தமிழ்ச் சங்கங்களின் அனைத்து விபரங்கள்

288 views
Skip to first unread message

Anbudan Nilavan

unread,
Dec 16, 2009, 7:14:29 AM12/16/09
to mint...@googlegroups.com
அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ச்சங்கம் தமிழகத்திலுள்ள வெவ்வேறு நகரங்கள் தொடங்கி, மாநிலம் முழுதும் சென்று உலகின் பரவலான அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதன் செயல்பாடுகள், விபரங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஆகியன ஓரிடத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். தமிழ்ச் சங்கம் என கூகிளில் தேடியதில் ஏனைய இணைய தளங்கள் நீக்கப்பட்டதாகவே அமைந்திருந்தன.

ஆற்றலுடன்(Active) செயல்படும் சங்கங்களின் தகவல், இணைய முகவரி தெரிந்தால் நமது செயல்பாடுகள் தகவல்கள் போன்றவற்றை இணைய முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். இச்சங்கங்களின் மூலம் த.ம.அ தொடர்பாக அனைத்துச் சங்கங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அத்துடன் இத்தகவ்லகளை எனது மென்தமிழ் இணையதளத்தில் வெளியிட நினைக்கின்றேன். உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கு அனுப்பவும்.


பின்குறிப்பு : நான் இக்குழுமத்தில் இவை ஏற்கனவே விவாதிக்கப்பட்டனவா எனத் தெரியவில்லை. அவ்வாறெனில் விபரம் தெரிவிக்கவும்.


--
வாழ்க தமிழுடன்,
நிலவன்.

http://blog.nilavan.net
http://www.mentamil.com
http://www.bangaloretamil.com

Innamburan Innamburan

unread,
Dec 16, 2009, 10:29:35 AM12/16/09
to mint...@googlegroups.com
வரவேற்கப்படைய கருத்து. இருந்தும், கவனத்துடன், பரிசீலனை செய்து, ஒரு சிறு குழு மேலும் ஆய்வு செய்த பின், நாம் செயல் படவேண்டும். திரு.கண்ணனும், திருமதி ஸுபாஷினியும் அனுபவப்பட்டவர்கள்; வழி காட்டுவார்கள்.
இன்னம்பூரான்
2009/12/16 Anbudan Nilavan <anbudan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


vishalam raman

unread,
Dec 16, 2009, 11:39:10 AM12/16/09
to mint...@googlegroups.com
எனக்குத்தெரிந்த தமிழ்ச்சங்கம் பம்பாய்த்தமிழ்ச்சங்கம் பலவருடங்கள்
ஆனது 100 வருடங்கள் கூட கொண்டாடிருக்கலாம்
இன்னொன்று தில்லித்தமிழ்ச்சங்கம் மிகவும் பெயர் பெற்றது
இரண்டினால்தான் என்னால் தமிழ் கொஞ்சம் வளர்த்திக்க முடிந்தது

Innamburan Innamburan

unread,
Dec 16, 2009, 11:52:03 AM12/16/09
to mint...@googlegroups.com
ஒரு வேடிக்கயான சம்பவம். பம்பாய் தமிழ்ச்சங்கம், பலவருடங்களுக்கு முன்னால், என்னை பேச அழைத்திருந்தார்கள். எண்ணி நான்கு பேர். பேசி, அசத்தி, உரையாடலாக மாற்றி ஒருவாறு ஒப்பேற்றினோம்.

இன்னம்பூரான்
2009/12/16 vishalam raman <rvis...@gmail.com>

தாரகை

unread,
Dec 16, 2009, 6:51:40 PM12/16/09
to மின்தமிழ்
Previously Thamizh Sangam catered & created avenues to extol & exhibit
Thamizh nuances. Lately, the primary objectives have narrowed down to
screening special cinema shows or acquiring a primary role in the
Thamizh Sangam committees - be it within India or overseas!

The slow decline of Thamizh Sangams contribution to anything to do
with "Thamizh" had created the gradual bloom of like minded Thamizh
egroups & blogs. Thiru Innamburan's anecdote of the Bombay Thamizh
Sangam gathering is no different in comparison with most Thamizh
sangams state of affairs - all around the globe, if it were for
lectures apart from cinestars:-(

On Dec 17, 2:52 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

gcsekaran

unread,
Dec 16, 2009, 1:22:52 PM12/16/09
to mint...@googlegroups.com
அன்பு நண்பர்களுக்கு,
நான் ஏற்கனவே எனது இணையதளத்தில் சில உலக மற்றும் இந்திய தமிழ் சங்கங்களைத் தொகுத்திருந்தேன். வடிவமைப்பு மாற்றம் செய்யும் போது அது தற்போது விடுபட்டு இருந்தது அதனை தற்சமயம் சரி செய்து வலையேற்றியுள்ளேன். இவை தவிர பிற சங்கங்களின் விவரங்களை அளித்தால் அவற்றையும் சேர்க்கிறேன். ஆனால் தற்போததய பட்டியலில்  தமிழ்நாட்டு சங்கங்கள் இல்லை தான். வலைபக்க முகவரி:
 
அன்புடன்
கோ.சந்திரசேகரன்
சென்னைநூலகம்.காம்
 
 
----- Original Message -----

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 12:49:48 AM12/17/09
to mint...@googlegroups.com
இது மேலோட்டமாகப் பார்க்கையில் சரியாகக் கொள்ளலாம். ஆனால் ஆழ்ந்து பார்க்கையில் அப்படி இல்லை.
 
தமிழ்ச்சங்கங்கள் ஊருக்கு ஊர் இருக்கத்தான் செய்கிறது. பல தமிழ்ச்சங்கங்கள் மிக நன்றாகவே செயல்படுகின்றன.
 
பிரச்சினைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. இன்னம்பூரார் குறிப்பிட்ட முமபையில் முப்பது தமிழ்ச்சங்கங்கள் இருப்பதாக இந்தப் பதிவிலேயே நண்பர் எழுதி உள்ளார். முப்பது எதற்கு.. முன்னூறு கூட இருக்கலாம். ஆனால் இத்தனைச் சங்கங்கள் வந்த வரலாறு பார்க்கையில் விசித்திரமாக இருக்கும். இப்படி இருக்கும் நகரத்தில் உள்ள ஒரு தமிழ்ச்சங்க கூட்டத்துக்கு நான்கு பேர் வந்தாலே மகாநாடு என்பேன்.
 
தமிழர்களை ஒன்று சேர்ப்பது என்பது மகாகடினம். அப்படியும் ஒன்று சேர்த்தாலோ அவர்களை ஒற்றுமையிலேயே வைத்திருப்பது  என்பது இன்னும் கடினம். இந்த ஒற்றுமையை நீண்ட காலத்துக்குக் காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தம் என்பது மிக மிக கடினம்.
 
இந்தக் கடினங்களையும் மீறி மேலே குறிப்பிட்ட விதத்தில் பல தமிழ்ச்சங்கங்கள் நன்றாகவே செயல்படுகின்றன (எங்களையும் சேர்த்து)
 
திவாகர் 

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 12:56:36 AM12/17/09
to mint...@googlegroups.com
 
வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்பது எப்படி ?.....இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்.

இது பதினைந்தாவது வருடம்..ஒரே பதவி - செயலாளர்.. 1994 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கம் நலிந்து கிடந்த நிலையில் அப்போது செயலற்று இருந்தவர்கள் செயல் புரிய செயலாளர் ஒருவரைத் தேடியபோது நானாக போய் வலிய வலையில் விழுந்தவன்தான். இன்னமும் எழுந்திருக்கவில்லை...எழுந்திருக்கவும் விடவில்லை....

சென்ற மாதம் கூட நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சொல்லிப்பார்த்துவிட்டேன். பதினான்கு வருடம் ஆகிவிட்டது.. ராமர் வனவாசம் போல... ஏன் ...ஆயுள் கைதிகளுக்கு கூட அதிகபட்சம் 14 வருடம் என நிர்ணயிக்கப்படுவது உண்டு... என்னையும் இந்தப் பதவியிலிருந்து விட்டுவிடுங்களேன்.. ஊஹூம்.. இந்தப் பேச்சு யார் காதிலுமே சென்று விழவில்லை..அல்லது இந்தச் சமயம் பார்த்து அவர்கள் செவிகள் ஊனமுற்றதோ என்னவோ என்று நினைத்து TV Replay போல மறு முறை சொன்னேன்.."விழலுக்கு இறைத்த நீர்தான்..."

சரி..விடுங்கள்.. தமிழ்ச்சங்கம் நடத்துவது என்பது நிச்சயம் சாதாரண வேலையல்ல...அரசியல் கட்சி கூட சற்று வலிமையும் பணபலமும் "வாழ்க" போட ஆள் பலமும் இருந்தால் போதும் - தேர்தல் வரும்போது யாராவது பெரிய கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்தோ அல்லது தோற்றுக்கொண்டோ, வெற்றிகரமாக கட்சியை நடத்தலாம்...ஆனால் தமிழ்ச்சங்கங்கள் நடத்துவது எல்லாம் அப்படி அல்ல...

முதல் குவாலிஃபிகேஷன் : எல்லோரையும் அணைத்துச் செல்லத் தெரிந்திருக்கவேண்டும்.. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறுவார்கள்.. ஒவ்வொரு விதமான சிந்தனை..பல சமயம் சிந்தனைகள் பலவிதமாக மாறுபடும். சங்கத்தில் செயல் குழு உறுப்பினர்கள் பலர் பல சமயம் கூட்டங்களுக்குத் தலையே காண்பிக்கமாட்டார்கள். ஆனால் ஏதாவது ஒரு கூட்டத்துக்கு வந்து சரமாரியான ஆலோசனைகளை அள்ளி வீசிவிட்டு ஏதோ பெரிய கடமையை முடித்தது போல கடமை வீரன் பார்வையையும் மற்றவர்கள் மேல் வீசி விட்டுப் போய் விடுவார்...அவர் கூறிய யோசனைகளையும் அவரே அடுத்த நாளும் மறந்து விட்டிருப்பார்... ஒரு வேளை நீங்கள் போன் செய்து அவற்றை ஞாபகம் படுத்தினால்... 'என்ன நான் சொன்னாமாதிரி செஞ்சுட்டீங்களா.. செய்யுங்க சார்.. அப்பத்தான் தமிழ் மன்றம் வளரும்..." என்று இன்னொரு பெரிய பொறுப்பையும் வழங்குவார்..

அடுத்த குவாலிஃபிகேஷன் : நிதி, ஃபைனான்ஸ்... இது இல்லையென்றால்...எதுவும் இல்லை..செயலாளர் என்பவர் செயல்கள் சரியாக நடைபெறத்தானே நியமிக்கப்படுகிறார். என்று யாரும் நினைத்து விடக்கூடாது. நிதி நிலைமை சீராக இல்லையென்றால் முதலில் செயலாளருக்கு மதிப்பு இருக்காது. ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் அதற்கான நிதி எப்படி என்று திட்டமிடவேண்டும்... யார் sponsor செய்வார் என்று பார்க்கவேண்டும்.. sponsor எப்போதுமே குறைந்த அளவில்தான் கிடைக்கும்.. ஏனைய செலவுகளை எப்படி சமாளிப்பது என்று பார்க்கவேண்டும்..டிக்கெட் போட்டால் அவைகளை சரியாக விற்பது எப்படி என்ற கலையைத் தெரிந்திருக்க வேண்டும்.. இதற்கும் மேலாக செலவு ஏற்பட்டால் யாராவது 'பணம் படைத்தவரை' கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கவேண்டும். பணம் படைத்தவர்தான் பக்கத்திலே இருக்கிறாரே என்று அவரை அடிக்கடி தொந்தரவு செய்யவும் கூடாது. பணமும் அவர் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்..ஆனால் அதை வாங்காத அளவுக்கு செயலாளர் அந்தத் தொடர்பை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். (இது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள்.. சாத்தியமாக்கவேண்டும்)

நிதி நிலைமையை நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு நிகழ்ச்சியை நடத்துவது நல்லதா -அல்லது நிகழ்ச்சியை நடத்தும் வேலைகளைத் தொடங்கி விட்டு நிதிக்காக அலைவதா என்று யாராவது கேட்டால்...'இரண்டையுமே செய்யலாம்..அவரவர்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்து..' என்பேன்..

முதலில் சொன்னபடி செய்யும்போது பணம் சேரவில்லை என்றால் நிகழ்ச்சியை நிறுத்திவிட வாய்ப்புள்ளது..

இரண்டாவது வகையில் செய்யும்போது 'குறிக்கோள்' ஸ்ட்ராங்காக இருக்கும் பட்சத்தில் உங்களால் பணம் எப்படியும் சேர்க்கமுடியும்..நிகழ்ச்சியையும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தமுடியும் ..நிகழ்ச்சி நன்றாக நடைபெறும் பட்சத்தில் பெருமையும் பெறமுடியும்.
இந்த இரண்டாவது வகைப்படிதான் விசாகப்பட்டினம் தமிழ்க்கலை மன்றம் தன் 'நூற்றாண்டு' விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. இந்த இரண்டாவது வகைப்படித்தான் ஆந்திர மாநிலத்திலேயே முதன்முறையாக விசாகப்பட்டினத்தில் தமிழ்ச் சங்கத்திற்கென ஒரு சொந்தக் கட்டிடமே எழுப்பியிருக்கிறோம்...

அடுத்து கும்பல் சேர்ப்பது. இது மாபெரும் கலை. வீட்டில் டி.வி. அதிலும் பல தமிழ் சேனல்கள், சதா ஏதாவது சினிமா, மெல்லிசை என்றெல்லாம் தொலைக்காட்சிகள் தொல்லை(?) கொடுத்துக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழரையும் அவர்தம் குடும்பத்தினரையும் இழுப்பது என்பது ஏறத்தாழ மணலைக் கயிறாக திரிப்பது போலத்தான். ஆனாலும் அவர்களை இழுக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்திக் காட்ட வேண்டும்..

இது ஒரு மாபெரும் கஷ்டம்தான்.. ஏனெனில் நிகழ்ச்சிகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று உள்ளூர்காரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்துவது... இரண்டாவது தமிழகக் கலைத் துறையின் பிரபலங்களை அங்கிருந்து வரவழைப்பது. இந்த இரண்டாவது நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் கூட்டம் கூட்டலாம்தான்.. டிக்கெட்டுகளையும் கூட விற்று விடலாம்தான்.. ஆனால் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு சங்கம் முழுவதும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து செய்யும்போது கிடைக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.

ஆனால் உள்ளூர்காரர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளைத்தான் நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்..காரணம் இவைகளைப் போன்ற நிகழ்ச்சிகளின் போது உள்ளூர் தமிழர்களின் கலை வெளிப்படுகின்றது. தன்னம்பிக்கை பெரிதாகிறது, இந்த தன்னம்பிக்கை உள்ளூர் தமிழர் எதிர்காலத்தில் இவர்கள் முன்னேற பெரிதும் உதவுகிறது.

ஆனால் அந்த வகையில் உள்ளூர்காரர் செய்யும் நிகழ்ச்சிக்கு கூட்டம் கூட்டுவது என்பது மகா கஷ்டம்தான். இதற்கும் ஒரு வழி வைத்துள்ளோம்..எல்லோரும் சேர்ந்து நிதிவகைகளில் உதவிசெய்து இரவுச் சாப்பாடு வைத்துவிடுவோம்.. அனைவரும் சேர்ந்து அதுவும் தமிழர் உணவு வகைகளை, உண்ணும்போது எல்லோருக்குமே தனி இன்பம் உண்டாகும்தான்.

யாராவது எதையாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தாலும் நாம் கண்டு கொள்ளக் கூடாது.. கோபமும் கொள்ளக்கூடாது. கோபம் பொதுவாக யாருக்கு வந்தாலும் வரலாம்.. ஆனால் இந்த செயலாளருக்கு வரவே கூடாது. மனதில் உறுதி வேண்டும்.. இந்த உறுதி பல கட்டங்களில் காப்பாற்றும்.

ஆனால் பெரிய நகரங்களில் (மும்பை, தில்லி, கல்கத்தா) உள்ள தமிழ் மன்றங்களுக்கு அவ்வளவாக இந்தக் கஷ்டங்கள் கிடையாது.. ஏனெனில் அங்கு தமிழர்கள் மிக அதிக அளவில் வசிப்பது ஒரு வசதியான காரணம் என்று சொன்னாலும், தமிழ்ச் சங்கத்தை நடத்தும் பொறுப்பாளர்கள் பாடு எங்கேயுமே திண்டாட்டம்தான். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பொதுவாக வெளிநாடுகளில் உள்ள எல்லா தமிழ்மன்றங்களுமே அனுபவிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தனை சொல்கிறேனே தவிர இந்தத் தமிழ்மன்றத்தில் இன்னமும் நான் ஏன் செயல்பட ஒப்புக்கொள்ளவேண்டும் என்று யாராவது கேட்டால் அது இந்தத் தமிழ்மன்ற நண்பர்கள் என் மேல் தனிப்பட்ட முறையில் காட்டும் 'அன்பு' ஒன்றுதான். அன்புதான் மூலதனம்..அந்த அன்பு ஒன்றைக் காட்டியே அடிமைப்படுத்தி விடுகிறார்கள். எல்லோருமே நல்லவர்கள் என்றுதான் அவர்களைப் பார்க்கும்போது பல சமயங்கள் எனக்குத் தோன்றும்...

இந்தக் கட்டுரையை இவர்கள் யாரும் படிக்காமல் இருக்க வேண்டுமே... ஒரு வேளை படித்தால் தமிழ்மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் நம் கதி அவ்வளவுதான் .. (அப்படியாவது அடுத்து என்னைக் கழட்டி விட்டால் சரி..)

திவாகர்

 

Innamburan Innamburan

unread,
Dec 17, 2009, 1:37:09 AM12/17/09
to mint...@googlegroups.com
அன்பர் திவாகர் என் கண் முன் இருந்தாரானால், அவர் வாயை அடைத்துவிடுவேன், சர்க்கரைப்பொங்கலை திணித்து! பரவாயில்லை. என்றும் உங்களுக்கு சுடச்சுட சர்க்கரைப்பொங்கல் காத்திருக்கும்.

இன்னம்பூரான்
2009/12/17 V, Dhivakar <venkdh...@gmail.com>

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 1:57:08 AM12/17/09
to mint...@googlegroups.com
வாய் வெந்தாலும் பரவாயில்லை.. அப்படியே முழுங்கிவிடுவேன். கொடுப்பது அன்பல்லவா..
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
 
தி

 

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 17, 2009, 2:14:08 AM12/17/09
to mint...@googlegroups.com
சென்ற ஆண்டு டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்தித் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு பெரிய நகைச்சுவைக் காட்சியை அரங்கேற்றினார்கள். அதைக் கூட்டியவர்களுக்கு எதற்காகக் கூட்டுகிறோம் என்பது தெரியவில்லை.  கலந்து கொண்டவர்களுக்கு எதற்காகக் கலந்து கொள்கிறோம் என்பது விளங்கவில்லை.
 
டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் அப்போது பொறுப்பில் இருந்த தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் விளம்பரத்துக்கு என்று பேயாய் அலைந்து கொண்டிருந்த சில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச் சங்கத்தின் மிகப் பெரும் செலவில் அரங்கேற்றிய நகைச்சுவை நிக்ச்சி அது. ஏறத்தாழ ஏழு லட்சம் இதற்காக செலவானதாக சொன்னார்கள்.  இந்தப் பணத்தில் எத்தனை நூல்களை பதிப்பித்து இருக்கலாம்?
 
கூட்டமைப்பு வேண்டியதுதான்.  ஆனால் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தாததால் இன்று வரை அந்தத் திசை நோக்கிய எவ்வித செயல்பாடுகளும் இன்னும் துவங்கவில்லை.
 
பொதுவாக எந்த ஊராக இருந்தாலும சரி.  நான் பார்த்த அளவில் இலக்கியத்திலும் கலையிலும் கூருணர்வு இல்லாதவர்கள் தான் இது போன்ற அமைப்புக்களில் பங்கேற்கிறார்கள்.  தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புக்களை தங்களுக்கான அரசியல் களமாக பாவிக்கத் துவங்குகிறார்கள்.  அதில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களைக் குறுநில மன்னர்களாகப் பாவித்து மற்ற கலைஞர்களையும் அறிஞர்களையும் இவர்களிடம் பாடிப் பரிசில் பெறும் கவிஞர்களாக நடத்துகிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.
 
இது அநேகமாக எல்லா இந்திய மொழிகளில் உள்ள சங்கங்களில் பொதுக்குணம்தான் என்று கருதுகிறேன்.
 
அன்புடன்
பென்னேஸ்வரன்
 


 
2009/12/17 V, Dhivakar <venkdh...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 2:20:56 AM12/17/09
to mint...@googlegroups.com
>>>பொதுவாக எந்த ஊராக இருந்தாலும சரி.  நான் பார்த்த அளவில் இலக்கியத்திலும் கலையிலும் கூருணர்வு இல்லாதவர்கள் தான் இது போன்ற அமைப்புக்களில் பங்கேற்கிறார்கள்<<<
 
அடடே.. ((((((:- பென்னண்ணா இப்படிச் சொல்லலாமா?
 
ஒன்றை வைத்து அதே பார்வையில் இன்னொன்றை எடை போட முடியாது.
 
தி

 

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 17, 2009, 3:08:12 AM12/17/09
to mint...@googlegroups.com
திவாகர்
 
நான் ஒன்றை வைத்துக் கண்டிப்பாக சொல்லவில்லை. 
 
உங்கள்   வேண்டுமானால் நீங்கள் ஒதுக்கிக் கொள்ளலாம்.  உங்களை நான் சொல்லவும் இல்லை.

vishalam raman

unread,
Dec 17, 2009, 3:29:19 AM12/17/09
to mint...@googlegroups.com
நானும் பம்பாய் தமிழ் சங்கத்தில் பாரதி கண்ட கண்ணன் என்பதைப்பற்றி பல
வருடங்களுக்கு முன் பேசினேன் மேலே இருந்த ஹால் நிறைந்திருந்தது மனதிற்கு
மகிழ்ச்சியைத்
தந்தது ஆனால் இப்போது இப்படி இருக்குமா என்பது சந்தெகம் தான் ஏன்
என்றால் தொலைக்காட்சி மற்றும் சினி நடிகர்களின்
வாழ்க்கையிலேயே பலர் மூழ்கிப்போகின்றனர் இதேபோல்
பாரதிகலா மன்றத்தில் திரு ஜெமினி திருமதி சாவித்திரி அவர்களை கௌரவிக்கும்
விழா நடந்தது, நான் தான் அதைப்படித்தேன் வெளியில் பந்தல் போட்டும் இடம்
போதாமல்
அவ்வளவு கூட்டம் என்னைப் பொருத்தவரை பம்பாய் தமிழ்ச்சங்கம்
எனக்குத்தமிழ் போதித்த குருதான்

vishalam raman

unread,
Dec 17, 2009, 3:34:00 AM12/17/09
to mint...@googlegroups.com
அன்பு திவாகர் நீங்கள் மிகத்தெளிவாகவும் சிறப்பாகவும்
எழுதி இருக்கிறீர்கள் நீங்கள்சொல்லியபடி பொறுமை நிதிநிலமை
மிகவும் முக்கியம் தான் படித்தப்பின் மனம் நிறைந்தது

தாரகை

unread,
Dec 17, 2009, 3:57:13 AM12/17/09
to மின்தமிழ்
Thiru Divakar,the forum & members who took part in this discussion
thread are aware that certain Thamizh Sangam's are able to keep alive
the trend of yester-years,though they fall into the minority list!
Thiru Penneswaran & Ms Vishalam Raman's thoughts reflect the
prevailing "Thamizh-Yengae"sphere:-(

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 4:10:14 AM12/17/09
to mint...@googlegroups.com
Sir,
Practical problems are to be faced.
Running Tamilsangham is really difficult, that is what i was telling through my blog
but running a successful tamil sangham, is a different one and I agree with the present day problems
 
D

 
On 12/17/09, தாரகை <thar...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 5:25:25 AM12/17/09
to mint...@googlegroups.com
நன்றி விசாலம்மா..
இது இப்படியிருக்க. இன்னும் ஆறுமாதங்களுக்குள் அடுத்த குழு வந்துவிடும்.. என எதிர்பார்க்கிறேன்..
அன்புடன்
திவாகர்

 

shylaja

unread,
Dec 17, 2009, 5:31:34 AM12/17/09
to mint...@googlegroups.com
பெங்களூர் தமிழ்ச்சங்கம் நன்கு செயல்படுகிறதே அல்சூர் ஏரிக்கு எதிரே  ஜிலுஜிலுன்னு காற்றுவீச  அழகான கட்டிடம்  இது!
  மாசாமாசம் ஏரிக்கரை கவியரங்கம் வாசகர்வட்டம் அது இதுன்னு நடைபெறுகிறது/  பெரிய நூலகம் இருக்கு. சொந்தமா  பத்திரிகை நடத்தறாங்க..பல பிரபலங்கள்  வந்துபோகும் இடம் இது..சமீபத்துல சென்னை  எழுத்தாளர்சங்கத்தினரை வரவழைத்து அவர்களை  கவிதை  பாட வைத்து வள்ளுவர் சிலையைக்காட்டி   தமிழ்ச்சங்க கட்டிடவளாகத்தில் தங்க வைத்து வயிறார உணவளித்து எல்லாம் நன்கு நடந்ததே..நானும் சங்க உறுப்பினர்!

2009/12/17 V, Dhivakar <venkdh...@gmail.com>



--
ஷைலஜா
///

Innamburan Innamburan

unread,
Dec 17, 2009, 6:17:28 AM12/17/09
to mint...@googlegroups.com
நாம் யாவரும் பெங்களூருக்கு படையெடுக்கும் காலம் நெருங்கிவிட்டது. நன்றி ஷைலஜா.

இன்னம்பூரான்
2009/12/17 shylaja <shyl...@gmail.com>

V, Dhivakar

unread,
Dec 17, 2009, 6:42:15 AM12/17/09
to mint...@googlegroups.com
மைசூரில் புகழேந்தி உள்ளார். அனைத்து கருநாடக தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் தலைவர். மிகச் சிறப்பாக செயல்படுகிறார். மைசூர் தமிழ்ச்சங்கம் மைசூர் முரசு என்ற ஒரு மாதப்பத்திரிகை வெளியிடுகிறது.
 
சமீபத்தில் அவருடைய அதிதியாக அங்கே கௌரவிக்கப்பட்டேன்.
 
அதே போல ஹைதராபாதிலும் மாநகர தமிழ்ச்சங்கம், திரு கிருபானந்தத்தின் தலைமையில் நல்ல முறையில் செயல்படுகிறது.
 
புவனேஸ்வரில் நண்பர் அன்சாரி மிக நல்ல முறையில் தமிழ்ச்சங்கத்தை நடத்திச் செல்லுகிறார். நிலம் வாங்கிவிட்டார்கள். கட்டடம் கட்ட முனைந்துவிட்டார்கள்.
 
அதே போல கொல்கத்தா பாரதி சங்கம் கூட..
 
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழக முதல்வரை வரும் ஞாயிறன்று மாலை கொல்கத்தா பாரதி சங்கம் தலைமையில் கௌரவிக்கிறார்கள். (நாங்களும் உள்ளோம்). நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. கலைஞருக்கு 'தமிழ்த்தலைமகன்' விருது வழங்குகிறார்கள்.
 
வெளி மாநில தமிழ்ச்சங்கங்கள் நன்றாகவே தற்சமயம் நடத்தப்படுகின்றன.
 
தி

Karthik Visweswaran

unread,
Dec 16, 2009, 11:36:08 PM12/16/09
to mint...@googlegroups.com
Vanakan,
 
Naan Karthikeyan, Oru varudam aaru mada kalamaga Kabul Tamizh Sangam Nadathi Varugiren. Aavapaozhdu ingu nadakum nigazhuvagalai tamizh ulagirku theriya paduthigiren. Melum engal nigazhvugulai nalla murayil dinamalar naledu veliyittu varugiradu.
 
Ennidam miga niraya , suvayana, swarasyamana, kasapana Afghanistan anubavangal irukiradu. Everenum virumbinal adai naan pagirndu kolla thayara aaga vullen.
 
Melum naan enadu anubavangalai nalla murayil thoguthu puthagamaga veliyida virumbigiren. Ennai okku vaikavum, vazhinadathavum, nalla aasan thevai padugiradu.
 
Ippadiku
Karthikeyan
Kabul Tamizh Sangam.
Minanjal: - kts...@gmail.com


 
2009/12/16 gcsekaran <gcse...@gmail.com>
2009/12/16 Anbudan Nilavan <anbudan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Best Regards
Karthik Visweswaran

Saravana Rajendran

unread,
Dec 17, 2009, 5:51:30 AM12/17/09
to mint...@googlegroups.com

 இது ஒரு வருத்தமான செய்திதான், மும்பை சயான் தமிழ்ச்சங்கம் என்பது தமிழ் பெயரை மட்டும் எனோ ஒரு அடையாளத்திற்காக சேர்க்கபட்டுள்ளதே தவிர தமிழர்களுக்கு என்று அந்த சங்கம் என்ன செய்திருக்கிறது என்று தெரியவில்லை,
நாஞ்சில் நாடான், பென்னேஸ்வரன், பாமரன், சிற்பி, என பலர் வந்தார்கள், வந்தவரகளின் பேச்சை கேட்க வந்தவர்களோ வெறும் 10 அதில் தமிழ் சங்க பணியாட்கள் நான் மணி கதிரவன் அவ்வப்போது நேரம் இருந்தால் வரும் புதிய மாதவி மேடம்,

  சமீபத்தில் ஜெரிமேரி தமிழ்சங்கத்தில் எனது தாராவி புத்தக அறிமுக விழா நடைபெற்றது, மிகவும் சிறிய சங்க வளாகம் எண்ணி 30 பேர் அமரலாம் ஆனால் வந்திருந்தவர்களோ சுமார் 250
மேல் தளத்தில் இடமில்லாமல் வெளியில் அமர் பலைகையிட்டு அமர்ந்திருந்தனர்.

 ஐயா சச்சிதானந்தம் விழாவின் இருதியில் வந்ததால் மேலும் கூட்டம் அதிகமாகியது.
 சயான் தமிழ் சங்கத்திற்கு தாராவிக்கும் நடைப்பயணம் 5 நிமிடம் தான் சயான் தமிழ் சங்கத்தில் சுமார் 1500 பார்வையாளர்கள் அமர சிறப்பு அரங்கம், பல அறைகள் மூன்று தளங்கள் என பல இருக்கிறன. ஆனால் தமிழன் தான் இல்லை தமிழ் மட்டும் ஒட்டிகொண்டு இருக்கிறது

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

Innamburan Innamburan

unread,
Dec 17, 2009, 10:06:56 AM12/17/09
to mint...@googlegroups.com
வருக.வருக.காபூலிவாலரே.

இன்னம்பூரான்
2009/12/17 Karthik Visweswaran <karvi...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 17, 2009, 12:00:17 PM12/17/09
to mint...@googlegroups.com

இந்த இழையில் ஒரு விஷயம் நெருடலாக இருக்கிறது (பெங்களூர் உட்பட) எல்லோரும் ஏதோ தங்கள் அளவில், தாங்கள் சாதனைகள் செய்த அளவில் அல்லது தாங்கள் பங்கேற்ற அளவில் தமிழ்ச் சங்கங்கள் குறித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்கள். 

நான் சொல்ல வந்த விஷயம் வேறு எங்கேயோ போய்விட்டது.  இனி ஒவ்வொருவரும் எங்கள் ஊர் தமிழ்ச் சங்கத்தில் புளியோதரை நன்றாக இருக்கும்.  தயிர் சாதம் புளிக்காமல் இருக்கும் என்பது போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களைத் தரலாம்.

நாளை அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படும்போது இந்தத் தகவல்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக அமையும். 

ராஜேந்திரன் சொன்னது போல நிறைய தமிழ்ச் சங்கங்களில் தமிழ் மட்டுமே காணாமல் போகிறது.

இதற்கான அடிப்படைக் காரணம் நான் சொல்ல முயற்சித்து இருப்பது போல கலை இலக்கிய விஷயங்களில் கூருணர்வு குறைந்தவர்கள் பதவிக்கு வருவதுதான்.  அவர்களால்தான் பதவிகளுக்கும் வரமுடிகிறது.  அது வேறு விஷயம்.

டெல்லித் தமிழ்ச் சங்கத்தில சென்றமுறை பொறுப்பில் இருந்தவர்கள் தேர்தல் அறிவிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விட்டது.  அவர்களை தட்டிக் கேட்டதற்கு ரொம்பவும் கேவலமாக சிறுமைப்பட வேண்டியிருந்தது.  என்னுடைய வலைப்பூவில் ஒரு கட்டுரையைப் பாருங்கள். டெல்லித் தமிழ்ச் சங்க அரசியலில் முதல் முறையாக தலையிட்டபோது எனக்குக் கிட்டிய பரிசு - இன்றும் நான் காலையில் விழுங்கியே தொலைய வேண்டிய ரத்தக் கொதிப்பு மாத்திரைகள்.

அதே போல நிறுவனங்களில் பதவிகளுக்கு (இதை நான் பொறுப்பு என்று சொல்வேன்.  அவர்கள் அதிகாரம் என்று வழக்கமாக எடுத்துக் கொள்வார்கள்) வருகிறவர்கள் உண்மையாகவே  குறுநில மன்னர்களின் மனநிலையில் தான் செயல்படுகிறார்கள்.

டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னால் உங்களுக்கு என் வேதனை புரியும்.

சுந்தரராமசாமி கனடா சென்று இயல் விருது பெற்று இந்தியா திரும்பும்போது டெல்லி வழியாக வந்தார்.  நான் மிகுந்த சிரமப்பட்டு தமிழ்ச் சங்க ஆட்களின் காலில் விழுந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யச்சொன்னேன்.  என்னுடைய அதிருஷ்டம் ஏற்றுக் கொண்டார்கள்.  நோட்டீஸ் விநியோகித்தார்கள்.  ஒரு ஐம்பது பேருக்கு மேல் கூடியிருந்தோம்.

சுந்தரராமசாமியை மேடையிலும் உட்கார வைத்து விட்டார்கள்.  தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வரத் தாமதம் ஆனதால் நிகழ்ச்சி துவங்கவில்லை.  சுந்தரராமசாமி கேள்வி கலந்த ஒரு புன்னகையுடன் என்னையே பார்க்கத் துவங்கினார்.  நான் ஒன்றும் தெரியாதது போல ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். 

தலைவர் அரைமணி நேரம் தாமதமாக வந்தார்.  மேடைக்கு வரும்போது கைப்பேசியில் பேசிக்கொண்டே வந்தார்.  தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கைப்பேசி உரையாடலைத் தொடர்ந்தார்.  ஒரு பத்து நிமிடம் அப்படிப் பேசி இருப்பார்.  பிறகு எவ்விதக் கூச்சமும் இல்லாமல் ஒலி வாங்கியின் முன் வந்து “திரு.சுந்தரம் ராமசாமி (பெயரைப் பாருங்கள்) ஒரு எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்.  அவர் தமிழில் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டேன்.  அவர் ஏதோ விருது வாங்கியிருக்கிறார் என்று சொன்னார்கள்.  வாழ்த்துக்கள்.  அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைத் தந்து விட்டு அவர் தன்னுடைய உரையைத் துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தத் தலைவர் திருவாய் மலர்ந்தார்.

சுந்தரராமசாமி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் துவங்கினார்.
“நான் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தமிழ் படைப்புலகில் ஈடுபட்டு வருகிறேன்.  என்னையும் என் படைப்புக்களையும் அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்பு அளித்த டெல்லித் தமிழ்ச் சங்கத்துக்கு என் வாழ்நாள் முழுதும் கடமைப் பட்டு இருக்கிறேன்”

ஒரு மூன்றாம் தர சினிமா நடிகனோ அல்லது எவனாவது அரசியல் தலைவனோ தமிழ்ச் சங்கத்துக்கு வந்திருந்தால் அந்த ஜென்மம் சுந்தர ராமசாமிக்கு செய்ததை செய்திருக்குமா?

இந்தத் தலைவன் அளவில்தான் நான் நிறைய நகரங்களில் உள்ள தமிழ்க் கலாச்சார நிறுவன  ஆசாமிகளைப் பார்த்து இருக்கிறேன்.  விதிவிலக்குகள் யாராவது ஓரிருவர்  இருக்கலாம். 

அவர்கள் பாவம் செய்தவர்கள்.  அங்கு இருந்தாலும் அவர்களால் தமிழுக்கும் கலைக்கும் ஒன்றும் செய்ய முடியாது.  இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

இந்த நிலையில் சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் எப்படி நடந்து  இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

பென்னேஸ்வரன்


2009/12/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Innamburan Innamburan

unread,
Dec 17, 2009, 12:31:09 PM12/17/09
to mint...@googlegroups.com
நண்பர் பென்னேஸ்வரனுக்கு, இன்னம்பூரான் வரையும் திறந்த மடல். உமது சொற்கள், அவை கூறும் பொருள், வெளிப்படை, உள்ளடக்கம் யாவற்றையும் நான் புரிந்து கொள்கிறேன்; உமது ஆதங்கத்தில் பங்கு கொள்கிறேன். இந்த அகம்பாவம்/மமதை/மண்டைக்கனம் நல்லவர்களையே குலைக்கும் ஆற்றல் கொண்டது. மற்றவர்கள் தானும் குலைந்து, அமைப்பையே குலைக்கும். செயல்களில் இறங்கி விடுவார்கள். முடிந்தவரை, தன்னலமற்றவர்களை வேலை வாங்கினால், உருப்பட முடியலாம். களையெடுக்கும் உழவாரப்பணி, இங்கு தான் அவசரத்தேவை

2009/12/17 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Anbudan Nilavan

unread,
Dec 17, 2009, 12:53:19 PM12/17/09
to mint...@googlegroups.com
தமிழ்ச் சங்கங்கள் செயல்படும் விதங்கள் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டு இருக்கிறேன். திவாகர், பொன்னேஸ்வரன் ஆகியோரின் அனுபவங்கள் தெளிவான உண்மைகளை உணர்த்துகின்றன.

திவாகர் அவர்களுக்கு :  மைசூர், ஹைதரபாத், புவனேஷ்வர் தமிழ்ச்சங்கங்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல், வலை முகவரி( இருந்தால்) போன்றவற்றை எனக்கு அளிக்கவும். 

-- 
வாழ்க தமிழுடன்,
நிலவன்.

http://blog.nilavan.net
http://www.mentamil.com
http://www.bangaloretamil.com


2009/12/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>

seethaalakshmi subramanian

unread,
Dec 17, 2009, 12:58:19 PM12/17/09
to mint...@googlegroups.com

இதுவரை மவுனமாக இருந்து பார்த்தேன். முடியவில்லை

நுழைந்துவிட்டேன்

தமிழ்ச் சங்கம் என்று இருப்பது தமிழர்கள் சங்கம் எனக்கொண்டால்

இந்த வேதனை குறையும். தமிழ் நாட்டைவிட்டு வெளிச்சென்றிருப்பவர்கள்

ஒன்று கூடும் இடம்.. தமிழர் கலாச்சாரம் காக்கும் இடம் என்று அவர்கள் கூறிக் கொள்வார்கள்

ஒன்று கூடி , மகிழ்ந்து இந்திய உணவு சாப்பிடுதல் இயல்பாக நடந்து வருகின்றது. குழந்தைகள் உறுப்பினர்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் வருவார், பாடகி, நடிகர் வந்தால்

உற்சாகமாக வரவேற்பு இருக்கும். முக்கியமான தினங்களில் விழா எடுப்பர்.தமிழ் சங்கத்தில் ஆங்கிலமும் இந்தியும் விளையாடும்.

சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு இப்படி பேசினார்கள் என்று கேட்கவே வேதனையாக இருக்கின்றது

திவாகர் ஓர் எழுத்தாளர். எனவே அவர் சங்கத்தின் பொறுப்பை எடுத்திருப்பதால் அங்கே நிகழ்வுகள் நன்றாக இருக்கலாம். பொறுப்பில் இருப்பவர் தமிழ் ஆர்வம் உள்ளவராக இருந்தால் அந்த ஆண்டு கொஞ்சம் களைகட்டும்.

சென்னையில் இரு எழுத்தாளர் சங்கங்கள். புலவர்களுக்குள் எப்படி ஒற்றுமை இல்லாமல் இருந்ததோ இன்றும் அதே நிலை. சினிமாவிற்கும் இருக்கும் கவர்ச்சி தமிழ் இலக்கியத்திற்குக் கிடையாது. வருந்த வேண்டிய

விஷயம். பரவாயில்லை. நடிகர் சிவகுமார் கம்பனையும் பாரதியையும் பேச ஆரம்பித்திருக்கின்றார். வரவேற்பு இருக்கின்றது. ஓய்வு பெறும் நடிகர்கள் இனிமேல் இலக்கியம் பேசினால் கூட்டம் வரும். இப்படி

எழுதும் பொழுதே மனம் வலிக்கின்றது. நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டது போதும்.

சீதாம்மா



2009/12/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>

தாரகை

unread,
Dec 17, 2009, 5:12:42 PM12/17/09
to மின்தமிழ்
Apologies for writing in English.

Though the Thamizh sangam p(l)ot thickens with dysfunctional anarchy,I
guess it would be worthwhile to resurrect the Thamizh Sangam - all
over the globe to fulfill the obligations to Thamizh Iyal, Isai &
Natakam.

This forum & its discussions can be a sounding board for the
renaissance of Thamizh sangam. Please enlist how the rudderless
Thamizh sangangaL around the globe can be redirected to its
quintessential responsibilities.

> திவாகர் ஓர் எழுத்தாளர். எனவே அவர் சங்கத்தின் பொறுப்பை எடுத்திருப்பதால் அங்கே
> நிகழ்வுகள் நன்றாக இருக்கலாம். பொறுப்பில் இருப்பவர் தமிழ் ஆர்வம் உள்ளவராக
> இருந்தால் அந்த ஆண்டு கொஞ்சம் களைகட்டும்.

We need a decorum & etiquette even if the organisers of Thamizh sangam
are not writers,kavingars or speakers of chaste Thamizh. Will we ill-
treat our parents or ancestors - likewise,people who aspire to take up
responsibilities of Thamizh sangam should prepare & equip themselves
for the Thamizh sangam position along with treading with caution,
rather than filling as a substitute.

> சினிமாவிற்கும் இருக்கும் கவர்ச்சி தமிழ் இலக்கியத்திற்குக் கிடையாது.

Attraction is more in the speaker/poet/writer's expressions along with
the organisers ability to convert a mundane affair into a literary
exuberance. We have to endure & enquire with others in the community
for assistance. Since most Thamizh sangam committee members develop an
"air of authority" as Thiru Penneswaran pertinently pointed
out.Organisers detest the art of checking,enquiring or request for
opinion,suggestions before a program. At the end of the
program,organisers penchant delve into condoning the community of lack
of support.

> நடிகர் சிவகுமார் கம்பனையும் பாரதியையும் பேச ஆரம்பித்திருக்கின்றார். வரவேற்பு இருக்கின்றது.
> ஓய்வு பெறும் நடிகர்கள் இனிமேல் இலக்கியம் பேசினால் கூட்டம் வரும். இப்படி
> எழுதும் பொழுதே மனம் வலிக்கின்றது

I guess,there are two points to it, first pont - Thiru Sivakumar has
always portrayed to be a gentleman in movies. So middle age & early
geriatric age people prefer to hear from an actor of diligence.
Despite the middle & early geriatric age population flocking to the
talk alone will not fill the hall for his speech. The second point is
he is the father of 2 successful & "talk of the town" cine-hero's add
to it father-in-law of a previous prima donna of Thamizh cinema.
There's always the speculation that the sons & daughter-in-law might
turn up for these talks.Who knows they might appear as
Rama,Lakshmanan,Seetha - during the talk on Kamban or Kannamma/Kali/
Puthumai Penn during the talk on Bharathi:-)

On Dec 18, 3:58 am, seethaalakshmi subramanian

V, Dhivakar

unread,
Dec 18, 2009, 12:19:37 AM12/18/09
to mint...@googlegroups.com
>>>நான் சொல்ல வந்த விஷயம் வேறு எங்கேயோ போய்விட்டது.  இனி ஒவ்வொருவரும் எங்கள் ஊர் தமிழ்ச் சங்கத்தில் புளியோதரை நன்றாக இருக்கும்.  தயிர் சாதம் புளிக்காமல் இருக்கும் என்பது போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களைத் தரலாம்<<<
 
நிஜமாகவே எங்களூர் தமிழ்ச்சங்க புளியோதரை நன்றாகவே இருக்கும்.
 
தி

 
On 12/17/09, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> wrote:



--

V, Dhivakar

unread,
Dec 18, 2009, 12:23:41 AM12/18/09
to mint...@googlegroups.com
ராஜேந்திரன்,
அத்தனை சிறிய (5 நிமிஷ தூர நடை) இடைவெளிக்குள் ஏன் இரண்டு தமிழ்ச்சங்கங்கள்?
 
சண்டை சச்சரவுகள் வந்தாலும் ஈகோவைத் தூக்கிப் போட்டுவிட்டு தமிழன் ஒன்றுபடமுயலவேண்டாமா..
 
சங்கம் என்றாலே சங்கமிக்கும் இடம்தான். தனிமனிதனுக்கொரு சங்கம் ஏன்?
 
முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.
 
தி

 

V, Dhivakar

unread,
Dec 18, 2009, 12:31:30 AM12/18/09
to mint...@googlegroups.com
அவ்வையாரே!
 
முதலில் தமிழ்ச்சங்கங்கள் எந்த கொள்கை மீது உருவாகவேண்டும் என்ற நிலை எங்கும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.
 
ஆனால் இன்றைய நிலை வேறு விதமான ஒன்றாக உருமாறிக்கொண்டு வருகிறது. ஆந்திரத்தைப் பொறுத்தவரை சொல்கிறேன். இப்போது ஐதராபாதில் தமிழர் மீது தாக்குதல் நடத்தியதாக அங்கிருக்கும் தமிழ்ச்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். காரணம் டில்லியில் 'சிதம்பரம்' அறிவித்து விட்டாராம். தமிழ் மந்திரி அறிவித்ததால் தமிழனைத் தாக்கு என்பதாக மூடச் செயல்களில் மக்கள் இறங்கும் காலம் இது.
 
இப்போதும் தமிழனுக்கு எங்கும் பாதுகாப்பில்லை. அந்தப் பாதுகாப்பின்மைக்கு ஒரு சங்கம் ஒற்றுமையோடு கூடியது மிக மிகத் தேவை.
 
கலை, நாட்டியம், தமிழ் இன்ன பிற இவையெல்லாம் பாதுக்காப்புக்குப் பிறகுதான்..
 
திவாகர்

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

V, Dhivakar

unread,
Dec 18, 2009, 12:42:26 AM12/18/09
to mint...@googlegroups.com
சீதாம்மா!
உங்கள் ஆதங்கம் மிக ஆழமானது.
சில விஷயங்களில் கண்டிப்பாக இருந்தால் தமிழ்ச்சங்கங்கள் சமாளிக்கமுடியும்.
குறிப்பாக, ஒரு பெரிய மனிதரை, கவுரவப்பட்டவர் வfரும்போது, அவருக்குக் கிடைக்கும் மரியாதையிலும் பொறுப்பாளர்கள் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பெரியவர்களை வரவழைக்கக்கூடாது.
 
பொறுப்பாளர்களுக்கு, பொறுப்புடன் உழைப்பும், நிர்வாகத்திறனும் அவசியம் வேண்டும். முதலில் விலாசமில்லாத தமிழ்ச்சங்கங்கள் எத்தனையோ உள்ளன, இவையெல்லாம் விலாசம் பெற முயற்சிக்க வேண்டும்.
 
ஈகோ என்பதை அறவே கழட்டிவைத்துப் பணியை செய்ய ஆரம்பித்தால் அந்தப் பணி தானாகவே நிறைவேறும்.
 
அன்புடன்
திவாகர்
 

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2009, 1:49:47 AM12/18/09
to mint...@googlegroups.com
பொதுவாகவே  தமக்கு தனிப்பட்ட முறையில்  என்ன லாபம் கிடைக்கிறது
என்று  எண்ணியே  பல தனிப்பட்ட மனிதர்கள்  பதவிகளில் இருந்துகொண்டு
அந்தப் பதவியைத் தவறாக உபயோகித்துகொண்டிருக்கின்றனர்

தமிழ் வளர்ச்சியோ, அல்லது  தமிழ் அறிஞர்களின்   பெருமையோ  இவர்களுக்கு முக்கியமில்லை

ஒரு நிகழ்சி நடத்தும்  போதுகூட இவர்களின் தனிப்பட்ட   மரியாதையும் கர்வமும் மேலோங்கி நிற்கிறது

இவைகளை விட்டு விட்டு  பொது மனப்பான்மையோடு  நிகழ்ச்சிகள்  நடத்தினால்

தமிழ்ச்சங்கங்கள்  இன்னும்   மிளிரும்
பல தமிழ்ச்சங்கங்களில் முறையாக  நிகழ்ச்சிகளை  நடத்தி தமிழ் வளர்த்து வருகின்றனர்

 வாஷிங்டனில்   உள்ள சியாட்டலில்  ,

சியாட்டல் தமிழ்ச் சங்கத்தில் வருடந்தோறும்  தமிழ் நாடக்ங்கள் நடத்தி
விழா கொண்டாடுகிறார்கள்

அதே போல அமீரக  தமிழ்ச்சங்கத்தில் பல நல்ல நிகழ்ச்சிகளை  நடத்துகிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ



18-12-09 அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 18, 2009, 2:31:14 AM12/18/09
to mint...@googlegroups.com
வணக்கத்துக்கு உரிய இன்னம்பூரான் ஐயா
 
நீங்கள் இந்த விஷயத்தில் யாரை எங்கே உதைக்கிறீர்கள் என்று அனுமானிக்க முடியவில்லை.
 
முழுக்க முழுக்க என்னுடைய ஆதங்கத்தைத்தான் இங்கே பதிவு செய்து இருக்கிறேன்.
 
ஏற்கனவே சொன்னது போல சென்ற ஆண்டு டெல்லி தமிழ்ச் சங்க அரசியலில் தலையிட்டு ரத்தக் கொதிப்பு மாத்திரைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டதுதான் மிச்சம்.
 
தற்போதைக்கு எங்கள் தமிழ்ப் பள்ளிகளின் தலைவலியையும் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.  சென்ற வாரம் கூட சில அதிகார மையங்களை சந்தித்து இப்பள்ளிகள் குறித்த சில பிரச்னைகளை விவாதித்து இருக்கிறேன்.  சில ஊழல்களை அவர்கள் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.
 
தில்லித் தமிழ்ச் சங்கம் எனக்கு ரத்தக் கொதிப்பு மாத்திரைகளை பரிசாக வழங்கியது போல இந்தத் தமிழ்ப் பள்ளிகள் எனக்கு என்ன வகையான பரிசைத் தரும் என்று தெரியவில்லை.  மிக விலை உயர்ந்த பரிசாக இருந்தாலும்   என் மனைவிக்கோ என் மகள்களுக்கோ அதிர்ச்சியாக  இருக்காது என்றுதான் இப்போதைக்கு நினைத்து என்னுடைய செயல்பாட்டை தொடரந்து வருகிறேன்.  வடக்கு வாசல் இணையதளத்தில் ராகவன் தம்பி பக்கங்களுக்கு சென்று பாருங்கள். நான் சொல்வது புரியலாம். 
 
இங்கே நமக்குத் தேவையானது முழுக்கவும் மாறுபட்ட பார்வைதான்.   மிகச்சிறிய அளவிலான ஆறுதல்களும் சமாதானங்களும் வேண்டியது இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
 
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Innamburan Innamburan

unread,
Dec 18, 2009, 3:30:38 AM12/18/09
to mint...@googlegroups.com
நண்பர் பென்னேஸ்வரனுக்கு,
வடக்கு வாசல் இணையதளத்தில் ராகவன் தம்பி பக்கங்களுக்கு சென்று, படித்த பிறகும் எழுதுகிறேன். உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொண்டதுமல்ல, எனது ஆதங்கத்தையையும் பகிர்ந்து கொண்டேன். நான் யாரையும் உதைக்க விரும்பவில்லை. பெரிய/சிறிய தமிழ்ச்சங்கங்களில், கருத்து வேற்றுமையின் மூலம், தற்பெருமை, அதனுடைய சாமர்த்தியமான பரிமாணங்கள். உங்கள் இன்னல்களும் அவற்றால் என்று அனுமானிக்கிறேன். 'களையெடுக்கும் உழவாரப்பணி, இங்கு தான் அவசரத்தேவை' என்று நான் சொல்வதும், நீங்கள் தேடும் முற்றிலும் மாறுபட்ட பார்வையும் ஒன்று தான்..
இன்னம்பூரான்2009/12/18 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
2009/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



2009/12/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>
நண்பர் பென்னேஸ்வரனுக்கு, இன்னம்பூரான் வரையும் திறந்த மடல். உமது சொற்கள், அவை கூறும் பொருள், வெளிப்படை, உள்ளடக்கம் யாவற்றையும் நான் புரிந்து கொள்கிறேன்; உமது ஆதங்கத்தில் பங்கு கொள்கிறேன். இந்த அகம்பாவம்/மமதை/மண்டைக்கனம் நல்லவர்களையே குலைக்கும் ஆற்றல் கொண்டது. மற்றவர்கள் தானும் குலைந்து, அமைப்பையே குலைக்கும். செயல்களில் இறங்கி விடுவார்கள். முடிந்தவரை, தன்னலமற்றவர்களை வேலை வாங்கினால், உருப்பட முடியலாம். "களையெடுக்கும் உழவாரப்பணி, இங்கு தான் அவசரத்தேவை" என்பதும் நீங்கள்


--

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 18, 2009, 4:53:06 AM12/18/09
to mint...@googlegroups.com
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி இன்னம்பூரான் ஐயா. கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு.
 
சரி.  இப்போது இன்னொரு பிரச்னை.
 
திவாகர் சொல்லும் கோணத்தில் இருந்து முற்றிலும் வேறுபட விரும்புகிறேன்.  அவர் முன்வைக்க முனையும் பார்வை மிகவும் ஆபத்தானது.
 
பாதுகாப்பு என்று எதைக் குறி்க்கிறார்?  அப்படி இந்த அமைப்புக்கள் நமக்கு  என்ன பாதுகாப்பு வழங்க முடியும்?
 
தமிழ்ச் சங்கத்தின் தாத்தாக்கள் தமிழர்களுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் துப்பாக்கி ஏந்தி தமிழர்களைப் பாதுகாக்க முடியுமா?   (தவறாக நினைக்க வேண்டாம். தமிழர்களின் பாதுகாப்பை தமிழ்ச் சங்கங்கள் தங்கள் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு சட்ட  விதி முறைகளில திருத்தங்கள் மேற் கொண்டால் என்ன நடக்கும் என்கிற ஒரு விஷமத்தனமான கற்பனை இது.  மன்னிக்கக் கூடிய கற்பனைதான்)
 
ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் கொல்லப்பட்டபோது அதுவும் தமிழர்களால் கொல்லப்பட்டபோது தமிழர்கள் தாக்கப் படுவார்கள் என்று நினைத்தோம்.  இந்திரா காந்தி கொலைசெய்யப்படட்போது சீக்கியர்கள் தாக்கப்பட்டது போல.  ஆனால் ராஜீவ் கொல்லப்பட்ட போது ஆர்.வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்தார்.  அவருடைய சமயோசிதத்தால் உடனடியாக இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.  அப்போது நான் உள்துறை அமைசச்கத்தில் பணியில இருந்தேன்.  இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நான் இருந்த துறையிலத்ான் செய்தார்கள்.  நான் இரவில் காரில் சென்றபோது என்னுடைய அதிகாரி சொன்னார்.  மதராசியாக இருக்கிறாய்.  பார்த்துப் போ என்றார்.  ஆனால் எந்த மதராசிக்கும் எதுவும் நடக்க வில்லை.
 
அதே போல நடிகர் விஜயகாந்த் கட்சியை சேர்ந்த ஒரு நண்பர் டெல்லியில் திருவள்ளுவர் பிரச்னைக்கு உண்ணாவிரதம் இருப்பேன் என்று விஜயகாந்த் சொன்னது போன்ற ஒரு அறிக்கையை டெல்லியில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் கொடுத்த போது அந்த நண்பரை கடித்துக் குதறி விட்டேன்.  உஙக்ள் அரசியல் வேலைகளையெல்லாம் தமிழகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  இங்கே தமிழர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காதீர்கள் என்று கடுமையாக சண்டை போட்டேன்.  அன்று விஜயகாந்துக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ச்ண்டை போடும் தீர்மானத்தில்  இருந்தேன்.  ஆனால் இரண்டு பேர் விட்டதும் வெறும் கரடிதான் என்று பிறகு தெரிந்தது.
 
தமிழர்கள் அரசியல் ரீதியாக சற்று அசட்டுத்தனமாக இல்லாது இருந்தாலே டெல்லி போன்ற இடங்களில் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
 
ஹைதராபாத்தில் தமிழர் தாக்கப்பட்டதை தயவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டு இதுபோன்ற செய்திகளை நம்புவோம்.    அந்தக் கோணத்தில் மேலும் பேசுவோம்.
 
இந்தக் கோணத்தில் நினைத்துப் பார்ப்பதே நம்முடைய தேசத்தின் இறையாண்மைக்கு மிகவும் ஆபத்தான காரியம் இல்லையா?
 
தமிழ்ச் சங்கஙக்் இலக்கியம் மற்றும் கலை வளர்ச்சிக்கானவை என்றுதான் நாம் நினைத்து செயல் படவேண்டும்.  நாம் வாழும் இடங்களை வளமாக்க நம்மால் இயன்றதை செய்யவேண்டும்.  நாம் வாழும் இடங்களில் திறந்திருக்கும் சன்னல்களில் வரும் காற்றை நாம் சகஜமாக சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  பிறகு பாதுகாப்பு போன்ற பெரிய வார்த்தைகள் எல்லாம தேவை இல்லை அல்லவா?
 
 
தமிழ்ச் சங்கங்கள் நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் சற்று அதிகமாகப் படுகிறது.
 
திவாகர் தயவு செய்து என்னைத் தவறாக எண்ணக் கூடாது. 

2009/12/18 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
வணக்கத்துக்கு உரிய இன்னம்பூரான் ஐயா



--
http://www.vadakkuvaasal.com/

Saravana Rajendran

unread,
Dec 18, 2009, 2:19:28 AM12/18/09
to mint...@googlegroups.com
என்ன சார் சோக் அடிக்கிறீர்கள், தாராவி 90 பிட் ரோட்டில் மட்டும் 17
சாதி சங்கள். அப்படி இப்படி என்று பார்த்தால் குறைந்தது 127 சாதி சங்கம்(
நான் பார்த்தவரை 113) ஏன் என்று கேட்டால் பெண் தேடுவதற்காக என்று
சொல்கிறார்கள்.
குறைந்தது 1 லட்சத்து 57 ஆயிரம் தமிழர்கள் 2001 மாநகராட்சி கணக்கின படி
ஆனால் அங்கு(தாராவி) தமிழ் சங்கம் மட்டும் இல்லை இது 168 கால தமிழரின்
வரலாற்று பகுதி(தாராவி‍- சரவணா ராஜேந்திரன்- கிழக்கு பதிப்பகம்)

தாரகை

unread,
Dec 18, 2009, 6:04:08 AM12/18/09
to மின்தமிழ்
> முதலில் தமிழ்ச்சங்கங்கள் எந்த கொள்கை மீது உருவாகவேண்டும் என்ற நிலை எங்கும்
> இல்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

I'm sorry for disagreeing to your views Thiru Dhivakar. There are
certain guidelines in a generic manner for any Thamizh association &
we need to be mature enough to evolve an efficient organisation,rather
than stating that there are no cohesive principles for starting any
Thamizh association.

> இப்போதும் தமிழனுக்கு எங்கும் பாதுகாப்பில்லை. அந்தப் பாதுகாப்பின்மைக்கு ஒரு
> சங்கம் ஒற்றுமையோடு கூடியது மிக மிகத் தேவை.

Thamizhan does'nt constitute ONLY Indian Thamizhan, its inclusive of
Sri Lanka Thamizhan, Malaysia Thamizhan, Singapore Thamizhan,
Mauritius Thamizhan et al. Despite the troubles in Sri Lanka &
Malaysia,this forum is well aware of the "unity" amidst Thamizhar to
raise their voices in unison! Thiru Penneswaran & Thiru Saravana
Rajendran have raised the issue of "safety" for Thamizhar.Though the
present concern is the very safety of the institution viz.,Thamizh
Sangam,
before one can ponder about the safety of Thamizhan or Thamizhar!

> கலை, நாட்டியம், தமிழ் இன்ன பிற இவையெல்லாம் பாதுக்காப்புக்குப் பிறகுதான்..

Expression of fine arts by any disadvantaged or vulnerable ethnic
group has & will be at the vanguard for upliftment of their
spirits,rather than safety as the primary objective. A forum which
reveres tradition does'nt require instances from their hoary tradition
of fine arts playing a significant role prior to safety!

V, Dhivakar

unread,
Dec 18, 2009, 11:20:34 PM12/18/09
to mint...@googlegroups.com
Thanks every one for their valuable suggestions. The time is apt as so many state Tamils Sanghams are meeting at Chennai this day.

D



2009/12/18 தாரகை <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Saravana Rajendran

unread,
Dec 19, 2009, 1:57:54 AM12/19/09
to mint...@googlegroups.com
  டில்லி தமிழர்கள் புண்ணியம் செய்தவர்கள், சிவசேனையினரால் தாராவி தமிழர்கள் தாக்கபட்டு கொண்டு இருந்த போது, மாதுங்க, சயான் தமிழர்கள் அலுவலகங்களுக்கு போய்க்கொண்டு இருந்தனர். அதாவது மேற்குடிகளை மையமாக வைத்து தாக்குதல் நடத்தவில்லை.
ஆனால் மேற்குடிகள் தாக்கபடும் தமிழர்களுக்காக எதுவும் சொல்லவில்லை, சமீபத்தில் சித்தா கேம்பில் சுமார் 1200 குடிசைகள் 1000 மேற்பட்டவை தமிழர்களின் குடிகள் சங்கமோ ஆசியாவின் மிகப்பெரிய அரங்கோ ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை, ஆனால் திபெத் அகதிகளின் குழு ஒன்று போர்வை கொடுத்து உதவியது, நெஞ்சை தொட்டது , மும்பையில் தமிழர்கள் இரண்டு பெரும் பிரிவாக பிரித்துவிட்டார்கள்.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 21, 2009, 8:47:54 PM12/21/09
to mint...@googlegroups.com
Dear Divakar
 
You can give a brief about what has happened at Chennai. 
 
நானும் அங்கே இருந்தேன்.  ஏறத்தாழ ஆறு மணி நேரங்கள் அங்கே உட்கார்ந்து மண்டையை உடைத்துக் கொண்டு இருப்பேனா?  உடைத்துக் கொண்டோமா?
நானாக ஏதாவது எழுதினால் தேவை இல்லாத குசும்பு சேர்ந்து கொள்ளும்.  நீங்கள் எழுதுங்கள்.  நியாயமாக எழுதுவீர்கள்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
 


 
2009/12/19 V, Dhivakar <venkdh...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

V, Dhivakar

unread,
Dec 22, 2009, 12:08:01 AM12/22/09
to mint...@googlegroups.com
 
 
நன்றி பென்னீஸ்வரன்
 
அங்கு கலந்து கொண்ட வினையால் எதை எழுதச் சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் குழப்பம், இருந்தாலும் நாம் மண்டையை உடைத்துக் கொண்டோம் என்று குறிப்பு கொடுத்துள்ளீர்கள்.. கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது.
 
முதலில் இந்தியாவில் உள்ள அனைத்துத்  தமிழ்ச்சங்கங்கள் இணையவேண்டும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் எவரிடமும் இல்லை என்பதே ஒரு நல்ல சகுனம்தான். பொதுவாக அனைத்து மாநிலத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம் கூட.
 
அடியேன் கூட்டத்தில் முதன் முதலில் வந்தவுடனேயே ஒரு யோசனையைவைத்து ஆரம்பித்தேன். தமிழக சங்க அமைப்புகளை விடுத்து ஏனைய மாநில சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு தேவை. ஒருவேளை தமிழகத்திலிருந்து ஒரு சங்கம் சேர்ந்துதான் ஆகவேண்டுமென்றால் அப்படிப்பட்ட சங்கங்களைப்பற்றி சற்று யோசித்து ஆராய்ந்து அலசி நல்லதைக் கெட்டதைப் பார்த்து அவர்களால் சுயநலமில்லா சேவையைப் பெற முடியுமானால், அப்படிப்பட்டவர்களை இந்த கூட்டமைப்பில் சேர்ப்பது நல்லது என்பதே அடியேனுடைய கருத்து. ஏனெனில் தமிழ்ச்சங்கம் என்பது ஏனைய மாநிலங்களில் உள்ள தமிழர்களின் பொது நன்மைக்குத்தான். இதை முதலில் கவனிக்கவேண்டும்.
 
ஆனால் முதலில் நம்மவர்களே நிராகரித்துவிட்டனர் இந்த யோசனையை..
 
ஆனால் இணைப்பு என வந்துவிட்டால் நாம் இன-மான உணர்வு கொண்ட தமிழரன்றோ.. அவ்வளவு சீக்கிரம் இணைந்துவிடுவோமா.. அல்லது இணைக்கத்தான் விட்டு விடுவோமா.. எங்கிருந்தோ வந்தாவது  கலைத்து விடமாட்டோமா.. தமிழனென்று ஒரு இனம் உண்டு, அவனுகோர் தனிக் குணம் உண்டல்லவா..
 
ஆனால் அதற்கு அடுத்து அரைமணி ஆனபின்னர் அங்கு அரங்கேறிய காட்சிகள் அருமையினும் அருமை.
 
சாதுவாக வந்த தமிழகத்தைச் சார்ந்த சங்கத்தவர் அடிதடியாக ஆர்ப்பரித்துப் பேசியதை காது குளிர (?) கேட்டவுடன் தான்.. ஓ.. நாம் சரியான தமிழ் அமைப்புக் கூட்டத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்ற சொரணையே வந்தது.
 
"யாரைக் கேட்டு இந்த புதிய அமைப்பு உருவாகலாம்.. நான் பழைய அமைப்புக்கு செயலாளர்.
 
(ஓ! ஏற்கனவே ஒரு அமைப்பு எப்போதோ இப்படி உருவாகி, இவர் செயலாளர் அதற்கு என பிறகு புரிய, ஆனால் அந்தச் சங்கம் ஆரம்பித்ததோடு சரி, அதற்குப் பின் பேச்சு மூச்சு இல்லை.. மூச்சு இல்லை என்றால் ஆள் அவுட் இல்லையா - அட, அந்த அமைப்பு செயல்படாத அமைப்பல்லவா)
 
" உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை இந்தக் கூட்டத்தைக் கூட்ட.. என்னிடம் கேட்டிர்களா?" 
 
(அட, இப்படி சொல்ல இவர் யார்.. அவருக்கும் இந்தக் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம், இது ஒரு புதிய கூட்டமைப்பு ஐயா)
 
"உங்களால்தான் தமிழரின் ஒற்றுமைக்கு ஊறு.. இப்படித்தான் தமிழர்கள் ஒற்றுமையில்லாமல், என்னைக் கலந்தோசிக்காமல் கூட்டம் கூடுவதா.. இப்படியே போனால்தான் தமிழன் இலங்கையில் செத்தான்.."
 
(ஆகா.. என்ன ஒரு உவமானம், சார்.. இது புதிய அமைப்புக்கான கலந்துரையாடல் ஐயா.. உங்கள் விஷயமே எங்களுக்குத் தெரியாது.. நீங்கள் வேண்டுமானால் உங்கள் கருத்துக்களை சாதாரணமாகச் சொல்லலாம்.. இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயல்படலாம் என்று சொல்லுங்கள்.. அவ்வளவுதான்.. இந்த அமைப்பின் கலந்துரையாடல்களை பிறகு ரிஜிஸ்டர் செய்யும்போது சேர்த்துக் கொள்வோம். நீங்கள் பேசிய, சண்டை போட்ட அந்த பழைய அமைப்புக்கும் இந்த அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை..)
 
நான் உங்களை சும்மா விடமாட்டேன்.. கோர்ட்டுக்குப் போவேன்..
 
(எதுக்கு சார் இந்தக் கோபம்.. இங்கு கூடியுள்ள பலருக்கு நீங்கள் யாரன்றே முதலில் தெரியாது.. இப்படியெல்லாம் பயமுறுத்தினால் எப்படி.. நீங்க என்னவேணும்னாலும் செய்துகொள்ளுங்கள்)
 
மேலே குறிப்பிட்டதெல்லாம் சபை நாகரீகம் கருதி சுருக்கமாக கொடுத்திருப்பது.
 
இந்த களேபாரம் முடிந்தபின் தில்லி செயலாளர் சக்திபெருமாள் அடியேன் சொன்ன முதல் யோசனையின் அருமையை உணர்ந்தார். நவி மும்பையைச் சேர்ந்த தலைவரும் (இதைப் போன்ற) தமிழகச் சங்கங்கள் சேர்வது நல்லதல்ல என்றும் சொன்னார்.
 
எது எப்படியோ, நல்லது நடந்தால் அங்கே அடியேனும் பங்கு பெறவே விரும்புகிறேன்.Postive frame mind or positive approach அடிப்படையில் உருவாகும் அமைப்புகள் எப்போதும் நல்லதே செய்யும்.  சிறந்த செயல்திறனும், நல்ல தலையும் கொண்டவர்களால் உருவாகும் கூட்டமைப்பினால் மட்டுமே தமிழ்ச்சங்கங்கள் பயனடைய முடியும். தமிழ்ச்சங்கங்கள் பயனடைந்தால் தமிழர்கள். அதாவது பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழர்கள் பயனடைவார்கள்.
 
இந்த நோக்கத்தில்தான் தற்சமயம் தில்லியில் ஒரு தமிழ்ச்சங்ககூட்டமைப்பு ஆரம்பமாகப் போகிறது. அதற்கான அஸ்திவாரம்தான் சென்னையில் போடப்பட்டுள்ளது. பார்ப்போம். நல்லதையே நினைப்போம்..  நல்லதே நடக்கும்.
 
திவாகர்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 22, 2009, 1:01:18 AM12/22/09
to mint...@googlegroups.com
எல்லாம் சரி திவாகர்.
 
அங்கே எள் எண்ணெய்க்காக காய்ந்து கொ்ண்டிருந்தன.
 
எலிப்புழுக்கை எதுக்குக் காய்ந்தது? 
 
என்னைத்தான் சொல்கிறேன்.
 
அந்த ஆள் போகிற போக்கில் என்னை பிராடு என்று திட்டி விட்டுப் போனார்.  நான் சபையை திசை திருப்புகிறேன் என்றும் சொன்னார்.  நான் கொஞ்சம் கெட்ட வார்த்தையில் (ரொம்ப லேசான வார்த்தைகள்) அவர் கொஞ்சம் அடங்கிய மாதிரி தெரிந்தது.
 
நான் அங்கே ஆறு மணிநேரம் மண்டையை உடைத்துக் கொண்டது (நீங்கள் வருவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பே அங்கே இருந்து வேலைகளைத் துவங்கினேன்) வருத்தமாக இருந்தது.
 
சென்னையில் வேண்டியவர்களைப் பார்த்து இருந்திருக்கலாம்.  அவர்களிடமும் கெட்ட பெயர் வாங்கினேன்.
 
சிலர் வாங்கி வந்த வரம் இது என்று நினைக்கிறேன்.
 
மறுநாள் காலையிலும் மாலையிலும் நிகழ்ந்தது பற்றி....
 
நான் ஜூட்...
 
பென்னேஸ்வரன்

2009/12/22 V, Dhivakar <venkdh...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Subashini Tremmel

unread,
Dec 23, 2009, 3:10:04 PM12/23/09
to mint...@googlegroups.com
வணக்கம் திரு.கார்த்திகேயன்.
 
காபூலிலிருந்து மின்தமிழில் எழுதும் முதல் தமிழர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.
 
தமிழில் எழுத உங்களுக்கு NHM Writer  உதவியாக இருக்கும். கீழ்க்காணும் பகுதியை வாசித்து install செய்து தமிழில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல்களை எழுதலாம்.
http://software.nhm.in/products/writer (மென்பொருள் இங்குள்ளது)
http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html  (எப்படி தமிழில் எழுதுவது

 
உங்கள அனுபங்களை நீங்கள் மின்தமிழில் எழுதலாம். தமிழ் மரபு சார்ந்த செய்திகளாக இருப்பின் நீங்கள் மரபுவிக்கியில் கட்டுரைகளாக தொகுக்கலாம்.  http://www.heritagewiki.org/ 
 
தொடர்ந்து எழுதுங்கள்.
 
அன்புடன்
சுபா
2009/12/17 Karthik Visweswaran <karvi...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages