Fwd: [வல்லமை] திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்! - தேவ நேயப் பாவாணர்

72 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Feb 7, 2018, 11:49:50 PM2/7/18
to thantha...@googlegroups.com, mintamil, tamilmantram, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, veeramani k

---------- Forwarded message ----------
From: seshadri sridharan <ssesh...@gmail.com>
Date: 2018-02-07 23:30 GMT-05:00
Subject: [வல்லமை] திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்! - தேவ நேயப் பாவாணர்
To: vall...@googlegroups.com


திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்!
- தேவ நேயப் பாவாணர் (1959)

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை 'அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்" என்றனர் முன்னோர்.

"மொழி பெயர் தேசத்தாயிராயினும்" என்பது குறுந்தொகை (11). தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்)

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட சாஸ்த்ரம்" எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, 'நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் "தென் ஆசியச் செய்தி" ஏட்டில் (மார்ச் 16-31, 2016) வெளி வந்தது.)

Tamilthesiyan.wordpress.com


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Bala

unread,
Feb 8, 2018, 1:57:57 AM2/8/18
to மின்தமிழ்
இந்தக் கட்டுரை அவர் எழுதியது என்பதற்கான ஆதாரம் இருப்பின், அதையும் பகிரவும். நன்றி.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 8, 2018, 1:09:38 PM2/8/18
to thantha...@googlegroups.com, Asan Buhari, Aravindan Neelakandan, Raju Rajendran, vallamai, mintamil, tamilmantram, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, veeramani k

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்த தினம் இன்று 1902 பிப்ரவரி 7

81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மில் ஒருவராக பிறந்தவர்; 
ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.

•மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையக் கற்றுத் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.

•வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.

•தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.

•உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.

•50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 43 அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களையும் 183 ஆராய்ச்சி கட்டுரைகளையும் தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

மொழிப்பெரும் புலவர் உயிர்ப்பாடும் முக்கழகம்..மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

தமிழ் பிற மொழிச் சொற்கள் கலவாமல் தனித்தியங்க வல்ல உயர்தனிச் செம்மொழி என முழங்கியவர்.

தமிழே உலக முதற்றாய் மொழி..என அறுதியிட்டு முழங்கியவர்

தமிழ் திரவிட மொழிகளுக்கெல்லாம் தாய் என்றும் இந்திய /ஆரிய மொழிகளுக்கெல்லாம் மூலம் என அறைந்துரைத்தவர்

குமரிக்கண்டமே முதல்மாந்தன் பிறந்தகம்

தமிழனே உலகின் மூத்த முதல்மாந்தன்..


#மொழிஞாயிறு
#தேவநேயப்பாவாணர் 
பிறந்த தினம் இன்று 
1902 பிப்ரவரி 7

பாவாணரைப் போற்றுவோம் ...தனித்தமிழைப் பேணுவோம்..தமிழினத்தைக் காப்போம்..

பதிவு(நன்றி) : த.அகரன் 
(பன்னீர்ச் செல்வம்)

N. Ganesan

unread,
Feb 8, 2018, 7:58:58 PM2/8/18
to மின்தமிழ்
2018-02-07 22:57 GMT-08:00 Bala <bala...@gmail.com>:
> இந்தக் கட்டுரை அவர் எழுதியது என்பதற்கான ஆதாரம் இருப்பின், அதையும் பகிரவும்.
> நன்றி.

I don't think this was written by Pavanar. All his articles are in
Tamil Virtual University website.

N. Ganesan
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

Bala

unread,
Feb 9, 2018, 7:17:15 AM2/9/18
to மின்தமிழ்
தகவலுக்கு நன்றி, திரு கணேசன். 

எனினும், திரு ஜெயபாரதன் அவர்கள் நல்லதொரு ஆதாரம் அனுப்புவார் என்று ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.

S. Jayabarathan

unread,
Feb 9, 2018, 9:38:48 AM2/9/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anne Josephine, Jay Jayabarathan, Anna Kannan
நண்பர் பாலா,

நான் கூறும் நல்லதோர் ஆதாரம் இதுதான்.

திராவிடம், திராவிடர், திராவிட நாடு இம்மூன்று சொற்களோ, அவற்றைப் பற்றிய நேரடி, மறைமுக விளக்கங்களோ இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை.

அவை குழப்பமான சொற்கள். தமிழரைப் பிரித்து வெறுப்பூட்டும் சொற்கள்.  தமிழ்நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு திராவிட நற்திருநாடு என்று தினம் பாடி வருவது துரோகச் செயல்.  

திராவிடத் தந்தை பெரியார் காலத்திலேயே "திராவிட நாடு" செத்துபோய்ப் புதைக்கப் பட்டு விட்டது.  அதற்கு மூச்சு ஊதி மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வது அறிவற்ற செயல் ! 

தமிழ்நாட்டில் திராவிடர் எனக் கருதப்படுவர் 1% கூட இருக்காது !!!  

திராவிடம் என்பது அரசியல் சட்டத்தில் விளக்கப்படாத பரப்பு !

தமிழ் நாட்டுப் பாடல் "தெக்கணமும் அதிற் சிறந்த செந்தமிழ் நற்திருநாடும்"  என்று திருத்தப் பட வேண்டும்.


சி. ஜெயபாரதன்

++++++++++++++

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 9, 2018, 9:43:33 AM2/9/18
to mintamil, vallamai, tamilmantram, thantha...@googlegroups.com, veeramani k, இலக்குவனார் திருவள்ளுவன், ருத்ரா (இ.பரமசிவன்), RRavi Ravi, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anne Josephine, Jay Jayabarathan, Anna Kannan

S. Jayabarathan

unread,
Feb 9, 2018, 9:51:34 AM2/9/18
to mintamil, vallamai, tamilmantram, thantha...@googlegroups.com, veeramani k, இலக்குவனார் திருவள்ளுவன், ருத்ரா (இ.பரமசிவன்), RRavi Ravi, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anne Josephine, Jay Jayabarathan, Anna Kannan
இதுதான் தமிழ்நாட்டுப் பாடல்.


தங்கத் தமிழ்நாடு

valluvar-statue

தங்கத் தமிழ்நாடு

சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

 

தங்கத் தமிழ்நாடு எங்கள் தாய்நாடு 

சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!

சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!

மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு  

எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட

முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!

வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட 

தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட

ஆத்திசூடி ஓளவைசூடிக்கொடுத்த ஆண்டாள் 

வான்புகழ் வள்ளுவர்தேன்கவி இளங்கோ,

கவிச்செல்வர் கம்பர்கவிக்கோ சேக்கிழார்

புதுமைக்கவி பாரதிபுரட்சிக்கவி பாரதிதாசன்,

யாவரும் உனது  மாதவ  மக்கள்!

யாதும் நாடே யாவரும் கேளிர்!

தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!

காசினி மீதில் நேசமாய்த் திகழும்

மாசிலா நாடேமைந்தர்கள்  ஒன்றாய் 

வாழ்த்துவம் உனையேஉயர்த்துவம் உனையே! 

பாரதத் தாயின் தவத்திரு நாடே!

பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்

பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

++++++++++++++++

S.Jayabarathan [jayaba...@gmail.com] October 24, 2016 [R-1]  

Bala

unread,
Feb 9, 2018, 1:28:14 PM2/9/18
to மின்தமிழ்

திரு ஜெயபாரதன் ,
 
அவை குழப்பமான சொற்கள். தமிழரைப் பிரித்து வெறுப்பூட்டும் சொற்கள்.  தமிழ்நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு திராவிட நற்திருநாடு என்று தினம் பாடி வருவது துரோகச் செயல்.  


இது தங்கள் தனிப்பட்ட கருத்து. இதைப் பலர் பேசி ஒரு முடிவுக்கு வருவது முடியாத ஒன்று. தேவையற்றதும் கூட.




எனினும், திரு ஜெயபாரதன் அவர்கள் நல்லதொரு ஆதாரம் அனுப்புவார் என்று ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.


தங்களின்  'தேவ நேயப் பாவாணர்' கட்டுரைக்கான ஆதாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.  
Reply all
Reply to author
Forward
0 new messages