ஒரு சந்தேகம்.. / கேள்வி...

25 views
Skip to first unread message

bala murali

unread,
Aug 16, 2010, 7:52:31 AM8/16/10
to namp...@googlegroups.com, nallana...@googlegroups.com, தமிழ் அமுதம், tamil2friends, தென்றல், anb...@googlegroups.com, illam, nagai...@googlegroups.com, பண்புடன், பிரியமுடன்..iTamizhFriends, முத்தமிழ், தமிழ்பிரவாகம், annamalaieasan, pothuv...@googlegroups.com, தமிழமுதம், thami...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil_...@googlegroups.com
பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?

பவர் பாய்ண்ட் என்பதற்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொல் என்ன?

தமிழாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவில்லை..
தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...

--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
http://groups.google.com/group/nallanampikkai?hl=ta_IN
http://groups.google.co.in/group/nampikkai?hl=en
http://www.nagaisbalamurali.blogspot.com/
http://vetrinadai.blogspot.com/
www.kalvithagaval.co.cc
தொடர்பு எண்: 9865325734

N. Ganesan

unread,
Aug 16, 2010, 8:37:18 AM8/16/10
to மின்தமிழ்

On Aug 16, 6:52 am, bala murali <nagaibalamur...@gmail.com> wrote:
> பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
>
> பவர் பாய்ண்ட் என்பதற்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொல் என்ன?
>
> தமிழாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவில்லை..
> தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...
>

அண்ணாகண்னன் ஒரு வார்த்தை கொடுத்திருந்தார்.

Annakannan

unread,
Aug 16, 2010, 9:30:32 AM8/16/10
to மின்தமிழ்
திரை விரித்து உரை நிகழ்த்திய போது, 'திரையுரை' என்ற சொல்லைப்
பயன்படுத்தினேன். திரை இல்லாமல் சுவர் போன்றவற்றிலும் ஒளியைப் பாய்ச்சி,
உரை நிகழ்த்த முடியும் என்பது, பிந்தைய தெளிவு. மறவன்புலவு
க.சச்சிதானந்தன், 'ஒளியுரை' என்ற பதத்தினைப் பயன்படுத்துகிறார்.

ஒளியைப் பாய்ச்சாமல், கணித் திரையிலேயே படத்தினை அடுத்தடுத்து நகர்த்தி,
உரை நிகழ்த்த முடியும். இது தொடர்பாக, முனைவர் அருள் நடராசன் அவர்களுடன்
உரையாடியபோது, 'படவுரை' என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன்.

முனைவர் மு.இளங்கோவன் 'காட்சி விளக்க உரை' என அழைத்து வருகிறார். இதன்
தொடர்ச்சியாகக் 'காட்சியுரை' என்ற சொல்லை அண்மைக் காலமாகப் புழங்கி
வருகிறேன்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

On Aug 16, 5:37 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 16, 6:52 am, bala murali <nagaibalamur...@gmail.com> wrote:
>
> > பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
>

> அண்ணாகண்ணன் ஒரு வார்த்தை கொடுத்திருந்தார்.
>

bala murali

unread,
Aug 16, 2010, 9:03:38 AM8/16/10
to mint...@googlegroups.com
On 8/16/10, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Aug 16, 6:52 am, bala murali <nagaibalamur...@gmail.com> wrote:
> பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
>
> பவர் பாய்ண்ட் என்பதற்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொல் என்ன?
>
> தமிழாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவில்லை..
> தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...
>

அண்ணாகண்னன் ஒரு வார்த்தை கொடுத்திருந்தார்.

அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்களேன்..

> --

> ~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
> ||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
> துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
> என்றும் அன்புடன்...

> நாகை.எஸ்.பாலமுரளி.http://groups.google.co.in/group/tamilamutham?hl=enhttp://groups.google.com/group/nallanampikkai?hl=ta_INhttp://groups.google.co.in/group/nampikkai?hl=enhttp://www.nagaisbalamurali.blogspot.com/http://vetrinadai.blogspot.com/www.kalvithagaval.co.cc

> தொடர்பு எண்: 9865325734

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...

geeyes

unread,
Aug 16, 2010, 1:46:17 PM8/16/10
to மின்தமிழ்
> முனைவர் மு.இளங்கோவன் 'காட்சி விளக்க உரை' என அழைத்து வருகிறார். இதன்
> தொடர்ச்சியாகக் 'காட்சியுரை' என்ற சொல்லை அண்மைக் காலமாகப் புழங்கி
> வருகிறேன்.
>
> அன்புடன் என்றும்,
> அண்ணாகண்ணன்.

-இந்த இரண்டும் சரியாகப் படுகின்றன. காட்சியுரை(.ppt) என்று கூறலாமா.

Hari Krishnan

unread,
Aug 16, 2010, 11:12:33 PM8/16/10
to mint...@googlegroups.com

2010/8/16 geeyes <gmsan...@gmail.com>

> அண்ணாகண்ணன்.

-இந்த இரண்டும் சரியாகப் படுகின்றன. காட்சியுரை(.ppt) என்று கூறலாமா.

ஒன்றைச் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும்.  PowerPoint என்பதை மொழிபெயர்க்க முடியாது.  Presentation என்பதைத்தான் மொழிபெயர்க்கலாம்; முடியும்.  ஆகவே, காட்சியுரை என்று தமிழிலே குறிப்பிடப்படுவது ப்ரசன்டேஷன் என்ற சொல்லுக்கானது.  பவர்பாயின்ட்டுக்கானது அன்று.  நுண்மென் சன்னல்கள், அதிமென் பலகணிகள், வெகுமென் காலதர்கள் என்றெல்லாம் Microsoft Widows எப்படி மொழிபெயர்க்கப்பட முடியாதோ அப்படியே பவர்பாயின்ட் மொழிபெயர்க்கப்பட முடியாது.  Elder brother Eyeman என்று அண்ணா கண்ணனை மொழிபெயர்க்க முடியாததைப்போல. :)))

ப்ரசன்டேஷனுக்குக் காட்சியுரை, திரையுரை, காணுரை என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.  பொருந்தும்.  

சிங்கக் கருப்பன் என்று என்பெயரை அந்தக் காலத்தில் அனந்தராம சேஷன் அவர்கள் (ஹிந்து பத்திரிகையின் துணையாரியராகப் பணியாற்றியவர்; இசைக்கவி ரமணனின் தந்தை) தமிழில் மொழிபெயர்த்து அழைப்பார்.  இன்னமும் அப்படித்தான் கூப்பிடுகிறார்.   அதுக்காக நான் சிங்கக் கருப்பன் அப்படின்னு கையெழுத்துப் போட முடியுமா, பத்திரம் பதிய முடியுமா? :))

--
அன்புடன்,
ஹரிகி.

ஆராதி

unread,
Aug 17, 2010, 1:03:15 AM8/17/10
to mint...@googlegroups.com
திரு ஹரிகி
ரத்தாட்சன் என்னும் பெயரைக் கம்பன் குருதிக்கண்ணன் என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்தியதாக நினைவு. தேவையும் மொழியில் வாய்ப்பும் இருந்தால் மொழிமாற்றம் செய்ய முன்னோர் வழிகாட்டுதலை மேற்கொள்ளலாமா?
அன்புடன்
ஆராதி
 
2010/8/17 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Raja sankar

unread,
Aug 17, 2010, 1:51:17 AM8/17/10
to mint...@googlegroups.com
ஹரிகி

சரியாக சொன்னீர்கள். இதைப்போலவே சோடியம்,பொட்டாசியம், செலினியம் என்பதை எல்லாம் மொழி பெயர்த்தே தீருவேன் என்று கிளம்பிய ஆட்களும் உண்டு. 

பவர் பாய்ண்டுக்கு காட்சியுரை. அப்ப கீழே இருக்கறதுக்கெல்லாம்

MS Access
MS Outlook
MS Outlook Express

Xerox என்பது நிறுவனப்பெயர். Photocopying என்பது அது தயாரிக்கும் எந்திரம் செய்யும் வேலை. 

அமெரிக்கர்கள் இரண்டையும் மாற்றி உபயோகப்படுத்தினால் நாமும் மறந்துவிடுவதா

ராஜசங்கர்

2010/8/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Aug 17, 2010, 1:52:21 AM8/17/10
to mint...@googlegroups.com

2010/8/17 ஆராதி <aara...@gmail.com>

திரு ஹரிகி
ரத்தாட்சன் என்னும் பெயரைக் கம்பன் குருதிக்கண்ணன் என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்தியதாக நினைவு. தேவையும் மொழியில் வாய்ப்பும் இருந்தால் மொழிமாற்றம் செய்ய முன்னோர் வழிகாட்டுதலை மேற்கொள்ளலாமா?

அன்புள்ள ஆராதி ஐயா,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.  But what we are discussing about now is a Brand Name, a Registered Trade Name.  நேருவின் குடும்பப் பெயர் நஹார் (சரியாக நினைவில்லை) கால்வாய் என்ற பொருளுள்ளது.  கால்வாய் என்ற பொருளுள்ள சொல்லிலிருந்து கிளைத்ததால் இந்தியாவின் முதல் பிரதமர் சிவந்தமணிக் கால்வாய் என்று மொழிபெயர்த்துச் சொல்ல முடியுமா?  அவசியம் ஏற்படும் இடங்களில் செய்யலாம் என்பது உண்மைதான்.  அதை மறுக்கவில்லை.

ரக்தாக்ஷனைக் குருதிக் கண்ணனாகவும், மஹாபார்ஸ்வானை மாபெரும் பக்கனாகவும், வேள்விப் பகைவன் என்று வேறோருவனையும் கம்பன் மொழிபெயர்த்தான் என்பது உண்மையே.  ஆனால், அதே தர்க்கத்தின் அடிப்படையில் ‘வாய்விட்டலறியவன்’ (ராவணன்) முறநகத்தி (சூர்ப்பணகை) குடக்கதான் (கும்பகர்ணன்) விசும்புளார்கோ வெல்லி (இந்திரஜித்) ஒட்டிய வயிறள் (மண்டோதரி) என்றெல்லாம் கம்பனேகூட மொழிபெயர்க்கவில்லை அல்லவா?  

ஆகவே, பவர்பாயின்ட் என்பதை மொழிபெயர்த்தால், MS Word, Excel, One Note, Outlook. Outlook Express, Adobe. GIMP. Python. Linux எல்லாவற்றையும் என்ன செய்யலாம். :)

நான் என்ன சொல்ல முயன்றேன் என்றால், இந்த மொழிபெயர்ப்புகள், PowerPoint Presentation என்பதில் உள்ள Presentation என்ற சொல்லுக்கு மட்டுமே பொருந்துமே ஒழிய, பவர்பாயின்ட்டுக்குப் பொருந்தாது என்பதே.  

ஆராதி

unread,
Aug 17, 2010, 7:10:39 AM8/17/10
to mint...@googlegroups.com
திரு ஹரிகி
நீங்கள் சொல்வதை முற்றிலும் உடன்படுகிறேன். வாய்ப்பிருந்தால் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மட்டுமே என் கருத்து. ஆனால், அறிவியல் பெயர் போன்றவற்றை, உலகம் தழுவிய பெயர்களை (நெல்லுக்குத் தாவரவியல் பெயர் ஒரைசா சட்டைவா என்பன போன்றவற்றை) மொழிபெயர்ப்பது பொருத்தம் இல்லை என்பதே என் கருத்தும்.
கூடுதலாக கிலோ, மீட்டர், லிட்டர் என மக்கள் வழக்காற்றில் இன்றுள்ள அளவுப் பெயர்களைத் தனித்தமிழ் அன்பர்கள் மொழிபெயர்த்து வழங்குவதாகத் தெரியவில்லை. அவ்வாறு வழங்குவதில் பொருளும் இல்லை.
அன்புடன்
ஆராதி
2010/8/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Thiruvengada Mani T.K

unread,
Aug 17, 2010, 10:04:35 PM8/17/10
to mint...@googlegroups.com, Narayanan Kannan, Subashini Tremmel
நல்ல சிந்தனை - ஆரோக்கியமான விவாதம் - உடன்படுகிறோம் - மகிழ்ச்சி.
ஆனால் கணி சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்குப் பலரும் பலவாறு மாற்றுச் சொற்களை வழங்கிவருவதைப் பல இடங்களில் பார்க்கிறோம். அது குழப்பத்தையே விளைவிக்கும். இதை நெறிப்படுத்தி அரசு சில முயற்சிகள் எடுத்தது. உதாரணத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு கையேடு. பாடநூல் நிறுவனம் வெளியிட்ட ஒரு நூல் - இப்படிச் சொல்லலாம்.
 
இவைகூட முழுமையானதா எனச்சொல்வதற்கில்லை. ஏனெனில் நித்தம் ஒரு புதுச்சொல் உருவாகி வருகிறது. தமிழின் மின்னாக்கத்தைத் தலையாய பணியாக நினைக்கும் இம் மின்தமிழ்க் குழுவின் சார்பாக இணையான தமிழ்பதங்களைத் தெரிவு செய்து அதை நம் சேகரத்தில் வைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பது என்கருத்து.
 
அறிஞர் பெருமக்கள் அறிவுரை தர வேண்டுகிறேன்.
 
மணி
--
Dr.T.K.Thiruvengada Mani

Nagarajan Vadivel

unread,
Aug 17, 2010, 10:30:45 PM8/17/10
to mint...@googlegroups.com
aஅன்மையில் அரசு எடுத்த நிலைப்பாடு காரணமாக ப்ல்லாயிரக்கணக்கான நிறுவனப் பெயர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யுப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் அரசின் கணினித் தரவு தளத்தில் ஆங்கிலப் பெயரும் அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பும் ஒன்றாக அமைந்து உள்ளது.  இதை நிரல் படுத்தினால் ஒரு பயனுள்ள சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்
கல்லூரியில் கணினி பயிலும் மாணவர்கள் குழுவாக அமைந்து இதைச் செய்ய முடியும்
அரசு செய்யும் என்று நம்பினால் அது ஒரு வல்லுனர் குழுவை அமைக்கும்.  பின்னர் மூதறிஞர் இராஜாஜி கூறியதுதான் நடக்கும்
அரசாங்கத்தை பொருத்தவரை எதையேனும் கொல்லவேண்டும் என்றால் ஒன்று தலையில் கல்லைப் போடு அல்லது யாராவது ஒருவர் தலைமையில் கமிட்டியைப்போடு என்பதே அவரின் அநுபவ மொழி
பேரா.நாகராசன்

2010/8/18 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Narayanan Kannan

unread,
Aug 17, 2010, 11:41:49 PM8/17/10
to Thiruvengada Mani T.K, mint...@googlegroups.com, Subashini Tremmel
இதற்கென பல பணிக்குழுக்கள் உள்ளன. தமிழக அரசும், இலங்கை அரசும் கூட
இதற்கென பணிக்குழுக்கள் வைத்துள்ளன. உத்தமம் ‘செந்தரமாக்குதலை’
முதன்மையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு.

மின்தமிழில் சொற்களஞ்சிய அனுபவம் உள்ளவர்கள், அதற்கென தனியிழை அமைத்து
இப்பணியைத் தொடங்கலாம். இத்தொதுப்பு எப்படியும் யாருக்காவது உதவும்.
செந்தரமாக்கும் அதிகாரம் நம்மிடையே இல்லாவிடினும், கலைச்சொற்களை
பரவலாக்கி, புழக்கத்திலிடலாம். வெல்லும் சொல் நிற்கும், காலப்போக்கில்.

க.>

2010/8/18 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

karthi

unread,
Aug 18, 2010, 12:11:33 AM8/18/10
to mint...@googlegroups.com
ஏற்கனவே விக்கி குழுமமும் இதைச் செய்து வருகிறது.

ரெ.கா.

விஜயராகவன்

unread,
Aug 18, 2010, 5:36:43 AM8/18/10
to மின்தமிழ்
பவர்பாயிண்டை நுகர்வோரே பவர்பாயிண்ட் அல்லது பவர் பாயிண்ட் என
உபயோகிக்கும் போது, "மொழி பெயர்ப்பு" பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்.
மாணவர்கள், வேலை செய்கிறவர்கள், புஸ்தகாசிரியர்கள், சஞ்சிகைகள்,
பேச்சாளர்கள் மற்ற எல்லா ஆர்வமுள்ளவர்களும் பயன்படுத்தும் வார்த்தையை
நாம் ஏன் மாற்ற வேண்டும், ஏன் மற்றவர்கள் ஒரு எல்லோருக்கும் தெரிந்த
வார்த்தையை விட்டு புதிதாக கற்றுக் கொள்ளப் போகிறனர்.

இரும்பு கொல்லர்பட்டறையில்தான் 1500 டிகிரி உஷ்ணம் மேலே வளைந்து பல
உருவங்கள் எடுக்கும், மொழியும் பயனில்தான் உருவாகி பரிமாணிக்கின்றது.
பயனில் இல்லாத மொழி, மொழியே இல்லை . "தனித்தமிழ்" தினா ஆக்கபூர்வமான
உணர்வு அல்ல.

விஜயராகவன்

On 16 Aug, 12:52, bala murali <nagaibalamur...@gmail.com> wrote:
> பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
>
> பவர் பாய்ண்ட் என்பதற்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொல் என்ன?
>
> தமிழாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவில்லை..
> தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...
>
> --
> ~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
> ||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
> துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
> என்றும் அன்புடன்...

விஜயராகவன்

unread,
Aug 18, 2010, 5:50:32 AM8/18/10
to மின்தமிழ்
தற்கால பயன்பாட்டுத் தமிழின் உதாரணம்

http://www.dinamalar.com/Supply.asp?ncat=4

விஜயராகவன்

On 16 Aug, 12:52, bala murali <nagaibalamur...@gmail.com> wrote:

> பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
>
> பவர் பாய்ண்ட் என்பதற்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொல் என்ன?
>
> தமிழாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவில்லை..
> தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...
>
> --
> ~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
> ||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
> துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
> என்றும் அன்புடன்...

bala murali

unread,
Aug 20, 2010, 5:17:53 AM8/20/10
to namp...@googlegroups.com, nallana...@googlegroups.com, தமிழ் அமுதம், tamil2friends, தென்றல், anb...@googlegroups.com, illam, nagai...@googlegroups.com, பண்புடன், பிரியமுடன்..iTamizhFriends, முத்தமிழ், தமிழ்பிரவாகம், annamalaieasan, pothuv...@googlegroups.com, தமிழமுதம், thami...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil_...@googlegroups.com
எல்லோருடைய பதிலையும் விளக்கங்களையும் படிச்சி அலசி, ஆராய்ஞ்சி
( குழம்பி:) ) ஒருவழியா "தொடர் படக்காட்சி" என்பது சரியாக இருக்கும்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன்..
அது சரிதானே..?!?!?!
:)
பதிலும் விளக்கமும் சொன்ன அனைவருக்கும் நன்றி!

2010/8/16 bala murali <nagaiba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2010, 5:51:11 AM8/20/10
to mint...@googlegroups.com
பவர் பாயின்ண்டுக்கு என் நண்பர் கொடுத்த விளக்கம்
ஒரு ஆசிரியர் பவர் பாயிண்ட் பயன்படுத்தும்போது
There is no power and there is no point
நாகராசன்

2010/8/20 bala murali <nagaiba...@gmail.com>
You chose to allow mint...@googlegroups.com even though this message failed authentication
Click to disallow | Boxbe

எல்லோருடைய பதிலையும் விளக்கங்களையும் படிச்சி அலசி, ஆராய்ஞ்சி
( குழம்பி:) ) ஒருவழியா "தொடர் படக்காட்சி" என்பது சரியாக இருக்கும்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன்..
அது சரிதானே..?!?!?!
:)
பதிலும் விளக்கமும் சொன்ன அனைவருக்கும் நன்றி!

2010/8/16 bala murali <nagaiba...@gmail.com>
பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

bala murali

unread,
Aug 20, 2010, 6:13:09 AM8/20/10
to thamizh...@googlegroups.com, mutht...@googlegroups.com, namp...@googlegroups.com, nallana...@googlegroups.com, தமிழ் அமுதம், tamil2friends, anb...@googlegroups.com, illam, nagai...@googlegroups.com, பண்புடன், பிரியமுடன்..iTamizhFriends, தமிழ்பிரவாகம், annamalaieasan, pothuv...@googlegroups.com, தமிழமுதம், thami...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil_...@googlegroups.com

2010/8/20 Gokul Kumaran <gokul...@gmail.com>
அப்போ நீங்க Presentation-க்கு கேட்டிருக்கீங்க.

Power Point-க்கு கேக்கலை.
உண்மையில் பவர்பாய்ண்டு காட்சிகளை தொகுப்பாக்கிப் பதிவு செய்ய ஒரு தலைப்பு பொருத்தமா இருந்தா நல்லா இருக்கும்னுதான் கேட்டேன்
(இப்போ வீடியோ காட்சிகளுக்கு காணொளின்னு இருக்கிற மாதிரி ) ஆனா இன்னும் திருப்தி இல்லாததால்
அதுவாவது சரியா இருக்குமான்னு தெரியலே..:(
 
--
கோகுல்குமரன்

"நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்”

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

N. Kannan

unread,
Aug 20, 2010, 9:54:47 AM8/20/10
to mint...@googlegroups.com
> (இப்போ வீடியோ காட்சிகளுக்கு காணொளின்னு இருக்கிற மாதிரி ) ஆனா இன்னும்
> திருப்தி இல்லாததால்
> அதுவாவது சரியா இருக்குமான்னு தெரியலே..:(
>>

பாலு சார்! இப்ப நம்ம ப்ரோமோஷன்: வீடியோ = விழியம் (காணொளி அல்ல).

க.>

RAJAGOPALAN APPAN

unread,
Aug 20, 2010, 11:10:27 AM8/20/10
to mint...@googlegroups.com

பெயர்ச்சொற்களில் காரணப்பெயர் மட்டுமே மொழிபெயர்ப்புக்கு இடங்கொடுக்கும். அவை மொழிபெயர்க்கப்படவேண்டும். இடுகுறிப்பெயர்கள் பெரும்பாலும் கலைச்சொற்களாக வருபவற்றை ஒலிபெயர்ப்பு மட்டுமே செய்யவேண்டும். அதற்குத் தேவையான புதிய குறியீடுகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். பிறமொழிகளுக்குச் சொந்தமான கலைச்சொற்களை தமிழ்ச்சொற்களாக மாற்ற முனைவது முறையற்றதுங்கூட என்பது என் தாழ்மையான கருத்து.

அ.ரா

bala murali

unread,
Aug 22, 2010, 12:08:19 AM8/22/10
to mint...@googlegroups.com
விழியம் என்பது பொருத்தமானதா தோணலீங்களே...
என்னமோ  மாதிரி இருக்கு
உடற்கூறுவியல் சொல் மாதிரி இருக்கு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 22, 2010, 3:15:20 AM8/22/10
to mint...@googlegroups.com
2010/8/22 bala murali <nagaiba...@gmail.com>:

> விழியம் என்பது பொருத்தமானதா தோணலீங்களே...
> என்னமோ  மாதிரி இருக்கு
> உடற்கூறுவியல் சொல் மாதிரி இருக்கு

திரு.இராம.கிருஷ்ணன் (இராம.கி) இங்கு இருக்கிறார். ஆனால் இதை
வாசிக்கிறாரா என்று தெரியவில்லை! அவர் தரும் கலைச்சொல் இது. செம்மொழி
மாநாட்டில் கேட்டறிந்த சொல். அவரது தமிழாக்கம் பெரும்பாலும் ஆங்கிலச்
சொல்லின் பலுப்பலுக்கு அருகில் வருமாறு இருக்கும். அதுவொரு சௌகர்யம்.
விழியம் - வீடியோ சொல்லிப்பாருங்கள். அது மட்டுமல்ல. இதன் உட்பொருள்
என்னவென்றும் அவரால் விளக்கமுடியும். அவர் பேசும் போது சொன்னார்,
‘காணொளி’ என்ற சொல்லையும் பலர் பயன்படுத்துகின்றனர். எச்சொல் வெல்லுமோ
அது நிற்கும் என்றார்.

க.>

Innamburan Innamburan

unread,
Aug 22, 2010, 8:45:33 AM8/22/10
to mint...@googlegroups.com
என் ஓட்டு, விழியத்திற்க்கு.

2010/8/22 N. Kannan <navan...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Aug 22, 2010, 10:30:40 AM8/22/10
to மின்தமிழ்
On 22 Aug, 08:15, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> ‘காணொளி’ என்ற சொல்லையும் பலர் பயன்படுத்துகின்றனர். எச்சொல் வெல்லுமோ
> அது நிற்கும் என்றார்.
>
> க.>

"எச்சொல் வெல்லுமோ அது நிற்கும் " என்பது வட்டவாதம். டாடாலஜி.

சரி சொல் தான் வென்று விட்டது என எப்படி சொல்லலாம், எப்படி தெரியவரும்?

“நிற்கும்” சொல் என்பதை எந்த பரிசோதனை மூலமாக கண்டுபிடிக்கலாம்?

விஜயராகவன்

செல்வன்

unread,
Aug 23, 2010, 2:41:58 AM8/23/10
to mint...@googlegroups.com

2010/8/22 விஜயராகவன் <vij...@gmail.com>

"எச்சொல் வெல்லுமோ அது நிற்கும் " என்பது வட்டவாதம். டாடாலஜி.

சரி சொல் தான் வென்று விட்டது என எப்படி சொல்லலாம், எப்படி தெரியவரும்?

“நிற்கும்” சொல் என்பதை எந்த பரிசோதனை மூலமாக கண்டுபிடிக்கலாம்?

G O O G L E

வீடியோ  = 5,080,000 hits

விடியோ = 109,000

விழியம் = 4,860

காணொளி = 619,000

--
செல்வன்

www.holyox.blogspot.com

"தன் மகளை தன் மருமகன் எப்படி நடத்தவேண்டும் என  ஒரு ஆண் எதிர்பார்க்கிறானோ அதே போல் அவன் தன் மனைவியை நடத்த வேண்டும்" - செல்வன்

வினோத்-VINOTH

unread,
Aug 23, 2010, 4:12:16 AM8/23/10
to mint...@googlegroups.com

23 ஆகஸ்ட், 2010 12:11 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2010/8/22 விஜயராகவன் <vij...@gmail.com>

"எச்சொல் வெல்லுமோ அது நிற்கும் " என்பது வட்டவாதம். டாடாலஜி.

சரி சொல் தான் வென்று விட்டது என எப்படி சொல்லலாம், எப்படி தெரியவரும்?

“நிற்கும்” சொல் என்பதை எந்த பரிசோதனை மூலமாக கண்டுபிடிக்கலாம்?

G O O G L E

வீடியோ  = 5,080,000 hits

விடியோ = 109,000

விழியம் = 4,860

காணொளி = 619,000

நாம் எந்தச்சொல் நிற்கவேண்டும் என விரும்புகிறோமோ அதை இன்றிலிருந்தே கட்டுரைகள், ப்ளாக், மற்ற ஊடகங்களில் எழுதும் பதிவு, கட்டுரைகளில் பயன்படுத்திவிட்டால் போதும், இந்த ஹிட்ஸ் விரைவில் கூடிவிடும்.

பெரும் எழுத்தாளர்கள் இச்சொற்களை பயன்படுத்தினால் அதையே எளிதில் மற்றவர்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்...

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth

செல்வன்

unread,
Aug 23, 2010, 4:19:15 AM8/23/10
to mint...@googlegroups.com
பெரும் எழுத்தாளர்கள் யார்?

நான் உட்பட இனையத்தில் எழுதுபவர்கள் சும்மா காகிதபுலிகள்.ஜனதொகையில் அரை சதவிகிதம் கூட இவர்கள் எழுதுவதை படிக்காது.அரை சதவிகிதத்திடம் என சொல் பாப்புலர் என்பதை தான் கூகிள் சோதனை காட்டும்.நிஜத்தில் விடியோ என்பது 99% தமிழர்களால் பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.

பாடபுஸ்தகத்தில் ஏறினால் கொஞ்சம் மாற்றம் வரும்.

வினோத்-VINOTH

unread,
Aug 23, 2010, 5:44:00 AM8/23/10
to mint...@googlegroups.com

23 ஆகஸ்ட், 2010 1:49 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

பெரும் எழுத்தாளர்கள் யார்?

நான் உட்பட இனையத்தில் எழுதுபவர்கள் சும்மா காகிதபுலிகள்.ஜனதொகையில் அரை சதவிகிதம் கூட இவர்கள் எழுதுவதை படிக்காது.அரை சதவிகிதத்திடம் என சொல் பாப்புலர் என்பதை தான் கூகிள் சோதனை காட்டும்.நிஜத்தில் விடியோ என்பது 99% தமிழர்களால் பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.

பாடபுஸ்தகத்தில் ஏறினால் கொஞ்சம் மாற்றம் வரும்.

பெரிய எழுத்தாளர்கள். நிறை வாசகர் எண்ணிக்கை உள்ளவர்கள். பேச்சாளர்கள், பத்திரிகை, ஊடகங்களில் எழுதுவோர்கள்.

இவர்கள் பயன்படுத்தும் சொற்களே நாளைடவில் மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.

--

Innamburan Innamburan

unread,
Aug 24, 2010, 2:04:42 PM8/24/10
to mint...@googlegroups.com
'போக்குவரத்து', 'வரத்துப்போக்கு' என்ன வித்தியாசம்?
இன்னம்பூரான்

2010/8/23 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

ஆராதி

unread,
Aug 24, 2010, 8:11:25 PM8/24/10
to mint...@googlegroups.com
திரு இன்னம்பூரான்
இரண்டும் ஒன்றுதான். வழக்காற்றின் வலிமையால் வெவ்வேறாகத் தெரிகிறது. பொருளில் வேறுபாடு இல்லை. பேவதும் வருவதும் என்பதே போக்கு + வரத்து என்று நிலைத்துவிட்டது. இதையே திரைப்படப் பாடலில்  ‘வருவதும் போவதும் தெரியாது’,  என்றும் ’ யாரோ வருவார், யாரோ போவார்’ என்றும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் நீங்கள் சொன்னது போல் வரத்துத்தான் முதலில் உள்ளது.
இந்தச் சந்தேகத்தின் அடிப்படை தெரியவில்லையே?

அன்புடன்
ஆராதி

2010/8/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>
'போக்குவரத்து', 'வரத்துப்போக்கு' என்ன வித்தியாசம்?
இன்னம்பூரான்

2010/8/23 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

வினோத்-VINOTH

unread,
Aug 25, 2010, 5:44:54 AM8/25/10
to mint...@googlegroups.com

24 ஆகஸ்ட், 2010 11:34 pm அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:

'போக்குவரத்து', 'வரத்துப்போக்கு' என்ன வித்தியாசம்?
இன்னம்பூரான்

போனால் தான் வரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது..
-- தத்துவம் 2012

Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 6:51:06 AM8/25/10
to mint...@googlegroups.com
திரு.ஆராதி,

'...இந்தச் சந்தேகத்தின் அடிப்படை தெரியவில்லையே?.'

அதிகப்பிரசங்கித்தனம். புதுமைப்பித்தன், 'வரத்துப்போக்கு' என்ற சொல்லை
பயன்படுத்தியிருக்கிறார். அது எனக்கு பிடித்துப்போயிற்று. யாராவது தகராறு
செய்தால், இதை எடுத்துவிடலாம் என்று பார்த்தேன். நீங்கள் தெளிவு
செய்துவீட்டீர்கள். நன்றி.

இன்னம்பூரான்

2010/8/25 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

ஆராதி

unread,
Aug 25, 2010, 6:55:40 AM8/25/10