--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்உன் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எழுதி வைத்துக் கொள் -அதே போல் நம் அடிமைத்தனம் நீங்க எந்தத் துறையிலும் சரி, புத்தகம் படிப்பதுதான் வழி என்பது அனுபவ சித்தமாகத் தெரியும் போது எந்த மஹானின் வார்த்தையையும் லட்சியம் பண்ணாதே.தாகம் கொள்ளை தாகம், பயங்கர வெயில். அந்த நேரத்தில் தண்ணீர்தான் தாகம் போக்கும் என்பதற்கு எந்த மஹானின் உபதேசம் வேண்டும்?எந்தப் பெரிய மஹான் சொன்னாலும் அபத்தம் அர்த்தம் உள்ளதாக ஆகிவிடாது.பெரியவாள்ளாம் சில பேரு, மஹான்கள், புத்தகப் படிப்பைக் கண்டிச்சிருக்காளே என்று கலங்காதே.நிறுத்து. உனக்கு ஒரே ஒரு வேலைதான் உண்டு. படிப்பது. உனக்கு முக்கியம் என்று பட்ட துறையில். உலகத் துறையா, உள்ளத் துறையா, ஆன்மிகமா, தத்துவமா - ஒரே ஓர் உண்மையான ராஜயோகம் - படிப்பு.உடனே மூக்கால் அழாதே. ‘எங்கண்ணா நேரம் இருக்கு. ஏகப்பட்ட வேலை..’தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.படிப்பு என்பது பெரிய தவம்.ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் - எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் - படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?இல்லையேல் யாராவது காட்டும் சர்க்கஸ் வேலைகளுக்கு நீ கைதட்டும் கூட்டமாக ஆகத்தான் வழிவகுக்கும்.மற்ற எல்லா வழிகளும் உன்னைக் குனிய வைத்து சிலர் பச்சைக் குதிரை தாண்டத்தான் பயன்படும்.எனக்குத் தெரிந்தவரை இல்லை என்று கொஞ்சம் மரியாதையாகச் சொல்கிறேன். பச்சையாகப் பிளந்து சொல்ல வேண்டும் என்றால் ‘கிடையவே கிடையாது’.நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.
தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.
இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.
படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.
***
*
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.
மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.
படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.
ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.
படிப்பு என்பது பெரிய தவம்.
தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.
எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.
படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.
இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.
தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.
--
’உம்’மை கற்பதின் சிறப்பை உணர்த்தும்.
கற்றலின் கேட்டல் நன்றுகேட்டலின் காண்டல் நன்று
நீங்களே செய்து பாருங்கள். ஆசானிடம் போய்க் கேட்பது உங்களுக்குப் பிடித்தது என்றால் அது போல் செய்யுங்கள். இல்லை படிப்பது எவ்வளவோ சிறந்தது என்றால் அதைச் செய்யுங்கள்.
எனக்கு இந்த ஆசானிடம் கேட்கறது என்ற மயக்கம் எல்லாம் இல்லை.தெளிவு - படிப்பு.படிப்பில் சேர்ந்ததுதான் மடலாடுவது, வீடியோ கல்வி எல்லாம். அதாவது படிப்பைப் பல்லூடகத் தன்மையாய் ஆக்கிவைத்திருக்கும் போது எங்க ஆசான் இருக்காருன்னு போய் பார்த்து குந்துக்க உட்காருங்களேன். யார் வேண்டாம் என்பது :-)
நல்ல நகைச்சுவை.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.
கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.
உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.
நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.
எனக்குத் தெரிந்தவரை இல்லை என்று கொஞ்சம் மரியாதையாகச் சொல்கிறேன். பச்சையாகப் பிளந்து சொல்ல வேண்டும் என்றால் ‘கிடையவே கிடையாது’.
மற்ற எல்லா வழிகளும் உன்னைக் குனிய வைத்து சிலர் பச்சைக் குதிரை தாண்டத்தான் பயன்படும்.
இல்லையேல் யாராவது காட்டும் சர்க்கஸ் வேலைகளுக்கு நீ கைதட்டும் கூட்டமாக ஆகத்தான் வழிவகுக்கும்.
நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?
இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் - எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் - படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.
எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.
படிக்க வாய்ப்புகளும், நூல்களும் எக்கச்சக்கமாக பெருகியுள்ள உண்மையான கிருத யுகம் நம் காலம்தான்.
படிக்க முடியாமல் யாரோ நெற்றுப் பண்ணதை, வாய் வார்த்தையாகச் சொன்னதை நம்பி வாழ்ந்தானே அந்தக் காலம்தான் பார்க்கப் போனால் உண்மையில் கலிகாலம்.
ஆனால் படிப்பு என்றால் யார் விட்ட புருடாவையும் நம்பி அப்படியே ஏற்றுப் பாராயணம் பண்ணுவதுதான் படிப்பு என்று எண்ணாதே.
படிப்பு என்பது பெரிய தவம்.
தவம் எல்லாவற்றினும் தவறாமல் கைமேல் பலன் தரும் ராஜ மார்க்கம் என்பதை ஒரு நாளும் மறவாதே.
எனவே படிப்பு என்பதை மிகவும் அக்கறையுடன் பெரும் யாகம் போல் தீவிரமாகச் செய்.
படிப்பது. படித்ததைக் குறிப்பு எடுத்துக் கொள்வது. பின்னர் அதை நன்கு சிந்தனை செய்வது. சிந்தனை செய்யும் போது புரிய வருவதைக் குறித்துக் கொள்வது. பின்னர் அங்கு படித்ததையும், இங்கு படித்ததையும் ஒப்பிட்டு ஒத்திசைவு, வேறுபாடுகள் ஆகியவற்றை கவனம் கொள்வது.
இது ஒரு தொடர்ந்த யக்ஞம். வேள்வி. நீ தான் யஜமானன். இந்த வேள்வியில் அனைத்து தெய்வங்களும் நேரடியாக வந்து பேசும்.
தெய்வம் நீ என்றுணர் - என்று மகாகவி ஏன் சொன்னார் என்பது அப்பொழுதுதான் உனக்குப் புரியும்.
உடனே மூக்கால் அழாதே. ‘எங்கண்ணா நேரம் இருக்கு. ஏகப்பட்ட வேலை..’
நிறுத்து. உனக்கு ஒரே ஒரு வேலைதான் உண்டு. படிப்பது. உனக்கு முக்கியம் என்று பட்ட துறையில். உலகத் துறையா, உள்ளத் துறையா, ஆன்மிகமா, தத்துவமா - ஒரே ஓர் உண்மையான ராஜயோகம் - படிப்பு.
படிப்புன்னா என்னன்னா... என்று இழுக்காதே... வெளிப்படையாகப் பச்சைத் தமிழில் நான் சொல்வது புத்தகப் படிப்பைத்தான்.
பெரியவாள்ளாம் சில பேரு, மஹான்கள், புத்தகப் படிப்பைக் கண்டிச்சிருக்காளே என்று கலங்காதே.
எந்தப் பெரிய மஹான் சொன்னாலும் அபத்தம் அர்த்தம் உள்ளதாக ஆகிவிடாது.
தாகம் கொள்ளை தாகம், பயங்கர வெயில். அந்த நேரத்தில் தண்ணீர்தான் தாகம் போக்கும் என்பதற்கு எந்த மஹானின் உபதேசம் வேண்டும்?
அதே போல் நம் அடிமைத்தனம் நீங்க எந்தத் துறையிலும் சரி, புத்தகம் படிப்பதுதான் வழி என்பது அனுபவ சித்தமாகத் தெரியும் போது எந்த மஹானின் வார்த்தையையும் லட்சியம் பண்ணாதே.
உன் கண்ணில் படும் இடத்திலெல்லாம் எழுதி வைத்துக் கொள் -
படிப்புதான் உண்மையான ராஜயோகம்.
***
படிப்பைப் பற்றி இப்படி விதந்து எழுதிவிட்டு எனக்கே கொஞ்சம் தோன்றியது. ‘கொஞ்சம் அதிகப்படியா சொல்லிவிட்டோமோ?’ என்று. அதற்குத்தான் இவ்வளவு நாள் விட்டுப் பார்த்தேன். ஆனால் இப்பொழுதும் எனக்குத் தோன்றுவது யாதெனில் மிக நிதர்சனமான உண்மையை எழுதியுள்ளேன் என்று. ஆம். படிப்பு என்பதைப் போல உண்மையான ஆன்மிகம், மத வழிபாடு, சத் சங்கம் என்பது வேறு எதுவும் இல்லை.ஞானமே உருவானவர் கடவுள் என்பது உண்மையானால், அந்தக் கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அல்லது ஒருவர் என்று கிடையாது, அது அனுபூதி நிலை, எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்க! ஞானமே உருவான ஒன்றிற்கு அணுக்கமான வழி அறிவை வளர்க்கும் படிப்புதானேவொழிய வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் படிப்பு என்பது தன்னுடைய ஆர்வம், உண்மையான ஊக்கம், முழு ஈடுபாட்டுடன் கூடிய தீவிரமான படிப்பு என்று இருக்க வேண்டும். சும்மாவாக, மற்றவர்க்குக் கண் மயக்குவதற்காக என்று இருக்கக் கூடாது.அது ஜபமோ, தவமோ, அனுஷ்டானமோ எதுவும் படிப்பு என்பதற்கு இணை கிடையாது.அறியாமை என்பது அகலுவதைக் கண்கூடாக நாம் படிப்பு என்பதில் காண முடியும். எந்தப் படிப்பு ஆயினும்.
படிப்புக்கு வயசு சொல்லாதே! எந்த வயசாயிருந்தாலும் படி. படி. படி.அது வாழ்க்கையின் இடைவிடாத இதயத் துடிப்பாக இருக்கட்டும். படி. படிப்பதைச் சிந்தி. சிந்தித்ததை நினைவில் கொள். அந்த நினைவோடு அடுத்து மேலும் படி. பொருத்திப் பார். யோசி. மறுக்க வேண்டும் என்றால் துணிந்து மறுத்து சிந்தித்துப் பார். மறுத்ததை மீண்டும் கொள்வதற்கு இடம் உண்டு என்று பட்டால் தயங்காதே! எந்த விதத்தில் கொள்ள வேண்டும் என்பதைத் துல்லியமாக ஆழ்ந்து ஆய்ந்து பார்.இதுதான் கண்கண்ட, கைகண்ட ஒரே தவம்! பொய்க்காத தவம் என்றால் இதுதான். நீ ஒவ்வொரு நாளும் புது புது உலகங்களில் நுழைந்து கொண்டிருப்பாய். புதிய மனிதராக ஆகிக்கொண்டிருப்பாய். ஏன்? மனிதர் என்பதையெல்லாம் கடந்தும் போய்க் கொண்டிருப்பாய். உனக்கு என்ன கவலை? படிப்பு என்னும் பெருந்தவம் வாய்த்தவளாக, வாய்த்தவனாக, வாய்த்தவராக நீ இருக்குங்கால், உன் ஆன்மிகப் பரிணாமம் உன் கண் முன்னாலே, கருத்தின் கண்ணிலேயே நிகழும் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பாய். நிறுத்தாதே.!எல்லாம் படிச்சு முடித்துவிட்டேன் என்று மனம் நைஸாக மாயை வேலை செய்யும். ஏமாறாதே! அந்த மனத்தையும் படி. மனிதன் என்பவன் படிக்கும் பிராணி. அதாவது யோசிக்கும் பிராணி. அதாவது கற்பனை செய்யும் பிராணி. அதாவது சிந்திக்கும் மிருகம். சிந்தனையாலேயே தன் பரிணாமத்தை மிருக நிலையிலிருந்து வெகு விரைவில் தேவ நிலைக்கு மாற்றக் கூடிய அற்புதம் நிகழ்த்தத் தெரிந்த ஒரே பிராணி!படிப்பு என்பதைப் பற்றிச் சொல்லி மாளாது. எனக்குத் தெரிந்ததைப் பொய் சொல்ல மாட்டேன். படிப்புதான் உண்மையில் கண்கண்ட ராஜ யோகம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
சிந்திப்பது சிந்தனா யோகம்சித்திப்பது என்ன யோகமோ அதுதான் யதார்த்தம்அன்புடன்தமிழ்த்தேனீ
2013/10/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>ஒரு சின்ன சந்தேகம்எழுதுவது ராஜ யோகமாபடிப்பது ராஜ யோகமாஅன்புடன்தமிழ்த்தேனீ
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2013/11/3 Rishi Raveendran <rishira...@gmail.com>
உண்மையில் படிப்பு என்பது என்ன ?
அமெரிக்காவின் தலை சிறந்த உளவியல் அறிஞர் பி.எஃப்.ஸ்கின்னர்படிப்பதையெல்லாம் படித்து மறந்ததுபோக மீதி உள்ளது கல்வி என்றார்மனித நினைவும் மறதியும் ஒன்ன்றோடொன்று இணைந்து மனிதனை அறிவுப்பாதையில் அழைத்துச் செல்கிறதுநினைவின் மூலம் மூன்றடி எடுக்கும் மனிதன் மறதியின் மூலம் இரண்டடி பின்னுக்குப் போகிறான்எனவே மனிதனுக்கு நினைவுபோன்றே மறதியும் முக்கியம்மறதி என்பதே முறையான நினைப்புக்கு வழி வகுப்பதுபழையதும் வேண்டாததையும் மற என்றால் மறவாத மனம் என்ன மனம்மூளை ஒரு கிட்டங்கி அதற்குள் எது இருக்கவேண்டும் எது குப்பைக் கூடைக்கு என்று தீர்மானிக்கும் சூத்திரதாரி யார்?வம்பு--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
எனவே நாம் கவனிக்க விரும்புவதில்லை என்ற ஒன்றைத் தவிர, என்ன தவறு, ‘படிப்பு’ என்பதை உண்மையான ராஜ யோகம் என்று சொல்வதில்?
.jpg?part=0.2)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தமிழ்ச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை நான்காகக் குறிப்பிடும் அவையாவன1. விழி நிலை
2. அறி துயில் அல்லது கனவுடன் கூடிய துயில்3. ஆழ் துயில் அல்லது கனவுகளற்ற துயில்4. துரிய நிலைமேலைச் சித்தாந்தம் மன நிலைப்பாடுகளை முன்றாகக் குரிப்பிடும்1.விழி நிலை
2. அறியா மன நிலை
3. அறியவியலா மன நிலைப்ராய்டும் யுங்கும் செயல்பாட்டு நிலைகளை மட்டும் விளக்கிச் செயல்படாத நிலையைப் பற்றி எதுவும் கூறவில்லைவம்பு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கணக்கு - இதுதான் கடைசியில் பிரபஞ்சக் கட்டுமானத்தின் அலகு என்று சொல்லலாமா?கடவுளும் பார்க்கப் போனால் கணக்குதானா? அல்லது ஓர் எண்ணா?பைதகோரஸ் சொன்னார் -- மகனே! உலகம் எண்களால் ஆனது என்று. வேதாந்தமோ ஏகம், த்விகம், த்ரிகம் என்று சொல்கிறது.கோடு, முக்கோணம், தளம், புள்ளி, சதுரம், வட்டம் -- இந்த உலகத்தில் பொருட்களை மிக ஆழமாக உற்று நோக்கினாலும் இந்த அடிப்படிகள்தான் மிஞ்சுகின்றன. மிக மிக விரிவாக நோக்கிப் போனாலும் இந்த அளவைகள்தான் மிஞ்சுகின்றன்.அதாவது நீங்கள் ஒரு கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிடுகிறீர்கள். போதாத காலம். சாப்பிடுமுன் அந்த கோன் ஐஸ் என்ன என்று ஆழ்ந்த கண்ணால் பார்த்துக் கொண்டே போகிறீர்கள்.ஃபூஉட்ட்ட்ட்ட்ட் கோன் ஐஸ் மறைந்துவிட்டது. கடைசியில் நுண்கருத்துகளால் ஆன கணக்குகளின் அளவைகள்தாம் உங்கள் கையில் (அது ஒரு நுண்கருத்துகளின் தளமாக ஆகிவிட்டதா) இருப்பதாக முடிவாக... ஐயோ பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?.. மறைந்து போன அந்த ஆழ்ந்த நோக்கு இல்லாத சாராசரி உலகை மீண்டும் வந்து அடைவதற்குள் அப்பாடா போதும் போதும் என்றாகிவிடுகிறது.இப்பொழுதும் கோன் ஐஸ் சாப்பிட யோசனையாக இருக்கிறது.சாப்பிடும் நான் யார்?சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் என்ன?எண்ணம் தோன்றும் மனம் என்ன?அந்த எண்ணம் எந்தவிதமான வெளியில் மனத்தில் தோன்றுகிறது?அதையெல்லாம் மறுபடியும் ஆழ்ந்து நோக்கினால், யம்மாடி எல்லாமே ஒரே கணக்கு மயம்.ஐயய்யோ நானும் காணவில்லை, மனமும் காணவில்லை, கண் உடம்பு, எல்லாம் கணக்கு, எண்கள் இப்படி ஆகிவிட்டால்? கடவுளே கடவுளே....ஆமாம் இந்தக் கடவுள் என்பது யார்? இன்னும் ஆழ்ந்து நோக்கும் போது....வாவ்..... கடவுளும் கணக்குதானோ?சார்! கோன் ஐஸ் கேட்டீங்களே.....ஐயய்யோ எந்த உலகத்தில் இருந்து, எத்தனியாவது கோஆர்டினேட்டிலிருந்து, எத்தனையாவது ஜியோமிதி ட்ரான்ஸ்ஃபார்மர் திருவையிலிருந்து இந்தக் குரல் வருகிறது தெரியவில்லையே!என்ன முழிக்கிறீர்கள்! கீழ் காணும் யூ ட்யூப் லிங்கைப் பாருங்கள்.விஞ்ஞானம் எந்த ரேஞ்சுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும். இதெல்லாம் படிப்பு இல்லாம முடுயுமா?அதெல்லாம் பளய காலத்து ரிசிங்க.. அப்படியே குந்திக்குனு.. கண்ணை மூடிக்கினு.... யோகத்துல பார்த்தாங்கன்னு... டூப்பு டுபுக்குக் கதையெல்லாம் சொல்லி டகல்பாச்சா பண்ணாமபடி படி படி இந்த ட்யூபைப் பார்த்த பிற்பாடாவது...***
ஆயினும் ‘அறிவு ஏற்படுவது’, ‘அறியாமை இரிவது’ என்னும் epistemological moments இவற்றைக் கருத்தில் கொண்டு, (‘போதோதயம்’, போதகத்வம், ’அஞ்ஞான பா4தம்’ ஆகியவற்றை மனத்தில் கொண்டு) நோக்கினீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ......................
அரிதாரம் பூசிய முகம் என் எழுத்தால் என்பால் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், ஏற்படுத்த ஒத்துழைக்காமல் இருக்கவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன் பேராசிரியரே! :-)***
அரிதாரம் பூசிய முகம் என் எழுத்தால் என்பால் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், ஏற்படுத்த ஒத்துழைக்காமல் இருக்கவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன் பேராசிரியரே! :-)***
ஏன் இந்தக் ’கொலைவெறி’, :-)
துரியம் துரியாதீதம் போனற அவத்தைகளைக் குறிப்பிடும்போது, அதன் தொடக்க நிலையாகிய சொப்பனாவத்தையை நாம் கருதவேண்டும் Freud ஓர் தவறான கனாவியல் சொல்லியிருக்க Jung என்பார் அப்படி அல்ல. ஆழமான ஞானக் கனவுகள மூரத்திகளின்( archetypes) விளையாடல் எனும் கருத்தில் அவர் விளக்குவார்.
இப்பொழுது நான் விளக்கிவரும் திருமூலரின் புரானவியல் இப்படித்டன் செல்கின்றது. புராணங்கள் ஞானக் கனவுகள்இவ்வாறான ஞானக் க்னவுகள் கண்டு பெயர்த்து அறிந்து ஞானம் வளர்க்க சொப்பனாவத்தை நிலையிலிருந்து துரிய நிலை அடைவோம். பிறகு இன்னும் ஆழமான தியான நிலைபோன்ற அவத்தைகள் தலைப்பட்டு துரியாதீத நிலை அடைவோம். இவை எல்லாம சாத்திரங்களை ஓதுவதால் மட்டும் வராது. உள்லபடியே அவற்றை ஒதுக்கிவிட்டு ஆழமான ஞானக் அகனௌவுகள் ஆய்ந்து உயர வேண்டும்
ஆகமவுளவியலில் இது இறைக்கல்வி பால் அடங்கும் - உலகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இதற்கு திரு ரா கிருஷ்ணனின் விமரிசனமோ, பாராட்டோ என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் :-)***
ஏற்கானவே குலை நடுங்கிப் போய் இருக்கிறேன். தெம்பு இல்லை.
நானும் தான் குலை நடுங்கிப் போயிருக்கிறேன், இங்கு ஒரு நூலைப் படிக்கும் போது. என்ன நூலா? --ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் மிகவும் சான்றாண்மை உள்ள புராணமாகக் கொண்ட ஸ்ரீவிஷ்ணு புராணம் என்ற நூலைப் படித்துவிட்டு --அதாவது பராசர ரிஷியை மைத்திரேயர் ஒரு கேள்வி கேட்கிறார்?‘நக்ன சொரூபம் என்றால் என்ன?’ அதாவது ஆடையில்லாத உருவம் என்றால் என்ன?அதற்கு பராசர ரிஷி கூறுகிறார் --“இருக்கு, யசுஸ், ஸாமம் என்கிற பெயரை உடைய வேதமானது பிராம்மணாதிவர்ணங்களுக்கு மறைவாய் இருக்கின்றது. அப்படிப்பட்ட வேதத்தை விட்டவன் யாரோ அவனே நக்கினன் என்று அறியும். நக்கினன் என்ற சொல்லுக்கு உலகத்தில் வஸ்திரமில்லாமல் திகம்பரனாயிருக்கிறவன் என்று அர்த்தமானாலும், சாஸ்திரத்தில் நக்கினன் என்கிறது வேத ரூபமான மறைவை இழந்தவனுக்கே என்று உணர்ந்துகொள்ளும். திரயீ என்கிற இம்மூன்று வேதமும் பிராம்மணாதி நான்கு வர்ணங்களுக்கும் மறைவு மாத்திரமன்று, சம்ரக்ஷணமாயும் இருக்கிறது. இப்படிப்பட்ட இதை மோகத்தினாலே விட்டுவிட்டவன் எவனோ, அவன் நக்கினன் என்று சொல்லப்படுவான்.”இவ்வாறு சொல்லிவிட்டு வசிஷ்டர் பீஷ்மருக்கு அருளிச்செய்த நக்கின ஸ்வரூப சம்பந்தமான விஷயத்தைச் சொல்லுகிறார்.அதாவது வழக்கம்போல் பூர்வத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் 100 வருஷங்கள் சண்டை நடந்தபோது, ஹ்ராதன் முதலிய அசுரர்களைக் குறித்து தேவர்கள் திருப்பாற்கடலில் ஸ்ரீவிஷ்ணுவிடம் முறையீடு செய்கிறார்கள். என்ன? அசுரர்கள் தர்மங்களில் தவறி நடக்கிறார்கள், தப்புத்தண்டா செய்கிறார்கள் என்றா? அதெல்லாம் இல்லையாம்.“ஹ்ராதன் முதலான அசுரரெல்லாம் பிரம்மாவின் ஆக்ஞையையும் கடந்து எங்களுக்குச் சேர வேண்டிய மூன்று லோக ஹவிர்ப்பாகங்களையும் அபகரித்துக் கொண்டார்கள்.. நாங்கள் தேவர்களானாலும் வேதமார்க்கத்தை அனுசரித்துத் தங்களுக்குரிய தருமங்களில் நின்றவர்களாய்த் தபஸோடு கூடியிருக்கிற அவ்வசுரரை வெல்ல அடியோங்களுக்குச் சக்தியில்லை. சர்வாத்துமகனான ஓ பகவானே! அடியோமெல்லாம் அவ்வசுரரை எதனாலே வெல்ல மாட்டுவோமோ அப்படிப்பட்ட உபாயத்தை அடியோங்களுக்குக் கொடுத்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்கின்றார்கள்.அப்படிப் பிரார்த்திக்க ஸ்ரீமஹாவிஷ்ணு தமது திருமேனியிலிருந்து ஒரு மாயாமோகனை உண்டாக்கி, அந்த தேவதைகளுக்குக் கொடுக்கிறார். அந்த மாயாமோகன் திகம்பரராய் நக்கின சொரூபம் என்று சொல்கிறது புராணம்.
அது மட்டுமன்று. அந்த சொரூபம் நேரே நருமதை நதிக்கரைக்குப் போய், தவம் செய்துகொண்டிருக்கும் அசுர ராஜர்களிடம் சென்று தர்மத்தைக் கைவிடும்படி உபதேசம் செய்து மாற்றுகிறதாம். புதிய உபதேசத்திற்கு நீங்கள் அருகர்கள், தகுதியானவர்கள், அருகர்கள் என்று மீண்டும் மீண்டும் சொன்னதினால் அவர்கள் எல்லாம் ஆருகதர்கள் ஆனார்களாம். அதே போல் சிவந்த ஆடை உடுத்துப் போய் இன்னும் வேறு சிலரை அறிந்துகொள்ளுங்கள், புத்யத புத்யத என்று சொல்லி அறிவு வாதத்தை உபதேசித்து மாற்றியதால் அவர்கள் புத்தன் பௌத்தர் என்று ஆயிற்றாம்.ஐயா! சொல்வது யாரோ இல்லை. பராசர ரிஷி. சொல்லியிருக்கும் நூலோ ஆதிசங்கரரால் பிரமாணமாகக் கொள்ளப்பட்ட புராணமாகிய ஸ்ரீவிஷ்ணு புராணம்.இன்று சரித்திர ரீதியாக நாம் சமணத்தைப் பற்றியும், பௌத்தத்தைப் பற்றியும் எவ்வளவு ஆராய்ச்சி முடிவாகப் பலதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் பிரமாண கிரந்தம் என்று கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படும் நூல் ஒன்று அந்தக் காலத்து ரிஷிகளால் எப்படிச் சிறிதும் அறிவு, ஆய்வு, வரலாற்றிற்கு உண்மையாக இருத்தல் என்ற எந்தவிதமான கவலையும் இன்றிக் கற்பனை போன போக்கில் தங்கள் சௌகரியத்திற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.இன்று ஒருவர் ஆய்வு நெறிகளுக்கும் அறிவு நெறிகளுக்கும் புறம்பாக எழுதும் போது நமக்குக் குலை நடுங்குகிறது. ஆனால் அப்படிப்பட்ட எவ்வளவு எழுத்துகள் ஏதோ பெரிய மகா யோக வல்லமையால் ரிஷிகளுக்கு வாய்த்த அற்புத ஞானம் போல் பழைய நூல்களில் பதியப்பட்டிருக்கிறது. அவற்றை இன்று படிக்கும் ஒவ்வொரு பொது அறிவு உள்ளவனுக்கும் குலை நடுங்குகிறது.காரணம் படிப்பறிவு தானே ஐயா! படிப்பறிவு இல்லையெனில் நீங்களும் நானும் என்ன சொல்லிக்கொண்டிருப்போம்? அதெல்லாம் பெரியவா சொல்றாள்னா அதுக்கு எல்லாம் ஒரு அர்த்தம் இருக்கும். நாம் யாரு அதெல்லாம் பற்றிக் கேள்வி கேட்பதற்கு? இப்படி காலத்துக்கும் இருக்கணும் நாம என்றுதானே ஐயா அவர்கள் படிப்பறிவு என்பதையே கண்டித்து, ஏளனம் செய்தார்கள்? புத்தகத்தைப் படிச்சுப் புட்டா நாம் சொல்றதை அப்படியே நம்ப மாட்டான். கேள்வி கேட்பான். வாதம் பண்ணுவான். நியாயம், நடுவு நிலைமை, ஆய்வு முறைகள் என்று பேசுவான் - அப்ப்டீன்னுதானே ‘நம்புடா நம்புடா... நம்பிக்கைதான் வழி. படிச்சுக் கெட்டுக் குட்டிசு சுவராப் போயிடாத’ என்று யோகிகளும், முனிவர்களும் உபதேசிக்கறதே.! ‘சாஸ்திர ஞானம் பஹு க்லேசம், புத்தி சலன காரணம்’ ‘சாத்திரங்களைப் படிக்காதே, பெரும் கஷ்டம், புத்தி அலைபாய அதுவே காரணம்’ -- இப்படிச் சொல்லிச் சொல்லியே.. என்ன சொல்ரது..... ஏதாவது சொன்னா நீங்க ஏன் அப்படி எழுதின, ஏன் இந்த மாதிரி வார்த்தையைப் போட்டே... படிக்கவே வெறுப்பா இருக்குன்னு திட்டுவீங்க.... ஆனால் என்னய்யா இதெல்லாம்?ஆனா ஒண்ணு. நம்ம சேசாத்திரியார் பழைய காலத்துல இப்படி எழுதியிருந்தா சும்மா ஜகஜ்ஜோதியா.... சேசாத்திரி மஹரிஷி உவாச -- என்று புராணம் கட்டியிருப்பாங்க. நாமும் சேசாத்திரியார் ரிஷி சொன்னதை யாராவது எதிர்த்துப் பேசினாக்க பயங்கரக் கோபப்பட்டிருப்போம். பாவம்! சேஷாத்ரியார், புத்தகப் படிப்பு பெருகிப் போன நம்ம காலத்துல வந்து நம்மோட சேர்ந்து கஷ்டப்படணும்னு இருக்கு. என்ன பண்றது?(ஸ்ரீவிஷ்ணு புராணம் - (தமிழில்) ஸ்ரீ வேதாந்த ராமானுஜாசாரியர் - சென்னை ஸ்ரீஆதிமூலம் பிரஸ் - 1925)மூல ச்லோகங்கள் வேண்டும் என்றாலும் போடுகிறேன். நானாகக் கதை விடவில்லை ஐயா!***
2013/11/3 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
ஏற்கானவே குலை நடுங்கிப் போய் இருக்கிறேன். தெம்பு இல்லை.
ரிஷிகள் தொடங்கி, ஸ்ரீராமகிருஷ்ணர், இரமண மகரிஷி வரை இவர்களது தியானம், அனுபவங்கள் இவற்றை நம்புகிறேன்.. இப்போது இருக்கும் ரீசண்ட் ரிஷிகளின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை.பழைய ஞான விசாரங்களின் உண்மைத் தன்மையை உணர்கிறேன்.இப்போது பாப்பாளா பள பள என நுனி நாக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும், இதர மொழிகளிலும் சமீபத்திய சில குருமார்கள் உதிர்க்கும் சொற்களில் சுத்தமாக நம்பிக்கை இல்லை.
ஒட்டுமொத்தமாகப் பொதுமைப் படுத்தக் கூடாது என்று நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் கணிசமான அளவில் இப்படித்தான் இருக்கிறது என்ன செய்ய? உங்கள் ஆதங்கம் புரிகிறது. அத்ற்கு வணங்குகிறேன். ஆனாலும் பல கடும் விமரிசனங்கள் இருக்கின்றன. என் குறிப்பு இந்த இழையைப் பொறுத்தமட்டில் புத்தகப் படிப்பு என்பது அலட்சியிக்கப்பட முடியாத அளவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது.***
--
--
ரீசண்ட் ரிஷிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதில் பலரும் எனக்கும் உடன்பாடில்லையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இதில் ஒட்டுமொத்தமாக இப்பொழுது என்னால் கழித்துக்கட்ட முடியாது என்று படுகிறது.உதாரணமாக ஜே கே. இவரைக் குறித்து நான் கடும் விமரிசனம் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ அவருடைய அணுகுமுறை மிகவும் பொருள் நிறைந்ததாகப் படுகிறது.ஏற்கனவே ஸ்ரீரமணர், அரவிந்தர் போன்றோர் வழிகளில் ஈடுபாடு உண்டு. விமரிசனமும் உண்டு என்பது ஒரு பக்கம்.ஆனால் இப்பொழுது என்னால் பழையவர்கள், புதியவர்கள் என்ற பார்வையைக் கொள்ள முடியவில்லை. யார் சொன்னதில் என்ன பொருள் இருக்கிறது? என்பதுதான் கவனத்திற்கு வருகிறது.This is just by way of stating the status of my mind.***
>>நான் இவர்களை நம்பாதது என் தனிப்பட்ட கருத்து. அதுவே பிறரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறுதியான உண்மை என்று நான் நினைக்க மாட்டேன். அதற்கு எனக்கு தகுதியில்லை. <<
இந்தக் கருத்து சரியில்லை. இவ்வாறு ரிலேடிவிஸ்டிக் அணுகுமுறையின் தயக்கத்தினால் நாம் நம் மனத்திற்கு உண்மையாக இருந்து படுகின்ற கறாரான விமரிசனங்களை வைக்கத் தயங்குவதால் நம் சம காலத்தினருக்கும், பின் வருவோருக்கும் உரிய மதிப்பு அளிக்கத் தவறுகிறோம் என்று கருதுகிறேன்.நமது புரிதல்கள் மாறலாம். மேலும் நம் அறிவு விரிவடைய, ஆழ்ந்து, தீவிரமாக நம் நிலைப்பாடுகளும், விமரிசனங்களும் மாற்றம் அடையலாம். அதை நாம் உள்ளபடிப் பதிவு செய்து போவதுதான் முறை. அதைவிட்டு நான் யார் விமரிசனம் செய்ய எனக்கு என்ன தகுதி என்பன போன்ற அறிவின் அணுகுமுறைக்கான பின்நகர்வுகளுக்கான நியாயப்படுத்தல்கள் நன்மை எதையும் விளைப்பதில்லை. மாறாக எதுவும் விமரிசனம் அற்ற சூழ்நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தியபடி காலத்தையும், தலைமுறைகளையும் தாக்கும் என்ற, நாமே பின்னால் வருந்த நேரிடும் நிலைமைக்கு, நாமே கண்மூடிய பங்குதாரர்களாக ஆகிவிட நேரிடும் அல்லவா?***
ரீசண்ட் ரிஷிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதில் பலரும் எனக்கும் உடன்பாடில்லையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இதில் ஒட்டுமொத்தமாக இப்பொழுது என்னால் கழித்துக்கட்ட முடியாது என்று படுகிறது.
உதாரணமாக ஜே கே. இவரைக் குறித்து நான் கடும் விமரிசனம் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ அவருடைய அணுகுமுறை மிகவும் பொருள் நிறைந்ததாகப் படுகிறது.ஏற்கனவே ஸ்ரீரமணர், அரவிந்தர் போன்றோர் வழிகளில் ஈடுபாடு உண்டு. விமரிசனமும் உண்டு என்பது ஒரு பக்கம்.ஆனால் இப்பொழுது என்னால் பழையவர்கள், புதியவர்கள் என்ற பார்வையைக் கொள்ள முடியவில்லை. யார் சொன்னதில் என்ன பொருள் இருக்கிறது? என்பதுதான் கவனத்திற்கு வருகிறது.This is just by way of stating the status of my mind.***
அருளாளர்கள் எல்லாம் ஒருமிக்கப் பெரும்பாலும் படிப்பு என்பதையே அல்ட்சியித்தோ, அல்லது கண்டித்தோ ஒதுக்கிப் பேசும் போது வேதங்கள்படிப்புதான் முக்கியம்.படிப்பைக் கைவிடாதே.படித்ததை ஒரு நாளும் மறந்துவிடாதே-- என்று வலியுறுத்துகின்றன.முத்கலரின் குமாரரான நாகர் என்பவர் --படிப்பதும், படித்ததை நன்கு எடுத்துச் சொல்வதுமே ஒரே பெருநெறி -- என்கிறார்.***
படித்ததை தியானிக்கச் சொல்கிறார்கள். படிப்புதான் அடிப்படை.***
நூலைக் கற்றல், புத்தகம் படித்தல் என்பதற்கு மேல் ஒரு மகத்தான ஆன்மிக வழி எனக்குத் தெரிந்தவரை இல்லை.உண்மையான ஆன்மிகம் என்பது படிப்பு.கடவுள், ஜபம், தபம், ஹோமம், பூஜை எல்லாம் சும்மா பிள்ளை விளையாட்டு.படிப்பு ஒன்றுதான் மனிதரை தேவ நிலையினும் உயர்ந்த பெரும் நிலைகளுக்கு உயர்த்தக் கூடியது.மனிதர் மனிதர் என்னும் பெயருக்குப் பொருத்தமாக ஆனது எப்பொழுது என்று கேட்டால் எனக்குத் தயக்கமே இல்லை பதில் சொல்ல.மனிதர் படிக்கத் தொடங்கிய பிறகுதான்.
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
..... அதுவும் ராமன்! புத்தர் ஒரு அவதாரம்! ராமன் புத்தரைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளையா பயன்படுத்துவது?
சரி. ஏன் இவ்வாறு புத்தகப் படிப்பையும், அறிவு வாதத்தையும் இவர்கள் எரிச்சல் அடைந்து கண்டிக்கின்றனர் என்று பார்த்தால் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அதாவது ஞானம், சமாதி நிலையில் தெய்விக ஞானம் பெறுதல் என்று எல்லாம் பார்த்தால் அங்கு அவ்வித ஞானம் பெறுபவர் தாம் அசாதாரணமானவர் என்றும் கேட்பவர்கள் சாதாரண நிலையில் இருப்பவர்கள் என்றும், கர்மங்களால் பந்தப்பட்டு அறியாமையில் கிடந்து உழல்பவர்களாகவும், ஏதோ பல ஜன்மத்துப் புண்ணியம் இப்படி ஞானம் பெற்றவர்களைப் பார்க்கவாவது கிடைத்ததே என்று வியந்து நிற்பவர்களாகவும் ஒருவித எதிரும் புதிருமான சூட்சுமம் எண்ணச் சூழ்நிலையில் உலவும். ஆனால் புத்தகப் படிப்பு, அறிவு வாதம் என்று வரும்போது அது அனைவருக்குமான பொதுமையாக அமைகிறது. ஏதோ படித்தவர் அந்தத் தெய்வத்தின் அவதாரம், இந்தக் கடவுளின் அவதாரம், என்றெல்லாம் ஹைலட்டர்களோ, அல்லது புத்தகத்தைப் படிக்காதவர் ஏதோ கர்மங்களில் விழுந்து பந்தப்பட்டு துர்பாக்கியம் ஆனவராகவோ கருதும் சூழ்நிலை கிடையாது. புத்தகத்தைத் தானும் கற்க முடியும், அறிவைப் பயன்படுத்தித் தானும் சிந்தித்தால் விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்ற இயல்பான வேதாந்த மனநிலை புத்தகப் படிப்பில்தான் நிலவுகிறது. இந்த வித ஜனநாயகப் போக்கு மெய்ஞ்ஞானச் சூழல்களில் பழகியவருக்கு ரசிப்பதில்லை. அஹங்காரம் அற்ற சூழ்நிலையை உருவாக்குவதாகச் சொல்லிக்கொள்ளும் மெய்ஞ்ஞானச் சூழல்கள் பெரும்பாலும் இந்தவித சூட்சுமமான அஹங்காரத்தை உள்ளடக்கியிருக்க, எந்தவித பந்தாவும் அற்ற புத்தகப்படிப்பு, அறிவுவாதம் என்னும் இயல்பான மனித வளர்ச்சிக்கான செயல்பாடுகள் அஹங்காரம் என்பதைத் தன்னடையே அகற்றுவதாய் அமைந்துவிடுகிறது.***2013/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பொதுவாகவே மதம், மெய்ஞ்ஞானம், யோகிகள், பக்தர்கள் என்று சொல்வோரெல்லாம் புத்தகப் படிப்பு, அறிவுவாதம், பொது புத்தியால் கேள்வி கேட்டல் என்பனவற்றை வெறுப்பவர்களாகவும், கண்டிக்கின்றவர்களாகவும், ஏசுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். கேட்டால், ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்கின்றனர்.‘புத்தகப்படிப்பில் அகப்படுமாடா பிரம்மம்?’ என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்கள் என்றால், கேட்டவர் தாம் கற்ற நூல்கள், கற்க நினைக்கிற நூல்கள் அனைத்தையும் வெற்று வீண் வேலை என்று நோகத் தொடங்கிவிடுவர். ஏதோ தெரியாத் தனமாய்த் தாங்கள் நூல்களைப் படித்துவிட்டொம் என்றும், பதில் சொன்னவரைப் போலத் தமக்கும் பரம ஞானம் வாய்க்கவில்லையே, வாய்த்திருந்தால் தாமும் நூல்களாவது ஒன்றாவது எல்லாம் மண்ணாங்கட்டி என்று மெய்ஞ்ஞானிகளாய் உலவலாமே என்று வருத்தப்பட்டுக் கொண்டு நிற்பர்.இந்த மாதிரியான பேச்சுகள் எல்லாம் மக்களுடைய அறிவுக்கான ஆர்வத்தைச் சீர்குலைத்து, புத்தகங்கள், நூலறிவு என்பது எல்லாம் பிரத்தியட்சமாய் மக்களுக்கு அறியாமையை விலக்கி அறிவு என்னும் மன ஒளியைத் தருகின்ற கண்கூடான உண்மையைக் காணாமல் அடித்து அஞ்ஞானம் அதிகப்படத்தான் வழிவகுக்கின்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. கண் இருந்தும் குருடர்களாய் ஆவதுதான் ஆன்மிகம் என்ற போலியான உணர்ச்சி வழக்கத்தை அதிகப்படுத்துகின்றன. போதாக்குறைக்கு பக்தி, பஜனை என்பதெல்லாம் அறிவு நெறியை அலட்சியப்படுத்தி மக்கள் எதையோ நம்பிக்கை வைத்துப் பின் தொடரும் விழிப்பற்ற நிலையையே பரவ வழிவகுக்கின்றது. கற்றல், சிந்தித்தல், ஓர்தல், ஓர்ந்ததனில் ஊன்றி நின்று உணர்தல் என்ற உண்மையானதும், மக்கள் அறிவுக்கும், வாழ்க்கைக்கும் ஆரோக்கியமானதுமான அறிவுக்கான ஊக்கம் மக்கள் வாழ்க்கையில் வேர்கொள்ளாமலேயே போய்விடுகிறது.***
இதெல்லாம் யாரை என்று குறிப்பிடுவது? பெரும்பான்மையும் புத்தகப்படிப்பைக் கண்டிப்பதுதான். பொதுவாகவே உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
ரீசண்ட் அருளாளர்கள் விஷயத்தில் நீங்கள் கொண்ட தயக்கம் தானய்யா எனக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் எனக்குப் பிடித்தவரைச் சொல்லிவிட்டாய், உனக்குப் பிடித்தவரைச் சொல்லிவிட்டாய் என்று தனிப்பட்ட வருத்தம் ஏற்படும் அல்லவா.பரவாயில்லை விருப்பப்பட்டால் முடிந்தால் சொல்லுங்கள். நோ ப்ராப்ளம்.***
சரி. ஏன் இவ்வாறு புத்தகப் படிப்பையும், அறிவு வாதத்தையும் இவர்கள் எரிச்சல் அடைந்து கண்டிக்கின்றனர் என்று பார்த்தால்.......
7. நூல் படிப்பு நிச்சயம் உலக அறிவைத் தரும். ஆனால் ஆத்மீகம் என்றொன்று இருப்பது உண்மையானால் அதில் உள்ள பூரண நிலையை அடைய அது உதவும் என்பதை ஏற்க நீங்கள் முதலில் அந்த பூரண நிலையப் புத்தகம் படித்தே அடைய வேண்டும். அப்படி நீங்கள் அடைந்தால் நீங்களே உதாரணமாவீர்கள். இல்லாவிட்டாலும் நீங்கள் உதாரணமாவீர்கள்.
கல்வியும், செல்வமும்மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. உத்தவரின்கல்வி உதவாமற் போனது. ஒப்புக்கொள்வோர்ஒப்புக்கொள்ளட்டும், இல்லையானாலும் நட்டமில்லைதேவ்
--
ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா? உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???
On Monday, 11 November 2013 18:40:27 UTC+5:30, myself wrote:ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா? உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???
டாக்டர் திவா ஜீ கண்ணில் படுகிறதா தெரியவில்லை;அவர் தரும் விளக்கம் அருமையாக இருக்கும்தேவ்
--
ஒவ்வொருத்தர் உயிரையும், ஆன்மாவையும் ஒன்றாக நினைப்பது சரியா? உயிர், ஜீவன் இரண்டும் ஒன்று தானே???
”எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்களை மறவாமல் இருப்பதினால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான்.”-- பீஷ்மர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
”எல்லா வேதங்களையும் ஓதுவதனால் துயரத்தினின்றும் உடனே விடுபடுகிறான். படித்த வேதங்களை மறவாமல் இருப்பதினால் ஸ்வர்க்கத்தையும், அவற்றின் பொருளை அறிவதனால் மோக்ஷத்தையும் அடைகிறான்.”-- பீஷ்மர்.
அடடே! அந்தக் காலத்துலயும் நம்மளை மாதிரி யோசிச்சவங்க உண்டு போல இருக்கே!
***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Ra Krishnan,If you do not like what I write kindly avoid seeing my mails. You have always the delete option. Kindly avoid personalising the comments.I hope you understand.***
பாராயணம் பண்ணுவதும், படிப்பதும் ஒன்றாகிவிடுமா?--பாராயணம் பண்ணுகிறவருக்கு அது ஒரு சடங்கு. பாராயணம் பண்ணுவதால் இந்தக் காரியம் நடக்கும்; அந்தக் காரியம் நடக்கும்; ஏதாவது காரியம் பலிதமாகும் என்ற நூலுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்தாம் முக்கியம்.இல்லாவிட்டால் யோசித்துப் பாருங்கள் - ஒரு நூலில் இன்னார் எழுதினார், இன்னார் பதிப்பித்தார் என்று போட்டிருக்கும். எந்த புத்திசாலியாவது நூலைப் படிக்கும் போது”எழுதியவர் இன்னார்நூலைப் பதிப்பித்தவர் இந்தப் பதிப்பகத்தார்அட்ரஸ் - இன்ன தெரு இன்ன இலக்கம், இந்த ஊர் இன்ன பின் கோட்விலை விவரம் இத்தனை ரூபாய்இந்த அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. ஃபோட்டோ ஆப்செட், டெமி ஆக்டேவோ, ”இப்படி ஒன்று விடாமல் படித்தார் என்றால் சரி ஒன்றும் புரியாத ஆள் பாவம், கண்ணில் கண்டதை மேய்ந்து கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருக்கும்.ஆனால், (மிகச் சிறுபான்மை உண்மையான விதவான்களைத் தவிர), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கிரந்தங்களைப் பாராயணம் பண்ணுகிறவர்களைப் பாருங்கள். கிட்டத்தட்ட இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள்.ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய:இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும்.மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும்.ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.ஸ்ரீபகவத் கீதை என்னும் உபநிஷத்தாகிய பிரம்ம வித்யையில், கீதை என்னும் யோக சாத்திரத்தில், ஸ்ரீகிருஷ்ண அர்ஜுனர்களிடையே நடந்த உரையாடலில், விபூதி யோகம் என்னும் பெயர் பெற்ற பத்தாவது அத்யாயம் இதுவாகும்.இந்தக் காலத்துல தலைப்பு கொடுத்து பேஜ் நம்பர் போட்டு முன்னாடி பொருளடக்கமும் கொடுத்துட்டா கதை முடிஞ்சுது. அந்தக் காலத்துல நெட்டுருப் பண்ணதால நினைவுல வைக்க வேண்டித் திருப்பிச் சொன்னாங்க.ஆனால் பாராயணம் பண்ணுகிறவருக்கு அதெல்லாம் கவலையில்லை. அங்கதான் விசேஷ சக்தி இருக்கிறதாக நினைத்துக்கொண்டு, அப்படி ஆடம்பரமா படிச்சார்னா அதனோட மகிமையே தனி! ஆனால் பொருள் மாத்திரம் கேட்கக் கூடாது. அது வேற கதை.
ஆனால் படிப்பு என்பதன் வழியே வேறு.நமது மகத்தான மரபுகளில் படிப்பு என்பது மிகச் சிறிய வட்டங்களில்தான் நடைபெற்றிருக்கிறது.பெரும்பாலும் பாராயணம்தான்.முதலில் சம்ஸ்கிருதத்தில் பாராயணம். அப்புறம் தமிழில், எந்த மொழியாய் இருந்தாலும் சரி பாராயணம்தான். இவ்வளவு நாள் ஓட வேண்டும். அதான் கணக்கு. காரிய சித்திக்கு அது போதாதோ?***
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
பாராயணம் பண்ணுவதும், படிப்பதும் ஒன்றாகிவிடுமா?பாராயணம் பண்ணுகிறவருக்கு அது ஒரு சடங்கு. பாராயணம் பண்ணுவதால் இந்தக் காரியம் நடக்கும்; அந்தக் காரியம் நடக்கும்; ஏதாவது காரியம் பலிதமாகும் என்ற நூலுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்தாம் முக்கியம்.இல்லாவிட்டால் யோசித்துப் பாருங்கள் - ஒரு நூலில் இன்னார் எழுதினார், இன்னார் பதிப்பித்தார் என்று போட்டிருக்கும். எந்த புத்திசாலியாவது நூலைப் படிக்கும் போது”எழுதியவர் இன்னார்நூலைப் பதிப்பித்தவர் இந்தப் பதிப்பகத்தார்அட்ரஸ் - இன்ன தெரு இன்ன இலக்கம், இந்த ஊர் இன்ன பின் கோட்விலை விவரம் இத்தனை ரூபாய்இந்த அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. ஃபோட்டோ ஆப்செட், டெமி ஆக்டேவோ, ”இப்படி ஒன்று விடாமல் படித்தார் என்றால் சரி ஒன்றும் புரியாத ஆள் பாவம், கண்ணில் கண்டதை மேய்ந்து கொண்டிருக்கிறார் என்று சிரிப்பாக இருக்கும்.ஆனால், (மிகச் சிறுபான்மை உண்மையான விதவான்களைத் தவிர), சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கிரந்தங்களைப் பாராயணம் பண்ணுகிறவர்களைப் பாருங்கள். கிட்டத்தட்ட இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள்.ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய:இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும்.மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும்.ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.ஸ்ரீபகவத் கீதை என்னும் உபநிஷத்தாகிய பிரம்ம வித்யையில், கீதை என்னும் யோக சாத்திரத்தில், ஸ்ரீகிருஷ்ண அர்ஜுனர்களிடையே நடந்த உரையாடலில், விபூதி யோகம் என்னும் பெயர் பெற்ற பத்தாவது அத்யாயம் இதுவாகும்.இந்தக் காலத்துல தலைப்பு கொடுத்து பேஜ் நம்பர் போட்டு முன்னாடி பொருளடக்கமும் கொடுத்துட்டா கதை முடிஞ்சுது. அந்தக் காலத்துல நெட்டுருப் பண்ணதால நினைவுல வைக்க வேண்டித் திருப்பிச் சொன்னாங்க.ஆனால் பாராயணம் பண்ணுகிறவருக்கு அதெல்லாம் கவலையில்லை. அங்கதான் விசேஷ சக்தி இருக்கிறதாக நினைத்துக்கொண்டு, அப்படி ஆடம்பரமா படிச்சார்னா அதனோட மகிமையே தனி! ஆனால் பொருள் மாத்திரம் கேட்கக் கூடாது. அது வேற கதை.
ஆனால் படிப்பு என்பதன் வழியே வேறு.நமது மகத்தான மரபுகளில் படிப்பு என்பது மிகச் சிறிய வட்டங்களில்தான் நடைபெற்றிருக்கிறது.பெரும்பாலும் பாராயணம்தான்.முதலில் சம்ஸ்கிருதத்தில் பாராயணம். அப்புறம் தமிழில், எந்த மொழியாய் இருந்தாலும் சரி பாராயணம்தான். இவ்வளவு நாள் ஓட வேண்டும். அதான் கணக்கு. காரிய சித்திக்கு அது போதாதோ?
***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ராமாயணமோ, கீதையோ அல்லது எந்த நூலாக இருந்தாலும் தவறாமல்ஓம் தத் ஸத் இதி ஸ்ரீமத பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய:இப்படி முடிவுக்கட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் பயங்கர ஏற்ற இறக்கத்தோடு நீட்டி முழக்கிச் சொல்வதைப் பார்த்தால், ‘ஐயோடீ! என்னமா பெரிய பண்டிதரு! வித்வான்...எவ்வளவு படிச்சவரு....’ என்று பார்க்கிறவர்களுக்கு விழி பிதுங்கிப் போகும்.மொழி வேற சம்ஸ்கிருதமாச்சா? யாருக்குத் தெரியும் அர்த்தம்... என்னவோ பெரிய மந்திரம் எல்லாம் சொல்றாரு...என்றுதான் நினைக்கத் தோன்றும்.ஆனால் இவையெல்லாம் பொருள் தெரிந்து பார்த்தால் வெறுமனே அந்தக் காலத்து பப்ளிஷிங் டீடெயில்ஸ்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
உரையாடல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கின்றது. வாசித்து ரசிக்கலாம் ஆனால் உண்மையில் இவ்வகை அனுபவங்களைப் பெறுவோருக்கு அச்சமயம் ஏமாற்ற உணர்வும், வலியும் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டுவது அவசியம்.கேள்வி எழுந்தாலும் கேட்காமல் சொல்லி வைத்ததை ஏற்றுக் கொண்டு செல்வதே மரியாதை என பெயர் சூட்டும் நிலையில் சமூகம் இருக்கும் வரை தெளிவு தேடுவோருக்கு பிரச்சனைதான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பழைய காலத்து ரிஷிக் கதைகளைப் பெரிதும் நோண்ட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஞானக் கண்ணால் கண்டது என்று சொல்லி எழுதப்பட்டுள்ள கதைகள் பலவற்றில் ஞானமும் இல்லை, கண்ணும் இல்லை என்பதுதான் சோக அனுபவம். ஆயினும் உண்மையும் உயர்வும் கொண்டோர் எந்தக் காலத்திலும் உண்டு என்பதுதான் பழம் நூல்களில் காணக் கிடைக்கும் அங்கங்கே அருமையான தத்துவப் பொழிவுகளாய் இருப்பவை நமக்கு உணர்த்துவன. அது ஒரு பக்கம்.நம் காலத்தில் விவேகாநந்தர் என்பவர் உண்மையான ரிஷிகளின் உயர்ந்த நிலையைக் காட்டுபவராய் முன்னிறுத்தப்பட்டவர். அதற்கான முழு சிறப்பும், செறிவும் கொண்டவர். எனக்கு உள்ளபடியே இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆயினும் அவருடைய எழுத்திலும், பேச்சிலும் தெரியவருகின்ற ஏகப்பட்ட முரண்பாடுகள், பொருந்தாமைகள் இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது - அப்படி என்றால் தியானம், சமாதி நிலை, தெய்விக அனுபவம், யோக வல்லமை - இதெல்லாம் மனிதருக்கு மிகச்சரியான, தெளிவான, முன்னுக்குப் பின் முரண்பாடற்ற கருத்து நிச்சயத்தை தம்மளவில் ஏற்படுத்தாதா? அப்படி அவை தம்மளவில் தெள்ளிய அறிவின் காரணங்களாக இருந்திருக்குமேயானால் பெரும் யோகி, பிறவியிலேயே பெரும் தியான சித்தர், சிவபெருமானின் அவதாரம் என்றெல்லாம் சொல்லப்பட்ட விவேகாநந்தரின் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் இவ்வளவு முரண்பாடுகள் எப்படிக் காணக் கிடைக்கின்றன்? அப்படியென்றால் வேதாந்தக் கல்வி இயல் சொல்வது போல் யோகம், தியானம் என்பவை எல்லாம் தம்மைப் போல் அறிவு வழிகளாக ஒரு நாளும் ஆகா. அவை பனுவல் வாசிப்புக்கு மிகவும் அருந்துணைகள் என்னும் அவ்வளவே அவற்றின் பயன் என்பதுதான் மிகச்சரியான கருத்தோ?மனிதன் புத்தகம் படிக்கத் தொடங்கிய நாளிலிருந்துதான் அவனுக்குத் தெய்விக வாழ்வு என்பது ஆரம்பம் ஆகியது. அன்றைய ஆரம்ப காலங்களில் படிப்பின் மகத்துவத்தை உள்ளபடி அறிய இயலாத சமுதாயம் புத்தகம் படிக்கும் மாந்தரிடை ஏற்பட்ட வித்யாசமான ஈடுபாடுகளைப் பார்த்து அதை திவ்யம், ஞானக் கண், உயர்ந்த சமாதி நிலை என்றெல்லாம் சித்திரங்களை உருவாக்கிவிட்டனர். அந்தச் சித்திரம் கட்டுடைக்கப்படாமலே அப்படியே காலப் போக்கில் வாய் வழக்காய் ஆகிவிட்டிருக்கிறது, கூடவே மாய மந்திர மழுமைகள் எல்லாம் சேர்ந்து!