Re: [MinTamil] பிரியாணி தமிழ்ச்சாெல் என்ன?

776 views
Skip to first unread message
Message has been deleted
Message has been deleted

kanmani tamil

unread,
Jul 23, 2018, 2:37:39 AM7/23/18
to mintamil
பண்டை இலக்கியத்தில் பயின்று வருவது 'ஊன் துவை அடிசில் '
இது தவிர 'விழுக்குடை மடை ' என்று வருவது ஊன் கலந்த உணவு என்னும் பொதுப் பொருளைத் தரும்.
கண்மணி 

On 23 July 2018 at 11:58, PitchaiMuthu <pitchaim...@gmail.com> wrote:

பிரியாணி இவ்வார்த்தையைக் கேட்டதுமே இரண்டு கேள்விகள்

பிரியாணி என்பது தமிழ்ச்சாெல்லா அல்லது பிறமாெழியா?

பிறமாெழி என்றால் உரிய தமிழ்ச்சாெல் சன்னவாக இருக்கலாம்?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jul 23, 2018, 2:43:41 AM7/23/18
to மின்தமிழ்
It is a great contribution of Islamic people (Muslims) from Iran/Arabia to India. The word, if i remember rightly, is from brin(y)j which was rice in old Persian. Now it is persian-arabic-urdu route. A direct cooking of rice with mutton and vegetables ( instead of mixing cooked rice with cooked mutton and vegetables) is briyani.

Also part of Tamil cuisine (discussed by selvan in some threads)

பிரியாணி இப்போது தமிழே, வேறு சொல் தேவையில்லை

rnk

kanmani tamil

unread,
Jul 23, 2018, 2:45:33 AM7/23/18
to mintamil

PitchaiMuthu

12:03 (3 minutes ago)
to Mintamil

Biryani (pronounced [bɪr.jaːniː]), also known as biriyani, biriani, birani or briyani, "spicy rice" is a mixed rice dish with its origins among the Muslims of the Indian subcontinent.[1][2][3] It is popular throughout the Indian subcontinent and among the diaspora from the region. It is made with spices, rice and meat (chicken, mutton, beef, prawn, or fish) or vegetables. Sometimes egg is also added.

இத்தகவல் எங்கிருந்து எடுக்கப்பட்டது எனக் கூறவில்லை .
சங்க இலக்கியத்தில் போரில் வெற்றி பெற்றவுடன் மனிதன் வீரர்களுக்கு விருந்து கொடுத்தான். அது பெருஞ்சோறு எனப்பட்டது.அதில் தவறாது இடம்பெற்றது ஊன்துவை அடிசில் ,கள் முதலியன.
"சோறு வேறு என்னாது" உண்ணுமளவுக்கு ஊன் துண்டுகள் மிகுதியாக இருந்தமையைச் சொல்லும் பாடல்களும் உள.
மான்கறியிலும் ஊன்துவை அடிசில் சமைத்தனர்.
சேர்க்கப்படும் மணப்பொருட்கள் எல்லாம் தமிழ் நாட்டில் விளைந்தவை.
இந்த மணப்பொருட்களுக்காக தமிழகச் சந்தையில் அரேபியர் /யவனர் குவிந்தனர்.
கண்மணி 

On 23 July 2018 at 12:03, PitchaiMuthu <pitchaim...@gmail.com> wrote:

Biryani (pronounced [bɪr.jaːniː]), also known as biriyani, biriani, birani or briyani, "spicy rice" is a mixed rice dish with its origins among the Muslims of the Indian subcontinent.[1][2][3] It is popular throughout the Indian subcontinent and among the diaspora from the region. It is made with spices, rice and meat (chicken, mutton, beef, prawn, or fish) or vegetables. Sometimes egg is also added.

kanmani tamil

unread,
Jul 23, 2018, 2:51:05 AM7/23/18
to mintamil
பிரியாணி தமிழாகிவிட்ட சொல் தான். ஆனால் அது தமிழனின் பாரம்பரிய விருந்துணவு.
நம்ம நாட்டுப் பஞ்சு மேலைநாட்டுக்குப் போய் அங்கே  துணியாக்கப்பட்டு இங்கே நமது பயன்பாட்டுக்கு வந்தது போல் தான் .........பிரியாணி என்ற பெயர் மட்டும் தான் ஈரான் >அரேபியா >பார்சி >உருது route.
sk

N D Logasundaram

unread,
Jul 23, 2018, 2:59:42 AM7/23/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, muthum...@gmail.com
தமிழாகிவிட்ட வேறுமொழிச்ச்சொல் எப்படி தவிர்க்கலாம் பற்றிய தொடர் இது
 இதனை தேவை இல்ல எனும் நீலகண்டன் கருத்து  குறுக்குச்  சால் ஓட்டும் நிலை 

வய வேந்தர் ஒண் குருதி . . . .30
சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆடுற்ற ஊன் சோறு
நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யொதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின் . . .40  மதுரைக்காஞ்சி 

பழம் தமிழ் சொல் மேல் அவா  இருந்தால் இந்த ஊன் சோறு
எனும் சொல்லை கொள்ளலாம் 

மேலும் 
ஊன்புழுக்கு எனபது காணப்படுகின்றது அது சோறு எனும் நிலை இல்லை
 எனவே அதனை ஏற்க வேண்டாம் 

ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
நெறியயல் திரங்கும் அத்தம் வெறிகொள
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்
நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
சுரன்வழக்கு அற்றது என்னாது உரஞ்சிறந்து 10
நெய்தல் உருவின் ஐதுஇலங்கு அகல்இலைத்
தொடைஅமை பீலிப் பொலிந்த கடிகை
மடைஅமை திண்சுரை மரக்காழ் வேலொடு
தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத்
துணிகுவர் கொல்லோ தாமே  துணிகொள 15
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை
மைதோய் சிமைய மலைமுதல் ஆறே20                அகநானுறு  159

புல்வேய் குரம்பை புலர ஊன்றி 10
முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின்
பிழிமகிழ் உவகையன் கிளையொடு கலிசிறந்து
சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
குன்ற நாட நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் 15
அணி இழை உண்கண் ஆய்இதழ்க் குறுமகள்
மணிஏர் மாண்நலம் சிதையப்
பொன்னேர் பசலை பாவின்று மன்னே அகநானுறு 172

On Mon, Jul 23, 2018 at 11:58 AM, PitchaiMuthu <pitchaim...@gmail.com> wrote:

பிரியாணி இவ்வார்த்தையைக் கேட்டதுமே இரண்டு கேள்விகள்

பிரியாணி என்பது தமிழ்ச்சாெல்லா அல்லது பிறமாெழியா?

பிறமாெழி என்றால் உரிய தமிழ்ச்சாெல் சன்னவாக இருக்கலாம்?.

N D Logasundaram

unread,
Jul 23, 2018, 3:05:59 AM7/23/18
to mintamil
மதுரைக்காஞ்சியிலும் ஊன் சோறு 
 எனும் சொல் அந்தப்பாடலில்
நாம்  இன்று பயன் கொள்ளும் பொருள்கோள் நிலையில் காணவில்லை 
நினைக்கும் எண்ணம் வரும்  இடமாக உள்ளது அவ்வளவே 

நூ த லோ சு
மயிலை

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 23, 2018, 3:06:14 AM7/23/18
to mintamil
எனது உணவுப் பெயர்கள் பட்டியலில்

பிரியாணி = மடை என்று கொடுத்திருந்தேனே.

பார்க்கவில்லையா இசையினியன் ஐயா?

On Mon, Jul 23, 2018 at 11:58 AM, PitchaiMuthu <pitchaim...@gmail.com> wrote:

பிரியாணி இவ்வார்த்தையைக் கேட்டதுமே இரண்டு கேள்விகள்

பிரியாணி என்பது தமிழ்ச்சாெல்லா அல்லது பிறமாெழியா?

பிறமாெழி என்றால் உரிய தமிழ்ச்சாெல் சன்னவாக இருக்கலாம்?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

nkantan r

unread,
Jul 23, 2018, 4:07:57 AM7/23/18
to மின்தமிழ்
நாளை ஹோட்டலில் மரக்கறிவூஞ்சோறு ஆர்டர் செய்வேன்.

rnk

kanmani tamil

unread,
Jul 23, 2018, 6:10:50 AM7/23/18
to mintamil
சிலப்பதிகாரத்தில் மாதரி பூங்கண் இயக்கிக்கு ' பால்மடை ' கொடுத்துப் பெயர்கிறாள்.
இங்கே பால்மடை என்பது பாலுணவு /பால்சோறு என்று தான் பொருள்படும்.
பால் மடையை பால் பிரியாணி என்று சொல்ல முடியாது.
எனவே மடை என்பது உணவுக்குரிய பொதுச் சொல்லாக்க கூடும்.
மடைப்பள்ளி =சமைக்குமிடம் 
மடைத்தொழில் =சமைக்கும் தொழில் 
கண்மணி  

On 23 July 2018 at 13:37, nkantan r <rnka...@gmail.com> wrote:
நாளை ஹோட்டலில் மரக்கறிவூஞ்சோறு ஆர்டர் செய்வேன்.

rnk

nkantan r

unread,
Jul 23, 2018, 7:55:34 AM7/23/18
to மின்தமிழ்
பால்மடைக்கு ஏன் பாற்சோறு எனும் பொருள்? (ஆயர்குலப் பெண், பாலில் உணவு செய்தல் சகஜமன்றோ.) அது ஏன் திரட்டுப்பால் என்று இருக்காது? இங்கு ப் ஒற்று சரிதானே?

இயக்கி ஒரு தெய்வம்? அப்படியானால் பால் பாயாசம்? நைவேத்தியம் இனிப்பெனெல் சிறப்பல்லவோ.

மடை யென்றால் உணவு ( அதுவும் தெய்வத்திற்கு த் தருமுணவு ?)

rnk

kanmani tamil

unread,
Jul 23, 2018, 8:00:51 AM7/23/18
to mintamil

nkantan r <rnka...@gmail.com>

17:25 (1 minute ago)
to மின்தமிழ்
///பால்மடைக்கு ஏன் பாற்சோறு எனும் பொருள்? (ஆயர்குலப் பெண், பாலில் உணவு செய்தல் சகஜமன்றோ.) அது ஏன் திரட்டுப்பால் என்று இருக்காது? இங்கு ப் ஒற்று சரிதானே? 

இயக்கி ஒரு தெய்வம்? அப்படியானால் பால் பாயாசம்? நைவேத்தியம்  இனிப்பெனெல் சிறப்பல்லவோ.
மடை யென்றால் உணவு ( அதுவும் தெய்வத்திற்கு த் தருமுணவு ?///
திரட்டுப்பாலாகவும் இருக்கலாம்.
'ப் ' ஒற்று சரிதான் .
பால் பாயாசமாகவும் இருக்கலாம்.
மடை என்பது உணவு .............ஆனால் தெய்வத்திற்குத் தரும் உணவு என்ற சிறப்புப் பொருள் கிடையாது.
மடை மக்கள் உண்ணும் உணவு என்பதற்கு மேற்கோள்கள் உள்ளன.
கண்மணி 

rnk

Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
0 new messages