யார் அந்த மோகினி?

256 views
Skip to first unread message

shylaja

unread,
Dec 23, 2009, 9:33:06 AM12/23/09
to minT...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
 வைகுண்ட ஏகாதசி வரப்போகிறது அதற்குமுன் தினம்  மோகினியாக அலங்காரம் பண்ணிக்கொண்டு  ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் வருவார் பாருங்கள் ஆஹா  காணக்கண்கோடிவேண்டும்!  பிராட்டியைப்போல  உடை நகைகள்தரித்து அந்தப்பின்னலில்  ராக்கொடி ஜடவில்லைலாம் வைச்சி  பூவை சுத்தி கிளியை தோள்பக்கம் வைத்துக்கொண்டு  கண்ணாடி முன்பு போய் பார்த்தாராம்  பெருமாள்.கதிர்மதியம்போல்முகத்தான்  அல்லவா? தாயாரின் வேஷம் போட்டதும் மதிமதியம் போல முகத்தான் ஆனார் ஆமாம் தாயாரின் கண்களில் வாத்சல்யம் மட்டுமே தான் இருக்கும்! இந்த அசுரர்களை அழிப்பது அடக்குவதெல்லாம்  அண்ணலின் வேலை அதுக்குத்தான் ஒருகண்ல கதிரை வைத்து அவர்கள்மேலப்பாய்ச்சுவார்!
 
ஆமாம் எத்ற்கு இந்த  மோகினி அலங்காரம்?
 
நல்லார்க்கு நிழலும், பொல்லார்க்கு பாடமும் புகட்ட எண்ணிய இறைவன், பாற்கடல் கடைதல் என்ற ஒன்றை ஏற்படுத்தினான் . மந்தார மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு தேவர், அசுரர் இருவரும் கடைந்தனர் . பல சோதனைகள் வந்தன  சில சாதனைகள் உண்டாயின.

தானே ஆமையாகி தாங்கி நின்றான் தானே தன்வந்திரியாய் தோன்றி அமிர்தம் வழங்க  அசுரர்  அதைப் பறித்தனர். அப்போதுதான் மாலவன் . மோகினியாய் உருக்கொண்டான். அசுரர் மயங்க, அமுதினை மீட்டான்  எங்கு சேர்ந்தால் தீமை குறைந்து, நலம் பெருகுமோ, அங்கு அமுதினைச் சேர்ப்பித்தான்

 இன்னொரு மோகினியும் உண்டு!
 
நம்ம நம்மாழ்வார்  தான்   ஏழாம் நாள், மோகினித் திருக்கோலத்தில் உலா வருகிறார்!

ஒரு காலத்தில் பெருமாளிடம் மனத்தைப் பறிகொடுத்து, ஒரு காதலியாய் உருகி உருகிப் பொழிந்தார் பாசுரங்களை!
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே, தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே என்று மயங்கிக் கிடந்தார்!
ஆனால்  நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது!
ஆழ்வார் என்னும் நாயகியை, அரங்கன் எம்பி எம்பிப் பார்க்கிறான்!
அவனை வாகனத்தில் வைத்தோ, தோள் மேலே வைத்தோ தூக்கவில்லை  பின்னே வேறு எப்படித் தூக்கி வருகிறார்கள்?
அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் தாங்கித் தாங்கித் தூக்கி வருகிறார்கள்!
 அப்போது நமமழ்வாருக்கு மோகினியாய்  பெண் அலங்காரம்!
 
மோகினியைப்பற்றி  மேலும் விவரங்கள் கூற மோகனரங்கனைவிட்டால்  வேறு யாரால் முடியும்? வாங்க அரங்கனாரே!
கோதைகுலக்கொடின்னு எனக்கு எப்போ பேர் வச்சீங்களோ அப்போதிலிருந்து உம்மை விரட்டிக்கொண்டே இருக்கிறேன்  ,  தேர் நகரணும்னா வடமிழுக்கவும் ஆட்கள் வேண்டுமே  !! ....ம்ம் சீக்கிரமா வந்து மோகினிஅவதாரப்பதிவினை வழக்கம்போல  உங்களின் ஆழ்ந்த பக்திச்சுவையோடு அளிக்கக்கேட்டுக்கறேன்(விரட்டலபாத்தீங்களா?:))))
 
(நம்பிக்கை குழுவிற்கும் மோகனரங்கன் வர இருக்கிறார்  இந்தமோகினியோடு!:)))

--
ஷைலஜா
///
.'சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக்கோயில் சூழ்
காலில் கலந்து ,ஆசை தந்து, ஏகினார் நெஞ்சு கல்நெஞ்சமோ?
 வாவிப்புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக்கண்டிலேன்;
பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப்பனிக்காலமே' .
 
திவ்யகவி

meena muthu

unread,
Dec 23, 2009, 9:56:01 AM12/23/09
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
அடடா...என்னதுது!
இப்படி அடுத்தடுத்து சந்தோஷ செய்திகளா கொடுத்திட்டிருக்கீங்க  ஷைலு!

மோகினி அலங்காரத்தில் ரங்கநாதர்! அறியாத விபரங்கள்! மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.  தொடரலாமே மற்றவர்களும்..! 

2009/12/23 shylaja <shyl...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Dec 23, 2009, 10:04:51 AM12/23/09
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai

2009/12/23 meena muthu <ranga...@gmail.com>

அடடா...என்னதுது!
இப்படி அடுத்தடுத்து சந்தோஷ செய்திகளா கொடுத்திட்டிருக்கீங்க  ஷைலு!

மோகினி அலங்காரத்தில் ரங்கநாதர்! அறியாத விபரங்கள்! மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.  தொடரலாமே மற்றவர்களும்..! 
 
?>>  >> ரங்கநாதர் மட்டுமில்ல  எல்லா  திருமால் கோயில்களிலும் அந்தந்தப்பெருமாளின் கோலமிதுதான் அந்தக்குறிப்பிட்டநாளில்! எனக்கு எங்க ஊர் பற்றிதான் ஒழுங்கா தெரியும் அதான்  ரங்கனை அரங்கத்திற்குக்கொண்டுவந்தேன்! 
2009/12/23 shylaja <shyl...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 23, 2009, 10:43:52 AM12/23/09
to mint...@googlegroups.com
ஆஹா!

2009/12/23 shylaja <shyl...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Dec 23, 2009, 11:40:43 AM12/23/09
to mint...@googlegroups.com
மோகினி ரங்கன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
23-12-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
Message has been deleted

Geetha Sambasivam

unread,
Dec 23, 2009, 9:01:15 PM12/23/09
to mint...@googlegroups.com
//போய்விட்டளா   இருக்கிறாளா  இன்னமும்  என்று  எட்டிப்பார்த்தால்,     ‘எங்க  எட்டிப்பார்க்கிற?     வா   உனக்கும்    ஆசையாய்  இருந்தால்    கற்கலாம்  கவியின்  பொருள்தானே’    என்கிறவளிடம்     என்ன  பாச்சா  பலிக்கும்?   தேமேன்னு  ஒரு  மூலையில்   சுருண்டு  கிடக்க   வேண்டியதுதான்.      ஏதாவது   
பதில்   பேசினா   உடனே     ஒரு  பாட்டு  விழுது,   ‘உன்  லட்சணம்  தெரியாதா?     யார்  யாரை  என்னப்  பாடு  படுத்தினேன்னு  எடுத்து  விடவா  உன்  சங்கதி?’  (பெரிய  திருமடல்,  சிறிய  திருமடல்)  //

அருமை, எளிமை, இனிமை!

//‘எனக்கு  ஒப்பாரும்  மிகாரும்  உண்டோ?’    என்று     ஒய்யார  நடை  நடந்து     வருகின்றான்.      பட்டர்   பார்த்தார்.      ‘என்ன  பட்டரே?    எப்படி?’     
 
‘சரிதான்  காணும்.      எல்லாம்  நன்னாத்தான்  இருக்கு.     ஆனா...’  
 
‘என்ன  ஓய்?   ஆனா   ஆவன்னா?’  
 
‘இல்லை   எங்க  அம்மா    விழி    விழிக்க  முடியவில்லையே  உங்களால!     விழி  காட்டிக்கொடுத்துடுதேங்காணும்.’  
(தொடரணும்) //

நேத்துத் தொலைக்காட்சியில் (எந்த சானல்????) கேட்டேன், என்றாலும் இவ்வளவு சரளமாப் பக்கத்துவீட்டு மாமா பேசறாப்போல் இல்லை. நல்லா இருக்கு. தாயாரின் அருட்கடாக்ஷம் வரலையே உனக்குனு பகவானையே பார்த்துக் கேட்க முடிகிறதே?? ம்ம்ம்ம்ம்??? நேத்துக் காலையிலே வேளுக்குடியும் இதே தான் சொல்லிட்டு இருந்தார்.

2009/12/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>
(ஷைலஜாவின்    அதட்டலுக்குக்  கீழ்ப்படிய  வேண்டியதுதான்.  என்ன  பண்றது  எல்லாரும்  அவங்க  பக்கம்!!)
 
முதலில்    ஆர்வமுடன்  கேட்கும்    மிந்தமிழார்  அனைவருக்கும்    நன்றியைக்  கூறிக்கொள்ள  வேண்டும்.       அப்பாடி  எத்தனை  பேர்    புறப்பட்டிருக்கிறார்கள்!       அழகாக  எழுத   பல  சத்  விஷயங்களைப்பற்றி.     விசாலம்மா,   பிரவீன்  கிருஷ்ணன்,   இன்னம்பூரர்,   திவாகர்.     மின்  தமிழ்   மார்கழிக்  களைகட்டியிருக்கிறது. 
 
முதலில்   ‘யாரந்த  மோஹினி?’   தலைப்பைப்  பார்த்ததும்     என்    கதை  போன்ற   இடுகை   சில  நன்றிகள்   இழையில்   ஞாபகம்  வந்துவிட்டது.    இந்த  மோஹினி   வேறு.     புராண  ரீதியாக     விஷ்ணுவின்   மோஹினி  அவதாரம்   என்பது  ஒன்று.    அது    பாற்கடலைக்  கடைந்து    அமுதம்   வர  அதை   தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  பங்கிடுவதில்   விஷ்ணு    போட்ட  அழகி  வேஷம். 
 
ஆனால்     ஸ்ரீரங்கநாதன்    அந்த  மோஹினி  அவதாரத்தையா    பகல்  பத்தின்  நிறைவு  நாளன்று   வேடம்  போட்டுக்கொண்டு  வருகிறான்.?    அந்த   அமுதக்  கலச  மோஹினியாய்  வந்து    என்ன  சொல்ல  முடியும்?     அமுதம்  தேவர்களுக்குத்தான்.    அசுரர்களுக்கோ    மனிதர்களுக்கோ  அன்று.   சரி  இருந்துவிட்டுப்  போகட்டுமே!   யார்  கேட்டார்கள்  அந்த  உப்புச்சாற்றை?    தேவர்களே   அதை    முட்ட  முட்டக்  குடித்துவிட்டு  ரம்பை  திலோத்தமை   என்று  அப்ஸரஸ்    நடனங்களாகப்  பார்த்துக்கொண்டு    உட்காரட்டுமே!     யார்  வேண்டாம்  என்றார்கள்? 
 
நமக்கு  வேண்டியது   அந்த  அமுதம்  இல்லை.     ‘ஆரா  அமுதே   அன்பாய்    நின்ற    அணியரங்கத்து  இன்னமுது  அன்றோ    யாம்  வேண்டுவது?     இதை   நமக்கு,  நமக்கே  நமக்கு,      அதுவும்  மனிதர்  என்று  சொல்ல்லிக்கொள்ளும்  நமக்காகவே       பிரத்தியேகமாகத்   தந்திருக்கும்  இரண்டு  மோஹினிகள்தாம்   நமக்கு    வேண்டும்.     அந்த  நாச்சியார்    திருக்கோலம்  அணிந்த     இருவர்தாம்     பராங்குச    நாயகியும்,   பரகால  நாயகியும்.  
 
பராங்குச   நாயகி     பரஞானம்,   பரபக்தி    என்ற  தசைகளைக்   கடந்து   பரமபக்தி   நிலையில்  ஸஞ்சரிப்பவள்.    ‘நீணிலா  முற்றத்து  நின்றவள்    நோக்கினாள்’  என்று  இருப்பவள்.   அத்தனை  கோவில்   எம்பெருமான்களும்     அவள்    இருந்த  புளிய  மரத்தடியே  சென்று    இளித்துக்கொண்டு  நின்றவர்கள்.    அவளோ  இன்ப  மாரி.  
 
பரகால   நாயகியோ    பாவம்    மென்மையானவள்.     மிருதுத்   தன்மையே    வடிவு  எடுத்தவள்.     எதையும்  உள்ளே   அழுத்தமாக  வைத்துக்கொள்ளத்  தெரியாது.     சிறிது   தாமதம்  என்றாலும்    தானே   மடல்   ஏறும்   அளவிற்கு    அவசரக்  குடுக்கை.      எல்லா   திவ்ய  தேசத்து  எம்பெருமான்களையும்    தானே    சென்று  சென்று   பார்க்கும்     துறுதுறுத்தை.     ஏதாவது  கோவில்  எம்பெருமான்     பெரிய  மனித  தோரணையில்  கோவில்  கதவம்  சாத்தியிருந்தால்    ஒரு  வசவு!     ‘வாழ்ந்தே  போம்  நீரே’    ஸ்ரீரங்கநாதன்    பாடு    உண்மையில்    பாவம்தான்.     ஏனெனில்    ஒரு   நாயகி     பராங்குச  நாயகி     கிட்ட  வரட்டும்  என்று    கமுக்கமாக  இருந்துவிட்டு     அண்மையில்  வந்ததும்     மடித்  துணியைப்  போட்டுப்  பிடித்துக்கொண்டு    அங்கு  இங்கு  நகர  முடியாதபடி  பண்ணி,      வாயே  திறக்க  முடியாத  கேள்விகளைக்  கேட்டுப்  போட்டு  வாங்குகிறாள்.    இந்த    பரகால  நாயகியோ   என்றால்     இருக்கிற  இடமெல்லாம்,   ஒளிந்து  கொள்ளும்    முழையெல்லாம்    தேடித்தேடிச்  சென்று    வாயிலில்   நின்றவாறே     வாய்க்கு  வந்தபடி     வரிசை   பாடவேண்டியது.   அவனுக்கோ   ஊரில்  மானம்  போகிறது.   வெளியில்  தலை காட்டமுடியவில்லை.      போய்விட்டளா   இருக்கிறாளா  இன்னமும்  என்று  எட்டிப்பார்த்தால்,     ‘எங்க  எட்டிப்பார்க்கிற?     வா   உனக்கும்    ஆசையாய்  இருந்தால்    கற்கலாம்  கவியின்  பொருள்தானே’    என்கிறவளிடம்     என்ன  பாச்சா  பலிக்கும்?   தேமேன்னு  ஒரு  மூலையில்   சுருண்டு  கிடக்க   வேண்டியதுதான்.      ஏதாவது   பதில்   பேசினா   உடனே     ஒரு  பாட்டு  விழுது,   ‘உன்  லட்சணம்  தெரியாதா?     யார்  யாரை  என்னப்  பாடு  படுத்தினேன்னு  எடுத்து  விடவா  உன்  சங்கதி?’  (பெரிய  திருமடல்,  சிறிய  திருமடல்)  
 
இந்த  பரகால  நாயகிதான்     பகல்  பத்தின்   ராணி.     பாகவத    சாம்ராஜ்யத்தில்     சக்களத்திப்  பொறாமையெல்லாம்  கிடையாது.   மாறாக    அக்காவைக்  கவனிக்க  வில்லையென்றால்     அடுத்த    ராணிகளுக்கு   முகம்  உம்மென்று  ஆகிவிடும்.     ஆமாம்   ‘எல்லாரும்  போந்தாரோ?  போந்தார்.   போந்தெண்ணிக்கொள்’    என்ற      உலகம்  அல்லவா    பகவத்  விஷய  உலகம்.     உலகில்     காமத்தை    அனுபவிக்கத்தான்      தனிமை  தேட்டமாயிருக்கும்.       பகவத்  விஷயத்தை   அனுபவிக்க   கூட்டம்    அன்றோ     வேண்டியது?    கூடியிருந்து  குளிர்ந்தேலோர்     என்ற   விஷயத்தில்     தனிமை  நாடினால்     ‘உனக்கென்ன  வேறுடையை?’   என்று  அன்றோ     அக்கா   நியமிப்பதும்?  
 
அது  என்னய்யா   இது    நாயகி,    நாயக  பாவம்  அது  இது  எல்லாம்?  என்று     யோசிக்கிறீர்களோ?       ஆன்மிகத்தில்   ஆத்மா     பக்குவம்  அடைய  அடையத்   தன்னை      பகவானை     நோக்கத்    தன்  இருப்பு,  இயக்கம்  எல்லாமே     அவனைச்  சார்ந்த     ஒன்றாக   ஆகிவிடுவதை     உணர்கிறது.   அதுகால்   அதற்கு    ஒப்புமைக்கு  உலகில்  தென்படுவது     காதலி  காதலனை முற்றும்  சார்ந்து   இருக்கும்  நிலைதான்.    எனவேதான்   உலக  அருளாளர்கள்    அனைவரும்    கிட்டத்தட்ட    இந்த  நாயகி  பாவத்தைப்  பற்றியே   தங்கள்     அனுபவங்களை   வெளியிடுகின்றனர்.    
 
பாரங்குசர்    என்னும்    நம்மாழ்வார்    தமது    பக்தியால்  கொண்ட     பெரும்  விரகத்தில்     மொழியால்   பராங்குச  நாயகியானார்.      பரகாலன்  என்னும்      திருமங்கையாழ்வார்       பரகால  நாயகியானார்.     இராப்பத்து  என்னும்   திருவாய்மொழித்   திருநாளை    ஸ்தாபித்த     திருமங்கையாழ்வாருக்குப்  பெயர்   அருள்  மாரி.      அருள்  மாரியின்    அனுபவப்  பொழிவுகள்     பகல்  பத்தில்  முக்கிய    இடம்  பெறும்.     ஆக   இராப்பத்தின்    நாயகி     குருகூர்க்  கோதை.  
 
ஏதாவது   ஜீவன்    தன்னை  நாடி   வராதா    என்று  ஏங்கி    கடல்  கரையிலும்,     ஏரிக்கரையிலும்,    நதிக்கரையிலும்,    மலை  உச்சியிலும்      பாவம்  காத்திருக்கும்      பரமனுக்கு     ஒன்றுக்கு    இரண்டாய்,   பன்னிரண்டாய்      இப்படி      நினைவு  வேறொன்றின்     திறம்  செல்லா     உள்ளத்துத்   தீர்ந்த  நெறியாளர்   கிடைத்தால்    எத்தனை  பூரிப்பு!!!     அவர்களுடைய     அமுதச்  சொல்  பெருக்கைக்  கேட்டு  கேட்டு  மகிழ்கிறான்.    அவர்களை    விக்ரகங்களாக    ஆக்கிவைத்துப்  பார்த்து  பார்த்து  மகிழ்கிறான்.     அவர்கள்    நாயகி  பாவம்  அடைந்து    தனக்காக    ஏங்கின  ஏக்கத்தைத்   தானே  அவர்கள்   போல்   நாயகி  வேடமிட்டு    அவர்கள்  அவஸ்தையை  அனுபவித்துப்  பார்க்கிறான்.      யாருக்காக?      யார்  அந்த  மோஹினிகளின்   அருள்  மயக்கில்    விழுந்து  ஆழ்ந்து     தம்மை  உணர்ந்து     தம்மில்  உள்  உயிராய்  நிலவும்  தன்னை  உணரத்   தலைப்  படுகின்றனரோ      அவர்களுக்கு    உய்பவர்களுக்கு  உய்யும்  வண்ணம்    காட்டினான்   திருவரங்கம்      என்று     பேறும்  வழியும்  தானாகவே    இருக்கும்  இருப்பைக்  காட்டுகின்றான்.  
 
இதில்  அவனிடம்  சென்று     யாரும்    ‘பராசர்  பட்டர்’  என்று  சொல்லிவிடக்கூடாது.   உடனே     ஒரு  பரபர்ப்பு.   சுற்றி  முற்றி  எங்கும்  ஒரு   பார்வை.    ஏன்  இந்தப்  பதட்டம்?     காரணம்     அவர்    ஏதாவது   சொல்லிவிடுவார்.   மட்க்கிப்  போடும்  விதத்தில்.   இப்படித்தான்     ஒரு  நாச்சியார்  திருக்கோலத்தின்  போது    தன்  ஒப்பனையில்   தானே    ஏகப்படி  மகிழ்ந்து    ‘எனக்கு  ஒப்பாரும்  மிகாரும்  உண்டோ?’    என்று     ஒய்யார  நடை  நடந்து     வருகின்றான்.      பட்டர்   பார்த்தார்.      ‘என்ன  பட்டரே?    எப்படி?’     
 
‘சரிதான்  காணும்.      எல்லாம்  நன்னாத்தான்  இருக்கு.     ஆனா...’  
 
‘என்ன  ஓய்?   ஆனா   ஆவன்னா?’  
 
‘இல்லை   எங்க  அம்மா    விழி    விழிக்க  முடியவில்லையே  உங்களால!     விழி  காட்டிக்கொடுத்துடுதேங்காணும்.’  
(தொடரணும்) 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்      
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Dec 24, 2009, 1:22:10 AM12/24/09
to mint...@googlegroups.com
2009/12/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>
(ஷைலஜாவின்    அதட்டலுக்குக்  கீழ்ப்படிய  வேண்டியதுதான்.  என்ன  பண்றது  எல்லாரும்  அவங்க  பக்கம்!!) <<<>>>>>
 
  :):):)  நாந்தான் அவங்க பக்கம்!
 
‘இல்லை   எங்க  அம்மா    விழி    விழிக்க  முடியவில்லையே  உங்களால!     விழி  காட்டிக்கொடுத்துடுதேங்காணும்.’  <<<>>>>
 
 அதே அதே!    என்ன பார்வை எங்கள்  அன்னையின் பார்வை!
 
(தொடரணும்) >>>>>
அருமை தொடருங்க!

shylaja

unread,
Dec 24, 2009, 1:42:17 AM12/24/09
to minT...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
மோகினி அலங்கார  அரங்கனையும்  தங்கக்கிரீட அலங்கார ரங்கனையும்  இங்கே காணலாம்!

2009/12/23 shylaja <shyl...@gmail.com>
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்
///

ஆண்டாள்

mohini_srirangam.jpg
ranganathar.jpg

devoo

unread,
Dec 24, 2009, 1:47:11 AM12/24/09
to மின்தமிழ்
Dec 24, 12:58 am, srirangammohanarangan v
//இந்த பரகால நாயகிதான் பகல் பத்தின் ராணி.பாகவத
சாம்ராஜ்யத்தில் சக்களத்திப் பொறாமையெல்லாம் கிடையாது.மாறாக
அக்காவைக் கவனிக்கவில்லையென்றால் அடுத்த ராணிகளுக்கு முகம்
உம்மென்று ஆகிவிடும்//

’தத் ஸுக ஸுகித்வம்’ - பிறர்தம் மகிழ்ச்சியில் இன்புறும் பாங்கு;
யாமுநாசார்யரும், பகவத் ராமாநுஜரும் ஒன்றிணைந்து முனைந்தால்
மண்ணிலிருந்து சுருள்படி அமைத்து, ஜீவ கோடிகளை வைகுந்தத்தில் ஏற்றி,
லீலா விபூதியை இல்லாமல் செய்து விடுவர் என்று எம்பெருமான் யாமுனரை
முதலில் அழைத்துக் கொண்டு விட்டானாம்.யாமுனரின் சரம சரீரத்தை
மட்டுமே உடையவரால் பார்க்க முடிந்தது.

மோஹினி அமுதம் பரிமாறியதுபோல் அரங்கனார் தமக்கே உரிய பாணியில்
அருளிச் செயல் அமுதம் பகிர்கிறார்;அவருக்கு நன்றி

தேவ்

Vedaprakash Vedaprakash

unread,
Dec 23, 2009, 9:15:38 PM12/23/09
to mint...@googlegroups.com, ranga...@gmail.com, vedamved...@yahoo.com
இதுதானா "மோஹனரங்கமா"?

--- On Thu, 24/12/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:

From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
Subject: Re: [MinTamil] யார் அந்த மோகினி?
To: mint...@googlegroups.com
Date: Thursday, 24 December, 2009, 1:28 AM

(ஷைலஜாவின்    அதட்டலுக்குக்  கீழ்ப்படிய  வேண்டியதுதான்.  என்ன  பண்றது  எல்லாரும்  அவங்க  பக்கம்!!)
 
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 24, 2009, 6:57:37 AM12/24/09
to mint...@googlegroups.com
மிக நல்ல பதிவு ஷைலஜா.
 
நாங்கள் வடக்கத்திக் காரர்கள். டெல்லியில் இருப்பதை சொல்லவில்லை.  எஙகள் கிருஷ்ணகிரி எல்லாம் தமிழகத்தின் வடக்கில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
 
நீங்களும் மோகனரங்கனாரும் எங்களுக்கு அரங்கனை தரிசனம் பண்ணி வைக்கிறீர்கள்.
 
உஙகள் ஊருக்கென்று நிறைய விசேஷங்கள் உண்டு.  மொழி உட்பட.  பாசுரங்களில் உங்களுக்கு இருக்கும ஈடுபாடும் ஞானமும் மலைக்க வைக்கிறது.
 
தொடருங்கள் உற்சாகமாக.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/12/23 shylaja <shyl...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
http://www.vadakkuvaasal.com/

shylaja

unread,
Dec 24, 2009, 9:04:56 AM12/24/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி   திருபென்னேஸ்வரன் ! திருவரங்கத்திற்கென்று   நிறைய  சிறப்புகள் இருக்கின்றன  நீங்கள் சொல்லியுள்ளதுபோல மொழி அங்கு முன்னணி வகிப்பதை மார்கழியில் காணலாம்! இயல் இசை  அனைத்திலும் தமிழ் ஆட்சி செய்யும்! அரையர்  தமிழ்ப்பாசுரங்கள்பாடுவதை அரங்கன் எதிர் இருந்து அமர்ந்து கேட்கும் அழகு ஒன்று போதும்!
 
சுந்தரத்தெலுங்கில் தியாகராஜ சுவாமிகளும்  பாடி இருக்கிறார்.
 
ஒருமுறை
 
 சங்கீத மகாகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் வந்தபோது
அவர் தெற்கு வீதியில் நின்று கொண்டிருந்தார். அரங்கன் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வருகிறான்.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த அழகைப் பக்கத்தில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கப்பட்டார்.

அவர் என்ன பெரிய செல்வந்தரா இல்லை உபயதாரரா, அருகில் செல்ல?
இல்லையே! தனக்கு மாலை மரியாதை எல்லாம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளும் தலைவரும் கிடையாது!

குதிரை வாகனம் வேறு வீதிக்குத் திரும்பி ஆனால் சற்று நேரத்தில் நின்று விட்டது. வாகனத்தைச் சுமப்போர் எவ்வளவோ முயன்றும் செல்லவில்லை
அர்ச்சகரின் மீது அரங்கன் ஆவேசம்வந்து,

 ‘‘தெற்கு வீதியில் என் உள்ளார்ந்த பக்தன் ஒருவன், தரிசனம் செய்ய முடியாமல் துடிக்கிறானே! அவனை அழைத்து வாருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.

உடனே கோஷ்டியில் உள்ளவர்கள் தியாகராஜரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சுவாமிக்கு அருகில் அழைத்து வந்தார்கள்.
இதே குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;
பின்னர் "ஓ ரங்க சாயீ" முதலான ஸ்ரீரங்க பஞ்சரத்னக் கீர்த்தனைகளைத் தனியாகப் பாடி அருளினார்
 
நம்மாழ்வார் மோட்சமும் இங்கு சிறப்பானது.
 
பத்து நாட்கள் ராப்பத்து விழா முடிந்து, இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சம்!
இது தான் விழாவின் மிக முக்கியமான கட்டம்;
பல அன்பர்கள் கண்ணிலும் நீர் வரவழைத்து விடும்!

முன்பே சொன்னது போல் நம்மாழ்வாருக்காக வாசல் திறக்கப்படும் வைபவம் தான் சொர்க்க வாசல்.
அதில் பெருமாள், தானே ஒரு சாதகனாய் நுழைகிறான்! ஒரு சாதகன்  எப்படி அனைத்து நிலைகளையும் கடந்து, பரமபதத்தில் எப்படி எல்லாம் வரவேற்கப்பட்டு, தன்னிடம் வந்து சேர்கிறான் என்பதைத் தானே நடித்துக் காட்டுகிறான்!

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின என்ற பாசுரம் முழங்குகிறார்கள்.
நம்மாழ்வார் திருவுருவச் சிலை சகல மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு நம்பெருமாள் முன் வைக்கப்படுகிறது.அலங்காரங்கள் எதுவுமே இல்லை! வெறும் வெள்ளை உடையும் துளசி மாலை மட்டுமே! பன்னிரெண்டு திருமண் காப்பு திருமேனியில்!
குந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
என்று பாடுகிறார்கள்! பாடிக் கொண்டே, துளசி தளங்களால் அர்ச்சனை!

நம்மாழ்வார் திருவுருவச் சிலையை, அவர் தலை அப்படியே அரங்கன் திருவடிகளில் படுமாறு கிடத்துகிறார்கள்! தலையாலே கீழே விழுந்து வணங்கிப், பற்றற்றான் பற்றினைப் பற்றுகிறார்!
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே!

என்று அன்று பாடினார் அல்லவா? அது அப்படியே இன்று நம் கண்முன்னால் நடக்கிறது! அர்ச்சனை இடையறாது நடந்து கொண்டே இருக்க, அடடா அங்கேநம்மாழ்வாரைக் காணவில்லை!
ஆம்! துளசியால் முழுதும் மூடப்பட்டு விடுகிறார்!!
சற்று முன்னர் வரை நம் கண் முன்னே, திருவாய்மொழி பாடிக் கொண்டே வந்தவர், இப்போது காணவில்லையே!

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

பாசுர முழக்கம் நிறைவு பெற்றது!
எங்கும் ஒரே நிசப்தம்! துளி சத்தம் கிடையாது!

எல்லார் கண்களும்  நனைகின்றன.

நம்மாழ்வார்  மோட்சம்  இப்படி வருஷாவருஷம்  நடைபெறுகிறது!

2009/12/24 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

--

devoo

unread,
Dec 24, 2009, 10:42:07 AM12/24/09
to மின்தமிழ்
Dec 24, 7:04 pm, shylaja

>> குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி
ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;<<

ப. ராஜு வெட3லெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க3

அ. தேஜி(னெ)க்கி ஸமஸ்த ராஜு(லூ)டி3க3மு ஸேய
தேஜரில்லு நவ ரத்னபு தி3வ்ய பூ4ஷணமு(லி)டி3 ரங்க3 (ரா)

ச. காவேரீ தீரமுனனு பாவனமகு3 ரங்க3 புரினி
ஸ்ரீ வெலயு சித்ர வீதி4லோ வேட்3கக3 ராக3
ஸேவனு க3னி ஸுருலு விருலசே ப்ரேமனு பூஜிஞ்சக3
பா4விஞ்சு த்யாக3ராஜு பா3ட3க3
வைபோ4க3ரங்க3 (ரா)

மன்னன் புறப்பட்டனன், காண்போம், வாரீர்! கஸ்தூரிரங்க (மன்னன்)

குதிரையின் மீதேறி, எல்லா அரசர்களும் ஊழியம் செய்ய
ஒளிரும் நவரத்தின திவ்விய அணி கலன்களணிந்து
அரங்க மன்னன் புறப்பட்டனன், காண்போம், வாரீர்!

காவேரிக் கரையினில், புனிதமான அரங்கபுரியினில்,
சீர் துலங்கும் சித்திரை வீதிகளில், வேடிக்கையாக வர,
சேவையினைக் கண்டு வானோர் மலர்கொடுக் காதலுடன் தொழ,
உணரும் தியாகராஜன் பாட,
வைபோக அரங்க மன்னன் புறப்பட்டனன், காண்போம், வாரீர்!

தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 24, 2009, 10:54:03 AM12/24/09
to mint...@googlegroups.com
'வைபோக ரங்கனை'யும், அவனது மோஹினித்தோற்றமும், இன்று இரவு வருவதற்கு முன் காணோமோ என்று ஏங்கினேன். ஓடி வந்தானே பார்க்கலாம். இந்த இழையை கவனத்துடன் படிக்கும் நான் தன்யனானேன், ஷைலஜா, மோஹனரங்கா.

இன்னம்பூரான்
2009/12/24 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

srirangammohanarangan v

unread,
Dec 24, 2009, 10:54:38 AM12/24/09
to mint...@googlegroups.com
எங்கள் கண்களும் பனிக்கின்றன.    ஷைலஜாவிற்கு யப்பா எவ்வலவு  விஷயம்  தெரிந்திருக்கிறது :--))))    எழுத எழுத  படித்துக்கொண்டே  இருக்கலாம்  என்று  தோன்றுகிறது.   நன்றி    கோதை  குலக்கொடியாரே

srirangammohanarangan v

unread,
Dec 24, 2009, 10:59:28 AM12/24/09
to mint...@googlegroups.com
இப்படி சொல்லிவிட்டு    நீங்கள்   எதுவும்  சொல்லாமல்  தப்பித்துக்கொள்ளலாம்  என்று  எண்ணமா?     கோஷ்டி  வஞ்சனை  பண்ணாமல்   சொல்லும்    ஐயா  இன்னம்பூரரே!   :--)))))
Message has been deleted

shylaja

unread,
Dec 24, 2009, 8:07:46 PM12/24/09
to mint...@googlegroups.com

2009/12/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>

On 12/24/09, shylaja <shyl...@gmail.com> wrote:
மிக்க நன்றி   திருபென்னேஸ்வரன் ! திருவரங்கத்திற்கென்று   நிறைய  சிறப்புகள் இருக்கின்றன  நீங்கள் சொல்லியுள்ளதுபோல மொழி அங்கு முன்னணி வகிப்பதை மார்கழியில் காணலாம்! இயல் இசை  அனைத்திலும் தமிழ் ஆட்சி செய்யும்! அரையர்  தமிழ்ப்பாசுரங்கள்பாடுவதை அரங்கன் எதிர் இருந்து அமர்ந்து கேட்கும் அழகு ஒன்று போதும்!
 
சுந்தரத்தெலுங்கில் தியாகராஜ சுவாமிகளும்  பாடி இருக்கிறார்.
 
ஒருமுறை
 
 சங்கீத மகாகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் வந்தபோது
அவர் தெற்கு வீதியில் நின்று கொண்டிருந்தார். அரங்கன் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வருகிறான்.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த அழகைப் பக்கத்தில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கப்பட்டார்.

அவர் என்ன பெரிய "  சத்தம் கிடையாது!

எல்லார் கண்களும்  நனைகின்றன. 
எங்கள் கண்களும் பனிக்கின்றன.    ஷைலஜாவிற்கு யப்பா எவ்வலவு  விஷயம்  தெரிந்திருக்கிறது :--))))    எழுத எழுத  படித்துக்கொண்டே  இருக்கலாம்  என்று  தோன்றுகிறது.   நன்றி    கோதை  குலக்கொடியாரே

>>>>>>>>>>>>>
கண்கள் பனிச்சவரை சரி  அடுத்த வரியில் எனக்கு சம்மதமில்லை  நுனிப்புல்லைப்பார்த்து   விருட்சம்   இப்படி விமரிசிக்கலாமா?:)

--
ஷைலஜா
///
.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
///

ஆண்டாள்

Innamburan Innamburan

unread,
Dec 24, 2009, 8:15:53 PM12/24/09
to mint...@googlegroups.com
கோஷ்டி வஞ்சனை செய்யாதே என்று விரட்டி விட்டு, இப்படி ' நாயகி என்ற    பாவனை   நமக்குத்  தெரிந்த உலகியல் ரீதியாக  எப்படி இருக்கிறது  என்று  பார்ப்பது   ஆன்மிகத்திற்கு  ஒவ்வாத  போக்கு' என்றெல்லாம் விஸ்தாரமா, எழில் பொங்க தேவரீர் விளக்கமளித்தாப்போல, எம்மால் விஷயதானம் செய்ய முடியுமா என்று சொல்லும் ஸ்வாமி. கொடியாலம் துரைஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி சொன்னாப்போல, 'நமது மமகாரம், அஹங்காரம், தேஹாத்ம ப்ரமம் இவைகளை அறவே ஒழித்து, தேஹாவஸானம் வரையில் ஒரு பிழையும் புகுராத உணர்ச்சியுடன், வர்ணாச் ரதர்மங்களை அனுஷ்டித்து, நமது ஸ்வரூபம், நம்மை காக்கும் பொறுப்பு, நாம் செய்யும் தர்மங்களின் பலன் எல்லாவற்றையும் பகவான் திருவடியில் அவன் ப்ரீதிக்காகவே அர்ப்பணம் செய்து உஜ்ஜீவிப்பதே ஸதாசார்யர்கள் காட்டிய வழி.' என்று இருக்கும்போது, நாயகி பாவனை, பாவனையே அல்ல, அது பகவத் விஷயத்திலே இயல்பே என்று விண்ணப்பிக்க தோன்றுகிறது. அப்படி ஒரு அற்புதமான அலை வரிசை! அவ்வளவு தான். இது நிற்க. ஆண்டாள் பிராட்டியை அண்டி, அவளருளால் உஜ்ஜீவிக்கும் எனக்கு ஒரு நாள் ஸ்ரீரங்கநாதன் ஓடி வந்து அமுதளித்தான். போன வருடம், என் மருமானும், அவனோட ஆம்படையாளும், என்னை ஸ்ரீரங்கம் கூட்டிச்செல்ல,(புஷ்பரதம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.) புஷ்பங்கள் பொழிய, அவன் சேவை சாதித்து கொண்டு இருந்தான். என் மனத்தை முழுதும் ஆக்ரமித்தான். நான் எப்போதும் சர்க்கரை பொட்டலம் வைத்திருப்பேன், திடீரென்று அது குறைந்து படுத்துவதால். என் மருமானும், அவனோட ஆம்படையாளும் வேறு எங்கோ செல்ல, என் கைப்பையையும் எடுத்துப்போய்விட்டனர். இந்த கெவெர்ன்மெண்ட் காராளுக்கு இது கெட்ட குணம். காசு வைத்துக்கொள்ளக்கூட, ஒரு ஆள் வேணும். அந்த நேரம் பாத்து, அடியேனின் சர்க்கரை நிலை குலைய, கொஞ்சம் பலஹீனம், குழப்பம், நினவு இழந்து விடும் அச்சம். கண் பார்வையும் மங்கிவிட்டது. சரி. இனி அவன் பாடு என்று விட்டு விட்டேன். யாரோ ஒருவர் ஒரு தொன்னையில், 'இந்தாங்கோ பெருமாள் ப்ரஸாதம்' என்று கொடுத்து விட்டு, கூட்டத்தோடு கலந்து விட்டார். அவனமுதுண்டு உஜ்ஜீவிக்கும் அடியேன் (மமகாரம் மின்னல் வேகத்தில் உள்புகுகிறது, பாருங்கள்!) உங்களுடன் சம்பாஷிக்கிறேன். க்ருதஞ்னன் ஆன,

இன்னம்பூரான்
2009/12/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>
நாயகி   பாவம்   என்பது ஜீவனின்    ஆன்மிக   உணர்வு  முற்றிய நிலையைக் குறிப்பது  என்று  பார்த்தோம்.    ஆன்மிக உணர்வு  முற்றிய நிலை என்ன  என்பதைத்தான்  நாம்  இதில்  கருத்தூன்றிப் புரிந்துகொள்ள முயல வேண்டுமே ஒழிய  நாயகி என்ற    பாவனை     நமக்குத்  தெரிந்த உலகியல் ரீதியாக  எப்படி இருக்கிறது  என்று  பார்ப்பது   ஆன்மிகத்திற்கு  ஒவ்வாத  போக்கு.     சாதாரண பேச்சுப் புழக்கத்திலேயே    ஒருவரை    ‘அவர் சிங்கம் மாதிரி சார்’   என்றால்   உடனே    அவருக்கு  வால் இருக்கிறதா,    நான்கு கால்களோடு இருக்கின்றாரா, கர்ச்சனை   புரிகிறாரா    என்றெல்லாம் ஒருவர்   பார்க்க ஆரம்பித்தால்  அந்தப் பேர்வழியைக்    ‘குறிப்பறிய   மாட்டாதவன்   நெடுமரம்’   என்றுதான்       திட்டுவோம்.      உவமை பற்றிய   பேச்சுக்கே  இந்த  நிலமை என்றால்    ’ உணர்ந்து உணர்ந்து  உணரிலும் உணர்வறிது    உயிர்காள் ’    என்ற   உன்னத ஆன்மிக    முதிர்நிலைக்குக்   குறிப்பு  காட்ட   பலருக்கும் தெரிந்த     உறவு,   உணர்ச்சி சார்ந்த     ஒரு  மொழியைக் கையாண்டால்     உடனே     பிராக்ருதமான பெண்ணாகவே அர்த்தம் பண்ணிக்கொண்டு, அது  எப்படி  ஆணான ஆழ்வார்    பெண் போல்    பேசவும்,   ஒப்பனை பூணவும்  படுகிறார்   என்று    புரியாமல் கேள்வி கேட்டால்    பதில் இல்லை.  ஆனால் பெரும் யோகிகள் தங்கள் யோகானுபவங்களைக்   குறியீடு மொழி  கொண்டு  விளக்கும் போது    சிற்றின்ப   மயமான பேச்சு     அந்த அனுபவங்களைப்  பற்றிக்    குறிப்பிட வாய்ப்பான  நல்ல   உதவியாக  இருக்கிறது என்கிறார்கள்.  
 
’யோக ரஹஸ்யம்’   எழுதிய    ஸ்ரீநாதமுனிகள்     பெரும் யோகி.     திருக்குருகூர்    மாதவத்தின்    யோகப் பெரு நிலையின்     ரஹஸ்யம் உணர்ந்தவர் ஆகையாலே     திருமொழித் திருவாய்மொழித்  திருநாளிலேயே   கண்காண,     கலை   வடிவமாய்க்   காலத்திற்கும்     நிகழும் படிவமாய்   ஆக்கிவைத்துவிட்டுப்  போனார். 
 
எனவேதான்    காமம்  இருக்கும் இடத்தில்  கண்ணன் இல்லை என்று     நிர்த்தாரணம் செய்யும்     பெரியோர்கள்   எல்லாம்   பராங்குச நாயகி,    பரகால   நாயகி   என்று  வந்ததுமே     கண்ணீர்    பெருக   நிலைகுலைய     ஈடுபடுவதும்,   உருகுவதுமாய் இருப்பது எல்லாம்.     ஸ்ரீராமானுஜரின்  மருமான்   கோவிந்தப்  பெருமாள்     என்பவர்.    கல்யாணம்  ஆகியும்  தாம்பத்ய   உறவு    கொண்டு   இகலோக வாழ்க்கையில்     முன்னேற்றம் எதுவும் காணாமல்    சதா சர்வ  காலமும் பகவத் சிந்தனையிலேயே   காலத்தைக்  கழித்தார்.   பெற்ற தாயும் கட்டிய மனையாளும்      சிந்தாகுலம் ஆயினர்.    கோவிந்தப் பெருமாளின் தாய்     ஸ்ரீராமானுஜரிடம்     இதுபற்றிப் புகார் செய்தார்.     உடையவர்   கோவிந்தப் பெருமாளைக் கூப்பிட்டு  அனுப்பி      வாழ்க்கையில் ஒவ்வொரு ஆச்ரமத்தில்     இருந்து ஆற்ற வேண்டிய    கடமையை   உணர்த்தி     இனியாவது    சாஸ்திர    மர்யாதையை  மதித்து  நடக்குமாறு    அறிவுறுத்தினார்.     சரி பிள்ளை திருந்தும் என்று  அன்று   இரவு     மகனையும், மருமகளையும்     தனிமையில்     விடுத்துத்    தாயார்     தவம் கிடந்தாள்.      மறுநாளும்     கதை முன்போலவே என்று  தெரிந்ததும்     உடையவரிடம்   இன்னும் வலுவாகக்   குறைகூறுதல்   போயிற்று.    கோவிந்தப் பெருமாளிடம் கேட்டால்    கூறுகிறார்,    ‘   ஐயா!      ஏகாந்தத்தில்  அன்றோ ஒருவர்     ஆண்பெண் இன்பம் அனுபவிப்பது. சதா சர்வ காலமும்     தேர்ந்த நல் துணையாய்,   ஒரு  நல் சுற்றமாய்     பகவான்   எங்கும்   சூழ்ந்திருக்கும் போது  எப்படித்  தனிமை   ஏற்படும்?     அதுவுமின்றி       இருட்டில்  அன்றோ  ஒருவர்     இன்பம் துய்ப்பது.    உள்ளே  அந்தர்யாமி     இடைவிடாது  ஒளிர்ந்துகொண்டிருக்கும் போது      நான் எக்கணமும் இருட்டைக் காணவில்லையே!    என்செய்வேன்.’     என்றார்.     இவ்வளவு   வைராக்கியம்  மிக்க     கோவிந்தப் பெருமாள்தான்  ஜீயராக  எம்பார்   ஆக  ஆனார்.       அந்த   எம்பார்     அரையர்  ஸேவையின் போது    அடிக்கும் கொட்டத்தைப் பார்க்க வேண்டுமே!   அடேயப்பா.      இவ்வளவு  விரக்தரா  இப்படி  நுணுக்கமான    சிருங்கார    ரஸப்   பிரதானமான      பாவ  விபாவ    அனுகார      அபிநயங்களை    அரையருக்குக் குறிப்புணர்த்திக்  காட்டுவது என்று   ஆச்சரியமாக இருக்கும்.    
 
அரையர்  ஸேவையின்   போது    ஒருநாள்     நாயகிப்   பாசுரம்.      ‘இன்னம் ஒரு நாள்   என்  கையகப் படும்போது   என்   சினம் தீர்வன்   யானே’  என்று    ஊடல் கொண்ட    தலைமகள்     கூற்றாக   வரும்    இடத்தில்   அபிநயம்  பிடிக்கும்    அரையர்      சினம்  தீர்தல் என்றால்     அடிப்பது, துகைப்பது     என்பதுபோல்   அபிநயம்  காட்டுகிறார்.      முன்வரிசையில்   ஸ்ரீராமானுஜர்.     அபிநயம் காட்டிய பின்பு      மீண்டும் அதே இடத்தை  அரையர்      வேறுவிதமாக    அபிநயம் பிடித்துக் காட்டுகிறார்.    என்னவெனில்    சினம் தீர்வன் யானே   என்ற  இடத்தைக் காட்ட    அடித்தல்  துகைத்தல் என்று காட்டாமல்     முகத்தை     நேர்கொடுநேர்     பார்க்காமல்      மாற்வைத்துக் கொள்வதுபோல்    அபிநயம் காட்டினார்.       உடனே    ஸ்ரீராமானுஜர்     கடைசி வரிசை பக்கம் திரும்பி      ‘கோவிந்தப்  பெருமாள்     இருந்தீரோ!’     என்று  வியந்து  கூறினார்.      ஏனெனில் பின்பக்கம் பார்க்காமலேயே    இந்த  அளவிற்கு  ரஸப்  ப்ராசுர்யமான       அபிநயக்   குறிப்பு      கோவிந்தப்   பெருமாள்     உதவியால்தான் அரையருக்குக்   கிடைத்திருக்கும்  என்பது    வெள்ளிடை மலையாக    இருந்திருக்கிறது     யதிராஜருக்கு. 
 
ஏன்  இவ்வளவும்  கூறுகிறேன் என்றால்     இத்தகைய   பெருமக்கள்    ஈடுபட்டிருக்கின்றார்கள்   என்றால்  இந்த   நாய்ச்சியார் திருக்கோலத்திலும், நாயகிப்  பாசுரங்களிலும்     எத்தகைய ஆன்மிக உட்பொருள்     புதைந்து  இருக்க  வேண்டும்    என்பது நமக்கு யூகிக்கப் போதரும் அன்றோ! 
 
மோக்ஷம்   அடையத் துடிக்கும்    முமுக்ஷுவான      ஜீவனின்      ஆன்ம   சரிதத்தை     அரங்கன் இந்த இருபத்தி ஒன்று  நாளும்    அபிநயித்துப்   பார்க்கிறான்    என்றால்     அந்த  ஆன்மிக   முதிர் நிலையான  பரம பக்தி  நிலையைக்   குறிக்கும்  நாயகி பாவத்தை      அபிநயித்துக் காட்டாமல் விடுவானா? (தொடர்..உம்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

On 12/24/09, shylaja <shyl...@gmail.com> wrote:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

shylaja

unread,
Dec 24, 2009, 8:18:51 PM12/24/09
to mint...@googlegroups.com

2009/12/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>

கோஷ்டி வஞ்சனை செய்யாதே என்று விரட்டி விட்டு, இப்படி ' நாயகி என்ற    பாவனை   நமக்குத்  தெரிந்த உலகியல் ரீதியாக  எப்படி இருக்கிறது  என்று  பார்ப்பது   ஆன்மிகத்திற்கு  ஒவ்வாத  போக்கு' என்றெல்லாம் விஸ்தாரமா, எழில் பொங்க தேவரீர் விளக்கமளித்தாப்போல, எம்மால் விஷயதானம் செய்ய முடியுமா என்று சொல்லும் ஸ்வாமி. கொடியாலம் துரைஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி சொன்னாப்போல, 'நமது மமகாரம், அஹங்காரம், தேஹாத்ம ப்ரமம் இவைகளை அறவே ஒழித்து, தேஹாவஸானம் வரையில் ஒரு பிழையும் புகுராத உணர்ச்சியுடன், வர்ணாச் ரதர்மங்களை அனுஷ்டித்து, நமது ஸ்வரூபம், நம்மை காக்கும் பொறுப்பு, நாம் செய்யும் தர்மங்களின் பலன் எல்லாவற்றையும் பகவான் திருவடியில் அவன் ப்ரீதிக்காகவே அர்ப்பணம் செய்து உஜ்ஜீவிப்பதே ஸதாசார்யர்கள் காட்டிய வழி.' என்று இருக்கும்போது, நாயகி பாவனை, பாவனையே அல்ல, அது பகவத் விஷயத்திலே இயல்பே என்று விண்ணப்பிக்க தோன்றுகிறது. அப்படி ஒரு அற்புதமான அலை வரிசை! அவ்வளவு தான். இது நிற்க. ஆண்டாள் பிராட்டியை அண்டி, அவளருளால் உஜ்ஜீவிக்கும் எனக்கு ஒரு நாள் ஸ்ரீரங்கநாதன் ஓடி வந்து அமுதளித்தான். போன வருடம், என் மருமானும், அவனோட ஆம்படையாளும், என்னை ஸ்ரீரங்கம் கூட்டிச்செல்ல,(புஷ்பரதம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.) புஷ்பங்கள் பொழிய, அவன் சேவை சாதித்து கொண்டு இருந்தான். என் மனத்தை முழுதும் ஆக்ரமித்தான். நான் எப்போதும் சர்க்கரை பொட்டலம் வைத்திருப்பேன், திடீரென்று அது குறைந்து படுத்துவதால். என் மருமானும், அவனோட ஆம்படையாளும் வேறு எங்கோ செல்ல, என் கைப்பையையும் எடுத்துப்போய்விட்டனர். இந்த கெவெர்ன்மெண்ட் காராளுக்கு இது கெட்ட குணம். காசு வைத்துக்கொள்ளக்கூட, ஒரு ஆள் வேணும். அந்த நேரம் பாத்து, அடியேனின் சர்க்கரை நிலை குலைய, கொஞ்சம் பலஹீனம், குழப்பம், நினவு இழந்து விடும் அச்சம். கண் பார்வையும் மங்கிவிட்டது. சரி. இனி அவன் பாடு என்று விட்டு விட்டேன். யாரோ ஒருவர் ஒரு தொன்னையில், 'இந்தாங்கோ பெருமாள் ப்ரஸாதம்' என்று கொடுத்து விட்டு, கூட்டத்தோடு கலந்து விட்டார்.<<<>>>>
 
ஆ!  இன்னம்பூரான் ஸார்!
கண்கள் பனிக்கின்றன...அரங்கனின் கருணையை உங்களின் எழுத்திலும் கண்டுகொண்டேன்!

--

Geetha Sambasivam

unread,
Dec 24, 2009, 8:18:48 PM12/24/09
to mint...@googlegroups.com
//யாரோ ஒருவர் ஒரு தொன்னையில், 'இந்தாங்கோ பெருமாள் ப்ரஸாதம்' என்று கொடுத்து விட்டு, கூட்டத்தோடு கலந்து விட்டார். அவனமுதுண்டு உஜ்ஜீவிக்கும் அடியேன் (மமகாரம் மின்னல் வேகத்தில் உள்புகுகிறது, பாருங்கள்!) உங்களுடன் சம்பாஷிக்கிறேன்//

இறையின் இருப்பை இப்படித் தான் வெளிப்படுத்தும்

2009/12/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>

shylaja

unread,
Dec 24, 2009, 8:36:34 PM12/24/09
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
நாயகிபாவ அலங்காரத்திற்கு இப்படி ஒரு சூட்சம விளக்கமா?  அதுதான் சதா  அர்த்தநாரீஸ்வரனாகவே இருந்து நம்மை மகிழ்கிவிக்கிறானா சிவபெருமானும்? ஆண்டவனின் தோற்றங்களுக்கான காரணங்களைப்புரிந்துகொள்ளும்போது மன இருட்டு அகன்று ஒளிக்கோடு நுழையத்தான் செய்கிறது..ம்ம் தொடருங்கள் மேலும் !கோடு, ரோடாக வேண்டுமே!

2009/12/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>
நாயகி   பாவம்   என்பது ஜீவனின்    ஆன்மிக   உணர்வு  முற்றிய நிலையைக் குறிப்பது  என்று  பார்த்தோம்.    ஆன்மிக உணர்வு  முற்றிய நிலை என்ன  என்பதைத்தான்  நாம்  இதில்  கருத்தூன்றிப் புரிந்துகொள்ள முயல வேண்டுமே ஒழிய  நாயகி என்ற    பாவனை     நமக்குத்  தெரிந்த உலகியல் ரீதியாக  எப்படி இருக்கிறது  என்று  பார்ப்பது   ஆன்மிகத்திற்கு  ஒவ்வாத  போக்கு.     சாதாரண பேச்சுப் புழக்கத்திலேயே    ஒருவரை    ‘அவர் சிங்கம் மாதிரி சார்’   என்றால்   உடனே    அவருக்கு  வால் இருக்கிறதா,    நான்கு கால்களோடு இருக்கின்றாரா, கர்ச்சனை   புரிகிறாரா    என்றெல்லாம் ஒருவர்   பார்க்க ஆரம்பித்தால்  அந்தப் பேர்வழியைக்    ‘குறிப்பறிய   மாட்டாதவன்   நெடுமரம்’   என்றுதான்       திட்டுவோம்.      உவமை பற்றிய   பேச்சுக்கே  இந்த  நிலமை என்றால்    ’ உணர்ந்து உணர்ந்து  உணரிலும் உணர்வறிது    உயிர்காள் ’    என்ற   உன்னத ஆன்மிக    முதிர்நிலைக்குக்   குறிப்பு  காட்ட   பலருக்கும் தெரிந்த     உறவு,   உணர்ச்சி சார்ந்த     ஒரு  மொழியைக் கையாண்டால்     உடனே     பிராக்ருதமான பெண்ணாகவே அர்த்தம் பண்ணிக்கொண்டு, அது  எப்படி  ஆணான ஆழ்வார்    பெண் போல்    பேசவும்,   ஒப்பனை பூணவும்  படுகிறார்   என்று    புரியாமல் கேள்வி கேட்டால்    பதில் இல்லை.  ஆனால் பெரும் யோகிகள் தங்கள் யோகானுபவங்களைக்   குறியீடு மொழி  கொண்டு  விளக்கும் போது    சிற்றின்ப   மயமான பேச்சு     அந்த அனுபவங்களைப்  பற்றிக்    குறிப்பிட வாய்ப்பான  நல்ல   உதவியாக  இருக்கிறது என்கிறார்கள்.  
 
’யோக ரஹஸ்யம்’   எழுதிய    ஸ்ரீநாதமுனிகள்     பெரும் யோகி.     திருக்குருகூர்    மாதவத்தின்    யோகப் பெரு நிலையின்     ரஹஸ்யம் உணர்ந்தவர் ஆகையாலே     திருமொழித் திருவாய்மொழித்  திருநாளிலேயே   கண்காண,     கலை   வடிவமாய்க்   காலத்திற்கும்     நிகழும் படிவமாய்   ஆக்கிவைத்துவிட்டுப்  போனார். 
 
எனவேதான்    காமம்  இருக்கும் இடத்தில்  கண்ணன் இல்லை என்று     நிர்த்தாரணம் செய்யும்     பெரியோர்கள்   எல்லாம்   பராங்குச நாயகி,    பரகால   நாயகி   என்று  வந்ததுமே     கண்ணீர்    பெருக   நிலைகுலைய     ஈடுபடுவதும்,   உருகுவதுமாய் இருப்பது எல்லாம்.     ஸ்ரீராமானுஜரின்  மருமான்   கோவிந்தப்  பெருமாள்     என்பவர்.    கல்யாணம்  ஆகியும்  தாம்பத்ய   உறவு    கொண்டு   இகலோக வாழ்க்கையில்     முன்னேற்றம் எதுவும் காணாமல்    சதா சர்வ  காலமும் பகவத் சிந்தனையிலேயே   காலத்தைக்  கழித்தார்.   பெற்ற தாயும் கட்டிய மனையாளும்      சிந்தாகுலம் ஆயினர்.    கோவிந்தப் பெருமாளின் தாய்     ஸ்ரீராமானுஜரிடம்     இதுபற்றிப் புகார் செய்தார்.     உடையவர்   கோவிந்தப் பெருமாளைக் கூப்பிட்டு  அனுப்பி      வாழ்க்கையில் ஒவ்வொரு ஆச்ரமத்தில்     இருந்து ஆற்ற வேண்டிய    கடமையை   உணர்த்தி     இனியாவது    சாஸ்திர    மர்யாதையை  மதித்து  நடக்குமாறு    அறிவுறுத்தினார்.     சரி பிள்ளை திருந்தும் என்று  அன்று   இரவு     மகனையும், மருமகளையும்     தனிமையில்     விடுத்துத்    தாயார்     தவம் கிடந்தாள்.      மறுநாளும்     கதை முன்போலவே என்று  தெரிந்ததும்     உடையவரிடம்   இன்னும் வலுவாகக்   குறைகூறுதல்   போயிற்று.    கோவிந்தப் பெருமாளிடம் கேட்டால்    கூறுகிறார்,    ‘   ஐயா!      ஏகாந்தத்தில்  அன்றோ ஒருவர்     ஆண்பெண் இன்பம் அனுபவிப்பது. சதா சர்வ காலமும்     தேர்ந்த நல் துணையாய்,   ஒரு  நல் சுற்றமாய்     பகவான்   எங்கும்   சூழ்ந்திருக்கும் போது  எப்படித்  தனிமை   ஏற்படும்?     அதுவுமின்றி       இருட்டில்  அன்றோ  ஒருவர்     இன்பம் துய்ப்பது.    உள்ளே  அந்தர்யாமி     இடைவிடாது  ஒளிர்ந்துகொண்டிருக்கும் போது      நான் எக்கணமும் இருட்டைக் காணவில்லையே!    என்செய்வேன்.’     என்றார்.     இவ்வளவு   வைராக்கியம்  மிக்க     கோவிந்தப் பெருமாள்தான்  ஜீயராக  எம்பார்   ஆக  ஆனார்.       அந்த   எம்பார்     அரையர்  ஸேவையின் போது    அடிக்கும் கொட்டத்தைப் பார்க்க வேண்டுமே!   அடேயப்பா.      இவ்வளவு  விரக்தரா  இப்படி  நுணுக்கமான    சிருங்கார    ரஸப்   பிரதானமான      பாவ  விபாவ    அனுகார      அபிநயங்களை    அரையருக்குக் குறிப்புணர்த்திக்  காட்டுவது என்று   ஆச்சரியமாக இருக்கும்.    
 
அரையர்  ஸேவையின்   போது    ஒருநாள்     நாயகிப்   பாசுரம்.      ‘இன்னம் ஒரு நாள்   என்  கையகப் படும்போது   என்   சினம் தீர்வன்   யானே’  என்று    ஊடல் கொண்ட    தலைமகள்     கூற்றாக   வரும்    இடத்தில்   அபிநயம்  பிடிக்கும்    அரையர்      சினம்  தீர்தல் என்றால்     அடிப்பது, துகைப்பது     என்பதுபோல்   அபிநயம்  காட்டுகிறார்.      முன்வரிசையில்   ஸ்ரீராமானுஜர்.     அபிநயம் காட்டிய பின்பு      மீண்டும் அதே இடத்தை  அரையர்      வேறுவிதமாக    அபிநயம் பிடித்துக் காட்டுகிறார்.    என்னவெனில்    சினம் தீர்வன் யானே   என்ற  இடத்தைக் காட்ட    அடித்தல்  துகைத்தல் என்று காட்டாமல்     முகத்தை     நேர்கொடுநேர்     பார்க்காமல்      மாற்வைத்துக் கொள்வதுபோல்    அபிநயம் காட்டினார்.       உடனே    ஸ்ரீராமானுஜர்     கடைசி வரிசை பக்கம் திரும்பி      ‘கோவிந்தப்  பெருமாள்     இருந்தீரோ!’     என்று  வியந்து  கூறினார்.      ஏனெனில் பின்பக்கம் பார்க்காமலேயே    இந்த  அளவிற்கு  ரஸப்  ப்ராசுர்யமான       அபிநயக்   குறிப்பு      கோவிந்தப்   பெருமாள்     உதவியால்தான் அரையருக்குக்   கிடைத்திருக்கும்  என்பது    வெள்ளிடை மலையாக    இருந்திருக்கிறது     யதிராஜருக்கு. 
 
ஏன்  இவ்வளவும்  கூறுகிறேன் என்றால்     இத்தகைய   பெருமக்கள்    ஈடுபட்டிருக்கின்றார்கள்   என்றால்  இந்த   நாய்ச்சியார் திருக்கோலத்திலும், நாயகிப்  பாசுரங்களிலும்     எத்தகைய ஆன்மிக உட்பொருள்     புதைந்து  இருக்க  வேண்டும்    என்பது நமக்கு யூகிக்கப் போதரும் அன்றோ! 
 
மோக்ஷம்   அடையத் துடிக்கும்    முமுக்ஷுவான      ஜீவனின்      ஆன்ம   சரிதத்தை     அரங்கன் இந்த இருபத்தி ஒன்று  நாளும்    அபிநயித்துப்   பார்க்கிறான்    என்றால்     அந்த  ஆன்மிக   முதிர் நிலையான  பரம பக்தி  நிலையைக்   குறிக்கும்  நாயகி பாவத்தை      அபிநயித்துக் காட்டாமல் விடுவானா? (தொடர்..உம்)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

On 12/24/09, shylaja <shyl...@gmail.com> wrote:
மோகினி அலங்கார  அரங்கனையும்  தங்கக்கிரீட அலங்கார ரங்கனையும்  இங்கே காணலாம்!

2009/12/23 shylaja <shyl...@gmail.com>
 வைகுண்ட ஏகாதசி வரப்போகிறது அதற்குமுன் தினம்  மோகினியாக அலங்காரம் பண்ணிக்கொண்டு  ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் வருவார் பாருங்கள் ஆஹா  காணக்கண்கோடிவேண்டும்!  பிராட்டியைப்போல  உடை நகைகள்தரித்து அந்தப்பின்னலில்  ராக்கொடி ஜடவில்லைலாம் வைச்சி  பூவை சுத்தி கிளியை தோள்பக்கம் வைத்துக்கொண்டு  கண்ணாடி முன்பு போய் பார்த்தாராம்  பெருமாள்.கதிர்மதியம்போல்முகத்தான்  அல்லவா? தாயாரின் வேஷம் போட்டதும் மதிமதியம் போல முகத்தான் ஆனார் ஆமாம் தாயாரின் கண்களில் வாத்சல்யம் மட்டுமே தான் இருக்கும்! இந்த அசுரர்களை அழிப்பது அடக்குவதெல்லாம்  அண்ணலின் வேலை அதுக்குத்தான் ஒருகண்ல கதிரை வைத்து அவர்கள்மேலப்பாய்ச்சுவார்!
 
ஆமாம் எத்ற்கு இந்த  மோகினி அலங்காரம்?
 
நல்லார்க்கு நிழலும், பொல்லார்க்கு பாடமும் புகட்ட எண்ணிய இறைவன், பாற்கடல் கடைதல் என்ற ஒன்றை ஏற்படுத்தினான் . மந்தார மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு தேவர், அசுரர் இருவரும் கடைந்தனர் . பல சோதனைகள் வந்தன  சில சாதனைகள் உண்டாயின.

தானே ஆமையாகி தாங்கி நின்றான் தானே தன்வந்திரியாய் தோன்றி அமிர்தம் வழங்க  அசுரர்  அதைப் பறித்தனர். அப்போதுதான் மாலவன் . மோகினியாய் உருக்கொண்டான். அசுரர் மயங்க, அமுதினை மீட்டான்  எங்கு சேர்ந்தால் தீமை குறைந்து, நலம் பெருகுமோ, அங்கு அமுதினைச் சேர்ப்பித்தான்

 இன்னொரு மோகினியும் உண்டு!
 
நம்ம நம்மாழ்வார்  தான்   ஏழாம் நாள், மோகினித் திருக்கோலத்தில் உலா வருகிறார்!

(நம்பிக்கை குழுவிற்கும் மோகனரங்கன் வர இருக்கிறார்  இந்தமோகினியோடு!:)))

--
ஷைலஜா
///
.'சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக்கோயில் சூழ்
காலில் கலந்து ,ஆசை தந்து, ஏகினார் நெஞ்சு கல்நெஞ்சமோ?
 வாவிப்புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக்கண்டிலேன்;
பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப்பனிக்காலமே' .
 
திவ்யகவி

--
ஷைலஜா
///
.

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்
///

ஆண்டாள்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

V, Dhivakar

unread,
Dec 25, 2009, 4:25:45 AM12/25/09
to mint...@googlegroups.com
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே >>>
 
மிக்க அருமை ஷைலஜா! இந்தப் பாசுரத்துக்குப் பிறகு வரும் பதிகங்கள் அனைத்துமே பரமாத்மாவைப் பணியும் தோத்திரங்களாக அமையும்.
 
அழகான தமிழ்..
 
வாழ்க,, வளர்க..
 
தி 
 
On 12/24/09, shylaja <shyl...@gmail.com> wrote:

--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Chandra sekaran

unread,
Dec 25, 2009, 12:56:18 PM12/25/09
to mint...@googlegroups.com
ஷைலஜாவின் மறுபக்கம் மகா இதிகாசமாய் இருக்கிறது. முதல்பக்கம் ..? அவரது நகைச்சுவை உணர்வு! எத்தனை பேருக்கு அது தெரியும்னு எனக்குத் தெரியாது :)
ரெங்கன் அண்ணா in full form. Vivian Richards அடிக்க ஆரம்பித்தால், Tornado என்று சொல்வதுபோல் அடர் மழைபோல் ரன்கள் குவியும்; அதே போல் கேட்பவரும், சொல்பவரும், இடையே விதூஷகம் செய்பவர்கள் எல்லாரும் விஷயஞானிகளாய் இருப்பதால்,இடையில் மழையை அனுபவிப்பவர்கள் பாடு என்னை பாட்டைப் போல் ('இடையர்கள்' கண்ணனின் நிழலில் சுகிப்பதுபோல்) கொண்டாட்டம்தான். Dil Mange More!!!

Chandra

shylaja

unread,
Dec 25, 2009, 8:49:52 PM12/25/09
to mint...@googlegroups.com

2009/12/25 Chandra sekaran <plastic...@gmail.com>

ஷைலஜாவின் மறுபக்கம் மகா இதிகாசமாய் இருக்கிறது. முதல்பக்கம் ..? அவரது நகைச்சுவை உணர்வு! எத்தனை பேருக்கு அது தெரியும்னு எனக்குத் தெரியாது :)<<>>>>>>>>>>>>>>>>>>>>
 
அட! உங்களுக்கு எப்படித்தெரிஞ்சுது?  
 
ரெங்கன் அண்ணா in full form. Vivian Richards அடிக்க ஆரம்பித்தால், Tornado என்று சொல்வதுபோல் அடர் மழைபோல் ரன்கள் குவியும்; அதே போல் கேட்பவரும், சொல்பவரும், இடையே விதூஷகம் செய்பவர்கள் எல்லாரும் விஷயஞானிகளாய் இருப்பதால்,இடையில் மழையை அனுபவிப்பவர்கள் பாடு என்னை பாட்டைப் போல் ('இடையர்கள்' கண்ணனின் நிழலில் சுகிப்பதுபோல்) கொண்டாட்டம்தான். Dil Mange More!!!>>>>>>>>>>>>>>>>>
 
ஆகா  இப்படி அருமையாய் விமர்சிக்கவும் கொடுத்துவச்சிருக்கணுமே!   ஒருதடவை பாடகர் ஜிஎன்பி  தொண்டை கம்மறது  இந்தக்கம்மலோட எப்படி மேடைல பாடறது இன்னிக்குன்னாராம்
அதனால் என்ன கம்மலும் காதுக்கு அழகுன்னாராம் பக்கத்துல இருந்தவர்! இதுமாதிரி  விமர்சித்துச்சொல்லவும் ரசிக உள்ளங்கள் வேணுமே!

Chandra

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
ஷைலஜா
///
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
/////

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 26, 2009, 7:20:40 AM12/26/09
to mint...@googlegroups.com
சுப்புடு சாரின் ஒரு விமர்சனம் ஞாபகத்துக்கு வந்தது.
 
பாவம் ராஜம் அய்யர்.  இன்று அவருக்குக் காதிலும கம்மல்.  தொண்டையிலும் கம்மல்.
 
பென்னேஸ்வரன்

2009/12/26 shylaja <shyl...@gmail.com>

--
http://www.vadakkuvaasal.com/

N. Kannan

unread,
Dec 27, 2009, 3:54:36 AM12/27/09
to mint...@googlegroups.com
நான் இரண்டு நாள் ஊரிலே இல்லை என்பதற்குள் பூலோக வைகுந்தம் மின்தமிழில்
புறப்பாடாகியிருக்கிறது. நல்ல வேளை கோஷ்டியில் சேர்ந்துவிட்டேன்.

ரங்கன் நமக்கொரு வரப்பிரசாதம். நம் மரபின் சூட்சுமங்களை வெள்ளிடை மலையாக
காட்டும் அவரின் நீர்மை.

அவருக்கு கிரியாஊக்கி போல் செயல்படும் ஷைலஜா *இவரது விஸ்வரூபமும் மலைக்க வைக்கிறது*

அரங்கப்பிரசாதத்தால் இன்று நம்முடன் உறவாடும் இன்னம்புரான்.

இப்படி, இந்த மார்கழி உற்சவம் மின்தமிழில் நடை போடுவது கண்டு உள்ளம்
பூரித்து நிறைகிறது!

நீவீர் வாழ்க!

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages