[நேரிசை ஆசிரியப்பா]
‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி [அசை]
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை [சீர்]
முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை [அடி]
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தரஃ தென்ப [எழுத்து]
அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு
நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில் ஒரு நண்பர் திருவள்ளுவர் முதலில் எழுதியது கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறினார் நான் தேடிய வரையில் எந்த தெளிவும் பிறக்கவில்லை தங்கள் இதற்குரிய தெளிவினை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன்,
பே.ஜதுர்சனன்
அன்புள்ள ஜதுர்சனன் அவர்களுக்கு
இதுவரை கேட்காத பெயர். நீங்கள் ஜைனரா?
நான் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திலேயே இந்த விவாதம் நடந்து ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டது. என் வகுப்புகளில் அன்றைய தமிழாசிரியர்கள் இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்
தமிழ்ப் பதிப்பியக்கமும், சைவமறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கியவை. அன்று திருக்குறளை ஒரு சைவநூல் என நிறுவும் பல்வேறு உரைகள் எழுந்தன. கா.சு.பிள்ளை எழுதிய உரைவிளக்கநூல் அதில் முதன்மையானது
அதன்பின் ஐம்பதுகளில் திருக்குறளை மதச்சார்பற்ற தமிழ்ப்பொதுமறையாக நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடங்கின. அன்றைய தமிழியக்கம், திராவிட இயக்கத்தின் பண்பாட்டுப்பணிகளில் முக்கியமானது இது. பல்வேறு உரைகள் வழியாக இது நடந்தது. முதன்மையான உரை மு.வரதராசனாருடையது. மிகப்பிரபலமானதும் அதுவே
இருசாராருக்குமே சிக்கலாக இருந்தது திருக்குறளின் கடவுள்வாழ்த்து அதிகாரம்தான். சைவர்களுக்கு அதிலுள்ள இறைவிளக்கம் அவர்களின் சைவ மரபுசார்ந்த விளக்கங்களுடன் பொருந்தாததாக இருந்தது. ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான், வாலறிவன் போன்ற சொல்லாட்சிகள் சமணத்தின் அருகர்களுக்குப் பொருந்துபவை. அவற்றை சைவத்துக்குள் கொண்டு வைக்க மிகப்பெரிய சொல்திரிப்பும் கருத்துவளைப்பும் தேவைப்பட்டது.
அதேபோல மதச்சார்பின்மைவாதிகளுக்கும் அந்த அதிகாரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் இரண்டு வாதங்களை முன்வைத்தார்கள். ஒன்று குறளின் பிற அத்தியாயங்களில் எங்கும் வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வாக இறைவழி சொல்லப்படவில்லை. ஊழுக்கு அளிக்கப்பட்ட இடம் கூட கடவுளுக்கு அளிக்கப்படவில்லைஆகவே கடவுள்வாழ்த்துப் பகுதி பின்னர் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்
இரண்டாவது வாதம், தேவநேயப் பாவாணர் வழிவந்தது. அவர் சொற்திரிப்புக்கு உலகளவில் நிகரற்றவர். ஆதிபகவன் முதலிய அனைத்துச் சொற்களையும் இலக்கணநெறிகளைக்கூட மீறி விருப்ப்படி பிரித்து எந்த விதப் பண்பாட்டுக்குறிப்புகளும் இல்லாமல் பொருள்கொண்டு அவை குறிப்பிடுவது இறைவனையே அல்ல என்றும் தொல்தமிழ் மூத்தார்வழிபாட்டை மட்டும்தான் என்றும் அவர் சொன்னார்.
உண்மை என்ன? நமக்கு திருக்குறள் எப்போது கிடைக்கிறதோ அப்போதே இறைவாழ்த்துடன் 1330 குறள்களுடன்தான் உள்ளது. அதன் எண்ணிக்கை பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதனால் அந்நூலின் அமைப்பு எளிதில் மாற்றப்படக்கூடியது அல்ல.
தமிழ்நூல்களில் சமண பௌத்தப் பின்புலம் கொண்ட நூல்களில் இடைச்செருகல்களும் பாடபேதங்களும் குறைவு. சமண பௌத்த மதங்கள் விரிவான எழுத்துமரபும் கல்விப்புலமும் கொண்டவை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சமண பௌத்த மதங்களின் சரிவுடன் அவையும் மறக்கப்பட்டு நீண்டநாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
கம்பராமாயணம் போன்றவற்றிலுள்ள இடைச்செருகல்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தாலும் மதம்சார்ந்த முக்கியத்துவத்தாலும் உருவானவை. காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற சமண பௌத்த நூல்களிலேயே குறள் தூயபிரதியாகவே நமக்குக் கிடைத்தது.
ஆகவே இறைவாழ்த்தை வள்ளுவர் எழுதவில்லை, இறைவாழ்த்தை அவர் பின்னால் எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு மிகச்சிறிய ஆதாரத்தைக்கூட நாம் இன்று கண்டடைய முடிவதில்லை
திருக்குறள் கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். 1500 ஆண்டுகள் பழைமை கொண்ட ஒரு பிரதியைப்பற்றி அப்படி ஆதாரபூர்வமாக ஏதும் சொல்லிவிடமுடியாது. அத்துடன் தமிழில் நமக்கு தெளிவாக வரலாறுகளைப் பேணும் வழக்கமும் இல்லை.
திருக்குறளை மட்டும் வைத்துக்கொண்டு இத்தகைய ஊகங்களை நிகழ்த்துவதெல்லாம் வெறும் தர்க்கவிளையாட்டு. எல்லா பழைய நூல்களும் அவ்வாறு சமகாலத்தில் வாசித்து அர்த்தப்படுத்தப்படுகின்றன. பல்வேறு கோணங்களில் வாசிப்பு நிகழ்கிறது. அவற்றுக்கிடையேயான ஒரு சமரசமாக அந்நூலுக்கான பொதுவாசிப்பு திரண்டு வருகிறது. இது முடிவடையாது நடந்துகொண்டே இருக்கும் ஒரு செயல்பாடு.
பொதுவாக மூலநூல்களை ஒவ்வொரு தரப்பும் தங்கள் நோக்குக்கு இழுக்க முயல்வது எங்கும் நிகழ்வதுதான். இந்திய மரபில் நமக்கு இவ்வாறு உரைகள் வழியாக மூலநூல்களை வளைத்துக்கொள்வது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைமுறையாகவே உள்ளது. பிரம்மசூத்திரமோ கீதையோ தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளால் வெவ்வேறுவகையில் உரைவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே குறள்சார்ந்தும் தொடர்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்
ஜெ
தீர்த்தங்கர்களை பணிந்தாலே மோக்ஷம் என்பது சமணக்கொள்கையா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
https://youtube.com/watch?v=REvikRsEqws
rnk
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.
இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.இராமாயணத்தை முழுமையாக தமிழில் தந்த கம்பன்வாலறிவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.முனிவர் என்ற பொருளிலே ஆள்கிறார். காசிபன் என்ற முனிவர்க்குமகனாய் வாமனாவதாரத்திலே மஹாவிஷ்ணு பிறந்ததைப் பாடும்போதுவாலறிவன் = முனிவர் என்று கம்பர் பாடியது:
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்.நீல நிறத்து நெடுந்தகை வந்து. ஓர்ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான் - கம்பன்விஷ்ணுவை ‘Solar deity' என்பர், விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள்என்பது வேதத்திலே உள்ள பொருள். விள்- என்ற தாதுவேரில் இருந்துவிண்ணு, விண்டு, விட்டு என்ற சொற்களாகி, விண்ணு > விஷ்ணு.வாமனன் ஆகி, திரிவிக்ரமன் ஆக வளர்தல் நாள்தோறும் சூரியன் செய்யும்செயல் என்று ஹிந்து சமய நூல்களிலே சொல்லப்படுவது.திருவள்ளுவர் அச் சூரியனின் செயல் போல மன்னன் உழைக்க அறிவுறுத்துகிறார்:
2017-09-20 16:16 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:ஹிந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகள், சைவமும் வைணவமும் ஆகும்.இந்த வாக்கியம் ஏன் இந்தப் பதிவில்?எனக்கு பதில் தரவேண்டும் என நினைத்தால் நேர்மையாக இக்கேள்வி எங்கு எழுந்ததோ அங்கே பதிய வேண்டியது தானே..சரி இந்து சமயத்தில் எத்தனை பிரிவுகள்? அவை எவை? யார் எந்த காலத்தில் எந்த நூலில் எழுதினார்? அதனை வெட்டி ஒட்டி இங்கு தரவும்.இந்தியாவின் இதிகாசங்கள் இரண்டு: ராமாயணம், மகாபாரதம்.இந்த விளக்கமும் இந்தப் பதிவிற்கு தேவையில்லையே.
Hinduism is a religion which accepts and absorbs the good and optimistic views and practices from the other religions in India
eg. when I went to amaranth last year I was shown the small carved image of Lord Buddha at the entrance of the cave above.so I'm sure it is a cave of the Buddhists once upon a time.now lakhs and lakhs of Hindus are visiting the cave shrine
//விஷ்ணுவை ‘Solar deity' என்பர், விஷ்ணு என்றால் சூரியனின் கதிர்கள்என்பது வேதத்திலே உள்ள பொருள். //
विष्णु [L=44345] [p= 0949-a] | vishṇu, us, us, u (in Uṇādi-s. III. 39. said to be fr. rt. 2. vish, ‘to pervade;’ according to some fr. rt. 1. viś), all-pervading, encompassing, pervading, penetrating (Ved); (us), m., N. of one of the principal Hindū deities, (in the later mythology regarded as ‘the preserver,’ and with Brahmā ‘the creator’ and Śiva ‘the destroyer,’ constituting the well-known Tri-mūrti or triad; although Vishṇu comes second in the triad he is identified with the supreme deity by his worshippers; |
தனது இறைவனை வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.அதனைச் சொல்கிறார்.
On Wednesday, September 13, 2017 at 11:16:00 PM UTC-7, N. Ganesan wrote:தனது இறைவனை வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.அதனைச் சொல்கிறார்.வாலறிவன் என்பதற்கு "இளவயதில் அறிஞராக மாறியவர்" என்பதும் ஒரு பொருள்.அத்தகுதிக்குரியவர் புத்தர்.பால = வாலஅரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).
பார்க்க:ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல்- ப. மருதநாயகம்பக்கம்: 163..... தேமொழிவாலறிவன், அறிவன் என்று வரும் சைவப் பாடல்கள் உண்டா? எந்த நூற்றாண்டு?யாப்பருங்கல விருத்தி மேற்கோள்:[நேரிசை ஆசிரியப்பா]
‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி [அசை]
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை [சீர்]
முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை [அடி]
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தரஃ தென்ப [எழுத்து]பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’.1திருந்தொளி அறிவன் = தூய்தான அறிவன் = வாலறிவன்.நா. கணேசன்
--
2017-09-21 21:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, September 13, 2017 at 11:16:00 PM UTC-7, N. Ganesan wrote:தனது இறைவனை வாலறிவன் என்று புகழ்கிறார் திருவள்ளுவர்.தூய்மையான ஞானம் பெற்றவன் - கேவல ஞானம் என்பது சமண சமயம்.அதனைச் சொல்கிறார்.வாலறிவன் என்பதற்கு "இளவயதில் அறிஞராக மாறியவர்" என்பதும் ஒரு பொருள்.அத்தகுதிக்குரியவர் புத்தர்.பால = வாலஅரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).நன்றி. பேரா. ப. மருதநாயகத்துடன் 3 நாள்கள் நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் இருக்கும் வாய்ப்பு அமைந்தது.ஒன்று குறிப்பிடவேண்டும். Baala என்ற வடமொழியின் சொல்லை வள்ளுவர் ”வால் அறிவன்” என்று பயன்படுத்திடவில்லை.வால் என்பது தூய தமிழ்ச்சொல். வால்அறிவன் - துறவி,முனிவர் என்று தீர்த்தங்கரருக்கு வள்ளுவர் ஆளும் சொல்லாகும்.இதனை, வள்ளுவர் வழியில் கம்பரும் உறுதிப்படுத்துகிறார்: மூன்று பாடல்கள் இவ்விழையில் கம்பரிடம் இருந்துகொடுத்துள்ளேன். வால் அறிவன் என்ற சொல்லுக்கு துறவி, முனி என்ற பொருளில் தான் கம்பரிலும் இருக்கிறது.வளையாபதி கடவுள் வாழ்த்திலும், வள்ளுவர் போன்றே தீர்த்தங்கரர் வாழ்த்தே உள்ளது. என் நூலகத்தில்இருந்து அட்லாண்டா பெரி. சந்திரா தட்டச்சி ப்ராஜக்ட் மதுரை தளத்தில் வளையாபதிச் செய்யுள்கள் முதன்முதலாகஇணையம் ஏறின.பகு-/வகு-. இதுபோல், பால்-/வால்- என்றாகும். வால்:வான் (வானம்). வெண்மையானது, தூய்மையானதுஎன்ற பொருளில் வால்அறிவன். வெண்பா - தூய்மையான பாவினம். இது Baala என்னும் வடசொல் இல்லை.வாலறிவன் என்ற குறள் அண்மைக்கால நூல் ஆகிய (சொர்ணம்பிள்ளை) இன்னிலையில் இருக்கிறது.அதுபோலவே, புராணங்களில் காணலாகும். காளைராசனுக்கு மணலூர் என்னும் பெயரை (வைஷ்ணவத்துடன் தொடர்புகொண்ட மணலூர். திருவிளையாடற்புராணத்தில் 17-ஆம் நூற்றாண்டில் வைஷ்ணவ தொடர்பு மாற்ற,
மணவூர் என்று சைவக் கதை ஏற்படுத்துகிறார் என விளக்கியுள்ளேன். பெரு மணலூர் பற்றிப் புதிய கல்வெட்டுகள்
கிடைத்துள்ளன.
மணலூரை ஏனோ கீழடி என்கிறார்கள். சிந்து சமவெளியாம்!! சாந்தலிங்கம் என்ன சொல்லியுள்ளார்