மதி சேர் அரவு - இன்றைய தமிழ்மணி (தினமணி) யில் கட்டுரை

237 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Oct 18, 2015, 1:57:04 AM10/18/15
to மின்தமிழ்
அன்புடையீர்,
இன்றைய (18.10.2015 ஞாயிறு) தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் தமிழ்மணி பகுதியில் மதி சேர் அரவு என்ற தலைப்பிட்ட என் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெகுநாட்களுக்கு முன்னர் நான் எழுதி அனுப்பிய கட்டுரை இது. ஓரளவுக்கு நறுக்கப்பட்டிருந்தாலும் பொருள் சிதைப்போ, தொடர்ச்சியின்மையோ ஏற்படாவண்ணம் மிகவும் திறமையாக, அவர்களின் இட அளவுக்கேற்ற வகையில் குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனை இங்கு பார்க்கலாம்:

(இதை Ctrl + Click செய்யும்போது இதனடியில் Go to link : என்று முகவரி தோன்றுகிறது. அதனைத் தட்டுங்கள்)

ஆகஸ்ட்டு, செப்டம்பரில் 'மருத்துவ விடுப்பில்' இருந்தேன். சற்றே தேறி வரும்போது அக்டோபரில் 15 நாள் இடைவெளியில் இரண்டு அடுத்தடுத்த பெரிய அதிர்ச்சிகள். இந்த அதிர்வலைகளின் சுனாமித் தாக்கத்தினால் மனத்தில் ஏற்பட்ட பெரும் நாசம் மாறி, இயல்புநிலை அடையப் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கட்டுரை வந்து கொஞ்சம் மயிலிறகாய்த் தடவிவிட்டிருக்கிறது.
இந்தச் சுட்டியின்மூலம் கிடைக்காவிட்டால், google Search - இல் மதி சேர் அரவு என்று தட்டிப் பாருங்கள்.
முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே வெளியிடுகிறேன்.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Malarvizhi Mangay

unread,
Oct 18, 2015, 2:10:31 AM10/18/15
to mint...@googlegroups.com

கட்டுரை மொழியியல். அறிவியல்.இலக்கியம் இவற்றின்
கூட்டணி அமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.பாராட்டுகள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 18, 2015, 2:26:07 AM10/18/15
to mintamil
பாண்டியராஜா அவர்களே,

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தங்கள் பதிவைக்கண்டு மகிழ்கிறேன்.  

கட்டுரையின் இறுதியில் தங்களின் பெயர் இருப்பினும், கட்டுரைக்குமேலே ByKrishnamurthy M என்றிருக்கிறதே!  கீழே தங்கள் பெயரைப் படிக்கும்வரை கட்டுரையை எழுதியவர் பெயர் கிருஷணமூர்த்தி என்றெண்ண வாய்ப்பை அது ஏற்படுத்திவிடுகிறதே என்று கவலைகொள்கிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Oct 18, 2015, 2:29:18 AM10/18/15
to மின்தமிழ்
படித்து மகிழ்ந்தேன் ஐயா.  சுவையான விளக்கம்.
தகவலுக்காக ....இந்த சுட்டியும் கட்டுரைக்கு எடுத்துச் செல்லும். 
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/10/18/மதி-சேர்-அரவு/article3085271.ece

..... தேமொழி 

Pandiyaraja

unread,
Oct 18, 2015, 10:56:05 AM10/18/15
to மின்தமிழ்
மிக்க நன்றி தேமொழி அம்மா!
கட்டுரைக்கான முகவரி இடத்தில் தாங்கள் காட்டியுள்ள முகவரிதான் அப்படியே தெரிந்தது. நான் அதனை நகலெடுத்தபோது ஏகப்பட்ட % குறியீடுகளுடன் மிக நீளமாக வந்தது. இரண்டுமுறை முயன்றேன். அவ்வாறே வந்தது. சரி தேமொழி பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிட்டேன். பார்த்துக்கொண்டீர்கள். மிக்க நன்றி. சரி! மீனைப் பிடித்துக்கொடுத்துவிட்டீர்கள். அதை எப்படிப் பிடிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தால் அடுத்தமீனுக்குத் தங்களைத் தேடமாட்டோம் அல்லவா! (ஆனால் நன்றியுடன் ஒவ்வொருமுறையும் நினைவுகூர்வோம்!!)
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Oct 18, 2015, 11:06:34 AM10/18/15
to மின்தமிழ், vallamai, Santhavasantham, housto...@googlegroups.com

>முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே 
> வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா

கட்டுரை படித்தேன். முழுக் கட்டுரையும் (நறுக்காக் கட்டுரை) காண ஆவல்.

 மதி சேர் அரவு, உரையாசிரியர்கள் குறிப்பிடும் “புலிகொல்யானை” என்னும் தொடர்போல அமைந்துள்ளது.
விளக்கத்திற்கு நன்றி. புலியைக் கொன்ற யானையா? புலியால் கொன்ற (கொல்லப்பட்ட) யானையா? என்பது 2-ஆம் (அ) 3-ஆம் வேற்றுமை உருபுகொண்டுதான் சொல்லமுடியும்.

மதி சேர் அரவு

First Published : 18 October 2015 12:53 AM IST
புகைப்படங்கள்

இன்றைய மொழியியற் கொள்கைப்படி இத்தொடர் ஒரு மயக்குத் தொடர் ஆகும் (ambiguous  statement). இக்கூற்று மதி அரவை அடைந்தது எனக் கூறுகிறதா, அல்லது அரவு மதியை அடைந்தது எனக் கூறுகிறதா என்பதில்தான் மயக்கம். முதற் பொருளின்படி இதனை மதி, சேர், அரவு என மூன்று கூறுகளாக்கி, இவற்றை எழுவாய்(subject), பயனிலை (predicate),  செயப்படுபொருள் (object)  எனக் கொள்ளலாம். இதன்படி இது ஒரு முழுத்தொடர் ஆகிறது.

இரண்டாவது பொருளின்படி இது (மதி சேர்) அரவு என்று பிரிக்கப்பட்டு, முதலிரண்டு சொற்களும் மூன்றாம் சொல்லுக்கு அடையாக (adjective) அமைந்து இது ஓர் எழுவாய்த்தொடர்  (Noun class) ஆகிறது. இவ்வாறான மயக்குத் தொடர்கள் இலக்கிய இன்பம் தரலாம். ஆனால், அறிவியல் தமிழுக்குத் தெளிவு தேவை அல்லவா? பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இத்தொடர் காணப்படுகிறது. அங்கு இத்தொடர் எப்பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

வயல் வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓர் அழகிய சொல்லோவியத்தைக் காட்டுகிறார்.

""குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
மருதம் சான்ற மருதத் தண்பணை'' (சிறு:178-185)

"குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சி மரத்தின் கொம்பில் ஏறி, நிலையான நீர் இல்லாத குளத்தை(கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின் பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன் முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின் தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம், திங்கள் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும், மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல் வெளிகள் நீர் நிறைந்த குளங்களைக்கொண்ட மருதநிலம்' என்பதுவே கூறவந்த பொருளாகும். அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே, இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர்.

ஒரு குளத்தில் வெள்ளைத் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. இதைத்தான் புலவர் முகிழ் விரி நாள் போது என்கிறார். எனவே, அதில் தேன் நிறைய இருக்கும். ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. இக்காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது என்கிறார்.

சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow)  சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத்தான் நம் முன்னோர் பாம்பு என்றனர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர்.

உண்மையில் அரவு எனப்படும் நிழல் எப்போதும் இருப்பது. ஆனால், மதி என்னும் நிலவு பூமியைச் சுற்றிவருவது. அப்படி வரும்போது பல நேரங்களில் நிலவு, நிழலுக்குள் செல்லாமல் விலகிச் செல்கிறது. சில நேரங்களில் நிலவு நிழலுக்குள் சென்று வருகிறது. அதைத்தான் மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். இதன்படி, மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது. அதாவது, மதி சேர் அரவு என்பது அரவைச் சேரும் மதி என்ற பொருளையே தரும். ஆனால், புலவரின் நோக்கம் என்ன?

புலவர் இத்தொடரை ஓர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். "காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக்கொண்ட தாமரை' என்கிறார்.

ஒரு குளத்தில் நெடுநெரம் காத்திருக்கும் மீன்கொத்திப் பறவை ஒன்று, தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. போகிற போக்கில் பறவையின் கால்கள் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகின்றன. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. பறவை ஒரு பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது. எனவே, தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி, நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும்.

இச்சூழ்நிலையில், மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது. அப்போது சிறிது சிறிதாக வெளித்தெரிந்த வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. இதுவே, "மதி சேர் அரவின்' என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, "கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்குத் தேனை நுகர்ந்த தேனீக்கள்' என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம். அத்தோடு மதி சேர் அரவு என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு மதி சேர்ந்த பாம்பு என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

பாதி மூடிய மலரை விட்டுக் தேனீக்கள் கூம்பு போல் எழுந்துசெல்லும் காட்சி மதி நுழைந்த அரவு போல் இருப்பதாகப் புலவர் பாடியுள்ளார். தேனீக்கள் விலகும் நிலையில் பாதி வெளித்தெரியும் வெள்ளைத்தாமரையைப் புலவர் உவமித்திருந்தால் "அரவு சேர் மதியின் மான' என்று உவம உருபான "மான'வை மதியுடன் இணைத்திருப்பார். ஆனால், அவர் "மதி சேர் அரவின் மான' என்று தெளிவாகக் கூறியிருப்பதால், புலவரின் ஒப்புமை தாமரைக்கும் மதிக்கும் அல்ல என்றும், உவமை கூம்பு போன்ற வண்டுக் கூட்டத்துக்கும் கூம்பு போன்ற அரவு என்னும் நிழலுக்குமே என்பது தெளிவு.

இப்போது உவமையை உற்றுப்பாருங்கள்: கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல், மதி சேர் அரவின் மானத் தோன்றும். எனவே, கிரகணம் என்பதில் உள்ள அரவு நிழல்கூம்பே என்ற அறிவியல் நுணுக்கத்தை அன்றைத் தமிழர் தெரிந்திருந்தனர் என்று நம்ப இடமிருக்கிறது.

-முனைவர் ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Oct 18, 2015, 11:12:11 AM10/18/15
to மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 7:56:05 AM UTC-7, Pandiyaraja wrote:
மிக்க நன்றி தேமொழி அம்மா!
கட்டுரைக்கான முகவரி இடத்தில் தாங்கள் காட்டியுள்ள முகவரிதான் அப்படியே தெரிந்தது. நான் அதனை நகலெடுத்தபோது ஏகப்பட்ட % குறியீடுகளுடன் மிக நீளமாக வந்தது. இரண்டுமுறை முயன்றேன். அவ்வாறே வந்தது. சரி தேமொழி பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிட்டேன். பார்த்துக்கொண்டீர்கள். மிக்க நன்றி. சரி! மீனைப் பிடித்துக்கொடுத்துவிட்டீர்கள். அதை எப்படிப் பிடிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தால் அடுத்தமீனுக்குத் தங்களைத் தேடமாட்டோம் அல்லவா! (ஆனால் நன்றியுடன் ஒவ்வொருமுறையும் நினைவுகூர்வோம்!!)
ப.பாண்டியராஜா

ஆங்கிலம் தவிர எல்லா மொழிகளுக்கும் வலைக்கண் அளிக்கும்போது இந்தப் பிரச்சினை.
இப்போதுதான் நிலைமை மாறிக்கொண்டுள்ளது. யூனிகோட் அங்கத்தினர் குழுவில் அடிக்கடி
பல ஆண்டுகளாய்க் கேட்டுவெருகிறேன். ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்ட்கள் உலக மொழிகளை
யுஆர்எல்-ல் அங்கீகரிக்கவேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் தீர்ந்து தமிழ் எழுத்து, மற்ற
இந்திய மொழிகளின் எழுத்துக்கள் தெரிய இன்னும் சில காலம் ஆகும்.

% என்கோடிங்காக மாறும் நிலை:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 18, 2015, 11:20:21 AM10/18/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com

>முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே 
> வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா

Your essay reminds me of the recent achievement by NASA capturing digitally the image of the dark side of the moon. ~NG

From a Million Miles Away, NASA Camera Shows Moon Crossing Face of Earth:

Megala Ramamourty

unread,
Oct 18, 2015, 11:21:53 AM10/18/15
to மின்தமிழ், Pandiyaraja
அறிவியல் கண்ணோட்டத்தோடு ’மதி சேர் அரவினை’ அணுகியுள்ளீர்கள் பாண்டியராஜா ஐயா. படித்து மகிழ்ந்தேன். கணேசனார் குறிப்பிடுவதுபோல் இத்தொடர் புலிகொல்யானையை ஒத்திருக்கிறது. இதனைத் தமிழிலக்கணத்தில் ’தடுமாறு தொழிற்பெயர்’ என்பர்.

ஆங்கிலத்தில் old boys' hostel; Midsummer night's dream போன்றவை இவ்வகையில் அடங்குமோ?  :-)

ஐயா,  

இவ்வாறு நீளமாகக் கொடுப்பதற்கு பதிலாக, 
என்பதை நீக்கிவிட்டு  மதி-சேர்-அரவு என்று அந்த இடத்தில் தந்துவிட்டால் போதும்.

இப்போது சுட்டி http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/மதி-சேர்-அரவு/article3085271.ece என்று சுருங்கிய வடிவுடையதாகிவிடும். அதைத்தான் தோழி தேமொழி செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.  

ஐயா, தங்கள் உடல்நிலை இப்போது சற்று தேறியுள்ளதா? உங்கள் ஆக்கங்களை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். 

அன்புடன்,
மேகலா

N. Ganesan

unread,
Oct 18, 2015, 11:29:47 AM10/18/15
to மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 8:21:53 AM UTC-7, megala.ramamourty wrote:

இப்போது சுட்டி http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/மதி-சேர்-அரவு/article3085271.ece என்று சுருங்கிய வடிவுடையதாகிவிடும். அதைத்தான் தோழி தேமொழி செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.  

இல்லை. அது முதல் ஸ்டெப் தான். 
நீங்கள் கொடுத்துள்ள வலைக்கண்ணைச் சொடுக்கிப் பார்க்கவும். தொழிற்படாது.

Megala Ramamourty

unread,
Oct 18, 2015, 11:36:44 AM10/18/15
to மின்தமிழ்
//நீங்கள் கொடுத்துள்ள வலைக்கண்ணைச் சொடுக்கிப் பார்க்கவும். தொழிற்படாது.//

சொடுக்கிப் பார்த்தேன்; தொழிற்படுகிறதே!  :-)

N. Ganesan

unread,
Oct 18, 2015, 11:38:51 AM10/18/15
to மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 8:36:44 AM UTC-7, megala.ramamourty wrote:
//நீங்கள் கொடுத்துள்ள வலைக்கண்ணைச் சொடுக்கிப் பார்க்கவும். தொழிற்படாது.//

சொடுக்கிப் பார்த்தேன்; தொழிற்படுகிறதே!  :-)

மதி-சேர்-அரவு என்ற தொடரை கிளிக் செய்து பாருங்கள்.

Megala Ramamourty

unread,
Oct 18, 2015, 11:47:11 AM10/18/15
to மின்தமிழ்
கணேசன் ஐயா,

அந்தச் சுட்டியில் ‘மதி-சேர்-அரவு’ என்ற சொல்லைத் தவிர்த்த மற்ற இடங்களில் சொடுக்கினால் கட்டுரையை எடுக்க முடிகிறது. 
அதுபோலவே வேறுசில கட்டுரைகளையும் சுருங்கிய வடிவில் கொடுத்துச் சோதித்துப் பார்த்தேன். தமிழ்ச்சொல் உள்ள இடம் தவிர்த்த மற்ற இடங்களில் சொடுக்கி அவற்றை இயங்கவைக்க முடிகிறது. 

N. Ganesan

unread,
Oct 18, 2015, 11:54:54 AM10/18/15
to மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 8:47:11 AM UTC-7, megala.ramamourty wrote:

அந்தச் சுட்டியில் ‘மதி-சேர்-அரவு’ என்ற சொல்லைத் தவிர்த்த மற்ற இடங்களில் சொடுக்கினால் கட்டுரையை எடுக்க முடிகிறது. 
அதுபோலவே வேறுசில கட்டுரைகளையும் சுருங்கிய வடிவில் கொடுத்துச் சோதித்துப் பார்த்தேன். தமிழ்ச்சொல் உள்ள இடம் தவிர்த்த மற்ற இடங்களில் சொடுக்கி அவற்றை இயங்கவைக்க முடிகிறது. 

Megala Ramamourty

unread,
Oct 18, 2015, 12:06:10 PM10/18/15
to மின்தமிழ்
Good job!  :-)

--

தேமொழி

unread,
Oct 18, 2015, 3:52:10 PM10/18/15
to மின்தமிழ்
அன்பு ஐயா,

இது மேகலா சொன்னது போலத்தான்....

நான் text editor / notepad இல்  சுட்டியின் ஆங்கிலப்பகுதியை மட்டும் முதலில் வெட்டி ஓட்டுவேன்...

http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/10/18/ <<< இதுவரை முதலில் ....
பிறகு கவனமாக விட்டஇடத்திலுருந்து மிச்சமிருக்கும் பகுதியையும் வெட்டி அதனுடன் இணைப்பேன்.

ஒருமுறை இதைப் பயன்படுத்தி சரியாகவே வேலை செய்கிறது, நான் வெட்டி ஒட்டியதில் தவறு ஏதும் செய்யவில்லை என்று உறுதிப் படுத்திக் கொள்வேன். 
பிறகு நோட்பேட் இல் இருந்து முழு சுட்டியையும் வேண்டும் இடங்களில் வெட்டி ஒட்டி பயன்படுத்துவேன்.

address bar இல் இருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் % போட்டு கொடுத்துவிடுகிறது என்பதாலும், 
அத்துடன் சுட்டியும்  அளவுக்கதிகமாக மிக நீளமாக இருப்பதாலும் இந்த வழிமுறை.

இவ்வாறு செய்வதால் .... 
அந்த சுட்டி எந்தக் கட்டுரையைக் குறிக்கிறது என்பதை சொடுக்காமலே பார்த்து தெரிந்து கொள்ளவும்  முடிகிறது 
அத்துடன் சுட்டியும் மூன்று நான்கு வரிகள்  %%% என்று நீளுவதுமில்லை. 

அன்புடன்
..... தேமொழி

On Sunday, October 18, 2015 at 7:56:05 AM UTC-7, Pandiyaraja wrote:

N. Ganesan

unread,
Oct 18, 2015, 10:55:02 PM10/18/15
to வல்லமை, மின்தமிழ்

On Sunday, October 18, 2015 at 6:05:34 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
படம் சந்திர கிரகணத்தை விளக்கும் படம் போல இருக்கிறது.  என் சிறு மூளைக்கு  படத்தில் ஒரு குறை தோன்றுகிறது,  சூரிய ஒளி சந்திரன் மீது படாத நிலையில், பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சந்திரனின் பாதி கருப்பாக அல்லவோ தெரிய வேண்டும்? 

தினமணி சந்திர கிரகணப் படம் தெளிவில்லை. அனேகமாக, இதிலிருந்து வரைந்திருக்கிறார்கள்:

நா. கணேசன் 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 18, 2015, 11:42:15 PM10/18/15
to மின்தமிழ்
அன்புநிறை திரு.ப.பாண்டியராஜா அவர்களே

உங்கள் எழுத்துக்களைக்கண்ட போது"எழுதரு மதியம் கடற்கண்டாங்கு"
என்பதைபோல் உள்ளம் பொங்குகிறது."மதி" என்ற சொல் தொல் தமிழ்ச்சொல் தான்.அது வடமொழி சொல்போல தோற்றம் கொடுப்பது
அங்கே இங்கே பரிமாறப்படுவதால் தான்.நம் பிள்ளைகளே நமக்கு சில சமயங்களில் அயற்பிள்ளைகளைப்போல் (கருத்து வேறுபாடுகளால் தோன்றுவது இல்லையா) அது போல் தான்.
ஆனால் மதி என்ற சொல் நம் சங்கத்தமிழ்ப்புலவர்களுக்கு களிப்பு தருவது ஆகும்.அச்சொல் வராத சங்கப்பாடல்கள் மிக மிகக்குறைவு.
"மதி மலி புரிசை நான்மாடக்கூடல்"என்பது தானே நம் மதுரைக்குப்பெயர்.மதி என்பது உள்ளம் சார்ந்த சொல்.(லுனார் என்று
மேலை நாட்டினரும் அப்படி அழைப்பதில் மொழியின் "ஒலி"
அல்லது "பொருள்" கூட பரிமாற்றம் செய்யப்படும் ஒரு வித கம்யூட்டேடிவ் ஃபிலாலஜிகல் எபிஸ்டமாலஜி இருக்கிறது.மதி என்ற சொல் தனிச்சொல்.பகுதியாக வரும் உறுப்பிலக்கணச்சொல்.மதித்தல் (கருதுதல்)என்ற சொல் அப்படித்தான் வந்திருக்கிறது.உள்ளமகிழ்ச்சியை காட்டும் சொல்."அது மதி அது மதி" என்று நம் சேரத்தமிழும்(மலையாளம்)செப்புகிறது."மதி பின் நீர பேதையார் நட்பு" என்று வள்ளுவர் சுட்டுவது தேய்பிறையை  மட்டும் அல்ல‌ தேய்ந்த அறிவு(உள்ள)க்கூர்மையையும் தான். 
 
இருப்பினும் மதிசேர் அரவு எனும் சொற்றொடரில் சூரியன் பூமி
மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஆடும் நிழல் விளையாட்டை
"பாம்பின்" வாலும் வாயும் சேர்ந்த வடிவமாக காணும் கற்பனையை
சுழன்று சுழன்று பறக்கும் அந்த "வண்டுக்கூட்டத்தோடு" பொருத்தி
எழுத்தியதில் வியப்பும் அழகும் ஒரு சேர இழந்திருக்கிறது.சங்கத்தமிழில் அப்படி ஒரு விண்வெளி விஞ்ஞானம் ஒளிந்திருப்பதை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.உங்கள் தமிழ் விருந்துக்கு பந்திவிரித்து காத்துக்கொண்டிருக்கிறோம்.உங்கள் உடல் நலம் நன்கு வலுப்பெற்று உங்கள் தமிழமுதம் பருகும் வாய்ப்பு இன்னும் இன்னும் எங்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற ஆவலையும் ஆர்வத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் ருத்ரா

ஒரு பின் குறிப்பு

அந்த அரைநிலவு, நிழலின் கருப்பு படியாமல் இருப்பதற்கு காரணம்
இது டையாக்ராமிக் இல்லஸ்ட்ரேஷன் ஆக இருப்பதே ஆகும்.அதனால் ஏற்பட்ட எர்ரர் ஆக இருக்கலாம்.இருப்பினும்
உவமை அந்த "நீலச்செங்கண் சேவலை" அரவாக‌ கற்பனை செய்த நுட்பம் சுவைக்கத்தக்கது.நிலவு மறைப்பு அன்றும் புலவர்களுக்கு
கூரிய சிந்தனையைக்கிளறி இருக்கிறது.

On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 18, 2015, 11:48:11 PM10/18/15
to மின்தமிழ்
//வியப்பும் அழகும் ஒரு சேர இழந்திருக்கிறது.//

"இழைந்திருக்கிறது " என்பது தவறுதலாய் இழந்திருக்கிறது என்று தட்டச்சு
செய்ததற்கு வருந்துகிறேன்.

==============ருத்ரா

On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 19, 2015, 12:46:37 AM10/19/15
to mintamil
ஐயா

மதி சேர் அரவு என்பதற்கு சந்திரனை விழுங்கும் பாம்பு என்ற பொருள் பொருந்தாது.

வெண்ணிலவினை மறைக்கும் மேகம் என்றே பொருள் தரும்.

இங்கு வரும் அரவு என்பதற்கு மேகம் என்றே பொருள். இதைப்பற்றி ' திங்களைப் பாம்பு கொண்டற்று' என்ற எனது கட்டுரையில் விரிவாகக் கூறியுள்ளேன்.

புலவர் கூறும் உவமையும் இந்தப் பொருளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது.

மலர்ந்திருக்கும் வட்டவடிவ வெண்தாமரையினை வெண்ணிலவுக்கும்

அதில் அமர்ந்து தேன் குடித்து எழுந்து பறக்கின்ற கருநிற வண்டினங்களின் கூட்டம் கருநிற மேகத்திற்கும் உவமை.

நிலவினை மேகம் மறைப்பதும் பின்னர் விலகுவதுமான இயல்பான காட்சியைத் தான் இங்கே உவமையாகக் கூறியுள்ளார் புலவர். சந்திர கிரகணத்தைப் பற்றிக் கூறவில்லை ஐயா.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 19, 2015, 1:08:48 AM10/19/15
to மின்தமிழ்
அன்புள்ள வேந்தன் சரவணன் அவர்களே

அரவம் என்பது அசைவு ஒலி இவற்றையும் குறிக்கும் "ஆள் அரவமே"இல்லாத காடு என்ற சொல்லில் இது விளங்குகிறது.
இங்கே அசைவும்(வண்டுக்கூடத்தின் சுழல் அசைவைக் குறிக்கும்.
அவற்றின் மொத்த ரீங்கார ஒலியே இங்கு "அரவு" ஆகவும் கொள்ளலாம்.இருப்பினும் இந்த செய்யுளில் பாம்பு என்ற பொருளே அந்த அசைவை ஒட்டிய பொருளாகக் கொள்ளப்படுகிறது.நீங்கள் மேகம் என்று குறிப்பிடும் பொருள் கூட அசைவை குறித்து (ஓடும் மேகங்கள்) எழுந்ததே

=======================================ருத்ரா

On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 19, 2015, 1:13:27 AM10/19/15
to mintamil
ஐயா

அரவு என்பது எவ்வாறு மேகத்தைக் குறிக்கும் என்ற விளக்கமும் இந்தக் கட்டுரையில் உள்ளது.

கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன். :)))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 19, 2015, 3:58:45 AM10/19/15
to மின்தமிழ்
அன்புள்ள வேந்தன் சரவணன் அவர்களே

சந்திர கிரகணம் என்பது பாம்பு விழுங்குவது என்ற நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.விஞ்ஞானம் உண்மையை தெளிவாக்கி விட்டது.இப்போதைய விஞ்ஞானத்தை அப்போதைய நம்பிக்கைகளில் பொருத்திவைத்து அது பாம்பு அல்ல மேகம் என்று
எழுதுவதில் நம் ஆர்வம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.அதற்காக தொல் தமிழர்களின் அறிவு சான்ற வரிகளில் புதைந்து இருக்கும்
விஞ்ஞானக்கூர்மையை நாம் மறுக்க முடியாது.சாதாரணமாக நிலவை பாம்பு உருவில் உள்ள மேகம் விழுங்கி விட்டது என்றும் பொருள் கொள்ளலாம்.அலரி என்று  உதிர்ந்த சிறுபூக்கள் காற்றில் மேகப்படலம் போல் எழுவதாகவும் அது பாம்பு உருவம் கொண்ட மேகமாகவும் அவர் எண்ணியிருக்கலாம்.இருப்பினும் பாம்பு "கொண்டற்று" என்று இருப்பதால் அக்கால மதி மறைவு நிகழ்ச்சியை அவர் மனத்தில் வைத்து எழுதியிருக்கலாம்.மேகம் என்று பொருள்படுவதாக நீங்கள் கூறும் அரவு என்ற சொல்லை அவர் பயன்படுத்துவதாக இருந்தால் பாம்பு என்ற அப்பட்டமான சொல்லை எழுதத்தேவையில்லை.
திங்களை மஞ்சு கொண்டற்று என்றோ அரவு கொண்டற்று என்றோ
அல்லவா அவர் எழுதியிருக்கவேண்டும்.திங்களை பாம்பு கொண்டற்று என்றால் அவர் சந்திரகிரகணத்தை தான் குறிப்பிடுகிறார் என்றும் உரை கொள்ளத்தேவையில்லை.நிலவு வட்டமாய் (உருண்டையாய்) இருப்பதால் அதை முட்டையாகவோ அல்லது ஒரு அதுபோல் தோற்றும் ஒரு தீனியாக இருப்பதாக எண்ணி அதை கவ்வுவது "கொடிய அலர் இந்த ஊரையே கவ்விப்பிடிப்பதாகவும் அவர் கற்பனை செய்வதாக உரை எழுதலாம்.அந்தந்த கால கட்ட நம்பிக்கை அல்லது நிகழ்வுகளின் ஒப்புமைகளை அவ்வாறு எழுதுவது தானே இலக்கியம்.அற நூல்களும் இலக்கிய வடிவில் தான் மக்களை வலம் வந்திருக்கின்றன.
பாம்பும் கயிறும் ஒன்றாய் தெரியவைத்து மயங்கும் உருவெளி மயக்கங்களும் உடையது மனித சிந்தனை.இது தத்துவங்களாக பேசப்படுகின்றன.அப்போதைய நம்பிக்கையை ஒரு உவமையில் காட்டுவதாக எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை."எழு பிறப்பும்" என்று மறு ஜென்ம சிந்தனையும்பற்றி குறளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அந்தக்கால சித்திரத்தை நாம் நம் தூரிகையில்
நம் எண்ணப்போக்குகளோடு தீட்டிக்கொள்வதும் ஒரு இலக்கியம் தான்.அதற்காக அக்காலம் அவர் எழுதிய கருத்து பிரதிபலிப்பை வைத்து அவரை அக்கருத்தோடு கட்டிப்போட தேவையில்லை.

=============================ருத்ரா

On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:

Pandiyaraja

unread,
Oct 19, 2015, 4:04:35 AM10/19/15
to மின்தமிழ்
அன்புமிகு சரவணன்!
தங்களின் கட்டுரையை முழுமையாகப் படித்தேன். முதலில் நுதலைக் கண் என்றீர்கள். இப்போது அரவை மேகம் என்கிறீர்கள். இப்படியே போனால் நீங்கள் சொல்வதை யாரும் serious-ஆக எடுத்துக்கொள்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. நீங்கள் புதிய கோணத்தில் பார்க்க விழைகிறீர்கள். அது சரியான கோணம்தானா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள். நீங்களாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அந்தத்தூணில் உங்கள் சொற்களை இழுத்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறீர்கள் - பால் கறக்கும்போது கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டுவதைப் போல.
அரவு சேர் மதியின் -- மழை சேர் மதியின் -- ஆகியவை வெவ்வேறு உவமைகள். அவற்றுக்கு வெவ்வேறு பொருள் உண்டு- பொருள் நுணுக்கமும் உண்டு. இதனாலெல்லாம் அரவு மழையாகிவிடாது.
உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு என் பாராட்டுகள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Oct 19, 2015, 7:44:49 AM10/19/15
to மின்தமிழ், vallamai

On Monday, October 19, 2015 at 1:04:35 AM UTC-7, Pandiyaraja wrote:
அன்புமிகு சரவணன்!
தங்களின் கட்டுரையை முழுமையாகப் படித்தேன். முதலில் நுதலைக் கண் என்றீர்கள். இப்போது அரவை மேகம் என்கிறீர்கள். இப்படியே போனால் நீங்கள் சொல்வதை யாரும் serious-ஆக எடுத்துக்கொள்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. 

 சங்க இலக்கியத்தில் ‘வெண்நுதல் கம்புள்’ = Coot with a white forehead.
இந்தப் பறவையை வர்ணிக்கும் சங்க இலக்கிய வரிகளை வைத்து நுதல் = கண் என
திரு. சரவணன் கூறுதல் பொருந்தாது
என விளக்கி ஓர் தனியிழையில் எழுதியுள்ளேன்:

இந்தியாவில் உள்ள வெள்ளைக்கண்ணி: 

”வெள்ளைக்கண்ணி சிறிய புறா வடிவத்தில் இருக்கும் இந்த வெள்ளைக்கண்ணி. இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படும். இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் இதைப் பார்க்கலாம். தென் இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இவை அதிகம் வசிக்கின்றன. பூவிலுள்ள தேனையும் சிறிய பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.  கண்ணைச் சுற்றியிருக்கும் வெள்ளை வளையத்தை வைத்து இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். உடல் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். 8 முதல் 9 செ.மீ. நீளம் இருக்கும்.
 ஒரு சமயத்தில் நீல நிறத்தில் 2 முட்டைகளை இடும். பத்து நாட்களில் குஞ்சுகள் பொறிந்து வெளியே வரும். தாய் தந்தை இருவரும் குஞ்சுகளை பாசத்துடன் வளர்க்கும்.”

”நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) ஐப்  பார்த்துக் கத்தும் வெள்ளைக் கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)

காட்டுச் சிறு ஆந்தையைப் (Forest Owlet Heteroglaux blewitti) பார்த்துக் கத்தும் வெள்ளைக்கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)”

வெள்ளைக்கண்ணிக்கு வெள்ளைநெற்றி (அ) வெள்ளைநுதலி எனப் பேரில்லை. 
எனவே, நுதல் என்பது நெற்றி. நுதல் என்பது கண் அன்று.

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 19, 2015, 7:58:42 AM10/19/15
to mintamil

2015-10-19 17:14 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
்.  கண்ணைச் சுற்றியிருக்கும் வெள்ளை வளையத்தை வைத்து இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இதைத்தானே நானும் சொல்கிறேன்.

இப்படி வெள்ளை வளையம் உடைய பறவையினை கம்புள் என அழைத்தனர் முன்னோர்.

கண்ணைச் சுற்றி வெள்ளை வளையம் உள்ளதால் தான் இதனை வெண் நுதல் கம்புள் என்று இலக்கியம் கூறுகிறது.

இதில் உங்களுக்கு என்ன குழப்பம்?

N. Ganesan

unread,
Oct 19, 2015, 8:04:32 AM10/19/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham

On Sunday, October 18, 2015 at 10:08:48 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
அன்புள்ள வேந்தன் சரவணன் அவர்களே

அரவம் என்பது அசைவு ஒலி இவற்றையும் குறிக்கும் "ஆள் அரவமே"இல்லாத காடு என்ற சொல்லில் இது விளங்குகிறது.
இங்கே அசைவும்(வண்டுக்கூடத்தின் சுழல் அசைவைக் குறிக்கும்.
அவற்றின் மொத்த ரீங்கார ஒலியே இங்கு "அரவு" ஆகவும் கொள்ளலாம்.இருப்பினும் இந்த செய்யுளில் பாம்பு என்ற பொருளே அந்த அசைவை ஒட்டிய பொருளாகக் கொள்ளப்படுகிறது.நீங்கள் மேகம் என்று குறிப்பிடும் பொருள் கூட அசைவை குறித்து (ஓடும் மேகங்கள்) எழுந்ததே

=======================================ருத்ரா

வண்டுகளின் ரீங்காரத்தை யாழின் ஒலிக்கு உவமையாக்குவது சங்க இலக்கியம். அரம் அரைப்பது போன்ற
பாம்புகளின் ஹிஸ்ஸிங் (hissing) ஒலியினால் பாம்பிற்கு அரவு/அரவம் எனப் பெயர்.

இந்த ஹிஸ்ஸிங் ஸௌண்ட் தான் இசுத்தல் என தமிழ்ப்படுத்தி, இசை என்றாகியது என்கிறார் பாவாணர்:
"இசையென்னும் தனிச்சொல் முதலாவது இசுவென்று (hissing) ஒலிக்கும் இயல்பான ஓசையைக் குறித்து, பின்பு இனிய ஓசையாகிய பண்ணைக் குறித்தது. இணைத்தலைக் குறிக்கும் இசை என்னும் சொல் வேறு. "

ஹம்மிங் (humming) ஒலியை தும்பிகளின் இறக்கைகள் ஏற்படுத்துகின்றன. எனவே தான்,
’அம் சிறைத் தும்பி’ என சங்க இலக்கியம் பாடுகிறது. அம் சிறை = beetles/bees having humming wings.
அஞ்சிறைச் சிட்டு = அமெரிக்காவில் உள்ள தேன்சிட்டு:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 19, 2015, 8:09:41 AM10/19/15
to மின்தமிழ்

On Monday, October 19, 2015 at 4:58:42 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2015-10-19 17:14 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
்.  கண்ணைச் சுற்றியிருக்கும் வெள்ளை வளையத்தை வைத்து இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இதைத்தானே நானும் சொல்கிறேன்.

இப்படி வெள்ளை வளையம் உடைய பறவையினை கம்புள் என அழைத்தனர் முன்னோர்.

கண்ணைச் சுற்றி வெள்ளை வளையம் உள்ளதால் தான் இதனை வெண் நுதல் கம்புள் என்று இலக்கியம் கூறுகிறது.

இதில் உங்களுக்கு என்ன குழப்பம்?

எனக்கு நுதல் = நெற்றி என்பதிலோ, வெண் நுதல் கம்புள் = நாமக் கோழி (Coot with a white forehead)
என்பதிலோ எந்தக் குழப்பமும் இல்லை. விரிவான விளக்கம் 3 மடல்களில் இவ்விழையில் கொடுத்துள்ளேன்:
சங்க இலக்கியத்தில் ‘வெண்நுதல் கம்புள்’ = Coot with a white forehead.
இந்தப் பறவையை வர்ணிக்கும் சங்க இலக்கிய வரிகளை வைத்து நுதல் = கண் என
திரு. சரவணன் கூறுதல் பொருந்தாது
என விளக்கி ஓர் தனியிழையில் எழுதியுள்ளேன்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 19, 2015, 8:45:37 AM10/19/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham

On Sunday, October 18, 2015 at 8:42:15 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
அன்புநிறை திரு.ப.பாண்டியராஜா அவர்களே

உங்கள் எழுத்துக்களைக்கண்ட போது"எழுதரு மதியம் கடற்கண்டாங்கு"
என்பதைபோல் உள்ளம் பொங்குகிறது."மதி" என்ற சொல் தொல் தமிழ்ச்சொல் தான்.அது வடமொழி சொல்போல தோற்றம் கொடுப்பது
அங்கே இங்கே பரிமாறப்படுவதால் தான்.நம் பிள்ளைகளே நமக்கு சில சமயங்களில் அயற்பிள்ளைகளைப்போல் (கருத்து வேறுபாடுகளால் தோன்றுவது இல்லையா) அது போல் தான்.
ஆனால் மதி என்ற சொல் நம் சங்கத்தமிழ்ப்புலவர்களுக்கு களிப்பு தருவது ஆகும்.அச்சொல் வராத சங்கப்பாடல்கள் மிக மிகக்குறைவு.

பல சமயங்களில் இரட்டைமெய்யெழுத்து ஒருமெய்யெழுத்தாய் எழுதப்படுவதுண்டு. தமிழ் ஒரு Phonemic script,
பிராமி ஒரு Phonetic script. ஒரு முறை எழுதப்படும் மெய் இரட்டிப்பாகினால் பொருள் விளங்கும்.
கொங்குத்தலைநகரில் பள்ளிபயின்றவர் நீங்கள். புழைக்கடை என்னும் சங்கச்சொல் பொடக்காளி என மெட்டாதீஸிஸ் ஆகிறது
கொங்குநாட்டில். மிகப் பழைய காலத்திலே, சட்டகம் என்ற சொல்லே சடகம் என எழுதி/பலுக்கி, மெட்டாதீஸிஸ் முறையில்
சகடம் என வண்டிச் சக்கரத்துக்கு ஆகிறது (பார்க்க: பார்ப்போலா, Origins of Hinduism and Indus Civilization, 2015, Oxford University Press).
சடகம் (=சட்டகம்) சகடம் என்ற மெட்டாதீஸிஸ் சங்கத்திலேயே வந்துவிடுகிறது. அதுபோல் தான், தமிழின் அரத்தம்
(அரிதல், அரக்கு-தல்) ந-ப்ரத்யம் சேர்ந்தால் அரதநம் என ரத்னத்துக்கு ரிக்வேத முதல் சுலோகத்தில் (இழா என்னும் தேவதைக்கு
- ஈகை அரிய இழை, மங்கிலியத்துக்கு சங்க இலக்கிய வரி.) வருகிறது என அவரிடம் சொன்னேன். தளா, தளவு, தளவம்
பலவிதமான முல்லைச்செடிகள். இது மெட்டாதீஸீஸ் ஆகி வடமொழியில் தவளம் என்றால் வெள்ளை என்ற வண்ணப்பெயர்
பிறக்கிறது (சடகம் சகடம் ஆதற்போல்).

மதி என்னும் திங்களுக்காக சொல்லிலும் இரட்டை-ஒற்றை மெய்கள் இருக்கின்றன. அரத்தம்:அரதம், சட்டகம்:சடகம், .... போல.
(தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் பல சொற்கள் இரட்டை மெய்யில்லாமல் எழுதப்பட்டுல்ளமை கண்கூடு.)

மத்தம் என்றால் வட்டமானது எனப் பொருள். மத்தம்/மத்தகம் = தலை. யானையின் தலையில் உருண்டைவடிவமான திரட்சி,.
மத்தம் = தலையை மயக்கும் பூவாகிய ஊ-மத்தம் என்னும் பூ, காய், செடி.
மத்து = வட்டமான தயிர் கடையுங்கோல். மத்தாடுதல் = பெண்கள் கையைக் கோத்து வட்டமாக ஆடுதல் (ராஸ்லீலா).
மத்தி என்றால் வட்டமான நிலா. அதனை சங்க இலக்கியத்தில் மதி என எழுதியுள்ளனர். பிராமி எழுத்தில்
தமிழ் எழுதும்போது, ஃபோனிமிக் ஸ்கிர்ப்டாக தமிழை வளர்ப்பதா? ஃபோனெடிக் ஸ்க்ரிப்டாக தமிழை
வளர்ப்பதா? - என நம் முன்னோர் சிந்திக்கும்வேளையில் 2000 ஆண்டுமுன்னே இருந்த சிக்கல்.
(1) அரதம்/அரத்தம் (Cf. அரதநம் : ரதந Rgveda's first shloka), (2) சட்டகம்:சடகம் (சகடம், by metathesis, just like taLavam 'white' from taLavam 'jasmine'
- all 20+ jasmine species yield white flowers when blossomed.).  இவை போல, மத்தி/மதி ‘moon'. வட்டமான கோளம் என்ற பொருளில்.

நா. கணேசன்

"மதி மலி புரிசை நான்மாடக்கூடல்"என்பது தானே நம் மதுரைக்குப்பெயர்.மதி என்பது உள்ளம் சார்ந்த சொல்.(லுனார் என்று

தேமொழி

unread,
Oct 19, 2015, 12:32:27 PM10/19/15
to மின்தமிழ்

குறிப்பு: 
அனைவரின் கவனத்திற்கும்...

மதி ... அரவு... நுதல் ...ஆகிய வேர்ச்சொல் ஆய்வுகள் இனி ஓர் தனி இழையில் தொடரப்படும்.  

பாண்டியராஜா ஐயாவின் மதி சேர் அரவு -  தமிழ்மணி (தினமணி) கட்டுரை  பற்றிய கருத்துப் பரிமாற்றம் மட்டுமே இவ்விழையில் தொடரப்படும்.

..... தேமொழி

Pandiyaraja

unread,
Oct 19, 2015, 1:07:05 PM10/19/15
to மின்தமிழ்
மிக்க நன்றி அம்மா!!
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Oct 19, 2015, 2:08:36 PM10/19/15
to மின்தமிழ்
அன்புடையீர்,
மதி சேர் அரவு என்ற தலைப்பில் எனக்குத் தோன்றியவற்றை நான் எழுதிய முதற்கட்டுரையைக் கீழே தருகிறேன். பின்னர், தினமணி - தமிழ்மணி பகுதியில் வெளியாகிக்கொண்டுவரும் அறிவியல் தமிழ் என்ற பகுதிக்கான கட்டுரையாக இதை அனுப்பலாம் என் நினைத்தேன். அவர்களின் இட வசதிக்கேற்ப கட்டுரையை வெகுவாகக் குறைத்து அனுப்பினேன். அதிலும் சில பகுதிகள் நீக்கப்பட்ட கட்டுரையே வெளிவந்திருக்கிறது. இருப்பினும், இந்தமுறை அதிகச் சேதாரம் இல்லாமல் கவனமாகச் செய்திருக்கிறார்கள். அதற்கு என்னுடைய நன்றி அவர்களுக்கு.
இரண்டாம் கட்டுரையை நான் அனுப்பவில்லை. அது தினமணியின் சொத்து. அதைக் குறைத்து வெளியிட அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே நான் அவர்களுக்கு அனுப்பிய கட்டுரையை இங்கு தரவில்லை. இரண்டாம் கட்டுரையில் அறிவியல் கருத்துகள் முன்னிறுத்தப்பட்டிருக்கின்றன. எனது முதல் கட்டுரையில் உவமைநயமும், இன்னும் சில தொடர்பான உண்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. சங்கப் புலவர் தவறுசெய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவரின் நுண்மாண் நுழைபுலத்தை வியந்து போற்றியிருக்கிறேன். உரையாசிரியர்கள் செய்திருக்கும் தவறையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
முழுக்கட்டுரையையும் படித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

ப.பாண்டியராஜா

மதி சேர் அரவு

இன்றைய மொழியியற் கொள்கைப்படி இத் தொடர் ஒரு மயக்கு தொடர் ஆகும் (ambiguous statement). இக்கூற்று மதி அரவை அடைந்தது எனக் கூறுகிறதா, அல்லது அரவு மதியை அடைந்தது எனக் கூறுகிறதா என்பதில்தான் மயக்கம். முதற் பொருளின்படி இதனை (மதி) (சேர்) (அரவு) என மூன்று கூறுகளாக்கி, இவற்றை எழுவாய்(subject), பயனிலை (predicate), செயப்படுபொருள் (object) எனக்கொள்ளலாம். இதன்படி இது ஒரு முழுத் தொடர் ஆகிறது. இரண்டாவது பொருளின்படி இது (மதி சேர்) அரவு என்று பிரிக்கப்பட்டு, முதலிரண்டு சொற்களும் மூன்றாம் சொல்லுக்கு அடையாக (adjective) அமைந்து இது ஒரு எழுவாய்த்தொடர் (Noun class) ஆகிறது. இவ்வாறான மயக்குதொடர்கள் இலக்கிய இன்பம் தரலாம். ஆனால் அறிவியல் தமிழுக்குத் தெளிவு தேவை அல்லவா? பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இத்தொடர் காணப்படுகிறது. அங்கு இத் தொடர் எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

ஒரு நாட்டிற்கு வளம் சேர்ப்பது அதன் வயல்வெளிகளே. வயல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இங்கு ஓர் அழகிய சொல்லோவியத்தைக் காட்டுகிறார்.

நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி

நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது

கொங்கு கவர் நீல செம் கண் சேவல்

மதி சேர் அரவின் மான தோன்றும்

மருதம் சான்ற மருத தண் பணை - சிறு 178 - 186

நறு மலர்களின் மாலை போல நாள்தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,

நிலையான நீர் இல்லாத குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து

புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின்

பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்

முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்

திங்கள் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும்,

மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்'

நீர் நிறைந்த குளங்களைக் கொண்ட மருதநிலம்' என்பதுவே கூறவந்த பொருளாகும். அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர்.

ஒரு குளத்தில் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. அன்றலர்ந்த மலர் என்று இப்போது கூறுகிறோம். இதைத்தான் புலவர் முகிழ் விரி நாள் போது' என்கிறார். எனவே அதில் தேன் நிறைய இருக்கும். அது வெள்ளைத் தாமரையாக இருக்கவேண்டும். ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. இக்காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது என்று புலவர் கூறுகிறார். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடத் தயாராகுங்கள்! சந்திர கிரகணம் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow) சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத் தான் நம் முன்னோர் பாம்பு என்று கூறினர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர்..

உண்மையில் அரவு எனப்படும் நிழல் எப்போதும் இருப்பது. ஆனால் மதி என்னும் நிலவு பூமியைச் சுற்றிவருவது. அப்படி வரும்போது பலநேரங்களில் நிலவு நிழலுக்குள் செல்லாமல் விலகிச் செல்கிறது. சில நேரங்களில் நிலவு நிழலுக்குள் சென்று வருகிறது. அதைத்தான் மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். இப்போது சொல்லுங்கள் மதி அரவைச் சேர்ந்து விலகுகிறதா, அல்லது, அரவு நிலவைச் சேர்த்து விலக்குகிறதா என்று. முதற்கூற்றே சரியானது. அதாவது, மதி சேர் அரவு என்பது அரவைச் சேரும் மதி என்ற பொருளையே தரும். ஆனால் புலவரின் நோக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.

புலவர் இத் தொடரை ஓர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். தாமரை மலர் மீது மொய்த்திருக்கும் வண்டுக்கூட்டம் நிலவை விழுங்கும் பாம்பு போல் இருந்தது என்று அவர் கூறிமுடித்திருக்கலாம். புலவரின் கற்பனைத் திறன் இதோடு முடியவில்லை. காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக் கொண்ட தாமரை' என்ற புலவரின் வருணனை நீளமானதாகவும், தேவையற்றதாகவும் தோன்றலாம். ஆனால் தேவையற்ற எதனையும் சங்கப் புலவர்கள் கூறுவதில்லை.

ஒரு குளத்தில் மீன் கொத்தி ஒன்று மீன் பிடிக்கும் காட்சிகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. நெடுநெரம் காத்திருக்கும் பறவை, தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. நீருக்குள் மூழ்கி மீனைக் கவ்விப்பிடிக்கிறது. அந்த வேகத்தில் அது நீருக்குள் சற்று ஆழமாகவே செல்ல நேர்கிறது. மேல் மட்டத்தில் உள்ள தண்ணீர் பளார்' என்று வெளியே தெறிக்கிறது. பின்னர், பறவை மேல் நோக்கித் திரும்பித் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது. மேலே தன் இருப்பிடத்திற்குத் திரும்புகிறது. இந் நிகழ்ச்சி அப் பகுதியில் ஒரு பெரிய சலசலப்பையே உண்டாக்கியிருக்கும். நீரைக் கிழித்துக்கொண்டு பறவை உட்சென்று வெளிவருவதால் நீர்ப்பரப்பு இரண்டு முறை அதிர்கிறது. அதனால் நீரில் மேலுள்ள தாமரை போன்ற மலர்கள் ஆட்டங்கொள்ளும். ஆனால் இது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிவதால் மலர்கள் நீண்ட நேரம் பாதிப்படைவதில்லை. ஆனால், புலவர் இங்கு மேலும் ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுகிறார். போகிற போக்கில் பறவையின் கால்கள் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகின்றன. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. எனவே தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும். இச் சூழ்நிலையில் வண்டுக்கூட்டங்கள் பாம்பு போல் அம் மலரைச் சூழ வரமுடியுமா? கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

விடியற்காலத்தில் ஓரளவே மலர்ந்த (முகிழ் விரி நாள் போது) மலரினுள் சென்று தேனீக்கள் ஏற்கனவே தேன் உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றன. மேலும் பல தேனீக்கள் மலரைச் சுற்றிலும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை மலரை ஏறக்குறைய மறைத்து விட்டிருக்கின்றன.

நன்கு விடிந்த பின்னர் பறவைகள் உணவு தேட ஆரம்பிக்கும். அப்போது வந்த மீன்கொத்தி, மரக் கிளையில் நீண்ட நேரம்  (நெடிது இருந்து) காத்திருக்கிறது. அதற்குள் இன்னும் நிறைய தேனீக்கள் அம்மலரை மொய்க்க ஆரம்பிக்கின்றன. தக்க நேரத்தில் பறவை பாய்ந்து மீனைப் பிடித்த சலசலப்பினாலும், இலை கிழிக்கப்பட்ட அதிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட மலர், பெரிதாக ஆட்டங்கொள்ள, மலர் மீது மொய்த்து இருந்த தேனீக்கள் விருட்டென்று' மேலெழும்புகின்றன. மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது.

On Monday, October 19, 2015 at 10:37:05 PM UTC+5:30, Pandiyaraja wrote:
மிக்க நன்றி அம்மா!!
ப.பாண்டியராஜா

On Monday, October 19, 2015 at 10:02:27 PM UTC+5:30, தேமொழி wrote:

குறிப்பு: 
அனைவரின் கவனத்திற்கும்...

மதி ... அரவு... நுதல் ...ஆகிய வேர்ச்சொல் ஆய்வுகள் இனி ஓர் தனி இழையில் தொடரப்படும்.  

பாண்டியராஜா ஐயாவின் மதி சேர் அரவு -  தமிழ்மணி (தினமணி) கட்டுரை  பற்றிய கருத்துப் பரிமாற்றம் மட்டுமே இவ்விழையில் தொடரப்படும்.

..... தேமொழி

அப்போது சிறிது சிறிதாக வெளித்தெரிந்த வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. இதுவே, ‘மதி சேர் அரவின்' என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, ‘கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு தேனை நுகர்ந்த தேனீக்கள்' என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. மேலும், தேனீக்களை ஆய்வோர், ‘தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதில்லை. தனித்தனியாகவே சென்று பூக்களைத் தேடுகின்றன' என்று கூறுவர். எனவே, ‘கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு தேனை நுகர்வதற்காக வரும் தேனீக்கள்' என்ற நிகழ்காலத் தொடராக விரிவு காண்பது பொருத்தமற்றது என்பது உறுதியாகிறது. இங்கே, சேவல் என்பது ஆண்தேனீக்களைக் குறிக்கும். அறிவியலார் கூற்றுப்படி, பெண் தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்க வெளியில் செல்லும். ஆண் தேனீக்கள் கூட்டிலேயே சோம்பியிருக்கும். எனவே ஆண் தேனீக்களுக்கு வீணன் அல்லது சோம்பித்திரிபவன் (drones) என்று பெயர். அக் காலத்தில் ஆண்கள் மட்டுமே வெளியில் பொருள் சேர்க்கச் செல்வர் என்பதால், தேன் சேகரிக்க வரும் தேனீக்களும் ஆண்களாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றைச் சேவல்' என்று புலவர் அழைக்கிறார். எனினும், ஆண், பெண் என்ற இருபால் தேனீக்களில் ஒருபால் இனமே தேனெடுக்க வெளியில் வருகிறது என்ற உண்மையைப் பண்டைய மக்கள் அறிந்திருந்தனர் எனத் தோன்றுகிறது. நீல செம் கண் சேவல்' என்ற தொடரை, ‘நீலச்சேவல், செங்கண் சேவல்' எனப் பிரித்துக் கரிய நிறமும் சிவந்த கண்களையும் உடைய வண்டு' என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் தேனீக்களின் கண்கள் சிவப்பானவை அல்ல. படங்களைப் பாருங்கள்.

தேனீக்களின் கண்கள் பெரும்பாலும் நீலமும் ஓரளவு சிவப்பும் கலந்த நிறத்தவை. எனவே, இத்தொடரில், ‘நீல', ‘செம்' ஆகிய இரண்டையுமே கண்ணுக்கு அடைகளாகக் கொண்டு, சிவப்புக் கலந்த நீல நிறமுடைய கண்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. எனினும், தேனீக்களின் கண்களைக் கூட இத்தனை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ள புலவரின் கூர்த்த மதி எண்ணி எண்ணி வியத்தற்குரியது. அதைப் போலவே பொன் வாய் மணிச் சிரல்'-அதாவது பொன்னிற வாயை யுடைய நீலமணி போன்ற சிச்சிலி-யின்' என்ற புலவரின் கூற்றும் எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள். எனவே, சங்கப் புலவர்களின் சொல்லோவியங்கள் கறுப்பு-வெள்ளை' (Black and White)ப் படங்களாக இல்லாமல், வண்ணப் படங்களாகவே இருப்பதை மீண்டும் இங்குக் காண்கிறோம்.

அடுத்ததாகப் பறவை அமர்ந்திருந்த மரத்தைப் பற்றியும் புலவர் கூறுகிறார். அது ஒரு காஞ்சிமரம்; இப்பொழுது அது ஆற்றுப்பூவரசு என அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இருக்கும். அதைக் குறுங்கால் காஞ்சி என்கிறார் புலவர். அதாவது சிறிய அடி மரத்தைக் கொண்டது அது. குட்டையான அந்த மரத்தின் கிளைகளில் சில நீரின் மேல் பகுதி மேலும் நீண்டிருக்கும். அப்போது அது நீருக்கு அருகில் இருக்கும். எனவே, அங்கிருந்து நீருக்குள் இருக்கும் மீன்களைப் பார்ப்பதுவும், தக்க நேரத்தில் சீக்கிரமாய்ப் பாய்ந்து செல்லவும் அது மிக்க வசதி உடையதாக இருக்கும். எனவேதான் மீன்கொத்தி அந்த மரத்தின் கிளை ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. பறவைகளின் உளப்பாங்கையும் புலவர் அறிந்து வைத்திருக்கிறார்.

காஞ்சி மரத்துக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. அதன் பூ ஏற்கனவே தொடுத்த ஒரு மாலையைப் போலிருக்கும். படத்தைப் பார்க்க.  இதையும் வருணிக்கப் புலவர் மறக்க வில்லை. எனவே இதனை, நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை என்கிறார். இதன் கிளைகள் பார்ப்பதற்குக் குச்சி போல் இருப்பினும் பறவை உட்காருமளவுக்கு வலுவுள்ளன என்பதை நாள் சினை என்பதன் வாயிலாகக் குறிப்பிடுவதற்கும் புலவர் மறக்கவில்லை.

ப.பாண்டியராஜா

Oru Arizonan

unread,
Oct 19, 2015, 4:22:56 PM10/19/15
to mintamil
தங்கள் விளக்கம் மிகவும் அருமை, ருத்ரா அவர்களே!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2015, 12:02:44 PM10/20/15
to mintamil, housto...@googlegroups.com, vallamai, santhavasantham

வணக்கம் ஐயா.
மதி சேர் அரவு – ஒரு அருமையான அறிவியல் விளக்கத்தையும், இலக்கிய இன்பம் துய்த்திடும் வகையில் படங்களுடனும் வழங்கி உள்ளீர்கள் ஐயா.  பண்டைத் தமிழ் இலக்கியங்களை இவ்வாறு பகுத்து உணர்ந்து எடுத்து இயம்புவது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது.  இவ்வாறான விளக்கங்களால் பாடல்வரிகள் மனதில் நீங்காது பதிந்து விடுகின்றன. தாங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற தங்களது புதிய சிந்தனைகளைப் பதிவு செய்து எங்களையும் இலக்கிய இன்பத்தில் ஆழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி, தங்களது கருத்தில் இரண்டு நெருடல்கள் எனக்கு உள்ளன.
1) தாமரை பெரிது, அதை மறைக்கும் தேனீ மிகச் சிறிது.
ஆனால் மதி சிறிது அதில் சேரும் அரவு பெரிது.
ஒருமுறை சந்திரகிரகணத்தைப் பார்த்தாலே இது தெளிவாக விளங்கும். எனவே புலவர் குறிப்பிடும் சேவல் என்பது தாமரை மலரை ஒத்த வடிவுடைய ஒரு பறவையாக இருக்க வேண்டும், மேலும், இப்பறவைக்குச்  சேவல் போன்றதொரு வால் இறகு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இதனால், “சேவல் என்பது தேனீ அல்ல“ என்பது எனது கருத்து.
2) “மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது“ என்று தாங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் ஐயா.
தங்களது கருத்துப்படி, சந்திரோதயம் சூரியோதயம் என்ற சொற்களும் பிழையானவை ஆகின்றன.  நாம் அண்டத்திலிருந்து பூமியையும் அதன் நிழலையும் சந்திரனையும் பார்க்கவில்லை. அறிவியல் அப்படியிருந்தாலும், புலவர் தன் கண்ணால் காண்பதையே கவிதையாகப் பதிவு செய்கிறார்.  நாமும் சந்திரகிரகணத்தன்று பார்த்தால், “மதியில்தான் இருள் சேர்ந்து விலகுகிறது“.  எனவே மதியில் அரவு சேர்கிறது என்பதே சரியான கருத்தாகும்.

எனது சங்கப்புலவர் சரியாகவே எழுதியுள்ளார் என்று எண்ணுகிறேன்.  எனது இவ்விரண்டு கருத்துகளும் சரியா? தவறா?
ஐயா அவர்கள் விளக்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

On 18-Oct-2015 8:36 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:

>முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே 
> வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா

கட்டுரை படித்தேன். முழுக் கட்டுரையும் (நறுக்காக் கட்டுரை) காண ஆவல்.

 மதி சேர் அரவு, உரையாசிரியர்கள் குறிப்பிடும் “புலிகொல்யானை” என்னும் தொடர்போல அமைந்துள்ளது.
விளக்கத்திற்கு நன்றி. புலியைக் கொன்ற யானையா? புலியால் கொன்ற (கொல்லப்பட்ட) யானையா? என்பது 2-ஆம் (அ) 3-ஆம் வேற்றுமை உருபுகொண்டுதான் சொல்லமுடியும்.

மதி சேர் அரவு

First Published : 18 October 2015 12:53 AM IST
புகைப்படங்கள்

இன்றைய மொழியியற் கொள்கைப்படி இத்தொடர் ஒரு மயக்குத் தொடர் ஆகும் (ambiguous  statement). இக்கூற்று மதி அரவை அடைந்தது எனக் கூறுகிறதா, அல்லது அரவு மதியை அடைந்தது எனக் கூறுகிறதா என்பதில்தான் மயக்கம். முதற் பொருளின்படி இதனை மதி, சேர், அரவு என மூன்று கூறுகளாக்கி, இவற்றை எழுவாய்(subject), பயனிலை (predicate),  செயப்படுபொருள் (object)  எனக் கொள்ளலாம். இதன்படி இது ஒரு முழுத்தொடர் ஆகிறது.

இரண்டாவது பொருளின்படி இது (மதி சேர்) அரவு என்று பிரிக்கப்பட்டு, முதலிரண்டு சொற்களும் மூன்றாம் சொல்லுக்கு அடையாக (adjective) அமைந்து இது ஓர் எழுவாய்த்தொடர்  (Noun class) ஆகிறது. இவ்வாறான மயக்குத் தொடர்கள் இலக்கிய இன்பம் தரலாம். ஆனால், அறிவியல் தமிழுக்குத் தெளிவு தேவை அல்லவா? பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இத்தொடர் காணப்படுகிறது. அங்கு இத்தொடர் எப்பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

வயல் வெளிகள் நிறைந்த நிலப்பகுதியை மருதநிலம் என்கிறோம். நீர்வளம் இல்லையென்றால் இந்த வயல்களும் வறண்டுவிடும். நல்லியக்கோடனின் நாடு நீர்வளம் மிக்கது என்று கூறவந்த புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓர் அழகிய சொல்லோவியத்தைக் காட்டுகிறார்.

""குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
மருதம் சான்ற மருதத் தண்பணை'' (சிறு:178-185)

"குட்டையான அடிமரத்தை உடைய காஞ்சி மரத்தின் கொம்பில் ஏறி, நிலையான நீர் இல்லாத குளத்தை(கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீலநிற மீன்கொத்தியின் பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன் முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின் தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம், திங்கள் சேர்கின்ற (கரும்)பாம்பு போலத் தோன்றும், மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல் வெளிகள் நீர் நிறைந்த குளங்களைக்கொண்ட மருதநிலம்' என்பதுவே கூறவந்த பொருளாகும். அதை நேரிடையாகச் சொன்னால் அது உரைநடை ஆகும். எனவே, இங்கே ஒரு குளத்தங்கரைக் காட்சியைச் சொல்லால் வடிக்கிறார் புலவர்.

ஒரு குளத்தில் வெள்ளைத் தாமரை பூத்திருக்கிறது. அதில் ஒரு பூ அன்றுதான் மலர்ந்திருக்கிறது. இதைத்தான் புலவர் முகிழ் விரி நாள் போது என்கிறார். எனவே, அதில் தேன் நிறைய இருக்கும். ஒரு வண்டுக்கூட்டம் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது. இக்காட்சி வெண்ணிலவைப் பாம்பு விழுங்குவது போன்று இருந்தது என்கிறார்.

சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow)  சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத்தான் நம் முன்னோர் பாம்பு என்றனர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர்.

உண்மையில் அரவு எனப்படும் நிழல் எப்போதும் இருப்பது. ஆனால், மதி என்னும் நிலவு பூமியைச் சுற்றிவருவது. அப்படி வரும்போது பல நேரங்களில் நிலவு, நிழலுக்குள் செல்லாமல் விலகிச் செல்கிறது. சில நேரங்களில் நிலவு நிழலுக்குள் சென்று வருகிறது. அதைத்தான் மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். இதன்படி, மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது. அதாவது, மதி சேர் அரவு என்பது அரவைச் சேரும் மதி என்ற பொருளையே தரும். ஆனால், புலவரின் நோக்கம் என்ன?

புலவர் இத்தொடரை ஓர் உவமைக்குப் பயன்படுத்துகிறார். "காஞ்சி மரத்தின் கிளையில் காத்திருந்த மீன்கொத்தி, மீன் ஒன்றைக் கொத்தித் தூக்க, அதன் கால் நகங்களால் கிழிக்கப்பட்ட இலைகளைக்கொண்ட தாமரை' என்கிறார்.

ஒரு குளத்தில் நெடுநெரம் காத்திருக்கும் மீன்கொத்திப் பறவை ஒன்று, தக்க தருணம் அமைந்ததும், மீனை நோக்கி அம்பு போல் பாய்கிறது. போகிற போக்கில் பறவையின் கால்கள் அங்கிருக்கும் தாமரை இலையில் படுகின்றன. காலின் கூரிய நகங்கள் அந்த இலையை இழுத்துக் கிழித்துவிடுகின்றன. இதனால் மலருடன் சேர்ந்த கொடி முழுவதுமே பாதிப்படைகிறது. பறவை ஒரு பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது. எனவே, தாமரை மலர் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி, நீண்ட நேரம் ஆடிக்கொண்டே இருக்கும்.

இச்சூழ்நிலையில், மேல் மட்டத்தில் இருந்த சில தேனீக்கள் முதலில் மேலெழும்ப, அதை அடுத்தடுத்து இருந்தவையும் அடுக்கடுக்காய் எழும்ப, பறந்துபோகும் தேனீக்கள் கூட்டம் ஒரு கூம்பைப் போல் தோன்றுகிறது. அப்போது சிறிது சிறிதாக வெளித்தெரிந்த வெள்ளைத் தாமரை, பாதி மூடிய முழுநிலவைப் போல் காட்சியளிக்கிறது. இதுவே, "மதி சேர் அரவின்' என்று புலவரைப் பாடச் செய்திருக்கிறது. எனவே, "கொங்கு கவர் சேவல்' என்ற வினைத்தொகைச் சொல்லுக்குத் தேனை நுகர்ந்த தேனீக்கள்' என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம். அத்தோடு மதி சேர் அரவு என்ற வினைத்தொகைச் சொல்லுக்கு மதி சேர்ந்த பாம்பு என்ற சென்ற காலத் தொடராக விரிவு காண்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

பாதி மூடிய மலரை விட்டுக் தேனீக்கள் கூம்பு போல் எழுந்துசெல்லும் காட்சி மதி நுழைந்த அரவு போல் இருப்பதாகப் புலவர் பாடியுள்ளார். தேனீக்கள் விலகும் நிலையில் பாதி வெளித்தெரியும் வெள்ளைத்தாமரையைப் புலவர் உவமித்திருந்தால் "அரவு சேர் மதியின் மான' என்று உவம உருபான "மான'வை மதியுடன் இணைத்திருப்பார். ஆனால், அவர் "மதி சேர் அரவின் மான' என்று தெளிவாகக் கூறியிருப்பதால், புலவரின் ஒப்புமை தாமரைக்கும் மதிக்கும் அல்ல என்றும், உவமை கூம்பு போன்ற வண்டுக் கூட்டத்துக்கும் கூம்பு போன்ற அரவு என்னும் நிழலுக்குமே என்பது தெளிவு.

இப்போது உவமையை உற்றுப்பாருங்கள்: கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல், மதி சேர் அரவின் மானத் தோன்றும். எனவே, கிரகணம் என்பதில் உள்ள அரவு நிழல்கூம்பே என்ற அறிவியல் நுணுக்கத்தை அன்றைத் தமிழர் தெரிந்திருந்தனர் என்று நம்ப இடமிருக்கிறது.

-முனைவர் ப.பாண்டியராஜா
 
On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
இன்றைய (18.10.2015 ஞாயிறு) தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் தமிழ்மணி பகுதியில் மதி சேர் அரவு என்ற தலைப்பிட்ட என் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெகுநாட்களுக்கு முன்னர் நான் எழுதி அனுப்பிய கட்டுரை இது. ஓரளவுக்கு நறுக்கப்பட்டிருந்தாலும் பொருள் சிதைப்போ, தொடர்ச்சியின்மையோ ஏற்படாவண்ணம் மிகவும் திறமையாக, அவர்களின் இட அளவுக்கேற்ற வகையில் குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனை இங்கு பார்க்கலாம்:

(இதை Ctrl + Click செய்யும்போது இதனடியில் Go to link : என்று முகவரி தோன்றுகிறது. அதனைத் தட்டுங்கள்)

ஆகஸ்ட்டு, செப்டம்பரில் 'மருத்துவ விடுப்பில்' இருந்தேன். சற்றே தேறி வரும்போது அக்டோபரில் 15 நாள் இடைவெளியில் இரண்டு அடுத்தடுத்த பெரிய அதிர்ச்சிகள். இந்த அதிர்வலைகளின் சுனாமித் தாக்கத்தினால் மனத்தில் ஏற்பட்ட பெரும் நாசம் மாறி, இயல்புநிலை அடையப் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கட்டுரை வந்து கொஞ்சம் மயிலிறகாய்த் தடவிவிட்டிருக்கிறது.
இந்தச் சுட்டியின்மூலம் கிடைக்காவிட்டால், google Search - இல் மதி சேர் அரவு என்று தட்டிப் பாருங்கள்.
முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே வெளியிடுகிறேன்.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2015, 1:06:02 PM10/20/15
to mintamil, vallamai

On 20-Oct-2015 9:32 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம் ஐயா.
> மதி சேர் அரவு – ஒரு அருமையான அறிவியல் விளக்கத்தையும், இலக்கிய இன்பம் துய்த்திடும் வகையில் படங்களுடனும் வழங்கி உள்ளீர்கள் ஐயா.  பண்டைத் தமிழ் இலக்கியங்களை இவ்வாறு பகுத்து உணர்ந்து எடுத்து இயம்புவது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது.  இவ்வாறான விளக்கங்களால் பாடல்வரிகள் மனதில் நீங்காது பதிந்து விடுகின்றன. தாங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற தங்களது புதிய சிந்தனைகளைப் பதிவு செய்து எங்களையும் இலக்கிய இன்பத்தில் ஆழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
>
> மற்றபடி, தங்களது கருத்தில் இரண்டு நெருடல்கள் எனக்கு உள்ளன.
> 1) தாமரை பெரிது, அதை மறைக்கும் தேனீ மிகச் சிறிது.
> ஆனால் மதி சிறிது அதில் சேரும் அரவு பெரிது.

> ஒருமுறை சந்திரகிரகணத்தைப் பார்த்தாலே இது தெளிவாக விளங்கும். எனவே புலவர் குறிப்பிடும் சேவல் என்பது தாமரை மலரை ஒத்த வடிவுடைய தேன்சிட்டுப் போன்றதொரு பறவையாக இருக்க வேண்டும், மேலும்,  இப்பறவைக்குச்  சேவல் போன்றதொரு வால் இறகு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

> இதனால், “சேவல் என்பது தேனீ அல்ல“ என்பது எனது கருத்து.
> 2) “மதி அரவைச் சேர்ந்து விலகுகிறது என்ற கூற்றே சரியானது“ என்று தாங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் ஐயா.
> தங்களது கருத்துப்படி, சந்திரோதயம் சூரியோதயம் என்ற சொற்களும் பிழையானவை ஆகின்றன.  நாம் அண்டத்திலிருந்து பூமியையும் அதன் நிழலையும் சந்திரனையும் பார்க்கவில்லை. அறிவியல் அப்படியிருந்தாலும், புலவர் தன் கண்ணால் காண்பதையே கவிதையாகப் பதிவு செய்கிறார்.  நாமும் சந்திரகிரகணத்தன்று பார்த்தால், “மதியில்தான் இருள் சேர்ந்து விலகுகிறது“.  எனவே மதியில் அரவு சேர்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
>
> எனது சங்கப்புலவர் சரியாகவே எழுதியுள்ளார் என்று எண்ணுகிறேன்.  எனது இவ்விரண்டு கருத்துகளும் சரியா? தவறா?
> ஐயா அவர்கள் விளக்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
>
> On 18-Oct-2015 8:36 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> >முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே 
>> > வெளியிடுகிறேன். மிக்க நன்றி, அன்புடன், ப.பாண்டியராஜா
>>
>> கட்டுரை படித்தேன். முழுக் கட்டுரையும் (நறுக்காக் கட்டுரை) காண ஆவல்.
>>
>>  மதி சேர் அரவு, உரையாசிரியர்கள் குறிப்பிடும் “புலிகொல்யானை” என்னும் தொடர்போல அமைந்துள்ளது.
>> விளக்கத்திற்கு நன்றி. புலியைக் கொன்ற யானையா? புலியால் கொன்ற (கொல்லப்பட்ட) யானையா? என்பது 2-ஆம் (அ) 3-ஆம் வேற்றுமை உருபுகொண்டுதான் சொல்லமுடியும்.
>> http://www.tamilvu.org/slet/l0100/l0100noo.jsp?song_no=96&head_id=2
>>
>>>
>>> http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2015/10/18/மதி-சேர்-அரவு/article3085271.ece
>>
>>
>>
>> மதி சேர் அரவு
>>
>> First Published : 18 October 2015 12:53 AM IST
>> புகைப்படங்கள்
>>
>>

N. Ganesan

unread,
Oct 20, 2015, 1:23:15 PM10/20/15
to மின்தமிழ்

ருத்ராவின் கவிதைகள் பிடிக்கும். அரவம், பாம்பு என்பவை மேகம் என்று குறிப்பிட்டிருந்தார். தேடிப் பார்த்தேன். அப்படி எவ்விலக்கியமும் பயன்படுத்தவில்லை.

நா. கணேசன் 

Pandiyaraja

unread,
Oct 20, 2015, 1:30:07 PM10/20/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, kalair...@gmail.com
மிக்க நன்றி காளை ஐயா!
நான் இறுதியில் அனுப்பிய முழுக்கட்டுரையையும் படித்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஐயா, நான் மிகப் பெரும்பாலும் உரையாசிரியர்கள் கூற்றை ஒட்டியே எழுதுவேன். அவர்களின் உரைகளைப் படித்துத்தான் புரிந்துகொள்கிறேன் என்பதை வெளிப்படையாகவே கூறிக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இருப்பினும் அந்தப் பொருளை உள்வாங்கிக்கொண்டு நானே தனிவழியில் சிந்திக்கிறேன். சிற்சில இடங்களில் நான் மாறுபட நேரிடுகிறது. ஆனால் அவசரப்படாமல் பலவித உள்/வெளிச் சான்றுகளின் அடிப்படியில்தான் என் மாறுபடுதலை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
கொங்குகவர் நீலச் செங்கண் சேவல் என்பதற்கு பெருமழைப்புலவர் கூறுவது: "தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு". இங்கு சேவல் என்பது ஒரு தனித்த தேனீ அல்ல. ஒரு தேனீக்கூட்டம் என்பது தெளிவாகிறது. மேலும் அவர் "சேவல் - ஆண்பால் குறித்த சொல். எனவே கொங்கு கவர் ஆண்வண்டுகள் என்றபடியாம்" என்கிறார்.
மதுரைக்காஞ்சியில்,
கந்துநீத்து உழிதரும் கடாஅ யானையும்,
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப் புரவி ..
கால் எனக் கடுக்கும் கவின்பெரு தேரும் --
என்ற அடிகளில் ஒரு யானையையோ, ஒரு குதிரையையோ, ஒரு தேரையோ அல்ல - இங்கு ஒரு யானைப்படையையும், குதிரைப்படையையும், தேர்ப்படையையும் தான் புலவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு. மதுரை நகர்த் தெருக்களைக் காவல்காக்க ஒரு யானையும், ஒரு குதிரையும், ஒரு தேரும் போதுமா? அது ஒரு Battalion. அதைப் போலவே தாமரை மலரை மொய்த்துக்கொண்டிருக்கும் வண்டுகளின் கூட்டத்தையே கொங்கு கவர் சேவல் என்கிறார் புலவர்.
மதியில் இருள் சேர்ந்து விலகுகிறது என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பதின் உண்மையான அறிவியல் காரணத்தை அன்றைய புலவர் அறிந்திருந்திருப்பரோ என்பதுதான் என் கூற்று. இதற்கு அவர் கூறும் உவமத்தின் விரிவான விளக்கம் ஒரு சான்று என நிறுவ முயல்கிறேன். அவ்வளவுதான்.
மீண்டும் தங்களுக்கு மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2015, 11:51:53 AM10/21/15
to Pandiyaraja Paramasivam, vallamai, mintamil

வணக்கம் ஐயா.
என் பொருட்டு உடன் விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா.

On 20-Oct-2015 11:00 pm, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> மிக்க நன்றி காளை ஐயா!

உரிமையுடன் காளை என்று அழைத்தால் பெரிதும் மகிழ்வேன் ஐயா.

> நான் இறுதியில் அனுப்பிய முழுக்கட்டுரையையும் படித்துவிட்டுத்தான் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஆமாம் ஐயா.

நான் மிகப் பெரும்பாலும் உரையாசிரியர்கள் கூற்றை ஒட்டியே எழுதுவேன். அவர்களின் உரைகளைப் படித்துத்தான் புரிந்துகொள்கிறேன் என்பதை வெளிப்படையாகவே கூறிக்கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இருப்பினும் அந்தப் பொருளை உள்வாங்கிக்கொண்டு நானே தனிவழியில் சிந்திக்கிறேன். சிற்சில இடங்களில் நான் மாறுபட நேரிடுகிறது. ஆனால் அவசரப்படாமல் பலவித உள்/வெளிச் சான்றுகளின் அடிப்படியில்தான் என் மாறுபடுதலை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
> கொங்குகவர் நீலச் செங்கண் சேவல் என்பதற்கு பெருமழைப்புலவர் கூறுவது: "தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு". இங்கு சேவல் என்பது ஒரு தனித்த தேனீ அல்ல. ஒரு தேனீக்கூட்டம் என்பது தெளிவாகிறது. மேலும் அவர் "சேவல் - ஆண்பால் குறித்த சொல். எனவே கொங்கு கவர் ஆண்வண்டுகள் என்றபடியாம்" என்கிறார்.

சங்கப்புலவரின் பாடல் வரிகளை ஆராயும்போது, உரையாசிரியர் பெருமழைப்புலவர்  கூறும்  விளக்கங்கத்தில்

1) தண்ணீர் தடாகத்தில் உள்ள தாமரையில் தேனீக்கள் தேன் எடுக்குமா?
2)தேனீக்கள் ஒரு மலரை மறைக்கும் அளவிற்கு ஒருகுழுவாகக் கூடிச் சென்று தேன் எடுக்கும்  இயல்புடையனவையா? எனவும் அறிய வேண்டியுள்ளது ஐயா.

எனக்கு என்னவோ, வளைந்த வால் உடைய ஒரு சிறிய கரியநிறப் பறவையைப் புலவர் குறிப்பிடுகின்றார் என்ற எண்ணம்.

தேமொழி

unread,
Oct 21, 2015, 1:15:04 PM10/21/15
to மின்தமிழ், pipi...@gmail.com, kalair...@gmail.com
On Wednesday, October 21, 2015 at 8:51:53 AM UTC-7, kalai wrote:

சங்கப்புலவரின் பாடல் வரிகளை ஆராயும்போது, உரையாசிரியர் பெருமழைப்புலவர்  கூறும்  விளக்கங்கத்தில்

1) தண்ணீர் தடாகத்தில் உள்ள தாமரையில் தேனீக்கள் தேன் எடுக்குமா?
2)தேனீக்கள் ஒரு மலரை மறைக்கும் அளவிற்கு ஒருகுழுவாகக் கூடிச் சென்று தேன் எடுக்கும்  இயல்புடையனவையா? எனவும் அறிய வேண்டியுள்ளது

இதோ படத்தில் விளக்கம்.

..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 21, 2015, 1:17:02 PM10/21/15
to மின்தமிழ், pipi...@gmail.com, kalair...@gmail.com

Pandiyaraja

unread,
Oct 21, 2015, 1:40:02 PM10/21/15
to மின்தமிழ், pipi...@gmail.com, kalair...@gmail.com
மிக்க நன்றி அம்மா! (கணினிக்)கரம் கொடுத்துத் தூக்கிவிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே!
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Oct 21, 2015, 10:46:22 PM10/21/15
to மின்தமிழ், pipi...@gmail.com, vall...@googlegroups.com, kalair...@gmail.com
அன்புமிக்க காளை!
<<
எனக்கு என்னவோ, வளைந்த வால் உடைய ஒரு சிறிய கரியநிறப் பறவையைப் புலவர் குறிப்பிடுகின்றார் என்ற எண்ணம்.
>>
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் என்பது ஒருமையில் வருவதால் அது ஒரே ஒரு பரவைதான் என்ற தங்கள் மன அமைவினின்றும் (mindset) தாங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதோ தமிழ் வழக்கு பற்றியும், சங்க வழக்கு பற்றியும் இன்னும் கொஞ்சம் விளக்கங்கள்:-
உங்களிடம் ஒருவர் நாற்பது ரூபாய் கேட்கிறார். நீங்கள் பத்து ரூபாய் தாள்கள் நான்கினைக் கொடுத்தாலும், நீங்கள் தருவது நாற்பது ரூபாய்-தான் நாற்பது ரூபாய்கள் அல்ல.
எங்கள் Flat பக்கம் திடீரென குரங்குகள் படையெடுக்கும். "கதவு ஜன்னல்களை மூடுங்கள், குரங்கு வருது" என்று முதலில் பார்த்தவர்கள் ஓங்கிக் குரல் கொடுப்பார்கள். ஒரு குரங்கு வருகிறது என்பது இதன் பொருள் அல்ல!!!!
இது பேச்சு வழக்கு. எழுத்து வழக்கு?
எறும்பூரக் கல்லும் தேயும் என்று எழுதுகிறோம். ஒரே ஒரு எறும்புதானா?
"அந்த இனிப்பை மூடிவை, ஈ மொய்க்கப் போகிறது" என்கிறோம். ஒரே ஒரு ஈ தானா?
இலக்கியத்தில் மதுரைக் காஞ்சியினின்றும் எ.கா. கூறினேன். இன்னுமோர் எ.கா. இம்முறை நெடுநல்வாடையிலிருந்து.
ஐப்பசி மாதக் கடுங்குளிர். அதிகாலை வேளை.
ஊர்ப்புறத்தில் கிடைபோட்டுக்கிடக்கும் மாடுகள் மேய்ச்சலை மறந்து நிற்கின்றன.
மரத்தில் குரங்குகள் குளிரில் விரைத்துப்போய் இருக்கின்றன.
பறவைகள் கிளைகளில் தம் கால்பிடி தளர்ந்து கீழே விழுகின்றன.
கறவைமாடுகளிடம் பால்குடிக்க வரும் கன்றுகளை பசுக்கள் உதைத்துத் தள்ளுகின்றன.
புலவர் இப்படிக் கூறுகிறார்:-
மா மேயல் மறப்ப, மந்தி கூர
பறவை படிவன வீழ, கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி -

மா, மந்தி, பறவை, கரவை என்று எல்லாமே ஒருமையில்தான் வருகின்றன. ஆனால் எல்லாமே அந்தந்த இனத்தைக் குறிக்கின்றன. மாக்கள், மந்திகள், பறவைகள், கறவைகள் என்று பன்மையில் அவற்றைக் கொள்கிறோம். இதுவே சங்க மரபு. ரொம்பப் போனால் ஆநிரை, வண்டினம் என்றுதான் பன்மைப் பெயர்கள் வரும். பல இடங்களில் ஒருமைப் பெயரே பன்மையையும் குறிக்கும். (அவ்வாறு பன்மைப் பெயர்கள் வந்தால் அவை பிற்கால இலக்கியங்கள் என்பர்)
எனவேதான் கொங்குகவர் நீலச் செங்கண் சேவல் என்பது தேனெடுக்கும் ஒரு வண்டுக்கூட்டத்தைக் குறிக்கிறது என்கிறோம்.
கடைசியாக இன்னொன்று:-
ஒரு தாமரைப் பூவையே மறைக்கும் அளவுக்கு உருவமும் வாலும் கொண்ட ஒரு பெரிய பறவை தேன் உண்டு வாழாது!!! அது தேன் எடுக்கவும் வாராது!!!
சிந்திக்கவைத்ததற்கு மீண்டும் மிக்க நன்றி காளை!
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2015, 11:10:29 PM10/21/15
to Pandiyaraja Paramasivam, mintamil

On 21-Oct-2015 11:10 pm, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> மிக்க நன்றி அம்மா! (கணினிக்)கரம் கொடுத்துத் தூக்கிவிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே!
> ப.பாண்டியராஜா
>

ஆமாம் ஐயா.
"இணையப் புயல்" அவர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியே நேரம் கிடைத்தால், தேன்சிட்டு தாமரையில் தேன் உண்ணுவது போன்ற படம் இணையத்தில் இருக்கிறதா?  எனவும் பார்த்துக் கூறினால் நன்றியுடையவனாவேன்.

> On Wednesday, October 21, 2015 at 10:45:04 PM UTC+5:30, தேமொழி wrote:
>>
>> On Wednesday, October 21, 2015 at 8:51:53 AM UTC-7, kalai wrote:
>>>
>>>
>>> சங்கப்புலவரின் பாடல் வரிகளை ஆராயும்போது, உரையாசிரியர் பெருமழைப்புலவர்  கூறும்  விளக்கங்கத்தில்
>>>
>>> 1) தண்ணீர் தடாகத்தில் உள்ள தாமரையில் தேனீக்கள் தேன் எடுக்குமா?
>>> 2)தேனீக்கள் ஒரு மலரை மறைக்கும் அளவிற்கு ஒருகுழுவாகக் கூடிச் சென்று தேன் எடுக்கும்  இயல்புடையனவையா? எனவும் அறிய வேண்டியுள்ளது
>>
>>

தேமொழி

unread,
Oct 21, 2015, 11:36:26 PM10/21/15
to மின்தமிழ், pipi...@gmail.com, kalair...@gmail.com

On Wednesday, October 21, 2015 at 8:10:29 PM UTC-7, kalai wrote:

அப்படியே நேரம் கிடைத்தால், தேன்சிட்டு தாமரையில் தேன் உண்ணுவது போன்ற படம் இணையத்தில் இருக்கிறதா?  எனவும் பார்த்துக் கூறினால் நன்றியுடையவனாவேன்.

மேலும் இரண்டு படங்கள் கீழ் காணும் சுட்டிகளில்    

https://www.flickr.com/photos/worksbyknight/1394470752/in/photostream/ <<< இதில் தேன் உண்ணுவது போல தெரிகிறது 

..... தேமொழி

Pandiyaraja

unread,
Oct 22, 2015, 12:29:27 AM10/22/15
to மின்தமிழ், pipi...@gmail.com, kalair...@gmail.com
மிக்க நன்றி அம்மணி!
தாங்கள் கொடுத்துள்ள இரண்டு சுட்டிகளுள் முதலாவது A 1. மலர்ந்தும் மலராத பாதி மலராய் நிற்கும் சங்கப் புலவரின் முகிழ் விரி நாள் போது அதுதான். அதுமட்டும் வெள்ளைத்தாமரையாய் அமைந்திருந்தால் SUPER -ஆக இருந்திருக்கும். பார்க்காமலா பாடியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள்? தேன் குடிக்கும் பறைவையினத்தில் மிகப்பெரியது இந்தத் தேன்சிட்டுதான் என நினைக்கிறேன். இது எப்படி மதி சேர் அரவைப் போல் மலரை மறைக்கும்? Partial eclipse கூட முடியாதே!!!
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 22, 2015, 12:44:07 AM10/22/15
to mintamil
ஐயா

இப் பாடலில் வரும் ' கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் ' என்னும் வரிக்கான எனது விளக்கம்.

இவ் வரியில் குறிப்பிடப்படும் பறவை நிச்சயமாக தேனீ அல்ல. காரணம், சேவல் என்று ஆண் பறவையினைக் குறிப்பிடுவதால், ஆண் தேனீக்கள் தேனை எடுப்பதில்லை.

இவ் வரியில் குறிப்பிடப்படும் பறவை, கருநீல உடலினையும் சிவந்த கண்ணையும் உடைய குயிலாகும்.

குயில்கள் தாதுண்ணும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. குறுந்தொகை 192 ம் பாடலில் இதற்கான சான்று உள்ளது.

இப் பாடலில் வரும் வெண் தாமரை மலர் குயிலைவிடச் சிறியதாக இருப்பதால், குயில் அதில் அமரமுடியாமல், அதன்மேலாக அங்கும் இங்கும் பறந்தவாறே தேனை எடுக்கிறது. இதனால், அது மலரை மறைத்து மறைத்து விலகுவதாகக் கொள்ளலாம். இதைத்தான், மேகமானது வெண்ணிலவினை மறைத்துமறைத்து விலகுகின்ற இயற்கை நிகழ்வுடன் ஒப்பிட்டுக் கூறியுளார் புலவர்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Oct 22, 2015, 12:57:26 AM10/22/15
to மின்தமிழ்
மிக நல்ல கற்பனை.
>>
பறவை நிச்சயமாக தேனீ அல்ல. காரணம், சேவல் என்று ஆண் பறவையினைக் குறிப்பிடுவதால், ஆண் தேனீக்கள் தேனை எடுப்பதில்லை.
>>
இந்த உண்மை இன்றைய ஆய்வின்மூலம் தெரிந்துகொண்டது. சங்கத் தமிழருக்குத் தெரிந்திருந்ததா எனத் தெரியாது. முதலில் தெரிந்திருந்தது என நிறுவவேண்டும். வேறு எ.கா- கள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்ப்போம்.
பொதுவாக ஆண்கள்தான் வெளியில் பொருள்சேர்க்கச் செல்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புலவர் பாடியிருந்திருக்கலாம்.

இந்த உவமையை, புலவரின் முழு விவரணங்களோடு சேர்த்துப் பார்க்கவேண்டும். மீன் பிடிக்கப்பாய்ந்து நீரில் மூழ்கி எழும்  சிரல் - அப்போது எழும் அதிர்வலைகள் - மீண்டும் எழும்போது கால் நகம்பட்டு தாமரை இலை கிழியும் காட்சி - அப்போது எழும் பேரதிர்வலைகள் - இதையெல்லாம் புலவர் சும்மா சொல்லிப்போயிருக்கமாட்டார். நேரடியாகப் பூவுக்கே வந்திருப்பார். ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் இதைப் பார்க்கவேண்டும். குயில்கள் மரக்கிளைகளில் அமர்ந்து எட்டி எட்டிப் பூவுக்குள் இருக்கும் தாதுக்களை உண்ணுவதை நினைத்துப்பார்க்கலாம். பறந்து பறந்து வந்து மலரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே எவ்வாறு குடைய முடியும்? மீண்டும் தூண் - கன்றுக்குட்டிதான் நினைவுக்கு வருகிறது.
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 22, 2015, 1:04:08 AM10/22/15
to mintamil
ஐயா

உங்களை ஒப்புக்கொள்ளச் செய்ய நான் இதை எழுதவில்லை. அது அவரவர் விருப்பம். :)))

ஆனால், உங்கள் கூற்று சங்கப் புலவர்களுக்கு வானில் நிகழும் சந்திர கிரகணம் பற்றித் தெரிந்திருக்கிறது ஆனால் புவியில் இருக்கும் தேனீக்களைப் பற்றித் தெரிந்திருக்காது என்று நினைப்பது என்ன நியாயம்?. :)))

எனது கூற்றுக்கு நான் ஆதாரங்களையும் கொடுத்துவிட்டேன் ஐயா.

அதை மறுப்பவர்கள் ஆதாரங்களைச் சுட்டுங்களேன் தயவுசெய்து.

தயவுசெய்து திறந்து மனதுடன் எப் பக்கமும் சாயாமல் ஈகோ இல்லாமல் இக் கருத்தினை யாரேனும் அணுகுவீராயின், இதன் உண்மை உங்களுக்கு புலப்படும்.

அன்புடன்,

தி.பொ.ச.

Pandiyaraja

unread,
Oct 22, 2015, 2:55:25 AM10/22/15
to மின்தமிழ்
>>
ஆதாரங்களையும் கொடுத்துவிட்டேன்
>>
எங்கே?

>>
தேனீக்களைப் பற்றித் தெரிந்திருக்காது என்று நினைப்பது என்ன நியாயம்?
>>

தெரிந்திருக்கிறது என்று சொல்ல என்ன சான்று?

அவரவர் கருத்து என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
"நீங்கள் சொல்வது சரியல்ல - அதற்கு இதுதான் பொருள்" என்பதை எந்நாளும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
"இது என் கருத்து" என்று சொல்லுங்கள். போதும். மற்றவரைத் திருத்த முயலவேண்டாம்.
மற்றபடி உங்களின் புதுமைக் கோணங்களை என்றும் ரசிப்பவன் நான்.

ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 22, 2015, 3:27:51 AM10/22/15
to தேமொழி, Pandiyaraja Paramasivam, mintamil

அருமையான படம்.
என் பொருட்டு இணையத்தில் புயலாய்த் தேடித் தேன்சிட்டுப் படம் எடுத்துப் போட்ட தேமொழியாருக்கு நன்றி பல.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 22, 2015, 3:35:15 AM10/22/15
to Pandiyaraja Paramasivam, mintamil

வணக்கம் ஐயா.

On 22-Oct-2015 9:59 am, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> மிக்க நன்றி அம்மணி!
> தாங்கள் கொடுத்துள்ள இரண்டு சுட்டிகளுள் முதலாவது A 1. மலர்ந்தும் மலராத பாதி மலராய் நிற்கும் சங்கப் புலவரின் முகிழ் விரி நாள் போது அதுதான். அதுமட்டும் வெள்ளைத்தாமரையாய் அமைந்திருந்தால் SUPER -ஆக இருந்திருக்கும். பார்க்காமலா பாடியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள்? தேன் குடிக்கும் பறைவையினத்தில் மிகப்பெரியது இந்தத் தேன்சிட்டுதான் என நினைக்கிறேன். இது எப்படி மதி சேர் அரவைப் போல் மலரை மறைக்கும்? Partial eclipse கூட முடியாதே!!!
> ப.பாண்டியராஜா

ஆமாம் ஐயா.
மலரும் தாமரை மொட்டை மறைக்கும் அளவிற்குத் தேன்சிட்டு பெரியதல்ல என்றே கருதுகிறேன்.

>
>
> On Thursday, October 22, 2015 at 9:06:26 AM UTC+5:30, தேமொழி wrote:
>>
>>
>>
>> On Wednesday, October 21, 2015 at 8:10:29 PM UTC-7, kalai wrote:
>>>
>>> அப்படியே நேரம் கிடைத்தால், தேன்சிட்டு தாமரையில் தேன் உண்ணுவது போன்ற படம் இணையத்தில் இருக்கிறதா?  எனவும் பார்த்துக் கூறினால் நன்றியுடையவனாவேன்.
>>

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 22, 2015, 7:57:43 AM10/22/15
to மின்தமிழ்
நான் அறிந்த மட்டில் ஆண் தேனீக்கள் உழைப்பாளித் தேனீக்கள்.பெண் தேனீ எனும் ராணித்தேனீயைக் காப்பது "சேவல்" தேனீக்களே.அதனால் தான் சங்கப்புலவரும் அப்படிக்கற்பனை செய்தார்.தேனீகளின் "கம்பவுண்டு ஐ" உருப்பெருக்கியில் "நீலச்செங்கண்" போல தெரியும் வாய்ப்பும் உளது

===============================================ருத்ரா

On Saturday, October 17, 2015 at 10:57:04 PM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
இன்றைய (18.10.2015 ஞாயிறு) தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் தமிழ்மணி பகுதியில் மதி சேர் அரவு என்ற தலைப்பிட்ட என் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெகுநாட்களுக்கு முன்னர் நான் எழுதி அனுப்பிய கட்டுரை இது. ஓரளவுக்கு நறுக்கப்பட்டிருந்தாலும் பொருள் சிதைப்போ, தொடர்ச்சியின்மையோ ஏற்படாவண்ணம் மிகவும் திறமையாக, அவர்களின் இட அளவுக்கேற்ற வகையில் குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனை இங்கு பார்க்கலாம்:

(இதை Ctrl + Click செய்யும்போது இதனடியில் Go to link : என்று முகவரி தோன்றுகிறது. அதனைத் தட்டுங்கள்)

ஆகஸ்ட்டு, செப்டம்பரில் 'மருத்துவ விடுப்பில்' இருந்தேன். சற்றே தேறி வரும்போது அக்டோபரில் 15 நாள் இடைவெளியில் இரண்டு அடுத்தடுத்த பெரிய அதிர்ச்சிகள். இந்த அதிர்வலைகளின் சுனாமித் தாக்கத்தினால் மனத்தில் ஏற்பட்ட பெரும் நாசம் மாறி, இயல்புநிலை அடையப் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கட்டுரை வந்து கொஞ்சம் மயிலிறகாய்த் தடவிவிட்டிருக்கிறது.
இந்தச் சுட்டியின்மூலம் கிடைக்காவிட்டால், google Search - இல் மதி சேர் அரவு என்று தட்டிப் பாருங்கள்.
முழுக்கட்டுரை, இன்னும் அதிகப் படங்களுடனும், அதிக விளக்கங்களுடனும் அமைந்திருக்கும். நேரம் கிட்டும்போது இங்கே வெளியிடுகிறேன்.
மிக்க நன்றி,
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 22, 2015, 8:13:21 AM10/22/15
to mintamil
இல்லை ருத்ரா ஐயா. இதோ உங்களுக்காக கீழ்க்காணும் சுட்டி.

https://agdev.anr.udel.edu/maarec/honey-bee-biology/the-colony-and-its-organization/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 22, 2015, 10:15:36 AM10/22/15
to mintamil
கதிரவன் வேறு, திங்கள் வேறு என்று அறிவோம்.

ஆனால், கீழ்க்காணும் பாடலில் கதிரவனைத் திங்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர்.

கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்து சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
சிறு புன் மாலையும் உள்ளார் - அகம் -114

கரியமலையின் பின்னால் சென்று மாலைவேளையில் மறையும் கதிரவனை, கருமேகம் மறைக்கின்ற வெண்ணிலவுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதைக் காணுங்கள்.

இப் பாடலிலும் அரவு என்பது மேகம் எனும் பொருளில்தான் கூறப்பட்டுள்ளது. இதுபோல நிறைய சான்றுகள் இருக்கிறது. அதைக் கட்டுரையாக்கித் தருகிறேன்.

சரி, ஏன் மேகத்தை அரவு என்கிறார்கள்? இதற்கான பதில் எனது ' திங்களைப் பாம்பு கொண்டற்று ' என்ற கட்டுரையில் இருந்தாலும் ( சீறுவது, ஊர்ந்துசெல்வது, நாவினை வெளிப்படுத்துவது போன்ற ஒப்புமைகள்), இன்னுமோர் காரணத்தை இங்கே சொல்கிறேன்.

மேகங்களுக்குப் பல வடிவங்கள் உண்டு. இவை நிலையற்றவை என்ற போதிலும் பாம்பு போல நீண்டதோர் வடிவத்தைத் தனது பயணத்தின் போக்கிலேயே அடிக்கடி அடையும். பெரும்பாலான நேரங்களில் இப்படி பாம்பு போல நீண்ட வடிவில் இருப்பதால், அதைப் பாம்பாகக் கருதி, அரவு என்று பெயரிட்டு அழைத்திருக்கலாம்.

அன்புடன்,

தி.பொ.ச.

Pandiyaraja

unread,
Oct 22, 2015, 11:12:50 AM10/22/15
to மின்தமிழ், minT...@googlegroups.com
என்ன சரவணன்!!! வெள்ளிடை மலையாக இருக்கும் பொருளை வீம்புக்குத் திருத்துகிறீர்களே. மலைக்குப் பின்னால் மறைகிறது சூரியன் (கல் சேர் ஞாயிறு) அது பாம்பினால் விழுங்கப்படும் சந்திரனைபோல் இருக்கிறதாம் - புலவர் கூறுகிறார். அரவு நுங்கு மதியின் - பாம்பு விழுங்கும் சந்திரனைப்போல. சிறிது சிறிதாக மறைகின்றது சூரியன் - ஐயென - அது கொஞ்சம் கொஞ்சமாகக் கூம்புக்குள் நுழையும் சந்திரனைப்போல் இருக்கிறது. கூம்புக்குள் நுழையும் என்று சொல்லாமல், அரவு விழுங்குவதாகக் கூறுகிறார். அதுதானே அன்றைக்கும் இன்றைக்கும் நம் நம்பிக்கை.
ப.பாண்டியராஜா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 22, 2015, 11:40:53 AM10/22/15
to mintamil

On 22-Oct-2015 7:45 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
>
> கதிரவன் வேறு, திங்கள் வேறு என்று அறிவோம்.
>
> ஆனால், கீழ்க்காணும் பாடலில் கதிரவனைத் திங்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர்.
>
> கேளாய் எல்ல தோழி வேலன்
> வெறி அயர் களத்து சிறு பல தாஅய
> விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
> உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு

செந் நிறத்தில் தோன்றும்,

இதைப் போன்றே
> அரவு நுங்கு மதியும் ஐயென மறையும்
போது செந் நிறத்தில் தோன்றும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 22, 2015, 11:45:00 AM10/22/15
to mintamil

On 22-Oct-2015 9:10 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
> On 22-Oct-2015 7:45 pm, "திருத்தம் பொன்.சரவணன்" <vaen...@gmail.com> wrote:
> >
> > கதிரவன் வேறு, திங்கள் வேறு என்று அறிவோம்.
> >
> > ஆனால், கீழ்க்காணும் பாடலில் கதிரவனைத் திங்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர்.
> >
> > கேளாய் எல்ல தோழி வேலன்
> > வெறி அயர் களத்து சிறு பல தாஅய
> > விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
> > உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
> செந் நிறத்தில் தோன்றும்,
>
> இதைப் போன்றே
> > அரவு நுங்கு மதியும் ஐயென மறையும்
> போது செந் நிறத்தில் தோன்றும்.
>
> >
> > கரியமலையின் பின்னால் சென்று மாலைவேளையில் மறையும் கதிரவனை, கருமேகம் மறைக்கின்ற வெண்ணிலவுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதைக் காணுங்கள்.

கருமேகம் மறைத்த வெண்ணிலவு செந்நிறமாகத் தோன்றாது!

Pandiyaraja

unread,
Oct 22, 2015, 1:48:39 PM10/22/15
to மின்தமிழ், kalair...@gmail.com
நல்ல ஒப்புமைதான். ஆனால் காளை!  நிறம்கூட அவ்வளவு முக்கியம் அல்ல இங்கே. (சரவணன்பாட்டுக்கு இதைப்பிடித்துக்கொண்டு வேறு எங்கேயோ போனாலும் போவார்) மலையின் பின்னால் மெல்ல இறங்கி மறையும் சூரியன். அரவின் வாய்க்குள் மெல்ல சென்று மறையும் சந்திரன். இங்கு புலவர் குறிப்பிடுவது sunset :: total lunar eclipse. சூரியன் - மலை:: சந்திரன்  - அரவுவாய்.
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 12:39:28 AM10/23/15
to mintamil
ஐயா

சந்திர கிரகணம் நடப்பது பெரும்பாலும் முழுநிலா நாளன்று பின்னிரவு வேளையில் தான் அதாவது இரவு 10 மணிக்கு மேல்தான் துவங்கும்.

சங்க காலத்தில் புலவர்களும் பொதுமக்களும் இரவெல்லாம் விழித்திருந்து இதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஐயா.

 அன்புடன்,

தி.பொ.ச.

Oru Arizonan

unread,
Oct 23, 2015, 12:50:28 AM10/23/15
to mintamil

2015-10-22 21:39 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
//சந்திர கிரகணம் நடப்பது பெரும்பாலும் முழுநிலா நாளன்று பின்னிரவு வேளையில் தான் அதாவது இரவு 10 மணிக்கு மேல்தான் துவங்கும். //

தங்கள் கூற்று சரியல்ல, சரவணன் அவர்களே!  பகல் நேரத்தில் சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பு இருக்கிறது.  சான்று கீழே!

Lunar eclipse observation during daylight

Is it possible to observe a lunar eclipse during daylight? Normally not. During an eclipse the sun and the moon are pretty much exactly opposite. So if one is above the horizon, the other must be below the horizon. So both can not be visible at the same time. One could say the body of the earth blocks the view.

Only under very special circumstances can both object be visible when they are opposite to each other. At this time for example both touch the horizon at the same time. One rises when the other sets. Then comes our atmosphere. Refraction apparently lifts objects a bit higher. The more the closer the object is to the horizon. At the time of sunset the solar disk is lifted about 30arc minutes (about it's own diameter). Also if one observes from a very high mountain the apparent horizon is somewhat lower as we observe a bit around the curvature of the earth.

These conditions came together on August 16 1989 when a lunar eclipse happened where the moon passes through the shadow cast into space by the earth. During the partial phase of the eclipse the moon was rising as seen from the top of Mauna Kea on the island of Hawaii. The mountain has an altitude of 4200m and give the impression of rather standing on the edge of the earth than on the surface.

The following images show the setting sun and the rising partially eclipsed moon. On the image showing the moon the sun light on the cloud tops can be seen. Also very impressive is the shadow of the mountain acting as a pointer to show the opposite direction of the setting sun. 

Inline image 2Inline image 3

ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Oct 23, 2015, 12:52:54 AM10/23/15
to mintamil
இன்னுமொரு சுட்டி:  http://www.unexplainable.net/space-astrology/daytime-lunar-eclipse-don-t-worry-physics-isn-t-broken.php  

Daytime Lunar Eclipse: Don't Worry, Physics Isn't Broken
Posted In: Space and Astrology  12/11/11 
By: Chris Capps

Eclipse_1.jpg
Here's a brainteaser that left some sky-watchers scratching their heads when the moon suddenly and unexpectedly went black during the daytime in an impossible astronomical display.  Why is it impossible to see a Lunar Eclipse during a perfectly cloudless day?  Conventional wisdom suggests it's because Lunar eclipses happen when the Earth, the Sun, and the Moon make a straight line.  So what often overlooked law of physics made it possible for witnesses in the Rocky Mountains to see both the Sun and the Lunar Eclipse at the same time?

The phenomenon is called a selenelion, and it's a rare but not impossible time when both the eclipsed moon and the sun are visible at the same time.  The phenomenon happens because of refraction from the Earth's atmosphere.  And to understand it, we need look only at a simple pool of water.  From the surface of the water we are seeing images that seem fairly consistent and correspond directly to our point of view.  But this is an illusion.  When we place our hand in the water and look at it, the hand looks almost as though it has slightly curved forward or backward.  Conventional wisdom in this case tells us that the hand has not changed shape, but that the light refracting from the water has altered it and made it appear so.  This phenomenon is one of the common problems among spear fishermen who have to adjust for the refraction of the water.  But what does this have to do with the Moon?

The Earth's atmosphere is a refracting sphere as well, which is why we can see the moon despite the fact that it is appearing just as the sun is rising in the East.  Also called a "horizontal eclipse," a selenelion is visible only in specific areas - often favoring high altitudes or ocean where the horizons can be broadened as much as possible.  So while it looked like the laws of physics were crashing down and flying in the face of basic geometric logic, it was in fact simply an incredibly rare occurrence.

Additionally, it should be noted that during the eclipse the moon turned a particularly deep shade of blood red, almost as red as how we would picture an alien planet or Mars.  This is partially because of the amount of dust in the atmosphere, causing the dawn to turn a bright and beautiful shade of red just like the moon.  And no doubt NASA will have some incredible images of the event as it was seen aboard the International Space Station.

And because of the rare event, the next total lunar eclipse will not become visible (or rather invisible) again until 2014 when once again sky watchers will break out their cameras and telescopes to catch a glimpse at something unique to remind us that we are all part of a vast cosmic experience full of mystery and surprises.

--
பணிவன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 2:48:57 AM10/23/15
to mintamil
அரிசோனன் ஐயா

உங்களது இரண்டு சுட்டிகளுமே பகல்நேர சந்திர கிரகணம் மிக மிக அபூர்வமானது என்று தெளிவாகச் சொல்கிறது.

இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வினைத் தான் சங்க இலக்கியங்கள் பெரிதும் விதந்து உவமையாகக் கூறுகின்றனவா?

பொதுவாக பாடல்களில் காட்டப்படும் உவமைகள்  மக்களுக்கு நன்றாகத் தெரிந்தவையாகவே இருக்கும்..

இந்நிலையில், அபூர்வ ரகமான பகல்நேர சந்திர கிரகணம் அடிக்கடி பாடல்களில் கூறப்படுமா ஐயா?

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Oru Arizonan

unread,
Oct 23, 2015, 3:34:18 AM10/23/15
to mintamil
கூறப்படலாம் அல்லவா?
அன்புடன்,

Pandiyaraja

unread,
Oct 23, 2015, 3:48:06 AM10/23/15
to மின்தமிழ்
>>
சந்திர கிரகணம் நடப்பது பெரும்பாலும் முழுநிலா நாளன்று பின்னிரவு வேளையில் தான் அதாவது இரவு 10 மணிக்கு மேல்தான் துவங்கும்.
>>
இதென்ன கொடுமை சரவணன்! நீங்கள் பலவற்றை அனுமானித்துக்கொள்கிறீர்கள். சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரகிரகணம் நடக்கும். அப்போது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையும். சந்திரன் பூமியைச் சுற்றுகிரது. அதனையும் இழுத்துக்கொண்டு பூமி சூரியனைச் சுற்றுகிரது. எனவே கிரகணம் எந்த நேரத்திலும் அமையலாம். இரவு 8 மணிக்குக்கூட அது நிகழலாம். 6 மணிமுதல் 8 மணிவரை பளீரென்ற வெள்ளை (முழு) நிலாவாக இருந்தது, திடீரென ஓர் இருளுக்குள் புகுவதைப் பார்த்துப் பிரமித்த பழங்காலத்து மனிதன் விண்ணில் இருக்கும் ஒரு பெரிய பாம்பு அதைக் கவ்வுவதாக நினைத்துக்கொண்டான். அவ்வளவுதான். இது எளிது.
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 4:39:25 AM10/23/15
to mintamil
பாண்டியராஜா ஐயா,

உங்களுக்காக இதோ விக்கிபீடியாவின் சுட்டி. இதில் முதல் மூன்று வரிகளிலேயே உங்களுக்கான விடை இருக்கிறது.

https://en.wikipedia.org/wiki/Lunar_eclipse

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 4:52:16 AM10/23/15
to mintamil
ஐயா,

இதோ ஒரு சந்திர கிரகணத்தின் விழியக் காட்சியின் சுட்டி.

http://www.ibnlive.com/news/tech/for-the-first-time-in-33-years-supermoon-lunar-eclipse-on-september-27-28-1106534.html

இச் சுட்டியில் வருகின்ற இரண்டாவது விழியக் காட்சியினை நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், சந்திரனைப் பாம்பு ஒன்று விழுங்கி உமிழ்வதைப் போலவா இருக்கிறது?.

அன்புடன்,

தி.பொ.ச.

Pandiyaraja

unread,
Oct 23, 2015, 5:05:55 AM10/23/15
to மின்தமிழ்
கடவுளே! கடவுளே! நீங்கள் புரிந்துகொண்டது அவ்வளவுதான். இந்தக் கட்டுரை மிகத் தெளிவாக என் கூற்றை விரிவாக எடுத்துக்கூறுகிறது. இதனை எனக்கு மறுப்பாக என்னிடமே எடுத்துக்கூறுகிறீர்களே! உங்களை என்ன சொல்ல?
>>
 a lunar eclipse can occur only the night of a full moon
>>
இதைச் சொல்கிறீர்களா? இதைதானே நானும் சொல்கிறேன். இது நமக்கு மதியம் 12 மணியளவில்கூட நடக்கலாம். அப்போது சந்திரன் நமக்கு நேர் கீழே இருக்கும் அதாவது ஏதாவது ஓர் அமெரிக்கப்பகுதியில். அங்கு அப்போது இரவு அங்கு சந்திர கிரகணம் நடக்கலாம். ஆனால் நமக்குத் தெரியாது. நமக்கு இரவில் சந்திரன் தெரியும்போது (பௌர்ணமி) சூரியன் நேர் எதிரில் இருக்கிறது. அப்போது அந்தப் பகுதியில் பகல். நமக்கோ இரவு. இப்போது பூமியின் நிழல் சந்திரனில் பட்டால் அது நமக்கு கிரகணம். எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்கள் பேசிக்கொள்வார்கள் "இப்போது இந்தியாவில் சந்திரகிரகணம்!!"
பௌர்ணமி அன்று (மேற்கில்) சூரியன் மறையும்போது கிழக்கில் சந்திரன் எழுவான் (கன்னியாகுமரியில் இரண்டையும் இரண்டு கடல்களில் பார்க்கலாம்) அப்போதுகூட கிரகணம் நடக்கலாம். அன்று இரவு முழுக்க எப்போதும் நடக்கலாம். சரவணன்! நான் இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது மிகவும் யோசித்துப் பேசுகிறேன். காரணம் அது எனக்குப் பாடமல்ல. பல புத்தகங்களைப் படிக்கிறேன். தெரிந்தவர்களிடம் தேவைப்பட்டால் கலந்தாலோசிக்கிறேன். அப்புறம்தான் இலக்கியம் பற்றிப் பேசுகிறேன். தாங்கள் வானியல் படித்திருக்கிறீர்களா? இப்படித் தடாலடியாக 10 மணிக்குமேல்தான் சந்திரகிரகணம் நடக்கும் என்கிறீர்களே? வியப்பாக இருக்கிறது உங்கள் துணிச்சலைப் பார்த்து. தயவுசெய்து B.Sc கணிதத்தில் வானியல் (Astronomy) படிக்கும் ஏதாவ்து ஒரு மாணவனிடம் Lunar Eclipse பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். எங்காவது ஏதாவது எழுதியிருப்பதைப் படித்தால் முழுதாகப் புரிந்துகொள்ளுங்கள்.
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Oct 23, 2015, 5:09:43 AM10/23/15
to மின்தமிழ்
நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.
"
பளீரென்ற வெள்ளை (முழு) நிலாவாக இருந்தது, திடீரென ஓர் இருளுக்குள் புகுவதைப் பார்த்துப் பிரமித்த பழங்காலத்து மனிதன் விண்ணில் இருக்கும் ஒரு பெரிய பாம்பு அதைக் கவ்வுவதாக நினைத்துக்கொண்டான். அவ்வளவுதான். இது எளிது."

அவ்வாறுதான் ஊரில் இன்றைக்கும் பேசிக்கொள்கிறார்கள். அவர்களைப்போய்க் கேளுங்கள்.
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 5:38:44 AM10/23/15
to mintamil
ஐயா

நான் கூறவந்த கருத்தினை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

இப்போதுதான் அரிசோனன் ஐயாவிற்கு பதில் கூறினேன். அதில், பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று. இதற்கு அவர் கொடுத்த சுட்டியிலேயே சான்று உள்ளது. இப்படிக் கண்ணால் காணவே இயலாத ஒன்றைப் பற்றித் தானா புலவர்கள் உவமையாகக் கூறுவார்கள்?.

சந்திர கிரகணம் பார்ப்பதற்கு பாம்பு விழுங்குவதைப் போல உங்களுக்குத் தெரிகிறதா? என்றுதான் கேட்டேன். படிக்காதவர்களின் கூற்று எனக்குத் தேவையில்லை. நீங்கள் படித்த அறிஞர் என்பதால், உங்கள் கருத்தினை அறிந்துகொள்ளவே கேட்டேன் ஐயா. எப் பக்கமும் சாயாமல், நடுநிலையாகத் திறந்த மனதுடன் கூறுங்கள் ஐயா. அவர்கள் சொன்னார்கள், அதைத்தான் நான் சொன்னேன் என்று தயவுசெய்து கூறாதீர்கள்.

அன்புடன்,

தி.பொ.ச.  

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 23, 2015, 6:06:05 AM10/23/15
to மின்தமிழ்
அன்புள்ள திரு.வேந்தன் சரவணன் அவர்களே

புலவர்கள் ஆறுமணிக்கே குடிலுக்குள் முடங்கிப்போவார்கள் என்று எண்ணுகிறீர்களே! இது எப்படி இயலும்?.புலவர்கள் நடுநிசியையும் அப்போது கேட்கும் நாய்களின் குரல்களைக் கூட பதிவு செய்திருக்கிறார்கள்.மேலும் போர்க்களத்து யானைகள் எதிரிகளின் தேர்களையெல்லாம் நொறுக்கிய பின்னும் "நிலைவைப் பார்த்து" அது எதிரி அரசனின் வெண்கொற்றக்குடை என்று நினைத்து தும்பிக்கையை விண் நோக்கி நீட்டி அதையும் இழுத்துப்போட நினைத்ததாய் ஒரு புலவர் கற்பனை செய்கிறார்.போர் பகலில் தானே நடைபெறும்?இரவும் நிலவும் ஏது?என்று நாம் தர்க்கம் செய்யலாம்.அது பகலில்(சில நாட்களில் பகலில் கூட பிறை நிலவுகள் தெரியலாம்) தோன்றிய நிலவு என்று வாதிடலாம்.இல்லையென்றால் இரவிலும் போர் நடந்ததாய் ஆராய்ச்சிகள் செய்யலாம்.எனவே இந்த தர்க்கங்கள் இலக்கியத்தின் அழகை கெடுத்து விடும்.கவிப்பேரரசு வைரமுத்து பாடிய "கவிதைக்கு பொய் அழகு" என்பதன் உட்பொருள் இதுவே தான்.உயர்வு நவிற்சி அணி எனும் கற்பனையின் கடலில் அலை வீசுவதே சங்க இலக்கியம்.அதிலும் வரலாற்று உண்மைகள் தெறிப்பதுண்டு என்பதுவும் நாம் மறுக்க முடியாது.

சுடர் விளக்கில் சுவடிகள் எழுதிக்குவித்த புலவர்கள் சங்கத்தமிழில் உண்டு.வெண்ணிலவு விண் ஏறும்போதே நெடிய இரவு கவிந்து விடுமே! "அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்" என்று பாடிய‌ புலவரின் உள்ளத்தில் இந்த இரவு வெண்ணிலவு வந்து உலவாதா என்ன?
மேலும் உங்கள் சுட்டியில் தேனீக்கள் மூவகைப்படும் என்று உள்ளது.அதில் ட்ரோன் எனப்படும் ஆண் தேனீக்களே தேன் உறிஞ்சுகின்றன.பாட்டாளித்தேனிக்கள் கூடு கட்டுகின்றன.எனவே சேவல் என்று ஆண் தேனீயைக்குறிக்கும் என்பது சரியே.ஆனால் இங்கே அவை தேனீக்களா?வண்டுகளா? இல்லை  குறிக்கும் தேன் சிட்டுக்குருவிகளா?என்பது கேள்வியே இல்லை.இவற்றின் நிழல் அல்லது நகர்ந்து செல்லும் போது ஏற்படும் மறைப்பு தான் "பாம்பு" போல் தோன்றி அக்காலத்தே உள்ள நிலா மறைப்பு பற்றிய கருத்து அவ்வரிகளில் வந்து உள்ளது.அரவு என்பதற்கு மேகம் என்ற பொருளை அவர் தோண்டி எடுத்துக்காட்டினாலும் இங்கே "மதி சேர்" என்பதோடு பாம்பு என்ற பொருளே பொருத்தமானது.மேலும் நீலச்செங்கண் என்றதும் நீல சிவப்பு வண்ண மீன்கொத்தியை கற்பனை செய்து கொண்டு நீங்கள் அந்த தேன் சிட்டு பற்றி குறிப்பிடுகிறீர்கள்.தமிழ் தொல் இலக்கியங்களில் நீல என்றாலும் கருமையைத்தான் குறிக்கும்.செங்கண் என்பதில் "செம்மையான கண்" என்றும் பொருள் உண்டு.எனவே சிறந்த கரும் வண்டுகள் தான் அங்கே நிழல் ஆகிறது நிழல் என்றும் நாம் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.நிழல் என்று பொருள் தரும் சொல் அங்கு இல்லை."அரவு" என்பதே பாம்பின் நிழலுக்கு ஆகி வந்ததாய் நாம் எடுத்துக்கொள்ளலாம்.பாம்பு மறைக்கும் மூட நம்பிக்கை கொண்டவரல்ல என்று நம் ஆர்வக்கோளாறினால் வேறு வேறு பொருளினை அங்கே உட்படுத்தல் ஆகாது.ஆளரவம் இல்லாத இடம் என்ற சொற்றொடர் "ஆள் சுவடு" இல்லாத இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.எனவே அரவு என்பது இங்கே நிழல்(அல்லது சுவடு)என்றும் எடுத்துக்கொள்ளலாம்.நிறைய சுட்டிகளை குவிப்பதனால் பெருமை எல்லாம் கூகிளுக்கே போகிறது."தொடை" இலக்கணப்படி சொல் தொடுக்கும் முறையின் உள் அழகையும் அதன் நுட்பத்தையும் சுவைப்பதே இலக்கியச்சுவை.இதில் வினாக்கள் எழுவதை விட வியப்புகள் எழுவதே முக்கியம். விட்டால்
கபிலர் குறிஞ்சித்திணையில் சிறந்த பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றால் "கபிலர்" என்று எவருமே இல்லை என்று நீங்கள் சுட்டிகள் தட்டலாம்.ஏனெனில் கபிலர் என்பவர் வடமொழி முனிவர் என்றும் உங்களுக்கு சுட்டிகள் நிறையக் கிடைக்கும்.அவர் கவிலர் என்றும் கவி என்பது கவை (வில்)ஏந்திய வேடுவர் என்றும் கூட நாம் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யலாமே.வ என்பது ப ஆக மருவது தான் கவிலரும் கபிலர் ஆனார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
அதை விட்டு சுட்டி சுட்டி மேல் அடுக்குவதில் உங்கள் அறிவுப்பசி மட்டுமே தெரிகிறது.அறிவை உண்டு செரிக்க நேரம் எடுத்துக்கொள்ளாமல் மேலும் மேலும் அறிவுப்பசி உங்களுக்கு எடுத்துக்கொண்டே இருக்கிறது.உங்களது இந்த அறிவுக்கூர்மையை
பாராட்டித்தான் ஆகவேண்டும்.ஆனால் அந்த கூர்மை தேவையில்லாமல் குத்திக்கொண்டே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.உங்களை இது புண்படுத்துவதாக தோன்றினால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் ருத்ரா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Oct 23, 2015, 6:12:28 AM10/23/15
to மின்தமிழ்
//அரவு என்பதற்கு மேகம் என்ற பொருளை அவர் தோண்டி எடுத்துக்காட்டினாலும்//

இந்த வரியில் "அவர்" என்பது "நீங்கள்"(அதாவது திரு வேந்தன் சரவணன் அவர்கள்) என்று இருக்கவேண்டும்.தட்டச்சு பிழைக்கு வருந்துகிறேன்.

==================================================ருத்ரா

தேமொழி

unread,
Oct 23, 2015, 6:14:29 AM10/23/15
to மின்தமிழ்

On Friday, October 23, 2015 at 1:52:16 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
ஐயா,

இதோ ஒரு சந்திர கிரகணத்தின் விழியக் காட்சியின் சுட்டி.

http://www.ibnlive.com/news/tech/for-the-first-time-in-33-years-supermoon-lunar-eclipse-on-september-27-28-1106534.html

இச் சுட்டியில் வருகின்ற இரண்டாவது விழியக் காட்சியினை நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், சந்திரனைப் பாம்பு ஒன்று விழுங்கி உமிழ்வதைப் போலவா இருக்கிறது?.

சரவணன் இந்தக் காட்சியை எந்த மனிதருமே பார்த்திருக்க இயலாதே!!! 

நாசா உதவியுடன்தான் இக்காலத்தில் பார்க்கலாம்.

அது நிலவில் நின்று பார்க்கும்பொழுது (!!!)  பூமி சூரியனை மறைக்கும் விளக்கம்.  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 6:16:39 AM10/23/15
to mintamil
ருத்ரா ஐயா,

உங்களது பதிலில் இரண்டு தவறான புரிதல்கள் உள்ளன.

1. ட்ரோன் எனப்படும் ஆண் தேனீக்கள் பூக்களில் தேனை எடுப்பதில்லை. நான் கொடுத்த சுட்டியில் அப் பகுதியினை மீண்டும் நன்றாக ஒருமுறை படித்துப் பாருங்கள். இதோ அந்த வரி.

Drones have never been observed taking food from flowers.

2. கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் என்று நான் சுட்டியது தேன்சிட்டினை அல்ல; குயிலை.

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 6:21:22 AM10/23/15
to mintamil
ஆமாம்.

வேறு நல்ல விழியமாகக் கிடைக்காததால், ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைச் சுட்டி இருக்கிறேன்.

பொதுவாகவே, சந்திர கிரகணம் இப்படித் தான் பார்ப்பதற்குத் தோன்றும் என்று நினைக்கிறேன்.

நான் பார்த்ததில்லை இதுவரை. :)))

தேமொழி

unread,
Oct 23, 2015, 6:29:10 AM10/23/15
to மின்தமிழ்

On Friday, October 23, 2015 at 3:21:22 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

பொதுவாகவே, சந்திர கிரகணம் இப்படித் தான் பார்ப்பதற்குத் தோன்றும் என்று நினைக்கிறேன்.

நான் பார்த்ததில்லை இதுவரை. :)))

!!! பார்த்ததில்லையா???

ஏன்? 

"பின்னிரவு வேளையில்  அதாவது இரவு 10 மணிக்கு மேல்" விழிக்கும் வழக்கம் இல்லையா? :-)

..... தேமொழி
 
திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 6:35:05 AM10/23/15
to mintamil

2015-10-23 15:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பின்னிரவு வேளையில்  அதாவது இரவு 10 மணிக்கு மேல்" விழிக்கும் வழக்கம் இல்லையா? :-)

உண்டு. டிவிக்கு முன்னால் குழந்தைகளுடன். :)))

Pandiyaraja

unread,
Oct 23, 2015, 9:17:38 AM10/23/15
to மின்தமிழ்
அன்புள்ள சரவணன்!
சந்திரகிரகணத்தைப் பற்றி நான் அத்துணை விலாவாரியாகச் சொல்லியும் இப்படிக் கூறியிருக்கிறீர்கள்;
"பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று."
பூமியின் பகல்பகுதியில் சந்திரகிரகணம் தெரியாது. ஆங்கிலக் கட்டுரையும் இதைத்தான் சொல்லுகிறது. நான் கரடியாய்க் கத்தியும் தங்கள் காதில் சரியாய் விழமாட்டேன் என்கிறது.

புரிந்துகொள்ளமாட்டேன் என்று வீண்பிடிவாதம் கொண்டவரிடம் எத்துணை பேசினாலும் அது வெட்டி வேலை. அதை நான் செய்யத் தயாராயில்லை. எனக்கு நேரமுமில்லை. உங்களுக்குப் புரியவில்லை என்றால் சந்தேகத்தைக் கேளுங்கள். ஆனால் உங்கள் கருத்தைத் திணிக்கமுயலாதீர்கள். நான் என் கருத்தைச் சொல்லிவிட்டேன். அது என் உரிமை. அதுபோலவேதான் உங்களுக்கும் உரிமை இருக்கிறது. உங்கள் உரிமையை நிலைநாட்டவேண்டிய இடத்தில் நாட்டிக்கொள்ளுங்கள். ஆனால் எனக்குக் குறுக்குச்சால் ஓட்டி குதர்க்கம் பேசவேண்டாம்.
உங்கள் எழுத்தில் கொஞ்சம்கூட logic இல்லை என்பது என் கருத்து. அதுமட்டுமல்ல. கொஞ்சம்கூட உண்மையும் இல்லை, அர்த்தமும் இல்லை. இனி எனக்குப் பொறுமையும் இல்லை.
ஒரு தமிழ்ச் சிந்தனையாளரிடம் ஒரு தமிழ் மாணவனாகிய நான் இப்படிச் சொல்லும்படியாகிவிட்டதே என்ற வருத்தமே எனக்கு.
தயவுசெய்து என்னை மன்னியுங்கள். இனி என்பக்கம் அமைதியே.
ப.பாண்டியராஜா

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 23, 2015, 9:44:04 AM10/23/15
to mintamil

2015-10-23 18:47 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புள்ள சரவணன்!
சந்திரகிரகணத்தைப் பற்றி நான் அத்துணை விலாவாரியாகச் சொல்லியும் இப்படிக் கூறியிருக்கிறீர்கள்;
"பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று."
பூமியின் பகல்பகுதியில் சந்திரகிரகணம் தெரியாது. ஆங்கிலக் கட்டுரையும் இதைத்தான் சொல்லுகிறது. நான் கரடியாய்க் கத்தியும் தங்கள் காதில் சரியாய் விழமாட்டேன் என்கிறது

ஐயா

எனது எழுத்துக்கள் உங்களை வருத்தியிருந்தால் பொறுத்தருள்க.

ஆனால், நான் சொல்லும் கருத்தையே நீங்களும் ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

பூமியில் மேல்பகுதியில் பகல் நேரத்தில் சந்திர கிரகணம் தெரியாது என்றுதானே நானும் சொல்கிறேன். 

ஆனால், நீங்கள் எனது கேள்விக்குப் பதிலளிக்காமல் ஏன் சினம் அடைகிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத மக்களால் எளிதில் பார்க்க இயலாத ஒரு சந்திர கிரகணத்தைப் பற்றிப் புலவன் எப்படி பாடமுடியும்?. சொல்லுங்கள்.

Pandiyaraja

unread,
Oct 23, 2015, 10:13:18 AM10/23/15
to மின்தமிழ்
நான் இறுதியாக மௌனம் கலைக்கிறேன்.
ஐயா! இரவில் பார்த்ததைப் பகலில் பாடக்கூடாதா? இது உவமைதானே
மதி சேர் அரவின் = மதி சேர்ந்த அரவின் . இது உவமை ஐயா! கண்ணால் ஒருபக்கம் கிரகணத்தையும் மறுபக்கம் தாமரையையும் பார்த்துக்கொண்டு புலவர் பாடுகிறார் என்று நீங்களாகவே எண்ணிக்கொண்டு ஏன் இத்தனை இடற்படுகிறீர்கள்? இது ஐயம் என்பதால் தெளிவுபடுத்தினேன். ஆனால் இனிமேலும் எனக்கு இதற்காகச் செலவழிக்க நேரமில்லை. கோபத்தைப் பொறுத்தருள்க.
ப.பாண்டியராஜா

Suba.T.

unread,
Oct 23, 2015, 2:22:10 PM10/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-10-23 15:44 GMT+02:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

2015-10-23 18:47 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புள்ள சரவணன்!
சந்திரகிரகணத்தைப் பற்றி நான் அத்துணை விலாவாரியாகச் சொல்லியும் இப்படிக் கூறியிருக்கிறீர்கள்;
"பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று."
பூமியின் பகல்பகுதியில் சந்திரகிரகணம் தெரியாது. ஆங்கிலக் கட்டுரையும் இதைத்தான் சொல்லுகிறது. நான் கரடியாய்க் கத்தியும் தங்கள் காதில் சரியாய் விழமாட்டேன் என்கிறது

ஐயா

எனது எழுத்துக்கள் உங்களை வருத்தியிருந்தால் பொறுத்தருள்க.

ஆனால், நான் சொல்லும் கருத்தையே நீங்களும் ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

பூமியில் மேல்பகுதியில் பகல் நேரத்தில் சந்திர கிரகணம் தெரியாது என்றுதானே நானும் சொல்கிறேன். 

ஆனால், நீங்கள் எனது கேள்விக்குப் பதிலளிக்காமல் ஏன் சினம் அடைகிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத மக்களால் எளிதில் பார்க்க இயலாத ஒரு சந்திர கிரகணத்தைப் பற்றிப் புலவன் எப்படி பாடமுடியும்?. சொல்லுங்கள்.

​திரு.சரவணன்,

டாக்டர்.பாண்டியராஜா தனது விளக்கத்தை படிப்படியாக தெளிவாகவே விளக்கியிருக்கின்றார்.

அதிலும் அவர் இனி கருத்து பதியவில்லை என குறிப்பிட்ட பின்னரும் வற்புறுத்தி நீங்கள் சரியென நினைக்கும் ஒரு கருத்தை ஏற்ற்றுக்கொள்ள வைக்க வலிந்து  திணிக்க ​முயல்வது சரியான கலந்துரையாடலுக்கு வழிவகுக்காது. வற்புறுத்தி தொடர்ந்து கருத்து திணிப்பு செய்வது வேண்டாம் நண்பரே.

அவர் மிகுந்த அமைதியுடனும் பொறுமையுடனும் கடிதங்களுக்கு பதில் எழுதுபவர் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அவர் உடல் நலம் தேறி இப்போது தான் மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கின்றார். உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் வேறொரு பதிவாக உங்கள் கருத்தை தனி இழையில் பதியுங்கள். 

சுபா

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Oru Arizonan

unread,
Oct 23, 2015, 3:55:48 PM10/23/15
to mintamil

2015-10-23 2:38 GMT-07:00 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
//நான் கூறவந்த கருத்தினை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. //
தி.பொ.ச. அவர்களே,

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு:  Understand before you ask others to be understood.  ஆகவே, முதலில் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் தரப்பு வாதத்தை வையுங்கள்.  இது யார் கருத்தை நீங்கள் மறுப்பதாக இருந்தாலும் சரி.

உயர்திரு பாண்டியராஜா அவர்கள் வாதிட்டு அலுத்து விட்டார்.  அமைதி காப்பதாகவும் எழுதிவிட்டார்.  உங்கள் வாதத்தில் புரிதல் [understanding] இல்லை என்று எனக்குத் தோன்றியதாலே இப்பதிலை எழுதுகிறேன்.  உங்கள் வாதத்தை நான் புரிந்துகொண்டேன் என்று நிரூபித்துவிட்டு என்தரப்பு வாதத்தை வைக்கப்போகிறேன்.

//இப்போதுதான் அரிசோனன் ஐயாவிற்கு பதில் கூறினேன். அதில், பகலில் சந்திர கிரகணம் நடப்பதைக் காண்பது அரிதினும் அரிதான ஒன்று. இதற்கு அவர் கொடுத்த சுட்டியிலேயே சான்று உள்ளது. இப்படிக் கண்ணால் காணவே இயலாத ஒன்றைப் பற்றித் தானா புலவர்கள் உவமையாகக் கூறுவார்கள்?. //
 
முதலில் நீங்கள் இரவு பத்து மணிக்குமேல், பின்னிரவில்தான் சந்திர கிரகணம் நடக்கும் என்று எழுதினீர்கள்.  அது எந்தவிடத்தைக் குறிக்கிறது என்று நீங்கள் எழுதவில்லை.  பின்னர் ஒரு கேள்விக்கு, பத்துமணிக்கு குழந்தைகளுடன் டிவி பார்ப்பேன் என்று இடக்காகவும் எழுதியுள்ளீர்கள்.  இது சரியான வாதமா?

சுழலும் உலகத்தில் பௌர்ணமி [முழுநிலவு] ஒரே சமயத்தில்தான் துவங்குகிறது, இது வானியல் உண்மை. உதாரணமாக இந்தியாவில் பகல் மூன்று மணிக்கு பௌர்ணமி துவங்கலாம்.  அப்பொழுது சிங்கப்பூரில் மாலை மணி ஆறு; அரிசோனாவில் காலை மணி இரண்டரை.

பூமியின் நிழல் நிலவின் மீது இந்திய நேரப்படி மாலை 5:30க்குத் துவங்குகிறது என்று வைத்துக்கொண்டால், சிங்கப்பூரில் இரவு ஏழரை மணி.  அவர்களால் கிரகணத்தை நன்கு காணமுடியும், ஏனெனில் அப்பொழுது இரவு.  நான் கொடுத்துள்ள சுட்டிகளில் ஒன்று ஒளி-முறிவின்மூலம் பகல் நேரத்திலும் -- இங்கு மாலை ஐந்தரை மணியிலும் நிலவு மறைவதைக் காணலாம் -- அது ஒரு அரிதான நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட. பழந்தமிழ்ப் புலவர்களும் இப்படி ஒரு நிகழ்ச்சியை, ஆதவன் இருக்கும்போதே முழுமதி மறையும் காட்சியைக் கண்டிருக்கலாம் அல்லவா?  . அச்சமயத்தில் கதிரவன் இருப்பதால் மலர்ந்திருக்கும் தாமரை மலரையும், கிரகணத்தில் மறையும் நிலவையும் ஒருங்கே காண வாய்ப்பிருக்கிறதா இல்லையா?  அதை நீங்கள் எப்படி // கண்ணால் காணவே இயலாத ஒன்றைப் பற்றித் தானா புலவர்கள் உவமையாகக் கூறுவார்கள்?.//என்று மறுக்கலாம்?  புலவர் எதைக்கண்டார்,எதைக் காணவில்லை என்று நாம் எப்படி முடிவு செய்வது?

இங்கு நான் வைத்தது உங்களது பின்னிரவு பத்து மணிக்குமேல்தான் நிலவு மறைக்கப்படும் என்பதற்கான எதிர்மொழியே!  உங்கள் கூற்றைப் புரிந்துகொண்டுதான் அதைநான் மறுத்திருக்கிறேன்

தாங்கள் ஆழ்ந்து சிந்தப்பவர் என்பதாலேயே நான் இப்படிப்பட்ட நீண்ட விளக்கத்தை எழுதாமல், தாங்கள் புரிந்துகொள்வீர்கள் எனக்கருதி தங்கள் கூற்று தவறென்று தகுந்த ஆதாரத்துடன் மறுத்தேன்.

//சந்திர கிரகணம் பார்ப்பதற்கு பாம்பு விழுங்குவதைப் போல உங்களுக்குத் தெரிகிறதா? என்றுதான் கேட்டேன். //

இப்படி ஒரு கேள்வியை உயர்திரு பாண்டியராஜா அவர்களிடத்தில் கேட்கவேண்டிய அவசியமென்ன?  அவர்தான் தெளிவாக //சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது ஏற்படும் நிழல்கூம்பினுள் (cone of shadow)  சந்திரன் நுழைய நேரிடும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிழல்கூம்பைத்தான் நம் முன்னோர் பாம்பு என்றனர். கூம்பின் நுனி பாம்பின் வால். கூம்பிற்குள் சந்திரன் நுழைகிறது என்பதற்குப் பதிலாக பாம்பு வந்து சந்திரனை விழுங்குவதாகக் கூறினர். நிழலை விட்டு சந்திரன் வெளியே வருவதையே பாம்பு அதை உமிழ்ந்துவிட்டதாகக் கூறினர்.// என்று எழுதியிருக்கிறாரே!  

நமது முன்னோர் வானவியலில் சிறந்து விளங்கியதால்தானே இன்னும் அவர்கள் விட்டுச்சென்ற சூத்திரங்களை{formula]வைத்து எப்பொழுது சூரிய, சந்திர கிரகணங்கள் வரும் என்று கணிக்க இயலுகிறது?  அவர்கள் நிழற்கூம்பை, அறியாத மக்கள் புரிந்துகொள்ளவேன்றும் என்பதற்காக அரவு என்று அழைத்திருக்கலாமல்லவா?

அதை ஒருமுறை படித்த நானே சரியாகப் புரிந்துகொள்ளும்போது, நீங்கள் புரியாமல் பாண்டியராஜா ஐயாவைத் திரும்பத் திரும்ப வினவுவது அவர் எழுதியதைத் தாங்கள் புரிந்துகொண்டீர்களா என்று எனக்கு இப்பொழுது ஐயமாக இருக்கிறது.
 
//படிக்காதவர்களின் கூற்று எனக்குத் தேவையில்லை. நீங்கள் படித்த அறிஞர் என்பதால், உங்கள் கருத்தினை அறிந்துகொள்ளவே கேட்டேன் ஐயா. எப் பக்கமும் சாயாமல், நடுநிலையாகத் திறந்த மனதுடன் கூறுங்கள் ஐயா. அவர்கள் சொன்னார்கள், அதைத்தான் நான் சொன்னேன் என்று தயவுசெய்து கூறாதீர்கள். //

இப்படித் தாங்கள் எழுதியுள்ளது, அவரைச் சீண்டி விளையாடுவதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது.  என்னை நீங்கள் சீண்டினால், இப்படி நீங்கள் எழுதினால் நான் பொறுத்துக்கொள்வேன்.  பாண்டியராஜா ஐயாவை, தன்னலம் கருதாது, தமிழ்ச்சேவை புரிந்துவரும் அவரைச் சீண்டுவது எனக்குப் பொறுக்கவில்லை.

மேலும் கவிஞர் ருத்ரா அவர்கள் ஒரு கவிஞர் மனது எப்படிச் செயல்படும் என்று விளக்கியும் தாங்கள் தங்கள் பக்கத்து வாதத்திலிருந்து விடுபட மறுக்கிறீர்கள்.

தாங்கள் தங்கள் கருத்தே சரி என்கிரீர்கள்.  நான் ஒரு கேளிவியை வைக்கிறேன், இதற்கு நான் பதிலை எதிபார்க்கவில்லை.

முலை என்ற சொல் இமையை மட்டுமே குறிக்கிறது என்று தங்கள் வலைப்பூவில் எழுதியுள்ளீர்கள் -- இமையையும் குறிக்கிறது என்றால் பரவாயில்லை.  

திருப்பாவையில் ஆண்டாள் பாடிச்சென்ற,

"சீர்த்த முலைபற்றி, வாங்கக் குடம் கறக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" என்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்?  பசுவின் இமையைப் பற்றியிழுத்துப் பால் கறந்தார்கள் என்றா?

Again, please understand, before asking to be understood.

இது தங்கள் வாதத்திற்கு மறுமொழியே.  தங்களின் ஆராய்ச்சித் திறன்மீது நன் மிகுந்த மதிப்புவைத்திருக்கிறேன்.  இந்த எதிர்மொழியைத் தங்கள் வாதத்திற்கு வைக்கப்பட்டது என்றுமட்டுமே எடுத்துக்கொள்க.  இது தனிமனிதத் தாக்குதலோ, தங்கள் தமிழ்ச்சேவையையோ, தமிழறிவையோ குறைத்து மதிப்பிடுவதல்ல.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 24, 2015, 12:09:03 AM10/24/15
to mintamil
திருமதி. சுபா, திரு. அரிசோனன்

நீங்கள் இருவரும் எனது மடல்களைப் படிக்கிறீர்களா என்றே எனக்கு ஐயமாக உள்ளது.

எனது மடல்களை நன்கு ஊன்றிப் படித்துப் பாருங்கள், எங்காவது அவரை நான் கடுஞ்சொற்களால் காயப்படுத்தி இருக்கிறேனா?

ஆனால் அவரது மறுமொழிகளைக் கவனியுங்கள், எப்படி என்மீது எரிந்து விழுந்திருக்கிறார் என்று!

இதில் நீங்கள் அவரைப் பொறுமைசாலி என்று கூறுகிறீர்கள். நான் பொறுமையற்றவன் என்று கூறுகிறீர்கள்.

சரி, இதுதான் உங்களைப் பொருத்தமட்டில் பொறுமையின் அளவீடு என்றால் நான் என்ன சொல்வது?

எனது கேள்விகளுக்கு அவர் என்ன பதில் அளித்தார் எப்படி பதில் அளித்திருக்கிறார் என்று நீங்களே படித்துப் பாருங்கள். உங்களுக்கே அது புரியும்.

பொதுமன்றத்தில் கேள்விகேட்டால் பொறுமையாகப் பதில்சொல்வது தானே பண்பாடு.

மன்னிக்கவும், இனி நான் அவரது மடல்களுக்குக் கருத்து தெரிவிக்கப் போவதில்லை.

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Malarvizhi Mangay

unread,
Oct 24, 2015, 2:30:56 AM10/24/15
to mint...@googlegroups.com

"வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற்பெரும்பசுக்கள் "

Oru Arizonan

unread,
Oct 24, 2015, 3:50:27 AM10/24/15
to mintamil

2015-10-23 23:30 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

//"வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற்பெரும்பசுக்கள் "//

திருத்தியமைக்கு நன்றி, மலர்விழிமங்கை அவர்களே!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Reply all
Reply to author
Forward
0 new messages