குஜிலியம் என்றால் என்ன ?

539 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 18, 2016, 11:04:20 AM6/18/16
to mintamil, thiruppuvanam

வணக்கம்.

எரியோடு என்ற ஊருக்கு அருகே குஜிலியம்பாறை என்ற ஊர் உள்ளது. 
குஜிலியம் என்றால் என்ன பொருள் ?

>>
>> 2014-02-14 17:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>>>
>>>> உ
>>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>>
>>>>
>>>> விண்ணிழி விமானம்
>>>>
>>>>
>>>> மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும்.  இது ஒரு “விண்கல்“.  விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.  ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை.  இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
>>>>
>>>> தேவர்களின் தலைவன் இந்திரன்.  இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.   வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது.  இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.  தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான்.  எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.  இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.
>>>>
>>>> இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
>>>>
>>>> முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.  அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1).  மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.  இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.  
>>>>
>>>> அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.  மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.  
>>>>
>>>> சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும்.  எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
>>>>
>>>> இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்.  திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
>>>
>>>
>>> அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால், 
>>> சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள்  விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
>>>
>>> மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
>>> விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
>>
>> மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன்.  இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
>> அறுபடைவீடு பாதயாத்திரை  சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.  
>>
>> அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.  
>> எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது.  இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.
>>
>> (எரியோடு இருக்கும் இடத்தைக் காட்டும் கூகிள் படங்களை இணைத்துள்ளேன்)
>>
>> விண்கல் எரிந்து விழுந்து பெரும் வட்டவடிவிலான மேட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது.  எரிகல் விழுந்த போது அதிலிருந்து பெயர்ந்த எரிகல் ஓடுமட்டும் தனித்து இந்த இடத்தில் விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.  
>> புவியியல் வல்லுனர்கள் இந்த இடத்தில் உள்ள பாறையை இதற்கு முன் ஆராய்ந்துள்ளார்களா? என எனக்குத் தெரிவில்லை.  அறிவியல் அடிப்படையில் இந்தப் பாறையை புவியியல் வல்லுனர்கள் ஆராய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
>> எரியோடு ஊரில் உள்ள பெருமாள்கோயிலின் அருகே உள்ள பாறையானது ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும்.
>
>  
>>
>>
>>>> அன்பன்
>>>> கி.காளைராசன்
>>>> திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,
>>>> திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
>>>> திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,
>>>>
>>>>
>>>> ...............................................
>>>>
>>>> வாசிக்கப் பட்டவை...
>>>>
>>>>
>>>> (1)
>>>> திருவாலவாய்க் காண்டம்
>>>> நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்
>>>>
>>>> “தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
>>>> வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
>>>> கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
>>>> ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“
>>>>
>>>> (2) 
>>>> திருவிளையாடற் புராணம்
>>>> பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340 
>>>>
>>>> “நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
>>>> விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
>>>> திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
>>>> புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“
>>>>
>>>>
>>>>
>>>> 4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
>>>> ________________________________
>>>>
>>>> ஏகபெ ருந்தகை யாயபெம்மா
>>>>
>>>> னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
>>>>
>>>> மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
>>>>
>>>> விண்ணிழி கோயில் விரும்பியதே. 4
>>>>
>>>> 38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
>>>>
>>>> தையலொ டுந்தள ராதவாய்மைப்
>>>>
>>>> புந்தியி னான்மறை யோர்களேத்தும்
>>>>
>>>> புகலி நிலாவிய புண்ணியனே
>>>>
>>>> எந்தமை யாளுடை யீசவெம்மா
>>>>
>>>> னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
>>>>
>>>> வெந்தவெண் ணீறணிவார்மிழலை
>>>>
>>>> விண்ணிழி கோயில் விரும்பியதே. 5
>>>>
>> --
>> google.com/+KalairajanKrishnan
>>
>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>> http://thiruppuvanam1.blogspot.in/
>> http://kaalaiyarkovil.blogspot.in/
>> http://thiruvadanai-puranam.blogspot.com/
>> http://sakkudi.blogspot.in/
>>
>> http://temples-kalairajan.blogspot.in/
>> http://myletters-kalairajan.blogspot.in/
>> http://thirukural-kalai.blogspot.in/
>> http://tours-kalairajan.blogspot.in/
>> http://books-kalai.blogspot.in/
>>
>> http://kovillormadam.blogspot.in/
>> http://kalairajanletters.blogspot.in/
>> http://kalairajan26.blogspot.in/
>
>

eriyodu 1.bmp
eriyodu 3.bmp

N. Ganesan

unread,
Jun 18, 2016, 11:18:39 AM6/18/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vallamai


On Saturday, June 18, 2016 at 8:04:20 AM UTC-7, kalai wrote:

வணக்கம்.

எரியோடு என்ற ஊருக்கு அருகே குஜிலியம்பாறை என்ற ஊர் உள்ளது. 
குஜிலியம் என்றால் என்ன பொருள் ?


குஜிலி, குஜ்ஜிலி என்றால் குஜராத், குஜராத்தி எனப் பொருள்.

கூர்ச்சுரம் - என்பது கூர்ச்சரம் > குச்சரம் என ஆகும்.

குச்சரம் > குஜ்ஜலி, குஜிலி என்றெல்லாம் திரிந்தது.

கூர் - என்பது வேலமரங்களில் ஒருவகையாக இருக்கலாம்.
வேல (= உடை, சேலை) மரங்கள் மிகுந்த சுரம் (semi-arid) = கூர்ச்சுரம்.

தமிழ்க்கடல் ராய. சொ. காந்தியடிகள் பிள்ளைத்தமிழ் பாடினார்.
அதில், கூர்ச்சர நாட்டான் என ஈற்றடியில் வரும்.

இன்னும் விரிவாக, 72 Cases of Tamil Nadu (1837) இழையில் பேசலாம்.

திராவிட மொழிகள் பேசும் 5 நாடுகள் பஞ்ச திராவிட நாடுகள் எனப்பட்டன
(1) சீந்து (சிந்து) - கூர்ச்சுரம்
(2) மகாராட்டிரம்
(3) கருநாடகம்
(4) தெலுங்கானா - ஆந்திரம்
(5) தமிழ்நாடு - கேரளம்.

பஞ்ச திராவிடம் போல, ஆரிய மொழிகள் பேசிய மாகாணங்கள் பஞ்ச கௌடம் ஆகும்.

என்னுடன் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பெயர்: கூர்ப்பாட் (கூர்ப்பாடி).
கூர்மையான முள்ளுடைய acacia மரங்கள் கூர் எனப்பட்டன போலும்.

நா. கணேசன்

Page # 13
Guzzeratt brahminy / Female




Guzzeratt brahminy (Gujarati Brahmin)
குசசிலிய பிராமணன (குச்சிலிய பிராமணன்)
--------------------------------------
Female 
குசசிலிய பிராமணததி (குச்சிலிய பிராமணத்தி)


Gujaratis, people of Gujarat; kucciliya  -  குஜராத்தியர், கூர்ச்சரதேசத்தவர், குச்சிலியர்

N. Ganesan

unread,
Jun 18, 2016, 4:19:21 PM6/18/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vall...@googlegroups.com
கொங்குநாட்டு எல்லை ஊரான எரியோடு ஊர்ப்பெயர் பற்றிப் பின்னர் ஒருமுறை பார்ப்போம்.

குச்சிலியன்பாறை என்பதை குச்சிலியம்பாறை என்பர். தெலுங்கு போன்ற மொழிகளின் தாக்கத்தால் குஜிலியம்பாறை எனக்
குச்சிலியம்பாறை ஆகியுள்ளது.

அரேபியாவில் இருந்து தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா எல்லாம் குச்சிலியர்கள் (குஜராத்தியர்) கூர்ச்சுரத்தின்
அச்சிட்ட துணிகளை விற்றனர். பாண்டிச்சேரி, சட்ராஸ் போன்ற துறைமுகங்கள் வாயிலாக விற்பதற்கு அனுமதி பெற
குச்சிலிய வணிகர்கள் (சவுதாகார்) மதுரையில் நாயக்கர் காலத்தில் முகாமிட்டிருந்தனர். குச்சிலிய வாணியர் ஒருவரின் படம்


சௌதாகிரி  - ப்ரிண்ட் துணிகள் தாய்லாந்து இருபாலரும் விரும்பி அணிந்தனர்:


இந்த அழகான துணி வகைகளை விற்க வந்த குச்சிலியன் வாழ்ந்த இடம் குச்சிலியம்பாறை.
வடுகர்கள் குஜிலியம்பாறை என அழைத்திருக்கலாம்.

N D Logasundaram

unread,
Jun 19, 2016, 2:55:28 AM6/19/16
to mintamil
 என்பதில் உள்ள குஜிலி தினவெடுப்பதைக்குறிக்கும் 
வடநாட்டில் இந்தியில் குஜிலி என்றா ல் சொறிந்துவிட்டுக்கொள்ள த்தோன்றும் உணர்ச்சி 

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Jun 19, 2016, 3:18:43 AM6/19/16
to mintamil
பாறைக்கு எப்படி இப்பெயர் வந்தது என காண முயன்றால் மைக்கா(அல்லது வே றொன்று பெயர் தொண்டை யில் இருப்பது வாயில் வரவில்லை) போன்றவை இவைகள் காற்றுமழை வெய்யில் இவற்றால் அரிமா னம் பெற்றால் நுண்ணிய துகள்களாக பறக்கும் வாய்ப்புள்ளது அவை தினவினைத்தூண்டும் பண்புடையன 
அப்படி  இருக்க வாய்ப்புள்ளது 

 மனிதர் உண்டாக்கிய  விட நுண்ணிய கண்ணாடி இழைகள் மிக மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும் இவைகளின் துகள்  கண்ணில் பட்டால்பெரும்  ஆபத்து தோ லி ல் பட்டால் தின ணவெடுக்கும் 

அல்லது
 தாவரங்களில் சில பூனைக்காஞ்சான் இலை தொலி ழில் பட்டால் திணவெடுக்கு ம் அறிவீர்   அது வளரக்கூடியதாக்கலாம்  

நூ த லோ சு 
மயிலை 

தேமொழி

unread,
Jun 19, 2016, 3:25:42 AM6/19/16
to மின்தமிழ்

திருச்சியில் "நடு குஜிலித் தெரு" என்றொரு தெரு இருக்கிறது.

இது காந்தி மார்க்கெட் அருகில் உள்ளது.  இப்பகுதி திருச்சியின்  வணிக மையம்.

சென்னை, திண்டுக்கல், மதுரை, தஞ்சை நெடுஞ்சாலைகளும்,   திருச்சியின் பெரிய கடைவீதி உள்ளிட்ட  முக்கியமான சாலைகள் யாவும்  சந்திக்கும் மையப்புள்ளியில் அமைந்த இடம்.

இப்பகுதியின் தெருக்கள் யாவும்  பல்லின மக்களும் (மதம், சாதி இன்னபிற) இங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் வகையில் ஜாபர்ஷா தெரு, பெரிய கம்மாளத் தெரு, சின்ன செட்டி தெரு, சௌராஷ்ட்டிரா தெரு, நடு குஜிலி தெரு, கள்ளதெரு, மல்லிசாஹிப் தெரு, கிலாதர் தெரு, மன்னார் பிள்ளை தெரு, மாப்பிள்ளை நாயக்கன் தெரு, அல்லிமால் தெரு,  என்ற பெயர்களுடன் அமைந்திருக்கும்.

வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தும், திருச்சியின் பழமையான வணிக நடவடிக்கைகளை  உணர்த்தும் வகையில் அமைந்த   இத்தெருக்களின் பெயர்களை திருச்சி மாநகராட்சி மாற்றாமல் பாதுகாக்க  வேண்டும்.  



..... தேமொழி



N. Ganesan

unread,
Jun 19, 2016, 3:29:05 AM6/19/16
to மின்தமிழ்
நடு குஜிலி தெருவில் குஜாத்தி சமாஜ் உள்ளது!

N. Ganesan

unread,
Jun 19, 2016, 3:34:02 AM6/19/16
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, Aragalur pon.venkatesan, dorai sundaram

நடு குஜிலி தெருவில் குஜாத்தி சமாஜ் உள்ளது!
நகைக் கடைகளும், ஆத்திசூடி அமரும் பார்சுவநாத தீர்த்தங்கரருக்குப் பள்ளியும் அதே தெருவில்!

Raju Saravanan

unread,
Jun 19, 2016, 3:34:35 AM6/19/16
to mint...@googlegroups.com
குச்சில் என்றால் தமிழில் சிறிய வீடு என்று பொருள். 

குச்சில் > குஜில் என மருவி இருக்க வாய்ப்புண்டு. 

குஜிலியம் பாறை (குச்சிலியன் பாறை) என்றால் சிறியவீடுகளும் பாறையும் உள்ள பகுதி என்று பொருள்.

நன்றி 

Raju Saravanan

unread,
Jun 19, 2016, 3:43:09 AM6/19/16
to mint...@googlegroups.com
TVU தளத்தில் குச்சிலி என்பதற்கு கடை என்ற பொருள் உள்ளதாக கூறுகிறது.


நன்றி 

N. Ganesan

unread,
Jun 19, 2016, 3:51:27 AM6/19/16
to மின்தமிழ்
On Sunday, June 19, 2016 at 12:43:09 AM UTC-7, இராசு சரவணன் wrote:
TVU தளத்தில் குச்சிலி என்பதற்கு கடை என்ற பொருள் உள்ளதாக கூறுகிறது.


நன்றி 


ஆம், மாலை நேரக் கடைகள் என்பதற்கு குஜிலிக் கடைகள் எனப் பெயர். மாலை நேரக் கடைகளை குஜராத்திகள் நடத்தியதால் வந்த பெயர்.
குஜிலிப் புஸ்தகங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

இன்றும் சோன்பப்டி, பேல் பூரி, பான்பூரி கடைகள் குஜிலியரால் மாலைகளில் நடத்தப்படுகின்றன.

நா. கணேசன்

Singanenjam Sambandam

unread,
Jun 19, 2016, 8:47:53 AM6/19/16
to mint...@googlegroups.com
குஜிலி எனில் இந்தியில் திணவு    அல்லது  அரிப்பு என்று பொருள்.  பெரியவர் நூ. தா. லோ. சு. அவர்கள்  குறிப்பிடுவது CHRYSTILE   ASBESTOS....
..கல்நாரில்  ஒரு வகை.  இந்தக்கனிமம்  அங்கே  இல்லை. 

N. Ganesan

unread,
Jun 19, 2016, 1:39:56 PM6/19/16
to மின்தமிழ், vallamai


On Sunday, June 19, 2016 at 5:47:53 AM UTC-7, singanenjan wrote:
குஜிலி எனில் இந்தியில் திணவு    அல்லது  அரிப்பு என்று பொருள்.  பெரியவர் நூ. தா. லோ. சு. அவர்கள்  குறிப்பிடுவது CHRYSTILE   ASBESTOS....
..கல்நாரில்  ஒரு வகை.  இந்தக்கனிமம்  அங்கே  இல்லை. 


நன்றி, முனைவர் சிங்கநெஞ்சன்.  குச்சிலியன்பாறை குஜிலியம்பாறை என மருவியுள்ளது. குச்சரம் < கூர்ச்சரம் (=குஜராத்)
குஜிலி தெரு என்று பல ஊர்களில் (உ-ம்: திருச்சி) இருப்பது கூர்ச்சர நாட்டார் கடைகள் இருக்கும் பகுதி.

இவர்கள் தொழில்முனைவோர். இன்றும் குஜராத்தும் பிரதமர் மோதியும் பன்னாட்டு வணிகத்தை அதிகமாக்க முனைகின்றனர்.

” ஹோம் ரூல் கண்டன, திராவிட முன்னேற்ற, இராஜ விசுவாசக் கும்மி

[சேலம் ஆசுகவி தி.சு. கணபதி பிள்ளையால் எழுதப்பட்டது (1918).]

-பக்.274, முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வேங்கடாசலபதி,
காலச்சுவடு பதிப்பகம்.

சுயமரியதைக்கு ஆதரவாகவும் ஆங்கில அரசின் பாதம் தாங்கவும் பாடப்பட்டதுதான் இந்த இராஜ விசுவாசக் கும்மி.

மலிவாக விற்கப்பட்ட இத்தகைய பாடல்கள் சென்னை ‘குஜிலி பஜாரில்’ விற்பனை செய்யப்பட்ட்ன.

Kanda Kottamசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது கந்தகோட்டம் என்ற கந்தசாமிக் கோவில். இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதி “குஜிலி பஜார்” என்றழைக்கப்பட்டது. குஜிலி என்பது இந்தப் பகுதியில் வசித்த குஜராத்திகளைக் குறிக்கும் என்றும் குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது. லெக்சிகன்களையும் பேரகராதிகளையும் மூளையில் சுமப்பவர்களுக்கு அதை விட்டுவிடலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து 1960கள் வரையும் கூடப் பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் இங்கே கிடைக்கும்.

புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், தேநீர் போன்ற புதுப்பொருட்களின் வருகை இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் விலை அரையணாவாக இருந்தது.

அன்றாடம் நிகழ்ந்த கொலை, கொள்ளை, அரசியல் தொடர்பான செய்திகள் உடனக்குடன் பாடலாக்கப்பட்டன. ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் சில ஆயிரம் படிகளே விற்ற காலத்தில் இந்தப் பாடல்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது.

1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத்தட்டுகள் மூலம் இசைப் பாடல்கள் பரவின. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ., கொலம்பியா, ஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டும், பிரபலம் ஆக வேண்டியவர்களைக் கொண்டும் நூற்றுக்கணக்கில் இசைத் தட்டுக்களை வெளியிட்டன.

குஜிலிக் கடைக்காரர்கள் கிராமபோன் பாடல்களை அச்சிட்டு விற்றனர். எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் உண்டு.

குஜிலிக் கடைகளில் கூட தேசபக்திக்கே வரவேற்பு அதிகம் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவர்கள் கைதான போது ‘அரெஸ்டு பாட்டு’ என்றே பாடல்கள் எழுதப்பட்டன. இவை சுடச்சுட விநியோகம் செய்யப்பட்டன. எதிர்த்தரப்பிலிருந்து “இராஜ விசுவாசக் கும்மி” போன்ற சில புத்தகங்களும் வந்தன.

வெகுஜனங்களின் விஷயஞானத்திற்காகவும் பொழுது போக்கிற்காகவும் பயன்பட்ட குஜிலிக் கடைகளைப் பார்த்தோம். இதே காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சினிமாவைப் பற்றியும் சிறிது பார்க்கலாம்.

அதற்கு, கந்தசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வால்டாக்ஸ் ரோடில் நிதானமாக நடந்து சென்ட்ரலைக் கடந்து விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வரவேண்டும். அந்தக் காலத்தில் இத்தனை வாகனங்கள் இல்லை என்பதால் காலாற நடக்கலாம்.”

N. Ganesan

unread,
Jun 19, 2016, 2:07:11 PM6/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
சென்னையில் குஜிலி பஜார் - ஒரு சரித்திரம்.


( சென்னை ) பர்மா பஜார் ஆனா வரலாறு !!!

ஷாப்பிங் என்றால் இன்றைய சென்னைவாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம், தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கி விட முடியும். ஆனால் அந்தக்கால சென்னைவாசிகள் இப்படி ஷாப்பிங் செய்ய வசதி இருந்ததா? அவர்கள் எங்கு போய் தங்களின் ஷாப்பிங் ஆர்வத்தைத் தணித்துக் கொண்டனர்? இதற்கான விடையைத் தேடிய போதுதான் மெட்ராஸின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றிய செய்திகள் தெரிய வந்தன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பஜார் இருந்திருக்கிறது. இதன் பெயர் குஜிலி பஜார். பாரிமுனை கந்தசாமிக் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த பகுதியில், அந்த நாட்களில் நிறைய குஜராத்திகள் வசித்து வந்தனர். இங்கிருக்கும் ஏதோ ஒரு இளம் குஜராத்திப் பெண்ணைப் பார்த்து பரவசமாகிப் போன யாரோ ஒரு சென்னைவாசி அந்தப் பெண்ணின் மீது உருகி மருகியதன் விளைவாக உருவானதே குஜிலி என்ற சொல். குஜராத்தி+கிளி என்பதையே மெட்ராஸ் பாஷைக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நசுக்கி பிசுக்கி குஜிலி ஆக்கியிருக்கிறார்கள். குஜிலி ஏரியாவில் இருக்கும் பஜார் என்பதால் குஜிலி பஜார் என்று பெயர் வந்திருக்கலாம் என மொழி ஆய்வாளர்கள் (!!!) கருதுகின்றனர். குஜிலி என்பது உருதுமொழிச் சொல் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

குஜிலி பஜார் என்பதை மாலை நேரக் கடைத்தெரு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பஜாரின் கதாநாயகன் பாட்டுப் புத்தகங்கள்தான். இங்கு கிடைத்த பாடல்கள் வெறும் சினிமாப் பாடல்கள் அல்ல. அந்த காலத்தில் ஏது அத்தனை சினிமா. இங்கு கிடைத்த பாடல்கள் எல்லாம் வேறு ரகம். இவற்றை குஜிலிப் பாடல்கள் என்று அழைத்தார்கள். புகைவண்டி, மின்சார விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட், தேநீர் என எந்த பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றி பாட்டு எழுதி இருக்கிறார்கள். பொருட்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களையும் பாட்டாக்கியிருக்கிறார்கள். அரை அணா இருந்தால் இந்த வித்தியாச பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கிவிடலாம்.

சாதாரண உப்புமாவில் இருந்து உப்பு சத்தியாகிரகம் வரைக்கும் குஜிலிக் கவிஞர்களின் பாடு பொருட்களாக இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள் கைதான போது ‘அரெஸ்டு பாட்டு’ என்றே சில பாடல்கள் எழுதப்பட்டன. இவை மக்கள் மத்தியில் சுடச்சுட விநியோகிக்கப்பட்டன. தேச பக்தர்களுக்கு எதிரானவர்களும் குஜிலியை கும்மி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து “இராஜ விசுவாசக் கும்மி” போன்ற சில புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன. இப்படி வெளியான இருதரப்புப் பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருந்தது.

1920 களிலும் 1930 களின் தொடக்கத்திலும் கிராமபோன் இசைத் தட்டுகள் பிரபலமாகி வந்தன. அது ரேடியோ இல்லாத காலம். எச்.எம்.வீ.,கொலம்பியா, ஓடியன் போன்ற இசைத் தட்டுக் கம்பெனிகள் பிரபல நாடக மேடைப் பாடகர்களைக் கொண்டு இசைத் தட்டுக்களை வெளியிட்டன. குஜிலிக் கடைக்காரர்கள் இந்த கிராமபோன் பாடல் வரிகளை அச்சிட்டு காசு பார்த்தார்கள்.

இன்றைக்கு பிரபல பாடகர்களின் பெயரில் தனியாக பாட்டுப் புத்தகம் போடும் வழக்கம் அப்போதுதான் தொடங்கியது. எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், என்.எஸ். பபூன் சண்முகம் போன்றோருக்கு தனிப் புத்தகங்கள் போடப்பட்டன. அவர்களின் ரசிகர்கள் அவற்றை வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாத்து பரவசமடைந்தனர். 1960கள் வரை கூட பாட்டுப் புத்தகங்கள், கதைப் பாடல்கள் போன்ற வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன. 

குஜிலி பஜாரின் முக்கில், ஒரு வீதி “ஈவினிங் பெஜார்“ என்றும், மற்றொரு வீதி “தீவிங் பெஜார்“ என்றும் அழைக்கப்பட்டது. இதுபற்றி மாதவையா 1925ஆம் ஆண்டு வெளியான தனது பஞ்சாமிர்தம் இதழில் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

''இதை நான் முதலில் கவனித்தபோது, உண்மை எவ்வாறிருப்பினும்,ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு “தீவிங் பெஜார் ரோடு“ (அதாவது,திருட்டுக் கடைத் தெரு) என்றிருப்பது, நகரவாசிகளுக்கேனும்,போலீஸாருக்கேனும் கௌரவம் தருவதன்று என்று நினைத்து, அப்பொழுது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர் மலோனி துரைக்கு அதைப்பற்றி எழுத, அவர், “தீவிங் பெஜார்“ என்ற பெயரை “குஜிலி பெஜார்“ என்று மாற்றினார்.''

- மாதவையா

குஜிலி பஜாருக்கு அருகிலேயே சைனா பஜார் இருந்தது. அந்தக் கால சைனா பஜார் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள, 1913இல் வெளியான கட்டுரையின் கீழ்கண்ட பகுதி மிகவும் உதவியாக இருக்கும்.

''சைனா பஜார் வீதி - மாலைக் காலத்தில் எப்போதும் ஜன நெருக்கமுள்ள இவ்வீதியைப் பார்க்க வெகு வினோத விழாவாயிருக்கும். செலவழிக்க மனம் வராதவர்களும் வாங்கக் கூடிய துணிமணிகளும், கண் கவரும் பழ தினுசுகளும், சித்திரப் படங்களும், பொன், வெள்ளி ஆபரணங்களும், செம்பு பித்தளை வெங்கலப் பாத்திரங்களும், வாசனை திரவியங்களும், குடை,ஜோடு, கொம்பு, தடிகளும், மிட்டாய் தினுசுகளும், புஸ்தகங்களும் மற்றும் பல வஸ்துக்களும் விற்கும் கடைகள் எண்ணிறந்தன.

வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப் போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளை கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில் முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம். இதற்கு விளக்கு வெளிச்சம் போராத குறையொன்றுண்டு. சென்னை நகரசபையார் இதைக் கவனித்து ஜியார்ஜ் அரசரின் உருவச் சிலைக்கு எதிரில் அதிகம் வெளிச்சம் தரக்கூடிய கொத்து விளக்கு, ஒன்றை அமைக்கப் பெற்றால் வெகு நலமாயிருக்கும்.''

மயிலை கொ. பட்டாபிராம முதலியார்
விஷ்ணு ஸ்தல மஞ்சரி` 1913

இப்படி எல்லாம் மெட்ராஸ்வாசிகளின் மாலை நேரங்களை ரம்மியமாக மாற்றிய இந்த குஜிலி பஜார்தான் தற்போது பர்மா பஜாராக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

* பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர்களுக்காக 1960களில் ஒதுக்கப்பட்ட பகுதிதான் பர்மா பஜார்.

* அன்றைய காலத்தில் திருட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன என்பதால பர்மா பஜாருக்கு வெள்ளைக்காரர்கள் காலத்தில் ‘தீவ்ஸ் பஜார்’ என்று பெயராம்.

நன்றி 
நண்பர் போதி
 — with Senthil Kumar JE II.

Raju Saravanan

unread,
Jun 19, 2016, 10:48:22 PM6/19/16
to mint...@googlegroups.com
குஜிலி என்னும் சொல் பொதுவாக அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

இந்த குஜிலிக்க‌டைகளை ஆதாரமாக கொண்டு குஜிலியம்பாறை என்ற பெயர் குஜிலிக்க‌டைகளை நடத்தும் குஜராத்திகள் அவ்விடங்களில் இருப்பதால் இந்த பெயர் உண்டாயிற்று என்று சொல்வது எனக்கு ஏற்புடையாக தெரியவில்லை.

மேலும் குஜிலியம்பாறை பகுதிகளில் எத்தனை குஜராத்திகள் எவ்வளவு அந்திக்கடைகளை நடத்துகின்றனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. எனக்கு தெரிந்து அங்கு குஜராத்திகள் கடைகளை இல்லை.

குஜிலியம்பாறை என்ற பெயர் குச்சில்  என்ற சொல்லில் இருந்து மருவி குஜில் என்று பேச்சு வழக்கில் மாறியிருக்கும்.

குச்சில்  > குச்சிலியன் > குச்சிலியம் பாறை > குஜிலியம் பாறை

மற்றபடி குஜராத்தின் குஜிலிகளுக்கும், குஜிலிகடைக்கும், குஜிலியம்பாறைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

--

N. Ganesan

unread,
Jun 19, 2016, 11:48:35 PM6/19/16
to மின்தமிழ்


On Sunday, June 19, 2016 at 7:48:22 PM UTC-7, இராசு சரவணன் wrote:
குஜிலி என்னும் சொல் பொதுவாக அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

இந்த குஜிலிக்க‌டைகளை ஆதாரமாக கொண்டு குஜிலியம்பாறை என்ற பெயர் குஜிலிக்க‌டைகளை நடத்தும் குஜராத்திகள் அவ்விடங்களில் இருப்பதால் இந்த பெயர் உண்டாயிற்று என்று சொல்வது எனக்கு ஏற்புடையாக தெரியவில்லை.

மேலும் குஜிலியம்பாறை பகுதிகளில் எத்தனை குஜராத்திகள் எவ்வளவு அந்திக்கடைகளை நடத்துகின்றனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. எனக்கு தெரிந்து அங்கு குஜராத்திகள் கடைகளை இல்லை.

குஜிலியம்பாறை என்ற பெயர் குச்சில்  என்ற சொல்லில் இருந்து மருவி குஜில் என்று பேச்சு வழக்கில் மாறியிருக்கும்.

குச்சில்  > குச்சிலியன் > குச்சிலியம் பாறை > குஜிலியம் பாறை

மற்றபடி குஜராத்தின் குஜிலிகளுக்கும், குஜிலிகடைக்கும், குஜிலியம்பாறைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.


திண்டுக்கல் - பழனி - உடுமலை பகுதிகளில் கம்பளத்து நாயக்கர்களின் பாளையங்கள் மிகுதி.
  1. காமைய நாயக்கனூர் ( கடவூர் ) - காமைய நாயக்கர்
  2. கன்னிவாடி - அப்பு நாயக்கர்
  3. கோம்பை( மதுரை ) - கன்னட தொட்டிய நாயக்கர் இனம்
  4. காடல்குடி
  5. கோலார் பட்டி - கலங்க நாயக்கர்
  6. தொட்டப்ப நாயக்கனூர்
  7. ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர்
  8. ஆலங்குளம் ( சிவகாசி )
  9. அருப்புகோட்டை
  10. ஆற்றங்கரை - பெதன்ன நாயக்கர்
  11. கொல்லப்பட்டி ( நில கோட்டை ) - மக்கால நாயக்கர் - கவரா இனம்
  12. பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
 
ஆவுலுப்பம்பட்டியில் குச்சிலி பொம்மு நாயக்கர்.
இதுபோன்ற குச்சிலியன் ஒருவனின் பாறை. குச்சிலியம்பாறை.

பொந்திலியர் போல, குச்சிலியர்கள் இசுலாமியர் படையெடுப்பால் தென்னகம் நோக்கி,
முதலில் ஆந்திர - கர்நாடகம், பின்னர் தமிழகம் வந்துள்ளனர். இதனால், வடக்கே
இருந்து தெற்கே வந்த கலந்தமைக்கு அடையாளமாக பொந்திலி, குஜ்ஜிலி எல்லாம்
இருக்கின்றன. குஜ்ஜிலியன் குஜிலியன் ஆகியுள்ளது எனக் கருதுகிறேன்.

இவர்கள் இபோதைய குஜராத்தியர் அல்லர். நாயக்கர் அரசாங்க காலத்து பாளையப்பட்டுகள்.
காலின் மெக்கென்சி சுவடிகள், சமுதாய ஆவணங்கள், திண்டுக்கல் வட்ட வரலாறு, ...
பார்த்தால் குச்சிலியர்/குஜ்ஜிலியர் வரலாறு தெரியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 20, 2016, 12:01:39 AM6/20/16
to மின்தமிழ்

குஜ்ஜிலியன் பாறை அருகே உள்ள குச்சிலி பாளையம். கம்பளத்து நாயக்கரில் ஒரு கூட்டம் : குச்சிலியர்,
வடநாட்டில் நிகழ்ந்த அன்னிய படையெடுப்புகளால் விஜயநகரம் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் பலர்.
கூர்ச்சரம்/குச்சரம் நாடுகளில் இருந்து வந்தோர் குச்சிலியர் எனப்பட்டனர். பொந்தகண்ட நாட்டார் பொந்திலியர் என்றது போல்.

குஜிலியன்பாறை அருகே உள்ள ஊர் குச்சிலிபாளையம். குச்சிலியர் கூட்டம் அமைத்த ஊர்.

“நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலக 
காவலாளியாக திண்டுக்கல் மாவட்டம் குச்சிலி பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி(52) என்பவர் 
பணியாற்றி வந்தார்.”

N. Ganesan

unread,
Jun 20, 2016, 12:13:42 AM6/20/16
to மின்தமிழ்
Tamil Lexicon:
குச்சிலியர் kucciliyar , n. < gurjarī. Gujaratis, people of Gujarat; கூர்ச்சரதேசத்தவர். குச்சிலிய மாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190).

குச்சிலி ஓவியம்:


குஜ்ஜிலி குஜிலி ஆகும். உ-ம்: குச்சிலியர் தெரு - திருச்சியில் குஜிலி தெரு என்கின்றனர்.
குச்சிலியன்பாறை, குச்சிலிபாளையம் எல்லாம் திண்டுக்கல் அருகே இருக்கின்றன.
இவை ராஜ கம்பளத்தாரோடு தொடர்புடையவை. 

N. Ganesan

unread,
Jun 20, 2016, 12:31:27 AM6/20/16
to மின்தமிழ்
2016-06-19 19:48 GMT-07:00 Raju Saravanan <ras...@gmail.com>:

குஜிலியம்பாறை என்ற பெயர் குச்சில்  என்ற சொல்லில் இருந்து மருவி குஜில் என்று பேச்சு வழக்கில் மாறியிருக்கும்.


The problem for this is "kuccil" Tamil word starts with k-, while gujiliyamparai, gujilipalayam are the names. I think clearly linking with Gujjili-s, people originally
of Gujarat.

N. Ganesan 

N. Ganesan

unread,
Jun 20, 2016, 12:40:28 AM6/20/16
to மின்தமிழ், kalair...@gmail.com, vall...@googlegroups.com
>எரியோடு என்ற ஊருக்கு அருகே குஜிலியம்பாறை என்ற ஊர் உள்ளது.  

எரியோட்டுக்கு 14 கல் அருகே உள்ள ஊர்: வெள்ளோடு.
கொங்குநாட்டின் ஈரோடு, சித்தோடு, பேரோடு, .... நினைக்கவும்.

N. Ganesan

unread,
Jun 22, 2016, 9:06:25 PM6/22/16
to மின்தமிழ், vallamai
There was heavy interaction between Tamil country and Ceylon all the time. A Nayak king from Madura became the King of Sri Lanka.
A Hindu king for Sinhalese Buddhists. Pl. read John C. Holt's book - I'll meet him shortly -

The Religious World of Kīrti ŚrīBuddhism, Art, and Politics in Late Medieval Sri Lanka

Front Cover
Oxford University Press, 1996 - Technology & Engineering - 147 pages
In this interdisciplinary inquiry, John Clifford Holt seeks to uncover how Buddhism was understood and expressed during the waning years of indigenous political power in Asia's oldest continuing Buddhist culture. Holt focusses on King Kirti Sri Rajasinha and how, despite powerful and persistent Dutch colonial threats and a deeply suspicious Kandyan Buddhist Sinhalese aristocracy, he successfully revived Sinhalese Theravada Buddhism. As Holt demonstrates, Kirti Sri succeeded in formulating his vision of an orthodox Buddhism in a number of ways: through the patronage of monastic sanha and re-establishing traditional lines of ordination, translating the Pali suttas into Sinhala, sponsoring public Buddhist religious rites, and refurbishing almost all Buddhist temples in the Kandyan culture region. The ultimate aim of Holt's study is to describe and interpret Kirti Sri's articulation of a normative Buddhist world, the essentials of which remain normative for many Buddhists in the Kandyan region of Sri Lanka today. Scholars and students will find The Religious World of Kirti Sri is an indispensable resource for the understanding of orthodox Buddhism at this important historical juncture, as well as the present day.

-----------------

குச்சிலியன் பாறை > குஜிலியம்பாறை. அதனருகே, குச்சிலிபாளையம். 
கவிதை எப்படிச் செய்யவேண்டும்? குச்சிலி மாதர் குயமும் ... (வெண்பா)

16-ஆம் நூற்றாண்டின் இலங்கை வரலாறு கூறுவது: வையாபாடல்.
இலங்கையில் எழுந்த தமிழ்நூல்களில் முக்கியமான ஒன்று. அதில், குச்சிலியர் = குஜராத்தியர் வருகின்றனர். குஜிலியன்பாறை பெயராய்வுக்கு வையாபாடல் போன்றன உதவும்.

நா. கணேசன்
 
Reply all
Reply to author
Forward
0 new messages