பாண்டியர்கள் மண்ணின் மைந்தர்களா?

104 views
Skip to first unread message

இணையப் பரிமேலழகன்

unread,
Oct 16, 2014, 8:33:53 AM10/16/14
to mint...@googlegroups.com
தமிழகத்தில் சோழர் பல்லவர் வரலாறுபோல பாண்டியர் வரலாறு அதிகம் அறியப்படவில்லை.  பாண்டியர்கள் யார் அவர்கள் தோற்றம் பற்றிக் கேட்டால் கல்லைக் காட்டுறாய்க மண்ணைக் காட்டுரய்ங்க நம்பமுடியலியே என்பதுபோல் பார்த்தால் (அரு)வாளைத் தூக்குறாய்ங்க.  பாண்டியர் பூமி மலைகளால் சூழப்பட்டு வளமான ஆறுகள் நிறைந்து வெளியார்கள் உட்புகா ஒரு மறைவுப் பகுதியாகவே இருந்துள்ளது.  மலை நாட்டு வேடர்களும் பளியர்களும் முதுவர்களும் தோடர்களும் பழங்குடிகளாக வாழ்த பூமியில் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆயர்களாக ஒரு பிரிவினரும் கடல் வழியாகக் கரையை அடைந்து நாகர்களாகவும் பரதர்களாகவும் வடகிழக்கு வாசல் வழியாக மதுராவை அடைந்து அங்கிருந்து கடல் வழியாகத் தென்னகம் வந்த மங்கோலிய சீனர்கள் என்று பலரும் ஒன்றுகூடி வாழ்ந்தார்கள்.  பாண்டியர்கள் வரலாறு தமிழர்களின் எழுதப்பட்ட வரலாற்றுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முந்தியதாக விளங்கி அவர்கள் இந்துமாக் கடல் வழியே கீழ்த்திசை நாடுகளில் வணிகம் நடத்தியவர்கள்.  பாண்டிய மன்னர்களின் தூதர்கள் சீன அரசவையிலும் ஸ்ரீவிஜயர் அரசவையிலும் அணி செய்தனர். அம்மன்னர்களின் தூதுவர்கள் பாண்டியன் அரசவையில் வீற்றிருந்தனர்.  பாண்டியர் அரசுமுறை வேளிர்கல் என்ற சிற்றரசர்கள் ஆட்சியின்கீழ் அமைந்து ஒரு பேரரசன் அதிகார எல்லைக்குள் பழங்குடி மரபின் அடிப்படையில் பெண்வழிச் சமுதாயமாக விளங்கியது

பாண்டிய மன்னர்களின் ஆட்சிபீட மோதல்களில் தலையிட்டு சீனர்கள் சமாதானப்படுத்தியதையும் ஒரு கட்டத்தில் பாண்டிய அரசர் சீன ஆட்சிக்குக் கப்பம் கட்டி அடிமையாக இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் வெளிநாட்டவர்களின் குறிப்பைத் தொகுத்து வெளியிட்டுக் குறிப்புகள் அளித்துள்ளார்.  பாண்டியர்களின் அனைத்து வளங்களும் கடல்கொண்டுவிட்டதாக அறுதியிட்டுக் கூறுவோர் கடலுக்குள் உள்ள எச்சங்களை அகழ்வாய்வு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை.  சீனத்திலும் கொரியாவிலும் ஸ்ரீவிஜய பாலி ஜாவா போன்ற நாடுகளில் கிடைக்கும் வரலாற்று ஆவணங்களைத் திரட்டும் பணியையும் செய்வதில்லை

ஆனால் பாண்டியனா கொக்கா என்ற பழம்பெருமை பேசுவது மட்டும் காதைக் கிழிக்கிறது

இனா பனா அனா

MURUGAVEL S

unread,
Oct 16, 2014, 12:35:33 PM10/16/14
to mint...@googlegroups.com
சரி நாம் இவர் தமிழன் இல்லை அவன் தமிழன் இல்லை என்கிறோம்
அப்படியானால் எவர்தான் தமிழன் எவரும் தமிழன் இல்லையா?
இதற்கு பதில் அளியுங்கள்
சு.மு. முருகவேல்
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>

--
சு.மு. முருகவேல்
கைப்பேசி
9047106966
மின்னஞ்சல்
s.mur...@gmail.com

Oru Arizonan

unread,
Oct 16, 2014, 12:35:55 PM10/16/14
to mint...@googlegroups.com
//பாண்டிய மன்னர்களின் ஆட்சிபீட மோதல்களில் தலையிட்டு சீனர்கள் சமாதானப்படுத்தியதையும் ஒரு கட்டத்தில் பாண்டிய அரசர் சீன ஆட்சிக்குக் கப்பம் கட்டி அடிமையாக இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் வெளிநாட்டவர்களின் குறிப்பைத் தொகுத்து வெளியிட்டுக் குறிப்புகள் அளித்துள்ளார்.//

இந்தச் சொற்றொடரின் மேற்கோள் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் எந்தப் புத்தகத்தில் (அல்லது எந்தப பதிவில்), எந்தப் பக்கத்தில் வந்தது என்று அருள்கூர்ந்து தர இயலுமா?  இது நான் அறியாத செய்தியாக இருக்கிறது. 

 நான் அறிந்தவரை பாண்டியர்களின் ஆட்சிபீட மோதல்களில் சோழர்களும், சிங்களவர்களுமே தலையிட்டு, பாண்டிய நாட்டை எரியிட்டுக் கொளுத்தினார்கள் என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் History of South India என்ற புத்தகத்தில் படித்துள்ளேன்.  

அதை South India and Her Muhammadan Invaders என்ற நூலில் S .கிருஷ்ணசாமி ஐயங்கார் உறுதிப்படுத்தி உள்ளார்.

SOUTH INDIA IN THE THIRTEENTH CENTURY

The Revival of Pandyan Greatness.—We have already
stated in the previous lecture that the power of the Pandyas
suffered considerable eclipse in the civil war which brought
on the intervention of both the king of Ceylon and the
reigning Chola Rajadhiraja II and his heir-apparent, who
became after him Kulottunga III.  (பக்கம் 43)

The two Ceylon generals, Lankapura
and Jagad Vijaya, made a joint attack upon Kulasekhara
who cut open the bund of a tank to prevent the enemy from
making use of it. The generals however repaired the breach
and set forward against Kulasekhara defeating him in battle
and took two villages called Sirimalakka and Kattala
(Kuttalam). The former Lankapura ordered to be burnt
down as that was the place where Parakrama Pancha
was slain.   (பக்கம் 8)

When Lankapura heard of this he ordered his colleague to
keep watch in Madura while he himself marched further
from Tirukkanapper upon the frontier fortress of Kllanilaya
(Kilanilai in the Tiruppattur Taluk and on the utmost
northern border of Madura). The battle here seems to have
taken the form of a running fight all along the road from
Kilanilai to the two ports of Vada Manamekkudi and
Manamekkudi (Manamelkudi at the mouth of the Vellar,
and the town and suburb north of it). Having defeated the
Tamil chiefs, Lankapura burnt down these two ports and
another Manjakkudi. As a punishment for this interference
of the Cholas, he burnt the Chola country, for a distance of
seven leagues.  (பக்கம் 9)

ஆக, சோழர்கள் சிங்களவர்கள் தலையீட்டால் பாண்டியநாடு எரியிட்டுக் கொளுத்தப் பட்டது என்பது வரலாறு.  இதற்கு S . கிருஷ்ணசாமி ஐயங்கார் தகுந்த சான்றுகளை அவரது நூலில் கொடுத்துள்ளார். 

தாங்கள் கொடுத்த குறிப்பிற்கும் சான்றுகளை அறிய விரும்புகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 16, 2014, 12:48:39 PM10/16/14
to mint...@googlegroups.com
//சரி நாம் இவர் தமிழன் இல்லை அவன் தமிழன் இல்லை என்கிறோம்
அப்படியானால் எவர்தான் தமிழன் எவரும் தமிழன் இல்லையா?//

ஆராய்ச்சியாளர்கள் மனிதகுலமே ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றிலிருந்து உதித்தவர்கள் என்று மரபணு ஆராய்ச்சி மூலம் நிறுவி இருக்கிறார்கள்.  அது உண்மை என்றால் உண்மையான தமிழன் யார்?  ஆப்பிரிக்கத் தாயின் வழின்தொன்றல்களான வந்தேறிகள்தான்!

நான்  இழிவாக உரைக்கவில்லை.  தமக்குப் பிடிக்காதவர்கள் அனைவரையும் தமிழகத்து வந்தேறிகள் என்று இழிவுபடுத்துவதை நிறுத்தவேண்டும் என்பதால்தான். 

மனித குலமே ஆப்பிரிக்காவைத் தவிர மற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் வந்தேறிகள்தான் என்று விஞ்ஞானம் ஆய்ந்து அறிந்துள்ளது !  எனவே தமிழ் ஆய்வாளர்கள் அருள்கூர்ந்து வந்தேறிகள் என்ற சொல்லைத் தவிர்த்து தமிழின் மேன்மையைப்பற்றிய ஆய்வைக் கைக்கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழ்த்தாயின் மக்கள் (சாதி, மத, இனப் பகுப்பின்றி) என்று போற்றும் நிலை வரவேண்டும்.

பணிவன்புடன்,

Suba.T.

unread,
Oct 16, 2014, 12:58:07 PM10/16/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-16 18:35 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//பாண்டிய மன்னர்களின் ஆட்சிபீட மோதல்களில் தலையிட்டு சீனர்கள் சமாதானப்படுத்தியதையும் ஒரு கட்டத்தில் பாண்டிய அரசர் சீன ஆட்சிக்குக் கப்பம் கட்டி அடிமையாக இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் வெளிநாட்டவர்களின் குறிப்பைத் தொகுத்து வெளியிட்டுக் குறிப்புகள் அளித்துள்ளார்.//

இந்தச் சொற்றொடரின் மேற்கோள் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் எந்தப் புத்தகத்தில் (அல்லது எந்தப பதிவில்), எந்தப் பக்கத்தில் வந்தது என்று அருள்கூர்ந்து தர இயலுமா?  இது நான் அறியாத செய்தியாக இருக்கிறது. 

​பேராசிரியர் நாகராசன் பல நேரங்களில் பல்கலைக்கழக ஆசிரியர் பணியை மறக்காது இங்கேயும் ஒரு மேற்குறிப்பு கொடுத்துவிட்டு ஏனையோர் தேடுங்கள் என வேலை வைத்து விடுவார்.​
 
​ அது போலத்தான் இதுவும் என நினைக்கின்றேன் :-) 

நீலகண்ட சாஸ்திரியார் பாண்டியர் வரலாறு என ஒரு நூல் எழுதியிருக்கின்றார். அதில் இக்குறிப்பு இருக்கலாம். எனது புத்தக அலமாரியில் இருக்கின்றது. ஆனால் எனக்கு தேடி எடுத்து போட தற்சமயம் அவகாசம்  இல்லை. அவரோ அல்லது ஏனையோர் தருவார்கள் என நானும் எதிர்பார்க்கின்றேன்.

​சுபா​

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Nagarajan Vadivel

unread,
Oct 16, 2014, 12:59:54 PM10/16/14
to மின்தமிழ்

2014-10-16 22:05 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தாங்கள் கொடுத்த குறிப்பிற்கும் சான்றுகளை அறிய விரும்புகிறேன்.

K.A.Nilakanata
​ sasthri (1931) Foreign Notes on South Indai, Madras, University of Madras

Nagarajan​

Suba.T.

unread,
Oct 16, 2014, 1:04:48 PM10/16/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-16 18:48 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//சரி நாம் இவர் தமிழன் இல்லை அவன் தமிழன் இல்லை என்கிறோம்
அப்படியானால் எவர்தான் தமிழன் எவரும் தமிழன் இல்லையா?//

ஆராய்ச்சியாளர்கள் மனிதகுலமே ஒரு ஆப்பிரிக்கத் தாயின் வயிற்றிலிருந்து உதித்தவர்கள் என்று மரபணு ஆராய்ச்சி மூலம் நிறுவி இருக்கிறார்கள்.  அது உண்மை என்றால் உண்மையான தமிழன் யார்?  ஆப்பிரிக்கத் தாயின் வழின்தொன்றல்களான வந்தேறிகள்தான்!

நான்  இழிவாக உரைக்கவில்லை.  தமக்குப் பிடிக்காதவர்கள் அனைவரையும் தமிழகத்து வந்தேறிகள் என்று இழிவுபடுத்துவதை நிறுத்தவேண்டும் என்பதால்தான். 

​யார் தமிழர் என்ற ஒரு தேடுதல் அவ்வப்போது மின் தமிழை வந்து எட்டிப் பார்த்து ​செல்வதுண்டு.:-)
தம்மை தமிழர் என நினைப்போர் எல்லோருமே தமிழர் தான் என நினைக்கும் மனப்பக்குவம் நாம் எல்லோருக்கும் தேவை. 

சுபா

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2014, 1:07:00 PM10/16/14
to மின்தமிழ்

2014-10-16 22:28 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
பேராசிரியர் நாகராசன் பல நேரங்களில் பல்கலைக்கழக ஆசிரியர் பணியை மறக்காது இங்கேயும் ஒரு மேற்குறிப்பு கொடுத்துவிட்டு ஏனையோர் தேடுங்கள் என வேலை வைத்து விடுவார்.​
 
​ அது போலத்தான் இதுவும் என நினைக்கின்றேன் :-) 

​தட்டுங்கள்
​ திறக்கப்படும் என்பதுபோல் தேடுங்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாததால் இவ்வாறு எழுத நேரிடுகிறது.  இந்நூல் என்னிடம் உள்ளது.   இது வெளிநாட்டு பயணர்கள் இந்தியா வந்து எழுதிய குறிப்புகளின் தொகுப்பு.  சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு.  அவர்களும் என்னைப்போல்தான்.  வெளியில் சொல்லவும் மாட்டார்கள் விற்கவும் மாட்டார்கள்
அதிசயமாகைரண்டாண்டுகளுக்குமுன் புத்தகக் கண்காட்சியில் கடை திறந்திருந்தார்கள் ஆனால் அதிகம் ஆதரவு இல்லை என்பதால் கடை மூடப்பட்டது

என்னைப் பற்றி எனக்கே தெரியாததெல்லாம் கற்பனை செய்வதுபோல் தோன்றுகிறது.  உங்கள் அடுக்கில் இந்த நூல் உள்ளதா என்று சொல்லவும்

இனா பனா அனா​

Suba.T.

unread,
Oct 16, 2014, 1:09:10 PM10/16/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-16 14:33 GMT+02:00 இணையப் பரிமேலழகன் <radius.co...@gmail.com>:
தமிழகத்தில் சோழர் பல்லவர் வரலாறுபோல பாண்டியர் வரலாறு அதிகம் அறியப்படவில்லை.  பாண்டியர்கள் யார் அவர்கள் தோற்றம் பற்றிக் கேட்டால் கல்லைக் காட்டுறாய்க மண்ணைக் காட்டுரய்ங்க நம்பமுடியலியே என்பதுபோல் பார்த்தால் (அரு)வாளைத் தூக்குறாய்ங்க.  பாண்டியர் பூமி மலைகளால் சூழப்பட்டு வளமான ஆறுகள் நிறைந்து வெளியார்கள் உட்புகா ஒரு மறைவுப் பகுதியாகவே இருந்துள்ளது.  மலை நாட்டு வேடர்களும் பளியர்களும் முதுவர்களும் தோடர்களும் பழங்குடிகளாக வாழ்த பூமியில் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆயர்களாக ஒரு பிரிவினரும் கடல் வழியாகக் கரையை அடைந்து நாகர்களாகவும் பரதர்களாகவும் வடகிழக்கு வாசல் வழியாக மதுராவை அடைந்து அங்கிருந்து கடல் வழியாகத் தென்னகம் வந்த மங்கோலிய சீனர்கள் என்று பலரும் ஒன்றுகூடி வாழ்ந்தார்கள். 
 
​நமக்கு சரியான தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழக, தென்னிந்திய நிலப்பரப்பிலும் கடல் பகுதியிலும் நிகழ்ந்தால் பல சான்றுகளை காட்டலாம் என்பது என் எண்ணம். பாண்டியர்கள் கிரேக்கர்களுடனும் சீனர்களுடனும் கொண்டிருந்த வர்த்தகம் பற்றி பலர் அறிவோம்.​ இதனை பல்கலைக்கழகங்கள் மேலும் ஆய்வு செய்ய ஆராய்ச்சி மாணவர்களை இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். இது தான் நடைபெறுவதில்லை. மாணவர்கள் தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் என்ற வகையில் அங்குள்ள அருங்காட்சியகங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு இவ்வகை ஆய்வுகளைச் செய்வது பன்முக நிலையை ஆய்வுக்கு வழங்குவதோடு சான்றுகளையும் பெற உதவும்.

சுபா

பாண்டியர்கள் வரலாறு தமிழர்களின் எழுதப்பட்ட வரலாற்றுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முந்தியதாக விளங்கி அவர்கள் இந்துமாக் கடல் வழியே கீழ்த்திசை நாடுகளில் வணிகம் நடத்தியவர்கள்.  பாண்டிய மன்னர்களின் தூதர்கள் சீன அரசவையிலும் ஸ்ரீவிஜயர் அரசவையிலும் அணி செய்தனர். அம்மன்னர்களின் தூதுவர்கள் பாண்டியன் அரசவையில் வீற்றிருந்தனர்.  பாண்டியர் அரசுமுறை வேளிர்கல் என்ற சிற்றரசர்கள் ஆட்சியின்கீழ் அமைந்து ஒரு பேரரசன் அதிகார எல்லைக்குள் பழங்குடி மரபின் அடிப்படையில் பெண்வழிச் சமுதாயமாக விளங்கியது

பாண்டிய மன்னர்களின் ஆட்சிபீட மோதல்களில் தலையிட்டு சீனர்கள் சமாதானப்படுத்தியதையும் ஒரு கட்டத்தில் பாண்டிய அரசர் சீன ஆட்சிக்குக் கப்பம் கட்டி அடிமையாக இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் வெளிநாட்டவர்களின் குறிப்பைத் தொகுத்து வெளியிட்டுக் குறிப்புகள் அளித்துள்ளார்.  பாண்டியர்களின் அனைத்து வளங்களும் கடல்கொண்டுவிட்டதாக அறுதியிட்டுக் கூறுவோர் கடலுக்குள் உள்ள எச்சங்களை அகழ்வாய்வு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை.  சீனத்திலும் கொரியாவிலும் ஸ்ரீவிஜய பாலி ஜாவா போன்ற நாடுகளில் கிடைக்கும் வரலாற்று ஆவணங்களைத் திரட்டும் பணியையும் செய்வதில்லை

ஆனால் பாண்டியனா கொக்கா என்ற பழம்பெருமை பேசுவது மட்டும் காதைக் கிழிக்கிறது

இனா பனா அனா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Oct 16, 2014, 1:11:03 PM10/16/14
to மின்தமிழ், Subashini Tremmel
​இல்லை. ஒரு படி எனக்கு தயாரித்து விட்கின்றீர்களா? இதனை   மின்னாக்கம் செய்து பிடிஎஃப் ஆக கொடுத்தாலும் உதவும்.​
 
​இணிஅத்து வைக்கலாம்.

சுபா

இனா பனா அனா​

-- 

Dev Raj

unread,
Oct 16, 2014, 2:36:04 PM10/16/14
to mint...@googlegroups.com
Bilingual (Tamil & Chinese) inscription in China dated Saka era 1203 (1281 CE) Mentions the erection of deity Thirukkaniccuramudaiyar by one Sambandapperumal for the well being of Chinese emperor Cekacaikan Parman

Oru Arizonan

unread,
Oct 16, 2014, 2:57:24 PM10/16/14
to mint...@googlegroups.com
I unearthed a book called "Yuan Khanate and South India" by Tansen Sen.  On Page 306, the following information is given:

Yang had previously displayed his military skills during the invasion
of key towns in southern China under Sögetü.20 Upon reaching Kollam
in the third lunar month of Zhiyuan 17 (April–May, 1280), he quickly
secured “conditions of surrender” (jiangbiao 􀫾􀥤) from the ruler of the
kingdom called Binadi 􀘘􀱏􀤱 (Pandiya?).21 The Kollam ruler also promised
to send a tributary mission to the Yuan court within a year.22
22 Yuanshi 210, p. 4669.

My two-cents worth:  During 1280 C.E., Tamilnadu was ruled by Emperor Kulasekara Pandiyan and Pandian Empire was at its zenith.  

ref: South India and Her Muhammadan Invaders by S. Srinivasa Iyengar. pp:  54-55
 
Maravarman Kulasekhara.—The next great Pandya
whose history is of sufficient importance to be dealt with
1 Ep. Coll. 435 of 1906. * Ep. Rep., Sec. 37 of 1912.
3
Ep. Rep. 1912, Sec. 36 ; Ep. Rep. 1913, Sec. 45.
Maravarman KulaSekhara 55
is the last great one among them called Maravarman
Kulasekhara I, whose accession took place in A.n. 1268
according to the late Professor Kielhorn, and of whose
forty-fourth year
1 we have a record or two. His reign
therefore would extend from a.d. 1268 to 1311 almost.
This long reign was one of comparative peace and uniform
prosperity, if the statements of Marco Polo and the Muhammadan
historians are to be given full credit. This ruler is
apparently the ' Khales Dewar ' of the Muhammadan
historians, and the ' Asciar ' or ' Ashar ' of Marco Polo. Of
Khales Dewar, Wassaf says that he ' had ruled for forty
years in prosperity and had accumulated in the treasury
of Shahr-Mandi 2 1200 crores in gold.' In his days, Kayal
a port of the Pandya country was in a very prosperous condition,
and Marco Polo says of him that he was ' the eldest
of the five brother kings.' Of Kayal he says :
'
it is at this
city that all the ships touch that come from the west, as
from Hormos 3 and from Kis * and from Aden, and all
Arabia, laden with horses and with other things for sale.
And this brings a great concourse of people from the
country round about, and so there is great business done in
this city of Cail.' 5
Reverting to his account of the king
he continues ' the king possesses vast treasures, and wears
upon his person great store of rich jewel. He maintains
great state and administers his kingdom with great equity,
and extends great favour to merchants and foreigners, so
that they were very glad to visit his city.'

Book's ref:
2 Shahr Pandi, the city of Piindya, Elliott III, p. 52.
3 Not Myos Hormos—Mussel Harbour a port of the Ptolemies in the Red
Sea. 27-12 N. and 33-13 E, but Ormuz in the Persian Gulf— Urimanji of
S. Indian writers.
4 Kis or Kais, an island in the Persian Gulf, the chief of which Maliku-1
Islam Jamal-ud-din was the chief horse trader with t with the Piindya.
5 Marco Polo Edn. by Yule and Cordier II, p. 370.

இப்படி ஒரு பெரிய பேரரசை ஆண்ட பாண்டிய மாமன்னன் குலசேகரன் சீனருக்குத் திறை செலுத்தியிருப்பானா?  பாண்டியர்கள் சீனர்களுடன் வணிகம் செய்ததால் சீன மன்னர் களுக்குப பரிசு அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்கிறது.  அதைத் திறை என்று சொல்வது எங்கணம்?

இங்கு இரண்டு சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.  ஒன்று சீனர்களுடையது.  இன்னொன்று சீன மன்னர் அரசவியில் இருந்து தமிழ்நாட்டில் பயணித்த மார்கோ போலோ  அவர்கள் , மற்றும் அரேபியா  பயணிகளின் குறிப்பு.  இரண்டு பேர்கள் புகழ்ந்த பாண்டியப் பேரரசு சீனர்களுக்குத் திறை செலுத்தியது என்று எழுதினால், அதற்குத் தக்க சான்று கொடுக்க வேண்டிய பொறுப்பும் தங்களிடமே உள்ளது, பேராசிரியர் ஐயா!

எனவே, பேராசிரியர் அவர்களே,

எங்களை மாணவராகக் கருதாமல் (குறிப்பு:  உயர்திரு தேமொழி, நானல்ல!), சான்றுகளுடன் எங்கள் அறிவைப் பெருக்குங்கள். 

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

பி.கு.  அலெக்சாந்தர் இந்திய மன்னன் புர்ஷோத்தமனுடன் போர் புரிந்து வென்றான் என்பதும் அலெக்சாந்தரின் பயணகே குறிப்பாளர் எழுதியதே!  இந்தியாவில் அப்படிப்பட்ட பெரிய படையெடுப்பு பற்றி ஒரு குறிப்பும் இல்லை.  எனவே, சான்று இல்லாததால் அது உண்மை என்று நம்ப்பப்படுகிறது.  உண்மை அதுதானா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 16, 2014, 3:02:12 PM10/16/14
to mint...@googlegroups.com
கல்வெட்டுப் பதிவுக்கு நன்றி, உயர்திரு தேவ் அவர்களே!  

அகழ்வாராய்ச்சியில் தமிழர்கள் கட்டிய கோவில் ஒன்றும், அதில் இருந்த தமிழ்க் கல்வெட்டு எந்த சீன மன்னர் நிலம் கொடுத்தார் என்பதையும் பகருகிறது என்றும் படித்தேன்.  இது வணிகத்தால் வந்த விளைவே, திறை செலுத்தியதால் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

தமிழர்களாகிய நாம் திரைகடலோடித் திரவியம் ஈட்டியது ஒவ்வொன்றாக வெளிவருவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2014, 3:46:55 PM10/16/14
to மின்தமிழ்

2014-10-17 0:27 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
எனவே, பேராசிரியர் அவர்களே,

எங்களை மாணவராகக் கருதாமல் (குறிப்பு:  உயர்திரு தேமொழி, நானல்ல!), சான்றுகளுடன் எங்கள் அறிவைப் பெருக்குங்கள். 

ஆராய்ச்சி
​ மாணவர்கள் உற்றுழி உதவியும் உரு பொருள் கொடுத்தும் பிற்றை​
​ நிலை முனியாமல் கற்பவர்கள்.  நீங்கள் உதவி எதையும் செ​ய்வதில்லை.  மாறாக எல்லாவற்றையும் நானே தேடிப்பிடிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமல்ல.  இருந்தாலும் மின் நூல் இணைப்பை இங்கே கொடுக்கிறேன். 

Oru Arizonan

unread,
Oct 16, 2014, 6:02:35 PM10/16/14
to mint...@googlegroups.com
//நீங்கள் உதவி எதையும் செ​ய்வதில்லை.  மாறாக எல்லாவற்றையும் நானே தேடிப்பிடிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமல்ல.//

பேராசிரியர் அவர்களே! 

தாங்கள் மின்தமிழில் பாண்டியர்கள் பற்றி ஒரு செய்தியைப்  பகிர்ந்துகொண்டீர்கள்.  

நாங்கள் மாணவர்களும் அல்லர் , ஆய்வாளர்களும் அல்லர்.  எனவே அக்கருத்துக்கு  வரலாற்றுச் சான்று உள்ளதா என்று கேட்டால் அதைக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் பேராசிரியர் என்ற முறையில் உங்களதே!

உங்கள் மாணவர்கள் உற்றுழி உதவியும் உரு பொருள் கொடுத்தும் பிற்றை​ நிலை முனியாமல் கற்பவர்கள்.  மறுக்கவில்லை.  அவர்கள் உங்களிடம் கற்றுப் பட்டம் வாங்கவே அப்படிச் செய்கிறார்கள்.  நாங்களோ உங்களிடம் இருந்து செய்திகளை அறிய ஆவலாக உள்ளோம்.  எனவே, நாங்கள் ஆராய்ந்து உங்களுக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்று சொல்வது நியாயம் அல்ல.  இரண்டு மூன்று மடல்களில் நாங்கள் இரந்து தகவல் பெறவேண்டும் என்று நீங்கள் விரும்புவதாகத தோன்றுகிறது.

அப்பொழுதும், நீங்கள் கொடுத்த தகவல் எங்கு இருக்கிறது என்று தேடிப்பார்க்கும் பொறுப்பையும் எங்களிடம் விட்டுவிட்டீர்கள்.  வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல நாங்கள் தேட வென்றும் என்பதும் தங்களின் விருப்பமாகவே இருக்கிறது.  தாங்கள் விரல் நுனியில் வைத்திருக்கும் தகவலை நாங்கள் அதிக நேரம் செலவு செய்து அறிய வேண்டும் என்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள்.  அதன்மூலம் தாங்கள் தெரிவிக்கும் செய்திகளுக்கு நாங்கள் சான்று கேட்கக்கூடாது என்று சொல்லாமல் சொல்லுகின்றீர்கள்.

பேராசிரியர் என்ற முறையில் தங்களிடம் நாங்கள் கேட்பது நியாயம், அதுவே முறை என்றும்  தாங்கள் இப்படி அலைக்கழிப்பது நியாயமே இல்லை என்றும் இந்தச் சிறியேனுக்குத தோன்றுகிறது.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Oct 16, 2014, 9:41:40 PM10/16/14
to மின்தமிழ்
​மெய்நிகர் உலகுக்கும் மெய்யுலகுக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.  ஒரு கருத்தைப் படித்து பொருள் அறிந்து நினைவில் நிறுத்தி அதை எழுத்தில் வெளியிட வேண்டும்.  அதனால் ஆய்வாளர்கள் நிறையக் கற்றுத் தகுந்த குறிப்புகளைத் தயாரிக்க வேண்டும். அவ்வாறு தகவல் திரட்டும்போது அவர்கள் வழிகாட்டிபவர்களிடமிருந்தோ அல்லது சமகால ஆய்வாளர்களிடமிருந்து உதவி பெறுவதுண்டு.  இந்த உதவி உதவுபவர்கள் புதியவற்றை அறிந்துகொள்ள வழி செய்கிறது.  ஆசிரியர்கள் மாண்ணவர்களால் பயன் பெறுவது எளிதல்ல என்பதற்கு மாறாக ஆய்வு மாணவர்கள் தங்களின் புதிய தகவலை ஆய்வு வ்வழிகாட்டியுடன் பங்கிக்கொள்வதால் மாணவரால் ஆசிரியரின் அறிவு விரிவு பெறுகிறது

இணையத்தில் நேர்மாறான நிலை.  இங்கு யார் முதலில் தகவலைத் தேடிப் போடுகிறாரோ அவரே அறிவிற் சிறந்தவர்.  இணையத்தில் ஒலியின் வேகத்தில் கிடைக்கும் எண்ணற்ற தகவலை வடிகட்டி பொருத்தமான தகவலையோ அல்லது அது கிடைக்கும் இடத்தையோ சுட்டிக்காட்டும் திறன் அவசியம். இணையத்தில் வெளியிடப்பட்ட தகவலின் சில வரிகளைக் கொண்டே மேலதிகத் தகவல்களைப் பெற வழியுள்ளது. மின் தமிழில் உள்ள எல்லாரும் இணையத் தேடலில் தலை சிறந்தவர்கள்.  ஆயினும் தனக்குப் பதில் யாராவது ஒருவர் இணயத்தில் தேடி எடுத்துப் போட்டால் நலம் என்று கருதுபவர்கள்.  குறிப்பாகச் சிலர் இரை தேடிக் கானகத்தில் அலையும் புலி இரையைத் தேடிக்கொண்டு அலைவதுபோல் இணையத்தில் அறிவுப்பசியுடன் உலாவுபவர்கள்

எனவே இணையத்தில் ஒரு குறிப்பு கிடைத்தால் அதை அக்குவேறு ஆனி வேறாக அலசிவிடுவார்கள்.  இப்படிப்பட்ட சூழலில் நான் ஏதோ எல்லாமறிந்தும் மறைக்கும் மனம் கொண்ட சித்தர் போன்று உருவகப்படுத்தக் கூடாது.  நேற்று தேடியபோதுதான் இந்த நூல் இணையத்தில் இருப்பது தெரிந்தது.  உடனே அந்த உசாத்துணையை அளித்துவிட்டேன்

ஆய்வில் உள்ள அறநெறி

ஒரு தகவலை அறியாமல் இருப்பதைவிட அறிந்துகொள்வது நல்லது
தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடமிருந்து பெறுக
தெரிந்தவர்கள் மறைக்காமல் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்
இணையத் தகவல்களை உடனுக்குடன் தேடி தேவையான பொருத்தமான கருத்தை வெளியிடும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

இறுதியாக ஒரு குறிப்பு யாதெனில் என் இடுகைகள் கேள்வி அடிப்படையில் அமைந்து பொதுவாக ஒரு இறுதித் தன்மை இல்லாமல் இருக்கும்.

இனா பனா அனா

N. Kannan

unread,
Oct 16, 2014, 10:38:03 PM10/16/14
to மின்தமிழ்
2014-10-17 9:41 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​இறுதியாக ஒரு குறிப்பு யாதெனில் என் இடுகைகள் கேள்வி அடிப்படையில் அமைந்து பொதுவாக ஒரு இறுதித் தன்மை இல்லாமல் இருக்கும்.

இனா பனா அனா

இபஅ அவர்கள் சிந்தனைத்தேர் உழவன்

சிந்தனை விதைகளை அள்ளித்தூவிக்கொண்டே இருப்பார். ஒரு மடலாடற் குழு ஆரோக்கியமாகச் செயல்பட இத்தகைய உழு தொழில் அவசியம். 

உடலுக்கு பயிற்சி எப்படியோ அது போல் உள்ளத்திற்குக் கேள்வி!

வாழ்க! வளர்க!

நா.கண்ணன்
Reply all
Reply to author
Forward
0 new messages