சம்ஸ்கிருதம் கற்போம் - 1 (உயிரெழுத்துக்கள்)

292 views
Skip to first unread message

Vinodh Rajan

unread,
Mar 6, 2010, 3:12:26 AM3/6/10
to mintamil
சமஸ்கிருதம் கற்போம்.

ரொம்ப நாள் கழித்து இந்த இழையை தொடர்கிறேன். :-) பொறுத்தருள்க.

(மின்னஞ்சலில் மீக்குறிகளுடன் தமிழிலும், கீழே பி.டி.எஃப்’இல்
கிரந்தத்திலும் இதைக்காணலாம். தேவையெனில் கிரந்த லிபிக்கென தனி இழை
ஆரம்பித்து அதை அறிமுகப்படத்தலாம். )

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

|| ஓம் நமோ புத்தாய ||

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதலில் எழுத்துக்கள் குறித்து பார்ப்போம்.

நெடுங்கணக்கு என்பதை ஸம°ஸ்க்ரு«தத்தில் வர்ணமாலா என்று அழைப்பர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உயிரெழுத்துக்கள். (ஸ்வரா‍:)

அ ஆ இ ஈ உ ஊ ரு« ரூ« லு« லூ« ஏ ஐ ஓ ஔ அம° அ‍:

இவையே ஸம°ஸ்க்ரு«தத்தில் உள்ள ஸ்வரங்கள் ஆகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸ்வரங்களை மாத்திரையின் அடிப்படையில் இரண்டாக பிரிப்பர்.

ஹ்ரஸ்வம் - அதாவது குறில், இன்னொன்று தீ³ர்க⁴ம் - அதாவது நெடில்.

இவற்றைத்தவிர தீ³ர்க⁴ ஸ்வரங்கள் தங்களது இயல்பான மாத்திரைகளை மீறிய
ப்லுத உச்சரிப்பும் (நம்மூர் அளபெடை போல) கொள்ளும். அதைப்பற்றி பின்னர்
பார்ப்போம்.

அ இ உ ரு« லு« ஆகியவை ஹ்ரஸ்வ ஸ்வரங்கள்

ஆ ஈ ஊ ரூ« லூ« ஏ ஐ ஓ ஔ ஆகியவை தீ³ர்க⁴ ஸ்வரங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தீ³ர்க⁴ ஸ்வரங்களில் ஏ ஐ ஓ ஔ ஆகிய ஸ்வரங்கள் ஸந்த்⁴யக்ஷரங்கள் அதாவது
ஸந்தி⁴-அக்ஷரங்கள் - புணர்ச்சி எழுத்துக்கள் என்றழைக்கப்படுகின்றது.

அகாரமும் இகாரமும் இணைந்தது ஏகாரம்
அகாரமும் உகாரமும் இணைந்தது ஓகாரம்
ஆகாரமும் இகாரமும் இணைந்தது ஐகாரம்
ஆகாரமும் உகாரமும் இணைந்தது ஔகாரம்

இதனால் தான் ஓம் எனப்தை அகரம், உகரம், மகரம் என மூன்றாக பிரித்து,

திரிமூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரஹ்மா என்று வைதீகர்களும்
புத்தரின் திரிகாய ஸ்வரூபமான தர்மகாயம், சம்போககாயம், நிர்மாணகாயம் என்று
பௌத்தர்களும்,
ஜைனர்களும் அருகர், உபாத்தியாயர் முனி, (சரியாக நினைவில்லை. பானுகுமார்
கேட்டால் தெளிவாக சொல்லுவார்) என்றும் கூறுவர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிற உயிரெழுத்துக்களின் உச்சரிப்பு, தமிழைப்போலவே என்பதால்,
கீழ்க்கண்டவையை மட்டும் கொஞ்சம் விரிவாக காண்போம்.

ரு« என்பதை ரி-க்கும் ரு-க்கும் இடையில் உச்சரிக்க வேண்டும். (எ.டு) ரு«ஷி‍:

ரூ« என்பது ரு«-வின் தீ³ர்க⁴ வடிவம்.

லு« என்பதை லி-க்கும் லு-க்கும் இடையில் உச்சரிக்க வேண்டும். இந்த
எழுத்து ககாரத்துடன் இணைந்த க்லு«ப் என்னும் அடிப்படையில் அமைந்த
சொற்களில் மட்டுமே வரும். பிற எழுத்துக்களோடு இனைந்த சொற்கள் இல்லை.

லூ« என்பதற்கு எந்த உபயோகமும் இல்லை. இலக்கண ரீதியாக லு«-வின் தீ³ர்க⁴மாக
வர்ணமாலாவில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறது !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அம° அ‍: ஆகிய இரண்டும் உப⁴யாக்ஷரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது, இவை
தனித்து இயங்க இயலாதவை.

அம° - அகரத்துடன் கூடிய அநுஸ்வாரம்

அ‍: - அகரத்துடன் கூடிய விஸர்க³ம்

அநுஸ்வாரமும் விஸர்க³மும் ஏதாவது ஒரு ஏதாவது ஒரு ஸ்வரத்தை அடிப்படையாக
கொண்டே வருபவை. வர்ணமாலாவில் பொதுவாக இவை அகாரத்துடன் இணைந்த

வடிவமாக காட்டப்படுகின்றன.

அநுஸ்வாரத்தின் உச்சரிப்பு சொல்லின் அது வரும் இடத்திற்கேற்ப மாறுபடும்.

க’வர்க³த்திற்கு முன் வரும்போது ங் ஆகவும்
ச’வர்க³த்திற்கு முன் வரும்போது ஞ் ஆகவும்
ட’வர்க³த்திற்கு முன் வரும்போது ண் ஆகவும்
த’வர்க³த்திற்கு முன் வரும்போது ந் ஆகவும்
பிற இடங்களிலிலும் சொல்லின் இறுதியிலும் ம் ஆகவும் உச்சரிக்கப்படும்.

அடுத்து விஸர்க³ம்.

இதன் பயன், ஸ்வரத்தின் மாத்திரையில் பாதியாக வரக்கூடிய ஹகாரத்தை இணைப்பது.

அதாவது, நம‍: - என்பதை நம(ஹ) என்று உச்சரித்தல் வேண்டும். இதில் (ஹ)
என்பது அகரத்தின் பாதி மாத்திரையின் அளவில் உச்சரிக்கபப்ட வேண்டும்.

ஹரி: - என்பதை ஹரி(ஹி) என்று உச்சரிக்க வேண்டும். மேலே உள்ளது போல (ஹி)
என்பது இகரத்தின் பாதி மாத்திரை அளவு தான் உச்சரிக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்த மதத்தில் ஒரு மந்திரம் உண்டு. இது வாக்-சித்தியை அதிகரிக்கும்
என்று நம்பப்படுகிறது.

அந்த மந்திரம் இது தான்:

ஓம° அ ஆ இ ஈ உ ஊ ரு« ரூ« லு« லூ« ஏ ஐ ஓ ஔ அம° அ‍: ஸ்வாஹா !

ஆக, சம்ஸ்கிருத உயிரெழுத்துக்களை உச்சரித்து வந்தாலே வாக் சித்தி கிடைக்கும் :-)

மந்திரத்தின் அடுத்த பகுதியை மெய்யெழுத்துக்கள் - வ்யஞ்ஜநாநி குறித்து
பார்த்து விட்டு முடிக்கலாம் .

Sanskrit - 1 - Vowels (Grantha).pdf
Sanskrit - 1 - Vowels (Tamil).pdf

Geetha Sambasivam

unread,
Mar 6, 2010, 3:18:16 AM3/6/10
to mint...@googlegroups.com
கிரந்தமே நல்லா இருக்கு, தொடருங்கள், ரொம்ப நாளாக் காணோமேனு நினைச்சேன். நன்றி.

2010/3/6 Vinodh Rajan <vinodh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Vinodh Rajan

unread,
Mar 6, 2010, 3:44:29 AM3/6/10
to mintamil
கிரந்த உயிரெழுத்துக்கள் மட்டும்..
Grantha - Vowels.pdf

Jean-Luc Chevillard

unread,
Mar 6, 2010, 4:31:57 AM3/6/10
to mint...@googlegroups.com
Very welcome!

Please go on!

Cheers

-- Jean-Luc

devoo

unread,
Mar 6, 2010, 5:06:38 AM3/6/10
to மின்தமிழ்
वर्धतामभिवर्धताम्

>  Sanskrit - 1 - Vowels (Grantha).pdf
> 406KViewDownload
>
>  Sanskrit - 1 - Vowels (Tamil).pdf
> 117KViewDownload

விஜயராகவன்

unread,
Mar 6, 2010, 5:52:34 AM3/6/10
to மின்தமிழ்
நல்ல தொடர்.


விஜயராகவன்

> > 117KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

Kumaran Malli

unread,
Mar 6, 2010, 9:09:57 AM3/6/10
to mint...@googlegroups.com
Glad to learn Sanskrit formally. Thanks.

thiruthiru

unread,
Mar 6, 2010, 10:46:44 PM3/6/10
to மின்தமிழ்
தமிழுக்கு ஒன்று க்ரந்தத்துக்கு ஒன்று என்று இரு பிடிஎப் கோப்புகளாக
இல்லாமல் க்ரந்தத்தின் ஒவ்வொரு பாராவின் கீழேயும் தமிழையும் அளித்து
விட்டால் க்ரந்தாக்ஷரங்களை புரிந்து கொண்டு நினைவில் வைத்துக் கொள்ளவும்
எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.

வினோத் ராஜன்

unread,
Mar 7, 2010, 1:50:49 AM3/7/10
to மின்தமிழ்
> தமிழுக்கு ஒன்று க்ரந்தத்துக்கு ஒன்று என்று இரு பிடிஎப் கோப்புகளாக
> இல்லாமல் க்ரந்தத்தின் ஒவ்வொரு பாராவின் கீழேயும் தமிழையும் அளித்து
> விட்டால் க்ரந்தாக்ஷரங்களை புரிந்து கொண்டு நினைவில் வைத்துக் கொள்ளவும்
> எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.
>

But won't there be too much redundancy ? One can always have both the
PDF's side by side to compare :-)

V

raman ramanujan

unread,
Mar 6, 2010, 3:23:18 AM3/6/10
to mint...@googlegroups.com
மிகவும் நல்ல பணி. தொடர வேண்டுகிறேன்.கிரந்த எழுத்துக்கள் மிகவும் எளிதாக புரியும்

2010/3/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 8, 2010, 1:09:19 PM3/8/10
to mint...@googlegroups.com
வினோத்,
 
மகிழ்ச்சி. பயனுள்ள இழை.
 
அன்புடன்
சுபா

2010/3/6 Vinodh Rajan <vinodh...@gmail.com>

ராஜராஜன்

unread,
Apr 19, 2010, 12:34:25 AM4/19/10
to மின்தமிழ்
மிகவும் நல்ல பணி. தொடர வேண்டுகிறேன்

நாகராஜன்...

Reply all
Reply to author
Forward
0 new messages