Re: [MinTamil] சமணம் அறிவோம்

2,774 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jul 3, 2014, 2:45:42 AM7/3/14
to மின்தமிழ், Subashini Tremmel

On Thu, Jul 3, 2014 at 6:40 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
சமணம் பற்றிய அறிமுகம் தருவதோடு ஆய்வுகளுக்கும்
துணை புரிகிறது -

பேரா. நளினி பல்பீர் தலைமையில் -

​பகிர்வுக்கு நன்றி.
நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்.

சுபா​

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
N D Logasundaram

unread,
Jul 3, 2014, 4:24:48 AM7/3/14
to mintamil, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, முனைவர் இர.வாசுதேவன், podhuvan sengai
சமணம் பற்றிய (ஆய்வு) இணைய  தளம் பற்றி மிக்க மகிழ்ச்சி 

திரு பானுகுமார், மற்றும் சுகுமாரன் அவர்களுக்கு யானறிந்தவர் கள்
என்பதால் அவர்கள் இதைப்பற்றி நினைவு கூற ஓர் வேண்டுகோள்

சமணம் நன்றே போற்றிவந்துள்ளதும் ஆனால் 
இன்று பலராலும் எழுத்திலும் வழங்காததுமான
உண்மையான அகில இந்திய மொழியாம் 

பிராகிருதம் 

பிராமண (அரை) மொழியாம் சமஸ்கிருதம்
தோன்றுவதற்கு முன்பே அமைந்த அதன் பழமைப் பண்புகள்
எவ்வாறு அது அகில இந்திய மொழியாக இருந்துள்ளது 
அதன் இன்றைய வழங்ககு மொழிகளின் தொடர்பு 
என்பதையும் இடை இடையே கோடிட்டுக்காட்டி 
அறியாதவர்களுக்கு,அறிமுகமாகவாவது சில சிறு பகுதியாவது
இருக்க தங்கள் வலிமை திறமை செல்லும்வரை முயலலாமே
என்பதுதான்  

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 

பி கு 
சமசுகிருதம் ஓர் அரை மொழி எனக் குறித்துள்ளமை இதுநாள் வரை
எந்த பு லத்திலும் மக்கள் தம் வாய்வழி வழங்காததாலும் எழுத்தில்
மட்டும் நிற்கும் அம்மொழியைக் கற்க வேறு ஒர் மொழிதான்
துணை நிற்க வேண்டும்என்பது மெய்யாவதும் தான்.  

பாலி என்பது அவ்வாறே எழுத்து படிப்பு நிலையில் மட்டுமிருந்து
மக்கள் வாய்மொழியில் வழங்காது தனித்து நின்றுள்ளதுவே
என்பதை நன்றே அறிவீர்கள் 

On Thu, Jul 3, 2014 at 10:10 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
சமணம் பற்றிய அறிமுகம் தருவதோடு ஆய்வுகளுக்கும்
துணை புரிகிறது -

பேரா. நளினி பல்பீர் தலைமையில் -

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 14, 2014, 6:14:40 AM7/14/14
to மின்தமிழ்

On Thu, Jul 10, 2014 at 12:54 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
பல முக்கியமான கட்டுரைகள் அடங்கிய வலைப்பூ -

Jain History of Tamil Nadu vandalised

N. Ganesan

unread,
Jul 14, 2014, 10:01:02 AM7/14/14
to mint...@googlegroups.com, vallamai
கலியாணம் என்பது நல்ல தமிழ்ச்சொல். அதன் பழைய பொருள் இன்னும் தமிழில்தான் இருக்கிறது.

கலி, யாணர் என்ற சொற்களின் கூட்டு கலியாண > கல்யாண (குமாரசம்பவ - வடமொழியினர் குமார்சம்பவ என்பதுபோல்).

பஞ்ச கலியாணம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

நா. கணேசன் 

seshadri sridharan

unread,
Jul 14, 2014, 10:07:49 AM7/14/14
to mintamil
On Mon, Jul 14, 2014 at 3:44 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:

On Thu, Jul 10, 2014 at 12:54 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
பல முக்கியமான கட்டுரைகள் அடங்கிய வலைப்பூ -

Jain History of Tamil Nadu vandalised

சடங்குகளை சமண மதம் மக்களிடையே வித்தியதால் தான் இந்து சமயமும் அதை ஒட்டி மக்களை சடங்குப் பித்தர்களாக ஆக்கிவிட்டது என்பது தெரிகின்றது. இந்த சடங்கே சமணத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பது மிகையாகாது.  

சேசாத்திரி

N. Kannan

unread,
Jul 14, 2014, 10:32:31 PM7/14/14
to மின்தமிழ்
அற்புதம்! இசையும் அழகு!

க.>

On 15 July 2014 03:59, Dev Raj <rde...@gmail.com> wrote:
ராஜஸ்தானம் ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்துள்ள 
அழகிய ரணக்புர் ஜிநாலயம் -

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Banukumar Rajendran

unread,
Jul 17, 2014, 7:05:41 AM7/17/14
to மின்தமிழ்

Banukumar Rajendran

unread,
Jul 18, 2014, 4:09:12 AM7/18/14
to மின்தமிழ்

Banukumar Rajendran

unread,
Jul 30, 2014, 2:47:40 AM7/30/14
to மின்தமிழ்

Suba.T.

unread,
Jul 31, 2014, 3:21:03 AM7/31/14
to மின்தமிழ், Subashini Tremmel
​எனது தமிழக பயணத்தில் கரந்தையும் இம்முறை சென்று வந்தேன். குந்தவை பிராட்டியார் கட்டிய கோயில் என இது குறிப்பிடப்படுகின்றது. ஒரு விழியப் பதிவும் செய்துள்ளேன்.  விரைவில் வெளியிடுகின்றேன்.
கொஞ்சம் கேட்டேன். பின்னர் முழுமையாகக் கேட்கிறேன். நன்றி

சுபா

தேமொழி

unread,
Jul 31, 2014, 3:09:38 PM7/31/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

அது மிக அருமையான காணொளி சுபா, மறக்காமல் பாருங்கள்.  (நானும் பிறகு நேரம் கிடைக்கும் பொழுது என பார்க்க, படிக்க ஒரு பட்டியலே வைத்திருக்கிறேன:)))

இந்தக் காணொளி மூலம் தமிழக வரலாற்றில் சமணர் பங்கு நன்கு விளக்கப்படுகிறது.  நான் நிறையத் தெரிந்து கொண்டேன்.

..... தேமொழி

On Thursday, July 31, 2014 12:21:03 AM UTC-7, Suba.T. wrote:
On Wed, Jul 30, 2014 at 8:47 AM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:
​எனது தமிழக பயணத்தில் கரந்தையும் இம்முறை சென்று வந்தேன். குந்தவை பிராட்டியார் கட்டிய கோயில் என இது குறிப்பிடப்படுகின்றது. ஒரு விழியப் பதிவும் செய்துள்ளேன்.  விரைவில் வெளியிடுகின்றேன்.
கொஞ்சம் கேட்டேன். பின்னர் முழுமையாகக் கேட்கிறேன். நன்றி

சுபா
On Sun, Jul 20, 2014 at 5:59 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:

பாகிஸ்தான் பாலைவனப் பகுதியில் :

Jain temple of Gori, said to date from 1376 is about 45 kilometers 
from Islamkot on the way to Nagarparkar (Sindh, Pakistan).

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Aug 4, 2014, 2:28:47 AM8/4/14
to mint...@googlegroups.com

சமணமும் தமிழும் - மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்கள் >>> http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm

2.சமணசமய தத்துவம்
[...]

  கீழ்க்காணும் சித்திரம் சமண சமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

     பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

     மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.

இங்கு குறிப்பிடப்படும் நரககதிக்கும்  மனிதகதிக்கும் என்ன வேறுபாடு?

..... தேமொழி

On Sunday, August 3, 2014 11:11:25 PM UTC-7, Dev Raj wrote:
On Tuesday, 29 July 2014 23:47:40 UTC-7, இரா.பா wrote:
கரந்தை சமண கோவில்!

தமிழகச் சமணத் தலங்கள் :

சினகஞ்சி, பருத்திக்குன்றம், கரந்தை, பூண்டி,
சிங்கை, வைகை, திருப்புறம்பை, அருகை, தாசை,
சினகிரி, வண்தீபை, சித்தை, வீரை, கூடல்
                                   - ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

[சமணமும் தமிழும் - மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்கள்] 

Banukumar Rajendran

unread,
Aug 4, 2014, 3:41:14 AM8/4/14
to மின்தமிழ்
என்னுடைய கட்டுரை ஒன்று!

http://banukumar_r.blogspot.in/2012/04/blog-post_15.html - ஸ்வஸ்திகம்

2014-08-04 11:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

முழுமுதற்கடவுள் கோட்பாட்டை ஏற்காத சமணத்திற்கு, உலகில் நிகழும் நிகழ்வுகளுக்குத் தக்க சமாதானம் கூறவேண்டியக்
கட்டாயம் அதற்குண்டு.

இந்த நிலவுலகில் நிகழும் நிகழ்வுகளுக்கு முழுமுதற் கடவுள்தான் காரணம் என்றால் பிரச்சனையே இல்லை. ஆதலால், கர்த்தா வாதத்தை
ஏற்காத சமணம், கர்மவினைக் கோட்பாட்டை முன் நிறுத்துகிறது.

கெட்ட வழியில் செல்லும் ஒரு மனிதனை/உயிரைக் கடவுள் பெயர்ச் சொல்லித் திருத்த வழியுண்டு நம்பும் மதங்களுக்கு! ஆனால்,
சமணமோ கர்த்தா வாதத்தை நம்பாத மதம். அவனை திருத்த முன் வைத்த கோட்பாடுதான் இந்த நான்கு கதி கோட்பாடு.

நல்ல படி நடந்துக் கொண்டால், இவ்வுலகில் நலமே வாழலாம். கெட்ட வழியில் சென்றால், நரககதிதான் கிடைக்கும் என்று எச்சரிக்க,
சொல்லிய கான்செப்ட்தான் இந்த நரககதி.

இப்போதைக்கு டைம் இல்லை. பிறகு எழுதுகிறேன்.

இரா.பானுகுமார்,
சென்னை

..... தேமொழி

On Sunday, August 3, 2014 11:11:25 PM UTC-7, Dev Raj wrote:
On Tuesday, 29 July 2014 23:47:40 UTC-7, இரா.பா wrote:
கரந்தை சமண கோவில்!

தமிழகச் சமணத் தலங்கள் :

சினகஞ்சி, பருத்திக்குன்றம், கரந்தை, பூண்டி,
சிங்கை, வைகை, திருப்புறம்பை, அருகை, தாசை,
சினகிரி, வண்தீபை, சித்தை, வீரை, கூடல்
                                   - ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

[சமணமும் தமிழும் - மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்கள்] 

--

Banukumar Rajendran

unread,
Aug 4, 2014, 3:43:38 AM8/4/14
to மின்தமிழ்
2014-08-04 11:41 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Tuesday, 29 July 2014 23:47:40 UTC-7, இரா.பா wrote:
கரந்தை சமண கோவில்!

தமிழகச் சமணத் தலங்கள் :

சினகஞ்சி, பருத்திக்குன்றம், கரந்தை, பூண்டி,
சிங்கை, வைகை, திருப்புறம்பை, அருகை, தாசை,
சினகிரி, வண்தீபை, சித்தை, வீரை, கூடல்
                                   - ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

[சமணமும் தமிழும் - மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்கள்] 

நன்றி ஐயா!

மயிலையாரின் சமணமும் தமிழும் - http://samanamumthamizhum.blogspot.in/2013_09_01_archive.html

இரா.பானுகுமார்,
சென்னை

--

N. Ganesan

unread,
Aug 4, 2014, 8:50:32 AM8/4/14
to mint...@googlegroups.com, vallamai

On Sunday, August 3, 2014 11:28:47 PM UTC-7, தேமொழி wrote:

சமணமும் தமிழும் - மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்கள் >>> http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm

ஜைநச் சின்னம்:

ஜைநக் கொடியிலும் இருக்கிறது:

ஸ்வஸ்திகம் (சோத்திகம்) சிந்துசமவெளியில் நிறைய உண்டு.

நந்தியாவட்டை - சோத்திக வடிவில் உள்ள பூ:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 4, 2014, 9:00:41 AM8/4/14
to mint...@googlegroups.com, pandiya raja, vallamai

On Monday, August 4, 2014 12:41:14 AM UTC-7, இரா.பா wrote:
என்னுடைய கட்டுரை ஒன்று!

http://banukumar_r.blogspot.in/2012/04/blog-post_15.html - ஸ்வஸ்திகம்

பாண்டியராஜா கட்டுரையில் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’
என்று தொல்காப்பியர் தமிழ் ப்ராமிக்கு புள்ளி வைக்கும் முறை பற்றி ஆராய்ந்துள்ளார் (1994-ல்).
புள்ளி வைத்து முக்கியமான ஒன்றைக் குறிப்பிடும் முறையை தன் சமணச்
சின்னத்திலிருந்து பெற்றாரா தொல்காப்பியர்?

நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
Aug 19, 2014, 2:12:56 AM8/19/14
to mintamil
நல்வரவு, ஃப்ரீமாண்டூராரே!

2014-08-18 23:22 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:

சமணரின் அண்டவியல் :

மூவா முதலா உலகமொரு மூன்றுமேத்தத்

தாவாத இன்பம் தலையாயது தன்னினெய்தி

ஓவாது நின்ற குணத்தொள்நிதிச் செல்வனென்ப

தேவாதி தேவனவன் சேவடி சேர்துமன்றே ! 

தோற்றமும், அழிவுமற்றது உலகம். மேருவைச் சுற்றிலும் புவநம் எனும் நிலவுலகு.

அதன் மேலும் கீழும் பல அடுக்குகளாக அமைந்துள்ளது அண்டம். உச்சியில் இருப்பது

முக்தி பெற்றோர் வாழும் ஸித்த சிலா எனப்படும் சிலாதலம்.

சமணத்தின் அண்டவியல் ஒரு தனித்துறை. விரிவானது, ஆழமானது

இது தொடர்பான த்ரிலோக ப்ரஜ்ஞப்தி [திலோய பண்ணத்தி] ஆசார்ய 

யதிவ்ருஷபர் செய்த நூல் - நுட்பமான கணித முறைகள் கொண்டது.

ஸூர்ய ப்ரஜ்ஞப்தி, சந்த்ர ப்ரஜ்ஞப்தி போன்றவை சமணர் செய்த 

தொன்மையான கணிதம் சார்ந்த நூல்கள்;  ஆசார்ய பத்ரபாஹு, 

உமா ஸ்வாதி போன்றோரும் கணித நூல்கள் செய்ததாகத் தெரிய 

வருகிறது.  வைசாலி கணிதம்,ஸ்தாநாங்க ஸூத்ரம் போன்றவையும்

பீஜ கணித ஸமீகரணங்களை [algebraic equations] விவரிப்பதாக

அறிஞர் கூறுவர்.

இவற்றையே சமணத்தின் அருங்கொடைகளாகக் கருதலாம் ;

துறை வல்லுநர் துணையுடன்  இவற்றை வெளிக்கொணர்வது 

நல்லதொரு பணியாக அமையும்.கோள்நிலைகளின் கணிப்பிலும் 

சமணர் வல்லவராய் இருந்தனர்

தேவ்

Banukumar Rajendran

unread,
Aug 30, 2014, 3:13:26 AM8/30/14
to மின்தமிழ்
Published: August 28, 2014 00:00 ISTUpdated: August 28, 2014 12:06 IST

ஜைன காஞ்சி

NCERT Study Course i-xii - Free Online Videos,Digital Books & More.Register and Watch Free Videoswww.thedigilibrary.com/NCERT
விஜி சக்கரவர்த்தி
COMMENT   ·   PRINT   ·   T+  

தட்சிண காசி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மிகவும் பழமையான நகராகும். கோயில் நகரமான இது சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனக்காஞ்சி என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து அழைக்கப்படுகிறது. இப்பெயர்களின் மூலம் மூன்று சமயங்கள் இம்மண்ணில் செழிப்பாக இருந்தது தெரியவருகிறது.

ஜைன காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால வித்யாத்தலமாக அது விளங்கியுள்ளது.

தமிழகத்தில் கிடைத்த முதல் செப்பேடான பள்ளன் கோயில் செப்பேடு திருப்பருத்திக்குன்ற மகாவீரர் கோயில் பற்றியது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப் பட்டது. அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, “தொன்மைசேர் பருத்திக் குன்றிலுறைகின்ற திரிலோகநாதனே” எனத் தன் கவியில் குறிப்பிடுகிறார். இக்கோயில் தமிழரின் கட்டிட, சிற்ப, ஓவியக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாகும். இங்கு கல்வெட்டுகள் உள்ளன.

மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரின் கருவறைப் பகுதி, திரைலோக்கியநாதர் கோயில் ஆகும். மற்றப் பகுதி திரிகூட ஆலயம். இங்கு பத்மபிரபர், வாசுபூஜ்யர், பார்சுவநாதர், ரிஷபதேவர், பிரம்மதேவர் ஆகியவரின் கருவறைகள் உள்ளன. சங்கீத மண்டபம், தானியக்கிடங்கு, முனிவாசம் ஆகியவையுள்ளன. இங்குள்ள தருமதேவி அம்மன் மிகச் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் ஆதரித்து வழிபட்டுள்ளனர்.

மண்டபங்களின் உட்கூரைகளில் மிக அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பகவான் ரிஷபதேவர், மகாவீரர், நேமிநாதர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் மிகக் கலைநயத்தோடு வண்ண ஓவியங்களாக உள்ளன. அதுபோல் கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் வீர தீர லீலைகளும், தருமதேவிஅம்மனின் வாழ்க்கை வரலாறும் கண் கவரும்படி மிக உன்னத ஓவியங்களாகப் பல வண்ணங்களில் மிளிர்கிறன.

இக்கோயிலில் உள்ள குராமரம் மிகப் பிரசித்தமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இம்மரம் தருமத்தின் உறைவிடமாகவும் அரச செங்கோலைக் காக்க கூடியதென்றும் நம்பப்படுகிறது. இம்மரத்தைப் பற்றிய பாடலில்

“தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி

முன்னுளது மும்முனிவர் மூழ்கியது_ மன்னவன்தன்

செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த

கொங்கார் தருமக் குரா”எனப்படுகிறது. குராமரத்தின் கீழ் ஆசாரியர்களின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மல்லிசேன வாமன ஆசாரியர் என்பவரின் பாதமும் ஒன்று. இவர் மேருமந்திர புராணம், நீலகேசி என்ற நூலுக்கு சமய திவாகரம் உரை ஆகிய நூல்களை இயற்றித் தமிழுக்கு அணி சேர்த்தார்.

மேருமந்திர புராணத்தையும் உலகிலேயே உள்ள ஒரே ஒரு நீலகேசிச் சுவடியையும் 90 ஆண்டுகளுக்கு முன் பேராசிரிய அ.சக்கரவர்த்தி நைனார் என்பவர் முதன்முதலாகச் சுவடிகளிலிருந்து பதிப்பித்தார்.

திரைலோக்கியநாதர் கோயிலுக்கு அடுத்தது பகவான் சந்திரப்பிரபர் ஆலயம் கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருவறையில் சந்திரப்பிரபரின் சுதை வடிவம் உள்ளது. டி.என். இராமச்சந்திரன் என்பவர் தன் ஆங்கில நூலில் இக்கோயில்களைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் ஜைன காஞ்சியாக, சமண மையமாகத் திகழ்ந்த இவ்விடத்தில் சமண மடம் ஒன்றும் இருந்தது. தற்போது அது செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூருக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

----------------------------------------------

unquote:

ஆசிரியர் புத்த காஞ்சியை சொல்லாமல் விட்டாரே? புத்த காஞ்சி தற்போது புது காஞ்சி என்றும், ஜின காஞ்சி சின்ன காஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன.

இரா.பானுகுமார்,

பெங்களூர்

Innamburan S.Soundararajan

unread,
Aug 30, 2014, 4:57:09 AM8/30/14
to mintamil
இங்கு நீலகேசி பாடம் நடந்த போது நான் இரா. பானுகுமாரை பற்றி பிரஸ்தாபித்தேன். முனைவர். நாச்சிமுத்துவும் அவரை பற்றி சிலாக்கியமாக சொன்னார்.

--

Banukumar Rajendran

unread,
Aug 30, 2014, 6:40:25 AM8/30/14
to மின்தமிழ்
2005ல் வந்த செய்தி!

http://archive.deccanherald.com/deccanherald/feb012005/n10.asp

Dalit youth turns jain monk

In a caste-dominated society, where dalit bridegrooms are often discouraged to ride a mare in their wedding processions, upper castes treat them with disdain and untouchability remains a stigma irrespective of what the Indian Constitution outlines, the induction of a dalit youth in Jain religion comes as a welcome change.

In a historic event, a 22-year-old youth belonging to Meghwal community was anointed as a Jain monk at Ahore town in Jalore district on Monday. Hailing from Mandwaria village, Sirohi district, Chandaram Meghwal alias Sandeep got a new identity as Anant Punya Maharaj at a diksha ceremony attended by a large number of people from Shwetambar Jain community and Sandeep’s relatives from Sirohi.

Sandeep who went to Mumbai in search of a job a few years ago was so impressed by Jain saint Suryodaya Maharaj that he expressed his desire to dedicate his life to the religion. He travelled with him to various holy places and attended religious sermons with deep devotion and sincerity to the surprise of the saint. On expressing his desire to join the religion, he was sent to Ahmedabad to study the Jain ideology for almost four years. Seeing his intense desire to lead life of a Jain monk, his family gave in after initial hesitation, reliable sources told Deccan Herald from Ahore.

He was given a warm send off from his village two days ago and reportedly there was a mad rush among the villagers to touch his feet to show their reverence. His monkhood moved about 1,500 people in the village to go vegetarian and give up drinking. Monday onwards, he would be known with his new name Anant Punya, said Mahaveer Jain, a businessman from Bangalore, who was currently in Ahore to attend the diksha ceremony. His 26-year-old sister also took diksha along with Sandeep, he said. A commerce student at the MES college in Bangalore, she gave up her studies to pursue the same path.

A tough life awaits the newly inducted monk from Tuesday as he will have to walk barefoot, clad in a white robe and seeking alms. No physical comforts will be allowed, including the services of a barber.

2014-08-30 12:43 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

Banukumar Rajendran

unread,
Sep 1, 2014, 3:55:37 AM9/1/14
to மின்தமிழ்
நன்றி ஐயா!

படித்தைப் பகிர்ந்துக் கொள்ளலாமே ஐயா?

நன்றியுடன்,

இரா.பா

Innamburan S.Soundararajan

unread,
Sep 1, 2014, 8:23:35 AM9/1/14
to mint...@googlegroups.com
நன்றி, பானுகுமார். நேரம் வரட்டும். எழுதுகிறேன். சொற்களுக்கு பொருள்
காண்பது கடினமாக இருந்தது.
இன்னம்பூரான்

--

Banukumar Rajendran

unread,
Sep 5, 2014, 4:45:44 AM9/5/14
to மின்தமிழ்

Dev Raj

unread,
Sep 9, 2014, 4:39:13 AM9/9/14
to mint...@googlegroups.com
மேற்குறித்த பதிவால் நாம் தெரிந்துகொள்வது சைவ சமயம் சார்ந்த 
சோழப்பேரரசில் சமணம் பாதிப்படையவில்லை. சமணர் நிவந்தங்கள் 
பெற்று நிம்மதியாக இருந்தனர். சமய குரவர், ஆழ்வார்கள் காலத்துக்குப் பின்னரும் சமணர் இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தனர். பிற்காலத்தில்
தோன்றிய வைணவ உரை நூல்களும் சமணர் சோழ நாட்டில் இருந்ததை
உறுதி செய்கின்றன

தேவ்

Suba.T.

unread,
Sep 9, 2014, 6:35:28 AM9/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-09 10:39 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:
மேற்குறித்த பதிவால் நாம் தெரிந்துகொள்வது சைவ சமயம் சார்ந்த 
சோழப்பேரரசில் சமணம் பாதிப்படையவில்லை.

​இது நன்கு அறியப்பட்ட ஒரு  தகவல் குறிப்பாக சோழர் வரலாறு தெரிந்தோரிடையே. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட திருமலை கோயில் ஒன்றும் கரந்தை கோயிலும் குந்தைவை கட்டியவை தாமே!

ராஜராஜன் அளித்த  நிவேந்தனங்களுக்காக அங்கே ராஜராஜன் துணைவியரொடு இருக்கும் நடுகல் போன்ற சிலை அமைப்புக்கள் திருமலை சாலையிலேயே இருக்கின்றன. நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.

சுபா

சமணர் நிவந்தங்கள் 
பெற்று நிம்மதியாக இருந்தனர். சமய குரவர், ஆழ்வார்கள் காலத்துக்குப் பின்னரும் சமணர் இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தனர். பிற்காலத்தில்
தோன்றிய வைணவ உரை நூல்களும் சமணர் சோழ நாட்டில் இருந்ததை
உறுதி செய்கின்றன

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

Dev Raj

unread,
Sep 9, 2014, 8:15:53 AM9/9/14
to mint...@googlegroups.com
2014-09-09 10:39 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:
மேற்குறித்த பதிவால் நாம் தெரிந்துகொள்வது சைவ சமயம் சார்ந்த 
சோழப்பேரரசில் சமணம் பாதிப்படையவில்லை.
 
On Tuesday, 9 September 2014 03:35:28 UTC-7, Suba.T. wrote:
​இது நன்கு அறியப்பட்ட ஒரு  தகவல் குறிப்பாக சோழர் வரலாறு தெரிந்தோரிடையே. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட திருமலை கோயில் ஒன்றும் கரந்தை கோயிலும் குந்தைவை கட்டியவை தாமே!
ராஜராஜன் அளித்த  நிவேந்தனங்களுக்காக அங்கே ராஜராஜன் துணைவியரொடு இருக்கும் நடுகல் போன்ற சிலை அமைப்புக்கள் திருமலை சாலையிலேயே இருக்கின்றன. நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.

நன்றி சுபா.

சோழர் காலச் சமயம் 
டாக்டர் பத்மாவதி

வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். 

பத்மாவதி அவர்களின் இக்கருத்தின் பொருள் யாது ?
சான்று கூற இயலுமா ?

தேவ்
 
Suba.T.

unread,
Sep 9, 2014, 9:01:13 AM9/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
​டாக்டர்.பத்மாவதி அவர்களின் பதிவையும் எனது குறிப்பையும் வாசித்தால் நன்கு புரிந்து கொள்ளலாமே.

சமணம் சோழர் காலத்திற்கு முன்னர் மிக விரிவாக பரவலாக வழக்கில் இருந்த சமயம். சோழர் காலத்தில்  அரசர்களின் பக்கபலத்தோடு சைவமும் வைணவமும் மிகப் பரவலாக வளர்ந்தது ஆனால் சோழ மன்னர்கள் சமண பௌத்த மதத்தை அழித்ததாகக் கொள்ளமுடியாது.

இக்கருத்தை நானும் எனது பதிவுகளில் ஓரிரு முரை குறிப்பிட்டிருக்கின்றேன்.

சமணத்தின் ​ஆதிக்கம் குறைந்தது என்பதே இங்கே புரிந்து கொள்ள வேண்டிய கருத்து.

சுபா

Dev Raj

unread,
Sep 9, 2014, 9:49:01 AM9/9/14
to mint...@googlegroups.com
வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை......

இதற்கான ஆதாரம் என்ன ?
அரசர் ஆதரவின்றி இது நிகழ முடியுமா ?

தேவ்

Suba.T.

unread,
Sep 9, 2014, 10:21:01 AM9/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-09 15:49 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:
வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை......

இதற்கான ஆதாரம் என்ன ?
​தற்சமயம் எனக்கு மிகக் குறைவான நேரமே உள்ளது.
கல்வெட்டு நூல்கள் உள்ளோர் தேடி தகவல் பகிர்ந்தால் மகிழ்வேன். நேரம் கிடைக்கும் போது நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

அரசர் ஆதரவின்றி இது நிகழ முடியுமா ?

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Sep 9, 2014, 12:46:50 PM9/9/14
to mint...@googlegroups.com
கேரளத்தின் ஸுல்தான் பேத்தரி [Sultan's Battery]எனும் இடத்தில்
நன்கு பராமரிப்படும் எழில்மிகு ஜிநாலயம் -

திப்பு ஸுல்தான் காலத்தில் இந்த ஆலயம் ஆயுதக் கிடங்காகப் 
பயன்பட்டது. இதன் பழைய பெயர் ஹன்னெரடு வீதி [Twelve Streets]. 
எதனால் இந்தக் கன்னடப் பெயர் தெரியவில்லை.

தேவ்

Banukumar Rajendran

unread,
Sep 10, 2014, 12:08:00 AM9/10/14
to மின்தமிழ்
2014-09-09 18:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

2014-09-09 14:15 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:
2014-09-09 10:39 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:
மேற்குறித்த பதிவால் நாம் தெரிந்துகொள்வது சைவ சமயம் சார்ந்த 
சோழப்பேரரசில் சமணம் பாதிப்படையவில்லை.
 
On Tuesday, 9 September 2014 03:35:28 UTC-7, Suba.T. wrote:
​இது நன்கு அறியப்பட்ட ஒரு  தகவல் குறிப்பாக சோழர் வரலாறு தெரிந்தோரிடையே. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட திருமலை கோயில் ஒன்றும் கரந்தை கோயிலும் குந்தைவை கட்டியவை தாமே!
ராஜராஜன் அளித்த  நிவேந்தனங்களுக்காக அங்கே ராஜராஜன் துணைவியரொடு இருக்கும் நடுகல் போன்ற சிலை அமைப்புக்கள் திருமலை சாலையிலேயே இருக்கின்றன. நான் நேரில் பார்த்திருக்கின்றேன்.

நன்றி சுபா.

சோழர் காலச் சமயம் 
டாக்டர் பத்மாவதி

வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். 

பத்மாவதி அவர்களின் இக்கருத்தின் பொருள் யாது ?
சான்று கூற இயலுமா ?

​டாக்டர்.பத்மாவதி அவர்களின் பதிவையும் எனது குறிப்பையும் வாசித்தால் நன்கு புரிந்து கொள்ளலாமே.

சமணம் சோழர் காலத்திற்கு முன்னர் மிக விரிவாக பரவலாக வழக்கில் இருந்த சமயம். சோழர் காலத்தில்  அரசர்களின் பக்கபலத்தோடு சைவமும் வைணவமும் மிகப் பரவலாக வளர்ந்தது ஆனால் சோழ மன்னர்கள் சமண பௌத்த மதத்தை அழித்ததாகக் கொள்ளமுடியாது.

இக்கருத்தை நானும் எனது பதிவுகளில் ஓரிரு முரை குறிப்பிட்டிருக்கின்றேன்.

சமணத்தின் ​ஆதிக்கம் குறைந்தது என்பதே இங்கே புரிந்து கொள்ள வேண்டிய கருத்து.

சுபா

இந்த விழியம் அதற்கு பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

http://www.tamilheritage.in/2013/05/blog-post.html

சோழர்களும் பர சமயமும் -  ஸ்ரீகுருராஜ்

சோழர் காலத்திற்கு பின்னரே சமணம் படிப்படியாக அருகி வரலாகியது.

10ஆம் நூற்றாண்டுவரை சமணம் பெரும்பான்மையர் சமயமாகதான் இருந்திருக்கிறது. அறிஞர்கள் தேவார காலத்தில் சமணம் தாழ்ப்பட்டு இருந்தது என்ற கருத்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருத்து. இதற்கு புறச்சான்றுகள் ஏதுமில்லை.

6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை சமண சமயக் கல்வெட்டுகளும் அதிகம் இருந்ததை நினைவில் கொள்ளவேண்டும். கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு பிறகே படிப்படியாக வீழ்ச்சித் தொடங்கியது. பின்னர் 14ஆம் நூற்றாண்டிற்கு பிறகு முற்றும் அருகும் நிலையடைந்தது. சமண இலக்கியத் தாழ்ச்சியும் இதற்கு அரண் செய்யும்.

சமணர்கள் பெரும்பான்மையாகயிருந்த பகுதிகளில் ஆதரவும், சிறுபான்மையாக வசித்தப் பகுதிகளில் ஜினாலயங்களும், விஹாரங்களும் மாற்ற மடைந்தன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்மாவதியார் கருத்து உடன்பாடே.

இரா.பானுகுமார்,
பெங்களூர்

தேவ்
 
Dev Raj

unread,
Sep 10, 2014, 1:50:32 AM9/10/14
to mint...@googlegroups.com
On Tuesday, 9 September 2014 21:08:00 UTC-7, இரா.பா wrote:
10ஆம் நூற்றாண்டுவரை சமணம் பெரும்பான்மையர் சமயமாகதான் இருந்திருக்கிறது. அறிஞர்கள் தேவார காலத்தில் சமணம் தாழ்ப்பட்டு இருந்தது என்ற கருத்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருத்து. இதற்கு புறச்சான்றுகள் ஏதுமில்லை. .......................

 பத்மாவதியார் கருத்து உடன்பாடே <<<<<

சோழர் காலச் சமயம் 
எழுத்து:  டாக்டர் பத்மா

இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. 

பத்மாவதியாரின் இக்கருத்து உங்களுக்கு உடன்பாடா  ?

பத்மாவதியாரின் இக்கருத்தும் , நீங்கள் சுட்டிய சான்றும் முரண்படுகிறது.
அப்பர் - சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளுக்கான அகச்சான்று, புறச்சான்று
உள்ளனவா ?

தேவ்
 
Banukumar Rajendran

unread,
Sep 10, 2014, 7:15:54 AM9/10/14
to மின்தமிழ்
2014-09-10 11:20 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Tuesday, 9 September 2014 21:08:00 UTC-7, இரா.பா wrote:
10ஆம் நூற்றாண்டுவரை சமணம் பெரும்பான்மையர் சமயமாகதான் இருந்திருக்கிறது. அறிஞர்கள் தேவார காலத்தில் சமணம் தாழ்ப்பட்டு இருந்தது என்ற கருத்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருத்து. இதற்கு புறச்சான்றுகள் ஏதுமில்லை. .......................

 பத்மாவதியார் கருத்து உடன்பாடே <<<<<

சோழர் காலச் சமயம் 
எழுத்து:  டாக்டர் பத்மா

இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. 

பத்மாவதியாரின் இக்கருத்து உங்களுக்கு உடன்பாடா  ?

தனி மடலில் என் கருத்தை பகிர்ந்துக் கொள்கிறேன் ஐயா.

இரா.பானுகுமார்,
பெங்களூர்

பத்மாவதியாரின் இக்கருத்தும் , நீங்கள் சுட்டிய சான்றும் முரண்படுகிறது.
அப்பர் - சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளுக்கான அகச்சான்று, புறச்சான்று
உள்ளனவா ?

தேவ்
 
--

Dev Raj

unread,
Sep 10, 2014, 8:04:30 AM9/10/14
to mint...@googlegroups.com
>>>> சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது <<<<

காபாலிகர் சமணரை அழித்ததாகச் சான்று எதுவும் கிடையாது;
அப்பர் காபாலிக சமயத்தவரும் அல்லர்.
லகுலீச சமயம் தோன்றியதும் கூர்ஜரத்தில்;
சமணம் செழித்து வளர்ந்ததும் கூர்ஜரத்தில்தான்.
இரு சமயத்தினருக்கும் மோதல் நடந்ததாக
ஒரு நிகழ்வும் கிடையாது. கூர்ஜர மன்னர் 
பீமதேவ ஸோலங்கி சைவத்தைப் பின்பற்றியவர்.
சமணத்தையும் ஆதரித்தார். அவர்கள் அரசவைப்
பொறுப்பிலும் இருந்தனர்.

தமிழகச் சைவம் பாரதத்தின் பல சைவச் சிந்தனைகளையும்
உள்வாங்கி வளர்ந்தது. காயாரோஹணம் அவற்றில் ஒன்று

தேவ்

seshadri sridharan

unread,
Sep 10, 2014, 9:26:41 AM9/10/14
to mintamil
> சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது <

தந்திரத்தின் ஒரு புற ஊழ்க முறை தான் காபாலிகம் 

சேசாத்திரி 

Prakash Sugumaran

unread,
Sep 11, 2014, 4:54:50 AM9/11/14
to mintamil
//சடங்குகளை சமண மதம் மக்களிடையே வித்தியதால் தான் இந்து சமயமும் அதை ஒட்டி மக்களை சடங்குப் பித்தர்களாக ஆக்கிவிட்டது என்பது தெரிகின்றது. இந்த சடங்கே சமணத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பது மிகையாகாது.//

இல்லை. முதல் தீர்த்தங்கரர் தொடங்கி 24வது தீர்த்தங்கரர் வரை அனுபவப்பட்டு, வேறு வழியில்லாமல் சாதி அமைப்புகளையும், சடங்குகளையும் படிப்படியாக ஏற்று கொண்டனர். அதே சடங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று இந்து சமய சடங்குகளில் பலி, யாகம், வேள்வி உள்ளிட்ட பல விஷயங்கள் இல்லாமல் செய்ததும் சமணர்கள். அவர்களை தொடர்ந்து பெளத்தர்கள்... இன்னபிற தத்துவ மரபினர்.

சமணத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.. சங்கத்தில் இணைவதற்கான விதிமுறைகள்.. அதன் பிறகான கடுமையான சுயக் கட்டுப்பாடு.

தவிர சமணத்தை பொறுத்தவரை வீழ்ச்சி என சொல்ல முடியாது. சமூக ஒவ்வாமை என்று சொல்லலாம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Innamburan S.Soundararajan

unread,
Sep 11, 2014, 4:56:48 AM9/11/14
to mint...@googlegroups.com
//சடங்குகளை சமண மதம் மக்களிடையே வித்தியதால் தான் இந்து சமயமும் அதை
ஒட்டி மக்களை சடங்குப் பித்தர்களாக ஆக்கிவிட்டது என்பது தெரிகின்றது.

~ எங்கிருந்து?

Banukumar Rajendran

unread,
Sep 11, 2014, 5:24:07 AM9/11/14
to மின்தமிழ்
http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/article6398846.ece

முனிகிரி என்கிற கரந்தை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவ, வைணவ, சமண, புத்த மதங்கள் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுர நகரத்தை சுற்றியிருந்த இடங்களிலெல்லாம் அம்மதங்கள் சிறப்போடு இருந்தன.

காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பணமூர் எனும் சமண கிராமங்களுள்ளன. முனிவர்கள் பலர் இங்கு வாழ்ந்ததால் கரந்தைக்கு முனிகிரி என்ற பெயருமுண்டு.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சமணர் கோயில் கரந்தையில் உள்ளது. இக்கோயில் நெடிதுயர்ந்த மதிலால் சூழப்பட்டுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் சோழர், விஜயநகர மன்னர், சிற்றரசர்கள் ஆகியோர் இக்கோயிலை ஆதரித்துள்ளனர் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலின் மூலவர் 17- வது தீர்த்தங்கரரான பகவான் குந்துநாதர் சுதை வடிவில் காட்சி தருகிறார்.

வீரஇராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்ததால் இக்கோயில் வீரஇராஜேந்திர பெரும்பள்ளி எனப்பட்டது கருவறையின் பின்புறம் புடைப்புச் சிற்பமாக பகவான் பார்சுவநாதர் மேற்கு திசை நோக்கி திருநறுங்கொண்டையெனும் இடத்தில் இருப்பதுபோல் இருப்பதால் மேற்றிசைப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

சோழர்காலக் கல்வெட்டும் இப்பெயரையே சுட்டுகிறது. இத்தலத்தில் பாகுபலி, சிலையாக மிகக் கலை நயத்தோடு, நேர்த்தியோடு காட்சித் தருகிறார்.

உயரமான கருவறையில் சுதை வடிவிலுள்ள மகாவீரர் திருக்காட்டாம்பள்ளி ஆழ்வார் எனப்படுகிறார். இக்கருவறையிலிருந்து பார்த்தால் கிழக்கேயுள்ள மாமண்டூர் குகைப்பள்ளி புலப்படும்படியும் கருவறை உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஆதிபகவன் கோயில். ஆலங்காட்டா எனும் மலையிலிருந்த கோயிலைப் பழுதின்றி பிரித்துவந்து இங்கு கட்டியுள்ளனர்.

இங்குள்ள தர்மதேவி மிக மூர்த்திகரமானதென்று நம்புகின்றனர். அகளங்கர் எனும் பெரும் புகழ் வாய்ந்த மாமுனிவர் தருமதேவி ஆசியுடன் அரசன் இமசீதளன் காலத்தில் பௌத்தரை சமயவாதம் செய்து வென்றுள்ளார்.

அகளங்க முனிவரின் சிலையும் பாதக் கமலங்களும் மண்டபமும் இத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன சம்மந்தபத்திரர், முனிபத்திரர் ஆகிய முனிவர்களின் திருப்பாதங்களும் நிறுவப்பட்டுள்ளன.

காலஞ்சென்ற டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார் எனும் முன்னாள் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருமதேவியைப் பற்றி வெகுவாகப் புகழ்வார். அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, ‘பன்னலன் பெருகிட பறம்பையி லுறைகின்ற தருமதேவி’ எனப் பாடுகிறார்.

ஆண்டுதோறும் இவ்வூரில் மகாத்திருவிழாவின்போது தெப்ப உற்சவம் நடை பெறுகிறது. குந்துநாத அஷ்டகம், தருமதேவி பத்து, தோத்திரத் திரட்டு ஆகிய நூல்கள் இத்தலத்தையும் தருமதேவியையும் புகழ்ந்து பாடுகின்றன. கரந்தையில்

பல அறவோர்கள் தோன்றி சமணத்தையும் தமிழையும் வளர்த்துள்ளனர். அவர்கள் வழியில் கரந்தை அ.சுகுமாரன் என்பவர் இன்றும் பல ஜைன நூல்கள் எழுதி தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார். முனைவர். ஏ. ஏகாம்பரநாதன் இத்திருத்தல வரலாற்றை எழுதிய நற்பணியைச் செய்துள்ளார்.

2014-09-09 13:56 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:

உத்திரமேரூரில் இருந்து குந்தவை ஜைன கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பகுதிகளில் சமணம் செழித்து வளர்ந்த சான்றுகளை வழி நெடுக காணலாம் என்று சென்ற பதிவில் கூறி இருந்தேன், அதில் ஒன்று தான் "திறக்கோயில்". வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மலைகள் சூழ்ந்து அமைந்திருக்கும் அழகான இந்த கிராமத்தில் உள்ள மலையில் இயற்கையாக அமைந்த மூன்று குகைகள் உள்ளன, இந்த குகைகளில் தான் அன்றைய சமணர்கள் தங்குமிடத்தை அமைத்திருக்கிறார்கள். இந்த மலைக்கு கீழே சுமார் 25 அடி உயரமி ருக்கும் இருக்கும் ஒரு தனி பாறையில் மஹாவீரர், பார்ச்வநாதர், ரிஷபநாதர், மற்றும் சந்திரநாதர் ஆகிய நான்கு தீர்த்தங்கரர்களின் உருவங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களின் நேர்த்தியைக் கண்டால் இவை கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் வடிக்கப் பட்டவையாகத் தோன்றுகின்றது. இந்த சிற்பங்களுக்குக் கீழே பராந்தக சோழன் சமணர்களுக்கு அளித்த கொடையை ஒரு கல்வெட்டு பதிவு செய்கின்றது, மலைக்கு மேலே இயங்கிய பள்ளிகளுக்கு ராஜ ராஜ சோழனும் கொடை அளித்துள்ளார், அதில் ஒன்று "சங்கரைப் பள்ளி" எனவும் மற்றொன்று "சுத்தப் பள்ளி" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைக்கு மேல் இயங்கிய அந்த பள்ளியை ஏறிச் சென்று பார்த்தோமேயானால் கீழிறங்கி வருவதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது, நிலமகள் அவள் அழகில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறாள், இயற்கை விரும்பி களும், வரலாற்று ஆர்வலர்களும் கட்டாயம் சென்று காண வேண்டிய இடம்.

திரு. சசிதரன்

Dev Raj

unread,
Sep 11, 2014, 5:39:54 AM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 01:54:50 UTC-7, Prakash Sugumaran wrote:
சமணத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.. சங்கத்தில் இணைவதற்கான விதிமுறைகள்.. அதன் பிறகான கடுமையான சுயக் கட்டுப்பாடு.
தவிர சமணத்தை பொறுத்தவரை வீழ்ச்சி என சொல்ல முடியாது. சமூக ஒவ்வாமை என்று சொல்லலாம்.
 
இக்காரணமே பொருத்தமாகத் தோன்றுகிறது.
அறிவு சார்ந்த ஆய்வுகளுக்கும், துறவின் தூய்மைக்கும்
என்றுமே பாரதத்தில் நல்ல மரியாதை இருந்து வந்துள்ளது.
சமண அறிஞர்களை மொகமதிய மன்னர்களும் 
ஆதரித்துள்ளனர் என்பதே வரலாறு

தேவ்

Prakash Sugumaran

unread,
Sep 11, 2014, 5:44:58 AM9/11/14
to mintamil
//வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். //

அந்தணர்களின் சடங்கு, வேள்வி முறைகளுக்கு நேரெதிர் கொள்கை கொண்டவர்கள் வேளாளர்கள். பிறகு எப்படி இருவரும் ஒன்று சேர முடியும்.

” வள்ளுவன் மெல்லியனாகி, வெள்ளாளனாகி மெல்ல மெல்ல முதலியானான் “ என ஒரு சொலவடை உண்டு. தன்னுள் ஒருவனான சமணனை, வேளாளன் ஏன் வெறுக்க வேண்டும்.

பெரும்பாலான தமிழ் சமணர்கள் சைவ வேளாள மரபினர். உணவு பழக்கம் மட்டுமே வேளாளருக்கும், சைவ வேளாளருக்கும் இடையில் உள்ள வேறுபாடு. எ.காட்டாக.. தொண்டை மண்டல சைவ வேளாளர்கள், தஞ்சாவூர் சைவ வேளாளர்கள் எல்லாம் பிற்காலத்தில் வெள்ளாய முதலியார் என்றும், அதில் சமணம், ஆசீவகத்தை பின்பற்றியவர்கள் பொதுவில் சமணர்கள் எனவும், சிவ வழிபாட்டை தொடர்ந்தவர்கள் சைவ வேளாளர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள்.

சைவ வேளாளர்கள், சமணர்களில் உள்ள பிரிவுகள் - ஆண் வழிபாடு, பெண் வழிபாடு என்பதில் மட்டுமே. இதில் சமணர்கள் அம்மன் வழிபாட்டுடன், தீர்த்தங்கரர்களை முதல் கடவுளாகக் கொண்டு விட்டனர்.

//சமணம் சோழர் காலத்திற்கு முன்னர் மிக விரிவாக பரவலாக வழக்கில் இருந்த சமயம். சோழர் காலத்தில்  அரசர்களின் பக்கபலத்தோடு சைவமும் வைணவமும் மிகப் பரவலாக வளர்ந்தது ஆனால் சோழ மன்னர்கள் சமண பௌத்த மதத்தை அழித்ததாகக் கொள்ளமுடியாது. இக்கருத்தை நானும் எனது பதிவுகளில் ஓரிரு முரை குறிப்பிட்டிருக்கின்றேன். சமணத்தின் ​ஆதிக்கம் குறைந்தது என்பதே இங்கே புரிந்து கொள்ள வேண்டிய கருத்து.//
//10ஆம் நூற்றாண்டுவரை சமணம் பெரும்பான்மையர் சமயமாகதான் இருந்திருக்கிறது. அறிஞர்கள் தேவார காலத்தில் சமணம் தாழ்ப்பட்டு இருந்தது என்ற கருத்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருத்து. இதற்கு புறச்சான்றுகள் ஏதுமில்லை.//
//6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை சமண சமயக் கல்வெட்டுகளும் அதிகம் இருந்ததை நினைவில் கொள்ளவேண்டும். கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு பிறகே படிப்படியாக வீழ்ச்சித் தொடங்கியது. பின்னர் 14ஆம் நூற்றாண்டிற்கு பிறகு முற்றும் அருகும் நிலையடைந்தது. சமண இலக்கியத் தாழ்ச்சியும் இதற்கு அரண் செய்யும்.//
//சமணர்கள் பெரும்பான்மையாகயிருந்த பகுதிகளில் ஆதரவும், சிறுபான்மையாக வசித்தப் பகுதிகளில் ஜினாலயங்களும், விஹாரங்களும் மாற்ற மடைந்தன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்மாவதியார் கருத்து உடன்பாடே.//
//சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. //

இவையெல்லாம் அவரவர் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.

சமணம் பெரும்பான்மை பெற்று இருந்தது என்பது ஒப்புகொள்ள முடியாதது. பிற சமூகத்தினரின் எதிர்ப்புக்கு உள்ளாகாதது என்பது பொறுத்தமாக இருக்கும்.

பிராமணர் சமூகத்தை போலவே ஆரிய மரபில் இருந்து வந்திருந்தாலும் பிராமணர்கள், பெளத்தர்கள் போல அரசாங்க காரியங்களில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்து மொழி, இறை, தத்துவ சேவைகளில் மட்டுமே ஈடுபட்டதால் பிறருடைய எதிர்ப்புக்கு ஆளாகவில்லை. அதோடு சமணத்தின் உட்பிரிவான ஸ்வேதாம்பரர்கள் வணிகரீதியாக அரசாங்கங்களுக்கு லாபங்களை ஈட்டி தரும் பிரிவினராக இருந்தது இன்னும் வசதி என்பதால், எளிதில் பல தேசங்களில் பரவியது. ஆனாலும் பெரும்பான்மை பெற்றிருக்க வாய்ப்பில்லை.

சிவபுராணத்திலும் தமிழகத்தின் 7 சமண பிராஜாபதிகளை குறித்த தகவல்களும், முருகன் அவர்களை கொன்ற தகவல்களூம் உள்ளதே தவிர வேறு எங்கும் ஆட்சியாளர்களாக சமணர்கள் இருந்ததாக அறியப்படவில்லை. சிவபுராணத்தில் குறிப்பிடப்படும் அந்த 7 பிரஜாபதிகளும் திருவண்ணாமலை - காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவளித்து வந்தவன் வேளாள மரபில் வந்து, ருத்திர வழிபாட்டை பின்பற்றி, நீலகிரியில் பிறந்து கரூர் முதல் மைசூர் வரை அரசாண்டு, பார்வதியின் உத்தரவுப்படி துர்கையால் விஷமளித்து கொல்லப்பட்ட மகிஷாசுரன்.

கபாலிகம் ஆதீஷ்வரன், ஆதிநாதன் எனப்படும் முதல் தீர்த்தங்கரனின் வழிபாட்டு முறைகளில் ஒன்று. அதனை தமிழகத்தில் அப்பர் முன்னெடுத்தார் என்று சொல்லலாமே தவிர சமணர்களை அழிக்க முயன்றார் என்று சொல்ல முடியாது.

தவிர முதன்முதலில் மடப்பள்ளிகளை தமிழகத்தில் நிறுவிய ஒரே காரணத்துக்காகவே சமணத்துக்கு பிற பெரும்பான்மை சமூகத்தினரின் ஆதரவு கிடைத்து இருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 11, 2014, 2:13:28 PM9/11/14
to mint...@googlegroups.com
///சமணம் பெரும்பான்மை பெற்று இருந்தது என்பது ஒப்புகொள்ள முடியாதது. பிற சமூகத்தினரின் எதிர்ப்புக்கு உள்ளாகாதது என்பது பொறுத்தமாக இருக்கும்.///

பிற மதத்தினர் வெறுக்கவில்லை????

ப்ரகாஷ் கீழ் காணும் பாடல்கள் போன்ற சைவ மதப் பாடல்கள் இல்லையா?  படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை விளக்கினால் நலம். 

ref: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=109&pno=1075

1216. மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 10

1217. சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே. 11

திருச்சிற்றம்பலம்

10. பொ-ரை: உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடு திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.

கு-ரை: புறச்சமயிகளை விலக்கிய விமலன் நகரிதுவாம் என்கின்றது. மண்டை - உண்கலம். மாசு - அழுக்கு. பண்டு அமர் தரு பழங்காவிரி - முன்னமே வளந்தரும் பழங்காவிரி எனப் பழமைக்கு எல்லை கூறியவாறு.

11. பொ-ரை: சிவபெருமான் எழுந்தருளிய சிவபுர நகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓத வல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.

கு-ரை: சிவபுரத்தைக் காழிநாதன் கூறிய பாடலைச் சொல்ல வல்லவர் சிவகதி சேர்வர் எனப் பயன் கூறியது. நவம் - புதுமை.

.... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 11, 2014, 2:24:39 PM9/11/14
to mintamil
//பிற மதத்தினர் வெறுக்கவில்லை???? ப்ரகாஷ் கீழ் காணும் பாடல்கள் போன்ற சைவ மதப் பாடல்கள் இல்லையா?  படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை விளக்கினால் நலம். //

சிம்பிள்.. பிற சமூகத்தவர் வெறுக்க வாய்ப்பில்லை என்றுதான் குறிப்பிட்டேன். ஆனால் மதப்போட்டியில், அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த வெறிமிக்க மதத்தவர் சமணர்களை வெறுக்காவிட்டால் ஆச்சரியம்தான்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 11, 2014, 2:46:06 PM9/11/14
to mint...@googlegroups.com
:)))
நல்ல விளக்கம் ...

..... தேமொழி

தேமொழி

unread,
Sep 11, 2014, 2:50:42 PM9/11/14
to mint...@googlegroups.com

சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm

இப்பகுதி இருக்குமிடம் ...
ref: http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=11

9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்து மதத்தில்24 காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்து மதத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றியபோது, சமணர்கள் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமண சமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகி வந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்துமதத்தில் கலந்து விட்டன. இந்து மதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம்.

ஊன் உண்ணாமை: இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக் காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டுவந்ததோடு புலாலுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்துசெய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனை வகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமணசமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண¢பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத் தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.

‘‘விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக்கள் தம் தெய்வங்களுக்கு ஆடுமாடுகளைப் பலியிடுவதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் சமணர் வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய ரிஷிகள் (பிராணிகளின் உயிரைக்கொன்று) யாகம் செய்தபோது அதை அரக்கர்கள் அழித்துவந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூறப்படுகிறதல்லவா? இதன் உண்மைக் கருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத்தின்பேரால் பிராணிகளைக் கொலை செய்துவந்ததை அரக்கர்கள்25 அஃதாவது சமண சமயத்தவர் தடுத்துவந்தார்கள் என்பதே. சமண சமயத்தவருடைய கொள்கை நாடெங்கும் பரவிச் செல்வாக்கடைந்த போது, இந்து மதத்தவரும் இக் கொள்கையைத் தமது கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும் பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமணசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்து சமயத்தில் சேர்ந்து மதம் மாறியபோது, தமது ஊனுண்ணாக் கொள்கையை விடாமல் இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு இரண்டு விதத்தில் சமணரின் இக் கொள்கை இந்து மதத்தில் சேர்ந்து விட்டது.

பௌத்தர்களும் ஊனுண்ணாக் கொள்கையுடையவர். ஆனால், அவர்கள் கொல்லாமையை மட்டும் வற்புறுத்திக் கூறி ஊனுண்ணாமையை அதிகமாக வற்புறுத்தாது விட்டனர். சமணரோ கொல்லாமை, ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தியதோடு, இவற்றைத் தமது மதத்தின் முதன்மையான கொள்கையாகவும் கொண்டனர். ஆதலால், சமணர்களாலேயே இந்தக் கொள்கை நமது நாட்டில் அதிகமாகப் பரவிற்று என்று கருதலாம்.

ஊன் உணவு அல்லாத ‘‘காய்கறி’’ உணவுக்கு இப்போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுகிறது. சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே ‘‘மரக்கறி’’ உணவுக்கு ஆருகத உணவு என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. இலங்கையிலுள்ள தமிழர்கள் ‘‘காய்கறி’’ உணவை இப்போதும் ஆரத உணவு என்று வழங்கி வருகின்றனராம்26. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு.

தீபாவலி: இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆனபடியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுதுவிடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைப் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கெண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு. ஆவலி = வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. நீராடியபின்னர் திருவிளக்கேற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும், ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம்:

[தொடரும்]

Dev Raj

unread,
Sep 11, 2014, 5:28:07 PM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 11:50:42 UTC-7, தேமொழி wrote:

சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். 

சாவக நோன்பினரான கோவலனும், கண்ணகியும் தீபாவலி கொண்டாடினரா ? 
சான்றுகாட்ட இயலுமா ?
சீவக சிந்தாமணி தீபாவலியைச் சொல்கிறதா ?
தமிழ்ச் சமண நூல்கள் தீபாவலியைச் சொல்லும் இடங்கள் எவை ?

தேவ்

Dev Raj

unread,
Sep 11, 2014, 5:31:21 PM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 11:24:39 UTC-7, Prakash Sugumaran wrote:
//பிற மதத்தினர் வெறுக்கவில்லை???? ப்ரகாஷ் கீழ் காணும் பாடல்கள் போன்ற சைவ மதப் பாடல்கள் இல்லையா?  படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை விளக்கினால் நலம். //

சிம்பிள்.. பிற சமூகத்தவர் வெறுக்க வாய்ப்பில்லை என்றுதான் குறிப்பிட்டேன். ஆனால் மதப்போட்டியில், அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த வெறிமிக்க மதத்தவர் சமணர்களை வெறுக்காவிட்டால் ஆச்சரியம்தான்.
 
பாண்டிய நாட்டில் சம்பந்தர் அதிகாரத்தைக் கைப்பற்றினாரா ?
பாடல் பெற்ற தலங்களில் பாண்டி நாட்டுத் தலங்கள் எத்தனை ?
சோழ நாட்டுத் தலங்கள் எத்தனை ?

தேவ்

தேமொழி

unread,
Sep 11, 2014, 5:49:53 PM9/11/14
to mint...@googlegroups.com
திரு. தேவ்,

மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழறிஞர் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்ட கட்டுரைகள்.  அவர் ஒரு போற்றப்பட்ட, மதிக்கத் தக்க தமிழறிஞர் என்று மட்டுமே நானறிவேன்.

சான்று:
"சான்றாக இருபதாம் நூற்றாண்டின் நல்ல ஆராய்ச்சி அறிஞர்களுள் ஒருவராகிய மயிலை சீனி. வேங்கடசாமியின் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்ற நூல்கள் இப்போது காணக்கிடைக்கவில்லை. இவை நிச்சயம் இன்றைக்கும் தமிழ் மாணவர்களும் ஆய்வாளர்களும் படிக்கவேண்டியவை. " -- பேராசிரியர். க.பூரணச்சந்திரன் (பார்க்க http://siragu.com/?p=14959)

அத்தகைய அறிஞர் ஒருவரின் படிக்க வேண்டிய கட்டுரை ஒன்றிலிருந்து அவரது கோணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பி,  அதனையும் "சமணம் அறிவோம்" என்ற இழைக்குப் பொருத்தமானது என்ற எண்ணத்துடன் இங்கு  பகிர்ந்து கொண்டேன்.

சமணத்தைப் பற்றிய மேற்கொண்டு எனக்கு எந்த பின்புலமோ தகவல்களோ தெரியாததால் உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

சமண அறிஞர்களோ தமிழிலக்கிய அறிஞர்களோ தங்கள் ஐயங்களைத் தீர்த்து வைக்க உதாவக்கூடும், நூலின் தகவல்களும் கொடுத்துள்ளேன் ... இது நான் படித்திராத நூல்.  வேண்டுமானால் நீங்களே அதைப் படித்து அறிந்தும் எங்களுக்கு விளக்கலாம்.

..... தேமொழி

Dev Raj

unread,
Sep 11, 2014, 5:51:28 PM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 11:24:39 UTC-7, Prakash Sugumaran wrote:
சிம்பிள்.. பிற சமூகத்தவர் வெறுக்க வாய்ப்பில்லை என்றுதான் குறிப்பிட்டேன். ஆனால் மதப்போட்டியில், அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த வெறிமிக்க மதத்தவர் சமணர்களை வெறுக்காவிட்டால் ஆச்சரியம்தான்.

யாரிடமிருந்த அதிகாரத்தை ?
ஏற்கெனவே சமணர் அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர் 
என்பதை ப்ரகாஷ் சுகுமாரன் ஒப்புக்கொள்கிறாரா ?

தேவ் 

Dev Raj

unread,
Sep 11, 2014, 6:01:16 PM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 14:49:53 UTC-7, தேமொழி wrote:
சமணத்தைப் பற்றிய மேற்கொண்டு எனக்கு எந்த பின்புலமோ தகவல்களோ தெரியாததால் உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

இரவுக் காலங்களில் எண்ணெய் ஊற்றி விளக்கெரிப்பதால்
சிற்றுயிர்கள் மாளும்; சமணர் ஆதவன் மறைந்தபின் உணவேற்பதில்லை. 
இன்றும் துறவியர் தங்கும் சமணரின் சமயக் கூடங்களில் மின் விளக்கு
எரிப்பதில்லை, சமண ஆலயங்களில் மின் விளக்கு இருக்கும்.

தமிழ்ச் சமண நூல்களில் தீப வரிசைக் கொண்டாட்டத்தைக்
காண முடியாது

தேவ்

Dev Raj

unread,
Sep 11, 2014, 6:15:19 PM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 11:50:42 UTC-7, தேமொழி wrote:

சமணசமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண¢பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத் தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.

‘‘விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. 

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - வள்ளுவம் .
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் வள்ளுவம்
சமண நூல் என்பதை ஒப்புக்கொள்ளவில்லையா ?

தேவ்

தேமொழி

unread,
Sep 11, 2014, 7:02:30 PM9/11/14
to mint...@googlegroups.com

திரு  தேவ்...

மாற்றுக் கோணத்தில் ஒரு ஆய்வாக, 

(தமிழிலக்கியதில் சமண தீபாவளி பற்றிய சான்றுகளை தேடுவதைத் தவிர்த்து)

மேற்கொண்டு   ...இது போன்ற சமய தொடர்பான கேள்விகளுக்கான விடைகளை ...  

வடபுலத்தில் இருந்து அந்த மதம் தென்புலத்திற்கும் வருவதற்கும் முன்னரே

ஏதேனும் பண்டைய சமண நூல்களில் தீபாவளி பற்றியக் குறிப்புகளும் ....

குறிப்பாக, வைதீக மதங்களுக்கும் முற்பட்ட தொன்மையான  சமண நூல்களில் தீபாவளியைப் பற்றியக் குறிப்புகளும்  இருக்கிறதா எனவும் தேடிப் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.

..... தேமொழி

Oru Arizonan

unread,
Sep 11, 2014, 10:33:42 PM9/11/14
to mint...@googlegroups.com
//தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். //
"தீபாவலி" அல்ல, "தீபாவளி"

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Sep 11, 2014, 11:20:16 PM9/11/14
to mint...@googlegroups.com
On Thursday, 11 September 2014 19:33:42 UTC-7, oruarizonan wrote:
//தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். //
"தீபாவலி" அல்ல, "தீபாவளி"

வடபுலத்தில் திவாலி [அ] தீபாவலி என்றே உச்சரிப்பு.
ளகரம் பயன்பாடு கிடையாது, பெரும்பான்மை. 
அதை ஒட்டி மயிலை சீ வே அவர்கள் எழுதினார்.
பிழையாகாது

தேவ்

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 1:46:06 AM9/12/14
to mintamil
திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம் பகுதி சமணர்கள் கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடத் தொடங்கியது 20-30 ஆண்டுகளாகத்தான்.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவது சமணர் வழக்கம் இல்லை. அக்கம்பக்கம் இருக்கும் பிள்ளைகள் புத்தாடை அணிந்து மகிழ்வாக இருக்கையில் தங்கள் வீட்டு பிள்ளைகள் வாடுகிறதே என்ற காரணத்தால் இப்போது அவர்களும் கொண்டாடுகிறார்கள்.

ஊருக்கு வெளியே மாவலி சுத்தும் வழக்கமாக முதலில் தொடங்கியது.

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 2:18:33 AM9/12/14
to mintamil
//பிற சமூகத்தவர் வெறுக்க வாய்ப்பில்லை என்றுதான் குறிப்பிட்டேன். ஆனால் மதப்போட்டியில், அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த வெறிமிக்க மதத்தவர் சமணர்களை வெறுக்காவிட்டால் ஆச்சரியம்தான்.//
யாரிடமிருந்த அதிகாரத்தை ?//

எல்லா கோவில்களும் தங்களுடையது என்று மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஏற்கனவே இருந்த மடங்கள், மடப்பள்ளிகள், கோவில்களின் அதிகாரங்களை கைப்பற்றி அங்கிருந்த கடவுளர்களை, வழிபாட்டு முறைகளை எல்லாம் மாற்ற..

ஆன்மீக கட்டமைப்பை கைப்பற்றுவதன் மூலம் ஆங்காங்கு இருந்த சமூக அமைப்புகளின் அதிகாரங்களை கைப்பற்ற..

அதாவது ஆன்மீக கட்டமைப்புகளின் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சமூக கட்டமப்புகளின் அதிகாரங்களையும், சமூக கட்டமைப்புகளின் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் ஆன்மீக கட்டமைப்புகளின் அதிகாரங்களை கைப்பற்றவும்..

//ஏற்கெனவே சமணர் அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர் 
என்பதை ப்ரகாஷ் சுகுமாரன் ஒப்புக்கொள்கிறாரா ?//

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்..
இங்கு வழக்கத்தில் இருந்த சாதீய அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பை மீறி, எல்லா சாதியினரும் பங்கேற்கும் வகையிலான பிரஜாபதி அதிகாரமுறை உருவாக்கப்பட்டு, 7 பிரஜாபதிகள் அமர்த்தப்பட்டதும், அவர்கள் கொல்லப்பட்டதும் மட்டுமே சமணர்கள் அரசியலில் ஈடுபட்டதற்கான ஒரே வரலாறு. பிரஜாபதி முறையிலும் சமணர்கள் பிரஜாபதியாக நீடிக்க முடியாது.

இப்போதும் திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த சில கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல்களின் போது, அரசாங்கத்தின் அத்தனை அதிகார பிரயோகத்தையும் மீறி சுழற்சி முறையில் ஒவ்வொரு சாதியினருக்கும் பதவிகளீல் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த முறை ஒரு இடையர் பஞ்சாயத்து தலைவராக இருந்தால், அடுத்த முறை வண்ணார், பிறகு முதலியார், செங்குந்தர், பறையர், நைனார், கவுண்டர் என மாறி, மாறி வருவார்கள். எந்த சாதிக்கு முறை வருகிறதோ, அவர்களை தவிர வேறு சாதியை சேர்ந்தவர்கள் போட்டியிட மாட்டார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் அந்த தேர்தலில் எந்த சாதிக்கு முறை வருகிறதோ, அந்த சாதியிலேயே வேட்பாளரை நிறுத்துவார்கள்.

இந்த நடைமுறையை மாற்ற வருவாய், காவல், தேர்தல் ஆணையம் என பல அடக்குமுறைகளை சந்தித்தும் தங்கள் வழக்கத்தை மாற்றி கொள்ளாமல் உள்ளனர்.

இதை தவிர தமிழக வரலாற்றில் எங்கும், எப்போதும் அதிகார அமைப்புகளில் சமணர்கள் இடம்பெற்று இருந்ததாக சான்றுகள் இல்லை.

தேமொழி

unread,
Sep 12, 2014, 2:28:19 AM9/12/14
to mint...@googlegroups.com
///அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த வெறிமிக்க மதத்தவர் ///

நீங்கள் இப்படி குறிப்பிட்ட பொழுது,

 நான் அரசை (கூன் பாண்டியன், மகேந்திர பல்லவன் ) போன்ற அரசாணை பிறப்பிக்கக்  கூடிய பெரிய தலைகளைக் குறிவைத்து காய் நகர்த்தினார்கள் என்று புரிந்து கொண்டிருந்தேன்.

..... தேமொழி  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 2:38:02 AM9/12/14
to mintamil
அதெல்லாம் இன்னும் பெரிய ஆட்டம் :))

ஆனால் சோழன், சேரன், பாண்டியன், பல்லவன் என எந்த ராஜா பதவியில் உட்கார வேண்டுமானாலும், முதல் வேலையாக இருக்கும் எல்லா சமூகங்களின் தலைவர்களில் பெரும்பான்மை யானவர்களின் ஆதரவை பெற்றாக வேண்டும். தலைக்கட்டு என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்கள் இல்லையா ? அது உள்ளூர் தொடங்கி இப்போதைய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிஸ்ஸா வரை நீளும். மதுரையில் அரசனாக இருந்தவர்களின் பட்டத்து அரசிகள் யார், அடுத்தடுத்த மனைவியர்கள் எந்தெந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதை கவனியுங்கள் :))

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 2:54:10 AM9/12/14
to mintamil
அரசனை முடிவு செய்யும்  இந்த தலைக்கட்டுகள் எப்படி தேர்வாகிறார்கள், அவர்களின் பலம், அவர்களின் மீதான சமுதாய மக்களின் விசுவாசம் இவற்றையெல்லாம் எப்படி உடைப்பது என்பது தெரியாமல் குழம்பிய மத குருக்களின் கவுரமான புலம்பல்கள்தான் நாம் படிக்கும் புராணங்களும், வரலாறுகளும்.

ஒருவழியாக இந்த மக்கள் கட்டமைப்பை உடைக்கும் வழிகளை மதக்கட்டமைப்பினர் அறிந்து அதை செயல்படுத்துவதற்குள்,  பாவம் அதே மதக்கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வேறு மதத்தினர் உள்ளே புகுந்ததால், எதை எது விழுங்கும் என்ற பயத்தில் திரிசங்குலோகம் போல நாடே தொங்கலாடுகிறது. ( அட.. புது வார்த்தையா, பழைய பிரயோகம்தானா ? :) )

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 3:02:23 AM9/12/14
to mintamil
//நான் அரசை (கூன் பாண்டியன், மகேந்திர பல்லவன் ) போன்ற அரசாணை பிறப்பிக்கக்  கூடிய பெரிய தலைகளைக் குறிவைத்து காய் நகர்த்தினார்கள் என்று புரிந்து கொண்டிருந்தேன்.//

கிட்டதட்ட அதுவும் உண்மைதான். அரசாணை பிறப்பிக்க முடியாவிட்டாலும், அரசன் ஆணையிட நெருக்கடி கொடுப்பது, அரசன் இட்ட ஆணைகளை உத்தரவாக எழுதி முத்திரையிடுவது வரை வேறு வழியில் நெருங்கி விட்டு இருந்தார்கள். பல அரசர்கள் டம்மியாக்கப்பட்டு, அவனது பெயரால் ஆணைகளையும் இட்டார்கள்.

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 3:06:39 AM9/12/14
to mintamil
//சமண அறிஞர்களை மொகமதிய மன்னர்களும் ஆதரித்துள்ளனர் என்பதே வரலாறு//

முதல் தீர்த்தங்கரருடைய தந்தையின் பெயர் நபி !!

தேமொழி

unread,
Sep 12, 2014, 3:07:01 AM9/12/14
to mint...@googlegroups.com

தொங்கலாடுகிறது :)))

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 4:53:57 AM9/12/14
to mintamil
பயங்கர தொங்கலாட்டமா இருக்கே :))

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 5:27:47 AM9/12/14
to mintamil
//நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’//

இந்த வரியில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் சமணர்களுக்கு சொந்தமானதல்ல. ஏனென்றால்..

//விலக்கின் மாக்கொன்று..//

இதுதான் ” கோக்குமாக்கா “ பேசுறான் என்பது :))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 6:18:49 AM9/12/14
to mintamil
பாண்டிய நாட்டில் சம்பந்தர் அதிகாரத்தைக் கைப்பற்றினாரா ?//

முதலில் சம்பந்தர் ஏன், எப்படி சைவரானார் என்பதில் தொடங்க வேண்டும். சைவ நெறியின் மூலமே சமணம் என்பதை ஏற்பீற்களா ? முதல் தீர்த்தங்கரர் இமயத்தை அடைந்தது முதலே ஆதீஷ்வரன், ஆதிநாதன்.. என ஈஸ்வர வரலாறு தொடங்குகிறது. 

//பாடல் பெற்ற தலங்களில் பாண்டி நாட்டுத் தலங்கள் எத்தனை ?
சோழ நாட்டுத் தலங்கள் எத்தனை ?//

இதனை விரிவாக ஆராய்ந்தால்..  மாவேலி நாடு, அதிரதர் நாடு, சதவாகனர் நாடு, எருமை நாடு, அமர நாடு, மகிழ நாடு, அசுர நாடு, மகிஷாசுர நாடு, சக்கர நாடு, அதிக நாடு, அதிய நாடு, அருவ நாடு, (சமயத்தில் அறுவா நாடு), எழுவர் நாடு, தொண்டை நாடு, அர்த்த நாடு...

இப்படி இவ்ளோ பெயர்கள் இருந்தும் வரலாற்றில் இருந்து காணாமல் போன பகுதி உட்பட பல விவரங்கள் வெளிப்படும் :))

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 6:41:48 AM9/12/14
to mintamil
அருமையான விளக்கம் ஐயா..

அதில்

எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி - 
அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி;

என்பது,

”வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி “
 ” வெண்மை நீங்கிய விழியை பெறும் தொழிலை செய்து இழி குலம் ஒருவி “, என்பது சரியாக இருக்கும்.

நிற்க.. தொல் குலத்தில் எது நல்ல தொல்குலம் ? எது கெட்ட தொல்குலம் ?

எல்லாக் குலத்தையும் சமமாக கருதும் குலத்தில் இழிகுலம் எது ? எதற்கு ?

நர-நாராயணர்கள் எப்படி இருந்தாலும், பிராஜபதி ஏன் நரபதி ஆகணும் :))

இடைச்செருகலாக எதையும் செய்யலாம் ஐயா :)

2014-09-12 15:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Friday, 12 September 2014 02:27:47 UTC-7, Prakash Sugumaran wrote:
//நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’//
இந்த வரியில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் சமணர்களுக்கு சொந்தமானதல்ல. 
 
ஒங்க பேச்சுக்கிடைல சீவக சிந்தாமணியத்
தொங்கலாட்டத்துல வுட்றாதீங்க , ஐயா.

வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா
வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி
நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே.

முத்தி இலம்பகம் - சீவக சிந்தாமணி

நரபதி! - மக்கள் தலைவனே!

வில்லின் மாக்கொன்று - வில்லாலே விலங்குகளைக் கொன்று ; 

வெள்நிணத்தடி விளிம்பு அடுத்த பல்லினார்களும் - 
வெண்மையான நிணமும் ஊனும் ஓரத்திற் பற்றித் தின்கின்ற பற்களையுடையவர்களும்;
 
படுகடல் பரதவர் முதலா - மீன்படு கடலின் ஓரத்தில் வாழும் பரதவரும் முதலாக; 

எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி - 
அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி; 

நல்ல தொல்குலம் பெறுதலும் அரிது- உயர்ந்த பழங்குடியிற் பிறத்தலும் அரியது.

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 12, 2014, 6:48:45 AM9/12/14
to mintamil
நாராயணவாதிகளுக்கு சிவந்த கண்களும், கருத்து பெருத்த உடலும் இழிகுலம். நர குலம். அதுதான் தென்னியந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் நிறம்.

வெற்றியாளனை வேறு வழியில்லாமல் மேக வர்ணன், நீல வர்ணன் என்று கருப்பை கலராக்கி ஏற்று கொள்வார்கள்..  :) ஆனால் நரன் - நரன் தான்.. என்றைக்கும் :))

Dev Raj

unread,
Sep 12, 2014, 7:38:58 AM9/12/14
to mint...@googlegroups.com
On Friday, 12 September 2014 03:41:48 UTC-7, Prakash Sugumaran wrote:
அருமையான விளக்கம் ஐயா..

அதில்

எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி - 
அளவு கடந்த இழிதொழிலைப் புரியும் இழிகுலத்தினின்றுந் தப்பி;

என்பது,

”வெல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி “
 ” வெண்மை நீங்கிய விழியை பெறும் தொழிலை செய்து இழி குலம் ஒருவி “, என்பது சரியாக இருக்கும்.

நிற்க.. தொல் குலத்தில் எது நல்ல தொல்குலம் ? எது கெட்ட தொல்குலம் ?
எல்லாக் குலத்தையும் சமமாக கருதும் குலத்தில் இழிகுலம் எது ? எதற்கு ?
நர-நாராயணர்கள் எப்படி இருந்தாலும், பிராஜபதி ஏன் நரபதி ஆகணும் :))
இடைச்செருகலாக எதையும் செய்யலாம் ஐயா :)
 
இது மிகவும் சுலபமான வழி ! நம் கருத்தியலுக்கு இடையூறாகத்
தொல்லை தருவனவற்றைச் சவுகரியமாக இடைச்செருகல்
என ஒதுக்கி விடலாம் :))

தேவ்

Banukumar Rajendran

unread,
Sep 12, 2014, 7:39:54 AM9/12/14
to மின்தமிழ்

2014-09-11 14:54 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/article6398846.ece

முனிகிரி என்கிற கரந்தை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவ, வைணவ, சமண, புத்த மதங்கள் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுர நகரத்தை சுற்றியிருந்த இடங்களிலெல்லாம் அம்மதங்கள் சிறப்போடு இருந்தன.

காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பணமூர் எனும் சமண கிராமங்களுள்ளன. முனிவர்கள் பலர் இங்கு வாழ்ந்ததால் கரந்தைக்கு முனிகிரி என்ற பெயருமுண்டு.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சமணர் கோயில் கரந்தையில் உள்ளது. இக்கோயில் நெடிதுயர்ந்த மதிலால் சூழப்பட்டுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் சோழர், விஜயநகர மன்னர், சிற்றரசர்கள் ஆகியோர் இக்கோயிலை ஆதரித்துள்ளனர் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலின் மூலவர் 17- வது தீர்த்தங்கரரான பகவான் குந்துநாதர் சுதை வடிவில் காட்சி தருகிறார்.

வீரஇராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்ததால் இக்கோயில் வீரஇராஜேந்திர பெரும்பள்ளி எனப்பட்டது கருவறையின் பின்புறம் புடைப்புச் சிற்பமாக பகவான் பார்சுவநாதர் மேற்கு திசை நோக்கி திருநறுங்கொண்டையெனும் இடத்தில் இருப்பதுபோல் இருப்பதால் மேற்றிசைப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

சோழர்காலக் கல்வெட்டும் இப்பெயரையே சுட்டுகிறது. இத்தலத்தில் பாகுபலி, சிலையாக மிகக் கலை நயத்தோடு, நேர்த்தியோடு காட்சித் தருகிறார்.

உயரமான கருவறையில் சுதை வடிவிலுள்ள மகாவீரர் திருக்காட்டாம்பள்ளி ஆழ்வார் எனப்படுகிறார். இக்கருவறையிலிருந்து பார்த்தால் கிழக்கேயுள்ள மாமண்டூர் குகைப்பள்ளி புலப்படும்படியும் கருவறை உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஆதிபகவன் கோயில். ஆலங்காட்டா எனும் மலையிலிருந்த கோயிலைப் பழுதின்றி பிரித்துவந்து இங்கு கட்டியுள்ளனர்.

இங்குள்ள தர்மதேவி மிக மூர்த்திகரமானதென்று நம்புகின்றனர். அகளங்கர் எனும் பெரும் புகழ் வாய்ந்த மாமுனிவர் தருமதேவி ஆசியுடன் அரசன் இமசீதளன் காலத்தில் பௌத்தரை சமயவாதம் செய்து வென்றுள்ளார்.

அகளங்க முனிவரின் சிலையும் பாதக் கமலங்களும் மண்டபமும் இத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன சம்மந்தபத்திரர், முனிபத்திரர் ஆகிய முனிவர்களின் திருப்பாதங்களும் நிறுவப்பட்டுள்ளன.

காலஞ்சென்ற டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார் எனும் முன்னாள் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தருமதேவியைப் பற்றி வெகுவாகப் புகழ்வார். அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, ‘பன்னலன் பெருகிட பறம்பையி லுறைகின்ற தருமதேவி’ எனப் பாடுகிறார்.

ஆண்டுதோறும் இவ்வூரில் மகாத்திருவிழாவின்போது தெப்ப உற்சவம் நடை பெறுகிறது. குந்துநாத அஷ்டகம், தருமதேவி பத்து, தோத்திரத் திரட்டு ஆகிய நூல்கள் இத்தலத்தையும் தருமதேவியையும் புகழ்ந்து பாடுகின்றன. கரந்தையில்

பல அறவோர்கள் தோன்றி சமணத்தையும் தமிழையும் வளர்த்துள்ளனர். அவர்கள் வழியில் கரந்தை அ.சுகுமாரன் என்பவர் இன்றும் பல ஜைன நூல்கள் எழுதி தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார். முனைவர். ஏ. ஏகாம்பரநாதன் இத்திருத்தல வரலாற்றை எழுதிய நற்பணியைச் செய்துள்ளார்.

2014-09-09 13:56 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:

உத்திரமேரூரில் இருந்து குந்தவை ஜைன கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பகுதிகளில் சமணம் செழித்து வளர்ந்த சான்றுகளை வழி நெடுக காணலாம் என்று சென்ற பதிவில் கூறி இருந்தேன், அதில் ஒன்று தான் "திறக்கோயில்". வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மலைகள் சூழ்ந்து அமைந்திருக்கும் அழகான இந்த கிராமத்தில் உள்ள மலையில் இயற்கையாக அமைந்த மூன்று குகைகள் உள்ளன, இந்த குகைகளில் தான் அன்றைய சமணர்கள் தங்குமிடத்தை அமைத்திருக்கிறார்கள். இந்த மலைக்கு கீழே சுமார் 25 அடி உயரமி ருக்கும் இருக்கும் ஒரு தனி பாறையில் மஹாவீரர், பார்ச்வநாதர், ரிஷபநாதர், மற்றும் சந்திரநாதர் ஆகிய நான்கு தீர்த்தங்கரர்களின் உருவங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களின் நேர்த்தியைக் கண்டால் இவை கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் வடிக்கப் பட்டவையாகத் தோன்றுகின்றது. இந்த சிற்பங்களுக்குக் கீழே பராந்தக சோழன் சமணர்களுக்கு அளித்த கொடையை ஒரு கல்வெட்டு பதிவு செய்கின்றது, மலைக்கு மேலே இயங்கிய பள்ளிகளுக்கு ராஜ ராஜ சோழனும் கொடை அளித்துள்ளார், அதில் ஒன்று "சங்கரைப் பள்ளி" எனவும் மற்றொன்று "சுத்தப் பள்ளி" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைக்கு மேல் இயங்கிய அந்த பள்ளியை ஏறிச் சென்று பார்த்தோமேயானால் கீழிறங்கி வருவதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது, நிலமகள் அவள் அழகில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறாள், இயற்கை விரும்பி களும், வரலாற்று ஆர்வலர்களும் கட்டாயம் சென்று காண வேண்டிய இடம்.

திரு. சசிதரன்

Dev Raj

unread,
Sep 12, 2014, 7:45:42 AM9/12/14
to mint...@googlegroups.com
On Friday, 12 September 2014 03:18:49 UTC-7, Prakash Sugumaran wrote:
இதனை விரிவாக ஆராய்ந்தால்..  மாவேலி நாடு, அதிரதர் நாடு, சதவாகனர் நாடு, எருமை நாடு, அமர நாடு, மகிழ நாடு, அசுர நாடு, மகிஷாசுர நாடு, சக்கர நாடு, அதிக நாடு, அதிய நாடு, அருவ நாடு, (சமயத்தில் அறுவா நாடு), எழுவர் நாடு, தொண்டை நாடு, அர்த்த நாடு...
இப்படி இவ்ளோ பெயர்கள் இருந்தும் வரலாற்றில் இருந்து காணாமல் போன பகுதி உட்பட பல விவரங்கள் வெளிப்படும் :))
 
மேலும் சில பெயர்களைத் தருகிறேன் -
குட நாடு, குட்ட நாடு, மல்லி நாடு, ஆலி நாடு, வருச நாடு , சேர்த்து ஆராயலாம்,
தடுப்பது யார் ? விவரம் தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கிறேன்.
தாலுகா அளவு நிலப்பரப்புக்கூட ‘நாடு’ அந்தஸ்தைப் பெறுவதுண்டு :))

தேவ்

Banukumar Rajendran

unread,
Sep 12, 2014, 7:55:22 AM9/12/14
to மின்தமிழ்
இழையில் பங்குபெரும் அனைவருக்கும் ஒரு சிரம் தாழ்ந்த விண்ணப்பம்.

சமணம் பற்றி அறிந்துக் கொள்ள தொடங்கப்பட்ட இழையிது. தேவ் ஐயா தொடங்கினாலும், இங்கு நடைபெறும் கருத்தாடல்கள் வேறு இழைத் தொடங்கி நடந்தால் நன்று அமையும் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் தேவ் ஐயா கேட்ட கேள்விக்கு தனி மடலில் பதில் அளிக்கிறேன் என்று எழுதினேன்.

சமணம் பற்றி செய்திகளை எங்கெங்கு காணினும் கொணர்ந்து இங்கு சேர்பீர்.

நன்றியுடன்,

இரா.பானுகுமார்,
பெங்களூர்

Banukumar Rajendran

unread,
Sep 12, 2014, 8:04:37 AM9/12/14
to மின்தமிழ்
2014-09-12 17:25 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Friday, 12 September 2014 03:18:49 UTC-7, Prakash Sugumaran wrote:
இதனை விரிவாக ஆராய்ந்தால்..  மாவேலி நாடு, அதிரதர் நாடு, சதவாகனர் நாடு, எருமை நாடு, அமர நாடு, மகிழ நாடு, அசுர நாடு, மகிஷாசுர நாடு, சக்கர நாடு, அதிக நாடு, அதிய நாடு, அருவ நாடு, (சமயத்தில் அறுவா நாடு), எழுவர் நாடு, தொண்டை நாடு, அர்த்த நாடு...
இப்படி இவ்ளோ பெயர்கள் இருந்தும் வரலாற்றில் இருந்து காணாமல் போன பகுதி உட்பட பல விவரங்கள் வெளிப்படும் :))
 
வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட்டெங் கோமான்

தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்

பாவலன்பால் நின்ற பசிபோல  நீங்கிற்றே

காவலன்பால் நின்ற கலி - நள வெண்பா

மள்ளுவ நாடு, நடுநாடு, நாஞ்சில் நாடு

யான் அறிந்தவரை, நாடுகள் தோறும் சமணம் குறித்து பொத்தகங்கள் வந்திருக்கின்றன.

1. தென்பாண்டி நாட்டில் சமணம் - பேரா.ஏகாம்பரநாதன் எழுதியது.
2. பாண்டிநாட்டில் சமணம் - பேரா.ஏகாம்பரநாதன் எழுதியது.
3. நடுநாட்டில் சமணம் - பேரா.வேங்கடேசன் எழுதியது.
4. குமரி நாட்டில் சமணம் - பேரா. சிவ.விவேகாநந்தன் எழுதியது.
5. கொங்கு நாட்டுல் சமணம் - கோவை கிழார் மற்றும் பேரா.இராசு எழுதியது.
6. தொண்டை நாட்டில் சமணம் - பேரா. ஏகாம்பரநாதன் எழுதியது.
7. கழுகு மலையில் சமணம் - பேரா.ஏகாம்பரநாதன் எழுதியது

இன்னும் இருக்கிறது. மறந்துவிட்டது.

பின்னர் நினைவுப்படுத்தி எழுதுகிறேன்.

இரா.பானுகுமார்,
பெங்களூர்

Dev Raj

unread,
Sep 12, 2014, 8:28:13 AM9/12/14
to mint...@googlegroups.com
On Friday, 12 September 2014 05:04:37 UTC-7, இரா.பா wrote:
1. தென்பாண்டி நாட்டில் சமணம் - பேரா.ஏகாம்பரநாதன் எழுதியது.
2. பாண்டிநாட்டில் சமணம் - பேரா.ஏகாம்பரநாதன் எழுதியது.
3. நடுநாட்டில் சமணம் - பேரா.வேங்கடேசன் எழுதியது.
4. குமரி நாட்டில் சமணம் - பேரா. சிவ.விவேகாநந்தன் எழுதியது.
5. கொங்கு நாட்டுல் சமணம் - கோவை கிழார் மற்றும் பேரா.இராசு எழுதியது.
6. தொண்டை நாட்டில் சமணம் - பேரா. ஏகாம்பரநாதன் எழுதியது.
7. கழுகு மலையில் சமணம் - பேரா.ஏகாம்பரநாதன் எழுதியது

நன்றி.
மலைநாட்டின் சமண வரலாறும் நெடியது.
‘கல்லில்’ தொன்மையான தலம், காலடிக்கருகில்

தேவ்

தேமொழி

unread,
Sep 12, 2014, 4:15:08 PM9/12/14
to mint...@googlegroups.com
9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்(தொடர்ச்சி)

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம்:

சைவமும் சமணமும்: சைவர்களுக்கும் சமண சமயத்தவருக்கும் பொதுவான சில கொள்கைகளை இங்கு ஆராய்வோம். இக் கொள்கைகளில் சில இரண்டு சமயத்துக்கும் பொதுவானதாக, அடிப்படையான கொள்கைகளில் ஒற்றுமையுள்ளதாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொதுவாகவும் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஆயினும், மிக மிகப் பண்டைக் காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்லச் செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம்.

சிவராத்திரி: சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்தவரும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்னவென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பக்ஷம், திதி, நட்சத்திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பதுதான்.

சைவர்கள் சிவராத்திரியன்று இரவு சிவபெருமானை வழிபட்டு ஒழுகினால் சிவகதியடையப் பெறலாம் என்று கருதுகின்றனர். ஆனால், சமண சமயத்தவர் சிவராத்திரி கொண்டாடுவதன் காரணம் என்ன? முதல் தீர்த்தங்கரராகிய ஆதிபகவன் (ரிஷபதேவர்) திருக்கயிலாய மலையிலே வீடுபேறடைந்தார் என்பது சமண சமயத்தவர் கொள்கை. வெள்ளியங்கிரியாகிய கயிலாயமலையிலே ஆதிபகவன் வீடுபேறடைந்தார் என்பதும், அது மாசித் திங்கள், அமரபக்ஷத்துச் சதுர்த்தசியன்று நள்ளிரவு என்பதும் சமணசமயக் கொள்கை. சமணர்கள், சைவ சமயத்திலே பிற்காலத்தில் சேர்ந்தபோது, தமது பழைய சிவராத்திரி வழிபாட்டைச் சைவ சமயத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்திலிருந்தே சிவராத்திரி வழிபாடு சைவ சமயத்தில் இருந்தது என்று கூறினால் அதை மறுத்துக் கூற யாதொரு சான்றும் கிடையாது. அப்படியானால், சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சிவராத்திரி வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது என்று கருதவேண்டும்; இதனால், மிகமிகப் பழைய காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்று பட்டிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

மோட்சமாகிய வீட்டுற்குச் சிவகதி என்றும், சிவபுரி என்றும், அருகக்கடவுளுக்குச் சிவகதிநாயகன், சிவன் என்றும் பெயர்கள் கூறப்படுவதைச் சமணசமய நூல்களில் பெரிதும் காணலாம். அது போலவே, தேவாரம் முதலிய சைவ சமய நூல்களிலே வீடுபேறு சிவகதி என்று கூறப்படுகிறது.

திருக்கயிலாயமலை : கயிலையங்கிரி என்னும் திருக்கயிலாயமலை இமயமலைக்கு வடபுறத்திலே திபெத்து நாட்டில் இருக்கிறது. இதற்கு வெள்ளியங்கிரி என்னும் பெயரும் உண்டு. பனிக்கட்டியால் நிறைந்துள்ள இந்த மலை இரவும் பகலும் வெண்மைநிறமாக வெள்ளிபோல் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமான திருப்பதியாகும். சிவபெருமான் இந்த மலையில் எழுந்தருளியிருக்கிறார் என்றும், இங்குள்ள சிவபெருமானை வணங்குவதற்காகத் திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்று, இக்கட்டான வழியில் செல்ல முடியாமல் திரும்பி வந்து விட்டார் என்றும் புராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து ஆகாய வழியாக இக் கயிலை மலைக்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம்மலைக்குச் சென்று இவ்விடத்தைக் காலினால் மிதிக்க அஞ்சித் தலையினால் நடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மலையையும் அதில் எழுந்தருளியிருக்கும் கயிலாயநாதனையும் தம் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். திருக்கயிலாய மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும்.

அது போன்றே, சமணர்களுக்கும் திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் இக்கயிலை மலையிலே வீடு பேறடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணியத்திருப்பதியாகும் திருக்கலம்பகம் என்னும் சமண சமய நூல், ஆதிநாதரை, கயிலாயம் என்னும் திருமலைமேல் உறைகின்றனர் என்று கூறுகிறது. மேலும்,

‘‘போக்கறு சுடர் வெள்ளி
மாக்கயிலை மிசை நாப்பண்’’

ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் மேற்படி நூல் கூறுகின்றது. இதனால் சைவர்களுக்குரியது போலவே சமணர்களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது.

சடைமுடி : சைவர்கள் வணங்கும் சிவபெருமான் சடை முடியுடையவர் என்றும், அதனால் அவர் சடையன் என்று கூறப் படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் ஆதி நாதரும் (ரிஷபதீர்த்தங்கரர்) சடை முடியுடையவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. ஆதிநாதரைத் தவிர, ஏனைய இருபத்து மூன்று தீர்த் தங்கரர் எல்லோரும் சடைமுடியற்றவர்கள். இவர்கள் திருவுருவங்கள் சடைமுடியில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் சமணக் கோயில்களில் காணலாம். ஆனால், ஆதிநாதர் மட்டும் சிவபெருமானைப்போலவே சடைமுடியுடையவர். இதனைத் திருக்கலம்பகம்,

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

என்று கூறுகிறது. இக்காலத்துச் சமணர் கோயில்களில் ரிஷபதேவராகிய ஆதிநாதர் திருவுருவமும், ஏனைய தீர்த்தங்கரரைப் போலவே, சடைமுடியில்லாமல் காணப்படுகின்றது. ஆனால் பண்டைக் காலத்திலே இருந்த ஆதிநாதர் திருவுருவங்கள் சடைமுடியுடன் அமைந்திருந்தன. இதற்கு ஆதாரமாகப் பழைய ஆதிநாதரின் திருவுருவங்கள் இன்றும் சடைமுடியுடன் சில இடங்களில் காணப்படுகின்றன.

இப்போதைய திகம்பரச் சமணர் இதை முற்றும் மறந்து விட்டனர். திருக்கலம்பகம் ஒன்று தவிர ஏனைய சமணத் தமிழ் நூல்கள் ஆதிநாதர் சடைமுடியுடையவர் என்பதைக் கூறவில்லை. ஆனால், சுவேதாரம்பரச் சமணரால் எழுதப்பட்ட திரிசஷ்டி சலாகாபுருட சரித்திரம் (ஆதீஸ்வர சரிதம்) இதைக் கூறுகிறது. சமண முனிவர் துறவுகொள்ளும்போது, லோசம் செய்துகொள்வது வழக்கம். அஃதாவது தலைமயிரைக் கைகளால் பிய்த்துக் களைவது வழக்கம். அந்த முறைப்படி, ஆதிநாதர் லோசம் செய்தபோது, இந்திரன் பொன்தட்டில் அந்த மயிரை ஏந்தினான் என்றும், ஆதிநாதர் தமது தலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் நான்கு பிடி மயிரைப் பிய்த்துக் களைந்து தட்டில் வைத்து, மற்றப் பக்கத்து மயிரையும் களையத் தொடங்கியபோது, இந்திரன் அந்த மயிரின் ஆழகைக் கண்டு இனியும் பிய்த்துக் களைய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதாகவும், இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி ரிஷபர் (ஆதிநாதர்) மற்றச் சிகைகளைக் களையாமலே விட்டார் என்றும் ஆதீஸ்வர புராணம் கூறுகிறது.27

(தொடரும்)

On Thursday, September 11, 2014 11:50:42 AM UTC-7, தேமொழி wrote:

சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/library/lA470/html/lA470soi.htm

இப்பகுதி இருக்குமிடம் ...
ref: http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=11

9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்து மதத்தில்24 காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்து மதத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றியபோது, சமணர்கள் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமண சமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகி வந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்துமதத்தில் கலந்து விட்டன. இந்து மதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம்.

ஊன் உண்ணாமை: இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக் காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டுவந்ததோடு புலாலுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்துசெய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனை வகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமணசமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண¢பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத் தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.

‘‘விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,

நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக்கள் தம் தெய்வங்களுக்கு ஆடுமாடுகளைப் பலியிடுவதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் சமணர் வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய ரிஷிகள் (பிராணிகளின் உயிரைக்கொன்று) யாகம் செய்தபோது அதை அரக்கர்கள் அழித்துவந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூறப்படுகிறதல்லவா? இதன் உண்மைக் கருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத்தின்பேரால் பிராணிகளைக் கொலை செய்துவந்ததை அரக்கர்கள்25 அஃதாவது சமண சமயத்தவர் தடுத்துவந்தார்கள் என்பதே. சமண சமயத்தவருடைய கொள்கை நாடெங்கும் பரவிச் செல்வாக்கடைந்த போது, இந்து மதத்தவரும் இக் கொள்கையைத் தமது கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும் பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமணசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்து சமயத்தில் சேர்ந்து மதம் மாறியபோது, தமது ஊனுண்ணாக் கொள்கையை விடாமல் இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு இரண்டு விதத்தில் சமணரின் இக் கொள்கை இந்து மதத்தில் சேர்ந்து விட்டது.

தேமொழி

unread,
Sep 13, 2014, 4:14:16 PM9/13/14
to mint...@googlegroups.com
9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்(தொடர்ச்சி)

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம்:
[...]

எருது அல்லது விருஷபம் : சமணருடைய முதல் தீர்த்தங்கரரான விருஷப தேவராகிய ஆதிநாதருக்கு முத்திரை (அடையாளம்) விருஷபம் என்னும் ஏறு ஆகும். இவரது திருவுருவத்தின்கீழ் விருஷபம் (ஏறு) அமைக்கப் பட்டுள்ளதைச் சமணக் கோயில்களில் இன்றுங் காணலாம். இவ்வாறே, சைவரும் சிவபெருமானுடைய வாகனம் ஏறு (விருஷபம்) என்று கூறுகின்றனர்.

அன்றியும், தருமத்திற்கு (அறத்திற்கு) வடிவம் ஏறு (எருது) என்று கூறுவது சமணசமயத் துணிபு. இதனை,

‘மணியினுக் கொளி; அகமலர்க்கு மல்கிய
அணியமை அங்குளிர் வாசம்; அல்லதூஉம்
திணி இமிலேற்றினுக் கொதுக்கம்; செல்வநின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே.’

எனவரும் சீவகசிந்தாமணி முத்தியிலம்பகச் செய்யுளால் அறியலாம். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘இமிலேறென்றது- அறத்தினை; தருமத்திற்கு அது வடிவமாகலின்’ என்று எழுதி யிருப்பதும் கருதத் தக்கது. விருஷபத்தைத் தருமத்தின் வடிவமாகக் கூறுவது போன்று தியானத்தையும் எருதின் வடிவமாகச் சமணர் கூறுவர். இதனை, ‘தியானமெனும் நரையம் புகா வினைத் தெவ்வென்றவா’ எனவரும் திருநூற்றந்தாதி28 அடியினாலும். ‘தியானம் என்னும் இடபத்திலே புகுந்து தீவினைப் பகையை வென்றபடி. நரை - விடபம்’ என வரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம்.

இந்தக் கருத்தைச் சைவரும் கொண்டுள்ளார். ஆதிநாதர் திருவுருவத்தின்கீழ், சமணர் எருது உருவத்தை (சிறியதாக) அமைப்பதைச் சைவர் சற்றுப் பெரியதாகச் செய்து, சிவபெருமானது வாகனம் எருது என்றும், அவர் அதன்மேல் ஊர்ந்து வந்து அடியார்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகின்றனர். விருஷப வாகன சேவையைச் சிறப்பாகவும் கருதுகின்றனர். அன்றியும், தருமத்தின் உருவந்தான் எருது என்று சமணரைப் போன்றே சைவரும் கூறுகின்றனர். இதனை,

‘வானேறுரு மெனதாயுதம் அவனாயுத மழுவாள்
யானேறுவ தயிராபதம் அவனேறுவ தெருதே’

என்று இந்திரன் சிவனைப் பழித்துக் கூறியதாகக் கூறப்படும் தக்கயாகப்பரணி29த் தாழிசையினாலும், ‘எருதென்றது எருதையன்று; தருமமென்பது30, தருமம் வெளுத்திருத்தலும் வஸ்துக்களில் வலிதாதலானும் தருமத்தின்மேலல்லது ஈசுவரன் ஏறானென்று கொண்டான். இதில் தேவேந்திரன் ஈசுவரனை இகழ்ந்தவாறாவது தரும வாகனன் யுத்தஞ் செய்ய வல்ல னல்லனென்றவாறு’ எனவரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம். இதனால், சமணரைப் போன்றே சைவரும் விருஷபத்தைத் தருமத்தின் (அறத்தின்) உருவாகக் கொண்டிருப்பது உணரலாம். இவ்வொற்றுமை இச் சமயங்களின் பண்டையத் தொடர்பைக் காட்டுகிறது.

நந்தி - கோமுகயக்ஷன்: திருக்கயிலாயமலையில் வீடு பேறடைந்த ஆதிநாதராகிய விருஷப தேவருடைய பரிவார தெய்வங்களில் கோமுகயக்ஷர் முதன்மையானவர் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. (கோமுகயக்ஷன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யக்ஷன் என்பது பொருள்.

கோமுகயக்ஷன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப் படுகின்றன. சைவசமயத்தவரும் தம் சிவபெருமானுடைய பரிவாரத் தெய்வங்களில் ‘நந்தி தேவரை’ முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமணரின் கோமுக யக்ஷனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அன்றியும், சமணர்களில் நந்திகணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள்வர். அச்சநந்தி, ஆரிய நந்தி, பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்த சத்தியஞான தரிசனிகள் என்பவர் மெய்கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களில் பண்டையத் தொடர்பு அறியப்படும்.

காலனைக் கடந்தது: ஆருகதரின் அருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இயமனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் கூறுகின்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம்.

சிவபெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவாரத்திலும் இச் செய்தி பல இடங்களிற் கூறப்பட்டுள்ளது.

‘‘சாடினார் காலன் மாளச் சாய்க்காடுமேவினாரே’’

என்றும்,

‘‘காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே’’

என்றும்,

‘‘சாற்றிநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே’’

என்றும் தேவாரம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள்கள் காட்டக் கூடுமாயினும் விரிவஞ்சி விடுகின்றோம் இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுவாம்:

‘‘கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே
கூறுகிற்பது மெய்ப்பொருட் கூற்றையே’’

என்றும், ‘‘காலனை வெந் கண்ட வென்றிப் பெருமானே’’ என்றும் சமணரின் திருக்கலம்பகம் கூறுகிறது.

‘‘கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்’’

என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி கூறுகிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றாம்.

சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காகக் (மார்க்கண்டற்காக) கூற்றுவனை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் தந்தருளினார் என்பது சைவரின் புராணக் கதை. அருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவா நிலையைத் தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. காமனைக் காய்ந்தது என்னுங் கதையில், பொதுநோக்காகப் பார்க்கும்போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையன போற் காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமையுடையனவே, அஃதாவது சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லாதவர்; ஆகையால், தம் அடியவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர்களை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார். ஆனால், அருகக்கடவுள், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது,

காமனைக் காய்ந்தது: அருகப்பெருமானும் சிவபெருமானும் காமனைக் காய்ந்தவர் (வென்றவர்) என்று சமணராலும் சைவராலும் கூறப்படுகின்றனர். இவற்றையும் ஆராய்வோம்:

‘‘செற்றங் கனங்கனைத் தீவிழித்தான் தில்லை யம்பலவன்
நெற்றியிற் கண் கண்ட கண்கொண்டு மற்றினிக்

காண்பதென்னே’’

என்றும்

‘‘மகர வெல்கொடி கைந்தனைக் காய்ந்தவன்’’

என்றும்,

‘‘தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்’’

என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம். சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. அருகப்பெருமான் காமனைக் காய்ந்த செய்தியை ஆருகதமத நூல்களிற் காண்போம்.

‘‘காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா.’’

என்று கவுந்தியடிகள் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப்பதிகாரத்தில்.

‘‘அல்லற் பிறவி அகன்றோய் நீ! ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!
வெல்லற்கரிய அனங்கனைமெய்,
வெண்ணீறாகவெகுண்டோய்நீ!’’

என்பது நீலகேசி.

‘‘களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப’’

என்பது சீவகசிந்தாமணி.

‘‘சிலைவயங்கு தோளனங்கள் திறலழித்த விசயமென்னோ?’’
‘‘கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்
கனன்றாய் தூய
விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்
கறமுரைத் தாய்’’

என்பது திருக்கலம்பகம். இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின்றன.

பொது நோக்காகப் பார்க்கும்போது, சிவபெருமானும் அருகப்பெருமானும் காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத்தில் வேறுபாடு உண்டு. அஃதாவது சிவபெருமான், மற்றவர் பொருட்டுக் காமனைக் காய்ந்தார். அருகப்பெருமானோ, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை நீக்குவதற்காகக் காமனைக் காய்ந்தார்.

முப்புரம் எரித்தது: சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சமண சமய நூல்கள் கூறுகின்றன.

தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு:

‘‘சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்’’
‘‘வறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும்
மந்திரத் தேர்ப்
பறவைப் புரமெரித்தார் எம்மை யாளும் பசுபதியே’’
‘‘செம்பு கொப்புளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீ ரட்டனாரே’’

முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக் கதை கூறுகிறது. ஆனால், முப்புரம் என்பது மும்மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது.

‘‘அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறி வாரே’’

என்பது திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம். இதனால், முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்களிடம் பொருந்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்று தத்துவப் பொருள் கொள்ளவேண்டும்.

சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் கூறுகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். சமண சமய நூல்களில் இருந்து இதனை விளக்குவாம்.

‘‘ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா’’

என்று, கவுந்தி அடிகள் அருகப் பெருமானைப் போற்றுகிறார் (சிலப்பதிகாரம் நாடு காண் காதை). இதற்கு அடியார்க்கு நல்லார் உரை வருமாறு: ‘‘எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப்பட்ட ஞான பாதமாகிய திருமொழியைக் கேட்டற்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறப்பனவல்ல.’’

‘‘முரணவிய வென்றுலகம் மூன்றினையும், மூன்றில்
தரணிமேல் தந்தளித்த தத்துவன்தான் யாரே’’

(சிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 81)

இதற்கு நச்சினார்க்கினியர் உரை : ‘‘மூன்றுமதிலையும் அழித்து அங்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்றாகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் யார்தான்?’’

‘‘அரணங்கொடிய மதின்மூன்றும் அழியக்கனன்றீர் அன்றுள்ள
முரணம் பொன்றே நுமக்கங்கு.....................’’

என்பது திருக்கலம்பகம்.

‘‘காவலாகிய கொடுமையையுடைய ஆவரணங்களான முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கணையே உமக்கிருந்தது;’’(பழைய உரை)

குறிப்பு : சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப்பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் என்பதும் வெளிப்பார்வைக்கு ஒரே கருத்துள்ளனவாகத் தோன்றினாலும், உண்மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின் தத்துவக் கருத்தை அறிந்தவர் தாம் உணரமுடியும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை எனின்:

சைவ சமயக் கருத்துப்படி சிவபெருமான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்களை அழித்தார் என்றால் ஆன்மாக்களிடம் உள்ள இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். சிவபெருமான் தம்மிடமிருந்த இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள் அன்று. என்னை? இறைவன் இயற்கையாகவே இக்குற்றங்கள் இல்லாதவர் ஆகலின்.

ஆனால், சமணரின் அருகக்கடவுள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் குற்றங்களையும் அழித்தார் என்றால், சமண சமயக் கருத்துப்படி, தம்மிடமிருந்த இம்மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். என்னை? மற்ற உயிர்களிடமுள்ள இக்குற்றங்களை அருகக் கடவுள் அழிப்பவர் அல்லர். ஒவ்வோர் உயிரும் தம்மிடம் உள்ள குற்றங்களைத் தாமே முயன்று அழிக்க வேண்டும் என்றும் அருகக்கடவுள் பிறரிடமுள்ள இக் குற்றங்களை அழிக்கமாட்டார் என்றும் சமண சமய சாத்திரம் கூறுகின்றது.

ஆகவே, முப்புரம் எரித்த கதையில் இரண்டு சமயத்துக்கும் ஒற்றுமையுள்ளதுபோலக் காணப்பட்டாலும், அடிப்படையான தத்துவக் கருத்தில் மாறுபாடு உண்டு என்பது அறியத்தக்கது.

ஐயனார்: ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் எனும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த் தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகின்றது. இந்தத் தெய்வம் பௌத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பௌத்த மதத்திலிருந்து ‘சாஸ்தா’ என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் எமது நூலிற் காண்க. சமண சமயத்திலிருந்து இத் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஈண்டுக் கூறுவோம். சமணர்களுடைய கோவில்களில் இத் தெய்வத்தை இன்றுங் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத் தெய்வத்திற்கு ‘பிரமம் யட்சன்’ ‘சாத்தனார்’ முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். முதன் முதலாக, ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக் கோயிலைக் கண்ட போது, அங்கு இத் தெய்வத்தின் உருவமும் பூசிக்கப்படுவதைக் கண்டு வியப்படைந்தோம். பின்னர், ஏனைய சமணத் திருக்கோயில்களுக்குச் சென்றபோதும் அங்கும் இத்தெய்வத்தின் திருவுருவம் பூசிக்கப்படுவதைக் கண்டோம். இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறு தெய்வங்களில் ஒன்று. சமணராக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், பௌத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை என்பதே. சைவக் கோயில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமணக்கோயில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் தனிக் கோயிலும் பூசை முதலிய சிறப்பும் பெற்று இன்றும் விளங்குகின்றார்.

(தொடரும்)

குறிப்பு:  
அடுத்து வருவது பெரிய புராணம் ஸ்ரீபுராணம் ஒப்பீடுகள் பகுதி...அத்துடன் "இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்" என்ற இந்த அத்தியாயம் நிறைவு பெறும்.
பெரிய புராணம் ஸ்ரீபுராணம் ஒப்பீடு பற்றி அரங்கனார் முன்வைத்த கேள்வி ஒன்றினைத் தொடர்ந்து இப்பகுதியை இங்கு வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

Prakash Sugumaran

unread,
Sep 13, 2014, 9:42:44 PM9/13/14
to mintamil
இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்//

சமிந்தையில் பிய எல்ல. ி இழையில் பிந்தால் அனத்ு பிகையும் பிக்க இயும்.

ஆருகர் - வித்ியர்ுறித்ு விளக்காகொல்லுடியுமா ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Sep 13, 2014, 9:47:02 PM9/13/14
to mintamil
இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதரர் என்று கூறப்படுகின்றனர்.//

பல நாடுகளை கடந்து இந்திரவிழாவை காண தனது மனைவியுடன் பூம்புகார் வந்த வித்தியாதரர் சிலப்பதிகாரத்தில் சிறப்பிக்கப் பட்டிருக்கிறார் !!

Dev Raj

unread,
Sep 14, 2014, 7:12:25 AM9/14/14
to mint...@googlegroups.com

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சமண சமயம் - முதல் பகுதி.

சமண மதம் துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டடோரே வீடுபெறுவர் என்று வலியுறுத்துகிறது. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம்; அருகன் எனும் சமண சமயக் கடவுளை வணங்குவோர் ஆருகதர் என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் விளங்குகிறது.

சமண சமயக் கொள்கைகளை உலகத்திலே பரப்ப ஞான நிலையை அடைந்த தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பது இச்சமயக் கொள்கை. ஏற்கனவே இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளனர் என்பதும், வருங்கலத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இவர்கள் நம்பிக்கை.

வரலாறு இந்த நம்பிக்கையிலிருந்து மறுபடுகிறது. பார்சவநாதர், 23 ஆம் தீர்த்தங்கரரே சமண மதத்தை தோற்றுவித்தவர் என்றும் வர்த்தமான மகாவீரர் எனும் 24 ஆம் தீர்த்தங்கரர் இம்மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்பது வரலாறு வலியுறுத்தும் கருத்து.

சமண மத புராணங்களும் இலக்கியங்களும் முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்ட அதிக உயரமும் பருமனுமுடைத்தவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள் என்ற இயற்கைக்கு மாறுபட்ட இயல்புகளைக் கற்பித்துக் கூறும் கருத்துக்களை வரலாறு ஒதுக்கித் தள்ளினாலும், எல்லா மதங்களுக்கும் தனது மதச் சான்றோர்களின் தெய்விகத் தன்மையைப் பெருக்கவே பலவித இயற்கைக்கு மாறுபட்ட இயல்புகளைக் கற்பனை கலந்து புராணங்களைப் புணைந்தார்கள் என்று கொள்ளலாம்.

இது போன்ற கற்பனைகளை தாண்டி நோக்கும் நடுநிலையாளர்கள் 24 தீர்த்தங்கர்களுமே சரித்திரகாலத்துக்கு முற்பட்ட காலங்களில் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தவர்கள் என்று கருதுகிறார்கள். முனிசு வர்த்தர், நமிநாதர், நேமிநாதர் பார்சுவநாதர் (கி.மு. 817 - கி.பி. 717), மகாவீரர் (கி.மு. 599 - கி.பி. 527) என்ற கடைசி ஐந்து தீர்த்தங்கர்கள் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர்கள் என்றும் ஏனைய 19 தீர்த்தங்காரர்கள் சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்றும் கருதுகிறார்கள்.

சமண சமயம் முப்பெரும் பிரிவுகளாகப் பிற்காலத்தில் பிளவுண்டது:

சுவேதாம்பர சமணம்: தீர்த்தங்கரர் திருவுருவங்கள், துறவிகள் எல்லாம் வெண்ணிற ஆடைகள் அணிவர்.

திகம்பர சமணம்: துறவிகள் திசைகளையே ஆடையாக உடுத்துபவர்கள் - உடையின்றி இருப்பர். தீர்த்தங்கரர் திருவுருவங்கள் ஆடையின்றி வடிக்கப்படும்.

ஸ்தானகவாசி சமணம்: உருவ வழிபாடு மறுப்பவர்கள். சமண ஆகம நூல்களையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குபவர்கள்.

வடநாட்டில் மட்டுமே சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் மிகுதி.

வடநாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் திகம்பர சமண முனிவர் பத்திரபாகு தலைமையில் தென்னகத்தின் பல பகுதிகளில் பரவினர். தமிழ்நாட்டிலே திகம்பர சமண சமயம் பண்டைக் காலத்திலே நன்கு செல்வாக்குப் பெற்றுப் பரவியிருந்தது. கிராமங்களிலும் நகரங்களிலும் திகம்பர சமண ஆலயங்கள்இருந்தன.

பண்டைக் காலத்தில் சென்னை மயிலாப்பூரில் திகம்பர சமண ஜீனாலயம் இருந்ததாக அவிரோதியாழ்வார் இயற்றி நேமிநாதரைப் போற்றிப் பாடிய திருநூற்றந்தாதி எனும் நூல் கூறுகிறது. மயிலை சாந்தோம் தேவாலயத்துக்கு அருகில் இருந்தது இந்த திகம்பர ஜீனாலயம். கடல் நீர் இவ்வாலயத்தை அழித்துவிடும் என்று அஞ்சியதால் இவ்வாலயத்தில் இருந்த அருகன் எனப்படும் ஜீன திருமேனியை கொண்டுபோய் தொண்டை நாட்டில் சித்தாமூர் என்ற ஊரில் வைத்ததாக ஒரு கல்வெட்டு மூலம் தெரிகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாட்டின் 28 வது மாவட்டமாகும். வட ஆற்காடு மாவட்டம் 1989 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டன. தொண்டை நாடு என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டை நாடு தமிழ் நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளையும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள்.

திருவண்ணாமலை மாவட்டப்பகுதி தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்றான பல்குன்றக் கோட்டத்தில் உள்ளது. சங்க காலத்தில் இப்பகுதியில் உள்ள செங்கத்தில நன்னன் ஆண்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது.

பெரும்பாணாற்றுப் படை இப்பகுதிகளின் ஊர் வளத்தை மெச்சுகிறது.

நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் இப்பகுதியினை ஆண்டனர் . நந்திவர்மன் பல்லவன் தென்னாட்டில் பாண்டியனைத் தோற்கடித்ததை 'நந்திக் கலம்பலம்' வியந்து பாராட்டுகிறது.

தொடர்ந்து இப்பகுதி சோழப்பேரரசின் (கி.பி. 871-1210) ஆட்சிக்குட்பட்டிருந்தது. சுந்தரச் சோழன் ஆட்சி முதல் அதி ராஜேந்திரன் ஆட்சிகாலம் வரை இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.இடையில் சிறிது காலம் இராஷ்டரகூடர்களின் ஆட்சிக்குள்ளானது.பின்னர் 'சம்புவராயர்'கள் (1236 - 1375) என்ற குறுநில மன்னர்கள் இடைக்கால மற்றும் பிற்கால சோழப்பேரரசின் கீழ் சிற்றரசர்களாக இப்பகுதிகளை ஆண்டனர்.சம்புவராயர்களுக்குப் பின் இப்பகுதி விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.பின்னர் ஆற்காட்டு நவாப்பின் ஆளுகையின் கீழ் இருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறியது.சுந்திரத்திற்குப் பின்னர் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து 1989 செப்டம்பரில் 30ந் தேதி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் புதிதாக உருவாக்ப்பட்டது.

'சம்புவராயர்'கள் என்ற குறுநில மன்னர்கள் பெயரிலேயே திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் இம்மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டமானது. இதன் பரப்பளவு 6191 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்த்தில் ஏழு வட்டங்கள் உள்ளன: 1. ஆரணி, 2. செங்கம், 3. செய்யாறு, 4. போளூர், 5. தண்டராம்பட்டு, 6. திருவண்ணாமலை மற்றும் 7. வந்தவாசி. இம்மாவட்டத்த்தின் முக்கிய ஆறுகள்: செய்யாறு, தென் பெண்ணையாறு மற்றும் கமண்டல நாகநதி,

'புவியியல் அமைப்பின்படியே வரலாறு நகரும்' என்ற எழுதப்படாத விதியின்படியே 'திகம்பர சமண சமயம் மலைகளைக் குறிவைத்தே நகர்ந்திருக்கிறது' என்பதை தெரிந்து கொள்ள முடியும். திருவண்ணாமலை மலைகளும் பாறைகளும் கொண்டு விளங்கும் மாவட்டமாகும். மலையும் மலைசார்ந்த நில அமைப்பு திகம்பர சமணர்களுக்கு சாதகமான பகுதியாக அமைந்துவிடவே பல்லாயிரக்கணக்கான திகம்பர சமணத் துறவிகளில் ஒரு பிரிவினர் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல இடங்களில் நிலைகொண்டு திகம்பர சமணப் பள்ளிகளை உருவாக்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஒரு திகம்பர சமணம் தழைத்தோங்கிய பகுதி . கீழ்க்கண்ட சான்றுகள் இக்கருத்தினை வலியுறுத்துகின்றன:

திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் திகம்பர சமணக் கல்வெட்டு மிகவும் பழைமையான பிரமிக் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.கங்கவாடி எனும் இன்றைய தென் கர்னாடகப் பகுதியிலிருந்துதான் திகம்பர சமண மதம் வட தொண்டை மண்டலத்துள் நுழையத் தலைப்பட்டது. தமிழக அளவில் கணித்துப் பார்த்தால் இப்பகுதியிலிருந்துதான் மிக அதிகமான திகம்பர சமண அடையாளங்களும் சான்றுகளும் இருப்பதைக் காணமுடியும்.

தொண்டை மண்டலத்தில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 150 திகம்பர சமணப் பள்ளிகள் (ஜீனாலயங்கள்) இருந்ததாக மெக்கன்சியின் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.சமணம் பழங்காலம் முதலே பல்லவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசகுல ஆதரவு பெற்று விளங்கியுள்ளது.

தற்காலத்தில் திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் திகம்பர சமணம் வளர்ந்து வருவதற்கான சான்றுகள் -’சினகஞ்சி பருத்திக்குன்றங் கரந்தை பூண்டி சிங்கைவைகை திருப்புறம்பை அருகை தாசை சினகிரிவண் தீபைசித்தை வீரை கூடல்’ என்னும் செய்யுள் ஸ்ரீ ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத்துள்ள சமணர் ஊர்கள் கூறப்படுள்ளதெனத் தோன்றுகிறது.

திரு. சாஸ்திரம் அய்யர் என்னும் சமணக் பெரியார் ஒருவர் ‘ஜைனசமய சித்தாந்தம்’ என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். இக் கட்டுரை இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1841 u) அச்சிடப்பட்ட வேத அகராதி என்னும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.

‘‘இவர்களுடைய (சைனருடைய) ஸ்தலங்கள் தெற்கே திருநறுங்கொண்டை என்றும், தீபங்குடி என்றும், சிற்றாமூர் என்றும், பெருமண்டூர் என்றும், இராசமகேந்திரமென்றும், மேற்கே காஞ்சீபுரம் என்றும், திருப்பதிக் குன்றமென்றும், பெரிகுளம் என்றும், மூடுபத்திரை என்றும், ஸ்ரீரங்கப்பட்டணமென்றும், கனககிரி என்றும் இருக்கின்றன. பெரிகுளத்தில் ஆசாரியமடமுண்டு’’ 

இதனால், இவ்வூர்கள் சைனக் கிராமங்களென்பது விளங்கும். தற்காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திகம்பர சமணர் ஆலயங்கள் அறுபத்தைந்து இடங்களில் உள்ளன.

தமிழ் (திகம்பர) சமணர்கள்

தொண்டை நாட்டிலே திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போதும் குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட தமிழ் (திகம்பர) சமணர்கள் உள்ளனர். ஆரணி, செய்யாறு, போளூர், திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி தாலுகாக்களில் இவர்கள் அதிகமாக உள்ளனர். வந்தவாசி, பொன்னூர், வெம்பாக்கம் முதலிய ஊர்களில் இவர்கள் மிகுதியாகக் காணப் படுகின்றனர். இவர்கள் பொதுவாக நைனார் என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தாலும், மற்ற சாதியினரின் பட்டப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

திரு முத்துசாமி ராமையா 

இந்த அறிஞரின் கட்டுரை அரிய தகவல்களின் தொகுப்பாக விளங்குகிறது.

முநி ஸுவ்ரத, ஜிநாலயம், சம்புவரையர் - சரியான சொற்கள்

Prakash Sugumaran

unread,
Sep 14, 2014, 8:15:13 AM9/14/14
to mintamil
அருகன் எனும் சமண சமயக் கடவுளை வணங்குவோர் ஆருகதர் என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் விளங்குகிறது.//

ஆருகதர் என்பதை விளக்கமாக சொன்னால் புரியும். என் அறிவுக்கு எட்டியவரை ஆறுவித போதனைகளில் ஒன்று என்று சமணம் என அறிகிறேன். குறைந்தபட்சம் அந்த ஆறறிவு என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்களேன்.

வருங்கலத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இவர்கள் நம்பிக்கை.//

அப்படியா ? விவரமாக கூறுங்கள் :) 786ல் நின்று விட்டதாக என் சிற்றறிவு சொல்கிறது..

வர்த்தமான மகாவீரர் எனும் 24 ஆம் தீர்த்தங்கரர் இம்மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்பது வரலாறு வலியுறுத்தும் கருத்து.//

வடக்கத்திய ஆய்வாளர்களின் கருத்துக்களையும்
கொஞ்சம் படியுங்கள் :)

முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்ட அதிக உயரமும் பருமனுமுடைத்தவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள் என்ற இயற்கைக்கு மாறுபட்ட இயல்புகளைக் கற்பித்துக் கூறும் கருத்துக்களை வரலாறு ஒதுக்கித் தள்ளினாலும், எல்லா மதங்களுக்கும் தனது மதச் சான்றோர்களின் தெய்விகத் தன்மையைப் பெருக்கவே பலவித இயற்கைக்கு மாறுபட்ட இயல்புகளைக் கற்பனை கலந்து புராணங்களைப் புணைந்தார்கள் என்று கொள்ளலாம்.//

பிறகு எதற்கு அருகர்.. அரூவம் என்றெல்லாம் ?? ஆதீஷ்வரன் சிவன் என்றானதாலேயெ, உருவ வழிபாட்டை முற்றிலுமாக தவிர்த்து, தங்களை தாங்களே நிக்கந்தம் ஆக்கி கொண்டவர்கள். இவர்களென்ன ராம, கிருஷ்ணனை வைஷ்ணவனாக்கினார்களா ? கிருஷ்ணனை வாசுதேவன் என்றார்களா ? ஆதீஷ்வரனையாவது எங்கள் சிவன் என்று சொந்தம் கொண்டாடினார்களா ?

//தொண்டை நாடு என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டை நாடு தமிழ் நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளையும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள்.//

தவறு.
இந்தியப்  பெருங் கடலில்  சிங்கப்பூரின் அருகே தொடங்கி இந்திய நாட்டின் இதயமாக உள்ள உஜ்ஜைனியில் முடியும் லங்கோ - ஜைனிக் கோட்டின் நடுப்பாகத்தில் மைசூர் முதல் கடலூர் வரை அமைந்துள்ள தென் பெண்ணையாற்றுக்கும், பாலாற்றுக்கும் இடையே பரந்து விரிந்துள்ள. கெடிலக்கரை என தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் பகுதியே பண்டைய காலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடு நாடு எனும் தொண்டை நாடு.

கதைகளெல்லாம் வேண்டாம். புராணதி திரிபுகள், பங்காளப் பிரிவினைகள் இனி வேலைக்கே ஆகாது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Balaji S

unread,
Sep 14, 2014, 8:48:10 AM9/14/14
to mint...@googlegroups.com
Please go through this link. good books to learn.

2014-08-29 22:40 GMT-12:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2005ல் வந்த செய்தி!

http://archive.deccanherald.com/deccanherald/feb012005/n10.asp

Dalit youth turns jain monk

In a caste-dominated society, where dalit bridegrooms are often discouraged to ride a mare in their wedding processions, upper castes treat them with disdain and untouchability remains a stigma irrespective of what the Indian Constitution outlines, the induction of a dalit youth in Jain religion comes as a welcome change.

In a historic event, a 22-year-old youth belonging to Meghwal community was anointed as a Jain monk at Ahore town in Jalore district on Monday. Hailing from Mandwaria village, Sirohi district, Chandaram Meghwal alias Sandeep got a new identity as Anant Punya Maharaj at a diksha ceremony attended by a large number of people from Shwetambar Jain community and Sandeep’s relatives from Sirohi.

Sandeep who went to Mumbai in search of a job a few years ago was so impressed by Jain saint Suryodaya Maharaj that he expressed his desire to dedicate his life to the religion. He travelled with him to various holy places and attended religious sermons with deep devotion and sincerity to the surprise of the saint. On expressing his desire to join the religion, he was sent to Ahmedabad to study the Jain ideology for almost four years. Seeing his intense desire to lead life of a Jain monk, his family gave in after initial hesitation, reliable sources told Deccan Herald from Ahore.

He was given a warm send off from his village two days ago and reportedly there was a mad rush among the villagers to touch his feet to show their reverence. His monkhood moved about 1,500 people in the village to go vegetarian and give up drinking. Monday onwards, he would be known with his new name Anant Punya, said Mahaveer Jain, a businessman from Bangalore, who was currently in Ahore to attend the diksha ceremony. His 26-year-old sister also took diksha along with Sandeep, he said. A commerce student at the MES college in Bangalore, she gave up her studies to pursue the same path.

A tough life awaits the newly inducted monk from Tuesday as he will have to walk barefoot, clad in a white robe and seeking alms. No physical comforts will be allowed, including the services of a barber.

2014-08-30 12:43 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
Published: August 28, 2014 00:00 ISTUpdated: August 28, 2014 12:06 IST

ஜைன காஞ்சி

NCERT Study Course i-xii - Free Online Videos,Digital Books & More.Register and Watch Free Videoswww.thedigilibrary.com/NCERT
விஜி சக்கரவர்த்தி
COMMENT   ·   PRINT   ·   T+  

தட்சிண காசி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மிகவும் பழமையான நகராகும். கோயில் நகரமான இது சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனக்காஞ்சி என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து அழைக்கப்படுகிறது. இப்பெயர்களின் மூலம் மூன்று சமயங்கள் இம்மண்ணில் செழிப்பாக இருந்தது தெரியவருகிறது.

ஜைன காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால வித்யாத்தலமாக அது விளங்கியுள்ளது.

தமிழகத்தில் கிடைத்த முதல் செப்பேடான பள்ளன் கோயில் செப்பேடு திருப்பருத்திக்குன்ற மகாவீரர் கோயில் பற்றியது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப் பட்டது. அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, “தொன்மைசேர் பருத்திக் குன்றிலுறைகின்ற திரிலோகநாதனே” எனத் தன் கவியில் குறிப்பிடுகிறார். இக்கோயில் தமிழரின் கட்டிட, சிற்ப, ஓவியக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாகும். இங்கு கல்வெட்டுகள் உள்ளன.

மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரின் கருவறைப் பகுதி, திரைலோக்கியநாதர் கோயில் ஆகும். மற்றப் பகுதி திரிகூட ஆலயம். இங்கு பத்மபிரபர், வாசுபூஜ்யர், பார்சுவநாதர், ரிஷபதேவர், பிரம்மதேவர் ஆகியவரின் கருவறைகள் உள்ளன. சங்கீத மண்டபம், தானியக்கிடங்கு, முனிவாசம் ஆகியவையுள்ளன. இங்குள்ள தருமதேவி அம்மன் மிகச் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் ஆதரித்து வழிபட்டுள்ளனர்.

மண்டபங்களின் உட்கூரைகளில் மிக அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பகவான் ரிஷபதேவர், மகாவீரர், நேமிநாதர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் மிகக் கலைநயத்தோடு வண்ண ஓவியங்களாக உள்ளன. அதுபோல் கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் வீர தீர லீலைகளும், தருமதேவிஅம்மனின் வாழ்க்கை வரலாறும் கண் கவரும்படி மிக உன்னத ஓவியங்களாகப் பல வண்ணங்களில் மிளிர்கிறன.

இக்கோயிலில் உள்ள குராமரம் மிகப் பிரசித்தமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இம்மரம் தருமத்தின் உறைவிடமாகவும் அரச செங்கோலைக் காக்க கூடியதென்றும் நம்பப்படுகிறது. இம்மரத்தைப் பற்றிய பாடலில்

“தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி

முன்னுளது மும்முனிவர் மூழ்கியது_ மன்னவன்தன்

செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த

கொங்கார் தருமக் குரா”எனப்படுகிறது. குராமரத்தின் கீழ் ஆசாரியர்களின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மல்லிசேன வாமன ஆசாரியர் என்பவரின் பாதமும் ஒன்று. இவர் மேருமந்திர புராணம், நீலகேசி என்ற நூலுக்கு சமய திவாகரம் உரை ஆகிய நூல்களை இயற்றித் தமிழுக்கு அணி சேர்த்தார்.

மேருமந்திர புராணத்தையும் உலகிலேயே உள்ள ஒரே ஒரு நீலகேசிச் சுவடியையும் 90 ஆண்டுகளுக்கு முன் பேராசிரிய அ.சக்கரவர்த்தி நைனார் என்பவர் முதன்முதலாகச் சுவடிகளிலிருந்து பதிப்பித்தார்.

திரைலோக்கியநாதர் கோயிலுக்கு அடுத்தது பகவான் சந்திரப்பிரபர் ஆலயம் கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருவறையில் சந்திரப்பிரபரின் சுதை வடிவம் உள்ளது. டி.என். இராமச்சந்திரன் என்பவர் தன் ஆங்கில நூலில் இக்கோயில்களைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் ஜைன காஞ்சியாக, சமண மையமாகத் திகழ்ந்த இவ்விடத்தில் சமண மடம் ஒன்றும் இருந்தது. தற்போது அது செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூருக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

----------------------------------------------

unquote:

ஆசிரியர் புத்த காஞ்சியை சொல்லாமல் விட்டாரே? புத்த காஞ்சி தற்போது புது காஞ்சி என்றும், ஜின காஞ்சி சின்ன காஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன.

இரா.பானுகுமார்,

பெங்களூர்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
-----------------------------------------------------
रत्नाकरधौतपदां हिमालयकिरीटिनीम् ।
ब्रह्मराजर्षिररत्नाढ्यां वन्दे भारतमातरम् ॥

ratnAkaradhautapadAM himAlayakirITinIm |
brahmarAjarShiraratnADhyAM vande bhAratamAtaram ||

To her whose feet are washed by the ocean, who wears the Himalayas as her crown, and is adorned with the gems of rishis and kings, to Mother India, do I bow down in respect

செல்வன்

unread,
Sep 14, 2014, 3:47:54 PM9/14/14
to mintamil
சமணம் அறிவோம் எனும் இந்த இழையில் இழை துவக்கிய திரு தேவ் அவர்கள் விருப்பபடி விவாதங்களை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இழையை துவக்கியவரின் விருப்பதுக்கு ஏற்ப அதை செய்ய ஒத்துழைக்கும்படி அனைவரையும் வேண்டுகிறேன். இழையில் எழும் கேள்விகளை வேறு துணை இழையில் விவாதிக்கலாம்

தேமொழி

unread,
Sep 16, 2014, 4:31:54 AM9/16/14
to mint...@googlegroups.com
9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்  (இறுதிப் பகுதி )

‘‘பெரியபுராணம்’’ ‘‘அறுபத்துமூன்று அடியார்’’

‘‘ஸ்ரீபுராணம்’’ ‘‘சித்தாந்தம்’’

பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைவ நூல் இப் புராணத்திற்கு முதல் நூலாக உள்ளவை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் ஆகும். இந்தத் திருத்தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்றும் வழங்குவர். இப் பெயர்கள் சமணரது ‘‘திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம்’’ என்றும் பெயரிலிருந்து அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் சமணர்களுக்குரிய நூல். இதில் 63 பெரியார்களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. திரிஸஷ்டி = அறுபத்துமூன்று; ஸலாகா புருஷர் = பெரியார். சமணருக்கு 63 பெரியார்கள் உள்ளனர். அவர்களாவன: தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதிவாசுதேவன் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவர். இவர்களுடைய சரித்திரங்களைக் கூறும் நூலுக்குத் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் என்பது பெயர்; அஃதாவது அறுபத்து மூன்று பெரியார்கள் சரித்திரம் என்பது பெயர்.

சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்படவில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள். எழுபத்திரண்டை ஏன் 63 ஆகக் குறைக்கவேண்டும்? சமணரது 63 அடியாருக்குச் சமானமாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அன்றியும் கன்னட மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றது. அவற்றிற்கும் அறுபத்து மூவர் பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். அஃதாவது, அருவத்துமூவர புராதன சரிதெ என்றும், அருவத்து மூரு புராதன சரணர சரிதெ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.31 இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அறுபத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது.

சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீபுராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவாள நடைநூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீபுராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப்ப டுகின்றன. சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கிவருவது போலவே, சைவர்களும் தமது பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக் காலத்தில் வழங்கி வந்தனர். ஆனால், இந்த வழக்கு இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை.

தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. ‘‘திருப்பங்குனி யுத்திரத்து ஆறாந்திருநாளான புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி’’.32

இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவரது 9 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவர் கி.பி. 1172 முதல் 1186 வரையில் அரசாண்ட இராசாதிராசர் II ஆவர். இந்தச் சாசனத்திலே, திருவொற்றியூர்க் கோயிலில், ஸ்ரீ புராணத்தில் ஆளுடைய நம்பி புராணம் படிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில், பெரியபுராணம் ஸ்ரீபுராணம் என்று கூறப்படுவது காண்க.

ஸ்ரீபுராணம், அறுபத்து மூவர் என்பவைகளைச் சைவரும் சமணரும் வழங்கியதுபோலவே சித்தாந்தம் என்னும் பெயரையும் இரு சமயத்தாரும் தம் சமய சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கி வருகின்றனர். சித்தாந்தம் என்பதற்கு முடிந்தமுடிபு என்பது பொருள். ஆயினும் இந்தப் பெயரைச் சமணரும் சைவரும் தம் சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கியுள்ளனர்.

‘‘ஸ்ரீகோமாறஞ் சடையற்கு யாண்டு 3. மதநெச்சுர நாட்டுத் திருச்சுரத்து திருமலைத் தேவர்க்கு குணசாகர படாரர்செயவித்த குழுவாணை நல்லூர் தும்பூர்க் கூற்றத்து காடந்தைகுடி தர்மசித்தனான தயாமாறர் திருமாலடைஞ்சிருந்து சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹாரதானமாகத் தன் முதல் குடுத்து33 என்று கழுகுமலைக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இதில் சமணருடைய சாத்திரம் சித்தாந்தம் என்று கூறப்பட்டிருப்பது காண்க. சைவரும் தமது சமய சாத்திரத்தைச் சித்தாந்தம் என்று கூறுகின்றனர்.

சித்தர் வணக்கம்

பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத் தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம் இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு. சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர். எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான் மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம் செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே, ‘‘சிததம நம’’ என்று கன்னட நாட்டினரும், ‘‘ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம’’ என்று தெழுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.34

இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர் வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக் காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப்படை.

________________________________________________________________________

24. இந்துமதம் என்று இங்குக் கூறுவது சைவவைணவ மதங்களை.

25. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதரர் என்று கூறப்படுகின்றனர்.

26. ஸ்ரீபுராணம்; நூன்முகம், பக்கம் 32.

27. P.116, Adisvara Caritra. Trisasti Salaka Purusa Carita. Vol I Gaekwad’s Oriental Series No.LI.

28. 34 ஆம் செய்யுள்.

29. காளிக்குக் கூளி கூறியது. 209

30. கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பரமேஸ்வரவர்மன் என்னும் பல்லவ அரசன், சைவ சமயத்தவனாய் எருதுக் கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக் கொடியைச் சில புராணங்கள் ‘தர்மத்துவஜம்’ என்று கூறவதும் ஈண்டுக் கருதத்தக்கது. இவன் பரம்பரையின் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.

31. P.5.6 Mys. Arch. Annual Report. 1925.

32. 371 of 1911. No. 1358 SII (Texts) Vol.V.P.494.

33. S.I.I. Vol V.

34. ஸ்ரீபுராணம், நூன்முகம், பக்கம் துதுதுடி.

அத்தியாயம் 9 நிறைவுற்றது.

மேலும் இந்நூல் வழங்கும் சமண மதத் தொடர்பான தகவல்கள்:

1.சமணசமயம் தோன்றிய வரலாறு
2.சமணசமய தத்துவம்
3.சமணமுனிவர் ஒழுக்கம்
4.ஆருகதரின் இல்லற ஒழுக்கம்
5.சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு
6.சமணசமயம் சிறப்படைந்த வரலாறு
7.சமயப்போர்
8.சமணசமயம் குன்றிய வரலாறு

தேமொழி

unread,
Sep 16, 2014, 5:02:10 AM9/16/14
to mint...@googlegroups.com

Suba.T.

unread,
Sep 16, 2014, 6:58:12 AM9/16/14
to மின்தமிழ், Subashini Tremmel
​நல்ல நூல். என்னிடமும் இருக்கின்றது.
இங்கே படிப்படியாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தேமொழி.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
K. Loganathan

unread,
Sep 16, 2014, 7:37:48 AM9/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு தேவ் அவர்களே

 மன்னிகவும். 'நபி' என்ற சொல்லும் 'மேரு" என்ற சொல்லும் சமணத் தீர்த்தங்கரோடு தொடர்பு படுத்தப்பட, எனக்கு ஓர் மலிழ்ச்சி. ஏற்கனவே சமணத்தின் தோற்றத்தை  சுமேரிய கில்காமேஷ் இதிகாசத்தில் நான் கண்டுள்ளேன்

இந்த குறிப்பு சமணம் சுமேரியாவிலிருந்து வந்திருக்கலாம் என்று காட்டுகின்றது. கீழே எனது சான்று தாங்கிய கட்டுரை

உலகன்

Na-bi as Messenger  god:

From C.J Gadd ( VII , p. 71)

The ‘na-‘ here appears to be related Ta. na-v-il, nu-v-al etc meaning : to relate, announce, tell etc. and Ta. nuul/nuun: a text , the phonemes.

40:  ur-(d) nin-a-zu na-bi (d) en-lil ( Ur Ninazu and Nabi Enlil)

ஊர் நீன்னாஜு நபி (தெய்) ஏண்லீல்

41. sagub-ti-ri-ga-a-an ki-en-gi-su ( the lieutenant of Tirigan, unto Sumer)

சங்கு திருகான் கீ ஏங்கி)சுமேரு)

42. kin-gi-a im-si-es  (Upon (the (king’s) orders returned)

காண்கிய இம்சீயெஸ்

Here ‘sag-ub’ is the root of Ta. saan-uba : the person by the side and hence lieutenant.  However ‘kin-gi-a’ is taken elsewhere as the one who surveys and hence someone  like a spy or an overseer This fits better the Ta. kaan-ki-s : the one who sees. We have Ta. kaNkaaNi: the supervisor related to this.

The word ‘nabi’  as in Nabi Enlil , can be interpreted as the messenger of Enlil and who is the great (ur) Ninazu

The word ‘na’ can be taken as another variant of ‘nu’ : to tell as Ta. nu-v-al. nu-tal, nuul etc.

For this we have the evidences from Kes temple Hymn of En Hudu Anna:

9. En-lil-le  kes zami am-ma-ab-be (Enlil spoke the praises of Kes)

10. (d) nisaba nu-ka-as-bi-im ( Nisaba was its princely arbiter? )

11. inim-bi-ta sa-gin im-da-an sur ( with its words she wove it intricately like a net)

Here the translation nu-ka-as-bi-im  as above seems to be inappropriate and it is  better to render it as :she who relates (nu) verbally ( ka: mouth) and thereby allows the generation of a coherent text. ( ka-as-bi-im> Ta. kaappiyam , kaaviyam etc)

That Nisaba was the Goddess of Learning who later came to be known as Saraswaty etc and  is substantiated from the following lines from Sulgi( hymn B)

2014-09-16 19:12 GMT+08:00 Dev Raj <rde...@gmail.com>:
On Friday, 12 September 2014 00:06:39 UTC-7, Prakash Sugumaran wrote:
முதல் தீர்த்தங்கரருடைய தந்தையின் பெயர் நபி !!

இது இந்தியவியல், இறையியல்
சார்ந்த இழை. ஆங்கில வழிப் 
புரிதலைத் தவிர்க்க வேண்டும்.

நாபி₄ப்ரியாயாமத₂ மேருதே₃வ்யாம்
த்வமம்ஶதோSபூ₄:   ருʼஷபா₄பி₄தா₄ந: | 
அலோகஸாமாந்யகு₃ணப்ரபா₄வ-
ப்ரபா₄வித         அஶேஷஜநப்ரமோத₃:||  
                                       - நாராயணீயம்

ஆதி நிர்க்ரந்தர் பகவான் ரிஷப தேவரின் 
தந்தையார் மாமன்னர் நாபி;
தாயார் மேரு தேவியார்

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

செல்வன்

unread,
Sep 16, 2014, 12:27:40 PM9/16/14
to mintamil
இழையில்  அனைவரும் விவாதிப்பது/ கருத்து சொல்வதை தவிர்க்க தேவ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்

Prakash Sugumaran

unread,
Sep 16, 2014, 3:55:34 PM9/16/14
to mintamil
லோகநாதன் ஐயா.. இதில் நபி-மேரு என்ற சொற்களுக்கும், சுமேரிய தமிழுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது புரியவில்லை.

K. Loganathan

unread,
Sep 16, 2014, 8:20:14 PM9/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
அன்பரே 

 திரு தேவ் அவர்கள் இவ்வாறு நாராயணீயம் என்ற நூலிருந்து ஓர் பாட்லை மேற்கோள் காட்டினார்

>>
நாபி₄ப்ரியாயாமத₂ மேருதே₃வ்யாம்
த்வமம்ஶதோSபூ₄:   ருʼஷபா₄பி₄தா₄ந: | 
அலோகஸாமாந்யகு₃ணப்ரபா₄வ-
ப்ரபா₄வித         அஶேஷஜநப்ரமோத₃:||  
                                       - நாராயணீயம்

ஆதி நிர்க்ரந்தர் பகவான் ரிஷப தேவரின் 
தந்தையார் மாமன்னர் நாபி;
தாயார் மேரு தேவியார்

இங்கு 'நாபி'  என்ற சொல்லும் 'மேரு" என்ற சொல்லும் வர, அவை சுமேருத் தொடர்பை காட்டுவதாகக்கருதி  அந்த சொல் (நபி) விளங்கும் சுமேருத் தமிழ் வரிகளை எடுக்காட்டினேன்.

மற்றும் சமண சமயத்தின் கூறுகள் சுமேருத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைப் பற்றியும் சில குறிப்புக்கள் எழுதியுள்ளேன்

காணக்:

உலகன்

Banukumar Rajendran

unread,
Sep 20, 2014, 7:35:32 AM9/20/14
to மின்தமிழ்

Banukumar Rajendran

unread,
Sep 24, 2014, 7:52:29 AM9/24/14
to மின்தமிழ்
கூகுள் பிளஸில் ஜினாலயக் குறிப்புகள்.

https://plus.google.com/103581459731825449183/posts

இரா.பா

தேமொழி

unread,
Sep 24, 2014, 10:56:24 AM9/24/14
to mint...@googlegroups.com

வலைத்தளம் = http://rprtravelogue.blogspot.com/

RPRTRAVELOGUE:  Jain temples Map
https://mapsengine.google.com/map/viewer?mid=zdretMEiFO3M.kcEEzQGYocQY

Map for Jain pilgrimage centres: 
(Tamil nadu & Kerala)
(Not fully updated)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )

Banukumar Rajendran

unread,
Sep 24, 2014, 11:28:23 PM9/24/14
to மின்தமிழ்

Suba.T.

unread,
Sep 25, 2014, 2:40:25 AM9/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
தகவலுக்காக..

சென்றமாத மணற்கேணியில் எனது கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.
தமிழக வருகையின் போது நான் சென்று வந்த சமண திருமடங்கள் சமணாலயங்களில் நடைமுறை செயல்பாடுகள் என்பவற்றின் பார்வையாக அமைந்த ஒரு கட்டுரை.  அடுத்த சில நாட்களில் இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

Nagarajan Vadivel

unread,
Sep 28, 2014, 11:54:04 PM9/28/14
to மின்தமிழ்
Got while searching the Internet. 
asadumusudu

Banukumar Rajendran

unread,
Oct 4, 2014, 2:11:03 AM10/4/14
to மின்தமிழ்

சமணமும் மகாபாரதமும்

http://venmurasudiscussions.blogspot.in/2014/10/blog-post_19.html

Banukumar Rajendran

unread,
Oct 26, 2014, 3:43:37 AM10/26/14
to மின்தமிழ்

Banukumar Rajendran

unread,
Oct 26, 2014, 3:44:04 AM10/26/14
to மின்தமிழ்
பழங்கால சமண சிற்பம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1099646

Banukumar Rajendran

unread,
Oct 26, 2014, 3:44:38 AM10/26/14
to மின்தமிழ்

சமணர்கள் தந்த தீபாவளி

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=6314&cat=3

Banukumar Rajendran

unread,
Oct 26, 2014, 3:45:23 AM10/26/14
to மின்தமிழ்
கோவையில் துறவறம் பூண்ட சமண பெண்கள்

http://temple.dinamalar.com/news_detail.php?id=36186

தேமொழி

unread,
Oct 31, 2014, 10:34:30 PM10/31/14
to mint...@googlegroups.com

விஜி சக்கரவர்த்தி

இந்து மதத்துக்குக் கீதையைப் போல் கிறிஸ்துவத்துக்கு பைபிள் போல் இஸ்லாத்துக்கு குரானைப் போல் சீக்கியத்திற்கு குருகிரந்த சாகிப் போல் சமணத்துக்கு ஸ்ரீபுராணம், வேத நூலாக விளங்குகிறது. இதைத் தெய்வீக நூலாகச் சமணர்கள் போற்றுகின்றனர். நல்லவை நடக்க வேண்டி சமணர்கள் ஸ்ரீபுராணத்தில் நூல் போட்டு சகுனம் பார்ப்பார்கள்.

இந்நூல் ஜினசேனாசாரியார், குணபத்திராசாரியார் ஆகியோரின் மகாபுராணம் எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும். கம்பீரமான மொழிநடையைக் கொண்டது.

ஸ்ரீபுராணத்தை எழுதியவர்

மகாபுராணத்திலிருந்து ஸ்ரீபுராணத்தை வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் குணபத்திரர் என்பவர் எழுதினார் என்றும் இவர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமண்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.

சமணத்தைப் போதித்தவர்கள் 24 தீர்த்தங்கரர்கள் ஆவார்கள். அவர்கள் விருஷபநாதர், அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தர், சுமதிநாதர், பத்மபிரபர், சுபார்சுவர், சந்திரப்பிரபர், புஷ்பதந்தர், சீதளர், சிரேயாம்சர், வாசு பூஜ்யர், விமலர், அனந்தநாதர், தர்மநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனீசுவிரதர், நமிநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், வர்த்தமான மகாவீரர். இவர்களுடன் 12 சக்கரவர்த்திகள் உட்பட உயர்ந்த 63 மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபுராணம் விவரிக்கிறது.

சமணத் தத்துவங்கள், கொள்கைகள், வழிபாட்டுமுறைகள், ஒழுக்கமுறைகள் மற்றும் அறநெறிகள் ஆகியவற்றை ஸ்ரீபுராணம் கொண்டுள்ளது.

முற்பிறவி முதல் முக்திவரை

அனைத்து தீர்த்தங்கரர்களும் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள். பின் துறவு ஏற்றவர்கள். தீர்த்தங்கரர்களின் முற்பிறவிகள் முதல் அவர்களின் முக்திவரை நிகழ்ந்தவற்றை மிகச் சிறப்பாகவும் அழகாகவும் பக்திப் பரவசத்துடனும் ஸ்ரீபுராணம் விவரிக்கிறது. தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாண நிகழ்வுகளும், சமவசரணத்தின் வர்ணனைகளும் நம்மை அங்கேயே அழைத்துச் செல்வதுபோல் சொல்லப்பட்டிருக்கின்றன.

மேலும் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் முதலிய புராணக் கதைகளும் பரசுராமர், மாபலி, சிபிச்சக்கரவர்த்தி முதலியோரின் வரலாற்றுச் செய்திகளும் இதிலுள்ளன.பெட்டிக்குள் பெட்டி, அந்தப் பெட்டிக்குள் பெட்டி என்பதுபோல் ஏராளமான கிளைக்கதைகளும் உள்ளன.

கிளைநூல்கள்

ஸ்ரீபுராண அடிப்படையில்தான் சீவக சிந்தாமணி, மேருமந்திர புராணம், சூளாமணி ஆகிய தமிழ் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இதன் சிறப்பை உணர்ந்த திரு.வெங்கடராஜுலு ரெட்டியார் என்பவர் முயற்சி எடுக்க, 1943-ல் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் மேல்சித்தாமூர் சமண மடத்தில் ஸ்ரீபுராணம் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1946-ல் வெளியானது.

சமணம் போற்றும் உயரிய இந்நூலைத் தமிழ்நடையில் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் 1977-ல் எழுதி வர்த்தமானன் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். இதனாலும், இவரின் ஸ்ரீபுராணம் பற்றிய சீரிய பேச்சாற்றலாலும் இவர் “ஸ்ரீபுராணச் செம்மல்” என்று பாராட்டப்படுகிறார். ஸ்ரீபுராணத்தைத் தொடர்ந்து பல தமிழ் நூல்களைத் தேடித்தேடி ஸ்ரீசந்திரன் வெளியிட்டு வருகிறார். இவரின் ஸ்ரீபுராணம் தமிழுலகு உள்ளவரை சமண நன்னெறிகளைத் தாங்கியும் பறைசாற்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும்.

க்ருஷ்ணகுமார்

unread,
Nov 1, 2014, 8:34:15 AM11/1/14
to mint...@googlegroups.com
தேமொழி அம்மையின் அறிய தகவலுக்கு நன்றி.

மணிப்ரவாளத்திலான மூலநூல் ஸ்ரீ புராணம் இணையத்தில் கிட்டுமானால் பகிரவும்.

It is loading more messages.
0 new messages