அம்மா சொல்படி ராஜூ:(ஒரு சகாப்தம் முடிய...): பகுதி 23: 8 11 2009

6 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Nov 7, 2009, 5:33:27 PM11/7/09
to mintamil, Innamburan Innamburan


அம்மா சொல்படி ராஜூ:(ஒரு சகாப்தம் முடிய...): பகுதி 23: 8 11 2009

(மின்னல் வேகம்)

(... இரண்டு பேருக்கும் (பூணூல்) போடலாம் என்று நினைக்கிறேன்...) தவிற நீ தனியாகப் போட்டால் நான் சீர் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக உனக்குப் பட்டு புடவையும், மாப்பிள்ளைக்கு வேஷ்டியும், பையன்களுக்கு வேஷ்டியும் வாங்கி விடுகிறேன் என்று சொன்னார். நீங்கள் மாப்பிள்ளை (யிடம்) கேளுங்கள். அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று சொன்னேன். நான் என்ன செய்வது. எனக்கோ புருஷன் வீட்டில் யாரும் இல்லை. அப்பாவே செய்வதானால் சரி என்று இருந்து விட்டோம், நாங்கள் இருவரும் ஆனால் என் புருஷனுக்கு இஷ்டம் இல்லை. வெளியில் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய அப்பாவும் பொரு (று)ப்பு இல்லாமல் இருப்பதால் அவருக்கு வருத்தம். என்ன செய்வது. எங்களுக்கு பெரியவராய் இருந்து சொன்னதால் தட்ட முடியவில்லை. என் இஷ்டப்படி காரைக்குடியில் அக்கா பெண் கல்யாணமும் என் பிள்ளைகள் பூனூலும் நடப்பதற்கு முன்னாடியே 89 என் மாமனாரும் கும்பகோணத்தில் அய்யங்கார் தெருவில் என் நாத்தனார் இருந்தார். அவருக்கும், பூணல் போடுவதாக லட்டர் போட்டு விட்டார் என் அப்பா. அவர்களும் பூணலுக்கு காரைக்குடி வந்தார் (கள்). ஆனால் அதில் என்ன ஆச்சு என்றால் பூனூல் போடுகிற பையனுக்கு பிரம்ம உபதேசம் செய்வதற்காக என் நாத்தனாரை எதிர்பார்த்தோம். அவர்கள் வரும் டிரெயின் லேட்டாகப் போய்விட்டது. என்ன செய்வது. என் தாய் மாமாவைக் கூப்பிட்டு நீங்கள் இரண்டு பேரும் சின்ன பையனுக்கு பிரம்ம உபதேசம் செய்யுங்கள் என்று என் அப்பா சொல்லி விட்டார். அது போல் நான் (நாங்கள்) பெரிய பையனுக்குப் பிரம்ம உபதேசம் செய்தோம். சின்னப் பையனுக்கு மாமா, மாமி இருவரும் செய்தார்கள். மாமனார் வந்திருந்தார். ஆனால் என் நாத்தனாருக்குக் கோபம் தான். என்ன செய்வது என்று நான் என் புருஷனிடம் போய் கடைக்குப் போய் ஒரு புடவையும் ரவிக்கைத்துண்டும் வாங்கி வாருங்கள். அதை வேதத்திற்குக் கொடுப்போம் என்று சொன்னதின் பேரில் உடனே வாங்கி வந்தார். அதை வெத்திலை பாக்குடன் அவருக்கு கொடுத்துவிட்டு உடனே புதுக்கோட்டைக்கு நானும் மாமனார் மற்ற என் புருஷன் எல்லாரும் வந்து சேர்ந்தோம். ஆனால் புதுக்கோட்டைக்கு என் நாத்தனார் அவர் புருஷன் வந்து விட்டார்கள். இரண்டு நாள் இருந்தார்கள். அப்போது மாமனாரும் இருந்தார். ஆனால் ஊருக்குப் போய்விட்டார். அவர் இல்லாத சமயம் பார்த்து என் நாத்தனார் புருஷன் என்னிடம் வந்து என் பிள்ளைக்கு உன் பெண்ணைக் கொடு என்னிடம் சொல்லிவிட்டு ஊருக்குப் போய்விட்டார். ஆனால் என் மாமனார் இருக்கிறார். மாப்பிள்ளை சொன்னது அவர் காதில் விழுந்து விட்டது. அவர் உடனே என்னிடம் வந்து மாப்பிள்ளைக்கு என்ன தெரியும். சொந்தத்தில் பெண்ணைக் கொடுக்க கூடாது என்று சொல்லி விடு. என் புருஷனைக் கேளுங்கள் என்ரு சொல்லி விடு என்று சொன்னார். சொல்லி விட்டு அவர் இன்னம்பூர் போய் விட்டார். இது இது மாதுரி சொல்லி ஒரு வருஷத்திற்கு மேல் போய் விட்டது. என் பெரிய பையன் படிப்பு முடிந்து வேறு பீ,ஏ.ஆனஸ் படிப்பதற்கு மெட்றாஸ் போய்விட்டான். ஆனால் (அவன்) என் கல்கத்தா நாத்தனார் மெட்றாஸில் இருந்தாள். அங்கு சாப்பிட்டுக்கொண்டு அங்கு படிக்கிறான். இப்படியிருக்கும் போது என் மாமனாருக்கு உடம்பு ஜாஸ்தி என்று தந்தி வந்து நாங்க எல்லாரும் போனோம். போன பிறகு கொஞ்சம் தேவலை. அப்போது நாத்தனாரில் கல்கத்தா நாத்தனாரும் கடைசி நாத்தனாரும் உதவியாக இருந்தார்கள். நாங்கள் மாமனாரை நீங்கள் புதுக்கோட்டை வந்து விடுங்கள் என்றும், இங்கு நீங்கள் தனியாக இருக்கவேண்டாம் என்று சொன்னோம். அவர் கேழ்க்கவில்லை. பிறகு அந்த நாத்தனார் இரண்டு பேரும் அவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள்.  மாமனார் தனியாக இருந்தார். ஆனால் கால் வீங்கிப்போய் கஷ்டபட்டு கொண்டுருந்தார்? 90  என் புருஷன் நான் அப்பாவைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இன்னம்பூர் போனார். ஆனால் அங்கு என் மாமனாருடைய அக்கா பிள்ளை91 இருந்தார். அவர் சாப்பாடு கட்டுப்படுத்தவில்லை. நிலக்கடலை வாங்கி உருண்டை பிடித்து அதையே சாப்பிடுகிறார். சாதம் கிடையாது. நீ அழைத்துப் போனால் நல்லது என்று சொன்னதின் பேரில் அவரை அழைத்து வந்து விட்டார். அவரைப் பார்ப்பதற்கு ரொம்பவும் பயமாக இருந்தது. உடனே புதுக்கோட்டையில் டாக்டர் ஸ்ரீனிவாசன் என்ரு ஒருத்தர் இருந்தார். அவரை ஆத்திற்கு அழைத்து வந்து மாமனார் உடம்பைப் பார்க்கச் சொன்னார். அவர் உடனே நாட்டு மருந்துகள் எழுதிக்கொடுத்து அதை சுக்கு மாதிரி இடித்து கஷாயம் வைத்துக் கொடுக்கச் சொன்னார். அதனை செய்து கொடுத்தால் சாப்பிடமாட்டேன் என்கிறார். எப்படியோ நல்ல வார்த்தை சொல்லிக் கொடுப்போம். அது யார் கொடுக்க வேண்டும் என்றால் என் பெரிய பெண் தான் கொடுக்கவேண்டும். அப்போது ஸ்ரீகாரம் கொடுத்த பிள்ளை காலேஜ் போய்க் கொண்டிருக்கிறான்? இதே சமயத்தில் என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.  ஆனால் என் தம்பிக்கு நாலாவதாக ஒரு பிள்ளை பிறந்தது. அதுவும் காரைக்குடியில் ஜெப்பார் ஆஸ்பத்திரியில். அவன் பிறந்த முப்பதாவது நாள் எனக்கு ஏழாவது பிள்ளை பிறந்தது. எல்லாம் எனக்கு சோதனை. ஆனால் ஆறாவது பெண் பிறந்ததிலிருந்து கஷ்டம் தான். இப்படியிருக்கும் போது என் மாமனாருக்கு என்னிடம் வந்து மூன்று மாஸத்தில் உடம்பு ஜாஸ்தியாகி விட்டதால், என் புருஷனுக்கு, மாமனாருக்குத் தெரியாமல் பெண்ணை லட்டர் போடச்சொன்னேன். அதற்கு முன்பு சேலத்திலிருந்து மாம்பழம் வாங்கி அனுப்பியிருந்தார். ஆனால் அதை என் மாமனாரே சாப்பிட்டார். என்ன செய்வது. பிறகு லட்டர் பார்த்ததும் என் புருஷன் ஒரு வாரம் லீவு போட்டு விட்டு வந்தார். அப்பா ரொம்ப மோசமாக இருக்கிறார். நீங்கள் மறுபடியும் லீவு போடுங்கள் என்று நாங்கள் சொன்னோம். அதை அவர் கவனித்தார். உடனே என் புருஷனைக் கூப்பிட்டு நீ லீவு போடவேண்டாம். எனக்கு உடம்பு தேவலை. நீ ஊருக்குப் போ என்று சொல்லிவிட்டார். அவர் என்ன செய்வார். உடனே அவரும் ஊருக்கு போய்விட்டார். (அவர்) அடுத்த வாரம் என் மாமனார் உடம்பு ஒரு மாதுரி ராத்திரி கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். நான் உடனே அவரை கீழே மெத்தையைப் போட்டு அதில் படுக்க வைத்தேன். மறு நாள் காலை 4 மணிக்கு காலேஜில் படிக்கிற பையனைப் போய் நாஞ்சூர் போய் குடியானவனிடம் வீட்டில் களஞ்சியத்தில் இரண்டு மூட்டை நெல் கீரனூரில் போய் மிஷினில் அறை (ரை)த்துக்கொண்டு வா என்று அவனை அனுப்பினேன். அவன் போய்விட்டான். காலை 6 மணி அளவில் என் மாமனார் இறந்து விட்டார்.

89. சில சொற்றொடர்கள் சரியாக   அமையவில்லை; புரிகிறது.

90. கேள்விக்குறிகளும் தாராளம்; சில சமயம் பொருளில்லை.

(ஒரு சகாப்தம் முடிய...)

இன்னம்பூரான்

Suresh sundaresan

unread,
Nov 7, 2009, 11:08:08 PM11/7/09
to mint...@googlegroups.com
நமஸ்க்காரம்  மாமா
 
தமிழ் தேனீ இடம் இருந்து போன் வரவேயில்லை' நான் இன்றுதான் கொச்சின் இருந்து வந்தேன்
 
முடிந்தால் தமிழ் தேனீ செல் நம்பர் மெயில்
 பண்ணவும்
     

2009/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages