பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (19)-
விலைக்கு பெயர் உழைப்பாக இருக்கலாம் நமது நேரம் ஆக இருக்கலாம்
நமது ஆனந்தமாக இருக்கலாம் அல்லது அமைதியாகக்கூட இருக்கலாம் !
ஆனால் நமது அறிவின் திறத்தால் விலையை நமக்கு பொருத்தமாக
அதிகம் வருத்தம் வராமல் நிர்ணயிக்கலாம் !
தெரிந்தோ தெரியாமலோ நமதிர்ஷ்டமோ ,நமது
தாய் தந்தையரின் இஷ்டம் இல்லாமலோ நாம் பிறந்ந்து விட்டோம் !
நாம் பிறகு வாழும் வாழ்கையில் குறைந்த பட்சமாக தனக்கும் ,தனது குடும்பத்திற்கும் ,தன்னை நம்பிய மனைவிக்கும் ,தனது மக்கட்க்கும் ,
தனது தாய், தந்தை சகோதர சகோதரியர் முதலியோருக்கும் ,
அதிக பட்சமாக தன்னை சுற்ற்யுள்ள சமுதாயத்திற்கும்
அதற்கும் மேலாக உகலத்திற்க்கும் ஒரு நிரந்தர நன்மை
செய்தவர்களே சாதனையாளர்கள் எனப்படுவோர் .!
இதுவே சுதர்மம் எனப் படும் !இதை செய்வது முதல் கடமை !
நமக்கு அமையும் குடும்பம் , சுற்றம் மனைவி மக்கள்
அத்தனையும் அமைவது ஒரு கர்மக் கணக்குக்குடன்தான் ,
ஜனமஜன்மமாக அந்தக்கணக்கு தீராததால்
பாத்திரம் மாறி மாறி பிறக்கிறார்கள் !
நம் தாய் நமக்கு செய்யும் அன்பிற்கு உழைப்பிற்கும் ,
ஈடாக நம் மகளாக அடுத்து வரும் பிறவியில் பிறந்து
அந்தக் கடனிற்கு சமமாக நாம் பட்ட கடன் தீரும் வரை ,,
திரும்பத்திரும்ப பிறந்து நம்மிடம் வசூல் செய்தே தீருவர் !
பட்டகடன் தீர சில கடன் பட்டோர் ஆடு மாடாக ,
அடுத்தப் பிறவியில் வாங்கிய கடனை ஈடு செய்வர் !
இந்த வாழ்கையில் எல்லாமே ஒரு நியதிதான் !
எதுவும் தற்செயல் இல்லை !
ஆடு மாடும் ,வண்டி வாகனமும் ,நல்ல ஒரு சேவகனும்
அமைவது அதிக பணம் அமைவது மட்டும் காரணமா ?
அதிக பணம் படைத்தும் ஆதரவு இன்றி வாழும்
மக்கள் பலர் உலகினில் உண்டே !வாங்கிய கடனை
அடைக்கும் நிலையில் இருப்போர் பலர் இருப்பதால்
இப்பிறவியில் வாய்க்கிறது இந்த பாக்கியம் !
மறுபிறவியையும் ,காரண கரிய நியதியையும்
ஒப்புக்கொள்ளவிட்டால் ,இப்புவியில் நடக்கும்
பல காரியங்களின் காரணம் என என்பதை இயம்புவது கடினமே !
ஆயினும் உலகில் அத்துணை பேரும் நடக்கும்
காரியங்கள் அனைத்தின் காரணனத்துயும் அறியும்
அவாவில் இருக்கின்றனரா ?என்றால் அதுவும் இல்லை !
ஆயின் தான் செய்யும் காரியத்தின் அணைத்து
காரியத்தையும் ஆய்வதற்கு செய்யும் காரியத்தின்
விழிப்புணர்வு அவசியம் ! அத்தகைய விழிப்புணர்வே
என்றும் செய்யும் செயலை கூர்ந்து பார்க்கும் !
வாழும் நிகழ காலத்தை விழிப்புணர்வுடன் வாழும் !
அதுவே யோகம் ஆகும் !
யோகம் என்பது இணைப்பு அல்லது சேர்க்கை
என சித்தர்கள் பொருள் கொண்டுள்ளனர் !
நமது புலன்கள் எப்போதும் வெளியே செல்லும்
வழக்கம் கொண்டவை ! நமது மனமோ
என்றும் சென்ற காலத்தை எண்ணி , இழை இழையாக
எண்ணம் என்னும் நூலை விட்டுக்கொண்டும் ,
வரும் காலம் எனும் வராத ஒரு காலத்தை எண்ணி
கற்பனைக் கோட்டையை கட்டும் எண்ணத்தை,
மறுபுறம் விட்டுக்கொண்டும் இருக்கும் !
இந்த வெளியே செல்லும் கள்ளப் புலன்களை
அடக்கி உள்ளே செலுத்தியும் , நடக்கும் காரியத்தை விழிப்புணர்வுடன்
பாராமல் எண்ணத்தை இழை இழையாக விட்டுக்கொண்டிருக்கும்
மனத்தின் சித்தத்தை இணைப்பதே யோகம் ஆகும் !
யோகி என்றும் விழிப்புணர்வுடன் இருப்பவன் !
அவன் கற்ப்பனா வாதியல்ல !
சென்றதை எண்ணி புலம்பும் கோழையல்ல !
அவன் நாளையை நிர்ணயிக்கும் இன்றில்
இன்பமாக வாழ்பவன் ! இன்றைய வாழ்வை
நாளைய முதலீட்டாக ஆக்கத்தெரிந்தவன்!
இன்றைய வாழ்வில் முழு சக்தியுடனும் ,
அதன் சுவை அத்தனையும் சுவைத்தும் ,
கர்மங்கள் அனைத்தையும் மாய்க்கத்தேர்ந்தவன் !
செய்யும் கர்மத்தை சிறப்புடன் செய்யும் கர்மயோகி !
சித்தத்தை அடக்கியவனே சித்தன் !
அவனே யோகி ! வாழ்வில் காணும் வெற்றிகள் அனைத்தும்
வாழ்க்கையை ஒரு யோக மயமாக ஆக்கத்தெரிந்தவர்க்கே !
வாழ்க்கையின் வெற்றி வாழும் முறையறிந்த மனிதருக்கே !
சித்தர்களின் நூல்களே , பாடங்கலேயே ,பல குறியீடுகள் ,குழுவுக்குறிகள்
குருசிஷ்ய பாரம்பரியமாக வழங்கி வருகின்றன !
இதுவே வாழையடி வாழையாக சித்தர் வழியில்
விளங்கி வரும் சொற்களாகும் ! நாம் அதே மொழியை
உபயோகிக்கும் போது அந்த பரம்பரையின் இழை அறுபடாமல்
இந்த திருக்கூட்டத்தின் அருளுக்கு வாய்ப்பளிக்கிறோம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
//இனி எழுதுவதை *எனக்கு புரிந்தது இதுவே ! - பாகம் 2"
எனப் புதிய இழையில் எழுதினால் என்னைப்போல
சொடுக்கச் சோம்பல் படும் பிராணிகளுக்குச் சுகமாக இருக்கும்.
ரெ.கா.//
என்ன நடை! என்ன தெளிவு.
பிரவாகம்தான்.
வாழ்த்துக்கள்.
க.>
On May 12, 2:43 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> *பாகம் 2*
>
> *எனக்கு புரிந்தது இதுவே ! (19)-*
//நம் தாய் நமக்கு செய்யும் அன்பிற்கு உழைப்பிற்கும் ,
ஈடாக நம் மகளாக அடுத்து வரும் பிறவியில் பிறந்து
அந்தக் கடனிற்கு சமமாக நாம் பட்ட கடன் தீரும் வரை
திரும்பத்திரும்ப பிறந்து நம்மிடம் வசூல் செய்தே தீருவர் !
பட்டகடன் தீர சில கடன் பட்டோர் ஆடு மாடாக ,
அடுத்தப் பிறவியில் வாங்கிய கடனை ஈடு செய்வர் !//
’விட்ட குறை, தொட்ட குறை’ என்று பேச்சுவழக்கிலும்
சொல்கிறோம்; கடமை செய்யாமல் விட்ட குறை, தொட்டு அனுபவித்து அது நிறைவேறாத
குறை இவற்றின் தொடர்ச்சியே அடுத்தடுத்து அமையும் பிறவிகள்.
தேவ்
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (20)-
யோகம் எட்டிவிடும் தூரம் தான் !
யோகம் என்றால் சேர்க்கை ! பல பொருள்களை
வாழ்வில் சேர விழைகிறோம் ,ஆனால் அந்த சேர்க்கை எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை ! ஆதலால் மனம் என்றும் அலை பாய்கிறது !
முடிவான முழு முதல் பொருளுடன் சேர்ந்து விட்டதால்
அதுவே யோகம் ஆகும் !
ஒருமையில் உயிர்ப்பது யோகம் !உள்ளத்தில் நிலைப்பது
யோகம் ! காரிருள் மினலைப்போல் உள்ளே கனலிடும்
முற்று முதல் பொருளை காண்பது யோகம் ! யோகம் வசமானால்
இயற்கையும் வசமாகும் !உடலை கருவியாக கொண்டு
மனதையும் உள்ளதையும் உயிரையும் பணபடுத்தி
மூலத்தை காண்பதுவே யோகமாகும் .!
அஷ்டாங்க யோகம் எனும் எட்டுவித படிகள் மனிதன் தன
நிலையில் இருந்து தேவனாகும் முயற்சியின் வழியாகும் !
யோகம் என்னும் முடிவை எட்டும் வழியிலே தான் இருக்கு
வாழ்வின் இன்பங்கள் அனைத்தும் !முடிவை அடையும் வழி
என்ன எனக் காண்பது தான் அஷ்டாங்க யோகம !
மூலத்தை அடைவதை விட செல்லும் பாதை தான் முக்கியம்
என்பர் ஞானியர் ! செல்லும் பாதை சிறப்புடன் இருக்குமானால்
அதில் பயிலும் பாடங்கள் நம்மை வாழ்வின் உச்சத்திற்கு
கொண்டு போகும் ! எண்ணியவை யாவையும் கைகூடும் !
கனவு மெய்ப்படும் ! அல்லலும் இல்லை அரற்றலும் இல்லை !
என்றும் ஆனந்த மயமாக இருக்கும் வழி செல்லும் பாதையே நம்மக்கு
புரியவைக்கும் ! இனி அந்த எட்டு யோகம் என்ன எனப் பார்ப்போம் !
இயமம் ,நியமம் ,ஆசனம் , பிராணயாமம் பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி இவைகளே அட்டாங்க யோகம் எனப் படும் !இந்த எட்டு வழிகளையும் உறுதியான மனத்துடன் கடை பிடிப்பவன்
பிறப்பு இறப்பு எனும் சுழளில் இருந்து விடுபடுகிறான! ,
பயிலும் போதே உலகியலில் சீரும் சிறப்புமாக வாழும்
முறையையும் பயின்று விடுகிறான் !
இயமம் என்பது நாம் வாழும் வழியில் இருந்து தள்ள வேண்டியவை !
முதலில் தள்ளவேண்டியைகளை தள்ளினால் தான்
பெறவேண்டியவைகளை பெற இயலும் !
சிலை செய்ய கல்லில் இருக்கும் வேண்டாதவைகளை முதலில்
நீக்கியபின் தான் சிலையின் வடிவம் வெளிப் படும் !
இனி இயமத்தின் பத்து நீக்க வேண்டிய விதிமுறைகளைப் பார்ப்போம் !
இது யோகத்த்திற்கு மட்டுமல்ல ,வெற்றியை வேண்டும் மாந்தர்க்கும்
இதுவே படி ! இவை கொள்ளத்தகும் வடிவில்
இந்தப் பத்தும் தரப்பட்டுள்ளது !
கொல்லாமை பொய் சொல்லாமை கள்ளாமை,
காமமின்மை ,பொறையுடைமை ,உறுதியுடமை இரக்கம்
நேர்மை அளவோடு உண்ணுதல் ,அக,புறத்தூய்மை !
இதனையும் கொண்டால் இயமம் என்னும்
யோகத்தின் ஒரு படி ஏறலாகும் !
இனி நியமம் இதுவோ கொள்ளத்தக்கது தவறாது
கடைபிடிப்பது ஆன விதிகளை கூறுவதாகும் ! அவை
தவம் ஜபம் தானம் ,வேள்வி ,கேள்வி வழிப்பாடு என
குருமுகம் மூலம் தகுதிக்கு ஏற்ப விரியும் !
நியமம் கடை பிடிக்கும் வழி போதிக்கும் இரண்டாம் படி !
ஆசனம் யோகம் பயிலும் சாதகர்க்கு வரும் வாதனையில்
இருந்து தப்ப ஞானியர் தந்த சாதனம் ஆகும் ! இது ஒரு முன் எச்சரிக்கை !
தவம் பயிலும் போது ஆசனங்கள் மூலம் உடலின் நலனை
காப்பது மட்டுமன்றி தவம் இருக்கும் நேரத்தில்
இருக்கவேண்டிய இருக்கையின் உடலின் இருப்பையும் உணர்த்துவதாகும் !
ஞானியர் கண்ட அறிவுப்படி நமது வாதனை அனைத்திற்கும் ,
தவத்திற்கும் இடையூறாக இருப்பது ரஜோ குணமே !இது ஒரு சூடு ,இது மேலூங்கி செல்லாமல் ஒடுங்கச்செய்யும் சாதனமே ஆசனம் !
இவை முக்கிய ஆசனங்கள் எட்டும் ,இதர நூற்றுகனகானவைகள்
குருவின் திருவருளால் கற்கவேண்டியவை !
இந்த ஆசனங்கள் கைவப்பட்டவனே அட்டாங்க யோகத்தின்
அடுத்த படியே செல்ல முடியும் !
இனி அடுத்த படிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்
அன்புடன்
ஏ சுகுமாரன்
May 11, 10:43pm, annamalai sugumaran
’விட்ட குறை, தொட்ட குறை’ என்று பேச்சுவழக்கிலும்
சொல்கிறோம்; கடமை செய்யாமல் விட்ட குறை, தொட்டு அனுபவித்து அது
பிராணாயாமம்
இதற்க்கு முந்தயபகுதிகளிலேயே முச்சை பற்றி
விரிவாக பார்த்திருக்கிறோம் !
ஒரு குறிப்பிட்ட ஆசனத்திலிருந்து கொண்டு மூச்சை நெறிப படுத்துதலே
பிராணாயாமம் ஆகும் .யோகப் பயிற்ச்சியில் பிராணாயாமம்
என்னும் இந்த குதிரைப் பயிற்சியை நன்கு கற்று தெரிவிட்டால் ,அது
அவனுக்கு பேரின்பத்தை தருகிறது !என்றும் இன்ப மயக்கத்தில்
ஆழது இருக்கலாம் ! ஆயினும் இது குருவின் கருணையால்
அவரின் நேர் முகமாக கற்றல் மிக்க பயனளிக்கும் !
இதப் பற்றி இன்னும் விரிவாக தனியே பார்க்கலாம்
பிரத்தியாகாரம்
இது பிராணனை திசை மாற்றும் பயிற்சியாகும்
இறையுணர்வு இல்லாத போது மாயையில் சிக்கிய
உயிரை இறைவனின் பக்கம் திருப்புவது இது !
வெள்யே செல்லும் பிராணனை கட்டுப்படுத்தும்
போது மனமும் கட்டுப் படுகிறது !இப்பயிற்சி சில செரிகளுடன் கட்டுப்பாட்டுடன்
குருவின் முனிகள் சாதகரின் நிலைகெர்ப்ப செய்ய வேண்டிய ஒரு
முக்கிய படி பிரத்தியாகாரம் !
தாரணை என்பது மறித்தல்,நிலை நிறுத்துதல் ஆகும்
இதுவும் குருமுகமாகவே கற்க வேண்டிய மிக முக்கிய
நுட்ப்பமான யோக மார்கத்தின் படியாகும் !இதன் மூலம்
அகவுணர்வு சக்திகள் வலுப்பெறும் !
தியானம்
தியானம் என்பது ஒன்றை எண்ணுதல் ,ஒன்றையே எண்ணுதல் !
ஒன்றில் உள்ளம் ஒன்றிவிட்டால் வேறொன்றை அது பற்றாது !
அதுவே தியானம் ஆகும் ! இதை மனம் என்னும் திருவிளக்கை
ஏற்றுதல் என்பார் திருமூலர் ! இந்த தியானத்தை
பயிலத்தான் முன்னே கூறிய ஆறு படிகளும் கடந்து வந்தோம் !
இது ஆன்மீக வெற்றிக்கும் ,எண்ணிய எண்ணியவாறு பெறுவதற்கும்
இறைவன் வகுத்த ஒரே வழி ! இது நமது இந்திய ஞானியர்
நமது பாரதத்திற்கு தந்த கொடை! ஒரு ரகசிய ஞானம் !
இதுவரை முழுவதும் அவிழாத மர்ம முடிச்சு !
சமாதி
சமாதி என்பது சித்தர்வழி ஞானத்தில் யோகப் பயிற்சியின் உச்சநிலை
பெறுகின்ற மாபெரும் சக்தியை குறிக்கிறது !
இது உயிரும் இறைவனும் புணர்ந்த நிலை !
ஐக்கிய போத ஆனந்தம் எனும் பேரானந்த நிலை !
சித்தர் ஞானத்தின் இறுதி குறிக்கோள் இதுவே ஆகும் !
சமாதி கை கூடினால் வனமும் மண்ணும் இரையும் ஒன்றாகும் !
அவன் வேறு அது வேறு அல்ல !
இனி மனித வாழ்க்கையின் போக்கிலே மகத்தான மாறுதலை உண்டு பண்ணும் ஆற்றல் உடைய தியானத்தை பற்றியும் அத்துடன் இணைத்த அதன் துணை கருவிகளான மூச்சு , மனத்தை ,நாம் நம் வழி கொண்டு
எண்ணிய எண்ணிய வாறு பெறும் உறுதியான வழிகளை விரிவாகப்
பார்க்கலாம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (20)-யோகம் எட்டிவிடும் தூரம் தான் !
--
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (22)-
தியானம் , குரு சில குறிப்புகள் !
தியானம் என்ற சொல் இன்று உலகின் எல்லா பகுதி மக்களையும்
கவர்ந்திழுக்கும் ஒரு மந்திர சொல்லாக விளங்கி வருகிறது !
இதை ஒரு பயிற்சியாக உலகின் பல பாகங்களிலும்
இந்திய குருக்களாலும் மேலை நாட்டு மனவியல் படித்த மேதைகளாலும் மக்களுக்கு பல்வேறு வழிகலேயே போதிக்கப் படுகிறது !ஆனால் எத்தனை பேர்
இதன் முழு பலனை அனுபவித்துஅறிகிறார்கள் என்று பார்த்தால்
அதன் தொகை என்னவோமிக குறைவே .!இந்த தியானம் எனும் பயிற்சிக்கு
சில தகுதிகள் வேண்டும் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் !
மனம் வெறுமனே ஒரு பொருளில் குவிப்பது தியானமல்ல !
அது மன ஒருமைப்பாடுதான் !தியானத்தில் இருவகை உண்டு
உலகியல் ரீதியான தியானம் .,ஆன்மீக ரீதியான தியானம் !
முதல் பிரிவு மன அழுத்தத்தை குறைக்கிறது ரத்த அழுத்தத்தை குறைகிறது ,
நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு இவை வரப்பிரசாதம் தான் !
மற்றது ஆன்மீக தியானம் ,இதுவே உபாசனை எனப் படும் !
தியானம் என்பது ஒருமை அமைதி இவைகளை நோக்கிய ஒரு பயணம்
மன ஒருமைப்பாட்டில் செவி கண் போன்ற பொறிகள் அடக்கப் படாமல் இயங்கிவருக்ன்றன ! புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் படவில்லை !
ஆனால் தியான வேளையில் பிற பொறிகள் அடக்கப் பட்டு மனம் மட்டும் செயல் படுகிறது .புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் பட்டு விடுகிறது .
இனி இந்தத் தொடரில் அதிகமாக கூறப் பட்டு வரும் இன்னும் இரண்டு பொருள்களைப் பற்றி பார்த்துவிட்டு ,நாம் இதுவரை எதை நோக்கி வந்து கொண்டு இருக்கிறோமோ அதை விரிவாக ஆராயப் போகிறோம் ! ஏன் நாம் விரும்புவது எல்லாம் நடை பெறுவதில்லை ! பிரபஞ்ச மனம் ஏன் நமது ஆசைகளை புறக்கணி கிறது ? என்ற வினாக்களுக்கு விரிவான விடை காணப் போகிறோம் !எதிர்காலம் ஏன் நாம் விருபியவாறு இருப்பதில்லை ? என்ன செய்தால் அதை விரும்பியவாறு இயங்கச்செய்யலாம் ? அத்தனையும் விரிவாக விடை காணப் போகிறோம் !
அதற்க்கு இதுவரை படித்ததுதான் துணை செய்யப் போகிறது !
இனி இப்போது குரு ,ஆத்மா இவைகளைப் பற்றி சுருக்கமாக சில தகவல்களிப் பார்த்துவிட்டு பிறகு நமது தொடரின் மிக மிக்கிய கட்டத்திற்கு போகப் போகிறோம் .
அங்கே தான் பல புதிர்கள் விடுபட போகின்றன ! நாம் உடல் சம்பந்தப் பட்ட விஷயங்களை சற்று விரிவாக பார்ப்பதற்கு காரணம் ,ஒரு பொருளைப் பற்றிய ஆழமான அறிவு இருந்தால் தான் நாம் அதைக்கடந்து அதற்க்கு மேலே அடுத்ததற்கு செல்ல முடியும் .நாமும் உடலில் வெளிப்புறமாக செல்லும் புற உணர்வை சற்று ஒதிக்கி அக முக பிரயாணம் செய்ய நினைக்கிறோம் .எனவே உடலைப பற்றிய பரிபூரண அறிவு நமக்கு அவசியம் ஆகிறது .
குரு
சித்தர்கள் உலகிலே குரு எனும் சொல்லுக்கு மகிமை மிக்க உண்டு !
குரு என்றால் ஒழி அல்லது வெளிச்சம் எஅப் பொருள் !
குறும் ஆசிரியரும் வேறுவேறு ! ஆசிரியர் ஆயகலை அத்தனையும்
கற்றுத்தந்தாலும் , தன்னை பற்றிய உண்மையை வார்த்தைகளால்
கூறாமல் தொட்டு உணர்த்துபவரும் உள் பொருளாகிய பேருண்மையை
சுட்டிக்காட்டி ,பின் உள்ளே இருக்கும் குருவை தொழில் பட செய்பவர் !
ஆன்ம பாதையில் குருவின் பங்கு மேலானது !
குரு நெகில் சுட்டிக்காட்டாமல் பயணம் தொடரமுடியாது !
துரோணர் பாண்டவருக்கும்கவுரவர்களுக்கும் ஆசிரியறேத்தவிர குரு இல்லை !
அதனாலேயே செஞ்சோற்று கடன் தீர்க்க தவறு எனத்தெரிந்தும்
கவருவார்கள் பக்கம் போர் செய்ய நேர்ந்தது ! ஆனால் சத்குரு
கட்டுப் படுத்த முடியாதவர் ! அவர் கடவுளின் ரூபம் !
குருதான் சீடரை தேர்ந்தெடுக்கிறார் !தன வாழையடி வாழை
தொடர்பு அறுபடாமல் ஞானத்தை தகுந்த பாத்திரம் அறிந்து அளிக்கிறார் !
ஆனால் இவ்வுலகில் பல போலியான குருக்களும்
என்றும் இருக்கின்றனர் ,இருதிருக்கின்றனர் ,
எனவே தான் திரு மூலர் கூட ஒரு குருடன் மற்றோரூ குருடனுக்கு
எவ்வாறு வழிக்காட்ட முடியும் என்கிறார் !குருவின் வல்லமைக்கும் ,பெருமைக்கும்
இத்தனை முக்கியத்துவம் தரும் சித்தர்கள் குருவை போற்றிய பின் தான் தங்கள்
படிப்பபை தொடருவார் ! குரு வணக்கம் செயல்களின் வெற்றிக்கு உரம் !
குருஅருள் இல்லாமல் இதுவும் சித்திப்பது அரிது !
நினையாமல் நினைப்பது ,தூங்காமல் தூங்குவது போல் ,
சொல்லல் சொல்வது என ஒன்று உண்டு ! குரு
பல ஞான பேருண்மைகளை சொல்லல் சொல்வது வழக்கம் !
அவருடைய செய்யல் உடலே படம் நடத்தும் ! வார்த்தைகளுக்கு அங்கு வேலை இல்லை ! மொத்தத்தில் குரு இல்லாமல் ஞான மார்க்கம் இல்லை !
குருவின் பெருமை சொல்லிலடங்காது ! குருவே சரணம் !
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்
குருடும் குருடும் குழிவீழுமாறே--- திரு மூலர்
அடுத்து ஆன்மாவை பற்றி காணலாம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
குரு
சித்தர்கள் உலகிலே குரு எனும் சொல்லுக்கு மகிமை மிக்க உண்டு !
குரு என்றால் ஒழி அல்லது வெளிச்சம் எஅப் பொருள் !
குறும் ஆசிரியரும் வேறுவேறு ! ஆசிரியர் ஆயகலை அத்தனையும்
கற்றுத்தந்தாலும் , தன்னை பற்றிய உண்மையை வார்த்தைகளால்
கூறாமல் தொட்டு உணர்த்துபவரும் உள் பொருளாகிய பேருண்மையை
சுட்டிக்காட்டி ,பின் உள்ளே இருக்கும் குருவை தொழில் பட செய்பவர் !
ஆன்ம பாதையில் குருவின் பங்கு மேலானது !
குரு நெகில் சுட்டிக்காட்டாமல் பயணம் தொடரமுடியாது !
துரோணர் பாண்டவருக்கும்கவுரவர்களுக்கும் ஆசிரியறேத்தவிர குரு இல்லை !
அதனாலேயே செஞ்சோற்று கடன் தீர்க்க தவறு எனத்தெரிந்தும்
கவருவார்கள் பக்கம் போர் செய்ய நேர்ந்தது ! ஆனால் சத்குரு
கட்டுப் படுத்த முடியாதவர் ! அவர் கடவுளின் ரூபம் !
குருதான் சீடரை தேர்ந்தெடுக்கிறார் !தன வாழையடி வாழை
தொடர்பு அறுபடாமல் ஞானத்தை தகுந்த பாத்திரம் அறிந்து அளிக்கிறார் !
எழுத்துப் பிழை நீக்கிய பதிப்பு !
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (22)-
தியானம் , குரு சில குறிப்புகள்
தியானம் , குரு சில குறிப்புகள் !
தியானம் என்ற சொல் இன்று உலகின் எல்லா பகுதி மக்களையும்
கவர்ந்திழுக்கும் ஒரு மந்திர சொல்லாக விளங்கி வருகிறது !
இதை ஒரு பயிற்சியாக உலகின் பல பாகங்களிலும்
இந்திய குருக்களாலும் மேலை நாட்டு மனவியல் படித்த மேதைகளாலும் மக்களுக்கு பல்வேறு வழிகலேயே போதிக்கப் படுகிறது !ஆனால் எத்தனை பேர்
இதன் முழு பலனை அனுபவித்துஅறிகிறார்கள் என்று பார்த்தால்
அதன் தொகை என்னவோமிக குறைவே .!இந்த தியானம் எனும் பயிற்சிக்கு
சில தகுதிகள் வேண்டும் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் !
மனம் வெறுமனே ஒரு பொருளில் குவிப்பது தியானமல்ல !
அது மன ஒருமைப்பாடுதான் !தியானத்தில் இருவகை உண்டு
உலகியல் ரீதியான தியானம் .,ஆன்மீக ரீதியான தியானம் !
முதல் பிரிவு மன அழுத்தத்தை குறைக்கிறது ரத்த அழுத்தத்தை குறைகிறது ,
நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு இவை வரப்பிரசாதம் தான் !
மற்றது ஆன்மீக தியானம் ,இதுவே உபாசனை எனப் படும் !
தியானம் என்பது ஒருமை அமைதி இவைகளை நோக்கிய ஒரு பயணம்
மன ஒருமைப்பாட்டில் செவி கண் போன்ற பொறிகள் அடக்கப் படாமல் இயங்கிவருக்ன்றன ! புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் படவில்லை !
ஆனால் தியான வேளையில் பிற பொறிகள் அடக்கப் பட்டு மனம் மட்டும் செயல் படுகிறது .புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் பட்டு விடுகிறது .
இனி இந்தத் தொடரில் அதிகமாக கூறப் பட்டு வரும் இன்னும் இரண்டு பொருள்களைப் பற்றி பார்த்துவிட்டு ,நாம் இதுவரை எதை நோக்கி வந்து கொண்டு இருக்கிறோமோ அதை விரிவாக ஆராயப் போகிறோம் ! ஏன் நாம் விரும்புவது எல்லாம் நடை பெறுவதில்லை ! பிரபஞ்ச மனம் ஏன் நமது ஆசைகளை புறக்கணி கிறது ? என்ற வினாக்களுக்கு விரிவான விடை காணப் போகிறோம் !எதிர்காலம் ஏன் நாம் விருபியவாறு இருப்பதில்லை ? என்ன செய்தால் அதை விரும்பியவாறு இயங்கச்செய்யலாம் ? அத்தனையும் விரிவாக விடை காணப் போகிறோம் !
அதற்க்கு இதுவரை படித்ததுதான் துணை செய்யப் போகிறது !
இனி இப்போது குரு ,ஆத்மா இவைகளைப் பற்றி சுருக்கமாக சில தகவல்களிப் பார்த்துவிட்டு பிறகு நமது தொடரின் மிக மிக்கிய கட்டத்திற்கு போகப் போகிறோம் .
அங்கே தான் பல புதிர்கள் விடுபட போகின்றன ! நாம் உடல் சம்பந்தப் பட்ட விஷயங்களை சற்று விரிவாக பார்ப்பதற்கு காரணம் ,ஒரு பொருளைப் பற்றிய ஆழமான அறிவு இருந்தால் தான் நாம் அதைக்கடந்து அதற்க்கு மேலே அடுத்ததற்கு செல்ல முடியும் .நாமும் உடலில் வெளிப்புறமாக செல்லும் புற உணர்வை சற்று ஒதுக்கி அக முக பிரயாணம் செய்ய நினைக்கிறோம் .எனவே உடலைப பற்றிய பரிபூரண அறிவு நமக்கு அவசியம் ஆகிறது .
குரு
சித்தர்கள் உலகிலே குரு எனும் சொல்லுக்கு மகிமை மிக்க உண்டு !
குரு என்றால் ஒளி அல்லது வெளிச்சம் எஅப் பொருள் !
குருவும் ஆசிரியரும் வேறுவேறு ! ஆசிரியர் ஆயகலை அத்தனையும்
கற்றுத்தந்தாலும் , தன்னை பற்றிய உண்மையை வார்த்தைகளால்
கூறாமல் தொட்டு உணர்த்துபவரும் உள் பொருளாகிய பேருண்மையை
சுட்டிக்காட்டி ,பின் உள்ளே இருக்கும் குருவை தொழில் பட செய்பவர் !
ஆன்ம பாதையில் குருவின் பங்கு மேலானது !
குரு நேரில் சுட்டிக்காட்டாமல் பயணம் தொடரமுடியாது !
துரோணர் பாண்டவருக்கும்கவுரவர்களுக்கும் ஆசிரியறேத்தவிர குரு இல்லை !
அதனாலேயே செஞ்சோற்று கடன் தீர்க்க தவறு எனத்தெரிந்தும்
கவருவார்கள் பக்கம் போர் செய்ய நேர்ந்தது ! ஆனால் சத்குரு என்பவர்
கட்டுப் படுத்த முடியாதவர் ! அவர் கடவுளின் ரூபம் !
குருதான் சீடரை தேர்ந்தெடுக்கிறார் !தன வாழையடி வாழை
தொடர்பு அறுபடாமல் ஞானத்தை தகுந்த பாத்திரம் அறிந்து அளிக்கிறார் !
ஆனால் இவ்வுலகில் பல போலியான குருக்களும்
என்றும் இருக்கின்றனர் ,இருதிருக்கின்றனர் ,
எனவே தான் திரு மூலர் கூட ஒரு குருடன் மற்றோரூ குருடனுக்கு
எவ்வாறு வழிக்காட்ட முடியும் என்கிறார் !குருவின் வல்லமைக்கும் ,பெருமைக்கும்
இத்தனை முக்கியத்துவம் தரும் சித்தர்கள் குருவை போற்றிய பின் தான் தங்கள்
படைப்பை தொடருவார் ! குரு வணக்கம் செயல்களின் வெற்றிக்கு உரம் !
குருஅருள் இல்லாமல் இதுவும் சித்திப்பது அரிது !
நினையாமல் நினைப்பது ,தூங்காமல் தூங்குவது போல் ,
சொல்லாமல் சொல்வது என ஒன்று உண்டு ! குரு
பல ஞான பேருண்மைகளை சொல்லாமல் சொல்வது வழக்கம் !
அவருடைய செயல் உடலே பாடம் நடத்தும் ! வார்த்தைகளுக்கு அங்கு வேலை இல்லை ! மொத்தத்தில் குரு இல்லாமல் ஞான மார்க்கம் இல்லை !
குருவின் பெருமை சொல்லிலடங்காது ! குருவே சரணம் !
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்
குருடும் குருடும் குழிவீழுமாறே--- திரு மூலர்
அடுத்து ஆன்மாவை பற்றி காணலாம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்ளவேண்டாம் என்பது
நல்ல எச்சரிக்கை.
தேவ்
On May 15, 12:10 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> *எழுத்துப் பிழை நீக்கிய பதிப்பு !*...
>
>
சுகுமாரன்..என்ன அவசரம்? ஏன் எழுத்துப்பிழைகள் வருகின்றன? தியானம்
பற்றிப் பேசும் போது அது நிகழ்தல் கூடாதே!
நாவல் போல் கொண்டு செல்கிறீர்கள். இதைப்படித்து முடித்தவுடன் ஐஸ்வர்ய
லக்ஷிமி கொட்டப்போகிறாள் என்று பலர் காத்திருக்கிறோம் ;-)
க.>
நான் இந்தத் தொடர் நிறைவடையும் வரை வாயையும்
கையையும் கட்டிக் கொண்டிருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேனே!
ஆழ்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
ரெ.கா.
ஆகா! அதுவே பெரிய சாதகம்தான். தியானம்தான்.
எப்படி வாயைக்கட்டி சும்மா இருப்பது என்று எங்களுக்கும் கொஞ்சம்
சொல்லித்தாருங்கள்!
இருந்தாலும் நீர் சமர்த்தர்!
க.>
ஆத்மா எனும் ஆதாரம் !
ஸ்தூல உடல் ,சூக்ஷம உடல் காரண உடல் இவை முன்றிலும்
அதற்க்கு ஆதாரமாக அதன் ஜிவனாக விளங்கிவது ஆத்மா !
ஆத்மா இல்லாவிட்டால் மனம் வேலை செய்யாது !
மனமும் பிராணனும் ஆத்மாவின் இரு சகாக்கள் !
ஆத்மா அழிவற்றது !பந்தம் இல்லாதது !
ஆத்மா சத சித்து ஆனந்த ரூபம் கொண்டது
எங்கும் நிறைந்தது அஞானம் எனும் குறை இல்லாதது
சுத்த சைதன்யம் வடியுள்ளது .
அது சுய ஒளி கொண்டது ! தத்துவங்களுக்கு மேம்பட்டது !
உடலில் நடக்கும் சுக துக்கம் இலாப நஷ்டம் ,இவை அனைத்திற்கும்
ஒரு மௌன சாட்சியாக விளங்குவது !நம் உடலில் உள்ள
பொறிகள் கண் ,காது முதலியவை மனம் இல்லது இயங்காது !
அதற்க்கு மூல சக்தியாக விளங்குவது ஆத்மா !
ஆத்மா இருக்கிறது என்பதற்கு மிக சக்திவாய்த சாட்சி ,
மரணம் தான் ! மனிதன் மரணம் அடைத்தும் ஆத்மா இருப்பதில்லை !
நான் ,நீ ,அவன் என்பது இந்த உடலையல்ல ,
உடலில் மறைந்திருக்கும் ஒரு உயர்ந்த உறு
பொருள் தான் ஆத்மா !ஆத்மா மனிதனுக்கு
மட்டுமல்ல உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளிலும்
,ஏன் செடி கொடி,மரம் எல்லாவற்றிக்கும் ஆத்மா உண்டு !
மரணம் தேகத்திற்கு மட்டும் நடக்கும் செயலாகும் !
பழைய ஆடையை களைந்து புதிய ஆடையை உடுத்துவது போல்
ஆத்மா வேறுதேகம் சென்று குடியேறும் !
பஞ்ச பூதத்தினால் ஆனா உடலின் மூலம் விஷயங்களை
சாட்சியாக இருந்து அனுபவிக்கிறது !இந்த தேகத்தில்
எண்ணிய எண்ணங்களும் ,செய்த செயல்களும் குணங்களாக மாறுகிறது !
குணங்கள் ஆத்மா ஒரு உடலைவிட்டு பிரியும் பொது கூடவே பிரிந்து அதனுடன் செல்லும் ! அதுவே பிறவி குணங்கள் !புதிய பிறவியின் மூலதனம் !
காற்று ஒரு நந்த வனத்தின் வழியே வீசும் போது, அவ்விடத்தில் உள்ள நறுமணகளையும் கொண்டு செல்வது போல் ஆத்மாவும் ஒரு உடலில் வாசம் செய்து பிரியும் போது கர்ம வாசனைகளையும் சுஷும வடிவில் எடுத்து செல்லும் !
அதுவே எஜமானன் !அதற்க்கு மேல் எதுவும் நமது உடலில் இல்லை !
அதற்க்கு இந்த உடம்பு ,ஒரு தேர் போன்றது !உடலின் பத்து இந்திரியங்களும்
இந்தத் தேரின் குதிரைகள் ! இந்த ஜிவன் புருவ நடு ஆகிய இடங்களில்
சஞ்சரிக்கும் !
மனம் இல்லாமல் ,ஜீவன் இருக்கும் ஆனால் பிராணன் இல்லாமல்
ஜீவன் இராது ! இந்த ஜீவா சக்தியைத்தான் கண்ணன் பரா பிரகிருதி
அபரா பிரகிருதி என கீதையில் கூறுகிறார் !
ஆத்மா நேரடியாக எந்தப் பொருளையும் தொடர்பு கொள்ளமுடியாது !
ஆத்மாவிற்கும் புறப் பொருளுக்கும் இடையில் மனம் ஒன்று வேண்டும் !
அந்த மனம் அந்த புறப் பொருளின் வடிவை எடுக்கவேண்டும் ,
ஆத்மாவின் ஒளி இந்த விருத்தி அல்லது எண்ண அலையில் விழும் போதுதான்
அந்தப் பொருளைப் பற்றிய அறிவு உதயமாகிறது !
அனைவரிடத்திலும் தான் ஆத்மா உள்ளது ! அது ஒரே மாதிரியானது !
பின் மனிதரில் ஏன் இத்தனை வேறுபாடு ? மனிதனின் மனத்தில் எழும் எண்ண அலைகளின் விருத்தியின் வேறுபாடுதான் தான் மனிதருள் வேறுபாடு இருக்கக் காரணம் ! உள்ளத்தை தூய்மை படுத்துவதாலும் ,தியானத்தாலும்
விருத்தியை செம்மைப் படுத்தி தேவனாகும் முயற்சி கை கூடும் !
இனி அடுதப்பகுதியில் இன்னும் கொஞ்சம் கர்ம வினைகளிப் பற்றி பார்த்துவிட்டு
அடுத்து மிக முக்கிய பகுதிக்கு செல்லலாம் ! அங்கே அஷ்ட லக்ஷ்மியும்
கொட்டக் காத்திருக்கிறதோ இல்லையோ , ஒவ்வருக்கும் ஒவ்வொரு அஷய பாத்திரம் நிச்சயம் கிடைக்கும் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
On May 15, 7:42 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> நான் இந்தத் தொடர் நிறைவடையும் வரை வாயையும்ஆகா! அதுவே பெரிய சாதகம்தான். தியானம்தான்.
> கையையும் கட்டிக் கொண்டிருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேனே!
> ஆழ்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
>
--
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (24)-
சமஸ்காரம -- ஆசை எனும் வேகம்
சமஸ்காரங்கள் என்பது முன் அனுபவங்களின் புதைப் பதிவுகள் !
இதில் முறப்பிறவி அனுபவங்களும் அடங்கும் !
இந்த சமஸ்காரங்கள் செயலற்ற மந்தப் பதிவுகள் அல்ல !
இவை சக்தி வாய்ந்த மன ஆற்றல் மண்டலங்களாகும் !
ஓடுகின்ற நதி எப்படி பாறைகளில் முட்டி மோதி
கிளை கிளையாக ஆற்றலுடன் பிரிகிறதோ அப்படியே
மனதில் தோன்றும் எண்ண ஓட்டமும் சமஸ்காரத்தால்
முட்டி மோதி கிளை கிளையாக கிளைததோடுகிறது !சிதைவுறுகிறது !
இதுவே உணர்வு தடைகள் எனவும் கூறப் படுகிறது !
மேலை நாட்டு உளவியல் அறிஞர் பராய்டு மனம் பற்றி இரண்டு முக்கிய
முடிவுகளை கூறுகிறார் ! ஒன்று மனம் முழுவதும் நம்
உணர்வாதிக்கத்தில் இல்லை !ஒரு சிறு பகுதியின்
செயல் பாடுகளையே நாம் உணர்கிறோம் !உணரும் பகுதியை
உணர்வு பகுதி எனவும் , உணர்வாதிக்கத்தின் கிழ் இல்லாத பகுதியை
உணர்வறு பகுதி என்கிறார் !
இதையே நமது சித்தர்களும் ரிஷிகளும் உணர்த்திருந்தனர் !
அவர்கள் நம் மனம் முழுவதும் உணர்வற்ற ஜடம் என்றனர் !
ஆன்மா மட்டுமே உணர்வு பொருள் ! ஆன்மாவின் ஒளியால்
ஒளிர்கின்ற பகுதியே நம் மனதின் உணர்வு பகுதி !
தமஸ் மேலோங்கிய எஞ்சிய உணவுறு பகுதி சித்தம் எனப் படுகிறது !
இதில் ஆன்மாவின் ஒளி படுவதில்லை !இந்த உணர்வுறு பகுதியில் தான்
சமஸகாரங்கள் புதைந்துள்ளன !இந்த சமஸ்காரத்தை துணை கொண்டுதான்
சித்தம் முடிவுகளை எடுக்கிறது ! சித்தத்தை நீக்குவதே யோகம் !
சித்தத்தில் ஆன்மாவின் ஒளி படச்செய்வதே யோகம் !
இதைத்தவிர சத்துவ குணம் மேலோங்கிய வேறு ஒரு பகுதி மனத்தில் உள்ளது !
இதுவே உயர்த்து ! இதுவே புத்தி எனப் படுவது !ஆன்மீக பேறுணர்வுகள்
இங்கிருந்துதான் தோன்றுகின்றன !இதுவே ஆன்மா !
சமஸ்காரத்தை இருவகையாக பிரிக்கிறார் பதஞ்சலி !
கர்மபீஜம் ,வாசனை இவை இரண்டும் சமஸ்காரத்தின் வகை !
கர்மபீஜம் ஆசைகளையும் ,உணர்ச்சி வேகங்களையும் தூண்டுகிறது !
வாசனை நினைவை எழுப்புகிறது !
ஒவ்வொரு செயலும் மனதில் ஒரு சமஸ்காரத்தை கர்ம பீஜத்தை உண்டாக்குகிறது !
அந்த சமஸ்காரங்கள் எழும்போது நாம் அதே செய்யலை
செய்யத் தூண்டப் படுகிறோம் ! இந்த தூண்டுதலையே நாம் ஆசை , வேகம் எனக் கூறுகிறோம் ! செய்யும் ஆயிரம் செயலுக்கு தக்க கர்மபீஜம் சேர்கிறது .
இந்த கர்மபீஜத்தின் மொத்த தொகுதியே கர்மாசயம் எனப் படுகிறது !
அடுத்த பிறவி ,அதற்கேற்ற உடல் ஆயுள் ,அனுபவங்கள்
அதனையும் கர்மாசயம் முடிவு செய்கிறது .
ஒவ்வொரு செய்யலும் , ஒரு அனுபவத்தை நம்மிடம் உண்டாக்குகிறது !
ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு சமஸ்காரத்தை மனதில் உருவாக்குகிறது !
இந்த அனுபவத்தின் சமஸ்காரம வாசனை எனப் படுகிறது !
புரிகிறதா ? செயலின் சமஸ்காரம கர்மபீஜம் !
அந்த செய்யலால் நாம் பெறும் அனுபவத்தின் சமஸ்காரம வாசனை !
செயல் ஆசையை தூண்டுகிறது ! செய்யசெய்ய ஆசை !
அனுபவம் வெறும் நினைவை தூண்டுகிறது ! நினைவுடன் நின்றால்
தப்பில்லை ! ஆனால் வேகம் கெடுக்க வேண்டும் !
வாசனையும் கர்மபீஜத்தின் தொடர்பை துண்டிக்க வேண்டும் !
செயலும் அனுபவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை !
ஒன்று தூண்டப்பட்டால் அது மற்றதை தூண்டுகிறது !
இவ்வாறு செய்யலும் அனுபவமும் , கர்மபீஜமும்
வாசனையும் முடிவின்றி சுற்றி சுழலும் வட்டத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது !
ஆன்மீக வாழ்வின் முக்கிய நோக்கம் இந்த வட்டத்தை துண்டிப்பதே !
இந்த வேகங்களும் நினைவுகளும் பிணைவது, அதாவது
கர்மாசயமும் வாசனையும் இணைவதுதான் நம் பிரச்சனை !
இந்த ஆசை மனத்தின் உணர்வுறு பகுதியில் இருந்து
நினைவுகளின் மேல் பாய்ந்து பற்றிக்கொண்டு
மனதின் உணர்வு பகுதியில் தோன்றுகின்றது !
இது நிகழ்ந்ததும் இந்த செய்யலால் ஏற்ப்பட்ட
கடந்த கால வடுக்களை பற்றியோ ,
எதிர்கால விளைவுகளைப் பற்றியோ ,
சிறிதும் சிந்திக்காமல் ஒரு அடிமையைப் போல்
அந்த செய்யலை மீண்டும் செய்யகிறோம்!
இதற்க்கு என்னதான் வழி ?
நினைவு -வேக பிணைப்பை எப்படிதுண்டிப்பது ?
வழிஇல்லாமலா இருக்கும் ?
இதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம் ?
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
பாகம் 2எனக்கு புரிந்தது இதுவே ! (23)-
On May 16, 10:35 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> ஆத்மா அழிவற்றது !பந்தம் இல்லாதது !
> அது சுய ஒளி கொண்டது ! தத்துவங்களுக்கு மேம்பட்டது !
> உடலில் நடக்கும் சுக துக்கம் இலாப நஷ்டம் ,இவை அனைத்திற்கும்
> ஒரு மௌன சாட்சியாக விளங்குவது !
> குணங்கள் ஆத்மா ஒரு உடலைவிட்டு பிரியும் பொது கூடவே பிரிந்து அதனுடன் செல்லும்
> ! அதுவே பிறவி குணங்கள் !புதிய பிறவியின் மூலதனம் !
>
> காற்று ஒரு நந்த வனத்தின் வழியே வீசும் போது, அவ்விடத்தில் உள்ள நறுமணகளையும்
> கொண்டு செல்வது போல் ஆத்மாவும் ஒரு உடலில் வாசம் செய்து பிரியும் போது கர்ம
> வாசனைகளையும் சுஷும வடிவில் எடுத்து செல்லும் !
ஆன்மா மௌனசாட்சியென்றால் அது வாசனையை எப்படிப் பெறுகிறது?
அது தத்துவங்களுக்கு மேற்பட்டது எனில், அது மீண்டும், மீண்டும் சட்டை
மாற்ற வேண்டியதேன்?
எங்கோ முரண்படுவது போல் தோன்றுகிறது.
ஆத்மா, பரமாத்மா பற்றிச் சொல்லும் உபநிஷத், `ஒரு பறவை மரத்திலுள்ள கனியை
உண்டு இளைக்கிறது, மற்றது உண்ணாமல் செழிப்பாக இருக்கிறது` என்று
சொல்கிறது.
க.>
உடல் ஐம்புலன்கள் மனம் புத்தி மூலப்பிரகிருதி ஆகியவற்றிலிருந்து
மாறுபட்டு ,ஆனால் அவற்றால் ஏற்ப்படும் மாற்றங்களை கண்டு ,அரசனைப் போல் சாக்ஷியாக ஆத்மா உள்ளது என அறிய வேண்டும் ---- ஆதிசங்கரரின் ஆத்ம போதம் --- 18
இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஆத்ம சொருபமே ,ஆத்மாவைத் தவிர வேறு யாதும் இல்லை , மண்ணை காட்டிலும் வேறாக குடம் இல்லை .,அது போன்று அனைத்தும் ஆத்ம சொருபமாகவே அவன் பார்க்கிறான் ----ஆதிசங்கரரின் ஆத்ம போதம் --- 49
இவைகள் ஆதிசங்கரரின் ஆத்ம போதம் நூலில் மிகச் சிறப்பாக உள்ளது .
தொடரின் இறுதியில் சில தொடர்பு நூல்களை குறிப்பிட இருந்தேன் .
சமஸ்க்ருதத்தில் எழுத இயலாததால் அதில் தந்துள்ள வரிக்கு வரி பெயர்ப்பை தந்துள்ளேன் .
உபாதிகள் அகன்றவுடன் ஜிவாத்மா பரமாத்மா வேறுபாடு சிறிதும் கிடையாது
கங்கையில் சிறிது நீரை எடுத்து சிறிது நேரம் கழித்து கங்கையில் விட்டால் அது கங்கையுடன் இரண்டற கலக்கும் .நிர்விஷேஷம் !
உங்கள் கேள்விகளுக்கு நாம் இப்பிரபஞ்சத்தின் மூலத்தை மாயைப் பற்றி அதிகம் பேச வேண்டும் .
ஆனால் இந்த தொடரின் நோக்கம் , இந்த உலகில் பிறந்த உயிர்கள் எங்ஙனம் உலக வாழ்வில் இன்பமாக தனக்கு தரப் பட்டுள்ள உடலைக் கொண்டு வாழ்வது , இந்த உடலின் அதிக பட்ச பயனை அடைவது ,வாழும் போதே அணைத்து இன்பங்களையும் துய்த்து சந்தோஷத்துடன் தனது குறிக்கோளான ஒரு படி மேலே எவ்வாறு செல்வது என்பதைப் பற்றியது .
மேலும் அதற்க்கு தடையாக இருக்கும் கர்ம சுழலில் இருந்து விடுபடுவது ,எவ்வாறு
தடைகளை நீக்கவோ , அல்லது குறைக்கவோ செய்வது போன்றவற்றை பற்றி
விவாதிக்கும் ஒரு சிறிய முயற்சி !அதற்க்கு முனோடியாக உடலை பற்றியும்
பிற தத்துவங்களைப் பற்றியும் சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டி உள்ளது .
நன்றி !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
On May 16, 10:35 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> ஆத்மா அழிவற்றது !பந்தம் இல்லாதது !> அது சுய ஒளி கொண்டது ! தத்துவங்களுக்கு மேம்பட்டது !
> உடலில் நடக்கும் சுக துக்கம் இலாப நஷ்டம் ,இவை அனைத்திற்கும்
> ஒரு மௌன சாட்சியாக விளங்குவது !
>
//குணங்கள் ஆத்மா ஒரு உடலைவிட்டு பிரியும் பொது கூடவே பிரிந்து அதனுடன் செல்லும்
> ! அதுவே பிறவி குணங்கள் !புதிய பிறவியின் மூலதனம் !
>
> காற்று ஒரு நந்த வனத்தின் வழியே வீசும் போது, அவ்விடத்தில் உள்ள நறுமணகளையும்
> கொண்டு செல்வது போல் ஆத்மாவும் ஒரு உடலில் வாசம் செய்து பிரியும் போது கர்ம
> வாசனைகளையும் சுஷும வடிவில் எடுத்து செல்லும் !//
இவை ஆத்மாவுடன் செல்லும் தொகுதிக்குத்தான் மனம் என்று பெயர் ! மனம் ஆத்மாவுடன் வரும் அதனுடன் திரும்பி செல்லும் ! வரவு செலவு கணக்குடன் !ஆத்மா என்றும் பரிசுத்தம் தான் ! ஆத்மாவுடன் சேர்ந்து இருக்கும் மனம் மாயும் வரை ஆத்மா சட்டையை மாற்றும் .
சட்டை பழுது அடைவதால் ஆத்மா சட்டையை மாற்றுகிறது !
ஆத்மா ஏன் வடிவெடுக்கிறது ? ஏன் மனத்தின் சமஸ்காரம் ? முதல் சமஸ்காரம் எப்போது ? என்பதெல்லாம் .வேறு தலைப்பில் விரிவாக பேசவேண்டியவை !
//ஆத்மாவிற்கும் புறப் பொருளுக்கும் இடையில் மனம் ஒன்று வேண்டும் !
அந்த மனம் அந்த புறப் பொருளின் வடிவை எடுக்கவேண்டும் ,
ஆத்மாவின் ஒளி இந்த விருத்தி அல்லது எண்ண அலையில் விழும் போதுதான்
அந்தப் பொருளைப் பற்றிய அறிவு உதயமாகிறது !
அனைவரிடத்திலும் தான் ஆத்மா உள்ளது ! அது ஒரே மாதிரியானது !
பின் மனிதரில் ஏன் இத்தனை வேறுபாடு ? மனிதனின் மனத்தில் எழும் எண்ண அலைகளின் விருத்தியின் வேறுபாடுதான் தான் மனிதருள் வேறுபாடு இருக்கக் காரணம் ! உள்ளத்தை தூய்மை படுத்துவதாலும் ,தியானத்தாலும்
விருத்தியை செம்மைப் படுத்தி தேவனாகும் முயற்சி கை கூடும் !//
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
உடல் ஐம்புலன்கள் மனம் புத்தி மூலப்பிரகிருதி ஆகியவற்றிலிருந்து
> ஆத்மா அழிவற்றது !பந்தம் இல்லாதது !
> அது சுய ஒளி கொண்டது ! தத்துவங்களுக்கு மேம்பட்டது !
> உடலில் நடக்கும் சுக துக்கம் இலாப நஷ்டம் ,இவை அனைத்திற்கும்
> ஒரு மௌன சாட்சியாக விளங்குவது !
>
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
வேகம் கெடுக்கும் வித்தை !
மனிதன் தனது மனத்தின் சமஸ்காரத்தின் காரணமாக
கண்டத்தையே காணவும் , தின்றதையே தின்னவும்
பெற்றதையே பெறவும் விரும்புகிறான் ,இதனால் பழைய செயல்களையே திரும்ப செய்யும் இச்சையினால் ,செய்ததையே செய்கிறான் ! இதற்க்கு
மனத்தின் சமஸ்காரத்தின் கர்மபீஜங்களும் ,வாசனையும் காரணமாக அமைகிறது !
வாசனைகள் நினைவையும் ,கர்ம பீஜங்கள் செய்யலுக்கு வேகமும்
அளிக்கிறது ! எனவே புதிய செயல் செய்வது சாத்தியமில்லாமல் போகிறது !
இந்த வட்டத்தில்லேயே வாழ்வு கழிகிறது .
சமஸ்காரத்தின்அங்கமான நினைவுகளால் எந்த தீங்குகளும் இல்லை ,
நினைவுகள் உத்வேகங்களுடன் இணையும் போதுதான் பிரச்சனையே ஆரம்பம் ஆகிறது ! புகைப்பதில் இருக்கும் இன்பத்தைப் பற்றிய விளம்பரம் பார்த்தவுடன் ,
தான் முன்பு அனுபவித்த புகைத்தல் இன்பம் நினைவுக்கு வருகிறது ,
அது வேகத்துடன் சேருவதற்கு முன்னால் , மருத்துவர் சொன்ன புகைத்தால் இறந்துவிடுவாய் எனும் எச்சரிக்கை பயம் எனும் உணர்ச்சியாக வந்து அது கர்மபீஜம் எனும் செயலுடன் கூடிய வேகத்துடன், நினைவு சேராமல் தடுக்கிறது ! இந்த விதமாக அவன் வேகம் இல்லாமல் சிகிரட்டை பற்றி நினைக்க மட்டும் முடிகிறது ! இதுவே பயம் எனும் உணர்வு கொண்டு சிகிரட்டை பிடிக்கும் ஆசை எனும் வேகத்தை தடுக்கும் வழி ! ஒன்றை ஒன்றால் வெல்லுவது !
இதனால் நாம் முன்பு செய்த அதே கர்மத்தை செய்யும் ஆபத்தில் இருந்து தப்பித்துவிடுகிறோம் ! மேலும் ஒரு சமஸ்காரம் மீண்டும் பதிவு ஆவது குறைகிறது !சமஸ்காரத்தை தூய்மைப் படுத்துவது தான் மனத்தை தூய்மை
படுத்துவது ஆகும் ! இதில் முதல் வழி தவம் !
தவம் என்பது உத்வேகங்கள் தூண்டும் செயல்களை தவிர்த்தல் !
அந்த சூழ்நிலையை தவிர்த்தல் !இப்படி தொடர்ந்து செய்ய
வேகங்கள் பலகீனப் படும் ! தவம் என்பது தவறாமல் செய்யவேண்டும் !
அடுத்தவழி தொடர்ந்து நற்கருமங்கள் செய்தல் !
இதன்மூலம் மனதில் நல்ல சமஸ்காரங்கள் உருவாக்குதல் !
நல்ல சமஸ்காரங்கள் புதியதாக தொடர்ந்து உருவாகும் போது
தீய சமஸ்காரங்கள் தலை தூக்காமல் தடுக்கப்படுகின்றன !
காலப் போக்கில் அவை மிக அடியே போய், வலுவிழக்கும் !
மேலும் ஒரு வழியை பதஞ்சலி கூறுகிறார் !
மனத்தில் தோன்றும் உருவங்கள் மனதை வெகுவாக பதிக்கிறது !
தீய உத்வேகங்கள் எழும் போது அவற்றை தெய்வீக மனிதர் ஒருவருடன்
இணைத்தால் அந்த வேகங்கள் ஒரு கட்டுக்குள் வரும் !எப்படி கெட்ட
வேகங்கள் எழும் போது ,அவற்றை நல்ல உணர்ச்சியுடன் இணைத்தால்
அவை அடங்கும் ! இந்த இயல்பை மாற்றுவதற்கு பிரதிபட்ச பாவனம் என்பர் .
ஆனால் இதற்க்கு தொடர்ந்த விழிப்புணர்வு தேவை !
மேலும் ஒரு வழி உண்டு சற்று கடினம் , தியானத்தால் மட்டுமே
கைகூடும் !அது நான் எனும் சுயேச்சை உணர்வை விலக்குவது!
சாதனைகள் மூலமே இது கை கூடும் !இதை இறுதியில் பார்ப்போம் .
கர்மபீஜத்தால் தோன்றும் உத்வேகம் பொதுவாக மூன்று வகைப் படும்
அவைகள் ஒன்று பொருள்களை நோக்கி , அவைகளுக்கு எதிராக
அல்லது அதை விலக்கிவிடுதல் ! இவை முறையே ராக் த்துவேஷ் , பயம் !
பற்று வெறுப்பு ,அச்சம் இவையே வெளிப்பாடு ! பொதுவாக வாசனையால்
வரும் நினைவுகள் அல்லது உருவங்கள் நடுநிலைமை ! ஆனால் கர்மபீஜதின் உத்வேகத்தை பெறும் போதுதான் அவை நல்ல தீய நிறம் பெறுகின்றது !
எனவே கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றினால் பயமோ ,சோர்வோ இல்லாது
அவைகளை கெட்ட உத்வேகத்தில் இருந்து பிரிக்கவேண்டும் !
ஆன்மாவை நினைவில் இருந்து பிரித்துவிட்டால் நினைவு மறைந்து விடும் !
நம் மனதில் இருக்கும் சமஸ்காரத்தை நாம் எப்போது உணர்கிறோம் !
மனதில் என்ன என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியுமா ? இல்லை !
அவை எண்ண அலைகளாகிய பின்னரே அறியமுடிகிறது ! நினைவுகளும் ,உத்வேகமும் எண்ண அலைகளின் வேறு வடிவங்கள் ஆகும் !
இவைகள் தோன்றும் போதே முளையிலேயே கிள்ளப் படவேண்டும் !
இவை எப்போது செய்யல் படத்தொடங்குகிறது ? நம் மனதில் பதிந்துள்ள
சமஸ்காரங்கள் பிரபஞ்ச ஆற்றல் பாயத்தும் செய்யல் படத்துவங்குகிறது !
அந்த பிரபஞ்ச ஆற்றல் தான் பிராணன் ! பிராணன் என்பது காற்று மட்டும் அல்ல !
ஆனால் காற்றின் சக்தி ! வாசனை கர்மபீஜம் இரண்டையும் பிராணன்
தூண்டி செயல் படுத்துகிறது ! வாசனை ஏற்படுத்தும் நினைவுகள்
மனத்தின் மேல்பகுதியைமட்டும் பாதிக்கிறது ! ஆனால் கர்மாசயம் உண்டாக்கும்
ஆசைகளும் உத்வேகங்களும் மனம் முழுவதும் ஆட்டிப் படைகின்றன !
தியானத்க்தால் மனத்தின் மேற்ப்பரப்பில் எழும் தூலவிருத்திகளை மட்டும்
கட்டுப் படுத்த முடியும் என பதஞ்சலி கூறுகிறார் !
மனதை கட்டுப் படுத்த பிராணாயாமமும் ஒரு நிலையான வழியல்ல !
பிராணாயாமம சமஸ்காரத்தை கட்டுப்படுத்துமேத் தவிர அழிக்காது !
பிராணாயாமம செய்யாதபோது சமஸ்காரம மீண்டும் முளைக்கும் !
அப்படியானால் உணர்ச்சி போராட்டங்களால் தூண்டப்பட்ட மனத்தை
எப்படி சீராக்குவது ! அதற்க்கு ஒரே வழி கர்மாசயத்தின் செயல் பாடுகளை
கட்டுப்படுத்துவதே ஒரே வழி என்கிறார் பதஞ்சலி ! செயல் பாடுகளைக் கட்டுப் படுத்த அவை செயலாற்றும் முறையை சரிவர அறியவேண்டும் !
இவைகளை சரிவர விளக்கத்தவறி இருந்தால் பொறுத்தருள்க ! குறையுண்டு !
நான் சற்று சுருக்கமாகவே கூறுவதாக உணர்கிறேன் .!
எனினும் சேர்ந்து பயில முயற்சிப்போம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
//குணங்கள் ஆத்மா ஒரு உடலைவிட்டு பிரியும் பொது கூடவே பிரிந்து அதனுடன் செல்லும்
> வாசனைகளையும் சுஷும வடிவில் எடுத்து செல்லும் !//
> ! அதுவே பிறவி குணங்கள் !புதிய பிறவியின் மூலதனம் !
>
> காற்று ஒரு நந்த வனத்தின் வழியே வீசும் போது, அவ்விடத்தில் உள்ள நறுமணகளையும்
> கொண்டு செல்வது போல் ஆத்மாவும் ஒரு உடலில் வாசம் செய்து பிரியும் போது கர்ம
இவை ஆத்மாவுடன் செல்லும் தொகுதிக்குத்தான் மனம் என்று பெயர் ! மனம் ஆத்மாவுடன் வரும் அதனுடன் திரும்பி செல்லும் ! வரவு செலவு கணக்குடன் !ஆத்மா என்றும் பரிசுத்தம் தான் ! ஆத்மாவுடன் சேர்ந்து இருக்கும் மனம் மாயும் வரை ஆத்மா சட்டையை மாற்றும் .
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (26)-
மேலும் மேலும் அனுபவம் !
இந்த உலகில் மனதைவிட ஆச்ச்சிரியமான
ஒரு வஸ்து இருக்கிறதா ? சந்தேகமே !
பிரபஞ்ச ரகசியத்தின் மொத்த அறிவும்அதன்
ஆழத்தில் தானேபுதைந்து கிடக்கிறது !
தியானம் செய்ய விருபுபவர் ,இந்த மனம் எவ்வாறு
செயல் படுகின்றது ?என்பதை முதலில் விரிவாக அவசியம்
தெரிந்து கொள்ளவேண்டும்
இந்த உடலுக்கு நாம் சொந்தக்காரர் என்றாலும்
இந்த மனதிற்கு நாம் மட்டுமே சொந்தக் காரர் இல்லை !
இந்த மனம் ஜன்ம ஜன்மமாக யார்யாரோ உருவாகியது !
இப்போது நம்மிடம் வந்திருக்கிறது !நம்மிடம் என்றால்
இந்த ஜன்மத்தில் இந்த உடலில் இருக்கும் உயிரை தான் குறிக்கும் .
இந்த ஜீவாத்மாவும் இதற்க்கு முன் பல உடலைக் கண்டது !
மனதின் பதிந்துள்ள சமஸ்காரங்களின் படி
பெரும்பாலும் வாழ்ந்து ,மீண்டும் சில பதிவுகளை
அதேமாதிரியே சேர்த்துக்கொண்டு ,மீண்டும் மீண்டும்
இந்த பிறப்பு இறப்பு வட்டத்தில் இருந்து வருகிறது !
நமக்கு துணைப் பாத்திரமாக நமது வாழ்வில் நாம்
சந்திக்கும் நண்பர்கள் மனைவி மக்கள் ,தாய், தந்தை
பிற உறவினர் என நம்முடன் கொடுக்கல் வாங்கல்
உறவு உள்ள உயிர்களும் நமது சுழலில் பிறந்து வாழ்ந்து வருகின்றனர் !
இதையே தொட்ட குறை விட்ட குறை எனப்படும் .
இதில் நாம் வளர்க்கும் மிருகங்களும் ,
நம்மைச்சுற்றி உள்ள i,தெரு பிராணிகளும் அடங்கும் .
நாம் நமது சமஸ்கார பதிவில் இருக்கும் கர்ம பீஜத்த்தின் படி மீண்டும் ,பழைய மாதிரி செய்யல்களையே செய்கிறோம் ! நல்லவைகளை செய்யது நமது கணக்கை
நாம் தீர்க்கிறோம் என்றால் சரிதான் ! ஆனால் முன்பு செய்து நமது இப்பிறவியின்
துயரங்களுக்கு காரணமாக தீய சமஸ்கார புதை பதிவும் சேர்ந்தே வருகின்றதே !
மீண்டும் அதே தீய செய்யலை செய்ய சமஸ்காரம் தூண்டுகிறதே !
மீண்டும் மீண்டும் நாம் அதே தீய செய்யலை செய்யது மீண்டும் சேற்றை பூசிகொள்கிறோமே ! இதை புரிந்து கொண்டு இந்த சமஸ்கார்தின்
கரபீஜதில் இருந்து எப்படி தப்புவது ! மீண்டும் அதே தீய பதிவு மீண்டும் பதியாமல் எவ்வாறு பார்த்துக்கொல்ல்வது என்பதை i சென்ற பகுதியிலும்
இனி வரப் போகும் பகுதியிலும் சற்று விரிவாக ஸமகாரத்தைப் பற்றி
புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் !
இதில் கலந்து வரும் வட மொழி வார்த்தைகள் சிலரை சற்று
மிரட்டுவது போல் இருக்கலாம் ! ஆனால் இதில் மேல் புரிதலுக்கு
நாம் போக நினைக்கும் போது ஒரே மாதிரி
வார்த்தைகளை பயன்படுத்துவது ,
ஆதியில் இருந்து இன்றுவரை தொடரும் வார்த்தைகளை
நாம் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்வது ,
மேலே இன்னும் ஆழமாக செல்லும் போது
எந்த குழப்பத்தையும் உண்டாக்காது !
இந்த சமகாரப் பதிவில் இருக்கும் விந்தையே
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்
நல்லதும் ,தீயது எது ஆனாலும்
தொடர்ந்து பதிவு ஆகிவருகிறது !
நலவைகள் செய்யதால் கெட்டவைகள்
கழிந்து போகும் என்பது கிடையாது ! முடியவும் முடியாது !
கர்மங்கள் அனைத்தும் நிச்சயம் ஒரு பதிவை பெறும் அது கர்மாசயம்
அந்த செய்யல் மூலம் கிடைக்கும் அனுபவம் ஒரு நினைவை பாதிக்கும்
அது வாசனை !
இதைத்தான் ஓஷோ விலங்குகளில் தங்கமாக இருந்தாலும் ,
இரும்பாக இருந்தாலும் விலங்கு விலங்குதானே என்கிறார் !
செய்யல்கள் அவை நல்லவை ஆனாலும் தீயவை ஆனாலும்
ஒரு பதிவை பெற்றே தீரும் ! நல்லவை மீண்டும் நல்லது செய்யத்தூண்டும் ,கெட்டவை மீண்டும் கெட்டவை செய்யத்தூண்டும் !
இதனால் பிறவி வட்டத்தை நிச்சயம் ஏற்ப்படுத்தும் !
இதில் செய்யலற்று இருத்தல் என்ற பேச்சே எழக்கூடாது ! கர்மம் புரிதலே ஒரு யோகமாக பயிலும் யுக்தி புரியவேண்டும் !
நமது தொடர்ந்து வரும் பழங கணக்கான கொடுக்கல் வாங்கல் படியே சிலரை ஏமாற்றுகிறோம் சிலரிடம் ஏமாந்து போகிறோம் .!எதற்கும் நமக்கு காரணம் புரியாமல் புலம்புகிறோம் .! ஏன் எனில் ஏமாறுவதற்கும் ,அதற்கான காரணம் நடைபெற்றதற்கும் இடையே காலம் எனும் பெரும் இடைவெளி உள்ளது !
இதை புரியாததால் நடைபெறும் சம்பவங்களின் தொடர்பு நமக்கு புரிவதில்லை !
ஆனால் நடை பெறும் ஒவ்வுறு காரியத்திறிக்கும் நாம் தகுதியானவர்கள்
(deserve ) தான் ! இதில் எந்த குழப்பமும் வேண்டாம் !
இதில் குறையும் வேண்டாம் ! இதில் நமக்கு தெளிவுஇருந்தால் மனதில்
நமக்கு அமைதி உண்டு ! எதற்கு நாம் தகுதியாக முன்பே இருக்கிறோமோ
அதையே இப்போது பெறமுடியும் !இப்போது நாம் செய்யும் செயல்கள் நமது கணக்கில் சேர சற்று கால தாமதம் ஆகும் ! இதில் காலம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் ! விரைவில் சேர கால பைரவரை தியானக்க
வேறு சில் யுக்திகளையும் கூறி இருக்கிறார்கள்
ஆனால் காரண காரியம் படியான கர்மக் கணக்கு ம்ட்டும்
துளியும் பிசகாமல் இயங்கி வருகிறது !.நாம் ஒவ்வொரு பிறவியிலும்
பெறுகின்ற சிறிதளவு ஞானத்தால் ,நாமாக சில வழிகள் ஆன்மீக வழியில்
சென்று சிறிதளவு ,நமது சமஸ்காரத்தின்வலித்து
வந்து நடக்கும் செயல் பாடுகளில் இருந்து தப்பலாம் .
சிறிதாவது சமஸ்காரங்கள் குறைக்கலாம் .!
இதன் மூலம் நாம் பிறந்த இந்த பிறவியின் பயனை நாம் சிறிதளவாவது பெற்று ,ஓரளவிருக்கு ஒரு படி மேலே செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் .!
இதில் சமஸ்காரத்தில் நினைவு என்பதை உருவாக்கும்
வாசனைப் பற்றியும் சற்று அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும் !
செய்யும் காரியங்கள் கர்மபீஜதை உருவாக்கி காரியங்களை
செய்யத்தூண்டும் ! எனவும் அந்தக் காரணங்களில் பெறும் அனுபவம்
வாசனை என்ற பதிவாகி ,அந்த செய்யலின் நினைவை அத்தகைய
சுழ்நிலை வரும்போது உண்டாக்குகிறது என முனமே பார்த்தோம் .
இதில் அனுபவம் என்பது என்ன ? அது நாம் செய்யும் செய்யலால் நாம் பெற்ற
ஒருவகை இன்பமோ துன்பமோ அல்லது பயமோ தான் அனுபவம் !
இந்த அனுபவம் அறிவாக மாறும் போது ,அனுபவம் பெறுவது நிற்கும் !
அது வரை அனுபவம் பெற்றுக்கொண்டே தான் இருப்போம் !
அனுபவம் பெறுவதே வாழ்கையாகி விடும் ! வாடிக்கையும் ஆகிவிடும் !
அனுபவத்தால் என்ன பயன் ! அது மீண்டும் வாசனையைத்தானே தூண்டும் !
அதில் இருந்து பெறும் அறிவைப் பெற்றுவிட்டால் மேலும் அதே அனுபவம்
மீண்டும் மீண்டும் கிட்டாமல் தப்பித்துவிடலாம் !
இந்த அனுபவம் ஒரு உணர்ச்சியின் வடிவில் அல்லது உருவின்வடிவில் இருக்கும் என புரிந்து கொள்வது இப்போது போதும் .! பின்பு இதை மேலும் பார்ப்போம் .
சுபா நீங்கள் இந்த கதை சொல்லிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா ?
விரைவில் இந்தக் கலை அழியும் நிலையில் உள்ளது !
அடுத்த தலைமுறைக்கு இதை கேட்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரிய வில்லை !
இதை பதிவு செய்யுமொரு திட்டம் கூட நல்லது தான் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
பாகம் 2எனக்கு புரிந்தது இதுவே ! (25)-
வேகம் கெடுக்கும் வித்தை !
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
விதியும் , ஸமஸ்காரமும் !
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும்
ஒரு எதிர்வினை நிச்சயம் உண்டு !
நெல் போட்டால் நெல் தான் முளைக்கும் என்பதை நம்பினால் ,
காரண காரியத்தையும் நம்ம்பிதான் ஆகவேண்டும் !
நடை பெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் நிச்சயம்
ஒரு பின்புலம் நிச்சயம் இருக்கும் !
இந்த வினையின் பயனை சித்தர்கள் வினைப் பயன் என்பார்கள் !
ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் கூடவே ஒரு கண்ணுக்குத்தெரியாத
வினைப்பயன் தொகுதி எனும் மூட்டை உண்டு !
உதாரணமாக நாம் ஒருவரைக் கன்னத்தில் கோபத்தில்
அடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் ! அவர் உடனே
உங்களை திருப்பி அடித்து விட்டால் உடனே உங்களின்
அந்த வினைப் பயன் உடனே முடிந்துவிடுகிறது !
கர்மக் கணக்கு அப்போதே முடிகிறது !
இரண்டு பேருக்கும் சமஸ்காரம் மட்டும் உண்டு !
அது அடிக்கும் சமஸ்காரம் !
அது கர்ம சுமையாக உங்கள் கணக்கில் சேருவதில்லை !
ஆனால் திருப்பி அடித்தவருக்கும ஒரு சமஸ்காரம்
எனும் பதிவு கிடைத்துவிடுகிறது !
அந்த சமஸ்காரம் அவரை கர்மபீஜமாக இருந்து
எப்படி அடிப்பது என்ற செயலை
அந்த மாதிரியான சுழல் வரும்
போதெல்லாம் அடிக்கத்தூண்டும் .!
மேலும் நினைவாக அந்த வாசனை
கன்னத்தில் வலி வரும் போதும் ,வேறு
யாரையாவது வேறு யாரு அடிப்பதை
பார்க்கும் போதும் ,இவருக்கும்
இந்த அடிக்கும் ஆசை தன்னை அறியாமல் வரும் .
இவர் அடிப்பதில் ஒரு சந்தோசம் காண ஆரமிப்பார் ,
முடிவு அவருக்கு வேறு யாரோ இவரை நைய புடைத்து
இவருக்கு வன்முறையில் இருக்கும் ஆர்வத்தை
பயம் எனும் வலிய உணர்ச்சியினால்
போக்கும் வரை தொடரும் !
அதே சமயம் .மேலும் மேலும் சமஸ்காரமும்
பெருகிக்கொண்டே இருக்கும் .!
ஒருவேளை அந்த அடிப்பட்ட மனிதர் ஒரு பண்பட்ட
ஜீவனாக இருந்து ,அடிபட்டதும் ஒன்றும் பேசாமல்
அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டால் ,
அவர் இந்த சமஸ்கார வட்டத்தில் இருந்து விடுப்பட்டுப் போகிறார் !
ஆனால் உங்களுக்குத் தான் நீங்கள் செய்த வினையின் பயன்
தொடர ஆரமிக்கும் .!நீங்களும் யாரிடமாவது காரணம் இல்லாது
கன்னத்தில் அடிவாங்கும்வரை அது தொடரும் !
இத்தகைய வினைப் பயன் மூன்று வழியில் வெளிப் படும்
என சித்தர்களும் ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள் .!
அவை சஞ்சிதம் எனும் முறப பிறவியில் செய்யத வினையில் ,இன்னும்
அந்த வினையின் பயனை அனுபவிக்காமல் எஞ்சி நிற்கும் கர்ம சுமை !
பிரரப்ப்தம் என்பது வினைப் பயனில் இந்தப் பிறவிக்கு என பங்கீடு செய்யப் பட்ட வினைகள் ! இந்தக் காரியங்கள் இந்தப் பிறவியில் உங்களுக்கு நடந்தே தீரும் !
அது சஞ்சிதத்தின் ஒரு பகுதியாகவோ ,அல்லது முழுமையாகவோ இருக்கலாம் !
இதைத்தான் பேச்சு வகையில் உன் பிராப்த்தம் இதுதான் எனக் கூறுகிறோம் .!
ஆகாமியம் என்பது இந்தப் பிறவியில் செய்து ,அடுத்தப் பிறவிக்கு என சேரும் சுமை !
இவ்வாறு நாம் இப்பிறவியில் பிறந்திருக்கும் போது ,
நாம் இதுவரை செய்த கர்மங்களின் பயன் ,
அதாவது நல்ல கர்மம் செய்யதால் நல்லது ,
தீய கர்மம் செய்தால் தீயது ஒரு சுமைபோல்
அதன் வினைப் பயனை நிறைவேற்ற காத்திருக்கிறது .!
இவ்வாறு நாம் இப்பிறவியில் அனுபவிக்கப்போகும்
செயல்களில் பெரும் பகுதி நமது பூர்வ வினையின்
காரணமாக நமக்காக காத்திருக்கிறது !
அதில் கழியாமல் மீதி இருக்கும் வினைப்பயன் சஞ்சிதம்
இபபிறவிக்காக காத்திருக்கும் வினைப்பயன் பிராரப்த்தம்
இந்த பிறவியில் நாம் செய்யும் நல வினை ,கெட்ட வினைகளின்
தொகுப்பாக அடுத்தப் பிறவிக்கு காத்திருக்கும் வினைப் பயன்
ஆகாமியம் !
இதனால் தான் நல்லது மட்டும் செய்யும்
சிலருக்கு ஏன் நல்லது மட்டும் நடப்பதில்லை !
சிலசமயம் எதிர்பாராத துயரமும் வருகிறதே ?
எனும் தீராத சந்தேகம் வருகிறது !
உண்மையில் அவர்கள் பெறும் பலன்கள்
பிரார்ப்ப்த்தம் எனும் வினைபயன் படி என்றோ
செய்ததற்கு இப்போது பலனை அனுபவிக்கிறார்கள் !
இதிலும் ஒரு வரிசை கிராமம் உண்டு !
இவ்வாறு வினைப் பயன்களுக்கும் , ஸமஸ்காரத்திர்க்கும் இடையே உள்ள
வேறுபாட்டை புரிந்து கொள்ளவே இதை இப்போது பேசவேண்டி வந்தது !
சமஸ்காரம் ஒரு மனதின் பதிவு !
அது இந்தப் பிறவியில் நடக்கப் போகும்
செயல்களில் நம்மை நமது பூர்வ கர்மபீஜம் என்னும் செய்ல் ஊக்கம் ஆன
ஆசையாகவோ , அல்லது வாசனை எனும் நினைவாகவோ ,
நமக்கு பூர்வ ஜன்மத்தில் செய்து பழக்கமான செயல்களியே மீண்டும் செய்யத்தூண்டும் ஒரு புதைப் பதிவு !
ஆனால் சஞ்சிதம் ,பிரரப்ப்தம் ஆகாமியம் என்பது
நாம் பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின்
பிரதிபலனான பெறும் வினைப் பயன் ஆகும் !
நாம் புண்ணியம் செய்திருந்தால்
பலருக்கு உணவுகொடுத்து பசிப்பிணி ஆற்றி இருந்தால் ,
இப்பிறவியில் நம் பசி ஆற்ற பலர் அவர்களது
கர்மக் கணக்கு தீர்க்க உணவுடன் காத்திருப்பார்கள் !
உபசரிக்க பலர் இருப்பார் !
நாம் சென்ற பிறவியில் பாவம் பல செய்து
காரணம் இல்லாமல் பிறரை துன்புறித்தினாலோ ,
அல்லது செய்யத வேலைக்கு கூலிதராமல் இருந்திருந்தாலோ ,
அத்தகயத்துன்பத்தை நாமும் அனுபவித்துதான் தீரவேண்டும் !
இந்த சமஸ்காரத்திர்க்கும் , கர்ம வினைப் பயனின் ,
விதி எனப் படும் வலித்து வந்து ஊட்டும் முறைக்கும்
உள்ள தொடர்பை சற்று சரிவர புரிந்து கொள்வது
இனி நமது வாழ்வில் நடை பெறும் காரியங்களில் ஸமஸ்காரத்தை வெல்வது எவ்வர்று ?இந்த விதி எனும் வினைப் பயனின் கொடிய பிடியில் இருந்து தப்ப இயலாதா? என்பதையும் விரிவாக பார்க்கும் போது , உதவியாக இருக்கும் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
மேலும் ஒரு வழியை பதஞ்சலி கூறுகிறார் !
மனத்தில் தோன்றும் உருவங்கள் மனதை வெகுவாக பதிக்கிறது !
******************************************************************************
Karl Gustav Jung என்ற உளவியல் வல்லுநர் - Sanskar is simply the result
of habitual repetition of common thought or behaviour pattern until
it becomes deeply rooted in psyche ' என்கிறார்.
ஸம்ஸ்காரமே கர்மத்தின் விதை என்று மீமாம்ஸை நூல்கள் கூறும். உண்மையில்
ஸம்ஸ்காரம், வாஸனை, கர்மம் இவை நுட்பமான,வலிமையான தொடர்பு கொண்டவை.
நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதற்குக் காற்று, தீ, காய்ந்த மரம் அனைத்துமே
காரணாமாவது போலவே இதுவும்.
உள்ளம், உரை, செயல் மூன்றிலும் தூய்மை காப்பதே இதற்கான மாற்று. பவுத்தம்,
சமணம் உள்ளிட்ட பாரதீய சமய மரபுகள் எல்லாமே திரிகரண சுத்தியை
வலியுறுத்துகின்றன.
தேவ்
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (28)-
காரண காரியத்தின் கதை !
இந்த கர்ம வினைப் பற்றிய கணக்குகள் ,சமஸ்காரம்
இவைகளிப் பற்றி முந்தையப் பகுதியில் கூறியது சற்று மயக்கம்
தருவது போல் இருக்கும் .படிப்பதற்கும்சுவை ஏற்படுத்தாது !
ஆனால் சுவை தருவது அனைத்தும் நல்ல பலன் பலன் தாரா !
சற்று சிரமப்பட்டு தான் சுகத்தையும் ஞானத்தையும் பெறமுடியும் .
ஊட்டியின் எழிலைக் காண வேண்டும் ஆனால் மலை ஏறித்தான் ஆகவேண்டும் !
மலை ஏறுவது சற்று சிரமத்தைதான்தரும் ! ஆனால் சிரமம் பார்த்தால்
சிகரத்தை அடைய முடியாது ! சிறந்ததை பெறவும் முடியாது !
படிப்பதற்கு இன்பம் தரும் இலக்கியம் மட்டும் ஞானத்தை தராது !
இன்பம் பெறுவது மட்டும் நூல்களின் பயனல்ல !
இந்த ஞானம் பெறும் வழிமுறையிலேயே முதன்மையானது
மனம் என்றும் புலன் வழி செல்லாமல் அறிவு வழியில் இருப்பதுதான் ! புலனடக்கம் தான் !
புலன்கள் எப்போதும் நம்மை வெளியே , வெளி இன்பத்தியே செலுத்தும் !
இன்பம் என்னவோ வெளியில் இல்லை என்பது தெரிந்தும் !
நாமோ நம்மை உள்ளே நோக்கும் வழியில்
உண்மையைத் தேடி இப்போது இருக்கிறோம் !
கீதை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக தான் இருந்து வருகிறது !
இருப்பினும் அதை எந்த காலத்திலும் அனைத்து மக்களும் படிக்க முயன்றதில்லை !
அனைத்து மக்களும் படித்தும் தெளிந்ததில்லை !
கீதை என்று ஒன்று இருப்பதாக தெரியவே பல பிறப்புகள் வேண்டும் !
படித்துப் புரிந்து கொள்வது என்பது எப்போதோ நடை பெறுகிறது !
கீதை என்னவோ எப்போதும் இருந்துதான் வருகிறது ! வந்திருக்கிறது !
நூல்நிலையத்தில் ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் ,வகை வகையாக !
மனிதர்களிம் எத்தனை வகைகள் அத்தனை வகை புத்தகங்கள் !
புதிது புதிதாக வரவுகள் தொடரும் ! அவரவர்க்கு பிடித்ததை
அவ்வரவர் படிக்கின்றனர் ! அனைவரும் கீதையை தேடுவர் எனக் கூறமுடியாது !
வகை வகையாக இருக்கும் புத்தகங்களை தாண்டிய சிலரே
கீதை மாதிரி புத்தகத்திலும் என்ன இருக்கு என நோக்க வருகின்றனர் !
இந்த நோக்கம் வரவே ஜன்மங்கள் பல ஆகிவிடுகின்றன !
இந்தக் கர்மக் கணக்கையும் ,ஸமஸ்காரத்தையும் சற்று சரிவர புரிந்து கொண்டால் ,
அதன் மாய வலையை நாம் சமாளிக்கும் வித்தை புலப் படும் !
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், ‘இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,என
அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.விளங்கும்
ஆன்மா எனப் படும் பேரறிவாகும் !
இதை தெரிந்துகொண்டால் அடைய முடியாது எதுவும் இல்லை என்று ஆகிவிடும்
பொதுவாக நம்முடைய அறிவு எனப் படுவது படிப்படியாக உயர்ந்து சென்று அதன் உயர்ந்த நிலைக்கு செல்லும் பாகுபடுத்தலே ! தனியாக ஏதாவது நடந்தால் ,
ஏதாவது நிக்ழ்ச்சிகள் தொடர்பின்றி துண்டுதுண்டாக இருந்தால் அது அறிவு பூர்வமானதுஎன நாம் ஒப்புக்கொள்வதில்லை !
ஒரு ஆப்பிள் கிழே விழுந்தால் நமக்கு திருப்ப்தியில்லை !
எப்போதும் ஆப்பிள்கள் கிழே விழுந்தால் தான் நமக்கு திருப்தி !
அதே நிகழ்ச்சி திருப்பித்திருப்பி நடை பெறவேண்டும்
அப்போதுதான் அதை நியதி என்போம் ! அதை ஒரு விதியாக்குவோம் !
அதற்க்கு புவியீர்ப்பு விசை எனப் பெயரும் கொடுப்போம் !
இதில் உள்ள உண்மை என்னவென்றால் தனி கொள்கையை
விஞானம் ஏற்பதில்லை ! பொதுக் கொள்கையை திருப்பித்திருப்பி
நடப்பதைத்தான் ஒரு நியதி என நம்பி அதற்க்கு
ஒரு விதி எனவும் பெயர் கொடுக்கிறது !
அது அந்தப் பொருளின் இயல்பை கொண்டே
அந்த இயல்பின் அடிப்படையிலேயே
விளக்கப் படுவதால் அந்த விதியை நம்புகிறோம் !
ஆப்பிள் கிழே விழும் இயல்பைக்கொண்டே
அது ஏன் விழுகிறது என அதற்க்கு ஒரு விசையை
புவியீர்ப்பு விசை பெயர் எனப பெயர் கொடுக்கிறோம் !
அதை நம்புகிறோம் !புறக்காரணகளால் விளக்கப் படுபவை
விஞான ரீதியில்லை என நம்புகிறோம் !பொருளுடைய
இயல்பின் அடிப்படையில் அமைந்த விளக்கம் தான்
விஞஞான ரீதியான விளக்கம் !
அது மாதிரியே உலகில் நடை பெறும் காரியங்கள் எல்லாம் ஒரு நியதியில்
இருந்தால் தான் அது அறிவு பூர்வமானது ! எதோ தொடர்பில்லாமல் ஒவ்வறு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக நடந்தால் அது எப்படி அறிவு எனும்
நியதியில் பாகுபடுத்தலில் உட்ப்படும் ! .
அது எந்த நியதியிலும் இல்லை என்றால் அது எந்த விதியிலும் அடங்காதே ?
அப்போது நமது வாழ்வைக் கட்டுப் படுத்தும் விதிதான் என்ன ?
அதை யாரும் கண்டுபிடக்கப்படாமல் அனாதியாக வருவதால்
அதற்க்கு ,நியூடன் எடிசின் என யார் பெயரும் எந்த ரிஷியின் பெயரும் இடப்படாமல்பொதுவாக மக்களால் விதிஎன அழைப்படுகிறது !
அந்த விதி எதைப் பொறுத்து இருக்கிறது ?
அதுவே காரண காரியம் !
ஒரு காரியம் என்பது ஒரு காரணத்தின் மாறுபட்ட வடிவம் தான் !
காரணத்தின் ஒழுங்கு படுத்தப் பட்ட வடிவமே அந்தக்
காரணமே ---காரியத்திற்கு அடிப்படை என்பதுவே
பரிணாம வாதத்தின் அடிப்படை ! சூன்யத்தில் இருந்து
இந்த உலகம் வரவில்லை ! அதற்கும் ஒரு காரணம் இருந்தது !
நடை பெறும் அனைத்து காரியங்களுக்கும் ஒரு காரணம்
இருதே ஆகவேண்டும் ! விதையில்லாமல் இதுவும் முளைப்பதில்லை !
காரணம் இல்லாமல் காரியமும் நடைபெறுவதில்லை !
விளைவை மேம்படுத்த விஞ்ஞானம் விதையைத்தான் முதலில்
மேம்படுத்துகிறது ! காரியத்தையும் மேம்படுத்த காரணத்தை தான்
சீராக்கவேண்டும் .! ஆனால் விதை போட்டால் உடனேவா விளைகிறது ?
அப்படியே காரியம் நடக்கும் போது விதை போட்டது நினைவில் இருப்பதில்லை !
எது நடந்தாலும் ஏன் நடந்தது என்கிறான் !
ஒரு கல் விழுத்தாலும் ,உடனே எழும் கேள்வி ஏன் இந்தக் கல் விழுந்தது என்பதுதான் ! இதில் இருந்து தெரிவது என்னவென்றால்
எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்
மனதிலேயும் உள்ளது !
விஞஞானம் என்பதும் எது நடந்தாலும் ஏன் ஏன் எனக் கேட்டு அதற்க்கு விடை கண்டுபிடிப்பதிலேயே அறிவை \வளர்க்கிறது !
எந்த ஒருகாரியம் தொடங்க்வதற்கும் நிச்சயம் ஒரு
காரணம் இருக்கும் என்ற ஊகம் என்றும் மனிதனின் மனதில் ஆழமாக உண்டு !
இந்த முன் ,பின் என்ற ஊகம் தான் ( precedence and succession )
இதுவே காரண காரிய விதிக்கு (LAW OF CAUSATION ) அடிப்படையாகும் !
இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்று காரியமாகவோ ,அல்லது காரியமாகவோ
மாறி ,மாறி இருக்கின்றன !
ஒரேசெயல் ஒரு சமயத்தில் காரணமாகவும் ,மற்றொரு சமயத்தில்
காரியமாகவும் இருக்கிறது !இதுவே காரண காரிய விதி !
இதுவே நமது வாழ்வின் விதி !
நமது கர்ம வினை என நாம் கூறும் வினைத்தொடர்
நாம் முன்பு போட்ட விதையை இப்போது அறுவடை செய்வது ஆகும் !
என்ன நாம் எப்போ போட்டோம் ,என்னபோட்டோம் என நமக்கு
மறந்து போவதால் ,நாம் சற்று அரற்றுகிறோம் !
மேலும் சமயத்தில் அறுவடை என்றால் வரவு பட்டும் கிடைப்பத்ல்லை !
யார்யாரோ அப்போது கொடுத்து வைத்த கடன்காரர்களும் வசூலிக்கக்க
வந்து நமை பாடாக படுத்திவிடுகிறார்கள் ! எதை எதையோ கேட்கிறார்கள் !
நமக்கு அடையாளம் தெரியாததால் ,
கொடுக்கும் போது அழுதுகொண்டே கொடுக்கிறோம் !
இப்போதைக்கு இது போதும் !
இனி இன்னும் கொஞ்சம் அடுத்த பகுதியில் பார்ப்போம் !
கொடுத்துவைத்தது எப்போது ஆரமித்தது ?
சமூகத்திற்கே வசூலிப்பு உண்டா ?
ஆதி காரணம் என்ன ?
அடுத்ததில் இன்னும் பார்ப்போம்
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (29)-
காலம் என்னும் கனவு !
காரணம் காரியம் தான் உலகை ஆளும் விதிகள் எனப்பார்த்தோம்
காரணம் எல்லாம் காரியம் ஆவதற்குள் காலம் என்று ஒன்று இடையில்
புகுவதால் எந்த காரணம் எந்தக் காரியம் ஆகிறது என்ற அறிவு நமக்கு
இல்லாமல் ஆகிறது ! மேலும் அதில் இடம் என்ற ஒன்றும் சேருகிறது
இந்த இடம் அந்தக் காரியம் நடை பெறும் இடத்தை குறிக்கும் .
இதில் விந்தை என்ன வென்றால் விதை போட்ட இடத்தில் தான் செடி
முளைக்கும் என்பதில்லை ! விதை விதைப்பது ஒரு இடம்
செடி வருவது ஒரு இடம் !
விதை போடுவது ஒரு சமயம் ,
செடியைப்பார்ப்பது வேறுசமயம் !
எந்த ஒரு காரணமும் காரியம் ஆவதற்கு
காலம் என்று ஒன்றும் இடம் என்று
ஒன்றும் தேவைப் படுகிறது .!
அதாவது அந்த காரணம் காரியமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் ,
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் நடை பெறும் .
இதையே வள்ளுவரும்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்”
:உலகத்தையே பொருளாக கைகொள்ள கருதினால்
உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து
அறிந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் கிட்டும். என்று கூறுகிறார் .!
!
குறளில் கூறப் பட்டுள்ள உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து
என்பதில் தான் இருக்கிறது வெற்றியின் மர்மமும் ,ரகசியமும் !
இவ்வாறு காலமும் இடமும் மாறுவதால் நாம் காரண காரியத்தை புரிந்து கொள்ளாமல் துயறுருகிறோம் .என்ன செய்தால்
என்ன விளையும் என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை !புரிவதில்லை !
நாம் செய்யும் செயல் அதன் எதிர்வினையாக
அதுவே தானே , அதேப் போல் தானே நடைபெறவேண்டும் ,அதுஎப்படி மாறும் ?
என நினைகிறீர்களா ? சற்று பொறுங்கள்
சற்று இதை விரிவாக சிந்தித்துப் பார்ப்போம் !
நடை பெறும் ஒவ்வொரு செயலும் எதற்காக நடை பெறுகிறது ?
அது ஒரு விளைவை ஏற்ப்படுத்தவேண்டிதானே ?
நமக்கு நாம் செய்த செயல் தெரிகிறது
அதனால் ஏற்ப்பட்ட விளைவு தெரிவதில்லை !
நம் சஞ்சிதமாக பெற்று இப்பிறவியில் அனுபவிக்கும் பிராரர்த்தம்
நமக்கு நாம் முன்பு செய்த செயலால் விளைந்த விளைவையே தருகிறது !
அதே செயலை மட்டுமே மட்டும் தருவதில்லை !
உதாரணமாக ,சும்மா ஒரு பேச்சிக்கு தான் , நாம் ஒருவர் பொருளை
வஞ்சகமாக பறித்துக்கொள்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள் !
நமது பொருளும் அதே போல் இப்பிறவியில் பறிபோகும்
சாத்தியமும் உண்டு ! ஆனால்
அது மிக சாதாரண தண்டனை ! சொல்லப் போனால் இதில் தண்டனையே இல்லை !
பொருள் இழப்பு சிலசமயம் சிலரிடம் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது !
அவரிடம் அதிக பொருள் இருக்கும் போது சிறிது பொருள் இழப்பு அவருக்கு சரியான தண்டனை ஆகாது !பலசமயம அவர் இதை உணரவே மாட்டார் !
ஆனால் முன்பு நாம் செய்த பாவச்செயல்லால் ,பொருள் இழைந்த காரணத்தால் பொருள் இழந்தவர் மகள் திருமணம் தடை பட்டிருக்கலாம் ! அவரதுமகனின் வேலைக்காக அந்தப் பணம் வைக்கப்பட்டிருந்து அதனால் ,அவரது மகனுக்கு வேலை வாய்ப்பு பறிபோயிருக்கலாம் ! அதனால் அவர் மனம் துன்பம் மிக
அடைந்திருக்கலாம் !
இப்போது இந்தப் பிறவியில் நமக்கு காரணம் இல்லாமல் வாய்க்கும் ,
மகளின் திருமண தாமதம் மகனின் வேலை பெறுதலின் தாமதம் போன்ற
இவைஎல்லாம் நாம் பறித்த பணத்தின் விளைவுகள் ! அதே மாதிரி மனத்துயரம்
நமக்கும் வாய்க்கும் ! இதில் செயல் மட்டுமல்ல அதல் விளைவால் கிடைத்தஉணர்வுகள் ,மனத்துயர்தான் அளவு ! நாம் சரியாக அதே அளவு
மனத்துயரத்தை , அவர் நம்மால் பெற்றதை நாம் இப்பிறவியில் அடைகிறோம் !.
இப்படியாக இப்பிறவியில் நமது பூர்வ கர்ம வினைத்தொடர் காரணமாக
சில வினைகள் நமது காரணம் இன்றி தானே நடைபெறுகிறது .!
பல வீடுகளில் பணமிருந்தும் மகளுக்கு திருமணம் தள்ளிப்போகும் !
படிப்பிருந்தும் மகனுக்கு வேலை தாமதப்படும் ! இவ்வாற்று பல காரியங்கள் நாம் முன்பே செய்த காரணங்களளால் நாம் அனுபவிப்பதற்காக காத்திருக்கிறது !
இப்போது எங்கே ? என்பது மற்றொரு மர்மம் !
இது என்ன என்னமோ கதை மாதிரி இருக்கிறது என்கிறீர்களா ?
உண்மையில் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் மிகச்சிறந்த
பல சிறந்த இலக்கியங்கள் பொதிந்துக் கிடைக்கின்றன ?
சாத்தியமில்லாத ஒன்றை நாம் கற்ப்பனை செய்யவே முடியாது !
நாம் ஏதாவது சிறந்த இலக்கியத்தை படைக்கிறோம் என்றாலே
அது எங்கோ முன்பே நடை பெற்றது என்றுதான் பொருள் ! அடைய முடியாததையும் ,சாதியமில்லாததையும்
நமது மனம் கற்பனை செய்யமுடியாது !
முதலில் விஞஞான கதைகளாக இருந்தவைகள்தான்
விஞஞான உண்மைகளாக மாறின !
,
உண்மையில் கற்பனை என்று ஒன்று இல்லை !
நாம் ஒரு நிலையில் காப்பியம் படைக்க முனைத்து இருக்கையில்
நமது மனம் பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டு ,நமது விருப்பத்தின் தீவிரத்திற்கு தகுந்த படி இலக்கியம் ஒன்றை ஆகாய பேரறிவில் இருந்து பெறுகிறது ! பிரபஞ்ச மனம் என்பது இதுவ்றை மனித குலம் மொத்தமும்
அடைந்த அறிவின் பதிவேடு ! அது என்றும் வளர்ந்து கொண்டே
வருகிறது ! தொடர்பு அறுபடாமல் இருக்கிறது !
வேதங்கள் பெற்றமுறை அதோடு முடிந்துவிடவில்லை !
என்றும் நடை பெறும்முறைதான் அது !
தொடர்ந்து நடப்பதுதான் விஞ்ஞானம் ! .
நமது சனாதன மதத்தை பொறுத்தவரை ,
விஞ்ஞானமும் , மெய்ஞஞானமும் வேறுவேறல்ல !
சிறந்தஇலக்கியமும் சிறந்த இசையும் படைக்கப் படுபவை அல்ல !
அவை பிரபஞ்ச அறிவில் இருந்து பெறப்படுவையே !
அதற்க்கு நாம் அதன் நிலையில் ( இடத்தில் ) ,தகுந்த முறையில்
தேவையான ஈர்க்கும் தீவிரத்துடன் இருந்தால் போதும் !
இனி காலம் என்பதைப் பற்றி அது என்ன என்பதை பற்றி பார்ப்போம் !
உண்மையில் காலம் இடம் ,காரணம் காரியம் இவைகள் தனித் தனியே இல்லை ! இவ்வைகளைதனியே கூறவே முடியாது ! இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவும் அதுஎதுவாக இருந்தாலும் சரி எந்த வடிவில் இருந்தாலும் சரி ,
மற்ற அணுக்களை சார்ந்தே இயங்குகிறது ! அதே மாதிரி காலமும் ,இடமும் சார்புடையதே !
ஆனால் எந்த மனிதனும் ,மற்றொரு மனிதனை எதிர்ப்பார்த்து இல்லை !
யாரும் மற்றவர் உதவியை எதிர்நோக்கி வாழ்வதில்லை ! ஒரு மயக்கத்தில்
ஒரு மனிதனை வேறு ஒரு மனிதன் காப்பதாக எண்ணினாலும் உண்மையில் யாரும்யாரையும் சார்ந்து இல்லை ! அனைவரிடத்திலும் ஒரே சமமான ஆற்றல் உடைய ஆத்மா அந்த மனிதனை வழி நடத்த இருக்கிறது !
ஆனால் அவன் பெற்று சுமக்கின்ற கர்ம சுமையிலும்
அவனில் பதித்திருக்கும் சமஸ்காரத்திலும்
மனித்தருக்கு மனிதர் வேறு படுகின்றனர் !
காலம் என்றும் சார்புடையது ! நமது மனத்தின் மாறுதலுக்கு
தக்கபடி அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது !
நல்ல ஒரு சினிமாவை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது
முன்று மணி நேரம் போவதே தெரியவில்லை ! மூன்று மணி மூன்று நிமிஷமாக போனது என்கிறோம் !அதுவே நமக்கு பிடிக்காத ஒன்றை
செய்யும் போது ஒரு நிமிஷம் போவது ஒரு யுகம் போவது
மாதிரி இருக்கிறது என்கிறோம் .! சிறிது நேரத்திலேயே ,
பலவருடம் வாழ்ந்ததாக கனவு கண்டு விடுகிறோம் .!
சிலருக்கு மாதம் போவதே தெரியவில்லை ! பலருக்கு
ஒவ்வரு நாளும் தள்ளுவதே பெரும் பாடாக இருக்கிறது !
நாம் ஒருமாதம் எனக் கொள்வதும் ,வேறு ஒரு மதத்தினர் ஒரு மாதம் எனக்கொள்வதும் ஒன்றாக இருப்பதில்லை ! நாளைக்கு
24 மணி என்ற போதும் நாள் ஓடியது ! ஒரு நாளைக்கு
60 நாழிகள் என்ற போதும் நாள் ஓடியதுதான் !
காலத்தை அளப்பது நமது மனம் தான் !
காலத்தை தனியே அளப்பது முடியாது !
காலம் என்பதை தனியாக நினைத்துப்பார்ப்பதே இயலாது !
காலம் என்றால் ஒன்று முன்னால் நடந்த கடந்த காலம் ,
அல்லது அதைத்தொடர்ந்து நடக்கும் நிகழ் காலம் !
அல்லது இனி நடக்கப் போகும் எதிர்க்காலம் ! ஆனால் இவைகளுக்கு இடையே பொதுவானது
இவை தொடர்ந்து இருப்பது !
நினைத்துப்பார்ப்பதர்க்குள் காலம் கடந்த காலம் ஆகிவிடுகிறதே !
மனமோ எப்போதும் இனி நடக்கப் போகும் எதிர்க் காலத்தை
கடந்த காலம் ஆக்கும் வினையில் தானே மும்முரமாக இருக்கிறது !
ஆனால் இதில் தான் இருக்கிறது வெற்றிக்கான சுட்ஷமம்
அடுத்தப் பகுதியில் இடம் எதை சாரும் ? இன்னம் சற்று கர்மத்தின்
லிலைகள்சற்று பார்ப்போம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (28)-
காரண காரியத்தின் கதை !
இந்த கர்ம வினைப் பற்றிய கணக்குகள் ,சமஸ்காரம்
பாகம் 2எனக்கு புரிந்தது இதுவே ! (30)-பொது மனிதன் - தனிமனிதன்
இடம் என்பதும் காலத்தைப போன்றதே !
இடத்தையும் தனியாகக் கூறமுடியாது
இடம் என்பது என்ன என்று நம்மால் அறிய முடியாது !
ஆனாலும் அது இருக்கிறது !.அதை சுட்டிக்காட்ட அதன்
எல்லைகளை தான் சுட்டிக்காட்ட முடியுமே தவிர
இடம் என்பதை எதையும் சாராமல் சுட்டிக்காட்ட முடியாது .
நிறம் ,எல்லை ,பொருள் இவைகளை சாராத
ஒரு இடத்தை நாம் சுட்டிக்காட்ட முடியாது .!
இடம் மற்ற பொருள்களை சார்ந்து இருப்பது போல்
காலமும் எப்போதும் இரண்டு நிகழ்ச்சியை சார்ந்து இருக்கிறது
ஒன்று முன்னால் நடந்தது ,அடுத்தது அதைத்தொடர்ந்து நடப்பது
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடப்பது
என்ற கருத்தால் இணைக்கவேண்டும் அப்போது தான் காலம் வரும் !இவ்வாறு காரண காரியம் என்ற இயக்கம் வினைத்தொடர் ,
காலம் ,இடம் இவற்றில் இருந்து பிரிக்க முடியாமல்
இருக்கிறது !அதேப்போல் காலமும் இடமும்
சார்பில்லாமல் தனியாக இருக்கமுடியாது !ஒரு சுவர் மேஜை போல காலத்திற்கும் ,
இடத்திற்கும் இருப்பிடம் கிடையாது !
ஆனால் காலமும் இடமும் எங்கும் ஒரு நிழல் போல் சுழ்த்திருக்கிறது !
உண்மையான இருப்பு இல்லையென்றாலும் .
காலமும் ,இடமும் இல்லை எனக் கூறமுடியாது !
எனென்றால் இந்தப்பிரபஞ்சத்தில் அனைத்து
நிகழ்ச்சிகளும் காலம் ,இடம் என்பது மூலமாகவே நடை பெறுகின்றது !இவ்வாறு நாம் பிறக்கும் போதே நாமுடன் கூட வரும் கர்மச்சுமைகளை
நாம் இப்பிறவியில் ,செய்யும் செயலுக்கு நேரடி விளைவாக பலன் வராமல் ,
நம்மிடம் உள்ள கர்ம சுமையின் படி நமக்கு பலன் வந்து சேருகிறது .மேலும் நம்முடன் வரும் சமஸ்காரம் நம்மை செய்ததையே செய்யவும் , பார்த்ததையே பார்க்கவும் தூண்டுகின்றன ! நமது எண்ணத்தின் வகைகளை
அது தான் நிர்ணயிக்கிறது !நமக்கு இப்பிறவியில் சேரும் செல்வம் புகழ் , மனைவி ,மக்கள்
போன்ற சில நாம் ஒன்று செய்தால் ,அது படி பலன் வராமல் அது சேர்த்து வைத்திருக்கும் சஞ்சிததில் ,இப்பிறவிக்கு என ஒதுக்கப் பட்ட
ஆகாமியத்தின் படி,நமக்கு வேறு விதமாக கூடுதலாகவோ குறைவாகவோ
பலன் கிடைக்கும் . !நமக்கு இப்பிறவியில் பார்க்கும் , ,இருக்கும் ,தகுதிகளுக்கும்
நாம் செய்த செயல்களுக்கும் ,அதனால் வரும் விளைவுகளுக்கும்
தொடர்பு நேரடியாக இராமல் மாறுபடும் .!ஆனால் இப்பிறவியில் நாம் கற்கும் கல்வி பெறும் ஞானம் ,
செய்யும் தர்மம் ,செய்யும் கடவுள் பக்தி இவைகளினால் பெறுபவைகளை ,
நமது ஆகாமியம் தடுக்காது ! எனவே இத்தகைய செயல்களில்
இப்பிறவியில் ஈடுபட்டால் இதனால் நாம் அதன் செயலுக்கு ஏற்ற விளைவை முழுமையாக பெறலாம் !
நூறு சதவிகித பலனை உறுதியாக பெறலாம் !எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இப்பிறவியை முழுமையாக
பயன்படுத்த உதவும் .வாழ்வின் productivity அதிகமாகும் ..!மேலும் இப்பிறவியில் சேரும் செல்வம் புகழ் , மனைவி ,மக்கள்
போன்றவற்றில் என்ன கிடைக்கிறதோ அதற்குத்தான் நாம் தகுதியாவர்கள்
என நாம் மனம் தெளிவதுதான் தான் ,வாழ்வில் மன அமைதியயும் ,
சஞ்சலமற்ற தன்மையையும் வழங்கும் .இயற்க்கை நியதியுடன் ஒத்துப் போவது தான் அறிவுடைய செயல் ,!
ஆற்றின் வெள்ளத்துடன் எதிர்நீச்சல் போடும் வீரமும் ,திறமையும்
நமக்கு இருக்கலாம் அல்லது இருப்பதாக நினைக்கலாம் .
ஆனால் இந்த முயற்ச்சியில் நமக்கு தான் சக்தி இழப்பே தவிர
ஆற்றிற்கு என்னக் குறைவு ! அது அதன் திசையில் சுகமாக
பயணிக்கிறது ! நாம் தான் அதை எதிர்த்து பயணம் செய்ய
முயன்று தோற்கிறோம் .!இனி நாம் இப்பிறவியில் பிறக்கும் இடத்தில் நமது சுழலை நிர்ணயிக்கும்
நமது அடிப்படை வாழ்வை நமக்கு அமைத்துத் தரும் நமது தாய் தந்தையின்
கர்ம வினைகளுக்கும் நமக்குமுள்ள தொடர்பு ஏதாவது நம்மை பாதிக்குமா எனப் பார்ப்போம் !நாம் இவ்வாறு இவைகளை எல்லாம் விரிவாக அலசுவது ,நமது செயல்களின்
நமது செய்யல்களின் உண்மையான பலன்களை இப்பிறவியில் நமக்கு கிடைக்காமல் தடை செய்யும் சக்திகள் எவை எவை என தெரிந்துகொள்ளவே .!
தடை செய்யும் சக்திகளை தெரிந்து கொண்டால் அவைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என சிந்திக்கலாம் !நாம் முன்பே பார்த்திருக்கிறோம் ., நாம் ஒவ்வருவரும் தனித்தனி ஆத்மா தான் ,!
நமக்குள் ஜன்ம ஜென்மமாக தொடர்ந்து வரும் கொடுக்கல் வாங்கல் கணக்கை தீர்க்கத்தான் நம்மிடம் இருந்து பெறவோ அல்லது நமக்கு தரவோ நமது தாய தந்தையர் கடமைப் பட்டுள்ளனர் . நமது ஜீவாத்மாவும் அதன் வினைப் பயனின் படியே தனது இப் பிறவிக்கான தாய் தந்தையை அடைகிறது !ஆனால் அவரவர்கள் செய்யும் கர்மத்தின் பலன்கள், வினைதொடராக
அந்த அந்த ஆத்மாக்களை தான் சேருமேத்தவிர , ,
அவர்களின் தாய் தந்தையர்கள் செய்யும் கர்மங்களின் பலன்கள் அவர்களின் வாரிசுகளையோ சேராது !
தாய்தந்தயர்கள் தங்களின் ,கணக்கு வழக்கின் படி தமது வாரிசுகளுக்கு
சேரவேண்டியதை சரிவர செய்வது அவர்களின் முக்கிய சுதர்மமாகும்அதை நிறைவேற்றிய பின் தான் அவர்கள் வரும் பிறவிக்காக
ஏதாவது செய்யது புண்ணிய பலன்களை சேர்க்க முடியும் .
எனவேதான் மகளுக்கு திருமணம் செய்யாமல் காசியாத்திரை போன்ற
புண்ணிய யாத்திரைகள் செய்யவது கூட பயன் தராது என விதித்திருக்கிறார்கள் !சில குடும்பங்களில் பிறப்பதால் இப்பிறவியில் சில பரம்பரை நோய்கள்
வருவதற்கு வழியிருப்பதாக வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனரே ,
அப்போது தந்தையின் கர்மத்தை மகனோ ,மகளோ அனுபவிக்க வேண்டயுள்ளதே என ஒரு வினா எழலாம் ! சில குடும்ப சாபம் தொடரும் என கதைகள் இருக்கின்றதே , என்றால் அவைகள் அறிவியலுக்கு ஒத்துவராதவையே !
!எங்காவது ஒற்றை நிகழ்வாக சில அற்புதங்களும் ,விபத்துக்களும் நடக்கலாம் .ஆனால் அது ஒரு தொடர் அல்ல !நமது சனாதன மதத்தின் அறிவியல் ஆரம்பம் முதல் ஒவ்வரு உயிரும் வேறு வேறு எனவும் ஒன்றில் ஒன்றில் கலப்பு இல்லாமல் தனித்தனியே உள்ளது என உறுதியாக கூறுகிறது .!
நாம் செய்யும் வினைகளுக்குத்தான் நாம் பொறுப்பு ! நமது வினையை கழிக்கவே நமது பிறப்பு ! அப்ப்டியே தான் அனைவரும் !இந்த பரம்பரை நோய் என்பது பொய் என மருத்துவ துறையில் முப்பது ஆண்டுகள்
கல்வி போதித்த ஒரு ஆராச்சியாளர் ஒரு அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார் !
ஆங்கிலத்தில் தான் !தனது The Biology of Belief என்ற முப்பது ஆண்டு ஆராச்சி நூலில் Bruce H. Lipton,
பல ஆச்சிரியமான முடிவுகளை தெரிவிக்கிறார் .நாம் நமது உடலின் இயக்கம்கள் நமது cell களாலும் DNA வாலும் நிர்ணயிக்கப் படுவதாக நினைத்து வந்தோம் .ஆனால் முனைவர் லிப்டன் அவைகளை ஆதாரப் பூர்வமாக மறுக்கிறார் .நமது மனதின் ஆழ்ந்த உள்மன நம்பிக்கைகளும் , நேர்மறை எதிர்மறை உணர்வுகளுமே DNA, CELL களை இயக்குவதாக நிருபித்துள்ளார் !
நாம் நம்பும் பரம்பரை வியாதிகள் பீடீப்பது நம்பிக்கையில் தான் நடை பெறுகின்றது என நிரூபிக்கிறார் .
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை பிரித்து அதை வேறு ஒரு தாய தந்தையிடம் வளர்க்க சொன்ன போது, அந்தக் குழந்தைக்கு
அது யாரிடம் பிறந்ததோ அந்த பெற்றோரின் பரம்பரை வியாதிகள் வரவில்லை !மாறாக அது எங்கே தனது பெற்றோராக எண்ணி வளர்கிறதோ அந்தத் தாய தந்தையரின்
வழியில் வரும் பரம்பரை வியாதிகள் அதை பிடிப்பதாக அவர் நிரூபிக்கிறார் .மேலும் நாம் இதுவரை கூறிவந்த மனம் ,ஆத்மா எனும் புற பொருளின் ஆளுமை இவைகளைப் பற்றியும் மிக புதிய ஆராச்சி முடிவுகளை தந்துள்ளார் .
அது பற்றி அவர் பேசி உள்ள பல பகுதிகள் ஒளிப்படங்களாக கிடைக்கின்றன .
ஆர்வமுள்லோரின் வசதிக்காக அவைகளை தந்துள்ளேன்.
முழுவதும் கேட்டால் பல வியக்கத்தக்க உண்மைகளை அறியலாம் .!
இது குறித்து இந்தத் தொடரின் முடிவில் தனியாக எழுத நினைக்கிறன் .அவர் எழுதியது பற்றிய சில ஆங்கிலக் குறிப்பு இதோ !
The Biology of Belief is a groundbreaking work in the field of New Biology. Author Dr. Bruce Lipton is a former medical school professor and research scientist. His experiments, and that of other leading edge scientists, have examined in great detail the processes by which cells receive information. The implications of this research radically change our understanding of life. It shows that genes and DNA do not control our biology; that instead DNA is controlled by signals from outside the cell, including the energetic messages emanating from our positive and negative thoughts. Dr. Lipton’s profoundly hopeful synthesis of the latest and best research in cell biology and quantum physics is being hailed as a major breakthrough showing that our bodies can be changed as we retrain our thinking.“Bruce Lipton’s book is the definitive summary of the new biology and all it implies. It is magnificent, profound beyond words, and a delight to read. It synthesizes an encyclopedia of critical new information into a brilliant yet simple package. These pages contain a genuine revolution in thought and understanding, one so radical that it can change the world.” -Joseph Chilton Pearce author of Magical Child and Evolution’s End
Believing in The Biology of BeliefMost fascinating about this book is that Lipton correlates the research findings of quantum physics and biology to conclude that quantum science, when adapted to cell biology research confirms the essence of the law of attraction, that humans attract circumstances based on thoughts and emotions. Humans are not pre-programmed by DNA with respect to health, behavior, or success. DNA may pre-dispose people, but environment, including thoughts, can change cell behavior.
The most disturbing thing about this book is that it is a self published version of a manuscript Lipton presented at a scientific conference. View graphs accompanying the presentation are still referenced in the book, but not included, giving The Biology of Beliefs an amateurish appearance.
Bruce’s presentation will explore:
The formerly hidden connections between biology, psychology and spirituality
How environment, including your thoughts and emotions, controls the character of every cell
How to become the master of your fate rather than the ‘victim’ of your programs
The way to make success a self-fulfilling prophecy, rather than a day-to-day struggle
இது வரை நாம் மனிதர்களின் பொதுவான தன்மைகளைப் பற்றி , ஓரளவிர்ர்க்கு
நமது உடல் ,நமது மூச்சு ,நமது மனம் , நாம் வருபோது கொண்டு வரும் கர்ம சுமை ,நமது எண்ணங்களை உருவாக்கும் சமஸ்காரம் இவைகளை பற்றி பார்த்தோம் .
மனிதனின் பொதுவான தன்மைகள் அனைவரிடமும் ,உள்ளது .ஆனால் இவைகளில் பெரும்பான்மை சக்திகள் இன்னும் உபயோகிக்கப் படாமலேயே இருக்கிறது !
நன் மும்பே கூறியபடி ,நமது துயரங்களுக்கு விடையும் ,விடிவும் மம்மிடம் மும்பே தரப் பட்டுள்ளது ! நாம் தான் அவைகளை உதாசீனப் படுத்திவிட்டு
துன்பத்தில் துயரப்ப் படுகிறோம்.!
நாம் பெரிய ஒரு பொங்கி ஓடும் ஜீவ நதியின் கரையில் அமர்ந்து கொண்டு தாகத்தால் வருந்தி வருகிறோம் .!
குவிந்து கிடக்கும் சோற்று குவியலிடையே அமர்ந்து பசியால் வாடி வருகிறோம் .!
புதைந்து கிடக்கும் வைர புதலளின் மேல் நின்று கொண்டு வறுமையை எண்ணி
வாடுகிறோம் ! .தங்களுக்கு உள்ளும் , தங்களை சுற்றியும் ,எல்லையற்ற ஆனந்த சுரங்கம் இருக்கிறது என்பது உணரப் படாமலேயே இருக்கிறது !
நரகம் என்பது என்ன ?
அறியாமைதான் நரகம் !
அறிவுதான் ஆனந்தம் !இனி நம் உடலைப் பற்றிய அறிவை தக்க வழியில் பயன் படுத்தி தனி மனித வாழ்வை எவ்வாறு உயர்த்தி , எப்படி நாம் எண்ணிய படி வாழ்வது ? ,நாம் எண்ணியவற்றை எவ்வாறு பெறுவது ? என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம் .
வாழும் போதே ஆனந்தமாக வாழ்வதும் , ஆனந்தமே செல்வத்தை ஈர்க்கும்
எளிய முறை என்பது பற்றியும் இன்னும் பார்ப்போம் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
On 5/30/09, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:
---------- Forwarded message ----------
From: annamalai sugumaran <amirth...@gmail.com>
Date: May 26, 2009 11:17 PM
Subject: Re: [MinTamil] Re: எனக்கு புரிந்தது இதுவே --பாகம் 2
To: minT...@googlegroups.com
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (29)-காலம் என்னும் கனவு !
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
நான் இதில் இணைப்புகளை தந்துள்ளேன் !
புதிய உண்மைகளை முனைவர் லிப்டன் மிக சுவையாக விளக்குகிறார் !
cell DNA பற்றி அவர் விளக்குவதை பற்றிய கருத்துக்களை முனைவர் கண்ணன் எழுதினால் உண்மை பலருக்கும் சென்றடையும் . அது இந்த தொடருக்கும் சுவை
சேர்க்கும் .மொத்தம் ஏழு பாகங்கள் உள்ளது
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
Biology of Belief Part 1
http://www.youtube.com/watch?v=R9JqD25rhxs&feature=related
Biology of Belief Part 2
http://www.youtube.com/watch?v=8lBpgfVgAmQ&feature=related
Biology of Belief Part 3
http://www.youtube.com/watch?v=FDygbJMT1Rc&feature=related
Biology of Belief Part 4
http://www.youtube.com/watch?
v=toH2faRugHo&feature=relatedv=FDygbJMT1Rc&NR=1v=8lBpgfVgAmQ&NR=1
லிப்டனின் உரை கேட்டேன். மிக அற்புதமாக வளர்ந்து வரும் மூலக்கூற்றுவியலை
விளக்குகிறார். எப்படி `உணர்வெனும் பெரும் பதம்` நம் ஜீவனையே மாற்றும்
என்று விளக்குகிறார். அது மட்டுமன்றி, நான் முன்பு எழுப்பிய `பரிணாமவியல்
கேள்விகளுக்கும்` ஆதாரங்கள் காட்டுகிறார். இது வளரும் துறை. இன்னும் 10
ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாடப்புத்தகமாகும். ஆனால் வியத்தகு இணையம்
இப்புரிதலை உடனுக்குடன் வழங்குவது அற்புதம். நான் திருவாய்மொழி அறிந்த
போது உள்ளத்தில் பீரிட்டெழுந்த ஆனந்தத்தை அவர் சில ஸ்லைடுகளில் மிக அழகாக
விளக்குகிறார். பக்தி இலக்கியம் என்பது முழுக்க, முழுக்க `pro biology -
positive' அந்தப் பாஸிடிவ் சிக்னல் வரும் போது நம் வாழ்வே மாறுகிறது.
நிரம்பப்பேச உள்ளது.
க.>
On May 31, 8:18 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> நான் இதில் இணைப்புகளை தந்துள்ளேன் !
> புதிய உண்மைகளை முனைவர் லிப்டன் மிக சுவையாக விளக்குகிறார் !
> cell DNA பற்றி அவர் விளக்குவதை பற்றிய கருத்துக்களை முனைவர் கண்ணன்
> எழுதினால் உண்மை பலருக்கும் சென்றடையும் . அது இந்த தொடருக்கும் சுவை
> சேர்க்கும் .மொத்தம் ஏழு பாகங்கள் உள்ளது
> அன்புடன் ,
> ஏ சுகுமாரன்...
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (32)-
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
2009/6/4 annamalai sugumaran <amirth...@gmail.com>
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (31)-
வாழ்க்கையின் குறிக்கோள் - என்றும் முகத்தில் சிரிப்பு !
தேடல் என்பது என்றும் இயற்க்கை தான் !
.
--
- Show quoted text -
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
நன்றி சுகுமாரன்:
லிப்டனின் உரை கேட்டேன். மிக அற்புதமாக வளர்ந்து வரும் மூலக்கூற்றுவியலை
விளக்குகிறார். எப்படி `உணர்வெனும் பெரும் பதம்` நம் ஜீவனையே மாற்றும்
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (33)-
எண்ணிய எண்ணியாங்கு !
ஆமாம் ! வாழ்கை என்பது தான் என்ன ?
வாழ்க்கை என்பது என்ன என வேறு எப்படி விரிவாக கூறினாலும்
சுருக்கமாக ஒரே வரியில் கூறினால் வாழ்கை என்பது
இதுவரை நாம் எண்ணிய
எண்ணங்களின் மொத்த வடிவம் தான் !
நாம் எண்ணும் எண்ணங்கள்தான் செயல்கள் ஆகி
பிறகு அதுவே பழக்கம் ஆகி பின் அந்த செயல்கள் தொடர்ந்து நடக்க
அதுவே வாழ்கை ஆகிறது ! இதில் எதுவும் ஐயம் இல்லை
எண்ணமே வாழ்வு !எண்ணம் போல் வாழ்வு ,மனம் போல் மாங்கல்யம்
என எந்த கிராமத்து மனிதரை கேட்டால் கூட நமது நாட்டில் கூறுவார்கள் !
இவ்வளவு தெரிந்தும் நாம் எண்ணும் எண்ணங்கள் நமது
கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை !
நாம் தான் நமது எண்ணங்களை உருவாக்குகிறோமா என்றால் இல்லை !
அல்லது வாழ்வில் ஒரு முறையாவது எண்ணத்தை நமது கட்டுப்பாட்டில்
வைக்க முயற்சியாவது செய்கிறோமா என்றால் இல்லை !
எண்ணங்கள் எப்படி உருவாகிறது என ஒரு சிறிய உதாரணம் பார்ப்போம் !
நாம் ஒரு குரங்கை பார்க்கிறோம் என்றுவைத்துக்கொள்ளுங்கள் ,
உடனே ஒரு குரங்கு நமது சிறுவயதில் நம்மை துரத்தியது நினைவுக்கு வரும் ,
அடுத்து நமது சிறுவயது நண்பன் ராமன் நினைவுக்கு வருவான்
அடுத்து ராமன் தற்ப்போது இருக்கும் அமெரிக்கா நினைவுக்கு வரும் ,
அடுத்து நாம் அமெரிக்கா வரும் மாதத்தில் போக இருப்பது நினைவுக்கு வரும் ,
அடுத்து அதற்க்கு விசா வாங்க நாளை சென்னை போக
இருப்பது நினைவுக்கு வரும் ,,
நாளை சென்னைக்கு எதில் போவது டிரைவர் நேரத்தில் வருவாரா என்ற பயம் வரும் , ஒரு வேலை விசா கிடைக்காமல் போனால் என்ன செய்வது ?
அதற்க்கு என்ன ஏற்ப்பாத் செய்வது யாரை பார்ப்பது ?
சென்னையில் எங்கு தங்குவது ?
யார் யாரைப் பார்ப்பது ? என்ன செலவாகும் ? பாங்கு போகவேண்டும்
பேங்க் மேலாளர் மகளுக்கு திருமணம் என்றார் ?
போவதா ? போனமாதம் பாலு வீட்டு திருமணம் போகமுடியவில்லை ?
மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போனது ?
அடாடா இன்று மனைவியை மருத்துவ மனை அழைத்து செல்ல வேண்டுமே ?
இவ்வாறு குரங்கில் ஆரமித்தது எங்கோ வந்து முடியும் ?இவ்வளவும்
மனோ வேகம் எனப்படும் வேகத்தில் !
இதில் பெறுவாரியான எண்ணங்கள் தொடர்பு நமது மனதில் புதைத்துள்ள
பூர்வ எண்ணங்களின் பதிவை பொறுத்து தான் இருக்கும் ,
நம்மை குரங்கு முன்பு துரத்த வில்லை என்றால் ,நல்லசமஸ்காரம்
இருந்தால் ஒருவேளை குரங்கை பார்த்ததும்
ஆஞ்சிநேயர் கோயில் நினைவுக்கு வரலாம்
அது தொடர்ந்து வேறு நல்ல விஷயங்கள் நினைவுக்கு வரலாம் !
இதை ஒரு பயிற்சியாக ஒரே ஒரு நாள் ஒரே ஒரு முறை
ஒரு ஐந்து நிமிடம் நமது எண்ணங்களை தொடர்ந்து கவனியுங்கள் ,
அவைகளை ஒன்று விடாமல் ,உண்மையாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல்
எழுதிப்பாருங்கள் ! நமது எண்ணம் எவ்வாறு கிளைதேழுகின்றதுஎன்பது
நமக்கே வியப்பாக இருக்கும் !
இதை தொடர்ந்து கவனித்தால் எப்படிப்பட்ட சமஸ்காரம் நம்மிடம் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் !
இதில் குரங்கை சந்தித்தது நமது விதி எனக் கொண்டால் !
அது நமது கர்ம பலன் படி நடக்கிறதென்றால் ,,
நமது சமஸ்காரம் நமது எண்ணத்தொடரை நிர்ணயிக்கிறது !
நமது எண்ணத்தொடர் நமது வாழ்க்கையாகிறது !
தோன்றும் எண்ணங்களை நாம் மிக கவனமாக நாம் விழிப்புணர்வுடன்
கவனித்தால் நமக்கு சில உண்மைகள் புலப் படும் !
இவைகளை சற்று கவனமாக புரிந்து கொண்டால் வாழ்க்கை நமக்கு வசப்படும் !
முதலில் எண்ணங்கள் தோன்றுவது நிகழ் காலத்தில் இருந்து ஆனாலும்
உடனடியாக அடுத்த எண்ணம் சென்ற காலம் எண்ணும் இறந்த காலத்திற்கோ ,
அல்லது வரும் காலம் எனும் எதிர்காலத்திர்க்கோ சென்று விடுகிறது !
பிறகு இறந்த காலத்திற்கும் ,எதிர்க்காலதிர்க்கும் மாறி மாறி
குரங்கு மாதிரி தாவுகிறது ,
இது இந்ததாவுதால் நமது கட்டுப்பாட்டில் இல்லை ,நாம் முதல் நிகழ்வான
குரங்கை பார்த்ததுமே நாம் நமது நினைவில் இல்லை ,!
மாறி மாறி எதிர்காலத்திலும் ,வரும் காலத்திலும் வாழ்கிறோம் !
அது எதுவரை என்றால் நாம் மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் வரை !
நிகழ்காலத்திற்கு வருவது என்றால் நமக்கு விழிப்புணர்வு வருவது
என்றுதான் பொருள் ! எப்போதாவது நாமே விழித்துக்கொள்கிறோம் !
விழிப்புணர்வு எப்போது வரும் என்பதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை ,
அது ஆளுக்கு ஆள் மாறுபடும் ! இதில் கர்ம வினையும்
சமச்காரமும் தனது வேலையைக் காட்டும் ! ஏமாந்தவர்களிடம் !
ஆம் ! விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார்கள் என்பது இதைதான் !
எண்ணங்கள் தொடர்ந்து வரிசையாக சோப்பு நுரைபோல்
வந்து கொண்டே இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எண்ணம் தான் ,
புதிய ஒரு எண்ணம் வரும் போது, நிச்சயம் பழைய எண்ணம் போய்த்தான் ஆகவேண்டும் !
உதாரணமாக கார் மோதி ,கிழே விழுந்து ,பயம் மிகக்கொண்டுஇருக்கும் போது ,,
பயம் எண்ணும் எண்ணம் நம்மை ஆளும் போது ,யாரோதரும் ஒரு சோடா ,
நமது பயத்தை மாற்றுகிறது ! சோடா குடிக்கும் போது பயம் போய்விடுகிறது !
அந்த பயம் மீண்டும் வரலாம் ஆனால் அப்போது தொடர் விடுபடுகிறது !
அதை மீண்டும் வரமாமல் எண்ணத்தை சீரமைப்பது தான் ,
அதை எவ்வர்று சீரமைப்பது என தெரிந்து கொள்வது தான் அவனது ஞானம் !
எனவே ஒரே எண்ணம் தான் ஒரு சமயம் !
அடுத்து எண்ணங்கள் எண்ணங்கள் தொடர் என்றாலும் அவை தொடர் அல்ல !
நீர் ஒழுகு மாதிரி இல்லை ! விட்டு விட்டுதான் வருகிறது !
அவைகளுக்கு இடையே ஒவ்வரு எண்ணத்திற்கும் இடையே
ஒரு சிறிய இடைவெளி உண்டு !
எண்ணங்கள் எந்த தர்க ரீதியாகவும் இருப்பதில்லை ! no logic !
தொடர்பும் இருப்பதில்லை !
எந்தக்காலத்திற்கும் உடபபட்டதில்லை !
இந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் நாம் உணர்வதும் இல்லை !
நமக்கு எது விருப்பமோ அதுதான் நமக்கு தெரியும் !
என்ன நடந்ததோ அவைதேரியாது ?
பின் நாம் என்னதான் செய்து கொண்டிருக்கிறோம் ?
இதை நீங்கள் தான் சொல்லவேண்டும் !
இதயம் நாம் இயக்கவில்லை ,
மூளை நாம் இயக்கவில்லை ,
நுரைஈறல் நாம் இயக்கவில்லை ,
நமது எண்ணமும் நாம் இயக்கவில்லை
எனவே மனமும் நாம் இயக்கவில்லை ,
செல்கள் தானே புதிப்பித்துகொள்கிறது !
அதுவும் நாம் செய்வதில்லை !
ஒன்பது ஒட்ட்யுள்ள உடலில் காற்று தானே உலாவி வருகிறது
பிறப்பும் நாம் விரும்பி வரவில்லை !
இறப்பும் நாம் விரும்பும் போது வரப்போவதில்லை !
விழித்திருக்கும் போது நாம் பொருள்களைப்பார்க்க
நமக்கு வெளிச்சம் வேண்டும் கண்கள் வேண்டும் !
ஆனால் இரவில் உறங்கும் போது எந்த வெளிச்சத்தில்
நாம் பொருள்களைப் பார்க்கிறோம் ! எந்தக்க் கண்ணால்
பார்க்கிறோம் என்பது தெரியவில்லை !
என்னமோ , இந்த மனிதன் தான் உலகின் மிக அற்ப்புத
படைப்பு !இந்த மனிதன் தான் இன்னும் புரியாத புதிர் !
இனி அடுத்து வரும் பாகத்தில் எப்படி விழிப்புணர்வு நாமே கொள்வது என்பதையும் ,இன்னும் கொஞ்சம் எண்ணங்களின் கொட்டத்தையும் பார்ப்போம் .!
என்பால் அன்புகொண்டு இடையுறு செய்யமாட்டேன் என தெரிவித்து வினா எழுப்பக் காத்திருக்கும் சான்றோர்களின் பொறுமையை சோதிக்கிறேனா என்பது தெரியவில்லை ?
இன்னும் மூன்று அத்தியாயத்தில் முடிந்துவிடும் என்ற நல்ல செய்தியை
மட்டும் இப்போது சொல்லிக்கொள்கிறேன்
அன்புடன்
ஏ சுகுமாரன்
எனக்கு புரிந்தது இதுவே ! (32)-
அடிப்படை கேள்விகள்
ஆமாம் ! வாழ்கை என்பது தான் என்ன ?
அதை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
2009/6/4 annamalai sugumaran <amirth...@gmail.com>
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (31)-
வாழ்க்கையின் குறிக்கோள் - என்றும் முகத்தில் சிரிப்பு !
தேடல் என்பது என்றும் இயற்க்கை தான் !
அற்புதமாகப் போய்கொண்டிருக்கிறது! நிறுத்த வேண்டாம். இது பிறருக்கு
'போரடிக்கும்' என்று எண்ணுவது கூட ஒரு நீட்சிதான்.
நான் அடிக்கடி சொல்வது போல் , மின்னரங்கம் என்பது 'உளக்கண்ணாடி' இங்கு
தெரிவதுதான் 'நாம்'.
உங்கள் எழுத்து 'உள்ளது உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி'யாக உள்ளது.
அதுவும் இந்த மடல்! அடடா! என்ன தெளிந்த ஓட்டம். என்ன உள்ளொளி, என்ன நடை.
சும்மா நிறுத்தப் போகிறேன் என்று பயமுறுத்த வேண்டாம்.
மின்தமிழில் இரண்டு மூன்று இழைகள்தான் என் ஜீவனை
'தளிர்பித்துக்கொண்டிருக்கின்றன' (rejuvenate).
ஒன்று திருவாய்மொழி, அடுத்தது, உங்கள் கட்டுரை. அவை ஆத்மஸ்வரூபமாக
உலாவுகின்றன. அதைக் காண்பதும், துய்பதும் பேறு.
நல்லதைக் காணும் போது உங்கள் கோட்பாட்டின் படி நல்லது நடக்கிறது,
இல்லையா? பின் ஏன் நிறுத்த வேண்டும்?
ஓய்வு வேண்டுமெனில் இடைவெளி தாருங்கள். அவன் தாள் வணங்க அவன் அருளட்டும்.
On Jun 18, 3:15 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> இதில் பெறுவாரியான எண்ணங்கள் தொடர்பு நமது மனதில் புதைத்துள்ள
> பூர்வ எண்ணங்களின் பதிவை பொறுத்து தான் இருக்கும் ,
> நம்மை குரங்கு முன்பு துரத்த வில்லை என்றால் ,நல்லசமஸ்காரம்
> இருந்தால் ஒருவேளை குரங்கை பார்த்ததும்
> ஆஞ்சிநேயர் கோயில் நினைவுக்கு வரலாம்
> அது தொடர்ந்து வேறு நல்ல விஷயங்கள் நினைவுக்கு வரலாம் !
>
ஆஞ்சநேயரா? நமக்கு அழகர்கோயிலில் காசு கொடுத்து வாங்கி சுவைக்க
வைத்திருந்த கோயில் தோசையை குரங்கு கொண்டு போனதுதானே நினைவிற்கு
வருகிறது;-)
உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர்
எல்லாம் கண்ணன் எம்பெருமான்!
என்ற நினைவு எப்போது? எப்படி வரப்போகிறது? ;-(
> இதை ஒரு பயிற்சியாக ஒரே ஒரு நாள் ஒரே ஒரு முறை
> ஒரு ஐந்து நிமிடம் நமது எண்ணங்களை தொடர்ந்து கவனியுங்கள் ,
> அவைகளை ஒன்று விடாமல் ,உண்மையாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல்
> எழுதிப்பாருங்கள் ! நமது எண்ணம் எவ்வாறு கிளைதேழுகின்றதுஎன்பது
> நமக்கே வியப்பாக இருக்கும் !
>
சுகு, ஒருமுறை எண்ணங்களின் வழியில் ஒரு கதை எழுதலாமா? என முயன்று
பார்த்தேன். "உதிரிப்பூக்கள்' என்பது கதை.
எண்ணங்கள் உதிரிப்பூக்கள். அவை ஒரு தோரணம் போல் தோற்றம் தந்தாலும்.
வேடிக்கை எண்ணவெனில், குவாண்டம் பிசிக்ஸ் பரிசோதனை போல், அதை (எண்ணத்தை)
கவனிக்கிறேன் என்று உட்கார்ந்து எழுத முற்படும் போது, வேறொன்று
நிகழ்ந்துவிடுகிறது!
எண்ணங்கள் என்பவை, second law of thermodynamics விதிப்படி random போக்கு
கொண்டவை. ஒழுங்கு வந்துவிட்டால், random போக்கு போய்விடுகிறது.
எனவே, எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கினாலே அவை அடங்கி, வேறு போக்கு கொள்ள
ஆரம்பிக்கின்றன.
எனவேதான் எழுத்து மிக நல்ல பயிற்சி. எல்லோரும் தினமும் நாலுவரியாவது எழுத
வேண்டும்.
இம்மடல், தன்னளவில் உங்களுக்கு வந்திருக்கும் 'மலர்ச்செண்டு'. கமலம்
கொடுப்பதற்கு முன் அதுவாக வந்து விழுந்துவிட்டது ;-)
கண்ணன்
க.>
பிகு: அதுவே, மின்தமிழின் நல்வழக்கம்.[?]. கேள்விக்குறி! சரிதான்.
சிந்தனைக் கிட்டங்கி என்ற தொடர் எல்லோரையும் நற்சிந்தனைக்கு இழுக்கும்
முயற்சி. நல்ல சிந்தனை என்பது ஆன்மீகம், ஒழுக்கம் என்றுதான் இருக்க
வேண்டுமென்பதில்லை. நல்ல சமூகச் சிந்தனைகள், அறிவியல் சிந்தனைகள், தமிழ்
இலக்கியச் சிந்தனைகள்.. இப்படி அங்கு தினம் பலரும் இடலாமே! எழுதும் போது
நமது சித்தி சுத்தியாகிறது. வாசிக்கும் போது பலரின் சித்தி
சுத்தியாகிறது!
> அதுவே, மின்தமிழின் நல்வழக்கம்.[?]
பிகு: அதுவே, மின்தமிழின் நல்வழக்கம்.[?]. கேள்விக்குறி! சரிதான்.
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
பாகம் 2
எனக்கு புரிந்தது இதுவே ! (34)-
ரகசியம் ! பரமரகசியம் !----1
சென்ற பகுதியில் நாம் நிகழ் காலத்தில் செய்யும்
ஒரு ,கரியத்திலோ ,அல்லது பார்க்கும்பொருளிலே இருந்து கிளைக்கும்
எண்ணங்கள் அடுத்த ஷணமே ஒன்று எதிர் காலத்திற்கோ ,அல்லது தனது இருப்பில் உள்ள கடந்த கால இருப்புடன் ஒப்புநோக்கி இறந்த காலம் சென்று பின் எண்ணம் இறந்த காலம் எதிர் காலம் என தாவ ஆரமிக்கும் என்பதைப் பார்த்தோம் .
.இந்த எண்ண தொடர் நடைபெற ஆரமிக்கும் போது நாம் நம் நினைவை இழந்து விடுவோம் .
ஒரு கனவுலகம் போல் கிறக்கத்தில் ஆழ்ந்து விடுவோம் .
மனம் எப்போதும் நிகழ் காலத்தில் உலாவ அச்சப்படும்
அது இறந்து விட்ட இனி திரும்பி வர இயலாத இறந்த காலத்திலேயும் ,
இனி வரும் அல்லது வராது என கூற முடியாத நிச்சயம் இல்லாத
எதிர் காலத்திலேயும் பாதுகாப்பாக உலாவ மிகுந்த விருப்பம் உடையது .
நாம் விழிப்புணர்வு கொள்வது என்பது என்றும் உண்மையான நிகழ காலத்தில் இருக்கும் போது தான் .
வாழ்கை என்பது ஒரு தொடர் செயல் ,அது தொடர்ந்து எதிர்காலத்தை
இறந்த காலம் ஆக ஆக்கிவருகிறது
வாழ்கை என்பது எண்ணங்கள் தான் அதாவது மனம் தான் என்று பார்த்தோம் .
எனவே மனம் என்பது தொடர்ந்து வருங்காலத்தை ,இறந்த காலமாக ஆக்கி வரும் செயல் தொடர் தான் .
எதிர்காலத்தை இறந்த காலமாக மாற்றி அதை சமஸ்காரமாக பதிவு செய்து கொள்கின்றது. பின்
அதே சமஸ்காரத்தை கொண்டு எதிர்காலத்தை இறந்த காலமாக ஆக்குகிறது
.இது ஒரு தொடர் .
அது ஆகிறது பின் அதுவே ஆக்குகிறது .
அது என்றும் நிற்காத ஒரு தொடர் சங்கிலி .
ஆனால் எண்ணங்கள் என்பதுவோ தொடர்ந்து எதிர்காலதிலேயும்
இறந்த காலத்திலேயும் மாறி மாறி தாவி வரும் ஒரு செய்யல் தொடர் !
இதில் எதிர்காலம் என்பது என்ன எனில் இனி வரும் காலம்
அதாவது இனி நடக்கப் போகும் செயல்கள் !
எதிர்காலம் என்பது ஒன்று நம்பிக்கையாகவும் ,அல்லது அவநம்பிக்கை என்ற பயமாகவும் தான் இருக்கிறது .
நாம் வரும் காலத்தில் இப்படி இப்படி ஆகவேண்டும் என கனவு கோட்டை கட்டுவோம் .
அல்லது ஒரு வேளை ஆகாவிட்டால் என்ன செய்வது என கற்பனை பயத்தில் உலாவுவோம் .இந்த இரண்டு வகையில் தான் எந்த ஒரு வருங்கால எண்ணமும் இருக்கும் .
மாறாக இறந்த காலம் என்பது இது வரை நடை பெற்ற செயல்களில் விளைந்த மக்ழ்ச்சி அல்லது நடக்காமல் போன செய்யல்களினால் விளைந்த துயரம் மற்றும் குற்றவுணர்வு .! இவை அணைத்து நிக்ழ்வும் முழுமையாக பதிவு செய்யப் பட்டு உள்ளது .
இந்த நடை பெற்ற சம்பவங்களில் இருந்து நாம் அனுபவம் என்ற ஏதாவது அறிவு பெற்றால் ,அதுவும் WISDOM ஆக பதிவு செய்யப் படுகிறது .
ஆனால் நம்மில் பெரும்பாலோர் விளையும் செயல்களில் இருந்து
அனுபவம் என்னும் அறிவை பெறத் தவறி விடுகிறோம் .
எனவே தான் பெரும்பாலும் செயத தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப் பட்டு வருகின்றன .!
இரண்டாம் வகுப்பில் பாடம் கேட்டால் இரண்டாம் வகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய அறிவை பெற்றால் தானே மூன்றாம் வகுப்பு போக முடியும் .
நாம் பாடம் கவனமாக கேட்கிறோம் அதில் இருந்து பெற வேண்டிய அறிவை மட்டும் விட்டுவிடுகிறோம் .எனவே மீண்டும் மீண்டும் இரண்டாம் வகுப்பு
அதே பாடம் பயில நேருகிறது .
எண்ணம் என்பது இறந்த காலத்திலேயும் ,எதிர்காலத்திலேயும் மாறி மாறி தாவி வரும் சிந்தனைத்தொடர் எனப் பார்த்தோம் .
அப்போது எண்ணங்கள் இறந்த காலத்தில் இருந்து எதிர்காலம் போகும் போது சும்மா போவதில்லை ,இறந்த காலம் எனும் பகுதியில் இருக்கும் எண்ணற்ற
பதிவுகளில் இருந்து துயரத்தையும் இன்பத்தையும் எடுத்து போய் வருகாலம் எனும் பகுதியில் பரிமாறிவிடுகிறது. அதே மாதிரி எதிராலத்தில் இருந்து வரும் போது
நம்பிக்கை ,அவ நம்பிக்கை என்ற பயம் எனும் உணர்வை கொண்டுவந்து இறந்த காலத்தில் சேர்க்கிறது .
நமக்கு முன்பே தெரியும் எதை நாம் விதை கிறோமோ அதைத்தாம் நாம் பெற முடியும் என்பது .
எனவே நாம் இந்த செயல் தொடரில் எதுவும் விதைக்க முடிவதில்லை .மனம் நம்மை ஒன்றும் மதிக்காமல் அது பாட்டிற்கு எதிர்காலத்தை ,இறந்த காலமாக மாற்றி , பயத்தையும் துயரத்தையும் மாற்றிப்ப்போட்டு ,நமது வாழிவில் இனி நடை பெறப் போகும் செய்யல்களும் நமது சென்ற காலத்தில் நடைப் பெற்ற மாதிரி அதே மாதிரி செய்யல்களே விளைய முழு மூச்சுடம் வேலை செய்ய்கிறது .
நாம் இதில் எப்படி யாவது நிகழ் காலத்தை கண்டுபிடித்து ,அதில் நமக்கு வேண்டியதை விதைத்தால் தான் வருங்காலம் நாம் விரும்பியப் படி இருக்கும் .
இதில் எண்ணங்கள் அதிகம் ஆக இருந்தால் எதிர்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் தாவுவதும் அதிகமாக இருக்கும் .அதனால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பரிமாறப் படுவதும் அதிகமாகத்தான் இருக்கும் .
எனவே இறந்த காலத்தை போலவே வருங்காலம் இருக்கும் சாத்தியம் அதிகம் ஆகிவிடுகிறது
எனவே இந்த நடந்ததே நடக்கும் போக்கினை தடுக்க முதலில் எண்ணங்களை குறைக்கவேண்டும் .
ஏதாவது ஒரு வழியிலே நாம் எண்ணத்தை குறைத்து விட்டால் ,உண்மையில் இறந்த காலத்திலேயும் நடந்ததுஎன என்பது நமக்கு தெளிவாக புலப்படும் .
அப்போது நந்து எல்லாம் நமக்கு தெரியாமலா நடக்கிறது என்றால் ,.
உண்மை தான் ! பெரும் பாலும் என்ன நடக்கிறது என்பதை நாம் நடக்கும் போதே உணர்வதில்லை !
பலர் காலையில் காலை உணவு சாப்பிடும் போதே அவர்களின் எண்ணங்கள் சென்று காரிலோ அல்லது பஸ் நிலயத்திலோ சென்று நின்றுவிடும் .
பஸ்சில் ஏறி உட்கார்ந்ததும் மனம் அலுவலகம் சென்றுவிடும்.
இன்று செய்யவேண்டிய காரியங்கள் , செய்ய வேண்டிய போன் கால் முதலியவை பற்றிய கனவு ஓடும் .பஸ் கார் பயணம் அவகளுக்கு உறைக்காது.
பலவித கற்பனை பயம் ,எதிர்ப்பார்ப்பு இவைகளால் இவர்களின் மனம் நிரம்பி இருக்கும் .
கார் வந்து அலுவலகத்தில் நிற்கும் போதுதான் ,அலுவலகம் வந்தது புரியும் வழியில் ,எத்தனையோ சிக்னல்கள் , எத்தனையோ வளைவுகள் தாண்டி நம் உணர்வின்றி வந்தது புரியும் .இத்தப்னைக்கும் நாம் தான் ஒட்டி வந்திருப்போம் !
கடவுளுக்கு தான் நாம் நன்றி செலுத்த வேண்டும் .
நம்மை நம்பாமல் எத்தனை எத்தனை ஆட்டோ முறைகளை நம்மில் புதைத்து வைத்திருக்கிறார் !.
செக்கு மாடு போல் பழக்கம் நம்மை இயக்கி நமது உணர்வின்றியே நம்மை நமது காரில் நமது அலுவலகம் கொண்டு சேர்த்து விடுகிறது !
நம்மை நிகழ காலைத்தில் இருக்கவிடாமால் நம்மை ஆளும் எண்ணங்கள்
நம்மை ஆண்டு வருகின்றன
எனவே நமது கார் பயணம் நமக்கு உறைக்கவே நமது ஆளும் எண்ணங்கள் குறைவாக இருக்கவேண்டும் .
எண்ணங்கள் குறைவாக இருந்தால் நடை பெற்ற செயல்கள் நமக்கு புரியும் .
எப்படி எண்ணங்களை குறைப்பது , எப்படி நிகழ காலத்தில் இருப்பது ?
நான் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே கூறினேன் ,இந்த தொடரை முடிக்கும் போது இந்தத்தொடரை படிக்கும் அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு அட்சய பாத்திரம் கிடைக்கும் என்று .!
இப்போது அட்சய பாத்திரம்பெறும் தருணம் நெருங்கி விட்டது .!
வெற்றிக்கு போகும் வழி காணும் இடம் அருகில் வந்து விட்டோம் .!
இனி நாம் எப்படி விதை விதைத்து மிகுந்த மகசூல் பெறுவது என்பதைப் பார்க்கப்
போகிறோம் .!
அன்புடன்
ஏ சுகுமாரன்
நான் என்ன சொல்ல? கமலமும் கண்ணனும் மலர்க்கொத்து தந்து மகிழ்ந்து நிற்கிறார்கள்!அதில் நானும் பங்கு கொள்கிறேன் :)
“Reveries of a Solitary Walker”
Rousseau
On Jun 21, 4:51 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
எப்படி எண்ணங்களை குறைப்பது , எப்படி நிகழ காலத்தில் இருப்பது ?
என்று சென்ற பகுதியில் நாம் வினா எழுப்பிஇருந்தோம் !
மனம் தான் வாழ்க்கை என்பதையும் , மனம் ஓயாமல் எதிர்காலத்தை ,இறந்த காலமாக மாற்றி வருகிறது ,என்றும் முன்பே பார்த்தோம் .
எதிர்காலம் என்பது நம்பிக்கை , அல்லது
அவநம்பிக்கை என்ற பயமாகவும் ,
இறந்த காலம் என்பது எண்ணியது நடந்த மகழ்ச்சி ஆகவும் ,நடை பெறாத
குற்ற உணர்வு ஆன guilty ஆகவும் ,துக்கமாகவும் இருக்கிறது என்றும் பார்த்தோம் !
நமக்கு தெரியும் எதை விதைக்கிறோமோ ,அதைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பது ! ஆனால் மனமோ நம்மை விதைக்கவே விடுவதில்லை !
இதில்நிகழ காலம் என்பது எதிர்காலமும் ,இறந்த காலமும் சந்திக்கும் நேரம் தான் !
ஆனால் அது நீடிப்பதில்லை ! உணருமுன்பே நகர்ந்து விடுகிறது !
அப்போது என்ன தான் செய்வது எப்படி நகழ் காலத்தை நம்
கையில் எடுப்பது ,எப்படி நாம் எண்ணியது எண்ணியபடி நடக்க
ஆளும் நேர்மறை எண்ணங்களை எப்படிவிதைப்பது என்றால் ,அதற்கும் ஒரு வழி நம்மிடம் இருக்கிறது .
மூச்சுக்கும் மனதிற்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்துவது !
எப்படி அதன் மூலம் நிக்ழ் காலத்தில் வாழ்வது என்றால் ,
அது தியானம் என்ற ஒரு ஒப்பரிய வேள்வியின் மூலமே நடக்கும் !
தியானம் என்பது மனதை வெறுமனே ஒரு பொருளில் குவிப்பது மாட்டுமல்ல !
அப்படியானால் அதற்க்கு மன ஒருமைப்பாடு என்றுதான் பெயர் !
மன ஒருமைப்பாடு என்பதில் எல்லா
பொறிகளும் வேலை செய்கின்றன !
தியான வேளையில் பொறிகள் அடக்கப்பட்டு மனம் மட்டும்
செய்யல் படுகிறது !
காலதைக்கடந்த நிலையில் வாழ முயற்சிப்பது தியானம் !
காலமற்ற நிலையில் செய்யல் படுவது தியானம் !
நாம் முன்பே பார்த்திருக்கிறோம் ,காலம் என்பது
இரு எல்லைகளுக்கு இடையே இருப்பது தான் என்பதைப்பற்றியும் ,
இடம் ( SPACE ) என்பதைப்பற்றியும் ஓரளவிற்கு பார்த்திரிக்கிறோம் .
உண்மையில் இருவகையான காலங்கள் உள்ளது !
ஒன்று ஒன்று சூரியன் பூமி இவைகளைக்கொண்டு நாம் கணக்கிடும் காலம் !
பூமியின் இயக்கத்தால் 24 மணி நேரம் ஆனதும் மறு நாள் ஆவதும்
மறு மாதம் ஆவதும், மறு வருடம் ஆவதும் ஒருவகை காலம் !
இது இயற்க்கை !
இது மனிதனுடன் சம்பந்தப் படாதது !
இது அனைவர்க்கும் பொது !
இரண்டாவது காலம் அகக்காலம் , !
அது நமக்குள்ளே ஓடும் எண்ண அலைகளால் நிச்சயிக்கப்பட்ட அகக்காலம்!
அது நாமே உண்டாக்குவது !நாம் படைக்கும் நமது பிரபஞ்சம் !
மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது !அதைப்பற்றித்தான் இதுவரை பார்த்துவருகிறோம் !
காலம்அவனை நிழல் போலத் தொடர்கிறது !
இந்த தியானம் பயின்ற மாணவர் சிறந்த மாணவர்ஆகிறார் !
இந்த தியானம் பயின்ற வியாபாரி சிறந்த வியாபாரி ஆகிறார் !
இந்த தியானம் பயின்ற பொறியாளர் சிறந்த பொறியாளர் ஆகிறார் !
இந்த தியானம் பயின்ற மனிதன்சிறந்த மனிதன் ஆகிறார் !
இத்தைய தியானங்களில் பல்வேறு வகையான ,பல வித பலன்களை தரவல்ல
பல நிலை தியானங்கள் உள்ளன !
நாம் பார்க்கப்போவது மிக எளிய ,நாம் விரும்பும்
எதையும் விரும்பியவண்ணமே காண வழி வகுக்கும் ஒரு
எளிய முறைத்தியானம் !
அதை பயின்று வாழும் போதே வாழ்வின் அத்தனை
சாரங்களையும் உணர ஒரு வாய்ப்பு !
பின் அதைக்கொண்டு வாழ்வின் குறிக்கோளான அடைய
அடுத்த படியை செல்ல அதுவே ஒரு ஆயத்தம் .!
அதன் முறைமற்றும் மூச்சும் மனதும் சேரும் மார்கத்தையும்
அடுத்த பகுதியில் பார்ப்போம் .
அன்புடன்
ஏ சுகுமாரன்
போரடிக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை.
பொறுமையைச் சோதிப்பதும் இல்லை.
(அறிவைச் சோதிக்கும் இடங்கள் உண்டு; அது பற்றிப்
பேச அவசரம் ஒன்றும் இல்லை.)
நேரம் எடுத்து நினைத்தௌ போல், எழுதுங்கள்.
நானொருவன் (முடிந்த வரை) தொடர்ந்து படித்துக் கொண்டுதான் வருகிறேன்.
சரி, வசதி கருதி பாகம் மூன்று தொடங்கலாமா?
ரெ.கா.
On Jun 18, 2:15 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> *பாகம் 2*
>
> *எனக்கு புரிந்தது இதுவே ! (33)-*
>
> *எண்ணிய எண்ணியாங்கு !*
வழி மொழிகிறேன்!
க.>
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (36)-
போனக சாலை
மனதைப் பற்றி எத்தனை கூறினாலும் அது போதுமானதாக இருக்கவில்லை !
இன்றுநேற்றா மனத்தைப் பற்றி கூறுகிறோம் !
மனிதன் தன்னை வெளிப்படுத்த அறிந்த உடனே அவனுக்கு மனதைப் பற்றி
தான் விசாரம் ! மனதை பற்றிய மனவிசாரம் மனிதனிடம் ஆரம்பம் முதல்
இன்றைய வரை இன்னும் நீங்கவே இல்லை !
மனதை உடையவன் மனிதன்
என்ற கோட்ப்பாடு அவனிடம் வந்து விட்டது !
இதில் அதிசயம் என்ன வென்றால் இதையும் சொல்லுவது
மனம் தான் என்பதுதான் ! மனிதன் வாழ்வில்
பெறும் முன்ற்றத்தை அளப்பதும் மனதுதான் !
பின் மனிதன் அடையும் பிற்ப்போக்கையும் அறிவிப்பது மனம்தான் !
அறச்செயல்கள் செய்து வாழ்க்கையில் சொர்கத்தை போல் அனுபவிப்பதும் மனம் தான் ! அறவழி நில்லாது பாபங்கள் செய்து பின் நரகம் போல்
தொல்லைகள் படுவதும் இதே மனதைக் கொண்டுதான் !
பார்க்கப் போனால் நமது வாழவே எதோ ஒன்றை நோக்கிய பயணம் தான் !
அது குறிக்கோள் இல்லாது தற்செயலாக தாறுமாறாக செல்கிறது
என்றும் நம்ப முடியவில்லையே ! எதோ ஒரு ஒழுங்கு நிச்சியம் அதில் இருக்கிறது ! எதோ ஒரு விதி அதை ஆள்கிறது !
அறிந்தோ அறியாமலோஎதோ ஜீவர்கள் அனைவரும பரத்தை நோக்கியே
பயணம் போகின்றனர் ! அதில் திருப்பம் இருதாலும் ,மயக்கம் இடையில் வந்தாலும்
அவ்வப்போது பாதை திருத்தப் பட்டு , மூலத்தை நோக்கிய பயணம்
தொடர்ந்து நடை பெறுகிறது ! வந்த இடம் நோக்கிய பயணம் தான்
பயணத்தின் முடிவாகயுள்ளது .!
அதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிகம் ,மிகப் பெரிது தான் !
ஜீவர்கள் எடுக்கும் முயற்சிக்கு அனுபக்ஷம் எனப்பெயர் !
இந்த முயற்சிக்கு இந்த முயற்சிக்கு கடவுளிடம் இருந்து வருகின்ற உதவிக்கு ,
அனுகிரகத்திற்கு சம்பு பக்ஷம் எனப்பெயர் !
இந்த இரண்டும் வேறு வேறானதா ? அல்லது ஒன்றா என்ற முரண்பாடு
என்றும் உள்ளது !தனக்குத்தானே உதவி செய்து கொள்வதும் , தன்னை தெய்வத்திடமே ஒப்படைப்பதும் எப்படி ஒன்றாகும் என்ற முரண்பாடு
என்றும் நிலவிததான் வருகிறது !
உண்மையில் இரண்டும் வேறுவேறு அல்ல ! இவைகளிடம் முரண்ப்பாடு இல்லை என்பதே நிதர்சனம் !
தங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் நெடும் தூரம் ஜீவர்கள் தங்கள் சொந்த முயச்சி
ஒன்றையே நம்பி வருகின்றனர் ! சுயப் ப்ரயத்தனத்தைக் கொண்டே கல் ,பூண்டு முதலிய நிலையில் இருந்து உயர்நிலை மானிடர் ஆகும் பக்குவம் வரை
சுய முயற்சி ஒன்றே அவர்களுக்கு துணை !
அதாவது மூளை ஒன்றே துணை !
மனம் அப்போது செயல் படவில்லை !
ஆனால் மனிதனாக பரிணாம வளர்ச்சிக்கு பிறகு அடுத்த நிலை போவதற்குள்
அவனது மனதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பதிவுகளும் அவனை பற்றி
பிணைந்து மேலே செல்லும் அவனது முயற்சிக்கு தடை போடுகிறது !
பின்பு எண்ணற்ற பிறவிகளுக்கு பின் ,அவனது கருமக்கணக்குக்கு ,சமஸ்கார
பிணப்புக்கு தப்பி அவனருளால் அவனை அறியும் போது ,தனக்கும் தனது
தலைவனுக்கும் உள்ள தொடர்பு அறியும் போது ,தன முயற்ச்சிகளை எல்லாம்
தன தலைவனிடம் ஒப்படைக்கிறான் !
அதற்க்கு அடைக்கலம் என்று பெயர் !
ஜிவன் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் ஒப்பற்ற முயற்சி
இந்த அடைக்கலம் தான் !
பிஞ்சு நேரம் வரும்போது கனியாவது போல் ,
மனிதன் நேரம் வரும் போது அவனும் கனிகிறான் !
அனுபக்ஷம் எனும் சுயப் ப்ரயத்தனத்தில் இருந்து ,
சம்பு பக்ஷம் எனும் ஈஸ்வர அனுகிரகம் எனும் நிலையில் பயணம் பூர்த்தியாகிறது !
இந்தநிலை ஏதாவது தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்துமா ?
என்றால் , இத நிலை ஏற்ப்படும் போது நமக்கு தன்னம்பிக்கை தேவை இராது !
அது ஒரு உதற வேண்டிய குணமாக ஆகியிருக்கும் !
அப்போது நம்பிக்கைதான் வேண்டி இருக்குமேத்தவிர ,தன்னம்பிக்கை தேவை இராது ! தான் என்பது அகன்றபின் தன்னம்பிக்கை என்பது ஏது ? எதற்கு ?
அந்த நிலைக்கு நாம் இன்னும் வெகுதூரம் போகவேண்டும் !
அதுவரை தன்னம்பிக்கையோடு இருப்போம் !
தன்னம்பிக்கை இல்லாத ஒரு நிலையை நோக்கி பயணப்படுவோம் !
அந்தக்கவலை இப்போது வேண்டாம் !
இதை கூறுவது தாயுமானவர் ஸ்வாமிகள் தனது
மௌன குருவணக்கத்தில் ,
" அணு பக்ஷ, சம்புபக்ஷம் ஆம் இருவிகற்ப்பமும் மாயாதி சேவையும் அறிந்து " என்கிறார் !
மனிதவாழ்வின் நோக்கம் வெறும் உணவு உண்டு வாழ்வது இல்லை என்பது
மனிதனுக்கு என்றோ அவனுக்குதெரிந்து விட்டது !
அவனது முந்திய பரிணாம வளர்ச்சி வரை அவனது நோக்கம் உணவு உண்டு
உடல் வளர்த்தல் மட்டுமே !
இப்போது உணவை உண்டு வாழ்வதை விட உயர்ந்த குறிக்கோள் அவனுக்கு இருப்பதாக அவன் உணர்கிறான் !உணவை உண்டு மட்டும் சும்மா இருக்க அவனால் இப்போது முடிவதில்லை !
பலருக்கும் பலவித குறிக்கோள் ! ஆயிரம் ஆயிரம் மனிதருக்கும் ஆயிரம் ஆயிரம் குறிக்கோள் !
அத்தனையும் தொகுத்து நான்கு ஆக ஆக்கியது மனிதனின் அறிவு !
அறம் பொருள் இன்பம் வீடு தமிழ் மொழியிலும் வட மொழியிலே
தர்மம் ,அர்த்தம் ,காமம் ,மோக்ஷம் எனவும் இந்த நான்கும் மனிதனால்
நாடப்பெறும் புருஷார்த்தம் வகுக்கப்பட்டது !
மனிதனின்தேட்டைகளும் ,வேட்டைகளும் இந்த நான்கில் அடங்கி விட்டன !
கூறப்போனால் இந்தநான்கைப் பற்றி கூறுவது ஒன்றே நூல்கள் ,சாஸ்திரங்கள் எனப்பட்டன !
இத்தகைய நூல்கள் எண்ணிக்கையில் அடங்காதவை !
தமிழ் மொழியில் தான் பக்தி இலக்கியங்கள் மிக அதிகம் !
இத்தனை சமய பூசல்களையும் , அனல் வாதங்களையும் ,புனல் வாதங்களையும் தாண்டி இன்னும் நமக்கு கிடைப்பெறும் சமய நூல்கள் எண்ணில் அடங்காதவை !
அவைகளை முழுவதும் கேள்விப்படவே இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமோ !
இனிப்பு சுவைதான் ! ,அனைவருக்கும் பிடிக்கும்தான் !,
ஆனால் மனிதருக்கு மனிதர் சுவையில் எத்தனை வித்தியாசம் !
அதை நம்பிதானே இனிப்புக்கடைகள் தெருவுக்கொன்றாக
நிறம் நிறமாகவும் ,வடிவிலே வேறுவேறாகவும் , திரவ ,திட
என மாறுதலாகவும் நம்மை உண்னத்தூண்டுகின்றன !
ஒவ்வருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கிறது !
அது போலவே சொல்லும் பொருள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கு
ஒவ்வொருவர் சொன்னால் தான் புரிகிறது !
எனவே தான் இத்தனை இத்தனை நூல்கள் !
நமதுமுன்னோர் நமது பால் கொண்ட கருணையின் காரணமாக
எண்ணற்ற சமய நூல்களை நமக்கு வழங்கி சென்றுள்ளனர் !
பகவத் கீதைக்கு உரை எழுதாத குருமார்கள் யார் ?
ஆதி சங்கரர் ,குரு ராமானுஜர் முதல் நமது பாரதி வரை பகவத் கீதைக்கு
உரை எழுதாத மகான்கள் யார் ?
அவர்கள் பகவத் கீதைக்கு உரை முன்பு இல்லை என நினைத்தா
எழுதினர் !
இவ்வாறு உண்மையை பலரும் அறியச் செய்வது அவர்களின் மனித
தர்மமாக கருதினர் ! இது ஒரு அறிவு தானம் எனப்பட்டது .
தாங்கள் அறிந்ததை தாங்கள் மட்டுமே வைத்து கொள்ளாது
மனிதர்கள் அனைவருக்கும் அறிவிக்க முயயன்றனர் .
தற்க்காபிற்காகவும் ,பிற உயிர்களின் மேல் தனது ஆளுமையை செலுத்தவும்
எல்லா விலங்குகளுக்கும் பல ஆயுதங்களை அவைகள் பிறக்கும் போதே
இறைவன் கொடுத்துள்ளான் .அனால் விலங்குகளில் இருந்து உர்யர்ந்த
மனிதனுக்கு அவனுக்கு என எந்த ஆயுதமும் வெளிப்படையாக இல்லை ,
ஆனால் தோற்றத்தில் தெரியாத மனமும் ,அதில் இருக்கும் பகுத்தறிவும் அவனை
யாராலும் வெல்ல முடியாதவனாகவும் ,எல்லா விலங்குகளையும் வென்று அடக்கும் ஆற்றலையும் அவனுக்கு வழங்குகிறது .
மெய்ப் பொருளை காணும் திறன் அவனிடமே உள்ளது !
அந்த மனத்தைக் கொண்டே மனத்தை வெல்லும் திறனை
படிபடியாக மனிதன் அடைகிறான் !
மாடிக்கு போக படிப்படியாகத்தானே போகவேண்டும் !
மனதை தூய்மையாக்குதல் ,பின் அதனை வென்று விடுதல்
இதுவே வாழ்வின் குறிக்கோள் !இதை மனதைக் கொண்டுதான் செய்யவேண்டும் !
அதேசமயம் ..வாழும் போதே நல்லவண்ணம் வாழும் முறையும்
அதே மனத்தைக் கொண்டு பயிலவேண்டும் !
அதற்க்கு தடை செய்யும் கர்மக்கணக்கை , சமஸ்கார சிக்கலை
மேலும் மேலும் வளர்க்காமல் குறைக்கும் வித்தையை பயிலவேண்டும் ..
ஒருமனிதனுக்கு வறுமை உண்டாவதற்கு அவனது மனநிலை , அவனது சூழ்நிலையே காரணம் ஆகிறது .
உடல் வாழ உணவு மிக அவசியம் ! உடலில் ஒரு பசியையும் , மனதில் ஒரு
பசியையும் பொதித்தே நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் !
உணவுதேடும் முயற்ச்சியே நமது வாழ்வின் பெறும் பகுதியை ஆக்கிரமிக்கிறது ! தேடி அதைபாதுகாக்க வைக்கிறது !
அதை மிகுதியாக சாப்பிட வைக்கிறது !
மிகு உணவிற்கு ,உணவு கிடைக்காமல் போகும் என்ற அச்சமே காரணம் .
பின் அதுவே பழக்கம் ஆகிறது !
இதுவே மனத்திற்கும் வாய்க்கிறது !
மனப்பசி நம்மை அலைய வைக்கிறது !
இதுவே நமக்கு ஒரு போஜன சாலை சொந்தம் என வைத்துக்கொள்வோம் ,
அங்கே எப்போது சென்றாலும் நாம் விரும்பும் அத்தனை உணவுகளும் பெற்று உண்ண நமக்கு உரிமை இருக்கிறது என்றால் ,நாம் உணவுக்கு அலைவோமா ?
அதை சேர்த்து வைப்போமா ?மிகுதியாக சாப்பிடுவோமா ?
இவ்வாறு இறைஎன்னும் போஜனசளை நமக்கு சொந்தம் என்பது நமக்கு தெரியாமல் இருக்கிறது அதனால் நாம் வறுமை என பாவித்து , சேர்த்துவைக்க அலைகிறோம் ,பிறர் உடமையும் தானே அடைய அலைகிறோம் !
இத்தனையையும் வாழ்வின் நோக்கங்களையும் தாயுமானவர்
மிக தெளிவாக விளக்குகிறார் !
நாம் இதுவரை சென்ற பகுதிவரை மனத்தின் படர்க்கையான எண்ணங்களின் ,இறந்த
காலம் , வரும் காலம் என்னும் ஆட்டம் ,பாட்டம் பற்றி பார்த்தோம் .
நிகழ்காலம் என்னும் வயலிலே எவ்வாறு வருங்காலத்தை விதைப்பது ,
நல்ல ஒரு வாழ்வினை ,நாம் எண்ணிய எண்ணியவாறே எவ்வாறு அடைவது
என ,அதன் வழியான தியானத்தின் மார்கத்தை பார்ப்பதற்கு முன்னே மீண்டும்
மனம் ,இறை ,வாழும் வழி இவைகளைப் பற்றி கொஞ்சம் பார்த்தோம் ..
இதில் எழும் கேள்விகள்தான் உலகின் மிகப்பழமையான கேள்விகள் ,
எத்தனையோ மகான்களால் ,அவ்வப்போது எத்தனையோ விதமாக விளக்கிய போதும் ,அந்த சந்தேகங்கள் ,கேள்விகள் திருப்பித்திருப்பி கேட்க்கப் படுகிறது .
ஆனால் இதற்க்கு விடை ஒவ்வருவருக்கும் தனித்தனியானது !.இது பொதுவானது அல்ல !எத்தனையோ முறை புத்தகத்தில் படித்திருந்தாலும்
,தானே உணரும் வரை அது புரியாது !
படித்து மட்டும்பசியை ஆற்ற முடியுமா ?
உணர்தல் எப்போதுயாரால் நிகழும் என்பது யாராலும் அறிய முடியாது !
இதற்க்கு முன் எத்தனை அடி விழுந்தாலும் கடைசி அடியில் தான்
கல் பிளக்கும் ! அந்த கடைசி அடி எப்போது விழும் ,யாரால் விழும் என்பது அவனருள்ளாலே நிகழும் விஷயம் !
போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
புசித்தற்கு இருக்கும் அது போல
புருஷர் பெறு தர்மாதி ,வேதமுடன் ஆகமம் ,
புகலும் அதினால் ஆம் பயன்
அணுபக்ஷம் சம்பு பக்ஷம் ஆம் இருவிகற்ப்பமும்
மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று எனும் ஓர்
மானத விகற்ப்பம் அறவென்று நிற்ப்பது நமது
மரபு என்ற பரமகுருவே !
-----தாயுமான சுவாமி
அன்புடன்
ஏ சுகுமாரன்
On Jul 5, 3:39 am, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> *பாகம் 3*
>
> *எனக்கு புரிந்தது இதுவே ! (36)-*
> ஆனால் மனிதனாக பரிணாம வளர்ச்சிக்கு பிறகு அடுத்த நிலை போவதற்குள்
> அவனது மனதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பதிவுகளும் அவனை பற்றி
> பிணைந்து மேலே செல்லும் அவனது முயற்சிக்கு தடை போடுகிறது
அவ்வாறானால் இந்தப் பரிணாமம் ஏனோ?
இப்படிப்பட்ட வடவமைப்புக் குழப்பங்கள் பற்றிதான்
ரங்கனிடமும் கேள்விகள் எழுப்பினேன். அவருடைய
விளக்கமும் வந்து கொண்டிருக்கிறது.
We are swinging between on the one hand, intelligent design, and
on the otherhand "maya". இவை முரணாக இருப்பது போல்
தோற்றம்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி உங்கள் குவிமையம்
குலைய வேண்டாம். இதைக் குறித்துக் கொண்டு
மேலே சொல்லுங்கள். இறுதியில் பேசுவோம்.
ரெ.கா.
>
போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
புசித்தற்கு இருக்கும் அது போல
புருஷர் பெறு தர்மாதி ,வேதமுடன் ஆகமம் ,
புகலும் அதினால் ஆம் பயன்
அணுபக்ஷம் சம்பு பக்ஷம் ஆம் இருவிகற்ப்பமும்
மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று எனும் ஓர்
மானத விகற்ப்பம் அறவென்று நிற்ப்பது நமது
மரபு என்ற பரமகுருவே !
-----தாயுமான சுவாமி
சென்ற எனக்கு புரிந்தது இதுவே தொடர்
பகுதியில் மேலேயுள்ள தாயுமான சுவாமியின்
பாடல் ஒன்றை குறிப்பிட்டுருந்தேன் .
அதில் உணவு என்பதற்கு போனகம் என்னும் சொல்லை
தாயுமான சுவாமிகள் உபயோகம் செய்திருப்பது பற்றி
மின் தமிழ் அன்பர்கள் யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன் .
பானகம் என்ற சொல் இன்னும் சிலப் பகுதியில் உள்ளது .
அது ஒரு திரவ உணவைக .குறிப்பது ! வெல்லம் ஏலம்
போட்டு செய்யும் ஒரு நாட்டுப்புற சர்பத் !
போனகம் என்பது திட உணவை குறிக்கிறது போலும் ,
ஒருவேளை போஜனம் என்பதின் அந்தக் கால தமிழாக்கமா ?
யாரவது தெரிந்தவர்கள் விளக்கினால் தெரிந்து கொள்ளலாம் .
முனைவர் நா கணேசன் போன்றவர்கள் இதுகுறித்து இன்னும் கூறமுடியும்
என நினைக்கிறேன்.
ஆனால் அவர் இந்தத் தொடரை படிக்கிறாரா என்பது
தெரியவில்லை
போனகசாலை என்பது உணவுசாலை போலும் !
எனக்குக்கூட போனகசாலை என்று ஒரு உணவு விடுதி
ஆரமிக்க ஆசை வருகிறது !
ஆசைகள் விடாது கருப்புரகம் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
> போனகம் என்பது திட உணவை குறிக்கிறது போலும் ,
> ஒருவேளை போஜனம் என்பதின் அந்தக் கால தமிழாக்கமா ?//
அப்படித்தான் இருக்க வேண்டும். போஜன சாலை போனக சாலை
ஆகியுள்ளது.
‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே’ - தொண்டரடிப்பொடி ஆழ்வார்
தேவ்
771
(பெரிய புராணம்)
பக்தி இலக்கியங்கள் தோன்றுமுன் இச்சொல் பயன்பாட்டில் இருந்ததா
தெரியவில்லை.
தேவ்
எனவே இன்று எப்படியாவது எழுதவேண்டும் என தீர்மானித்து
இதுவரை எழுதியதை நானே ஒரு முறை படித்தேன் !
அப்போது நண்பர்களுக்கும் இதன் சுருக்கத்தை ( சில பகுதிகளை தொகுத்து )
ஒரு முறை தந்தால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியதால் ,
இந்த இழையின் முதல் பாகத்தின் சில பகுதிகளை தருகிறேன் .
நண்பர்கள் ஏற்பர் என நம்புகிறேன் !
அன்புடன்
ஏ சுகுமாரன்
எனக்கு புரிந்தது இதுவே !
பாகம் 1 -- தொகுப்பு
சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டு செய்கிறார்களா ?
எந்த பிரச்னையும் தீர்வுடன் தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டு தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வை தேடி அலைகிறோம் !
எப்போதோம் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில் தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !
உஷாராக நாம் காலுறை அணிவது தான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரை திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்ளவது
மிக சுலபம் !
தவறான காரியத்தை செய்ய எந்த
சரியான வழியும் இல்லை !
முடிவு சரியோ இல்லையோ !
போகும் பாதை சரியாக இருக்கவேண்டும் !
பலதும் படைத்த கடவுள் பணத்தை
மட்டும் தான் படைக்கவில்லை !
இறைவனின் இயற்க்கை நியதிகள் எதுவும் பணத்தை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை !
பலர் சொல்வது போல் எல்லா மனிதனும் கடவுள் இல்லை !
ஆனால் எல்லா மனிதருல்லேயும் கடவுள் இருக்கிறார் !
அவனைக் காண ,ஞானத்தைப் பெற பரந்த கல்வியிலோ
வாதப் பிரதி வாதத்திலோ மட்டும் இயலாது !
நமது தாய் தந்தையை நாம் தேர்ந்தெடுக்வில்லை !
அவர்களும் நம்மை வேண்டி இருக்கவில்லை !
பின் எதுதான் பிணைத்தது !பிணைப்போ தொடர்வது
இன்று நேற்றல்ல கொடுக்கல்வாங்கல் தீரும் வரை
தொடரும் பந்தம் !ஆனால் பாத்திரங்கள் தான் மாறுகின்றன
இறைவனின் மாயா சக்தி இயற்க்கை
மாயை என்றால் இல்லாமல் இருப்பது அல்ல
இருப்பதுவே இல்லாமல் இருப்பது !
இயற்கையின் பிரதிநிதி சந்திரன்
பரமனின் பிரதிநிதி சூரியன் !
பிறப்பின் ஆதாரம் பரவிந்து ,நாதம்
உடல் எடுக்க வேண்டிய உயிர் சூரிய சந்திர
கதிர்கள் மூலம் பரவி
உண்ணும் உணவின் மூலம்
அவன் தாயின் உடலில் பரவி ,
தந்தையின் பிராணனின் உந்துதலுக்கு
காத்திருக்கும் !
பிறப்பின் முதல் மூச்சில் தான்
பிறவி தொடங்குகிறது !
பிறப்பின் இறுதி மூச்சில் தான்
இறப்பின் தொடக்கம் !
மூச்சு விடுவது காற்றை இழுத்து
விடுவது மட்டும் தானா ! மூச்சினிலே
தான் இருக்கு வாழ்வின் ஸுச்சுமம் !
மூச்சி விடுதல் தான் வாழ்தலின் அடையாளம்
சுவாசத்தை பரிஎன்றும் ,வாசிஎன்றும்
அழைப்பர் யோகியர் ! குதிரை என்பதற்கு
சுவாசத்தின் ஓட்டம் துடிப்பு ,
எளிதில் அடங்காத தன்மை இவையே
காரணம் ! இந்தகுதிரைக்கு 16 கால் !
மூச்சு உள்ளே போகும் போது வேண்டியவை
விருப்பம் நினைக்க கை கூடும் .
மூச்சு வெளியே செல்லும் போது நமக்கு வேண்டாதையும்
வெளியே தள்ள நினைக்கலாம் !
வறுமையே போ! சினமே போ !
வாழும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே ,ஒடுங்குவதும்இந்தஆகாயத்திலே!
இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள
இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !
பிரணாயாமம் மூச்சை கணக்கிட்டு செய்வது
இதுவே பல சித்த சக்திகளுக்கு மூலம் ,
குருஅருளும் ,குரு முன்பில் செய்ய சித்திக்கும் !
முறையுடன் பயின்றால் உடம்பு உள்ளம் அறிவு
வளமுறுதல் நிச்சயம் ! வெற்றிக்கு மூலம் இதுவே !
பிரணாயாமம் செய்யாமல் வாழ்வில் வெற்றி
கல்வியில் சிறப்பு ,தொழிலில் மேன்மை ,
அடைதல் அரிது ! உயிரின் மூலம் பிராணனே !
அதன் ஆக்கப் பயிற்ச்சியே பிரணாயாமம் !
வாழ்வெனும் சமரில் நமக்கு அளிக்கப்பெற்ற
சக்தி வாய்ந்த ஆயுதம் நமது தேகம் ஆகும் !
இத்தேகத்தில் 96 வகை செயல்பாடு நடை பெறுகின்றன
இவைகள் தேகத்தின் 96 தத்துவம் எனப் படும் !
ஆகாயம் ,வாயு , நெருப்பு நீர் , மண்
இவையே பூதங்கள் ஐந்து ! மூலங்கள் ஐந்தும்
தனித்தும் இணைந்தும் ஆகின்றன உலக
பொருள்கள் யாவையும் ! அதுவே ஆகின்றது
நமது மேனியாகவும்
மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்துவது இந்த மனமே .!
மனமுடையவன் தான் மனிதன் !
மனம் அகத்தில் சுக்ஷமமாக இருப்பதால் அகம் !
உடலுக்கு உள்ளே இருந்து இயங்குவதால் உள்ளம் !
இதுவே அறிவுக்கு ஆதாரம் !
உணர்ச்சிக்கு உறைவிடம் !
இந்த மனம் இல்லையெனில் ஆய கலை அறுபது நாலும் இல்லை !
அறிவு நூல் விஞானம் மெய்ஞானம் எதுவும் இராது !
மனத்தினால் தான் மனத்தை அறியமுடியும் !
மனத்தின் வலிமை எல்லையில்லாதது !
இம்மனம் விரிய விரிய வலிமை குறையும் !
அதுவே அடங்க அடங்க பலமாகும் !
அறிவு மூளையை சார்ந்தது
அன்பும் அருளும் மனதை சார்ந்தது !
இந்த நெறிபடைத்த மனம் எதையும் பற்றும் ,
விடும் , பற்றி விடும் , விட்டு பற்றும்
விட்டும் விடாது , பற்றவும் விடாது விட்டும் நிற்கும்
இத்தனை சக்தியும் அதன் இயல்பான ரஜோ தாமச இயல்பாலே
நாம் உண்ணும் உணவை நமது உடலில் உள்ள
ஜாடராகினி முன்று பாகம் ஆக்குகிறது
ஸ்தூல உணவு மலமாகிறது !
மத்தியமானது தசையாகவும்
சுக்ஷமமானது மனதாகவும் மாறும் !
மனம் அன்ன மயமானது !
உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப
மனதின் தன்மை வாய்க்கும்
மனத்தில் நல்ல மனம் கெட்ட மனம் என இரண்டு இல்லை !
இரண்டும் இருப்பது மனம் ஒன்றலேத்தான் !
நல்ல வாசனையில் மனம் இருந்தால் நல்ல மனம்
அசுப வாசனையில் நின்றால் கெட்ட மனம் !
மனம் ஊஞ்சலை ஒக்கும் ! ஊஞ்சல் ஒருபக்கம் எவ்வளவு
செல்லுமோ ,மறுபக்கமும் அவ்வள்வு சென்றே தீரும் !
மனம் ஒரு பொருளை அதிகம் விரும்பி அதிகம்
மக்ழ்வு கொண்டால் அப்பொருளை பிரியும் போது
அதே அளவு துயரம் வாய்க்கும் ! தொடக்கத்தில்
மனம் மட்டுடன் மகிழ்வு கொண்டால்
தொடரும் துயரமும் குறைவே ஆகும் !
மனம் எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவம் !
அதே சமயம் மனதில் புறமன்த்தில் இருந்து தான் எண்ணங்கள்
கிளம்புகின்றன ! அங்கே வாசனைகள் ஒரு மூட்டையாய்
காத்திருக்கின்றன அவை ஒரு நியதியில் இயங்குகின்றன !
அடுத்தது சித்தம் , அதுவோ நீரின் கூறு !
நீரின் விசைப்போல் எதையும் பற்றி தன வசமாகும்
தன்மை கொண்டது ! மனதின் தூண்டுதலால் செயல் படும் புலன்களின்
அடியே இருக்கும் நுண்ணிய உணர்வை துல்லியமாக
பதிவு செய்யும் டேப் ரெகார்டர் !இப்படி பதிவு செய்யும்
பணித்தான் சித்தத்தின் விருத்தி எனப் படும் !
பலஜென்மங்களின் கர்மவினைகளை ,மனத்தின் அத்தனை
சேட்டைகளை விருத்தியாக பதிவு செய்யும் ! யோகம் என்பது
சித்தத்தின் விருத்தியை ,நிரோதகம் செய்யும்
சிறந்த வழியே ஆகும் ! இந்த யோகம் எட்டு வகைப் படும் !
மனிதனின் நான் எனும் பொருளை
பற்றி நிற்கும் அகங்காரம் ஆகும் ! இதுவோ மண்ணின் கூறு !
இறுகிய கல் போல் எதையும் நான் என பற்றி நிற்கும்
பண்பு ஆகும்! இது இல்லை எனில் எண்ணங்களின் விருத்தி இல்லை !
ஆற்று வெள்ளத்தில் எந்தப் பகுதியும் நீர் தான் போல் அந்தக்கரணத்தின்
எந்தப் பகுதியும் நான் எனும் தன முனைப்புதான் அடிநாதம் !
படைப்பின் சிகரம் மனிதன் !
மனிதனைப் படைத்தது பற்றி இறைவனே
பெருமை கொள்ளலாம் ! மனிதனால் மட்டும் மூலமே
வினையின் பதிவுகள் கழியும் !வினையின் பதிவு
அகற்ற மனிதராய் பிறந்தே தீரவேண்டும் ! தேவர்களும் !
ஐந்து உடம்புகள் கொண்டது ஆத்மா !கவனியுங்கள்
ஆன்மாவிற்கு ஐந்து கோசம் !
அதுவே உடம்பின் 96 தத்துவத்தில்
கோசங்கள் எனப் படும் .அவையே அன்னமய கோசம் ,
பிராண மய கோசம் மனோ மய கோசம் விஞ்ஞான மய கோசம் ,ஆனந்த மய கோசம் என்பனவாம் !
பிராண மய கோசம் ,மனோமய கோசத்தால் நிரப்பப்பட்டுள்ளது !
பிராணனை விட நுண்ணியது !அறிவு உணர்ச்சிகள் கருத்துக்கள் ,
சமஸ்காரங்கள் அனைத்துக்கும் இருப்பிடம் இந்த மனோமய கோசமே !
ஒவ்வோர் உடம்பும் அந்தந்த நிலையில் பிரபஞ்சத்துடன் இணைந்துள்ளது !
நாம் தனியே தோன்றினாலும் ,பிரபஞ்சத்தின் அங்கமே !
நமது ஸ்தூல உடம்பு ஸ்தூல பிரபஞ்சத்துடனும்
மனோ மய உடம்பு பிரபஞ்ச மனத்தினுடனும் ,
விஞ்ஞான மய உடம்பு மஹத் எனும் பிரபஞ்ச புத்தியுடனும் ,
ஆனந்த மய உடம்பு இறையானுபவத்துடன் தொடர்பு கொண்டது !
மூளை ஒரு பொறி ,ஒரு இயந்திரம் ,பதிவு செய்யும் இயந்திரம் .
அது மனம் எனும் ஆற்றல் இல்லாமல் செயல் படாது .
மனமோ ஆத்மா இல்லாமல் செயல் படாது .!
எண்ணங்கள் தோன்றுவதற்கு மனமே காரணம் !
தொடருவதும் மனதில் தான் !
எண்ணங்கள் தோன்றுவது பழைய பதிவுகளும் ,விருப்பு வெறுப்புமே காரணம் ..!
அடுத்தது சுழல் !
எண்ணம் எப்படி தொடங்குகிறது என நோக்கிக் கொண்டே இருந்து ,அது தோன்றும் போதே மாய்ப்பதுதால் ரமணரின் மார்க்கம் !
நல்லது செய்தாலும் ,கெட்டதுசெய்தாலும் ,மனதில் பதிவு தொடர்ந்துதான் ஆகும் !
விலங்கு தங்கத்தில் செய்தால் என்ன !
இரும்பில் செய்தால் என்ன ? விலங்கு விலங்குதான்
என்கிறார் ஓஷோ !
மனம் தான் பழைய பதிவுகளை ஜன்ம ஜென்மமாக தொடர்ந்து சேமித்து ஆன்மாவுடன் தொடர்ந்து வருவது .!
உடல் வாடி உயிர் நீக்கும் முன்
அதன் ஒளி சுழல் வாடி விழும் என கண்டுள்ளனர்
அதன் ஒளி சுழலை புகைப்படம் எடுக்கும்
கருவிகள் கூட வந்து விட்டன !
அந்த ஒளி சுழலை கண்டே வரும் நோய் களையும்
அவன் கொண்டுள்ள குணங்களையும் அறியலாம் என்கின்றனர் !
ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு தனி ஒளி வட்டம் !
கோபத்திற்கு ஒன்று ! கவலைக்கு ஒன்று !
இது மனிதனின் அனுபவத்திற்கும் ,அறிவிற்கும் தகுந்த படி
அளவில் சிறிதாகவும் ,பெரிதாகவும் விளங்குவதுண்டு !
இதைதான் புனிதர்களின் தலைக்கு பின்னே ஒளிவட்டமாக
போட்டனரா ? நம் பெரியவர்கள்
மனதிற்கு தானே அறியும் சக்தி இல்லை
ஆனால் அறிவானுக்கு அது அறியும் கருவியாகிறது !
மூக்கு கண்ணாடிக்கு பார்வை உண்டா ?ஆனால்
பார்ப்பவனுக்கு பார்வைதருகிறது !அதே போல்
மனம் அறிபவனுக்கு அறிவைதருகிறது
மூளையை பயன்படுத்தி !
மனிதனின் தினசரி வாழ்கையில் அவன்
மொத்தம் முன்றே நிலையில் தான்
இருக்கிறான் ! அவைகளே அவஸ்தைகள் எனப் படும் !
விழிப்பு நிலை எனப்படும் ஜாக்கிரத்
உறக்க நிலை எனப் படும் ஸுஷுப்தி
கனவு நிலை எனப் படும் ஸ்வப்னம்
நான் படிக்கிறேன் என்ற உணர்வு இல்லாமல் படிகிறவனுக்கு
படிப்பது ஒரு இன்பமாக இருக்கிறது ! அதுவே நான் படிக்கிறேன்
என பரீட்சைக்கு படிப்பது பெரும் துன்பமாக இருக்கிறது !
இந்த 'நான்' உணர்வு போனால் இதுவே ஒரு யோகமாகும் !
நான் என்னுமகங்காரம் இல்லாமல் எதுவும் செய்தால்
அதுவும் மிக இலேசாகும் ! சுமையும் குறையும் !
பதிவும் இராது !இதில் எதுவும் பாபமும் இல்லை !
வினை மட்டும் உண்டு !அதில் விருத்தி ஏதும் இராது !
இனி பாகம் இரண்டின் சிலபகுதிகள் நாளை !
ஒரு தத்துவ ஞானியின் செறிவுடன்..
எப்படி விழுகின்றன வார்த்தைகள் பார்த்தீர்களா?
இவர் ஒஷோ, ரமணரை மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.
உள்ளத்தே உறையும் இறைவன் பேசட்டும்.
க.>
2009/7/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
> அன்பின் சுகுமாரன்,
> நிங்ஙள் மின்தமிழின் அருமைகளில் ஒருவர்.
> அருமையாய், பொறுப்பாய், நிங்ஙள் தொகுத்தளிக்கும், மின் செய்தித்தகவல்கள்,வளமான
> செய்திக்கோர்வைகள்.
> காலையில் கணிணி திறந்ததுமே மனதை சுகந்தமாய் வரவேற்கிறது இக்கட்டுரை. சிமென்ட்
> வேலைக்கிடையேயும்
> இக்கட்டுரையை , இழையாக்க முடிகிறதே,[என்னால் என்டெ வேலையிலிருந்து அப்படி,
> இப்படி திரும்பக்கூட முடிவதில்லை.]
> வரி வரியாய் படித்தேன்.சிந்தனையில் விழுந்த அலை மலர்கள், மலர்ந்து விகசிக்க,
> மகிழ்வுடன் தருகிறேன்.---சம்சயமேயில்லை.
> இவ்வாரப்பூச்செண்டு நிங்ஙளுக்கேதான்.
> அன்பில் கமலம்.
>
>--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
எனக்கு புரிந்தது இதுவே !
பாகம் 2 -- தொகுப்பு
இந்த உலகில் எதற்குமே ஒரு விலையுண்டு !
எதுவும் சும்மா கிடைக்காது !சும்மா கிடைப்பதும் நிலைக்காது !
நாம் தேடும் எந்த வெற்றிக்கும் ஒரு விலையுண்டு !
அதன் விலை அடையும் வெற்றிக்கு சமமாகத்தான் இருக்கும் !
யோகம் என்பது இணைப்பு அல்லது சேர்க்கை
என சித்தர்கள் பொருள் கொண்டுள்ளனர் !
நமது புலன்கள் எப்போதும் வெளியே செல்லும்
வழக்கம் கொண்டவை ! நமது மனமோ
என்றும் சென்ற காலத்தை எண்ணி , இழை இழையாக
எண்ணம் என்னும் நூலை விட்டுக்கொண்டும் ,
வரும் காலம் எனும் வராத ஒரு காலத்தை எண்ணி
கற்பனைக் கோட்டையை கட்டும் எண்ணத்தை,
மறுபுறம் விட்டுக்கொண்டும் இருக்கும் !
யோகி என்றும் விழிப்புணர்வுடன் இருப்பவன் !
அவன் கற்ப்பனா வாதியல்ல !
சென்றதை எண்ணி புலம்பும் கோழையல்ல !
அவன் நாளையை நிர்ணயிக்கும் இன்றில்
இன்பமாக வாழ்பவன் ! இன்றைய வாழ்வை
நாளைய முதலீட்டாக ஆக்கத்தெரிந்தவன்!
தியானம் என்பது ஒன்றை எண்ணுதல் , ஒன்றையே எண்ணுதல் !
ஒன்றில் உள்ளம் ஒன்றிவிட்டால் வேறொன்றை அது பற்றாது !
அதுவே தியானம் ஆகும் ! இதை மனம் என்னும் திருவிளக்கை
ஏற்றுதல் என்பார் திருமூலர் ! இந்த தியானத்தை
பயிலத்தான் முன்னே கூறிய ஆறு படிகளும் கடந்து வந்தோம் !
இது ஆன்மீக வெற்றிக்கும் ,எண்ணிய எண்ணியவாறு பெறுவதற்கும்
இறைவன் வகுத்த ஒரே வழி ! இது நமது இந்திய ஞானியர்
நமது பாரதத்திற்கு தந்த கொடை! ஒரு ரகசிய ஞானம் !
இதுவரை முழுவதும் அவிழாத மர்ம முடிச்சு !
தியானம் என்பது ஒருமை அமைதி இவைகளை நோக்கிய ஒரு பயணம்
மன ஒருமைப்பாட்டில் செவி கண் போன்ற பொறிகள் அடக்கப் படாமல் இயங்கிவருக்ன்றன ! புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் படவில்லை !
ஆனால் தியான வேளையில் பிற பொறிகள் அடக்கப் பட்டு மனம் மட்டும் செயல் படுகிறது .புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் பட்டு விடுகிறது .
ஆன்ம பாதையில் குருவின் பங்கு மேலானது !
குரு நேரில் சுட்டிக்காட்டாமல் பயணம் தொடரமுடியாது !
துரோணர் பாண்டவருக்கும் கவுரவர்களுக்கும் ஆசிரியறேத்தவிர குரு இல்லை !
அதனாலேயே செஞ்சோற்று கடன் தீர்க்க தவறு எனத்தெரிந்தும்
கவுரவர்கள் பக்கம் போர் செய்ய நேர்ந்தது ! ஆனால் சத்குரு
கட்டுப் படுத்த முடியாதவர் ! அவர் கடவுளின் ரூபம் !
குருதான் சீடரை தேர்ந்தெடுக்கிறார் !தன வாழையடி வாழை
தொடர்பு அறுபடாமல் ஞானத்தை தகுந்த பாத்திரம் அறிந்து அளிக்கிறார் !
ஸ்தூல உடல் ,சூக்ஷம உடல் காரண உடல் இவை முன்றிலும்
அதற்க்கு ஆதாரமாக அதன் ஜிவனாக விளங்கிவது ஆத்மா !
ஆத்மா இல்லாவிட்டால் மனம் வேலை செய்யாது !
மனமும் பிராணனும் ஆத்மாவின் இரு சகாக்கள் !
ஆத்மா அழிவற்றது !பந்தம் இல்லாதது !
ஆத்மா சத சித்து ஆனந்த ரூபம் கொண்டது
எங்கும் நிறைந்தது அஞானம் எனும் குறை இல்லாதது
சுத்த சைதன்யம் வடியுள்ளது
அதுவே எஜமானன் !அதற்க்கு மேல் எதுவும் நமது உடலில் இல்லை !
அதற்க்கு இந்த உடம்பு ,ஒரு தேர் போன்றது !உடலின் பத்து இந்திரியங்களும்
இந்தத் தேரின் குதிரைகள் ! இந்த ஜிவன் புருவ நடு ஆகிய இடங்களில்
சஞ்சரிக்கும் !
மனம் இல்லாமல் ,ஜீவன் இருக்கும் ஆனால் பிராணன் இல்லாமல்
ஜீவன் இராது ! இந்த ஜீவ சக்தியைத்தான் கண்ணன் பரா பிரகிருதி
அபரா பிரகிருதி என கீதையில் கூறுகிறார் !
ஆத்மா நேரடியாக எந்தப் பொருளையும் தொடர்பு கொள்ளமுடியாது !
ஆத்மாவிற்கும் புறப் பொருளுக்கும் இடையில் மனம் ஒன்று வேண்டும் !
அந்த மனம் அந்த புறப் பொருளின் வடிவை எடுக்கவேண்டும் ,
ஆத்மாவின் ஒளி இந்த விருத்தி அல்லது எண்ண அலையில் விழும் போதுதான்
அந்தப் பொருளைப் பற்றிய அறிவு உதயமாகிறது !
சமஸ்காரங்கள் என்பது முன் அனுபவங்களின் புதைப் பதிவுகள் !
இதில் முறப்பிறவி அனுபவங்களும் அடங்கும் !
இந்த சமஸ்காரங்கள் செயலற்ற மந்தப் பதிவுகள் அல்ல !
இவை சக்தி வாய்ந்த மன ஆற்றல் மண்டலங்களாகும் !
ஓடுகின்ற நதி எப்படி பாறைகளில் முட்டி மோதி
கிளை கிளையாக ஆற்றலுடன் பிரிகிறதோ அப்படியே
மனதில் தோன்றும் எண்ண ஓட்டமும் சமஸ்காரத்தால்
முட்டி மோதி கிளை கிளையாக கிளைததோடுகிறது !சிதைவுறுகிறது !
சமஸ்காரத்தை இருவகையாக பிரிக்கிறார் பதஞ்சலி !
கர்மபீஜம் ,வாசனை இவை இரண்டும் சமஸ்காரத்தின் வகை !
கர்மபீஜம் ஆசைகளையும் ,உணர்ச்சி வேகங்களையும் தூண்டுகிறது !
வாசனை நினைவை எழுப்புகிறது
ஒவ்வொரு செயலும் மனதில் ஒரு சமஸ்காரத்தை கர்ம பீஜத்தை உண்டாக்குகிறது !
அந்த சமஸ்காரங்கள் எழும்போது நாம் அதே செய்யலை
செய்யத் தூண்டப் படுகிறோம் ! இந்த தூண்டுதலையே நாம் ஆசை , வேகம் எனக் கூறுகிறோம் !
ஒவ்வொரு செய்யலும் , ஒரு அனுபவத்தை நம்மிடம் உண்டாக்குகிறது !
ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு சமஸ்காரத்தை மனதில் உருவாக்குகிறது !
இந்த அனுபவத்தின் சமஸ்காரம வாசனை எனப் படுகிறது !
செயலின் சமஸ்காரம கர்மபீஜம் !
அந்த செய்யலால் நாம் பெறும் அனுபவத்தின் சமஸ்காரம வாசனை !
மனிதன் தனது மனத்தின் சமஸ்காரத்தின் காரணமாக
கண்டத்தையே காணவும் , தின்றதையே தின்னவும்
பெற்றதையே பெறவும் விரும்புகிறான் ,இதனால் பழைய செயல்களையே திரும்ப செய்யும் இச்சையினால் ,செய்ததையே செய்கிறான் ! இதற்க்கு
மனத்தின் சமஸ்காரத்தின் கர்மபீஜங்களும் ,வாசனையும் காரணமாக அமைகிறது !
வாசனைகள் நினைவையும் ,கர்ம பீஜங்கள் செய்யலுக்கு வேகமும்
அளிக்கிறது ! எனவே புதிய செயல் செய்வது சாத்தியமில்லாமல் போகிறது !
இந்த வட்டத்தில்லேயே வாழ்வு கழிகிறது
நினைவு -வேக பிணைப்பை அறுப்பது தியான வாழ்வின் முதல் கட்டம் !
மனத்தை தூய்மை படுத்துவது என்பது இதுவே !
பலஉருவங்களாகவும் ,எண்ணங்களாகவும் ,பல நினைவுகள் வரலாம் !
ஆனால் அவை உந்து வேகங்களுடன் இணைக்கப் படுவதில்லை !
நீல வானில் உலவும் வெண்மேகங்களைப்போல் இந்த நினைவுகளும் மனதின் உணர்வுப் பகுதியில் சிறிது நேரம் உலவி விட்டு சென்றுவிடும் !
அடுத்தவழி தொடர்ந்து நற்கருமங்கள் செய்தல் !
இதன்மூலம் மனதில் நல்ல சமஸ்காரங்கள் உருவாக்குதல் !
நல்ல சமஸ்காரங்கள் புதியதாக தொடர்ந்து உருவாகும் போது
தீய சமஸ்காரங்கள் தலை தூக்காமல் தடுக்கப்படுகின்றன !
காலப் போக்கில் அவை மிக அடியே போய், வலுவிழக்கும் !
இந்த உலகில் மனதைவிட ஆச்ச்சிரியமான
ஒரு வஸ்து இருக்கிறதா ? சந்தேகமே !
பிரபஞ்ச ரகசியத்தின் மொத்த அறிவும்அதன்
ஆழத்தில் தானேபுதைந்து கிடக்கிறது !
தியானம் செய்ய விருபுபவர் ,இந்த மனம் எவ்வாறு
செயல் படுகின்றது ?என்பதை முதலில் விரிவாக அவசியம்
தெரிந்து கொள்ளவேண்டும்
இந்த உடலுக்கு நாம் சொந்தக்காரர் என்றாலும்
இந்த மனதிற்கு நாம் மட்டுமே சொந்தக் காரர் இல்லை !
இந்த மனம் ஜன்ம ஜன்மமாக யார்யாரோ உருவாகியது !
இப்போது நம்மிடம் வந்திருக்கிறது !
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும்
ஒரு எதிர்வினை நிச்சயம் உண்டு !
நெல் போட்டால் நெல் தான் முளைக்கும் என்பதை நம்பினால் ,
காரண காரியத்தையும் நம்ம்பிதான் ஆகவேண்டும் !
நடை பெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் நிச்சயம்
ஒரு பின்புலம் நிச்சயம் இருக்கும் !
இந்த வினையின் பயனை சித்தர்கள் வினைப் பயன் என்பார்கள் !
ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் கூடவே ஒரு கண்ணுக்குத்தெரியாத
வினைப்பயன் தொகுதி எனும் மூட்டை உண்டு !
அவை சஞ்சிதம் எனும் முறப பிறவியில் செய்யத வினையில் ,இன்னும்
அந்த வினையின் பயனை அனுபவிக்காமல் எஞ்சி நிற்கும் கர்ம சுமை !
பிரரப்ப்தம் என்பது வினைப் பயனில் இந்தப் பிறவிக்கு என பங்கீடு செய்யப் பட்ட வினைகள் ! இந்தக் காரியங்கள் இந்தப் பிறவியில் உங்களுக்கு நடந்தே தீரும் !
அது சஞ்சிதத்தின் ஒரு பகுதியாகவோ ,அல்லது முழுமையாகவோ இருக்கலாம் !
இதைத்தான் பேச்சு வகையில் உன் பிராப்த்தம் இதுதான் எனக் கூறுகிறோம் .!
ஆகாமியம் என்பது இந்தப் பிறவியில் செய்து ,அடுத்தப் பிறவிக்கு என சேரும் சுமை !
சமஸ்காரம் ஒரு மனதின் பதிவு !
அது இந்தப் பிறவியில் நடக்கப் போகும்
செயல்களில் நம்மை நமது பூர்வ கர்மபீஜம் என்னும் செய்ல் ஊக்கம் ஆன
ஆசையாகவோ , அல்லது வாசனை எனும் நினைவாகவோ ,
நமக்கு பூர்வ ஜன்மத்தில் செய்து பழக்கமான செயல்களியே மீண்டும் செய்யத்தூண்டும் ஒரு புதைப் பதிவு !
ஆனால் சஞ்சிதம் ,பிரரப்ப்தம் ஆகாமியம் என்பது
நாம் பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின்
பிரதிபலனான பெறும் வினைப் பயன் ஆகும் !
நாம் புண்ணியம் செய்திருந்தால்
பலருக்கு உணவுகொடுத்து பசிப்பிணி ஆற்றி இருந்தால் ,
இப்பிறவியில் நம் பசி ஆற்ற பலர் அவர்களது
கர்மக் கணக்கு தீர்க்க உணவுடன் காத்திருப்பார்கள் !
உபசரிக்க பலர் இருப்பார் !
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், ‘இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,என
அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.விளங்கும்
ஆன்மா எனப் படும் பேரறிவாகும் !
இதை தெரிந்துகொண்டால் அடைய முடியாது எதுவும் இல்லை என்று ஆகிவிடும்
நடை பெறும் அனைத்து காரியங்களுக்கும் ஒரு காரணம்
இருதே ஆகவேண்டும் ! விதையில்லாமல் இதுவும் முளைப்பதில்லை !
காரணம் இல்லாமல் காரியமும் நடைபெறுவதில்லை !
விளைவை மேம்படுத்த விஞ்ஞானம் விதையைத்தான் முதலில்
மேம்படுத்துகிறது ! காரியத்தையும் மேம்படுத்த காரணத்தை தான்
சீராக்கவேண்டும் .! ஆனால் விதை போட்டால் உடனேவா விளைகிறது ?
இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்று காரியமாகவோ ,அல்லது காரியமாகவோ
மாறி ,மாறி இருக்கின்றன !
ஒரேசெயல் ஒரு சமயத்தில் காரணமாகவும் ,மற்றொரு சமயத்தில்
காரியமாகவும் இருக்கிறது !இதுவே காரண காரிய விதி !
இதுவே நமது வாழ்வின் விதி !
காரணம் எல்லாம் காரியம் ஆவதற்குள் காலம் என்று ஒன்று இடையில்
புகுவதால் எந்த காரணம் எந்தக் காரியம் ஆகிறது என்ற அறிவு நமக்கு
இல்லாமல் ஆகிறது ! மேலும் அதில் இடம் என்ற ஒன்றும் சேருகிறது
இந்த இடம் அந்தக் காரியம் நடை பெறும் இடத்தை குறிக்கும் .
இடம் மற்ற பொருள்களை சார்ந்து இருப்பது போல்
காலமும் எப்போதும் இரண்டு நிகழ்ச்சியை சார்ந்து இருக்கிறது
நமது சனாதன மதத்தின் அறிவியல் ஆரம்பம் முதல் ஒவ்வரு உயிரும் வேறு வேறு எனவும் ஒன்றில் ஒன்றில் கலப்பு இல்லாமல் தனித்தனியே உள்ளது என உறுதியாக கூறுகிறது .!
நாம் செய்யும் வினைகளுக்குத்தான் நாம் பொறுப்பு ! நமது வினையை கழிக்கவே நமது பிறப்பு ! அப்ப்டியே தான் அனைவரும் !
இந்த பரம்பரை நோய் என்பது பொய் என மருத்துவ துறையில் முப்பது ஆண்டுகள்
கல்வி போதித்த ஒரு ஆராச்சியாளர் ஒரு அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார் !
ஆங்கிலத்தில் தான் !
தனது The Biology of Belief என்ற முப்பது ஆண்டு ஆராச்சி நூலில் Bruce H. Lipton,
பல ஆச்சிரியமான முடிவுகளை தெரிவிக்கிறார் .
நாம் நமது உடலின் இயக்கம்கள் நமது cell களாலும் DNA வாலும் நிர்ணயிக்கப் படுவதாக நினைத்து வந்தோம் .ஆனால் முனைவர் லிப்டன் அவைகளை ஆதாரப் பூர்வமாக மறுக்கிறார் .நமது மனதின் ஆழ்ந்த உள்மன நம்பிக்கைகளும் , நேர்மறை எதிர்மறை உணர்வுகளுமே DNA, CELL களை இயக்குவதாக நிருபித்துள்ளார் !
Bruce’s presentation will explore:
The formerly hidden connections between biology, psychology and spirituality
How environment, including your thoughts and emotions, controls the character of every cell
How to become the master of your fate rather than the ‘victim’ of your programs
The way to make success a self-fulfilling prophecy, rather than a day-to-day struggle
தேடல் என்பது என்றும் இயற்க்கை தான் !
எதைத் தேடுகிறோம் என்பதை தெரியாமலேயே தேடுகிறோம் .!
எதை செய்து என்ன கிடைத்தாலும் மனம் மட்டும் தேடுவதை
நிறுத்தக் காணோம் ! ஒன்று கிடைத்தால் மனம் அடுத்ததை தேடுகின்றது !
மனதில் அமைதி மட்டும் வருவதில்லை ! தேடுதலும் நிற்ப்பதில்லை !
புழு பூச்சி கூட நகர்ந்து நகர்ந்து எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது !
அவை இவ்வாறு பயணப் பட்டதால் தான் பரிணாம வளர்ச்சி பெற்றன !
கண்ணீர் மல்கி பக்தி செலுத்தி தேடும் பக்தி யோகமும் ,
அறிவு பூர்வமாக தேடும் ஞான யோகமும்
பக்தியும் அறிவு தேடுதலும் கலந்த சேவை மனம் கொண்ட
கர்ம யோகத்தை நாடுபவரும் ,பிராணாயாமம் ,ஹட யோகம் ,
யோகாசனம் என உடல் ரீதியாக முயலும் ராஜ யோகம்
பயிலும் சாதகரும் , தியானம் என்ற ஒன்றிலே இணைகிறார்கள் !
உடல் ,மனம் புத்தி ,ஆத்மா என்ற நான்கும் நமக்குள் இருக்கிறது
இந்த நான்கும் ஒன்றாக இணைவதே யோகம் !
இவை முரண் பட்டால் நமக்கு அமைதி இழப்பு !
இந்த முரண்பாடுதான் நமது அகங்காரம் !
இந்தப் பிறப்பின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும் ,
அதை நோக்கி செல்லும் பயணம் இனிமையாக இருக்க வேண்டும்
என்பதே அவனின் முதல் குறிக்கோள் !
நமது வாழ்வு ஒரு பயணம் ஆனால்
இந்த பயணம் இனிமையாக இருக்கவேண்டுமானால்
அவன் செல்லும் பாதை சுகமாக இருக்கவேண்டும் !
அந்த பாதைக்குத்தான் வாழ்க்கை எனப் பெயர் !
மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதில் ஒவ்வருவருக்கும்
ஒவ்வரு கருத்து இருக்கும் ! ஆனால் ஆராயிந்து பார்த்தால்
யாவரும் ஒப்புகொள்ளகூடிய குறிக்கோளாக கூறவேண்டுமானால்
ஒற்றைவரியில் கூறினால் வாழும் போது
உங்கள் முகத்தில் என்றும் சிரிப்பு இருக்கட்டும எனக் கூறலாம் !
ஆனந்தம் தான் வாழ்க்கை !அதுதான் அர்த்தம் !
எந்தப் படைப்பு அதிக புலன்களை தாங்கி வருகிறதோ
அது ஞான சேகரிப்பில் ஈடுபடுகின்றன என்கிறது உபநிஷதம் !
பரிணாம வளர்ச்சியில் மனிதன் தான் அதிக புலன்கள் உள்ளவன் !
அவன் வெளிப்புறம் செல்லுமாறு உள்ள புலன்களை
உட்ப்புரமாக செலுத்தி உள்ளே நோக்க
அவனிடன் உள்ளே புதைத்துள ்ள பரம் பொருள் புலனாகின்றது !
சத்சித் ஆனந்தத்தை உணர்கிறான் !
சொல்லப் போனால் வாழ்கை என்பது தான் என்ன ?
வாழ்க்கை என்பது என்ன என வேறு எப்படி விரிவாக கூறினாலும்
சுருக்கமாக ஒரே வரியில் கூறினால் வாழ்கை என்பது
இதுவரை நாம் எண்ணிய
எண்ணங்களின் மொத்த வடிவம் தான் !
இவ்வளவு தெரிந்தும் நாம் எண்ணும் எண்ணங்கள் நமது
கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை !
நாம் தான் நமது எண்ணங்களை உருவாக்குகிறோமா என்றால் இல்லை !
அல்லது வாழ்வில் ஒரு முறையாவது எண்ணத்தை நமது கட்டுப்பாட்டில்
வைக்க முயற்சியாவது செய்கிறோமா என்றால் இல்லை !
இதயம் நாம் இயக்கவில்லை ,
மூளை நாம் இயக்கவில்லை ,
நுரைஈறல் நாம் இயக்கவில்லை ,
நமது எண்ணமும் நாம் இயக்கவில்லை
எனவே மனமும் நாம் இயக்கவில்லை ,
செல்கள் தானே புதிப்பித்துகொள்கிறது !
அதுவும் நாம் செய்வதில்லை !
ஒன்பது ஒட்ட்யுள்ள உடலில் காற்று தானே உலாவி வருகிறது
பிறப்பும் நாம் விரும்பி வரவில்லை !
இறப்பும் நாம் விரும்பும் போது வரப்போவதில்லை !
விழித்திருக்கும் போது நாம் பொருள்களைப்பார்க்க
நமக்கு வெளிச்சம் வேண்டும் கண்கள் வேண்டும் !
ஆனால் இரவில் உறங்கும் போது எந்த வெளிச்சத்தில்
நாம் பொருள்களைப் பார்க்கிறோம் ! எந்தக்க் கண்ணால்
பார்க்கிறோம் என்பது தெரியவில்லை !
என்னமோ , இந்த மனிதன் தான் உலகின் மிக அற்ப்புத
படைப்பு !இந்த மனிதன் தான் இன்னும் புரியாத புதிர் !
சென்ற பகுதியில் நாம் நிகழ் காலத்தில் செய்யும்
ஒரு ,கரியத்திலோ ,அல்லது பார்க்கும்பொருளிலே இருந்து கிளைக்கும்
எண்ணங்கள் அடுத்த ஷணமே ஒன்று எதிர் காலத்திற்கோ ,அல்லது தனது இருப்பில் உள்ள கடந்த கால இருப்புடன் ஒப்புநோக்கி இறந்த காலம் சென்று பின் எண்ணம் இறந்த காலம் எதிர் காலம் என தாவ ஆரமிக்கும் என்பதைப் பார்த்தோம் .
நாம் விழிப்புணர்வு கொள்வது என்பது என்றும் உண்மையான நிகழ காலத்தில் இருக்கும் போது தான் .
வாழ்கை என்பது ஒரு தொடர் செயல் ,அது தொடர்ந்து எதிர்காலத்தை
இறந்த காலம் ஆக ஆக்கிவருகிறது
வாழ்கை என்பது எண்ணங்கள் தான் அதாவது மனம் தான் என்று பார்த்தோம் .
எனவே மனம் என்பது தொடர்ந்து வருங்காலத்தை ,இறந்த காலமாக ஆக்கி வரும் செயல் தொடர் தான் .
இதில் எண்ணங்கள் அதிகம் ஆக இருந்தால் எதிர்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் தாவுவதும் அதிகமாக இருக்கும் .அதனால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பரிமாறப் படுவதும் அதிகமாகத்தான் இருக்கும் .
எனவே இறந்த காலத்தை போலவே வருங்காலம் இருக்கும் சாத்தியம் அதிகம் ஆகிவிடுகிறது
எனவே இந்த நடந்ததே நடக்கும் போக்கினை தடுக்க முதலில் எண்ணங்களை குறைக்கவேண்டும் .
இதில்நிகழ காலம் என்பது எதிர்காலமும் ,இறந்த காலமும் சந்திக்கும் நேரம் தான் !
ஆனால் அது நீடிப்பதில்லை ! உணருமுன்பே நகர்ந்து விடுகிறது !
தொடரும் போதே முடிந்து விடுகிறது !
உணரும் போதே இறந்து விடுகிறது !
இந்த நிகழ காலம் என்பது ஒரே ஒரு ஷணம் கூட இருப்பதில்லை !
இதில் இறந்த காலம் என்பதுசேமிப்பாகிறது !
வரும் காலம் நம்பிக்கையிலேயே வாழ்கிறது !
மூச்சு என்றும் இறந்த காலம் ஆவதில்லை !
அது ஒரு தொடர் !நாம் பிறந்த போது விட ஆரமித்த
முதல் மூச்சு அது ! இறுதி மூச்சு ஆகும் போது நாமும்
இருப்பதில்லை !
அதுவரை அது ஒரு தொடர் இயக்கம் !
அந்த மூச்சு தான் மனதை அடக்கும் கடிவாளம் !
மூச்சை அறிந்தவர் முழுவதும் அறிந்தவர் ஆகிறார் !
மூச்சுக்கும் மனதிற்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்துவது !
எப்படி அதன் மூலம் நிக்ழ் காலத்தில் வாழ்வது என்றால் ,
அது தியானம் என்ற ஒரு ஒப்பரிய வேள்வியின் மூலமே நடக்கும் !
தியானம் என்பது மனதை வெறுமனே ஒரு பொருளில் குவிப்பது மாட்டுமல்ல !
மனிதவாழ்வின் நோக்கம் வெறும் உணவு உண்டு வாழ்வது இல்லை என்பது
மனிதனுக்கு என்றோ அவனுக்குதெரிந்து விட்டது !
அவனது முந்திய பரிணாம வளர்ச்சி வரை அவனது நோக்கம் உணவு உண்டு
உடல் வளர்த்தல் மட்டுமே !
இப்போது உணவை உண்டு வாழ்வதை விட உயர்ந்த குறிக்கோள் அவனுக்கு இருப்பதாக அவன் உணர்கிறான் !உணவை உண்டு மட்டும் சும்மா இருக்க அவனால் இப்போது முடிவதில்லை !
ஒருமனிதனுக்கு வறுமை உண்டாவதற்கு அவனது மனநிலை , அவனது சூழ்நிலையே காரணம் ஆகிறது .
உடல் வாழ உணவு மிக அவசியம் ! உடலில் ஒரு பசியையும் , மனதில் ஒரு
பசியையும் பொதித்தே நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் !
உணவுதேடும் முயற்ச்சியே நமது வாழ்வின் பெறும் பகுதியை ஆக்கிரமிக்கிறது ! தேடி அதைபாதுகாக்க வைக்கிறது !
அதை மிகுதியாக சாப்பிட வைக்கிறது !
மிகு உணவிற்கு ,உணவு கிடைக்காமல் போகும் என்ற அச்சமே காரணம் .
பின் அதுவே பழக்கம் ஆகிறது !
இதுவே மனத்திற்கும் வாய்க்கிறது !
மனப்பசி நம்மை அலைய வைக்கிறது !
இதில் எழும் கேள்விகள்தான் உலகின் மிகப்பழமையான கேள்விகள் ,
எத்தனையோ மகான்களால் ,அவ்வப்போது எத்தனையோ விதமாக விளக்கிய போதும் ,அந்த சந்தேகங்கள் ,கேள்விகள் திருப்பித்திருப்பி கேட்க்கப் படுகிறது .
ஆனால் இதற்க்கு விடை ஒவ்வருவருக்கும் தனித்தனியானது !.இது பொதுவானது அல்ல !எத்தனையோ முறை புத்தகத்தில் படித்திருந்தாலும்
,தானே உணரும் வரை அது புரியாது !
படித்து மட்டும்பசியை ஆற்ற முடியுமா ?
உணர்தல் எப்போதுயாரால் நிகழும் என்பது யாராலும் அறிய முடியாது !
இதற்க்கு முன் எத்தனை அடி விழுந்தாலும் கடைசி அடியில் தான்
கல் பிளக்கும் ! அந்த கடைசி அடி எப்போது விழும் ,யாரால் விழும் என்பது அவனருள்ளாலே நிகழும் விஷயம் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவரை எழுதப்பட்டதன் முக்கிய பகுதிகளை தொகுத்து
இதுவரைப் பார்த்தோம் !
இந்தத்தொடர் தேவையா ? இத்தனை விரிவாக வாழ்வைப்ப் பற்றி
தெரிந்து கொள்ளவேண்டுமா ? என்றுகூட ஒருநண்பர் கேட்டார் !
நம்மைப் பற்றியும் ,நமது வாழ்க்கையில் ஆனந்தத்தை தரவல்ல
நமது வாழ்வின் செயல் பாட்டு முறைகளை விட
நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன இருக்கிறது ?
எதுஒன்றையும் நமது ஆளுகைக்கைக்கு கொண்டுவர
முதலில் அதைப் பற்றிய பரிபூரண நிபுணத்துவம் தேவை !
நிபுணத்துவம் என்பது அதைப் பற்றிய பூரண அறிவு தான்!
கணினி யைப் பற்றி அதிகம் தெரியத்தெரிய ,
அவர் அத்துறையில் மேல் நிலை பெறுகிறார் !
அது போல் வாழ்வைப் பற்றிய உண்ம்மைகள்
அதிகம் தெரிய தெரிய அவர்கள் வாழ்வின் விதியின்
ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு ,
தங்கள் எண்ணியபடி தங்கள் குறிக்கோளை நோக்கி
தாங்களே தங்கள் வாழ்வை செலுத்துகின்றனர் !
வாழ்வை அதன் போக்கை தாங்களே
நிர்ணயித்து வாழ்கிறார்கள் !
இப்போதெல்லாம் ஞானம் தான் செல்வம் !
வாழ்வியலையும் , வர்த்தக இயலையும்
இப்போதெல்லாம் விஷயம் புரிந்த
ஞாநிகள்தான் சொல்லித்தருகின்றனர் !
வாழ்வியலையே ஒரு பொறியியல் என
ஜக்கி வாசுதேவ் சொல்லித்தருகிறார் !
மின்சாரத்தை உபயோகிக்க
அதைப்பற்றி தெரிந்துதான் இருக்கவேண்டும் என்பதில்லை !
ஆனால் உபயோகிக்கும் மின்சாரத்தை மேன்மைப்படுத்த வேண்டின்
அது குறித்த ஆழ்ந்த அறிவு அவசியம் !
அதுபோல் வாழ்வை அதுபற்றி தெரியாமல்
அப்படியே வாழலாம் !
ஆனால் அதில் அடுத்த நிலைப் போக
அவசியம் இருக்கும் நிலைப் பற்றிய முழு அறிவு அவசியம் !
இதுவரை நமது உடலைப்பற்றியும் ,மூச்சைபற்றியும் ,
மனதைப் பற்றியும் , ஆத்மாவைப் பற்றியும் ,
நமதுவாழ்வை நிர்ணயிக்கும் எண்ணங்களைப் பற்றியும் ,
அது இறந்த காலம் எனும் சேமிப்பிலும் ,
எதிர்காலம் எனும் நம்பிக்கையிலும் வாழ்ந்து ,
நமது பூர்வ சேமிப்பு மூட்டைகளின்
வழியே நமது வாழ்கையை நடத்துவிக்கும்
விதத்தையும் பார்த்தோம் !
சிலருக்கு நடைபெறும் வாழ்கை உவப்பாக இருக்கும்
ஆனால் பலருக்கு இந்த சுழலில் இருந்து விடுபடும்
விதம் அறியும் அவா உண்டு !
இதற்க்கு ஒரேவழி வாழ்வைபற்றிய ஒரு பகுத்தாய்வுதான் !
இனி நிகழ்காலத்தில் அதிகம்வாழ்ந்து ,
நமது எண்ணப்படி வாழ்வை மாற்றியமைக்கும்
வல்லமை கொண்ட தியானம் பற்றி அடுத்தப்
பகுதியில் பார்ப்போம் !
இந்தத்தொடருக்கு ஆதரவுயும் ,பாராட்டுகளையும் அளித்துவரும்
அத்துணை நண்பர்களுக்கும் எனது நன்றி .!
குறிப்பாக நண்பர் கண்ணன் ,தேவ் ரெ கா முதலியோருக்கும்
சகோதரிகமலம் அன்புடன்அளித்துவரும் வாடாமலருக்கும் ,
பெரியவர்களின் ஆசிகளும் நன்றி !
இதில் எதாவது குறையிருப்பின்
அது எனது அறியாமையால் விளைந்ததுவே !
இதில் கூறப்படும் உண்மைகளின் குறையல்ல !
அன்புடன்
ஏ சுகுமாரன்
குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்; இத்தொடரின் அருமையான, சுவையான பகுதி இது.
மேலும் சற்று விரிவாக விளக்கினால் பலரும் புரிந்து கொள்ள இயலும் .
தேவ்
> மனிதன் தனது மனத்தின் சமஸ்காரத்தின் காரணமாக
> கண்டத்தையே காணவும் , தின்றதையே தின்னவும்
> பெற்றதையே பெறவும் விரும்புகிறான் ,இதனால் பழைய செயல்களையே திரும்ப செய்யும்
> இச்சையினால் ,செய்ததையே செய்கிறான் ! இதற்க்கு
> மனத்தின் சமஸ்காரத்தின் கர்மபீஜங்களும் ,வாசனையும் காரணமாக அமைகிறது !
> வாசனைகள் நினைவையும் ,கர்ம பீஜங்கள் செய்யலுக்கு வேகமும்
> அளிக்கிறது ! எனவே புதிய செயல் செய்வது சாத்தியமில்லாமல் போகிறது !
> இந்த வட்டத்தில்லேயே வாழ்வு கழிகிறது
>
திருவாய்மொழி இவ்வுண்மையுடன்தான் தொடங்குகிறது
கண்ணனின் மாற்றுரு போன்று அவதரிக்கிறார் குருகூரில் சடகோபன். இது
காசியில் பயணப்படும் ஒரு அந்தணருக்குத் தெரிகிறது. ஏசுவின் பிறப்பை
வானில் கண்ட மூன்று கிழக்கு தேச ஞானிகள் ஜெருசலேம் நோக்கி வந்தது போல்,
மதுரகவி இந்த ஞான ஒளி நோக்கி நடக்கிறார்.
பாரதி பேசும் `குகையில் வளர் சுடரே` என்பது போல் இச்சுடர் புளிய
மரப்பொந்திற்குள் உட்கார்ந்து இருக்கிறது. ஆழ்ந்த தியானம். 16 வருட தொடர்
தியானம். உண்பதில்லை, உடுப்பதில்லை. மதுரகவி வந்தவுடன் மெல்லக் கலைகிறது
(குரு தன் சீடன் வரும்வரை காத்திருத்தல் என்பது இதுதான் போலும்).
சீடனின் முதல் கேள்வி: செத்ததின் வயிற்றில் சின்னது பிறந்தால்
எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?
குருவின் பதில்: அத்தைத்தின்று அங்கே கிடக்கும்.
இந்த உரையாடல் விரிந்து திருவாய்மொழி ஆவதாகக் கதை.
நம்ம ஊர் கதைகள் கூட இனிக்கின்றன!
க.>
--
| Excellent thought process Cause, Effect and Time! |
இங்கே எங்கள் கண்ணப்ப நாயனார்
(தொழில் முறையில் புஞ்சை வேட்டுவத் தலைவன்)
திண்ணப்ப நாயனார் ஆகிறார்...
அது வேறோர் உலகம்/காலம் (hunter-gatherer)
(சாதி பேதமற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயம்)
பெருமாளின் வெறுங்கண்ணில்
இருந்து விடாது கொட்டும் குருதியை கண்டு..
துடித்தெழுந்த நாயனார் பெருமான்...
ஏதேதோ செய்தும்.. ஏதும் பலிக்காத நிலையில்..
கண்ணுக்குக் கண்/ஊனுக்கு ஊன் என்கிற (சிபி..?)
அன்றைய சித்தமரபினை கருத்திற்கொண்டு..
தன் கண்ணினைப் பிடுங்கி..
தனது கண்ணுக்குக் கண்ணான
பெருமாளின் இடது கண்ணில் கால் பதித்து...
( மெடிகல் மால்பிராக்டிஷ்’ கோர்ட்கேஸுனு
யாரால் அலைய முடியும்.. சொல்லுங்ங)
அப்பி.. கண் திறந்து வைத்ததால்..
கண்ணப்பர் ஆயினார் என்கிறது..
எமது கர்ணபரம்பரை கதை ...!?
நன்றி.. வணக்கம்...!
அன்புடன்.../பூபதி
________________________________
போனகம்: அன்னம்/அரிசிச் சோறு ?
___________________________________
போனகம் (B) என்பதும் தமிழ்ச் சொல்தான். படையல் என்று பொருளில் வரும்
என்று நினைக்கிறேன். இப்போது போனகம் தமிழில் வழக்கத்தில் இல்லை என்றாலும்
தெலுங்கு மொழியில் அதுவும் தெலுங்கானா பிராந்தியத்தில் இன்னமும்
வழக்கத்தில் உள்ளது.//
நன்றி திவாகர்
தேவ்
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (39)-
மாறாத சில விதிகள் !
நாம் வாழும் பிரபஞ்சத்தில் நாம் எண்ணும் எண்ணங்கள்
நம்மை மட்டும் உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்யவதில்லை !
அதன் தாக்கம் இந்தப்ப் பிரபஞ்சத்தையும் தாக்குவதுண்டு !
நாம் வாழும் இந்தப்பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று
இணைக்கப் பட்டதுவே ! நாம் எண்ணும்
எண்ணமும் நம்பிக்கையும் நம்மோடு மட்டும் போவதில்லை ,!
அவைகள் அனைவரையும் உயர்த்தும் , நம்மோடு சேர்த்து .
இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே சக்தியின் வடிவம் தான் !
எங்கெங்கு காணினும் சக்திதான் !
எனவே நமது எண்ணமும் ஒரு சக்தி ( energy) தான் !
அதிகமான எண்ணங்கள் நமது உடலின் சக்தியை குறைக்கும்
ஒரு ஆபத்த்தான வடிகால் !
அதுவும் மித மிஞ்சினால் வருவது உடல் நலக்கேடுதான் !
செய்கைகளே( actions) செயல்களே உருவாகும் !
நமது ஒவ்வொரு எண்ணத்தையும் ,கனவுகளும் ,
உணர்வுகளையும் உருவாக்க அவைகளை
செயல்களாக மாற்ற அதை ஒத்த ,அதை சார்ந்த
செயல்கள் என்றும் தேவை ! சூக்ஷும எண்ணங்கள் செய்கைகளுடன்
சேரும்போதுதான் இப்புவியில் அவை ஸ்தூல
செயல்களாக மாற்றும் !
இந்த விதைக்கும் செயல்களின் மேன்மை
நமக்கு கிடைக்கும் ஆசிகளாலும் , பரிசுகளாலும் ,
நமது செல்வவளத்தாலும் ,சேரும்பொருள்களாலும் ,
நண்பர்களாலும் ,பெறும் பாராட்டாலும் உணரப்படும் !
நேர்சக்திகள் அன்பு நேர்மை , ஆனந்தம் கருணை ,நன்றி !
இவை ஈர்ப்பதுவோ செல்வத்தையும் ,ஆனந்தத்தையும் !
எதிர்மறை சக்திகள் பொறாமை ,ஒழுங்கீனம் , வன்முறை இன்னும் பல !
பெறுவதோ வறுமை , தொடரும் ஆதரவின்மை , செயலில் மேன்மையின்மை ,
பிறவியை வீணடிக்கும் அறிவீனம் இன்னும் பல !
ஒவ்வொரு மனிதனுள்ளும் அவனை மேன்மை படுத்திக்கொள்ளும்
வல்லமை பொதிந்தே உள்ளது !
அவனினின் கர்ம வினையின் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ளும்
வழி அவனிடமே உள்ளது !
வாழ்வு தண்டனை கழிக்க வரும் சிறைச்சாலை இல்லை !
மேன்மை படுத்திக்கொள்ளவரும் அற்ப்புதமான பாடசாலை !
இறைவன் தண்டனைதரும் சிறை வார்டன் அல்ல !
அறிவை நமக்கு தர நாளும் உழைக்கும் நல்லாசிரியன் !
மேலும் சில வாழ்வின் சிக்கலில் இருந்து மீளும் ,
சுலப வழிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம் !
அதில் மிக சுலபம் பக்தி ! அதுவே நன்றி தெரிவித்தல் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
இதய பூர்வமாக கூறுகிறேன் !
ஒவ்வொரு மனிதனுள்ளும் அவனை மேன்மை படுத்திக்கொள்ளும்
வல்லமை பொதிந்தே உள்ளது !
அவனினின் கர்ம வினையின் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ளும்
வழி அவனிடமே உள்ளது !
வாழ்வு என்பது தண்டனை கழிக்க வரும் சிறைச்சாலை இல்லை !
தன்னை மேன்மை படுத்திக்கொள்ளவரும் அற்ப்புதமான பாடசாலை !
இறைவன் ஒன்றும் தண்டனைதரும் சிறை வார்டன் அல்ல !
அறிவை நமக்கு தர நாளும் உழைக்கும் நல்லாசிரியன் !
செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை !
ஒவ்வருவரின் வாழ்வின் வழி அதுதான் !
நம்மை நாமே துன்ப சிறையிலிட்டுகொள்ளவேண்டாம் !
மேலும் சில வாழ்வின் சிக்கலில் இருந்து மீளும் ,
சுலப வழிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்
இடையேடையே தாமதம் அதிகம் ஆவதால்
முந்தய பகுதியின் இறுதி வரிகளை நினைவுப் படுத்தி
இன்னும் கொஞ்சம் மேலே செல்வோம் .!
இரண்டு மாதமாக வலுவில் சென்று பரபரப்பை
ஏற்றுக்கொண்டதால் ,உள்ளம் சொல்லும் உண்மைகளை
உன்னிப்பாக என்னால் கிரகிக்கமுடிவதில்லை !
ஆனால் இனி சுதந்திரம் தான் !
மனம் என்பது எண்ணங்களின் கூட்டம் எனப்பார்த்தோம் .
எண்ணமே வாழ்வு என்பதும் நமது கிராமத்து பெரியவர் முதல்
நகரத்து உளவியல் அறிஞர் வரை அனைவருக்கும்
தெரிந்த விஷயம் தான் .
ஆனால் எண்ணமோ என்றும் நிக்ழ் காலத்தில் இருப்பதில்லை
அது வரும் காலத்தை இறந்தகாலமாகும் பெரு முயற்சியிலே
மும்முரமாக இருக்கிறது !
ஒரே ஷணம் நிகழ காலத்தில் இருப்பதே விழிப்புநிலை எனப்படுகிறது .
உடனே அதில் இருந்து வரும் காலத்தை நோக்கி சென்றுவிடுகிறது !
ஓயாத chating தான் !
அதை ஊன்றிக் கவனித்தால் ஓயாத இரைச்சல் !
மனதின் இரைச்சல் ஒரு மாளாத வாதை !
இதில் வேடிக்கை என்னவென்றால் பெறும் பாலும்
நமது மனம் வரும்காலத்தில் என்ன வேண்டும் ,
என்ன நடை பெற வேண்டும் என சிந்திப்பதில்லை ,
மாறாக என்ன என்ன நடை பெறக் கூடாது ,
என்ன என்ன நமது வாழ்வில் நடை பெற கூடாது
என்றுதான் ஆழமாக திட்டங்கள் போடும் !
இதன் மூலம் என்னநடக்ககூடாத்து
என்பதில் கவனமாக இருந்து அதையே
எண்ணி எண்ணி அதையே வாழ்வில்
ஈர்க்கிறது !
குழியில் விழக்கூடாது என கவனமாக
குழியையே கவனமாகப் பாத்து நடந்து
தவறாமல் குழியிலேயே விழுகிறது !
என்ன எண்ணுகிறோமோ அது தான் நடக்கும்
அதுதான் LAW OF ATTRACTION .
மேலும் மனம் சென்றகாலத்திற்கும் ,வரும்காலத்திற்கும்
தொடர்த்து பயணம் செய்வதால் ,சென்ற காலத்தில்
பெற்ற அனுபவங்களையே ,வரும் காலத்திலும்
பரிமாறி , வரும்காலத்திலேயும்
அதே மாதிரி அனுபவங்களே ஏற்ப்பட செய்கிறது .
இன்னும் அதே மாதிரி அனுபவங்கள் ஏற்ப்பட்டதும் ,
தான் நினைத்ததே நடந்தது குறித்து பெருமைப் பட்டுக்கொள்ளும் .
எனக்கு தெரியும் சார் ! இந்த பஸ் போறவிதம்
பார்க்கும் போதே கவிழ்த்து விடும் என நினைத்தேன்
என கையை முறித்து கொண்டும் ,வலியை
பொருட்படுத்தாமல் பெருமைப் பட்டுக்கொள்ளும்
சகோதரரை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாமே !
மனத்திற்கு இந்த மாதிரி பெருமைப் ,பீற்றி கொளவதும் ,
சந்தோஷப்படித்திக் கொள்வதும் அவசியம் தேவை !
இதுவே வடிக்கை ! ஒரு வேடிக்கையும் கூட !
நம்ம வீட்டு பெரியவர்கள் கூட சொல்லுவார்களே ,
எந்த ஒரு காரியமும் அது நடைபெறுமுன்
அதைப் பற்றி பேசாதே என்று !
அந்தக் காரியத்தைப் பற்றி பேசிவிட்டாலே ,
மனம் அதன் மூலம் அடையும் சந்தோஷத்தை
அனுபவித்துவிடும் , பிறகு மனத்திற்கு
அந்த காரியத்தை செயலாக செய்யும் வலிவை
தரும் ஆர்வம் சற்று குறைந்துவிடும் !
மேலும் பேசப் பேச மொத்தத்தில் அந்தக் காரியமே நடக்காது !
மனம் சந்தோஷத்தை அனுபவித்துவிட்டதால்
வேறு வேலையே நோக்கி செல்ல முனையும் !
தேவையற்ற பேச்சு வாழ்க்கைக்கு ,அதன் சாதனைகளுக்கு
பெரும் தடையாகும் .
தும்பை விட்டு வாலை பிடிப்பது போல
இல்லாமல் செயல் நம்மை துன்பப் படுத்துமுன்
எண்ணத்திலேயே அதை கிள்ளி எறிந்து விடலாம் !
ஆனால் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ,!
காணும் பொருள் , கேட்க்கும் பொருள் ,
உணரும் பொருள் இன்னும் நமது பொல்லாத
ஐந்து புலன்கள் வாயிலாக பெறும் உணர்ச்சிகள்
அத்தனையும் கிளை கிளையாக ஆயிரம்
எண்ணங்களை தூண்டுகின்றன !
அதில் நல்லதோ கெட்டதோ ,திருப்பித்திருப்பி
வரும் எண்ணங்கள் அதிக வலுப் பெற்று
செயல்களாக மாறுகிறது !
மனத்திற்கு நல்லது கெட்டது தெரியாது !
ஒயாமல் உழைக்கத்தான் தெரியும் !
நடைப் பெற்ற செயல்களையும் ,அதன் மூலம் பெறும் உணர்வுகளையும்
பெறும் பட்டறிவு எனும் அனுபவத்தையும் தனித்தனியே ,
தவறாமல் பதிவு செய்து கொள்ளும் .
இவ்வாறு கிளைக்கும் ஆயிரம்ஆயிரம் எண்ணங்களை
கட்டுப்படுத்த வழி இல்லையா ?
மனத்தை அடக்க மனம் மட்டும் போதுமா ?
முதலில் மனம் தேவைதான் !
வைராகியம் தான் முதல் தேவை !
மனதை மனத்தால் தான் அடக்க முடியும் !
ஆனால் தாவிக்குதிக்கும் இந்த மனதை அடக்க
ஒரு மாபெரும் கருவியும் இறைவன் நமக்கு
தந்திருக்கிறார் !
நாம் முன்பே பார்த்தோம் மூச்சிலே இருக்கு
சுஷமம் என்று ஒரு பகுதியிலே மூச்சின் மாண்பு பற்றி !
மூச்சைப் பற்றிய மெய்ப்பொருள் நமது இந்திய தத்துவ ஞானம்
உலகிற்கு தந்த கொடை !
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மூச்சைப் பற்றி மூச்சின் வலிமை
அதன் ஆற்றல் ,மூச்சை வைத்து ஞானம் என நமது யோகியர்
பலவாறு நமக்கு அறிவை விட்டுச்சென்றுள்ளனர் !
வேத காலத்திலேயே பிராணயாமம் எனும் மூச்சு பயிற்ச்சி
வலியுறுத்தப் பட்டுள்ளது ..
வெற்றிகரமான வாழ்விற்கு அடிப்படைத தேவை
மனத் தெளிவு !
சிந்திக்கின்ற மனம் தெளிவுபெறுகிறது
நல்லவிதமாக சிந்திக்க நல்ல விதமாக
பிராணன் உடலில் உலாவ வேண்டும் .
எதையும் சாதிக்க அதற்குரிய ஆற்றல் வேண்டும்
பிரார்த்தனையும் , பிராணனுமே ஆற்றலின் ஊற்று !
இதயம் என்பது பிராணனின் இருப்பிடம்
உணர்ச்சிகள், செயல்பாடு என்று வாழ்வின் அனைத்துமே
இங்கிருந்துகட்டுப்படுத்தப்படுகிறது .
ஆனால் இந்த இதயம் ரத்தத்தை செலுத்தும்
பௌதீக இதயம் இல்லை !
இது ஆன்மீக இதயம் !
இதற்க்கு மூன்று அடையாளங்களை நாராயண சூக்த்தம்
கூறுகிறது !
* தொப்புளுக்கு மேல் ஒரு ஜான் உயரம்
* சுடர்வரிசையால் சூழப்பட்டுள்ளது ,
* இதுவும் பிராகாசிக்கிறது !
இது சுஷமம் ஆனது !
இதுவரை நிரூபணம் ஆகாது !
இதை பார்க்கவோ ,படம் பிடிக்கவோ
முடியாது !
இந்த இதயத்தில் இருந்து தான் சுஷ்ம நாடிகள்
புறப்படுகின்றன !
இன்னும் நிரூபணம் ஆகவில்லையே தவிர
இது ரகசியம் அல்ல ! அணைத்து இந்தியருக்கும்
தெரியும் ,
வணங்கும் போதும் ,எந்த பிரமாணம் கூறும் போதும் ,
சந்தோசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் ,
தவறாமல் எந்த பாமரரும் ,அரைகுறை பாமரரும்
இதயத்தில் கை வைத்தே பேசுவார்கள் .இது
பௌதீக இதயம் மீது இல்லை !
ஆன்மீக இதயம் மீதுதான் !
இனி பிராணனை கட்டுப்படுத்தும் ,மனதின்
கடிவாளத்தைப்பற்றி அடுத்த பகுதியில்
பார்க்கலாம் ! விரைவாக !
அன்புடன்
ஏ சுகுமாரன்
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (39)-மாறாத சில விதிகள் !
நாம் வாழும் பிரபஞ்சத்தில் நாம் எண்ணும் எண்ணங்கள்
நம்மை மட்டும் உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்யவதில்லை !
அதன் தாக்கம் இந்தப்ப் பிரபஞ்சத்தையும் தாக்குவதுண்டு !நாம் வாழும் இந்தப்பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று
இணைக்கப் பட்டதுவே ! நாம் எண்ணும்
எண்ணமும் நம்பிக்கையும் நம்மோடு மட்டும் போவதில்லை ,!
அவைகள் அனைவரையும் உயர்த்தும் , நம்மோடு சேர்த்து .
சுகு!
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் ஒரு உரையில் இதுபற்றி விளக்கக்
கேட்டுள்ளேன். மிக ஆச்சர்யமான புரிதல். உயிர் போகும் போது இதயத்திலுள்ள
இந்த நாடி வழியேதான் பிராணன் பிரயாணப்படுமாம். அங்குதான் `மலர்மிசை ஏகிய`
இறைவன் இருக்கின்றானாம். நாதமுனிகள் காலம்வரை இறைவனை இதயத்தில் வைத்து
வழிபடும் வழக்கமே பிரதானமாக இருந்ததாம் (அதாவது யோகவழி). பின்
ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கிடைத்தபின் அவனை பக்தியின் மூலம்
புறத்திலும் காணும் வழி தெரிந்ததாம்.
பிராணாயாமம் நாம் எல்லோரும் கட்டாயம் செய்ய வேண்டும். நல்ல கருத்து.
க.>
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (41)-
ஆண்டவன் படைத்த இவ்வுலகின் உயரிய
படைப்பான மனிதனும் ஆனந்த மயமாகத்தானே
இருக்கவேண்டும் !
நாம் அடுத்தவரை ஆனந்தப்பட வைத்தால்
இறைவனின் பணியை சற்று குறைத்தவர் ஆவோம் !
அவர்வேலையை நாம் பார்த்தால்
நம் நலனை இறைவன் பார்த்துகொள்வார்
நாம அடுத்தவரை ஆனந்தப் படுத்தினால்
நம்மை யாராவது ஆனந்தப் படுத்துவார்கள் !
ஆனால் நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோமா ?
என்ன status இல இருந்தாலும் நாம் என்ன state இல
இருக்கிறோம் என்பது தானே முக்கியம் !
நாம் தான் பிறந்ததில் இருந்து இருப்பது ஒரே
நிலை தானே ! மேலும் மேலும்
வேண்டும் என்பது தானே நமது நிலை !
இன்னும் கொஞ்சம் என்பதுதானே நமது கீதம் !
கிடைக்ககிடைக்க மேலும் ஒன்று தேவையாக
இருக்கிறதேத் தவிர கிடைத்ததினால் வரும்
சந்தோசம் நிலைப்பதில்லையே !
கிடைத்தவுடன் தான் தெரிகிறது நாம் அதை தேடவில்லை என்று !
நமக்கு என்ன தேவை என்று நமக்கே புரியவில்லை !
அங்கும் இங்கும் அலைகிறோம் !
இது சந்தோஷத்தை தருமா ?
அது சந்தோஷத்தை தருமா ?
என TRIAL AND ERROR பார்ப்பதிலேயே
நம் காலம் கழிகிறது!
நமக்கு தக்கவழி காட்டும் சற்குருவும்
சட்டென்று வாய்ப்பதில்லை !
குருவோ தக்க மாணக்கனுக்காக
காத்திருக்கிறார் ! நமக்கோ இன்னும்
குருவின் அவசியம் தெரியவில்லை !
வாழ்க்கை என்பது அந்தக்கரணத்தின்
அங்கத்தில் ஒன்றான " நான் " என்னும்
அங்கத்தில் கட்டுப்பாட்டில் இல்லாமல்
மனம் என்ற அடஙகாப்பிடாரியின்
வசப்பட்டு ஒரு கனவு நிலையிலேயே
பகல் கனவு காண்பதிலேயே கழிகிறது !
ஜக்ரதம் என்னும் நிலை
"நானும்" ,மனமும் சேர்ந்த நிலை
ஆனால் அதில் "நானை" மனம்
ஆக்கிரமித்துக்கொண்டு
ஜக்ரத்தில் சற்று விழிப்பு நிலையில்
நம்மை இருக்கவிடாமல் பகல் கனவு
காணவைக்கிறது !
இந்த state இல நாம் இருப்பதால் ,
மனம் போகும் பாதையே அங்கும் இங்கும் போய்
மேன் மேலும் கர்ம பதிவையும்
சம்ச்காரத்தையும் பெற்று அந்த
சக்கரத்தில் இருந்து விடுபடாமல்
அதிலேயே சுழன்று வருகிறோம் !
நமது வாழ்வு நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை !
இதில் வலிமையாக அதன் வழியில்
செலுத்தும் ஆற்றல் கொண்ட கர்ம வினை பதிவுகளையும் ,
சமஸ்கார தூண்டுதல்களையும் கொண்ட
மனதின் ,வலிமையில் இருந்து மீள ,அதை கட்டுப்படுத்த
நமக்கு கிடைத்துள்ள ஒரு வலிமையான
கருவிதான் நமது மூச்சு !
வாழ்கை என்றுமே விழிப்புடன் இருக்கவேண்டிய
போர்க்களம் தான் ! விழிப்புடன் இல்லையெனில்
நாம் விரும்பும் வெற்றி நமக்கு கிடைக்காது !
அதற்க்கு அந்தப்போருக்கு என்றும்
நாம் தயாராக இருக்கவேண்டும் !
இதைக்காட்டத்தானே நாம் வணங்கும்
இறைவனின் வடிவங்கள் எல்லாம்
ஆயுதம் தாங்கி தயார் நிலையில்
இருக்கின்றன !
வாழ்க்கையில் விழிப்புணர்வுடன் ,
பிரச்சனைகளை எதிர்கொள்ள
தயாராக இருப்பதை வலியுறுத்தும் வடிவங்கள் தானே அவைகள் !
சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் !
எனநமக்கு நம்பிக்கைத் தரத்தானே தெய்வ வடிவங்கள் !
ஒவ்வரு ஆயுதமும்
ஆழ்ந்த ஒரு உண்மையை
அதுகுறித்து தீவிரமாக வேண்டுபவருக்கு
தருகின்றன ! அந்த ஞானம் தேவைப்படும் போது !
மூச்சும் நாம் செய்யும் செயல்களும்
நேரடியாக தொடர்புடையவை !
ஒட்டுக்கேட்க்கும் போது மூச்சை அடக்கிக் கொள்கிறோம் !
உலக்கையில் இடிக்கும் போது மூச்சின் லயமே தானே !
பளுவைத்தூக்க மூச்சை தம் கட்டுகிறோம் .
சந்தோஷமாக இருக்கும் போது மூச்சின் லயம் தனி !
பயம் வந்தால் மூச்சின் லயம் தனி !
செய்யும் ஒவ்வரு காரியத்திலும்
மூச்சின் போக்கு வரத்து விகிதம்தானே
மாறுகிறது !
நிதானமாக மூச்சு உள்ளே சென்று ,
நிதானமாக வெளியே வந்தால்
மனதில் தோன்றும் எண்ணங்களின்
எண்ணிக்கையும்தானே குறைகிறது !
எண்ணிக்கை குறைவான எண்ணங்கள்
வலிமை கொண்ட எண்ணங்கள் !
அவைகள் கடந்த காலத்தையும் ,
வரும்காலத்தையும் தெளிவாக
உணரும் ஆற்றல் கொண்டவைகள் !
படிப்படியாக எண்ணங்கள் இல்லாத
ஒரு நிலையை அடையும் போது நாம்
அதை தியான நிலை என்கிறோம்
அதுவே துரியம் என்னும் ஒரு STATE
அது இதுவரை நாம் உணராத ஒரு
உன்னத நிலை !
அந்த நிலையில் தான் மனம் மசிகிறது
எண்ணங்கள் இருப்பதில்லை ,
ஆனால் "நான்" மட்டும் இருக்கிறது !
இந்த உன்னத நிலை வாய்க்கும் போது
பிரபஞ்சத்தில் உள்ள COSMIC கதிர்கள்
நம் உடம்பில் பாயத்தொடங்கும் !
இந்த நிலை அடிக்கடி வாய்க்கும்
போது நமது வாழ்கையின் போக்கும்
மாறத்தொடங்கும் !
நமக்கும் பிரபஞ்ச சக்திக்கும்
தொடர்ந்த ஒரு தொடர்பு ஏற்ப்படும் !
நாமும் பிரபஞ்சமும் ஒன்றாக இணைவோம் !
பின் என்ன வானமும் நம் வயப்படும் !
இன்னும் கொஞ்சம் மூச்சிப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
The conscious practice of controlling prana through regulation of
breathing and concentration of mind is called Pranayama. Through this
discipline the body can be rejuvenated to optimal beauty, strength and
wisdom and is assured of survival under any conditions.
http://www.rahoorkhuit.net/library/yoga/pranayama/1.html
இங்கு ப்ராணாயாம முறைகளும், நன்மைகளும் விளக்கப் படுகின்றன.
தேவ்
பாகம் 3
அது என்னவோ "எனக்கு புரிந்தது இதுவே " தொடர் தொடர்ந்து காலதாமதம்
ஆகிக்கொண்டே இருக்கிறது .
வாராவாரம் எழுதத் தொடங்கும் போது
ஏதோ காரணங்களால் காலதாமதம் ஆகிறது .
சில சமயம் வேறு இடத்தில் இருக்க நேருகிறது
சில சமயம் சரிவர காலம் அமைவதில்லை
.
உலகமே வேண்டுமானாலும் கைகூடும் காலம் கருதி இடத்தார் செய்யின்
என்கிறார் வள்ளுவர் !
இந்த காலம் இடம் பற்றி முன்பே இரண்டுமுறை இத்தொடரில் பேசப்பட்டுள்ளது .
இது கதை அல்லது நாவல் என்றால் சம்பவங்களின் தொடர்பு வைத்து ஒரு நேர் கோட்டில் செல்லலாம் .
ஆனால் இதுவோ மனிதனின் மனதைப் பற்றிய தொடர் எனவே எண்ணத்தின்
ஓட்டம் போல் சற்று மாறி மாறி முன் பின் போகவேண்டிஇருக்கிறது.
எந்த ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் காலமும் ,இடமும்
இயைந்து வரவேண்டி இருக்கிறது .
அவை சற்று ஒருமைபடாமல் ,சிறிய வேறுபாடு இருந்தாலும் நூலிழையில்
எண்ணும் காரியம் நழுவிப்போகிறது .
சென்னை செல்ல ரயில் பிடிக்கவேண்டும் என்றால் ,
ரயில் வரும் ரயில்வே நிலையத்திற்கு முதலில் போகவேண்டி இருக்கிறது .
போவது மட்டுமல்ல ரயில் வரும் சரியான நேரத்தில் இருக்கவேண்டி இருக்கிறது .
அப்போதுதான் நாம் எண்ணியபடி நாம் போகவேண்டிய ரயிலை பிடிக்கமுடிகிறது .
போவது அவசியமா ? போவதினால் பலன் விளையுமா ? என்பதெல்லாம் ஒரு தனி பிரிவு , தனிஆய்வு .
எண்ணியதை செய்ய இடமும் காலமும் ஒத்து இருக்கவேண்டி இருக்கிறது .
இது நடை பெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் பொருந்தும்.
ஆனால்இந்த அண்டத்தில் எத்தனையோ காரியங்கள் ஒவ்வொரு கணமும ் நடைபெற்று வருகிறது .
ஒவ்வொன்றும் நெறி முறை தவறாமல் நடந்து வருகிறது .
அண்டத்தில் நடப்பதுவே பிண்டத்திலும் நடக்கிறது .
நம் உடம்பில் நடைபெறும் காரியங்கள் பல ஆயிரம் இருக்கும் ,அல்லது ஒரு தினத்தில் பல லட்சங்கள் இருக்குமா ?
அத்துணை காரியங்களும் ஒரு முறை கூட பிசகுவது இல்லை ..
மேலும்
உள்ளத்தில் நடைபெறும் காரியங்களைப்பார்த்தால் சொல்லிவைத்தது போல்
உடனுக்குடன் நடக்கிறது .
நம்பவே கூட முடிவதில்லை .
பார்த்தல்
சிந்தித்தல்
அடையாளம் கண்டு இனம் பிரித்தல்
நினைவில்வைத்தல்
மறுத்தல்
யோசித்தல்
எலாமே அதிசயம் தான் . ! தானே நடக்கும் அற்ப்புதங்கள் !
உடலில் நடை பெறும் காரியம் மனதில் நடைபெறும் காரியம்
இவைகளுக்கு நாம் அதிகாரி இல்லை .
காலம் இடம் இவைகளை சேர்ப்பிக்க நாம் முயல்வதுமில்லை !
உண்மையில் காலம் என்பதுதான் என்ன ?
யாராவது இறந்துவிட்டால் காலமாயிட்டார் என்கிறோம் !
என்ன நினைத்து கூறுகிறோம் ?
அப்போ நமக்கு முன்பே காலம் என்றால் என்ன
என்று தெரியுமா ?
மனம் எப்போதும் இறந்த காலம் ,வரும் காலம் இவற்றில்
சஞ்சரிக்கிறது என்று பார்த்தோம் .
இந்த இறந்த காலம் , நிகழ்காலம் வரும் காலம் தான் காலமா ?
இந்த முன்று காலத்தையும் பிரிக்கும் கோடு யார் போட்டது ?
இந்த நொடி ,நிமிஷம் மணி பகல் இரவு நாள் வாரம் மாதம்
பருவம் வருடம் எல்லாம் உண்மையில் இருக்கிறதா ?
யார் இதை பிரித்து எல்லை வகுத்தது ?
கொஞ்ச நாள் முன் நாழிகைஎன்றோம் ,
இப்போது மணி என்கிறோம் !.
இந்தியாவில் ஒரு மணி
அதுவே ஒவ்வொரு நாட்டிலும் வேறு மணி !
ஒரு இடத்தில் உறக்கம் விழிக்கிறான் ,
வேறு ஒரு இடத்தில் உறங்க செல்கிறார்கள் !
ஊருக்கு போக மனைவி மக்களை காண ஆவலுடன்
ரயிலுக்கு காத்திருக்கிறோம் , அரை மணி தாமதம் என்கிறார்கள்
அரை மணி போவது அரைநாள் போவதுபோல் இருக்கிறது !
ஒவ்வரு நிமிஷமும் ஒரு மணி போல் தெரிகிறது !
கை கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்க்கிறோம் .
அதுவே ஊருக்குபோய இரண்டு நாட்கள் உறவுடன் ஆனந்தமாக
கழியும் போது போனதே தெரியவில்லை !
இரண்டு நாள் எப்படி போனது என்று தெரியவில்லை !
காலத்தின் அளவுதான் என்ன ?
காலத்தைப் பற்றிய நினைவு வந்து விட்டால் துன்பமாக இருக்கிறது
அதுவே காலத்தை பற்றிய நினைவு இல்லை எனில் ஆனந்தமாக இருக்கிறது !
மனிதன் தோன்றி இயற்கையின் கருணையில் வாழத்தொடங்கி
ஆரம்ப கால பயங்கள்சற்று குறைந்த போது தான் அடைந்த
அனுபவங்களை தொகுக்க ஆரமித்தான் .
பயம் தான் மனிதனின் அடிப்படை உணர்வு !
பரிணாம வளர்ச்சியில் ஐந்துஅறிவு ஜந்துவிடம்
இருந்து அவன் அடைத்த சீதனம் பயம் தான் !
பயத்தைப் போக்க அவன் கண்ட வழியே சமூகம் !
மனிதனின் பயத்தை நம்பியே அரசுகள் இயங்குகின்றன !
மதங்களும் பயத்தை வளர்த்தே வாழ்கின்றன !
சுழன்ற வண்ணம் சூரியனை சுற்றிவரும் பூமியில்
படும் வெளிச்சத்தினால் ஆகும் பகல் இரவை அனுபவித்து
ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் எனக்க கொண்டான் !
உருவாகும் பருவ வேறுபாடுகளை பருவங்கள் ஆறு என
அனுபவத்தால் கொண்டான் ! முழுநிலவு மீண்டும் மறுமுறை வருவதை
மாதம் என கொண்டான் !ஆறு பருவமும் தவறாமல் வருவதை அறிந்து
ஒரு சுற்று ஒரு வருடம் எனக் கொண்டான் !
நாள் மாதம் பருவம் வருடம் எல்லாம்
அனுபவத்தில் கணக்கில் கொண்டதுதான் !
உண்மையில்அவை இல்லை ! அனுபத்து அறிந்ததை
உணர்வில் உணர்ந்ததை பொருள்களின்
இயக்கத்தினாலும் உணர்ச்சியாலும்
வருஷம் மாதம் ,நாள் மணி என்று வெளிப்படுகிறது !
இயக்கத்திற்கு அதில் பெறும் அனுபவத்திற்கு
காலம் என பெர்யர் சூட்டுக்றோம் !
இதில் நல்லகாலம் கெட்டகாலம் என்று வேறு
ஒவ்வருவருக்கும் பிரிக்கிறோம் ! அவன் நேரம்
எல்லாம் நல்லா நடக்குது என்கிறோம் !
மனிதன் காலத்தை உருவாகுகிறான் !அதை பிடித்துக்கொண்டு
வாழ்வை கழிக்கிறான் !
கடவுளையே காலம் கடந்தவர் என்கிறான் !
மனிதர்கள் காலத்திற்கு கட்டுப்பவர்கள் என்றோன் !
இப்படியேதான் இடத்திற்கு கட்டுப்படுத்தும் மாயையும் !
நாம் எப்போதும் நமது அறிவு குறித்து வைத்திருக்கும்
பழக்க வழக்கங்கள் ,சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள்
விதிமுறைகள் ஆகியவைக்கு உட்ப்பட்டு நடக்க
அநாதி காலமாக பழகயுள்ளோம் !
மனைவி மக்கள் உற்றார் உறவினர் வேண்டியவர் வேண்டாதவர் சமூகம் ,முதலாளி வேலையாள் இவர்கள்தான் இடம் ! இவர்களை அனுசரித்து வாழவேண்டி உள்ளது !
இவர்களால் ஆனதே இடம் ! அதற்க்கு
என்னபெயர் வேண்டுமானாலும் இருக்கலாம் !
மற்றபடி வடக்கு தெற்கு கிழ் மேல் வட்டம் சதுரம் சிதம்பரம் .சென்னை மும்பை
அமெரிக்க கொரியா எல்லாம் நாம் வைத்த பெயர் .
வரும் ஆண்டுகளில் வேறு பெயர் வைக்கப் படலாம் ! முன்னர் இதே பெயர் இருந்ததா ? தெரியாது !எவ்வளவு நாளிருக்கும் தெரியாது !
பின் ஏன் அந்த இடம் எதோ ஒன்று என் மனைவி மக்கள் உற்றார் உறவினர் வேண்டியவர் வேண்டாதவர் சமூகம் ,முதலாளி வேலையாள் ஆகியோர்
உள்ளனர் ! எனவேஅந்த இடம் !
என்ன சற்று குழப்புகிறேனா ?
சற்று பொறுங்கள் குருநாதர் வரப்போகிறார் !
தகுந்த விளக்கம் தருவார் !
உணர்ச்சிக்கும் அறிவுக்கும் கட்டுப்பாட்டு நடப்பதையே
காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதாக கூறுகிறோம் !
கடவுள்போட்ட வேஷம் காலம் !
காலம் போட்ட வேஷம் இடம் !
அகளமாய் யாரும் அறிவரித்து அப்பொருள்
சகளமாய் வந்ததென்று
உந்தீ பற :
தானாக வந்ததென உந்தீ பற ::--
---திருஉந்தியார்
அகளமாய் -- நீள அகலம் என்றோ உயரம் ஆழம் என்றோ
நேற்று இன்று என்றோ
அறிவு ,அரிது காலம் இடம் இல்லாத
பரம்பொருள் --
சகளமாய் -- அப பரம்பொருள் சகலதத்துவனகளாகவும்
காலத்தோடும் இடத்தோடும் தோற்றம்
எடுத்தது
இதையே மாணிக்கவாசகர் தெளிவாக
மேலை வானவரும் அறியாததோர் கோலமே !
எனை ஆட்க்கொண்ட கூத்தனே !
ஞாலமே ! விசும்பே ! இவை
வந்து போம் காலமே உன்னை
என்று கொள் காண்பதே ! -------என்கிறார்
எனவே காலம் இடம் என்பவை மனிதனின் மாயா தன்மை எனலாம்
உணர்ச்சியும் அறிவும் காலத்தையும் இடத்தையும் உருவாக்குகிறது !
கடவுள் காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்படாதவர் !
நாம் காலத்திற்கும் ,இடத்திற்கும் கட்டுப்படாமல்
இருக்கமுடியுமா ?
முடியும் என்றுதான் நமக்கு தியானம் எனும் சாதனத்தை
கட்டிகொடுத்துள்ளார்கள் !
உண்மையான தியானம் காலம் கடக்கும் !
உண்மையான தியானம் இடம் இல்லாதது ! எங்கும் நிறைந்தது !
உண்மையான தியானம் வேண்டுபவை
எல்லாம் தரும் ! கடவுளைப்போல !
இனி உண்மையான தியானம் பற்றி அடுத்தப் பகுதியில் ......
அன்புடன்
ஏ சுகுமாரன்
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (41)-
செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை !
ஒவ்வருவரின் வாழும் வழி அதுதான் !வாழ்க்கை ஆனந்த மயமாக இருக்கவேண்டும்
ஆண்டவனும் ஆனந்த மயம் தான் !ஆண்டவன் படைத்த இவ்வுலகின் உயரிய
படைப்பான மனிதனும் ஆனந்த மயமாகத்தானே
இருக்கவேண்டும் !
நாம் அடுத்தவரை ஆனந்தப்பட வைத்தால்
இறைவனின் பணியை சற்று குறைத்தவர் ஆவோம் !
அவர்வேலையை நாம் பார்த்தால்
நம் நலனை இறைவன் பார்த்துகொள்வார்நாம அடுத்தவரை ஆனந்தப் படுத்தினால்
நம்மை யாராவது ஆனந்தப் படுத்துவார்கள் !
பாகம் 3
எல்லா சூழ்நிலையையும் நம்மால் மாற்ற முடியாது .!
இதை நாம் ஒப்பு கொள்வதும் புரிந்து கொள்வதும் தான் நல்லது !
இதை புரியவைக்கத்தான் கர்ம பலன் ,சமஸ்காரம் என
பல தத்துவகளை இதுவரை பார்த்தோம் .
நம்மிடம் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால் படிப்பது
எதுவும் நமக்கு சம்பந்தம் இல்லை என நினைப்பதே !
பெரும்பாலும் படிக்கும் இன்பத்திற்காகவே படிக்கிறோம் .
ஆனால் அதை உணர்வதோ படிப்பதில் இருக்கும்
படிப்பினைகளை உணர்வதோ மிகக் குறைவு .!
படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான் .!
படித்து கொண்டே இருப்பவன் படித்துக்கொண்டே தான் இருக்கிறான் .
அவனுக்கு அதில் கிடைக்கும் இன்பம் மட்டும்
போதுமானதாக இருக்கிறது .இன்னும்
அதிகப்படியாக அதைப்பற்றி பேசி பேசி வேறு இன்பம் அடைகிறான் !
ஆனால் அவனது பூர்வ கர்மபலம் படி அவனது ஜீவிதம் அமைகிறது ,
இப்பிறவியின் புருஷார்த்தம் அவன் மேலே மேலே படித்து
மேலும் சில மடிப்புகளை மூளையில் பெருக்கிகொள்வதில் தான் முடிகிறது !
இந்தப் படிப்பு அடுத்தமுறை படிக்கும் போது அவனுக்கு சுலபமாக
புரியவைக்கும் ! ஆனாலும் அவன் அதை உணராதவரையில்
அதை தனது வாழ்வில் பொருத்தி அதை ஒரு அங்கமாக ஆக்காத
வரையில் அவனுக்கு அந்தப்படிப்பால் ஏதும் ஆதாயம் இல்லை !
ஆனால் அதனால் வரும் அகங்காரம் மட்டும்
மேலும் மேலும் சேர்ந்து கொண்டே வரும் !
அலட்டவைக்கும் ! அதிகாரம் செய்யும் !
பார்த்தாயா என் அறிவை, நானே அடக்கமாக
இருக்கிறேன் என வெளிச்சம் போடும் !
பின் மதிக்கவில்லை என கூச்சல் போடும் !
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதும் ,
அடுத்தவரின் பொறாமையை பெறுவதிலேயும் தானே
நமது வாழ்வின் வெற்றி உள்ளது !
இது தானே நமது வெற்றியின் இலக்கணம் !
அப்படித்தானே உலகம் நினைக்கிறது !
videocon விளம்பரம் நினையில் உள்ளதா ? அது எப்போதும்
அடுத்தவர் பொறாமை படும் T. V வாங்க உங்களை தூண்டும் !
நாம் உண்பது உடுப்பது ,பிள்ளைகளை படிக்கவைப்பது ,
அவர்களை வாட்டி வதைத்து அவர்களின் இளமையை தொலைத்து ,
அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைத்து
பெரியவேலையில் சேர்த்து பெரிய சம்பளம் வாங்க வைப்பது எல்லாம்
அடுத்தவர் மெச்ச வாழ துடிக்கும் அவாதானே !
நாம் பிறந்த பிறவியின் பலன் என்ன என்பது
நமக்கு நினைவில் இருப்பதில்லை !
நடப்பது எல்லாம் சென்ற பிறவியில் சேர்த்துவைத்த
இருப்பின் செலாவணிதான் ! ஆனால் பெருமை
மட்டும் எல்லாம் என் திறமையால் ,அறிவால்
வந்தது என ! சொல்லிக்கொடுத்த ஆசிரியர்
இன்னும் அழுக்கு சட்டையுடன் சுற்றுவது
நினைவில் வராது !
எப்போதும் சுதர்மம் எனும் கடமையை செய்யவேண்டியதான் !
கூடவே தனக்கும் கொஞ்சம் அடுத்தப் பிறவிக்கு என
சேர்த்துவைப்பது தானே நல்லது ! காஞ்சி பெரியவர்
முன்பெல்லாம் பார்ப்பவரை எல்லாம் கேட்டும் கேள்வி உனக்கு
என்ன செர்த்துவைதிருக்கிராய் ? என்பது தான் !
அப்போது வந்து வாய்த்த சுழ்நிலையில் அதனுடன்
சகித்துத்தான் வாழ வேண்டுமா ? வேறுவழி இல்லையா எனில் ,
கடலில் வாழும் சிறிய மீன் கூட தொடர்ந்து தன எதிரிகளால்
உண்ணப்படும் போது அது அதனிடம் இருந்து தப்ப முயல்கிறது !
அது கடலையோ ,தன எதிரிகளையோ மாற்ற முயற்சி செய்வதில்லை
மாறாக தொடர்ந்து உயரே பறந்து தப்பிக்க எண்ணுகிறது
பரிணாம வளர்ச்சியில் அது சிறிய இறக்கையை அடைந்துவிடுகிறது !
வளார்ச்சியின் உச்சக்கட்டத்தில் உள்ள மனிதனால்
சூழ்நிலையின் கொடுமையில் இருந்து மாற முடியும் !
அல்லது அதன் கொடுமையை உணராது மாறமுடியும் !
அந்த வித்தையை பயிலமுடியும் ! பிறப்பு இல்லாத
இறப்பை அடையமுடியும் !
ஆனால் அவன் சூழ்நிலையை மாற்ற முயல்வதை விடுத்து
அவன் தன்னை மாற்றிக்கொளவேண்டும் !
உலகத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கக் கூடாது !
இந்தக் கோணத்தில் இருந்து பிரச்சனைகளை அணுகுவதுதான்
பிரச்னையை நீக்கும் வழியாகும் !]
கோபத்தையும் ,வெறுப்பையும் அலச்சியம் செய்யும் மனவலிமையை
நாம் பெற்றுவிட்டால் , நாம் கோபமோ வெறுப்போ அடைவதில்லை !
மாறாக கோபத்தை வெறுப்பை அழிப்பேன் என அதனுடன்
போராடுவது நமக்கு தளர்வையும் தோல்வியையுமே தரும் !
ஆகவே வெற்றியடைய ஒரே வழி
நம்மை முழுமை ஆக்கிக்கொள்வது தான் !
முழுமையடைய முதலில் முழுமையாக
நம்மை புரிந்து கொள்ளவேண்டும் !
நம்மை நாம் சரிவர புரிந்து கொள்ள நாம்
ஆன்மீக வாழ்வில் உயர்ந்த படிக்கு செல்லவேண்டும் !
ஆன்மிகம் என்பது உணர்வுடன் வாழ்தல் ! விழிப்புணர்வு !
அந்தப்பாதையில் பல படிகள் உள்ளது ,!
இயமம் நியமம் என அஷ்டாங்க யோகத்தை
நமக்கு பதஞ்சலியும் திருமூலரும் அருளியிருக்கிறார்கள் !
இதில் தியானம் என்பது மிக உயர்ந்த நிலை !
அந்த நிலையை அடைவதற்கு
சில தகுதிகள் மனத்தளவிலும்
உடல் ரீதியிலும் தேவை !
சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் !
தியானத்தை இருவகையாக பிரிக்கலாம் ,
உலகியல் தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு !
இரண்டாவது ஆன்மீகத் தியானம் !
மனதை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது
உலகியல் தியானம் ! கருத்தூர்ன்றி ஒரு கதைப்புத்தகம் படிக்கும் போது கூட சில சமயம் இந்த நிலை அமைத்து விடுகிறது !
மனம் இயல்பாகவே வெளியே செல்லுமாறு
படைக்கப்பட்டிருப்பதாக கடோபநிடதம் கூறுகிறது !
எனவே புறப்பொருள் மேல் பற்றி அதில் மனதை
குவிப்பது சற்று சுலபம் தான் ! மனதை புறத்தே இருக்கும்
எந்த பொருள் மேல் வேண்டுமானாலும் குவிக்கலாம் !
இதனால் மன அமைதி கிடைக்கும் ! எண்ணத்தின் கொதிப்பு அடங்கும் !
இதனால் உடல் நலம் கிடைக்கும் ,
ரத்தக்கொதிப்பு குறையும் ,உணர்ச்சிகளின் கட்டுப்பாடு கிடைக்கும் !
இதுவே உலகியல் தியானம்.
அதுவும் பெருமைக்குரியதே !
ஆன்மீக தியானம் என்பது மனதை அதன் உண்மையான
பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது !
வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாக்கி
அதன் இருப்பிடத்தை நாடச்செய்வதே !
ஆன்மாவின் ஒளியால்தான் புறத்தில் இருக்கும்
பொருள்களையும் , மனத்தில் எழும் எண்ணத்தின்
ஓட்டங்களையும் நாம் உணரமுடியும் !
ஆன்மாவின் ஆன்மாவான இறைவைனை
காணவேண்டிடின் அந்த ஆன்மாவின் ஒளியை
உள்பக்கமாக செலுத்தவேண்டும் அதுவே
ஆன்மீக தியானம் !
அங்கும் இங்கும் புறேத்தே பாயும் மனம் என்னும்
அடங்காப்பிடாரியை உள்முகமாக்குவது அத்துணை சுலபமா ?
மனத்தைதிருப்பி அதை உள்ளேக்குவிக்க நமக்கு
அகத்தே ஒரு இடம் வேண்டுமே ! உடலின் எந்த இடத்தில்
அகத்தில் குவிப்பது ?
அந்த மையம் இன்னும் நம்மில் உருவாகவில்லை !
பலருக்கு இது புதிராக இருக்கலாம் !
அந்த மையம் தான் இதயம் !
இதய தாமரை ! அதுவே ஆன்மீக இதயம் !
அங்குமட்டுமே உண்மையில் தியானிக்கமுடியும்.
நம்மில் பலருக்கு இந்த ஆன்மீக இதயம் இன்னும் மலரவில்லை !
இன்னும் மொட்டாகவே இருக்கிறது !
அதை முதலில் மலரச்செய்யவேண்டும் !
மலர்ந்த பின் அதை மேல்நோக்கி நிமிரச் செய்யவேண்டும் !
அதற்க்கு ஜபம் பக்தி பிரார்த்தனை ,பிரமச்சரியம் போன்ற நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் .
அஷ்டாங்க யோகமும் முறைப்படி சாத்னமாகவேண்டும் !
தக்க ஒரு குரு தொட்டுக்காடவேண்டும் !
அஷ்டாக யோகமும் முறைப்படி நிறைவேறும் போதே
அஷ்டமா சித்திகளும் உடம்பில் குடி கொள்ளும் !
ஆனால் சித்திகள் சாதகனின் சித்தமலவே !
மேலும் தியானத்தைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் !
கூடவே பயணித்தற்கு நன்றி !
அன்புடன்
ஏ சுகுமாரன்
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (42)-
உலகமே வேண்டுமானாலும் கைகூடும் காலம் கருதி இடத்தார் செய்யின்
என்கிறார் வள்ளுவர் !
இந்த காலம் இடம் பற்றி முன்பே இரண்டுமுறை இத்தொடரில்
மிக நன்றாக வந்துள்ளது.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது எனும் பழமொழி உங்கள் கருத்தின் ஆழத்தைச் சொல்லும்.
இது இன்னும் முமூக்ஷு எனும் மோட்ச வழிப்பயணிக்கு வெகுவாகப் பொருந்தும்!
க.>
பாகம் 3
உண்மையில் தியானம் என்பது என்ன /
நாம் அறிந்து கொள்ளவேண்டிய பொருளை நோக்கி தொடர்ந்து
செல்லும் பயணம் தான் தியானம் ஆகும் !
தொடர்ந்து என்றால் எப்படி என நமது சமய நூல்கள் தெளிவாக கூறுகின்றன .
ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்திற்கு எண்ணையை
மாற்றும் பொது அது துண்டு துண்டாக விழாது .
அது ஒரு கம்பியை போல் தொடர்ந்து விழுவது
தான் சீராக விழுவது என்பது ஆகும் .!
அதேப் போல் தியானம் செய்ய்பவர்களிடம் இருந்து
தியானம் செய்யப்படும் பொருள் எனும்
பாத்திரத்திற்கு தியானம் செய்பவரது எண்ணம்
சீராக ஒரு கம்பி போல்
தொடர்ந்து பாய்கிறது .!
எண்ணுபவர் எண்ணப்படும் பொருள் , எண்ணுவது
இந்த மூன்றும் ஒரே கம்பியாக மாறிவிடுகிறது .
எனவே தான் தியானம் எப்போதும்
நிகழ காலத்தில் இருக்கிறது என்கிறோம் .!
அது இறந்த காலமாகவோ ,
எதிர்காலமாகவோ மாறுவதில்லை !
தியானம் எப்போதும் ஒரே நிலை
அது காலம் கடந்தது !
மனதை படிப்படியாக உயர்த்தி
காலமற்ற நிலைக்கு எடுத்துச் சென்று
காலத்தின் கொடுமையில் இருந்து
மனிதனை விடுவிக்கும் முயற்சிதான்
தியானம் ! அது காலமற்ற நிலையில் செய்யப்படுவது !
தியானம் செய்வதற்கு காலை நாலரை மணியோ மாலை
நாலரை மணியோ ஏதாவது ஒரு நேரம் தொடர்ந்து செய்ய
தேர்ந்தெடுக்க வேண்டும் !.
ஏதாவது ஒரு இடம் தொடர்ந்து
ஒரே இடம் தேர்நதெடுக்கவேண்டும் .
இத்தகைய ஒழுக்கம் தியானம் உடனடியாக கை கூட உதவி செய்யும் . !
தினமும் ஒரே நேரம் ஒரு மணி நேரம் என்றால் தினமும்
ஒரு மணி தியானம் செய்ய பழகவேண்டும் .
ஒருமணி நேரம் தியானம் செய்பவர்
தியானம் முடிக்கும் போது ஐந்து நிமிடம் தான்
சென்றதாக உணவேண்டும் !
அப்போதுதான் அவர் உண்மையான தியானத்தில் அனுபவித்து ஈடுபட்டிருக்கிறார் எனப் பொருள் !
அவ்வாறு இல்லாமல் ஐந்து நிமிடம் ஆவதற்குள் ஒரு மணி ஆகி விட்டதா என அடிக்கடி
கை கடி காரத்தை பார்த்துக்கொண்டால்
அவர் தியான அனுபவத்தில் இன்னும் புகவே இல்லை எனப்பொருள் .!
தியான அனுபவத்திற்கு காலவரம்பு கிடையாது
காலம் மட்டுமல்ல இடம் கூட
தியான அனுபவத்தில் மறைந்துவிடும் !
தியானிப்பவரும் மறைந்து விடுவார் !
அப்போது எல்லாம் மாறந்து விட்டால்
தியான அனுபவம் பெறுவது எப்பாடி தெர்யும் என்றால்
சில அடையாளங்கள் தோன்றும் !
எந்தப்பொருளை நிறுத்தி தியானிக்கிரோமோ அது தொடர்பான
அழகிய காட்சிகள் முதலில் சில தோன்றும் !
சில சமயம் கடல் அலையின் முழக்கம்
சங்கின் நாதம் , ,நாதசுரத்தின் நாதம்
விவரிக் இயலாத அரும் பெரும் காட்சிகளும் ,
ஓசைகளும் கேட்க்கும் கண்டறியாதன காண இயலும் !
தியான நிலையில் முதல் படியாக இந்திரிய ஒழுக்கம்
இரண்டாம் படியாக காரண ஒழுக்கம்
முன்றாம் படியாக ஜீவ ஒழுக்கம்
நான்காம் படியாக தான் தியான உச்சம் !
இதுவே வள்ளல் பெருமான்
தியானத்திற்கு வகுக்கும் நான்கு பாதை !
அதுவே பதஞ்சலி கூறும் அஷ்டாக யோகமும் ஆகும் !
மனிதனில் ஆன்ம ஒளி எப்போது பிரகாசிக்கும் !
மனிதனின் மன அலைகள் எல்லாம் அடங்கிய பிறகே !
அமைதியான மன நிலை ஆன்மீக வாழ்வின் அடையாளம்
தியானம் என்பது வெறும் மன அமைதியை மட்டும் தருவது அல்ல !
தியானத்தின் நோக்கமும் அதுமட்டும் அல்ல !
இந்த அமைதியை ஒரு கருவியாக்கி ,
அதன் மூலம் மனதை அதன் மூலமாகிய
பரமாத்த்மாவின் சன்னதியுடன் இணைப்பதுவே தியானம் ஆகும் !
நமக்கும் மூலத்திற்கும் ஒரு உண்மையான உயிரோட்டமான
பிணைப்பு இருந்தால் தான் உண்மையான தியானம் கைகூடும் !
சிலர் பிறப்பிலேயே இந்தப் பிணைப்பை பெற்றுவிடுகின்றனர் !
கண்ணால் பார்க்காத , அவரைப் பற்றி ஏதும் தெரியாமலேயே
ஒரு பிணைப்பு வந்து விடுகின்றது .! ஜிவன் முக்தர் !
இது காலம் காலமாக ,பிறவிகள் தோறும்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவரும் அவனருளாலே தான்
இத்தகைய பிணைப்பு இப்போது கைகூடுகிறது !
இயபாகவே அவர்களுக்கு மூலத்தின் பால் ஒரு
அன்பு எனும் பிணைப்பு அமைகிறது ! கருவிலே திருவுடயோர் !
மற்றவர்களுக்கோ பிரார்த்தனை பூஜை பக்தி
என கொஞ்சம் சேர்த்து வாய்த்த அறிவினால் இந்த
பிறவியில் கொஞ்சம் புருஷார்த்தம் தேவைப்படுகிறது !
பிரார்த்தனையும் ,பக்தியும்
இதய தாமரையை மலரச்செய்கிறது !
பிரார்த்தனையும் பக்தியும் ஆழமான பகுதியை விழிக்கசெய்து
மனதின் எல்லா பகுதியும் தூண்டி
ஒவ்வொரு பகுதியும் தியானத்தின் பலனை பெறச்செய்கிறது !
தியானம் என்பது பிரார்த்தனை ,பக்தியின்
தொடர்ந்த நுண்ணிய ஒரு தொடர்ச்சியே !
முமுஷூ எனும் பயணிக்கு பிரார்த்தனையும்
பக்தியும் இரு உன்றுகோல்கள் !
செல்லுமிடமோ தியானம் என்னும்
ராஜப்பட்டைக்கு !
நிகழ காலத்தில் என்றும் நடை பெறும்
ஜீவாத்த்மா ,பரமாத்த்மா உறவே தியானம் !
அது எப்போதும் நிகழ் காலம் தான் !
பிரார்த்தனையோ பூஜையோ நாம்
கடந்த காலத்தில் இருந்து செய்ய முடியாது .
எதிர்காலத்தில் இருந்தும் செய்ய முடியாது !
நிகழ காலத்தில் இருந்து நம்மை மறக்க ஆரமித்ததும்
பிரார்த்தனை தடைபட்டுவிடுகிறது .
ஆக விழிப்புணர்வே பிரார்த்தனையாகும் !
தியானம் என்பது அன்றாட வாழ்வுடன் ஒன்றாகவேண்டும் !
இருவேறு நிலை என்றும் போராட்டம் தான் !
தியானம் என்பது வாழ்வின் போராட்டம் ,எதிர்பார்ப்பு
அத்துனையுடன் பின்னி பிணைய வேண்டும் !
முழுவாழும் அடக்கியதே ஆன்மீக வாழ்க்கை !
வேறு வேறு நிலை உடலிலும் ,மனதிலும் ஒவ்வாத்தன்மை
ஏற்ப்படுத்தி உடலையும் மனத்தையும் வருத்தும் !
ஆன்மீக வாழ்வு தியானத்தை மையமாக கொண்டு தான் அமையவேண்டும் !
தியானம் இல்லாமல் ஆன்மீக வாழ்வில் உயர்வு இல்லை !
இத்தக தியானம் கைகூட அஷ்ட்ட்டாக யோகமும் கைகூட வேண்டும் .
அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் !
இல்லயேல் சருக்குமர விளையாட்டுதான் !
சாதாரமாக நமது வாழ்வு ஏமாற்றமும் , போராட்டமும் கொண்டதாகத்தான் இருக்கிறது ! அது முதலில் சீர் செய்யப்படவேண்டும் !
ஆன்மீக வாழ்வு என்று இல்லை ,எந்த முயர்ச்சியானாலும்
முழு வாழ்வுடன் ஈடுபடுபோதே அதில் வெற்றி அடைய முடியும் !
நமது வாழ்க்கை முறை நமது ஒவ்வரு செயலையும் பாதிக்கிறது .
உற்றுப்பார்த்தால் நமது பிரச்சனைகளுக்கு ,தோல்விகளுக்கு
நாம் சிந்திக்கும் பாங்கு ,
நாம் செயல் படும் விதம்
நமது வாழ்க்கை முறை
இவையே காரணம் என்று தெரியும் .
வாழ்வில் வெற்றி பெறுபவர்கள் எல்லாம்
அறிவு மிகுந்தவர்கள் அல்லர் !
ஆற்றல் மிகுந்தவர் அல்லர் !
ஆனால் மிக முக்கியமாக அவர்கள்
வாழ்க்கையை சரியாக புரிந்து வைத்திருப்பவர்கள் !
அவர்கள் முயற்ச்யின் பின்னால் முழு வாழ்வும் இருக்கும் .
முழு ஆளுமையும் இருக்கும் !
உலகியல் வாழ்வின் வெற்றிகள் புற சூழநிலையை சார்ந்தது !
ஆனால் முழுவதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை !
ஆன்மீக வாழ்வின் வெற்றிகள் அக உணர்வை பொறுத்தது !
அவனருள் மட்டுமே அதிகம் தேவை ! மீதி அத்தனையும் நமது
ஆளுமை !
ஆன்மீக வாழ்வில் போட்டிகள் இல்லை !
புறவாழ்வில் இருப்பது போல் காலைப்பிடித்து
இழுப்பது இதில் இல்லை ! கைத்தூக்கி விடுவதுதான் உண்டு !
புறஉலகின் தோல்விகள் அதை பாதிப்பதில்லை !
ஆனால் சிலநிபந்தனைகள் மட்டும் உண்டு !
முதல் நிபந்தனை தேடல் !தீவிர தாகம் !
இரண்டாவது நிபந்தனை முழு ஆளுமை !
முன்றாவது பிரபஞ்ச வாழ்வுடன் இணைப்பு !
இவ்வ்று தான் வாழும் புற வாழ்வில்
முழு வெற்றி பெற்ற திருப்பதி வந்த பிறகே,
பூரண அமைதி கிடைத்தபிறகே ,
புறத்தே நிகழும் எதுவும் ,எந்த செயலும் , எவராலும்
தன்னை பாதிக்காத மன சமநிலை வாய்க்கும் போதே
ஆன்மீக வாழ்வின் வெற்றிகள் கைகூட துவங்கும் .
முதல் மாற்றம் மனதில் ,தன்னில் தோன்றவேண்டும் !
ஆசை பட்டவைகளை அடையத் தெரியவேண்டும் !
அல்லது அடைந்த பின் கிடைக்கும் அமைதி
அதை அடையாத போதும் எப்படி அடைவது என்று தெரியவேண்டும் !
மனதில் சமநிலை வாய்க்கும் போதே ,
மண்ணில் சொர்க்கம் புலப்படத்தொடங்கும் !
இன்னும் கொஞ்சம் அடுத்த பகுதியில் அடுத்தவாரம் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
பாகம் 3
ஆசை பட்டவைகளை அடையத் தெரியவேண்டும் !
அல்லது அடைந்த பின் கிடைக்கும் அமைதி
அதை அடையாத போதும் எப்படி அடைவது என்று தெரியவேண்டும் !
மனதில் சமநிலை வாய்க்கும் போதே ,
மண்ணில் சொர்க்கம் புலப்படத்தொடங்கும் !
இன்னும் கொஞ்சம் அடுத்த பகுதியில் அடுத்தவாரம் !
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (46)-
வேதத்தில் இருந்து கூறப்படும் 'தத்துவமசி' போன்ற மகா வாக்கியங்கள் போல்
புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது .அவர்கள் கூறிய அருளுரையில் இருந்து இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன்
அது ' அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள் ' என்பதுவே .ஆகும் .
இதுவே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்து காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான காரணத்தை கூறவல்லது ஆகும்
உண்மையில் எல்லோரும் சொல்வது போல் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்பொருத்தோ ,நமது எண்ணங்களை பொறுத்தோ ,நமது தேவைகளின் பொறுத்தோ , நமது பிரார்த்தனைகளைப் பொறுத்தோ நடக்கும் காரியங்கள் இருப்பதில்லை .நமது அறிவுக்கும் நடக்கும் காரியங்களுக்கும் தொடர்பில்லை .
ஆனால் நமது அக உணர்வின் தன்மையைப் பொறுத்தே
காரியங்கள் நடைபெறுகின்றன .உணர்வு என்பது அறிவல்ல !
வேண்டுமானால் அதன் விளைவு என்று கூறலாம் .எப்படி சந்தோஷமாக எப்ப்போதும் இருப்பது என தெரிந்திருந்தாலும் .அந்த தெரிந்தது சந்தோஷமல்ல.
சந்தோஷமாக உணரவேண்டும் .
அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது .
எது உணர்கிறது .
மூளையா மனதா
மனம் தான் உணரவேண்டும் .அதற்க்கு முன்பே சந்தோசம் என்பது என்ன என தெரிந்திருக்கவேண்டும் .அப்போது தான் உணரமுடியும் .
சக்கரையின் சுவை முன்பே தெரிந்தால் தான் சக்கரையை இனம் காண முடியும் .
முன்பே தெரிந்தது தான் வாசனை என்பது .அது ஒவ்வரு பிறவியிலும் ,ஒவ்வருநாளும் பெரும் அனுபவத்தை சேகரம் செய்வது .
உறங்கி விழிப்பதுதானே சாக்காடு ,
வரும் பிறவிகளும் சிறிது நீண்ட தூக்கம் தூங்கி எழும் புதிய நாள்தான் ஆகிறது .
வாசனை குறிந்தும் ,விருத்தியை குறித்தும் ,மனம் என்பதின் பல கூறுகளைப் பற்றியும் , சமஸகாரம் பற்றியும் முன்பே விரிவாக பார்த்திருக்கிறோம்.
இதில் அக உணர்வை வளர்த்துகொள்வதும் நல்ல உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும் மிக முக்கியமானதாகும் .நல்ல உணர்வுகள் அன்பு ,பக்தி
சந்தோசம் , பரிவு ,பெருந்தன்மை , மன்னிக்கும் குணம் முதலியவையாகும் .
தீய உணர்வுகள் கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் முதலியவையாகும் .
கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் போன்றவற்றின் பலனை ஏறக்குறைய
நாம் உடனே உணர்ந்து விடலாம் .நாம் கோபமாக பேசினால் ,பதிலுக்கு என்ன கிடைக்கும் சாதாரணமாக கோபமே திருப்பிக் கிடைக்கும் .
நாம் பெறும் அனுபவங்கள் அறிவாக மதில் சேமிக்கப்பட்டு முளையின் மூலமாக
செயல் படுகிறது .
உணர்வு என்பது மனிதனின் ஆன்மாவிற்கு சொந்தமானது மட்டுமல்ல் .
ஆன்மாவின் இயல்பே உணர்வு தான் .
நாம் உணர்வில் செயல் படும் போது ஆன்மாவின் ஒளி அதன் மேல் படுகிறது .
ஆன்மா மட்டுமே உணர்வு பொருள் .
ஆன்மா விழிப்பின்றி உடலாலோ மனதாலோ செய்யப்படும் செயல்கள் எல்லாம்
தன்னுண்ர்வற்ற தன்னறிவற்ற நிலையிலேயே நடை பெறுகிறது .
உணர்வுடன் செய்யும் போதே அங்கே ஆன்மாவின் ஒளி படுகிறது .
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ,அதாவது நம்மை சுற்றி இருக்கும் ஸ்துல
பிரபஞ்சம் , நுண் பொருளாகிய மனம் ,இந்த உடல் இவையாவையுமே
உணர்வற்றவை .இது தோன்றா நிலையில் இருக்கும் மூலம் தான் .
ஸ்துல பிரபஞ்சம் , நுண் பொருளாகிய மனம் ,இவ்வை இரண்டுமே அதன் இரு வெளிப்பாடுதான் .
ஆன்மாவின் ஒளி படும் போதுதான் அவை ஒளிருகின்றன .
அனால் ஆன்மா ஒரு சுயம் ஜோதி .
உணர்வையும் ,உணர்வின்மையும் வேறுபடுத்திக்காட்டியது பாரதத்தின் பெரும்
ஞானிகள்தான் .இது ஒரு சாதனைத்தான் .
இந்த வேற்றுமை உணர்வுதான் ஆன்மீக வாழ்விற்கு மிகவும் தேவைப்படுவது .
நம் உடலில் ரத்த ஓட்டம் ,உணவு ஜீரணித்தல் ,சக்தி உடலெங்கும் பரவுதல் முதலியன நமது நினைவின்றி ,உணர்வின்றிதான் நடக்கிறது .
நமது மனத்தை ஊன்றி கவனித்தால் ,அதில் எழும் எண்ணங்கள் பெரும் பகுதி நமது உணர்வின்றி நடப்பது புரியும் .
நாம் பேசுகிறோம் , பேசுகிறோம் ,நடக்கிறோம் , படிக்கிறோம் ,உண்கிறோம்
,கார் ஓட்டுகிறோம் இவற்றில் பெரும்பாலானவை தன்னறிவில்லாதுதான் செய்கிறோம் . உணர்வு இருப்பதில்லை .
நாளில் பெரும் பகுதியை உணர்வற்று கழிக்கும் நாம் அதை மனதின் போக்கிற்கே விட்டுவிடுகிறோம் .மனமோ அதில் இருக்கும் வாசனை ,சமஸகாரத்தின் படி உணர்வின்றி ,தன்னறிவிற்றி செயல்படுகிறது .
தியானத்தில் அமர்வதும் அத்தகைய ஒரு நிலையிலேயே அமைகிறது .
தியான வேளையில் அமர்ந்த உடனேமனம் அடங்கிவிடும் என எதிர்ப்பார்க்கிறோம் .அது எப்படி இயலும்
நாம் தன்னுணர்வு மிக்கவர்களாக ஆவது நாம் எந்த அளவு ஆன்மாவை சார்ந்திருக்கிறோம் என்பதை பொறுத்திருக்கிறது .
நாம் தன்னுணர்வு பெற்றவர்கள் ஆகும் போது நமது எண்ணங்களும் செயல்களும்
நமது கட்டுப் பாட்டில் வருகிறது .
இந்த உலகில் நாம் எதையாவது அடையவேண்டுமானால் அதற்கான குறிப்பிட்ட உணர்வு நிலையை அடைய வேண்டும் .
பாவித்தால் போதும் என்பது இதைத்தான் .
இந்த உணர்வு பகுதி ,உணர்வுறு பகுதி இவை அடங்கிய மனதை அதன் ஆற்றலை
பிராணனே நிர்ணயிக்கிறது .அதன் ஆற்றலே இயக்குகிறது .
பிராணன் இடகலை எனும் சந்திர நாடி வழியாக மேல் இழுவதும்
பிங்கலை வழியாக கிழே வருவதுமாக இயங்குகின்றது .
இதில் பெறும் ஆற்றலின் ஒரு பகுதி உடலையும் இயக்குகிறது .
மனதின் உணர்வு பகுதி ,உணர்வுறு பகுதி ஆகிய இறுபகுதயையும் இயக்குகிறது .
பிராணன் இந்தப் பிரபஞ்சம் எங்கும் விரவி பரவி இருக்கிறது .அது வெறும் காற்று அல்ல .
பிராணாயாமத்தின் மூலம் இந்த நாடிகளை கட்டுப்படுத்தவும் இயைந்து செயல் படியும் இருக்கசெய்ய முடியும் .
தியானத்தின் மூலம் தன்னுணர்வில் இருக்க முடியும் .
பிராணன் கட்டுப்படும்போது சமஸகாரம் தூண்டப்படுவது குறைகிறது .
மனம் அமைதி பெறுகிறது தியானம் கைகூடுகிறது .நாம் ஆன்மாவிற்கு
அருகில் செல்ல முடிகிறது .
தீவர பக்தி ஆன்ம விசாரம் ,ஜபம் இவைகளின் மூலமும் மனதை அமைதியுற செய்ய முடியும் .
ஜபமும் ஒரு வகையில் பிராணாயாமம் போன்றதே .மூச்சு மென்மையாகிறது .
இடகலை யும் , பின்களையும் தண்டுவடத்தின் கிழுள்ள மூலாதாரத்தின் இட ,வல
பக்கத்தில் இருந்து தொடங்கி ஒன்றை ஒன்று பின்னி , இவ்வாறு வளையத்தை
ஒவ்வரு சக்கரத்தை சுற்றியும் உண்டாக்கி மேலே செல்கின்றன .
வழியில் மூன்றுமுறை இணைகின்றன
இவ்வையே அரசமரத்தடியில் பின்னிய நாகங்களாக வடிவமைத்து வணங்கப்படுகின்றன .
இது கிரந்திகள் அல்லது முடிச்சுகள் எனப்படும் .
இவை பிராணனின் ஓட்டத்தை தடுக்கும் தடையாக கருதப் படுகிறது .
இந்த முன்று முடுச்சுகளும் மனதின் மூன்று நிலைகள் ,மூன்று முடிச்சுகள் . .
முதலில் வருவது பிரம கிரந்தி
இது தொப்புளுக்கு கிழ் உள்ளது
பிராணன் இங்கு தேங்கி தடைபடும் போது
மனம் ஆசைகளுக்கும் ,பசி தாகம் முதலிய புலன் இச்சைகளுக்கும்
அடிமைப்படுகிறது .
இரண்டாவது விஷ்ணு கிரந்தி
இது இதயத்துக்கு கிழே உள்ளது
இதுதான் உணர்ச்சி மையம்
மனிதனின் உணர்ச்சிகள் இங்கிருந்துதான் பொங்கிப் பெருகுகிறது .
மூன்றாவது ருத்திர கிரந்தி
இது புருவமத்திக்கு கிழே உள்ளது .
இதுதான் அறிவின் மையம் .
பிராணன் உணர்ச்சி மையத்திர்க்கும அறிவு மையத்திர்க்கும மிகுதியாக போக
மனம் ஆசைகளுக்கும் ,பசி தாகம் முதலிய புலன் இச்சைகளுக்கும் அதிகம் செலவாகாமல் மேலே செல்லவேண்டும் .
இந்த மூன்று முடிச்சும் வாழ்வை மூன்று நிலைகளாக
பிரிக்கிறது .
இயல்புணர்ச்சி வயப்பட்ட வாழ்வு .
உணர்ச்சி வயப்பட்ட வாழ்வு
அறிவு வயப்பட்ட ஆன்மீக வாழ்வு
பொதுவாக ஆன்மீக பாதையில் ஒரு பெரிய மூட நம்பிக்கை உண்டு
ஒரு குறிப்பிட்ட நபர் ஆன்மீக பாதையில் போகிறார் என்றதும்
பிறர் அவரைப் பற்றி என்ன புரிந்து கொள்கிறார்கள் ,
என்ன அவரிடம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றால் ,
பாகம் 3
எனக்கு புரிந்தது இதுவே ! (47 )
உணர்வுகள் ஆன்மாவின் ஒளி என்று பார்த்தோம் .
உணர்வற்ற மூலம எனும் பிரகிருதியில் சத்துவம் ,ரஜஸ்,தமஸ்
என்னும் முன்று குணங்களின் வடிவானது .
இதில் சத்துவம் ஞான சேர்க்கை , ரஜஸ் கர்மாவின் சேர்க்கை ,
தமஸ் மயக்கத்தில் ஆழ்த்தும் மாயை
இந்த முன்று குணங்களில் இருக்கும் நிலைக்கு தகுந்த படி உணர்வு
நல்லதாகவோ தீயதாகவோ மாறுகிறது .
குணம் இருக்கும் தன்மை ,சுழ்நிலை ,உண்ணும் உணவு ,விரதம்
முதலியவைபோருத்ததாகும் .
என்றும் சத்துவ நிலையில் இருப்பது ஆன்மீக வாழ்வின் தேவை
நமது தனிப்பட்ட வாழ்வு ,பிரபஞ்ச வாழ்வின் ஒரு பகுதியாகும் .
நாம் வாழும் வாழ்வு அமைதியையும் பாதுகாப்பையும்
பெறவேண்டுமானால் நமது வாழ்வு நம்மை சுற்றி இருக்கும் உலக வாழ்வுடன் ,பிரபஞ்ச வாழ்வுடன் இயைந்து இருக்கவேண்டும் .
தியானம் என்பது உணர்வை குவிப்பது மனதை சரிவர கையாளுவது .
ஆனால் தனிப்பட்ட வாழ்வு பிரபஞ்ச வாழ்வில் இருந்து வேறுபடுமானால்
இது கடினம் ஆகிவிடும் .
மனதின் ஆற்றல் ,உடல் ஆரோகியம் இவை அனைத்திற்கும் தேவையான ஆற்றல்
பிரபஞ்ச வாழ்விலும் பிரபஞ்ச மனத்திலும் அடங்கயுள்ளன .பிரபஞ்ச மனம்
உலகின் மொத்த மனம் ஆகும் .
அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் ,அந்த எல்லையற்ற ஆற்றலுடன் இயந்து வாழத்தெரியவேண்டும்
சுலபமாக சொன்னால் சுற்றி இருப்பவர்களுடன் இயந்து வாழத் தெரியவேண்டும் .
நம்மைப் பொறுத்தவரை நம்மை சுற்றி உள்ளவர்கள்தான் உலகம் .
நன்மை -தீமை ., இன்பம் -துன்பம் .ஒளி -இருள் போன்று இருமை நிறைந்ததுதான்
வாழ்க்கை . !
இத இணைகளில் ஒன்றை விட்டு ஒன்றை மாத்திரம் பற்றி வாழ முயன்றால் பிரபஞ்ச வாழ்வுடன் இயந்து வாழ முடியாது .
இந்த பிரபஞ்சமும் சுருங்கி விரிகிறது .
நமது வாழ்விலும் ஏற்ற இறக்கம் உண்டு !
பள்ளம் இருப்பதால் தான் மேடு என்று ஒன்று இருக்கிறது
இருள் இல்லை என்றால் வெளிச்சம் நமக்குத் தெரியுமா
ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் எப்படி நாணயமாகும் .
ஒரேப்பக்கம் கொண்ட காகிதிதம் எங்காவது இருக்கிறதா
நமது வாழ்வில் இயல்பு வேண்டுமானால்
இந்த இருமையை ஏற்றுக்கொண்டுதான் ஆகா வேண்டும் .
வாழ்க்கையில் போராடுவது இல்லையென்றால்தான்
வீணாகும் சக்தி ஆன்மீக வாழ்வுக்கு பாயும் .
இதை ஒப்புக்கொள்வது சரணாகதி !
இது கோழத்தனம் அல்ல
இது பக்குவப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் .
எதிலும் போட்டி தேவைலில்லை !
வாழ்க்கை பரந்தது !
ஒருவரைப் போல் இன்னொருவறில்லை !
ஒவ்வருவரும் தனிப் பாதை வகுத்துகொள்ளமுடியும் .
ஒரு பாதையில் எதிர் எதிரே இரண்டு நல்லவர்கள் வந்தால்
இரண்டு பாதை புதியதாக வரும்.
ஒரு நல்லவரும் ,ஒரு கெட்டவரும்
எதிர் எதிரே வந்தால் ஒரு புதிய பாதை வரும் !
இரண்டு கெட்டவர்கள் எதிர் எதிரே வந்தால்
ஒருவருக்கும் பாதை இராது !
உண்மையில் நல்லவர்கள் என்றால்
நன்றாக வாழத்தெரிந்தவர்கள் !
நாம் எத்தையும் யாருக்கும் ஆளுமை செலுத்தி
அறிவிக்கத்தேவை இல்லை !
உண்மையை சொல்லப்போனால் நாம் சொல்லப் போவது அனைத்தும்
முன்பே அவர்களுக்கு தெரிந்ததால் தான் அவர்கள்
அதை கேட்க்கிறார்கள் அல்லது படிக்கிறார்கள் !
கம்ப ராமாயணம் படித்து ரசிக்கிறோம் .நண்பர்களிடம்
அதன் சிறப்பை சிலாகித்து மக்ழ்கிறோம் .
பிறகு சிறிது காலம் சென்று மீண்டும் கம்ப ராமாயணம்
படிக்கிறோம், புதியசுவை ,புதிய நயம் புலப்படுகிறது !
அனுபவித்து மக்ழ்கிறோம் ! என்ன கம்ப ராமமாயனத்தில்
புதிய பாடலோ ,பக்கமொவா இப்போது சேர்ந்தது !
முன்பு பல முறை படித்த அதே பழைய கந்தல் புத்தகம் தான்
நாம் மாற்றம் அடையும் போது நமக்கு புதிய சுவை
புத்தகத்திலும் தோன்றுகிறது !
மாற்றம் புத்தகத்தில் இல்லை !,
நம்மில் தான் !
நாம் மாறியதால் தான் ,நமக்கு அதில் இருக்கும் விஷயங்கள் முன்பே
தெரிந்ததால் தான் அந்தப் புத்தகத்தை
தேடி படிக்கமுடிகிறது ரசிக்க முடிகிறது .!
அப்படியே தான் நாம் கூறும் விஷயங்களை
முன்பே தெரிந்தவர்கள் தான் ,அந்த
சுவை அறிந்தவர்கள் தான் அதை படிக்கவே செய்கிறார்கள் .!
அவர்களுக்கும் நாம் கூறும் விஷயம்
முன்பே தெரிந்ததால் தான்
ரசிக்க்கவும்செய்கிறார்கள் .!
உண்மையில் வெளியில் இருந்து வருவது
போல் இருக்கும் அறிவு , உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமேயாகும் !
எதுவும் வெளியில் இல்லை !
நாம் பிறரைப் பற்றி கூறும் குறைகள் கூட
உண்மையில் அந்தக் குறை நம்மிடம் இருப்பதால் தான் தெரிகிறது !
எனவே எதையும் வெள்யில் தேடி அலையாமல்
நம்மிடம் புதைந்துள்ள அளவற்ற அருளாலளின்
கருணையான பரிபூரண ஞானத்தின் பெருமையை
உணர ,நம்மிடம் படிந்துள்ள பாசத்தை ,மாசுகளை நீக்க
முயச்சித்தலே வாழ்வின் சிறந்த செயலாகும் .!
இந்த வாழ்வும் இந்த குறிக்கோளை அடையும் பாதையும் சீராகயும் ,
இன்பமயமாகவும் இருக்கவேண்டும்.!
ஆனந்தமாக வாழ்வது நமது அடிப்படி உரிமை !
இந்த தொடரின் இடையே நான் இந்தத்தொடர் முடியும் போது ஆளுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் கிடைக்கும் எனக் கூறியிருந்தேன் .
உண்மையில் அதற்க்கு வேண்டிய வழியை நான்
பலமுறை இந்தத் தொடரில் கூறிவிட்டேன் .
ஆனால் தொடர்ந்து இடைவெளி இல்லாது
எழுத இயலாதது என் தவறு தான் !
.தயவு செய்து மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்துப் பாருங்கள் !
உண்மையில் இதில் இதில் கூறப்பட்டது எல்லாம்
எனக்கு புரிந்தது இல்லை ! இவ்வளவு புரிந்தால்
நான் ஏன் இப்படி இருக்கிறேன் !
ஆனால் ஆரம்பத்தில் சொன்னது போல்
நான் எழுதியது எல்லாம் முதலில் எனக்குத்தான் !
ஒரு மாணவனாகத்தான் சிந்தித்தேன் .
ஆளுக்கு ஒரு அஷய பாத்திரம் கிடைப்பதற்கு
வேண்டிய சில நடை முதல் உக்திகளை இன்னும் இரண்டு பாகம் ஆக தர நினைக்கிறேன் .அதையும் இரண்டு நாட்களில் முடிக்க எண்ணுகிறேன் .!
இதில் கடவுள்ளைப் பற்றி தனியே எதுவும் கூறவில்லையே
என ஒரு எண்ணம் உண்டு !
நம் ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார் !
ஆனால் நாம் கடவுள் அல்ல !
அவர்தான் ஞானமாகவும் ,ஆன்மாவாகவும் நம்மை
வழி நடத்துகிறார் .!
பின் ஏன் இந்த தீரா விளையாட்டு
அலகிலா விள்ளயட்டுடையானின்
அம்சம் இப்புயியில் வெளிப்பட நம்மை
பத்திரமாக்குவதுதான் அவரின் இச்சையா !
நம்மை பரிணாமத்தின் அடுத்தபடிக்கு
தயார் செய்வதா இந்த வாழ்க்கை !
மனிதனை தேவனக்கும் முயற்சிதான் இந்த வாழ்க்கையா !
ஆனால் இந்தப் பரிணாமம் மட்டும் தகுதி உடையவர்க்கு மட்டுமே
வாய்க்கும் என்பது மட்டும் புரிகிறது !
அடுத்த நான்காம் பாகம் நாளை ...
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
எனக்கு புரிந்தது இதுவே ! (46)-
வேதத்தில் இருந்து கூறப்படும் 'தத்துவமசி' போன்ற மகா வாக்கியங்கள் போல்
புதுவை அன்னையின் மகா வாக்கியம் ஒன்று உள்ளது .அவர்கள் கூறிய அருளுரையில் இருந்து இந்த வாக்கியத்தை மகாவாக்கியமாக நான் மதிக்கிறேன்
அது ' அகவுணர்வுகளின் வெளிப்பாடே நம்மை சுற்றிய புறச்செயல்கள் ' என்பதுவே .ஆகும் .
இதுவே நம்மைச்சுற்றி நடக்கும் அனைத்து காரணங்களுக்கும் தகுந்த ஒரு சரியான காரணத்தை கூறவல்லது ஆகும்