1743 இல் ஐதராபாத் நிஜாம் படையை விரட்டியடித்த தஞ்சை கள்ளர்கள்

2,050 views
Skip to first unread message

Thevan

unread,
Jan 31, 2019, 3:56:42 AM1/31/19
to panbudan, minTamil
1743 இல் ஐதராபாத் நிஜாம் படையை விரட்டியடித்த தஞ்சை கள்ளர்கள்
=====================================

1719-ம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள்
நிஜாம் என்ற பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721
வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த முதலாம்
அசாஃப் ஜா இந்த வம்சத்தை துவங்கினான். 1707-ல் அவுரங்கசீப்பின்
மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை
தனிமன்னராக அறிவித்துக்கொண்டான்.

1743-ம் ஆண்டு ஐதராபாத் நிஜாம் நிஜாம் உல் முல்க் 80,000 குதிரைப்படை
மட்டும் 200000 காலட்படை கொண்டு தென்னகத்தின் மீது படையெடுத்து
வந்தான்.ஒரே நாளில் 18 குறுநில தலைவர்களை வென்று திக்விஜயம் செய்தான்.
இறுதியில் திருச்சியை தாக்கினான். திருச்சி அப்பொழுது மராத்தியரிடம்
இருந்தது.திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்படையுடன் தாக்குதல்
நடத்தி சூரையாடினான்.

திருச்சிராப்பள்ளி கோட்டையை கைப்பற்ற நிசாமின் படை கடுமையான தாக்குதலில்
ஈடுபட்டிருந்தனர்.அந்த சமயத்தில் தஞ்சாவூரிலுள்ள குண்ணம்பட்டி (
புதுக்கோட்டை, தஞ்சை எல்லை)மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள
கள்ளர்கள், நிசாமின் போர்படை பற்றில் இரவு தாக்குதல்களை நடத்தினர்.
கள்ளர்களின் இந்த திடீர் தாக்குதலை எதிர்ப்பாராத நிசாமு படையினர்
நிலைகுலைந்தனர். நிசாம் படையில் இருந்த மாடுகள், ஒரு யானை, 133 குதிரைகள்
மற்றும் 40 ஒட்டகங்களை கொள்ளையடித்து சென்றனர்.

கள்ளர்களின் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்த நிசாம் தனது தளபதியின்
தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி கள்ளர்களை தாக்கினான்.ஆனால்
கள்ளர்களின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிசாம் படை திணறியது.

நிசாம் நினைத்ததை போல் கள்ளர்களை எளிதாக சமாளிக்க இயலவில்லை.
கள்ளர்களிடம் வெற்றி பெற இயலாத நிசாம் படை அவர்களிடம் இருந்து கிடைத்ததை(
குதிரை, ஒட்டகம்) பெற்று கொண்டு, தோல்வியுடன் திரும்பினர். கள்ளர்களின்
இரவு தாக்குதல்கள் தொடர்ந்ததால், நிசாம் மீண்டும் பெரிய படை ஒன்றை
அனுப்பினான். ஆனால் கடைசிவரை கள்ளர்களை நிசாமால் கட்டுக்குள் கொண்டுவர
இயலவில்லை.

ஒரே நாளில் 18 குறுநில தலைவர்களை வென்ற, நிசாமின் பெரும்படையால்
கள்ளர்களை ஒரு தடவை கூட வெல்ல இயலவில்லை என்பது நமக்கு விளங்கும்..

(General history of pudukkottai state 1916 pg 184)
(Letter of madurai mission to rome 1743)

தொகுப்பு :-சியாம் சுந்தர் சம்பட்டியார்
--
51275609_449156472289206_5948745123339698176_n.jpg

nkantan r

unread,
Jan 31, 2019, 4:51:15 AM1/31/19
to மின்தமிழ்
Almost like why imperial Rome empire (east and west) failed against goths though were successful against Greeks.

rnk

Innamburan S.Soundararajan

unread,
Jan 31, 2019, 5:10:56 AM1/31/19
to mintamil
கள்ளர் சமுதாயமும் எங்கள் குடும்பமும் ஒன்றி வாழ்ந்தவை. என் தம்பி தீவிராமான தீக்காயம் பட்டு கிடந்த போது, யாதொரு
 துணையும் இல்லாமல் இருந்த என் அன்னை,, இரவு முழுதும் கள்ளர்கள் அவனுக்கு விசிறிக்கொண்டு இருந்ததை பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பாவனை செய்வ்து அறியாதவர்கள்.கள்ளம், கபடு அற்றவர்கள். துணிச்சலில் அவர்களுக்கு ஈடு கிடையாது.
கிராமம், கிராமமாக, குடும்பம்தோறும் வம்சபரம்பரையாக, ராணுவத்தில் பணி புரிபவர்கள்.
இன்னம்பூரான்

செல்வன்

unread,
Jan 31, 2019, 10:07:47 AM1/31/19
to vallamai, panbudan, minTamil
இந்தியா முழுவதையும் ஆண்ட மவுரியர், சுல்தான்கள் ஆகியோரால் தமிழகத்தை ஆள முடியவில்லை.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும் தமிழகம் தான். விடுதலைபோரில் முன்நின்று அவர்களை விரட்டியதும் தமிழ் மண்தான்.

இன்றைய தலைமுறை சந்திக்கும் சவால்களான குடி, சுற்றுசூழல், ஒபிசிட்டி ஆகியவற்றுக்கும் எதிராக கள்ளர் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களும் போராடவேண்டும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 31, 2019, 11:52:44 AM1/31/19
to mintamil, panbudan
உயிரைத் துச்சமாகக் கருதி வீரத்துடனும் விவேகத்துடனும் நிஜாம் படையை எதிர்கொண்டுள்ளனர்.
நுட்பமாகத் தாக்கும் இவர்களது வழிமுறைகள் குறித்த ஏடுகள் ஏதும் யாரிடமாவது உள்ளனவா? 

அன்பன்
கி.காளைராசன்

-- 

செல்வன்

unread,
Jan 31, 2019, 11:17:23 PM1/31/19
to vall...@googlegroups.com, minTamil, panbudan
மெய்சிலிர்க்க வைக்கும் வீர வரலாறு

On Thu, Jan 31, 2019 at 8:52 PM Thevan <apth...@gmail.com> wrote:
1755 இல் ஆங்கிலேய படையை விரட்டியடித்த நத்தம் கள்ளர்கள்
==============================================

கள்ளர்நாடு நிலப்பிரதேசத்தில் இருந்த கள்ளர் இனக்குழுக் கூட்டத்தினர்
எவ்வித வரியினையும் கட்டாமல் இருந்தனர். இக்கள்ளர் நாடு என்ற அமைப்பு
மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நத்தம் பகுதிகளுக்கு இடைப்பட்ட
நிலமாக 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சுருங்கி போனது. அதற்கு முன் சேலம்
பகுதியில் எல்லாம் கள்ளர்நாடுகள் இருந்தற்கான கல்வெட்டுகள் உள்ளன.

இராசேந்திரன் தன் மகனான சுந்தரசோழன் என்பவனை பாண்டிய நாட்டிற்குத் தலைவன்
ஆக்கினான். இவ்வளவில் கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
எனப்படுகிறான். பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் நத்தம் பகுதியில் பல
மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது.

கிபி 1755ல் பெப்ரவரி மாதம் ஆங்கில தளபதி கர்னல் ஹெரான் மற்றும் நவாப்
தென் தமிழக பாளையக்காரர்களிடம் வரி வசூல் பாக்கியை பெற பெரும்படை கொண்டு
கிளம்பினான். மணப்பாறை பகுதியில் வெற்றிபெற்றதும் கர்னல் ஹெரானிடம்
பொறுப்பை ஒப்படைத்து நவாப் திருச்சிராப்பள்ளி திரும்பினான்.

1752 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆலம்கான், பிரெஞ்சு படை துணைகொண்டு
திருச்சியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த சந்தாசாகிபுக்குத் துணையாய்
சென்றபொழுது மதுரை திருநெல்வேலி நாடுகளை மூன்று பட்டானிய
உத்தியோகஸ்தர்களிடம் விட்டுச் சென்றான். அம்மூவரின் பெயர் மகம்மது
பக்கிரி, மகம்மது மைனாக்கு, நபிகான் கட்டாக்கு என்பன. இவர்களுள்
முதலாமவன் பொதுவாக மியானா என்று சாதிப் பெயரால் வழங்கப்பட்டான்.

மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும், கான் சாகிப்
என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள். இவர்களுடைய வருகையையொட்டி
மியானா அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
கோவில்குடி (திறம்பூர் என்பது அதனுடைய தொண்மையான பெயர், மேலூருக்கும்
மதுரைக்கும் நடுவில்) என்கிற இடத்தில் ஒளிந்து கொள்கிறான். இதனால் கர்னல்
ஹெரானும், கான் சாகிப்பும் கோவில்குடியை நோக்கி செல்கிறார்கள். இதனை
எதிர்பார்த்த மியானா மீண்டும் அங்கிருந்து தப்பி செல்கிறான்.

பின்பு மிகவும் தாமதமாக வந்த கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள
கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய கோவிலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான்.
கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர்களுடன் சண்டையிட்டு, அங்கிருந்த
அனைத்து கள்ளர்களையும் கொன்றுவிட்டு பின்பு கொள்ளையடிக்க தயாராகிறான்
கர்னல் ஹெரான்.

கான் சாகிப்புக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லாமல் கோவிலில் ஏறுவதற்கு
ஏணி மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் மேலும் மியானா இங்கிருந்து தப்பி
சென்றுவிட்டான் எனவும் கூறுகிறான். ஆனால் இதனை ஏற்காத கர்னல் ஹெரான் அந்த
கோவிலின் கோட்டை கதவை வைக்கோல் போரை வைத்து தீயிட்டு எரிக்க
ஆணயிடுகிறான்.

இதனை ஏற்று கான்சாகிப்பும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே
நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரை
மட்டமாக்குகிறார்கள். மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது
சாமி சிலையை எடுக்கிறார்கள்.

இந்த காட்டு மிராண்டித்தனத்தை பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் இராபர்ட்
ஓர்மி,எஸ்.சி ஹிலும், பிரிட்டீஸ் கவுன்சிலும் கடும் கண்டனமும்,
வருத்ததையும் தெரிவிக்கிறார்கள். மேலும் கர்னல் ஹெரான் ஒட்டுமொத்த
மிலிட்டரி விதிமுறைகளை மீறிவிட்டான் எனவும் குறிக்கிறார்கள்.

கொள்ளையடித்த கள்ளர்களின் சாமி சிலையை ஒரு பிரமாணரிடம் 5000 ரூபாய்க்கு
கர்னல் ஹெரான் விற்க முனைகிறான் ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவு அறிந்த
அந்த பிராமணர் ஏற்க மறுக்கிறார். இதனால் அந்த சாமி சிலையை கொள்ளையடித்த
பொருட்களோடு சேர்த்து கட்டுகிறார்கள். அங்கிருந்து மார்ச் 25, 1755 ல்
திருநெல்வேலியை அடைந்து பாளையக்காரர்களிடம் வரி வசூலில் ஈடுபட்டான்.

5 மே, 1755 ல் நெற்கட்டாஞ்சேவலை அடைந்து பூலித்தேவரிடம் வரி வசூல் செய்ய
முயன்றான் ஹரான். அவரது கோட்டை மீது சில மணி நேரம் பீரங்கி தாக்குதல்
நடத்தினான். ஆனால் வெள்ளையரின் ஆயுதபலம் மிகவும் குறைந்திருந்ததை
அறிந்திருந்த பூலித்தேவர் எந்த சலனமும் இன்றி இருந்ததால், ரூபாய்
கொடுத்தால் சென்று விடுகிறோம் என தூது அனுப்பினான் ஹரான். ஆனால்
பூலித்தேவர் ஒரு ரூபாய் கூட தர இயலாது என கூறிவிட்டார். ஹரானின்
படையினருக்கு தேவையான பொருட்கள் முடியும் நிலையில் இருந்ததால், அவர்கள்
அங்கிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.20 மே 1755ல், ஹரானின் படை
மதுரையை அடைந்தது.

மதுரையை அடைந்தவுடன் படையினர் ஒய்வு எடுத்துக்கொண்டனர். ஜமால் சாகிப்
என்பவர் தலைமையில் 1000 சிப்பாய்கள் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட
தயாராயினர். ஆனால் அங்கிருந்து திருச்சிக்கு நேரடியாக செல்லும் பாதை
கள்ளர்கள் வாழும் அபாயகரமான பகுதியாதலால், கேப்டன் ஸ்மித் என்பவர்
தலைமையில் 100 ஐரோப்பியர்கள், 4 கம்பனி சிப்பாய்கள் மதுரையில் இருந்து 20
கிமீ தொலைவில் (நத்தம் கணவாயின் தெற்கு எல்லையில்) உள்ள வெளிச்சி நத்தம்
எனும் கோட்டையை நோக்கி செல்ல திட்டமிட்டனர்.

மதுரைக்கு தனது படைகளுடன் வந்த ஹெரானுக்கு பிரிட்டீஸ் கவுன்சிலிடம்
இருந்து அழைப்பு வருகிறது, அதனால் ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படையும்
திருச்சி நோக்கி செல்லத் தயாராகின்றன.

ஆனால் கிளம்புவதற்கு முன்பாக பிரிட்டீஸ் உளவுத்துறையிடம் இருந்து கர்னல்
ஹெரானுக்கும் அவரது படைகளுக்கும் ஒரு தகவல் வந்தது. மிகவும் ஆபத்தான
நத்தம் கணவாயை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது.

ஹெரானுக்கு முன் மதுரை கமாண்டோ சார்ஜன்ட் கௌல்ட் (Sergeant gould)
என்பவர் தலைமையில் சென்ற சிப்பாய்கள் அனைவரும் கள்ளர்களால் நத்தம்
பகுதியில் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற அனைவரையும் கள்ளர் படைகள் ஊசிமுனை
அளவு கூட ஈவு இரக்கமின்றி குத்தி சரித்து விடுகிறார்கள்.

இதன் மூலமாக கர்னல் ஹெரானையும் அவரது படைகளையும் பழிக்கு பழியாக இரத்த
ருசி காண்பதற்கும் இழந்த தங்களுடைய சாமி சிலையை மீட்பதற்கும் கள்ளர்
படைகள் நத்தம் கணவாயில் தாயராக இருப்பதாக பிரிட்டீஸ் உளவுத் துறை தகவல்
அளிக்கிறது.

இந்த அதிர்ச்சி தகவலால் கர்னல் ஹெரான் மிகவும் நுணுக்கமாகவும்,
தந்திரமாகவும் தனது படையை நான்கு பாகமாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கு
ஒரு கேப்டன் தலைமை கொண்டு வழி நடத்த ஆணையிடுகிறார்.

(Joseph smith' account of expedition: orme mss india III 608-612:
கள்ளர்களின் தாக்குதலை நேரில் கண்ட கேப்டன் ஜோசப் ஸ்மித் குறிப்புகளில்
இருந்து)
28 May 1755 ல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலப்படை மதுரையில் இருந்து
புறப்பட்டது. காலை 5 மணிக்கு புறப்பட தயாரான வெள்ளையர் படை, பல அணிகளாக
பிரிந்து சென்றனர். முதலில் கேப்டன் லின் தலைமையிலான அணி, எந்த
பிரச்சனையும் இன்றி நத்தம் கணவாயை கடந்து நத்தம் நகரத்தை அடைந்தனர்.

இதன் பின் (Captain polier) கேப்டன் போலியர் தலைமையில் கம்பனி
சிப்பாய்கள், சார்ஜன்ட்கள், ஐரோப்பியர்கள் மற்றும் 12 பேர் அடங்கிய அணி
நத்தம் கணவாயில் பயணத்தை தொடங்கியது. இவர்களை பின் தொடர்ந்து ராணுவ
தளவாடங்கள் கொண்ட வண்டி, 20 ஐரோப்பியர்கள், 2 கம்பனி சிப்பாய்கள்
வந்தனர். இதனை தொடர்ந்து மாபூஸ் கானின் யானைகள் மற்றும் ஒட்டகங்கள்
தொடர்ந்தன.

இதனை தொடர்ந்து 6 ராட்சத பீரங்கிகள், 20 ஐரோப்பியர்கள், 200 சிப்பாய்கள்
மற்றும் கம்பனி படைகள் கேப்டன் ஸ்மித் தலைமையில் வந்தது. ஹரான் முன்னாள்
படைகளை வழிநடத்தி சென்றுகொண்டு இருந்தார். கணவாய் பகுதியில் கள்ளர்களை
எதிர்நோக்கி சென்றது படை.
முதலில் சென்ற இராணுவ பிரிவு தாங்கள் எந்த தாக்குதலுக்கும் ஆளாகவில்லை,
இங்கு கள்ளர்களின் நடமாட்டம் இல்லை என தகவல் அளிக்கிறார்.

அனைத்தும் பாதுகாப்பாக செல்கிறது என அனைவரும் மகிழ்ச்சியோடு சென்று
கொண்டிருந்தனர். ஆனால் இதை அனைத்தையும் வழித்தடத்தின் இருபுறத்திலும்
கள்ளர்கள் தங்களுடைய உளவுபடை உளவாளிகள் மூலம் அத்தனை நிகழ்வையும்
அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்து தகவல் கொடுத்து கொண்டிருந்தனர்.
கள்ளர்கள் உளவாளிகள் மூலம் அனைத்து சம்பவங்களையும் கண்காணித்து வந்தனர்.
தாக்குதலை தொடுக்க உரிய நேரத்திற்காக காத்திருந்தனர்.

இவ்வளவு பெரிய ஆங்கிலப்படைகளை தனிமை படுத்துவதற்காக கள்ளர்கள்
வழித்தடத்தில் மரங்கள வெட்டி 30 பேர் வரிசையாக செல்லும் வழியை 10
பேர்களுக்கும் குறைவாக செல்லும் அளவு பாதையை சுருக்குகிறார்கள்.
சரியாக கேப்டன் ஜோசப்பின் பீரங்கி படையுடன் வந்த சாமி சிலை பிரிவை
கள்ளர்கள் வெட்டி வைத்த புதைகுழியில், போர் கருவிகளை கொண்டு சென்ற ஒரு
வண்டியின் சக்கரம் குழியில் இறங்கி சிக்கி கொண்டது. தளபதி முன்னாள் சென்ற
வண்டிகளை நிறுத்தவில்லை. அந்த வண்டியை பின்தொடர்ந்த வண்டிகள் அனைத்தும்
நின்றது.

முன்னாள் சென்ற வண்டிகளுக்கும், பின்னால் குழியில் மாட்டியிருந்த ராணுவ
தளவாட வண்டிக்கும் இடையேயான தூரம் 2 மைல்களை அடைந்தவுடன், பின்னால்
இருந்த ராணுவ படையை நோக்கி கள்ளர்கள் தாக்க தயாரானார்கள்.

கள்ளர்களை கண்டவுடன் படையினர் சுடத்தொடங்கினர். கள்ளர்கள் தற்காலிகமாக
பின்வாங்கினர்.சிறிது நேரம் அமைதி நிலவியது. அவர்கள் திரும்பி
வரமாட்டார்கள் என எண்ணிக்கொண்டிருந்த போது, பெரும் எண்ணிக்கையிலான
கள்ளர்கள் அபாயகரமான சத்தம் எழுப்பிக்கொண்டு மற்றொரு புறத்தில் இருந்து
தாக்க தொடங்கினர். இதனால் பின்னால் வந்த அனைத்து படையும் ஒரே இடத்தில்
தப்பித்து ஓட முடியாதவாறு தேங்குகிறது.

ஆங்கிலபடைகள் என்ன செய்வதன்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த
நேரத்தில் திடீரென கள்ளர் படைகள் தங்களுடைய ஆயுதங்களுடன் (வளரி, வில்
அம்பு, 18 அடி ஈட்டி, நாட்டு துப்பாக்கிகள்) பயன்படுத்தி ஒருவிதமான வினோத
சத்தம் எழுப்பி நான்கு பக்கமும் திரண்டு தாக்குதல் நடத்துகிறார்கள்.

கேப்டன் ஜோசப் படைகள் பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களுடன் எதிர் தாக்குதல்
நடத்துகிறார்கள். ஐரோப்பிய வீரர்கள் திக்குமுக்காடினர். கள்ளர்களின்
கையில் நவீன ஆயுதங்கள் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டும் என எண்ணினர்.
ஐரோப்பிய சிப்பாய்கள் சிறிய ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர்.
கள்ளர்களும் தொடர்ந்து தாக்கினர்.

ஆனால் திடீரனெ கள்ளர் படைகள் அனைத்தும் காட்டுக்குள் மறைந்து விடுகிறது.
ஆங்கிலபடைகளால் அவர்களையோ, அவர்கள் சென்ற இடத்தையோ கண்டுபிடிக்க
இயலவில்லை.
இந்த முதல் தாக்குதலில் கேப்டன் ஜோசப் மற்றும் ஆங்கிலப்படைகள் இரத்தம்
உறையும் அளவிற்கு பயந்து நடுங்கி ஆயுதங்களுடன் நிற்கின்றனர். சற்று
நேரத்தில் மீண்டும் நான்கு பக்கமும் கள்ளர் படை சூழ்ந்து மிகவும்
உக்கிரமாக தாக்குதலை தொடர்ந்து பல பிரிட்டீஸ் வீரர்களை கொன்று குவித்து
முன்னேருகின்றனர்.

சிறிது நேரத்தில் கள்ளர்கள் காட்டுக்குள் பின்வாங்கி அங்கிருந்து
தாக்குதல் நடத்தினர். பிறகு அங்கிருந்து முன்னேறி ராணுவ தளவாடங்கள்
இருக்கும் பகுதியை நோக்கி வந்தனர்.

கள்ளர்கள் (Arrows, matchlocks, spikes, javelines,, rockets) அம்புகள்,
துப்பாக்கி, வேல் கம்பு, ராக்கெட் முதலிய ஆயுதங்களை கொண்டு
தாக்கினர்.கள்ளர்களின் மீது செய்யப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் அதே
அளவு வீரியத்துடன் அபாயகரமாக சத்தம் எழுப்பிக்கொண்டு பதிலடி கொடுத்தனர்.

தாக்குதலில் சாமி சிலையை வைத்திருந்த பெரிய பீரங்கியை சுற்றி இருந்த
அனைவரையும் கள்ளர் படை தங்களது ஈட்டியால் குத்தி சரிக்கிறார்கள். அவற்றை
பாதுகாத்து நின்ற சிப்பாய்களை தங்களது ஈட்டி மூலம் பலியிட்டனர்.
பீரங்கிகள் இருந்து பகுதியை அடைந்து எதையோ தேடினர். பின்னால் இருந்து
மற்றொரு படை கள்ளர்களை தாக்கியது. ஆனாலும் கள்ளர்கள் பெரும்
எண்ணிக்கையில் திரண்டு தாக்கினர்.

ராணுவ தளவாடங்கள் இருந்த பகுதியில் கள்ளர்கள் எதையோ தேடத்தொடங்கினர்.
ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். சிறுது நேரத்தில் கள்ளர்களின் குரல்
ஒருங்கிணைந்து ஒரே சொல்லை ஒலிக்க ஆரம்பித்தது. ஆம், " சாமி, சாமி, சாமி"
என ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். அவர்கள் தேடி வந்தது கோயில்குடியில்
ஹரானால் திருடப்பட்ட சாமி சிலைகள்.

கள்ளர்களில் சிலர் அங்கிருந்த வண்டியில் இருந்த மூட்டைகளை எடுத்து
திறந்து பார்த்தனர். அதில் ஒரு மூட்டையில் சுவாமி சிலைகள் இருந்தது.சாமி
சிலைகள் கிடைத்த பின்பு அவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகள் திரும்ப
கிடைத்தால் வரும் மகிழ்ச்சியைவிட அதிகம் சந்தோசம் அடைந்தனர்.

சாமி சிலைகளை மீட்ட பின்பும் பல மணி நேரம் தொடர் தாக்குதல்கள்
கள்ளர்களால் நடத்தப்பட்டது. கேப்டன் ஸ்மித் உதவி கோரி அனுப்பிய உளவாளிகள்
யாரும் திரும்பவில்லை, எந்த படை உதவியும் கிடைக்கவில்லை. போராட்டம்
தொடர்ந்தது.

மாலை 4 மணி அளவில் கள்ளர்கள் தாக்குதல் குறைந்தது. ஆனால் சற்று நேரத்தில்
படையினர் மற்றும் கூலிகளை நோக்கி பாய்ந்தனர் கள்ளர்கள். கையில் சிக்கிய
அனைவரையும் கொன்று தீர்த்தனர்.வெள்ளைய தளபதிகளின் குடும்பத்தினர் உறவினர்
என அனைவரும் அலறியடித்து ஒடினர். சிப்பாய்களில் வெறும் 30 பேர் மட்டுமே
உயிர்தப்பினர்.
கேப்டன் ஸ்மித், கணவாயில் இருந்து பின்வாங்கி காட்டுப்பகுதியில் இருந்து
பின்வாங்கி சமவெளி பகுதிக்கு படையினரை அழைத்து வந்தார். இதன் பிறகு
கள்ளர்களின் தாக்குதல் ஒய்ந்தது.

இரவு நேரம் நெருங்கியதால், முடிந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை
அங்கேயே விட்டுவிட்டு வேகமாக ஒடினர் ஆங்கிலேயர்கள். முன்னாள் சென்றிருந்த
படைப்பிரிவினருடன் இணைந்து ஸ்மித் தலைமையில் படையினர் வேகமாக நகர்ந்தனர்.
கடுமையான சூரிய வெப்பத்தால் வெள்ளையர்கள் சோர்ந்திருந்தனர்.

அடுத்த நாள் காலை கள்ளர் படை தாக்குதலில் எஞ்சியிருந்த சில வீரர்களுடன்
கேப்டன் ஜோசப்பும், கர்னல் ஹெரானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு
நத்தம் டவுனுக்கு வருகிறார்கள் நத்தம் நகரத்தை அடைந்து அங்கிருந்து
திருச்சி நோக்கி தப்பினோம் பிழைத்தோம் என ஒடினார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரிட்டீஸ் கவுன்சில் நத்தம் கணவாயை ஆபத்து
பகுதியாக அறிவித்து அந்த வழியாக செல்லும் போது அனைத்து படைகளும் மிகவும்
கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கிறது.

இந்த சம்பவத்தை அனைத்து பிரிட்டீஸ் ஆய்வாளர்களும் தங்களது புத்தகத்தில்
ஆவணப்படுத்தியுள்ளனர். கர்னல் ஹெரான் இருந்த வரை பிரிட்டிஸ்
படைகளும்,கள்ளர் படைகளும் மாறி மாறி இழப்பை சந்தித்தது.

(orme millitary transactions in hindoostan vol 1 :p(390-394)
(Yusuf khan the rebel commendant p 41-43)

நன்றி .

திரு . சியம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சோழ பாண்டியன்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2019, 11:34:57 PM1/31/19
to vallamai, minTamil, panbudan
அமெரிக்கவரலாறுபோல் மிகவும் விலாவாரியாக இருக்கு

வியா., 31 ஜன., 2019, பிற்பகல் 8:17 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 1, 2019, 1:48:42 AM2/1/19
to mintamil, vallamai
அரியதொரு வரலாற்றுத் தகவல்.
இதன்படிப் பார்த்தால் 28 மே 1755 ல்  நத்தம் கள்ளர்கள் தாக்குதலுக்கு ராக்கெட் (Rocket) பயன்படுத்தியுள்ளனர் என்ற செய்தி வியப்பாக உள்ளது.

நன்றி
அன்பன்
கி.காளைராசன்

Thevan

unread,
Feb 2, 2019, 1:38:53 AM2/2/19
to panbudan, minTamil
திருமோகூர் (கோயில்குடி)
=======================

"நத்தம்" கள்ளர் படைப்பற்று மூலமாக கோயில் சிலையை மீட்டதை பார்த்தோம்.
அந்த கோயிலின் இறைவன் யார், அந்த கோயிலில் கள்ளர்களுக்கான மரியாதை என்ன
என்று பார்ப்போமயானால்...

திருமோகூர் (கோயில்குடி) மதுரை மாநகருக்கு வடக்கே ஏழு, எட்டுக் கல்
தொலைவிலுள்ளது. மதுரை- மேலுனர் நெடுஞ்சாலை வழியே ஒற்றைக்கடைவரை சென்று,
அதன் பிறகு கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்று இவ்வூரை அடைதல் வேண்டும்.

அசுரர்களை ஏமாந்த சோணகிரிகளாக்க எடுக்கப்பெற்றதே மோகனாவதாரம். இந்த
அவதாரம் எழுந்த தலமே மோகனுர்; அதுவே மோகூர்’ எனக் குறுகி திரு' என்ற
அடையுடன் சேர்ந்து 'திருமோகூர்' என்றாயிற்று என்பதாக அறிகின்றோம்.

இந்த திவ்விய தேசத்தைத் திருமங்கை யாழ்வாரும் நாம்மாழ்வாரும்
மங்களாசாசனம் செய்துள்ளனர். சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர்’ என்பது
சிறிய திருமடல். நம்மாழ்வார் ஒரு திருவாய் மொழியால் (பதிகத்தால்)
மங்களசாசனம் செய்துள்ளார். மருத நிலப் பகுதியைச் சார்ந்த இவ்வூர்
நீர்வளம், நிலவளம் மிக்கதாகத் திகழ்கின்றது.

ஆழ்வார் காலத்தில் நான் மறைகளை நன்கறிந்தவர்களும், அவற்றை
அநுட்டிப்பவர்களும் ஆன வைதிகர்கள் வாழும் இடமாக இருந்த்து.

திருக்கோயிலைச் சுற்றி நீண்டு உயர்ந்த மதில் அமைந்துள்ளது. மதிலுக்கு
வெளியே புஷ்கரிணி உள்ளது.

கிழக்கு நோக்கிய திருவாயிலை உடையது. வாயிலைத் தாண்டியதும் நாம் வந்தடைவது
கம்பத்தடி மண்டபம். இந்த மண்டபத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி
செய்த மருது பாண்டியர்கள் சின்னமருது, பெரிய மருது இவர்களின் சிலைகள்
இருப்பதைக் அடுத்த வாயிலைக் கடத்து கருட மண்டபம்’ என வழங்கும் ஒரு
மண்டபமும். அங்குக் கண்கவர் வனப்புடைய மூன்று தான்கு நல்ல சிலைவடிவங்கள்
தூண்களை அணி செய்வதையும் காண்கின்றோம். ஒரு தூணில் மிதிலைச் செல்வியை
அனைத்தவண்ணம் உள்ள கோதண்டராமன் சிலையும், அதனையடுத்து இன்னொரு துணில்
இலக்குவன் சிலையும் காணப்பெறு கின்றன. இச்சிலைகளைத் தவிர காமவேளின்
சிலையும் இரதிதேவியின் சிலையும் உள்ளன. இந்தச் சிலைகளுக்கிடையில் பெரிய
திருவடி ஒரு சிறிய கோயிலில் நின்று காட்சி தருகின்றார். மகா மண்டபத்தைக்
கடந்து அர்த்த மண்டபத்திற்கு வந்து, அங்கிருந்து பார்த்தாலே கிழக்கே
திருமுக மண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் பெரிய பிராட்டியார், பூமிப்
பிராட்டியார் என்ற இருவருடன் மூலவர் காளதேகப் பெருமாள் சேவை
சாதிக்கின்றதைக் காணலாம்.

தாயாரின் திருநாமம் மோகனவல்லி, இவர் திருமோகூர் வல்லி நாச்சியார்',
மேகவல்லி நாச்சியார்' என்ற திருநாமங்களாலும் வழங்கப் பெறுகின்றார்.

மதுரைக் காஞ்சி பழையன் என்ற குறுநில மன்னன் திருமோகூரை ஆண்டதாகக்
குறிப்பிடுகின்றது. பழையனுடைய நியாயசபையில் கோசர் என்ற வீரர்கள்
இருந்தனர்.

மோரியர் வடுகரை முன்னர் அனுப்பி அவர்களைத் தொடர்ந்து தென்னாட்டின் மீது
படையெடுத்து வந்தபொழுது பழையன் அவர்கட்குப் பணியாமல் கோசரின் துணையால்
அவர் ஆலம்பலத்தில் வென்றதாக அகநானூறு பேசும். இதனால் மெளரியர்
காலத்துக்கு முன்ன தாகவே மோகூர் பழம் பெருமையுடன் சிறப்புற்றிருந்தது
என்பதை அறிகின்றோம்.

கள்ளர்களின் பட்டங்களான கூசர், மொரியர் பட்டங்கள் இதனுடன் தொடர்புடையதக
இருக்க வேண்டும்.

இத்திருக்கோயிலில் இடைக்காலக் கல்வெட்டுகள் நிறைய உள்ளன. இத் திவ்விய
தலத்தில் பழையனின் பலத்த கோட்டையும் இருந்ததாகச் சான்றுகள் உள்ளன.
திருமோகூர் தென்பறம்பு நாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்ந்திருந்த தையும்
அறிக்கின்றோம்.

கோயில்குடி, திரும்பூர் என்றெல்லாம் வழங்கியிருப்பதையும் அறிகின்றோம்.

கோயிலின் பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்த கள்ளர் குலமக்கள், ஆங்கிலேயன்
ஹெரானை விரட்டியடித்து அவர்கள் கைப்பற்றிய பொன், பொருள், இறைவன் திருமேனி
முதலியவற்றை கடும் யுத்தத்தின் மூலம் மீட்டு வந்து சேர்த்தனர். இதற்காக
திருமோகூர் கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர்களின் ஆறு பிரிவுக்
கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.

1.திருமோகூர்
2.பூலாம்பட்டி
3.கொடிக்குளம்
4.சிட்டம்பட்டி
5.வௌவ்வால் தோட்டம்
6.ஆளில்லாங்கரை
ஆகியவையாகும்

முதல் ஐந்து கிராம கள்ளர்களும் ஆறாவது கரைக்குரிய மரியாதையை ஆளுக்கொரு
ஆண்டாக பகிர்ந்து கொள்வர், தவிரவும் ஆண்டுதோறும் நடைபெறும்
கஜேந்திரமோட்சம் திருவிழாவிற்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு
திருமோகூர் காளமேகப்பெருமாள் சாமி வரும்போது கொள்ளையடிக்கப்பட்ட
விக்கிரகங்களை கள்ளர்கள் மீட்ட செயலுக்கான மரியாதையாக இன்றுவரை இறைவன்
கள்ளர் வேடம் புனைந்து வருகின்றார்.

அழகர்கோயில் , திருமோகூர் ஆகிய இரண்டு கோயில்களிலும் திருமால்
“கள்ளர்”வேடமிட்டு வந்தாலும் அழகர்கோயில் கள்ளர்வேடமே காலத்தால்
முந்தையதாக இருக்க வேண்டும் என ஆங்கிலேயர் ஆவணக் குறிப்புகள் கூறுகின்றன.

நன்றி :
திரு வழக்கறிஞர் சிவ.கலைமணி அம்பலம், மேலூர்
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

Thevan

unread,
Feb 2, 2019, 1:39:03 AM2/2/19
to panbudan, minTamil
1.jpg
10.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 2, 2019, 7:04:54 AM2/2/19
to mintamil, panbudan

Thevan

unread,
Feb 8, 2019, 4:21:25 PM2/8/19
to panbudan, minTamil
கள்ளர் குல வரலாறு
5 mins ·
சோழ தேசத்தை காப்பாற்ற,
ஐதர் சேனையை தலையோட வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான் ராஜா ஸ்ரீ ராய ரகுநாத
தொண்டைமான்

(பொ. ஆ. 1769 - 1789)
==================================================================

தொண்டைமான் மன்னரான ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான் 1769 டிசம்பர் 28
முதல் 1789 டிசம்பர் 30 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார்.
இவர் 1738ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். தந்தையார் முதலாம் விஜய ரகுநாத
ராய தொண்டைமான் மன்னராவார். தாயார் ராணி நல்லகட்டி ஆயி சாஹிப். இந்த
தம்பதியினருக்கு இவர் மட்டுமே ஒரே புதல்வர். இவரும் அவர்கள் குடும்ப
வழக்கப்படி வீட்டிலேயே தனி ஆசிரியரை அமர்த்திக் கல்வி கற்றவர்.

ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1769 டிசம்பர் 28இல் காலமான போது இவர்
ஆட்சிக்கு வந்தார்.

ராய ரகுநாத தொண்டைமானும், தனது தந்தையைப் போல 20 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார்.

இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார்.

இவரது ஆட்சியில் தான் முத்துகுமரப் பிள்ளை, வெங்கப்ப அய்யர் ஆகியோர்
திறமைவாய்ந்த அமைச்சர்களாக இருந்தனர்.

ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு பதினொரு ராணிகள். இவருக்கு ஒரேயொரு
மகள் மட்டும் இருந்தார். அவர் பெயர் ராஜகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆயி
சாஹேப்.

தொண்டைமான் 1770 முதல் 1773 வரை அளித்த படை உதவிக்காக புதுக்கோட்டை படை
வீரர்களின் செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்த நவாப், அந்த
பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் அதற்கு ஈடாக பட்டுக்கோட்டையின்
ஒருபகுதியான 142 கிராமங்களை உள்ளடக்கி தொண்டைமானுக்கு அளித்தார். இந்த
பகுதியில் இருந்து 53,000 சக்கரம் (அன்றைய செலவாணி பணம்) கிடைத்தது.
இதுவரை தேவைப்பட்ட படை செலவிற்காகவும், இனிவரும் காலங்களில் படை உதவி
அளிப்பதற்காகவும் இப்பகுதியை அளித்ததாக ஒப்பந்தம் உருவானது. இப்பகுதியை
1773 இல் ஆங்கிலேய கம்பெனி துல்ஸாஜியைத் தஞ்சை மன்னராக மீண்டும்
அமர்த்தியபோது தொண்டைமான் தஞ்சைக்கே இப்பகுதியை மீண்டும் வழங்கினார்.
.

#ஐதர் அலியுடன் போர்:-
.

1750களில் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கிருஷ்ணராஜா, தனது
படையில் ஓரு போர் வீரராக இருந்து தளபதியாக உயர்ந்த ஐதர்அலிக்கு தனது
ஆட்சிக்கு கீழிருந்த திண்டுக்கல் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை
தந்தார். ஐதர்அலிக்கு தானே அரசரானால் என்கிற சிந்தனை வர, படை வீரர்களை
தனக்கு சாதகமாக்கி 1762 ல் அரசை கைப்பற்றி மன்னராக அமர்ந்தான்.

மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை
பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான்.
ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு
அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில்
ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி
எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின்
மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு
வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை
நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சுகாரர்கள் தலைமையில் பெரும்
கூட்டணியை உருவாக்க எண்ணினான் ஐதர் அலி.

கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய
ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான்.

தமிழகத்தில் நுழையும் முன் மலபாரின் கோயில்களை இடித்து தள்ளி, ஊரை
எரித்து, அனைவரையும் மதம் மாற்றி, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக
அழைத்து செல்கின்றான், நூற்றுக்கணக்கான மக்கள் கொள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் நுழைந்து கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டு
முன்னேறுகிறான்.

அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான்.
நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன் இணைய
வலியுறுத்தினான். தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரும் ஐதரின்
பக்கம் சென்றனர். தஞ்சை மன்னர் ஐதருடன் சேரும் பேச்சுவார்த்தையில்
இருந்தார். தஞ்சை மன்னர் எந்த முடிவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி
வந்தார். புதுக்கோட்டை அரசர் ராய ரகுநாத தொண்டைமான் நவாப் மற்றும்
ஆங்கிலேயர் பக்கம் இருந்தார். தமிழகத்தின் மற்ற ஏனைய பாளையக்காரர்கள்
ப்ரெஞ்சு கூட்டணியில் ஐதருக்கு ஆதரவாக இருந்தனர். தனது பக்கம் வரும்படி
ஐதர் அலி அனுப்பிய தூதுகளை மறுத்து தொடர்ந்து ஆங்கிலேயர் பக்கம்
இருந்தார் தொண்டைமான்.

(General history of pudukkottai state 1916 R.aiyar page 262-263)
.

#தஞ்சையை சூரையாடிய ஐதர் அலி :-
.

மே மாதம் 1781, ஐதர் அலி தன் பக்கம் சேராத தஞ்சையை தாக்கினான்.23 ஜூலை
1781 அன்று தஞ்சையின் கோட்டை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் ஐதர்
கைப்பற்றினான். தஞ்சையின் மற்ற அனைத்து கோட்டைகளையும் கைப்பற்றி தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். தஞ்சையில் இருந்து கால்நடைகள்
கடத்தப்பட்டன. விவசாய நிலங்கள் கொளுத்தப்பட்டது. கிராமங்கள்
தீக்கிறையாயின.குளங்கள் மற்றும் ஏரிகள் உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு
ஏற்படுத்தப்பட்டது. கிணறுகளில் மனித பிணங்களே மிதந்தன. ஆயிரக்கணக்கான
சிறுவர்கள் அடிமைகளாக மைசூருக்கு இழுத்துசெல்லப்பட்டனர். கோயில்கள்
அடித்து நொறுக்கப்பட்டு, பழமையான தெய்வ சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தஞ்சையில் வசித்து வந்த பாதிரியார் சுவார்ச் தனது
குறிப்பில் :- வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், கோயில்கள்
சூரையாடப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள் (7-8 வயது) மைசூருக்கு
கடத்தப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் தஞ்சை வீதிகளில்
சுற்றி வருவதாகவும், பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பல ஏரிகளும்
அணைகளும் உடைக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாழாகி போனதாக எழுதியுள்ளார்.

ஐதரால் மைசூருக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இஸ்லாமியராக
மதமாற்றம் செய்யப்பட்டு, அனைவரையும் தனது பணியாளராக மாற்றினான். விவசாயம்
பல ஆண்டுகள் தடைப்பட்டது. வறட்சியால் வீதிகளில் தினமும் மக்கள் மடிந்து
விழுந்தனர். பிணங்களை அகற்றி மொத்தமாக எரிக்க ஊழியர்கள்
நியமிக்கப்பட்டனர். மக்கள் பசியால் கண்ணீர் விட்டனர். ஒரு சமயம் 1200
பேர் எலும்புக்கூடுகளை போல் நிற்க கூட முடியாமல் உணவுக்காக கையேந்தி
நின்றுக்கொண்டு இருந்ததாகவும், பசியால் வீதிகளில் இறந்து கிடந்தவர்களின்
உடல்களை நாய்களும், பறவைகளும் தின்றதாகவும், அவர்களுக்கு உதவ சென்ற
கிறிஸ்தவ மிசனரி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

(The history of christian missions 1864 p147-148)

(General history of pudukkottai state 1916 R.aiyar page 264-265)

ஐதர் அலியிடம் இருந்து புதுக்கோட்டை மக்களின் உயிரை காத்த தொண்டைமான் :-

தஞ்சை மீது படையெடுத்து வந்த ஹைதரலி சேனையுடன் எதிர்த்து போர் புரிந்த
ஆங்கிலேய அரசுக்கு தேவையான படை உதவிகளை தொண்டைமான் செய்ததால்
ஆத்திரமடைந்த ஐதர் அலி படைகள் புதுக்கோட்டை மீது தாக்குதல் தொடுத்தனர்.
.

#ஐதர் படையின் முதல் தாக்குதல்:-
.

கிபி 1781 ல் , ஐதர் அலியின் பெரும்படை தனது எதிரணியில் உள்ள
புதுக்கோட்டை தொண்டைமானை அழிக்க புறப்பட்டது. புதுக்கோட்டை எல்லையில்
இருந்த ஆதனக்கோட்டை எனும் ஊரின் வழியே ஐதர் அலி படையின் ஒரு பிரிவு
தாக்கியது. ராய ரகுநாத தொண்டைமான் தனது தளபதி சர்தார் மண்ண வேளார்
தலைமையில் படையை அனுப்பி, ஐதரின் படைகளை ஆதனக்கோட்டையில் எதிர்க்கொண்டு
விரட்டி அடித்தனர். பல நூறு ஐதர் குதிரை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
(சர்தார் மண்ணவேளார் வம்சாவளிகள் இன்றும் வைத்தூர் அம்மன் கோயிலில் முதல்
மரியாதை பெறுகின்றனர். இவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர்களுடன் மண உறவில்
இணைந்தவர்கள்). இந்த சமயத்தில் ஐதர் அலியின் கைகளில் சிக்கியுள்ள
கீழாநிலைக்கோட்டையை மீட்கும்படி தஞ்சை மன்னர் தொண்டைமானுக்கு கடிதம்
எழுதினார். ஐதருக்கு ஆதரவாக மருங்காபுரி பாளையக்காரனான பூச்சி
நாயக்கனும், நத்தம் பாளையகாரன் லிங்க நாயக்கன் புதுக்கோட்டையில்
தாக்குதல் நடத்தினர். தொண்டைமான் இவ்விரு பாளையக்காரர்களையும் விரட்டி
அடித்தார். புதுக்கோட்டை தொண்டைமானின் ஏறுமுகத்தை அறிந்த தஞ்சையை சார்ந்த
அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் தொண்டைமானிடம் தஞ்சம்
அடைந்தனர்.

#ஐதர் படையின் இரண்டாம் தாக்குதல் :-
.

ஐதர் அலியின் மற்றொரு படைப்பிரிவு புதுக்கோட்டை - திருச்சி எல்லையில்
உள்ள மல்லம்பட்டி, எனும் பகுதியின் வழியாக புதுக்கோட்டையை தாக்கினர்.ராய
ரகுநாத தொண்டைமான் தானே நேரடியாக களத்தில் இறங்கினார்.ஐதர் அலியின்
வீரர்களின் தலைகளை கொய்தார்.

தொண்டைமானின் வீரத்தை பாடும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் நூல்

" மலம்பட்டி வாடியிலே வந்த ஐதர் சேனையை தலையோட

வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான்"

என இந்நிகழ்வை குறிப்பிடுகிறது.

ஐதர் படையின் மூன்றாம் தாக்குதல் :-

ஐதரின் தளபதி ஒருவனை, ஒற்றைக்குதிரைக்காரன் என மக்கள்
குறிப்பிட்டுள்ளனர். அவனும் மற்றொரு பகுதி வழியாக தாக்குதல்
நடத்தியுள்ளான். அவனது தாக்குதலை தவிர்க்க எண்ணிய பேராம்பூர் மக்கள், ஒரு
ஏரியில் உடைப்பை ஏற்படுத்தினர். உடைப்பினால் ஏற்பட்ட வாயக்கால் இன்றும்
ஐதர் வாயக்கால் என அழைக்கப்படுகிறது.

இந்த ஒற்றைக்குதிரைக்காரன் புதுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்தினான்.
இந்த போர் நிகழ்ச்சிகளை பற்றி அம்புநாட்டு வளந்தான் மற்றும் வெங்கண்ண
சேர்வைக்காரர் வளந்தான் எனும் இரு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி தன் நாட்டில் புகுந்து சூரையாட தொடங்கிய ஒற்றைக்குதிரைக்காரனை
தொண்டைமான் விரட்டி அடித்து, விராலிமலை பகுதியில் ஒரு அடர்ந்த
காட்டுப்பகுதியின் நடுவில் வைத்து கொன்றுள்ளார்.

" மஸ்தகம் பதித்ததொரு விராலிமலை தன்னில்

ஒற்றைக்குதிரைக்காரன் ஒருமையாக வந்தவனை

பற்றித் துரத்திவெட்டும் பகதூர் தொண்டைமான்"

என தொண்டைமானின் வீரத்தை புகழ்கிறது. தேசத்தில் இருந்த தாய்மார்கள்
தங்களது பிள்ளைகளை சாப்பிட வைக்க ஒற்றைக்குதிரைக்காரனிடம் பிடித்து
கொடுத்து விடுவேன் என மிரட்டும் பழக்கம் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரை
இருந்துள்ளதை புதுக்கோட்டை வரலாறு எழுதிய ராதாகிருஷ்ண ஐயர் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.

திருக்காட்டுப்பள்ளியை தொண்டைமான் கள்ளர் படை மீட்டல்:-
.

கிபி 1781, ஜூலை மாதம், ஐதர் அலியின் மகனான திப்புவுக்கு, ஒற்றர்கள்
மூலம் தகவல் வந்தது. தொண்டைமானின் படைகள் தஞ்சையில் இருந்த சிறுபடையோடு
திருக்காட்டுப்பள்ளியை மீட்க வருவதே அந்த தகவல். சையது சாகிப் எனும்
ஐதரின் தளபதி தாக்குதலை சமாளிக்க தயாரானார்கள். ஆனாலும் தொண்டைமான்
படைகளால் ஐதரின் படை விரட்டப்பட்டு , திருக்காட்டுப்பள்ளி மீட்கப்பட்டது.
இந்த வெற்றியை குறிப்பிடும் ஆங்கில ஆவணம் , " The officer commanding the
troops had frequently been shamefully defeated by kullars of tondaiman
and regular cavalry of tanjore " என விளக்கியுள்ளது.

(General history of pudukkottai state 1916 R.aiyar page 267)
.

#மன்னார்குடியை மீட்ட தொண்டைமான்:-
.

பட்டுக்க்கோட்டை, தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை ஆகிய பகுதிகள் ஐதரின் வசம்
தொடர்ந்து இருந்தது. கிபி 1781, செப்டம்பர் மாதம், தொண்டைமான் படைகள்
மன்னார்குடியில் இருந்து ஐதரின் படைகளை விரட்டியது. சிதறி ஒடிய ஐதர் படை
பட்டுக்கோட்டையில் தஞ்சம் அடைந்தது.

.

#தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை, பட்டுக்கோட்டையை மீட்ட புதுக்கோட்டை
பல்லவராயர் படை :-
.

புதுக்கோட்டை தொண்டைமான் அடுத்த தாக்குதலுக்கு தயாரானார். தஞ்சை ஐதரின்
கோர பிடிகளில் சிக்கித் தவித்தது. ஆங்கிலேயரும் நவாபும் ஐதரை
விரட்டியடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

தஞ்சையை மீட்க வலிமையான படை ஒன்றை உருவாக்கினார் தொண்டைமான். பெருங்களூர்
போரம் பல்லவராயர், ராமசாமி ராங்கியத்தேவர், சுப்ரமணிய முதலியார்
தலைமையில் பெரும்படையை அனுப்பினார். தஞ்சை, கீழாநிலைக்கோட்டை,
பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டது.

ஐதருக்கு ஆதரவாக செயல்பட்ட, சேதுபதியின் உறவினர் மாப்பிள்ளை தேவன்,
தொடர்ந்து போரிட்டார். அவரை வீழ்த்த நலம் கொண்ட ஆவுடையப்ப சேர்வைக்காரர்
தலைமையில் ஒரு படையை அனுப்பினார் தொண்டைமான். மாப்பிள்ளை தேவன்
தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கிபி 1781 இறுதியில் ஐதர் படை
சோழ தேசத்தில் இருந்து பின்வாங்கியது.

சோழதேசத்தில் துலுக்கரால் ஏற்பட்ட கழகங்களை ஒடுக்கி, ஐதர் படையை விரட்டி
அடித்து, மக்களையும் பாரம்பரிய சின்னங்களையும் காக்க தன் உயிரை துட்சமாக
எண்ணி போரிட்ட தொண்டைமான் தலைமையிலான படையினருக்கு சோழ நாட்டு மக்கள்
என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராத்திய மன்னர்
தன் உயிரை காக்க தப்பி ஒடியபோதும், தன் நாடான புதுக்கோட்டையில் எந்த
சலசலப்பும் ஏற்படாமல் காவல் தெய்வங்களை போல காத்து நின்றவர் புதுக்கோட்டை
மன்னர் ராய ரகுநாத தொண்டைமான்!

திப்பு சுல்தான் படைகளை 1783ல் ஆங்கிலேயரோடு கைகோர்த்த தொண்டைமான் படை
வென்றது. கரூர்,அறவக்குறிச்சி,திண்டுக்கல் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு
பகுதிகளையும் தொண்டைமான் படைகள் கைப்பற்றியது.

எதிர்த்த எல்லா படைகளையும்
(சிவகங்கை, இராமநாதபுரம் அரசுகள், தஞ்சை மராத்தியர், மதுரை நாயக்கர்கள்,
நவாப்கள்,பிரஞ்ச் படைகள்,மைசூர் சுல்தான் )

இன்று புதுக்கோட்டையில் இந்துக்களும் பழங்கால கோயில்களும் அதே பொலிவுடன்
விளங்குவதற்கு காரணம் 13 ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் மற்றும் 18 ஆம்
நூற்றாண்டில் ஐதரின் படைகளிடம் இருந்து புதுக்கோட்டையை காத்த கள்ளர்களும்
மற்றும் தொண்டைமான் மன்னர்களே.

இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார்
இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:

“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து
கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது,
தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து
நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம்
சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”
இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த
பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று.

இருபது ஆண்டுகள் இவர் ஆட்சி முடிந்த நிலையில் இவர் 1789 டிசம்பர் 30 இல்
காலமானார். இவர் இறந்த போது இவருக்கு ஆண் மக்கள் எவரும் இல்லாத நிலையில்
இவரது ஒன்றுவிட்ட சகோதரர் உறவினரான “விஜய ரகுநாத தொண்டைமான்” அரச
பதவியைப் பெற்றார்.

General history of pudukkottai state R aiyar 1916/ p 264-271

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 9, 2019, 11:20:59 AM2/9/19
to mintamil, panbudan
வணக்கம்.
அரியதொரு செய்தியை வழங்கியுள்ளீர்கள்.  நன்றி.
சுல்தான் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்தால், எதிர்த்தோர் மற்றும் அவர்களது சொந்த பந்தங்கள் அனைவரையும் கொலை செய்வார்கள் என்பதை அறிந்தே எதிர்த்துள்ளனர்.  தன்மானம் மிகுந்த தமிழர்.

அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
Feb 11, 2019, 3:51:07 AM2/11/19
to panbudan, minTamil
பெரிய சூரியூர் கள்ளர்நாடு
=============================

திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று பெரிய சூரியூர்
கள்ளர்நாடு

பெரிய சூரியூர் கள்ளர்நாடு என்பது

பெரியசூரியூர்,
சின்னசூரியூர்,
வீரம்பட்டி,
பட்டவேலி,
கும்பக்குடி,
கண்டலூர்,
இலத்தப்பட்டி,
பூலாங்குடி,
பாலாண்டாம்பட்டி,
தெண்திரையன்பட்டி மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது.

நாடு: பெரிய சூரியூர் கள்ளர்நாடு

தலைமை கிராமம்: பெரிய சூரியூர்

பொதுகோவில்: ஆதி மூர்த்தீஸ்வரர் கோவில், சக்தி மாரியம்மன் கோவில்.

கள்ளர் கோவில்: நற்கடல்குடி கருப்பர் கோவில்

மொத்தம் ஆறு கரைகள் உள்ளன.

முதல்கறை: இராங்கி பிரியர்

இரண்டாவது கறை: மொட்டலார்

மூன்றாவது கரை: வல்லத்திரியர்,
சோழங்க தேவர், சோழதிரியர்

நான்காம் கரை: பாண்டுரார், குர்கண்டார், இராங்கிபிரியர்

ஐந்தாம் கரை: முதல்கரையில் வந்த இராங்கி பிரியர், பாண்டுரார், அழகு
பிரியர், இதிலும் வருகின்றனர்!

ஆறாம் கரை : மழவராயர், காடுரார் , பாலாண்டார்

இது தவிற சேப்பிளையார், கண்டியர், தென்கொண்டோர், கருப்பட்டியார் ஆகியோரும் உள்ளனர்.

பாரம்பர்யமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துவருகின்றன. தை மாதம் 2ம்
நாளில் மாட்டுப்பொங்கல் அன்று இவ்வூர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
நடைபெறுகின்றன. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் இதுவும்
ஓன்று.

இப்பகுதில் உள்ள எலந்தப்பட்டி சிவன் கோவில் செல்லும் வழியிலே மகாவீரர்
சிற்பமும் அதனருகே சிவலிங்க ஆவுடையும் காணப்படுகின்றன. அச்சிவலிங்க
ஆவுடையின் மேல் பொருந்தாத பாணமொன்றை பொருத்தி உள்ளூர் மக்கள் வழிபட்டு
வருகின்றனர். இதன் அருகே ஒரு பழைய கல்லானது கங்கம்மன் என்ற பெயரில்
வழிபாட்டில் உள்ளது. அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. இவையனைத்தும்
ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள்
அழிந்துபட்டிருக்கின்றன. அவற்றின் அடையாளமாக முதுமக்கள் தாழியின் பானை
ஓட்டு எச்சங்கள் காணக் கிடைக்கின்றன.

இங்கு கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவ்வோட்டின்
உட்புறமானது பச்சை வண்ணத்தில் முலாம் பூசியும், வெளிப்புறமானது
கரும்பச்சை மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரித்தும் காணப்படுகின்றன.

எலந்தப்பட்டிக்கு மேற்கேயுள்ள பட்டவெளி (பட்டவன் வெளி?) என்ற
குக்கிராமத்தில் பிரம்மாண்டமான கல்வட்டங்கள் நிறைய உள்ளன. சில
கல்வட்டங்கள் சிதைக்கப்பட்டுவிட்டனன. முன்னர் கேட்பாரற்றுக் கிடந்த
பழமையான தாமரைபீடம் கொண்ட சிவலிங்கமும் நந்தியும், இன்று உள்ளூர் மக்கள்
சிலரது முயற்சியினால் பொன்னீஸ்வரர் என்னும் பெயரிலே வழிபாட்டில் உள்ளன.
லிங்கத்தின் அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

பட்டவெளியின் வடக்குபுறத்திலே சுமார் நான்கடி உயரமும் இரண்டரை அடி
அகலமும் கொண்ட அழகிய அய்யனார் சிலை ஒன்று உள்ளது. அரியதாக இவரின்
பீடத்திலே யானையும், குதிரையும் ஒன்றாக காணப்படுகிறன.

பட்டவெளிக்கு மேற்கே காலத்தால் முற்பட்ட பிரம்மசாஸ்தா கோலத்திலுள்ள
முருகன் சிலையொன்றுள்ளது. இச்சிலை குறித்த தகவலை திரு.கரு.ராஜேந்திரன்
அவர்கள் அறிவித்திருந்தார். இவ்விடம் அந்நாளில் ஒரு பெரிய கோவிலாக
இருந்திருக்கலாம். சுற்றிலும் செம்பாறை கற்கலாளான சுற்றுச்சுவரின்
எச்சமுள்ளது. தற்சமயம் சிறிய கட்டுமானத்தில் சுவர் எழுப்பி சிலர்
வழிபட்டு வருகின்றனர்.

சூரியூர் லெட்சுமணன் பட்டி அருகேயும் பழங்கால அய்யனார் சிலை மற்றும்
சிதைவுற்ற பழைய கற்றளிகள் உள்ளன.

சூரியூர் கள்ளர்கள் நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு
கட்டுப்படாமல் இருந்துள்ளனர்.

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இராமேஸ்வரம் கோவிலுக்கு
செல்பவர்கள் திருச்சியிலிருந்து கீரனூர் வழியாக இந்த பெரிய சூரியூர்
கள்ளர்நாட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது
பாதசாரிகள் அஞ்சுவர். அதுவும் வறட்சிகாலங்கள் என்றால் கள்ளர்கள்
முழுவதுமாக வழிப்பறியில் ஈடுபடுவார்கள். வழிபறி என்றால் திருடி ஓடுவது
அல்ல தாட்டியமாக அவர்களை மறித்து வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வார்கள்.
ஒரு முறை திருச்சி நாயக்க மன்னரின் அரச குரு கள்ளர்களால் வழிபறிக்கு
ஆளாகியுள்ளார். சினம்கொண்ட நாயக்க மன்னர் செய்வதறியாது திகைத்தார். பெரிய
சூரியூர் கள்ளர்களை நாயக்க மன்னர்களின் படைபிரிவில் உள்ளவர்களாலும்
ஒன்றும் செய்யமுடியவில்லை.

அரச குரு நாயக்க மன்னரின் படைபரிவாளங்களோடுதான் வந்தார் ஆனால்
அப்படைவீரர்களால் மூர்க்கதனம் கொண்ட பெரியூர் சூரியூர் கள்ளர்களை ஒன்றும்
செய்ய முடியவில்லை. அப்படைகள் கள்ளர்களால் சிதறடிக்கப்படுகிறது.
அவர்களுடைய குதிரைகள் கவரப்படுகிறது.

வலிமைமிக்க பெரிய சூரியூர் கள்ளர்களை கட்டுப்படுத்த நாயக்கர்
புதுக்கோட்டை தொண்டைமானிடம் உதவி கேட்கிறார். தொண்டைமானும் கள்ளர் நாடான
அம்புநாட்டின் தலைவர் என்பதால் பின்பு தொண்டைமான் பெரிய சூரியூர்
கள்ளர்களோடு இணக்கத்தை கடைபிடித்து அவர்களுக்கு உதவியாக நாயக்க
மன்னர்களிடம் இருந்து படைபற்றில் பணியாற்ற பதவிகளை அவர்களுக்கு வாங்கி
தருகிறார். இருந்தும் பெரிய சூரியூர் கள்ளர்களின் தாட்டியத்தை அவர்களால்
இறுதி வரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவர்கள் ஆங்கிலேயருக்கும் பெரும் சவாலாகவே இருந்தனர். பெரிய சூரியூர்
கள்ளர்நாட்டை பார்வையிட வந்த ஆங்கிலேயர் படைத்தளபதி, அவருடைய குதிரை
மற்றும், அவருடைய மனைவி இரண்டையும் கவர்ந்து சென்றார்கள்.

1923 ஆம் ஆண்டு பெரிய சூரியூர் கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது DNC கீழ் வருகின்றனர். DNT
க்காக போராடுகிறார்கள்.

பெரிய சூரியூர் கள்ளர் நாட்டின் மந்தையில் இருகற்கள் நடப்பட்டுள்ளது.
பெரிய சூரியூர் கள்ளர்களுக்குள்ளேயே கடுமையான சண்டைகள் மூண்டுள்ளன.
மீன்பிடிப்பதில் முன்னுரிமை கோரி ஒரே கரைக்குள்ளேயும், வெவ்வேறு
பட்டத்திற்குள்ளேயும் சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்.
நடப்பட்டிருக்கும் கற்களில் ஒரு வகையறாவும், மற்றொருபுறம் இன்னொரு
வகையறாவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது, சாமி கும்பிடுவது என முன்பு
பிரித்துள்ளனர்

சூரியூர் நாடு, தற்போது திருவெறும்பூர் தொகுதியின் கீழ் வருகிறது.

1963 ஆம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சியில், ஐயா T. துளசி ராங்கிப்பிரியர்
அவர்கள் பெரிய சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்களால் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவராக இருந்த போது கட்டப்பட்ட பழைய
தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்ந ஊரின் மற்றொரு பெருமை ஜல்லிக்கட்டில் புகழ்பெற்ற "காசி" மாடு.

இன்று சூரியூரில், துடிப்புள்ள மவுன சாட்சியாய், ஊரின் பிரதான சுவரில்
இருந்து நம்மை உற்றுப் பார்க்கிறான் காசி. காசியின் முழுப்பெயர்
ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசாமி காசி. காசி பற்றிய நினைவுகளில்
உருகுகிறார், காசியை வளர்த்தெடுத்த காசி குமார்.

காசி வருவதற்கு முன், சூரியூருக்கு கோவில் மாடு ஏதுமில்லை. காசி வந்தான்.
'ஜல்லிக்கட்டு' எனும் போர்வையுடன் அத்தனை ஊர்களுக்கும் படையெடுத்தான்.

தன் வெற்றியின் வாயிலாக, அந்தந்த ஊர் மக்களின் மனங்களை வென்றான்.
சூரியூரின் வீரத்தையும் களம் கண்ட மண் அத்தனையிலும் பதித்தான். 'பொதுவா,
இரண்டு வயசுல மாடுகளுக்கு பல் போடும். 5 - 6 வயசுல பருவம் வர்றப்போ,
மொத்த, 16 பல்லும் சேர்ந்துடும். பல் சேர்ந்ததுல இருந்து, 10
வருஷத்துக்கு தான், மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தலாம். காசி
எங்ககிட்டே வர்றபோதே, பல் சேர்ந்து ஆறு வருஷம் ஆயிருந்துச்சு! ஆனாலும்,
அதுக்கப்புறம் அவன் வாழ்ந்ததுல, 13 வருஷமும், அவன் யார்கிட்டேயும்
தோத்ததில்லை. பெருமை பொங்கச் சொல்கின்றனர் சூரியூர் கிராமத்தினர்.

வாடிவாசலுக்கு அவன் போறதுக்கு முன்னாடி, பொங்கல் வைச்சு பூஜை பண்ணுவோம்.
வீட்டுக்கு வீடு, அவன் கால்களை மஞ்சத் தண்ணியில கழுவி, ஆசிர்வாதம் வாங்கி
வழியனுப்புவோம். எங்க சாமிங்கய்யா அவன்!' ஓவியமாய் சிலிர்த்து நிற்கும்
காசியை பார்த்தபடியே, முந்தானையால் கண்ணீர் துடைத்துக் கொள்கின்றனர்
சூரியூர்ப் பெண்கள்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம்
தான். சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த
மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும்
விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள்
விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல்
பார்த்துக்கொண்டது.

சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது
தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி
2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில்
படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான்
சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான
கம்பெனி என்று. தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால்
பெப்சிக்கு எதிராக போராடிவருகிறார்கள்.

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்
நன்றி : யாஊயாகே
1.jpg
4.jpg
8.jpg
7.jpg
6.jpg
12.jpg
10.jpg
11.jpg
9.jpg
2.jpg

Rathinam Chandramohan

unread,
Feb 11, 2019, 6:45:38 AM2/11/19
to mint...@googlegroups.com

On Mon, 11 Feb 2019 at 14:47, Thevan <apth...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (apth...@gmail.com) Add cleanup rule | More info
பெரிய சூரியூர் கள்ளர்நாடு
=============================

திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று பெரிய சூரியூர்
கள்ளர்நாடு

பெரிய சூரியூர் கள்ளர்நாடு என்பது

பெரியசூரியூர்,
சின்னசூரியூர்,
வீரம்பட்டி,
பட்டவேலி,
கும்பக்குடி,
கண்டலூர்,
இலத்தப்பட்டி,
பூலாங்குடி,
மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும்

விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள்
விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல்
பார்த்துக்கொண்டது.

சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது
தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி
2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில்
படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான்
சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான
கம்பெனி என்று. தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால்
பெப்சிக்கு எதிராக போராடிவருகிறார்கள்.

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்
நன்றி : யாஊயாகே

Thevan

unread,
Feb 14, 2019, 5:55:46 AM2/14/19
to panbudan, minTamil
ஐதர் அலியின் கள்ளர் படைப்பற்று
=====================================

பஞ்சாபை பூர்விகமாக கொண்ட பத்தே முகம்மது ஆற்காடு நவாபின் படையில்
முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார்.
தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார்.
இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஐதர் அலி.

மைசூர் மன்னர் கிருட்டிணராச உடையாரிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர்
அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல்
நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை
வியப்பில் ஆழ்த்தியது. இதனால் குதிரைப் படைக்குத் தளபதி ஆனார். மைசூர்
ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை
ஹைதர் அலிக்கு வழங்கினார்.

பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும் விசுவாசியான இவர், ஆங்கிலேயர்களுக்கு
எதிரான அணியில் போராடினார். ஐரோப்பியர்களின் போர் நுட்பங்களையும், நவீன
ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.

திண்டுக்கல்லில் இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி,
ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அமைத்தார்.

மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் படையில் கள்ளர்
படைப்பற்று என்ற படையை தனியாக வைத்திருந்தார். தேனி,திண்டுக்கல்,
திருச்சி மண்டலத்தை சேர்ந்த விசுவாத்திற்கு பெயர் போன அந்த கள்ளர்
படைப்பற்று ஹைதர் அலியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது.

கள்ளர்கள், ஆங்கிலேய படைகளை நேரடியாக Mathlocks என்ற துப்பாக்கியும்
மற்றும் தங்களுக்கே உரித்தான ஈட்டியை வைத்து தாக்கி சிதறடித்துள்ளனர்.

மேலும் கள்ளர் படைப்பற்று ஆங்கிலேயர் படையில் ஊடுருவி அவர்களின்
படைபலம்,போர் வியூகம் போண்றவற்றை உளவு பார்த்து அதனை எழுத்து வடிவில்
ஆவணமாக கொடுப்பார்கள்,ஹைதர் அலி அதை வைத்து போர் வியூகம் அமைக்கிறார்.
கர்நாடக வரலாற்று புத்தகத்தில்
“கள்ளர் பற்று” என்றே உள்ளது.

இன்றும் கர்நாடாகவில் கள்ளர் என்றால் வீரன்,உளவாளி என்று பொருள்.
உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை
"அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு என்று
கவியரசு' கண்ணதாசன் அவர்கள் சொல்வதை நாம் இங்கு பொருத்தி
பார்க்கவேண்டும்.

அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும்
பாராட்டப்படுகிறது. ஆனாலும் அயிதர் படைகள் கள்ளர் குல மன்னர் ராஜா ஸ்ரீ
ராய ரகுநாத தொண்டைமானால் விரட்டப்பட்டது.

நன்றி : திரு.சோழ பாண்டியன்
History of Mysore by C.Hayavadana Rao
1.jpg
2.jpg
3.jpg

Thevan

unread,
Feb 24, 2019, 12:32:02 AM2/24/19
to panbudan, minTamil
வாரைவளர் வாராப்பூர் கள்ளர் நாடு
=====================================

புதுக்கோட்டை வட்டம், ஆலங்குடி வட்டம், கறம்பக்குடி வட்டம்,
கந்தர்வகோட்டை வட்டம் இந்த நான்கு வட்டத்தையும் உள்ளடக்கிய நாடே வாரைவளர்
வாராப்பூர் நாடு

அந்த வாராப்பூர் நாட்டில் உள்ள சிறு நாடுகள் மற்றும் அந்த நாடுகளை
சேர்ந்த கிராமங்கள்

நாவல் நாடு;-

1)பாப்பான்விடுதி
2)பாச்சிக்கோட்டை
3)மேலவிடுதி
4)மாங்கோட்டை
4)சம்பட்டிவிடுதி
5)உஞ்சனிபட்டி
6)சேவுகம்பட்டி
7)மூக்கம்பட்டி
8)செட்டியாபட்டி

துரைப்புள்ள நாடு:-

1)தொண்டைமான் ஊரனி.
2) அதிரான்விடுதி
3)புலவன்காடு
4)மஞ்சக்கரை
5)அரியாண்டி

வாரைவளர் நாடு:-

1)வாராப்பூர் கிராமம்
2)தெர்க்குதெரு கிராமம்
3)குருவிணாங்கோட்டை
4)தீத்தானிபட்டி

பெரம்பூர் நாடு -

1) வெள்ளாலவிடுதி

பனிசூல் நாடு;-

1) வலங்கொண்டான்விடுதி
2)சேவல்பட்டி
3)ஆயிப்பட்டி

மேலமடை கோட்டை நாடு;-

1)இடையபட்டி
2)கிருஷ்ணம்பட்டி
3)கருப்பட்டிபட்டி

பொன்னா பனிகுடி நாடு:-

1)பொன்னன்விடுதி
2)மழையூர்

இவை அனைத்து நாடுகளை சேர்ந்தவைதான் வாரைவளர் வாராப்பூர் நாடு.

#வாராப்பூர் நாட்டில் இருக்கும் கள்ளர் மக்களின் #பட்டபெயர்கள்:-

1)சம்பட்டியார்
2)தொண்டாம்பிரியர்
3)கிடாத்தரையர்
4)பாச்சுண்டார்
5)சவுளியார்
6)மாகாளியார்
7)ஓந்திரியர்
8)நெட்டையர்
9)கருப்பட்டியார்
10)கொத்தமுண்டார்
11)இரும்பர்
12)புலிக்கையார்
13)ஆலப்புரியர்
14)கோன்றி
15)தம்புரார்
16)சேதுரார்
17)படியர்
18) மண்டலார்
19)கும்மாயன்
20)வலங்கொண்டார்

வாராப்பூர் நாட்டின், பொது கோயிலான கருப்பர் கோயிலில் நடைபெறும்
திருவிழாவில் வாராப்பூர் நாட்டின் 18 பட்டி மக்களும் பங்கேற்பர். 18
பட்டி கள்ளர் அம்பலக்காரர்களுக்கும் மரியாதை அளிக்கப்படும். நாட்டு
அம்பலமாக தொண்டாம்பிரியர் (தொண்டைமான்) உள்ளனர்

இவ்விழாவில் பாப்பான்விடுதி எனும் ஊரின் கள்ளரில் சம்பட்டியார் பட்டம்
உடைய அம்பலக்காரருக்கு பட்டு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை
அளிக்கப்படுகிறது. வாராப்பூர் நாட்டு மாசிமகம் திருவிழாவிற்கான
காப்புக்கட்டு நாட்டின் முதல் கரை சம்பட்டியார் பூ போட்டு திருவிழா
தொடங்கும்.

பாலையடிகருப்பருக்கு ( பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சங்கிலிக்கருப்பு,
முத்துக்கருப்பு) சம்பட்டியார் முதல் மண்டகபடி நடக்கும். கருப்புக்கு
பில்லிசோறு வீசுதல் நடைபெறும். இந்த கள்ளர் நாட்டிற்கே உள்ள தனித்தன்மை
பில்லிச்சோறு வீசுதலில் மனித இரத்ததில் வீசப்படும். பூசாரி தன் தொடையை
தானே கிழித்து இரத்தம் எடுப்பார்.

கிபி 1735 ல் வாராப்பூர் பகுதியை ஜகந்நாத அய்யர் ஆட்சி செய்து வந்தார்.
தஞ்சை மராத்திய மன்னரால் அய்யங்காருக்கு வாராப்பூர் பகுதி
அளிக்கப்பட்டிருந்தது­.

கிபி 1735 ல் ரகுநாதராய தொண்டைமானுடன் இணைந்து நமண தொண்டைமான் வாராப்பூர்
பாளையக்காரர் கருவறுத்து வாராப்பூர் நாட்டை கைப்பற்றினார்

அப்பகுதியை புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைத்து, போரில் உதவி செய்த,
ராமசாமி தொண்டைமான் மற்றும் அவரின் உறவினரான குருந்தன் சம்பட்டியாரின்
வகையாராக்கு மரியாதை அளிக்கும் விதமாக சம்பட்டியார்களுக்கு வாராப்பூர்
நாட்டின் தலைமை அம்பலக்காரராக நியமித்து பட்டு பரிவட்ட முதல் மரியாதையை
அளித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

குளத்தூர் மன்னர் நமண தொண்டைமான் குருந்தன் சம்பட்டியாரின், மகளை மணம்
முடிக்கிறார். அவர்களுக்கு பிறந்தவரே ராமசாமி தொண்டைமான் குளத்தூரின்
மன்னராக பொறுப்பேற்கிறார்.

#சம்பட்டியார்

தொண்டைமான் சீமையிலுள்ள கள்ளர் நாடுகளில் வாராப்பூர் நாடு மற்றும்
அம்புநாட்டை சேர்ந்தவர்கள் சம்பட்டியார்கள்.

இவர்கள் வாராப்பூர் நாட்டில் சம்பட்டிவிடுதி, மேலவிடுதி, பாப்பான்விடுதி
ஆகிய ஊர்களிலும், அம்புநாட்டில் வடக்கலூர், தென்தெரு ஆகிய ஊர்களில்
மிகுந்து வாழ்கின்றனர்.

அம்புநாட்டில் இருந்து வாரப்பூர் நாட்டில் குடியேறி இவர்கள்
பிற்காலத்தில் பாப்பான்விடுதி, மேலவிடுதி, சம்பட்டிவிடுதி போன்ற
பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.அம்புநாட­்டில் வடக்கலூர், தென்குப்பம்
ஆகிய பகுதிகளிலும் சம்பட்டியார் குடும்பங்கள் வாழ்கின்றனர்.

சம்பட்டியார்கள் பெயர் காரணத்தை நொக்கும்போது, இது புதுக்கோட்டையில்,
குளத்தூர் பகுதியில் இருக்கும், சம்பட்டி மலை எனும் குன்றுடன் தொடர்பு
படுகிறது.

இந்த குன்று இருந்த பகுதியை அரையர்களாக ஆட்சி செய்ததனால், சம்பட்டிராயர்
என அழைக்கப்பட்டு, பின்னாலில் சம்பட்டியார் என திரிந்திருக்கும்.( எ.கா
அண்ணவாணல்ராயர், கொடும்பாளூராயர்).

குளத்தூர் பகுதியில் இருந்து பிற்காலத்தில் அவர்கள் அம்புநாட்டில்
குடியேறி தொண்டைமான்களின் குப்பத்திலும், அம்புநாட்டிலும்
வாழ்ந்திருந்தனர்.

குளத்தூர் மற்றும் அம்புநாட்டு மக்களுக்கு உள்ள தொடர்பு மிகவும்
தொன்மையானது. புதுக்கோட்டை கல்வெட்டு எண் 458 ல், குளத்தூர் நாட்டவர்
அம்புக்கோயில் தொண்டைமான்களுடன் இணைந்து அம்புக்கோயிலில் உள்ள சிவன்
கோயிலுக்கு கிபி 1100 ல் கொடை அளித்துள்ளனர்.

பிற்காலத்தில் தொண்டைமான்களுடன் இணைந்து அம்புகோயிலில் அரையர்களாக இருந்துள்ளனர்.

நன்றி :
திரு. ராஜேஷ் வல்லாளதேவர் - கள்ளர் நாடு அறக்கட்டளை
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. சுதாகர் சம்பட்டியார்
52507977_461448504393336_4431320047947874304_n.jpg
52669958_461448511060002_6360382867821821952_n.jpg
52684524_461448444393342_2410845996004147200_n.jpg
52729395_461448454393341_1382119299031760896_n.jpg
52989910_461448457726674_3041329783259529216_n.jpg

Thevan

unread,
Feb 24, 2019, 10:17:50 PM2/24/19
to panbudan, minTamil
**பாண்டிய மன்னரை அரியனையில் அமர்த்திய**
**********கள்ளர் குல பல்லவராயர்*********

வரலாற்று சுவடுகளில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் அதிகாரத்தின்
மறுபெயர் பல்லவராயர்.

கிபி1169ஆம் ஆண்டு பாண்டிய மன்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவருடைய
சகோதரரான குலசேகர பாண்டியனுக்கும் மதுரை அரச உரிமை சண்டை வருகிறது,

இச்சண்டையில் குலசேகர பாண்டியனை சமாளிக்க பராக்கிரம பாண்டியன்,
இலங்கையில் உள்ள சிங்கள மன்னரான முதலாம் பராக்கிரம பாகுவிடம் உதவியை
நாடுகிறார்.

இதனை அறிந்த குலசேகர பாண்டியன் சிங்கள படை மதுரை வருவதற்கு முன்பு மன்னர்
பராக்கிர பாண்டியனையும், அவரது மனைவியான இராணியையும், சில இளவரசர்களையும்
கொன்று விடுகிறார்.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இலகங்கை மன்னர் பராக்கிரம பாகு தன்னுடைய
சிங்களப் படையை லங்கப்புரா என்கிற வலிமையான தளபதியின் தலைமையில் மதுரையை
நோக்கி அனுப்புகிறார்.

ஆரம்ப காலத்தில் குலசேகர பாண்டிய மன்னர் கள்ளர், மறவர் படைகளை கொண்டு
இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சிங்களப்படைகளை உள்ளே நுழையவிடாமல்
தடுத்து வெற்றி பெறுகிறார்.

ஆனால் லங்கப்புராவின் பெரும்படை அனைத்து தடைகளையும் உடைத்தும்,பல தமிழ்
சிற்றரசர்கள் உதவியுடன் மதுரையை கைப்பற்றி பராக்கிரம பாண்டிய மன்னரின்
மகனான வீர பாண்டியனை சிங்கள மன்னர் ஆதரவின் பெயரில் மதுரையில் முடி
சூடுகின்றனர்.

நிலமையை உணர்ந்த குலசேகர பாண்டியன், சோழ மன்னர் இரண்டாம் இராஜ இராஜ
சோழரிடம் உதவியை நாடுகிறார்.

இரண்டாம் இராஜ இராஜ சோழரும், சிங்களர் ஆதரவுடன் மதுரையில் பாண்டியர்
அரசாட்சி நடப்பதை விரும்பவில்லை.

அதனால் குலசேகர பாண்டியனின் கோரிக்கை ஏற்று சிங்கள படைகளுக்கு பாடம்
புகட்ட தன்னுடைய கள்ளர் தளபதியான பல்லவராயர் தலைமையில் சோழர் படையை
குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்.

பல்லவராயரின் சோழர் களப்படை மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருந்த
லங்கப்புராவின் சிங்களப்படைகளை அடித்து, துவைத்து தமிழ் நாட்டை விட்டு
விரட்டி மீண்டும் இலங்கைக்கே துரத்து அடிக்கிறார்.

குலசேகர பாண்டியனை மதுரை பாண்டிய தர்பாரில் பல்லவராயர் அமர வைக்கிறார்.

இலங்கையில் உள்ள முதலாம் பராக்கிரபாகுவை நேரிடையாக மோத இலங்கைக்கு
பல்லவராயர் தன்னுடைய களப்படையுடன் இலங்கைக்கு செல்கிறார்.

இலங்கையில் பராக்கிரபாகுவின் மைத்துனர் ஶ்ரீவல்லபா இலங்கையில் பராக்கிரம
பாகுவிற்கு பாடம் எடுக்க வந்துள்ள பல்லவராயரிடம் உதவியை நாடுகிறார்.

பல்லவராயரும் தன்னுடைய ஆதரவை ஶ்ரீவல்லபாவிற்கு தெரிவித்து களத்தில் இறங்குகிறார்.

பல்லவராயரின் களப்படை இலங்கையில் உள்ள சிங்களர் கோட்டைகள்,படைபற்று
பெரும்பாலனவற்றை கைப்பற்றி பராக்கிர பாகுவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்
பல்லவராயர்.

இதே நிலைமை நீடித்தால் தன்னுடைய அரசு பல்லவராயரால் உடைத்தெறியப்படும்
என்பதால் மதுரையில் இரண்டாம் இராஜ இராஜ சோழரின் ஆனைக்கிணங்க பல்லவராயரால்
அமர்த்தப்பட்ட குலசேகர பாண்டியனிடம்,

பராக்கிரபாகுவின் சிங்களப்படையுடன் குலசேகர பாண்டியன் இனைந்து சோழ
தேசத்தை வீழ்த்தலாம் என ஓலை அனுப்புகின்றனர்.

குலசேகர பாண்டியரும்,இரண்டாம் இராஜ இராஜ சோழரை சிங்க படையுடன் இணைந்து
போரிட தயாராகின்றனர்.

ஆபத்தை உணர்ந்த பல்லவராயர் சோழ எல்லை பகுதிக்கு உடனடியாக தன்னுடைய
களப்படையுடன் விரைகிறார்.

குலசேகர பாண்டியரின் கூட்டுப்படைக்கும் பல்லவராயரின் களப்படைக்கும் பல
இடங்களில் போர் நடக்கிறது.

ஆனால் பல்லவராயர் அனைத்து போர்களிலும் வென்று சிங்களப்படையை மீண்டும்
இலங்கைக்கு விரட்டுகிறார்.

சோழ மன்னருக்கு எதிராக சிங்கள மன்னருடன் கைகோர்த்து துரோகம் செய்த
குலசேகர பாண்டியனை மதுரையின் அரியணையில் இருந்து இறக்கி மீண்டும்
பராக்கிர பாண்டியரின் மகன் வீர பாண்டியனை மதுரையின் அரியனையில் அமர
வைக்கிறார் பல்லவராயர்.

குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு பல்லவராயரால் விரட்டியடிக்கப்படுகிறார்.

இந்த ஒட்டு மொத்த நிகழ்வில் பல்லவராயர் மதுரையின் king makerஆக இருந்தது
வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இராஜ இராஜ சோழருக்கு கட்டுக்கடங்காத வீரம், இராஜ விசுவாசம் ஒரு
சேர கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் பல்லவராயர்.

குலோத்துங்க சோழருக்கு எப்படி கருணாகர தொண்டைமானோ, அதேபோல் இரண்டாம் இராஜ
இராஜ சோழனுக்கு பல்லவராயர்.

குறிப்பு:
கள்வன் இராஜன் (இரண்டாம் இராஜ இராஜன்) தன்னை கள்ளர் என்று
மெய்கீர்த்தியில் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல்.

நன்றி
A history of South India by Nilakanta Sastri
Tamil and Ceylon by C.S Navaratnam

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
17.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Mar 1, 2019, 1:15:45 PM3/1/19
to panbudan, minTamil
தமிழகத்தில் நகரமயமாக்கல் - மோகன் குமாரமங்கலம்

https://www.facebook.com/kallar.varalaru.50/videos/464135704124616/

வேந்தன் அரசு

unread,
Mar 1, 2019, 3:49:39 PM3/1/19
to vallamai, panbudan, minTamil


வியா., 28 பிப்., 2019, பிற்பகல் 5:52 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
தமிழகத்தில் நகரமயமாக்கல் - மோகன் குமாரமங்கலம்

https://www.facebook.com/kallar.varalaru.50/videos/464135704124616/

இவருரையைகேட்க பொறுமை மலையளவு வேணும். தாளில் எழுதினால் வாசித்துக்கொள்ளலாம். 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Thevan

unread,
Mar 3, 2019, 4:49:38 PM3/3/19
to panbudan, minTamil
வெள்ளளூர் கள்ளர் நாட்டு மக்களின் பாரம்பரியம்..! | மண் பேசும் சரித்திரம்

https://www.youtube.com/watch?v=mpCgbmb5OZw&feature=youtu.be&fbclid=IwAR3HIn8jRlO5KFaOh19F58vdY2K4FUwKKnrZN_fYVzq150bJd2ZWqNAg9QY

Thevan

unread,
Mar 5, 2019, 9:58:39 PM3/5/19
to panbudan, minTamil
மானம் காத்த மாமன் மைத்துனர்கள்

மதுரையை மையபடுத்தி 72 பாளையங்களுக்கு மன்னராக விளங்கிய திருமலை நாயக்கர்
கள்ளர் நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பி அதிலே
தோல்வியடைந்து அதன்பின்பு கீழஉரப்பனூர் பின்னத்தேவரை எட்டு நாட்டிலும்
கம்பளிவிரித்து நீதி பரிபாலனம் செய்யும் உரிமையை திருமலை நாயக்கர் மூலம்
திருமலை பட்டத்துடன் திருமலை பின்னத்தேவர் பெறுகிறார் அவருக்கு துணையாக
ஊராண்டா உரப்பனூர் சுந்தத்தேவரையும் வடமலை பட்டத்துடன் நியமிக்கிறார்.
திருமலை பின்னத்தேவரும் வடமலை சுந்தத்தேவரும் பூர்வீக மாமன் மைந்துனர்கள்
அதாவது வடமலை சுந்தத்தேவரின் அக்காவின் கணவரே திருமலை பின்னத்தேவர்.
இவர்களுது வாரிசுகளும் சகோதர்களும்,

திருமலை பின்னத்தேவர் கூட்டத்தினர்:- கீழஉரப்பனூர், மாவிலிபட்டி,
கள்ளபட்டி, கரையாம்பட்டி போன்ற ஊர்களிலும் அவரது சகோதர்கள்
கட்டபின்னத்தேவர், காரிபின்னத்தேவர் வாரிசுகள் வாகைக்குளம்,
பெருங்காமநல்லூர், குருவித்துரை, வெள்ளைமலைப்பட்டி, கப்பலூர் போன்ற
ஊர்களில் வாழ்கின்றனர்.

வடமலை சுந்தத்தேவர் கூட்டத்தினர்:-
ஊராண்டா உரப்பனூர்,
மேலஉரப்பனூர், கரடிக்கல், வடபழஞ்சி, புங்கங்குளம், மேலக்கோட்டை,
மேலக்குயில்குடி, தங்களாச்சேரி போன்ற ஊர்களிலும். அவரது சகோதர்கள்
பெரியாண்டித்தேவர், முதலித்தேவர் வாரிசுகள் கண்ணனூர், மீனாட்சிபட்டி,
புள்ளநேரி, விக்கிரமங்கலம், அல்லிகுண்டம், மானூத்து போன்ற ஊர்களில்
வாழ்கின்றனர்.

மண்ணின் மானம்காத்த கள்ளர் நாட்டின் வடமலை சுந்தத்தேவன் திருமலை
பின்னத்தேவன் திருஉருவப்படம் மாசி மகா சிவராத்திரி 04.03.2019
திங்கக்கிழமை காலை 10.30 மணியளவில் கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள
பெரியகருப்பு கோயிலில் சிறப்பாக வெளியிடபட்டது. அதே சமயம் நமது பிறமலைக்
கள்ளர் குலக்கோயிலும் உறவுமுறையும் புத்தகத்தின் முதல் பாகமாக
கருமாத்தூர் நாடு எனும் புத்தகமும் சிறப்பாக கள்ளர்நாடு தன்னார்வலர்கள்
சார்பாக வெளியிடப்பட்டது.

தொடர்புக்கு:
9626178910
9715193553,
9894311221,
9884397551.
53084552_301326057199349_6841200183116562432_n.jpg

வேந்தன் அரசு

unread,
Mar 6, 2019, 2:00:55 PM3/6/19
to vallamai, panbudan, minTamil
சிவநாடார், ஆதித்தனார், விஜிபி போல் தேவர்களில் தொழிலதிபர்கள் உள்ளாரா?

செவ்., 5 மார்., 2019, பிற்பகல் 11:06 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
பழந்தமிழனின் பாரம்பரியம் காக்கும் வெள்ளலூர் நாட்டின் பாரிய வேட்டை
திருவிழாவில் நாட்டு அம்பலங்கள்..


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
Mar 7, 2019, 3:08:16 PM3/7/19
to panbudan, minTamil
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Mar 18, 2019, 5:33:14 AM3/18/19
to panbudan, minTamil
நாயக்கர்பாளையம் கள்ளர் பாளையக்காரர் சாவடி நாயக்கர்
=====================================================

தஞ்சை நாயக்கர் காலத்தில், அரசு அதிகாரியாக கள்ளர் குடியை சேர்ந்த
அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் நியமிக்கபட்டவர்கள் (கள்ளர்-நாயக்கர் என்ற
பட்டம்) . அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம். முதல் மரியாதைக்கு
உரியவர்கள்.

சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி
மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று
மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன் மகன்,
மராட்டியத்தின் அடுத்த அரசன் ராஜாராம் என்கிற ராமராஜவுடன் தப்பித்து
செஞ்சி வந்து, பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு
வருகிறார்கள். தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி
துக்காவுபாய் மகன். தன் சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி, அவர்களை
தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) சாவடி நாயக்கர்
பொறுப்பில் முழு பாதுகாப்புடன், அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார்.
அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு, சேவகர்களுக்கான
குடியிருப்பு ஏற்படுத்தி, சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி, அருகில்
உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி
கொண்டிருந்தார்கள்.

ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள். சாவடி
நாயக்கர் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த, ராஜாராம் மராட்டியத்தின்
மன்னனாகிறார்.

#சௌராஷ்டிர சமூக மக்கள் மானம் காத்த சாவடி நாயக்கர் :

‌சௌராஷ்டிர சமூக மக்கள் திருச்சி ஜில்லா அரியலூர் தாலுகாவில் வாழ்ந்து
வந்தனர் இன்றளவும் பட்டுநூல்காரர் தெரு என்று இரண்டு தெருக்கள் உள்ளது
செட்டிகுளம் என்ற ஊரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக யாரும்
இல்லை என்ற எண்ணத்திலும் உடையார்பாளையம் ஜமீன்தார் சௌராஷ்டிர மக்களிடம்
அவர்கள் வீட்டில் புதிதாக பூப்பெய்திய பெண்ணை ஜமீன்க்கு தரவேண்டும் என்று
காம இச்சையுடன் கட்டளை இட்டான்.

இது நாள் வரை பல நாடுகள் கடந்து வந்த சௌராஷ்டிர மக்களுக்கு ஏற்படாத சோதனை
உடையார்பாளையம் ஜமீன் மூலம் ஏற்பட்டது. சௌராஷ்டிர சபையார் கூடி என்ன
செய்வது என்று விவாதித்தனர். நாளைய தினம் ஒரு புது பெண்ணை அனுப்பவேண்டுமே
என்று கலங்கி நின்றனர். அப்போது நம்மில் மந்த்ர தந்த்ரம் தெரிந்த
சௌராஷ்டிர பிராமிணர்கள் ஒரு உபயம் செய்தனர். மாவினால் ஒரு பெண் உருவத்தை
பிண்டமாக செய்து அதை உடையார்பாளையம் ஜமீன் அனுப்பி வைத்த பல்லக்கில்
ஏற்றி அனுப்பிவிட்டு , சௌராஷ்டிரர்கள் தத்தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு
ஊரை காலி செய்து விட்டு தஞ்சையை நோக்கி கால்நடையாக கிளம்பிவிட்டனர்.

‌போகும் வழியில் திருமானுர் ஏலாகுறிச்சி அருகே ‘கொள்ளா நீரும் கொள்ளும்
இடம்’ என்பார்கள் கொள்ளிடத்தை. கரை புரண்டு ஓடி காவியங்களில் இடம்பெற்ற
அந்தக் கொள்ளிடத்தின் வடகரையில் நாயக்கர்பாளையம் என்ற பகுதியில் சாவடி
நாயக்கர் பெயரை உடைய ஜமீன் நீதி வழுவாது ஜமீனை பரிபாலனம் செய்து வந்தார்.
அவரிடம் சௌராஷ்டிர சமூக மக்கள் சரணடைந்த போது , சௌராஷ்டிர சமூக
குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் அனைவரும் சோர்வுற்ற நிலையில் இருத்ததை
கண்ணுற்று அனைவர்க்கும் உணவு படைத்து அஞ்சாதீர் எனக்கு சொந்தமான சாவடி
ஒன்று அய்யம்பேட்டை அருகில் உள்ளது அந்த இடத்தில் நீங்கள் குடியேறி
நிம்மதியாக வாழலாம் என்று ‌ மனோஜியப்பா சாவடியில் சௌராஷ்டிர மக்களை
குடியமர்த்தியோதோடு அல்லாது இவரும் சாவடியில் தாங்கினார்.

‌உடையார்பாளையம் ஜமீன் பல்லக்கில் சென்ற பெண் உருவத்தை ஜமீன் ஆசையோடு
நெருங்கியபோது அந்த பெண்ணுருவம் கீழே விழுந்து விட்டது. முதலில் பயந்த
ஜமீன் பிறகு சுதாரித்து சௌராஷ்டிரர்கள் நம்மை ஏமாற்றிவிட்டானர் என்று
கொதித்து எழுந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்று
சூளுரைத்து தன் வீரர்கள் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினான்.

சௌராஷ்டிரர்கள் தஞ்சை‌க்கு அருகே அய்யம்பேட்டை மனோஜியப்பா சாவடியில்
பிரதாப சாவடி ஐயாவின் ஜமீனில் அடைக்கலம் பெறுள்ளனர் என்ற செய்தியை
அறிந்து உடையார்பாளையத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு சாவடி ஐயா
வீட்டிற்கு வந்தான். சாவடி ஐயாவும் உடையார்பாளையம் ஜமீனை வரவேற்று உணவு
உண்ண அழைத்தார். ஊர் மக்களும் என்ன நடக்கபோகிறது என்று பதைத்து நின்றனர்.
சாவடி ஐயா தன் பணியாள் மூலம் பேயன் வாழை இலையை பறித்து வரசெய்து அதில்
உணவு பரிமாறினார். பேயன் வாழை இலை மிகவும் பெரியதாக இருக்கும்.
உடையார்பாளைய ஜமீன் அமர்ந்து உணவு அருந்த கைக்கு எட்டாத தொலைவில்
இருந்தது.

‌என்ன ஐயா எட்டவில்லை என்று உடையார்பாளையம் ஜமீன் கேட்டபோது ஆமாங்க ஐயா
உங்களுக்கும் எங்களுக்கும் எட்டதுங்க என்று கூறிவிட்டார். கோபத்துடன்
உடையார்பாளையம் ஜமீன் வெளியேறினான். அவனுடன் நமது சாவடி ஐயாவின்
ஒற்றனையும் கலந்து அனுப்பிவிட்டார். உடையார்பாளையம் ஜமீன் போகும் வழியில்
தன் வீரர்களிடம் இன்னும் இருவாரத்தில் சாவடி ஐயாவின் தலையை
கொய்துவிட்டால் இந்த சௌராஷ்டிர மக்கள் அதன்பின் என்னிடம் என்ன
பாடுபடபோகிறார்கள் என்று ஆணவ சிரிப்பு உதித்தான்.

‌விவரங்கள் யாவும் தன் ஒற்றன் மூலம் அறிந்த நமது சாவடி ஐயா தன்னுடைய ஆளை
அனுப்பி உடையார்பாளையம் சென்று உடையார்பாளையம் ஜமீன் தலையை கொய்து
எடுத்து வந்து சாவடியில் வைத்து சௌராஷ்டிர மக்களின் பயம் கலையப்பட்டது.

சௌராஷ்டிர சமூக மக்கள் தமக்குள் உள்ள சர்ச்சையை சாவடி ஐயாவிடம்
முறையிட்டு தீர்த்து கொள்வர். கிருஷ்ணன் கோவில் கட்ட இடம் தந்து
சௌராஷ்டிர சமூக மக்களை பல இன்னல்களில் காத்ததால் பிரதாப சாவடி ஐயாவிற்கு
கோவில் முதல் மரியாதை பரிவட்டம் முதலான சம்பிரதயங்கள் இன்றும்
தரப்படுகிறது. அவரது முழு பெயர் தெரிந்தாலும் ஐயா என்றே அனைவரும்
அழைக்கின்றனர்.

செப்பேடு உதவி : ஆய்வாளர் ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார்

தகவல் உதவி : திரு. கோபி ஸ்ரீனிவாசன் (சௌராஷ்டிரர்)
53777544_471497393388447_2343148914758123520_n.jpg
54239230_471505410054312_670331368546238464_n.jpg
53827785_471505446720975_3499930169034932224_n.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 19, 2019, 9:11:42 PM3/19/19
to mintamil, panbudan
வணக்கம்.



On Mon, 18 Mar 2019 at 15:03, Thevan <apth...@gmail.com> wrote:
நாயக்கர்பாளையம் கள்ளர் பாளையக்காரர் சாவடி நாயக்கர்
=====================================================

தஞ்சை நாயக்கர் காலத்தில், அரசு அதிகாரியாக கள்ளர் குடியை சேர்ந்த
அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் நியமிக்கபட்டவர்கள் (கள்ளர்-நாயக்கர் என்ற
பட்டம்) . அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம். முதல் மரியாதைக்கு
உரியவர்கள்.

சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி
மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று
மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன் மகன்,
மராட்டியத்தின் அடுத்த அரசன் ராஜாராம் என்கிற ராமராஜவுடன் தப்பித்து
செஞ்சி வந்து, பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு
வருகிறார்கள். தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி
துக்காவுபாய் மகன். தன் சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி, அவர்களை
தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) சாவடி நாயக்கர்
பொறுப்பில் முழு பாதுகாப்புடன், அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார்.
அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு, சேவகர்களுக்கான
குடியிருப்பு ஏற்படுத்தி, சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி, அருகில்
உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி
கொண்டிருந்தார்கள்.

ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள். சாவடி
நாயக்கர் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த, ராஜாராம் மராட்டியத்தின்
மன்னனாகிறார்.
அரியதொரு வரலாற்றுச் செய்தி.
நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்
 
-- 

செல்வன்

unread,
Mar 19, 2019, 9:56:01 PM3/19/19
to mintamil, panbudan
கள்ளர் சமூகத்தின் வீரவரலாறு பற்றி அதிகம் வெளியே அறியாத தகவல்களை தொகுத்து வழங்கும் நண்பர் பெருமாள் தேவன் அவர்களுக்கு நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

Thevan

unread,
Mar 19, 2019, 10:05:39 PM3/19/19
to panbudan, minTamil
பாண்டியர் காலத்து கள்ளர் காணி நிலங்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அளகாபுரி அளகமணீஸ்வரர் கோவில்
கல்வெட்டில்.

பாண்டிய மன்னர் ஶ்ரீசுந்தரபாண்டித் தேவர் ஆட்சியாண்டான கிபி1228ஆம் ஆண்டு
தேவதானமாக ஊர் நிலங்கள் கிளிப்பற்றுடையானுக்கு வழங்கப்படுகிறது.

கல்வெட்டில் உள்ள விளக்கமானது அதளையூர் நாடாள்வார் கட்டுப்பாட்டில் உள்ள
நிலங்கள் கேரளசிங்க வளநாட்டு (புதுக்கோட்டை, சிவகங்கை) சேர்ந்த
கிளிப்பற்றுடையானுக்கு தேவதானமாக,அதளையூர் நாடாள்வாரின் கோவில் நிலங்கள்
மற்றும் கள்ளர் நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும்
கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது. தானமாக வழங்கப்பட்ட
நிலங்களில் இருக்கும் வரிகள் அப்படியே இருக்க கடவாராகவும் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோர்:
அதளையூர் நாடாள்வார் (தொண்டைமான்)
முனையத்தரையர்
சுந்தரபாண்டிய விழுப்பரையர்
வாதராஜன்
திருமலையுடையான் சேதிராயர்
பல்லவரையர்

குறிப்பு: ஏதோ கள்ளர்கள் திருடர்கள் என்று பிதற்றும் மூடர்களே, பாண்டிய
மன்னர் காலத்திலே கள்ளர்களுக்கென்று தனிக்காணி நிலம் இருந்துள்ளது,
அதுபோக கள்ளர் காணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருந்தால்
அது கோவில் நிலத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தோடு சேர்த்து ஒப்பீடு
செய்யப்படுகிறது. இதில் வரும் கள்ளர் காணி முறையே ஏழுகிளை கள்ளர்கள்,
புதுக்கோட்டை கள்ளர்கள், மல்லாக்கோட்டை கள்ளர்கள் என கலந்து வரும் நில
எல்லையாக வருவது தனிச்சிறப்பு.

மேலும் இதில் வரும் விழுப்பரையர், முனையத்தரையர், அதளையூர் நாடாள்வார்,
சேதிராயர், பல்லவரையர் முதலானோர் கள்ளர் சிற்றரசர்கள் என்பது
தனிச்சிறப்பு.

கல்வெட்டு :2
மன்னர் : சுந்தரபாண்டித் தேவர்
ஆட்சியாண்டு : கிபி1231

அதே கேரளசிங்க வளநாட்டு கிளிப்பற்றுடையானுக்கு தானமாக அதலையூர்
நாடாள்வாரின் ஆட்சி பகுதியில் உள்ள கோவில் நிலம் மற்றும் கள்ளர்
காணியயும் நீக்கி வழங்கப்படுகிறது.

கையொப்பம்:
அதளையூர் நாடாள்வார்(தொண்டைமான்)

கள்ளர் படைப்பற்று, கள்ளர் காணி என்று இராணுவம், நிர்வாகமும் சோழ,
பாண்டியர் காலத்திலே கள்ளர் பெருமக்கள் எவ்வளவு வலிமையாக அரையர்களாகவும்,
மன்னர்களாகவும், தளபதிகளாகவும், நாடாள்வார்களாகவும் வாழ்ந்துள்ளதை
இன்றுள்ளவர்கள் மறைக்கலாம், மறுக்கலாம்.
ஆனால் வரலாற்று தாய் யாருக்காகவும் அதை வளைக்க மாட்டாள்.

நன்றி
தமிழக தொல்லியல் துறை
53666502_277047936529081_5911364055867588608_n.jpg
54420995_277047966529078_1194318327846010880_n.jpg
54432726_277047996529075_3474801191559364608_n.jpg

Thevan

unread,
Mar 20, 2019, 5:05:28 AM3/20/19
to mint...@googlegroups.com
திரு செல்வன் அவர்களுக்கு,

தற்போது பல முக்குலத்து இளைஞர்கள் தன்னிச்சையான வரலாற்று ஆய்வில்
ஈடுபட்டுள்ளார்கள். இதில் முதன்மையானவர்கள், முனிராஜ் வானதிராயர், சியாம்
சுந்தர் சம்மட்டியார், சோழபாண்டியன். அவர்களின் தொகுப்பையே நான் இங்கே
வழங்கி வருகிறேன். உங்களது நன்றி அவர்களுக்கே உரித்ததாகும்.

Thevan

unread,
Mar 24, 2019, 12:16:08 AM3/24/19
to panbudan, minTamil
நாட்டார்பட்டயம் - கள்ளர்- மறவர்

சில வரலாற்று சிறப்புமிக்க பட்டயங்களை பார்க்கும் போது சில புதிர்களை
உடைத்தெரிகிறது.

அப்படிப்பட்ட பட்டயம் தான் “நாட்டார் பட்டயம்”

கிபி1853ஆம் ஆண்டு சித்திரை 24ம் தேதி சர்க்கரைப் புலவர் இயற்றிய இராமயண
பிரசங்கத்திற்காக தானமளித்த நாட்டார் பட்டயம் ஆகும்.

இதில் அஞ்சுகோட்டைப் பற்று நாட்டார்களாகவும், அம்ப்லங்களாகவும் கள்ளர்,
மறவர்கள் மற்றும் பிள்ளைமார்கள் வருகிறார்கள், இப்பட்டயத்தில் கள்ளர்,
மறவர் என பிரிக்காமல் அம்பலகாரர்கள் என ஒரு குடையின் கீழ் வருவது தனிச்
சிறப்பாக உள்ளது.

மேலும் இதில் கிளைவழி கள்ளர் அம்பலகாரர்களுக்கு தேவர் பட்டம் வருவது பல
புதிருக்கு விடை தருகிறது.

அனைத்தையும் விட என்னிடம் கப்பலூர் வள்ளல் ஐயா கருமாணிக்கத் தொண்டைமான்
வம்சத்தை சேர்ந்த கரிய மாணிக்கம் இராமசாமி அம்பலம் அவர்கள் அவர்களுடைய
குடும்ப பெயர் கரி(ரு)யமாணிக்கம் என்று கூறிய உன்மை நிரூபிக்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த பட்டயம் கிபி 1853 காலத்ததைச் சேர்ந்தது. இப்போது உள்ள
அவரின் தலைமுறைக்கு சுமார் 5 தலைமுறைக்கு முந்தையது.

இப்போது அவரின் பெயர்
கரிய இராமசாமி அம்பலம்
தந்தை கரிய மாணிக்கம் அம்பலம்
தாத்தா கரிய இராமசாமி அம்பலம்
கொள்ளுத் தாத்தா கரியமாணிக்கம் அம்பலம் என்றார்.

இப்போது அவரின் கொள்ளுத் தாத்தாவின் முன்னோர் பெயரும் அதையே தாங்கி
நிற்கிறது என்பது கப்பற் கோவையின் நாயகர் கப்பலூர் கருமாணிக்கத்
தொண்டைமான் வம்சாவழியை இன்னும் உறுதிபடுத்துகிறது.

இதுபோக படை கண்டான் அம்பலம் எனப்படுகிற கண்ணங்குடி கள்ளர் அம்பலத்தின்
குடும்ப பெயரும் அதையே தாங்கி நிற்கிறது, 800 வருடத்திற்கு முந்தைய
சிங்களப் படையெடுப்புக்கு இதே பெயர் தமிழ் படைத்தளபதியாக வருவது இன்னும்
வியப்பளிக்கிறது.

நாட்டார் பட்டயத்தில் வரும் அம்பலகாரர் பெயர்கள்:

கள்ளர் அம்பலங்கள்:

கரியமாணிக்கம் (கப்பலூர்)
படைகண்டான் (கண்ணங்குடி)
ஆண்டியப்பன் அம்பலம் (ஆற்றங்கரை மாகாணம்)
அனுமத்தேவன் (இறகுசரி)
திடக்கோட்டை தேவன் (வெங்கலூர்)
மல்லித்தேவன் (வெங்கலூர்)
திருக்காட்டி தேவன் (வெங்கலூர்)
உடைச்சி (இலுப்பைகுடி)
ஆண்டான் (ஆயங்குடி)
சின்ன கள்ளப்பத்தான் (ஆலம்பாடி)
பொன்னாண்டான் (கப்பலூர்)
முன்னையன் (களபத்தூர்)
உடைச்சியன் (சிறுகல்)
வணங்காமுடி (அனுமந்தகுடி)
சாத்தப்பன் (திருப்பாக்கோட்டை)
கருதேவன் (மணக்குடி)

மறவர் அம்பலங்கள்:

உடையார் (ஓரியூர்)
வெள்ளையத் தேவன் (பஞ்சாவயல்)
சுப்பாத்தேவன் (பஞ்சாவயல்)
வடுகத் தேவன் (நாலூர்)
கோரணி (பனங்குளம்)
வளை சித்திரன் (திருத்தல்)
சீனி (திருத்தல்)
கருமலைத்தேவன் (அஞ்சுகோட்டை)
சின்னாதித்தேவன் (அஞ்சுகோட்டை)
மல்லாரித் தேவன் (பிள்ளையாரேனேந்தல்)
ராக்கத்தேவன் (கிளியூர்)
மன்னங்காரன்
கருப்பன் (மருதங்குடி)
கட்டத்தேவன் (ஆக்களூர்)
ஆவணியாத்தேவன் (ஆக்களூர்)
பேயத்தேவன் (ஆக்களூர்)

மேலும் சில அம்பலங்களின் ஊர்கள் இன்று மருவியுள்ளதால் அடையாளம் காண முடியவில்லை.

மருவிய ஊர் பெயர் யாருக்காவது தெரிந்தால் என்னிடம் தகவல் கொடுங்கள்,
மேலும் இதில் வரும் அம்பலங்களின் குடும்பங்கள் யாராவது இருந்தாலும் தகவல்
கொடுங்கள்.

தகவலுக்காக காத்திருக்கிறேன்

குறிப்பு: இச்சிறப்பு மிக்க நாட்டார் பட்டயம் தொல்லியல் துறையால்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Mar 24, 2019, 12:16:24 AM3/24/19
to panbudan, minTamil
தஞ்சையை ஆட்சி செய்த மராட்டியர் ஆவணங்களில் கள்ளர்கள்

தஞ்சையை 17 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி
செய்தவர்கள் மராத்திய மன்னர்கள். இவர்களது ஆட்சிகாலத்தில் நடந்த முக்கிய
நிகழ்வுகள், கணக்கு வழக்குகள் உட்பட பல சுவையான தகவல்களை "மோடி"
ஆவணங்கள் எனும் பெயரில் பாதுகாத்து வந்துள்ளனர்.தஞ்சை தமிழ்ப்
பல்கலைக்கழகம் பழமையான மோடி ஆவணங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
மோடி ஆவணங்களில் கள்ளர் இனத்தவர்கள் பற்றிய குறிப்புகள் கள்ளர்களின்
அன்றைய சமூக நிலை மற்றும், வாழ்க்கை முறை, தஞ்சை கள்ளர் பாளையங்கள்
பற்றிய பல தகவல்களை தருகிறது. அவற்றை காண்போம்.

தஞ்சை கள்ளர் பாளையங்கள்:-

கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர்
பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி "தஞ்சை மன்னர்
பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை
சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை
நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான
எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல
பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் ( கிபி
1780-1790) காலக்கட்டம் ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி
வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில்
இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம்.
(தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)

இதே கருத்தை வேங்கடசாமி நாட்டாரும் தனது " கள்ளர் சரித்திரம்" நூலில்
கூறியுள்ளார். மேலும் தஞ்சையின் 13 பாளையங்களில் 11 பாளையங்கள் கள்ளர்
வசம் இருந்ததாக நாட்டார் குறிப்பிட்டுள்ளார். ( கள்ளர் சரித்திரம்:
வேங்கட. நாட்டார் பக் :65)

தஞ்சையில் இருந்த 13 பாளையங்களில் 10 பாளையங்கள் இன்றும் கள்ளர்
ஜமீன்களாகவே உள்ளனர். இன்று கள்ளர் வசமுள்ள ஜமீன்கள் : கண்டர்கோட்டை,
பாலையவனம், பாப்பா நாடு, கல்லாக்கோட்டை, சிலத்தூர், பாதரங்கோட்டை,
சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், புனல்வாசல் ஏனைய 3 பாளையங்களில்
முக்குலத்தோரின் மற்ற பிரிவினர் வசமே உள்ளது.

கள்ளர்குல அறந்தாங்கி தொண்டைமான் பாளையம் :-

கிபி 1827ல் எழுதப்பட்ட மோடி ஆவண குறிப்பில் " தஞ்சாவூர் சமஸ்தானத்தில்
சில ஊர்களுக்கு மெய்க்காவல் ஆயிருந்த தொண்டைமான் பாளையப்பட்டு காரருக்கு"
என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட பாளையம் அறந்தாங்கி
தொண்டைமானின் பாலையவனம் ஆகும்.
( தஞ்சை மராத்தியர் மோடி ஆவணம் Vol 1 page 23)

கிபி 1739 மற்றும் 1740 ஆம் ஆண்டுகளில் அறந்தாங்கி தொண்டைமான்களால்
வெளியிடப்பட்ட பெருவயல் செப்பேடு 1 மற்றும் 2 ல், வணங்காமுடி தொண்டைமான்
மற்றும் முத்து தொண்டைமான் ,ஆகியோர் தஞ்சை நகராதிபதி மகாராஜா சாயிபு என
தஞ்சை மன்னர் பிராதப சிம்ம ராஜாவை குறித்துள்ளனர். எனவே (கிபி 1739-1740)
காலக்கட்டத்திலேயே அறந்தாங்கி தொண்டைமான்கள் தஞ்சை மராத்தியர் மேலாண்மையை
ஏற்று விட்டனர் என விளங்குகிறது.

கிபி 1816 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குப்பட்டிணம் செப்பேட்டில், ஆண்டவராய
வணங்காமுடி தொண்டைமானும், பெரியதம்பி காலிங்கராச பண்டாரத்தாரும் அளித்த
கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னருக்கான எந்த அடைமொழிகளும் இந்த
செப்பேட்டில் காணப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் அறந்தாங்கி
தொண்டைமான்கள் சாதாரண பாளையக்காரராக, மெய்க்காவல் பொறுப்புகளை சில
ஊர்களுக்கு ஏற்கும் அளவுக்கு வலுவிழந்து இருந்தனர். ( தொண்டைமான்
செப்பேடுகள், புலவர் இராசு) .

இந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆண்டவராய வணங்காமுடி
தொண்டைமான், பாலையவன ஜமீன் குடும்பத்தார் என்றும் முற்காலத்தில்
தொண்டைமான் பட்டத்தை பயன்படுத்திய இந்த ஜமீன்தார்கள் தற்போது வணங்காமுடி
பண்டாரத்தார் எனும் பட்டத்தை மட்டும் பயன்படுத்துவதாக (List of
inscriptions and sketches of dynasties of southern india, robert
sewell :1884) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணங்காமுடி எனும் பட்டத்தை
அறந்தாங்கி தொண்டைமான்கள் பெற்ற விதம் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் தசரா விழா காலத்தில் தஞ்சை மன்னரை அனைத்து குறுநில
தலைவர்களும் நேரில் கண்டு வணங்கி வரும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால்
அறந்தாங்கி தொண்டைமான் தஞ்சை மன்னரை சந்திக்க தான் செல்லாமல் தன்னுடைய
பிரதிநிதியை அனுப்பி வைத்ததால், மன்னருக்கு தலைவணங்காதவர் எனும்
குறிக்கும் விதமாக வணங்காமுடி என பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வணங்காமுடி எனும் பட்டம் அறந்தாங்கி தொண்டைமான்களால் கிபி 1600 களில்
இருந்தே பயன்படுத்தப்படுவதை அவர்களின் செப்பேடுகள் குறிப்பிடுகிறது.
இன்றும் பாலையவன ஜமீன்களால் வணங்காமுடி பட்டம் தொடர்ந்து
பயன்படுத்தப்படுகிறது.

1930-ம் ஆண்டு கல்வெட்டு எண் 233-ல் கிபி 1482 ல் ஏகப்பெருமாள்
தொண்டைமான் காலத்தில், பொதுமக்கள் தங்களுக்கு அநீதி ஏற்பட்டால்
கள்ளப்பற்றில் முறையிட்டு நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ளது. நீதி பரிபாலனம் செய்யும் இடமாக இருந்துள்ளது.

கல்வெட்டு எண் 341 of 1925 , பட்டுக்கோட்டை சீர்மையில் கள்ளப்பற்று என
அறந்தாங்கியை கிபி 1684 ல் குறித்துள்ளது. அறந்தாங்கி கள்ளர்களின்
ஆளுமையில் இருந்துள்ளதை இந்த கல்வெட்டு விளக்குகிறது.
.
ஆவுடையார்கோயிலில் உள்ள ஆவுடைநாதர் கோயிலில் 9 ஆம் மண்டகப்படிதாரர்கள்
பாலையவனம் ஜமீன்தார்கள் என்பது கூடுதல் தகவல்

பாளையப்பட்டுகள் அனைத்தும் கள்ளர்கள் வசம் இருந்தது என "மோடி" ஆவணங்கள்
குறிப்பிட்டதை கண்டோம்.

நம்ராம்பட்டி கள்ளர்கள் :-(கிபி 1799)

கிபி 1799 ல் கள்ளர் பாளையப்பட்டை சேர்ந்த நம்ராபட்டி எனும் ஊரில்
யேகரமூர்த்தி என்பவரின் குதிரை வயலில் மேய்ந்ததால் கள்ளர்கள் குதிரையின்
காதையும், வாளையும் அறுத்துவிட்டார்களாம். அதற்கு கள்ளர்களுக்கு அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது. யேகமூர்த்தி என்பவர் மராத்திய மன்னரின்
பிரிதிநிதியாக இருக்கலாம்.

மழைவேண்டி கள்ளர்களின் பூஜை ( கிபி 1776)

கிபி 1776 ல் கள்ளப்பற்றில், மழை வேண்டி , வருண ஜெபம் , ருத்திராபிஷேகம்,
ஆகியவை 45 நாட்களுக்கு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செய்ததற்கான செலவு
கணக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் கள்ளர்களிடம் இறை
நம்பிக்கை மிகுந்து வேத மந்திரங்களில் நம்பிக்கையுடையவர்களாக
இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வெங்கடாசல சிங்கப்புலியார்(1787)

கிபி 1787 ல் வெங்கடாசல சிங்கப்புலியார் தனக்கு பாளையப்பட்டு
ஏற்படுத்தப்பட்டதை பற்றி குறிக்கப்பட்டுள்ளது. சிங்கப்புலி எனும் பட்டம்
கல்லாக்கோட்டை மற்றும் பாதரங்கோட்டை ஜமீன்களால் உபயோகிக்கப்படுகிறது.

கல்லாக்கோட்டை பாளையம்

கள்ளப்பற்றான, கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜய ரகுநாத முத்து விஜய
சிங்கப்புலியார் காலத்தில் சிவன் ராத்திரியை முன்னிட்டு களச்சிக்காய்
எனும் பருப்பு வகை நான்கு படி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சமஸ்தானத்திற்கு
அளித்து இருக்கலாம். தஞ்சை சமஸ்தானத்திற்கும், கல்லாக்கோட்டை ஜமீனுக்கும்
சமூகமான உறவு நிலவியுள்ளது.

தொண்டைமானுக்கு நாய்களை பரிசளித்தல் ( 1791)

கிபி 1791 ல் தொண்டைமானுடைய மனிதர் வந்திருந்ததாகவும் அவருக்கும் நாய்களை
அளித்ததாகவும் தஞ்சை மன்னர் மோடி குறிப்பு கூறுகிறது. இது புதுக்கோட்டை -
தஞ்சை மன்னர்களுக்கு இடையே சுமூக உறவு நிலவிய காலமாக இருக்கலாம்.

தஞ்சை மன்னரை சந்தித்த கல்லாக்கோட்டை பாளைய தலைவர்(1846)

கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜயரங்கநாத சிங்கபுலியார் அவர்களுடைய
பிள்ளையுடன் தஞ்சை மன்னர் இரண்டாம் சிவாஜியை சந்தித்த போது ரூ 11 பணம்
அன்பளிப்பாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மன்னருக்கும்,
கல்லாக்கோட்டை பாளையத்திற்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து வந்துள்ளது.

குத்தகைக்கு விடப்பட்ட பாளையப்பட்டு நிலங்கள் ( 1850)

கிபி 1850 ல் குத்தகை விடப்பட்ட நிலங்கள் சமந்தமுள்ள பாளையப்பட்டுகள்
குறிக்கப்பட்டுள்ளது. அவையாவன:- அத்தவெட்டி, சேந்தங்குடி, கோனூர் ,
சிலட்டூர், கல்லாக்கோட்டை, புனல்வாசல், பாப்பாநாடு, நெடுவாசல், மதுகூர்,
கண்டர்க்கோட்டை ஆகியன. இந்த பாளையம் சமந்தமுள்ள கணக்காய்வு குறிப்புகள்
தரப்பட்டுள்ளது.

கல்லாக்கோட்டை/ கண்டர்க்கோட்டை( 1832)

கிபி 1832ல் கல்லாக்கோட்டை பாளையத்திற்கும், கண்டர்கோட்டை
பாளையத்திற்கும் ஒரு விசயம் தொடர்பாக விவாதம்( வழக்கு) இந்ததாக
குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதம் தொடர்பாக தஞ்சை மன்னரை நாடியிருக்கலாம்.

கள்ளர் சீமை சிலட்டூர்/ நெடுவாசல் ( 1788)

தஞ்சை மன்னர் அமரசிங்கு காலத்தல் கள்ளப்பற்று சீமையில் இருந்த ராமாசாமி
பன்றிக்கொண்டாரின் பாளையப்பட்டு நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையம்
ஆகியவற்றின் தாயாதி( ஆதி) கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் என
குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட குறிப்பும்
உள்ளது. நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையங்கள் இங்கு கள்ளர் சீமையில்
இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ( கிபி 1861)

நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் நிலம் தொடர்பாக அளித்த சாசனங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மிராசுதாரர்கள் என குறிப்பிடப்பட்டு
உள்ளனர். இன்றும் நாஞ்சிக்கோட்டையில் மண்ணையார் பட்டம் கொண்ட கள்ளர்கள்
வாழ்கின்றனர். இந்து எதிர்ப்புப் போராளி, முள்ளிவாயக்கால் முற்றம்
அமைக்கப் பாடுபட்ட நடராஜன் மண்ணையார் நாஞ்சிக்கோட்டை அருகில் உள்ள விளார்
கிராமத்தை சேர்ந்தவராவார்.

கிளாக்குடையார்கள் (1831)

நாராயணன் கிளாக்குடையார் மற்றும் அவரது மகன் கிருஷ்ண கிளாக்குடையார்
ஆகியோர் பிறரிடம் இருந்து மனைகளை வாங்கியது பற்றிய குறிப்புகள்
காணப்படுகிறது. கிளாக்குடையார்களொ பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும்
தஞ்சையில் வாழ்கின்றனர். புகழ்ப்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார்
பட்டம் கொண்டவராவார்.

கள்ளப்பற்று கண்டர்கோட்டை பாளையம் ( கிபி 1798)

கிபி 1798 ல் கண்டர்கோட்டை பாளையக்காரர் அச்சுதப் பண்டாரத்தார் காலத்தில்
தஞ்சை மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இரண்டு மூன்று உள்ளது. அனைத்தும்
ஒரே தகவலை கொண்டுள்ளது. முற்காலத்தில் கோனூர் நாடு கண்டர்கோட்டை
பாளையப்பட்டில் சேர்ந்திருந்ததாகவும், பிற்காலத்தில் அது தஞ்சையுடன்
இணைந்ததாகவும், கோனூர் நாடு, சந்தை மற்றும் ஆயம் உள்பட அனைத்தையும்
முன்பிருந்தவாறே கண்டர்கோட்டை பாளையத்துடன் இணைத்திடவும் அதற்கு உரிய
உடன்படிக்கைக்கு தயார் எனவும் கண்டர்க்கோட்டை பாளைய தலைவர் அச்சுதப்
பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்றை
சேர்ந்த கண்டர்கோட்டை பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோனூர்
பாளையப்பட்டும் கண்டர்கோட்டை எனும் பெரிய பாளையத்தோடு முன்பிருந்ததை இந்த
ஆவணம் விளக்குகிறது.

தஞ்சை மன்னர்கள் வரலாற்று குறிப்புகளான மோடி ஆவணங்களின் மூலம் நாம்
அறியும் முக்கிய தகவல்கள், தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைக்கும்போது
அவர்களுக்கு எதிராக இருந்தவர்கள் வாள் வீச்சு வீரர்களான கள்ளர்கள்
மட்டுமே. கள்ளர்களை சமாதானப்படுத்தவே, பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சையின் பாளையங்கள் இருந்த பகுதிகள் அனைத்தும் கள்ளர் பற்று என்றே
குறிக்கப்பட்டுள்ளது மூலம் கள்ளர்கள் அப்பகுதியில் மிகுந்து ஆதிக்கத்தோடு
13 பாளையங்களை உருவாக்கி வாழந்துள்ளனர் என்பது விளங்கும். சோழ பேரரசின்
வாரிசுகள் அல்லாமல் வேறு யாரால் தஞ்சையில் ஆதிக்கம் செலுத்த இயலும்?!

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

Thevan

unread,
Mar 24, 2019, 12:16:29 AM3/24/19
to panbudan, minTamil
5.jpg
6.jpg
7.jpg

Thevan

unread,
Mar 26, 2019, 3:44:28 PM3/26/19
to panbudan, minTamil
கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என ஒருவர் கேட்பது எந்த
அளவிலான மூடத்தனம், என்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம்
இல்லை! கீழே...தேதி வாரியாக கள்ளர்கள் போரிட்டதற்கு ஆதாரம் தந்துள்ளேன்.
மறுக்க முடிந்தால் மறுத்து பாருங்கள்!

1.அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து
திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

2. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.

3. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து
சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.

4. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக்
கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய
மொழியில் யேசு சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.

5. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று
தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.

6. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம்
எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

7. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள
ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.

8. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு
தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.

9. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.

9. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு
எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.

10.1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு
மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.

Thevan

unread,
Apr 5, 2019, 1:10:39 AM4/5/19
to panbudan, minTamil
#தமிழ்மகன்_Vs_ஆரியமகன்*********
**************#வரலாற்றுப்போர்****************

சுமார் 70வருடங்களுக்கு முன்னாள் தமிழ் மன்னர்களை ஆரிய இனமாக
காட்சிப்படுத்தி அதை புத்தகமாக வெளியிட்டார் மஹா வித்துவான் ராவ் சாகிப்
#இராகவய்யங்கார் அவர்கள்.

அந்த புத்தகத்தில் உள்ள ஆரிய கற்பனையை, தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற மகன்
தமிழறிஞர்,நாவலர் நடுக்காவேரி முத்துசாமி #வேங்கடசாமி_நாட்டார் அவர்கள்
சுக்கு நூறாக உடைத்து மறுப்பு புத்தகம் வெளியிட்டு கேள்வி கனைகளை
ஐயங்கார் மீது தொடுத்தார்.

இறுதியில் என்ன ஆனது....?
யார் அந்த தமிழ் மன்னர்கள்...?
எப்படி ஆரியர்களாக திரிக்கப்பட்டார்கள்...?
நாட்டார் எப்படி அதை உடைத்தார்....?

விரைவில்....................!

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Sivaramakrishnan Siva

unread,
Apr 14, 2019, 9:40:31 AM4/14/19
to mint...@googlegroups.com
அற்புத  விளக்கம்...

Thevan

unread,
Apr 15, 2019, 2:39:23 AM4/15/19
to panbudan, minTamil
சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த
செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன
சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும்.
கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும்
செப்பேடு காட்டும் செய்தியில் "ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்" என
வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது.

செப்பேடு
~•~•~•~•~

சொக்கலிங்கம் துணை

அகோர சிவந்த பாதமூருடைய ஆதினம் வடகரை ஆதிக்க சின்னனேந்திரன் அவர்களால்
எழுதிய நளச்சக்கரவர்த்தி அம்பொன்னாட்டு தேவர் வம்ச பாரம்பரை தாம்பிர சாசன
நகல் பால

ர்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் அம்பொன்னாட்டு டைய மகா ள ஸ்ரீ
வடகரை ஆதிக்கம் முடி மன்னன் சின்னனேந்திரன் ராஜாதிராஜன் ராஜகெ ம்பீரன்
ராஜ போஜனன் வீரடதகடதட மகுட கோலாகல நாய விதுரன அஷ்டதிக்கு மனோட் சங்கரன்
பாண்டிய மண்டல பிரதிஷ்டா வனாச்சியார் இந்திரன் முடிமேல் இனைவழைஎறிந்தோன்
ஆரம் தரித்த சௌந்திரஷ்வரர் பூதத்தை பணி கொண்ட புகழ் வீர கேரளன் மேகத்தை
திரை கொண்டு வீர நாகற்தை கண்ணு வாங்கும் பெருமாள் கண்டநாடு கொண்ட நாடு
ஆப்பநாடு கொண்டநாடு கொடாத புண்டரீக வதனன்

கனக சபை அச்சுத சபை சித்திர சபை தாம்பிர சபை மாரதின சபை சிர்ச்சபை ராஜ
சபை நர்த்த சபை தேவ சபைக்குடைய வனாயும் அம்பொன்னாடு ஆப்பநாடு
செம்பொன்நாடு
கிழுவை நாடு பொதுநாடு வன்னிவள நாடு ஈசாங்கு நாடு முதலான நாட்டில் முதன்மை
பெற்றவனாம் சண்டப் பிரசண்டன் தண்டுவர் முண்டன் ஷிவ தயாபரன் நித்ய கல்யாண
நிபுணன் திரிபுவன சக்கரவர்திகளில் கோனேரிமை கொண்டவன் வாரி வடிவம்பல மகா
மேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப் பெருமாள் பொற்கை துருகின் தாக
மகுட நிகழ்த்தி மகுடந் தரித்த மகராஜன்
தென் பொதிகை மேருவின் குறுமுனி ஏவி வருட் புனல் தன்னை மின்னும்
சென்றதினால் வழிவிட்டருளிய கொற்கை வேந்தன் ஆரம்பூண்ட வேப்பந்தார் மார்பன்
மகாராஜ ராஜாமார்த்தாண்டன் மணிமகுடந் தரித்தோன் முன் வைத்த காலை பின்
வாங்காப் புகழ் வீரன் க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றோன் அம்புக்கோட்டை
கொண்டையங்கோட்டை செம்புக்கோட்டை அணிற்கோட்டை வாள் கோட்டை முதலான
கோட்டைக்குக்கோட்டைக்கு முதன்மை பெற்றோன் அம்பனேர் கலனை முக்குழணி
மங்கலம் அரும்படியுத்தம் புரிந்தோன் ஆகையால் அம்ப நறியார் என்று பெயரும்
பெற்றோன்
எட்டு கிளையும் எட்டுக்கொத்தும் உடையோன் தேவர் குல வம்சமாகிய பாண்டி
நாட்டுக்கு பதி தீர்த்தயாருரை ன் சு வா மி தெரிய வந்தது கண்டு எங்கள்
குலகுருவாகிய காஞ்சிபுரம் பிரபு அகோர சிவந்த பாதமூருடைய தேசிகரவர்கள்
தென்காசி விஸ்வநாதர் சன்னதியில் சன்னதி மடத்ததிபதியார் வந்திருப்பது
தெரிந்து குரு சன்னி தானத்தில் வந்து தெரிசனை செய்தது தெரிந்து திரு
நோக்கம் பார்த்து திருவாய் மலர்ந்து அருமை மொழி கூறி தீட்க்ஷய் செய்து
திருநீர் ஆசீர்வாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்ரீ
பெருமாள் அழகம் இருந்த காலம் சாலி வாகன சகாப்தம் 1171 ன் மேல் கொல்லம்
ஆண்டு 421 புத்திர புவன மகேந்திர: மூலப் பிரதீப மதுர மாகேந்திர மோந்த
மங்கல மிரபலாதீப நாரங்க கேரள தாமோதர வந்த்ர சோழ சிந்து ய ட் ஷ்கல நாயக
சாயஞ்சய கேரள பௌம மகா ள ஸ்ரீ காசி பராக்கிரம பாண்டிய ராஜா அவர்கள்
முன்னிலையில் விஸ்வேஸ்சுர சன்னதியில் எழுதிய தாம்பிர சாசனம்
திருவாலவாய் ஸ்வாமி ஆடி வீதியில் சப்தாபரண மண்டபமும் கோவிச்சடையில்
சொக்கலிங்கம் பிரதிஷ்டையும் நம்மால் செய்து அதற்கு அருகே நிலமும் சன்னதி
மடம் ஸ்வாமி சொக்கலிங்கம் பூஜைக்கு ஊர் மேல் அழகியான் மூன்று
கோட்டை விரைப்பாடும் தர்ம சாசுவதமாக ஏற்படுத்தி எங்கள் வம்சத்தார்
பரம்பரை குரு சன்னிதானத்திற்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம்
இரண்டும் பெண்ணுக்கு பணம் இரண்டும் தீட்க்ஷைக்கு பணம் பத்தும் சுப முதலான
காரியத்திற்கு பணம் பத்தும் அவர்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும்
கடமையும் கல்யாணத்திக்கு வெற்றிலை 100ம் பாக்கு 20 இருபதும் கொடுத்து
வேண்டுமென்கிற பணிவிடைகள் செய்து வருவோமாகவும் இந்த உடை பண்ணினவர்கள்
காசிக்கரையில் காராம்பசுவை மாதா பிதா சிசு கொலை செய்த தோஷத்தில்
போவோமாகவும் இதை விடுத்து செய்கிறவர்கள் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று புத்திர
சம்பத்தும் பெற்று தங்கள் குலம் உள்ளளவும் பேர் பெற்று வாழ்ந்து
கொண்டிருப்பார்களாகவும் காசி முதல் கன்னியாகுமரி வரை

இந்தப்படிக்கு

ஒப்பம் -வடகரை சின்னனேந்திரன்
ஒப்பம் - காசி பராக்கிரம பாண்டிய ராஜா
ஒப்பம் -ராமசந்திரமகாராஜா

அகோர சிவந்த
பாதமுடைய வம்ச பரம்பரையில் உதித்த ஸ்ரீ
மகா ள குரு சுவாமி அவர்கள்

....ந்திரன் வம்ச பாரம்பரையில் உதித்த
திரிபுவன சக்கரவர்த்தி மாற.
திரிகூடபுரம் சின்னனேந்திரன்

எழுத்து

மேலுள்ள செப்பேடு ஒரு பாத்திரக்கடையில் இருந்து தொல்லியல் துறை மேனாள்
துணை இயக்குனர் திரு. சொ.சந்திரவாணன் அவர்களால் மீட்கப்பட்டு
செப்பேட்டுக்கு உரியவர்களின் சம்மதத்தின் பேரில் தொல்லியல் துறையிடம்
சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது சென்னை கோட்டையில் உள்ள அலுவலகத்தில்
உள்ளதாக அவரால் சொல்லப்படுகிறது.

செப்பேடு காட்டும் செய்திகள்
-------------------------------------------------
" பாலார்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் "

"இந்திரன் முடிமேல் இனைவளையெறிந்தோன்"

"ஆரம் தரித்த சௌந்தரஷ்வரர்"

"திரிபுவனச் சக்கரவர்த்திகளில் கோனேரிமை கொண்டவன்"

"வாரி வடிவம்பல மகாமேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப்பெருமாள்"

"கொற்கை வேந்தன்"

"ஆரம் பூண்ட வேப்பந்தார் மார்பன்"

"க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றவன்"

"தேவர் குல வம்சமாகிய பாண்டிய நாட்டுக்கு பதி"

முதலான தொடர்களால் வடகரையாதிக்கத்து அரசர் குறிப்பிடப்படுகிறார். இது
இவர் பாண்டிய வம்சத்தவர் என்பதற்கு உறுதியான சான்றுகளாக உள்ளது. மேலும்
செப்பேடு பாண்டியன் முன்னிலையில் எழுதப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

செப்பேடு தனது தொடக்கத்திலேயே மதுரை பாண்டியரின் குலதெய்வமாகிய
சொக்கநாதரைக் குறிக்கும்வண்ணம் "சொக்கலிங்கம் துணை" என்று
தொடங்கப்பெறுகிறது. வடகரையாதிக்க பாண்டிய தேவ நந்தனார்களாகிய
சொக்கம்பட்டி அரசர்களது பிற்காலத் தலைநகரும் "சொக்கன் பட்டி" என்று
சொக்கநாதரை நினைந்து உருவாக்கப்பட்ட ஊரேயாகும்.

மேலும் சொக்கம்பட்டியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு செல்லும்
பாதையில் கருப்பாநதி ஓரத்தில் பெரியநாதன் கோயில் என வழங்கப்படும்
பெரியசாமி ஐயன் கோயில் உள்ளது. இக்கோயில் சொக்கம்பட்டி அரசர் பெரியசாமித்
தேவர் அவர்களின் பள்ளிப்படையே என்று கருதப்படுகிறது. அக்கோயிலில் இரண்டு
கல்வெட்டுகள் சொக்கம்பட்டி அரசர்கள் இருவரைக் குறிக்கின்றன. கோயிலின்
முன் மண்டப மேற்புறத்தில் பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு
பொறிக்கப்பட்டு அதன் கீழே பெரியசாமி செம்புலி வேள் கல்வெட்டு
பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை அடுத்த பதிவில் காண்போம்.

நன்றி!
உயர்திரு. சொ.சந்திரவாணன் அவர்கள். {மேனாள் இயக்குனர் தமிழக தொல்லியல் துறை }

தென்கரை மகாராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி ஜமீன் வாரிசுதாரர்}

அன்பன்:
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg

Thevan

unread,
Apr 15, 2019, 7:13:55 PM4/15/19
to panbudan, minTamil
பிறமலைக்கள்ளர் எட்டுநாடு
---------------------------------------------------
கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட திருமலை நாயக்கர் செப்பேட்டில்
குறிப்பிடப்பட்டுள்ள பிறமலைக்கள்ளர்களின் 8 நாடுகள் :

பதிவு - சியாம் சுந்தர் சம்பட்டியார்
57409176_317097925622162_4185342022455918592_n.jpg
56927298_317097895622165_2126696414309253120_n.jpg

Thevan

unread,
Apr 15, 2019, 7:14:00 PM4/15/19
to panbudan, minTamil
பழந்தமிழனின் பாரம்பரியப்படி சித்திரை தமிழ்புத்தாண்டில் வருகின்ற
நாட்களில் உழவுதொழிலும் விவசாயமும் சிறப்படைந்து வெற்றிகரமான ஆண்டாக மாற
குடிபடைகளுக்கு “வெற்றிலை”வழங்கி வாழ்த்தி அனுப்பும் பதினாலு தன்னரசு
கள்ளர் நாடுகளில் ஒன்றான வெள்ளலூர் நாட்டு அம்பலங்கள் ..
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Apr 15, 2019, 7:14:03 PM4/15/19
to panbudan, minTamil
பட்டுக்கோட்டை பேராவூரணி காவல் தெய்வம் #கள்ளர்_குடியில் பிறந்த
ஸ்ரீ குட்டியப்பர்
===================================
புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் கள்ளர் குடியில்
பிறந்த ஸ்ரீ குட்டியப்பர் வாழ்ந்துவந்தார். அப்போதிருந்த பாலைவனம் அரையர்
வணங்காமுடி பண்டாரத்தார் ஆதரவில் ஸ்ரீ குட்டியப்பர் வேல், கம்பு ,
துப்பாக்கி முதலிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆங்காங்கு வேட்டைக்கு
செல்வது வழக்கம். அப்பொழுது ஆத்தாளுர் (பேராவூரணி ) பக்கத்தில் ஓர் புலி
ஆடுமாடுகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வந்தது. இதனை கேள்வியுற்ற ஸ்ரீ
குட்டியப்பர், அவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆத்தாளின்
அருள்பெற்று வேட்டையாடிப் புலியை வேலினால் குத்தி கொன்றார். ஸ்ரீ
குட்டியப்பரும் இவ்விடத்திலேயே தெய்வமாகி அம்மனுக்கும், மற்றையோருக்கும்
காவல் தெய்வமாயிருந்து கத்துவருகிறார். இவருடைய பங்காளிகளால் பெரும்
பூஜையும், தினமும் ஒரு காலப்பூஜையும் நடத்தப்படுகிறது.
57262784_317360975595857_8299248697145819136_n.png
57190381_317360968929191_5974193826770714624_n.png

வேந்தன் அரசு

unread,
Apr 16, 2019, 10:04:49 AM4/16/19
to vallamai, panbudan, minTamil


சனி, 16 மார்., 2019, பிற்பகல் 7:46 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:

இதே கதை ஆந்திராவிலிருந்து  முசுலீம் மன்னனுக்கு அஞ்சி தமிழ் நட்டுக்கு ஓடிவந்ததாக கம்மவார் சரித்திரத்திலிருக்கு. அங்கு நாய்பொம்மை வைத்துவிட்டு ஓடிவந்துவிடுவார்கள்.

கன்னடமக்களுக்கும் இதேபோல் ஒரு கதையும் இருக்கு என்று, கோபல்லவ கிராமம் எனும் புதினம் எழுதிய கி இராஜ நாராயணனிடம் நான் சொல்ல அவரும் ஆமாம் எனக்கும் மடல்கள் வந்தன என்றார்.

 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
Apr 16, 2019, 3:36:26 PM4/16/19
to panbudan, minTamil
57262784_317360975595857_8299248697145819136_n.png
57190381_317360968929191_5974193826770714624_n.png

Thevan

unread,
Apr 16, 2019, 3:36:32 PM4/16/19
to panbudan, minTamil
பூஜையும், தினமும் ஒரு காலப்பூஜையும் நடத்தப்படுகிறது.
57262784_317360975595857_8299248697145819136_n.png
57190381_317360968929191_5974193826770714624_n.png

Thevan

unread,
Apr 17, 2019, 12:12:43 AM4/17/19
to panbudan, minTamil
செம்புலி வேள் 'முத்துசுவாமி'
○~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~○

அன்பு வாசக நண்பர்களே! -உறவினர்களே!!, வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி
பாண்டியர்களுடைய வரலாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும்
குறுகியதொன்றல்ல! ,அவர்கள் ஆண்டபகுதிகளை உள்ளடக்கிய தென்பொதிகைச்
சாரலிலும்,தென்றல் தவழுகின்ற ஆலயங்களிலும், அன்னச்சத்திரங்களிலும்,
இளைப்பாறுதல் தருகின்ற கல்மண்டபங்களிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில்
படித்தும் படிக்காமலும் -படியெடுத்தும் அச்சில் ஏற்றியும்- ஏற்றாமலும்
இருக்கின்ற கல்வெட்டுகளும்- செப்பேடுகளும்- ஓலைசாசனங்களும் -
பிறகுறிப்புகளும் ஏராளமான அளவிலே உள்ளன.வரலாற்றை மீண்டும்
மீளாய்வுக்குட்படுத்தி நடுநிலை தவறாத ஆய்றிஞர்களைக் கொண்டு, தமிழகத்
தொல்லியல் துறையானது அங்கே முறையான ஆய்வுகளை நடத்தி "உள்ளது உள்ளபடி"
சொல்ல முற்பட்டால், இன்றைய வரலாற்று திரிபுகள் அத்தனையும் மொத்தமாக
காணாமல் போய்விடும். ஏன் தமிழக வரலாற்றிற்கே ஒரு பெரும் வெளிச்சம் இதனால்
கிடைக்கும் என்று கூறிக்கொண்டு எனது தென்காசிப் பாண்டிய வம்சத்தின்
தேடலைத் தொடர்கின்றேன். நீங்கள் இப்போது வாசிக்க இருப்பது இதுவரை அச்சில்
ஏறாத புதிய கல்வெட்டுகளாகும்.

பெரியசுவாமி ஐயன் கோயில்
•••••••••••••••••••••••••••••••••••••••••
சொக்கம்பட்டி ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி
மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம்தான் ஸ்ரீபெரியசுவாமி ஐயன் கோயில். இதனை
சொக்கம்பட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் "பெரியநாதன்" கோயில் என்றே
அழைக்கின்றனர். இக்கோயிலின் அமைவிடம் மிகவும் ரம்மியமான எழில் கொஞ்சும்
பிரதேசத்தில் அமைந்துள்ளது. கோயிலின் படிக்கட்டுகளை தினந்தோறும்
ஆற்றுநீரானது அலையடித்துக் கழுவிக்கொண்டிருக்க நாமும் இறங்கி
கருப்பாநதியாகிய இந்த தெளிவான நீரோட்டத்தில் நடந்துதான் நாம்
ஆலயத்திற்குள் நுழைய முடியும். நுழைவாயிலில் சாஸ்தா நம்மை வரவேற்கிறார்.
இரண்டு பெரிய குதிரை சிலைகளின் மீது பெரியசுவாமி ஐயன் அருகில்
பூரணபுஷ்கலையுடன் கம்பீரமாக அருள்கொஞ்சும் முகத்துடன் காட்சியளிக்கிறார்.
அதைக்கடந்து உட் செல்கையில் நேர்த்தியான கற்கோயில் தென்படுகிறது. கட்டிட
அமைப்புகள் பிற்காலப் பாண்டியர் காலத்தவை என்பதை பறைசாற்றுகின்றன. பெரிய
கருவறை மற்றும் முன் மண்டபம் கொண்டு அதற்கு முன்பாக சிறு மண்டபத்துடன்
அழகாகக் காட்சியளிக்கிறது ஆலயம். மூன்று லிங்கங்கள் கருவறையில்
காட்சியளிக்கின்றன. நடுவில் உள்ளதுதான் கருஞ்சிவலிங்கம் என்று
சொல்லப்படுகின்ற பெரியசுவாமி ஐயனாவார். இடமும் வலமும் முறையே பூரண
புஷ்கலா தேவியர் லிங்க வடிவில் காட்சிதருகின்றனர்.

கல்வெட்டுகள் .
••••••••••••••••••••
இங்கே நான் அறிந்தவரை மூன்று கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒன்று செம்புலி
சின்னணஞ்சாத் தேவர் காலத்தியது இக்கல்வெட்டு இக்கோயிலின் முன்
மண்டபத்தின் உட்புறத்தில் அமைந்துள்ள மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளது.

மற்றொன்று அதே மண்டபத்தில் கீழே படுக்க வைக்கப்பட்ட நிலையில் உடைந்து
காணப்படுகின்றது. மற்றொன்று அதே மண்டபத்தில் கோயிலின் பிரதான வாசலின்
வலது ஓரத்தில் நின்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

செம்புலி சின்னணஞ்சாத் தேவர் கல்வெட்டு.

1.திரு பணியுஞ் செய்து விண்னோர் முன்வர பொற்.சூயதாவினகும்பாபி செதானென் உ

2. {பிரி}யமுடன் கருஞ்சவனப் பெரியசுவாமி வெள் விடையோன் டனக்கு அந்தமெல்படிலசனத்தில்

3. . .ருப்பிலுவர் மாணிக்க வரையான் வெள் செம்புலிதுரைச் சின்னணஞ்சான்
சோலமுத்து சுவாமி

4. . . . .ருத. . . .ன். . .மை . . ங்கி தெக்கல்லக நன்னாடன் வடகரைக்கு வேங்கன்

5. {சின்ன}ணஞ்சான் செம்புலி வேள் முத்து சுவாமி செய்தானே கும்பாபிசேகந்தானே உ

6. . .ன வனாங் கருஞ்சை வனப் பெரிய சுவாமி முக்கண்ணன் றிருப்பணியு முடித்தே எங்

7. . . னயஞ்செ ஆதித்தவாரம் நன்னாள் துலங்கு சதுர்த்தெசி அத்தமார்சித வேளையிலே

8. . . என்னு துளாயிரத்திருபத்தாராம் ஆண்டு வசந்தத்து சித்திரை நன்மாஷம்
எட்டாந் தேதி....

- என முடிகிறது. இக்கல்வெட்டின் கீழே சாசனத்திற்கு முத்திரை போன்று
பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு புடைப்புச் சிற்பமாக
பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மற்றும் அதன் படங்களை கீழே
பதிந்துள்ளேன். மூன்று கல்வெட்டுகளில் இரண்டை நானும், ஒன்றை மேலப்பனையூர்
திரு.ஐயா. கரு.ராஜேந்திரன் அவர்களும் வாசித்தோம் அவற்றை நாங்கள்
வாசிக்கும்போது எங்களுடன் கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள் திரு.
Ra Ja @ தென்கரை மகாராஜ பாண்டியன் திரு. பராக்கிரம பாண்டியன். திரு.
விவேக் பாண்டியன் அவர்கள் உடனிருந்தனர்.

கல்வெட்டு செய்தியும், விளக்கமும்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
மேற்கண்ட கல்வெட்டில்,வடகரை அரசராகிய சின்னணஞ்சாத் தேவரவர்கள்,...

"முத்து சுவாமி"

"செம்புலி வேள் முத்துசுவாமி"

"வேள் செம்புலி துரை"

"பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சோல முத்து சுவாமி "

"தெக் கல்லக நன்னாடன்"

"வடகரைக்கு வேங்கன்"

- எனும் சாசனத்தொடர்களால் குறிக்கப்பெற்றுள்ளார்.

முத்து சுவாமி எனும் தொடரை நோக்கும்போது நமக்கு பாண்டியனின் ஞாபகம்
வராமலிருக்காது.அதற்கேற்ற வண்ணமாக குற்றாலத்தில் வடகரையாதிக்க பதியார்கள்
முத்துப்பூணூல் -முத்தாரம் -முத்துக்கடகமணிந்த கோலங்களில் காட்சியளிப்பது
போன்றே இங்கும் அவர்கள் வம்சத்து "செம்புலி வேள் முத்துசுவாமி
சின்னணஞ்சாத்தேவர்" ஆலயத்தின் முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணொன்றில்
முத்துப்பூணூல் மற்றும்அதே இதர அணிகளுடன் கரம் கூப்பி வணங்கின காட்சியில்
தோற்றமளிக்கிறார்.

அடுத்ததாக "அந்தமேல்படிலசனத்தில் பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சொல
முத்துசுவாமி" எனும் சாசனத்தொடரானது அந்தமிலாத உயர்ந்த சிகரங்களையுடைய
மாணிக்க மலையினையும் அதனுடைய சோலை வனங்களையும் உடைய முத்து சுவாமி"
என்கிற பொருளைத்தருகிறது. இது பொதிகை மலையே என்பது திண்ணம்.

மேலும் "தெக்கல்லக நன்னாடன்" என்ற குறிப்பை சிலர் நோக்குங்கால் அவர்கட்கு
புதுக்கோட்டை அருகிலுள்ள கல்லகநாடு ஞாபகத்திற்கு வந்து செல்லும். ஆனால்
தென் பாண்டி நாடாகிய திருநெல்வேலிச் சீமையிலும் ஒரு பகுதி கல்லகநாடு என
வழங்கிய விபரங்களை கல்வெட்டுகளில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ..

சங்கரநயினார் கோயில் தாலுகா, வீரசிகாமணியிலுள்ள குடைவரைக் கோயிலின் தூண்
ஒன்றில், ஜடாவர்மன் சுந்தரசோழ பாண்டியன்{1028-29 AD} காலத்திய கல்வெட்டு
{No;40 -AR no;40-1908 -ASI.SII volume xxv }

4...........................இராசராசப்பா

5.ண்டி நாட்டு முடிகொண்ட சோழவளநாட்டு

6.கல்லக நாட்டு பிரஹ்மதேயம் வீரசி{காமணி}யா

7.ன வீரவிநோதச் சருப்பேதி ம {ங்கலம்} - என்று சங்கரன்கோவில்
வீரசிகாமணிப்பகுதி கல்லகநாடு என்ற பெயருடன் விளங்கியதை தெளிவாகச்
சுட்டுகிறது.

பெரியசுவாமிஐயன் கோயிலின் கல்வெட்டானது அக்கோயிலுக்கு சின்னணஞ்சாத்
தேவரவர்கள் கும்பாபிஷேகம் செய்து திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது.
அடுத்ததாக "கருஞ்சவனப்பெரியசாமி" எனும் சாசனத்தொடர் நம்மை ஈர்த்தது .
கருஞ்சை -கருஞ்சி என்பது கருநிறச் சிறகுகளையுடைய வண்ணத்துப்பூச்சி
இனவகைகளைக் குறிக்கும். அப்படியான வண்ணத்துப்பூச்சிகள் நிறம்பிய
வனப்பகுதி என்பது இதற்குப் பொருளாகும். அப்பெயராலேய இக்கோயிலின் இறைவனும்
வழங்கப்படுகிறார். சொக்கம்பட்டி அரசர்களின் பள்ளிப்படையாகவே இந்த ஆலயம்
விளங்கியிருக்கக்கூடும் என்று கருதத்தோன்றுகிறது. ஏனெனில் பெரியசுவாமி
தேவர் என்ற பெயரில் சொக்கம்பட்டி அரசர்கள் வாழ்ந்துள்ளனர். பெரியநாதன்
-பெரியசுவாமி போன்றன மக்களால் மன்னர்கள் வழங்கப்படும் போக்கே ஆகும்.
எடுத்துக்காட்டாக அரண்மனை சுவாமிகள் என்றும், சாமிக்கூட்டத்தார் என்றும்
ராஜவழியினர் தெற்கில் வழங்கப்படுகின்றனர். சிவகங்கை -ராமநாதபுரம் போன்ற
ராஜ சந்ததியினர் இவ்வாறே இன்றுவரை பொதுமக்களால் அழைக்கப்படுகின்றனர் .

இக்கல்வெட்டின் காலம் அக்கல்வெட்டின் கூற்றுப்படி கொல்லம் ஆண்டு 926
ஆகும். அதன்படி அதன் ஆங்கில ஆண்டு 1751 .
இக்கல்வெட்டின் மூலம் பொதிகை மலைக்கு உரியவன்- முத்துக்குரியவன் -தென்
கல்லகநாடுடையவன் என வழங்கிய பாண்டியர்சந்ததியினர் வடகரைக்கு வேங்கனாகிய
சொக்கம்பட்டி அரசர்களே என்பது நிரூபணமாகியுள்ளது.

...........மீண்டும் பிறகு சந்திக்கிறேன்!

நன்றி!

1.பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற
கல்வெட்டாய்வாளர், உயர்திரு. கரு.ராஜேந்திரன் அவர்கள்.

2. கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள்
திரு. விவேக் பாண்டியன்
திரு. தென்கரை மகாராஜ பாண்டியன்
திரு. பராக்கிரம பாண்டியன்

புகைப்படங்கள் உதவி:
திரு. செங்கல்வராயன். {வெங்கடேஸ்வர ஐயங்கார் பேக்கரி -காளகஸ்தி}
56976997_2296779507204672_3340646122837245952_n.jpg

Thevan

unread,
Apr 17, 2019, 6:05:07 PM4/17/19
to panbudan, minTamil
***********#கள்ளர்_இனத்_தலைவன்***********
******************#கள்ளழகர்******************

என் கள்ளர் இனத் தலைவர் ஶ்ரீகள்ளழகரின் சித்திரைத் திருவிழா காணும்
நேரத்தில் இந்த கட்டுரையை எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பழங்காலங்களாக சில போலிகள், ஶ்ரீகள்ளழகர் என்பது திருமலை நாயக்கர்
காலத்தில் கள்ளர்களை சமாதானப்படுத்த அழகரை கள்ளழகராக மாற்றினார்கள் என்று
பொய்யுரைத்து வருகிறார்கள்.

அவர்களின் அறியாமை எழுத்துக்களுக்காகவும், எமது இனத்திற்கு உன்மை வரலாறை
எடுத்துரைப்பதற்காகவே இந்த கட்டுரை.

“#நாடறிந்த_கள்வன்_நாரணன்_ஆனான் என்பது திருமாலைப் பற்றிய மிகவும்
தொன்மையான பழமொழி, அதாவது நாட்டவர்கள் அனைவரும் அறிந்த கள்ளனே அவதாரம்
ஆகிறான் என்பது பொருளாகும்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடியவர்களில் ஒருவரான நம்வாழ்வார்

திருமாவிலஞ்சோலை(அழகர் மலை)யில் உள்ள திருமாலை,

#வஞ்சக்_கள்வன்_மாமாயன் என்றே அழைக்கிறார், மேலும் அழகர் மலையை திருமால்
இருக்கும் சோலை என்றும் கூறுகிறார்.

திரு என்றால் = தெய்வத்தன்மையுடைய என்று பொருள்
மால் என்றால் = கருப்பு,கரியவன் என்பது பொருள்

ஆக திருமால் என்பது தெய்வத்தன்மையுடைய கரியவன் என்றும் தெய்வத்தன்மையுடைய
கருப்பன் என்பதே பொருள் தரும்.

மிகவும் பழமையான சங்க இலக்கியம் பரிபாடலில் ஶ்ரீகள்ளழகர் எப்படி
இருப்பார் என்பதனை பாடலாக விளக்குகிறது.

“கள்ளணி பசுந்துள்ளவை, கருங்குன் றனையே;
ஒளளொளியவை ; ஒருகுழையவே;
புள்ளனி பொலங் கொடியவை;
வள்ளணி வளைநாஞ்சிலவை;
சலம்புரி தண்டேந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரிசிலை வய அம்பினவை;
புகரிணர்சூழ் வட்டத்தவை ; புகர்வாளவை;
எனவாங்கு;
நலம்புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி;
இதுவென உரைத்தலினெம் உள்ளமந்து இசைத்திறை
இருங்குன்றத்து அடியுறை இயைகெனப்
பெரும்பெயர் இருவரைப் பரவுதுந்த் தொழுதே;

என்று கூறுகிறது.

விளக்கம்:-

கள்ளரணியான துளசி மாலை அணிந்தவன்;
கருங்குன்றம் போன்றவன்;
ஒளிக்கு ஒளியானவன்;
காதில் குழை(கடுக்கண்) அணிந்தவன்;
கருடக்கொடி உடையவன்;
மேலும்,கீழும் வளைந்திருக்கும் வளரியை கொண்டவன்;
சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை(வேல் கம்பு)உடையவன்;
சங்கும்,சக்கரமும் கொண்டவன்;
விரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு உடையவன்;
புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி உடையவன்;
புள்ளியிட்ட வாள் ஏந்தியவன்.

என்று கள்ளர் தலைவராக வளரி,வாள்,வேல்,வில் என கள்ளர் திருக்கோலத்தை சங்க
இலக்கியத்திலே திருமாலை கள்ளராக பாடப்பெற்றுள்ளது.

மேலும் ஆண்டாள் நாச்சியார் அழகர் மலை கள்வனை காதலிப்பதாக நாச்சியார்
திருமொழியில் பாடியுள்ளார்.

ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலுக்கு
பாண்டியர்கள்,சோழர்கள்,வாணாதிராயர்கள்,நாயக்கர்கள் என தொடர்ந்து
இத்தளத்திற்கு திருப்பணி செய்து வந்துள்ளனர்.

ஆதி முதலே ஶ்ரீகள்ளழகர் மலைப் பகுதியை சுற்றி கள்ளர் பெருங்குடிகள்
வாழ்ந்து இக்கோவிலை பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்த பகுதியை முழுமையாக திருமலை நாயக்கர் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு
வர என்னும் போது மேல் நாட்டு தன்னரசு கள்ளர்களுக்கும்,திருமலை
நாயக்கருக்கும் யுத்தம் நடைபெறுகிறது.

இந்த யுத்தத்தில் திருமலை நாயக்கரால் தன்னரசு கள்ளர்களை வெல்ல முடியாமல்,
திருச்சி நாயக்கரிடம் உதவி கேட்டு மதுரை வீரனை(கள்ளரே) வர வைத்து
கள்ளர்களை கருவறுக்க திட்டம் போடுகிறார்.

ஆனால் இறுதி வரை தன்னரசு நாட்டாரை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.
பிறகு அழகர் மலை மற்றும் மேல் நாடு உள்ளிட்ட பகுதிகளை கள்ளர்கள் தங்களது
கட்டுப்பாட்டிலே ஆங்கிலேயர் காலம் வரை ஆண்டார்கள் என்பதே வரலாற்று உன்மை.

வரலாறு இப்படி இருக்க திருமலை நாயக்கர் தான் கள்ளர்களுக்கு இந்த உரிமைகளை
கொடுத்தார் என்ற அடிப்படை ஆதாரமற்ற கூற்றை எப்படி அனைவரும்
ஏற்றுக்கொள்வார்கள்......?

வளரி என்பது கள்ளர் பெருங்குடிகளின் வாழ்க்கையில் இரத்தமும்,சதையுமாக
இருகிப் போன ஒன்று என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

சிவகங்கை,மேலூர் நாட்டார் கள்ளர்கள் கிபி1905வரை “வளரியை அனுப்பி,பெண்னை
கொண்டு வா” என்றே திருமணத்தில் முழங்கியுள்ளனர். மேலும் வளரியை
சீதனமாகவும் கொடுத்துள்ளனர்.

நாயக்கர் படைகளை எதிர்கொள்ள அழகர் மலை கள்ளர்கள் வளரி,வேலை வைத்தே எதிர்
தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருமாலை பல இடங்களில் கள்ளராகவே வழிபடுகிறார்கள்.

#கள்ள_பிரான் (ஶ்ரீவைகுண்டம்)
தூத்துக்குடி மாவட்டம்

#கள்ள_பெருமாள் (காஞ்சிபுரம்)
காஞ்சிபுர மாவட்டம்
இதே காஞ்சிபுர மாவட்டத்தில் #சோழகங்கர் சிற்றரசரின் கல்வெட்டில் அரசரின்
பெயராக கள்ள பெருமாள் என்று உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் கோவிலில் இருந்து ஶ்ரீகள்ளழகர் கையில் வளரி,வேலும்
காதில் கள்ளர் கடுக்கன்,தகையில் கள்ளர் தலைப்பாகையுடன், தங்க குதிரையில்
ஏறி மேல் நாட்டு கள்ளராகவே மதுரைக்குள் வருவார்.

இஸ்லாமியர்,கிறித்துவர்,ஜைனர்கள் என்ற வேறுபாடில்லாமல் சாதி,மதம்
பேரமின்றி அனைவரும் ஶ்ரீகள்ளழகரை மதுரையில் காண வழி மேல் விழி வைத்து
காத்திருந்து நிற்பார்கள்.

ஶ்ரீகள்ளழகர் சித்திரை திருவிழா இறுதியாக ஆற்றில் இறங்கும் முன்
நரசிங்கப்பட்டி அம்பலகாரன் மண்டகப்படியில் தங்கிய பிறகு ஆற்றில்
இறங்குகிறார்.

அழகர் மலையை விட்டு ஶ்ரீகள்ளழகர் வெளிவந்தது முதல்
இசை,நாட்டியம்,கூத்து,வானவேடிக்கை என அம்பலகாரர்களால் விழா
சிறப்பிக்கப்படுகிறது.

மேலும் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் உள் கள்ளர் நாட்டார்களுக்கு சொந்தமாக
மண்டபம் உள்ளது, ஆனால் இன்று அந்த மண்டபம் பிரசாதம் செய்யும் இடமாக
மாற்றப்பட்டுள்ளது.

முழுக்க,முழுக்க கள்ளர் தலைவர் ஶ்ரீகள்ளழகருக்கு கள்ளர் பெருங்குடி
மக்களால் எடுக்கப்படும் பாரம்பரியமிக்க முன்னோர் வழிபாடு தான் இந்த
ஶ்ரீகள்ளழகர் வழிபாடு👍

இந்த ஶ்ரீகள்ளழகரை பாதுகாத்து காவலுக்கு நிற்கும் கடவுளும் ஒரு
கள்ளரே(பதினெட்டாம்படி கருப்பர்)

மதுரை மண்டலத்தில் தப்பு செய்தவர்கள் காவல்துறைக்கு பயப்படுகிறார்களோ இல்லையே,
யுத்த கோலத்தில் ஆங்கார சொருபமாய் நிற்கும் கருப்பன் பார்வைக்கு அஞ்சி
நடுங்குவதை இன்றும் காணலாம்.

பெரும்பாலான மதுரை மண்டல கள்ளர்களுக்கு ஶ்ரீகள்ளழகரும்,கருப்பருமே குல
தெய்வமாக உள்ளனர்.

ஆய்வு தொடரும்........!

நன்றி
நாலாயிர திவ்ய பிரபந்தம்
ஶ்ரீகள்ளழகர் தேவஸ்தானம்
மதுரை வீரன் அம்பானை
ஶ்ரீகள்ளழகர் தல வரலாறு (குருகுல பாடசாலை)
ethnographic notes in southern india

Thevan

unread,
Apr 20, 2019, 6:07:39 PM4/20/19
to panbudan, minTamil
குடிகள்ளன் ( காவல் முறை )
==============
மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன்,
அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கி, மதுரையில் தங்குவதற்கு
உதவினான். இதே போன்று சோழ மன்னன் சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும்
முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம்
ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் இன்றும்
இருக்கிறது. திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் (ஹிஜ்ரி
116ல்) கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம் 'கல்லுப்பள்ளி' என்றழைக்கப்படுகிறது.

இப்படி தமிழ் மக்களோடு கலந்து நின்ற முகமதியர்களோடு கள்ளர்கள்
குடிக்கள்ளன் என்ற காவல் முறையை கொண்டனர்

சு.சமுத்திரம் எழுதிய, "எனது கதைகளின் கதைகள்' என்ற நூலில் இருந்து.

மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே
நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம்
பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது.
அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில்,
கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் இடம்
பெறுகின்றனர். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளனர்.

பொதுவாக, இந்த பகுதியில் ஜாதிச்சண்டை கிடையாது; சமயச் சண்டையும்
கிடையாது; அதுவும் இந்து - முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை.
இதற்குக் காரணம், "குடிகள்ளன்' என்ற ஒரு முறைமை, அந்தப் பக்கம் இன்னமும்
புழக்கத்தில் இருக்கிறது.

அதாவது, சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும், ஒரு
கள்ளர் குடும்பம், அதன் நல்லது, கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும்.
இதற்குக் குடிகள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும்,
சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த
முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்கிடையே காலங்காலமாக இருந்து வருகிறது.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பத்து பெண்ணை, வெளியூரில் கட்டிக்
கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர்
குடிகள்ளன், தன் சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய், அவளை
துன்புறுத்தியவர்களை மரத்தில் கட்டி வைத்து விட்டார்.

ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ தகராறு வந்தால், முஸ்லிம்
பக்கமே நிற்பார் இந்த குடிகள்ளன். இவருடைய கல்யாணத்தில், அந்த முஸ்லிம்
வீட்டிற்கு முதல் வெற்றிலை; அந்த முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில்
இவருக்கு முதல் பாக்கு.

இந்த செய்தி, தமிழகத்தில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக, நம்
எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது.

#குடிகள்ளன் - உடையார் :

கள்ளர்களுக்கும் உடையார் பட்டமாக உள்ளது. கள்ளர்களின் அரசுக்குடையார்,
அன்னமுடையார், உலகுடையார், உழுவுடையார், பனையுடையார், பசையுடையார்,
வேணுடையார் போன்ற பட்டங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் செருகடம்பூர்
ஊரில் உடையார் பட்டம் உள்ள கள்ளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இன்று
உடையார் என்று தனி சதியாகவும் உள்ளனர்.

புதுகோட்டை குன்னாண்டார் கோவில் உடையாளிபட்டி பஞ்சாயத்து புதுக்கோட்டை
மாவட்டதில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் வாழும் உடையார்கள்
தங்களுக்கென்று தனியான பஞ்சாயத்து முறை பின்பற்றுவதில்லை தங்களுக்குள்ளோ
அல்லது வேறு பிற சாதி மக்களால் ஏன் கள்ளர்களால் கூட எழும் எந்த
பிரச்சனையானாலும் முதலில் கள்ளர்களை நாடுவார்கள் அல்லது அதன் பிறகே
நீதிமன்றம் செல்வார்கள்.

இங்கு முன்பு நடைமுறையில் இருந்த இந்த குடிகள்ளர் வழக்கம் உடையார்கள்
எந்த ஒரு சர்ச்சை பிரச்சனை என்றாலும் கள்ளர்களை நாடுவர் கள்ளர்கள்
முன்நின்று அதை தீர்த்துவைப்பர் அதாவது இந்த குடிகள்ளன் முறை தற்போது
வழக்கில் இல்லை என்றாலும் இன்றும் கள்ளர் உடையார் மக்களிடையே நெருங்கிய
தொடர்பு காணப்படுகின்றது. அது தொடர்பான சடங்குகளும் நடைமுறையில் உண்டு.

ஒவ்வொரு உடையார் குடும்பத்திற்கும், ஒரு கள்ளர் அல்லது கள்ளர் கூட்டம்
குடிகாவல் செய்வர் அவர்கள் உயிர், உடைமைகளை காப்பது இவர்கள் கடைமையாகும்.
தமது குடிகள்ளர்க்கு ஏதும் பொருளாதார பிரச்சனை என்றால் அந்த உடையார் உதவி
செய்வார் அதற்க்கு பதிலாக அவரது குடும்பத்தையும் உடைமைகளையும் பிற கள்ளர்
குழுக்களால் ஏதும் பாதிப்பு வராமல் காப்பாற்றுவார்,. உடையார்கள் உரிமையாக
"எங்க கள்ளவீட்டு ஆளுக" என்று சொல்வார்கள். ஒரு பிரச்சனை என்றால் உடையார்
தனது அங்காளி பங்காளி மாமன் மச்சான கூட நம்ம மாட்டார்கள் சம்பந்தமுடைய
குடிகள்ளர்களிடம் தான் முதலில் முறையிடுவர்.

இதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு உடையார்களுக்குள் பொறாமை குணம் அதிகம்
தனது சாதிகாரனை நம்புவதில்லை என களஆய்வில் ஒரு உடையார் இன பெரியவர்
கூறியுள்ளார். ஒரு உடையாருக்கும் கள்ளருக்கும் பிரச்சனை வரும்போது இந்த
குடிகள்ளன் உடையார் பக்கமே இருப்பார்.

கள்ளர் சரித்திரதில் ஐயா வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கள்ளார்களின்
தலைகாவல் முறி பட்டயங்கள் சிலவற்றை சொல்லியுள்ளார் அதில் கூட
ரெட்டியார்கள், உடையார்கள் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள், கிராமங்கள் என
கள்ளர்கள் காவல் செய்த பல கிராமங்கள் பற்றி அறியலாம்.

#குடிகள்ளன் - இடையர் :

ஆயிரம் வீட்டிடையர்களின் காப்பாளன் திருமலை பின்னத்தேவன் என்று இடையர்களை
காத்த கள்ளர் வரலாறும் இன்றும் தென்மாவட்டங்களில் கோனார்களுக்கும்
தேவர்களுக்கும் இடையே உள்ள உறவு பரவலாக அணைத்து சமுதாயமும்
அறிந்திருந்ததே,

இதே குடிகாவல் முறை தென்மாவட்டங்களில் மட்டும்மல்லாது புதுக்கோட்டை,
திருச்சி, தஞ்சை என அணைத்து கள்ளர்நாடுகளிலும் இந்த காவல் முறை குடிகாவல்
இருந்ததற்க்கு இது ஒரு உதாரணம்.

புதுக்கோட்டை ஆழ்வான்பட்டியில் ஒரு சிறிய கிராமம் இங்கு முப்பதிற்க்கும்
மேற்ப்பட்ட கோனார்களும் கள்ளரில் மட்டையர் பட்டம் உள்ளவர்களும் உள்ளனர்,
இங்குள்ள கோனார்களும் உடையார்களை போலவே கள்ளர்கள் போல வழுவான நாடு,
நிர்வாக அமைப்போ பஞ்சாயத்து முறையோ இல்லாதவர்கள், அதனால் அவர்கள் எதும்
பிரச்சனை என்றால் கூடியவரை அவர்களுக்குள் தீர்க்க முற்ப்படுவர் இல்லை
என்றால் கள்ளர்களிடமே முறையிடுவர்.

ஆங்கிலேயர்களின் தூண்டுதலில் குடிகாவல்(குடிகள்ளன்) முறைக்கு எதிராக
நடத்தப்பட்ட பண்டு கலவரத்தின் முடிவில் நீதி விசாரனையின் போது
செட்டியார்களும், உடையார்களும் கள்ளர்களையே ஆதரித்தனர் என்பது
பதிவாகியுள்ளது.

#ஜமீன்களை மீட்ட குடி கள்ளர்கள்

1790 களில் நவாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள செய்தியில் வரி
பாக்கியை கட்ட தவறியதால் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஜமீன்களை
திருச்சி சிறையிலும் பின்னர் அவர்கள் சொந்த ஊரிலும் சிறையில்
அடைக்கப்பட்டபோது பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உடையாரின்(ஜமீன்களின்)
கள்ளர்கள் சுவரில் துளையிட்டு கோட்டைக்குள் புகுந்து ஜமீன்களை மீட்டு
நவாப்பின் ஆட்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

நன்றி : திரு. கார்த்திக் காலிங்கராயர்
1.jpg
2.jpg
3.jpg

Thevan

unread,
Apr 21, 2019, 8:59:25 PM4/21/19
to panbudan, minTamil
மீ பொழில்நாடு - வணங்காமுடி பாளையம் - கந்தர்வகோட்டை - கள்ளர் நாடு
=============================

பண்டாரத்தார் பட்டம் உடைய கள்ளர் அரையர்களால் ஆட்சி செய்யப்பட்ட நாடு
கந்தர்வகோட்டை ஆகும்.

சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள், இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு
வந்தது. அவ்வளநாடுகள் ஒன்பதும், முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன
என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாண்டி குலாசனி வளநாடும் ஒன்று, அதில்
இருந்து பிரிந்தது ஐயசிங்ககுலகால வளநாடு தோன்றியது. இந்த நாட்டில்
ஒருபகுதியான மீ செங்கிளி நாடு [குளத்தூர்], தென் மீ பொழில் நாடு என்பதில்
கந்தர்வக்கோட்டை கோவில் நல்லூர் எனவும், கோவில் நல்லூர் மற்றும் சில
கிராமங்களை உள்ளடக்கி அதை மீ பொழில்நாடு எனவும் அழைக்கப்பட்டது. (மீ
பொழில் நாடு - மேன்மையான, அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள்
நிறைந்த நாடு).

1000-ம் ஆண்டுகள் பழமையான கந்தர்வகோட்டை பாளையம், சோழ மண்டலத்தில் உள்ள
18 பாளையங்களில் இதுவே மிக பெரிய பாளையமாக இருந்தது.

கந்தர்வன் என்னும் மன்னன் சிறப்புற ஆட்சிபுரிந்தமையால் கந்தர்வன் கோட்டை
என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மறுவி கந்தர்வக்கோட்டை என மாற்றமானது
என்றும், கண்டராதித்த சோழ கோட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மறுவி
கண்டர் கோட்டை பிறகு கந்தர்வக்கோட்டை என மாற்றமானது என்றும்
கூறப்படுகிறது. கண்டர், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டராயர்,
கண்டவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

கந்தர்வகோட்டை பாளையத்தின் தலைநகர் கோமாபுரம். இந்த பாளையத்தார் கீழ் 106
கிராமங்கள் இருந்தன. கந்தர்வகோட்டை பாளையத்தின் மற்றொரு பெயராக
வணங்காமுடி பாளையம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பாளையத்தாரின் 400
ஆண்டுகள் பழைய அரண்மனை முற்றிலும் இடிபாடுகளுடன் உள்ளது, ஆனால் மீதமுள்ள
கட்டமைப்புகள் பார்த்து ஆரம்ப ஆண்டுகளில் இது எத்தனை பெரிய அரண்மனையாக
இருந்தது என்று கற்பனை செய்யமுடியும்.

கந்தர்வகோட்டையில் ஐந்து பிரதான, 1000 ஆண்டு பழமையான கோயில்கள் இருந்தன.
இதில் பாளையத்தாரின் குடும்பத்திற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டது.

காமாட்சி அம்மன் கோயில்,

அங்காளம்மன் கோயில்,

மாரியம்மன் கோயில்,

சிவன் கோயில்,

பெருமாள் (இராமர்) கோவில்,

வெள்ளை முனிஸ்வரன் கோவில்.
(பூரணா, பூஷ்கலா சமேத அய்யனாரின் காவல் தெய்வமாகிய வெள்ளை முனியன்)
கோவில் ஆகிய காலத்தால் முற்பட்ட கோவில்கள்.

கந்தர்வகோட்டை பாளையத்தார் குடும்பத்தில் புதுக்கோட்டை மகாராஜா
குடும்பத்துடன் திருமண உறவு உள்ளது. கந்தர்வகோட்டை பாளையத்தார் கடந்த ஏழு
தலைமுறையினர் பெயர்கள்

1) சூர்யா நாராயண பண்டாரத்தார்
2) அர்ஜுனனாதன் பண்டாரத்தார்
3) ராஜா கோபால பண்டாரத்தார்
4) ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
5) ராமச்சந்திர துரை ராஜா பண்டாரத்தார்

ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார் MLA வாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவர்

சிவனாரின் மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன்,
ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப்
போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின்
தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு அழகிய கோயிலைக் கட்டினான்.
காலப்போக்கில் இந்தக் கோயில் இருந்த பகுதி முழுவதும் வனமாகிவிட,
கந்தர்வகோட்டை ஜமீன்தார்களின் முயற்சியால் கோயில் கண்டெடுக்கப்பட்டு,
சீர்செய்யப்பட்டு பழையபடி வழிபாடுகள் நடைபெறத் துவங்கிய தாகச் சொல்கிறார்
கோயிலின் திருவேங்கட பட்டாச்சார்யர்.

சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த
கந்தர்வக்கோட்டை பகுதி முற்காலத்திலும், சுதந்திரத்திற்கு பிறகும் சோழ
நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த
கந்தர்வக்கோட்டை 1974-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் புதுக்கோட்டை மாவட்டம்
உருவானபோது அதனுடன் இணைக்கப்பட்டது.

19ம் நூற்றாண்டு இறுதி வரை கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி பயன்படுதிதாக
வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

காடுகளை அழித்து விவசாயத்திற்காக ஏரி நீர் பயன்படுத்தப்பட்டது என்பதை,
‘மருதன் ஏரி’ என்ற, பெயர் உணர்த்துகிறது. பல்லவ, சோழர்களின் கூட்டுப்
படைகள், பாண்டியர்களை வெற்றிகண்ட பின், பல்லவர்களின் நேரடி துணை
ஆட்சியாளர்களான முத்தரையர்கள், சோழர்களின் நிர்வாக மேம்பாட்டுக்கு
பயன்படுத்தப்பட்டனர். அதற்கு சான்றாக, ஆதித்த சோழன் காலத்திய, ரணசிங்க
முத்தரையன் கல்வெட்டு விளங்குகிறது. இதுவே, இப்பகுதியில் கிடைத்த, மிகப்
பழமையான கல்வெட்டு. இவ்வாறு தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன்
கூறினார்

கந்தர்வகோட்டை வரலாற்றை கூறும் கல்வெட்டு ஓவியர் கலியபெருமாள், ஆசிரியர்
மணிகண்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அழிக்கப்பட்ட தகவலைக் கூறும்
13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூரில் உள்ள குளம் தூர்வாரியபோது அங்குள்ள
மடையில் சுமார் 3 அடி நீளம், முக்கால் அடி அகலமுள்ள கல்வெட்டு
மீட்கப்பட்டது. கல்லில் எழுதப்பட்டிருந்தது குறித்து ஆய்வு மேற்கொண்ட
போது, கந்தர்வக்கோட்டை கோவில் நல்லூர் எனவும், கோவில் நல்லூர் மற்றும்
சில கிராமங்களை உள்ளடக்கி அதை மீபொழில்நாடு எனவும் மக்களால்
அழைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதை வாராப்பூரில் உள்ள பழமையான
அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சமஸ்தான கல்வெட்டும் உறுதி செய்கிறது.

இந்தக் கல்லின் ஒரு பகுதியில் தாமரை பூக்கள் செதுக்கப்பட்டுள்ளதால், இது
பழமையான கோயில்களில் வாசற்படிக்காக பயன்படுத்தியிருக்கவும்
வாய்ப்புள்ளது. பின்னர், ஏதோ ஒரு காரணத்தினால் கோயிலில் இருந்த கல்லை
விவசாயிகள் குளத்தின் மடைக்கு பயன்படுத்தியுள்ளனர். கி.பி. 13-ம்
நூற்றாண்டில் செங்குலத்தரையன் என்பவர் மூலம் கோவில்நல்லூர் என்று
அழைக்கப்பட்ட கந்தர்வக்கோட்டை அழிக்கப்பட்டிருக்கிறது என இக்கல்வெட்டு
மூலம் தெரிகிறது.

இத்தகைய அழிவில் இருந்து மீட்க மீபொழில் நாட்டின் பாதுகாவலராக விளங்கிய
கடுங்கோளனை கடுங்கோளனை அந்தப் பகுதியினர் நாடியதும் அந்தக் கல்வெட்டின்
மூலம் அறியமுடிகிறது. ஆனால், எதற்காக அழிக்கப்பட்டது என்ற விளக்கம் அதில்
இல்லை. இத்தகவல்களை கல்வெட்டு ஆய்வாளர் கே.ராஜேந்திரனும் உறுதி
செய்துள்ளார்.

தொண்டைமான்கள் புதுக்கோட்டையை ஆண்டிருந்தாலும் இந்த கந்தர்வகோட்டை நாடு
தன்னரசாக யாருக்கும் கட்டுப்படாமல் இங்குள்ள கள்ளர்கள்
வாழ்ந்திருக்கின்றனர்.

இவர்கள் அப்போதிலிருந்தே தஞ்சை வளநாட்டு கள்ளர்களுடன் உறவு முறையில்
இருந்து வருகின்றனர்.

இங்குள்ள கள்ளர்கள் அனைவரும் MBC பட்டியலில் வருகிறார்கள்.

கள்ளர்களில்
காடவராயர்
தொண்டைமார்
தென்கொண்டார்
வாட்டாச்சியார்
சவுளியார்
சாணையர்
பிழியராயர்
மட்டையர்
சோழகர்
நாட்ரையர்
திராணியார்
வாண்டையார்
தொண்டைமான்
நரங்கியர்
தெத்து வாண்டையார்
ஊர்த்தியார்
அங்குரார்(ஊர்: அங்குராப்பட்டி)
பாலியார்
நெருமுண்டார்
சேப்பிளார்
காளிங்கராயர்
கோரையர் (ஊர்: கோரம்பட்டி)
சோழங்க தேவர்
வல்லத்தரசு
கட்டவெட்டியார்
மங்களார்
மழவராயர்
பாலண்டார்
திராணியார் (ஊர்: திராணியப்பட்டி)

போன்ற பட்டப்பெயர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

பகட்டுவான் பட்டி, கந்தர்வக்கோட்டை நாட்டில் கள்ளர்கள் மட்டுமே இருக்கும் ஒரே ஊர்

கோமாபுரம் , மெய்க்குடிப்பட்டி, மங்கனூர், கல்லுப்பட்டி போன்று நிறைய ஊர்கள் உள்ளன.

இந்த கந்தர்வகோட்டை நாடு அனைத்து குடிகளையும் கொண்டுள்ளது.

அங்குள்ள தமிழ்ச் சாதிகளுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒற்றுமை, நான்
இவர் வீடு எங்கிருக்கு என கேட்டபோது அது எங்க கள்ளவீடுதான் நான் காட்றேனு
என்னை அழைத்து செல்கிறார் பறையர் இனத்தவர்.

வெள்ளாளர், கோனார், வண்ணார், பூசாரி, பறையர் என அனைத்து குடிகளும் உள்ளன.

விவசாயம் செழிப்பாக உள்ளது.

நெல், ஆலைக்கரும்பு, துவரை, எள், உளுந்து , சவுக்கு, RS பதி, முந்திரி என
பலதரப்பட்ட பயிர்கள் இச்செம்மண் பூமியில் மோட்டார் ,கிணற்று பாசனம்
உள்ளது.

குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை அருகில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின்
மூலம் நிலத்தின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது.

நாட்டு பசு, வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. 10 கள்ளர் வீடுகள்
இருந்தாலும் அந்த ஊரில் கள்ளர்களுக்கான மரியாதை கொடுக்கப்படுகிறது.
அதுபோல கள்ளர்கள் பெரும்பாலும் உள்ள ஊர்களிலும் அனைத்து குடிகளுக்கும்
உரிய மரியாதை வழங்கப்படுகிறது.

நாட்டு அம்பலங்கள்,ஊர் அம்பல முறை பெரும்பாலும் சிதைந்துவிட்டது.
எல்லோருக்குமே மரியாதை தரப்படுகிறது.

பழமையான கலாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.

திருக்காட்டுப்பள்ளி, கந்தர்வகோட்டை கள்ளர்களுக்குள் தொன்றுதொட்டே பெண்
கொடுத்து, எடுக்கும் பழக்கம் உள்ளது.

பிரிட்டீஸ் இந்தியாவில் இந்த கந்தவர்கோட்டை பாளையக்காரர் முதன் முதலாக
தமிழ்நாட்டில் பாளையக்காரர்களின் முகவர்களாக குறவர் இனமக்களை
நியமித்தார். குறவர் மக்களை வேற எந்த பாளையக்காரர்களும் முகவர்களாக
நியமித்ததில்லை.

ஒரு பழம்பெரும் தமிழ் குடியான குறவர் பழங்குடியினரை நாட்டுக்குள் ஒரு
மரியாதைக்குரிய பாளையக்காரர் முகவர் பதிவில் அமர வைத்து அழகு
பார்த்தவர்கள் தான் கந்தவர்கோட்டை கள்ளர் குல அரையர்கள்.

மிகவும் வீரமிக்க இந்த நாட்டை சேர்ந்த கள்ளர்கள் குற்றப்பழங்குடி
சட்டத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் எந்த
தமிழ் பழங்குடியை(குறவர்கள்) சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுத்து அழகு
பார்த்தார்களோ அவர்களும் குற்றப்பழங்குடி சட்டத்தில் கடுமையான
இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த குற்ற பழங்குடி சட்டத்தால் இன்று அந்த ஊரில் குறவர் மக்களின் குடியே
இல்லாமல் உள்ளது மிகவும் வேதனையாகவும், நெருடலாகவும் உள்ளது.

கந்தர்வகோட்டை - தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு

வாடிவாசலை பாக்குமரம் கொண்டு அமைத்துள்ளனர், மாடு மூர்க்கமாக
வெளியேவரும்போது முட்டினாலும் பெரிய அளவில் காயம் ஏற்படாது. மாடு
குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருத்தல் வேண்டும். மாட்டின் வயது 6 பல்லாக
இருக்க வேண்டும். கொம்பு, வாலை பிடித்தால் வீரர்களை வெளியேற்றுதல். மது
அருந்தியிருந்தால் அனுமதியில்லை.
போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்கிறார்கள்.

கந்தர்வகோட்டை கள்ளர் ஜமீனை ஜாமீனில் மீட்ட தாத்தா வேங்கடசாமி நாட்டார் குடும்பம்:-

அக்காலத்தில் சோமசுந்தர நாட்டாருக்கு மிகவும் ஸ்நேகிதமாயிருந்த
கந்தர்வகோட்டை ஜமீன்தார் அச்சுதநாராயண பண்டாரத்தார்.

ஜமீனுக்கு மூன்று நாட்கள் விருந்துவைத்தனர் நாட்டார் குடும்பம்.
நாட்டாருடைய குதிரை சிறியதாக இருந்ததால் தன்னுடைய குதிரையை நாட்டார்
வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார் பண்டாரத்தார். ஜமீனுக்கு தன்னுடைய
பல்லாக்கையும் நாட்டார் குடும்பம் அளித்துள்ளது.

அதிலிருந்து பிரியம் ஏற்பட்டு, நாட்டார் குடும்பம் 10,12வண்டிகளில்
தேங்காய், கரும்பு, காய்கறிகளை சீராகவும், விமரிசையாகவும்
பண்டாரத்தாருக்கு அனுப்பியுள்ளனர்.

கந்தர்வகோட்டை ஜமீன் ரிமாண்டில் கோவை ஜெயிலில் இருக்கும்பொழுது தன்
சொந்தங்களை நம்பாமல் சோமசுந்தர நாட்டாருக்கு தன்னை மீட்கும்படி கடிதம்
எழுதுகிறார். நாட்டார், கள்ளப்பெரம்பூர் தன் அத்தை மகனான செவந்திலிங்க
நாட்டாரை தொடர்பு கொண்டு பண்டாரத்தை விடுதலை செய்து மீட்டு வந்துள்ளார்.

கள ஆய்வு : திரு. பரத் குமார் கூழாக்கியார்.

நன்றி: திரு . ரமேஷ் மனோகரன்
1.jpg
3.jpg
2.jpg
4.jpg

வேந்தன் அரசு

unread,
Apr 22, 2019, 10:38:22 AM4/22/19
to vallamai, panbudan, minTamil
<ராய ரகுநாத தொண்டைமானும், தனது தந்தையைப் போல 20 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார்.

இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார்.>

இவர் எப்படி தெலுகு அறிந்தார்?

வெள்., 8 பிப்., 2019, முற்பகல் 8:30 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
கள்ளர் குல வரலாறு
5 mins ·
சோழ தேசத்தை காப்பாற்ற,
ஐதர் சேனையை தலையோட வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான் ராஜா ஸ்ரீ ராய ரகுநாத

தொண்டைமான்

(பொ. ஆ. 1769 - 1789)
==================================================================

தொண்டைமான் மன்னரான ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான் 1769 டிசம்பர் 28
முதல் 1789 டிசம்பர் 30 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார்.
இவர் 1738ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். தந்தையார் முதலாம் விஜய ரகுநாத
ராய தொண்டைமான் மன்னராவார். தாயார் ராணி நல்லகட்டி ஆயி சாஹிப். இந்த
தம்பதியினருக்கு இவர் மட்டுமே ஒரே புதல்வர். இவரும் அவர்கள் குடும்ப
வழக்கப்படி வீட்டிலேயே தனி ஆசிரியரை அமர்த்திக் கல்வி கற்றவர்.

ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1769 டிசம்பர் 28இல் காலமான போது இவர்
ஆட்சிக்கு வந்தார்.

ராய ரகுநாத தொண்டைமானும், தனது தந்தையைப் போல 20 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார்.

இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார்.

இவரது ஆட்சியில் தான் முத்துகுமரப் பிள்ளை, வெங்கப்ப அய்யர் ஆகியோர்
திறமைவாய்ந்த அமைச்சர்களாக இருந்தனர்.

ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு பதினொரு ராணிகள். இவருக்கு ஒரேயொரு
மகள் மட்டும் இருந்தார். அவர் பெயர் ராஜகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆயி
சாஹேப்.

தொண்டைமான் 1770 முதல் 1773 வரை அளித்த படை உதவிக்காக புதுக்கோட்டை படை
வீரர்களின் செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்த நவாப், அந்த
பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் அதற்கு ஈடாக பட்டுக்கோட்டையின்
ஒருபகுதியான 142 கிராமங்களை உள்ளடக்கி தொண்டைமானுக்கு அளித்தார். இந்த
பகுதியில் இருந்து 53,000 சக்கரம் (அன்றைய செலவாணி பணம்) கிடைத்தது.
இதுவரை தேவைப்பட்ட படை செலவிற்காகவும், இனிவரும் காலங்களில் படை உதவி
அளிப்பதற்காகவும் இப்பகுதியை அளித்ததாக ஒப்பந்தம் உருவானது. இப்பகுதியை
1773 இல் ஆங்கிலேய கம்பெனி துல்ஸாஜியைத் தஞ்சை மன்னராக மீண்டும்
அமர்த்தியபோது தொண்டைமான் தஞ்சைக்கே இப்பகுதியை மீண்டும் வழங்கினார்.
.

#ஐதர் அலியுடன் போர்:-
.

1750களில் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கிருஷ்ணராஜா, தனது
படையில் ஓரு போர் வீரராக இருந்து தளபதியாக உயர்ந்த ஐதர்அலிக்கு தனது
ஆட்சிக்கு கீழிருந்த திண்டுக்கல் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பை
தந்தார். ஐதர்அலிக்கு தானே அரசரானால் என்கிற சிந்தனை வர, படை வீரர்களை
தனக்கு சாதகமாக்கி 1762 ல் அரசை கைப்பற்றி மன்னராக அமர்ந்தான்.

மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை
பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான்.
ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு
அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில்
ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி
எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின்
மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு
வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை
நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சுகாரர்கள் தலைமையில் பெரும்
கூட்டணியை உருவாக்க எண்ணினான் ஐதர் அலி.

கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய
ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான்.

தமிழகத்தில் நுழையும் முன் மலபாரின் கோயில்களை இடித்து தள்ளி, ஊரை
எரித்து, அனைவரையும் மதம் மாற்றி, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக
அழைத்து செல்கின்றான், நூற்றுக்கணக்கான மக்கள் கொள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் நுழைந்து கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டு
முன்னேறுகிறான்.

அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான்.
நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன் இணைய
வலியுறுத்தினான். தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரும் ஐதரின்
பக்கம் சென்றனர். தஞ்சை மன்னர் ஐதருடன் சேரும் பேச்சுவார்த்தையில்
இருந்தார். தஞ்சை மன்னர் எந்த முடிவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி
வந்தார். புதுக்கோட்டை அரசர் ராய ரகுநாத தொண்டைமான் நவாப் மற்றும்
ஆங்கிலேயர் பக்கம் இருந்தார். தமிழகத்தின் மற்ற ஏனைய பாளையக்காரர்கள்
ப்ரெஞ்சு கூட்டணியில் ஐதருக்கு ஆதரவாக இருந்தனர். தனது பக்கம் வரும்படி
ஐதர் அலி அனுப்பிய தூதுகளை மறுத்து தொடர்ந்து ஆங்கிலேயர் பக்கம்
இருந்தார் தொண்டைமான்.

(General history of pudukkottai state 1916 R.aiyar page 262-263)
.

#தஞ்சையை சூரையாடிய ஐதர் அலி :-
.

மே மாதம் 1781, ஐதர் அலி தன் பக்கம் சேராத தஞ்சையை தாக்கினான்.23 ஜூலை
1781 அன்று தஞ்சையின் கோட்டை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் ஐதர்
கைப்பற்றினான். தஞ்சையின் மற்ற அனைத்து கோட்டைகளையும் கைப்பற்றி தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். தஞ்சையில் இருந்து கால்நடைகள்
கடத்தப்பட்டன. விவசாய நிலங்கள் கொளுத்தப்பட்டது. கிராமங்கள்
தீக்கிறையாயின.குளங்கள் மற்றும் ஏரிகள் உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு
ஏற்படுத்தப்பட்டது. கிணறுகளில் மனித பிணங்களே மிதந்தன. ஆயிரக்கணக்கான
சிறுவர்கள் அடிமைகளாக மைசூருக்கு இழுத்துசெல்லப்பட்டனர். கோயில்கள்
அடித்து நொறுக்கப்பட்டு, பழமையான தெய்வ சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தஞ்சையில் வசித்து வந்த பாதிரியார் சுவார்ச் தனது
குறிப்பில் :- வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், கோயில்கள்
சூரையாடப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள் (7-8 வயது) மைசூருக்கு
கடத்தப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் தஞ்சை வீதிகளில்
சுற்றி வருவதாகவும், பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பல ஏரிகளும்
அணைகளும் உடைக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாழாகி போனதாக எழுதியுள்ளார்.

ஐதரால் மைசூருக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இஸ்லாமியராக
மதமாற்றம் செய்யப்பட்டு, அனைவரையும் தனது பணியாளராக மாற்றினான். விவசாயம்
பல ஆண்டுகள் தடைப்பட்டது. வறட்சியால் வீதிகளில் தினமும் மக்கள் மடிந்து
விழுந்தனர். பிணங்களை அகற்றி மொத்தமாக எரிக்க ஊழியர்கள்
நியமிக்கப்பட்டனர். மக்கள் பசியால் கண்ணீர் விட்டனர். ஒரு சமயம் 1200
பேர் எலும்புக்கூடுகளை போல் நிற்க கூட முடியாமல் உணவுக்காக கையேந்தி
நின்றுக்கொண்டு இருந்ததாகவும், பசியால் வீதிகளில் இறந்து கிடந்தவர்களின்
உடல்களை நாய்களும், பறவைகளும் தின்றதாகவும், அவர்களுக்கு உதவ சென்ற
கிறிஸ்தவ மிசனரி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

(The history of christian missions 1864 p147-148)

(General history of pudukkottai state 1916 R.aiyar page 264-265)

ஐதர் அலியிடம் இருந்து புதுக்கோட்டை மக்களின் உயிரை காத்த தொண்டைமான் :-

தஞ்சை மீது படையெடுத்து வந்த ஹைதரலி சேனையுடன் எதிர்த்து போர் புரிந்த
ஆங்கிலேய அரசுக்கு தேவையான படை உதவிகளை தொண்டைமான் செய்ததால்
ஆத்திரமடைந்த ஐதர் அலி படைகள் புதுக்கோட்டை மீது தாக்குதல் தொடுத்தனர்.
.

#ஐதர் படையின் முதல் தாக்குதல்:-
.

கிபி 1781 ல் , ஐதர் அலியின் பெரும்படை தனது எதிரணியில் உள்ள
புதுக்கோட்டை தொண்டைமானை அழிக்க புறப்பட்டது. புதுக்கோட்டை எல்லையில்
இருந்த ஆதனக்கோட்டை எனும் ஊரின் வழியே ஐதர் அலி படையின் ஒரு பிரிவு
தாக்கியது. ராய ரகுநாத தொண்டைமான் தனது தளபதி சர்தார் மண்ண வேளார்
தலைமையில் படையை அனுப்பி, ஐதரின் படைகளை ஆதனக்கோட்டையில் எதிர்க்கொண்டு
விரட்டி அடித்தனர். பல நூறு ஐதர் குதிரை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
(சர்தார் மண்ணவேளார் வம்சாவளிகள் இன்றும் வைத்தூர் அம்மன் கோயிலில் முதல்
மரியாதை பெறுகின்றனர். இவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர்களுடன் மண உறவில்
இணைந்தவர்கள்). இந்த சமயத்தில் ஐதர் அலியின் கைகளில் சிக்கியுள்ள
கீழாநிலைக்கோட்டையை மீட்கும்படி தஞ்சை மன்னர் தொண்டைமானுக்கு கடிதம்
எழுதினார். ஐதருக்கு ஆதரவாக மருங்காபுரி பாளையக்காரனான பூச்சி
நாயக்கனும், நத்தம் பாளையகாரன் லிங்க நாயக்கன் புதுக்கோட்டையில்
தாக்குதல் நடத்தினர். தொண்டைமான் இவ்விரு பாளையக்காரர்களையும் விரட்டி
அடித்தார். புதுக்கோட்டை தொண்டைமானின் ஏறுமுகத்தை அறிந்த தஞ்சையை சார்ந்த
அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் தொண்டைமானிடம் தஞ்சம்
அடைந்தனர்.

#ஐதர் படையின் இரண்டாம் தாக்குதல் :-
.

ஐதர் அலியின் மற்றொரு படைப்பிரிவு புதுக்கோட்டை - திருச்சி எல்லையில்
உள்ள மல்லம்பட்டி, எனும் பகுதியின் வழியாக புதுக்கோட்டையை தாக்கினர்.ராய
ரகுநாத தொண்டைமான் தானே நேரடியாக களத்தில் இறங்கினார்.ஐதர் அலியின்
வீரர்களின் தலைகளை கொய்தார்.

தொண்டைமானின் வீரத்தை பாடும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் நூல்

" மலம்பட்டி வாடியிலே வந்த ஐதர் சேனையை தலையோட

வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான்"

என இந்நிகழ்வை குறிப்பிடுகிறது.

ஐதர் படையின் மூன்றாம் தாக்குதல் :-

ஐதரின் தளபதி ஒருவனை, ஒற்றைக்குதிரைக்காரன் என மக்கள்
குறிப்பிட்டுள்ளனர். அவனும் மற்றொரு பகுதி வழியாக தாக்குதல்
நடத்தியுள்ளான். அவனது தாக்குதலை தவிர்க்க எண்ணிய பேராம்பூர் மக்கள், ஒரு
ஏரியில் உடைப்பை ஏற்படுத்தினர். உடைப்பினால் ஏற்பட்ட வாயக்கால் இன்றும்
ஐதர் வாயக்கால் என அழைக்கப்படுகிறது.

இந்த ஒற்றைக்குதிரைக்காரன் புதுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்தினான்.
இந்த போர் நிகழ்ச்சிகளை பற்றி அம்புநாட்டு வளந்தான் மற்றும் வெங்கண்ண
சேர்வைக்காரர் வளந்தான் எனும் இரு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி தன் நாட்டில் புகுந்து சூரையாட தொடங்கிய ஒற்றைக்குதிரைக்காரனை
தொண்டைமான் விரட்டி அடித்து, விராலிமலை பகுதியில் ஒரு அடர்ந்த
காட்டுப்பகுதியின் நடுவில் வைத்து கொன்றுள்ளார்.

" மஸ்தகம் பதித்ததொரு விராலிமலை தன்னில்

ஒற்றைக்குதிரைக்காரன் ஒருமையாக வந்தவனை

பற்றித் துரத்திவெட்டும் பகதூர் தொண்டைமான்"

என தொண்டைமானின் வீரத்தை புகழ்கிறது. தேசத்தில் இருந்த தாய்மார்கள்
தங்களது பிள்ளைகளை சாப்பிட வைக்க ஒற்றைக்குதிரைக்காரனிடம் பிடித்து
கொடுத்து விடுவேன் என மிரட்டும் பழக்கம் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரை
இருந்துள்ளதை புதுக்கோட்டை வரலாறு எழுதிய ராதாகிருஷ்ண ஐயர் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.

திருக்காட்டுப்பள்ளியை தொண்டைமான் கள்ளர் படை மீட்டல்:-
.

கிபி 1781, ஜூலை மாதம், ஐதர் அலியின் மகனான திப்புவுக்கு, ஒற்றர்கள்
மூலம் தகவல் வந்தது. தொண்டைமானின் படைகள் தஞ்சையில் இருந்த சிறுபடையோடு
திருக்காட்டுப்பள்ளியை மீட்க வருவதே அந்த தகவல். சையது சாகிப் எனும்
ஐதரின் தளபதி தாக்குதலை சமாளிக்க தயாரானார்கள். ஆனாலும் தொண்டைமான்
படைகளால் ஐதரின் படை விரட்டப்பட்டு , திருக்காட்டுப்பள்ளி மீட்கப்பட்டது.
இந்த வெற்றியை குறிப்பிடும் ஆங்கில ஆவணம் , " The officer commanding the
troops had frequently been shamefully defeated by kullars of tondaiman
and regular cavalry of tanjore " என விளக்கியுள்ளது.

(General history of pudukkottai state 1916 R.aiyar page 267)
.

#மன்னார்குடியை மீட்ட தொண்டைமான்:-
.

பட்டுக்க்கோட்டை, தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை ஆகிய பகுதிகள் ஐதரின் வசம்
தொடர்ந்து இருந்தது. கிபி 1781, செப்டம்பர் மாதம், தொண்டைமான் படைகள்
மன்னார்குடியில் இருந்து ஐதரின் படைகளை விரட்டியது. சிதறி ஒடிய ஐதர் படை
பட்டுக்கோட்டையில் தஞ்சம் அடைந்தது.

.

#தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை, பட்டுக்கோட்டையை மீட்ட புதுக்கோட்டை
பல்லவராயர் படை :-
.

புதுக்கோட்டை தொண்டைமான் அடுத்த தாக்குதலுக்கு தயாரானார். தஞ்சை ஐதரின்
கோர பிடிகளில் சிக்கித் தவித்தது. ஆங்கிலேயரும் நவாபும் ஐதரை
விரட்டியடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

தஞ்சையை மீட்க வலிமையான படை ஒன்றை உருவாக்கினார் தொண்டைமான். பெருங்களூர்
போரம் பல்லவராயர், ராமசாமி ராங்கியத்தேவர், சுப்ரமணிய முதலியார்
தலைமையில் பெரும்படையை அனுப்பினார். தஞ்சை, கீழாநிலைக்கோட்டை,
பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டது.

ஐதருக்கு ஆதரவாக செயல்பட்ட, சேதுபதியின் உறவினர் மாப்பிள்ளை தேவன்,
தொடர்ந்து போரிட்டார். அவரை வீழ்த்த நலம் கொண்ட ஆவுடையப்ப சேர்வைக்காரர்
தலைமையில் ஒரு படையை அனுப்பினார் தொண்டைமான். மாப்பிள்ளை தேவன்
தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கிபி 1781 இறுதியில் ஐதர் படை
சோழ தேசத்தில் இருந்து பின்வாங்கியது.

சோழதேசத்தில் துலுக்கரால் ஏற்பட்ட கழகங்களை ஒடுக்கி, ஐதர் படையை விரட்டி
அடித்து, மக்களையும் பாரம்பரிய சின்னங்களையும் காக்க தன் உயிரை துட்சமாக
எண்ணி போரிட்ட தொண்டைமான் தலைமையிலான படையினருக்கு சோழ நாட்டு மக்கள்
என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராத்திய மன்னர்
தன் உயிரை காக்க தப்பி ஒடியபோதும், தன் நாடான புதுக்கோட்டையில் எந்த
சலசலப்பும் ஏற்படாமல் காவல் தெய்வங்களை போல காத்து நின்றவர் புதுக்கோட்டை
மன்னர் ராய ரகுநாத தொண்டைமான்!

திப்பு சுல்தான் படைகளை 1783ல் ஆங்கிலேயரோடு கைகோர்த்த தொண்டைமான் படை
வென்றது. கரூர்,அறவக்குறிச்சி,திண்டுக்கல் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு
பகுதிகளையும் தொண்டைமான் படைகள் கைப்பற்றியது.

எதிர்த்த எல்லா படைகளையும்
(சிவகங்கை, இராமநாதபுரம் அரசுகள், தஞ்சை மராத்தியர், மதுரை நாயக்கர்கள்,
நவாப்கள்,பிரஞ்ச் படைகள்,மைசூர் சுல்தான் )

இன்று புதுக்கோட்டையில் இந்துக்களும் பழங்கால கோயில்களும் அதே பொலிவுடன்
விளங்குவதற்கு காரணம் 13 ஆம் நூற்றாண்டு முஸ்லிம்கள் மற்றும் 18 ஆம்
நூற்றாண்டில் ஐதரின் படைகளிடம் இருந்து புதுக்கோட்டையை காத்த கள்ளர்களும்
மற்றும் தொண்டைமான் மன்னர்களே.

இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார்
இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:

“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து
கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது,
தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து
நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம்
சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”
இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த
பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று.

இருபது ஆண்டுகள் இவர் ஆட்சி முடிந்த நிலையில் இவர் 1789 டிசம்பர் 30 இல்
காலமானார். இவர் இறந்த போது இவருக்கு ஆண் மக்கள் எவரும் இல்லாத நிலையில்
இவரது ஒன்றுவிட்ட சகோதரர் உறவினரான “விஜய ரகுநாத தொண்டைமான்” அரச
பதவியைப் பெற்றார்.

General history of pudukkottai state R aiyar 1916/ p 264-271

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
Apr 23, 2019, 10:18:43 PM4/23/19
to panbudan, minTamil
பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் வரலாறு

மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது
பாப்பாபட்டி என்ற கிராமம். கருமாத்தூர் என்ற ஊரில் இருந்தும் அங்கு செல்ல
முடியும். அங்கிருந்தும் 15 கிமீ தொலைவு தூரம்தான். பாப்பாயி என்ற
கிராமத்துப் பெண்ணை பாப்பான்பட்டி என்ற ஊரில் இருந்தவனுக்கு திருமணம்
செய்து கொடுத்து இருந்தனர். கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் ஆலயம் உள்ளது.
ஒருமுறை ஆண்டாயி (பாப்பாயி ) என்பவளும் அவளுடைய கணவரின் தங்கையும் அங்கு
வந்து பொங்கலிட்டனர். அந்த ஆலய வழக்கப்படி அந்த ஆலய பூசாரிகள் பொங்கல்
படைக்க வருபவார்களிடம் இருந்து பொங்கலை வைக்கும் முன் சிறிது
அரிசியையும், பொங்கல் வைத்தப் பின் சிறிது பொங்கலையும் பெற்றுக்
கொள்வார்கள் . ஆனால் ஆண்டாயி தனது மதினியிடம் இருந்து அவர்கள் அந்த
பொருட்களை எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை . தன்னுடைய புகுந்த
வீட்டினரின் பொருளை அவர்களைக் கேட்காமல் எடுத்துக் கொண்டால் தன்னை தப்பாக
நினைப்பார்கள் என்று கோபமுற்றாள் . ஆனாலும் அந்த பூசாரிகள் அதை ஏற்றுக்
கொள்ளாமல் அவள் மதினியிடம் இருந்தும் அரிசி மற்றும் பொங்கலை எடுத்துக்
கொண்டார்கள். ஆகவே கோபமுற்ற ஆண்டாயி பொங்கும் பொங்கலை தன் தலையில்
வைத்துக் கொண்டு பாப்பாபட்டியை நோக்கி நடக்கத் துவங்கினாள். அவள்
பின்னால் அவளுடைய சகோதரன் போய் கொண்டு இருந்தான். வழி தவறிப் போய் அந்த
கிராமத்தின் எல்லையை அவன் தாண்டிப் போய் விட அவள் அவனை மீண்டும்
திரும்பிப் போக வேண்டாம் எனவும் அப்படிச் சென்றால் கருமாத்தூர் மக்கள்
அவனை மரியாதை குறைவாக நடத்துவார்கள் எனவும் கூறி அவனை தடுத்து நிறுத்தி
விட்டாள். அவர்கள் உசிலம்பட்டிக்குச் சென்றதும் தனது சகோதரனை சின்ன
கருப்பு ஆலயத்தில் இருக்குமாறு கூறி விட்டு தான் அரண்மனை ஆற்றில்
குளிக்கச் சென்றாள். அந்த அரண்மனை காவலாளி தனது குழந்தையை தாலாட்ட அவள்
கரையில் வைத்து விட்டுப் போய் இருந்த புடவையை எடுத்து தூளியாக கட்டினான்.
ஆனால் அவளுக்கு தெய்வீக சக்தி இருந்ததினால் அந்த புடவை எரிந்து விட்டது.
ஆகவே பயந்து போனவர்கள் அவளை அந்த அரண்மனையில் இருந்த ஒரு இடத்துக்கு
சென்று தங்குமாறு கூறினார்கள். அங்கு பொங்கல் பானையுடன் சென்றவள் அதன்
பின் திரும்பி வரவே இல்லை. அவளுடைய பத்து குழந்தைகளும் அவள் சென்று
மறைந்த புதரில் அவளை தேடிய போது அங்கு பொங்கல் பானை மட்டுமே இருந்ததைக்
கண்டனர். அவள் பெண் கடவுளாக மாறி மறைந்து விட்டாள் என அனைவரும்
நினைத்தனர். அந்த இடத்தில் ஏற்கனவே அங்காள ஐயர் என்ற ஆலயம் இருந்தது.
அதற்குள் அவளுக்கு ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அவளைத் தொடர்ந்து
ஒச்சான்டம்மனும் அங்கு வந்ததாகக் கருதி அவளுக்கும் அங்கு ஒரு ஆலயம்
எழுப்பினார்கள். அதுமுதல் ஆண்டாயியை ஆச்சிக் கிழவி என அழைத்தனர்.



அந்த ஊரில் இருந்த அவளுடைய குழந்தைகள் பெரியவர்களாகி சொத்துக்களை பாகம்
பிரித்துக் கொண்டபோது அவர்களில் ஒருவனுக்கு பாலை நிலமே கிடைத்தது. அவன்
சென்று ஆச்சிக் கிழவியிடம் அது பற்றிக் கூறி அழுதபோது உள்ளிருந்து வந்த
குரல் 'நீ கவலைப் படாதே, உன்னை ஒரு கண்ணாகவும், மற்ற அனைவரையும் இன்னொரு
கண்ணாகவும் நான் பாவிப்பேன்' என்றது. அது முதல் பாலை நிலமாக இருந்த நிலம்
செழிப்பாக மாற அவன் நாளடைவில் மற்றவர்களை விடப் பெரிய பணக்காரனாக
மாறினான்.



அந்த இடத்தில் உள்ள அங்காள ஐயர் ஆலயத்தில் தங்கண்ணி மற்றும் போங்கண்ணி
போன்ற தேவதைகளும் உள்ளனர். வாயிலில் மாயாண்டி உள்ளார். ஆலயத்தின் இடது
புறம் ஏழு தேவதைகள் உள்ளனர். வலதுபுறத்தின் சுவற்றில் ஆச்சிக் கிழவியின்
படம் போடப்பட்டு மாலை சார்த்தப்பட்டு உள்ளது. அதன் எதிரில் உள்ள
பகுதியில் அக்னி தாங்கு, மதனைத் தாங்கு, பெரிய தவசி, செந்தவசி,
ஒச்சாண்டம்மாள், உலகநாதன் மற்றுள் வீருமல ராகு போன்றோர் உள்ளனர். அருகில்
உள்ள திண்ணையில் அவளை வணங்குகின்றனர். அங்கும் ஆச்சிக் கிழவியின் படம்
உள்ளது. அவள் பக்கத்தில் பேச்சியம்மன், சந்தனக் கருப்பு, கலாஞ்சிக்
கருப்பு, கோட்டைக் கருப்பு, சின்னக் கருப்பு, பெரியக் கருப்பு,
அக்னிவீரன் மற்றும் கொல்லிமலை ராக்கம்மாள் போன்ற தேவதைகளும் சிலைகளும்
உள்ளன. தம் மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுக்களில் இருந்து
விடுதலைக் கிடைக்க ஆச்சி கிழவியை வந்து வணங்குகின்றனர்.

சிவராத்தரி விழா கோலாகாலமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆச்சிக் கிழவியின்
அனைத்து பொருட்களும் ( நகை போன்றவை) உசிலம்பட்டியில் உள்ள சின்னக்
கருப்பு ஆலயத்தில் வைத்து உள்ளனர். அங்கிருந்து வாத்திய முழக்கங்களோடு
அதை எடுத்து வருவார்கள். அங்காள ஐயர் ஆலய சாமியாடிகள் ( சாமி வந்து
ஆடிக்கொண்டு வருபவர்கள்) அதன் பின்னால் ஒரு கழியை எடுத்துக் கொண்டு
வருவார்கள். இளந்தோப்பு என்ற இடத்தில் ஆச்சி கிழவியின் சந்ததியினர்
அவளுடைய நகைகளை வாங்கிக் கொள்வார்கள். அவை சரியாக உள்ளனவா என கணக்குப்
பார்ப்பார்கள். அதன் பின் அவற்றை ஆச்சிக் கிழவியின் ஆலயத்துக்கு கொண்டு
வந்து பூஜை செய்வார்கள். அதன் பின் மீண்டும் அவை உசிலம்பட்டிக்கு
எடுத்துச் செல்லப்படும். சின்ன மற்றும் பெரிய கருப்பர்களுக்கு ஆடுகள்
பலியாகத் தரப்படும்.



இந்த ஆலயம் பற்றிய இன்னொரு கதையும் உள்ளது. கருப்பு ஆலயத்தின் முன்னால்
இரண்டு யானையின் சிலைகள் உள்ளன. ஒன்று கருப்பாகவும் இன்னொன்று
வெள்ளையாகவும் உள்ளது. ஒருமுறை ஒரு ஆங்கிலேயன் சாமியாடிக்கொண்டு
வந்தவர்களிடம் அந்த யானைகள் கரும்பை தின்னுமா என கேலியாகக் கேட்க ,
சாமியாடிகள் தின்னும் என்றனர். ஆகவே கரும்புகளைக் கொண்டு வந்து அவற்றின்
முன்னால் போட்டு விட்டு, பெரிய துணியால் யானையும் சேர்த்து கரும்பை
மூடிவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னால் அதை திறந்து பார்த்தபோது
கரும்புகளைக் காணவில்லை. சாமியாடியவர் அந்த வெள்ளிக்காரனிடம் அவனுடைய
மகன் உடல் நலமின்றி உள்ளதாகவும் அவன் நீண்ட நாள் உயிருடன் இருக்க
மாட்டான் எனவும் கூறினான். அடுத்து சில மணி நேரத்திலேயே அந்த
ஆங்கிலேயனுக்கு அவன் மகன் உடல் நலமின்றி கிடந்தது மரணம் அடைந்து விட்டதாக
தகவல் வந்தது.



ஆச்சியின் நகைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அனைத்துக்
கடைகளுக்கும் விடுமுறை தரப்படுகின்றது.



தேவரின சிறப்பு செய்திகள்
கள்ளர் வாழ்வியல் வரலாறு - Kallar History
கள்ளர் வரலாறு மீட்பு குழு
கள்ளர் நாடு அறக்கட்டளை
57882226_340627703315189_118837617616748544_n.jpg

Thevan

unread,
Apr 23, 2019, 10:24:31 PM4/23/19
to panbudan, minTamil
கிபி1311ல் டெல்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் முதன்மை தளபதி
மாலிக் கபூர் ஒட்டு மொத்த இந்தியாவையும் கில்ஜியின் காலடி கொண்டு
வந்தான். அதில் பாண்டிய நாடும் அடக்கம், கிபி. 1310-ல் பாரதம் போற்றிய
பாண்டிய மன்னர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் தங்களுக்குள்
ஏற்பட்ட சகோதர யுத்தத்தால் மாலிக் கபூரால் மதுரையை இழந்து டெல்லி
சுல்தான் ஆட்சிக்கு அச்சாரம் போட்டுவிட்டு தென்காசிக்கும்,
திருவாடனைக்கும் தப்பி சென்று சிறு பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.



கிபி1320-ல் டெல்லி சுல்தானாக துக்ளக் வம்சத்தினர் ஆட்சியில் அமர்ந்தனர்.
அவர்களுடைய பிரதி நிதிகள் மதுரையில் துக்ளக் ஆட்சி நடத்தினர்.



ஆனால் இதனை ஏற்காத கள்ளர்களின் ஒரு பிரிவினர், அவர்கள் வாழ்ந்த அப்போதைய
மதுரை எல்லையில் அதாவது இன்றைய புதுக்கோட்டை எல்லையான காரைக்குடி,
தேவகோட்டை பகுதிகளில் பாண்டியர்களுக்கு எல்லை அரையர்களாக இருந்த
சூரைக்குடி தொண்டைமான்களும், அவர்தம் கள்ளர் குலத்தவர்களும் மதுரை
சுல்தானுக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர்.



சூரைக்குடி கள்ளர் படைகள் மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட, பொன்
அமராவதி நாடான விராச்சிலை, கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும்
தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.



இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதிகான் தலைமையில்
மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான்,ஆசாம் கான், முவாசம் கான்
மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை
தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்குகிறார்கள்.



கிபி1359-ல் தொடர்ந்து சுல்தானுக்கு கட்டுப்படாமல் இருந்த சூரைக்குடி
தொண்டைமானையும் அவர்தம் கள்ளர் பற்றையும் அழித்து வாள் முனையில் இன்றைய
காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கியை கட்டுக்குள் கொண்டு
வந்தனர்.



அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி
நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச்
சொல்லுகிறார்.



அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக்கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை
சுழற்றிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும்
அழித்துவிட்டோம்.



இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழற்றினால் சூரைக்குடி கள்ளர்
பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான், இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும்
ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.



இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக
வெட்டியுள்ளனர். அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளரான உயர் திரு.சாமிநாத
அய்யர் படி எடுத்து வைத்துள்ளார்.



இந்த பகுதிகளின் பாடிக்காவல் உரிமையும், நீதி பரிபாலனம் உரிமை அனைத்தும்
மதுரை சுல்தான் கட்டுப்பாட்டிற்கு சென்றது, அந்த சமயத்தில் கிபி1369ல்
காத்தூர் கோட்டை காரணவரும், அந்த ஊர் கிராமத்தாரும் நெடுஞ்சாலைகளில்
வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.



இந்த சம்பவம் சுல்தானின் புதுக்கோட்டை பிரதிநிதிக்கு சென்றது,
வழிப்பறியில் ஈடுபடாமல் இருக்க நாட்டு கூட்டம் கூட்டி சத்தியம் செய்ய
வழியுறுத்தப்படுகிறது.



இதனால் கிபி1369 கார்த்திகை மாதத்தில் காரணவர்கள் கண்டதேவி நாட்டு
கூட்டத்தில் வன்னியர் (கள்ளர் தலைவர் - வன்னியர் கள்ளர் பட்டம்),
கள்ளர்களும் ( கள்ளர் மக்களும்), புறத்தூர் பட்டர், வித்துவான்கள்,
பாடகர் மற்றும் காரணவர்களின் எதிரியான அறந்தாங்கியார் ( அறந்தாங்கி
தொண்டைமான்) மற்றும் அங்கு உள்ள மனிதர்கள் முன்னிலையில் வழிப்பறியில்
ஈடுபட மாட்டோம் என சத்தியம் ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள்.



அப்படி அவர்கள் செய்த சத்தியத்தை மீறினால் கீழ்க்கண்ட தண்டனைகள ஏற்கிறோம்
என உறுதியளிக்கின்றனர்



1.எங்கள் மீசை தாடிகளை மழிக்கிறோம்

2.எங்கள் பெண்களை எதிரிகளுக்கு அளிக்கிறோம்

3.எங்கள் எதிரிகளுக்கு அடிமையாகக்க கடவுகிறோம்

4.பிராமனர்களை கங்கையில் கொண்ற பாவத்தை ஏற்கிறோம்

5.எங்களை பெண் உருவமாக வடித்து கீழ்சாதிகள் ஆன பாணர், புலவர், பள்ளர்,
பறையர்களின் சிறுவர்களின் காலில் கட்டி எங்கள் தேசத்திலும், பிற
தேசத்திலும் சுற்றட்டும்.



என தண்டனைகளை அவர்களே நிர்மாணிக்கிறார்கள்.



இந்த கல்வெட்டை முதன் முதலாக முன்னாள் உலக வராலாற்று ஆய்வகத்தின்
உறுப்பினரும், இந்திய வரலாற்று ஆய்வாளரும் ஆன உயர்திரு. கிருஷ்ணசாமி
அய்யங்கார் பதிவு செய்கிறார்



அவருடைய பதிவில் சிறு, சிறு தவறுகள் இருந்ததை 08:04:86 ல் உஞ்சனை வட்டார
கல்வெட்டு பகுதியில் திருத்தி படியெடுத்து புத்தகமாகவும் வந்தது. அந்த
புது படியெடுத்த கல்வெட்டை அன்று தினதந்தி, தினமலர், தினகரன்
நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.



மேலும் இதனை வரலாற்று ஆர்வலர் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
நேரடியாக கண்டதேவிக்கு சென்று படி எடுத்து, புகைப்படத்தையும்
அளித்துள்ளார்.



உன்மை இப்படி இருக்க சில கோமாளிகள் ஏதோ கள்ளர்கள் பொண்டாட்டியை
ஒப்படைப்பதாக சத்தியம் செய்தார்கள் என்று வலைதளங்களில்
கிறுக்கியுள்ளார்கள். மேலும் பள்ளி சாதியினர், வன்னியர் என்று இங்கு
குறிக்கப்பட்ட சூரைக்குடி தொண்டைமானை பள்ளி சாதி என்று கூறிவருகின்றனர்.



தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்களும் என்று குறித்துள்ளது. இங்ஙனம்
வன்னியர் என்பது ஒருமை அதை கூட புரிந்து கொள்ளாமல் அது ஜாதி பெயர் என
ஒப்பாரி வைக்கின்றனர். இவர்கள் வன்னியர் என்பது சாதியாக மாறியது இந்த
நூற்றாண்டில் என்பது நாம் அறிந்ததே. வன்னியர் என்ற பட்டம் இங்கு கள்ளர்,
மறவர், வலையர், பள்ளி என்ற பலதர சாதிகளுக்கு உள்ளது.



புதுக்கோட்டை தொண்டைமான், அந்த பகுதி விசங்கு நட்டு கள்ளர்களை நாய்
சங்கிலியால் கொண்டுவந்தார் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால்
தொண்டைமான் என்பது வேறு சாதி, கள்ளர்கள் வேறு சாதி என்று சொன்னால்
எவ்வளவு அபத்தமோ அதுபோல் உள்ளது பள்ளி சாதியினரின் கதை.



கல்வெட்டில் கள்ளர்கள் என்று குறிக்கப்பட்ட போது வன்னியர்கள் என்று ஏன்
பன்மையில் குறிக்கவில்லை?



அதனால்தான் அய்யா கிருஷ்ணசாமி அய்யங்கார் சூரைக்குடி தொண்டைமானை கள்ளர்
குடும்பம் என்றும் சூரைக்குடி கள்ளர்களின் தலைமையிடம் என்றும் பதிவு
செய்தார்.



மேலும் பலர் இதை கிபி 16 ஆம் நூற்றாண்டு என்று பிதற்றுகிறார்கள். அவர்கள்
ஹிஜிரா வருடத்தை பற்றிய புரிதல் இல்லாமல் பொய்யுரைக்கின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு நன்கு தெரியும் ஹிஜிரா வருடம் என்றால் என்னவென்று.



இப்போது ஹிஜிரா வருடம் 1440-ல் உள்ளது. இந்த வருடக் கணக்கை சூரிச்
பல்கலைகழக கணக்கீடில் வைத்து தான் கிபி 1369 என்று கணக்கீடு
செய்துள்ளேன்.



இன்றும் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் கள்ளர்கள் அம்பலமாகவும், நாட்டு
சேர்வையாகவும் அனைத்து குடிமக்களுக்கும் நீதிபரிபாலனம் செய்தும் 150
க்கும் மேற்பட்ட கோவில்களில் சாமி கழுத்தில் உள்ள துண்டையே முதல்
மரியாதையையாகவும், காளாஞ்சியமும் பெறுகிறார்கள்.



ஆய்வு : சோழ பாண்டியன் - ஏழுகோட்டை நாடு



நன்றி



South Indian And Her Mohammadan Invaders by Honourable Mr.Krishnaswami Aiyangar

உஞ்சனை வட்டார கல்வெட்டுகள்

South Indian and her muhammadan invaders

Institute of oriental studies:Zurich university

திரு.சியாம் சுந்தர் சம்பட்டியார்
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg

வேந்தன் அரசு

unread,
Apr 24, 2019, 11:12:04 AM4/24/19
to vallamai, panbudan, minTamil
மருதனாயகம் கள்ளர் இனமா?

செவ்., 23 ஏப்., 2019, பிற்பகல் 7:18 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
Apr 25, 2019, 10:50:29 PM4/25/19
to panbudan, minTamil
வெள்ளையனிடம்_வரி_கேட்ட பிறமலைக்கள்ளர் :-
-----------------------------------------------------------------------
மதுரையில் இருந்த ஆங்கில அதிகாரி ராபர்சன் துரை என்பவரிடம்
பிறமலைக்கள்ளர்கள் காவல் வரி கேட்டதையும் அதற்கு பின் நடந்தேறிய சுவையான
சம்பவங்களை " India on march " எனும் புத்தகத்தில் சுவையான தகவல்களுடன்
வெள்ளையர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.. அவற்றை காண்போம்.

" இந்த தேவன் ( பிறமலை கள்ளர்) மிகவும் உறுதியான உடல் அமைப்பை கொண்டவன்.
இவர்கள் மதுரையில் நாகமலை பகுதியில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய
விளையாட்டு ஜல்லிக்கட்டு. தங்களது நீண்ட கூத்தலுடன் கூர்மையான கத்தியை
இணைத்து வைத்திருப்பார்கள்.

பிறமலைக் கள்ளர்கள் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒரு
மரத்தின் அடியில் இருக்கும் கருப்புசாமியை வழிபட செல்வது இயல்பானதாகும்.

ஒரு பிறமலைக்கள்ளர் ராபர்ட்சன் துரை எனும் ஆங்கில அதிகாரியிடம் காவல்
வரியாக 5 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி , வரி செலுத்த
மறுத்துவிட்டார். காவல் வரி கேட்டு வீட்டுக்கு வந்த மற்ற கள்ளர்களையும்
போலீசில் புகார் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தார். காவல் வரி செலுத்த
மறுத்த வெள்ளையருக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார் அந்த தேவர்.

20 மைலுக்கு அப்பாலுள்ள தங்களது கிராமத்தில் இருந்து 8 கள்ளர்கள்
ராபர்ட்சன் பங்களாவை இரவு 2 மணிக்கு அடைந்தனர்.
உடம்பில் எண்ணை தடவிக்கொண்டு, பங்காவிற்குள் நுழைந்தனர்.

தங்களது சுவாசத்தின் மூலமே ராபர்சன் இருக்கும் அறையை அடைந்தனர்.
வெள்ளையரின் கைக்கடிகாரம், துப்பாக்கி, டயரி முதலியவற்றை எடுத்துக்கொண்டு
அங்கிருந்து கிளம்பினர். தூங்கிய எழுந்த வெள்ளையன் தான் பழிவாங்கப்பட்டதை
உணர்ந்து கொதித்து போய் காவல் நிலையத்தை நோக்கி ஒடிப்போனார்.

கள்ளர்களின் வாழ்வாதாரமான காவல் தொழிலை ஒழித்து, பிற்காலத்தில் கள்ளர்களை
குற்றப்பரம்பரை என முத்திரை குத்தியது வரலாற்றில் மறைக்கமுடியாத
வெள்ளையர்களின் அவலம்.

(India on march 1922)

பதிவு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Apr 27, 2019, 7:25:45 PM4/27/19
to panbudan, minTamil
போலிச்_செப்பேடு

வெள்ளியங்குன்றம் பாளையம் விஸ்வநாத நாயக்க மன்னர் தமிழ்நாட்டை பல
பாளையங்களாக பிரித்த போதே உருவான பழமையான பாளையம்.

இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக
வழங்கப்பட்டு வருகிறது.

இடைக்காலத்தில் சில விஷமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம்
நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல,
வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான
செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளனர்.

வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.

ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670-ம்) ஆண்டு மன்னர் திருமலை
நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம், வெள்ளி பாத்திரங்கள்
மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.

இதனால் கோளில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம்
முறையிடுகின்றனர்.

திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து
திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி
ஆபதணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.

இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின்
கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு
செப்பேடு அளித்தாராம்.

இதுவே செய்தி

சரி இந்த செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம் என்ன......?

போலி :1

சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம்
78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு
கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக
குறித்துள்ளார்கள்.

சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி
செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர்
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.
ஆக முதல் திரிபே முட்டாள் தனமாக திரித்துள்ளனர்.

போலி :2

ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது
என்று கூறியுள்ளனர்.
திருமலை நாயக்கர் கிபி1659-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார், அப்போது
ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர்.
இது இரண்டாவது திரிபு.

போலி: 3

கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது,
ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆணையிடுகிறார்
என்று அடுத்த வரியில் வருகிறது...!
திருடியது வேடர்களா....?
கள்ளர்களா .....?
இதில் கள்ளர் என சேர்த்ததே கோவில் உரிமையை அவர்களிடம் பறிக்க என்பது
நன்கு புலப்படுகிறது.

இது மூன்றாவது திரிபு.

போலி : 4

இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது.
திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா
வேண்டும்....?
அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில்
சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும், சிவகங்கை, புதுக்கோட்டை
மன்னர்களும் வருகிறார்கள். ஆனால் இதில் மட்டும் இராமப்பையன்
வருகிறார்..........?

ஶ்ரீகள்ளழகர் கோவிலில் மேல் நாட்டு அம்பலங்கள் தங்களுடைய வாள்
வலிமையாளும், உயிர் தியாகத்தாலும் பெற்றது.

வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு மரியாதை வேண்டுமென்றால் கோவிலுக்கு ஒதுக்கு
புறமாக துண்டை தலையில் கட்டி அப்படியே சாமிய கும்பிட்டு செல்லலாம்.

கள்ளர்களை வெட்டினாராம் உடனே திருமலை நாயக்கர் மரியாதை வழங்கினாராம்....

மண்டையில உள்ள கொண்டைய மறைங்கடே.

இதுபோல செயல்கள் நடக்காமல் இருக்க சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்

வேந்தன் அரசு

unread,
Apr 28, 2019, 9:21:19 AM4/28/19
to vallamai, panbudan, minTamil
<செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளனர்>மிக அண்மையில்தான் இந்த நாடகமா? திருமலைக்காலத்தில் கிரிகெரியன் ஆண்டு புழக்கத்தில்வந்துவிட்டதா?

சனி, 27 ஏப்., 2019, முற்பகல் 7:42 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
May 10, 2019, 10:42:56 AM5/10/19
to panbudan, minTamil
கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு●

வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான
ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய
செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை
கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு
ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய
தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை
அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என மக்களால் வணங்கப்பெறும் பெரியசாமி ஐயன்
கோயிலின் முன்நுழைவு மண்டபத்தின் இடது ஓரத்தில், கீழே சாய்க்கப்பட்ட
நிலையில் கண்டறியப்பட்டது. 27 வரிகள் கொண்ட இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி
உடைந்து காணப்படுகின்றது. இதனை படியெடுக்காமல் நான் படித்து அன்று பதிவு
செய்தபின் முறையாகத் தொல்லியல் துறையிடம் தெரிவித்துப் பின்னர் அது,
மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்களால் முறையாகப்
படியெடுக்கப்பட்டது. இனி அச் சாசனத்தொடரை நாம் பார்ப்போம்.

கல்வெட்டு
""""""""""""""""

1. ௵௶யஎ௵
2. பரிதாபி௵
3. உத்தராயண
4. மான நிர்ஷ
5. மாக ஆனி௴
6. யச ம்தேதி சுக்கிரவா
7. ரமுஞ் சுக்கில ப
8. ட்ச நவமியு
9. மசுத நட்செ
10.த்திர முஞ் சித்த
11.யோகமு பய
12.கரணமும் விரி
13.ச்சிகலக் க
14.னெமு மார்ச்சுதவே
15.ளையுங் கூடின சு
16.ப தினத்தில் பூர
17.ணவல்லி சமே
18.தப் பிரசுதிசுர
19.ரும் பூரணா பு
20.ட்கலா சமேத
21.மகாசாத்தா
22.வுக்குஞ் சொ
23.க்கம்பட்டி ஆதிக்
24.கத்துக்கு அரசராகி
25.ய கருணாலய வ
26.லங்கைப்புலிப்
27.பாண்டி{யன்}

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில் அது இருக்குமிடமாகிய
அக்கோயிலின் கடவுளர் ,

"பூரணவல்லி மற்றும் பிரசுதிசுரர்"- எனவும்,

"பூரணபுட்கலா -மகாசாத்தா" -எனவும்,

வழங்கப்பெறுகின்றனர். சொக்கம்பட்டி ஜமீன் ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய
வலங்கைப்புலி பாண்டியன் இக்கல்வெட்டில். ..

"சொக்கம்பட்டி ஆதிக்கத்துக்கு 'அரசராகிய' கருணாலய வலங்கைப்புலிப்
பாண்டியன்"- என்றே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

●கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் பற்றிய செய்திகள்.

இவருக்கு "அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியன்" என்றும்,
"சோமசுந்தரபாண்டியன்"-என்றும் வெவ்வேறு பெயர்களும் உண்டு.

இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மன்னராகப் பதவியேற்றார். இவர் பற்றிய
சில செய்திகளை நாம் இப்போது காண்போம்.

சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால்
வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .இதே போல ஒரு
புலி அட்டகாசம் செய்து வந்ததைக் கண்டக் கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன்
புலியை அடித்துக் கொன்று விடுகிறார் .அதைப் புலவர் இவ்வாறாக
பாடுகிறார்,...

"தம்புலியான மடப்புலியே ! தடிக்கம்பால் அடிபட்டாயே ! எங்கள் முப்புலி துரைப்புலி
வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலி கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே "

என்று புகழ்ந்து பாடியுள்ளார் .

இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைக்குச் சான்றாக ஒரு சிலை ஒன்று புலியைக்
குத்திக்கொல்வது போன்ற தோற்றத்தில் இதே கோயிலில் ஆற்றடி ஓரமாக
அமைந்துள்ளது அச் சிலை கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் சிலையாகவே இருக்க
வேண்டும். அந்த சிலைக்கு தனியாக கோயிலில் அறை எழுப்பப்பட்டு இன்று
வணங்கப்பெறும் சிலையாக உருமாறியுள்ளது. அதன்படத்தையும் கீழே
பதிவிட்டுள்ளேன்.

கடைசி அரசர் தம் வாழ்நாட்களை அரண்மணையின் ஓரிடத்தில்
கழித்துக்கொண்டிருந்தார். அவர் வேதமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு ஒரு
வேதாந்தியைப்போல,..

"வாழ்க்கை நிலையாமையுடைத்து"

எனக்கூறி ஒரு சந்நியாசியைப்போல வாழ்ந்தார் என கலெக்டர் எழுதியுள்ளார்.
{பேசும் ஆவணங்கள் }

பிற்காலத்தில்சொக்கம்பட்டியின் மிகப்பெரிய அரண்மணைக் கொத்தளங்களில்
கற்றாழையும், இண்டும், இசங்கும், ஆமணக்கும் முளைத்துக்கிடந்தன, அங்கே
பன்றிகளும், நாய்களும், கழுதைகளும், வாசம் செய்தன, அரண்மணையின் பெரிய
வாயிற்படிகளின் அருகே உள்ள கேணியில் பலர் நீர் இறைத்துக்
கொண்டிருந்தார்கள், பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த அரண்மணையைச் சுற்றிலும்
மண்சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன, சில சிலைகள் அங்கே நடுகற்களாகத்
தரையில் புதைக்கப்பட்டிருந்தன, என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அரண்மனை பராமரிப்பின்றி சீர்கேடு அடைந்ததால்
கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் தமது குற்றாலம் பங்களாவாகிய
"வலங்கைப்புலி விலாசம்" வசம், வாசம் செய்து, தனது இறுதிநாட்களை
கழித்துவிட்டு 1892 ல் மரணமடைந்தார். என தனது பேசும் ஆவணங்கள் நூலில்
எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் தெரிவிக்கிறார்.

அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன் !
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
May 20, 2019, 11:18:29 PM5/20/19
to panbudan, minTamil
திரு வாணாத தேவர் கல்வெட்டு.
●~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~●

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள "சோலைச்சேரி" ஊரில் உள்ள
இக்கல்வெட்டு சேத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசாகிய ராஜஸ்ரீ திரு வாணாத
சேவகப்பாண்டிய மகாராஜா பற்றிய தகவலைத் தருகிறது.

கல்வெட்டு வாசகம்.
- - - - - - - - - - - - - - - - -

1. ஶ பாண்டி விநாயகர் துணை
2. சேத்தூர் மகாராஜா ௵ வடம
3. லை திரு வாணாத சேவகப் பாண்
4. டிய மகாராஜா அவர்களின்
5. அனுக்கிரகத்தினால் சோலை சே
6. ரி வடுகாயர் பெத்த நல்லு
7. நாயக்கர் மகன் பெத்த நல்லு
8. நாயக்கர் உபயம்
9. கொல்லம்௯௩ஶபங்குனி.

{இறுதிப் பகுதி உடைந்துள்ளது}

கல்வெட்டு செய்தி.
- - - - - - - - - - - - - - - - -

சோலைச்சேரி ஊரைச் சேர்ந்த வடுகாயர் சமூகமாக அறியப்பட்ட, தெலுங்கு இடையர்
ஜாதியைச் சேர்ந்த பெத்தநல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர்
சேத்தூர் அரசராகிய ஸ்ரீ ராஜஸ்ரீ
"திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா" அவர்கள் அருளால் எழுப்பிய கோயிற்
பணியைச் சுட்டுகிறது. கல்வெட்டு அருகிலேயே பெத்த நல்லு நாயக்கர் மற்றும்
அவரது மகனான மற்றொரு பெத்த நல்லு நாயக்கர் இருவரும் நின்று வணங்கிய
நிலையில் சிலைவடிவமாகக் காணப்படுகின்றனர்.

கல்வெட்டு காட்டும் வரலாறு.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சேத்தூர் மன்னர்கள் தென்தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பான
வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள். மறவரில் "வணங்காமுடி பண்டார மறவர்கள்"
என வழங்கப்படும் 'பொக்கிஷதார மறவர்' பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை
வாணர்குலமாகிய வாணாதிராயர் வம்சத்தவர் என உறுதி செய்யும் வகையிலான
பல்வேறு சான்றுகள் தற்காலத்தில் கிடைத்த வண்ணம் உள்ளன. அதில்
ஒன்றாகவேஇந்த 18ம் நூற்றாண்டு கல்வெட்டையும் கருதவேண்டியுள்ளது. இதில்
வாண குலத்திற்கே உரிய "திரு வாணாத " எனும் அடைமொழியால் அவர்கள்
அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள்
வரிசையில் வைத்து எண்ணப்பட்டு வரும். திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள்
ஏற்கனவே வாணாதிராயர்களுக்கு, "மறத்திரு வாணாதிராயர்கள்" -என குறிப்புகள்
உள்ளதாகக் காட்டுகின்றார். இதற்கு வலுவைக் கூட்டும் விதமாக இந்த
கல்வெட்டு, மறவர் ஜாதியைச் சேர்ந்த சேத்தூர் அரசர்களை "திரு வாணாத
சேவகப்பாண்டிய மகாராஜா " என வழங்கி அமைந்துள்ளது . மேலும் இப்பெயர் இந்த
அரசவழியினருக்கு காலந்தோறும் அடைமொழி முன்னொட்டுப் பெயராக தொடர்ந்து
வழக்கில் இருந்து வரும் பெயராகவே உள்ளமையை வரலாறு உணர்த்துகிறது.

நெல்லையில் "தச்சனூர் அருளாளன் சேவகத்தேவன்" என வாணாதிராயர் ஒருவரை தனது
பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் எனும்நூலில்முனைவர்.திரு.வேதாச்சலம்
அவர்கள் தெரிவிக்கிறார்கள். "சேவகத்தேவன்" எனும் பட்டமும் சேத்தூர்
அரசர்கட்கு வழங்கிவருவதும் நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.
மேலுள்ள கல்வெட்டில் சேத்தூர் அரசர்களுக்காக வடுகாய நாயக்கர் சமூகத்தின்
பெத்த நல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் {தகப்பனார் -மகன்
இருவருக்கும் ஒரே பெயர் }தமது விசுவாசத்தால் செய்த அறச்செயல்
அறியவருகிறது. இது மதுரை நாயக்கர் மேலாண்மையை ஏற்காது வாணாதிராயர் கீழ்
தம்மை பணித்துக்கொண்ட தும்பிச்சி நாயக்கரை நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு
வருகிறது. வாணர்களுடைய வரலாறு முழுமையடைய வேண்டுமெனில் ,வத்திராயிருப்பு
-சேத்தூர் - கொல்லங்கொண்டான்- தலைவன்கோட்டை -சங்கரன்கோயில் பகுதி
மறவர்கள் பற்றி ஆய்வுகள் முழுமையடைய வேண்டியது இங்கு அவசியமாகிறது.

நன்றி!

கல்வெட்டு படம் உபயம்: திரு. Ra Ja @ தென்கரை மஹராஜ பாண்டியன் அவர்கள்
{கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர் }

அன்பன்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
1.jpg

Thevan

unread,
May 21, 2019, 5:14:06 AM5/21/19
to panbudan, minTamil
டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மஹாராஜா.
சிங்கம்பட்டி ஜமீன்..

மக்களாட்சியிலும், இன்றைக்கும் "மஹாராஜா "
ஒருவர் இருக்கிராறென்றால் ஆச்சரியமாக
இருக்கிறது.."குடியாட்சியில் ஒரு முடியாட்சி" உண்மையும்கூட.
இந்தியாவின் கடைசி முடிசூட்டப்பட்ட மஹாராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
மணிமுத்தாறு அருகிலுள்ள சிங்கம்பட்டி..
திரு.சிவசுப்பிரமணி சங்கர முருகதாஸ்
தீர்த்தபதி மஹாராஜா..90 வயது. ஜமீன்.

தனது தந்தை இறந்து ,மூன்றாவது வயதிலேயே,32 வது அரசராக மணிமகுடம் சூட்டிய
மஹாராஜா. பிரம்மாண்டமான அரண்மனை..ராஜா காலத்தைப்போலவே இன்றும்
வேல்கம்புடன் காவலிருக்கும் வாயிற்காவலர்கள்,தர்பார் மண்டபத்தில்
மன்னர்வரும்போது புகழ்பாடும் அரசவைக்கவிஞர்,யானைத்தந்தத்தை
கைப்பிடியாக கொண்ட தங்கவாள் சொருகி
மிடுக்கோடு நடைபோடும் மஹாராஜா..
வருடந்தோறும் ஆடி அமாவாசைதோறும் பொதுமக்களுக்கு தரிசனம் தருகிறார்..
ஏழைமக்களுக்கு அதுதான் திருவிழா.

"முதுகுத்தோலை உறிச்சிடுவேன்"எனும் வழக்கு
மொழிக்கு காரணமான தண்டனை பிறப்பிடம்
சிங்கம்பட்டி ஜமீன்..
தவறுசெய்தவர்களை, நேரடியாக பிரம்பால் அடிக்காமல்,ஆட்டின் தோலை உறித்து,அதன்மீது
உப்பு தடவி,குற்றவாளி முதுகில் ஒட்டவைத்து அந்த ஆட்டுத்தோல்மீது
பிரம்பால் அடித்து,பிறகு
ஆட்டின்தோலை எடுக்கும்போது குற்றவாளி உடலிலிருந்து மேல்தோல் எடுப்பதுதான்
தண்டனை, இதுவே நாம் வழக்குமொழியில்
பேசும் "தோலை உறிச்சிடுவேன்"தண்டனை.

18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மார்த்தான்டவர்மனின் இறப்பிற்கு
பிறகு அவரது வாரிசை(குழந்தை) முடிசூடவிடாமல் சூழ்ச்சிசெய்து,எட்டுபிள்ளை
வீட்டுக்காரர்கள் என்னும் திருவிதாங்கூர் மன்னரின் எதிரிகளால் அவரது
வாரிசு விரட்டப்பட்டதாகவும், அந்த வாரிசு சொரிமுத்து அய்யனார் கோவிலில்
தஞ்சமடைந்து
இருப்பதையறிந்த 26 வது மஹாராஜா, அந்த குழந்தையை வளர்த்து,களரிப்பயிற்சி கொடுத்து
தனது மூத்த இளவரசருடன் திரும்பவும் திருவிதாங்கூரை மீட்டு மஹாராஜாவிடம்
ஒப்படைத்தாகவும், போரின் முடிவில் இளவரசன் இறந்துவிட்டாரென தெரிந்தும்,
கலங்காமலே
தான் வளர்த்த திருவிதாங்கூர் வாரிசை மீண்டும் திருவிதாங்கூர் மன்னராக
முடிசூட்டினார் ..
அதற்கு பிரதிபலனாக சிங்கம்பட்டி ஜமீன்க்கே
மேற்கு தொடர்ச்சிமலையின் என்பதாயிரம் ஏக்கர் நிலத்தை ஜமீன்வசமே ஒப்படைத்தார்
திருவிதாங்கூர் மஹாராஜா... அதிலே ஆறாயிரம் ஏக்கர் எல்லைப்பிரச்னையால்
தடுமாறிப்போய்விட்டது, சிங்கம்பட்டி ஜமீன்
ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அரண்மனையோடு திகழ்ந்தது..

அரசகுடும்பத்தில் அன்று தொடங்கிய " கிங் ஜார்ஜ் பள்ளி "மன்னரின்
அரண்மனைக்குள்ளேயே, இன்றும் அரசின் நிதி
உதவியோடு செயல்படுகிறது.

அரசகுடும்பத்தில் திருமணம் என்றால்,மணமகன் இல்லாமல் மன்னரின் வாளை
மட்டுமே எடுத்துச்சென்று மணமகளை
அரண்மனைக்கு இளவரசியாக்குவதே நடைமுறை.

பலதலைமுறை கண்ட மஹாராஜா இன்றைக்கும் பலருக்கு பொருளாதார உதவி
வழங்கும் மன்னராகவே வாழ்கிறார். பலரது இல்லங்களில் கடவுளைப்போலவே இவரது
புகைப்படங்கள் வைத்து வணங்கும் மக்கள்
மனதை வென்ற மன்னன்.

பிறப்பும் இறப்பும் அறிந்த சித்தராக,
பலமொழியில் பேசும் வல்லவராக,.
அழுத்தமான,ஆழமான சிந்தனையோடு சாதாரண எளிமை மனிதராக, ஏழைகளுக்கு பொருளுதவி
வழங்கும் வள்ளலாக,
பசும்பொன் தேவர்திருமகனாரின் நண்பனாக
சிங்கம்பட்டி ஜமீன் மன்னராக,,
எல்லாவற்றுக்கும் மேலாக
"இயற்கை விவசாயி"யாக வாழும்..

முக்குலத்து மன்னன், தென்னாட்டுபுலிக்குட்டி..
ஆன்மீக வழியில் பயணிக்கும் அய்யா..

"டிஎன்எஸ். முருகதாஸ்தீர்த்தபதி மஹாராஜா"

சிங்கம்பட்டி ஜமீன்.. வணங்குகிறோம் அய்யா.
1.jpg

Thevan

unread,
Jun 1, 2019, 6:15:20 AM6/1/19
to panbudan, minTamil
சோழ பாண்டிய மன்னர்களின் "ஆனையூர்" கள்ளர் நாடு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் கட்டக்கருப்பன்பட்டி வருவாய்
கிராமத்தின் பிடாகையாக ஆனையூர் (கருமாத்தூர்) அமைந்துள்ளது. காட்டு
யானையாகப் பிறந்த இந்திரனின் ஐராவதம், கடம்பவனமாகிய திருக்குறுமுல்லூர்
வந்து, ஸ்ரீஅக்னீஸ்வர முடையாரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. இப்படி,
வெள்ளை யானையாகிய ஐராவதம் வழிபட்டதால் இங்குள்ள ஈசன், ஸ்ரீஐராவதீஸ்வரர்
என்று திருநாமம் கொண்டார், தலமும் 'ஆனையூர்' ஆனது.
ஆனையூர் மூன்று புறங்களிலும் கண்மாய்களால் சூழப்பட்ட அமைப்பினைக்
கொண்டதாகும். இவ்வூரின் மேற்கில் ஆனையூர் கண்மாய், வடக்கில்
கட்டக்கருப்பன்பட்டி கண்மாய் மற்றும் தெற்கில் பொட்டலுப்பட்டி கண்மாயும்
அமைந்துள்ளன. இதே போன்று, மேற்கில் தொம்பரைமலை, வடக்கில் நாகமலைத்தொடர்,
தெற்கில் புத்தூர்மலை என இயற்கை அரணாக இம்மலைகள் அமைந்துள்ளன.
இப்பகுதியில், திடியன் மலையில் பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான
கற்கருவிகளும், புத்தூர்மலை மற்றும் ஆனையூர் போன்ற இடங்களில்
இரும்புக்கால மக்கள் வாழ்ந்தமைக்கான முக்கியத் தடயமான கருப்பு சிவப்பு
நிற பானைகளும், முதுமக்கள் தாழிகளும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளமை இவ்வூரின்
தொன்மை வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டுவதாகும். சோதி மாணிக்கம் என்ற
கிராமத்தில் ஆதிமனிதனின் மரபணுவை (எம் 130) கொண்டிருக்கும் விருமாண்டி
தேவர் இப்பொழுது வாழ்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் ஆனையூர் ஒரு முக்கியப்
படைத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டுகளில் சோழன்
தலைகொண்ட வீரபாண்டியனின் 10-வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டே
மிகவும் பழமையானதாகும். இக்கல்வெட்டு கோயில் கருவறை நுழைவாயிலின்
நிலையில் காணப்படுகின்றது.
ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையினால்
நிர்வகிக்கப்பட்டு வந்தது. பாண்டி நாட்டில் சோழர்களின் உச்சநிலை ஆட்சிக்
காலத்தின் போது கோயில் நிர்வாகத்தில் படைத்தலைவர்கள் ஒரு முக்கிய
இடத்தைப் பெற்றிருந்தனர்.
முதலாம் இராஜராஜனின் 26-வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றில் ஆனையூர்
கோயிலுக்கு ஆடுகள் தானமாக வழங்கப்பட்டது. அந்த ஆடுகளை இவ்வூரில் இருந்த
வேலன் சேந்தன் மற்றும் அறையன் பல்லவன் ஆகிய படைத் தலைவர்களால் பெற்றுக்
கொள்ளப்பட்டதுடன், கோயிலின் ஒரு விளக்கினை எரிக்க 1 உழக்கு நெய்
வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாண்டிய மன்னனின் கி.பி 956 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூரைத்
திருக்குறுமுள்ளூர் எனக் குறிப்பிடுகிறது (ARE: 336/ 1961-62). இம்மன்னன்
இவ்வூரிலுள்ள கடவுளர் திருவக்வீசுவரரின் உதவியால் மீண்டு பாண்டிய
அரியணையைப் பெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுவதிலிருந்து. அக்காலத்தில்
இவ்வூரின் மதிப்பும் புகழும் கோயிலின் சிறப்பால் பாண்டிய அரசில்
புனிதத்துடன் நன்கு மிளிர்ந்திருந்ததைக் காட்டுகிறது.
சோழர் ஆட்சி பாண்டிய நாட்டில் நிலவிய போதும் திருக்குறுமுள்ளூர் என்ற
பெயரே தொடர்ந்து வழங்கி வந்துள்ளது என்பதை இவ்வூரில் கிடைக்கப்பெற்ற
முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுகளின் வாயிலாக
அறிய முடிகிறது. அப்போது இவ்வூர் இராஜராஜ பாண்டிய நாட்டின் முக்கிய
வருவாய்ப் பிரிவுகளுள் ஒன்றான மதுராந்தக வளநாட்டிலிருந்த தென்கல்லக
நாட்டுப் பிரிவில் அமைந்திருந்தது.
திருக்குறுமுள்ளூர் என்ற பெயர் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை
பயன்பாட்டிலிருந்து பின்னர் ஆனையூர் என பெயர் மாற்றம் பெற்றிருப்பதை
அறியமுடிகிறது. இப்பெயரே தற்பொழுதும் வருவாய் ஆவணங்களில் காணப்படுகிறது.
விஜயநகர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டதாகக் கருதக்கூடிய கல்வெட்டு
ஒன்று முதன்முதலில் இவ்வூரின் பெயரை ஆனையூர் எனக் குறிப்பிடுகிறது.
ஆனையூர் பிற்காலங்களில் கோட்டையூர் என்றும் அழைக்கப்பட்டதாக
அறியப்படுகிறது.
பாண்டியர் மற்றும் சோழர் காலத்தில் இவ்வூரில் நிலைப்படை (Standing Army)
இருந்ததைச் சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. இவ்வூரில் முகமதியர்களின்
தாக்கம் இருந்ததற்கான எச்சங்களும் காணப்படுகின்றன. விஜயநகர் கல்வெட்டு
ஒன்று இவ்வூரை ‘தென்னாட்டு ராயர் மடமான ஆனையூர்’ எனக் குறிப்பிடுகிறது.
பாண்டிய மன்னர்களின் கீழ் சிற்றரசாக விளங்கிய வாணாதிராயர்களின் அரசு
சார்ந்த செயல்பாடுகளும் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அரசு மரபுகளின் காலங்களில் தொடர்ச்சியாக முக்கிய இடத்தைப்
பெற்றிருந்த ஆனையூர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் முக்கிய இடத்தைப்
பெற்றிருந்ததை அக்காலத்தைச் சேர்ந்த ஆவணங்களில் இப்பகுதியின்
பெரும்பான்மை சமூகத்தினரைக் குறிப்பிடும் இடங்களில் “ஆனையூர் கள்ளர்கள்”
என அழைப்பதிலிருந்து இவ்வூருக்கு இருந்த தலைமைப் பண்பு நன்கு
வெளிப்படுவதைக் காணலாம்.
'தென்கல்லக நாடு' என்ற குறிப்புடன் வாடிப்பட்டி, விக்கிரமங்கலம்,
ஆனையூர், மேலத்திருமாணிக்கம், திடியன் பகுதிகளில் கல்வெட்டுக்கள்
கிடைக்கின்றன. முக்கியமாக ஆனையூர் கோயிலில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்,
ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோர்கள் காலத்திய வட்டெழுத்து
கல்வெட்டுகளில் 'தென்கல்லகநாடு' குறிப்பிடப்படுகிறது.
தென் கல்லகநாடு என்ற பெயர் ஒரு கல்வெட்டில் தென்கல்ல நாடு எனக்
குறிப்பிடப்படுகிறது.
இது கள்ளர் பெரும் பான்மையாக உள்ள தற்போதைய நிலப்பகுதியையே
குறித்துநிற்கின்றது. ஆணையூரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் தன்
மாமனைக் கொன்ற தோஷத்திலே போகக் கடவதாக எனக்குறிப்பிடுவது பிற
கல்வெட்டுகளிலிருந்து சற்று மாறு பட்டதாகக் காணப்படுவதோடு மாமானுக்கு
முக்கியத்துவம் இருந்ததையும் இதன்வழி அறிய முடிகிறது. குறிப்பா கள்ளர்
சமூகத்தில் தாய்மாமனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்பது இச்சமூக
மரபில் காணப்படும் சிறப்பான கூறாக இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருவதை
நாம் காணலாம்
கல்லகநாட்டின் நிலப்பரப்பே இன்றும் பிறமலை நாட்டுக் கள்ளர்களின் எட்டு
நாடு 24 உப கிராமமாக உள்ளது.
இந்த ஐராவதர் கோவிலை ராசராச சோழன், இவர்மகன் ராசேந்திர சோழன்,
இவர்களுக்குப் பிறகு சோழ மன்னர்கள் வாரிசுகளான பாதுகாத்து தங்கி வணங்கி
வந்த முதல் கோவில் தென் தமிழ்நாட்டில் இந்த ஆனையூர் தான். இவர்கள் இங்கு
கோட்டை கட்டி வாழ்ந்து வந்ததால் கோட்டையூர் என்றும் சொல்வதும் உண்டு.
இந்த ஆணையூர் தான் மதுரையின் முதல் தாலுகா 1754ம் ஆண்டு வரை. (ஆர்.கே.
கண்ணனின் ஆய்வு நூலில் இருந்து)
கிபி1311-ல் பாண்டியர்களை வீழ்த்த டெல்லி சுல்தானாகிய அலவுதீன்
கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரைக்கு பெரும்படையுடன் வருகிறார்.
அப்படி மாலிக்கபூர் மதுரைக்குள் நுழையும் முன் எல்லையில் கள்ளர் குடியின்
தளபதிகளான வீரத்தேவர், கழுவத்தேவர் இருவரும் மாலிக்கபூர் படையுடன்
சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர்.
அப்படி உயிர் தியாகம் செய்த இருவருக்கும், போரில் பட்டு இறந்ததால்
பட்டவன் என்கிற பெயரில் அந்த வட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும்
நடுகல் எடுத்து கடவுளாக வணங்கி வருகின்றனர்.
அந்த நடுகல்லில் வீரத்தேவர், கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது
கையில் வளரியும் வைத்துள்ளனர். இன்றும் மதுரை கீழக்குயில்குடி சென்றால்
அங்குள்ள மலையடி அய்யனார்,கருப்பு கோவிலில் இவர்களுடைய நடுகல்லை
பார்க்கலாம்.
இதில் இன்னொரு கவனிக்ககூடிய விடயம் என்னவென்றால் கோவிலில் பாண்டிய
மன்னனின் பழமையான சிலையை அந்த ஊரில் உள்ள கள்ளர் பெருமக்கள் பாண்டியராஜன்
சாமி என்று பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.
கிபி1650-ல் திருமலை நாயக்கர் பாண்டியமன்னர்கள் முற்றிலும் அழிந்த
காலத்தில் மதுரையை தனது முழுகட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் போது,
மதுரை எல்லை அரணில் வாழ்ந்த கள்ளர்கள் நாயக்கருக்கு எதிராக கலகம்
செய்தனர். அப்போது திருமலை நாயக்கரால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத
போது திருச்சி நாயக்கரிடம் உதவி கேட்டு வீரையன் சேர்வை மூலமாக ஒழிக்க
நினைக்கிறார்.
இதனை பற்றி மதுரை வீரன் அம்பானை விளக்கும் போது வீரையன் சேர்வையை ஆனையூர்
பத்து நாட்டு தனிக்காட்டு தன்னரசு கள்ளர் படைகள் வளரியும், வேலையும்
வைத்து சண்டையிட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது.
மதுரை வீரன் அம்பானையில் “ஆனையூர் கள்ளர்கள்” என்றே குறிப்பிட்டுள்ளனர்.
கிபி1881வரை ஆனையூர் கள்ளர்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர்
(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக
குறித்துள்ளனர். சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர்
தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள்
அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி,செயல்பட்ட இடம் தான்
ஆனையூர் (கருமாத்தூர்) கள்ளர் நாடு.
கிபி1750-ல் மதுரையை தங்களுக்கு கீழ் கொண்டுவர எண்ணிய போது அந்த மண்ணின்
பூர்வீக போர் பழங்குடியினரான கள்ளர்கள் அதற்கு பெரும் தடையாக இருந்தனர்.
மதுரையை கைப்பற்ற வேண்டும்மென்றால், கள்ளர்களை கருவருத்தால் மட்டுமே
முடியும் என நினைத்த பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் மதுரை மண்டலத்தில் உள்ள
வெள்ளலூர் நாடு, மேலூர் நாடு, ஆனையூர் நாட்டில் உள்ள கள்ளர்களில் பெரும்
பகுதி மக்களை கருவறுத்த பின்பே அவர்களால் மதுரையில் ஆட்சி செலுத்த
முடிந்தது.
1750-களில் நடந்த வரலாற்று சம்பவங்களை பல புத்தங்களாக எழுதியுள்ள
பிரிட்டீஸ் இந்தியாவின் முன்னால் கல்வித்துறை மற்றும் அரசு
ஆவணக்காப்பாளுருமான S.C.Hill யூசூப்கானை பற்று தனது புத்தகமான YUSUF KHAN
(THE REBEL COMMADANT) என்கிற புத்தகத்தில் மதுரையை பற்றி விளக்கும் போது
அங்கே வாழும் கள்ளர் பழங்குடியினரை பற்றி விளக்கியுள்ளார்.
அதாவது கள்ளர் இனம் என்பது மதுரையில் பூர்வீக போர் பழங்குடியினர் என்றும்
மதுரை சுற்றியுள்ள குறிஞ்சி (மலை), முல்லை (காடு) நிலப்பரப்பை
வைத்திருக்கும் நிலவுடைமையாளர்கள் என்றும் குறிக்கிறார். காடு, மலைகளில்
தனக்கென்று ஒரு ரகசிய பாதையை வைத்து பிரிட்டீஸாரை பயமுறுத்தியும்
உள்ளனர்.
மேலும் கள்ளர்களின் ஆயுதமான வளரியை திறம்பட பயன்படுத்துதல், எப்போதும்
தங்களது இருப்பிடத்தை சுற்றி கோட்டையை கட்டமைத்தல், வழித்தடங்களில்
கோட்டை போன்ற தடையை ஏற்படுத்துதல் என குறிக்கிறார்.
இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று
ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும்
கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி
எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர்
பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என
குறிக்கின்றனர்.
கிபி1795-ம் ஆண்டு நிலக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி, அதன்
பாளையக்காரராக இருந்த கூளப்ப நாயக்கரை விரட்டுகின்றனர். இதனால் கூளப்ப
நாயக்கர் பிரிட்டீஸ் படையை எதிர் தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்.
அதற்காக ஆனையூர் நாட்டு கள்ளர்களிடம் உதவியை பெருகிறார்.
அதன்பின்பு சுமார் 6000 முதல் 8000 ஆனையூர் கள்ளர் படைபற்று வீரர்கள்
பிரிட்டீஸ் படையை எதிர் தாக்குதல் நடத்த மலபார்
கைத்துப்பாக்கி,மேட்ச்லாக் நீள துப்பாக்கி,வளரி தடி, ஈட்டி, வாள் போண்ற
ஆயுதங்களோடு நிலக்கோட்டையில் பிரிட்டீஸ் படையுடன் தாக்குதல்
நடத்துகிறார்கள்.
ஆனையூர் கள்ளர்களின் இந்த தாக்குதலால், மிகவும் வலிமையான நிலக்கோட்டையில்
இருந்த பிரிட்டீஸ் படையும்,அங்கிருந்த சுபேதாரும் நிலைத்
தடுமாறுகின்றனர்.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3க்கும் மேற்பட்ட பிரிட்டீஸின்
கம்பெனி (இராணுவ குழுக்கள்) படைகள் நிலக்கோட்டைக்கு வருகிறது.
இத்தனை பிரிட்டீஸ் படைகள் சேர்ந்தும் ஆனையூர் கள்ளர்களின் வீரமிக்க
தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைகிறது. இந்த போரில் கொரில்லா போர்
முறையை பின்பற்றினார். இதனை உணர்ந்த அன்றைய மதுரை கலெக்டர்
மதுரையிலிருந்த ஒட்டுமொத்த பிரிட்டீஸ் படையையும் கூட்டிக்கொண்டு
திண்டுக்கல்லை அடைகிறார்.
ஆனால் அப்போதும் அவர்களால் கூளப்ப நாயக்கரையோ, கள்ளர் படைகளையோ
பிடிக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. இறுதியாக கூளப்ப நாயக்கரின் தலைக்கு
ரூபாய்1000 நிர்ணயம் செய்கிறது, அன்றைய ஆங்கிலேய அரசு. இந்த
தாக்குதலுக்கு பிறகு கூளப்ப நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டிலே தஞ்சம்
அடைகிறார். தொடர்ந்து 3வருடங்கள் ஆகியும் கூளப்ப நாயக்கரை ஆனையூர்
கள்ளர்கள் பாதுகாத்தனர். இறுதிவரை ஆனையூர் நாட்டுக்குள் புகுந்து
ஆங்கிலேயர்களால் தாக்குதல் நடத்தி கூளப்ப நாயக்கரை பிடிக்கமுடியவில்லை.
தானாகவே முன் வந்து திண்டுக்கல் கலெட்டர் முன்பு சரண் அடைகிறார்.
மருது பாண்டியர்களின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத
ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம் (ஆனையூர் நாட்டு
பிரிவு) ஏனென்றால் இங்குதான் மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை
உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர்
நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது
திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின்
இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட
கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பின்னாங் தீவிற்கு நாடு கடத்தப்பட்டு
சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்
1.ஆண்டியப்ப தேவர்
2.சடை மாயன்
3.கொன்றி மாயத் தேவர்
மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை
பிரிட்டிசார் கைப்பற்றியதாலும். கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர்
நாட்டுக்கு பொன்னித்தேவர் ("கள்ளப்பட்டி" செல்லம்பட்டிக்கு அருகில்)
உதவியால் தப்பிச்செல்கிறார், இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ்
படையால் கொல்லப்படுகிறார்.
பிறகு கோபால நாயக்கர் ஆரிப்பட்டி, கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள
கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.
ஆங்கிலேயர்கள் முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக்கள்ளர்களை தொடர் தாக்குதல்
நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.
ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படைகள் சேர்ந்தும் ஆனையூர் கள்ளர் படையை ஒன்றும்
செய்ய முடியவில்லை, அவர்களுடைய அஞ்சா குணம் அவர்களை நிலைகுலையச் செய்தது.
இதுபோக கிபி1877-ல் ஆனையூர் கோவிலில் பழைய யானை தந்தங்கள்
ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரிட்டீஸ் ஆய்வாளர் இந்த ஆனையூர்
என்பது மேற்கு கள்ளர்களின் தலைமை இடம் என்றே குறித்துள்ளனர்.
அனைத்து கள்ளர்களுக்கும் குற்றப்பரம்பரை சட்டம் போட்டு பிற்காலத்தில் பல
கள்ளர்களுக்கு விலக்கு அளித்தாலும், இந்த ஆனையூர் கள்ளர்களுக்கு மட்டும்
எங்களால் விலக்கு கொடுக்க முடியாதென்று மறுத்துவிட்டது ஆங்கிலேய அரசு.
அதற்கு காரணம் இவர்கள் மட்டுமே இறுதிவரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக
தொடர்ந்து போராடி வந்தனர்.
நன்றி:
முனைவர் பா.ஜெயக்குமார்.
திரு. ராஜேஷ் வல்லாளதேவர் - கள்ளர் நாடு அறக்கட்டளை
திரு. சோழபாண்டியன்
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
14.jpg
15.jpg
16.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Jun 7, 2019, 4:57:05 PM6/7/19
to panbudan, minTamil
கிபி - 871-907 காலக்கட்டத்தில் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கள்ளப்பால்
கற்குறிச்சி திருக்கட்டளை (திருக்கற்றளை) சிவன் கோவில்.
புதுக்கோட்டை மாவட்டம் #வல்லநாட்டின் வட எல்லைக்குட்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது
ஆதித்த சோழன், பராந்தங்க சோழன் கல்வெட்டுகள் நிறைந்துள்ள கோவில்.

குடுமியான்மலை, நார்த்தாமலை போன்று காலத்தின் பழமையான நினைவுகளை
தாங்கியுள்ள இடமாக திருக்கட்டளை உள்ளது.

#கள்ளப்பால் கற்குறிச்சி_திருக்கட்டளை
#வல்லநாடு_புதுக்கோட்டை
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg

Thevan

unread,
Jun 7, 2019, 5:01:34 PM6/7/19
to panbudan, minTamil
வரலாற்று ஏடுகளில் ஏழுகிளை கள்ளர் நாடுகள்

சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக, சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம்
மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர் நாடுகள்,
ஏழுகிளை கள்ளர் நாடுகள் என அழைக்கப்படுகிறது.

ஏழுகிளை கள்ளர் நாடுகள்
-------------------------------------------
1) குன்னங்கோட்டை நாடு,
2) தென்னிலைநாடு,
3) உஞ்சனை நாடு,
4) இரவுசேரி நாடு,
5) செம்பொன்மார் நாடு,
6) கப்பலூர் நாடு,
7) இரும்பா நாடு,
8) சிலம்பா நாடு,
9) வடம்போகி நாடு,
10) தேர்போகிநாடு,
11) கோபால நாடு,
12) ஏழுகோட்டை நாடு,
13) ஆற்றங்கரை நாடு,
14) முத்து நாடு

மேற்குறிப்பிட்ட கள்ளர் நாடுகளில் வாழும் கள்ளர்களின் கிளைகள்
1. அரசியான்கிளை
2. அரியாதன் கிளை
3. பிச்சையாகிளை
4. சோழான் கிளை (சோலையான்)
5. அரசனன் கிளை (பெஸ்தான் )
6. தொண்டைமான்கிளை
7. குருவிலி கிளை

கிபி 1909-ல் எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய Caste and tribes of southern
india vol 3 ல் மேற்குறிப்பிட்ட 14 நாடுகளுக்கும் தலைமையாக "உஞ்சனை,
செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி நாட்டு அம்பலங்கள் உள்ளனர்.
இவர்களுக்கு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் முதல் மரியாதை
அளிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இனி இந்நாட்டார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம்.

இலங்கை படையெடுப்பை எதிர்த்து போரிட்ட செம்பொன்மாரி நாட்டு கள்ளர்கள் ( கிபி 1171)
---------------------------------------------------------------------------------------------
* கிபி 1171 ல் பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டியனுக்கும், பராக்கிரம
பாண்டியனுக்கும் வாரிசுரிமை போர் ஏற்படுகிறது. இந்த போரில் குலசேகர
பாண்டியனின் கைக்கு ஆட்சி சென்றது. பராக்கிரம பாண்டியன் இலங்கை அரசர்
பராக்கரம பாகுவின் உதவியை நாடினார். பராக்கரம பாகு, மாபெரும் படையை
லங்கபுரா தண்டநாதா எனும் தளபதி தலைமையில் அனுப்பினார்.ஆட்சியை இழந்த
பராக்கிரம பாண்டியன் கொல்லப்படுகிறார். குலசேகர பாண்டியனை வென்று
பாண்டிநாட்டை பராக்கரம பாண்டியனின் வாரிசிடம் ஒப்படைக்குமாறு இலங்கை
அரசர் தனது தளபதிக்கு உத்தரவிட்டார்.

* லங்கபுராவை எதிர்க்க குலசேகர பாண்டியன், தன்னுடைய படைகளை இணைத்து
கோட்டை கொத்தளங்களோடு திகழ்ந்த ஏழுகோட்டை நாட்டில் தயாராக இருந்ததாக
மகாவம்ச நூல் கூறுகிறது.ஏழுகோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்றாகும்.

* இலங்கை தளபதி லங்கபுரா ராமேஸ்வரம் வழியாக தமிழகத்தில் நுழைந்து
தாக்குதலை நடத்தி சென்றான். லங்காபுராவை எதிர்த்த தமிழ் குறுநில
மன்னர்களை தோற்கடித்து, தொடர்ந்து முன்னேறி கள்ளர் நாடாம் செம்பொன்மாரியை
அடைந்தார். " செம்பொன்மாரி நாட்டு மாளவ சக்கரவரத்தியை சரணடையும்படி
லங்கபுரா தூது அனுப்பினான். ஆனால் செம்பொன்மாரியில் இருந்த மாளவ
சக்கரவர்த்தி லங்கபுராவை எதிர்த்து தாக்க தயாரானார்.

* செம்பொன்மாரியில் இருந்த கோட்டையை பிடிக்க சோலியர்கள் ( சோலையான் கிளை
கள்ளர்கள்) இரு வருடமாக முயற்சி செய்தும் தோற்றதாக செம்பொன்மாரி
நாட்டின். படைபலத்தை மகாவம்சம் விளக்குகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள
சோலையன் வழியினர் இன்றும் சோலைய கிளை கள்ளர்களாக வாழ்கின்றனர் என்பது
சிறப்பிற்குரிய தகவல்.

* இத்தகைய பலம் வாழந்த செம்பொன்மாரியை பெரும் யானைபடை கொண்டு தாக்கிய
லங்கபுரா அரை நாளில் கைப்பபற்றினான். பிறகு 60,000 பேர் கொண்ட கள்ளர்
மற்றும் மறவர்கள் படை இலங்கை தளபதியை தாக்கியது. ஆயினும் பெரும்பலம்
கொண்டிருந்த லங்கபுரா ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து வெற்றி
பயணத்தை தொடர்ந்தார். பெரும்போரிட்டு கள்ளர்கள் மறவர்கள் மற்றும் ஏனைய
குறுநிலத் தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
இலங்கையர்கள்.

(இலங்கை வரலாறு கூறும் "மகாவம்ச நூல் "வரிகள் (246-267)

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட செம்பொன்மாரி இன்றும் கள்ளர் நாடுகளில்
ஒன்றாக திகழ்கிறது. சொலையர்கள் என குறிப்பிடப்பட்ட சோலையன் கிளை
கள்ளர்கள் இன்றும் வசித்து வருகின்றனர். இலங்கையில் எழுதப்பட்ட ஒர்
நூலில் தமிழ் போர்குடிகளாக குறிப்பட்டது கள்ளர் மற்றும் மறவர் மட்டுமே.
கல்வெட்டுகளில் ஏழு கிளை கள்ளர் சீமை
----------------------------------------------------------------------

உஞ்சனை நாடு
*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 12 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய தேவர் காலத்தில் உஞ்சனை
நாட்டார்களுக்கு, செலுத்தவேண்டிய வரி தொடர்பான தகவல்கள் கொண்டுள்ள
கல்வெட்டு, உஞ்சனை நாடு என இந்த பகுதியை குறித்துள்ளது( உஞ்சனை வட்டார
க.வெ 6)

அரசியான் கிளை
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 1313 ல், இராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் அரச மணவாள
தேவன் என்பவருக்கு, கார்த்திகை மாதம் பிரசாதம் கொடுத்து பரிவட்டம் கட்ட
தானத்தார் ஏற்பாடு செய்ததாக செய்தி கூறப்பட்டுள்ளது. அரசர் மணவாளதேவரின்
வழியினாராக இன்றும் அரசியான் கிளை, அரசனன் கிளை ஆகிய கிளைகள் ஏழுகிளை
கள்ளர் கிளைகளில் உள்ளது.( உஞ்சனை வட்டார க.வெ 11)

* கிபி 1315 ல், சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவர் ஆட்சி காலத்தில்,
உஞ்சனை நாட்டார்கள் இறையிலியாக நிலத்தை அளித்துள்ளனர். அவ்வூர்காரர்களாக
செழியதரையர், அதிகைமான், ஆளவந்தார், வீரபாண்டிய பல்லவதரையர், அண்டக்குடி
கண்டத்தேவர், காணப்பேரயன், வீரசிங்கத்தேவன் முதலானவர்கள்
குறிப்பிடப்பட்டுள்ளனர்( உஞ்சனை வட்டார க.வெ 8)

யானைப்படை குதிரைப்படை கொண்டிருந்த உஞ்சனை படைபற்று
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 1315-ல் ராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சிகாலத்தில், சிதம்பரம்
மடத்துக்கு, ,உஞ்சனை நாட்டார்கள் நிலம் அளித்துள்ளனர். அந்த நிலத்தின்
மீதான வரிகளும் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட வரிகளின் பட்டியலில்,
ஆனைச்சாரல், குதிரைப்பந்தி, சிறைத்தேவை,, ஆள்வரி முதலியவை
குறிக்கப்பட்டுள்ளது. குதிரைப்பந்தி என்பது குதிரைப்படையை பொறுத்து
வாங்கப்படும் வரி. ஆனைச்சாரல் என்பது யானைப்படையினை பொருட்டு
வாங்கப்படும் வரியாகும். ஆள் தேவை என்பது வீரர்கள் தொடர்பான வரியாகும்.
சிறைச்சாலையின் பொருட்டு வாங்கப்படும் வரி, சிறைத்தேவையாகும். இவற்றின்
மூலம் உஞ்சனை பற்று ஒர் படைபற்றாக திகழ்ந்ததை அறிந்து கொள்ளலாம்.
குதிரைப்படை, யானைப்படை என மாபெரும் படைப்பற்று உஞ்சனை நாட்டில் இருந்ததை
கல்வெட்டு தெளிவுபடுத்துகிறது (உஞ்சனை வட்டார க.வெ 12)

உஞ்சனை நாடு
*-*-*-*-*-*-*-*-*-*-*
* கோனேரின்மை கொண்டான் என்பவரின் ஆட்சி காலத்தில்(கிபி 13-14 ஆம்
நூற்றாண்டு) , உஞ்சனை நாட்டார்களுக்கு அரசு வரி விதித்த தகவல்கள்
உள்ளது.( உஞ்சனை வட்டார க.வெ 4)

தொண்டைமான் புன்செய்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
* கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாத்தூரான வீரபாண்டிய புரத்தில் வாழ்ந்த,
காத்தான் நகர சேனாதிபதி என்பவன் உஞ்சனை கோயிலுக்கு நிலத்தை கொடையாக
அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தின் ஒர் எல்லையாக தொண்டைமான் புன்செய்
குறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் கிளை கொண்ட கள்ளர்கள் இன்றும்
அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.( உஞ்சனை வட்டார க.வெ 17)

* உஞ்சனை நாடு இன்றும் கள்ளர் நாட்டு பாரம்பரியத்தை தன்னகத்தே
கொண்டுள்ளது. 14 நாடுகளுக்கும் தலைமை வகிக்கும் 4 நாடுகளில் உஞ்சனை
நாடும் ஒன்றாகும்.

செம்பொன்மாரி நாட்டை சேர்ந்த மாளவ சக்கரவரத்தி
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

* கிபி 13 ஆம் நூற்றாண்டு, கண்டதேவி சொர்ணமூரத்தீஸ்வரர் கோயில்
கல்வெட்டு, பாண்டி மண்டலத்து தாழையூர் நாட்டு செம்பொன்மாரி பற்றை, "
இந்நாட்டில் எங்கள் காணி பற்றில் " என குறித்துள்ளனர். இதன் மூலம் மாளவ
சக்கரவரத்தி செம்பொன்மாரி நாட்டார் என்பது தெளிவுபடும். மகாவம்ச நூலில்
செம்பொன்மாரி பற்றை பிடிக்க இலங்கை தளபதி மாளவ சக்கரவரத்தியிடம்
போரிட்டதாகவும் கூறுகிறது. இவரோடு மும்முடிசோழன் சக்கரவர்த்தியும்
செம்பொன்மாரி பற்றை சேர்ந்தவராக குறிக்கப்படுகிறார்.சோலையன் கிளை
கள்ளர்கள் இன்றும் வாழ்வது குறிப்பிடத்தக்கது.( உஞ்சனை வட்டார க.வெ;;
கண்டதேவி கல்வெட்டு 2)

* கிபி 14 ஆம் நூற்றாண்டில், இராசாக்கள் தம்பிரானார் காலத்தில் அவ்வூர்
கள்ளர் மக்கள் கண்டதேவி தூண் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். (ஹஜிரா
கல்வெட்டு 771-825)

செம்பொன்மாரிபற்று, மூத்தூர் கூற்றம்(முத்து நாடு)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

* தேவகோட்டை வெங்களூர் சிவன் கோயில் கல்வெட்டு கோனேரிமேல்கொண்டார்
ஆட்சிகாலத்தை சேர்ந்தது( கிபி 14) . முத்தூற் கூற்றத்து சாத்த மங்கல மாளவ
மாணிக்க ஈசுவரமுடையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றி
கூறுகிறது.
" இச்செம்பொன்மாரி மாளவ மாணிக்கம் கானப்பேருடையான் மாளவசக்கரவரத்தி" என
மாளவர் மாணிக்கம் குறிக்கப்படுகிறார். முத்து நாடான முத்தூற் கூற்றமும்
குறிப்பிடப்பட்டுள்ளது( உஞ்சனை வட்டார க.வெ, வெங்களூர் கல்வெட்டு 1).

சேதுபதி செப்பேடுகளில் கள்ளர் நாடுகள்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

முத்துநாடு, தென்னிலை நாடு (கிபி 1661)

திருமலை சேதுபதி காத்த தேவர் காலத்தில் மதுரை நாயக்க மன்னர்
புண்ணியத்துக்காவும், தளவாய் சேதுபதி காத்த தேவர் புண்ணியத்துக்காவும்,
தங்கள் மாதா, பிதா ஆகியோரின் புண்ணியத்திற்காகவும் திருப்பெருந்துறை
ஆவுடைய பரம சுவாமியாருக்கு பூசை நடத்த அம்பலத்தாடும் பண்டாரம் வசம் பல
சீமைகளில் உள்ள கிராமங்கள் கொடை அளிக்கப்பட்டது. அவற்றில்
முத்துநாட்டுச்சீமை மற்றும் தேர்போகி நாட்டு சீமைகளில் உள்ள
கிராமங்களையும் தானமாக அளித்ததாக இம்மன்னர் அளித்த திருப்பெருந்துறை
செப்பேடு கூறுகிறது. முத்து நாடு கருமாணிக்க மன்னர்களால் ஆளப்பட்ட
நாடாகும்.இது முத்தூற்கூற்றம், கப்பலூர் நாடு என கல்வெட்டுகளிலும்
இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. தேர்போகி நாடு மற்றும் முத்து
நாடு 14 கள்ளர் நாடுகளில் உட்பட்டவை.
தென்னிலைநாடு ( கிபி 1684):-

இரகுநாத சேதுபதி கிபி 1684 ல் அளித்த " புதுக்கோட்டை செப்பேடு" அம்மாவாசை
புண்ணிய நாளில் தென்னிலை நாட்டில் வளுவாபுரி
விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈஸ்வரி அம்மனுக்கும் காளையார் கோயில்
சீமையில் தென்னிலை நாட்டில் அரிசிலையாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை,
கள்ளிக்குடி, எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களை கொடையாக அளித்ததை
கூறுகிறது. தென்னிலை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். புதுக்கோட்டை
எனும் ஊர் காளையார் கோயில் பகுதியிலும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தேர்போகி நாடு (கிபி 1709)

கிழவன் சேதுபதி காலத்தில் இரகுநாதராய தொண்டைமான் சகோதரியும்,
இராயதொண்டைமான் மகளுமான இராமநாதபுர சமஸ்தான அரசியுமான காதலி நாச்சியார்
கிபி 1709-ல் குமரண்டூர் வீரம நல்லூரில் இருக்கும் வெங்கடேசுவரய்யன் மகன்
சங்கர நாராணய்யன் என்பவருக்கு ஓரு அமாவாசை புனிதநாளில் தேர்போகி நாட்டில்
உள்ள களத்தூரை கொடையாக அளித்த செய்தியை களத்தூர் செப்பேடு கூறுகிறது.
தேர்போகி நாடு ஏழுகிளை கள்ளர் நாடுகளில் ஒரு நாடாகும்.

ஏழுகோட்டை நாடு (கிபி 1733):-

இரகுநாத சேதுபதி காத்த தேவர் கிபி 1733-ல் வெளியிட்ட "
திருப்பொற்கோட்டைச் செப்பேட்டில்" திருவாடுதுறை மடத்தில் அருளாட்சி
நடத்திய பன்னீரெண்டாம் ஆதீனகரத்தா அவர்களிடம் மடத்தின் பூசைக்காக சேதுபதி
அரசர் அம்பலவாணசுவாமி சன்னதியில் ஏழுக்கோட்டை நாட்டில் ஒரூர் வட்டவகையில்
திருப்பக்கோட்டை எனும் ஊரை கொடையாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழுகோட்டை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும்.

18 ஆம் நூற்றாண்டு போர்களில் ஏழு கிளை கள்ளர் நாடுகள்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

சேதுபதி மன்னருக்கு ஆதரவாக தேர்போகி, கப்பலூர் மற்றும் இரவுசேரி நாடுகள்(
கிபி 1772)
---------------------------------------------------------------------------------------------
கிபி 1772 ல் ஆங்கில தளபதி ஸ்மித் தலைமையிலான படை இராமநாதபுரத்தை தாக்கிய
போது இராமநாதபுரத்துக்கு உதவியாக கப்பலூர் நாடு , தேர்போகி நாடு மற்றும்
இரவுசேரி நாடு சென்றுள்ளது.
" தேர்போகி நாட்டுத் திரண்ட படைக்கலமும் இரவிகேசரி நாடும் யெண்வோண்ணா
மன்னவரும் வெருவிச் சினந்து வெகுசேனை சூழ்ந்து வர கப்பலூர் நாடுங்
கறுத்தக்கோட்டை நாட்டவரும் தளத்துடனே"( சிவ அம் பக் 109)
என கப்பலூர் நாட்டார், தேர்போகி நாட்டார்கள் மற்றும் இரவுசேரி
நாட்டார்கள் படை உதவி அளித்ததை விளக்குகிறது.

முத்துவடுகநாதரை காக்க களம் கண்ட ஏழுகிளை கள்ளர் நாடுகள்(ஏழுக்கோட்டை
நாடு , தென்னிலை நாடு, சிலம்பா நாடு, முத்து நாடு)( 21 Jun 1772)
---------------------------------------------------------------------------------------------
இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி
1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர்
வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ள
நாடுகளை பற்றி அம்மானை பாடுகிறது.
" தென்னிலை வளர்நாட்டு ஊரவரும், மேல் சிலம்பா நாட்டவரும் , சாவ முத்து
நாட்டுத்தலைவர் வெகுசனமும் கண்டதேவி நாட்டு கனமான மன்னவரும்
வண்டரெழுவங்கோட்டை மன்னருடன் கண்டமாணிக்கம் கனநாட்டு இராணுவமும்
துண்டரிக்க னான துரை பாகனிச் சனமும் பட்டமங்கல நாட்டு பலசனங்கள்
மெத்தவுமாய் திட்டமுட னாயுதங்கள் சேர்க்கை வெகு வாகவுமே, பள்ளத்தூர்
நாடும், பாலைய நாட்டாரும் கள்ளற் சிலகுடியுங் காவலராரும் , நேரிய போரில்
நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம்
தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்" (சிவ அம் பக் 122)
எழுவங்கோட்டை நாட்டார்கள், தென்னிலை நாட்டார்கள், சிலம்பா நாட்டார்கள்,
முத்து நாட்டு கள்ளர்கள் ஆகிய ஏழுகிளை கள்ளர் நாடுகளும் , பாகனேரிச்
சனமும், பட்டமங்கல நாட்டார்களும்,
கண்டதேவி நாட்டார்கள், கண்டர்மாணிக்கம் நாட்டார்கள், பள்ளத்தூர் நாடு,
பாலையூர் நாடு, கள்ளர் காவல்காரர்களும், மல்லாக்கோட்டை நாட்டு
சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான
நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க
உதவியுள்ளனர்.

இராமநாதபுர மன்னர் சிவகங்கையை தாக்கியபோது உதவிய தென்னிலை நாடு மற்றும்
முத்துநாடு (கிபி 1794)
---------------------------------------------------------------------------------------------
கிபி 1794ல் ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதி படமாத்தூர் கவுரி
வல்லபதேவருக்கு ஆதரவாக இராமநாடு படையை அனுப்பி ஒரு சகோதர யுத்தத்தை
நடத்தினார். அந்த போர் ஆனந்தூர் எனும் இடத்தில் நடந்தது. இப்போரில்
மருதுபாண்டியருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் நாடுகள்:-

" தென்னிலை நாட்டில் வளர் ராமச்சந்திரன் சேனையது நானூறு காலும் சமத்தான்
தைரியவான் நாச்சியப்பன் சேர்வை நானூறு தளமதுவும் பெருமைமிகு பெரும்பாலைய
நாடும், மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும், ஏரியூர் நாடும்,
எண்ணவொண்ணா மன்னவரும் முத்துநல்ல நாட்டவரும், முனைவீரமுள்ள திருப்பத்தூர்
நாட்டவரும், பூரவரும் சிறுகுடி நாட்டவரும் " ( சிவ அம் பக் 172-174)

தென்னிலை நாட்டு வளர் ராமச்சந்திரன் தலைமையில் நானூறு பேர் கொண்ட படையும்
மல்லாக்கோட்டை நாச்சியப்பன் சேர்வை, தலைமையிலான நானூறு பேர் கொண்ட
படையும், பாலையூர் நாட்டவரும், மாசற்ற மல்லாக்கோட்டை கள்ளர்களும்,
ஏரியூர் நாட்டாரும், முத்து நாட்டு கள்ளர்களும் திருப்பத்தூர் மற்றும்
சிறுகுடி நாட்டு கள்ளர்களும் மருதுபாண்டியருக்கு ஆதரவாக ஆனந்தூர் போரில்
களம் கண்டுள்ளனர். இவற்றில் தென்னிலை நாடு மற்றும் மற்றும் முத்து நாடு
ஏழுகிளை கள்ளர் நாடுகளை சேர்ந்ததாகும்.
இங்ஙனம் மூவேந்தர் காலம் தொட்டு பிரிட்டீசார் காலம் வரையிலும் நாட்டுக்கு
ஆபத்து நேர்ந்த காலங்களில் தங்களது உயிரை துச்சமென மதித்து, போர்களம்
நோக்கி விரைந்தவர்களே, கள்ளர் நாட்டார்கள்! காலங்காலமாக இன்றும் மாறாமல்
நாட்டு வழக்கங்கள் கடைபிடிக்கப்படுவதே கள்ளர் நாட்டு கட்டமைப்புகளின்
வெற்றி. நாட்டார்களுக்கு அளிக்கும் மரியாதை, கொட்டிய இரத்தத்தால் வந்தது.
சியாம் சுந்தர் சம்பட்டியார்
வாராப்பூர் நாடு
1.jpg
10.jpg
11.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Jun 8, 2019, 4:25:54 AM6/8/19
to panbudan, minTamil
சிவகங்கை கள்ளர் ரிஜ்மெண்ட்

கிபி1773-ல் சிவகங்கை அரசை கைப்பற்றுவதில் நவாப் மற்றும் பிரிட்டிஸ்
கூட்டுப் படை மிகத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்த நேரம்.

அந்த நேரத்தில் கிபி1773 மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசுக்கு அவர்களின்
பிரதிநிதி முத்து கிருஷ்ண முதலியார் சென்னையில் உள்ள இராபர்ட் பால்க்
என்கிற அதிகாரிக்கு சிவகங்கை நிலவரத்தை பற்றி கடிதம் மூலமாக
தெரிவிக்கிறார்.

அதில் சிவகங்கை கள்ளர் நாடுகள் புரட்சியில் ஈடுபட்டு நமக்கு எதிரான
புரட்சியில் உள்ளனர் என்றும் மேலும் அவர்களின் ஆதி சொந்தமான சிவகங்கை
அரசுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபடுவதாகவும் எழுதியுள்ளார்.

அதேபோல் இராபர்ட் பால்க் பிரிட்டிஸ் கவுன்சிலுக்கு சிவகங்கை கள்ளர்
நாடுகள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கடிதம்
எழுதியுள்ளார்.

சிவகங்கையின் இரத்த சரித்திர வரலாற்றை எழுதிய பிற்கால ஆசிரியர்கள் கள்ளர்
படையின் வீரத்தையும், தியாகத்தையும் மூடி மறைப்பது ஏனோ?

வரலாற்று ஆசிரியர் கே.இராஜய்யன் அவர்கள் மட்டுமே சிவகங்கை சரித்திரத்தில்
கள்ளர் நாட்டின் பங்கை எந்தவித சமரசம் இல்லாமல் பதிவிட்டவர்!

இந்த புரட்சியின் தொடர்ச்சியே பிற்காலத்தில் சிவகங்கை கள்ளர் படை நாயகன்
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி வரை தொடர்ந்தது!

சிவகங்கை பயணம் தொடரும்....

நன்றி
Reports on palk manuscripts

அன்புடன்
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Jun 17, 2019, 4:50:09 PM6/17/19
to panbudan, minTamil
பெரிய சூரியூர் கள்ளர்நாடு
=============================

திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று பெரிய சூரியூர்
கள்ளர்நாடு

பெரிய சூரியூர் கள்ளர்நாடு என்பது

பெரியசூரியூர்,
சின்னசூரியூர்,
வீரம்பட்டி,
பட்டவேலி,
கும்பக்குடி,
கண்டலூர்,
இலத்தப்பட்டி,
பூலாங்குடி,
பாலாண்டாம்பட்டி,
தெண்திரையன்பட்டி மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது.

நாடு: பெரிய சூரியூர் கள்ளர்நாடு

தலைமை கிராமம்: பெரிய சூரியூர்

பொதுகோவில்: ஆதி மூர்த்தீஸ்வரர் கோவில், சக்தி மாரியம்மன் கோவில்.

கள்ளர் கோவில்: நற்கடல்குடி கருப்பர் கோவில்

மொத்தம் ஆறு கரைகள் உள்ளன.

முதல்கறை: இராங்கி பிரியர்

இரண்டாவது கறை: மொட்டலார்

மூன்றாவது கரை: வல்லத்திரியர்,
சோழங்க தேவர், சோழதிரியர்

நான்காம் கரை: பாண்டுரார், குர்கண்டார், இராங்கிபிரியர்

ஐந்தாம் கரை: முதல்கரையில் வந்த இராங்கி பிரியர், பாண்டுரார், அழகு
பிரியர், இதிலும் வருகின்றனர்!

ஆறாம் கரை : மழவராயர், காடுரார் , பாலாண்டார்

இது தவிற சேப்பிளையார், கண்டியர், தென்கொண்டோர், கருப்பட்டியார் ஆகியோரும் உள்ளனர்.

இங்கு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துவருகின்றன. தை மாதம்
2ம் நாளில் மாட்டுப்பொங்கல் அன்று இவ்வூர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
நடைபெறுகின்றன. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் இதுவும்
ஓன்று.

இப்பகுதில் உள்ள எலந்தப்பட்டி சிவன் கோவில் செல்லும் வழியிலே மகாவீரர்
சிற்பமும் அதனருகே சிவலிங்க ஆவுடையும் காணப்படுகின்றன. அச்சிவலிங்க
ஆவுடையின் மேல் பொருந்தாத பாணமொன்றை பொருத்தி உள்ளூர் மக்கள் வழிபட்டு
வருகின்றனர். இதன் அருகே ஒரு பழைய கல்லானது கங்கம்மன் என்ற பெயரில்
வழிபாட்டில் உள்ளது. அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. இவையனைத்தும்
ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் அழிந்து
விட்டன. அவற்றின் அடையாளமாக முதுமக்கள் தாழியின் பானை ஓட்டு எச்சங்கள்
காணக் கிடைக்கின்றன.

இங்கு கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவ்வோட்டின்
உட்புறமானது பச்சை வண்ணத்தில் முலாம் பூசியும், வெளிப்புறமானது
கரும்பச்சை மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரித்தும் காணப்படுகின்றன.

எலந்தப்பட்டிக்கு மேற்கேயுள்ள பட்டவெளி (பட்டவன் வெளி?) என்ற
குக்கிராமத்தில் பிரம்மாண்டமான கல்வட்டங்கள் நிறைய உள்ளன. சில
கல்வட்டங்கள் சிதைக்கப்பட்டுவிட்டனன. முன்னர் கேட்பாரற்றுக் கிடந்த
பழமையான தாமரைபீடம் கொண்ட சிவலிங்கமும் நந்தியும், இன்று உள்ளூர் மக்கள்
சிலரது முயற்சியினால் பொன்னீஸ்வரர் என்னும் பெயரிலே வழிபாட்டில் உள்ளன.
லிங்கத்தின் அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

பட்டவெளியின் வடக்குபுறத்திலே சுமார் நான்கடி உயரமும் இரண்டரை அடி
அகலமும் கொண்ட அழகிய அய்யனார் சிலை ஒன்று உள்ளது. அரியதாக இவரின்
பீடத்திலே யானையும், குதிரையும் ஒன்றாக காணப்படுகிறன.

பட்டவெளிக்கு மேற்கே காலத்தால் முற்பட்ட பிரம்மசாஸ்தா கோலத்திலுள்ள
முருகன் சிலையொன்றுள்ளது. இச்சிலை குறித்த தகவலை திரு. கரு.ராஜேந்திரன்
அவர்கள் அறிவித்திருந்தார். இவ்விடம் அந்நாளில் ஒரு பெரிய கோவிலாக
இருந்திருக்கலாம். சுற்றிலும் செம்பாறை கற்கலாளான சுற்றுச்சுவரின்
எச்சமுள்ளது. தற்சமயம் சிறிய கட்டுமானத்தில் சுவர் எழுப்பி சிலர்
வழிபட்டு வருகின்றனர்.

சூரியூர் லெட்சுமணன் பட்டி அருகேயும் பழங்கால அய்யனார் சிலை மற்றும்
சிதைவுற்ற பழைய கற்றளிகள் உள்ளன.

சூரியூர் கள்ளர்கள் நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு
கட்டுப்படாமல் இருந்துள்ளனர்.

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இராமேஸ்வரம் கோவிலுக்கு
செல்பவர்கள் திருச்சியிலிருந்து கீரனூர் வழியாக இந்த பெரிய சூரியூர்
கள்ளர்நாட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது
பாதசாரிகள் அஞ்சுவர். அதுவும் வறட்சிகாலங்கள் என்றால் கள்ளர்கள்
முழுவதுமாக வழிப்பறியில் ஈடுபடுவார்கள். வழிபறி என்றால் திருடி ஓடுவது
அல்ல தாட்டியமாக அவர்களை மறித்து வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வார்கள்.
ஒரு முறை திருச்சி நாயக்க மன்னரின் அரச குரு கள்ளர்களால் வழிபறிக்கு
ஆளாகியுள்ளார். சினம்கொண்ட நாயக்க மன்னர் செய்வதறியாது திகைத்தார். பெரிய
சூரியூர் கள்ளர்களை நாயக்க மன்னர்களின் படைபிரிவில் உள்ளவர்களாலும்
ஒன்றும் செய்யமுடியவில்லை.

அரச குரு நாயக்க மன்னரின் படைபரிவாளங்களோடுதான் வந்தார் ஆனால்
அப்படைவீரர்களால் மூர்க்கதனம் கொண்ட பெரியூர் சூரியூர் கள்ளர்களை ஒன்றும்
செய்ய முடியவில்லை. அப்படைகள் கள்ளர்களால் சிதறடிக்கப்படுகிறது.
அவர்களுடைய குதிரைகள் கவரப்படுகிறது.

வலிமைமிக்க பெரிய சூரியூர் கள்ளர்களை கட்டுப்படுத்த நாயக்கர்
புதுக்கோட்டை தொண்டைமானிடம் உதவி கேட்கிறார். தொண்டைமானும் கள்ளர் நாடான
அம்புநாட்டின் தலைவர் என்பதால் பின்பு தொண்டைமான் பெரிய சூரியூர்
கள்ளர்களோடு இணக்கத்தை கடைபிடித்து அவர்களுக்கு உதவியாக நாயக்க
மன்னர்களிடம் இருந்து படைபற்றில் பணியாற்ற பதவிகளை அவர்களுக்கு வாங்கி
தருகிறார். இருந்தும் பெரிய சூரியூர் கள்ளர்களின் தாட்டியத்தை அவர்களால்
இறுதி வரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவர்கள் ஆங்கிலேயருக்கும் பெரும் சவாலாகவே இருந்தனர். பெரிய சூரியூர்
கள்ளர்நாட்டை பார்வையிட வந்த ஆங்கிலேயர் படைத்தளபதி, அவருடைய குதிரை
மற்றும், அவருடைய மனைவி இரண்டையும் கவர்ந்து சென்றார்கள்.

1923 ஆம் ஆண்டு பெரிய சூரியூர் கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது DNC கீழ் வருகின்றனர். DNT
க்காக போராடுகிறார்கள்.

பெரிய சூரியூர் கள்ளர் நாட்டின் மந்தையில் இருகற்கள் நடப்பட்டுள்ளது.
பெரிய சூரியூர் கள்ளர்களுக்குள்ளேயே கடுமையான சண்டைகள் மூண்டுள்ளன.
மீன்பிடிப்பதில் முன்னுரிமை கோரி ஒரே கரைக்குள்ளேயும், வெவ்வேறு
பட்டத்திற்குள்ளேயும் சண்டையிட்டுள்ளனர்.
நடப்பட்டிருக்கும் கற்களில் ஒரு வகையறாவும், மற்றொருபுறம் இன்னொரு
வகையறாவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது, சாமி கும்பிடுவது என முன்பு
பிரித்துள்ளனர்.

சூரியூர் நாடு, தற்போது திருவெறும்பூர் தொகுதியின் கீழ் வருகிறது.

1963-ம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சியில், ஐயா T. துளசி ராங்கிப்பிரியர்
அவர்கள் பெரிய சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்களால் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த போது கட்டப்பட்ட
பழைய தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்ந ஊரின் மற்றொரு பெருமை ஜல்லிக்கட்டில் புகழ்பெற்ற "காசி" மாடு.

இன்று சூரியூரில், துடிப்புள்ள மவுன சாட்சியாய், ஊரின் பிரதான சுவரில்
இருந்து நம்மை உற்றுப் பார்க்கிறான் காசி. காசியின் முழுப்பெயர்
ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசாமி காசி. காசி பற்றிய நினைவுகளில்
உருகுகிறார், காசியை வளர்த்தெடுத்த காசி குமார்.

காசி வருவதற்கு முன், சூரியூருக்கு கோவில் மாடு ஏதுமில்லை. காசி வந்தான்.
'ஜல்லிக்கட்டு' எனும் போர்வையுடன் அத்தனை ஊர்களுக்கும் படையெடுத்தான்.

தன் வெற்றியின் வாயிலாக, அந்தந்த ஊர் மக்களின் மனங்களை வென்றான்.
சூரியூரின் வீரத்தையும் களம் கண்ட மண் அத்தனையிலும் பதித்தான். 'பொதுவாக,
இரண்டு வயசுல மாடுகளுக்கு பல் போடும். 5 - 6 வயசுல பருவம் வர்றப்போ,
மொத்த, 16 பல்லும் சேர்ந்துடும். பல் சேர்ந்ததுல இருந்து, 10
வருஷத்துக்கு தான், மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தலாம். காசி
எங்ககிட்டே வர்றபோதே, பல் சேர்ந்து ஆறு வருஷம் ஆயிருந்துச்சு! ஆனாலும்,
அதுக்கப்புறம் அவன் வாழ்ந்ததுல, 13 வருஷமும், அவன் யார்கிட்டேயும்
தோத்ததில்லை. பெருமை பொங்கச் சொல்கின்றனர் சூரியூர் கிராமத்தினர்.

வாடிவாசலுக்கு அவன் போறதுக்கு முன்னாடி, பொங்கல் வைச்சு பூஜை பண்ணுவோம்.
வீட்டுக்கு வீடு, அவன் கால்களை மஞ்சத் தண்ணியில கழுவி, ஆசிர்வாதம் வாங்கி
வழியனுப்புவோம். எங்க சாமிங்கய்யா அவன்!' ஓவியமாய் சிலிர்த்து நிற்கும்
காசியை பார்த்தபடியே, முந்தானையால் கண்ணீர் துடைத்துக் கொள்கின்றனர்
சூரியூர்ப் பெண்கள்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம்
தான். சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த
மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும்
விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள்
விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடி நீரை வற்றாமல்
பார்த்துக்கொண்டது.

சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது
தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி
2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில்
படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான்
சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான
கம்பெனி என்று. தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால்
பெப்சிக்கு எதிராக போராடிவருகிறார்கள்.

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்
நன்றி : யாஊயாகே
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

வேந்தன் அரசு

unread,
Jun 17, 2019, 9:05:06 PM6/17/19
to vallamai, panbudan, minTamil
விரைவில் கோதாநல்லி தண்ணீர் வரும்.

திங்., 17 ஜூன், 2019, முற்பகல் 7:40 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Thevan

unread,
Jun 20, 2019, 3:31:30 AM6/20/19
to panbudan, minTamil
கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஓடிய மராட்டிய படையினர் - கிபி_1745
==========================================

பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739 இல் தஞ்சாவூர்
மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது
மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். பிரதாப்
சிங் காலத்தில் தான் தஞ்சை உள் நாட்டு விவகாரத்தில் ஆங்கிலேயர் மற்றும்
பிரெஞ்சுகாரர்கள் தலையிட ஆரம்பித்தார்கள்.

கிபி 1745-ல், மராத்தியரின் சதாரா இராச்சியத்தின் மன்னரின் படை தளபதி
முராரி ராவ் தலைமையில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை தாக்கியது.
மராத்தியர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தங்களது சூரையாடலை
தொடங்கினர்.

கிபி 1745-ல் மார்ச் மாதம், ஆவூரில் இருந்த பாதிரியார்கள் மற்றும்
கிறிஸ்தவ மத பரப்புரை செய்பவர்கள் மராத்தியரிடம் இருந்து தப்பித்து ,
தஞ்சையிலுள்ள குண்ணம்பட்டி கிராம கள்ளர்களிடம் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தான எல்லையில் உள்ள மலையடிப்பட்டி கிராம மக்கள் தங்களது
ஆடு மாடுகளுடன் நார்த்தாமலை பக்கம் சென்று விட்டனர்.

ஒரு மாதம் கழித்து திருச்சியில் இருந்த முகாலயர்கள், மராத்தியரை தாக்க
தொடங்கினர். இதே சமயத்தில் கள்ளர்களும் மராத்திய படையை தாக்கினர்.
மராத்திய படையின் படைபற்றுகளை சூரையாடினர்.

கிட்டதட்ட 3000 மராத்திய குதிரை படை வீரர்கள் கள்ளர்களின் தாக்குதலில்
நிலைகுலைந்தனர். மராத்தியபடையின் போர்கருவிகள் கள்ளர்களால்
கொள்ளையடிக்கப்பட்டன.

கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு,
கள்ளர்களிடம் மீண்டும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மாறுவேடமிட்டு
நடைபயணமாக தங்களது சதாரா நாட்டிற்கு தப்பி ஒடினர் மராட்டியர்கள்.

மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1758-ல் கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச்
கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்டதை நாம் அறிந்ததே

நூல் : General history of Pudukkottai State R iyar pg 86

நன்றி : உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
64544668_1339369802881450_7957045833512255488_n.jpg

Thevan

unread,
Sep 14, 2019, 5:42:03 AM9/14/19
to panbudan, minTamil
*********#சோழரின்_எல்லை_இராணுவப்_படை*******
**************#சிங்கமங்கலத்தரையர்கள்************
***********#கவிநாட்டு_கள்ளர்_படைப்பற்று**********

இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிங்கமங்கலம் என்கிற ஊரைப் பற்றி
நவீன இந்திய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலும்.

சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சி காலத்தில் மிகவும் முக்கியமான எல்லைப்
படைப்பற்றாக இருந்துள்ளது.
அதுவும் குறிப்பாக சோழர் ஆட்சிப்பரப்பின் தெற்கு பகுதியின் அதாவது
புதுக்கோட்டை வடக்கு வெள்ளாற்று பகுதியில் இருந்துள்ளது.

புதுக்கோட்டை என்பது அக்கால காஷ்மீர் கார்கில் போன்ற பகுதி எப்போதும்
இராணுவ நடவடிக்கைகள்,போர்கள்,கிளர்ச்சிகள் என தொடர்ந்து போரிலே நின்ற
ஊர்.

அப்படிப்பட்ட புதுக்கோட்டையில் சிங்கமங்கலம் என்கிற சோழ மண்டல எல்லையில்,
சோழர் காலம் தொட்டே பாண்டியர்களின் எழுச்சியை கட்டுப்படுத்த சோழ அரசினால்
உருவாக்கப்பட்ட படைப்பற்று தான்

#கள்ளர்_பற்று_கற்குறிச்சி_ஏத்தக்கரை_கண்டச்சோழ_நல்லூர்_கவிநாட்டுப்_படைப்பற்று

இந்த கவிநாட்டுப் படைப்பற்றில் தான் பல கள்ளர்குல சோழ நாடாள்வார்கள்
சோழரால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
👇👇👇👇👇👇👇
https://www.facebook.com/10002671630…/posts/380638859503321/

https://www.facebook.com/10002671630…/posts/365537877680086/

https://www.facebook.com/100026716305728/posts/267546870812521/

அப்படி நியமிக்கப்பட்ட அரையர்களில் சிங்கமங்கலத்தை அரசாக கொண்டு பல
கள்ளர் அரையர்கள் வாழ்ந்துள்ளனர்.
#மழவராயன்
#சிவலோகமுடையானான_தெற்கிலரையன்
#ஆயிரவனான_அயிலாளயன்
#வடக்கிலரையன்_தேவன்_சாந்தன்

போன்றோர் கிபி13ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளனர்.

சோழர் வீழ்ச்சிக்கு பின்பு முறையே பாண்டிய பேரரசின் கட்டுப்பாடில் இருந்துள்ளனர்.

கிபி1351வரை இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

பிற்காலத்தில் கலசமங்கலம் மற்றும் சிங்கமங்கலம் என்கிற இரு பாண்டிய,சோழ
எல்லைப் பற்றை இணைத்து புதுக்கோட்டை என விஜய ரகுனாத ராயத் தொண்டைமான் தனி
நாடாக அறிவித்து தொண்டைமான் அரசர்கள் கிபி1948வரை அரசாண்டுள்ளனர்.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்

வேந்தன் அரசு

unread,
Sep 23, 2019, 11:19:16 AM9/23/19
to vallamai, panbudan, minTamil
மண்ணாங்கட்டி புனைவுகள் என்ன என்பது மறந்துபோச்சே!

திங்., 23 செப்., 2019, பிற்பகல் 8:41 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
இந்திர_குலம்

கரியவன்@இந்திரனை தேடிய எனது பயணத்தில் முதல் வெற்றியாக சுமார் 72வருட
பழமையான பத்திரத்தில், கள்ளர் சமூகத்தவர்கள் தங்களை இந்திர குலம் என்று
குறிப்பிட்டுள்ளனர்.

கள்ளர்களில் அதுவும் குறிப்பாக பிரமலைக்கள்ளர்களில் போன தலைமுறை
வரைக்கும் தனது வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு தெய்வேந்திரன் என்கிற
பெயர் சூட்டுவார்கள்.

தேவேந்திரன் என்கிற இந்திரனுடைய பெயரைத் தான் தெய்வேந்திரன் என்று வைத்துள்ளார்கள்.

கல்வெட்டுகளில் கூட தேவர் என்கிற பெயர் தெவர் என்றே இருக்கும்.

இந்திரனை பற்றி கடந்து முறை நான் பதிவு செய்ததை பார்த்து மதிப்பிற்குரிய
அண்ணன் Thirumaranji அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு
நிலப்பத்திரம் உள்ளது என்று எனக்கு அனுப்பினார்.

அதனுடைய காலம் கிபி1947ஆம் ஆண்டு, அது ஒரு நிலப்பத்திரம் திருமாறன்
அண்ணன் தாயாரின் 3தலைமுறைக்கு முன்னாள் உள்ள பூர்வீக சொத்து.

அந்த பத்திரத்தில் மாயாண்டித்தேவர் இந்திரகுலம் என்று தெளிவாக உள்ளது.

இன்னும் இதற்கு முந்தைய பத்திரத்தில் இந்திர குலம் பிறமலைக் கள்ளர் சாதி
என்று தெளிவாக உள்ளதாகவும், அதனை நகல் எடுத்து தருகிறேன் என்று
கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக ஆய்வு செய்தால் சில மடையர்களின் மண்ணாங்கட்டி புனைவுகளை
உடைத் தெரியலாம்.

நன்றி
மதிப்பிற்குரிய அண்ணன்
Thiru Maran


அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Sep 23, 2019, 10:07:49 PM9/23/19
to vall...@googlegroups.com, panbudan, minTamil
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Sep 30, 2019, 8:48:02 PM9/30/19
to panbudan, minTamil
பாண்டிய மன்னரை அரியனையில் அமர்த்திய
கள்ளர் குல பல்லவராயர்

வரலாற்று சுவடுகளில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் அதிகாரத்தின்
மறுபெயர் பல்லவராயர்.

கிபி1169ஆம் ஆண்டு பாண்டிய மன்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவருடைய
சகோதரரான குலசேகர பாண்டியனுக்கும் மதுரை அரச உரிமை சண்டை வருகிறது,

இச்சண்டையில் குலசேகர பாண்டியனை சமாளிக்க பராக்கிரம பாண்டியன்,
இலங்கையில் உள்ள சிங்கள மன்னரான முதலாம் பராக்கிரம பாகுவிடம் உதவியை
நாடுகிறார்.

இதனை அறிந்த குலசேகர பாண்டியன் சிங்கள படை மதுரை வருவதற்கு முன்பு மன்னர்
பராக்கிர பாண்டியனையும், அவரது மனைவியான இராணியையும்,சில இளவரசர்களையும்
கொன்று விடுகிறார்.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இலங்கை மன்னர் பராக்கிரம பாகு தன்னுடைய
சிங்களப் படையை லங்கப்புரா என்கிற வலிமையான தளபதியின் தலைமையில் மதுரையை
நோக்கி அனுப்புகிறார்.

ஆரம்ப காலத்தில் குலசேகர பாண்டிய மன்னர் கள்ளர், மறவர் படைகளை கொண்டு
இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சிங்களப் படைகளை உள்ளே நுழையவிடாமல்
தடுத்து வெற்றி பெறுகிறார்.

ஆனால் லங்கப்புராவின் பெரும்படை அனைத்து தடைகளையும் உடைத்தும், பல தமிழ்
சிற்றரசர்கள் உதவியுடன் மதுரையை கைப்பற்றி பராக்கிரம பாண்டிய மன்னரின்
மகனான வீர பாண்டியனை சிங்கள மன்னர் ஆதரவின் பெயரில் மதுரையில் முடி
சூடுகின்றனர்.

நிலமையை உணர்ந்த குலசேகர பாண்டியன், சோழ மன்னர் இரண்டாம் இராஜ இராஜ
சோழரிடம் உதவியை நாடுகிறார்.

இரண்டாம் இராஜ இராஜ சோழரும், சிங்களர் ஆதரவுடன் மதுரையில் பாண்டியர்
அரசாட்சி நடப்பதை விரும்பவில்லை.

அதனால் குலசேகர பாண்டியனின் கோரிக்கை ஏற்று சிங்கள படைகளுக்கு பாடம்
புகட்ட தன்னுடைய கள்ளர் தளபதியான பல்லவராயர் தலைமையில் சோழர் படையை
குலசேகர பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்.

பல்லவராயரின் சோழர் களப்படை மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை இருந்த
லங்கப்புராவின் சிங்களப் படைகளை அடித்து, துவைத்து தமிழ் நாட்டை விட்டு
விரட்டி மீண்டும் இலங்கைக்கே துரத்து அடிக்கிறார்.

குலசேகர பாண்டியனை மதுரை பாண்டிய தர்பாரில் பல்லவராயர் அமர வைக்கிறார்.

இலங்கையில் உள்ள முதலாம் பராக்கிரபாகுவை நேரிடையாக மோத இலங்கைக்கு
பல்லவராயர் தன்னுடைய களப்படையுடன் இலங்கைக்கு செல்கிறார்.

இலங்கையில் பராக்கிரபாகுவின் மைத்துனர் ஶ்ரீவல்லபா இலங்கையில் பராக்கிரம
பாகுவிற்கு பாடம் எடுக்க வந்துள்ள பல்லவராயரிடம் உதவியை நாடுகிறார்.

பல்லவராயரும் தன்னுடைய ஆதரவை ஶ்ரீவல்லபாவிற்கு தெரிவித்து களத்தில் இறங்குகிறார்.

பல்லவராயரின் களப்படை இலங்கையில் உள்ள சிங்களர் கோட்டைகள், படைபற்று
பெரும்பாலனவற்றை கைப்பற்றி பராக்கிர பாகுவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்
பல்லவராயர்.

இதே நிலைமை நீடித்தால் தன்னுடைய அரசு பல்லவராயரால் உடைத்தெரியப்படும்
என்பதால் ''மதுரையில் இரண்டாம் இராஜ இராஜ சோழரின் ஆனைக்கிணங்க
பல்லவராயரால் அமர்த்தப்பட்ட குலசேகர பாண்டியனிடம், பராக்கிரபாகுவின்
சிங்களப் படையுடன் குலசேகர பாண்டியன் இணைந்து சோழ தேசத்தை வீழ்த்தலாம்''
என ஓலை அனுப்புகின்றனர்.

குலசேகர பாண்டியரும், இரண்டாம் இராஜ இராஜ சோழரை சிங்களப் படையுடன்
இணைந்து போரிட தயாராகின்றனர்.

ஆபத்தை உணர்ந்த பல்லவராயர், சோழ எல்லை பகுதிக்கு உடனடியாக தன்னுடைய
களப்படையுடன் விரைகிறார்.

குலசேகர பாண்டியரின் கூட்டுப் படைக்கும் பல்லவராயரின் களப்படைக்கும் பல
இடங்களில் போர் நடக்கிறது.

ஆனால் பல்லவராயர் அனைத்து போர்களிலும் வென்று சிங்களப் படையை மீண்டும்
இலங்கைக்கு விரட்டுகிறார்.

சோழ மன்னருக்கு எதிராக சிங்கள மன்னருடன் கைகோர்த்து துரோகம் செய்த
குலசேகர பாண்டியனை மதுரையின் அரியணையில் இருந்து இறக்கி மீண்டும்
பராக்கிரம பாண்டியரின் மகன் வீர பாண்டியனை மதுரையின் அரியணையில் அமர
வைக்கிறார் பல்லவராயர்.

குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு பல்லவராயரால் விரட்டியடிக்கப்படுகிறார்.

இந்த ஒட்டு மொத்த நிகழ்வில் பல்லவராயர் மதுரையின் 'கிங் மேக்கராக'
இருந்தது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இராஜ இராஜ சோழருக்கு கட்டுக்கடங்காத வீரம், இராஜ விசுவாசம் ஒரு
சேர கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்தான் பல்லவராயர்.

குலோத்துங்க சோழருக்கு எப்படி கருணாகர தொண்டைமானோ,
அதேபோல் இரண்டாம் இராஜ இராஜ சோழனுக்கு பல்லவராயர்👍

குறிப்பு: கள்வன் இராஜன் (இரண்டாம் இராஜ இராஜன்) தன்னை கள்ளர் என்று
மெய்கீர்த்தியில் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல்.

நன்றி
A history of South India by Nilakanta Sastri
Tamil and Ceylon by C.S Navaratnam
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

வேந்தன் அரசு

unread,
Oct 1, 2019, 9:21:25 PM10/1/19
to vallamai, panbudan, minTamil
<இந்த ஒட்டு மொத்த நிகழ்வில் பல்லவராயர் மதுரையின் 'கிங் மேக்கராக'
இருந்தது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.>

 அந்த பொன்னெழுத்துகளை எங்கு காணலாம்?

திங்., 30 செப்., 2019, பிற்பகல் 5:59 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Oct 6, 2019, 11:16:59 AM10/6/19
to panbudan, minTamil
ஈழத்தரையர் / ஈழத்திரையர் / ஈழங்கொண்டார் பட்டமுடையோர்
ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்ற சோழ மரபினர், இலங்கை மேல்
படை எடுத்து வேற்றி கொண்டவர்கள். ஈழத் தரைகளையும், திரைகளையும்,
கட்டியாண்டதால் ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்றும்,
இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் திருச்சி, மேலும் பல ஊர்களிலும்
வாழுகின்றனர்.
ஈழத்தரையர் என்ற பட்டமுடையவர்கள் கல்லணைத் தோகூரில் வாழ்கிறார்கள்.
ஈழங்கொண்டார் பட்டமுடையவர்கள் தஞ்சை பல பகுதியில் வாழ்கின்றனர்.
திருநாவலூர் கோவில் கல்வெட்டில் சோழர் காலத்தில் ஈழத்தரையர் மகள் வழங்கிய
தானமும், திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு
மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில்
கல்வெட்டில் ஈழத்தரையர் பற்றியும் குறிக்கப்படுகிறது.
#முனைவர் கல்பனா ஈழம்கொண்டார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்கள் ஐயா
செல்வம் ஈழம்கொண்டார் , திலகவதி அம்மையார் மகள் ஆவார். கணவர் மருத்துவர்
சேக்கிழார் ஆவார்,
ஜனாதிபதி அவர்கள், செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட இளம் அறிஞர் விருதை
முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்களுக்கு வழங்கினார்.

#கள்ளர் குல வரலாறு

https://perumalthevannews.blogspot.com/2019/10/blog-post.html
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 6, 2019, 11:39:33 AM10/6/19
to mintamil, panbudan
வணக்கம் ஐயா.
அரியதொரு செய்தி.
குடியரசுத்தலைவரின்  இளம் அறிஞர் விருது பெற்றுள்ள முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
இவரது ஆய்வுகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றனவா?

அன்பன்
கி.காளைராசன்

-- 

தேமொழி

unread,
Oct 6, 2019, 11:51:06 AM10/6/19
to மின்தமிழ்


On Sunday, October 6, 2019 at 8:39:33 AM UTC-7, கி. காளைராசன் wrote:
வணக்கம் ஐயா.
அரியதொரு செய்தி.
குடியரசுத்தலைவரின்  இளம் அறிஞர் விருது பெற்றுள்ள முனைவர் கல்பனா ஈழம்கொண்டார் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.

அவரை கல்பனா சேக்கிழார் என்று அவர் குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் குழம்பியிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 

வேந்தன் அரசு

unread,
Oct 16, 2019, 9:34:14 AM10/16/19
to vallamai, panbudan, minTamil


செவ்., 15 அக்., 2019, பிற்பகல் 5:00 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
சூரிய குல சோழர்கள்

சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அனைத்து வரலாற்று
ஆய்வாளர்களும் அறிவர்.

ஆனால் உலகமுழுவதும் சூரிய வழிபாடு,சூரியன் சார்ந்த அர்த்தங்களுக்கு
#சோழர் என்ற சொல்லாடலே பல மொழிகளில் மருவி இன்றும் உலா வருவதை யாரும்
ஆராயவில்லை என்பதே நிதர்சனம்.

சோழர்களே முதன் முதலில் சூரிய வழிபாட்டை கொண்டு வந்தவர்கள் என்பதே எனது
ஆழமான கருத்தியல்.

ஏனென்றால் சோறுடைத்த சோழ நாடு என அழைக்கப்பட்டு அறுவடை தினத்தன்று
சூரியனுக்கு படையலிட்டு வணங்கியுள்ளனர் சோழ தேசத்து மக்கள்.

இன்றும் தெற்காசியா முழுவதும் பொங்கல் விழா வேறு,வேற பெயர்களில் கொண்டாட
காரணம் அந்த நாடுகளில் சோழர்களின் ஆளுமை இருந்த காரணம் தான்.

அதுபோல ஆதிகாத்தில் சோழர்கள் உலகம் முழுவதும் தொடர்பில் இருந்ததால்
அவர்களுடைய சூரிய குலப் பெயர் பல மொழிகளில் சோழர் என்ற வார்த்தையை
தழுவியே வருகிறது.

இன்றும் சூரிய சக்திக்கு உலகமுழுவதும் சோழார் எனர்ஜி என்றே குறிப்பிடுகிறார்கள்.

அவற்றை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்:-

மொழி சொல் தமிழில்

லத்தீன். ˈsōlər. சோழிஸ்
ஆங்கிலம். Solar சோழார்
குரோஷியன். solare சோழரி
போஸ்னியன். solarno. சோழரினோ
டேனிஷ் sol சோழ்
டச்சு. zonne- சோன்னி
பிரஞ்ச். Solarie. சோழரி
இந்தோனேஷியன் tenaga surya. டிநாக சூர்யா
ஜெர்மன். Solar. சோழார்
இத்தாலியன். Solare. சோழரி
மெசடோனியன். соларна. சோழார்னா
போர்ச்சுகீஸ். Solar. சோழார்
செர்பியன். соларни சோழார்னி
சிங்களம். සූර්ය. சூர்யா
ஸ்பெனிஷ். Solar சோழார்
சமஸ்கிருதம். सूर्य சூர்யா
நார்வேயியன். solenergi. சோழனேர்ஜி
ரோமானியன். Solar. சோழார்
ரஷ்யன். солнечный. சோழஜ்னி
வெல்ஷ். Solar. சோழார்
உருது. شمسی. சோங்சி
அரபிக். شمسي. சோம்சி

இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் அதாவது
பெங்காலி,மராட்டி,குஜராத்தி,கன்னடம்,சமஸ்கிருதத்தில்

சவுரவ்,சூர்யா என வழங்கப்படுகிறது.

இது சோழா,சூழா,சூழியா,சூரியா,சூர்யா,சூரவ்,சரவ்,சவுரவ் என மருவிருக்க வேண்டும்.

இதில் இந்தோனேஷியாவில் நாக சூர்யா என்று வருவது தான் நாகர்,சோழர் ஒருவராக
பாவிக்க வருகிறது.


தமிழில்மட்டுமே சோழ எனில் சூரியன் எனும் பொருளில்லை. 

ஏற்கனவே வரலாற்று ஆய்வாளர்கள் சோழர்களை நாகர் வழித்தோன்றல் என
கூறியுள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதற்காக சோழர்கள் உலகம் முழுவதும் ஆண்டார்கள் என்று கூறவில்லை.

உலகம் முழுவதும் ஆளுமை செலுத்தியுள்ளார்கள் என்பதே எனது கருத்து.

சோழர் பயணம் தொடரும்......!

அன்புடன்
சோழ பாண்டியன்

ஏழுகோட்டை நாடு

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Oct 16, 2019, 11:00:02 PM10/16/19
to panbudan, minTamil
உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு
உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

"வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி"
இந்த வசனத்தை உண்மையில் பேசியது மதுரை கள்ளர்கள்.
இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.

இந்த வசனத்தை காப்பி அடித்து சம்மந்தம் இல்லாமல் கட்டபொம்மு பேசியதாக கதை
அமைத்து அதையும் ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே பேச வைத்துவிட்டார்
இயக்குனர் தெலுங்கு பந்துலு.

Source :The Madura Country: A Manual.

நன்றி: Karthik Thevar

------------------------

1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும்உ ரிமையை
பெற்று தன்னரசு கள்ளர்நா ட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார்க ள்ளர்
நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று
பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.

ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன்எ ழுதிய நூல்களில் பிரிட்டீஸ்
அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம்
அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கள்ளர்களின் பதில்:

“வானம் பூமிக்கு மழையைத் தருகிறது,

எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம்.

அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள்.

இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?”

மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றார்போல் எங்களிடம்
சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

சான்றுகள்:-

The rebel commandant by S.C Hill

East india magazine by R.Alexander

Castes and Tribes of south India by Edger thurston

நன்றி:-

சோழ பாண்டியன்
TAX.jpg

Thevan

unread,
Oct 18, 2019, 3:15:15 PM10/18/19
to panbudan, minTamil
கள்ளர்வழி சோழர்கள்

இதற்கு முன்பாக மானுடவியல் ரீதியாக இராஜ இராஜ சோழர் கள்ளர் சமூகத்தை
சேர்ந்தவர் என்று பார்த்தோம்.

இப்போது சில கல்வெட்டுகள் மூலமாக சோழர்களின் களப்படை, கப்பற்படை மற்றும்
படைப்பற்று என காண்போம்.

கல்வெட்டு எண்: 115/1974
இடம் : தர்மபுரி
நடுகல் வீரனின் பெயர் : ஶ்ரீகள்ளச் சோழன்

இந்த கள்ளர் குல சோழன் மார்பில் அம்பு பாய்ந்த படி உள்ளனர், இவர் ஒரு
போரில் இறந்த வீரராக இருக்கலாம் என தொல்லியல் துறை கருதுகிறது.

இரண்டாம் இராஜ இராஜ சோழரின் மெய்கீர்த்தி: கிபி1146 -1163

மெய்கீர்த்திகள் பெரும்பாலும் அரசர்கள் தங்களுடைய குலத்தை
குறித்திருப்பார்கள், அப்படி 2ஆம் இராஜ இராஜ சோழர் தன்னுடைய
மெய்கீர்த்தியில் “கள்வன் இராஜ இராஜன்” என்றே குறித்துள்ளார்.

கல்வெட்டு எண்: 103 of 1897
அரசர் : குலோத்துங்க சோழர்

இந்த கல்வெட்டில் கள்ளர்பற்று இருந்ததை தெளிவாக
குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே கல்வெட்டுகள் தொடர்ச்சியில் களப்படையின்
(கள்ளர் படை) வீரத்தையும் பறை சாற்றுகிறது.
தஞ்சையின் இந்த கள்ளர் பற்றுகள் பிரிட்டீஸ் காலம் வரை போர் தொழிலை
மட்டுமே செய்து கொண்டிருந்தது....!

கல்வெட்டு காலம்: 8-ம் நூற்றாண்டு

இந்த கல்வெட்டில் ஊர் மக்களுக்கு மதகு அமைத்துக் கொடுத்த சோழர் கால
அரையரான (சிற்றர்சர்) கொங்கரையர் கள்ள பெருமாள் என்பவரின் மனைவி
கொங்கச்சியார் அமைத்து கொடுக்கிறார் என கல்வெட்டு முடிகிறது.

கல்வெட்டு எண்: 132 of 1947-1948
காலம் : இராஜேந்திர சோழர்

இந்த கல்வெட்டில் இராஜேந்திர சோழரின் சேனாபதியாக முனையத்திரியர் என்பவர்
குறிக்கப்படுகிறார்.

கல்வெட்டு எண்: 129 of 1938-1939
காலம் : இராஜேந்திர சோழன்

இந்த கல்வெட்டிலும் இராஜேந்திர சோழரின் பட்டப்பெயரான கங்கை கொண்டான் என்ற
பெயரையே அவருடைய சேனாபதியான முனையத்திரியருக்கும் தாங்கி நிற்கிறது.

இந்த முனையத்திரியர் என்கிற பெயரை கள்ளர் மக்கள் இன்றும் குடும்ப பட்டமாக
பயன்படுத்துகிறார்கள்.

குலோத்துங்க சோழன் உலாவில் “கண்ணன் வம்சத்து கள்ளரில் ஒருவர் குலோத்துங்க
சோழன்” என கள்ளர்களை கண்ணன் வம்சம் என்றும் அந்த கண்ணன் வம்சத்தில்
ஒருவன் குலோத்துங்க சோழன் எனக்கூறுகிறது,

இந்த குலோத்துங்க சோழனுக்கு ஆதரவாக செம்பொன்மாரி ஏழுகிளை கள்ளர் நாட்டில்
கள்ளர்குல மாளவசக்கரவர்த்தி தனது கள்ளர் படைப்பற்றை வைத்து சிங்களவர்களை
விரட்டியடித்தார் என்பது கூடுதல் வரலாறு.

இதுபோக இன்னும் நக்கன்காவடியர் (நாயக்காவடியர்)
வங்கார முத்தரையர்
வளவத்தரையர்
மழவராயர் என 100-க்கும் மேற்பட்ட கள்ளர்குல அரையர்கள், நிர்வாகிகள்,
தளபதிகள் என கல்வெட்டுகளில் அலங்கரிக்கிறார்கள்.

குறிப்பு: மாற்று சமூகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்...! எந்தவொரு இரத்த
சரித்திரம், நாட்டு நிர்வாகம் என எதிலும் இடம்பெறாமல், மனசாட்சியே
இல்லாமல் சோழரை உரிமை கொண்டாட வேண்டாம்.

நன்றி
விக்னேஷ் மாளுசுத்தியார்
சியாம் சம்பட்டியார்
மற்றும்
தமிழக தொல்லியல் துறை

1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Oct 24, 2019, 5:11:04 AM10/24/19
to panbudan, minTamil
தென்னிந்தியாவின் பெருமை

வீரத்தின் கலியுக பிறப்புகளின் மறு உருவமான மருதுபாண்டியர்களின் குரு
பூஜை வரும் நேரத்தில் அவர்களுடன் நாட்டுக்காக தங்களுடைய இரத்தம் சிந்தி
உயிர் நீத்த கள்ளர் பெருங்குடிகளுக்கு இந்த கட்டுரையை
காணிக்கையாக்குகிறேன்.

சிவகங்கை அரசுத் தலைவர் சின்ன மருதுவால் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய
புரட்சி பிரிட்டீஸ் இந்தியாவால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது.

ஏனென்றால் மைசூர் புலி திப்பு சுல்தான், கள்ளர் நாட்டு தலைவர்கள்,
திண்டுக்கல் கோபால நாயக்கர், கொங்கு மண்டல வெள்ளாள கவுண்டர் தலைவர்கள்,
பாளையக்காரர்கள், ஊர் தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை இனைத்து
மண்ணுரிமைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரே அணியாக திரட்டிய இராஜ
தந்திரம் அரசுத் தலைவர் சின்ன மருதுவையே சேரும்.

இந்த தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது
ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக
குறித்துள்ளனர்.

சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள்,
இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும்
ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி, செயல்பட்ட இடம்தான்
ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு.
இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று
ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும்
கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி
எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர்
பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என
குறிக்கின்றனர்.

இந்த வேங்கை சின்ன மருதுவின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல
முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர்
நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் வேங்கை மருது பாண்டியர்களின் ஆயுத
தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர்
நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது
திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல்
நடத்தியுள்ளனர்.

இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின்
இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட
கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்டு
சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.

1. ஆண்டியப்ப தேவர்
2. சடைமாயன்
3. கொன்றி மாயத்தேவர்

மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை
பிரிட்டிசார் கைப்பற்றியதாலும், கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர்
நாட்டுக்கு பொன்னித்தேவர் (கள்ளப்பட்டி(செல்லம்பட்டிக்கு அருகில்)
உதவியால் தப்பிச்செல்கிறார். இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ்
படையால் கொல்லப்படுகிறார்.

பிறகு கோபால நாயக்கர் ஆரியபட்டி, கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள
கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.

இந்த தென்னிந்திய புரட்யில் மேலூர், வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள்
திருப்பரங்குன்ற மலையில் இருந்து ஆங்கிலப்படைகள் மதுரையிலிருந்து சிவங்கை
செல்லவிடாமல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த புரட்சி இறுதியில் ஆங்கிலேயர்கள் வேங்கை மருது பாண்டியர்களை வீழ்த்த
மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு உள்ளனர்.

அதாவது முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக் கள்ளர்களை தொடர் தாக்குதல்
நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.
பின்பு மேலூர், வெள்ளலூர், திருப்பத்தூர்(அம்பலம்) நாட்டு கள்ளர்களை
தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு தொழிற்சாலைகளை தரைமட்டமாக்கி
ஆங்கிலேய படை சிவங்கையை நோக்கி சிறுவயலுக்கு முன்னேறுகிறது.

சிவங்கை நாட்டு எல்லையில் நுழைந்த ஆங்கிலேய படைகளுக்கு அதிர்ச்சி
வைத்தியமாக கண்டதேவி, தேர்போகி (ஏழுகிளை கள்ளர் நாடு (அம்பலம்,சேர்வை))
நாட்டு கள்ளர்கள் மிகவும் வீரம் செறிந்து போரிட்டனர்.

தேர்போகி நாட்டு கிளைவழி கள்ளர்கள் மிகவும் வீரத்துடனும்
சண்டையிட்டுள்ளனர் மேலும் புரட்சியாளர்களின் தளபதிகளுக்கு மிகவும்
தோளுக்கு தோளாக நின்றுள்ளனர்.

இவர்களின் தாக்குதலை தவிர்க்க பிரிட்டீஸார் மருது பாண்டியர்களுக்கு ஆதரவு
கொடுக்க வேண்டாம் எனவும், தேர்போகி நாட்டு கள்ளர்களுக்கு போர் மன்னிப்பு
கொடுக்கிறோம் என்று பிரிட்டிஸ் தளபதி பிளாக் பர்ன் பரிந்துரைக்கிறார்.

ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்து தாங்கள் இறுதி மூச்சுவரை மருது
பாண்டியர்களுக்காக தான் நிற்போம் என்று நெற்றி பொட்டில் அடித்தால் போல்
கூறிவிட்டனர்.

புரட்சியில் தோல்வியால் இந்த தேர்போகி நாட்டு கள்ளர்களும் கருவறுக்கப்பட்டனர்.

கண்டதேவி கள்ளர் நாட்டில் 3000 வீரர்களை திரட்டி ஆங்கில தளபதி பிளாக்
பர்னுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர்.
இதனால் தளபதி அறந்தாங்கிற்கு சென்று மறு தாக்குதல் நடத்த செல்கிறார்.

அதே போல் பாலை நாட்டு கள்ளர்களும், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில்
பிரிட்டீஸாருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்த கிளை வழி கள்ளர் நாட்டை முழுவதுமாக வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சிவகங்கை
உள்ளே நுழைகின்றனர்.

அங்குதான் நம்முடைய தென் பாண்டி சிங்கம் பாகனேரி நாட்டு பட்ட
அம்பலக்காரர் வாளுக்கு வேலி அம்பலம் எல்லை சாமியாக நின்று துரோகத்தால்
வீழ்த்தப்பட்டார் என்பது தனித்த காவிய வரலாறு.
அதுபோக கொண்டைய கோட்டை மறவர் தலைவரான, தற்கொலைப் படை பீரங்கி மாவீரர்
மயிலப்பன் சேர்வையை தெற்கில் வீழ்த்தி ஒரு பிரிட்டிஸ் ரிஜ்மெண்ட்
முன்னேறியுள்ளது.

இந்த ஒட்டு மொத்த கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்திய பின்புதான்
மருதிருவர்களை ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டுள்ளனர்.
வேங்கை மருது சகோதரர்களை வீழ்த்த வேண்டுமாயின் கள்ளர் நாட்டு தலைவர்களை
வீழ்த்த வேண்டும் என்று பிரிட்டீஸார் நன்கு புரிந்து அதை
செயல்படுத்தியும் உள்ளார்கள்.

இதுபோக வேங்கை மருது பாண்டியர்களுக்காக நாயக்கர்கள், இஸ்லாமியர்கள்,
செட்டியார், அய்யர்கள், வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இரத்தம்
சிந்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உன்மையே.....!

இதுபோக தூத்துக்குடி எங்கள் உடன்பிற சகோதரர்களான பரதவ மக்கள் அவர்களுடைய
பரத குலத்தலைவன் பின்னால் அணிவகுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர்
செய்துள்ளனர்.

இந்த வரலாறை எல்லாம் படிக்காமல், சிவங்கை மருது பாண்டியருக்கே
அரண்மனையில் உள்ளவர்கள் “வெளியே செல்” என நான் மேற்கோள் காட்டிய எந்த
சமூகத்திலும் இடம் பெறாத ஒரு கூட்டம் பிரிவினை பேசி வருகிறது.

அவர்களுக்கு நான் கூறும் ஒரே விடையம் தான் வேங்கை மருது பாண்டியர்கள்
தமிழ் மக்களின் சொத்து அதை பங்கு கேட்டு வரும் எவரையும் வரலாறே
விரட்டும்.

குறிப்பு: வேங்கை மருது பாண்டியர்கள் வரலாற்றை மறைக்கிறார்கள் என்று
மார்தட்டும் கூட்டத்தாரே, நீங்கள் எப்போது அவர்களோடு வரலாற்றில் பயணித்த
கள்ளர், மறவர், பரதவர், கவுண்டர், வெள்ளாளர், அய்யர், செட்டியார்,
இஸ்லாமியர், நாயக்கர்களை போற்றப்போகிறீர்கள்.....?

நன்றி
South Indian rebellion by Dr.Rajayyan
Historical dictionary of the Tamils
by Mrs.Vijaya Ramaswamy
அன்புடன்
சோழ பாண்டியன்
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
3.jpg
2.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Oct 25, 2019, 5:44:22 PM10/25/19
to panbudan, minTamil
உலக பூமராங் சாம்பியன் Roger Perry
கள்ளர்களின் வளரி ஆயுதத்தை பார்வையிட்ட போது.
பிறமலைக்கள்ளர் நாடு.
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg

Thevan

unread,
Nov 4, 2019, 4:00:54 PM11/4/19
to panbudan, minTamil
மாலிக்கபூரும் மதுரை சுல்தான் ஆட்சியும்
கள்ளர்களின் உயிர்தியாகமும் கோவில் காவலும்

மாலிக் கபூர் என்ற பெயரை தவிர்த்து தென்னிந்திய வரலாறை எவராலும் தொகுக்க முடியாது.

தென்னிந்திய வரலாற்றை மாலிக்கபூரை வைத்து முன்பு, பின்பு என கூட
பிரிக்கலாம். ஏனென்றால் தென்னிந்தியா வரை படையெடுத்து வந்த ஒரே டெல்லி
சுல்தானின் படைத் தளபதியே இம் மாலிக்கபூர் என்பவர்.

பிறப்பால் இந்துவாக இருந்து பிற்காலத்தில் அலாவுதீன் கில்ஜியின் ஆசை
நாயகியாகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர்.

கிபி1311ஆம் ஆண்டு காஷ்மீர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள அகண்ட பாரதத்தை,
தன்னுடைய ஹொசூர்(எஜமான்) காலனியின் கீழ் கொண்டு வந்தவர்.

அப்படிப்பட்ட மாலிக்கபூர் கடைசியாக வெறியாட்டம் ஆடிய பகுதி தான் இன்றைய மதுரை.....!

கிபி1311ஆம் ஆண்டு மதுரையில் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட சகோதர
யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு மாலிக்கபூர் தன்னுடைய கொடும்படையுடன்
மதுரைக்குள் நுழைந்தார்.

அப்போது அவரை எல்லையில் எதிர்த்து உயிர் நீத்த கள்ளர் தளபதி
கீழக்குயில்குடி வீரத்தேவர் என்பவருக்கு நடுகல் எழுப்பி இன்றும்
அவர்களுடைய வாரிசுதாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மதுரையை தாக்கி பின்பு மதுரை திருப்புவனம் வழியாக திருப்பத்தூர்,
சூரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை, இராமேஸ்வரம் என தான் செல்லும்
வழிகளில் உள்ள கோவில்களை சேதப்படுத்திக் கொண்டே சென்றார் மாலிக்கபூர்.

அப்போது திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, புதுக்கோட்டை பகுதி
வாழ் கள்ளர் படைப்பற்றுகளை வீழ்த்திக் கொண்டே சென்றுள்ளார் மாலிக்கபூர்.

ஏனென்றால் மேலே குறிப்பிட்ட ஊர் மற்றும் நாடுகளில் கள்ளர் படைகள்
(வில்லவர்கள், களப்படை) சுந்தர பாண்டியத்தேவரால் காவலுக்கு
நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாலிக்கபூர் சென்ற வழித்தடம் அத்தனையும் கள்ளர் நாடுகளே ..!

எனவேதான் ஒவ்வொரு கள்ளர் பற்றையும் கருவறுத்தே முன்னோக்கி சென்றுள்ளார்.

மாலிக்கபூருக்கு பின்பு அவரது அடிமையை மதுரையின் செல்லி சுல்தான்
பிரதிநிதியாக நியமித்து விட்டு மீண்டும் டெல்லிக்கே சென்றுவிட்டார்
மாலிக்கபூர்.

அதற்கு பின்பு கிபி1335 ஜலாலுதீன் ஆசாம் கான் என்பவர் டெல்லியில் உள்ள
துக்ளக் ஆட்சியை உதறி, மதுரையை தன்னாட்சியாக அறிவித்து அவருக்கு பின்பு
ஏறக்குறைய 43 வருடங்கள் மதுரையை ஆட்சி புரிந்துள்ளனர்.

அந்த 43 வருடங்களில் திருப்பத்தூர், திருப்புவனம், திருப்பரங்குன்றம்,
காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை போன்ற
பகுதிகளில் இருந்த பெரும்பாலான சைவ, வைணவ கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.

அக்காலகட்டத்தில் மதுரை சுல்தான்களுக்கு எதிராக கலகம் செய்த சூரைக்குடி
கள்ளர் குல விஜயாலத்தேவர் தலைமை கொண்ட கள்ளர் படைப்பற்று, மதுரை
சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட பொன் அமராவதி நாடான விராச்சிலை,
கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும்
சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர்.

இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதி கான் தலைமையில்
மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான், ஆசாம் கான், முவாசம் கான்
மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை
தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்கிறார்கள்.

அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி
நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச்
சொன்னார்.

அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக் கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை
சுழட்டிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும்
அழித்துவிட்டோம்.

இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழட்டினால் சூரைக்குடி கள்ளர்
பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான் இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும்
ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர்.

இதே சுல்தான் ஆட்சி காலத்தில் கோயம்புத்தூரில் ஹிஜிரா ஆண்டு 769 பொது
ஆண்டு கிபி1368

காங்கய நாட்டு முத்தூர் கோவில் சிவபிராமணருக்கும், திருவாநந்தீஸ்வரர்
கோவில் சிவபிராமணருக்கும் ஓலை அனுப்பப் பெற்றுள்ளது.

அதில் கோவிலை பாதுகாக்க கள்ளர் மரபைச் சேர்ந்த ஒருவருக்கு காவல் உரிமை
அளிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் கிடைத்த ஹிஜிரா கல்வெட்டுகள் மிக மிக குறைவே அதில்
பெரும்பாலும் கள்ளர்களின் உயிர்தியாகமும், காவலுமே உள்ளது.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
1.jpg
2.jpg
3.jpg

Thevan

unread,
Nov 4, 2019, 4:01:01 PM11/4/19
to panbudan, minTamil
4.jpg

Thevan

unread,
Nov 17, 2019, 5:57:25 PM11/17/19
to panbudan, minTamil
கள்ளர் குல இருக்குவேளிர் வழி வந்த
ஹொய்சாள வீரவல்லாளத்தேவன்

முன்னுரை
வரலாறு படிப்பவர்களுக்கு நன்கு தெரியும், சில வரலாறுகளை படிக்கும் போது
தன்னை அறியாமல் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது,பூரித்து நிற்பது என
இருக்கும்.

அதேபோல் சில வரலாறுகளை படிக்கும் போது தன்னை அறியாமல் கண்களில் இருந்து
சார,சாரயாக அருவி போல் கண்ணீர் கொட்டும்.
அப்படி வரலாறு தன்னை அறியாமல் பல மணி நேரமாக அழுதது. என் வாழ்க்கையில் மூன்று முறை
1. சூரைக்குடி கள்ளர் பற்றை, முவாசம் கான்
முழுமையாக அழித்தொழித்து, பொன்னமராவதி
நாட்டார்களை மிரட்டி பணிய வைப்பது.
2. கேப்டன் ரூம்லேவிற்கும், வெள்ளளூர் நாட்டு
கள்ளர்களுக்கும் நடந்த யுத்தத்தில் 5000 ஆண்,
பெண், குழந்தைகள் என அனைவரும் வீர மரணம்
அடைந்தது.
3. மதுரை சுல்தான் ஆட்சியில் பல இன்னல்களை
மக்கள் சந்தித்து வந்து போது, அதனை மீட்க வந்த
மண்ணின் மைந்தன் வீரவல்லாளத்தேவனை சூழ்ச்சி
செய்து உயிருடன் தோலை உரிந்த கோர சம்பவம்.

இதில் 3வதாக படித்த வரலாற்றில், அதெப்படி கர்நாடகாவில் இருந்து ஒரு
மன்னன் மதுரை மீட்க இப்படி கொடுரமான முறையில் வீரமரணம் அடைந்தார் என்பது
பல வருடங்களாகவே உருண்டு கொண்டிருந்தது.

அவரைப் பற்றிய தேடலில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பல பாகங்களாக
எழுத உள்ளேன்.
அதில் முதலாவதாக
யார் அந்த ஹொய்சாளர்.....?
அவர்கள் குலம்....?
அவர்களின் பூர்வீகம்....?
என முதல் தொகுதியில் பார்ப்போம்....!

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
ஹொய்சாள மன்னர்கள் தங்களுடைய முன்னோர்கள் யதுகுலத்தில் உதித்தவர்கள்
என்றும், தங்கள் முன்னோன் ஒருவர் காட்டில் வேட்டையாடச் சென்ற போது, தவம்
செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரை புலி ஒன்று தாக்க நேரிட்டது.
அச்சமயத்தில் ஹொய்சாள முன்னோன் அந்த புலியை கொன்று முனிவரை
காப்பாற்றினார் என்றும் கல்வெட்டுகளில் முறையே தெரிவித்துள்ளனர். அதனால்
இவர்களுடைய சின்னம் கூட புலியை கொள்ளும் ஒரு வீரனின் சிலையே இருக்கும்.

இங்கு யதுகுலம் என்பது சங்ககால தமிழ் வேளிர் குலம் ஆகும்.
தபலகர் என்னும் முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். புலி ஒன்று அவரைத்
தாக்க வந்தது. சளன் என்னும் யாதவ அரசன் அவ்வழியாக வேட்டையாட வந்தான்.
முனிவர் அவனிடம் “ஹொய் சள” (சளனே ஓட்டு) என்றார். அவன் ஓட்டினான். அதனால்
அவ்வரசன் ஹொய்சளன் எனப்பட்டான்.

என்று தங்கள் முன்னோர் என கூறுகிறார்கள்.
இதேபோல் சங்க இலக்கியத்தில் இருக்குவேளிர் மரபைச் சேர்ந்த புலிகடிமாஅல்
பற்றி கபிலர் பாடுகிறார்:-

வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!

என இருங்கோவேள், புலிகடிமால் என்ற பிறிதொரு பெயரானும் அழைக்கப்பெறுவன்
என்பதைக்கொண்டு. “வேள்.குல அரசருள் சளன் என்ற பெயருடையான் ஒருவன்
இருந்தான் அவன் ஒருநாள் காட்டில் வேட்டைய்ாடிக் கொண்டிருந்தான் அப்போது
ஆங்கே தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரைப் புலி. யொன்று தாக்க
நெருங்கியது ; அதுகண்டு அஞ்சிய முனிவர், அருகே, வேட் ைட பாடிக்
கொண்டிருந்த சளனேக் கூவி அழைத்துப், "புலியைக் கொல் சள " என்ற பொருள்
படுமாறு, 'பொய் சள பொய் சள " என்று கூறினர்; அவனும் அக்கணமே அம்பெய்து
அப் புலியைக் கொன்ருன் , அவன் செயல்கண்டு மகிழ்ந்த முனிவர், அரசே மின்
வெற்றி கண்டு மகிழ்ந்தேன். என புலிகடி மாஅல்! ஐ விவரிக்கிறது.
இதில் வரும் புலிகடி மாஅல் என்பது திருமாலை குறிக்கும் சொல்லாக
எடுத்துக் கொள்ளலாம்.
ஹொய்சாளர்களும் தீவிர வைணவ மார்க்கத்தை கொண்டவர்கள்.
ஆக கொடும்பாளூர் இருக்குவேளிர் மரபில் இருந்து உதித்தவர்களே ஹொய்சாளர்கள்
என்பது எந்த ஐயமின்றி புலனாகிறது.

சரி, இந்த இருக்குவேளிர் தங்களை எந்த இனமாக குறித்துள்ளார்கள் என்று
பார்த்தால் தங்களை கள்ளர் என்றே குறித்துள்ளார்கள்.
திருப்பழனம் கல்வெட்டில்: (140)

கள்ளன் அச்சப்பிடாரி என்றே நேரடியாக குறித்துள்ளனர்.
பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை மிகவும் துல்லியமாக எழுதிய தாத்தா நீலகண்ட
சாஸ்த்திரி இருக்குவேளிரை கள்ளர் தலைவர்கள் என்றே குறித்துள்ளார்.
அதுபோக இன்றும் கொடும்புறார்,இருக்குவேள்,வல்லாளத்தேவன் என்ற
பட்டங்களுடன் தஞ்சை கள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் மேலூர் கள்ளர்களில் அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள வல்லாளப்பட்டி
தலைமை அம்பலகாரர் தங்களின் குடும்ப பெயராக வல்லாளத்தேவன் அம்பலம் என்றே
குறிப்பிடுகிறார்கள்.

அதுபோக சுமார் 1000ஆண்டுகளாக வல்லாளப்பட்டி கிராமத்தில்:-
தெற்குவளவு கிராமத்தின் காவல் தெய்வங்களாக விளங்கும் பெரிய புலி அய்யனார்
மற்றும் சின்ன புலி அய்யனாருக்கு கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில்
நடைபெறும் புரவி (குதிரை) எடுக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி
பெற்றதாகும்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை வல்லாளத்தேவன் என்ற குறுநில மன்னன் ஆண்டு
வந்தான். அவன் மிகவும் பலசாலி. அப்போது பக்கத்து நாட்டைச் சேர்ந்த
குறுநில மன்னன் அவனது ஊருக்குள் வந்து ஒரு பெண்ணைத் தூக்கிச் சென்றான்.

இதையறிந்த வல்லாளத்தேவன் அந்த நாட்டுக்கு விரைந்த சென்று அந்தப் பெண்ணை
மீட்டான். ஆனாலும் வல்லாளத் தேவனைப் பின்தொடர்ந்து வந்தான் பக்கத்து
நாட்டு மன்னன். பொட்டல் என்ற இடத்தில் இருவருக்கும் கடும் சண்டை நடந்தது.
அந்த நேரத்தில் சின்னபுலி, பெரியபுலி என்ற இருவர் வல்லாளத்தேவனுக்கு
உதவியாக வந்து, எதிரி நாட்டு மன்னனைத் துரத்தி, இந்தப் பகுதி மக்களைக்
காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இருவரையும் இப்பகுதி மக்கள்
குலதெய்வமாக வழிபடுகின்றனர். சின்ன புலி அய்யனாருக்கு ஊரின் தெற்குப்
பகுதியிலும், பெரிய புலி அய்யனாருக்கு வடக்குப் பகுதியிலும் கோயில்
அமைந்தனர். அவர்கள் தங்களது எல்லாப் பிரச்னைகளும் தீர இந்தக்
கோயில்களுக்கு வந்து நேர்ந்து கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல்
நிறைவேறியதும் அய்யனாருக்கு மண் குதிரைகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.

இந்தக் கோயிலின் புரவி எடுக்கும் திருவிழா பதிமூன்று ஆண்டுகளுக்குப்
பிறகு கடந்த மே மாதம் 23-ம் தேதி துவங்கியது. பத்த நாட்கள் நடைபெற்ற
திருவிழாவில் ஜூன் 1, 2 தேதிகளில் புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவிலேயே அதிக மண் குதிரைகளை (புரவி எடுப்பு) காணிக்கை செலுத்தும்
திருவிழா இதுதான் என்கிறார்கள்.
இத்திருவிழாவையொட்டி முன்னதாக கடந்த பிப்ரவரி மாதமே குதிரைகள் செய்யும்
பணிக்கான ஏற்பாடுகள் துவங்கின. மேலூர் அருகே மந்தைத் திடலில் தெற்குவளவு
கிராமத்துப் அம்பலகாரர்கள் ஒன்று கூடினர். அவர்கள் சிவலிங்க கண்மாயில்
இருந்து எடுக்கப்பட்ட பிடி மண்ணை ஸ்தபதிகளிடம் ஒப்படைத்தனர்.

இம்மண்ணைக் கொண்டு கோயில் சார்பாக முதலில் இரண்டு சேமங் குதிரைகள்
பன்னிரண்டு அடி உயரத்தில் ஸ்தபதிகளால் செய்யப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு
டன் எடை கொண்டவை. அதுதவிர ஒன்பது அடி உயரத்தில் 9 கரை குதிகைள், 21
சுவாமி சிலைகள், 2 பூத சிலைகள் செய்யப்பட்டன. மேலும் நேர்த்திக்கடன்
செலுத்துவதற்காக ஆயிரத்து ஐந்நூறு குதிரை சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள்
துவக்கப்பட்டன. இதற்காக சின்னபுலி அய்யனார் கோயில் பொட்டல் மைதானத்தில்
பெரிய பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. இந்த குதிரைகள் பல்வேறு
கிராமங்களைச் சேர்ந்த ஸ்தபதிகளின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. ஒரு
நேர்த்திக் கடன் குதிரை செய்ய ஆயிரம் ரூபாய் ஆனதாம்.

திருவிழா துவக்க நாளன்று கிராம மக்கள் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள
அழகர்கோயிலுக்கு நடந்து சென்று தீர்த்தமாடினர். பின்னர் மேளதாளம் முழங்க
அங்கிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வந்து கோயிலிலும் வீடுகளிலும்
தெளித்தனர். இரவு மந்தைத் திடலில் களரி ஆட்டம் நடைபெற்றது. அன்றிலிருந்து
தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியாக ஜூன் 1ம் தேதியன்று பெரிய புலி அய்யனார் கோயிலுக்கும், ஜூன்
2-ம் தேதியன்று சின்னபுலி அய்யனார் கோயிலுக்கும் குதிரைகளைச் சுமந்து
வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, பத்து நாட்களாக விரதம் அனுசரித்து, அந்தப் புரவிகளை வழிபட்டு
வந்தனர். புரவி எடுப்பு நிகழ்ச்சியன்று அய்யனார் வேடம் பூண்டவர்களின்
சாமி ஆட்டத்துடன், பக்தை ஒருவர் கரகம் எடுத்து வர புரவி எடுப்பு
தொடங்கியது. புரவிகளுக்கு பூஜை செய்யப்பட்ட பின், கோயிலுக்கான சேமங்
குதிரை முதலில் எடுத்து வரப்பட்டது. கள்ளர்குல ஒரு பெண் உட்பட 18 கள்ளர்
சாமியாடிகள் பொம்மை தூக்கியதும், நேர்த்திக்கடன் குதிரைகள்
பின்தொடர்ந்தன. புறப்பாட்டிற்கு முன்பாக, ஒவ்வொருவரும் தங்கள் குதிரைகளை
கண்ணாடி, பலூன், தென்னங்கீற்று, சரிகை, கலர் காகிதங்களால் போட்டி போட்டு
அலங்கரித்திருந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மேளதாளத்துடன் அய்யனார் வீற்றிருக்கும்
கிராமத்திற்கு அலங்கரித்த மண் குதிரைகளை பக்தர்கள் மிகுந்த சந்தோஷத்துடன்
சுமந்து செல்வார்கள்.
இந்த வல்லாளப்பட்டி அம்பலகாரர்கள் தீவிர வைணவப் பற்றாலர்கள் என்பது
முக்கிய காரணியாக உள்ளது.

மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் மூலமாக ஹொய்சாளர்கள் கள்ளர் இனத்தை
சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக உறுதியாகிறது.
வல்லாளத்தேவரின் பயணம் தொடரும்.........!

நன்றி
பிற்காலச் சோழர் சரித்திரம் (நீலகண்ட சாஸ்த்திரியார்)
Hoysalar dynasty by Dr.B.SHEIK ALI
South Indian inscription
தினமலர் - ஆன்மீக பக்கம்
1.jpg
10.jpg
11.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Nov 22, 2019, 2:10:23 AM11/22/19
to panbudan, minTamil
அஞ்சூர் கள்ளர் நாட்டின் பெருமை
அனைத்து சமூக பிரதிநிதித்துவம்

பாண்டிய நாட்டின் கிழக்கு அரணாக உள்ள கள்ளர் நாடுகளில் ஒன்றாக வருவது
தான் அஞ்சூர் நாடு.

அம்பலம் பட்டம் தாங்கிய நாட்டார் கள்ளர்களின் ஆளுமையில் ஏனாதி கிராம
தலைமை அம்பலகாரர்களால் பூவந்தி, கீரனூர், மடப்புரம், செம்பூர் போன்ற
ஐந்து கிராமங்களை இணைத்து அஞ்சூர் நாடாக ஆளப்படுகிறது.

அஞ்சூர் நாட்டில் முக்குலத்தோர், செட்டியார், வேளார், வெள்ளாளர்,
முதலியார், கோனார், வன்னார், நாடார், பள்ளர், பறையர் முதலிய
வகுப்பினர்கள் வாழும் பகுதியாகும்.

இதில் கள்ளர்,அகமுடையார்,கோனார்,செட்டியார் ஆகியோர் நிலவுடைமையாளர்களாக உள்ளனர்.

ஏனாதி கிராமத்தின் தலைமை அம்பலகாரரே அஞ்சூர் நாட்டின் நீதிவழங்குதல்
நிர்வாகம் தலைமை அம்பலகாரராக வலம் வருகிறார்.

ஏனாதி என்ற பெயரின் பொருள்:- வில்லான்மையில் சிறந்து விளங்கிய
படைத்தலைவர்களுக்கு சோழர்கள் வழங்கிய பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலான நாட்டார் கோவில்களில் அனைத்து
சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக: பத்ரகாளியம்மன் கோவிலுக்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்
பூசாரியாக உள்ளனர். தன்னாயிரம் கோவிலில் கோனார் சமூகத்திற்கு மரியாதை
வழங்கப்படுகிறது.

முக்கிய அம்சம்: பள்ளர் சமூகத்திற்காக தாங்கள் வணங்கி வந்த கருப்ப சாமி
கோவிலை, கள்ளர் பெருங்குடிகள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.

எந்தவித சாதிய பூசல் இல்லாமலும், மனச்சகிதம் இல்லாமலும் அஞ்சூர் நாடு
இன்றும் கம்பீரமாக தனது புகழுடன் நிற்கிறது.

நன்றி
வரலாற்றுத் துறை
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்
1.jpg
2.jpg
3.jpg

Thevan

unread,
Dec 1, 2019, 4:09:00 PM12/1/19
to panbudan, minTamil
தொண்டைமானின் மெய்க்காவலர்கள் வலையர் சமூகம்

தொண்டைமான் அரசர்கள் வேட்டைக்கு செல்லும் போது வேட்டை சமூகமான வலையர்கள்
பாதுகாப்பு அளித்துள்ளனர். மற்றும் அரசரின் வனப்பகுதிகளையும்
பாதுகாத்துள்ளனர்.

அதன் மூலமாக பல நிலங்களை, அரசரிடமிருந்து இனாமாக பெற்றுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே அரசருடன் நல்ல உறவு முறையில் வலையர் சமூகம் இருந்துள்ளது.

இன்றும் புதுக்கோட்டையில் பல கோவில்களில் தொண்டைமான் அரசரால் காவலுக்கு
வைக்கப்பட்ட வலையர்கள் இன்றும் கோவில் காவல் பணியில் உள்ளார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

நன்றி

The Hollow Crown 👑 by Nicolas B. Dirks
1.jpg
2.jpg
3.jpg

வேந்தன் அரசு

unread,
Dec 2, 2019, 12:08:48 AM12/2/19
to vallamai, panbudan, minTamil


திங்., 4 நவ., 2019, பிற்பகல் 7:49 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:

நல்ல தகவல் 

Thevan

unread,
Dec 5, 2019, 2:37:18 PM12/5/19
to panbudan, minTamil
நாட்டார் {The beginning}

•-•-•-•-•-•-•

கல்வெட்டுகளில் நாட்டார் எனப்படுவோர் நாடாக வகைப்படுத்தப்பட்ட
நிலப்பரப்புகளின் முக்கிய அவையினர் ஆவார்கள். இவர்கள் ஆளும்
வர்க்கங்களில் ஒருவராகத் திகழ்ந்தனர்.



பொதுவாக ஆய்வாளர்களிடையே நாட்டாரை முதன்மைப்படுத்துவதற்கு மாறாக, நாடு
எனும் நிர்வாகப்பிரிவை முன்னிலைப்படுத்தும் போக்கே அதிகம் காணப்படுகிறது.
ஆனால் இத்தகைய செயல்களை வருங்காலங்களில் மாற்றி நாட்டார்களையே முன்னிலைப்
படுத்தவேண்டும் என்பதே நமது வேண்டுகோள் ஆகும். நாட்டார்களைப் பற்றிய
உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வர உதவும் சுப்பராயலு மற்றும் ஹைய்ஸ்மன்
ஆகியோரது ஆய்வுகள் இந்தப் பதிவிற்குப் பயன்படுகின்றன. தொடக்கத்தில் நாடு
என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இயல்பாகவே அமைநத வேளாண்
குடியிருப்புகளின் தொகுப்பாகும். இதுவே காலப்போக்கில் நிர்வாகப்
பிரிவாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வேளாண் குடியிருப்புகளின்
தொகுப்பாக அமைந்த நாடானது ஒரு சமூக இனக்குழுவினர் {Kinship group}
மட்டும் வாழும் நிலப்பரப்பாக ஒருமித்த இயல்பைக் கொண்டிருந்தது. ஆனால்
பிரமதாயங்களின் தோற்றம், ஆக்கிரமிப்பு ஆகியவை காரணமாக நாட்பட நாடானது
தனது ஒருமித்த இயல்பை இழந்து பன்முகத் தனமை கொண்டதாக மாற்றமுற்றதாக
திரு.சுப்பராயலு அவர்கள் கூறுவார்.



{ political Geography of the chola country, chennai: Tamilnadu state
Department of Archaeology} & { 'The pulankurichi inscriptions' ; A
side light cola officialdom; The sale Deeds in cola inscriptions; 'The
Cola state ' In Rajagopal 2001}



- எனவே நாட்டிலுள்ள அனைத்து வெள்ளான் வகைக் குடியிருப்புகளின்
பிரதிநிதிகளே தொடக்கத்தில் நாட்டாராகச் செயல்பட்ட நிலையில் ஒத்த இயல்பு
கொண்ட நாட்டார் அவை இனக்குழுவின் அவையாகவே {Tribal assembly} செயல்பட்டது
எனக் கருதலாம்.

நாட்டாரின் பணிகள்

~~~~~~~~~~~~~~

நாட்டாரின் செயல்பாடுகளை மூன்று காலப்பிரிவுகளில் பகுத்து ஆய்வு
செய்துள்ள சுப்பராயலு 6,10ம் நூற்றாண்டுகளில் நாட்டவராகச் செயல்பட்ட
உறுப்பினர்களின் பெயர்கள் கூறப்படவில்லை எனவும், நாட்டார் அமைப்பில்
பன்முகத் தன்மை தோன்றிய பின்னரே , அதாவது 11ம் நூற்றாண்டிற்குப் பிந்தைய
காலத்திலேயே நாட்டாராகச் செயல்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள்
கூறப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார். சோழரின் அதிகாரத்தை மையப்படுத்தும்
போக்கு காரணமாக 12, 13ம் நூற்றாண்டுகளில் நாட்டாரின் செயல்பாடு சோழ
மண்டலத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. 13ம் நூற்றாண்டிற்குரிய
பாண்டியரின் கல்வெட்டுகளிலேயே நாட்டாரின் செயல்பாடுகள் மீண்டும்
கூறப்படுகின்றன.



புதுக்கோட்டைப் பகுதி மற்றும் சோழ மண்டலத்தின் நான்கு வருவாய் வட்டங்கள்
அடங்கிய நிலப்பரப்பில் காணப்படும் கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ள
ஹைய்ஸ்மன் அவர்கள் நாட்டாரின் செயல்பாடு குறித்து பின்வருமாறு
கூறுகிறார்..



"பதிப்பிக்கப்பட்டுள்ள சுமார் 2400 கல்வெட்டுகளில், 49 கல்வெட்டுகள்
நாட்டார் செயல்பாடு பற்றி கூறுகிறது. இவற்றுள் கி.பி.985 வரையில் 13
கல்வெட்டுகளிலும், கிபி. 985- முதல்- 1178 வரை 5 கல்வெட்டுகளிலும், அதன்
பின்னர் 17 கல்வெட்டுகளிலும் நாட்டார்களின் செயல்பாடுகள்
சொல்லப்படுகின்றன. சோழரின் அதிகாரக் குவிப்பு காரணமாக கி.பி.985 -1178
வரையான காலங்களில் நாட்டாரின் செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது.
புதுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் 21 கல்வெட்டுகளில் நாட்டார்
செயல்பாடுகள் காணப்படுகிறது. சோழ மண்டலத்தில் அரசின் பிரதிநிதிகள்
மற்றும் அலுவலர்கள் கவனித்த வரி நிர்வாகம் மற்றும் பொதுப்பிரச்சனைகளைத்
தீர்த்தல் ஆகிய பணிகளைப் புதுக்கோட்டை பகுதியில் நாட்டாரே ஆற்றியுள்ளனர்.
ஆகையால் இப்பகுதியில் அரசு அலுவலர்களின் தேவையானது நாட்டார்களால்
குறைந்து காணப்படுகிறது"



-ஹைய்ஸ்மனின் இந்த கருத்து சோழரின் ஆட்சிக்காலத்தில் மற்ற பகுதிகளை விட
புதுக்கோட்டை பகுதியில் நாட்டார்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்ததை
அறிவிக்கிறது.

ஆகவே நாம் நாட்டார்கள் பற்றி புதுக்கோட்டை பகுதி கல்வெட்டுகள் என்ன
கூறுகின்றன என்பதைப் பற்றியும், கானாடு- கோனாடு -தென்கவிர்நாடு
நாட்டார்களைப் பற்றியும் இனி விரிவாகக் காண்போம்.

புதுக்கோட்டை பகுதியில் நாடு தொடர்பான முதல் குறிப்பு கி.பி.500க்குரிய
பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் கூறப்படும் ஒல்லையூர் கூற்றம், கூடலூர்
நாடு ஆகிய பெயர்களாகும். இதனையடுத்து தந்திவர்மனின் மலையடிப்பட்டிக்
கல்வெட்டில் {I.P.S.18} கீழ் செங்கிளி நாட்டவர் வழங்கிய அறக்கொடையைத்
தெரிவிக்கிறது.



[ " ....... கீழ் செங்கிளி நாட்டு நாட்டா.......நாட்டார்க்கு செய்த " ]

12ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில், சுமார் 10 கல்வெட்டுகளில் நாட்டார்
குறித்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால் , நாட்டவராகப் பணியாற்றிய
தனிநபர்கள் பற்றிய விபரங்களை இக் கல்வெட்டுகள் கூறவில்லை.



மூன்றாம் குலோத்துங்கனின் திருவப்பூர் கல்வெட்டில் {IPS.155} நாட்டாரின்
செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் நாட்டின் பிரதிநிதிகளாக தனிநபர்கள்
கூறப்படுகின்றனர்.

[ " ..... ஜயசிங்க குலகால வளனாட்டுத் தென்கவிர் நாட்டு நாடாய் இசைந்த
நாட்டோம்..." ]



-இவ்விதம் நாட்டார் அவையின் உறுப்பினர்களைக் குறிப்பிடும் நடைமுறை 15ம்
நூற்றாண்டு வரைத் தொடர்ந்து காணப்படுகிறது. வேளாண் குடியிருப்புகளே
நாடாவதால் இக் குடியிருப்பின் பிரதிநிதிகளான 'ஊரவர்' தானே நாட்டாராகவும்
செயல்பட்டிருப்பர்? சோழமண்டலத்தில் "ஊர்க்கு சமைந்த ஊரவர் " என நாட்டார்
கூறப்படுவது {Dr.சுப்பராயலு/ political Geography of the chola country,
chennai: Tamilnadu state Department of Archaeology} இதைத் தெளிவு
படுத்தும். புதுகைப் பகுதிகளிலும் இத்தகைய குறிப்புகள் கிடைக்கின்றன.
{IPS. 546}



[ "...... செயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயின்னாட்டுக்கு சமைந்த
நாஞ்சில் ஊற்கு சமைந்த ஊரோமும் பெருஞ்செவூர் ஊற்கு சமைந்த ஊரோமும் விரைக்
குடிக்கு சமைந்த ஊரோமும் கணையக்குடி ஊற்கு சமைந்த ஊரோமும் இவ்வனைவோம்
எங்களில் இசைந்து...."]



- எனும் குறிப்பு இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும். பூவாலைக்குடிச்
சிவாலயத்தில் 'மறமாணிக்கன் சந்தி' நிறுவப்பட்டதைக் கூறும் கல்வெட்டிலும்
{IPS.444} இதே போன்ற குறிப்பு, கூடலூர்நாட்டின் செவ்வலூர் உள்ளிட்ட
வடபற்று நாட்டவர்கள் ஊரவராகவும் செயல்பட்டதை விளக்குகிறது.
["....தெ ன்கோனாட்டுக் கூடலூ ர் நாட்டு செவ்வலூர் உள்ளிட்ட வடபற் று
நாட்டவரோம் கூளிபிறை செம்பூதி மதியாணி அரசர்மிகாமன்நிலை இவ்வூர்க ளில்
ஊராயிசைந்த ஊரவர்கள்]
- எனவே நாட்டின்கண் அமைந்துள்ள குடியிருப்புகளின் பிரதிநிதிகளான ஊரவரே
நாட்டாராகவும் செயல்பட்டனர் என்பது தெளிவு. இனி அடுத்த பதிவில்
புதுக்கோட்டை பகுதியின் கானாடு-கோனாடு ஆகிய பிரிவுகளில் நாட்டார்களின்
பணிகளைப் பார்ப்போம்.
தொடரும்..
Reference..
1. political Geography of the chola country, chennai: Tamilnadu state
Department of Archaeology
2.'The pulankurichi inscriptions' ; A side light cola officialdom; The
sale Deeds in cola inscriptions; 'The Cola state ' In Rajagopal 2001
3.IPS: 18, - 155, - 546, - 444.
4. புதுக்கோட்டை 1600 வரை , முனைவர். மாணிக்கம். பக்:333 -335.
Thanks to
கல்வெட்டு தகவல்கள் அளித்தவர்கள்.
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
நன்றி.
அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

தேமொழி

unread,
Dec 5, 2019, 3:02:42 PM12/5/19
to மின்தமிழ்
இந்த இழையில் நீங்கள் பகிரும் ஆய்வுக்கட்டுரைகள் சிறப்பு தோழர்.

இவற்றைத் தக்க தலைப்புகளின்  கீழ் அமைத்துப் பகிர்ந்தால் மேலும் ஆய்வு நோக்கில் அணுகுவோருக்குத் துணை புரியும்.

முன்னர் நான் தங்களுக்கு அனுப்பிய தனிமடலின் படியை இங்கு மீண்டும் இணைக்கிறேன்.  

----

வணக்கம் தோழர், நலமா?  

"1743 இல் ஐதராபாத் நிஜாம் படையை விரட்டியடித்த தஞ்சை கள்ளர்கள்"

என்ற தலைப்பில் நீங்கள் அனுப்பும் கட்டுரைகளில் சில இழை தலைப்பிற்குப் பொருத்தமின்றி உள்ளனவே !!!!

தலைப்பில் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கு நீங்கள் இன்று அனுப்பியுள்ள விகடன் கட்டுரையையும் ஓர் எடுத்துக்காட்டு.

பிரபல நாளிதழ்கள்,வார இதழ்கள் போன்றவற்றில் வரும் கட்டுரைகளை அவ்வாறே அந்த தலைப்புடன் பகிர்தல் நன்று.  

அவர்களுக்கு உரிய பெயர் தரப்படுவது அவர்கள் உரிமை, கொடுப்பதும் பகிர்வோர் நம் கடமை.

இதில் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு விருப்பமான 'தமிழர் நலம் காக்கும் குலம்' பற்றிய கட்டுரைகளை அதற்குத் தக்க தலைப்பின் கீழ் தொகுக்க விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள். தலைப்பில் சாதிப் பெயரில் தொகுக்க வேண்டாம். 

கடந்த வரலாறு என்பது வேறு, நடப்பு அரசியல் என்பது வேறு.

அரசியல் நோக்கம் கொண்ட பதிவுகளைத் தவிர்த்து விடுங்கள். 

கட்சி சாரா, சாதி சாரா, சமயம் சாரா, இனம் சாரா நோக்கமும், தமிழும் தமிழரும் என்ற நோக்கம் மட்டும்  கொண்ட மின்தமிழ் கொள்கைக்கு உடன்பாடான வகையில் பகிரும் வண்ணம் உங்கள் ஒத்துழைப்பை வரவேற்கிறேன்.

மின்தமிழ் மட்டுறுத்தர் குழுவின் சார்பில்
அன்புடன் 
தேமொழி 


வேந்தன் அரசு

unread,
Dec 5, 2019, 7:39:37 PM12/5/19
to vallamai, panbudan, minTamil


வியா., 5 டிச., 2019, பிற்பகல் 6:32 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
 [ "...... செயசிங்க குலகால வளநாட்டு வடசிறுவாயின்னாட்டுக்கு சமைந்த
நாஞ்சில் ஊற்கு சமைந்த ஊரோமும் பெருஞ்செவூர் ஊற்கு சமைந்த ஊரோமும் விரைக்
குடிக்கு சமைந்த ஊரோமும் கணையக்குடி ஊற்கு சமைந்த ஊரோமும் இவ்வனைவோம்
எங்களில் இசைந்து...."]



இங்குமொரு  நாஞ்சில் நாடு இருந்துள்ளதோ? 

Thevan

unread,
Dec 6, 2019, 12:15:56 AM12/6/19
to panbudan, minTamil
நாட்டார் {கோனாடு}
•-•-•-•-•-•
"நாட்டார்" பதிவின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை பகுதியின் கோனாட்டில்
நாட்டவர்கள் செயல்பாடுகள் பற்றி தற்போது காண்போம்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனின் குடுமியான் மலைக் கல்வெட்டில் IPS: 266,
[ ".... கோனாடான கடலடையாதி லங்கைகொண்ட சோழ வளநாட்டு நாட்டோமும்..." ]
கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டின் நாட்டவரும்,
திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிற் தானத்தாரும் காரையூர் வேளானுக்கு
கோயிலின் தேவதானமாக உள்ள நிலத்தை விற்பனை செய்து அதை மீண்டும் கோயிலுக்கே
திருத்தோப்பாக மாற்றி வழங்கிய செய்தியை அறியமுடிகிறது. இதற்கு ஒப்புதல்
அளித்த நபர்களாக,

1.நம்பு செய்வான்.
2.கருணாலைய பிள்ளையான் ஆன திருமந் பொழிய நின்றான்.
3.உதையன் நம்பியாண்டாரான வளவதரையன்
4.செருந்திவனப் பெருமாள்
5.அன்பாண்டார்
6.திருமுனைப்பாடி நம்பி
7.எதிரிலிச் சோழ பட்டன்
8.கோயிற் கணக்கு பெரியநாட்டுப் பிரியன்
9.நாட்டுக் கணக்கு குன்றிசூழ்நாட்டு வேளான்
10. கைக்கோளர் கணக்கு குடுக்கும் தியாகி
11.கோயிலின் அனுஸாரம் பிக்ஷை மடத்து நல்லதறியும் பெருமாள். - முதலானோர்
குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்களுள் நம்பி ,பட்டன், கோயிற்கணக்கு, மடாதிபதி ஆகிய நால்வரைத் தவிர
எஞ்சியோரை நாட்டாராகவே கருத முடிகிறது. மூன்றாம் ராஜராஜனின் குமாரமங்கலம்
கல்வெட்டில் IPS: 196,
[ "....கோனாடான கடலடையாத இலங்கைகொண்ட சோழவளநாட்டு நாடும் நகரம் அகர
பிரமதேயம ளோமும்..." ]

நாட்டாரும், நகரத்தாரும், அகரப் பிரமதேயங்களில் வாழும் நபர்களும் கூடிய
நிகழ்வு சுட்டப்படுகின்றது. திருவாணைக்காத் திருப்பதியிலுள்ள
மடத்திற்கும் ஜீயர் ஒருவருக்கும்
[ "... திருவாணைக்காத்திரு(ப்ப)திய் அ (கிலா)ண்ட நாயகி திருமடத்து
எழுந்தருளி இரு க்கும் ஜியர்....." ]
நிலக்கொடை வழங்கிய தகவலைக் கூறும் இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்து
காணப்படுவதால் ஒப்பமிட்டவருள் நாட்டுவேளான் எனக் கூறப்படும் ஒரு நபரை
மட்டுமே அறியமுடிகிறது.
வீரபாண்டியனின் குடுமியான்மலைக் கல்வெட்டு IPS: 601 திருநலக்குன்றத்தில்
உள்ள சிகாநாதசுவாமி சிவாலயத்தில் பிராமணர்களால் நடந்த திருட்டை
விசாரிப்பதற்காகக் கூடிய கோனாட்டு நாடுகள், நகரங்கள், கிராமங்கள், கோயிற்
தானத்தார் அடங்கிய கூட்டத்தைக் குறிப்பிடுகிறது.

[ "... கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாட்டு நாடுகள் நகரங்கள்
கிராமங்களோம் உடையார் திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிற் காங்கேயராயன்
திருமண் டபத்து நிறைவற நிறைந்து குறைவறக்கூடி எங்களில் அமைந்து பிடி பாடு
இட்டபடியாவது..." ]
[ "...இப்படி இக்கோயிற் சிவப்பிராமணரில் கள்ளரானவர்களை மாற்கத்து கத்துக்கு கடவார்

சிவத்துரோகிகளைச் செய்யும் முறைமைகளிலே செய்யவுநிலை யிட்டு...." ]
கோயிற் கணக்கர் இருவர், நம்பி, பட்டன் முதலான ஆலயப் பிரதிநிதிகளுடன்
கீழ்கண்டவர்களும் ஒப்பமிட்டுள்ளனர்.

1.புன்னங்குடி குன்றன் தேவனான தென்னவதரையன்,
2.பரம்பையூர் நம்புசெய்வான், 3.சிகாநல்லூர் வளவதரையன், 4.காரையூர்ச்
செங்கதிர்ச் சோழ மூவேந்த வேளான்,
5.அண்ணல் வாயில் வளவன் பல்லவதரையன்,
6.புதுவூர்ப் பெரியதேவன்
7.கீழ்தணியத்து வீரசோழ வேளான்
8.சுந்தரசோழபுரத்துத் தென் கோனாட்டு வேளான்
9.கீழ்மணநல்லூர் இராசேந்திர வேளான்
10. வெம்பனூர் ஈசானதேவன்
11.மீநெல்வேலி பொற்காரி சூரியதேவன்
12.திருநலக்குன்றத்து அன்பாண்டான்
13.குலோத்துங்கப் பல்லவதரையன்
14.கச்சிராயன்
15.விஞ்சத்தரையன்
16.பெருமாள் உடையான்
17.குடுக்குந் தியாகி வேளான்
18.ஆளவந்தான் திருவொத்த சாமமழகியான் .

வேளாண் குடியிருப்பின் {ஊர்கள்} பிரதிநிதிகளே இங்கே நாட்டாராகச்
செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு தெளிவாக அறியமுடிகிறது. வேளான் அந்தஸ்து
பெற்றவர்களும், அரையர் அந்தஸ்து பெற்றவர்களும் இங்கு ஏறக்குறைய சம அளவில்
இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக ஒரு குடுமியான் மலைக் கல்வெட்டு IPS: 367 கோனாட்டு நாட்டாரின்
தன்மையை நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. திருநலக்குன்றத்து நாயனார்
திருக்கற்றளியைப் புதுப்பிக்க நிதியில்லாத காரணத்தினால் கோயிலின் தேவதான
நிலத்தை விற்பதாகக் கொண்ட முடிவினைக் கூறும் இந்த கல்வெட்டில் 41 நபர்கள்
ஒப்பமிட்டுள்ளனர். இவர்களில் ஆலயத்தின் தேவகன்மிகள், கணக்கர், வயிராகி,
கைக்கோளன்,பட்டன், நம்பி,கோயிற் பண்டிதன், உள்ளிட்ட நபர்கள் தவிர்த்து
மீதமுள்ள நபர்களில் 14 அரையர்களும், 9 வேளான்களும் , 2 மாராயன்களும்
வருகின்றனர். இங்கு வேளான்களை விட அரையர்களே அதிக எண்ணிக்கையில் இடம்
பெற்றுள்ளனர்.

[ "... இந்நாயநார் திரு க்கற்றளி ஜீணிக்கையில் ஜீணோத்தாரம்பண்ண வேறு
உடலில்லாமையால் இதுக்கு உடலாக நாட்டுத்தேவதான இந்நாயனார் திரு
நாமத்துக்கா ணி இலுப்பைக்குடிக்குளமும் வயலிலும் விற்பதான..." ]
14வது நூற்றாண்டிற்குரிய கூடலூர்க் கல்வெட்டில்{ IPS: 447 }
ஒப்பமிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் வரி நிர்வாகத்தில்
நாட்டாரின் பங்கு எத்தகையது என்பதை அக் கல்வெட்டு உணர்த்துகிறது.

[ "..... எங்கள் நாட்டு இல்லநூரில் இருகூற்றுக்குக் கடவ இல்லனூர் கிழவன்
கீழ்மணநல்லூ ரில் பெரியதேவரை புணையிட்டு இவர் கடமையிறாமல் ஓடிப்போகையில்
இப்பெரியதேவரை நாங்கள் நாடாக அழைத்து நீரு புணைப்படியே இறுக்கவேணும்
என்று புரட்டாதி மாதவரை கடமை இவரைப் பூட்டுகையில் இப்படி புணைபட்ட நான்
இறுக்கப்பாத்தால் எனக்கு ஆற்றாது என் காணியான கீ ழ்மணநல்லூர்க்காணியும்
போகட்டுப்பெமித்தளை என்று சொல்லி எங்கள் முன்பாக இவர் புணை
கழித்துப்போகையாலும்...." ]
அதாவது,.. கோனாட்டு இல்லனூருக்கு அரசுக்கான வரியில் இரண்டு பங்கைச்
செலுத்த வேண்டிய இல்லனூர்க் கிழவனானவன் கீழ்மணநல்லூர் பெரியதேவரை புணையாக
{ஜாமீன்} வைத்து விட்டு வரியைத் தராமல் ஓடிப்போகிறான். இந்த சிக்கலைத்
தீர்க்க எண்ணி தென்கோனாட்டு நாடும், நகரமும், கிராமங்களும் கூடிப்
பெரியதேவரை அழைத்துக் கேட்கின்றனர். அவர் இந்த வரியைத் தன்னாலும் செலுத்த
முடியாது என்று கூறி தனது கீழ்மணநல்லூர் காணியை எடுத்துக்கொண்டு இந்த
கைது நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறதை ஏற்று
அவரை விடுவிக்கின்றனர். இது பத்தாமல் போக அதேபோல இன்னொரு பங்கைச் செலுத்த
இல்லனூர்க் கிழவனால் பனணயமாக வைக்கப்பட்ட பிள்ளான் சொக்கனாரையும்
அழைத்துக் கேட்க, அவர் தன்னாலும் அந்த வரியைச் செலுத்த இயலாது என்று கூறி
தனது காணியையும் விற்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறித் தன்னை
விடுவித்துக்கொள்கிறார். இறுதியாக இல்லநூரை ஏலத்தில் விட்டு வரியைச்
செலுத்த முனையும் நாட்டார்கள் மதுரைக் கைக்கோளனான
மாளுவச்சக்கரவர்த்திக்கு விற்கின்றனர்.
கோனாட்டுப்பகுதியில் அரையர்களே வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தினர்
என்பதற்கு எடுத்துக்காட்டாக 13ம் நூற்றாண்டிற்குரிய குடுமியான்மலைக்
கல்வெட்டு IPS 565. படம் பிடித்துக் காட்டுகிறது.

[ ".... கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு இரண்டுகரைனாட்டு
னாட்டவர்ரோம் இன்னாட்டு கூடலூர்னாட்டு பனையூர் குளமங்கலத்தரை . .
ர்கள்ளுக்கு . . . தரம் பண்ணிக்குடுத்த பரிசாவது இவர்களுக்கு
நாட்டரசுங்கட்டி இவர் . . தின்கலம் சிற்றூர் ஐங்கலனெல்லும்
பெற்றுச்சிலந்திவனபெருமாள் சிபாதம்...." ]
கோனாட்டின் இரண்டு கரை நாட்டவர்கள் கூடலூர் நாட்டு பனையூர்-குளமங்கலத்து
அரையர்களுக்கு நாட்டரசு அளித்து காவற் பொறுப்பையும் தருகின்றனர். இதற்கு
காணிக்கையாக ஒவ்வொரு ஊரவரும் நெல் அளக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது. மேலும்
திருநலக்குன்றமுடைய நாயனார் கோயிலில் முன் ஒடுக்கும் {முதல் மரியாதை}
அரையர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் "மறவ அரையர்கள்" வலுவான
நிலையில் காணப்பட்டதற்குச் சான்றாகத் தென்கோனாட்டுக் கூடலூர் நாட்டுச்
செவ்வலூர் உள்ளிட்ட வடபற்று நாட்டவரால் பூவாலைக்குடி சிவாலயத்தில்
நிறுவப்பட்ட "மறமாணிக்கன் சந்தி" ஐக் குறிப்பிடலாம். {IPS:444}
மறமாணிக்கம் என்பது மறவர் இனத்தாரின் விருதுப் பெயராகும். அவர்களை அண்டி
வாழ்ந்த கைவினைஞர், இடையர் மக்கள், ஆகியோருக்கும் மறமாணிக்கக் கொல்லன்,
மறமாணிக்கத் தட்டான், மறமாணிக்கக் கோன் என அறியப்பட்டனர். அடுத்த பதிவில்
கானாட்டு நாட்டவரின் செயல்பாடுகள் எத்தகையவை என்பதைக் காண்போம்.

Reference..
1. IPS:266, 196, 601, 367, 447, 565, 444.
2. புதுக்கோட்டை 1600 வரை.
{ பக்: 335-337 }
Thanks to
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டுத் தகவல்கள்}
நன்றி!
அன்பன்: கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg

Thevan

unread,
Dec 6, 2019, 11:10:15 PM12/6/19
to panbudan, minTamil
ஶ்ரீகள்ளச்சோழன்


நாட்டார்_அரையர்_நாடாள்வார்_அரசர்



சோழர்களின் பல கல்வெட்டுகளில் அவர்கள் கள்ளர்களாகவே அறியப்படுகிறார்கள்.



அவர்களுக்கு பெண் கொடுத்த வேளிரும்,விழுப்பரையரும் கள்ளர்களாகவே வருகிறார்கள்.



அவர்களின் தளபதிகளும் கள்ளர்களாகவே வருகிறார்கள்.



அவர்களின் அரையர்களும் கள்ளர்களாகவே வருகிறார்கள்.



அவர்களின் நாட்டார்களும் கள்ளர்களாகவே வருகிறார்கள்.



இதற்கான காலவரிசைப்படி 300வருடங்களாக தொடர்ச்சியாக வரும் ஒரு கல்வெட்டு தொகுப்பு:-



கல்வெட்டு :- 1



அரசர் : பரகேசரி வர்மன் என்ற பராந்தக சோழர்


காலம் : கிபி909


செய்தி : முதன்முதலாக #கள்ளர் படைப்பற்று தனியாக


குறிக்கப்பட்டது இந்த கல்வெட்டில் தான்


“வல்ல நாட்டு கள்ளப்பால் கற்குறிச்சி


நாட்டார்” என அறியப்படுகிறது.



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


நாட்டார்


வல்ல நாட்டார்



கல்வெட்டு :- 2



அரசர் : பரகேசரி வர்மன் என்ற பராந்தக சோழர்


காலம் : கிபி915


செய்தி : திருநலக்குன்றத்தை சேர்ந்த “கானவன்


சேந்தன் #கள்ளன் “ என்ற அரையர்


கோவிலுக்கு அளித்த கொடைச் செய்தி


குறிக்கப்படுகிறது.



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


சேந்தர்


சேந்தூரியர்


சேந்தமுடையர்,


சேந்தமடையார்



கல்வெட்டு :- 3



அரசர் : பரகேசரி வர்மன் என்ற பராந்தக சோழர்


காலம் : கிபி924


செய்தி : #கள்ளர் இன இருக்குவேளிர் மங்கை


ஆச்சப்பிடாரியாரின் கோவில் கொடையை


பற்றிய செய்தி



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


ஆச்சப்பிரியர்


கொடும்புறார்


இருங்களர்


இருக்குவேள்



கல்வெட்டு :- 4



அரசர் : பரகேசரி வர்மன் என்ற பராந்தக சோழர்


காலம் : கிபி940


செய்தி : #கள்ளர் இன இருக்குவேளிர் மங்கை


உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர்


ஆதிச்சபிடாரியாரின் கோவில் கொடையை


பற்றிய செய்தி



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


ஆச்சப்பிரியர்


கொடும்புறார்


இருங்களர்


இருக்குவேள்



கல்வெட்டு :- 5



அரசர் : பரகேசரி வர்மன் என்ற பராந்தக சோழர்


காலம் : கிபி942


செய்தி : #கள்வன் வீரமல்லன் என்ற அரையரின்


மனைவி அரகன் கொற்றப்பிராட்டியார்


அளித்த கொடை பற்றிய செய்தி



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


கள்வர்


களவர்



கல்வெட்டு :- 6



அரசர் : மதுராந்தக சோழர் என்ற சுந்தரசோழர்


காலம் : கிபி957


செய்தி : சுந்தரசோழரின் அரசு அலுவரான


கொடும்பாளூர் இருக்குவேளிர் #கள்ளச்சி


உத்த.ற்றான். ஆன பூதி பட்லாகன் பற்றிய


செய்தி



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


ஆச்சப்பிரியர்


கொடும்புறார்


இருங்களர்


இருக்குவேள்



கல்வெட்டு :- 7



அரசர் : கங்கரையர் (சோழர் கிளையினர்)


காலம் : கிபி9ஆம் நூற்றாண்டு


செய்தி : கொங்கரையர் #கள்ளப்பெருமானாரின்


மனைவி கொங்கச்சியர் செய்வித்த மதகு


பற்றிய செய்தி



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


கொங்கணர்


கொங்கரையர்


கொங்குராயர்


கங்கர்


கங்க நாட்டார்


கங்கநாடர்



கல்வெட்டு :- 8



அரசர் : சோழர் (அரசர் பெயர் சிதைவுற்றது)


காலம் : கிபி10 நூற்றாண்டு


செய்தி : ஆநிரை பூசலில் உயிர் நீத்த வீரனான


#ஶ்ரீகள்ளச்சோழனுக்கு எடுத்த நடுகல்



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


சோழர்


சோழகர்


சோழன்


சோழவர்


சோழகோன்



கல்வெட்டு எண் :- 9



அரசர் : இராஜேந்திர சோழன்


காலம் : கிபி1043


செய்தி : கல்வெட்டில் நிலஅளவு பற்றிய செய்தியில்


கிழக்கடையன் #கள்ளன் எனும் பெயரில்


நில அளவு இருந்துள்ளது.



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


கிளக்கட்டையார்


கிளாக்குடையார்


கிளாக்குடையர்


கிளாக்கடையார்


கிளாக்கடையர்



கல்வெட்டு எண் :- 10



அரசர் : குலோத்துங்க சோழன் I


காலம் : கிபி1078


செய்தி : மன்னார்குடி வராபதி ஆழ்வார் கோவிலுக்கு


30000பணம் நாடு,நகரம்,#கள்ளர்பற்றில்


இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


மன்னையர்


மன்ன சிங்கர்


மன்னை சிங்காரியர்


மன்ன தேவர்


மன்னவேள்


மன்னவேளார்



கல்வெட்டு எண் :- 10



அரசர் : குலோத்துங்க சோழன் I


காலம் : கிபி1078


செய்தி : இராஜேந்திர சோழமங்கல நாடாள்வானான


#கள்ளர்பற்றில் அரையன் சேந்தனின்


கொடை பற்றிய செய்தி



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


அரையர்


நாடாள்வார்


சேந்தர்


சேந்தமுடையார்


சேந்தூரியர்


சேந்தமடையார்




கல்வெட்டு எண் :- 11



அரசர் : குலோத்துங்க சோழன் I


காலம் : கிபி1080


செய்தி : தென்கவிர் நாட்டு #கள்ளர்பாற் கற்குறிச்சி


சோழமங்கல நாடாள்வார் #வாண்டையான்


என்ற நாடாள்வார் பற்றிய செய்தி வருகிறது.



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


வாண்டையார்


வாண்டராயர்


வண்டயர்


வண்டரையர்


நாடாள்வார்



கல்வெட்டு எண் :- 11



அரசர் : இராஜராஜன் II


காலம் : கிபி1160


செய்தி : கல்வெட்டில் நில விற்பனை செய்தியுள்ளது.


அதில் அரையர்களாக உள்ளவர்களின்


பாடகம் உள்ளது #கடம்பராயன்கள்ளன்


#காங்கையன்கள்ளன் #மகதராயன்கள்ளன்


என கடம்பராயர்,காங்கையர்,மகதராயர்


மூவரும் கள்ளர்களாக அறியப்படுகிறார்கள்.



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


காங்கையர்


காங்கேயர்


கரம்பராயர்



கல்வெட்டு எண் :- 12



அரசர் : இராஜராஜன் II


காலம் : கிபி1163


செய்தி : இரண்டாம் இராஜ இராஜ சோழரின்


மெத்கீர்த்தி கல்வெட்டில் தன்னை #கள்வன்


என்றே குறித்துள்ளார்



கல்வெட்டு எண் :- 13



அரசர் : இராஜராஜன் இராஜகேசரியார் III


காலம் : கிபி1222


செய்தி : நில விற்பனை கல்வெட்டில் ஆன இதில்


சோழருக்கு பெண் கொடுத்த மரபில் உள்ள


விழுப்பரையர் இதில் #கள்ளன் என்றே


குறிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்னும் சில


ஆரியர்களின் கள்ளர் என்றே வருகிறது.


#கள்ளன்விழுப்பரையன் #கள்ளன்சீராளத்தேவன்


#கள்ளன்பெரியதேவன்



இதனை சார்ந்த இன்றும் உள்ள கள்ளர் பட்டங்கள்:


தேவர்


விழுப்பாதாரர்



மேலும் சோழர்கள் பெரும்பாலும் பெண் எடுத்த இருக்குவேளிர்கள் கள்ளர்
என்பதும் ஶ்ரீகள்வர் கள்வன் முத்தரைய அரச மரபினர் இறுதியாக இந்த
இருக்குவேளிர்களிடம் தான் கரைந்தும் போயுள்ளனர்.



இது வெறும் முதல் அத்தியாயம் தான்


சோழன் பயணம் தொடரும்......!



நன்றி


தமிழக தொல்லியல் துறை



மற்றும்



சியாம் சுந்தர் சம்பட்டியார்



விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்



Anan Karthick



அன்புடன்


சோழபாண்டியன்


ஏழுகோட்டை நாடு
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
13.jpg
14.jpg
15.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

Thevan

unread,
Dec 6, 2019, 11:10:15 PM12/6/19
to panbudan, minTamil
16.jpg
25.jpg
26.jpg
27.jpg
28.jpg
29.jpg
17.jpg
18.jpg
19.jpg
20.jpg
21.jpg
22.jpg
23.jpg
24.jpg

Thevan

unread,
Dec 8, 2019, 2:47:28 AM12/8/19
to panbudan, minTamil
நாட்டார் {தென் கவிர் நாடு}
•-•-•-•-•-•
நாட்டார் பற்றிய பதிவில் கானாடு - கோனாடு நாட்டவர்கள் பற்றி அறிந்தோம் .
தற்போது தென்கவிர்நாட்டின் நாட்டார்களை வாசிப்போம்.
ஜெயசிங்க குலகால வளநாட்டில் அமைந்திருந்த தென்கவிர் நாட்டில் தேவதான
நிலத்திற்கு ஆட்சியாளரால் வழங்கப்பட்ட இறையிலிச் சலுகையை அறிவிக்கும்
திருவப்பூர் கல்வெட்டில் {IPS: 155}
1.வேளான் சுந்தரத்தோளுடையான்
2.கேரளன் பொற்சாத்தன்
3.அழகியசோழத் தென்கவி நாட்டு மூவேந்த வேளான்
4.அரயன் கூத்தன்
5.திருமங்கை நம்பி
6.சாந்தி ஐய்யாறு தேவன்
7.வேளான் சிறுச்சந்தன்
8.பிச்சன் பெரியான்
9.வேளான் அரசன்
10.தென்னவன் பல்லவதரையன்
11.கங்கைகொண்ட சோழக்காடவதரையன்
12.செம்பியன் பல்லவதரையன்
13.வேளான் பக்கன்
14.வல்லநாட்டுக்கோன்
-ஆகியோர் ஒப்பமிட்டவர்களாக வருகின்றனர்.
நாயனார் சேமப்பிள்ளையாரின் ஆணைப்படி இறையிலி திருவிடையாட்ட நிலக்கொடை
தென்கவிநாட்டாரால் வழங்கப்பட்டதாகக் கூறும் கல்வெட்டில் {IPS: 371}
1. கவிநாட்டு வேளான்
2. ஜயங்கொண்ட சோழப் பல்லவதரையன்
3. அரையன் ஆட்கொண்டான்
4.அரையன் வேளான்
5.வல்லத்து வேளான்
6.வேளான் எழுபோதழகியான்
7.வேளாநாத(ன்?)
8.செம்பியன் கோனார்
9.வில்லவராயன்
10.வல்லநாட்டு வேளான்
11.பெரியான் சாத்தன்
12.அச்சன் பட்டன்
13. மும்முடிசோழவேள் தென்கவிநாட்டு வேளான்
14.அருள்மொழி வளவதரையன்
15.ஜெயங்கொண்ட வேளான்
16.நாட்டுக்கணக்கு ஸ்ரீராமதேவன்
17.திருவைய்யாறு உடையான்
என இரண்டு பட்டர்கள் தவிர்த்து மற்றவர்கள் வரிசைப்படி ஒப்பமிட்டுள்ளனர்.
சாமந்தனாரின் திருநக்ஷ்த்ர நாளன்று திருவரங்குளச் சிவாலயத்தில்
நிறுவப்பட்ட அரசகண்டராமன் சந்திக்குரிய செலவிற்காகக் கவிநாட்டுக்
குளத்தூரின் வரித்தொகை வழங்கப்படுவதாகக் கூறப்படும் கல்வெட்டில்
{IPS:428} தென்கவிநாட்டாராக,..
1.முடிகொண்டசோழத் தென்கவிநாட்டு வேளான்
2.செம்பியன் தென்கவிநாட்டுக்கோன்
3.குலோத்துங்கசோழ வேளான்
4.மும்முடிச்சோழ வல்லநாட்டு வேளான்
5.அரவன் வேளான்
6.வில்லவராயன்
7.பெரியரசன்
8.வேளான் பெரியான்
9.அரவன் இடங்கொண்டான்
10.பிள்ளையான் பெரியான்
11.வேளான் தேவன்
12.மும்முடிச்சோழ தென்கவிநாட்டு வேளான்
13.ஸ்ரீராமதேவன் முத்தன் சீருடையான்
14.இராச சுந்தரன்
15. வேளான் மன்றன்
16.திருவாயக்குலநாதன்
17.திருவரங்கமாணி
18.நாட்டுக்கணக்கு திருவப்பூருடையான்
-ஆகியோர் அரவன் பட்டன் நீங்கலாக ஒப்பமிட்டுள்ளனர்.
மேற்கூறப்பட்ட மூன்று கல்வெட்டுகளும் 13ம்
நூற்றாண்டிற்குரியனவாகும். இவற்றில் அரையர் ஓரிருவரே காணப்பட, வேளான்கள்
அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். 14ம் நூற்றாண்டிற்கான
கல்வெட்டுகளில் {IPS:590-691} தென்கவிநாட்டாரின் செயல்பாடுகள்
கூறப்படுகிறது. இவற்றில் வேளான்-அரையர் எண்ணிக்கையில் காணப்படும் இடைவெளி
குறைந்து காணப்படுகிறது. மேலும் வேளான்களும் அரையர் எனச் சுட்டப்பெறுவதை
{IPS: 371, அரையன் வேளான்} கவனத்தில் கொண்டால் அரையரின் ஆதிக்கம்
வலுவடைந்ததை உணரலாம். "தென்சிறுவாயில் நாட்டு வேளான் நல்லூருடையான்
குருகுலத்தரையன்" {IPS:636} -எனும் குறிப்பு உடையான்- வேளான்-அரையன்
தொடர்பைத் தெளிவாக உணர்த்தும். கவிநாட்டுக் கள்ளர்பால் {கள்ளருக்குரியது
அல்லது கள்ளரைச் சார்ந்தது} எனும் குறிப்பு தென்கவிர்நாட்டில் கள்ளர்
சமூகத்தவரே அரையர்களாகக் காணப்படுகின்றனர் என்பதைச் சுட்டி நிற்கும்.
இடையரின் பிரதிநிதிகளாக "கோன்" எனும் பின்னொட்டுடன் ஓரிருவர்
நாட்டார்களாக இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது.
அடுத்ததாக நாட்டார் பற்றியும் நாடுகள் பற்றியும், இத்துடன் செய்த மூன்று
பதிவுகளின் ஆய்வையும் காண்போம்.
Reference..
1. IPS: 155, 371, 428, 590, 691
2.புதுக்கோட்டை 1600 வரை, {Dr. Manickam}
Thanks to,
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டுப்படங்கள்}
நன்றி!,
அன்பன்: கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg

Thevan

unread,
Dec 8, 2019, 9:48:57 PM12/8/19
to panbudan, minTamil
நாட்டார் {ஆய்வுத்தொகுப்பு}
•-•-•-•-•-•
•".....கிராமங்களோமும்"......•
~~~~~~~~~~~~~~~~~~~
புதுக்கோட்டைப் பகுதியின் நாட்டார் அமைப்பைத் தொகுத்துக் கூறும் முன்பாக
இப்பகுதிக் கல்வெட்டுகள் சிலவற்றில், நாட்டாருடன் நகரங்களும்,
கிராமங்களும் அல்லது பிரமதேயங்களும் {..."நாடுகளோம் நகரங்களோமும்
கிராமங்களோம பிரம்மதேயமுங்களோம்"..} என தனியே கூறப்படுவதற்கு விளக்கம்
என்னவென்று பார்ப்போம். முதலில் "கிராமங்களோம்" என வருவதைக் கவனிப்போம்,
இன்றைய நாளில், கிராமம் என வரும் சொல் ஊர்க்குடியிருப்பைக் காட்டும்.
அவ்வாறாயின் ஊர்க்குடியிருப்பின் பிரதிநிதிகளே , அதாவது 'ஊரவரே'
நாட்டாராக இடம் பெற்றனர் எனும் கருத்தினைக் கவனத்தில் கொண்டால், கிராமம்
அல்லது ஊரின் பிரதிநிதிகள் நாட்டார் அவையில் இடம்பெறவில்லை என்று கூற
வேண்டியமை வரும். எனவே கிராமம் எனும் சொல்லிற்கு இன்று வழங்கப்படும் சொல்
இங்கு பொருத்தமற்றதாகும். பிரமதேயக் குடியிருப்புகள் நாட்டார் அவையின்
ஒருமித்த இயல்பிற்குப் பொருத்தமற்ற நிலையில், பிராமணர்களின் பிரதிநிதிகள்
நாட்டார் அவையில் தனியே இடம்பெற்றனர் எனக் கொள்வது ஏற்கத்தக்கது என்றால்,
இங்கு கூறப்படும் கிராமங்கள் பிரமதேயக்குடியிருப்புகளே எனக் கொள்வதில்
தவறில்லை!, கிராமம் எனும் சொல்லிற்குப் பதிலாக பிரமதேயம் என கூறப்படுவது
{IPS: 196 "அகர பிரம்மதேயங்களும்" } கிராமங்கள் பிரமதேயங்களே எனும்
கருத்தை உறுதிசெய்யும்.
•......"நகரங்களொமும்"....•
~~~~~~~~~~~~~~~~~
மேற்கண்ட தலைப்பிற்குள் உள் நுழையும் முன்பு, வணிகர்கள் பற்றிய ஒரு
விரிவான பார்வையைப் பார்ப்போம். வணிகருக்குரிய அறுவகைத் தொழில்களாக,
ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல்,வணிகம் -ஆகியன தொல்காப்பியப்
பொருளுரையில் கூறப்படுகின்றன. வடவரின் சமூகத்தில் வைஸ்ய மற்றும் சூத்திர
குழுக்கள் வேளாண் தொழிலை மேற்கொண்டன எனவும், வைஸ்யருள் வசதி படைத்தோரே
வணிகத்திலும் ஈடுபட்டனர் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் பண்டைய
சான்றுகளின் படி, மருத நில மாந்தருக்குத் தேவையான உப்பு, நெய்தல் நிலத்து
உமணரால் கொணர்ந்து அளிக்கப்பட்டது. மருத நில உற்பத்திப் பொருட்களாகிய
நெல் முதலானவற்றை பிறபகுதி மக்கள் விரும்பியமையால் பிறபகுதி மக்களும்
மருதநிலப்பகுதியில் குவிந்து பொருட்களைப் பறிமாறிக்கொண்டனர். இவ்விதப்
பரிமாற்றங்கள் பெருமளவில் நடைபெறும் இடங்கள் வணிக மையங்களாகின. எனவே
ஓரிடத்தில் கிட்டும் உற்பத்திப் பொருள் அல்லது அதன் அமைவிடம் வணிக
மையங்கள் உருவாகக் காரணமாகிற்று. தமிழகத்தைப் பொறுத்தவரை வைசியர் எனும்
குழு இங்கு ஒருபோதுமே காணப்படவில்லை எனினும், வேளாண் தொழிலை மேற்கொண்டேரே
வணிகத்திலும் ஈடுபட்டனர் எனலாம். அதாவது வணிகர் என்போர் வேளாண்
சமூகத்திற்கு அந்நியர் அல்லர். வணிகத்தை மேற்கொண்ட வெள்ளாளர், வெள்ளான்
செட்டார்{செட்டி} - வெள்ளாஞ் செட்டியார் எனவும், வணிகம் புரிந்த
பிராமணர் , 'பிரம்மச்செட்டி' எனவும் அறியப்பட்டனர். இங்கு செட்டி எனும்
பின்னொட்டுச் சொல் இன்றுள்ள செட்டியார் எனும் சமூகக் குழுவைக்
குறிக்காது. அது வணிகத்தில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும் குறிக்கும்.
'செட்டி' எனும் சொல்லிற்குரிய விளக்கம் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும்.
"சிரேஸ்டி" எனும் வடசொல்லின் தமிழ் வடிவமே 'செட்டி'யாகும். அச்
சொல்லிற்கு 'சிறப்புப்பெற்றவர்' என்பது பொருள்.{ Recent perspective of
early Indian history, New Delhi: Sangam Books - 1995, Romila Thapar.}
& { The culture and civilisation of Ancient india in historical
outline, New Delhi: vikas. - D.D.Kosambi} அதாவது வணிகத்தில்
ஈடுபட்டுச் செல்வநிலையினை எய்தியோர் {சிரேஸ்டி} செட்டி என அறியப்பட்டனர்.
இவர்களிலும் மேம்பட்டநிலையைப் பெற்றவர்கள், "மஹாசிரேஸ்டி" எனப்பட்டனர்.
இதன் தமிழ் வடிவமே கல்வெட்டுகளில் பயின்று வரும் "மாயிலட்டி" எனும்
சொல்லாகும். இவ்விதமாக, வணிகத்தில் ஈடுபட்ட அனைவரும் செட்டி என்கிற
சொல்லைப் பெற்றனர். புதுக்கோட்டைக் கல்வெட்டுகளில் பயின்று வரும்
"சிலைச்செட்டி" எனும் தொடர் திரு.ஹால் அவர்களின் கூற்றுப்படி
சிறப்புமிக்க{சிலை} வணிகரைக் குறிப்பதாகும்.வணிகத்தில் ஈடுபட பொருள்வளம்
வேண்டுமாகையால் திரு. ரொமிலா தாபார் குறிப்பிடுவது போன்று வேளாண்
தொழிலில் கிட்டிய பொருள்வளமே வணிகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்க
வாய்ப்புண்டு எனலாம்.
இன்றைய நாளில் செட்டியார் எனும் சமூகக் குழுவின்{ஜாதியின்} உட்பிரிவாக
நகரத்தார் கூறப்படுகின்றனர். ஆனால் இடைக்காலத்தில் இச்சொல் இரண்டுவிதமான
சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, நாட்டுப் பிரிவினுள் அடங்கிய
உள் வணிக மையமான நகரத்தின் பிரதிநிதிகள் நகரத்தார் எனச் சுட்டப்பட்டனர்.
இவர்கள் சாசனங்களில் தங்கள் செயல்பாடுகளை அறிவிக்கையில் "நகரத்தோம்" எனக்
கூறிக்கொண்டனர். மேலும் வணிகக் குழுக்களைக் குறிப்பதற்கும் நகரத்தார்
எனும் சொல் பயன்பட்டிருக்கிறது. அவைகள்,.
1. வணிகக் கிராம அல்லது மணிக்கிராம நகரத்தார் {அயல் வணிகம் செய்த பண்டைய குழு}
2. அஞ்சுவண்ண நகரத்தார் { ஹஞ்சமன எனும் அயல் வணிகர் குழு}
3.சாலிய நகரத்தார் { சாலியராகிய நெசவாளர் வணிகக் குழு}
4.வாணிய நகரத்தார் அல்லது சங்கரப்பாடி நகரத்தார் {எண்ணெய் வணிகர்}
5. அரவ நகரத்தார் { ஆந்திரப்பகுதியில் இயங்கிய தமிழ் வணிகக் குழு}
- முதலானவைகளாகும். - இன்றைய நாளில் நகரத்தார் என்று ஒரு சமூகத்தைக்
குறிக்கும் நடைமுறை உருவானது 16ம் நூற்றாண்டில் எனக் கருத இயலுகிறது.
இதற்குச் சான்றாக, கி.பி.1544 க்குரிய திருவரங்குளம் கல்வெட்டில் {IPS:
855} கூறப்படும் "ஒன்பது நகரத்தார்" மற்றும், கி.பி.1504-க்குரிய
கோட்டையூர்க் கல்வெட்டில் {IPS: 838} இடம்பெறும் "கோட்டையூர்ச்
செட்டிகளில் பெற்ற பெருமாள் நகரத்தார்" எனும் குறிப்புகளைக்
குறிப்பிடலாம்.
வேளாண் குடியிருப்புகளே வணிக மையங்களாக செயல்பட்டன எனும் அடிப்படையில்
வேளாண்குடிகளே வணிகராயினர் என்பதுதானே உண்மை! -அவ்வாறாயின், நாட்டார்
அவையில் நகரத்தார் இடம்பெறாது, கிராமம் அல்லது பிரமதேயம் போன்று தனியே
இடம் பெறுவதற்கான காரணத்தை நாம் அறியவேண்டும். வேளாண் குடியிருப்புகளே
நகர மையங்களாக மாற்றம் பெற்றிருப்பினும் ஊர்க்குடியிருப்புகளில் நிலவிய
ஒருமித்த இயல்பை நகர மையங்கள் பெறவில்லை. பிற குடியிருப்புகளின்
'உடையான்'களும் நகர மையங்களில் ஊரவராக இடம் பெற்றிருந்தனர். {IPS: 158,
...."இனகரத்து வியாபாரி பரம்பையூருடையான் } மேலும், அயல் வணிகர்களும்
இங்கே தொடர்புற்றிருந்தமையால் நகரத்து பகுதிகளில் ஒரு பன்முகத்தன்மை ,
அதாவது பலதரப்பட்ட மக்களும் வாழும் சூழல் நிலவியதாகக் கருத முடிகிறது.
நாட்டார்கள், இவ்விதமான பன்முகத் தன்மை கொண்ட நகரத்தாரைத் தம்முடன்
இணைத்துக் கொள்ளாமல் தனிக் குழுவாகவே கருதியுள்ளமை வியப்பளிக்கும்
நிகழ்வாகத் தோன்றவில்லை. கோனாட்டில் வந்திறங்கும் வெற்றிலைத் தரகு பெறும்
உரிமையை இரண்டு வணிகருக்கு வழங்கிய நாட்டாரின் செயல்பாடு {IPS: 125 }
இனக்குழு அவையின் {Tribal Assembly} செயல்பாடு போன்றது எனும் ஹாலின்
கருத்து ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது.{ Trade and state craft in the
age of colas} நகரத்தார் தனிக் குழுவாக நாட்டார் அவையுடன் இணைந்து
செயல்பட்டிருப்பினும் நகரத்தாராக ஒப்பமிட்டுள்ளோரை இனங் காண்பது
கடினமானதாகத் தோன்றுகிறது. திருமயத்தில் கூடிய நாட்டார் அவையின்
பெருங்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சோழபாண்டியச் செட்டியை {IPS: 341}
மட்டுமே நகரத்தாரின் பிரதிநிதி என உறுதியாகக் கூறலாம்.
•...."நாடோமும்"...•
~~~~~~~~~~~~~
புதுக்கோட்டைப் பகுதியின் கோனாடு-கானாடு-தென்கவிநாடு ஆகிய நாடுகளின்
நாட்டாராகச் செயல்பட்டோர் குறித்துப் பின்வரும் கருத்துக்களைக் கூறலாம்.
முதலாவதாக, ஊர் மட்டத்தில் அதிகார வர்க்கமாகக் காணப்படும் 'உடையான்'
எனும் அடிப்படைத் தகுதியைப் பெற்ற வேளான்களும் அரையர்களுமே நாட்டவராகச்
செயல்பட்டுள்ளனர். இருப்பினும் 13ம் நூற்றாண்டை ஒப்புநோக்க, 14ம்
நூற்றாண்டில் அரையர்களின் பிடி நாட்டார் அவையில் வலுவாக இறுகுகிறது.
மேலும் வல்லாண்மை பெற்ற சமூகத்தவரான கள்ளரும் மறவருமே அரையர்களாகக்
காணப்பட்ட நிலையில், இச்சமூகத்தவரே நாட்டாராக, நாட்டளவில் அதிகார
வர்க்கமாகக் காணப்படுகின்றனர். பிற சமூகக் குழுக்களில் இடையர் மக்களின்
ஓரிரு பிரதிநிதிகளை மட்டுமே இனங்காண இயலுகிறது.
அடுத்ததாக, வளநாட்டளவிலேயே நாட்டாரின் செயல்பாடுகள் காணப்படுகிறது.
கோனாடு-கானாடு தனி வளநாடுகளாக அமைக்கப்பட்ட நிலையில் இவற்றிற்குரிய
நாட்டாரும் தனியாகவே செயல்பட்டுள்ளனர். கோனாட்டின் உட்பிரிவாகிய தென்
கோனாட்டின் நாட்டார் கூறப்பட்டிருப்பினும்{IPS: 447}, ஒல்லையூர்க்
கூற்றத்திற்குரிய கோனாட்டின் நாட்டவரே இங்கு பங்கு பெற்றனர்
எனலாம்.வளநாட்டளவிலேயே நாட்டார் அவையின் செயல்பாடு நடைமுறைக்கு மாறாக,
இருவளநாடுகளின் உட்பிரிவுகளான இரு நாடுகளின் ஊரவர்கள் இணைந்து
செயல்பட்டுள்ள நிகழ்வும் உண்டு. இதைக் குறிப்பிடும் மூன்றாம் ராஜராஜனின்
கீரனூர்க் கல்வெட்டு{IPS:198} புதுக்கோட்டைப் பகுதியின் நாட்டார் அவையின்
தன்மையை முழுமையாக அறிய உதவிடும்.
கோனாட்டு உறத்தூர்க் கூற்றத்தின் ஒன்பது ஊரவரும், நான்கு அரையர்களும்,
ஜெயசிங்க குலகால வளநாட்டின் சிறுவாயில் நாட்டின் பத்து ஊரவரும், அரையர்
இருவரும் தம் குடியிருப்புகளிலுள்ள கீரனூர்ச் சிவாலயத்திற்குரிய
நிலங்களுக்கு இறையிலிச் சலுகை வழங்கியமை இக்கல்வெட்டில் கூறப்படுகிறது
{IPS: 198} "இன்னிலத்தால் வந்தகடமை முதலிய எப்பேர்ப்பட்டவையும் இரண்டு
நாட்டுக்கும் பாரமாகும்" - என {நாட்டவரே ஏற்றுக் கொள்வதாக} கல்வெட்டில்
கூறப்படுகிறது. உறத்தூர்க் கூற்றத்து நான்கு ஊரவரோடும் வடசிறுவாயில்
நாட்டு இரண்டு ஊரவரோடும் இணைத்துக் கூறப்படும் அரையர் அறுவரும் {எ.கா:
...."விருதராயக் குறிச்சி ஊரோமும் வருதராயனும்"....} அவ்வூர்களின்
ஆட்சிப் பொறுப்பிற்குரியவர் எனலாம். "வடசிறுவாயில் நாட்டுக் கீரனூர்
ஆளும் அரையன்" - எனும் குறிப்பு இதை உறுதிபடுத்தும்.
இக்கல்வெட்டில், 19 ஊரவர்கள் கலந்து கொண்டிருப்பினும், நாட்டவரின் முடிவை
இருநாட்டுப் பிரிவுகளின் அரையர்களே அறிவிக்கின்றனர். எவரெவர் எனில்,..
1. புதுவயல் கொடும்பையராயன்
2.முடிகொண்ட நாடாழ்வான்
3.விசையராயன்
4.குருகுலராயன்
5.வீரபத்திர நாடாழ்வான்
6.கீழைப்புதுவயல் விக்கிரம முத்தரையன்
7.ஈழத்தரையன்
8.சேரமான்தோழன்
9.கீழ்க்கோனாட்டுத் திருவரங்க நாடாழ்வான்
10. சேனைபரிபாலன நாடாழ்வான்
11.விருதராயக்குறிச்சியில் விருதராயன்
12.சிறியான் எதிரிலிப் பெருமாளான நாட்டரையன்
13.மருதாந்தப்பேரரையன்
14.அரையன் நாயன்
15.கடம்பன் நாயன்
16. குஞ்சிர முத்தரையன்
17.மொன்னைக் காடன்
18.கொன்னதேவனான விருதராயன்
19.கீரனூர் ஆளும் அரையன்
20.விசையபால நாடாழ்வான்
21.ஆகமல நாடாழ்வான்
22.ஐந்நூற்றுவப்பேரரையன்
23.தொண்டைமா நாடாழ்வான்
24.இனசாக்கியரையன்
25.எதிரிலிச் சோழ நாடாழ்வான்
26.கொல்லத்தரையன்
27.மாணிக்கராயன்
28.ஜெயங்கொண்ட நாடாழ்வான்
29.கிடாரங்கொண்ட பேரரையன்
30.காங்கய நாடாழ்வான்
31.செம்பியன் நாடாழ்வான்
32.உப்பிலிக்குடியில் ஈழஙாகொண்ட நாடாழ்வான்
33. மங்களராயன்
34.கோனாட்டரையன்
35.வீரசிங்க நாடாழ்வான்
36.சிறுபாலூர் வாளுவராயன்
37.பெருங்களூர் நாடாழ்வான்
38.இளஞ்சையூர் நாஞ்சில் முத்தரையன்
39. கற்குடி நாடாழ்வான்
40.ஆனையூர் நாடாழ்வான்
41.இரைங்குடி நாடாழ்வான்
42.குமாரமங்கலத்து கண்ணவதரையன்
-ஆகியோர்கள் ஒப்பமிட்டுள்ளனர். இறுதியாக "இக்கல்வெட்டுப்
பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் இரண்டுநாட்டு அரையர்களோம்" - எனக்
கூறப்படுகிறது. ஆகவே, ஊர் அளவில் காணப்பட்ட அரையர்களின் ஆதிக்கப்பிடி
நாட்டார் அவையிலும் இறுகியது என நான் கூறிய கருத்தை இக்கல்வெட்டுச்
செய்தியும் உறுதி செய்கிறது.
கேரளசிங்க வளநாட்டு உஞ்சனைப் பற்றில் தனியொரு நாட்டாராக கள்ளர் ஒருவர்
செயல்பட்டிருப்பனும் இங்கு நாட்டார் அவை என்பது தனியொரு நபருக்கானதல்ல
என்பதைக் கடந்து காலத்தால் அது தனிநபர்களுடையதாகியதை உணர முடிகிறது.
ஊர் அமைப்பு குறித்தும் இக்கல்வெட்டில் ஒரு புதிய செய்தி கூறப்படுகிறது.
வடசிறுவாயில் நாட்டின் 10 குடியிருப்புகளின் ஊரவரைக் குறிப்பிடுகையில்
"குமாரமங்கலத்து இரண்டூராய் இசைந்த ஊரோம்" - 'அமண்குடி{சமணர்
குடியிருப்பு? } இரண்டூராய் இசைந்த ஊரோம்' - 'இறைங்குடி இரண்டூராய்
இசைந்த ஊரோம்'- என மூன்று குடியிருப்புகளில் இரண்டு ஊர் அவைகள்
செயல்பட்டுள்ள செய்தி கிடைக்கப் பெறுகிறது. பிற பகுதி கல்வெட்டுகளில்
பிராமணக் குடியிருப்பின் 'ஸபை'யாரும், ஊர்க் குடியிருப்பின் ஊரவரும்
இணைந்து செயல்பட்டுள்ளனர்.இதே போன்று இந்து ஆலயங்களின்
தேவதானக்குடியிருப்பும், சமணரின் பள்ளிச் சந்தக் குடியிருப்பும் இணைந்து
செயல்பட்டுள்ளன. கொங்கு நாட்டின் வேளாண் குடிகளான வெள்ளாளக் கவுண்டரும்,
வேட்டுவக் கவுண்டரும் முறையே, வெள்ளானூர்- வேட்டவூர் என ஊர் அளவிலும்,
வெள்ளாநாடு - பூலுவநாடு என , நாட்டளவிலும் தனித்தனி அவைகளாக இணைந்து
செயல்பட்டுள்ளனர். { கொங்குநாடு- மக்கள் வெளியீடு- Dr.மாணிக்கம்} ஆக
இங்கு சுட்டப்படும் இரண்டு ஊர் அவைகள் சமய அடிப்படையிலோ அல்லது
கள்ளர்-மறவர் எனும் சமூகக் குழுக்களின் அடிப்படையிலோ தனித்தனியாகச்
செயல்பட்டன எனக்கருதலாம்.
Reference..
1. IPS: 196, 125, 341, 447, 198, 855, 838, 158, 125, 341
2. Recent perspective of early Indian history, - 1995, Romila Thapar.
3. The culture and civilisation of Ancient india in historical
outline, - D.D.Kosambi
4. கொங்கு நாடு - {மக்கள் பதிப்பகம், Dr..Manickam}
5. புதுக்கோட்டை 1600 வரை,
6. Trade and state craft in the age of colas {Dr. R.Kenneth Hall}
Thanks to,
AHRC பண்டைய வரலாற்றாய்வு மையம்.
{கல்வெட்டு படங்கள்}
நன்றி!.
1.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg
10.jpg

Thevan

unread,
Dec 12, 2019, 10:34:28 PM12/12/19
to panbudan, minTamil
வேள் - வேளிர்-வேளான் [ஒரு ஆய்வு]
•-----•-----•------•------•‌‌‌‌------•-----•
"வேளான்" - எனும் சொல் பலரால் பொதுவாக வேளாண் குடியினைரைக் குறிப்பதாகக்
கொள்ளப்படுகிறது. வேளான்-வேளாளன் எனும் சொற்களின் ஒற்றுமையைக் கருத்திற்
கொண்டு வேளான்களே வேளாளர் என்று கருதுவர். ஆனால் ..,வெள்ளாளர் என
வழங்கும் இன்றைய சொல்லாட்சியின் ஆதிவடிவம் வேளாளன் என்பதாகும் என்பதை
பரிபாடல் கூறுகிறது,{பரிபாடல்:20}

[ "மத்திகை மாலையா மோதி, அவையத்துத்

தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட

விடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,

தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,

நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?‘ என்னாமுன்-- 65"

- பரிபாடல்: 20]

-அதே பரிபாடலில் வேள் {செவ்வேள்-நெடுவேள்-வெல்வேள்}என்று குறிஞ்சிநிலத்
தெய்வம் முருகனையும், காமக்கடவுள் மன்மதனையும் {கருவேள்} குறிக்கிறது. .
எனவே தலைமையின் உயர்தரத்தைக்குறிக்கும் "வேள்"-எனும் சொல் வெள்ளாளரையே
குறிக்கும் எனக் கருதுவது பொருத்தமற்றதாகும்.

பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் வேளான் அல்லது வேளிர் எனும் சொல் ஒரு
இனக்குழுவின் தலைவர்களுக்கு சூட்டப்பெற்ற சொல்லாகும்.

'வேள்' எனும் வினைச்சொல் விரும்புதல் என விளக்கம் பெறும். இதுவே
பெயர்ச்சொல்லாகும்போது, விரும்பப்படும் நபர் என்ற பொருள்படும். இந்த
சொல்லிற்கு தமிழ் அகராதி அளித்துள்ள விளக்கங்களுள் ஒன்று, "சிறந்த
ஆண்மகன்" என்பதாகும். வேள் அதாவது வேளிர் எனும் சொல் வெண்மை அல்லது
ஒளிபொருந்திய எனவும் பொருள்படும். புறநானூறில் {24} வரும்,
"தொன்முதுவேளிர்" என்பதை வைத்து வேளிர் என்பார் தொன்மையான குடியினர்
என்பதை அறியலாம். இவர்கள் சமுதாய அமைப்பில் வேந்தருக்கு அடுத்த
படிநிலையில் வைக்கப்பட்டனர் என்பதை "வேந்தரும் வேளிரும்" எனும் தொடர்
{பதி: 30, 49, 75, 88} உணர்த்தும்.

வேதகாலத்தில், இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்த நிலையில், இனக்குழுக்களின்
மூத்த கிளையினர் {Senior lineage} 'ராஜன்ய' எனப்பட்டனர்.
இக்குழுவிலிருந்தே இனக்குழுவின் தலைவன் 'ராஜா' தேர்வாகிறான். ராஜா எனும்
இச்சொல் 'ரஜ்' {ஒளிபொருந்திய} எனும் வேர்ச்சொல்லிலிருந்து பெறப்படுகிறது.
{Romila Thapar: / From Lineage to state O.U.P} பிற்றை நாட்களில், அரசு
உருவாக்கம் கருக்கொள்கிறது. புதிதாகத் தோன்றிய அரசுகள் இனக்குழுக்களை
ஒவ்வொன்றாக வெற்றி கொண்டு ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்கின்றன. அரசு
உருவாக்கத்தின் உச்சத்தை மௌரியப்பேரரசின் வடிவில் காணலாம். இப்பேரரசின்
சூத்ரதாரியான கௌடில்யர் தாம் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இனக்குழுக்களை
அழிப்பதற்கென்றே உள்ளிருந்தே அழித்தல் {boring from within} எனும்
உத்தியைக் குறிப்பிடுகிறார். { D.D.Kosambi/ The Culture and
Civilisation of Ancient india in historical outline }

மேற்கூறிய வடபுலச் சூழலின் பின்னணியில் வேளிர் குறித்த ஆய்வைத் தொடரலாம்.
ரஜ்-வேள் எனும் சொற்களுக்குரிய விளக்கத்தை ஒப்புநோக்கி வடபுலத்
தலைவர்களின் இனக்குழுத்தலைவர்களான ராஜா எனும் சொல் போன்று தமிழகத்தின்
இனக்குழுத் தலைவரைச் சுட்டும் வேளிர் எனும் சொல்லைக் கருதலாம்.
வடபுலத்தில் அரசு உருவாக்கத்திற்குப் பிறகு ராஜா எனும் சொல்லே அரசனைக்
குறித்தது. ஆனால் தமிழகத்தில் இக்குழுத் தலைவர்கள் வேளிர் என்றே அறியப்பட
, அரசனைச் சுட்டுவதற்கு வேந்தன் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரு.சிவத்தம்பி அவர்களின் அரசு உருவாக்கம் குறித்த ஆய்வு இந்நிலையினைத
தெளிவாக எடுத்தரைக்கும். {K.Sivathamby/ Studies in Ancient Tamil
Society}

பழந்தமிழ்ப்பாக்களில் ஆட்சியதிகாரத்தைக் குறிப்பிடும் இறை- கோ- கிழான்-
மன்னன்-வேந்தன்- ஆகியோர் பல இனக்குழுக்கள் கொண்ட நிலப்பகுதிக்கு
உரியவராவார்கள். தமிழ்ச் சமூகத்தின் புதிய வரவான "வம்ப வேந்தர்கள்"
வடபுலத்தைப் போன்று இனக்குழுக்களை அழித்துத் தம் ஆதிக்கத்தை விரிவாக்க
முனைந்தனர்.இதனால் இக்குழுக்களின் தலைவர்களான வேளிர்களில் பலர் பெரு
வேந்தரின் ஏவலர்களாயினர். நாங்கூர்வேள், வேள் ஆவி, போன்றோர் பெரு
வேந்தர்களுக்கு தம் புத்திரிகளை மணம் செய்வித்தனர். மென்புலப் பகுதியில்
வேந்தர்கள் ஆதிக்கம் பெற, வன்புலப்பகுதியை நோக்கி வேளிர் நகர்ந்தனர்.
மேலும் வன்புலப்பகுதியில்தான் இனக்குழுச் சமுதாயம் இறுக்கமாக காணப்பட்டு
அங்கு வேளிரின் ஆட்சி தொடர்ந்தது. தமக்கு அடிபணியாத அல்லது தமக்கு
மகற்கொடை மறுத்த வேளிர்தலைவர்களை அகற்றும் முயற்சியில் பெருவேந்தர்கள்
முனைப்புடன் ஈடுபட்டனர். புதுக்கோட்டைப் பகுதியான கோனாட்டின்
தென்மேற்கெல்லைக்கு அருகாமையிலுள்ள பிரான்மலை என அறியப்படும்
பாரிவள்ளலின் பரம்புமலை மூவேந்தரின் முற்றுகைக்கு ஆளாகியது. வேள்
எவ்விக்கு உரியதான "முத்தூரு" {முத்தூற்றுக் கூற்றம்} "மிழலை" {மிழலைக்
கூற்றம்} மற்றும் வைகையாற்றின் கரையிலிருந்த அகுதைவேளின் அரசு ஆகியவை
பாண்டியரால் அகப்படுத்தப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

வன்புலத்தில் இனக்குழுச் சமூகத்தின் சிறப்பியல்புகளான பகுத்துண்ணல், கொடை
வழங்கல் ஆகியன தொடர்ந்து காணப்பட்டதால் அவை புலவர்களின்
பாராட்டிற்குரியதாயின. {புறம்: 335} இனக்குழுத் தலைவர்களான வேளிர்கள்
புலவரை மதித்துக் கொடையளித்த செயலால் அவர்கள் பாக்களில் புகழப்பட்டனர்.
இத்தகைய புகழைப் பெறமுடியாத வேந்தர்கள் பாரியின் மீது பொறமையால் போர்
தொடுத்தனர். தொல்குடியினராகத் தம்மைக் கருதிய வேளிர் வேந்தருக்கு
மகற்கொடை மறுத்ததில் வியப்பேதுமில்லை!, கூத்தாடிகள் போல வேடம் தரித்து
வந்தால் பாரியின் பரம்பைப் பெறலாம் எனும் கபிலரின் எள்ளல் மொழி
'உள்ளிருந்தே அழித்தல்' எனும் அர்த்தசாஸ்திர உத்தியை நினைவு கூர்வதாக
உள்ளது.

மேற்கண்ட கருத்துக்களிலிருந்து பெறப்படும் செய்திகளாவன, தொன்முதுவேளிர்
இனக்குழுக்களின் தலைவராவார். மென்புலப்பகுதியின் செல்வ வளம் காரணமாக,
இப்பகுதியில் இனக்குழுச் சமூகம் சிதைவடைந்து அரசுச் சமுதாயம் தோற்றம்
பெறுகிறது. இப்பகுதியின் இனக்குழுத் தலைவர்களான வேளிர்கள், வேந்தர் எனும்
பெயரைப் பெறுகின்றனர். புதிதாகத் தோன்றிய வம்ப வேந்தர்கள் ஆதிக்க
விரிவாக்கத்தின் பொருட்டு இனக்குழுச் சமூகத் தலைவர்களை வென்று
வேளிர்களைத் தமது ஏவலராக்கினர். எதிர்ப்போரை அழிக்கின்றனர். இருப்பினும்
வன்புலப் பகுதியில் வேளிரின் ஆதிக்கம் தொடர்ந்தது. சமுதாய அமைப்பில்
வேந்தருக்கு அடுத்த படிநிலையில் வேளிர்கள் கருதப்பட்டமையால் "வேந்தரும்
வேளிரும்" எனும் சொல்லாட்சி தோன்றியிருக்க வேண்டும். வரலாற்றுத் தொடக்க
காலச் சமூகம் சமனற்ற, மாற்றமுறும் இயல்பைக் கொண்டது எனும் கருத்தைக்
கவனத்தில் கொண்டால், அரசு உருவாக்கத்தின் படிநிலை வளரச்சியில் வேளிர்
எனும் சமூகத்தரம் {Status} வேந்தருக்கு அடுத்த நிலைக்குரியது எனத்
தெளியலாம். இடைக்காலச் சமுதாயத்திலும் "வேள்" என்பது சமூகத்தரத்தைக்
குறிப்பிடும் சொல்லாகக் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேளான்-எனும் சொல்லை இடைக்காலத்தில் வேளிராகிய இருங்கோவேள்களும்
பெற்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, குடுமியான்மலைக் கல்வெட்டில் {IPS:
255, ..."பிராந்தகன் குஞ்சிரமல்லனான வீரசோழ இளங்கோ வேளா னேன்"....}
சுட்டப்படும் பிராந்தகன் குஞ்சிரமல்லனான இருங்கோவேளானைக் குறிப்பிடலாம்.
வேள்-வேளிர்-வேளான் தொடர்பைக் கவனத்தில் கொண்டால் பண்டைய வேளிர் எனும்
சொல்லே வேளானாகியது எனலாம். பண்டு ஆட்சியதிகாரத்தைக் குறிப்பிட்ட வேளான்
எனும் சொல் இடைக்காலத்தில் சமூகத்தரத்தைச் சுட்டும் விருதுப்பெயராக
மாற்றம்பெற்றிருக்கிறது. முதலாம் ஆதித்தனின் தில்லைத்தானம் கல்வெட்டில் {
286 of 1911} சோழனும் சேரனும் இணைந்து விக்கியண்ணன் இனும்
படைத்தலைவனுக்கு "செம்பியன் தமிழ்வேள்" எனும் விருதுப்பெயரும், விருதுச்
சின்னங்களும் வழங்கப்படும் செய்தி கூறப்படுவதை ஈண்டு கவனத்தில் கொள்ள
வேண்டும். "தென்கவிநாட்டு வேளான் அழகனான செம்பியன் வேளிர்" எனும்
திருவெப்பூர் கல்வெட்டுச் செய்தி {IPS: 475} வேளிர்- வேளான் தொடர்பைப்
புலப்படுத்தும். எனவே பண்டைய தமிழ்ச் சொல்லான வேளிர் இடைக்காலத்தில்,
சமூகத்தரத்தைக் {Social status} குறிக்கப் பயன்பட்டது என்று தெளியலாம்.
ஆய்வாளர்களில் பலர் வேளான்கள் யாவரும் வெள்ளாளர் எனக் கூறுவதைத்
தவிர்த்து, உயர்தரம் பெற்ற வெள்ளாளரும் வேளான் எனும் விருதுப்பெயரைப்
பெற்றனர் என்றே கூற முற்படவேண்டும்.

வேளான்களுள்ளும் படிநிலைகள் உள்ளதை சாசனங்கள் மூலம் அறியமுடிகிறது.
ஊர்வேளான் என்பது முதல் படிநிலை!{ IPS: 386, ...."மேற்படியூரில் வேளான்
சொக்கநாயநயினார்க்கும்"...."சோலையர்க்கும்".... } , அடுத்ததாக, நாட்டு
வேளான், -பெரியநாட்டு வேளான்- மூவேந்தவேளான் என சமூகத்தரம் {promotions}
உயர்வடைகிறது. இதைக் காரையூர் வேளான்கள் குறித்த கல்வெட்டுகளால் {IPS:
229, 266, 399} அறிந்து தெளியலாம். காரையூர் என்பது புதுக்கோட்டைப்
பகுதியின் அதிகார மையங்களில் ஒன்று. இங்கே 12-13ம்
நூற்றாண்டுகளுக்குரியதான எட்டுக் கல்வெட்டுகளில் காரையூர் வேளான்களின்
செயல்பாடுகள் கூறப்படுகின்றன. இவர்களுள் முதலாமவன் 'செம்பியன் கானாட்டு
வேளான் {IPS: 229} ஆவான். அடுத்து வருபவன் காரையூர்த் தேவன் கிழவனான
சோழதிவாகர மூவேந்தவேளானாவான் {IPS: 266}

வேளான் எட்டியான செங்கதிர்ச் சோழ மூவேந்த வேளானும் அவனது தம்பி வேள்
சான்றான் ஆகியோரும் அரசுக்கு வரி செலுத்தாத நிலையில், வேள் சான்றானின்
நிலம் ஏலத்தில் விடப்படுகிறது. {IPS: 399} -15ம் நூற்றாண்டின் இரு
கல்வெட்டுகளில் {IPS: 703-715} காரையூர் வேளான் பாடிகாவல் பொறுப்பைப்
பிறரிடம் ஒப்படைத்த செய்திகள் கூறப்படுகின்றன. காரையூர்-
வெள்ளக்குடி-நாவற்குடி-கூடலூர்-புலவர் நாவற்குடி-இடையாத்தூர் ஆகிய
குடியிருப்புகள் இவனது அதிகாரத்திற்குட்பட்டவையெனவும், இவற்றிலிருந்து
கிடைக்கும் வருவாயில் பங்கும், தனக்குரிய அரசு சின்னங்கள் மற்றும்
விருத்தாவளிகளை பாடிகாப்போர்க்கு உரித்தாக்குவதாகவும் கூறப்படுகிறது.
தன்னைச் திருச்சிராப்பள்ளியுடையான் என ஒருநபர் கூறிக்கொள்வது
{IPS:705-755} திருச்சிராப்பள்ளியிலும் நில உடைமை பெற்றிருந்ததைக்
குறிக்கும். 16ம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் {IPS: 755-909} ஊரார்
சார்பாக காரையூர் வேளான் கம்மாளர்களுக்குச் சலுகை அளித்துள்ள செய்தி
கூறப்படுகிறது. {IPS:909,-"கம்மாளர்களை 'முகச் சவரம்' செய்யுமாறு
பணித்து, அவர்கள் மறுத்து ஊரை விட்டு செல்லுதலைத் தடுத்துச் சலுகை
அளித்தல்"}

மேற்கூறிய செய்திகளிலிருந்து காரையூர் வேளான்கள் ஊர்வேளான் எனும்
நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, கோனாட்டு வேளான்- எட்டி- மூவேந்த
வேளான்- எனும் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்வு பெற்றுள்ளனர்.இவ்வாறாக
ஊர்வேளானிலிருந்து மூவேந்தவேளான் மரத்திற்கு உயர்ந்து சிறிய அரசு அளவில்
இயங்கியுள்ளனர்.மேலும் உயர் அரசு அலுவலர்கள் நிலையிலும் மூவேந்தவேளான்
எனப்பட்டோர் பணியாற்றியுள்ளனர். இந்த வேளான் எனும் தகுதியைப்
பெறவேண்டுமெனில் அவர்கள் உடையான் எனும் தகுதியைப் பெறவேண்டும். அதை
அடுத்தடுத்த பதிவுகளில் விளக்குகிறேன்.

Reference

1.பரிபாடல் மூலமும் உரையும் {புலியூர் கேசிகன்}

2. புறநானூறு : 24-355

3.பதிற்றுப் பத்து : 30, 49, 75, 88.

4. From Lineage to state O.U.P. { Romila Thapar}

5. The Culture and Civilisation of Ancient india in historical outline
{ D.D.Kosambi}

6. Studies in Ancient Tamil Society { K.Sivathamby}

7.IPS: - 475 - 229 - 266 - 399 - 705 - 755 - 909

8. ASI 286 of 1911

நன்றி!

அன்பன்: கி.ச. முனிராஜ்வாணாதிராயன்
1.jpg
10.jpg
11.jpg
12.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8.jpg
9.jpg

வேந்தன் அரசு

unread,
Dec 13, 2019, 8:04:16 AM12/13/19
to vallamai, panbudan, minTamil
<கூத்தாடிகள் போல வேடம் தரித்து
வந்தால் பாரியின் பரம்பைப் பெறலாம் எனும் கபிலரின் எள்ளல் மொழி
'உள்ளிருந்தே அழித்தல்' எனும் அர்த்தசாஸ்திர உத்தியை நினைவு கூர்வதாக
உள்ளது.> பாரி, இரவலருக்கு எல்லாமும் ஈவான் என்ற கருத்தில் சொல்லப்பட்டது

வெள்., 13 டிச., 2019, முற்பகல் 8:21 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Dec 16, 2019, 12:02:27 PM12/16/19
to panbudan, minTamil
மூவேந்தர்களுக்கு பின் தமிழகத்தின்
பெரும் நிலப்பகுதியை ஆண்ட தமிழ்மன்னர்கள்
இந்திர குலத்து தொண்டைமான்



16ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் முழுமையாக மூவேந்தர்களின் ஆட்சி
முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வழித்தோன்றலாகிய கள்ளர்குல
தொண்டைமான்கள் சூரைக்குடி,அறந்தாங்கி,பல்லவராயர்,அம்புநாட்டு
தொண்டைமான்கள் தனித்த அரசாக ஆட்சி செலுத்தி வந்தனர்.



அவர்களில் யானைகளை அடக்குவதில் வல்லமைமிக்க அம்பு நாட்டு தொண்டைமான்கள்
தங்களின் அசுர பலத்தால் வடக்கே விராலிமலை முதல் தெற்கே மீமிசல் கடற்கரை
வரையும். கிழக்கே அறந்தாங்கி முதல் மேற்கே மல்லாக்கோட்டை நாட்டு
எல்லைக்கோடு வரை பரந்து விரிந்து ஆட்சி செய்தனர்.



அம்பு நாட்டு தொண்டைமான்களின் ஒட்டுமொத்த ஆட்சி நிலப்பரப்பாக கிபி1930ல்
3053.59சதுர கிலோமீட்டர் பரப்பளவை தன்னகத்தே வைத்திருள்ளனர். இதுவே
மூவேந்தர்களுக்கு பின்பு தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரே
தமிழ் மன்னர்கள் தொண்டைமான்களே.....!



இந்திய ஒன்றியத்திற்காக தன்னுடைய நாட்டையே தானமாக அளித்த பாரி நாட்டு
வேந்தன் இந்திர வங்கிசத்து தொண்டைமானையே சாரும்.

ஆனால் தமிழகத்தின் ஜமீன்களும்,சமஸ்தானங்களும் 99% பேர், இன்றும் அரசு
உதவித் தொகையை பெற்று வருகின்றனர். பல கோவில்களின் உண்டியல் பணம் பல
சமஸ்தானங்களின் வயிறு வளர்க்க பெரும் உதவி செய்கிறது. ஆற்காடு நவாப்
இன்றும் சைரன் போட்ட காரில் அரசு உதவித்தொகையுடன் வலம் வருகிறார்.



ஆனால் தொண்டைமான் அரசர்களோ தங்களுடைய நிலம்,அரசு கஜானா,அரண்மனைகள்,படை
பரிவாரங்கள்,100க்கும் மேற்பட்ட அரசு கோவில் சொத்துக்கள் அனைத்தையும்
கிபி1948ல் இந்திய ஒன்றியத்திடம் அளித்து விட்டு எந்த ஒரு உதவித்தொகை
பெறாமல் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து இன்று சராசரி இந்திய குடிமக்களாக
வாழ்ந்து வருகிறார்கள்.

நிறை குடம் என்றும் தழும்பாது.....!



நன்றி
The hollow crown by asiatic society

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
1.jpg
2.jpg
3.jpg
4.jpg

Thevan

unread,
Dec 22, 2019, 6:06:24 PM12/22/19
to panbudan, minTamil
திருச்சி மலைக்கோட்டையும் கள்ளர்களும்:-

நாம் திருச்சி மலைக்கோட்டையை பார்க்கும்போதெல்லாம், அதன் பிரமாண்ட
அமைப்பும், மலைஉச்சியில் அமைந்துள்ள கோயிலும் நமக்கு பிரமிப்பை
ஏற்படுத்தும். ஆனால் வரலாறு அறிந்தவர்களுக்கு, மலையின் உச்சியை மிஞ்சும்
அளவிற்கு வீரம் மிகுந்த கள்ளர்கள் திருச்சி மலைக்கோட்டையில் செய்த
போர்கள் நினைவுத்துளிகளில் வந்து வியப்பை ஏற்படுத்தும். வரலாற்றில்
பதிவுசெய்யப்பட்ட வீரம் செறிந்த நிகழ்வுகள் சிலவற்றை காண்போம்.

பீஜப்பூர் சுல்தான்களை தோற்கடித்தல்:

கிபி 1660 ல் பீஜப்பூர் சுல்தான்களின் படைத்தளபதிகள் முல்லா மற்றும் ஷாஜி
என்பவர்கள் தலைமையில் துலுக்கர் படைகள் முதலில் நாயக்கர் வசம் இருந்த
தஞ்சையை தாக்கினர். தாக்குதலை சமாளிக்க இயலாத தஞ்சை நாயக்க மன்னர் ஒடி
மறைந்தார். தஞ்சையை சூரையாடிய பின் துலுக்கர்கள் திருச்சி கோட்டையை
முற்றுகையிட்டனர். திருச்சி நாயக்கர் படைதளபதி லிங்கம நாயக்கர் தலைமையில்
வலுவான படை இருந்ததால், கோட்டையை எளிதில் கைப்பற்ற இயலவில்லை. துலுக்கர்
படையின் ஒரு பிரிவினர் திருச்சியின் மற்ற பகுதிகளை சூரையாடி மக்களை
வதைக்க தொடங்கினர். இச்சமயத்தில் கள்ளர்கள் இரவு நேரங்களில்,எதிர்பாரா
தாக்குதல்களை பீஜப்பூர் படை மீது நடத்தினர். அவர்களின் முகாம்களை தாக்கி
சூரையாடி தவிடு பொடியாக்கினர். தாக்குதல்களை சமாளிக்க இயலாத பீஜப்பூர்
படை திருச்சியை விட்டு அகன்றனர். அங்கு மதம் பரப்ப வந்த போதகர்கள்
தங்களது குறிப்புகளில், தமிழகத்தின் மீது படையெடுத்த சுல்தான்கள்,
மன்னர்களின் படையைவிட, கள்ளர்களின் திடீர் தாக்குதல்களை கண்டே அஞ்சி
நடுங்கியதாக கூறியுள்ளனர்.

(Tamilaham in 17th century: page 73)

மராத்தியரை விரட்டியடித்த கள்ளர்ப்படை:-

கிபி 1682ல் ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் வசம் இருந்த திருச்சி
மலைக்கோட்டையை மராத்தியர் தாக்கினர் கைப்பற்றினர். தாக்குதலை சமாளிக்க
இயலாத நாயக்கர், புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை
நாடினார். அம்புநாட்டு கள்ளர்களுடன் தொண்டைமான் மலைக்கோட்டையை
முற்றுகையிட்டுள்ளார். கோட்டையின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு
இருந்ததால் கள்ளர்கள் பெரும் ஏணிகளை கொண்டும், கயிறுகளை பயன்படுத்தியும்
கோட்டை மதில்களை தாண்டி உள்ளே சென்று, தொடர்ந்து போரிட்டு மராத்தியர்களை
விரட்டியடித்தனர். இந்த உதவியால் மகிழ்ந்த திருச்சி நாயக்கர்,
அம்புநாட்டு கள்ளர்களை 12 மாவட்டங்களின் தலைமை காவல் அதிகாரிகளாக
நியமித்தனர். புதுக்கோட்டை தொண்டைமானுக்கு திருச்சியை பாதுகாக்கும் அரசு
காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.
(General history of pudukkottai state 1916 R Aiyar Page 121)

கர்நாடக நவாப்பை கருவறுத்தல் :-

கிபி 1741 ல், கர்நாடக நவாப் சந்தா சாகிப் வசமிருந்த திருச்சி கோட்டையை
மீட்க, புதுக்கோட்டை கள்ளர்களும் தொண்டைமானும் மராத்தியரோடு சேர்ந்து
நவாப்பை தாக்கினர். கள்ளர்களும், மராத்திய படையும் கூட்டணி அமைத்து
தாக்குதல் நடத்தி மலைக்கோட்டையை கைப்பற்றினர். கோட்டையை ஆக்ரமித்து
இருந்த சந்தா சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை தொண்டைமான்
வீரத்தை கண்டு வியந்த மராத்திய தளபதி வட்டா சிங் என்பவன், மன்னருக்கு
வஜ்ஜிருடு எனும் பட்டத்தை அளித்தான். இதன் பொருள் " தன்னிகரற்ற போர்வீரர்
" என பொருள்படும்.

(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 183 )

ஐதரதாபாத் நிசாம் படையை விரட்டியடித்த கள்ளர்கள்:

கிபி 1743 ல், ஐதராபாத் நிசாம் பெரும்படை கொண்டு தமிழகத்தை தாக்கினான்.
மதுரையும் நிசாமிடம் வீழ்ந்தது. திருச்சி கோட்டையை கைப்பற்ற தாக்குதல்
நடந்து வந்தது,அச்சமயம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்கள்
நிசாம் படையின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர். நிசாம்
படையின் முகாம்களை துவம்சம் செய்து ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும்
வண்டி மாடுகளை கவர்ந்து சென்றனர். நிசாம் படை இழந்ததை மீட்க கள்ளர்
நாட்டை தாக்கியது. ஆனால் அவர்களை நினைத்ததை போல கள்ளர்களை எளிதில்
வெல்லமுடியாததால் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நிசாம்
படை ஒடிவிட்டதாக அங்கு மதபோதனைகள் செய்து வந்த பாதர்கள் குறித்துள்ளனர்.

(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 184)(The
letter of madura mission to rome 1743)

மராத்திய படைகளை சூரையாடல்

கிபி 1745ல் நிசாம் வசமிருந்த திருச்சி கோட்டையை கைப்பற்ற மீண்டும்
மராத்திய படை திருச்சியை தாக்கியது. திருச்சியை தாக்கியது
மட்டுமில்லாமல், திருச்சி முதல் ஆவூர் வரையிலான பகுதிகளில் தாக்குதல்
நடத்தினர். அங்கிருந்த கிறிஸ்தவர்கள் தப்பி புதுக்கோட்டை கள்ளர்களிடம்
சரணடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பலிவாங்க கள்ளர்கள் திருச்சி கோட்டை
அருகே முகாமிட்டு இருந்த மராத்தியரை தாக்கினர். கிட்டதட்ட 3000 பேர்
கொண்ட மராத்தியரின் குதிரைப்படை கள்ளர்களால் சிதறடிக்கப்பட்டது. முகாமில்
இருந்த தளவாடங்கள் கள்ளர்களால் கவரப்பட்டது. தாக்குதலுக்கு மிஞ்சிய
மராத்திய குதிரைப்படை வீரர்கள் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு,
மாறுவேடங்களில் நடந்தே தஞ்சைக்கு சென்றதாக மதபோதகர்கள் தங்களது
குறிப்புகளில் எழுதியுள்ளனர்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 186)
(The letter of madura mission to rome 1746)

சந்தாசாகிப்போடு மற்றுமொரு போர்:

கிபி 1751ல் சந்தா சாகிப் மீண்டும் திருச்சியை கைப்பற்றினான். கர்நாடக
நவாபின் மற்றொரு பிரதிநிதியான முகமது அலியும், பிரிட்டீசாரும்
தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 400 பேர் கொண்ட
குதிரைப்படையும், 3000 கள்ளர்களை கொண்ட காலாட்படையும் அனுப்பி திருச்சி
கோட்டையை தாக்கி கைப்பற்றினார்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 189)

சந்தா சாகிப்பின் இறுதி நாள் :-

கிபி 1752ல் திருச்சியை இழந்த சந்தா சாகிப், ஆலம் கான் என்பவனிடம் உதவி
கோரினான். ஆலம் கான் என்பவன் சந்தா சாகிப் படையில் பணியாற்றி தளபதிகளில்
ஒருவன். 2000 பேர் கொண்ட குதிரைப்படையை திரட்டி மதுரை மற்றும்
திருநெல்வேலியை கைப்பற்றுகிறான் ஆலம்கான். சந்தா சாகிப்பிற்கு உதவ
திருச்சி நோக்கி விரைந்தான். தொண்டைமான் அரசவைக்கு சென்ற ஆலம் கான்
தனக்கு உதவினால் பெரும் நிலப்பரப்பை தருவதாக கூறினான். ஆனால் தொண்டைமானோ,
உதவ மறுத்துவிட்டார். திருச்சி கோட்டைக்கு தொண்டைமான் நாட்டில் இருந்து
வரும் பொருட்களை தடுத்து நிறுத்த ஆலம் கான் புதுக்கோட்டை - திருச்சி
சாலைகளில் தாக்குதல்களை நடத்தினான். இதையறிந்த தொண்டைமான் தனது படையுடன்
சென்று ஆலம் கானை திருச்சி இரட்டைமலை பகுதி வரை விரட்டினார். அங்கு யானை
மேல் அமர்ந்து இருந்த ஆலம் கான் பீரங்கி குண்டால் கொல்லப்பட்டான். 200
க்கும் மேற்பட்ட ஆலம்கான் படையினர் கொல்லப்பட்டனர். திருச்சி கோட்டை
முழுவதும் தொண்டைமான் உதவியுடன் முகமது அலியின் முழு கட்டுப்பாட்டில்
வந்தது.
(General history of pudukkottai state R aiyar page 191)

ப்ரெஞ்சுக்கு எதிராக போர்:

கிபி 1760 திருச்சி கோட்டையை கைப்பற்ற ப்ரெஞ்சு மற்றும் ஐதர் அலி கூட்டணி
முயற்சி செய்தது. ஆங்கிலேயர் மற்றும் ஆர்காடு நவாப் தொண்டைமான் உதவியை
நாடினர்.தொண்டைமான் 100 பேர் கொண்ட குதிரைப்படை மற்றும் 1000 பேர் கொண்ட
காலாட்படையை அனுப்பி ப்ரெஞ்சு கூட்டணி தாக்குதலில் இருந்து திருச்சி
கோட்டையை காத்தார்.
(General history of pudukkottai state R aiyar page 226)

ஐதர் அலியிடம் இருந்து திருச்சியை காத்தல் :

கிபி 1781 ல் ஐதர் அலி பெரும்படையோடு திருச்சி கோட்டையை தாக்கினான்.
தொண்டைமான் தனது படையை அனுப்பி ஐதர் அலி படையிடம் போரிட்டு திருச்சி
கோட்டையை காத்தார். பின்வாங்கிய ஐதர் அலி படைகள் திருக்காட்டுப்பள்ளியை
தாக்கி பலரை கொன்று குவித்தான். ஆங்கிலேயர் படைகள், தொண்டைமான் அனுப்பிய
கள்ளர் படையுடன் சேர்ந்து ஐதர் அலி படைகளை திருக்காட்டுப்பள்ளியில்
இருந்து பின்வாங்க செய்தது.
(General history of pudukkottai state R aiyar page 267)

திப்பு சுல்தானிடம் இருந்து திருச்சியை காத்தல் :

கிபி 1790 ல், ஐதர் அலியின் மகன், திப்பு சுல்தான் மீண்டும் திருச்சி
கோட்டையை தாக்கினான். திருச்சியில் மக்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டு,
மாடுகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் தொண்டைமானின் உதவியை நாடினர்.
தொண்டைமான் 1500 பேர் கொண்ட கள்ளர் படையை அனுப்பி, திப்புவின் படைகளை
திருச்சியில் இருந்து பின்வாங்க செய்தார்.
(General history of pudukkottai state R aiyar page 291)

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் திருச்சிராப்பள்ளி கோட்டைக்கும்,
கள்ளர்களுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை நமக்கு உணர்த்தும். திருச்சி
மலைக்கோட்டை பல செங்குறுதி வரலாறுகளை தன்னகத்தே கொண்டு, இன்று மௌன
சாட்சியாக தனது பழம்பெருமைகளை அசை போட்டுக்கொண்டு உள்ளது.

* சியாம் சுந்தர் சம்பட்டியார் *

Thevan

unread,
Dec 26, 2019, 6:19:46 PM12/26/19
to panbudan, minTamil
**வீரமங்கை வேலு நாச்சியாரும் கள்ளர் பற்றும்**

தலைப்பை பார்த்தவுடனே வேலு நாச்சியார் மறவர் அவருக்கும் கள்ளருக்கும்
என்ன சம்பந்தம் எனக் கேட்டுக்கும் உட்பிரிவினைவாதிகளுக்கு இந்த பதிவை
சமர்ப்பிக்கிறேன்.

1772ல் சிவங்கங்கை சீமை நவாப் தலைமையில் ஆங்கிலேயர் கையில் நாட்டை
இழந்தார் நம் போற்றுதலுக்குரிய அம்மா வீரமங்கை வேலு நாச்சியார்.

நாட்டை இழந்த அம்மா வேலு நாச்சியாரும் அவர்தம் பெண் குழந்தையுடனும்,சின்ன
மருது பாண்டியனாருடனும் திண்டுக்கல்லில் உள்ள விருப்பாச்சி பாளையத்தில்
கள்ளர் தலைவர்களுடன் அடைக்கலம் அடைகிறார்.

அப்படி அவர் தஞ்சம் அடைந்த அம்மா வீரமங்கையால் நாட்டை மீட்காமல் உறக்கம்
இன்றி கள்ளர் படைப்பற்று தலைவர்களுடன்
ஆங்கிலேயர்களுக்கும்,நாவாப்பிற்கும் எதிராக அவ்வப்போது கிளர்ச்சியில்
ஈடுபட்டு வருகிறார்.

சிவங்கை இராஜ பிரதாணியான தாண்டவராய பிள்ளையிடம் சொல்லி ஹைதர் அலிக்கு ஒரு
கடிதம் எழுதுகிறார்.

08:12:17772
அந்த கடிதத்தில் “ஆற்காடு நவாப் இராமநாதபுரம்,சிவகங்கை சீமையையும்
ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்துகிறார்கள், நான் இங்கு கள்ளர் தலைவர்களுடன்
சேர்ந்து அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
நீங்கள் எனக்கு படை உதவி அளித்து உதவ வேண்டும் என மைசூர் சிங்கத்திற்கு
கடிதம் எழுகிறார்.

மேலும் இராஜ பிரதாணி தாண்டவராய பிள்ளை சிவகங்கை கள்ளர் நாட்டார்களுக்கு
ஓலை அனுப்பி சிவ்கங்கையை மீட்க்கும் பணியில் இறங்குகிறார்.

அம்மா வேலு நாச்சியாருக்கு பிரதாணி அவர்கள் போற்றுதலுக்குரிய
தொண்டைமானார் பூமியில் உள்ள பாய்குடியில் தங்கி சிவகங்கையின்
நடவடிக்கைகளைப் பற்றி கடிதம் எழுதுகிறார்.

அந்த கடிதத்தில் தஞ்சை மராட்டியரும்,தொண்டைமானரும் படை உதவியும்,பொருள்
உதவியும் தர சம்மதித்து உள்ளனர்.மேலும் இங்கு ஹைதர் அலியின் படையும்
வரவிருக்கிறது. இதை பயன்படுத்தி நான் சிவகங்கையையும்,இராமநாதபுரத்தையும்
மீட்கலாம் என எழுதுகிறார்.

கள்ளர் பெருமகனார் தொண்டைமானரை விமர்சிக்கும் முன் இதை சற்று உள்வாங்கி
விமர்சனம் செய்ய கோருகிறேன்.

அக்காலத்தில் இருந்த ஒற்றுமை இன்று இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

ஒவ்வொரு முறை உட்பிரிவு சண்டை வரும் போது ஒற்றுமை ஒற்றுமை என கொடி
பிடிப்பதை விட அக்காலத்தில் நடந்த வரலாற்று சம்பவத்தை நேர்மையாக
உட்பிரிவு பார்க்காமல் கட்டுரையாக வந்தால் இக்கால தலைமுறையினருக்கு
ஒற்றுமை என்னவென்று புரியும்.

இதில் இன்னொரு சம்பவம் என்னவென்றால் சிவகங்கையை மீட்க வந்த மைசூர்
சிங்கத்தின் படையும் “கள்ளர் பற்றே” வரலாற்றை மறைக்க மறைக்க உட்பிரிவு
மோதல் அதிகரிக்கத் தான் செய்யும்.

இந்த நேரத்தில் என் எண்ணத்தில் ஓடுவது எல்லாம் அம்மா வீரமங்கை வேலு
நாச்சியார் தனது கணவனை இழந்து நாட்டை இழந்து தனது குழந்தையுடன் இன்னொரு
நாட்டில் அடைக்கலம் அடைந்தாலும் அந்த மறத்தியாரின்
வீரமும்,செருக்கும்,வைராக்கியமும் கொஞ்சம் கூட குறையாமல் அந்த இடத்தில்
உள்ள தனது இனத்தின் கள்ளர் பெருமக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி தனது
நாட்டை மீட்ட அந்த அம்மாவையும்,கள்ளர் தலைவர்களையும் நான் என் வாழ் நாள்
முழுவதும் நெஞ்சில் சுமக்க கடமைப் பட்டுள்ளேன்.😓

இன்றுள்ள நமது பெண் குழந்தைகளுக்கு இந்த வரலாறை கொண்டு செல்லுங்கள் எனது
இரத்த தேவமார்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி
MILLITARY COUNTRY CORRESPONDENCE VOL.3
சீர்மிகு சிவகங்கை BY Dr.கமால்
மாயக் கருப்பன் மதுரை

அன்புடன்
சோழ பாண்டியன்
1.jpg
2.jpg
3.jpg

Thevan

unread,
Dec 28, 2019, 1:36:53 PM12/28/19
to panbudan, minTamil
சிந்துசமவெளி மடகேஸ்கர் கள்ளர்நாடுகள்

ஏறுதழுவுதல்

தலைப்பு சற்று தலைசுற்றும் என நினைக்கிறேன். ஏனென்றால் சிந்துசமவெளி
நாகரீகத்திற்கும் மடகேஸ்கருக்கும் என்ன தொடர்பு என தோன்றும்.

#ஒன்றே_குலம்_ஒருவனே_தேவன் என திருமூலரின் பாடல் மூலம் உலக மக்கள்
அனைவரும் ஒரு குலத்தில் இருந்து கிளைத்தவர்கள் என்பது உன்மை என பல
இடங்களில் வரலாற்றுத் தாய் நிலை நிறுத்துவாள்.

அதுபோல தான் இக்கட்டுரையின் சாராம்சமும்....!

சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த ஏறுதழுவுதல் ஓவியம் அனைவரும்
அறிந்தததே, அந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை பல்வேறு ஆய்வாளர்களின்
கூற்றாக உள்ளது.

சிந்துசமவெளி நாகரிகம் கிட்டத்தட்ட 5000வருட பழமையானது. அதில் வரும்
ஏறுதழுவுதல் நமது சங்க இலக்கியமான கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது.

முல்லையில் இரண்டு சமூகங்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது
1. ஆயர்
2. இடையர்

இதில் வரும் ஆயர் மக்கள் ஏறுதழுவுதலை காலங்காலமாக விளையாடி வருகின்றனர்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய -
உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.

- கலித்தொகை

அந்த ஆயர் மக்களாகிய களவர்,களமர்,கள்வர்,மழவர் என அறியப்பட்ட கள்ளர்
முதுகுடிகள் இன்றும் தங்களது 119கள்ளர் நாடுகளில்
அம்பலங்கள்,தேவர்கள்,பட்டக்காரர்கள் தலைமையில் உயிர்ப்புடன் இன்றும்
நடைபெற்று வருகிறது. உயிர்ப்புடன் நிலை நிறுத்தி வருகின்றனர் என்பது
காலத்தால் அழியா புகழுடைய வரலாறு.

ஏறு தழுவுதல் அதிகமாக நடைபெறும் மாவட்டங்கள்:

புதுக்கோட்டை
மதுரை
தஞ்சை
சிவகங்கை
தேனி
திண்டுக்கல்
திருச்சி

மேற்கோள் காட்டிய மாவட்டங்களில் மட்டுமே ஏறு தழுவுதல் நடைபெற்றதாக அரசு
ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நடைபெறுகிறது என்பதும் நிதர்சனமாக
உள்ளது.

ஏறு தழுவதலில் மிகவும் புகழ்பெற்ற காளையான புளியங்குளம் காளையை
புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர்கள் பாரம்பரியமாக அனைவரின் வீட்டில்
கிபி1920வரை வளர்த்துள்ளனர்.

மதுரை திருமங்கலம்,மேலூர் (சிந்துபட்டி,உறங்கான்பட்டி)வெள்ளையர்கள்
பார்த்து வியந்து,பயந்து இரசித்த ஏறு தழுவுதலும் நடந்துள்ளது.

இந்த ஏறுதழுவுதல் நடைபெரும் இடத்தில் கள்ளரின பெண்கள் கூடியிருப்பார்கள்.
அந்த களத்தில் அடக்க முடியாத காளையை அடக்கும் கள்ளர் பெருமகனை அந்த
இடத்திலே தேர்வும் செய்வார்கள்.

மாட்டை அடக்க முடியாத ஆண்கள் கடைசி வரை திருமணம் முடிக்க முடியாது. ஆனால்
கள்ளர் குல காளையர்கள் என்றும் தனிமையில் வாழ்கையில் கழித்தது கிடையாது.
மாட்டை எப்படியாவது 20வயதிற்குள் அடக்கி தனக்குண்டான துணையை பெற்று
விடுவார்கள்.

காரி,செவலை,மயிலை என ரகங்கள் இறக்கப்படும்.

இதில் உள்ள காரி மாடுகளை தான் நமது கள்ளர் குல திலகம் தமிழ் நாடு
ஜல்லிகட்டு தலைவர் ஐயா பிஆர். இராஜசேகர் அம்பலம் அவர்கள் பாரம்பரியமாக
வளர்த்து வருகிறார்.

அதேபோல அறந்தாங்கி தொண்டைமான் வழித்தோன்றல் இலங்கை அமைச்சர் செந்தில்
தொண்டைமான் அவர்கள் இலங்கையில் இன்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து
அதனை கப்பல் மூலம் தமிழக ஜல்லிகட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

காளை-கள்ளர் பிரிக்க முடியாத வரலாறாகவே பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஆப்பிரிக்கா கண்டத்திற்குட்பட்ட மடகேஸ்கர் தீவில் மழகசி என்ற
ஊரில் சவிகா என்ற ஏறுதழுவுதல் விளையாட்டு பல ஆயிரம் வருடங்களாக ஆடப்பட்டு
வருகிறது.

இந்த ஆட்டத்தில் நமது ஏறுதழுவுதல் விதிமுறை போலவே உள்ளது

1. காளைக்கு காயம் ஏற்பட்டால் போட்டியை நிறுத்தி
விடுவார்கள்
2. காலையும் திமிலை மட்டுமே பிடித்து அடக்க
வேண்டும்
3. அனைத்து திருமணம் ஆகாத ஆண்கள் கலந்து
கொள்ள வேண்டும்.
4. போட்டியில் காளையை அடக்கும் ஆண்களை
அடையாளம் கண்டு அவர்களை தங்கள் வாழ்க்கை
துணையாக இளம் பெண்கள் தேர்ந்தெடுத்து
கொள்ள வேண்டும்.

மழகசியில் உள்ள அனைத்து ஆண்களும் காளையை அடக்கினால் மட்டுமே திருமணம்
நடைபெறும். மாட்டை அடக்க முடியாவிட்டால் கடைசி வரை
சன்னியாச வாழ்க்கை தான்.

இதனை BBC செய்திக்குழு ஆவணப்படுத்தியுள்ளது. அதில் வரும் ஒரு வாலிபர்
27வயதாகியும் மாட்டை அடக்க முடியாததால் திருமணம் ஆகாமல் இருக்கிறார்.
பிறகு மாட்டை அடக்கி அங்கு வந்த இளம் பெண்களின் மனதை கவருகிறார்.

அப்படியே நமது கள்ளர் நாட்டு கலாச்சாரம் மழகசியில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

மேலும் குமரிக்கண்டத்தின் மாதிரி வரைபடத்தில் மடகஸ்கரும் அடங்கும்,இந்த
மழகசி பழங்குடிகளின் டிஎன்ஏவும் M130y என்பது கூடுதல் தகவல்😉

மழகசி என்பது மழவர் வாழும் ஊராகவும் எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால்
சங்ககாலத்தில் களவர்,மழவர் இருவரும் ஆநிரை கவர்தலில் வல்லவர்களாக
இருந்துள்ளனர்.

மேலும் ஐயா ஐராவதம் மஹாதேவன் தமிழர்களின் மூத்தகுடிகள் இந்த கள்வர்,மழவர்
என்றே குறிப்பிடுகிறார்.

அது எப்படி தமிழ் மூத்த குடிகள் கள்வர்,மழவர்....?

தொடரும்....!

நன்றி

Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Saints,goddess and kingdom
A manual of Pudukottai state
Madura A Tourist Illustrated Guide
The Madura country A manual
Madura district Gazetteer
Gazetteer of Pudukottai state

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

https://www.youtube.com/watch?v=ahDPfu7E7yw
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg

Thevan

unread,
Jan 7, 2020, 3:44:10 AM1/7/20
to panbudan, minTamil
யார்_அந்த_ஆதித்தமிழன்**************
*********************#பாகம்_1***********************

இன்றை முகநூலில் அதிகமாக நடக்கும் வரலாற்று போர் என்னவென்றால்
பாண்டியர் யார்...?
சோழர் யார்...?
சேரர் யார்..?
வேளிர் யார்..?
என்பதை வைத்து அவரவர் தத்தம் சாதியை வைத்து ஆண்ட பரம்பரை வரலாற்றை பல
ஆண்டுகளாக அரங்கேற்றி வருகிறார்கள்.

ஆனால் மூவேந்தர்கள்,வேளிர்களின் தந்தையாக வரும் அந்த ஆதித்தமிழன் யார்
என்பதை இந்தியா மட்டுமல்லாமல் உலக வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும்
ஏற்றுக்கொண்ட மிகப்பெரிய வரலாற்று ஆய்வாளரான, பெருமதிப்பிற்குரிய ஐராவதம்
மகாதேவன் IAS அவர்கள் முடிவுரையே எழுதிவிட்டார் என்பது இங்குள்ள 149/-
டேடா பேக் ஆய்வாளர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.

ஐராவத மகாதேவனின் சிறுகுறிப்பு:-

அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன். சட்டக் கல்லூரியில்
சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து
தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.

1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.வி.
சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல்
துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு
பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக
செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச்
செயல்பட்டார்.

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள்
குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு
முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம்
ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச்
சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில்
கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின்
உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம்
காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில்
அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட
மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை
முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை
நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே
என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.

தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக
அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து
அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early
Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய
வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை
மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ்
எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள
முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

தன் இறுதி வாழ்நாள் வரை தமிழுக்காகவே தொண்டாற்றிய மாமனிதரை, இவ்விடத்தில்
போற்றுகிறேன்💐🙏

அப்படிப்பட்ட மாமனிதரின் ஆய்வில் இறுதியாக தமிழ் நாட்டில் இன்றுள்ள ஒரு
மாபெரும் சமூகம் தான், தமிழ் இனத்திற்கே முன்னோர் என்றும், அவர்கள் வழி
வந்த இரண்டு உட்பிரிவினர்களும் இந்தியாவின் அடையாளம் என்று தன்னுடைய
ஆய்வின் இறுதி அத்தியாத்தை எழுதியுள்ளார்.

யார் அந்த சமூகம்...?
அவர்களை மட்டும் கூற காரணம் என்ன..?
அவர்களை இலக்கியம் மூலமாக மூத்த குடி என்றாரா..?
இல்லை தொல்லியல் ஆய்வு மூலமாக கூறினாரா...?
இல்லை பண்பாடு,கலாச்சாரம் என்கிற மானுடவியல் மூலமாக கூறினாரா...?

யார்..? யார்..? ஏன்..? ஏன்..? எதனால்..?எதனால்..?

ஆதித்தமிழனின் பயணம் தொடரும்................!

நன்றி
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
And
THE HINDU NEWS PAPER

Thevan

unread,
Feb 15, 2020, 9:37:44 PM2/15/20
to panbudan, minTamil
பராந்தக சோழரின் எயில்நாட்டு கள்ளர் தளபதி

திருச்சி மாவட்டம் திருநெடுங்களத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில்
உள்ள சோழர் காலத்து கல்வெட்டுகள் ஒன்றில் எயில் நாட்டு சோழர் அதிகாரி
ஒருவர் வருகிறார்.

காலம் : கிபி926
வம்சம் : சோழர்
அரசர் : முதலாம் பராந்தகச் சோழன்
பட்டம் : மதுரை கொண்ட கோப்பரகேசரி

கல்வெட்டு செய்தி:-

திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய
கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடுகளை ஏற்றுக் கொண்டு
விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி
நியமத்து #கள்வன்_உலங்கண் ஆவார். இந்த கள்வன் உலங்கண் என்பவர் பராந்தக
சோழரின் அதிகாரமிக்க தளபதியாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் எயில்
நாட்டில் உள்ளவருக்கு உறையூர் கூற்றத்தில் உள்ள கோவிலில் ஒப்புதல்
அளிக்கும் அதிகாரம் இருப்பதிலே நாம் அவரின் அதிகாரத்தை அறியப் பெறலாம்.

இதில் வரும் எயில் நாடு என்பது பழைய சோழர் நாட்டமைப்பான இன்றைய
கிருஷ்ணகிரி மாவட்டமாகும். ஏற்கனவே இதே மாவட்டத்தில் தான் ஶ்ரீகள்ளச்
சோழன் என்கிற 10 நூற்றாண்டு கல்வெட்டும் கிடைத்துள்ளது.

இந்த கல்வெட்டோடு சேர்ந்து பராந்தக சோழரின் கல்வெட்டுகளில் கள்ளர்
பெருங்குடியின் கல்வெட்டுகள் மொத்தம் 5ஆகும்👍 சோழர் காலத்து
கல்வெட்டுகளில் மொத்தம் 14ஆகும்👍

நன்றி
தமிழக தொல்லியல் துறை
1.jpg
2.jpg

Thevan

unread,
Feb 15, 2020, 9:37:47 PM2/15/20
to panbudan, minTamil
பாண்டியரின் மிழலைக் கூற்றத்து கள்ளர் தளபதிகள்

மாறவர்மன் சுந்தரபாண்டித் தேவர் கிபி1230ஆம் ஆண்டு திருக்கோளக்குடி
கல்வெட்டில் குறிக்கப்பட்ட கள்ளர் தளபதிகள்:-

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - பல்லவரையர்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - கச்சிராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - சேதிராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - மாதவராயன்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - அதிகைமார்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - விழுப்பரையர்

மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - திருநீலதரையன்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - செம்பியத்தரையன்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - முனையத்தரையர்

மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - கலிங்கத்தரையன்

இதில் விழுப்பரையரை இதே சுந்தரபாண்டியத் தேவர் காலத்திற்கு 8ஆண்டுகளுக்கு
முன்பு கள்ளன் விழுப்பரையர் என்றே கல்வெட்டு உள்ளது.

மேற்கண்ட தளபதிகளின் வழித்தோன்றலாக இன்றும்
சேதிராயர்,மாதவராயர்,அதிகைமார்,நீலங்கொண்டார்,செம்பியத்தரையர்,முனையத்தரையர்,கலிங்கராயர்,கச்சிராயர்
என்று இன்றும் கள்ளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இன்று பல்வேறு தொழில்
செய்து வந்தாலும் அவர்தம் குருதியின் அரச,போர்குடி தாக்கம் அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது.

மீண்டெழுவோமா.....?

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு



https://perumalthevannews.blogspot.com/2020/02/blog-post_14.html
1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg

Thevan

unread,
May 13, 2020, 12:39:00 PM5/13/20
to panbudan, minTamil
கீழாநிலை அறந்தாங்கி பட்டுக்கோட்டையை மீட்ட தொண்டைமான் தளபதிகள்
இராமசாமி சேர்வை, சுப்ரமணிய முதலியார்
18ஆம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத வரலாறாக பொறிக்கப்பட்டதே மைசூர்
யுத்தம் 1,2,3 ஆகும்.
மைசூர் சுல்தான்கள்,பிரஞ்சு படைகள், தென்னக பாளையக்காரர்கள் ஒரு அணியினராகவும்.
ஆற்காட் நவாப், தொண்டைமான் அரசர், ஆங்கிலேயப் படைகள் ஒரு அணியாகவும்
நின்று மோதிக் கொண்டனர்.
இதில் இரண்டாம் மைசூர் போரில், கிபி1781ல் மைசூர் அரசர் ஹைதர் அலியின்
கூட்டுப்படைகள் மைசூரில் இருந்து பெங்களூர், சித்தூர், கிருஷ்ணகிரி,
வேலூர், திண்டுக்கல் வரை கைப்பற்றியது. பிறகு தஞ்சை, மேலூர், திருச்சி
மண்டலங்களை கைப்பற்ற முன்னேறியது.
அதில் தஞ்சை மராட்டியர்களின் இரு தரப்பட்ட நிலைப்பாட்டால் பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி, கீழாநிலைக்கோட்டை போன்ற பகுதிகளை மைசூர் அரசர் ஹைதர் அலியின்
படைகளால் கைப்பற்றப்பட்டது. தஞ்சையின் இக்கட்டான இச்சூழலில் தஞ்சை
மராட்டியர்கள் தஞ்சையை விட்டு வெளியேறி தலைமறைவாகின்றனர்.
பிறகு புதுக்கோட்டைக்கு முன்னேறிய ஹைதர் அலியின் படையை, புதுக்கோட்டை
அரசர் இராய ரகுநாத தொண்டைமான் நேரடியாக போரிட்டு வீழ்த்தி, ஹைதர் அலியின்
படைகளை திண்டுக்கல்லுக்கு விரட்டுகிறார்.
தஞ்சையை மீட்க புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் உதவி இல்லாமல் மீட்க
முடியாது என்பதனை உணர்ந்த ஆற்காட் நவாப்பும், ஆங்கிலேய அரசும், இராய ரகு
நாத தொண்டைமானிடம் உதவி கோருகின்றனர்.
இதனை எற்றுக் கொண்ட புதுக்கோட்டை மன்னர் குதிரைப்படை,கலாட்படையுடன் கூடிய
பெரும் படைப்பற்றை கள்ளர் தளபதிகளான இராமசாமி சேர்வைக்காரர் மற்றும்
சுப்ரமணிய முதலியார் தலைமையில் அனுப்புகிறார்.
ஹைதர், ஷாவின் பெரும் பிரஞ்சு கூட்டுப்படைகளை மிகவும் குறைந்த மணி
நேரத்தில் வீரமிக்க இவ்விரண்டு தளபதிகளால் அறந்தாங்கி, கீழா
நிலைக்கோட்டை, பட்டுக்கோட்டையில் முற்றுகையிட்டு ஹைதர் படைகளை வீழ்த்தி
தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அதன் பின்பு ஒப்பந்த அடிப்படையில் பட்டுக்கோட்டையை தஞ்சை
மராட்டியரிடமும், அறந்தாங்கியை அறந்தாங்கி தொண்டைமான்களிடமும்
ஒப்படைக்கின்றனர்.
ஆனால் பாரம்பரியமிக்க கீழாநிலைக்கோட்டையை இராய ரகுநாத தொண்டைமான்
புதுக்கோட்டை நாட்டில் இனைத்துக் கொண்டார்.
அவருக்கு பின்னால் வந்த 6 தொண்டைமான் அரசர்களும் இக்கோட்டையை முறையாக
பராமரித்து வந்துள்ளனர்.
சோழ, பாண்டியர் காலம் தொட்டு இருக்கும் இப்போர் பாசறை, இன்று
சிதலமடைந்திருக்க்கிறது. இக்கோட்டையில் இன்றும் புதுக்கோட்டை
தொண்டைமான்கள் வீரம் சொல்லும் விதமாக கிபி1920ல் இராஜா ஸ்ரீமார்த்தாண்ட
பைரவ தொண்டைமானால் வைக்கப்பட்ட பீரங்கி இன்றும் உள்ளது.
மேலும் புதுக்கோட்டை அரசர்களால் உருவாக்க்பட்ட நெற்களஞ்சியமும் இன்றும்
உள்ளது. கிபி1989ல் சுதந்திர இந்தியாவில் இக்கோட்டை மரமத்து என்கிற
பெயரில் சிதைவை ஏற்படுத்தியுள்ளனர்.
சுமார் 43.61 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்கோட்டையின் நுழைவுவாயிலில்
ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. அதனை தொடர்ந்து உள்ளே சென்றால் இக்கோட்டையின்
முதன்மை தெய்வமாகவும், பாண்டிய மன்னரின் மகளாக கருதப்படும் ஸ்ரீஅரியநாயகி
அம்மன் ஆங்கார சொருபமாக காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து அம்மன்
குளமும்,விஷ்ணு கோவிலும் உள்ளது. கோட்டையின் தெற்கு பகுதியில் கோட்டை
காவல் தெய்வமாக பொற்பனைக்கோட்டை முனி உக்கிரமாக காட்சியளிக்கிறார்.
கோட்டையின் நுழைவுவாயிலுக்கு முன்பு வல்லம்பர் சமுதாயத்தை சேர்ந்த
செல்லச்சாமி சாமியாடி அவர்களின் ஜீவசமாதி இன்று கோவிலாக அனைவராலும்
வணங்கப்படுகிறது. இப்பகுதி வாழ் மக்கள்கள், இக்கோட்டையை பாதுகாக்கப்பட்ட
பகுதியாகவும்,சுற்றுலா தளமாகவும் அறிவிக்கக் அரசுக்கு கோரிக்கை அளித்து
வருகிறார்கள்.
குறிப்பு:-
இப்பகுதி மக்கள் கீழாநிலைக்கோட்டையில் இரகசிய சுரங்க பாதை உள்ளதாகவும்,
அப்பாதை சாக்கோட்டைக்கு செல்லலாம் என்கிறார்கள். இதனை நான் ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டுள்ளேன்.
நன்றி
The important moments in and around pudukkottai
History of madras army by Wilson
Copies and extract of letters of pudukkottai Thondaiman
மற்றும் இக்கட்டுரையை எழுத ஆர்வம் தூண்டிய நாடுமதிச்சான் வெங்களப்பன் அம்பலம்
1.jpg
G.jpg
H.jpg
I.jpg
J.jpg
2.jpg
3.jpg
a.jpg
b.jpg
c.jpg
D.jpg
E.jpg
F.jpg
It is loading more messages.
0 new messages