அஞ்சலி.. அஞ்சலி.. பாடும் நிலவுக்கு மௌன அஞ்சலி ..
கானம் பாடிய வானம் பாடியே
உன் கீதம் இன்று ஏன் மௌனமானதோ
உன் ராக ஆயுள் இன்று அமைதியானதோ
அமைதியானதோ ..
பாடிப் பாடியே அன்பை வளர்த்தான்
போற்றிப் போற்றியே தெய்வத்தைத் துதித்தான்
இசை என்னும் வானின் திசையை அளந்தாய்
இன்னுயிரில் யாவையுமே பாடியே தீர்த்தாய்
காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை
காற்று மண்டலத்தில் வசித்தாலும்
கண்ணெதிரே உனைக்காணும் வரம் கிடைக்குமா ...
மீண்டும் வாரம் கிடைக்குமா?
அஞ்சலி.. அஞ்சலி.. பாடும் நிலவுக்கு மௌன அஞ்சலி ..
அஞ்சலி.. அஞ்சலி.. பாடும் நிலவுக்கு மௌன அஞ்சலி ..