சிவஞானபோதம் அருளிய ஸ்ரீ மெய்கண்டார் கோவில் கும்பாபிடேகம் - பெண்ணாகடம்

187 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 24, 2014, 1:27:58 AM6/24/14
to mintamil, vallamai, housto...@googlegroups.com, maza...@googlegroups.com, muththamiz, தமிழ் மன்றம், santhavasantham, N D Logasundaram, கி.கா​ளைராசன், Subashini Tremmel, k.ula...@gmail.com, தேமொழி, பார்வதி இராமச்சந்திரன்., Megala Ramamourty
வணக்கம். பெண்ணாடத்தில் 22.06.2014 அன்று சிவஞானபோதம் அருளிய திருக் கயிலாய
பரம்பரை ஸ்ரீ மெய்கண்டார் ஆலய புனருத்தான அஷ்டபந்தன மகாகும்பாபிடேகம் மிகச்
சிறப்பாக நடந்தேறியது. தொழுதூர்,விருத்தாசலம் சாலையில் திட்டக்குடி
அடுத்து உள்ள பாடல்பெற்ற தலம் பெண்ணாடம். தூங்கானைமாடத்துச்
சுடர்க்கொழுந்தீசரும் அழகியகாதலி அம்பாளும் அருள்பாலிக்கும் ஊர். ஸ்ரீ
மெய்கண்டார், மறைஞான சம்மந்தர், கலிக்கம்ப நாயனார் ஆகியோர் அவதாரத் தலம்.
திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான பாலாலயம் செய்யப்பட்டிருந்த
மெய்கண்டார்கோவில் திருப்பணி ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்
அருளாசியுடனும் கார்காத்த வேளாளர்
மரபினர் பங்களிப்புடனும் சிவநேயச்செல்வர்கள் ஒத்துழைபுடனும் ஒரு கோடி ரூபாய்
செலவில் நிறைவுற்றுள்ளது. மெய்கண்டாருக்கு உற்சவச் செப்புத் திருவுரு
புதிதாக அழகுறச் செய்துள்ளார்கள். பாலாலயத்தில் வீற்றிருந்த
சைவசமயாச்சாரியர்கள் மெய்கண்டார், மறைஞானசம்மந்தர், உமாபதி சிவம், குரு
நமச்சிவாயர் திருவுருக்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.

மகள் வீட்டிற்கு வந்திருந்த நாங்கள் யாகசாலை கண்டு வழிபடும் நற்பேறு அமைந்தது.

சைவசமய தத்துவக்கொள்கையான சைவ சித்தாந்தை முழுமையாகப் பன்னிரு சூத்திரங்களில்
எடுத்துரைக்கும் முதல் செந்தமிழ் நூல் சிவஞானபோதம். பெண்ணாகடத்தில் 800
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துவந்த அச்சுதகளப்பாளர் என்னும் வேளாள
குடிப்பிறந்தார் தன் குருநாதர் அருணந்தி சிவாசாரியார் சொற்படி திருவெண்காட்டுப்
பெருமானைத் தொழ அவருக்கு மகவாக மெய்கண்டார் திருஅவதாரம் செய்தார். அவர் மூன்று
வயதுக் குழந்தையாக இருந்தபோது தன் தாய்மாமன் ஊரான திருவெண்ணெய்நல்லூரில்
பரஞ்சோதி முனிவர் அருளால் ஞானம் கைவரப்பெற்றுச் சிவஞானபோதம் அருளினார் என்பர்.
அவரை அணுகிச் சிவஞானம் பெற்ற மாணாக்கர் பலர். தலை மாணாக்கரானவர் குலகுருவான
அருணந்திசிவம் என்றால் மெய்கண்டார் பெருமையை யாரே அளவிட்டுக் கூற வல்லார்!

பெண்ணாடத்தில் திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான அச்சுதகளப்பாளர் மேடு
என்ற ஒரு ஏக்கர் இடத்தில் அழகுற அமைந்துள்ள கோவிலின் படங்களையும் வேள்விச்சாலை
படங்களையும் நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
IMG_7863.JPG
IMG_7981.JPG
IMG_7885.JPG
IMG_7964.JPG
IMG_7987.JPG
IMG_7985.JPG
IMG_7865.JPG
IMG_7900.JPG
IMG_7882.JPG
IMG_7886.JPG
IMG_7891.JPG
IMG_7892.JPG
IMG_7906.JPG
IMG_7908.JPG

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 24, 2014, 2:55:11 AM6/24/14
to சொ வினைதீர்த்தான், mintamil

வணக்கம் ஐயா .
பெண்ணாடம் கோயில் கும்ப அபிசேகம் காணக்கிடைத்தது ஓர் பெரும் பாக்கியமே

K. Loganathan

unread,
Jun 24, 2014, 2:58:27 AM6/24/14
to சொ. வினைதீர்த்தான், meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, vall...@googlegroups.com
திரு வினைத்தீர்த்தான் அவர்களே 

மிக்க நன்றி. எனது ஞான வாழ்க்கையில் மிகச் சிறப்பான இடத்தை வகிப்பது சிவஞானபோதமே. மலேசியாவில் அதனை போதிப்பதற்கு யாரும் இல்லாத சூழலில் யானே முயனறு பல உரைகள வழியாக கற்று பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததொடு தமிழிலும் புதியவோர் 'நூலிய அறிவியல்' உரையும் எழுதினேன்.

நான் பிறப்பால் சைவன் அல்ல. ஆனால் மெய்கண்டாரின் அற்புதமான நூலிய அறிவியல் சான்ற ஏரணவியல் சான்ற சிவஞானபோத்ததப் புரிந்துகொண்ட பிறகு, நல்லவொரு சைவ சித்தாந்தியாக இருப்பதைத் தவிற வேறொன்றும் தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தேன். இன்றும் அப்படித்தான் இருக்கின்றேன்.

மெய்கண்டாருக்கு இப்படி சிறப்புக்கள் செய்வது மகிழ்ச்சியைத் தந்தாலும், அவரது வரலாறு பல கற்பனைக் கதைகளை உடையதாகவே இருக்கின்றது.

யார் போத்தத்தைக் கற்கின்றார்களோ அதற்கு மெய்கண்டாரே எழுதிய உரை, தொல்காப்பியர் வகுத்தளித்த காண்டிகை உரை என்பத அறியாதே இருக்கின்றனர். மெய்கண்டார் நல்லவொரு தொல்காப்பியப் புலவர்.

மேலும் அவர் திருக்குறளின் தாக்கத்திற்கும் ஆளாகியவர். அவரது முதல் சூத்திரம்  திருக்குறளின் முதல் குறளின் விரிவாக்கம் ஆகும்.

இப்படிப்பட்ட வரலாற்று உணமைகளை இதுவரை யாரும் ஆய்ந்து வெளியிடாதது ஓர் பெருங்குறையே.

ஓர் கேள்வி கேட்டு போதத்தை இன்னும் புதிய கோணங்களைல் ஆய்ந்துணர முயற்சி செய்யலாம் என்று வற்புறுத்த நினைக்கின்றேன்.

சிவஞானபோதத்தில் விளங்கும் காண்டிகை உரை, அது காட்டும் ஏரணவியல், பார்தமெங்கும் பரவி இருக்கும் நையாயிகமா அல்லையா? என்பதே என் கேள்வி.

கோயில்கள் எழுப்பி அவரை போற்றுவது ஒருபுரம் இருக்க அவரது சிந்தனையின் ஆழத்தைப் புரிந்துகொள்வதும் தேவையே

குறிப்பு; இது தனை மடலா ஆலது மிந்தமைழ் மடலா என்று தெரிஉஅவில்லை, ஆயினும் பொதுவான ஓர் விசயமாக் இருக்க எனது மின்குழுமங்களுக்கும் அனுப்பிவைக்கின்றேன். மிக்க நன்றி  திரு வினைதீர்த்தான் அவர்களே.

உலகன்

தேமொழி

unread,
Jun 24, 2014, 3:08:18 AM6/24/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com

///மெய்கண்டாருக்கு உற்சவச் செப்புத் திருவுரு  புதிதாக அழகுறச் செய்துள்ளார்கள். ///

புன்னகை பூக்கும் முகத்துடன் மிக அழகிய சிலை.  

நன்றி ஐயா.

..... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 24, 2014, 5:47:20 AM6/24/14
to K. Loganathan, meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, vallamai
2014-06-24 12:28 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
திரு வினைத்தீர்த்தான் அவர்களே 

மிக்க நன்றி. எனது ஞான வாழ்க்கையில் மிகச் சிறப்பான இடத்தை வகிப்பது சிவஞானபோதமே. மலேசியாவில் அதனை போதிப்பதற்கு யாரும் இல்லாத சூழலில் யானே முயனறு பல உரைகள வழியாக கற்று பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததொடு தமிழிலும் புதியவோர் 'நூலிய அறிவியல்' உரையும் எழுதினேன்.

நான் பிறப்பால் சைவன் அல்ல. ஆனால் மெய்கண்டாரின் அற்புதமான நூலிய அறிவியல் சான்ற ஏரணவியல் சான்ற சிவஞானபோத்ததப் புரிந்துகொண்ட பிறகு, நல்லவொரு சைவ சித்தாந்தியாக இருப்பதைத் தவிற வேறொன்றும் தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தேன். இன்றும் அப்படித்தான் இருக்கின்றேன்.

மெய்கண்டாருக்கு இப்படி சிறப்புக்கள் செய்வது மகிழ்ச்சியைத் தந்தாலும், அவரது வரலாறு பல கற்பனைக் கதைகளை உடையதாகவே இருக்கின்றது.

யார் போத்தத்தைக் கற்கின்றார்களோ அதற்கு மெய்கண்டாரே எழுதிய உரை, தொல்காப்பியர் வகுத்தளித்த காண்டிகை உரை என்பத அறியாதே இருக்கின்றனர். மெய்கண்டார் நல்லவொரு தொல்காப்பியப் புலவர்.

மேலும் அவர் திருக்குறளின் தாக்கத்திற்கும் ஆளாகியவர். அவரது முதல் சூத்திரம்  திருக்குறளின் முதல் குறளின் விரிவாக்கம் ஆகும்.

இப்படிப்பட்ட வரலாற்று உணமைகளை இதுவரை யாரும் ஆய்ந்து வெளியிடாதது ஓர் பெருங்குறையே.

ஓர் கேள்வி கேட்டு போதத்தை இன்னும் புதிய கோணங்களைல் ஆய்ந்துணர முயற்சி செய்யலாம் என்று வற்புறுத்த நினைக்கின்றேன்.

சிவஞானபோதத்தில் விளங்கும் காண்டிகை உரை, அது காட்டும் ஏரணவியல், பார்தமெங்கும் பரவி இருக்கும் நையாயிகமா அல்லையா? என்பதே என் கேள்வி.

கோயில்கள் எழுப்பி அவரை போற்றுவது ஒருபுரம் இருக்க அவரது சிந்தனையின் ஆழத்தைப் புரிந்துகொள்வதும் தேவையே

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி திரு உலகன் அவர்களே. சைவசித்தாந்தத்தில் நூலிய ஏரணவியல் வழியாகத் தாங்கள் ஆய்ந்துணர்ந்த முயற்சியை வியந்து போற்றுகிறேன்.

தத்துவங்களில் என் போதாமையால் ஈடுபாடு ஏற்படவில்லை. ஆனால் 800 ஆண்டுகளாகத் தமிழ்ச் சமுதாயம் போற்றிக்கொண்டாடுகிற பேரருளார், அவருடைய பன்னிரு சூத்திரங்களுக்குப் பல அறிஞர்கள் பல்லாயிரம் பக்கங்கள் விரிவு எழுதியும் விஞ்சி நிற்கிற சொல்லாளர் தவழ்ந்த இடம் என்று நினைக்கிறபோது மனதில் தோன்றுகிற சிலிர்ப்பை, மனநிறைவை விவரிக்கச் சொற்கள் இல்லை.

அவர் நினைவைப் போற்றுகிற கோவில் பொலிவுடன் அமைகிறபோது இக்கோயிலும் அது சார்ந்த அமைப்பும் வருங்காலச் சந்ததியினரில் ஒரு சிலரையாவது தத்துவங்களில் தங்களைப் போன்று ஈடுபாடுகொள்ளத் தூண்டுகோலாக அமையும் என்பது உறுதி.
திருவாவடுதுறை ஆதின நூலகம் கோவில் வளாகத்தில் செயல்படுகிறது. அங்கிருந்த நூல் விற்பனை நிலையத்தில் மெய்கண்டார் சூன் திங்கள் இதழ், திருக்கோவையார், திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிகள், நரசிங்கபுரம் தலபுராணம் நூல்கள் வாங்கினேன். 
நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 24, 2014, 5:49:16 AM6/24/14
to vallamai, mintamil
மெய்கண்டார் திருவுருப் படத்தை அழகுறப் பெரிதாக்கி வெளியிட்டமைக்கு நன்றி திருமிகு தேமொழி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 24, 2014, 6:26:22 AM6/24/14
to santhavasantham, mintamil, vallamai

2014-06-24 12:49 GMT+05:30 Arunachalam Sabapathy <arunach...@gmail.com>:
நன்றி வினைதீர்த்தான் அவர்களே மெய்கண்டாரைக் கண்டு காட்டியமைக்கு வாழ்த்துக்கள்.படங்கள் சிறப்பாக இருந்தன.சபா.அருணாசலம்.

பதிவையும் படங்களையும் கண்டு வாழ்த்தியமைக்கு நன்றி திரு சபா அருணாசலம் ஐயா. வளாகத்திலிருந்த நூல்நிலையத்தில் சில நூல்களும் மெய்கண்டார் சூன் 2014 திங்கள் இதழும் வாங்கினேன்.
 
அவ்விதழில் ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள் சித்திரை ஆயில்ய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தங்களுடைய கட்டுரையின் முதல் பகுதி வெளியிடப்பட்டிருந்தைப் படித்தேன். மாதவச் சிவஞான யோகிகள் அருளிய பிள்ளைத்தமிழ் நூல்களில் சிவநெறிச் செய்திகள் என்ற தலைப்பில் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் குறித்த செய்திகள் பார்த்தேன். மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
 
சிவபெருமானும் விநாயகரும் வேறல்லர்; ஒருவரே என்ற கருத்தையும் பிள்ளைத் தமிழிலில் உள்ள சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 
Reply all
Reply to author
Forward
0 new messages