர்கள் சிலரும் இருந்தால் பெய்யும் மழையும், உதிக்கும் சூரியனும் கெட்டவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்காக மட்டும் பலனளிக்க முயல்வதில்லை. ஓர் ஊருக்குப் புதிய பஸ் ரூட் திறந்து மக்களுக்கு வசதி செய்ய முன் வந்தால் திருடி விட்டு தப்பிப்பவனுக்கு அது உதவுகிறது.

இறைவனுக்குத் தேவர்கள் உகந்தவர்கள், அசுரர்கள் ஏற்புடையவர்களில்லை, எதிரிகள் என்று நாம் அறிவோம். ஆனால் அசுரர்களை மூத்த தெய்வங்கள் என்றும், சிருஷ்டியில் தேவர்களுக்கு முன்னால் பிறந்தவர்கள் என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். பக்தியால் இறைவனை அடைவதைவிட, இறைவனை எதிர்த்தால் விரைவாக அவனை அடையலாம் என்று நாராயணன் துவார பாலகர்களுக்குச் சொல்கிறார்.

நம் கருத்துப்படி ஒரு பிள்ளை வேண்டியவன், அடுத்த பிள்ளை வேண்டாதவன் என்று நினைத்தால், நம் நினைவுக்கு அடுத்த கட்டத்தில் அது மாறாகவும் இருப்பதுண்டு. அதனால்தான் பாரபட்சமான பெற்றோர் எண்ணம், பிற்காலத்தில் எதிராகப் பூர்த்தியாகிறது. செயல்களின் முழுமையை நாம் அறிய முற்பட்டால், அக்கண்ணோட்டத்திருந்து பார்த்தால் தவறு வாராது. முதல் தலை கீழாகப் புரிந்தாலும், பின்னால் பலன் வரும்பொழுது தத்துவம் சரியாகத் தெரியும்.

******

வினோத்-VINOTH

unread,
Feb 21, 2012, 10:49:01 PM2/21/12
to தமிழ்நண்பர்கள், mintamil, தமிழ் அமுதம்


  1. உலகத்திற்கு சத்திய ஜீவியம் வர பொருள் அவசியம்.

சத்திய ஜீவியத்திற்கு அவசியமானது பொருள். சக்தியை வெளிப்படுத்துவது பொருள் என்பதால் சத்திய ஜீவியம் வர பணம் அவசியம் என்கிறார் பகவான். பக்தர்கள் வாழ்வில் பெரும் பணம் வரும் பொழுது இதுவரை நடைபெறாத பெரிய காரியங்கள் தாமே நடப்பதைப் பார்க்கலாம்.

உலகத்தில் பொருள் அசுரன் கையில் உள்ளது. பக்தர்கள் சம்பாதிப்பதென்றால் அசுரனுடைய கையிருந்து பொருளை மீட்பது என்று பொருள். அப்பொருள் சத்திய ஜீவியம் வருவதற்கு உதவியான கருவியாக இருக்கும்.

சத்திய ஜீவியம் உலகை நாடி வர மூன்று நிபந்தனைகளை பகவான் கூறுகிறார். பொருள் அவற்றில் ஒன்று. அந்த மூன்றும் பின்வருமாறு:

  1. சர்க்கார் நம் கையில் இருக்க வேண்டும்,
  2. உடல் வெண்கலம்போல் தரமாக இருக்க வேண்டும்,
  3. பொருளுக்குரிய சக்தி இந்த இலட்சியத்திற்குச் சேவை செய்ய வேண்டும்.

வினோத்-VINOTH

unread,
Feb 27, 2012, 9:41:34 PM2/27/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. நமக்கு உரிமையில்லாததை நாம் விரும்புகின்றோம். மற்றவர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்தளித்தால் அச்செயல் அன்பாக மாறுகிறது.

அருளாக வருவது, அன்பாக வெளிப்படுகிறது.

ஆசையால் உரிமையில்லாததை விரும்புகிறோம். அன்பால் பிறர்க்கு உரிமையில்லாததைச் செய்கிறோம். அருள் தானே செயல்படுவது. நமக்குத் தெரியாமலேயே செயல்படும். நமக்கு உரிமையில்லாததைக் கொடுக்கும். இதைத்தான் தானே நடந்தது, ஆண்டவன் செயல், அருள், அதிர்ஷ்டம் என்று கருதுகிறோம்.

அருளை பெறும் மனிதன் அதை வெளிப்படுத்தினால் அன்பாக வெளிப்படுகிறது என்கிறார் அன்னை. அருளும், அன்பும் ஒன்றே. நம்முள் வருவதற்கு முன் அருளாக இருக்கிறது. நம்மிடமிருந்து வெளிப்படும்பொழுது அன்பாகக் காணப்படுகிறது.

எனவே அருளை நம்முள் செயல்பட அழைக்கும் வழி, அன்பை வெளிப்படுத்துவது. அதாவது பிறர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்து அவர்களுக்குக் கொடுப்பதாகும். எப்படி அருள் தானே நமக்குக் கொடுக்கின்றதோ, அப்படி நாம் பிறருக்கு அன்பால் கொடுக்க வேண்டும்.

அன்பை வெளிப்படுத்த நாமே முனைந்து செயல்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால், அருள் உள்ளே வரும்.

*******

வினோத்-VINOTH

unread,
Feb 27, 2012, 9:44:09 PM2/27/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. இன்று உன் மனநிலையுள்ள இடத்தில் ஆரம்பிக்கா விட்டால், ஆரம்பிக்க முடியாது.

ஆரம்பத்திற்குரிய ஒரே இடம்.

இரண்டடி உயரத்தில் விட்டுவிட்ட சுவரைப் பூர்த்தி செய்ய, அதே இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். இ.ஆ. முதல் வருஷத்தில் படிப்பை விட்டுவிட்டவன் 4 வருஷம் கழித்து படிப்பைத் தொடர்ந்தால் முதல் வருஷத்திருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இரண்டாம் வருஷத்திருந்து தொடர முடியாது. 4 வருஷமாகிவிட்டதால் ங.ஆ. முதல் வருஷத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம். அதற்கு வாழ்க்கை இடம் கொடுக்காது. படிப்பு, பயிர், தொழில், குடும்ப விவகாரம், வியாபாரம், அரசியல் எதுவானாலும், இடைவெளி ஏற்பட்டுவிட்டால், மீண்டும் அங்கிருந்து ஆரம்பித்தால்தான் காரியம் பூர்த்தியாகும்.

யோகத்தை ஆரம்பிக்க விரும்புபவர் தம் வயதிற்கேற்ற அளவிலோ, படிப்புக்கு ஏற்ற முறையிலோ,

அந்தஸ்திற்குத் தகுந்தாற் போன்ற முறையை அனுஷ்டிக்க முடியாது. தம் மனநிலை இன்றுள்ள இடம் எது என்று கண்டு அந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

குடும்பத்தின் மீது பற்றுள்ளவர், முதற்படியாக அப்பற்றைக் களைய வேண்டும். ஆத்திரக்காரருக்கு ஆரம்பம் ஆத்திரத்தை அழிப்பது. ஆசையால் நிரம்பியவர் ஆசையை அழிக்க முன் வரவேண்டும்.

இன்று நம் மனநிலை எது என்று அறிய வேண்டும். அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன்றி, எனக்கு ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் மனப்பாடம். எனவே நான் யோகத்தை ஆரம்பிக்க முதற்படியாகத் தியானத்தை மேற்கொள்கிறேன் என்றால் அவருக்குத் தியானம் அமையாது. தியானத்தில் ஆசை பூதவுருவுடன் கிளம்பும்.

*****

வினோத்-VINOTH

unread,
Mar 1, 2012, 12:21:36 AM3/1/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil


  1. எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும். (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.

வினோத்-VINOTH

unread,
Mar 3, 2012, 1:14:55 AM3/3/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. கண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன். 100 முறை சொல்யதைப் புதியதுபோல் மீண்டும் கேட்பான். 
  • கண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன்.
  • பார்வையற்ற திறந்த கண்கள்.
  • - பிறருக்கு நாம் தவறாமல் சொல்லும் புத்திமதியை நாம் கடைப்பிடிப்பதில்லை.
  • - இருபது முறை நஷ்டம் ஏற்பட்ட முறையை இருபத்தி ஓராவது முறையும் கடைப்பிடிக்கின்றோம்.
  • - திருமணமாகி 8 வருஷமாகக் கணவன் செய்ய மறுத்ததை இன்று நடக்கும் என்று கேட்கும் மனைவி உண்டு.

  • - ஓர் ஊருக்குப் போகும்பொழுது போக டிக்கெட்டு வாங்கிக் கொண்டு எப்படியாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்படுதல் ஒரு சிலர் பழக்கம்.
  • - தனக்குச் சூன்யம் வைத்த பார்ட்னரால் இந்த நேரம் நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதும் உண்டு.
  • - ரூ. 200 விலை சொல்லும் பொருளைப் பேரம் பேச வேண்டும் என்று ரூ. 20க்கு கேட்டுப் பேரத்தை ஆரம்பிக்கும் நபர் ஒருவர்.
  • - 63 வருஷமாக ஆயிரம் விஷயத்தை எதிர்ப்பார்த்தேன். இதுவரை ஒன்றுகூட நடந்ததில்லை. என்றாலும் என் மனம் இன்னும் ஏதாவது பெரியது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றது.
  • - கடந்த இருபது வருஷமாக என் கண் எதிரே சுமார் நூறு சிக்கலான விஷயங்களில் நூற்றுக்கு நூறு நாணயமாக நடந்தவரை இன்று என் விஷயத்தில் மனம் நம்ப மறுக்கிறது. என் விஷயத்தில் எத்தனையோ முறை நாணயமாக நடந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
  • - அகராதி என்று சிறு வயது முதல் 30 வருஷமாகப் பெயர் வாங்கியவருக்கு இன்றும் ஏன் தன்னை இப்படி நினைக்கின்றார்கள் எனப் புரிவதில்லை.

கண்மூடித்தனம் மனிதனுடைய மனநிலை. நான் கண்மூடித்தனமாக இல்லை என கண்மூடித்தனமாகப் பேசுவது வழக்கம். நாம் கண்மூடித்தனமாக இருக்கின்றோம் என்று அறிவது முதல் நிலை. எந்த விஷயத்தில் அப்படியிருக்கின்றோம் என்றறிவது அடுத்த நிலை. மாறுவது கடைசி நிலை.

*******

வினோத்-VINOTH

unread,
Mar 3, 2012, 11:08:40 PM3/3/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. உடல் உணர்வில்லாதவருண்டு. மேளச் சத்தம் கேட்டவுடன் எழுந்து ஓடுபவருண்டு. அது போன்றி மனத்தால் உணர்வைக் கட்டுப்படுத்துபவருண்டு. உணர்ச்சியை மனம் கட்டுப்படுத்துவதுபோல் ஜீவியம் மனத்தைத் தாண்டியிருக்கிறது.  சிந்தனை நின்ற பின் ஒரு பெரிய எண்ணம் உதயமாகிறது. எண்ணத்தை நிறுத்தி ஜீவியத்தால் மட்டுமே செயல்படமுடியும். அதைச் சாதிக்க சிந்தனையைத் தியாகம் செய்ய வேண்டும்.

மௌனத்தில் பெரிய எண்ணம் உதயமாகும். ஆசைக்குக் கடிவாளம் போடாவிட்டால், வாழ்க்கையே இல்லை. அவரவர்கள் தத்தமக்குப் பிரியப்பட்டதைக் கட்டுப்பாடின்றிச் செய்தால், நம் வாழ்க்கை காட்டு வாழ்வு போலிருக்கும். எந்த அளவுக்கு ஆசை கட்டுப்படுகிறதோ அந்த அளவுக்கு நாம் நாகரீகம் உடையவர்களாகிறோம். வாழ்க்கையில் நம்மோடு ஒத்தவர்களைப் பார்த்தால் தம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் முன்னேறுவதையும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் முன்னேற முடிவதில்லை என்பதையும் காண்கிறோம். அறிவு, உணர்ச்சியைவிட உயர்ந்தது. உணர்ச்சி தானே கட்டுப்படாது. அறிவால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு நிலையில் உள்ள வேகம், அடுத்த நிலையிலுள்ளதற்குக் கட்டுப்படும். அதற்குக் கட்டுப்பாடு என்று நாம் பெயரிடுகிறோம்.

அதேபோல் அறிவைவிட, ஜீவியம் உயர்ந்தது. உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவன் சாதாரண மனிதன். சாதாரண மனிதனுக்கு அறிவைக் கட்டுப் படுத்தவேண்டும், கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றாது. அறிவு கட்டுப்படாது. அறிவு கட்டுப்பட்ட நிலைக்கு மௌனம் என்று பெயர். அது தவ நிலை. அறிவு கட்டுப்பட்டால் அதற்கடுத்த ஜீவியத்திற்குத்தான்  கட்டுப்படும். சிந்தனையைத் தியாகம் செய்ய முன் வந்தால் அறிவு ஜீவியத்திற்குக் கட்டுப்படும். அது மோன நிலை, தபஸ்வியின் நிலை, அது சித்தித்தால் மௌனம் சித்திக்கும்.

********

வினோத்-VINOTH

unread,
Mar 4, 2012, 9:03:45 PM3/4/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. எண்ணத்தைச் சமர்ப்பித்தால் எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம் செயல்பட ஆரம்பிக்கும்.

ஜீவியம் செயல்படும் சமர்ப்பணம். உணர்ச்சியேயில்லாமல், உடலால் செயல்படும் மனிதனை நாம் பார்க்கிறோம். அவன் வேலை செய்வான். பாசம், பற்று இருக்கா. சாப்பாடு இருந்தால் போதும். தூங்கி விடுவான். குழந்தை இறந்தாலும் அவனைப் பாதிக்காது. திட்டினாலும் கோபம் வாராது. சாப்பாடுதான் முக்கியம். இவனைச் சாப்பாட்டு ராமன் என்பார்கள். இவன் எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் அங்கே கடைசி நிலையிருப்பான்.

அறிவேயில்லாமல், உணர்ச்சி வசப்பட்டவரைப் பார்க்கின்றோம். அடிக்கடி ரோஷம் வரும். கோபம் வரும். படபடப்பாக இருப்பார்கள், நிதானமிருக்காது. ஆசையின் பிடியிலிருப்பார்கள். அவர்கள் பொதுவாக வாழ்க்கையை எந்த நிலையில் ஆரம்பித்தார்களோ, அங்கேயே இருப்பார்கள். மேலே போவது கடினம். போனாலும் மீண்டும் கீழே வரும் வாய்ப்பும் அதிகம். இருக்குமிடத்திருந்தும் மேலும் கீழே போக வாய்ப்புண்டு. பெரிய முன்னேற்றம் இவனுக்குக் கிடையாது. மற்றவர்கள் அவனைப்பற்றிப் பேசும்பொழுது, சுத்தமா அறிவேயில்லை அவனுக்கு என்பார்கள்.

எண்ணம் அறிவைப் பிரதிபக்கும். அறிவுள்ளவன் உயர்ந்தவன். எண்ணம் சமர்ப்பணமாகி ஜீவியம் செயல்பட்டால், எண்ணத்தால் பெறும் பலனைவிட பல மடங்கு உயர்ந்த பலன் பெறுவார்கள்.

வினோத்-VINOTH

unread,
Mar 5, 2012, 9:47:57 PM3/5/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. உயர்ந்த செயலையும் தாழ்ந்த மன நிலையுடன் மனிதன் பார்ப்பதால் அவை சிறியனவாகத் தோன்றும். தாழ்ந்த செயலையும் உயர்ந்த மன நிலையுடன் இறைவன் காண்பதால் அவை உயர்ந்து தோன்றும். உயர்ந்த நிலையிருந்து உலகத்தின் செயல்களைக் காண முயலும் மனிதன் தெய்வத்தை நோக்கிச் செல்கிறான்.

தெய்வத்தை நோக்கிச் செல்லும் மனநிலை.

நம் வீட்டிலுள்ள பொருளை இன்னொருவர் நாம் அறியாமல் எடுத்துப் போனால் அதைத் திருட்டு என்கிறோம். திருடியவன் கிடைத்தால் அவனைத் தண்டிக்கின்றோம். ஒரு பிஷப் வீட்டில் வெள்ளி வத்தி ஸ்டாண்டைத் திருடியவனை போலீஸ் பிடித்து வந்து அவரிடம் நிறுத்திய பொழுது, 'நான் உனக்கு இரண்டு ஸ்டாண்ட் கொடுத்தேன், ஏன் ஒன்றை இங்கு வைத்துப் போய்விட்டாய்? அதையும் எடுத்துக் கொள், என்று கொடுத்தார். நம் பொருள் திருடு போயிற்று என நாம் நினைக்கிறோம். அவன் பசியால் வாடுவதை அவர் நினைக்கின்றார்.

நமக்கு எரிச்சல் மூட்டும் செயல்களையும், அருவெறுப்புத் தரும் செயல்களையும், தவறாகத் தெரிவனவற்றையும் மனநிலையை உயர்த்திக் கொண்டு பார்த்தால் அச்செயல்களில் தெய்வம் வெளிப்படுவது தெரியும்.

நம்மை ஏமாற்றுபவனை எப்படி இதுபோல் உயர்ந்ததாகக் கருத முடியும்? என்றால், அன்னை அதற்குக் கூறும் பதில் வேறு. அவனுடைய மன நிலையுடன் நாம் ஒன்றிப் போய் அவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு அமைந்துள்ளது தெரியும். அதற்காக நாம் அவனைக் கண்டு பரிதாபப்பட வேண்டும். ரூ. 1500 சம்பளம் பெறுபவன் தனக்கு ரூ. 2000 சம்பளம் என்று சொன்னால், தன் சம்பளத்தைச் சொல்ல அவன் கூச்சப்படுகிறான் என்று பொருள். உண்மையை அறிந்து அவனைக் கேலி செய்வது தாழ்ந்த மனநிலை. அதைத் தெரிந்து அவனுக்காகப் பரிதாபப்படுவது உயர்ந்த மனநிலை.

வினோத்-VINOTH

unread,
Mar 6, 2012, 9:16:03 PM3/6/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil


  1. மறுப்பு ஆர்வமானால் திருவுருமாற்றம் ஏற்படும்.

தனக்குப் பழக்கமானவை தவிர மற்றவற்றை மனிதன் எதிர்க்கின்றான், வெறுக்கிறான், மறுப்பு தெரிவிக்கின்றான். இதுவே அவன் வழக்கம், எந்த மாறுதல் வந்தாலும் முதல் மறுப்பது மனித சுபாவம். அன்று குடுமியை மாற்றிக் கிராப் வெட்டிக் கொண்ட பொழுதும், இன்று கிராப்பை மாற்றி நீண்ட முடியை வளர்த்தபொழுதும் புறப்பட்ட எதிர்ப்பு பெரியது. உடை, உணவு, ஸ்டைல், கருத்து, பழக்கம், வழக்கம் மாறியவண்ணமிருக்கின்றன. முதல் மறுப்பு வருகிறது. பிறகு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏற்றுக் கொண்ட பின் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆங்கிலப் படிப்பு வந்த காலத்தில் அது நீசபாஷை, படிப்பது அனாசாரம் என்றார்கள். ஆக்ஸ்போர்ட் போய் படித்தவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை ஊர் விலக்கியது. புதிய  பாடம் படித்தவர்க்கு வேலை கிடைக்கவில்லை. புதிய பயிரிட்டவர்களைக் கேலி செய்தார்கள். இவர்கள் எல்லாம் முன்னோடிகள். இவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக வரவேற்பு தெரிவித்தால் உலகம் எளிதில் முன்னேறும்.

இறைவன் நம் மீது அருளைப் பொழிகிறான். அவன் செயல் நாமறிந்த முறையில் வந்தால் வரவேற்கிறோம். வேறு உருவத்தில் வந்தால் மறுப்புத் தெரிவிக்கின்றோம். ரூ. 4000 சம்பாதித்தவருக்கு ரூ. 6000 சம்பளம் வந்தவுடன் இறைவனுக்கு நன்றி தெரிவித்து அடுத்த நாள் அந்த வேலையில் சேர்ந்தார். ஒரு மாதம் கழித்து அவருக்கு இந்தோனேஷியாவில் ரூ. 40,000 சம்பளத்தில் வேலை வந்தது. அவர் வீட்டார் அதை ஏற்கக் கூடாது என்றனர். அருள் புதிய பாதையை அதற்கேற்ப ஏற்படுத்தும். நமக்கே உரிய வழியில் மட்டும் செயல்படாது. மறுப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக நம்மை நாடி வருவது அருள் என உணர்ந்து ஆர்வம் தெரிவித்து ஏற்றுக்கொண்டால் திருவுருமாற்றம் ஏற்படும்.

********

வினோத்-VINOTH

unread,
Mar 8, 2012, 9:28:21 PM3/8/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

49. ஜடம் தெய்வ நிலைக்குப்போக துன்பத்தைக் கருவியாக நாடுகிறது. ஜடம் தெய்வத்தை நாடும்பொழுது துன்பம் என்ற பாதை வழியே செல்கிறது. ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்தியஜீவியத்தை நாடினால் துன்பத்தின் வழியே செல்லத் தேவையில்லை. அதன் பாதை ஆனந்தமாகும். 

துன்பத்தின் பரிணாம நிலை.

செல்வத்தைச் சேகரிக்க ஒருவர் உழைக்க வேண்டும். நிலையில்லாத சந்தர்ப்பங்களை எதிர் கொண்டு சமாளிக்க வேண்டும். இடையறாது மனம் நிலையிழந்திருக்க வேண்டும். செல்வத்தின் நிலை உயர்ந்தால், வசதி செல்வாக்கு உயர்வதுபோல், எதிரிகளும் எதிர்ப்பும் அதிகமாகும். நாட்டில் எந்த நிலை மாறினாலும் நாமும் பாதிக்கப்படலாம். சில மாறுதல்கள் நம்மை அழிக்கக்கூடும். இம்மாதிரி நிலைகளில் பல ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்றால் பெருஞ்செல்வம் சேரும்.

ஒருவருக்கு இனிமையான பழக்கம், நாணயம், அடக்கம், பிறர் பொருளை மனம் நாடாத பக்குவம், உயர்ந்த தன்னலமற்ற பண்பு போன்றவை நிறைந்திருந்தால் அவரைப் பெருஞ்செல்வர் பழக்கத்தால் அறிந்திருந்தால் தம் செல்வத்திற்கு அதிபதியாக வேண்டும் என்று அவரை அழைப்பதுண்டு. ஏதோ ஒருவருக்கு இதுபோன்ற நிலை அமையும்.

ஜடம் தெய்வத்தை நாடினால் துன்பத்தைக் கருவியாக்குகிறது என்பது மனிதன் தன் உழைப்பால் பெருஞ்செல்வம் தேடுவதுபோல், பெருஞ்செல்வர் ஒருவருடைய பண்பால் கவரப்பட்டு அவருக்குத் தம் செல்வத்தை அளிக்க முன் வருதல் ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்திய ஜீவியத்தை நாடுதல்போல் ஆகும்.

துன்பத்தால் மட்டுமே அடையக் கூடிய இலட்சியத்தை ஆனந்தத்தால் நமக்குப் பெற்றுத் தருவது iraivanin  நோக்கம்.

******

வினோத்-VINOTH

unread,
Mar 9, 2012, 10:33:26 PM3/9/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil


  1. கருணையும் இனிமையும் தெய்வத்தின் சுபாவம். ஒருவரிடமாவது மனிதன் கருணையுடனும், இனிமையுடனும் இருக்கலாம். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வான்.

கருணையை ஏற்றுக் கடவுளாகும் மனிதன்.

இனிமையாகப் பேசுதல் குறைவு. மனதில் இனிமை ஏற்பட்டு அதைப் பேச்சால் வெளிப்படுத்துதல் உயர்வு. எல்லாச் சமயங்களிலும் இனிமை மனதில் உற்பத்தியாவதில்லை. முறையாகப் பேசலாம், முறையாக நடக்கலாம். இனிமையாகப் பேசவும், நடக்கவும், அதை மனதில் உணரவும் முயல்வது அரிது. அதை எல்லா நேரங்களிலும், எல்லோரிடமும் உணர முடிவது மிகப் பெரிய காரியம். இனிமையாக இருக்க நாமே முயலலாம். கருணை இருந்தால் வெளிப்படும். இல்லாத கருணையை உற்பத்தி செய்ய முடியாது. கருணையை உற்பத்தி செய்ய முடிந்தால் அது தெய்வத்தை நோக்கிச் செல்வதாகும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கருணையை உற்பத்தி செய்தால், அதுவும் உற்பத்தியாகும். இருக்கும் கருணையை எல்லோரிடமும் வெளிப்படுத்த முயன்றாலும் நல்லது. அதுவும் மேலும் கருணையை உற்பத்தி செய்ய உதவும்.

நமக்கில்லாத தெய்வ சுபாவங்களையும் அன்னை மீது நம்பிக்கை வைத்து உற்பத்தி செய்யலாம்.

வினோத்-VINOTH

unread,
Mar 11, 2012, 1:45:52 AM3/11/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. கவனத்திற்குப் பலன் உண்டு. நேரடியான பலனில்லை எனில் அதே குணமுள்ள மற்றொருவர் அதே பலனைத் தருவார்.

தவறாது பலன் தரும் கவனம்.

குழந்தையும், தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பதில் உள்ள உண்மை பெரிது. நம் கவனத்திற்குரிய மனிதர்களும், பொருள்களும், நிகழ்ச்சிகளும், நேரங்களும் நம்மை நாடி வர முயல்வதைப் பார்க்கலாம். நம் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால், எந்த விஷயங்களில் நமக்கு அதிக கவனம், அக்கறையிருந்ததோ அவற்றால் நமக்குப் பெரும்பலன் கிடைத்திருக்கும். எவற்றால் நாம் பெரும்பலன் பெற்றோமோ அவற்றின் மீது நமக்குக் கவனம் இருந்திருக்கும் என்பது பொதுவான விதி.

நாம் வேலை செய்யும் ஆபீஸில் உண்மையாக உழைப்பதைக் கண்டு கொள்வாரில்லை. நம் உண்மைக்கும், உழைப்புக்கும், பொறுப்புக்கும் பதிலாக

நமக்குக் கிடைத்தது பராமுகம், உதாசீனம், சில்லரைத் தொந்தரவு என இருக்கலாம். ஏன் என் கவனம் எனக்குப் பலன் தரவில்லை என்று நினைக்கலாம்.

நாம் வீடு கட்டப் புறப்பட்டாலும், நம் தம்பி ஒரு தொழில் செய்ய முனைந்தாலும், அல்லது வேறு எந்தக் காரியத்தை நாம் நாடினாலும், அளவு கடந்த பலன் அதன் மூலம் வரும்பொழுது பார்த்தால், நம்மை உதாசீனப்படுத்திய ஆபீஸில் எப்படி பைல்களை நாம் கவனித்தோமோ, கணக்கை எப்படி பொறுப்புடன் நிறைவேற்றினோமோ அப்படி இப்புதுத் துறையில் பைல்களும், கணக்கும் நம்மைக் கவனிப்பது நமக்குப் பலனளிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் நடந்து கொள்வதைப் பார்க்கலாம்.

*******

வினோத்-VINOTH

unread,
Mar 11, 2012, 10:12:57 PM3/11/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு. அவர்களுடைய நல்ல குணங்களைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை அறிவதாகும். அவர்களுடைய குறைகளைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை உயர்ந்த றையில் அறிவதாகும்.

நம்மை நமக்கு உணர்த்தும் பிள்ளைகள்.

பெற்றோருக்குக் குழந்தைகள் மீது இயற்கையான பாசம் உண்டு. பற்று, பாசம், பிரியம், அன்பு என்ற நான்கு நிலைகளில் அது அமையும்.

உடலையுடையவன் மனிதன் என்பதால் உடலுக்குரிய பற்று இயல்பாக இருக்கும். உணர்விருப்பதால் பாசம் இருக்கும். பல குழந்தைகளிருந்தால் எல்லாக் குழந்தைகளிடமும் பற்றிருக்கும்.

பாசம் சில குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும். பாசம் பழக்கத்தைப் பொருத்தது. பற்று பிறப்பில் வருவது.

பிரியம் ஏதோ ஒருவருக்குத் தானிருக்கும். அவர்களுக்கும் அந்தப் பிரியம் குழந்தைகளிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது. பிரியமுள்ளவருக்கு அப்பிரியத்தைப் பொதுவாக ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். பலருக்குத் தன் பிரியத்தைக் கொடுப்பது சிரமம். பிரியத்தை நண்பனுக்குக் கொடுக்கலாம். அண்ணனுக்கும் அளிக்கலாம், மனைவி அதற்குரியவளாக அமையலாம். சில குழந்தைகள் பெறலாம். எப்படி அமைவதானாலும் மனிதனுக்குள்ள பிரியத்தை ஓரிருவரே பெறுவர். அவர்கள் யார் என்பதைச் சந்தர்ப்பம் நிர்ணயம் செய்யும். அதனால் உன் குழந்தை மீது நிச்சயமாகப் பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வாகும்.

நம் நல்ல குணங்கள் அவரிடம் காண்பதால், அவற்றை அறிவது நாம் நம்மை அறிவதாகும். நாம் உலகத்திடமிருந்து மறைத்த குறைகள் நம் குழந்தைகளிடம் காண்பதால், அதை அறிந்து ஏற்றுக் கொள்வது நாமே நம்மை முழுவதுமாக அறிவதாகும்.

வினோத்-VINOTH

unread,
Mar 15, 2012, 3:14:08 AM3/15/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. மனித முயற்சி முழுமையானதன்று, தெய்வ முயற்சி முழுமையுடையது. மனத்தின் முயற்சி முழுமையானதன்று. உடல் முயற்சி முழுமையானது. நம் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால் நாம் தெய்வமாகி விடுகிறோம். எல்லாக் கரணங்களிலும் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால், நாம் முழுமையாகத் தெய்வமாகிறோம்.

உடலுக்கு உயர்ந்த செயன் உன்னதம்.

ஜீவனுக்கு 4 பகுதிகள் உண்டு. அவை மனம், உணர்வு, உடல், ஆன்மா, இவற்றுள் எந்த ஒரு பகுதியின் முயற்சியும் அல்லது செயலும் முழுமையுடையதன்று, ஏனெனில் அவை ஜீவனின் ஒரு பகுதி. ஓரளவு உடலுக்கு மட்டும் விதிவிலக்குண்டு. இக்கரணங்கள் ஒவ்வொன்றுக்கும் இரு பகுதிகள் உண்டு. நாம் தாழ்ந்த பகுதியிருந்து செயல்படுகிறோம். தெய்வம் உயர்ந்த பகுதியிருந்து செயல்படும். மனம் சிந்திப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது, கற்பனை செய்வது, முடிவெடுப்பது ஆகியவற்றை அதன் தாழ்ந்த பகுதியிருந்து செய்கிறது. மனத்திற்கு ஜோதியுண்டு. ஜோதியிருந்து செயல்பட்டால் உயர்ந்த பகுதியில் இருந்து செயல்படுவதாக அர்த்தம்.

அதேபோல் உணர்வுக்கும் இரு பகுதிகளுண்டு, உடலுக்கும் இரு பகுதிகளுண்டு, ஆன்மாவுக்கும் இரு பகுதிகளுண்டு. எல்லாக் கரணங்களிலும் உயர்ந்த பகுதியிருந்து மட்டும் நாம் செயல்பட்டால் அது தெய்வ நிலை. தெய்வநிலையிலுள்ளவர் செயல்படும் வகை அது.

மனத்தில் மனம், உணர்வு, உடல் என்ற மூன்று பகுதிகளுண்டு. சிந்திப்பது மனம். உணர்வது மனத்தின் உணர்ச்சிக்குரிய பகுதி. செயல்படுவது மனத்தின் உடலுக்குரிய பகுதி. மூளை என நாம் அறிவது மனத்தின் உடலுக்குரிய பகுதி. மனம் முயன்று செயல்படும்பொழுது அதன் சிந்தனைக்குரிய பகுதியால் செயல்படுவதால் தன்னில் மூன்றில் ஒரு பாகத்தில் செயல்படுகிறது.

உணர்வுக்கும் இம்மூன்று - சிந்தனை, உணர்வு, உடல் - பகுதிகள் உள்ளன. உணர்வு தீவிரமாகச் செயல்படும்பொழுது அதன் உணர்வுக்குரிய பகுதியால் செயல்படுவதால் அதற்கும் முழுமையில்லை.

உடலுக்கும் இம்மூன்று - சிந்தனை, உணர்வு, உடல் - பகுதிகள் உள்ளன. உடல் தீவிரமாகச் செயல்படும் பொழுது உடன் பகுதியால் செயல்படுவதால் அது மூன்றில் ஒரு பகுதியானாலும், கடைசிக் கட்டமாக இருப்பதால் அதனுள் மனத்திற்கும், உணர்வுக்கும் உள்ள பகுதிகள் அடங்கியுள்ளன. எனவே உடன் ஆர்வம் முழுமை பெறுகிறது. அதனால் தெய்வ நிலைக்கு உயருகிறது. எல்லாக் கரணங்களின் ஆர்வத்தை உயர்த்தினாலும், அல்லது உடன் ஆர்வத்தை உயர்த்தினாலும், மனிதன் தெய்வமாகிறான்.

******

வினோத்-VINOTH

unread,
Mar 19, 2012, 10:26:52 PM3/19/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. எப்பொருள் ஏராளமாக நமக்குத் தேவைப்படுகிறதோ அதைச் சுலபமாகப் பெறும் வழியொன்றுண்டு. தெய்வத்திற்கு அப்பொருளைக் காணிக்கையாக அளித்தால் அபரிமிதமாக அது நம்மை நாடி வரும். அதை விடச் சிறந்த முறை அப்பொருளை அடுத்தவர்க்குக் கொடுப்பதாகும். உதாரணமாக அபரிமிதமான அன்பு தேவைப்பட்டால் உன் அன்பை மற்றவர்க்குச் சமர்ப்பணமாகவும், தெய்வக் காணிக்கையாகவும் செலுத்த வேண்டும்.

மனிதனிலுள்ள தெய்வத்தின் அபரிமிதமான அம்சம்.

ஒரு பொருளை கடனாகக் கொடுப்பதற்கும், கடமையெனப் பரிசாகக் கொடுப்பதற்கும், அன்பின் அடையாளமாகப் பரிசாக்குவதற்கும், காணிக்கை ஆக்குவதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்ததே.

பரிசாகக் கொடுக்கும்பொழுது அடுத்தவர்க்குப் பயன்படுவது முக்கியம். அன்பின் அடையாளம் பரிசாகும்பொழுது அடையாளம் முக்கியம். தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்து பயிரிடுபவன், வேலை தேடுபவன், குழந்தையை ஆபரேஷனுக்கு அனுப்புபவன் காணிக்கை செலுத்துகிறான். தான் தெய்வத்தால் மட்டுமே வாழ்வதை உணர்ந்து, அடுத்து வரும் வேலையை தான் செய்ய மறுத்து, தான் எந்தத் தெய்வத்தை நம்பி வாழ்கின்றானோ, அதை நம்பி செய்ய முன் வந்து, அந்த வேலை பூர்த்தியான பின் தன் நம்பிக்கைக்கு அடையாளமாக ஒரு பொருளைத் தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வது காணிக்கை.

காணிக்கை தெய்வ நம்பிக்கையிருந்து எழுவது. நம்பிக்கையின் சின்னமாக இருப்பது. தெய்வத்தை தெய்வமாகக் காண்பது அனைவராலும் முடியாத ஒன்று. தெய்வம் சிலையாகவோ, படமாகவோ காணப்படும். தெய்வமாக நமக்குக் காட்சியிலோ, உணர்விலோ தென்படுவது அரிது. அடுத்து மனிதரைத் தெய்வமாகக் காண முயல்வது அதனினும் அரிது. தொழுத கையுள் படையை அடக்கிச் சிவனடியாரைக் கொலை செய்ய வந்தவன் சிவனடியார் வேஷம் தரித்து வந்ததால், கொலை செய்தவனைத் தெய்வமாகக் கண்டார் நாயனார்.


நமக்கு எப்பொருள் அபரிமிதமாகத் தேவையோ அப்பொருளைத் தெய்வத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நம்மை அளவு கடந்து நாடி வரும். காணிக்கையானவுடன் அப்பொருளிலுள்ள தெய்வீகம் வெளிப்பட்டு காணிக்கை செலுத்திய நம் நம்பிக்கையை வேகமாக நாடி வருவதால் அது அபரிமிதமாக இருக்கின்றது.

ஒரு திருமணத்தில் தெருவில் ஏராளமான கார் நின்றால் காருடைய சொந்தக்காரர்கள் வந்திருக்கின்றார்கள் என்று பொருள். நாம் காணிக்கையாக நெல்லை செலுத்துகிறோம், பணத்தை கொடுக்கின்றோம், நம் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருளை அர்ப்பணிக்கின்றோம். அப்பொருள்கள் நம் பக்தியையும், நம்பிக்கையையும் தாங்கிச் செல்லும் உடைமைகள். நம் நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட இறைவன் அவன் அருளை நமக்கு அனுப்ப அதே பொருளை அருளைத் தாங்கிச் செல்லும் உடமையாக்குகின்றான். அதனால் நம்மை நோக்கி வருகின்றன.

கட்சித் தலைவர்களுக்கு, பெற்றோர்களுக்கு, கம்பெனி முதலாளிகளுக்குத் தாங்கள் பெறும் மரியாதையை விட தங்கள் ஊழியர்கள், குழந்தைகள், சிப்பந்திகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு அதிக க்கியம். இறைவனுக்கு அதுபோல் தன் அடியார்கள் முக்கியம். அதைவிட அவன் சிருஷ்டித்த மனிதனும், மற்ற பொருள்களும் முக்கியம்.

இறைவனுக்குச் செய்யும் சமர்ப்பணம் உயர்ந்தது. அவனது அடியார்களுக்குச் செய்யும் சமர்ப்பணம் அதைவிட உயர்ந்தது. எல்லாவற்றையும் விட சிறந்ததாகக் கருதப்படுவது எளிய மனிதனுக்கு நாம் செய்யும் சேவை. சேவையைக் காணிக்கையாக மாற்றிச் செய்வதைவிடச் சிறந்த காரியமில்லை.

எளிய மனிதனில் உள்ள தெய்வீகத்தைக் கண்டு அதற்குச் சேவை செய்ய முன் வந்து செய்யும் சேவையை நம் தெய்வ நம்பிக்கையின் வெளிப்பாடாகச் செய்வது தெய்வ வழிபாட்டின் சிகரம்.

வினோத்-VINOTH

unread,
Mar 21, 2012, 11:22:50 PM3/21/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. சமூகம் கடந்ததை மறந்து நடப்பதைக் கருதும். மனம் கடந்ததை மனதில் கொண்டு இன்று கசங்கும். ஆன்மீக வாழ்வு கடந்ததையும் எதிர்காலத்தையும் சேர்த்து இன்றைய வாழ்வை சிறப்பிக்கின்றது. அது முதிர்ந்து திரிகாலத் திருஷ்டியாகிறது.

திரிகால திருஷ்டியின் முழுமையான நிகழ்காலம்.

பரம எதிரிக்குப் பணம் வந்துவிட்டால் அவன் மீது பாசம் வரும். எவனை ஊரால் ஏளனமாக நடத்தினார்களோ அவனுக்குப் பதவி வந்துவிட்டால் அனைவரும் அவனை ஏற்றுக் கொள்ளும் முறை கவனிப்பதற்கே சிறப்பாக இருக்கும். இன்று உயர்ந்த நிலையில் ஒருவன் இருந்தால் அவனுடைய நேற்றைய நிலை, பழைய மோசடி, கேவலமான நிலை ஆகியவற்றை உலகம் க்ஷணத்தில் மறந்துவிடும். செல்வம் வந்தால் மட்டும் இது உண்மையில்லை. எந்தப் பண்ணையார் தெரு வழியே நடக்க அனுமதிக்க வில்லையோ அவர்  எலக்ஷனுக்கு நிற்கும்போது நடக்க அனுமதிக்காதவன் வீடு தேடிச் சென்று இரு கரம் கூப்பி வோட்டு கேட்க அதே பண்ணையார் தயங்கவில்லை. எலக்ஷனுக்குள்ள மகத்துவம் அது. இன்று மனம் ஏற்றுக் கொள்ளும் என்றால் கடந்தது எதுவானாலும், சமூகம் மறந்துவிடும்.

பத்துக் கோடி சம்பாதித்த பின் சிறுவயதில் பள்ளிக்கூட பீஸ் கட்ட முடியாததை நினைத்து கண் கலங்கும். நூறு பெரிய மனிதர்கள் வந்து அஞ்சலி செலுத்தும் பொழுதும் 25 வருஷத்திற்கு முன் கிடைக்காத பிரமோஷனை மனம் நினைக்கும். அன்று பிரமோஷனில்லை என்று கூறிய ஆபீஸருடைய சொற்களை இன்று நினைத்து மனம் சுடுவதை உணருவோம். உற்றாரையும், ஊராரையும் எதிர்த்துத் தன் செல்வ நிலையைப் புறக்கணித்து அன்பிற்காக ஓர் ஏழைக் கதாசிரியரைத் திருமணம் செய்து கொண்ட பெண், இன்று எவ்வளவு அந்நியோன்யமாக அவருடன் இலட்சிய மனைவியாக வாழ்ந்தாலும் தம் அத்தை மகளையே அவர் விரும்பினார் என்ற செய்தி சாகும்வரை அவள் வாழ்வில் ஜீவனைக் கருகிப் போகச் செய்யும்.

சமூகத்திற்கு நிகழ்காலம் நிதர்சனம். மனத்திற்குக் கடந்தகாலம் பொக்கிஷம். எதிர்காலம் இனிய கற்பனைக்குரியது. நிதர்சனம் ஜடத்திற்குரிய உண்மை. உடலால் வாழ்பவருக்கே பொருந்தும். கடந்தகாலம் உணர்வுக்குரிய லட்சியம். ஆசையாலும், பிரியத்தாலும் ஆட்கொள்ளப்பட்டவருடைய உலகம் அது. கற்பனைக்குரிய எதிர்காலம் மனத்திற்குரியது. இவை எவையும் ஆன்மாவுக்கு உரியவையல்ல.

ஆன்மாவுக்குரியது காலமில்லை. ஆன்மா காலத்தைக் கடந்தது. ஆகவே உடலாலும், உணர்வாலும், மனத்தாலும் கட்டுப்படாதது. ஆன்மீக நிலைக்கு உடலும், உணர்வும், மனமும் கட்டுப்படும். ஆன்மீக வாழ்வை ஏற்றுக்கொள்பவருக்கு  எலக்ஷனும் வாக்காளர் பெருமக்களும் வெறும் நிகழ்ச்சிகள். கணவனுடைய விஸ்வாசம் மனைவியைத் தொடாது. அவனுடைய விஸ்வாசத்தின் பலனை அனுபவிப்பது அவனே. கணவனுடைய ஆன்மா அவன் விஸ்வாசத்தால் உயராது, விஸ்வாசம் குறைவதால் கசங்காது. ஆன்மா மனிதர்களுடன் தொடர்பு கொள்வதில்லை. அவருடைய ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளும். உணர்வுடனோ, நிகழ்ச்சியுடனோ தொடர்பு கொள்வதில்லை. அவற்றிலுள்ள தெய்வீகத்துடன் தொடர்பு கொள்ளும். அதனால் அந்தத் தெய்வீகத்தால் நிறையும். தெய்வீகம் முக்காலத்திற்கும் உரியது. அந்நிலை முதிர்ந்தால் முக்காலமும் உணர முடியும். அதுவே திரிகால திருஷ்டி.

********

வினோத்-VINOTH

unread,
Mar 23, 2012, 3:25:46 AM3/23/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. நாம் பிறந்த மண்ணின் பகுதி. நம் உடல் உறையும் ஆன்மாவின் பகுதியாகவும் நாமிருக்கின்றோம். ஆன்மாவைக் கண்டு சித்தி பெறுபவன் யோகி. உடலால் பிறந்த மண்ணின் ஆன்மீகத்தைக் காண்பவன் பூரணயோகி.

உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகம்.

மண்ணாலான உடலும், சக்தியால் நிறைந்த உணர்வும் அறிவாலான மனமும், ஜோதிமயமான ஆன்மாவும் சேர்ந்ததே ஜீவன். ஜீவனுக்குரியது ஜீவாத்மா, அது பரமாத்மாவின் பகுதி.

மனித வாழ்வு எல்லா நிலைகளையும் தழுவியதன்று. ஏதோ ஒரு நிலையில் நின்று வாழ்வை அந்த நிலையில் பூர்த்தி செய்து கொள்கிறது. குறைந்தபட்சமாகப் பூர்த்தி செய்வதும் உண்டு. அதிகபட்சமாகப் பூர்த்தி செய்வதும் உண்டு.

உடலால் வாழ்பவன் உணவைப் பிரதானமாகக் கருதுகிறான். மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் பொழுது போகிறது, இருக்க இடம் இருக்கிறது, வேறு பிரச்னையில்லை என்பவன் வாழ்வை முதல் நிலையான உடல் குறைந்தபட்சமாகப் பூர்த்தி செய்பவன்.

நூறு ஏக்கர் நிலம், ஆளுகை மாகாணம், ஊரில் நாட்டாமை, செல்வாக்கு, வீடு நிறைய தானியம், பவுன், வெள்ளி நகை பாத்திரம் நிறைந்த வாழ்க்கை தல் நிலையான உடன் வாழ்வை அதிகபட்சமாகப் பூர்த்தி செய்வதாகும்.

அடுத்தது உணர்வு. குடும்பத்தின் அளவைக் கருதாமல் பாசமும் பற்றும் நிறைந்த மனைவி மக்களுடன் அன்பின் பிணைப்பால் ஆர்வமாக வாழுபவர் செல்வ நிலை எப்படியிருந்தாலும் குறைந்த பட்ச நிலையில் உணர்வால் வாழ்வைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். பொதுவாக இவர்களுக்கு வறுமை, நோய் இருக்காது.

செல்வ நிலையை இரண்டாம்பட்சமாகவும், ஊரில் முக்கியத்துவம், தலைமை, செல்வாக்கு, அதிகாரத்தைத் தேடி வெற்றி பெற்றவர் குடும்பத்திலும், தன் ஜாதியிலும், உள்ளூரிலும், எங்கிருந்தாலும் இருக்கும் இடத்தில் முதன்மையாக இருப்பவர் உணர்வில் வாழ்வை அதிகபட்சத்தில் பூர்த்தி செய்பவர்கள் அரசியல் தலைவர்களாகவும், அதிகார பீடத்தில் இருப்பவர்களாகவுமிருப்பார்கள் இவர்கள்.

பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அறிவு நிலையில் வாழ்வைக் குறைந்தபட்ச நிலையில் பூர்த்தி செய்பவர்கள். இவர்களுக்குப் புகழும், செல்வமும் வந்து அதிக பட்ச நிலையிலும் அறிவின் வாழ்வைப் பூர்த்தி செய்வதுண்டு.

இவை பல அளவில் பல நிலைகளில் கலந்து காணப்படும். ஆன்மீகத்தைத் தேடி தவம் பத்து ஞான யோகத்தாலோ, மற்ற வழியாலோ மோட்சம் பெறுபவர் ஆன்மீக வாழ்வைக் குறைந்தபட்ச நிலையில் பூர்த்தி செய்பவர்.

உடலுக்கு ஆன்மீகம் உண்டு. அதை அன்னமயப் புருஷன் என்பார்கள். அதன் மூலம் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அடைவது மோட்சம். ஹடயோகப் பாதை அது. அதற்குரிய ஆன்மீகப் பலன் ஆன்மீக நிலைகளில் முதற்படி. கர்மயோகம் அடுத்த நிலை. பிராணமயப் புருஷன் மூலம் மோட்சம் பெறுவது கர்மயோகம். சைத்தியப் புருஷன் மூலம் மோட்சம் பெறுவது பக்தி யோகம். மனோமயப் புருஷன் மூலம் மோட்சம் பெறுவது ஞானயோகம், ராஜயோகம், ஹடயோகம் முதற்படியானால் ஞானயோகமும், ராஜ யோகமும் கடைசிநிலை. அதனால் ஞானி பக்தனையும், ஆசனம் செய்பவனையும் கேலி செய்வதுண்டு.

இம்மார்க்கங்கள் எல்லாம் ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பவை. அதையே மோட்சம் என்கிறோம். நம் கரணங்களில் உயர்ந்தது ஆன்மா. தாழ்ந்தது உடல். ஆன்மாவுக்கு மோட்சம் என்பது வீட்டு வசதியும், விமானப் பிரயாண வசதியும், பென்ஷனும் கொடுப்பது போன்றது. கடைசி நிலை மனிதன் கிராமலித்திருக்கின்றான். அவனை வறுமைக் கோட்டைத் தாண்டச் செய்வதும், அவனுக்கு எழுத்தறிவு கொடுப்பதும், குடி நீர் வழங்குவதும், வீடு கட்டித் தருவதும் உடலுக்கு மோட்சம் கொடுப்பதை ஒக்கும்.

இன்றுவரை யோகம் ஆன்மாவின் மோட்சத்தையே நாடுகிறது. அதற்கடுத்த நிலையில் மனத்திற்கு மோட்சம் உண்டு. அடுத்த நிலையில் உணர்வுக்கு மோட்சம் உண்டு. கடைசி நிலையில் உடலுக்கு மோட்சம் உண்டு.

மனத்திலும், உணர்விலும், உடலிலும் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று ஆன்மீகப் பகுதியான புருஷன். அதை அன்னமயப் புருஷன், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன் என்கிறோம். அதற்குக் கீழ் மனத்தில் ஜடமான மூளை இருக்கிறது. உணர்வுக்குக் கீழே ஜடமான நரம்புள்ளது. அன்னமயப் புருஷன் ஸ்தூலமான உடல் உறைகிறது. மனத்தின் ஜடமான பகுதிக்கு மோட்சம் கிடைக்க இதுவரை எவரும் யோகம் செய்ததில்லை. உணர்வின் ஜடமான பகுதியான நரம்புக்கு மோட்சம் கிடைக்கவும் யோகம் கிடையாது. அன்னமயப் புருஷன் உறையும் உடலுக்கு விடுதலையளித்து மோட்சம் கிடைக்க நினைத்தவரில்லை. அதை இலட்சியமாகக் கொண்டது பூரணயோகம். தான் தேடும் மோட்சத்தைத் திருவுருமாற்றம் என்றழைக்கிறது.

காயமே இது பொய். மலக்கூடு அழியும் உடல். உதாசீனத்திற்குரியது என்று யோகிகள் புறக்கணித்த உடலை நாடி அதனுள் உள்ள ஆன்மீகத்தைத் தொட்டால் உடல் பிறந்த மண்ணின் ஜோதி வெளிவரும். அதற்கு மோட்சம் என்னும் திருவுருமாற்றத்தை நாடுபவன் பூரணயோகி.

வினோத்-VINOTH

unread,
Mar 26, 2012, 1:23:03 AM3/26/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. சட்டத்தைப் பிறப்பிப்பவன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் எனினும் சட்டத்தை அமுல்படுத்தும் பொழுது சாதாரண மனிதனை விடத் தன்னை அதிகமாகச் சட்டத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான்.

சட்டத்தைப் பின்பற்றும் பெருநெறி.


நெப்போலியனைப் பற்றி ஒரு கதை உண்டு. சக்கரவர்த்தியாக இருக்கும்பொழுது பாரிசில் ஓர் இடம் சர்க்காருக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எடுத்துக் கொள்ள அதிகாரம் இருந்தாலும் அதிகாரத்தைச் செலுத்தாமல், மற்றவர்கள்போல் சக்கரவர்த்தியும் தேவைப்பட்ட இடத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தார். மனைக்குரியவன் ஏராளமான விலை கேட்டான். சக்கரவர்த்திக்கே அது பெரிய தொகை. அதிக விலை என்பதால், அதை விட்டு வேறிடம் பார்த்தார்கள். முடிவாக அவன் சொன்ன அதிக விலை கொடுத்து வாங்க சம்மதித்தார். மனைக்குரியவன் மேலும் விலையை இரட்டிப்பாக்கினான். இப்படிச் செய்தால் விலையே கொடுக்காமல் சர்க்கார் இடத்தை எடுத்துக் கொள்ளும் என்று அனைவருக்கும் புரிந்துவிட்டது. மீண்டும் அதைவிட்டு வேறிடம் பார்த்து, முடிவாக அவனிடம் அவன் சொன்ன அதிக விலைக்கு வாங்க முன் வந்தார்கள். மறுபடியும் விலையை இரட்டிப்பாக்கினான் மனைக்குரியவன். நிலைமை மீறி விட்டதால் நிதானத்திற்கு இனி இடமில்லை. அரச அவை அடுத்த கட்டத்தைப் பதட்டத்துடன் எதிர்ப்பார்த்தது. சக்கரவர்த்தி நெப்போயனுக்கு நிதானம் தவறிவிட்டது. அவர் அதிகாரத்தை எளிதில் செயல்படுத்தும் நிர்ப்பந்தத்தை மனைக்குரியவன் பல முறையும் வற்புறுத்தி ஏற்படுத்தி விட்டான். இழந்த நிதானத்தைப் பொறுமையாக மீண்டும் பெற்ற சக்கரவர்த்தி சட்டத்தைச் சக்கரவர்த்தி ஏற்றுக் கொண்டு மதிப்பதற்கு அடையாளமாக நான் அம்மனையை வாங்கும் எண்ணத்தை இத்துடன் கைவிட்டு விடுகிறேன் என்று பிரகடனப்படுத்தினார்.


சட்டத்தை ஏற்படுத்தியவனுக்கு அதை மாற்றும் திறமையுண்டு. என்றாலும், தான் ஏற்படுத்திய சட்டத்திற்குத் தானே பணிவது ஜனநாயக மனப்பான்மை. இன்றுவரை உலகம் ஜனநாயகத்தைப் போற்றி வளர்த்த விதம் இதுவே. சிபிச்சக்கரவர்த்தி கருணையை வெளிப்படுத்தினார். மனுநீதி சோழர் தாம் ஏற்படுத்திய சட்டத்திற்குத் தம் மகனைப் பலியாக்கச் சம்மதப்பட்டார்.

இறைவன் உலகைச் சிருஷ்டித்தவன். சிருஷ்டியை எப்படி மாற்றவும் அவனால் முடியும். ஆனால் சிருஷ்டியின் நிலைக்குரிய சட்டத்திற்கு இறைவன் எப்பொழுதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரைமுறைக்குள் செயல்படுகிறான்.

பெயிலான மாணவன் பிரார்த்தனை செய்தால், அவன் பிரார்த்த கணக்குப் பரீட்சை சரியாக எழுதவில்லை. எனவே மீதிப் பரீட்சை எழுத மாட்டேன் என்று முடிவு செய்த பொழுது, அவனுக்குத் தேறுதல் சொல்ல முன் வந்தவர்கள் அவனுக்கு எத்தனை மார்க் வரும் என்று கூட்டிக் காட்டினர். 32 வந்தது. 35 வேண்டும். சில சமயங்களில் 32 அல்லது 31 வாங்குபவர்களும் பாஸ் செய்கிறார்கள். பையன் மீதிப் பரீட்சை எழுதினான். பாஸ் செய்துவிட்டான். அன்னை பக்தர் ஒருவர் பிரார்த்தனையால் பையன் பாஸ் செய்துவிட்டான். சர்ட்டிபிகேட் வந்தபொழுது அவனுக்கு மார்க் 42 என்றிருந்தது. எப்படி என்று தெரியவில்லை. அந்த வருஷம் கேள்விகள் கடினமானதால் அனைவருக்கும் 12 மார்க் சேர்த்துப் போட்டார்கள் என்பது செய்தி. இறைவன் கருணை இருக்கும் நிலைகளுக்குட்பட்டு செயல்படுவதே வழக்கம். தன் சட்டத்திற்குத் தானே பணியும் பாங்கு அவனுக்குண்டு.

*******

வினோத்-VINOTH

unread,
Mar 29, 2012, 2:48:24 AM3/29/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. பெற்றோர் குழந்தைபாசம்; தம்பதிகள்; நட்பு; குரு சிஷ்ய உறவு ஆகியவை உறவுகளில் சிறந்தவை. உறவைப் புனிதப்படுத்தும்பொழுது உச்சக்கட்டத்தை எட்டுவது தம்பதிகள் உறவு, புனிதப்பட்ட உறவை ஆன்மீகச் சிகரத்திற்கு கொண்டு செல்ல குரு சிஷ்ய உறவே அனுமதிக்கும்.

திருமணத்தைவிட உயர்ந்த குருசிஷ்ய உறவு. ஆபீஸில் பழகுவது, வியாபாரத்தில் வாடிக்கைக் காரராக இருப்பது; ஒரே காலனியில் குடியிருந்து பழகுவது, சொந்தம் என்பதால் பழகுவது போன்ற உறவுகள் சந்தர்ப்பத்தால் ஏற்பட்டன. பொதுவாக மேலெழுந்தவாரியாக இருக்கும். அவை உயர்ந்த நிலைக்குப் போவதில்லை.

இரத்தபாசம், தாம்பத்யம், நட்பு, சிஷ்யபாவம் ஒருவரை அடுத்தவருடன் இணைத்துவிடும். அதனால் உறவு சிறப்படைகிறது.

உடல், உணர்வு ஆகிய இரண்டுமே இங்கு முக்கியம். மனம் பொதுவாக நட்பு, உறவில் செயல்படுவதில்லை. ஆன்மா எட்டாத நிலை. பெற்றோர் குழந்தைகளுடன் இரத்த பாசத்தால் உறவுள்ளவர்கள். உடல் முதல் நிலை என்பதால் இது உயர்ந்த உறவாகச் சிறந்து வளர்வதில்லை. இரத்த பாசம் அதற்குரியவற்றை ஏற்படுத்தும். அதனுடன் வேறு அம்சங்கள் கலந்து வந்தால் அவை சிறக்கும் வாய்ப்புண்டு. இரத்த பாசத்தை நாம் மிக உயர்ந்ததாகக் கருதுகிறோம். அது உண்மை. ஆனால் உறவில் அது முதல் நிலையில் உள்ளது.

நட்பு, உணர்வால் ஏற்படக் கூடியது. இவ்வுணர்வு தேவையாலோ, சந்தர்ப்பத்தாலோ ஏற்பட்டால் மேலெழுந்தவாரியாக நின்றுவிடும். உயர்ந்த அம்சமான விஸ்வாசம் ஏற்பட்டால் உணர்வின் உறவு சிறக்கும். உணர்விலுள்ள உயர்ந்த அம்சத்தால், நட்பு உயர்ந்துவிடும். உணர்வுக்கு மற்ற கரணங்களுக்கு உண்டானதுபோல், ஆன்மீகம் உண்டு. உணர்வின் ஆன்மீகம் வெளிப்பட்டுக் கலந்தால் அது உயர்ந்த நிலை.

தம்பதிகளுக்கிடையே உள்ள உறவு உணர்வாலாகியது. உணர்வின் நிலையை 4 கட்டமாகப் பிரிக்கலாம். மேலெழுந்தவாரியான உணர்வு, நெருங்கிய உணர்வு இவை இரண்டும் மனித சுபாவத்திலுள்ளது. மூன்றாம் கட்டத்தில் ஆன்மீக அம்சமாகிய விஸ்வாசம் உள்ளது. கடைசி உயர்ந்த கட்டத்தில் ஆன்மாவேயுள்ளது. நண்பர்கள் விஸ்வாசத்தால் பிணைக்கப்பட்டால் சிறந்த நண்பர்களாவார்கள். தம்பதிகள் விஸ்வாசத்தால் பிணைக்கப்பட்டால் இது இயற்கையிலேயே இணையும் உறவாக இருப்பதால் அது நட்பைவிட உயர்வாக மிளிரும். நிலை ஒன்றானாலும் தரம் தம்பதிகளுக்கு உயர்ந்து நிற்கும். கடைசிக் கட்டத்திலுள்ள ஆன்மாவில் தம்பதிகள் கலக்க முடியும் என்றாலும் உணர்வில் விஸ்வாசத்துடனே நிற்பதே வழக்கம். குடும்ப வாழ்வும், ஆன்மீகமும் சேராத காரணத்தால், தம்பதிகள் உறவு உணர்வின் உயர்ந்த நிலையான ஆன்மாவில் சேர்ந்து பூர்த்தியாவதில்லை.

குரு சிஷ்ய உறவுக்கு இது அவசியம். ஆன்மாவில் அவர்கள் இணைந்தே குரு சிஷ்யனாக இருப்பதால், உணர்வின் ஆன்மாவில் அவர்கள் கலக்க முடிவு செய்தால் மனித உறவின் சிகரத்தைத் தொடுவார்கள். எனவே சிறந்த உறவாக அது அமையும்.

*****

வினோத்-VINOTH

unread,
Mar 31, 2012, 11:36:46 PM3/31/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. ஆன்மீக முன்னேற்றம் அருளை அளவு கடந்து கொண்டு வரும். பொதுவாக அதன் அறிகுறியாகப் பெரு மழை வரும்.

அருளாக வரும் பெருமழை.

பல நாள் தியானத்தை மேற்கொண்டால் ஒரு நாள் மௌனம் திடீரென்று ஏற்படும். வெள்ளமாக ஜோதி தெரியும். சாந்தி ஏற்பட்டு உடல் சிர்க்கும். இவை ஆன்மீக முன்னேற்றத்திற்குள்ள சில அறிகுறிகள்.

எல்லா நிலைகளுக்குமுள்ள ஆன்மீக முன்னேற்றங்கள் உண்டு. அவற்றைச் சுட்டிக்காட்டும் அறிகுறிகள் கனவாகவும், காட்சியாகவும், நிகழ்ச்சியாகவும் தெரியும். முதல் நிலைக்குரியவற்றை இங்கு குறிப்பிட்டேன்.

எண்ணம் அழிந்து மௌனம் ஏற்படுதல்.

உணர்வு கரைந்து மகிழ்வு உற்பத்தியாவது.

தியானம் நிலைத்து, கண் திறந்த பின்னும் தியான நிலை நிற்பது.
உடல் அமைதியாக உணர்வற்ற ஜடம்போல் தோன்றும் ஆழ்ந்த அமைதி.

அகந்தை அழிந்து மனம் விசாலமாகி தலை பெரியதாகத் தோன்றுவது.

இனிமை தோன்றி உணர்வை ஆட்கொள்வது.

பழக்கம் கட்டுப்பட்டு புதிய நிலையை ஏற்க உடல் தயாராகி ஸ்தம்பித்துப்போவது. ஆனந்தம் மனத்துள் துள்ளுவது.

பயம் கரைந்து விடுதலை உணர்வு ஏற்படுவது.

அன்னை நினைவு தானே வருவது.

அன்னை தரிசனம் மனக்கண் முன் தோன்றுவது.

விளங்காத ஸ்ரீ அரவிந்தர் எழுத்து விளங்குவது.

நெடுநாளாக இருந்த கறுப்பு, உணர்வில் மறைந்து ஒளி தோன்றுவது போன்ற பல ஆன்மீக முன்னேற்றங்களுண்டு. அவை சிறப்புறும் நேரம் அருளுக்கு அறிகுறியான பெருமழை வரும். ஆன்மீக முன்னேற்றம் பெரு மழையைக் கொண்டு வரும். அளவு கடந்த அருளை எந்த உருவத்திலும் கொண்டு வரும்.

*******

வினோத்-VINOTH

unread,
Apr 4, 2012, 2:00:19 AM4/4/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil

  1. அகம் புறத்தைப் பிரதிபக்கும் நிலைகள் மூன்று. முழுச் சக்தியுடைய அகம் அதன் பிரதிபலிப்பாகப் புறத்தை ஏற்படுத்துகிறது. வலிமையில்லாத அகம் புறநிகழ்ச்சிகளை பிரதிபலிக்கும் பாங்குடையது. இவற்றிடையே இந்த இரண்டு அம்சங்களும் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளன.

அகத்தை பிரதிபக்கும் புறநிகழ்ச்சிகளின் மூன்று நிலைகள். கல்லூரித் தேர்தலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்பொழுது பல மாணவர்கள் தலைமைப் பதவியை நாடுகின்றனர். போட்டி உருவாகிறது. தலைமைப் பதவிக்குள்ள எல்லாத் தகுதிகளும் உடைய ஒருவர் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாலும் தாம் நின்றால் தலைவராகலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றவேயில்லை.

போட்டி நிலைகள் பல கட்டங்களைத் தாண்டி வந்து ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்த நிலையில் பலரும் முன்வந்து தகுதியுடையவர் எவரும் போட்டியிடவில்லை, தகுதியுள்ளவர் ஒருவர் இருக்கின்றார். அவரையே நாம் தலைவராக்க வேண்டும் என்கிறார்கள். போட்டியிட விரும்பிய அனைவரும் ஏதோ காரணத்தால் ஆமோதிக்கின்றார்கள். அனைவரும் அவரை ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அகத்தில் உள்ள திறன் புறத்தில் நிகழ்ச்சிகளை உருவாக்கியதற்குச் சிறு உதாரணம். நம்மைத் தேடி ஒருவர் வருகிறார். அவர் நினைவு அன்று நமக்கு வருகிறது. அவரைப் பற்றிப் பேசுகிறோம். அரை மணியில் நம் முன் நிற்கிறார். அவர் வருகையை நம் மனம் உணர்ந்து பிரதிபலித்திருக்கின்றது. நம் உணர்வால் அவர் புறப்பட்டு வரவில்லை. இவற்றிடையே பல நிலைகள் உள்ளன.

வினோத்-VINOTH

unread,
Apr 5, 2012, 1:29:42 AM4/5/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. பிரம்ம ரிஷி உலகத்தைப் பிரம்மமாகக் காண்கிறார். பூரணயோகி உலகத்தைப் பிரம்மத்தின் வெளிப்பாடாகக் காண்கிறார். பிரம்மரிஷி பிச்சைக்காரன் மனதிலுள்ள பிரம்மத்தைக் காண்கிறார். பூரணயோகி பிச்சைக் காரனையே பிரம்மமாகக் காண்கிறார்.

பிச்சைக்காரனைப் பிரம்மமாகக் காணும் பிரம்ம ஞானம்.

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது வழக்கு, ஒவ்வோர் அணுவும் அவனே. அசைவும் அவனே. அவன் தவிர உலகில் எதுவும் இல்லை என்பது அடுத்த கட்டம்.

எல்லா ஜீவராசிகளுக்கும் வித்தாக அமைவது பிரம்மம் என்பது தத்துவத்தின் முதல் நிலை. வித்து மட்டுமன்று, ஜீவராசியே பிரம்மம் என்பது தத்துவத்தின் முடிவான நிலை.

இந்த மரத்தில் பழுக்கும் பழத்தை நாம் சாப்பிடலாம் என்பது ஒன்று. வாழை மரத்தில் எல்லாப் பாகங்களும் நமக்கு உதவும், கறியாகும் பாகங்கள் பல என்பது மற்றொன்று. மரத்தின் பழத்தை மனிதன் சாப்பிடுகிறான். இலையை ஆடுமாடுகள் தின்கின்றன. பட்டையையும், மரத்தையும் செல் அரிக்கிறது. மரத்தின் எல்லாப் பகுதிகளும் உணவாக மாறக் கூடியனவே.

மனிதனுள் உள்ள பிரம்மத்தைக் காண்பது முதல் நிலை, மனிதனையே பிரம்மத்தின் வெளிப்பாடாகக் காண்பது முடிவான யோக நிலை. தன்னுடைய ஆன்மாவில் உயர்ந்தவனுக்கு மற்றவருடைய ஆன்மா தெரியும். தன் கரணங்களையும், தன் அசைவுகளையும், செயல்களையும், உணர்வுகளையும் ஆன்மாவாக உணர்ந்தவனுக்குப் பிச்சைக்காரனே பிரம்மமாகத் தெரியும்.

********

வினோத்-VINOTH

unread,
Apr 7, 2012, 12:37:46 AM4/7/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. கண் எதிரேயுள்ள வாய்ப்பைக் கண்டு கொள்ளாமருப்பது கண்மூடித்தனம். அதிருந்து மீண்டுவந்து அந்த வாய்ப்பு கிடைக்கவேண்டும் என நினைக்கும்பொழுது அது நமக்கு எட்டுவதில்லை. நம்மை அது புறக்கணிப்பதை நாம் மறந்து விடுகிறோம். இனி அது வேண்டும் என்ற ஏக்கம் ஆர்வத்தின் ஆரம்பம். நாம் புறக்கணிக்கப்படுவது ஏக்கம் வருமுன் உள்ள நிலை.

புறக்கணிக்கப்படுவதின் புனிதம்.

*******


  1. அருள் செயல்படும்பொழுது கேட்டது மட்டும் கிடைப்பதில்லை. பல நல்லவை நடக்கும்.

அருள் வழங்கும் ஒன்று பலவாகும்.

மனிதன் விரும்புவது ஒரு பொருள். அருள் ழுமையானது. ஒரு பொருள் அருளில் ஒரு பகுதி.

வினோத்-VINOTH

unread,
Apr 10, 2012, 12:26:44 AM4/10/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. தான் பெற்ற முழு அறிவை அறியாமை என்றுணர்பவன் ஞானி. தன் அறியாமையை அறிவாகக் கொண்டவன் மனிதன்.

ஞானியின் அறியாமை; மனித அறிவு.

ஸ்ரீ அரவிந்தர் 5 வருஷங்களில் எழுதி முடித்ததை 5 வருஷங்களில் படித்து முடித்தவரில்லை. 30 வருஷமாகப் படிப்பவரும் இன்னும் முழுவதும் புரியவில்லை என்கிறார்.

மௌனம் சித்தித்த பின் பேச முடியாது. மௌனம் திர்ந்து அடுத்த நிலைக்குப் போனால் நினைக்க முடியாது. அதற்கடுத்த நிலையில் நினைப்பது அறிவைக் குறைக்கும், எழுதுவது அறியாமையை வளர்க்கும். பகவான் இந்த நிலைக்கு வந்ததால் மீண்டும் எழுத முடியாது என்றார். எந்தப் புத்தகங்களைப் புரிந்து கொள்ள நமக்கு அறிவில்லையோ அவற்றை அறிவின் எல்லைக்குக் கீழ்ப்பட்டதாக, பகவான் கருதுகிறார். இது ஞானியின் மனநிலை.

தனக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டால் அது சரியா, தப்பா என்று யோசனை செய்யாமல் பேச ஆரம்பித்து விடுகிறான் மனிதன். அவன் பேசுவதை ஆர்வமாகப் பலர் கேட்டால், தன்னை அறிவாளி என நினைக்கின்றான். அறிவுடை ஒருவன் முன்வந்து அவன் பேசுவது அனைத்தும் அறிவுக்குப் பொருந்தாது என்று சொல்லும்வரை தன்னைப் பறைசாற்றுவதைச் சாதாரண மனிதன் நிறுத்த மாட்டான். இப்படிப் பேசியவர்கள் ஏராளம்.

இந்தியா பஞ்சத்தால் சாகும். இந்திய விவசாயிக்குப் பயிரிடத் தெரியாது. படிப்பு அனைவருக்கும் இல்லை. சுதந்திரம் வந்தால் நாடு அழிந்து விடும் என்றெல்லாம் பேசி அறிவாளி எனப் பட்டம் பெற்று உயர் பதவியை அடைந்தவர் பலர்.

********

வினோத்-VINOTH

unread,
Apr 15, 2012, 1:22:20 AM4/15/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. நம் நிலையின் உச்சகட்டத்தைத் தியானத்தில் தொடுகிறோம். அடி மட்டத்தை அன்றாட வாழ்வில் வெளிப்படுத்துகிறோம். நம் குறைந்தபட்ச நிலை ஆன்மீக முன்னேற்றத்தை நிர்ணயிக்கும்.

ஆன்மீகத்தை நிர்ணயிக்கும் அன்றாட வாழ்வு.

எளிய ஆன்மீக நிலையிலுள்ள சிலருக்குச் செல்வாக்கு இருக்கும். அவர்களுடைய அந்தஸ்திற்கு மீறிய இடங்களில் பிரபல்யமாக இருப்பார்கள். அவர்களுடைய சாதுர்யத்தால் அமைவது இது. ஒரு முதலீடு செய்ய வேண்டும். வீடு கட்ட வேண்டும், சம்பந்தம் செய்ய வேண்டும் என்றால் இவர்களுடைய செல்வாக்கிற்குத் தகுந்தாற்போல் அது அமையாது. செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் அது அமையும். ஆயிரம் காலத்துப் பயிர் தோற்றத்திற்கேற்ப அமையாது. உண்மையை அது வெளிப்படுத்தும்.

ஆன்மீகம் முழுமையானது, ஆழமானது, கனமானது. நம் உச்சநிலைக்கேற்ப ஆன்மீகப் பலன் கிடைக்காது. நம் உண்மை நிலைக்கேற்ப அது அமையும்.

******

வினோத்-VINOTH

unread,
Apr 17, 2012, 12:54:43 AM4/17/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. நாம் யாருக்குப் பணிகின்றோமோ அவரே நம்மை அதிகாரம் செய்ய முடியும். சூட்சும உலகில் உன் எதிரியிடம் தொடர்பு கொண்டாலும் அவனால் உன்னை அதிகாரம் செய்ய முடியும், அழிக்க முடியும். எந்த அளவில் தொடர்பேற்பட்டாலும், எதிரிக்குச் சாதகமாக முடியும். சில சமயங்களில் நினைத்தாலும் அத்தொடர்பு ஏற்படும்.

நினைவாலும் விலக்க வேண்டிய தொடர்பு. பலருடன் பழகுகிறோம். சிலரால் உதவி செய்ய முடியும். சிலரால் தொந்தரவு செய்ய முடியும். உதவியைப் பெற நமக்கும் மற்றவர்க்கும் ஒரு காரியமாக உறவு தேவை. முன்பின் தெரியாதவர் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள். நாம் யாரோடு கொடுக்கல், வாங்கல், உறவு, நட்பு கொள்கிறோமோ அவர்களால்தான் நமக்குத் தொந்தரவு செய்ய முடியும். எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒருவரால் நமக்கு உதவவோ, கெடுதல் செய்யவோ முடியாது. ஒரு நண்பன் நமக்குத் தொந்தரவாக அமைகிறான். அவனிடம் உள்ள தொடர்பை அறுத்துவிட்டால் பின்னர் அவனால் தொந்தரவு செய்ய முடியாது. இது நம் வாழ்வில் அறிந்த உண்மை.

சூட்சும உலகத்தின் விதிகள் சற்று மாறுபட்டிருக்கும். தெய்வம் இதுபோல் செயல்படும் தன்மையுடையது. ஆனால் நடை முறையில் உலகை ஆபத்திருந்து காக்கவே தெய்வம் செயல்படும். மற்ற நேரங்களில் அருள் செயல் படுவதில்லை. அன்னையும் அவரது அருளும் எல்லா நேரங்களிலும் இது போன்றே செயல்படுகின்றது. நம் முயற்சியின்றி நடக்கும் நல்ல காரியங்கள் இவை.

கெட்ட எண்ணம் உள்ளவரை விட்டு நாம் அகன்று 10 வருஷங்களாக இருக்கும். பழகிய தோஷத்தில் பேச்சு வரும்பொழுது அவர் மீது நமக்குப் பாசம் ஏற்படும். அடுத்த நிமிஷம் வரும் சேதி நல்லதாக இருக்காது. ஒரு வகையில் அவருடன் தொடர்புள்ளதாக இருக்கும்.

நம்மை எதிரியாக ஒருவன் நினைத்தால், அவனுடன் எந்தத் தொடர்பும் இப்பொழுதும் இல்லை என்றாலும், மனத்தால் அவனை நினைக்கும்பொழுது அவனுக்கும் நமக்கும் தொடர்பேற்பட்டு அவனுடைய எண்ணம் நம் வாழ்வில் பாதிக்கும். அதையும் தவிர்க்க வேண்டும்.

*******

கர்மயோகி




வினோத்-VINOTH

unread,
Apr 20, 2012, 12:58:11 AM4/20/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. பிறர் அறியாமையைக் காணும்பொழுது அறியாமையின் புறத்தோற்றத்தைக் காண்கிறோம். நம்முடைய அறியாமையைக் கண்டால் அறியாமையின் உள்ளுறை இரகஸ்யங்கள் தெரியும்.

தன் அந்தரங்கத்தை நண்பனிடம் சொல் மோசம் போனவனைப் பார்க்கும்பொழுது அறிவில்லாமல் நடக்கின்றான் என்று நினைக்கின்றோம். தன் இரகஸ்யத்தைப் பிறர் பாதுகாப்பார்கள் என்ற அறியாமை அவனுடையது என்று நாம் அறிகிறோம். அதே காரியத்தை நாமும் செய்வதுண்டு. அப்பொழுது நம் மனநிலையைக் கவனித்தால் நண்பனின் அறியாமை நம்மிடம் இருப்பதும் தெரியும். மேலும் அவனிடம் நாம் காண முடியாததை, நம்மிடம் காண டியும். ஏன் நம் இரகஸ்யத்தை அடுத்தவனிடம் சொல்கிறோம் என்று கவனித்தால், நம் செய்கைக்காக நண்பன் நம்மை உயர்ந்தவன் என் நினைப்பான் என நாம் எதிர்ப்பார்ப்பது தெரியும். சொல்ய பின்னர்தான் நண்பன் நம்மைக் குறைவாக நினைக்கின்றான். இவனிடம் இதைச் சொல்யது தவறு என்று புரியும். அடுத்த முறை இதைச் செய்யாதவர் அறிவாளி. செய்பவர் அதிகம்.

நண்பனுடைய அறியாமை நமக்குச் செயலின் அர்த்தமற்ற போக்கை விளக்கும். நம் அறியாமை மனத்தின் நோக்கத்தின்அறியாமையை விளக்கும். எனவே நம்மை அறிய முயல்வது பயன் தரும்.

-- கர்மயோகி

வினோத்-VINOTH

unread,
May 3, 2012, 12:39:58 AM5/3/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. எல்லாவற்றையும் ஈர்த்துப் பிடிக்கும் அமைப்பும் சக்தியும் கொண்டது அகந்தை. அதன் அமைப்பு பூரணமானது. சுதந்திரத்திற்காக வேலை செய்தாலும், விலங்குகளையே உற்பத்தி செய்யும் திறனுடையது.

விலங்கை உற்பத்தி செய்யும் சுதந்திரம்.

காந்தம் தன் வட்டத்திற்குள் வரும் எந்த இரும்பையும் தன்னை நோக்கி இழுக்கும். அதனால் இழுக்காமலிருக்க முடியாது. அது காந்தத்தின் தன்மை. அதைப் போன்ற சக்தியுடையது அகந்தை. அதனருகில் வந்தால் தன்னை நோக்கி வந்ததை இழுக்காமலிருக்க முடியாது. அதன் அமைப்பும் அதற்கேற்ப உள்ளது.

ஒரு தீய சக்திகளின் கூட்டம் அன்னையை எதிர் கொண்டபொழுது அவர்களை அன்னை இறைவனுக்குச் சரணடையச் சொன்னார். அவை அதை ஏற்றுக் கொண்டு அன்னையைச் சரண் அடைந்தன. நாங்கள் என்ன செய்யலாம் என்று அன்னையைக் கேட்டதற்கு உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார்கள். எங்களுக்குக் கல் எறியத் தெரியும் என்று அவர்கள் சொல்ய பதிலைக் கேட்டு அன்னை சிரித்தார்.

அன்னையைச் சரண் அடைவது பெரிய காரியம். அதைச் செய்த பின்னரும் தங்கள் பழைய முறைகளை மட்டுமே பின்பற்றும் பாங்குடையவை அவை. அதே போல் அகந்தை எதை ஏற்றுக் கொண்டாலும் தன் பாணியிலேயே செய்யும். சுதந்திரத்திற்காகச் சேவை செய்தாலும், அகந்தையால் விலங்குகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

********

வினோத்-VINOTH

unread,
May 4, 2012, 1:22:34 AM5/4/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. முடியாது என்று கருதினால் ஒரு சுலபமான முறையுண்டு. அகந்தையை தான் கரைய வேண்டும் என்று பிரார்த்திக்கச் சொல்வது அம்முறை. பொய்யால் ஏற்பட்டது அகந்தை. அதை மெய்யாக இருக்கச் சொன்னால் அதன் அஸ்திவாரம் வீழ்ந்துவிடும்.

அகந்தையில் பொதிந்துள்ள அஸ்திவாரமான மெய்.

மௌனத்தை நாடுபவன் பேசுவதை நிறுத்துவான். அதற்குப் பதிலாக ஓம் என உச்சரிக்க ஆரம்பித்தால் சப்தம் எழ, எழ, மௌனம் கூடி வருவது தெரியும். ஓம் சப்தமானாலும், மௌனத்தை நோக்கிச் செல்லும் சப்தம்!

ஸ்ரீ அரவிந்தர் புத்தகத்திருந்து 4 பக்கத்தை வாய் விட்டுப் படித்து முடித்தவுடன் அங்கு மௌனம் நிலவுவதைக் காணலாம். அவரது நூல்கள் மௌனத்தை வெளிப்படுத்துபவை. சப்தத்தின் மூலமும் மௌனத்தை வெளிப்படுத்தும் தன்மையுடையவை. மௌனத்தை அழிக்கும் சப்தத்தின் மூலம் மௌனத்தை வெளிப்படுத்தும் சக்தி ஸ்ரீ அரவிந்தரின் அருள். சப்தத்திற்கு அகந்தையில்லை என்பதால் இது முடிகிறது. வறுமை மூலம் பகவான் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்துவார். தடை நம் அகந்தை. அகந்தையற்ற மனிதனை வறுமையை மீறி அதிர்ஷ்டத்தைப் பெற வைக்க அருளால் முடியும் என்பதை இதிருந்து தெரியலாம்.

அகந்தை எதற்கும் கட்டுப்படாது என்பது உண்மை. எனவே அதையே பிரார்த்திக்கச் சொன்னால், நமக்கு அதிர்ஷ்டமிருந்தால், அது ஒத்துக் கொள்ளும். தான் கரைய வேண்டும் என்ற அகந்தையின் பிரார்த்தனை பக்கும். மெய் சொல்ல அகந்தை ஒத்துக் கொண்டாலும், அகந்தை கரைந்துவிடும்.

Innamburan Innamburan

unread,
May 4, 2012, 2:25:51 AM5/4/12
to mint...@googlegroups.com
நண்பர் விநோத் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த கருத்துக்கள், ஈயடிச்சான் காப்பியாக http://www.karmayogi.net/?q=yogavaazhkai14 என்பதில் காணப்படுகின்றன. அந்த தளத்திலும் நீங்கள் தான் எழுதிகிறீர்களா/ அல்லது நகல் எடுத்துப் போடுகிறீர்களா? விளக்கம் யோகவாழ்க்கைக்கு வெளிச்சம் தரும்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

வினோத்-VINOTH

unread,
May 7, 2012, 2:08:33 AM5/7/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. பிறர் நமக்கிழைக்கும் தீங்கில் அகந்தை அழிந்தவன் விஸ்வாசம் இருப்பதைக் காணமுடியும்.

அகந்தை அழிந்தவனின் விஸ்வாசம்.

நம் ஜீவன் அகந்தையால் மூடப்பட்டிருப்பதால் இறைவன் நம்மை அருளால் தீண்ட முடியாது. இறைவன் மனித உருவில் நம்மை நாடினால் அகந்தையைத்தான் தீண்ட முடியும். அதைத் தாண்டிய ஜீவனைத் தீண்ட முடியாது.

பள்ளிக்கூடம் போக மறுக்கும் குழந்தையைத் தாயார் அன்பால் தீண்ட முடியாது, தண்டனையால் மட்டுமே தீண்ட முடியும். அக்குழந்தைக்குத் தாயன்பு தண்டனையாக வருகிறது. பள்ளிக்கூடம் போக ஒத்துக்கொண்டவுடன் தாயார் சாக்லேட் தருகிறாள். போகாத குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தால் தாய் குழந்தையைக் கெடுக்கின்றாள் என்று பொருள்.

இறைவன் மனிதன் மூலம் நம் ஜீவனைத் தேட விழையும்போது அகந்தையால் நாம் மூடப் பெற்றிருந்தால் அவன் அகந்தையைத் தீண்ட விரும்பாமல் அகந்தையை அழிக்கும் முறை ஒன்றை நாடுகிறான். விஸ்வாசமாக அந்நிலையில் நம்மிடம் இருப்பவர் நம் அகந்தையுடன் உறவாடுகிறார். அது வெறும் உறவு. துரோகமாக நம்மிடம் செயல்படுபவர் நம் அகந்தைக்கு ஊறு செய்கிறார். அதனால் அகந்தை புண்படுகிறது. திரை கிழிய ஆரம்பிக்கின்றது. நாம் ஓலமிடுகிறோம். அகந்தை அழிய ஆரம்பித்த நிலையில் ஒருவர் துரோகமாக நடந்தால் ஓலமிடுவதற்குப் பதிலாக அதன் உண்மையை ஜீவன் அறியும். அது அகந்தை அழிய ஆரம்பித்த பின்னரே தெரியும். அதற்கு முன் கோபம் வரும், ஆத்திரம் வரும், பழி வாங்கத் தோன்றும். இப்பொழுது உண்மை தெரியும்.

இதுவரை நமக்கு வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி அவை ஏன் நடந்தன எனக் கணித்து, அங்கு எப்படி நம்மிடம் உண்மை குறைவாயுள்ளது என்று தெரிந்து அந்த உண்மையை இன்று ஜீவன் ஏற்றுக் கொண்டால் அந்தக் கசப்பு விலகும். அதை உணர்ந்த அகந்தை விலகும். இது யோகப் பயிற்சி. அதிலும் மிக உயர்ந்த நிலையிலுள்ள யோக முயற்சி.

வினோத்-VINOTH

unread,
May 10, 2012, 1:42:43 AM5/10/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. உலகை அற்புதக் காட்சியாகக் காண முயல்பவர் சில சாதாரண நிகழ்ச்சிகளில் அதைக் காண வேண்டும். ஜீவனற்ற காரியங்களில் ஆன்மீக ஜீவனைக் காணும் திறன் ஆன்மா விழிப்புற்றதற்கு அறிகுறி.

ஆன்மா விழிப்புற்றதற்கு அறிகுறி. இறைவனைப் பொருத்தவரையில் அன்றாடக் காரியங்களுக்கும், பெரிய நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசமில்லை. இறைவனைச் சிறு காரியத்தில் கண்டாலும், நம்மால் அவனைக் காண முடிகிறது எனப் பொருள். பெரிய காரியங்களில் ஈடுபடும் பொழுது மனம் தீவிரமாக ஈடுபடுகிறது. அதனால் ஆழ்ந்த நிலையில் விழிப்பிருக்கின்றது. ஆழ்ந்த நிலையில் மனம் விழிப்புற்றிருப்பதால் பெரிய காரியங்களில் ஒரு சமயம் இறைவன் காட்சி அளிக்கின்றான். எந்தக் காரியத்தைச் செய்யும்பொழுதும் அதே விழிப்பிருந்தால் இறைவன் தரிசனம் தருவான்.

*******






--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும் சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."


வினோத்-VINOTH

unread,
May 15, 2012, 12:29:08 AM5/15/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. அந்தத் திருஷ்டிக்கு வறுமையில் செல்வம் தெரியும், துரோகத்தில் விஸ்வாசம் தெரியும், சோம்பல் சுறுசுறுப்பு விளங்கும், பக்காத்திருடன் பெரிய ஆத்மா எனப் புரியும், பொது மகளிரின் கற்பு விளங்கும்.

திருடனின் அடி திருவடி.

அப்பூர் சிறையிருக்கும்பொழுது பகவானுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது. அனைத்தும் வாசுதேவனாகக் காட்சியளித்தன. ஜெயில் கம்பி முதற் கொண்டு, வார்டன்வரை எல்லாப் பொருள்களும் கிருஷ்ணனாகத் தெரிந்தன. அந்தக் கைதிகள் உள்ளத்தில் கருணை, சாந்தம் போன்ற உயர்ந்த குணங்களை இந்தத் திருஷ்டியிருந்தபோது பகவான் கண்டார்.

நாம் ஏழையை ஏழையாகப் பார்க்கின்றோம். இந்தத் திருஷ்டி ஏற்பட்டால் பல பிறவிகளில் செல்வத்தைப் பெற்றுக் கடைசியில் பெருஞ்செல்வத்திற்கு அதிபதியான பின் ஏழ்மை என்றால் எப்படியிருக்கும் என்று அனுபவம் பெற இந்த ஏழையின் ஆத்மா இப்பிறவியில் வறுமையில் பிறந்திருக்கின்றது என்பது தெரியும். அதேபோல் மேலே சொன்ன ஒவ்வொரு குணத்திற்கும் எதிரான குணம் ஆத்மாவிருப்பதை நாம் அந்தத் திருஷ்டி மூலம் காணலாம்.

******

கர்மயோகி

வினோத்-VINOTH

unread,
May 17, 2012, 2:45:49 AM5/17/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil
  1. நம் தீவிர ஆர்வம் பல நிலைகளில் அமைந்துள்ளது.


உழைப்பு தீவிர ஆர்வம் பெற்றால் பெருஞ்செல்வத்தில் முடியும்.

தைரியமான தலைமை தீவிர ஆர்வம் பெற்றால் தலைமைப் பதவியைக் கொடுக்கும்.

அறிவுக்குத் தீவிர ஆர்வம் கிடைத்தால் புதிய கருத்துகள் உற்பத்தியாகும்.

ஆன்மீகம் தீவிர ஆர்வமடைந்தால் ஆழ்ந்த தியானம் நிலைக்கும்.

ஆன்மா மனதில் தீவிர ஆர்வம் அடைந்தால் மனிதன் மேதையாக மாறுவான்.

ஆன்மா உணர்வில் தீவிர ஆர்வம் பெற்றால் மாவீரன் உதயமாவான்.

ஆன்மா உடல் தீவிர ஆர்வம் பெற்றால் அவதாரப் புருஷன் பிறப்பான்.

இவை இரண்டு மூன்று நிலைகள் கலந்து வரும்.

செயலின் தரத்தை உயர்த்துவது முன்னேற்றம். 

*******

Vinoth Kanyakumari

unread,
May 17, 2012, 5:31:44 AM5/17/12
to mint...@googlegroups.com


ஏற்கெனவே கூறியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
இவை நான் எழுதுவது அல்ல.




--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும் சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."

 

Innamburan Innamburan

unread,
May 17, 2012, 6:29:09 AM5/17/12
to mint...@googlegroups.com
எங்கே கூறியிருக்கீறீர்ள்? யோகவாழ்க்கை வாழ்பவர்கள் விசனத்தில்.


2012/5/17 Vinoth Kanyakumari <vino...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Vinoth Kanyakumari

unread,
May 17, 2012, 9:35:24 AM5/17/12
to mint...@googlegroups.com


On Thursday, May 17, 2012 3:59:09 PM UTC+5:30, இன்னம்பூரான் wrote:
எங்கே கூறியிருக்கீறீர்ள்? யோகவாழ்க்கை வாழ்பவர்கள் விசனத்தில்.



கூறியதாக நியாபகம், வேறு குழுமமாக இருக்கலாம்.
ஏதும் பிரச்சனையா?

Subashini Tremmel

unread,
May 17, 2012, 10:08:43 AM5/17/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
திரு.வினோத்,

நீங்கள் வேறொருவரின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளும் போது ஒவ்வொரு முறையும் அவரது வலைப்பக்கத்தையோ, அல்லது  நன்றி என்று குறிப்பிட்டு அவர் பெயரையோ குறிப்பது முக்கியம். இப்போது உங்களின் இப்பதிவைப் படிப்பவர்கள்  நீங்கள் தான் இவற்றை எழுத்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் நிச்சயம் நினைப்பார்கள். ஆக பதிவின் கீழ் நன்றி என்று குறிப்பிட்டு அவர் பெயரை அல்லது லிங்கை இனி இணைத்து விடுங்கள். வாசிப்பவர்கள் இதனை வழங்குபவரின் வலைப்பூ சென்று நேரடியாக பழைய பதிவுகளையும் வாசிக்க அது உதவும்.

சுபா

2012/5/17 Vinoth Kanyakumari <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Vinoth Kanyakumari

unread,
May 17, 2012, 10:16:32 AM5/17/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


On Thursday, May 17, 2012 7:38:43 PM UTC+5:30, Subashini Tremmel wrote:
திரு.வினோத்,

நீங்கள் வேறொருவரின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளும் போது ஒவ்வொரு முறையும் அவரது வலைப்பக்கத்தையோ, அல்லது  நன்றி என்று குறிப்பிட்டு அவர் பெயரையோ குறிப்பது முக்கியம். இப்போது உங்களின் இப்பதிவைப் படிப்பவர்கள்  நீங்கள் தான் இவற்றை எழுத்க் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் நிச்சயம் நினைப்பார்கள். ஆக பதிவின் கீழ் நன்றி என்று குறிப்பிட்டு அவர் பெயரை அல்லது லிங்கை இனி இணைத்து விடுங்கள். வாசிப்பவர்கள் இதனை வழங்குபவரின் வலைப்பூ சென்று நேரடியாக பழைய பதிவுகளையும் வாசிக்க அது உதவும்.


அனைத்து பதிவுகளிலும் கீழே பெயர் போட்டிருக்கிறேன். சரியாக பார்க்கவும். சில நேரம் முகவரியும் சில நேரம் பெயர் மட்டும் வந்திருக்கும்.

Innamburan Innamburan

unread,
May 17, 2012, 2:19:36 PM5/17/12
to mint...@googlegroups.com
என்னே விநோதம்!


2012/5/17 Vinoth Kanyakumari <vino...@gmail.com>


Vinoth Kanyakumari

unread,
May 17, 2012, 4:15:50 PM5/17/12
to mint...@googlegroups.com


On Thursday, May 17, 2012 11:49:36 PM UTC+5:30, இன்னம்பூரான் wrote:
என்னே விநோதம்!




புரியவில்லை. என்ன பிரச்சனை தங்களுக்கு?

Innamburan Innamburan

unread,
May 17, 2012, 5:14:55 PM5/17/12
to mint...@googlegroups.com
எனக்கு பிரச்னை ஒன்றும் இல்லை. உமது ஈயடிச்சான் காப்பி யோக மரபுக்கு முரண். தமழி மரபு கட்டளையின் மரபுக்கு முரண்
இன்னம்பூரான்

2012/5/17 Vinoth Kanyakumari <vino...@gmail.com>

Vinoth Kanyakumari

unread,
May 18, 2012, 12:45:06 AM5/18/12
to mint...@googlegroups.com


On Friday, May 18, 2012 2:44:55 AM UTC+5:30, இன்னம்பூரான் wrote:
எனக்கு பிரச்னை ஒன்றும் இல்லை. உமது ஈயடிச்சான் காப்பி யோக மரபுக்கு முரண். தமழி மரபு கட்டளையின் மரபுக்கு முரண்
இன்னம்பூரான்



ம்ம்ம்.. அப்படி தெளிவா சொல்லுங்க. இப்போது தானே உங்க பிரச்சனை என்ன என்று 'தெளிவாக' விளங்குகிறது.

இதே கருத்துகளை ஒரு படத்தை போட்டு அதில் எழுதி இங்கே போட்டால் நீங்கள் ஒத்துப்பீங்களா? அதாவது அது 'ஈ அடிச்ச காப்பி' இல்லை என்பீர்களா?


இந்த வெறுப்பு நஞ்சு, என் மீது ஏற்றப்பட்ட வெறுப்பா அல்லது இந்த கருத்துகளின் மீது ஏற்பட்ட தங்களின் வெறுப்பா எனவும் அறிய மிகுந்த ஆவலாக உள்ளேன்.

மட்டுருத்தினர்களே கொஞ்சம் வாங்க. என்ன பண்ணணும்னு சொல்லுங்க. எதும்னாலும் எனக்கு ஓகே. (ஆனால் வழக்கமான சாக்லெட் லேயர் பூசி மெழுகிய பதிலை எதிர்பார்க்கவில்லை.)

வினோத்-VINOTH

unread,
May 18, 2012, 12:56:57 AM5/18/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்
  1. சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும். (அன்பு சண்டை மூலம் வளரும்)

எதிர்ப்பால் வளரும் சத்தியம்.

இது ஓர் அடிப்படை ஆன்மீகத் தத்துவம். அன்பு செலுத்தினால் அன்பு வளரும் என்பது நாமறிந்தது. கொடுமைப்படுத்தினால் அன்பு வளரும் என்பதும் ஆன்மீக உண்மை. அன்பும், கொடுமையும் ஒரே இடத்திருந்து புறப்பட்டவை. அதனால் இது உண்மை.

செடிக்குத் தண்ணீர்ப் பாய்ச்சினால் வளரும் என்றால் புரியும். செடியை வெட்டினால், இலைகளைக் கழித்தால் அதிகமாக வளரும் என்பதும் உண்மை. எதிர்த்தால் வளரும். சத்தியத்தின் அம்சங்களை ஒரு நிலையில் போற்றி வளர்க்க வேண்டும். வேறொரு நிலையில் எதிர்த்து வளர்க்க வேண்டும் என்பது ஆன்மீக உண்மை.

நாத்திகப் பிரசாரம் நாட்டில் அளவுகடந்து பரவிய பின் வளர்ந்தது நாத்திகமில்லை, ஆஸ்திகம். ஆஸ்திகத்தை எதிர்த்தால் வளரும் என்பதை கடந்த 50 ஆண்டு சரித்திரம் விளக்கும்.

********

Subashini Tremmel

unread,
May 18, 2012, 10:34:02 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள வினோத்,


2012/5/18 Vinoth Kanyakumari <vino...@gmail.com>
..

மட்டுருத்தினர்களே கொஞ்சம் வாங்க. என்ன பண்ணணும்னு சொல்லுங்க. எதும்னாலும் எனக்கு ஓகே. (ஆனால் வழக்கமான சாக்லெட் லேயர் பூசி மெழுகிய பதிலை எதிர்பார்க்கவில்லை.)


இதில் சாக்லேட் லேயர் பூச வேண்டிய தேவையே இல்லை.:-) நேரடியான விளக்கம் தருகின்றேன்.

உதாரணமாக இன்று ஒரு பதிவு பேட்டிருக்கின்றீர்கள்.

===========================================================================
  1. சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும். (அன்பு சண்டை மூலம் வளரும்)

எதிர்ப்பால் வளரும் சத்தியம்.

இது ஓர் அடிப்படை ஆன்மீகத் தத்துவம். அன்பு செலுத்தினால் அன்பு வளரும் என்பது நாமறிந்தது. கொடுமைப்படுத்தினால் அன்பு வளரும் என்பதும் ஆன்மீக உண்மை. அன்பும், கொடுமையும் ஒரே இடத்திருந்து புறப்பட்டவை. அதனால் இது உண்மை.

செடிக்குத் தண்ணீர்ப் பாய்ச்சினால் வளரும் என்றால் புரியும். செடியை வெட்டினால், இலைகளைக் கழித்தால் அதிகமாக வளரும் என்பதும் உண்மை. எதிர்த்தால் வளரும். சத்தியத்தின் அம்சங்களை ஒரு நிலையில் போற்றி வளர்க்க வேண்டும். வேறொரு நிலையில் எதிர்த்து வளர்க்க வேண்டும் என்பது ஆன்மீக உண்மை.

நாத்திகப் பிரசாரம் நாட்டில் அளவுகடந்து பரவிய பின் வளர்ந்தது நாத்திகமில்லை, ஆஸ்திகம். ஆஸ்திகத்தை எதிர்த்தால் வளரும் என்பதை கடந்த 50 ஆண்டு சரித்திரம் விளக்கும்.

******** 

கர்மயோகி

===========================================================================

இதில் யார் இதனை எழுதியவர் என்ற தகவல் இல்லை. கீழே கர்மயோகி என்று உள்ளது. இதன் பொருள் தெரியவில்லை. நீங்களே உங்களை கர்மயோகி என பெயரிட்டுக்கொள்கின்றீர்களா அல்லது வேறு யாரேனும் கர்மயோகி என்ற பெயரில் எழுதுகின்றார்களா என்று வாசிக்கும் எனக்குத் தெரியவில்லை. இங்கு நான் என்பது இப்பதிவை வாசிக்கும் வாசகர்கள்.

இதனை சற்றே மாற்றி..சிவப்பு நிறமிடப்பட்ட பகுதியைக் காண்க!
 
===========================================================================
  1. சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும். (அன்பு சண்டை மூலம் வளரும்)

எதிர்ப்பால் வளரும் சத்தியம்.

இது ஓர் அடிப்படை ஆன்மீகத் தத்துவம். அன்பு செலுத்தினால் அன்பு வளரும் என்பது நாமறிந்தது. கொடுமைப்படுத்தினால் அன்பு வளரும் என்பதும் ஆன்மீக உண்மை. அன்பும், கொடுமையும் ஒரே இடத்திருந்து புறப்பட்டவை. அதனால் இது உண்மை.

செடிக்குத் தண்ணீர்ப் பாய்ச்சினால் வளரும் என்றால் புரியும். செடியை வெட்டினால், இலைகளைக் கழித்தால் அதிகமாக வளரும் என்பதும் உண்மை. எதிர்த்தால் வளரும். சத்தியத்தின் அம்சங்களை ஒரு நிலையில் போற்றி வளர்க்க வேண்டும். வேறொரு நிலையில் எதிர்த்து வளர்க்க வேண்டும் என்பது ஆன்மீக உண்மை.

நாத்திகப் பிரசாரம் நாட்டில் அளவுகடந்து பரவிய பின் வளர்ந்தது நாத்திகமில்லை, ஆஸ்திகம். ஆஸ்திகத்தை எதிர்த்தால் வளரும் என்பதை கடந்த 50 ஆண்டு சரித்திரம் விளக்கும்.

******** 

கர்மயோகி

நன்றி:xxxxxxxxx (எழுதியவர் பெயர்)

xxxx வலைப்பக்கத்திலிருந்து இப்பதிவு இங்கே வழங்கப்படுகின்றது 

===========================================================================

என்று தகவல் போட்டால் போதும்.

இப்போது புரியும் என்று நினைக்கின்றேன் :-)

தொடரவும்
சுபா



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும் சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
May 18, 2012, 10:39:36 AM5/18/12
to மின்தமிழ்

On May 18, 7:34 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:

> ===========================================================================
> இதில் யார் இதனை எழுதியவர் என்ற தகவல் இல்லை. கீழே கர்மயோகி என்று உள்ளது.
> இதன் பொருள் தெரியவில்லை. நீங்களே உங்களை கர்மயோகி என
> பெயரிட்டுக்கொள்கின்றீர்களா அல்லது வேறு யாரேனும் கர்மயோகி என்ற பெயரில்
> எழுதுகின்றார்களா என்று வாசிக்கும் எனக்குத் தெரியவில்லை. இங்கு நான் என்பது
> இப்பதிவை வாசிக்கும் வாசகர்கள்.
>
> இதனை சற்றே மாற்றி..சிவப்பு நிறமிடப்பட்ட பகுதியைக் காண்க!
>
> ===========================================================================
>

>    1. *சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும். **(**அன்பு சண்டை
>    மூலம் வளரும்)*


>
> எதிர்ப்பால் வளரும் சத்தியம்.
>
> இது ஓர் அடிப்படை ஆன்மீகத் தத்துவம். அன்பு செலுத்தினால் அன்பு வளரும் என்பது
> நாமறிந்தது. கொடுமைப்படுத்தினால் அன்பு வளரும் என்பதும் ஆன்மீக உண்மை.
> அன்பும், கொடுமையும் ஒரே இடத்திருந்து புறப்பட்டவை. அதனால் இது உண்மை.
>
> செடிக்குத் தண்ணீர்ப் பாய்ச்சினால் வளரும் என்றால் புரியும். செடியை
> வெட்டினால், இலைகளைக் கழித்தால் அதிகமாக வளரும் என்பதும் உண்மை. எதிர்த்தால்
> வளரும். சத்தியத்தின் அம்சங்களை ஒரு நிலையில் போற்றி வளர்க்க வேண்டும். வேறொரு
> நிலையில் எதிர்த்து வளர்க்க வேண்டும் என்பது ஆன்மீக உண்மை.
>
> நாத்திகப் பிரசாரம் நாட்டில் அளவுகடந்து பரவிய பின் வளர்ந்தது நாத்திகமில்லை,
> ஆஸ்திகம். ஆஸ்திகத்தை எதிர்த்தால் வளரும் என்பதை கடந்த 50 ஆண்டு சரித்திரம்
> விளக்கும்.
>
> ********
>
> கர்மயோகி
>
> நன்றி:xxxxxxxxx (எழுதியவர் பெயர்)
>
> xxxx வலைப்பக்கத்திலிருந்து இப்பதிவு இங்கே வழங்கப்படுகின்றது
>
> ===========================================================================
> என்று தகவல் போட்டால் போதும்.
>
> இப்போது புரியும் என்று நினைக்கின்றேன் :-)
>


Karmayogi biodata:

"Karmayogi is a disciple of Sri Aurobindo and The Mother and the
Founder/President of The Mother's Service Society, an educational and
research institute inspired by their spiritual teachings and based in
Pondicherry, South India. Since the 1960s, he has been studying their
work and developing original applications of spiritual principles in
the fields of economic and social development theory, education,
literary criticism, management, national and global governance, peace
and security, psychology, spirituality and yogic practice. He is
author of over 50 books and many hundreds of papers and published
articles in English and Tamil and editor of Malarndhajeeviyum, a
monthly spiritual journal in Tamil."

http://www.karmayogi.net/

N. Ganesan

> தொடரவும்
> சுபா
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > --

> > *வினோத் கன்னியாகுமரி*
> > *http://tamilnanbargal.com/friends/vinoth*<http://tamilnanbargal.com/friends/vinoth>
>
> > *"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும்
> > சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."*


>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings

Innamburan Innamburan

unread,
May 18, 2012, 10:47:06 AM5/18/12
to mint...@googlegroups.com
நானு கொயட்டு.


2012/5/18 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Subashini Tremmel

unread,
May 18, 2012, 11:00:52 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/5/18 Innamburan Innamburan <innam...@gmail.com>

நானு கொயட்டு.


அப்போ நான் என்ன செய்ய.. ??? :-)

சுபா 

Geetha Sambasivam

unread,
May 18, 2012, 11:03:34 AM5/18/12
to mint...@googlegroups.com
கர்ம யோகி அரவிந்தர்-அன்னையின் பக்தர்.  அன்னையைப் பற்றி அவர் எழுதியவை இணையத்தில் கிடைக்கின்றன.

2012/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள வினோத்,

கர்மயோகி

நன்றி:xxxxxxxxx (எழுதியவர் பெயர்)

xxxx வலைப்பக்கத்திலிருந்து இப்பதிவு இங்கே வழங்கப்படுகின்றது 

===========================================================================

என்று தகவல் போட்டால் போதும்.

இப்போது புரியும் என்று நினைக்கின்றேன் :-)

தொடரவும்
சுபா



Nagarajan Vadivel

unread,
May 18, 2012, 11:23:02 AM5/18/12
to mint...@googlegroups.com
கர்மயோகி என்பது  இணையதளத்தின் முகவரி
கடந்த 40 ஆண்டுகளாக அன்னை சேவை மையம் என்ற பெயரில் பாண்டிச்சேரி அரவிந்தர்  அன்னையின் புகழ் பரப்பும் முயற்சியில் இருந்து வரும் தன்னார்வ நிறுவனம் இதை நடத்தி வருகிறது
பின்னணியில் இருப்பவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை
அவரே தாங்கள் வெளியிடும் கருத்துக்குக்களுக்கு ஆவண மேற்கோள் தரவில்லை
கர்மயோகி என்பது கோக் பெப்சி போல் பேடண்ட் செய்யப்பட்டதல்ல.
 கர்மயோகி கர்மயோகம் பற்றி வெளியிடும் கருத்துக்கள் பதிப்புரிமை உள்ள நூல்களில் இருந்து எடுத்தாளப்பட்டதாகக் காண இயலவில்லை
அரவிந்தரும்யோகி மஹரிஷி சுத்தானந்தரும் சிவானந்தரும் கர்மயோகம் பற்றி நிறைய எழுதியுள்ளனர்
இங்குள்ள கருத்துக்களுக்கும் அவர்களுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்றும் தெரியவில்லை
ஒவ்வொரு இடுகையிலும் கர்மயோகி என்ற இணயதளத்தின்  இணைப்பு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது
வெட்டி ஒட்டி வெளியிடும் மடலாடல் கருத்துக்களை காப்புரிமை வாதத்துக்குள் கொண்டுவருவதால் கிஞ்சித்தும் பயனில்லை.

 மென்று தின்று மகிழும் பொருளா? அல்லது ஆளை மென்று உமிழும் செயலா?

சாக்லேட் கோட்டிங் பற்றி எனக்கு என்னவென்று  தெரியவில்லை

நாகராசன்


2012/5/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
May 18, 2012, 11:29:00 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/5/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

கர்மயோகி என்பது  இணையதளத்தின் முகவரி
கடந்த 40 ஆண்டுகளாக அன்னை சேவை மையம் என்ற பெயரில் பாண்டிச்சேரி அரவிந்தர்  அன்னையின் புகழ் பரப்பும் முயற்சியில் இருந்து வரும் தன்னார்வ நிறுவனம் இதை நடத்தி வருகிறது
பின்னணியில் இருப்பவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை
அவரே தாங்கள் வெளியிடும் கருத்துக்குக்களுக்கு ஆவண மேற்கோள் தரவில்லை
கர்மயோகி என்பது கோக் பெப்சி போல் பேடண்ட் செய்யப்பட்டதல்ல.
 கர்மயோகி கர்மயோகம் பற்றி வெளியிடும் கருத்துக்கள் பதிப்புரிமை உள்ள நூல்களில் இருந்து எடுத்தாளப்பட்டதாகக் காண இயலவில்லை
அரவிந்தரும்யோகி மஹரிஷி சுத்தானந்தரும் சிவானந்தரும் கர்மயோகம் பற்றி நிறைய எழுதியுள்ளனர்
இங்குள்ள கருத்துக்களுக்கும் அவர்களுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்றும் தெரியவில்லை
ஒவ்வொரு இடுகையிலும் கர்மயோகி என்ற இணயதளத்தின்  இணைப்பு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது
வெட்டி ஒட்டி வெளியிடும் மடலாடல் கருத்துக்களை காப்புரிமை வாதத்துக்குள் கொண்டுவருவதால் கிஞ்சித்தும் பயனில்லை.

 மென்று தின்று மகிழும் பொருளா? அல்லது ஆளை மென்று உமிழும் செயலா?

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லையே.
சுபா 

Nagarajan Vadivel

unread,
May 18, 2012, 11:34:26 AM5/18/12
to mint...@googlegroups.com
இணையத்தில் எழுதும் எல்லாக் கருத்துக்களும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை
காப்புரிமை உள்ள நூல்களில் இருந்து எடுத்தால் மட்டும் மேற்கோள் காட்டவேண்டும்
நாகராசன்

2012/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 18, 2012, 11:38:51 AM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/5/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இணையத்தில் எழுதும் எல்லாக் கருத்துக்களும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை
காப்புரிமை உள்ள நூல்களில் இருந்து எடுத்தால் மட்டும் மேற்கோள் காட்டவேண்டும்
நாகராசன்

இது நிச்சயம் வினோத்தை குழப்பும்.
அவரது கருத்துக்கள் அல்ல. அதனால் எங்கிருந்து எடுத்து பதிகின்றார் என்று போடுவது அவசியம் என்று திரு.இன்னம்புரான் சொல்கின்றார். மட்டுறுத்துனர் என்ற வகையில் நானும் அதனையே வலியுறுத்த விரும்புகின்றேன்.
ஒருவருக்கு ஒன்று மற்றவருக்கு வேறொன்று என்று நாம் மின்தமிழ் னடைமுறைகளை மாற்ற வேண்டாம். அது பதிபவர்களைக் குழப்பும்.
ஆக அது வேறொருவர் பதிவாக இணையத்தில் வெளிவந்த ஒன்றாக இருந்தாலும் காப்புரிமை பிரச்சனை இருக்கின்றதா இல்லையா என்பது இங்கே பிரச்சனையில்லை. உண்மையில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவேண்டும் என்ற வகையில் தொடர்வோம்.

நன்றி
சுபா

Geetha Sambasivam

unread,
May 18, 2012, 11:51:05 AM5/18/12
to mint...@googlegroups.com
பேராசிரியர் ஐயா,

கர்மயோகி என்றபெயரிலேயே கலைமகள் பத்திரிகையிலும் அவருடைய அன்னையின் மொழிகளைப் படித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.  ஆனால் இப்போது இல்லை.  கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னர்.  அந்தக் கர்மயோகி தான் இவர் என எண்ணினேன்.

2012/5/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
கர்மயோகி என்பது  இணையதளத்தின் முகவரி
கடந்த 40 ஆண்டுகளாக அன்னை சேவை மையம் என்ற பெயரில்

Nagarajan Vadivel

unread,
May 18, 2012, 11:52:37 AM5/18/12
to mint...@googlegroups.com
நான் அவரது தொடர் இழைகளைப் பார்த்துவிட்டே எழுதினேன்
ஒவ்வொரு பதிவுக்கும் கீழே
கர்மயோகி என்ற
இணைய இணைப்பைக் கொடுத்துள்ளார்
எனவே அவர் மற்றவர் எழுத்தைத் தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது
கர்மயோகியில் அவர்கள் மேற்கோள் காட்டாதபோது இவரைக் காட்டவேண்டும் என்று சொன்னால் அவர் எங்கே போவார்
எடுத்துக்காட்டாக அவருடைய முதல் தொடக்க இழையில் உள்ள
  1. எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும். (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.
என்ற வரிகளில்
கூகிளில்
எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும்
என்பதைப் போட்டுத் தேடினால்
முதலில் கர்மயோகி தளத்தில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும்
இரண்டாவதாக அது மின் தமிழ் மடலாடல் குழுவில் இருப்பதையும் காட்டும்
அருள் கூர்ந்து நான் நாரதர் வேலை பார்ப்பதாக என்ண வேண்டாம்
நாகராசன்
இந்தத் தளத்தில் காப்புரிமை பற்றிய குறிப்பில்லை

Subashini Tremmel

unread,
May 18, 2012, 12:04:27 PM5/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/5/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நான் அவரது தொடர் இழைகளைப் பார்த்துவிட்டே எழுதினேன்
ஒவ்வொரு பதிவுக்கும் கீழே
கர்மயோகி என்ற
இணைய இணைப்பைக் கொடுத்துள்ளார்
எனவே அவர் மற்றவர் எழுத்தைத் தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது
கர்மயோகியில் அவர்கள் மேற்கோள் காட்டாதபோது இவரைக் காட்டவேண்டும் என்று சொன்னால் அவர் எங்கே போவார்
எடுத்துக்காட்டாக அவருடைய முதல் தொடக்க இழையில் உள்ள
  1. எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும். (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.
என்ற வரிகளில்
கூகிளில்
எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும்
என்பதைப் போட்டுத் தேடினால்
முதலில் கர்மயோகி தளத்தில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும்
இரண்டாவதாக அது மின் தமிழ் மடலாடல் குழுவில் இருப்பதையும் காட்டும்
அருள் கூர்ந்து நான் நாரதர் வேலை பார்ப்பதாக என்ண வேண்டாம்

சற்று சீரியஸான விஷயம் பேசுகின்றோம் என்பதால் நாரதர் வேலை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால் உங்கள் வாதம் வினோத் போன்று பதிபவர்களையும் புதிதாக பதிய வருபவர்களையும் நிச்சயம் குழப்புவதாக உள்ளது.

இதில் வினோத் மற்றவர் எழுத்தை தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. அதனால் இந்த சிந்தனையை நாம் வளர்க்க வேண்டாம். யாருடைய சிந்தனை இது என்பதில் தான் தெளிவில்லாமல் இருந்தது.

மின்தமிழின் அடிப்படை கொள்கை.

1.எழுதுபவரின் சொந்த சிந்தனை என்றால் எந்த பிரச்சனையுமில்லை.
2.பிறரது நூலிலிருந்தோ இணையபக்கத்திலிருந்தோ எடுத்து பதிவது என்றால் பதிவின் கீழே நன்றி என்று குறிப்பிட்டு எங்கிருந்து எடுத்துப் போடப்படுகின்றது என்று விளக்குவது தேவை. ஏனென்றால் அப்போதுதான் அதனை முழுதாகப் படிக்க விரும்புபவர், விட்டுப்போன பழைய பகுதிகளை படிக்க விரும்புபவர்கள் அப்பகுதிக்குச் சென்று தேட முடியும்.

இங்கே கர்மயோகி என்பது யாரைக் குறிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் போல சிலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இதனைத் தெளிவு படுத்தி விடுவது பதிபவரின் வேலையை சுலபமாக்கும்.

இதனை இத்துடன் முடித்து வினோத் யோக வாழ்க்கையைத் தொடர அனுமதிப்போமே :-)

சுபா

Nagarajan Vadivel

unread,
May 18, 2012, 1:25:40 PM5/18/12
to mint...@googlegroups.com
//இங்கே கர்மயோகி என்பது யாரைக் குறிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் போல சிலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இதனைத் தெளிவு படுத்தி விடுவது பதிபவரின் வேலையை சுலபமாக்கும்.//
நான் ஒரு விளக்கத்துக்காச் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்
இந்த விவாதத்தால் மின் தமிழ் ஒரு கொள்கை முடிவை எடுக்க முடிந்தது மகிழ்வான செய்தி.  நன்றி பல

எடுத்துக்காட்டாக முதல் இழையில் அடிப்பக்கத்தில்

கர்மயோகி

என்ற ஹைச்டிஎமெல் இணைப்பைக் கொடுத்துள்ளார்.  அதை அழுத்தினால்
http://karmayogi.net/
என்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்துக்குச் செல்கிறது.
கொடுக்கும்போதே http://karmayogi.net/ என்று எழுதுவது நல்லது
இன்னும்  குறிப்பாக

  1. எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும். (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை 

என்ற பக்கத்துக்கு இட்டுச் செல்லும் இணைப்பைக் கொடுக்கலாம்

http://www.karmayogi.net/?q=yogavaazhkai12

இந்தப் பக்கத்தில் உள்ள வரிசைப்படியே ஒவ்வொரு பகுதியாக மின்தமிழில் வெளியிட்டிருப்பதைக் காணலாம்

இன்னொரு சிக்கல் கர்மயோகி என்ற இணைப்பு பக்கத்தின் கடைசியில் இருப்பதால் பலநேரம் கூகிள் அதை மறைத்துவிடுவதால் இணைப்பு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது

நாகராசன்

Vinoth Kanyakumari

unread,
May 19, 2012, 3:16:11 AM5/19/12
to mint...@googlegroups.com


On Thursday, May 17, 2012 11:49:36 PM UTC+5:30, இன்னம்பூரான் wrote:
என்னே விநோதம்!




நேரடி பதில் சொல்லாமல் இந்த மழுப்பல்கள் ஏனோ. இதே போல பெயரை வைத்து விளையாடுவதை பார்க்க நன்றாக இல்லை நண்பரே. வினை எதிர்வினையை எப்போதாவது யாரிடமாவது ஆற்றலாம்.



இப்போதெல்லாம் இ என்பதை பார்க்கும் போது நீங்கள் கூறிய ஈ அடிச்சான் காப்பி என்பது தான் ஞாபகம் வருகிறது. இதை  மனதில் இருந்து அழிக்க யாராவது ஒரு எரேசர் தருவீர்களா?

Vinoth Kanyakumari

unread,
May 19, 2012, 3:28:59 AM5/19/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


On Friday, May 18, 2012 8:04:02 PM UTC+5:30, Subashini Tremmel wrote:
அன்புள்ள வினோத்,


2012/5/18 Vinoth Kanyakumari <vino...@gmail.com>
..

மட்டுருத்தினர்களே கொஞ்சம் வாங்க. என்ன பண்ணணும்னு சொல்லுங்க. எதும்னாலும் எனக்கு ஓகே. (ஆனால் வழக்கமான சாக்லெட் லேயர் பூசி மெழுகிய பதிலை எதிர்பார்க்கவில்லை.)


இதில் சாக்லேட் லேயர் பூச வேண்டிய தேவையே இல்லை.:-) நேரடியான விளக்கம் தருகின்றேன்.

உதாரணமாக இன்று ஒரு பதிவு பேட்டிருக்கின்றீர்கள்.


நான் எதிர்பார்த்த படியே நன்றாக பூசிமெழிகிவிட்டீர்கள். 

இன்னும் பெரிய பூதக்கண்ணாடி வைத்திருந்தால் இன்னும் பல குறைகள் தென்பட்டிருக்குமே. நல்லதொரு வாய்ப்பை நழுவ விட்டுவிட்டீர்களே.

நன்றி போடாதது ஒரு குறை. சரி உங்க விருப்பப்படியே இனி போட்டுடுவோம். :)

அதற்கு முன் ஒரே கேள்வி.

இதே கருத்துகளை ஒரு படத்தை போட்டு அதில் எழுதி இங்கே போட்டால் நீங்கள் ஒத்துப்பீங்களா?

அவ்வாறு போடுபவர்களுக்கு நீங்க (அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற விதிப்படி) பூதக்கண்ணாடி மாட்டுயிருக்கிறீர்களா? இல்லை என்பதே உண்மை.

இணையத்தில் கிடைத்த படங்கள் என்று எங்கிருந்தாவது படங்களை இங்கே போட்டால் இங்கே அனைவகும் பூதக்கண்ணாடி இல்லாமலேயே இரசித்து வந்திருக்கிறீர்கள் என்பதும் உண்மை.

முன்பெல்லாம் அனைவரும் "எழுதிவிட்டேன் வலை தளத்தில் வந்து பாருங்கள்" என்று அவரவர்கள் வலைதள முகவரியை மட்டும் இங்கே பதிவது வழக்கம். அந்த நடைமுறை மாற்றப்பட்டு முழுபதிவும் போட வேண்டும் என்ற விதி எப்போதிலிருந்து ஏன் என்பதையும்  அறிய ஆவலாக உள்ளேன்.

( நீங்க என்னிடம் சொன்ன படி யாராவது அப்படி முகவரி மட்டும் போட்டால் நான் போய் நொள்ள நொட்டுன்னு குத்தம்  சொல்லிக்கொண்டிருக்கப்போவதில்லை. ஜெஸ்ட் தெரிந்து வைத்துக்கொள்வதற்காக மட்டுமே. )


இ அவருக்கு இந்த வெறுப்பு ஏன் என்பதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இ அவரை தயவு செய்து சொல்ல சொல்லவும். எல்லாம் ஒரு புரிந்துணர்வுக்காக தான்.


நன்றி  (நல்லா பாருங்க, நன்றி போட்டிருக்கிறேன் :)) )

sundaramurthy murthy

unread,
May 22, 2012, 1:54:33 PM5/22/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
karma yogi  enbaddu kariyam ( action ) seidu kondu Eraivanin (GOD) ninaivil eruppadu.
sundramurthy

2012/5/19 Vinoth Kanyakumari <vino...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
May 23, 2012, 1:04:23 AM5/23/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

ஒருவர் தனக்கு மற்றவர்களை விட அதிகம் தெரியும் என காட்டிக்கொள்ள செய்யும் செயல்கள் அவரது அறியாமையை வெளிப்படுத்தும்.

அறிவு அறியாமையையும் வெளிப்படுத்தும். அறியாமையை வெளிப்படுத்தும் அறிவு.

அனைத்தும் அறிந்து வைத்திருந்தும் தன்னடக்கம் பேணுவோர் பலர். ஆனால் ஒரு சிலரோ குறை குடம் நீர் தழும்பும் என்பது போல தன்னிடம் உள்ள குறை அறிவை காட்டிக்கொள்ள முற்படுவர். அப்போது அது அவரது அறியாமையையும் சேர்த்தே வெளிக்கொணர்ந்து விடும்.

சத்திய ஜீவன் தன்னைப்போல அனைவரையும் சம அறிவுடையவர் என்ற உண்மையை உணர்ந்தது. சத்திய ஜீவன் செயல்படும் போது அறிவு தன்னை எதுவும் அறியாதவராக காட்டிக்கொள்ளும்.
அகந்தை செயல்படும் போது அறியாமையும் தன்னை அறிந்தவராக காட்டிக்கொள்ள முற்படும். அகந்தையை அதை விட உயர்ந்த அறிவால் வெட்டுபவர் ஞானி.

Vinoth Kanyakumari

unread,
May 23, 2012, 3:23:49 AM5/23/12
to mint...@googlegroups.com


On Tuesday, May 22, 2012 11:24:33 PM UTC+5:30, sundaramurthy murthy wrote:
karma yogi  enbaddu kariyam ( action ) seidu kondu Eraivanin (GOD) ninaivil eruppadu.
sundramurthy


உண்மைதான் ஐயா. கர்மத்தை யோகமாக செய்பவன் கர்மயோகி.

வினோத்-VINOTH

unread,
May 24, 2012, 3:15:08 AM5/24/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

உண்மையும் பொய்மையும் அகந்தையை அதிகப்படுத்தும்.

நான் பெரியவன் நிறைய பணமிருக்கிறது புகழ் இருக்கிறது அழகு இருக்கறது வீரம் இருக்கிறது அறிவு இருக்கிறது என்பது போன்ற உண்மையை ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போதே அங்கே அவன் அகந்தை தலை தூக்கிவிடும்.

தனக்கு எதிராக ஒருவர் பொய் கூறினால் அல்லது தான் உண்மை என நம்பி பெருமைப்படும் ஒன்று பொய் என நிரூபிக்கப்படும் போது அங்கே அவனது அகந்தை விழிப்படைந்து அந்த பொய்யை ஏற்க மறுக்கும். பொய்யின் பலம் அதிகப்படும் போது அதை எதிர்க்க அவன் அகந்தையின் பலமும் அதிகரிக்கும். அகந்தையின் பலம் அதிகமாகும்.

உண்மையிலும் பொய்மையிலும் அகந்தை அகிதமாவதை உணர்ந்து அறிவால் அகந்தையை அழிப்பவன் ஞானி.

வினோத்-VINOTH

unread,
May 25, 2012, 1:21:24 AM5/25/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

ஒருவன் அழியவும் ஒருவன் திருந்தவும் அவனுக்கு அகந்தை வினையூக்கியாக வந்து சேரும்


நம் இதிகாசங்களிலும் செவிவழிக்கதைகளிலும் அழியப்போகும் ஒருவனை பார்த்தால் அவன் அந்நேரம் அகந்தையிலும் ஆசையிலும் மயங்கியவனாக காணப்படுவான். திருந்திய ஒருவனை பார்த்தாலும் அவன் அகந்தையிலும் ஆசையிலும் மயக்கமுற்றிருந்தது தெரியும்.

ஒருவன் அழியப்போகிறான் என்பதற்கு அடையாளம் அவனின் அளவு கடந்த அகந்தையும் ஆசையும் ஆகும். ஒருவன் அடிபட்டு திருந்தப்போகிறான் என்பதற்கும் இவையே அடையாளம்.

அகந்தையும் ஆசையும் அதிகமானால் அவன் செய்யும் தவறுகள் அவனுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கும். அப்போதும் கற்க இயலாமல் அகந்தையின் மயக்க நிலையில் இருப்போர் முற்றிலுமாக அழிக்கப்படுவர்.

சத்திய ஜீவன் ஒருவனை எப்போதும் நல்வழிப்படுத்தும் காரியங்களையே செய்யும். சுய அறிவால் திருந்தாதவன் அடிபட்டு திருந்த அவனுக்கு அகந்தையை வினையூக்கியாக கொடுக்கும்.

வினோத்-VINOTH

unread,
May 28, 2012, 2:34:09 AM5/28/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

அறிவு வளர வளர குழப்பங்களும் வளரும். குழப்பங்கள் அறிவை வளர்க்கும்.

தண்ணீரில் தீ வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நீர் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொதித்து குமிழிகள் வருவது போல அறிவு எனும் தீ வளர வளர பலவகையான எண்ணங்கள் வந்து குழப்பங்களை ஏற்படுத்தும்.

எதுவும் புரியாத மாணவனுக்கு சந்தேகம் வருவதில்லை என்பது போல அறிவு இல்லாதவர் மனதில் இருண்ட அமைதி தவழும்.

ஆனால், தீர்வுகள் எட்டப்படாத எண்ணங்கள் குழப்பங்களாக அதிக அளவு அலைபாய்வதை ஒரு ஆராய்ச்சியாளரின் மனதில் காண முடியும். அதே குழப்பங்களும் சந்தேகங்களுமே அவர் புதிய கண்டுபிடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும்.

குழப்பங்கள் வரவில்லை எனில் தெரிந்து கொண்ட அறிவை மேன் மேலும் சிந்திக்கவில்லை என்பது பொருள். குழப்பங்கள் வந்தால் அறிவு இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது என்பது பொருள்.

வினோத்-VINOTH

unread,
Jun 7, 2012, 2:02:27 AM6/7/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

நல்ல உள்ளங்கள் அன்பை உணர்வாக வைத்திருக்கும். கெட்ட உள்ளங்கள் அன்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும்.

ஒருவனை அறிவால் வீழ்த்த முடியாது என அறிந்தவன் அன்பை ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பிப்பான்.

கெட்டவர்கள், மதம் மாற்ற நினைப்பவர்கள், வணிகத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் எல்லாம் எதிரியை நேரடியாக வீழ்த்த முடியாமல் தோற்ற பின்பு, அன்பு என்பதை ஒரு கடைசி ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.

நல்ல உள்ளங்கள் தான் அன்பு வைத்திருப்பதை தன் செயல்களால் வெளிப்படுத்திக்கொண்டிராது. நல்ல உள்ளங்களின் அன்பு இயல்பாகவே ஏப்போதாவது மட்டுமே வெளிப்படும்.
நல்ல உள்ளங்கள் அன்பால் எதையும் சாதிக்க நினைக்காது.

ஆனால், கடைசியில் அவர்கள் எதிர்பார்த்தது தான் நடக்கும் என்பதால் கெட்ட உள்ளங்களும் அன்பால் எதுவும் தேவை இல்லை என்றே கடைசி வரை சொல்வார்கள். ஆனால் கெட்டவர்கள் அன்பு அடிக்கடி வெளிப்பட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளும். வெளிப்படையாக தன்னை நம்ப வைக்கும்.

அன்பிலும் உண்மையான அன்பை கண்டறிய தெரிந்தவன் ஞானி.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)

Dhivakar

unread,
Jun 7, 2012, 2:16:51 AM6/7/12
to mint...@googlegroups.com
>>கெட்டவர்கள், மதம் மாற்ற நினைப்பவர்கள், வணிகத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் எல்லாம் எதிரியை நேரடியாக வீழ்த்த முடியாமல் தோற்ற பின்பு, அன்பு என்பதை ஒரு கடைசி ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்<<. 

அன்பு கடைசி ஆயுதம் என்கிறீர்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு உண்மையான அன்பு பலனளிக்காது. எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். விளைவு இவர்கள் நினைத்தபடி வேண்டுமென்றால் அங்கே அன்பை - அன்பு எனும் நல் உணர்ச்சியை கட்டவே முடியாது.

’அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’.

அன்பென்று கொட்டு முரசே - மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.

2012/6/7 வினோத்-VINOTH <vino...@gmail.com>

நல்ல உள்ளங்கள் அன்பை உணர்வாக வைத்திருக்கும். கெட்ட உள்ளங்கள் அன்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும்.

ஒருவனை அறிவால் வீழ்த்த முடியாது என அறிந்தவன் அன்பை ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பிப்பான்.


நல்ல உள்ளங்கள் தான் அன்பு வைத்திருப்பதை தன் செயல்களால் வெளிப்படுத்திக்கொண்டிராது. நல்ல உள்ளங்களின் அன்பு இயல்பாகவே ஏப்போதாவது மட்டுமே வெளிப்படும்.
நல்ல உள்ளங்கள் அன்பால் எதையும் சாதிக்க நினைக்காது.

ஆனால், கடைசியில் அவர்கள் எதிர்பார்த்தது தான் நடக்கும் என்பதால் கெட்ட உள்ளங்களும் அன்பால் எதுவும் தேவை இல்லை என்றே கடைசி வரை சொல்வார்கள். ஆனால் கெட்டவர்கள் அன்பு அடிக்கடி வெளிப்பட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளும். வெளிப்படையாக தன்னை நம்ப வைக்கும்.

அன்பிலும் உண்மையான அன்பை கண்டறிய தெரிந்தவன் ஞானி.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Jun 7, 2012, 8:29:22 AM6/7/12
to mint...@googlegroups.com


2012/6/7 Dhivakar <venkdh...@gmail.com>

அன்பு கடைசி ஆயுதம் என்கிறீர்கள்

அன்புக்குள் ஆயுதம் எங்கிருந்து வந்தது!  அன்பு உண்மையானதாக இருந்தால், அதை ஆயுதமாகவோ, கருவியாகவோ பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.  அது இயற்கையாகவே அமைந்திருப்பது.  மனிதனால் செயற்கையாக சில திசைகளில் மறிக்கப்படுகிறது.  ‘அன்பின் வழியது உயிர்நிலை‘. இந்த மூன்று சீர்களுக்குள் பொதிந்திருக்கும் அன்புச் சும்மையை மனம் திறந்து பார்த்தால், அன்பென்பது ஆயுதமாகப்  (அல்லது கருவியாக, இன்ஸ்ட்ருமென்டாக.... எட்செட்ரா) பயன்படுத்தக்கூடிய ஒன்றன்று என்பது விளங்கும்.

அன்பருக்குக் கோபம் வராது என்ற நம்பிக்கையில் இதைச் சொல்லிவிட்டேன்.  அன்பருக்குக் கோபம் வந்தால், அவருடைய ஆயுதப் பிரயோகத்தை வாங்கிக் கொள்கிறேன். :))

--
அன்புடன்,
ஹரிகி.

வினோத்-VINOTH

unread,
Jun 8, 2012, 1:48:45 AM6/8/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

அன்பு இயல்பாக வெளிப்படுவதை விட ஆயுதமாக பயன்படுத்தப்படும் போது அதை அதிகமாக உணர முடியும்.

அன்பானவர்களின் அன்பு தானாகவே வெளிப்படும். அவர்களாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லாததாலும், அன்பு எல்லா சமயத்திலும் இருக்கும் என்பதாலும் அது மற்றவர்களுக்கு தெரியும் என்பதாலும் அதை எல்லா சமயத்திலும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த அன்பு வெளிப்படும் போது அதன் ஆழத்தை நாம் அறிய முடியும்.

ஆனால் ஆயுதமாக பயன்படுத்தப்படும் அன்பானது அதை மற்றவர்களுக்கு உணர்த்தி தன்னை நிலைநிறுத்த அடிக்கடி தன்னை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். எனவே அவர்கள் அதை அடிக்கடி வெளிப்படையாக காட்டிக்கொள்வார்கள். அதனால் நாம் அதை அதிகமாக உணர முடியும். மனதை உருக்கும் வார்த்தைகளை அவர்களிடம் கேட்க முடியும்.

தனக்கு ஏதாவது பொருள் தேவை என்றால் முதலில் பெற்றோரை மிக அதிகமாகவே கொஞ்சும் குழந்தைகள், கணவனிடம் ஏதேனும் நிறைவேற இருந்தால் அதை மறைத்து முதலில் கொஞ்சும் மனைவி அல்லது மனைவியிடம் கொஞ்சும் கணவன், அதுவரை இல்லாமல் பணம் புகழ் வந்ததும் அதிகமாகும் சொந்தங்கள் நட்புகள், காதலர்கள், வேலை வாங்குவதற்காக சேவையாளர்களிடம் அன்பாக பேசும் மேலதிகாரிகள் இவர்களிடம் அன்பு ஆயுதமாக பயன்படுவதை வெளிப்படையாக காண முடியும்.

அன்பால் நம்பி ஏமாந்த பின்பு அதை நம்பிக்கை துரோகம் என்ற பெயரால் சிலர் அழைப்பதை கேட்டிருக்கக்கூடும். ஏமாற்றத்தின் அளவு அதிகரிக்கும் போது அது துரோகமாக மாறுகிறது.

அன்பால் நம்பி ஏமாந்த பின்பு அது தெரிய வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது அன்பின் உன்னத நிலை. அன்பால் ஏமாற்றப்படுவது அறிந்தே ஏமாற வேண்டுமா வேண்டாமா என முடிவெடுத்து செயல்படுவது ஞானியின் நிலை.

Geetha Sambasivam

unread,
Jun 8, 2012, 1:52:49 AM6/8/12
to mint...@googlegroups.com
emotional blackmail??????

2012/6/8 வினோத்-VINOTH <vino...@gmail.com>
360.gif

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2012, 12:09:00 AM6/11/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

அனைத்து மனிதரிடத்திலும் அனைத்து விதமாக உணர்வுகளும் கண்டிப்பாக அடங்கியிருக்கிறது.

மனிதன் என்ற இயந்திரத்தில் அனைத்துவிதமான உணர்வுகளும் வைக்கப்பட்டே அவன் படைக்கப்பட்டுள்ளான். இதில் ஏதேனும் ஒரு உணர்வு இல்லை என்றாலும் அது அவனுடைய படைப்பின் குறை ஆகும்.

ஒருவனுக்கு வாழ்க்கையில் கோபமே வரவில்லை என்றால் அவன் உணர்வற்ற ஜடம் என்று மற்றவர்களால் இகழப்படுவான்.

தான் பாதுகாக்க வேண்டிய ஒன்றை அல்லது நபர்களை வேறொருவர் பறிக்கும் போது அல்லது துன்புறுத்தும் போது எந்த உணர்வும் இல்லாமல் வேடிக்கை பார்ப்பவன் கோழை என கருதப்படுவான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவும் அறிவிற்கு ஏற்பவும் அந்தந்த உணர்வுகள் வெளிப்படாமல் இருக்கக்கூடும் அல்லது அதே உணர்வு வேறு வடிவில் வெளிப்படும்.

தன்னை விட அதிகம் படிப்பவனை பார்த்தால் ஒருவனுக்கு பொறாமை வரலாம் வேறு சிலருக்கு அதே பொறாமை நாமும் இன்னும் அதிகம் முயற்சி செய்ய வேண்டும் என்ற உந்துதலாக வெளிவரும்.

அழகான பெண்ணை பார்த்தால் அடைய வேண்டும் என்ற உணர்வு காமமாகவோ அல்லது நட்பாகவோ வெளிப்படும்.

புகழ் பெற்ற ஒருவரை பார்க்கும் போது தானும் அதே புகழை அடைய தனக்கும் வழி இருந்தால் அதை தேடும் அந்த வாய்ப்பு இல்லாத போது அவரிடம் நட்பு ஏற்படுத்தி அதில் பெருமை காண முயற்சி செய்யும்.

கள்ளத்தனம் சின்ன வயதில் இரசிக்கத்தக்க குறும்பாக வெளிப்படும் வயதாகும் போது தவறு செய்யவும் தூண்டும்.

எந்த உணர்வை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று கட்டுப்படுத்தி தேவைக்கேற்ப வெளிப்படுத்துபவன் ஞானி.

வினோத்-VINOTH

unread,
Jun 12, 2012, 1:40:30 AM6/12/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

அடுத்தவன் தவறை சுட்டிக்காட்ட ஒருவன் அகந்தை முன் நிற்கும். தன் தவறை உணர்ந்தால் அமைதியாகிவிடும்.

அகந்தை தன்னை பெருமையுடையவனாக நினைத்துக்கொள்கிறது. தன்னைப்போல பெருமையுடைவராக நம்புவரை மட்டுமே நட்பாக ஏற்க தேடுகிறது. மற்வர்களை தன் கீழ் என நினைத்துக்கொள்கிறது.

அகந்தை அடுத்தவர் தவறை சுட்டிக்காட்டி அதன் மூலம் தன் பெருமையை மற்றவர் முன்னிலையில் நிலைநாட்ட விரும்புகிறது. ஆனால் தான் சொன்னது தவறு என்ற நிலை வரும் போது வெளிச்சத்தின் முன் இருள் ஓடி ஒழிந்து கொள்வது போல அமைதியாகிவிடுகிறது. மன்னிப்பு கேட்க அது முன்னே நின்று கொண்டிராது.

திருந்தாத அகந்தையோ ஒழிந்து இருந்த வண்ணமே வேறு நபர்களின் தவறை தேடிக்கொண்டிருக்கும்.

வினோத்-VINOTH

unread,
Jun 13, 2012, 2:45:51 AM6/13/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

அடுத்தவரின் நம்மைப்பற்றிய உணர்வுகள் நம்மை பாதிக்கும். அதை நாம் சாதாரணமாக தடுத்துவிட முடியாது.

நம் பேச நினைத்திருக்கும் ஒருவர் அவரே நம்முடன் பேசுவது அல்லது அவரை ஏதேச்சையாக காண நேரிடுவது இதன் ஒரு விளைவு.

நம் தாயின் பிரார்த்தனைகள் நம்மை எப்போதும் கூடவே இருந்து காக்கும். தாய் ஏங்கி அழுதாலும் அது பிள்ளையின் வாழ்வை வெகுவாக பாதிக்கும்.

பிள்ளைக்கு ஏதேனும் ஆபத்து என்றால் தாய் எத்தனை தூரத்தில் இருந்தாலும் அவளுக்கு நெஞ்சு பதற்றமாக இருக்கும். மற்ற உறவுகளை விட தாய்க்கு உடல் ரீதியாக நமக்கு சொந்தம் என்பதால் தாயால் இதை வெகுவாக உணர முடியும்.

கணவன் மனைவிக்குள்ளும் ஒருவரது எண்ணங்கள் மற்றவர் மனதில் அன்பை சுரக்க வைக்கும்.

ஒரு தலைக்காதலாக இருந்தால் கூட ஒருவரது எண்ணங்கள் மற்றவரை பாதிக்கும். அவரது எண்ணத்தின் வீரியத்தை பொறுத்து அது மற்றவர் மனதில் காதல் உணர்வை வரவைக்கும். பெண்களுக்கு மனதில் காரணமில்லாமல் விரக தாபம் ஏற்பட்டால் யாரோ அவர்களை அன்பாக நினைக்கிறார்கள் என்பது பொருள்.

பொறாமையுடன் அல்லது கோபத்துடன் உங்கள் எதிரியை நினைத்தவண்ணம் இருந்தால் அது அவர்களை பாதிக்கும். அந்த பாதிப்பின் பலன் உங்கள் இருவரின் எண்ணத்தையும் கர்ம பலனையும் பொறுத்து நல்லதாகவோ தீயதாகவோ அமையும்.

இந்த எண்ணங்களின் பாதிப்பிலிருந்து விடுபட ஆன்மிக சாதகர்களுக்கு முன்பு ஆள் நடமாட்டம் அற்ற காடு தேவைப்பட்டது.

ஆழ்ந்த தியானம் மனதை சத்திய ஜீவனை நோக்கி இழுக்கும். அது பிரம்மத்தை சலனப்படுத்தும். அப்போது வருகிற எண்ணங்கள் நல்லதானாலும் தீயதானாலும் வலுவான விளைவை ஏற்படுத்தும். ஆழ் மனதில் லயித்திருக்கும் முனிவர்களின் வாக்கு பலிப்பதற்கும் இது காரணமாக அமையும்.

எதனால் நாம் பாதிக்கப்படுகிறோமோ அதன் மீது விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் உள்ள ஒருவருக்கு மட்டுமே அந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

வினோத்-VINOTH

unread,
Jun 17, 2012, 10:47:35 PM6/17/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

காலத்திற்கு கட்டுப்பட்ட உண்மை பொய்க்கு நிகராகும். பொய் என்பது இறந்த கால உண்மையாக கூட இருக்கலாம்.

பிரம்மத்தை தவிர மற்ற அனைத்தும் காலத்திற்கு கட்டுப்பட்டதால் அவை அனைத்தும் தற்காலிக உண்மைகளே. இது மாயையின் பகுதி.

'நான் உயிருடன் இருக்கிறேன்' என்பது ஒரு தற்காலிக உண்மை. காலம் மாறும் போது இந்த தற்காலிக உண்மை நிரந்தர பொய்யாக மாறிவிடும். நான் இருந்தேன், இறப்பேன் என்பதும் காலத்திற்கு கட்டுப்பட்ட தற்காலிக உண்மைகளே.

'சூரியன் கிழக்கில் உதிக்கும்' என்பதும் கூட பூமியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டது.

'ஆன்மாவிற்கு அழிவில்லை' என்பதும் தற்காலிக உண்மையே. ஆன்மா காலத்திற்கு கட்டுப்பட்டு செயல்படுகிறது. அது தன்னை விடுவித்து பிரம்மத்துடன் சேரும் போது அது பிரம்மமாகவே மாறிவிடுவதால் அது அழிந்து விடுகிறது.

காலத்திற்கு உண்மையை பொய்யாக்கவும் பொய்யை உண்மையாக்கவும் சக்தி உண்டு. ஏனென்றால் காலம் என்பது மாயையின் அங்கம். மாயை தன்னை உணர்பவர்களை பொறுத்து தன் வெளிப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.

வினோத்-VINOTH

unread,
Aug 17, 2012, 2:01:57 AM8/17/12
to தமிழ்நண்பர்கள், தமிழ் அமுதம், mintamil, தெய்வத்தமிழ்

தன் அறிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அடுத்தவர் உணர்விற்கும் கொடுக்கும் மனிதன் மனிதர்களில் சிறந்தவன் ஆகிறான்.

அறிவு என்பது சிறந்தது தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அறிவு மட்டுமே இருந்து உணர்வு இல்லாமல் இருக்கும் மனிதன் இயந்திரம் போன்றவன். மற்றவர் உணர்வுகளை உணரும் மனம் இல்லாதவனால் அவர்கள் மனதில் வாழ முடியாது.

தனக்கு தான் அறிவு இருக்கிறது என தனக்கு தானே நம்புகிறவன் வாழ்க்கை இந்த சமூகத்தில் மற்றவர்கள் குறைகளை மட்டுமே சொல்லித்திரியும் ஒரு மடையனின் வாழ்க்கை போலவே இருக்கும். இதற்கு பல சமூக தலைவர்களின் வாழ்க்கை உதாரணம். இவர்களைப்போலவே சிந்திப்பவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளலாமே தவிர மற்றவர்கள் இவர்களை வெறுப்பார்கள்.

உறவுகளை தன் அறிவை வைத்து எடை போடுபவன் உறவுகளை வெகு சீக்கிரமே இழந்துவிடுவான்.
மனித உறவுகள் நீதி நியாயத்தை விட உணர்வை முக்கியமாக கருதுகிறது. தன்னை குறை சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவனை ஒதுக்கிவிட்டு தன்னை ஏற்று ஆதரிக்கும் ஒருவனையே மனித மனங்கள் ஏற்கும்.

(இங்கே அறிவு என குறிப்பிடப்படுவது மனித மூளைக்கு உட்பட்ட அறிவு)

நீதி நியாயம் என்பவை அறிவில் செயல்படுவன.
அன்பு கருணை இவை உணர்வில் செயல்படுவன.

சத்தியமும் உணர்வும் இணைந்தது இறை ஸ்வரூபம். அவன் அளவு கடந்த ஒரு முட்டாளின் பக்திக்கும் இரங்குவான். சத்திய அறிவுக்கும் நீதியாக இருப்பான். ஆனால் மனித அறிவை வைத்து உணர்வை எடைபோடுபவனுக்கு அகப்பட மாட்டான்.

Innamburan Innamburan

unread,
Aug 17, 2012, 2:12:35 AM8/17/12
to mint...@googlegroups.com
தன் உணர்வுக்கு மட்டும் முக்கியத்துவும் கொடுத்து, மற்றவர் அறிவுரையை புறக்கணிப்பதும் ஒரு குறையே. மனிதனின் மனமும் மூளையும் இணைந்து பயணித்தால் உணர்வும் (தனதும்,மற்றவர்களதும்) அறிவும்  (தனதும்,மற்றவர்களதும்) ஒன்றுக்கு மற்றது உரிய துணை. வாழ்வியலுக்கு மேன்மை.
இன்னம்பூரான்
17 08 2012

2012/8/17 வினோத்-VINOTH <vino...@gmail.com>
It is loading more messages.
0 new messages