பாற்றை ‘Moth', பட்டாம்பூச்சி/பற்றாம்பூச்சி ‘Butterfly'

40 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 12, 2017, 10:27:44 AM4/12/17
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
சுவாமி பிரஜ்நானந்தர் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலை) வண்ணாரப்பூச்சி பற்றி மின்தமிழ் குழுவில் கேட்டார். ஸ்ரீவிவேகானந்த ஸ்வாமிகள் திவ்விய சரித்திரம். ஆசிரியர்: ஸ்ரீ சுப்ரமண்ய சிவம் (நமது நாட்டின் விடுதலைப்போராட்ட வீரர்) - இந்தநூலில் ”மிகவும் சிறிய பையனா யிருந்த பொழுதே, நரேந்திரன் ஒரு பெருங் கூட்டத்தின் முன்னே ஒருவனோடு முஷ்டி யுத்தம் செய்து ஜயமடைந்து, வெள்ளியினா லாக்கப் பெற்ற அழகியதோர் வண்ணாரப் பூச்சியை வெகுமதியாக அடைந்தான்.”  இந்த வெள்ளி வண்ணாத்திப்பூச்சி பரிசு பற்றி பல நூல்களிலே சொல்லியுள்ளனர்:

On Friday, April 7, 2017 at 3:54:39 AM UTC-7, Prakash Sugumaran wrote:

துவைக்காத ஆடைகளை தொடர்ந்து உடுத்தினால் உடல் முழுக்க ஒருவித வலையப்புண்கள் ஏற்படும். பல வண்ணங்களில் காணப்படும் அந்தப்புண்களுக்கு ‘வண்ணார்பற்று’ என்பது பழந்தமிழ் பெயர். பார்ப்பதற்கு வண்ணார்பற்று போலவே இருக்கும் பூச்சியை ‘வண்ணார்பூச்சி’ என்றும், ‘பற்றாம்பூச்சி’ என்றும் அழைத்தது, பிறகு ‘வண்ணாரப்பூச்சி’, ‘பட்டாம்பூச்சி’ என்று மருவியது.

பற்றாம்பூச்சி - பட்டாம்பூச்சி சரியான விளக்கம். அத்திப்பற்று - அத்திப்பட்டு எனப்படுகிறது.படபட/பறபற > பறவை.
Calicut -  கழிகோறு என்றே எழுதப்பட்டுள்ளது 4/5 நூற்றாண்டில். அதாவது, கழிகோடு. (உப்பங்) கழிகோடு. இன்று கோழிக்கோடு.

பழந்தமிழிலே மூன்று லகரம் (ல, ள, ழ), மூன்று நகரம் (ந, ன, ண) இருப்பதுபோலவே மூன்று த-கரம் (த, ற, ட) இருக்கிறது. ற = alveloar  ṯ.
பறவை, பறத்தல், பறை, படலை இவற்றை முறையே paṯavai, paṯattal, paṯai,, paṯalai, ...   எனக் குறிப்பர் மொழியியலார்.
உ-ம்: Bh. Krishnamurti றகரத்தை ṯ (alveolar) என்றுதான் எழுதினார் அவர் நூல்களில். paṯai (பறை) gets its Tamil name
using alveloar  ṯ  due to its leather membrane vibrating up and down and producing sound.

றகரம் த- என்றோ, ட- என்றோ மாறும். அவ்வாறு Moth என்பதன் தமிழ்ச்சொல்லுக்கு மாறுவதைப் பார்ப்போம்.
பற்றுப் பற்றாக இறக்கையில் உள்ள பூச்சி பற்றாம்பூச்சி/பட்டாம்பூச்சி (butterfly). பற்றாம்பூச்சிக்கும்,
Moth என்பவற்றுக்கும் வேறுபாடு காட்டப் பாற்றை என மலையாளத்தில் சொல்கின்றனர். அப்படி
ஒரு பாற்றை யாழ்ப்பாணத்தில் கிடைத்தது:

”யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் மிகப்பெரிய வண்ணாத்திப்பூச்சி ஒன்றினை பிரதேசவாசிகள் நேற்று கண்டெடுத்துள்ளனர்.

10 சென்ரி மீட்டர் உயரமும் 18 சென்ரி மீட்டர் அகலமும் கொண்டதாக மண்ணிறத்தில் இவ் வண்ணாத்துப்பூச்சி காணப்படுகின்றது.”







பற்றாம்பூச்சி பாற்றை என Moths-கு பெயராகி உள்ளமை வெள்ளிடைமலை. பாற்றை என மலையாளிகள் அழைக்கும் பழஞ்சொல் தமிழில் பாத்தை:பாச்சை என்றாகியுள்ளது.

பாற்றை > பாத்தை/பாச்சை (தமிழ்), பாந்தை (> ஹாந்தெ - கன்னடத்தில்).

DEDR 4083 b. Ma. pāṟṟa moth. Ka. (Bark.) hānte id. Tu. pāntè butterfly; (B-K.) pāte, pānte id., moth. 

கரப்பான் பூச்சிக்கும் Moth போல மண்ணிறம் இருப்பதாலும், பறக்க வல்லதாலும் பாச்சை (தமிழ்), பாற்றை (மலையாளம்) என்ற பெயருண்டு.

-----------------------------------------------


பாப்பா - பாவை ‘doll' - வண்ணாத்திப்பூச்சியின் பழந்திராவிடப் பெயர் (another Proto-Dravidian word for butterfly. Earlier one is paṟṟā )

DEDR 4083 (a) Ta. pāppātti butterfly. Ma. pāppātti id. Koḍ. pa·pïli id., moth. Go. pāpe (A. Y. Ch. Ph. S.) butterfly, (Ma.) grasshopper; (Tr.) pāpē butterfly; (W.) phāpe id., grasshopper; (Ph.) phāphe locust (Voc. 2189). Kur. paplā butterfly. Cf. 4084 Pe. pāmi.


பாப்பா, பாப்பு, பாப்பாத்தி - சிறு பெண்குழந்தையைக் குறிக்கும். பொம்மை போல் உள்ளதால். பாவை பாப்பா தொடர்புள்ள சொற்கள்.

கண்ணின் கருவிழிக்கு பாப்பா எனப் பெயர் உண்டு. கருமணியிற் பாவாய் நீ போதாய் (குறள்). பாப்பா = பாவை.


பாப்பா, பாப்பாத்தி, பாப்பாச்சி என்றும் வண்ணாத்திப்பூச்சிக்கு ஒரு பெயர்.
பாப்பா = doll, பாவை.

கண்ணின் கருவிழியைப் பாப்பா என்பதும் இதனாலேயே. பலவண்ணங்கள் விரவி
இருத்தலால். அதனால் தான், முந்து-திராவிடமொழிக் காலத்திலே பாப்பா என பட்டாம்பூச்சிக்குப் பெயர்.
இது வட இந்திய த்ராவிட பாஷைகள் பாப்பா என பட்டாம்பூச்சியை அழைப்பதால் வெளிச்சமடைகிறது.

ஓடி விளையாடு பாப்பா - பாரதி. பாப்பா என்று தன் இளைய மகளைப் பாரதியார் எழுதியுள்ளார்.

இந்த சமயத்தில் "பாப்பா" (பாப்பா - ஸ்ரீ பாரதியாரின் இளைய குமாரி.) வந்து "பகவதிப் பாட்டு பாடட்டுமா?" என்றுகேட்டது. "பாடு பாடு" என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.

ஆ  ஆ  ஆ  !

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்; - அவை    நேரே இன்றெனக்குத் தருவாய்; - என்றன்    முன்னைத் தீயவினைப் பயன்கள்; - இன்னும்    மூளாதழிந்திடுதல் வேண்டும்; - இனி    என்னைப் புதிய உயிராக்கி; - எனக்    கேதும் கவலை யறச்செய்து; - என்றும்    சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! ஹே!    காளீ, வலிய சாமுண்டீ! - ஓங்    காரத் தலைவி யென் னிராணீ!


பெண்ணைப் பாப்பா என்பது பாவை போல் இருப்பதால்.
 

இன்றும் குழந்தைகளைப் பாப்பாத்தி, பாப்பா என்னும் வழக்கம் கொங்குநாட்டில்
பரவலாக உண்டு. 


இதே, சின்ன பாப்பாத்தியோ, பெரிய பாப்பாத்தியோ (அன்பர்களே, கொங்கு மண்டலத்தில் பெண் பிள்ளைகளை அன்பாக பெரிய பாப்பாத்தி, சின்ன பாப்பாத்தி என்று விளிப்பது வாடிக்கை! ஆமுங்க, நெலையில‌ நிக்குற தேரை, யாருன்னா தெருவுல இழுத்துவுட்டா என்ன பன்றது? அதான், சொல்லி வெச்சிர்லாம்!!) பொன்னானை செரி பன்னீற்ச்சுன்னு வெயுங்கோ, பசங்க சொல்லுறது,

பாரு கண்ணூ, நான் ஒரு நாள் பொழுது விடிஞ்சதும் ஏழு மணி வண்டிக்கு நெகமம் போயி உரக் கடையில உரமும், பருத்திக் காட்டுக்கு சிம்புசு மருந்தும் வாங்குலாமுன்னு போயிட்டு இருந்தன். அப்ப வடக்காலூட்டு பாப்பாத்தி அக்கா, அங்க நின்னுட்டு இருந்த பூவாத்தக்கா கிட்டச் சொல்லுது,

“ஏனுங்... கடைசி வண்டிய உட்டுப் போட்டீங்ளாக்கூ? புக்குளத்து பெரிய பாப்பாத்தி ஊட்ல இருந்துட்டு வர்லாமுங்ளே?”

பாப்பா, பாப்பாத்தி - இங்கே பல வண்ணக் கோலம் கொண்ட பாவை (doll) போல. இதனை சென்னைப் பேரகராதியும் சுட்டுகிறது.
இவை தமிழரில் எல்லா சமூகங்களிலும் பெண்குழந்தையை அழைக்கும் பெயர்கள்.

 ”285. நூ:  பார்ப்பு திரிந்து பெண்ணிள மைக்காம்;

         பிள்ளை உயர்திணை ஆண்பெண் பொதுப்பெயர்

    பொ: ‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை’ என்று தொல்காப்பி யர்
கூறிய இளமைப் பெயரிரண்டில் பார்ப்பு என்பது திரிந்து பெண்டிர்க்குச்
சூட்டுப் பெயராதலும், பிள்ளை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுப்
பெயராதலும் நடைமுறை.

    சா: பார்ப்பு-பாப்பு-பாப்பா=பாப்பாத்தி (குழந்தையம்மை) இவை இன்றும்
பெண் குழந்தையர்க்கு வழக்கிலுள. ஆண் பிள்ளை; பெண் பிள்ளை;
ஆண்பிளே,பெண்பிளே எனத்திரிந்து பெரியோரைக் குறித்தல் வழு.
ஆண்பிளைப் பிள்ளை,பெண் பிளைப் பிள்ளை என வருதல் மிகு வழு. 
பிள்ளை என்பது தனித்துக்குறிக்கும் போது ஆணைச்சுட்டுவதும் உண்டு.


நா. கணேசன்


புதுமைப்பித்தன், மாகாவியம்:

 - வண்ணாத்திப்பூச்சி போன்ற இயற்கை அழகை, உயிரிகளைப் பேசுகிறது.


N. Ganesan

unread,
Apr 12, 2017, 10:42:01 AM4/12/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
பாற்றை - கொங்குத் தமிழிலும், பாற்ற - மலையாளத்திலும். இரண்டும் பழைய சேரநாடு.

  • ”பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
  • பாச்சை, பாற்றை- கரப்பாம்பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)”
  • Not just cockroaches, bur also moths. See DEDR 4083 ~NG

nkantan r

unread,
Apr 12, 2017, 11:27:11 AM4/12/17
to மின்தமிழ்

பாச்சை (one type of cicada, cricket)
  கயா' யாத்திரை ! | Page 4 | Indusladies
=================================

அந்துப்பூச்சி (moth)

Meaning of MOTH - LIGHTGRID - Lichtnetz - REDDELUZ=======================
 butterfly பட்டாம்பூச்சி

... சின்னம் ==>> பட்டாம்பூச்சி

regards
rnkantan

N. Ganesan

unread,
Apr 12, 2017, 10:57:27 PM4/12/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Wednesday, April 12, 2017 at 8:27:11 AM UTC-7, nkantan r wrote:
அந்துப்பூச்சி (moth)

Meaning of MOTH - LIGHTGRID - Lichtnetz - REDDELUZ=======================


 அந்துப்பூச்சியை நினைவூட்டினமைக்கு நன்றி. அந்தச் சொல்வரலாற்றை ஆய்வோம்.

பற்றை, பற்றையாக இருப்பதால் பற்றாம்பூச்சி/பட்டாம்பூச்சி.

பற்றை > *பத்தை/பந்தை என அந்துப்பூச்சியின் பழைய பெயராக இருந்திருக்கும்.
பப்படம் (பருப்பு+அட-) > ஹப்பள > அப்பளம் என்றாதல் போல்,
பந்தை > ஹந்தை > அந்து(பூச்சி) என Moths பெயர். ஹாந்தெ - கன்னடத்தில் Moth.
பத்தை - பதங்கம் - any flying insect, especially a moth, that is attracted by a light.

பத்தை:பந்தை: ஒப்பீடு
கோத்து/கோந்து ‘gum'. சாத்து/சாந்து ‘சந்தநம்’, தொத்து/தொந்தம் ‘சொந்தம்’,
பொத்து/பொந்து, வித்து/விந்து, கேத்து/கேந்து (கேந்திப்பாடல் - நாட்டுப்பாடல் வகை),
சேத்து/சேந்து (தண்ணி கிணற்றில் சேந்து), நத்தை/நந்து, கொத்து/கொந்து.

பற்றாம்பூச்சி தொடர்பாக பாற்றை என Moths-கு பெயராகி உள்ளமை வெள்ளிடைமலை. பாற்றை என மலையாளிகள் அழைக்கும் பழஞ்சொல் தமிழில் பாத்தை:பாச்சை என்றாகியுள்ளது.

பாற்றை > பாத்தை/பாச்சை (தமிழ்), பாந்தை (> ஹாந்தெ - கன்னடத்தில்).

DEDR 4083 b. Ma. pāṟṟa moth. Ka. (Bark.) hānte id. Tu. pāntè butterfly; (B-K.) pāte, pānte id., moth. 

கரப்பான் பூச்சிக்கும் Moth போல மண்ணிறம் இருப்பதாலும், பறக்க வல்லதாலும் பாச்சை (தமிழ்), பாற்றை (மலையாளம்) என்ற பெயருண்டு.


நா. கணேசன்

சாகைட்ராசஸ் மலபேரிக்கஸ்





















இலை சுருட்டு புழு: ஸைலெப்ட்டா டெரோகேட்டா




















Reply all
Reply to author
Forward
0 new messages