இன்றைய மூலிகை அவுரி -

566 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Jan 2, 2010, 9:40:46 AM1/2/10
to minT...@googlegroups.com
இன்றைய  மூலிகை       அவுரி  -
                                     --  ஏ.சுகுமாரன்
  
நீலி என சமஸ்கிருதத்திலும்  சென்னா என ஆங்கிலத்திலும்  அறியப்படும . அவுரி எனும் குறுந்  செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும்  அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார்ஐம்பதுஆண்டுகளுக்குமுன்வரை விளை  நிலங்களில் ,நெல் அறுவடைக்குப் பின் ,அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார் .அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல  ,அவுரி  18  வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும் .அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர் .ஆனால்  இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது ,எளிதில் நோய் தாக்கும் படி பூஞ்சையாக மாறிவிட்டார்கள் .
 
ஆனால்  இப்போது அவுரி நெல்லைவிட மதிப்பு வாய்ந்த தாவரமாக மாறிவிட்டது .நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி   ஆகும் மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது .குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா என்றும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவுரி சுமார்  3000எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார்  5    கோடி  ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
 இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. . பண்டைய நாட்களில் இருந்தே நமது  கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும  தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும  அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது .நமதுபருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள் ..
இன்னும் உலகில்இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது ,நாம் தான் சந்தோஷமாக நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு ,செயற்கை சாயங்களை பயன்படுத்தி தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம்
 
அவுரி இலைகள்  சாயம் மட்டும் தருவதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை  விஷங்களை  நீக்கும்  வன்மை  பெற்றது .
 
உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி ----- என்கிறது  குண  பாடம் 
 
 மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது.
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
 
இதன் குணங்கள் சோபாநாசினி , விஷநாசகாரி மலகாரி ,உற்ச்சாககாரி
 
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன்  அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
Botanical-Indigofera tinctoria Linn.(fam.Fabaceae)   
 Sanskrit-Nilika                
  English-Indigo           
  Gujarath-Gali                   
 Hindi-nili                         
Kannada-Karunili   
Malayalam-Neelamar Marathi-Neel                   
Tamil-Avuri                    
Telugu-Nili chettu.
 
இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும் .தினம் ஒரு வேலையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும் .
 
இதன் இல்லையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும் .
இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் 
தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும் .இது ஒரு பாதுகாப்பான வைத்தியம் 
 
அவுரிஇலை சாறு பல விஷங்களை நீக்கும் .சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம்
அவுரி வேரைநன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேலை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதயவையின் 
விஷம் நீங்கும் .
 
இதில் நெல்லிக்காய் அளவு என்றுசொல்வது பிரமாணம் 
பசும் பாலில் கலந்து என்பது அனுபானம் 
சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம் .
மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம் .
அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வன்றிர்க்கும் ஒவ்வெரு தனி முறை உள்ளது .
ஆனால் அவைகள் தெரியாத நிலையில் அந்த மருத்துவ பொருளை 
 நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் மருந்து சுத்தி ஆகும் . அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி
 
அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு  நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக  ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம் .பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை ஆரமிப்பதர்க்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டுவந்த மருந்த்களின் வீரியத்தைக் குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது தான் வழக்கம் .இன்னும் கூட சில சிறந்த ரகசிய முறைகள் ஒவ்வரு வைத்தியரும் வைத்திருப்பார்  இப்போதது ஆங்கில முறை மருத்துவத்தில் அத்தகைய கவனிப்பு ஒன்றும் இல்லை.உடலை ஒரு சோதனைக் கூடமாக கருதி வேறு வேறு மருந்துகளை தரும் பழக்கம் தான் உள்ளது . ஆனால்  சித்தமருத்துவத்தில் முன்னர் கொடுத்த மருந்துகளை முரித்தபின்பே அடுத்தது கொடுக்க ஆரமிப்பார் உடலை மிகவும் நேசிப்பார் .
இப்போதெல்லாம் வயல்களில் அவுரி இல்லாததால் மாடுகளுக்கும் கண்டதைத் தின்று பலவித நோய்கள் வருகின்றன .பசுவின் பால் கூட இப்போது சுத்தமாக  இல்லை நஞ்சு கலந்துவிட்டது .
மனிதர்களுக்கு வைத்தியம் கண்டது போல் மாடுகளுக்கும் வைத்திய முறை கண்டிருந்தனர் நமது பண்டைய தமிழர் அத்தகைய மாட்டு வைத்திய முறைகள் அடங்கிய நூலுக்கு மாட்டு வாகடம என்று பெயர்  இவ்வாறு ஒவ்வொரு மிருகத்திற்கும் உண்டு ஆட்டு வாகடம  பறவை வாகடம போன்று இருந்தது  .இந்த வைத்திய முறைகளில் அவுரிக்கு பெரும் பங்கு உண்டு .
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலை முறையாக   நம் முன்னோர்கள் ஆராய்ச்சி  செய்து கண்டு பிடித்த இது போன்ற அறிவியல் பூர்வமான, சித்த வைத்தியக் கூறுகள், காலவெள்ளத்தால் அழிந்து, மறைந்து போய்க் கொண்டிருக்கிறது நாம் தொலைத்து விட்ட அறிவுசார் சொத்துக்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ ஆனால்   இப்போ
என்னசார் செய்வது என்கிறீர்களா !
ஊதுற சங்கை பலமாக ஊதிவைப்போம் .


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

We never like what we have.
We never get what we want,

Tirumurti Vasudevan

unread,
Jan 2, 2010, 10:46:23 AM1/2/10
to mint...@googlegroups.com
இப்படி ரகசிய ரகசியமா வெச்சுதான் பலதும் காணாம போச்சு!
:-(

2010/1/2 annamalai sugumaran <amirth...@gmail.com>

.இன்னும் கூட சில சிறந்த ரகசிய முறைகள் ஒவ்வரு வைத்தியரும் வைத்திருப்பார்



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

devoo

unread,
Jan 2, 2010, 12:11:01 PM1/2/10
to மின்தமிழ்
Jan 2, 8:40 am, annamalai sugumaran >

*சென்னா என ஆங்கிலத்திலும்*
*சென்னோஸைடு’ மூலப்பொருள்*

சென்னா என்பது நித்யகல்யாணிச் செடியைக் குறிப்பது என்று நினைக்கிறேன்;
இது குடற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாகும்.
ஆங்கிலத்தில் Indigo என்பதையும் பின்னர் சொல்லியுள்ளீர்கள்.

பிஹார் மாநிலத்தில் சம்பரனில் அவுரி பயிரிடும் எளிய விவசாயிகளுக்காக
1917ல் காந்திஜி செய்த போராட்டம் உப்பு சத்தியாகிரகத்துக்கு இணையானது.

தேவ்

annamalai sugumaran

unread,
Jan 2, 2010, 9:16:19 PM1/2/10
to mint...@googlegroups.com
நன்றி  திரு தேவ்
சென்னா  என்பது அவுரிதான் அது அதற்க்கு வழங்கும் பொதுவான வணிக பெயர் .
அதேபோல் ஹென்னா என்பது மருதோன்றி .
ஏற்றுமதி செய்பவர்கள் அப்படித்தான் கூறுவார்கள் .விவசாயிகளுக்கும் அதுதான் புரியும் .நான் கூட சில காலம் மூலிகை ஏற்ற்றுமதி செய்திருக்கிறேன் .
அன்புடன் 
ஏ சுகுமாரன்


2010/1/2 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 2:34:14 AM1/3/10
to mint...@googlegroups.com
என்க்கு என்னமோ தேவ சொல்வது சரியாகப்படுகிறது. சென்னா 'சூரத்தாவரை'  அல்லவோ? தயை  செய்து மீள்பார்வை, சுகுமாரன். மீள்பார்வை என்ற சொல்லைக்கேட்டாலே கைகால் எல்லாம் உதறுகிறது!
இன்னம்பூரான்


 
2010/1/3 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
இன்னம்பூரான்

annamalai sugumaran

unread,
Jan 3, 2010, 4:31:28 AM1/3/10
to mint...@googlegroups.com
ஐயா
 
 மீள்பார்வை செய்ததில் குழப்பம் தான் வருகிறது
துணையை   நாடிப்பார்த்தால் மூலிகை வனம் குப்புசாமி அவர்கள்  சென்னாவும் அவுரியும் ஒன்றுதான் என்கிறார் 
 
ஆனால் தாவர பெர்யர் சென்னவுக்கும் அவுரிக்கும் வேறு வேறு 
அதற்க்கு  அவர் அவைகள் இரண்டும் ஒரு வகை என்கிறார் ( அவரது வலைப்பூ வில்  தான் )
 
இதோ அவர் தரும்  தகவல்
 மூலிகையின் பெயர் :- சென்னா.
2. தாவரப்பெயர் :- CASSIA ANGUSTIFOLIA.
3. தவரக்குடும்பம் :- LEGUMINOSAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் காய்கள்.
5. வேறுபெயர்கள் :- அவுரி, நிலாவாரை மற்றும் நிலாவக்காய்.
6. வகைகள் :- கோசியாஅங்குஸ்டிப்ரியா, C.acutifolia, C.obovata. C.itlica. ALFT - 2 சோனா ஆகியவை.
ஆங்கிலத்தில் பார்த்தால் இவ்வாறு இருக்கிறது .
 
Botanical Name : Cassia Angustifolia
Family Name : Caesalpinaceae
Common Name : Senna, Indian Senna, Tinnervelly Senna, Cassia Senna.
Part Used : Pods, Stems And Leaves.
Habitat : Cultivated in dry lands of southern & western india, and indegenous to arabia.
Product offered : Leaves, Fruit, Pod
Uses : It is recognised by British and US pharmacopoeias. It is useful in habitual costiveness. It lowers bowels, increases peristaltic movements of the colon by its local action upon the intestinal wall. It is used as expectorant, wound dresser, antidysentric, carminative and laxative. Useful in loss of appetite, hepatomegaly, spleenomegaly, indigestion, malaria, skin diseases, jaundice and anaemia. Leaves are made into a paste, and applied to various skin diseases.
Indigofera tinctoria Linn.(fam.பாபசியே

 

அடியேனுடைய  நினைவில் பதிந்து இருப்பதும் இரண்டும் ஒன்றுஎன்றே .ஏன் எனில் குணபாடத்தில் வரும் குணங்கள் இவை இரண்டிற்கும் பொருந்துகிறது
மேலும் நிலாவாரை என்பதும் அவுரிதான் என்பது என் முடிவு .ராஜஸ்தானில் இன்னும் பல வகைகள் புதிப்பித்து அதிக  சத்து கிடக்கப்பெருவதாகவும் தகவல் .ஏற்றுமதியில் திருநெல்வேலி சென்னா என்று ஒரு ரகம் பிரசித்தம் .
 
முடிவு இது இரண்டும் ஒன்றே .பல வகைகள் உண்டு 
 
ஆமாம் மீள் பார்வை என்றதும் ஏன் ஐயா கைகால்கள் நடுங்குது 
இங்குதான்  குளிர் சக்கை போடு போடுது பனி மூட்டத்தால் பல ரயில்  விபத்து விமான தாமதம் என செய்திகள் வருகிறது
அங்கும் அப்படியா
அல்லது
அடியேன் என்ன தவறு செய்தேன்
அன்புடன்
ஏ சுகுமாரன்



2010/1/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 6:03:27 AM1/3/10
to mint...@googlegroups.com
நல்லதொரு ஆய்வு செய்திர்கள், சுகுமாரன். நிங்களாவது தவறு செய்வதாவது!. அன்றொரு நாள் மீள்பார்வை பாடாய் படுத்தியது நினைவுக்கு வந்ததது. இது நிற்க. குளிரோ கிளிரோ இங்கும் நடை பயில்கிறேன்.
இன்னம்பூறான்

shylaja

unread,
Jan 3, 2010, 6:05:15 AM1/3/10
to mint...@googlegroups.com


2010/1/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>

நல்லதொரு ஆய்வு செய்திர்கள், சுகுமாரன். நிங்களாவது தவறு செய்வதாவது!. அன்றொரு நாள் மீள்பார்வை பாடாய் படுத்தியது நினைவுக்கு வந்ததது. இது நிற்க. குளிரோ கிளிரோ இங்கும் நடை பயில்கிறேன்.
இன்னம்பூறான்<>>>
 
என்னாச்சு   இடையினம் வல்லினம் ஆனது? ரொம்பக்குளிரோ?:)



--
ஷைலஜா

///

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 6:12:43 AM1/3/10
to mint...@googlegroups.com
குளிரல்ல, பெண்ணே! கூகில்தமிழ் படுத்தும்பாடு. எனவே,
இ  

2010/1/3 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jan 3, 2010, 6:15:14 AM1/3/10
to mint...@googlegroups.com
ஓ(கே)!

2010/1/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--
ஷைலஜா

///

Innamburan Innamburan

unread,
Jan 3, 2010, 6:24:45 AM1/3/10
to mint...@googlegroups.com
நீண்டதொரு கவிதை எங்கே? எங்கே?


 
2010/1/3 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jan 3, 2010, 8:12:07 AM1/3/10
to mint...@googlegroups.com


2010/1/3 Innamburan Innamburan <innam...@googlemail.com>

நீண்டதொரு கவிதை எங்கே? எங்கே?
>>>>>>>
 
நீண்ட கவிதை  இல்லை  ‘இ’ ஸார்..நாலே வரில யமகம்  ஒண்ணூ வரும், ரும் , ம்:)



--
ஷைலஜா

///

Reply all
Reply to author
Forward
0 new messages