>வெகு காலமாக இந்த கட்டடம், கட்டிடம் இரண்டும் என்னைக் குழப்பிக்கொண்டிருந்தன. நான் எப்போதும் கட்டடம் என்றுதான் எழுதுவேன்.
>பிறர் வேறு மாதிரி எழுதியதைப் பார்த்துக் குழப்பம். தீர்த்து வைத்ததற்கு நன்றி. நிர்மலா ராகவன்
சொல்லின் பொருளைப் பார்த்து நுணுக்கமான வேறுபாட்டைத் தெளிவுசெய்துள்ளனர். துல்லியமாக எழுதப் பயன்படுத்தலாம்.
”கட்டடமா, கட்டிடமா என்று தெரியாமல் சிலர் முட்டிக்கொள்வதுண்டு.
இரண்டுமே சரி எனினும் நுண்ணிய வேறுபாடு உண்டு.
கட்டப்பட்ட இடம் என்பதைக் குறிக்க கட்டடம் எனச்சொல்லலாம் (Building)
கட்டிடம் என்றால் கட்ட வைத்திருக்கும் இடம். கட்டுவதற்குரிய இடம் (Plot, Site).
சரி, சொற்களை பிரித்தும் சேர்த்தும் எழுதுவதில் உள்ள வேறுபாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்:
பள்ளிவாசலில் அவனைப் பார்த்தேன் என்பதற்கும்
பள்ளி வாசலில் அவனைப் பார்த்தேன் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?”
இன்னொரு வலைச்சுவடியும் படித்தேன். கவிஞர் மகுடேசுவரன் எழுதியுள்ளார்.
-ள/-ட விகுதி பெறும் சொற்கள் பல. வங்கம் = படகு. வங்கம் மிகுந்த இடம் வங்களம்/வங்காளம்.
பஞ்சரம் பஞ்சாரம் எனப்பெறுதல்போல. உப்பு காய்ச்சுமிடம் உப்பளம்/உம்பளம். உ-ம்:உம்பளச்சேரி மாடுகள்.
பருப்பு மாவில் பருப்படம் > பப்படம் (Pappad in English). இது வப்படம் எனக் கொங்குமண்டிலத்தில் வழங்கும்,
பால் > வால் ‘வெண்மை போல. வப்படம்/வப்பளம் சொல்முதல் வ் கெட்டு அப்பளம்/அப்படம் எனவும் சொல்லப்படுகிறது.
வடமொழியில் ஶுல்க என்றால் சுங்கவரி. ஶுல்கம்m வாங்கிய இடம் ஶுல்கடம் > சுக்கடம் ஆகி உக்கடம்
எனக் கோவையில் ஒரு பகுதி. கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வணிகப் பெருவழி 2500 ஆண்டுகளாய்.
உல்கு என திருக்குறளில் உண்டு. அங்கே உக்கடம் (தெற்கு - தெக்கு, விற்க - விக்க, போல,
உற்கடம் - உக்கடம். ட-ப்ரத்யம் பெறும் பெயர். பல்லடம், குண்டடம் சரியாய்ச் சொல்லியுள்ளார். உக்கடம் பற்றிக் கேட்கிறார்.
எனவே, இக் குறிப்பு.
நா. கணேசன்
”கட்டிடம் கட்டடம் - எது சரி ?
ஊடகங்களில் கட்டடம் என்ற சொல் சொல்லிவைத்தாற்போல் புழங்குவதைக் காண்கிறோம். இதுநாள்வரை கட்டிடம் என்றே எழுதியும் அறிந்தும் வந்தவர்கள் நாம். இரண்டில் எது சரி என்று ஆராய்வோம்.
கட்டு + இடம் = கட்டிடம்
கட்டு + அடம் = கட்டடம்
கட்டிய இடம், கட்டுகின்ற இடம், கட்டும் இடம் ஆகிய முக்காலப் பொருள்களில் பயிலும் வினைத்தொகைதான் கட்டிடம் என்பது தெளிவாகிறது. அதாவது கட்டுமானத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், நிலம், மனைதான் கட்டிடம் என்ற பொருளைத் தருகிறது. பிறகு, மனையின்மீது எழுப்பப்பட்ட கட்டுமானத்தையும் அதுவே சுட்டி நின்றது. இந்த வழக்குநிலையைப் பிழையெனக் கருதத் தேவையில்லை. எனினும் கனியிருப்பக் காய்கவர்கின்றோமா என்று பார்க்க வேண்டும்.
ஒன்றின்மீது ஒன்றாக வைத்துக் கட்டி அடுக்குவது கட்டடம் எனப்படுகிறது. புத்தகத்தை அட்டையிட்டு இறுக்கித் தைத்துக் கட்டுவது புத்தகக் கட்டடம் (Book Binding) எனப்படுகிறது. குழந்தை ஒன்றையே மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துக் கேட்கிறது, செய்கிறது என்றால் அதை ‘அடம் பிடிக்கிறது’ என்கிறோம். ஒன்றை ஒன்றின்மீது ஒன்றாக ஒரே மாதிரி அடுக்கிக் கட்டுவதுதான் கட்டுமானச் செயல். அதனால் கட்டடம் என்பதே மிகப் பொருத்தமான சொல். ஒன்றின்மீது ஒன்றாக மீண்டும் மீண்டும் ஒற்றியெடுத்தலை ‘ஒற்றடம்’ என்கிறோமே அதுபோல.
எங்கள் பகுதியிலுள்ள பல்லடம், குண்டடம், உக்கடம் ஆகிய ஊர்ப்பெயர்களின் பொருளை இதனடிப்படையில் விளக்க முடியுமா என்று யோசித்தேன். பல் என்பதற்குத் தந்தம் என்ற பொருள் வழங்குவதால் அக்காலத்தில் யானைகள் மிகுந்து திரிந்த இடமாகப் பல்லடம் இருந்திருக்க வேண்டும். குண்டடம் பகுதியில் இன்றும் சிறுசிறு குன்றுகள் நிறையவே காணப்படுகின்றன. அதனால் குன்றடம் என்பது மருவி குண்டடம் ஆகியிருக்கலாம். உக்கம் என்றால் பசு, கோழி என்றும் பொருள்படும். ஆநிரைகள் மிகுந்து மேய்ந்ததால் உக்கடம் ஆயிற்றா என்றும் யோசிக்கிறேன். - கவிஞர் மகுடேசுவரன்”
On Friday, November 20, 2015 at 12:56:17 AM UTC-8, Niranjan Bharathi wrote:
1. கட்டடமா ? கட்டிடமா ? எது சரி ?ஏன் ?
நிரஞ்சன்,
கட்டடம் = building.
கட்டிடம் = கட்டு + இடம் (வினைத்தொகை).
உதாரணம்: மாடுகளைக் கட்டும் இடம் கட்டிடம் ஆகும்.
வீடு கட்டும் காலி மனையை கட்டிடம் எனலாம்.
2. சிறைபிடிப்பா ? சிறைப்பிடிப்பா ? எது சரி ?ஏன் ?
சிறைப்பிடிப்பு என்பது சரி. ஒற்று மிகும்.
நா. கணேசன்