புலவர் என்பவர் யார்?

1,116 views
Skip to first unread message

coral shree

unread,
Jul 31, 2012, 2:01:15 AM7/31/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், vallamai, தென்றல்


முனைவர் புலவர் செ.இராசு

புலவர் என்றால் ‘புலமையுடையவர்”, அதாவது அறிவுடையவர். இன்று ’புலவர்’ என்றால் தமிழில் பாடல் இயற்றும் ஆற்றல் உடையவர்களை மட்டுமே குறிக்கின்றோம். பாடல் இயற்றுவோர் மட்டும்தான் அறிவுடையவர்களா? சட்டம் பற்றிய அறிவு பெற்றவரை, அதாவது வழக்கறிஞரை ‘சட்டப்புலவர்’ என்றும் மருத்துவத்துறையில் அறிவுடைய டாக்டர்களை மருத்துவப்புலவர் என்றும் அழைக்கலாமே! இதற்கு வழிகாட்டுகிறார் கொங்கு மண்டல சதகம் இயற்றிய கார்மேகக் கவிஞர். நாமக்கல் நகரில் உள்ள குன்றில் நரசிம்மருக்கும், பள்ளிகொண்ட பெருமாளுக்கும் குடைவரைக் கோயில்களைக் குடைவித்தவன் அதியமான் மரபில் வந்த ஓர் அதியமான். அதனால் அவை ‘அதியேந்திர விஷ்ணுகிரகம்’ எனப்பட்டன. அவைகளைச் சிற்பப் புலவர்கள் உருவாக்கியதாகப் புலவர் பாடுகிறார்.

“புதிதாய் மலையைக் குடைந்துநல் சிற்பப் புலவரைக்கொண்டு
இதிகாச மான கதையைச் செதுக்குவித்து இம்பர்மகிழ்ந்து
அதியேந்திர விஷ்ணுக் கிரகம்என்று ஏத்த அமைத்தவனாம்
மதியூகி யான அதிகனும் வாழ்கொங்கு மண்டலமே”



அன்புடன்
பவள சங்கரி
--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2012, 5:00:14 AM7/31/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
ஒவ்வொரு துறையிலும் புலமையுடையோர்  எல்லோரும் புலவர்களே
 
ஆனால் சிற்பக் கலையில் வல்லுனரை சிற்பி என்றும்
நடனக் கலையில் வல்லுனரை  நாட்டியக் கலைஞர் என்று அவரவர் துறைக்குத் தகுதியான பெயரால் அழைத்தல்
 
அவர் என்ன கலையில் வல்லவர் என்பதை இனம் காட்டும் சொல்லாகவே வழங்கி வந்திருக்கிறது
 
 

அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/7/31 coral shree <cor...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Subashini Tremmel

unread,
Jul 31, 2012, 6:02:02 PM7/31/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
குறிப்பு...
சில தமிழக கல்லூரிகளிலும் சைவ மடங்களிலும் புலவர் பட்டத்தேர்வு நடத்தப்படுவது பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். சமீக காலத்தில் திருவாவடுதுறை மடத்திலிருந்து மலேசியாவில் சைவ சிந்தாந்த புலவர் பட்டப் பயிற்சி அளிப்பது பற்றி என் தோழி சில நாட்களுக்கு முன்னர் பேசிய போது சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுபா

2012/7/31 coral shree <cor...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

MANICKAM POOPATHI

unread,
Aug 1, 2012, 4:11:42 AM8/1/12
to mint...@googlegroups.com
வணக்கம்: _/\_

சென்ற சில தலைக்கட்டுகளுக்கு
முன்பு வரை இருந்திருந்த.. புலவர் (புலமை) அல்லது வித்வான்/வித்துவான்
(வித்தை) என்கிற தமிழ் பண்டிதர் பட்டப்படிப்பு.. கலைக் கல்லூரிகள்
உருவான பிறகு இளங்கலை இலக்கியம் (B.Litt.,) என்று மாறிப் போனது..
என்பார்கள்..?

பண்டைய திண்ணை பள்ளிகளைப் போலவே பல்லாயிரக்கணக்கான இலக்கண இலக்கிய
வரிகளை.. பாடுபட்டு பாடம் பண்ணி.. புலவர் பட்டம் பெற்றவர்களில்
குறிப்பிடத் தக்கவர்களுள் ஐயா பாவாணர் அவர்கள் ஓலைவலசு புலவர் குழந்தை
அவர்கள் போன்றவர்களைக் குறிப்பிடலாம்..?

அவ்வாறே.. பாரதி சுப்பிரமணிய ஐயரவர்கள் காலத்தில்.. F.A. (not B.F.A.?)
என்கிற பட்டப்படிப்பு ஒன்று இருந்ததாகவும் கேள்வி..!?

மிக்க நன்றி..!

அன்புடன்.../பூபதி
__________________________

தேமொழி

unread,
Jun 28, 2014, 6:38:28 PM6/28/14
to mint...@googlegroups.com, poop...@gmail.com


1960 களில் "தமிழ் வித்வான்" என்ற படிப்பு இருந்தது, பள்ளிகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிய இந்த வித்வான் படிப்பு தேவை.

1967 களில் கழக ஆட்சி துவங்கியதும், தொடர்ந்து வந்த  காலத்தில்  இதே படிப்பு  புலவர் எனப் பெயர் மாற்றம் கொண்டது.

வித்வான் படிப்பிற்கு எனப் பதிந்து,  படித்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் இடைக்கால நிலையில் இருந்தவர்களுக்கு, அவர்கள் தகுதி பெற்றதும்  புலவர் பட்டம் வழங்கப்பட்டது.

பின்னர் புலவர் என்றே முற்றிலும்  கல்விமுறை அறியப்பட்டது, வித்வான் என்ற பெயர் மறைந்தது.

எனவே தகுதிப் பெற்ற முறையில் படித்து பட்டம் பெற்ற பட்டங்கள் வித்வான் என்பதும், புலவர் என்பதும்.

(ஒரு சிலருக்கு இப்பட்டங்கள் கௌரவப் பட்டங்களாகவும் வழங்கப்படிருக்கலாம் அல்லது சிலர் தானே கூட தங்களுக்கு வைத்துக் கொண்டிருக்கலாம் இவற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.)

ஆனால் தகுதிச் சான்றிதழ் இருந்தால்தான் தமிழாசிரியர் பணி கிடைத்திருக்கும். 

பிறகு இப்படங்கள் பெற்றவர்கள் மேல் படிப்பு படிக்க உதவுவதற்காக (பல்கலைகழகங்களில் முதுகலை தமிழ் படிக்க இளங்கலை பட்டம் தேவை), மேலும் சில தாள்கள் தேர்வெழுதி B.Litt பட்டம் பெற்றுக் கொள்ள வழி வகுக்கப்பட்டது.  

இதனால் தமிழில் M.Litt மற்றும் M.A பட்டம் படிக்க விரும்புவோர் இவ்வழியாக மேற்கல்வியினைத் தொடர்ந்தார்கள்.

கரந்தை தமிழ்ச் சங்கம் புலவர் பட்டம் பாடத்திட்டம் கொண்டிருந்ததாகவும், அதனை தமிழில் ஆர்வம் கொண்ட என் அப்பா தனிப்பட்ட முறையில் படித்து திருச்சி Saint Joseph கல்லூரியில் சென்று புலவர் தேர்வு எழுதினார், பின்னர் B.Litt  ம் எழுதினார் என்ற ஞாபகம்.  அத்துடன் அவர் இந்த வித்வான்-புலவர் இடைக்கால நிலையையைச் சந்தித்தவர் என்றும் நினைக்கிறேன்.  

(பிறகு அப்பா மதுரை பல்கலையில் அஞ்சல் வழியில் முதுகலை பட்டம் பெற்றார், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைகழகம் வந்த பின்னர் தனது ஐம்பது வயதை நெருங்கும் சமயம் அவசர அவசரமாக முனைவர் படிப்பிற்கும் பதிந்து ஆய்வு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். .  50 வயதிற்கு பிறகு பதிவு செய்ய முடியாது என்று சொன்னதாக நினைவு.)  

இதை நினைவில் இருந்து எழுதுகிறேன்.  

..... தேமொழி

Suba.T.

unread,
Jun 29, 2014, 4:48:57 AM6/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
புலவர் பட்டங்களை ஆதீனங்களும் வழங்குகின்றன எனக் கேள்விப்பட்டுள்ளேன். ஆதீனங்களின் சார்பில் ஆதீனங்கள் அனடத்தும் கல்லூரிகளில் அவர்கள் மாணாக்கர்களுக்கு கல்வி போதிப்பவர்களாக இருந்து வருகின்றனர் என நினைக்கின்றனர்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Jun 29, 2014, 12:59:28 PM6/29/14
to மின்தமிழ்
ஆங்கிலக் கல்விமுறை அறிமுகம் பலநூறாண்டுகளாக வழக்கில் இருந்த கிராமப் பள்ளிக் கல்வியைப் பெரிதும் பாதித்தது.  ஆங்கிலக் கல்விக் கொள்கையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் உருவாக்கவில்லை.  ஆங்கில ஆதரவு சமஸ்கிரிதம், பெர்சியன், அரபி உருது ஆகிய செம்மொழிகளுக்குமட்டுமே இருந்தது.  சமஸ்கிரிதம் கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்க சிரோன்மை பட்டய்ப் படிப்பு இருந்ததுபோல் தமிழில் இல்லை.  தமிழ் கற்பிக்க தமிழறிஞர் ஒருவர் அறிமுகப் பரிந்துரை அளித்தால் போதும் என்ற நிலைதான் இருந்தது
 
தமிழ்த்துறை ஒரு ஆங்கிலேயரின் நினவேந்தலுக்காக அவர் மனைவி கொடுத்த கொடையைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 
 
The Department of Comparative Philology, Oriental Research Institute, University of Madras first began its research in Tamil in 1914. To perpetuate the memory of Rev. Father John Lazarus, his daughter instituted the endowment Chair in Tamil in his name in 1927 and a separate Tamil Department was established in the Institute​
 
ஆங்கில ஆட்சிக்காலத்தில்  தமிழுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.
 
உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் அறிமுகமான  தமிழ் மொழி உயர்கல்வியில் சிறப்பான இடத்தைப் பெறாமல் செம்மொழி என்ற தகுதரம் இல்லாமல் தமிழகத்தின் தாய்ப் பல்கலையான சென்னைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் நிலையில் இருந்தது
 
தத்து பித்து

Innamburan S.Soundararajan

unread,
Jun 30, 2014, 6:10:05 AM6/30/14
to mintamil
ஆங்கில ஆட்சிக்காலத்தில்  தமிழுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.

~ 1858 காலகட்டத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்தது. தாசில்தார் வெள்ளைக்கார கலைக்டருக்கு தமிழில் தான் கடிதம் எழுதினார். அதில் அடக்கம் இருந்தது. கூழைக்கும்பிடு இல்லை.

தவிர what happened to B.O. L & M.O.L? I tried for B.O. L, but had to happy to get B>Lit in Tamil.

Suba.T.

unread,
Jun 30, 2014, 8:35:51 AM6/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-06-30 12:09 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஆங்கில ஆட்சிக்காலத்தில்  தமிழுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.

~ 1858 காலகட்டத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்தது. தாசில்தார் வெள்ளைக்கார கலைக்டருக்கு தமிழில் தான் கடிதம் எழுதினார். அதில் அடக்கம் இருந்தது. கூழைக்கும்பிடு இல்லை.
இது எனக்கு புதிய செய்தியாக இருக்கின்றது . எந்தக்  காலகட்டத்தில்? .. இந்தியா முழுமைக்குமா அல்லது தமிழகப் பகுதியில் மட்டுமா?

சுபா

 

Innamburan S.Soundararajan

unread,
Jun 30, 2014, 10:42:49 AM6/30/14
to mintamil, Innamburan S.Soundararajan
நான் மின் தமிழில் கஷ்டோபனிஷத் என்று ஒரு தொடர் எழுதி வந்தேன். அதில் 1947க்கு பிறகு தமிழின் வளர்ச்சி குன்றி விட்டது; திராவிட கட்சிகள் பதவிக்கு வந்த பின். தமிழ்த்தாய் மெலிந்து போனாள். தமிழ் வளர்ச்சி பிரசாரங்களில் 90 % போலி. நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளாத ஆணைக்குவியல்.

'தாசில்தார் வெள்ளைக்கார கலைக்டருக்கு தமிழில் தான் கடிதம் எழுதினார். அதில் அடக்கம் இருந்தது. கூழைக்கும்பிடு இல்லை.'

~ இதற்கு உதாரணமாக ஒரு மடல் இங்கே: அதற்கு முன் ஒரு ரத்ன சுருக்கம்.


௵1800 ~ ௵2056: இது ஒரு 256 வருட சகாப்தம். ஆங்கிலேயரின் நடவடிக்கையில் குறை காண இயலாது. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றை த.ம.அ.வுக்காக, மின்னாக்கம் செய்துள்ளேன். அத்துடன் ஒப்பியல் செய்தால்,தற்கால பட்டப்படிப்பின் தரக்குறைவு



வெள்ளிடை மலை. 1940ம் வருடத்திய அண்ணா அவர்களின் மனவலி எனக்கு புரிகிறது. அவருடைய தம்பிகளுக்குத்தான் புரியவில்லை. அதனால், இன்று நிலைமை இன்னும் மோசம். விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்!  தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! அடுத்த வருடம் தி.மு.க.  பதவியேற்பும், நகாசு வேலையும்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். [இந்த அழகில்  வீரப்ப மொய்லி அவர்கள் இரண்டுங்கெட்டான் மொய் எழுதியிருக்கிறார். எல்லாரும் கை தட்டி இருக்கிறார்கள்!] 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.  எல்லாம் டபிள் மாமாங்கம்! 15 வருடங்கள் கழித்து 2010ல் பலிகடா பாவ்லா! அசட்டுத்தனமான முரண்டு கெடுபிடி. எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது. மற்றவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.

நன்றி, வணக்கம், வெட்கம்.


(முற்றும்)

இன்னம்பூரான்


27 12 2011

30 01 2014

சித்தரத்துக்கு நன்றி:https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/p403x403/988338_534460486643301_1810643166_n.jpg


ஒரு மாதிரி மடல் தொகுப்பு:


A


COLLECTION


OF


OFFICIAL DOCUMENTS


IN


TAMIL LANGUAGE


CONSISTING OF ARZEES AND OTHER PAPERS FILED IN THE COURS OF JUSTICE


FOR THE USE OF CANDIDATES 


FOR THE INDIAN CIVIL SERVICE


COMPILED BY THE ORDER O THE RIGHT HONOURABLE THE SECRETARY OF STATE FOR INDIA


BY

LIEUT. W.F. WRIGHT


MADRAS STAAFF CORPS TAMIL TRANSLATOR TO THE GOVERNMENT OF MADRAS


MADRAS

PRINTED FOR THE GOVT OF MADRAS

BY

CALEB FOSTER

AT THE FOSTER PRESS, 23, RUNDALL’S ROAD

VEPERY

1868

ஒரு மடல். பல நுட்பங்கள் நோக்கத்தக்கவை:

No. 68


மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,

     

திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.

     

பாக்கி கட்டாத தண்டை செயது கொண்டிருந்த கல்லியாணகுப்பம் கிராம மணியக்காரர் கணக்குப்பி... இவர்களை அனுப்பும்படி துரையவர்கள்  ஆக்கியாபத்த 769வது நம்பர் இனாயத்துனாமா சேர்ந்து அறிந்து கொண்டேன்.


துரையவர்கள் இப்படி அனுபபிய உததரவின் பயத்தினாலே அவர்கள் இருவரும் செலுத்தவேண்டிய பாக்கியை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.


இப்போ அடங்கல் பார்க்கவேண்டிய காலமாயும் மேற்படி மணியக்கார, கணக்கபி.. இவர்கள் என் உத்தரவின்படி அந்த காரியத்தில் இருந்து கொண்டிருக்கிறபடியினாலே  நாலது பசலி ஜமாபந்தியின் போது மேற்படியார்கள் 2   பேரையும் அது வரையில் அவர்கள் நடத்தைகளைக்கண்டு மனுவு செய்து (நூபு நூபு) ஆஜர்ப்படுத்துகிறேன். ஆகையால் சங்கதி மனுவு செய்து கொண்டேன்.


1864 வருடம் ஜனவரி மீ 8 உ

திருவள்ளூர்

தங்கள் விதேயன்



-#-
பி.கு. ஸுபாஷிணியின் பின்னூட்டம் வேண்டும். மற்ற தமிழ் ஆர்வலர்களும் உண்மையை எழுதவேண்டும். தற்கால முதல்வர் தமிழார்வம் காட்டுகிறார். அவருடைய கவனத்துக்கு இதை எடுத்துச் செல்லவேண்டும். இதை எழுதும் போது என்னுடைய ஆயாசம் சொல்லி மாளாது.

Kumaraguruparan Ramakrishnan

unread,
Jun 30, 2014, 11:00:04 AM6/30/14
to mint...@googlegroups.com
மின்தமிழ் நட்புக்காக சுபாஷிணி அவர்களுக்கு நன்றி.

தேமொழி அவர்களின் குறிப்பு-வித்துவான், புலவர் ஆனது, இளங்கலை, முதுகலை விவரங்கள்-முற்றிலும் சரி. எனது அப்பா 'தமிழ் வித்வான்' படித்து 'தமிழ் பண்டிட்' ஆகப் பணி புரிந்தவர். பெரியப்பாவும் 'வித்வான்' படித்து முடித்தவர். எப்போதும் வித்வான்/புலவர் படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும் என்ற விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இரா.குமரகுருபரன்.


Reply all
Reply to author
Forward
0 new messages