வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு
ஆனால் கடலில் மூழ்கி இருந்ததற்கு சாட்சியாக புதுச்சேரிப் பகுதி சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்து இருந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. புதுவையின் அருகில் உள்ள பொம்மையர் பாளையத்தில் கிடைத்த பழைமை வாய்ந்த மனித எலும்புக்கூட்டை அறிவியல் முறைப்படி ஆய்ந்ததில் அதன் காலம் ஒன்றறை லட்சம் ஆண்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அதற்கு முன்பிருந்தே மனிதர்கள் புதுச்சேரி பகுதியில் வாழ்ந்துள்ளது தெரிகிறது. இதனால் உலகில் மனிதன் முதல் முதலில் வாழத்தொடங்கிய இடங்களில் ஒன்றாக புதுச்சேரியைக் கருதலாம்.
எனவே அகத்தியர் இங்கு வாழ்ந்ததை நாம் வெறும் கதையாக புறம் தள்ளத் தேவையில்லை.
மேலும் இந்தப் புதுச்சேரிப் பகுதியின் பழமையை நிலைநிறுத்த மிக அருமையான சான்றுகளும் கிடைத்துள்ளன. புதுச்சேரியின் அருகே உள்ள திருவக்கரை என்ற ஊர் பழமையிலும் பழைமை வாய்ந்ததாகும்.##Pg##
சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்களின் படிவப்பாறையை வடிவங்கள் (Fossilized Trees) அங்கு அதிகமாக கிடைத்துள்ளது. இதேப் போன்ற மரப்படிவங்கள் புதுவையின் அருகில் உள்ள காலாப்பட்டிலும் கிடைத்துள்ளன.
மேலும் திருவக்கரையில் பெருங்கற்கால மனிதனின் சவக்குழியில் கற்களை வட்டமாக அடுக்கி வைத்து இருந்ததையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்பை திட்டை என்று கூறுவார்கள். மேலும் புதுவையின் அருகில் உள்ள சுத்துக்கேணியிலும் புழைக்குழிகள் பெருங் கற்காலத்தை சேர்ந்தவை (Megalitlioc Period) என்று கண்டறியப் பட்டுள்ளது.
எனவே மனிதனின் மிகப் பழமையான வாழிடமாக இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்திருக்கிறது. ஓன்றறை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை மனிதன் இங்கு வாழ்ந்த சான்றுகள் கிடைத்துள்ளது. பின் லெமோரியா கண்டம், குமரிக்கண்டம் ஆகியவை கடல்கோள் ஏற்பட்டதால் அழிந்தபோது புதுச்சேரியின் பெரும் பகுதியும் கடலினுள் சென்றுள்ளது. அந்த சமயத்தில் இதன் பெயர் வேதபுரி ஆகவோ அகத்தீஸ்வரமாகவே இருந்திருக்கலாம்.
பின்பு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இந்தப்பகுதி கடலில் இருந்து மீண்டு அங்கே மக்கள் குடியேறத் துவங்கி உள்ளனர். அந்தச் சமயத்தில் இது புதுச்சேரி என அழைக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டவர்களும் இந்தப்பகுதியை புதுவை எனப் பொருள் படும் வகையில் "புதுகே' என அழைத்துள்ளனர்.
எனவே இத்தனை நீண்டகால மனித வாழ்விடத்தில் மனிதனின் இயற்கையான குணாதீசியங்கள் அதிர்வுகளால் அடர்த்தியாய் வியாபித்திருப்பதில் ஆச்சிரியம் இல்லை. இத்தனை நீண்ட நெடிய இந்த மனித குல வாழ்வில் அவர்கள் எத்தனை எத்தனை அனுபவ மனக்குமுறல்கள், ஆசைகள், அபிலாட்சைகள் இங்கு அடர்த்த?991;ாய் வியாபித்துள்ளது. எனவே இது ஒரு தீவிர கவர்ச்சியுடன் அங்கு வருபவர்களை இங்கேயே தங்கச் செய்யும் மாட்சியுடன் அமைந்துள்ளது.
இத்தகு பெருமை மிகு புதுவையில் அகத்தியரின் வாழ்விற்குப் பிறகு வாழையடி வாழையாய் சித்தர் பரம்பரை இப்புனித ஆன்மீக பூமியில் வாழ்ந்து வருகின்றது. நமது அறிவுக்கு எட்டியவரை அருட்பிரகாச வள்ளலார் இங்கு பலமுறைவந்தததாக தெரிகிறது, வங்காளத்தில் இருந்து அரவிந்தரை இந்த புனித பூமியின் காந்தசக்திதான் இங்கு வாழ இழுத்தது. அதைத் தொடர்ந்து பிரான்சு நாட்டில் இருந்து வந்த அன்னை இங்கு வாழ்ந்து மறைந்தும் இன்னும் அருள் பாவித்து வருகிறார். மேலும் கழுவெளிசித்தர், சிவஞான பாலசித்தர், பாலயசுவாமிகள், தொன்னை காது சுவாமிகள், அழகர் சுவாமிகள், சித்தானந்த சுவாமிகள், சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள், ராம்பரதேசி சுவாமிகள், அக்காசுவாமி, கம்பளி ஞான தேசிகர், பகவந்த சுவாமி, கதிர்வேல் சுவாமிகள், சாந்தாநந்த சுவாமிகள், தயானந்த சுவாமிகள், சட்டி சுவாமிகள், மண்ணுருட்டி சுவாமிகள், கோவிந்த சுவாமிகள் போன்ற புனித ஆத்மாக்கள் வாழ்ந்து இன்னும் அருள் பாவிக்கும் புனித பூமிதான் புதுவை.
இன்னும் சொல்லப் போனால் நமது முண்டாசுக் கவிஞர் பாரதி தன்னையே ஒரு சித்தராகத் தானே கூறிக் கொண்டார்? அவரது பல ஆன்மீக படைப்புகள் இப்புனித பூமியில் தான் நடைபெற்றது. புதுவையின் பல முகங்களில் அதன் முக்கிய முகம் அதன் ஆன்மீகத்தாக்கம் தான். புதுவை ஒரு ஞான பூமி தான். தற்போது அரவிந்தர் மற்றும் அன்னையின் அருள் சக்தியின் இருப்பிடமாக உள்ள அரவிந்தர் ஆசிரமம் இருக்கும் இடத்தில் தான் அகஸ்தியர் தனது வேதபுரியை அமைத்திருந்ததாக நம்பப்படுகிறது. பொதுவாகவே சித்தர்களும், ஞானிகளும் அடங்கிய, புழங்கிய இடங்களை நாடி குவியல் குவியலாகப் பொருளும், கும்பல் கும்பலாக மக்கள் கூட்டமும் கூடுவது இயற்கை தான்.