எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள்,
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்.
-பாரதிதாசன்
சரியாத்தான் பேரு வச்சிக்கிட்டாரு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
###பாரதிதாசன்
சரியாத்தான் பேரு வச்சிக்கிட்டாரு###
1975 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். எங்கள் அண்ணாமலை பல்காளைக் கழகத்தின் செனட் அரங்கில் கூட்டம் ஒன்று நடந்த் கொண்டிருந்தது. பேராசிரியர் வ.சுப. மாணிக்கம் உரையாற்றிக் கொண்டிருந்தார். பாரதிதாசன் பற்றி பேசச் வந்தது. " பாட்டெல்லாம் நன்றாக இருக்கிறது. பொருளும் நன்றாக இருக்கிறது. இளைஞர்கள் விரும்பிப் படிக்கிறார்கள்..எல்லாம் சரி, பெயரில், அது என்ன "தாசன் ".... பாரதியை மிகவும் பிடிக்கும் என்பதைக் காட்ட , " பாரதி அடியான்" என்று வைத்துக் கொள்ளலாமே. சிவனடியான் என்று பேரில்லையா, அதபோல."
நான் கையை உயர்த்தினேன். ஒரு , முறை முறைத்தார். . ஏற்கனவே அவரிடம் இரு முறை வாங்கிக் கட்டிகொண்டது நினைவிற்கு வரவே அடங்கி விட்டேன்,
மாணிக்கனார் அவர்களுக்கு தூய தமிழ் மீது அவ்வளவு பற்று.
அறிவினை விரிவு செய்.....அகண்டமாக்குவிசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.....
நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை!
உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!
கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்’
‘புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்’ என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
“சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!
அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!”
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!
தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
(விழுப்புரம் “பாவேந்தர் பேரவை”யின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)
நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல
நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை
ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே
ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்!
பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப்
பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று
போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப்
புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்!
மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும்
மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை!
சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம்
தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை!
மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ?
மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும்
செங்கரும்பும் நறும்பாலும் தேனும் பாகும்
செந்தமிழ்க்கு நிகராமோ என்ற மேலோர்!
தமிழியக்கம் எனும்கனலைத் தமிழர் நெஞ்சில்
தழைத்தெரியச் செய்ததனால் தமிழர் இன்று
தமிழ்வாழ்வு காணுதற்கு முயலு கின்றோம்!
தம்மானம் காக்கின்ற உணர்வு பெற்றோம்!
தமிழியக்கம் எனும்தீயால் தமிழ்ப்பற்று றில்லாத்
தருக்கர்தம் செருக்கெல்லாம் பொசுங்கக் கண்டோம்!
தமிழியக்கம் கண்டதொரு தமிழின் நல்ல
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! (1968)
இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள். ஒவ்வொரு நிறைநிலா மாலையிலும் நினைவில் வந்து மகிழ்விக்கும் அவரது கவிதை . பள்ளி நாட்களில் படித்தது.
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!
குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!
வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்து சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!
Azhagana arumaiyana pathivu
அருமையாக அனைவரும் எழுதி செல்கிறீர்கள்மானிட இனத்தை ஆட்டை வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாட்டில்வைப்பேன்னு
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைன்னு சொன்ன கண்ணதாசன் வரிகள் பாரதிதாசனுக்கு பொருந்தும்
பாரதி
இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.
இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.
தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. "இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?" என்று தராசு கேட்டது.
"எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்" என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.
"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.
"மாதிரி சொல்லும்" என்றது தராசு.
புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.
"காளை யொருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள் - இவன்
தொல்லறி வாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! - தம்பி
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - எங்கள்
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ ?
மங்கை நகைத்த ஒலியதுவாம் - அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!"
தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"
கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்."
தராசு: "சரிதான் ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்."
இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார். . . .
கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸம்பாஷணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாயிற்று" என்றார்.
தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்."
அப்போது புலவர் தராசை நோக்கி: "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.
தராசு: "எழுக! நீ புலவன்!" என்றது.
///நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்///என்ன அருமையான கொள்கை!!!!!தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்மிக நல்ல, எழுத்தாளர் அனைவரும் பின்பற்றவேண்டிய ஓர் அறிவுரை.இக்கொள்கையைப் பின்பற்றியவரும், அவரது தாசரும் இன்றும் மக்கள் மனதில் நிற்கும் காரணம் புரிகிறது.
இந்திய அளவில் பாரதியின் இடம்குறித்த முதல் தமிழ்ப்பதிவு மகாகவி பாரதியைத் ‘தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவன்’ எனவும், ‘பாரத நாட்டின் கவிஞன்’ எனவும், ‘உலக கவி’ எனவும் முதலில் கவிதையில் போற்றி எழுதியவர் பாரதிதாசன். அவர் 75 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதை இயக்க ‘நகரதூதன்’ இதழில் எழுதிய கட்டுரையில் ஒரு செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.
பல்லாண்டுகளுக்கு முன் பெல்ஜியக் கவிஞர் வெர்ஹேரன் இறந்தபோது, ‘சுதேசமித்திரன்’ இதழில் தாம் ஒரு கட்டுரையை எழுதியிருந்ததாகவும், அந்தக் கட்டுரையுள் தமிழ்நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டியதாகவும், அதுவே பாரதி கவிதை உயர்ந்தது எனத் தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எனவும், முதன்முதலில் எடுத்துக்காட்டியவன் நான்தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
“பாரதியார் அநேக வருஷங்களாகக் கவிதை ருசியாக எழுதிவருவது தெரிந்திருந்தும், வி.வி.எஸ். ஐயர் அவரைப் பாராட்ட வேண்டியதிருக்க ‘அநேக நூற்றாண்டாகத் தமிழ்நாட்டில் கவிதை தோன்றவில்லை’ என்று பத்திரிகையில் எழுதினார். அதையடுத்து, அயர்லாந்தில் வெர்ஹேரன் கவி இறந்தார். அதுபற்றி நான் சுதேசமித்திரனில் அப்போது ஓர் கட்டுரை எழுதினேன். அதில் தமிழ்நாட்டில் பாரதி உயர்ந்த கவி என்பதை விளக்கிக் காட்டினேன். முதன்முதலில் எழுத்துப்பட பாரதி கவிதை உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியவன் நான்தான்.’ (நகரதூதன், 15-09-1940)
எங்கே அந்த எழுத்து?
பாரதிதாசன் இப்படிச் சொல்லியுள்ள போதிலும் பாரதிதாசனின் எழுத்துகளாக இதுவரை வெளிவந் துள்ளவற்றில் அப்படியொரு எழுத்து இடம்பெறவில்லை.
நான் மேற்கொண்ட தேடலில், பாரதிதாசன் ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்த அந்தக் கட்டுரையைக் கண்டெடுத்துள்ளேன். ‘நகரதூதன்’ இதழில் குறிப்பிட்டிருந்தபடி வெர்ஹேரன் இறந்தபோது அவரால் எழுதப்பட்ட கட்டுரை அது. அந்தக் கட்டுரை வெளிவந்து சரியாக 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாரதியின் மீது செல்வாக்குச் செலுத்திய கவிஞர்களுள் ஒருவர் எனக் கைலாசபதி முதலியோரால் குறிப்பிடப்படும் வெர்ஹேரன் பற்றி, பாரதியாரால் உரைநடையில் குறிப்பிடப்பட்ட கவிஞர்களுள் ஒருவராகிய வெர்ஹேரன் பற்றி பாரதியாரின் சமகாலத்திலேயே பாரதியார் தொடர்ந்து எழுதும் ‘சுதேசமித்திரன்’ இதழிலேயே பாரதிதாசனும் எழுதியிருக்கின்றார். இன்னுமொரு சிறப்பு பாரதிதாசனின் வெர்ஹேரன் குறித்த கட்டுரையும், பாரதியாரின் ‘ வைஷ்ணவம்’ என்னும் கட்டுரையும் சுதேசமித்திரன் இதழில் ஒரே பக்கத்தின் மேற்பகுதியில் பாரதி கட்டுரை, கீழ்ப்பகுதியில் பாரதிதாசன் கட்டுரை என இடம்பெற்றிருந்தன. 1917 ஜனவரி 3 அன்று இவை வெளிவந்திருந்தன.
முதல் பதிவு ஒரு ஆய்வு
தாம் எடுத்துக்காட்டி ‘சுதேசமித்திர’னில் எழுதியதே ‘பாரதியார் உயர்ந்த கவி’ எனத் தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு என்று பாரதிதாசன் கூறியிருப்பது எண்ணத்தக்கதாக அமைகிறது.
பாரதி வாழ்ந்த காலத்தில் அவரைப் போற்றி எழுதப்பெற்றவையாக மு.ராகவையங்கார், பரலி சு.நெல்லையப்பர், ராஜாஜி, ஏ.வி.சுப்பிரமணிய ஐயர், வ.வெ.சு.ஐயர் ஆகியோரின் எழுத்துகள் முதல்நிலையில் காட்சியளிக்கின்றன. ராகவையங்கார் பாரதியாரைப் பாராட்டி எழுதியது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலின் மதிப்புரை (1908). நூல் மதிப்புரை என்னும் நிலையிலும், இனிய கவிகள் பாட வல்லவர் பாரதியார் எனக் குறிப்பிடும் நிலையிலும் அமைந்தது இது. பாரதியை உச்சநிலையில் வைத்துப் பாராட்டி எழுதப்பட்ட ஏ.வி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரையானது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அன்னிபெசன்ட் நடத்திய ‘நியூ இந்தியா’ பத்திரிகையில் அது 1919-ல் வெளிவந்தது. ‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ என்னும் தலைப்பில் வ.வே.சு.ஐயர் எழுதிய கட்டுரை 1918 ‘சுதேசமித்திரன் வருஷ மல’ரில் வெளிவந்தது. ராஜாஜியின் குறுங்கட்டுரையோ 1916-ல் அன்னிபெசன்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் வெளிவந்ததாயினும் ஆங்கிலத்தில் அமைந்தது. பரலி சு.நெல்லையப்பரின் மிகச் சிறந்த பதிவுகள் 1917 ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில்தான் கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு ஆகிய நூல்களின் முகவுரைகளாக இடம்பெற்றன. இவை நூலைப் பதிப்பித்தவர் கூறியவை என்னும் நிலையில் அமைவன.
இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது பாரதியார் உயர்ந்த கவி எனக் குறிப்பிடும் பகுதியைக் கொண்ட, 1917 ஜனவரி 3 அன்று வெளிவந்த பாரதிதாசனின் கட்டுரையே பாரதியைச் சிறப்பித்துக் கூறும் முதற்பதிவு என்று கொள்ளத் தோன்றுகின்றது.
பாரதிதாசன் சொல்லவில்லை
தமிழில் எழுதப்பட்ட பதிவுகளுள் பாரதி உயர்ந்த கவி எனத் தெரிவிக்கும் பகுதி பாரதிதாசன் கட்டுரையில்தான் முதன்முதலில் இடம்பெற்றுள்ளது எனினும், அக்கருத்து பாரதிதாசனின் சொந்தக் கருத்தாக இடம்பெறவில்லை. அவரே நான் ‘எடுத்துக்காட்டினேன்’ என்று சொல்வதற்கேற்ப அயர்லாந்தின் சிறந்த கவிஞராகவும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் உள்ள இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் கூற்றே பாரதிதாசனின் கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கஸின்ஸ், பாரதியின் கவிதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமாவார்.
அன்னிபெசண்ட் நடத்திய ‘காமன்வீல்’ இதழில் 1916 டிசம்பர் 8 அன்று வெர்ஹேரன் குறித்து அவர் மறைவையொட்டி கஸின்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் பல செய்திகள் பாரதிதாசனால் தமிழில் ‘வெர்ஹேரன் என்ற பெல்ஜியக் கவிராயர்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சுதேசமித்திரன்’ இதழில் கட்டுரையாளர் பெயர், பாரதிதாசனின் இயற்பெயர் அடிப்படையில் அக்காலத்தில் அவர் பயன்படுத்திய வடிவமாகிய ‘கனகசுப்பரத்தினம்’என இடம்பெற்றிருந்தது. ஆங்கிலப் புலமை அதிகமற்ற பாரதிதாசன், ஆங்கிலம் அறிந்த பாரதியின் நண்பர்களால் கஸின்ஸ் கட்டுரையைப் பயின்று தமிழில் எழுதியிருக்க வேண்டும்.
வெர்ஹேரன் மறைவையொட்டி எழுதிய கட்டுரையில், அவருடைய சிறப்பைச் சொல்ல வருகையில் இந்தியாவின் சிறந்த கவிஞர்களாக நால்வரையும் அவர்தம் கவிதைப் போக்கையும் கஸின்ஸ் குறிப்பிடுகின்றார். தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு, பாரதி ஆகிய நால்வரே அவர் சுட்டும் கவிஞர்களாவர். இதில் இடம்பெறும் தமிழ்க் கவிஞர் பாரதி மட்டுமே. பாரதியைப் போற்றி அமைந்துள்ள இந்தப் பகுதியைத் தமிழுலகம் நன்கறிந்த ‘சுதேசமித்திரன்’ இதழின் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பாரதிதாசன் கஸின்ஸ் எழுதிய கட்டுரையைப் பெரிதும் தழுவித் தமது கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.
பாரதிதாசன் கட்டுரை வெளிவந்த சில ஆண்டுகள் கழித்து, ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் இந்தப் பகுதியைப் பாரதியின் துணையோடு பாரதியின் தொடர்புடையோர் தாம் வெளியிட்ட பாரதி நூல்களின் பிரசுரம் பற்றிய ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ அறிக்கையில் (1920) ஆங்கிலத்திலும் தமிழ் மொழிபெயர்ப்பிலுமாக அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியின் மொழிபெயர்ப்பை பாரதியே செய்திருக்கலாம்.
தலைசிறந்தவர்களில் ஒருவர்
இந்தியாவின் சிறந்த கவிஞர் நால்வருள் ஒருவராக, தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு ஆகியோரோடு இணைத்து எண்ணத்தக்க ஒருவராக பாரதி விளங்குவதை முதலில் ஆங்கிலத்தில் எழுதி விளக்கியவராக ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் திகழ்கின்றார். அதனைத் தம் தமிழ்க் கட்டுரையின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய முதலாமவராக பாரதிதாசன் விளங்குகின்றார். பாரதியார் மீது 1917-லேயே பாரதிதாசன் கொண்ட ஈடுபாட்டையும், ‘சுதேசமித்திர’னுக்குக் கட்டுரைகள் எழுதும் திறத்தையும், உலகக் கவிஞர்களுள் ஒருவராகிய வெர்ஹேரன் பற்றி அறிந்துகொண்ட நிலையையும் உணர்த்துவதாக பாரதிதாசனின் கட்டுரை அமைகின்றது!
கட்டுரையாளர் பேராசிரியர் - தலைவர் (பொ.),
தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: v.y.man...@gmail.com
இன்று பாரதிதாசனின் 126 - வது பிறந்த நாள்
பாரதியியலிலும் பாரதிதாசனியலிலும் முக்கியமான படைப்பாக, ஆவணப் பதிவாகத் திகழும் இதனை, முதன்முறையாக இன்றைய தமிழுலகம் பாரதிதாசனின் 126-ம் பிறந்த நாளான இன்று கண்டு மகிழும் வண்ணம் இங்கே வெளியிடப்பெறுகிறது.
வெர்ஹேரன் என்ற பெல்ஜியக் கவிராயர்
கனகசுப்பரத்தனம்
சில வாரங்களின் முன்பு பிரான்ஸு தேசத்திலுள்ள ‘ரூவன்’பட்டணத்தில், ரயில் வண்டி அதிவேகமாக ஓடும்போது அதில் ஏறப் போய்த் தவறி விழுந்து, ‘வெர்ஹேரன்’ என்ற கவிராயர் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது.
இப்புலவரின் தெளிவை வியந்து சென்னை ‘காமன்வீல்’ பத்திரிகையில் ‘ஜேம்ஸ் கஸின்ஸ்’ என்ற ஐர்லாந்து தேசத்துப் புலவர் நல்லதொரு லிகித மெழுதியிருக்கிறார்.
பெல்ஜியம் தேசத்தில் ஆன்ட் வெர்ப் நகரத்தருகேயுள்ளதொரு சிறிய கிராமத்தில் அறுபத்தொரு வருஷங்களுக்கு முன்னே, (1855) வெர்ஹேரன் பிறந்தார். அதே ஜில்லாவிலேதான் மகா கீர்த்திமானாகிய மாரிஸ் மெடர்லிங்க் என்ற வித்வானும் பிறந்தார்.
வெர்ஹேரன் இலக்கியத் தொழிலிலே தலையிட்ட காலம் தாமே கீர்த்திகொண்டு தனிச்சுடராக நிற்பதற்குத் தகுந்த காலமில்லை. ஏற்கெனவே, ரோஸெத்தி, ரஸ்கின் என்ற ஆங்கிலேய வித்வான்களின் நெறியை அனுஸரித்து பெல்ஜியம் தேசத்தில் புதிய இலக்கிய முறை தோன்றி நடைபெற்றது. இம்முறை அவ்விடத்தாரால் ‘ரியலிஸம்’அதாவது ‘ப்ரத்யக்ஷ நெறி’ என்று சொல்லப்படுவது. அதென்ன முறை என்றால், கண்டதே காக்ஷி கொண்டதே கோலம் என்று நம்பி, ஏறக்குறைய ஆத்மா இல்லையென்று பாவனை செய்வது.
இளமையில் வெர்ஹேரன் சிற்றின்பங்களில் மூழ்கினார். பிறகு, கண்ணை விழித்தார். வலிமைக் கொள்கையிலே சேர்ந்தார். ஆத்மாவை வணங்கவில்லை. சக்தியை வணங்கினார். மோடார் வண்டியிலும் கவிதை யுண்டென்று வெர்ஹேரன் சொன்னார்.
கஸின்ஸ் எழுதுகிறார் அந்த காமன்வீல் பத்திரிகையில் - பொருளின் வெளி வடிவத்திலே அழகு காண்பது காட்சியன்று. பொருளின் இயல்பிலே அழகு காண வேண்டும். எந்தப் பொருளிலும் வடிவத்துக்குள்ளே வந்து ஒன்று நிற்கிறது. வடிவத்தைக் கருதாது வஸ்துவை நேரிடப் பார்ப்பதே காட்சியாம். வெர்ஹேரன் விடுதலைக் கற்பனைக்கு மிகவும் சமீபத்திலே வந்துவிட்டான்.
ஆனால், பாரதக் கவிராயராகிய ரவீந்திரநாத் டாகுர், ஸரோஜினி நாயுடு, அரவிந்த கோஷ், சி.சுப்பிரமணிய பாரதி இந்த நால்வரும், இவர்களைப் போலே, ஏரின் (ஐர்லாந்து) தேசத்திருப்போரும், செய்திருக்கும் ‘கவிதை’சாலவும் பெரிது. ‘ஏன்?’ எனில் இவர்கள் அழகுத் தெய்வத்தை நேரே கண்டனர்! கண்டதைக் கண்டபடி பாட்டாலே சொல்லினர்! பெல்ஜியம் தேசத்தார் கொண்டாடிய ‘ப்ரத்யக்ஷ மின்றி’க் கவிதையெல்லாம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூலைப் படித்துப் பாரீர்! பிறகு ஏரின் தேசத்துக் கவிராயனாகிய A E (என்ற குறிப் பெயருடையான்) பாடிய பின்வரும் செய்யுளைப் படித்துப் பாரீர்!
காதல்
காதலிப் பெண்ணே;
உள்ளத் திடையே கனவுற வேண்டும்.
காதல் முன்பு காட்சி பின்பு
நின்னிடையுள்ள பரம்பொருள் காண்பேன்
நின்னை அதன்பின் வணங்குவேன்,
நீ செயும் செய்கையிலெல்லாம்,
நினது தெய்வ - இயல் காண்பேன்.
நினதழகைக் கருதேன். ‘திருவனை’
வணங்குவேன்.
(சுதேசமித்திரன், 3 ஜனவரி 1917 ப. 6)
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இந்த இடையோடு இறைவனை ஒப்பிடுவது கம்பனது காவியத்திலேயே உள்ளது. " இந்த பெண்களுக்கு இடை உண்டா இல்லையா என விவாதிப்பது , இறைவன் உண்டா இல்லையா என்று விவாதிப்பதற்கு ஒப்பாக உள்ளது" என்கிறாராம் கம்பர். பாட்டு எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்." பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் -அவன்மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோஐயோ..........கற்பனையில் காணும்போது இந்தக் காட்சியும் வெகு அழகாக இருக்கும்.
2016-05-02 14:25 GMT+05:30 இறையடியான் <yesura...@gmail.com>:
2016-05-02 18:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Monday, May 2, 2016 at 5:29:16 AM UTC-7, singanenjan wrote:இந்த இடையோடு இறைவனை ஒப்பிடுவது கம்பனது காவியத்திலேயே உள்ளது. " இந்த பெண்களுக்கு இடை உண்டா இல்லையா என விவாதிப்பது , இறைவன் உண்டா இல்லையா என்று விவாதிப்பதற்கு ஒப்பாக உள்ளது" என்கிறாராம் கம்பர். பாட்டு எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்." பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் -அவன்மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோஐயோ..........கற்பனையில் காணும்போது இந்தக் காட்சியும் வெகு அழகாக இருக்கும்.இதே போல புகழேந்திப் புலவரும்:கொய்த மலரைக் கொடுங்கையி னால்அணைத்துமொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தையலாள்பாதார விந்தத்தே சூட்டினான் பாவைஇடைக்குஆதாரம் இன்மை அறிந்து- நளவெண்பாஎல்லாம் சரி. பாரதிதாசன் கருத்தை கவிச்சக்கரவர்த்தி ஒருவர் 900 ஆண்டுகளுக்கு முன்னரேஅழகாகத் தமிழில் பாடியுள்ளார். அந்நூல் பற்றித் தெரியுமா? இந்தியாவின் தத்துவ தரிசனங்களில்ஒன்றான லோகாயதத்தை சொல்லும் நூல். தேமொழி போன்றோர் உரை எழுதவேண்டும்.நா. கணேசன்
--அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in