1.
திருவாதவூரரின் வரலாறு நடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏழு வருடங்களுக்கு முன்பே தோன்றியது உடனே பல புத்தகங்களில் அவரைப் பற்றி எழுதின கட்டுரைகளை அலச ஆரம்பித்தேன். ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. அவரின் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டிருந்ததால் திருவாதவூரர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பேயே வாழ்ந்தவர் என்பது. ஆனால் அவையெல்லாம் இன்னொன்றை நோக்கி என் மனதை இழுத்தது. அவர் எழுதிய பாடல்கள் மீதுதான். ஏற்கனவே சில பாடல்கள் பரிச்சயம் என்றாலும் திருவாசகம் முழுவதும் பருக ஒரு அவகாசம் கிடைத்தது. அழகு தமிழ், எளிமையான வரிகள், படிக்கப் படிக்க ஆனந்தம், இவருக்கு சிவன் குருவானால் இவர் தமிழர் அனைவருக்கு குருவன்றோ என்ற புரிதல் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய இந்த வெளிப்பாடுதான் நான் எழுதின திருமலைத் திருடன் நாவலில் இந்தப் பாடலுக்காகவே ஒரு பாத்திரப் படைப்பையும் உண்டாக்க வைத்தது. அவர் பாடல்களில் சில வரிகள் அவ்வப்போது ஆங்காங்கே விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம்..
ஏற்கனவே பல சமயங்களில் நான் குறிப்பிட்டதுதான். தெய்வப் பாடல்கள் பாடிய பலரும் பொதுமக்களின் பொது நன்மை கருதியும், தெய்வத்தின் மீதுள்ள அன்புப் பெருக்காலும், பக்தியாலும், மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக ஞானவெளிப்பாடாகப் பாடினரே தவிர தம் கால நிலை இதுதான், இப்போது இந்தச் சமயத்தில் இந்த ராஜா ஆண்டுகொண்டிருந்தபோது, என் தந்தையாரான இவர் இன்னின்ன செய்துகொண்டிருந்தபோது, என் தாயான இவர் மகிழ்ச்சி அடைவதற்காக இந்தப் பாட்டுகளையெல்லாம் எழுதி வைத்தேன் என்ற சுயநலமான வகையில் எழுதவில்லை.
பதிகங்களின் முடிவில் பாடல் எழுதியவரைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. பலஸ்துதி என்பார்கள். இந்த பலஸ்துதிகள் மூலம் தெரியவரும் விவரங்கள் கூட இவ்வூரைச் சேர்ந்த இன்னார் என்றுதான் வரும். ஆனால் அவை கூட எதற்காக சொல்லப்பட்டது என்று கவனிக்கவேண்டும். இந்தப் பாடல்களின் மகிமையால் என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதையும் அந்த பலஸ்துதியில் பொதுமக்களைக் கருத்தில் கொண்டு விவரித்து அவர்களை நல்ல நெறியில் அழைத்துச் செல்லவே இத்தகைய பாடல்கள் எழுதப்பட்டதாக அவர்கள் சொல்லும்போதுதான் அவர்களுக்கு இருந்த கருணை உள்ளம் புரியும். மக்கள் மீது எத்தனை அபரிமிதமான அன்பு இந்தத் தெய்வப் புலவர்களுக்கு!
மாணிக்கவாசகர் பற்றிய வரலாறு சரியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டுமானால் நாம் செல்லவேண்டியது மாணிக்கவாசகரிடத்தேதான். அதாவது அவர் எழுதிய தெய்வத் திருவாசகத்திடம்தான். சமீபத்தில் இந்தக் குறிப்புகளெல்லாம் மறுமுறை படிக்க ஒரு நல்வாய்ப்புக் கொடுத்த நண்பர்களுக்கு ஒரு நன்றி! அதே சமயம் மாணிக்கவாசகரைப் பற்றிய சரித்திரக் கல்வெட்டுகள் அறவே கிடையாது என்பதால் இலக்கியச் சான்றுகள் பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் நடுவில் இருக்கிறோம். எந்தப்பக்கம் சென்றால் எந்தப் பாதையில் நடந்தால் நாம் தேடவேண்டியது கிடைக்கும் என்று நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். அப்படி சில நோக்குகளைக் கொண்டு இக் கட்டுரையை துவங்கியுள்ளேன். கூடுமானவரை எனக்கெனத் தோன்றும் எண்ணங்களையும் முடிவுகளையும் திணிக்கக்கூடாது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் எனக்கென விதித்துக் கொண்டதால் திறந்த மனதுடன் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் விவரங்களின் மதிப்புத் தெரியவரும். மேலும் மாணிக்கவாசகரின் காலம் பற்றி எழுதும்போதே வேறு சில சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் விவரித்து எழுத வேண்டிய கட்டாயம் உண்டென்பதால் சில சமயம் செல்கின்ற பாதை பிரிந்தால் கூட வரவேண்டிய சமயத்தில் சரியான பாதையில் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி மற்ற விஷயங்கள் என வரும்போது கூடுமானவரை சரித்திர சம்பந்தமான விஷயங்கள் கொடுக்கப்படும்.
அப்பர் பெருமான், ஞானசம்பந்தர், சுந்தரர் (மூவர்) இவர்கள் காலம் ஓரளவுக்கு அனைவருமே ஒப்புக் கொள்ளத்தக்க வரையில் தெரியவந்துள்ளது. அப்பர் பெருமான் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும், ஞானசம்பந்தர் ஆறாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அதாவது பல்லவ மாமல்லன் காலத்திலும், பாண்டிய கூன்மாறன் காலத்திலும் தோன்றியவர் என்பதும், சுந்தரர் ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதிவரை வாழ்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்களும் சமயப் பெரியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். பல்லவ ராஜசிம்மன் (கைலாசநாதர் கோயிலை எழுப்பித்தவன்) காலத்தில் சுந்தரர் வாழ்ந்ததாக தி,வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார் (1).
ஆகையினால் இக்கட்டுரையின் முதல் நோக்கமாக வாதவூரரின் காலம் என்பது மூவரின் காலத்துக்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை மனதில் இருத்திக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது நமக்கு முதலில் தெரிய வருவது சுந்தரர் எழுதிய ’திருத்தொண்டத்தொகை’ பாடல்களாகும். இந்தப் பாடல் பிறந்த விதம் பற்றிய கதையில் ஆரூர்த் தலைவனான தியாகேசப்பெருமான் தம் அடியார்களைப் பற்றிப் பாடுக என சுந்தரரைத் தூண்ட, சுந்தரர் முதலில் எப்படி ஆரம்பிப்பது எனக் கேட்க ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அப்பாடல் பின் சுந்தரமூர்த்தியாரால் பல அடியார்கள் பெயர் சொல்லி முடித்ததாக சொல்லப்படுகிறது.
சுந்தரர் எழுதிய அடியார்கள் பற்றிய குறிப்பில் மாணிக்கவாசகர் பெயர் இல்லை. மாணிக்கவாசகர் என்ற பெயர் வாதவூரர் என்ற பெயரிலும், வாகீசர் என்ற பெயரிலும் முற்காலத்தில் வழங்கப்பட்டதாக சைவசமயக் குறிப்புகள் சொல்கின்றன. சரி, சுந்தரர் தாம் பாடிய அடியார்கள் பெயர் பற்றி ஒரு குறிப்பு கீழே தருகிறோம். (நன்றி – தேவாரம் தளம்)
”தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப்
பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி
வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால்
பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப்
பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப்
பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில்
இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து
வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல்
என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண்
உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல்
பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா.
15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு
நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர்.
நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார்
என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.”
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்கள் மீது கவனமாக அவர்கள்தம் பெயரைக் கூட மறைமுகமாகவே, அந்த அடியார்கள் எப்படி விரும்புவார்களோ அந்த வகையில்தான் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலம்மையை பேயார் எனக் குறிப்பிட்டுள்ளதுதான் அந்த அம்மைக்கும் விருப்பம் என்பது உண்மைதானே.. இப்படி மறைமுகமாகப் பெயர் கொடுத்தது சுந்தரரது விருப்பமாகவும் இறைவனது திருவெண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும் ஆனால் இந்த அடியார்கள் வரிசையில் வாகீசர் பெயர் குறிப்பிடவில்லை.
திருத்தொண்டத்தொகையையோடு சுந்தரரின் ஏனைய பாடல்களையும், தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி ராஜராஜசோழன் காலத்தவர் (பதினோராம் நூற்றாண்டவர்). நம்பியவர்கள் இந்தத் திருத்தொண்டத்தொகையை அடிஒற்றி திருத்தொண்டர் அந்தாதி இயற்றினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய அடியார்கள் பெயரோடு அதிகப்படியாக ஒரே ஒரு அடியார் பெயரையும் சேர்த்தார். அவர் கோச்செங்கணான் எனும் சோழ அரசன். இரண்டாம் நூற்றாண்டில் சிவபெருமான் அருளால் பிறந்தவன், சிவனுக்காக திருவானைக்காவில் கோயில் எழுப்பியவன். அவன் பிறந்த கதையும் விசித்திரமானது. இவன் சற்று நேரம் கழித்துப் பிறந்தால் சிறந்த சிவத்தொண்டனாக விளங்குவான் என்று சோதிடம் கணிக்கப்பட்டதால், அவன் தாய் தலைகீழாய் நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து பெற்று, உயிர் நீத்த கதை அனைவருக்கும் தெரியும். திருமுறையில் பலபாடல்கள், திவ்யபிரபந்தத்தில் திருமங்கையின் பாடல் இந்த அரசனைப் போற்றிப் புகழ்கின்றன. இத்தகைய கோச்செங்கட்சோழனையும் அடியார்கள் வரிசையில் சேர்க்கிறார் நம்பியாண்டார் நம்பி.
திருத்தொண்டரடிப்புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் நாயகனாகவே சுந்தரரை அறிமுகப்படுத்தும் சேக்கிழார் பெருமானுக்கும் சுந்தரரின் திருத்தொண்டத்தொகையே ஆதாரம், எனினும் நம்பியாண்டார் நம்பிகள் சேர்த்த கோச்செங்கட்சோழனோடு சோழர்களின் பெருமைமிகு சோழர்களின் ஆதிஅரசர்களில் ஒருவனான மனுநீதிச் சோழனையும் சிவனடியாராகச் சேர்த்துப் பெருமை சேர்க்கிறார்.
நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக திருவாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியில் மாணிக்கவாசகர் பெயர் விடுபட்டுள்ளது.
பெரிய புராணமும் மாணிக்கவாசகர் பெயரைக் கூறவில்லை. ஆனால் பொய்யடிமை இல்லாப் புலவர் எனும் சிவனடியார் ஒருவரைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் கூறும்போது அது மாணிக்கவாசகர் பற்றிக் கூறியதாக இருக்கமுடியாது என்று சேக்கிழாரும், நம்பியாண்டார் நம்பிகளும் கருதியதால் பொய்யடிமை இல்லாப் புலவர் என்பது மாணிக்கவாசகர் அல்லது வாகீசர் அல்லது வாதவூரராக இருக்கமுடியாது என்றே கொள்ளலாம். இப்படிச் சொல்லும்போது ஒரு நிதர்சனத்தை நாம் கவனிக்கவேண்டும். சேக்கிழார் பெருமான் கண்ணை மூடிக்கொண்டு சுந்தரர் சொன்னதையே அதே போல பெரியபுராணத்தைப் பாடவில்லை. சுந்தரர் எழுதிய ஒவ்வொரு அடியார் பெயரையும் அவர் ஊர், அவர் எவ்வாறு சிவனருள் பெற்றார் என்பதையும் கடினமாக உழைத்து, சேகரித்து, ஆராய்ச்சி செய்தபின் எழுதப்பட்டதுதான் பெரிய புராணம். அப்படி இல்லாவிட்டால் இறைவனே வந்து ‘உலகெலாம்’ எனும் சொல்லை எடுத்துத் தருவானா? தமிழகத்தின் முதல் ஆய்வாளரே சேக்கிழார் பெருமான் அவர்கள்தான்.
பதினொன்றே பாடல்களுடன் 88 வரிகள் கொண்டதுதான் திருத்தொண்டத்தொகை. ஆனால் பெரிய புராணமோ 4272 பாடல்கள் கொண்டது. 71 புராணங்களை விலாவாரியாகச் சொன்னது. எழுதி ஏறத்தாழ் 750 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் மிகச் சிறப்போடு இந்தக் காவியம் தமிழ்த்தாயின் கூந்தலில் வைரமணியாக ஒளிர்கின்றது. தமிழ் உள்ள வரை, உலகம் உள்ளவரை ஒளிரும் காவியமாகத் திகழும் வகையில் இந்தப் பெரியபுராணத்தைப் படைத்துள்ளார் சேக்கிழார் பெருமான்.
ஆனால் இப்படிப்பட்ட அரிய காவியத்தில் மாணிக்கவாசகர் பெயரோ அவர் வரலாறோ குறிப்பிடப்படவில்லை.. அதே சமயத்தில் சுந்தரர் குறிப்பிடாத கோச்செங்கட்சோழனும், மனுநீதிச் சோழனும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
மாணிக்கவாசகரின் வரலாறு மூவருக்கும் முன்னவரா, பின்னவரா எனும்போது, அவர்தம் பாடல் இருக்கின்றது, ஆனால் அவர்தம் வரலாறே பன்னிரண்டாம் நூற்றாண்டின் த்மிழின் மிகப் பெரிய காவியத்தில் இல்லை. இது மிகப் பெரிய கேள்வி. இவை பற்றிய ஒரு பார்வையை பார்த்துவிட்டு மேலும் சில விஷயங்களுக்குச் செல்வோம்.
திவாகர்
(இன்னும் வரும்)
(நண்பர்களுக்கு, இந்தக் கட்டுரையில் மேலே கண்ட விஷயங்கள் அனைவரும் அறிந்ததுதான். அதே சமயத்தில் இது ஆய்வுக் கட்டுரை அல்ல. ஆய்வுக்கு உதவும் கட்டுரை என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கவும். அத்தோடு விவரங்கள் ஆதியிலிருந்து சொன்னால்தான் கட்டுரை எழுதப்பட்ட பயனைத் தரும். இந்தக் கட்டுரை சற்று நீளும், நிறைய விஷயங்கள் பேசப்படும்.. அதனால் பொறுத்தருளவும்.. கேள்விகள் வந்தால் கடைசியில் பதிலளிக்கிறேன்.)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வாகீசர் என்றால் திருநாவுக்கரசர் தான். இதைச்
சேக்கிழார் சொல்கிறார். நாவுக்கரசர் (அப்பர்) = வாகீசர்
என்ற பழைய மரபு இருப்பதால், வாகீசர் = மாணிக்கவாசகர்
என்று எழுதுவதை சரிபார்க்க வேண்டுகிறேன்.
[Begin Quote]
மாணிக்கவாசகர் என்ற பெயர் வாதவூரர் என்ற பெயரிலும், வாகீசர் என்ற
பெயரிலும்
முற்காலத்தில் வழங்கப்பட்டதாக சைவசமயக் குறிப்புகள் சொல்கின்றன. சரி,
சுந்தரர்
தாம் பாடிய அடியார்கள் பெயர் பற்றி ஒரு குறிப்பு கீழே தருகிறோம்.
(நன்றி
–தேவாரம் தளம்)
[End Quote]
இதனால், வாகீசர் என்று மாணிக்கவாசகரை மொத்தம் 3 இடங்களில் நீங்கள்
பயன்படுத்துகிறீர்கள். தேவாரம்.ஒர்க் தளத்தில் இல்லையென்றால்
அப் பிரயோகத்தை எடுத்துவிடுதல் நன்று,
இப்படி மாணிக்கவாசகர் = வாகீசர் என்று தேவாரம் தளம்
சொல்கிறதா? என்ன? இருந்தால் வலைவரி வேண்டும்.
http://www.thevaaram.org/katturai/56.html
தருமை ஆதீனகருத்தர் ஆசியுரையில் சொல்கிறார்கள்:
”அறுபத்து மூவர் வரலாற்றினை, எடுத்த எடுப்பிலேயே நாயனார் பெயரை வைத்தே
தொடங்கிய வரலாறு இரண்டு. அதிலும் நாவுக்கரசர் வரலாறே முதலில்
இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக மங்கையர்க்கரசியார் வரலாறு
இடம்பெற்றுள்ளது.
திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
( தி.12 ப.21 பா.1)
நான்கு வகையாக விளித்து அழைக்கிறார். ஒரு நாவால் உரை செய்ய ஒண்ணாமை
உணராததேன், பெருநாமச்சீர் பரவல் உறுகின் றேன் என்கிறார். ”
அன்புடன்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாம் நடுவில் இருக்கிறோம். எந்தப்பக்கம் சென்றால் எந்தப் பாதையில் நடந்தால் நாம் தேடவேண்டியது கிடைக்கும் என்று நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். அப்படி சில நோக்குகளைக் கொண்டு இக் கட்டுரையை துவங்கியுள்ளேன். கூடுமானவரை எனக்கெனத் தோன்றும் எண்ணங்களையும் முடிவுகளையும் திணிக்கக்கூடாது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் எனக்கென விதித்துக் கொண்டதால் திறந்த மனதுடன் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் விவரங்களின் மதிப்புத் தெரியவரும். மேலும் மாணிக்கவாசகரின் காலம் பற்றி எழுதும்போதே வேறு சில சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் விவரித்து எழுத வேண்டிய கட்டாயம் உண்டென்பதால் சில சமயம் செல்கின்ற பாதை பிரிந்தால் கூட வரவேண்டிய சமயத்தில் சரியான பாதையில் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி மற்ற விஷயங்கள் என வரும்போது கூடுமானவரை சரித்திர சம்பந்தமான விஷயங்கள் கொடுக்கப்படும்.
அப்பர் பெருமான், ஞானசம்பந்தர், சுந்தரர் (மூவர்) இவர்கள் காலம் ஓரளவுக்கு அனைவருமே ஒப்புக் கொள்ளத்தக்க வரையில் தெரியவந்துள்ளது. அப்பர் பெருமான் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும், ஞானசம்பந்தர் ஆறாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அதாவது பல்லவ மாமல்லன் காலத்திலும், பாண்டிய கூன்மாறன் காலத்திலும் தோன்றியவர் என்பதும், சுந்தரர் ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதிவரை வாழ்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்களும் சமயப் பெரியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். பல்லவ ராஜசிம்மன் (கைலாசநாதர் கோயிலை எழுப்பித்தவன்) காலத்தில் சுந்தரர் வாழ்ந்ததாக தி,வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார் (1).
ஆகையினால் இக்கட்டுரையின் முதல் நோக்கமாக வாதவூரரின் காலம் என்பது மூவரின் காலத்துக்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை மனதில் இருத்திக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது நமக்கு முதலில் தெரிய வருவது சுந்தரர் எழுதிய ’திருத்தொண்டத்தொகை’ பாடல்களாகும். இந்தப் பாடல் பிறந்த விதம் பற்றிய கதையில் ஆரூர்த் தலைவனான தியாகேசப்பெருமான் தம் அடியார்களைப் பற்றிப் பாடுக என சுந்தரரைத் தூண்ட, சுந்தரர் முதலில் எப்படி ஆரம்பிப்பது எனக் கேட்க ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அப்பாடல் பின் சுந்தரமூர்த்தியாரால் பல அடியார்கள் பெயர் சொல்லி முடித்ததாக சொல்லப்படுகிறது.
அன்புள்ள திவாகர்,பாராட்டப்பட வேண்டிய நிலைப்பாடு. இப்படிப்பட்ட நடுவுநிலைமையுடனும், முன்முடிபுகளால் மூளையை நிறைத்துக்கொண்டு, அங்குல அளவும் அதிலிருந்து நகர மாட்டேன் என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்போர் மத்தியில் உங்களைப் போன்றவர்களும் உள்ளார்கள் என்பது மன நிறைவை அளிக்கிறது.உங்களிடம் ஜி. வான்மீகநாதன் எழுதி, ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட பெரியபுராணம் (ஆங்கிலத்தில்) இருக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில் உங்களுடைய ஆய்வுக்குத் துணையாக இந்நூல் பெரிதும் பயன்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
--
ஹரிகியிடம் ஒரு ஆலோசனை! பெரிய புராணம் ஆய்வுக்கட்டுரை பேராசிரியர் திரு அ.ச.ஞானசம்பந்தன் அவர்களாலும் எழுதப்பட்டுள்ளதாய்க் கேள்வி. அதையும் படிக்கலாமா? நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியருக்கும், இவருக்கும் ஆய்வுகளில் வேறுபாடுகள் இருக்கின்றனவா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புநிறை
திருமுறையில் மாணிக்கவாசகர் பாடல்களை முறையாகத் தொகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பி அவர்கள் ஒரு பாடலில் வாதவூரர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்
வருவாசகத்தினில்
முற்றுணர்ந்தோனை வண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ
பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார்
தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சைவப் பெருந்தகை நம்பியாண்டார் நம்பி திருவாதவூரரைப் பற்றி தம் ’கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ (பதினோராம் திருமுறை) எனும் பாடலில் (58) வாதவூரரைப் பற்றியும், வாதவூரர் பாடிய சிற்றம்பலத்திருக்கோவைப் பாடல்களைப் பெருமைப் படுத்தியும் எழுதிய பாடல் இது,. அவர் பாடிய திருக்கோவைப்பாடலுக்கு மற்ற கோவைப்பாடல்கள் இணையாக வராது என்பதை இங்கே குறிப்பிடுகிறார். (பின்னே! தில்லையம்பலத்தானே அந்தணன் உருவில் நேரில் வந்து அவர் சொல்ல இவர் எழுத கடைசியில் திருவெம்பாவையை முடித்தவுடன் ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று நேயர் விருப்பமாகக் கேட்டு திருக்கோவையை எழுதி வாங்கிக்கொண்டதாக அல்லவா வாதவூரர் வரலாறு சொல்கிறது!.)
ஆனாலும் இப்படி அழகாக வாதவூரரைப் புகழ்ந்த நம்பியவர்கள் திருத்தொண்டர்புராணத்தில் வாதவூரர் பற்றி ஏதும் சொல்லவில்லை.
பெரியபுராணத்திலும் திருத்தொண்டர்புராணத்த்லும் வாதவூரர் புகழ் பாடப்படாமைக்குக்காரண்ம் எளிமையானதுதான். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதவில்லை, ஆகையினால் நாமும் எழுதவேண்டாம் என்று அவர்கள் இருந்துவிட்டதுதான்.
ஆனால் மனுநீதிச் சோழனைப் பற்றி ஏன் எழுதவேண்டும். அவரைப் பற்றி சுந்தரர் எழுதவில்லையே என்று ஆராயும்போது, மனுநீதிச் சோழன் என்பான் சோழர் குல விளக்கு. உலகத்துக்கே சோழர்களின் நீதி தலையானது என்பதை நிரூபித்த மகாமன்னன். மிகப் பெரிய சிவபக்தன்.(” தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ் சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதி (பெரிய புராணம்)- சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞ னாகிய அம்மகன், நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதி)
தனக்கு அடுத்து பதவியேற்கப் போகும் சிவநெறிச்செல்வனான மகனை, அவன் அறியாது செய்த பாவத்துக்காக நீதியின் கண்கொண்டு தேர்க்காலில் இட்டவன். இத்தகைய செயலை யார்தான் செய்வர். மனித இனத்திலேயே முடியாத செயல் ஒன்று என்னவென்றால் தம் மகனைத் தம் கையால் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் தியாகம் செய்தல். இப்படிப்பட்ட மகனை பசுவின் கன்று ஒன்று இவன் தேர்க்காலில் பட்டு இறந்தமைக்காக தண்டிக்கிறான். இத்தகைய தியாகம் சோழகுலத்துக்கே தலைமகுடமாய் விளங்கிப் பெருமை சேர்த்ததால், அந்த மனுநீதிச் சோழனின் புராணத்தை முதலாக பெரியபுராணத்தில் தலைவாசலாக வைத்து திருத்தொண்டர் புராணத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் ஒரு மனுநீதிச் சோழனைத்தவிர திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடத்தவறிய வேறு எந்த அடியாரையும் அவர் குறிப்பிடவில்லை.
அப்படியானால் சுந்தரர் எழுதிய இந்த அறுபது (அறுபதும், சுந்தரர், சுந்தரரின் தாய்-தந்தை ஆக மூவர் சேர்ந்து அறுபத்துமூவர்) திருவடியார்கள்தான் அந்த மொத்தப் பழைய காலத்தில் சிவனுக்கு மிகவும் பிடித்த திருவடியார்களாக இருந்திருப்பார்களா.. இந்தக் கேள்வி குழந்தைத்தனமானது என்று எண்ணத்தோன்றும். சிவன் அருள் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர், எல்லோரையும் எழுதவேண்டுமென்றால் அது முடியாதுதான். ’ஒரு சிலரை’ சுந்தரர் இறைவன் திருவருளால் திருவாரூரில் அன்று நினைத்துப் பார்த்துப் பாடியிருக்கவேண்டும் என்ற ஒன்றுதான் இந்த ஒன்றுக்கு சான்றோர்கள் கூட பதிலாகச் சொல்லுவர்.
சுந்தரர் எழுதவில்லை, ஆகையினால் அவருக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் அருள் பெற்ற சிவனடியார்கள் இத்தனை பேர்தான் என்று நாம் கருதமுடியாதல்லவா.. சுந்தரமூர்த்தியாரும் இதுதான் முடிவு என்று சொல்லவில்லையல்லவா.. எத்தனையோ சிவனடியார்கள் சரிதம் விடுபட வாய்ப்புண்டு அல்லவா (அவர் மாணிக்கவாசகராகட்டும் அல்லது வேறு ஒருவராகத்தான் இருக்கட்டும்). ஆகையினால் திருத்தொண்டத் தொகைக்கும் அதன் அடி ஒற்றி எழுதப்பட்ட பெரியபுராணத்துக்கும் வாதவூரரைப் பொறுத்தவரை எவ்வித சம்பந்தமுமில்லை என்ற முடிவுக்கு முதலில் வரலாம் என்றுதான் தோன்றுகிறது.
மூவரில் மூத்தவரான அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏறத்தாழ நாற்பதினாயிரத்துக்கும் மேலாக பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். சரியாக கிடைத்த பாடல்களை முறையாகத் தொகுத்ததில் நமக்கு எஞ்சியவை 8250 பாடல்கள் மட்டுமே.
மூவருக்குப் பின்னவரா மாணிக்கவாசகர் என்ற பார்வையில் இரண்டாவதாகப் பார்க்கையில் மாணிக்கவாசகப் பெருமான் பற்றி நேரிடையாக எழுதப்பட்ட இரண்டு திருவிளையாடல் புராணங்கள். இவைகள் மாணிக்கவாசகர் பின்னவர் எனும் கருத்தை ஒப்பவில்லை. அரிமர்த்தனபாண்டிய அரசன் அவையில் அமைச்சராக இருந்த மணிவாசகர் குதிரைகளுக்காக செலவழிக்க வேண்டிய செல்வத்தை திருப்பெருந்துறை கோயிலுக்காக செலவழித்ததால் ஏற்படும் அவமானங்களும், இறைவன் அதற்கு பிறகு செய்த நரியைப் பரியாக்கியது, வையை பெருகியது, கரை கட்டியது, பிட்டுக்கு மண் சுமந்த கதைகள் மூலம் அவன் செய்த லீலைகளையும் விளக்கியுள்ளன.
பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் எனும் நூல் ஏறத்தாழ வாதவூரர் எழுதிய கீர்த்தித் திருவகலை ஒட்டியே மேற்கண்ட சம்பவங்களை எழுதியுள்ளது. இந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் பன்னிரண்டாம் நூற்றாண்டு கடையிலோ அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டது என்பர். இன்னொரு பெரிய புராணம் பரஞ்சோதி முனிவர் எழுதியது. (பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும்) இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு என்பார். பரஞ்சோதியார் வாதவூரர் அவதரித்த படலமாகவே ஆலவாய்த் திருவிளையாடல்களில் அவர் வரலாற்றைப் பாடியுள்ளார்.
ஆயினும் சரித்திர ஆய்விலும் சமய ஆய்விலும் மிகவும் தேர்ச்சி பெற்ற சதாசிவப்பண்டாரத்தார் இந்த இரு நூல்களும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்பதை விவரித்துச் சொல்கின்றனதான் என்றாலும் இது சரித்திர ஆய்வுக்குப் பொருந்தாது, ஆகையினால் மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் பிற்பட்டதுதான் என்று தன் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அதைப் போலவே மாணிக்கவாசகர் தம் திருச்சிற்றம்பல திருக்கோவையில்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும்
மாலரியே
றன்னவன்
தேர்புறத் தல்கல்செல்
லாது
வரகுணனாந்
தென்னவ
னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத்
தேவர்க்கெல்லாம்
முன்னவன்
(மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான் – நன்றி தேவாரம் தளம்)
இங்கு கூறப்பட்ட வரகுணன் எனும் தென்னவன் எனும் பாண்டியமன்னன் கி.பி 800-830 இல் ஆண்ட முதலாம் வரகுணனாகவோ அல்லது 1862 இல் ஆண்ட இரண்டாம் வரகுணனாகவோ இருக்கவேண்டும் என்கிறார் பண்டாரத்தார். இந்த ஒரு வரியால் மாணிக்கவாச்கரின் காலத்தைக் கணக்கிடமுடியுமா.. ’வரகுணன்’ என்ற பட்டப் பெயரை எந்த பாண்டிய அரசனும் பெற்றிருக்கலாமே.. திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணபாண்டியனாகவோ அல்லது பட்டினத்தடிகள் பாடிய மிகச் சிறந்த சிவபக்தசிரோன்மணியாக இருந்த வரகுணனாகவோ கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அந்தக் கால அரசர்கள் எல்லோருக்குமே அதிகமான அளவில் பட்டப்பெயர்கள் இருந்தன என்பது நரசிம்மபல்லவன் அல்லது மகேந்திர பல்லவன், ஏன் ராஜராஜ சோழன் சரித்திரத்திலிருந்தும் தெரியும். ஆகையினால் இந்த வரகுணனுக்கே அமைச்சகராக வாதவூரர் பணிபுரிந்தார் என்றும் சொல்ல முடியாத் நிலை. கடந்து போன சரித்திரத்தில் அதி விரைவாக எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாது - அது விரிவாக வெளிப்படும் வரை.
மாணிக்கவாசகர் தில்லையிலே அதிக வருடங்கள் இறைப் பணி செய்தவர். தில்லையம்பதி வெகுவாக அறியப்பட்டது மூவர் காலத்தில்தான் என்று சொல்வர். அதற்கு முன்பு தில்லையைப் பற்றிய அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூட சொல்வர்.
நாம் தில்லை பற்றிய திரட்டிய தகவல்களை கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.
திவாகர்
இன்னும் வரும்.
திருவாதவூரரின் வரலாறு நடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏழு வருடங்களுக்கு முன்பே தோன்றியது உடனே பல புத்தகங்களில் அவரைப் பற்றி எழுதின கட்டுரைகளை அலச ஆரம்பித்தேன். ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. அவரின் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டிருந்ததால் திருவாதவூரர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பேயே வாழ்ந்தவர் என்பது. ஆனால் அவையெல்லாம் இன்னொன்றை நோக்கி என் மனதை இழுத்தது. அவர் எழுதிய பாடல்கள் மீதுதான். ஏற்கனவே சில பாடல்கள் பரிச்சயம் என்றாலும் திருவாசகம் முழுவதும் பருக ஒரு அவகாசம் கிடைத்தது. அழகு தமிழ், எளிமையான வரிகள், படிக்கப் படிக்க ஆனந்தம், இவருக்கு சிவன் குருவானால் இவர் தமிழர் அனைவருக்கு குருவன்றோ என்ற புரிதல் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய இந்த வெளிப்பாடுதான் நான் எழுதின திருமலைத் திருடன் நாவலில் இந்தப் பாடலுக்காகவே ஒரு பாத்திரப் படைப்பையும் உண்டாக்க வைத்தது. அவர் பாடல்களில் சில வரிகள் அவ்வப்போது ஆங்காங்கே விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம்..
ஏற்கனவே பல சமயங்களில் நான் குறிப்பிட்டதுதான். தெய்வப் பாடல்கள் பாடிய பலரும் பொதுமக்களின் பொது நன்மை கருதியும், தெய்வத்தின் மீதுள்ள அன்புப் பெருக்காலும், பக்தியாலும், மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக ஞானவெளிப்பாடாகப் பாடினரே தவிர தம் கால நிலை இதுதான், இப்போது இந்தச் சமயத்தில் இந்த ராஜா ஆண்டுகொண்டிருந்தபோது, என் தந்தையாரான இவர் இன்னின்ன செய்துகொண்டிருந்தபோது, என் தாயான இவர் மகிழ்ச்சி அடைவதற்காக இந்தப் பாட்டுகளையெல்லாம் எழுதி வைத்தேன் என்ற சுயநலமான வகையில் எழுதவில்லை.
பதிகங்களின் முடிவில் பாடல் எழுதியவரைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. பர ச்ருதி என்பார்கள். இந்த பர ச்ருதிகள் மூலம் தெரியவரும் விவரங்கள் கூட இவ்வூரைச் சேர்ந்த இன்னார் என்றுதான் வரும். ஆனால் அவை கூட எதற்காக சொல்லப்பட்டது என்று கவனிக்கவேண்டும். இந்தப் பாடல்களின் மகிமையால் என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதையும் அந்த பர ச்ருதுதியில் பொதுமக்களைக் கருத்தில் கொண்டு விவரித்து அவர்களை நல்ல நெறியில் அழைத்துச் செல்லவே இத்தகைய பாடல்கள் எழுதப்பட்டதாக அவர்கள் சொல்லும்போதுதான் அவர்களுக்கு இருந்த கருணை உள்ளம் புரியும். மக்கள் மீது எத்தனை அபரிமிதமான அன்பு இந்தத் தெய்வப் புலவர்களுக்கு!
மாணிக்கவாசகர் பற்றிய வரலாறு சரியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டுமானால் நாம் செல்லவேண்டியது மாணிக்கவாசகரிடத்தேதான். அதாவது அவர் எழுதிய தெய்வத் திருவாசகத்திடம்தான். சமீபத்தில் இந்தக் குறிப்புகளெல்லாம் மறுமுறை படிக்க ஒரு நல்வாய்ப்புக் கொடுத்த நண்பர்களுக்கு ஒரு நன்றி! அதே சமயம் மாணிக்கவாசகரைப் பற்றிய சரித்திரக் கல்வெட்டுகள் அறவே கிடையாது என்பதால் இலக்கியச் சான்றுகள் பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் நடுவில் இருக்கிறோம். எந்தப்பக்கம் சென்றால் எந்தப் பாதையில் நடந்தால் நாம் தேடவேண்டியது கிடைக்கும் என்று நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். அப்படி சில நோக்குகளைக் கொண்டு இக் கட்டுரையை துவங்கியுள்ளேன். கூடுமானவரை எனக்கெனத் தோன்றும் எண்ணங்களையும் முடிவுகளையும் திணிக்கக்கூடாது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் எனக்கென விதித்துக் கொண்டதால் திறந்த மனதுடன் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் விவரங்களின் மதிப்புத் தெரியவரும். மேலும் மாணிக்கவாசகரின் காலம் பற்றி எழுதும்போதே வேறு சில சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் விவரித்து எழுத வேண்டிய கட்டாயம் உண்டென்பதால் சில சமயம் செல்கின்ற பாதை பிரிந்தால் கூட வரவேண்டிய சமயத்தில் சரியான பாதையில் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி மற்ற விஷயங்கள் என வரும்போது கூடுமானவரை சரித்திர சம்பந்தமான விஷயங்கள் கொடுக்கப்படும்.
அப்பர் பெருமான், ஞானசம்பந்தர், சுந்தரர் (மூவர்) இவர்கள் காலம் ஓரளவுக்கு அனைவருமே ஒப்புக் கொள்ளத்தக்க வரையில் தெரியவந்துள்ளது. அப்பர் பெருமான் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும், ஞானசம்பந்தர் ஆறாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அதாவது பல்லவ மாமல்லன் காலத்திலும், பாண்டிய கூன்மாறன் காலத்திலும் தோன்றியவர் என்பதும், சுந்தரர் ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதிவரை வாழ்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்களும் சமயப் பெரியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். பல்லவ ராஜசிம்மன் (கைலாசநாதர் கோயிலை எழுப்பித்தவன்) காலத்தில் சுந்தரர் வாழ்ந்ததாக தி,வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார் (1).
ஆகையினால் இக்கட்டுரையின் முதல் நோக்கமாக வாதவூரரின் காலம் என்பது மூவரின் காலத்துக்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை மனதில் இருத்திக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது நமக்கு முதலில் தெரிய வருவது சுந்தரர் எழுதிய ’திருத்தொண்டத்தொகை’ பாடல்களாகும். இந்தப் பாடல் பிறந்த விதம் பற்றிய கதையில் ஆரூர்த் தலைவனான தியாகேசப்பெருமான் தம் அடியார்களைப் பற்றிப் பாடுக என சுந்தரரைத் தூண்ட, சுந்தரர் முதலில் எப்படி ஆரம்பிப்பது எனக் கேட்க ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அப்பாடல் பின் சுந்தரமூர்த்தியாரால் பல அடியார்கள் பெயர் சொல்லி முடித்ததாக சொல்லப்படுகிறது.
சுந்தரர் எழுதிய அடியார்கள் பற்றிய குறிப்பில் மாணிக்கவாசகர் பெயர் இல்லை. மாணிக்கவாசகர் என்ற பெயர் வாதவூரர் என்ற பெயரிலும் முற்காலத்தில் வழங்கப்பட்டதாக சைவசமயக் குறிப்புகள் சொல்கின்றன. சரி, சுந்தரர் தாம் பாடிய அடியார்கள் பெயர் பற்றி ஒரு குறிப்பு கீழே தருகிறோம். (நன்றி – தேவாரம் தளம்)
”தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.”
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்கள் மீது கவனமாக அவர்கள்தம் பெயரைக் கூட மறைமுகமாகவே, அந்த அடியார்கள் எப்படி விரும்புவார்களோ அந்த வகையில்தான் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலம்மையை பேயார் எனக் குறிப்பிட்டுள்ளதுதான் அந்த அம்மைக்கும் விருப்பம் என்பது உண்மைதானே.. இப்படி மறைமுகமாகப் பெயர் கொடுத்தது சுந்தரரது விருப்பமாகவும் இறைவனது திருவெண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும் ஆனால் இந்த அடியார்கள் வரிசையில் வாதவூரர் பெயர் குறிப்பிடவில்லை.
திருத்தொண்டத்தொகையையோடு சுந்தரரின் ஏனைய பாடல்களையும், தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி ராஜராஜசோழன் காலத்தவர் (பதினோராம் நூற்றாண்டவர்). நம்பியவர்கள் இந்தத் திருத்தொண்டத்தொகையை அடிஒற்றி திருத்தொண்டர் அந்தாதி இயற்றினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய அடியார்கள் பெயரோடு அதிகப்படியாக ஒரே ஒரு அடியார் பெயரையும் சேர்த்தார். அவர் கோச்செங்கணான் எனும் சோழ அரசன். இரண்டாம் நூற்றாண்டில் சிவபெருமான் அருளால் பிறந்தவன், சிவனுக்காக திருவானைக்காவில் கோயில் எழுப்பியவன். அவன் பிறந்த கதையும் விசித்திரமானது. இவன் சற்று நேரம் கழித்துப் பிறந்தால் சிறந்த சிவத்தொண்டனாக விளங்குவான் என்று சோதிடம் கணிக்கப்பட்டதால், அவன் தாய் தலைகீழாய் நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து பெற்று, உயிர் நீத்த கதை அனைவருக்கும் தெரியும். திருமுறையில் பலபாடல்கள், திவ்யபிரபந்தத்தில் திருமங்கையின் பாடல் இந்த அரசனைப் போற்றிப் புகழ்கின்றன. இத்தகைய கோச்செங்கட்சோழனையும் அடியார்கள் வரிசையில் சேர்க்கிறார் நம்பியாண்டார் நம்பி.
திருத்தொண்டரடிப்புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் நாயகனாகவே சுந்தரரை அறிமுகப்படுத்தும் சேக்கிழார் பெருமானுக்கும் சுந்தரரின் திருத்தொண்டத்தொகையே ஆதாரம், எனினும் நம்பியாண்டார் நம்பிகள் சேர்த்த கோச்செங்கட்சோழனோடு சோழர்களின் பெருமைமிகு சோழர்களின் ஆதிஅரசர்களில் ஒருவனான மனுநீதிச் சோழனையும் சிவனடியாராகச் சேர்த்துப் பெருமை சேர்க்கிறார்.
நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக திருவாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியில் மாணிக்கவாசகர் பெயர் விடுபட்டுள்ளது.
பெரிய புராணமும் மாணிக்கவாசகர் பெயரைக் கூறவில்லை. ஆனால் பொய்யடிமை இல்லாப் புலவர் எனும் சிவனடியார் ஒருவரைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் கூறும்போது அது மாணிக்கவாசகர் பற்றிக் கூறியதாக இருக்கமுடியாது என்று சேக்கிழாரும், நம்பியாண்டார் நம்பிகளும் கருதியதால் பொய்யடிமை இல்லாப் புலவர் என்பது மாணிக்கவாசகர் அல்லது வாதவூரர் இருக்கமுடியாது என்றே கொள்ளலாம். இப்படிச் சொல்லும்போது ஒரு நிதர்சனத்தை நாம் கவனிக்கவேண்டும். சேக்கிழார் பெருமான் கண்ணை மூடிக்கொண்டு சுந்தரர் சொன்னதையே அதே போல பெரியபுராணத்தைப் பாடவில்லை. சுந்தரர் எழுதிய ஒவ்வொரு அடியார் பெயரையும் அவர் ஊர், அவர் எவ்வாறு சிவனருள் பெற்றார் என்பதையும் கடினமாக உழைத்து, சேகரித்து, ஆராய்ச்சி செய்தபின் எழுதப்பட்டதுதான் பெரிய புராணம். அப்படி இல்லாவிட்டால் இறைவனே வந்து ‘உலகெலாம்’ எனும் சொல்லை எடுத்துத் தருவானா? தமிழகத்தின் முதல் ஆய்வாளரே சேக்கிழார் பெருமான் அவர்கள்தான்.
பதினொன்றே பாடல்களுடன் 88 வரிகள் கொண்டதுதான் திருத்தொண்டத்தொகை. ஆனால் பெரிய புராணமோ 4272 பாடல்கள் கொண்டது. 71 புராணங்களை விலாவாரியாகச் சொன்னது. எழுதி ஏறத்தாழ் 750 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் மிகச் சிறப்போடு இந்தக் காவியம் தமிழ்த்தாயின் கூந்தலில் வைரமணியாக ஒளிர்கின்றது. தமிழ் உள்ள வரை, உலகம் உள்ளவரை ஒளிரும் காவியமாகத் திகழும் வகையில் இந்தப் பெரியபுராணத்தைப் படைத்துள்ளார் சேக்கிழார் பெருமான்.
ஆனால் இப்படிப்பட்ட அரிய காவியத்தில் மாணிக்கவாசகர் பெயரோ அவர் வரலாறோ குறிப்பிடப்படவில்லை.. அதே சமயத்தில் சுந்தரர் குறிப்பிடாத கோச்செங்கட்சோழனும், மனுநீதிச் சோழனும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
மாணிக்கவாசகரின் வரலாறு மூவருக்கும் முன்னவரா, பின்னவரா எனும்போது, அவர்தம் பாடல் இருக்கின்றது, ஆனால் அவர்தம் வரலாறே பன்னிரண்டாம் நூற்றாண்டின் த்மிழின் மிகப் பெரிய காவியத்தில் இல்லை. இது மிகப் பெரிய கேள்வி. இவை பற்றிய ஒரு பார்வையை பார்த்துவிட்டு மேலும் சில விஷயங்களுக்குச் செல்வோம்.
திவாகர்
(இன்னும் வரும்)
(நண்பர்களுக்கு, இந்தக் கட்டுரையில் மேலே கண்ட விஷயங்கள் அனைவரும் அறிந்ததுதான். அதே சமயத்தில் இது ஆய்வுக் கட்டுரை அல்ல. ஆய்வுக்கு உதவும் கட்டுரை என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கவும். அத்தோடு விவரங்கள் ஆதியிலிருந்து சொன்னால்தான் கட்டுரை எழுதப்பட்ட பயனைத் தரும். இந்தக் கட்டுரை சற்று நீளும், நிறைய விஷயங்கள் பேசப்படும்.. அதனால் பொறுத்தருளவும்.. கேள்விகள் வந்தால் கடைசியில் பதிலளிக்கிறேன்.)
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாணிக்கவாசகர் பாடலில் முஸ்லிம் வணிகர்கள் பற்றிய வரிகள் வருவதை அவர்
பிற்காலத்தவர் என்பதற்குச் சான்றாகச் சொல்வதாக கேள்விப்பட்டுள்ளேன். இது
ஏற்கனவே அலசப்பட்டிருந்தால் மன்னிக்க.
மாணிக்கவாசகர் வீரசைவர் எனும் கருத்து புதிதாகக் கேள்விப்படுகிறேன்.
ஆயின் அவர் வேதம் ஓதும் அந்தணர் அல்லவென்றும், வேற்று சாதியினர்
(அந்தணருள்) என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.
மேலும் மாணிக்கவாசகர் ஆழ்வார்களில் ஆழங்கால் பட்டவர் என்பது அவரது
பாடல்களிலிருந்து தெரிகிறது. நாயகி-நாயக பாவம் என்பதை சைவத்தில்
உச்சத்திற்குக் கொண்டு சென்றவர் மாணிக்கவாசகர். அவரது திருக்கோவையாரை
சைவம் முழுதாக புரிந்து கொள்ளாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பதற்குக்
காரணம் அவரது ராஸ அனுபவம் என்று சொல்வாரும் உண்டு.
அவரது பாடல்களின் அகச்சான்றுகளே ஆய்விற்கு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறேன்.
வைணவத்தில் இருப்பது போல் காலவாரியான குருபரம்பரா சரிதம் சைவத்தில்
இல்லையா? நீர் இரண்டும் அறிந்தவர்!
நா.கண்ணன்
2011/8/31 Dhivakar <venkdh...@gmail.com>:
> 2.
திவாகர்:

>
> பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்
> தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> அரபு அல்லது மேற்கு நாட்டு வணிகராக இறைவனே தோன்றுவதாக திருவிளையாடல் புராணம்
> சுட்டும். எக்காலத்திலும், அது கிருத்துவுக்கு முந்தையதாக இருந்தாலும்,
> பிந்தையதாக இருந்தாலும் அரபு நாட்டுக் குதிரைகள்தான் (புரவி) வணிகத்தில்
> ஒசத்தி. மேற்கு கரையோரம் சேரநாட்டோடு தொடர்புகள் கொண்ட அரபு வணிகர்கள்
> சரித்திரம் நிறைய உள்ளது.
>>
அரபு வணிகருடன் குதிரை பறிமாற்றம் பற்றிய முந்தையச் சேதிகள், அதாவது இவர்
3ம் நூற்றாண்டாக இருந்தால், உண்டா?
> எந்த சாதியாக இருந்தாலும், அவர் வாதவூரில் பிறந்தவர், அந்தணர். அமைச்சுப்பதவி
> செய்தவர். வீரசைவம் என்றில்லை. மாணிக்கவாசகரது சைவம் சற்று ஆழ்ந்து நோக்கினால்
> ’துறவற சைவம்’. எல்லாவற்றையும் துறந்து சிவனே என கிடப்பது. இங்கே சைவத்தில்
> பிரிவெல்லாம் காணமுடியாது.
>>
ஆசைக்கு அப்படி சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் உண்டு.
சிவாச்சார்யர்கள் ஸ்மார்தருடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதாவது
ஸ்மார்த்தர்கள் தங்களை சைவர்கள் என்று கருதினால்.
மேலும் சைவ வேளாளர், சைவக் கௌண்டர், சைவ கர்நாடகர் இவர்களுக்குள் எல்லாம்
மண உறவுகள் கிடையாது.
சைவம் என்பது பொது நெறி அவ்வளவுதான். எனவேதான் NDLS தரு தகவல்
முக்கியமானதாக உள்ளது. பிராமணர்களிலும் கர்நாடக ராவ்ஜியுடன்
ஸ்மார்த்தர்கள் உறவு வைத்துக் கொள்வதில்லையே!
மேலும் மாணிக்கவாசகரிடம் ஒரு வீர சைவப்பிடிப்பு தெரிகிறது.
//மாணிக்கவாசகரது சைவம் சற்று ஆழ்ந்து நோக்கினால் ’துறவற சைவம்’.
எல்லாவற்றையும் துறந்து சிவனே என கிடப்பது. இங்கே சைவத்தில் பிரிவெல்லாம்
காணமுடியாது.//
இதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. அதுவே திருக்கோவையைப் புரிந்து கொள்ள
அப்பிரிவினருக்கு தடங்கலாகவும் உள்ளது. வைராக்கியம் பற்றி
நம்மாழ்வாரும்தான் பாடுகிறார். ஆனால், வாதவூரார் அளவிற்கு சைவத்தில்
நாயக-நாயகி ராஸத்தை யாரும் பாடியதில்லை. Main stream saivism
ஒத்துக்கொள்ளாது என்பது எதிர்பார்த்ததே :-))
க.>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
2011/8/31 N. Kannan <navan...@gmail.com>
திவாகர்:
மாணிக்கவாசகர் பாடலில் முஸ்லிம் வணிகர்கள் பற்றிய வரிகள் வருவதை அவர்
பிற்காலத்தவர் என்பதற்குச் சான்றாகச் சொல்வதாக கேள்விப்பட்டுள்ளேன். இது
ஏற்கனவே அலசப்பட்டிருந்தால் மன்னிக்க.அரபு அல்லது மேற்கு நாட்டு வணிகராக இறைவனே தோன்றுவதாக திருவிளையாடல் புராணம் சுட்டும். எக்காலத்திலும், அது கிருத்துவுக்கு முந்தையதாக இருந்தாலும், பிந்தையதாக இருந்தாலும் அரபு நாட்டுக் குதிரைகள்தான் (புரவி) வணிகத்தில் ஒசத்தி. மேற்கு கரையோரம் சேரநாட்டோடு தொடர்புகள் கொண்ட அரபு வணிகர்கள் சரித்திரம் நிறைய உள்ளது.
மாணிக்கவாசகர் வீரசைவர் எனும் கருத்து புதிதாகக் கேள்விப்படுகிறேன்.
ஆயின் அவர் வேதம் ஓதும் அந்தணர் அல்லவென்றும், வேற்று சாதியினர்
(அந்தணருள்) என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.எந்த சாதியாக இருந்தாலும், அவர் வாதவூரில் பிறந்தவர், அந்தணர். அமைச்சுப்பதவி செய்தவர். வீரசைவம் என்றில்லை. மாணிக்கவாசகரது சைவம் சற்று ஆழ்ந்து நோக்கினால் ’துறவற சைவம்’. எல்லாவற்றையும் துறந்து சிவனே என கிடப்பது. இங்கே சைவத்தில் பிரிவெல்லாம் காணமுடியாது.
மேலும் மாணிக்கவாசகர் ஆழ்வார்களில் ஆழங்கால் பட்டவர் என்பது அவரது
பாடல்களிலிருந்து தெரிகிறது. நாயகி-நாயக பாவம் என்பதை சைவத்தில்
உச்சத்திற்குக் கொண்டு சென்றவர் மாணிக்கவாசகர். அவரது திருக்கோவையாரை
சைவம் முழுதாக புரிந்து கொள்ளாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பதற்குக்
காரணம் அவரது ராஸ அனுபவம் என்று சொல்வாரும் உண்டு.’பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என தில்லையம்பலத்தானால் கேட்டு எழுதப்பட்டது திருக்கோவை. நம்பியாண்டார் நம்பி இக்கோவையை சிறப்பித்த பாடல் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. (இதைப் பற்றி 2ஆம் பாகத்தில் எழுதியுள்ளேனே). திருமுறை தொகுத்த பெரும் சைவரே பாராட்டிவிட்ட பிறகு சைவ சமயத்தினரின் ஏனைய எதிர்மறை தகவல்கள் இக்கோவைக்குப் பொருந்தாது.
அவரது பாடல்களின் அகச்சான்றுகளே ஆய்விற்கு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறேன்.நல்ல வார்த்தை. அதைத்தான் செய்துகொண்டு வருகிறேன்.
வைணவத்தில் இருப்பது போல் காலவாரியான குருபரம்பரா சரிதம் சைவத்தில்
இல்லையா? நீர் இரண்டும் அறிந்தவர்!
இரண்டும் ஏதோ ஏட்டுப்படிப்புதான் கண்ணன். கறிக்குதவாது.தேசிகர் காலத்தில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் சில முயற்சிகள் செய்திருக்கிறார்.
ஆனால் மாணிக்கவாசகர் பற்றிய விவரங்கள் இல்லை. முறையாகவே தொகுத்தளித்தாலும், மாணிக்கவாசகர் காலம் பற்றி பல ஆண்டுகளாகவே இப்படி ஆய்வுகள் நடந்து கொண்டே வருகின்றனசமீபத்தில் இந்தளூரில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் ராஜேந்திரன் (1052) காலத்து செப்பேடுகளும், அங்கு கிடைத்த சிலைகளில் மாணிக்கவாசகரின் ஐம்பொன் சிலையும் கண்டறியப்பட்டுள்ளது. நால்வர் சிலையொடு, சுந்தரரின் மனையாள் பரவை நாச்சியார் சிலை கூட உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் வழிபடப்பட்ட மிகப்பெரிய சிவனடியாராக மாணிக்கவாசகர் உள்ளார் என்பது சரித்திர ஆதாரமாக நமக்கு சமீபத்தில் கிடைத்த செய்தி!! இது மேலும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.
நா.கண்ணன்
2011/8/31 Dhivakar <venkdh...@gmail.com>:
> 2.
>
> பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்
> தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
>
>--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> அரபு அல்லது மேற்கு நாட்டு வணிகராக இறைவனே தோன்றுவதாக திருவிளையாடல் புராணம்அரபு வணிகருடன் குதிரை பறிமாற்றம் பற்றிய முந்தையச் சேதிகள், அதாவது இவர்
> சுட்டும். எக்காலத்திலும், அது கிருத்துவுக்கு முந்தையதாக இருந்தாலும்,
> பிந்தையதாக இருந்தாலும் அரபு நாட்டுக் குதிரைகள்தான் (புரவி) வணிகத்தில்
> ஒசத்தி. மேற்கு கரையோரம் சேரநாட்டோடு தொடர்புகள் கொண்ட அரபு வணிகர்கள்
> சரித்திரம் நிறைய உள்ளது.
>>
3ம் நூற்றாண்டாக இருந்தால், உண்டா?
ஆசைக்கு அப்படி சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் உண்டு.
> எந்த சாதியாக இருந்தாலும், அவர் வாதவூரில் பிறந்தவர், அந்தணர். அமைச்சுப்பதவி
> செய்தவர். வீரசைவம் என்றில்லை. மாணிக்கவாசகரது சைவம் சற்று ஆழ்ந்து நோக்கினால்
> ’துறவற சைவம்’. எல்லாவற்றையும் துறந்து சிவனே என கிடப்பது. இங்கே சைவத்தில்
> பிரிவெல்லாம் காணமுடியாது.
>>
சிவாச்சார்யர்கள் ஸ்மார்தருடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதாவது
ஸ்மார்த்தர்கள் தங்களை சைவர்கள் என்று கருதினால்.
மேலும் சைவ வேளாளர், சைவக் கௌண்டர், சைவ கர்நாடகர் இவர்களுக்குள் எல்லாம்
மண உறவுகள் கிடையாது.
சைவம் என்பது பொது நெறி அவ்வளவுதான். எனவேதான் NDLS தரு தகவல்
முக்கியமானதாக உள்ளது. பிராமணர்களிலும் கர்நாடக ராவ்ஜியுடன்
ஸ்மார்த்தர்கள் உறவு வைத்துக் கொள்வதில்லையே!
மேலும் மாணிக்கவாசகரிடம் ஒரு வீர சைவப்பிடிப்பு தெரிகிறது.
//மாணிக்கவாசகரது சைவம் சற்று ஆழ்ந்து நோக்கினால் ’துறவற சைவம்’.
எல்லாவற்றையும் துறந்து சிவனே என கிடப்பது. இங்கே சைவத்தில் பிரிவெல்லாம்காணமுடியாது.//
நா. கணேசன்
> மணிவாசகர் கூற்றினில் *"திருப்பெருந்துறை வரையில் ஏறி"* (*68
> திருவண்டப் பகுதி)*
>
> *வரை* எனும் சொல் மூங்கிலைக் குறித்து ஆகுபெயராக அஃது இயல்பாக
> விளையும் மலை (அ) குன்றினைக் குறித்தது
> *ஏறி* எனும் சொல்லால் உயர்ந்த நிலை காட்டப்படுகின்றது
> *எல்லை* என்னும் பொருள் படாது.
> மேலும் பாடல் வரிகளில் *வரை* என்னும் சொல்
> கூறுகிறேன் அவர் உலக மகா போரில் கலந்து கொண்டவர் இப்போதுள்ள பாகிஸ்தான் *Quetta
> * விலிருந்து ஸ்ரீலங்கா
> *கொழும்பு *வரை சென்றவர்
>
> மாணிக்க வாசகர் தம் தமிழ் அறிவு மிகவும் சிறப்பானதாக இருப்பதால் வடுக நாட்டு
> வழியாக வந்த
> சமணர் வழியினருக்கும் நல்ல தமிழறிவு இருந்ததைப் போல் இவருக்கும் இருப்பதாகக்
> கொள்ளலாம்
> மேலும் அக்காலத்தே வடுக மொழி தமிழ் மொழி போல் சிறப்புடையதாக் வளரவில்லை போலும்
>
> அல்லது வடுகநாட்டில் இருந்து வந்தவர்களின் பல தலைமுறையினருக்கு பிற்பட்டவர்
> ஆகலாம்
>
> மேலும் பலப்பல கருத்துக்கள் உள்ளன பிறகு தொடருவேன்
>
> அன்புடன்
> நூ த லோ சு
> மயிலை
>
> திருவாளர் காந்தி அவர்களின் கோகழி பற்றிய கட்டுரை இணைய வலையில் இன்று கிடைக்க
> வில்லை
> என் கோப்பிலிருந்து நகல் எடுக்கமுடியவில்லை (இன்றுதான் பழுதுதாகி விட்டது )
> கிடைத்தவுடன் வைக்கின்றேன்
>
> 2011/8/29 coral shree <cora...@gmail.com>> அன்பின் திரு திவாகர் ஜி,
>
> > திருவாதவூரர் என்ற பெயர் மாணிக்க வாசகருக்கும், திருவாகீசர் என்ற பெயர்
> > திருநாவுக்கரசருக்கும் வழங்கி வந்தது. திருநாவுக்கரசருக்கு, தருமசேனர் என்று
> > மற்றொரு பெயரும் உண்டல்லவா?
>
> > மாணிக்கவாசகருக்கு திருமணம் ஆகி குடும்பம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய
> > பிறந்த ஊரில் சென்று நாங்கள் விசாரித்த போது அது பற்றி தகவல்கள் ஏதும்
> > கிடைக்கவில்லை. தங்களுடைய ஆய்வில் மாணிக்கவாசகரின் வழித் தோன்றல்கள் குறித்த
> > தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொண்டால் நலம். நன்றி ஐயா.
>
> > 2011/8/29 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >> அன்பின் பவளா,
> >> சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்
> >> மரபு விக்கியில் ஏற்றுவதற்கு முன், வாகீசர் என்ற சொல்லை நீக்கிவிடவும்.
> >> நன்றி!
> >> (மின் தமிழ் மாடரேட்டர்களுக்கு இதே வேண்டுகோள்தான், நன்றி
>
> >> அன்புடன்
> >> திவாகர்
>
> >> 2011/8/29 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >>> நன்றி கணேசன் அவர்களே
> >>> திருத்திக் கொள்கிறேன்.
>
> >>> வாகீசனார் அப்பர் பெருமானின் பெயர்தான்.
>
> >>> தி
>
> >>> 2011/8/29 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>>> send email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-u...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>> --
> >>> Dhivakar
> >>>www.vamsadhara.blogspot.com
> >>>www.aduththaveedu.blogspot.com
>
> >> --
> >> Dhivakar
> >>www.vamsadhara.blogspot.com
> >>www.aduththaveedu.blogspot.com
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
>
> > மின் செய்தி மாலை படியுங்கள்.
> > Take life as it comes.
> > All in the game na !!
>
> > Pavala Sankari
> > coralsri.blogspot.com
> > Erode.
> > Tamil Nadu.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
திரு. லோகசுந்தரம்,
திருவாளர் காந்தி கட்டுரை கிடைக்கிறபோது தாருங்கள். முக்கியமாக
தெரிகிறது.
கோகழி பற்றிச் சில செய்திகள் - இணைய மடல்களில்:
(அ) http://www.treasurehouseofagathiyar.net/04800/4845.htm
மெய்கண்டார் வரலாறு
ஔவை துரைசாமிப் பிள்ளை
(கோளகி சம்பிரதாயம் பற்றிச் சில செய்திகள்)
(ஆ)
http://www.treasurehouseofagathiyar.net/21300/21395.htm
”மணிவாசகர் எந்த சைவப்பிரிவைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொள்ள
முயன்றாலன்றி இப் பிரச்சி
னை தீராது. மணிவாசகர் சைவ சித்தாந்தி அல்லர். மணிவாசகர் காலத்தில்
தமிழ்நாட்டில்
பாசுபதரும் காளாமுகரும் நிறைந்திருந்தனர்.
கோகழி ஐநூற்றுவர் என்னும் சிம்ம பரிஷத்தைச் சார்ந்த காளாமுகர்கள் -
(லகுலீச பாசுபதர்கள்)
கர்நாடகத்தில் இருந்தனர். கோகழிப் பெயரைக் குறிப்பிடும்
கல்லெழுத்துக்களும் கிடைத்துள்ளன.
கோகழி மரபினரான ஒரு குருவிடம் மணிவாசகர் உபதேசம் பெற்றார். ”
சாங்கியம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லான சங்க்யா என்பது எண் என்ற
பொருளுடையதாதலால் சாங்கிய தரிசனத்தைக் குறிப்பிடுவதற்கு 'ஆரூர்க்கபிலனின்
எண்நூல்' என்ற தொடரைப் பாரதிதாசன் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் நீண்ட
நெடுங்காலமாகவே சைவ சித்தாந்தம் தமிழரின் தத்துவ மரபுதான் என்ற எண்ணமும்
பிராமணரல்லாத தமிழக மேட்டுக்குடியினரிடம் இருந்து வந்ததால் அதனையும்
பாரதிதாசனால் புறக்கணிக்க இயலவில்லை. 'எதிர்பாராத முத்தம்' என்ற நூலில்
உயிர்க்கொலையை ஆதரிக்கும் வடநாட்டுத் துறவிகளைக் கண்டித்தும், சைவ
நெறியாகிய அன்பு நெறியைப் பின்பற்றும் தமிழ்த் துறவிகளைப் போற்றியும்
அவர் எழுதியுள்ளதைக் காணலாம். கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
அதாவது மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கால இறுதியில் சோழ நாட்டில்
'குகையிடி கலகங்கள்' ஏற்பட்டன என்று கல்வெட்டுகளால் தெரியவருகின்றது.
1913ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஆண்டறிக்கையில்
இக்கல்வெட்டுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தென்னாட்டுச் சைவத்
துறவிகளின் செல்வாக்கைக் குறைப்பதற்காக கோளகி மடம் போன்ற வடநாட்டுச் சைவ
மரபு சார்ந்த மடாலயத் துறவிகள் செய்த கலகங்கள் இவை என்ற கருத்து
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கருத்தே பாரதிதாசனின்
கருத்துக்கு அடிப்படையாக இருந்ததெனத் தெரிகிறது3.
நா. கணேசன்
இப்போது கொண்டுள்ள திருப்பெருந்துறையில் குன்றுகள் ஏதும் இல்லை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
மூவர்
இவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பை மூவர் தேவாரம்
எனப்போற்றுவர். முதல் மூன்று திருமுறைகளைத்
திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளைத்
திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையைச் சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் பாடி அருளியுள்ளனர்.
http://www.tamilvu.org/courses/diploma/a071/a0711/html/a071131.htm
என்கிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
எக்காலக்கட்டத்திலிருந்து சமயக்குரவர் நால்வர் எனும் வழக்கு தமிழ்
மண்ணில் வருகிறது?
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜராஜ சோழன் காலத்தில், சிதம்பரம் கோவிலில் தில்லை வாழ் அந்தணர்கள் மூவர் பாடிய தேவாரப் பாடல்களின் ஏடுகளை ஓர் அறையில் வைத்துப் பூட்டி, அதற்கு பூசைகள் செய்து கொண்டிருந்தார்கள். மன்னரே வந்து கேட்டாலும் அதை தர மறுத்து அத் தெய்வப்பாடல்களைப் பாடிய அம்மூவர் வந்து கேட்டால் மட்டுமே தருவதாகக் கூறிவிட்டார்கள். ராஜராஜ சோழன் மூவருக்கும் விழா எடுத்து ஊர்வலமாக மூவர் சிலைகளையும் எடுத்து வந்து அறையைத் திறக்க வைக்க, உள்ளே மூவர் பாடிய தேவாரங்களின், பல ஆயிரம் ஏடுகளும் கரையான் அரித்து சிதிலமடைந்திருக்க எஞ்சியவைகளே இப்போதிருக்கும் பாடல்களாகும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சம காலத்தவர். இந்தக் காலங்களுக்குப் பிறகே நால்வர் என்று கூறப்பட்டது.குலோத்துங்கச் சோழன் தொண்டர்களுடைய பெருமைகளை எடுத்துக் கூறும்படி தன் அமைச்சரவையில் இருந்த சேக்கிழார் பெருமானை கேட்டுக் கொள்ள, அது சமயம், சேக்கிழாரால் பாடப்பெற்ற பாடல்கள் தான் பெரிய புராணமாகும். இதிலும் மூவரைப் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த காலகட்டங்களுக்குப் பிறகே
சமயக்
குறவர்கள்
அன்பின் திரு. ரங்கன் ஜி,தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மன்னிக்கவும். திருத்திக் கொள்கிறேன். சமயக் குரவர்கள் என்று வர வேண்டும்.
பி கு -- சமய(க் வராதுன்னு பொதுவா சொல்லுவாய்ங்க)நான் ஒரு தபா சமயக் குரவர் என்று போட்டதற்கு தேவ் திருத்தினாரு. ஆனால் போட்டா தப்பில்லைன்னு எனக்குத் தோணுது. ஏன்னா சமயக் கணக்கர் என்றுதானே போடுறோம். அப்ப சமயக் குரவர் போட்டா என்ன? அப்படிங்கறது என் எண்ணம்.
--
aamaam ஐயா அப்படித்தான் எனக்கும் படுகிறது. ஆனால் நூல்களில் சமய குரவர் என்றே காண்கிறது. காரணம் இரண்டு வடமொழிப் பதங்கள் நடுவில் சந்தி மிகாது என்று காரணம் சொல்கிறார்கள்.
aamaam ஐயா அப்படித்தான் எனக்கும் படுகிறது. ஆனால் நூல்களில் சமய குரவர் என்றே காண்கிறது. காரணம் இரண்டு வடமொழிப் பதங்கள் நடுவில் சந்தி மிகாது என்று காரணம் சொல்கிறார்கள்.
On Sep 1, 4:30 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/9/1 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> > aamaam ஐயா அப்படித்தான் எனக்கும் படுகிறது. ஆனால் நூல்களில் சமய குரவர் என்றே
> > காண்கிறது. காரணம் இரண்டு வடமொழிப் பதங்கள் நடுவில் சந்தி மிகாது என்று காரணம்
> > சொல்கிறார்கள்.
>
> குரவன், குரவர் வடமொழியா? எனக்கு அப்படித் தோன்றவில்லை.
>
> நமக்கு வழித்துணை கம்பன். கை போன போக்கில் புரட்டினால் ஒன்று சிக்கியது:
>
> *'நம்குலக் குரவர்கள்,* நவையின் நீங்கினார்
> தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்,
> வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார்;
> எங்கு உலப்புறுவர், என்றுஎண்ணி, நோக்குகேன்.
>
> அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்.
>
> குலக் குரவர் சரி என்றால், சமயக் குரவர் ஏன் தவறாகிறது? சிந்திப்பதற்காகத்தான்
> கேட்கிறேன்.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
சமயக் குரவர்
சமயக் குரவர் நால்வர் வரலாறு-கா.சுப்பிரமணியம் பிள்ளை; பக்.558; ரூ.250;
பூம்புகார் பதிப்பகம், சென்னை-108, )044-25267543.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழுணர்வும், சைவ உணர்வும், இலக்கிய
உணர்வும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தவர் புலவர் கா.சு.பிள்ளை. தமிழ்-
ஆங்கிலம் மற்றும் சட்டநூற் புலமையும் வாய்க்கப்பெற்ற சிறந்த ஆராய்வாளர்.
பெüத்தம், சமணம் ஆகிய புறச்சமயங்களை வேரொடு களைந்து, சைவ சமயத்தைத்
தழைத்தோங்கச் செய்த பெருமை சைவ சமயக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர்,
சுந்தரர், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகிய நால்வர் பெருமக்களையே சாரும்.
இந்நால்வரது வரலாறு மிக நுட்பமானவை மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் வாழ்ந்த
மக்களின் பண்பாடு, பக்தி நிலை, பழக்க வழக்கங்கள், தமிழர்தம் வரலாறு
முதலியவற்றைக் கூறும் காலப்பெட்டகமாவும் திகழ்கிறது. வரலாற்றுக்கு
இடையிடையே கூறப்படும் தேவார, திருவாசக, திருக்கோவையார் ஆராய்ச்சிக்
குறிப்புகள் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. "அன்பு
வைக்கப்பட்டவர்களுக்குத் துன்பம் நேரிடுவதாய் இருந்தால் அன்பு வைப்பாற்கு
அத்துன்பம் நேரிடக்கூடாதென்ற கவலையும் அச்சமும் விளைதல் இயல்பு. தீய
ஒழுக்கத்தைக் கண்டபொழுது ஞானிகள் சினங்கொள்ளுதல் இயல்பே' என சம்பந்தர்,
சமணர் பொருட்டு சினங்கொள்வதை மிக நுட்பமாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல,
நடுநடுவே பல தத்துவக் கருத்துகள் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. சில
ஆண்டுகளுக்கு முன்பு வரை நூலகங்களில் பார்வை நூலாக (ரெபரன்ஸ்) இருந்த
பொக்கிஷம், தற்போது அனைவரும் படிக்கும்படி புதிதாகப்
பதிப்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல, நால்வர்
பெருமக்களின் வரலாறு அனைத்தும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது இரட்டிப்பு
மகிழ்வைத் தருகிறது. ஓவியர் ம.செ.யின் அட்டைப்படம் கூடுதல் ஈர்ப்பை
ஏற்படுத்தி படிக்கத் தூண்டுகிறது. சைவ சமய ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல,
சைவப் பேருலகுக்கே ஒளி தரவல்லது ஞானத்தின் வரலாறு
1. முதல் மூவர் என்ற வழக்கு நீண்டகாலமாக இருந்து வந்திருப்பது தெரிகிறது.
அதையே மூன்று முதலிகள் என்று சொல்வதையும் காண்கிறோம். ஆழ்வார்களிலும்
முதல் மூவர் உண்டு. பொய்கை, பூதம் பேய் ஆழ்வார்கள். அதில் யாரும் பிணக்கு
காணவில்லை! இதுவரை :-) எனவே இதை மரபு வழி ஆதாரம் (சாட்சியம்) என்று
கொள்ள வேண்டும்.
2. இறையனார் களவியல் என்பது மிக அழகான தமிழ் மரபு. ஈசனே தந்தது. அதை
ஆழ்வார்கள் எனும் தமிழ் பாவலர் எடுத்துச் சென்ற அளவிற்கு சைவக் குரவர்கள்
(முதல் மூவர்) செய்யவில்லை. ஆழ்வார்களுக்குப் பின் வந்த மாணிக்கவாசகர்
செய்கிறார். அவருக்கு முன்னுதாரணம் இருந்திருக்கிறது. அவர் காலத்தில்
திருப்பாவை பிரபலமாக இருந்திருக்க வேண்டும். எனவே சைவத்திற்கும்
அப்படியொரு பாவை நோன்பை அளிக்க வேண்டுமென்று அவர் திருவெம்பாவை
செய்திருக்க வாய்ப்புண்டு. இது கண்டு மகிழ்ந்த ஈசன் அவரை அழைத்து, ’பாவை
பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று சொல்லி இருக்கலாம்.
4. திருக்கோவை பாடுக! என்று களவியல் தந்த இறையனார் சொல்வது ஆச்சர்யமே
இல்லை. சைவம் ஆலவாய் அண்ணலை ரொம்ப dry ஆகப் பார்க்கிறார்கள் என்று
தோன்றுகிறது. அவர் பிச்சாண்டிதான், சுடலைமாடன்தான் ஆயினும் அவரே
காமேஸ்வரன். அவர் ராஸ லீலா அனுபவத்தில் எவ்வளவு ஆர்வம் உள்ளவர் என்பதற்கு
தமிழகத்தில் உதாரணங்கள் இல்லை (மறைக்கப்பட்டிருக்கலாம்). ஆனால்
குஜராத்தில் உள்ளது. நமது அண்ணல் காந்திக்கு மிகவும் பிடித்த ‘வைஷ்ணவ
ஜனதோ’ எனும் பாடலை அருளிச்செய்த நரசிம்ம மேத்தா என்பவர் எப்படி
வைணவரானார் என்பதற்கு ஒரு கதையுண்டு. தாயில்லாப்பிள்ளையான நரசிம்மா,
சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார். காட்டு
வழியில் இரவில் ஓர் சின்ன சிவாலயத்தில் தஞ்சம் கொள்கிறார். இரவில்
தோன்றிய ஈசன் அவரை அழைத்துக் கொண்டு பிருந்தாவனம் செல்கிறார். அங்கு
கண்ணனின் ராஸலீலை நடந்து கொண்டு இருக்கிறது. அதில் பூரணமாக இக்குழந்தை
லயித்துப்போயிற்று. அன்றிலிருந்து நரசிம்ம மேத்தா பரம வைஷ்ணவராகிறார்.
சிவனே பரம வைஷ்ணவன்தான். இல்லையெனில் சிவ பூஜையின் போது நம்
சிவாச்சாரியர்கள் ஏன் அவனை, ‘முகுந்தப்பிரியன்’ என்று பூஜிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட காமேஸ்வரன்தான் கோவை பாடச் சொல்கிறார். திருக்கோவையாருக்கு
ஆழ்வார்கள் வழியில் உரை கண்டாலது தமிழுக்குக் கொடையாக அமையும்.
5. இப்படி யோசித்துப் பாருங்கள். இருபதாம் நூற்றாண்டில் ஒரு
சிவக்கொழுந்து பிறக்கிறது. சித்தர் எனில் பூரண சித்தராக ஒரு குழந்தை
பிறக்கிறது. மலர்க்கொத்து போல் ஆயிரமாயிரமாக பாடல்கள் அருளிச்செய்கிறது.
யோனிப்பிறப்பு எனினும் யோக சித்திகளால் தன் ஊன உடலை அப்பிராகிருத உடலாக
மாற்றுகிறது. ஒரு நாள் கற்பூரம் கரைவது போல் காற்றில் கரைந்துவிடுகிறது.
அவரின் இறைநிலை புரிந்த மக்கள் இவர் செய்வித்தது எல்லாம் மறை. அது
திருமறை. அது தேவாரம் என்கின்றனர். ஆனால், மரபு ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்வாதம் செய்கிறது. இன்றும் அது தேவாரம் ஆகவில்லை. ஆனால் சில
நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது தேவாரம் ஆகும். அப்போது சமயக்குரவர் ஐயர்
என்போம். நான் யாரை விளித்துப் பேசுகிறேன் என்பது புரிந்திருக்கும். ஆம்
வடலூர் அருட்பிரகாச வள்ளலார்தான் அவர்.
ஆனால் என்ன செய்தாலும் அவரை முதல் மூவர் ஆக்க முடியாது. அதற்கு சமூகக்
கூட்டு பிரக்ஞை, நினைவு அனுமதிக்காது. அப்படி இருப்பதால்தான்
மாணிக்கவாசகரை கடைசியாக வைத்து சைவம் அழகுசெய்கிறது.
நா.கண்ணன்
2011/9/1 coral shree <cor...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆஹா.....அருமையான சிந்தனை. உண்மை. தாங்கள் சொல்வது போல் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். ”சமயக் குரவர்கள் ஐவர்” என்ற காலம் வரலாம்..........
(அ) ஆதி சங்கரரின் மாயாவாதம் பற்றி மாணிக்கவாசகர்
முக்கியமான செய்தியைக் குறிப்பிடுகிறார். எனவே 9-ஆம்
நூற்றாண்டினர் என்பது தெளிவு என்கிறார் ஔவை சு.
துரைசாமிப் பிள்ளை.
(ஆ) திருவிடைமருதூர்க் கல்வெட்டு சோழர்கள்
ஆட்சியில் நடராஜரை நிறுவியதை மாணிக்கக்
கூத்தன் எனக் குறிப்பிடும் 11-ஆம் நூற்றாண்டுக்
கல்வெட்டு இருக்கிறது. மாணிக்கவாசகர் தில்லைக் கூத்தனை
மாணிக்கக்கூத்தன் என்பார்.
திரு வாசகம் மாணிக்கக்கூத்தர் மீதான பக்திப்பனுவல்.
மாணிக்கவாசகர் - மாணிக்கநிறத்தானாகிய தில்லைக்
கூத்தனின் அடியார்/தொண்டர்/பக்தர். வாசகன் என்பதற்கு
இப்பொருளை ஆழ்வார் அருளிச் செயலிலும் பார்க்கலாம்.
மாணிக்கத்தி என்றால் கொங்குநாட்டில் சிவன்கோயில்
தேவரடியாள் எனக் கல்வெட்டுகளில், ஓலை ஆவணங்களில்
காணலாம். மாணிக்கம் = சிவன் (நடராஜா), வாசகன் = பக்தன்.
இது பட்டப்பெயர். இயற்பெயர் அறியோம்.
(இ) மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுண பாண்டியனைப்
பல இடங்களில் போற்றுகிறார்.
(இவ்) காளாமுகர்கள் தில்லையில் வழிபாடு செய்தது
இன்றும் தில்லையில் நடக்கிறது. குஜராத், பின்னர்
கர்நாடக செல்வாக்கு பெற்றிருந்த காளாமுகர்கள்
காலத்தில் கோகழி ஆண்ட குருமணி அருள்பெற்றவர்
மாணிக்கவாசகர்.
திரு, லோகசுந்தரம் சொல்வதுபோல் கொங்குநாட்டுப்
பெருந்துறை வழியாக முசிறி (பட்டினம் இன்று தொல்பொருள்
ஆய்வால் வெளிவந்துள்ளது.) அல்லது மங்களூர் சென்று
குதிரை வாங்கியவரா? என்பது இன்னும் ஆராயப் பெறவேண்டும்.
அவர் தரும் கோகழி பற்றிய கட்டுரைக்கு காத்திருப்போம்.
நா. கணேசன்
> திவாகரை வழி மறிக்கிறோம் என்று நினைக்கிறேன்.
> தவளை சொன்னது: மத்தவங்க குத்தினா உன்கிட்ட முறையிடலாம் ராமா... நீயே குத்தினால்
> யார்கிட்ட முறையிடறது!
>
நான் சொன்னா அது வழிமறியலா?
அவர் மாற்று சிந்தனை தருகிறார். மரபு மீறிய சிந்தனைதான் அது. நான் மரபின்
வழியில் சிந்திக்கிறேன், அவ்வளவுதான். குமுகாயக் கூட்டு சிந்தனை என்று
கருத்தைக் கொஞ்சம் கவனிக்க. மற்றபடி நானும் கலந்து கொள்கிறேன்,
அவ்வளவுதான். அவர் என் எழுத்திற்குப் பழக்கப்பட்டவர்தான் (கணேசன் உம்ம
தாக்குதலுக்கு பழகி இருப்பது போல் :-))
நா.கண்ணன்
நான் சொன்னா அது வழிமறியலா?
அவ்வளவுதான். அவர் என் எழுத்திற்குப் பழக்கப்பட்டவர்தான் (கணேசன் உம்ம
தாக்குதலுக்கு பழகி இருப்பது போல் :-))
>> நான் சொன்னா அது வழிமறியலா?
>
> ரங்கன் கிட்ட சொல்லிப்பாருங்ணா! :))
>>
ரங்கன் என்ன கொக்கா :-))
அவரைத்தான் எல்லோரும் வாரு, வாருன்னு வாரிக்கிட்டு இருக்காங்களே!!
சமீபத்திலே நாகராஜன் சார், ராஜமக்கா இழையிலே வாரினாரு (ஏதோ நம்மாள ஆனது.
போட்டுக்கொடுப்போம் :-)
க.>
க.>
க.>
கொஞ்சம் பின்மண்டையை முட்டிப்பாக்கிறது. மெடுல்லா ஆப்லாங்கட்டா எக்கட உந்தி, அரவர்க்கோன்?
இ
--
கொஞ்சம் பின்மண்டையை முட்டிப்பாக்கிறது. மெடுல்லா ஆப்லாங்கட்டா எக்கட உந்தி, அரவர்க்கோன்?
இ
--
கொஞ்சம் பின்மண்டையை முட்டிப்பாக்கிறது. மெடுல்லா ஆப்லாங்கட்டா எக்கட உந்தி, அரவர்க்கோன்?
இ
--
The requested URL /brains.com was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
No go. 'The document “brains.wmv” could not be opened. The movie is not in a format that QuickTime Player understands.'
No go. 'The document “brains.wmv” could not be opened. The movie is not in a format that QuickTime Player understands.'யாரிட்ட சாபமோ"இ
2011/9/1 Innamburan Innamburan <innam...@gmail.com>No go. 'The document “brains.wmv” could not be opened. The movie is not in a format that QuickTime Player understands.'
தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று கிடைத்த சந்திலெல்லாம் முனகுபவர்களுக்கு இப்போது முனகக்கூட முடியாதபடி மூச்சடைச்சுப் போயாச்சாக்கும். புஸ்ஸு ஊதும் மகுடிக்குக் குழலூதும் பெரியவரே மயங்கிக் கிடக்கும்போது மாணிக்கவாசகராவது, மண்ணாங்கட்டியாவது!இப்படித் தொடர்ந்து திசை திருப்பிக் கொண்டே இருந்தால்தான், ‘What happened to Manikavasagar 3rd century theory’ என்று நாசாவாசா சம்பந்தமில்லாத இடத்திலெல்லாம் கேள்வி கேட்டு, கல்லை இழைந்து நாமம் போடும்.நடத்துங்க பெரியவங்களே நடத்துங்க. தொடங்கினவன் அடுத்த அடி எடுக்க வழி விட்டாத்தானே! ரங்கன் இழைனா கப்புசிப்புன்னு ஒக்காந்து வாய மூடிட்டு கத கேக்கல? அதுல பாதி அளவாவது மாணிக்க வாசகர் பேச்சை அவர் பேச விடுங்க.--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நாகராஜன் சார் கவனிக்க :-)
கல கலப்பிற்கு இங்கு எப்போதும் குறைவில்லை :-)
க.>
”தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்று கீர்த்தி திருவகல் பாடலை ஆரம்பித்துள்ள மாணிக்கவாசகர், தில்லையை ’மூதூர்’ (மிகப் பழைய ஊர்) என இங்கே சிறப்பாக வர்ணித்திருப்பது கவனிக்கத் தக்கது. கடல்கொண்ட தமிழ்ப்பகுதிகளைக் குறிப்பிட்ட இளங்கோ அடிகள் கூட மதுரையை ‘மூதூர்’ என சிறப்பாக அழைத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழகத்தைப் பற்றி கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வரலாற்றினை எந்த சரித்திர ஆசிரியராலும் இந்த நிகழ்ச்சி நடந்தது இப்போதுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாதுதான் (சமுத்திர குப்தன் பல்லவனை வென்றது தவிர). கல்வெட்டுகள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டிலிருந்து அதிகமாக வர வர நாம் சென்றுபோன காலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தோராய அளவில் கணக்கிட்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்துக்கு களப்பிரர் வருகையும் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டு வரை பல சரித்திர ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. களப்பிரர் காலத்தில் சரித்திரசம்பந்தமான எவ்வித ஆதாரமும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமான வகையில் ‘நாவலர் சரிதத்தில்’ ஒரு தகவல் கிடைத்துள்ளது,
மூவேந்தர்களையும் ஒரு சேர வீழ்த்திய களப்பிர அச்சுதராயன் என்பான் ‘தில்லை நகரில்’ முடிசூட்டிக்கொள்கிறான். அவன் அருகே சங்கிலியால் கட்டப்பட்டு சிறைப்பட்ட மேவேந்தர்களும் அவன் புகழைப் பாடவேண்டுமெனக் கட்டளை. சேரன் (தினையும் செந்நெல்லும் நிறைந்த அச்சுதனின் பெரு மாளிகையின் முன்வாசலில் – முற்றத்தில், முர்சுகளும் சங்கும் ஊத தேர்களில் வந்த அரசர்கள் அவனுக்காக காத்திருப்பது) எனப் பாடுகிறான். இரண்டாவதாக சோழன், அந்த முற்றத்தில் காணப்படும் அரசர்களின் காலோசை, அந்த முரசுகளின் ஓசையைக்கூட மட்டுப்படுத்தும் என்று பாடுகிறான். ஆனால் பாண்டியன் இவர்களைப் போல ஒரேயடியாகப் புகழவில்லை. மாறாக அச்சுதனை மட்டம் தட்டிப் பாடுகிறான்.
“குறையுளார் எங்கிரார் கூர்வேல் விராமன்
நிறையாறு திங்களிருந்தான் – முறைமையால்
ஆவிக்கும் தானை யலங்குதா ரச்சதமுன்
வாவிக்கிளையான் வரை”
(குறையிலாத மனிதன் யார்? கூர்வேலையுடைய ராமன் வாலியின் இளையோன் சுக்கிரிவனுக்காக ஆறு மாதம் காத்திருக்கவில்லையா. அதேபோலத்தான் நானும் பெரும்படை கொண்ட அச்சுதனுக்காக இங்கே காத்திருக்கிறேன் (சுருக்கமான விளக்கம்)
இந்தப்பாட்டின் பொருளால் தன்னை குரங்கினத்தலைவனுக்கு இணையாகவும், பாண்டியணை ராமனாகவும் வர்ணித்தது அச்சுதனுக்குக் கோபத்தை எழுப்பியது. தண்டனையை அதிகப்படுத்த ஆணையிட உடனே அவனை சாந்தப்படுத்தி இன்னொரு பாடலைப் பாடுகிறான் பாண்டியன்.
“கடகர் குணகடலென்றார்த்தார் குடார்க்
கிடவர் வடகடலென்றார்த்தார் – வடகடல்
தென்கடலென்றார்த்தார் தென் தில்லை அச்சுதன் நின்றன்
முன் கடை நின்றார்க்கு”
ஒரேயடியாக தடாலடிப்புகழ்தான். அதாவது தென் தில்லையில் அச்சுதன் அரண்மனை முற்றத்தில் இருந்த அரசர்கள் எண்ணமாவது இப்படி இருந்ததாம். அச்சுதன் படையைப் பற்றி மேற்கு நாட்டார் ஏதோ படையின் எல்லை கீழ்க்கடல் வரை நீளும் என்றும் தென்கடல்பகுதியின அது வடகடல் எல்லை வரை நீண்டதாம் எனவும் வடபுலத்தாரோ தென்கடல் வரை நீண்டதாக சொன்னார்களாம்..
மூவேந்தர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் இங்கே கவனிக்கப்படுவது தென் தில்லை என வரும் ஒரு சொல். இப்பாடல்களை வைத்து அச்சுதன் மூவேந்தர் முன்னிலையில் தில்லையம்பலத்தான் கோயிலில் முடிசூட்டிக்கொண்டதாக பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது நூலில் எழுதியுள்ளார். மேலும் அச்சுதக்களப்பராயன் பற்றி ‘புத்ததத்தா’ எனும் பௌத்தமதப் புலவர் பாலி மொழியில் மிகவும் புகழ்ந்துள்ளார். அவர் எழுதிய வினய வினிச்சாயா எனும் நூலில் அச்சுதன் தமிழகத்தில் குறிப்பாக சோழப்பகுதிகளை ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (PT Srinivasa Iyengar’s The early History of Tamils).
தில்லையம்பதி மிகப் பழைய ஊர் என்பதில் வாதபேதம் வராது என்றாலும் தில்லையம்பலத்து இறைவன் பற்றிய் செய்திகள் எப்போது வந்தது என்பதைச் சற்று ஆராயவேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு சிற்பம் (மூலம்-விக்கி) என சில சிற்பவரலாறுகள் கூறப்பட்டாலும் அவை சரித்திர நோக்கில் ஆராய்கையில் கால விவரங்களில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஆடலரசனான சிவனை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது..
திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழ லவிழா
துமையவ ளொருதிற நாக வோங்கிய
விமைய னாடிய கொட்டிச் சேதம் சிலம்பு 28 67 - 75
(நன்றி - சைவம் தளம்)
அதுவும் உமையவள் அவன் ஆடும் நடத்தினைக் காணும் வர்ணனையும் கவனித்துப்
பார்க்கும்போது இது ஆனந்த தாண்டவமாக தில்லையில் ஆடல்வல்லான் ஆடிய
நாட்டியம் தான் என்பதும் மறைமுகமாக விளங்கும். இளங்கோ இன்னொரு இடத்தில்
மதுரை மாநகரத்து வெள்ளியம்பலத்தான் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம்பலத்து
(பதிகம், 39-41)
வெள்ளியம்பலத்தில் ஆடலரசன் இருப்பதற்கு முன்பே தில்லையிலும் ஆனந்த தாண்டவம் ஆடும் கூத்தன் கோயில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இதன்கண் தெரிகிறது. சரி, இளங்கோ தம் சிலம்பில் திருமலையைப் பற்றியும் திருவரங்கத்தையும் பற்றிச் சொன்னவர் தில்லையையும் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். ஆனால் திருவரங்கம், திருமலைக் கோயிலைப் பற்றிச் சொன்னது பாதைவழி காட்டுவதற்காக மட்டுமே. அந்தப் பகுதியில் கோவலனும் கண்ணகியும் அடிகளும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் நடுவழியில் எந்தப் பாதையில் சென்றால் மதுரை வரும் என்பதற்காக போகிற போக்கில் காண்பிக்கப்பட்ட சரித்திரப் பொருத்தமான வார்த்தைகள் இவை. இந்த வழியில் தில்லையம்பதி வருவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்பதால் தில்லையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆடலரசனின் ஆனந்த தாண்டவம் பற்றிய அற்புதக் குறிப்பை அவர் கவிதைப் படுத்திய நயம் மிக அருமை.
ஐந்தாம் நூற்றாண்டு பல்லவமன்னரான ஐயடியார் காடவர்கோன் தன் ஷேத்திரத் திருவெண்பாவில் முதல் பாடலாகக் குறித்திருப்பது தில்லை பொன்னம்பலம் பற்றித்தான். இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐயடிகள் பற்றிய செய்தியை சுந்தரரும் தம் திருத் தொண்டத் தொகையில் சேர்த்திருக்கிறார்.
ஓடுகின்ற நீர்மை ஒழித்தலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற
நல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
(வாழ்க்கை ஓடுகின்றது.. உற்றார் உறவினரும் உம்மை விட்டு பிரிகின்றார். எப்படியும் முடிவில் போய்ச் சேரவேண்டிய மயானத்துக்குப் போவதற்கு முன்பே, நல்ல நெஞ்சே.. திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக! - சுருக்கமான விளக்கம்)
ஐயடிகள் தனது சகோதரனான சிம்மவர்ம பல்லவனை திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருக்குளத்தில் குளிக்கவைத்து அவன் தொழுநோயைப் போக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இதனால் சிம்மவர்மன் திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்பர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிம்மவர்மன் என்ற பெயரில் மூன்று விதமான காலகட்டத்தில் பல்லவ அரசர்கள் இருந்தனர் என்பதற்கான சில செப்பேடுகள் ஆந்திரத்தில் (கோவூர்-நெல்லூர் செப்பேடு) கிடைத்துள்ளன. இவர்களில் எந்த சிம்மவர்மனின் சகோதரர் ஐயடிகள் என்று தெரியவரவில்லை. ஆனாலும் ஐயடிகள் மகேந்திரனின் தந்தையான சிம்மவிஷ்ணு (550-580) காலத்துக்கும் முற்பட்டவர் என்று வரலாற்றாசிரியர் உடுமலை திரு என்.சுப்பிரமணியன் தனது தமிழ்நாடு வரலாறு – (முதல் பகுதி) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பதினோராம் திருமுறையில் நக்கீரதேவனார் எழுதிய பாடல்களில் பொன்னம்பலம் பற்றிய ஒரு வரி வந்தாலும், நக்கீரதேவர் எந்தக் காலகட்டவர் என்பதை ஆராய இன்னொரு கட்டுரை தேவை என்பதால் அந்தப் பாடலை நாம் இங்கே கொண்டுவரமுடியாது.
"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” என்று அப்பர் சுவாமிகளால் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தில்லைச் சிற்றம்பலம் அவர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் முன்பேயே இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றும் சித்தர்களால் வழிபடும் சில தலங்கள் கொல்லி மலைக் காடுகளிலும் மலை மேலும், கடற்கரை ஓரத்திலும் இருப்பதாக அறிகிறோம். தில்லைவனம் என்பதே தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. முதலில் வனங்களுக்கிடையே இருந்த கோயில் காலம் போகப் போக வெளிப்பட்டிருக்கவேண்டும். இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் புராணங்களில் பெயர் பெற்றுள்ளது உண்டு. தில்லைக்கு புலியூர் என்று ஒரு கால கட்டத்திலும் (தேவாரப்பாடல்களுக்கு முன்பு – வியாக்ரபாதர் அல்லது புலிக்கால் பாதர் பூசித்ததால் வந்த பெயர், பெரும்பற்றப்புலியூர் என தேவாரப் பாடல்கள் காலத்துக்கும் பின்னும் (ராஜராஜசோழன், குலோத்துங்கன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது), சிதம்பரம் என நிகழ்காலத்திலும் காலத்துக்கு ஏற்ப பெயர்கள் மாறிகொண்டே வருகின்றன. சிதம்பரம் எனும் பெயர் திருமூலர் திருமந்திரத்திலும் இடம் பெற்றுள்ளதால், வடமொழிப் பெயரான சிதம்பரம் புராணகாலத்திலும் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள், வடமொழியில் சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் புலிக்கால் முனிவரின் வேண்டுதலுக்கேற்ப தில்லை நடராசனின் ஆனந்த தாண்டவமே பொற்சபையில் ஆடப்பட்டதாகத் தெரிவிப்பதால், அரசாண்ட மன்னவர்களும் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அவரது சபை கனகசபையாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு பொன் வேய்ந்திருக்க வேண்டும். அதை சிம்மவர்ம பல்லவன் செய்திருந்தாலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் (பராந்தகன், குலோத்துங்கன் போன்றோர்) தொடர்ந்து வந்தாலும் பொன்னம்பலத்தான் என்ற பெயருக்கேற்ப அரசர்கள் ஆலயத் தொண்டு செய்தார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஆக மாணிக்கவாசகர் மனமுருகப் பாடி உருகி, ஆண்டவனுடன் அங்கேயே ஐக்கியமாகிய இந்த ஆனந்த தாண்டவன் ஆடிய கோயில் தேவார காலத்துக்கு முற்பட்டதாக இருந்தது என்பது ஒரு பக்கம் வெளிப்படையாகவே தெரிந்தாலும், மாணிக்கவாசகர் உறுதியாக இந்தப் பழைய காலத்துக்குச் சேர்ந்தவர்தானா என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அத்துடன் அவர் தில்லையில் நிகழ்த்திய வாதம் பற்றிய விவரங்கள் அக்காலகட்டத்திலா என்பதையும் ஆராயவேண்டும். தில்லையில் மட்டும் இல்லை, வாதவூரார் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோயில்கள் எப்போதிலிருந்து வழிபாட்டுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும். அவர் சமய வாதிகளை எப்படிக் கையாண்டார், அவர் காலத்தில் உள்ள சமய நிலை எப்படி இருந்தது, என்பதையும் பார்க்கவேண்டும்.. ஆனால் இவை எல்லாவற்றையுமே அவர் பாடல்களிலிருந்தே சற்று சுருக்கமாகவே பார்ப்போம்..
திவாகர்
இன்னும் வரும்
2.திருமுறையில் மாணிக்கவாசகர் பாடல்களை முறையாகத் தொகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பி அவர்கள் ஒரு பாடலில் வாதவூரர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்
வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை வண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சைவப் பெருந்தகை நம்பியாண்டார் நம்பி திருவாதவூரரைப் பற்றி தம் ’கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ (பதினோராம் திருமுறை) எனும் பாடலில் (58) வாதவூரரைப் பற்றியும், வாதவூரர் பாடிய சிற்றம்பலத்திருக்கோவைப் பாடல்களைப் பெருமைப் படுத்தியும் எழுதிய பாடல் இது,. அவர் பாடிய திருக்கோவைப்பாடலுக்கு மற்ற கோவைப்பாடல்கள் இணையாக வராது என்பதை இங்கே குறிப்பிடுகிறார். (பின்னே! தில்லையம்பலத்தானே அந்தணன் உருவில் நேரில் வந்து அவர் சொல்ல இவர் எழுத கடைசியில் திருவெம்பாவையை முடித்தவுடன் ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று நேயர் விருப்பமாகக் கேட்டு திருக்கோவையை எழுதி வாங்கிக்கொண்டதாக அல்லவா வாதவூரர் வரலாறு சொல்கிறது!.)
ஆனாலும் இப்படி அழகாக வாதவூரரைப் புகழ்ந்த நம்பியவர்கள் திருத்தொண்டர்புராணத்தில் வாதவூரர் பற்றி ஏதும் சொல்லவில்லை.
பெரியபுராணத்திலும் திருத்தொண்டர்புராணத்த்லும் வாதவூரர் புகழ் பாடப்படாமைக்குக்காரண்ம் எளிமையானதுதான். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதவில்லை, ஆகையினால் நாமும் எழுதவேண்டாம் என்று அவர்கள் இருந்துவிட்டதுதான்.
ஆனால் மனுநீதிச் சோழனைப் பற்றி ஏன் எழுதவேண்டும். அவரைப் பற்றி சுந்தரர் எழுதவில்லையே என்று ஆராயும்போது, மனுநீதிச் சோழன் என்பான் சோழர் குல விளக்கு. உலகத்துக்கே சோழர்களின் நீதி தலையானது என்பதை நிரூபித்த மகாமன்னன். மிகப் பெரிய சிவபக்தன்.(” தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ் சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதி (பெரிய புராணம்)- சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞ னாகிய அம்மகன், நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதி)
தனக்கு அடுத்து பதவியேற்கப் போகும் சிவநெறிச்செல்வனான மகனை, அவன் அறியாது செய்த பாவத்துக்காக நீதியின் கண்கொண்டு தேர்க்காலில் இட்டவன். இத்தகைய செயலை யார்தான் செய்வர். மனித இனத்திலேயே முடியாத செயல் ஒன்று என்னவென்றால் தம் மகனைத் தம் கையால் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் தியாகம் செய்தல். இப்படிப்பட்ட மகனை பசுவின் கன்று ஒன்று இவன் தேர்க்காலில் பட்டு இறந்தமைக்காக தண்டிக்கிறான். இத்தகைய தியாகம் சோழகுலத்துக்கே தலைமகுடமாய் விளங்கிப் பெருமை சேர்த்ததால், அந்த மனுநீதிச் சோழனின் புராணத்தை முதலாக பெரியபுராணத்தில் தலைவாசலாக வைத்து திருத்தொண்டர் புராணத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் ஒரு மனுநீதிச் சோழனைத்தவிர திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடத்தவறிய வேறு எந்த அடியாரையும் அவர் குறிப்பிடவில்லை.
அப்படியானால் சுந்தரர் எழுதிய இந்த அறுபது (அறுபதும், சுந்தரர், சுந்தரரின் தாய்-தந்தை ஆக மூவர் சேர்ந்து அறுபத்துமூவர்) திருவடியார்கள்தான் அந்த மொத்தப் பழைய காலத்தில் சிவனுக்கு மிகவும் பிடித்த திருவடியார்களாக இருந்திருப்பார்களா.. இந்தக் கேள்வி குழந்தைத்தனமானது என்று எண்ணத்தோன்றும். சிவன் அருள் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர், எல்லோரையும் எழுதவேண்டுமென்றால் அது முடியாதுதான். ’ஒரு சிலரை’ சுந்தரர் இறைவன் திருவருளால் திருவாரூரில் அன்று நினைத்துப் பார்த்துப் பாடியிருக்கவேண்டும் என்ற ஒன்றுதான் இந்த ஒன்றுக்கு சான்றோர்கள் கூட பதிலாகச் சொல்லுவர்.
சுந்தரர் எழுதவில்லை, ஆகையினால் அவருக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் அருள் பெற்ற சிவனடியார்கள் இத்தனை பேர்தான் என்று நாம் கருதமுடியாதல்லவா.. சுந்தரமூர்த்தியாரும் இதுதான் முடிவு என்று சொல்லவில்லையல்லவா.. எத்தனையோ சிவனடியார்கள் சரிதம் விடுபட வாய்ப்புண்டு அல்லவா (அவர் மாணிக்கவாசகராகட்டும் அல்லது வேறு ஒருவராகத்தான் இருக்கட்டும்). ஆகையினால் திருத்தொண்டத் தொகைக்கும் அதன் அடி ஒற்றி எழுதப்பட்ட பெரியபுராணத்துக்கும் வாதவூரரைப் பொறுத்தவரை எவ்வித சம்பந்தமுமில்லை என்ற முடிவுக்கு முதலில் வரலாம் என்றுதான் தோன்றுகிறது.
மூவரில் மூத்தவரான அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏறத்தாழ நாற்பதினாயிரத்துக்கும் மேலாக பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். சரியாக கிடைத்த பாடல்களை முறையாகத் தொகுத்ததில் நமக்கு எஞ்சியவை 8250 பாடல்கள் மட்டுமே.
மூவருக்குப் பின்னவரா மாணிக்கவாசகர் என்ற பார்வையில் இரண்டாவதாகப் பார்க்கையில் மாணிக்கவாசகப் பெருமான் பற்றி நேரிடையாக எழுதப்பட்ட இரண்டு திருவிளையாடல் புராணங்கள். இவைகள் மாணிக்கவாசகர் பின்னவர் எனும் கருத்தை ஒப்பவில்லை. அரிமர்த்தனபாண்டிய அரசன் அவையில் அமைச்சராக இருந்த மணிவாசகர் குதிரைகளுக்காக செலவழிக்க வேண்டிய செல்வத்தை திருப்பெருந்துறை கோயிலுக்காக செலவழித்ததால் ஏற்படும் அவமானங்களும், இறைவன் அதற்கு பிறகு செய்த நரியைப் பரியாக்கியது, வையை பெருகியது, கரை கட்டியது, பிட்டுக்கு மண் சுமந்த கதைகள் மூலம் அவன் செய்த லீலைகளையும் விளக்கியுள்ளன.
பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் எனும் நூல் ஏறத்தாழ வாதவூரர் எழுதிய கீர்த்தித் திருவகலை ஒட்டியே மேற்கண்ட சம்பவங்களை எழுதியுள்ளது. இந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் பன்னிரண்டாம் நூற்றாண்டு கடையிலோ அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டது என்பர். இன்னொரு பெரிய புராணம் பரஞ்சோதி முனிவர் எழுதியது. (பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும்) இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு என்பார். பரஞ்சோதியார் வாதவூரர் அவதரித்த படலமாகவே ஆலவாய்த் திருவிளையாடல்களில் அவர் வரலாற்றைப் பாடியுள்ளார்.
ஆயினும் சரித்திர ஆய்விலும் சமய ஆய்விலும் மிகவும் தேர்ச்சி பெற்ற சதாசிவப்பண்டாரத்தார் இந்த இரு நூல்களும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்பதை விவரித்துச் சொல்கின்றனதான் என்றாலும் இது சரித்திர ஆய்வுக்குப் பொருந்தாது, ஆகையினால் மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் பிற்பட்டதுதான் என்று தன் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அதைப் போலவே மாணிக்கவாசகர் தம் திருச்சிற்றம்பல திருக்கோவையில்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன்(மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான் – நன்றி தேவாரம் தளம்)
இங்கு கூறப்பட்ட வரகுணன் எனும் தென்னவன் எனும் பாண்டியமன்னன் கி.பி 800-830 இல் ஆண்ட முதலாம் வரகுணனாகவோ அல்லது 1862 இல் ஆண்ட இரண்டாம் வரகுணனாகவோ இருக்கவேண்டும் என்கிறார் பண்டாரத்தார். இந்த ஒரு வரியால் மாணிக்கவாச்கரின் காலத்தைக் கணக்கிடமுடியுமா.. ’வரகுணன்’ என்ற பட்டப் பெயரை எந்த பாண்டிய அரசனும் பெற்றிருக்கலாமே.. திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணபாண்டியனாகவோ அல்லது பட்டினத்தடிகள் பாடிய மிகச் சிறந்த சிவபக்தசிரோன்மணியாக இருந்த வரகுணனாகவோ கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அந்தக் கால அரசர்கள் எல்லோருக்குமே அதிகமான அளவில் பட்டப்பெயர்கள் இருந்தன என்பது நரசிம்மபல்லவன் அல்லது மகேந்திர பல்லவன், ஏன் ராஜராஜ சோழன் சரித்திரத்திலிருந்தும் தெரியும். ஆகையினால் இந்த வரகுணனுக்கே அமைச்சகராக வாதவூரர் பணிபுரிந்தார் என்றும் சொல்ல முடியாத் நிலை. கடந்து போன சரித்திரத்தில் அதி விரைவாக எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாது - அது விரிவாக வெளிப்படும் வரை.
மாணிக்கவாசகர் தில்லையிலே அதிக வருடங்கள் இறைப் பணி செய்தவர். தில்லையம்பதி வெகுவாக அறியப்பட்டது மூவர் காலத்தில்தான் என்று சொல்வர். அதற்கு முன்பு தில்லையைப் பற்றிய அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூட சொல்வர்.
நாம் தில்லை பற்றிய திரட்டிய தகவல்களை கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.
திவாகர்
இன்னும் வரும்.
2011/8/29 Dhivakar <venkdh...@gmail.com>
1.
திருவாதவூரரின் வரலாறு நடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏழு வருடங்களுக்கு முன்பே தோன்றியது உடனே பல புத்தகங்களில் அவரைப் பற்றி எழுதின கட்டுரைகளை அலச ஆரம்பித்தேன். ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. அவரின் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டிருந்ததால் திருவாதவூரர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பேயே வாழ்ந்தவர் என்பது. ஆனால் அவையெல்லாம் இன்னொன்றை நோக்கி என் மனதை இழுத்தது. அவர் எழுதிய பாடல்கள் மீதுதான். ஏற்கனவே சில பாடல்கள் பரிச்சயம் என்றாலும் திருவாசகம் முழுவதும் பருக ஒரு அவகாசம் கிடைத்தது. அழகு தமிழ், எளிமையான வரிகள், படிக்கப் படிக்க ஆனந்தம், இவருக்கு சிவன் குருவானால் இவர் தமிழர் அனைவருக்கு குருவன்றோ என்ற புரிதல் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய இந்த வெளிப்பாடுதான் நான் எழுதின திருமலைத் திருடன் நாவலில் இந்தப் பாடலுக்காகவே ஒரு பாத்திரப் படைப்பையும் உண்டாக்க வைத்தது. அவர் பாடல்களில் சில வரிகள் அவ்வப்போது ஆங்காங்கே விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம்..
ஏற்கனவே பல சமயங்களில் நான் குறிப்பிட்டதுதான். தெய்வப் பாடல்கள் பாடிய பலரும் பொதுமக்களின் பொது நன்மை கருதியும், தெய்வத்தின் மீதுள்ள அன்புப் பெருக்காலும், பக்தியாலும், மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக ஞானவெளிப்பாடாகப் பாடினரே தவிர தம் கால நிலை இதுதான், இப்போது இந்தச் சமயத்தில் இந்த ராஜா ஆண்டுகொண்டிருந்தபோது, என் தந்தையாரான இவர் இன்னின்ன செய்துகொண்டிருந்தபோது, என் தாயான இவர் மகிழ்ச்சி அடைவதற்காக இந்தப் பாட்டுகளையெல்லாம் எழுதி வைத்தேன் என்ற சுயநலமான வகையில் எழுதவில்லை.
பதிகங்களின் முடிவில் பாடல் எழுதியவரைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. பர ச்ருதி என்பார்கள். இந்த பர ச்ருதிகள் மூலம் தெரியவரும் விவரங்கள் கூட இவ்வூரைச் சேர்ந்த இன்னார் என்றுதான் வரும். ஆனால் அவை கூட எதற்காக சொல்லப்பட்டது என்று கவனிக்கவேண்டும். இந்தப் பாடல்களின் மகிமையால் என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதையும் அந்த பர ச்ருதுதியில் பொதுமக்களைக் கருத்தில் கொண்டு விவரித்து அவர்களை நல்ல நெறியில் அழைத்துச் செல்லவே இத்தகைய பாடல்கள் எழுதப்பட்டதாக அவர்கள் சொல்லும்போதுதான் அவர்களுக்கு இருந்த கருணை உள்ளம் புரியும். மக்கள் மீது எத்தனை அபரிமிதமான அன்பு இந்தத் தெய்வப் புலவர்களுக்கு!
மாணிக்கவாசகர் பற்றிய வரலாறு சரியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டுமானால் நாம் செல்லவேண்டியது மாணிக்கவாசகரிடத்தேதான். அதாவது அவர் எழுதிய தெய்வத் திருவாசகத்திடம்தான். சமீபத்தில் இந்தக் குறிப்புகளெல்லாம் மறுமுறை படிக்க ஒரு நல்வாய்ப்புக் கொடுத்த நண்பர்களுக்கு ஒரு நன்றி! அதே சமயம் மாணிக்கவாசகரைப் பற்றிய சரித்திரக் கல்வெட்டுகள் அறவே கிடையாது என்பதால் இலக்கியச் சான்றுகள் பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் நடுவில் இருக்கிறோம். எந்தப்பக்கம் சென்றால் எந்தப் பாதையில் நடந்தால் நாம் தேடவேண்டியது கிடைக்கும் என்று நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். அப்படி சில நோக்குகளைக் கொண்டு இக் கட்டுரையை துவங்கியுள்ளேன். கூடுமானவரை எனக்கெனத் தோன்றும் எண்ணங்களையும் முடிவுகளையும் திணிக்கக்கூடாது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் எனக்கென விதித்துக் கொண்டதால் திறந்த மனதுடன் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் விவரங்களின் மதிப்புத் தெரியவரும். மேலும் மாணிக்கவாசகரின் காலம் பற்றி எழுதும்போதே வேறு சில சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் விவரித்து எழுத வேண்டிய கட்டாயம் உண்டென்பதால் சில சமயம் செல்கின்ற பாதை பிரிந்தால் கூட வரவேண்டிய சமயத்தில் சரியான பாதையில் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி மற்ற விஷயங்கள் என வரும்போது கூடுமானவரை சரித்திர சம்பந்தமான விஷயங்கள் கொடுக்கப்படும்.
அப்பர் பெருமான், ஞானசம்பந்தர், சுந்தரர் (மூவர்) இவர்கள் காலம் ஓரளவுக்கு அனைவருமே ஒப்புக் கொள்ளத்தக்க வரையில் தெரியவந்துள்ளது. அப்பர் பெருமான் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும், ஞானசம்பந்தர் ஆறாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அதாவது பல்லவ மாமல்லன் காலத்திலும், பாண்டிய கூன்மாறன் காலத்திலும் தோன்றியவர் என்பதும், சுந்தரர் ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதிவரை வாழ்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்களும் சமயப் பெரியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். பல்லவ ராஜசிம்மன் (கைலாசநாதர் கோயிலை எழுப்பித்தவன்) காலத்தில் சுந்தரர் வாழ்ந்ததாக தி,வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார் (1).
ஆகையினால் இக்கட்டுரையின் முதல் நோக்கமாக வாதவூரரின் காலம் என்பது மூவரின் காலத்துக்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை மனதில் இருத்திக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது நமக்கு முதலில் தெரிய வருவது சுந்தரர் எழுதிய ’திருத்தொண்டத்தொகை’ பாடல்களாகும். இந்தப் பாடல் பிறந்த விதம் பற்றிய கதையில் ஆரூர்த் தலைவனான தியாகேசப்பெருமான் தம் அடியார்களைப் பற்றிப் பாடுக என சுந்தரரைத் தூண்ட, சுந்தரர் முதலில் எப்படி ஆரம்பிப்பது எனக் கேட்க ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அப்பாடல் பின் சுந்தரமூர்த்தியாரால் பல அடியார்கள் பெயர் சொல்லி முடித்ததாக சொல்லப்படுகிறது.
சுந்தரர் எழுதிய அடியார்கள் பற்றிய குறிப்பில் மாணிக்கவாசகர் பெயர் இல்லை. மாணிக்கவாசகர் என்ற பெயர் வாதவூரர் என்ற பெயரிலும் முற்காலத்தில் வழங்கப்பட்டதாக சைவசமயக் குறிப்புகள் சொல்கின்றன. சரி, சுந்தரர் தாம் பாடிய அடியார்கள் பெயர் பற்றி ஒரு குறிப்பு கீழே தருகிறோம். (நன்றி – தேவாரம் தளம்)
”தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.
`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.
`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.
`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.
`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.
குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.
அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.”
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்கள் மீது கவனமாக அவர்கள்தம் பெயரைக் கூட மறைமுகமாகவே, அந்த அடியார்கள் எப்படி விரும்புவார்களோ அந்த வகையில்தான் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலம்மையை பேயார் எனக் குறிப்பிட்டுள்ளதுதான் அந்த அம்மைக்கும் விருப்பம் என்பது உண்மைதானே.. இப்படி மறைமுகமாகப் பெயர் கொடுத்தது சுந்தரரது விருப்பமாகவும் இறைவனது திருவெண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும் ஆனால் இந்த அடியார்கள் வரிசையில் வாதவூரர் பெயர் குறிப்பிடவில்லை.
திருத்தொண்டத்தொகையையோடு சுந்தரரின் ஏனைய பாடல்களையும், தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி ராஜராஜசோழன் காலத்தவர் (பதினோராம் நூற்றாண்டவர்). நம்பியவர்கள் இந்தத் திருத்தொண்டத்தொகையை அடிஒற்றி திருத்தொண்டர் அந்தாதி இயற்றினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய அடியார்கள் பெயரோடு அதிகப்படியாக ஒரே ஒரு அடியார் பெயரையும் சேர்த்தார். அவர் கோச்செங்கணான் எனும் சோழ அரசன். இரண்டாம் நூற்றாண்டில் சிவபெருமான் அருளால் பிறந்தவன், சிவனுக்காக திருவானைக்காவில் கோயில் எழுப்பியவன். அவன் பிறந்த கதையும் விசித்திரமானது. இவன் சற்று நேரம் கழித்துப் பிறந்தால் சிறந்த சிவத்தொண்டனாக விளங்குவான் என்று சோதிடம் கணிக்கப்பட்டதால், அவன் தாய் தலைகீழாய் நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து பெற்று, உயிர் நீத்த கதை அனைவருக்கும் தெரியும். திருமுறையில் பலபாடல்கள், திவ்யபிரபந்தத்தில் திருமங்கையின் பாடல் இந்த அரசனைப் போற்றிப் புகழ்கின்றன. இத்தகைய கோச்செங்கட்சோழனையும் அடியார்கள் வரிசையில் சேர்க்கிறார் நம்பியாண்டார் நம்பி.
திருத்தொண்டரடிப்புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் நாயகனாகவே சுந்தரரை அறிமுகப்படுத்தும் சேக்கிழார் பெருமானுக்கும் சுந்தரரின் திருத்தொண்டத்தொகையே ஆதாரம், எனினும் நம்பியாண்டார் நம்பிகள் சேர்த்த கோச்செங்கட்சோழனோடு சோழர்களின் பெருமைமிகு சோழர்களின் ஆதிஅரசர்களில் ஒருவனான மனுநீதிச் சோழனையும் சிவனடியாராகச் சேர்த்துப் பெருமை சேர்க்கிறார்.
நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக திருவாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியில் மாணிக்கவாசகர் பெயர் விடுபட்டுள்ளது.
பெரிய புராணமும் மாணிக்கவாசகர் பெயரைக் கூறவில்லை. ஆனால் பொய்யடிமை இல்லாப் புலவர் எனும் சிவனடியார் ஒருவரைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் கூறும்போது அது மாணிக்கவாசகர் பற்றிக் கூறியதாக இருக்கமுடியாது என்று சேக்கிழாரும், நம்பியாண்டார் நம்பிகளும் கருதியதால் பொய்யடிமை இல்லாப் புலவர் என்பது மாணிக்கவாசகர் அல்லது வாதவூரர் இருக்கமுடியாது என்றே கொள்ளலாம். இப்படிச் சொல்லும்போது ஒரு நிதர்சனத்தை நாம் கவனிக்கவேண்டும். சேக்கிழார் பெருமான் கண்ணை மூடிக்கொண்டு சுந்தரர் சொன்னதையே அதே போல பெரியபுராணத்தைப் பாடவில்லை. சுந்தரர் எழுதிய ஒவ்வொரு அடியார் பெயரையும் அவர் ஊர், அவர் எவ்வாறு சிவனருள் பெற்றார் என்பதையும் கடினமாக உழைத்து, சேகரித்து, ஆராய்ச்சி செய்தபின் எழுதப்பட்டதுதான் பெரிய புராணம். அப்படி இல்லாவிட்டால் இறைவனே வந்து ‘உலகெலாம்’ எனும் சொல்லை எடுத்துத் தருவானா? தமிழகத்தின் முதல் ஆய்வாளரே சேக்கிழார் பெருமான் அவர்கள்தான்.
பதினொன்றே பாடல்களுடன் 88 வரிகள் கொண்டதுதான் திருத்தொண்டத்தொகை. ஆனால் பெரிய புராணமோ 4272 பாடல்கள் கொண்டது. 71 புராணங்களை விலாவாரியாகச் சொன்னது. எழுதி ஏறத்தாழ் 750 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் மிகச் சிறப்போடு இந்தக் காவியம் தமிழ்த்தாயின் கூந்தலில் வைரமணியாக ஒளிர்கின்றது. தமிழ் உள்ள வரை, உலகம் உள்ளவரை ஒளிரும் காவியமாகத் திகழும் வகையில் இந்தப் பெரியபுராணத்தைப் படைத்துள்ளார் சேக்கிழார் பெருமான்.
ஆனால் இப்படிப்பட்ட அரிய காவியத்தில் மாணிக்கவாசகர் பெயரோ அவர் வரலாறோ குறிப்பிடப்படவில்லை.. அதே சமயத்தில் சுந்தரர் குறிப்பிடாத கோச்செங்கட்சோழனும், மனுநீதிச் சோழனும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
மாணிக்கவாசகரின் வரலாறு மூவருக்கும் முன்னவரா, பின்னவரா எனும்போது, அவர்தம் பாடல் இருக்கின்றது, ஆனால் அவர்தம் வரலாறே பன்னிரண்டாம் நூற்றாண்டின் த்மிழின் மிகப் பெரிய காவியத்தில் இல்லை. இது மிகப் பெரிய கேள்வி. இவை பற்றிய ஒரு பார்வையை பார்த்துவிட்டு மேலும் சில விஷயங்களுக்குச் செல்வோம்.
திவாகர்
(இன்னும் வரும்)
(நண்பர்களுக்கு, இந்தக் கட்டுரையில் மேலே கண்ட விஷயங்கள் அனைவரும் அறிந்ததுதான். அதே சமயத்தில் இது ஆய்வுக் கட்டுரை அல்ல. ஆய்வுக்கு உதவும் கட்டுரை என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கவும். அத்தோடு விவரங்கள் ஆதியிலிருந்து சொன்னால்தான் கட்டுரை எழுதப்பட்ட பயனைத் தரும். இந்தக் கட்டுரை சற்று நீளும், நிறைய விஷயங்கள் பேசப்படும்.. அதனால் பொறுத்தருளவும்.. கேள்விகள் வந்தால் கடைசியில் பதிலளிக்கிறேன்.)
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
தமிழ்நாடு அரசு பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு பயிற்சிப் பக்கத்தில் சைவம் என்பதற்கு எதிர்ச்சொல் அசைவம் என்று போட்ட அந்த அளவுக்கு மோசம் இல்லைஆனாலும் இந்த இழக்கும் நமக்கும் துரம் வெகுதூரம்
க.>
கட்டுரையை ரசித்துப் படித்துவருகிறேன், திரு. திவாகர்.
ஆனந்த தாண்டவம் என்பது பின்னாl வந்தது. 9-ஆம் நூற்றாண்டு
வாக்கில். பஞ்ச கிருத்தியத் தொழிலைக் காட்டி ஆடும் நடனம்.
நடராஜாவின் ஆனந்த தாண்டவ நடனம் இளங்கோ அடிகள்
பாடவில்லை.
நா. கணேசன்
திரு. லோகசுந்தரம்,
>திருவாளர் காந்தி அவர்களின் கோகழி பற்றிய கட்டுரை இணைய வலையில்
>இன்று கிடைக்க வில்லை என் கோப்பிலிருந்து நகல் எடுக்கமுடியவில்லை
>(இன்றுதான் பழுதுதாகி விட்டது ) கிடைத்தவுடன் வைக்கின்றேன்
திருவாளர் காந்தி கட்டுரை கிடைக்கிறபோது தாருங்கள். முக்கியமாக
தெரிகிறது.
கோகழி பற்றிச் சில செய்திகள் - இணைய மடல்களில்:
(அ) http://www.treasurehouseofagathiyar.net/04800/4845.htm
மெய்கண்டார் வரலாறு
ஔவை துரைசாமிப் பிள்ளை
(கோளகி சம்பிரதாயம் பற்றிச் சில செய்திகள்)
(ஆ)
http://www.treasurehouseofagathiyar.net/21300/21395.htm
”மணிவாசகர் எந்த சைவப்பிரிவைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொள்ள
முயன்றாலன்றி இப் பிரச்சி
னை தீராது. மணிவாசகர் சைவ சித்தாந்தி அல்லர். மணிவாசகர் காலத்தில்
தமிழ்நாட்டில்
பாசுபதரும் காளாமுகரும் நிறைந்திருந்தனர்.
கோகழி ஐநூற்றுவர் என்னும் சிம்ம பரிஷத்தைச் சார்ந்த காளாமுகர்கள் -
(லகுலீச பாசுபதர்கள்)
கர்நாடகத்தில் இருந்தனர். கோகழிப் பெயரைக் குறிப்பிடும்
கல்லெழுத்துக்களும் கிடைத்துள்ளன.
கோகழி மரபினரான ஒரு குருவிடம் மணிவாசகர் உபதேசம் பெற்றார். ”
(இ)
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20608188&format=print&edition_id=20060818
சாங்கியம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லான சங்க்யா என்பது எண் என்ற
பொருளுடையதாதலால் சாங்கிய தரிசனத்தைக் குறிப்பிடுவதற்கு 'ஆரூர்க்கபிலனின்
எண்நூல்' என்ற தொடரைப் பாரதிதாசன் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் நீண்ட
நெடுங்காலமாகவே சைவ சித்தாந்தம் தமிழரின் தத்துவ மரபுதான் என்ற எண்ணமும்
பிராமணரல்லாத தமிழக மேட்டுக்குடியினரிடம் இருந்து வந்ததால் அதனையும்
பாரதிதாசனால் புறக்கணிக்க இயலவில்லை. 'எதிர்பாராத முத்தம்' என்ற நூலில்
உயிர்க்கொலையை ஆதரிக்கும் வடநாட்டுத் துறவிகளைக் கண்டித்தும், சைவ
நெறியாகிய அன்பு நெறியைப் பின்பற்றும் தமிழ்த் துறவிகளைப் போற்றியும்
அவர் எழுதியுள்ளதைக் காணலாம். கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
அதாவது மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கால இறுதியில் சோழ நாட்டில்
'குகையிடி கலகங்கள்' ஏற்பட்டன என்று கல்வெட்டுகளால் தெரியவருகின்றது.
1913ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஆண்டறிக்கையில்
இக்கல்வெட்டுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தென்னாட்டுச் சைவத்
துறவிகளின் செல்வாக்கைக் குறைப்பதற்காக கோளகி மடம் போன்ற வடநாட்டுச் சைவ
மரபு சார்ந்த மடாலயத் துறவிகள் செய்த கலகங்கள் இவை என்ற கருத்து
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை
கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கருத்தே பாரதிதாசனின்
கருத்துக்கு அடிப்படையாக இருந்ததெனத் தெரிகிறது3.
நா. கணேசன்
அன்பின் நூ த லோ சு ஐயா ,திருவாதவூரைப் பற்றிய ஒரு கல்வெட்டுக்குறிப்பை வில்லியனூர் வெங்கடேசன் தனது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக நினைவிருக்கிறது .அதில் குலோத்துங்க சோழருடைய ஒரு கல்வெட்டில் 11 ஆம் நூற்றாண்டில் வாதவூராருக்கு விழா எடுக்க நிவந்தம் அளித்ததாக சிறுகுறிப்பு உள்ளதாக கூறி உள்ளார் .ஆனால் வேறு கல்வெட்டு சான்று எதுவும் மனிக்கவசகரைக் குறித்து கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார் .அதனாலும் சரியானக் காலம் புலப்படவில்லை என்கிறார் .
மாணிக்கவாசகர் தாங்கள் குறிப்புட்டுள்ள கல்வெட்டு ஆதாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் .
> அதாவது வடுகபிள்ளை படிமம் நிறுவப்படுகின்றது பற்றிப் பேசுவது
> நினைவில் இருந்து குறிக்கின்றேன் அது ஓர் கொங்கு நாட்டு கோயில் ஆகும்
>
மாணிக்கவாசகரை “வடுகபிள்ளை” என்றழைப்பது சுவாரசியமாக உள்ளது.
இராமானுஜரின் மடப்பள்ளி கைங்கர்யம் செய்வதரை ‘வடுக நம்பிகள்’
என்றழைக்கும் வழக்கம் வைணவத்திலுண்டு.
வடுகன் என்றால் தெலுங்கன் என்று எண்ணியிருந்தேன். வடுகன் என்றால் கர்நாடக
தேசத்தவரையும் குறிக்குமென அறிந்து கொண்டேன்.
ஆதி சங்கரர், ‘திராவிட சிசு’ என்றழைத்தது மாணிக்கவாசகரை என்று சிலர்
எழுதுகிறார்களே. அது எவ்வளவு உண்மை?
நா.கண்ணன்
On Sep 3, 8:25 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/9/4 N D Llogasundaram <selvindl...@gmail.com>:
>
> > அதாவது வடுகபிள்ளை படிமம் நிறுவப்படுகின்றது பற்றிப் பேசுவது
> > நினைவில் இருந்து குறிக்கின்றேன் அது ஓர் கொங்கு நாட்டு கோயில் ஆகும்
>
> மாணிக்கவாசகரை “வடுகபிள்ளை” என்றழைப்பது சுவாரசியமாக உள்ளது.
> இராமானுஜரின் மடப்பள்ளி கைங்கர்யம் செய்வதரை ‘வடுக நம்பிகள்’
> என்றழைக்கும் வழக்கம் வைணவத்திலுண்டு.
>
> வடுகன் என்றால் தெலுங்கன் என்று எண்ணியிருந்தேன். வடுகன் என்றால் கர்நாடக
> தேசத்தவரையும் குறிக்குமென அறிந்து கொண்டேன்.
பழைய நூல்களில் வடுகு என்றால் கன்னடநாடு என்ற பொருளும்
உண்டு. கொங்குநாட்டு மலைகளில் வாழும் வடுகர் (படுகர்)
கன்னடம் சார்ந்த மொழி பேசுவோர்.
திருவாசகத்தில் சில வடுகுச் சொற்கள் உள்ளன:
எந்து, வேசறு. வீரசைவ மரபினர் என்பார் மறைமலை
அடிகள்.
>
> ஆதி சங்கரர், ‘திராவிட சிசு’ என்றழைத்தது மாணிக்கவாசகரை என்று சிலர்
> எழுதுகிறார்களே. அது எவ்வளவு உண்மை?
>
ஆதிசங்கரர் மாணிக்க வாசகரைப் பற்றி எதுவும் சொல்லலை.
பிற்கால நூலாகிய சௌந்தர்யலகரியில் சம்பந்தருக்கு
ஞானப்பாலூட்டிய செய்தி உள்ளது. சௌந்தர்யலகரியின் பழைய
தமிழ் மொழிபெயர்ப்பிலும் இப்படியே உள்ளது.
நா.கணேசன்
> பிற்கால நூலாகிய சௌந்தர்யலகரியில் சம்பந்தருக்கு
> ஞானப்பாலூட்டிய செய்தி உள்ளது. சௌந்தர்யலகரியின் பழைய
> தமிழ் மொழிபெயர்ப்பிலும் இப்படியே உள்ளது.
>
ஓ! அது ஞானசம்பந்தர் பற்றி. மறந்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
சௌந்தர்ய லகரி பின்னால் உருவான நூல் என்றால் அது ஆதிசங்கரர் அருளியது இல்லையா?
க.>
On Sep 3, 9:18 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/9/4 N. Kannan <navannak...@gmail.com>
>
> > 2011/9/4 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > > பிற்கால நூலாகிய சௌந்தர்யலகரியில் சம்பந்தருக்கு
> > > ஞானப்பாலூட்டிய செய்தி உள்ளது. சௌந்தர்யலகரியின் பழைய
> > > தமிழ் மொழிபெயர்ப்பிலும் இப்படியே உள்ளது.
>
> > ஓ! அது ஞானசம்பந்தர் பற்றி. மறந்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
>
> > சௌந்தர்ய லகரி பின்னால் உருவான நூல் என்றால் அது ஆதிசங்கரர் அருளியது இல்லையா?
>
> > க.>
>
இதில் இன்னொரு பெரிய குழப்பமும் உண்டு.
சௌந்தர்யலஹகரி தாந்திரீக நூல். 14-ஆம் நூற்றாடாக
இருக்கலாம். துருக்கர் தென்னாட்டுப் படையெடுப்பின்
பின் ஏற்பட்ட பிரபந்தம்.
சம்பந்தரைத் திரமிட சிசு என்று சொல்லும் நூலை,
மறைந்த காஞ்சி மஹாபெரியவர் சந்திரசேகரேந்திர
சரஸ்வதிசுவாமிகள் சங்கரர் தன்னையே திரமிடசிசு
என்கிறார் என்று வியாக்கியானம் அருளினார்.
At least in the scholarly world, nobody takes
the explanation seriously.
More later,
NG
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் எனும் வசனம் அதன்
தத்துவக் கோணத்தில் வைஷ்ணவர்களுக்கு மிகவும் பரிட்சயமானது. ஸ்ரீராமானுஜரை
ஆண்டாள் ஜீயர் என்றுதான் அழைப்பர். ஒரு பனுவல், ஒரு மனிதரை எந்த அளவு
மாற்றும் என்பதற்கு இராமானுஜர் வாழ்வில் கோடானகோடி சம்பவங்களுண்டு.
மாணிக்கவாசகரிடம் அதே பாவம். அதே நடை. “அவன் அருளால் அவன் தாள் வணங்கும்”
நிலை. வித்தியாசமே தெரியாத இறை அனுபவம். அவர் மற்ற மூவரிலிருந்தும்
வெகுவாக வேறுபடுகிறார். எப்படி என்று கேட்டுப்பார்க்கலாம்?
நான் மீண்டும் வள்ளலார் உதாரணத்திற்குத்தான் வர வேண்டி உள்ளது.
எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல் கிடைத்து விடுகிறது. அதன் பிறகு அதன்
ஆக்கங்கள் முன்னைய ஆக்கங்களிலிருந்து வெகுவாக வேறுபடுகிறது. வள்ளலார்
‘வாடிய பயிரைக் கண்டு வாடும்’ அன்பு நிலைக்கு மேல் போய் சன்மார்க்க
சமரசம் செய்கிறார். அது அவரது காலத்தைக் காட்டிக்கொடுத்துவிடும்.
மாணிக்கவாசகரின் பனுவலை இந்நோக்கிலும் காணுதல் சிறக்கும். சிவ, வைஷ்ணவ
வேறுபாடுகளை விடுத்து இவர்களைத் தமிழ் புலவர்கள் என்று பார்த்தால் நான்
சொல்வதன் பொருள் விளங்கும். கம்பனுக்கு முன்னோடி ஆழ்வார்கள். அதே வசனம்.
அதே பயன்பாடு. நம்மாழ்வாருக்கு முன்னோடி வள்ளுவர். அதே வசனங்களைப்
பயன்படுத்துகிறார். பாரதிக்குப் பின் நாம் அவரை அப்படியே காப்பி
அடிக்கவில்லையா? இது இலக்கியத்தில் சகஜம்.
நன்றி.
நா.கண்ணன்
2011/9/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கற்றாரும் கல்லாரும் உருகுகவி
வாதவூர் கருணை வள்ளல்
என திருக்குற்றாலப்புராணப்பாடலில் சொல்லியபடி திருவாசகம் எனும் தேன் வாசகம் எம்மைப் போன்ற கல்லாதாரையும் உருகிக் கனிய வைக்கும் என்பதை உணர்ந்ததால், திருவாசகத்தின் தேனைப் பார்த்துக் கொண்டே, அதைப் பருகாமல், இந்தக் கட்டுரைக்குத் தேவையான அங்குள்ள சில தேவையான சொல்வளங்களை மட்டும் இங்கே எடுத்துப் போடுகிறேன்..
நாயினேனை நலமலி தில்லையுட்
கோலமார்தரு பொதுவினில் வருகென (கீர்த்தி திருவகவல்)
எத்தனை அடக்கம் தன்னைப் பற்றி மாணிக்கவாசகருக்கு பாருங்கள். திருபெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆதிசிவனையே குருவாகப் பெற்று அவர்தம் வாக்கினால் ’தில்லைப் பொதுமன்றில் தன்னைக் காண வருக’ என்ற கட்டளையை ஏற்று, திருப்பெருந்துறையிலிருந்து தில்லை செல்கிறார் வாதவூரரர். கீர்த்தித் திருவகவல் எனும் அவர் அருளிய பாடல் இறைவனின் அருட்செயலைக் கூறுவதாகும். அத்துடன் இந்தப் பாடலில் தன் வரலாற்றையும் ஆங்காங்கே தேன் தூறலாக தூவித் தருகிறார். புரவிகள் வாங்கும் வழியில் இறைவன் ஆட்கொண்டதும், குருவாய் அருள் பாலித்ததும், பாண்டியன் பார்வையில் பல திருவிளையாடல் (பரியை நரியாக்கியது போன்றவை) செய்தும், இறைவன் மாணிக்கவாசகர்தம் மகிமையை உலகுக்குக் காட்டியதும் மிக அழகாக கீர்த்தித் திருவகலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி தில்லை வருகவெனப் பணித்ததும் அவர் தில்லை செல்லும் வழியில் சிவன் அருளிய திருத்தலங்களை வலம் வருகிறார். கீர்த்தி திருவகலே தில்லையில் பாடப்பெற்றதாகும். அவற்றில் பல திருத்தலங்கள் மூவர்களால் பாடப்பட்ட பெருமையைப் பெற்றதாகும் சில திருத்தலங்கள் பெயர் இன்றும் அழிந்தோ மறைந்தோ போயின. அப்படிப் பெயர்கள் மறைந்துபோன ஊர்கள் சில:
கல்லாடம், கோகழி, நந்தம்பாடி,ஓரியூர், சந்திரதீபம், பாண்டூர், சாந்தம்புத்தூர் போன்றவை.
"பூவலமதனிற் பொலிந்தினிதருளி பாவ நாசமாக்கிய பரிசும்" – யான் இந்த பூமியை வலம் வந்து மேற்கொண்ட தலயாத்திரையில் வழிபட்ட தலங்கள் எல்லாம் அழகிய காட்சி தந்து என் பாவங்களை நாசம் செய்த இயல்பு - என்று தில்லையாண்டவனை நோக்கிப் பாடிய வாதவூரார் தமிழகம் மட்டுமல்லாமல் இன்றைய ஆந்திரமாநிலத்தில் உள்ள நல்லமலை வரை சென்று வந்ததையும், மேலைக் கர்நாடக மலை, மற்றும் மேலைக் கடலோரம் போன்றவைகளையும் குறிப்பிடுகிறார். இன்றைய நல்லமலைத் தொடர், கிழக்கு, தென் மேற்காக சென்று சற்று பிரிந்து மேற்குமலைத் தொடரைச் சேர்ந்து இணைந்து கொள்ளும். இந்த நல்ல மலை பழைய காலத்தில் மகேந்திர மலை என்பதாக் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் திருப்பருப்பத மலை என்ப் பெயர் பெற்றதாகவும், பின்னரே நல்லமலை என்ற பெயரில் இருப்பதாகவும் சைவ வரலாற்றுப் புத்த்கங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீசைலம்,, அஹோபிலம், திருமலைக்கோயில்கள் இத் தொடர்மலையில் இருப்பனவாகும்.( The earliest known historical mention of the Hill - Srisailam, can be traced in Pulumavis Nasik inscription of 1st Century A.D.) “மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்” என்று அவர் கீர்த்தித் திருவகலில் ஆரம்பவரிகளில் தொடங்கும்போதே இது புரியும். ஸ்ரீசைலமலைக் கோயில் சரிதத்தில் இறைவன் ஸ்ரீசைலத்தில்தான் அம்பிகையை தன்னிடத்தே கொண்டு உலகையே உற்பவித்தான் என்பதாக வரும். வாதவூரரின் கீர்த்தித் திருவகலில் இளைய வேடன் போல இறைவன் சென்று அங்குள்ள வேட்டுவ மகளாகப் பிறந்த பார்வதிதேவியை மணந்த செய்தி வருகின்றது, இந்தக் காட்சி இன்றைக்கும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவின் போது உறசவவிழாவாக நடத்தப்படுகிறது. பின் அங்கிருந்து கன்னடநாடு என தற்போது அழைக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று வந்ததை ”பஞ்சப்பள்ளியில் பான்மொழி தன்னோடும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் வாதவூரர் குறிப்பிடும் பஞ்சப்பள்ளியும் கர்நாடக பஞ்சஹல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை. இன்றைய பஞ்சிம் (கோவா) முன்னொரு காலத்தில் அக்ரஹாரப் பெயராக பஞ்சஹள்ளி என்று பெயர் பெற்றதாக கூகிளில் ஒரு செய்தி உள்ளது. http://en.wikipedia.org/wiki/Villages_and_Agraharas_in_Goa_and_their_ancient_names
ஆனால் கோகழி என்ற ஊரைப் பற்றிய பழைய செய்திகள் இந்த கோகழி என்பதும் கர்நாடகத்தில்தான் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. கோகழி என்பது ஆந்திரத்தைச் சார்ந்த ஊர் என திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியனார் சொல்வதை வைத்து ஆந்திரத்தில் உள்ள ஒரு சிவத்தலம் என்று சொல்வோரும் உண்டு. கோகழி என்பதன் தமிழ்ப்பதத்தின் பொருள் திருவாவடுதுறையே என்பதால் குடந்தை அருகே உள்ள திருவாவடுதுறையைத்தான் மாணிக்கவாசகர் குறிக்கிறார் என்றும் சில நூல்கள் சொல்கின்றன. ஆனால் இங்கே இன்னொன்றைக் கவனிக்கவேண்டும் கோகழி எனும் ஊரின் சொல்லாட்சி திருவாசகத்தில் ஐந்து இடங்களில் வருகிறது என்பதிலிருந்து கோகழி ஆண்ட குருநாதர் மிக அதிகமாகவே வாதவூரரைக் கவ்ர்ந்திருக்கிறார் என்பதும் புரியும். கர்நாடக மாநிலத்து மேற்குக் கரையோரம் கார்வார் அருகே காணப்படும் ஆத்மநாதர் (முக்திநாதர்) கோயில் கொண்டுள்ள கோகரணமும் கோகழியும் ஒன்றா எனப்தையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பரும் சம்பந்தரும் கோகரணத்தைப் பாடிய பதிகங்கள் உள்ளன. ஆதி காலத்தில் இந்தப் பழைய பதி கோகழி எனப் பெயரில் வழங்கப்பட்டதா என்றும் ஆராய வேண்டும்.
ஆனால் அதே சமயத்தில் மாணிக்கவாசகர் தமிழ் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பழக்கமான சில சிவத்தலங்களையும் குறிப்பிடுகிறார். திருவாரூர், திருவிடைமருதூர், கடம்பூர், திருவாஞ்சியம், குத்தாலம் (இது துருத்தி என மணிவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது,) சீர்காழி (இது கழுமலம் என்று மணிவாசகரால் குறிப்பிடப்பட்டாலும் திருஞானசம்பந்தரும் சீர்காழியை பல நாமங்களால் தொழும்போது அதில் கழுமலம் என்ற பெயரும் உண்டு), திருவண்ணாமலை, திருப்பராய்த்துறை, திருவெண்காடு, திருவையாறு (இவை சோழநாட்டுத் திருத்தலங்கள்), திருவாதவூர், திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கையூர், திருப்பூவணம், மதுரை, குற்றாலம் போன்ற பாண்டி நாட்டுத் தலங்களும், காஞ்சி, திருக்கழுக்குன்றம், திருவெற்றியூர் போன்ற தொண்டைநாட்டுத் திருத்தலங்களும் அடங்கும், மலைநாடு எனப் பொதுவாக சேரநாட்டை அழைத்தாலும் மலைநாட்டுத் திருத்தலங்கள் ஏதும் காணப்படவில்லை. தேவூர் என்ற ஒருதலத்தில் நடந்த சிவன் திருவிளையாடலைப் பற்றி ஒரு இடத்தில் பாடுகிறார். இது ராமேவரத்தையோ அதன் அருகே உள்ள ஒரு தீவையோ குறிக்கிறது என்பர் சிலர். தேவூர் பற்றியும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.
தேவார மூவர் பாடிய மொத்தத் திருத்தலங்கள் 275 தலங்களாகும் இவற்றில் தமிழகத்தில் மட்டுமே 266 தலங்களும், ஆந்திரத்தில் இரண்டும், இலங்கையில் இரண்டும், கருநாடகத்தில் ஒன்றும், வடநாட்டில் நான்கும் அமைந்துள்ளன. மூவர் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்பதும் முன்பே எழுதினோம். அதே சமயத்தில் திருவாசகம் முழுதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஏனெனில் தில்லை இறைவனே முன்னின்று அவர் பாடிய பாடல்களை மறுபடி பாடவைத்து எழுதினான் என்பதை ’வாதவூரர் பாட சிற்றம்பலத்தான் எழுதியது’ என்ற குறிப்பின் மூலம் காணலாம். வாதவூரர் காலத்தில் அவர் சென்ற போது உள்ள கோயில்கள் இத்தனைதானா என்ற கேள்வி கேட்கத் தோன்றும். ஷேத்திரத் திருவெண்பா எழுதிய ஐயடிகள் காடவர்கோன் கூட 23 ஷேத்திரங்கள் பற்றித்தான் எழுதினார், அதில் ஒன்று வடநாட்டு உஜ்ஜயினி கோயில் பற்றியது என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று.
அடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் சமயங்களில் நிலையை பார்ப்போம். மகாபாரத காலத்துக்குப் பிறகு, இப்பூவலகில் எந்தக் காலத்திலும் சமயத்தை அடிப்படையாக வைத்து மனிதர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதோ, உயர்த்திக் கொள்வதோ, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதோ அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அறிந்தோ அறியாமலோ அவன் பிறக்கும்போதே சமய முத்திரையுடன் பிறக்கும் அவலம் இந்த உலகில் இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.
மாணிக்கவாசகர் பாடலிலிருந்தும் அவர் காலத்தில் இருந்த இந்த சமயவேற்றுமைகள் பளிச்செனத் தெரியத்தான் செய்கின்றன.
திவாகர்
இன்னும் வரும்
On Sep 4, 2:13 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> 4.
>
> *கற்றாரும் கல்லாரும் உருகுகவி*
>
> *வாதவூர் கருணை வள்ளல் *
>
> என திருக்குற்றாலப்புராணப்பாடலில் சொல்லியபடி திருவாசகம் எனும் தேன் வாசகம்
> எம்மைப் போன்ற கல்லாதாரையும் உருகிக் கனிய வைக்கும் என்பதை உணர்ந்ததால்,
> திருவாசகத்தின் தேனைப் பார்த்துக் கொண்டே, அதைப் பருகாமல், இந்தக்
> கட்டுரைக்குத் தேவையான அங்குள்ள சில தேவையான சொல்வளங்களை மட்டும் இங்கே
> எடுத்துப் போடுகிறேன்..
>
> *நாயினேனை நலமலி தில்லையுட்*
>
> *கோலமார்தரு பொதுவினில் வருகென (கீர்த்தி திருவகவல்)*
>
> எத்தனை அடக்கம் தன்னைப் பற்றி மாணிக்கவாசகருக்கு பாருங்கள். திருபெருந்துறையில்
> குருந்த மரத்தடியில் ஆதிசிவனையே குருவாகப் பெற்று அவர்தம் வாக்கினால் ’தில்லைப்
> பொதுமன்றில் தன்னைக் காண வருக’ என்ற கட்டளையை ஏற்று,
> திருப்பெருந்துறையிலிருந்து தில்லை செல்கிறார் வாதவூரரர். கீர்த்தித் திருவகவல்
> எனும் அவர் அருளிய பாடல் இறைவனின் அருட்செயலைக் கூறுவதாகும். அத்துடன் இந்தப்
> பாடலில் தன் வரலாற்றையும் ஆங்காங்கே தேன் தூறலாக தூவித் தருகிறார். புரவிகள்
> வாங்கும் வழியில் இறைவன் ஆட்கொண்டதும், குருவாய் அருள் பாலித்ததும், பாண்டியன்
> பார்வையில் பல திருவிளையாடல் (பரியை நரியாக்கியது போன்றவை) செய்தும், இறைவன்
> மாணிக்கவாசகர்தம் மகிமையை உலகுக்குக் காட்டியதும் மிக அழகாக கீர்த்தித்
> திருவகலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி தில்லை வருகவெனப் பணித்ததும் அவர்
> தில்லை செல்லும் வழியில் சிவன் அருளிய திருத்தலங்களை வலம் வருகிறார். கீர்த்தி
> திருவகலே தில்லையில் பாடப்பெற்றதாகும். அவற்றில் பல திருத்தலங்கள் மூவர்களால்
> பாடப்பட்ட பெருமையைப் பெற்றதாகும் சில திருத்தலங்கள் பெயர் இன்றும் அழிந்தோ
> மறைந்தோ போயின. அப்படிப் பெயர்கள் மறைந்துபோன ஊர்கள் சில:
>
> கல்லாடம், கோகழி, நந்தம்பாடி,ஓரியூர், சந்திரதீபம், பாண்டூர், சாந்தம்புத்தூர்
> போன்றவை.
>
> *"பூவலமதனிற் பொலிந்தினிதருளி பாவ நாசமாக்கிய பரிசும்"* – யான் இந்த பூமியை
> வலம் வந்து மேற்கொண்ட தலயாத்திரையில் வழிபட்ட தலங்கள் எல்லாம் அழகிய காட்சி
> தந்து என் பாவங்களை நாசம் செய்த இயல்பு - என்று தில்லையாண்டவனை நோக்கிப் பாடிய
> வாதவூரார் தமிழகம் மட்டுமல்லாமல் இன்றைய ஆந்திரமாநிலத்தில் உள்ள நல்லமலை வரை
> சென்று வந்ததையும், மேலைக் கர்நாடக மலை, மற்றும் மேலைக் கடலோரம் போன்றவைகளையும்
> குறிப்பிடுகிறார். இன்றைய நல்லமலைத் தொடர், கிழக்கு, தென் மேற்காக சென்று சற்று
> பிரிந்து மேற்குமலைத் தொடரைச் சேர்ந்து இணைந்து கொள்ளும். இந்த நல்ல மலை பழைய
> காலத்தில் மகேந்திர மலை என்பதாக் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் திருப்பருப்பத
> மலை என்ப் பெயர் பெற்றதாகவும், பின்னரே நல்லமலை என்ற பெயரில் இருப்பதாகவும் சைவ
> வரலாற்றுப் புத்த்கங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீசைலம்,, அஹோபிலம்,
> திருமலைக்கோயில்கள் இத் தொடர்மலையில் இருப்பனவாகும்.( The earliest known
> historical mention of the Hill - Srisailam, can be traced in Pulumavis
> Nasik inscription of 1st Century A.D.) “மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன
> ஆகமந் தோற்றுவித்தருளியும்” என்று அவர் கீர்த்தித் திருவகலில் ஆரம்பவரிகளில்
> தொடங்கும்போதே இது புரியும். ஸ்ரீசைலமலைக் கோயில் சரிதத்தில் இறைவன்
> ஸ்ரீசைலத்தில்தான் அம்பிகையை தன்னிடத்தே கொண்டு உலகையே உற்பவித்தான் என்பதாக
> வரும். வாதவூரரின் கீர்த்தித் திருவகலில் இளைய வேடன் போல இறைவன் சென்று
> அங்குள்ள வேட்டுவ மகளாகப் பிறந்த பார்வதிதேவியை மணந்த செய்தி வருகின்றது,
> இந்தக் காட்சி இன்றைக்கும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் மகாசிவராத்திரி
> திருவிழாவின் போது உறசவவிழாவாக நடத்தப்படுகிறது. பின் அங்கிருந்து கன்னடநாடு என
> தற்போது அழைக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று வந்ததை ”பஞ்சப்பள்ளியில் பான்மொழி
> தன்னோடும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் வாதவூரர் குறிப்பிடும்
> பஞ்சப்பள்ளியும் கர்நாடக பஞ்சஹல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை. இன்றைய
> பஞ்சிம் (கோவா) முன்னொரு காலத்தில் அக்ரஹாரப் பெயராக பஞ்சஹள்ளி என்று பெயர்
> பெற்றதாக கூகிளில் ஒரு செய்தி உள்ளது.http://en.wikipedia.org/wiki/Villages_and_Agraharas_in_Goa_and_their_...
>
> ஆனால் கோகழி என்ற ஊரைப் பற்றிய பழைய செய்திகள் இந்த கோகழி என்பதும்
> கர்நாடகத்தில்தான் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. கோகழி என்பது ஆந்திரத்தைச்
> சார்ந்த ஊர் என திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகமணி கே.எம்
> பாலசுப்பிரமணியனார் சொல்வதை வைத்து ஆந்திரத்தில் உள்ள ஒரு சிவத்தலம் என்று
> சொல்வோரும் உண்டு. கோகழி என்பதன் தமிழ்ப்பதத்தின் பொருள் திருவாவடுதுறையே
> என்பதால் குடந்தை அருகே ...
>
> read more »
On Sep 4, 5:51 am, "Maravanpulavu K. Sachithananthan"
<tamiln...@gmail.com> wrote:
> விசாகப்பட்டினம் சென்று வாழ்வதால் வரலாற்றுச் செய்திகளை தக்காணம் வரை
> அகன்று பார்க்கவும் தமிழகத்துள் அடங்காதவற்றைத் தக்காணம் வரை நீடித்து
> நோக்கவும் திவாகருக்குப் பெரு வாய்ப்பு. கிணற்றுக்குள் தனித்திருந்த
> கருத்தோட்டங்களை ஆற்றோடும் குளத்தோடும் விரித்திருக்கிறார்கள். முன்னோர்
> தமக்குத் தெரிந்தவரை எழுதிவைத்தார்கள், பூடகமாகவும் சொல்லிவைத்தார்கள்,
> திவாகரோ சான்றுகளைப் பெருக்கியுள்ளார்கள். குடவாயில் பாலசுப்பிரமணியனார்
> எழுதிய செய்திகளும் திவாகரின் பார்வைக்கு வரவேண்டும். தொடர்வாராக
> திவாகர்.http://vamsadhara.blogspot.com/2011/09/4.html
>
ஆம். அருமையாக திவாகர் எழுதுகிறார்.
பஞ்சப்பள்ளி வடகொங்கில் மலைகளில் உள்ள கிராமம்.
வனங்கள் மிகுந்த அழகான மலைகளில் இயற்கை கொஞ்சும் பகுதி.
பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும் - மாணிக்கவாசகர்.
பஞ்சப்பள்ளி அணை - தருமபுரி மாவட்டம்.
http://iruloli.blogspot.com/2011/03/45_29.html
http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5-181300914.html
நா. கணேசன்
> ...
>
> read more »
அன்பின் திவாகர், நூம்பல் த.லோ.சு,
திருவாசக தலங்கள் பற்றி: பஞ்சப்பள்ளி வடகொங்கில் உள்ளது. அதற்கு தெற்கே
கொல்லிமலை அறைப்பள்ளி உள்ளது. சிலர் அறப்பளீசுரர் சதகம்
படித்திருக்கலாம். வல்வில் ஓரி வாழ்ந்த இடம். மாணிக்கவாசகர் சொல்லும்
ஓரியூர் இதுவா? என்று ஆராயலாம். இப்பொழுது கா. ராஜன் போன்ற தொல்பொருள்
பேராசிரியன்மார் தோண்டுகிறார்களே, அவ்விடங்கள் பாண்டுகுழி என்று
கிராமங்களில் சொல்வர். மாணிக்கவாசகரின் பாண்டூர், பஞ்சப்பள்ளி (பஞ்சவர் =
பாண்டவர், பாண்டியரின் முன்னோர்) மெகாலித்திக் ஸைட்ஸ்-ஆ? ஏனெனில்
அவற்றில் தான் இரும்பு தாவடி, குதிரை எலும்புகள், ஐயனார் (சாத்தன்)
சிற்பங்கள் கிடைக்கின்றன. சாத்தன்புதூர் என்ற ஊரையும் திருவாசகம்
பேசுகிறது. குதிரை ஐயனார் (சிவன்) வழியாக வந்த தொன்மக் கதைகளை
மாணிக்கவாசகர் தொட்டுப் பேச, மிகப் பிற்கால புராணங்கள் அவர் குதிரை
வாங்கப் போனார் என்று கதை கட்டிவிட்டனவா?
---------
மாணிக்கவாசகர் சொல்லும் ஆகமம் எழுதிய
மயேந்திரமலை எது? என்று பின்னர் பார்ப்போம்.
--------
மொக்கணி எங்கே இருக்கிறார்? கொங்குமண்டல சதகத்தில் அதைச் செய்த சமண
அருட்குரவர் (கார்மேகக் கவிஞர்) விளக்குவதைப் பார்போம்.
"மொக்கணீசுரர்
24.
ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சிவதரிசன வழிபாடு செய்யும் ஒரு வணிகன் குடக்
கோட்டூருக்கு வந்து, ஆடை தோய்த்து ஸ்நானஞ் செய்து நியம முடித்து
வருதல் கண்ட யோசனையுள்ளமற்றொருவன், குதிரைக்குக் கொள்கட்டும்
பையை மணலில் நட்டுவைத்து (பூமாலை போட்டு அலங்கரித்து, இதோ
சிவலிங்கமென்றான்; அன்பன் வணங்கினான். அது சிவலிங்கப்
பெருமானாயிற்று. அக்குடக் கோட்டூரும் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு :- சிவதரிசனஞ் செய்து பின் உணவு அருந்தும் நியமம்
பூண்ட ஒரு வணிககுல சிவநேசர் குடக்கோட்டூர்* வழி வந்தார்.
ஆடை தோய்த்து முழுகிக் கரையேறிச் சிவலிங்க தரிசனஞ் செய்ய
வேண்டும்; நீ முன் சொல்லிய சிவாலயம் எங்கு இருக்கிறது? என்று
தன்னுடன் வந்த மைத்துனனை வினவினார். இதன் முன்னம் அவரது
மைத்துனன் பரிகாசத்துக்காகக் குதிரைக்குக் கொள்காட்டும் பையில்
மணலை நிரப்பிச் சிவலிங்கம் போல மண்ணில் நட்டு மாலை சாத்தி
வைத்திருந்தான். ஐயா, இதோ சிவபெருமான் இருக்கிறார். தரிசித்து வாரும்
என்று சுட்டினான். சிவபத்தர் மகிழ்ச்சி கொண்டு அச்சிவபெருமானை
இருவிழிகளுங் குளிரக் கண்டு சுயம்பு மூர்த்தியெனக் களங்கமற்ற
மனத்திலிருத்தித் தோத்திரம் புரிந்து வணங்கினர். உணவருந்தத் தொடங்கும்
பொழுது மைத்துனன் இவரை நோக்கி அத்தான்! இன்று சிவதரிசனமின்றிப்
புசிக்கத் தொடங்குகின்றீரே என்றனன். தொழுது வந்தேனே எனவே, அது
சிவலிங்கமல்லவே என்று மைத்துனன் சொல்லிக் கைகொட்டிச் சிரித்துப்
பலபேர்களோடு திருமுன் சென்று முன் புதைத்து வைத்த கொள்ளுப்
பையைத் தூக்கினான்; அசையவில்லை. மண்ணைப் பறிக்கப் பறிக்க அடி
காணவில்லை. சுயம்பு மூர்த்தியாகப் பாதாளம் வரை ஊடுருவி நின்றது
கண்டவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டு "உண்மைப் பத்தி மான்கள் பாவித்த
படி சிவபிரான் விளங்குவார்" என்று நிச்சயித்தார்கள். சிவநேசச்
செட்டியார்
உள்ள முருகினர். இதனால் மொக்கணீசுரர் என்று திருநாமம் உண்டாயிற்று.
(இது ஆறை நாடு)
(மேற்)
மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
(திருவாசகம் - கீர்த்தித் திருவகவல்)
பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி
எழிறரு மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங்
கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு
முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி
(வேம்பத்தூர் திருவிளையாடல்)
-------
*இது ஆறை நாட்டுள்ள ஓர் ஊர். அவிநாசியினின்று சத்திய மங்கலம் போகும்
பாதையில் ஐந்தாவது மயிலிலுள்ள சேவூரினின்று வடமேற்கே செல்லும் கொடி
வழியில் சுமார் மூன்று மயில் தூரத்தே அழிந்த ஆலயமாக இருக்கிறது ஊர்
அழிந்து போயிற்று. கோட்டூர்ப்பள்ளம் என்ற பெயர் மாத்திரம் சொல்ல
இருக்கிறது. செட்டியார் நீராடிய ஓடை தாழையூற்று என்கிறார்கள்.
இவ்வாலயத்தின் உத்ஸவ மூர்த்திகள் சேவூர் வாலீசப் பெருமான் கோயிலில்
சுமார் முந்நூறு வருஷங்களின் முன் சேர்க்கப்பட்டதாம். இச்சரிதத்தைச்
சுற்றுமுள்ள குடியானவர்களெல்லாரும் கூறுகிறார்கள். "
Kongumandala Sathakam, 1923, Tiruchengode Astavathanam Muthusami Konar
(ed.,)
------------------
N. Ganesan
இறைவன் மொக்கணீஸ்வரர்
இறைவி மீனாட்சி
தல மரம் வில்வம்
புராண பெயர் மொக்கணீச்சரம்
கிராமம்/நகரம் கூழையகவுண்டன்புதூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு : முற்காலத்தில் இரண்டு வணிகர்கள் இத்தலம் வழியாக
வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினமும்
சிவவழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் இங்கு
ஒருநாள் இரவில் தங்கினர்.
மறுநாள் காலையில் சிவபக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால்,
அவ்விடத்தில் லிங்கம் எதுவும் இல்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த
நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல்
குதிரைக்காக கொள்ளு வைத்
திருந்த பையில் மணலை நிரப்பி, சிவலிங்கம் போல் தோற்றம் உருவாக்கி,
மாலையிட்டு ஓரிடத்தில் வைத்தார். ""நண்பா! இதோ சிவலிங்கம், இதை
பூஜித்துக் கொள்,'' என்றார்.
அப்பாவி பக்தரும், அதை நம்பி கோணிப்பை லிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை
முடிந்ததும், ""ஏமாந்தாயா! இது லிங்கம் இல்லை, கோணிப்பை,'' என்ற நண்பர்,
அதை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அதை அசைக்கக்கூட முடியவில்லை. அது
நிஜ லிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம்
திருந்தினார். அவரும் சிவபக்தரானார்
திருவிழா : திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி.
சிறப்பு : சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. ஏழு குதிரைகள்
பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை காலை 10- 12 மணி வரை திறந்திருக்கும், மற்ற
நேரங்களில் திறக்க வேண்டுமானால், முன் கூட்டியே அர்ச்சகரிடம் தொடர்பு
கொள்ள வேண்டும்.
பொது தகவல் :
அளவில் மிகச்சிறிய கோயில் இது. அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி
தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார்.
இவருக்கான குருபூஜை சிறப்பாக நடக்கிறது. அருகில் ஏழு குதிரைகள் பூட்டிய
தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார்.
கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபம் இருக்கிறது. இதில்
மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில், கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார்.
பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளது.
தலவிநாயகர்: மூத்தவிநாயகர்
பிரார்த்தனை : பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு
ஆளானவர்கள் இங்கு வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள்.
நேர்த்திக்கடன் : அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகங்கள்
செய்கின்றனர்.
தல சிறப்பு : சிறப்பம்சம்: கொள்ளு வைக்கும் பைக்கு "மொக்கணி' என்று பெயர்
உண்டு. எனவே சிவன், "மொக்கணீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சுந்தரரால்
பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இந்தக் கோயில் முழுமையாக அழிந்து
போயிருந்தது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "கீர்த்தி
திருத்தாண்டகத்தில்' இத்தலம் பற்றி, ""மொக்கணி அருளிய முழுத்தழல்மேனி
சொக்கதாகக் காட்டிய தொன்மையும்'' என குறிப்பிட்டு பாடியுள்ளார். இப்பாடலை
அடிப்படையாக வைத்து மீண்டும் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
அளவில் சிறிய கோயில். அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில்
அருளுகிறாள்.
முன் மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். அருகில் ஏழு குதிரைகள்
பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில்
மண்டபத்தில், மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில், கைகளை கூப்பி வணங்கியபடி
இருக்கிறார். இத்தல விநாயகர், "மூத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழையகவுண்டன்புதூர் -
641 654. கோயம்புத்தூர் மாவட்டம்
----------------
இவரை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும்
எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதில் சிவத்தைக் கண்டால் அது சிவமாகவே
மாறிவிடும் என்பதை நிரூபித்த சிவபெருமான், கோயம்புத்தூர் மாவட்டம் கூளே
கவுண்டன்புதூரில் "மொக்கணீஸ்வரர்' என்ற பெயரில் அருளுகிறார். இவரை
வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும்
தல வரலாறு: சிவபக்தியில் தீவிர நாட்டம் கொண்ட வணிகர் ஒருவர், தினமும்
சிவபெருமானை வழிபாடு செய்த பின்பே சாப்பிடும் பழக்கத்தை
மேற்கொண்டிருந்தார். ஒருமுறை வியாபாரத்திற்காக, தனது மைத்துனருடன்
குடக்கோட்டூர் வழியாக சென்றார். அப்போது வழிபாட்டுக்குரிய நேரம் வந்தது.
அருகிலுள்ள ஓடையில் நீராடச் சென்றார். அப்போது அவரது மைத்துனர்,
குதிரைக்கு கொள்ளு வைக்கும் "மொக்கணி' என்ற பையில், யதார்த்தமாக மண்ணை
நிரப்பி ஒரு மரத்தடியில் புதைத்து வைத்தார். அதன் மீது மலர்களைத் தூவி
சிவலிங்கம் போலத் தோன்றும்படி செய்தார்.
நீராடி வந்த வணிகர் "அருகில் சிவன் கோயில் உள்ளதா'? என மைத்துனரிடம்
கேட்டார். அவர், கொள்ளுப் பையைக் காட்டி, ""இதோ! இங்கே இருக்கிறதே
சிவலிங்கம்!'' என்று கையைக் காட்டினார். வணிகரும் அதை சிவலிங்கமென்றே
கருதி வழிபட்டார். பிறகு சாப்பிடத் துவங்கும் போது, மைத்துனர் இவரைப்
பார்த்து, ""இன்று சிவதரிசனம் செய்யாமல்உண்ணத் துவங்குகின்றீரே,'
என்றார்.
""இப்போது தானே சிவபெருமானை வணங்கினேன்,'' என்றார் வணிகர். அதற்கு அவர்
""அது சிவலிங்கம் இல்லை,'' என்று கைகொட்டிச் சிரித்து, மண்ணில் புதைத்து
வைத்த கொள்ளுப்பையைத் (மொக்கணீயை) தூக்க முயன்றான். ஆனால், அது
அசையவில்லை. எனவே சுற்றிலும் மண்ணைத் தோண்டி அதை எடுக்க முயன்றான்.
அப்போதும் அதை அசைக்க முடியவில்லை. அந்த "மொக்கணி' லிங்கம் போல் மண்ணில்
ஊடுருவிக் காட்சியளித்தது. பக்தன் எந்தப் பொருளை சிவவடிவாக பார்த்தாலும்,
அதில் சிவபெருமான் எழுந்தருளுவார்,'' என்பது இதன் மூலம் உறுதிப்பட்டது.
சிவபெருமானின் கருணையை எண்ணி வணிகரும், அவருடைய மைத்துனரும் உள்ளம் உருகி
நின்றனர்.
மொக்கணி பையில் தோன்றிய அந்த சிவன் " மொக்கணீஸ்வரர்' என்ற திருப்பெயர்
பெற்றார். இத்தலம் "மொக்கணீசுரம்' எனப்பட்டது. பிற்காலத்தில்
இந்தக்கோயில் அழிந்து போனது. திருவாசகத்தில் கீர்த்த திருத்தாண்டகத்தில்
மாணிக்கவாசகர் ""மொக்கணீ அருளிய முழுத்தழல்மேனி சொக்கதாகக் காட்டிய
தொன்மையும்'' என இத்தலம் பற்றி பாடியிருந்ததை அடிப்படையாக வைத்து
மீண்டும் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இந்த
கோயிலுக்கு கொங்கு நாட்டு சிற்றரசர் பாலைய தேவ மகாராசா என்ற வானராச
உடையார் திருப்பணி செய்தார்.
சிறப்பம்சம்: சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம். மூலஸ்தானம்
முன்பு நின்று சுவாமி, அம்பாள் ஆகியோரை ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் தனி சந்நிதியில்
அருள்பாலிக்கிறார்.
எமபயம் நீக்கும் அம்பிகை: மொக்கணீஸ்வரர் கிழக்கு பார்த்தும், அம்பாள்
மீனாட்சி தெற்கு நோக்கியும் இருப்பதால் இந்த கோயில் பரிகார கோயிலாக
உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மனுக்கு நெய் விளக்கு
ஏற்றி, அரளிப்பூ மாலை சாத்தி வழிபட்டால் தீர்க்காயுளும் கிடைக்கும்.
திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தை பேறு, கல்வியில் மேம்பாடு,
வேலைவாய்ப்பு கிடைத்தல், உடல் ஆரோக்கியம் குடும்ப பிரச்னைகள் தீர்தல் ஆகி
நற்பலன்களும் கிடைக்கும். விவசாயம், கால்நடை செழிப்புக்கு
மொக்கணீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளை விவசாயிகள் செய்கின்றனர்.
மன அமைதிக்கு வழிபாடு: பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை
துரோகத்திற்கு ஆளானவர்கள் இங்கு சிவனை மன அமைதிக்காக பிரார்த்திக்கலாம்.
கோயில் அமைப்பு: முன் மண்டபத்தில் மாணிக்கவாசர், பிரகாரத்தில்
சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இத்தல விநாயகர்,
"மூத்த விநாயகர்' எனப்படுகிறார்.
இருப்பிடம்: கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 40
கி.மீ., தூரத்தில் புஞ்சை புளியம்பட்டி உள்ளது. அங்கிருந்து குட்டகம்
வழியாக சேவூர் செல்லும் சாலையில் 9 கி.மீ., தூரத்தில் கூளேகவுண்டன்புதூர்
உள்ளது. புளியம்பட்டியில் இருந்து பஸ்வசதி குறைவு என்பதால்
கார்களில்செல்லலாம்.
> பாடியவர்கள் : -
> முகவரி : அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழையகவுண்டன்புதூர் -
> 641 654. கோயம்புத்தூர் மாவட்டம்
>
கோயம்புத்தூர் எங்கே திருவாதவூர் எங்கே! கொங்கு நாட்டிலிருந்து
பாண்டிநாடு வந்து அப்பவே செட்டிலாகி இருக்கிறார்கள் போலும்.
மாணிக்கவாசகரின் தீந்தமிழைப் பார்த்தால், அவருக்கு முன்னமே ஓரிரு தலைமுறை
பாண்டிநாட்டில் வந்து நிலைபெற்று இருக்க வேண்டும். இந்திய தேசியம் என்பது
இப்படித்தான் உருவாகிறது. கன்னடம் பேசும் ஒரு குடும்பம் தமிழகம் வந்து
வீரசைவ மரபை தென்பாண்டி நாட்டில் நிலைபெற வைப்பது, அம்மொழியில் புலமை
பெற்று! இந்திய தேசியம் என்பதில் இப்படித்தான் ஏதாவதொன்றைத் தொட்டால்
இந்தியா முழுமையையும் தொட வேண்டிவரும்! ஆச்சர்யம்! இந்திய தேசிய
உருவாக்கலில் சமயத்தின் பணி அளப்பரியது!
நா.கண்ணன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Sep 5, 5:22 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> மின்தமிழ் அன்பர்களுக்கு
>
> திருப்பூர் அருகு (கூனிப்பாளையம் ரயிலடி?? கிழக்கு??)
> *சர்கார் பெரிய பாளையம்* என்னும் ஊரில் உள்ள கோயில்
> *குரக்குதளி *என *சுந்தரரால்* குறிக்கப் பெற்ற தேவார*வைப்பு*த் தலமாகும்
>
> இதனிலிருந்து 1908 ம் ஆண்டு படிஎடுக்கப் பெற்ற கல்வெட்டுகளில்
> (MER-Madras Epigraphical Reports) எண் 304 முதல் 312 வரை
> இதனில் 306 ம் எண் உடையதில் *வடுகபிள்ளை* பற்றிய குறிப்பு
> இருந்ததை நான் 1968 ல் கன்னிமாரா நூலகத்தில் கண்டதை குறித்துள்ளேன்.
> என் நினைவில் மாணிக்கவாசகருக்கு ஓர் படிமம் புதிதாக நிறுவப் பட்டது பற்றியது.
> அரசன் / ஆண்டு முதலியவை பற்றி குறிப்பு அதனில் இருந்ததா என இப்போது நினைவில்
> இல்லை
>
பிரெஞ்ச் நிறுவனம் பாண்டிச்சேரியில் இருக்கும்.
ழானிடம் கேட்போம்.
புலவர் செ. ராசுவிடமும் இருக்கலாம். கேட்கிறேன்.
நா. கணேசன்
> M E R என்பது ஒரு ஆண்டறிக்கை. இதனில் கல்வெட்டின் முழு வாசகமும் இருக்காது
> ஆனால் படியெடுத்த அந்த கல்வெட்டில் சொல்லப்பட்ட பொருள் பற்றி விவரங்கள்
> ஆங்கிலத்தில் இருக்கும் தமிழ் மொழியில் எழுதியதை டிரான்ஸ்லிடரேஷன்
> முறையில் மிகச்சரியான தமிழ் சொற்களை பயன்கொண்டு எழுதி இருப்பார்கள்
>
> மேலும்,
>
> மாணிக்கவாசகர் புத்தபிக்கு களுடன் வாதிட்ட வரலாறும் உண்டென்று குறித்
> திருந் தேன்
> இப்போது என் குறிப்புகளில் *சாரி புத்தன்* என்பது அவர் பெயர் என்றும் அவரைப்
> பற்றிய செய்தி
> ஒன்று நடுநாட்டு தேவாரப் பாடல் பெற்றத் தலமான *சோபுரம்* ( *தற்போது தியாகவல்லி
> *
> *என அழைக்கப் படுகின்றது.- கடலூரை அடுத்து தெற்காக /சிதம்பரத்திற்கு
> வடக்கு/ கடற்கரையில்*
> *அமைந்துள்ளது)* கல்வெட்டில் இருந்ததாகவும் காண்கின்றேன் கல்வெட்டு எண்
> முதலியவை
> ஏனோ காணவில்லை குறிக்க மறந்தேன் போலும்
>
> அன்புடன்
> நூ த லோ சு
> மயிலை
>
> 2011/9/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
மின்தமிழ் அன்பர்களுக்கு
On Sep 5, 10:35 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
குரக்குத்தளி:
479
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.
சுந்தரர் (7.47.2)
---------------
அருள்மிகு சுக்கிரீசுவரர் திருக்கோயில்
சர்க்கார் பெரிய பாளையம் பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
பெருந்துறைக்கு தென்மேற்கே 28 கி.மீ.
குரக்குத்தளி, குறும்பர்நாடு, நொய்யல் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 367
ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கியது. இங்குள்ள
மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் ஆவுடைநாயகி.
இராமாயணத்தில்வரும் சுக்கிரீவன் வழிபட்ட தலம். ஆதலால் குரக்குத்தளி
எனப்பெயர் பெற்றது. சுந்தரமூர்த்திசுவாமிகள் இத்தலத்தைக் குறும்பர்
நாட்டைச் சேர்ந்தது என்ற விவரத்தோடு கொங்கிற் குறும்பில் குரக்குத்
தளியாய் என ஊர்த் தொகையில் பாடியுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாகப்
போற்றப்படுகிறது. கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர், பாண்டியர், மைசூர்
உடையார் காலத்தைச் சேர்ந்தது. தொல்பொருள் ஆய்வுத் துறையிலுள்ள அழகிய
கற்றளி இக்கோயில்.
-----------------
http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_kurakkuthali.htm
கல்வெட்டில் ஈசுவரனை ‘ஆளுடைய பிள்ளை’ என்பதில்
ஆள் = மாணிக்கவாசகர்?
-------------------
அவ்வூர் குளம் பற்றிய கல்வெட்டு:
http://avinashikongunadu.blogspot.com/2011/03/blog-post_5108.html
செ. ராசு, கொங்குச் சமுதாய ஆவணங்கள், தமிழ்ப் பல்கலை,
தஞ்சை.
குரக்குத்தளி சுக்ரீசுவரர் பற்றிக் குறிப்பிடும் ஆவணம் ஒன்று:
http://kongukulagurus.blogspot.com/2009/09/23.html
நா. கணேசன்