https://timesofindia.indiatimes.com/city/chennai/tracing-the-origin-of-tamili-the-scripts-of-the-tamils/articleshow/71800476.cms
தமிழ்நாட்டில் உலக மொழியியலில் முக்கியமான Phonetics Analysis கண்டுபிடிக்கப்பெற்றது
என்று நிறுவுவதில் இந்தாலஜி துறையிலே சிக்கல்கள் எழும் என எண்ணுகிறேன். பிராமி கி.மு. நான்கு (அ) ஐந்தாம்
நூற்றாண்டில் தமிழ்நாட்டில், இலங்கையில் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் கூட.
இந்தியாவிலே வாய்மொழி இலக்கியம் என்பது அரதப் பழமையானது. எழுதப்படாத இருக்குவேதம்
சுமார் கி.மு. 1200 எனக் கணிக்கின்றனர். செம்பூழிக்கால நூல் இஃது. இரும்பைஅறியாதது என்ப.
மனனம் செய்து இருக்குவேத பிராமணர்கள் காலம், காலமாக தம் வம்சாவளியினருக்கு வாய்மொழியாகவே
போதித்து வருவது ரிக்வேதம். இதன் பழைய வேள்விகளை கேரளாவின் பாஞ்ஞல், பாலைக்காடு அருகே -
பேரா. ஃப்ரிட்ஸ் ஸ்டால், ஆஸ்கோ பார்போலா, .... போன்றோர் முழுமையாக 50 ஆண்டு முன்னர் பதிவு செய்தனர்.
பாஞ்ஞல் என்பது பாஞ்ஞாலம் என்னும் பாஞ்சாலம் (பஞ்சாப்) ஆகும். அங்கிருந்து தெற்கே வந்த இருக்குவேதி நம்பூதிரிகள்.
நம்பி+ஸ்ரீ >> நம்பூதிரி. அம்முறையில் கயிலை போய்வந்த கயிலைஸ்ரீ >> கயிலைதிரி, காசிஸ்ரீ >> காசிதிரி என்று தனித்தமிழில்
வழங்கலாம். வாய்மொழியாக மனனம் செய்து வழிசெய்து ஒரு டேப் ரிக்கார்டர் போல தலைமுறைகளைக் கடந்து
வந்ததால், உலகின் முதல் ஃபோனட்டிக் ஸயன்ஸ் வேதங்களுக்கு உருவாகி, உயிர் எழுத்து, மெய்யெழுத்து,
உயிர்மெய் எழுத்துக்கள் என்பன கண்டுபிடிக்கப்பெற்றன. இந்தப் பகுப்பு சிவ சூத்திரங்கள்
என்று வேத இலக்கியங்கள், பாணிநீயத்தில் அறியப்படுகின்றன.
ஏ. சி. பர்னல் 150 ஆண்டு முன்னரே தொல்காப்பியத்திற்கும், ஐந்திரத்திற்கும் உள்ள உறவுகளை
நூலாக எழுதியுள்ளார். தொல்காப்பியர் வடக்கே நிகழ்ந்த மொழியியல் விஞ்ஞானப் புரட்சியை
உள்வாங்கி, தமிழுக்கே உரிய எழுத்துக்களை கடைசியாக வைத்து தமிழ் இலக்கணம்
செய்துள்ளார். புள்ளிக் கோட்பாடு காந்தாரத்திலும், தமிழ்நாட்டிலும் கி.பி. 2-ம் நூற்றாண்டில்
உருவெடுக்கிறது. வடக்கே சம்யுக்தாக்ஷரம் நிலைபெற்றுவிட்டதால் புள்ளி பெரிதாகவில்லை.
கீழடியில் பிராமி வரும் நூற்றாண்டு என்ன என அறுதியிடல் அவசியம். 100 ஏக்கர்
ஹேபிட்டேஷன் ஸைட் என்பது கலைக்கப்படாமல் (பெரு) மணலூரில் இருப்பது அதிசயம்.
இன்னும் பல இடங்கள் (உ-ம்: கொடுமணல், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், ...)
இருக்கும். வருங்காலங்களில் மேலைநாட்டு ஆய்வாளர்கள் தனியாக தொல்லியற் குழிகளை
தோண்ட அனுமதி கொடுத்து, தமிழ்நாட்டு ஆய்வாளரளுடன் முயன்றால் எந்த
நூற்றாண்டில் ப்ராமி தமிழ்நாட்டில் இருக்கிறது என துல்லியமாகத் தெரியும்.
இதுபற்றி பலகாலமாக, ஐராவதம், ராஜன், ... கண்டுபிடிப்புகள் பற்றி எழுதிவரும்
தி. சி. சுப்பிரமணியன் கீழடியின் பிராமிக் காலம் என்பது தெளிவடையாமல்
இருப்பதை விளக்கியுள்ளார். அதனைப் படித்தபின் என் கருத்துகள்,
கீழடியில் பிராமி கி.மு. 5-ம் நூற்றாண்டு என்று கொண்டாலும் கூட,
அதற்கும் பல நூற்றாண்டு முன்னர் ஹரியானாவில் ’மழுவாள் நெடியோன்’ என
மதுரைக் காஞ்சி குறிப்பிடும் விடங்கர் படிமத்தில்
பிராமியின் தோற்ற கால எழுத்துக்கள்:
Figures 4 and 5 (in Page 4 of PDF):
பிற பின்!
நா. கணேசன்
M. T. Saju wrote a piece in Times of India paper,
Indus symbols and their Dravidian connections