’பத்நி’ என்று பொதுமையில் மனையாளைக் குறிக்கும் சங்கதச் சொல் தமிழில் ’பத்தினி’ என்று கற்புடைய மாதரைக் குறிக்கும் சொல்லாகிறது;
அதேபோல் ‘பஶு’ என்று பொதுமையில் விலங்குகளை / உயிர்களைச் சுட்டும் சொல் தமிழில் ஆவை மட்டும் குறிக்கிறது.சைவ சித்தாந்தம் கூறும் பதி - பசு - பாசத்தில் இருக்கும் ‘பசு’ உயிர்களைச் சுட்டும் பொதுச்சொல்லேயன்றிக் குறிப்பாக ஆவைச் சொல்லவில்லை ; பஶுபதி - உயிர்களின் தலைவன்.
”பதி - கடவுள், பசு - உயிர், பாசம் - உயிரைப் பிணைக்கும் கட்டு.”
"சைவ சித்தாந்தத்தில் கொள்ளப்படும் பொருள்கள் மூன்றாகும். அவை பதி, பசு, பாசம் என்பனவாகும். பதி - கடவுள், பசு - உயிர், பாசம் - உயிரைப் பிணைக்கும் கட்டு. பதிப்பொருள் (கடவுள்) ஒன்று, உயிர்கள் எண்ணற்றவை.பாசம் - ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இம்மூன்று பொருள்களும் தனித்தனியானவை. பதியாகிய கடவுள் என்றும் உள்ளதுபோல மற்ற இரண்டும் என்றும் உள்ள பொருள்களாகும்."
http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021602.htm
பஶு
पशु [ paśu ] .
(instr. [ paśúnā ] or [ °śva ] ; dat. [ páśve ] or [ paśáve ] ; gen. [ paśvás ] or [ °śos ] ; du. [ paśvā́ ] ; acc. pl. [ paśvás ] or [ °śū́n ] )
cattle , kine (orig. " any tethered animal " ; singly or collect. " a herd " ) ,
a domestic or sacrificial animal (as opp. to [ mṛga ] ,
" wild animal " ; 5 kinds are enumerated , " men , kine , horses , goats and sheep " ( Lit. AV. xi , 2 , 9 ) ,
to which are sometimes added mules arid asses ( Lit. MBh. vi , 155 ) or camels and dogs ( Lit. AV. iii , 10 , 6 Comm. ) ) Lit. RV.
any animal or brute or beast ( also applied contemptuously to a man ; cf. [ nara-p ] and [ nṛ-p ] )
a mere animal in sacred things i.e. an uninitiated person Lit. Cat.
flesh Lit. RV. i , 166 6 an , ass Lit. L.
a goat Lit. L
[இது தொடர்பான பிற இழைகளில் இட்டால் குறுக்கீடாகும் என்பதால் தனி இழை]
தேவ்
’பத்நி’ என்று பொதுமையில் மனையாளைக் குறிக்கும் சங்கதச் சொல் தமிழில் ’பத்தினி’ என்று கற்புடைய மாதரைக் குறிக்கும் சொல்லாகிறது;
அதேபோல் ‘பஶு’ என்று பொதுமையில் விலங்குகளை / உயிர்களைச் சுட்டும் சொல் தமிழில் ஆவை மட்டும் குறிக்கிறது.சைவ சித்தாந்தம் கூறும் பதி - பசு - பாசத்தில் இருக்கும் ‘பசு’ உயிர்களைச் சுட்டும் பொதுச்சொல்லேயன்றிக் குறிப்பாக ஆவைச் சொல்லவில்லை ; பஶுபதி - உயிர்களின் தலைவன்.
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போலவே பசுபாசம் அநாதி....திருமூலர்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பஶு என்றால் மனிதன் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட விலங்குகள். ஆடு, மாடு, குதிரை, ....
....... ஆனால், வன விலங்குகள் பஶு அல்ல. அவை, ம்ருகம் என்பது சாலும்.
--
On Sunday, 22 March 2015 06:26:42 UTC-7, N. Ganesan wrote:பஶு என்றால் மனிதன் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட விலங்குகள். ஆடு, மாடு, குதிரை, ........... ஆனால், வன விலங்குகள் பஶு அல்ல. அவை, ம்ருகம் என்பது சாலும்.அப்படி வரையறை செய்ய வழியுள்ளதா தெரியவில்லை;
பஶு = domesticated animal. இதை எவ்வாறு செக் செய்வது? வன விலங்குகள் - புலி, சிங்கம், மான், ... போன்ற எவற்றுக்கும் பசு என அழைக்கும் வழக்கம் சம்ஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் இல்லை.
पशु [ paśu ] .
(instr. [ paśúnā ] or [ °śva ] ; dat. [ páśve ] or [ paśáve ] ; gen. [ paśvás ] or [ °śos ] ; du. [ paśvā́ ] ; acc. pl. [ paśvás ] or [ °śū́n ] )
cattle , kine (orig. " any tethered animal " ; singly or collect. " a herd " ) ,
a domestic or sacrificial animal (as opp. to [ mṛga ] , " wild animal " ; 5 kinds are enumerated , " men , kine , horses , goats and sheep " ( Lit. AV. xi , 2 , 9 ) ,
to which are sometimes added mules arid asses ( Lit. MBh. vi , 155 ) or camels and dogs ( Lit. AV. iii , 10 , 6 Comm. ) ) Lit. RV.
any animal or brute or beast ( also applied contemptuously to a man ; cf. [ nara-p ] and [ nṛ-p ] )
a mere animal in sacred things i.e. an uninitiated person Lit. Cat.
flesh Lit. RV. i , 166 6 an , ass Lit. L.
a goat Lit. L
"Who but the animal-killer or the killer of the soul will not care to hear glorification of the Supreme Personality of Godhead? Such glorification is enjoyed by persons liberated from the contamination of this material world."
இங்கே கோவிலில் பலிகொடுக்கும் பூசகன் குறிக்கப்படுகிறான்.
நீங்கள் கொடுத்துள்ள பாகவத சுலோகம் தமிழ்நாட்டில் (திருவரங்கம்? கச்சி?) ஆழ்வார்களின்பின்னர் எழுதிய பக்தி இலக்கியம். இதிலும், பசு என்றால் டொமெஸ்டிக் விலங்கே,வன விலங்கு அல்ல.
- nivṛtta-tarṣair upagīyamānād
- bhavauṣadhāc chrotra-mano-’bhirāmāt
- ka uttamaśloka-guṇānuvādāt
- pumān virajyeta vinā paśu-ghnāt
"Who but the animal-killer or the killer of the soul will not care to hear glorification of the Supreme Personality of Godhead? Such glorification is enjoyed by persons liberated from the contamination of this material world."
இங்கே கோவிலில் பலிகொடுக்கும் பூசகன் குறிக்கப்படுகிறான்.
பஶு என்றால் மனிதன் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட விலங்குகள். ஆடு, மாடு, குதிரை, ........... ஆனால், வன விலங்குகள் பஶு அல்ல. அவை, ம்ருகம் என்பது சாலும்.
நிச்சயமாய் இருக்கிறது. நீங்கள் கொடுத்துள்ள சம்ஸ்கிருத அகராதியில் இருந்து:பாஶத்தால், அதாவது தளைகயிறால், கட்டப்படுவது பஶு. காணுவது கண் என்கிறோமே, அதுபோல்.டொமெஸ்டிக் வெர்ஸஸ் வைல்ட் வேறுபாடு தமிழில் 5000 வருஷமாய் உண்டு,
पशु [ paśu ] .
" wild animal " ;
முதல் பதிவில் நான் எடுத்துக்காட்டிய சங்கத அகராதிப் பொருள் :பஶுपशु [ paśu ] .
" wild animal " ;
any animal or brute or beast ( also applied contemptuously to a man ; cf. [ nara-p ] and [ nṛ-p ] )
'வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக்கொன்று, இனிப் பயன் இல்லை' என்று இராவணன் கொண்டான்;நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான்.கம்பராமாயணம், யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்
தேவ்
cattle , kine (orig. " any tethered animal " ; singly or collect. " a herd " ) ,
a domestic or sacrificial animal (as opp. to [ mṛga ] , " wild animal " ; 5 kinds are enumerated , " men , kine , horses , goats and sheep " ( Lit. AV. xi , 2 , 9 ) ,
தேவ்
தேவ்
நீங்கள் அகராதி எண்ட்ரியைப் பாருங்கள்: பசு என்றால் " wild animal " என்று பொருள் அந்த அகராதி தரவில்லை.அப்படிப் பொருள் கொள்ளாதீர்கள்.
Animalistic -
नरपशु [ narapaśu ] m. " man-beast " , a brute in human form
पशुवत् [ paśuvat ] ind. like an animal , as in an animal Lit. Gaut.
पशुकर्मन् [ paśukarman ] copulation (as a merely animal act)
पशुचर्या [ paśucaryā ] acting like animals , copulation
पशुधर्म [ paśudharma ] the law of animals , manner of beasts (said of the re-marriage of widows), copulation
पशुवत् [ paśuvat ] like an animal Lit. Kap, as in an animal
पशुशीर्ष [ paśuśīrṣa ] n. the head of an animal.
பஶு - ஆவினத்தை மட்டுமே குறிக்கும் சொல்லன்று என்பதே நான் நிறுவ விழைவது; வன விலங்குகளைத் தனிப்பகுப்பாகச் சொல்வதற்கு ‘வந்ய பஶு ’ எனும் பயன்பாடு உள்ளது
தேவ்
On Monday, 23 March 2015 07:38:20 UTC-7, N. Ganesan wrote:நீங்கள் அகராதி எண்ட்ரியைப் பாருங்கள்: பசு என்றால் " wild animal " என்று பொருள் அந்த அகராதி தரவில்லை.அப்படிப் பொருள் கொள்ளாதீர்கள்.பஶு - பொதுவாக விலங்குகளைச் சொல்கிறது
cattle , kine (orig. " any tethered animal " ; singly or collect. " a herd " ) ,
a domestic or sacrificial animal (as opp. to [ mṛga ] , " wild animal " ; 5 kinds are enumerated , " men , kine , horses , goats and sheep " ( Lit. AV. xi , 2 , 9 ) ,
> பஶு - ஆவினத்தை மட்டுமே குறிக்கும் சொல்லன்று என்பதே நான் நிறுவ விழைவது;
Yes. In the dictionary, pasu means any domesticated animal: man, domestic cattle, horse, goat, sheep are the classical pancha-pasu.
Wild animals are mentioned as Mrga in Sanskrit. Mrga-s are lions, tigers, deer, antelopes, rhino, wild buffalo, ...
N. Ganesan
பசு - சிலப்பதிகார காலத்தில் ஆவைக் குறிப்பதற்குப் பசு பயன்பட்டதாகத்தெரிகிறது; சங்க இலக்கியத்தில் ‘பசு’ உள்ளதா பார்க்க வேண்டும்.
"நற்றிணை 40, கோண்மா நெடுங்கோட்டனார்,
மருதத் திணை – பரத்தை சொன்னது, தலைவியும் தோழியும் கேட்கும்படியாக
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட
குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர்
பெரும் பாண் காவல் பூண்டென ஒரு சார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகல் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.
Natrinai 40, Kōnmā Nedunkōttanār, Marutham Thinai – What the concubine said as the heroine’s friend listened nearby
Bright bells with long clappers
ring in a protected house
where a pavilion with spread sand
and rustling frond thatch is set up.
On one side,
women adorned with perfect jewels
stand waiting for a good omen,
like a big bard who protects
the man of the house from concubines.
The fragrance of newborn is there.
The baby sleeps with his foster mother
in a fragrant, soft bed. The rich woman,
the baby’s mother, sleeps after white
mustard paste was rubbed on her delicate
body along with fresh ghee, and given a bath.
Like a thief he comes in the thick of night,
the man from the town with wide ports, when his
son who bears his noble father’s name was born.
Meanings: நெடு நா ஒள் மணி – long-tongued bright bells, கடி மனை இரட்ட – ringing in the protected house, குரை இலைப் போகிய – rustling leaves/fronds, விரவு மணல் – spread sand, பந்தர் – temporary pavilion, பெரும் பாண் காவல் பூண்டென – like a big bard or many bards protecting the hero, ஒரு சார் – on one side, திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – women with fine jewels wait for an omen, வெறி உற விரிந்த அறுவை – fragrance filled cloth, மெல் அணை – soft pillow/bed, புனிறு – recently delivered, நாறு – fragrance, செவிலியொடு புதல்வன் துஞ்ச – as the son sleeps with the foster mother, ஐயவி அணிந்த நெய்யாட்டு – applied oils with ground mustard and bathed, ஈரணி – wet, பசு நெய் – fresh/cow’s ghee, கூர்ந்த மென்மை யாக்கை – rubbed delicate body, சீர் கெழு மடந்தை – wealthy woman, ஈர் இமை பொருந்த – her eyelids closed, நள்ளென் கங்குல் கள்வன் போல – like a thief in the dark night, அகல் துறை ஊரனும் வந்தனன் – the man from the wide port came, சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – when his son who bore his fine father’s name was born"