"ழ"சிறப்பு

2,752 views
Skip to first unread message

Janu Tamil

unread,
Dec 25, 2012, 7:14:00 AM12/25/12
to mint...@googlegroups.com




உலகில் எம்மொழியிலும் “” என ஒலிக்க எழுத்தில்லை.  எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறதுஎன்பது வியப்புக்குறியதுஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போதுசில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள்  இல்லை.


என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம்ஜானகிஇது சமஸ்கிருத பெயர்நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளதுஇதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன்ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறதுதமிழில் இருப்பதோ 247 எழுத்துகள்ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லைஏன் என்றால்  ‘ஜ’  என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.


ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாதுசமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீஷ்ஜ்ஜெக்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம்உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம்கிறிஸ்துஅல்லாஹ்கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?  

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும்அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள்இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல்இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.


எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும்ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்திமலையாளம்தெலுங்கு என பல மொழிகளில் ,,,, எல்லாம் நான்கு நான்காக உள்ளனஇதனால் fun, bun போன்றவற்றை எழுதும் போது நமக்கு ஏற்படும் பிரட்சைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. pen, ben என்பதை தமிழில் எழுதும் போது பெண்ஃபெண் என்று நாமும் எதையாவது முயன்று பார்க்கிறோம்இவைகளை இலக்கணம் ஒத்துக் கொள்கின்றதா என்று தெரியவில்லைஆங்கில மொழி தமிழுடன் கலந்த காலத்திற்கு பிறகு எந்த தமிழ் இலக்கண மரபும் மாற்றியமைக்கப்படவில்லை என்பது உண்மைநமக்கும் முன் நிறைய தமிழறிஞர்கள் தனித்தமிழ் பற்றியெல்லாம் யோசனை செய்து உள்ளார்கள்அவர்களின் நிலைப்பாட்டுடன் நமது மொழியை மாற்றியமைக்க எவரும் துணியவில்லை.


மீண்டும் தொடங்கிட இடத்திற்கே வருவோம்உலகில் எம்மொழியிலும் “” என ஒலிக்க எழுத்தில்லைஆங்கிலத்தில் தமிழ் என்ற பெயர்சொல்லை Tamiழ் என்றா எழுதுகிறோம்?. இல்லையே Tamil, Thamil, Thamizh என்று எப்படி எப்படியோ எழுதிவிடுகிறோம்விக்கிப்பீடியா தமிழை ஆங்கிலத்தில் உச்சரிக்க [t̪ɐmɨɻ] என்று உச்சரிப்பு முறையை சொல்லிதருகிறதுகுறியீடுகளின் மூலம் எழுத்துகளின் ஒலியமைப்பினை மாற்றி உச்சரிக்க மற்ற மொழியில் வழி செய்கிறார்கள்மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் இருந்தும்தமிழர்கள் இருந்தும், 247 எழுத்துகள் இருந்தும் இன்று கூட நம் அண்டை மொழிகளிடம் எழுத்துகளை கடன் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது வெட்கமானது இல்லையா?. தமிழின் தலைவர்கள் இத்தனை பேர் இருந்தும்உலகின் அறிவான இனம் என்ற பெருமை இருந்தும்இது இகழ்வானது இல்லையா?. மேலும் மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும்மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது என்கிறது விக்கிப்பீடியா.


சரியான புரிதல்கள் இன்றி தமிழை ஆதிகாலத்தின் நிலையிலேயே நாம் வைத்திருக்க முடியாதுவழக்கொழிந்து செல்லாமல் இருக்க பிற மொழியின் எழுத்துகளை தமிழில் பயன்படுத்துவதையும் ஏற்கமுடியாது














k.Janaki., M.A.,B.Ed., M.phil.,

seshadri sridharan

unread,
Dec 25, 2012, 10:07:02 AM12/25/12
to mint...@googlegroups.com
janaki > ஜனகி என்றும் ஒலிப்பு வருகிறதே ஆனாலும் எப்படியோ நாம் ஜானகி என படித்துவிடுகிறோம். ழகரம் மலையாளம்,சிங்களம் ஆகியமொழிகளிலும் உண்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் 10 ஆம்நூற்றாண்டில் ழகரம் இருந்தது, இன்று ஏன் இல்லை. அத்தகு ஒலிப்பு இப்போது ல கரமாகிவிட்டது தான் காரணம். 

ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதிகப்படியான எழுத்து அம்மொழியை உருக்குலைத்துவிடும் என்பதால்.
 .
சேசாத்திரி       

2012/12/25 Janu Tamil <januta...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

S NEELAKANTAN

unread,
Dec 25, 2012, 11:12:01 AM12/25/12
to mint...@googlegroups.com
 பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும்  
 போது
 ஸ்ரீஷ்ஜ்
ஜெக்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம்

 தடுமாறி்க் கொண்டிருக்கிறோம்

 "ஏன் தடுமாறவேண்டும் "

  வடமொழி எழுத்துகள் இருக்கும் சமயத்தில் அதை உபயோகிப்பதால்  தமிழின் தனித்தன்மை குறைந்து விடும்

  என்று ஏன் எண்ண  வேண்டும் என்று எனக்கு புரியவில்லை ஒரு மொழி நிலைக்கவேண்டும் என்றால் பிறமொழி

  எழுத்துக்களையும்  வார்த்தைகளையும் கலப்பதில் ஒரு தவறும் இல்லை. " கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன்

  தோன்றிய மூத்த குடி" என்று  தமிழர்களை பற்றி பெருமை கொள்ளும்போது அடந்த தமிழ் குடியினர் பேசும் தமிழ் 

  மொழியில்  மாற்றங்கள் செய்யவேண்டும்   வேற்றுமொழி வாத்தைகளையும் , எழுத்துகளையும் உபயோகிக்கவேண்டும்

  ஆரியம்  திராவிடம் என்று பிரித்துப் பேசுவதினால் மட்டும்   தமிழ் வளரப்போவதில்லை 

 

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)


2012/12/25 seshadri sridharan <ssesh...@gmail.com>

Pandiyaraja

unread,
Dec 25, 2012, 3:34:10 PM12/25/12
to mint...@googlegroups.com
அம்மா ஜானகி,
தாங்கள் இன்னொரு இழையில் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதில் முதல் நூற்பாவே,
 
எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
 
என்றுதானே இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் 30 + 1 ஆய்தம் = 31 தான். அப்புறம் 247 என்று நீங்களே கூறுகிறீர்களே  எப்படி?
உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு வசதிதான் . அவற்றை எழுத்துரு எனலாம். அவற்றை மனப்பாடம் செய்துதான் ஆகவேண்டும். எல்லா மொழிகளிலும் இவ்வாறு  மனப்பாடம் செய்பவை நிறைய உண்டு. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்தான் என்கிறீர்களே. ஸன்ஸ் ரேஸ் என்பதை, son's race அல்லது sun's rays என்று இருவிதங்களில் எழுதலாம். எனவே நீங்கள் சொல்வதை வைத்து ஆங்கிலத்தில் எழுதமுடியாது. context தெரியவேண்டும். நோ என்பதை எப்படி  எழுதுவீர்கள் No or know ? பிராக்டிஸ் என்பதற்கு, அது பெயரா அல்லது வினையா என்பதைப் பொருத்து c அல்லது s போடவேண்டும். இந்த மாதீரி எத்தனை விதிகளை நீங்கள் ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்யவேண்டும் தெரியுமா? இது ஒரு குழப்பம் என்றால் அதைவிடப் பெரிய குழப்பம் இன்னும் வருகிறது. அது Spelling. ஒரு நபர் தன் வாழ்வின் இறுதிவரையில் மனப்பாடம் செய்துகொண்டே இருக்கவேண்டும். குஷன் = cushion; நேஷன் = nation; விஷன் = vision; பேஷன் = passion; ஐயையோ கண்னைக் கட்டுதடா சுவாமி என்று எந்த வெள்ளைக்காரனும் அங்கலாய்த்துக்கொள்வதில்லை. இன்னும் இருக்கிறது. அது pronunciation. one = ஒன்; cone = கொன் தானே, அதைக் கோன் என்கிறோம். done = டன்; gone = (ங்)கான். இப்படி one என்பதனோடு ஒரு மெய்யெழுத்தை முதலில் சேர்க்க ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொருவிதமாக உச்சரிக்க வேண்டும். இப்படி, நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மனப்பாடம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது  ஆங்கிலத்தில். தமிழில் இப்படியா? ஆங்கிலத்தில் எழில் என்பதை எப்படி எழுதிப் படிக்கிறார்கள்? ஏன் இந்தியில்கூட எழுதமுடியாது. என் மகள் பொன் எழில் என்பதை போன ஏலில என்றுதான் தேவநாகரியில் எழுதமுடியும். இப்பொழுதுதான் கோட்டைப்போட்டு போன் ஏலில் என்கிறார்கள். ஆங்கிலத்திலும் சுத்தமாய் முடியாது. இன்னும் சொல்லலாம். ஆங்கிலத்தில் குறில்/நெடில் பாகுபாடு கிடையாது. கலாவதி - Kalavathi என்றாகி- அதனைக் காலாவதி என அமெரிக்க ஆங்கில ஆசிரியர்கள் அழைத்து. தலைக்குனிவை ஏற்படுத்தினார்கள். நம் நெடுநல்வாடையையே ஆங்கிலத்தில் எழுதி நெடுநாள்வடை என்று சொல்லிச் சிரித்ததில்லையா? Ramesh = ரமேஷ், Rajesh = ராஜேஷ்  எப்படி? ரஜேஷ் தானே அல்லது முதலாவது ராமேஷ் தானே. இந்தமாதிரியான ஒரு மொழியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட நம் ஒருவரால்தான் முடியும்? பிரஞ்சுக்காரனைக் கேட்டுப்பாருங்கள். என் பெயர் கூடப் பாண்டியராஜா தான். என் அப்பா வைத்த பெயர். ஜ, ஷ, ஹ போன்றவை, தமிழ்நாட்டுச் சாதிச் சனியன்கள் போன்றவை. ஒட்டிக்கொண்டுவிட்டன. உதறமுடியவில்லை. இதற்கும் ஒரு தீர்வு கண்டால் நல்லது. ஆனால், அதனால் தாழ்வு மனப்பான்மை தேவை இல்லை. தலைநிமிர்ந்து நில்லுங்கள்.
ப.பாண்டியராஜா

On Tuesday, December 25, 2012 5:44:00 PM UTC+5:30, Janu Tamil wrote:



உலகில் எம்மொழியிலும் “” என ஒலிக்க எழுத்தில்லை.  எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறதுஎன்பது வியப்புக்குறியதுஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போதுசில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள்  இல்லை.


என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம்ஜானகிஇது சமஸ்கிருத பெயர்நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளதுஇதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன்ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறதுதமிழில் இருப்பதோ 247 எழுத்துகள்ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லைஏன் என்றால்  ‘ஜ’  என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.


ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாதுசமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீஷ்ஜ்ஜெக்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம்உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம்கிறிஸ்துஅல்லாஹ்கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?  

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும்அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள்இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல்இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.


எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும்ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்திமலையாளம்தெலுங்கு என பல மொழிகளில் ,,,, எல்லாம் நான்கு நான்காக உள்ளனஇதனால் fun, bun போன்றவற்றை எழுதும் போது நமக்கு ஏற்படும் பிரட்சைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. pen, ben என்பதை <font face=""Latha","...
Show original

seshadri sridharan

unread,
Dec 25, 2012, 9:28:53 PM12/25/12
to mint...@googlegroups.com
நிறை, குறை உள்ள மொழிகள் தாம் எல்லா உலக மொழிகளும். உலகிலேயே ஒலிப்பில் சிறப்பு வாய்ந்தவை இந்திய மொழிகள். க் + அ = க ,தமிழ் இலக்கணத்தில் மெய் எழுத்துகளுக்கு ஏற்பு (அங்கீகாரம்) உண்டு ஆனால் மற்ற இந்திய மொழிகள் சமற்கிருதத்தை அடிப்படையாக கொள்வதால் மெய் எழுத்திற்கு ஏற்பு இல்லை ஆனால் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் போது   க் + அ = க என்கிறார்கள். இது எப்படி என எந்த அறிஞனும் இதுவரை கேள்வி எழுப்பியதில்லை. இதனால் அம்மொழிகளில் மெய் எழுத்தை பாதியாகவோ, ஒரு எழுத்தின் கீழ் சிறிதாகவோ எழுதுகிறார்கள். 

தெலுங்கு, கன்னடம், மலையாளம்போன்ற மொழிகளில் த்ர,க்ய போன்ற எழுத்துகளை எழுத தனிக்குறிகளை கொண்டுள்ளார்கள். ஆக இம்மொழிகளை படிக்கும் பிள்ளைகள் அல்லது அயலார் கூடுதல் குறிகளையும் அறிய வேண்டியுள்ளது.  தமிழில் இந்த இடர் இல்லை ஒரே ஒரு புள்ளியை மேலேயிட்டால் போதும் விளங்கிவிடும்.. 

ஆக குறையில்லாத மொழியே உலகில் இல்லை என்பதை ஜனகீ உணர்வாராக!

சேசாத்திரி     

2012/12/26 Pandiyaraja <pipi...@gmail.com>

தேமொழி

unread,
Dec 26, 2012, 1:34:27 AM12/26/12
to mint...@googlegroups.com

நம் தமிழில் நமக்கு கிடைத்த மிகச் சிறந்த எழுத்தே ஆய்த எழுத்துதான் 

ஃ எழுத்தை நாம் அதிகம் ஏனோ உபயோகிப்பதில்லை.

புதுப் புது ஒலிகளுக்கு ஏற்றவாறு கூட்டு எழுத்துக்களை உருவாக்க நமக்கு கிடைத்த  ஆயுதம் அந்த எழுத்து.  

நாம் அறிவுபூர்வமாக மற்ற மொழிகளில் உள்ள ஒலி  உச்சரிப்புக்கு ஏற்றவாறு புதுக்  கூட்டெழுத்துக்களை உருவாக்க 'ஃ' எழுத்தை திறமையாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சமஸ்கிரதம் மட்டுமல்ல பிற உலகமொழிகள் உள்ள சில ஒலிகளை நமக்கு உச்சரிக்க  புதிய தமிழ் எழுத்துரு தேவை.  உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களில் ஒரு குறிப்பிட்ட தகுந்த ஒலி  நமக்கு கிடைக்கா விட்டால் நாம் புலம்பக் கூடாது.  நமக்குக்  கிடைத்த ஆயுதத்தை கையில் கொண்டு புதிது படைக்க வேண்டும்.  நம் மொழியில் புதுமை புகுத்த நாம் என்றுமே தயங்கக் கூடாது. 

ஒரு உதாரணம்  zen; இது போன்ற சில சீன ஜப்பானிய எழுத்தொலியைக் குறிக்கும் z எழுத்தும் நம்மிடம் இல்லைதான்.  

ஆனால், phone = ஃபோன், fan = ஃபான், fine = ஃபைன்  என 'ph' மற்றும் 'f'  ஒலியைக் ஃ உதவியுடன் குறிக்கிறோம்.

இதனைப் போன்ற அடிப்படையில் புது ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை உருவாக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் நமக்கு.

ஃ எழுத்தின் முழுத் திறனையும் நாம் வெளிக்கொணர வேண்டும்.  

சமஸ்கிரத எழுத்துக்கள் என்ன, எந்த மொழி எழுத்துக்களின் ஒலியையும் நாம் உருவாக்கினால்  தமிழ்  வலைந்து கொடுத்து அனுசரித்து செல்லும் மொழியாக இருக்கும்.  

எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழ்  மொழியை சுலபமாக்க கொண்டுவந்த நடைமுறை வழக்கை செரிமானம் செய்ய முடியாதவர்களுக்கு நான் சொல்லுவது வேடிக்கையாக, உளறலாக தோன்றலாம்.  

ஆனால் காலம் காலமாக தமிழ் எழுத்தகள் அடைந்த பரிணாம வளர்ச்சியை உணர்ந்தால் ஏன்  கூடாது? என்ற கேள்வியும் தானே பதிலாகக் கிடைக்கும்.

 

பிறமொழி எழுத்தோசைகளை  தமிழில் எழுத ஃ உபயோகம் இன்றியமையாதது.  
 
 

...  தேமொழி


On Tuesday, December 25, 2012 4:14:00 AM UTC-8, Janu Tamil wrote:



உலகில் எம்மொழியிலும் “” என ஒலிக்க எழுத்தில்லை.  எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறதுஎன்பது வியப்புக்குறியதுஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போதுசில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள்  இல்லை.


என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம்ஜானகிஇது சமஸ்கிருத பெயர்நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளதுஇதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன்ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறதுதமிழில் இருப்பதோ 247 எழுத்துகள்ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லைஏன் என்றால்  ‘ஜ’  என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.


ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாதுசமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீஷ்ஜ்ஜெக்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம்உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம்கிறிஸ்துஅல்லாஹ்கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?  

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும்அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள்இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல்இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.


Dhivakar

unread,
Dec 26, 2012, 2:06:32 AM12/26/12
to mint...@googlegroups.com
தேமொழி!

ஃபைன்!! 

சரி,  'F' வரும்போது ‘ஃ’  ஆயுதஎழுத்தை ப’ எழுத்துக்கு முன்னால் பயன்படுத்துகிறோம்.. ஏனைய சொற்களுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் உங்கள் கருத்தை உலவவிடுங்களேன்.. இங்கே உள்ள தமிழறிஞர்களும் உதவுவார்கள் என நினைக்கிறேன்.
உதாரணத்துக்கு

பனிபூஷனம் - 'Ph'anibhushanam - இதை எப்படி எழுதுவது? நாம் இந்த பெயரைப் படிக்கும்போது panibhushanam என்றுதான் படிக்கிறோம். பொருள் மாறிவிடுவதைக் கவனிக்கவில்லை.. ஒரிஜினல் பெயரில் உள்ள பனி என்பது பாம்பு என்பதாகும்.. நாகத்தை ஆபரணமாகக் கொண்டவன் என்று பொருள். ஆனால் நாம் சாதாரணவிளிக்கும்போது அதன் பொருள் SNOW இல்லையென்றால் நல்ல தமிழில் ‘ஈரம் செறிந்த காற்றுத் தெளி’ என்று பொருள் வருகிறது. ஸ்நோவுக்கும் நாகத்துக்கும் என்ன சம்பந்தம்?

எல்லாவற்றையும் விட இந்த ‘ப’ தான் paயமுறுத்துகிறது, இல்லை bhaயமுறுத்துகிறது. இன்னமும் பத்மா’வை நாம் bhaத்மா என்றே கூப்பிட்டுப் பழகிவிட்டோம்.. 

இதற்கெல்லாம் ஒரு வழி சொல்லலாம்.. தனித்தமிழ் ஆர்வலர்களைக் கேட்டால் நீ ஏன் அந்தப் பெயரை வைக்கிறாய் எனத் திருப்பிக்கேட்பார்கள். தாமரை என வைத்துவிட்டுப் போயேன் என்பார்கள். நம்மூரில் வேண்டுமெனில் அப்படி வைத்துக் கொள்ளலாம். பக்கத்து மாநிலத்தாரை அப்படி மாற்றிவிடமுடியாதல்லவா.. அவர்களை எப்படிக் கூப்பிடுவது?

இதைப் போல பல எடுத்துக் காட்டுகள் தமிழில் சொல்லலாம்.. ஆனாலும் நாம்தான் பிடிவாதக் காரர்கள் ஆயிற்றே.. நாம் பிடிக்கும் முயல் எப்போதுமே வித்தியாசமானது

 
 


2012/12/26 தேமொழி <them...@yahoo.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Dec 26, 2012, 4:01:00 AM12/26/12
to mint...@googlegroups.com
ஐயா:

ஆச்சர்யமான வகையில் உங்களிடமிருந்தொரு இப்படியொரு மடல். நீண்ட நாள்
ஆதங்கம் என்று புரிகிறது. மொழிகள் சில தேவைகள் குறித்து உருவாகின்றன.
குறிப்பாக ஒருவன் வாழும் சூழலை நன்கு புரிந்து கொண்டு அதன் வளங்களை
நுகரவும், அவை தரும் இன்னல்களிலிருந்து தப்பிக்கவும் அடிப்படை நிலையில்
மொழிகள் உதவுகின்றன. எஸ்கிமோ மொழியில் பனியின் சாகைகளைச் சொல்ல மட்டும்
100க்கும் மேல் சொற்கள் உள்ளனவாம். தமிழில் வெக்கையைக் குறிக்க ஒரு 20
வார்த்தைகளாவது இருக்காதா? ஏன் எஸ்கிமோ மொழியில் சூட்டிற்கு வார்த்தை
இல்லை எனக்கேட்கக்கூடாது. அதே போல் நம் ஆட்களிடம் பனியின் பருவநிலைகள்
என்ன? என்று வினவுதல் கூடாது. பிரக்ஞை குறித்த சொல்லாக்கத்தில்
சமிஸ்கிருதம் அதிகச் சொற்களைக் கொண்டுள்ளதாகப் படித்த ஞாபகம்.

நாம் திணை வகுந்து வாழ்ந்த வாழ்வியல் இப்போது மாறிவிட்டது. திணைத்தாவல்
தினப்படியாகிவிட்டது. இச்சூழலில் பல்வேறு மொழிகளின் கலப்பும்
தவிர்க்கவியலாது போய்விட்டது. இச்சூழலில்தான் நமக்கிந்த மொழி மயக்கம்
வருகிறது. ஒரு மொழியில் ஒரு சொல் உருவான ஆதிக்காரணம் என்னவென்று கண்டால்
நாம் இன்னொரு மொழியுடன் ஒப்பு நோக்க மாட்டோம். மனிதர்கள் எப்படி
தனித்துவத்துவத்துடன் விளங்குகின்றனரோ அதே போல் மொழிகளும் தனித்தன்மை
கொண்டு விளங்குகின்றன. தனித்தன்மை கொண்ட மனிதனும் அடிப்படையில் பிற
உயிரிகளுடன் உறவு கொண்டுள்ளது போல எல்லா மொழிகளும் ஏதே ஒருவகையில்
தொடர்புடையனவாகவும் உள்ளன.

நாம் நினைப்பதைவிட வாழ்வின் முடிச்சுக்கள் ஆழமாகவும், அடர்த்தியாகவும்,
பிரிக்கமுடியாமலும் உள்ளன. புதிய வாழ்க்கைக்கு எப்படி நாம் நம்மை
மாற்றிக்கொண்டுள்ளோமோ அதே போல் மொழியும் தன்னளவில் மாறி இடம் கொடுக்கும்.
கூர்ந்து கவனித்தால் புரியும். பேண்ட், ஷர்டுக்கு நாம் மாறிவிட்டாலும்
ஆங்கிலேயன் ஆங்கிலேயன்தான், தமிழன் தமிழன்தான். இதுவும் உண்மை. இதுதான்
வாழ்வு!

நா.கண்ணன்

2012/12/25 Pandiyaraja <pipi...@gmail.com>:


> அம்மா ஜானகி,
> தாங்கள் இன்னொரு இழையில் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதில்
> முதல் நூற்பாவே,
>
> எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
>
> என்றுதானே இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் 30 + 1 ஆய்தம் = 31 தான். அப்புறம்

> 247 என்று நீங்களே கூறுகிறீர்களே எப்படி?. என் பெயர் கூடப் பாண்டியராஜா

தேமொழி

unread,
Dec 26, 2012, 4:42:57 AM12/26/12
to mint...@googlegroups.com

செய்யலாம் ...யோசிக்க வேண்டும். முடிந்தால், தமிழறிஞர்கள் துணை இருக்கும் பொழுது முடியாதது என்ன?

இதில் கருத்தில் கொள்ள வேண்டியது பின் வரும் குறிப்புகள்:

(1)

சில ஓசைகள் சமீபத்தில் சுபா  பகிர்ந்து கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்கள் கட்டுரையில் காணப்பட்டது போல வார்த்தைக்கு முதல், இடை, கடை நிலைகளுக்கு  ஏற்ப தானே ஒலியில் மாறுபடுகிறது.  அதை நாமே நம்மை அறியாமல் சரியான ஓசையில்தான் உபயோகித்து வந்திருக்கிறோம்.

உதாரணம்: ப இடத்திற்கு ஏற்றவாறு கொள்ளும் ஓசை

பணம், பறவை   - முதல் எழுத்து P ஓசை 

அன்பு, அம்பு  - கடை எழுத்து B ஓசை , குறிப்பாக ஒரு மெல்லின மெய் எழுத்தை  அடுத்து வரும்பொழுது 

படைப்பு, வார்ப்பு - அதே கடை P  எழுத்து , குறிப்பாக ஒரு வல்லின  மெய் எழுத்தை  அடுத்து வரும்பொழுது 

மாம்பழம், பலாப்பழம் என்று சொல்லும் பொழுது மேலே குறிப்பிட்ட முன் வரும் அதே வல்லின மெல்லின எழுத்திற்கு  ஏற்றவாறு  B  மற்றும் P ஓசைகள்.

எனவே அடுத்து நிற்கும் எழுத்து கொண்டு உச்சரிப்பிற்கு ஏதோ ஒரு விதி இருக்கிறது.  எனக்குத் தெரியவில்லை அது என்ன என்று.  

மொழி அறிஞர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் இது தெரிந்திருக்கக் கூடும். 

இந்த விதிகளையும் அடிப்படையாகக்  கொள்ள வேண்டும். 
 
இதே விதிகளைத்தான் பிறமொழிச் சொற்களுக்கும் உபயோகப் படுத்துகிறோம் என நினைக்கிறேன் 
 

ஃ ப்ஹ, ஃப போன்றவற்றிற்கு ஃஉபயோகித்து விடுகிறோம் 

நீங்கள் குறிப்பிடும் "பனிபூஷனம்" உச்சரிப்பு இதற்குள் அடங்கக் கூடுமா?

இது போல ச, த என பல எழுத்துக்கள்  இடத்திற்கு இடம் ஒலி யில் வேறுபடுகிறது.

...

(2)

ஃ எழுத்துக்கு முன் அல்லது பின் வரும்பொழுது எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று ஒரு பொது விதி நிர்ணயிக்க வேண்டும் 

...

(3)

அத்துடன் காலத்திற்கேற்றவாறு தட்டச்சு பலகையில் வெறுமனே உள்ள சில எழுத்து உருக்கள் (ஆனால் கணிதத்தில் பயன்படும்) \ / ^~> < | போன்றவற்றையும் உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் 

...

(4)

ஆங்கிலத்தில் ஃ போனெடிக் ஒலி முறைப்படி எழுவதற்கு எழுத்துக்கள் மேலே கீழே என்று கோடுகள் போட்டு ஒரு முறை இருக்கிறதே அதை தமிழ் மொழி வழக்கத்திற்கு கொண்டு வந்து விரிவாக்க வேண்டும் 

...

(5)

பிறமொழி பெயர்ச் சொற்களை தமிழ் படுத்துகிறேன் என்று கொலை செய்வதை நிறுத்த வேண்டும்.  அது அந்த நாட்டிற்கோ அல்லது மொழிக்கோ உள்ள சிறப்பு . அதனால் அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். வினைச்  சொற்களுக்கு மட்டும் தகுந்த பதம் கண்டு பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் 

[என் பாட்டி பெயர் லக்ஷ்மி, அம்மா பெயர் ஜானகி இந்தப்  பெயர்களைத் தவறாக உச்சரிக்க எனக்கு விருப்பம் இருந்ததில்லை]

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  ேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் ெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத</fon...
Show original

N. Kannan

unread,
Dec 26, 2012, 4:59:31 AM12/26/12
to mint...@googlegroups.com
2012/12/26 தேமொழி <them...@yahoo.com>:

> ஃ ப்ஹ, ஃப போன்றவற்றிற்கு ஃஉபயோகித்து விடுகிறோம்
> நீங்கள் குறிப்பிடும் "பனிபூஷனம்" உச்சரிப்பு இதற்குள் அடங்கக் கூடுமா?
> இது போல ச, த என பல எழுத்துக்கள் இடத்திற்கு இடம் ஒலி யில் வேறுபடுகிறது.
>
> ...

எல்லா மொழிச்சொற்களையும் தமிழில் எழுத வேண்டும் என முயலுவது தமிழின்
இயல்பை மாற்றிவிடும் என்று எண்ணுகிறேன். சமிஸ்கிருதம் ‘செய்யப்பட்ட’ மொழி
என்ற சொல்லப்படுவதுண்டு. அது செம்மொழியாக இருக்க வேண்டுமென முயன்று
உருவாக்கப்பட்டதோ? என்ற கேள்வி? ஆனால் தமிழ் தொன்றுதொட்டு, கம்பன்
சொல்வது போல், ‘என்றுமுள தமிழ்’ ஆக உள்ள மொழி. ஒரு பேச்சுத்தொடர்ச்சி
உள்ள மொழி. இயற்கையான மொழி. பிற மொழிச் சொற்களை தமிழில் பலுக்க
இயலவில்லையெனில் பரவாயில்லை.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

இதை நாம் பலுக்குவது போல், எழுதுவது போல் வேறொரு மொழியில் எழுத முடியுமா?
அப்படியெல்லாம் யாரும் முயலுவதாகத்தெரியவில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ள
வேண்டும்?


> பிறமொழி பெயர்ச் சொற்களை தமிழ் படுத்துகிறேன் என்று கொலை செய்வதை நிறுத்த
> வேண்டும். அது அந்த நாட்டிற்கோ அல்லது மொழிக்கோ உள்ள சிறப்பு . அதனால்
> அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். வினைச் சொற்களுக்கு மட்டும் தகுந்த
> பதம் கண்டு பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்
>
> [என் பாட்டி பெயர் லக்ஷ்மி, அம்மா பெயர் ஜானகி இந்தப் பெயர்களைத் தவறாக
> உச்சரிக்க எனக்கு விருப்பம் இருந்ததில்லை]
>

ஏற்புடைய கருத்து. நம் உணவு, நம் பெயர்கள் அனைத்தும் உள, உடல்
ஆரோக்கியத்தை மனதில் கொண்டு உருவானவை. பெயர்களுக்குப் பின்னால் ‘பீஜ
மந்திரங்கள்’ உள்ளன. எனவே உள்ளது உள்ளபடி பலுக்குதல் நல்லது.
(சமிஸ்கிருதம் வேற்றுமொழி என நான் நினைப்பதில்லை. எனக்கு சமிஸ்கிருதம்
தெரியாது. ஆனால் அது இந்த மண்ணின் மொழி எனும் உணர்வுண்டு)

நா.கண்ணன்

Pandiyaraja

unread,
Dec 26, 2012, 5:22:26 AM12/26/12
to mint...@googlegroups.com
அடுத்த மொழியில் உள்ள பெயர்களை எல்லாம் அவர்கள் உச்சரிப்பிலேயே தமிழில் எழுதவேண்டும் என்று கவலைப்படுகிறவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். தமிழ்ப் பெயர்களை - நெடுஞ்செழியன் - கிள்ளிவளவன், தேன்மொழி - போன்றவற்றை எழுதுவதற்காக இதுவரை எத்தனை மொழிக்காரர்கள் தங்கள் மொழிகளில் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டீர்களா? வந்தாரை வாழவைப்பதிலேயே வழுக்கை மண்டையாகிப் போய்விட்டதுதான் மிச்சம்.
என்ன செய்வதூ?
ப.பாண்டியராஜா

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  ேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் ெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத</fon...
Show original

Kamala Devi

unread,
Dec 26, 2012, 10:02:05 AM12/26/12
to mint...@googlegroups.com
நன்றி, நன்றி.
க.
 

From: N. Kannan <navan...@gmail.com>


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
இதை நாம் பலுக்குவது போல், எழுதுவது போல் வேறொரு மொழியில் எழுத முடியுமா?
அப்படியெல்லாம் யாரும் முயலுவதாகத்தெரியவில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ள
வேண்டும்?
> பிறமொழி பெயர்ச் சொற்களை தமிழ் படுத்துகிறேன் என்று கொலை செய்வதை நிறுத்த
> வேண்டும்.  அது அந்த நாட்டிற்கோ அல்லது மொழிக்கோ உள்ள சிறப்பு . அதனால்
> அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். வினைச்  சொற்களுக்கு மட்டும் தகுந்த
> பதம் கண்டு பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்
>ஏற்புடைய கருத்து. நம் உணவு, நம் பெயர்கள் அனைத்தும் உள, உடல்
ஆரோக்கியத்தை மனதில் கொண்டு உருவானவை. பெயர்களுக்குப் பின்னால் ‘பீஜ
மந்திரங்கள்’ உள்ளன. எனவே உள்ளது உள்ளபடி பலுக்குதல் நல்லது.
(சமிஸ்கிருதம் வேற்றுமொழி என நான் நினைப்பதில்லை. எனக்கு சமிஸ்கிருதம்
தெரியாது. ஆனால் அது இந்த மண்ணின் மொழி எனும் உணர்வுண்டு)

நா.கண்ணன்

Karuannam Annam

unread,
Dec 26, 2012, 10:32:28 AM12/26/12
to mint...@googlegroups.com
பலரும் பல காலம் எழுதிவரும் தலைப்பு.
1.ஒலிக் குறையொன்றும் இல்லை என்று மூதறிஞர் கட்டுரை நமது இழைகளில் சில நாட்களுக்கு முன் படித்தேன்.

2. ஆயிரக் கணக்கில் பிறமொழிச் சொற்களை எப்படி வேற்று எழுத்து இல்லாது கையாளுவது என்பதைப் பதினாயிரம் பாடல்களில் கம்பராமயணமும் பக்தி இலக்கியத்தில் பல நூறு பாடல்களும் நமக்குக் காட்டியுள்ளன.

4.குழுமத்தில் பலரும் இயல்பாகப் பிறமொழி  கலவாது எழுதுவதைக் காண்கிறேன்.சிலர் ப்ரார்த்தனை, ப்ரயத்தனம் என்றும் ஆங்கிலம் கலந்தும் சென்னை மொழியென்றும் எழுதும்போது வலிந்து எழுதுவதைக் காணமுடிகிறது.

5. பெயர்ச்சொற்களுக்கு மட்டும் ஒலிப்பு வேண்டுமென்றால் ஏற்கனவே பயன்படுத்தும் ஷ,ஜ,ஹ எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.
இயன்றவரை கலப்பின்றி எழுத முயலலாம்.

4.புற்றீசல் போன்ற ஆங்கிலப் பள்ளிகளாலும் ஆங்கிலப் பள்ளியில் கற்றால் பிள்ளைகள் எதிர்காலம் சிறக்கும் என்ற எண்ணமிருப்பதாலும் தமிழ்வழிக் கல்வி அருகி வருகிறது. இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும் குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற வழிவகை காண்போம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


2012/12/26 Dhivakar <venkdh...@gmail.com>

ஃபைன்!! 
பனிபூஷனம் - 'Ph'anibhushanam - எப்படி எழுதுவது? 
எல்லாவற்றையும் விட இந்த ‘ப’ தான் paயமுறுத்துகிறது, இல்லை bhaயமுறுத்துகிறது. இன்னமும் பத்மா’வை நாம் bhaத்மா என்றே கூப்பிட்டுப் பழகிவிட்டோம்.. 
நாம் பிடிக்கும் முயல் எப்போதுமே வித்தியாசமானது
 
 தேமொழி <them...@yahoo.com>
அத்துடன் காலத்திற்கேற்றவாறு தட்டச்சு பலகையில் வெறுமனே உள்ள சில எழுத்து உருக்கள் (ஆனால் கணிதத்தில் பயன்படும்) \ / ^~> < | போன்றவற்றையும் உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் 

ஆங்கிலத்தில் ஃ போனெடிக் ஒலி முறைப்படி எழுவதற்கு எழுத்துக்கள் மேலே கீழே என்று கோடுகள் போட்டு ஒரு முறை இருக்கிறதே அதை தமிழ் மொழி வழக்கத்திற்கு கொண்டு வந்து விரிவாக்க வேண்டும்.



 
 


கி.காளைராசன்

unread,
Dec 26, 2012, 11:16:43 AM12/26/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/12/26 Karuannam Annam <karu...@gmail.com>

2. ஆயிரக் கணக்கில் பிறமொழிச் சொற்களை எப்படி வேற்று எழுத்து இல்லாது கையாளுவது என்பதைப் பதினாயிரம் பாடல்களில் கம்பராமயணமும் பக்தி இலக்கியத்தில் பல நூறு பாடல்களும் நமக்குக் காட்டியுள்ளன.

5. பெயர்ச்சொற்களுக்கு மட்டும் ஒலிப்பு வேண்டுமென்றால் ஏற்கனவே பயன்படுத்தும் ஷ,ஜ,ஹ எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.
இயன்றவரை கலப்பின்றி எழுத முயலலாம்.

தங்களது கருத்தே எனது கருத்தும்.
 
4.இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும் குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற வழிவகை காண்போம்.
குட்டையை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்பியாச்சு. 
தமிழ்மொழி நமது அனைவருக்கும் பொதுவானது.
சங்கம் வைத்து ஆய்ந்தறிந்து உருவாக்கப் பெற்ற மொழி,

ஏதேதோ காரணங்களைக் கற்பித்து நாமே நமது மொழியைச் சிதைக்க நினைத்தால் என்ன சொல்வது?
என்ன செய்வது?

54வருடத்திற்கு முன் பிறந்த எனது பெயரை  காளைரான் என்று நான் எழுத வேண்டும் காரணத்திற்காக  5000 வருடத்திற்கும் முன் உருவான மொழியைச் சிதைக்க எனக்கு மனம் இல்லை. எனது பெயரைக் காளைரான் என்றே எழுதிவருகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்.

S NEELAKANTAN

unread,
Dec 26, 2012, 11:47:35 AM12/26/12
to mint...@googlegroups.com
தங்களுடைய பெயரை காளைராஜன் என்று சொல்வதால் தமிழின் தனித்தன்மை அழியப்போவதில்லை
தமிழ் சிதையவும் போவதில்லை உங்கள் விருப்பம் எதுவொ அதை பயன் படுத்தவும் யாரும் உங்களை
கட்டாயப் படுத்தவில்லை 
ராஜ ராஜ சோழன் என்பதை ராச ராச சோழன் என்று சொல்வதில்லை தனித்தன்மை என்ற பெயரில்
குட்டையை குழப்பாமல் மொழியை அதன் போக்கில் விட்டுவிட்டால் தமிழ் நன்றாக வளரும் என்ற நம்பிக்கை

இன்னும் இருக்கிறது 
  

S.Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)


2012/12/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--

Karuannam Annam

unread,
Dec 26, 2012, 11:56:03 AM12/26/12
to mint...@googlegroups.com


2012/12/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>

ஏதேதோ காரணங்களைக் கற்பித்து நாமே நமது மொழியைச் சிதைக்க நினைத்தால் என்ன சொல்வது?
என்ன செய்வது?

வணக்கம் திரு காளைராசன்.
 
ஆமையைச் சிலர் தடி கொண்டு மேலோட்டில் தாக்கினராம். முடியவில்லை. வழியில் சென்றவர் தெரியாத்தனமாக ஓடுமீது தாக்குகிறீர்களே திருப்பிப்போட்டு அடியுங்கள் என்று சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.
அன்புடன்
சொ,வினைதீர்த்தான். 

N. Ganesan

unread,
Dec 26, 2012, 11:51:16 AM12/26/12
to மின்தமிழ்

On Dec 26, 10:47 am, S NEELAKANTAN <sneelakanta...@gmail.com> wrote:
> தங்களுடைய பெயரை காளைராஜன் என்று சொல்வதால் தமிழின் தனித்தன்மை அழியப்போவதில்லை
> தமிழ் சிதையவும் போவதில்லை உங்கள் விருப்பம் எதுவொ அதை பயன் படுத்தவும் யாரும்
> உங்களை
> கட்டாயப் படுத்தவில்லை
> ராஜ ராஜ சோழன் என்பதை ராச ராச சோழன் என்று சொல்வதில்லை

இராசராசன் என்று சொல்வது தமிழில் வழக்கம்.

நா. கணேசன்

>தனித்தன்மை என்ற பெயரில்
> குட்டையை குழப்பாமல் மொழியை அதன் போக்கில் விட்டுவிட்டால் தமிழ் நன்றாக வளரும்
> என்ற நம்பிக்கை
> இன்னும் இருக்கிறது
>

> S.Neelakantan
> நீலகண்டன் (செம்புர் நீலு)
>

> 2012/12/26 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வணக்கம் ஐயா,
>
> > 2012/12/26 Karuannam Annam <karuan...@gmail.com>


>
> >> 2. ஆயிரக் கணக்கில் பிறமொழிச் சொற்களை எப்படி வேற்று எழுத்து இல்லாது
> >> கையாளுவது என்பதைப் பதினாயிரம் பாடல்களில் கம்பராமயணமும் பக்தி இலக்கியத்தில்
> >> பல நூறு பாடல்களும் நமக்குக் காட்டியுள்ளன.
>
> >> 5. பெயர்ச்சொற்களுக்கு மட்டும் ஒலிப்பு வேண்டுமென்றால் ஏற்கனவே
> >> பயன்படுத்தும் ஷ,ஜ,ஹ எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.
> >> இயன்றவரை கலப்பின்றி எழுத முயலலாம்.
>
> >> தங்களது கருத்தே எனது கருத்தும்.
>
> >> 4.இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும்
> >> குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற
> >> வழிவகை காண்போம்.
>
> > குட்டையை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்பியாச்சு.
> > தமிழ்மொழி நமது அனைவருக்கும் பொதுவானது.
> > சங்கம் வைத்து ஆய்ந்தறிந்து உருவாக்கப் பெற்ற மொழி,
>
> > ஏதேதோ காரணங்களைக் கற்பித்து நாமே நமது மொழியைச் சிதைக்க நினைத்தால் என்ன
> > சொல்வது?
> > என்ன செய்வது?
>

> > 54வருடத்திற்கு முன் பிறந்த எனது பெயரை  காளைரா*ஜ*ன் என்று நான் எழுத


> > வேண்டும் காரணத்திற்காக  5000 வருடத்திற்கும் முன் உருவான மொழியைச் சிதைக்க

> > எனக்கு மனம் இல்லை. எனது பெயரைக் காளைரா*ச*ன் என்றே எழுதிவருகிறேன்.


>
> > அன்பன்
> > கி.காளைராசன்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

DEV RAJ

unread,
Dec 26, 2012, 2:28:25 PM12/26/12
to mint...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 20:37:02 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<


ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration

இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்



தேவ்


On Tuesday, 25 December 2012 20:37:02 UTC+5:30, seshadri sridharan wrote:
janaki > ஜனகி என்றும் ஒலிப்பு வருகிறதே ஆனாலும் எப்படியோ நாம் ஜானகி என படித்துவிடுகிறோம். ழகரம் மலையாளம்,சிங்களம் ஆகியமொழிகளிலும் உண்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் 10 ஆம்நூற்றாண்டில் ழகரம் இருந்தது, இன்று ஏன் இல்லை. அத்தகு ஒலிப்பு இப்போது ல கரமாகிவிட்டது தான் காரணம். 

ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதிகப்படியான எழுத்து அம்மொழியை உருக்குலைத்துவிடும் என்பதால்.
 .
சேசாத்திரி       

2012/12/25 Janu Tamil <januta...@gmail.com>




உலகில் எம்மொழியிலும் “” என ஒலிக்க எழுத்தில்லை.  எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறதுஎன்பது வியப்புக்குறியதுஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போதுசில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள்  இல்லை.


என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம்ஜானகிஇது சமஸ்கிருத பெயர்நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளதுஇதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன்ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறதுதமிழில் இருப்பதோ 247 எழுத்துகள்ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லைஏன் என்றால்  ‘ஜ’  என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.


ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாதுசமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீஷ்ஜ்ஜெக்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம்உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம்கிறிஸ்துஅல்லாஹ்கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?  

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும்அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள்இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல்இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.


எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும்ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்திமலையாளம்தெலுங்கு என பல மொழிகளில் ,,,, எல்லாம் நான்கு நான்காக <font face=""Latha","sa...
Show original

செல்வன்

unread,
Dec 26, 2012, 2:51:28 PM12/26/12
to mint...@googlegroups.com


2012/12/26 DEV RAJ <rde...@gmail.com>

ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration

இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்


ஆங்கிலம் ஜ என்பதற்கு ஒப்பான J வை பிரெஞ்சு மொழியில் இருந்து பெற்றுள்ளது.

 ஆங்கிலத்தில் J நுழைந்த காலம் ரா'ஜ'ரா'ஜ' சோழன் காலத்துக்கு பிற்பட்டதுதான். ஆக ஆங்கிலத்தில் J நுழையுமுன்னரே தமிழில் ஜ நுழைந்துவிட்டது. தனிஆங்கில மொழி ஆர்வலர்கள் விரைவில் ஆங்கிலத்தில் இருந்து Jவை அகற்றி மொழியை சுத்தம் செய்யபோகிறார்கள் என எதிர்பார்ப்போம்.
--
செல்வன்

தேமொழி

unread,
Dec 26, 2012, 7:23:52 PM12/26/12
to mint...@googlegroups.com

 

ஆயுத எழுத்தை வைத்து "f" "ph" ஒலியைக் கொண்டு வருவது போல ஏன் இன்னமும் இரண்டு  மூன்று ஒலிகளுக்கு வழி காணக் கூடாது என்ற ஆர்வத்தில் சொன்ன கருத்துதான் என்னுடையது.   

ஆனால் அனைவரும் பொறுமையாக வேறு வேறு கண்ணோட்டத்தில் அதற்கு தேவை என்ன? பாதகமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது போன்ற கருத்துக்களை அளித்ததற்கு நன்றி. 

____________________________

கீழ் வரும் கருத்துக்கள் சிந்தனையை மிகத் தூண்டியது:

நாம் புதிய பிறமொழி ஒலி வடிவங்களை எடுத்தாளும் போதுதான் (தமிழ் ஒலிகள் ஒத்துப்போகாத நிலையில்) பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆயினும் அதற்கிணையாய் நிறைய சொற்கள் தமிழில் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தாமல் புதிய உருவைத் தேடுதல் ஆபத்தைத் தான் விளைவிக்கும். தமிழின் பயன்பாடு அழிந்து வேற்றினச் சொல் பயன்பாட்டில் வந்துவிடும்.

Thamilthendral Muthupillai   

____________________________

இதை நாம் பலுக்குவது போல், எழுதுவது போல் வேறொரு மொழியில் எழுத முடியுமா?

அப்படியெல்லாம் யாரும் முயலுவதாகத்தெரியவில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ள
வேண்டும்?

நா.கண்ணன்

____________________________

அடுத்த மொழியில் உள்ள பெயர்களை எல்லாம் அவர்கள் உச்சரிப்பிலேயே தமிழில் எழுதவேண்டும் என்று கவலைப்படுகிறவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். தமிழ்ப் பெயர்களை - நெடுஞ்செழியன் - கிள்ளிவளவன், தேன்மொழி - போன்றவற்றை எழுதுவதற்காக இதுவரை எத்தனை மொழிக்காரர்கள் தங்கள் மொழிகளில் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டீர்களா? வந்தாரை வாழவைப்பதிலேயே வழுக்கை மண்டையாகிப் போய்விட்டதுதான் மிச்சம்.


என்ன செய்வதூ?

ப.பாண்டியராஜா
____________________________

தமிழ்வழிக் கல்வி அருகி வருகிறது. இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும் குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற வழிவகை காண்போம்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

____________________________


ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration

இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்


தேவ்
____________________________

 

இப்பொழுது நான் அறிந்து கொள்ள விரும்புவது ...

(1) ஆய்த எழுத்தை உபயோகித்து சில ஆங்கிலச் சொற்களை எழுதும் வழக்கம் எப்பொழுது தோன்றியது?

(2) தேவ் அவர்கள் குறிப்பிட்டபடி ஆங்கில மீக்குறிகளைப் போல  (எனக்கு புதிய வார்த்தை இது) முன்பே கிரந்த வடிவில் இருக்கும் சில ஒலிவடிவத்தை இப்பொழுது மீண்டும் தமிழில் உபயோகிக்க என்ன தடை? ஏன் நடைமுறையில் சாத்தியப்படாது? "தமிழ் ஆட்சி மொழியான கட்டுரையில்" குறிப்பிடப் பட்டது போல 'தொழில் நுட்ப' வழியில்  (உதாரணத்திற்கு காட்டப்பட்ட தட்டச்சுப் பொறி போன்று) ஏதேனும் தடைகள் உள்ளதா?

பதில் சொல்ல நேரம் இருப்பவர்கள் விளக்கினால் குறை நிறைகளைத் தெரிந்து கொள்வேன். 

நன்றி 

...தேமொழி 

2012/12/25 Janu Tamil <januta...@gmail.com>


தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான  வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும்இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்நானும் அதையே விரும்புகிறேன்அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும்அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லைசில தமிழ் நண்பர்கள் எனது பெயரை  “சானகி” என்று எழுதுவார்கள்ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள்இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல்இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் <font face=""Latha","sans-serif&...
Show original

Kamala Devi

unread,
Dec 26, 2012, 7:47:57 PM12/26/12
to mint...@googlegroups.com
அன்புள்ள தேன்,
இவ்விழையை ஆர்வத்தோடு வாசித்துவரும் ஞான் , என்டெ அனுபவங்களை சொல்லலாமா என்று தயங்கினேன்.
ஆனாலும் துணிபு பெற்று எழுதுகிறேன். பள்ளிநாட்களில் என்டெ சைனீஸ் ஆசிரியர்கள் எல்லோருமே தாராளமாக என் பெயரை அழகு சொட்டச்சொட்ட அழைத்தது  கம்ரா [கமலாஎன்பதன் திரிபு] எனும் விளியில் தான்..லா--சீனர்களுக்கு வராது.
மலாய் மொழி ஆசிரியர் இஞ்சே துக்கிமான்--கா மா லா டீ வி, என்றே சர்வ சாதாரணமாக அழைப்பார்.
பல்பிர் சிங் எனும் என்டெ ஆங்கில ஆசிரியர் கம்லாடேவி என்பார்.
என்டெ ஆருயிர், இன்னுயிர், உயிரின் உயிராய் ஞான் பழகிய சீனத்தோழி டான் சியூ கிம் மட்டும் தாராளமாக கமரா என்றே அழைப்பாள்.ஞான் இதனாலெல்லாம் செத்துப்போகவில்லை.மலேசிய சிங்கப்பூரில் எங்கள் பெயரை அவர்கள் கொலை செய்வதுபோல் மற்ற மொழிக்காரர்களின் பெயரை நம்மவரும் கள்ளம் கபடமின்றி  எப்படி ஆசைதீர கொலை செய்தே விளிக்கிறோம் என்பதை ஈஷ்வரன் சான்னிதியிலாவது நாம் அறிவோம்.எப்படியிருப்பினும் எனிக்கிஷ்டமாய பெயரை மின்தமிழில் அழைப்பதுதான் மலையாள இலக்கிய உலகில் பிரசித்தம்.
வாழ்க தமிழ்
அன்புடன் கமலம்
 

From: தேமொழி <them...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 27 December 2012, 8:23
Subject: Re: [MinTamil] "ழ"சிறப்பு

2012/12/25 Janu Tamil <januta...@gmail.com>




உலகில் எம்மொழியிலும் “” என ஒல ிக்க எழுத்தில்லை.  எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை  தமிழ் பெற்றிருக்கிறதுஎன்பது  வியப்புக்குறியதுஆனால் அதனை ச ிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எ னும் போதுசில தமிழில் இல்லாத  எழுத்துகளுக்காக நாம் வருத்தம்  கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை கு றை சொல்வதாக பொருள்  இல்லை.

என்னுடைய பெயரை எடுத்துக் கொள் வோம்ஜானகிஇது சமஸ்கிருத பெ யர்நான் தமிழாசிரியராக பயிற் சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளதுஇதனை நான் ஆ ங்கிலத்தில் எழுத வேண்டும் என் றால், janaki என்று எழுதுவேன்ஆங்கி லத்தில் இருக்கும் 26 எழுத்து களைக் கொண்டே என்னுடைய பெயரை எழ ுத முடிகிறதுதமிழில் இருப்பதோ  247 எழுத்துகள்ஆனாலும் என்பெ யரை தமிழில் எழுத முனைகையில் என ்னால் முழுவதுமாக முடியவில்லை ஏன் என்றால்  ‘ஜ’  என்ற எழுத்தி ற்கு இணையான ஒலியை உடைய எழுத்து  தமிழில் இல்லை.

ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதா ல் தமிழ்படுத்த முடியவில்லை என் ற கூற்றை ஏற்க இயலாதுசமஸ்கிரு தம் என்றல்ல,. பல மொழிகளில் இரு க்கும் பெயர்களை தமிழ்படுத்தும்  போது ஸ்ரீஷ்ஜ்ஜெக்ஷ வரிசைகளுக்கு இணையான  தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம்  தடுமாறி்க் கொண்டிருக்கிறோம் உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல் லாம்கிறிஸ்துஅல்லாஹ்கிரு ஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக் காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?  
தினம் தினம் நான் என் பெயர் எழு துகையில் என் மொழியில் இந்த எழு த்துகள் இல்லை என்ற உண்மையான  வ ேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கி றேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும்  தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லா மல் பிறமொழியில் இருந்து கடன் ப ெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோ ம்ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை  பிற மொழியில் எழுத முனையும் போ து ஒலி வேறுபாடு கலையப்பட வேண் டும்இரு மொழியிலும் பெயர்ச்சொ ல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக் கப்பட வேண்டும் என்று பலரும் ஆச ைப்படுகிறார்கள்நானும் அதையே  விரும்புகிறேன்அதாவது கிருஷ் ணன் என்பதை கிருட்டின் என்றும்,  அல்லாஹ் என்பதை அல்லாக் என்று  மாற்றுவது நான் விரும்பவில்லை சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை   “சானகி” என்று எழுதுவார்கள் ஏன் எனக் கேட்டால் தமிழில்தான்  எழுத வேண்டும் என்ற கொள்ளை உடை யவர்களாக இருக்கிறோம் என்பார் கள்இது மிகவும் பாராட்டிற்கு  உரிய செயல்இருந்தும் வேற்றுமொ ழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில்  அதே ஒலியுடன் <font face=""Latha","sans-serif&...
Show original
--

தேமொழி

unread,
Dec 26, 2012, 8:17:45 PM12/26/12
to mint...@googlegroups.com, Kamala Devi

உங்கள் கருத்துக்கு நன்றி கமலம்.  

நீங்கள் அதிக சகிப்புத் தன்மையும், பரந்த மனப்பான்மையும் கொண்டு நடைமுறை வாழ்க்கையை ஒத்து வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் பதில்  காட்டுகிறது. 

பல கலாச்சாரங்களை  தினசரி வாழ்க்கையில் பார்த்துப் பழகுவது, குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு பிரச்சனையை அணுகும் பழக்கத்தை உங்களிடம் இருந்து நீக்கிவிட்டது.

இதனை அறிந்து நான் பெருமைப் படுகிறேன்.

... தேமொழி 

2012/12/25 Janu Tamil <januta...@gmail.com>


தினம் தினம் நான் என் பெயர் எழு துகையில் என் மொழியில் இந்த எழு த்துகள் இல்லை என்ற உண்மையான  வ ேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கி றேன்தமிழ்ப்பாடங்களை நடத்தும்  தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லா மல் பிறமொழியில் இருந்து கடன் ப ெறுகிறோம் எ...
Show original

seshadri sridharan

unread,
Dec 26, 2012, 8:58:19 PM12/26/12
to mint...@googlegroups.com


2012/12/27 DEV RAJ <rde...@gmail.com
>>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<

 [ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது; ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க - http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர் - தேவ்]

இந்த மீக்குறிகளை மொழி ஆய்வாளர்கள் தவிர மாணவரோ, செய்தி ஊடகங்களோ பயன்கொள்வதில்லை என்பது ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது.

bhaarath > भारत என்பதை  baarath > बारत - பாரத்  என்று தான் (எல்லா வல்லொலி  வர்க்க எழுத்துகளையும்  மெல்லொலி வர்க்க எழுத்துகளாக) வடநாட்டின் 90% எளிய மக்கள் பலுக்குகின்றனர். வேதம் ஓதும் பிராமணர் மட்டுமே வல்லொலி வர்க்க எழுத்துகளை முறையாக பலுக்குகின்றனர் . இவ்வாறு நடப்பு உண்மை  இருக்க பயன்படாத வர்க்க ஒலிகளை கற்கும்படி மாணவர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதை யாரேனும் எடுத்துச்சொல்ல துனுவு கொண்டுள்ளாரா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கில் கூட பாரதமு என்று மேல்லோளியில்தான் பலுக்குகின்றனர்.

இந்த குப்பையைத் தான் கிரந்த ஆதரவாளர் தமிழ் மீது திணிக்க முயலுகின்றனர்.

seshadri sridharan

unread,
Dec 26, 2012, 9:03:14 PM12/26/12
to mint...@googlegroups.com
1. துணிவு கொண்டுள்ளாரா ? .  2. மெல்லொலியில் தான் பலுக்குகின்றனர்  என திருத்தமாக படிக்கவேண்டுகிறேன் 



2012/12/27 seshadri sridharan <ssesh...@gmail.com>


 [ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது; ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க - http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர் - தேவ்]
 
 இதை யாரேனும் எடுத்துச்சொல்ல துனுவு கொண்டுள்ளாரா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கில் கூட பாரதமு என்று மேல்லோளியில்தான் பலுக்குகின்றனர்.


Kamala Devi

unread,
Dec 26, 2012, 10:22:36 PM12/26/12
to mint...@googlegroups.com
நன்றி தேன்
கமலம்

 

From: தேமொழி <them...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Cc: Kamala Devi <saahi...@yahoo.com.sg>; saahi...@yahoo.com.sg
Sent: Thursday, 27 December 2012, 9:17

Subject: Re: [MinTamil] "ழ"சிறப்பு
--

Karuannam Annam

unread,
Dec 27, 2012, 12:17:48 AM12/27/12
to mint...@googlegroups.com


2012/12/27 DEV RAJ <rde...@gmail.com>

On Tuesday, 25 December 2012 20:37:02 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<

ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration
 
இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்
 
வணக்கம் திரு தேவ். 
1.ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று எண்ணி மீக்குறிகளை ஏற்றார்களா? பரிந்துரைத்தார்களா?

2.இலக்கணத்திலும் அகராதிகளிலும் சீர்திருத்தம் என்று ஏற்றுள்ளார்களா?

3.ஆங்கிலம் ஏற்றுள்ளது என்று தாங்கள் கூறுவதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் சுட்டியிலிருந்து சமக்கிரதம் கையாண்ட வழியென அறிகிறேன்.

 The International Alphabet of Sanskrit Transliteration (IAST) is a transliterationscheme that allows a lossless romanization of Indic scripts as employed by the Sanskritlanguage.

தமிழரில் சிலர் தமிழ் ஒலிக்குறையுடையதென்றும் சீர்திருத்த வேண்டும் என்றும் பல சொல்லி மீக்குறிகளைப் புகுத்தப் பரிந்துரைக்கிறார்கள் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டுகிறேன்.

DEV RAJ

unread,
Dec 27, 2012, 6:59:30 AM12/27/12
to mint...@googlegroups.com
On Thursday, 27 December 2012 05:53:52 UTC+5:30, தேமொழி wrote:
>>> ஆங்கில மீக்குறிகளைப் போல  (எனக்கு புதிய வார்த்தை இது) முன்பே கிரந்த வடிவில் இருக்கும் சில ஒலிவடிவத்தை
இப்பொழுது மீண்டும் தமிழில் உபயோகிக்க என்ன தடை? <<<

மீக்குறி - diacritics

மனத்தடை தவிர வேறு ஒருதடையும்
இல்லை.

அல்லாஹ்,  அல் ஹதிஸ், அல் ஜன்னத், ஜின், ஸல்,
ஸஹீஹுல் புஹாரி, இமாம் ஹஸன் பஹரி, கஃபதுல்லாஹ்,
ஹுஸைன், ஹஜ், இஸ்ஹாக், இப்னு தஹ்மான், பஹ்ரைன்,
தவ்ஹீத் ஜமாஅத், அல் மஸ்ஜிதுல் அஷ்ரஃப், ஜாஹீர், ஜான்,
ஜார்ஜ் புஷ், வாஷிங்டன்  போன்ற எண்ணற்ற பெயர்களைக்
கையாள க்ரந்தம்  பயனாவதை இணையத்தில் காணலாம்


தேவ்

DEV RAJ

unread,
Dec 27, 2012, 8:24:10 AM12/27/12
to mint...@googlegroups.com

On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:
>>> ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று எண்ணி மீக்குறிகளை ஏற்றார்களா?
பரிந்துரைத்தார்களா? <<<


IAST is based on a standard established by the International Congress of
Orientalists at Geneva in 1894.[1]


It allows a lossless transliteration of
Devanāgarī (and other Indic scripts, such as Śāradā script),
and as such represents not only the phonemes of Sanskrit,
but allows essentially phonetic transcription
(e.g. Visarga ḥ is an allophone of word-final r and s).

http://en.wikipedia.org/wiki/IAST





>>> ஆங்கிலம் ஏற்றுள்ளது என்று தாங்கள் கூறுவதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் <<<

BBT வெளியிடும் ஆன்மிகப்  புத்தகங்களை ஆங்கிலம் அறிந்தோர் வாங்கிப் பயன்படுத்துவதை
நீங்கள் அறிவீர்கள். மேற்கத்திய உலகம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மேற்கத்தியர் அளித்த
கொடையில் வளர்ந்ததுதான் ஹரே க்ருஷ்ண இயக்கம். Orientalism வளர்ந்ததும் மேற்கத்தியரின்
முயற்சியால், ஈடுபாட்டால்.


மொழியின் வளர்ந்த நிலையில் சில மாற்றங்களை அது ஏற்க வேண்டும்.
சங்கதம் பவுத்தர்களால் Hybrid Sanskrit எனும்  தனிப்பிரிவானது;
அதை யாரும் எதிர்க்கவில்லை. அது துறை சார்ந்த பயன்பாடு என
ஏற்றனர்.



>>> இலக்கணத்திலும் அகராதிகளிலும் சீர்திருத்தம் என்று ஏற்றுள்ளார்களா? <<<

அது ஒரு தனியான துறை என்பதால் அகராதியின்
அங்கீகாரம் தேவையற்றது. மொழியை அன்றாடம்
பயன்படுத்தும் சாமானியரை அது பாதிக்காது.
ஆங்கிலேயர் இம்மாற்றங்களைப் பொருட்படுத்துவதில்லை.



தேவ்

DEV RAJ

unread,
Dec 27, 2012, 11:31:23 AM12/27/12
to mint...@googlegroups.com
அயலக ஆராய்ச்சியாளர் ISO 15919:2001
உதவியுடன் தமிழை எழுதி வாசிக்கின்றனர் -

vākkuṇṭām nalla maṉamuṇṭām māmalarāḷ
nōkkuṇṭām mēṉi nuṭaṅkātu  - pūkkoṇṭu
tuppār tirumēṉi tumpikkaiyāṉ pātam
tappāmal cārvār tamakku


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

International Phonetic Alphabet (IPA)
இது மொழியியலாளர்கள், மாணவர்கள், பிறமொழிப் பாடல்களைப்
பாடுவோர், பிறமொழிகளில் நடிப்போர், மொழிபெயர்ப்பாளர்கள்
அனைவருக்கும் பயனாகும் எழுத்துரு.


மேற்கத்தியர் குழுமனப்பான்மையுடன் ஒருங்கிணைந்து
செயல்பட்டு, செந்தரப்படுத்தித் துறைகளை வளர்க்கின்றனர்;
நம்மவரிடையே அது கிடையாது.


”மெத்த வளருது மேற்கே-அந்த
   மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”
என மனம் நொந்தார் மஹாகவி; இன்னும் அச்சூழல்
மாறவில்லை



தேவ்

N. Ganesan

unread,
Dec 27, 2012, 8:21:05 AM12/27/12
to மின்தமிழ்

On Dec 26, 7:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 2012/12/27 DEV RAJ <rde...@gmail.com>>>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும்
>
> 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<
>

>  [ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது; ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Trans...


> இம்முறையை
> க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர் - தேவ்]
>
> இந்த மீக்குறிகளை மொழி ஆய்வாளர்கள் தவிர மாணவரோ, செய்தி ஊடகங்களோ
> பயன்கொள்வதில்லை என்பது ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது.
>
> bhaarath > भारत என்பதை  baarath > बारत - பாரத்  என்று தான் (எல்லா
> வல்லொலி  வர்க்க எழுத்துகளையும்  மெல்லொலி வர்க்க எழுத்துகளாக) வடநாட்டின் 90%
> எளிய மக்கள் பலுக்குகின்றனர். வேதம் ஓதும் பிராமணர் மட்டுமே வல்லொலி வர்க்க
> எழுத்துகளை முறையாக பலுக்குகின்றனர் . இவ்வாறு நடப்பு உண்மை  இருக்க பயன்படாத
> வர்க்க ஒலிகளை கற்கும்படி மாணவர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதை யாரேனும்
> எடுத்துச்சொல்ல துனுவு கொண்டுள்ளாரா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
> தெலுங்கில் கூட பாரதமு என்று மேல்லோளியில்தான் பலுக்குகின்றனர்.
>
> இந்த குப்பையைத் தான் கிரந்த ஆதரவாளர் தமிழ் மீது திணிக்க முயலுகின்றனர்.
>
> சேசாத்திரி

கிரந்த ஆதரவாளர் யாரும் தமிழ் மீது எதையும் திணிக்கவில்லை. செந்தமிழ்
எழுதத்
தமிழ் எழுத்தே போதும். அதுதான் சரி. உ-ம்: மரபுக் கவிதைகள் எழுதுவோர்
செந்தமிழைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். தனித்தமிழ் இயக்கத்திலும்
தமிழ் பற்றிய கட்டுரைகளில் தமிழ் எழுத்தே போதும்.

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் செந்தமிழ் தவிரப் பிற மொழிகளுடன்
தொடர்பு கொண்டு எழுதத் தேவை உள்ளது. உதாரணமாக, சுமேரியன்,
ஜப்பானின் மொழி, எகிப்து மொழி, வட மொழி, மலையாளம், தெலுங்கு, ...
இவை செந்தமிழ் அல்லவே. அவை எழுத கிரந்தம் ஒரு கருவி. அவ்வளவுதான்.

ஆங்கிலத்தில் தமிழை, ஸம்ஸ்க்ருதத்தைச் சரியாக எழுத ஐஎஸ்ஓ 15919
உள்ளது. இதுபற்றி விளக்கமாக பேரா. பாண்டியராஜா அவர்களுக்கு மறுமொழி
அளிக்க வேண்டும். ஓரிரு அகநானூறு பாடல்களை எடுத்தே சொல்லமுடியும்.
பல லிபிமாற்றிகள் அதற்கு உள்ளன.

செந்தமிழ் எழுத தமிழ் எழுத்தைப் பயன்படுத்துவோம்.

மற்ற பாஷைகளை எழுத - உ-ம்: சுமேரியன், ஹிந்தி, மலையாளம், வடமொழி,
ஒரிஸா, ... - இவற்றுக்கு கிரந்த எழுத்தையும் பயன்படுத்தலாம். அதை 50 பேர்
பயன்படுத்தினாலும் கணினியில் ஓர் இடத்தில் இருக்கலாம். ஃபாரோக்கள் கால
எகிப்து படங்களின் லிபியை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?
அதுபோல, வட, தென் (உ-ம்: தெலுங்கு, கன்னடம், ...) மொழிகள் எழுத
கிரந்தம் ஒரு கருவி. 5 பேரோ, 5000 பேரோ ... இந்த எண் நூற்றாண்டு
நூற்றாண்டுக்கு
மாறுபடும்.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Dec 27, 2012, 11:59:40 AM12/27/12
to mint...@googlegroups.com
On Thursday, 27 December 2012 07:28:19 UTC+5:30, seshadri sridharan wrote:
  [ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது; ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க - http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration
இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர் - தேவ்]

>>>>  இந்த மீக்குறிகளை மொழி ஆய்வாளர்கள் தவிர மாணவரோ, செய்தி ஊடகங்களோ பயன்கொள்வதில்லை என்பது ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது.<<<<


அதைத்தானே ஐயா க்ரந்தம் தேவை என்போரும் ஆழ்ந்து நோக்கிச்
சொல்லி வருகின்றனர் :))

அந்தத் துறையில் தேர்ச்சி பெற்றோர் தம் கருத்துப்பகிர்வை
எளிதாக்க அந்த வரிவடிவை இணையத்தில் பயன்படுத்தப் போகின்றனர்;
பிறர் எப்போதும்போல் இருக்கும் வரிவடிவைப் பயன்கொள்வர்.
இது எப்படி திணிப்பாகும் ?

செல்வன் அவர்கள் வல்லமை குழுமத்தில் கொடுத்த
சுலோகம் இது -

yo vai mamātibharam āsura-vaḿśa-rājñām
akṣauhiṇī-śatam apānudad ātma-tantraḥ
tvāḿ duḥstham ūna-padam ātmani pauruṣeṇa
sampādayan yaduṣu ramyam abibhrad ańgam

இவ்வரிவடிவை ஆங்கிலம் எழுதுவோர்  யாரும் பயன்படுத்தப் போவதில்லை.
ஒருகால் மேற்கோளாகப் பயன்படுத்தலாம், அதுவும் அதற்கான தேவை
நேரும்போது மட்டுமே. இதைப்போலவே  க்ரந்தம் பயன்பாட்டில் வந்தாலும்
ஊடகங்களோ, துறை சாராதவர்களோ பயன்படுத்தப் போவதில்லை.

இன்று இருக்கும் தமிழைப் படிக்கச் சொன்னாலே இளந்தாரிகள்
காததூரம் ஓடுகின்றனர்



தேவ்

DEV RAJ

unread,
Dec 27, 2012, 2:22:57 PM12/27/12
to mint...@googlegroups.com
On Thursday, 27 December 2012 07:28:19 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> bhaarath > भारत என்பதை  baarath > बारत - பாரத்  என்று தான் (எல்லா வல்லொலி  வர்க்க எழுத்துகளையும் 
மெல்லொலி வர்க்க எழுத்துகளாக) வடநாட்டின் 90% எளிய மக்கள் பலுக்குகின்றனர். <<<


வழக்கம்போல் சேச்சா ஊத்த ஆரம்பித்து விட்டார்.
நான் வடபுலத்தின் ஊரகப் பகுதிகளைப் பார்த்தவன் தான்.
வட இந்திய ஊரகப் பகுதிகளில் gha,bha, jha, dha இவற்றை
நன்கு தெளிவாகவே உச்சரிப்பர்; ‘ஷ’’க்ஷ’ மட்டும் சரியாக இருக்காது.

http://www.youtube.com/watch?v=rFwNA79OViw

இதில்  jhUmE, nadiyAn ki dhArA இவை தெளிவாகவே உள்ளன;
மிலன் தமிழிலும் வெளியானது



தேவ்

seshadri sridharan

unread,
Dec 28, 2012, 4:13:34 AM12/28/12
to mint...@googlegroups.com
2012/12/27 N. Ganesan <naa.g...@gmail.com>

> இந்த குப்பையைத் தான் கிரந்த ஆதரவாளர் தமிழ் மீது திணிக்க முயலுகின்றனர். - சேசாத்திரி

//ஆங்கிலத்தில் தமிழை, ஸம்ஸ்க்ருதத்தைச் சரியாக எழுத ஐஎஸ்ஓ 15919
உள்ளது. மற்ற பாஷைகளை எழுத - உ-ம்: சுமேரியன், ஹிந்தி, மலையாளம், வடமொழி,
ஒரிஸா, ... - இவற்றுக்கு கிரந்த எழுத்தையும் பயன்படுத்தலாம். -  நா. கணேசன்//

ஒரு இடத்தில் பொது வழக்கல்லாத ஒரு மொழியை  iso 15919 எழுத்து வடிவிடில்  எழுதினால் என்ன குறைநேரப்போகிறது . எழுதக்கூடாது  என்றால் அதற்கு என் பன்னாட்டு எழுத்து என்று பெயர்.

seshadri sridharan

unread,
Dec 28, 2012, 4:19:26 AM12/28/12
to mint...@googlegroups.com


2012/12/27 DEV RAJ <rde...@gmail.com>

>>>>  இந்த மீக்குறிகளை மொழி ஆய்வாளர்கள் தவிர மாணவரோ, செய்தி ஊடகங்களோ பயன்கொள்வதில்லை என்பது ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது.<<<< 

அதைத்தானே ஐயா க்ரந்தம் தேவை என்போரும் ஆழ்ந்து நோக்கிச் சொல்லி வருகின்றனர் :)) 

//அந்தத் துறையில் தேர்ச்சி பெற்றோர் தம் கருத்துப்பகிர்வை எளிதாக்க அந்த வரிவடிவை இணையத்தில் பயன்படுத்தப் போகின்றனர்; பிறர் எப்போதும்போல் இருக்கும் வரிவடிவைப் பயன்கொள்வர். இது எப்படி திணிப்பாகும் ?// 

இன்று ஆங்கில எழுத்தை அறியாதார் யாரும் இல்லை எனவே பன்னாட்டு ஆங்கில எழுத்திலேயே எழுதலாம். இதற்காக தமிழிலும் பன்னாட்டு எழுத்தாக கிரந்தம் உருவாக வேண்டுமா? தேவையில்லையே.

seshadri sridharan

unread,
Dec 28, 2012, 4:23:29 AM12/28/12
to mint...@googlegroups.com


2012/12/28 DEV RAJ <rde...@gmail.com


இதில்  jhUmE, nadiyAn ki dhArA இவை தெளிவாகவே உள்ளன; மிலன் தமிழிலும் வெளியானது - தேவ்//

பட்டிக்காட்டார் போல் பாடி நடிக்கிறார். இவர் உண்மை பட்டிக்காரர் அல்லர். இந்த து இந்தி பாடல் ஒரு எடுத்துக்காட்டே அல்ல . 

N. Kannan

unread,
Dec 28, 2012, 4:55:14 AM12/28/12
to mint...@googlegroups.com
2012/12/27 DEV RAJ <rde...@gmail.com>:

> yo vai mamātibharam āsura-vaḿśa-rājñām
> akṣauhiṇī-śatam apānudad ātma-tantraḥ
> tvāḿ duḥstham ūna-padam ātmani pauruṣeṇa
> sampādayan yaduṣu ramyam abibhrad ańgam
>
> இவ்வரிவடிவை ஆங்கிலம் எழுதுவோர் யாரும் பயன்படுத்தப் போவதில்லை.
> ஒருகால் மேற்கோளாகப் பயன்படுத்தலாம், அதுவும் அதற்கான தேவை
> நேரும்போது மட்டுமே. இதைப்போலவே க்ரந்தம் பயன்பாட்டில் வந்தாலும்
> ஊடகங்களோ, துறை சாராதவர்களோ பயன்படுத்தப் போவதில்லை.
>

தமிழ் நாட்டிலும், தமிழ் பேசும் பிறநாடுகளிலும் தமிழ் வரிவடிவத்தில்,
அதன் இலக்கணத்தில் பயிற்சியற்றோர் இல்லை பயப்படுவோர் ஆங்கில எழுத்தைக்
கொண்டுதான் தமிழ் எழுதுகின்றனர். இது தகவல்துறை வட்டாரத்தில் அதிகம்.
குறிப்பாக டிவிட்டர் போன்ற நுண்தரவு (micro content) தளத்தில்
ஆங்கிலத்தமிழே புழக்கத்தில் உள்ளது. எனக்கு இன்றும் இந்த ரோமாஜி (ரோமன்
எழுத்தில் தமிழ்) பிடிபடவில்லை. தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதினால்
மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது.

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Dec 28, 2012, 5:55:33 AM12/28/12
to mint...@googlegroups.com
On Friday, 28 December 2012 14:53:29 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> இந்த து இந்தி பாடல் ஒரு எடுத்துக்காட்டே அல்ல . <<<

படத்தில் தெளிவாக உள்ளது;
அவர் நாட்டுப்புறத்து உச்சரிப்பை ‘ஸோர், ஸோர்’
என்று வலியுறுத்துகிறார்; அம்மையார் திருத்திக்கொள்கிறார்.
 ‘merA ghar'  'jhArkhanD' என்று நாட்டுப்புறத்திலுள்ளோர்
தெளிவாகவே உச்சரிப்பர்.

உவமைதான் கூறமுடியும்; உம்மை உத்தரப் பிரதேசத்துக்கு
அழைத்துச் செல்லவா முடியும் ?


தேவ்

N. Ganesan

unread,
Dec 28, 2012, 7:52:05 AM12/28/12
to மின்தமிழ்

”தமிழிலும் பன்னாட்டு எழுத்தாக கிரந்தம் உருவாக வேண்டுமா?
தேவையில்லையே.”

தமிழில் பன்னாட்டு எழுத்தாக கிரந்தம் உருவாகவில்லை.

கிரந்தம் வேறு, தமிழ் வேறு. கிரந்தம் பல மொழிகளை - உ-ம்: வடமொழி,
பிராகிருதம், மலையாளம்,
... எழுதிய எழுத்து. அது தனியாக பன்னாட்டு எழுத்தாக இயங்கவல்லது என்பத
அதன் வரலாறு
காட்டிநிற்கிறது.

செந்தமிழ் எழுத தமிழ் எழுத்து. கிரந்தம் வேறானது.

ஹிந்தி, மலையாளம், சம்ஸ்க்ருதம், தெலுங்கு, ஒரியா, சிங்களம், ... போன்றவை
எழுத
கிரந்த லிபி. அவ்வாறு கிரந்தத்தில் எழுதும் முறைக்கும் தமிழுக்கும்
தொடர்பில்லை.
உ-ம்: விராமம் வேறு. கூட்டெழுத்தில் கிரந்தம் எழுதப்படுகிறது.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Dec 28, 2012, 10:06:57 AM12/28/12
to mint...@googlegroups.com
சௌந்தரராஜன் 'ஒத்தயடிப் பாதயிலெ அத்த மக போகயிலே'என்ற கிராமியப் பாடல் பாடினார். 
சுசீலா 'பூப் பூக்கும்மாசம் தை மாசம் ஊரெங்கும் வீசும் பூவாசம்' என்று பாடினார். இப்பாடல்களில் சொல்லமைப்பு ஊர்ப்புற மக்கள் பேச்சடிப்படையில் தான் அமைந்துள்ளன ஆனால் இப்பாடல்களில் கிராமியக் குரல் நயம் ஒரு சிறிதுமில்லை.

'என்னேடி முனியம்மா ஓங் கண்ணுல மையீ யாரு வச்ச மையீ இது நா வச்ச மையீ நீ முன்னாலே போனா நாம் பின்னாலேவாறேன்' என்ற பாடலில் நாட்டுப்புற குரல் நயமும் இருக்கிறது. ஏன்? பாடியவர் அந்த மண் வாசனையை நன்றாக அறிந்தவர். ஆதலால் அவரால் அவ்வாறு பாட முடிந்தது.  

மேற்சொன்ன குறைதான் இந்திப் பாடலிலும் உள்ளது.

உத்திரப் பிரதேசம் செல்ல வேண்டாம். இங்கேயே பீகாரிகள் வேலை செய்கிறார்கள். அவர் பேச்சை சற்று காதுகொடுத்து கேளுங்கள் என் கருத்து சரி என்று படும்.    

சேசாத்திரி          

2012/12/28 DEV RAJ <rde...@gmail.com>

//படத்தில் தெளிவாக உள்ளது; அவர் நாட்டுப்புறத்து உச்சரிப்பை ‘ஸோர், ஸோர்’ என்று வலியுறுத்துகிறார்; அம்மையார் திருத்திக்கொள்கிறார்.  ‘merA ghar'  'jhArkhanD' என்று நாட்டுப்புறத்திலுள்ளோர் தெளிவாகவே உச்சரிப்பர். 

உவமைதான் கூறமுடியும்; உம்மை உத்தரப் பிரதேசத்துக்கு  அழைத்துச் செல்லவா முடியும் ? - தேவ்//

Innamburan Innamburan

unread,
Dec 28, 2012, 10:09:54 AM12/28/12
to mint...@googlegroups.com
 இங்கேயே பீகாரிகள் வேலை செய்கிறார்கள். அவர் பேச்சை சற்று காதுகொடுத்து கேளுங்கள் என் கருத்து சரி என்று படும்.    

சேசாத்திரி          
~ புலன் பெயர்ந்து இங்கு அவர்கள் படும் அவதியை பற்றி நாம் யோசிக்கிறோமோ? அவர்களின் முகத்தில் எத்தனை சோகம் கப்பியிருக்கிறது.

2012/12/28 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 28, 2012, 10:14:49 AM12/28/12
to mint...@googlegroups.com


2012/12/28 N. Ganesan <naa.g...@gmail.com
//கிரந்தம் வேறு, தமிழ் வேறு. கிரந்தம் பல மொழிகளை - உ-ம்: வடமொழி, பிராகிருதம், மலையாளம், எழுதிய எழுத்து. அது தனியாக பன்னாட்டு எழுத்தாக இயங்கவல்லது என்பத அதன் வரலாறு காட்டிநிற்கிறது.//

எல்லா எழுத்துகளும் ஒலியடிபபடையில் ஆனாவை தாம். ஆக ஒரு மொழியை எழுத எந்த  எழுத்தையும் பயன் படுத்தி எழுத முடியும். எனவே கிரந்தத்தால் மட்டுமே தமிழை ஏழுத முடியும் என்ற கருத்தை ஏற்க முடியாது. பன்னாட்டு ஆங்கில எழுத்தே போதும்.கிரந்தப் பரிந்துரை சூது நிறைந்தது.

Karuannam Annam

unread,
Dec 28, 2012, 11:12:25 AM12/28/12
to mint...@googlegroups.com


2012/12/28 seshadri sridharan <ssesh...@gmail.com>

கிரந்தப் பரிந்துரை சூது நிறைந்தது.

   
கிரந்தப் பரிந்துரை சூது நிறைந்தது என்ற தங்கள் எண்ணம் எதனால் என்பதற்கான கருத்துக்களை அறியத்தாருங்கள் திரு சேசாத்ரி.

DEV RAJ

unread,
Dec 28, 2012, 11:28:54 AM12/28/12
to mint...@googlegroups.com
On Thursday, 27 December 2012 07:28:19 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> (எல்லா வல்லொலி  வர்க்க எழுத்துகளையும்  மெல்லொலி வர்க்க எழுத்துகளாக)
வடநாட்டின் 90% எளிய மக்கள் பலுக்குகின்றனர். <<<


மக்களால் உச்சரிக்க இயலாத வல்லொலிகளை ஹிந்தியிலிருந்து நீக்கி விடலாம் என்பது
சேச்சாவின் பரிந்துரை; இங்கு நம்மவரில் 95%க்கு மேல் ழ ,ல, ள உச்சரிப்பில் தகராறு.
பலர் காண தொ காவில் செய்தி வாசிப்போரிடம்கூட இக்குறைபாடு தென்படுகிறது.
ஒரு வடநாட்டவர் ‘ள’வை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதைத் தமிழிலிருந்து
நீக்கிவிடலாம் என்றால் அது ஏற்புடையதா ? பெரும்பாலானோரை சிரமப்படுத்தும்
‘ழ’ ஒரு குப்பை என்று சொல்ல முடியுமா ?

பிஹாரிகளின் உச்சரிப்பு -
http://www.youtube.com/watch?v=hWHKTrlBCIk

Aj bhI, kal bhI லாலு ஜீ தெளிவாகவே
சொல்கிறார்



தேவ்

Hari Krishnan

unread,
Dec 28, 2012, 12:50:42 PM12/28/12
to mintamil


2012/12/28 DEV RAJ <rde...@gmail.com>

ழ’ ஒரு குப்பை என்று சொல்ல முடியுமா ?

பிஹாரிகளின் உச்சரிப்பு -

என் அனுபவத்தில் ஒரு பிஹாரியுடன் பணியாற்றியிருக்கிறேன்.  ட்ரைடென்ட் ஹோட்டலில் அப்போது பணி.    வருட இறுதிக்காக ஹோட்டலுக்க மறுபூச்சு, வெட்டிச் சீவிச் செதுக்குதல் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன.  ஒவ்வொருவரும் ஒரொரு சிறு குறிப்பைக் கொண்டு வருவார்கள்.  நான் அவற்றைக் குறித்துக்கொண்டு உரிய பிரிவுகளுக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும்.  இந்த பிஹாரி ஒரு ஸிவில் எஞ்சினியர்.  என்னிடத்தில் வந்து சொல்கிறார்: 

ஹே... தட் ட்ரீ... யுநோத...த த ட்ரீ ... என்ட்ரேன்ஸ்...தட் வோகன்பில்லா மேன்... வோகன்பில்லா யுநோ... வோகன்பில்லா... இட் ஆஸ் டு பி கட் மேன்...

நான் பேமுழி முழிக்றேன்.  என்ன சொல்றான் இவன்... சுத்தமா விளங்வில்லை.  அப்புறம்தான் மண்டைக்குள் ஆன்டெனா பளிச்சிட்டது.

நுழைவு வாயிலில் போகன்வில்லா வளர்த்திருக்கிறார்கள்.  அது அளவுக்கு மீறி வளர்ந்திருக்கிறது.  ஹவுஸ் கீப்பிங்கில் சொல்லி அவற்றை வெட்டச் சொல்ல வேண்டும்.  :))

வ-வுக்கு ப, ப-வுக்கு  வ.  அதுதான் விஹாடி ஷ்டேயில்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Dec 28, 2012, 2:14:23 PM12/28/12
to mint...@googlegroups.com
>>> வ-வுக்கு ப, ப-வுக்கு  வ<<<


ப்ருந்தாவன் - வ்ருந்தாபன்
மதுவன் - மதுபன்

பிஹாரின் மதுபனி ஓவியங்கள் புகழ் பெற்றவை -
https://www.youtube.com/watch?v=gG-0W8DlOIo


தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 28, 2012, 3:09:40 PM12/28/12
to mint...@googlegroups.com
வாஸ்தவம், தேவ். எனக்கு சில பீஹாரி நண்பர்கள் உண்டு. ஹிந்தியிலும் சரி, மைதிலியிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி. அவர்களின் உச்சரிப்பின் நேர்த்தி
அபாரம். இந்தனைக்கும், பலர் பாட்னாவை விட்டு அதிக தூரம் போகாதவர்கள். அதுவும் துர்கானந்த் சின்ஹா என்ற மனோதத்துவ பிதாமஹர், உலகெங்கும் அத்துறையை நாட்டியவர். அவர் மைதிலியில் பாடியதையும், ஃப்ளோரிடாவில் அப்பழக்கற்ற அமெரிக்கன் இங்க்லீஷ் பேசியதையும் மறக்கமுடியாது. ஏன் நம் ராஜன் பாபுவை எடுத்துக்கொள்ளுங்கள். 
இன்னம்பூரான்

2012/12/28 DEV RAJ <rde...@gmail.com>

--

DEV RAJ

unread,
Dec 28, 2012, 10:59:24 PM12/28/12
to mint...@googlegroups.com
பிஹாரிகளின் பங்களிப்பு மிகுதி;  வளங்கள் இருந்தும்
அதன் பின்தங்கிய நிலைதான் வருத்தமளிக்கிறது.
சமீபத்திய வளர்ச்சி விகிதம் அதிகம் என்று புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன


தேவ்

DEV RAJ

unread,
Dec 28, 2012, 11:48:52 PM12/28/12
to mint...@googlegroups.com
On Saturday, 29 December 2012 01:39:40 UTC+5:30, இன்னம்பூரான் wrote:
>>> துர்கானந்த் சின்ஹா என்ற மனோதத்துவ பிதாமஹர்.... ஏன் நம் ராஜன் பாபு...... <<<

ஆமாம் ஐயா,
பலர் இருந்தாலும் ஜய ப்ரகாஷ் நாராயண் ஜீ ஒருவரே போதும்


தேவ்

DEV RAJ

unread,
Dec 29, 2012, 12:27:30 AM12/29/12
to mint...@googlegroups.com
On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:
>>> .ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று
 எண்ணி மீக்குறிகளை ஏற்றார்களா? பரிந்துரைத்தார்களா?<<<



இந்திய மொழிகளில் பார்வை செலுத்தினால் உள்ளபடியே
தேவநாகரியில் diacritic இல்லை; ஆனால் பல மொழிகளின்
பயன்பாட்டுக்கும் துணை செய்வதாக அது நெகிழ்ந்துள்ளது.


சிந்தி மொழி முதலிலிருந்த குடவாடி வரிவடிவிலிருந்து மாறி
தேவநாகரியை ஏற்றபோது அடிக்கோடுகளும், புள்ளிகளும்
அதில் புகுந்தன. உர்து மொழியை தேவநாகரியில் எழுத
அடியில் புள்ளிகள் சேர்க்கப்பட்டன. ஒலிப்புக் குறைகளைச்
சரி செய்ய இம்மாற்றங்கள். தற்போது அவ்வரிவடிவம்
20க்கும் மேற்பட்ட மொழிகளுக்குப் பயனாகிறது.


தற்போது திருமுறைகள் பிற வரிவடிவங்களில் உருவாக்கம்
பெற்று வருகின்றன. இது ஒரு சீரிய முயற்சி. தெய்வப் பனுவல்கள்
எல்லை கடந்து பரவ இது வழிவகை செய்யும்



தேவ்


On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:

Geetha Sambasivam

unread,
Dec 29, 2012, 12:46:34 AM12/29/12
to mint...@googlegroups.com


2012/12/27 செல்வன் <hol...@gmail.com>



ஆங்கிலம் ஜ என்பதற்கு ஒப்பான J வை பிரெஞ்சு மொழியில் இருந்து பெற்றுள்ளது.

 ஆங்கிலத்தில் J நுழைந்த காலம் ரா'ஜ'ரா'ஜ' சோழன் காலத்துக்கு பிற்பட்டதுதான். ஆக ஆங்கிலத்தில் J நுழையுமுன்னரே தமிழில் ஜ நுழைந்துவிட்டது. தனிஆங்கில மொழி ஆர்வலர்கள் விரைவில் ஆங்கிலத்தில் இருந்து Jவை அகற்றி மொழியை சுத்தம் செய்யபோகிறார்கள் என எதிர்பார்ப்போம்.
--
செல்வன்

360.gif

Geetha Sambasivam

unread,
Dec 29, 2012, 12:51:31 AM12/29/12
to mint...@googlegroups.com
பிஹாரிகள் பேசுவது ஹிந்தி அல்ல சேஷாத்ரி.  பிஹாரி, மைதிலி, போஜ்புரி போன்ற மொழிகளில் பேசுகின்றனர்.  ஒரு சிலர் வங்காளம் கலந்த பிஹாரியில் பேசுகிறார்கள்.  வடக்கே உத்தரப் பிரதேசம், மத்யப் பிரதேசம் இரு மாநிலங்கள் மட்டுமே சுத்த ஹிந்தி மொழி பேசும் மாநிலங்கள்.  மற்ற மாநிலங்களுக்குச் சொந்த மொழி உள்ளது. 

2012/12/28 seshadri sridharan <ssesh...@gmail.com>


உத்திரப் பிரதேசம் செல்ல வேண்டாம். இங்கேயே பீகாரிகள் வேலை செய்கிறார்கள். அவர் பேச்சை சற்று காதுகொடுத்து கேளுங்கள் என் கருத்து சரி என்று படும்.    

சேசாத்திரி          

360.gif

seshadri sridharan

unread,
Dec 29, 2012, 2:29:40 AM12/29/12
to mint...@googlegroups.com
2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com

//பிஹாரிகள் பேசுவது ஹிந்தி அல்ல சேஷாத்ரி.  பிஹாரி, மைதிலி, போஜ்புரி போன்ற மொழிகளில் பேசுகின்றனர்.  ஒரு சிலர் வங்காளம் கலந்த பிஹாரியில் பேசுகிறார்கள்.  வடக்கே உத்தரப் பிரதேசம், மத்யப் பிரதேசம் இரு மாநிலங்கள் மட்டுமே சுத்த ஹிந்தி மொழி பேசும் மாநிலங்கள்.  மற்ற மாநிலங்களுக்குச் சொந்த மொழி உள்ளது.//

நான் இங்கே இந்தியை அடிப்படையாகக் கொண்டு இதை சொல்லவில்லை. பொதுவாக வட மாநிலங்களில் kha வை ka என்றும்,  gha வை  ga என்றும்,  cha வை ca என்றும்,  jha வை ja என்றும் பலுக்குகின்றனர் என்றேன்.  

This expression created from external sounds changes with the changes in time, place and person. In other words, linguistic distortion is dependent upon temporal, spatial and personal changes. Now let us see how linguistic distortion occurs as a result of these changes.

An uneducated person does not speak in the same way that an educated person does with their refined language. For example, an educated person says cikitsá [medical treatment], mahotsav [great festival], etc., but an uneducated person will say cikicchá, mocchav, and so on. Practical experience shows that in areas with greater numbers of educated people the use of their refined language influences the colloquial language. The reverse is also true. In areas with a greater proportion of uneducated people, the colloquial language of the many also influences the educated language of the few. Thus the mocchav of the common people’s language also becomes part of the spoken language of the educated people. At one time there was a greater number of educated Brahman scholars in Vikrampur Pargana and the nearby Mymensing and Tripura districts. Hence there was a much greater use of Sanskrit-borrowed words in the spoken language of the people there. I have even heard little-educated women there call dai [curd] dadhi.

by pr sarkar,  3 October 1983, Calcutta, Published in: Varńa Vijinána, chapter : Derivation Emanation and Distortion Discourse 19.

//பெரும்பாலானோரை சிரமப்படுத்தும் ‘ழ’ ஒரு குப்பை என்று சொல்ல முடியுமா ? - தேவ்//

ஐயா அது வட்டார வழக்குத் தாக்கத்தால் உண்டானது. ழகரத்தை தமிழ் மக்கள் சரியாக பலுக்காவிட்டால் கன்னடம்,தெலுங்கில் ழகரத்திற்கு ஏற்பட்ட நிலை தான் தமிழிலும் அரங்கேறும்.

//கிரந்தப் பரிந்துரை சூது நிறைந்தது என்ற தங்கள் எண்ணம் எதனால் என்பதற்கான கருத்துக்களை அறியத்தாருங்கள் திரு சேசாத்ரி- சொ.வி.//

கணேசருடைய முந்தைய ஒரு இடுகையில் கிரந்தத்தை கன்னடர், மலையாளியர், தெலுங்கர், தமிழர் உள்ளிட்ட எல்லோரும் ஏற்று அதைப் பரவலாகப் பயன்படுத்தி அவரவர் மொழிக்கான எழுத்தை விட்டவிட வேண்டும் என்று எழுதுயிருந்தாரே அதை நீங்கள் படிக்கவில்லையா? இதன் நோக்கம் சிறுகச் சிறுக ஆரியர் திராவிடர் என்ற கருத்தியலை அடியோடு வேரறுப்பது தான். அது நடந்தேறினால் எல்லாமே வேத நாகரிகர் கற்றுக் கொடுத்தது என்று சொல்வதற்குத் தான். வேத நாகரிக சிறப்பை நிலை நிறுத்த இவர்கள் ஆரிய என்ற சொல்லை தூக்கி எறிய அணியமாக இருக்கின்றார்கள்.

தமிழின் தனித் தன்மை குலைந்தால் இப்பணி எளிதில் நிறைவேறும் என்ற பெரிய கணக்கு தான் இவர்களை இயக்குகின்றது. கணேசர் கண்ணை மூடிக்கொண்டு வேத நாகரி ஆதரவாளர் தோண்டி பள்ளத்தில் விழுந்து விட்டார். 

//மலையாளம், தெலுங்கு, கன்னாம், ஹிந்தி, சுமேரியன். எத்தியோப்பியன், கொரியன், ... எழுத கிரந்த எழுத்து ஒரு கருவி.// நா. கணேசன்

இவற்றை கற்க அவ்வவற்றுக்கு தனியே எழுத்துண்டு அது போதும். அதற்கு கிரந்தத்தை ஒரு கருவி என்பது மறைமுகமாக கொண்டுள்ள கருத்தை மறைப்பதாகும்.

Karuannam Annam

unread,
Dec 29, 2012, 2:51:14 AM12/29/12
to mint...@googlegroups.com


2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

 வணக்கம் அம்மா. தாங்கள் தெளிவான சொற்களில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யக்கூடியவர்கள்.
மேற்கண்டவாறு நான்கு சிரிப்பான்கள் மூலம் தாங்கள் தெரிவிக்கும் கருத்தை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
360.gif

Geetha Sambasivam

unread,
Dec 29, 2012, 3:55:14 AM12/29/12
to mint...@googlegroups.com
நான் கோபமாகவோ, வருத்தமாகவோ கூறவில்லை என்பதன் வெளிப்பாடு அது.  சிரிப்பான்கள் போட்டுவிட்டால் என் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம் என நினைத்தேன்.  ஏமாந்துட்டேனே!

2012/12/29 Karuannam Annam <karu...@gmail.com>


2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

 வணக்கம் அம்மா. தாங்கள் தெளிவான சொற்களில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யக்கூடியவர்கள்.
மேற்கண்டவாறு நான்கு சிரிப்பான்கள் மூலம் தாங்கள் தெரிவிக்கும் கருத்தை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


"
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
360.gif

DEV RAJ

unread,
Dec 29, 2012, 6:38:46 AM12/29/12
to mint...@googlegroups.com
On Saturday, 29 December 2012 12:59:40 UTC+5:30, seshadri sridharan wrote:

>>>> The reverse is also true. In areas with a greater proportion of uneducated people,
the colloquial language of the many also influences the educated language of the few.
Thus the mocchav of the common people’s language also becomes part of the spoken
language of the educated people.

 I have even heard little-educated women there call dai [curd] dadhi.<<<<
by pr sarkar,  3 October 1983, Calcutta, Published in: Varńa Vijinána,


Ánanda Márga Pracáraka Saḿgha (Central) வெளியீட்டை அப்படியே தந்துள்ளார் சேச்சா.
आनन्दमार्ग प्रचारक सङ्घ என்பதன் ஆங்கில வடிவத்தில்கூட அவர்கள் குறிகளின் உதவியோடு
சங்கத உச்சரிப்பின் தூய்மை பேணுவதைக் காண்கிறோம். ஸர்கார் ஜீ மேற்கோள்
காட்டும் மிக உயர்ந்த சிவோபதேசமும் இவ்வகையைச் சேர்ந்தது.


துறை சார்ந்த ஆய்வுகளிலும், விவாதங்களிலும்
அதன் முக்கியத்துவத்தை அவர் இனியாவது
உணர முயல வேண்டும்.


தேவை காரணமாக க்ரந்தம் கோரப்படுகிறது.
ஆராய்ச்சித் தேவைகளைப் பெரிதுபடுத்து
அரசியலாக்குவது வருத்தத்துக்குரியது



தேவ்

N. Ganesan

unread,
Dec 29, 2012, 6:57:29 AM12/29/12
to மின்தமிழ்

On Dec 28, 11:27 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:
> >>> .ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று
>
>  எண்ணி மீக்குறிகளை ஏற்றார்களா? பரிந்துரைத்தார்களா?<<<
>
> இந்திய மொழிகளில் பார்வை செலுத்தினால் உள்ளபடியே
> தேவநாகரியில் diacritic இல்லை; ஆனால் பல மொழிகளின்
> பயன்பாட்டுக்கும் துணை செய்வதாக அது நெகிழ்ந்துள்ளது.
>
> சிந்தி மொழி முதலிலிருந்த குடவாடி வரிவடிவிலிருந்து மாறி
> தேவநாகரியை ஏற்றபோது அடிக்கோடுகளும், புள்ளிகளும்
> அதில் புகுந்தன. உர்து மொழியை தேவநாகரியில் எழுத
> அடியில் புள்ளிகள் சேர்க்கப்பட்டன. ஒலிப்புக் குறைகளைச்
> சரி செய்ய இம்மாற்றங்கள். தற்போது அவ்வரிவடிவம்
> 20க்கும் மேற்பட்ட மொழிகளுக்குப் பயனாகிறது.
>

திராவிட பாஷைகளின் சிறப்பு எழுத்துக்களை எழுதவும்
- குறில் எ, ஒ, மெய் ற, ழ, ன - தேவநாகரியில் இடம் உண்டு.
பார்க்கவும் (search for the word, Dravidian)
http://www.unicode.org/charts/PDF/U0900.pdf

கிரந்தத்தில் 1000 ஆண்டுகளாக திராவிட பாஷைகள் எழுதப்பட்டுள்ளன.
அதை எழுதும் வல்லமை கணினியில் தேவை. இல்லையெனில்
மலை, ஆறு, மனிசர் பேர்கள் கூட சரியாக எழுதவியலாது.
யாருமே தங்கள் எழுத்தைப் பிறர் பயன்படுத்தினால் வரவேற்பர்.
ஆனால், தமிழில்??? மேலும் தமிழ் ஒன்றுக்கு மட்டுமில்லை
த்ராவிட எழுத்துக்கள் - பல த்ராவிட மொழிகட்கும் பொது.
இந்தியர், ஈழநாட்டவர் அனைவர்க்கும் பொது.

நா. கணேசன்

> தற்போது திருமுறைகள் பிற வரிவடிவங்களில் உருவாக்கம்
> பெற்று வருகின்றன. இது ஒரு சீரிய முயற்சி. தெய்வப் பனுவல்கள்
> எல்லை கடந்து பரவ இது வழிவகை செய்யும்
>
> தேவ்
>
>
>
>
>
>
>
> On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:
>

> > 2012/12/27 DEV RAJ <rde...@gmail.com <javascript:>>


>
> >> On Tuesday, 25 December 2012 20:37:02 UTC+5:30, seshadri sridharan wrote:
> >> >>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும்
> >> 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<
>
> > ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
>
> >> ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
>

> >>http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Trans...


>
> >> இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்
>
> > வணக்கம் திரு தேவ்.
> > 1.ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று எண்ணி
> > மீக்குறிகளை ஏற்றார்களா? பரிந்துரைத்தார்களா?
>
> > 2.இலக்கணத்திலும் அகராதிகளிலும் சீர்திருத்தம் என்று ஏற்றுள்ளார்களா?
>
> > 3.ஆங்கிலம் ஏற்றுள்ளது என்று தாங்கள் கூறுவதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>
> > தங்கள் சுட்டியிலிருந்து சமக்கிரதம் கையாண்ட வழியென அறிகிறேன்.
>

> >  The *International Alphabet of Sanskrit Transliteration* (*IAST*) is a
> > transliteration <http://en.wikipedia.org/wiki/Transliteration>scheme that
> > allows a lossless romanization <http://en.wikipedia.org/wiki/Romanization>
> >  of Indic scripts <http://en.wikipedia.org/wiki/Brahmic_family> as
> > employed by the Sanskrit <http://en.wikipedia.org/wiki/Sanskrit>language.

N. Ganesan

unread,
Dec 29, 2012, 7:22:39 AM12/29/12
to மின்தமிழ்

சேசாத்திரி எழுதினார்:

>கணேசருடைய முந்தைய ஒரு இடுகையில் கிரந்தத்தை கன்னடர், மலையாளியர், தெலுங்கர்,
>தமிழர் உள்ளிட்ட எல்லோரும் ஏற்று அதைப் பரவலாகப் பயன்படுத்தி அவரவர் மொழிக்கான
> எழுத்தை விட்டவிட வேண்டும் என்று எழுதுயிருந்தாரே அதை நீங்கள் படிக்கவில்லையா?
>இதன் நோக்கம் சிறுகச் சிறுக ஆரியர் திராவிடர் என்ற கருத்தியலை அடியோடு
> வேரறுப்பது தான். அது நடந்தேறினால் எல்லாமே வேத நாகரிகர் கற்றுக் கொடுத்தது
> என்று சொல்வதற்குத் தான். வேத நாகரிக சிறப்பை நிலை நிறுத்த இவர்கள் ஆரிய என்ற
>சொல்லை தூக்கி எறிய அணியமாக இருக்கின்றார்கள்.
> தமிழின் தனித் தன்மை குலைந்தால் இப்பணி எளிதில் நிறைவேறும் என்ற பெரிய கணக்கு
> தான் இவர்களை இயக்குகின்றது. கணேசர் கண்ணை மூடிக்கொண்டு வேத நாகரி ஆதரவாளர்
> தோண்டி பள்ளத்தில் விழுந்து விட்டார்.


தமிழின் அணங்கன் என்ற சொல் அனங்கன் ஆகி இருக்கிறது. பழைய
சம்ஸ்க்ருதத்தில்
அங்கம் என்றால் உறுப்பு (ஸாஷ்டாங்கம் - ஸ + அஷ்ட + அங்கம் -
{cf. சோமாஸ்கந்தம் = ஸ + உமா  + ஸ்கந்த}, அங்கஹீனம், வேதாங்கம், ...)
எனக் காட்டி  என்ற போது பழுத்த நாத்திகரா என்ற கேள்வி எழுந்தது.
தமிழில் இருந்து வடமொழி பெற்ற கருத்து அணங்கம்/அனங்கன் என்பதற்கும்
நாத்திகம், ஆத்திகம் என்பது வேற்பட்டது.
இப்போது வேத படுகுழியில் வீழ்ந்தார் என்கிறீர்கள். தமிழ் எழுத்தை
மாத்திரம்
வைத்துக்கொண்டு இந்தியாவின் எழுத்துக்களை ஆராய முடியாது.
பல எழுத்துக்களுக்கு ஆய்வுத் தேவை உள்ளது. அதன் ஓர் பகுதி: க்ரந்தலிபி.

எந்த எழுத்தையும் யாரும் விட வேண்டாம் என்பதே என் கொள்கை.
கணினியில் எந்த எழுத்தும் எப்பொழுதும் மறையாது. கிரந்தத்தில்
ஐந்து எழுத்துக்கள் தமிழில் பயன்படுகின்றன. அவற்றை யார் நினைத்தாலும்
- தமிழ்நாட்டு அரசாங்கம் நினைத்தாலும் - நீக்க முடியாது.
இணையத்தில் பயன்படுத்துவோருக்கு இருக்கும். எனவே,
எந்த எழுத்தும் இருப்பவை மறைய. நீவிர் அஞ்சற்க!

நான் சொல்லியது வேறு. மீண்டும் சொல்கிறேன். பலருக்கும்
கன்னடம், தெலுங்கு, சிங்களம், மலையாளம், ... போன்ற லிபிகள்
தெரியாது. கணினி இணையப்பக்கத்தில் ஓர் லிபியில் இருந்து
இன்னோர் லிபிக்கு மாற்றிப் படிப்பது மிக எளிது. என் போன்றோருக்கு
தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், ஹிந்தி எழுத்துக்கள்
தெரியாது. தேவையும் இல்லை. அந்த லிபிகளில் வலைப்பக்கங்களை,
மின்னஞ்சல்களை கிரந்த லிபியில் படித்துக் கொள்வேன்.
கிரந்தத்தில் ஆரிய, திராவிட பாஷைகளை எழுதிய சரிதம் 1000 ஆண்டாக
இருக்கிறது. எனவே, அம்மரபு - தேவையானவர்களுக்கு - நவீன
கணினி, இணையத்தில் வேண்டும். அவ்வளவுதான்.
நீங்கள் கிரந்தம் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதை தடுக்கவில்லை.
பயன்படுத்த வேண்டும் என்போருக்கு அளிக்க வேண்டும்.

உதாரணமாக, கல்வெட்டறிஞர் நாகசாமி அவர்கள் எழுதிக் காட்டுகிறார்.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Dec 29, 2012, 9:16:49 PM12/29/12
to mint...@googlegroups.com
தேவு ஐயா!

சர்க்கார் சமற்கிருதம் போன்ற வழங்கா மொழிகளை உரோமை எழுத்தில் எழுதலாம் என்கிறார்.

India has many scripts. Many of these scripts are very old. From time immemorial Sanskrit, the common property of India, has been written in different scripts. Sanskrit has no script of its own. Though the Indian alphabetical order is scientific with regard to phonetics, the scripts are not scientific in the practical field. Even though Roman script is the most scientific script, I do not think that it is desirable to impose this script on the living languages of India which have a developed literature. It is, however, not disadvantageous to use the Roman script for those languages which have practically no literature at all (such as Konkani, Santhali, Khasia, etc.), or for those which are not spoken languages (such as Sanskrit and Pali). The interests of the languages which have a rich literature (such as Bengali, Hindi, Tamil and Gujarati) will be greatly affected if the Roman script is imposed on them, because by doing so the link between the past literature and the future literature will be cut off.

(கிரந்த்த்தை புகுத்துவதும் தமிழுக்கு தீங்காகவே அமையும்)

For the general convenience of the people of the world, the necessity of a world script is not as great as the necessity of a world language. But then, it cannot be denied that learning languages will be easier if the different languages of the world are written in one script.

Among all the scripts prevalent in the world, the Roman script is the most scientific. But if this script is used for all spoken languages, certain practical difficulties will arise. Besides this, people are partial to their regional scripts. In my opinion it is better if the decision whether to use the Roman script for different languages or not is left to the people who speak those languages. The greater the number of people who learn the Roman script as the world script, the better it is.

There is no rule that the script of the world language of a particular age is to be the world script of that age. Rather, the script which is judged to be the most scientific script of the particular age will be the world script. The study of the world language of the age should be undertaken in that very script.

by P R Sarkar, 26 January 1958 RU, Trimohan, Bhagalpur, Published in: Problems of the Day


சீனுத்தாத்தா

unread,
Dec 29, 2012, 10:50:08 PM12/29/12
to mint...@googlegroups.com
This 83 yrs old person would go no further than cite the following
Wikipedia Link to authenticate the fact that Sanskrit is the most perfect word:


With regard to another matter, that is the usage of the word 'Zha' ழ
Please read the beginning first verse of Thirukkural:
"அகர முதலெழுத்தெல்லாம்"
கவிஞர் நாமக்கல் பிள்ளை கூறுகிறார்
“தமிழனென்றோர் இனமுண்டு,
அவனுக்குத் தனியே ஒரு குணமுண்டு.’

நான் கூற் விரும்புகிறேன்:
“தமிழ் என்றோர் மொழியுண்டு, அதற்கென தனியே ‘ழ்’ என்றோர்
சொல் உண்டு’

DEV RAJ

unread,
Dec 29, 2012, 10:55:21 PM12/29/12
to mint...@googlegroups.com
On Sunday, 30 December 2012 07:46:49 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> கிரந்த்த்தை புகுத்துவதும் தமிழுக்கு தீங்காகவே அமையும்<<<


ஸர்கார் ஜீ சொல்வது  பொதுவழக்குக்கு உதவும்
ஒரு தனிப்பட்ட கருத்து. அதில் குறைகாண்பது நோக்கம் இல்லை.
ஆனால் க்ரந்தம் ஸர்கார் ஜீ பிறப்பதற்கு முன்பே தமிழகத்திலும்,
ஈழத்திலும் வழக்கில் இருந்த வரிவடிவம்; எண்ணற்ற நூல்கள்
இதில் உள்ளன . ஒருங்குறியாக்கம் மட்டும் கோரப்படுகிறது.
அந்த நோக்கத்தைத் திரித்து அரசியலாக்குவோர் அதன் வழி
செல்லட்டும். நடுநிலையாளர் புரிந்து கொள்வர்.

இந்தி அரக்கி பிறமொழிகளை அழித்து விடுவாள்
என்று பிரசாரம் நடந்தது. ஹிந்தியை ஏற்றதால்
மாநிலமொழிகளில் எது அழிந்தது ? இன்று
தொழில்நகரங்களில் நாகர எழுத்துரு முதன்மை
பெற்று நிற்கிறது



தேவ்

DEV RAJ

unread,
Dec 29, 2012, 11:36:22 PM12/29/12
to mint...@googlegroups.com
On Sunday, 30 December 2012 07:46:49 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> சர்க்கார் சமற்கிருதம் போன்ற வழங்கா மொழிகளை .....<<<


வழங்கும் மொழியா, வழங்கா மொழியா ?

ஆராய்ச்சி அளவிலாவது சங்கதம் இடம்பெற்றுள்ளது
இதைப் பார்த்தால் தெரியும் -
http://sanskrit.inria.fr/portal.html


தேவ்

Pandiyaraja

unread,
Dec 30, 2012, 2:09:15 AM12/30/12
to mint...@googlegroups.com
. >>Even though Roman script is the most scientific script, I do not think that it is desirable to impose this script on the living languages of India which have a >>developed literature.
 
The Roman Script has the greatest disadvantage for Indian languages, especially for Tamil, since it doesn't have a form for the consonat+vowel combination (உயிர்மெய்). This is equivqlent to writing துவரங்குறிச்சி as  த் உ வ் அ இ அ ங் க் உ ற் இ ச் ச் இ (thuvarangkuRiccci) which makes the word length more. This is calles as 'graphic monstrosity' in writing by Bhagwat (Bhagwat, S.V. 1961 Phonemic Frequencies in Marathi and their relation to devising a speed script, Poona University and Deccan College Publications in Linguistics). In Tamil the forms for consonat + u and consonant + U (உகர, ஊகார) have single forms. This is advantageous (many persons wrongly think otherwise) for Tamil, for, next to the consonant + a (அகரம்), the sound combination consonant + u occurs in large numbers. I have made frequency studies based on about 2.5 lakh words and have found that spliting the consonant and vowel would greatly reduce the speed of writing. In the theory of Entropy for languages, they say,"A unit of expression should be large enough to convey as much information as possible while keeping the number of distinct forms within reasonable bounds". I have found that the average length of a word, while writing in Roman script is 6.15 while the same for writing in the present Tamil system is only 4.29 (based upon my sample of 2.5 lakh words). So, don't be misled by the least number of letters in Roman Script. Moreover, any system of writing involves two types of efforts, (1) the memory effort to learn and retain the codes and (2) the physiologocal effort in producing them. The memory effort is a one-time job but the application effort is there whenever you write. In Tamil, the memory effort is more but it is one-time only and the physilogical effort is much simplified.
P.Pandiyaraja
(This information is part of my Ph.D Thesis which I submitted in 2001, on the verge of my retirement!!)

தேமொழி

unread,
Dec 30, 2012, 2:39:15 AM12/30/12
to mint...@googlegroups.com
On Saturday, December 29, 2012 11:09:15 PM UTC-8, Pandiyaraja wrote:
. >>Even though Roman script is the most scientific script, I do not think that it is desirable to impose this script on the living languages of India which have a >>developed literature.
 
The Roman Script has the greatest disadvantage for Indian languages, especially for Tamil, since it doesn't have a form for the consonat+vowel combination (உயிர்மெய்). This is equivqlent to writing துவரங்குறிச்சி as  த் உ வ் அ இ அ ங் க் உ ற் இ ச் ச் இ (thuvarangkuRiccci) which makes the word length more.
 
 

 

புரிகிறது...ஒவ்வொரு 'அசை'க்கும் (syllable)  நம்மிடம் தனித்தனியாக எழுத்துள்ளது. 

அதனால் குறைந்த எழுத்துக்கள் தேவைப்படுகிறது. 

Ilavazhuthi = இளவழுதி 

ஐந்தெழுத்தில் எழுதும் சொல்லுக்கு அதைவிட இருமடங்கு எழத்துக்கள் ஆங்கிலத்தில் தேவைப்படுகிறது.

வெளிநாட்டுக்காரர்களும்  எதற்காக இவ்வளவு நீளமான பெயர் வைத்துக் கொள்கிறீர்கள் என ஆச்சரியப்படுகிறார்கள்.

...தேமொழி 

Pandiyaraja

unread,
Dec 30, 2012, 6:12:17 AM12/30/12
to mint...@googlegroups.com
தேமொழி உரைத்தது செவ்வை, நன்மொழி!!!!
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 30, 2012, 7:00:00 AM12/30/12
to மின்தமிழ்
Dear Prof. Pandiyaraja,

(1) Nowadays the need for handwriting any language is on the decline.
More and more of "writing" in any Indian language happens in
keyboards.

(2) More than 99% of Tamil or Hindi inputting happens from Roman
keyboards,
this situation is known as digraphia, where we input in Roman letters
and get output as Tamil or Hindi etc., output.

(3) I think your letter count of Roman letters is based on non-
diacritical
plain-English letters. If you use diacritcal form, the letter count
will be
lot less and will favorably compare more.

(4) Allowing youth to read Indic script web pages in Roman also will
help
in uniformity of scripts all across India. To a secondary degree, the
Roman
script can be allowed, since many youngsters are not fluent in any
Indic script in today's modern world. Nowadays, it is not true that
one language can be writte only in one script in web pages, emails in
mobiles etc., After all, we write in Roman input (digraphia) and show
as Tamil, Telugu, Hindi, ... scripts. It is only outward appearance
in Indic scripts.

(5) Since going from one script to another in computers and mobiles is
lot easier nowadays, allowing Roman letter transliteration as one
way to write will be useful for Indian languages. All Indian languages
can be read via roman lettering. All languages, except Tamil script,
have one-to-one phonetic trancription & so easy.

In Tamil, for easy reading, the cononants, k(க்) and c(ச்) in between
two vowels are fricative sounds, and in Arabic for example, they
write these fricatives with a breve sign below. So, a converter
for intervocalic k(க்) and c(ச்) should be h and s with a breve sign
below.
All other letters can follow ISO 15919.
And, this Spoken Tamil form for roman transliteration of
a web page or email will be useful to read Tamil as it is done
by native Tamils. I will give some samples, & please check this
conversion to Spoken Tamil.

Happy New year!
N. Ganesan

Unless we standardize this spoken
Tamil conversion, the fricative sounds of intervocalic k & c
(esp. that of -k- due to influence from Telugu, Kannada, etc.,)
will be lost.

>
>
>
>
>
> On Sunday, December 30, 2012 10:06:22 AM UTC+5:30, DEV RAJ wrote:
> > On Sunday, 30 December 2012 07:46:49 UTC+5:30, seshadri sridharan wrote:
> > >>> சர்க்கார் சமற்கிருதம் போன்ற வழங்கா மொழிகளை .....<<<
>
> > வழங்கும் மொழியா, வழங்கா மொழியா ?
>
> > ஆராய்ச்சி அளவிலாவது சங்கதம் இடம்பெற்றுள்ளது
> > இதைப் பார்த்தால் தெரியும் -
> >http://sanskrit.inria.fr/portal.html
>
> > தேவ்
>
> > On Sunday, 30 December 2012 07:46:49 UTC+5:30, seshadri sridharan wrote:
>
> >> தேவு ஐயா!
>
> >> சர்க்கார் சமற்கிருதம் போன்ற வழங்கா மொழிகளை உரோமை எழுத்தில் எழுதலாம்
> >> என்கிறார்.
>
> >> India has many scripts. Many of these scripts are very old. From time
> >> immemorial Sanskrit, the common property of India, has been written in
> >> different scripts. Sanskrit has no script of its own. Though the Indian
> >> alphabetical order is scientific with regard to phonetics, the scripts are
> >> not scientific in the practical field. Even though Roman script is the most
> >> scientific script, I do not think that it is desirable to impose this
> >> script on the living languages of India which have a developed literature.
> >> It is, however, *not disadvantageous to use the Roman script for those
> >> languages which have practically no literature at all (such as Konkani,
> >> Santhali, Khasia, etc.), or for those which are not spoken languages (such
> >> as Sanskrit and Pali).* The interests of the languages which have a rich

Innamburan Innamburan

unread,
Dec 30, 2012, 3:58:15 PM12/30/12
to mint...@googlegroups.com
ஒரு சிரிப்பான் குறைந்ததின் 'காய்மறைவு;இலை மறைவு' என்ன?


2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
360.gif

DEV RAJ

unread,
Dec 30, 2012, 11:49:11 PM12/30/12
to mint...@googlegroups.com

On Sunday, 30 December 2012 17:30:00 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> (4) Allowing youth to read Indic script web pages in Roman also will
help in uniformity of scripts all across India. To a secondary degree, the
Roman script can be allowed, since many youngsters are not fluent in any
Indic script in today's modern world. Nowadays, it is not true that
one language can be writte only in one script in web pages, emails in
mobiles etc., After all, we write in Roman input (digraphia) and show
as Tamil, Telugu, Hindi, ... scripts. It is only outward appearance
in Indic scripts. <<<<



இது முழுவதும் ஏற்புடைய கருத்து.

ஆனால் இந்திய மொழிகளில் கூட்டெழுத்து முன்பு இருந்துள்ளது;
நாகரியில் இப்பொழுதும் உண்டு. வரி நீளத்தையும், எழுத்துச் சிரமத்தையும்
குறைக்க இது மிகவும் உதவியது. க்ரந்த எழுத்து புதுச்சரக்கன்று.
நெடுங்காலமாக நிலவி வருவதுதான். கல்வெட்டு ஆதாரம் உள்ளது.
வரிநீளத்தைக் குறைக்கும் *பொதுவான* புதிய வரிவடிவம் ஆசிய / இந்திய
மொழிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. காலம் அருகி வருகிறது;
உலகம் சுருங்குகிறது. கட்டாயம் இதன் தேவையை மக்கள் உணர்வர்



தேவ்

Geetha Sambasivam

unread,
Dec 31, 2012, 1:08:32 AM12/31/12
to mint...@googlegroups.com
எதுவும் இல்லை. கணக்கில் எடுத்துக்கிறதும் இல்லை.  சும்ம்ம்மா எவ்வளவு தோணுதோ, அவ்வளவு தான் கணக்கு!

2012/12/31 Innamburan Innamburan <innam...@gmail.com>
ஒரு சிரிப்பான் குறைந்ததின் 'காய்மறைவு;இலை மறைவு' என்ன?


2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நான் கோபமாகவோ, வருத்தமாகவோ கூறவில்லை என்பதன் வெளிப்பாடு அது.  சிரிப்பான்கள் போட்டுவிட்டால் என் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம் என நினைத்தேன்.  ஏமாந்துட்டேனே!

360.gif

seshadri sridharan

unread,
Dec 31, 2012, 2:14:57 AM12/31/12
to mint...@googlegroups.com
On Mon, Dec 31, 2012 at 10:19 AM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
//ஆனால் இந்திய மொழிகளில் கூட்டெழுத்து முன்பு இருந்துள்ளது; நாகரியில் இப்பொழுதும் உண்டு. வரி நீளத்தையும், எழுத்துச் சிரமத்தையும்  குறைக்க இது மிகவும் உதவியது.  -  தேவ்//

தமிழில் இகர ஈகார உயிர்மெய்யெழுத்துகள், உகர ஊகார மெய்யெழுத்துகள் சீர்மையாக இல்லை. இதனால் குழந்தைகள் அதிக வரிவடிவங்களை நினைவில் கொள்ள வேண்டயுள்ளது அதோடு(and) அச்சுக் கோர்பில் கூடுதல் குறிகள் தேவைப்படுகின்றன ஆதலால் வ.செ. குழந்தைசாமி அதற்கு ஒரு எழுத்துச் சீர்மையை பரிந்துரைத்தார். தமிழில் குறைவான எழுத்துகள் இருக்கும் போதே இந்த எழுத்து சீர்மை பற்றி பேசுகிறார்கள். இன்னும் கூட்டெழுத்துகள்  என்றால் எப்படி எல்லாம் ஒப்பாரி வைப்பார்களோ? மற்ற இந்திய எழுத்துகளை ஒப்பும் போது தமிழ் எழுத்துகள் மிக எளிமையானவை. 

தமிழ் எழுத்துகள் சிலவற்றை விரலைத் தூக்காமலேயே எழுதமுடியும் ஆனால் பிற இந்திய எழுத்துகளை எழுத அவ்வப்போது விரலை தாளினின்று எடுக்க வேண்டியுள்ளது. நாகரி எழுத்து அகரத்தை எழுத முதலில் ஒரு 3 அதன் பின் அதை இணைத்தபடி 1. அதன் பின் மேலே ஒரு கோடு என ஒரே எழுத்தை எழுத மூன்று முறை விரலை தாளிலில் இருந்து தூக்க வேண்டியுள்ளது.

Karuannam Annam

unread,
Dec 31, 2012, 2:34:51 AM12/31/12
to mint...@googlegroups.com


2012/12/31 seshadri sridharan <ssesh...@gmail.com>

தமிழில் இகர ஈகார உயிர்மெய்யெழுத்துகள், உகர ஊகார மெய்யெழுத்துகள் சீர்மையாக இல்லை. இதனால் குழந்தைகள் அதிக வரிவடிவங்களை நினைவில் கொள்ள வேண்டயுள்ளது அதோடு(and) அச்சுக் கோர்பில் கூடுதல் குறிகள் தேவைப்படுகின்றன ஆதலால் வ.செ. குழந்தைசாமி அதற்கு ஒரு எழுத்துச் சீர்மையை பரிந்துரைத்தார். தமிழில் குறைவான எழுத்துகள் இருக்கும் போதே இந்த எழுத்து சீர்மை பற்றி பேசுகிறார்கள். மற்ற இந்திய எழுத்துகளை ஒப்பும் போது தமிழ் எழுத்துகள் மிக எளிமையானவை. 

தமிழ் எழுத்துகள் சிலவற்றை விரலைத் தூக்காமலேயே எழுதமுடியும் ஆனால் பிற இந்திய எழுத்துகளை எழுத அவ்வப்போது விரலை தாளினின்று எடுக்க வேண்டியுள்ளது. நாகரி எழுத்து அகரத்தை எழுத முதலில் ஒரு 3 அதன் பின் அதை இணைத்தபடி 1. அதன் பின் மேலே ஒரு கோடு என ஒரே எழுத்தை எழுத மூன்று முறை விரலை தாளிலில் இருந்து தூக்க வேண்டியுள்ளது.

உணர்ந்து எழுதப்பட்டுள்ள சிறப்பான கருத்து.
வாழ்த்துக்கள் திரு சேசாத்ரி.

seshadri sridharan

unread,
Dec 31, 2012, 3:25:31 AM12/31/12
to mint...@googlegroups.com


2012/12/31 Karuannam Annam <karu...@gmail.com>
//உணர்ந்து எழுதப்பட்டுள்ள சிறப்பான கருத்து. வாழ்த்துக்கள் திரு சேசாத்ரி.- சொ.வினைதீர்த்தான்//

நன்றி ஐயா!. 

Pandiyaraja

unread,
Dec 31, 2012, 3:47:04 AM12/31/12
to mint...@googlegroups.com
திரு.வ.செ.குழந்தைசாமி அவர்களின் எழுத்துமுறை எழுதும் வேகத்தைக் குறைக்கும் - நேரத்தை அதிகரிக்கும் - எழுதுதாள்கள் அதிகம் தேவைப்படும் என்பதை - 10 மாணவர்களைக் கொண்டு எழுதச்செய்து - ஆய்வு முடிவை 5 பக்கங்களுக்கு விளக்கமாக அவருக்கு (அவர் முறை வெளிவந்த சில நாட்களிலேயே) அனுப்பினேன். "நன்றி, எந்தப் புதுமுயற்சிக்கும் எதிர்ப்புத் தெரிவிப்போர் எந்நாளும் உண்டு" என்ற பொருள்பட ஒரு வரியில் பதில் சொல்லி முடித்துவிட்டார். மீண்டும் சொல்கிறேன் - புள்ளியியல் அடிப்படியில், இன்றைய எழுத்துமுறையைவிட்டு வேறு எந்த முறை வந்தாலும் அது தமிழுக்கு நல்லதல்ல. இன்னும் நூறு ஆண்டுகட்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் இலட்சக்கணக்கான தாள்களில் தேர்வுகள் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார்கள். அதுவரை இது தொடரட்டும். கையெழுத்தே மறைந்துவிட்டால் -- அப்போதுள்ளவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.
ப.பாண்டியராஜா
பி.கு
இந்திய அளவில் ஒரே குறியீடு என்ற நோக்கில் குரல் கொடுப்போருக்கு ஒரு தகவல். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர், அனைத்து (அன்றைக்கிருந்த) இந்திய மொழிகளும் - தமிழ் உள்பட - ஒரே எழுத்துமுறையைத் தான் கொண்டிருந்தன. அதுதான் பிராமி. ஆனால் அவை இன்று வெவ்வேறாய் உருமாறியிருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் - ஒவ்வொரு மொழியின் இயல்பும் பயன்பாட்டு முறையும் தான். The principle of least effort -படி மிக அதிகப் பயன்பாடு உள்ள எழுத்துகள் மிகச் சிறிய உருவத்தைப் பெறுகின்றன. இது மொழிக்கு மொழி வேறுபடும். மீண்டும் சீரான எழுத்துரு என்று கூறுவது வரலாற்றை ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுப்பது ஆகும். வெட்டி வேலை- வீண் முயற்சி - தற்கொலைக்கு ஒப்பானது.

DEV RAJ

unread,
Dec 31, 2012, 5:46:39 AM12/31/12
to mint...@googlegroups.com

On Monday, 31 December 2012 12:44:57 UTC+5:30, seshadri sridharan wrote:
>>>> தமிழ் எழுத்துகள் சிலவற்றை விரலைத் தூக்காமலேயே எழுதமுடியும் ஆனால் பிற இந்திய எழுத்துகளை எழுத அவ்வப்போது விரலை
தாளினின்று எடுக்க வேண்டியுள்ளது. நாகரி எழுத்து அகரத்தை எழுத முதலில் ஒரு 3 அதன் பின் அதை இணைத்தபடி 1. அதன் பின் மேலே ஒரு கோடு
என ஒரே எழுத்தை எழுத மூன்று முறை விரலை தாளிலில் இருந்து தூக்க வேண்டியுள்ளது.<<<


குறைகள் லிபிகளில் இருப்பது உண்மையே.
உமது பெயரையே நாகரி லிபியிலும்,
தமிழ் லிபியிலும் தட்டெழுதினால் -

शेषाद्रि
चेच्चात्तिरि
சேச்சாத்திரி

தமிழில் வரி நீளம் கூடுகிறது;
எழுதுவதானால்  தேவநாகரியில் பலமுறை
விரலைத் தாளிலிருந்து எடுத்து எழுத நேரலாம்.
அதையும் ஒப்புக்கொள்கிறேன்.

வல்லுநர்கள் ஒருங்கிணைந்து முயன்று
குறை களைய வேண்டும்



தேவ்

seshadri sridharan

unread,
Dec 31, 2012, 5:49:01 AM12/31/12
to mint...@googlegroups.com
நல்ல கருத்தை வெளிப்படுத்தினீர்கள். கணேசர் இந்த எழுத்து சீர்திருத்தத்தை ஆதரிப்பவர்

2012/12/31 Pandiyaraja <pipi...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 31, 2012, 6:39:24 AM12/31/12
to மின்தமிழ்

On Dec 31, 4:46 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Monday, 31 December 2012 12:44:57 UTC+5:30, seshadri sridharan wrote:
> >>>> தமிழ் எழுத்துகள் சிலவற்றை விரலைத் தூக்காமலேயே எழுதமுடியும் ஆனால் பிற
>
> இந்திய எழுத்துகளை எழுத அவ்வப்போது விரலை
> தாளினின்று எடுக்க வேண்டியுள்ளது. நாகரி எழுத்து அகரத்தை எழுத முதலில் ஒரு 3
> அதன் பின் அதை இணைத்தபடி 1. அதன் பின் மேலே ஒரு கோடு
> என ஒரே எழுத்தை எழுத மூன்று முறை விரலை தாளிலில் இருந்து தூக்க
> வேண்டியுள்ளது.<<<
>
> குறைகள் லிபிகளில் இருப்பது உண்மையே.
> உமது பெயரையே நாகரி லிபியிலும்,
> தமிழ் லிபியிலும் தட்டெழுதினால் -
>
> शेषाद्रि
> चेच्चात्तिरि
> சேச்சாத்திரி
>
> தமிழில் வரி நீளம் கூடுகிறது;
> எழுதுவதானால்  தேவநாகரியில் பலமுறை
> விரலைத் தாளிலிருந்து எடுத்து எழுத நேரலாம்.
> அதையும் ஒப்புக்கொள்கிறேன்.
>

தமிழ் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.
மலையாளம், கிரந்தத்திலும் பலவகையான உ, ஊ உயிர்மெய் இருந்தது.
20-ஆம் நூற்றாண்டில் மலையாளம், கிரந்தம் உ, ஊ
உயிர்மெய்களைச் சீராக்கிவிட்டது. தமிழில்
எழுத்தாணி கொண்டு எழுதுவோர் யாருமில்லை.
இன்று பலரும் ஆங்கில எழுத்தை உள்ளிட்டு கணினியில்
எழுதுகிறார்கள். இந்திய லிபிகள் எல்லாவற்றுக்கும் digraphia
செயல்பாடுதான்.

தமிழ், கிரந்தம் எழுத்தாணியில் எழுதப்பெற்றன. ஆனால் நாகரி
எழுதுவது மையினால் - தாளிலும், துணியிலும், பூர்ஜபத்திரத்திலும்.
எனவே, அது எழுதும் முறை வேறுபடுகிறது. விரலை எடுத்தபின்.

இந்திய மொழிகளுக்கு ஐஎஸ் ஓ முறை 15919 முக்கியம்.
தமிழுக்கு இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க், ச்
என்னும் உராய்வொலிகளைக் குறித்து பேச்சுத்தமிழ் ரோமன்
லிபிமாற்றி செய்யலாம்.

நா. கணேசன்

> வல்லுநர்கள் ஒருங்கிணைந்து முயன்று


> குறை களைய வேண்டும்
>
> தேவ்
>
>
>
>
>
>
>
> On Monday, 31 December 2012 12:44:57 UTC+5:30, seshadri sridharan wrote:
>

Pandiyaraja

unread,
Dec 31, 2012, 7:54:10 AM12/31/12
to mint...@googlegroups.com
இதன் தொடர்ச்சியாக -----
அன்பர்கள் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு எழுத்துமுறையிலும் அதனைப் பயன்படுத்துவோரின் Gene -இன் தாக்கம் இருக்கும். 400, 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவர்கள் அரங்கினை இடஞ்சுழியாகச் சுற்றுவர். Benhur படத்தில் chariot race பார்த்தீர்களா? இடஞ்சுழியாகவே (anticlockwise) தேர்கள் ஓடும். அதனால்தான் இன்றைக்கும் ஓட்டப்பந்தயங்களில் இடஞ்சுழி ஓட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் நமது கோயில் பிரகாரங்களை வலஞ்சுழியாகவே (clockwise)சுற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் சாத்திரம் இல்லை. நமது gene அப்படி. ரோமன் எழுத்துக்களில் பெரும்பாலானவை - குறிப்பாக சிறிய எழுத்துகள் a, b, c, d, e f, g,h,i,...)- இடஞ்சுழியாகவே எழுதப்படுகின்றன. b- கூடப்பாருங்கள், எழுத்துவழக்கில் இடஞ்சுழியாகத்தான் பெரும்பாலும் எழுதப்படுகிறது. காரணம் அவர்களின் gene. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியா முழுக்க - எந்த மொழியிலும் 'க' என்பது + என்றுதான் எழுதப்பட்டது. அதுதான் பிராமி 'க'. இந்த +-ஐ கை எடுக்காமல் இடஞ்சுழியாக எழுதினால் இன்றைய ஹிந்தி 'க' கிடைக்கும். இந்த  +-ஐக் கையை எடுக்காமல் (I told you - the principle of least effort) வலஞ்சுழியாக எழுதினால் நமது க கிடைக்கும். இது ஏதோ சேசாத்திரியைத் தமிழில் எழுதினால் மட்டும் நீளமாவதைப் போல் இல்லை.(ஒருவேளை தமிழில் மட்டும் font size பெரியதாக இருக்கிறதோ?) இன்றைய 'த' என்பது பிராமியில் திருப்பிப்போட்ட lamda (λ).நீளக்கோட்டை இடது பக்கமும் சிறிய குறுக்குக்கோட்டை வலது பக்கமும் எழுதவேண்டும். இதையே கையை எடுக்காமல் எழுதினால் இன்றைய 'த' கிடைக்கும். இது வலஞ்சுழியானது. ஹிந்தியில்தான் இது வராதே. சிரமப்பட்டு மேலே ஆரம்பித்து நடுவுக்கு வந்து வலப்பக்கம் சென்று, சிறிய கோட்டை இடப்பக்கம் கொண்டுவந்துவிட்டார்கள். எழுத்து இடஞ்சுழியாகிவிட்டது. இது அவர்களின் gene. 'ச' கூட அப்படித்தான். தமிழில் வலம் - ஹிந்தியில் இடம் - ஆனால் மூல உருவம் ஒன்றே. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம் - அதற்கு வேறு காரணங்கள் இருக்கும். மொத்தத்தில் இந்தோ-யூரோப்பியன் மொழிகள் இடஞ்சுழி, திராவிட மொழிகள் வலஞ்சுழி - கன்னட, தெலுங்கு, மலையாள ஜிலேபி எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழிதானே. இது இரத்தத்தில் உள்ளது. இப்போது தமிழுக்கும் ரோமன் அல்லது நாகரி எழுத்து என்றால் நம் gene-ஐயே transplant செய்வது போல். யோசித்துப்பாருங்கள். நான் இனத்துவேஷம் பேசுகிறவன் அல்லன். ஆனால் இன வேறுபாடு உண்டு - அவையவை தனித்து வாழட்டும் - வாழ்ந்து செழிக்கட்டும்.

Pandiyaraja

unread,
Dec 31, 2012, 9:13:44 AM12/31/12
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, முனைவர்.ந.கணேசன்.( நான் ஏற்கனவே சொன்னபடி) வ.செ.கு - வுக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். அந்தக் கட்டுரையின் தலைப்பு 'சீரான அமைப்பு எல்லாம் சீரமைப்பு இல்லை' புள்ளிவிவரங்களுடன் நிறுவியிருக்கிறேன்.
ஒரே ஒரு சொல்லை வைத்து நீளத்தை ஆயமுடியாது. சிறுபிள்ளையில் விளையாட்டாய்ச் செய்வதில்லையா - X-ray என்பது தமிழில் எக்ஸ் ரே  ஆகி, ஒரு X -க்கு மூன்று தமிழில். மூன்று Ray - க்கு ஒரு ரே தமிழில். உங்களுக்குத் தெரியும். Sampling மூலம் நிறுவவேண்டும். நான் 2,50,000 சொற்களை எடுத்து, கணினி மூலம் நீளத்தைப் பலவிதமாக அளந்து, அவற்றில் மிகச் சிறந்தது சங்ககாலப் பிராமியே என்று நிறுவியிருக்கிறேன். அந்தப் பிராமியில் எல்லா உயிர்மெய்க்கும் ஒரே எழுத்துதான். பின்னர்தான் 'கால்'களும், 'கொம்பு'களும் முளைத்தன. எனினும் அவற்றின் எண்ணிக்கை பயன்பாட்டில் not significant என்றும் காண்பித்திருக்கிறேன். significant difference உள்ள உகர மெய்யெழுத்துக்கள் frequency அதிகம் உள்ளவை - எனவேதான் அதன் உகரக் குறியீடு மூல மெய்யுடன் mergeஆகிவிட்டது. இதுதான் பரிணாம வளர்ச்சி. இதை மீண்டும் பிரித்தால் அது இயற்கைக்கு முரணானது. ஊகாரத்தைப் பற்றிக் கவலையில்லை. frequency மிகவும் குறைவு. எனவே உகர ஊகாரங்களைக் கண்டு மிரளவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
நன்றி, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ப.பாண்டியராஜா

 


On Monday, December 31, 2012 6:54:10 AM UTC-6, Pandiyaraja wrote:
இதன் தொடர்ச்சியாக -----
அன்பர்கள் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு எழுத்துமுறையிலும் அதனைப் பயன்படுத்துவோரின் Gene -இன் தாக்கம் இருக்கும். 400, 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவர்கள் அரங்கினை இடஞ்சுழியாகச் சுற்றுவர். Benhur படத்தில் chariot race பார்த்தீர்களா? இடஞ்சுழியாகவே (anticlockwise) தேர்கள் ஓடும். அதனால்தான் இன்றைக்கும் ஓட்டப்பந்தயங்களில் இடஞ்சுழி ஓட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் நமது கோயில் பிரகாரங்களை வலஞ்சுழியாகவே (clockwise)சுற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் சாத்திரம் இல்லை. நமது gene அப்படி. ரோமன் எழுத்துக்களில் பெரும்பாலானவை - குறிப்பாக சிறிய எழுத்துகள் a, b, c, d, e f, g,h,i,...)- இடஞ்சுழியாகவே எழுதப்படுகின்றன. b- கூடப்பாருங்கள், எழுத்துவழக்கில் இடஞ்சுழியாகத்தான் பெரும்பாலும் எழுதப்படுகிறது. காரணம் அவர்களின் gene. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியா முழுக்க - எந்த மொழியிலும் 'க' என்பது + என்றுதான் எழுதப்பட்டது. அதுதான் பிராமி 'க'. இந்த +-ஐ கை எடுக்காமல் இடஞ்சுழியாக எழுதினால் இன்றைய ஹிந்தி 'க' கிடைக்கும். இந்த  +-ஐக் கையை எடுக்காமல் (I told you - the principle of least effort) வலஞ்சுழியாக எழுதினால் நமது க கிடைக்கும். இது ஏதோ சேசாத்திரியைத் தமிழில் எழுதினால் மட்டும் நீளமாவதைப் போல் இல்லை.(ஒருவேளை தமிழில் மட்டும் font size பெரியதாக இருக்கிறதோ?) இன்றைய 'த' என்பது பிராமியில் திருப்பிப்போட்ட lamda (λ).நீளக்கோட்டை இடது பக்கமும் சிறிய குறுக்குக்கோட்டை வலது பக்கமும் எழுதவேண்டும். இதையே கையை எடுக்காமல் எழுதினால் இன்றைய 'த' கிடைக்கும். இது வலஞ்சுழியானது. ஹிந்தியில்தான் இது வராதே. சிரமப்பட்டு மேலே ஆரம்பித்து நடுவுக்கு வந்து வலப்பக்கம் சென்று, சிறிய கோட்டை இடப்பக்கம் கொண்டுவந்துவிட்டார்கள். எழுத்து இடஞ்சுழியாகிவிட்டது. இது அவர்களின் gene. 'ச' கூட அப்படித்தான். தமிழில் வலம் - ஹிந்தியில் இடம் - ஆனால் மூல உருவம் ஒன்றே. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம் - அதற்கு வேறு காரணங்கள் இருக்கும். மொத்தத்தில் இந்தோ-யூரோப்பியன் மொழிகள் இடஞ்சுழி, திராவிட மொழிகள் வலஞ்சுழி - கன்னட, தெலுங்கு, மலையாள ஜிலேபி எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழிதானே. இது இரத்தத்தில் உள்ளது. இப்போது தமிழுக்கும் ரோமன் அல்லது நாகரி எழுத்து என்றால் நம் gene-ஐயே transplant செய்வது போல். யோசித்துப்பாருங்கள். நான் இனத்துவேஷம் பேசுகிறவன் அல்லன். ஆனால் இன வேறுபாடு உண்டு - அவையவை தனித்து வாழட்டும் - வாழ்ந்து செழிக்கட்டும்.
ப.பாண்டியராஜா
 
 

சீர்மையை கிரந்தம் நடைமுறைப்படுத்திய போதும் உ, ஊ உயிர்மெய் குறிகள் வலஞ்சுழி ஆகவே உள்ளன.
வாசெகு சொல்கிற உ, ஊ உயிர்மெய்யும் வலஞ்சுழி வடிவுதான். 90 பாகை திருப்பியுள்ளார்.

புள்ளி தத்துவத்தால் நாகரியைவிட வரிநீளம் அதிகம் - தமிழ்லிபியில். ஃபாண்ட்டால் அல்ல.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Jan 1, 2013, 1:29:53 AM1/1/13
to mint...@googlegroups.com
On Monday, 31 December 2012 19:43:44 UTC+5:30, Pandiyaraja wrote:
>>>> X-ray என்பது தமிழில் எக்ஸ் ரே  ஆகி, ஒரு X -க்கு மூன்று தமிழில். மூன்று Ray - க்கு ஒரு ரே தமிழில்.
உங்களுக்குத் தெரியும். Sampling மூலம் நிறுவவேண்டும். நான் 2,50,000 சொற்களை எடுத்து, கணினி மூலம் நீளத்தைப்
பலவிதமாக அளந்து, அவற்றில் மிகச் சிறந்தது சங்ககாலப் பிராமியே என்று நிறுவியிருக்கிறேன்.
அந்தப் பிராமியில் எல்லா உயிர்மெய்க்கும் ஒரே எழுத்துதான். பின்னர்தான் 'கால்'களும், 'கொம்பு'களும் முளைத்தன.
எனினும் அவற்றின் எண்ணிக்கை பயன்பாட்டில் not significant என்றும் காண்பித்திருக்கிறேன்.
significant difference உள்ள உகர மெய்யெழுத்துக்கள்  frequency அதிகம் உள்ளவை - எனவேதான்
அதன் உகரக் குறியீடு மூல மெய்யுடன் mergeஆகிவிட்டது. <<<<


நன்றி, ஐயா
உங்கள் கருத்துகள் விஞ்ஞானபூர்வமாக உள்ளன.
உங்கள் ஆராய்ச்சியைச் சிறிது சிறிதாக ஒரு
தொடராக வெளியிடலாம்.

தகவல்களை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ
மொழி பெயர்த்துவிட்டு, பின்னர் தமிழில்
அதையே எழுதினால் தமிழில் அளவு
அதிகமாகவே உள்ளது. NHM font தான்.
நீங்கள் முயன்று பார்க்கலாம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
தேவ்

Pandiyaraja

unread,
Jan 1, 2013, 7:33:53 AM1/1/13
to mint...@googlegroups.com
>> தகவல்களை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ
மொழி பெயர்த்துவிட்டு, பின்னர் தமிழில்
அதையே எழுதினால் தமிழில் அளவு
அதிகமாகவே உள்ளது. NHM font தான்.
நீங்கள் முயன்று பார்க்கலாம்.
>>
நீங்கள் கூறுவது வேறு பிரச்சினை திரு.தேவ். இது மொழிபெயர்ப்புப் பிரச்சினை. மொழிபெயர்ப்பவரின் திறமையைப் பொருத்தது. ஓரளவு மொழித்திறனும் இதில் அடங்கும். நீங்கள் சொல்வதையே புரட்டிப்போட்டுப் பாருங்கள். தமிழில் சொல்லிவிட்டுப் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பாருங்கள்.
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக(9 சொற்கள்) = Learn faultlessly, after learning what is to be learnt and then stand by it (14 words).
இதையே ரோமன் எழுத்தில் எழுதினால்,
kaRka kacaTaRa kaRpavai kaRRapin niRka athaRkuth thaka -- எழுத்துகளின் எண்ணிக்கையைக் கூட்டிப்பாருங்கள். தமிழில் எழுதுவது குறைவா, ரோமனில் எழுதுவது குறைவா? ஏதோ நமக்குச் சாதகமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு புள்ளிவிவரம் பேசக்கூடாது. குறைந்தது 2500 சொற்கள் கொண்ட ஒரு தமிழ்ப் பகுதியை வேறு எந்த எழுத்துமுறையிலும் எழுதிப்பார்த்துச் சொல்லுங்கள்.
1960-இல் என் தமிழ்ப்பேராசிரியர் திரு.ஜோதிமுத்து (அமெரிக்கன் கல்லூரி) வினையாலணையும்பெயரின் தன்மை பற்றிக் கூறும்போது சொன்னது.
நேற்று வந்தவன் இன்றும் நாளையும் வரமாட்டான் (5 சொற்கள்)- இதையே ஆங்கிலத்தில் சொன்னால் The person who came yesterday will not come today and tomorrow (11 சொற்கள்)
இது மொழிப் பிரச்சனை - மொழிபெயர்ப்புப் பிரச்சனை. நான் இதைக் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிடுவது எழுத்துப்பிரச்சனை.
பி.கு எனக்கு ஹிந்தி தெரியாது. தெரிந்திருந்தால் அதிலிருந்தும் சொல்லியிருப்பேன். (இதற்குத்தான் சொன்னேன் - ஹிந்தி படித்துக்கொள்ளுங்கள் என்று யாராவது கூறினால் - அது இன்னொரு பிரச்சினை ஆகிவிடும் - ஏற்கனவே 'ழ'-வின் சிறப்புப் பற்றிப் பேச ஆரம்பித்த இழை வேறு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது!!!!!)
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 

Pandiyaraja

unread,
Jan 1, 2013, 9:26:55 AM1/1/13
to mint...@googlegroups.com
தங்களுடைய உடனடியான பதிலுக்கு நன்றி, முனைவர் நா. கணேசன்.
>>
இந்தியாவிலேயே வரிநீளம் அதிகம் உள்ள லிபி தமிழ் தான்
>>
இதற்கு ஏதேனும் supportive evidence with statistical base - இருந்தால் தயவுசெய்து கொடுங்கள்.
என்னமோ தமிழ்நாட்டுக் குழந்தைகள் உகர ஊகார உயிர்மெய்யைப் படிக்கத் திக்கித் திணறுவதுபோன்ற ஒரு மாயையை எழுப்புகின்றனர். அந்த வலையில் நீங்களும் சிக்கிக்கொண்டீர்களா? அப்படியே இருந்தாலும் (very definitely NO) அது one-time job தான். வாழ்க்கை முழுக்கக் கிடைக்கும் பயனைப் பற்றி மறந்துவிடுகிறார்கள். வாய்ப்பாடுகளை  மனப்பாடம் செய்வது waste என்ற மேலைநாட்டு கல்வியியல் "மேதைகள்' கூறியதை வைத்து நாமும் அவ்வாறு செய்து வருகிறோம். ஒரு சில ஆண்டுகள் மனப்பாடம் செய்யாமல் (வேறு என்னத்தை அந்த வயதில் செய்து கிழிக்கிறார்களோ?) வாழ்க்கை முழுக்க calculator-ஐக் கையில் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். ஒரு சில மணி நேரத்திற்கு காசு வாங்கும் counter களில் மின்சாரம் இல்லாவிட்டால் அமெரிக்காவில் விற்பனையே ஸ்தம்பித்துவிடும். 4 x 75 தெரிய calculator வேண்டும். (நா முக்கா மூணு !!!!) 
ஏதோ ஒரு சில நூறு பேர் தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வளர்வதைப் பற்றிக் கவலையில்லை. ஆயிரக்கணக்கான கிராமங்களில் இலட்சக்கணக்கான பேர் கையினால்தான் இன்னும் எத்தனையோ ஆண்டுகட்கு எழுதிக்கொண்டிருக்கப்போகின்றனர். எத்தனை பேர் twitter, facebook கிறுக்குப்பிடித்துத்திரிகின்றனர். முன்புசொன்ன தமிழ் தெரியாத பெரு மேதாவிகள்தான் பெரும்பாலும். அந்தக் கிறுக்கு வேண்டுமா என்று இன்னொரு இழை தொடங்கலாம். அங்கு நடப்பவை எல்லாம், என்ன மச்சி எங்க இருக்க, துன்னிட்டியா? போன்றவைதானே.
மலையாளம், ஹிந்தி என்று எங்கெங்கோ பார்த்துக்கொண்டிராமல் தமிழைப் பாருங்கள். நான் புள்ளிவிவரத்துடன் அறிவியல் பூர்வமாக (உணர்ச்சிப்பூர்வமாக அல்ல) சொல்வதைத் தவறு என்று காட்டுங்கள். பிராமி எழுத்தின் வளர்ச்சியை நூற்றாண்டுதோறும் ஊன்றிக் கவனியுங்கள். (REF: Gift Sironmani's book) அதை புள்ளியியலுடனும், மொழியியலுடனும் ஒத்து நோக்குங்கள்.  அப்புறம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுங்கள்.
அன்பு கணேசன்! இது தவிர வேறு சில கடிதங்களும் தங்களுக்கு due இருக்கிறது. மறக்கவில்லை. நேரம் மிகக் குறைவு. பின்னர் எழுதுகிறேன்.
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
புத்தாண்டு வாழ்த்துக்கள்
 

On Tuesday, January 1, 2013 6:18:33 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Monday, December 31, 2012 8:13:44 AM UTC-6, Pandiyaraja wrote:
மிக்க நன்றி, முனைவர்.ந.கணேசன்.( நான் ஏற்கனவே சொன்னபடி) வ.செ.கு - வுக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். அந்தக் கட்டுரையின் தலைப்பு 'சீரான அமைப்பு எல்லாம் சீரமைப்பு இல்லை' புள்ளிவிவரங்களுடன் நிறுவியிருக்கிறேன்.
ஒரே ஒரு சொல்லை வைத்து நீளத்தை ஆயமுடியாது. சிறுபிள்ளையில் விளையாட்டாய்ச் செய்வதில்லையா - X-ray என்பது தமிழில் எக்ஸ் ரே  ஆகி, ஒரு X -க்கு மூன்று தமிழில். மூன்று Ray - க்கு ஒரு ரே தமிழில். உங்களுக்குத் தெரியும். Sampling மூலம் நிறுவவேண்டும். நான் 2,50,000 சொற்களை எடுத்து, கணினி மூலம் நீளத்தைப் பலவிதமாக அளந்து, அவற்றில் மிகச் சிறந்தது சங்ககாலப் பிராமியே என்று நிறுவியிருக்கிறேன். அந்தப் பிராமியில் எல்லா உயிர்மெய்க்கும் ஒரே எழுத்துதான். பின்னர்தான் 'கால்'களும், 'கொம்பு'களும் முளைத்தன. எனினும் அவற்றின் எண்ணிக்கை பயன்பாட்டில் not significant என்றும் காண்பித்திருக்கிறேன். significant difference உள்ள உகர மெய்யெழுத்துக்கள் frequency அதிகம் உள்ளவை - எனவேதான் அதன் உகரக் குறியீடு மூல மெய்யுடன் mergeஆகிவிட்டது. இதுதான் பரிணாம வளர்ச்சி. இதை மீண்டும் பிரித்தால் அது இயற்கைக்கு முரணானது. ஊகாரத்தைப் பற்றிக் கவலையில்லை. frequency மிகவும் குறைவு. எனவே உகர ஊகாரங்களைக் கண்டு மிரளவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
நன்றி, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ப.பாண்டியராஜா


புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. 

ஒர் மொழிக்கு ஒரே லிபி என்பதன் காலம் முடிந்துவிட்டது. இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இடஞ்சுழி என்கிறீர்கள்.
துர்க்கியின் மொழி அரபி எழுத்தை விட்டு ஆங்கில எழுத்துக்கு மாறியது. மலேசியாவிலும், இந்தோனெசியாவிலும்
இந்தோ-ஐரோப்பிய லிபி வந்துவிட்டது.
 
இன்றைய யதார்த்தத்தைப் பாருங்கள். எத்தனை பேர் அகநானூறு படிக்கிறார்கள்?
உங்கள் விரிவுரைகளுக்கு எத்தனை ஆக்க பூர்வமான மறுமொழிகள் வருகின்றன?
(நான் முதல் கோப்பு தான் பார்த்தேன். இன்னும் மற்றவைகளை படிக்கவில்லை - நேரம் தான் காரணம்.)

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பலவற்றில் ஆங்கில எழுத்தில் தமிழ் எழுதப்படுகிறது - இளைய
சமுதாயத்தால். வெளிநாடுகளிலே, ஏன் இந்தியாவிலும் கூட பல மாணவர்கள்
தமிழ், மற்றும் எந்த இந்திய லிபியும் அறியாமல் வளர்கிறார்கள். வாழ்க்கையும் நன்முறையில்
நடத்துகிறார்கள். 

இன்று தமிழ் லிபி மாத்திரமோ, தமிழ் மட்டுமோ இருந்தால் உலகமயமான
வாழ்க்கைக்கு அனேகருக்கு உதவுவதாய் இல்லை. தமிழில் இன்றைய விஞ்ஞானம், தொழில்நுட்பம்,
என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். ஆங்கிலம் இல்லாமல் நல்வாழ்க்கை வாழ இயலா
நிலை பலருக்கும் இருப்பதை தமிழ்நாட்டிலே கூடப் பார்க்கிறோமே. 

தமிழைக் கற்பிக்கவும், கற்ற எழுத்துக்களை எளிதாக நினைவில் நிறுத்தவும் உ, ஊ சீர்மை
அவசியம் என்பது வாசெகு கருத்து. நமக்கு அண்டையில் உள்ள மலையாள லிபி பாருங்கள்.
நீங்கள் சொல்லும் வலஞ்சுழியாக உ, ஊ இரண்டிற்கும் தனிக் குறியீடுகள் செய்துவிட்டார்கள்.
தமிழில் வலஞ்சுழியாக ஜ,ஹ, ஷ, ஸ உ, ஊ குறிகள் இயங்குகின்றன. அதை எடுக்கலாம்
என்பது தமிழறிஞர் கிவாஜ போன்றோர் பரிந்துரை. தமிழில் வலைப்பதிவுகள் பெருக
காரணாமாக இருந்தது தேனீ உமர் உழைப்பு. அவரும் கிவாஜ போல்தான் சொல்லியுள்ளார்.
இந்தியாவிலேயே வரிநீளம் அதிகம் உள்ள லிபி தமிழ் தான். அந்த வரிநீளம் அதிகமாகாமல்
உ, ஊ தனிக்குறிகள் இருக்கின்றன. 

இன்று கணினி உலகில், எல்லோரும் தமிழ் லிபி பயன்படுத்த கற்றுக் கொடுக்கவும்,
கற்றதை நினைவில் நிறுத்தவும் உ, ஊ உயிர்மெய் பிரித்தும் எழுத வசதி ஏற்பட
வேண்டும். ஏன் என தமிழ் இணையப் பல்கலை நிறுவுநர் விளக்குகிறார்:
மலையாள லிபியில் இந்த எளிமையாக்கம் நடைமுறையில் உள்ளது காண்க.

அடுத்த தலைமுறை பார்த்துக்கொள்வார்கள் என்கிறீர்கள். இப்போதைய
பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்தின் எஸ்ஸென்ஸ் போய்ச் சேர வேண்டியது அவசியம்.
அதற்குத் தான் உ, ஊ உயிர்மெய் சீர்மை. யாரும் இன்று ஓலையில் எழுதுவதில்லையே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நா. கணேசன்
 

N. Kannan

unread,
Jan 1, 2013, 9:36:34 AM1/1/13
to mint...@googlegroups.com
பேராசிரியர். பாண்டிய ராஜா நிறைய எழுத வேண்டும்.

கல்லூரிக் காலங்களிலிருந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றிக்
கேட்டுக்கேட்டு குழம்பிக்கொண்டிருக்கிறேன். உங்கள் எழுத்து எங்கள்
குழப்பத்தைத் தவிர்ப்பதாக உள்ளது. தொடர்ந்து கலந்துரையாடுக! கலக்கத்தைப்
போக்குக!

நா.கண்ணன்

2013/1/1 Pandiyaraja <pipi...@gmail.com>:

DEV RAJ

unread,
Jan 1, 2013, 10:58:26 AM1/1/13
to mint...@googlegroups.com
On Tuesday, 1 January 2013 18:03:53 UTC+5:30, Pandiyaraja wrote:
>>> ஏதோ நமக்குச் சாதகமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு புள்ளிவிவரம் பேசக்கூடாது. குறைந்தது 2500 சொற்கள் கொண்ட
ஒரு தமிழ்ப் பகுதியை வேறு எந்த எழுத்து முறையிலும் எழுதிப்பார்த்துச் சொல்லுங்கள்.<<<<


இது தவறு, ஐயா.
2000 பக்கம் உள்ள ஒரு ஹிந்தி நூலை
மொழி பெயர்த்த அநுபவத்தில் பேசுவது இது;
சாதகம், பாதகம் எனும் சார்பு எதுவும் இல்லை.
இன்றைய தமிழ் வரிவடிவில்  எழுதுவதும்,
பதிப்பிப்பதும் பாடு நிறைந்த பணி. இரண்டுக்கும்
மேற்பட்ட மொழிகள் சார்ந்த அறிஞர்களுடன்
பணி செய்த பட்டறிவும் உள்ளது.
தமிழ் எழுத்தாளர்கள் / பதிப்பாளரகள் இவர்களது
நன்மையை மையமாக வைத்து இந்த உரையாடல்;
கவன ஈர்ப்பு நோக்கம் இல்லை; பல லிபிகளில்
பரிசயம் இருந்தால் புரிந்துகொள்வது எளிது



தேவ்

N. Ganesan

unread,
Jan 1, 2013, 11:15:30 AM1/1/13
to மின்தமிழ், rajavel subramani
On Jan 1, 8:26 am, Pandiyaraja <pipir...@gmail.com> wrote:

> இந்தியாவிலேயே வரிநீளம் அதிகம் உள்ள லிபி தமிழ் தான்
>
> இதற்கு ஏதேனும் supportive evidence with statistical base - இருந்தால்
> தயவுசெய்து கொடுங்கள்.

நிறைய இருக்கிறது. line-length என்பதற்கு வரிநீளம் என்ற அலகைக்
கொடுத்து ஆராய்ந்திருக்கிறோம். தேவ் ஐயாவிடம் கேளுங்கள்.

புள்ளித் தத்துவ விளைச்சல் = வரிநீளம்.
ஆனால், கற்க எளிமை உண்டு.

> [...] முன்புசொன்ன தமிழ்


> தெரியாத பெரு மேதாவிகள்தான் பெரும்பாலும். அந்தக் கிறுக்கு வேண்டுமா என்று
> இன்னொரு இழை தொடங்கலாம். அங்கு நடப்பவை எல்லாம், என்ன மச்சி எங்க இருக்க,
> துன்னிட்டியா? போன்றவைதானே.
> மலையாளம், ஹிந்தி என்று எங்கெங்கோ பார்த்துக்கொண்டிராமல் தமிழைப் பாருங்கள்.
> நான் புள்ளிவிவரத்துடன் அறிவியல் பூர்வமாக (உணர்ச்சிப்பூர்வமாக அல்ல)
> சொல்வதைத் தவறு என்று காட்டுங்கள். பிராமி எழுத்தின் வளர்ச்சியை
> நூற்றாண்டுதோறும் ஊன்றிக் கவனியுங்கள். (REF: Gift Sironmani's book) அதை
> புள்ளியியலுடனும், மொழியியலுடனும் ஒத்து நோக்குங்கள்.  அப்புறம் தமிழ்
> எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுங்கள்.

உங்களுக்கு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் அறிஞர் சு. ராஜவேலு ஐயாவைத்
தெரியும அல்லவா?
http://www.thehindu.com/arts/history-and-culture/valuable-vignettes/article4009059.ece

தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை சுமார் 2500 ஆண்டுகளாய் ஆராய்ந்து
எழுதியிருக்கிறார். உ, ஊ உயிர்மெய்க் குறிகளாக முனைவர் ராசவேலு
பரிந்துரையும் உள்ளது. ராஜவேல் அவர்களின் ஆய்வுக் கட்டுரை
படித்து தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்.
https://www.indianfolklore.org/journals/index.php/Panu/search/authors/view?firstName=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.&middleName=%E0%AE%9A%E0%AF%81.&lastName=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&affiliation=&country=
(Click on the word, PDF, you will get the 14-page essay by Dr. S.
Rajavel
- it details the 2500 year history Tamil script and future directions
for its growth.)

அன்புடன்
நா. கணேசன்

DEV RAJ

unread,
Jan 1, 2013, 11:58:53 AM1/1/13
to mint...@googlegroups.com
வரி நீளம் -


ஆறு அங்கு உள்ளது

నది ఇక్కడ ఉన్ది

नदी उधर है

नदी तत्र अस्ति

N. Kannan

unread,
Jan 1, 2013, 12:10:02 PM1/1/13
to mint...@googlegroups.com
2013/1/1 N. Ganesan <naa.g...@gmail.com>:

> தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை சுமார் 2500 ஆண்டுகளாய் ஆராய்ந்து
> எழுதியிருக்கிறார். உ, ஊ உயிர்மெய்க் குறிகளாக முனைவர் ராசவேலு
> பரிந்துரையும் உள்ளது. ராஜவேல் அவர்களின் ஆய்வுக் கட்டுரை
> படித்து தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்.

நன்றி. கொடுமுடி சண்முகனார் கொடுத்த மாதிரி காலவாரியான வரிவடிவ அட்டவணை
கொடுத்திருக்கலாம்.

தமிழி வரிவடிவம் ஆங்கில வரிவடிவம் போல் எளிமையாக இருப்பது
ஆச்சர்யமளிக்கிறது. கொரிய மொழிக்கு வரிவடிவம் கொடுத்த சேஜோன் அரசனுக்கு
இவ்வரிவடிவம் மிகவும் பரிச்சயமாக இருந்திருக்கிறது. உயிர் மேவிய
உயிர்மெய் என்பதற்கு தனி எழுத்துரு உருவாக்காமல் அப்படியே நம் மூத்தோர்
எழுதிய வண்ணமே எழுதும் வழக்கத்தை அங்கு கொண்டு வந்தான். மேலும் எகர, ஏகார
வேறுபாடு (குறில், நெடில்) என்பதை ‘வழக்காக’ வைத்தானே தவிர தனி எழுத்தாக
வைக்கவில்லை. இன்று ஹங்குல் ஐ.நா சபையால் மிகவும் அறிவியல் பூர்வமான
எழுத்து என்று அறிவிக்கபட்டுள்ளது. இந்த எழுத்துரு மாற்றம் மிக சமீப
காலத்திலேதான் (20 நூற்றாண்டு தொடக்கத்தில்) அங்கு அரச கட்டளையாகியது.

பலவகையில் பிற்போக்கான (மொழி அணுகுமுறையில்) தமிழக அரசியல் சூழலில்
இன்னொரு எழுத்துரு மாற்றம் என்பது நிகழும் என்று நான் நினைக்கவில்லை.
அதற்கான அரசியல் வலு இல்லை என்றே சொல்லலாம்.

நா.கண்ணன்

பிகு: ஐ என்பதை அய் என்று எழுதலாம் என்று ராசவேலு சொன்னாலும் அதனால்
உண்டாகும் மொழிச்சிக்கல் பற்றி இங்கு விரிவாக முன்பு அலசியுள்ளோம்.
மேலும் ஆங்கிலேயர் காலத்தில்தான் வரிவடிவச் சிக்கல் தோன்றியது என்பதை
அவர் விரிவாக விளக்கவில்லை.

Pandiyaraja

unread,
Jan 1, 2013, 2:38:57 PM1/1/13
to mint...@googlegroups.com
ஐயா தேவ்,
>> ஒரு ஹிந்தி நூலை மொழி பெயர்த்த அநுபவத்தில்
 
நீங்கள் மீண்டும் மொழிபெயர்ப்புப் பற்றித்தான் பேசுகிறீர்கள். நான் தமிழில் உள்ள பகுதியைப் பலவிதமான எழுத்துருக்களில் எழுதுவது பற்றிப்  பேசுகிறேன். இதற்கு தமிழ்மட்டும் தெரிந்தால் போதும்.
என்னுடைய ஆய்வில், ஒரு சொல்லின் நீளத்தை acai length, syllable length, grapheme length (Brahmi), phoneme length, hand writing length(இன்றைய எழுத்து முறை), Printing length (composing in old style - how many pickings), typing length (Old Tamil Type writer), CDAC length, Singapore length (Govindasamy recommendations), internet length (phonemic keyboard) என்ற 10 வகைகளில் அளந்து, தரவுச்சொற்களுக்குரிய சராசரி நீளத்தையும் கண்டுபிடித்திருக்கிறேன். என்னுடைய தரவுகளில் தொல்காப்பியம் முதல் அன்றைய குமுதம் ஆனந்தவிகடன் முதலானவை வரை, பல்வேறு காலத் தமிழ்ப் பகுதிகளில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  2,51,506 சொற்கள் உள்ளன. எனவே எனது புள்ளிவிவரம் நம்பத்தக்கது என நினைக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா

செல்வன்

unread,
Jan 1, 2013, 3:17:04 PM1/1/13
to mint...@googlegroups.com
குறைகள் இல்லாத மொழி/ எழுத்துரு எதுவும் இல்லை. புதிதாக செய்யபடும் மாற்றங்கள் மொழியில் மிகபெரிய சீர்குலைவை ஏற்படுத்தும். பழையநூல்கள் அனைத்தையும் புதிய எழுத்துருவுக்கு மாற்ரவேண்டும். பழைய எழுத்துருவில் தமிழ் படித்தவர்கள் புதிய எழுத்துருவை கற்கவெண்டும். படிக்காதவர்கள் பாதிபேர் இருக்கும் நாட்டில் இம்மாதிரி செலவுகள் எல்லாம் தேவையா?

  தமக்கு தேவையான சீர்திருத்தங்களை மக்கள் தம்மளவில் செய்துகொண்டு தான் உள்ளனர். உதாரணமாக வரும் பொங்கலுக்கு இங்கிருக்கும் தமிழ் குழந்தைகள் சிலர் "அமுதே, தமிழே" பாடலை பாட உள்ளனர். அனைவர் தாய்மொழியும் தமிழ் தான் என்றாலும் தமிழ் படிக்க அவர்களுக்கு தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி வைத்து தான் பாட உள்ளனர். தமிழ் தெரியாமல் தமிழ்படங்களில் பாட வரும் வெளிமாநில பாடகர்களும் ஆங்கிலத்தில் எழுதி படிக்கின்றனர். கிரந்தத்தில் தேவாரத்தை எழுதி தாய்லாந்தில் படிப்பதாக தெரிகிறது. இம்மாதிரி மாற்றுமுயற்சிகளை அவரவர் தமக்கு தேவையான அளவில் செய்துகொன்டு தான் உள்ளனர். அவற்றுக்கு தேவையான உதவியையும் செய்யவேண்டும்.

பல்வேறு எழுத்துருக்களில் தமிழ் படிக்கபடுவது நல்லதுதான். ஆனால் அவை தேவைகேற்ப தேவைபடுபவருக்கு மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய எல்லாருக்கும் ஒரே சட்டை என்பதுபோல் எல்லாருக்கும் ஒத்துவரும் எழுத்துருவை உருவாக்குகிறேன் என சோவியத்யூனியன் சென்ட்ரல் பிளானிங் ஸ்டைலில் செய்யபடும் முயற்சிகள் தேவையற்றது.
--
செல்வன்

தேமொழி

unread,
Jan 1, 2013, 8:47:32 PM1/1/13
to mint...@googlegroups.com
>>>உங்கள் கருத்துகள் விஞ்ஞானபூர்வமாக உள்ளன.
>>>உங்கள் ஆராய்ச்சியைச் சிறிது சிறிதாக ஒரு
>>>தொடராக வெளியிடலாம்.
 

இதை நானும் வழி மொழிகிறேன்.  

உங்கள் பதில்கள் விவாதத்தின் மற்றொரு பக்கத்தைக் காண்பிக்கிறது.  புள்ளியல் ஆதாரங்கள் வலியுறுத்தும் கருத்தை படித்துத் தெரிந்து கொள்ள விருப்பம்.

..... தேமொழி 

seshadri sridharan

unread,
Jan 1, 2013, 9:35:20 PM1/1/13
to mint...@googlegroups.com

இந்த எழுத்தின் நீளம் வடிவமைப்பால் வந்ததேயன்றி எழுத்தால் அமைந்தது அல்ல.  வடிவமைப்பாளர் இந்த குறையை நீக்க இயலும்.


8 புள்ளிகளில் இந்த தொடரின் நீளம் குறைவு ஆனாலும் பிற எழுத்துகளை விட மிகத் தெளிவாக உள்ளது. பிற மொழி எழுத்துகற் 10 புள்ளிகளில் இருந்தாலும் கண் புலனாகா சிறு எழுத்துகளாகவே காட்சி தருகின்றன.


ஆறு அங்கு உள்ளது - 8

ஆறு அங்கு உள்ளது - 10

నది ఇక్కడ ఉన్ది - 10

नदी उधर है -10

नदी तत्र अस्ति - 10

DEV RAJ

unread,
Jan 1, 2013, 11:20:00 PM1/1/13
to mint...@googlegroups.com
ஒரு தாளை எடுத்து உங்கள் கையெழுத்தில்
எழுதிப் பாருங்கள்; எந்த வரியிலும் இடைவெளிகூட
வேண்டாம்


தேவ்


N. Ganesan

unread,
Jan 1, 2013, 5:21:28 PM1/1/13
to மின்தமிழ்
On Jan 1, 2:17 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> குறைகள் இல்லாத மொழி/ எழுத்துரு எதுவும் இல்லை. புதிதாக செய்யபடும் மாற்றங்கள்
> மொழியில் மிகபெரிய சீர்குலைவை ஏற்படுத்தும். பழையநூல்கள் அனைத்தையும் புதிய
> எழுத்துருவுக்கு மாற்ரவேண்டும். பழைய எழுத்துருவில் தமிழ் படித்தவர்கள் புதிய
> எழுத்துருவை கற்கவெண்டும். படிக்காதவர்கள் பாதிபேர் இருக்கும் நாட்டில்
> இம்மாதிரி செலவுகள் எல்லாம் தேவையா?
>

கணினியில் உ, ஊ சீர்மை செய்ய எவ்வளவு செலவு?
அரசு அப்படி தேவை உள்ளோர் படிக்கலாம் என்றால்,
ஃபாண்ட்கள் ஃஃப்ரியாச் செஞ்சுடுவாங்க.

>   தமக்கு தேவையான சீர்திருத்தங்களை மக்கள் தம்மளவில் செய்துகொண்டு தான்
> உள்ளனர். உதாரணமாக வரும் பொங்கலுக்கு இங்கிருக்கும் தமிழ் குழந்தைகள் சிலர்
> "அமுதே, தமிழே" பாடலை பாட உள்ளனர். அனைவர் தாய்மொழியும் தமிழ் தான் என்றாலும்
> தமிழ் படிக்க அவர்களுக்கு தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி வைத்து தான் பாட
> உள்ளனர். தமிழ் தெரியாமல் தமிழ்படங்களில் பாட வரும் வெளிமாநில பாடகர்களும்
> ஆங்கிலத்தில் எழுதி படிக்கின்றனர்.

ஆங்கில எழுத்தில் படிக்க ஐஎஸ்ஓ முறை உள்ளது. அதுவும்
இருக்கிறது எனப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம்.

கணேசன்

> கிரந்தத்தில் தேவாரத்தை எழுதி தாய்லாந்தில்
> படிப்பதாக தெரிகிறது. இம்மாதிரி மாற்றுமுயற்சிகளை அவரவர் தமக்கு தேவையான
> அளவில் செய்துகொன்டு தான் உள்ளனர். அவற்றுக்கு தேவையான உதவியையும்
> செய்யவேண்டும்.
>
> பல்வேறு எழுத்துருக்களில் தமிழ் படிக்கபடுவது நல்லதுதான். ஆனால் அவை தேவைகேற்ப
> தேவைபடுபவருக்கு மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய எல்லாருக்கும் ஒரே சட்டை
> என்பதுபோல் எல்லாருக்கும் ஒத்துவரும் எழுத்துருவை உருவாக்குகிறேன் என
> சோவியத்யூனியன் சென்ட்ரல் பிளானிங் ஸ்டைலில் செய்யபடும் முயற்சிகள் தேவையற்றது.
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

Hari Krishnan

unread,
Jan 1, 2013, 11:41:05 PM1/1/13
to mintamil


2013/1/2 DEV RAJ <rde...@gmail.com>

ஒரு தாளை எடுத்து உங்கள் கையெழுத்தில்
எழுதிப் பாருங்கள்; எந்த வரியிலும் இடைவெளிகூட

தட்டச்சு இருந்த காலங்களில் எழுத்துருக்கள், அளவின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கபட்டிருந்தன.  அவை:

1) பைகா (Pica) - அங்குலதத்துக்குப் பத்தெழுத்து
2) எலைட் (Elite) - அங்குலத்துக்குப் பன்னிரெண்டு எழுத்து
3) கோதிக் (Gothic) - அங்குலத்துக்கு எட்டெழுத்து.

ஆங்கில எழுத்துகளை, தட்டச்சுப் பொறியில் பைகா, ரோமன் இரண்டு அளவுகளிலும் அமைக்க முடியும்.  இப்படி எழுத்தின் அளவு மாறினால், பொறியின் உட்பாகங்களில், கேரேஜ் ரேக் எனப்படும் நீண்ட பற்சட்டத்தின்  எந்த இரு ப்ல்லுக்கும் இடையிலுள்ள வெளி வேறுபட்டே ஆகவேண்டும்.  பைகா தட்டச்சுப் பொறியின் உருளைத்தாங்கி, அல்லது கேரேஜை கழற்றி, ரோமன் தட்டச்சுப் பொறியிலோ கோதிக் தட்டச்சுப் பொறியிலோ மாற்றிவிட முடியாது.  ஒத்த எழுத்தளவுள்ள பொறிகளில் இப்படிப்பட்ட மாற்றி அமைக்க முடியும்.

தமிழ்த் தட்டச்சுப் பொறிக்கு ஒரே ஒரு எழுத்தளவு மட்டும்தான் பயன்படும்.  அது, கோதிக்.  அங்குலத்துக்கு எட்டெழுத்துகள்.  எல்லா எழுத்தும் 1/8 அங்குலம் இடம் பிடித்தால், ணு என்ற ஒற்றை எழுத்து, 1/4 அங்குலம் இடம் பிடித்துக்கொள்ளும்.  முதலில் அந்த ணுகர விசையைத் தட்டினால், அதன் முன்பாதி வடிவம், தாளில் பதிவாகும்.  பிறகு மாற்று விசையை (ஷிஃப்ட் கீ) பயன்படுத்தித் தட்டினால், பின்பகுதி எழுத்து வடிவம் பதிவாகும்.

கம்ப்யூட்டர் வந்ததற்குப் பிறகு இந்த ‘இரட்டை விசை’ முறைக்கு விடுதலை கிடைத்தது.  இப்போதெல்லாம் ஆங்கில எழுத்தில் q இருக்கும் இடத்தைத் தட்டினால் ணு கிடைத்துவிடுகிறது.  அப்பர் கேஸுக்கு,ஸ-வை இடம் மாற்றி வைத்திருக்கிறேன்.  எனக்கான தட்டுப் பலகையை நானே உருவாக்கிக் கொண்டதால் இது முடிந்தது.

எதற்காகச் சொன்னேன் என்றால், தமிழ் எழுத்துகள், இயல்பிலேயே அதிக இடம் பிடித்துக் கொள்வன.  ஆங்கில எழுத்தைப் போல தமிழில் எலைட் வடிவம் கொண்டு வருவது முடியாது.  கொண்டுவந்தால், திரையில் டிஸ்ப்ளே அளவைக் கூட்ட வேண்டியிருக்கும்.  

இது தெலுங்குக்கும், கன்னடத்துக்கும் மலையாளத்துக்கும் பொருந்தும்.  ஹிந்தி தட்டச்சு என்றால் அங்கே எழுத்துக்குக் கீழே எழுத்தாகக் கூட்டெழுத்துகள் இருப்பதால், டெட் கீகளின் எண்ணிக்கை அதிகம். தட்டசுப் பொறியின் இயங்கு அமைப்பே வேறு விதம்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Jan 2, 2013, 12:19:43 AM1/2/13
to mint...@googlegroups.com


2013/1/1 N. Ganesan <naa.g...@gmail.com>

கணினியில் உ, ஊ சீர்மை செய்ய எவ்வளவு செலவு?
அரசு அப்படி தேவை உள்ளோர் படிக்கலாம் என்றால்,
ஃபாண்ட்கள்  ஃஃப்ரியாச் செஞ்சுடுவாங்க.


இதை சொல்ல அரசு எதற்கு? திஸ்கி, யுனிகோடு எல்லாம் அரசு சொல்லியா உருவானது? தமிழ்மொழி தமிழ்நாடு என்ற சின்ன எல்லையை தாண்டி பல பத்தாண்டுகள் ஆகின்றன. இனி வரும் மாற்றங்கள் பாட்டம் அப் என்ற விதத்தில் தான் வரவேண்டுமே ஒழிய டாப் டவுன் அப்ரோச் பலன் அளிக்காது.

செலவு ஆகும் என்பது பழைய நூல்கள் அனைத்தையும் புதிய எழுத்துருவில் பதிப்பிட, தட்டச்ச, வலையெற்ற ஆகும் செலவுகள்.
--
செல்வன்

DEV RAJ

unread,
Jan 2, 2013, 1:12:45 AM1/2/13
to mint...@googlegroups.com
On Wednesday, 2 January 2013 10:11:05 UTC+5:30, Hari wrote:
>>>  தமிழ் எழுத்துகள், இயல்பிலேயே அதிக இடம் பிடித்துக் கொள்வன.  <<<


இதுதான் பாயிண்ட். வினைமுற்றின் சந்தி, சாரியைகள் வரிநீளத்தை
மிகுவிக்கின்றன. நடைமுறைச் சிக்கலைச் சொல்லித் தீர்வு வேண்டும்
என்றால் மொழி விரோதி என எண்ணுகிறார்கள். ஒரு மாற்று இருக்குமா
என வாய் திறந்தால் மொழிப்போர் ஆகி விடுகிறது :))


எல்லா வரிவடிவங்களிலும் நிறைகுறைகள்
இருப்பதை மறுக்கவில்லை. தமிழில் எந்த மாற்றமும் கூடாது
என்போர் மின்னரட்டையில் பயன்படுத்துவது குறுகிய
ஆங்கிலச் சொற்களை



தேவ்

Pandiyaraja

unread,
Jan 2, 2013, 2:11:52 AM1/2/13
to mint...@googlegroups.com
சேஷாத்திரி அவர்களே!
>>

ஆறு அங்கு உள்ளது - 8  , ஆறு அங்குஉள்ளது - 10.  இதன் பொருள் என்ன? தெரியவில்லை. சொல்லின் நீளத்தைப் பலவகைகளில் வரையறுக்கலாம். ஒவ்வொரு எழுத்தும் 1 என எண்ணப்படும். எனவே ஆறு அங்கு உள்ளது = 9 எழுத்துக்கள். அடுத்தமுறை- ஒவ்வொரு எழுத்தையும் தனியாக எழுதும்போது எத்தனை முறை கையை எடுக்கிறோமோ அதன் எண்ணிக்கை (இதற்காக 'தி'-யைக் கையெடுக்காமல் எழுதி உருவத்தை மாற்றக்கூடாது. ('தி' = 2; டி = 1) சொல்லை எழுத.விசைப்பலகையைப் பயன்படுத்தும்போது எத்தனை முறை விசையைத் தட்டுகிறோம் என்பது சொல்லின் நீளம் என்பது இன்னொரு முறை. இது font-க்கான மென்பொருள் தன்மையைப் பொருத்து மாறலாம். இதில் வரக்கூடிய சின்னஞ்சிறு வேறுபாடுகள் முக்கியமல்ல - காரணம் விசைப்பலகையைத் தட்டுகிறவர்களின் வேகமும் இதில் அடங்கும். நான் விசைகளைப் பார்த்துக்கொண்டே இரண்டே விரல்களைப் பயன்படுத்தித் தட்டுவேன். எனவே கையெழுத்துத்தான் முக்கியம். அப்படிப்பார்க்கும்போது (எத்தனை முறை கையை எடுக்கவேண்டும் என்பது):  नदी = 6 उधरहै 8, ஆக மொத்தம் 14 ஆகிறது. நீங்கள் 10 என்கிறீர்களே! தமிழில் 'கை' = 2; ஹிந்தி = 4. தமிழில் 'கு' = 1, ஹிந்தியில் 3. (எனக்குக் கொஞ்சம் ஹிந்தி எழுத்துக்களும் தெரியும்!!!)

இப்படித் தனித்தனியாகத் தமக்கு வேண்டிவற்றை எழுதிப்பார்த்து எண்ணிக்கொண்டிராமல், ஒரு large random sample எடுத்து ஆயவேண்டும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல. ஒவ்வொரு எழுத்துமுறையும் அதன் மொழியை எந்த அளவுக்குச் சிறப்பாக எழுதுகிறது என்பதை அளக்கமுடியும். coding efficiency என்பார்கள். மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்களை அது மிகக் குறைந்த எழுத்துக்களில் எழுதிக்காண்பிக்கவேண்டும். இதற்குச் சொற்களின் frequency -உம் தேவை. அது மட்டுமல்ல அந்த முறை எந்த அளவு மோசமாக இருக்கலாம் - the maximum limit for inefficiency - என்பதையும் அளக்கமுடியும். மிகப் பிரபலமான புள்ளிமுறை மொழியியலாளர் (Statistical Linguist) Gustuv Herden இவற்றுக்கான சூத்திரங்கள் கொடுத்திருக்கிறார். இவர் கூற்றுப்படி English has worst writing system!!! இவற்றையெல்லாம் தமிழுக்கு - 2.5 இலட்சம் சொற்களுக்கு மேல் - பயன்படுத்தித்தான் நான் ஏற்கனவே கூறிய முடிவுகள் கிடைக்கப்பெற்றன.

நன்றி,

ப.பாண்டியராஜா

 

seshadri sridharan

unread,
Jan 2, 2013, 4:00:29 AM1/2/13
to mint...@googlegroups.com


2013/1/2 Pandiyaraja <pipi...@gmail.com

//சேஷாத்திரி அவர்களே!  இதன் பொருள் என்ன? தெரியவில்லை.// 

ஆறு அங்கு உள்ளது - 8  < microsoft wordல் எட்டு புள்ளிகள் அளவு எனப் பொருள் ,

ஆறு அங்குஉள்ளது - 10< microsoft wordல் பத்து புள்ளிகள் அளவு எனப் பொருள்

ஆறு அங்கு உள்ளது என்பதை அப்படியே தெலுங்கு எழுத்திலும் நாகரி எழுதிதலும் ஒலிபெயர்ப்பு செய்து 10 புள்ளி அளவில் எழுதி நீல வண்ணம் தீட்டி உள்ளேன் அவை மொழிபெயர்ப்பை விட நீளமாகவே உள்ளன.

ఱు అంకు ఉల్లతు 

నది ఇక్కడ ఉన్ది

आरु अंकु उल्लतु 
नदी उधर है

தெலுங்கு இந்தி எழுத்துருக்களை அவற்றில் உள்ள மெய்யெழுத்துகளை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் தாளின் இடத்தை அடைக்கும் எனக் கருதி எழுத்துருவன் அளவையே ஒடுக்கி இருக்கின்றார்கள். தமிழிலும் இவ்வாறு செய்யமுடியும். காட்டாக, 

ஆறு அங்குஉள்ளது > microsoft 10 points

ఱు అంకు ఉల్లతు >  microsoft 14 points
आरु अंकु उल्लतु >   microsoft 14 points

10 புள்ளி அளவுள்ள தமிழ் எழுத்து போல் தெலுங்கு, நாகரி எழுத்துகளை எழுத வேண்டுமானால் அவற்றை 14 புள்ளிகளில் தட்டச்ச வேண்டி உள்ளது. எனவே இடக் குறைப்பு என்பதை கருத்தில் கொண்டே தெலுங்கு,நாகரி எழுத்து வடிவமைப்பாளர்கள் அவற்றை ஒடுக்கி இருக்கின்றார்கள். 

Pandiyaraja

unread,
Jan 2, 2013, 4:49:18 AM1/2/13
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு சேஷாத்திரி அவர்களே!
சொல்லின் நீளத்தை அடிக்குச்சி வைத்து அளப்பது எழுதுதாள் எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரிவிக்கும். ஆனால் இது தமிழிலேயே எழுத்துக்கு எழுத்து மாறுபடும். ன, ண ஆகியவை வெவ்வேறு நீளங்களைக் கொண்டவை.  எனவே
எழுத்துக்களைக் கொண்ட அட்டவணைகளைத் தயாரிக்கும்போது வெகுவாகச் சிரமப்படுகிறேன். Courier New -வில் அனைத்து ஆங்கில எழுத்துக்களும் ஒரே அளவினதாக இருக்கின்றன. அப்படி ஒரு தமிழ் font இருக்கிறதா? அதாவது கண்ணன், கந்தன், கன்னன், முருகன், உதயன் போன்ற நாலெழுத்துச் சொற்கள் அனைத்தும் ஒரே நீளத்தில் (MS WORD -இல் எழுதினால்)அமைவது போன்ற எழுத்துரு தேவை.
நன்றி,
ப.பாண்டியராஜா
 

seshadri sridharan

unread,
Jan 2, 2013, 6:20:34 AM1/2/13
to mint...@googlegroups.com
தமிழுக்கும் பிற இந்திய மொழி எழுத்துக்குமுள்ள வேறுபாடு எ, ஏ, ஐ, ஒ,ஓ இன உயிர்மெய் எழுத்துகளை குறிக்க துணைக் குறிகளை அவ்வேழுத்துகளுக்கு முன்போ அல்லது பின்போ இருக்கிறோம். பிற இ ந்திய மொழி எழுத்துகளில் மேலே துணைக் குறிகளை இடுகிறார்கள். இதனால் இரட்டைகோடுகள் அல்லாமல் நார்கோடுகளில் எழுதவேண்டியுள்ளது.

சேசாத்திரி      

2013/1/2 Pandiyaraja <pipi...@gmail.com>

Pandiyaraja

unread,
Jan 2, 2013, 7:14:05 AM1/2/13
to mint...@googlegroups.com
நன்றி ஐயா,
நான் கேட்டது தமிழில் எல்லா எழுத்துருக்களும் சம நீளம் உள்ளனவாக இருக்கிறாற்போல் ஒரு font உண்டா?

 

கண்ணன்

முருகன்

கொன்

தடியன்

மாற்று

ஒவ்வொன்றும் நான்கு எழுத்துருக்கள் கொண்டது. அவற்றின் நீளம் திரையில் மாறுபடுகிறது.

DEBT

GIFT

WOOL

KILL

MANY

This is Times New Roman. Words occupy varying space length .

 

DEBT

GIFT

WOOL

KILL

MANY

This is Courier New. All 4 words occupy the same space length.

Do we have any such font for Tamil?

seshadri sridharan

unread,
Jan 5, 2013, 10:05:45 PM1/5/13
to mint...@googlegroups.com
உங்கள் கருத்து பிழையான கருத்தை திருத்தியுள்ளது .நன்றி !

சேசாத்திரி 

2013/1/5 கா. சேது | K. Sethu <skh...@gmail.com>

On Tuesday, December 25, 2012 8:37:02 PM UTC+5:30, seshadri sridharan wrote:
janaki > ஜனகி என்றும் ஒலிப்பு வருகிறதே ஆனாலும் எப்படியோ நாம் ஜானகி என படித்துவிடுகிறோம். ழகரம் மலையாளம்,சிங்களம் ஆகியமொழிகளிலும் உண்டு.


இவ்வாறு ழகரம் சிங்களத்திலும் உண்டு என ஆங்காங்கே சிலர் எழுதியுள்ளதை கடந்த வருடத்தில் கண்டிருக்கிறேன். அது தவறு. சிங்களத்தில் ழகரம் இல்லை.


கிரந்த, மலையாள, சிங்கள, தமிழ் எழுத்துகளின் ஒப்பீடுகளையும் அவற்றிற்கான இலத்தினிய எழுத்துப்பெயர்ப்புகளையும் கிரந்த எழுத்துமுறை பற்றிய விக்கி கட்டுரை [http://ta.wikipedia.org/s/1fq ] பக்கத்தில் அட்டவணைகளாக்க் காணலாம். அவற்றுள் அகரமேறிய மெய்யெழுத்துகளுக்கான அட்டவணைகளை மட்டும் பார்க்க இத்தொடுப்பை அழுத்துங்கள் : http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3e/Grantha_ConsComp.gif


அதில் காட்டயுள்ள படி தமிழிலும் மலையாளத்திலும் உள்ள ழகரம் கிரந்த மற்றும் சிங்கள வரிவடிவங்களில் இல்லாதிருப்பதை அவதானியுங்கள். அது சரியே. ழ எனப்படுவது IPA இல் Retroflex Approximant என்கிறார்கள். (குறியானது ஆங்கில r ஐ தலைகீழாக எழுதி அதன் கீழ் ஒரு புள்ளி போட்டிருப்பது) அது சிங்களத்தில் இல்லை.


ஆனால் IPA இல் Retroflex Lateral Approximant எனப்படும் "ள" தமிழ் எழுத்து அந்த அட்டவணையில் சிங்களம் மற்றும் கிரந்த வரியுருக்களிலும் காணலாம். (IPA குறியில் l அதனுடன் கீழாக ஒரு புள்ளியுடன்) சிங்களத்தில் அது ළ எழுத்து mūrdhaja layanna என்பர் (unicode : U+0DC5). காட்டாக தமிழ் என்பதை சிங்களத்தில் දෙමළ =DemaLa =தெமள என குறிக்கின்றனர். (தெ யில் உள்ள த ஒலிப்புடை தகரம் - அந்த, இந்த போன்று ந் அடுத்து வரும் த போல)


அதே போல IPA இல் Alveolar | Dental-Alveolar Lateral Approximant எனப்படும் "ல" தமிழ் எழுத்து சிங்களத்தில் ල எழுத்து. அதை dantaja layanna என்பர் (unicode : U+0DBD). (IPA குறியில் l மட்டும்) காட்டாக சிங்களம் என்பதை அவர்கள் எழுதுவது සිංහල (கிட்டத்தட்ட "சிங்ஹல" எனவே)

கொழும்ப் பல்கலைக்கழகதின் சிங்கள மொழியியல் துறையின் மாணபு ஓய்வு பேராசிரியர் ஜே.பீ. திசாநாயக்க எழுதியுள்ள Lets Learn Sinhala என்னும் 4-தொகுதி எளிய கையேடு நூலின் தொகுதி 2 இல் இந்த இரு சிங்கள எழுத்துக்களும் (அதாவது தமிழ் ல மற்றும் ள களுக்கு இணையான சிங்கள எழுத்துகள்) தற்காலத்தில் ஒரே ஒலிப்பைத்தான் குறிப்பதாகவும் ஆயினும் வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு இரண்டும் தொடரப்பட வேண்டும் எனவும் மேலும் அவற்றில் ஓர் எழுத்தை பயன்படுத்தும் ஒரு சொல்லும் மற்றைய எழுத்தை அதே இடத்தில் பயன்படுத்தும் இன்னொரு சொல்லும் பொருள் வேறுபடுவது சகசம் ஆதலால் எழுத்துக்கூட்டலுக்கு சரியான எழுத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். (அது போலவே ன, ண விற்கும் குறிப்பிட்டுள்ளார்).

It is loading more messages.
0 new messages