மறக்க இயலாத மாமன்னர் இராசராசன்!

133 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Oct 30, 2017, 10:27:18 AM10/30/17
to மின்தமிழ்


மறக்க இயலாத மாமன்னர் இராசராசன்!

இன்று சதயத்திருநாள் !
மாமன்னர் இராசராசன்  அவதரித்தநாள் !
சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். அது ஒரு பெருமைபெறுகிறது ராஜராஜன் அதில் பிறந்ததால் .

இந்தியவரலாறு  குப்தர்களையும்,மௌரியர்களையும்  விஜயநகர அரசர்களைப் பற்றிச் சொல்லுமளவிற்கு  ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ அதிகம் சொல்வதில் . .ஆதாரங்கள் என்னமோ கொட்டிக்கிடக்கிறது .
தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று தோன்றுகிறது .
மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சிபி , முசுகுந்தன் மனு, செம்பியன் என்று புராணங்களில் அவர்களின் மரபு இடம் பெற்றிருக்கிறது .அதனால் தான் வரலாற்றில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா என்று தெரியவில்லை .

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் மிக முக்கியமானவர் ஆவார் . 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.
இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது  ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.ஆகும் .
அவரது பிறந்த நாள்  - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)
மேலும் வேறுபட்ட கருத்துக்களும் சில உண்டு .
இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இராசராசன் வரலாற்றில் பெற்றிருந்த சிறப்பை அவரது சிறப்புப் பெயர்கள் - 42 குறிப்பிடுகின்றன .
  1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன் 
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)   வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்
தஞ்சை பெரியகோயில் என்றும் ஒரு அதிசயமாகும் .யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. 
உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுனர்களே கிடையாது. இராஜராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாக கட்டிய (கி.பி.985 - 1012)அரும்பெரும் ஆலயம் இது.  இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர். 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி . இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.  அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர்.
இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனப்படுகிறது .
முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.
எத்தனை அழகாக தனது வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் பாருங்கள் . இன்னமும் தமிழர்கள் வரலாற்று அறிவு இல்லாதவர்கள் என்று பழி சுமத்தப்படுகிறது .
பதிவுகள் என்னமோ மிகவும் உண்டு ஆனால் சரிவர ஆராயப்படவில்லை .
மாமன்னர் இராஜராஜன் ஆண்ட காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் சில ,
சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்
மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா? இதோ அரசின் வருவாய்க்காண வரிகள்.
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை

கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்
இவரின் பெருமைக்கு இன்னம் பல சிறப்புச்செய்திகள் வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன .ஆனால் முக்கிய ஒன்றை குறிப்பிடாமல் இருக்க முடியாது .
அது ஒரு அறிவியல் அற்புதம் ! சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.
இத்தனையும் செய்த மாமன்னரின் சிலை இருக்குமிடம் அறிந்தால் வருத்தம் மிகும் .
 பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் இராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். இராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.
பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. இச் சிலைகளை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும் சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.

பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. 

இந்த அற்புத வரலாற்று முக்கியம் வாய்ந்த சிலைகளை  மீண்டும் தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும்.இதுவே மாமன்னர் இராஜராஜனுக்கு நாம் 
செய்யும் நன்றி கூறல் ஆகும் .
அண்ணாமலை சுகுமாரன் 
30/19/17

Suba

unread,
Oct 30, 2017, 11:57:57 AM10/30/17
to மின்தமிழ்
இப்பதிவை மின்தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்,.

சுபா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேனீ

unread,
Oct 30, 2017, 10:05:13 PM10/30/17
to மின்தமிழ்
தமிழர் வரலாற்றைச் சிறப்பிக்கும் பதிவுக்கு நன்றி. 

தேமொழி

unread,
Oct 30, 2017, 10:57:59 PM10/30/17
to மின்தமிழ்

ஆனைமங்கலம் செப்பேடுகள் காட்டும் இராஜராஜ சோழனின் சமயநல்லிணக்கப் பண்பு 

-- தேமொழி

சைவசமயத்தைப் பின்பற்றியிருந்து உயர்ந்த தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய இராஜராஜ சோழன், சமயநல்லிணக்கத்திலும்  தான் உயர்ந்தவனே என்று காட்டியதற்குச் சான்றாக அமைவது அவர் சோழ மண்ணின்  நாகப்பட்டினம்  நகரில்,  கிடாரத்தை (இன்றைய மலேசியா) ஆண்ட சைலேந்திரகுல அரசனான மாற விஜயதுங்கவர்மன் எழுப்ப விரும்பிய சூடாமணி புத்த விகாரத்திற்கு  நிலமளித்து, நிதியளித்து, புத்தக் கோயில்  நிர்வாகத்திற்காக ஆனைமங்கலம் என்ற ஊரின் நிலத்தை நிவந்தமாக அளித்த செய்கை. அதை  விவரிக்கிறது 'லீய்டன் செப்பேடுகள்' அல்லது  ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden copper plates) தரும் செய்தி. 

இராஜராஜ சோழன் ஆதரவுடன் சைலேந்திரகுல அரசனான மாற விஜயதுங்கவர்மனால் கி.பி. 1006 இல் நாகப்பட்டினத்தில் சூடாமணி புத்த விகாரம் கட்டப்பட்டது. 

இராஜராஜ சோழ மன்னனின் வழி வந்த அவரது மகன்  இராஜேந்திர சோழனும், பின்னர் முதலாம் குலோத்துங்க சோழனும் குறிப்பிடும் இந்தச் செய்தியை ஆனைமங்கலம் செப்பேடுகள் தரும் தகவல்கள் மூலம் நாம் அறியலாம். இன்று இந்த ஆனைமங்கலம் செப்பேடுகள்  நெதர்லாண்ட் நாட்டின் லெய்டன் நகர் அருங்காட்சியகத்தில் உள்ளதால்  (Leiden University in the Netherlands) 'லீய்டன் செப்பேடுகள்' எனவும் அறியப்படுகிறது. இச்செப்பேடுகள்  தரும் தகவலை மதுரைத்திட்டம் தளத்தில் படித்தறியலாம் (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0329.html).


ஆனைமங்கலச் செப்பேடுகள்



(1 ) 'லீய்டன் பெரிய செப்பேடு'
மாமன்னன் முதலாம் இராஜராஜன் (985-1014)  வழங்கிய ஓர் அறத்தினை  அவன் மகன் இராஜேந்திரன் (1012-1044)  தாமிரசாசனம் செய்ததை விளக்குவது

(2) 'லீய்டன் சிறிய செப்பேடு'
முதலாம் குலோத்துங்கன் (1070-1120)  அவ்வறத்தையே மீண்டும் உறுதி செய்து  மேலும் பிறவும் அளித்ததை விளக்குவது

(1) லீய்டன் பெரிய செப்பேடு - நாகப்பட்டினத்தில், முதலாம் இராஜராஜன், தன்ஆட்சிக்கு உட்பட்ட, கடல்கடந்த தூர கிழக்கு நாடான, ஸ்ரீவிஜய நாட்டுத் தலைவனும், [இன்றைய சுமத்திரா-ஜாவா, Keddah] கிடாரத்தை ஆளும் சைலேந்திரகுல அரையனான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் பெயரால் எடுப்பிக்கின்ற, சூடாமணிபன்ம விகாரம் என்னும் பௌத்தர் வழிபாட்டுத் தலத்திற்கு, வேண்டும் நிவந்தங்களுக்கு க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டு ஆனைமங்கலம் எனும் ஊரில் நிலம் தொண்ணூற்றேழே இரண்டுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் மூன்றுமா முக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல், எண்ணா யிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது முக்கலனே இருதூணிக்குறுணி ஒருநாழியும், தன் ஆட்சியின் ஆண்டு 21 வது, நாள் தொண்ணூற்று ஆறில் தலைநகர் தஞ்சையில் இருந்த புரம்படிமாளிகை 'ராஜஸ்ரயன்' தெற்குமண்டபத்தில் எழுந்தருளி இருந்தவாறு, பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக் கொடுத்த தானம்அளி ஆணையை விவரிக்கும் ஆவணமாகும் ஆணைநிறைவேற 2 ஆண்டுகளும் 18 நாட்களும் கடந்தன இவ்வாணை அவன்மகன் இரோஜேந்திர சோழன் காலத்தில் தாமிரசாசனமும் செய்யப்பட்டுள்ளது.

(2) லீய்டன் சிறிய செப்பேடு - முதலாம் குலோத்துங்க சோழன், மேற்கண்ட பௌத்தபள்ளிக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன்காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை அளிக்கவும் அக்காலத்திருந்த மேற்படி கிடாரத்தரையனின் தூதன் ராஜவித்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானதுங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பித்தபடி, மன்னன் தன் இருபதாவது ஆண்டில் தன் ஆயிரத்தளியான ஆகவமல்ல குலகாலபுரத்து கோயில் (அரசன் இல்லம்) உள்ளால் திருமஞ்சன சாலையில் பள்ளிபீடம் 'காலிங்கராய'னில் எழுந்தருளி இருந்தபோது சோழகுலவல்லி பட்டி னத்து (நாகப்பட்டினம்) இராஜராஜ பெரும்பள்ளி (மேற்படி விகாரம்) மற்றும் இராஜேந்திர பெரும் பள்ளிக்கு (இவர் காலத்து இராஜேந்திர சோழன் பெயரிலும் வேறு விரிவுற்றது போலும்) அளித்திட்டதை விவரிக்கும் ஆவணமாகும்.

பின்குறிப்பு:  இராஜராஜ சோழன் ஆதரவுடன் சைலேந்திரகுல அரசனான மாற விஜயதுங்கவர்மனால் கி.பி. 1006 இல் கட்டப்பட்ட சூடாமணி புத்த விகாரம்,  ஐரோப்பியர் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த பொழுது, ஆகஸ்ட் 28, 1867 இல் பிரஞ்சு கிறிஸ்துவ அவையினரால் அரசு ஆதரவுடன், உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறித் தகர்க்கப்பட்டது. 



மேலும் தகவலுக்கு பார்க்க: 
Anaimangalam CeppetukaL  (Leiden Plates) - http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0329.html
The Return of the Buddha: Ancient Symbols for a New Nation, by Himanshu Prabha Ray, Page- 150 - https://books.google.com/books?id=uXo9BAAAQBAJ

படம் உதவி: 
Leiden University's new Asian Library

 

தேமொழி

unread,
Oct 30, 2017, 11:13:44 PM10/30/17
to மின்தமிழ்


On Monday, October 30, 2017 at 8:57:57 AM UTC-7, Dr.K.Subashini wrote:
இப்பதிவை மின்தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்


மின்தமிழ்மேடையில் . . . 
மறக்க இயலாத மாமன்னர் இராசராசன்!




..... தேமொழி   

annamalai sugumaran

unread,
Oct 31, 2017, 12:13:52 AM10/31/17
to mint...@googlegroups.com
நன்றி பல , முனைவர் சுபா 
வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி !

31 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 8:43 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
Reply all
Reply to author
Forward
0 new messages