முக்கியமாக, talipot palm (தாளிப்பனை) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்
ஸ்ரீதாளி பனை ஓலைகளில் முதல்முதலாக
பாலி மொழியின் புத்த வசனங்கள் பொறிக்கப்பட்டன என்கிறார்கள்.
வேதத்தை எழுதாமறை ஆனால் புத்த, ஜைந ஆகமமங்கள்
நெடுங்காலம எழுதுமறைகள். இதன் பிரதிவிம்பத்தை
தேவாரத்தில் பார்க்கலாம். தேவாரத்தை எழுதுமறைகள்
என்கின்றனர் தேவார முதலிகள்.
தாலம், தாட/தாள என்று எச் சொல்லில் இருந்து தோன்றுகிறது?
தாழ் என்னும் பெயர் பனைமரத்துக்கு மிகப் பழைய சொற்களில்
ஒன்று. அதன் ஓலைகள் தாழ்ந்து தொங்குதலாலாம்.
http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33826
பழங் கன்னடத்தில் தாழ் என்றால் பனைமரம்.
திராவிட வேர்ச்சொல் அகராதி:
3180 Ka. tār̤
3180 Ka. tār̤ palmyra or toddy palm, Borassus flabelliformis. Tu.
tāri, tāḷi id. Te. tāḍu, (inscr., Inscr.2) tār̤u id.; tāṭi of or
belonging to the palmyra tree; tāṭi ceṭṭu palmyra tree; tāṭ-āku
palmleaf. Kol. (Kin.) tāṭi māk palmyra tree. Nk. tāṛ māk/śeṭṭ
toddy palm. Nk. (Ch.) tāṛ id. Pa. tāṛ id. Ga. (S.3) tāṭi palmyra palm.
Go. (G. Ma. Ko.) tāṛ, (S.) tāṛi, (A.) tāḍi toddy palm; (SR.) tādī kal
palm liquor (Voc. 1709). Konḍa ṭāṛ maran, ṭāṭi maran palmyra tree. Pe.
tāṛ mar toddy palm. Kuwi (Su.) tāṭi mārnu, (S.) tāti id. Kur. tāṛ palm
tree. Malt. tálmi Borassus flabelliformis. / Cf. Skt. tāla-, Pkt.
tāḍa-, tāla-; Turner, CDIAL, no. 5750 (some of the Dr. items may be <
IA). DED(S, N) 2599.
Toddy = தாடி (பனை) கள்ளு. (தாடிக்கொம்பு திண்டுக்கல் அருகே
உள்ள ஊர்.)
மதகாக, ஓடைகளின் இடையே தாழ் மரத்தை (பனையை)
போட்டிருக்கிறார்கள். “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”
- உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்து மீட்டும் படித்தேன்.
வள்ளுவரும், பாரதியாரும் தாழ் என்னும் பனைமரம்
பற்றிக் குறிப்பிடுகிறார்கள் என்று கருத இடம் இருக்கிறது.
பெண்ணை எனப்படும் பெண்பனை மரம் மிக வலுவானது.
(E. Balfour).
"இப்போது கொஞ்சம் வெளிச்சம் கிட்டுகிறது. ஆசை என்னும் கொடி என்பது,
உள்ளத்தை நிறைத்துப் பல்கிப் பெருகிக் கிளைகளாக ஓடுவது என்றும்; தாழ்மரம்
என்பது, அப்படிக் கொடி ஓடாமல் ஏரியின் மதகை அடைப்பதற் காகப் பயன்படும்
பலகை அல்லது shutter என்றும் புலப்படுகிறது. பெருக்கெடுக்கும் ஆசை,
வழிந்தோடும் ஆசை மேலும் பெரு காமல், மேலும் சிந்தி, வழிந்து ஓடாமல்
தடுத்து நிறுத்தும் தாழ், குரு. உள்ளே ஆசை நிறைந்து, கரையை அரித்து,
உடைத்து ஓடப் பார்க் கிறதா? குருவைச் சரண்புகுந்தால், ஓட்டை ஏற்பட்ட dyke
உடைந்து போகாமல் அதனுள் விரலை நுழைத்துக் காத்த சிறுவன் ஹேன்சன்
செய்ததைப்போல் குருவின் பாதம், ஆசையின் மதகை அடைக்கப் பயன்படும்
பலகையாகச் செயல்படும் என்று பாரதி சொல்கிறான். மலையைக் கெல்லி எலியைப்
பிடித்ததைப் போல் பிடிக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய சொல்லாட்சியை
அப்படி இழந்து கொண் டிருக்கிறோம். மிக எளிமையான பாடல்கள் என்று
பெயர்பெற்ற பாரதியின் கவிதை களுக்கே இந்த நிலை.
அப்படியானால் அடைக்கும் தாழ்? திரு வள்ளுவர் என்ன சொல்கிறார்? அங்க
வாங்க. அன்பு என்பது எப்போதும் உள்ளத்தில் முற்ற முழுக்க நிறைந்து
இருக்கிறது. அது வற்றுவதில்லை. அது வெளிப்பட்டபடியே இருக்கும். அப்படி
வெளிப்படும் அன்பின் ஒழுக்கை--அல்லது பெருக்கை--தடுக்க ஒரு தாழ்--
அடைக்கும் பலகை--ஏதும் இல்லை. அதனால்தான் தன் அன்புக்கு உரியவர் களுக்கு
ஏதேனும் துன்பம் ஏற்படுமானால் 'புன்கணீர் பூசல் தரும்', கண்ணீர் வழியாக
வெளிப்படும். அன்பைத் தடுத்து நிறுத்த முடியாது. உள்ளே நிறைந்த அன்பு,
துன்பம் ஏற்படும் சமயங்களில் கண்ணீர் வடிவத்தில் வெளிப்படுகிறது.
அப்புறம் எங்க இருக்கு தாப்பாள்?"
(ஹரிகி, டிச. 2007, தென்றல்).
முன்னரெல்லாம், மெக்கானிக்கல் லிஃப்டிங், லோயரிங் கிடையாது.
தாழ்மரம் என்றால் தாளி (பனை) மரம் என்று கொண்டால்
நெடுக வளர்ந்த பனைகளை கால்வாய்களின் குறுக்கே தண்ணீரை
அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர் என்று பொருள் கொள்ளவியலும்.
பழங்கன்னடத்தில் தாழ் என்று பனையைக் குறிப்பதும்,
தாட்-/தாள்-/தால்- என்னும் அதன் திரிபுகளும் இந்தியா முழுமையும்
உள்ளதைச் சிந்திப்போம். சோழ- வடக்கே ழ இல்லையாதலால்,
சோட-/சோள-/சோல-/சோர- என்றெல்லாம் சோழ மன்னர்கள்
குறிக்கப்படுவதோடு ஒப்பிடுங்கள்.
பௌத்த ஸ்தூபியின் ஸிம்பாலிசம், பண்டை இந்தியாவில்
palm trees அடுத்த மடலில்.
நா. கணேசன்
On Jun 5, 9:44 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> எல்லா இந்திய உபகண்ட பாஷைகளிலும்
> தாலம், தாட/தாளம் என்றால் பனைமரத்துக்கு இருக்கிறது.
> இது திராவிடச் சொல்லை ஆரிய மொழிகள் கடனாகப்
> பெற்றுள்ளன என்கிறார்கள்.
>
> முக்கியமாக, talipot palm (தாளிப்பனை) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்
> ஸ்ரீதாளி பனை ஓலைகளில் முதல்முதலாக
> பாலி மொழியின் புத்த வசனங்கள் பொறிக்கப்பட்டன என்கிறார்கள்.
> வேதத்தை எழுதாமறை ஆனால் புத்த, ஜைந ஆகமமங்கள்
> நெடுங்காலம எழுதுமறைகள். இதன் பிரதிவிம்பத்தை
> தேவாரத்தில் பார்க்கலாம். தேவாரத்தை எழுதுமறைகள்
> என்கின்றனர் தேவார முதலிகள்.
>
> தாலம், தாட/தாள என்று எச் சொல்லில் இருந்து தோன்றுகிறது?
> தாழ் என்னும் பெயர் பனைமரத்துக்கு மிகப் பழைய சொற்களில்
> ஒன்று. அதன் ஓலைகள் தாழ்ந்து தொங்குதலாலாம்.http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33826
இங்கே குரு = பாரதியாரின் குரு, யாழ்ப்பாணத்துக் குள்ளச்சாமி.
”ஆசை என்னும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்”
பாரதியின் ஆசையெல்லாம் நிறைவேற்றும் குள்ளச்சாமி என்று
சொல்லலாமா? ஆசையை கவி தன் மனத்தில் உதிக்கும் கொடி
என்று உருவகப்படுத்தினால், அதை பட்டொளி வீசிப் பறக்கச்
செய்யும் பெரிய கொடிக்கம்பமாக (தாழ் மரமாக) விளங்குபவர்
குள்ளச்சாமி.
/க/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jun 7, 4:30 pm, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> தால் . தாடு (இந்தி) என்னும் பனையை குறிக்க சங்ககால நூல் வழக்கு பெண்ணை
>
பெண்ணை குலை ஈனும் பெண் மரம்.
> ௨௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே இத னில் அகன்ற இன ஓலைகளை ஒரு முழம்
> வரையிலான அளவு களில் ஈர்க்கு நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கூரான ஓர்
> ஊசியை பயன் கொண்டு எழுதத் தலைப் பட்டனர் தமிழ் மக்கள்
>
> காகிதம் என மேல்நாட்டார் பலவித மரக் கூழ்களிருந்து பனை ஓலை
> போல் அல்லாமல் வாழை இலை போல் அகன்றதாக மெல்லிய இதழாகத் தடவி
> எழுத முயன்ற போதும் அதற்கு தமிழ் மக்கள் *தாள்* (தால்) என பெயரிட்டனர்
>
> தமிழ் நாட்டில் அதிகமாக காணப் படுவதாலேயே மக்கள் தாங்கள் வாழும்
> வீட்டினை பெரும்பாலும் அதன் ஓலை மரம் முதலியவை கொண்டே கூரை
> வேய்ந்தனர். மேலும்
> இ னி ப்பான சர்க்கரை செய்யவும் அதன் மரச் சாறு பயன் பாட்டது.
>
> பனை மரம் தென்னை பாக்கு ஈச்சை மூங்கில் கரும்பு எண்ணைப்பனை(ஈச்சை) போன்றே ஓர்
> புல்லினத்தைச் சேர்ந்ததானாலும் அதன் காய்களில் இரண்டு அல்லது
> மூன்று விதைகள் இருக்க மற்றவையில் ஒரே வித மாட்டும் விளைகின்றது
> மேலும் காய்க்காத ஆண் மரம் காய்க்கும் பெண் மரம் என இரு விதமாகக்
> காணப் படுகின்றது.
>
> மேலும் இப்புல்லினத்தில் அற்புதமானா லும் பலகிளைகள் உள்ள பனை மரம்
> பலநேரங்களில் பலயிடங்களிலும் காணப்படுகின்றது மற்றவையில் அங்ஙனம்
> இருப்பதாக ஆவணங்களில் கூட இல்லை
>
> மேலும் சில தொடரும்
>
> நு த லோ சு
>
> இவை கடலோரத்திலிருந்து பல நூறு கி மீ வரையிலான நிலத்தினில் வளர்கிறது
> தென்னை என்பது அவ்வாறு இல்லை
> 2011/6/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
On Jun 7, 4:30 pm, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> இவை கடலோரத்திலிருந்து பல நூறு கி மீ வரையிலான நிலத்தினில் வளர்கிறது
> தென்னை என்பது அவ்வாறு இல்லை
தென்னை உள்நாட்டிலும் வளர்கிறது.
கோவை மாவட்டம் நல்ல உதாரணம்.
எங்கள் குடும்பம் தென்னை பயிரிட ஆரம்பித்தவர்களில்
முதல். என் தாய் பத்தாயிரம் தென்னை மரங்களை
1970-களில் வளர்த்த ஆரம்பித்தார்.
நா. கணேசன்