இருதய அடைப்புக்கு இப்படியொரு சிகிச்சை - நம்பலாமா?

1,178 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Nov 6, 2016, 8:24:47 AM11/6/16
to மின்தமிழ்
அண்மையில் எனக்கு வந்த ஒரு தனிமடலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பதும் அதற்கு நான் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அந்த நண்பருக்குத் தெரியும். நம்பிச் செய்யலாம் என்றால் தேன் சாப்பிடச் சொல்கிறார். எனக்கோ சர்க்கரை நோய் வேறு.
என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருக்கிறேன். இது ஏதோ எலுமிச்சை, இஞ்சி, பூண்டு வியாபாரியின் கதை போலிருக்கிறது.
தெரிந்தவர்கள் கருத்துக் கூறலாம்.

ப.பாண்டியராஜா

>>

நண்பர்களே கவனியுங்கள்----

    இது உண்மைச் சம்பவம்....

   இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

தமிழாக்கம்; Mannargudi Banukumar

***இந்த நல்ல தகவலை நம் நண்பர்கள் மத்தியில் பரப்ப SHARE செய்யுங்கள்!!!!


Innamburan S.Soundararajan

unread,
Nov 6, 2016, 10:09:30 AM11/6/16
to mintamil
எனது அருமை நண்பர் பாண்டியராஜாவுக்கு,
சான்றுகள் அளிக்காமல் மொட்டரஜிப்பா உங்கள் நண்பர் ஏமாந்து போய், உங்களையும் மாட்டி விடுகிறார். இவற்றை நம்பவேண்டாம்.- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ் என்று கூகிளை கேளுங்கள். குப்பை தான் வருகிறது. உங்கள் உயிர் உங்களுக்கு வெல்லம்.  இருதயத்தில் அடைப்பு உள்ளவர்கள் எல்லாருக்கும் பை பாஸ் தேவையாக இல்லாமல் இருக்கலாம். டாக்டர் சொல் மதிக்கவும். தேன் உமக்கு லாயக்கு இல்லை.
அன்புடன்,
அனுபவஸ்தன் இன்னம்பூரான்
 

Pandiyaraja

unread,
Nov 6, 2016, 10:29:50 AM11/6/16
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா
ப.பாண்டியராஜா

Dev Raj

unread,
Nov 8, 2016, 5:33:37 AM11/8/16
to மின்தமிழ்
இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.
நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார். 
வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது.
பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .
தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .
மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து

உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள்.
இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே…..

Sukumaran Vaidyans G A Pharmacy & Nursing Home. 
Neyyattinkara P.O.,
Thiruvananthapuram-695572,
Kerala State. 



தேவ்

Dev Raj

unread,
Nov 8, 2016, 5:48:40 AM11/8/16
to மின்தமிழ்

Pandiyaraja

unread,
Nov 8, 2016, 8:58:49 AM11/8/16
to மின்தமிழ்
Thank you Sir. I went o the link you had mentioned and found among other comments, the following one too.
>>
sunil kumar Please get some other vydyar...currently the said vaidyan is ill and under treatment. Now his son is treating, he is good for nothing..Dont waste your time....it long journey from trivandrum city.....You will be disappointed if u come here....do confirm 10 times before you come
>>
Anyhow thank you very much Sir,
P.Pandiyaraja


On Tuesday, November 8, 2016 at 4:18:40 PM UTC+5:30, Dev Raj wrote:

Dev Raj

unread,
Nov 9, 2016, 8:35:33 AM11/9/16
to மின்தமிழ்
On Tuesday, 8 November 2016 19:28:49 UTC+5:30, Pandiyaraja wrote:
Thank you Sir. I went o the link you had mentioned and found among other comments, the following one too.
>>
sunil kumar Please get some other vydyar...currently the said vaidyan is ill and under treatment. Now his son is treating, he is good for nothing..Dont waste your time....it long journey from trivandrum city.....You will be disappointed if u come here....do confirm 10 times before you come
>>
Anyhow thank you very much Sir,
P.Pandiyaraja

தகவலால் பயனில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது, ஐயா.
மாற்றுச் சிகிச்சை முறைகள் இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் நம்பகமான சிகிச்சை முறையைப் பரிந்துரைக்கத்
துணிவில்லை.

நண்பர் ஜெபமணி மோகன்ராஜ் அவர்களைக் கலந்துகொண்டு
எழுதுவேன். இவர் அமரர் நெல்லை ஜெபமணி அவர்களின் புதல்வர்.
திபெத்தியப் பண்டுவ முறைகளைப்பற்றி எழுதியிருந்தார்.
அவருடன் கலந்துகொண்டு தகவல் சொல்கிறேன்.

தங்கள் உடல்நலனுக்கு நாள்தோறும் இறைவனை
வேண்டுகிறேன் 


தேவ்

Pandiyaraja

unread,
Nov 9, 2016, 8:49:01 AM11/9/16
to மின்தமிழ்
தங்கள் கனிவான பதிலுக்கு மிக்க நன்றி ஐயா!
ப.பாண்டியராஜா

Dev Raj

unread,
Nov 10, 2016, 2:00:46 AM11/10/16
to மின்தமிழ்
திபெத்திய மருத்துவம்



அனைவரும் பயன்கொள்ளலாம். நம்பகமான, அதிகச் செலவில்லாத மருத்துவ முறைகள்
என்கிறார் திரு ஜெபமணி மோகன்ராஜ் அவர்கள்.  அவர் அங்குதான் தாம் சிகிச்சை பெறுவதாகவும்
தெரிவிக்கிறார்


தேவ்

Innamburan S.Soundararajan

unread,
Nov 10, 2016, 10:02:37 AM11/10/16
to mintamil
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன் எனக்கு திபெத்தியன் மருத்துவம் அறிமுகமானது.
ஸூப்பர் தான், ஒரிஜினல் திபெத்தியன் டாக்டர்களின் மூலம் கிடைப்பது. ஆனால், அவை சகல ரோக நிவாரணி இல்லை. எதுவும் இல்லை. தலை லாமா அவர்களே மேல் நாட்டு வைத்தியம் பெறுகிறார். ஒன்றுக்கொன்று பழுதில்லை என்றால் கூட, பாண்டியராஜா அண்ணாமலை சுகுமாரனை கேட்பது விவேகம்.
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages