சபரிமலை நடைப் பயணம்.# 2

58 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jan 10, 2014, 4:58:59 PM1/10/14
to tamil_ulagam, mint...@googlegroups.com

சபரிமலை நடைப் பயணம்.# 2


  இந்த வாள் புனலூரில் அரசுக்கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கபட்டு வருகிறது.அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன் கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம்

                

       இதன் எடை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. இங்குள்ள சுவாமி தீர்த்தம் பாம்பு கடிக்கு அரு மருந்தாகும். ஐயன் விக்ரகத்தின் முன் தினமும் வைக்கப்பட்டிருக்கும். யாருக்கேனும் பாண்டி தீண்டி விட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் நடை திறந்து இந்தத் தீர்த்தம் கொடுக்கபடுகிறது.எந்த பாதிப்புமின்றி குணமடைவது  இன்றும் கண்கூடாகும். இத்தலத்தில் மார்கழி மாதம் முதல் தேதி கொடியேற்றம் நடக்கும் தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடக்கும்.

 நாங்கள் சென்ற சமயம் புஷ்பாஞ்சாலி என்ற வைபவம் நடந்தது. மலையாக மலையாக மலர்களை கொட்டி ஐயப்பனுக்கு அர்ச்சினை செய்கிறார்கள்

.மலர்களை கூடை கூடையாக கொட்டுவதால் சிலை முழுவதும் மலர்களால் மூடிவிடுகிறது. இருவர் பக்கத்திலிருந்து மலரைகளை விலக்குகிறார்கள்.    என் வாழ்நாளில் இதுவரை இப்படி ஒரு மலர் அர்ச்சினையும்,காட்சியினையும் கண்டதில்லை.

     தென்காசியிலிருந்து சுமார் 35 கி.மீ தூரம் மலைப்பாதையில் சென்றால்,  அச்சன் கோவிலை அடையலாம். ஓரளவு பஸ் வசதியிருந்தாலும் திருப்தியான பயணமாக இருக்காது. கார்,வேன் சென்று வருவது நல்லது. சுமார் ஆறு மணி நேர பஸ் பிரயாணத்திற்கு பின் மாலை, அந்தி சாயும் நேரம் நாங்கள் சபரி மலை அடிவாரம் அடைந்தோம்.

            [ பெருவழி :-- எருமேலியிலிருந்து மலைகளில் ஏறிஇறங்கி காட்டினுள் நடந்து தர்ம சாஸ்தாவின் சந்நிதிக்கு சுமார் 40 மைல் கடந்து வரும்          இந்த பாதைதான் பெரும்பாதை என்றழைக்கப்படுகிறது. சாலக்காயம் வழியாக பம்பையாறு வந்தடைவோரும், குமுளி, வண்டிப்பெரியார் வழியாக       நேராக சந்நிதானம் வந்தடையும் பக்தர்களும் உண்டு.]

 

  சபரி மலை அடிவாரத்திலேயே பம்பா நதி ஓடுகிறது. பம்பா நதியில் தண்ணீர் இரு கரையையும் தொட்டு ஓடியது. பம்பா நதி கங்கையை,காவிரி நதிகளுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.  இருப்பினும் இராமபிரான் தந்து தந்தைக்காவும், மூதாதையர்களுக்காவும் பம்பாக் கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக  கொண்டே இப்போது பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். சபரி அன்னையை பார்ப்பற்காக இராமர் இங்கு வந்தார்.வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

             [ * பொன்னம்பலமேடு என்கிற காந்தமலை பம்பையாற்றின் கரையில் இருந்து  பன்னிரண்டு கல் தூரத்திலுள்ளது. ஐயப்ப பக்தர்கள்                             முக்கியத்துவம் கொடுக்கும்  திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று ]

 

    மஹிஷியின் கொடுமைக்குள்ளாகி இருந்த தேவர்கள் முன்பே பொன்னம்பல மேட்டில் மணி கொண்டசொரூபத்தை பிரதிஷ்டை செய்து,   தங்களைக்     காத்து இரசிக்குமாறு வேண்டிக்கொண்டனர். அங்கே கோயில் கொண்டிருக்கும் மணிகண்டனை ''பூதநாதன்'' என்பார்கள்.

 

     நாங்கள் சென்ற சமயம் நிறைய ஐயப்ப பக்தர்கள் இரு கரையிலும் பூஜைகளும், தர்ப்பணங்களும் செய்துக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் யாரும் தர்ப்பணம் செய்யவில்லை. மலையேறும் முன் நாங்கள் அனைவரும் பம்பா நதியில் குளித்தோம்.. பம்பாநதி அதிக ஆழமில்லாவிட்டாலும் நீரோட்டம்  அதிக இருந்தது.பனி உருகி நீராக வந்தால் எந்த அளவு குளிர்ச்சி இருக்குமோ அப்படி இருந்தது பம்பா நதி நீரோட்டம். குளிர்க்குப் பயந்து சிலர் கரையோரத்தில்  நின்று நிதானித்துக் கொண்டு இருந்தார்கள்.  இறுதியாக,   ஒருவழியாக யாவரும் குளித்துவிட்டு மலையேற புறப்பட்டோம். மலைத்தொடக்கத்தில் இருந்த விநாயகரை வணங்கிவிட்டு சாமியே சரணம் என்று மெதுவாக கோஷமிட்டவாறு ஏறத்தொடங்கினோம்.

   நாங்கள் சென்ற இந்த நடைப்பயணம் சுமார் ஏழு கி.மீ தூரம் கொண்டது. இதில் நான்கு கி.மீ செங்குத்தாக ஏற வேண்டும். சிமெண்ட் படிகளும், பிடித்து ஏற இடையில் இரும்பு பிடி உண்டு. வலு உள்ளவர்கள் வேகமாகவும்முதியோர்கள் மெதுவாகவும் ஏறலாம். இடையில் நின்று, அமர்ந்து ஓய்வு எடுத்த பின்னும் தொடரலாம். மேல் போக போக காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்.அப்போது சுவாசம் சற்று சிரமாக இருக்கலாம். இருந்தபோதிலும் இடையே இளைப்பாறி மெதுவாக நாங்கள் சமதரை அடைந்தோம்.

 

      சமதரையில்  ஒரு ஆர்ச் வலைவு இருந்தது,.  தோரண வாயில்

   [ தோரண வாயில்] ....

                  அந்த  மார்டன் தியேட்டர் ’  என்று  எழுதி  இருந்தது.  இது எனக்கு வியப்பை அளித்தது.இதன் விபரம் அறிய அங்கிருந்து ஒரு பெரியவரிடம் கேட்டேன்.  அவர் கூறிய விபரம்  எனக்கு சற்று வியப்பை அளித்தது. ‘ மர்ம யோகி ’’  என்ற ஒரு தமிழ்த் திரைப்படம் 1950 காலக்கட்டத்தில் வெளிவந்தது.  இதில், எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எம்.என்.நம்பியார், சகஸ்ரநாமர், நடராஜன், ஜாவர் சீதாராமன் போன்றவர்கள் பிரபல நடிகர்கள் நடித்தது    இருந்தார்கள். இது ஒரு ஆங்கில படத்தின் மூலம். அதில் எம்.ஜி.ஆர் காட்டில் மறைந்து வாழும் ஒரு போராளியாக நடிப்பார். இனிமையான இன்றும் கேட்டு இரசிக்க கூடிய பாடல்கள் இருந்தன.. .நல்ல சுந்தர தமிழில் அழகு பட வசனம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியம். மர்ம யோகியின்   பெரும்பாலான காட்சிகள்  இந்த இடத்தில்தான்  படமாக்கப்பட்டது. அதன் நினைவாக மார்டன் தியேட்டர் அதிபர்.திரு.சுந்தரம் ஒரு நினைவாக கட்டிக்கொடுத்தார் என்றார்.  சிங்கப்பூர் வந்தபின்  மர்மயோகி திரைப்படத்தை சி.டி மூலம் பார்த்தபோது அந்த பெரியவர் சொன்னது உண்மை என விளங்கியது.

      இப்படி சுமார் நான்கு கி.மீ ஏறியபின் சமத்தரை அடைந்தோம். சமதரைப் பகுதியில் சில அங்காடி கடைகள் இருந்ததன. களைப்பு தீர அமர்ந்தோம்.     பின் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

    சமத்தரை காட்டு ஒற்றையடி பாதை.கல்லும், மரவேர்களும் இருந்ததால் நம் போன்றவர்கள் மெதுவாகத்தான் நடந்து செல்லவேண்டும்.

[ இது தவிர நடக்க இயலாதவர்கள் தூக்கிச்செல்ல டோலி உண்டு.அந்தக் காலமன்னர்கள் பல்லக்கில் போவது போல். நான்கு பேர்கள் தூக்கிச் செல்வார்கள். இதற்கு சென்று திரும்ப 5000 ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்த தொகை காலத்திற்கு ஏற்ப மாறலாம்.]

சபரி பீடம்:

   இப்படி நாங்கள் நடந்து இடம் சபரிபீடம் என்று அழைக்கப்படும் ஓர் சமதளமான இடத்தை அடைந்தோம்.. இங்குதான் சபரி என்னும் பக்தை தவம் செய்து விண்ணுலகம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.  இராமன் வரவுக்கு காத்திருந்திருந்து, இராமனை தரிசித்து, இனிய உணவினை படைத்து அன்பு காட்டியதால் இராமன் மனம் மகிழ்ந்து ‘’ இனி இந்த மலை உன் நாமத்தால் விளங்குமென வரம் தந்தாக ‘’ ஒரு தகவலும் உண்டு. இன்றைய நிலையில் அதனை எண்ணும் போது உண்மையாக கூட இருக்கலாம். பலரும் எண்ணுவது போல் ஐயப்பன் மலை இல்லை. சபரி என்னும் பக்தையின் பெயர்.’’ சபரி மலை’’ என்றாகியது.  இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டோம்.

  சரங்குத்தி:

     இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். சபரிமலைக்கு புனித யாத்திரை வரும் கன்னி ஐயப்பன்மார் தங்கள் இரு முடிக்கட்டில் ஓர் அம்பினை செருகி எடுத்து வருகின்றனர்.அதை சரங்குத்தியில் செருகிய பின்பே புனிதமான பதினெட்டுப் படிகளில் ஏறும் தகுதி பெறுகின்றனர். கடைசியில் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் சென்றடையலாம்.

                       ----------<> பயணம் தொடரும் ------->


அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

கி.காளைராசன்

unread,
Jan 10, 2014, 6:39:35 PM1/10/14
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா.

ஐயப்பன்மார்கள் திருக்கூட்டம் கூடுதலாக இருப்பதால், வழிபாட்டிற்கான வரிசை
பம்பையிலிருந்தே ஆரம்பமாகிறதாம்-
தங்களது அருட்பயணத்தைத் தொடர்ந்து படித்து வருகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

Krishnan S

unread,
Jan 10, 2014, 8:07:47 PM1/10/14
to mint...@googlegroups.com
அன்பார்ந்த திரு, காளைராசன் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா. நலமா.?
’’ பொங்கல் வாழ்த்துக்களை’’ தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்
  இங்கு பதிவாக்கி மகிழ்கிறேன்.
தங்கள் பின்னூட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

@ உண்மையான ஐயப்பன்மார்கள் திருக்கூட்டம் என்று சொன்னால் எனது அனுபவத்தில்...,
     கூடுகிற கூட்டத்தில் ஒரு ஐந்து சதவீதம் இருக்குமா என்ற ஐயம் உண்டு எனக்கு.
    விடலையும், எந்த நேர்மையும் இல்லாத மாக்கள்தான் இந்த கூட்டத்தில் அதிகம்.
    ஐயப்பனின் தத்துவம் தெரியாமல் கூடுகிற கூட்டம் அதிகம்.
    ஏன் மஞ்ச மாத சன்னதியில் தேங்காய் உருட்டுகிறார்கள், ஐயப்பன் ஆசனம் ஏன் என்று
    தெரியாது.
@ என் அனுபவம். சில ஆண்டுகளுக்கு முன் பழனியில், சன்னிதானத்தில் நாங்கள் நின்றுக்கொண்டு
     இருந்தோம். ஒரு ஐயப்பன்மார்கள் கூட்டம் தறுமாற ஓடுயது, நின்றவர்கள் மீது மோதியும், இடித்தும்
     ஓடியது. இதற்கிடையில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இரத்தம் காயத்தோடு ஓடுகிறது இந்த
      ஐயப்பன்மார்கள் கூட்டம்.
@ இராமேஸ்வரம்  நண்பர் ஒருவரின் பரிகார பூஜைக்காக ஒரு பிராமண ஐயர் இல்லம் அதிகாலையே
     சென்று இருந்தோம். ஐயர் இல்லம் இரண்டாவது மாடி. நண்பரும், மனைவிக்கும் பூஜை அறையில்
      பரிகாரம் நடந்துக்கொண்டு இருந்தது. நான் இரண்டாவது மாடியில் பால்கனியிலிருந்து நின்று
      வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்தே, ஐயர் வீடு கோவிலுக்கு பின் புறம்தான்.
      ஒரு வேன் வந்தது. அதில் ஐயப்பன்மார்கள் கூட்டம் 6 - 7 பேர் இறங்கினார். இறங்கி உடன் பீடி
       பற்ற வைத்து புகைத்தார்கள். கோயில் மதில் சுவருக்கு பக்கதில் சிறு நீர் கழித்தார்கள்
      இதெல்லாம் பராவில்லை. சில பள்ளி இளம் வயது மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டு
       இருந்தார்கள். அவர்களை பிடித்தும், விரட்டியும் அட்டாகாசம் செய்தார்கள்.

இப்படி இருந்தால் இயற்கையும் என்ன செய்யும்
 அய்யா, அதிகம் கொட்டிவிட்டேன் போலும்.
------------------------------------------------------------------------------------------------
அய்யா, சபரி நடைப்பயணம் குறித்த தங்களின் கருத்தினையும் எண்ணத்தினை பதிவாக்கவும்.
  கட்டுரை தேறுமா என்று.... சார் நீங்கள்தான் மார்க் போட வேண்டும்.
நன்றி, வணக்கம்/
மற்றை பின்
அன்புடன்
கிருஷ்ணன்



2014/1/11 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Reply all
Reply to author
Forward
0 new messages