புணரின் புணருமாம் இன்பம்!

65 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
May 25, 2010, 11:11:42 PM5/25/10
to tamizh...@googlegroups.com, மின்தமிழ், முத்தமிழ், ezhil

புணரின் புணருமாம் இன்பம்!

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்!
-நாலடியார்

மரண தண்டனை; வாழ்வதற்காகவே உயிர்த்த உயிரை வலுக்கட்டாயமாக மாய்த்தல்! ஆறறிவு உள்ள மனிதன், மற்றொரு ஆறறிவு உள்ள மனிதத்தைக் மரித்துப் போகச் செய்கிறான்.

விளை நிலத்தில் ஊடுருவிய களையை அகற்றுதல் போன்றது என்றும் வாதிடுவான் மனிதன். மனிதனை மனிதனே மனிதனாக்கவியலாது தோற்றுப் போய், மனிதம் அற்ற செயலைச் செய்யும் காரியமே அதுவென வாதிடுபவனும் மனிதனே! இவ்விரு வாதங்களையும் இடத்திற்கேற்ற வியந்தோதலுடன் இன்னொரு மனிதன்!!

இன்றைய நாளில், இகம் போற்றவல்ல இந்த அவனியில் மரணதண்டனையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் ஐம்பத்தெட்டு; அது மனிதமற்ற செயலென ஒதுக்கி வைக்கும் நாடுகள் தொன்னூற்று ஐந்து; இதுவும் அதுவுமாய் இருப்பவை எஞ்சிய நாடுகள்!!

இங்கேதான் நாம் ஒன்றைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். யாரும், யாரையும் தூற்றிக் கொண்டிருக்கவில்லை. அவரவர் அவரவர் வாதங்களில், எண்ணங்களில் ஊன்றி நிற்கின்றனரே அல்லாது, காழ்ப்பும் கடுமையும் குடிபுகுதலுக்கு இடம் கொடாது அன்றைய தினத்தை அருள் நீங்காப் பற்றுதலுடனே கழிக்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க மாகாணங்களில், ஒரு சில மாகாணங்கள் மரண தண்டனை என்பது சட்டத்திற்குப் புறம்பானது எனச் சொல்லுகையில், அண்டைய மாகாணங்களில் அது சட்டத்தின் ஆதரவுடன் நிமிர்ந்து கோலோச்சுகிறது. இரு மாகாண மக்களும் காழ்ப்பை உமிழ்ந்து, அன்பைத் தொலைத்து, மனதை நோகடித்துக் கொண்டா இருக்கிறார்கள்? மாறாக, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இடத்தின் தன்மைக்கொப்ப தம்மையும் ஆட்படுத்திக் கொண்டல்லவா இருக்கின்றனர்??

எந்த மாகாணத்தில் மரண தண்டனையைச் சட்டத்தில் சேர்க்கவில்லையோ, அதே மாகாணத்தில் கருக்கலைப்புக்குச் சட்டத்தில் இடமளித்து இருக்கிறார்கள். அல்லது, அதற்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் இருக்கிறார்கள் என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?

எந்த மாகாணத்தில் மரண தண்டனைக்குச் சட்டத்தில் இடமிருக்கிறதோ, அங்கே கருக்கலைப்புக்கு இடமில்லை. இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. எனினும், பெரும்பாலான மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, அதற்கு ஒத்துழைப்பும் செய்கின்றார் பெருமக்கள்.

ஆயினும், அவரவர் எண்ணங்களையும் வாதங்களையும் அவர்கள் கைவிட்டு விடவில்லை. வாய்ப்பு அமைகிற போதெல்லாம் துணிச்சலாக, தத்தம் கருத்துகளை உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணர உணரும் உணர்வுடையாரை நாடிச் செலல் தவறல்லவே?!

நடப்புக் காலகட்டமென்பது தமிழினத்திற்கு மட்டும் அல்ல; ஏனைய பல்வேறு தேசிய இனங்களுக்குமான நெருக்கடி மிகுந்த காலம். மாற்றங்கள் பெருவேகம் எடுத்துச் சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று, அண்டபேரண்டத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன! அதன் வேகத்தில் மனிதங்கள் மரித்துப் போகின்றன!!

நம்மில் எத்துனை எத்துனை முரண்பாடுகள்? இறப்புகளை மறப்புகளாக்க ஒரு கூட்டம். மறப்புகளை இருப்புகளாக்க ஒரு கூட்டம். மனிதம் மறந்தவரென ஒரு கூட்டம். செம்மொழி மாநாடு என ஒரு கூட்டம். அதாகாவென ஒரு கூட்டம். ஊழலே திறமென ஒரு கூட்டம். ஊழலுக்கு எதிர்ப்பு என ஒரு கூட்டம். எதிர்த்தே ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். எதிர்ப்பவனை எதிர்ப்பவர் எவரும் துரோகியரென ஒரு கூட்டம். எதிர்ப்பவர் எவரும் பிழைக்கத்தெரியா மடையரென ஒரு கூட்டம்.

கொள்கைப் பற்றுடன் ஒரு கூட்டம்; பற்றிருந்தும் ஒழுகாரென ஒரு கூட்டம்; கொள்கை எதுவுமற்று ஏமாறுபவர் ஒரு கூட்டம்; ஏமாறுபவரென நடித்து ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். மொழியென ஒரு கூட்டம். மொழியைக் கேலி செய்து அற்ப மகிழ்வு பெறுபவர் ஒரு கூட்டம். இப்படி, வகை வகையாய் எண்ணிலடங்காக் கூட்டங்கள்!!

இவ்வகையான கூட்டங்களுக்குள், மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது; எண்ணிக்கையில் மிகக் குறைவாய்!!
  • என்மொழியை, எண்ணங்களை ஆராதிக்கிறேன்; ஆராதிக்க மறுப்பவரைக் கடிந்து கொள்ளேன்! ஆராதிக்க முனைபவனை எள்ளி நகையாடுவதை நிராகரிக்கிறேன்!!
  • எந்தவொரு தேசத்தையும் நேசிக்கிறேன். மனிதமே மகத்துவம் என என்றும் போற்றுவேன். மனிதர்கள் அனாதரவுகள் ஆவதைக் கண்டு மனம் நோகிறேன்!!
  • அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கிறேன். மாண்பு போற்றுவேன். மாற்றங்கள் கண்டு ஒரு போதும் அஞ்சேன்!!
  • எண்ணுவது இழுக்கன்று; தோற்பது இழிவுமன்று; மற்றவர் உணர்வுகள் மதிக்கப்படுவது ஈனமுமன்று!!
--பழமைபேசி.

seethaalakshmi subramanian

unread,
May 25, 2010, 11:30:03 PM5/25/10
to mint...@googlegroups.com
போற்றப்படும் பண்புகள்
சீதாம்மா

2010/5/25 பழமைபேசி <pazam...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 26, 2010, 12:28:11 AM5/26/10
to mint...@googlegroups.com, tamizh...@googlegroups.com
மரணதண்டனையை நிறுத்தி வைத்திருப்பவை பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே.அவை பெரும்பாலும் இடதுசாரி மனபான்மை கொண்டவை.அமெரிக்காவில் அதேபோல் இடதுசாரி கொள்கையாளர்கள் (டெமாகெரட்டுகள்) பெரும்பான்மையினராக இருக்கும் மாநிலங்களில் மரணதண்டனையை நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

கடப்பாரையை எடுத்து ஒரு 12 வயது பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் சொறுகி பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு ஐரோப்பாவாக இருந்தால் 15 ஆண்டு தான் மேக்சிமம் தண்டனை.அதற்கு மேல் அவனுக்கு ஜெயில் தண்டனையே கிடையாது எனும்போது மரனதண்டனை பற்றி மூச்சு விட முடியுமா?ஆஸ்த்ரியாவில் போனவருடம் ஒரு மனித மிருகம் போலிஸில் பிடிபட்டது.அது 25 வருடங்களாக தான் பெற்ற மகளை இருட்டறையில் அடைத்து வைத்து 7 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறது.18 வயதில் இருட்டறையில் அடைபட்ட அந்த பெண் 43 வயதில் தான் வெளியே வந்தார்.ஆஸ்த்ரிய சட்டப்படி அந்த மிருகத்துக்கு மேக்சிமம் 15 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கமுடியும்.

இடதுசாரிகளின் கற்பனாவாதங்கள் மூலம் அலிஸின் விந்தை உலகை மட்டுமே ஆளமுடியும்.மனிதர்களை ஆளமுடியாது



--
செல்வன்

www.holyox.tk

"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin

Tthamizth Tthenee

unread,
May 26, 2010, 12:29:44 AM5/26/10
to mint...@googlegroups.com
  • என்மொழியை, எண்ணங்களை ஆராதிக்கிறேன்; ஆராதிக்க மறுப்பவரைக் கடிந்து கொள்ளேன்! ஆராதிக்க முனைபவனை எள்ளி நகையாடுவதை நிராகரிக்கிறேன்!!
  • எந்தவொரு தேசத்தையும் நேசிக்கிறேன். மனிதமே மகத்துவம் என என்றும் போற்றுவேன். மனிதர்கள் அனாதரவுகள் ஆவதைக் கண்டு மனம் நோகிறேன்!!
  • அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கிறேன். மாண்பு போற்றுவேன். மாற்றங்கள் கண்டு ஒரு போதும் அஞ்சேன்!!
  • எண்ணுவது இழுக்கன்று; தோற்பது இழிவுமன்று; மற்றவர் உணர்வுகள் மதிக்கப்படுவது ஈனமுமன்று!!
--பழமைபேசி.

 

 
அன்புள்ள பழமை பேசி அவர்களே  உங்களைப் போன்ற பழமை பேசிகள்
நம் நாட்டில், ஏன் உலகத்திலேயே  அதிக எண்ணிக்கை ஆக வேண்டும்
 
 
அப்படி ஆனால்    உலகமே  செழித்தோங்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
26-5-10 அன்று, seethaalakshmi subramanian <seethaa...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Raja sankar

unread,
May 26, 2010, 12:43:17 AM5/26/10
to mint...@googlegroups.com
//இடதுசாரிகளின் கற்பனாவாதங்கள் மூலம் அலிஸின் விந்தை உலகை மட்டுமே ஆளமுடியும்.மனிதர்களை ஆளமுடியாது//

முக்கியமான விசயத்தை விட்டுட்டீங்க.
அமெரிக்காவில் ஆயுட்கால தண்டனை பெற்று இருப்பவர்கள், சிறையில் இருப்பவர்களையும் கொல்வார்கள். அதான் அதுக்கு மேல தண்டனை கிடையாதே. எவ்வளவு பேர வேணாலும் கொன்னுக்கலாம்.

ராஜசங்கர்


2010/5/26 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
May 26, 2010, 12:53:23 AM5/26/10
to mint...@googlegroups.com


2010/5/25 Raja sankar <errajasa...@gmail.com>

அமெரிக்காவில் ஆயுட்கால தண்டனை பெற்று இருப்பவர்கள், சிறையில் இருப்பவர்களையும் கொல்வார்கள். அதான் அதுக்கு மேல தண்டனை கிடையாதே. எவ்வளவு பேர வேணாலும் கொன்னுக்கலாம்.

ஆமாம் ராஜாசங்கர்.அலாஸ்காவில் 300 வருடம் தண்டனை பெற்ற ஒருவன் ஜெயிலிலிருந்து தன் தங்கை மூலம் ரிமோட் கண்ட்ரோல் குண்டுவைத்து தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தவனின் தந்தையை கொன்றான்.அதுக்கு அவனுக்கு கிடைத்த பனிஷ்மெண்ட் 300 வருட தண்டனையை 1250 வருட தண்டனையாக மாறியதுதான்.தண்டனையை கேட்டு அவனுக்கு ஒரே சிரிப்பு:

Raja sankar

unread,
May 26, 2010, 1:02:02 AM5/26/10
to mint...@googlegroups.com
என்னைக்கேட்டா இவனுக்கு வேண்ணா அந்த கல்லாடி தண்டனை குடுக்கலாம்.

ராஜசங்கர்

2010/5/26 செல்வன் <hol...@gmail.com>
--

Hari Krishnan

unread,
May 26, 2010, 1:04:37 AM5/26/10
to mint...@googlegroups.com


2010/5/26 பழமைபேசி <pazam...@gmail.com>


எந்த மாகாணத்தில் மரண தண்டனையைச் சட்டத்தில் சேர்க்கவில்லையோ, அதே மாகாணத்தில் கருக்கலைப்புக்குச் சட்டத்தில் இடமளித்து இருக்கிறார்கள். அல்லது, அதற்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் இருக்கிறார்கள் என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?


இந்த உடல், உயிர் பற்றிய பல கேள்விகளை என்னுள் எழுப்பிய வண்ணமாக இருப்பவை இரண்டு பாடல்கள்.  ஒன்று

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.

முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிப்பட்டுப் போனதைப்போல உடம்பு கிடக்கிறது.  இது உயிர் பிரிந்ததற்குப் பின்னால் சொல்லப்படுவது.  முட்டையின் ஓட்டைப் போல உடம்பு கிடக்கிறது என்கிறார் இங்கே.

இந்தக் குறள் என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.  ஆனால் ஒரு அபிராமி அந்தாதி படித்துக் கொண்டிருக்கும்போதுதான் கரு எப்போது மனிதனாகிறது என்ற கேள்விக்கு விடையைத் தேடத் தொடங்கினேன்.  கார்ல் சகன் எழுதிய மில்லியன்ஸ் அன்ட் மில்லியன்ஸ் இதற்குத் தெளிவான விடையைச் சொல்கிறது.  முதல் மூன்று மாதங்களுக்குக் கரு என்பது தாயின் உடலில் ஒரு அப்பன்டேஜ்.  You can define clinical death very clearly.  உடலைவிட்டு உயிர் நீங்கிய கணம் எது என்பதை வெகு தீர்மானமாகவும் துல்லியமாகவும் சொல்ல முடியும்.  ஆனால், எந்தக் கணத்தில் கருவுக்குள் உயிர் தோன்றுகிறது என்பதைத் தீர்மானமாகச் சொல்லவில்லை என்று கார்ல் சகன் சொல்கிறார்.

உயிர் எப்போது தோன்றுகிறது என்ற கேள்விக்கு விடை சொன்னால்தான் கருக்கலைப்பு என்பது உயிர்க்கொலையா அல்லது பிண்டச் சிதைப்பா என்பதைத் தீர்மானிக்க முடியும்.  ஏனெனில், கொலை என்பது எதுவென்றால், ஒரு மனித உயிரைப் போக்குவது மட்டும்தான்.  ஆட்டையும் மாட்டையும் கழுதையையும் குதிரையையும் நாயையும் பன்றியையும் கொல்வதை, சட்டம் கொலை என்று கொள்வதில்லை.  ஒரு மனித உயிரைப் பறிப்பதைத்தான் கொலை என்று கொள்ள முடிகிறது அல்லவா?

இதை வைத்துக்கொண்டு கார்ல் சகன், ‘கருவுக்குள் உயிர் தோன்றுவதான அந்த ஆச்சரியமான கணம் இன்னதுதான் என்பதைத் தீர்மானமாக மருத்துவ உலகத்தால் சொல்ல முடியவில்லை என்றாலும், சுமாராக முதல் மூன்று மாதங்களுக்கு அது வெறும் பிண்டம்தான்.  உயிர் இல்லை’ என்று சொல்கிறார்.  பிராணன் வேறு; ஆத்மா வேறு என்கிறது நம் மதம்.  பிராணன் இருப்பதால்தான் அது வளர்கிறது.  ஆனால் ஆத்மா வந்து குடியேறுவது பலநாள் கழித்த பின்னரே என்பதே நாம் சொல்வது.  நான் இதையெல்லாம் தேடக் காரணமாக இருந்த அபிராமி அந்தாதிப் பாடலின் முதல் இரண்டடிகள் இவை:

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும்........

குரம்பை என்றால் பறவைக்கூடு.  பறவைக்கூட்டைத் தேடிவந்து குடிபுகுந்ததாகிய ஆவி, ஆத்மா, வளர வளர, உடலையே தான் என்று நினைத்துக்கொண்டுவிடுகிறதே, தேடிவந்து குடியேறியது உண்மை என்றால், ஒருநாள் காலிசெய்துகொண்டு போகவேண்டியதும் உண்மை என்பதை உணராமல், ‘ஐயோ நான் சாகப் போகிறேனே, ஐயோ எனக்குச் சாவு வந்துவிடும் போலிருக்கிறதே’ என்றெல்லாம் தவிக்கத் தொடங்கிவிடுகிறதே’ என்று பேசுகிறார் அபிராமி பட்டர்.

கருவில் எப்போது உயிர் தோன்றுகிறது என்ற கேள்விக்கு விடையாகத்தான் தேடத் தொடங்கினேன்.  கார்ல் சகன் புத்தகத்தில் விடை கிடைத்தது.  

உங்களுக்கு விடை தேவைப்பட்டால் பல இடங்களில் கூகிள் தேடித்தரும்.  இவை இரண்டையும் கூடவே பாருங்கள்:



இரண்டாவது சுட்டியில் சொல்வது இன்னமும் பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.  ஒவ்வொரு கருவும் முதலில் ஆணிடம் ஒருமாத காலம் வளர்கிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. (இரண்டு மாதகாலம் என்று நம் மதம் சொல்கிறது.  ராம, பரத, லட்சுமண சத்ருக்னர்கள் 12 மாத காலம் தாயின் கருவில் இருந்ததற்குக் காரணம், தசரதன் உடலில் அந்தக் கரு இல்லாது போனதுதான் என்று வாய்மொழி விளக்கங்கள் உண்டு. {இராமாயணங்களில் இப்படிப்பட்ட நேரடித் தகவல் இல்லை.}  ஆனால் நாம சொல்றததான் இந்த விஞ்ஞானமும் சொல்கிறது.

இன்னமும் நிறைய எழுத விஷயம் இருக்கிறது.  வேணாம்.  இத்தோட விட்டுடறேன்.  இதற்கே சுடுகாட்டு எரியும் முக்கண்ண மூர்த்தியும் புஜத்தை மடக்கி சவால் விடப் போறாங்க.  அய்யாக்களே....நீங்களே ரொம்ப பெரியவங்க.  நீங்க என்ன சொல்லப் போறீங்களோ அதுதான், அதுமட்டும்தான் சரி.  உங்ககூட வாதத்துக்கு நான் தயாரில்லை அப்படின்னு இப்பவே என்னுடைய தோத்தாங்குளி அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறேன்.  படிப்பதற்காக அளித்த உங்களுடைய நேரத்துக்கு நன்றி.  
--
அன்புடன்,
ஹரிகி.

Nakinam sivam

unread,
May 26, 2010, 1:28:11 AM5/26/10
to mint...@googlegroups.com
அன்புள்ள ஹரிகி அய்யா அவர்களுக்கு,

மிக சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
எப்பொழுதோ ஒரு முறை உங்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததற்காக
எப்பொழுதும் மறுப்பு சொல்வேன் என்று நினைக்காதீர்கள்.
உங்கள் எழுத்து பணியை தொடருங்கள்.
உங்கள் மனம் நோகும் படி நடந்து இருந்தால் 
உங்களிடம்  மன்னிப்பு வேண்டுகிறேன்.
எந்த கருத்துமே எனது கருத்து, உங்கள் கருத்து என்பது இல்லை.
எல்லாமே நாம் என்ன அறிந்து இருக்கிறோமோ 
அந்த அறிந்த கருத்துதான்.
ஆக உங்கள் எழுத்துக்களை இனி நீங்கள் தொடருங்கள்
என்று அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
நக்கினம் சிவம்

குறிப்பு : இது பயோ டேட்டா அல்ல ஒரு சிலர்  பயப்பட வேண்டாம் 
2010/5/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Geetha Sambasivam

unread,
May 26, 2010, 1:49:53 AM5/26/10
to mint...@googlegroups.com
பழமையின் எண்ணங்களும் ஹரிகியின் ஆய்வும் வியப்புக்கு உரியதாய் உள்ளது.

2010/5/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

பழமைபேசி

unread,
May 26, 2010, 6:14:03 AM5/26/10
to மின்தமிழ்
மிக்க நன்றிங்க; சிந்தனையைக் கிளரும் ஆய்வுத் தகவல்கள்!!

On May 26, 1:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/5/26 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
> > *
> > *

> அன்புடன், ...
>
> read more »

N. Kannan

unread,
May 26, 2010, 8:25:08 AM5/26/10
to mint...@googlegroups.com
பாராட்டப்பட வேண்டிய பண்பு, மற்றோருக்கு வழிகாட்டும் பண்பு.

வாழ்த்துக்கள் சிவன் அவர்களே!!

க.>

2010/5/26 Nakinam sivam <nak...@gmail.com>:

Nakinam sivam

unread,
May 26, 2010, 9:51:42 AM5/26/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களே,

மிக்க நன்றி.

சொல் ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் 
இல்லாமல்
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்
என்பதை 
பயின்று வருகிறேன்.

அன்புடன்
நக்கினம் சிவம்



2010/5/26 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 27, 2010, 7:30:07 AM5/27/10
to mint...@googlegroups.com
அன்பின் நக்கினம் சிவன்:

நான் அடிக்கடி சொல்வதுதான். வள்ளலார் இளமையாக இருக்கும் போது கண்ணாடி
பார்த்த போது தன் உருவம் தெரியாமல் கந்தக்கடவுள் உருவம் தெரிந்ததாம்
(பள்ளிப்பருவத்தில் ம.பொ.சியின் நூலில் படித்தது). ஆண்டாளுக்கு கண்ணன்
தெரிந்தான்.

சம காலத்தில் நமக்கு இறைவனைக் காட்ட வந்திருக்கும் கண்ணாடிதான் இந்த
மின்னரங்கம். நாம் எதை நினைத்துக் கொண்டு பார்க்கிறோமோ அதுவே தெரியும்
;-)

உங்கள் இறையன்பு அதிர்வுகள் இவ்வலையை இன்பத்தில் ஆழ்த்தட்டும். அக்கனிவு,
அத்தனிப்பெரும் கருணை எல்லோரையும் ஆட்கொள்ளட்டும்.

நா.கண்ணன்

2010/5/26 Nakinam sivam <nak...@gmail.com>:

Nakinam sivam

unread,
May 28, 2010, 2:52:05 AM5/28/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மீண்டும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம் நமது மின்தமிழ் தன்னை உணர வைக்கும் கண்ணாடிதான்.

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே. 
- வள்ளல் பெருமான் 

இந்த மின் அரங்கத்தில்
நாம் அனைவருமே  கற்பவராக இருக்கின்றோம்.
ஆகவே இறைவன் கற்பதற்கு ஏற்ற இறை அனுபவத்தை 
அளித்துக் கொண்டே இருக்கிறார்.
மேலும் உங்களை போன்ற நம் மின் அரங்கத்தில் உள்ள
அறிவு ஜீவிகளின் கேள்விகள் நம்மை மேலும் ஆராய தூண்டுகின்றன.
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற 
நமது ஆவலின் காரணமாக 
உண்மை நம்மை நோக்கி பயணப் படுகின்றது.
ஆன்மீகத்தின் அடிப்படையே
அனைத்து மனிதர்களையும் சம நோக்கில் காண்பது.
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துவது.
இது இல்லாமல் எத்தனை கோவிலுக்கு சென்றாலும்
அவர்களால் உண்மையை உணர முடியாது.
மாயை என்பதே நான் வேறு மற்ற மனிதர்கள், மற்ற ஜீவர்கள் வேறு என்று பிரித்து பார்க்கின்ற மன நிலைதான்.
ஆக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 
என்பதே உண்மை உணர்ந்தவர்களின்
தாரக மந்திரமாக இருக்கும்.
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு ஏதுவாக 
நான் அறிந்த உண்மைகளை 
அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
மீண்டும் நன்றியுடன்.
அன்புடன்
நக்கினம் சிவம்


2010/5/27 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 28, 2010, 4:42:20 AM5/28/10
to mint...@googlegroups.com
அன்பின் நக்கினம் சிவன்:

இப்படி அலவுளாவது மனதிற்கு இதமாக உள்ளது.

இன்னொன்று, நான் அறிந்தவரை தீவிர வெறுப்போ, தீவிரக் கோபமோ ஒருவர் மீது
கொள்கிறோம் எனும் போது கோபம் தாக்குவது முதலில் நம்மைத்தான். ஏனெனில்
அம்பு விடுவதற்கு எப்படித் தசை நாண்கள் சூடேறுகின்றனவோ அதுபோல் சட்டெனக்
கிளம்பும் ஆக்ரோஷத்தில் குதித்துவிடுகிறோம். கொஞ்சம் நிதானமாகப்
பார்த்தால் அடுத்தவன் நடுங்குகிறானோ என்னவோ நமது உடல் மெல்ல
ஆடிக்கொண்டிருப்பது புரியும். எனவே வாழைமட்டை என்றே சொல்லிக்கொள்ளட்டும்
(இல்லை நாகையா என்று சொல்லட்டும் ;-), முதலில் நம் மீது அன்பு செய்து
பழகுவோம் :-)) நம் மீது அன்பிருந்தால் யாரிடமும் கோபப்படமாட்டோம். ஆனால்
இது பலருக்குப் புரிவதே இல்லை.

சத்சங்கம் என்பது அலைவரிசை ஒருங்கிணைப்புதான். வீணை வாசிக்க ஏன்
ஸ்ருதிப்பெட்டி வேண்டி இருக்கிறது? ஏதாவதொரு ஸ்ருதியில் நம் மனது இழைய
வேண்டும். அப்படி இணைந்தால் மின்தமிழில் இசை கூடும். இல்லையெனில் வெறும்
கூச்சல்தான் :-)

ஆன்மீகம் என்பது எல்லாவற்றிலும் பின்னிப்பரவி இருப்பது. பிரித்துவைத்தே
பழகிய நமக்கு ஒற்றுமை புரியாமல் இருப்பதில் அதிசயமில்லை, இல்லையா?

நா.கண்ணன்

2010/5/28 Nakinam sivam <nak...@gmail.com>:

Madhurabharathi

unread,
May 28, 2010, 8:21:29 AM5/28/10
to mint...@googlegroups.com
2010/5/28 N. Kannan <navan...@gmail.com>

அன்பின் நக்கினம் சிவன்:

இப்படி அலவுளாவது மனதிற்கு இதமாக உள்ளது.
 
அளவளாவுவது :-)
 
 
இன்னொன்று, நான் அறிந்தவரை தீவிர வெறுப்போ, தீவிரக் கோபமோ ஒருவர் மீது
கொள்கிறோம் எனும் போது கோபம் தாக்குவது முதலில் நம்மைத்தான்.
 
 
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
 
கண்ணன் சொல்றதையே வள்ளுவர் ஐயாவும் சொல்லியிருக்காக.
 
ஒருத்தன் ரொம்ப எரிச்சல்ல நிலத்தை ஓங்கி அடிச்சானாம். எவ்வளவுக்கெவ்வளவு ஓங்கி
அடிச்சானோ அவ்வளவுக்கவ்வளவு கை அதிகம் வலிச்சுதாம். எல்லை மீறினால் கையெலும்பும்
முறியலாம். நிலத்துக்கு ஏதாவது ஆச்சுதான்னா அதுதான் இல்லை.
 
அப்பிடி, ஒருவன் ‘நான் மகா கோபக்காரன்’ என்று பெருமிதமாகச் சொல்லிக்கொண்டு
எடுத்ததுக்கெல்லாம் கோபப்பட்டா ரத்த அழுத்தம் கூடும், பல்ஸ் ஏறும், உடம்பெல்லாம்
பதறும், முகம் ஜிவுஜிவுன்னு செவந்து போகும், கூடுதல் எனர்ஜி ரிக்வையர்மெண்டுக்காக
ரத்தத்துல ஷுகர் கூடும். கோபத்தை பெர்மனண்ட் ஃபீச்சர் ஆக்கிட்டமுன்னா
மேலே சொன்ன ரத்த அழுத்தம், ஷுகர், வேகமான பல்ஸ், நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம்
எல்லாமே ரெகுலர் ஃபீச்சர் ஆய்டும்.
 
எவன் ஒருவன் கோபத்தை முக்கியமென்று கருதி, ஏற்றுக்கொண்டு, கோபப்படுவதை
இயல்பாக்கிக் கொள்கிறானோ, அவன், நிலத்தை ஓங்கி அறையும் ஒருவன் தன் கைக்கு ஊறு
ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க முடியாதோ, அதேபோலத் தனக்கு ஏற்படுத்திக்கொள்ளும்
தீமையிலிருந்து பிழைக்க முடியாது.
 
கோபம் பாபம் சண்டாளம்.
 
அன்புடன்
மதுரபாரதி

N. Kannan

unread,
May 28, 2010, 8:54:10 AM5/28/10
to mint...@googlegroups.com
2010/5/28 Madhurabharathi <madhura...@gmail.com>:

>> இப்படி அலவுளாவது மனதிற்கு இதமாக உள்ளது.
>
>
> அளவளாவுவது :-)
>
>

முதலில் சரியாக எழுதிவிட்டு தப்பாகத்திருத்தினேன். நாம் பள்ளியில் படித்த
காலத்தில் எவ்வளவு அதிகமாக நமது டேடாபேஸ் இருக்கு அவ்வளவு பின்னால்
உதவும். ஆயினும் கணினிகள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் தமிழ் பிழை
திருத்தி இன்னும் வராமல் இருப்பது வருத்தமானதே. ஆங்கிலத்தில் அடிக்கும்
போதே திருத்திவிடுகிறது. எவ்வளவு வசதி.

அப்புறம் வள்ளுவருக்கு நன்றி.

ஜே.கேயிடம் கற்றுக்கொண்டது ஒன்று.
கற்றுக்கொள்ள சிறந்த புத்தகம் ‘நாம்’ தான் என்பார். எனவே என்னிலிருந்தே
நல்லதும் கெட்டதும், பிழையும், வல்லமையும் வருவதைக் காண்கிறேன்.
அதிலிருந்தே எழுதுகிறேன்.

வள்ளுவர் சொல்லும் உவமையும் எனக்கு எழுதும் போது தோன்றியது.
எங்கப்பாவிற்கும், அம்மாவிற்கும் சண்டை நடக்கும் போது, எல்லோரும்
வீட்டுக்காரியை மொத்துவார்கள். பாவம் என் தந்தை சுவரில் முட்டிக்
கொள்வார். ஆனாலும், negative feed back system இருப்பதால் உடல் ஓரளவிற்கு
மேல் அனுமதிக்காது. நாக்கைப் பிடுங்கிச் சாகிறேன் என்றோ, தன் மூக்கை
அடைத்து சாகிறேன் என்பதோ முடியாத காரியம். உடலில் diffuse system
இருக்கிறது ;-)

க.>

Nakinam sivam

unread,
May 28, 2010, 9:20:32 AM5/28/10
to mint...@googlegroups.com
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை!!! அருட்பெருஞ்ஜோதி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!!

அன்புள்ள ஹரிகி அய்யா அவர்களுக்கு,

மிக மிகச் சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.

எப்பொழுதோ ஒரு முறை உங்கள் கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததற்காக
எப்பொழுதும் மறுப்பு சொல்வேன் என்று நினைக்காதீர்கள்.
உங்கள் எழுத்துப் பணியை தொடருங்கள்.

உங்கள் மனம் நோகும் படி நடந்து இருந்தால்
உங்களிடம்  மன்னிப்பு வேண்டுகிறேன்.
உங்கள் எழுத்துக்களை இனி நீங்கள் தொடருங்கள்
என்று அன்புடன் வேண்டுகிறேன்.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. - எட்டாம் திருமுறை,  திருச்சாழல்
(8:12:3)

அன்புள்ள திரு நக்கினம் சிவம் அரசு ஐயா அவர்களுக்கு,
அடியேன் நினைத்தவகள், தங்கள் எழுத்தில் இருந்தது.
ஆகவே அப்படியே வழி மொழிந்துள்ளேன்

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

அன்பு சகோதரர் அறிவொளி அவர்களுக்கு,

அன்பே சிவம் என்பதன் பொருளை உணர்ந்து இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
அன்பே உலகு ஆளும்.
அன்பு இல்லை என்றால் இந்த உலகு மாயும்.
மாயா உலகில் நாம் இந்த உடல் எடுத்து வந்து இருக்கிறோம்.
நான் நான் தானா ?
இந்த உலகில் நான் இருக்கிறேனா ?
அல்லது இந்த உலகம் என்னுள்  இருக்கிறதா ?
உடலை சார்ந்தே பழக்க பட்டுள்ளதனால் 
அனைவரையும் வேறாக காண்கின்ற நிலையினை பெற்றுள்ளோம்.
ஆனால் 
ஆன்மா சார்ந்து பார்க்கும் நிலை பெற்றால் 
கோபம் எல்லாம் மறைந்து 
பார்க்கும் பொருள் அனைத்தும் நானே 
அப்படி இருக்க
யார் மீது யார் கோபம் கொள்வது.
கோப கொள்பவனும்  நானே
கோபம் கொள்ளப் படுபவனும் நானே 
என்பது விளங்கும்.
ஆகவே கோபம் ஒழித்து
ஆன்ம லாபம் அடைவோம்.
அன்புடன்
சகோதரன்
நக்கினம் சிவம்


2010/5/28 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nakinam sivam

unread,
May 28, 2010, 9:34:27 AM5/28/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் மதுர பாரதி அவர்களுக்கு,

வள்ளுவ பெருந்தகையின் சிறந்த குறளுக்கு
உங்களின் அற்புதமான விளக்கத்தை அளித்து இருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.
வாருங்கள் அன்பையும், அமைதியையும்
அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
நக்கினம் சிவம்


2010/5/28 Nakinam sivam <nak...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 28, 2010, 9:43:57 AM5/28/10
to mint...@googlegroups.com
                        ”சினத்தின் கேடு”
            

”சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற் சுட்டுச்
செத் திடுவா ரொப்பாவார்; சினங் கொள்வார் தாம்
மனங் கொண்டு தங் கழுத்தைத் தாமே வெய்ய
வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவா ராம்
தினங் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்
சினம்பிறர்மேற் றாங்கொண்டு  கவலையாகச்
செய்ததனைத் துயர்க்கடலில்  வீழ்ந்து சாவார்”
 
மஹாகவி பாரதியார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
28-5-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Nakinam sivam

unread,
May 28, 2010, 10:09:01 AM5/28/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

ஜே.கேயிடம் கற்றுக்கொண்டது ஒன்று.
கற்றுக்கொள்ள சிறந்த புத்தகம் ‘நாம்’ தான் என்பார். எனவே என்னிலிருந்தே
நல்லதும் கெட்டதும், பிழையும், வல்லமையும் வருவதைக் காண்கிறேன்.
அதிலிருந்தே எழுதுகிறேன்.

உண்மை 
நாம் கற்றுக் கொள்ள சிறந்த புத்தகம் நாம்தான்.
காரணம் மற்றவர்களை பார்த்து அதுபோல நாம் இருக்க விரும்பினால்
அது செயற்கையான ஒன்றாக மட்டுமே இருக்கும்.
அங்கு இயல்பு நிலை போய் விடும்.
அது மட்டுமல்லாமல்
அவர்களது  அனுபவம் நமக்கு வைக்க வில்லையே என்று
நமக்கு நம் மீது நம்பிக்கை போய் விடும்.

என்னிலிருந்தே நல்லதும் கெட்டதும், பிழையும், வல்லமையும் 
வருகின்றது என்பது
நாம் பெற்றிருக்கின்ற இந்த அறிவானது
நாம் எங்கிருந்து பெற்றோம்.
அறிவியலின் படி
மூளை இயங்கியதனால் பெற்றோம் என்றால்
நமது மூளை இயங்கி அந்த இதுவரை தெரியாத உண்மையை எங்கிருந்து பெற்றது ?
மூளை இயங்குவதனால் மட்டும் அனைத்து உண்மைகளையும் நாம் அறிந்து விட முடியுமா ?
அப்படி என்றால் ஒரு சிலரால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற உண்மை நிறைய பேரால் அறிந்து கொள்ள முடியவில்லையே ஏன்?
இதற்கு விடையாக 
நமது ஆன்மா அனைத்தையும் அறிந்த ஒன்றாக நம்மிடம் இருக்கின்றது.
இருப்பினும் அந்த ஆன்மாவை அறியும் அறிவினை நாம் அசுத்த மாயா காரிய அணுக்களின் காரணமாக பெற முடியவில்லை.
இந்த அசுத்த மாயா காரிய அணுக்களை சுத்த காரிய அணுக்களாக மாற்ற முடிந்தவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தின் உண்மைகள் வெட்ட வெளிச்சமாக தெரியும்.
இதற்கு பல பயிற்சிகள் உள்ளன
அதில் ஒன்று
தியானம் - தன்னை அறிதல்
ஜெ கே அவர்கள் தன்னை அறிந்த காரணத்தால் அனைத்தும் என்னிலிருந்தே வருகின்றது என்பதை தெளிவாக
கூறி இருக்கிறார்கள்.

மேலும் சிந்திப்போம்.
அன்புடன்
நக்கினம் சிவம்
 


2010/5/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

MANICKAM POOPATHI

unread,
May 28, 2010, 8:06:10 PM5/28/10
to mint...@googlegroups.com
வணக்கம்  நண்பர்களே:

"எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்."
என்பதுதானே 'தறிபடாத' தமிழ்  பழமொழி..!?

உள்ளபடியே..
ஒன்பது சுவைகளில்
உருத்திரச்சுவையும் அடக்கம்.. இல்லீங்களா..? 8-p

புறநிலைத் தாக்கம் => அகநிலை வெளிப்பாடு
(Moral outrage is a response to the behavior of others.. never one's own.)


மிகவும் நன்றி..!


அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்

_______________________________________

The wrath 'tis hard e'en for an instant to endure
Of those who virtue's hill have scaled, and stand secure.

~Thiruvalluvar (kural 29)
___________________________

2010/5/28 Madhurabharathi <madhura...@gmail.com>

N. Kannan

unread,
May 28, 2010, 9:22:07 PM5/28/10
to mint...@googlegroups.com
ஹ..ஹா! நண்பர் பூபதி, பாரதி போல், “ரௌத்திரம் பழகு” என்கிறார் :-))

க.>

2010/5/29 MANICKAM POOPATHI <poop...@gmail.com>:

N. Kannan

unread,
May 28, 2010, 9:25:10 PM5/28/10
to mint...@googlegroups.com
2010/5/28 Nakinam sivam <nak...@gmail.com>:

> என்னிலிருந்தே நல்லதும் கெட்டதும், பிழையும், வல்லமையும்
> வருகின்றது என்பது


இது ஜே.கே சொன்னதில்லை. அடியேன் சொன்னது :-) அதாவது அதிகமாக மேற்கோள்
காட்டுபவர்களைக் கண்டால் எனக்கு கொஞ்சம் அலர்ஜி. சின்ன வரிகளில், அழகாக
சொந்த அனுபவத்தை பதியச் செய்வது அதனினும் மேன்மை என்று நம்புகிறேன்.
ஆனால் தமிழில் மேற்கோள் காட்டத்தக்க அற்புத வரிகள் நிரம்ப உள்ளன. என்ன
செய்ய! :-))

க.>

Nakinam sivam

unread,
May 28, 2010, 11:43:13 PM5/28/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மிக சிறந்த வரிகள். 
> என்னிலிருந்தே நல்லதும் கெட்டதும், பிழையும், வல்லமையும்
> வருகின்றது என்பது

இது ஜே.கே சொன்னதில்லை. அடியேன் சொன்னது :-) 

நீங்கள் சொன்னாலும்  இதுதான் நிதர்சனமான உண்மை.
ஆக தத்துவம் உங்கள் வசப்படுகிறது.
என்னை தவிர வேறு ஒன்று இல்லை என்பதே முடிந்த முடிபாக 
ஞானத்தை உணர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.
ஆக அனைத்தும் என்னிலிருந்தே வருகின்றன
என்பது முடிந்த முடிபான உண்மை.
நன்றி.

அன்புடன்
நக்கினம் சிவம் 

2010/5/29 N. Kannan <navan...@gmail.com>

க.>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
May 28, 2010, 11:52:50 PM5/28/10
to mint...@googlegroups.com
அன்பின் நக்கினம் சிவன்,

'என்னை', 'நான்', 'எனது' என்பதெல்லாம், பொருள் உலகில் கரைந்து
விடுகின்றன. சிந்தனை என்று வந்து விட்டாலோ, 'என்னிலிருந்தே நல்லதும்


கெட்டதும், பிழையும், வல்லமையும்

வருகின்றது'.
இன்னம்பூரான்

2010/5/28 Nakinam sivam <nak...@gmail.com>:

Nakinam sivam

unread,
May 29, 2010, 12:50:00 AM5/29/10
to mint...@googlegroups.com
அன்பு அய்யா இன்னம்புரன் அவர்களுக்கு,

'என்னை', 'நான்', 'எனது' என்பதெல்லாம், பொருள் உலகில் கரைந்து
விடுகின்றன. சிந்தனை என்று வந்து விட்டாலோ, 'என்னிலிருந்தே நல்லதும்
கெட்டதும், பிழையும், வல்லமையும்
வருகின்றது'.

உண்மை.

பொருள் உலகு சார்ந்தே நான் - எனது உழன்று வருகிறது.
உணர்தல்  ஏற்படும்போது
நான் - எனது சுமையாக தெரிகிறது.
சுமை நீக்க முடியா விட்டாலும் 
சுமை குறைக்க முயல்வார்கள் உண்மை உணர்ந்தோர்கள்.

இங்கே
என்னிலிருந்தே வருகின்ற
நல்லதும் - வல்லமையும் ஆன்ம அறிவிடமிருந்து வருகிறது.
கெட்டதும் - பிழையும் மன அறிவிடமிருந்து வருகிறது.
இரண்டும் என்னிடமே இருப்பதனால்
அனைத்தும் என்னிடமிருந்தே வருகிறது.

அன்புடன்
நக்கினம் சிவம்


2010/5/29 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
May 29, 2010, 1:01:36 AM5/29/10
to mint...@googlegroups.com
என்னை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
29-5-10 அன்று, Nakinam sivam <nak...@gmail.com> எழுதினார்:



--

Nakinam sivam

unread,
May 29, 2010, 1:06:29 AM5/29/10
to mint...@googlegroups.com
அன்பு தேனீ அய்யா அவர்களுக்கு,

உங்கள் ஆய்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன் 
நக்கினம் சிவம்


2010/5/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 29, 2010, 1:22:04 AM5/29/10
to mint...@googlegroups.com
மின்தமிழில் எழுதுவதும்
 
இங்குள்ள  அறிஞர்களிடம் விவாதம் செய்வதும்
 
சில நேரங்களில் இங்குள்ள அறிஞர்கள் எழுதுவதைப் படித்துவிட்டு மனதுள்ளேயே அசை போடுவதும்
 
அனைத்துமே என்னைப் பற்றி நான் செய்யும் ஆய்வின் ஒரு பகுதியே
 
புண்படும் நேரங்களைக்கூட நாம் பண்படும் நேரமாக நினைக்கும் பக்குவம் கைவரவே
 
என்னைப் பற்றிய ஆராய்ச்சி