வரலாற்று ஆய்வுகள் — மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி

94 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 1, 2026, 10:51:13 AMApr 1
to மின்தமிழ்
பாச்சில் மேற்றளியும் பைஞ்ஞீலி கோயிலும்

இரா. கலைக்கோவன்,
இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி

நன்றி: திருநெல்லை 
மார்ச் 2026 இதழ்
பக்கம் 25-29

25.jpg
26.jpg
27.jpg
28.jpg
29.jpg

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​---------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 6, 2026, 11:08:17 AMApr 6
to மின்தமிழ்
மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்

இரா. கலைக்கோவன்
 
கழுவேற்றம்
அன்புள்ள வாருணி, நலந்தானே. 'விளக்கேற்றலில் மகிழ்ந்தேன்; சிவபெருமானின் ஆடற்காட்சிகளிலும் காரைக்கால் அம்மையின் அன்பிலும் நெகிழ்ந்தேன்; மன்னர் திருமலையின் எளிமைப் பெருநோக்கில் உருகினேன்; இப்போதோ, தொடர்ந்து குற்றங்களும் தண்டனைகளுமாய்க் காட்சிப்படுத்துகிறீர்கள்! கோயில்கள் பதிவகங்கள் என்று பலமுறை நீங்கள் கூறியிருந்தபோதும், இவை எல்லாமும் அங்குக் காட்டப்பட்டுள்ளன என்பதை அறிய நேர்கையில், கோயிலைப் பற்றிய பார்வை விரியவேண்டும் என்பதை முற்றிலுமாய் உணர்கிறேன். பதிவகம் என்பதன் உட்பொருளும் அறிகிறேன்' என்று நீ எழுதியுள்ளாற் போலவே, இத்தொடரைப் படிக்கும் அன்பர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.

கோயில்கள் பத்திமைக்காக எழுந்தவைதான் என்றாலும், அக்காலத்தே மக்கள் பெரும் அளவில் கூடுமிடங்களாகவும் அவை விளங்கியமையால், அவற்றைக் கட்டமைத்தவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிவூட்டலுக்காகவே சமூகத்தின் அனைத்துப் பக்கங்களையும் அங்குப் பாடமாக்கினர். ஒவ்வொரு கோயிலும் அது உருவான, உருமாறிய காலங்களின் கண்ணாடியாகவே திகழ்வதைக் கோயிலுடன் உறவாடி வாழ்பவர்கள் அறியாதிருக்க முடியாது. மீனாட்சிக் கோயிலில் வலம் வந்த ஒவ்வொரு நாளும், கோயில் எங்களுடனும் நாங்கள் கோயிலுடனும் கூடிக் கலந்ததாலேயே பலவும் பார்க்க முடிந்ததுடன். அவற்றின் பாடங்களும் உணர்ந்து கோயிலுடன் ஒன்றவும் இயன்றது.

மீனாட்சிக் கோயிலின் ஒவ்வோரிடமும் காலநிரலான வாழ்க்கைப் படப்பிடிப்புகளைப் பெற்றிருந்தாலும், கொண்டதும் இணைந்ததுமாய் அதன் ஆயிரங்கால் மண்டபம் உள்ளடக்கியிருக்கும் சிற்ப அற்புதங்கள் அதை வரலாற்றுக் களஞ்சியமாய் மாற்றியுள்ளன. மண்டபக் கூரையைத் தாங்கியிருக்கும் நெடுந்தூண்கள் ஒன்றின் கீழ்ப்பகுதியில் நாங்கள் பார்த்த சிற்பம் நாயக்கர் காலத் தண்டனை முறைகளுள் ஒன்றான கழுவேற்றத்தின் படப்பிடிப்பாய்ப் புன்னகைத்தது.

'கழுவேற்றல்' என்ற அந்தத் தண்டனைமுறை தமிழ்நாட்டில் வழக்கிலிருந்ததைப் பதிகம் படித்த அனைவரும் அறிவர். தேவாரமூவரில் ஒருவரான ஞானசம்பந்தரின் மதுரைப் பயணமும் அப்போது அங்கு நிகழ்ந்தனவும் அவற்றின் பலனாய் விளைந்த கழுவேற்றமும் சேக்கிழாரின் பெரிய புராணம் பயின்ற அனைவருக்கும் தெரியும். பொதுக்காலம் 6ஆம் நூற்றாண்டில் நிறைவேறிய அந்தக் கழுவேற்றம் சங்க காலத்தில் இருந்ததா என்பதறிய இலக்கியப் பக்கங்களைப் புரட்டியபோது நான்கு சுட்டல்கள் கிடைத்தன. அவற்றுள் முதன்மையானது பெரும்பாணாற்றுப்படையின் பாடலடிகள் எனலாம். எயினர் குடியிருப்புகள் உள்ள ஊரின் வாயிலை வருணிக்க முற்பட்ட புலவர், நெடிய முனையுடைய வலிமையான கழுமரங்கள் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவைபகைவரைக் குத்துவதற்குப் பயன்பட்டதாக இப்பாடலுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

புலவர் தமிழகனை நீ அறிவாய் வாருணி. நாமிருவருமே அவரைச் சந்திக்க அவர் இல்லம் சென்றிருக்கிறோம். மெத்தப் படித்தவர். பெருநூலகம் கொண்டிருப்பவர். அங்குள்ள நூல்கள் அனைத்தும் அவர் கைப்பட்டு மனம் சென்றவை. அவரிடம் மீனாட்சிக் கோயில் சிற்பம் குறித்து உரையாடியபோது, 'பழங்காலத் தண்டனைகள்' என்ற தலைப்பில், தாம் குறிப்புகள் சேர்த்திருப்பதாகவும், அருட்பா, பிரபந்தம், திருவிளையாடல் புராணம் இவற்றிலும்கூடக் கழுவேற்றல் சுட்டப்பட்டுள்ளது என்றும் செய்தி தந்தார். இராமலிங்க அடிகளாரின், 'இருங்கழுவில் ஏற்றினாலும்' எனும் அருட்பா அடி குறிக்கத்தக்கது. பழமொழியில்கூட, 'இனம் கழுவில் ஏற்றினார் இல்' என்ற பாடம் உள்ளது. மதுரைக் கோட்டை வாயிலில் இருந்த கழுக்கோல்களைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

இலக்கிய ஆளுகை கழுவேற்றலைச் சங்கம் தொட்டுத் தொடரும் தண்டனையாகக் காட்டுவதால், சிற்ப வெளிப்பாடுகளாய் இது பதிவாகியுள்ளதா என்று தேடினோம். பல்லவக் கற்றளியாய்க் காஞ்சிபுரத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் வைகுந்தப்பெருமாளின் உள்சுற்றுச் சுவர் பல்லவர் வரலாறு பேசும் சிற்பத்தொகுதிகளைத் தொடராய்க் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் கழுவேற்றல் காணலாம். அரசர் ஆணையிட நிறைவேற்றப்பட்ட தண்டனையாகப் பதிவாகியுள்ள அக்காட்சியில், இரண்டு குற்றவாளிகளைக் காணமுடிகிறது. ஒருவரைத் தலைகீழாகவும் மற்றவரைத் தலை மேலிருக்குமாறு நேராகவும் கழுவில் ஏற்றியுள்ளனர்.

மீனாட்சிக் கோயிலில் முற்றிலும் மாறுபட்ட காட்சி. இங்குக் கழுமரம் பெரும்பாணாற்றுப்படைப் பாடலடியை ஒட்டி நெடிய முனையுடன் உள்ளது. வைகுந்தப்பெருமாள் காட்சி போலன்றி இங்குக் குற்றவாளி வயிற்றில்கழுமுனைநுழையுமாறு தண்டிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்து துவண்டிருக்கும் அவர் உடலின் கீழ்ப்பகுதியை நரிகளும் நாய்களும் கடிக்க, மேற்பகுதியைப்பருந்தும் கழுகும் கொத்துகின்றன. இச்சிற்பத்தின் மேற்புறத்தில் மற்றொரு கழு. அதிலும் ஒரு குற்றவாளி. அவரது தலையருகே ஒரு நரி.

இறைவன் ஆடும் இடு, சுடுகாட்டுக் காட்சிகளை வருணிக்க முனைந்த காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சம்பந்தர் ஆகியோர் அங்கு நரிகளும் பருந்து, கழுகு முதலிய பறவைகளும் இறந்தோர் உடலை உணவாய்க் கொள்ளும் காட்சிகளைப் பலபடக் காட்டியிருப்பர். பரஞ்சோதி முனிவரோ, திருவிளையாடல் புராணத்தில் இந்தச் சிற்பக் காட்சியை நேரில் கண்டவர் போல் வருணித்திருக்கிறார். பார்வையின் விளைவே பாடலடிகள் என்பதை மீனாட்சிக் கோயில் கழுவேற்றல் காட்சியும் இலக்கியப் பக்கங்களின் பதிவுகளும் உறுதிசெய்கின்றன வாருணி. ஆவுடையார் கோயில் ஓவியங்களிலும் கழுவேற்றம் இடம்பெற்றுள்ளதை நினைவூட்டிய பேராசிரியர் மு. நளினி அந்தப் படங்களையும் காட்சிப்படுத்தினார்.

குற்றங்கள் இல்லாத சமுதாயம் எக்காலத்தும் இருந்ததில்லை. அது போலவே குற்றத்திற்கேற்பத் தண்டனைகள் வழங்குவதும் காலந்தோறுமான நிகழ்வாகவே இருந்துவந்துள்ளது. அவற்றுள் சில, கிடைக்கும் வாய்ப்பிற்கேற்ப எதிர்வரும் தலைமுறைகளுக்கு எச்சரிக்கையாகப் படைப்பாளிகளால் பதிவு செய்யப்படுகின்றன. பார்ப்பவர்கள் பகிர்வதும் கேட்பவர்கள் உணர்வதும் சமுதாயத் திருத்தங்களுக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையுடன்தான் காலமும் அதைக் கருத்துடன் காப்பாற்றி வந்துள்ளது.


நன்றி:
இலக்கியப்பீடம், ஏப்ரல் 2026
பக்கம்: 35-38

Dr Kalaikovan 1.jpg
Dr Kalaikovan 2.jpg 
Dr Kalaikovan 3.jpg
Dr Kalaikovan 4.jpg

--------------------------------------

தேமொழி

unread,
Apr 17, 2026, 10:04:46 PMApr 17
to மின்தமிழ்
dr kalaikovan.jpg
18.04.2026  -  09.02 AM @  FM RAINBOW 102.1 - நேயர்களுக்காக நேயர்களால்  ஆகாசவாணி, திருச்சி
AIR-Trichy  https://onlineradiofm.in/tamil-nadu/tiruchirappalli/all-india-air-tiruchirappalli-fm


வசந்த அழைப்பு: காலக் கனவுகளைக் காப்போம்
வரலாற்று ஆய்வாளர்  இரா. கலைக்கோவன்
அவர்களுடன் நேரலை

தேமொழி

unread,
May 2, 2026, 3:45:02 PMMay 2
to மின்தமிழ்
ஒரே நாளில் ஓலையான அரசாணை - இரா. கலைக்கோவன்,
இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி

நன்றி: திருநெல்லை — பங்குனி - சித்திரை | ஏப்ரல் 2026
பக்கம்: 28 — 33

dr kalaikovan1.jpg
dr kalaikovan2.jpg
dr kalaikovan3.jpg
dr kalaikovan4.jpg
dr kalaikovan5.jpg
dr kalaikovan6.jpg
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​--------------------------------------------------------------------------------- 

தேமொழி

unread,
May 6, 2026, 3:11:58 AMMay 6
to மின்தமிழ்
மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்
இரா. கலைக்கோவன்

11. தேவதேவி
அன்புள்ள வாருணி, தமிழ்நாட்டின் மிகச் சில கோயில்களிலேயே ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிற்பக் களஞ்சியங்களாக விளங்குபவை திருவரங்கம், தில்லை, மதுரைத் திருக்கோயில்களில் உள்ளவையே. இம்மூன்றனுள்ளும் ஆளுயரச் சிற்பங்களுடன் காண்போரைக் கவர்ந்திழுக்கும் கவினுறு கட்டுமானமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத்தைக் குறிக்கலாம். மண்டப வாயிலிலும் வாயிலை அடுத்து விரியும் கூடத்தின் முதல் வரிசைத் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் விரிவான ஆய்வுக்குரியவை. அவற்றுள் தனித்துக் குறிக்கத்தக்கது கரணக்கோலத்திலுள்ள தேவதேவிச் சிற்பம்.

தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு எப்போது தோன்றியது என்பது குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரை எங்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, 'பெண்தெய்வ வழி பாடு தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலில் இடம் பெற்றுள்ளதை நீ அறிவாய். சங்க இலக்கியங்களிலோ, அடுத்தமைந்த காலக்கட்ட நூல்களான காப்பியங்களிலோ இடம்பெறாத பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்துவன திருமுறைகளே. சம்பந்தரும் அப்பரும் வழங்கியுள்ள குறிப்புகள் பிள்ளையார் தோற்றம் பற்றிய தெளிவான தரவுகளை முன்வைக்கின்றன.

தமிழ்நாட்டில் காணப்பெறும் பிள்ளையார் சிற்பங்களில் காலத்தால் முற்பட்டவை குடைவரைகளில் அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டிக் குடைவரையிலுள்ள கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அக்குடைவரையை ஆறாம் நூற்றாண்டு அமைப்பாகக் கருதுகின்றனர். எனில், தமிழ்நாட்டின் முதல் பிள்ளையாராக அவரையே கொள்ளவேண்டியிருக்கும். பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் பரவலாக இடம்பெற்றுள்ள பிள்ளையாரைக் காலத்தால் முற்பட்ட வடதமிழ்நாட்டுப் பல்லவக் குடைவரைகளில் காணமுடியவில்லை. வல்லம் குடைவரைகளின் பக்கச்சுவர்களிலும் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரையிலும் தோற்றம் காட்டும் பல்லவப் பிள்ளையார் கற்றளிக் காலத்தே சிறப்பிடம் பெறுவதைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டின் குடைவரைக் காலப் பிள்ளையார்களில் நின்றகோலத்தில் காணக்கிடைப்பவர் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரையில் உள்ளார். நான்முகன், முருகன், கதிரவன், கொற்றவைக்கு இணையாகப் பின்சுவர்க் கோட்டத்தில் இடம்பெற்றுள்ள இப்பிள்ளையார், பிற்பல்லவர் கற்றளிகளில் விமானத்திற்கு முன்னமைந்த முகமண்டபத் தெற்குக் கோட்டத்திற்கு மாற்றம் பெறுகிறார். இம்மாற்றம் சோழர் காலத்தில் நிலைபேறடைவதை அவர்தம் கற்றளிகள் கண்முன் நிறுத்துகின்றன.

குழந்தை போல் இரு கால்களையும் மடக்கிப் பாதங்கள் எதிர்ப்பட அமர்ந்த எளிய கோலம் தொடங்கி இலலிதாசனம், மகாராஜலீலாசனம் என வரையறுக்கப்பட்ட அமர்வுகளில் பிள்ளையார் சிற்பங்கள் பலவாய்க் கிடைக் கின்றன. சில  ஊர்களில் நின்ற கோலத்திலும் சோழப் பிள்ளையார்களைக் காணமுடிகிறது. இதன் அடுத்த நிலையாகப் பிள்ளையாரை ஆடற் கோலத்தில் அமைக்கத் தொடங்கினார்கள். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலை முழங்காலளவில் மடக்கி உயர்த்தும் (ஊர்த்வஜாநு, பார்சுவஜாநு) கரணக்கோலப் பிள்ளையார்களைப் பல கோயில்களில் காண முடிகிறது. முழங்காலை முன்னால் உயர்த்துவது ஊர்த்வஜாநு. பக்கவாட்டில் உயர்த்தினால் பார்சுவஜாநு.

தொடக்கக் காலங் களில் தனித்தமைந்த பிள்ளையாரை அவரது தேவியுடன் இணைத்துக் காட்டும் சிற்பங்கள் அடுத்த நிலையின. சுகாசனப் பிள்ளையாரின் தொடையில் அமர்ந்தவராய் அம்மை காட்சிதரும் சிற்பங்களும் இருவரும் களிநிலை காணும் சிற்பங்களும் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ளன. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரக்கால் மண்டபத்தூண் அதுவரை நாங்கள் கண்டிராத புதிய காட்சியைக் கண்முன் நிறுத்தியது, வாருணி.

மண்டபத்துள் நுழைவாயிலில் ஒவ்வொருவரும் காணுமாறு முகப்பு வரிசைத் தூணில் இப்பெருஞ் சிற்பம் படைக்கப்பட்டுள்ளது. இதில், பிள்ளையார் பேரழகராய் ஊர்த்வஜாநு கரணத்தில் காட்சியாகிறார். அவரது வலப்பாதம் தளத்தில் நன்கு ஊன்ற, இடக்கால் முழங்காலளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ளது. பத்துத் திருக்கைகளுடன் திகழும் அவரது மேலிரு கைகளில் சக்கரமும் தாமரையும் விளங்க, வல முன் கையில் உடைந்த தந்தம். வலம்புரியாய் வளைந்துள்ள துளைக்கையிலோ அமுதக்குடம். கழுத்தணிகள், தோளணிகள், கையணிகள், தொங்கு சரத்துடன் அடர்த்தியான வயிற்றுக்கட்டு, கால்களில் தண்டை, சிலம்பு, பெற்றுக் கரண்டமகுடத்துடன் கண்களுக்கு விருந்தாகும் அவரது இடையில் பதக்கஅணிகளும் குறங்குசெறியும் இருத்தும் அழகிய சிற்றாடை. அதன் தொங்கல்கள் கால்களுக்கிடையே விரிந்தும் மடிந்தும் நெகிழ்ந்திருக்கும் பாங்கு சிற்பிகளின் திறம் காட்டுகிறது.

இது போல் ஊர்த்வஜாநு கரணத்தில் பல பிள்ளையார் சிற்பங்களைச் சோழர் காலத்தே காணமுடிந்தாலும் இது அளவில் பெரியதாகவும் அழகில் உச்சம் பெற்றதாகவும் அமைந்திருப்பதால் மட்டுமே இங்குக் குறிக்கப்படுவதாக நினைத்துவிடாதே வாருணி. அளவு, அழகு இரண்டினும் மேம்பட்ட புதிய சிந்தனை இச்சிற்பத்தில் கையாளப்பட்டுள்ளது. இதில், இறைவனின் உயர்த்தப்பட்ட கால் அவர் தேவிக்கு இருக்கையாகியுள்ளது. பிள்ளையாரின் இடத்தொடையில் கோயிலாரால் வல்லபை என்று அழைக்கப்பெறும் அவரது தேவி இனிதே அமர்ந்துள்ளார்.

அம்மையின் வலக்கை பிள்ளையாரின் முதுகு தழுவ, இடக்கையில் மலர். கரண்டமகுடம் உள்ளிட்ட பல அணிகலன்கள் அழகூட்டப் பட்டாடையும் கச்சும் அணிந்து இறைத்தழுவலில் இளகிக் காட்சிதரும் தேவியின் இடையைத் தம் இடக்கை ஒன்றால் பேரன்புடன் பற்றியுள்ளார் இந்தப் பேரழகர். ஆடும் நேரத்திலும் அந்தக் கோலத்திலும் தம்மில் நிறைந்திருக்கும் தேவியை உடன் கொண்ட இந்த அன்பின் விளைச்சலை என் கண்கள் வேறெங்கும் கண்டதில்லை வாருணி. அதனால்தான், இந்தத் தேவதேவி இலக்கியப்பீடப் பக்கங்களில் இனிதே பதிவாகிறார்.

தமிழ்நாட்டுச் சிற்பிகளின் எண்ண வண்ணங்கள் காலந்தோறும் கவிதைகள் போல் வெளிப்பட்டுத் தமிழ்நாட்டுக் கோயில்களில் நமக்காகவே காத்துக் கிடக்கின்றன. அவற்றைக் காணவும் அவை வழி விளையும் களிப்பில் நிறையவும் நாம்தான் முனைவதில்லை.


நன்றி:
இலக்கியப்பீடம்,
மே 2026, பக்கம் 44 - 47
 

தேமொழி

unread,
May 6, 2026, 3:16:28 AMMay 6
to மின்தமிழ்
pillaiyar.jpg
மதுரை மீனாட்சிக் கோயிலில் கண்டதும் கற்றதும்
இரா. கலைக்கோவன்
11. தேவதேவி
---

தேமொழி

unread,
May 31, 2026, 9:03:43 PMMay 31
to மின்தமிழ்

568 காசுகளும் 1200 கலம் நெல்லும்


இரா. கலைக்கோவன்,

இயக்குநர்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார்
வரலாற்றாய்வு மையம்,
திருச்சிராப்பள்ளி

சித்திரை - வைகாசி | மே 2026
நன்றி: திருநெல்லை - இதழ்

Screenshot 1.jpg 
Screenshot 2.jpg
Screenshot 3.jpg
Screenshot 4.jpg

----
இணைப்பிலும் உள்ளது 
568 காசுகளும் 1200 கலம் நெல்லும்.pdf

தேமொழி

unread,
Jun 6, 2026, 7:55:39 PMJun 6
to மின்தமிழ்

dr kalaikovan article.jpg
அமுதசுரபி இதழ் கட்டுரை 

தேமொழி

unread,
Jun 7, 2026, 2:10:56 PMJun 7
to மின்தமிழ்

மதுரை மீனாட்சிக கோயிலில் கண்டதும் கற்றதும்

— இரா. கலைக்கோவன்

12.  வீரமறவர்களின் வேட்டைக் காட்சிகள்

நன்றி: இலக்கியப்பீடம் - ஜூன் 2026 - பக்கம் 42

veera maravar 1.jpg

 veera maravar 2.jpg

veera maravar 3.jpg

veera maravar 4.jpg

veera maravar 5.jpg

மதுரை மீனாட்சிக கோயிலில் கண்டதும் கற்றதும்

— இரா. கலைக்கோவன்

12.  வீரமறவர்களின் வேட்டைக் காட்சிகள்

நன்றி: இலக்கியப்பீடம் - ஜூன் 2026 - பக்கம் 42 
--------------------------------------------

தேமொழி

unread,
2:48 PM (4 hours ago) 2:48 PM
to மின்தமிழ்
கண்டாரே கலக்கப் பெறுக ...

இரா.கலைக்கோவன்

வரலாற்றாய்வாளர்
தொடர்புக்கு: rkalaik...@gmail.com

hindu tamil.jpg

சங்க காலத்திலிருந்தே விளக்கேற்றுதல் சிறப்புக்குரிய நிகழ்வாகக் கருதப்பட்டது. பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கண்சிமிட்டும் விளக்கேற்றல் காட்சிகள் அந்நாளைய சமூகம் அதற்கு எத்தனை முதன்மை அளித்திருந்தது என்பதைச் சுட்டுகின்றன. குளத்தில் மூழ்கித் தூய்மை பெற்ற பிறகே மகளிர் இறையகத்தில் விளக்கேற்றியதாகப் பட்டினப்பாலை பேசுகிறது.

நந்தாவிளக்கு, கார்த்திகை விளக்கு, மலரணி விளக்கு எனச் சங்கம் சுட்டும் விளக்கு வகைகள் பத்திமைக் காலத்தில் பலவாய்ப் பெருகின. விளக்கேற்றலை அருஞ்செயலாய்ப் போற்றும் அப்பர் பெருமான், இறைவன் அருளைப் பெற உடல் உறுப்புகள் ஆற்றக்கூடிய பணிகளைப் பேசுமிடத்தில், ஒளி உமிழும் விளக்குகளை இயன்றபோதெல்லாம் ஏற்றுவதே விரல்கள் பெற்றதன் பயன் என்கிறார். இவ்விளக்கேற்றும் பணி பல்லவ, பாண்டிய, சோழர்காலத்தில் ஓர் அறமாகவே கைக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில் பெரும்பாலனவை விளக்கேற்றல் பற்றியே பேசுகின்றன.

அக்காலத்தே தமிழ்நாட்டிலிருந்தவிளக்குகளின் வகைகள், அவை ஏற்றப்பட்ட முறை, விளக்கேற்றலின் நோக்கம், அதற்கெனத் தரப்பட்ட கொடைவகைகள், அதையொற்றி உருவான அறக்கட்டளைகள், அவை செயற்பட்ட ஒழுங்கு - தணிக்கை செய்யப்பட்ட பாங்கு, கொடையாளர்களின் விளக்கேற்றல் தொடர்பான விழைவுகள் என இச்செயல் சமுதாயத்தின் பல்வேறு நம்பிக்கைகள், நடைமுறைகள், ஒழுகலாறுகள் குறித்த வரலாற்று விளக்கமாக விளங்கியதைக் கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன.

'உலகும் சந்திரரும் ஆதித்தரும் உள்ள அளவும்' ஒளிர வேண்டும். 'பூமியும் ஆகாசமும் உள்ள மட்டுக்கெல்லாம்' வெளிச்சம் தரவேண்டும் என்று வேண்டி நிகழ்ந்த இந்த இறையக விளக்கேற்றல் பேரறமாகக் கருதப்பட்டதால், சமுதாயத்தின் பல தள மக்களும் பல்வேறு நோக்கங்களுக்காகக் காலங்காலமாகக் கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். உறவுகளின் நலம் காக்கவும் நீத்தார் நினைவு போற்றவும் நிகழ்வுகளின் சிறப்பு குறிக்கவும் விளக்கேற்றினாற்போலவே குற்றங்களுக்குத் தண்டனையாகவும்கூட விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. கோயில்களில் சுடர்விட்ட இத்தகு விளக்குகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு கதை இருக்கிறது. அவற்றுள், பழுவேட்டரையர் காலத் தரவுகள் குறிக்கத்தக்கவை.

அரியலூர் மாவட்டப் பழுவூர், பழுவேட்டரையர்கள் எனும் சிற்றரசமரபினரின் கீழ்ச் செழிப்புடன் விளங்கிய பேரூராகும். அங்கு அவர்கள் எடுப்பித்த கலைக்கோயில்களில் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் சில, அக்காலத்தே நேர்ந்த இழப்புகளையும் அவற்றின் விளைவான விளக்குகளையும் படம்பிடிக்கின்றன. பழுவேட்டரையரின் படைவீரர் பலதேவன் வயிரியும் மல்லூர் கிழவன் நம்பனும் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவின் காரணமாக வாளேந்திச் சண்டையிட, அதில் வயிரி, கொல்லப்பட்டார். அதற்கான தண்டனையாகக் கோயில் இறைத்திருமுன் நம்பன் விளக்கேற்ற வேண்டுமென மன்னர் ஆணையிட, வயிரியின் நினைவு நிலைக்குமாறு பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கு ஒளிர்ந்தது.

குஞ்சிரமல்லன் முருக்கனுக்கும் தென்பாளன்பாடி வாழ் ஐயாறன் கானனுக்கும் இடையிலான சச்சரவில் முருக்கன் உயிரிழந்தார். அவ்விழப்பிற்கு ஈடாக, பழுவூர்க் கோயிலில் முருக்கன் நினைவாக ஐயாறன் நந்தாவிளக்கேற்றுமாறு ஆணையிடப்பட்டது. குற்றம் இழைத்தவர் பிடிபடுகையில் தண்டனை உடன் விளைவாகிறது. அதற்கு இவ்விரு நிகழ்வுகளும் சான்று. குற்றவாளி தப்பிவிட்டால் ...?

பழுவூரில் வாழ்ந்த சோமன் புவனியைக் கத்தியால் குத்தி உயிரிழக்கச் செய்த அரங்கன்பட்டன், ஊரார் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டார். தப்பிய அரங்கனை, ஊரார் யார் கண்டாலும் அவர்களே அவனுக்குத் தக்க தண்டனை வழங்கிட ஆணையிட்ட நகராட்சி, இறந்தவர் நினைவு போற்றிப் பழுவூர்க் கோயிலில் நந்தாவிளக்கேற்றும் பொறுப்பைத் தனதாகக் கொண்டது.

குற்றம் செய்தவர் தப்பிவிடுகையில் குற்றத்தின் விளைவால் உயிரிழந்தவருக்காக அரசரே விளக்கேற்றியதையும் பார்க்கமுடிகிறது. முதுகுடியில் வாழ்ந்த வீரக்கலி அரங்கனும் மாதேவடிகளும் சச்சரவிட்டபோது, வீரக்கலிஅரங்கன் கொலையுண்டார். குற்றம் இழைத்த மாதேவடிகளைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில், பழுவேட்டரையர் குமரன் மதுராந்தகனே இறந்தவர் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்றியுள்ளார்.

பழுவூர் எண்ணெய் வணிகர் குமிழிமனப்பன் கோலொன்றால் அடிபட்டு இறந்தார். கோலை எறிந்து அவர் உயிரிழக்கக் காரணமானவரை அறியமுடியாத நிலைில், அவர் சார்ந்திருந்த வளஞ்சியர் என்னும் வணிகக்குழுவினர் மனப்பன் நினைவாகக் கோயிலில் நந்தாவிளக்கேற்ற நிதியளித்தனர். குமிழிமனப்பனின் மனை, நிலங்கள் ஆகியவற்றை அவர் துணைவியும் வழியினரும் நிலவும் கதிரும் உள்ளவரை வரி செலுத்தாது அனுபவித் துக்கொள்ள ஊராட்சி துணையானது. பழுவூர்க் கல்வெட்டுகள் பகிர்ந்துகொள்ளும் இந்த ஐந்து நிகழ்வுகளிலும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அந்த உயிரிழப்பை நேர்செய்யக் குற்றம் செய்தவர்களோ, ஊராட்சியோ, அரசோ, இறந்தவர் சார்ந்த குழுவினரோ கோயில்களில் விளக்கேற்றியுள்ளனர். இறந்தவரின் ஆன்ம அமைதிக்கான அறமாக இவ்விளக்குகள் சுடர்விட்டன.

எனில், குற்றஞ்செய்து தப்பியவர் களுக்குத் தண்டனை இல்லையா? இந்தக் கேள்விக்கு ஐந்து கல்வெட்டுகளில் ஒன்று தெளிவாக விடைசொல்கிறது. சோமன்புவனி இறக்குமாறு அவனைக் குத்தித் தப்பிய அரங்கன் பட்டனை, 'கண்டாரே கலக்கப் பெறுக' என்ற பழுவூர் நகரத்தாரின் ஆணை பொருள் பொதிந்ததல்லவா!

--
WhatsApp Image 2026-06-21.jpeg
நன்றி : இந்து தமிழ்
https://www.hindutamil.in/
சிறப்புக் கட்டுரை
ஜூன் 20, 2026




Reply all
Reply to author
Forward
0 new messages