--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply
| Forward |
சுபா,ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாமா?விட்டால் நான் தொடர் நிகழ்ச்சி போல 3 மணி நேரத்திற்கு ஒன்று என்றும் பதிவு போடுவேன்.முன்பு இணைய இதழ்களில் வெளிவந்த என் கட்டுரைகள் சில கைவசமுள்ளது.
தேமொழி
கை வீசம்மா கை வீசு…
அன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கடைக்குப் போகலாம் கை வீசு…
மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
மெதுவாய் திங்கலாம் கை வீசு…
சொக்காய் வாங்கலாம் கை வீசு…
சொகுசாய் போடலாம் கை வீசு…
கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
கும்பிட்டு வரலாம் கை வீசு…
இன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
கொடியை ஏற்றலாம் கை வீசு…
நாட்டை ஆளலாம் கை வீசு…
படையில் சேரலாம் கை வீசு…
பகைவரை அழிக்கலாம் கை வீசு…
நாட்டைக் காக்கலாம் கை வீசு…
நல்லோர்வழி நடக்கலாம் கை வீசு…
- தேமொழி
(இன்றைய வரிகள் மட்டும்)
குடியரசு தின வாழ்த்துக்கள்…
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேமொழி
மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.
ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.
அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.
இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.
இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசரமாக ஓடும்போழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என அவர்கள் அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.
தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.
என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.
பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.
சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.
இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்கள் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கலள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்படவன், மறுநாளே மாற்றி எழுதப்பட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.

| |||||||||||||||||
|
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply
| Forward |
2010-ல் எழுதிய கட்டுரை:
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...
இன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.
துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.
சகமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.
இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களைப் பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. பெண்கள் முயன்றுதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை.
‘ஆமாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.
இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.
‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.
விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.
பிரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய உழைக்கும் மகளிர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?
சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.
வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.
கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.
சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***
விகடன்.காமில்..
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மகளிர் தினத்தையொட்டி ‘பெண்கள் ஸ்பெஷலாக’ வெளிவந்துள்ள (10.03.2014) இந்த வாரக் குங்குமம் வார இதழில்...
பிடித்த பெண்மொழிக் கவிதையாக..
‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’:
அகஸ்டஸின் 'டீக்கடைச்சூரியன்' தொகுப்பிலிருந்து.. |
தவித்துத் தனியே நிற்பதனால்
தடைகள் குறையப்போவதில்லை
புவியை அசைக்கப் போராடிடுவாய்
புதுமை செய்யப் புறப்படுவாய்!
வெட்டிப்பேச்சு பேசுவதனால்
விளையும் பயன்பெற இயல்வதில்லை
வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய்
விரைந்து முன்னேறு பெண்ணே!
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!
மேகலா இராமமூர்த்தி
மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.
’பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!’ என்று பெண்மையை வாழ்த்திப்பாடி அவர்களை நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களாய் வாழ வலியுறுத்தினான் மானுடம் போற்றும் மாகவி பாரதி!
’கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!’ என்றான் புரட்சிக்கவி.
களர் நிலங்களாக இருந்த பெண்களின் தளர்நிலை இன்று வெகுவாக மாறியுள்ளது எனலாம். கல்வியெனும் விதையால் அறிவுப்பயிர் செழித்து வளர்ந்து சிந்தனைமலர்கள் மணம்வீசி வெற்றிக்கனிகளை எட்டிப்பறித்து வருகின்றனர் இன்றைய பெண்கள்! பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்களுக்கே ஏகபோக உரிமையாய் இருந்ததுபோக இன்று ’எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று ஆனந்தக் கூத்தாடும் வகையில் சக்தி வடிவங்களான பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமா? ஆண்களைக் காட்டிலும் மங்கையர் திலகங்களே தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.
இல்லத்தரசி என்ற பட்டத்தோடு பெயரளவில் ’அரசியாய்’ உண்மையில் அடுக்களை துடைத்தும், படுக்கையை விரித்தும் வீட்டினர் அனைவர்க்கும் அடிமையாய் வா(தா)ழ்ந்து வந்த பெண்கள் இன்று நாட்டையே ஆள்கின்றனர்! சந்திரனைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருந்த மகளிர் இன்று சந்திர மண்டலத்திற்கே சென்று வருகின்றனர். அன்ன நடையால் வீட்டை மட்டுமே அளந்து கொண்டிருந்தவர்கள் இன்று வானை அளக்கின்றனர்; கடல் மீனை அளக்கின்றனர்.
அலுவலகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், கணினி நிறுவனங்களிலும், கார்பரேட் கம்பெனிகளிலும் அற்புதமாய்ப் பணியாற்றி வருகின்றனர் இன்றைய பெண்கள் என்பதை எண்ண எண்ண இனிக்கவே செய்கின்றது! வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இன்று தலைகுனிவைச் சந்தித்துவருவது மகளிர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.
இவ்வாறு பெண்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவில் உள்ளது என்றபோதிலும், அவர்களின் வெற்றியைக் குலைக்கவும், நிம்மதியைக் கெடுக்கவும், நல்வாழ்வை நாசமாக்கவும் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கும், சதிகளுக்கும் பஞ்சமேயில்லை.
வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், அலுவலங்களில் பணிபுரியும் பெண்களும் அதிக அளவில் சந்தித்துவருகின்றனர். இத்தகைய கொடுமைகளால் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருவதைப் பத்திரிகைகள் தினமும் பத்தி பத்தியாய் வெளியிடுகின்றனவே!
இத்துணைப் பிரச்சனைகளுக்கு இடையிலும் விடாமுயற்சியுடன் தளராது பணியிடங்களில் உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான அங்கிகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஓரளவிற்குமேல் பெண்கள் உயர்பதவிகளுக்குச் செல்வதை ஆணாதிக்கச் சமுதாயம் பல்வேறு வகைகளில் தடைசெய்கின்றது; அனுமதிக்க மறுக்கின்றது. ’Glass Ceiling’ எனும் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தடுப்புச்சுவர் பெண்களின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது வேதனையளிக்கின்றது. அதுபோல் ஒரே வேலையைச் செய்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவிலான ஊதியமும் (சில இடங்களில்) வழங்கப்படுவதில்லை. தினக்கூலித் தொழிலாளர்களிடையே ’gender pay gap’ எனும் இவ்வூதிய வேற்றுமையை இன்றும் நாம் கண்கூடாகக் காணமுடியும். இவையெல்லாம் பெண்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத, அழுக்காறு மிகுந்த ஆண் அதிகாரவர்க்கத்தின் வேலையே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா!
வெளியில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளும் தொல்லைகளும் ஒருபுறம் என்றால்….மறுபுறம் வீடுகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவற்றிற்குச் சற்றும் குறைந்தவையல்ல. திருமணமான பெண்களில் சிலர் புக்ககத்தினரின் நாகரிகமற்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளவேண்டியுள்ள அவலநிலை இன்றும் நீடிக்கின்றது. திருமணமான உடனே பெண் பிள்ளைபெறத் தவறினால் சொல்லவே நாக்கூசும் ‘மலடி’ என்ற பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்திடமும் அனுமதி பெறாமல் இந்தச் சமூகம் அவளுக்குச் சூட்டுகின்றது! அதுபோக, குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டாலோ….அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் வசவுகளுக்கோர் அளவில்லை.
மருத்துவ உண்மைகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து வழங்கிவிட்டுப் போகின்ற இந்த நவீன யுகத்தில் மெத்தப் படித்ததாய் மார்தட்டிக்கொள்ளும் இன்றைய சமூகத்தினர் குழந்தைப்பேறு வாய்க்காமல் போவதற்கும், பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதற்கும், பெண்ணை மட்டுமே குறைசொல்லும் மடமையை, சிறுபிள்ளைத்தனத்தை எங்கு கற்றார்கள்?? ஆடவர்க்கென்று ஒரு (பொன்) தராசும் பெண்களுக்கென்று வேறொரு (மண்) தராசும் வாங்கி எடைபோடும் அற்புதப் பயிற்சியை எங்கு பெற்றார்கள்??
இவையல்லாமல், குடியைக் கெடுக்கும் குடிக்கு அடிமையான கணவன்மார்களை மணந்துகொண்ட பெண்களின் துயர நிலையோ வார்த்தைகளின் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது!!
அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.
’பெண்ணியம்’ என்ற கொள்கை இப்பொழுது பலராலும் பரவலாகப் பேசவும் விவாதிக்கவும்படுகின்றது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதும், வேலை வாய்ப்புக்களிலும், ஊதிய அளவுகளிலும் சமநிலை காண்பதும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அத்தோடு நில்லாமல், பெண்களின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து அவர்களின் விருப்பத்திற்கெதிரான செயல்களை அவர்கள்மீது திணிப்பதையும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் பெண்ணியம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்!
இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள் இன்று எந்த அளவிற்குச் செயல்வடிவம் கண்டிருக்கின்றன என்பதை நடுநிலையான பார்வையோடு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் நிலை இன்றைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது என்றபோதிலும் இவ்வளர்ச்சி போதுமானது என்று சொல்வதற்கில்லை. அரசியலிலும், பொதுப்பணிகளிலும் இப்போதும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே. இந்நிலை மாறவேண்டும். அரசியலிலும் பொதுப்பணிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். ’பெண்கள் தங்கள் உரிமைகளைத் தவறாது பெறுவதற்கு அவர்கள் தயக்கமின்றிப் பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டும்!’ என்று தந்தை பெரியார் கூறியதை நாம் இவ்வேளையில் நினைவுகூர்வது நல்லது!
மேடைகளில் மட்டும் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதையும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பெண்களின் நலன் குறித்து விவாதிப்பதையும் விடுத்துப் பெண்கள் ஒன்றுகூடி வீதிகளில் போராட வேண்டும். ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்றோர் பழமொழி உண்டு. நாட்டின் எந்த மூலையில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சனை என்றாலும் எல்லாப் பெண்களும், பெண்ணுரிமை அமைப்புக்களும் ஒன்றுபட்டுத் தட்டிக்கேட்க வேண்டும், எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும். கிராமங்களுக்கும், நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று பெண்ணுரிமை குறித்தும், அவை மறுக்கப்படும்போது மேற்கொள்ளவேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும் மகளிர் அமைப்புக்கள் கிராமப்புறப் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டும்.
அணு மிகச்சிறியதுதான்; ஆனால் அது பிளக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது! அதுபோல் பலவீனமானவர்கள் (weaker sex) என்ற எண்ணத்தில் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும், அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணினமும் ஒன்றுதிரண்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி எக்காளமிட்டதுபோல் மீண்டும் ஓர் யுகப்புரட்சியை நாடு சந்திக்கும் நிலை வரலாம். எனவே சமுதாயம் பெண்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும், சுயமரியாதையோடு வாழவும் அனுமதிக்க வேண்டும். அதுபோல், பெண்களும் தம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தாமே ஈடுபடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்துத் துணிச்சலோடு முன்னேறுவதும் அவர்களுக்கு ஏற்றத்தையும் எதிர்நோக்கும் மாற்றத்தையும் உறுதியாகத் தரும் என்பதில் ஐயமில்லை.
’உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்’
என்ற முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை மனத்தில் கொண்டு அயராது உழைத்தால் இந்தப் பாரையே வென்று சரித்திரம் படைப்பர் பாவையர்!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வணக்கம் நண்பர்களே.இவ்வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக INSPIRING CHANGE என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

கல்வி கற்று அறிவு பெறுதல் கற்புடைமையாம்
சொல் தவறா ஒழுக்க நெறியும் கற்புடைமையாம்
கற்புடைமை மகளிருக்கு மட்டுமென இங்கு
வற்புறுத்துவது மனிதரின் மடமையடி கண்மணி
ஒருவனுக்கு ஒருத்தி என்பது கற்புநெறியானால்
ஒருத்திக்கு ஒருவன் என்பதும் கற்பு நெறிதானே
ஒருவனுடன் மட்டுமே உன்வாழ்க்கை என்போர்
ஒருத்தி மட்டுமே ஆணுக்கென்பதை மறப்பதேனோ
வாழ்க்கைத் துணைநலப் பண்புரைத்த வள்ளுவனும்
வாழ்த்துவதேனோ பெண்ணடிமைப் பேதைமையை
பெண்வழிச்சேரல் வாழ்க்கை நெறியுரைத்தவனோர்
பெண்ணில்லை என்பதால் இத்தீங்கடி கண்மணி
வேத நூலாக்கியோர் நெஞ்சில் கொண்டதந்த
பேத மனநிலையே சீரழித்தது பெண்ணுரிமையை
நன்னெறி நூலாக்கியவர் மங்கையரெனில் அதில்
நன்னடத்தை பொதுவாகியன்றோ இருந்திருக்கும்
வீரம் கல்வி செல்வம் என்பதோ ஆணுரிமை
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்ணுடமை
மிச்சமின்றி பிடுங்கப்பட்ட பிறப்புரிமைகளால்
நச்சுப்பல் பிடுங்கப்பட்ட நாகமானாளடி கண்மணி
ஆண்களுக்கும் நல்ல கற்புநெறி தேவையென்பதை
அடியோடு மறந்திட்டார் மூடமக்கள் நம்நாட்டில்
உடல் வலிமையினால் கல்வி செல்வம் மறுத்தே
அடிமையாக்கினர் பெண்ணினத்தை நம்மண்ணில்
திட்டங்கள் பலவும் சட்டங்கள் பலவும் செய்து
திரையிட்டு மறைத்தார் பெண்களை இங்கே
உரிமையைப் பறித்தே உறுதியைக் குலைத்தார்
உண்மை நிலையுணர்ந்து விழித்திடடி கண்மணி
ஆண் உயர்வென்ற ஆணாதிக்கம் போற்றி
பெண்ணடிமை என்ற தாழ்வெண்ணம் ஏற்றி
அடக்கினார் பெண்களை திட்டமிட்டு அன்றே
அடங்கினர் பெண்களும் மறுப்பின்றி என்றும்
பிறப்பிற்கொரு நீதியென்ற நெறிமுறை மறுத்து
சிறப்பான கற்பென்பது பொதுவென்று உரைத்து
பிறப்புரிமை என்பதில் அடங்காது அடிமைத்தனமென
சிறப்புடன் கூறி சீரிய வாழ்வு காண்பாயடி கண்மணி
மகளிர் இதழுக்கு தாய்மையின் நெகிழலை இப்படியும் சொல்லலாம்.கண்கள் பனிக்க
அம்மாவை இன்று எல்லோருமே நினைப்போம். என்டெ அம்மா உட்பட,
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2010-ல் எழுதிய கட்டுரை:
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...
..
சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முன்னேறு பெண்ணே!*************************அழுதுபுலம்பித்தேய்வதனால்
ஆகும் பயனிங்கேதுமில்லை
ஆற்றல் கொண்டே எழுந்திடுவாய்
அவனியும் உந்தன் வசமாகும்
தவித்துத் தனியே நிற்பதனால்
தடைகள் குறையப்போவதில்லை
புவியை அசைக்கப் போராடிடுவாய்
புதுமை செய்யப் புறப்படுவாய்!
அரண்டு அதிர்ந்து நிற்பதனால்
ஆளுமை செய்ய வழியுமில்லை
புரட்சி செய்யப் புறப்படுவாய்புவனம் உனக்கு வசமாகும்வெட்டிப்பேச்சு பேசுவதனால்
விளையும் பயன்பெற இயல்வதில்லை
வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய்
விரைந்து முன்னேறு பெண்ணே!
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
(இக்கட்டுரையை மகளிர் தினமான இன்று வெளியிட்டுச் சிறப்பித்த வல்லமை இதழுக்கு நன்றி!)
மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!
மேகலா இராமமூர்த்தி
அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி: திண்ணை[April 22nd, 2013]
========================காற்றுக்கென்ன வேலி!!!
ஒரு ஆணுக்கு அவர் ஆண் என்ற ஒரே காரணத்தினால், அவரால் தலைமை ஏற்க முடியும் என்று கருதி தலைமைப் பதவி தேடி வரும். ஆனால் பெண்களோ தாங்கள் அந்தப் பதவிக்கு தகுதிகள் உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபடுகிறார்கள். தொழில் முறையில் பெண்களுக்கு தலைமைப் பதவியை அடைய ஏற்படும் தடையை 'கண்ணாடிக் கூரை' (Glass ceiling) என்ற முட்டுக் கட்டை இருப்பதாகக் கூறுவதுண்டு. தொழிலேணியில் (career ladder/corporate ladder) அவர்கள் ஒரு அளவிற்கு மேல் ஏற முற்படுவது பலரால் விரும்பப் படுவதில்லை. அது போன்றத் தடைகள் ஏற்படும்பொழுது பெண்கள் தொழிலேணி வழியாக குறிப்பிட்ட உயர்நிலைப் பதவியை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்வதைத் தவிர்த்து, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள 'ஜங்கிள் ஜிம்' (Jungle Gym) விளையாட்டு உபகரணத்தில் எப்படி பல வழிகளில் ஏறி உச்சியை அடைய முடிகிறதோ அதைப்போன்று செயல் பட வேண்டும். குறிப்பிட்ட தலைமைப் பதவியை அடைய அந்த நிறுவனத்தில் முட்டுக்கட்டை இருப்பதாகக் கருதினால் அந்தப் பதவியை அடைய வழிவகுக்கும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஷெரில்.
இந்த நூலின் மூலமாக அவர் அறிவுறுத்துவது இரு முக்கியக் கருத்துக்கள்: ஒன்று, பெண்கள் தலைமைப் பதிவிகளை அடைந்து தன்னையொத்த பெண்களும் முன்னேறி தலைமைப் பதவியை அடைய வழி வகுக்க வேண்டும், அவர்கள் பெண்களின் தேவைகளைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மற்றொன்று, பெண்களின் முன்னேற்றதிற்கான தடைகளை உடைத்தெறிந்து அவர்கள் குறிக்கோள்களை அடைய பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து ஊக்குவிக்க வேண்டும்.
நன்றி சுபா.ஆமாம், படமும் வரைந்து வண்ணம் தீட்டுவதுண்டு.அதனை ஊக்குவித்தவர்களில் பெரும் பங்கு என் அப்பாவிற்கே உரியது.இந்தக் குழந்தை படம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் என் மகள் பிறந்த பொழுது வந்த வாழ்த்து அட்டையினைப் பார்த்து வரைந்தது.பள்ளி நாட்களில் வரைந்த அளவு இப்பொழுது நான் வரைவதில்லை.என்படங்களை வல்லமை இதழ் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது.வல்லமைக்கும் வல்லமை ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.அன்புடன்..... தேமொழி
பள்ளியே செல்லாத கோகிலத்தம்மாள் தன் பெண்கள் படிக்க வேண்டுமென பழம் பேச்சைக் குப்பையில் தள்ளி பெண்களைப் படிக்க அனுப்பியது முதல் அடி! மிக நீண்ட தூரம் நடந்துவிட்டோம் இந்த அரை நூற்றாண்டிற்குள். பெருமையாக இருக்கிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
தாயார் ஜனகா அவர்களின் படத்தையும் போட்டிருந்தால் நாங்களும் பார்த்திருக்கலாமே அவரை.

வணக்கம் நண்பர்களே.
இவ்வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக INSPIRING CHANGE என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அனைத்துலக பெண்கள் தின வலைப்பக்கத்தில் மேலும் விவரம் இப்படி குறிப்பிடுகின்றது. http://www.internationalwomensday.com/International Women's Day 2014 Theme: INSPIRING CHANGEWomen's equality has made positive gains but the world is still unequal. International Women's Day celebrates the social, political and economic achievements of women while focusing world attention on areas requiring further action.கடந்த சில வாரங்களாக மின்தமிழில் கலந்துரையாடப்பட்டு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக அமைவது பெண் நலன். இவ்வாண்டு மகளிர் தினத்தில் பெண்கள் தொடர்பான சிந்தனைகளை சிறு கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதையாகவோ, என்ணத்தின் வெளிப்பாடாகவோ, அனுபவப் பகிர்வாகவோ அனைவரும் தங்கள் பதிவுகளை இதே இழையில் பதியலாம்.இந்த இழை பெண்களுக்கு மட்டுமே ஆன ஒன்று அல்ல. தாய், சகோதரி, மனைவி, காதலி, ஆசிரியை, சக அலுவலகர், தோழி, வழிகாட்டி, நமக்கு உதவியவர் என ஏதோ ஒரு வகையில் பெண்களோடு வாழும் ஆண்களும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது விரிவான ஒரு பார்வையை வாசிக்கும் அனைவருக்கும் நிச்சயம் வழங்கும்.அன்புடன்சுபாஷிணி ட்ரெம்மல்
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--குடியரசு தின வாழ்த்துக்கள்…
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அன்பின் சுபா,இன்றுதான் உங்கள் அம்மாவைப் பார்க்கிறேன். அழகு! நீங்கள் அம்மா சாயலில்தான் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
நீங்கள் கொடுத்த சுட்டி திறக்கவில்லையே?
தேமொழி அவர்களேஅது கை என்று யார் சொன்னது?காற்றுகொஞ்சம் ஓய்வு எடுத்தபோதுவீசியது இது.தென்றலுக்கும்புயலுக்கும்இடையே உள்ள வித்யாசம்அப்புறம் தானே புரிந்தது.குட்டைப்பாவாடையும்ரிப்பன் சடையும்இமைகள் தூக்கிய போதுஉலகத்து ஏழு அதிசயங்களும்ஒன்றுமே இல்லாமல்போய்விட்டது.=========================================ருத்ரா
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சுபா, அப்பா படம் கேட்டால்தான் போடுவீர்களா? சரி கேட்டுவிட்டேன்...
சுட்டி இப்போதும் திறக்கவில்லை.
மின் இணைப்பு இல்லை. பேட்டரியில் மக்கர் செய்கிறதோ? பொறுத்திருந்து பார்க்கிறேன்.அன்புடன்பவளா2014-03-08 16:28 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
2014-03-08 11:53 GMT+01:00 coral shree <cor...@gmail.com>:
அன்பின் சுபா,இன்றுதான் உங்கள் அம்மாவைப் பார்க்கிறேன். அழகு! நீங்கள் அம்மா சாயலில்தான் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.:-))நான் அப்பா அம்மா இருவரின் கலவை. அப்பாவைப் பார்த்தால் அப்பாபோல என்று சொல்வீர்கள் :-)நீங்கள் கொடுத்த சுட்டி திறக்கவில்லையே?எனக்கு திறக்கின்றது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.சுபா
பே ஆஃப் பெங்கால் அல்ல இது.பே ஆஃப் "பெண்காள்!"விரி கூந்தலில்அன்பு அறிவு அழகுபண்பு பரிவு பாசம்என்று நல்லியல்புகள்அலையடிப்பது பாரீர்.கண்கள் அருகே மட்டும்போகவேண்டாம்.கண்ணீர் சமுத்திரங்கள்இன்னும் காயவில்லை அங்கே.அவை வற்றிப்போகட்டும்.அது வரைஇந்த சூரியன்கள்அழுக்குத்துணிகளைஅலசிக்கொள்ளட்டும்.============================================ருத்ரா
On Friday, March 7, 2014 6:43:06 AM UTC-8, Suba.T. wrote:
வணக்கம் நண்பர்களே.இவ்வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக INSPIRING CHANGE என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அனைத்துலக பெண்கள் தின வலைப்பக்கத்தில் மேலும் விவரம் இப்படி குறிப்பிடுகின்றது. http://www.internationalwomensday.com/International Women's Day 2014 Theme: INSPIRING CHANGEWomen's equality has made positive gains but the world is still unequal. International Women's Day celebrates the social, political and economic achievements of women while focusing world attention on areas requiring further action.கடந்த சில வாரங்களாக மின்தமிழில் கலந்துரையாடப்பட்டு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக அமைவது பெண் நலன். இவ்வாண்டு மகளிர் தினத்தில் பெண்கள் தொடர்பான சிந்தனைகளை சிறு கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதையாகவோ, என்ணத்தின் வெளிப்பாடாகவோ, அனுபவப் பகிர்வாகவோ அனைவரும் தங்கள் பதிவுகளை இதே இழையில் பதியலாம்.இந்த இழை பெண்களுக்கு மட்டுமே ஆன ஒன்று அல்ல. தாய், சகோதரி, மனைவி, காதலி, ஆசிரியை, சக அலுவலகர், தோழி, வழிகாட்டி, நமக்கு உதவியவர் என ஏதோ ஒரு வகையில் பெண்களோடு வாழும் ஆண்களும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது விரிவான ஒரு பார்வையை வாசிக்கும் அனைவருக்கும் நிச்சயம் வழங்கும்.அன்புடன்சுபாஷிணி ட்ரெம்மல்
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வம்புகளே செய்யும் சிவகாமிப் பாட்டியாய்,எனது வணக்கத்திற்குரிய அன்னையாய்,மதிப்பிற்குரிய அக்காளாய்,என்மீது பாசம் கொண்ட தங்கையாய்,எனதன்பிற்குரிய மகளாய், மருமகளாய்,எல்லாமுமான பேத்தியாய்விளங்கும் உலக மகளிர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.வாழ்க வளர்க.அன்பன்கி.காளைராசன்
2014-03-07 20:13 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நன்றி: வல்லமை ========================டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்
- Saturday, March 8, 2014, 6:20
- Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்
- Add a comment
- [Edit]
தேமொழி
மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.
ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.
அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.
இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.
இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசரமாக ஓடும்போழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என அவர்கள் அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.
தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.
என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.
பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.
சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.
இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்கள் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கலள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்படவன், மறுநாளே மாற்றி எழுதப்பட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.
2010-ல் எழுதிய கட்டுரை:
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...
இன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.
துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.
சகமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.
இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களைப் பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. பெண்கள் முயன்றுதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை.
‘ஆமாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.
இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.
‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.
விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.
பிரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய உழைக்கும் மகளிர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?
சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.
வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.
கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.
சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***
விகடன்.காமில்..
***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
முன்னேறு பெண்ணே!*************************அழுதுபுலம்பித்தேய்வதனால்
ஆகும் பயனிங்கேதுமில்லை
ஆற்றல் கொண்டே எழுந்திடுவாய்
அவனியும் உந்தன் வசமாகும்
தவித்துத் தனியே நிற்பதனால்
தடைகள் குறையப்போவதில்லை
புவியை அசைக்கப் போராடிடுவாய்
புதுமை செய்யப் புறப்படுவாய்!
அரண்டு அதிர்ந்து நிற்பதனால்
ஆளுமை செய்ய வழியுமில்லை
புரட்சி செய்யப் புறப்படுவாய்புவனம் உனக்கு வசமாகும்
வெட்டிப்பேச்சு பேசுவதனால்
விளையும் பயன்பெற இயல்வதில்லை
வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய்
விரைந்து முன்னேறு பெண்ணே!
--shylaja
2014-03-08 8:43 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
சிந்திக்கவேண்டிய பதிவு.
குடியரசு தின வாழ்த்துக்கள்…
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
அன்புடன்ஷைலஜா
Reply Forward
--அன்புடன்ஷைலஜா
Reply Forward
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
(இக்கட்டுரையை மகளிர் தினமான இன்று வெளியிட்டுச் சிறப்பித்த வல்லமை இதழுக்கு நன்றி!)
மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!
மேகலா இராமமூர்த்தி
மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.
’பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!’ என்று பெண்மையை வாழ்த்திப்பாடி அவர்களை நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களாய் வாழ வலியுறுத்தினான் மானுடம் போற்றும் மாகவி பாரதி!
’கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!’ என்றான் புரட்சிக்கவி.களர் நிலங்களாக இருந்த பெண்களின் தளர்நிலை இன்று வெகுவாக மாறியுள்ளது எனலாம். கல்வியெனும் விதையால் அறிவுப்பயிர் செழித்து வளர்ந்து சிந்தனைமலர்கள் மணம்வீசி வெற்றிக்கனிகளை எட்டிப்பறித்து வருகின்றனர் இன்றைய பெண்கள்! பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்களுக்கே ஏகபோக உரிமையாய் இருந்ததுபோக இன்று ’எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று ஆனந்தக் கூத்தாடும் வகையில் சக்தி வடிவங்களான பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமா? ஆண்களைக் காட்டிலும் மங்கையர் திலகங்களே தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.
இல்லத்தரசி என்ற பட்டத்தோடு பெயரளவில் ’அரசியாய்’ உண்மையில் அடுக்களை துடைத்தும், படுக்கையை விரித்தும் வீட்டினர் அனைவர்க்கும் அடிமையாய் வா(தா)ழ்ந்து வந்த பெண்கள் இன்று நாட்டையே ஆள்கின்றனர்! சந்திரனைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருந்த மகளிர் இன்று சந்திர மண்டலத்திற்கே சென்று வருகின்றனர். அன்ன நடையால் வீட்டை மட்டுமே அளந்து கொண்டிருந்தவர்கள் இன்று வானை அளக்கின்றனர்; கடல் மீனை அளக்கின்றனர்.
அலுவலகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், கணினி நிறுவனங்களிலும், கார்பரேட் கம்பெனிகளிலும் அற்புதமாய்ப் பணியாற்றி வருகின்றனர் இன்றைய பெண்கள் என்பதை எண்ண எண்ண இனிக்கவே செய்கின்றது! வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இன்று தலைகுனிவைச் சந்தித்துவருவது மகளிர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.
இவ்வாறு பெண்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவில் உள்ளது என்றபோதிலும், அவர்களின் வெற்றியைக் குலைக்கவும், நிம்மதியைக் கெடுக்கவும், நல்வாழ்வை நாசமாக்கவும் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கும், சதிகளுக்கும் பஞ்சமேயில்லை.
வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், அலுவலங்களில் பணிபுரியும் பெண்களும் அதிக அளவில் சந்தித்துவருகின்றனர். இத்தகைய கொடுமைகளால் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருவதைப் பத்திரிகைகள் தினமும் பத்தி பத்தியாய் வெளியிடுகின்றனவே!
இத்துணைப் பிரச்சனைகளுக்கு இடையிலும் விடாமுயற்சியுடன் தளராது பணியிடங்களில் உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான அங்கிகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஓரளவிற்குமேல் பெண்கள் உயர்பதவிகளுக்குச் செல்வதை ஆணாதிக்கச் சமுதாயம் பல்வேறு வகைகளில் தடைசெய்கின்றது; அனுமதிக்க மறுக்கின்றது. ’Glass Ceiling’ எனும் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தடுப்புச்சுவர் பெண்களின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது வேதனையளிக்கின்றது. அதுபோல் ஒரே வேலையைச் செய்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவிலான ஊதியமும் (சில இடங்களில்) வழங்கப்படுவதில்லை. தினக்கூலித் தொழிலாளர்களிடையே ’gender pay gap’ எனும் இவ்வூதிய வேற்றுமையை இன்றும் நாம் கண்கூடாகக் காணமுடியும். இவையெல்லாம் பெண்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத, அழுக்காறு மிகுந்த ஆண் அதிகாரவர்க்கத்தின் வேலையே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா!
வெளியில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளும் தொல்லைகளும் ஒருபுறம் என்றால்….மறுபுறம் வீடுகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவற்றிற்குச் சற்றும் குறைந்தவையல்ல. திருமணமான பெண்களில் சிலர் புக்ககத்தினரின் நாகரிகமற்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளவேண்டியுள்ள அவலநிலை இன்றும் நீடிக்கின்றது. திருமணமான உடனே பெண் பிள்ளைபெறத் தவறினால் சொல்லவே நாக்கூசும் ‘மலடி’ என்ற பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்திடமும் அனுமதி பெறாமல் இந்தச் சமூகம் அவளுக்குச் சூட்டுகின்றது! அதுபோக, குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டாலோ….அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் வசவுகளுக்கோர் அளவில்லை.
மருத்துவ உண்மைகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து வழங்கிவிட்டுப் போகின்ற இந்த நவீன யுகத்தில் மெத்தப் படித்ததாய் மார்தட்டிக்கொள்ளும் இன்றைய சமூகத்தினர் குழந்தைப்பேறு வாய்க்காமல் போவதற்கும், பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதற்கும், பெண்ணை மட்டுமே குறைசொல்லும் மடமையை, சிறுபிள்ளைத்தனத்தை எங்கு கற்றார்கள்?? ஆடவர்க்கென்று ஒரு (பொன்) தராசும் பெண்களுக்கென்று வேறொரு (மண்) தராசும் வாங்கி எடைபோடும் அற்புதப் பயிற்சியை எங்கு பெற்றார்கள்??
இவையல்லாமல், குடியைக் கெடுக்கும் குடிக்கு அடிமையான கணவன்மார்களை மணந்துகொண்ட பெண்களின் துயர நிலையோ வார்த்தைகளின் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது!!
அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.
’பெண்ணியம்’ என்ற கொள்கை இப்பொழுது பலராலும் பரவலாகப் பேசவும் விவாதிக்கவும்படுகின்றது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதும், வேலை வாய்ப்புக்களிலும், ஊதிய அளவுகளிலும் சமநிலை காண்பதும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அத்தோடு நில்லாமல், பெண்களின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து அவர்களின் விருப்பத்திற்கெதிரான செயல்களை அவர்கள்மீது திணிப்பதையும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் பெண்ணியம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்!
இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள் இன்று எந்த அளவிற்குச் செயல்வடிவம் கண்டிருக்கின்றன என்பதை நடுநிலையான பார்வையோடு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் நிலை இன்றைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது என்றபோதிலும் இவ்வளர்ச்சி போதுமானது என்று சொல்வதற்கில்லை. அரசியலிலும், பொதுப்பணிகளிலும் இப்போதும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே. இந்நிலை மாறவேண்டும். அரசியலிலும் பொதுப்பணிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். ’பெண்கள் தங்கள் உரிமைகளைத் தவறாது பெறுவதற்கு அவர்கள் தயக்கமின்றிப் பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டும்!’ என்று தந்தை பெரியார் கூறியதை நாம் இவ்வேளையில் நினைவுகூர்வது நல்லது!
மேடைகளில் மட்டும் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதையும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பெண்களின் நலன் குறித்து விவாதிப்பதையும் விடுத்துப் பெண்கள் ஒன்றுகூடி வீதிகளில் போராட வேண்டும். ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்றோர் பழமொழி உண்டு. நாட்டின் எந்த மூலையில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சனை என்றாலும் எல்லாப் பெண்களும், பெண்ணுரிமை அமைப்புக்களும் ஒன்றுபட்டுத் தட்டிக்கேட்க வேண்டும், எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும். கிராமங்களுக்கும், நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று பெண்ணுரிமை குறித்தும், அவை மறுக்கப்படும்போது மேற்கொள்ளவேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும் மகளிர் அமைப்புக்கள் கிராமப்புறப் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டும்.
அணு மிகச்சிறியதுதான்; ஆனால் அது பிளக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது! அதுபோல் பலவீனமானவர்கள் (weaker sex) என்ற எண்ணத்தில் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும், அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணினமும் ஒன்றுதிரண்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி எக்காளமிட்டதுபோல் மீண்டும் ஓர் யுகப்புரட்சியை நாடு சந்திக்கும் நிலை வரலாம். எனவே சமுதாயம் பெண்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும், சுயமரியாதையோடு வாழவும் அனுமதிக்க வேண்டும். அதுபோல், பெண்களும் தம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தாமே ஈடுபடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்துத் துணிச்சலோடு முன்னேறுவதும் அவர்களுக்கு ஏற்றத்தையும் எதிர்நோக்கும் மாற்றத்தையும் உறுதியாகத் தரும் என்பதில் ஐயமில்லை.
’உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்’என்ற முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை மனத்தில் கொண்டு அயராது உழைத்தால் இந்தப் பாரையே வென்று சரித்திரம் படைப்பர் பாவையர்!
2014-03-07 21:16 GMT-06:00 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>:
மகளிர் தினத்தையொட்டி ‘பெண்கள் ஸ்பெஷலாக’ வெளிவந்துள்ள (10.03.2014) இந்த வாரக் குங்குமம் வார இதழில்...
பிடித்த பெண்மொழிக் கவிதையாக..
‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’:
***
அகஸ்டஸின் 'டீக்கடைச்சூரியன்' தொகுப்பிலிருந்து..
2014-03-08 8:43 GMT+05:30 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>:
2010-ல் எழுதிய கட்டுரை:
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...
இன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.
துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.
சகமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.
இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களைப் பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. பெண்கள் முயன்றுதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை.
‘ஆமாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.
இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.
‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.
விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.
பிரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய உழைக்கும் மகளிர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?
சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.
வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.
கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.
சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***
விகடன்.காமில்..
***--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
http://www.kamalagaanam.blogspot.comமகளிர் இதழுக்கு தாய்மையின் நெகிழலை இப்படியும் சொல்லலாம்.கண்கள் பனிக்க
அம்மாவை இன்று எல்லோருமே நினைப்போம். என்டெ அம்மா உட்பட,
கமலம்
2014-03-07 22:43 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:
வணக்கம் நண்பர்களே.
இவ்வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக INSPIRING CHANGE என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.ஐந்தும் பொண்ணாய் பிறந்த போது என் தந்தையை நோக்கிச் சொன்னார்கள், ‘அரசனும் ஆண்டியாவான்’ என்று. அப்படியேதும் நடக்கவில்லை. பெற்றோர் இறந்த பின் கமலா அக்கா பள்ளி ஆசிரியையாய் வேலைக்குச் சேர்ந்தாள். செல்லம்மாள் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தாள். பெண்களுக்குக் கல்வி அவசியம் என்று சொன்ன நம் பெரியோர்கள், அரசியல் தலைவர்களுக்கு வணக்கம். என் சகோதரிகள் இல்லையெனில் இன்று நான் உலகக்குடிமகன் இல்லை. என் மகள் தூதுவர் பாஸ்போர்டில் உலகை வலம் வர முடியாது. இந்தியா தன் கடந்த 60 வருடங்களில் பெண்களைக் கோபுரத்தில் வைத்துப் பார்த்திருக்கிறது.இதைவிட INSPIRING CHANGE வேறு என்ன வேண்டும்? இரண்டே இரண்டு தலைமுறையில் கிராமத்துப் பையனை உலக அரங்கில் வைத்துவிட்டது இந்தியா. இது பெண்களின் சாதனை என்பேன். பள்ளியே செல்லாத கோகிலத்தம்மாள் தன் பெண்கள் படிக்க வேண்டுமென பழம் பேச்சைக் குப்பையில் தள்ளி பெண்களைப் படிக்க அனுப்பியது முதல் அடி! மிக நீண்ட தூரம் நடந்துவிட்டோம் இந்த அரை நூற்றாண்டிற்குள். பெருமையாக இருக்கிறது.வாழ்க தாய்மை.நா.கண்ணன்--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆஹா....என்ன ஆளுமை..?என நம்மை வியக்க வைக்கும் சிலரை நாம் வாழ்வில் எப்போதாவதோ சந்தித்திருப்போம். அல்லது அவர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அல்லது அவருடன் நெருங்கிப் பழகியிருப்போம்; அல்லது நமது நெருக்கமான உறவாகவே அவர்கள் அமைந்திரும் நிலை இருக்கலாம்.அப்படி என்னை/நான் வியக்க வைத்தவர்களில்/வியப்பவர்களில் அதிலும் குறிப்பாக பெண்களில் ஒரு சிலரை நினைத்துப் பார்க்க முனையும் போது உடனே என் மனதில் தோன்றும் சில நபர்களைப் பற்றிய ரு சிறு குறிப்புத் தான் இந்தப் பதிவு.1. திருமதி மரியபுஷ்பம் வேலு - எனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவர். எனது 2ம், 3ம்வகுப்பு ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியை. ஆனால் அந்தப் பள்ளியில் படித்த வரை நானும் அவரது செல்ல மாணவர்களில் ஒருவர். என்னைப் போல ஏனைய மாணவ மாணவியரும் கூட அவரைச் சூழ்ந்திருப்போம். முன்னர் சிறு பெண்ணாக இருந்த சமயத்தில் மிக ஒல்லியாக இருப்பேன். அதற்காக என் பெற்றோர் என் ஆசிரியரிடம் வந்து என்னைப் பற்றி நான் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை எனச் சொல்லி கோள்மூட்டி விட்டு சென்றிருப்பர். அவர் என்னை பள்ளி உணவு இடைவேளையில் அவர் முன்னே அமர வைத்து நான் கொண்டு வந்திருக்கும் உணவை சாப்பிட்டு முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பார். ஏதோ வேலையில் இருக்கின்றார் என நினைத்து உணவு டப்பாவை பாதியிலேயே மூடினால் ஒரு மிரட்டல் பார்வை பார்ப்பார். பயந்து சாப்பிட்டு முடித்து விடுவேன். சாப்பிட்டு முடித்ததுமே என்னை அணைத்து கட்டிக் கொள்வார். அது பயமா.. அன்பா என்றால்.. அன்பே எனக்கு அவர் மேல் அதிகம் என்பதை சந்தேகமில்லாமல் என் மனம் சொல்லும். ஆரம்பப்பள்ளி காலம் முடிந்தும் பல ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறக்காமல் பலகாரங்கள் கொண்டு சென்று கொடுத்து வந்தேன் அவர் இறக்கும் வரை. அவர் முகம் மனதில் பசுமை குறையாமல் இருக்கின்றது. மாணவர்கள் மேல் இருந்த இவரது அன்பின் ஆளுமையை நினைத்து மலைத்துப் போகிறேன்.2. ஜெர்மனியின் சான்ஸலர் - சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு முறை மூன்றாவது தவணையாக தந்தையர் நாடாகிய (ஜெர்மனியை தாய் நாடு எனச் சொல்லமாட்டார்கள். Vaterland - தந்தையர் நாடு என்றே குறிப்பிடப்படுவது) ஜெர்மனியின் சான்ஸலராக பதவி எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர் இவர். உலக நாடுகளின் பெருந்தலைவர்களில் தனியிடம் பெறுபவர். இவரது பணிக்காலத்தில் அரசியல், தனி வாழ்க்கை, என எண்ணிக்கையில்ல விமர்சனங்களை எதிர்கொண்டவர். பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரமும் முழு அளவில் கடைபிடிக்கப்படும் ஜெர்மனியின் ஊடகங்களில் அவரை கேலி செய்யாத, குறை கூறாத, கிண்டலடிக்காத ஊடகங்களே இல்லை எனலாம். ஆனால் அதே வேளை அந்த அனைத்து ஊடகங்களும் அவரது நிர்வாகத்திறமையை மெச்சத் தவறுவதில்லை. இவரை பார்க்கும் போதும், நாளிதழ்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்திகளில் காணும் போதும் இவர் தொடர்பான செய்திகளை அறியும் போதும் இவரது ஆளுமையை நினைத்து மலைத்துப் போகிறேன்.3. என் தாயார் ஜனகா - 18 வயதில் தஞ்சையில் திருமணம் முடித்த அடுத்த 8ம் நாளே பெற்றோர் உற்றார் அனைவரையும் விட்டு மலேசியாவிற்குக் கப்பலில் என் தந்தையுடன் பயணித்தவர். புதிதாக வந்த ஊரில் யாரையும் அறியாத நிலையிலும், மலாய் மொழி அறியாத நிலையிலும் அவர் சோர்ந்து விடவில்லை. தன் கல்வியை உயர்த்திக் கொண்டார்; தனது வாழ்க்கையை குடும்பம் என்ற வரையறைக்குள் வைத்துக் கொள்ளாமல் பல சமூகப்பணிகளில் ஈடுபட்டார்; தனது இலக்கிய ஆர்வம் காரணமாக பல சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள் ஆகியவற்றோடு 7 நூல்களுக்கும் ஆசிரியர் என்ற புகழ் பெற்றவர். மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய இந்து சங்கம், பயணீட்டாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் என தனது ஈடுபாடுகளையும் செயல்பாடுகளையும் விரிவாக்கினார். இசை, நாட்டியம், மருத்துவம், இலக்கியம் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபராகவும் சில காலங்கள் பரிமளித்தார். அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது இனிய முகத்தின் புகைப்படத்தை பார்க்கும் போது அவர் திறமையை நினைத்து என்னால் வியக்காமல் இருக்க முடிவதில்லை.4. செம்பியன் மாதேவி - அரச குலத்துப் பெண்கள் பலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர்களில் சோழ குலத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்க வந்தவர்களின் தனிச்சிறப்பிடம் பெறுபவர் செம்பியன் மாதேவி. நீண்ட காலம் வாழ்ந்த இந்த மாதரசியார் இளம் பிராயத்திலேயே தனது கணவர் கண்டராதித்தர் வடக்கி நோக்கி சென்று விட்ட நிலை ஏற்பட்டமையால் தனித்து வாழும் நிலைக்கு வாழ்நாளின் பெரும்பகுதி அமைந்தது. தனக்கு அமைந்த இந்த நிலையை சோழர் ராஜ்ஜியத்தின் பக்தி சிந்தனை மக்கள் மத்தியில் பெருகும் வகையில் சோழர்கள் ஊர்களில் இருந்த ஏறக்குறைய எல்லா செங்கற்றளி கோயில்களையும் கற்றளி கோயில்களாக மாற்றிய பெருமை இந்த மங்கையைச் சேரும். இது மட்டுமன்றி புதுக் கோயில்களையும் கட்டுவிக்கச் செய்தவர். கோனேரி ராஜபுரம் கோயில் இவர் பெயர் சொல்லி நிற்கும் கலைக்கூடத்தில் தனிச் சிறப்பு பெற்று விளங்கும் ஒன்று. நேரில் சோழ நாடு சென்று வந்த போதும், கோனேரி ராஜபுரம் கோயில் சென்று அதனை நேரில் பார்த்த போதும் இந்த அம்மையாரின் ஈடுபாட்டையும் செயல் திறத்தையும், ஆளுமையௌயும் கண்டு வியந்து நின்றேன்.5. சந்தனமேரி - இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியின் வழியாக இவரைப் பற்றி அறிந்து கொண்டேன். http://kalvi.vikatan.com/index.php?aid=1410 தமிழகத்தில் தான் வாழும் பகுதியில் சாதிக் கொடுமையை எதிர்த்து தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சமூக அநீதியை எதிர்க்க குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது இந்த தனது முற்சிகளினால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பல இழப்புக்களையும் சந்தித்த பெண்மனி. அவை அனைத்தையும் கண்டு அஞ்சாது தனது சேவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளர் இந்தப் பெண்மணி. தாழ்த்தப்பட்டோர் என சமூகத்தாரால் பெயரிடப்பட்டு சாதி கொடுமைகளுக்கு உள்ளாகும் கல்வி வாய்ப்புக்களை இழக்கும் குழந்தைகளுக்கு ஒரு கல்விச் சாலையை நடத்தி வருகின்றார். இவரைப் பற்றி அறிந்த போது நான் இவரது தைரியத்தையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருக்கும் உறுதியையும் பார்த்து மலைத்து நின்றேன். இது வியப்பையும் தாண்டிய ஒரு அனுபவம்.இவர்கள் மட்டுமல்ல.. மேலும் பலர் என்னுள்ளே அவர்களின் செயல்களின் வழி ஏற்படுத்தியவர்களாக இருக்கின்றார்கள்.
மகளிர் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி: சிறகு========================
குறிப்பு: பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" என்ற நூலின் முதல் அத்தியாயம் கவிதை வடிவில்கேளடி கண்மணி (கவிதை)
தேமொழி
Feb 7, 2014
கல்வி கற்று அறிவு பெறுதல் கற்புடைமையாம்
சொல் தவறா ஒழுக்க நெறியும் கற்புடைமையாம்
கற்புடைமை மகளிருக்கு மட்டுமென இங்கு
வற்புறுத்துவது மனிதரின் மடமையடி கண்மணி
ஒருவனுக்கு ஒருத்தி என்பது கற்புநெறியானால்
ஒருத்திக்கு ஒருவன் என்பதும் கற்பு நெறிதானே
ஒருவனுடன் மட்டுமே உன்வாழ்க்கை என்போர்
ஒருத்தி மட்டுமே ஆணுக்கென்பதை மறப்பதேனோ
வாழ்க்கைத் துணைநலப் பண்புரைத்த வள்ளுவனும்
வாழ்த்துவதேனோ பெண்ணடிமைப் பேதைமையை
பெண்வழிச்சேரல் வாழ்க்கை நெறியுரைத்தவனோர்
பெண்ணில்லை என்பதால் இத்தீங்கடி கண்மணி
வேத நூலாக்கியோர் நெஞ்சில் கொண்டதந்த
பேத மனநிலையே சீரழித்தது பெண்ணுரிமையை
நன்னெறி நூலாக்கியவர் மங்கையரெனில் அதில்
நன்னடத்தை பொதுவாகியன்றோ இருந்திருக்கும்
வீரம் கல்வி செல்வம் என்பதோ ஆணுரிமை
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்ணுடமை
மிச்சமின்றி பிடுங்கப்பட்ட பிறப்புரிமைகளால்
நச்சுப்பல் பிடுங்கப்பட்ட நாகமானாளடி கண்மணி
ஆண்களுக்கும் நல்ல கற்புநெறி தேவையென்பதை
அடியோடு மறந்திட்டார் மூடமக்கள் நம்நாட்டில்
உடல் வலிமையினால் கல்வி செல்வம் மறுத்தே
அடிமையாக்கினர் பெண்ணினத்தை நம்மண்ணில்
திட்டங்கள் பலவும் சட்டங்கள் பலவும் செய்து
திரையிட்டு மறைத்தார் பெண்களை இங்கே
உரிமையைப் பறித்தே உறுதியைக் குலைத்தார்
உண்மை நிலையுணர்ந்து விழித்திடடி கண்மணி
ஆண் உயர்வென்ற ஆணாதிக்கம் போற்றி
பெண்ணடிமை என்ற தாழ்வெண்ணம் ஏற்றி
அடக்கினார் பெண்களை திட்டமிட்டு அன்றே
அடங்கினர் பெண்களும் மறுப்பின்றி என்றும்
பிறப்பிற்கொரு நீதியென்ற நெறிமுறை மறுத்து
சிறப்பான கற்பென்பது பொதுவென்று உரைத்து
பிறப்புரிமை என்பதில் அடங்காது அடிமைத்தனமென
சிறப்புடன் கூறி சீரிய வாழ்வு காண்பாயடி கண்மணி
On Friday, March 7, 2014 9:03:34 PM UTC-8, தேமொழி wrote:
நன்றி: திண்ணை
[April 22nd, 2013]
========================காற்றுக்கென்ன வேலி!!!
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு, மகளிருக்குத் தலைமைப் பதவி ஏற்கும் தகுதி இருக்கிறதா என்ற சந்தேகமே வர வாய்ப்பிருக்காது. அவரவர் பிறந்த காலக்கட்டத்தை வைத்து உலக நாடுகளில் ஓரிரு நாடுகளிலாவது பெண்கள் தலைமை ஏற்றுத் திறம்பட வழி நடத்துவதைப் பார்த்துதான் வளர்ந்திருப்பார்கள். அதிலும் கீழை நாடுகளில் பெண்களின் மேல் அடக்குமுறை அதிகம் எனக் கூறப்பட்டாலும், அந்த நாடுகள்தான் பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டதில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் அரசியல் ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுப்பணிகளில் முத்திரை பதித்திருக்கும் பெண்களைப் போல, பெண்களால் வர்த்தக நிறுவனங்களிலும் அதே அளவு தலைமைப் பதவிகளைப் பெற முடிந்திருக்கிறதா என்பது பலரும் வியந்து கேட்கும் கேள்வி.
சுயதொழில்களில் பெண்கள் முன்னின்று தங்கள் நிறுவனங்களைக் கட்டிக் காத்து வளர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனாலும் மற்ற பிற வணிக நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றும் பொழுது, அவர்களது பங்களிப்பு பாராட்டப் படுவதில்லை, அவர்கள் தகுதிக்கேற்ற பதவிகள் வழங்கப் பெறுவதில்லை என்பது பெண்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் என்றும் உள்ள மனக் குறைபாடு. பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி புகழ் பெற்ற பெண் நிர்வாகியாக உலகில் அறியப்படுகிறார். அவர் போல விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில பெண்கள்தான் 'ஃபார்ச்சுயூன் 500' (Fortune 500) எனப் போற்றப்படும் பெருவணிக நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள்.
ஏன் இந்தப் பாகுபாடு? பெண்களின் முன்னேற்றதில் எதனால் தடை ஏற்படுகிறது? 1960 கள் முதல் பெண்ணியம் என்று மகளிரின் சமுதாய முன்னேற்றதிற்காக, சம உரிமைக்காகப் பாடுபட்ட புரட்சி அலை ஏன் செயலிழந்து நிற்கிறது? இது போன்ற தடைக்கற்களை எப்படி அகற்றுவது? இதனைச் செய்ய வேண்டியவர் யார்? எங்கே குறைபாடு இருக்கிறது? எனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதல் பத்திரிக்கை ஆசிரியர்கள் எனப் பலரும் அவரவர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது போன்ற பெருவணிக நிறுவனங்கள் ஒன்றில் தலைமைப் பொறுப்பேற்ற பெண் நிர்வாகியின் கண்ணோட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் நாம் படிக்க வேண்டியது சென்ற மாதம் (மார்ச் 2013) வெளியான "ஷெரில் சேண்ட்பெர்க்" (Sheryl Sandberg) எழுதிய "லீன் இன்: விமன், வொர்க் அண்ட் தி வில் டு லீட்" (Lean In: Women, Work and the Will to Lead) என்ற புத்தகத்தை.
ஷெரில் ஃ ப்பேஸ் புக் (Face Book) சமூக வலைதள நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பெண்ணதிகாரி (chief operating officer of Facebook), ஃபார்ச்சுயூன் 50 தரவரிசைப் பட்டியலில் அதிகாரம் நிறைந்த பெண் நிர்வாகியாகவும் (Fortune’s list of the 50 Most Powerful Women in Business), டைம் இதழின் உலகில் செல்வாக்குமிக்க 100 மனிதர்களில் (Time’s 100 Most Influential People in the World) ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
ஷெரில் இந்த நூலை எழுத நேர்ந்த காரணம் என்ன என்பதையும் கூறுகிறார். அவர் முதன் முதலில் பணியில் சேர்ந்தபொழுது அவரது தலைமுறையினருக்கு சம அளவு பொறுப்பும் வாய்ப்பும் இருப்பதாக நினைத்திருந்தாராம். ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருந்திருக்கிறது. பெண்கள் அதிக அளவில் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுகிறார்கள். மேல் நிலைப் பட்டங்களும் பெறுகிறார்கள். பல பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஏனோ ஒவ்வொரு துறையிலும் 20 விழுக்காடுகளுக்கும் குறைவாகவே தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நிலையை அடைகிறார்கள். இது அவரது கவனத்தை ஈர்த்து மேலும் இதன் காரணத்தை ஆராயத் தூண்டியிருக்கிறது.
அவரது கூர்ந்த கவனிப்பு பெண்கள் முன்னேற்றதிற்கு குறுக்கே நிற்பதாக அவருக்குத் தெரிவித்தது; பணியிடத்தில் நிலவும் பாரபட்சமான நிலை, பணியில் இசைவான முறையில் பணியாற்ற வகையில் இல்லாத வரைமுறைகள், குறைவான வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவது எனப் பற்பல தடைகளாகும். அத்துடன் பெண்களும் தங்களை அறியாமலே தங்கள் முன்னேற்றதிற்கு தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்குகிறார்கள், ஆர்வமுடன் விவாதங்களில் கலந்து கொள்வதில்லை, தங்கள் கருத்துக்களைத் துணிவுடன் முன் வைப்பதில்லை. எந்தப் புதிய பணியையும் தங்களால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கை பலப் பெண்களுக்கு ஏற்படுகிறது. எதையும் செய்ய என்னால் இயலும் என்ற தன்னம்பிக்கை குறைவால் முன்னேற வாய்ப்பளிக்கும் புதிய பதவிகளைத் தவிர்க்க முயல்கிறார்கள். தவறாக ஏதேனும் செய்து கேலிக்குரிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், தயக்கமும் அவர்களைக் கட்டுப் படுத்துகிறது.
வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளாலும், சமுதாயம் காலம் காலமாகப் பெண்களுக்கென வரையறுத்த சில கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படும் வகையிலுமே அவர்களது நடை முறைகள் அமைகிறது. இவை அவர்கள் முன்னேற்றத்தின் தடைக் கற்களாக விளங்குகிறது. ஷெரில் இது போன்ற பண்புகளை தன்னிடமும், தன்னுடன் பணியாற்றும் பெண்களிடமும் கண்டு, அதனால் அவர்கள் நல்ல பல வாய்ப்புகளையும் நழுவ விடுவதை உணர்ந்து இதனை நீக்கும் முயற்சியினை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். திறமை இருந்தும் தயக்கத்துடன் வாய்ப்புகளை நழுவ விடும் செயல்கள் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதற்கு தடையாக இருக்கிறது.
எந்த வயதிலும், எந்த பணியிலும், எந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் இருக்கும் பெண்களுக்கும் இந்த அறிவுரைகள் பொருந்தும். கல்வி முடித்து முதன்முறையாக பண்ணிபுரியச் செல்லும் பெண்களானாலும், குடும்பப் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் திறமையில் நம்பிக்கைக் கொள்ள, தாங்கள் கண்ட கனவுகள் வழி குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்கு இவர் அறிவுரை உதவும். தங்கள் துறையில் மற்றவர்களை தலைமை ஏற்று வழி நடத்த விரும்புபவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது ஷெரிலின் அறிவுரைகள்.
இந்நூலில் பெண்களின் வாழ்க்கைத் துணைவர்களும் தங்களுக்குரிய பங்கினை உணர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று ஷெரில் கூறுகிறார். ஒருவரின் முன்னேற்றதிற்கு அவரது பாலினம் எந்த வகையிலும் தடையாக இல்லாதவாறும், அவர்களது ஆர்வமும் முயற்சியும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து சமநீதி உள்ள உலகம் அமைய நடவடிக்கைகள் எடுப்பது அனைவரின் பொறுப்பாகும்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிகம் உறுதுணையாக இருக்கப் போவது பெண்களில் பலர் தலைமைப் பதவிகளுக்கு வருவதே ஆகும். அவ்வாறு தலைமைப் பொறுப்பேற்கும் பெண்கள், தங்களின் கண்ணோட்டத்தில் பெண்களுக்குத் தடைகளாக இருக்கும் காரணங்களை உடைத்தெறியும் வழியில் வகை செய்யலாம். ஆனால் இது கோழியில் இருந்து முட்டை வருமா அல்லது முட்டையில் இருந்து கோழி வருமா என்பது போன்ற விவாதமாகவும் அமைகிறது.
இதற்கு எடுத்துக் காட்டாக அவர் கூறுவது கூகிள் (Google) நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை. மகப்பேறு காலத்தில் அவரது ஊர்தியை நிறுத்துமிடம் அதிகத் தொலைவில் இருந்த பொழுது அவர் அடைந்த சிரமத்தினால் உடனடி நடவடிக்கையாக கர்பிணிப் பெண்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்க அவர் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறார். அவரும் பெண்ணாக இருந்தும் அதுவரை அவருக்கு கர்பிணிப் பெண்கள் அடைந்த சிரமம் புரியாமல் இருந்ததாகவும், அதுபோலவே கூகிள் தலைமை அதிகாரிகளுக்கும் அதன் முக்கியத்துவம் தெரியாததும் அவரை வியக்க வைத்ததாகக் கூறுகிறார். அதுவரை அங்கு பணி புரிந்த பெண்களும் சிறப்பு சலுகை கேட்பதைத் தவிர்த்ததன காரணம், பணியிடத்தில் இது போன்ற சிறப்புச் சலுகைக் கோரிக்கைகள் வைப்பது அவர்களைக் குறைவாக மதிப்பிடச் செய்யும் என்ற அச்சமாகவோ தயக்கமாகவோ இருந்திருக்கக் கூடும் என்பது ஷெரிலின் கருத்து.
ஒரு ஆணுக்கு அவர் ஆண் என்ற ஒரே காரணத்தினால், அவரால் தலைமை ஏற்க முடியும் என்று கருதி தலைமைப் பதவி தேடி வரும். ஆனால் பெண்களோ தாங்கள் அந்தப் பதவிக்கு தகுதிகள் உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபடுகிறார்கள். தொழில் முறையில் பெண்களுக்கு தலைமைப் பதவியை அடைய ஏற்படும் தடையை 'கண்ணாடிக் கூரை' (Glass ceiling) என்ற முட்டுக் கட்டை இருப்பதாகக் கூறுவதுண்டு. தொழிலேணியில் (career ladder/corporate ladder) அவர்கள் ஒரு அளவிற்கு மேல் ஏற முற்படுவது பலரால் விரும்பப் படுவதில்லை. அது போன்றத் தடைகள் ஏற்படும்பொழுது பெண்கள் தொழிலேணி வழியாக குறிப்பிட்ட உயர்நிலைப் பதவியை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்வதைத் தவிர்த்து, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள 'ஜங்கிள் ஜிம்' (Jungle Gym) விளையாட்டு உபகரணத்தில் எப்படி பல வழிகளில் ஏறி உச்சியை அடைய முடிகிறதோ அதைப்போன்று செயல் பட வேண்டும். குறிப்பிட்ட தலைமைப் பதவியை அடைய அந்த நிறுவனத்தில் முட்டுக்கட்டை இருப்பதாகக் கருதினால் அந்தப் பதவியை அடைய வழிவகுக்கும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஷெரில்.
இந்த நூலின் மூலமாக அவர் அறிவுறுத்துவது இரு முக்கியக் கருத்துக்கள்: ஒன்று, பெண்கள் தலைமைப் பதிவிகளை அடைந்து தன்னையொத்த பெண்களும் முன்னேறி தலைமைப் பதவியை அடைய வழி வகுக்க வேண்டும், அவர்கள் பெண்களின் தேவைகளைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மற்றொன்று, பெண்களின் முன்னேற்றதிற்கான தடைகளை உடைத்தெறிந்து அவர்கள் குறிக்கோள்களை அடைய பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து ஊக்குவிக்க வேண்டும்.
இக்கருத்துக்களை முன்னிறுத்த தனது வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகளை, செய்த பிழைகளை, அவருக்கு ஏற்பட்டத் தடைகளை, தொழிலிலும் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்க முற்படுகிறார். பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் சிறந்த முடிவுகளை எடுத்து தன்நிறைவு பெற்று வாழ்க்கைக் கனவுகளையும் குறிக்கோளையும் அடைய வழி சொல்லுகிறார்.
ஷெரில் பெண்கள் தலைமை பதவியை அடைய தடைகளாக இருக்கும் முக்கிய காரணங்களாகக் கருதுவது ...
[1] வாழ்வில் அனைத்தையும் செய்ய வேண்டும், அதுவும் அனைத்தையும் சரியாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணுவது; கச்சிதமாக ஒரு தவறு கூட இருக்கக்கூடாது என்று செயல்படுவது நடைமுறையில் உதவாது. இந்த எண்ணமே முன்னேற்றதின் முக்கிய எதிரி.
[2] வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டுவது போன்ற அருமையான நேரங்களில், பெண்கள் தங்கள் திறமையிலோ, அல்லது தங்கள் வாழ்க்கை சூழ்நிலையை முன்னிறுத்தி இது தன்னால் இயலுமா என்பது போன்ற சந்தேகங்கள் கொள்வது. அதனால் தன்னம்பிக்கையின்றி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி அவற்றை நழுவ விட்டுவிடுவது.
[3] பொதுவாக அனைவரும் அறிவதும், ஆண்களைப் பொறுத்தவரை அடிப்படையில் அனைவரும் நம்புவதும் பணியிலும் குடும்ப வாழ்க்கையிலும் அவர்களுக்கு எந்த வித தடைகளும் கிடையாது என்பதை. பணியிலும் வெற்றி பெற்று, ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையும் அவர்களால் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துதான் மற்றொன்றை அடைய வேண்டிய நிர்பந்தம் இருகிறது. பணியினியைத் திருப்திகரமாகச் செய்தாலும், மேலும் பல பொறுப்புகளைப் பெற்றுத் தலைமைப் பதவிக்குச் செல்ல பெண்களுக்கு குடும்ப வாழ்வில் பல நிர்பந்தங்கள் தடையாக அமைந்து விடுகிறது.
[4] பெண்களும் தாங்களே தங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். யாராவது உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் தலைமைப் பண்புகளை செயல்களில் காட்டவேண்டும். எப்பொழுதும் அடுத்தவர் சொல்வதை மட்டுமே செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதும், சுயசிந்தனையின்றி பிறர் ஆட்டுவிப்பதற்கு ஏற்ப ஆடும் பண்புகளைக் காட்டும் ஒருவரால் தலைமைப் பொறுப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை அடுத்தவர்கள் கோணத்தில் எண்ணிப் பார்ப்பதற்கு இயலாததாக இருக்கும்.
[5] தங்கள் வெற்றி தங்கள் கையில், தங்கள் நடவடிக்கையில் இருக்கிறது அதனைச் சரியாக் கையாள்வதே மேலும் முன்னேறுவதற்கு வழி வகுக்கும் என்பதை பெண்கள் உணர வேண்டும். அவர்களது முன்னேற்றத்தை விரும்புவதில், அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில் அவர்களைத் தவிர பிறருக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
[6] தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், தன்னம்பிக்கையுடன் இருப்பதாகப் பிறர் உணரும் வண்ணம் செயல் படுவதும் முன்னேற்றதிற்கான வாய்ப்புகளைப் அடைய வழி வகுக்கும். பெரும்பாலும் வாய்ப்புகள் யாருக்கும் வழங்கப் படுவதில்லை, விருப்பபடுபவர்களால் எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதே உண்மை. அத்துடன், மிக வேகமாக இயங்கும் தற்கால உலகில் வாய்புகள் யாருக்காகவும் வழங்கப் படுவதும் இல்லை, அவர்கள் வழியில் தென்படும் வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதே அவரவர் வெற்றிக்கு வழி என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
[7] தாய்மார்கள் தங்களுக்குத் தோன்றும் தேவையற்ற குற்ற உணர்வுகளுக்குப் பலியாகாமல், காலத்தைத் திறம்பட நிர்வகித்து செயல்படுவது தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
[8] எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் மிக முக்கியமாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டியது தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பதாகும். தங்களுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்று முடிவெடுக்கும் பெண்கள், தங்கள் பணிக்கும் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளுக்கும் உறுதுணையாக இருக்கும், உதவும், தன்னலமற்று மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
[9] அச்சமே பெண்களுக்கு முதல் எதிரி. சரியான முடிவுகளை எடுக்காமல் போய் விடுவோமோ? அவ்வாறு செய்தால் நம்மைப் பார்த்து பிறர் நகைப்பதற்கு இடம் கொடுத்துவிடுவோமோ? தோல்வி அடைந்து விடுவோமோ? பிறர் நம்மை தவறாக எண்ணும் வாய்ப்பை அளித்துவிடுவோமோ? நம் முன்னேற்றம் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துமோ? தகுதிக்கு மீறிய செயலாக அகலக்கால் வைக்கிறோமோ? என்பது போன்ற தேவையற்ற அச்சங்கள் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. அதிலும் தங்களால் சிறந்த மகளாக அல்லது, சிறந்த மனைவியாக அல்லது, சிறந்த தாயாகச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்பது போன்ற அச்சங்கள் பல பெண்களையும் காலம் காலமாக பிடித்தாட்டி அவர்கள் முன்னேற்றதிற்குக் குறுக்கே நிற்கிறது.
[10] எந்த முடிவையும் எடுப்பதில் அச்சம் குறுக்கிடாவிட்டால், அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் தொழில் முறையில் எடுக்கு முடிவுகள் என்னவாக இருக்குமோ அந்த முடிவினை எடுப்பதில் பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது.
ஷெரில், தான் பணிபுரியும் ஃபேஸ் புக் நிறுவன அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஊக்கமூட்டும் கருத்துப்படச் சுவரொட்டிகள் குறிப்பிடும் அறிவுரைகளை நூலைப் படிப்பவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறர். "தன்திறமையில் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் வாய்புகள் அதிகம்," "தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்" என்பது போன்ற வாசகங்களைத் தாங்கியவை அச்சுவரொட்டிப் படங்கள். அவற்றில் ஷெரிலின் கவனத்தை மிகவும் கவர்ந்ததாக, "அச்சம் என்பதே உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?" என்ற வாசகத்தைக் குறிப்பிடுகிறார்.
"காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?"
என்ற கண்ணதாசனின் வரிகள் தனது வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்கு சிறந்த அறிவுரை. இந்த அறிவுரைதான் ஷெரிலின் நூல் முழுவதும் விரவி நின்று பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தந்து "உன்னால் முடியும் பெண்ணே" என்று உற்சாகமூட்டுகிறது. பெண்களின் வாழ்வில் பங்குபெறும் ஆண்களுக்கும் சமுதாயத்திற்கும், பல்லாண்டுகளாக அடக்கு முறையினால் தவிக்கும் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுத்தர தடையாக இருக்கக்கூடாது, தங்கள் கடமையை உணர்த்து உதவ வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவுடன் செயல்படும் பணியிடங்களும், குடும்பமும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணையுமே பெண்களுக்கு சமஉரிமை கிடைக்க வழி செய்ய முடியும்.
Lean In: Women, Work and the Will to Lead
- by Sheryl Sandberg
Hardcover: 240 pages
Publisher: Knopf (March 11, 2013)
Language: English
ISBN-10: 0385349947
--குடியரசு தின வாழ்த்துக்கள்…
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒரு சம்பாஷணைவயதான தம்பதியர்."என்ன கமலா பெரியவா சீரியல் ஆரம்பிச்சுடுத்தா?'"ஆமாம் இப்பதான் ஆரம்பிச்சுது. அதான் பாக்கறேன்'"சரி ஏந்துபோய் சூடா காப்பி கலந்துண்டு வா,"" சத்த இருங்கோ இப்பத்தானே விளக்கேத்திட்டு உட்க்காந்தேன்'" என்ன பதில் பேசறே . போய் எடுத்துண்டு வாங்கறேன்'"இன்னிக்கு மகளிர் தினம் தினமலர்ல பாத்தேன் . இன்னிக்காவது எங்கிட்ட கத்தாம கோச்சுக்காம இருக்கப்டாதா? எனக்குன்னு என்னிக்குத்தான் சுதந்தரம் கிடைக்குமோ? உம் ராமா ராமா ""என்ன முணுமுணுக்கறே . மகளிர் தினம்னா ஆத்துகாரர் சொன்னத கேக்கப்டாதுன்னு சொல்லியிருக்கா.அதான் சுதந்திரம் கொடுத்து கொடுத்து நாடு கெட்டுப்போச்சே .நெத்தில பொட்டு இல்ல . தல விரிச்ச கோலம்தான் எப்போதும் .வெளில சொல்லுவானேன் நம்மாத்லேயே தான் எல்லாம் பாக்கறோமே!""அட சும்மா இருங்கோ , ஏதோ வருஷத்ல ஒரு தடவ நம்பள பார்க்க புள்ளையும் மாட்டுப்பொண்ணும் வரா. அப்ப போய் இது சரியில்ல அது சரியில்லன்னு சொல்லி சண்டை மூட்டணுமா?ஏதோ அவா சந்தோஷமா இருக்க வரா நீங்க சும்மா இருந்தாலே போதும் .'"இந்தக்கண்ராவியெல்லாம் பாக்காம இருக்கத்தான் நான் நியூயார்க்குக்கு போன வருஷம் வல்லன்னு சொல்லிட்டேன் '"சும்மா இருங்கோ அந்தப்பொண்ணு ரொம்ப நல்ல பொண்னுதான் ட்ரெஸ்ல என்ன வந்தது?குணம்தானே முக்கியம் ""எல்லாம் இடம் கொடுத்து கெட்டுபோயிடுத்துகள் . உனக்கு உம் புள்ளைட்ட போய் இருக்கணும்னா நீ போய் இருந்துக்கோ . பெரிய மகளிர்தினமாம்அடக்கம் ஒடுக்கமெல்லாம் இல்லாம போயிடுத்து. சரிசரி எதுத்து பேசாதே போய் காப்பி கொண்டு வா""ஈஸ்வரா இந்த வயசிலும் இப்படி நடுங்கித்தொலைக்கறேனே . இந்த கால பெண்கள் போல எப்பத்தான் தைரியம் வருமோ? என்னதான் இருந்தாலும் அந்தக்கால மனுஷா மாறபோறதில்லை.அதுவும் கும்பகோணம்னா கேட்கவே வேண்டாம் . உம் என் காலம் முடிஞ்சுப்போச்சு.. இனி போற வழிக்கு புண்ணியம் தேடணும் அதான் ""என்னடி எதோ முணுமுணுத்துண்டு போறே.நீ முன்னமாரி இப்போ இல்லை.உனக்கும் திமிர் வந்துடுத்து. உன் இஷ்டப்படி நாலு மாமிகளோட வெளில கிளம்பிடறே. வீட்ல புருஷன் என்ன சாப்பிடுவான் ? அவனுக்கு எதாவது செஞ்சு வைச்சோமா ஊஹும் ஒரு நினைப்புமில்லை""என்னன்னா என்னிக்கோ திருவேற்காடு கோவிலுக்குப்போனத பத்து தடவ சொல்லிக்காட்டறேளே.இன்னிக்கு எனக்கு சந்த்ராஷடமம் போல இருக்கு. எழுந்த நேரமே சரியில்லை.போதாததுக்கு இன்னிக்கி "மகளிர் தினமாம் " ரொம்ப அழகுதான் .ஒரு ஆம்பளையும் மாறப்போற்தில்லை.""சரி சரி வாசல்ல யாரோ வந்திருக்கா கதவ திற""ஆஹா நம்ம பொண்னு சுசீ வாம்மா சுசீ சௌக்கியமா? மாப்பிள்ளை வரலையா?"இல்லப்பா நான் மட்டும் தான் வந்தேன் இன்னிக்கி மகளிர்தினத்துக்கு ஒரு ஸ்பீச் கொடுக்கணும் அதனாலெ சுரேஷ் "நான் சமைக்கறேன்.நீ போய்ட்டு வா"ன்னு சொல்லிட்டார்"அப்போ சுமிக்குட்டி கூட வரலையா உன்னோட வரேன்னு அது அழலையா?""இல்லையம்மா அதுக்கு கொஞ்சம் சுரம் அதனாலே வீட்டில விட்டுட்டு வந்துட்டேன் . மாப்பில்ளை நன்னா பாத்துப்பார்.கவலப்படாதே.""ஏண்டி இப்படி பொறுப்பில்லாம ! மாப்பிள்ளை சமையலும் செஞ்சு குழந்தையும் கவனிச்சுண்டு . உன் மனசுல நீ என்ன நினைச்சுண்டிருக்கே பெரிசா மகளிர் தினத்தைப் பத்தி பேச வந்துட்டே'" அம்மா எங்க காலமே தனி தான் .ஒருத்தர்க்கொருத்தர் விட்டுக்கொடுத்துப்போம் . உணர்ச்சியை மதிக்க கத்துப்போம் . என்னை ஒரு அடிமைப்போல் அவரும் நடத்த மாட்டார். நானும் சுரேஷுக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் கொடுப்பேன்.எங்களுக்கு இதெல்லாம் சகஜம் அம்மா. .ரெண்டு பேரும் வேலைக்குப்போறோமே. இது போல வோர்க் க ஷேர் செஞ்சாதான் முடியும் .என்ன சொல்றே. சரி விஷ் செய்ய மறந்தே போயிட்டேன்அம்மா உலக மகளிர் தின நல் வாழ்த்துகள் . இன்னிக்காவது நிம்மதியா உன்னிஷ்டப்படி இரு . என்னப்பா .நான் சொல்றது சரிதானே "" பாவம்டி அப்பா அவர் பாட்டுக்கு தேமேன்னு பேப்பர் படிச்சுண்டிருக்கார்.. அவர ஒண்ணும் சொல்லாதே உனக்கும் மகளிர் தின வாழ்த்துகள் .மேடைல நன்னா பேசிட்டு வா'" இரு சுசீ ஒரு நிமிஷம் உங்கம்மா இங்க உட்க்கார்ந்து என்ன செய்யப்போறா அவளையும் உங்கூட அழைச்சுண்டு போ நான் என் வேலைய பாத்துக்கறேன் ""ஆ அப்பா இதைத்தான் இதத்தான் நான் எதிர்ப்பார்த்தேன் ரொம்ப தேங்க்ஸ் அப்பா "2014-03-07 22:38 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
மகளிர் தின சிறப்புகள் அனைவரின் இடுகைகளிலும் சிறந்து காணப்படுகின்றன. மகளிருக்கு வந்தனம், வாழ்த்துகள்.
மனிதப் புரிதலுக்குள் அகப்படாத பேரியக்க சக்தியின் ஒற்றைப் பிரதிநிதியாக
பெண்மையைக் காண்கிறார் உளவியலாளர் யூங். ஆணுக்கு ஆன்ம வெளிச்சத்தை
அடையாளம் காட்டியபடி அவன் ஆழ்மனதில் அசைந்தாடும் பெண்மை ஒளிக்கீற்றை
'அனிமா' என்கிறார்
அவர். கனிவு, பரிவு, உணர்வுபூர்வமான உடன் இருப்பு, ஊக்குவிப்பு, உள்ளுணர்வு,
உதவ வேண்டும் என்ற உள்துடிப்பு, பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் அழிவுக்கும்
அரணாக நிற்கும் அறம்சார் வீரம், ஆன்ம விரிவு, புலன் அறிவுக்கு அப்பாற்பட்ட
அறிவியலால் நிரூபிக்க இயலாத ஆனால் மனம் உணரக்கூடிய அனைத்துக்கும் தலைமை
கொள்ளும் தாய்மை என பெண்மை தன்னை வெளிப்படுத்தும் யாவும் பெண்மொழியே.
ஒவ்வொரு பெண்ணும் சிறுமை கண்டு பொங்கி பெரிதினும் பெரிது வேட்கும்
போராளியாகவே இருக்கிறாள். அதனால் பெண்மொழி இன்றுவரை போர்விளியாகவே
இருக்கிறது.
ஆதிப்பெண்கவி அவ்வை முதல் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளி ஆலிஸ்வாக்கர் வரை,
மஹாஸ்வேதாதேவி முதல் மார்க்கரெட் ஆட்வுட் வரை நெருப்பில் விரல் தோய்த்துத்தான்
பெண்கள் எழுதுகிறார்கள். நெஞ்சு பிளந்து உயிர் குடிக்கிறார்கள். பெண்மொழி
தகிக்கிறது.
ஆயினும் பெண் மொழிக்குப்பெரிதும் குரல்கொடுத்தவர்கள் ஆண்கள் என்பதை மறுக்க
இயலாது. பெண் விடுதலைக்கு பாரதியைப்போல யார் ஏங்கி இருக்கிறார்கள்!
பெண்ணைப்போற்றிய தமிழ்க்கவிஞர்களை வணங்குவோம்!
சர்வதேச மகளிர்' தினத்தை உலகத்தோரை ஒட்டி நாமும் அங்கீகரித்து வருகிறோம்.மகளிர்
போராட்டாங்கள் சாதனைகள் இன்று நேற்று தொடங்கியதல்ல. பலநூற்றாண்டுகள் பல
முன்னால் சென்று, பண்டைய காலங்களில் நம் கால் தடம் பதித்தால் பல்வேறு
துறைகளில் தம் பெயர்களை, அடையாளங்களை, திறமைகளை பெண்டிரும்
பதித்திருக்கின்றனர் எனும் உண்மையைக் அறிவோம். சமூகம் என்பது சரியாமல்,
சுமூகமாக நடைபோட ஆண் பெண் என இரு பாலாரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
மனிதனும் இதை உணர்ந்தே இருந்தான். பண்டிதர்களாக, கலைஞர்களாக,
ராஜதந்திரிகளாக, போர் வீராங்கனைகளாக, அதிகாரிகளாக,
பல்வேறு துறையின் சாஸ்திரங்களை அறிந்தவர்களாக திகழ்ந்தவர்கள் ஏராளம். அப்படிப்
பட்ட பெண்களை உதாரணமாகக் கொண்டு அவர்கள் வழியில் உயர்ந்தவர்களும் நிறைய
உண்டு. அவர்கள் எல்லாம் பேசப்பட்டதில்லை. பேசப்படுவதில்லை. ஏனெனில், பல
ஏடுகள் புரட்டி காலச்சக்கரத்தின் சுழலை பின்னோக்கிச் செலுத்தி நம்மால்
உண்மை அறிவது கடினம்.
எனவே, சில நூற்றாண்டுக்கு முன் இருந்தவர்கள் எப்படி இருந்தனர் என்று
பார்க்கிறோம். வேதனையே மிஞ்சுகிறது.
சமூகத்தின் இருகண்கள் ஆணும் பெண்ணும்
என்பதை மறந்து பெண்களுக்கு படிப்பறிவு மறுக்கப்பட்டதும், சட்டம் சம்பிரதாயம் என
ஒடுக்கப்பட்டதும், சில நூற்றாண்டுகள் முன்பிலிருந்தே தோன்றியவை. பெண்கள் தினம்,
பெண்கள் சாதனை என்ற சொற்றொடர்களுக்கு அடுத்ததாய் நினைவுக்கு வருவது பெண்விடுதலை
. ஏன் ஆண்களின் சாதனைகளை தனியாக தூக்கிப் பாராட்டுவதில்லை என்றால்,
அதற்கு விடை இது தான். பெண் என்பவள் முடக்கப்பட்டு பின் எழுச்சி
பெற்றிருக்கிறாள்.
இடைக்காலங்களில் முடங்கிக் கிடந்த அவளின் உணர்வுகள் மீண்டும் துளிர்த்து, அவளே
புதுமைப் பெண்ணாக ஜனனம் எடுத்திருக்கிறாள். சாதனையின் மறுபக்க நாணயமாய்
பின்னிப்பிணைந்து நிற்பது பெண்ணின் விடுதலை.
ஆணும் பெண்ணும் சமமாய் செயல்பட்டால் சமூகம் என்ற தராசு நிமிர்ந்து நிற்கும்.
செயல்படாவிடின், ஏதேனும் ஒரு பக்கம் சரிந்து, சீரான சமூகம் அமையாது போகும்.
படித்த அறிவிற் சிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இதை உணர்ந்தே இருந்தனர்.
உணராது போனவர்கள், அறிவில் முழுமை பெறாதவர்கள். அறிவில் முழுமை பெறாத
பலர் இன்று சமூகத்தில், பொருளாதார அடிமட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அடிமட்டத்திலிருக்கும் பெண்களுக்கு
கல்வியறிவு என்ற அடிப்படையே பாதிக்கப்படுகிறது என்றால்,
மேல்மட்டட்திலிருக்கும் பல பெண்களுக்கு சமுதாயத்தின் வெளிப்பார்வைக்காக
கல்வி கிடைத்துவிட்டாலும், அதை பயன்படுத்தும் சுதந்திரம் சில-பல
நேரங்களில் மறுக்கப்படுகிறது. இங்கே தான் பிறக்கிறது விடுதலை எனும் சொல்.
எதனிடமிருந்து அவளுக்கு விடுதலை? ஆண்களிடமிருந்தா? சமூகத்திடமிருந்தா?
அல்லது, அவளுக்கு அவளிடமிருந்தே விடுதலையா? ஒரு பெண் காலம் காலமாய்
புகட்டப்பட்ட சிந்தனையால் தன்னைத் தானே சிறுமைப்படுத்தி
சிறைப்படுத்திக்கொள்கிறாள்.
'ஆணாதிக்கம்' என்ற சொல்லுக்கே தவறான கண்ணோட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சட்டங்களில் மட்டுமே ஆண்களின் ஆதிக்கங்கள் இருந்தது. பழக்க வழக்கங்கள்
சாஸ்திரங்களில் மட்டுமே ஆண் உயிர்த்தப்பட்டிருந்தான். ஆனால் சமூகத்தில் நேரி
டையாகவும் மறைமுகமாகவும் ஆணாதிக்கத்தை செலுத்தியது ஆண் மட்டுமன்று.
அவனுடன் இணைந்து பெண்ணும் வழியமைத்துக்கொடுத்திருக்கிறாள்.
இன்றளவும் பலர், ஆண்களாலேயே கட்டுண்டு கிடப்பதாகவும், பெண்ணின் சிறகை
ஆண் மட்டுமே கத்தரித்திருக்கிறான் என்ற வெறுப்புணர்வுடன் பெண்ணியம்
பேசுகின்றனர்.
பெண் என்பவளின் அன்றாடக் கடமைகளை உதறிவிட்டு, சமூகத்தில் கைகோர்த்து
நடக்கவேண்டிய ஆணை உதறித் தள்ளிவிட்டு எழுவதே பெண் விடுதலை என்ற நினைப்பை
வேறூன்றியிருக்கின்றனர். சாதனை என்பது தனிப்பட்ட மனிதனின் சொத்து. அது
ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் அதன் மதிப்பு ஒன்று தான். ஆண்
என்பவன் எப்படி பெண்ணின் பக்கபலமும் துணையும் இன்றி சாதித்து விட
முடியாதோ, அதே போன்று ஒவ்வொரு சாதித்த பெண்ணின் பின்பும் ஆண் ஒருவனின்
முத்திரை அழுத்தமாய் பதிந்திருக்கும்.
சமூகம் என்பது ஆண் பெண் இருபாலாரின் கூட்டமைப்பு. சரியாகவோ தவறாகவோ
புரிந்து வைத்திருக்கும் சட்டங்களும் சம்பிரதாயங்களும் சாஸ்திரங்களும்
அதன் முறை தவறாது பின் பற்றாவிட்டால் கேடு நேரிடும் என்ற அச்சமும்
பாகுபாடின்றி இரு பாலருக்கும் இருந்திருக்கிறது.
சிறகை விரித்து சாதிக்க நினைக்கும் திறமை மிகுந்த ஒரு பெண்ணை முடக்குவதில்
பெரும் பங்கு மற்ற பெண்களுக்கும் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு சாதனைக்குப் பின் எத்தனையோ பேர்களின் தியாகங்கள் ஊக்கங்கள்
பிணைக்கப்பட்டிருக்கிறது. சமூக சீர்திருத்தங்கள் நிரம்ப நடைபெற்ற பின்பே இந்த
மாற்றங்கள் நிகழக் காரணம் உருவாகியிருக்கிறது. அச்சீர்திருத்தங்கள் பெரிய
அளவில் நடைபெற முக்கியப்பங்கு வகித்த பலரில் ஆண்களும் உண்டு.
'சதி' ஒழிப்பையே தம் வாழ்வின் குறிக்கோளாய் பாடுபட்ட *ராஜாராம் மோஹன் **ராய்*
க்கு பெண் இனமே நன்றியுணர்வு கொள்ள கடமைப் பட்டுள்ளது. அவர் விட்ட பணியை *
வித்யாசாகர் எனும் வங்காள சீர்திருத்தவாதி* தொடர்ந்து போராடி வென்றார். விதவை
மறுமணம் மட்டுமின்றி, ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளைத் தேடும்
polygamy-யை எதிர்த்து போர்கொடி தூக்கினார்.
பல நாடுகளில் மதத்தின் போர்வையிலேயே பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும்
செயல்கள் நடைபெற்றுவந்திருக்கின்றன. தேர்ந்த துறவியான யக்ஞவல்கியாவிற்கும்
கார்கி எனும் பெண் துறவிக்கும் ஆன்மீக விவாதங்களும் சம்பாஷணைகளும்
நடைபெற்றாதாய் புராணம் உண்டு. ஆனால் இன்றளவும் பெண்கள் வேதங்கள்
படிப்பதும், புரோகிதங்கள் செய்யும் உரிமையை பெருமளவில்
மறுக்கப்பட்டிருக்கிறது. ஆர்ய சமாஜத்தின் தோற்றத்திற்கு காரணமாய் இருந்த
தயானந்த சரஸ்வதி, உருவ வழிபாடு, தீண்டாமை, ஜாதியை ஒழிக்க பாடுபட்டதோடு
மட்டுமின்றி, பெண்களின் சம உரிமைக் கல்விக்கும் வித்திட்டிருக்கிறார்.
கல்வி என்றால், சமுதாய கல்வித்திட்டத்திற்கு
மட்டுமின்றி, பெண்களுக்கும் வேதங்கள் உபநிஷத்துக்கள், இதிஹாசங்கள் படிக்க
வழிவகுத்து, புரோகிதம் செய்யும் உரிமைக்காகவும் பாதை
அமைத்துக்கொடுத்திருக்கிறார்.
பாரதி முதல் காந்தி வரை, சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கை வரவேற்று
ஆதரித்திருக்கின்றனர். பெருந்தலைவனாய் *காந்தி*யின் குரல், பால்ய விவாஹம்,
வரதட்சிணை, விதவை மறுமணம் போன்ற சமூகச் சீரழிவுகளைச் சாடி ஓங்கி
ஒலித்தபோது, அக்குரலுக்கு மதிப்பும், கனமும் அதிகமாய் இருந்தது. அதனால்
எழுந்த மறுமலர்ச்சிக்கு இன்றைய பாரதம் தலைவணங்கவேண்டும். *பாரதி*யின் எழுச்சி மிக்க
கவிதைகள் அவரின் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்றால், நடைமுறையில் அவர்
செல்லம்மாவை தம்மில் சரிபாதியாய் நடத்தியும் காட்டியிருக்கிறார். பெண்ணுக்கு சம
உரிமை கொடுக்காத சமூகம், தன் வீழ்ச்சிக்கு தான வித்திட்டுக்கொள்கிறது என்று
சாடியிருக்கிறார்.
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் மக்களின் மதிப்பிற்குரிய *பெரியார்
ராமசாமி*, மிகப்பெரிய சீர்திருத்தவாதி. கல்வியறிவு, கேள்வியறிவு சாதனைகள் என்ற
பெரிய அளவில் மாறுதல்கள் நடைபெற, அடிப்படை எண்ணம் மாற வேண்டும். பெண்ணை
உடைமையாய் கருதும் மனப்பாங்கு மாற வேண்டும். அவளின் உரிமை தன்னை
வெளிப்படு்த்திக்கொள்ளும் சுதந்திரத்தில் துவங்குகிறது. ஒரு பெண்ணின்
தனிப்பட்ட வாழ்வைத்தீர்மானிக்கும் உரிமை எந்த சட்டத்துக்கும்
சமூகத்திற்கும் மதக்கோட்பாடுகளுக்கும் இல்லை என வலியுறுத்தினார். ஆணுக்கென சாதகமாய் தோன்றும்
பல மதச்சடங்குகளைத் தாண்டி, பெண்ணையும் ஆணையும் சமம் என சீர்தூக்கி வைத்தார்.
இவரின் எழுச்சி மிக்க எண்ணங்கள், பலரின் அன்றாட வாழ்க்கை முறையையே செதுக்கியது.
கற்ற, கல்லாத பலதரப்பட்ட நிலைகளில் வாழ் மக்களின் சிந்தனையை மாற்றவும் செய்தது.
விவேகானந்தர் முதல் ஆன்மீகவாதிகள் பலரும் பெண்ணின் சமத்துவத்திற்கு தங்களின்
செய்திகளை பரப்ப்யிருக்கிறார்கள். இவர்களின் சொல்லுக்கு மதிப்பும்
முக்கியத்துவமும் அதிகம் இருந்ததால், தலைவனின் வழியே செல்பவன் தொண்டன்
எனும் கூற்றிற்கு ஏற்ப இவர்களால் பலர் தங்கள் சிந்தனையின் போக்கை
மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
சமூகம் என்பதன் போக்குக்கு ஏற்றவாறு நாட்டின் சட்டதிட்டங்கள் மாறும். அதே போல்
சட்டதிட்டங்கள் மாறினால் சமூகத்தில் ஒரு சாராரின் வீழ்ச்சியும் உயர்ச்சியும்
நிகழும். டாக்டர் அம்பேத்கார் பெண்களை சமச்சீராகப் பார்வையிடும் சட்டங்களை
அமைத்தார். சொத்துரிமை, விவாகரத்து என பல்வேறு முகங்களில் பெண்களை சமமாக
நடத்தும் சட்டம் இந்து சட்ட திருத்த மசோதா மூலம் கொண்டுவரப்பட்டது. வளர்ந்து
வரும் பலநாடுகளும், வளர்ச்சிபெற்ற நாடுகளைக் கண்டால், அங்கு ஆண் பெண்
பாகுபாடுகள் வெகுவாய்க் குறைந்திருப்பதைக் காணலாம்.
அஸ்திவாரத்தின் ஆட்டம் காணாமல் இருந்தால், எழும் உயரம் அம்சமாக அமையும்.
அது போல், அன்றைய காலகட்டங்களில் மதிப்பில் உயர்த்தி
வைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் தங்களாலான முயற்சியை அழகாக மேற்கொண்டனர்.
அவர்களுடன் இணைந்து, இயைந்து, பெண்களும் செயல்பட்டனர். இன்றைக்கு
சாதிக்கும் பெண்களுக்காக நாம் தட்டும் கைத்தட்டல்கள் அவர்கள் பின் நின்று
செயல்பட்டவர்களுக்கும் சாரும்.
ஒரு பெண்ணின் தியாகத்தினாலே, வீரத்தினாலே விவேகத்தினிலே எழுந்து நிற்கும்
ஆண்களைப் போல், ஆணின் தியாகமும், ஊக்குவிப்பினாலும் எழுச்சி பெறுகின்றனர்
பெண்கள்.பெண் விடுதலை என்றாலோ, பெண் சுதந்திரம் என்பதோ, பெண்ணின் சாதனை என்பதோ
தனிப்பட்ட ஒரு பாலாரின் முயற்சி அன்று. அது ஒரு சமூக இயக்கம்.
சிறுதுளிகள் சேர்வதே பெருங்கடல். நம் காதுகளுக்கு எட்டும் செய்திகள்
பிரபலங்களைப் பற்றியது மட்டுமே. பிரபலமான சில ஆண்கள் பெண்ணுரிமைக்கு
எடுத்திருக்கும் முயற்சிகள் பெரும் அளவில் பாராட்டப்படுகின்றன. அல்லது, பெரும்
அளவில் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால், அவர்கள் பிரபலம் அடைந்து
விடுகின்றனர். ஆனால், சத்தமின்றி, இயங்கும் சிறு துளியாய் வீட்டில்
அமைதியாகவழிநடத்தியஆண்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள்
வீட்டுப்பெண்களை ஊக்குவித்து, சிறு அளவில் மாற்றங்கள் செய்து, அவர்களின்
உரிமைகளை மதித்து, வாழ்வில் எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்கள் பலர்.
பெரிய அளவில் மாற்றங்கள் வந்த வண்ணம் இருக்க, மாற்றத்தின் முழுமைக்கு நாம்
இன்னும் சில காலம் காத்திருத்தல் அவசியம். சமூக நலனைக் கருத்தில் கொண்டு
பொறுப்போடும் முதிர்ச்சியோடும், ஆணும் பெண்ணும் இணைந்து செயல் படுவோம்.
ஒற்றுமை ஓங்கி வேற்றுமை குறையும் போது நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள்
எளிதில் கைகூடும்.
Reply | Forward |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இம்மாதிரி கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடிவுகாலம் எப்போது என்று தான் தெரியவில்லை..>>>>பார்வதி...இதைவாசிக்கும்போதே கஷ்டமாக இருக்கு நேரில் பார்த்த உங்க நிலமை எப்படி இருக்கும்? என்ன மனிதர்களோ இவர்கள்! மனநோய் பிடித்த மிருகங்கள்தான் வேறென்ன?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பெண்களின் உயர்கல்விக்காக, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘தாலிக்குத் தங்கம்’ மற்றும் ‘திருமண நிதி உதவித்’ திட்டங்கள் தற்காலத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர், இது போன்று பொருளுதவி வழங்கி ஊக்குவிக்கும் முயற்சி இல்லாமலே பெண்கள் உயர் கல்வி பெற்று முன்னேற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதனை வழங்கியது ஒரு கல்விமுறை மறுசீரமைப்பாகும். அந்த வாய்ப்பினை செவ்வனே பயன்படுத்தி பெரும்பான்மையான மகளிர் உயர்கல்வி முடித்து, பணிபுரிந்து, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்களது சந்ததியினரையும் முன்னேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிட்டியதை இந்த உலக மகளிர்தின நாளில் திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.
இந்த நூற்றாண்டில் உயர் கல்விக்குத் தடை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமின்றி அது பொருளாதாரம் ஏற்படுத்திய இடையூறாக இருக்கிறது. ஆனால் சென்ற நூற்றாண்டில் இருந்த காரணங்கள் வேறு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்கள் எதிர் கொண்ட தடைகள் வெவ்வேறு. சிலதடைகள் ஆண் பெண் இருவருக்கும் பொது. சில பெண்களுக்கே உரித்தானது. அவையாவும் பெண் கல்விக்கு அளிக்கப்படாத முக்கியத்துவம் என்ற ஒரு பொது வகையில் அடங்கிவிடும்.
ஒருவகையில், பெண்கல்விக்கு என்ன தேவை என்ற அலட்சிய மனப்பான்மை சமூகத்தில் ஊறியிருந்தது. மற்றொரு வகை மனப்பான்மையில் பெண்கள் தேர்ச்சி பெறுவதில் தோல்வியடைந்தால் அதனை கையாளும் முறையில் அமைந்தது. தேர்வில் தேர்ச்சி பெறுவது தடையாகத் தோன்றிய பொழுது அது வேறு வேறு விளைவுகளை ஆண் பெண் இருபாலருக்கும் வழங்கியது.
ஆண் தேர்வில் தவறினால் அது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று முயன்று ஆண்பிள்ளைகளை பெற்றோர் நெருக்கடி கொடுத்துப் படிப்பை முடிக்க வைத்தனர், உயர் கல்வி கற்க வைத்தனர். ஆனால் அதுவே பெண் தேர்வில் தவறினால், சரி இதற்கு மேல் உனக்கு படிப்பு ஏறாது போலிருக்கிறது, உனக்குத் திருமணம் செய்து வைத்து என் கடமையை முடித்துக் கொள்கிறேன் என்று கையைக் கழுவிவிடும் நிலைமையில் முடிந்தது. ஆனால் இதன் விளைவென்னவோ பெண்களுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தடைபட்டதில்தான் முடிந்தது.
ஒரு தொண்ணூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், பெண்களின் கல்வி நிலை இருந்த அவலநிலையை பாரதி போன்றோர் பாடிச் சென்றுவிட்டனர்.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று அவரால் இவ்வாறு ‘கற்பனையில்’ மட்டுமே பாடிடும் நிலை இருந்த காலமது. ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களோ ஏராளம்.
ஒரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், பெண்களுக்கு அன்று 1950 களின் மத்தியில் இருந்த தடைகள் சமுதாய மனப்பான்மையின் அடிப்படையிலானதும், உயர் கல்விக்கு ஆதரவான சரியானக் கட்டமைப்புகளும் இல்லாமல் இருந்திருப்பதும் தெரிய வரும். சில சமயங்களில், உயர் கல்வி மட்டுமல்ல, இவை பள்ளிப் படிப்பையே தடை செய்த சூழல்களாகவும் அமைந்தன.
பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தயாரானதும், வயதுக்கு வந்துவிட்டாள், இனி குடும்பம் நடத்த தேவையான சமையல் கலை மற்றும் குடும்பப் பொறுப்பில்தான் கவனம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த உடல் வளர்ச்சி மாற்ற நிகழ்வுடன் படிப்பு நிறுத்தப்படும். ஆனால், அந்த வயதோ தனது விருப்பத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத, போராடி அடைய முடியாத, தனது வாழ்வுத் தேவையைப் பற்றி முடிவெடுக்க முடியாத வயது அது என்று இன்று நாம் உணர்கிறோம். ஆனால் வீட்டில் தாய் இறந்தால், அல்லது தாய்க்குப் பல பிள்ளைகள் இருந்தால், தாய்க்கு உதவப் பெண்களின் படிப்பு தடைக்குள்ளானது. ஏதோ அவ்வப்பொழுது ஒரு கடிதம் எழுதப் படிக்க இருக்கும் கல்வியின் அளவே பெண்களுக்குப் போதுமானது என்ற மனநிலையில் அக்கால மக்கள் இருந்தனர். பொருளாதரத்தில் நடுத்தர மற்றும் அடிமட்ட நிலையில் இருந்த பெரும்பாலான குடும்பங்களின் பெண்கள் எட்டாம் வகுப்பை எட்டிப் பார்ப்பதோ, அல்லது நடுநிலைப்பள்ளி வரை முடிப்பதோதான் உயர் கல்வி என்ற நிலையே இருந்தது.
இந்த நிலையைத்தாண்டி வெளியே வந்த பெண்கள் சமுதாயத்தில் உயர் மட்டக் குடும்பங்களாகக் கருதப்பட்டக் குடும்பப் பெண்கள். இவர்கள் உயர்நிலைப் பள்ளி வரை தடையின்றிப் படிக்க முடிந்தது. இவர்களும் பெண்கல்வி எதற்கு என்ற சமுதாயகட்டுபாட்டைத் தாண்டினாலும் உயர் கல்விக்கேற்ற வசதியான சூழ்நிலையும், அதற்கேற்ற கட்டமைப்பற்ற சமுதாயத்தால் உயர்நிலைப் பள்ளியுடன் கல்வியை நிறுத்த வேண்டிய முடிவை எதிர் கொண்டார்கள். பணம் கட்டிப் படிக்க வைக்க வேண்டிய நிலையில் சகோதர்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பெண் புறக்கணிக்கப் பட்டாள்.
அடுத்து அக்காலம் கல்லூரிகளும் பல இல்லாத காலம் வேறு, வெளியூருக்கு அனுப்பி, விடுதியில் தங்கி பெண்கள் கல்வி கற்பதை 60 ஆண்டுகளுக்கு முன்னர் பலகுடும்பங்கள் நினைத்தும் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தனர். அக்காலக் கட்டத்தில் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள் கல்லூரியில் இண்ட்டர்மீடியட் என்ற வகுப்பை இரண்டாண்டுகள் படித்து, பிறகு மேற்கல்வி பயில வேண்டும். இண்ட்டர்மீடியட் வகுப்புகளின் பயிற்று மொழி ஆங்கிலம்.
பெரும்பான்மையான அக்கால மாணவர்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியில் படித்து, பிறகு கல்லூரியில் உயர்படிப்பில் ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாறினார்கள். அவர்கள் இந்த மாறுதலில் சற்றே தடுமாறினாலும், அவர்களை சமாளித்து நிலை நிறுத்திக் கொள்ள இரண்டு ஆண்டுகள் படிக்கும் இண்ட்டர்மீடியட் கல்வி முறை உதவியது. துவக்கத்தில் சற்று சறுக்கியவர்கள் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 1950 களின் மத்தியில் இந்த இண்ட்டர்மீடியட் கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது, 1955-57 காலத்துக் கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு மாணாக்கர்கள்.
இண்ட்டர்மீடியட் வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர். இந்த முறையில் பட்டப்படிப்பிற்கு முன்னர் படிக்க வேண்டிய கல்வி ஓராண்டாக கல்வியாண்டு குறைக்கப் பட்டாலும், அதன் பாடத் திட்ட முறை ஓராண்டு ஆங்கில வழி பயிற்று முறை என்பது பெண்கல்விக்குப் பாதகமாகவே முடிந்தது.
கல்லூரிகள் பல தோன்றினாலும், பெண்கள் விடுதிகளில் சென்று படிக்கும் அளவிற்கு அக்கால சமுதாயத்தின் மனநிலை பரவலாக மாறினாலும், தமிழ்ப் பயிற்று மொழியில் இருந்து ஆங்கிலப் பயிற்று வழிக்கு மாறிய பெரும்பாலான மாணவர்கள் தடுமாறினார்கள். தங்களை சுதாரித்துக் கொள்வதற்குள், சூழல் மாறுதலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் முன்னர் ஆண்டு இறுதித் தேர்வு வந்துவிடும். ஆண் பெண் இருபாலருக்குமே இந்த வகுப்புகள் மேற் கல்விக்குச் செல்வதில் தடங்கல் ஏற்படுத்தியது. புகுமுகவகுப்பு என்று அழைக்கப்பட்ட கல்லூரி அறிமுகவகுப்பு, மேல்படிப்பிற்குப் ‘புகாமுக’ வகுப்பாக மாறியது. ‘பாட்டில்நெக் எஃப்பெக்ட்’ (bottleneck effect) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும், சீசாவின் குறுகிய கழுத்தினால் வெளிவரும் திரவத்தின் அளவு குறுக்கப்படும் பாங்கில், மேல்நிலைக்குச் செல்லும் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த புகுமுக வகுப்பு தடை ஏற்படுத்தியது. ஆங்கில பயிற்று வழிக்கு மாறிய மாணவர்கள் தாங்கள் கற்பதிலும் சிரமம் எதிர் கொண்டு, அவ்வாறு கற்றதையும் ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாமல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றார்கள், அல்லது முற்றுமாகத் தோல்வியே அடைந்தார்கள்.
இதில் ஆண் தேர்ச்சியில் தவறினால் பெற்றோர்கள் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாதே என்று அவர்களை எப்படியாவது தேர்வு பெற வைக்கப் பாடுபட்டார்கள். ஆனால் பெண்களுக்காக அவ்வாறு பாடுபட்டவர்கள் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் சொல்லலாம். அதற்குள் பெண்களுக்கும் 18 வயது வந்துவிடுவதால், படிப்பு வராவிட்டால் அடுத்து திருமணம் செய்துகொள், என்று சொல்லி சடுதியில் திருமணம் செய்து அனுப்பிவைப்பதைக் கொள்கையாக வைத்திருந்தார்கள். வாழ்வின் மிக மிக முக்கியமான திருப்புமுனையான காலத்தில், இரக்கமற்றவகையில் பெண்கல்வியை அந்த புகுமுக வகுப்பு முறை பாதித்தது.
அத்துடன் அந்த புகுமுக வகுப்பின் பாடத்திட்டம் மூன்றே பிரிவு பாடத்திட்டம் மட்டுமே கொண்டது.
இவையாவுடனும் ஆங்கிலமும், ஏதோ ஒரு மொழியும் (Part I & II) அவசியம்.
முதல் இரண்டு பிரிவும் தொழிற் கல்விக்கானதாக திட்டமிடப்பட்டு இருப்பினும் இளங்கலை அறிவியல் பட்டப்படிபிற்கும் அவையே அடிப்படை. இம்முறையில் இருந்த இடையூறுகள், முதல் இரண்டு பிரிவில் இருக்கும் மாணவர்கள் பொறியியலோ அல்லது மருத்துவமோ இவற்றில் ஏதேனும் ஒன்றினைத்தான் மேற்படிப்பாகக் கொள்ள முடியும். இரண்டு படிப்புகளுக்குமே விண்ணப்பிக்க இயலாத வகையில் அந்தப் பாடத்திட்டம் அமைந்திருந்தது.
ஓராண்டில் ஆங்கிலவழிமுறை பயிற்று மொழிக்கு தகவமைத்துக் கொள்ள முடியாத திறமைசாலி பள்ளி மாணவர்கள் தட்டுத் தடுமாறி இரண்டாம் வகுப்பிலோ அல்லது மூன்றாம் வகுப்பிலோ தேர்வு பெறுவார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களே பொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப் படிப்பிலோ சேருவார்கள். இன்றைய காலத்தில் இருப்பது போல பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் இல்லாத காலம் அது. எனவே தொழில் கல்வி படிக்கப் போட்டி அதிகம் இருந்தது. இன்றைய நாட்களில் இத்தனை பொறியியல் இடங்கள் காலியாக நிரப்பப் படாமல் உள்ளது என்பதை செய்திகளாகப் படிப்பவர்களுக்கு அக்கால சூழ்நிலை புரியுமா என்பதே சந்தேகம்.
புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற ஆண்கள் மேற்கொண்டு படித்து முன்னேற குடும்பத்தினர் ஆதரவு உண்டு. பெண்களுக்கு திருமணம் செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது ஒன்றே வழியாக இருந்தது. அத்துடன் சில குடும்பங்களில் தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு மதிப்பெண் எடுக்காத மாணவிகளிடம், “படித்தால் டாக்டருக்குப் படி இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள், நான் என் கடமையை முடித்துக் கொள்கிறேன்”, என்ற முடிவுகளும் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டன. புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற பெண்களும், தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு அதிக மதிப்பெண் பெறாதவர்களும் உயர்கல்வியில் இருந்து விலகிச் சென்றதைக் கண்கூடாகக் கண்ட சொந்த அனுபவமே இங்கு காட்டப்பட்டுள்ளது.
பதினொன்றாம் வகுப்பாக பள்ளியிறுதி வகுப்பு படித்து, கல்லூரியில் ஓராண்டு ஆங்கிலத்தில் புகுமுக வகுப்பு படித்த முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது 1978 – 1979 கல்வியாண்டில். தொடர்ந்து வந்தது புதிய ப்ளஸ் டூ முறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிளஸ் டூ முறை. பள்ளியிறுதி வகுப்பு என்பது பத்தாம் வகுப்பு என மாற்றப்பட்டது. கல்வியாண்டுகள் 1978 -1980 இல் முதல் மேல்நிலை வகுப்பு அல்லது ப்ளஸ் டூ வகுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் யாவும் மேல்நிலைப்பள்ளிகளாக மாறின. இம்முறை வழங்கிய ஆக்கபூர்வமான விளைவுகள் பலருக்கும் முட்டுக்கட்டையாக இருந்த உயர்கல்வித் தடையை நீக்கியதுதான்.
கல்லூரி உயர்கல்விக்குத் தேவையான கல்வி பள்ளிகளிலேயே போதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்க்கல்வி, புதிய கல்லூரி மற்றும் விடுதி வாழ்க்கை என்ற மாறுதல்கள் தவிர்க்கப்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையான காலத்தில், அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் சூழலில் எந்த ஒரு மாறுதலுமே இல்லாது, இது போன்ற தேவையற்ற சூழ்நிலை மாறுதல்கள் என்ற மாற்றத்தடைகள் அறவே நீக்கப்பட்டது.
அத்துடன், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள் அதே படிக்கும் முறையில் கற்கும் வாய்ப்பும் தொடர்ந்தது. இதனால் இவர்களுக்குப் பயிற்று மொழித் தடுமாற்றம் என்பது கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகுதான் துவங்கியது. ஆனால் மூன்று, நான்கு, ஐந்து ஆண்டுகள் என்று விதம் விதமான பயிற்சிச் தேவை உள்ள பட்டப் படிப்புகளில் அவர்கள் துவக்கத்தில் தடுமாறிச் சறுக்கினாலும் மீண்டெழ வாய்ப்பும் கிடைத்தது. உயர்கல்வியில் நுழைந்து அதை முயன்று முடிக்கவும் முடிந்தது. மாறாக, அவர்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாற்றிக் கொண்டிருந்தாலும் கூட, 1950 களில் கல்லூரியில் இருந்த இரண்டாண்டு இண்ட்டர்மீடியட் வகுப்பு போல பயிற்றுமொழியினால் வரும் மாற்றத்தில் இருந்து மீண்டு வர ஒரு வாய்ப்பும் கிடைத்தது. இதனால் பயிற்றுமொழியினால் வரும் தடை என்பதும் நீக்கப்பட்டது.
ஒரு முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1970 களின் இறுதியில் இந்த இரு முக்கியத் தடைகளும் நீங்கிய காலத்தில் பெண்கல்வியின் கண்ணோட்டமும் சமூகத்தில் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அத்துடன் பல தனியார் கலைக்கல்லூரிகளும், பற்பல தொழிற்கல்வி வழங்கும் பல்கலைக் கழகங்களும் தோன்றியதில் பலருக்கு உள்ளூரிலேயே உயர் கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த மாற்றங்கள் பெண்கள் உயர்கல்வியில் அதிக அளவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ இப்பொழுது உயர்கல்வியில் தடை என்றால் இருவருக்கும் பொதுவாக அது பொருளாதார அடிபடையினால் ஏற்படும் தடங்கல் மட்டுமே என்ற நிலைக்கு தமிழகம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.
[மன்னிக்கவும் மீண்டும் அதே பதிவு, இணைய தளத்தில் இருந்து ஒத்தி ஒட்டியதில் ஏதோ கோளாறு, ஆகவே அதனை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன்]...நன்றி: திண்ணை[October 7th, 2013]===============வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார். இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு ‘பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்’ (group ‘A’ aviation pilot license) பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக ‘பிரிவு ‘பி’ விமானி உரிமம்’ (group B commercial pilot’s licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக தடைபட்டது. விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார்.
உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதர்களால் (Wright Brothers) நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 (at Kitty Hawk, North Carolina on December 17, 1903) அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமான சேவையில் 1909 ஆம் ஆண்டு முதல் இறங்கின. ‘வான்பயணத்தின் பொற்காலம்’ (Aviation’s Golden Age 1918–1939) எனக் கருதப்பட்ட காலம் என்பது முதாலம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப்போரின் துவக்கம் உரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில் நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்த காலமாகும்.இக்காலத்தில் விமான சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர். அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர். அமெரிக்காவின் ‘ஹரியெட் குயிம்பி’ (Harriet Quimby) என்ற பெண்மணி 1911 ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி ஆவார். இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் (அக்காலத்தில் சரளா ஷர்மாவாக இருந்தவர்) விமானி உரிமம் பெற்றார். தற்காலத்தின் “ஏர் இந்தியா” விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனியார் நிறுவனமாக ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் துவக்கிய வர்த்தக விமானசேவை) துவக்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது ஒரு செயற்கரிய வியப்பூட்டும் சாதனை.வாழ்க்கைக் குறிப்பு:சுதந்திரதிற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore, Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பரை தனது 16 வயதில் மணந்த சரளா பொது ஆண்டு 1914 இல் பிறந்தவர். இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி’ (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயண சேவையை நடத்தி வந்தது. சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள். முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot’s licence) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில் பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார். அவரையும் விட கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார். தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறித்திய வண்ணம் இருந்தார். ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிட்டாததைக் கண்ட அவர் தானே தனது மருமகளை “லாகூர் ஃப்ளையிங் கிளப்” (Lahore Flying Club) இல் சேர்த்து ‘டிம்மி தஸ்த்தூர்’ (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.இந்தியாவின் முதல் பெண் விமானி:பயிற்சியாளர் தஸ்த்தூர் சரளாவிற்கு சரியாக 8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார். தனது கணவர் பணியிலிருந்து வரும்வரைக் காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு ‘ஜிப்சி மாத்’ (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார். அப்பொழுது நான்கு வயது மகள் ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான். தான் வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.இவர் விமானம் ஓட்ட கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறும் இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஒரு ஊழியர் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப் பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.இவர் கணவர் பி.டி. ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939 ஆம் ஆண்டு இறந்த பிறகு தனது 24 வயதில் தனது ஒன்று மற்றும் ஆறு வயது மகள்களுடன் சரளா தனித்து விடப்பட்டார். தொடர்ந்து தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் (Jodhpur) சென்றார். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைபட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று ‘மேயோ கலைக் கல்லூரி’யில் (Mayo School of Art) ஓவியம
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
...<p style="margin-top: 10px; margin-bottom: 0px; outline: 0px; background-color: tran
அவருடைய பெண் குழந்தை மூன்று வயது வரை பேசாதிருந்த போதே கவலைப் பட்டிருக்கிறார். வீட்டில் கண்டு கொள்ளவில்லை.. இவரே பிறந்த வீட்டின் உதவியோடு முயற்சி செய்து, மருத்துவரைப் பார்த்ததில், குழந்தைக்கு ஆட்டிஸம் என்று தெரிந்திருக்கிறது.. அப்போதும் வீட்டில் ஒத்துழைப்பில்லை.. ஒருவழியாக உண்மை உறைத்த போது, கடுமையான எதிர்ப்பாம்.. 'குழந்தையை எங்காவது கொண்டு சேர்த்து விடு, வீட்டுக்கு நாலு பேர் வரப் போக இருக்கும் போது, குழந்தை இருந்தால் சங்கடம்.. நாமும் நாலு இடம் போக வர முடியாது'மருத்துவம் செய்யப் பணம் தரவில்லை என்பதால் நகைகளை விற்க நேரிட்டதாம்.. இறுதியாக, வீட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டாராம்.. இப்போது வேலைக்கும் போய்க் கொண்டு, குழந்தையையும் தெரபிக்கு அழைத்து வந்து என்று படாத பாடு படுகிறார்...
இம்மாதிரி கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடிவுகாலம் எப்போது என்று தான் தெரியவில்லை..
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
..ஆறு குழந்தைகளையும் இவரையும் விட்டு விட்டு, மிகக் குறைந்த வயதிலேயே மாமா மரணமடைந்த தினத்தில் இவர் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை...
எல்லாம் முடிந்து, சரவணப் பொய்கையில் குளித்து விட்டு வீட்டுக்குள் வந்ததும், மகனை அழைத்து, 'கணக்குப் பிள்ளையை வரச் சொல்லு,காரியங்கள் பத்தி பேசணும்' என்றிருக்கிறார்... இவரது அண்ணா, 'அதெல்லாம் உனக்கெதுக்கு, நாங்க பாத்துக்கறோம்..' என, அழுத்தமாக, 'என் குடும்பத்தை நான் பாத்துக்காம, யார் பாத்துப்பா?.. எனக்குத் தெரியும் பாத்துக்க!' என்று வாயடைத்ததோடு, தொடர்ந்து குடும்ப நிர்வாகத்தை ஏற்றிருக்கிறார். யாருக்கும் பயப்படாமல், விதவைகள், பெற்ற மகனோடு பொதுவில் பேசுவதே விமர்சனத்துக்குள்ளாகும் காலக்கட்டத்தில், யார் பேச்சுக்கும் கவலைப்படாமல், பெண், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து, சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்து, தானும் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு, குடும்பத்தின் பொது விஷயங்களை நிர்வகித்துக் கொண்டு, என்று அதன் பின் காலம் முழுவதும் ராணி போலவே வாழ்ந்தார்.
...<a href="http://siragu.com/wp-content/uploads/2014/03/pugaamuga-vaguppugal6.jpg" style="outline:0px;font-size:13px;background-color:transparent;color:rgb(24,100,154)" target="_blank" onmousedown="this.href='http://www.google.com/url?q\75http%3A%2F%2Fsiragu.com%2Fwp-content%2Fuploads%2F2014%2F03%2Fpugaamuga-vaguppugal6.jpg\46sa\75D\46sntz\0751\46usg\75AFQjCNFYmULpEqzdj3Dm9ZB-rnWRKzxjkA';return true;" onclick="this.href='http://w
பூரணி அத்தை:இவரைப் பற்றி, ஏற்கெனவே வகுப்பறைத் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்..மிகச் சின்ன வயதில் திருமணமாகி, அடுத்த வருடமே,கணவர் இறந்ததால் பிறந்த வீட்டோடு வந்து விட்டவர்.சிறுமியாக இருக்கும் போதே, இவர் வயதொத்த சிறுமிகள், பூ, பொட்டு என்று அலங்கரித்துக் கொள்ளும் போதே, தலை மழிக்கப்பட்டு, நார்மடிப் பட்டு உடுத்தப்படும் நிலைக்கு ஆளாகியவர். மனைவியை இழந்த தன் அண்ணாவின் ஐந்து குழந்தைகளை ஆளாக்கும் பொறுப்பை ஏற்றவர்.
தன் நிலை குறித்து வருத்தமிருந்தாலும், அதை வெளியில் காட்டியதில்லை. அதற்காக, அடுத்தவர் மேல் கோபம் காட்டி, வெறுப்பு ஏற்படும் வண்ணம் நடந்ததில்லை..விடியலில் சரவணப் பொய்கையில் குளித்து, பளிச்சென்ற விபூதிக் கீற்றுடன் வீட்டுக்குள் வந்தால், வெளியில் பார்ப்பது அபூர்வம்!..மிக இளம் வயதிலேயே வாழ்விழந்த பெண்களைப் பற்றி எளிதில் பேச்சு வந்துவிடும் என்பதால், ஒரு தபஸ்வி போல், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தவர்.மிகுந்த திறமைசாலி. கைவினைப் பொருட்கள் செய்வார்.. அழகாகக் கோலம் போடுவார். மிகக் குறைந்த நேரத்தில், அதிக அளவு ஐட்டங்கள் சமைப்பார்..மனக்கணக்கில் புலி!.. சிக்கனத்தை ஒவ்வொரு விஷயத்திலும் நடைமுறைப்படுத்தி, கட்டு செட்டாகக் குடும்பத்தை நடத்தியவர்.அன்பால் குழந்தைகள் மனங்களை ஆண்டார். வந்த மருமகள்கள் போற்றும் வண்ணம் நடந்து கொண்டார். பாட்டி 'அன்னவூர்ணி(அன்னபூரணி) அத்தை மாதிரி முடியாது' என்று கண்கள் பனிக்கச் சொல்லுவார்.இவரைப் பற்றிய கட்டுரையை முழுமையாகப் படிக்க
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
[March 25th, 2013]
நன்றி: திண்ணை
========================
பொதுவில் வைப்போம்
...
இளைப்பாறச் சொன்னது அறிவு
இரவுணவு சமைக்கவில்லையா?
இரக்கமற்று கேட்தது உமது குரல்
உழைத்த களைப்பு ஏன்
இருவருக்கும் பொது இல்லை
புரியவில்லை என் மனதுக்கு
பயிலும் படிப்பில் வேறுபாடில்லை
செய்யும் பணியிலும் வேறுபாடில்லை
சமையல்கலை பெண்களுக்கு மட்டுமே
என்ற பிறந்த வீட்டுச் சீதனமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
தேமொழி
கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.
இந்த பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்டியது.
இவரது தாய் பூர்வீகத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு தனது தாயின் நாடான ஃபிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஃபிலிப்பைன்ஸ்தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.
சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.
பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தை சேகரிக்க சோலார் செல் என்றழைப்படும் சூரியமின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்யவது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது.
இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை,கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பை சமர்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்கானப் பிரிவில் இவரது கண்டுபிடுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.
இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையானக் கட்டமைப்பும், அத்துடன் இந்த கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப் பரிசினைத் தேடித் தந்துள்ளது.
இவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுபுறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிர பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு வெப்பமின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின் இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்பமின்சக்தியை உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெட்லியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறைமின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்படிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்போழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.
பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஒரு அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள பெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கி குறைமின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்பமின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்குக்ம் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.
பலருக்கு பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப் பாராட்டுகள்.
தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries –http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect:http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php
தேமொழி
உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு; அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை என்ற குறைபாடும் காலம் காலமாகப் பெண்களாலும், அவர்கள் நலம் விரும்பும் ஆண்கள் சிலராலும் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதினை மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்கள் உண்டு. புவியில் தோன்றி, அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதன் காரணமாக மற்ற உயிரினங்களை விட மேம்பாடு அடைந்த வாழ்வினை வாழ்வது மனித இனம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றி வாழும் பிற உயிரினங்கள் போல அல்லாது, சூழ்நிலையை ஒரளவுக்கு தங்கள் வாழ்விற்கு ஏற்றவாறு மாற்றும் திறன் கொண்டது மனித இனம்.
இந்த மனித இனம் தங்கள் வரலாற்றை, பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய விரும்பும் பொழுதோ பெரிதும் உதவுவது பெண்கள்தான். பெண்களின் மரபணுவின் அடிப்படையிலான பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பக் கால வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் அறிய விரும்பும் பொழுது உபயோகப் படுத்தப் படுகிறது. ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியைவிட, ‘ஆணித்தரமான அறுதியிட்டுக் கூற உதவுவது’ பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே. இதற்கு உதவுவது பெண்களின் உடல் செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ (mtDNA) ஆகும். மைட்டோகாண்ட்ரியாவினை ஆண் பெண் இருபாலரும் கொண்டிருகிறார்கள். இருந்தாலும் ஏன் பெண்களின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ மட்டுமே பரம்பரை வழி ஆராய்சிகளில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது என்பதனையும், செல்லில் உள்ள நியூகிலியஸின் டி.என்.ஏ வைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ எந்த அடிப்படையில் பரம்பரை வழி ஆராய்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்க முற்படுகிறது இக்கட்டுரை.
[மைட்டோகாண்ட்ரியா (mitochondria) தமிழில் "இழைமணி" அல்லது "இழைத்தணுக்கு" என குறிப்பிடப்பட்டாலும், பரவலாக மைட்டோகாண்ட்ரியா என்றே அறியப்பட்டுள்ளதால் இக்கட்டுரையில் மைட்டோகாண்ட்ரியா என்றே குறிப்பிடப்படுகிறது. அவ்வாறே தமிழில் 'ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்' என வழங்கப்படும் (Deoxyribonucleic acid - DNA) டி.என்.ஏ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காரணத்தின் அடிப்படையில் மற்றும் சில அறிவியல் பதங்களும் தமிழ்ப் பதங்களாகக் கொடுக்கப்படுவது தவிர்க்கப் பட்டுள்ளது, எனவே வாசகர்கள் மன்னிக்கவும்.]
மனித குல வரலாறு:
பரிணாம வளர்ச்சி (evolution) ஆராய்ச்சிகளும், படிம (fossil) ஆராய்ச்சிகளும் உலகின் முதல் நாகரீக வளர்ச்சி அடைந்த ‘ஹோமோ சாப்பியன்ஸ்’ (Homo sapiens) என்னும் மனித இனம் தோன்றியது ஆஃப்ரிக்காவின் ‘எதியோப்பியா’ (Ethiopia) பகுதியில் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு எனத் தெரிவிக்கிறது. பிறகு, அங்கேயே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனித இனம், சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரவ எத்தனித்தது. இந்த வெளியேற்றத்திற்குக் காரணம் சுற்றுப் புறச் சூழலில் ஏற்பட்ட வாழ முடியாத சில மாறுதல்களாக இருக்கலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். அக்காலத்தில் மக்கட் தொகை 10,000 ஆகவும் குறைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. உலகில் ஏற்பட்டக் கடுங் குளிர் காலமும், உறைபனி காலமும் (ice age) மனித குலத்தின் இந்தப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்பட்டு, இந்தப் பரவல் ‘ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியற்றம்’ (‘Out-of-Africa’ theory) என்ற கோட்பாடாக விளக்கப் படுகிறது. இது நிகழ்ந்தது ‘ப்ளிஸ்டோஸின்’ காலத்தின் இறுதியில் (Late Pleistocene Era). இந்த மனிதகுலப் பரவலை மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA)வின் உதவியுடன், மனிதர்களின் தாய்வழிப் பாரம்பரியத்தை (Maternal Ancestry) ஆராய்வதன் வழியாக அறியப்பட்டுள்ளது.

மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA) என்பது என்ன?
செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு, வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதாகும். ஆண், பெண் இருவர் உடலில் உள்ள செல்களிலும் மரபுவழிக் கட்டளைகளைக் கொண்ட மரபணு மூலக்கூறு டி.என்.ஏ. உள்ளது. பெரும்பான்மையான டி.என்.ஏ. செல்லில் உள்ள ‘நியூகிலியஸ்’ (nucleus) இல் இருந்தாலும், செல்லின் உட்காருவான நியூகிலியசைச் சூழ்ந்துள்ள சைட்டோபிளாசத்தில் (cytoplasm) உள்ள நுண்மமான மைட்டோகாண்ட்ரியாவிலும் அவை உள்ளது. இது ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mtDNA) என அழைக்கப் படுகிறது.
ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவிலும் பல மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. நகல்கள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு செல்லிலும் பல மைட்டோகாண்ட்ரியாக்கள் உள்ளன. எனவே செல்லின் நியூகிலியஸில் உள்ள ஒரே ஒரு இழையான டி.என்.ஏ. அளவைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் அளவு செல்லில்அதிகம். அளவில் அதிகமாக இருப்பதாலும், அத்துடன் அது நியூகிலியஸின் டி.என்.ஏ. போல எளிதில் சேதமடையாப் பண்பினைப் பெற்றிருப்பதாலும் பெரும்பான்மையான அகழ்வாராய்ச்சிகள் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

ஆண், பெண் இருவர் உடலிலும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது அவர்களது தாயிடம் இருந்து பெறப்பட்டது. அத்தாய்க்கு கிடைத்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. அவளது தாயிடம் இருந்து வந்தது. இவ்வாறு தாய் வழியாகாவேப் பெறப்படுவதன் காரணம் இனப்பெருக்க நிகழ்வு அமைந்துள்ள முறையினால் ஆகும்.
இனப்பெருக்கத்தின் பொழுது, ஆண்விந்துவும் (sperm), பெண் முட்டையும் (egg), இணைந்து கருமுட்டை (zygote) உருவாகிறது. தலைப்பிரட்டை (tadpole) வடிவில் உள்ள ஆண் விந்து முட்டையை நோக்கி நீந்துவதற்கு அதன் வால் உதவுகிறது. விந்துவின் இந்த வால் பகுதி, நீந்த சக்தியைக் கொடுக்கும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது. முட்டையை அடைந்து விந்துவின் நியூகிலியசைக் கொண்ட தலைப்பாகம் உள் நுழைகிறது. காரியம் முடிந்தவுடன் தேவையட்ற விந்துவின் வால் பகுதி கழற்றி விடப் படுகிறது. அத்துடன் வால் பகுதியில் இருந்த (தந்தை வழியாகப் பெறப் பட வேண்டிய) மைட்டோகாண்ட்ரியாவும், அதிலுள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வும் கரு முட்டையில் இடம் பெறாமல் போய் விடுகிறது. இதனால் ஆணின் சைடோப்லாஸத்தில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது சந்ததியின் செல்களில் இடம் பெறுவதில்லை. சந்ததிகளில் செல்களில் தாயின் வழி வந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மட்டுமே இருக்கும்.

நியூகிலியஸின் டி.என்.ஏ. போல அல்லாது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாய்வழி மரபு மட்டும் என மாறுபட்டிருப்பதன் காரணம் இதுதான். மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாயிடம் இருந்து சந்ததிகளுக்குச் செல்கிறது, ஆண் பெறுவது தாயின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ., ஆனால் இதனை ஆணால் தனது சந்ததிகளுக்குத் தர இயலாது. மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. பெண்களின் வழியாகவே ஒவ்வொரு சந்ததியையும் சென்றடைகிறது.

தாய்வழிப் பாரம்பரியத்தை அறிதலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.” வின் பங்கு:
பொதுவாக இனப்பெருக்கத்தின் பொழுது தாயின் பாதி மரபணுக்களும், தந்தையின் பாதி மரபணுக்களும் ஒன்றாகக் கலப்படையும். ‘ஜான் கிரிகர் மெண்டல்’ (Johann Gregor Mendel) இதனை விளக்கியதால் இந்தக் கலப்பு முறை ‘மெண்டலியன் கலப்பு’ என விளக்கப் படுகிறது. ஆனால் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இது போன்ற எந்த ஒரு மாற்றமும் இன்றி பரம்பரைப் பரம்பரையாக அப்படியே தாயிடமிருந்து சந்ததிகளின் வழி தொடரும். அதனால் நம் உடலில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது, நம் கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டியான பெண்ணிடமிருந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் நகலே ஆகும். இவ்வாறு பல 100 அல்லது பல 1000 தலைமுறைகளுக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மாறாமலே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நமது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை நாம் அறிந்து கொண்டால், அது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முன்பிருந்த நமது பாட்டி ஒருவரின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வினை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு மரபு வழியை அறிந்துணர்வது ‘மனித மைட்டோகாண்ட்ரிய மரபியல்’ (human mitochondrial genetics) என மரபியல் துறையில் வகைப் படுத்தப் படுகிறது.
காலப்போக்கில் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வில் ஏற்படும் ‘மரபணு திடீர்மாற்றங்கள்’ (genetic mutation) சந்ததிகளுக்குத் தொடரும் பொழுது, அந்த மனிதக் கூட்டம் வேறு ஒரு இனமாக அல்லது குழுவாகப் பிரியத் தொடங்குகிறது. ஒரு மனித குழுவுக்கும் மற்றொரு மனித குழுவுக்கும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் வேறுபாடுகளின் தொகுப்பு, மனித மரபியலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்”(mitochondrial DNA haplogroup) என வரையறுக்கப் படுகிறது. இவ்வாறு மனித இனப் பரிமாண வளர்ச்சியில் கிளைகளாகப் பிரிவது ‘இனவரலாறு /இனவளர்ச்சி’ (phylogeny) என அறியப்படுகிறது. இவ்வாறு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன் தாய்வழி மரபின் பாரம்பரியத்தை (matrilineal inheritance) அறிந்து கொள்வதால், மனித இனம் ஃ ஆப்ரிக்காவில் தோன்றி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிய வருகிறது.
மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள தாய்வழி மரபு முறை ஆராய்ச்சி மிகவும் உதவியுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட முதுதாய் ‘மைட்டோகாண்ட்ரியல் ஏவாள்’ (Mitochondrial Eve) எனப் பெயரிடப்பட்டுள்ளாள். இந்த ஏவாள் இப்பொழுது வாழும் மனிதர்களுக்கான தாயாகக் கண்டறியப்பட்டவள் (most recent common ancestor – MRCA). இது போலவே ஆணின் Y- குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுபிறது. அவ்வாறு கண்டறியப்பட்ட முது தந்தை ‘ஒய் குரோமொசோமல் ஆதாம்’ ( Y-chromosomal Adam) எனவும் குறிப்பிடப்படுகிறான். இவர்கள் முன்னொரு காலத்தில் ஃஆப்ரிக்காவில் வாழ்ந்த நமது பொது மூதாதையர்கள் (common ancestor) ஆவார்கள்.
இந்த மரபியல் துறை ஆராய்ச்சியில், ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையான எழுத்துக்கள், ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்பிற்கும் அடையாளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடப் பட்டதற்கு உயர்வு தாழ்வோ, தரவரிசை முறையோ, குழுக்களுக்கிடையே ஆன மரபணுத் தொடர்போ அடிப்படை அல்ல. எந்த வரிசைமுறையில் ஹாப்லோக்ரூப்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த வரிசைமுறையிலேயே A – Z எனப் பெயரிடப் பட்டுள்ளது. நமது முது பெற்றோர்களின் ஹாப்லோக்ரூப் L. இந்த ஆதிகால மனிதர்களில் இருந்து மாறுபாடுகள் ஏற்பட்டு L0, L1, L2, L3, M, N, R எனப் பல குலங்கள் தோன்றி உலகம் முழுவதும் மனித இனத்தினர் பரவினர். இந்தக் குலப் பிரிவுகளையும் அவர்கள் பரவிய விதத்தையும் கொடுக்கப் பட்டுள்ள படங்களின் மூலம் அறியலாம். பெரிய ஹாப்லோக்ரூப் (macro-haplogroup) என இப்பிரிவுகள் அழைக்கப் பகுகின்ற. இப்ரிவுகளில் ஏற்படும் உப பிரிவுகள் ‘உப ஹாப்லோக்ரூப்’ (sub haplogroup) என அழைக்கப் படுகின்றன.

இந்தியாவின் மனித குலப்பிரிவுகள்:
இந்தியாவில் அல்லது தெற்காசியப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும், அதாவது 60% த்தினர் M ஹாப்லோக்ரூப் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் “ஏவாள்” > L1/L0 > L2 > L3 > M என்ற முறையில் வழித் தோன்றல்களாக உதித்தவர்கள். L3 ஹாப்லோக்ரூப் பிரிவிலிருந்து தோன்றியவர்கள் ஹாப்லோக்ரூப் M மற்றும் N குழுக்கள். M ஹாப்லோக்ரூப் பிரிவினத்தவரைத் தவிர N ஹாப்லோக்ரூப், மற்றும் அந்த N ஹாப்லோக்ரூப் வழித் தோன்றல்களாகிய R ஹாப்லோக்ரூப் பிரிவினரும் இந்தியப் பகுதியில் உள்ளனர். M ஹாப்லோக்ரூப் குலத்தினர் முதன் முதலில் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி யவர்கள். கடலோரப் பகுதி வழியாக பயணம் செய்து இன்றைய இந்தியாவை அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஆங்கிலேய மன்னன் மூன்றாம் ரிச்சர்ட் (English king Richard III) உடலின் எலும்புகளை மரபணு பரிசோதனையின் மூலம் அடையாளம் கண்டு தகுந்த முறையில் அடக்கம் செய்யவும், மறைந்த ரஷ்ய அரசப் பரம்பரையினரை (Russian royal family) அவர்களது எலும்புகளின் மூலம் அவர்கள்தான் என உறுதிப் படுத்தவும் தாய்வழி மரபு மரபணுச் சோதனையே பயன்படுத்தப் பட்டது.
இந்த அறிவியல் தகவல்கள் உறுதிப் படுத்துவது யாதெனில், வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, மனித குலத்தின் வரலாற்றையே உணர பெண்ணகளின் பங்குதான் பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பதும், வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.
-பெண்மை, பாரதியார்
பெண்ணின் பெருமையை உணர்ந்து கொள்வோம்….
மகளிர் தின வாழ்த்துக்கள்……
தங்களது தாய்வழி மரபினை அறிய விரும்புவோருக்கானத் திட்டம்:
TO PARTICIPATE IN A GENOGRAPHIC PROJECT:
Geno 2.0 – Genographic Project
https://genographic.nationalgeographic.com/
Geno 2.0 – Genographic Project Participation and DNA Ancestry Kit
http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp?productId=2001246&gsk&code=MR20944
______________________________________________
தகவல் ஆதாரங்கள்:
CONTENT SOURCES:
Human mitochondrial genetics -
http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_genetics
Human mitochondrial DNA haplogroup -
http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_DNA_haplogroups
mtDNA and its role in ancestry -
http://www.genebase.com/learning/article/17
Haplogroup M -
http://www.openthemagazine.com/article/living/haplogroup-m
More than a hunch: identifying Richard III with DNA -
http://theconversation.edu.au/more-than-a-hunch-identifying-richard-iii-with-dna-11999
மேலதிகத் தகவலுக்காக பரிந்துரை செய்யப்படும் ஆய்வு அறிக்கைகள்:
RESEARCH ARTICLES:
Deep Rooting In-Situ Expansion of mtDNA Haplogroup R8 in South Asia.
Thangaraj et al; PLoS ONE;2009, Vol. 4 Issue 8, p1
http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0006545
Phylogeography of mtDNA haplogroup R7 in the Indian peninsula.
Chaubey et al; BMC Evolutionary Biology 2008
http://www.biomedcentral.com/1471-2148/8/227
Phylogeny of Mitochondrial DNA Macrohaplogroup N in India, Based on Complete Sequencing: Implications for the Peopling of South Asia
Palanichamy et al; Am J Hum Genet. 2004 December; 75(6): 966–978.
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1182158/
Mother’s curse: the effect of mtDNA on individual fitness and population viability.
Gemmell NJ, Metcalf VJ, Allendorf FW. Trends Ecol Evol. 2004 May;19(5):238-44
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16701262
பட உதவி:
http://3.bp.blogspot.com/-kQRXiQhc_J0/ToN6yifvb_I/AAAAAAAABWI/UFJYPXs-P70/s1600/mDNA+migration+map+-+small.jpg
https://genographic.nationalgeographic.com/wp-content/uploads/2012/09/human-journey_940.jpg
http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MDI=.jpg?download=1
http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MTA=.jpg?download=1
http://leavingbio.net/HUMAN%20REPRODUCTION-WEB_files/image004.gif
http://katiephd.com/wp-content/uploads/2011/02/humanlifecyc.jpg
http://www.starchildproject.com/images/dna2011mtdnadiagram1.jpg
http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1Mzc=.jpg?download=1
http://jonciwolff.com/wp-content/uploads/2012/12/mitochondrialdna22.gif
http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c4/Peopling_of_eurasia.jpg
http://www.openthemagazine.com/sites/default/files/imagecache/435by290/article_images/8308.haima.jpg
நன்றி: வல்லமை ========================கைவிளக்கை உருவாக்கிய காரிகை
- Monday, March 3, 2014, 5:05
- அறிவியல், இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்
- 3 comments
தேமொழி
கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.
இந்த பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்டியது.
இவரது தாய் பூர்வீகத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு தனது தாயின் நாடான ஃபிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஃபிலிப்பைன்ஸ்தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.
சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.
பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தை சேகரிக்க சோலார் செல் என்றழைப்படும் சூரியமின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்யவது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது.
இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட
...
--

வணக்கம் நண்பர்களே.
இவ்வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக INSPIRING CHANGE என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
.