பச்சையா சில சொற்கள்...

200 views
Skip to first unread message

Thamilthendral Muthupillai

unread,
Apr 19, 2012, 1:13:43 PM4/19/12
to மின்தமிழ்
எங்களுர்ப் பக்கம் வழக்கில் உள்ள சொற்கள் இவை:
பச்சத் தண்ணி (குளிர்ந்த நீர்)
பச்சப் பிள்ளை (கைக்குழந்தை)
பச்ச நாவி (நஞ்சு)

இங்கே வழக்கில் பச்சை என்பது பச்ச என்றாயிற்று.
தமிழார்வலர்கள் இந்த 'பச்ச' யின் விவரம் அறியத் தாருங்களேன்.

Swaminathan Venkat

unread,
Apr 19, 2012, 11:24:43 PM4/19/12
to mint...@googlegroups.com
அது வரை தான் தனக்குத் தெரிந்த பாஷையில் திட்டித் தீர்த்து வந்த பெரியார் ஈ.வே,ரா, காமராஜ் முதன் மந்திரியானதும் அவரை பச்சைத் தமிழர் என்று புகழ்ந்து பாராட்ட்லானார். காமராஜர் பச்சைத் தமிழர் ஆனார். இந்த பச்சையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சையாகப் பேசுதல் என்பதும் ஒரு வழ்க்கு. மூடி மறைக்காத, பூச்சு இல்லாத, அனேகமாக ஆபாசமாகப் பேசுதலும் இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னும் பல வழக்குகள் தென்படலாம்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Apr 20, 2012, 12:44:42 AM4/20/12
to mint...@googlegroups.com
பச்ச மண்
நாகராசன்

2012/4/20 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

seshadri sridharan

unread,
Apr 19, 2012, 11:01:18 PM4/19/12
to mint...@googlegroups.com
 பச்சை என்பது இயற்கையான, கலப்பில்லாத, தூய்மையான என்ற பொருளில் ஆளப்படுகின்றது. காட்டாக, பச்சைப் பொய், பச்சைத் தமிழர். 

பச்சைக் என்பது பண்படாத என்ற பொருளிலும் வழங்குவதுண்டு. காட்டாக, பிள்ளை பெற்ற உடம்பை பச்சை உடம்பு என்பர். பச்சைக் குழந்தை என்பது எல்லோரும் கையாளும் பக்குவத்தில் இல்லாத உடலமைப்பு கொண்ட குழந்தை.

சேசாத்திரி

2012/4/19 Thamilthendral Muthupillai <tthe...@thanjai.net>

--
"

seshadri sridharan

unread,
Apr 19, 2012, 11:29:17 PM4/19/12
to mint...@googlegroups.com


2012/4/20 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

இந்த பச்சையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சையாகப் பேசுதல் என்பதும் ஒரு வழ்க்கு. மூடி மறைக்காத, பூச்சு இல்லாத, அனேகமாக ஆபாசமாகப் பேசுதலும் இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னும் பல வழக்குகள் தென்படலாம்.

உள்ளதை உள்ளபடியே அதன் இயல்பு மாறாமல் பேசுவதைத் தான் இயற்கையான என்று குறிப்பிட்டுள்ளேன். 

Hari Krishnan

unread,
Apr 20, 2012, 2:19:40 AM4/20/12
to mint...@googlegroups.com


2012/4/20 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

பச்சையாகப் பேசுதல் என்பதும் ஒரு வழ்க்கு. மூடி மறைக்காத, பூச்சு இல்லாத, அனேகமாக ஆபாசமாகப் பேசுதலும் இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னும் பல வழக்குகள் தென்படலாம்.

பச்சையா சொன்னா, சிவப்பு விளக்கில் நீலத் திரைப்படத்தில் வந்ததை மஞ்சள் பத்திரிகை வெளியிடுவதாகத் தெரிய வருகிறது.  :D

--
அன்புடன்,
ஹரிகி.

Swaminathan Venkat

unread,
Apr 20, 2012, 2:25:30 AM4/20/12
to mint...@googlegroups.com
எந்த பின்னூட்டத்திலும் (இது தானே அதற்குப் பெயர்?) பெயர் இல்லாவிட்டாலும் ஹரிஹி எழுதியது என்று சொல்லிவிடலாம். அவர் எழுத்தில் தெரியும் முத்திரை எழுத்தை மீறி வரும்.

N. Ganesan

unread,
Apr 19, 2012, 9:40:28 PM4/19/12
to மின்தமிழ், Jean-Luc Chevillard, yavaru...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com

On Apr 19, 10:13 am, Thamilthendral Muthupillai

எல்லா ஊரிலும் உள்ள வழக்கம்தான்.

பசுமை - fresh, raw என்ற பொருளில் வருகிறது.
பச்சை என்றால் வெறும் நிறத்தைக் குறிப்பதில்லை.

உங்கள் கேள்வியைப் பார்த்ததும் 101 ஆண்டு வாழ்ந்து
மறைந்த பிரெஞ்சு மாந்தவியல் நிபுணர் ஞாபகத்துக்கு
வருகிறார். அவரது “Raw and the Cooked" படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/The_Raw_and_the_Cooked
"Cuit" in French does not necessarily mean "cooked", but is also used
to denote "done" or "prepared", which is not necessarily obtained by
cooking. In this case, Strauss' use of cuit implies what culture and
society do to the raw and make it 'done' or 'cooked'.

"Cuit" எனும் பிரெஞ்சுச் சொல்லுக்கு எதிர்ப்பதம் தமிழின் “பச்சை”
எனக் கருதுகிறேன்.

க்லாட் லெவி-ஸ்ட்ராஸ் (1908-2009):
http://en.wikipedia.org/wiki/Claude_L%C3%A9vi-Strauss

நா. கணேசன்

Vijay Vanbakkam

unread,
Apr 20, 2012, 5:36:45 AM4/20/12
to mint...@googlegroups.com
ஹிந்தியிலும் பக்கா என்றால்  சமைத்தது மட்டுல் இல்லை, முடிவான தீர்மானம் என்ற பொருளிலும்.
 
தமிழில் பச்சை என்பது பல பொருள் கொண்டது.,  can be used in various contexts.  நல்ல தமிழ் அகராதி என்றால் எல்லா பொருள்களையும் கொடுக்க வேண்டும்.
 
 
 
வகொவி
 
> Date: Thu, 19 Apr 2012 18:40:28 -0700
> Subject: [MinTamil] Re: பச்சையா சில சொற்கள்...
> From: naa.g...@gmail.com
> To: mint...@googlegroups.com
> CC: jeanluc.c...@gmail.com; yavaru...@googlegroups.com; santhav...@googlegroups.com; thami...@googlegroups.com

singam

unread,
Apr 20, 2012, 10:30:40 AM4/20/12
to மின்தமிழ்
எல்லாம் சரி ,' பச்சரிசி' ய மறந்துட்டிங்களே

On Apr 20, 2:36 pm, Vijay Vanbakkam <vcvi...@hotmail.com> wrote:
> ஹிந்தியிலும் பக்கா என்றால்  சமைத்தது மட்டுல் இல்லை, முடிவான தீர்மானம் என்ற பொருளிலும்.
>
> தமிழில் பச்சை என்பது பல பொருள் கொண்டது.,  can be used in various contexts.  நல்ல தமிழ் அகராதி என்றால் எல்லா பொருள்களையும் கொடுக்க வேண்டும்.
>
> வகொவி
>
>
>
>
>
>
>
> > Date: Thu, 19 Apr 2012 18:40:28 -0700
> > Subject: [MinTamil] Re: பச்சையா சில சொற்கள்...

> > From: naa.gane...@gmail.com
> > To: mint...@googlegroups.com
> > CC: jeanluc.chevill...@gmail.com; yavaru...@googlegroups.com; santhav...@googlegroups.com; thami...@googlegroups.com

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

seshadri sridharan

unread,
Apr 20, 2012, 11:57:32 AM4/20/12
to mint...@googlegroups.com

பச்சைமண் என்பது virgin land என்ற பொருளில் வழங்குகின்றது. இதற்கும் பண்படுத்தி பயிர் செய்யாத இயற்கை நிலம் என்பது பொருள். இங்கு இயற்கை என்பதற்கும் பண்படாத என்பதற்கும் ஒரு உறவு உண்டு என்பதை உணரலாம்.    ஆதியில் மாந்தன் தன் முயற்சி அல்லாதவற்றை தாவரங்களின் பசுமை நிறத்தின் ஊடாகவே கண்டதால் அவன் இயற்கையை பச்சை என்ற பொருளில் உணர்ந்தான் எனக் கொள்ளலாம். 


சேசாத்திரி


2012/4/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 20, 2012, 12:14:05 PM4/20/12
to mint...@googlegroups.com
அதெல்லாம் விடுங்க
முன்னம் ஒரு முறை கண்ணனின் நிறம் கருப்பா நீலமா என்ற விவாதம் நடந்தது
வண்ணத்தைக் குறிக்கும் வார்த்தைகளை அலசும்போது நாம-ரூப அடிப்படையில் அலச வேண்டியது அவசியம்
கருப்பு என்றால் அறுதியிடமுடியாத காலத்தைக் குறிக்கும் அதனால் கன்ணனின் நிறம் கருப்பு என்பதுபோல்
பச்சை என்ற நாமத்துக்கு பச்சைவண்ணம் என்ற ரூபத்தைத்தவிர வேறு ஏதாவது பொருள் உண்டா
பச்சை என்பது விர்ஜின் என்பது சரியா என்று மீண்டும் சிந்திக்கவும்
நாகராசன்

2012/4/20 seshadri sridharan <ssesh...@gmail.com>

rajam

unread,
Apr 20, 2012, 2:36:52 PM4/20/12
to mint...@googlegroups.com

முன்னம் ஒரு முறை கண்ணனின் நிறம் கருப்பா நீலமா என்ற விவாதம் நடந்தது
வண்ணத்தைக் குறிக்கும் வார்த்தைகளை அலசும்போது நாம-ரூப அடிப்படையில் அலச வேண்டியது அவசியம்
"நாம-ரூப" என்று தாங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லை. எனக்கு புரிந்தவரை அந்த அலசல் உடனடித் தேவையில்லை.
போங்கள், போங்கள் ... சங்க இலக்கியத்துக்கோ அதுக்கும் முன்னரோ போங்கள். "பச்" என்ற வேர் எப்படிக் கிளைத்தது என்று புலப்படும்.  

பச்> பசி ... இன்ன பிற 
பச்> பசு
பச்> பசை ... இன்ன பிற 
 

"பசுங்கண்" என்ற ஒரு சொல்லுக்குத் தாங்கள் எங்ஙனம் பொருள் உரைப்பீர் என அறிந்துகொள்ள ஆவல். 

Nagarajan Vadivel

unread,
Apr 20, 2012, 4:17:15 PM4/20/12
to mint...@googlegroups.com
அன்புடை பேராசிரியர்
புரியல.  நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும்
நான் குறிப்பிட்டது மனித இயக்கத்தில் புலனறியும் பொறிகள் புற உலகை நோக்குவதில் உள்ள இடர்ப்பாடு
எடுத்துக்காட்டாக ப்ரோமைட் என்ற வேதியப்பொருள் மனிதன் பயன்படுத்தும் பொருள்களில் வண்ணத்தை உருவாக்கும்
மஞ்சள் வண்ணத்தைப் ப்ரோமைட் உருவாக்கும்போது அது 20000க்கு மேற்பட்ட மஞ்சள் வண்னத்தைக் கண் அறியவல்லது.  மொழியில் வண்னங்களை விளிக்கும் சொல் மிகக்குறைந்த அளவே
கண் ஆயிரக்கண்க்கான் பச்சை வண்ணங்களைக் (ரூபம்)கண்டறியும் வல்லமை கொண்டது.  ஆயினும் பச்சை வண்னத்தைக் குறிக்கும் சொல் எண்ணிக்கை அளவில் மிகக் குறந்தவை
நாகராசன்

2012/4/21 rajam <ra...@earthlink.net>

Tthamizth Tthenee

unread,
Apr 20, 2012, 11:26:23 PM4/20/12
to mint...@googlegroups.com
பச்சை மஞ்சள் என்பார்கள்  பசுமஞ்சள் என்பார்கள்

 

காயாமல் பசுமையாய் இருக்கும் மஞ்சளை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

seshadri sridharan

unread,
Apr 20, 2012, 11:22:35 PM4/20/12
to mint...@googlegroups.com

ஐயா,


ஆங்கிலத்தில் unprocessed என்பார்களே, இதாவது உள்ளது உள்ளபடியே என்று அதையே இந்த virgin land, பச்சை மண் என்பது குறிக்கின்றது எனலாம். நெல்லை ஈரமாக்கி அதைப் புழுக்கி (வேகவைத்து) பின் உமி நீக்குவது என்பது ஒரு செயன்முறை (process).  இந்த வகையில் பெறப்படுவது தான் புழுங்கல் அரிசி. இந்த செயன்முறைக்கு உட்படாத அரிசி பச்சரிசி எனப்படுவதை நோக்குக. உழவிற்காக பண்படுத்திய நிலம் தமிழில் புலம் எனப்படுகின்றது. இந்த பண்படுத்துதல் என்பதும் ஒரு வகை செயன்முறை (process) தான். இவ்வாறு பண்படுத்தாமல் இருக்கும் நிலமே பச்சைமண். இப்போது கன்னி நிலம் என்பதையும் கன்னி என்ற வழக்கையும் நோக்கினால் அது இயல்பாக இருப்பது என்பதை உணர்த்தக் காண்கின்றோம். இயல்பு என்பதினின்றே இயற்கை என்ற சொல் உருவானது. கன்னி நிலம் என்பதும் பச்சைமண் என்பதும் ஒரே பொருள் கொண்டவை. 

seshadri sridharan

unread,
Apr 21, 2012, 12:00:16 PM4/21/12
to mint...@googlegroups.com

 rijபசுமஞ்சள், பசுமண் ஆகியன ஈரமான என்ற பொருளில் குறிப்பிடப்பட்டாலும் காய்தல் என்னும் சுடுதல் செய்முறைக்கு உட்படாததால் அவையும் இயற்கையght 


2012/4/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

seshadri sridharan

unread,
Apr 21, 2012, 12:05:20 PM4/21/12
to mint...@googlegroups.com

பசுமஞ்சள், பசுமண் ஆகியன ஈரமான என்ற பொருளில் குறிப்பிடப்பட்டாலும் காய்தல் என்னும் சுடுதல் செய்முறைக்கு உட்படாததால் அவையும் இயற்கையான  என்ற பொருளையே கொண்டிருப்பது நோக்கத்தக்கது. இதாவது தோன்றுங்கால் இருந்த இயல்பு மாறாத என்பது ஈண்டு உணரப்படவேண்டும்.


 

சேசாத்திரி


2012/4/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
பச்சை மஞ்சள் என்பார்கள்  பசுமஞ்சள் என்பார்கள்

 

காயாமல் பசுமையாய் இருக்கும் மஞ்சளை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Thamilthendral Muthupillai

unread,
Apr 23, 2012, 2:29:08 PM4/23/12
to மின்தமிழ்
அன்பர்களின் கலந்துடையாடல்களிலிருந்து நான் மீட்டெடுத்துக்கொண்டவை இவை:
பச்ச தண்ணீ - வெறும் குளிர்ந்த நீர் மட்டுமன்று; புதிதான (அதாங்க fresh)

குளிர்ந்த நீர்)
-- அபோதெல்லாம் எங்கள் வீட்டில் இருக்கும் கேணியிலிருந்து தினமும் எம்
தாயார் நீர் இறைத்து பானைகளில் நிறைத்து வைத்துக்கொள்வார்.அதற்கு முன்பாக
நேற்று நிறைத்து இன்னும் பயன்படுத்தாமல் இருக்கும் முழுப் பானை நீரையும்
தோட்டத்து செடிகளில் அப்படியே கவிழ்த்துவிடுவார். அது எல்லோர்
இல்லத்திலும் நாளும் நடக்கும் கதைதான். அதனால் அப்போது எல்லோரும்
குடித்தது என்னவோ 'பச்ச தண்ணீ ' தான்.
ஆனால் இப்ப குடிக்க கிடைக்கும் 'பச்ச தண்ணீ 'யை டாஸமாக் குடியர்கள்
அனுபவிக்கிறார்கள் (அதாங்க raw-வா அடிக்கிறது.. எதுவும் கலக்காம
அடிக்கிறதைச் சொன்னேன்)

பச்ச புள்ளை - புதிதான, பண்படாத(raw-வா) குழந்தை (பச்ச புள்ளய எப்படித்
தூக்குறா பாறேன்...)

பச்ச நாவி - இயற்கையில் (எளிதில் கிடைக்கும்) நஞ்சு. (ஆமாம், நாவி
என்றால் நஞ்சா...?)

பச்சை மண் - பண்படாத நிலம்.

பச்சரிசி - ஃப்ரஷ்ஷான அரிசிங்க... (இப்ப நானிருக்கும் ஊரில் ரா ரைஸ்
என்று கடைகளில் விற்கிறார்கள். புழுங்கரிசிக்கு பாயில்ட் அரிசியாம்)

பசும் பொன் - தூய பொன் (24 காரட்?)

பச்சைத் தமிழன் - கலப்பற்ற தமிழன் (நீங்களும் நானுந்தான்).

பச்ச பச்சயா பேசுறான் - பண்படாத சொற்களைப் பேசுகிறான்

நாம் முன்னாளில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததனாலோ என்னவோ அதிகம் பச்சையை
'பச்சையா' வழக்கிலும் இலக்கியத்திலும் பயன்படுத்தவில்லை போலும்.

DEV RAJ

unread,
Apr 24, 2012, 12:59:29 AM4/24/12
to மின்தமிழ்
On Apr 23, 11:29 am, Thamilthendral Muthupillai

<tthend...@thanjai.net> wrote:
>>> நாம் முன்னாளில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததனாலோ என்னவோ அதிகம் பச்சையை
'பச்சையா' வழக்கிலும் இலக்கியத்திலும் பயன்படுத்தவில்லை போலும் <<<


இலக்கியத்தில் பசுங்காய் -

மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு *பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை..
(குறுந்தொகை)


நுண்ணீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண்ணீர் *பசுங்காய் சேறு கொள முற்ற....
(நெடுநல்வாடை)


சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு *பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்ய....
(சிலம்பு)

மொய்த்தாரை ஓர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால்
தைத்தான் அவர் கழல் திண் *பசுங்காய் ஒத்தனர் சரத்தால்..
(கம்பராமாயணம்)


கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் *பசுங்காய் தூங்கி....
(கந்தபுராணம்)

பன்னிறப் *பசுங்காய் சிந்தும் பழுமரக் காமர் காவுள்
பொன்னிவர் புனை மாண் கோயில் புரவலற்கு அமைந்த அன்றே
(கந்தபுராணம்)

தேவ்


On Apr 23, 11:29 am, Thamilthendral Muthupillai

seshadri sridharan

unread,
Apr 24, 2012, 5:25:21 AM4/24/12
to mint...@googlegroups.com
மக்கள் வழக்கையும் அகராதி எழுதுவோர் கருத்தில் கொண்டு எழுதினால் நீண்ட கால பயன் விளையும் எனக் கருதுகிறேன்.

சேசாத்திரி

2012/4/23 Thamilthendral Muthupillai <tthe...@thanjai.net>

tirumalainumbakkam

unread,
Apr 24, 2012, 7:13:07 AM4/24/12
to மின்தமிழ்
பொருள்
பச்சை(பெ)
ஒரு நிறம்
(உ)
ஒன்றும் அறியாத, அப்பாவித்தனமான
அத ஒண்ணும் சொல்லாத, அது பச்ச மண்ணு!

குளிர்ந்த
பச்ச தண்ணி குடிச்ச தொண்ட கட்டிக்கும்
புதிய, சமீபத்தில் தோன்றிய
ஆபாசம் கொண்ட
அந்தப் பையன் பச்ச பச்சையா பேசறான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்:
fresh, raw, cool (water)
innocent, frank
vulgar, blunt

> >http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88

ARTHANARI RAMASAMY

unread,
Apr 25, 2012, 10:52:41 AM4/25/12
to mint...@googlegroups.com
அடேயப்பா
பச்சை ... பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு தகவல்கள்
பச்சமுத்து,பச்சைமலை,பச்சைமிளகாய்.... நிறம்
பச்சை தண்ணி,பச்சை பிள்ளை,........ குணம்
பச்சையாக பேசுதல்,பச்சோந்தி,..... நிறைய எழுதிக்கிட்டே போகலாம்எழுதிவிட்டார்கள்
நன்றி
அர்த்தநாரி













2012/4/24 tirumalainumbakkam <tnke...@gmail.com>



--
HORIZONS
25/2 POSTAL COLONY
COLLEGE ROAD
TIRUPUR 641602

nkantan r

unread,
Apr 27, 2012, 5:24:14 AM4/27/12
to mint...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages