[MinTamil] ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !

1,314 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Apr 19, 2010, 6:48:32 AM4/19/10
to minT...@googlegroups.com




களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௧-   ( 1 )


வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு  - ௧ (   1 )




வரலாறு என்பதன் அவசியம்  சென்றதையும் ,கடந்து போன இறந்தகாலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக   மட்டும் அல்ல .  வரலாறின் தேவை  நிகழ்காலத்த்ன் தேவைக்கேற்ப மாறக்கூடியது .  சொல்லப்போனால் வாழ்வின் வளர்ச்ச்யே நாம் புறப்பட்ட இடத்தையும் ,இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதிலும் ,அதிலிருந்து பாடங்கள் பெறுவதைப் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை
ஆழமாக பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களை சரிவர புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்ல .

வரலாறுக்கு ஆதாரமான  காலத்தை ஆய்வதற்கு  அந்தக்காலத்தைய இலக்கியமும்  நிகழ காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியபங்கு வகிக்கிறது. .அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகள் அந்தக் காலத்தய  இலக்கிய செய்திகளோடும், அந்தக் காலத்தய இலக்க்ய செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் .
அப்போதுதான் ஒரு உறுதியான முடிவுக்கு வரலாற்றின் செய்திப் பற்றி வரஇயலும் .

ஆனால்  உலகின் பெரும்பாலான இடங்களில்  இதுவரை அகழ்வாய்வில்பெறப்பட்ட சான்றுகள இலக்க்யத்தொடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெற ப படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .

எகிப்த்தில்  பிரமிடுகள் கண்ணுக்கேதிரே இன்னும்  நிற்க்கின்றன. வரலாற்றை பறை  சாற்றுக்றது .
காலத்தை வென்று சான்றுகள் நிற்க்கிறது. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்க தொல்லிலக்க்யங்கள்மட்டும் அங்கே  இல்லை .நம் நாட்டிலேயே   கூட  வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோத்ரோ  ,  ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள்
சான்றுகள்  இருக்க்ன்றன .
ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்க்யங்கள் தான்  கிடைக்கப் பெறவில்லை .

ஆனால் தமிழ் நாட்டின் நிலையே வேறு மாதிரியானது நேர்மாறானது .
 இங்கே  தொல்லிலக்க்யங்கள் நிறைய கொட்டிக்கிடக்க்ன்றன .ஒப்பிட்டுப்பார்க்க , தொல்லிலக்க்யங்கள்கூறும் சான்றுகளை தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தன இல்லை.

பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு .ஆனால் பூம்புகார் இன்னும்ஆழ்கடலில் தான் பத்திரமாக தேடுவாரின்றி  உறங்கிகொண்டு   இருக்கறது .
அங்கே எகிப்த்தில்  பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோத்ரோ  ,  ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள்  இருக்க்ன்றன .ஆனால்நிலை நிறுத்த இலக்க்யங்கள் வேறு புற சான்றுகள்தான் இல்லை .

ஆனால் தமிழ் நாட்டின் வரலாறை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்ம்ம்டம் மிக முக்கய ஆதாரங்கள் இருக்க்றது.அதுவே வழி வழி வந்த இன்றும் நிலைத்த்ருக்கும்   பழந்தமிழர் மரபு ஆகும் .
தொல்லிலக்க்யங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழி யாக பேசவரும் பழந குடிகளான தமிழர் மரபு இன்றும் இருந்து வருகிறது .
இரண்டாயிரம்    ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி  இன்னும் அதேபோல் பாடல் இயற்ற வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது .சீரிளமை குறையாமல் தம்ழ குடி வாழ்ந்து வருகிறது ...யாதும் ஊரே
யாவரும் கேளிர் என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .

வாழும் வரலாற்று சின்னங்கள் தான்  தொல் தமழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்க்யங்கள் ஓலை சுவடிகளிலே 
  எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாக பாதுகாப்பாக  இருக்க்றது , வாழும் தொல்குடிகளும்  இருக்க்ன்றனர்  ஆனால் இதை
அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் செய்யும் புற சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை ..

தமிழர்களான நாம் உண்மையல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் .ஆயிரம், இரண்டாய்ரம் வருஷத்த்ற்கு முன் உள்ள ஒரு கவியின் உள்ளத்தை    அறியக்கொடுத்து வைத்த்ருக்கிறோம்
.அந்த மொழி இன்னும்அதே வடிவில் இருக்க்றது . இன்னும் அதில் உள்ள சொல்கள்  நமக்கு புரிகிறது .
அதே அர்த்தத்தில் இன்னும்  அந்த சொல்  புழக்கத்தில் இருக்கறது . 

ஆயிரம் வருடத்ர்க்கு முந்தய இத்தாலிய லத்தீன் நூல்கள ,தாய் மொழ்யாக கண்டு வாசிப்பவர் தற்போது இல்லை .ஆயிரம்வருஷத்த்ற்கு முன் இருந்த ஆங்கில  நூல் எதையும் தற்காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது ..

இது எப்படி தமிழ நாட்டில் மட்டும்நிகழ்ந்தது ?

இதில் தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது .
தன்னைச்சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி  மரங்கள இவைகளை தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங்களைக் கண்டு அவகளை தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் ,மன வழி , செவி வழி பெற்ற
கருத்துக்கோவைகளை வரிவடிவில் மாற்ற ஏற்ற சாதனம் ஒன்றை தங்கள் ஆற்றல் மிகு அறிவால்கண்டனர் .

கற்பக விருஷமான பண மரத்தின் ஓலைகளின் பெரும்பயன்பாட்டை         கண்டனர் ..
பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எந்தவ்த பராமரப்பு இல்லாதபோதும் குறைந்தது  300ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் .
தொடர்ந்த பராமரப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் .
இவ்வாறு பழன் தமிழர் தொல் இலக்க்யங்கள்  , அறிவுச்செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது வட இந்தியாவில் பனை  ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்த்ரங்கள் எனப்படும்  இலைகளில் எழுதப்பட்டது .

.இதுவே தம்ழ நாட்டின் தொல் இலக்க்யங்கள்
தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது .
தமிழின் அன்ற்லிருந்து  இன்றயவரை இருக்கும் சீரிளைமைக்கும் ஓலைகளே ஒருவகையில் காரணம் ஆனது .

 
 தொன்ம  இலக்க்யங்களை ஓலைகளில் பாதுகாத்து படிஎடுத்து  தங்களன் வருங்கால சமுதாயத்ர்க்கு பாதுகாப்பாக தங்கள் மரபின் செல்வங்கள வழங்கியதே இன்றும் அன்றிருந்த மொழ்யும் இலக்கணமும் சொல்களும் இன்னும்  ஜீவனுடன் விளங்குவதற்கு   காரணமாக
அமைந்தது .
இன்றும்தமிழின் தொன்மைக்கு சான்றாக நமக்குகிடைத்துள்ள எண்ணற்ற இலக்க்யங்களுக்கும் ,அறிவு சார் நூல்களுக்கும் காரணம் ஓலை சுவடிகளே .நமது ஓலையில் எழுதும் பழக்கமே .ஆகும் .
பனையின் கொடையால் தான் நமக்கு ஜீவனஊள்ள நமது தமிழ
மொழி யும்  அதன் தொன்மை இலக்க்யங்களும் கிடைத்துள்ளது .

.
முன்னையோரின் புலமையையும் அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது
ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும்.
சென்ற நூற்றாண்டுவரை அவைகளை செல்வமாக மதித்து பூசித்து வந்தனர் .
ஓலைகள் இல்லாத வீடுகளே தம்ழ நாட்டில் இல்லை என ,எல்லா கிராமங்கல்லும் நீக்கமற நிறைந்திருந்தது .
தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில் தான்   எழுதி தொடர்ந்துபோற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடி வடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக்
கணக்கான ஓலைச் சுவடிகள்  தமிழ நாட்டின் கிராமங்களில் பரவலாக கிடந்தது நமது    பண்டையோரின் அறிவின்  நயத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

 சீனர் கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும்  ஒருவகை   புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது
என்பர். ஆனால் இவைகள் நமது தொன்ம தமழர் பயன்பாட்டில் இருந்த ஓலை சுவடிகளுக்கு தரத்தில்  ஈடாகாது .


பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில்  இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப்படுத்தி
ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் ..
சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படிஎடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்சமாக சுவடிகள்  நமது கிராமங்களில் இருந்து  மறையத்தொடங்கின ..
அப்போதுதான்  எஞ்சிய  ஓலை சுவடிகளை காப்ப்ற்றவேண்ட்யதன் அவசியத்த்யும் , அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாச்சாரத் துறை  2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம்  இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும்    பழமை வாய்ந்த ஓலை சுவடிகள் , காகித சாசனங்கள் இவைகளைக் காக்க ஒரு  இயக்கம் (  NMM) தொடங்கியது .


இந்த இயக்கம் தமிழ் நாட்டில்   NSS     மாணவர்களைக் கொண்டு அந்தந்த பகுதில் இருந்த  கிளை நூலகர்களக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தி தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவட்கள் சுமார்  16,000  இடங்களில் இருப்பதாக அறிவித்தது .

இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள் ஓலையை தேடி நாங்கள்  ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள்  ,அவர்கள் காட்டிய பெருந்தன்மை   ,தங்களன் பாரம்பர்ய  சொத்தாக பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள்
கொடையாக கேட்டபோது எந்த பொருளாதார எத்ர்ப்பார்ப்பும் இல்லாமல்
முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சை பல்கலைக்கு வழங்க்ய பண்பு ,அப்போது அவர்கள் கட்டிய உபசரிப்பு   இவைகளை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
நான் அவர்களைப்பற்றி செய்த்களை அறிவ்க்காமல் போனால்  அது எனது மனத்தளவில் ஒரு குற்றமாகவே ஆகிவடும் எனும் எண்ணத்தால் இந்த தொடரை துவங்குக்றேன் .
இதில்  பயணத்தின் போது நடைபெற்றதன் இனிமையான சம்பவங்களே இடம்பெறும்.
கசப்பான சம்பவங்கள் எனது மனதிற்கு கிடைத்த  மருந்தாக எண்ணி
ஜீரணத்து விட்டேன் .
மீண்டும் மீண்டும் சுவைக்க இனி ப்புதானே சேமிக்கப்படவேண்டும் .
கசப்புகள் மறக்கப்படவேண்டியவை .

தஞ்சை தமிழ பல்கலையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து செய்து கொண்ட  MOU   வின் படி மேற்கொள்ளப்பட ஓலை சுவடிகள் சேகரிப்பு தொடர்பாக அண்ணாமலை சுகுமாரன் ஆகிய நான்  ,செல்வமுரளி இருவரும் தமிழ மரபு அறக்கட்டளை சார்பாகவும் ,முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சை பல்கலை சார்பாகவும் கடந்த பெப்ருவரி மார்ச் மாதங்களில் சென்னை ,திருவள்ளூர் , காஞ்சிபுரம், நாமக்கல் திருநெல்வேலி .கன்னியாகுமரி ஆகய மாவட்டங்களில் மேற்கொண்ட
தேடுதலின் முக்கயமான சுவையான சந்திப்புகள் அவர்களுக்கு நன்றி  கூறும் முகத்தான்  இத்தொடர் எழுதப்படுகின்றது .
என்னுடன் பயணித்த  திரு செல்வமுரளிக்கும் ,முனைவர்  கோவை மணிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் .
இந்த திட்டத்த்ன பின் புலமாக  இயக்கும் சக்த்யாக செயல்பட்ட   THF  நிர்வாகிகள்  சுபா ,கண்ணன் ,   ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடித்தவை .

சுவடிகள் எங்கு  எங்கு  எல்லாம் இருக்கும் தெரியுமா  ?

படம் பாருகள் !

கூரையில் சேமித்துவைத்ததை
கோரியவுடன்  தானம் தரும்
தயவு கொண்ட தாத்தா !


மறக்காமல் படம் பாருங்கள் !
மீண்டும் அடிக்கடி இன்னும்
செய்த்களும் படங்களும் வரும் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

     



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
PICT1730.JPG

annamalai sugumaran

unread,
Apr 19, 2010, 6:50:58 AM4/19/10
to minT...@googlegroups.com


-
PICT1730.JPG

விஜயராகவன்

unread,
Apr 19, 2010, 7:05:34 AM4/19/10
to மின்தமிழ்
On 19 Apr, 11:48, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:

> ஆனால்  உலகின் பெரும்பாலான இடங்களில்  இதுவரை அகழ்வாய்வில்பெறப்பட்ட சான்றுகள
> இலக்க்யத்தொடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெற ப படவில்லை .காரணம் அங்கே
> தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .
>
> எகிப்த்தில்  பிரமிடுகள் கண்ணுக்கேதிரே இன்னும்  நிற்க்கின்றன. வரலாற்றை பறை
> சாற்றுக்றது .
> காலத்தை வென்று சான்றுகள் நிற்க்கிறது. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்க
> தொல்லிலக்க்யங்கள்மட்டும் அங்கே  இல்லை .

சுகுமாரன்

எகிப்து நாகரீகம் 6000 கி.மு.வில் இருந்து தொடங்கி, ஆயிரக்கணக்கான
கல்வெட்டுகளும், சிலைகளும், பிரமிடுகளும் அகப்பட்டுள்ளன. எகிப்தியர்
கல்லில் எழுதினர், மேலும் ஓலைகளில் எழுதுகினர். ஓலைகள் அழிந்துவிட்டன.
தொல்காப்பியர் இருந்த காலத்திலேயெ எகிப்து நாகரீகம் 6000 வருடங்கள்
வாழ்விக்குப்பிறகு அஸ்தமிக்கத் தொடங்கியது. தொல்காப்பியர் காலத்தில்
எகிப்து அதன் சுதந்திரத்தை இழந்து ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக
இருந்தது. ஆனால் எகிப்தில் இலக்கியம், எழுத்து மேல் ஏற்ப்பட்ட படிப்புகள்
இல்லை என்பது சரியில்லை.

அதேபோலத்தான் சுமேரிய நாகரீகமும், சீன நாகரீகங்களும். அவை மிகப்பழமை
வாய்ந்தவை, எழுத்தின் மேல் , இலக்கியத்தின் மேல் நின்றவை. மேலும் கிரேக்க
சிந்தனையாளர்களும் , நாடகாசிரியர்களும் 400 கி.மு.வில் இருந்தே தங்கள்
வேலைகளை விட்டுச் சென்றுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.

விஜயராகவன்

Innamburan Innamburan

unread,
Apr 19, 2010, 9:34:17 AM4/19/10
to mint...@googlegroups.com
வரலாறு பல இதழ்களுடன் விகசிக்கும் புஷ்பம் போல. கல்வெட்டு, அகழ்வாய்வு, இலக்கியம், நாணயங்கள் ஆகியவை, திறந்த மனத்துடன், நடுவு நிலையில் இருந்து, ஆராய உதவுகின்றன. நாள்தோறும், இந்த  எல்லாதுறைகளிலும், புதிய செய்திகள், ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. சான்றாக, http://www.frontlineonnet.com/stories/20100423270806200.htm என்ற கட்டுரையும், அடுத்து வந்த ஒரு கட்டுரைகளையும் பார்க்கலாம்.
இன்னம்பூரான்

2010/4/19 விஜயராகவன் <vij...@gmail.com>

annamalai sugumaran

unread,
Apr 19, 2010, 11:47:26 AM4/19/10
to mint...@googlegroups.com
நன்றி விஜயராகவன்,

//தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .//

நான் கிடைக்கபெறவில்லை என்றுதான் குறிப்பட்டு இருக்க்றேன் .
நான் எகிப்த்தில் தொல்ல்யக்க்யங்கள் இருந்ததா இல்லையா என்ற
விபரத்தை கூற முற்ப்படவில்லை.
மேலும் நம்மிடமும் வரலாறுக்கு முற்ப்பட்ட காலமும் , மூன்று சங்கமும் ,  குமரிக்கண்டம் கபாட புரம் என நீண்ட வரலாறு போல் நம்பிக்கைகள் இருக்கின்றன .
கரிகாலன் , இமயம் வென்ற நெடுஞ்சேரலாதன் ,மற்றும் பல இலக்க்ய குறிப்புகல்தான் இருக்க்ன்றன .

ஆனால் எகிப்த்தில் கிடைத்ததைப் போல் நமமிடம் அகழ்வாய்வு
சான்றுகள் தான் கிடைக்கவில்லை .

நான் குறிப்பிட நினைத்தது நமமிடம் இத்தன தொல் இலக்க்யங்கள்
இன்னும் புழக்கத்தில் இருப்பதற்கு முக்கய காரணம் நம்ம்டம்  இருந்த
பனை ஓலையில் எழுதி ,அதை படி எடுக்கும் முறைதான் என்பது தான் .

இந்த முறை உலகில் அந்த காலத்தல் பல பகுதியில் பயன் பட்ட முறையை விட உயரியது என்பதுவே .

எனினும் கருத்து கூறியதற்கு நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன் 


2010/4/19 விஜயராகவன் <vij...@gmail.com>
On 19 Apr, 11:48, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Tthamizth Tthenee

unread,
Apr 19, 2010, 12:26:40 PM4/19/10
to mint...@googlegroups.com
ஆரம்பமே இப்படியென்றால் இன்னும் உங்களின் பலவிதமான அனுபவங்கள்
அந்த அனுபவங்களின் சாறு எங்களுக்கு கிடைக்கவிருக்கிறது
என்பதே மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு
 
தொடருங்கள் திரு அண்ணாமலை சுகுமாரன் அவர்களே
 
இதனை இதனால் இவன் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்
 
எவ்வளவு பயன் தருகிறது
 
கொடுப்பினையும்     இருக்கிறது உங்களுக்கும் திரு செல்வ முரளீ அவர்களுக்கும் 
கொடுத்து வைத்தால்தான் கிடைக்கும்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
19-4-10 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

annamalai sugumaran

unread,
Apr 19, 2010, 12:42:53 PM4/19/10
to mint...@googlegroups.com

நன்றி  இன்னம்பூரான் ஐயா !
நான் கூட  8 th aprl   அன்று எழுதிய ஒரு இழையில் இவ்வாறு எழுதி
இருந்தேன்
//வரலாறு என்பது நிலையானது இல்லை அது மாறக்கூட்யது .
சம்பவங்கள் வரலாற்றன் வித்துதான் .
ஆனால் அதில் இலை ,பூ ,காய் பழம் என மேலும் பல விளக்கங்கள் உண்டு .

வரலாறு என்பது ந்கழ் காலத்தின் தேவைக்கும் ,நியதிக்கும் ஏற்ப கடந்த காலத்தின் ஒரு பகுதியை புரிந்து  கொள்வது ஆகும் .



ஆனால் நிகழ காலத்தின் தேவைக்கு ஏற்ப அதுவே தன்னை தேவைப்படும் அளவிற்கு வெளிப்படுத்திக்கொள்ளும் .

அவ்வப்போது  கடந்த காலத்தின் தரவுகள்
தேவைக்கு ஏற்ப தானே வெளிப்படும் .//

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ,

கடந்த அம்பது ஆண்டுகளாக எத்தனையோ வரலாறு கண்டுபிடிப்புகள்
ந்கழ்ந்துள்ளன .
ஆனால் பாட புத்தகங்களில் அவைகள் மாற்றப்பட்டுள்ளதா ?
இன்னும் தஞ்சை பெர்ய கோயில் கோபுரத்த்ன் நிழல்  கீழே விழாது
கோபுரத்த்ன் உச்சியில்  இருக்கும் கல் ஒரே கல்லால் ஆனது .
சாரம் கட்டி சாரப்பள்ளம் என்ற இடத்தில் இருந்து ஏற்றப்பட்டது என எனக்கு சொல்லித்தந்தது போலவே ( SSLC 1965 )  இன்னும் சொல்லித்தருவதாக   தகவல் .

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்



2010/4/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Kamala Devi

unread,
Apr 19, 2010, 1:05:53 PM4/19/10
to mint...@googlegroups.com
சுகுமாரன்.
சுவாரஸ்யமான கேள்விகளும், அலசல்களும்.
நிங்ஙள் தொடருங்கள்.  அருமையாய் நாங்கள் பின்பற்றுகிறோம்.
தமிழுக்கு நிங்ஙள் தரும் இவ்வளவு கடின உழைப்பை,
தமிழே வணங்கும் .பாருங்கள்
அன்பு கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 20 April 2010 00:42:53
Subject: Re: [MinTamil] Re: ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !

Send instant messages to your online friends http://asia.messenger.yahoo.com

annamalai sugumaran

unread,
Apr 19, 2010, 1:06:14 PM4/19/10
to mint...@googlegroups.com
நன்றி நண்பர் தமிழ்த்தேனீ அவர்களே ,
தங்கள் அன்பு ஊக்கம் அளிக்கும் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


2010/4/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 19, 2010, 1:08:05 PM4/19/10
to mint...@googlegroups.com
நன்றி, சுகுமாரன்.

உங்கள், உங்கள் குழுவின் பணியை வியப்புடனும், ஆர்வத்துடன் பார்து வருகிறேன்

'ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ,


கடந்த அம்பது ஆண்டுகளாக எத்தனையோ வரலாறு கண்டுபிடிப்புகள் 
ந்கழ்ந்துள்ளன .
ஆனால் பாட புத்தகங்களில் அவைகள் மாற்றப்பட்டுள்ளதா ?

என்று கேட்கிறீர்கள். சந்தேகம் வேண்டாம். பெரும்பாலும், எல்லா துறைகளிலும் நம் பாடப்புத்தகங்கள் பல வருடங்கள் பின் தங்கியுள்ளன. யானறிந்தவரை, மூன்று காரணங்கள்.
  1. அவற்றை திருத்தியமைக்க விருப்பமில்லா சோம்பேறித்தனம்;
  2. ஆய்வு மனபான்மையும், திறனும் உள்நாட்டில் துறந்தும், வெளிநாட்டில் சிறந்தும் பணி புரியும் நம்மவர் போக்கு;
  3. புலவர்களும், ஆசிரிய் பெருமக்களும், சான்றோரும், ஆன்றோரும், தத்தம் வழி மட்டும் பயணிக்கும் தன்மை.  ஏற்கனவே, எனக்கு டோஸ்மாரி பெய்து கொண்டே இருக்கிறது. இப்படி சொன்னால், அது கனத்த மழையாக பொழியும், அனவரதமும். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? 
இன்னம்பூரான்

2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>

விஜயராகவன்

unread,
Apr 19, 2010, 1:43:28 PM4/19/10
to மின்தமிழ்
நன்றி சுகுமாரன். உங்கள் ஓலைகள், இதற இலக்கிய துப்பு தேடல் அனுபவங்களை
சொல்லுங்கள்.


விஜயராகவன்

aOn 19 Apr, 16:47, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> நன்றி விஜயராகவன்,
>
> //தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .//
>
> நான் கிடைக்கபெறவில்லை என்றுதான் குறிப்பட்டு இருக்க்றேன் .
> நான் எகிப்த்தில் தொல்ல்யக்க்யங்கள் இருந்ததா இல்லையா என்ற
> விபரத்தை கூற முற்ப்படவில்லை.
> மேலும் நம்மிடமும் வரலாறுக்கு முற்ப்பட்ட காலமும் , மூன்று சங்கமும் ,
> குமரிக்கண்டம் கபாட புரம் என நீண்ட வரலாறு போல் நம்பிக்கைகள் இருக்கின்றன .
> கரிகாலன் , இமயம் வென்ற நெடுஞ்சேரலாதன் ,மற்றும் பல இலக்க்ய குறிப்புகல்தான்
> இருக்க்ன்றன .
>
> ஆனால் எகிப்த்தில் கிடைத்ததைப் போல் நமமிடம் அகழ்வாய்வு
> சான்றுகள் தான் கிடைக்கவில்லை .
>
> நான் குறிப்பிட நினைத்தது நமமிடம் இத்தன தொல் இலக்க்யங்கள்
> இன்னும் புழக்கத்தில் இருப்பதற்கு முக்கய காரணம் நம்ம்டம்  இருந்த
> பனை ஓலையில் எழுதி ,அதை படி எடுக்கும் முறைதான் என்பது தான் .
>
> இந்த முறை உலகில் அந்த காலத்தல் பல பகுதியில் பயன் பட்ட முறையை விட உயரியது
> என்பதுவே .
>
> எனினும் கருத்து கூறியதற்கு நன்றி .
> அன்புடன்
> அண்ணாமலை சுகுமாரன்
>

> 2010/4/19 விஜயராகவன் <viji...@gmail.com>

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Apr 19, 2010, 11:25:38 PM4/19/10
to மின்தமிழ்
சுகுமாரன் அவர்களுக்கு நன்றி
களப்பணி அனுபவங்களை முழுவதும் பகிர்ந்து
கொள்ள வேண்டுகிறேன்

தேவ்

devoo

unread,
Apr 19, 2010, 11:55:47 PM4/19/10
to மின்தமிழ்
இன்னம்பூர் ஐயா தந்திருப்பது மிகவும் பயனுள்ள
தகவல்; நாடு தழுவிய ‘அகழ்வாராய்ச்சிச் சுற்றுலா’ மக்களிடையே
வரலாற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கும்

தேவ்


On Apr 19, 8:34 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> வரலாறு பல இதழ்களுடன் விகசிக்கும் புஷ்பம் போல. கல்வெட்டு, அகழ்வாய்வு,
> இலக்கியம், நாணயங்கள் ஆகியவை, திறந்த மனத்துடன், நடுவு நிலையில் இருந்து, ஆராய
> உதவுகின்றன. நாள்தோறும், இந்த  எல்லாதுறைகளிலும், புதிய செய்திகள், ஆய்வுகள்

> வந்த வண்ணம் உள்ளன. சான்றாக,http://www.frontlineonnet.com/stories/20100423270806200.htmஎன்ற


> கட்டுரையும், அடுத்து வந்த ஒரு கட்டுரைகளையும் பார்க்கலாம்.
> இன்னம்பூரான்
>

> 2010/4/19 விஜயராகவன் <viji...@gmail.com>

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

annamalai sugumaran

unread,
Apr 20, 2010, 4:08:14 AM4/20/10
to mint...@googlegroups.com

களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௨    (  2 )


சுவடிகளை தேடி அவைகளை அச்சில் பத்ப்பித்த  பதிப்பு முன்னோடிகளான
அ. தாண்டவராய முதலியார்,
சிவக்கொழுந்து தேசிகர்,
திருத்தணிகை விசாகப்
பெருமாளையர், களத்தூர்
வேதகிரி முதலியார்,
புஷ்பரதஞ்செட்டியார்,
ஆறுமுகநாவலர்,
சி.வை. தாமோதரம் பிள்ளை,
மழவை மகாலிங்கையர்,
உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை
ஆகியோர் இத்துறையில் உழைத்துப் பல அரிய
தமிழ் நூல்களைப் பதிப்பித்துத்தந்தனர்.----
அத்துணை பேரின் அரிய தமிழ தொண்டும் அவர்களது சீர்ய பதிப்பு
முயற்ச்சிகளும் தமிழுக்கு பல தொல் இலக்க்யங்களை மீட்டுத்தந்துள்ளது
அவர்கள் அனைவருக்கும் எங்களது பணிவான வணக்கங்கள் ..

ஆனால்   எங்களது குழுவின் செயல்பாடு  முற்றிலும் வேறு விதமானது .
மேலே  கூறிய தமிழ் சான்றோர்களின் செய்யல்களுடன் எந்த வழியிலும்
ஒப்புநோக்க  முடியாதது .
அவர்கள் அளவு எங்கள்டம் தமிழ புலமை கிடையாது .நிச்சயமாக என்னிடம் இல்லை .தேடுதலும் மின்னாக்கம் செய்தலுமே எங்கள் பணி .
பத்ப்பித்தல் ஆய்வு இவைகலுக்காக எங்களுடன் தஞ்சை பல்கலை
இருந்தது  .
எங்கள்    பணி , NMM  திட்டத்தில் எடுக்கப்பட்ட பட் டி யலை வைத்துக்கொண்டு அந்த முகவரிகளையும் ,அந்த முகவரிக ளில் இருக்கும்
பெரிய்ர்களை அணுகி அவர்களிடம் ஓலை சுவடிகள் இருக்க்றதா
என்பதை அவர்கள் வாய்மூலம் அறிந்து ,பின் அவர்களை  அதைக் காட்டச் சொல்லி சம்மத்க்க வைத்து ,அவைகளை கண்ணால் கண்ட பிறகு அவகளை தஞ்சை பல்கலைக்கு கொடையாகத் தந்தால் அதை நீண்ட காலம் அழ்வின்றி பாதுகாக்க இயலும் என்பதை அவர்களுக்கு விளக்கி,அவர்களுக்கு பு ரியவத்து அவர்கள தானாக அவர்களிடம் இருக்கும் சுவடிகளை கொடையாக வழங்க செய்வது ஆகும் .

ஆனால் இந்தப் பணி சொல்லுவது போல் அவ்வளவு சுலபமல்ல .
ஏனெனில் நாங்கள் கொண்டு போவதோ நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்தப் பட்டியல் ,முதலில் ஊரையும் ,அங்கே இருக்கும் தெருவையும்
சரியாக கண்டு பிடிக்கவேண்டும்   .பல இடங்கள்ல் தெரு பெயர் மாறி
இ ருக்கும் .பிறகு புதிய எண்ணா பழைய எண்ணா என்ற குழப்பம் .
அடுத்த வீட்டில் இருப்பவரையே நகரத்தில் இருப்பவருக்கு தெரியாது .
மேலும் அவர் முகவரி மாறி  இருப்பார் .பெரும்பாலும் அந்தப்பெயர் உள்ளவர் இறந்து போய்ருப்பர் .
அவரது சரியான வாரிசு   யார் என காணவேண்டும் ..
சில சமயம் அவர் ஆசானாக இருப்பன் அவரது சீடர் யார் என கண்டு படிக்கவேண்டும் .ம்குந்த சம்யோஜிதம் இருக்கவேண்டும் .
நம்பிக்கை தரும் பேச்சும் நடவடிக்கையும் வேண்டும் .
இத்தனையும் வ்ரிவாகவும் அதே சமயம் சந்தேகம் வராத அளவு மென்மையாகவும் செய்யவேண்டும் .

சிரமப்பாட்டு இத்தனையும் மீறி சரியான நபரை கண்டுவிட்டால் பெரும்பாலோரே எடுத்தவுடன் எதற்கு வம்பு என்று முதலிலேயே
சுவடியா அப்படி என்றால் எனன என அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறுவார்கள் ...சலிகக் கூடாது .
கிராமம் என்றால் முகவரி தேடுவது சற்று சுலபம்  ஆனால் அந்த கிராமத்தை தேடுவதுதான் கடினம் .ஆனால்
நிஜமாகவே அப்பாவிகள் உண்டு .
ஓலை தானே இருக்க்றது  என்று சில மையில் தூரம் அழைத்து சென்று தங்கள் ஓலை குடிசையை காட்ட்யவர்களும் உண்டு .

நாங்களும் ஒன்றும் சாமான்யர்கள் அல்ல .
யாராவது தப்பித்தவறி   கொஞ்சம் ஓலை சுவடி  எங்களுக்கு கொடுத்து விட்டால் ,
பழகிய யானையை வைத்து வேறு புதிய யானை பிடிப்பது போல் ,
அவரையும் நட்ப்பாக்கி எங்கள் குழுவில் இணைத்து கொள்வோம் .
இரண்டு மூன்று நாட்கள் அவர் எங்களுடன் வநது ஊர்களுக்கு செல்லும்
சரியான வழி கட்டவேண்டி இருக்கும்.

பட்டியலில் இலாத  புதிய இடங்களில் இ ருந்தும ஓலைகளை பெற்ற சம்பவங்களும் உண்டு .
அடுத்து வரும் இழைகளில் இனி வருபவை அனுபவங்கள்தான்
மொத்தம் இ ரண்டு மூன்று மாதங்கள்ள் நேரடி களத்தில் இருந்த காலம் சுமார்  40 .நாட்கள் .அப்போது குறுக்கும் நெடுக்குமாக நாங்கள் சுவடி தேடி
அலைந்த தூரம் சுமார்  7500  km   இருக்கும் .
அன்புடன் .

அண்ணாமலை சுகுமாரன்


தம்ழ மரபு அறக்கட்டளையின் கண்ணனும் சுபா வும் பல ஆண்டுகளுக்கு
முன் ஓலை சுவடிகளை பற்றி எழுத்திய சில மடல்கள் .மற்றும் செய்தகள்
இதோ .
இன்னும் பலருக்கு  THF  க்கு இருக்கும் நீண்ட கால ஓலைச் சுவடி ஆய்வு பற்றய உழைப்பு தெரியாது .

'' 
ஜெர்மனியில் தமிழ் ஓலைச் சுவடிகள் பல்வேறு நூலகங்களில் சிதறிக் கிடக்கின்றன. பெர்லின்
தலைமை நூலகத்தில் நிரம்ப வைணவ நூல்கள் உள்ளன. பிள்ளை லோகாச்சாரியர், மணவாள
மாமுனி, நாலாயிரம், பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் இப்படி....பரமார்த்தகுருகதை
மற்றும் பஞ்ச தந்திரக் கதைகள் கொண்ட நூல் ஒன்று உள்ளது (வீரமாமுனிவர்). பெரும்பாலும்
மணிப்பிரவாள அல்லது கிரந்தம். பேரா. இலாஸ் அவர்களுக்கு கிரந்தம் நன்கு தெரிகிறது.
இவைகளை பதிப்பிப்பதில் சிரமமில்லை. ஆனால் இவையெல்லாம் தமிழகத்திலும் உள்ளன.
இன்னும் அரிய நூலாக எதையும் காணவில்லை. எலலா நூலகர்களும் ஒத்துழைப்பு தருவதில்லை.
பலர் சிடுமூஞ்சிகளாக உள்ளனர். Dog in the manger என்று சொல்வது போல் ஒன்றுக்கும்
உதவாமல் உள்ளனர். நாங்கள் தொடர்ந்து முயல்வோம்.

பெர்லின் நூலகத்தில் எம் மூதாதையர் கைப்பட எழுதிய வியாக்கியானங்களை அவர்கள்
மிக பத்திரமாகத் தர (இந்த இடத்திற்குள் போவதற்கான பந்தோபஸ்தை நீங்கள் பார்க்கவேண்டும்!
அப்பா!!) அதை கையில் வாங்கியபோது மெய் சிலிர்த்தது. இந்தியாவின் பாதுகாக்கப் பட்ட நிலையிலுள்ள
முதல் ஓலைச் சுவடியொன்று கோபிப் பாலைவனப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப் பட்டு
ஜெர்மன் நூலகத்திலுள்ளது. பிராமி எழுதிற்கும் முன்னோடியாக உள்ளது அது. மை வைத்து எழுதியது.
பெளத்த நாடகப் பிரதி அது. தேவநாகரி, மற்றும் கிரந்தம், தமிழ் ஓலைச் சுவடிகள் உள்ளன.
ஜெர்மனியிலுள்ள மொத்த தமிழ் ஓலைச் சுவடிகளின் பட்டியல் இன்னும் தயாராகவில்லை.
மிக, மிக மெதுவாகத் தயாரிக்கிறார்கள். காரணம் இவைகளை வாசிக்கத் தெரிந்த ஆட்கள் மிகக்
குறைவு என்பதால்.

வளையாபதி போன்ற நூல்கள் கிடைத்தால் தமிழுக்கு லாபம்.
கண்ணன் 

சுபா
Re: தினமணி கதிர் - செய்தி  
Transférer | Imprimer | Afficher le fil | Afficher l'original | Signaler ce message | Rechercher les messages de cet auteur
*விழிப்புணர்வு: புறப்படட்டும் "மரபு அணில்கள்'!*

மருத்துவம், அறிவியல், கணிதம், கட்டடக் கலை, இசை, நடனம், ஓவியம் போன்ற
எந்த விஷயமாக இருந்தாலும் அதில்
பல தலைமுறைகளுக்கும் முன்பாகவே கரை கண்டிருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள்
வாழ்ந்த காலத்தில் பல துறைகளிலும்
அவர்கள் பயன்படுத்திய நுட்பங்களை அன்றைய காலத்திற்கேற்ற எழுத்து வடிவமான
பனை ஓலைச் சுவடிகளில்தான் குறித்து வைத்திருப்பர். இந்த ஓலைச் சுவடிகளில்
இருக்கும் விஷயங்களைப் படித்து உணர்ந்து கொள்வதே ஒரு தனிக் கலை. இந்த
ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாமல் அதை அடுப்பெரிக்கவும், பூச்சி,
புழுக்கள் அரிக்க பரணில் அசிரத்தையாகப் போட்டு வைத்திருப்பவர்களும்
அதிகம்.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்
டாக்டர் கண்ணன் இருப்பது
கொரியாவில். துணைத் தலைவர் சுபாஷிணியும் இருப்பது
ஜெர்மனியிலும். மூலைக்கு ஒருவராக இருந்தாலும் இணையத்தின் வழியாக இவர்களை
இணைத்திருப்பது- தமிழ்!


தமிழின் புராதனமான ஓலைச்சுவடிகளையும், அரிய புத்தகங்களையும் மின்
பதிப்பாக மாற்றி வருகிறது தமிழ் மரபு
அறக்கட்டளை. இந்த அமைப்பின் செயல் குழுக்களை அமைப்பதற்கும்,
தன்னார்வலர்களைச் சேகரிப்பதற்கும்
ஜெர்மனியிலிருந்து சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் தமிழ் மரபு
அறக்கட்டளையின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுபாஷிணி. அறக்கட்டளையின்
செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...


"" ஜெர்மனியிலிருக்கும் "ஹெலட் பேகர்ட்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில்
கணிப்பொறியாளராகப் பணிபுரிகிறேன். புலம்
பெயர்ந்த தமிழரான எனக்கு மலேசியாதான் பூர்வீகம். இன்னமும் அச்சில்
கொண்டுவரப்படாத ஓலைச்சுவடிகளின்
எண்ணிக்கை எத்தனையோ ஆயிரங்களைத் தொடும் என்ற நிதர்சனமான உண்மைதான்,
எங்களை மலேசிய இந்திய
காங்கிரஸின் விதைப் பணத்துடன் இந்த தமிழ் மரபு அறக்கட்டளையை மலேசியாவில்
கடந்த 2001-ம் வருடம்
தொடங்கவைத்தது. மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனியில் எங்களின்
அலுவலகங்கள் இயங்குகின்றன. இங்கிலாந்தில்
முறையாக இந்த அறக்கட்டளையைப் பதிவு செய்திருக்கிறோம்.


தமிழர்களிடம் எல்லாத் திறமைகளும் இருந்தாலும், அவர்கள் எந்தக் காலத்தில்
தங்களின் படைப்புகளை
எழுதியிருக்கிறார்கள் என்ற தகவலை அவர்களின் படைப்புகளிலிருந்தோ, இதர
குறிப்புகளிலிருந்தோதான் நம்மால்
தெரிந்துகொள்ள முடியும். வரலாற்று ரீதியான விழிப்புணர்வு தமிழர்களிடம்
குறைவு. வெளிநாட்டு அறிஞர்களின் காலத்தை
நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிவதுபோல், நம்முடைய பாரம்பரியத்தில்
இருப்பவர்களை நம்மால் அடையாளம்
காண்பது கடினம். ஓலைச் சுவடிகளை மிகச் சரியாகப் பராமரித்தால் கூட ஐந்து
நூற்றாண்டுகள் வரைதான் அதற்கு
ஆயுள்காலம் என்பதுதான் அதை மின்பதிப்பாக்கம் செய்வதற்கான அவசர, அவசியத்தை
எங்களுக்கு உணர்த்தியது.
நாங்கள் அறக்கட்டளையைத் தொடங்கியவுடன், ஓலைச் சுவடிகள் இருக்கும்
இடங்களைக் கண்டறிவது, அதில் இருக்கும்
கருத்தை அறிஞர்களைக் கொண்டு எல்லோருக்கும் புரியும் வகையில்
எளிமையாக்குவது, அவற்றை மின் பதிப்பாக்குவது,
தகவல் வங்கியை உருவாக்குவது... என்று எங்களின் பணிகளை ஒழுங்கு படுத்திக்
கொண்டோம். பணிகளை மளமளவென்று
தொடங்கினோம். தமிழ் கூறும் நல்லுலகத்திலிருந்து அறிஞர் பெருமக்கள் பலரின்
உதவிக் கரம் நீண்டது.


படங்கள் அடுத்த இழையல் இடம்பெறும் .அளவில் ஒவ்வரு படமும் மக பெரிதாக இருக்கறது .சிறிது செய்து வெளியிட ஆவன செய்துவருக்றேன் .சு




Innamburan Innamburan

unread,
Apr 20, 2010, 7:35:23 AM4/20/10
to mint...@googlegroups.com
"...பழகிய யானையை வைத்து வேறு புதிய யானை பிடிப்பது போல்..."
ஆஹா!
இன்னம்பூரான்



2010/4/20 annamalai sugumaran <amirth...@gmail.com>

Kamala Devi

unread,
Apr 20, 2010, 9:25:39 AM4/20/10
to mint...@googlegroups.com
அன்பு சுகுமாரன்
எழுத வார்த்தைகள் இல்லை.
நிங்ஙளின் உழைப்பை வணங்குகிறேன்.
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 20 April 2010 16:08:14
Subject: Re: [MinTamil] Re: ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !

Subashini Tremmel

unread,
Apr 20, 2010, 10:39:46 AM4/20/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
திரு.சுகுமாரன்,
 
இந்தத் தொடர் மிக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சிறந்த தொடர். உங்கள் இருவரின் கடுமையான களப்பணி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்.  இவற்றை நாம் திட்ட வலைப்பக்கத்தில் தொகுத்து வைப்போம்.
 
சுவடிப்பதிப்பியல் பற்றிய ஒரு நூல் - மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியது.  விரைவில் இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஒலிப்பதிவுகளாக்கி வெளியிடலாம் என்ற யோசனை உள்ளது.  தயார் செய்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
 
அன்புடன்
சுபா
 

 
2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>





களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௧-   ( 1 )


வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு  - ௧ (   1 )

Selva Murali

unread,
Apr 20, 2010, 11:47:17 PM4/20/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி!
சுகுமாரன் சார்.
உங்களுடன் இணைந்து பணியாற்றியும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தொடருங்கள்...
காத்திருக்கிறேன்..................................

2010/4/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

annamalai sugumaran

unread,
Apr 21, 2010, 5:44:28 PM4/21/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௩   -   (  3 )



ஏட்டுக்கல்வி என பெயர் வந்ததற்கு அந்த நாள் முதல் கல்வி பயில ஏடுகளே பெருந்துணையாக இருததுவே காரணமாகும் .
இப்போதும்  இன்றைய  கல்வியை ஏட்டுக்கல்வி என்றுதானே
கூறுகிறோம் , படிக்கும் இடத்தை  பள்ளிக்க்கூடம் என்றுதானே கூறுகிறோம் .
ஏன் பள்ளிக்கூடம் என பெயர் வந்தது ?
 
EDUCATION  என்பதற்கும் ஏட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ?



நல்ல துவக்கம் பெரிய வெற்றியில்  பாதி !
--
 2009  டிசம்பர் மாதம்  18  நாள்  அன்று தமிழ மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ பல்கலை கழகமும்   ஓலை சுவடிகள் தேடுதல் மற்றும்  அவைகளை மின்னாக்கம் செய்தல்  பொருட்டும்
ஒரு ஒப்பந்தத்தில் கையப்பமிட்டனர் ..
உடனே பல்கலை  கழக பட்டமளிப்பு விழா அதைதொடர்ந்து அரையாண்டு விடுமுறை என நாட்கள் நகர்ந்தது .பிறகு சில நாட்கள் வேலை பிறகு பொங்கல் வ்டுமுறை வந்தது .
நானும் செல்வமுரளியும் தொடர்ந்து  இந்தப்பணி குறித்து    நினையுருத்த வழக்கமாக தஞ்சை
செல்ல ஆரம்த்தோம் .
நிறைய பஸ் நடத்துனர் ,ஓட்டுனர் நண்பர்கள்  ஆக ஆரமித்தனர்  . எனன சார்!  இரண்டு நாளாக காணமே என விசாரிக்க ஆரம்த்தனர் ..பயணங்கள் வாடிக்கை ஆனது .

 தஞ்சையில் நிறைய அரசாங்க நடை முறை சிக்கல்கள் அலசப்பட்டன .பல திட்டங்கள் தந்தோம் .
ஒத்துவருமா என  ஆய்ந்தனர் .இடைஇடையே கண்ணன் சுபா பல கடிதங்கள் எழுதினர் .ஆண்டோ
பலமுறை பேசினார் .
நாங்கள் நடக்க நடக்க தேரும் மெதுவாக அசைய ஆரமித்தது ..
த்டீர் என ஒரு நாள்  இன்பஅதிர்ச்சி தந்தனர் , நாளை முதல் ( 5/ 2  / 2010 )  திட்டமிட்டபடி
சென்னையில் முனைவர் கோவை மணியுடன்  தேடுதல்  பணி துவங்கலாம் என்றனர் .
கோவை மணி ரயிலில்  புறப்பட்டு காலை  11  மணிக்கு சென்னை வருவதாக கூறனார் .
இவை முடிவு செய்யப்பட நேரம் மாலை  6  மணி  இடம் தஞ்சை . நாள்  4 /2 /2010
விடுவோமா  வாய்ப்பை !  செல்வமுரளி மறுநாள் கலந்து கொள்ள நிச்சயத்து  உடுப்பு எடுக்க ஊருக்குப் போக  நான்
எடுத்தேன்   ஓட்டம் !
இரவு முழுவதும் பயணம் !
விடியலில் மீண்டும் பயணம் !
பத்து மணிக்கே எழும்பூர் !
ரயிலும் வந்தது அத்துடன் கோவை மணியும் வந்தார் .
ரயில் நிலைய பிளாட்பாரம் அங்கிருந்த நாற்காலிகள்
எங்கள் ஆலோசனை அறையாக மாறியது .
சென்னையில்  சுவடிகள் இருப்பதாக   NMM   தயாரித்த பட்டியலில் 
இருந்த முகவரிகள் மொத்தம்  76
நான் முன்பே அவைகளை  பகுதிவாரியாக  பிரித்து வைத்திருந்தேன்
ராயப்பேட்டை மயிலாபூர்  பகுதி என முகவரிகள் பிரித்து வைத்திருந்தேன் ..
அன்று எங்கே போவது  ? எங்கே முடிப்பது  ? என ஆராய்ந்தோம் .
அருகில் இருக்கும் சிந்தாதிரிபேட்டை , மைலாபூர் , திருவல்லிகேணி பார்த்து நான் அங்கே விடுதியில் தங்குவது .மறுநாள் காலை மீண்டும் அங்கிருந்து ஆரம்பிப்பது என தீர்மானிததோம் .
எதிரே சென்று அவசர அவசரமாக மதிய உணவை முடித்தோம் .
அழைப்பு  வண்டியை (  CALL TAXI) அழைத்தோம் .
மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு ஒரு வண்டியை
அமர்த்திககொண்டோம்

உவேசா  அவர்கள் மாதிரி மாட்டு வண்டியில் செல்லும் பாக்கியம் இப்போது  கிட்டாதே  ! ஏதோ கிடைத்த வண்டியில் திருப்தி அடைய வேண்டியதுதான் .என மனதை சமாதானப் படுத்திக்கொண்டோம் .

(சும்மா நகைசசுவைக்குத்தான் !  முன்பே சொல்லிவிட்டேன் ,  அது
வேறுவகை தேடல் .நாங்கள் வேறு ! நோ  COMPARISON  PLEASE ! )

சிந்தாதிரி பேட்டையில் ஒரே ஒரு முகவரிதான் இருந்தது .
எனவே குழப்பம் இல்லை .
வண்டியை நேரே சிந்தாதிரி பேட்டை  விடச்சொன்னோம் .
முகவரியில் இருந்த பெயர் நிமலன் .
.பட்டியலில் எப்படி இருந்தது தெரியுமா ? 
 Nameelan  .A
107 , CHIKANA CHETTY STREET
CHENDARIPET.   CHENNAI  -2

சிந்தாதிரி பேட்டை சென்று தோன்றிய ஒரு இடத்தில்  வண்டியை  நிறுத்தி
நமீலன் , சிக்கன செட்டித்தெரு என விசாரிக்க  ஆரம்த்தோம் .
யாருக்கும் தெருவும் தெரியவில்லை , நபரும் தெரியவ்ல்லை .
நடந்து நடந்து வண்டியை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டோம் .
தாகம் நாக்கை இழுத்தது , நடை தளர்ந்தது !
அப்போது தான் தவறு புரிய ஆரமித்தது .
ஆனால் அழுகைமட்டும் வரவல்லை !
( அது ஏன் என பூச்செண்டு புகழ் கமலம் தான் கூறவேண்டும் !
அவர்கள் மாதிரி எழுத வருமா என ஒரு சிறிய முயற்சி !)

குளிர்பானம் குடிக்க ஒரு கடைக்கு சென்று ஒரு பானம் அருந்தி
மீண்டும் மெதுவாக இங்கே நமீலன் என யாராவது என கேட்க்க ஆரமித்ததும் நிமலனை கேட்கறீர்களா ,பக்கத்தில்   சிக்கண்ண செட்டி தெருவில்  தான் போங்கள் ! என்றார் .
இரண்டு புதிர்களை ஒரே நேரத்தல் விடுவித்த சாதனை அவருக்கு
தெரியவல்லை .!
இப்போது கொஞ்சம் தெம்பாக அருகில் இருந்த வீட்டை அடைந்தோம் .
வீட்டு எண்ணை பார்த்தேன் அதுவும்  107  இல்லை .
என்னை அறியாமல் முருகா என்றேன் !
ஆனால் அப்படி உரக்கக்கூறும் வழக்கம் எனக்கு கிடையாது .
என்னவோ தோன்ற்யது ! கூறிவிட்டேன் .
உள்ளே சென்று நிமலன் ஐயா இருக்க்றாரா என்றேன் .
அது ஒரு புத்தக கடையாக இருந்தது .
ஒரு சிறுமியும் சிறுவனும் இருந்தனர் .
நிமலன் வெளியே சென்றிருக்க்றார் , உங்களுக்கு
என்ன வேண்டும் என்று கேட்டனர் .
அவர்கள்தாம் எங்களுக்கு சுவடி வேண்டும் என எப்படி
கேட்பது . எனவே நாங்கள் எங்களை பற்ற்யும் சுவடி தேடி
கிளம்பி இருப்பதையும் கூறினோம் .
இருவரும் எங்களை சில கணங்கள் பரிதாபமாக பார்த்தனர் .
இங்கே ஏன் வந்தீர்கள் எனக்கேட்டனர் .
பிறகு உடனே  NMM  பற்றி விளக்க ஆரமித்தோம் ..
அந்தப் பட்டியலில் உங்கள் வீட்டில்  160 சுவடிகள் இருப்பதாக
இருக்கறது என்றதும் அதுவரை உற்ச்சாகமாக பேசி வந்தவர்கள்
இப்போது எங்களை பயத்துடன் எதோ பிள்ளை பிடிக்க வந்தர்களை
பார்ப்பது போல் பார்த்து , அருகில் இருந்த அழைப்பு மணியை
அலற விட்டனர் .
உடனே மாடில் இருந்து    ஒரு பெண்மணி இறங்கிவந்து ,
மீண்டும் ஒருமுறை எங்கள் கதையை முழுவதும் கேட்டார் .
பின் இது யார் வீடு தெரியுமா எனக் கேட்டார் .
நாங்களும் முகத்தை அப்பாவித்தனமாக  வைத்துக்கொண்டு
இங்கே நிமலன் என்று என இழுத்தோம் .
உடனே அந்த பெண்மணி மேலும் எங்களை சோதிக்க விரும்பாமல்
"இது வாரியார் ஸ்வாமிகள் வீடு !
நான் அவரது சகோதரர் மகள் ! நிமலன் அவரது சகோதரர் மகன் .
அவர் சுவாமிகளின் புத்தகங்களை  பதிப்பித்து வருகிறார் .
நீங்கள் கூறியபடி இங்கே  160  புத்தக கட்டு வேண்டுமானால்
இருக்க்றது.  160  சுவடி கட்டுகள் கிடையாது  " என்றார் .

வாரியார் ஸ்வாமிகள் பெயரை கேட்டதும் ஒரு கணம் நாங்கள்
இருவரும் மெய் சிலிர்த்து  விட்டோம் .
இறையருளாலேயே நாங்கள் முதலில் இங்கு வந்து எங்கள் தேடுதலை ஆரமித்ததை உணர்ந்தோம் .
இன்னும் சொல்லப்போனால் வாரியார் சுவாமிகளுக்கும் என் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு .
நான் முதல் வெளிநாடு சென்று திரும்பியதும் ஒரு தொழில் உற்பத்திசாலை ஆரம்த்தேன் .அதை திறந்து வைத்தது  ( 1985) வாரியார் சுவாமிகளே !
அந்த தொடர்பை நான் கூறயதும் அந்தப்பெண்மணி எங்களை மாடியில் இருக்கும்   சுவாமிகளின் பூஜை அறைக்கு அழைத்து சென்று வழிபட செய்து பூஜைகள் நடத்தி ,எங்கள் பணி வெற்றியடையும் என வாழ்த்னார் .
எங்களுக்கு சில புத்தகங்களையும் அந்த சிறுமி அவர்கள் பங்குக்கு
பரிசாக தந்தனர் .
கந்தன் அருள் பெற்ற  சந்தோஷத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தோம் .
சிந்தாதிரிபேட்டையில் எங்களுக்கு சுவடி கிடைக்காவிட்டாலும்
நான்கு முக்கய  போதனைகள் கிடைத்தது .
அவைகள் என்ன என்பதையும் ,அன்றே எங்களுக்கு கிடைத்த சுவடி குவியலின் தரிசனம் பற்றியும் நாளை கூறுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்




A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

2010/4/21 Selva Murali <mural...@gmail.com>

மிக்க நன்றி!
சுகுமாரன் சார்.
உங்களுடன் இணைந்து பணியாற்றியும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தொடருங்கள்...
காத்திருக்கிறேன்..................................

2010/4/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

திரு.சுகுமாரன்,
 
இந்தத் தொடர் மிக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சிறந்த தொடர். உங்கள் இருவரின் கடுமையான களப்பணி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்.  இவற்றை நாம் திட்ட வலைப்பக்கத்தில் தொகுத்து வைப்போம்.
 
சுவடிப்பதிப்பியல் பற்றிய ஒரு நூல் - மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியது.  விரைவில் இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஒலிப்பதிவுகளாக்கி வெளியிடலாம் என்ற யோசனை உள்ளது.  தயார் செய்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
 
அன்புடன்
சுபா
 

 
2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>





A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Innamburan Innamburan

unread,
Apr 21, 2010, 5:55:04 PM4/21/10
to mint...@googlegroups.com
நண்பர் சுகுமாரன்,
வாரியார் ஸ்வாமிகள் அருள் புரிந்ததில், எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஸூபாஷிணியால் விளக்கமளிக்க இயலலாம்.
வாழ்த்துக்கள்
இன்னம்பூரான்

2010/4/21 annamalai sugumaran <amirth...@gmail.com>

Kamala Devi

unread,
Apr 22, 2010, 9:32:20 PM4/22/10
to mint...@googlegroups.com
அன்பு சுகுமாரன்
அழுகை வரவில்லையா? ஆனால் கமலத்தை நினைத்தீர்களா?
வாவ், இதுதானே  ஞான்.------
சாரே, இதுதான் என்டெ வெற்றி, என்டெ எழுத்தின் துளி சந்தோஷம்.
நிங்ஙளின் எழுத்தில் என்டெ சாயல் மணக்க ஆரம்பித்துவிட்டதே?
அழுகை ஏன் வரவேண்டும் ,நிங்ஙள் யாருமே அழக்கூடாது.சர்வபேரும்
பரவசத்தில் அப்படியே அருமையாக எழுதிக்கொண்டிருங்கள் .எனக்கு அதுபோதும்..
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>

Subject: Re: [MinTamil] ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !


தாகம் நாக்கை இழுத்தது , நடை தளர்ந்தது !
அப்போது தான் தவறு புரிய ஆரமித்தது .
ஆனால் அழுகைமட்டும் வரவல்லை !
( அது ஏன் என பூச்செண்டு புகழ் கமலம் தான் கூறவேண்டும் !
அவர்கள் மாதிரி எழுத வருமா என ஒரு சிறிய முயற்சி !)

Venkatachalam Subramanian

unread,
Apr 22, 2010, 10:47:50 PM4/22/10
to mint...@googlegroups.com
ஓம்.
உயரிய குறிக்கோளுடன் எவ்விதப் பலனும் எதிர்பார்க்கமுடியாத வரையறுத்துக் கூறமுடியாத ஒரு உறுதியுடன்கூடிய நம்பிக்கை ஒன்றையே பிரதானமாகக் கொண்ட களப்பணி இந்தச் சுவடி தேடல்.
மனம் உள்ளவன் வழியைத் தேடுவான்; மனம் மறுத்தவன் காரணத்தைத் தேடுவான்.
கண் உறுப்பினைத் தானம் செய்ய உடையவன் எழுதி அனுமதி  கொடுத்திருந்தாலும் உறவாக உடன் இருப்பவர்கள் அறியாமையினால் கண் எடுப்பதற்கு மறுப்பர்
அதனைப் போன்று சிறிய ஒரு தகவலுடன் சுற்றித் திரிந்து கண்டவர்களிடம் நயம்படப் பேசிப் புரியவைத்து  சாதனை படைப்பது ஒரு வேள்வியினை ஒக்கும்.
பந்தல் ஒன்றின் பல கால்களும் சேர்ந்து பந்தலை உருவாக்கித் தாங்குவது போன்று பிறந்த மேனியாய்த் தங்கியிருக்கும் பனுவல்களைப் பாதுகாக்கவும் பகிர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும்  உழைக்கும் அந்தக் குழுவின் அண்ணாமலை சுகுமாரன், செல்வமுரளி  ஆகியோர் சிறப்பும் ஆரோக்கியமும் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

முயற்சி மெய்வருந்தக் கூலிதரும்; பணமாகவன்று. புகழால், மகிழ்ச்சியால்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
2010/4/23 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

annamalai sugumaran

unread,
Apr 22, 2010, 10:49:43 PM4/22/10
to mint...@googlegroups.com
கடிதங்களுக்கு மக்க நன்றி .
உங்களுக்குத்தான் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறதே !
உங்கள் எழுத்தையும் உங்களுக்கு கி டைக்கும் பாராட்டுதல்களையும் தவறாமல் படித்து மகிழ்வேன் .

மீண்டும் நன்றி ,
அன்புடன் ,

அண்ணாமலை சுகுமாரன்

2010/4/23 Kamala Devi <saahi...@yahoo.com.sg>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Subashini Tremmel

unread,
Apr 23, 2010, 4:24:23 AM4/23/10
to mint...@googlegroups.com
இன்னம்புரான் அவர்கள் நான் சென்னை வந்திருந்த போது வாரியார் சுவாமிகள் கையெழுத்திட்ட அவரது நூலை எனக்குப் பரிசாக வழங்கினார்.  இந்த ஆசிர்வாதம் வேலை செய்கின்றது..:-)
-சுபா

2010/4/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>

annamalai sugumaran

unread,
Apr 24, 2010, 2:30:42 PM4/24/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --   ௪   -   (   4 )


பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் காட்டும்  கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இருக்காது . ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்
மெய்யெழுத்துகள் புள்ளி இருக்காது

இவற்றை அறிந்து எழுதுவதற்குத் மிகுந்த  பயிற்சி வேண்டும்.
அதை விட அதிகம் வேண்டும் பொறுமை .
கண் பார்வை கூர்மை மிக அவசியம் .



மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்  



சிந்தாதிரிபேட்டையில் எங்களுக்கு சுவடி கிடைக்காவிட்டாலும்
நான்கு முக்கய  போதனைகள் கிடைத்தது .என்று சென்ற இழையில் சொல்லி நிறுத்தி இருந்தேன் .
இப்போது நாங்கள் பெற்ற போதனைகளை பார்ப்போமா ?
   NMM  பட்டியல்  2006  இல்  முழுமையாகவெள யிடப்பட்டு பயன்பாட்டில்   இருந்தாலும் அதை நாங்கள் இப்போதுதான்  மிக தாமதமாக பயன்படுத்த இறங்கி இருக்கிறோம் . .அநேகமாக பெரும்பாலான தனியார் சேகரிப்பாளர்கள் 
மற்றும் நிறுவனங்கள் முன்பே முதல் அறுவடை செய்து சுலபமாக பெறகூடியவற்றை
பெற்றுவிட்டன .எனவே இந்தப் பட்டியல் உண்மையா
பொய்யா ?அதிலுள்ள தகவல்களை எந்த அளவு நம்பலாம் இந்த பட்டியலை  வைத்து திறம்பட எவ்வாறு வேலை செய்யவது .?  அதில் இருந்து அதிகபட்ச வெற்றியை பெற என்ன செய்ய வேண்டும்  ?   என பல சிந்தனைகள் மனதில் இருந்தது . வேறு முனையில் வேறு  இந்தப்பட்டியல் முழுவதும் தவறு என ஒரு பேச்சு இருந்தது 
ஆனால் சிந்தாதிரி பேட்டை விஜயம் எங்களுக்கு சில தெளிவை உடனே உண்டாக்கியது .
1  ) பட்டியலில் இருக்கும் ஊரின் பெயர் ,தெருவின் பெயர் ,நபரின் பெயர் 
இவை எதையும் அதில் உள்ளது போல அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது .
ஏன் எனில் தமிழ் நாட்டில்  NSS  மாணவர்களால் வீடு வீடாக சென்று எடுக்கப்பட்ட 
பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டு 
அங்கிருக்கும் தமிழ்தாய் மொழி அல்லாத ஹிந்திக்காரர்களால் தட்டச்சு 
செய்யப்பட்டிருப்பதால் இதில் இருக்கும் ஊர் தெரு நபர்கள் பெயருக்கு அவர்களுக்கு தோன்றிய உச்சரிப்பு கொடுத்து  தட்டச்ச்சு செய்திருக்கிறார்கள் .
எனவே நிமலன்  என்பது நமீலன்    ஆனது போல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் .
எனவே பட்டியலில் இருப்பது ஒருவேளை சரியாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அதை ஒத்த பெயராகவும் இருக்கலாம் .எனவே விபரம் வழி முதலியவை
விசாரிக்கும் போது பெயரை ஒத்த எல்லா வித மார்கத்திலும் விசாரிக்கவேண்டும் .
நிறைய கற்பனை  வளம் வேண்டும் .நிகண்டு அறிந்திருந்தாலும் நலம் .
அம்மட்டுமா ?
 
௨) முகவரியை சரியாக கண்டபின் அங்கிருப்பவரிடம் எப்படி அணுகுவது என எங்களுக்கு ஒரு தெளிவு உண்டாகியது .வாரியார் ஸ்வாமிகள் வீட்டில் இருந்தோர் மிகுந்த நல்ல எண்ணம் கொண்டவர்கள் .எங்களுக்கு ஆறுதலும் ,ஆசியும் வழங்கினர் .அனால் பிற இடங்களில் எப்படி பேச வேண்டும் எப்படி அணுகவேண்டும் என எங்களுக்குள் ஒரு மன கணக்கு உருவானது .
 First impression is the best impression  எனக் கூறுவார்கள் .எனவே நாம் கூறும் முதல்சொற்க்களைகளைப் பொறுத்தே , ஆரமிக்கும் விதத்தை வைத்தே அங்கே ஓலை சுவடி பெறுவதும் ,இதர உபசரிப்பு பெறுவதும் இருக்கும் என புரிந்து  கொண்டோம் .
௩) நடக்க ஆரமிக்கும் போது நாம் போகப்போக வண்டியையையும் கூடவே நகரச்செய்யவேண்டும் .அதற்க்கு முதலில் ஓட்டுனரின் கை பேசி எண்அவசியம் தேவை .இதனால்  அந்த வேலை முடிந்ததும் அடுத்த இடம் போக வண்டியும் தயாராக இருக்கும் .

௪) பட்டியலில் இருக்கும் முகவரிகள் எதோ பொய் முகவரிகள் அல்ல .ஓலைகள் இருக்கும் இடம் அல்லது இருந்த இடம் அல்லது இருக்கும் சாத்தியம் உள்ள இடம் தான் என்பதை புரிந்து கொண்டோம் .ஒவ்வொரு இடமும் அவசியம் போகவேண்டிய இடமே !எந்தப் புற்றில் பாம்பு இருக்குமோ தெரியாது .
 
புரிந்தவை என குறிப்பிடுபவை மிகவும்  elementary  ஆக  பலருக்குத் தோன்றலாம் .
ஆனால் சின்ன சின்ன புரிந்தாலும் அதன் ஒழுக்கமும் தான் வாழ்வின் வெற்றியை நிர்ணயிக்கின்றன .
 
நாங்கள் சென்னையை முதலில் ஓலை தேடுதலுக்கு எடுத்துக்கொண்ட காரணமே ,முக்கியமான சில முடிவுகளை இந்த தேடுதல் சம்பந்தமாக சென்னையில்கிடைக்குமனுபவங்களை பொறுத்து எடுக்கவே. ஆகும்
ஏன் எனில் சென்னையில் மொத்தம் 76  இடங்கள் தான் .எனவே முடிந்தவரை அனைத்து இடங்களையும் சென்றுபார்த்து பட்டியலின் நம்பகத்தன்மையை அறிவதும் .
மக்களை எப்படி அணுகுவது ,அவர்களின் reaction    எவ்வாறு இருக்கிறது என்பதை காணுதலும் ஆகும் .
சென்னை அருகில் இருக்கிறது .வீடுகள் பகுதிகள்  அருகருகே இருக்கிறது ,ஓரளவு சாலை வசதி அங்கே உண்டு .
பிற மாவட்டங்களில் ஒவ்வொன்றும் ஆயிரத்திற்கு மேல் முகவரி உண்டு .
மொத்தமும் கிராமங்களை கொண்டது .இடைவெளி தூரம் அதிகம் .எனவே சோதனை செய்ய சென்னையை தேர்ந்தெடுத்தோம் ..
பயிற்சி விளையாட்டுக்கு அருகில் இருக்கும் மைதானம் தானே சிறந்தது ..


வாரியார் ஸ்வாமிகள் வீட்டில் இருந்து அவசர அவசரமாக மயிலாப்பூர்
கிளம்பினோம் .
மயிலாப்பூரில் சமஸ்க்ருத கல்லூரி மற்றும்  K.S.R INSTITUTE NO. 84, T.V.K ROAD என இரு முகவரிகள் இருந்தது .
மாலை எத்தனை மணிக்கு கல்லூரி மூடப்படுமோ என்ற பயத்துடன் விரைந்தோம் .
நல்லவேளை அங்கு கல்லூரி மூடப்படவில்லை K.S.R   NSTITUTE      கல்லூரி வளாகத்த்லேயே இருந்தது .       நாங்கள்  அதன் முதல்வர் முனைவர் காமேஸ்வரியை சந்தித்தோம் .
அவர்களிடத்தில் சுமார்  1500  சுவடிகள் இருப்பதை காட்டினர் .
அதில் சாரங்கன் கதை என ஒரு கதைப் பாடலும் ,மற்றவை வைஷ்ணவ
கிரந்தங்கள் எனக் கூறனர் .
ஆனால் அவகளை தஞ்சை பல்கலைக்கு கொடையாக தர இயலாது என்றனர் .அவர்களீடம் அவகளை மின்னாக்கம் செய்வது குறித்து
பேசினோம்.
அவர்கள் முறைப்படி எழுத்து மூலம் அனுமதி கேட்க்கச்சொன்னனர் .
முதல் நாளிலேயே ஓலை சுவடிகள  1500  கண்ணால் கண்டது எங்களுக்கு  உற்ச்சாகத்தை அளித்தது .
மேலும் ஒரு விஷயம்  முகவரி சரியாக இருந்தது மட்டுமல்லாது
ஓலை சுவடிகள் எண்ணிக்கை அதில்  1050 + 600  என சரியாக
 குறிப்பி டப்ப ட்டிருந்தது  மன சந்தோஷத்தை அளித்தது .
இவ்வாறு எங்கள்  சுவட்த்தேடலின் முதல் அளித்த சந்தோஷத்தை
ஆண்டவனுக்கு நன்றி கூறி கபாலியையும் கறப்பகாமபாளையும்
மனதில் தொழுது அன்றைய வேலையை முடித்தோம் .

மறுநாள் காலை  8.30  மணிக்கே திருவல்ல்க்கேணி வியாச ராஜ மடத்தில்
இருநதோம் .
அங்கே  200  சுவடிகள் இருப்பதாக மந்திரப் பட்டியல் கூறியது .
மடம் என்பதால் எங்களுக்கும்  இருக்கும் என நம்பிக்கை இருந்தது .
ஆனால் எங்களை உபசரித்தார்களேத் தவிர அவர்கள் இதுவரை
ஓலையை கண்ணாலேயே பார்த்ததில்லை என ஒரே போடு போட்டனர்
அவர்கள்னின் மைசூர் தலைமை முகவரி கேட்டு பெற்றுக்கொண்டு
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எனபாடிகொண்டு ( மனதில் தான் )

அடுத்து ராயபுரம் அவ்வை கலைக் கழகம் என்று முகவரி
இருந்தது அதல்  30  சுவடிகள் இருப்பதாகவும் ,அது ராமானுஜர் முயுசியம்
என போட்டிருந்ததால் மனதில் பல கனவு .
 30  கட்டாக இருக்கும் என பேசிக்கொண்டோம் .
ஆனால் அங்கே போனதும் தான் தெரிந்தது அது   கணிதமேதை ராமானுஜர் கண்காட்சி என்பது .
அவர்களும் ஆர்வமுடன் பேசினார் ஆனால் அங்கே ஓலை சுவடிகள்
இல்லை  ஆனால் பார்க்கவேண்டிய இடம் தான் அது
அடுத்து வண்ணாரப்பேட்டைய நோக்கி வண்டியை விட்டோம் .
அடுத்து அங்கே எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வியப்பு காத்திருந்தது .
அதை அடுத்துப் பார்ப்போம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
    வியாஜராஜா   மடத்தில்
PICT1126.JPGPICT1138.JPGPICT1134.JPG
 கணித மேதை ராமானுஜம கண்காட்சி 



வாரியார் ஸ்வாமிகள் வீட்டில்
-- PICT1125.JPG

2010/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

இன்னம்புரான் அவர்கள் நான் சென்னை வந்திருந்த போது வாரியார் சுவாமிகள் கையெழுத்திட்ட அவரது நூலை எனக்குப் பரிசாக வழங்கினார்.  இந்த ஆசிர்வாதம் வேலை செய்கின்றது..:-)
-சுபா

2010/4/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>

நண்பர் சுகுமாரன்,
வாரியார் ஸ்வாமிகள் அருள் புரிந்ததில், எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஸூபாஷிணியால் விளக்கமளிக்க இயலலாம்.
வாழ்த்துக்கள்
இன்னம்பூரான்

2010/4/21 annamalai sugumaran <amirth...@gmail.com>


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Chandra sekaran

unread,
Apr 24, 2010, 2:40:36 PM4/24/10
to mint...@googlegroups.com
படங்கள் சரியா தெரியலையே சார்!
சந்திரா

annamalai sugumaran

unread,
Apr 24, 2010, 2:45:26 PM4/24/10
to mint...@googlegroups.com
அடுத்ததில் இருந்து தொடர்ந்து தெரியும் .
இந்தமுறை தனியாக வேறு ஒன்று அனுப்பியிருக்கிறேன்
இது  TRIAL VERSION !
அன்புடன்
சுகுமாரன் 

2010/4/25 Chandra sekaran <plastic...@gmail.com>

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

N. Kannan

unread,
Apr 24, 2010, 9:56:28 PM4/24/10
to mint...@googlegroups.com
முருகனுக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவுண்டு!
கந்தன் கருணையுடன் ஆரம்பிப்பதே சுபம்!

க.>

2010/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>:


> இன்னம்புரான் அவர்கள் நான் சென்னை வந்திருந்த போது வாரியார் சுவாமிகள்
> கையெழுத்திட்ட அவரது நூலை எனக்குப் பரிசாக வழங்கினார்.  இந்த ஆசிர்வாதம் வேலை
> செய்கின்றது..:-)
> -சுபா

N. Kannan

unread,
Apr 24, 2010, 11:13:27 PM4/24/10
to mint...@googlegroups.com
அன்பின் சுகுமாரன்:
 
மிக நல்ல தொடர். மெதுவாக வாரக்கடைசியில் வாசிப்போம் என்று விட்டு வைத்திருந்தேன்.
 
இது போல் நான் ஆங்கிலத்தில் எழுதிய தொடரொன்றுண்டு! அது கீழ்க்கண்ட முகவரியில் சேமிக்கப்பட்டுள்ளது. அப்போது வழக்கில் இருந்த இ-சுவடி மடலாடற்குழுவில் எழுதினேன்.
 
 
அவைகளை மீண்டும் தனியிழையாகப் பதிப்பிக்கலாமென்று தோன்றுகிறது.
 
சுவடி தேடும் நமது பணியை இப்படி வகைப்படுத்தலாம்.
 
1. முதன் முதலாக கிரந்த லிபியில் அமைந்த மின்னாக்கமடைந்த ஒரு சுவடியை ஜெர்மனியில் என் நண்பர் வீட்டில் பார்த்தது. அவருடன் சேர்ந்து பெர்லின் நூலகத்தில் தமிழ்ச் சுவடிகளைப்பார்த்தது (அந்த நினைவுகளைத் தாங்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் கீழே) (1995-2000)
 
2. யூகி சேது நடத்திய ‘நையாண்டி தர்பாரில்’ எனது ஜெர்மன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு தமிழகம் தழுவிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. (2000)
 
 
3. தமிழினி 2000 மாநாட்டில் தமிழ் இலக்கியவாதிகள்/வாசகர்கள் பேரவையில் ஓலைச்சுவடி மின்னாக்கம் பற்றிய முதல் செய்முறை விளக்கம் தந்தது (2000)
 
 
4. உத்தமம் அமைப்பு நடத்திய தமிழ் இணைய மாநாடுகளில் தொடர்ந்து சுவடி மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வை/புரிதலை ஏற்படுத்தியது. (2000 தொடக்கம் இன்றுவரை)
 
 
5. தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கியவுடன் (2001) மேற்கொண்ட களப்பணிகள்.
 
How to read a palm leaf?:  http://www.tamilheritage.org/old/mss.html
 
The Art of Palm Leaf (Manuscript) Publishing: http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
 
இக்களப்பணிகளின் போதுதான் ஸ்ரீரங்கம் மோகனரங்கனைப் பார்க்கிறேன். நான் கீழத்திய சுவடியகம், சென்னை சென்று மின்னாக்கம் செய்த போது ரங்கன் உடனிருந்தார்.
 
 
OML-1.jpg
 
ஓரியண்டல் மேனுஸ்கிரிப்ட் நூலகம். ரங்கன் எடுத்த படம். ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்வதைக் காணுங்கள்.
 
 
உ.வே.சா நூலகம் சென்று சுவடி மின்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கிய போது திரு.நரசய்யா உடனிருந்தார். உ.வே.சா நூலக சுவடிகள் பற்றிய குறும்படம் காண:
 
 
 
UVESA-7.jpg
 
உ.வே.சா கைப்பட எழுதிய பதிப்புரைக் குறிப்புகள்
 
 
6. சுபாவின் தொடர்பால் பேரூர் கலைக்கல்லூரிக்கு நானும் சுபாவும் மேற்கொண்ட களப்பணிகள். அதுவொரு பெரும் புதையலைக் காட்டிக் கொடுத்தது.
 
 
 
tabloidraj.jpg
 
நொய்யலாறு படுகையில் கிடைத்த சுட்ட ஓடுகள். பேரா.முனைவர்.புலவர் இராசு அவர்கள் பற்பல அரிய ஆவணங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது கட்டுரைகளை வாசிக்க:
 
 
 
 
 
7. சுபாவும், நானும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களைக் கண்டு சுவடிப்பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது.
 
 
KSUKAL.jpg 
 
இதுவே நீங்கள் குறிப்பிடும் National Manuscript Mission ஆக்கங்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது.
 
7. நானும் சுபாவும் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறையினருக்கு மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
 
 
oodudiss2.jpg
 
முனைவர் கொடுமுடி சண்முகம், டாக்டர் பத்மாவதி போன்றோர் காட்டிய உற்சாகம் ஊக்கமளிப்பது. 
 
8. தமிழ் மரபு அறக்கட்டளையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் உருவாக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம். (நா.கண்ணன் 2008).
 
 
BDU.jpg 
 
9. சுபா இருமுறை தனியாக மேற்கொண்ட களப்பணிகள்.
 
10. தஞ்சைப் பல்கலைக் கழகத்துடன் உருவாக்கிய புரிந்துணர்வு (சுபா டிரம்மல் 2009).
 
 
TTU.jpg
 
 
இங்குதான் நீங்கள் சேர்கிறீர்கள் (அ.சுகுமாரன், சுபா, முனைவர் இராஜேந்திரன் (துவே).
 
அ. தாண்டவராய முதலியார்,
சிவக்கொழுந்து தேசிகர்,
திருத்தணிகை விசாகப்
பெருமாளையர், களத்தூர்
வேதகிரி முதலியார்,
புஷ்பரதஞ்செட்டியார்,
ஆறுமுகநாவலர்,
சி.வை. தாமோதரம் பிள்ளை,
மழவை மகாலிங்கையர்,
உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை
 
இவர்கள் எல்லாம் பதிப்பாசிரியர்கள். ஆயின் நாம் பாதுகாவலர்கள். ஒருவகையில் மெக்கின்சி போன்ற ஆங்கில அதிகாரிகள் தமிழ்ச் சுவடிப் பாதுகாபிற்குச் செய்ததற்கு ஒப்பான செயலில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.
 
உங்கள் நினைவுகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள்.
 
நா.கண்ணன்
 
 
2010/4/20 annamalai sugumaran <amirth...@gmail.com>:
--
BDU.jpg
OML-1.jpg
oodudiss2.jpg
UVESA-7.jpg
TTU.jpg
KSUKAL.jpg
tabloidraj.jpg

Subashini Tremmel

unread,
Apr 25, 2010, 3:28:19 AM4/25/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
அன்புள்ள கண்ணன்,
 
தொடர்ச்சியாக சுவையான சில தகவல்கள்..
 
2010/4/25 N. Kannan navan...@gmail.com
 
 
10. தஞ்சைப் பல்கலைக் கழகத்துடன் உருவாக்கிய புரிந்துணர்வு (சுபா டிரம்மல் 2009).
 
 
தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வோமா?  இந்த பணியைத் தொடங்க முடியுமா என எனக்கு டிசம்பர் 18ம் நாள் காலை வரை தெரியாது. எனது முதல் வார சென்னை பயணத்திலேயே துணை வேந்தரை இருமுறை சந்தித்து எவ்வகையான நடவடிக்கைகளை தமிழ் மரபு அறக்கட்டளை செய்து வருகின்றது, எவ்வகையில் சேர்ந்து பணியாற்றலாம் என்று ஓரளவு பேசினோம். அதிலும் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளுக்கு இடையில் அவர்  நேரம் ஒதுக்கி தந்ததே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த வகையில் நான் திருநெல்வேலி புறப்படுவதற்கு முன் அவரை செம்மொழி அலுவலகத்தில் சந்தித்து திட்டம் தொடர்பான கருத்துக்களைப் பற்றி பேசினோம். ஆனால் அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உண்டா என்று தெரியாமலேயே தான் இருந்தது.
 
எட்டயபுரத்தில் களப்பணி முடித்து 17ம் நாள்  நான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு உரையாற்ற வேண்டியிருந்தது. அன்று திரு.சுகுமாரனும் திரு.செல்வமுரளியும் உடன் வந்திருந்தனர். சொற்பொழிவிற்குப் பிறகு சுவடிப்புலம் தலைவர்  முனைவர் மாதவனுடன் ஓலைச்சுவடிப் பணிகள் விஷயமாக கலந்து பேசினோம். அன்றும் கூட  புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்தப் பணிகளின் தொடக்கமும் உடன் எனது இந்தப் பயணத்தில் சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது.
 
மறுநாள் 18ம் தேதி துணைவேந்தரைச் சந்தித்து விட்டு சென்னை திரும்புவதாகத் திட்டம். அன்று அதிகாலையில் தொல்பொருள் ஆய்வாளர்  முனைவர் நாகசுவாமி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து மயிலாடுதுறையில் இருக்கும் திரு.இராமலிங்கம் அவர்கள் என்னை  சந்திக்க விரும்புவதாகவும் முடிந்தால் சென்னை வருவதற்குள் பார்த்து வருமாறும் கூறினார்.
 
அன்றே நான் திரும்ப வேண்டும். எனினும் பேசிவிட்டு முடிவு செய்வோம் என நினைத்து திரு. இராமலிங்கத்தை தொடர்பு கொண்டேன். அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்தை செய்து கொண்டு த.ம.அறக்கட்டளைச் செய்திருக்கும் தலபுராண வெளியீடுகளைப் பாராட்டினார். அத்தோடு என்னை தருமபுர ஆதீனத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறினார். இது எனக்கு ஒரு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அவரிடம் பகல் 12 மணிக்கு மேல் வந்தால் நாம் செல்லலால் என்று சம்மதம் தெரிவித்தேன். இருந்தாலும் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியுமா என்று சற்று சந்தேகம் இருந்தது.
 
காலையில் துணை வேந்தரை சந்தித்தபோது மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பணியை உடன் தொடங்குவோம் என்பது தான்.  உடனே புரிந்துணர்வு ஒப்பந்தம் சரிபார்த்து திருத்தி தேவையானவற்றை புகுத்தி சரி செய்து கையெழுத்திடும் போது ஏறக்குறைய மதியம் ஒன்றாகி விட்டது. 
 
திரு.ராமலிங்கம் ஏற்கனவே வந்து காத்திருந்து என்னையும் திரு.சுகுமாரனையும் தனது வாகனத்தில் மயிலாடுதுறை அழைத்துச் சென்றார். மிக அன்பானவர். ஆதீனத்து புலவர்களில் ஒருவர். பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்று தற்போது மிகப்பெரிய அளவில் தங்கும் விடுதி ஏற்படுத்தி (வைத்தீஸ்வரன் ஆலயம் பக்கத்தில்) தொழில் புரிந்து வருகின்றார். சைவ தல புராணங்கள் தொடர்பாக ஆய்வு செய்து நூல் வெளியிட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு ஆதீனத்தை அடைந்தோம். மிகப் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு ஆதீனம். அங்கு சில நிமிடங்கள் காத்திருந்த பின்னர் ஆதீன கர்த்தர் பூஜை முடித்து விட்டார்; இப்போது சந்திக்கலாம் என்ற செய்தி கேட்டு உள்ளே சென்றோம். 
 
திரு.ராமலிங்கம் எங்களை அறிமுகம் செய்து வைத்து எங்கள் பணிகளையும் இன்று சிறப்பாக தமிழ்ப்பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த தகவலையும் கூறினார். மகிழ்ச்சியுடன் எங்களை இந்தப் பணி சிறப்புற வேண்டு மென்று  ஆசி கூறி திருநீறு கொடுத்து வாழ்த்தினார்கள். மகிழ்ச்சியான, மனம் அமைதியான ஒரு தருணம் அது.
 
மடத்து நூலகத்திலுள்ள ஓலைகளையும் கூட அங்கேயே இருந்து மின்பதிவு செய்யலாம் என சம்மதமும் தெரிவித்தார்.  3 மணி நேரங்கள் அவருடன் பேசி விட்டு இரவு 8:30 மணி வாக்கில் புறப்பட்டோம். திரு.இராமலிங்கம் எங்களை தனது விடுதிக்கு அழைத்துச் சென்று நல்ல உணவு கொடுத்து உபசரித்தார். எங்களை உடன் காத்திருந்து திரு.சுகுமாரனை பாண்டிச்சேரிக்கும் என்னை சென்னைக்கும் பேருந்து வரும் வரை இருந்து அனுப்பி வைத்தார்.  அந்த நாள் மறக்க முடியாத ஒரு சிறப்பான நாள். 
 
குருமகா சன்னிதானத்தின் ஆசிகளுடன் தொடங்கிய பணி!
இதனை சிறப்புடன்  செயல்படுத்தியிருக்கின்றோம்!
மேலும் தொடருவோம்!
 
அன்புடன்
சுபா
 

Innamburan Innamburan

unread,
Apr 25, 2010, 7:36:21 AM4/25/10
to mint...@googlegroups.com
அன்பின் ஸுபாஷிணி,
புரிகிறதோ? அன்று தமிழ்த்தாத்தா அவர்கள் குறிஞ்சி மலர்களை தேடி திருவாவடுதுறை மடத்தின் அபிமான புத்ரனாக தருமபுர ஆதீனம் சென்று அங்குள்ள சுவடிகளில், அவற்றை கண்டு மகிழ்ந்தார். மரபுவிக்கியில் படிக்கலாம். அவர் தான் உங்களை வழி நடத்துகிறார் என்பதில் ஐயம் இல்லை.
இன்னனம்பூரான் .

2010/4/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 25, 2010, 7:54:52 AM4/25/10
to mint...@googlegroups.com
பொது நோக்கோடு பணியாற்க் கிளம்பினால் நாம் படும் கஷ்டங்கள் அனைத்துக்கும் ஒரு பலன் கிடைத்தே தீரும்
 
அன்புள்ள சுகுமாரன் மற்றும் செல்வமுரளி, கோவைமணி ஆகியோருக்கு கொடுப்பினை இருக்கிறது களப்பணி செய்ய
இப்படிப்பட்ட உத்தமமான களப்பணியை ஏற்படுத்திக்கொடுத்த திரு கண்ணன், திருமதி சுபாஷிணிட்ரெம்மல் , திரு ஆன் டோ பீட்டர் போன்றவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
 
களப்பணி தொடரட்டும்
உங்கள் வருணனையும் தொடரட்டும்
 
படிக்கவே ஆனந்தமாய் இருக்கிறது
 
புகைப்படத்தில் பார்க்கும் போது  அந்தப் புகைப்படத்தில் காணப்படும் இடங்களில் இருக்கும் வெய்யில் போன்றவை நம்மைத் தாக்காது
 
ஆனால் அந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்குதான் அதன் கடுமை தெரியும்
 
அது போல உங்கள் அனுபவம்  படிக்க நன்றாய் இருக்கிறது
 
அனுபவித்த உங்களுக்கல்லவா தெரியும்  அதன் கடுமையும் இனிமையும்
 
சில அனுபவங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது
 
அன்புடன்’
தமிழ்த்தேனீ
 
25-4-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

annamalai sugumaran

unread,
Apr 25, 2010, 12:16:57 PM4/25/10
to mint...@googlegroups.com
நன்றி  தமிழ்த்தேனீ அவர்களே !
 
தங்கள் உணர்வுக்கும் அன்பிற்க்கும் நன்றி !
 மின் தமிழ் அன்பர்கள்  அனைவரின் சார்பாகததான் நாங்கள் வேலை செய்தோம் .
உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் எங்களுடன் இருந்தது .
அன்புடன் .
அண்ணாமலை சுகுமாரன்


2010/4/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

annamalai sugumaran

unread,
Apr 25, 2010, 12:59:23 PM4/25/10
to mint...@googlegroups.com

தருமபுரம் ஆதீனத்தின் உள்ளே   திரு ராமலிங்கத்துடன் சுபா
PICT0939.JPG
ஆதீனத்திடம் ஆசி பெறும்   சுபா
PICT0944.JPG

ஆசிபெறும்  நாங்கள்
PICT0947.JPG

2


 

2010/4/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
PICT0944.JPG
PICT0947.JPG
PICT0939.JPG

annamalai sugumaran

unread,
Apr 25, 2010, 1:30:21 PM4/25/10
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன் ,,
உங்கள் இருவரின்  THF மேன்மைக்கான உழைப்பு ஈடுபாடு  பிரமிப்பு
தரக்கூடியது .சுவடி தேடும்  பணியை தொடர்ந்து  செய்துவருகிறீர்கள் .

வாழையடி வாழை போல் இந்த தொடர் பணியில் ஈடுபட எங்களுக்கும்
வாய்ப்பு கிடைத்தது இறையருளே .
நன்றி !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன் 
 

2010/4/25 N. Kannan <navan...@gmail.com>

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
UVESA-7.jpg
OML-1.jpg
oodudiss2.jpg
tabloidraj.jpg
KSUKAL.jpg
TTU.jpg
BDU.jpg

N. Kannan

unread,
Apr 25, 2010, 10:19:56 PM4/25/10
to mint...@googlegroups.com
அன்பின் சுகுமாரன்:
 
உங்களுக்கு நயமும் ஈடுபாடும் உள்ளது. இது மிக முக்கியம். நாம் சுவடி தேடல் என்று ஆரம்பித்துவிட்டால் வித்யா பீடத்தில் உள்ளோம். சுவடிகள் அழுக்குப் பிடித்து இருக்கலாம், வீடுகள் ஒளி மங்கி இருக்கலாம், ஆனால் சுவடி தாங்கும் அறிவு என்பது எப்போதும் சுடர்தான். இப்புரிதல் இருந்தால் சில நேரம் சுவடிகள் நம்மை அழைக்கும். அப்படி உங்களுக்கு நேர்ந்துள்ளது.
 
உங்கள் அனுபவங்கள் புதியவை, சுவையானவை. சொல்லுங்கள்.
 
க.>

2010/4/26 annamalai sugumaran <amirth...@gmail.com>

அன்பின் கண்ணன் ,,
உங்கள் இருவரின்  THF மேன்மைக்கான உழைப்பு ஈடுபாடு  பிரமிப்பு
தரக்கூடியது .சுவடி தேடும்  பணியை தொடர்ந்து  செய்துவருகிறீர்கள் .

வாழையடி வாழை போல் இந்த தொடர் பணியில் ஈடுபட எங்களுக்கும்
வாய்ப்பு கிடைத்தது இறையருளே .

நன்றி !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன் 

--

Tthamizth Tthenee

unread,
Apr 26, 2010, 12:39:57 AM4/26/10
to mint...@googlegroups.com
கொடுப்பினை இருந்தால்தான்  ஈடுபடவே  முடியும்
 
 கொடுத்து வைத்தவர்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
26-4-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Kamala Devi

unread,
Apr 26, 2010, 4:57:34 AM4/26/10
to mint...@googlegroups.com
பழமையை பாதுக்காக்க பாடுபடும் அனைவருக்கும் அபிநந்தனம்
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 26 April 2010 01:30:21
Subject: Re: [MinTamil] Re: ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !
OML-1.jpg
UVESA-7.jpg
tabloidraj.jpg
KSUKAL.jpg
oodudiss2.jpg
BDU.jpg
TTU.jpg

Geetha Sambasivam

unread,
Apr 26, 2010, 6:38:05 AM4/26/10
to mint...@googlegroups.com
திரு சுகுமாரன், திரு செல்வமுரளி இருவரின் பணியும் பாராட்டுக்கு உரியது. கடும் உழைப்புக்கிடையிலே செவ்வனே இதைச் செய்திருக்கிறார்கள். அநுபவங்கள் வியக்க வைக்கின்றன.

2010/4/26 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
UVESA-7.jpg
TTU.jpg
KSUKAL.jpg
BDU.jpg
tabloidraj.jpg
OML-1.jpg
oodudiss2.jpg

annamalai sugumaran

unread,
Apr 26, 2010, 2:01:09 PM4/26/10
to mint...@googlegroups.com



களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --   ௫     -   (   5  )


 
------------------------------------------------------------------------------------
 
தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை
என பலரை நாம் ஓலை சுவடிபதிப்பாசிரியர்கள்  என இப்போது  கொண்டாடினாலும்,   இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம் .
சொல்லப்போனால் இதன் புரவலர் தஞ்சையில் 
இருந்துதான் அவரை இயக்கினார் .

 
------------------------------------------------------------------------------------------

            பாரு பாரு பட்டணம் பாரு !


 
                 வண்ணாரப்பேட்டை யை நோக்கி  வண்டி ஓட ஆரமித்தது .
அங்கே மொத்தம்  9  முகவரிகள் இருந்தன .அனைத்துமே தனி நபர்கள் ,ஒரே ஒரு மருத்துவமனை .எப்படி ஓலை வைத்த்ருக்கும் நபர்கள் அதிகம்
   பேர் சென்னை வண்ணாரப்பேட்டையை தேர்ந்தெடுத்து வசிக்கிறார்கள் என்ற வினா மனதில் மின்னலடித்தது .

எப்படியும் அத்தனையையும் பார்த்து விடுவது என உறுதி எடுத்து
அதிகம் அலைந்தோம் .
தனி நபர்கள் வீ டு களை எல்லாம்  அலைந்து திரிந்து
ஒவ்வ்ன்றாக தேடினோம் .வழக்கம் போல் அப்படியும் இப்படியும் திரிந்து
வழியில் அகப்படும் அனைவரையும் தொந்தரவு செய்து அவர்களையும் மிகவும் சிந்திக்கச் செய்து ஒவ்வரு முகவரியாக சென்றடைந்தோம் .
ஆனால் சென்ற இடம் எங்கும் ஓலை சுவடிகள் இல்லை என்ற பதிலே
கிடைத்தது .ஒரு வேளை பட்டியல் தவறோ என எண்ணம் வந்தபோது ,
ஒரு  இடத்தில் அவர்களுக்கும் ஓலை சுவடிக்கும் சம்பந்தம் இருக்கும்
தகவலை கூறினார்கள் .
குடும்பமே கூடி அந்தத்தகவல்களை  உறுதிபடுத்தினர் . 
பாஸ்கர் என்னும் அந்த குடும்பத்தினை சேர்ந்த வாலிபர் , வீடுகட்டும் தொழில் செய்து வருகிறார் .
சென்னையில் ஒரு இடத்தில் ஒரே வீட்டை புதிதாக கட்டுவதற்காக முழுமையும் இடிக்கும் வேலையில் ஈடுபட்டபோது இரண்டு சாக்குப்பை
நிறைய அங்கே ஓலை சுவடிகள் கிடைத்ததாம் .அந்த சுவடிக் குவியலை
வைத்துக் கொண்டு எனன செய்யவது எனத்தெரியாமல் வைத்திருந்தனராம் ஆறுமாதம் முன் யாரோ ஒரு மீசைக் காரர் அதை
வாங்கிக்கொண்டு போனாராம் .
எங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள் ?
அந்த மீசைக்காரர்பற்றி வேறு ஏதாவது மேல் விபரம் தெரியுமா என மிக்க ஆதங்கத்துடன் பலமுறை கேட்டோம் .
ஆனால் அவர்கள் அதை அத்துணை சிரத்தை எடுத்து குறித்து வைக்கவ்ல்லை .
எங்களுக்கோ கைக்கு எட்டியது இப்படி நழுவி விட்டதே என்றவேதனை ..
 பிறகு எங்களுக்கு மோர் எல்லாம் கொடுத்து எங்களை அவர்களே ஆறுதல்  படுத்தும் நிலை ஏற்ப்பட்டது .
  சில ஆண்டுகளுக்கு முன் NSS  மாணவர்கள் வநது ஓலை சுவடி பற்றி கேட்டதை உறுதி படுத்தினர் .
ஆனால் உடனே வருவது தானே இவ்வளவு ஆண்டுகள் எனன செய்தீர்கள் என்ற கேள்விக்குத்தான் எங்களால் பதில் கூற முடியவில்லை .

பல இடங்களில் இப்படித்தான் அங்கே கொடுத்தோம் இங்கே கொடுத்தோம் என கூறுவதை அடிக்கடி  கேட்பது பின் வழக்கம் ஆனது
கொஞ்சம் விபரம் அறிந்தவர்கள் புதுவை பிரெஞ்சு நிறுவனம் .,
சென்னை பல்கலை ,திருப்பதி தேவஸ்தானம் என விபரம் கூறுவார்கள் .
பலர் யாரோ வநது வாங்கி சென்றனர் என்பதோடு நிறுத்திக்கொள்வர்.

இன்னும் சில இடங்களில் வண்ணாரப்பேட்டையில் அலைந்தோம் .ஆனால் அவர்களிடம் ஓலை சுவடிகள் இருந்த தடயமே இல்லை  .

வெய்யில் சுட்டெரிக்க மத்யம் உணவு நேரத்தை கடந்தது ..மணி இரண்டைக் கடந்தது .மிக்க உடல் களைப்பு ,மன சோர்வு இவை உண்டானது .
காலையில்      இருந்து     சுவடிகளை  கண்ணால்  பார்க்காத  ஏக்கம்  வேறு !

அப்போது குவளை நிறைய குளிர்ந்த பாதாம் மிக்க இட்ட சுவையான
கெட்டியான பானத்தை கொடுத்து கையில் ஒரு கட்டு திருவாசகம்
ஏடுகளை கொடுத்தால் எப்படி இருக்கும் .

எனன பகலிலேயே கனவா என்கிறீர்களா ?
உண்மையிலேயே இது நடந்தது .! 

வண்ணாரப்பேட்டையில் மொத்தம்  9   முகவரியில் ஒரு மருத்துவ மனை முகவரி இருந்தது என சொல்லிருந்தேன் அல்லவா ?
அந்த மருத்துவமனையின் பெயர் ராகவேந்திரா  மருத்துவமனை என்று இருந்தது .சென்றபோது எதிர்ப்பார்த்தபடி அது சித்தமருத்துவசாலை தான் .ஆனால் நவீனமாக இருந்தது மக்கள் கூட்டமும் அதிகம் இருந்தது .
நாங்கள் முக்கய விஷயமாக டாக்டரை பார்க்கணும் என எப்படியோ டாக்கடர் அறையில் நுழைந்துவிட்டோம் .
எங்கள் பசி அப்படி !
டாக்டரும் நவீனமாகத்தான் இருந்தார் .
எனன வேண்டும் என்றபோது ,
" டாக்டர் உங்கள்டம் நிறைய ஓலை சுவடிகள் இருப்பதாக எங்களுக்கு
தகவல் .நாங்கள் அதைப் பார்க்க தஞ்சை பலகலையில் இருந்து வருகிறோம் ' என்றோம்
இப்போது எல்லாம் எப்படி பேசுவது என்பது அத்துப்படி ஆகிவிட்டது .

அப்படியா ?  என்ற டாக்டர் வேறு ஒருவரை அழைத்து இவர்களை அலுவலம் அழைத்து போங்கள் என்று கூறி ,
எங்களைப்பார்த்து "நீங்கள் அங்கே சென்று கொஞ்ச நேரம் இருங்கள் நான்
விரைவில் காத்ருப்பவர்களை அனுப்பிவிட்டு வநது உடனே வநது விடுகிறேன் " என்றார் .
அவர் ஓலை சுவடிகள் இல்லை என சொல்லாமல் காத்ருக்கச்ச 
 சொன்னதுமே எங்கள் கற்பனை சிறகடித்து பறக்காரபித்தது .

அங்கே நாங்கள் போனதும் பார்த்தால் கண்ணாடி அலமாரி நிறைய
ஓலை சுவடிகள் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன .
இரண்டு பேர் ஒரு  சிறந்த மின்வருடிக் கொண்டு சுவடிகளை வருடிக்கொண்டிருன்தனர் .
அப்படியே நாம் எனன செய்ய நினத்தோமோ  அதை அங்கு செய்து
கொண்டு இருந்தனர் ..
 நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம் .
செல்வமுரளி  techncal  விபரம்  கேட்டுக்கொண்டிருந்தார் .
நாங்கள் ஓலை சுவடிகளை ஆர்வ முடன் பார்த்துக்கொண்டிருந்தோம் .
சுமார்  300  கட்டுகள் இருக்கலாம் .அத்தனையும் மருத்துவ சுவடிகள் .
மிக நேர்த்தியாக  சுத்தம் செய்து எண்ணையிட்டு , மையிட்டு புதிய நூலிட்டு  அடுக்கி வைக்கப்பட்டிருந்தது ..

டாக்டர் "எனன பார்த்தீர்களா"  என்று கேட்டபடி வந்தார் .
அவரது அறைக்கு அழைத்தார் .
முன்பு கூறியபடி குளிர்ந்த பாதம் கீர் வந்தது .
அவரது பெயர்    Dr . ராமசாமி பிள்ளை .நாகர்கோயிலை சார்ந்தவர் .பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் படித்தவர் என்று
அறிமுகப் படுத்த்கொண்டார் .
எங்களைப் பற்றிகேட்டார் .நாங்கள் எங்கள் தேடுதல் மற்றும் ,தமிழ் மரபு அறக்கட்டளைப் பற்றிக் கூறினோம் .
அவரும்     MEDICAL  MANUSCRIPT RESEARCH  CENTRE   என்ற அமைப்பை உருவாக்கி  இதுவரை சுமார்  300  கட்டுகள் வரை சேர்த்து இருப்பதாகவும்
 மத்திய சுகாதார    துறையின் நிதி உதவி பெற்று  இதை செய்து வருவதாகவும் கூறனார் .
அவருக்கு மருத்துவ சுவடிகள்தான் தேவை என்றாலும் ,வேறுவகை சுவடிகளும் கிடைப்பதாக கூறி அப்போதுதான் திருவாசக சுவடிக் கட்டை எங்கள் கையில் கொடுத்தார் .
அவர்டமும் சுவடிகளை பெறமுடியாது என தெரிந்து கொண்டு சோகத்துடன் சுவடியை திருப்பிக் கொடுத்து கிளம்ப்னோம் .

பிறகு உணவு அருகில் இருந்த  உணவு விடுதியில் கிடைத்ததை
உண்டு விட்டு அருகில் இருக்கும்  திருவெற்றியூர் சென்றோம் .
அங்கே நல்லதண்ணி ஓடையை நாடிச் சென்று ஊர் பஞ்சாயத்தில்
மாட்டிக்கொண்ட கதையை அடுத்ததில் பார்க்கலாம் .


அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்  









 

--

Innamburan Innamburan

unread,
Apr 26, 2010, 3:38:03 PM4/26/10
to mint...@googlegroups.com
"...இப்போது எல்லாம் எப்படி பேசுவது என்பது அத்துப்படி ஆகிவிட்டது..." அதையும் அச்சடித்தாற்போல் எழுதுவதும் அத்துப்படி ஆகிவிட்டது. அடுத்த வினா, ஸுபாஷிணி, மத்திய அரசு உதவி பெறுவது எப்படி?
இன்னம்பூரான் 

2010/4/26 annamalai sugumaran <amirth...@gmail.com>

Kamala Devi

unread,
Apr 26, 2010, 11:08:27 PM4/26/10
to mint...@googlegroups.com
சுகுமாரன்
கண்கள் நிரம்புகிறது.இவ்வளவு சிரமப்பட்டீர்களா?
மின்தமிழே வெண்சாமரம் வீசுகிறது.
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 27 April 2010 02:01:09
Subject: Re: [MinTamil] ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !

Subashini Tremmel

unread,
Apr 27, 2010, 6:27:00 AM4/27/10
to மின்தமிழ், ksuba...@gmail.com


2010/4/26 annamalai sugumaran <amirth...@gmail.com>




களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --   ௫     -   (   5  )


 
------------------------------------------------------------------------------------
 
தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை
என பலரை நாம் ஓலை சுவடிபதிப்பாசிரியர்கள்  என இப்போது  கொண்டாடினாலும்,   இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம் .

 
 
 
மேலும் ஒரு தகவல்..
 
நமது வலைப்பக்கத்தில் சுவடிப்பதிப்பியல் பகுதியில் சுவடிப் பதிப்பாசிரியர்கள் பற்றிய பட்டியல் உள்ளது. பார்க்க.. 
 
-சுபா
 
 

Tthamizth Tthenee

unread,
Apr 27, 2010, 6:55:31 AM4/27/10
to mint...@googlegroups.com

அங்கே நல்லதண்ணி ஓடையை நாடிச் சென்று ஊர் பஞ்சாயத்தில்
மாட்டிக்கொண்ட கதையை அடுத்ததில் பார்க்கலாம் .

 

படிப்பவர்களுக்கு  சுவாரஸ்யமாகவே இருக்கும்  என்று தெரிகிறது
 
சரி படித்துவிட்டு உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று
 கற்பனை  செய்து   புரிந்து கொள்கிறேன்
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
 
27-4-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Geetha Sambasivam

unread,
Apr 27, 2010, 7:37:48 AM4/27/10
to mint...@googlegroups.com
படிக்க முடியலை, எழுத்துரு மாற்றியின் உதவியோடுதான் படிக்கணும். :(

2010/4/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 27, 2010, 7:48:47 AM4/27/10
to mint...@googlegroups.com
இப்போது படிக்க முடிகிறதா என்று பார்த்து சொல்லுங்கள் திருமதி கீதா.
-சுபா

2010/4/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 27, 2010, 7:54:07 AM4/27/10
to mint...@googlegroups.com
அருமை, பலர் பெயர்கள் உள்ளன, கொஞ்சம் எழுத்துப் பிழைகளும் சேர்ந்து!

2010/4/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
360.gif

Subashini Tremmel

unread,
Apr 27, 2010, 7:59:35 AM4/27/10
to mint...@googlegroups.com
:-)
இந்த பட்டியல் இன்னமும் முடிக்கப்படவில்லை. நீண்ட பட்டியல். முடித்து வெளியிட்டால் மிகவும் பலருக்கும் உதவியாக அமையும். அதோடு பிழை சரி பார்த்துக் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு நான் அதிகம் தொந்தரவு கொடுக்கின்றேனோ என்று சில நேரம் நினைப்பேன். நேரம் இருந்தால் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.
360.gif

N. Kannan

unread,
Apr 27, 2010, 8:31:55 AM4/27/10
to mint...@googlegroups.com
2010/4/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

>அடுத்த வினா, ஸுபாஷிணி, மத்திய அரசு உதவி பெறுவது எப்படி?
> இன்னம்பூரான்
>

ஏஞ்சார்! இதை இத்தனை நாள் யோசிக்காமல் இருப்போமா?

நான் முதன்முறை பெங்களூர் போய் இந்திய சூப்பர் கணினித்துறைத் தலைவரைப்
பார்த்து மில்லியன் புத்தகத் திட்டம் பற்றி அறிந்தவுடன் கேட்ட முதல்
கேள்வி இதுதான். எப்படி நிதியுதவி பெற்றுச் செயல்படுவது என்று. அப்போது
இருந்த நிலமையை விட இப்போது மானிய (நிதி) உதவி தாராளமாகக் கிடைக்கிறது.
நமக்கு நம்பகமான தொழில் நுட்பமறிந்த நண்பர்கள் இந்தியாவில் தேவை.
அமெரிக்காவிலெல்லாம் fund raiser என்பவர் நிதிகளை நோக்கித் தேடிக் கொண்டே
இருக்கும் தொழில் விற்பன்னர். அவர்கள்தான் நம் மாதிரி அரசு சாரா
நிறுவனங்களுக்கு நிதி பெற்றுத்தருவது. அப்படியொரு முழு நேர தொண்டூழியர்
நமக்குத்தேவை (ஆரம்பத்தில் தொண்டூழியம், பின் சம்பள ஊழியம்). உண்டு
என்றால் பிற விவரங்களைப் படிப்படியாய் சொல்லிக் கொடுக்க முடியும்.
எனக்கும், சுபாவிற்கும் உள்ள சுமையைத் தாங்குவதே பெரும்பாடாக உள்ளது.
உண்மையில் நாங்கள் ஒரு சம்பளத்திற்கு இரண்டு வேலை பார்த்துக்கொண்டு


இருக்கிறோம்.

நம்பிக்கை இருக்கிறது. நிலமை மாறும். நம்ம ஜோதிடர்கள் ஒரு நல்ல குறி
சொல்லக்கூடாதா? ;-)

க.>

Astrologer Vighnesh சென்னை

unread,
Apr 27, 2010, 8:41:21 AM4/27/10
to mint...@googlegroups.com
சீக்ரமே கடாக்ஷ சித்திரஸ்து. 
சொல்லிட்டேன். நீங்கள் கேட்ட குருவி.
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/4/27 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 27, 2010, 8:44:47 AM4/27/10
to mint...@googlegroups.com
நல்ல குருவி. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.:-)

2010/4/27 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 27, 2010, 9:01:02 AM4/27/10
to mint...@googlegroups.com
திரு  விக்னேஷ் வாயிலிருந்து  வாக்கு வந்திருக்கிறது
 
சீக்கிறம் பலிக்கும்
 
 
 
சுபஸ்ய சீக்கிறம்  என்பார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
27-4-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:
நல்ல குருவி. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.:-)

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

N. Kannan

unread,
Apr 27, 2010, 6:16:43 PM4/27/10
to mint...@googlegroups.com
நன்றி!
அப்படியே ஆகட்டும். விரைவில்.
நிறையச் செய்யமுடியும், தமிழுக்கு!

க.>

2010/4/27 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>:


> சீக்ரமே கடாக்ஷ சித்திரஸ்து.
> சொல்லிட்டேன். நீங்கள் கேட்ட குருவி.
> கே.வீ.விக்னேஷ் சென்னை

annamalai sugumaran

unread,
Apr 28, 2010, 8:34:47 AM4/28/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௬     -   (   6  )
 

 
----------------------------------------------------------
திருநாரையூரே   அன்று களைகட்டிவிட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரை சாரையாக கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர் அனைவர் முகத்திலும் ஆனந்தக்  களை.   இருக்காதா பின்னே?  மாமன்னர் ராஜராஜ உடையார் அல்லவா அவர்கள் ஊருக்கு விஜயம் அதுவும் அவர்கள் ஊர் பொள்ளாப்பிள்ளையார் நம்பியாண்டார் நம்பி தரும் பிரசாதத்தை சாப்பிடும் அற்புதததை
நாடெங்கும் அதிசயமாக பேசப்பட்டு வரும் அற்புதத்தை
அல்லவா பார்க்கவருகிறார் .
நம்பியாண்டார் நம்பியினால் ஊரே இப்போது  பெரும் பெருமைகொண்டுவ்ட்டது .
 நால்வர் பாடிய தேவாரப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட  ராஜராஜ உடையார்  அவைகளைத் தொகுக்க தொடர்ந்து முயன்று வந்தார்  .ஆனால் சில பாடல்கள்தான் கிடைத்ததுவே தவிர அவருக்கு மொத்த  பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், திருநாரையூர்  வந்து தனக்கு உதவும்படி கேட்டார் . நம்பியும்  விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது.
இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் எனும் சந்நிதி இருப்பதைக் காணலாம் .
நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம்சென்ற மன்னர் , தீஷ்தர்கள் வைத்தநிபந்தனையை  நிறைவேற்றி  மண்டபத்தில்  புற்றுக்களால் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எண்ணையுற்றி, புற்றைக் கரைத்து  அரித்தது
அழிந்தது போக எஞ்சியதை எடுத்தனர் . அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்கு படுத்தி 7 திருமுறைகளாகத் தொகுத்தார். தொகுக்கப்பட்ட  தேவாரப் பதிகங்களுக்கு பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். "திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்கு பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்" என்று தெய்வவாக்கு கிடைத்தது. மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அந்தப் பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இவ்வாறு, திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு திருமுறை காட்டிய விநாயகர் என்ற பெயரும் உண்டானது. இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது. 
மன்னன் திருமுறை கண்ட சோழன் ஆனார்
இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ராஜராஜஉடையார் உதவியுடன்
நம்பியாண்டார் நம்பி மறைந்து கிடந்த தேவார திருமுறைகளை தொகுத்துஅவகளை மீண்டும் பல நூறு  ஏடுகளில் படியெடுத்து பதிப்பித்து  அந்த தேவார சுவடிகளை அனைத்து சிவாலயங்களிலும் இடம் பெற செய்தார் .
 சொல்லப்போனால் இவரே முதல் சுவடி பதிப்பு செய்தவராக இருக்கலாம்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏடுகளைத்தேடி, தொகுத்து ,அவைகளை  தமிழ் நாடெங்கும் இருக்குமாலயங்களில் வைத்து அவைகளை மக்கள்
பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்
.அவரும் தஞ்சைமன்னன் ராஜராஜ உடையாரும் இதை மட்டும் செய்திருந்தால் நமக்கு தேவாரம் திருவாசகம் கிடைத்திராது .
-----------------------------------------------
தருமமிகு சென்னை !
 
 
திருவேற்றியூரை அடுத்த டோல் கேட்
எனும்பகுதியில்  நல்லத்தண்ணிஓடக்குப்பம்என்ற இடத்தில்  கண்ணன்
என்பவரிடம்  50 சுவடிகள்  இருப்பதாக  எங்களது NMMபட்டியல் கூறியது .அந்த பகுதி முழுவதும் கடலை ஒட்டிய மீனவர் குப்பங்கள் .நாங்கள் ஒவ்வரு கிராமமாக நல்லத்தண்ணி ஓடக்குப்பம் என்பதையும் கண்ணன் என்பவரைப்பற்றியும் விசாரித்துக்கொண்டு ,கடலை ஒட்டியே நடந்தோம் .ஆனால் எங்கள் நடவடிக்கைகளை கண்காணித்தபடியே ஒரு கும்பல் எங்களுக்குப் பின்னால் வருவதை நாங்கள் உணரவில்லை .இப்படியே போய் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு கோயில் வந்தது அங்கே சுமார்  20  நபர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .நாங்கள் இவர்களை கேட்டால் இவர்களில் ஒருவருக்கு நிச்சயம் கண்ணன் என்பவரைப்பற்றி தெரிந்திருக்கம் என்றுஎண்ணி இங்கு  நல்லத்தண்ணி ஓடக்குப்பம் என்ற இடத்தில் கண்ணன் என்று யாராவது இருக்கிறார்களா என்றோம் .
உடனே அவர்களில் ஒருவர் இதுதான் நல்லத்தண்ணி ஓடக்குப்பம் ,உட்காருங்கள் என்றார் .நாங்களும் உட்கார்ந்தோம் .அடுத்தகணம்  எங்கள்  பின்னல் வந்த சுமார்  10 பேர் தலைவரே இவர்கள் ஒரு மணி நேரமாக நம்ம கண்ணனைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியபடி அவர்களும் அந்த கூட்டத்தில் அமர்ந்து விட்டனர் .
எனக்கு உடனே புரிந்துவிட்டது நாங்கள்  மீனவர் பஞ்சாயத்தில் அமரவைக்கப்பட்டிருக்கிறோம் என்பது .  சரிவர சமாளிக்கவிட்டால் விஷயம்விபரீதமாகலாம் என்பதும் புரிந்தது .
உடனே நான் எங்களது ஓலை தேடும் படலத்தைப் பற்றி மிக விபரமாகக் கூறஆரபித்தேன் .பிறகு நல்லத்தண்ணி ஓடை என்று இருக்கிறதே அந்த நல்லத்தண்ணி ஓடை எங்கே இருக்கிறது என பேசி அங்கே ஒரு சுமுக சிநேகித சுழ்நிலை உண்டாக்க தலைப்பட்டேன் .
உடனே தலைவர் எனப்பட்டவர் அந்தகூட்டத்தில் இருந்த ஒருவரைக்காட்டி இவர்தான் கண்ணன் என்று கூறி எங்களை அதிசயப்படுத்தினார் .ஏன் எனில் அவர் எங்களுடனேயே இதுவரை நடந்து வந்தவர்களில் ஒருவர் .
பிறகு " எங்கள் குப்பத்தில் வந்து எங்களில் ஒருவரைப்பற்றி நீங்கள் விசாரிக்கிறீர்கள் .என்ன விஷ்யம் என்பது தெரியாமல் நாங்கள் எப்படி அவரைக் காட்டிகொடுப்போம் .பின் அவருக்கு உங்களால் ஏதாவது தீங்கு வந்தால் நாங்கள் தானே பொறுப்பாவோம் " என்றார் .
அவர்களில் ஒற்றுமையை அவரிடமே பாராட்டிவிட்டு .எங்களைப்பார்த்தால்
அப்படி தீங்கு  செய்பவர்கள் மாதிரியா தெரிகிறது என அப்பாவித்தனமாக  முகத்தை வைத்துக் கொண்டு கேட்டோம்    .
நாங்கள் தமிழ் அன்னையின் தொலைந்து போன இலக்கிய ,அறிவுசார் நூல்கள்  போன்ற ஆபரணங்கள் எங்காவது மதிப்பரியாமல் புதைந்து போய்விடக் கூடாதே என அவைகளை தேடுகிறோம் என இலக்கிய ரீதியில் பேசத்தொடங்கினோம் . கண்ணன் அவரிடமிருக்கும் சுவடிகளை எங்களுக்குத்தந்தால் அரசு மூலம் பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றோம் .
உடனே தலைவர்  " ஏம்ம்பா உன்னிடம் ஓலை சுவடிகளிருக்கிறதா" என்று கேட்டார் .
கண்ணன் பவ்வியமாக " நான் இதுவரை ஓலை சுவடிகளை சன் டி வி யில் தான் பார்த்திருக்கேன் தலைவா !  " என சிரிக்காமல் கூறினார் .
நாங்களும் அதை நம்பினால் போல் காட்டிக்கொண்டு  எழுந்தோம் .உடனே தலைவர் இந்த இடத்தில் ஒரு நல்ல தண்ணீர் ஓடை நீண்ட நாட்களாக மக்களுக்கு குடிநீர் தந்துவந்தது .இப்போது அந்த ஓடையும் கடலால் முழ்கடிக்கபட்டுவிட்டது .ஆனால்  இப்பவும் கடலில் அந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் நல்லத்தண்ணியாக இருக்கிறது .
இத்தனைக்கும் காரணம் இந்த அம்மன் தான் என்று நாங்கள் அமர்ந்திருந்த கோயிலைக் காட்டினார் .நாங்களும் அம்மனை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு இடத்தைக் காலி  செய்தோம் .
 
இவ்வாறு இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறக்காரணம் இந்த மாதிரி எங்களுக்கு அடிக்கடி பின்னாளிலும் நேர்ந்தது .விசாரித்து உண்மையான முகவரி கண்டுபிடிப்பது ஒரு நம்பிக்கை ஏற்ப்பட்டவுடந்தான் ஏற்ப்படுகிறது .
 
சென்னையில் இருக்கும் முகவரிகளில் பார்க்கும் போது நிறைய கோயில்கள் இருக்கக் கண்டோம் .
திருவட்டீஸ்வரர் கோயில் சன்னதி என முகவரி இருந்தது .நாங்களும் சன்னதிக்கு சென்று அங்கு கேட்க்காமல்  E.O  மற்றும் குருக்களை கேட்டோம் .  நாங்கள் என்ன நம்பியாண்டார் நம்பியா ? இறைவனிடம் பேசுவதற்கு   ஆனால் அவர்களே அவர்கள் கோயில் நிலத்தை மீட்க்க பழைய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள் .பழைய சுவடிகள் எங்கே போனது எனத் தெரியவில்லை எனக்கூறி , ஏதாவது எங்களுக்கு கிடைத்தால் கூறுங்கள் என்றனர் .
நாங்களும் அவர்கள் கொடுத்த காப்பியை குடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம் .
எங்கள் பட்டியலில் இன்னும் அமைந்த கரை மாங்காளி அம்மன் ,வடபழனி முருகன் , வடபழனி  100  ரோடு சித்தர்கள் மடம்,வடபழனி ஜெயின் கோயில் ,
வடபழனி வேங்கீஸ்வரர் ஜாபர்கான் பேட்டை கங்கை அம்மன் கோயில் புரசைவாக்கம் நவசக்தி விநாயகர் புவனேஸ்வரி அம்மன் கோயில் ,பாடி திரு வாலேஸ்வரர் கோயில் , கோயம்பேடு குசெலேஸ்வரர் ,செம்மியம் சுந்தர விநாயகர் கோயில் தி நகர் சிவவிஷ்ணு கோயில்  அண்ணா  நகர் எல்லை பிடாரி கோயில் ,வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் ஏன் வள்ளுவர் கோட்டம் பெயர் கூட இருந்தது .
பொறுமையாக அனைத்து கோயிலுக்கும் சென்றோம் .அங்கு பொறுப்பான அதிகாரிகளை காத்திருந்து பார்த்தோம் .ஆனால்  எந்த எடத்திலேயும் சுவடிகளின் சுவடுகூட கிடைக்கவில்லை .
எப்படி ? அப்போ பட்டியல் தவறாக தயாரித்து விட்டார்களா என்ற வினா எழுந்தது   ஆனால் அப்படியும் எண்ணமுடியாதபடி  ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோயில்பூசாரி முன்று கட்டுகள் முன்பு இருந்ததாகவும் .ஒரு ஆண்டுக்கு முன் யாரோ வாங்கி சென்றனர் எனக் கூறினார் .
எனவே நாங்கள்இல்லாதபோது  தேடி வந்திருக்கிறோம்  இருந்தபோது பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது என உணர்ந்தோம் .
 
எனவே கோயில்கள் நீண்ட நாட்களாக சுவடிகளை பாது காக்கும் இடமாக , சீஸ்வது பண்டாரம் எனப் படும் பொது நூலகமாக ,தேவாரம் திருவாசங்கள் தினசரி பாடும் இடமாக ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது .
தேவார திருமுறைகள் வேண்டும் பொது மக்கள் கோயில்களில் இருக்கும் மூலங்களில் இருந்து படி எடுத்து போகும் வழக்கமும் இருந்திருக்கிறது .
அனால் இப்போது படிப்படியாக கோயில்கள் மாறும்போது சுவடியாளும் மாயமாகி விட்டன .இப்போது இருக்கும் குருக்களும் அதிகாரிகளும் வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டாம் என மிக்க முன்ஜாக்கிரதையாக ஓலை சுவடியா அப்படி என்றால் என்ன என்று கேட்டு விடுகின்றனர் .
 
தருமமிகு சென்னையாயிற்றே !  வாழ்க்கையில் உஷாராகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது .ஆனால்  நாங்கள் மதுரைக்கு தெற்கே பாண்டிய நாட்டுப்பகுதியில் தேடும் போது வேறு மாதிரி அனுபவங்கள் கிடைத்தது .
 
ஒரு வழியாக மாலை ஏழு மணிக்கு வேலையை முடித்து அறைக்கு திரும்பினோம் .அடுத்தநாளும் ஒரு சுவடிகுவியலை சுமார்  1500  கட்டுகள்
 20, 000  ஏடுகள் பார்க்கப்போகிறோம் எனத் தெரியாததால் சற்று சோர்வுடனேயே அன்று படுத்தோம் .
 
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
 
 
 


 


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

--

annamalai sugumaran

unread,
Apr 28, 2010, 8:43:56 AM4/28/10
to mint...@googlegroups.com
அன்பின் கமலம்
இன்னும் கஷ்ட்டத்தையே சொல்ல ஆரபிக்கவில்லை .அதற்குள்  இப்படி சொன்னால் பிறகு  எப்படி ?  .தங்கள் அன்புக்கு நன்றி !
தொடர் எப்படி இருக்கிறது .தொடர்ந்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும் .
அன்புடன்
சுகுமாரன்
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

--

meena muthu

unread,
Apr 28, 2010, 10:19:17 AM4/28/10
to mint...@googlegroups.com
அத்தனை பதிவுகளையும் நேற்றும் இன்றுமாக படித்து முடித்தேன்!

தங்களின் அனுபவங்களை படிக்கும்போது எவ்வளவு ஈடுபாட்டோடு
இதில் செயல்ப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.தங்களின் எழுத்து சுவாரஸ்யமாகவும் அதேசமயம் அடுத்து என்னவென்று தெரிந்து
கொள்ளும் ஆர்வத்தையும் உண்டு பண்ணுகிறது.

ஆரம்பமே சுபமாக இருந்தது அதிசயம்! விட்டகுறை தொட்டகுறை
போல இந்த சுவடிகளுக்கும் உங்கள் இருவருக்கும் அன்று ஏதோ
தொடர்பு  இருந்திருக்கிறது இன்று அதை தொடர்ந்திருக்கிறீர்கள்!

இதையே ஏடு தேடிய படலம்  என்று தனி புத்தகமாக போடலாம் போல!

தங்களுக்கும் செல்வமுரளி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

தொடருங்கள்
ஆர்வத்துடன்
ரங்கமீனா

2010/4/28 annamalai sugumaran <amirth...@gmail.com>
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௬     -   (   6  )

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
 
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

meena muthu

unread,
Apr 28, 2010, 10:33:25 AM4/28/10
to mint...@googlegroups.com
குறிப்பிட மறந்துவிட்டேன்.  எழுத்துகள் கண்களை உறுத்தாமல் இருந்தால் தேவலை.

நன்றி

2010/4/28 meena muthu <ranga...@gmail.com>
அத்தனை பதிவுகளையும் நேற்றும் இன்றுமாக படித்து முடித்தேன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Apr 29, 2010, 5:05:39 AM4/29/10
to mint...@googlegroups.com
Why should we format a texual material?
Text in "plain text" format is the best.
We need formatting only if we need to add a photo or emphasis
something important.
A general note to everyone.

Kannan

2010/4/28 meena muthu <ranga...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

வினோத் ராஜன்

unread,
Apr 29, 2010, 5:24:44 AM4/29/10
to மின்தமிழ்
One of the reasons why I read the Group mails in Web :-)

All appear as plain text here :P

V

On Apr 29, 2:05 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Why should we format a texual material?
> Text in "plain text" format is the best.
> We need formatting only if we need to add a photo or emphasis
> something important.
> A general note to everyone.
>
> Kannan
>

> 2010/4/28 meena muthu <rangame...@gmail.com>:


>
>
>
>
>
> > குறிப்பிட மறந்துவிட்டேன்.  எழுத்துகள் கண்களை உறுத்தாமல் இருந்தால் தேவலை.
>
> > நன்றி
>

> > 2010/4/28 meena muthu <rangame...@gmail.com>


>
> >> அத்தனை பதிவுகளையும் நேற்றும் இன்றுமாக படித்து முடித்தேன்
>
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> >>> visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send


> >>> email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post


> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Kannan

unread,
Apr 29, 2010, 6:43:30 AM4/29/10
to mint...@googlegroups.com
You are clever! Always :-))

ஆனா, நல்ல பல படங்களைக் காணும் வாய்ப்பையும் இழக்கிறீர்கள் :-(

க.>

2010/4/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:


> One of the reasons why I read the Group mails in Web :-)
>
> All appear as plain text here :P
>

Subashini Tremmel

unread,
Apr 29, 2010, 3:49:25 PM4/29/10
to mint...@googlegroups.com
நண்பர்களே,
 
திரு.சுகுமாரன் வழங்கும் இத்தொடரின் முதல் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியைக் காண!
 
குறிப்பு - எழுத்துபிழை திருத்தி உதவிய திரு.தேவ் அவர்களுக்கு நன்றி.
 
-சுபா
2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>




களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௧-   ( 1 )


வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு  - ௧ (   1 )


வினோத் ராஜன்

unread,
Apr 30, 2010, 12:10:58 AM4/30/10
to மின்தமிழ்
Nah..

Except for rare cases. The Images appear as attachments.. So no big
deal :-)

V

On Apr 29, 3:43 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> You are clever! Always :-))
>
> ஆனா, நல்ல பல படங்களைக் காணும் வாய்ப்பையும் இழக்கிறீர்கள் :-(
>
> க.>
>
> 2010/4/29 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
>
> > One of the reasons why I read the Group mails in Web :-)
>
> > All appear as plain text here :P
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

annamalai sugumaran

unread,
Apr 30, 2010, 2:20:59 AM4/30/10
to mint...@googlegroups.com
பாராட்டிற்கு நன்றி மீனா முத்து அவர்களே !
வாழ்கை என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு  பரமபத விளையாட்டு போன்றதுதானே!  .இதில் சாக்காடு என்பது உறக்கம் போன்றதுதானே .
இதில் இந்த ஓலை படலத்தின்  மெய்பொருள் யாரறிவார் ?
நீங்கள் தந்த பெயர் நன்றாக இருக்க்றது . நன்றி

இந்த  இழை சற்று "பெரிய எழுத்து விக்க்ரமாத்த்தன் கதை" போல்தான் இருந்தது .
காரணம் யான் மட்டும் அல்ல .
எங்கள் தெருவில் சித்திரா பௌர்னமிக்கு என்று வந்த தேர் , internet   , phone cable  களை அறுத்து தள்ளிவ்ட்டது .இன்றுதான் சரியானது .
 எனவே நான் வெளியே கடைகளில் சென்று எழுத நேர்ந்தது .
அங்கு   ஈ கலப்பை இல்லை .
நான்  google  transliterate  உபயோகித்து எழுதி ஓட்டினேன் .
ஆனால் எனன காரணமோ எழுத்துக்கள் என்வசம் இல்லை 
சிறிதும்பெரிதுமாக  வண்ணவண்ணமாக வந்தது ,எப்படியோ ஒருவாறு ஒப்பேற்றி நேரம் முடிந்ததால் வெளியே வந்தேன் .அதனால் இப்படி
கண்களை உறுத்தும் நிலையில் அமைந்தது .
இனி கண்களை உறுத்தாது .கவனமாக இருப்பேன் .

   T H F வலை தளத்தில்   எனது கட்டுரை கண்டேன் .வழக்கம் போல் மிக நன்றாக செய்த்ருக்கிறார் சுபா .  எப்படியோ அவருக்கு நேரம் கிடைத்து விடுகிறது .! அதிசயமான சுறுசுறுப்பு தான் .

எழுத்துபிழை பார்த்த திரு தேவ் அவர்களுக்கு நன்றி !
பலமுறை நான் அவருக்கு உபத்தரவம் தந்த்ருக்க்றேன் .
இந்த முறை எனக்கு   வேறு மாதிரி சங்கடம் .
எனது விசை பலகையில் என்னவோ " I " வேலை செய்யமாட்டேன் என்கிறது .
 " I " இல்லாமல் வரும் வார்த்தைகள் மிக விந்தையாக இருக்கறது .
அதை வைத்தே ஒரு ஆய்வு நடத்தலாம் போல் இருக்கறது .
எப்படி பார்த்து பார்த்து செய்தாலும்  பிழை வந்து விடுகிறது . 
" I"  யே பார்த்துக்கொண்டு இருந்தால் சிந்தப்பது மறந்து போகிறது .
இத்தனைக்கும் வாங்கி ஒரு மாதம் கூட ஆகவ்ல்லை .
மீண்டும் ஒருமுறை  வீட்டில் ஒரு ஆணை பெறவேண்டும் .
கணினிக்கு நீங்கள் நேரம் செலவு செய்வதே அதிகம் இதில்
மாதா மாதம் செலவு வேறு என்ற முனுமுனுப்பு வேறு எழும் !
எப்படியும் இரண்டு நாளில் வாங்க வேண்டும் .
தேவுக்குதான் சிரமம் தருகிறேன் .நன்றி !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


2010/4/28 meena muthu <ranga...@gmail.com>

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Kamala Devi

unread,
Apr 30, 2010, 3:02:21 AM4/30/10
to mint...@googlegroups.com
சுகுமாரன்
நிங்ஙளின் கட்டுரைத்தொகுப்பை சிரத்தையோடு படிக்கத்தோன்றுகிறது.
நிமிஷங்கள் கண்ணெடுக்காமல் அந்த படத்தையே பார்க்கிறேன்/
ஆனால் என்டெ அனுபவம் , சீற்றாம்பலம் தேவி காழ்ச்சைக்கு சென்றபோது, நிலவறையிலிருந்து,
கிட்டிய மலையாள பழம்நூலை, [எந்தகாலத்துபொக்கிஷமோ தெரியவில்லை , ]
.போற்றி தேவியிடம் வைத்து பூஜித்தபோது அந்நூலிலிருந்து , ஒளிர்ந்த தேஜஸ்,கண்டு
போற்றி விம்மி அழுதார். [குறிப்பிட்ட ஒரு சில குடும்பத்தாருக்கு மட்டுமே உரித்தான விசேஷபூஜை அது].
நிங்ஙளின் போட்டோவில் உள்ள தாத்தாவின் கண்களைப்பார்க்கும்போது, ஏனோ எழுதத்தோன்றியது
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 30 April 2010 03:49:25
Subject: Re: [MinTamil] ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !

Kamala Devi

unread,
Apr 30, 2010, 3:02:04 AM4/30/10
to mint...@googlegroups.com
சுகுமாரன்
நிங்ஙளின் கட்டுரைத்தொகுப்பை சிரத்தையோடு படிக்கத்தோன்றுகிறது.
நிமிஷங்கள் கண்ணெடுக்காமல் அந்த படத்தையே பார்க்கிறேன்/
ஆனால் என்டெ அனுபவம் , சீற்றாம்பலம் தேவி காழ்ச்சைக்கு சென்றபோது, நிலவறையிலிருந்து,
கிட்டிய மலையாள பழம்நூலை, [எந்தகாலத்துபொக்கிஷமோ தெரியவில்லை , ]
.போற்றி தேவியிடம் வைத்து பூஜித்தபோது அந்நூலிலிருந்து , ஒளிர்ந்த தேஜஸ்,கண்டு
போற்றி விம்மி அழுதார். [குறிப்பிட்ட ஒரு சில குடும்பத்தாருக்கு மட்டுமே உரித்தான விசேஷபூஜை அது].
நிங்ஙளின் போட்டோவில் உள்ள தாத்தாவின் கண்களைப்பார்க்கும்போது, ஏனோ எழுதத்தோன்றியது
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com


From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 30 April 2010 03:49:25
Subject: Re: [MinTamil] ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !

Venkatachalam Subramanian

unread,
May 1, 2010, 11:18:07 AM5/1/10
to mint...@googlegroups.com
தலைப்பட்டேன் .
உடனே தலைவர் எனப்பட்டவர் அந்தகூட்டத்தில் இருந்த ஒருவரைக்காட்டி இவர்தான் கண்ணன் என்று கூறி எங்களை அதிசயப்படுத்தினார் .ஏன் எனில் அவர் எங்களுடனேயே இதுவரை நடந்து வந்தவர்களில் ஒருவர் .
பிறகு " எங்கள் குப்பத்தில் வந்து எங்களில் ஒருவரைப்பற்றி நீங்கள் விசாரிக்கிறீர்கள் .என்ன விஷ்யம் என்பது தெரியாமல் நாங்கள் எப்படி அவரைக் காட்டிகொடுப்போம் .பின் அவருக்கு உங்களால் ஏதாவது தீங்கு வந்தால் நாங்கள் தானே பொறுப்பாவோம் " என்றார்

 
---
ஓம்.
அன்புடைய அண்ணாமலை சுகுமாரன் அவர்களே! அரிய அனுபவங்கள் உங்களின் தேடலில் பெறுகின்றீர்கள். வரைகலைத் தொகுப்பு போன்று மிகவும் அருமையாக யாத்திரைத் தொடரைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.
            நீங்கள் கண்ணனைத் தேடியது போன்று எனக்கும் ஒரு அனுபவம் கிட்டியது.வேடசந்தூர் வட்டம் கோட்டநத்தம் பிர்க்கா வருவாய் ஆய்வராக நான் பணியாறியபோது ஒரு நிகழ்ச்சி.
கரிக்காலி  அந்த பிர்க்காவின் பதினோரு கிராமங்களில் ஒரு கிராமம். மக்கள்  அரசிடம் பெற்ற கடன் வசூல் தொடர்பாக கலெக்டர் அவர்களின் நேரடி ஆய்வுக்கு நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. கணிசமான வசூல் இல்லையெனில்  பெரிய கண்டனம் வழங்கி பல்லோர் மத்தியில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.  வருவாய்த் துறையின் கேட்பு வரவு நிலுவைப் பட்டியல் அமர்க்களப்படும்.
ஒரு தவணையில் ரூ 5000/- நிலுவையில் உள்ள கடன்பெற்றவர்களை நேரில் சந்திக்கும் முகத்தான் அத்தகைய பெரிய இனங்கள் நிலுவையாளர்களின் பெயர் பட்டியல் ஒன்று அனைத்து கிராமங்களினின்றும் பெற்று, சூறாவளிச் சுற்றுப் பயணமாக சைக்கிளிலும், நடந்தும், பேருந்துவில் சென்றும் வசூல்பணி முடுக்கிவிடப்பட்டது.ஒரு ஞாயிற்றுக் கிழமைதினத்தில்   12 மைல்கள் சைக்கிளில் சென்று ‘தனலட்சுமி’ என்ற ஒருவரைத் தேடிச் சென்றேன். அவருடைய முகவரியை பட்டியலில் கண்டபடி விசாரித்ததில் அருகிருந்த ஒருவர் அந்த அம்மையார்  அந்தக் கிராமத்தின் கர்ணத்தின் தாயார் என்று கூறினார். பட்டியலில்  கண்ட முகவரியில் அந்த அம்மையா குடியிருந்ததே இல்லை  என்றும் அவரும் கர்ணத்துடன் தான் வசித்துவருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. நிலுவைக் கடன் லட்சக் கணக்கிலும் கடன்தாரர்கள் ஆயிரக்கணக்கிலும் இருந்தும் தனலட்சுமி என்ற தன்னுடைய தாயின் பெயரில் கடன் உள்ளது என்று அந்தக் கர்ணம் பட்டியலை என்னிடம் தந்தபோது சொல்லியிருக்கலாம். 12 மைல் தூரம் சைக்கிளில் அலையவிட்டு வெயிலின் தாக்கம் மிகுந்தநாட்களில் மறைத்துப் பழகியமை சற்றே வருத்தமடையச் செய்தது.
தனலட்சுமி அம்மையாரின் நிலத்தில் விளைபயிர்கள் இருக்கும் பட்சத்தில் அறுவடை செய்வதற்குமுன் அவற்றைப் பிணையாகக் காட்டி ‘அட்டாச் ’ செய்யலாமா என்று உத்தேசித்து புலத்தணிக்கை செய்தேன். அந்தக் கர்ணம் ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்தார். கணக்குகள் சர்வே கருவிகள் சகிதம் கர்ணம் இல்லாமலேயே நான் மேற்கொண்டேன்.
கிணறு அடிவெட்டுக்கென வழங்கப்பட்ட கடன் தனலட்சுமி அம்மையின் பெயரில் இருந்தது. கடன் எந்தக் கிணற்றின்பேரில் வழங்கப்பட்டிருந்ததோ அந்தக் கிணற்றின் உரிமையாளருக்கும், த்னலட்சுமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அண்டை நிலத்தில் தான் கிணறு உள்ளது.நிலம் அறுவடைமுடிந்து காலியாக இருந்தது.

தவறாக கிணறு காட்டப்பட்டு தவறாக கடன் வேறுநபர்பெயரால் வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலிடத்திற்கு அறிக்கை செய்துவிட்டேன்.
மறுநாள் பல அன்பர்கள் முக்கியஸ்தர்களுடன் அந்தக் கர்ணம் என்னை என் அலுவலகத்தில் கிராமச் சாவடியில் காணவந்தார். நடந்ததவற்றுக்கு வருந்துவதாகவும் கூறி முழுமையாக கடன் தொகை பாக்கியன்னியில் கட்டிமுடித்து வட்டாட்சியரிடமிருந்து கடன் தீர்ந்துவிட்டது என்று சான்றும் பெற்று வந்து காண்பித்தார். மேலிடத்துக்கு அறிக்கை செய்யவேண்டாம் என்று அந்தக் கூட்டம் என்னை வற்புறுத்தியது.

அவரைப் பழிவாங்க நான் நினைக்கவில்லை.  அறிக்கை முந்திவிட்டது. துறைவாரி நடவடிக்கை  மேற்கொள்ளபட்டது.

annamalai sugumaran

unread,
May 1, 2010, 3:06:38 PM5/1/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௭      -   (    7  )
------------------------------------------------
ஏடுகளில் எழுத எழுத்தாணி எனும் கருவி பயன்படுத்தப்பட்டது ..
எழுத்தாணிகளில் குண்டு எழுத்தாணி , வார் எழுத்தாணி, மடக்கு எழுத்தாணி ,
என பல வகை உண்டு .எழுத்தாணிகளுக்கு அந்தக்கால   உடை வாளுக்கு இருப்பது போல் ஒரு  உறையும் செய்யும் வழக்கம் உண்டு .அந்த உறை பனையோலையால் செய்யப்படும் .மடக்கு 
எழுத்தாணிக்குப பிடி இருக்கும் அந்தப் பிடி மரத்தாலோஅல்லது மாட்டுக் கொம்பாலோ செய்யப்பட்டிருக்கும் ..
அதை மடக்கி வைத்துக்கொள்வார்கள் .குண்டு எழுத்தாணி குண்டாக
இராது .அதன் தலையில் தான் ஒரு குண்டு இருக்கும் .

காவியம் எழுதுபவர்கள் சொல்லச  சொல்ல எழுத அந்தக் காலத்தில் எழுத்தர்கள் இருந்த்ருக்கிரார்கள் ..
சிவபெருமான்  கூட சில சமயம் அந்த வேலை பார்த்த்ருக்க்றார் .நம்ம விநாயகர் கூட அவரோட சிறப்பு எழுத்தாணி கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பாரே ! ( அதான் அவரோட  உடைந்த தந்தம் ).

----------------------------------------------------------------------------------------------------------


முடிவுக்கு வந்த சென்னைத  தேடுதல்  !



கோயில்களுக்கு அடுத்தபடியாக  எங்கள் பட்டியலில் பல ஜோதிடர்களும்
இடம் பெற்றிருந்தனர் .நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித் தேடி சென்றுப்பார்தோம் .ஆனால்  நாடி ஜோதிடர்கள் யாரும்  நாங்கள் அவர்களை   நாடியபோது திறந்த மனதுடன் எங்களை வரவேற்கவில்லை  எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தனர் .

ஒரு நாடி ஜோத்டர் எங்களை பார்த்ததும் ஏதோ சரியான முரட்டு கிராக்கி
கிடைத்து விட்டது என அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்தவர் ,
நாங்கள் சுவடி தேடி வந்த்ருக்க்றோம் என்றவுடன் முகம் மாறி , உடல் வேர்த்து தன்னிடம் " எந்த வித ஓலை சுவடியும் இல்லை ,எனக்கு தேவைப்படும் போதெல்லாம் வைதீஸ்வரன் கோவிலில் எங்கள்
குருவிடம்    கேட்டுவாங்கி பின் திருப்பி அனுப்பிவிடுவோம்"  என்றார் .
எங்களை விரைவில் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார் .

ஒரு வழியாக நாங்கள் கிளம்பியதும்  " யாருயா இந்த மாதிரி ஆளுங்களை உள்ளே விட்டது .இனி சரியாக வசாரித்து உள்ளே விடுங்கப்பா " என இரைந்தது நாங்கள் தெருக்கோடி போகும் வரை எங்கள் காதில்  ஒலித்தது .
மனிதரில் இத்தனை விதமா ?  என வியந்த படி அடுத்த இடத்திற்கு
நடையைக் கட்டினோம் .

ஆனால் மதுராந்தகத்தில் ஒரு உண்மையான நாடி ஜோதிடரை பார்த்ததையும் அவரிடம் இருந்த சுவடிகள் அனைத்தையும் அவர்
காட்டியதையும் அத்தனையும் உண்மையான ஜோதிட சுவடிகளாக
இருந்ததையும் பின்னால் விபரமாக  கூறுகிறேன் .

முருகு ராஜேந்திரன் என்ற ஒரு முதிய  ஜோதிடரை வடபழநியில் சந்தித்தோம் .எனக்கும் அவரைத் தெரியும் .இரண்ட்டு ஜோதிட பத்திரிக்கைகளை நடத்தி வருகிறார் .
அவர் எங்களை அன்புடன் வரவேற்றார் .அவரது மகனும் ஜோத்டம் பார்த்துவருவதையும் (  B.A.B.L )    கூறி அர்முகப்படுத்தினார் .அவரிடம்
இருக்கும் மிகபழமை வாய்ந்த ஜோதிட  நூல்களை மின்னாக்கம்  செய்து கொள்ள அனுமதி வழங்கினார் .

பிறகு வேறு சில இடங்களைப் பார்த்து அரும்பாக்கம் சித்த மருத்துவ
ஆராய்ச்சி நிலையம் வநது சேர்ந்தோம் .
அங்கே சென்று அலுவலகம் உள்ளே சென்றதுமே அங்கே கண்ணாடி
அலமாரிகளில் அடுக்கடுக்காக ,ஒவ்வாரு தட்டிலேயும் அடுக்கப்பட்ட்ருந்த ஓலை சுவடிகள் தான் எங்கள் கவனத்தை முதலில்
இழுத்தது .அத்தனை சுவடிகள் ஒரே இடத்தில் எதிர்பார்க்கவில்லை .!
சந்தோசமும் இத்தனை அத்தனை இல்லை எங்களுக்கு .!
அந்த  நிறுவனம் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ  இயங்குவது .
நாடெங்கிலும் கிடைக்கும் சித்த மருத்துவ ஏடுகளை திரட்டி பாதுகாத்து வருகிறார்கள் .அனைத்தும் அருமையான சித்த மருத்துவ நூல்கள் .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே  வள்ளுவரே இத்தனை சிறப்பாக ,விபரமாக மருந்து என ஒரு அதிகாரமே யாத்திருக்க்றார் என்றால் ,அதற்க்கு எத்தனை காலம் முன் நமது தமிழ் மருத்துவம் மூத்ததாக
இருந்த்ருக்கும் ? அத்தனை தமிழர் தொல் அறிவும் ,இப்படி உலகால்  அறியப்படாமல் ,அங்கீகாரம் இன்றி உறங்குவது ஏக்கத்தை தந்தது .

என்னசெய்வது எதற்கும் காலம் கூடிவரவேண்டுமே என எண்ணிக் கொண்டே  ,அந்த நறுவனத்தின்  இணை இயக்குனர்  Dr.ஜகஜோதிப்பாண்டியன் அறைக்குள் நுழைந்தோம் .
அவரும் எங்களை மகழ்வுடன் வரவேற்றார் .
சுவையான பேச்சு சிறிது நேரம் சித்த மருத்துவத்த்ன் ஆழம் குறித்து
நடந்தது .சுவடிகள் பாதுகாப்பு அவர்களின் பணிகளில் ஒன்று ,எனவே  சுவடிகளை கொடையாக பெரும் பேச்சுக்கே இடமில்லை .
ஆனால் இது வரை சுவடிகள் மின்னாக்கம் செய்யப்படவில்லை என்பதறிந்து , அவரிடம் அனுமதி கேட்டோம் .
அவர் முறைப்படி அணுக கூறினார் .

பின் அடுத்த தேடுதல் நோக்கிய பயணத்திற்காக ,சுவடிகளை ஏக்கப்பார்வை  பார்த்தபடி விடைபெற்றோம் .

பிறகு அகோபில மடம் சார்பில் நடத்தப்பெறும் நரசிம்ஹ பிரியா பத்திர்க்கை அலுவலம் ,கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி முதலிய தங்களுக்கு ஆசையுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பினோம் .

சில பள்ளிக்கூடங்களும் பட்டியலில் இருந்தது .
அங்கும் சென்றோம் .
வடபழனியில் ஒரு வீட்டில் முகவரியில் இருக்கும் கார்த்க் என்பவர் 
கைபேசி எண்ணை மிகுந்த சிரமத்த்ன் பேரில் பெற்றோம் .
வீட்டில் இருப்பவர்களும் ஓலை அவரிடம் இருப்பதாக கூறியதும் எங்கள்
ஆவல் எல்லை மீறியது .ஆனால் கார்த்த்க் அவரிடம்  50 ஏடுகள் வடமொழி மந்த்ரம் அடங்கிய சுவடி இருப்பதாகவும் ,ஆனால் அவர் காஞ்சி யில் வேலை செய்வதாகவும் கூறினார் .  வரும் போது தெரிவ்ப்பதாகக் கூறினார் .

இவ்வாறு எங்கள் தேடுதல் நிர்ணயித்த ஐயைந்தாம் நாளை அடைந்தது
.
அநேகமாக அனைத்து முகவரிகளையும் பார்த்துவிட்டோம் .
பட்டியல் எப்படி தயாரிக்கப்பட்டிருக்கும் என மெல்ல புரிய ஆரம்த்தது .
ஆனால் எத்ர்ப்பார்த்த சில இடங்களில் கூட சுவடி இல்லாது ஆச்சர்யத்தை அளித்தது .
உதாரணமாக  chennai fort museum  முகவரி கூட பட்டயலில் இருந்தது .
அங்கே தக்க அதிகாரிகளை அணுகி பார்த்தபோது சுவடிகளே அங்கே இல்லை .   இவ்வை சற்று வியப்பாகவே இருந்தது .

ஒருவாறு  சென்னை மாவட்ட  5  நாள் தேடல் முடிந்தது .
தொடர்ச்சியாகாக சுவடிகளைப் பார்த்தோம்
ஆனால் கொடையாக பெற முடியவ்ல்லை ..
மின்னாக்கம் செய்ய அனுமதி கேட்டோம் .

எப்படி அணுகுவது என ஒரு தெளிவு பிறந்தது .
ஒருவழியாக அடுத்த தேடுதல் திருவள்ளூர் மாவட்டம் என
முடிவு செய்து அவரவர் ஊருக்கு அடுத்த பயணம் ஆயத்தப் படுத்தி க்கொள்ள புறப்பட்டோம் .

அடுத்து திருவள்ளூரில் திரிந்தது !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
 



2010/4/28 annamalai sugumaran <amirth...@gmail.com>
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௬     -   (   6  )
 

 
-
 
 
 


 


annamalai sugumaran

unread,
May 1, 2010, 11:27:55 PM5/1/10
to mint...@googlegroups.com
நன்றி திரு ஒம் ஐயா ,

சுவையான அனுபவங்கள் .
என்னக்குக் கூட இப்படி காணாமல் போகும் கிணறுகளை கண்டுபிடிக்கவேண்டிய நிர்பந்தங்கள் பலமுறை வந்துள்ளது .
நான் மின்சாரத்துறையில்  அது  M.S.EB  என்று இருக்கும் போதே  1968  சேர்ந்தேன் அப்போது எனக்கு  19  வயதுதான் ,என்னிடம்  20 PER வேலை
பார்த்தனர் .நட்சத்ர குழு என்று அப்போது எங்களுக்கு பெயர் .
எல்லா விதமான   SPECIAL JOB  எங்களுக்குத்தான் .
அபோதெல்லாம் இரண்டே பல்கலதான் .
சென்ன மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை .
மூன்றாண்டு பொறியியல் பட்டயப்படிப்பு  HOTCAKE .
 முடிவு வரும்முன்னே வேலை நச்சயம் .
அப்போதெல்லாம் என்னைபோல் படித்தவர்கள் அத்கம் களப்பணிக்கு வரமாட்டார்கள் .நான் வலிந்து வாங்கனேன் .
சுமார் நூறு கிராமங்களுக்கு மின்வசதி புதிதாக செய்து தந்த்ருக்க்றேன் .

2010/5/1 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Subashini Tremmel

unread,
May 2, 2010, 3:17:27 AM5/2/10
to mint...@googlegroups.com
நண்பர்களே,
இத்தொடரின்  2ம் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 
-சுபா
2010/4/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 3, 2010, 4:37:12 PM5/3/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
நண்பர்களே,
 
இத்தொடரின் 3ம் பகுதியும் 4ம் பகுதியும் இப்போது படங்களுடன் வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண:
 
 
அன்புடன்
சுபா

2010/5/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நண்பர்களே,
இத்தொடரின்  2ம் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 
-சுபா
2010/4/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நண்பர்களே,
 
திரு.சுகுமாரன் வழங்கும் இத்தொடரின் முதல் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியைக் காண!
 
குறிப்பு - எழுத்துபிழை திருத்தி உதவிய திரு.தேவ் அவர்களுக்கு நன்றி.
 
-சுபா
2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>





களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௧-   ( 1 )


வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு  - ௧ (   1 )



annamalai sugumaran

unread,
May 4, 2010, 3:45:54 PM5/4/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௮ -   ( 8 )


----------------------------------------------------------------------------------------------------------
கரிவலம் வந்த நல்லூரில்   வரகுணபாண்டியருடைய  ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் .தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவைத தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் .

"வரகுணபாண்டியர் வைத்திருந்த  ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில்இருக்கின்றனவாமே ?"

"அதெல்லாம் எனக்குத்தெரியாது என்னவோ வைக்கோற் கூளம் மாதிரிக் கணக்குச் சுருனையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன "

"வாருங்கள் போகலாம் "

"அந்தக் கூளங்களையெல்லாம் எனன செய்வதென்று யோசித்தார்கள் .ஆகம சாஸ்திரத்தில் சொல்லியபடி செய்து விட்டார்கள்"
"எனன செய்துவிட்டீர்கள் ? "
"பழைய ஏடுகளைக்  கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாதாம் .அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம் ,
இங்கே அப்படித்தான் செய்தார்கள் "
"ஹா  !  "   என்று என்னையும் மறந்து விட்டேன்
                              
      ---என்சரித்திரம் - உவே சா எழுதியது பக்கம்  666

நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓலைச் சுவடி தேடுதல் ஆரமித்தபோது முதலில் போன இடம்   கரிவலம் வந்தநல்லூர்  தான் ..
யார்சொல்லியும் அங்கேபோகவில்லை .! ஆனால் ஏனோ சென்றோம்..
என்னவோ சங்கரன் கோயிலில் தங்கியிருந்த ஐந்து நாளும் அங்கே போக நேர்ந்தது .அதன் அருகில் இருந்த ஒரு ஊரில்  நான்கு இடங்களில் இருந்து ஓலைகளை பெற்றோம் .ஒரு இடத்தில் அதிக சுவடிகள் கிடைத்தது .

ஆனால் கரிவலம் வந்த நல்லூரில் கோயிலுக்கு மட்டும் போகவில்லை .
காரணம் வழக்கம் போல் நேரமின்மை .
ஆச்சரியம் என்னவென்றால் அப்போது எங்களுக்கு இந்த வரலாறு தெரியாது . இந்த செய்தியை  நான்  படித்ததே சில நாட்களுக்கு முன்தான்  இந்த நூலை சில வருடம் முன் படித்தது உண்டு ஆனால் ஊரின்  பெயர் சுத்தமாக நினைவில் இல்லை ..

ஆனாலும் இன்னும் ஹோமத்தில் இடப்படாமல் பல ஓலைச் சுவடிகள் அங்கே  கிட்டியது நம்பிக்கையை தூண்டுகிறது .
ஏன் நேரே கரிவலம் வந்தநல்லூர் சென்றோம் ?
ஏன் திரும்பி திருபி அங்கே போக நேர்ந்தது ?
இதற்க்கேலாம் பதில் இன்னொரு முறை  அங்கே போனால் தான் தெரியும் போலிருக்கிறது !

-----------------------------------------------------------------------------------------------------------

திருவள்ளூரில் திரிந்தது ! -

பிப் மாதம்  13  ஆம் நாள் அன்று எங்கள்  திருவள்ளூர் மாவட்டம் ஓலைச் சுவடிகள் தேடுதல் துவங்கியது . குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் மூவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்தோம் .
திருவள்ளூர்மணவாள நகர் நாங்கள் சந்திக்கக் குறிப்பிட்டிருந்த  இடம் .அங்கே இருந்து ஒரு மகிழ்வூந்து ஏற்ப்பாடு செய்து கொண்டோம் .

திருவள்ளூர் மாவட்டம்  8 வட்டங்களையும் ,  14  ப்ளாக் கொண்டது .
இதில்  650  கிராமங்கள் இருக்கின்றன .
எங்களிடம் இருக்கும்  NMM  பட்டியலில் மொத்தம்  126  முகவரிகள் இருந்தன .நாங்கள் இந்த மாவட்டத்தையும் ஐந்து நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தோம் .

tiruvallur_road.jpg

எங்கள்" ஓலைச் சுவடி ஊர்தி" பயணத்தை தொடங்கியது .ஒரு நீண்ட ஆற்றின் பாலத்தை கடந்த போது  'இதுதான் குசுஸ்தலை ஆறு  " என்றபடி
அங்கிருக்கும் அகஸ்தியர் கோயிலையும் போகும் போதே காட்டினார் முனைவர் கோவை மணி .அந்த ஆறின் கரையினிலே பல சிவன் கோயில்கள் இருப்பது பின் அறிந்தேன் .
திரு கோவை மணி அவர்களுக்கு பிறந்த ஊர் திருத்தணி பக்கம் தான்  .எனவே திருவள்ளூர் அவரது சொந்த மாவட்டம் ..
என்ன இருந்தாலும் சொந்த ஊர் பாசம் யாரை விடும் .மகிழ்வுடன் காணப்பட்டார் முனைவர் .
அவர் காட்டிய அகஸ்தியர் கோயிலை நோக்கி மனதில் ஒரு வேண்டுதலை விடுத்தோம் .
அகத்தியர் கோயில் இல்லாத மாவட்டமே தமிழ் நாட்டில் கிடையாது .
ஆனால் அவர் வடக்கே கைலாயத்தில் இருந்து தானே வந்ததாக வரலாறு கூறுகிறது எனவே திருவள்ளூர் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி இந்த மாவட்டத்தில் கையில் கொஞ்சம் ஓலைச சுவடிகள் கிடைக்க அவர் அருள் வேண்டினோம் .
முதலில் திருவலங்காடு பிளாக் பாதையை தேர்ந்தெடுத்து எங்கள் பயணம் அமைந்தது .வழக்கம் போல் பட்டியலில் இருந்த பெயர்கள் சில சமயம் கொஞ்சம் குழப்பத்தை அளித்தது .

ஒரு பிளாக் என்று கொள்ளாமல் போகும் வழியில் இருந்த ஊர்களையும் பார்த்து சென்றோம்.
அலைந்து திரிந்து முகவரிகளைத்தேடியபோதும் இல்லை என்ற பதிலையே பெறமுடிந்தது .
அம்மையற்குப்பம் ,அருங்குளம் திருமுல்லை வாயில் என பார்த்த ஊர்கள் ஊர்கள் வரிசைதான்   நீண்டன .
A ARUMUGAM
AMMAIYARKUPPAM
AMOIL TAMIL SANGA ST,
TIRUVALLUR DIST என்று இருந்த முகவரியைத்தேடி ,அலைந்து ஓய்ந்த போதுதான் தெரிந்தது அது அறநெறி தமிழ் சங்க தெரு என்று இப்படிப்பட்ட குழப்பங்கள் நிறையவே இருந்தது .

அருங்குளம் எனும் சிற்றூர் எங்களை வியப்பில் ஆழ்த்தியது .எங்கள் பட்டியல் படி சிவன் கோயில் ஜெயின் கோயில் என்று இரண்டு முகவரிகள் இருந்தன .ஆனால் ஜெயின் கோயில்தான் எங்களை வியப்பில் ஆழ்ததியது  .
அருகில் சென்ற போது திருவதிகை சிவன் கோயில் நினைவு ஏனோ வந்தது ,உள்ளே சென்றுபார்த்தால் மிகபெரிய பிரகாரங்கள் ,மண்டபங்கள் நடுவில் அமைத்த கருவறை  உள்ளே  சென்றுபார்த்தாலோ சமணர்களின் தீர்த்தங்கரர் .வடிவம் .
இத்தனை பெரிய கருகல் பாறைகளால் அமைந்த சமணக் கோயிலை நான் இதுவரைக் கண்டதில்லை .ஆனால் நின்று பார்க்க நேரம் இல்லாததால் ,மீண்டும் ஒருமுறை இதைப் பார்க்கவென்று வரவேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் .அங்கே இருந்த அகஸ்தீஸ்வரர் கோவிலையும் தூரே இருந்தே ஒரு பார்வை பார்த்து நகர்ந்தோம் .
இந்த மாவட்ட பட்டியலிலும் நிறைய கோயில்கள்  பட்டியலில் இடம் பெற்றிருந்தது .எதையும் விடமனசில்லாமல் கோயில் கோயிலாக அலைந்தோம்
திருமுல்லைவாயில் கோயிலிலே வெள்ளெருக்கு வேர்களினாலேயே  கர்ப்பகிரக தூண்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம ...
குருக்கள் உள்ளே இருந்ததால் அங்கே செல்ல நேர்ந்தது .

பெரியப்பாளையம் கோயில்லே சென்று ஓலைச சுவடிகளைபற்றி புலன்விசாரணை செய்து விட்டு இல்லை என்றதும் கிளம்பியதும் கோயில் அதிகாரி "இருந்து அம்மனை பார்த்துவிட்டு போங்களேன் " என்று கூறியபோது நேரமில்லை எனக் கூறி விரைந்த எங்களை வியப்பாகவே பார்த்தார் அந்த  அதிகாரி .
எனன செய்வது எங்கள் அவசரம் எங்களுக்கு ஐந்து நாளில்  126  முகவரியைப் பார்க்கவேண்டுமே !

02032008624.jpg
திருநின்றயூர் என்ற அழகிய ஊர் அந்த ஊரின் ஆலயம் மிக பழமைவாய்ந்தது . சிறந்த வைணவ தலம் .  அங்கும் அப்படிதான்               " என்னைபெற்ற தாயார் "என பெயர் பெற்ற அந்த பிராட்டியையும் பார்க்க நேரம் இல்லாமல் விரைந்தோம் வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கே தங்கிவிட்ட பக்தவசல்னாரையும் பார்க்க நேரமில்லை ..

திருமழ்சை கோயில் எங்கள் பட்டியலில் இல்லை எனவே உள்ளே செல்லும் பாக்கியமும் கிட்டவில்லை .கோபுர தரிசனம்   மட்டுமே கிடைத்தது .
பிராயம் பத்து என ஓர் ஊர் திரு மழிசை ஆழ்வார்  10 வயதுவரைஅங்குஇருந்ததால் அந்த பெயராம் அந்த ஊருக்கு ..  அங்கும் இந்த கதை சொல்ல வந்த பெண்மணியிடம் பேச நேரம் இல்லை என ஓட்டம் .

திருவலங்காடு இருமுறை செல்ல நேர்ந்தது ஆனாலும் கோயிலின் மதில் சுவரை மட்டுமே தரிசித்தோம் .  அத்தனை வேகம் எங்கள் குறியெல்லாம் ஓலை சுவடியிலே !
திருவேற்காடு சென்றோம் அங்கேயும் அப்படிதான் கோயில் அருகில் கூட செல்லவில்லை .
ஓலைச சுவடி இல்லாத இடத்த்தில் எங்களுக்கு எனன வேலை ? என்பது போல் ஒரே ஓட்டம் தான்     எப்படியாவது இந்த மாவட்டத்தில் ஓலைச் சுவடிகளை பெற்றிடவேண்டும் என்ற துடிப்பு எங்கள் அனைவரிடமும் இருந்தது .

அங்கே ஐயப்ப சாமீ மடம் என ஒரு முகவரி இருந்தது .எங்களுக்கு உண்மையிலேயே அதன் முக்கியத்துவம் தெரியாது .வழக்கம் போல் விசாரிப்புக்கு உள்ளே சென்றோம் .சென்றதும் தான் தெரிந்தது தஞ்சை பெருவுடையாருக்கு குடமுழுக்கு நடத்திவைத்த வயது என்பதுக்குமேல் ஆகி பழுத்த ஞானியாக விளங்கும்  ஐயப்ப சுவாமிகள் அங்கே வீற்றிருந்து அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் .
நாங்களும் அருகில் சென்று எங்கள் ஓலைச் சுவடி தேடுதல் பற்றி பணிவுடன் கூறினோம் .
எங்கள் மூவரையும் தலையில் கைவைத்து வெற்றி பெற வாழ்த்தினார் .
ஆனாலும் அங்கேயும் ஓலை சுவடி கிடைக்காதது கொஞ்சம் வருத்தம் தான் .ஆனால் அங்கே ஆசியுடன் சுவையான சாப்பாடும்எங்களுக்கு  கிடைத்தது .சுவாமிகளின் அன்பு கட்டளையை தட்ட  இயலாமல் அங்கே கிடைத்த் உணவை உண்டு அடுத்த இடம் நோக்கி புறப்பட்டோம் ..

திருத்தணி வட்டம் ராமன்சேரி என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான கோயிலை கண்டோம் .
சிவனையும் விஷ்ணுவையும் அருகருகே அமைத்து இரண்டையும் சேர்த்து வழிபடும் வியப்பினை அங்கேக் கொண்டோம் .
சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலில் வேறு வேறு இடங்களில் இருப்பதைக் கண்டதுண்டு .
சிவனும் விஷ்ணுவும் பாதி பாதி உடலாக அமைத்த  ஓருருவம் கொண்ட சங்கரனார் கோயிலும் கண்டதுண்டு .ஆனால் சிவனையும் நாரயனையும் அருகருகே நிறுத்தி வழிபடபடுவதை இங்குதான் கண்டேன் .

இப்படியாக எங்கள் தேடல் அலைச்சல்  முதல் ஓலைச்சுவடிக்கட்டுகளைப்  பெறப்போகும் பழவேற்காடு போகும் வரை நீண்டது .அதன் பிறகு தொட்டதெல்லாம் வெற்றிதான் .
பழவேற்காட்டில் தான் எங்கள் தேடுதலின் முதல் வேட்டை கிடைத்தது .அந்த விபரம் அடுத்ததில் பார்ப்போம் .
அன்புடன் ,

அண்ணாமலை சுகுமாரன்









2010/5/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நண்பர்களே,
இத்தொடரின்  2ம் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 
-சுபா
2010/4/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நண்பர்களே,
 
திரு.சுகுமாரன் வழங்கும் இத்தொடரின் முதல் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியைக் காண!
 
குறிப்பு - எழுத்துபிழை திருத்தி உதவிய திரு.தேவ் அவர்களுக்கு நன்றி.
 
-சுபா
2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>







--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
02032008624.jpg
tiruvallur_road.jpg

Venkatachalam Subramanian

unread,
May 4, 2010, 7:06:41 PM5/4/10
to mint...@googlegroups.com


2010/5/1 annamalai sugumaran <amirth...@gmail.com>
நன்றி திரு ஒம் ஐயா ,
ஒம்.
அன்பு சுகுமாரன் அவர்களே, நீங்களும் இந்த நில அளவைப் பணியில் ஈடுபட்டு பல கிணறுகள் தேடிய அனுபவம்,
தற்பொழுது சுவடி தேடும் போதும் பயன்படுகின்றது. நன்றி
வெ.சுப்பிரமணியன்.ஓம்
 அனுபவங்கள் .
என்னக்குக் கூட இப்படி காணாமல் போகும் கிணறுகளை கண்டுபிடிக்கவேண்டிய நிர்பந்தங்கள் பலமுறை வந்துள்ளது .
நான் மின்சாரத்துறையில்  அது  M.S.EB  என்று இருக்கும் போதே  1968  சேர்ந்தேன் அப்போது எனக்கு  19  வயதுதான் ,என்னிடம்  20 PER வேலை
பார்த்தனர் .நட்சத்ர குழு என்று அப்போது எங்களுக்கு பெயர் .
எல்லா விதமான   SPECIAL JOB  எங்களுக்குத்தான் .
அபோதெல்லாம் இரண்டே பல்கலதான் .
சென்ன மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை .
மூன்றாண்டு பொறியியல் பட்டயப்படிப்பு  HOTCAKE .
 முடிவு வரும்முன்னே வேலை நச்சயம் .
அப்போதெல்லாம் என்னைபோல் படித்தவர்கள் அத்கம் களப்பணிக்கு வரமாட்டார்கள் .நான் வலிந்து வாங்கனேன் .
சுமார் நூறு கிராமங்களுக்கு மின்வசதி புதிதாக செய்து தந்த்ருக்க்றேன் .

2010/5/1 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
    

S.Partha sarathy

unread,
May 5, 2010, 12:06:17 AM5/5/10
to mint...@googlegroups.com
///நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓலைச் சுவடி தேடுதல் ஆரமித்தபோது முதலில் போன இடம்   கரிவலம் வந்தநல்லூர்///

கரி- யானை; யானை வலம் வந்த நல்லூர்

அன்புடன்
பார்த்தசாரதி

2010/5/5 annamalai sugumaran <amirth...@gmail.com>
02032008624.jpg
tiruvallur_road.jpg

Innamburan Innamburan

unread,
May 5, 2010, 1:13:55 AM5/5/10
to mint...@googlegroups.com
என்னது இது? சுகுமாரன் தங்கமான மனிதர். என் நண்பர். அவரை போய் யானைக்கு உவமையாக!


2010/5/4 S.Partha sarathy <spsar...@gmail.com>
02032008624.jpg
tiruvallur_road.jpg

Chandra sekaran

unread,
May 5, 2010, 1:30:29 AM5/5/10
to mint...@googlegroups.com
அருங்குளம் - நானும் ஜைன, சிவன், பெருமாள் கோயில்களை பார்க்க நேர்ந்தது. சிவன் கோயில் சிதிலமடைந்துள்ளது, மேற்கூரை மட்டும் 2 லட்சம் செலவு ஆகும்., அதை செய்தால், ஒரு அருமையான ராஜேந்திரன் காலத்துக் கோயிலை புனரமைத்த புண்ணியம் கிட்டும் :)
பெருமாள் கோயில், புராதனத்தை பாழ் பண்ணி மாடர்ன் சிமிட்ரி ஆக்கிவிட்டார்கள். பாவம், பெருமாள். ஜைன கோயில், நம் கோயில் போல கட்டுமானம் கொண்டது. பூசாரிதான் கொஞ்சம் சிடு சிடு.புகைப்படங்களை பின்னன்ர் பிகாசாவில் இட்டு நிரலி அனுப்புகிறேன். அண்ணாமலை சார், நான் தான் நீர் வடிகட்டி ஆலை சம்பந்தமாக திருத்தணி டேரா 2 மாதங்களாகப் போட்டுள்ளேனே. வந்தால் ஒரு முறை கூப்பிடக் கூடாதா?

சந்திரா

S.Partha sarathy

unread,
May 5, 2010, 7:38:33 AM5/5/10
to mint...@googlegroups.com
ஹா..ஹா..
 வேண்டுமானால் சுகுமாரனன் அவர்கள் சென்றுவந்துவிட்டதால் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
இது என் அன்னையின் சொந்த ஊர்.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/5/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>
02032008624.jpg
tiruvallur_road.jpg

annamalai sugumaran

unread,
May 6, 2010, 1:34:13 AM5/6/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௯  -   ( 9 )
                                                        --  அண்ணாமலை சுகுமாரன் 

------------------------------------------------------------------------------------------------------------
ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது .
சரியான சுவடியை சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல்  ( acquire )
என்பது தொடக்கம் .அதன் பிரதிகளைத் திரட்டல் (  collect )
ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல் அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை
நூலக பதிவுகள் (  cataloque ) போன்றவற்றில்  இருந்து  பெறுதல் அடுத்த தளமாகும் .
சுவடியின் வரலாறு  என்பது  இதில்   முக்கியமானது .
மூலமா ,படியா என்பதுடன் அதன் கால் வழியும் , தனி நபர் , மடம் கல்வியாளர் என யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும் ,
யாரை எட்டியது ,யாரால் ஏற்கப்பட்டது  (  reach and reception  ) என்பன
இதனால் புலப்பட்டு அச் சுவடிக்கான  வரவேற்பைப் பற்றி அறிய முடியும் .

விருப்பம் ,ஆர்வம் ,முயற்சி  என்பதுடன் ஆய்வு நுணுக்கமும் ,அறிவுத் திறனுமே இச் சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் .
                                          -   டாக்டர் அன்னி தாமசு --பதிப்பியல் எண்ணங்கள்
------------------------------------------------------------------------------------------


பழவேற்காட்டில் பெற்ற பயன் ! 

சென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக  அத்தனைப  பரபரபின்றி  கழிமுகங்களும்  காடு நிலம் ,ஏரி கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது
இங்கிருக்கும் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும்..

DSC02531[2].jpg 

பல  இடங்களில் சுற்றி அலைந்தபடியே பழவேற்காடு வநது சேர்ந்த போது மதியம் மணி இரண்டு ஆகிவிட்டது . ஆலைய வழிபாடு செய்ய வில்லை என்றாலும் வயத்துக்கு வழிபாடு செய்தாகவேண்டுமே !  உணவு படைத்தல் என்றுதானே கூறுகிறோம் .
அங்கும் இங்கே உணவுக்கு தேடியளைத்து ஒருவழியாக எதோ கிடைத்த உணவை அள்ளிப்போட்டுக்கொண்டு  புறப்பட்டோம் .புலிகாட் எனப்படும் பழவேற்காட்டில் எங்கள் பட்டியல் படி ஆறு முகவரிகள் இருந்தன .

B. Haridaas
PULICAT - 601205
 என்று முகவரி இருந்தது ,          நல்லவேளையாக மீனவர் குப்பங்களைத்தவிர்த்து பழவேற்காட்டில்சில தெருக்களே இருந்தன.
கிராமங்களில் முகவரி தேடும் போது அவரின்  தந்தை பெயரோ அல்லது  ஜாதியோ தெரிந்து விட்டால் கண்டுபிடிப்பது சுலபம் .
ஜாதி தெரிந்துவிட்டால் அந்த ஜாதி இருக்கும் தெருவை சுலபமாக
காட்டிவிடுவார்கள் .அல்லது அந்த ஜாதியை சேர்ந்த வேறுயாராவது ஒருவரை கை காட்டுவார்கள் .
முதலெழுத்து மட்டும் இருக்கும் போது நாங்கள் அதற்க்கு விரிவுரைத்தருவோம் .
 B   என்றால் பாலசுப்ரமணிமாக இருக்கலாம் ,பாஸ்கராக இருக்கலாம் என சொல்லிக்கொண்டே போவோம் .
வழி சொல்பவரும் ஏதாவது தெரிந்த பெயர் வந்தால் நாங்கள் கூறும் பட்டியலின் ஓட்டத்தை சற்று நிறுத்தி விபரம் கூறுவார் .
ஜாதிக்கு இன்னும் கிராமங்களில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது ..

ஒருவாறு ஹரிதாஸ் வீட்டை  கண்டுபிடித்தோம் .வீட்டின் கதவோ  மூடப்பட்டிருந்தது ".சார் சார் "  என கதவை தட்டிக்கொண்டு நின்றோம் .
கதவைத் திறந்து ஒரு பெண்மணி வெளியில்  வந்தார் ,.
நாங்கள் நிறைய மார்க்கெட்டிங் ததிரங்களை கையாளுவோம் .முதலில் அதிகநேரம் நம்மை இருக்க அனுமதித்தாலே நம்மால் அதிக விபரம் அவர்களிடம் இருந்து பெறமுடியும் எனவே சீராக பேசி நல்ல எண்ணம் பெற முயல்வோம் .
"அம்மா  நாங்கள் தஞ்சை பலகலையில் இருந்து ஓலைச் சுவடி தேடி வந்திருக்கிறோம் சார் இல்லையா ?"
"உங்களிடம் உங்களிடம் சில ஓலை சுவடிகள் இருப்பதாக கேள்விப்பட்டோம்"  என கூறியபடி அங்கிருந்த திண்ணையில் உற்கார்ந்து விட்டோம் .
அந்த அம்மையார் "ஆமாம் இருக்கிறது"  என்றது எங்கள் சோர்வு போனவிடம்  தெரியவில்லை சற்று நிமிர்ந்து உற்காந்தோம் .
"ஐயா எங்கே"  எனக்கேட்டபோது அவர் கணவர் தலைமை ஆசிரியராக அருகில் இருக்கும் பள்ளியில் வேலை செய்வதாக கூறினார் .
எங்கள் பேச்சை சற்றே நீட்டினோம் அருகில் இருக்கும் கோயில்கள் ,திருவிழாக்கள் முதலியன பற்றி பேசி அவரிடம்  எங்கள்பால் ஒரு
ஈடுபாட்டினை உருவாக்குவோம் .
அம்மையார் உடனே களைப்பாக இருக்கிறீர்களே மோர் வேண்டுமா என்றார் ம, இது அவர்களிடம் இன்னும் சொஞ்சம் நெருங்க ஒரு வழி ! "இருந்தால் கொஞ்சம் தாருங்கள் தாகமாத்தான் இருக்கு "என்றோம் .
மோர் குடித்தவுடன் ஐயா கைபேசி எண் தந்தால் அவருடன் பேசுகிறோம் என்றோம் .
பொதுவாக  அவர்களின் நல்ல எண்ணத்தையும் ,நம்பிக்கையையும் பெறாமல் கை பேசி எண் கேட்கக்கூடாது .அப்படி அவசரப்பட்டு கேட்டால் எனக்குத் தெரியாது என்ற உஷாரான பதில் உடனே கிடைத்துவிடும் .
இதில் மிக நுட்பமான மன விளையாட்டுக்களை பயன்படுத்தவேண்டும் ..
அந்த அம்மையாரும் மன மகிழ்ச்ச்யுடன் இப்போது ஒத்துழைக்கும் மன நிலையில் இருந்தார் .
அவரே அவரது கைபேசியில் அவரது கணவரின் என்னைப் போட்டு இதில் நீங்களே பேசுங்கள் என்றார் .
இதில் பேசினால் அவர் உடனே எடுப்பார் என்று கூறினார் .அதே சமயம் எங்களிடம் எண்ணைக் கொடுக்காமல் தவிர்த்த சாமர்த்தியமும் தெரிந்தது .ஏன் என்றால் ஏன் என்னை கொடுத்தாய் என அவர் கணவர் கோபிக்கும் சாத்தியக்கூறு உண்டு .
நம்ம கிராமத்து தாய்மார்கள் மிகவும் சாமர்தியம்  அதுவும் கணவர் நலம் காப்பதில் மிகுந்த உஷார் !

முனைவர் மணி பேசினார் ."அவர் தான் வர இரவு ஆகிவிடும்" என்றும் தன்னிடம் ஓலை சுவடிகள் இருந்தது உண்மைதான் ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுத்தபோதே அதை பொன்னேரி கிளை நூலகரிடம் தந்துவிட்டேன் என்றார் .
"ஐயா இப்போது வேறு சுவடிகளே இல்லையா ,அம்மா எதோ சுவடி இருப்பதாக கூறினார்களே"   என பணிவுடன் கேட்டோம் .

"ஆமாம் இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு பயன்படாது .அது கணக்கு வழக்கு பற்றிய ஓலை சுவடி" என்றார்
"அதைப் பார்க்கலாமா "
"அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் , இதை முன்பே பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிபோய்விட்டார்கள்  " என்றார் .
"வந்துவிட்டோம் எதற்கும் பார்க்கிறோமே  "
"இல்லை அது எங்கே இருக்கிறது என்று தேடமுடியாது .அது நான் வந்து தான் செய்யவேண்டும் நீங்கள் போய வாருகள் "என்றார் .
அம்மையாரின் முகத்தில் அது எங்கே இருக்கிறது என தெரியும் என்ற குறிப்பு தெரிந்தது .ஆனாலும் கணவர் கூறிவிட்டாரே இனி எப்படி காட்டுவது என்ற விசனமும்  தெரிந்தது .
"சரி மீண்டும் எண் கணவர் இருக்கும் போது வாருங்கள் நான் காட்டுகிறேன் "  என்று கனிவுடன் கூறினார் .
அந்த சகோதரிக்கு நன்றி கூறி அந்த இடத்தை காலி செய்தோம் .ஆனால் பொன்னேரி சென்று கிளை நூலகரை பார்க்கவேண்டும் என உறுதி செய்து கொண்டோம் .

அடுத்தமுகவரி
K.GANESAN
PULICAT 601205 என்பதுதான் .
நாங்கள் வழக்கம் போல் பல தொழில்  திறமைகளை கையாண்டு , 
ஷெர்லாக் ஹோமேஸ் போல் அவர் வீட்டை கண்டுபிடித்தோம் .
எங்கள் அதிர்ஷ்டம் அவர் வீட்டில் இருந்தார் .இளைக்ர்
 பழவேற்காட்டில் இருக்கும் நூலகத்தில் பகுதி நேர  வேலை செய்கிறார் .
அவரிடம் பேசி நடப்பாகி பொன்னேரி கிளை நூலகர் கைபேசி எண் பெற்றோம் .
கணேசனும் அவர் வீட்டில் இருந்த இரண்டு கட்டு ஓலை சுவடிகளை
பொன்னேரி நூலகரிடம் கொடுத்ததாகக் கூறினார் .
நாங்கள் அந்த" யானை பிடிக்கும் தந்திரத்தை " கையாண்டு அவரையும் காரில் தூக்கி போட்டுக்கொண்டோம் .
அவரே பழவேற்காட்டில் இருக்கும் இதர முகவரிகளுக்கு அழைத்து போனார் .
பாவப்பட்ட பழவேற்காட்டு மக்கள் எங்கள் கேள்வி கணை களில் இருந்து தப்பித்துக் கொண்டனர் .முகவரி கிடைக்கும் வரை எதிரில் அகப்படும் பொதுஜனத்தை அப்படி கேள்விக் கேட்டு பாடாக படுத்திவிடுவோம் .
எங்களுக்கு" டீ" எல்லாம் வாங்கிகொடுத்து தப்பித்துக் கொண்டவர்கள் உண்டு .

கணேசன் எங்களை கந்தசாமி குருக்கள் என்பவர் வீட்டுக்கு அழைத்து சென்றார் .அங்கிருந்த ஒரு முதியவர் ,அவரிடம் இருந்த ஓலைச் சுவடிகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் தந்துவிட்டதாக கூறினார் .
ஆனால் அவர் வீட்டில் இன்னும் ஏராளமான வட  மொழி ஆகமங்களைப் பற்றிய புத்தகங்களை சேர்த்து வைத்திருக்கிறார் .அவைகளை எங்களுக்குக் காட்டினார் .நாங்கள் மின்னாக்கத்தின்  பயன் பற்றி அவருக்கு எடுத்துக்கூறினோம் .அவரும் அவைகளை மின்னாக்கத்திர்க்கு தர சம்மதம் தெரிவித்தார் .ஆனால் அங்கேயே வந்து செய்யவேண்டும் என்றார் .
வேறு பல இடங்களுக்கு கணேசன் அழைத்து சென்றார் .அனேக இடங்களில் யாரும் இல்லை .ஓலையும் கிடைக்கவில்லை .

பிறகு கணேசனிடம் பெற்ற கைபேசி எண் வைத்து பொன்னேரி கிளை நூலகர் போனிக்பாண்டியனிடம் பேசினோம்  ..அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை பார்க்க இப்போது பொன்னேரி வருவதாகக் கூறினோம் .அவரும் வரச் சொன்னார் .
ஆனால் அவரிடம் பழவேற்காட்டில் இருந்து பெற்ற ஓலைச் சுவடிகளைப் பற்றி கேட்கவில்லை ,அவரை நேரில் பார்த்து கேட்கலாம் என்று முடிவுட்செய்தோம்

விரைவாக  பொன்னேரி  சென்றோம் .ஒருவழியாக நூலகம் சென்றால் அங்கே நூலகர் போனிக் பாண்டியன் இல்லை .எங்களுக்கு ஏமாற்றம் !

அவரது உதவியாளர் தான் எங்களை வரவேற்று நூலகர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டார் நீங்கள் வந்தால் வேண்டிய உதவி செய்யச் சொன்னார் என்று கூறி காபி ஆர்டர் செய்தார் .

நாங்கள் பழவேற்காட்டில் போனிக் வசம் கொடுத்ததாகக் கூறப்படும் ஓலை சுவடிகளைப் பற்றிக் கூறி அவரை அவசியம் பார்க்கவேண்டும் என்றோம் .
அவரும் அப்படி இங்கே எந்த ஒலைச்க் சுவடியும் இல்லையே என்று கூறி
நூலகருக்கு கைப் பேசியில் பேசினார் .
போனிக் பாண்டியனும் போனில் எங்களிடம் பேசும் போது "என்னிடம் எந்த ஓலை சுவடியும் இல்லையே அப்போதே திருப்பித்தந்துவிட்டேனே "என்று கூறினார் .
என்னடா  இது இந்த ஓலை நம்மிடம் இப்படி கண்ணாம்பூச்சி காட்டுகிறதே என சற்று மயங்கினோம் .ஆனாலும் எப்படியும் பெற்றே திருவது என முடிவு சேது சில அதிரடி திட்டங்களை வகுத்தோம் .
பிறகு பொன்னேரியில் இருந்த சில முகவரிகளைபார்க்க ஆரமித்தோம் .

மறுநாள் அந்த ஓலை சுவடிகளை எப்படி கையில் வாங்கினோம் என்பதை அடுத்த இழையில் பார்ப்போம் . .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்



2010/5/5 S.Partha sarathy <spsar...@gmail.com>
ஹா..ஹா..
 வேண்டுமானால் சுகுமாரனன் அவர்கள் சென்றுவந்துவிட்டதால் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
இது என் அன்னையின் சொந்த ஊர்.

அன்புடன்
பார்த்தசாரதி

2010/5/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

என்னது இது? சுகுமாரன் தங்கமான மனிதர். என் நண்பர். அவரை போய் யானைக்கு உவமையாக!


2

2010/5/5 annamalai sugumaran <amirth...@gmail.com>

களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  -- ௮ -   ( 8 )



கு






DSC02531[2].jpg

karthi

unread,
May 6, 2010, 1:51:57 AM5/6/10
to mint...@googlegroups.com
சுகுமாரன் ஐயா,
 
எல்லாம் முடிந்து ஓய்வு கிடைக்கும்போது ஒரு நாவலாக எழுதுங்கள்.
Docu-novel போல. பெரும் வரவேற்பு இருக்கும். காரம் மணம் குணம்
நிறைந்த அனுபவங்கள். சோகமும் சுகமும் உண்டு. இப்போதே ஒரு
நாவலின் சுவையோடுதான் படித்து வருகிறேன்.
 
ரெ.கா.
DSC02531[2].jpg

N. Kannan

unread,
May 6, 2010, 4:02:10 AM5/6/10
to mint...@googlegroups.com
இவர்கள் அந்த மூணு மாதத்தில் அலைந்த அலைச்சல் இருக்கிறதே!
சுகு போல் தணியாத ஆர்வம் இல்லையெனில் சரிப்பட்டுவராது!
பல நேரங்களில் என் முந்தைய அனுபவங்களுடன் ஒத்துப் போகிறது.
நேரமில்லை, இல்லையெனில் ரெட்டை நாயனம் வாசிக்கலாம் :-))
 
க.>

2010/5/6 karthi <karth...@gmail.com>

சுகுமாரன் ஐயா,
 
எல்லாம் முடிந்து ஓய்வு கிடைக்கும்போது ஒரு நாவலாக எழுதுங்கள்.
Docu-novel போல. பெரும் வரவேற்பு இருக்கும். காரம் மணம் குணம்
நிறைந்த அனுபவங்கள். சோகமும் சுகமும் உண்டு. இப்போதே ஒரு
நாவலின் சுவையோடுதான் படித்து வருகிறேன்.
 
ரெ.கா.

--

Innamburan Innamburan

unread,
May 6, 2010, 8:03:48 AM5/6/10
to mint...@googlegroups.com
ஸுபாஷிணி,
என்ன மாயாஜாலங்கள் செய்து, இந்த சுகுமாரனை வளைத்துப்போட்டீர்கள்! 20 06 2010 அன்று அவரை, "ஓலைச் சுருட்டுவது எப்படி" என்ற தலைப்பில் பேசச் சொல்லுவோம்.
இன்னம்பூரான்


2010/5/6 karthi <karth...@gmail.com>
DSC02531[2].jpg

Innamburan Innamburan

unread,
May 6, 2010, 8:06:51 AM5/6/10
to mint...@googlegroups.com


2010/5/6 N. Kannan <navan...@gmail.com>

Kamala Devi

unread,
May 6, 2010, 10:03:55 AM5/6/10
to mint...@googlegroups.com
எழுத வார்த்தைகளில்லை சுகுமாரன்
/ அமைதியாக வாசிக்கிறேன்.
அன்பு கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 6 May 2010 13:34:13
Subject: Re: [MinTamil] ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !
DSC02531

Thiruvengada Mani T.K

unread,
May 6, 2010, 10:40:09 AM5/6/10
to mint...@googlegroups.com
Dear Sugumaran
Even though I know some of your struggles earlier itself, I read with interest and enjoying it as a thril novel. I was waiting for getting my tamil fonts restored for participating in this thread but since it is taking longer time, I rather feel guilty for not participating in this thread so long.
I even wonder whether this could have been achieved if the selection was some others than you and SelvaMurali. I take this oppurtunity to thank Mrs.Subashini and Dr.Kannan for identifying you rightly.
 
Pl.continue with your thriller...we are waiting anxiously to listen to more thrilling parts... since I know about your Kolli Malai trip already...
Best wishes
Mani

2010/5/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>



--
Dr.T.K.Thiruvengada Mani
DSC02531

Subashini Tremmel

unread,
May 6, 2010, 2:23:45 PM5/6/10
to mint...@googlegroups.com
திரு.இன்னம்பூரான்,

 
2010/5/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஸுபாஷிணி,
என்ன மாயாஜாலங்கள் செய்து, இந்த சுகுமாரனை வளைத்துப்போட்டீர்கள்!
இது நகைச்சுவை போல சொல்லப்பட்டாலும் சரியான ப்ரயோகமில்லை. பல பேர் வாசிக்கும் மடலாடற்குழுவில் இப்படிப்பட்ட உதாரணம் வாசிப்பதற்கு பொறுத்தமானது அல்ல.!
 
இந்த குறிப்பிட்ட ஓலைச்சுவடி பணி பற்றிய எண்ணம் எனது சிந்தனையில் உதித்த நாளிலிருந்து தமிழகத்திலேயே எத்தனை பயணங்கள், சந்திப்புக்கள்,  இல்லம் திரும்பிய பின்னர் இன்று வரை எத்தனை தொலை பேசி அழைப்புக்கள், ஏற்பாடு தயாரிப்புக்கள், பொருளாதார பிரச்சனைகள் நான் பின்னிருந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்பது ஒரு சிறு குழுவினருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.  அதுபோல திரு.சுகுமாரன் திரு.செல்வமுரளியின் தன்னலமற்ற சிந்தனை, உழைக்கும் ஆர்வம்-  இது இந்த நல்ல பணியில் அவர்கள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழத்துடன் சேர்ந்து ஈடுபடவும் அவர்களால் இப்பணி சிறப்புறவும் வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றது என்று நோக்க வேண்டும்.
 
மின்தமிழ் மின்னாடல் குழுவில் மட்டுறுத்தல் செய்வதும் வலைப்பக்கத்தை நிர்ணயிப்பது மட்டும் எனது பணியல்ல. ஒரு சர்வதேச நிறுவனத்தில் மிகவும் பொறுப்புள்ள பணியில் இருக்கும் எனக்கு திட்டங்களை வகுத்து அதனை எப்படி சரியாக நடத்துவது என்பதில் மிகத் தேர்ந்த அனுபவம் இருக்கிறது. அப்படி ஒரு மாயாஜாலம் செய்திருக்கின்றேன் என்றால் அது எனது கடின முயற்சி. எனது உழைப்பு.   இறைவனின் அருள். சரியான மனிதர்களை சரியான நேரத்தில் சேர்த்து வைத்து செயல்பட வைப்பதும் இந்த இறையருள்  தான். 
 
-சுபா

Innamburan Innamburan

unread,
May 6, 2010, 2:34:57 PM5/6/10
to mint...@googlegroups.com
பொருத்தமில்லா பிரயோகத்திற்கு வருந்துகிறேன். உங்கள் கடின உழைப்பும் , இறையருளும் நாம் அறிந்ததே.
இன்னம்பூரான்

2010/5/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
May 6, 2010, 6:16:09 PM5/6/10
to mint...@googlegroups.com
ஓம்
திரு சுகுமாரன் குழு அன்பர்களின் செயலாற்றலும், சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் தன்னலம் பாராது சேவைக்கென்றே உழைக்கும் போது மேம்படுகின்றது என்பது தெள்ளெனத் தெரிகின்றது. ஒருபுறம் பொறாமையாகக் கூட  இருக்கிறது. அந்தக் குழுவோடு இணைந்து செயற்படக் கொடுத்துவைக்கவில்லையே என்று.போற்றினும் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றினும் தூற்றட்டும் என்ற முடிவோடு களம் புகுந்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். ஏதாவது சிலசுவடிகளைக் கையில் வைத்திருந்தால் பார்ப்பவர்களுக்கு நம்முடைய தேடல் புரிய வாய்ப்பிருக்கலாம்.

களைப்பாகப் பயணித்தவர்கள் சற்றே ஓய்வு நினைப்பதற்காக ஒரு சம்பவம்.ஒரு கிராமத்தில்  இரண்டு வரிசையாக அமைந்த எதிர் எதிர் தெருக்களில் இரண்டு பெருந்தனக்காரர்கள் வசித்துவந்தனர்  இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகை. ஒருவரை ஒருவர் பலவகையிலும் முந்தி உயரவேண்டும் என்றுபோட்டி போட்டுக்கொண்டே இருந்தனர். இக்குடும்பத்தினர் எதிர்குடும்பத்தினருடன் பேசுவதில்லை. இக்குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை அக்குடும்பத்தினர் விரும்பி  நோட்டம் இடுவர்.
ஒருநாள் துறவிகள் குழு ஒன்று அக்கிராமத்தின் அந்தத் தெருவில் வருகை புரிந்தனர். வந்தவர்கள் திருக்கூட்டமாய் எதிர்வரிசை பெருந்தனக்காரர் வீட்டின் தலை வாயிலில்  நுழைவதை இந்த வரிசையில் வசிக்கும் பெருந்தனக்காரர் தன் வீட்டு மாடியில் இருக்கும் போது பார்த்துவிட்டார். வைத்த கண் பிறழாமல் அந்த வாயிலையே பார்த்துக்கொண்டு எப்போது அந்தத் திருக்கூட்டம் வெளியே வரும்?; அங்கு என்ன நடந்தது?; துறவிகளுக்கு அவர் என்ன கொடுத்தார்? என்பனவற்றை தெரிந்துகொள்ளவில்லையென்றால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது.  ஒருமணி நேரம் ஆகியும் அத்திருக்கூட்டம் வெளியில் திரும்பி வராததால் அவருடைய கண்கள் பூத்துவிட்டன. அவருடைய அங்கலாய்ப்பு மேலோங்க வழிமேல் விழியாய் கண்கொத்திப் பாம்பாய், தூண்டிலில் மீன் பிடிப்பவன் மிதவையில் வைத்த கண் போல் காத்திருக்கையில் ஒரு துறவி வெளியே வந்தார். சற்று நேரத்தில் அக்கூட்டம் முழுமையும் வெளியில் வரவும், அவர்களைத் தம் இல்லத்திற்கு வருமாறு தக்க மரியாதையுடன் அழைத்தார். உபசாரமாக அழைத்து தரை விரிப்பை த் தன் கையாலேயே விரித்து குடிக்க எலுமிச்சை சாறு வழங்கி, ஆன்மீகம், கலாச்சாரம்,  இலக்கியம், இலக்கணம் என்று பலவற்றைப் பேசினர். எனினும் அவர்களுக்கு எதிர் வீட்டில் என்ன கிடைத்தது, அவ்வளவு நேரம் எவ்வாறு கழிந்தது என்பதை அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்க பெரும் முயற்சி செய்தும் அவர்களிடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. வரட்டு வேதாந்தமாய் சோல்லாடல் போய்க் கொண்டிருந்ததே அன்றி பயனின்றி நேரம் கழிந்துகொண்டெ இருந்தது.
 அப்போது ஒரு துறவி ஒரு பெருமூச்சுவிட்டு, கொட்டாவியுடன் விரலை சொடுக்கிவிட்டு, “ கடைசியில் அவர் வீட்டில் செய்தது போலத்தான் இங்கும் செய்யவேண்டியிருக்கும் போல் இருக்கிறதே” என்றார். பெருந்தனக்காரருக்கு உற்சாகம்; அங்கு என்ன செய்தீர்கள்? என்றும் கேட்டார். அதற்கு அந்தத் துறவி,” ஐயா! சற்றே வயிற்றுக்கு ஏதாவது கிடைத்தால் நன்று” என்று திறந்த மனத்துடன் வாய்விட்டார். பெருந்தனக்காரர் எதிர் பார்த்த தகவல் உண்டால் தான் வெளிவரும் என்ற சூழலைப் புரிந்து கொண்டு உடன் சமையலுக்கு ஏற்பாடு செய்தார் மிக்க மகிழ்ச்சியுடன்.  உணவு உறுதிப் படுத்தினாலும் துறவியிடமிருந்து விபரம் கிடைக்கவில்லை. சுமார் அரை மணி நேரத்தில் அமுதுபடைத்தார்.  உண்டு ஏப்பம் விட்டு அனைவரும் சற்றே சிரமப் பரிகாரமாய்த்ய தூண்களிலும் சுவறிலும் சாய்ந்து அமர்ந்தனர். ஆயினும் ‘அங்கு நடந்தது என்ன?’ என்பதைத் தெரிந்து கொள்ளும் தணியாத ஆவல் பெருக்குடன், “ஐயன்மீர்! அங்கு ஏதோ செய்ததாகச் சொன்னீர்களே? என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார் பெருந்தனக்காரர்.
பதில் ஏதும் சொல்லாமல் தலைமைத் துறவி எழுந்ததும் அனைவரும் எழுந்து உண்டிக்கு நன்றி சொல்லிவிட்டு வாழ்த்தி விட்டு புறப்படலாயினர். பெருந்தனக்காரர் தலைமைத் துறவியின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு,”:அய்யா! என் கேள்விக்கு பதில் என்ன?” என்று கேட்டார். துறவிகள் அனைவரும் வாயிலைத் தாண்டி  வெளியே வந்தனர். தன் கைகளை விடுவித்தக் கொண்ட தலைமைத் துறவி , “ஐயா! உங்கள் உணவுக்குப் பின்தான் எங்களுக்கு உயிர் வந்தது. எதிர் வீட்டுக் காரர் நன்கு கற்றறிந்தவராய் நடந்து கொண்டார். ஆய்வுகள் பல செய்து இலக்கியம் ஆன்மீகம் அரசியல் காழ்ப்பு என பலபடப்  பேசினார். பசியின் மிக்கோரை பலப்பல கேள்விக் கணைகளால் துளைத்துக் கொண்டே இருந்தார். நீரைத் தவிர ஏதும் தரவில்லை. அதனால் களைப்புற்ற அடியவர்கள் தம் கைகளை மடித்து தலைக்கடியில் வைத்து தரையில் அங்கங்கே படுத்தனர். அந்த அருளாளர் எழுந்து கை கூப்பி சென்று வாருங்கள் என்று விடைகொடுத்து வெளியே அனுப்பினார். நல்ல வேளையாக நீங்கள் அமுது படைத்து உதவினீர்கள். நீங்கள் உண்டியைப் பற்றிப் பேசாது சொல்லாடலிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த வேளையில் அந்த வீட்டில் செய்ததைப் போன்றுதான் (கைகளை மடித்துத் தலைக்கடியில் வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும்)இங்கும் செய்யவேண்டும் போல் இருக்கிறதே என்று அடிகள் உங்களிடம் கூறினார். நன்றி சென்றுவருகிறோம் என்று திருக்கூட்டம் வெளியேறியது.
அட அடிகளே இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே! என்றார். புன்னகையுடன் திருக்கூட்டம் தம் வழி சென்றது.
ஓம். வெ.சுப்பிரமணியன்.
2010/5/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>

annamalai sugumaran

unread,
May 7, 2010, 2:50:45 AM5/7/10
to mint...@googlegroups.com

களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௧௦  -   ( 10 )
                                                        --  அண்ணாமலைசுகுமாரன்
 -----------------------------------------------------------------------------------------------------------
சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்க்காகச்சுவடியில் வசம்பு ,மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள் .அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும் .
இங்ஙனம் சுவடிபடிக்கத்தொடங்கும் முன் மை தடவுவதால்
அக்ஷ்ராப்பியாசத்தை "மையாடல் விழா" என்று சொல்லுவார்கள் ..
                         
--- உவேசா அவர்களின் "நல்லுரைக் கோவை" தொகுதி
------------------------------------------------------------------------------------------------------------                ஆடுவோமே !  அடைந்து விட்டோம் முதல் சுவடிகளை என்று !                                 ---

காலை  8.00 மணி . தமிழ் நாட்டு மக்கள்  அப்போதுதான் " டீ  " அருந்தியபடி ஆங்காங்கே அமர்ந்து அரசியலை அலசும் நேரம் .

நானோ தேடியலைந்து காலை உணவை எப்படியோ முடித்துக்கொண்டு திருவள்ளூர் கோயில் வாசலில் எங்கள் ஓலைச சுவடி வாகனத்தின் வருகைக்காக காத்திருந்தேன் ..எதிரில் தெரிந்த திருவள்ளூர் வீரராகவ சுவாமியின் நெடிய அழகிய கோபுரத்தைப் பார்த்தபடி நின்றேன் .
இன்று காலை வழக்கத்துக்கு  முன்னமே தயாராகி காலை   ஆறுமணிக்கே கோயிலுக்குச் சென்றுவிட்டேன் ,.ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்ச்சியளுக்கும் வீரராகவப் பெருமாளையும்  அருகில் உறைந்துள்ள  வசுமதி என்ற கனகவல்லியும் கண்டு "இன்றாவது எங்கள் ஓலை பெறும் கணக்கை துவக்கி வைத்திட " மனமுருகி வேண்டினேன் ..

20061102-thiruvalur_gopuram.jpg
மன அமைதியுடனும் ,உணவுண்ட திருப்தியுடனும் காத்திருக்கும் போது
சிறிது நேரத்தில் எங்கள் ஊர்தியும் வந்துவிட்டது .

பழவேற்காட்டில் திரு ஹரிதாஸ் வீட்டில் பேசும்போதே அவர் எங்கே வேலை செய்கிறார் என்று கேட்டு முகவரி வாங்கி இருந்தோம் .அவர் திருப்பாலைவனம் என்ற ஊரில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பதையும் அறிந்தோம் .
முன்பே ஒரு முறை அந்த திருப்பாலைவனம் ஊர்  வழியாக சென்றிருக்கிறோம் .அங்கே இர்ருக்கும் அழகிய கோயிலும் எங்களைக் கவர்ந்தது .அருகில் சென்று பார்க்கயிலவில்லையே என்ற வருத்தம் மனதிலிருந்தது .
இப்போது மீண்டும் திருப்பாலைவனம்  செல்லும் வாய்ப்பு கிடைத்ததும்
மனதில் மகிழ்ச்சி கூடியது .ஆனால் அங்கும் கோயிலைப்பார்க்க நேரம் ஒதுக்க இயலவில்லை .ஆனாலும் பலா மரம் அங்கு ஸ்தலவிருஷமாகவும்   யோகாம்பாள் உடனுறை திருப்பாலீஸ்வரர் அங்கே அருள் பாளிப்பதாலும் அந்த பெயர் வந்ததாக அறிந்தேன் .
இதை அறிந்த உடன்தான் ஏன் பாலைவனம் என பெயர் வந்தது தமிழ் நாட்டில்  அருகில் ஏதாவது பாலைவனம் இருந்திருக்குமா  என்ற என்னுடைய மனதில் அரித்து கொண்டிருந்த   அறியும் வேட்க்கை சற்று தணிந்தது ..

சரியாக பள்ளிக்கூடம்  ஆரமித்ததும் நாங்கள் பள்ளிக்கூடத்தில் நுழைந்து விட்டோம் .ஹரிதாஸ் அவர்களுடன் அவரது பணிக்கு இடைஞ்சல் இல்லாமல் சற்று நேரம் தனியே பேச விரும்புவதாக கூறினோம் .
அவரும் அங்கே காலியாக இருந்த ஒரு வகுப்பறையில் சென்று சற்று நேரம்காத்திருக்குமாறு  கூறினனார் .நாங்களும் சென்று வகுப்பறையில் சமத்து பிள்ளைகளாக அமர்ந்திருந்தோம் .

எங்களை அதிகநேரம் காக்கவைக்காமல் ஹரித்தாஸ் அவர்களும் வந்துவிட்டார் .அவரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம் .
"ஆமாம் நேற்று வீட்டுக்கு வநது போனதாக வீட்டில் கூறினார்கள் "
என்றபடி "அதுதான் நேற்றே போனில் கூறினேனே வீட்டில் இருக்கும் ஓலைசுவடி எங்கள் நிலம்  பற்றிய ஆவணம் .அது உங்களுக்கு தேவை இராதே " என்றார் .
நாங்கள் "ஐயா நாங்கள் இங்கே தேடிவந்தது அதுபற்றி பேச இல்லை "
"வேறு எனன வேண்டும் உங்களுக்கு" என்றார் அவர் முகத்தில்லேசான உஷார் நிலை ஒரு விறைப்பு தன்மை வந்தது .
"அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஐயா ,உங்கள் ஊரைச்சேர்ந்த கணேசனும் நீங்களும் உங்களிடம் இருந்த ஓலைச் சுவடிகளை பொன்னேரி நூலகரிடம் தந்ததாக கூறினார் ,அது பற்றி உங்களிடம் பேசிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தோம் .
உங்கள் வீட்டில் இருக்கும் சுவடிகள் எங்களுக்கு வேண்டாம்"  என்றோம் .

ஒருவாறு சற்று இறுக்கம் நீங்கியவராக ஹரிதாஸ்
"அப்படியா  ! ஆமாம் நாங்கள் எங்களிடம் இருந்த ஓலை சுவடிகள் அனைத்தையும் நான்கு வருடம் முன்பு இதுபற்றி கணக்கெடுக்க வந்த பொன்னேரி நூலகர் வசம் தந்துவிட்டோம் ."
"அப்புறம் பிறகு அவரை பார்த்தீர்களா "
"இல்லையே பிறகு பார்க்கவில்லை "
அந்த ஓலைச் சுவடி யார்மூலமாவது உங்களிடம் திரும்பி வந்ததா ?
"இல்லையே ! இதுவரை யாரும் வநது ஓலைச் சுவடியை தரவில்லையே "
ஐயா ,நீங்கள் அந்த ஓலை சுவடிகளை நூலகரிடம் தததர்க்கு ஏதாவது
ரசீது வாங்கினீர்களா ?
"இல்லையே அது அவ்வளவு முக்கியமா ,எதோ வீட்டில் இருந்தது வந்தூ கேட்டார்கள்   ,கொடுத்துவிட்டேன் " என்றார் அவரைபபொருத்தவரை
அதன் முக்கியத்துவம் அவ்ளவே !

"ஒன்றும் இல்லை சார்! நேற்று  பழவேற்காட்டில் இருந்து நேராக போன்னேரிதான்  போனோம் .ஆனால் அங்கே விசாரித்தபோது
நூலகத்தில் அந்த ஓலைச் சுவடிகளை உங்களிடம் திருப்பித்தந்துவிட்டதாக கூறுகிறார்கள் "

"எனன இது புது தொந்தரவு ! என்னிடம் எதுவும் திருபி வரவில்லையே "
இல்லை ஐயா , நீங்கள் எதாவதூ ஞாபக மறதியாக எங்காவது வாங்கி வைத்திருக்கபோகிரீர்கள் என்றுதான் பள்ளிக்கூடத்திற்கே தேடி வந்தோம் "
"இல்லை இல்லை ! என்னிடம் யாரும் திருப்பிகொடுக்கவில்லை >
சரி நீங்கள் ஒருவாரம் சென்று வாருகள் நான் பொன்னேரி போனால் விசாரிக்கிறேன் "என்று சாவதானமாக கூறினார் .
"ஐயா நாங்கள் இந்த மாவட்டம் வநது நான்கு நாள் ஆகப்போகிறது .
நாளையுடன் இங்கு எங்கள் பணி முடியப்போகிறது .
நாங்கள் பொன்னேரி நூலகர் கைபேசி எண் வைத்திருக்கிறோம் . உங்கள் முன்னேயே அழைக்கிறோம் ,அவர் எனன சொல்கிறார்  பாருங்கள் "
என்றபடி பொன்னேரி நூலகர் கைபேசி எண்ணிற்கு அழைத்தோம் .
அவர் நேற்று  நாங்கள் வந்தபோது இல்லாமல் போனதற்கு அவசர காரியங்கள் திடீர் என வந்துவிட்டது எனக் கூறினார் .நாங்கள் மீண்டும் பழவேற்க்காடில் பெற்ற ஓலைகளைப் பற்றிகேட்டோம் .அவர் அதை அப்போதே வாங்கிய ஆசிரியரிடமே தந்துவிட்டதாக கூறினார் .

நாங்கள் பணிவாக "சார் நாங்கள் இப்போது ஓலைச் சுவடிகளை கொடுத்த அந்த ஆசிரியரின் பக்கத்தில் தான் இருக்கிறோம் ,தயவு செய்து சற்று நேரம் அவரிடம் பேசுங்கள் " என்று கூறியபடி திரு ஹரிதாஸ் வசம் கைபேசியைத் தந்தோம் .
ஒன்றும் கூறவோ செய்யவோ முடியாது இரண்டு பேரும் சற்று திகைத்து
போயினர் .அவர்களிடையே நீண்ட நேரம் பேச்சு நடை பெற்றது .நாங்கள்  அவர்களை தனியே பேசவிட்டு சற்று தூரத்தில் போய நின்றோம் .
ஒருவாறு இருவரின் பேச்சும் ஒரு முடிவுக்கு வந்தது .
திரு ஹரிதாஸ் எங்களை அழைத்தார் ..
நூலகர் உங்களுடன் பேசவேண்டுமாம் என்று கைபேசியை திருப்பித்தந்தார் .
நூலகர்" சார் இன்று மாலை ஐந்து மணிக்கு நூலகம் வாருங்கள்
அதற்குள் நான் தேடி எடுத்துவைக்கிறேன் "
எங்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை .
பிறகு நாங்களும் இதை கிளறவில்லை .யார்பக்கம் தவறு என்று கண்டுபிடித்து எங்களுக்கு எனன ஆதாயம் .எங்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது .
பின்பு மகிழ்ச்சியுடன் திருப்பால நாதர் பற்றியெல்லாம் பேசிவிட்டு ஹரிதாஸ் வாங்கிக்கொடுத்த டீ யை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம் .

பிறகு வேறு பல இடங்களுக்கு சென்றுவிட்டு சரியாக ஐந்து மணிக்கு பொன்னேரி நூலகத்தில் நுழைந்தோம் .
நூலகரும் காத்திருந்தார் ,உடனே எங்களை அமரச்சொல்லிவிட்டு
அங்கிருந்த அலமாரியில் இருந்து பப்பெரில் சுற்றப்பட்ட ஓலைச் சுவடி கட்டுகளை எடுத்தார் .
நாங்களும் நன்றி கூறி பெற்றுக்கொண்டோம் .
வேறு ஒன்றும் அதிகம் பேசவில்லை .நேற்று ஏன் இல்லை என்றார் இப்போது எப்படி வந்தது என்றெல்லாம்  கேட்கவில்லை .
அது தெரிந்து எனன செய்யப் போகிறோம் .
ஓலை தான் கைக்கு வநது விட்டதே !

எங்களுக்கு உடலெங்கும் சிலிர்ப்பு  9  நாட்கள் சுற்றி முதல் ஓலை சுவடிகளை கொடையாக பெற்றுவிட்டோம் .
மனதிற்குள் இறைவனுக்கு நன்றி கூறினோம் .

விரைவில் அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம் .
எப்போதுமே ஓலை சுவடிகள் பெற்றால் உடனே அந்த இடத்தை காலி செய்து விடுவோம் .ஏன் எனில் கொடுத்தவரே மனம் மாறிவிடலாம் .அல்லது வேறு யாராவது சுக்கிராச்சாரியார் மாதிரி கொடுக்கும் தானத்தை கெடுக்கலாம் ,எதற்கு வம்பு என்று உடனே இடத்தை காலி செய்துவிடுவோம் .

இன்னும் சில சுவடிகளைப் பற்றிய துப்பு அன்றே கிடைத்ததைபற்றி அடுத்ததில் பார்க்கப்போகிறோம் .
அன்புடன் ,

அண்ணாமலை சுகுமாரன்

------------------------------------------------------------------------------------------------------------
ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது .
சரியான சுவடியை சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல்  ( acquire )
என்பது தொடக்கம் .அதன் பிரதிகளைத் திரட்டல் (  collect )
ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல் அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை
நூலக பதிவுகள் (  cataloque ) போன்றவற்றில்  இருந்து  பெறுதல் அடுத்த தளமாகும் .
சுவடியின் வரலாறு  என்பது  இதில்   முக்கியமானது .
மூலமா ,படியா என்பதுடன் அதன் கால் வழியும் , தனி நபர் , மடம் கல்வியாளர் என யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும் ,
யாரை எட்டியது ,யாரால் ஏற்கப்பட்டது  (  reach and reception  ) என்பன
இதனால் புலப்பட்டு அச் சுவடிக்கான  வரவேற்பைப் பற்றி அறிய முடியும் .

விருப்பம் ,ஆர்வம் ,முயற்சி  என்பதுடன் ஆய்வு நுணுக்கமும் ,அறிவுத் திறனுமே இச் சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் .
                                          -   டாக்டர் அன்னி தாமசு --பதிப்பியல் எண்ணங்கள்
------------------------------------------------------------------------------------------


பழவேற்காட்டில் பெற்ற பயன் ! 

சென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக  அத்தனைப  பரபரபின்றி  கழிமுகங்களும்  காடு நிலம் ,ஏரி கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது

20061102-thiruvalur_gopuram.jpg

Tthamizth Tthenee

unread,
May 7, 2010, 6:11:17 AM5/7/10
to mint...@googlegroups.com
பலா மரம் அங்கு ஸ்தலவிருஷமாகவும்   யோகாம்பாள் உடனுறை திருப்பாலீஸ்வரர் அங்கே அருள் பாளிப்பதாலும் அந்த பெயர் வந்ததாக அறிந்தேன் .
இதை அறிந்த உடன்தான் ஏன் பாலைவனம் என பெயர் வந்தது தமிழ் நாட்டில்  அருகில் ஏதாவது பாலைவனம் இருந்திருக்குமா  என்ற என்னுடைய மனதில் அரித்து கொண்டிருந்த   அறியும் வேட்க்கை சற்று தணிந்தது ..
 
 
பலாமரங்கள் நிறைந்த வனமாக ஒருகாலத்தில் அந்த ஊர் இருந்திருக்கலாம்
 
அதனால் திருப்பலாவனம்  என்று பெயர் வந்திருக்கலாம்
 
அந்தப் பெயர் காலப்போக்கில் திருப்பாலைவனம் என்று மறுவி இருக்கலாமோ என்று தோன்றுகிறது
 
எப்படி இருந்தாலும்   இனிய பலாச்சுளைகளாக ஓலைச்சுவடிகள் உங்களுக்கு கிடைத்த இடம் ஆகவே  திருப்பாலாவனம் என்றே அழைக்கலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
7-5-10 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
20061102-thiruvalur_gopuram.jpg

annamalai sugumaran

unread,
May 7, 2010, 9:40:32 AM5/7/10
to mint...@googlegroups.com
நன்றி திரு ரெ.  கா ,
 தொடர் சுவையாக இருப்பதாக தாங்கள் கூறியதற்கு நன்றி .

நான் நேற்று தான் உங்களிடம் இருந்து எந்த கடிதமும் இல்லையே படிக்கிறீர்களா இல்லையா என்று மடலிடலாம் என்றிருந்தேன் .
அதுசரி ஏன் இந்த ஐயா ,
நீங்கள் அழைக்கும் சுகுவே சுகம் .
அன்புடன் ,
சுகுமாரன் 

2010/5/6 karthi <karth...@gmail.com>
DSC02531[2].jpg

karthi

unread,
May 7, 2010, 9:04:10 PM5/7/10
to mint...@googlegroups.com
அன்பின் சுகு,
 
அப்படியே. இதற்குப் பின், கடைசியாக எழுதினீர்களே, நூலகர் சொன்ன பொய்,
அதை நீங்கள் பிடித்த விதம் மிக அருமை.
 
ஏடு கிடைத்தது; இனி ஏன் அந்தப் பொய்யைத் தேடி கேடு ஏற்படுத்த வேண்டும்
என்ற எண்ணம் விவேகம்.
 
தொடருங்கள்.
 
அன்புடன்
DSC02531[2].jpg

annamalai sugumaran

unread,
May 11, 2010, 2:02:51 AM5/11/10
to minT...@googlegroups.com



களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௧௧    -   ( 11 )
                                                        --  அண்ணாமலைசுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------------
ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப்  போய்விட்டு   திருநெல்வேலி வந்தேன் .தெற்கு புதுதெருவிலிருந்தவக்கீல்
சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன் .
"எங்கள் வீட்டில் ஊர்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில்இருந்தன .எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய்விட்டன .இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனன செய்வதென்று யோசித்தேன் .".
ஆற்றில் போட்டுவிடலாமேன்றும் ஆடிபதினேட்டில் சுவடிகளைத் தேர் போலக் கட்டிவிடுவது சம்பரதாயமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள் .நான் அப்படியே எல்லா ஏடுகளையும்  ஓர்  ஆடிபதினேட்டில் வாய்க்காலில் விட்டுவிட்டேன்" என்றார் .
        ---- உவேசா  அவர்களின் என சரித்திரம் எனும் நூலில் இருந்து  .
000000000000000000000000000000000000000000000000000000000


 சிறியவயதில் ஆடி பதினெட்டில் சப்பரம் எனும் சிறியதேர் செய்து  அதை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்றதுண்டு  ஆனால் நல்லவேளையாக அதில்  சுவடிகளை வைத்து  யாரும் இழுத்து சென்றதைப் பார்த்ததில்லை..ஆனால் இந்த பழக்கம் ஏன் வந்திருக்கிறது என தெரிந்தபோது  மனம் திடுக்கிடுகிறது ..

உலகின் எந்த ஒரு நாட்டிலும்  அவர்களின் பழைய அறிவு செல்வங்களான சுவடிகளுக்கு இத்தகைய ஒரு முடிவு கிடைத்ததாக எந்த சான்றும் இல்லை .ஆனால் நாம் மட்டும் ஏன் அப்படி செய்தோம்  ? சுவடிகள் ஹோமாத்தீயில் ஆஹுதி ஆகிறது .
கட்டுகட்டாக ஆற்றில் வரும்  புது வெள்ளத்தில் பூசனை செய்து விடப்படுகிறது !  ஏன் இப்படி ? நம் மரபுச் செல்வங்கள் மட்டும்   ஏன்  நம்மால் மதிக்கப்படவில்லை ?
இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ ?
-----------------------------------------------------------------------------------------------------------

முடிவடைந்த திருவள்ளூர் தேடல்


ரத்தினசபை என்றழைக்கப்படும்
நடராஜர் நாட்டியமாடிய பஞ்சசபைகளில் முதல் தலமான  திருவாலங்காடுக்கு நாங்கள் மீண்டும் போகவேண்டி நேர்ந்தது        .பலாவனத்தில் இருந்து ஆலங்காட்டிற்கு சென்றோம் .
ஆலங்காட்டிலும் சிதம்பரம் மாதிரி ஓர்  ரகசியம் மறைந்து  கிடக்கிறது.  நடராஜருக்கு பின்புறம் சன்னதியில் பாதியை மறைத்து சுவர் எழுப்பட்டு . இதற்குள்எப்போதும்  காரைக்காலம்மையார் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது .
காரைக்காலம்மையார் .மூத்த திருப்பதிகம் பாடிய இடம் இது .
அவர் முக்தியடைந்த ஸ்தலம் இதுவே .

திருவாலங்காட்டில் நிறைய முகவரிகள் பட்டியலின் படி  இருந்தன .
நாங்கள் ஒவ்வன்றாக பார்த்துவந்தோம் .பலருக்கும் ஓலைச் சுவடியுடன் தொடர்பே இல்லை எனககூறிவிட்டார்கள்.ஆனால் அதில் கணேசன் என்பவர் மட்டும்" சுமார்  120  ஆண்டுகளுக்கு முன் அவர்களது
முன்னோர்கள் வருடாவருடம்  நாடகம் போடுவது உண்டு .
அதுசம்பந்தமான மகா பாரதகதைகளை கவிதையாக எழுதி  ஓலைச் சுவடிகளில் தான் பாடங்கள்  எங்கள் வீட்டில் இருந்தது .ஆனால் நாங்கள் படித்துவிட்டு வேறுவேறு வேலைகளுக்கு இரண்டு தலைமுறையாக போக ஆரமித்துடன் ,இந்த நாடகம் போடும் வழக்கம் எங்கள் குடும்பத்தை விட்டு போய்விட்டது "என்றார் .
அவரது பாட்டானர் பெயர் தாண்டவராய ரெட்டியார் என்றார் .
அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்கள் பெயர்கள்  எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது .
ஆவலை அடக்க முடியாத நாங்கள் "எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ,காத்திருக்கிறோம் கொஞ்சம் தேடிப்பாருங்கள் " என்று நயமாக பேசத்தொடங்கினோம் .
அவர் நான் அரசு போக்குவரத்து துறையில் நடத்துனராக இருக்கிறேன் .
எனக்கு இந்த ஓலைச் சுவடிபற்றிய அறிவோ ,ஆவலோ கொஞ்சம் கூட கிடையாது ." நான் வீடு கட்டிக்கொண்டுதனியே வந்துவிட்டேன் அப்போதில் இருந்தே நான் வீட்டில் எந்த சுவடிகளையும் எப்போதும் கண்டதில்லை .
எனவே தேடவேண்டிய அவசியமே இல்லை " என்றார் .ஆனாலும்
வாடத்தொடங்கிய எங்கள் முகத்தைக் கண்டு எனன நினைத்தாரோ ,

" சரி  வாருங்கள் எங்கள் பூர்வீக வீட்டில் இப்போது எங்கள் அண்ணன் தான் இருக்கிறார் அவரிடம் அழைத்து போகிறேன்"  என்றார் .எங்கள் முகவரி பட்டியலில் அவர்அண்ணன்  பெயரும் இருந்தது எப்படியும் போகப்போகிறோம் .ஆனால் அழைத்து திரிந்து போவதைவிட வழி தெரிதவர் கூட போவது சுலபமல்லவா ? எனவே சந்தோஷத்துடன் அவருடன் புறப்பட்டோம் .

அவர் அண்ணன் திரு கோதண்டன்  வீட்டிற்கு  சென்றடைந்தோம் .
அவரது தம்பி உள்ளே சென்றுவிட்டு வெளியில் வந்தார் ."அண்ணன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் .நீங்கள் வந்திருப்பதை கூறிவிட்டேன் .அவர் உட்க்காரச்சொன்னார் " என்றார் .
உட்கார்ந்ததும் ஆசைகள் கிளைவிட்டுப் பெருக ஆரமித்தது .நிச்சயம் எதோ பெரிதாக இங்கே கிடைக்கப்போகிறது என எண்ணங்கள் ஓடத்தொடங்கியது .
உட்காரச் சொன்ன தம்பி அதற்குள் போய் எங்களுக்கு குளிர்பானம் வாங்கிவந்துவிட்டார் .
நாங்கள் இந்த இரண்டுமாதத்தில் நாங்கள் சென்னையில் இருந்து
கன்னியா குமரிவரை சுற்றி வந்து விட்டோம் .
இதில் வாழும் தமிழரிடம் என்ப்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிசய குணம் .இந்த விருந்தோம்பல்தான்.
அனைவருமே அவர்கள் வீட்டுக்குபோனால் ஏதாவது உண்பதற்கோ ,குடிப்பதற்கோ தர நிச்சயம் விரும்புகிறார்கள் ..
அதை மறுப்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை .
எனவே நாங்களும் விருப்பமுடன் ஏற்றுக்கொள்வோம் .
இது மேலும் ஒரு சுமுக நிலையையும் அங்கே தோற்றுவிக்கும்.

சில இடங்களில் குடிக்க நீராவது கொடுக்காமல் இருப்பதில்லை .
நீரை மட்டும் வாங்கி பேசாமல் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்து ,பிறகு அவர்கள் பார்க்காத போது மெல்ல கீழே வைத்துவிடுவோம் .ஒரு இடத்தில் இப்படித்தான் உற்ச்சாக மிகுதியில் தட்டமாட்டாமல் அவர்கள்
கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு அன்றைய இரவே மாத்திரை வாங்க
நூறு ருபாய் செலவு செய்ய நேர்ந்தது .எனவே அது ஒரு எச்சரிக்கையாக
எங்கள் பயணம் முழுவதும் அமைந்தது .

நாங்கள் குளிர்பானத்தை சாப்பிட்டு முடிப்பதற்குள் அண்ணன்  கோதண்டமும் சாப்பிட்டுவிட்டு எங்கள் அருகில் வநது திண்ணையில் அமர்ந்தார்
கிராமங்களில்  தான் இன்னும் சில இடங்களில் திண்ணை இருக்கிறது .இப்படி உட்கார்ந்து பேச வசதியாக .காற்றோட்டமாகவும்  இங்கும் இருந்தது .
திண்ணை பேச்சின் சுகமே தனி !

வழக்கம் போல் எங்கள் அறிமுகம் , எங்கள் பயணத்தின் நோக்கம் இவைபற்றிய விளக்க உரை எங்களால் அளிக்கப்பட்டது .
அவரும் அவரது மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார் .
பிறகு , "தம்பி சொன்னது உண்மைதான் .
நிறைய சுவடிகள் பல காலம் எங்களிடம் இருந்தது .
இரண்டு தலை முறையாக எங்கள் குடும்பத்தில் அவைகளை  படிப்பவர் குறைந்து போனதால் ,நாங்களும் சுவடிகளை  கவனிப்பதில்லை .
அவைகளே மெல்ல மெல்ல அழியத்தொடங்கின .
சரஸ்வதிபூஜை காலங்களில் அவைகளை தேடி எடுத்து வைத்துப் படைபதுண்டு .பிறகு பரண்  மேலேயே வைத்துவிடுவோம். " என்றார் .
" இப்போ  இருப்பவைகளை கொஞ்சம் காட்டுங்களேன் அவைகளையாவது
அழிவில் இருந்து காப்பாற்றுவோம்  " என்றோம்.

அதற்க்கு அவர்   " கொஞ்ச நாள் முன்னே வந்திருக்கக் கூடாதா ? ஒரு மூன்று மாதத்திற்கு முன் நீங்கள் வைத்திருக்கும் அதே  பட்டியலை வைத்துக்கொண்டு வருவாய் துறை அதிகாரிகள்
எனது வீட்டிற்கு வந்தார்கள் ,அவர்களும் நீங்கள் சொன்னபடிதான் கூறி
எங்களிடம் இருக்கும் ஓலைச்சுவடிப் பற்றி கேட்டார்கள் .
எங்களால் அப்போதும் உடனே ஓலைச் சுவடிகளை தேடி எடுக்க முடியவில்லை .நாங்கள் அவர்களிடம் தேடிப்பார்க்கிறோம் என்று கூறினோம் .பிறகு ஒருவாரத்தில் சுவடிகளை தேடி எடுத்து நாங்களே நேரில் திருத்தணி சென்று திருத்தணி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டோம்  " என்றார் .

" எத்தனை கட்டுகள் கொடுத்தீர்கள் "என்றோம்
 "நான்கு கட்டுகள் சுமார்  200  ஏடுகள் இருக்கும்
நாங்கள் தாசில்தாரிடம் ஓலை சுவடிகளை தந்ததும் அவர்கள் ஒரு ஒப்புதல் கடிதம் கொடுத்தார்கள்
அதை வேண்டுமானால் காட்டாட்டுமா ? "
"வேண்டாம் வேண்டாம் அதை பார்த்து எனன செய்யப்போகிறோம் "
என்றோம் .
முனைவர் கோவைமணி அவரிடம் தஞ்சை பல்கலை  தான் ,அனைத்து மாவட்ட த தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் ,
அதன் தொடர்பாகவே திருவள்ளூர் மாவட்டத்தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார் ,.
பிறகு நாங்கள் சென்ற இடங்களில் பல இடங்களிலும் வருவாய் துறை அதிகாரிகள் வந்தார்கள் ,ஓலைச் சுவடிபற்றி கேட்டார்கள் என்ற தகவல்களை எங்களுக்கு அந்த மாவட்டத்தில்  கூறினார்கள் .

பிறகு திருத்தணி சென்று தாசில்தாரை சந்திக்கவேண்டும் என்று முனைவர் கோவைமணி கூறினார் .

பிறகு அடுத்த இடங்களையும் பார்க்கவிரைந்தோம் .
நல்லாத்தூர் எனும் கிராமத்தில் தேடி அலைந்து பட்டியலில் இருந்த பாலசுப்ரமணித்தை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றடைந்தோம் .அங்கே அவர் இல்லை அவரின் சிறிய தந்தை ஆறுமுக உடையாரை சந்தித்தோம் .
"அவரது குடும்பம் பரம்பரையில் வைத்திய குடும்பமாம் .
சுற்றுப்பட்டு  ஐம்பது கிராமங்களில் இருந்து ஒரு காலத்தில் மக்கள் தேடிவந்து காத்துக்கிடப்பார்கள் .நோய்களை மருந்து ,மாந்திரீகம் இவைகளால் எங்கள் முன்னோர்கள் நீக்கினார்கள்"   என பெருமையுடன்
அவரது பரம்பரைப் பற்றி கூறினார் .
பிறகு அவரே இரண்டு தலை முறையாக இப்போது வைத்தியம் செய்வத்தில்லை .எல்லோரும் வேறுவேலைக்கு போய்விட்டார்கள் என்றார் .
நாங்களும் "  உங்கள் முன்னோர் பயன்படுத்திய ஓலைச் சுவடிகள் எல்லாம் எங்கே  நாங்கள் அவைகளை பார்க்கவேண்டும் " என்றோம் .
அதற்க்கு முருகேச உடையார் இருபது வருடத்திற்கு முன்னேயே
திருப்பதி பல்கலை ஆசிரியர் என்று ஒருவர் வநது அவைகளை வாங்கிக்கொண்டு போய்விட்டதாகக் கூறினார் .
" கொஞ்சம் தேடிப்பாருங்களேன் ஏதாவது மீதி இருக்கிறதா
நாங்கள் உங்களைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்
எங்களை வெறுங்கையுடனா அனுப்புவது ? "  என்றோம் .
அவர்களும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து
ஓலை சுவடிகள் ஒன்றும் இல்லை ,இவை   ஏதாவது பயன்படுமா
பாருங்கள் என்றபடி இரண்டு எழுத்தாணிகளின் கைப்பிடியை கொண்டுவந்தார் .
நாங்களா விடுவோம் .நன்றி சொல்லி அவைகளை முனைவர் கோவை மணி பெற்றுக்கொண்டார் .
 
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையின் அருகில் இருக்கும் அம்பத்தூர் ,கொரட்டூர் ,முகப்பேர் முதலியவை இருந்தன ..
இவைகளை திருவள்ளூர் மாவட்டம் தேடுதல் முடியப்போகும் கடைசி நாளான ஐந்தாவது நாளில் மாலையில் வைத்துக்கொண்டு பயணத்தை முடிப்பதாக முன்பே திட்டமிட்டிருந்தோம் .அவ்வாறே அந்த பகுதிகளுக்கு சென்றோம் .
பல இடங்களில் எங்களுக்கு பயனளிக்கும் பத்தில் கிடைக்கவில்லை .ஆனால் கொரட்டூரில் பழனியப்பன் என்பவர் முகவரி தேடியலைந்து போய் சேர்ந்தபோது ,அங்கே இருந்தவர்கள் பழனியப்பன் இறந்து சில தினங்களே ஆனதாகக் கூறினார்கள் .

நாங்கள் வந்த நோக்கத்தை எவ்வாறு தெரிவிப்பது எனத்தயங்கி நின்றபோது அவரது மருமகன் பாலச்சந்தர் என்பவர் , " பரவாக இல்லை
சார் ,நீங்க வந்த விஷயம் சொல்லுங்க " என்று எங்களை உள்ளேக் கூப்பிட்டு அமரச்சொன்னார் .நாங்களும் எங்களைப்பற்றிய சிறிய முகவுரைக் கூறினோம் .
அவர்"  திரு பழனியப்பன் ஒரு மிகப்பெரிய ஜோதிடர் .ஜோதிட சாஸ்திரத்தையே கரைத்து குடித்தவர் .பல சிறந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர் .உயர் அதிகாரிகாக பணியாற்றி ,ஒய்வு பெற்றுடன் ஜோதிடம் சம்பந்தமாக நீண்ட ஆராய்ச்சிகள் செய்துவந்தார் "என அவரது மாமனாரைப்பற்றி மிக உயர்வாகப் பேசினார் .

மேலும் மாடியில் ஒரு அறை  முழுவதும் சுமார்  2000  ஜோதிட ,மற்றும் இதர சாஸ்த்திர பண்டைய நூல்கள் சேர்த்துவைக்கப் பட்ட்ருப்பதாகவும் .ஆனால் தற்போது அவரின் மகன் ,தந்தையின் இறப்பிற்கு வநது விட்டு
அமெரிக்கா  சென்றுவிட்டதாகவும் .அவரிடம் அனுமதி வாங்கினால் நீங்கள் கூறியவாறு அவைகளை பார்ப்பதோ ,மின்னாக்கம் செய்வதோ முடியும் என்று கூறிவிட்டார் .
திரு பழனியப்பனை சந்திக்க முடியாமல் போனதை எண்ணி வருத்தம் தெரிவித்து அவரது மகனின் முகவரியை பெற்றுக்கொண்டோம் .

எப்படியும் நிச்சயம் அந்த புத்தக குவியலை பார்த்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் ..

இவ்வாறு எங்கள் ஐந்து நாள் திருவள்ளூர் தேடல்  அன்று முடிவுக்கு வந்தது .
அடுத்ததாக காஞ்சீபுரம் மாவட்டம் பார்ப்பதாக உறுதி செய்து கொண்டு ,அவரர் உடைகள் அடங்கிய மூட்டையுடன் எங்கள் வீடு நோக்கிய பயணத்தை தொடங்கினோம் .
பல்லவர் காலத்திலேயே நகரம் என்றால் காஞ்சி என்று பெயரெடுத்த காஞ்சியில் ,நாலந்தா போல் சிறந்த கல்வி களமாக விளங்கிய காஞ்சியில் எங்களுக்கு கிடைக்கப்போகும் சுவடிக்குவியல்களைப பற்றி மனதில் எண்ணியபடி எங்கள் பயணம் அமைத்தது .
மனத்தில் எண்ணியபடியே நிஜத்தில் நாங்கள் கண்ட சுவடிக் குவியல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம் .

அன்புடன் ,

அண்ணாமலை சுகுமாரன்


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Thiruvengada Mani T.K

unread,
May 11, 2010, 2:45:58 AM5/11/10
to mint...@googlegroups.com

அருமை!

எங்கே சுகுமாறனையும் சுவடியியலையும் சின்னாட்கள் காணவில்லையே என்று பார்த்தேன் – இன்று வந்து விட்டரர்கள். நன்றி.

முகவரிகள் இப்படிப் பொதுவுடைமையானதால் வந்த வம்புதான் உரியவரிடம் கிடைக்காமல் பல சுவடிகள் இடையாட்களிடம் மாட்டிக்கொண்டு விட்டன. அவற்றுள் எத்தனை அரிய தகவல்கள் இருந்தனவோ அம்பலத்திற்கு வராமலேயே அவை அழியப் போகின்றன.

 

இப்படி எடுத்துப்போன இடையாட்களைத்தேடி அவர்களிடமிருக்கும் சுவடிகளைப் பெற்றுப் பொது உடைமையாக்க அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

 

இழைமுடிவில் இத்தகவல்களை நூலாக வெளியிடுங்கள் சுகுமாறன். பல ஆய்வாளர்களுக்குப் பயனாக இருக்கும்.

 

மணி



2010/5/11 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani

Innamburan Innamburan

unread,
May 11, 2010, 7:28:48 AM5/11/10
to mint...@googlegroups.com
திரு.சுகுமாரன்,
அந்த அமெரிக்க நண்பரின், விலாசம், விவரங்கள் அவற்றை, திருமதி.ஸுபாஷிணியிடம் கேட்ட பிறகு கொடுத்தால், நான் பேசி அனுமதி வாங்க முயற்ச்சிக்கிறேன்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான

2010/5/11 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

annamalai sugumaran

unread,
May 11, 2010, 7:57:36 AM5/11/10
to mint...@googlegroups.com
நன்றி , முனைவர் மணி அவர்களே ,
இங்கே புதுவையில் மூன்று நாட்களாக கம்பன் மழை ,தும்பினாலும் கவிதைதான் வருது .
 
மேலும் கடுமையான சுட்டெரிக்கும் வெய்யிலும் ,அப்போப்போ போய்விடும் இணைய இணைப்பும் இன்னலின் இடையே வாழ்வதைப்பற்றி வகுப்பெடுக்கிறது .
அதனால் எழுதுவது தள்ளிப்போனது .
(இப்போதும் காலை  11  மணியில் இருந்து இணைய இணைப்பு இல்லை .)
அன்பிற்கு நன்றி ,
அன்புடன் ,
சுகுமாரன்

2010/5/11 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

அருமை!

Venkatachalam Subramanian

unread,
May 11, 2010, 3:50:32 PM5/11/10
to mint...@googlegroups.com
ஓம்.
அன்புடையீர்! உழைப்பும் பயனும் எப்போதும் ஒத்திருப்பதில்லை. காணச் சென்றவர் பெரும்பாலும் வீட்டில் இல்லை என்பதுதான் எப்போதும் கிடைக்கும் பதிலாகும். களப்பணியில் இருப்போர் பெறும் அனுபவங்கள் பலப்பல.எதிர்பார்த்த பலாபலன்களைவிட ஆயாசமும் சோர்வும் மிகுதியாகக் கிட்டும். எனினும் சில வேளைகளில் எதிர்பார்த்த பயனைவிட மிக மிக அதிகமாகவும் கிடைப்பதுண்டு.

கூடலூர் என்ற கிராமம் வேடசந்தூர் கரூர் பாதையில் அமைந்த ஒரு கிராமம். வருவாய்த்துறையின் முதல் கடமை நிர்வாகம். மற்றது நிலவரி வசூல். கடன்கள் இதனுள் அனைத்து விதமான கடன் வசூல், பிற துறைகளின் வசூலிக்க முடியாத பிற கடன்கள், தண்டம், நீதிமன்றக் கட்டணம்   ஆகியவை வருவாய்த்துறையின் வசூலில் அடங்கும்.

கூடலூர் பல பசலிப் பாக்கிகள் பெரும் நிலுவையாகத் தேங்கியிருந்தன. ஜமாபந்தி,(வருடாந்திர கிராமக் கணக்குகள் சரிபார்த்தலும் கேட்பு வரி பாக்கி முடிவு செய்தலும்) வரவிருப்பதால் வசூற் பணியை முடுக்கிவிட்டு திறமான வசூல் ஏற்படுத்துமுகமாய் தமுக்கு(உள்ளூர் அறிவிப்பு கிராமப் பணியாளர், அல்லது ஊர்ராட்சிப் பணியாளர்) அறைந்து  விவசாய அன்பர்கள் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் அறிவிப்பு செய்தோம். வருவாய் ஆய்வரின் முன்னிலையில் கிராம முன்சீப் வரி செலுத்துவோருக்கு உரிய ரசீதுகள் வழங்குவார். கர்ணம் தன்னுடைய கணக்கில் ஒவ்வொரு பட்டாதாரரும் செலுத்தவேண்டிய  தொகையினை துல்லியமாக எடுத்துரைப்பார்.
நான் சென்றிருந்த அந்த நேரத்தில்  வாக்களிக்க வரும் ஒரு மந்தமான நிலையைப் போன்று மக்கள் மிகவும் சாவதானமாக வரலாயினர்.
சரி வேறுப் பணியாக கர்ணத்தை அழைத்துக்கொண்டு கிராம வரைப்படம், புலப்படம் சர்வே உபகரணங்களுடன் ஆக்கிரமிப்புகள் உள்ள இனங்களை சரிபார்க்கும் முகத்தான் வயற்காடுகளுக்குள் நுழைந்தோம்.புல எண் 18 புறம்போக்கு நிலம். அதன் அண்மைப் பட்டாதார் புறம்போக்கில் ஒரு செண்ட் ஆக்கிரமணம் செய்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை சரிபார்க்கும் முகத்தான் ஒரு  சர்வே கல்லில் துவங்கி கணக்குகளில் கண்டதைவிட எவ்வளவு மாற்றம் என்பதைச் சரிபார்க்க புதருக்குள் இருப்பதாக அனுமானிக்கப்பட்ட சர்வே கல்லின் மீது அடையாளம் உள்ளதா என்று பார்க்க அளக்கும் 10  லிங்க்ஸ் போல் கொண்டு புதரைத் துளைத்தான் கிராமப் பணியாளரில் ஒருவன்.

ஒரு புதிய அனுபவம்.  கர்ணம் கையில் இருந்த புலச் சுவடி ஆகாயத்தில் பறந்தது. கையில் இருந்த கழியை தூக்கி வீசிவிட்டு கிராமப் பணியாளன் புதர் தாண்டிக் குதித்தான். .என்ன நடந்தது? ஏன் பரபரப்பு ?என்று தலை கவிழ்ந்து வரப்பில் நின்று கொண்டு கணக்குகளப் பார்த்துக் கொண்டிருந்த நான் தலையைத் தூக்கிப் பார்க்கும் போது ஒரு நல்ல பாம்பு வேகமாக ஊர்ந்து என்னை நோக்கி வர, அருகில் நின்ற மற்றொருவன் என் கையினைப் பிடித்து வேகமாக மறுபுறம் இழுக்க நான் கீழே விழுந்தேன். கணப்போதில் பாம்பு தோன்றி சர்வேக் கல் மீது நுழைக்கப்பட்ட கழியின் மீது ஊர்ந்து அவன் கையை நோக்கி கொண்டு வர, கையருகில் வந்த பாம்பைக் ஒருசேரக் கண்ட கர்ணமும் பணியாளனும் கையிலிருந்த புலச்சுவடியை அறியாமலேயே ஆகாயத்தில் வீசியிருக்கிறார். வந்தது போலவே வேகமாக  ஓடிச் சென்று எங்கேயோ அந்தக் கட்செவி கரைந்து மறைந்துவிட்டது.

புலச் சுவடி தையல் பிரிந்து தனித்தனித் தாள்களாக காற்றில் மிதந்து அடித்துச் செல்லப்பட்டன. நடந்தது என்னவென்று புரிந்து கொள்ளாமலே நான் எழுந்து ஓடி புலச்சுவடியின் பக்கங்களைப் பிடிக்கத் துள்ளிப் பறந்தேன். ஒருவாராக பக்கங்களை ஒன்றுசேர்த்தோம்.
ஐயா! சகுனம் சரியில்லை போலும்! எனக்கு உடல் எல்லாம் உதறுகின்றது. இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோமா? என்றார்  கர்ணம்.
கிடைத்த காலப்  பொழுதில் முடிந்தவரை செயற்படுத்திவிடுவது சிறந்ததன்றோ? என்றேன்.
சரி அப்படியானால் நீங்கள் போய் வசூலில் உட்காருங்கள், நான் பணியாளர்களுடன் சென்று வேறு சில இனங்களை பார்த்துவருவதாகக் கூறிவிட்டு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளைப் புலத்தணிக்கை செய்யச் சென்றுவிட்டேன்.

 கர்ணம் வசூல் செய்கின்ற சாவடிக்கு வந்து சேரவும் ’வருவாய் ஆய்வர் ஜப்தி நடவடிக்கையில் இருக்கிறார். ஊருக்குள் வரவிருக்கிறார்.’ என்று யாரோ ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள்.
பட்டாதார்கள் பிற பணிகளைப் பின்தள்ளி. எதற்கு வரிசெலுத்துவதைத் தாமதப் படுத்தவேண்டும் என்று நினைத்து கூட்டம் கூட்டமாக வந்து வசூல் பணி களைகட்டியது. மதியம் இடைவேளைக்கு ஒரு ஓட்டலில் இருந்து வாங்கிவந்த பலகாரங்களை களப்பணியாளர் நாங்கள் அருந்தி சில இனங்களைப் புலத்தணிக்கை செய்து சாவடிக்கு வந்த போது அந்தக் கூட்டமான பட்டாதார்கள் சில நடைமுறைச் சிக்கல்கள் பற்றிப் பேசினார்கள். அவர்களுக்கு உரிய இதமான பதில்களைக் கூறியும் அவர்கள் கோரிக்கையை மனுவடிவில் வாங்கியும், இரவு 8-00 மணிவரை வசூல் பணி நடத்தி மீளவும் மீந்த இனங்கள் நாளை கால 8-00 மணிக்கு வருமாறு அறிவுருத்தினேன்.  அன்றைய வசூல் 40-ஆயிரத்தைத் தொட்டிருந்தது.
என்ன சுந்தரம் (கர்ணம் ) சகுனம் சரியில்லை என்று சொன்னீர்களே! அது சரியா என்றேன். இது வரை இப்படி வசூல் ஆனதே இல்லை. இழுத்தடித்து இரண்டு மாதங்கள் அலையாய் அலைந்தாற்கூட மசியமாட்டார்கள். என்றார்.
எல்லாம் நாகராஜன் அருள். அந்தப் புலச் சுவடியை சரிபார்த்து அடுக்கி வரிசைப் படுத்தி அங்கு வத்து தைத்து முடித்துவிட்டு குஸிலியம் பாறை திரும்பினேன்.

அதே போன்று ஒரு கட்டத்தில் சுவடிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
2010/5/11 annamalai sugumaran <amirth...@gmail.com>

annamalai sugumaran

unread,
May 13, 2010, 3:11:25 PM5/13/10
to mint...@googlegroups.com
களப்பணி  -- ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  --  ௧௨     -   ( 12 )
                                                        --  அண்ணாமலைசுகுமாரன்
----------------------------------------------------

சில பணிகளை பகிரத  பிரயத்தனம் செய்து நீண்ட காலம் தொடர்ந்து செய்தாலும் அது முடிவேனா என்று இழுத்துக்கொண்டேபோகும் ..
 செய்பவர்களுக்கும்  அயர்ச்சியை உண்டுபண்ணும் .

சில செய்யல்களோ செய்ய செய்ய நாளும் முனேற்றம் காணும் .
செய்யும் போதே  மிகுந்த ஊக்கம் பிறக்கும் .விரைவில் நல்ல பலனும் கிடைக்கும்  .     வெற்றியும் விரைவில் கூடிவரும் .

இரண்டற்கும் ஒரே மாதிரியான முயற்சி தானே செய்யப்படுகிறது .செய்வதும்  ஒரே மனிதன் தானே பின்யேன் முடிவில் மட்டும் மாற்றம் ? ஒன்று ஏன் இப்படி இழுத்துக்கொண்டே போகிறது ,மற்றது ஏன் நாளும் முனேற்றம் காண்கிறது .
இந்த புதிர் அநேகமாக அனைவருக்கும் இருப்பதுதான் ..

பார்க்கப்போனால் அனைவரது வாழ்க்கை பயணத்திற்கும் இரண்டு பகுதியிருக்கும் .ஒவ்வருவர் வாழ்க்கைக்கும் நோக்கம் உண்டு .ஒவ்வுருவர் வாழ்க்கைக்கும் சில  பணிகள்  உண்டு .
 இங்கே வந்ததற்கு நிச்சயம் சில  காரணங்கள்  இருக்கும் நிறைவேற்றவேண்டிய காரியயங்களும் சில  நிச்சயம் இருக்கும்  .

மனித நிலையில் இருந்து ஒருபடி மேலே செல்லமுடிந்தால் அனைவர் வாழ்வும் ஒரே நோக்கத்தை நோக்கி செல்வது புரியும் .வேறுவேறு பாதையில் சுற்றி சுற்றி சென்றாலும் நோக்கம் என்பது ஒன்றேயாகதான் இருக்கும் .இதை புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரம அன்னை பல நூல்களில்  அழகாக விளக்கிறிருப்பார் .
வாழ்வின் சிறியபகுதியே புரிவதால்  சரியான பொருள் முழுமையாக  நமக்கு விளங்குவதில்லை .

ஆனால் அவரவர் பூர்வ வினையின் கொடுக்கல் வாங்கல் ,தொடுப்பின் பயனாக கொடுக்கப்பெறும் பணிகள்  சில நேரம் சீக்கிரமே வந்துவிடும் .சிலநேரம் வாழ்நாள் பூராவும் கழிந்தபின்பும் புலப்படாது .
அத்தகைய பணிகளின்  போது  இறையருள் என்பது சரியான வழியிலே செல்ல வழிகாட்டும் ,உடனிருந்து துணை புரியும் .

சிலநாள் ஓய்வுக்கு பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும்
22 /  02/  10  அன்று செங்கல்பட்டில் ஒன்றாகக் கூடினோம் .
இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத் தேடலுக்காக நாங்கள் தங்குவதற்கு செங்கல்பட்டை தெரிவு செய்தோம் .
மாவட்டத்தின் நடுவே நான்குபுறமும் செல்வதற்கு வாகாக செங்கல்பட்டே அமைந்திருந்தது .காஞ்சிபுரம் நகரம் ஒரு ஓரமாக ஒதுங்கி  இருந்தது .
எப்போதும் ஒன்றுகூடியபின் நாங்கள் உடனே  தங்குவதற்கு  விடுதியைத  தேடமாட்டோம் , உடனே எங்கள் சுவடித்  தேடுதலைத தான் ஆரமிப்போம் .
இரவில் திரும்பிவந்து  அலைந்து திரிந்து ஏதாவது ஒரு விடுதியை தேர்ந்தெடுத்து தங்குவோம் இதனால் எங்களுக்கு ஒரு நாள் தங்கும் செலவு மிச்சமாகும் .
அவ்வாறே வழக்கம் போல் முதலில் ஒரு வாகனத்தை அமர்த்திக்கொண்டு எங்கள் தேடுதலைத்தொடங்கினோம். .

ஆயிரம் கோயில்களின் நகரம் என்று  வழங்கபெறும் காஞ்சிபுரம் ,அந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும் .இது ஒரு பாரம்பரியமான
தலை நகரம்   இது முந்தய சோழர் காலத்திலேயும் ,பல்லவர்கள் காலத்திலேயும் தலைநகராக விளங்கி "நகரேஷு காஞ்சி " என காளிதாசரால் நகரென்றால் காஞ்சிதான் எனப  புகழ்பெற்றது .
மணிமேகலை ,பெரும்பாணற்றுப்படை , பத்துப்பாட்டு இவைகளில் காஞ்சியின் பெருமை பலவாறு புகழப் பட்டிருக்கிறது .
பண்டைய நாளில் கல்வியின் முக்கிய இருப்பிடமாக விளங்கியது .
எனவே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் எங்கள் தேடுதல் துவங்கியது .

kanchi1.jpg
நன்றி mapience india limited


காஞ்சிபுரம் மாவட்டம் பத்து வட்டங்களை அடங்கியது .
எங்களது MNN  முகவரிப்பட்டியல் படி அனைத்து வட்டங்களிலும்
சேர்த்து மொத்தம் 133 முகவரிகள் இருந்தன .
நாங்கள் இவ்வைகளை ஐந்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருந்தோம் .

எங்கள் வாகனம் திருகழு குன்றம் தாண்டி  செல்ல ஆரமித்தது .
.திருகழுகுன்றம் ஊரில் இரு முகவரிகள் இருந்தன .கடம்பாடி ,வீராபுரம் ,ஓரகடம் முதலிய பகுதியில் ஒவ்வரு முகவரி இருந்தது .நாங்கள் முதலில் ஓரகடம் பார்த்துவிட்டு திரும்பிவரும் போது
வழியில் இருப்பவைகளைப் பார்த்துவரலாம் என திட்டமிட்டோம் .
ஓரகடத்தில்
விஜய ராகவன் ஆர்
ஓரகடம்
என்று ஒரு முகவரி இருந்தது .நாங்களும் வழக்கம் போல்
எங்கள் விசாரிப்பை துவங்கினோம் .
ஓரகடம் ஓரளவு பெரிய ஊராகவே விளங்கியது .
எனவே நாங்கள் தேடுவதும் சிரமம் ஆயிற்று ..
விஜய ராகவன் ஆர்  என்ற பெயரில் இருந்து அவரின் தொழிலை
ஊ கிக்க முடியவில்லை .
சில முகவரிகளில் பட்டர் , ( வெண்ணையல்ல ) குருக்கள் ,ஜோதிடர்
சாஸ்திரிகள் என சில' CLUE' இருக்கும் .இதில் அப்படி ஏதும் இல்லை .
நாங்களும் எதையும் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை .அப்படியே விசாரித்துக் கொண்டு பிராமணர் தெருவுக்கு வந்தோம் .
அங்கும் யாருக்கும் விஜய ராகவன் ஆர் என்பது தெரியவில்லை .
ஒரு முதியவர் மட்டும் எங்கள் முழுகதையையும் பொறுமையுடன்
முழுமையாகக் கேட்டு விட்டு" யார் பாஷ்யத்தைப் பார்க்கனுமா ?"
என்றார் நாங்களும் ஆமாம் ஆமாம் அவரேதான் என்றோம் ..
எங்களுக்கு ஏதாவது பிடிப்பு கிடைக்காதா என்ற ஆவல் .
எது கிடைத்தாலும் பிடித்துக்கொள்வோம் .
அதில்  இருந்து பாதை போடமுடியுமா என்றுபாப்போம் .

அந்த முதிய அந்தணர் ஒரு சிறிய ஓட்டு  வீட்டைக் காட்டினார் ..
"சார் சார் " என்று அழைத்த படி உள்ளே சென்றோம் ..
அங்கே ஒரு பெரியவர் தன்னந்தனியே ஒரு ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார் .
"ஐயா வணக்கம் "
"நமஸ்காரம்   என்னவேணும் "
"ஐயா உங்களிடம் ஓலைசுவடிகள் நிறைய
இருப்பதாக தகவல் "
"ஆமாம் அதற்க்கு என்ன இப்போ ?"
இதை கேட்டதும் தேவர்கள்  " மலர் மாரிப  பெய்தார்கள்"  என்று கேளிவிப்பட்டிருக்கிறோமே  அதை உண்மையாக உணர்ந்தோம்
உடல் சிலிர்த்தது  ..காதுகளில் தேவ கானம் கேட்க்க ஆரமித்தது .

இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார் அதுவும் நிறைய என்பதையும் ஒத்துக்கொள்கிறார் .உடனே உஷாரானோம் .!

நல்ல கார்டுகள் வந்துவிட்டால் , நன்றாக ஆடவேண்டுமே .ஏனோதானோ என்று ஆடி வாய்ப்பை நழுவவிட்டால் எப்படி ?
உடனே தரையில் அவருகில் அமர்ந்துவிட்டோம் .

"ஐயா நாங்கள் தஞ்சை பல்கலை யில் இருந்து வருகிறோம்
உங்களிடம் இருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்க்கவேண்டுமே  "

அவர் சற்று தூரத்தில் இருந்த ஒரு இரும்புப் பெட்டியை  டிரன்கு பெட்டி என்று சொல்லும் ஒரு ரகப்பெட்டியை  சுட்டிக்காட்டி அதை எடுங்கள் என்றார் ..
அதை எடுத்தோம்
 பார்த்தால் ,   அது முழுவதும் ஓலைச் சுவடிகள் ! ஓலைச் சுவடிகள் !
நாங்கள் இத்தனைநாள் தேடியது மொத்தமாக ஒரே இடத்தில் .

அதை ஒன்று ஒன்றாக வெளியில் எடுக்க ஆரமித்தோம்
எங்களை சுற்றி ஓலைச் சுவடி கடை பரப்பப் பட்டது .
மெதுவாக " ஐயா இவ்வை அத்தனையும் பயன்பாட்டில் இருக்கிறதா ?  "
என்று ஆரமித்தோம் .அவரும் " ஆம் நான் படித்தது தான் அனைத்தும் , எப்போதாவது எடுத்துப்பார்ப்பேன் " என்றார் .
"இவைகளை தக்கபடி பாதுகாக்க இவைகளை தஞ்சை பல்கலை கழகத்துக்கு கொடையாக தாருங்களேன் .
இவைகளை நாங்கள் நல்லபடி உங்கள் பெயரிலேயே பாது காக்கிறோம்  " என்றோம் .
" ஊஹும் அது எப்படி ! நான் இவைகளை அவ்வப்போது பார்ப்பதுண்டு "  என்றார் .
"ஐயா இங்கிருந்தால் மேலும் மேலும் வீணாகும் ,நாங்கள் பாதுகாத்து உங்கள் பெயரால் வைக்கிறோம் "என்றோம்

 யாரையும் கட்டாயப் படுத்தியோ , கட்டளையிட்டோ ஓலைகளைப் பெற இயலாது .                அது அவர்களது சொத்து

அவர்களை உணரவைத்து நயமாகத்தான் பெறவேண்டும் .
எனன செய்வது இவைகள் அத்தனையும் எப்படி பெறுவது  ? என்ற கவலை வந்தது ..
அப்போது கவலையை தீர்க்க கடவுளே அனுப்பியமாதிரி அவரின் மனைவி வேகமாக வீட்டில் நுழைந்தார் .

எங்கோ ஊருக்குப் போகப் புறப்பட்டு பஸுக்கு காத்திருந்தவரை
ஊர்ஜனங்கள் சிலர்  உங்கள் கணவரை யாரோ மூன்று பேர் தேடிக்கொண்டு உங்கள்  வீட்டுக்கு போகிறார்கள் என்றதும்
பார்த்துவிட்டுப் போகலாமே என்று வீட்டுக்கு திரும்பிவிட்டார் .நாங்கள் தான் அத்துனைபேரை விசாரித்திருக்கிறோமே,!
 நாங்கள் விசாரித்ததில் யாரோ சில பேர் பார்த்து சொல்லிருக்கிறார்ர்கள்.

வந்த அவர் மனைவி " நீங்கள் தான் நேற்று போன் செய்தீர்களா " என்றார்
"இல்லையைமா நாங்கள் இப்போதுதான் வருகிறோம்"  என்றோம் .
" இல்லை யாரோ பத்திரிகையில் இருந்து இவரிடம் பேச வருவதாக
போன் செய்தார்கள் ,காமரா எல்லாம் எடுத்துக்கொண்டு வந்ததும் நீங்கள் தான் என்று நினைத்தோம்  " என்றார் .அம்மா

பிறகு நாங்கள் விபரமாக எங்கள் தேடுதல் பயணம் இவைகளைப்
பற்றி கூறினோம் .அவரும் பரிவுடன் கேட்டார் .

பேச்சை கேட்ட அம்மா  உடனே "  உங்களுக்கு இந்த ஓலைச் சுவடிகல்தானே வேண்டும் எடுத்துக்கொள்ளுங்கள் " என்றார் .
எங்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !
அவரது கணவரால் ஒன்றும் பேச முடியவில்லை .
அவரது மனைவியை முறைத்தார் .

ஆனால் அவர்கள் ஒருவர் போல் ஒருவர் கொண்ட அன்பு தெளிவாக வெளிப்பட்டது .மனைவி சொல்வதை அவர்தட்டவில்லை .
 "இவர் ஆசைபடுவார் ஆனால் இனி அவரால் படிக்க முடியாது .வயதும் மிக்க ஆகிவிட்டது கண்ணும் சரிவரத் தெரியவில்லை .
இனி இவரால் படிக்க முடியாது .
நீங்கள் எடுத்து போய் பாது காத்து வைத்திருங்கள் " என்றார்
அந்த அம்மா .
அத்தோடு விட்டாரா  " இன்னும் ஏராளமான புத்தகங்கள் பரணில் தூங்குகிறது பாருங்கள் ! இனி  அவைகளையும் அவரால் படிக்க முடியாது .ஆசைப் படுகிறார்
ஆனால் படிக்க முடிவதில்லை  " என்று கூறி பரனை காண்பித்தார் .

நாங்களும் பரணில் ஏற முஸ்தீபுகள் செய்ய ஆரமித்தோம் .
பரணில் அடுக்கடுக்கான மூட்டைகள் .
அவ்வளையும் கீழே இறக்கினோம் .
மெதுவாக புத்தகங்களை பிரித்தெடுக்க ஆரமித்தோம் .
எங்களைச் சுற்றி புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும்
குவிந்தன !

பெரியவரோ ஒன்றும் செய்ய இயலாது சோகமாக எங்களைப்பார்க்க ஆரமித்தார் .
அதற்குள் அம்மா உள்ளே சென்று மோர் எடுத்துவந்து குவளை குவளையாக வழங்க   ஆரமித்தார் .
நாங்கள் பரணில் இருந்து புத்தகங்களையும் ஓலைச் சுவடிகளையும்
எடுத்தமாதிரியே , அம்மாவும் அடுக்களையில் இருந்த பழங்கள்
மற்ற உண்ணும் பொருகளை எங்கள் முன் பரப்பினார் .

எங்களுக்கு இருவித விருந்து கிடைக்க ஆரமித்தது .
நாங்களோ காணாததைக்  கண்டமாதிரி புத்தகங்களையும் ஓலைச் சுவடிகளையும் மாறி மாறி பார்க்க ஆரமித்தோம் .

பெரியவரோ நாங்கள் இரண்டையும் எடுக்க மாறி மாறி எடுப்பதையும் பார்த்து  ,  கையில் இருந்த மிட்டாயையும் ,கமர்கட்டையும் ( தெரியுமா? ) சேர்த்து பறிகொடுத்த சிறுவன் மாதிரி விழிக்க ஆரமித்தார் .

நாங்கள் பரப்பிய ஒவ்வரு புத்தகத்தையும் அவர் எடுத்து தன்னிடம்  திரும்ப அடுக்க ஆரமித்தார் .

ஒவ்வரு புத்தகத்தின் மேலும்  அவரிடம் ஒரு இனிய நினைவு பொதிந்திருந்தது .
அவைகளைக் கூற ஆரமித்தார் ." இது என்  பையன் வாங்கிக்கொடுத்தது ,இதை வைத்து இந்த பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினேன்"  என தனது நினைவுகளை விவரிக்க ஆரமித்துவிட்டார் .
எங்களுக்கோ பாவமாகிவிட்டது .
ஆனாலும் எதையும் விட மனதில்லை .

நாங்கள் அடுக்குவதும் அவர் திருப்பி எடுப்பதுமாக சிறிது நேரம் போனது .ஆனாலும் அவர் மனைவி சொல்லை அவர் தட்டவில்லை .
அவரது மனைவிக்கும் அவர் கவலை புரிந்து விட்டது .அவர் முகம் வாடியதை அம்மா உணர்ந்து கொண்டார்கள் .

" சரி அப்படியானால் ஒன்று செய்யுங்கள் ஓலைச் சுவடிகளை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் ! புத்தகங்களை சிறிது காலம் கழித்து எடுத்துக் கொள்ளலாம்  " என்றார் .
பெரியவரும் புத்தகங்கள் கிடைத்ததும் சற்று அமைதியாகிவிட்டார்
எங்களுக்கோ ஓலைச் சுவடிகள் கிடைத்த சந்தோசம்

பெரியவர் .புத்தகங்களிலேயே மீண்டும் ஆழ்ந்துவிட்டார் .

எங்களுக்கு அந்த பெரியவரின் வாட்டம் புரிந்தது .
வாழ்நாள் முழுவதும் அவர்படித்த புத்தகங்களை அவர் நண்பர் போல் கருதுகிறார் .நண்பர்களை பிரிவது  போல் அவர் மனம் வருந்தினார் .
நாங்கள் ஒருவழியாக அவ்வளவு  ஓலைச் சுவடி கட்டுகளையும் ஒரு அட்டைபெட்டியில் அடுக்கினோம் .அவரிடம் இருந்த எழுத்தாணியையும் பெற்றுக்கொண்டோம் .

அவருக்கும் அவரது மனைவிக்கும் நன்றி கூறினோம் .
அவருக்கு நமஸ்காரம் செய்தேன் .
ஒருபுறம் மிக்க மகிழ்ச்சி ஒரு புரம் இந்த பெரியவருக்கு பிடிக்காத காரியத்தை செய்கிறோமே என்ற வேதனை ..

இருந்தாலும் முதல் நாளே மிகப்பெரிய ஓலைச் சுவடி புதையல் ஒன்று கிடைத்ததில் மனதில் மிக்க மகிழ்ச்சி ..
எல்லாம் இறைவன் செயல் என்று மன மகிழ்வுடன்
விடுதியில் அறை போடும் போதே சுவடி பொதியுடன் சென்றோம் .
இறையருளால் அனேகமாக  வரும் நாட்களில் சில நாட்களைத்தவிர தினமும் ஓலைச் சுவடிகளை  தொடர்ந்து பெற ஆரமித்தோம் .
அவைகளைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் .
PICT1145.JPG
ஆமாம்  இருக்கு அதுக்கு எனன இப்போ ?
 
PICT1154.JPG
ஆசையுடன் சுவடியை பார்க்கும் முனைவர் கோவை மணி
PICT1166.JPG
பரணியில் மூட்டை மூட்டையாக அறிவு செல்வங்கள்

PICT1167.JPG
துணைக்கு  வந்த அம்மா !
PICT1175.JPG

பெட்டியிலே அடுக்கிய சுவடிகள் !

PICT1171.JPG

அரிய புத்தகங்களின் அழியும் நிலை  !
PICT1158.JPG
ஓலைச சுவடிகளை அடுக்கும் போது


PICT1164.JPG
பரவிக்கிடக்கும் சுவடிகள்


PICT1172.JPG
புத்தகங்களைப் பார்க்கும் அணியினர்


PICT1173.JPG
விட்டுவந்த  தேறிய  புத்தகங்கள்
PICT1175.JPG
PICT1171.JPG
PICT1154.JPG
PICT1164.JPG
kanchi1.jpg
PICT1158.JPG
PICT1167.JPG
PICT1145.JPG
PICT1166.JPG
PICT1172.JPG
PICT1173.JPG

Innamburan Innamburan

unread,
May 13, 2010, 4:30:16 PM5/13/10
to mint...@googlegroups.com
உங்களையெல்லாம் திரு. பாஷ்யம் அவர்களிடம் அழைத்து சென்றவர் எழுத்தறிநாதர், சுகுமாரன். விஜயராகவனை பிடித்தீர்களா? இல்லையா? பெரியவர் பாஷ்யத்தைக்கேட்டு இருக்கலாமே? திருமதி. பாஷ்யம் அவர்களின் யதார்த்தம் உங்களுக்கு உதவியது. வெற்றி நாடுக.

அன்புடன்,
இன்னம்பூரான்

2010/5/13 annamalai sugumaran <amirth...@gmail.com>

karthi

unread,
May 13, 2010, 8:49:28 PM5/13/10
to mint...@googlegroups.com
அன்பின் சுகு,
 
ஒரு பார்வையில் சாகசக் கதை; ஒரு பார்வையில் பிரயாணக் கட்டுரை;
ஆனால் மொத்தமாகத் தமிழ்ப் பணி. மிக அருமை.
 
உங்கள் எழுத்து பளிச்சிடும் இடங்கள்:
 
"நல்ல கார்டுகள் வந்துவிட்டால் , நன்றாக ஆடவேண்டுமே .ஏனோதானோ என்று ஆடி வாய்ப்பை நழுவவிட்டால் எப்படி ?"
 
இந்த உண்மையை வைத்து நான் ஒரு நாவலே எழுதியிருக்கிறேன்.
"சூதாட்டம் ஆடும் காலம்."  ஆம். வாழ்க்கையில் அடுத்து என்ன
நடக்கும் என யாரும் முன்னறிந்து சொல்லிவிட முடியாது.
ஆனால் காலம் போடும் சீட்டுக்களை அடுக்கி நாம் திறமையோடு
ஆடினால் ஜெயிக்கலாம். அப்படிச் செய்து தோற்பதும் உண்டு.
அதுதான் சூதாட்டம். நீங்கள் ஜெயித்ததில் மகிழ்ச்சி.
 
"பெரியவரோ நாங்கள் இரண்டையும் எடுக்க மாறி மாறி எடுப்பதையும் பார்த்து  ,  கையில் இருந்த மிட்டாயையும் ,கமர்கட்டையும் ( தெரியுமா? ) சேர்த்து பறிகொடுத்த சிறுவன் மாதிரி விழிக்க ஆரமித்தார் ."
 
தெரியாது. பல நேரங்களில் இந்த கமர்கட் தமிழ் நாட்டுப் படைப்புக்களில் கண்டிருக்கிறேன்.
ஆனால் மலேசியர்களுக்கு அது என்ன என்று தெரியாது.
ஆனால் நீங்கள் சொல்லவரும் விஷயம் / உணர்வு தெற்றெனப் புரிகிறது. பெரியவரின்
முகபாவத்தைக் கூட மனக்கண்ணில் காண முடிகிறது.
 
சரி! இதெல்லாம் உங்கள் எழுத்தில் உள்ள அணிகள் (embellishment). உங்கள் தேடலின்
குறி உங்களுக்கு அகப்பட்டதில் எங்களுக்கெல்லாம், மகிழ்ச்சி. உங்களோடு சேர்ந்து
சுவடிகளைத் தலையிலும் தோளிலும் சுமக்காவிட்டாலும் உங்கள் அனைவரின்
பணிகளையும் மனதில் சுமக்கிறோம்.
 
வாழ்க.
 
ரெ.கா.
 


----- Original Message -----
kanchi1.jpg

V, Dhivakar

unread,
May 14, 2010, 1:07:09 AM5/14/10
to mint...@googlegroups.com
>>>எப்போதும் ஒன்றுகூடியபின் நாங்கள் உடனே  தங்குவதற்கு  விடுதியைத  தேடமாட்டோம் , உடனே எங்கள் சுவடித்  தேடுதலைத தான் ஆரமிப்போம் .
இரவில் திரும்பிவந்து  அலைந்து திரிந்து ஏதாவது ஒரு விடுதியை தேர்ந்தெடுத்து தங்குவோம் இதனால் எங்களுக்கு ஒரு நாள் தங்கும் செலவு மிச்சமாகும் .<<<

சுகு,

உங்களின் தன்னலமில்லாத அயராத சேவை மற்றவர்களுக்கும் படிப்பினை.
வாழ்க வாழ்க!! வளர்க!!

அன்புடன்
திவாகர்

2010/5/14 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com
PICT1158.JPG
PICT1167.JPG
kanchi1.jpg
PICT1172.JPG
PICT1154.JPG
PICT1166.JPG
PICT1164.JPG
PICT1145.JPG
PICT1173.JPG
PICT1171.JPG
PICT1175.JPG

N. Kannan

unread,
May 14, 2010, 1:44:33 AM5/14/10
to mint...@googlegroups.com
 
 
2010/5/14 annamalai sugumaran <amirth...@gmail.com>
> அந்த முதிய அந்தணர் ஒரு சிறிய ஓட்டு  வீட்டைக் காட்டினார் ..
> "சார் சார் " என்று அழைத்த படி உள்ளே சென்றோம் ..
> அங்கே ஒரு பெரியவர் தன்னந்தனியே ஒரு ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார் .
> "ஐயா வணக்கம் "
> "நமஸ்காரம்   என்னவேணும் "
> "ஐயா உங்களிடம் ஓலைசுவடிகள் நிறைய
> இருப்பதாக தகவல் "
> "ஆமாம் அதற்க்கு என்ன இப்போ ?"
 
 
சுகு:
 
இப்படித்தான் ஆழ்வார் திருநகரியில் ஒரு வைணவப் பெரியவர் வீட்டில் நுழைந்து சுவடிகளை நான் கேட்க அவர் மெல்ல, மெல்ல நிறையச் சுவடிகளைக் கொண்டு வந்தார். பெரும்பாலும் வைணவ கிரந்தங்களாக இருப்பதால் சட்டென நம்மைத் தொடவிடமாட்டார்கள். திருஞானக்கோவை பதிப்பகத்தார் பெரியன் ஸ்ரீநிவாசன் வீட்டில் சுவடிகள் பூஜை அறையில் இருந்தன. இதிலிருந்து அவற்றின் மதிப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மிகச்சரியாகச் சொன்னீர்கள். அவை வெறும் சுவடி அல்ல. ஒரு தொன்மம். ஒரு பாரம்பரியம். ஒரு தொழு பொருள். ஆழ்ந்த ஞானம்..இன்னும் என்னென்னவோ!
 
ஆழ்வார்திருநகரிப் பெரியவர் அழாத குறையாகச் சொன்னார். இவையெல்லாம் ஆகம சாஸ்திரச் சுவடிகள். எல்லாம் திராவிட லிபியில் (கிரந்தம்) உள்ளன. ஆனால் பதிப்பிக்க ஆளில்லை. தெலுங்கில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் திருப்பதி தேவஸ்தானம் பதிப்பிப்பதாகச் சொல்கிறது. எனவே தெலுங்கில் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்றார்.
 
அப்போது அவரை எடுத்த போட்டோவையும் (கீழே), இக்கதையையும் நான் கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் (2001) எனது உரையில் சொன்ன போது, எதிரே ஒருவர் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டு இருந்தார். அவர்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு. அதுவே அவரை உந்தி எம்மை தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கப் பணித்தது!
 
தஞ்சைப் பல்கலைக் கழகம் இவைகளை அக்கரையுடன் பாதுகாக்க அந்த எம்பெருமான் அருள் செய்யட்டும். ஏனெனில், தமிழ்நாட்டில் பஞ்சம் வந்த போது பிள்ளையைக் கிரயம் பேசி விற்றுவிடுகிறான் அப்பன். ஆயினும் பிள்ளைப்பாசம் போகுமா? கிரயப்பத்திரத்தில் இதையும் சேர்த்து எழுதுங்கள் என்று சொல்லி, ”என் பையனை நீங்கள் பிள்ளைக்குப் பிள்ளையாய் பார்த்துக் கொள்ள வேண்டியது” என்கிறான். அதுதான் இந்த விஜயராகவனின் நிலையும்.
 
We need to handle this with utmost care and sensitivity. In fact, THF's original plan was not to displace this manuscript from the owner. We want to digitize them right at their place in front of them. Give them the original and a digital copy and then leave them in peace!. This is the way it should be done. Unfortunately, we do not have enough funds to buy a mobile unit and employ a team of people to do that. I wish our piggy bagging stops soon.
 
ஆகம சுவடிகளுடன் ஆழ்வார் திருநகரிப் பெரியவர்
private_collection.jpg
 
அன்புடனும், வாழ்த்துக்களுடனும்,
நா.கண்ணன்
தமிழ் மரபு அறக்கட்டளை
private_collection.jpg
It is loading more messages.
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages