நம்பிஆரூரர் எனும் நாமமுடன் சிறப்புற வாழ்ந்தார் .
மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில் .........
தந்தையார் சடையனார் இத்தனை சிறப்பாக வளர்த்த நம்பிக்கு
புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும்
ஏற்ப்பாடுகள் செய்யத்தொடங்கினார்
எப்படியெல்லாம் ஏற்பாடுகள் நடைபெற்றது தெரியுமா ?
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப் பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி
பைம்பொன் திண்கால் ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் ஈசனுக்கு இனியான்
மேனி எழில் பெற விளக்கினார்கள்
அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்.
. தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
பான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்
தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான்.
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்
இவ்வாறு மணக்கோலம் பூண்ட நம்பி குதிரை மேல் ஏறி பலரையும் கவரும் வண்ணம்
,மணமகளும் அவர்தம் தோழியரும் மறைந்திருந்து காண
கம்பீரமாக வந்தடைந்தார் .
அப்போதுதான் வந்தார் நடந்தது அந்த எதிர்பாரா திருப்பம் ! இத்திருமணத்தைத் தடுக்க இறைவனே
ஒரு முதிர்அந்தணர் வேடம் பூண்டு .
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க ௦
வந்தவரை அனைவரும் ஆர்வமுடன் நோக்கும் வேளையில் அவர் உரைத்தது
இடியென பாய்ந்தது அனைவர் செவிகளிலும் .
வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்
பின் இந்த வழக்கை முடித்து பின் திருமணம் செய்க என முழங்கினார் !
முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்
ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்
இதைக் கேட்டு அனைவரும் இடி கேட்டாற்போல் மயங்கி நிற்க ,
இடி இடி என ஓங்கிச் சிரித்தார் நம்பி .
ஓலையுடன் வந்த அந்தணர் ,நான் கூறுவது கேட்டு நீ சிரிப்பது ஏன் ?
அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட என வினவ ,
சிரமத்துடன் சிரிப்பை நிறுத்திய நம்பி ,
கோபத்துடன் முதிய அந்தணரை நோக்கி
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்
வந்த அந்தணரோ எதற்கும் அசராத கல்லுளிமங்கன் ஆயிற்றே !
நான் பித்தனோ அல்லது பேயனோ அதைப்பற்றி கவலை இல்லை
நீ இப்போது என் பின் வா என்றழைத்தார் .
பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் அத்தனைக்கு என்னை ஒன்றும்
அப்போதும் அசராத அந்த அந்தணர் மீண்டும் அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை
ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் வந்தவாறிசைவே அன்றோ
வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்
. இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?
ஆயினும் இப்போது கிழித்தது படியோலையே என்றும் மூல ஓலை காட்ட இயலும் என
சபையிடம் அந்தணர் கூறினார் அபயோரும் ஓலை சுருளை பிரித்துப் பார்த்தனர்
இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித்
தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்
59. அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து
பிறகு ஓலையுடன் வந்த அந்தணரே இவன் தந்தை அவன் தந்தை எழுதிய
வேறு எழுத்து இருப்பின் அதை இவ்வோலையுடன் ஒப்புநோக்குக என்றார் .
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்
ஒப்பு நோக்கிய சபையோர் இரண்டும் ஒன்றே என தீர்மானித்தனர் .
நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார்
பிறகு ஊர் சபையார் அந்தணரிடம் இத்தனை காலம் நீர் எங்கிருந்தீர் ?
எங்களில் யாரும் உங்களை அறிந்தில்லையே என வினவ
பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் போலும் என்றுரைத்துச் சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோடு
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்குஉணர்த்தல் உற்றார்
பின்பு இறைவர், நம்பியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை
பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என்
சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை,ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள்
`பித்தாபிறைசூடீ` என திருப்பதிகம் பாடினார்
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
இவ்வரலாற்றை உறுதிபடுத்தும் கல்வெட்டுகள் பல திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர் கோயிலில் இருக்கிறது .
`
ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27)
ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள்
திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான்
உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம்
இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின
கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர
ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)
இன்னும் பல செய்திகள் இந்த ஓலையைப் பற்றிய செய்திளால் யூகிக்க முடிகிறது .
இன்னும் பல ஓலை சுவடி சங்கதிகள் வாரம் ஒன்றாக இறைவன் அருள் இருந்தாலும் படிப்பவரிருந்தாலும் தொடரும் ..
திருச்சிற்றம்பலம் !
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is and why it exists as all !
விஜயராகவன்
இந்த தலைப்பிலேயே ஒரு அம்பிக்விடி - இருசார்மை - இருக்கு.
`கிழிக்கப்பட்ட` என்பது இறைவனையா அல்லது ஓலையை காட்டுகிறதா?
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடிமை ஓலைகள் பற்றிய சேதிகளை முன்பு நான் தொகுத்து வழங்கியுள்ளேன்:
http://www.tamilheritage.org/old/photoarc/olai/olainaya.html
http://www.tamilheritage.org/old/video/moindex.html
கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil