திருமுறைகள் கன்னடத்தில்

3 views
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Dec 15, 2009, 6:55:25 AM12/15/09
to Sasirekha
வணக்கம்.
பன்னிரு திருமுறையைக் கன்னடத்துக்கு மொழிபெயர்க்கும் பணி தொடங்கியுள்ளது.

பங்களூரில் திரு.பிந்திகனாவிலே நாராயணசுவாமி அவர்கள் 
திருஞானசம்பந்தர் தேவாரம் முழுவதையும் மொழிபயர்க்கத் தொடங்கி, 
இதுவரை 250 பாடல்களை மொழிபெயர்த்துள்ளார்கள்.

பங்களூரில் பேராசிரியை திருமதி மலர்விழி அவர்கள் 
ஒன்பதாம் திருமுறையை மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

முதலாம் திருமுறை முதலாம் பாடலின் கன்னட மொழிபெயர்ப்பைத் தளத்தில் காணலாம்.


இணைத்துள்ள சொல்எழுதிக் கோப்பில் முதல் 43 பாடல்களின் கன்னட மொழிபெயர்ப்பு உண்டு.

  1. பாடல்களைத் தமிழில் படித்து, 
  2. உள்வாங்கி, பொருள்விளக்கம் பெற்றபின்
  3. கன்னடத்தில் சொற்களைத் தேடி
  4. திருமுறைப் பொருள் வருமாறு வரிகளாக அடுக்கி,
  5. அடுக்கிய வரிகளை மீளவும் ஒருநாள் மீளப் பார்த்து,
  6. தட்டச்சுக்குக் கொடுத்து,
  7. மெய்ப்புப பார்த்து,
  8. திருததிய படியை மீளப் பார்த்து
  9. திருத்தம் இருப்பின் திருத்தி
  10. ஒருங்குறிக்கு மாற்றி,
  11. மாற்றுகையில் வரும் தவறுகளை நீக்கி
  12. வரி முறியும் இடமறிந்து 
  13. தளத்துக்காக முறி ஆணையிட்டு
  14. எமக்கனுப்ப

நாம் தளத்தில் சேர்க்கிறோம்.
பாரிய பணி
வரலாற்றுப் பணி.

உங்களின் ஆதரவை நாடுகிறேன்.
நன்றி

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
kannada01001001-43.doc

N. Kannan

unread,
Dec 15, 2009, 7:28:57 AM12/15/09
to mint...@googlegroups.com
தமிழக சைவ சமயத்தாக்கமே கர்நாடகத்தில் வீரசைவம் தழைக்கக் காரணமாயிருந்திருக்கிறது.

இது குறித்த சிறுகட்டுரை என் வலைப்பதிவில்:

http://thirumozi.blogspot.com/2007/08/066.html

க.>

2009/12/15 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Reply all
Reply to author
Forward
0 new messages