உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகள்

3,148 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:16:52 PM6/23/10
to Min Thamizh
தமிழின் தொன்மை நாட்டுக்கே பெருமை:- இந்தியக் குடியரசுத் தலைவர் புகழாரம்




தமிழ் மொழி வரலாற்றின் தொன்மை நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் புகழாரம்  சூட்டினார்.

கோவையில் முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழா புதன்கிழமை (23/06/10) நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை தொடங்கி வைத்துப் பேசியது:-

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மொழி ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மிக்க இந்த மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.

தமிழின் மேன்மை, சிறப்புகளை மத்திய அரசு அறிந்ததால் தான் கடந்த 2004ல் தமிழுக்குச் "செம்மொழி"அந்தஸ்து வழங்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி, எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி என பல்வேறு முகங்கள் கொண்டவர். அவர் கடந்த 50 ஆண்டுகளாக சட்டப் பேரவை உறுப்பினராகவும், 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்து வரும் மூத்த தமிழறிஞர். தனது ஓய்வில்லாத பணிகளுக்கு இடையேயும் இலக்கியத் தொண்டாற்றி வரும் கருணாநிதிக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

எனது இதயத்தில் தமிழ்நாட்டுக்கு என்று தனி இடம் வைத்துள்ளேன். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரசாரத்தை தமிழக தலைநகரில் இருந்துதான் தொடங்கினேன். அதேபோல் குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றதும் புது தில்லிக்கு வெளியே நடைபெற்று நான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியும் தமிழகத்தில்தான் நடந்தது. இங்கு தொடங்கும் இந்த மாநாடு தமிழகத்துடனான எனது பந்தத்தை உணர்த்தும் மற்றொரு நிகழ்ச்சியாகும் என்றார்.

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:19:53 PM6/23/10
to Min Thamizh
தமிழின் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத் தமிழாக விளங்குகிறது என்று மாநாட்டுக்குத் தலைமை வகித்த தமிழக முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் கூறினார்.

உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் இதுவரை எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடைபெறும் இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு.

முன்பு நடந்தவை "உலகத் தமிழ் மாநாடுகள்".

தற்போது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும்.

தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. இதை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "ஞாலமொழி தமிழே" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே, உலக முதல் தாய்மொழி என்ற தகுதியைப் பெறுகிறது என்றார்.

பின்லாந்து நாட்டின் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்குவதற்கான தகுதிச்சான்றுப் பட்டயத்தை நிதியமைச்சர் க. அன்பழகன் மேடையில் வாசித்தார்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக முதல்வர் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டினைப் பாராட்டினார்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

தமிழறிஞர்கள் வா.செ.குழந்தைசாமி பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், செம்மொழி விருது பெற்ற அஸ்கோ பர்ப்போலா ஆகியோர் பேசினர்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் கே. எஸ். ஸ்ரீபதி நன்றி கூறினார்.

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:23:07 PM6/23/10
to Min Thamizh

தமிழ் - அழகான மொழி என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆளுநரின் உரை விபரம்:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் அழகான மொழி ஆகும்.  நான் பேராசிரியர் நன்னனிடம் தமிழ் கற்றேன்.

உலகில் 55 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கான இலச்சினையில் "பிறப்பால் எல்லா உயிரும் ஒன்றே" என்ற சிறந்த கருத்துடன் உருவாக்கிய முதல்வரை பாராட்டுகிறேன்.

திருவள்ளுவரின் கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.

திருக்குறள் தமிழுக்கு சிகரமாக உள்ளது. கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் ஆகியவை தமிழுக்கு பொன் ஆபரணமாக திகழ்கின்றன.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அதன் வீச்சு, செழுமை, வேற்று மொழி கலவாத தனித்தன்மை ஆகியவற்றை சார்ந்துள்ளது. அந்த வகையில் தமிழ் காலத்தை கடந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

உலகளவில் தமிழ் படிப்புகள் மற்றும் ஆய்வுகள் மேலும் விரிவடைய இந்த செம்மொழி மாநாடு நிச்சயம் வழியமைக்கும் என்று நம்புகிறேன்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டை நடத்திய முதல்வர் கருணாநிதிக்கும் தமிழக அரசுக்கும் மற்றும் இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பேசினார்.

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:26:32 PM6/23/10
to Min Thamizh
சங்க காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவத்தை தமிழ் வழங்கியிருந்தது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புதன்கிழமை (23/06/10) தொடங்கி வைத்து அவர் பேசினார்.

அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழ் கலாசாரம், வரலாறு குறித்த அறிவுடன் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எல்லா மதங்களுக்கு இடையிலும் மரியாதை காட்டிய இனம் தமிழ் இனம்.

சமத்துவமற்ற நிலையை உருவாக்கும் அல்லது சகித்துக் கொள்ளாத உலகைத்தான் உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் எல்லா சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வாழும் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் அப்படிப்பட்ட அமைப்பு முறை இருப்பதைக் காண முடிகிறது. இதனால் பொருளாதார, நிர்வாக ரீதியில் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வகையில் அவவை செயல்படுகின்றன. இதுபோன்ற நிலைதான் நாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ் இருக்கிறது. மிகவும் சிறப்பான இலக்கண, இலக்கியங்கள் நிறைந்ததாக தமிழ் இருக்கிறது.

சங்க காலத்தில் பெண் புலவர்களும் இருந்து கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள் என்பது அந்த காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட்டது என்பதற்கு நிரூபணமாக உள்ளது.

நன்னெறியைப் போதித்த அற்புதமான ஆசிரியராக திருவள்ளுவர் இருக்கிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை தமிழின் பெருமையை பறைசாற்றுபவையாக உள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் கவிஞர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பாடல்கள்தான் நாட்டின் எல்லா நிலைகளுக்கும் சுதந்திர உணர்வைப் பரவச் செய்தன என்று பிரதிபா பாட்டீல் கூறினார்.

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:35:06 PM6/23/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் துணை துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.அவரது உரையின் முழு விபரம்:-

மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், கூட்டியிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, இப்போது தொடங்குகிறது!  மாநாட்டினைத் தொடங்கிவைத்து உரையாற்றுவதற்கு; தமிழ் மக்களின் அன்பான அழைப்பினை ஏற்று, இங்கே வருகை தந்திருக்கும்,  மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர், திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களே!  இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான, முதல் பெண் வேட்பாளர் என்கிற முறையில், உங்களை ஆதரித்து, சென்னையில், நடைபெற்ற மாபெரும் மகளிர் பேரணியின்போது, முதல்வர் கருணாநிதி, “உங்களுடைய அரும்பணிகளுக்கு அரிய துணையாக, நாமெல்லோரும் இருப்போம்,” என்று சொன்னதை நினைவு கூர்ந்து, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவராகிய உங்களை, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, உரையாற்ற வருகை தந்துள்ள, மேதகு தமிழ்நாடு ஆளுநர், திரு.சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களே!  முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எந்நாளும் இனிய நண்பராக உள்ள உங்களை, மாநாட்டுத் தலைமைக் குழுவின் சார்பில், வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தொடக்க விழாவின் தலைவர், முதல்வர் கருணாநிதி அவர்களே!  “தமிழகத்தின் பெருமையைச், சங்ககாலம் போல, மீண்டும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு உயர்த்தவேண்டும் என்ற, கனவை நனவாக்க விடாமுயற்சி மேற்கொண்டுள்ள, சிறந்த அறிஞர் கலைஞர்” என்று, டாக்டர் மு.வரதராசனார் உள்ளிட்ட, தமிழறிஞர்களால் பாராட்டிப் போற்றப்பட்டுள்ள உங்களை; இங்கே கூடியிருக்கும் தமிழ்மக்களின் சார்பாகவும், மற்றும் அனைவர் சார்பாகவும், வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தகுதியுரை வழங்கவுள்ள, நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே! முதல்வர் கருணாநிதி அவர்களோடு என்றென்றைக்கும், இணைந்து, ஈடற்ற பணியாற்றிவரும் உங்களை, மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார்பாக வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களே! சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களே! பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களே! மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும், பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களே! உறுப்பினர்களே! தலைமைச்  செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே, அலுவலர்களே! ஆசிரியப் பெருமக்களே! தொழிலாளத் தோழர்களே! பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே! உங்கள் அனைவரையும் வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

“தமிழ்மொழி, உலகின் மிக உயர்ந்த செவ்வியல் இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும், பெற்றுத் திகழும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்பதனை, நான் எவ்விதத் தயக்கமுமின்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன்” என்று பிரகடனம் செய்து,

பன்மொழிப் புலவராகத் திகழும்,  ஆய்வரங்க ஆலோசனைக் குழு உறுப்பினர், அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களே! உங்களை வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

“தமிழ், இன்று ஒரு மாநில மொழி மட்டுமன்று; ஒரு நாட்டுமொழி மட்டுமன்று; அது ஒரு குவலயக் குடும்பத்தின் தாய்மொழி. தமிழ், உலகு தழுவி வாழும், ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழி என்பது, உலகு ஒப்பிய உண்மை” என்று எடுத்தியம்பிய, உலகத் தமிழாய்வு நிறுவனம் -  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆகியவற்றின் துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களே! உங்களை வருக!வருக என்று வரவேற்கிறேன்.

தமிழ் ஆய்வு, மற்றும் தமிழ் விமர்சனம் ஆகியவற்றைப், பல்துறை சார்ந்த பரிமாணங்களில், வெளிப்படுத்தும் திறன் மிக்கவரும்;  தமிழ்ச் சமூக வரலாற்றை, பல்வேறு தரவுகளின் ஊடாக எழுதும் வாய்ப்பினைப் பெற்று, சரியான புரிதலை உருவாக்கிய; முதுதமிழ்ப் பேராசிரியருமாகிய, மாநாட்டு ஆய்வரங்கத்தின் அமைப்புக் குழுத் தலைவர், இலங்கை நாட்டுப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே! உங்களை வருக! வருக!  என்று வரவேற்கிறேன். 

“சிந்து சமவெளி நாகரிகம் - திராவிட நாகரிகமே; அங்கே இருந்தவர்கள் திராவிட மொழி பேசியவர்களே” என்று, உலகெங்கிலும் உள்ள ஆய்வறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவரும்,முதல், “கலைஞர் செம்மொழி விருதினைப்” பெற்று, ஏற்புரை ஆற்ற வருகை தந்திருக்கும்,   பின்லாந்து நாட்டுப் பேராசிரியர், அஸ்கோ பர்ப்போலா அவர்களே! உங்களை வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ்ச் சான்றோர்களே! தமிழறிஞர்களே! தமிழ் ஆர்வலர்களே! 

“வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்;
 அன்னார், உள்ளத்தால் ஒருவரே! மற்றுடலினால் பலராய்க் காண்பார்!”

என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல்வரிகளுக்கேற்ப; இங்கே ஆயிரம், பல்லாயிரம், இலட்சோபலட்சமெனத் திரண்டிருக்கும் தமிழ்ப் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்!

தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வன்மை, தாய்மை, தூய்மை, செம்மை, முழுமை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய அனைத்தையும், பெற்றுள்ள ஒரேமொழி தமிழ்மொழி தான் என்று, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறிவித்தார். 

தமிழை -  அமுதத் தமிழ், இன்பத் தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ்,  சுந்தரத் தமிழ், தூய தமிழ், தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் -  என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும்,  போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.   

தமிழ், உலகின் மூத்த மொழி மட்டுமல்ல;  முதல் செம்மொழியும் ஆகும்.  

அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன், 

கனியிடை ஏறிய சுளையும்
முற்றல்,  கழையிடை ஏறிய சாறும்;
பனிமலர் ஏறிய தேனும்,
காய்ச்சுப்,  பாகிடை ஏறிய சுவையும்;
நனி பசு பொழியும் பாலும்
தென்னை, நல்கிய குளிர் இளநீரும்;
இனியன என்பேன்; எனினும்,
தமிழை,  என்னுயிர் என்பேன் கண்டீர்!” 

என்று உலகுக்குப் பிரகடனம் செய்தார்.

அண்ணல் காந்தியடிகள்;

“எனது வாழ்க்கையில், ஏதாவது ஒன்றைப் பற்றி நான் வருந்துகிறேன் என்று சொன்னால், அது உயர்ந்த மொழியாகிய, தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லையே, என்பது பற்றித்தான்”

என்று தமிழ்மொழியை பெருமைப்படுத்தி கூறியுள்ளார். 

அத்தகைய இனிமையும் தனித்தன்மையும், வாய்ந்தது தமிழ்மொழி.            

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை,  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திரு.ஜி.யு.போப் அவர்கள், ஒரு தமிழனாகப் பிறக்கவில்லையே என ஏங்கினார்.         

அவர், தான்  தமிழ் மொழியின்பால் கொண்ட பற்றின் அடையாளமாக, தமது கல்லறையில், “ஜி.யு.போப், ஒரு தமிழ் மாணவன்” என்று பொறிக்க வேண்டுமென விரும்பினார்.        

அத்தகைய ஈர்ப்பும், இன்பமும் கொண்டது தமிழ்மொழி. 

அத்தமிழ் மொழியை, முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதற்கான, வழிவகைகளை வகுத்துச் செயல்படுத்திட, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, முதல்வர் கருணாநிதி இங்கே கூட்டியிருக்கிறார்கள்.   

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை, மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தாய் எனில், நைந்துபோகும் என்வாழ்வு;
நன்னிலை உனக்கெனில், எனக்கும் தானே!”

என்ற உள்ளத்து உணர்வோடும், எழுச்சியோடும், இங்கே திரண்டிருக்கும், உங்கள் அனைவரையும் வருக! வருக! என்று, உள்ளன்போடு, மகிழ்வோடு   வரவேற்று விடைபெறுகிறேன்.        

நன்றி!

வணக்கம்!

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:39:05 PM6/23/10
to Min Thamizh
தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் புத்தகம்:- கா.சிவத்தம்பி வேண்டுகோள்



உலக மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் புத்தகம் வெளியிட தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவ வேண்டும் என்று இலங்கை தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி கேட்டுக் கொண்டார்.

செம்மொழி மாநாட்டில் அவர் பேசியது:-

முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.

இந்தியவின் இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல்லாட்சியையும் பெற்ற ஓரே மொழி தமிழ் மொழி மட்டுமே. இத்தகு தமிழ் மொழியின் பெருமை உலக மக்களுக்குத் தெரிய வேண்டும். உலகம் அறிய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள நாட்டு மக்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்ல உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் கருணாநிதி செய்ய வேண்டும்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே மொழி தமிழ். ஆதலால், இம்மொழியின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை செய்ய வேண்டும்.

இவ்வாறு சிவதம்பி பேசினார்.

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:48:19 PM6/23/10
to Min Thamizh
ஊர் கூடித் தமிழ்த் தேர்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் இருந்து தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி,​​ கோவையில் இன்று (நேற்று - 23/06/10) முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு காண இருக்கிறோம்.

உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்தவுடன் 'உலகளாவிய உவகை' என்று தலையங்கம் தீட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தோம்.​

அறிவிப்பே உலகளாவிய உவகையைத் தருமானால்,​​ மாநாடு எத்தகைய இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்க வேண்டுமா,​​ என்ன?

ஈழத் தமிழர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு மாநாடு தேவைதானா என்றும்,​​ அரசியல் ரீதியாகத் தங்களை பலப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சியால் கூட்டப்படும் மாநாடுதானே இது என்றும் கேள்விகளை எழுப்பி எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

வீட்டில் ஒரு திருஷ்டி விழுந்துவிட்டது என்பதற்காக,​​ குழந்தை பிறந்தால் பெயரிடாமலா இருந்து விடுகிறோம்?​

இப்படி ஒரு மாநாடு கூட்டித் தமிழர்கள் ஓரணியில் நிற்பதன் மூலம்தானே உலகுக்குத் தமிழர்தம் ஒற்றுமை உணர்வையும்,​​ பலத்தையும் எடுத்துரைக்க முடியும்!

கடந்த 20 ஆண்டுகளாக,​​ குறிப்பாக,​​ பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் முன்னுரிமை பெற்றது முதல்,​​ தமிழினுடைய முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.​

எல்லா தளங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,​​ இல்லையென்றால்,​​ பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

படித்தாலும்,​​ ஏன்,​​ பேசினாலும்கூட மரியாதை இல்லை என்கிற வசை தமிழுக்கு எய்திடலாமோ?​

நடைமுறையில் அதுதானே உண்மை நிலை.​


தமிழர்கள் ஒருவருக்கொருவர் தமிழில் அளவளாவுவதுகூட அரிதாகி வருகிறதே.​

வீடுகளில் பெற்றோர் தங்கள் செல்வங்கள் ஆங்கிலத்தில் மழலைமொழி பேசுவதைக் கேட்டு குதூகலிக்க விரும்புகிறார்களே தவிர அவர்களுக்கு ஆத்திசூடியும்,​​ கொன்றைவேந்தனும்,​​ திருக்குறளும்,​​ நாலடியாரும் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டதே...

தமிழனுக்கு அடிக்கடி தமிழின் பெருமையை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.​

அதுமட்டுமல்ல.​ பன்னாட்டு அறிஞர்கள் தங்களது ஆய்வுகளைப் பதிவு செய்யக் களம் ஒதுக்கித் தரவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.​

உலகளாவிய அளவில் இதுபோலத் தமிழ் மாநாடு கூட்டப்பட்டால்,​​ சாமானியனுக்குத் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த மாதிரியும் இருக்கும்.​

தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வழிகோலுவதால்,​​ மொழியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியதாகவும் இருக்கும்.இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேளையில்,​​ அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழ்ச் சிந்தனை மட்டுமே பரவிக் கிடக்கும் சூழலில்,​​ தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.நமக்குள்ளே,​​ உற்றார் உறவினரோடு,​​ நண்பர்களோடு பேசும்போது இயன்றவரை தமிழில் மட்டுமே பேசுவது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்களேன்.​

நம் வீடுகளில் குழந்தைகள் 'டாடி,​​ மம்மி' என்று பெற்றோரை அழைப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்.

அரசியல் கலப்பு என்பது இன்றைய இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாதது.​ ஆனால்,​​ என்ன அதிசயம்?...​

செம்மொழி மாநாட்டுக்காக விழாக் கோலம் பூண்டிருக்கும் கோவை மாநகரில் பார்வைபடும் இடம் எல்லாம் பட்டொளி வீசிப் பறப்பது மாநாட்டின் இலச்சினை தாங்கிய வண்ணக் கொடிகளே தவிர,​​ பெயருக்குக் கூட ஒரு கட்சிக் கொடி கிடையாது.​ ​

குறைந்தபட்சம் எங்காவது முதல்வரின் படமோ,​​ துணை முதல்வரின் படமோ ​ காணப்படுகிறதா என்றால்,​​ ஊஹும்.​

ஆளும் கட்சித் தொண்டர்கள் கரை வேட்டியில் வந்து குவிந்துவிடுவர் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.

ஆய்வரங்க நிகழ்ச்சியில்,​​ அமைச்சர் பெருமக்களும்,​​ ஆளும் கட்சிப் பிரமுகர்களும் ​ முன்னுரிமை பெற்றிருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.எள்ளளவும் அரசியல் கலவாத,​​ தரத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுகின்றன.​

சமயம் புறக்கணிக்கப்படும் என்று பயந்தவர்கள் இப்போது அரசியல் முற்றிலுமாக ஆய்வரங்கங்களில் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

நாங்கள் முறையாக அழைக்கப்படவில்லை என்று சிலருக்கு மனக்குமுறல்.​

எங்களுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்று இன்னும் சிலரின் முணுமுணுப்புகள்.​

எனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று மேலும் சிலருக்கு ஆதங்கம்.​

தமிழின் பெயரால் நடத்தப்படும் ஒரு கோலாகலத் திருவிழாவில் நமது பங்களிப்பு என்ன என்று யோசித்துச் செயல்பட வேண்டியவர்கள்,​​ மரியாதையை எதிர்பார்த்துக் காத்திருப்பது அவர்களது தமிழ்ப் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.

இத்தனை பண விரயத்தில் எதற்காக இப்படி ஒரு செம்மொழி மாநாடு என்று கேட்பவர்கள்,​​ தமிழகத்தின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதே அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும்தான் என்ன என்று ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கூட்டப்படும் இந்த வேளையில்,​​ தமிழின் சிறப்பையும்,​​ தமிழர் தம் மேன்மையையும் நமக்கு நாமே மீண்டும் உயர்த்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.​

பட்டி தொட்டியெல்லாம்,​​ தமிழ்,​​ தமிழ் மாநாடு என்கிற முழக்கத்தால்,​​ உறங்கிக் கிடக்கும் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும் என்று நம்பலாம்.

மனமாச்சரியங்களைக் களைந்து,​​ குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தமிழ் உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குதூகலிக்க வேண்டிய வேளை இது.​

குறுகிய அரசியல் கண்ணோட்டத்தினால்,​​ தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் இந்த கோலாகல விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது,​​ சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தும் முயற்சியாகத்தான் முடியும்!

இதற்கு முன்னால் நடந்த மூன்று உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களின் மனசாட்சி சொல்லும் இதுபோல அரசியல் கலவாத மாநாடு நடந்ததில்லை என்று.​ அதைச் சாதித்துக் காட்டிய முதல்வரின் சாதனைக்குத் தலைவணங்குகிறோம்!'

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'

என்றும்,​​

'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்'

என்றும்

முழங்கிய மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் கூட்டப்படும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்!

Swaminathan Venkat

unread,
Jun 23, 2010, 6:48:32 PM6/23/10
to mint...@googlegroups.com
அன்புள்ள ஐயா,
 
என் அறியாமைக்கு மன்னிக்கவும். இந்த மின் தமிழ் குழுமத்தில் சேர்ந்திருக்க நான் தகுதி இல்லாதவன்.  சிலரின் அன்பின், நட்பின் காரண்மாக நான் இங்கு உங்கள் எல்லோருடனும் அமர்ந்திருக்கிறேனே தவிர என் தகுதி காரணமாக அல்ல. மன்னிக்கவும்.
 
நீங்கள் விரும்பி, மகிழ்ந்து தந்திருக்கும் வரவேற்புரையில் காணும் இந்த பகுதிக்கு என்ன அர்த்தம் என்பதை முடிந்தால் விளக்குங்கள். ஏற்கனவே முத்தமிழ் காவலரின் ஒரு ப்குதி எழுத்தைக் குறிப்பிட்டு இது தமிழ் தானா, இதில் உண்மைப் பேச்சு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். இப்போது அவர் தம் அன்பு மகனார் தமிழ்:
 
      “தமிழை -  அமுதத் தமிழ், இன்பத் தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ்,  சுந்தரத் தமிழ், தூய தமிழ், தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் -  என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும்,  போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.”
 
 
இந்தத் தமிழ்-கள் எல்லாம் எங்கு கிடைக்கும்? எனக்கென்னவோ நேற்று ‘இனியவை நாற்பது ஊர்வலத்தைப் பார்த்த் பிறகு,  இப்போது வாழ்வது சங்கத்தமிழ் தான். அதற்குப் பின் தமிழ் வாழ்வதன் அடையாளத்தையே காணோம் என்று தான் தோன்றிற்று.
 
நன்றி. வணக்கம்.  வாழ்க, மேலே பட்டிய்ல் இடப்பட்டுள்ள எல்லா தமிழகளும். இப்பெரும் தலைவர்கள் அடியொற்றி நானும் சொல்லி வைக்கிறேனே, என்ன போச்சு.
 
வெ.சா.
 
வெ.சா.   



 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 6:54:19 PM6/23/10
to Min Thamizh
தமிழ் முழக்கம் செழிக்க - 1


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் பலராலும் எழுப்பப்படும் கேள்வி, தமிழ்க் குழந்தைகள் ஏன் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பதில்லை என்பதுதான்.

ஆங்கிலம் படிப்பதில் குழந்தைகள் ஆர்வம் காட்டவில்லை என்பதும், தெருவில் தமிழில் பேசி விளையாடும் குழந்தை, நடைமுறையில் புழங்கும் ஆங்கிலச்சொற்களைப் பயன்படுத்தினாலும்கூட, அதையும் தமிழாகவே கருதித்தான் பேசுகிறதே தவிர அதற்குப் பேதம் தெரியாது என்பதும் அக்குழந்தை ஆங்கிலக் கல்வியை விரும்பிப் படிப்பதில்லை என்பதும், பெற்றோரால் திணிக்கப்படுகிறது என்பதும்தான் உண்மை.

அடுத்த கேள்வியும் எழவே செய்கிறது.

"கண்ணே, மணியே" என்று குழந்தைகளிடம் தமிழில் கொஞ்சிய பெற்றோர், அக்குழந்தையை ஆங்கில வழிக் கல்வியில் கொண்டுபோய் சேர்ப்பது எதனால்?

இக் கேள்விக்கான பதிலாக, ஆங்கிலத்தில் படித்தால் கெளரவம் என்பதோ அல்லது ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்று சொல்வதோ பல காரணங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறதே தவிர, அவை உண்மையல்ல.

ஏனென்றால் ஆங்கில வழியில் படித்த அனைத்துக் குழந்தைகளுக்கும் கெளரவம் கிடைத்துவிடவில்லை.

வேலை கிடைக்கிறது என்பது உண்மை என்றாலும், ஒரு வேலையைப் பெற்றுத்தரும் அளவுக்குத் தரமான ஆங்கிலமாகத் தமிழகத்தின் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படவில்லை என்கிற கசப்பான உண்மை, அகில இந்திய அளவில் வேலை தேடிச் செல்லும் இளைஞர்களைப் பார்க்கும்போது, அவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்கும்போது வெட்டவெளிச்சமாகி விடுகிறதே!

ஆங்கிலக் கல்வியை நடுத்தர மக்கள் தேடிப்போனதற்கான சமூக - பொருளாதாரக் காரணங்கள் நிறைய உண்டு. அவற்றில் மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல், தனியார் பள்ளிகளை நாடியது.

தமிழ்நாட்டில் இந்தப் போக்கு அதிகரித்தபோது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசல்போல வளர்ந்தன.அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, அரசுப் பள்ளி ஆசிரியர்களேகூடத் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள் என்கிற கசப்பான உண்மை, நடுத்தர மக்களை மேலும் அச்சுறுத்துவதாக அமைந்தது.அரசுப் பள்ளி ஆசிரியருக்கே தன் பள்ளி மீது நம்பிக்கையில்லாமல் இன்னொரு பள்ளியில் குழந்தையைச் சேர்க்கிறார் என்றால், அந்தப் பள்ளியில் தரம் இல்லை என்றுதானே பொருள் என்பதாகப் பார்த்தனர்.

இந்த எண்ணம் வேர் ஊன்றிய நேரத்தில், தமிழகத்தின் கல்வித் துறை, பள்ளிகள் மீது அதிக அக்கறை செலுத்துவதை மட்டுப்படுத்தியது. கல்வித் தரம் மெல்ல குறையத் தொடங்கியது. ஆகவே, நடுத்தர மக்கள், தங்கள் வருமானத்துக்கு அப்பாற்பட்டதாகக் கல்விக் கட்டணம் இருந்தாலும்கூட, எல்லா வசதிகளையும் தியாகம் செய்துவிட்டு, தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்தனர் - அவர்கள் சரியாக ஆங்கிலம் படிக்கிறார்களா என்று அறிந்துகொள்ளும் திறன் இல்லாதபோதும்.இப்போதும்கூட இதே மனநிலை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படும் அந்த இடத்தில்தான் தமிழ்க் கல்வி புறக்கணிப்பும் தொடங்குகிறது என்கிற உண்மையை அரசு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

அண்மையில் வெளியான, மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவ, மாணவியர் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் என்பதை செய்தித் தாள்களில் பார்க்கும்போது, புள்ளிவிவரப்படி கணக்கிடுவோமேயானால், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 99 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்கிற மிகப்பெரிய உண்மை அரசுக்குத் தெரியவரும்.

தமிழ்நாட்டில், தமிழ் வழக்கொழியாமலும், தமிழ் மதிப்பான கல்வியாகவும், தமிழ் தனது முன்னைப் பெருமைகளை மீட்டெடுப்பதாகவும் இருக்க வேண்டுமானால், தமிழ் வழியில் குழந்தைகள் படிக்க வேண்டும்.

அரசு ஊழியர், அரசு ஆசிரியர்கள் மட்டுமே அவர்களது வாரிசுகளுக்கு நல்ல கல்வியைத் தருவது போலவும், தாம் மட்டும் தங்கள் குழந்தைகளுக்கு ஏதோ கார்ப்பரேஷன் கல்வியைத் தந்துவிட்டதாகவும் மனம் புழுங்கும் நிலை நடுத்தர மக்களுக்கு ஏற்படாத சூழல் உருவாகுமானால், அனைத்து நடுத்தர மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு கொண்டுவரவே விரும்புவார்கள்.

தமிழ் வழிக் கல்வி 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு உயரும்.

குழந்தைகள் தமிழ் மொழியை நன்கு படிக்க, எழுதத் தெரிந்தவர்களாக ஆவார்கள்.

தற்போதுள்ளதைப்போல, ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் திண்டாட மாட்டார்கள்.

அரசு ஊழியர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதை இந்தச் செம்மொழி மாநாட்டின் முடிவாக தமிழக அரசு மேற்கொள்ளுமேயானால், தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும்.

அவரவர் குழந்தையை அவரவர் விருப்பப்படி படிக்க வைத்தல் அவரவர் உரிமை என்று பேசப்படலாம்.

அது உண்மையும்கூட.

ஆனால் அரசு ஊழியர்களாக இருந்துகொண்டு, உரிமை பேச முடியுமானால், அவர்களை அரசு ஏன் பணியில் வைத்துக்கொள்ள வேண்டும்?

அவர்கள் பணியிலிருந்து விலகி, அல்லது அரசுப் பணியில் சேராமல் புறக்கணிக்கலாமே!

அரசுப் பள்ளிகளிலும், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிகுலேஷன்  பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்கித் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த முயலும் தமிழக அரசு இத்தகைய முடிவை எடுக்குமானால், நடுத்தர மக்கள் அரசுப் பள்ளிகளுக்கு மீண்டும் திரும்புவார்கள். தமிழ்வழிக் கல்வி மீண்டும் பெருமைகொள்ளும்.

தமிழன் தமிழ் பெறுவான்!

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 7:07:47 PM6/23/10
to Min Thamizh
கணினி வரைகலைப் போட்டியில் சொக்கம்பாளையம் பள்ளிக்கு பரிசு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கணினி வரைகலைப் போட்டியில், அன்னூர் அருகிலுள்ள சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் குழுப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழக அரசு தமிழ் இணைய மாநாடு - பள்ளி மாணவர்களுக்கு கணினித் தமிழ் வரைகலைப் போட்டி நடத்தியது.

அப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் 3,800 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

அதில் சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏ.வீரன்(12ம் வகுப்பு) டி.இராமராஜ் (11ம் வகுப்பு) ஆகிய இருவரும் குழுப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.

இப்போட்டிக்கான பரிசு 26ம் தேதி கொடிசியா அரங்கத்தில் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

இம் மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் சுகுமார், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டினர்.

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 7:11:18 PM6/23/10
to Min Thamizh
தினமணியின் "செம்மொழிக்கோவை" இப்போது விற்பனையில்...



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலராக தினமணி வெளியிட்டுள்ள "செம்மொழிக்கோவை" இப்போது விற்பனையில் உள்ளது.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஆவணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தை www.indiavarta.com இணையதளம் மூலம் வாங்கலாம்.

இந்தியாவில் வசிப்பவர்கள் இப்புத்தகத்தை அஞ்சலில் பெற விரும்பினால் ரூ. 215க்கு Express Publications (Madurai) Limited என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலை (Demand Draft) அல்லது பணவோலை (Money Order) அனுப்பி பெறலாம்.

முகவரி:-

மண்டல விற்பனை மேலாளர்,
தினமணி,
29, இரண்டாவது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 058

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 7:25:35 PM6/23/10
to Min Thamizh
தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் வீரத்தை விளக்கும் "இனியவை நாற்பது" அலங்கார வாகன அணிவகுப்பை ஜனாதிபதி, முதல்வர் ஆகியோர் கண்டு இரசித்தனர்.


கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று (23/06/10) காலை துவங்கியது.

மாலையில், தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறை, கலை,பண்பாட்டை நினைவூட்டும் "இனியவை நாற்பது" அலங்கார வாகன அணிவகுப்பு அவினாசி ரோடு இலட்சுமி மில் சந்திப்பில் மாலை 3.50 மணிக்கு துவங்கியது.

வாகன ஊர்வலத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் டி.ஜி.பி.,இலத்திகா சரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,இராதாகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, ஐ.ஜி.,சிவனாண்டி ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட போலீசார் முன் செல்ல, மங்கள இசையுடன் 40 அலங்கார வாகன அணிவகுப்பு புறப்பட்டது.அலங்கார வாகனங்களுக்கு இடையே கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் தமிழர்களில் வீர விளையாட்டான சிலம்பாட்டம், வாள் வீச்சுடன் ஊர்வலம் நகர்ந்தது.

அணிவகுப்பை, அவினாசி ரோட்டின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆர்வமாக கண்டு வியந்தனர். 

இலட்சுமி மில் சந்திப்பில் 3.50க்கு துவங்கிய ஊர்வலம் பிளமேடு சென்றடைந்தது. இடையிடையே நெருக்கியடித்த கூட்டத்தை போலீஸ் அதிகாரிகள் சரி செய்தனர்.  மாலை 5.45 மணிக்கு பீளமேடு, வரதராஜாமில் பகுதிக்கு வாகன அணிவகுப்பு வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூர மேடையில் இருந்து, அலங்கார வாகன அணிவகுப்பையும், கலைஞர்களின் நடன நிகழ்ச்சியையும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய,மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஊர்வலப் பாதை பாதுகாப்பு பணியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 ஆயிரம் போலீசாரில் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டுக்கோப்பான போலீஸ் பாதுகாப்பு இருந்ததும், அவினாசி ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், ஊர்வலப் பாதைக்குள் பொதுமக்களின் ஊடுருவல் ஏதும் நிகழவில்லை ஊர்வலம் இனிதாக நிறைவடைந்தது.

அணிவகுத்த அலங்கார வாகனங்கள்;


01. மங்கள இசை ஊர்தி:- இசைக்கலைஞர்கள் மங்கள இசை முழங்கி வருகின்றனர்.
02. மலைக்கு எல்லோரும் எல்லாமும் சமம்:- குறிஞ்சி நிலக் காட்சி.
03 .காதல் உணர்வு பறவைக்கும் உண்டு:- முல்லை நிலக் காதல் காட்சி.
04. ஜாதி வேற்றுமையில் குடும்பம் காக்கும் ஒற்றுமை:- மருதம் நிலக்காட்சி.
05. வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்:- நெய்தல் நிலக் காட்சி.
06. வேட்டுவர் பாணர்க்கு விருந்தோம்பல்:- பாலை நிலக் காட்சி.
07. சண்டைக் கலைஞர்கள்: பண்டைக் கால தமிழர்களின் வீரத்தை எடுத்துரைக்கும் சண்டைக் காட்சி.
08. புறநானூற்றுத்தாய்:- போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் மகனின் நெஞ்சில் அம்பு பாய்ந்திருப்பதை கண்டு ஆனந்தக் கண்ணீர் விடும் தாய்.
09. மறக்குடியே தமிழ்க்குடி:-"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி" என்ற புறப்பொருள் வெண்பா காட்சி.
10. தமிழகக் கலை வளர்ச்சி:- தமிழக கட்டட, சிற்பக்கலைகளை பறைசாற்றும் காட்சி.
11. புதியதோர் உலகம் செய்வோம்:- நவீன விஞ்ஞான வளர்ச்சியை காட்டும் தமிழ் அறிவியல் காட்சி.
12. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்:- இவர்களின் நட்பை விளக்கும் காட்சி.
13. மனுநீதி சோழன்:- கன்று குட்டிக்காக நீதி கேட்கும் பசு, கன்றின் உயிருக்கு ஈடாக தன் மகனை தேர் சக்கரத்துக்கு பலியிட்ட மனுநீதி சோழனின் நீதி தவறாத காட்சி.
14. மயிலுக்கு போர்வை வழங்கி பேகன்:- குளிரில் நடுங்கும் மயிலுக்கு பட்டு அங்கவஸ்திரம் கொடுத்த மன்னன் பேகனின் வள்ளல் காட்சி.
15. கவரி வீசிய காவலன்:- புலவர் மோசிகீரணாருக்கு மன்னன் கவரி வீசும் வரலாற்றுக் காட்சி.
16. முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி:- முல்லைக்கொடிக்கு படர தேர் கொடுத்த வள்ளல் பாரியின் கொடை சிறப்பை விளக்கும் காட்சி.
17. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான்:- நீண்ட ஆயுள் தரும் கருநெல்லிக்கனியை, அவ்வைக்கு கொடுத்து தமிழ் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை செய்த அதியமானின் அற்புதக் காட்சி.
18. பொற்கை பாண்டியன்:- தவறுதலாக, பெண்ணின் மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, தன் கையையே வெட்டி தண்டனை கொடுத்த பாண்டிய மன்னனின் காட்சி.
19. மிருகங்கள் நடை:- குதிரை, சிங்கம், புலி, யானை, சிறுத்தை சிற்பங்கள் அடங்கிய காட்சி.
20. சிலம்பு வஞ்சினமாலை:- தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மதுரையை எரித்த கண்ணகியின் ஆவேசக்காட்சி.
21. உணவளித்தலின் உயர்வு:- அட்சயப் பாத்திரம் மூலம், பசியென்று வந்தோருக்கெல்லாம், மணிமேகலை உணவளித்தக் காட்சி.
22. போர்க்கோலத்தில் வேலுநாச்சியார்:- வெள்ளையரை எதிர்த்து, வீரமங்கை வேலுநாச்சியார், வாளேந்தி போருக்கு செல்லும் காட்சி.
23. போரில் பெண்களின் பங்களிப்பு:- போரில் காயம்பட்ட வீரர்களுக்கு பெண்கள் பணிவிடை செய்யும் காட்சி.
24. மரம் உடன்பிறந்தவளாகிறது:- மரத்துக்கும் உயிர் உள்ளதை விளக்கும் பசுமை நிறந்த இலக்கிய காட்சி.
25. ஜாதி, மத பேதமற்ற காதல் காட்சி:- காதலுக்கு ஜாதி, மத பேதமில்லை என்பதை விளக்கும் காட்சி.
26. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்:- உலகம் உழவனின் விவசாயத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்த்தும் காட்சி.
27. திருக்குற்றாலக் குறவஞ்சி:- குற்றால மலையின் பெருமை, சிறப்புகளை விளக்கும் காட்சி.
28. ஜாதி, மத வேறுபாடற்ற தமிழ் மன்னனின் புரட்சி:- இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மன்னர்களின் சிற்பங்கள்.
29. கூத்தர், பாணர், சான்றோருடன் இருக்கும் மன்னன்:- தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கூத்தர்கள், பாணர்கள் மற்றும் சான்றோர்களின் பங்களிப்பை விளக்கும் காட்சி.
30. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்:- சிற்பத் தொழிலாளி தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் காட்சி.
31. வண்ணங்கள் வேறுபட்டாலும், மானுடர் ஒன்றுதான்:- நிறத்தால் வேறுபட்டாலும், மனிதர்கள் வேறுபடுவதில்லை என்பதை விளக்கும் காட்சி.
32. கிராமிய நடனம்:- இந்த ஊர்தியில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வலம் வருகின்றனர்.
33. கிராமிய மனம்:- காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் குடிசையும், உழவனும் உள்ள கிராமியக்காட்சி.
34. சங்கே முழங்கு:- தமிழ் பெருமையை பறைசாற்றும் காட்சி அமைப்புகள்.
35. நடனக் கலைஞர்கள்:- இதில், சினிமா நடனக்கலைஞர்கள் நடனமாடி வருகின்றனர்.
36. காக்கை குருவி எங்கள் ஜாதி:- மகாகவி பாரதியை காக்கை, குருவிகள் சுற்றி நிற்கும் காட்சி.
37. பகிர்ந்து உண்:- பகிர்ந்து உண்டு வாழும் தத்துவம் அடங்கிய காட்சி.
38. காலத்தை வென்று நிற்கும் வரலாற்று சின்னம்:- இதில், தஞ்சை பெரியகோவிலும், திருவள்ளுவர் கோட்ட தேர்வடிவமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
40. ஊர்வலத்தில் இறுதியாக வந்த இரு ஊர்திகளில் இருந்து செலுத்தப்பட்ட லேசர் ஒளிக்கற்றைகள் வானத்தில் அழகிய காட்சிகளை வடிவமைத்தபடி வந்தன.

நன்றி:- தினமலர்

Kannan Natarajan

unread,
Jun 23, 2010, 7:29:29 PM6/23/10
to Min Thamizh
செம்மொழியா... செவ்வியல் மொழியா?

தமிழை செம்மொழி என்பதா அல்லது செவ்வியல் மொழி என்று அழைப்பதா என்ற குழப்பம் சமீபகாலமாக நீடித்து வந்தது.

சங்க இலக்கியம்,தொல்காப்பிய இலக்கணம் முதலாக மொழிஞாயிறு பாவணர் வரை அனைவருமே தமிழை செம்மொழி என்றே அழைத்து வந்துள்ளனர்.

"செம்மையாய் அமைந்த மொழி" என்பது அதன் பொருளாகும்.

"கிளாசிக்கல்" எனும் ஆங்கில வார்த்தையை அப்படியே மொழி பெயர்க்கும் போது, "செவ்வியல்" என்று மொழி பெயர்க்கிறார்கள்.

கிளாசிக்கல் லிட்டரேச்சர் என்பதை செவ்வியல் இலக்கியம் என்று மொழி என்று மொழி பெயர்க்கலாம்.

ஆனால் செவ்வியல் மொழி என்றால் புதுவகை இயல் மொழி என்றே எண்ணத் தோன்றும்.

ஆனால் செம்மொழியில் உள்ள "செம்" என்பது செம்மை என்பதன் சுருக்கமாகும்.

செம்மையாய் அமைந்த மொழி என்று பொருள்.

இதனால்தான் கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதை செம்மொழி என்று கூறுவதே பொருத்தம்.

மணவை முஸ்தபா

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 7:53:53 PM6/24/10
to Min Thamizh
என்ன வேண்டும் தமிழுக்கு? ஆணையிடுங்கள் அரசுக்கு!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத் தொடக்க விழாவில் ஆய்வரங்க மலரை நிதி அமைச்சர் க.அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட, பெற்றுக் கொள்கிறார் முதல்வர


தமிழ் மொழிக்கு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுங்கள் என்று தமிழ் அறிஞர்களுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (24/06/10) ஆய்வரங்க நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டமான ஆய்வரங்கம் இப்போது தொடங்குகிறது.

இது அன்னைத் தமிழுக்கு அரிய பயன் தரும் கட்டமாகும்.

இன்றிலிருந்து நான்கு நாள்கள் நடைபெறும் ஆய்வரங்கங்களின் மூலம்தான் தமிழை மேலும் செழுமைப்படுத்தவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும் அதை வளர்த்து, 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் நாம் பெற உள்ளோம்.நம்பிக்கை அளிக்கிறது...

தாய்மொழி, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பொருத்த வரை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் காண முடிகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும், 50க்கு மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் வந்திருப்பது நமக்குப் புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகும் சிந்தனைகளைச் சேகரித்து ஒன்றிணைப்பதே ஆய்வரங்குகளின் பணியாகும்.

ஆய்வரங்கிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்க்கும் முன், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துகளை அறிஞர்கள் வழங்க வேண்டும், என்றார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 7:58:43 PM6/24/10
to Min Thamizh
தமிழை உயிரோட்டம் மிக்க மொழியாக வழங்க வேண்டும்:- சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் வலியுறுத்தல்




தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை உயிரோட்டம் மிக்க மொழியாக தமிழர்களுக்கு வழங்க தமிழ் இணைய மாநாடு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசின் தொழில், வர்த்தகம் மற்றும் கல்வித் துறை மூத்த துணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

கோவையில் நடைபெறும் 9வது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் வியாழக்கிழமை (24/06/10) அவர் பேசியது:-

தமிழின் வளமான பாரம்பரியத்தைச் சிறப்பிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், எதிர்காலத் தலைமுறையினரும் தமிழின் அவசியத்தைக் கட்டிக் காக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய உலகமயமாதல் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்பவும் தமிழை ஈடுகொடுக்கச் செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் இணையமும், தகவல் தொழில்நுட்பமும் முக்கியப் பங்கு வகிக்கும்.

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இளைஞர்களிடையே தமிழை வாழும் மொழியாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒன்று.

பள்ளிகளில் முக்கியப் பாடங்களில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் தமிழ் பேசும் சமூகம் சிறியதாக இருந்தாலும் பெரும்பாலானோர் பேச்சுத் தமிழைச் சமூக மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர். 

தமிழின் வளர்ச்சிக்கு வலுவான சமூக ஆதரவும் அவசியமாகிறது.

பல்வேறு மொழி மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் வழியே மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளவும் வகுப்பறைக்கு வெளியே அவர்கள் தமிழைப் பயன்படுத்தவும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் பிற சமூக அமைப்புகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

சிங்கப்பூரில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலம் பேசும் குடும்பப் பின்னணியில் இருந்து வருகின்றனர்.

மாணவர்களை ஈர்க்கும் இணையத்திலும் ஆங்கிலப் பயன்பாடே அதிகம்.

இச்சூழலில், தமிழ் பயிலும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதும், அன்றாட வாழ்க்கையில் தமிழைக் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதும் நாம் எதிர்நோக்கியுள்ள முக்கியச் சவாலாகும்.

சிங்கப்பூர் ஒரு தகவல் தொடர்புத் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது.

ஆகவே, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தமிழை இடம்பெறச் செய்ய முடிகிறது.

எதிர்காலக் கல்வியில், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

சிங்கப்பூரில் 81 சதவீத குடும்பங்களில் இணைய வசதி உண்டு.

இதை பயனுள்ள வழிகளில் செயல்படுத்தினால் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் மாணவர்கள் சிறப்பாகக் கற்கவும், கருத்துப் பரிமாறவும் முடியும்.

இணையம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தற்போது ஆசிரியர்களும் திறம்பெற்று விளங்குகின்றனர்.

இணையத்தில் உள்ள வ
ங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் இயல்பான முறையில் சிறப்பாகக் கற்பிக்க முடியும்.

மாணவர்களின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித் திறன்கள் மேம்படும்.

நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி குறைந்து தொடர்புகள் அதிகரிப்பதால் எதிர்காலத் தொழில்நுட்பம் இன்னும் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாகச் சந்திக்கும்.

எதிர்காலத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவர்.

அவர்கள் புதிதாகவும், விரைவாகவும் தகவல்களைப் பெறுவர்.

ஆகவே, தொடர்ச்சியாக புத்தாக்கமும், பயன்முனைப்பும் மிகுந்த வழிகளில் தமிழைக் கற்பித்துக் கற்றலை மேம்படுத்த வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்றுள்ளோர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு தமிழை உயிரோட்ட மிக்க மொழியாக தமிழர்களுக்கு வழங்க முடியும் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

இணைய மாநாட்டில் விவாதிக்கப்படும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்கள் தமிழ் வளர்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.

மாநாட்டுக்குப் பிறகு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த முன்முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் இணைய மாநாட்டின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை அத் துறை அமைச்சர் ஆ.
ராசா வெளியிட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் வாசு அரங்கநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:01:44 PM6/24/10
to Min Thamizh
சிந்துச் சமவெளி நாகரிகத்தை பறைசாற்றும் பொதுக் கண்காட்சி


தமிழ் இணைய மாநாடு கண்காட்சி அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தினமணி இணையதள கண்காட்சி அரங்கம்.

உலகிலேயே பழம்பெரும் நாகரிகமாகக் கருதப்படும் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிடர்களுக்குச் சொந்தமானது என்பதை விளக்கும் வகையில் பொதுக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கண்காட்சியை டி.ஆர்.பாலு வியாழக்கிழமை (24/06/10) துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

கண்காட்சியில் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மையமாக விளங்கிய ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சி முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிந்துச் சமவெளி நாகரிக மக்களின் ஓவியம் காண்போரைக் கவர்ந்தது.

தொடர்ந்து அமைக்கப்பட்டிருந்த அரங்கில் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்து ஆய்வு நடத்திய அறிஞர்களின் பணியை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மொகஞ்சதாரோவில் நடந்த அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பிரசித்தி பெற்ற நடன மாதரின் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதையடுத்து, மொகஞ்சதாரோவை ஆட்சி செய்த மன்னரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது.  அக் காலத்தில் உருவாக்கப்பட்ட கிணற்றின் மாதிரி வடிவத்தையும் மக்கள் பார்த்து
ரசித்தனர்.

ஹரப்பா மக்களால் பயன்படுத்தப்பட்ட அரசு முத்திரை, எழுத்துகள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் கண்காட்சிக்குப் பெருமை சேர்த்தன.

கோவை இருகூர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஈமப்பேழை, முதுமக்கள் தாழியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

போர் புரிந்த குதிரை வீரர்கள் பயன்படுத்திய நீளமான வாள், இரும்பினாலான பட்டைக் கத்தி, சிறிய கத்தி, வில், பல்வேறு வகையான அம்புகள் ஆகியன பண்டைய தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தன.

நாகை மாவட்டத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய செப்புப் பட்டயம் காண்போரைக் கவர்ந்தது.

அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து மக்கள் ஆர்வமாகக் கேட்டறிந்தனர்.

வனத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் பண்டைய இலக்கியங்கள், வன வளப் பாதுகாப்பை வலியுறுத்தியது குறித்த சான்றுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதைத் தவிர, 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான வில், அம்பு, விலங்குப் பொறி ஆகியவை வியக்க வைத்தன.

பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான யாழ் உள்ளிட்ட இசைக் கருவிகளை மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சென்றனர்.

பழங்கால திராவிடப் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் இருந்த இக் கண்காட்சியை பல மணிநேரம் காத்திருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:05:28 PM6/24/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:- 2வது நாளாக மக்கள் வெள்ளத்தில் மிதந்த கொடிசியா வளாகம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வரங்கத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 2வது நாளிலும் (24/06/10) கொடிசியா வளாகம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதன்கிழமை (23/06/10) துவங்கியது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இம் மாநாட்டு துவக்க விழாவிற்கும், அதைத் தொடர்ந்து நடந்த அலங்கார ஊர்திகளை காண்பதற்காகவும்
லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சிகள் செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசையுடன் துவங்கியது.

அதைத் தொடர்ந்து, லாரன்ஸ் குழுவின் மாற்றுத் திறனாளிகள் வழங்கிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை 9 மணி முதலே மாநாட்டு வளாகத்தில் குவிந்தனர்.

மதியம் 12 மணியளவில் பொதுக் கண்காட்சி,
ணைய மாநாட்டு கண்காட்சி, புத்தகக் கண்காட்சி ஆகியவை துவங்கின.

இந்தக் கண்காட்சிகளை காண்பதற்காக ஆயிரக் கணக்கான மக்கள், 2 கி.மீ. தொலைவு நீண்ட வரிசையில் நின்றனர்.

பல மணிநேரம் பொறுமையாகக் காத்திருந்து அரிய கண்காட்சிகளை பார்த்து மக்கள்
ரசித்தனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமான தாற்காலிகக் கடைகள் மாநாட்டு வளாகத்தில் முளைத்தன.

மாநாட்டு உணவகங்களில் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டதால், சாலையோர உணவகங்களில் விற்பனை சூடு பிடித்தது.

மாலை 6 மணியளவில் கண்காட்சியைப் பார்வையிட்ட மக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பத் துவங்கினர்.

ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான மக்கள், அவிநாசி சாலையில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், வாகனங்கள் பல மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மக்கள் கூட்டத்தையும், வாகனப் போக்குவரத்தையும் சமாளிக்க முடியாமல் போலீ
சார் திணறினர்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:09:30 PM6/24/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:- புத்தகக் கண்காட்சியில் 6 அடி உயர திருக்குறள் நூல்



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவையில் வியாழக்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட திருக்குறள் நூல்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி வியாழக்கிழமை (24/06/10) தொடங்கிய புத்தகக் கண்காட்சியில் 6 அடி உயரத்திலான திருக்குறள் நூல் இடம்பெற்றுள்ளது.

இக் கண்காட்சியில் சந்தனம்மாள் பதிப்பகம் அரங்கில், வி.ஜி.பி குழும நிறுவனங்களின் சகோதர்கள் சார்பில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக 6 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் 133 பக்கங்களில் 1,330 திருக்குறள்கள் இடம்பெற்ற இந்த பெரிய புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இது 1.25 டன் எடையுடன் ரூ. 5
லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட புத்தக அரங்கை கவிஞர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்  ஜி.கே.வாசன் முன்னிலை வகித்தார்.

வி.ஜி.பி குழும நிறுவனங்களின் நிர்வாகி வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, புத்தகக் கண்காட்சியை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்துவைத்தார்.

இவ்விழாவில் கவிஞர் கனிமொழி, தமிழக வணிகவரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா, மக்களவை உறுப்பினர் ஜே.எம்.ஆரூண், கே.எஸ்.கே.
ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே கண்காட்சி வளாகத்தில் உள்ள யுனிவர்சல் பதிப்பகத்தார் அரங்கில், கவிக்கோ அப்துல்
ரகுமான் எழுதிய "எம்மொழி செம்மொழி" எனும் நூலை அமைச்சர் ஜி.கே. வாசன் வெளியிட, வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா பெற்றுக்கொண்டார்.

கவிதா பதிப்பகம் சார்பில் "மாதவ சிவஞானமுனிவரின் நூற்களஞ்சியம்" எனும் நூலை ஜி.கே.வாசன் வெளியிட, கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.

வேறு சிலரது நூல்களையும் அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது.சொக்கலிங்கம், செயலர்
ராம.லட்சுமணன், பொருளாளர் ஷாஜ கான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:11:03 PM6/24/10
to Min Thamizh
கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வியாழக்கிழமை (24/06/10) ஒரே நாளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மாநாட்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை காலை, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 22 அரங்குகளில் ஆய்வரங்கங்கள் தொடங்கின.

இதில் மாலை 6 மணி வரை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட 259 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துப் பேசினர்.

இந்த ஆய்வரங்க அமர்வுகளுக்கு அஸ்கோ பர்ப்போலா, கிரிகோரி ஜேம்ஸ், தியோடர் பாஸ்கரன், மயில்சாமி அண்ணாதுரை, சிலம்பொலி செல்லப்பன், நீதியரசர் மோகன், கிறிஸ்டியானா முரு,
ரவிக்குமார் எம்.எல்.ஏ., உல்ரிக் நிக்லாஸ், ஆ.சிவதாணுப்பிள்ளை, எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் தலைமையேற்று நடத்தினர்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:15:10 PM6/24/10
to Min Thamizh
தமிழ் இணைய மாநாடு:- முதல் நாள் நிகழ்வுகள்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து 9வது தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவை, தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. முதல் நாளான 24 ஜூன் 2010 இன்று, காலை 12.00 மணிக்கு தமிழ் இணைய முகப்பரங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக அமைச்சர் பூங்கோதை வரவேற்புரை ஆற்றினார்.

“தமிழக முதல்வர் தொலைநோக்குப் பார்வையோடு இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சி அடையவேண்டியதன் தேவையை உணர்ந்து, தமிழ் இணைய மாநாட்டையும் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடத்த அறிவுறுத்தினார்”, என்பதை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையுரை நிகழ்த்தினார்.

“தொழில்நுட்பத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பது இயற்கையே. எந்த ஒரு துறையின் வளர்ச்சிக்கும் இந்தக் கருத்து வேறுபாடுகள் அவசியமே. ஆனாலும்,  வந்திருக்கும் அறிஞர் பெருமக்கள் மனத்தில் கொள்ளவேண்டியது ஒன்றுதான். நாம் அனைவரும் இணைந்திருப்பது செம்மொழி தமிழுக்காக. இதனை உணர்ந்து, கருத்து வேறுபாடுகள், வளர்ச்சியை நோக்கிச் செல்லுமாறு செலுத்துவது நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். தமிழ் இணைய மாநாடு 2010ல் வழங்கப்படும் கட்டுரைகளும் அந்தக் குறிக்கோளை நோக்கியே செல்லவேண்டும்” என்றார் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் குறுவட்டுகளை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட, சிங்கப்பூர் அரசின், மூத்த துணை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்தக் குறுவட்டுகளில் ஒன்றில் இலவச தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும் உள்ளன. மற்றொன்று, குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்கான எடு-பாஸ் தமிழ் நிரல் நிறுவல் குறுவட்டு ஆகும். செம்மொழி வளாகத்தில் இந்தக் குறுவட்டுகள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதற்கான தகவல் தொடர்புக் கொள்கை மத்திய அரசின் கையில்தான் இருந்தது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்தான் மாநில அரசே நேரடியாக மொழி தொடர்பான இந்தக் கொள்கைகளைத் தீர்மானிக்க முயற்சிகளை மேற்கொண்டார். அதில் வெற்றியும் அடைந்தார். இனி வரும் காலங்களில் தமிழ் மொழி தொடர்பான அனைத்துத் தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் கொள்கைகளுக்கும் மத்திய அரசு எல்லா விதங்களிலும் துணையாக இருக்கும்” என்பதை மத்திய அமைச்சர் ஆ. இராசா தனது பேச்சின்போது தெரிவித்தார்.

தமிழ் இணைய மாநாடு பற்றிய அறிமுக உரையை முனைவர் வாசு அரங்கநாதன், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா அவர்கள் அளித்தார்.

“தமிழ் இணைய மாநாடுகளும் உத்தமம் அமைப்பும் சிங்கப்பூரில்தான் உதயம் ஆயின. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அரசுதான் உத்தமத்துக்கான செயல் அலுவலகம் நடத்த இடமும் நிதி வசதியும் செய்துகொடுத்தது. செம்மொழி மாநாட்டுடன் முதல் முறையாக தமிழ் இணைய மாநாடும் சேர்ந்து நடப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. இது தமிழ் இணைய மாநாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு” என்றார்.

தொடர்ந்து விழாப் பேருரையை சிங்கப்பூரின் மாண்புமிகு மூத்த துணை அமைச்சர் திரு எஸ். ஈஸ்வரன் அவர்கள் நிகழ்த்தினார்.

“இப்போதுள்ள இளைஞர்களை தமிழை நோக்கிக் கவர்வதற்கு, இன்றைய இளைஞர்களுக்கு எவை பிடித்தமானவையாக இருக்கின்றனவோ, அந்தத் துறைகளில் தமிழைப் புகுத்தவேண்டியது அவசியமாகிறது. சிங்கப்பூரில் உள்ள தமிழ் வாரிசுகளுக்கு வெளி இடங்களில் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்புகள் குறைவானவையாகவே உள்ளன. இதனைச் சரி செய்ய சிங்கப்பூர் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இறுதியாக, உத்தமம் அமைப்பின் தலைவர் திரு தி.ந.ச. வெங்கடரங்கன் அவர்கள் நன்றி கூறினார்.

மதிய உணவுக்குப்பின் நான்கு அரங்கங்களில் கட்டுரை படைத்தலும், ஓர் அரங்கில் நிபுணர் ஒருவரோடு உரையாடலுமாக தமிழ் இணைய மாநாடு 2010 தொடங்கியது.

எழுத்தாளர் சுஜாதா அரங்கில் "கணினி வழி தமிழ் கற்றல்" என்ற தலைப்பின்கீழாக நான்கு கட்டுரைகள் படைக்கப்பட்டன.

“மடிக்கணினியில் கன்னித்தமிழ் – ஒரு கற்றல் அனுபவம்” என்ற தலைப்பில் பேசிய சிங்கப்பூர் கிரசண்ட் பெண்கள் பள்ளி ஆசிரியர் சம்பந்தம் மோகன், எப்படி அவர்களுடைய பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முற்றிலும் மடிக்கணினியைப் பயன்படுத்தி பேச்சாற்றல், எழுத்தாற்றல் முதலிய திறமைகளை வளர்க்கிறார்கள் என்பதை விளக்கிப் பேசினார்.

“மாணவர்கள் தாங்கள் பேசுவதைக் கணினியில் ஒளிப்பதிவு செய்து, அதனை ஒலி, ஒளி வடிவில் பிறர் கேட்குமாறும் பார்க்குமாறும் வெளியிடுகிறார்கள். வாரம் மூன்று நாள்கள், கட்டாயத் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன” என்றார். இந்தச் செயல்களுக்கென அவர்கள் பயன்படுத்தும் மென்பொருள்கள் பற்றியும் அவர் விளக்கிக் காட்டினார்.

முரசொலி மாறன் அரங்கில், பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் மலேசியாவின் கணினி வல்லுனர் முத்து நெடுமாறன் பங்கேற்றார்.

“இன்றைக்கு வணிகரீதியில் தமிழ்க் கணிமைக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், மேலும் மேலும் தமிழ்ப் பயனர்கள் கணினிகளைப் பாவிக்கத் தொடங்கியிருப்பதால், வரும் காலங்களில் தமிழ்க் கணிமை வணிகரீதியாகவும் வெற்றி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

முத்து நெடுமாறன், பல்வேறு தெற்காசிய மொழிகளுக்கு எழுத்துருக்களையும் மென்பொருள்களையும் உருவாக்குபவர். அந்தப் பின்னணியில், தமிழ் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதில் உள்ள உயர் தொழில்நுட்பத்தை விளக்கியதோடு, தரமான தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவது எப்படி என்பதற்கு பல குறிப்புகளைக் கொடுத்து உதவினார். அவர் கைப்பேசிகளுக்கு என்று உருவாக்கிய செல்லினம் என்ற தமிழ் மென்பொருள் பற்றி விளக்கம் கொடுத்தார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:18:15 PM6/24/10
to Min Thamizh
தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (24/06/10) ஆய்வரங்க நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:-

இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

கிரேக்க மொழியிலும், ஜெர்மன் மொழியிலும், பிற மொழிகளிலும் தமிழியல் குறித்தும் தமிழினம் குறித்தும் எழுதப் பெற்றுள்ளவை அனைத்தும் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு உலகில் எந்த பகுதியில் உள்ளவரும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும்.

வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.

தமிழுக்கு இன்னும் என்னென்ன வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கும் அறிஞர்கள் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆணையிட வேண்டும்.

புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை தமிழன் முதலில் உணர வேண்டும்.

பிறருக்கும் அதை உணர்த்த வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், தமிழ், தமிழ் இனம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதித்துள்ள சாதனைகளை எல்லாம் ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.

இருந்தாலும் அத்துடன் நின்றுவிடாமல், தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் ஆற்ற வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன என்பதை உணர வேண்டும்.

காலந்தோளும் தமிழ், தமிழர்கள் கொண்டுள்ள எண்ணற்ற சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவற்றை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள்தான் வெளிநாட்டவர்க்கு எடுத்துரைக்க வேண்டும்.

ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர் அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தமிழ் மொழியின் தொன்மையைப் பொருத்தவரை தொல்காப்பியம் போன்றதோர் பழைமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை.

அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும், திணை, துறை வகுப்பும், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாதவாறும், கூற்றுநிலையில் அமைந்திடுமாறும் உள்ள  அகப்பாடல்களும், பொய்யும் வழுவும் விரவா மெய்யான தூய காதலைப் போற்றும் மரபும், மகேசனை மையப்படுத்தாமல் மனிதனை  மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை.

திருக்குறள் போல உலகப் பொதுமையான அற இலக்கியமும் எந்த மொழியிலும் இல்லை.

கடவுளை விடுத்துக் குடிமக்களைத் தலைமக்களாகக் கொண்ட சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை.

ஆசியா முழுவதும் கோலோச்சிய பௌத்த சமயத்திற்கு மணிமேகலை போல ஒரு காப்பியம் பாலி மொழியிலும் இல்லை.

எல்லா சமயங்களையும் - சைவ, வைணவ சமயங்களையும் - சமண, பௌத்த சமயங்களையும் - கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களையும் இதயத்திலே ஏந்திக் கொண்ட மொழி தமிழ்.

எல்லா மெய்ப் பொருள் தத்துவங்களையும் விளக்கும் மொழி அது என்று முதல்வர் கூறினார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:24:48 PM6/24/10
to Min Thamizh
தமிழ் முழக்கம் செழிக்க - 2

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி வெளியிட்ட கருத்து அனைவரையும் மறுசிந்தனைக்கு உட்படுத்துகிறது.

அதாவது,"....இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் வெளிநாட்டவர்களுக்குத் தமிழின் பெருமையை  விளக்க வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் பிறந்த கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்றவர்கள் தமிழர்களுக்குத் தமிழின் அருமையை விளக்கும் நிலைதான் தொடர்ந்து இருந்துவருகிறது''.

முதல்வர் சொல்வது முற்றிலும் உண்மை.

தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது ஒருபுறமிருக்க, தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் அளிக்கலாம், செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்குத் தமிழைவிடத் தகுதியான மொழி இல்லை என்பதை உலகுக்குச் சொல்ல ஜார்ஜ் ஹார்ட் தேவைப்படுகிறார்.

ஏனென்றால், அந்த அளவுக்கு ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் பன்மொழிப் புலமை உள்ளவர்கள் இன்று தமிழில் இல்லை என்பதுடன், பிறமொழிகளுக்கு நல்ல தமிழ் இலக்கியங்கள் சிறந்த முறையில் நம்மவரால் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டு செல்லப்படவும் இல்லை.

மற்ற மொழியினர் தங்கள் இலக்கியங்களையும் பெருமைகளையும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று காட்டும் அக்கறை, தமிழர்களிடம் இல்லை என்பதைத் தவிர, வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

உலக மொழிகளை விட்டுத் தள்ளுவோம்.

குறைந்தபட்சம் எத்தனை இந்திய மொழிகளில் சிலப்பதிகாரம், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

அப்படியே சில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தாலும்கூட, அவை சிறந்த மொழி பெயர்ப்புதானா என்பதை அம்மொழி தெரிந்த தமிழர்கள் உறுதிப்படுத்தியதுண்டா அல்லது தமிழ்ப் படித்த அந்த மாநிலத்தவர்தான் பாராட்டியதுண்டா?

இதற்கெல்லாம் பன்மொழிப் புலமை பெற்ற தமிழர்கள் இருந்தால் அல்லவா சாத்தியம்.

மேலும், ஒரு மொழிபெயர்ப்பு செய்யும் போது, எந்த மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியில் வல்லவராக இருப்பவர், அதைச் செய்யும்போதுதான் மொழியாக்கம் சிறப்பாக இருக்கும் என்பதுதான் உண்மை.

அகநானூறு மற்றும் புறநூனூற்றுக் கவிதைகள் சிலவற்றை மறைந்த பேராசிரியர் ஏ.கே.
ராமானுஜம் மொழிபெயர்ப்பில் படிக்கின்றபோது ஏற்படும் உணர்வுக்கும், சில பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்துள்ள சில மொழியாக்கங்களை ஒப்பிட்டுப் படிக்கும்போது ஏற்படும் உணர்வுக்கும் நெருடல் காணப்படுகிறது என்றால், நம் பல்கலைக்கழகங்களின் மொழிபெயர்ப்புகள் சரியில்லை என்றுதானே அர்த்தம்.

பெங்குயின் நிறுவனம் வெளியிட்டுள்ள திருக்குறள் (மொழியாக்கம் - பேராசிரியர் பி.எஸ். சுந்தரம்), புறநானூறு (மொழியாக்கம் - ஜார்ஜ் ஹார்ட்), லவ் ஸ்டான்ட்ஸ் அலோன்  (தெரிவுசெய்யப்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள்) ஆகிய மூன்று நூல்களிலும் உள்ள தரமான மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது, பெங்குயின் நிறுவனம் தன் சொந்த முயற்சியில் இதைச் செய்துள்ளதே தவிர, இதனை தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப் பதிப்பகங்களோ அல்லது பல்கலைக்கழகங்களோ செய்யவில்லை என்பது தெளிவு.

உலக நாடுகளில் தற்போதுதான் நல்ல இலக்கியங்கள் தோன்றத் தொடங்கியுள்ள மொழிகள்கூட, தங்கள் நூல்கள் பல மொழிகளுக்குச் செல்ல வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றன.

இதற்கு உதாரணம் துருக்கி.

நோபல் பரிசு பெற்ற ஒரான் பாமுக் துருக்கிய மொழியில் எழுதிய "என் பெயர் சிவப்பு" நாவலைத் தமிழில் மொழிபெயர்க்க, அதனைச் சிறப்பாகப் பதிப்பித்து வெளியிட, நிதிநல்கை வழங்குகிறது துருக்கி அரசு என்றால், செம்மொழித் தகுதிபெற்ற தமிழை உலகுக்குக் கொண்டு சேர்க்க எத்தகைய விரிவான ஆழமான செயல்களை மேற்கொண்டாக வேண்டும்?

தற்போதும் தமிழகத்தில் அரசின் நிதியுதவியில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

ஆனால் அவை சிலரை மகிழ்விக்கவும், சில பேராசிரியர்கள் மட்டுமே அந்த நிதிநல்கையை - மொழிபெயர்ப்பு திறன் இல்லாதபோதும் - பெற்று வளம்பெறவும் போட்டி நடக்கிறதே தவிர, இதையொரு வருமானத்துக்கான இன்னொரு வழி என்று கருதப்படுகிறதே தவிர, தமிழை இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்கிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து செய்வதாக இல்லை என்பதால்தான் தமிழ்ச் செம்மொழியின் பெருமை உலகறியமாட்டாமல் கிடக்கிறது.

அயர்லாந்து அரசு, தனது எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக இங்குள்ள திறமையான மொழிபெயர்ப்பாளர்களையும், பதிப்பாளர்களையும் தேர்வு செய்து, பணியையும் நிதிநல்கையையும் ஒப்படைக்கிறது என்பதைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் இத்தகைய நிலைமை இல்லையே என்பது வருத்தம் தருகிறது.

உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களைக் கொண்டுசெல்ல வேண்டுமானால், அந்த மொழியில் திறமையானவர்கள், அதே வேளையில் தமிழை அறிந்தவர்களைத் தேர்வு செய்து, நிதிநல்கை வழங்கி ஊக்கப்படுத்தினால்தான் தமிழின் பெருமை உலகம் முழுவதும் பரவும். இல்லையானால் நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதாகவே முடியும்.

இத்தகைய நிதிநல்கை ஒரு மொழிபெயர்ப்பாளரின் திறமை அடிப்படையில் அமைய வேண்டுமேதவிர, அரசியல் சார்பாகவும், அவையில் பாடிப் பரிசில் பெறும் புலவர் என்கிற பாசத்தாலும் அமையக்கூடாது.

அந்த அளவுகோல்தான் தமிழின் பெருமையை உலக அளவில் காத்துநிற்கும்.

இது சாத்தியமா என்று கேட்கலாம்.

அப்படி சாத்தியப்பட்டால் மட்டுமே செம்மொழித் தமிழ் உண்மையான செம்மொழித் தகுதி பெற்றதாகக் கருதமுடியும்!

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:32:21 PM6/24/10
to Min Thamizh
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்கவிழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி" ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தின் நேற்று (24/06/10) காலை நடந்தது. ஆய்வரங்கத்தைத் துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:-

தமிழ்மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துக்களையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கின்றோம்.

தமிழ்மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது.

திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர். இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக்குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர்.

1927ல் ஜான் மார்ஷலின் சிந்து வெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது. அதன்பின்பே, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில் உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர். திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் இரவீந்திரநாத் தாகூர்.

வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார் சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப். 

காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப்பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். பீகாரின் இராஜ் மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்" என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.

இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, "இந்தோ - ஆரியன் - இந்து" என்ற நூலில் எழுதியுள்ளார். ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடேயாகும். அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்து வெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.

உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்கிறார் சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திர தோவ். எழுத்து முறையை எகிப்தியருக்குக் கொடையாகக்கொடுத்ததும் திராவிடர்களே.

மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத் தமிழரிடமிருந்து சென்றவை. பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த "ஒனசு" என்பவர், தமது குழுவினருடன் வந்தார், நாகரிகம் கற்பித்தார், ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார், அறிவியல் கலை, கட்டடக் கலை, ஆண்டவன் வழிபாட்டையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சங்ககாலம், கி.மு.4வது நூற்றாண்டின் தொடக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய "தமிழர் தோற்றமும், பரவியதும்" என்ற நூலில் "மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே'' என்று கூறியுள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும், திணை, துறை வகுப்பும், அகப்பாடல்களும், தூய காதலைப் போற்றும் மரபும், மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலிமொழியிலும் இல்லை.

எல்லாச் சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக் கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப்பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி. திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம், தமிழினம்.

மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் இராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி.1053வது ஆண்டைச்சேர்ந்த 85 செப்பேடுகள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும்.

தஞ்சையை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக்குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது. இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப்பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள்தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தமிழன் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை முதலில் தமிழன் உணர வேண்டும். தமிழ், தமிழினம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதனைகள், ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமிதம் தருபவை. அந்தப் பூரிப்போடு இருந்து விடாமல், தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப்பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன் படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன் பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.

இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உயிருள்ளவரை தமிழுக்காகப் பாடுபட, நம்மைத்தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட, நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட, உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.  இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

நன்றி:- தினமலர்

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:39:52 PM6/24/10
to Min Thamizh
செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே:- ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்

"கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் சிவத்தம்பி தலைமை வகித்தார். விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

கிரிகோரி ஜேம்ஸ்:-

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர்.

அவரது பேச்சு:-

சில காலத்துக்கு முன், பல்கலைக்கழகத்திற்குச் சென்று தமிழ் நூல்களைத் தேடிச் சென்றேன். அங்கிருந்த பணியாளர், அதற்கு முன்பு அங்கு வந்தது உண்டா என்று கேட்டார். நான் மாணவனாக இருந்தபோது, வந்ததாகக் கூறினேன். அப்போது அவர், அந்நூலகத்தில் எனது 20 வயதில் கொடுத்த விண்ணப்பத்தைத் தேடிக் கொடுத்தார். நான் வியந்து போய், "நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததை எப்படி பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர், பழமையான தமிழ் மொழிக்கு 40 ஆண்டுகள் என்பது ஒரு காலமா என்று கேட்டார். அந்த அளவுக்கு தொன்மை வாய்ந்த மொழி, தமிழ் மொழி.  மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்:-

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

அவரது பேச்சு:-

இந்த மாநாட்டில் பேச வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 17வது நூற்றாண்டிலேயே ஜெர்மனியைச்சேர்ந்த அறிஞர், தரங்கம்பாடிக்கு வந்து தமிழ் மொழி பயின்று, தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அதிலிருந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி அங்கு மதிக்கப்பட்டு வருகிறது. கலோன் பல்கலைக்கழகத்தின் 1943லிருந்து தமிழ்த்துறை செம்மையாக செயல் படுகிறது. தமிழில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பு வரை அங்கே படிக்கும் வசதியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழ் நூலகங்களில் பெரிய நூலகம் அங்குள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அங்குள்ளன. ஜெர்மனியில் தமிழ்த் தாய்க்கு கோயில் கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். எட்டாவது தமிழ் இணைய தள மாநாட்டை நாங்கள் நடத்தினோம். தற்போது செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9வது இணைய தள மாநாடு நடத்துவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. தமிழ்மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி என்பதோடு, நவீன கணினி யுகத்துக்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது. எனது தாய் வீடு ஜெர்மனி என்றாலும், புகுந்த வீடு இந்த தமிழ்நாடுதான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மருமகள் நான். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாகவே நான் வாழ்கிறேன்.

ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி.,கான்பூர்:-

தமிழ்மொழி வரலாற்றில் இலக்கியமும், இணையமும் சேரும் முதல் நிகழ்வு இங்கு நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சீரிய முயற்சியாக இந்த இணைய தள மாநாடு நடத்தப்படுகிறது. 1997ல் கணினித்தமிழ் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முதன் முதலாக அங்கு இணைய தள மாநாட்டை நிகழ்த்தினார். தமிழ் இணையதளம், பல மைல்களைத் தாண்டி, சில மைல்களை தவற விட்டுள்ளது. இதை உணர்ந்த இளைஞர்கள், புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர். தமிழ் இணைய மாநாட்டில் 15 தலைப்புகளில் கணினித் தமிழ் பற்றி ஆய்வு நடக்கிறது. இதில் தரப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீது விவாதம் நடந்து, அவை செயல்பாடுகளாக மாற வேண்டும். மாநாட்டுக்குப்பின், இந்த தீவிரம் மங்கி விடக்கூடாது. கணினி மொழியியல் மையத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும், வடிவமைப்பு, எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும். 7 விதமான ஆராய்ச்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 70 கோடி ரூபாய் நிதியை கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, பல்கலைக்கழகங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்.

வா.செ.குழந்தைசாமி, துணைத்தலைவர், உலகத் தமிழாய்வு நிறுவனம்:-

சிந்து வெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் உள்ளிட்ட உலகின் பழமையான 6 நாகரிகங்களில், 4 நாகரிகங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இந்த நாகரிகத்தை அடித்தளமாகக்கொண்ட மொழிகளில், சீன மொழியும், இந்திய மொழிகளில் வடமொழியும், தமிழ் மொழியும்தான் அழியாமல் உள்ளன. அந்த மொழி, நம் தாய் மொழி என்பதால் நாம் ஓர் அங்குலம் உயர்ந்திருக்கிறோம். இந்த பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டியது முக்கியம். ஆரிய நாகரிகத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம்; திராவிட நாகரிகத்தின் அடையாளம் தமிழ் மொழி. ஆனால், இந்திய நாகரிகம், தத்துவத்துக்கு அடிப்படையாக தமிழ் மட்டுமே விளங்குகிறது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும்.  துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் தொன்மை வாய்ந்த இரு மொழிகளுக்குள் 2,000 ஆண்டுகளாக போட்டி இருந்து வருகிறது. அது இப்போது பகைமையாக மாறும் சூழல் உள்ளது. உண்மையில், இந்த இரு மொழிகளும், இந்திய நாகரிகத்தின் தூண்கள். அதற்கு மாறாக, தமிழின் தொன்மை குறித்து, சில கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

தமிழ் இலக்கிய நூல்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தில், 9வது நூற்றாண்டில் கற்பனையாக எழுதியவை என்று ஹெர்மன் டிக்கன் எழுதியுள்ளார். ஷெரிலேக் என்ற அறிஞர், இந்திய மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் என்று கூறுகிறார். ஆனால், தமிழ் பற்றி தனியாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. வடமொழி ஆதரவாளர்கள் இயக்கம், வெளிநாடுகளில் புதிய கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழின் தொன்மைக்கு ஆதரவாக வாதிடும் மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகிறார். சங்க கால இலக்கியங்களின் தொன்மையை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

அன்பழகன், நிதியமைச்சர், தமிழக அரசு:-

முதல்வர் பணி, அரசியல் பணி என பல்வேறு பணிப்பளுவுக்கு இடையில் முதல்வர் கருணாநிதி இலக்கியப் பணி ஆற்றுவதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டியுள்ளார். தமிழால் கருணாநிதி பெருமை பெற்றிருக்கிறார்; அவரால் தமிழ் செம்மொழியாக பெருமை பெற்றுள்ளது. இந்திய மொழிகளில் உள்ள ஒரு வட்டார மொழிகளில் தமிழும் ஒன்று என்று எல்லோரும் கருதுகிற நிலை இருந்தது. பரிதிமாற்கலைஞர் துவங்கி, இன்றைய கலைஞர் வரை நடத்திய போராட்டத்துக்கு, வெற்றி கிடைத்து செம்மொழியாக தமிழுக்கு தகுதி கிடைத்திருக்கிறது. உயர்ந்த கருத்துக்களின் உறைவிடமாக, ஞானத்தின் மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. நாலடியார், திருக்குறள் போன்ற இலக்கியங்கள், வேறு எந்த மொழியிலும் இல்லை. இயல், இசை என எல்லாவற்றிலும் செறிவு பெற்ற மொழியாக இருப்பதோடு, இன்னும் வாழுகிற மொழியாகவும் உள்ளது. என்றைக்கோ அழிந்த மொழிகளுக்குதான் செவ்வியல் மொழித் தகுதியை வழங்க முடியும் என்ற ஒரு கருத்து இருந்ததால்தான், தமிழ் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மக்களால் பேசப்படுகிற, நேசிக்கப்படுகிற மொழிக்கு செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது என்றால், அது தமிழுக்கு மட்டுமே. இவ்வாறு தமிழறிஞர்கள் பேசினர்.

விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்களுக்கு ஆய்வரங்க அமைப்புக்குழு செயலர் கனிமொழி பொன்னாடை மற்றும் நூல்களை வழங்கினர். ஆய்வரங்க சிறப்பு மலரை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஆய்வரங்க பொருண்மைகளை முதல்வர் வெளியிட, சிவத்தம்பி பெற்றுக் கொண்டார். விழாவில் பொன் கோதண்டராமன் (பொற்கோ) வரவேற்றார்; அவ்வை நடராசன் நன்றி கூறினார். மொரிஷியஸ், மலேசியா வாழ் தமிழர்களின் சார்பில், முதல்வருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:42:58 PM6/24/10
to Min Thamizh
கண்ணகியை ஆராயும் கிரேக்க அறிஞர்

கிரீசிலிலுள்ள தெஸ்ஸலோனிகி பல்கலைக்கழகப் பேராசிரியரும் மொழியியல் அறிஞர் ஆன்ட்ரியாஸ் கடானிஸ் கண்ணகியைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.


இது குறித்து அவர் தெரிவித்த போது, "நான் தமிழகத்துக்கு இதற்கு முன் வந்துள்ளேன். மாணவர்களுக்கு, பல வகுப்புகள் எடுத்துள்ளேன் இங்குள்ளவர்கள் அன்பானவர்கள். எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் பற்றி படிக்கிறேன். சிலப்பதிகாரம் பற்றி ஆங்கில வழியில் படித்து வருகிறேன்.

நான் கண்ணகியைப் பற்றியும் கிரேக்கத்தில் வாழ்ந்த அன்டிகோனே பற்றியும் ஆராய்ந்து வருகிறேன்.

இருவரும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள் என்பது என் ஆய்வில் தெரிய வருகிறது.

இந்த மாநாட்டில் அது பற்றி தெரிவிக்க வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:45:27 PM6/24/10
to Min Thamizh
ஓலைச்சுவடி அறிஞர்கள் மதிக்கப்படுவதில்லை:- அறிஞர் வேதனை!

'தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை' என்று மூத்த ஓலைச்சுவடி நிபுணர் நாகராஜன் தெரிவித்தார்.



இது குறித்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கில், தினமலர் இதழுக்கு அவர் அளித்த பேட்டி:-

தமிழில் உள்ள பழம் பெரும் செல்வங்கள் ஓலைச்சுவடியிலிருந்துதான் வந்தன. ஓலைச்சுவடி பதிப்புகளுக்குப் பிறகுதான் தமிழ் ஆராய்ச்சி முறையாக வந்தது. இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட தகவல்கள் அங்கிருந்துதான் பெறப்பட்டன. உ.வே.சா., அவர்கள்தான் சுவடியிலிருந்து துல்லியமான தகவல்களைப் பெற்று நூல்கள் வெளியிட்டார். அப்போது அவருக்கு எந்தவிதமான அறிவியல் சாதனங்களும் இல்லை. கையால்தான் அவர் எழுதியாக வேண்டும். தற்போது, அறிவியல் சாதனங்கள் இருந்த போதிலும், சுவடியிலுள்ள கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் வேலை வேகமாக நடக்கவில்லை.

இன்று சுவடியிலிருந்து தகவல்களைப் பெறுவதில் தரம் குன்றி வருகிறது. அதே சமயத்தில் இம்முயற்சி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகப் பேர் இத்துறைக்கு வருகிறார்கள். அதனால் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.இது கட்டாயமும் கூட. இது தமிழ் பதிப்பு உயரவும், தமிழ் உயரவும் வழி வகுக்கும்.

இன்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. இவற்றை புத்தகங்களாக வெளியிட இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். இவற்றில் பெரும்பாலானவை மருத்துவத் தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இது அறியப்பட்டால் தமிழ் மருத்துவத்துக்கு என தனிப் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு தகவல்கள் பெறப்படும். சுவடியில் பிற இலக்கியமும் கிடைக்க வாய்ப்புள்ளது. பாரம்பரியமாக பலர் சுவடிகளை பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் அந்த சுவடிகளை பொதுப் பயன்பாட்டுக்குத் தர மறுக்கிறார்கள். என்றாலும் தொடர்ந்து சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

சுவடியில் உள்ள தகவல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலானவை. அவற்றை பெயர்த்து புத்தகங்களாக மாற்ற வேண்டுமானால், யாப்பு தெரிய வேண்டும். பின்னர் உரைநடைக்கு மாற்ற வேண்டும். ஆனால் இன்று முதுகலை படிக்கும் மாணவர்கள் கூட, யாப்பு தெரியாமல் வெளி வந்துவிட முடியும். ஏனென்றால் இன்று ஆய்வு செய்யும் அளவுக்கு தமிழ் மொழியில் நூல்கள் வந்துவிட்டதால், யாப்பை மாணவர்கள் கற்பதில்லை.

செய்யுளிலிருந்து யாப்புக்கு கொண்டு வருவதற்குத் தனித் தகுதிகள் வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தால்தான் சுவடியியலில் சிறந்து விளங்க முடியும். தமிழ்த் தகவல்கள் புத்தக வடிவுக்கு கொண்டு வர முடியும். சுவடியைக் கூட யாரும் படிக்கலாம். 15 நாளில் தெளிவு பெறலாம். ஆனால் யாப்பு படிப்பது அதைவிட கடினமானது. ஆகவே யாப்பு வளர வேண்டும். பழைய யாப்பு தெரிய வேண்டும்.பழைய பொக்கிஷத்தை அறிய இது அவசியம்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:47:07 PM6/24/10
to Min Thamizh
ஊக்கம் தரும் தாய்மொழி

சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்த போது:-

தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் சர்வதேச அளவில் சாதனை புரிய முடியும். அதே சமயம், நாம் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

தமிழக இளைஞர்கள் கடின உழைப்புக்கு சளைக்காதவர்கள்.

அவர்கள் கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறவர்கள்.

வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நான் பணிபுரிகிறேன்.

தாய்மொழியில் கல்வி கற்றவர்களிடம் உள்ள திறமை என்னை வியக்க வைக்கிறது.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:49:53 PM6/24/10
to Min Thamizh
தமிழ் - அரபி இடையே ஒற்றுமை:- காதர் மொய்தீன் தகவல்

"இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது:-

"தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு" என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன்.

இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

"அல் -இலாஹ்" என்பதே, "அல்லாஹ்" என மருவியது என்பவர். "அல்லாஹ்"வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும்.

இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"எல்லே இலக்கம்" என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்" என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு.

இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர். இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது.

கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர்.

இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.

இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும்.

இவ்வாறு, காதர் மொய்தீன் தெரிவித்தார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:53:29 PM6/24/10
to Min Thamizh
குமரிக் கண்டத்தை ஆராய வேண்டும்:- சிவதாணுப் பிள்ளை

குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப் பிள்ளை தெரிவித்தார்.



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று (24/06/10) நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:-

தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.

பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.

தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 8:59:51 PM6/24/10
to Min Thamizh
வடஇந்திய மொழிகளில் ஐரோப்பிய ஆதிக்கம்; தென்னிந்திய மொழிகளில் தமிழின் ஆதிக்கம்.

இந்திய மொழிகளில் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. வட இந்திய மொழிகளில் ஐரோப்பிய மொழிகளின் ஆதிக்கம் கலந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழின் ஆதிக்கமே உள்ளது என்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா டொரன்டோ பல்கலை பெண் பேராசிரியை கூறினார்.



உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பேச வந்திருந்த கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலை பேராசிரியர் பிரென்தா இ.இ.பெக் அளித்த பேட்டி:- 

நான் சிறு வயதில் கோவை வந்தேன். அப்போது கொங்குத்தமிழில் கொஞ்சி பேசும் தமிழை பார்த்து நாமும் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. அதனடிப்படையில் தமிழ் பேச முயற்சித்தேன். அதன் பின் தமிழில் எழுதினேன். தமிழ் ஆய்வு மேற்கொண்டேன். என்னுடைய முதல் ஆய்வு "கொங்குநாட்டு கலாசாரமும், கொங்கு தமிழும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரையை என்னுடைய பல்கலையில் சமர்பித்தேன். ஆய்வுக்கட்டுரையில் கொங்கு நாட்டு மனிதர்களின் நிலை, பழக்கவழக்கம், நிதி நிர்வாகம், தொழில், விவசாயத்திலுள்ள பல்வேறு நிலை குறித்து விளக்கியுள்ளேன்.

இந்தியாவிலுள்ள பல மொழிகளில் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. வட இந்திய மொழிகளில் ஐரோப்பிய மொழிகளின் ஆதிக்கம் கலந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழின் ஆதிக்கமே உள்ளது. ஏனென்றால் தென்னிந்தியா மொழிகளில் பல தமிழிலிருந்து பிரிந்து சென்றவை தானே. தமிழ் மொழி தனித்தன்மை பெற்றது. இம்மொழியிலிருந்து ஏராளமான மொழிகள் பிரிந்து சென்று செழுமையாகவே உள்ளதே தவிர தமிழை போன்று தனித்தன்மையை எப்போதும் பெற முடியாது. 

சகோதரத்துவம், வீரம், ஆட்சித்திறன் ஆகியவற்றை முன்னிருத்தி நடந்த நிகழ்வுகளின் பிரதிப்பலிப்பாக நடந்த அண்ணன்மார் கதையை படிக்க படிக்க கண்ணீர் விட்டதுண்டு. அதைப்பற்றி செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பேச உள்ளேன்.  அண்ணன்மார் கதையில் மூன்று சந்ததிகளின் நிகழ்வுகள் எப்படி இருந்தது என்பதை பற்றி தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

அதை பற்றி நான் மேற்கொண்ட ஆய்வுகளை இந்த ஆய்வரங்கத்தில் பேச உள்ளேன். 

அண்ணன்மார் கதையோடு, மதுரைவீரன், காத்தவராயன், கோவன் போன்ற குறுநில மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆய்வுக்கட்டுரை தயாரித்துள்ளேன்.

அதில் சமுதாயத்திற்கு தேவையான சகோதரத்துவத்தையும், பாசத்தையும் முன்னிறுத்தி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கருத்தை கொடுத்துள்ளேன் என்றார்.  

தன்னுடைய பெயர் பிரென்தா இ.இ.பெக் என்பதை பிருந்தா என்று தமிழ்படுத்தி என்னுடைய பெயர் பிருந்தா என்று தமிழில் எழுதி காண்பித்து மகிழ்ச்சியடைந்தார். 

அமைதிக்கும், சகோதரத்துவத்திற்கும் புகழ்பெற்ற ஊர் கொங்கு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும், கொங்கு மன்னில் வாழ்ந்து மறைந்த நான்கு குறு நில மன்னர்களின் வாழ்க்கை காவியத்தையும் புத்தகமாக எழுதியுள்ளார்.

ஓலிப்பேழையாகவும் வெளியீடு செய்துள்ளார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:05:38 PM6/24/10
to Min Thamizh
பண்டைத் தமிழர் கடந்து வந்த கரடு முரடான பாதை:- செம்மொழி கண்காட்சி அரங்கில் அசத்தல்

செம்மொழி மாநாட்டில் துவங்கிய கண்காட்சி அரங்கில், சங்ககால தமிழர்கள் பயன்படுத்திய நாணயங்கள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், அரசாங்க முத்திரைகள், ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன மொபைல் போன் உலகை அடைய பண்டைய தமிழர் சிரமத்துடன் கடந்து வந்த பாதையை பற்றி, தமிழை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக காண வேண்டிய அரிய கண்காட்சி இது. கண்காட்சியின் முதல் நாளான நேற்று இக்கண்காட்சியைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பழங்கால தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், மாக்கொதை, கொல் ஈப்புறை, பெருவழுதி, கொல் ஈரும்புறைய் ஆகிய சங்ககால நாணயங்கள் குறித்த அரிய கண்காட்சி இடம் பெற்றுள்ளது.  மதுரை நாயக்கர் நாணயம், சேதுபதி நாணயம், தென்காசி பாண்டியர் நாணயம், பிற்கால பாண்டியர் நாணயம், பாண்டியன் மோதிரம், சங்க கால பாண்டியர்கள் பயன்படுத்திய வெள்ளி முத்திரை நாணயம், வெள்ளி சோழர் நாணயம், சோழர் புலி முத்திரை, பல்லவன் நாணயம், சோழர் முத்திரை மோதிரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட அரிய நாணயத்தின் ஒருபுறம் நட்சத்திர குறியீடும், மறுபுறம் திருவள்ளுவரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயம் 1807 - 1817ல் மெட்ராஸ் கலெக்டராக இருந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவரால் வெளியிடப்பட்டதாக அரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய ஓலைச்சுவடிகள்:-

நாலடியார், குறளுக்கு பரிலேழகர் உரை, திருவள்ளுவ மாலை, தொல்காப்பியம், நச்சினார்க்கினியர் உரை, மதுரை சங்கத்தார் சரித்திரம், நன்னூல், அரிச்சுவடி, முக்கூடற் பள்ளு, அகத்தியர் வைத்தியம், கந்தபுராணம், இராமாயண யுத்த காண்ட வசனம், பெரியபுராணம், கந்தபுராணம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, புறநானூறு, திருக்குறள் ஆகிய சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட அரிய வகை ஓலைச் சுவடிகள், கண்ணாடி பெட்டகங்களில் இன்னும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இன்று ஒவ்வொரு துறையிலும் தகவல்களை "சி.டி", பென் டிரைவ், கம்ப்யூட்டர் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதியால் பாதுகாக்க முடிகிறது. பண்டைத் தமிழகத்தை ஆண்ட அரசர்கள் அரசாங்க தகவல்கள், இரகசியங்கள், கணக்குகளை செப்பு பட்டயங்களில் எழுதி பாதுகாத்து வந்ததை பொதுமக்களுக்கு விளக்க, அதே செப்பேடுகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்கள்:-

சாத்தனார் கல்வெட்டு, புலிக்குத்துப் பட்டன் கல், கோழிச் சண்டையில் வீரமரணம் அடைந்த கோழிக்கு அமைக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு, நன்றி மறவாத நாய்க்கு எடுக்கப்பட்ட நடுகல், பஞ்சமுக வாத்தியம், விலங்குகளை பிடிக்க பயன்படுத்திய பல்வேறு விதமான பொறிகள், கேடயம், பெரிய வாள்கள், இசைக் கருவிகள், தொல் மாந்தர் வாழ்ந்த குகை வீடுகள், கற்கிடை எனும் கல் வீடுகள், தொல் மாந்தர் பயன்படுத்திய சிறு ஆயுதங்கள், உணவு தயாரிக்க பயன்படுத்திய சிறு கருவிகள், கடலில் கிடைத்த புத்தர் சிலை, இரும்பு ஆயுதங்கள் ஆகிய அரிய சேகரிப்புகள் பொதுமக்களை ஆச்சரியப்படுத்துகின்றன.

தபால் துறை அரங்கம்:-

கோவை தபால் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு அரங்கில், செம்மொழி மாநாடு நடைபெறும் ஐந்து நாட்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய தமிழகத்தின் ஐந்திணைகளை குறிக்கும் தபால் முத்திரைகள் ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகின்றன. இந்த அரங்கில் இருந்து தபால்களை அனுப்பும் சேவையும் ஐந்து நாட்களும் நடக்கிறது.  இதற்காக பயன்படுத்தப்படும் தபால் அட்டைகளில் ஐந்திணைகளை குறிக்கும் தபால் முத்திரைகள் பொறித்து அனுப்பப்படுகின்றன. மாநாட்டின் முதல் நாள் குறிஞ்சி நிலப் பகுதியை குறிக்கும் தபால் முத்திரையும், இரண்டாம் நாளான நேற்று முல்லை நிலப்பகுதியை குறிக்கும் தபால் முத்திரையும் தபால் அட்டைகளில் பொறிக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளன்று, தபால் துறையின் சார்பில் செம்மொழி மாநாடு தபால் தலையை முதல்வர் கருணாநிதி வெளியிடவுள்ளார்.

மாணவர்களை ஈர்க்கும் வகையில் கண்காட்சி அரங்கில் பல்வேறு தகவல்கள் எல்.இ.டி., திரையில் ஒலிப்பரப்பப்படுகின்றன. நாட்டு விடுதலையில் தமிழர்களின் பங்களிப்பு, பழந்தமிழர் இலக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ராக்கெட் தொழில் நுட்பம், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்கள் படக்காட்சிகளாக விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் கண்டிப்பாக காண வேண்டிய இந்த அரிய கண்காட்சி, ஏ.சி., அரங்கில் கலை நயத்துடன் அழகாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பண்டைத் தமிழ் நிகழ்வுகளை குறிக்கும் மணியம் செல்வனின் கலை நயம்மிக்க ஓவியங்கள் அழகு சேர்க்கின்றன.

செம்மொழி மாநாடு முடிந்த பின்னும் ஒரு வாரத்துக்கு இக்கண்காட்சியை காணலாம் என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதால்,பொதுமக்கள் சாவகாசமாக காணலாம்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:17:29 PM6/24/10
to Min Thamizh
"சமயம் வளர்த்த தமிழ்" கருத்தரங்கு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் 23/06 மாலை "சமயம் வளர்த்த தமிழ்" கருத்தரங்கு நடந்தது.



நிகழ்ச்சியில், சாந்தலிங்க இராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது:-

பழமையான, உயர்வான மொழி தமிழ் மொழி. கொங்கு நாடு மிகச் சிறந்த பண்பாடு கொண்ட நாடு. தலை சிறந்த புலவர்கள், அறிஞர்கள், சமய வழியில் தமிழை வளர்த்தவர்கள் வாழ்ந்த நாடு. கொங்கு நாடு மலை மற்றும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சியை சேர்ந்தது. பழங்காலம் முதல் இப்பகுதி மக்கள் தெய்வபக்தியோடு வாழ்ந்தனர் என்பதை சமய நூல்கள் எடுத்துரைக்கிறது.  6ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை "இலக்கிய காலம்" ஆகும். இனி வரும் காலங்களில் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். "எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ்", என்பதை வலியுறுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உதவும். இவ்வாறு, சாந்தலிங்க இராமசாமி அடிகள் பேசினார்.

பேராயர் சின்னப்பா பேசியதாவது:-

கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தொன்மை மற்றும் பழமை வாய்ந்த மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விழா. இதன் மூலம் உலகளவில் செம்மொழியாக திகழும் தமிழ் மொழி கொண்டுள்ள பெருமை குறித்து உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்த முடியும். திராவிட மொழிகளில் பழமையானது தமிழ் மொழி.

மொழிகளில் வணிகத்துக்கு - ஆங்கிலம், இசைக்கு - கிரேக்கம்,  சட்டத்துக்கு - இலத்தீன், தத்துவத்துக்கு - ஜெர்மன், காதலுக்கு -  இத்தாலி என உள்ள நிலையில் தமிழ் மொழி - பக்தியை அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாறு, சின்னப்பா பேசினார்.

"சைவம்" குறித்து சாரதா நம்பி ஆரூரான் பேசுகையில்,

"சைவ இலக்கியங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. உதயசூரியன் குறித்து முதலில் பாடியவர் நக்கீரர். சைவ இலக்கியங்கள் சிவனை அடிப்படையாக கொண்டது. நமச்சிவாயம் என்றால் அருள் பெறலாம்'' என்றார்.

"சமணம்' குறித்து ஸ்ரீபால் பேசுகையில்""வாழ்க்கையில் அனைவரும் தங்களது ஆன்மவை தூய்øயாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமணத்தை தவிர்த்தால் தமிழ் இல்லை. தமிழ்மொழியும், சமணமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. தொன்மையான மொழியாக திகழும் தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமணத்தின் பங்கு அதிகம் உள்ளது'' என்றார்.

"வைணவம்" குறித்து பேராசிரியர் ஞானசுந்தரம் பேசுகையில்,

"மற்றவர்கள் படும் துன்பம் கண்டு கவலைப்படும் குணம் கொண்டவர்கள் வைணவர்கள். வைணவம் வளர்ச்சியில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் மற்றும் உரையாசிரியர்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது. தமிழும்,வைணவமும் வேறல்ல'' என்றார்.

"கிறித்துவம்" குறித்து அமுதன் அடிகள் பேசுகையில்,

"செம்மொழியான தமிழ் மொழி வளர கிறித்துவர்கள் அக்காலத்திலேயே பேச்சு தமிழ் இலக்கணத்தை வகுத்து செயல்பட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சியில்  கிறித்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது'' என்றார்.

"இஸ்லாம்" குறித்து பேராசிரியர் காதர் மொகிதீன் பேசுகையில்,

"கடல் வழியாக வந்தது இஸ்லாம். தமிழ் மொழியின் வளர்ச்சியில் இஸ்லாம் அறிஞர்கள் பங்களிப்பு உள்ளது. இயல், இசை, நாடகத்தில் துவங்கி சமயத்தமிழ், அறிவியல் தமிழ், கம்ப்யூட்டர் தமிழ் வரை தமிழ்மொழியின் வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு இன்றும் தொடர்கிறது'' என்றார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:24:26 PM6/24/10
to Min Thamizh
தமிழ்ச் சங்க இலக்கியங்கள் "பெரிசுகளின் மொழியா?":- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கவலை

"தற்போதைய காலச்சூழலில் சங்க இலக்கியம் என்பது, "பெரிசுகளின் மொழி" என்பதாகவே தவறான கண்ணோட்டத்துடன் இளைஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதை மாற்ற, ஒவ்வொரு தமிழரும் தங்களது பிள்ளைகளுக்கு தமிழுணர்வை ஊட்ட வேண்டும்; தமிழின் தொன்மை, மேன்மையை எடுத்துரைக்க வேண்டும்,'' என, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் தெரிவித்தார்.



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம், தமிழுணர்வு பொங்க 23/06/10 காலை துவங்கியது. பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை வாசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாக பல்வேறு அரங்குகளில் சங்கமித்திருந்தனர். மலேசியாவில் இருந்து, "மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்" சார்பில் 250 பேர் வந்திருந்தனர்; இவர்களில் 34 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர்.

இக்குழுவினரை கோவைக்கு அழைத்து வந்திருந்த, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இராஜேந்திரன் கூறியதாவது:-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, மலேசியாவில் ஆறு மாதத்துக்கு முன்பே செம்மொழி அலுவலகத்தை திறந்தோம். உலகம் தழுவிய தமிழறிஞர்களை ஒரே வளாகத்தில் கண்டு தமிழுறவாட வேண்டும், என்ற ஆவலில் கோவை வந்துள்ளோம்; மாநாடு முடியும் வரை தங்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளோம். பதினான்கு மாநிலங்களை கொண்ட மலேசியாவின் மக்கள்தொகை 2.5 கோடி; இதில், 23 இலட்சம் பேர் தமிழர். மலேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதத்தை சீனர்கள் பிடித்துள்ளனர். ஆனால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் 60 சதவீதம் சீனர்கள் வசமுள்ளன. தமிழர்களின் நிலை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. எனினும், நாங்கள் குடியேறிய மலேசிய நாட்டில் தமிழுணர்வுடன் இலக்கியத்தை பரப்பவும், தமிழர் குடும்பங்களிடையே நல்லதொரு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் எழுத்தாளர் சங்கம் நடத்துகிறோம்.

தற்போதைய காலச்சூழலில், நமது சங்க இலக்கியம் என்பது, "பெரிசுகளின் மொழி" என்பதாகவே தவறான கண்ணோட்டத்துடன் இளைஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வயதானோர் மட்டுமே தமிழிலக்கியங்கள் மீதான ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்பதை போன்ற தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே, இளைஞர்கள் மத்தியிலும் தமிழுணர்வை ஊட்ட வேண்டும். தமிழ் இலக்கியங்களின் மேன்மை குறித்து மனதில் ஆழமாக பதியச் செய்ய வேண்டும். செம்மொழியான தமிழின் ஆற்றல், தொன்மை, பெருமை, அருமை குறித்து, ஒவ்வொரு தமிழரும் தங்களது பிள்ளைக்கு எடுத்துரைக்க வேண்டும்; இதற்கான கடமை தாய், தந்தையை சாரும். இதை அரசும், சமூக அமைப்பும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதை அடிப்படியாக கொண்டே, எமது பிள்ளைகளுக்கு தமிழின் பெருமைகளை அன்றாடம் கூறி, உணர்வூட்டி வருகிறோம்.

தமிழின் மீதான தீவிர பற்று காரணமாக நாங்கள் ஒவ்வொருவரும் 40 ஆயிரம் ரூபாய் வரை சொந்தமாக செலவிட்டு, இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளோம்; நிதிச்செலவு ஆனாலும், தமிழ் மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் இதயத்துக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. தமிழக அரசு, மிகவும் நேர்த்தியான முறையில் மிகச்சிறப்பாக இம்மாநாட்டு திட்டங்களை வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பதை, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களான நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறு, இராஜேந்திரன் தெரிவித்தார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:31:37 PM6/24/10
to Min Thamizh
பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்:- ஜெர்மனிய பல்கலை பேராசிரியர் பெருமிதம்

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலைத் தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் கூறினார்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 23/06/10 துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள "ஜூகொலின்" பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான "வுல்ரிக் நிக்லஸ்" அளித்த பேட்டி:- 


ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலைக்கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுளாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ் பாரம்பரியமான, முதன்மையான, தொண்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடமால் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டியக் கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.

உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை.  ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன்.

அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தகங்களை படித்தால் நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. 

அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கனவராக ஏற்றுக்கொண்டேன்.

பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம்.

எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது.

அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன்.

வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களை சந்திப்பது வழக்கம்.

தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப்படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன். மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன். இவ்வாரு பேராசிரியர் "வுல்ரிக் நிக்லஸ்" கூறினார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:34:28 PM6/24/10
to Min Thamizh
தமிழுக்கு நிகர் தமிழே:- செக் குடியரசு பேராசிரியர் பேட்டி

தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது என்று செக் குடியரசு பேராசிரியர் ஐரோஸ்லாவ் வாசெக் கூறினார்.



செக் குடியரசிலுள்ள சார்லஸ் பல்கலை பேராசிரியர் ஜரோஸ்லாவ் வாசெக் அளித்த பேட்டி:- 

செக் குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன். 75 வயதை கடந்தவன். ஆனால் 30 வயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஈடுபாடு அதிகம். தமிழில் ஏராளமான ஆராய்ச்சி மேற்கொண்டு உலகம் முழுக்க ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளேன்.  என்னுடைய பல மொழி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தது தமிழ். ஏனென்றால் தமிழ் தனித்துவமான மொழி. தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது. உலகின் முதன்மையான தொண்மையான மொழி தமிழ். திராவிட மொழியான தமிழுக்கு மற்ற மொழிகளோடு நெருங்கிய தொடர்புண்டு. ஏனென்றால் தமிழிலிருந்து ஏராளாமான மொழிகள் பிரிந்து சென்றுள்ளது.

தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு.

மங்கோலிய மொழியில் கால் என்பதற்கு கோல் என்று கூறுவர். தமிழ் மொழியில் பேசுவதற்குள் மங்கோலிய மொழிக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் சில வார்த்தைகளில் மட்டும் வித்தியாசங்கள் உள்ளது. அதனால் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழியாகவே மங்கோலிய மொழியை என்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். 

தமிழில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க கால இலக்கியங்களை கரைத்துக்குடித்து விட்டேன். அதில் எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்டாலும் என்னால் விளக்கமளிக்க முடியும். 

திராவிட மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் எத்தனை அந்த மொழியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நான் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் ஆய்வரங்கத்தில் திராவிடமொழிகளுக்கும் "அல்தாய்" மொழிக்கும் உள்ள உறவு குறித்து பேசுகிறேன்.

தற்போது சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றுவருகிறேன்.

முழுமையாக கற்ற பின் தமிழிற்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து பணியாற்றத்துவங்கியுள்ளேன். 

இவ்வாறு பேராசிரியர் ஜரோஸ்லாவ் வாசெக் கூறினார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:38:05 PM6/24/10
to Min Thamizh
தமிழர்களின் துயர் துடைக்க எழுத்துக்களால் போராடிய ஜெர்மனிய பெண் பேராசிரியர்

தமிழர்களுக்கு எங்கெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ, அதைப்பற்றி கட்டுரை வாயிலாக கருத்துக்களை வெளிப்படுத்தி தமிழர்களின் துயர் துடைக்க பாடுபட்டதுண்டு என்கிறார் ஜெர்மனி பல்கலை பெண் பேராசிரியர்.

"உலக நாடுகளில் தமிழும், தமிழரும்" என்ற தலைப்பில் ஆய்வரங்கத்தில் பேச வந்திருந்த ஜெர்மன் பல்கலையை சேர்ந்த டாக்டர் டக்மா ஹெல்மன் இராஜநாயகம் அளித்த பேட்டி:- 

ஜெர்மனியிலுள்ள லுட்மிகிஸ் மில்லியன் பல்கலை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய கணவர் இலங்கை வாழ் தமிழர். தற்போது ஜெர்மனிய பிரஜை. தமிழில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியினால் 70 ஆய்வுக்கட்டுரைகளை தயாரித்து பல மாநாடுகளில் சமர்பித்துள்ளேன்.

தமிழர்களுக்கு எங்கெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ அதைப்பற்றி கட்டுரை வாயிலாக என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதுண்டு. இலங்கை பிரச்னை குறித்து அமைதிப்பேச்சுக்கு முன்பு "தமிழ்நெறிய உணர்வு" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை எழுதினேன்.  அது இலங்கையிலுள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியானது. அக்கட்டுரை அரசியல் வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் வாயிலாக விடுதலைப்புலிகளோடு அரசு பேச்சு நடத்த முயற்சித்தது. அது தோல்வியில் முடிந்து போனது. 

சுயமரியாதைக்கு தலைவரான பெரியார் எழுதிய கருத்துக்கள், அவரது கொள்கைகளை புத்தகங்கள் வாயிலாக படித்துள்ளேன். அதே போல தமிழக முன்னாள் முதல்வர் அன்னாதுரை எழுதிய ஏராளமான கட்டுரைகளை படித்துள்ளேன். அவரது பேச்சுக்களை கேட்டுள்ளேன்.  இது போன்ற கட்டுரைகளை படித்ததின் வாயிலாக நான் இலங்கைத் தமிழர்கள் படும் துயரத்தையும் அவர்களது உணர்வுகளையும் கட்டுரைகளாக எழுதியுள்ளேன். அவை நாளிதழ்கள் வாயிலாக பிரசூரிக்கப்பட்டன. உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களைக்கூட நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றார்.

அருகிலிருந்த அவரது கணவர் இராஜநாயகம் கூறுகையில், ஜெர்மனிலுள்ள "நோக்கியா சீமென் நெட்ஒர்க்" பிரிவில் பணிபுரிகிறேன். சென்னையிலுள்ள அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றேன்.  தமிழன் என்பதால் தான் என்னை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சம்பந்தமான நிகழ்வு உலகின் எந்த மூலை முடுக்கில் நடந்தாலும் அந்த இடத்தில் நாங்கள் இருவரும் சென்றுவிடுவோம். அதன் படி இந்த செம்மொழி மாநாட்டில் பங்கேற்றோம் என்றார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:40:54 PM6/24/10
to Min Thamizh
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மலர் விற்பனை அமோகம்:- விலை ரூ. 600

கோவை மாநாடு வளாகத்தில் "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மலர்" விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவக்க விழாவில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மலரை தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட, ஜனாதிபதி பிரதிபா பட்டீல் பெற்றுக்கொண்டார். அந்த மலர் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

மாநாட்டு வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆறு இடங்களில் வாகனங்களில் நின்று கொண்டு மாநாட்டு மலரை விற்பனை செய்கின்றனர். மாநாட்டு அரங்கம் அருகில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டு மலர் விற்பனை செய்யப்படுகிறது. அட்டையில் முகப்பில் மாநாட்டு சின்னத்துடன், வழுவழு வண்ணத்தாள்களில் 700 பக்கங்களை கொண்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மலர்  அழகாக உள்ளது. ஒன்று 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதிகாரிகள் ரசீது போட்டு விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இந்த மலரை வாங்கிச்செல்கின்றனர்.

தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை ஈகிள் அச்சகத்தில் அச்சிடப்பட்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மலர், கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளன. தமிழ் வளர்ச்சித்துறை மூலம்  விற்பனை துவங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் மலர் வெளியிடப்பட்டதும் பொதுமக்கள் கைகளிலும் மாநாட்டு மலர் தவழ வேண்டும் என்பதற்காக  கொண்டு வந்தோம். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாநாட்டு மலர் கொண்டு வரப்பட்ட வாகனங்களை அனுமதிக்காததால் விற்பனை செய்ய முடியவில்லை. அதனால், ஒரு நாள் தாமதமாக 24/06/10 விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்தில் அனைத்து அரங்குகளிலும் சேர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநாடு மலர் விற்பனையாகி உள்ளது.

இவ்வாறு, தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:45:19 PM6/24/10
to Min Thamizh
இலக்கியத்தில் யானைக்கு 12 பெயர்கள்:- கண்காட்சி அரங்கில் தகவல்

செம்மொழி மாநாட்டின் கண்காட்சி அரங்கில் "பழங்கால இலக்கியங்களில் கானுயிரும் கானகமும்" என்ற பெயரில் வழங்கப்படும் தகவல்களும் பொருட்களும் காண்பவரின் விழிகளை விரியச் செய்கின்றன. வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கில், சங்கத் தமிழ் இலக்கியத்தில் யானை, 12 பெயர்களால் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ள தகவல் ஆச்சரியம் அளிக்கிறது.

மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அரங்கில், தமிழகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் பழங்குடி மக்கள் பயன்படுத்திய பல்வேறு அரிவாள்கள், அம்புகள், வேட்டைக் கருவிகள், மூங்கில் வில், பிரம்பு அம்புகள், உலோக முனை பிரம்பு அம்புகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வில் மூங்கில், விதம் விதமான கோடரிகள் ஆகியவற்றைப் பற்றி வன அருங்காட்சியக காப்பாளர் சந்திரசேகரன் கூறுகையில், "இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆயுதமும் பயங்கர தன்மை கொண்டவை. ஆழமாக குத்தும் அம்பை வெளியே இழுத்தால், மொத்த சதையையும் கிழித்து கொல்லும் இரகத்தை சேர்ந்தவை. எங்கும் காணக் கிடைக்காத இந்த அரிய பொருட்கள் பற்றி புறநூனூறில் சான்றுகள் உள்ளன,'' என்றார்.

யானைக்கு 12 பெயர்கள்:-

தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதாங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு ஆகிய 12 பெயர்களால் அறியப்பட்டதாக இந்த அரங்கில் அளிக்கப்படும் தகவல் ஆச்சரியம் அளிக்கிறது.

இத்துடன் வனங்கள் அழியாமல் பாதுகாப்பது எப்படி, மரத்தை வெட்டுவதால் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:53:54 PM6/24/10
to Min Thamizh
தமிழ் இணைய மாநாட்டில் சலசலப்பு; வலைப்பதிவாளர்கள் போர்க்கொடி!

வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிப்பதற்கு நேரம் ஒதுக்காததைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ் இணைய மாநாடு என்பது, இதுவரையிலும் தனியாக நடத்தப்பட்டு வந்தது. முதன் முறையாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, 9வது இணைய மாநாடாக நடந்து வருகிறது. கொடிசியா வளாகத்தில் "டி" அரங்கில் இணைய மாநாடுக்காக, 5 சிறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், கணினிப்பொறியாளர்கள் வந்துள்ளனர். மாநாட்டில் 15 தலைப்புகளில் 136 கட்டுரைகளை அறிஞர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

தமிழ் இணைய மாநாட்டை "உத்தமம்" (இன்பிட்) என்கிற அமைப்பு நடத்தி வருகிறது. தற்போது நடக்கும் இணைய மாநாட்டுக்கு வந்த பலருக்கும், முறையாக தங்குமிட ஏற்பாடு செய்யவில்லை, அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் பரவலான புகார் இருந்தது. 

ஆயினும், 23/06/10 துவங்கிய இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முகப்பரங்க பொழிவினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் துவக்கி வைத்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "சிங்கப்பூரில் தமிழர்கள் குறைவாக இருந்தாலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி மொழிகளில் ஒன்றாக அந்த அரசு அங்கீகரித்துள்ளது. பள்ளிகள், வானொலி, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது,'' என்றார். மத்திய தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பில் 2 இலவச தமிழ் மென்பொருள் குறுவட்டுக்களை அத்துறையின் அமைச்சர் இராஜா வெளியிட, ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு, தமிழ் இணைய மாநாட்டுக் குழுவின் தலைவரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாநாடு துவங்கி, கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடந்தன. மாநாடுக்கு "பிளாக்கர்ஸ்" எனப்படும் வலைப்பதிவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களின் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்குவதாக, தகவல் தரப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. அதை நம்பி வந்த இவர்களுக்கு, நேரம் ஒதுக்கப்படவில்லை. மாநாடு நடத்தும் "உத்தமம்" அமைப்பின் செயலர் மணியம் கூறியதன்பேரில் வந்ததாக அவர்கள் கூற, உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் வெங்கட்ரங்கன் உள்ளிட்டோர், "முறைப்படி பதிவு செய்யாதவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.

இதனால், அவர்கள் மாநாட்டு அரங்கிற்கு வெளியே வந்து சத்தம் போட ஆரம்பித்தனர். தகவலறிந்து, மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பூங்கோதை வந்து, அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அவர்கள் ஏற்கவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் முன் வந்து சமாதானப்படுத்தினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் குறைத்துக் கொண்டு, வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அதனால், 24/06/10 அவர்கள் தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

இது குறித்து தமிழ் இணைய மாநாட்டுக்குழுவின் உறுப்பினரும், "உத்தமம்" அமைப்பின் துணைத்தலைவருமான வெங்கட்ரங்கனிடம் கேட்டபோது, "அவர்கள் இதுபற்றி முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை; அதனால், அவர்களுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனாலும், அவர்களை புறக்கணித்து விடவில்லை. நாளை அவர்களுக்கு நேரம் ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளோம். தமிழில் வலைப்பூக்கள் அதிகரிப்பது, வரவேற்கப்பட வேண்டியது. வலைப்பூக்களில் எழுதுவோரைப் புறக்கணிக்கவும் தேவையில்லை. வேறு எந்த சர்ச்சையும் இல்லை,'' என்றார்.

முந்தைய இணைய மாநாடுகள்:-

முதல் தமிழ் இணைய மாநாடு, 1997ல் சிங்கப்பூரில் கோவிந்தசாமியால் நடத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு, 1999ல் சென்னையிலும்

3வது மாநாடு, 2000வது ஆண்டில் சிங்கப்பூரிலும்

அதற்கடுத்த ஆண்டில் மலேசியாவிலும், 5வது மாநாடு

2002ல் அமெரிக்காவிலும் நடத்தப்பட்டன.

மீண்டும் சென்னையில் 6வது தமிழ் இணைய மாநாடு, 2003ம் ஆண்டில் நடந்தது.

ஏழாவது மாநாடு, 2004ல் சிங்கப்பூரிலும்,

எட்டாவது மாநாடு, 5 ஆண்டுகள் இடைவெளியில் 2009ல் ஜெர்மனியிலும் நடத்தப்பட்டன.

ஆனால், ஒரே ஆண்டிற்குள் 9வது இணைய மாநாடு, செம்மொழி மாநாட்டுடன் நேற்று துவங்கியது.

என்னென்ன கட்டுரைகள்?

  • கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல்
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல்
  • கணினி மொழியியல்
ஆகிய பிரிவுகளில் 20 கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

  • இணைய வழிக்கல்வி - 6
  • கணினி வழி தமிழ் மொழி சொற்திருத்திகள் - 6
  • கணினியில் தமிழ்ப்பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வு - 13
  • இணைய தொழில் நுட்பத்தில் தமிழ் மொழி மற்றும் திறவூற்று செயலிகள் என்ற தலைப்பில் - 5
  • தமிழ் மின் தரவு மற்றும் மின் அகராதிகள் - 12
  • கணினி வழி தமிழ் எழுத்து உணரி செயல்பாடுகள் - 7
  • தமிழில் சிந்தனைத் திறன் கணினிச் செயல் திரல்கள் - 10
  • கணினியில் தமிழ் தட்டச்சு - 3
  • தமிழ் வலைப்பூக்கள் - 4
  • மின்னரசும், தமிழ் தகவல் தொழில் நுட்பமும் - 6
  • கணினி வழி கல்வி - 8
  • தமிழில் தேடு பொறிகள் - 7
  • கையடக்கக் கருவிகளில் தமிழ் - 5
  • தமிழ் ஒருங்குறி - 4
என்ற தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 9:59:18 PM6/24/10
to Min Thamizh
தமிழரென சொல்லிக் கொள்வது பெருமை தரும்:- ஜார்ஜ் ஹார்ட் பெருமிதம்

"மகாகவி பாரதியாரின் கூற்றைப் போலவே, தமிழரெனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும்'' என மொழியியல் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் பேசினார்.

செம்மொழி மாநாட்டு துவக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசியதாவது:-

மகாகவி பாரதியார்  "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்", என்ற பாடலில் தமிழர் எனச் சொல்லிக் கொள்வதன் பெருமை பற்றிக் கூறியுள்ளார்.

தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மையானது.

தமிழகம், கேரளா, இலங்கை போன்ற பரந்த வெளிகளில் செவ்விலக்கியமாக பேசப்பட்டு வந்துள்ளது.

அதன் தனிச்சிறப்பு மிக்க கவிகள், ஆன்றோர்களின் அனுபவம், மகிழ்ச்சி, வருத்தம் உள்ளிட்டவற்றின் சிறப்பான வெளிப்பாடாகும்.

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய "உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் கொள்ளலர்", என்ற பாடலை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எவ்வளவு உயரிய கருத்துகளை தமிழ்ப்பாடல்கள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.

வேட்கைப்பத்து என்ற சங்க என்னும் பாடலில், "வாழியாதன் வாழியவனி" என்று தொடங்கும் அடிகளில் இருந்து மழை பல பொலிக, வருக இரவலர் என உலகு உய்ய தேவையான கருத்துகள் மட்டுமே கோரப்பட்டுள்ளன.

இத்தமிழ் மாநாட்டில் பங்கு பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், என்றார்.

Kannan Natarajan

unread,
Jun 24, 2010, 10:01:47 PM6/24/10
to Min Thamizh
பிரமிக்கச் செய்த மாற்றுத்திறனாளிகள்:- அரங்கம் அதிர முழங்கியது சலங்கை ஒலி

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கின.

பல ஆயிரம் மக்கள் காலை 8.00 மணிக்கே மாநாட்டு அரங்கத்தில் சங்கமமாகியிருந்தனர்.

முதல் நிகழ்ச்சியாக செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசை முழங்கியது.

அடுத்து, லாரன்ஸ் குழுவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

இரு கால்களையும் இழந்த வாலிபர்கள் இருவர் நாற்காலி மீது சாகசங்களை புரிந்தவாறு, செம்மொழி மாநாட்டின் மைய நோக்கப்பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.

அடுத்து வந்த இளைஞர்களும் பல்வேறு சாகசங்களை செய்து, அரங்கத்திலிருந்த மக்களை பிரமிக்கச்செய்தனர். இவர்களின் ஆடல் காட்சிகள் அரங்கேறிய போது, அரங்கமே அதிரும் வகையில் கரவோசை எழுந்தது. நிகழ்ச்சியின் முடிவில் லாரன்ஸ் பேசுகையில், தனது குழுவிலுள்ள மாற்றுத்திறனாளிகளான சிறுவர், சிறுமியர் 35 பேரின் இருதய அறுவைச்சிகிச்சைக்கு முதல்வர் கருணாநிதி உதவிக்கரம் நீட்டியதை நினைவுகூறி, மனமுருக பேசினார்.

தொடர்ந்து, பாலு தலைமையிலான 40 பேர் கொண்ட குழுவினரின் சலங்கை ஆட்டம் நடந்தது.

"வந்திருக்கும் கூட்டத்துக்கும் வணக்கம்; வரப்போகும் கூட்டத்துக்கும் வணக்கம்" என்ற பாடலுடன் துவங்கிய சலங்கை ஆட்டம், பார்வையாளர்களின் செவிகளில் ஒலிமழையாக பொழிந்தது. மாநாட்டு அரங்கத்தில் கூடியிருந்த பலரும் எழுந்து நின்று உற்சாகத்தில் ஆடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது, அடுத்து நடந்த கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சி. சின்னப்பொண்ணு குமார் தலைமையிலான குழுவினர், கிராமிய மணத்துடன் பாடலிசைத்து பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தனர்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 12:56:51 AM6/25/10
to Min Thamizh
செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் இன்று (25/06/10)..

இன்று ஐராவதம் மகாதேவன் பங்கு பெறும் அமர்வரங்கம் நடைபெறுகிறது.

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் மூன்றாம் நாளான இன்றும் (25/06/10) அமர்வரங்கம் நடைபெறுகிறது.

மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற அமர்வரங்கம் நடந்தது.

இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது.

ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம்:-

இன்று பூங்குன்றனார் அரங்கில் நா.திருமலைச் செட்டி தலைமையில் நடைபெறும் "பிறநாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம்" அமர்வரங்கில், "ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலம்" எனும் தலைப்பில் நா.சுப்பிரமணியம் உரையாற்றுகிறார்.

சிறுவர் இலக்கியம்:-

இன்று மாசாத்தியார் அரங்கில் மின்னூர் சீனிவாசன் தலைமையில் நடைபெறும் "சிறுவர் இலக்கியம்" அமர்வரங்கில், "இசையில் சிறுவர் கல்வி" எனும் தலைப்பில் மலர் சின்னையாவும், "ஈழத்தில்  சிறுவர் இலக்கியம்" எனும் தலைப்பில் எஸ்.சிவலிங்கராசாவும் சொற்பொழிவாற்றுகின்றனர்.

மொழிசார் இயக்கங்கள்:-

இன்று நக்கண்ணையார் அரங்கில் முருகேசபூபதி தலைமையில் நடைபெறும் மொழிசார் இயக்கங்கள் அமர்வரங்கில், "தமிழகத்தில் தனித்தமிழ்த் தாக்கங்கள்" எனும் தலைப்பில் தாயுமானவனும், "மொழிசார் இயக்கங்கள்" எனும் தலைப்பில் ஆ.நெடுஞ்சேரலாதனும் உரையாற்றுகின்றனர்.

தமிழ் மருத்துவம்:-

இன்று உருத்திரங்கண்ணனார் அரங்கில் க.வேங்கடேசன் தலைமையில் நடைபெறும் "தமிழ் மருத்துவம்" எனும் அமர்வரங்கில் ஆய்வாளர்கள் சித்தமருத்துவம் மற்றும் பிறநாடுகளில் அதன் தாக்கம் குறித்து கட்டுரைகள் வாசிக்கின்றனர்.

சிற்பக்கலை:-

இன்று நப்பூதனார் அரங்கில் இரத்தின வெங்கடேசன் தலைமையில் நடைபெறும் "சிற்பக்கலை" எனும் அமர்வரங்கில் ஆய்வாளர்கள் சிற்பக்கலையை செப்பனிடுதல், சிற்பங்களில் மெய்ப்பாடுகள் குறித்து கட்டுரை வாசிக்கின்றனர்.

மீநுண்(நானோ) நில இயற்பியல்:-

கம்பர் அரங்கில் ஆரோக்கியசாமி ஜே.பால்ராஜ் தலைமையில் நடைபெறும் "அறிவியல் தமிழ்" அமர்வரங்கில் "மீநுண்(நானோ) நில இயற்பியல்" - அண்மைய போக்குகளும், வருங்கால வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் கி.பார்த்தசாரதியும், "தெற்காசியக் கடல்களின் எல்லைகள் - தட்ப வெப்பநிலை மாற்றங்களில் சவால்கள்" என்ற தலைப்பில் ஆர்.வெங்கடேசனும் உரையாற்றுகின்றனர்.

ஐராவதம் மகாதேவன் பங்கேற்கும் அமர்வரங்கம்:-

இன்று கபிலர் அரங்கில் ஐராவதம் மகாதேவன் தலைமையில் நடைபெறும் "சிந்துவெளிப் பண்பாடும், எழுத்துக்களும் திராவிடத் தொடர்புகளும்" எனும் அமர்வரங்கில் அஸ்கோ பார்ப்போலா ஹரப்பா மற்றும் திராவிடர் பண்பாடுகள் குறித்து பேசுகிறார்.

தமிழர் பண்பாடு:-

இன்று சாத்தனார் அரங்கில் பி.யோகீசுவரன் தலைமையில் நடைபெறும் கலை - இலக்கியப் - பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில் "சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாடு" எனும் தலைப்பில் ச.சாம்பசிவனார் உரையாற்றுகிறார்.

செம்மொழித்தமிழ் இலக்கியம்:-

இன்று நக்கண்ணையார் அரங்கில் மு.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் சூழலியலும், தமிழும் அமர்வரங்கில் "செம்மொழித்தமிழ் இலக்கியமும் பல் உயிர் வகைமையும்" என்ற தலைப்பில் அனந்தகிருஷ்ணன் கட்டுரை வாசிக்கிறார்.

"எய்ட்ஸ்' ஆய்வு:-

இன்று பரணர் அரங்கில் டி.ஆனந்தன் தலைமையில் நடைபெறும் தமிழ் மருத்துவம் அமர்வரங்கில் "எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோயின் கடந்த கால நிகழ்வுகளும், எதிர்கால எதிர்பார்ப்புகளும்" என்ற தலைப்பில் சி.என்.தெய்வநாயகம் உரையாற்றுகிறார்.

நாடகவியல் அமர்வரங்கம்:-

இன்று கல்லாடனார் அரங்கில் க.இரவீந்திரன் தலைமையில் நடைபெறும் "நாடகவியல்" அமர்வரங்கில் ஆய்வாளர்கள் திராவிட இயக்க நாடகங்கள் குறித்து விரிவாக கட்டுரைகள் வாசிக்கிறார்கள்.

செம்மொழி ஆக்கத்தில் சேக்கிழார்:-

இன்று நக்கீரர் அரங்கில் தி.சித்தலிங்கையா தலைமையில் நடைபெறும் சமயமும், தமிழும் அமர்வரங்கில் "செம்மொழி ஆக்கத்தில் சேக்கிழார்" எனும் தலைப்பில் இரா.செல்வக்கணபதி பேசுகிறார்.

இலங்கையில் நூல் பாதுகாப்பு:-

இன்று கல்லாடனார் அரங்கில் ஆவுடையப்பன் தலைமையில் நூல் பாதுகாப்பு வரலாறு அமர்வரங்கில், "இலங்கையில் நூல் பாதுகாப்பு - தேசிய ரீதியான நடைமுறைகளும் இடைவெளிகளும்" எனும் தலைப்பில் மைதிலி விசாகரூபன் உரையாற்றுகிறார்.

தமிழக தாவரங்கள்:-

இன்று கம்பர் அரங்கில் முத்துப்பாண்டியன் அசோக்குமார் தலைமையில் நடைபெறும் அறிவியல் தமிழ் அமர்வரங்கில் "தமிழகத் தாவரப் பெயர்களின் சீரமைப்பு:- ஓர் அறிவியல் கண்ணோட்டம்" எனும் தலைப்பில் ச.சண்முகசுந்தரம் உரையாற்றுகிறார்.

ஊடகத் தமிழ் அமர்வரங்கம்:-

இன்று ஒளவை அரங்கில் ரெ.கார்த்திகேசு தலைமையில் நடக்கும் ஊடகத்தமிழ் அமர்வரங்கில் ரெ.கார்த்திகேசு "நவீனத் தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு" குறித்து பேசுகிறார்.

ஊர்ப்பெயர்கள்:-

இன்று பூங்குன்றனார் அரங்கில் கி.நாச்சிமுத்து தலைமையில் நடைபெறும் ஊர்ப் பெயராய்வு அமர்வரங்கில், "ஊர்ப்பெயர் - பொருத்தமும் விளக்கமும்" எனும் தலைப்பில் பா.றோ.சுபத்ராவும், "கேரள ஊர்ப்பெயர்களில் தமிழின் தாக்கம்" எனும் தலைப்பில் மா.நாயினாரும் கட்டுரை வாசிக்கின்றனர்.

ஆட்சிமொழி வரலாற்றில் கலைஞர்:-

இன்று உருத்திரங்கண்ணனார் அரங்கில் ஜீன் லாரன்ஸ் தலைமையில் நடைபெறும் மொழி மேலாண்மை அமர்வரங்கில் , "தமிழ் ஆட்சிமொழி வரலாற்றில் முதல்வர் கலைஞரின் பங்களிப்பு" எனும் தலைப்பில் க.வெற்றிவேல் சொற்பொழிவாற்றுகிறார்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 1:06:29 AM6/25/10
to Min Thamizh
கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான (25/06/10) இன்று, மாநாடு வளாகத்தில் நடக்கும் பொது அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விபரம்:-


பொது அரங்க நிகழ்ச்சிகள்:
-

இன்று, காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரை, இஞ்சிக்குடி சுப்பிரமணியம் குழுவினர் மங்கல இசை நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 10.00 மணிக்கு "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை வகிக்கிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் துவக்கி வைக்கிறார்.

  • "தன்மானம் காக்க" என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா
  • "தாய்த்தமிழ் வளர்க்க" என்ற தலைப்பில் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்
  • "அடையாளம் மீட்க" என்ற தலைப்பில் கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா
  • "ஆதிக்கம் அகற்றிட" என்ற தலைப்பில் பேராசிரியர் கருணாநிதி
  • "சமத்துவம் பூக்க" என்ற தலைப்பில் கவிஞர் விவேகா
  • "பகுத்தறிவு தழைக்க" என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார்
ஆகியோர் கவிதை வாசிக்கின்றனர்.

காலை 11.30 மணிக்கு "தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது - சங்க இலக்கியமே! இடைக்கால இலக்கியமே! இன்றைய இலக்கியமே" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

பேராசிரியர் சோ.சத்தியசீலன் நடுவராக செயல்படுகிறார்.

குமரிஅனந்தன் துவக்கவுரையாற்றுகிறார்.

"சங்க இலக்கியமே" என்ற தலைப்பில்
  • இலங்கையை சேர்ந்த ஜெயராஜ்
  • முனைவர் சுந்தரஆவுடையப்பன்
ஆகியோரும்,

"இடைக்கால இலக்கியமே" என்ற தலைப்பில்
  • அ.அறிவொளி
  • தேசமங்கையர்க்கரசி
ஆகியோரும்,

"இன்றைய இலக்கியமே" என்ற தலைப்பில்
  • பேராசிரியர் அரங்க மல்லிகா
  • தென்னப்பன்
ஆகியோரும் வாதிடுகின்றனர்.

பகல் 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, கலைமாமணி ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 4.00 மணிக்கு, "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது.

கருத்தரங்குக்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.
  • கே.வி.தங்கபாலு
  • கி.வீரமணி
  • இல.கணேசன்
  • இராம வீரப்பன்
  • ஸ்ரீதர் வாண்டையார்
  • பூவை ஜெகன்மூர்த்தி
  • தாவூத் மியா கான்
  • எல்.சந்தானம்
  • சீத்தாராம் யெச்சூரி
  • இராமதாசு
  • இராஜா
  • தொல் திருமாவளவன்
  • கே.எம். காதர் மொகிதீன்
  • செல்லமுத்து
  • திருப்பூர் அல்தாப்
  • எம்.பஷீர் அகமது
ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மாநாடு வளாகத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சி:
-

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பிரசன்னா இராமசாமியின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கலை நிகழ்ச்சி நடக்கிறது.

முகப்பரங்கப் பொழிவு:-


கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கில் இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, "சிந்துவெளி எழுத்து; திராவிடத் தீர்வு" என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. முனைவர் ஐராவதம் மகாதேவன தலைமை வகிக்கிறார். முனைவர் அஸ்கோ பர்ப்போலா சொற்பொழிவாற்றுகிறார்.

கலை நிகழ்ச்சி:-


தொல்காப்பியர் அரங்கத்தில் இன்று மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை கூத்துப்பட்டரை முத்துசாமியின் "ஆற்றாமை" என்ற நாடகமும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பூலவாடி முத்துமீனாட்சியின் "அண்ணன்மார் கதை" நிகழ்ச்சியும் நடக்கின்றன.

கலந்துரையரங்கம்:-


இளங்கோ அரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, "தமிழாய்வுச் செல்நெறிகள்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முனைவர் தமிழண்ணல் தலைவராக செயல் படுகிறார்.
  • முனைவர் தி.முருகரத்தினம்
  • முனைவர் ஏ.ஜி. மேனன்
  • முனைவர் இ.மறைமலை
  • முனைவர் கி.நாச்சிமுத்து
ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

சிறப்புப் பொழிவரங்கம்:-


திருவள்ளுவர் அரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, "தத்துவ உலகில் தமிழ்" என்ற தலைப்பில் சிறப்பு பொழிவரங்கம் நடக்கிறது.

O தோழன்:-}

unread,
Jun 25, 2010, 1:13:07 AM6/25/10
to mint...@googlegroups.com

கோவை : ""தமிழுக்கும், கொரியா நாட்டு மக்கள் பேசும் "ஹங்குல்' மொழிக்கும் தொடர்பு உண்டு,'' என, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வந்துள்ள, தென்கொரிய விஞ்ஞானி நாராயணன் கண்ணன் தெரிவித்தார்.

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க கோவை வந்துள்ள, தென்கொரியாவைச் சேர்ந்த எண்ணெய் ஆய்வு திட்ட விஞ்ஞானி நாராயணன் கண்ணன் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி: எனது சொந்த ஊர் மதுரை, திருப்புவனம். ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியா சென்று, அங்கு எண்ணெய் ஆய்வுத் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். கடுமையான பணி நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழின் மீதான தீராத காதல் கொண்டிருக்கிறேன். தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து,"தமிழ் மரபு அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். "தமிழில் மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல்)' குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, தமிழ் மாநாட்டுக்கு வந்துள்ளேன். உலகத்தமிழர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை மிகப்பெருமையாக கருதுகிறேன். உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளிலுள்ள அனைத்து தகவல்களையும் இணையதளத்துக்கு மாற்ற வேண்டும், என்பது எனது விருப்பம். தென்கொரிய மக்களின் "ஹங்குல்' மொழிக்கும், தமிழுக்கும் எழுத்து வடிவ தொடர்பு உண்டு.

ஆரம்ப காலத்திலிருந்து சீன மொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ம் நூற்றாண்டு முதல் "ஹங்குல்' எழுத்துவடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றனர். அதன்பின், கொரிய மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது; தற்போது, கொரிய மக்களில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்று திகழ்கின்றனர். இதன் காரணமாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் கொரியா, 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததே, எழுத்து சீர்திருத்தம் தான். "ஹங்குல்' எழுத்து முறை வந்த பிறகே, அந்நாட்டினர் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மொழியை முன்னிறுத்தியே எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு, கொரியா சாட்சி. எனவே, மொழிப்பற்றை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நாராயணன் கண்ணன் தெரிவித்தார்
2010/6/25 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"
http://hariom.acnrep.com/

http://velmurugantemple.org.uk/

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 4:40:46 PM6/25/10
to Min Thamizh
தமிழகத்தில் விற்பனையாகும் அனைத்துக் கணினிகளிலும் தமிழ் மென்பொருள் இருப்பது அவசியம் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கண்காட்சி, இணைய மாநாட்டுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி ஆகியவற்றின் திறப்பு விழா வியாழக்கிழமை (24/06/10) நடைபெற்றது.

பொது அரங்கில் நடந்த இவ் விழாவிற்கு முன்னிலை வகித்து அமைச்சர் தயாநிதி மாறன் பேசியது:-

உலகெங்கும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

அதாவது ஒரு வாரத்தில் 3 மொழிகள் இந்த உலகைவிட்டு அழிவதாக மொழியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழலில் தமிழ் மொழி மட்டும்தான் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தற்போதைய சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறை அதிவேக வளர்ச்சியை அடைந்து வருகிறது.

அத் துறையை நோக்கி இளைஞர்கள் கவரப்பட்டு வருகின்றனர்.

இன்றைய நாகரிக இளைஞர்களிடம் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் தமிழை இணையதளத்தில் ஏற்ற வேண்டும்.

கடந்த 1986ம் ஆண்டு கணினி பயன்பாட்டுக்கு வந்தது.

அந்த ஆண்டே கணினித்  தமிழ் எழுத்துருகள் உருவாக்கப்பட்டன.

கடந்த 2005ம் ஆண்டு வரை தமிழ் மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலைதான் நிலவியது.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்ட முயற்சியால் அனைவருக்கும் தமிழ் மென்பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்துதான் கணினித் தமிழ் புதிய பரிணாம வளர்ச்சியைப் பெறத் தொடங்கியது.

தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்களின் பங்களிப்பால், ஆங்கில வழி மென்பொருள்கள் அதீத வளர்ச்சியை அடைந்துள்ளன.

அதேபோல், தமிழை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருள்களும் சிறந்த வளர்ச்சி அடைய வேண்டும்.

தமிழகத்தில் விற்பனையாகும் அனைத்துக் கணினிகளிலும் தமிழ் மென்பொருள் இருப்பது அவசியம். தமிழ் மென்பொருள் உள்ள கணினிகளை மட்டும்தான் தமிழகத்தில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார் தயாநிதி மாறன்.

டி.ஆர்.பாலு எம்.பி:-

தமிழர்களது பண்பாடு மிகவும் பழமையானது. அந்தப் பண்பாட்டின் சிறப்பு இன்றைய கால இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், தமிழர்களது பெருமையைப் போற்றும் கண்காட்சியைப் பள்ளிதோறும் அமைக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களது கலாசாரப் பெருமையை இளைய சமூகம் உணரும். இம் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு செம்மொழித் தமிழுக்குப் பெருமையைச் சேர்த்துள்ளனர் என்றார். 

முன்னதாக, பொதுக் கண்காட்சியை டி.ஆர்.பாலுவும், இணைய மாநாட்டுக்  கண்காட்சியை அமைச்சர் தயாநிதி மாறனும், புத்தகக் கண்காட்சியை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் தொடங்கி வைத்தனர்.


நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 4:49:16 PM6/25/10
to Min Thamizh
தமிழ் முழக்கம் செழிக்க - 3

தமிழ்ச் செம்மொழிக்காக ஆயிரம் கோடி செலவிட்டாலும், அது அடுத்த தலைமுறையிலும் வாழும் மொழியாக இருக்க வேண்டுமானால் இன்றைய குழந்தைகளால்தான் அது முடியும்.

இன்றைய குழந்தைகளும் சிறார்களும்தான் நமது மொழி தாங்கிகள்.

நமது மொழியை அவர்தம் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பவர்கள்.

மொழி ஒரு வாழையடி வாழை.

நம் தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும், பேசியதும்தான் இன்றைய நமது பண்பாடும், மொழியுமாக அமைந்தது.

பெற்றோர் நமக்குத் தந்த மொழியை அதன் வட்டார மணத்தோடு சுமந்து வந்து, வாழ்க்கையின் கட்டாயத்தாலும் அல்லது பொய்யான நம்பிக்கைகளாலும் நாம் வேற்று மொழிச் சொற்களையும் தேவையில்லாமல் கலந்துதான் நம் குழந்தைகளின் மீது சுமை மாற்றினோம்.

காப்பித்தூள் என்றும் புளியங்கொட்டைத் தூள் என்றும் அறியாதவரைப்போல குழந்தைகளும் மொழிக்கலப்பை அப்படியே நம்மிடமிருந்து தங்கள் மூளையில் பதிவிறக்கம் செய்துவிடுகின்றனர்.

தற்போது நமது சொல்லாடலில் ஆயிரம் சொற்களுக்கு 400 சொற்கள் தமிழ் அல்லாத சொற்களாக இருக்கின்றன.

இந்தக் குழந்தைகள் அவர்தம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்போகும் மொழியில், தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை உயர்த்திவிடலாம் என்ற நம்பிக்கையைக்கூட சிதைப்பதாக வளர்ந்துவிட்டது தகவல் தொழில்நுட்பம்.

நாளிதழ்கள், வார இதழ்களைக் குழந்தைகள் படிப்பதில்லை.

ஒளிவழி ஊடகங்கள்  குழந்தைகளின் மீது மொழிக்கலப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

கடற்கரையில்  சோழிகளுக்குப் பதிலாக, கண்ணாடிச் சில்லுகளை குழந்தைகள் பொறுக்குவதைத் தடுக்க வேண்டியவர்கள், தாமும் குழந்தைகளோடு சேர்ந்து கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்குவதைப் போல, மொழிக்கலப்பில் பெற்றோரும் சேர்ந்துகொண்டு நிற்பதை நியாயம் என்பதா, அப்பாவித் தனம் என்பதா, அறிவின்மை என்பதா?

புரிந்துகொள்ள இயலாத இந்தச் சூழலில்தான் அரசின் தலையீடும், திட்டமும், செயலாக்கமும் அவசியமாகிறது.

இன்றைய குழந்தைகளுக்கான தமிழ்க் கல்வியை அவர்கள் வாழும் சூழலிலிருந்து தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.

அவர்கள் அறிந்திருக்கும் சொற்களில் அவர்களைப் பேசவைத்துப் பார்த்து, அவர்களுக்கு இது அயல்மொழி, இது நம் மொழி என்று புரிய வைக்கவும், அக்குழந்தைகளுடன் நல்ல எளிய தமிழில் உரையாடவும்கூடிய சூழல் பள்ளிகளில் ஏற்பட வேண்டும்.

இதைப் பள்ளிகள் மட்டுமே நிகழ்த்த முடியும்.

இதைச் செய்தால், அவர்களது கவனம், ஒளிவழி ஊடகங்களின் மீது திரும்பாது.

தமிழறிஞர் ஒளவை நடராஜன் கூறுவதைப்போல, "வீட்டுக்குள் கணினி நுழைந்தால் அங்கே 100 ஆங்கிலச் சொற்கள் நுழைகின்றன. அதைத் தடுப்பதைவிட, கணினி மூலமே தமிழை வளர்க்க முயல்வதுதானே புத்திசாலித்தனம்!"

இன்றைய குழந்தைகளுக்கு கரும்பலகையைவிட கணினி பலகை எளிதாகக் கையாள  வருகிறது.

தந்தையின் கைபேசியை வாங்கி, எண்களைச் சரியாக அழுத்தி, தந்தையிடம் பேசிச் சிரிக்கும் குழந்தைக்கு, இன்றைய கணினி ஒரு விளையாட்டுக் கருவியாகவே மாறிவிட்டது.

ஆனால் எந்த இணைய தளத்தைத் திறந்தாலும், வலைப்பூக்களும், வலைப்பதிவுகளும், தேடுபொறிகளும், இணைய கடிதங்களும் ஆங்கிலத்தில்தான் அதிகமாக இருக்கின்றன. 

கைபேசியில் வரும் குறுந்தகவல்களும்கூட ஆங்கிலத்திலேயே இருக்கும் என்றால், ஒரு குழந்தை இயல்பாகவே ஆங்கிலத்தின்பால் ஈர்க்கப்படுவது தவிர்க்க இயலாததாகிறது.

இந்த நிலையை மாற்ற, அனைத்து நிலைகளிலும் கணினித் தமிழ் கிடைக்கச் செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.

அரசுப் பள்ளிகளிலும், தமிழ்வழி மழலையர் பள்ளிகளிலும் கரும்பலகைக்குப் பதிலாக கணினியில்தான் அவர்கள் அ, ஆ, இ எழுதுவார்கள் என்றால், கணினியில் யாவற்றையும் தெளிவான ஒலி உச்சரிப்புடன் படிக்க முடியும் என்றால், குழந்தைகளின் மொழியறிவு, சொற்திறன் எல்லாமும் விரிவடையும் என்றால், தொடக்கப் பள்ளியிலேயே குழந்தைகளை ஈர்க்கும்படியான கணினித் தமிழ்க் கல்விக்கு வகை செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.

இதற்குச் செய்ய வேண்டியது அனைத்துக் குழந்தைகளும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும்  தமிழ்க் கணினிகளுடன் பழகவும் விளையாடவும், கற்கவுமான சூழலை ஏற்படுத்துவதுதான்.

தற்போது அரசு மேனிலைப் பள்ளிகளில் கணினிகளும், கணினி அறையும் இருந்தாலும் அவற்றைப் பூட்டி வைத்திருப்பதைப் போல, குழந்தைகளிடம் காட்டி மறைத்தல் நிகழுமேயானால், இந்த வாய்ப்புகளையும் தனியார் பள்ளிகளே தட்டிச் செல்வார்கள். 

அது தமிழ் வழிக் கல்வியா அல்லது ஆங்கில வழிக் கல்வியா என்பது ஒரு பொருட்டல்ல.

இத்தகைய தமிழ்வழிக் கணினிச் சூழலுக்குத் பெற்றோர் மாறினால் அவர்களும் மாறிவிடுவார்கள்.

அவர்களுக்கு வியாபாரம்தான் முக்கியம்.

ஆங்கிலம், தமிழ் எந்த மொழியென்றாலும் பிழையின்றி எழுதத் தெரியாத ஒரு சமூகம் உருவாகக் காரணம், தாய்மொழியல்லாத ஆங்கில வழிக் கல்வியில், பாடங்களைப் புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்வதுதான்.

ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் படித்து ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் படிக்கத் தொடங்கிய முந்தைய தலைமுறைக்கு இந்தச் சிக்கல் இல்லை என்பதை உணரவும், உணர்த்தவும் முற்படுவதோடு, குழந்தைகள் விரும்பி வரும் இடமாக தொடக்கப் பள்ளிகளை மாற்ற வேண்டிய அவசியம் இன்றைய கல்வித்துறைக்கு எழுந்துள்ளது.

பாடங்களை புத்தகமாகவும், கணினியிலும் ஒருசேர அளித்தல், குழந்தைகளைப் பயமுறுத்தாத எளிய வீட்டுத் தமிழில் சொல்லும் பாடநூல்கள், கணினியை கையாளும்போது குழந்தைகளுக்கு அதற்கான தமிழ்ச்சொற்களை மனதில் பதியச் செய்தல் மிக முக்கியம்.

ஆங்கிலத்தில் ரைம்ஸ் இருப்பதைப் போல, தமிழில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி ஆகியன குழந்தைப் பாடல்களே என்பதை தமிழர்களும் தமிழகக் கல்வித்துறையும் உள்வாங்கிக்கொண்டு அவற்றை முழுமையாக சொல்லிப் பழக்கச் செய்ய வேண்டும்.

கட்சி சார்புடைய படைப்பாளிகளின் பாடல்களை உயர்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் புகுத்திக் கொள்ளலாம்.

தொடக்க, நடுநிலைப் பள்ளிக் குழந்தைகள் நல்ல தமிழை மட்டுமே இசை நயத்துடன் படித்து
ரசிக்கட்டுமே!

சிறுவர்களுக்கான புத்தகம், கதை, கவிதை, இசைப்பாடல் ஆகியவற்றுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் அளித்தல், தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள நூலகங்களில் உள்ள சிறுவர் பகுதியில்  கணினிகளையும் வண்ணப் புத்தங்களையும் கொண்டு நிரப்புதல், குழந்தைகளுக்கான திரைப்படங்களை அனைத்து மொழிகளிலிருந்தும் கொண்டுவந்து தமிழ்ப்படுத்தி, இலவசமாகத் திரையிட்டுக் காட்டுதல், குழந்தைகளுக்கான ஆவணப் படங்கள், குறும்படங்களுக்கு ஊக்கமளித்தல் ஆகிய அனைத்தும் தமிழால் நடக்கும்போது, குழந்தைகள் தமிழின்பால் தானே ஈர்ப்புக்குள்ளாவார்கள்.

தமிழ் ஆய்வுக்காக கோடி, கோடியாய் ஒதுக்கீடு செய்து செலவிடுவது  தமிழின் பெருமையை நிலைநிறுத்த உதவும்.

இருப்பினும், வாழ்வின் அங்கமாக தமிழ் நிலைநிறுத்தப்பட வேண்டுமானால் அந்தப் பணம் முழுவதும் சிறுவர்களின் தமிழ்வழி தொடக்கக் கல்விக்காக செலவழிக்கப்பட வேண்டும்.

காலத்துக்கேற்ப, அவர்களைக் கவர்ந்திழுக்கும் கணினித் தமிழாக அது அமைய வேண்டும்.

குழந்தை இலக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பதும், அவை குழந்தைகள் நடுவே வரவேற்பு பெறச் செய்வதும் அரசின் தலையாய கடமை!

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 4:55:37 PM6/25/10
to Min Thamizh
சேமமுற வேண்டுமெனில்...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழைப்  பாதுகாப்பதும், வளர்ப்பதும், கட்டிக்காப்பதும் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உள்ள கடமையாகவும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற எண்ணமும் இன்று பலரின் மனதில் மேலோங்கிவிட்டது.

திரைத்துறையில் அன்று இருந்த முன்னோடிகள் தமிழை வளர்ப்பதில் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டனர். திரை உரையாடல்களில் பிற மொழிகளைக் கலந்து பேசி வந்த நிலையை மாற்றி, உரையாடல்கள் மட்டுமன்றி, பாடல்களிலும் தூய தமிழைக் கையாண்டனர்.

இந்த நிலையில், இன்று உரையாடல்கள், பாடல்கள் அனைத்திலும் பல மொழிகளைக் கலந்து திணிப்பதன் மூலம் மிகவும் பிற்போக்குத்தனமான சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, வட்டார மொழி வழக்கு எனக் கூறிக்கொண்டு, தமிழ்மொழியை சேற்றில் தள்ளி,  தமிழ் மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்ற ஏமாற்று வார்த்தைகள் வேறு.

திரைக் கவிஞர்கள் குறித்து கூறவே வேண்டாம்.

"மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்,
 முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்"

என்று பல்லவிக்கும், சந்தத்துக்கும் பாட்டெழுதியபோதுகூட கண்ணதாசன் போன்றவர்கள் தமிழை உயிராக நினைத்தார்கள்.

இப்போதுள்ள நிலையை ஊரே சொல்லட்டும்...!

இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பீடிகை.

மாநாட்டு ஆய்வரங்கில் பங்கேற்று கட்டுரை அளிக்க வேண்டுமா, கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டுமா?

அது அவர்களின் விருப்பம், தனித்திறனைப் பொருத்தது.

ஆனால், அவர்களால் இயன்றும் செய்யாமல் விட்டது ஒன்று உண்டு.

அது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து நம் தெருக்களில் சென்று முழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தாதது.

தேர்தலாகட்டும், போராட்டங்களாகட்டும், வியாபார ரீதியிலான விளம்பரங்களாகட்டும்  திரை நட்சத்திரங்கள் தோன்றினால், அந்தக் கருத்து உடனடியாக பாமரனைச் சென்று சேர்ந்துவிடுகிறது.

இதுபோன்றதொரு நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது, யார், யாரெல்லாம் இதில் பங்கேற்கப் போகிறார்கள், அவர்கள் இந்த மாநாட்டில் பேசப்போவது என்ன, இதனால் விளையப்போகும் நன்மை என்ன, இவை குறித்தெல்லாம் விளிம்பு நிலை தமிழர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை திரைத் துறையினருக்கும் உண்டல்லவா?

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

தங்கள் துறையில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு குழுவை அமைத்து தமிழக முதல்வர், மாநாட்டுத் தலைவர் ஆகியோரிடம் சென்று மாநாடு குறித்த விழிப்புணர்வுப் பணியை தங்கள் துறையினருக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டிருக்க வேண்டும்.

அவர்களின் அனுமதியைப் பெற்று, தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம்  சென்று மாநாடு குறித்து விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பணியாற்றக் கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர்கள் அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் முன்னேற்றமே எங்களின் உயிர் மூச்சு என்று பறைசாற்றிக் கொண்ட பல அரசியல் கட்சிகளும், பிரமுகர்களும் அந்த வார்த்தைகள் எவ்வளவு செயற்கையானவை என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்திருக்கின்றனர்.

மாநாட்டுப் பணிகளை அரசு செய்தால், மற்றவர்கள் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைக்கூடவா செய்ய முடியாது?

தேர்தல் கூட்டணி என்றால், "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை" என்ற இலக்கணத்தை வகுத்துச் செயல்படும் இவர்கள்,  அன்னைத் தமிழுக்காக நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவும்,  நம் வீட்டு விருந்துக்கு வந்த அயல் சொந்தங்களை வரவேற்கவும் முடியாமல் போனது ஏனோ?

அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள தமிழுணர்வாளர்கள், விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருக்கலாமே?

அவர்களின் தலையாய பணி என்னவோ?

தங்களின் தேவைகளுக்காக போராட்டம் நடத்தத் தயங்காத ஆசிரியர்கள், மறந்தும் மாநாடு தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்த முனையவில்லை.

தெருமுனை பிரசாரமாக, வாயில் கூட்டமாக, பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கமாக நடத்தியிருக்க வேண்டாமா?

எத்தனை ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

எத்தனை மாணவர்களுக்கு மாநாட்டில் என்னென்ன அமர்வுகள் நடைபெறுகின்றன, எங்கிருந்தெல்லாம் தமிழறிஞர்கள் வந்திருக்கிறார்கள், அவர்கள் எந்தெந்த தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்க உள்ளனர் என்பது தெரியும்? 

மொத்தத்தில் தமிழின் தொன்மையைப் பறைசாற்றவும், அதை உய்விக்கவும் அயல்வாழ் தமிழர்கள் எல்லாம் தமிழகத்தில் திரண்டிருக்கும் போது, உள்ளூரில் ஒரு சாரார் பெருத்த மெ
னத்தில் இருக்கிறோம்.

நாம் சேமமுற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்ற எட்டயபுரத்தானின் வாக்கினை இந்த நேரத்தில் நினைவில் கொள்வது நல்லது...


இரா. மகாதேவன்

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 4:59:10 PM6/25/10
to Min Thamizh
மொழி வளர்ச்சி மேம்பாடு ஆய்வு செய்கிறது "சிடாக்"!

மத்திய கம்ப்யூட்டர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், "சிடாக்" மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதை மேம்படுத்தி வருகிறது. "எடுபாஸ்" என்ற அமைப்பை "சிடாக்" நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

குழந்தைகளுக்கான சாப்ட்வேர், கம்ப்யூட்டர் அமைப்பு ஆகியவற்றை பல மொழிகளில் உருவாக்கும் பணியை எடுபாஸ் செய்து வருகிறது.

இந்தியாவில் அஸ்ஸாமி, வங்காளம், போடோ, டோகரி, குஜராத், இந்தி, கன்னடம், கொங்கணி, கஷ்மீரி, மைதிலி உள்ளிட்ட 19 மொழிகளில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 

இதில், அசைவூட்டம், மற்றும் கணித பயிற்சிகள், மின் கற்றல் கருவிகள், புதிர்கள், அறிவியல் செயலிகள், விளையாட்டுகள், சமூக அறிவியல் செயலிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

மேலும் "சிடாக்" மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ் மொழியை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதை கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வினாத்தாள்களை தயாரிக்க முடியும் என்பதை ஆய்வு செய்தது. பின், தகவல்களை பெற்று, மீண்டும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த தேவையான முறையை உருவாக்கியுள்ளது.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:01:54 PM6/25/10
to Min Thamizh
மொபைலில் தமிழ்:- பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்டான்போர்டு விஞ்ஞானி வேண்டுகோள்

'தமிழில் மொபைல் தொழில்நுட்ப சாதனங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்' என்று அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் தெரிவித்தார்.



பொள்ளாச்சியில் பிறந்து, அமெரிக்காவில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இவர் திகழ்கிறார். மொபைல்போன்களுக்கான 4ஜி தொழில்நுட்பத்தின் தந்தையாக இவர் மதிக்கப்படுகிறார்.

இந்தியாவின் பெருமைமிகு பத்மபூஷன் விருதையும் அவர் பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் பொறியியல் கழகத்தின் உறுப்பினரான 4வது இந்தியர் இவர். இதுபோல் ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரரான அவர், கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.

அப்போது தினமலர் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:-

நான் இந்திய கப்பல் படையில் பணிபுரிந்த போது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாயந்த சோனார் கருவி அமைப்பை வெற்றிகரமாக நிறுவினேன். செயற்கை நுண்ணறிவு ரோபாடிக் ஆய்வு நிறுவனம், சி-டாக் நிறுவனம், மத்திய மின்னணு ஆய்வுக் கூடம் ஆகிய மூன்று ஆய்வுக் கூடங்களை இந்திய அரசு சார்பில் நிறுவியிருக்கிறேன். அதன்பின், அமெரிக்கா சென்ற நான், வயர்லெஸ் தொடர்பு குறித்து ஆய்வு செய்தேன். இதற்கான தொழில்துறையிலும் ஈடுபட்டேன்.

மொபைல் போன், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இவ்வகையில் நாம் சீனாவைவிட பின்தங்கியே இருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா இந்தியாவை விட பின்தங்கி இருந்தது. இன்று அந்நாடு நம்மை முந்திவிட்டது. இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியது, சீனாவை விட, உயர் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

தனியார் தரப்பில் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மந்தம் காணப்படுகிறது. அரசே அனைத்துத் தொழில்நுட்பத்தையும் உருவாக்கிவிடவும் முடியாது. இந்தியா வளர்ந்து வரும் நாடு, ஆராய்ச்சிப் பட்ட மாணவர்களை அதிகளவில் உருவாக்கி வருகிறது. இந்த கருத்தரங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ் முதல் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வரை, பல்வேறு துறையினரின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது. இங்கு, நான் உருவாக்கிய மைமோ மொபைல் பிராட்பேண்ட் இணைப்பு குறித்து பேசுகிறேன். என்னுடைய முந்தைய கண்டுபிடிப்புதான் இங்குள்ள அதிவேக மொபைல் இன்டர்நெட் இணைப்புக்குப் பயன்படப்போகிறது.

ஒரு முக்கிய கருத்துக்கணிப்பின் படி, இன்னும் ஐந்து ஆண்டுகளில் மொபைலில் இன்டர்நெட் வசதியைப் பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும். மொபைலில் இன்டர்நெட் வசதி இருந்தால், வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் ஒருவரால் தகவல் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக மலிவான விலையில் இணைப்பு கிடைக்கும் என்பதால் அது பெரும்பாலான மக்களைச் சென்று சேரும்.மொபைல் வழித் தொடர்பு பெரிய உற்பத்தி வாய்ப்பாக அமையப் போகிறது. எனவே தமிழில் ஏராளமான மொபைல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கான வசதியை வழங்க, மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களையும் தமிழக அரசு கேட்டுக் கொள்ளலாம்.

இன்னும் சில மாதங்களில் மொபைலில் மிக அதிவேக இன்டர்நெட் இணைப்பை இந்தியா வழங்க இருக்கிறது. ஆகவே தமிழில் மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான 100 வசதிகளைப் பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:04:44 PM6/25/10
to Min Thamizh
"யுனிக்கோட்" முறைக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சியடையும்

"கம்ப்யூட்டரில் தமிழை பயன்படுத்துவோர், யுனிக்கோட் தமிழுக்கு மாற்றிக்கொண்டால் தான் , கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், இன்டர்நெட் பயன்பாட்டிலும், தமிழ் வளர்ச்சியடையும்" என்று, மைக்ரோ சாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுனர் கப்ளான் கூறினார்.

செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியில் தமிழ் இணைய ஆய்வரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்க வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுனர் கப்ளான் கூறியதாவது:- 

வட இந்திய மொழிகளுக்கான இன்டிக் கட்டமைப்பில், யுனிக்கோடு தமிழை இணைத்து பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால் யுனிக்கோடு தமிழுக்கான கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இது போன்று கட்டமைப்பு ஏற்படுத்தினால் அனைத்து வசதிகளையும் கம்ப்யூட்டரில் எளிதாக கையாளலாம். 

கம்ப்யூட்டரில் தமிழை பயன்படுத்துவோர், யுனிக்கோட் தமிழுக்கு மாற்றிக்கொண்டால் தான், கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், இன்டர்நெட் பயன்பாட்டிலும், தமிழ் வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் நாளிதழின் இணையபதிப்பு, "யுனிக்கோடு தமிழில் உள்ளதா" என்று கேட்டார். தமிழ் பத்திரிகைகளில் யுனிக்கோடு தமிழுக்கு மாறிய முதல் இணைய நாளிதழ், "தினமலர்" என்று குறிப்பிட்ட போது மிக மகிழ்ச்சியடைந்து பாராட்டினார்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:07:54 PM6/25/10
to Min Thamizh
மின்னஞ்சல் குழுமத்தில் தமிழர்கள் உறுப்பினராக வேண்டுகோள்

மின்னஞ்சல் குழுமத்தில் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இணைய வேண்டும் என்று சிங்கப்பூர் பாராளுமன்ற மொழி பெயர்ப்பு பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரியும் பழனியப்பன் இணைய மாநாட்டில் வேண்டுகோள்விடுத்தார். 

செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்க வந்த பழனியப்பன் கூறியதாவது:-

தமிழுக்காக நடத்தப்பட்ட இணையத்தமிழ் மாநாட்டில் ஒன்றைக்கூட தவற விடாமல் அனைத்திலும் பங்கேற்றுள்ளேன்.

உலகம் முழுக்க உள்ள தமிழர்களை இணைப்பதற்காக, "தமிழ் உலகம்" என்ற மின்னஞ்சல் குழுவை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறேன். 

இக்குழுமத்தில் ஆயிரத்து 500 உறுப்பினர்களை கொண்டு உலகம் முழுக்க சிறப்பாக செயல்படுத்தி வருகிறேன்.

மின்னஞ்சல் குழுமத்தில் அனைத்து தமிழர்களும் இணையவேண்டும் என்று செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இணைய மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:13:48 PM6/25/10
to Min Thamizh
அசத்தும் இணையதள அரங்குகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையதள கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கண்காட்சியில் உள்ள ஸ்டால்களில் தமிழ் விசைப்பலகை, கண்பார்வை இல்லாதவர்கள் கம்ப்யூட்டர் மூலம் தமிழ் மொழியில் தகவல்களை பெறும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன்கூடிய சாப்ட்வேர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் கம்ப்யூட்டர் துணையோடு இயங்கும் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் உள்ளன. பி.எஸ்.என்.எல்., நிறுவன ஸ்டாலில் 3ஜி., மொபைல் கால் பயன்பாடு, அதிவேக முறையில் டேட்டா பரிமாற்றம் செய்யும் முறைக்கு பயன்படும் 3ஜி டேட்டா கார்டுகள் பயன்பாடு, 2ஜி மொபைல்போன் பூஸ்டர் கார்டுகள் மற்றும் லேண்ட்லைன், பிராட்பேண்ட் தொழில்நுட்பத்துடன் செயல்படும் ஐ.பி., "டி.வி" மூலம் ஒரே நேரத்தில் கேபிள் "டி.வ", வாய்ஸ் கால்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை பயன்படுத்தும் முறை குறித்த தகவல்களை பெறலாம்.  சென்னை, கோவை, திருநெல்வேலி அண்ணா பல்கலை மற்றும் தமிழ் இணையப் பல்கலை சார்பில் தமிழ் மொழி ஆராய்ச்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பெறலாம். தமிழ்நாடு காவல்துறை ஸ்டாலில், சாலை விபத்து தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைதுறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து தயாரித்த குறும்படம் திரையிடப்படுகிறது. கம்ப்யூட்டரில் கைரேகை ஒப்பிடும் முறை குறித்த தகவல்களும் இங்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை, நிலநீர் பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 385 ஒன்றியங்களில் சராசரி நிலநீர் மட்டம், தரம், நிலத்தடி நீர் நுகர்வு பாகுபாடு, மழை அளவு உள்ளிட்ட தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை நீர் ஆதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் வசதியுடன் மக்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணைகள் விபரம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆறுகளின் விபரங்கள், நீர்வள, நிலவளத்திட்டம் உள்பட நீர்ஆதாரத்துறையில் உள்ள பல்வேறு தகவல்களை கம்ப்யூட்டரில் எப்படி பெறுவது என்பது குறித்த தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் கல்வி அமைச்சக அரங்கில், சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றல், கற்பித்தலில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயன்பாடு குறித்த தகவல்கள் வழங்கப்படுகிறது.  மைக்ரோசாப்ட், டி.சி.எஸ்., காக்னிசன்ட், எச்.சி.எல்., உள்ளிட்ட பன்னாட்டு தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழ் மொழி எவ்வாறு பயன்ப்டுத்தப்படுகிறது என்பது குறித்து தகவல்களையும் கண்காட்சியில் பெறலாம். கோவை மாநகராட்சி அரங்கில் பிறப்பு, இறப்பு, வரிசெலுத்துதல், மின்னணு ஏலம் உள்பட மாநகராட்சி இணையதளத்தில் உள்ள பல்வேறு தகவல்களை மக்கள் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

தமிழ் இணைதள கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் கூறியதாவது:-

உலகத் தமிழ் இணைய மாநாடுகள் அனைத்திலும் தமிழ் இணைய கண்காட்சி நடப்பது வழக்கம். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமாக இணையதள கண்காட்சி அரங்கு அமைக்கப் பட்டுள்ளது. அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை இணைந்து மொத்தம் 120 ஸ்டால்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. எந்த விஞ்ஞான முன்னேற்ற த்துக்கும் ஈடுகொடுத்து தன்னை வளர்த்துக்கொள்ளும் தகுதி தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இக்கண்காட்சியின் வெற்றியே சாட்சி.

மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் கண்காட்சிக்கு வரும் மக்களுக்கு ஒரு இலட்சம் யுனிகோடு தமிழ் பான்ட் "சி.டி" இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ் வளைதளங்கள் தொடர்பான பயிலரங்கம் கண்காட்சியில் தினமும் நடக்கிறது. கண்காட்சி நேரம்: காலை 10.00 முதல் இரவு 9.00 வரை. இடைவேளை கிடையாது. அனுமதி இலவசம்.  இவ்வாறு  ஆனந்தன் தெரிவித்தார்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:19:38 PM6/25/10
to Min Thamizh
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 'செம்மொழி தமிழில் விண்வெளி'

உலகத் தமிழ் மாநாட்டு கண்காட்சி அரங்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "செம்மொழித் தமிழில் விண்வெளி" என்ற அரங்கு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் முதல், பழங்கால பொருட்களின் அணிவகுப்பு, அரிய தகவல்கள், படங்கள், காணக்கிடைக்காக பழங்கால பொருட்கள் என பிரமிக்க வைக்கிறது.  சிந்து வெளி நாகரிகம் துவங்கி, தமிழ் இனத்தின் வளர்ச்சியைப் படிப்படியாக வரிசைப்படுத்தி பல அரங்குகள் அமைந்துள்ள நிலையில், கடைசி அரங்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "செம்மொழித் தமிழில் விண்வெளி" என்ற தலைப்பில் கண்காட்சி அரங்கு உள்ளது. அரங்கில், நமது நாட்டில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட  "விகாஷ் இன்ஜின்" முதல் "கிரையோஜெனிக்" எஸ்.எல்.வி., ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எல்.வி.எம். 3 ராக்கெட்களில் மாதிரி வடிவமைப்பும், செயற்கைக் கோள்களான ஆரியபட்டா முதல் சந்திராயன் 1 வரை அனைத்தின் மாதிரி வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.  நிலவு பயணத்தின் வீடியோ காட்சியினர் தமிழாக்கமும் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சந்திரனை தொட்டதை சாதனையாக கூறி வரும் இந்த தலைமுறையிடம் சங்க காலத்திலேயே தமிழன் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர் என்பதை ஆதாரத்துடன், திருநெல்வேலி மகேந்திரபுரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மைய விஞ்ஞானி கண்ணு தலைமையிலான குழுவினர் விளக்குகின்றனர்.

"உலகம் தட்டை வடிவமானது என நம்பப்பட்ட காலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கோள்கள் வடிவத்தால் உருண்டையானது என்பதை புறநானூற்றுப்பாடல்

"இனிது உருண்ட சுடர் நேமி முழுதும் ஆண்டார் வழிக்காவல"

என தற்கால அறிவியல் புறப்பாடலை வழிமொழிந்துள்ளது.

சூரியநாயகக் கோட்பாட்டையும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளது, "பூமியை மையமாக வைத்து சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருவதாக பிற நாட்டினர் நம்பிக்கொண்டிருந்த முற்காலத்தில், சூரியனை மையமாக வைத்தே பூமியும், பிற கோள்களும் சுற்றி வருகின்றன" என்ற கருத்தை

"வானிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த விளங்கதிர் ஞாயிறு"

என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளது.

சூரிய மண்டலத்தை நாம் நெருங்க முடியாது; வெப்பம் சுட்டுவிடும் என்பதை பரிபாடலிலும், பிரபஞ்ச இயக்கத்தின் தத்துவத்தை கூறும் வகையில், ஒவ்வொரு அண்டமும் சுழன்று கொண்டிருப்பதுடன், அதில் உள்ள பொருட்களும் தங்களது உருமாறி, வட்டங்களாக சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை,

"அண்டப்பகுதியின் உண்டப் பிறக்கம்... துன்னணுப்புரைய"

என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அணு மற்றும் தொலைபேசி பயன்பாடு இல்லாத காலத்தில் உருவான சங்ககால இலக்கியங்கள் விவரிக்கின்றன; வான் பயணம் இல்லாத காலத்திலேயே, சிலப்பதிகாரத்தில் கண்ணகி வான ஊர்தியில் அழைத்து சென்றதாக,

"வானவூர்தி ஏறினாள் மாதே"

என்ற பாடலும்;

இன்றைய விண் சுற்று நிலையம் குறித்தும்; ஆளற்ற விமானம் குறித்து, உறையூர் முத்துகண்ணன் சாத்தனார் பாடும் பாடலில்

"வலவன் ஏவா வானவூர்தி"

என குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பட்டினப்பாலை முதலான நூல்களில் விவரித்துள்ளது. 

பாரதியின்

"வானையளப்போம் கடல் மீனையளப்போம்,
 சந்திர மண்டலத்தை கண்டு தெளிவோம்";

"காசி நகர் புலவர் பேசும் உரைதான்
 காஞ்சியில் கேட்பதற்கு கருவி செய்வோம்"

என்ற பாடல் படி தற்போது அனைத்தையும் இந்தியர்கள் சாதித்து விட்டதையும்,

"கனவு மெய்ப்பட வேண்டும்" என்பதை போல இலக்கியங்களின் கனவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நனவாக்கியுள்ளது என பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர்.

சங்கத்தமிழ் முதல் தற்போது வரை நமது சாதனைகளை விளக்குவதோடு, பிரமாண்டமான ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் மாதிரி வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:22:47 PM6/25/10
to Min Thamizh
தமிழ் மீது காதல் கொண்ட மணிப்பூர் பெண் அறிஞர்:- திருக்குறளை மொழிபெயர்த்தார்

தமிழ் மீது காதல் கொண்ட மணிப்பூர் பெண்மணி, தமிழில் மொழியியல் ஆய்வு மேற்கொண்டதோடு, திருக்குறளை தாய்மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான நேற்று (25/06/10) நடந்த ஆய்வரங்கத்தில், மணிப்பூரை சேர்ந்த சொய்பம் ரெபிக்கா தேவி பங்கேற்றார்.

இவர், மைசூரிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மொழிபெயர்ப்புத்துறை மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.  அவர் கூறியதாவது:-

சிறுவயதில் என் சொந்த மாநிலமான மணிப்பூரில் படிக்கும்போது, என் ஆசிரியர் அடிக்கடி தமிழை புகழ்ந்து பேசுவார். தமிழிலுள்ள காவியங்களையும், இலக்கியங்களையும் உதாரணமாக முன்னிறுத்தி பேசுவார். அதனால் அப்போதே எனக்கு தமிழ் மொழி மீது காதல் ஏற்பட்டது. பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட தமிழ்க்காதல் என்னுடைய வாழ்வில் தொடர்ந்தது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப்படிப்பை தொடர்ந்தேன். அப்போது நான் தாவரவியல் படிப்பை தேர்வு செய்து படித்தேன். அதில் முதுகலைப்பட்டம் பெற்றேன். ஆனாலும் எனக்கு தமிழின் மீது இருந்த ஈர்ப்பு குறையவில்லை. அந்த படிப்போடு மதுரை காமராஜர் பல்கலையில் பி.லிட்., படித்தேன். அதைத்தொடர்ந்து தமிழ் மொழியியல் பாடத்தை தேர்வு செய்து படித்தேன். எனக்கு மத்திய அரசுப்பணியான மொழிபெயர்ப்புத்துறையில் பணி கிடைத்தது. அப்பணியோடு நான், "லோமென்ஸ் கன்டம்ப்பரரி" மொழிபெயர்ப்பு புத்தகம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். இது ஒரு குழுப்பணியாக இருந்தாலும், அதில் எனது பங்கு அதிகம். மேலும், என் சொந்த மொழியான மனிப்பூரியில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டேன். 

தமிழில் மொழியியல் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். அதற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியை ரேணுகா தேவி எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தை சென்னை மத்திய தொன்மை இலக்கிய மையம் விரைவில் வெளியிட உள்ளது. சிறுவயதில் ஏற்பட்ட தமிழ்க்காதல் என்னை இந்த அளவிற்கு தமிழில் ஆய்வு செய்ய தூண்டியுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி:- தினமலர்


Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:26:06 PM6/25/10
to Min Thamizh
கொரிய மொழிக்கு பல ஆண்டாக தமிழுடன் தொடர்பு:- ஆராய்ச்சியாளர் ஜங்க் நாம்கிம் தகவல்

"கொரிய மொழிக்கும், தமிழுக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான், தமிழிலுள்ள அனைத்து சொற்றொடர்களும் கொரிய மொழியில் இடம் பெற்றுள்ளன" என்று, தமிழ் ஆராய்ச்சியாளர் ஜங்க் நாம்கிம் கூறினார்.



தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்ற தமிழ் ஆராய்ச்சியாளர் ஜங்க்நாம்கிம் கூறியதாவது:-

எங்களது தாய்மொழியான கொரிய மொழி, தமிழ் மொழியின் ஒரு அங்கம்.

தமிழ் தனித்துவமான மொழி. அதற்கென்று உள்ள இலக்கியம் மற்ற மொழிகளில் இல்லை.

தமிழில் உள்ள சொற்களில் பெரும்பாலானவை கொரிய மொழியில் உள்ளன.

தமிழில் தாய் மற்றும் தந்தையை அம்மா, அப்பா என்று அழைக்கிறோம். அதே போல கொரிய மொழியில், அப்பா, அம்மா என்றே அழைக்கிறோம்.

அச்சச்சோ, அப்பாடா என்று எதேச்சையாக சொல்லும் வார்த்தைகள் அனைத்தும், அப்படியே தமிழை போன்றே உச்சரிக்கிறோம்.

உயரம் என்பதை உரம் என்றும், "நீ திரும்ப வா" என்பதை கொரிய மொழியில், "நீ இங்கே பா" என்றும் சொல்கிறோம்.

"புல்லை வெட்டு" என்று சொல்வதை, "புல் வேடா" என்று சொல்கிறோம்.

பெரிய அளவில் தமிழுக்கும், கொரிய மொழிக்கும் வித்தியாசம் இல்லை என்பதை என் ஆய்வில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

நம் உறவு முறைகளில் பெயர் வைத்து அழைக்கும் முறையில், கொரிய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. 

"புதியது" என்ற வார்த்தை தமிழில் பயன்படுத்தப்படுகிறது. அதே வார்த்தை, "புது" என்ற பெயரில் நாங்கள் பயன்படுத்துகிறோம். 

குழந்தைகளை கொஞ்சும் விஷயத்திலும் தமிழில் உச்சரிக்கும் சொற்களையே நாங்கள் பயன்படுத்துகிறோம். 

கொரிய மொழிக்கும், தமிழிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

அதை பற்றி ஆய்வரங்கத்தில் விளக்கமாக பேசுகிறேன்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 5:29:20 PM6/25/10
to Min Thamizh
எங்கள் உயிரோடு கலந்த மொழி தமிழ்:- ஜெர்மன் கல்லூரி மாணவி ஸ்வேட்டா

"ஜப்பானில் பிறந்து ஜெர்மனில் வளர்ந்த நான் தமிழின் மீதிருந்த பாசத்தால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சிரமத்திற்கிடையே கோவைக்கு வந்தேன்,'' என்றார், ஜெர்மன் பல்கலையில் சர்வதேச அரசியல் படிக்கும் மாணவி ஸ்வேட்டா.



தமிழின் வளர்ச்சி அபாரமானது.

தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் எல்லாமே போற்றுதலுக்குரியது.

என் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர். ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்.

நான் சிறுகுழந்தையாக இருந்த போது ஜப்பானில் இருந்தோம்.

பள்ளிப்படிப்பின் போது ஜெர்மன் சென்றோம்.

தற்போது அங்கு தான் இருக்கிறோம்.

எங்களுக்கு ஆங்கிலம் வழக்கமாக பயன்படுத்தும் மொழியாக இருந்தாலும் எங்களது வீட் டில் தமிழ் பேசுகிறோம்.

தமிழிலுள்ள வரலாற்று சிறப்புகளை எனது பெற்றோர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். அதன் காரணமாக எனக்கு தமிழ் மீது அளவிற்கதிகமான பாசம் ஏற்பட்டது.  அதனால் தமிழ் கட்டுரைகளை படிப்பதற்காக நான் தமிழை படிக்க கற்றுக்கொண்டேன். அதன் வாயிலாக ஏராளமான வீர காவியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்துள்ளேன். என் தந்தை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பேசுவதை கேட்கவும், மற்ற தமிழ் அறிஞர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்பதற்காக பார்வையளாராக இங்கு வந்தேன்.

செம்மொழி மாநாட்டில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை பார்க்கும் போது உலகின் இரு கண்களும் திறந்திருப்பதை போல உள்ளது. 

மேற்கத்திய நாட்டிய நடனங்களை போல, தமிழ் நாட்டிய நடனங்களை விரும்பி இரசிப்பது உண்டு. ஜெர்மனில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது.

தமிழை என்றுமே எங்களால் மறக்க முடியாது.

உலகின் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும் எங்கள் உயிரோடு கலந்த மொழி தமிழ்.

இவ்வாறு அவர் கூறினார்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:29:56 PM6/25/10
to Min Thamizh
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி அலுவலகம்:- முதல்வர் கருணாநிதி


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" சிறப்புக் கருத்தரங்கம்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்ச் செம்மொழித் தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்பதை முதல்வர் கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெள்ளிக்கிழமை (25/06/10) நடைபெற்ற "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து முதல்வர் பேசியது:-

இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஏராளமான கருத்துகள், அறிவுரைகள், கட்டளைகளை வழங்கியுள்ளனர்.

தமிழரை வாழ வைக்கவும், தமிழை மேலும் உயர்த்தவும் என்னென்ன செய்ய வேண்டும் என்று இங்கு தலைவர்கள், மக்கள் கொடுத்த கட்டளைகளை ஏற்று நிச்சயம் செயல்படுவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

"எங்கும் தமிழ்" என்று கூறும் நாம், "ஏங்கும் தமிழ்" என்ற கவலையளிக்கும் கட்டத்தில் உள்ளோம்.

கூட்டணி சேர்க்கும் சக்தி:
-

இங்கு 20க்கும் மேற்பட்ட கட்சியினர் உள்ளதைப் பார்த்து, மறுபடியும் பழைய கூட்டணியைப் பார்ப்பது போல் உள்ளதே என்று சிலர் கேட்டனர். ஆனால் கூட்டணி கவிழ்ந்தாலும், பிரிந்தாலும் எல்லா கட்சிகளையும் மீண்டும் சேர்க்கும் சக்தி எனக்கு உள்ளது. அது மாய சக்தியா, மந்திர சக்தியா என்று கேட்டால் அது நான் பெற்ற தமிழ் சக்தி என்றுதான் கூறுவேன்.

இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் வருவார்களா என்று அச்சத்தோடு இருந்தேன். ஆனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் தமிழுக்காக வந்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய தங்கபாலு எனக்கு 10 கோரிக்கைகள் வைத்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ளவரே கோரிக்கை வைக்கிறார்.  

உயர் நீதிமன்றத்தில் தமிழ்:
-

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்கு அவர்கள் ஒப்புதல் வழங்காதது மனமில்லாததால் அல்ல. அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் தான்.

நாங்கள் "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற வழியில் வந்த வீர வரலாற்றுக்கு உரியவர்கள். தமிழுக்காக தமிழகத்தில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அது இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாலோ, அரங்குகளில் நடைபெறும் அமர்வுகளாலோ முடிந்துவிடக் கூடியது அல்ல.

சங்க காலம் முதல் இப்போது வரை தமிழ் பல்வேறு சிக்கல்களைக் கண்டுள்ளது. மூவேந்தர்கள் ஆட்சியில் சங்க இலக்கியம் தோன்றியது. ஆனால் களப்பிரர்கள் ஆட்சியில் தமிழுக்கும் இருண்ட காலம் ஏற்பட்டது.

இதைப் போலவே 14ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை தமிழ் சீரழிந்துபோனது.

அதையேதான் நாம் இன்று கவலையோடு காண்கிறோம்.

இந்த நிலையை மாற்ற பரிதிமாற்கலைஞர் முதலானோர் முயன்றனர்.

இதையடுத்து தமிழுக்கு இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மாநாடு முடிவதற்குள்...:
-

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது போல மைசூரில் உள்ள செம்மொழி அலுவலகத்தை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு வாங்கி நடத்துகிறோம்.

புதிய சட்டசபைக் கட்டடம் கட்டப்பட்ட பிறகு பழைய சட்டப்பேரவைக் கட்டடத்தை என்ன செய்வது என்று யோசித்தோம். இப்போது பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழித் தமிழ் தலைமை அலுவலகம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்குள்ள முதல்வர் அறை, செம்மொழித் தலைமை அலுவலர் அறையாக மாற்றப்படும்.

கோவை மாநாடு முடிவடைவதற்குள் கோட்டையில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு அலுவலகம் அமைக்கும் பணிகள் முடிந்துவிடும்.

செம்மொழி அந்தஸ்து பெற்ற பிறகு நாங்கள் அமைதியாக இருந்துவிடாமல், தமிழ் வாழ, வலிமை பெற நல்ல அடித்தளம் அமைத்து வருகிறோம்.

மொழியின் பெயரை மாற்றி விட்டு, வைரக் கிரீடம் வைத்துவிட்டால் மட்டும் போதும் என்று இல்லாமல் கணினியில் தமிழ், தமிழ் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று எதிர்காலத்தில் எல்லாவற்றையும் பெற நிச்சயம் உழைப்போம் என்றார் முதல்வர்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:32:09 PM6/25/10
to Min Thamizh
எழுத்துச் சீர்திருத்தம் அவசியம்:- கி. வீரமணி


கணினித் தமிழில் சீர்மை பெற, தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெள்ளிக்கிழமை (25/06/10) அவர் மேலும் பேசியது:-

பழம்பெருமை பேசிக் கொண்டே இருந்துவிடாமல், 21ம் நூற்றாண்டுக்கு தமிழைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு துணிச்சலாக மேற்கொள்ள வேண்டும். கணினித் தமிழைப் பெற வேண்டுமானால் எழுத்துச் சீர்திருத்தம் அவசியம்.

தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அரசு உத்தரவிட்டபோதும் எதிர்ப்பு வரத்தான் செய்தது. எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்களும் பின்னாளில் ஏற்றுக்கொள்வார்கள்.

நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை தமிழ் வர வேண்டும்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.

இது மிகவும் அவசியம்.

எங்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், அதைத் தட்டிக்கேட்கும் உரிமை தாயகத்துக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை, உலகத் தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும் என்றார் வீரமணி.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:36:57 PM6/25/10
to Min Thamizh
தமிழ் வளர்ச்சிக்கான 10 கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு.

  1. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்துக் கல்வியும் தமிழே முதலாய், முதல் பாடமாய் முழுவதுமாய் இருக்க வேண்டும். கர்நாடகத்தில் அதுபோன்றுதான் உள்ளது. ஏன் தமிழகத்தில் இருக்கக் கூடாது?
  2. அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழாசிரியர் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  3. ஆரம்ப வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை தமிழ்ப் பாடமுறை சீர்திருத்தப்பட வேண்டும்.
  4. தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை  அமைக்கப்பட வேண்டும். தமிழுக்கு என்றும், தமிழ்ப் பண்பாட்டுக்கு என்றும் தனி அமைச்சர் இருக்க வேண்டும். பிறமொழிச் சிறப்புகள் தமிழிலும், தமிழ் மொழிச் சிறப்புகள் பிறமொழிகளிலும் கொண்டுசெல்ல இத்துறைகள் செயல்பட வேண்டும்.
  5. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் தமிழறிவும், மொழியாற்றலும் பெற்றிட ஆசிரியர்கள், புத்தகங்கள், கல்விக்கூடங்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
  6. வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அவர்களது குழந்தைகள் தமிழ் கற்றிட தேவையான வாய்ப்புகள் உருவாக்கித் தர வேண்டும்.   
  7. இயல், இசை, நாடகம் சங்கமிக்கும் "முத்தமிழ்ச் சங்கம்" தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிறுவப்பட வேண்டும். அதன் தலைவராக முதல்வர் கருணாநிதி முதல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
  8. எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், பிற மாநிலத் தலைநகரங்களிலும், தமிழ் பேசும் பிற உலக நாடுகளிலும் செம்மொழிச் சங்கத்தின் கிளைகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  9. தமிழில் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் வகையில் கணினித் தமிழ் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  10. செம்மொழித் தகுதி பெற்ற தமிழுக்கான வளர்ச்சித் தொகையை மத்திய அரசு விரைந்து அளிக்க வேண்டும்
என்றார் கே.வீ.தங்கபாலு.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:41:48 PM6/25/10
to Min Thamizh
தமிழ் உலகமெலாம் பரவிட அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்:- டி.ராஜா




தமிழை உலகமெங்கும் பரவச் செய்திட அறிவியல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.
ராஜா எம்.பி. வலியுறுத்தினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி வெள்ளிக்கிழமை (25/06/10) நடைபெற்ற "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" எனும் சிறப்புக் கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரை:-

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மொழிக்கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2004, ஜூன் 7ம் தேதி குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க பரிசீலனைக் குழு அமைக்கப்படும் என்றார்.

தமிழை செம்மொழி என்று பிரகடனப் படுத்தவும் செய்தார். அன்றைக்கு கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் முழுமையாக இதை வரவேற்றனர்.  

தமிழகத்தில் ஆட்சிமொழியாக இருந்தாலும், இந்திய அளவில் தமிழின் நிலை என்ன என்றுதான் பார்க்க வேண்டும். நாம் சங்ககால, மத்தியகால பெருமைகளை மட்டும் பேசுவதில் பயனில்லை. தற்போது ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும். இலங்கையில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்று ஐக்கிய நாடுகள் சபை சொன்னது. ஆனால், அந்த மக்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, கட்சி வேறுபாடின்றி நாம் யோசித்தாக வேண்டும்.

தமிழ், சீனம்,
லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரூ, கிரேக்க மொழிகளை யுனெஸ்கோ நிறுவனம் செம்மொழியாக கருதுகிறது. இதில் தனித்துவம் மிக்க மொழியாக தமிழ் உள்ளது. செம்மொழிக்கான 11 இலக்கண விதிகளையும் கொண்டுள்ளது. ஆனால், இன்றைக்கு தமிழின் நிலை என்னவாக உள்ளது என்பதை யோசிக்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டப்படி 8வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளும் ஆட்சிமொழியாக வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மத்திய அரசும் தனது பொறுப்பை இதில் உணர்ந்து செயல்பட வேண்டும். 18 மொழிகளுக்கும் அரசியல் சாசனப் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசும் நிலை உருவாகும்.

தமிழகத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதிடலாம் என்றபோதிலும், நீதிபதியிடம்  ஆங்கிலத்தில்தான் முறையிட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே, நீதிமன்ற வழக்கு மொழி, பயிற்றுமொழியை ஏற்படுத்திட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாகி வரும் இக்காலத்தில் தமிழ் உள்பட எல்லா மொழிகளையும் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. 

தமிழ்மொழியை தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பிற செம்மொழிகளைப் பயில்வதற்கான இருக்கைகளையும், பிற நாட்டுப் பல்கலைகளில் தமிழ்மொழி இருக்கைகளையும் ஏற்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க பல அறிஞர்கள் போராடி வருகின்றனர். இதற்கான அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. செம்மொழி பலம் தமிழுக்கு உள்ளதால், அதை அறிவியல் ஆதார மொழியாக வளர்க்க வேண்டும். அப்போதுதான் உலகம் முழுதும் பரவும் நிலை ஏற்படும் என்றார் டி.
ராஜா.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:45:44 PM6/25/10
to Min Thamizh
உலகத் தமிழர்களுக்காக தனித் துறை வேண்டும்:- இல. கணேசன்




உலகத் தமிழர்களின் பிரச்னைகளைக் கவனித்து மத்திய அரசுக்கு எடுத்தியம்பும் வகையிலான தனித் துறையை உருவாக்க வேண்டும் என்றார் பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன்.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், வெள்ளிக்கிழமை (25/06/10) இரவு அவர் மேலும் பேசியது:-

ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், தமிழால் இங்கே ஒன்றுபட்டிருக்கிறோம். "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற முழக்கம் ஒன்றும் புதிதல்ல. ம.பொ.சி. தொடங்கிய முழக்கத்தை இப்போது கருணாநிதி காலம் வரை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

எதிர்காலத்திலும் இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்காமல் அமலாக்க வேண்டும்.

கையெழுத்து போடும்போதும், முன்னெழுத்தையும் சேர்த்து தமிழில் போடுவோம்.

அரசு செய்ய வேண்டும் என்றபோதும்கூட, மக்களாகச் செ
ய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.

அதேபோல, பேசும்போது ஆங்கிலக் கலப்பின்றிப் பேசுவோம்.

மொழி என்பது வெறும் கருவிதான் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது பண்பாட்டின் அடையாளம்.

எனவே, 100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தமிழில் பேசிப் பார்த்தால் அது ஆச்சரியம் என்ற நிலை வரக் கூடாது.

தமிழ்நாட்டில் பிறந்தவன் ஆயிரம் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தமிழ் தெரியவில்லை என்றால் அவனை தற்குறி என்றுதான் கூறுவேன்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைக் காக்க தனித்துறையை உருவாக்கி, அதன்மூலம் மத்திய அரசுக்கு எடுத்தியம்ப வேண்டும்.

இதற்கான சட்டப் பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை முதல்வரால் எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

கணினியில் இயல்பாகவே மொழிபெயர்ப்பு செய்யும் மென்பொருளை உருவாக்கிட வேண்டும்.

அப்போது உலகம் முழுவதும், அனைத்து மொழிகளிலும் தமிழ்ப் பண்பாடு செழிக்கும், என்றார் இல. கணேசன்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:49:47 PM6/25/10
to Min Thamizh
மக்கள் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சிக்கு அர்த்தமில்லை:- சீதாராம் யெச்சூரி



கருத்தரங்கில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியுடன் அளவளாவும் முதல்வர் கருணாநிதி.

மக்களின் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை என்றார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், வெள்ளிக்கிழமை (25/06/10) இரவு நடந்த கருத்தரங்கில் அவர் பேசியது:-

மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்த ஒன்று.

மொழியின் தோற்றம் குறித்து ஜெர்மானிய தத்துவம் என்ற நூலில் அது சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறினார் காரல் மார்க்ஸ்.

பல்வேறு மொழிகளுக்கிடையே காணப்படும் பொதுமைப் பண்புகள் மற்றும் அவை நவீன காலத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, செறிவான பண்பாட்டு மரபு ஆகிவயற்றை ஆய்வுக்கு உள்படுத்தி மேலும் வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருமே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள். ஆனால், மூவரும் தெலுங்கில் பாடினர். ஆயினும் அந்த இசை கர்நாடக சங்கீதம் என்று அழைக்கப்பட்டது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. தெலுங்கில் பாடப்பட்ட இசையை சிரமமின்றி வேறு  மொழிகளில் எளிதில் மொழி பெயர்க்க முடியும். இந்த உண்மையை மறுத்து திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜர் உத்சவத்தின்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறுகிய வெறி மனப்பான்மை கொண்டவர்களின் செயல் இது.

மக்களின் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை. மக்களாட்சி வெற்றிகரமாக நடந்திட, அரசு நிர்வாகத்துடன் எளிதில் அணுகும் தன்மை மிகவும் முக்கியமானது. ஆள்பவர்களையும், ஆளப்படுபவர்களையும் ஒன்றாக இணைப்பது மட்டுமின்றி, மொழி என்பது ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது என்பதை நிர்ணயிக்கும் கருவியாகவும் உள்ளது.

மொழி சமூகத்தின் முக்கியமான அடையாளம்.

அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வியல் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மொழி திகழ்கிறது.

மும்மொழியைத் திணிக்கும் வலைக்குள் சிக்கிவிடாமல் அந்தந்த மண்ணில் பேசப்படும் மொழிகளின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். குறுகிய மொழிவெறி மனப்பான்மையால் இதைச் சாதிக்க முடியாது.

இன்றைய உலகில் எந்தவொரு மனிதனும் தனித்த அடையாளத்துடன் தன்னை நிறுத்திக் கொள்ள முடியாது. பன்முக அடையாளத்தையும் பேண வேண்டியுள்ளது.

இன்றைக்கும் பொருந்தக்கூடிய பெருமைமிகு இலக்கியங்களை தமிழ் கொண்டுள்ளது. ஏட்டில் எழுதப்படாத வாழ்மொழி வரலாற்றுச் செல்வங்களும் மிகுதியாக உள்ளன. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டும்.

நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. தேசிய இயக்கம், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடமை இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்புகளால் செழுமையடைந்த தமிழ் மொழியில், அதன் செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து அறிவியல் கண்ணோட்டத்துடனான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார் யெச்சூரி.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:53:09 PM6/25/10
to Min Thamizh
இப்போதுதான் இந்த மாநாடு தேவை:- ராம.வீரப்பன்



செம்மொழி மாநாட்டையொட்டி வெள்ளிக்கிழமை (25/06/10) நடைபெற்ற "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" கருத்தரங்கில் பங்கேற்று ராம. வீரப்பன் பேசியது:-

இன்றைக்கு இந்த மாநாடு தேவையா என்று சிலர் கேட்கின்றனர். 

அவர்களுக்கெல்லாம் ஒரே பதில், இப்போதுதான் இந்த மாநாடு தேவை என்பதே.

15 ஆண்டுகள் கழித்து தமிழுக்கு மாநாடு நடைபெறுகிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகளுக்கும் இப்பொழுது நடைபெறும் மாநாட்டுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு, தற்போது நடைபெறுவது செம்மொழி மாநாடு.

விழுந்து விழுந்து, எழுந்து எழுந்து, எதிர்ப்புகளைச் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி தமிழ். அதை செம்மொழி ஆக்கி அழகு பார்க்க நூறு ஆண்டுகள் போராட வேண்டியிருந்திருக்கிறது.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்று தமிழத்தில் ஆக்க வேண்டும். இதுவே இக் கருத்தரங்கின் நோக்கம்.

தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், பரப்பவும் இணையதளத்தால் மட்டுமே முடியும். அதற்காகவே செம்மொழி மாநாட்டுடன் இணையதள மாநாடும் நடத்தப்படுகிறது.

சில கருத்துகளைக் கூறி விவாதத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. சிலர் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கின்றனர். தமிழகத்தில் தற்போது தமிழ்தான் ஆட்சி மொழி.

சில விஷயங்களில் முதல்வர் கருணாநிதி பொறுமையாகத்தான் இருப்பார். ஆனால் முடிவில் பலன் கிடைத்ததா என்பதுதான் முக்கியம்.

கணினியின் மூலம், இணையதளத்தின் மூலம் இளைய சமுதாயம் தமிழை நோக்கித் திரும்பியிருக்கிறது.

உலகம் முழுவதும் தமிழைக் கொண்டு செல்ல வேண்டுமானால், நம் அனைவரின் உள்ளமும் உணர்வும் அந்த நோக்கிலேயே இருக்க வேண்டும், என்றார் அவர்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:56:23 PM6/25/10
to Min Thamizh
ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு அமைக்க வேண்டும்:- தொல். திருமாவளவன்



கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெள்ளிக்கிழமை (25/06/10) மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியது:-

"தமிழா, உன் உறுதியை இழந்துவிடாதே என்று கூறுவதற்காகத்தான், இந்த மாநாட்டை முதல்வர் கருணாநிதி இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார். 

அறிவுசார்ந்த துறைகளில் தமிழ் ஏற்றம் பெற வேண்டும் என்பது, முதல்வர் வெளிப்படையாக அறிவித்திருக்கும் மாநாட்டின் நோக்கம்.

சோர்ந்துவிடாமல், தமிழர்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும், மொழி உணர்வை ஊக்கப்படுத்த வேண்டும். இன உணர்வு இருந்தால்தான் ஒற்றுமையும் பாதுகாப்பும் உறுதிப்படும்.

தமிழை ஆட்சி மொழியாக்குங்கள். இதற்காக இந்த அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். எந்த மதிப்பும் இல்லை. செம்மொழியான தமிழ் ஆட்சியில் இல்லை. தமிழை ஆட்சிமொழி ஆக்காவிட்டால், இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ஆவணக் காப்பகத்தில்தான் கிடக்கும்.

அடுத்த வேண்டுகோள்.

ஈழத் தமிழர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துங்கள்" என்று கோரிக்கை விடுத்தார் திருமாவளவன்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 7:59:55 PM6/25/10
to Min Thamizh
தமிழ் வாழ தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:- ஜி.கே. மணி




செம்மொழி மாநாட்டையொட்டி வெள்ளிக்கிழமை (25/06/10) நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில்
பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது:-

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதை அரசு மட்டும் செய்தால் போதாது; ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டும்.

வெளிநாட்டினர் தூய ஆங்கிலம், கலப்பில்லாத தமிழில் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோ எதிர்மாறாக உள்ளது.

ஒவ்வொரு தமிழனும் தூய, ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் பேச வேண்டும்.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற நிலை வர தமிழில் படிக்க வேண்டும்.

பள்ளிகளில் பிரெஞ்சு படிக்கலாம், ஹிந்தி படிக்கலாம், ஆனால் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை பயின்று பட்டம் பெற்றுவிடலாம் என்ற நிலை இருந்தது. அதை அரசு முயன்று இப்போது மாற்றியுள்ளது. அதற்குத் தீர்வு கண்டவர் முதல்வர் கருணாநிதி.

ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஊடகத் துறையும் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்ற வேண்டும். 

தமிழ் வாழ்வதற்கு தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அண்டை நாட்டில் அல்லலுறும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க, அரசும், தாயகத்துத் தமிழர்களும் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

Kannan Natarajan

unread,
Jun 25, 2010, 8:04:45 PM6/25/10
to Min Thamizh
அரபியையும் தமிழையும் ஒப்பாய்வு செய்ய வேண்டும்:- கே.எம். காதர் மொகிதீன்


அரபியையும், தமிழையும் ஒப்பாய்வு செய்வதற்கான ஓர் ஆய்வகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3வது நாளான வெள்ளிக்கிழமை (25/06/10), கோவையில் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-

உலகின் முதல் மாந்தரும், மூல மொழியும் தோன்றிய தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தமிழ்த் திருவிழாவில் பங்கேற்பதில் அனைவரும் பெருமை கொள்கின்றனர்.

தமிழகத்தில் இஸ்லாமிய நெறியும், தமிழ்நெறியும் வேறல்ல. தமிழ்நெறிதான் இஸ்லாமிய நெறி. இஸ்லாமிய நெறிதான் தமிழ்நெறி.

  • காயிதே மில்லத்
  • அப்துல் லத்தீப்
  • வடகரை பக்கர்
  • மணவை முஸ்தபா
  • கவிக்கோ அப்துல் ரகுமான்
  • இலங்கை அரபுத் தமிழ் அகராதியை எழுதிய கலிலோன் மௌலானா
போன்றோரெல்லாம் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகவே, தமிழ்நெறியையும், இஸ்லாமிய நெறியையும் வலிமைப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் தமிழக முதல்வர் இஸ்லாமிய உலமாக்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி அரபியையும், தமிழையும் ஒப்பாய்வு செய்யும் ஓர் ஆய்வகத்தை உருவாக்கிட வேண்டும்.

தமிழகத்தின் தொன்மையான தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழ்நெறியின் மூலாதாரமாகும். இந்த இரண்டையும் அடிப்படையாககக் கொண்டு செயல்பட்டால் தமிழ்நெறி உலகமெலாம் பரவிடும்.

மேலும், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காக்க மானிடநேய நெறியான தமிழ்நெறியைப் பரப்பிட வேண்டும். ஆகவே, உயர்தனிச் செம்மொழியான தமிழ்நெறியை உலகமெல்லாம் கொண்டு செல்ல வேண்டும்.

மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சி கண்டிருந்த நிலையில், சிறிதுகாலம் வளர்ச்சி தடைபட்டிருந்தது. தற்போது முதல்வர் கருணாநிதியின் ஆளுமையால் அது தழைத்து ஓங்குகிறது, என்றார் அவர்.

Chandrasekaran

unread,
Jun 25, 2010, 10:27:51 PM6/25/10
to mint...@googlegroups.com
>      “தமிழை -  அமுதத் தமிழ், இன்பத் தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ்,  சுந்தரத் தமிழ், தூய தமிழ், தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் -  என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும்,  போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.”
 
 
இந்தத் தமிழ்-கள் எல்லாம் எங்கு கிடைக்கும்? எனக்கென்னவோ நேற்று ‘இனியவை நாற்பது ஊர்வலத்தைப் பார்த்த் பிறகு,  இப்போது வாழ்வது சங்கத்தமிழ் தான். அதற்குப் பின் தமிழ் வாழ்வதன் அடையாளத்தையே காணோம் என்று தான் தோன்றிற்று.
 
வெ.சா.. ! வெச்சாருய்யா ஆப்பு! சூப்பர்!
சந்திரா 

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

தாரகை

unread,
Jun 25, 2010, 10:38:38 PM6/25/10
to மின்தமிழ்
வெ.சா.. ! வெச்சாருய்யா ஆப்பு! சூப்பர்!

:-(

Chandrasekaran

unread,
Jun 25, 2010, 10:40:58 PM6/25/10
to mint...@googlegroups.com
புலிக்குப் பிறந்தது பூனைக்குட்டி ஆகுமா? இது நம் நா.கண்ணன் அவர்களின் அருமைப் புதல்வி.
சந்திரா
2010/6/26 Kannan Natarajan <thar...@gmail.com>

தாரகை

unread,
Jun 25, 2010, 10:48:29 PM6/25/10
to மின்தமிழ்
> புலிக்குப் பிறந்தது பூனைக்குட்டி ஆகுமா?
> இது நம் நா.கண்ணன் அவர்களின் அருமைப்புதல்வி.

அட:-)

பாராட்டுக்கள்.

நண்பன்

unread,
Jun 26, 2010, 3:29:24 AM6/26/10
to mint...@googlegroups.com
செம்மொழி மாநாட்டில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை பார்க்கும் போது உலகின் இரு கண்களும் திறந்திருப்பதை போல உள்ளது. 

மேற்கத்திய நாட்டிய நடனங்களை போல, தமிழ் நாட்டிய நடனங்களை விரும்பி இரசிப்பது உண்டு. ஜெர்மனில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது.

தமிழை என்றுமே எங்களால் மறக்க முடியாது.

உலகின் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும் எங்கள் உயிரோடு கலந்த மொழி தமிழ்.

இவ்வாறு அவர் கூறினார்.

2010/6/26 தாரகை <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
குற்றம் சொல்லின்
சுற்றம் இல்லை

நன்றியுடன் நாசரு  

Kannan Natarajan

unread,
Jun 26, 2010, 8:06:46 PM6/26/10
to Min Thamizh
"மலர்கள்" மலர்ந்த மலர்



தமிழக அரசின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் இன்றைய அச்சு நேர்த்தியுடன் வண்ணம் மிக்க மலராக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் திறப்பிலேயே முதல்வர் மு. கருணாநிதி மாநாட்டின் மைய நோக்கப் பாடலுடன் இதழ் விரிக்கிறது மலர். 

அடுத்து இலச்சினை.

அதற்கடுத்து, மணியன் செல்வத்தின் கைவண்ணத்தில் தமிழ்த்தாய், அதைத் தொடர்ந்து வாழ்த்துகள், பிறகு கட்டுரைகள் என மணம் கமழ்கிறது.

முதல் கட்டுரை முதல்வர் எழுதியுள்ள "செம்மொழித் தமிழுக்குச் சிறப்புகள் சேர்ப்போம்" கட்டுரை.

அடுத்தது பேராசிரியர் அன்பழகன், மூன்றாவதாக கனிமொழி எம்.பி எழுதியுள்ள "பிறர் தர வாரா" கட்டுரை என பட்டியல் நீள்கிறது.

செம்மொழித் தமிழ் என்ற பொருண்மையில் 12 தமிழறிஞர்களின் (கால்டுவெல், பரிதிமாற்கலைஞர் உள்பட) கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அனைவரும் ஏற்கெனவே நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் கட்டுரை வடித்தவர்கள் தான்.

பெரும்பாலும் அதே சிந்தனை மறுவார்ப்புகளாக, வெவ்வேறு தலைப்புகளில் இம் மலரில் இடம் பெற்றுள்ளன.

அடுத்தது கவிதைகள்.

இதில்,
    • அப்துல் ரகுமான்
    • வாலி
    • வைரமுத்து
    • மு. மேத்தா
    • பா. விஜய்
    • பழநிபாரதி
    • நா. முத்துகுமார்
    • கபிலன்
    • சல்மா
    உள்பட 34 கவிஞர்களின் கவிதைகள்.

    இதிலும் மனதைத் தொடும் கவிதைகள் சிலவே.

    • கலையும் பண்பாடும் என்ற பொருண்மையில் 13 கட்டுரைகள்
    • சமயப் பொதுமை கண்ட தமிழ் என்ற பொருண்மையில் 12 கட்டுரைகள்
    • இலக்கியம் என்ற பொருண்மையில் 43 கட்டுரைகள்
    • இலக்கணமும் மொழியியலும் பகுதியில் 5 கட்டுரைகள்
    • தொல்லியல் பகுதியில் 11 கட்டுரைகள்
    • ஆட்சித் தமிழ் பொருண்மையில் 5 கட்டுரைகள்
    • அறிவியல் தமிழ் தலைப்பில் 12 கட்டுரைகள்
    இடம் பெற்றுள்ளன.

    துறை சார்ந்த பேராசிரியர்கள் எழுதியுள்ள இக்கட்டுரைகள் அவரவர் துறை சார்பில் நடைபெற்றுவரும் மாறுதல் மற்றும் சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்துகின்றன.

    இம் மலரில் பார்த்தவுடன் மனதிற்குப் பிடித்தது:
    -

    1. பாட்டும் படமும் பகுதியில், சிலப்பதிகாரம் கொலைக்களக் காதையில், சிலம்பு விற்க மதுரை சென்ற கணவன் வீடுவந்து உண்பதற்காக சமைக்கிறாள் கண்ணகி. கோபுலுவின் சித்திரம் மிக அழகு. கண்ணகி சிலையுடன் சேரன் செங்குட்டுவன் பவனியை சித்திரிக்கும் மணியம் (இந்தப் பழைய படம் எப்படிக் கிடைத்ததோ?) வரைந்த படம்,

    2. தமிழ் இலக்கியத்தில் - புதுமையும், மரபும் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியுள்ள இரு பக்கக் கட்டுரை!

    "புதுமையும் மரபும் ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமாய் மோதிக் கொள்கிற நிலை இலக்கியப் பிரச்னை மட்டுமல்ல, வாழ்க்கையில் எது,எது பிரச்னை ஆகிறதோ அதெல்லாம் இலக்கியத்திலும் பிரச்னை ஆகிவிடுகிறது...."

    தொடக்கமே ஜெயகாந்தனின் எழுத்து இன்னும் தன் இளமை மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

    "தமிழைத் தனது வாழ்க்கையின்
    லட்சியமாகக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞருக்குத் தமிழ் உலகமும், உலகத் தமிழரும் இந்தப் பெரும் பணி சிறக்க வாழ்த்தி நிற்கிறார்கள்", என்கிறபோது ஜெயகாந்தனின் முதுமையும் தெரிகிறது.

    3. இந்த மலரில் கருத்து வேறுபாடே இல்லாமல் மனம் திறந்து பாராட்டக்கூடிய பகுதி கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இடம்பெறும் 99 மலர்களையும் மிக அழகாகப் படம் பிடித்து இடம்பெற வைத்திருப்பதுதான். இன்றைய தமிழ் உலகம் பல பூக்களின் பெயரைக்கூட ஆங்கிலத்தில் அறிந்துகொண்டிருக்கும் நிலையில், 99 மலர்களின் தமிழ்ப் பெயரையும் அந்த மலரின் வண்ணத் தோற்றத்தையும் பதிவு செய்திருக்கிறது இந்த மலர். இந்த மலர்ப் படங்களை அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் பார்க்கும்படி செய்யவும், இதன் தாவரவியல் பெயர்களுடன் அறிமுகம் செய்வதுமான பணி தமிழகக் கல்வித் துறையைச் சார்ந்தது.

    இம் மலர் ரூ. 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இன்னும் கொஞ்சம் தேடலுடன் புதிய அறிஞர்களைத் தேடிப்போய் கட்டுரைகள் வாங்கிப் போட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    15 ஆண்டுகளுக்குப் பின்பும் முந்தைய உலகத் தமிழ் மாநாட்டு மலரில் பார்த்த பல முகங்களையே இந்த மலரிலும் பார்க்கும்போது, புதிதாகத் தமிழறிஞர்கள் உருவாகவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.  

    மலரில் ஆங்கிலக் கட்டுரைகள் என்று ஒரு பகுதி இருக்கிறது.

    இதில் எழுதியிருப்பவர்கள் எல்லாருமே தமிழர்கள்.

    தமிழ் ஆய்வு செய்யும் வெளிநாட்டு அறிஞர்களின் ஆங்கிலக் கட்டுரைகளை இடம்பெறச் செய்திருந்தால் மலருக்கு மெருகேற்றி இருக்கும். 

    இது தவிர, ஆய்வரங்கச் சிறப்பு மலரும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

    மாநாட்டு ஆய்வரங்குகளில் வழங்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு, ஆய்வுச் சுருக்கங்கள் இதில் உள்ளன.

    இருப்பினும், இவை எல்லாவற்றையும்விட மிக,மிக முக்கியமான பகுதி - பங்கேற்பாளர் முகவரி.

    சுமார் 40 பக்கங்களில் சுமார் 800 தமிழறிஞர்களின் முகவரி, தொலைபேசி, இணையமுகவரி என முழுமையான தகவல்கள் உள்ளன.

    தமிழ் ஆய்வுகள் செய்வோருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மிக முக்கியமான பட்டியலாக இது இருக்கிறது.

    பாராட்டுக்குரியது.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 8:14:11 PM6/26/10
    to Min Thamizh
    "தமிழ் இலக்கியத்தின் வயது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது"!



    "செம்மொழித் தகுதி" என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி.

    தொன்மைமிக்க தமிழ் இலக்கியத்தின் வயது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 4ம் நாளான சனிக்கிழமை (26/06/10), மாநாட்டுப் பொது அரங்கில் "செம்மொழித் தகுதி" எனும் தலைப்பிலான கருத்தரங்கில் "தொன்மையில்" எனும் பொருளில் அவர் பேசியது:-

    வணிகத்தின் மொழி ஆங்கிலம், தூதின் மொழி பிரெஞ்சு, காதலின் மொழி இத்தாலி, தத்துவத்தின் மொழி ஜெர்மனி. ஆனால், உலகிலேயே பக்தியின் மொழி தமிழ்தான்.

    காயப்பட்டு, சேதப்பட்டு, சிதைக்கப்பட்டுக் கிடந்த தமிழைச்  செம்மொழி எனும் சிம்மாசனத்தில் அமர வைத்து மணிமகுடம் சூட்டிய பெருமை கருணாநிதியையே சாரும்.

    தொல்காப்பிய இலக்கண மருந்தை இலக்கியத் தேனில் குழைத்து தொல்காப்பியத்தை பாமரனும் படிக்கும் வகையில் தொல்காப்பியப் பூங்காவாக மாற்றிக் காட்டினார்.  

    தமிழ் இலக்கணத்தின் தொடை வகைகள் 13,699 ஆகும். இதில் எதிலும் சேராத செந்தொடை வகைகள் 8556 ஆகும்.

    இவற்றின் இலக்கிய வளம், காலத்தைக் கணக்கில் கொண்டால் அவை தொல்காப்பியம் தோன்றியதற்கு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும்.

    அப்படியானால், தமிழ் இலக்கியத்தின் வயது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்று இலக்கணச் சான்றுகள் கூறுகின்றன.

    ஆகவே, தமிழின் தொன்மையின் அடையாளத்தை இலக்கியம், இலக்கணம் வாயிலாக அறிய முடிகிறது.

    குறுந்தொகையின் காலம்கூட கி.மு. 5ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக உள்ளது.

    எழுத்தின் ஆதாரமாகத் தமிழின் "யா" என்ற எழுத்தும் உள்ளது.

    சேரனின் மூதாதையர்கூட சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களும் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர்கள், அவர்களது மொழியும் தமிழே என்று கல்வெட்டுகள், காசுகள், சில்லுகள் தெரிவிக்கின்றன. 

    மண்பாண்டங்களில் தமிழ் எழுத்துகள் அதிகமாகக் காணப்படுவதும் தமிழகத்தில்தான் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோர் எடுத்துரைக்கின்றனர். அப்படியெனில், தமிழர்கள் எவ்வளவு புராதன காலத்திலேயே எழுத்தறிவைப் பெற்றவர்களாக விளங்கி வந்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரியவரும்.

    ஆகையால், தொன்மை என்பது நாம் வாழ்ந்ததன் பழைய அடையாளம் அல்ல. நமது ஆணிவேரின் அடையாளம் என்றார்.

    கருத்தரங்கில், "பன்மொழிகளை ஈன்றதில்" எனும் தலைப்பில் முனைவர் ஜி.ஜான் சாமுவேல் பேசியதாவது:-

    தமிழ், பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மைப் பண்பைப் பெற்ற மொழியாகும். ஒரு காலத்தில் தமிழ் மொழியானது இந்தியாவில் உள்ள சம்ஸ்கிருதம் மொழியிலிருந்துதான் பிறந்தது என்ற தவறான கருத்து நிலவியது. காரணம், அப்போது மொழி பற்றிய ஆராய்ச்சி பெரிய அளவில் இல்லை. முதல் முதலாக மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது தமிழானது தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றின் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் பின்னர், தமிழ்மொழிதான் மற்ற 3 மொழிகளுக்கும் தாய் என்றும் தெரியவந்தது.

    வெளிநாட்டு அறிஞர் கால்டுவெல் 1856ம் ஆண்டில் 9 மொழிகளுக்கு தமிழ்தான் தாய் என்று தெரிவித்தார். அதன்பின்னர், 14 மொழிகள் என்றும் தற்போது 30 மொழிகளுக்குத் தமிழ் தாய்மொழி என்றும் தெரியவந்துள்ளது.

    ஜப்பானிய மொழிகூட தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியுள்ளது.

    ஆகவே,  தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்றார்.

    "பண்பாட்டுக் கொடையில்" எனும் தலைப்பில் பேசிய பேராசிரியர் வளனரசு, விருந்தோம்பல் என்பது தமிழனின் பண்பாட்டில் தனிச்சிறப்பாகும்.

    தமிழன் கடல் பற்றி அக்காலத்திலேயே தீர்க்க தரிசனம் கொண்டிருந்தான்.

    கடல் சங்கிலே கூட,
    • வலம்புரிச் சங்கு
    • சலம்சலம் சங்கு
    • பாஞ்சசன்யம்
    உள்ளிட்ட பல்வேறு சங்குகளையும், கப்பல்களுக்கு 25க்கும் மேற்பட்ட பெயர்களையும் இட்டு அழைத்தவன் தமிழன் என்றார் வளனரசு.

    "இலக்கியச் செழுமையில்" எனும் தலைப்பில் பேராசிரியர் ஆறு.அழகப்பன் பேசினார்.

    இக் கருத்தரங்கில், "உலகப் பொதுமையில்" எனும் தலைப்பில் பேராசிரியர்  இளம்பிறை மணிமாறன், "இலக்கணச் செப்பத்தில்" எனும் தலைப்பில் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை உள்ளிட்டோர் பேசினர்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 8:43:01 PM6/26/10
    to Min Thamizh
    உலக நாகரிகத்துக்கு அடிப்படை திராவிட நாகரிகமே:- க.அன்பழகன்




    உலக நாகரிகத்துக்கெல்லாம் திராவிட நாகரிகம்தான் அடிப்படை நாகரிகமாகக் கருதப்படுகிறது என்று நிதியமைச்சர் க.அன்பழகன் குறிப்பிட்டார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி சனிக்கிழமை நடைபெற்ற "தமிழ்ச் செம்மொழியின் தனித்தன்மை" எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் ஆற்றிய தலைமையுரை:-

    தமிழ்ச் சொற்கள் பல, வடமொழியில் கலந்தன. பின்னர், வடமொழிப் பேச்சு வழக்கிலிருந்து விடுபட்டதால் அதில் கூடுதல் தமிழ் மொழிக் கலப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் போனது.

    ஆனால், தமிழ் தொடர்ந்து பேச்சு வழக்கில் இருந்ததால் வடமொழிச் சொற்கள் கலப்பது நீடித்தது. அதைக்காரணம் காட்டி, தமிழை மட்டுப்படுத்தும் முயற்சிகள் இடைக்காலம் முதல் நடைபெற்றது.

    ஆனால், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் தனித்தமிழ் முயற்சிகள், அதனைத் தடுப்பதில் நல்ல பங்களிப்பை ஏற்படுத்தியது.உலகத்திலேயே தமிழர்கள்தான் முதல் முதலாகத் தோன்றிய இனம் என்பதற்கு குமரிக்கண்டம் ஒரு சான்றாக உள்ளது.

    ஒரு மொழி கண்ட நாகரிகம், மூதறிஞர்கள் கண்ட நாகரிகம் என்றால் அது தமிழ் மொழியைத்தான் குறிப்பிடும்.

    மொழி வேறு, நாம் வேறு என்பதை நான்மறை என்று தெரிவிக்கப்பட்டது. அது ஆரம்ப காலத்தில் எவ்வாறு தோன்றியிருக்கும் என்றால் ஒரு மறையாகத் தோன்றி நாளடைவில் மும்மறையாக உருவெடுத்து பிற்காலத்தில் நான்மறையாகத் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

    உலகத்தார் அனைவருக்கும் தமிழர்தான் நல்வழி காட்டினர் என்று புராணங்களில் கூறப்படுகிறது.

    அறிவியல் ஆய்வாளர்கள் உலகில் ஒரே ஒரு மொழிதான் தோன்றியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர்.

    ஒரு மொழி என்பது இன்றைய வளர்ச்சி பெற்ற மொழியாக இருப்பதற்குக் காரணம், தொடக்கத்தில் அம்மொழி குழந்தையின் மழலை மொழியாகத்தான் தோன்றியிருக்கக்கூடும்.

    உலக நாகரிகத்திற்கெல்லாம் திராவிட நாகரிகம்தான் அடிப்படை நாகரிகமாகக் கருதப்படுகிறது. இதை உணர்ந்துதான் பரிதிமாற் கலைஞர் பல தெளிவான கட்டுரைகளை வழங்கியுள்ளார். 1887ம் ஆண்டிலேயே தமிழ் குறித்த கட்டுரைகளை வரைந்து, தமிழ்மொழி செம்மொழியாகும் என்று அப்போதே தனது கருத்துகளை உலகுக்கு உணர்த்தியவர். அவர் மற்ற மொழிகளை வெறுத்தவர் அல்ல. வடமொழிச் சொற்கள் தமிழிலே கலந்துவிடக் கூடாது என்பதற்காகவே தமிழ்ப் பணியாற்றியவர்.

    தற்போது தமிழ்மொழிக்கு முதல்வர் கருணாநிதியால் செம்மொழித் தகுதி கிடைத்துள்ளது.

    இம்மொழியைத் தொடர்ந்து போற்றிக் காக்க அனைவரும் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 8:48:52 PM6/26/10
    to Min Thamizh
    மறைமலையடிகள் பேரன் நடத்திய ஆய்வரங்கில் கட்டுரை சமர்ப்பித்த பரிதிமாற் கலைஞர் பேரன்



    செம்மொழி மாநாட்டில், தமிழும் உலகச் செம்மொழிகளும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கம், மறைமலையடிகளாரின் பேரன் ஆளுடையப்பிள்ளை தலைமையில் சனிக்கிழமை (26/06/10) நடைபெற்றது.

    இதில் பரிதிமாற் கலைஞரின் பேரன் பேராசிரியர் வி.சு. கோவிந்தன் கலந்து கொண்டு "பரிதிமாற் கலைஞரின் செம்மொழிச் சிந்தனை" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.

    ஆய்வரங்கிற்கு தலைமை தாங்கி ஆளுடையப்பிள்ளை பேசியது:-

    லத்தீன், கிரேக்க மொழிகள் ஐரோப்பியரிடையே செம்மொழிகளாக வலம் வந்ததைப் போல இந்திய பல்கலைக்கழகங்களில் அரபிக், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகியவையே செம்மொழிகளாக கருதப்பட்டு முக்கியத்துவம் வழங்கப்பட்டன.

    ஆனால் அரபிக், பாரசீகம் போன்ற மொழிகளில் பழமையான இலக்கியங்கள் எனக் கூறத் தக்க படைப்புகள் முறையே 4வது, 10வது நூற்றாண்டுகளில்தான் தோன்றுகிறது.

    மொழியில் உள்ள சிறப்பான இலக்கியத்தின் வழியாகவே செம்மொழி என்ற தகுதி கிடைக்கிறது.

    ஹோமரின் இலியட் ஒடிசி, சாக்ரடீஸ், பிளட்டோ, அரிஸ்டாடில் போன்றோரின் நூல்கள் காரணமாக கிரேக்கம் செவ்வியல் மொழியாகக் கருதப்பட்டது.

    சிசரோவின் தத்துவங்கள், வர்ஜிஸின் நூல்கள் காரணமாக
    லத்தீன் செம்மொழியானது.

    ஆனால் மேலை நாட்டு மொழி அறிஞர்களும், சுனிதிகுமார் சாட்டர்ஜி,
    ராமானுஜம் போன்ற இலக்கிய ஆய்வாளர்களும் தமிழை இயல்பாகவே செம்மொழி என்று கூறுகின்றனர்.

    திராவிட மொழிக் குடும்பம் தனித்தன்மை வாய்ந்தது. அதன் மூத்த மொழி தமிழ் என்று 1816லேயே லார்டு எல்லீஸ் அறிவித்தார். இதே போல் 1856ல் கால்டுவெல், 19ம் நூற்றாண்டின் இறுதியில் பரிதிமாற் கலைஞர் போன்றவர்கள் தமிழை உயர் தனிச் செம்மொழி என்று கூறியுள்ளனர்.

    இப்போது செம்மொழித் தகுதியைப் பெற்றுள்ள தமிழ் மொழியை மேலும் சிறப்புடையதாகச் செய்ய பல்வேறு முயற்சிகள் தேவை.

    கணினி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, மானிடவியல், சுற்றுச்சூழல் போன்ற எண்ணற்ற துறைகளிலும் பயிற்று மொழி, பயன்பாட்டு மொழி என விரிவும், இளமை குன்றா சிறப்பும் அடைய பாடுபட வேண்டும் என்றார் ஆளுடையப்பிள்ளை.

    வி.சு. கோவிந்தன் பேசியது:-

    முதன் முதலாக தமிழைச் செம்மொழி என்று கூறிய பரிதிமாற் கலைஞர் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட செயல்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    1901 - 02ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தமிழ் அகராதியில் பிற மொழி சொற்கலப்பு இருப்பதால் அதை பரிதிமாற் கலைஞர் ஏற்கவில்லை.

    அகராதிகள் படித்தவர், பாமரர் என அனைவருக்கும் ஏற்றபடி இருக்க வேண்டும்.

    செய்யுள் சொற்கள், வழக்குச் சொற்கள் பிரித்துக் காட்டப்பட வேண்டும்.

    சொற்பொருள் காரணம் குறிப்பிட வேண்டும் என்று கூறி அவர் எதிர்பார்த்த அகராதி இன்னும் வரவில்லை.

    தமிழகத்தில் 5ம் வகுப்பு வரை தமிழே கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12 வயது வரை தமிழ் கற்ற பிறகே மாணவர்கள் அடுத்த மொழியைக் கற்க வேண்டும்.

    மொழி என்பது மக்களின் நாக்குப் பொருள் என்பதால் பழையன கழிதல், புதியன புகுதல் போல் மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மொழியின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 8:52:45 PM6/26/10
    to Min Thamizh
    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சனிக்கிழமை (26/06/10) நடந்த 44 அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் 169 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    தொல்காப்பியர் அரங்கில் நடந்த "தமிழ்ச் செம்மொழியின் தனித்தன்மை" எனும் கருத்தரங்கு நிகழ்வில் நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையேற்று உரையாற்றினார்.

    இதில், அமெரிக்க தமிழறிஞர் ஜார்ஜ் ஹார்ட் சிறப்புரையாற்றினார்.

    இந்தக் கருத்தரங்கில் முதல்வர் கருணாநிதி, கவிஞர் கனிமொழி எம்.பி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்
    .ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    அதே அரங்கில் "சங்க காலம் - அண்மைக் கால ஆய்வு நிலைகள்" என்ற தலைப்பிலான கலந்தாய்வில் ஜார்ஜ் ஹார்ட் தலைமை உரையாற்றினார்.

    • மொழிநோக்கு குறித்து அ.அ.மணவாளன்
    • பொருள் இலக்கண நோக்கு குறித்து சோ.ந.கந்தசாமி
    • வரலாற்றியல் நோக்கு குறித்து ச.சம்பகலட்சுமி
    • கல்வெட்டியல் நோக்கு குறித்து ரா.நாகசாமி
    • தொல்லியல் நோக்கு குறித்து எ.சுப்புராயலு
    • நாணயவியல் நோக்கு குறித்து தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி
    • அயல்நாட்டு ஆவண நோக்கு குறித்து ப.சண்முகம்
    ஆகியோர் கலந்தாய்வு உரைகளை வழங்கினர்.

    • திருவள்ளுவர் அரங்கு
    • நக்கீரர் அரங்கு
    • ஒளவை அரங்கு
    • கோவூர்க்கிழார் அரங்கு
    • சாத்தனார் அரங்கு
    • பெருஞ்சித்திரனார் அரங்கு
    • இளங்கோ அரங்கு
    • அம்மூவனார் அரங்கு
    உள்பட 23 அரங்குகளில் 44 தலைவர்கள் தலைமையில், பல்வேறு தலைப்புகளில் 169 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 8:58:09 PM6/26/10
    to Min Thamizh
    தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் தமிழ் பண்பாட்டு மையத்தை நிறுவ வேண்டும்:- முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன்



    தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டு மையங்களை நிறுவ வேண்டும் என்று, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் கூறினார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, "கடல் கடந்த தமிழும் தமிழரும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கு சனிக்கிழமை (26/06/10) நடைபெற்றது.

    மாநாட்டு பொது அரங்கில் நடந்த இக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் பேசியது:-

    சில நூற்றாண்டுகளுக்கு முன், கடல் கடந்து செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு தமிழர்களிடம் காணப்பட்டது. சில காலத்துக்கு பிறகு, ஆண்கள் மட்டும் கடல் கடந்து செல்லலாம், பெண்கள் செல்லக் கூடாது என்ற நிலை இருந்துவந்தது.

    6ம் நூற்றாண்டுக்குப் பிறகே தமிழர்கள் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்லத் துவங்கினர்.

    18ம் நூற்றாண்டில் பினாங்கு, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் குடியேறினர். கூலி வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். தற்போது தங்களது உழைப்பால், வெளிநாடுவாழ் தமிழர்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு நிலைத்து நீடிக்க, தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை நிறுவ வேண்டும். அந்த மையம் தமிழர்களது பண்பாட்டுப் பெருமையையும், தொன்மையையும் வெளிநாடு வாழ் தமிழர்களது புதிய தலைமுறைக்கு போதிக்க வேண்டும், என்றார்.

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.
    ராஜேந்திரன்:-

    கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு, அதிக கூலி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, மலேசிய நாட்டுக்கு தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அந்நாட்டில் அவர்கள் பட்ட துன்பம் சொல்களால் விவரிக்க முடியாதது. அத்தகைய கஷ்டங்களை தமிழர்கள் அனுபவித்தாலும், தங்களது தமிழ் அடையாளத்தை மட்டும் இன்றுவரை அவர்கள் இழக்கவில்லை. தமிழர்களது தீவிர முயற்சியால், மலேசியாவில் தற்போது 523 தமிழ்ப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 6 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அங்கு நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் உள்ளன.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களுக்கும், மலேசிய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த வேறுபாடுதான் "ஹிண்ட்ராப்" அமைப்பின் போராட்டமாக உருவெடுத்தது. தற்போதைய மலேசிய அரசு தமிழர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கத் துவங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழர்களுக்கு மலேசிய அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக தமிழர்கள் வாழும் மலேசியாவில் தமிழ் பண்பாட்டு மையத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும், என்றார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 9:50:06 PM6/26/10
    to Min Thamizh
    சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் செம்மொழி ஆய்வரங்கில் தினமலர் ஆசிரியர் விளக்கம்

    சங்க கால பாண்டிய மன்னர்களின் தலை உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் குறித்து தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விளக்கினார்.


    கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில், தமிழ் ஆய்வரங்குகள் நடந்து வருகின்றன. கொடிசியாவில் உள்ள சாத்தனார் அரங்கில், "சங்க கால பாண்டிய மன்னர்களின் தலை உருவம் பொறித்த நாணயங்கள்",என்ற தலைப்பில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று (26/06/10) காலை பேசினார்.

    அவர் பேசுகையில், சங்க கால மன்னர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் வெளியிட்டது போல், பாண்டிய மன்னர் தலை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறார். இதுவரை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளில் சங்ககால பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட தலை பொறிக்கப்பட்ட நாணயங்களின் பின்புறம் மீன் சின்னம் இல்லாமல் இருந்தது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயத்தில் மீன் சின்னம் இருப்பதை விளக்கினார், ஆசிரியர்.

    ஆய்வரங்கில் பார்வையாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சோழ மன்னர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா, கண்டுபிடிக்கப்பட்டவை வெளியிடப்பட்டுள்ளதா,'' என தினமலர் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினார்.

    அவருக்கு பதில் அளித்த ஆசிரியர், "சங்ககால சோழ மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், டச்சு நாட்டு தொல்லியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, இலண்டனில் இருந்து வெளியாகும் நாணயவியல் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அவர், "சங்ககால நாணயங்கள்" என்ற என்னுடைய ஆங்கில நூலில் வெளியாகி இருந்த புலிச்சின்னத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த மன்னர் தலை குறித்த நாணயத்தின் பின்புறம் உள்ள புலிச்சின்னத்தை ஒப்பிட்டு சோழ மன்னர் வெளியிட்ட சங்ககால நாணயம் என கட்டுரை எழுதி உள்ளார். இவரால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தங்கள் காசுகளில் தங்களின் தலை உருவத்தை பொறித்திருக்கிறார்கள் என்று உறுதியாகிறது,'' என்றார்.

    ஆய்வரங்கில், சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்த நிபுணரும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கணபதி ஸ்தபதி, "ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புகளால், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலமும், நாணயங்கள் வெளியிடப்பட்ட காலமும் அறிய முடிந்துள்ளது. பல நாணயங்களை கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டு, சமூகத்துக்கு தெரியப்படுத்திய தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கவுரப்படுத்த வேண்டும்,'' என்று பேசினார்.

    தொல்காப்பியர் அரங்கு:- மாநாட்டின் ஆய்வரங்க நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பகல் 2 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில், "சங்ககாலம்:- அண்மைக்கால ஆய்வு நிலைகள்" என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் நடைபெற்றது. ஜார்ஜ் எல்.ஹார்ட் தலைமை வகித்தார்.

    • "மொழி நோக்கு" என்ற தலைப்பில் கோதண்டராமனும்
    • "பொருளிலக்கண நோக்கு" என்ற தலைப்பில் மணவாளனும்
    • "இலக்கிய நோக்கு" என்ற தலைப்பில் ந.கந்தசாமியும்
    • "கல்வெட்டியல் நோக்கு" என்ற தலைப்பில் ரா.நாகசாமியும்
    • "தொல்லியல் நோக்கு" என்ற தலைப்பில் எ.சுப்பராயனும்
    சங்ககால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டு சங்க காலத்தை கணித்து, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியும்,
    • "அயல்நாட்டு ஆவண நோக்கு" என்ற தலைப்பில் ப.சண்முகமும்
    • "வரலாற்றியல் நோக்கு' என்ற தலைப்பில் சா.சம்பகலெட்சுமியும்
    பேசினர்.

    நன்றி:- தினமலர்

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:02:27 PM6/26/10
    to Min Thamizh
    ஆங்கிலம் உதட்டோடு ஒட்டிய மொழி; தமிழ் உள்ளத்தோடு ஒட்டிய மொழி:- வெளிநாட்டு தமிழர்கள் பெருமிதம்

    வெளிநாடுகளில் தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை செம்மொழி மாநாட்டின் மூலமாக தமிழக அரசுக்கு வெளிநாட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    செம்மொழி மாநாட்டின் பொது அரங்கில், "கடல் கடந்த தமிழும், தமிழரும்" என்ற தலைப்பில் நேற்று (26/06/10) நடந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் சார்பில் பேசியவர்கள் விபரம்:-

    பால் பாண்டியன் (அமெரிக்கா):-

    அமெரிக்காவில் 3 இலட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
    • எங்களைப் போல, 40 ஆண்டுகளுக்கு முன்னால் சென்றவர்கள்
    • எங்களின் பிள்ளைகள்
    • சமீபத்தில் வந்தவர்கள்
    என 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சென்றவர்கள், பெரும்பான்மையாக உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 10 ஆயிரம் தமிழர்கள் வருவதாக, மென்பொருள் துறை புள்ளி விபரம் கூறுகிறது.

    நாங்கள் அங்கு சென்று 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழகத்தோடும், தமிழோடும் உள்ள தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்தி வருகிறோம்.

    எங்களது பெற்றோர் இப்போது இல்லாததால் விடுபட்ட தொடர்பு, தமிழின் பெயரால் தொடர்கிறது.

    அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள், தமிழை வளர்க்காவிட்டாலும், தமிழைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகின்றன.

    இந்தியாவில் வெளியுறவுத்துறை செயல்பட்டாலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்துகிறது.

    எனவே, எங்களைப் போன்ற தமிழர்களின் நலனுக்காக, தமிழகத்தில் வெளியுறவுத்துறைக்கு தனி அமைப்பை அரசு ஏற்படுத்தி, தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதனால், அடுத்த தலைமுறை பெரிதும் பயனடையும்.


    கல்லாறு சத்திஷ் (சுவிட்சர்லாந்து):-

    இருபது ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தமிழ்க் குடும்பங்கள் அங்கு சென்றபோது, கடுங்குளிர், ஜெர்மானிய மொழி தெரியாததால் ஏற்பட்ட பிரச்னை, உணவுப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை, உறவுகளை இழந்ததால் ஏற்பட்ட வேதனை என பல வகையான பிரச்னைகளுக்கு உள்ளானோம்.

    ஆனாலும், 6,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியையும், அது கற்றுத்தந்த மரபும் எங்களுக்கு உதவியது. கடும் உழைப்பால் இன்றைக்கு நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளோம். பேருந்து நிலையத்தில் தமிழர்கள் காத்திருந்த நிலை மாறி, இப்போது எல்லோரும் சொந்த வாகனங்கள் வைத்துள்ளோம். சொந்த வீடுகள் வாங்கத் துவங்கியுள்ளோம். பல்வேறு தேசங்களிலிருந்து வந்த பல இனத்தவரிடமிருந்து நல்ல மரபுகளை கற்றுக் கொண்டு, நம்முடைய நல்ல மரபுகளை அவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறோம்.

    இப்போது எல்லா இனங்களையும் விட, சுவிஸ் தமிழ்ச் சமுதாயம் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறது. இப்போது அங்கு மக்கள் பிரதிநிதியாகும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.

    அங்கு 50 ஆயிரம் பேராக உயர்ந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கை, இன்னும் 2 ஆண்டுகளில் 2 இலட்சமாக உயரும். கடல் கடந்து சாதித்த தமிழர்களுக்காக பெருமைப்படுவதோடு, கடல் கடக்க முடியாத தமிழர்களின் கண்ணீரையும் நாம் துடைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கிடையே தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும்.

    அழகப்பா இராம்மோகன் (அமெரிக்கா):-

    இந்தியாவை விட்டுப் பிரிந்து சென்று 45 ஆண்டுகளான பின், அமெரிக்கத் தமிழனாக இங்கு வந்திருக்கிறேன். ஆனாலும், தமிழ் எங்களை விட்டுப் பிரிந்ததில்லை.

    நாட்டுக்காக என்ன செய்ய வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி கேட்டார். தமிழர்களைப் பார்த்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் கேட்பது, தமிழன் படும் வேதனையைப் பார்த்து ஒரு சொட்டு கண்ணீராவது விட வேண்டுமென்பதுதான்.

    ஈழத்தமிழர், மலேசியத் தமிழர், பர்மா தமிழர், கர்நாடகத் தமிழர் என பல முனைகளிலும் தமிழர்கள் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். தமிழன் இனிமேல் நல்லவனாக வாழ்வதை விட, வல்லவனாகவும் வாழ வேண்டும். நம் எல்லோருக்கும் பொதுவான அடையாளம், தமிழ்தான்.

    திருக்குறளை நம் எல்லோரையும் இணைக்கும் மையப்புள்ளியாக மாற்றி, அதனை பைபிள், குர்ஆன் போன்ற வழிபாட்டு நூல் போல எல்லா மக்களுக்கும் பொதுவான மறையாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

    கேம்பிரிட்ஜ் பல்கலையுடன் இணைந்து, தமிழ் வளர்ச்சிக்கான ஒளி - ஒலி குறுந்தகடுகளை வெளியிட முயற்சி எடுத்து வருகிறோம்.

    என்.இராம் (இங்கிலாந்து):-

    தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழுவானா, தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

    சங்க இலக்கிய காலத்தில் தமிழ் வாழ்ந்தபோது, தமிழன் வறுமையில் வாழ்ந்தான். இன்றைக்கு கணினி கற்ற தமிழன், வளமாக வாழ தமிழ் வறுமையில் வாடுகிறது. ஆனாலும், தமிழ் அழிந்து விடாது.

    ஆஸ்கர் விருது பெற்ற போது இரஹ்மான், "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்றார். அவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்தும் தமிழில் அதைச் சொன்னார். ஏனெனில், ஆங்கிலம் என்பது உதட்டோடு ஒட்டிய மொழி; தமிழ், உள்ளத்தோடு ஒன்று பட்ட மொழி. தமிழனை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கலாம்; தமிழைப் பிரிக்க முடியாது.

    நான் கடந்த 32 ஆண்டுகளாக இங்கிலாந்தில் இருக்கிறேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத்தான் மேடைகளில் தமிழை அதிகமாகக் கேட்க முடிகிறது. முன்பெல்லாம் பெரிய அரசியல் தலைவர்கள் பேசும்போது, சமஸ்கிருத சுலோகங்களை மேற்கொள் காட்டி தங்களது ஆங்கில உரைக்கு இடையே குறிப்பிடுவார்கள். இப்போது, தமிழ்க் கவிதைகளை ஆங்கில உரைக்கு இடையில் அடிக்கடி கேட்க முடிகிறது. தமிழ் புதிய மறுமலர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும், தமிழ்ப்பற்றோடு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் 1950 - 60களில் இங்கிலாந்துக்கு சென்றபோது, எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட 30 கிலோ பொருட்களோடு உள்ளத்தில் கருணாநிதி வளர்த்த தமிழ்ப்பற்றையும் எடுத்துச் சென்றவர்கள்.

    பாலகிருஷ்ணன் (பிரான்ஸ்):-

    இந்தியாவை விட 7 மடங்கு சிறிய நாடு பிரான்ஸ்; 20 மடங்கு மக்கள் தொகை குறைவானது. ஆனால், வல்லரசாக திகழும் நாடு. அங்கு தமிழர்களுக்கென்று தனி மதிப்பு இருக்கிறது. செல்லும் இடத்தில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டால் தமிழனை யாரும் மதிக்க மாட்டார்கள்.

    ஆனால், தமிழர்கள் எல்லோரும் உழைப்பாளிகள் என்பதால் செல்லுமிடத்திலெல்லாம் பெயர் பெறுகின்றனர்.

    தமிழ் வாழ வேண்டுமென்றால், அதற்கு வெளிநாட்டில்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

    பணத்தையும், நகையையும் பாதுகாக்க, வங்கிகளில் வைப்பது போல, வெளிநாட்டில் தமிழை வளர்த்தால் அது நிச்சயம் தமிழைப் பாதுகாக்கும்.

    தமிழை வளர்ப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு இங்கிருந்து பல ஆயிரம் புத்தகங்களை வழங்கிட, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

    நித்யானந்தன் (இங்கிலாந்து):-

    சுதந்திர இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்ட இனக்கலவரம், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம் பெயர்ந்தனர். அங்குள்ள தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகளால், அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பரந்து விரிந்த சமுதாயமாக வாழ்ந்த தமிழர்கள், இப்போது முடக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் சென்ற தமிழர்களுக்கு, ஆங்கில மொழிப்புலமை கிடைக்க பல ஆண்டுகளானது.

    இப்போது தமிழ்ச் சமுதாயத்தின் கட்டுப்பாடு உடைக்கப்பட்டு, கலப்புத் திருமணங்கள் அதிகமாகியுள்ளது. தமிழ்ப் பெற்றோர்களை பெரிதும் வருத்தமடையச் செய்யும் விஷயம் இது. இதனால், தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றனர்.

    பொருளாதாரம், வசதியான வாழ்க்கைக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களது பாரம்பரிய பண்பாட்டு வாழ்விலிருந்து விலகிச் செல்கின்றனர்.

    வயதான தமிழர்கள் பலர், சொந்தங்களிடமும் செல்ல முடியாமல் முதியோர் இல்லங்களுக்குள் முடங்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், இங்கிலாந்தில் முன்பிருந்த இனத்துவேஷம், இப்போது இல்லை என்பதால் தமிழர்களுக்கு பரவலான ஆதரவு இருக்கிறது.

    நாடு கடந்தும் ஆட்சிகளை அமைத்த தமிழ்ச் சமூகம், இப்போது ஆட்சி, அதிகாரங்களை இழந்து நிற்கிறது. உலகம் முழுவதிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கென்று தனி நாடு எதுவுமில்லை. தமிழர்களின் நிலை பாதுகாக்கப்பட்டாலே நிச்சயமாக தமிழ் பாதுகாக்கப்படும்.

    பாலா எஸ் பாலேந்திரா (ஆஸ்திரேலியா) சிட்னி நகர் மன்ற உறுப்பினர்:-

    ஒரு காலத்தில் தமிழர்கள் குடியேற்றப்பட்டனர்; இப்போது குடி அகற்றப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, 1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது, ஏராளமான தமிழர்கள் ஆஸ்திரேலியா சென்றனர். அகதிகளாகச் சென்ற அவர்களுக்கு ஆஸ்திரேலியா ஆதரவுக் கரம் நீட்டியது. ஒரு கண்டமே நாடாக இருக்கும் ஆஸ்திரேலியாவில் மொத்தமுள்ள நிலப்பரப்பில், 20 சதவீத இடத்தில்தான் மக்கள் வசிக்கின்றனர்.

    அங்கு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடியினர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இப்போது ஒரு சில பழங்குடியினரே உள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில், தெய்வங்களின் பெயர்களில் தமிழ்ப்பெயர்கள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் அங்கே வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில், இப்போது ஏராளமான தமிழ்க் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கோவில்கள் கட்டப்படுகின்றன; அங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் கற்றுத்தரப்படுகிறது. சிறுவர்கள் இப்போது நன்கு தமிழ் பேசத்துவங்கியுள்ளனர்.

    இந்த கலப்படத்தைத் தடுக்கலாமே! கருத்தரங்கத்தின் இறுதியில் பேசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலேந்திரா, "மருந்துப் பொருட்களில் உள்ள கலப்படத்தையும், உணவுப் பொருளில் உள்ள கலப்படத்தையும் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல, தமிழ்த் தொலைக்காட்சிகளில் தமிழில் ஏற்பட்டுள்ள கலப்படத்தை ஏன் தடுக்கவில்லை என்று எங்களுக்கு வேதனையாகவுள்ளது. எங்களுடைய குழந்தைகள், அந்தத் தமிழைப் பார்த்து என்ன மொழி என்றே புரியாமல் தவிக்கின்றனர். அதற்கும் அரசு நல்லதொரு முயற்சியை எடுக்க வேண்டுமென்று வெளிநாட்டுத் தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்,'' என்றார். அதற்கு அரங்கு நிறைந்த கைதட்டல் கிளம்பியது.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:11:41 PM6/26/10
    to Min Thamizh
    "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது"!

    "அச்சுத்துறை தமிழ் மொழிக்கு பாதுகாப்பாகவும், ஆவணமாகவும், பிரசாரமாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது'' என, பட்டிமன்ற விவாத நிறைவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தீர்ப்பு கூறினார்.

    கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான்காவது நாளான நேற்று (26/06/10) நிறைவு நிகழ்ச்சியாக, "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.



    புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் பட்டிமன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.

    பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவர் பொறுப்பு வகித்து பேசியதாவது:-

    தமிழ் மொழி பழமை வாய்ந்தது, தமிழில் இல்லாத சிறப்புகளே இல்லை. தமிழை பேசினால் இனிக்கும், காது குளிர கேட்டால் மணக்கும். அத்தகைய பெருமையும், தொன்மையும் நிறைந்த செம்மொழித் தமிழ் மாநாடு பட்டிமன்றத்தில் தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு யாருக்கு என்ற தலைப்பில் பட்டிமன்றம். தமிழ் வளர்ச்சிக்கு அச்சுத்துறை தான் முதலில் தடம் பதித்தது. அதன்பின், வெள்ளித்திரையில் தமிழ் புகுத்தப்பட்டது. வெள்ளித்திரையில் உமைப்படத்தில் துவங்கி கருப்பு வெள்ளை படமாகி, தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று நெடுந்தொலைவு வளர்ந்துள்ளது. இறுதியாக சின்னத்திரை அனைத்தையும் ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதில், எது தமிழ் வளர்க்க பெரும் பொறுப்பு வைக்கிறது என்பதற்கு விவாதத்திற்கு பிறகு தீர்வு காண்போம்.

    பாரதிராஜா (வெள்ளித்திரைக்கே):-

    தமிழக முதல்வர் அச்சுத்துறையில் பணியாற்றி பல புரட்சி கருத்துகளை எழுதியவர். அவரது கதைவசனத்தில் உருவான படங்கள் மூலம் வெள்ளித்திரையில் தமிழ் காலூண்றியது. ஓலைச்சுவடிகளில் இருந்து எழுத்துகளை கதைகளாக்கி, திரைப்படம் எடுத்து மக்களுக்கு தமிழ் சென்றடைய வெள்ளித்திரை சேவை செய்தது. வெள்ளித்திரையில் தமிழ் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகே தமிழ் மொழிக்கு விடிவு கிடைத்தது. திரைத்துறையில் இருந்த கலப்பு மொழித்தமிழுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் வளர்ந்துள்ளது.

    லியோனி (வெள்ளித்திரைக்கே):-

    திரைத்துறை சாதித்தது நிறைய இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெள்ளித்திரையின் குழந்தை தான் சின்னத்திரை. சின்னத்திரை வீடு தேடி வந்து விற்கப்படும் பொருள். ஆனால், வெள்ளித்திரை வெளியில் தேடிச் சென்று வாங்கி சாப்பிடும் பொரும். மக்களின் வீடு தேடி வரும் சின்னத்திரையே தமிழ் வளர்க்க பெரும் பங்காற்றுகிறது.

    கிருஷ்ணன் (அச்சுத்துறைக்கே):-

    அச்சுத்துறையை அடிப்படையாக கொண்டே வெள்ளித்திரை, சின்னத்திரைகள் இயங்குகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு காரணமே அச்சுத்துறைதான். பழங்கால ஓலைச்சுவடி ஆவணங்களை அச்சுவடித்தில் ஆவணமாக்கி பாதுகாக்கப்பட்டுள்ளது. சிறுகதை, குறுநாவல், தொடர் கதைகள் வெள்ளித்திரையில் படமாக வருவதற்கு காரணமே அச்சுத்துறைதான். வெள்ளித்திரை, சின்னத்திரையை பாதுகாப்பது அச்சுத்துறைதான். 200 ஆண்டுகள் பழமையான அச்சுத்துறையில் தமிழ் வரிவடிவத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அச்சுத்துறை தொடர்புடைய தமிழ் இணையதளத்தின் மூலம் உலகத்திலுள்ள தமிழர்களும் தமிழ் படிக்க முடிகிறது. தமிழ் வளர்ச்சிக்கு எது ஆதாரமாக இருக்கிறதே, அந்த துறைக்கு தான் கூடுதல் பொறுப்புள்ளது.

    சந்திரசேகர் (வெள்ளித்திரைக்கே):-

    கடந்த 1913ல் இந்தியாவில் திரைத்துறை அறிமுகமானது. மெல்ல வளர்ந்து நவீன தொழில்நுட்பத்தின் உச்சியில் உள்ளது. இருட்டில் இருந்து தமிழ், வெள்ளித்திரையில் முதல்வரின் கதைவசனத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. எழுத, படிக்க தெரியாத பாமர மக்கள் திரைப்படங்களை பார்த்தே தமிழ் கற்றனர். அதனால், தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே உள்ளது.

    எஸ்.வி.சேகர் (சின்னத்திரைக்கே):-

    சின்னத்திரையில் வரும் விளம்பரங்களாலே திரைப்படங்கள் வியாபாரமாகிறது. சின்னத்திரையால் சிறுவர் முதல் அனைவரும் தமிழ் கற்க முடிகிறது. சின்னத்திரையில் வரும் சம்பவங்கள் மக்கள் மனதில் பதிகிறது. செம்மொழி மாநாட்டு பாடல் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டதால் பட்டி தொட்டியெல்லாம் பரவியுள்ளது. வீட்டுக்கு ஒரு இலவச தொலைக்காட்சி வழங்கியுள்ளதால், தமிழ் வளர்க்கும் சக்தி சின்னத்திரையிடம் மட்டுமே உள்ளது.

    நக்கீரன் ஆசிரியர் கோபால் (அச்சுத்துறைக்கே):-

    செம்மொழி மாநாட்டு சின்னத்தில் ஓலைச்சுவடியில் அச்சாணியில் எழுதுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சுத்துறையின் முக்கிய பங்கை முதல்வரே உணர்த்தி விட்டார். அவ்வப்போது கிடைக்கும் புதைபொருள் செப்புத்தகடுகள் அச்சுத்துறையின் அழியா தன்மை வெளிப்படுத்துகின்றன. திரைப்படங்கள் மக்களை தவறான பாதைக்கு இழுத்து செல்கின்றன. சின்னத்திரையில் தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளே இல்லை. மொழி என்றால் இலக்கணம், கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அச்சுத்துறையில் மட்டுமே இலக்கணத்தை இடம் பெறச் செய்ய முடியும். அதனால் அச்சுத் துறை மட்டுமே தமிழ் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக உள்ளது.

    பட்டிமன்றத்தில் நிறைவாக சாலமன் பாப்பையா பேசியதாவது:-

    பாமரனுக்கும் தமிழை கொண்டு சேர்த்த பொறுப்பு வெள்ளித்திரைக்கு உள்ளது. ஆனால், வெள்ளித்துறையில் ஆங்கில ஆதிக்கமே அதிகமுள்ளது. அரசு மானியம் பெற தமிழில் பெயர் வைக்கின்றனர். தமிழ் பண்பாட்டை பரப்புவதை விட, வெளிநாட்டு கலாச்சாரமே வெள்ளித்திரையில் இடம் பெறுகிறது.

    சின்னத்திரையில் திரைப்படம், ஆரோக்கியம், இலக்கியம், நாட்டு நடப்புகள் அனைத்தும் உள்ளது. ஆனால் சின்னத்திரையும், வெள்ளித்திரையும் பதிவுகள் செய்வதில்லை.

    நாட்டு நடப்புகளை ஆவணமாக பதிவு செய்வது அச்சுத்துறை மட்டுமே. தமிழை பாதுகாத்து, ஆவணமாக வைத்திருக்க அச்சுத்துறை பங்காற்றியுள்ளது.

    வெள்ளித்திரை, சின்னத்திரை பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அச்சுத்துறைக்கு மட்டுமே உள்ளது. அச்சுத்துறை வளர்ச்சி பெற்று வலை தேடல் வரையிலும் விரிந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அச்சுத்துறை உள்ளது.

    தமிழ் வளர்க்க இந்த மூன்று துறையும் பங்காற்றியுள்ளதையும் மறுக்க முடியாது.

    தமிழை வளர்க்கவும், பாதுகாக்கவும் இவை மூன்று முப்படையாக உள்ளது.

    • சின்னத்திரை கப்பல் படையாகவும்
    • வெள்ளித்திரை விமானப்படையாகவும்
    இவற்றை இணைத்து போர் தொடுக்கும்,
    • தரைப்படையாக அச்சுத்துறை
    உள்ளது.

    அச்சுத்துறை தமிழ் மொழிக்கு பாதுகாப்பாகவும், ஆவணமாகவும், பிரசாரமாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது. இவ்வாறு, சாலமன் பாப்பையா தீர்ப்பு கூறினார்.

    பட்டிமன்ற துளிகள்...

    * "தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு" என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில் லியோனி பேசத்துவங்கியதும், முதல்வரை பற்றி பேச எனக்கு பயமாக உள்ளது. நேற்று (25/06/10) நடந்த கருத்தரங்கில் முதல்வரை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து விட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க காரணமாக இருக்கும் அவரை புகழாமல் இருக்க முடியுமா? என்று கேள்வி கேட்டு விட்டு, வழக்கமான பாணியில் பேச்சை துவங்கினார்.

    * ஆஸ்திரேலியா சென்றபோது அங்கிருந்தவர்கள் பேசிய ஆங்கிலத்தை லியோனி பேசிக்காட்டி, பழைய பாடல்களை பாடிக்காண்பித்து அரங்கில் இருந்தோரை சிரிக்க வைத்தார். லியோனியின் நகைச்சுவை பேச்சை கேட்டு முதல்வரும், அமைச்சர்களும் வயிறு குலுங்க சிரித்து இரசித்தனர்.

    * நடிகர் சந்திரசேகர் முதல்வரை புகழ்ந்து பேசி, திரைத்துறையும் முதல்வரும் என்ற தலைப்பில் பேசிக்கொண்டே இருந்தார். நடுவர் மணி அடித்ததும் திரைத்துறை இல்லாமல் தமிழ் இல்லை என்று கூறி அமர்ந்து விட்டார்.

    * எஸ்.வி. சேகர் பேசும்போது, மாற்றாந்தோட்டத்து மல்லிக்கும் மணமுண்டு என்று முதல்வர் கூறியது தான் மாயம், அம்மாவின் தோட்டத்தில் இருந்து வேரோடு மல்லி செடிகள் வந்து கொண்டுள்ளன என்று அரசியல் சிலேடையோடு பேசினார்.

    * பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அனைவரும் எழுதி கொண்டு வந்திருந்ததை படித்து மட்டுமே காண்பித்தனர். லியோனியும், நடுவர் சாலமன் பாப்பையாவும் மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் எதுகை, மோனை நடையில் தமிழில் பேசினர்.

    * பட்டிமன்றத்தில் முத்தரப்பு விவாதம் முடிந்ததும் நடுவர் தீர்ப்பு கூறும் முன்பே முதல்வர் கிளம்பினார். அதையடுத்து அரங்கத்திலும் சலசலப்பு ஏற்பட்டு பட்டிமன்ற நிகழ்ச்சி முடியும் முன்பே மக்கள் கலைந்தன

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:14:57 PM6/26/10
    to Min Thamizh
    தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு என்ன அறிவிக்கப் போகிறார் முதல்வர்?

    "செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில், எனது உரை இன்னொரு பட்ஜெட் போன்று அறிவிப்புகளை கொண்டிருக்கும்" என, முதல்வர் தெரிவித்துள்ளதால், தமிழை முதன்மைப் பாடமாக பயின்ற பட்டதாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தமிழாசிரியர், கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    செம்மொழி மாநாட்டின் மூன்றாவது நாளான (25/06/10) நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதி தலைமையில் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" கருத்தரங்கு நடந்தது. பல்வேறு பிரமுகர்களின் கருத்துரைக்குப் பின் இறுதியாகப் பேசிய முதல்வர், "தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் என ஆணையிடுங்கள். இந்த அரசு உடனே நிறைவேற்றும் என்று கூறியிருக்கிறேன். இறுதிநாள் நிகழ்ச்சியில் எனது உரை, இன்னுமொரு பட்ஜெட் போன்ற அறிவிப்புகளைக் கொண்டிருக்கும்",என்று கூறியிருந்தார்.

    இது தமிழார்வலர்கள் மத்தியிலும், தமிழ் பட்டதாரிகள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தமிழை முதன்மைப்பாடமாகக் கொண்டு, இளங்கலை மற்றும் முதுகலைத்தமிழ் படித்தவர்கள் நிறைய பேர் உரிய வேலை கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் தமிழ் படித்தால் மதிப்பு இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மூன்றாம் தரமாக நடத்தப்படுகின்றனர். இதர துறை ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதிகூட வழங்கப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்த்துறை மொழியைக் கற்பிக்கும் துறையாக உள்ளதே அன்றி, பட்டப்படிப்பு வழங்கும் துறையாக இருப்பதில்லை. அதுபோன்ற கல்லூரிகளில் முறையான கல்வித்தகுதியை அடிப்படையாகக் கொண்டு, பணிநியமனம் செய்யப்படுவதில்லை. எனவே, தமிழில் பட்டப்படிப்பும், ஆசிரியர், விரிவுரையாளருக்கான முறையான எழுத்துத்தேர்வு தகுதிகளைக் கொண்டவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வேலை உத்தரவாதத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மேலும், தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தமிழ் தொடர்பான முனைவர் பட்ட ஆய்வுகள், தனிப்பட்ட ஆய்வுகளுக்கும், தமிழரோடு நெருங்கிய தொடர்புடைய நாட்டுப்புறவியல் ஆய்வுகள் உள்ளிட்டவற்றுக்கும் இளமுனைவர், முனைவர், தனிப்பட்ட ஆய்வுகள் நடத்த தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஆய்வுகளுக்கு பல்கலை மானியக்குழு வழங்குவது போல், நிதி உதவி வழங்க வேண்டும், எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைக்கும் முதல்வர், தமிழை விரும்பிப் படித்தவர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யப்போகிறார்?

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:19:19 PM6/26/10
    to Min Thamizh
    "தமிழ் நூல்கள் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்தால் நல்ல வரவேற்பு":- பெங்களூரு கல்லூரி பேராசிரியை

    தமிழ் நூல்கள் கன்னடத்தில் மொழி பெயர்ப்பு செய்தால் நல்ல வரவேற்பு உள்ளது என ஆய்வரங்கில் பங்கேற்ற பெங்களூரு கல்லூரி பேராசிரியை தெரிவித்தார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், நேற்று (26/06/10) நடந்த ஆய்வரங்கத்தில் பெங்களூரு, பிரசிடென்சி கல்லூரி பேராசிரியை மலர்விழி மொழிபெயர்ப்பின் வரைவிலக்கணம், பொருள், குணாதியசங்கள் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். இவர் தமிழ் இலக்கியங்கள், கவிதை, கட்டுரைகளை கன்னடத்தில் மொழி பெயர்த்து நூல்கள் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் மொழி குறித்து மலர்விழி கூறியதாவது:- 

    தமிழகத்திலுள்ள வேலூர் சித்தேரியில் பிறந்தாலும்,பெங்களூருவில் கன்னட மொழி மூலமே கல்வி பயின்றேன். தமிழ் படிக்காவிட்டாலும், திராவிட மொழிகள் மீதும், குறிப்பாக தமிழ் இலக்கியம், கலாசாரம் மீதும் ஆர்வம் அதிகரித்தது. இதுவே தமிழ் நூல்களை மொழி பெயர்க்க தூண்டியது. மேலும், தமிழகம் மற்றும் கர்னாடகத்தின் ஒன்றுமையை வலுவூட்ட வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை துவக்கினேன். 

    மொழிபெயர்ப்பு என்பது கருப்பொருள், அனுபவம், உணர்வு தொணி ஆகியவற்றை மாற்றாமல், அப்படியே இருக்க வேண்டும். இதற்கு, மொழிபெயர்க்கும் இரண்டு மொழிகளிலும் ஆழ்ந்த அறிவு தேவை. தமிழ் நூல்கள் கன்னடத்திற்கு எழுத்தாளர் சேஷநாராயணன் அதிகளவு மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

    40 ஆண்டுகளுக்கு முன்பே, தென்பாண்டி சிங்கம், பார்த்திபன் கனவு என கல்கி, சாண்டில்யன் நூல்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதும் பல எழுத்தாளர்கள் மொழி மாற்றம் செய்து வருகின்றனர். தமிழ் மொழி நூல்கள் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்தால் கன்னட மக்களிடம் அந்த நூல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    வைரமுத்துவின் 33 கவிதை தொகுதிகளையும், ஒன்பதாம் திருமுறையையும் கன்னட மொழியில் மொழி மாற்றம் செய்துள்ளேன்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளிலுள்ள நூல்களை, திராவிட மொழிகளிலுள்ள மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வது எளிதாக உள்ளது. திராவிட மொழிகளில் சமஸ்கிருத மொழியின் கலப்பு அதிகளவு உள்ளது. ஆனால், தமிழ் மொழியில் சொற்ப அளவே உள்ளது. அதனால், தமிழ் மொழி இன்றும் சிறப்பானதாக உள்ளது.

    12ம் நூற்றாண்டிலேயே தமிழ் இலக்கியத்தின் தாக்கல் கன்னட மொழியில் உள்ளது. சேக்கிழார் 63 நாயன்மார்களை வைத்து பெரியபுராணம் இயற்றினார். அதன் பொருள் ஒட்டியே கன்னட மொழியில், ஹரிஹரரகளை என்ற நூல் அமைந்துள்ளது. இரண்டிலும் ஒரே மாதிரியான தகவல்கள் உள்ளது. நாம் நாயன்மார்கள் என்பதை கன்னடத்தில் சிவசரன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதே போல், திருவள்ளுவரும், கன்னட கவிஞர் சர்வஞ்சரும் வேறு, வேறு காலத்தவர்களாக இருந்தாலும், கருத்து ஒற்றுமை ஒன்றாகவே உள்ளது. இதனால்தான் தமிழ் இலக்கியங்களின் தாக்கம் கன்னட மொழியில் அதிகளவு உள்ளது என்பதை எனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:27:10 PM6/26/10
    to Min Thamizh
    வெளிநாட்டு தமிழ் குடும்பங்களில் தமிழ் அழிவதை தடுக்க வேண்டும்:- ஆப்ரிக்க ஆசிரியர்

    "வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழை மறக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையை போக்க, நல்ல தமிழ் புத்தகங்களை மலிவு விலையில் அனுப்பித் தர தமிழக அரசு முன்வர வேண்டும்,'' என்று தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கூறினார்.

    கோவையில் நடைபெற்று வரும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சின்னப்பன் என்பவர் வந்துள்ளார். தென் ஆப்ரிக்க பள்ளிகளில் படிக்கும் தமிழ் குழந்தைகள் தமிழை மறக்காமல் இருக்க, இந்தியாவில் இருந்து தமிழ் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்கிறார். இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்.

    இவர் அளித்த பேட்டி:-

    தென் ஆப்ரிக்காவில் மொத்தம் இரண்டு இலட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதில் 60 சதவீதத்தினர் தமிழர்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள், தமிழ் பேசாதவர்களுடன் அதிகம் பழகுவதால், தமிழை மறக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களால் புரிந்து கொள்ள மட்டுமே முடிகிறது. ஆனாலும் தமிழ் கலாசாரம், பண்பாட்டை மறக்காமல் உள்ளனர். இந்த நிலை வராமலிருக்க, தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் தமிழ் பள்ளிகள் இல்லாத இடங்களை கண்டறிந்து, உள்ளூர் மக்கள் உதவியுடன் துவங்கி வருகிறேன். தமிழ் வகுப்புகள் நடத்தி குழந்தைகள் தமிழை மறக்காமலிருக்க செய்கிறேன். இந்தியாவுக்கு வரும் போது ஏராளமான ஆத்திச்சூடி போன்ற ஏராளமான நல்ல தமிழ் நூல்களை வாங்கிச் சென்று அங்குள்ள தமிழ் குழந்தைகளுக்கு அளிக்கிறேன். அங்கு தமிழ் நூல்கள் கிடைப்பதில்லை. இதனால் தமிழர் வீடுகளில் கூட பெற்றோரும் குழந்தைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியாக வேண்டிய அவல நிலை உள்ளது. அங்கு தமிழ் மெல்ல, மெல்ல மறைந்து வரும் அபாயம் உருவாகி வருகிறது.

    கடல் கடந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையும் தமிழை மறக்காமல் இருக்க, 10 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நூல்களையாவது எங்களுக்கு மலிவு விலையில் அனுப்பித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சிறு குழந்தைகள் படிக்கும் நூல்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை, தென் ஆப்ரிக்காவில் பல்கலை பாடங்களில்தான் படிக்க முடியும்.

    கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு, உலகத் தமிழர்கள் அனைவரும் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் கலந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான நிகழ்வு.

    இந்த மாநாட்டு ஆய்வரங்குகளில் பேசிய அரிய விஷயங்களை அப்படியே விட்டு விடாமல் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். தென் ஆப்ரிக்கர்கள், தமிழர் கலைகளை கற்க இந்தியா வருவதாக இருந்தால் யாரை தொடர்பு கொள்வதென தெரிவதில்லை. தென் ஆப்ரிக்கா மட்டுமல்ல, அனைத்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இது போன்ற உதவிகளை செய்ய, தமிழக அரசு சார்பில் சிறப்பு உதவி மையம் அமைக்க வேண்டும். கலைகள் அழியாமல் வாழ்ந்தால்தான் மொழி அழியாமல் இருக்கும்.

    இவ்வாறு, சின்னப்பன் கூறினார்.

    வணக்கம் கூறினால் "ஹலோ" ; ஆப்ரிக்க ஆசிரியர் வேதனை:-

    "தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பலர் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். நிறைய தமிழில் பேச வேண்டும் என்ற ஆவலுடன் வந்துள்ளோம். இங்குள்ள தமிழர்களை கண்டதும் நாங்கள் "வணக்கம்" சொல்கிறோம். ஆனால் பதிலுக்கு இவர்கள் "ஹலோ" என கைகுலுக்குகின்றனர். இது தமிழ் மொழிக்கு செய்யும் அவமரியாதை. முதலில் தமிழன் தமிழில் பேச வேண்டும். தனது தாய் மொழியை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் நிலை மாற வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதை கவுரவமாக கருதும் நிலை கூடாது. சங்கம் வளர்த்த தமிழகத்தில் இரு தமிழர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்,'' என்றார் சின்னப்பன்.

    தமிழர்கள் அடிப்படையிலேயே போர்க்குணம் இல்லாதவர்கள் என்பதோடு, உழைப்பதற்கு அஞ்சாதவர்கள் என்பதால், சீனர்களை வெளியேற்ற தமிழர்களை அதிகளவில் கூலிகளாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். கூலிகளாகவும், பஞ்சம் பிழைக்கவும், உழைத்து வாழவும், அகதிகளாகவும் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இப்போது தங்களது உயர் அறிவு, தொழில்நுட்பத் திறனால் சமூகத்தில் அந்தஸ்து பெற்று வாழ்கின்றனர்.

    தினமும் 3 இடத்தில் வேலை, கிடைப்பதைச் சாப்பிட்டு வாழ்வது என்று அகதிகள் வாழ்வை அழகாகச் சித்தரித்திருக்கிறார் ஈழக்கவிஞர் திருமாவளவன்.

    தமிழகத்திலிருந்து வெளியே போன தமிழர்கள், சிக்கலில் இருந்து மீளவில்லை; ஆனால், சிக்கலிலேயே மூழ்கி விடவுமில்லை. எப்போதும் அவர்கள் நம் கவனத்தில் இருக்கிறார்கள். தங்களது தாய் பூமியான தமிழகம், தங்களுக்கு ஏதாவது செய்யாதா என்கிற ஏக்கத்தில் வாழ்கிறார்கள்.

    அந்தச் சூழலில்தான், செம்மொழி மாநாட்டைக் கூட்டி, உங்களது பிரச்னைகள் என்னவென்று சொல்லுங்கள் என்று கூற கருணாநிதி அழைத்திருக்கிறார். தன்னால் இயன்ற முயற்சிகளையும் அவர் செய்வார். இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழக்காமல் இருப்பதே பெருமிதப் பட வேண்டிய ஒன்றாகும். அவர்களுக்கு கை கொடுக்கும் விதத்தில், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மத்திய அரசின் உதவியுடன் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். தமிழின் கவித்துவம், நாட்டுப் புறக் கலை வடிவங்களின் சிறப்பு ஆகியவற்றை அங்குள்ள தமிழர்களின் குடும்பங்களுக்கு, வாரிசுகளுக்கு சொல்லித் தரும் பணியை இந்த மையம் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே நன்றாகவுள்ளனர்; 35 சதவீதம் பேர் ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர். மீதமுள்ள 50 சதவீத தமிழர்கள் கவலையில் உள்ளனர். அவர்களின் கவலையைப் போக்க வேண்டியது நமது கடமை. அகதியாக வேறு நாடுகளுக்குச் சென்ற பலரும், தங்கள் தாய் மொழிக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்தனர். அதே முயற்சியை வெளிநாடு வாழ் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு க.ப.அறவாணன் பேசினார்.

    எங்கே இருக்கிறது இலங்கை?

    கடல் கடந்த தமிழர் என்றாலே, எல்லோருக்கும் நினைவுக்கும் வரும் நாடு இலங்கைதான். நேற்று நடந்த கருத்தரங்கில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாடுகளில் உள்ள தமிழ் மற்றும் தமிழர் நிலை பற்றி பேச பலரை அழைத்திருந்தனர். ஆனால், தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்ற எண்ணத்தில் இலங்கை குறிப்பாக தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பெயரில் பேச வந்த அனைவருமே ஈழத்தமிழர்கள்தான். அவர்களின் பேச்சில், ஈழத்தில் தமிழர்கள் படும் வேதனையைக் குறிப்பிட மறக்கவில்லை. கருத்தரங்கத்தில் பேசிய அனைவரும் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் அழகிய தமிழில், தெளிவான உச்சரிப்பில் தமிழில் பேசி, அரங்கத்திலிருந்த பல ஆயிரம் மக்களை மெய்ம்மறக்கச் செய்தனர்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:32:23 PM6/26/10
    to Min Thamizh
    இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்

    இன்றைய அரங்க நிகழ்ச்சிகளில் பெண்ணியம், இலக்கணம், இலக்கியம், நுண்கலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வரங்கம் நடைபெறுகிறது.

    கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் ஐந்தாம் நாளான (27/06/10) இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது.

    மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுப் பிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மூன்றாம் நாள் நடந்த அமர்வரங்கில் ஐராவதம் மகாதேவன் பங்கேற்று சொற்பொழிவாற்றினார்.

    நான்காம் நாளான நேற்று நீதியரசர் வள்ளிநாயகம், ஆளுடையப் பிள்ளை உள்ளிட்டோர் அமர்வரங்கில் பங்கேற்றுப் பேசினர்.

    இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது.

    பழந்தமிழக மகளிர்

    இன்று பிசிராந்தையார் அரங்கில் ச.பரிமளா தலைமையில் நடைபெறும் பெண்ணியம் அமர்வரங்கில், "பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்" எனும் தலைப்பில் அ.மணவழகன் கட்டுரை வாசிக்கிறார்.

    தமிழரின் இசைக்கருவிகள்


    இன்று கல்லாடனார் அரங்கில் சா.கிருட்டிணமூர்த்தி தலைமையில் நடைபெறும் நுண்கலைகள் அமர்வரங்கில், "தமிழர் கண்ட இசைக் கருவிகள் பாதுகாப்பு முறைகள்" எனும் தலைப்பில் இராம.கவுசல்யா உரையாற்றுகிறார்.

    பாவேந்தரிடம் வினா

    இன்று இளங்கோ அரங்கில் நெல்லை சொக்கலிங்கள் தலைமையில் நடைபெறும் இலக்கியம் அமர்வரங்கில், "பாவேந்தரிடம் ஒரு வினா" எனும் தலைப்பில் கு.சிவமணி கட்டுரை வாசிக்கிறார்.

    தமிழின் ஒட்டுநிலை

    இன்று வெள்ளிவீதியார் அரங்கில் பொன்னவைகோ தலைமையில் நடைபெறும் அரசியல்,சமூக,பொருளாதார வரலாறு அமர்வரங்கில் ஆய்வாளர்கள் தமிழ் மொழியின் ஒட்டுநிலை, கொங்குநாட்டு கல்வெட்டுகள், தமிழில் ஆரியத் தாக்கம் குறித்து கட்டுரைகள் வாசிக்கின்றனர்.

    தமிழர் திருமணம்

    இன்று கோவூர்கிழார் அரங்கில் ஜோதிமுருகன் தலைமையில் நடைபெறும் கலை - இலக்கிய - பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "தமிழர் திருமணம்" எனும் தலைப்பில் ஆர்.இலம்போதரன் உரையாற்றுகிறார்.

    எழுத்துச் சீர்திருத்தம்

    இன்று சாத்தனார் அரங்கில் முத்துக்குமரன் தலைமையில் நடைபெறும் அரசியல்,சமூக,பொருளாதார வரலாறு அமர்வரங்கில், "எழுத்துச் சீர்திருத்தமா! தமிழுக்கது பொருத்தமா?" எனும் தலைப்பில் பெஞ்சமின்.லெ.பொ பேசுகிறார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:34:24 PM6/26/10
    to Min Thamizh
    இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் நடக்கும் கருத்தரங்கில் நடிகர் சிவக்குமார் தலைமையேற்று பேசுகிறார். கோவையில் உலகத்தமிழச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் இறுதி நாளான இன்று (27/06/10) காலை 10 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    "வித்தாக விளங்கும் மொழி" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேராசியர் வீரபாண்டியன் துவக்கவுரை ஆற்றுகிறார்.

    பீட்டர் அல்போன்ஸ், அருட்தந்தை மா.ஜெகத் கஸ்பர், பேராசியர் பர்வீன் சுல்தானா, வழக்கறிஞர்கள் இராமலிங்கம் மற்றும் அருள்மொழி, கம்பம் பெ.செல்வேந்திரன் உட்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.

    முன்னதாக காலை 9 மணி முதல் 9.45 மணி வரை திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசை நடைபெறுகிறது.

    பாலசாயி குழுவினரின் கலந்திசை நிகழ்ச்சி:
    -

    கருத்தரங்கம் நிறைவு பெற்ற பின் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை "தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம்" வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பாலசாயி குழுவினரின் கலந்திசை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:40:06 PM6/26/10
    to Min Thamizh
    கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கடந்த நான்கு நாள் நிகழ்வுகளில் மட்டும் ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் பங்கேற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று நடக்கும் மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ள போலீசார், மாநாடு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.



    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே போலீசார் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர். ஐந்து நாள் மாநாட்டில் எவ்வளவு மக்கள் கூடுவார்கள், எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எந்த மாதிரியான சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தலைதூக்கும், இவற்றை சமாளிப்பது எப்படி, என்பது குறித்து பல்வேறு கோணத்திலும் ஆய்வு செய்து, பாதுகாப்புத் திட்டத்தை தயாரித்திருந்தனர். ஆனால், மாநாட்டில் மக்கள் கூடுவது தொடர்பான போலீசாரின் முன்யூக கணக்கீடுகளை மீறி இலட்சக்கணக்கான மக்கள் மாநாட்டின் முதல் நாளான 23ம் தேதி மாநாட்டுத் திடலில் கூடினர். அன்றைய தினம் மட்டுமின்றி அடுத்தடுத்த நாட்களிலும் நேற்று வரை மொத்தம் ஏழு இலட்சம் மக்கள் மாநாட்டு வளாகத்துக்கு வந்து சென்றுள்ளதாக போலீசாரின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    வெளிமாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் வாகனங்கள் கோவை கிழக்குப்பகுதியின் சுற்றுப்புறங்களிலுள்ள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் மாநாடு வளாகத்தையொட்டிய பகுதிகளில் ஆங்காங்கு உள்ள பார்க்கிங் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. போலீசாரின் சரியான திட்டமிடுதல் காரணமாக மாநகரின் கிழக்குப் பகுதி தவிர, வேறு எந்த பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. கிழக்குப்பகுதி அவிநாசி சாலையில் ஹோப் காலேஜ் முதல் சிட்ரா வரை மட்டுமே வாகனங்கள் ஸ்தம்பித்து ஊர்ந்து சென்றன.

    மாநாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற முனைப்பில் தமிழக டி.ஜி.பி.இலத்திகா சரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. இராதாகிருஷ்ணன், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, சிறப்பு பணி டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன் (சென்னை மத்திய பகுதி இணைக்கமிஷனர்) ஆகியோர் மாநாட்டு வளாகத்திலேயே தினமும் 18 மணி நேரம் வரை முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். தவிர, ஏழு டி.ஐ.ஜி.,க்கள், 27 எஸ்.பி.,க்கள் தலைமையில் மாநாட்டு அரங்கை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செல்லும் சாலை, மாநாட்டுத் திடலுக்குள் செல்லும் சலை, அவிநாசி சாலையின் பல்வேறு முக்கிய சந்திப்புகளிலும் 24 இடங்களில் சுழலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதன் பதிவுக்காட்சித் தொடர்பு மாநாட்டுத் திடல் வளாகத்திலுள்ள சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் மெகா திரை கொண்ட மானிட்டரில் தெரியும், மாநகரச் சாலைகளின் கேமரா பதிவுக் காட்சிகளை நேரடியக பார்வையிடும் போலீஸ் உயரதிகாரிகள், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், மக்கள் கூடும் கூட்டத்தையும் கட்டுப்படுத்தவும், களத்திலுள்ள போலீசாருக்கு உத்தரவிட்டு வருகின்றனர். இதன் மூலமாக மாநகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நேற்று உடனுக்குடன் கண்டறிப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.

    30 குழந்தைகள் மீட்பு:-

    நேற்று மாநாட்டில் பங்கேற்க குடும்பத்துடன் வந்தவர்கள், குழந்தைகளை தவறவிட்டு அழுகையுடன், அருகிலுள்ள காவல் உதவி மையங்களில் கூடினர். இது குறித்த தகவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, மாநாட்டு வளாகத்தில் சாதாரண உடையிலான போலீசாருக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் பரிமாறப்பட்டது. பெற்றோரில்லாமல் தனியாக சுற்றித்திரிந்த 30 குழந்தைகளை கண்டுபிடித்து மீட்ட போலீசார், பெற்றோரிடம் சேர்த்தனர். இவ்வளவு பெரிய கூட்டத்தில் குழந்தைகள் தவறிச் சென்றிருந்தாலும் மீட்டு ஒப்படைத்த போலீசாரை பலரும் பாராட்டினர். குழந்தைகள் மீட்பு நடவடிக்கைக்காக மட்டுமே சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் 73731 11111, 73732 22222, 73734 44444 ஆகிய மொபைல் போன் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. குழந்தைகளை தவறவிடுவோ இந்த மொபைல் போன் எண்களை உடனடியாக தொடர்பு கொண்டால், மீட்டுப் பணியை துரிதமாக துவக்க போலீஸ் தயார் நிலையில் இருப்பதாக, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    நள்ளிரவிலும் ஆலோசனை:-

    மாநாடு நிகழ்வுகள் மற்றும் மாநகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த மூன்று நாட்களாக தினமும் நள்ளிரவில் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாநாட்டு நிகழ்வுகள் முடிந்த பின் டி.ஜி.பி.,இலத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி., இராதாகிருஷ்ணன், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் அமல்படுத்தப்பட்ட மாநாடு பாதுகாப்பு நடவடிக்கைகள், காணப்பட்ட குறைபாடுகள், மறுநாளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டுத்திடலில் 3,500 போலீசார், அவிநாசி சாலையில் 800 போலீசார், மாநகரின் கிழக்குப்பகுதி முக்கிய சாலைகள் மற்றும் மாற்றுப்பாதைகளில் 5,700 போலீசார் என ஏறத்தாழ 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்பாடுகளும் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள சுழலும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதற்காக, சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உயரதிகாரிகளே கண்டிராத கூட்டம்:-

    தமிழகத்தில் இதற்கு முன் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்த போது மாநில போலீஸ் தலைமைப்பொறுப்பில் பணியாற்றிய அதிகாரிகள் யாரும் தற்போது பணியில் இல்லை. இப்போது, பணியிலுள்ள உயரதிகாரிகளுக்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெள்ளமென திரண்டு வந்த மக்கள் கூட்டம், பாதுகாப்பு பணிகள் தொடர்பான புதிய அனுபவத்தை தந்திருக்கிறது. சமீபகாலமாக, தமிழகம் கண்டிராத அளவில் மாநாட்டு நிகழ்வுக்கு மக்கள் திரண்டு வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை திரும்ப, திரும்ப ஆய்வு செய்து மாற்றங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடக்கும் மாபெரும் நிகழ்வான உலகத் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதை, உயரதிகாரிகள் பெருமையாகவும், தங்களுக்கு வாய்த்த புதிய அனுபவமாகவும் கருதுகின்றனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:-

    நான்கு நாள் நிகழ்வுகள் நிறைவுற்றுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நகை, பணம் திருட்டு குற்றங்கள், அடிதடி தகராறுகள் தொடர்பான புகார்கள் எதுவும் எழவில்லை. சாலை போக்குவரத்து ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்டு பல முறை ஆய்வு செய்து அமல்படுத்தி வருவதால், மாநகர எல்லைக்குள் மாநாடு தொடர்பான சாலை விபத்துகள் நிகழவில்லை. மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வளித்து வருகிறோம். இதனால், முழுக்கவனத்துடனும், கட்டுக்கோப்புடனும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வான நாளை (இன்று) ஏறத்தாழ மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு, சைலேந்திர பாபு தெரிவித்தார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:41:52 PM6/26/10
    to Min Thamizh
    உலகத்தமிழ்ச் தமிழ் செம்மொழி மாநாட்டின் இன்றைய நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை ஏற்கிறார்.

    கோவையில் கடந்த ஜூன் 23 முதல் துவங்கி நடைபெற்று வரும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (ஜூன் 27)  இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

    மாலை 4 மணிக்கு  தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    மத்திய அமைச்சர் ஆ.இராசா சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார்.

    மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை ஏற்கிறார்.

    "கனியன் பூங்குன்றனார்" பரிசு:-

    முதல்வர் மு.கருணாநிதி சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக "கனியன் பூங்குன்றனார்" பரிசு வழங்கி, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றின் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார்.

    செம்மொழி மாநாட்டுக்கான தனி அலுவலர் கா.அலாவுதீன் நன்றியுரை ஆற்றுகிறார்.

    இத்துடன் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு பெறுகிறது.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:46:53 PM6/26/10
    to Min Thamizh
    உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்களின் சங்கம் சார்பாக மிகப் பெரிய புத்தகங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் மொத்தம் 136 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்று இருப்பதோடு, செம்மொழி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட தொன்மையான தமிழ் இலக்கிய நூல்கள் பல இடம் பெற்று இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் என்ற பொது தலைப்பில் கம்பர், இளங்கோவடிகள், சேக்கிழார், கொங்கு மண்டல கலைக்களஞசியம் என தொடர்ச்சியாக பல தலைப்புகளில் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் கோவை விஜயா பதிப்பகம் மு.வேலாயுதத்தை சந்தித்த போது புதிதாக புத்தகங்கள் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கை பெருகி இருப்பது பற்றி விரிவாக பேசினார்.

    "உனக்காக வரம் வேண்டி யாரோ இருந்த தவம் புத்தகங்கள்", "ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகிறது",புத்தகங்களை வாசித்தால் நாட்டில் குற்றங்கள் குறையும் என்று கூறுகிறார்கள் அறிஞர்கள். திரைப்படம், "டி.வி" போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களின் வளர்ச்சியால் பாட புத்தகங்களை தவிர, வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடமும், மக்களிடமும் குறைந்து இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை தலை கீழாக மாறி இருக்கிறது.

    உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே புத்தங்களின் முக்கியத்துவம் அறிந்து இரசனையோடு புத்தகங்களை வாங்கி வாசிக்க தொடங்கி விட்டார்கள் கோவை மக்கள். இது கோவையில் மட்டுமல்ல தமிழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான புதிய வாசகர்களை இந்த மாநாடு உருவாகி இருக்கிது.

    தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ பயனுள்ள திட்டங்களை உருவாக்கியவர் தமிழக முதல்வர். இவைகளுக்கு எல்லாம் மணிமகுடமாக அமைந்து இருக்கிறது இந்த மாநாடு. 

    அடிப்படையில் அவர் புத்தகங்களின் காதலர் என்பதால் வாசகர்களுக்கும், புத்தக வெளியீட்டாளர்களுக்கும் நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அரசு நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்கள் எண்ணிக்கை 600 ஆக இருந்ததை ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டு இருக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் கட்டாயம் இரண்டு புத்தக கடைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், அரசு விழாக்களில் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் சால்வை, பரிசு பொருட்களுக்கு பதில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறார். பல எழுத்தாளகளின் படைப்புகளை நாட்டு உடமை ஆக்கபட்டு இருக்கிது. வயது முதிர்ந்த எழுத்தாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. அவருடைய சொந்த பணத்தை கொடுத்து, ஆண்டு தோரும் அதில் வரும் வட்டியின் மூலம் சிறந்த படைப்பாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவம் செய்ய வேண்டும் என்று, அந்த பொறுப்பை தென்னிந்தியபுத்தக பதிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைது இருக்கிறார்.

    இப்படி எத்தனையோ உதவிகளை இலக்கிய வளர்ச்சிக்காக இன்னும் செய்து கொண்டும் இருக்கிறார். இந்த மாநாடு முடிந்த பிறகு படைப்பிலக்கிய துறையில் மிகப் பெரிய மற்றம் நிகழும். புத்தகம் படிப்பவர்கள், புத்தகம் எழுதுபவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதை மக்கள் ஆர்வத்தோடு புத்தகங்களை செல்வதில் இருந்து தெரிகிறது"என்றவர், கோவையில் இலக்கிய கூட்டம்,புத்தக வெளியீடுகள் நடத்துவதற்கு அரசு சார்பில் அரங்கம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்றும், திருவள்ளுவர் தினத்தில் எழுத்தாளர்களுக்கு ஆண்டு அரசு அளிக்கும் விருது தொகையை உயர்த்தி தரவேண்டும் என்று முதல்வர் அவர்களுக்கு சிறிய வேண்டுகோளையும் வைத்தார். 

    செம்மொழி மாநாட்டில் நடக்கும் இந்த புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 10:50:27 PM6/26/10
    to Min Thamizh
    "குழந்தைகளுக்கு ஆங்கிலச் சிறுகதை புத்தகங்கள் வாங்கித் தருவதற்கு பதிலாக தமிழ்ச் சிறுகதை புத்தகங்கள் வாங்கித் தருவதை தமிழ் பெற்றோர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிறு வயதில் தமிழில் பேசவும்,படிக்கவும் பழக்க தவறினால் அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்ல முடியாது. தமிழ் மெள்ள மறைய துவங்கி விடும்,'' என பயமுறுத்துகிறார் பாண்டிச்சேரியை சேர்ந்த அறிவுமதி தென்னகன்.

    பாண்டிச்சேரியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், ஓய்வு பெற்ற பின் குழந்தைகளுக்கான தமிழ் இலக்கிய நூல்கள் எழுதுவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 200 புத்தகங்கள் எழுதியுள்ளார். இதில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 75. சிறுவர் இலக்கிய புத்தகங்கள் எழுதியதற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் பாரதிதாசன், கலைமாமணி விருதுகள் பெற்றவர். கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அவர் கூறியதாவது:-

    இன்று தமிழில் சிறுகதை புத்தகங்கள் வெளிவருவது குறைந்து விட்டது. தரமான தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. அதனால்தான் "தினமலர்" நாளிதழ் போன்ற பெரிய செய்தி நிறுவனங்கள் கூட சிறுவர் மலர் வெளியிடுவதை நான் பங்கேற்கும் கூட்டங்களில் பேசி வருகிறேன். கதை, நாடகம் எழுதும் பெரிய எழுத்தாளர்களைப் போல் சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு பெற்றோர்தான் காரணம்.

    குழந்தைகள், மம்மி, டாடீ என அழைப்பதை பெரிய கவுரவமாக நினைக்கும் பெற்றோர், ஆங்கிலச் சிறுகதை புத்தகங்கள், "ரைம்ஸ்" புத்தகங்களைதான் வாங்கித் தருகின்றனர். தமிழில் நிறைய நல்ல சிறுகதை, பாடல்கள் அடங்கிய நூல்கள் உள்ளபோதும், அவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்வதில்லை. இதனால் சிறு வயதிலேயே தமிழ் என்றால் என்னவென்று தெரியாமலே நம் குழந்தைகள் வளர்கின்றனர்.  பஸ்சில் ஊர் பெயர், தமிழில் எண்களை கூட படிக்கத் தெரியாத நிலையில் உள்ளனர். தமிழகத்தில் சுமார் 30 புத்தக பதிப்பகங்கள் இருந்தாலும், குழந்தை இலக்கிய நூல்கள் சிறு எண்ணிக்கையில்தான் வருகின்றன. சில புத்தகங்கள்தான் வருகின்றன. தமிழ் படிக்க குழந்தைகளுக்கு வாய்ப்பே தராமல், தமிழின் எதிர்கால வளர்ச்சி பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.  சிங்கப்பூரில் சிறுவர் இலக்கிய நூல்கள் அதிகளவில் விற்பனை ஆகின்றன. அங்குள்ள பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை மட்டும் "ஐயா" என அழகான தமிழில் அழைக்கின்றனர். அங்குள்ள தமிழ் பெற்றோர் தமிழ் என்றால் உயிராய் இருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் தமிழில் பேசுவதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் கேவலமான நிலையே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

    "நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா, மலை மீது ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டு வா", "ஒரு குடம் தண்ணி ஊத்தி" போன்ற பாடல்கள் இன்றளவும் நம் நினைவில் நிற்க காரணம், நம் சிறு வயதில் இப்பாடல்களை புத்தகங்களில் படித்தோம். தமிழ் வாழ வேண்டும் என ஆசைப்படும் உண்மையான தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் நூல்களை வாங்கித் தர வேண்டும். தமிழில் எழுத,படிக்க பேச கற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும். 

    இவ்வாறு, அறிவுமதி தென்னகன் கூறினார்.

    tirumalainumbakkam

    unread,
    Jun 27, 2010, 1:28:39 AM6/27/10
    to மின்தமிழ்
    மாநாடு முறைப்படி துவங்குவதற்கு முந்தைய நிமிடம் வரை, "யாதும் ஊரே
    யாவரும் கேளிர்' எனும் மைய நோக்குப் பாடல் தொடர்ச்சியாச
    ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.


    * அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, சுரேஷ்ராஜன் உட்பட அனைத்து அமைச்சர்கள்,
    வி.ஐ.பி.,களும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்தனர். அடையாள
    அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த இன்னொரு முக்கிய வி.வி.ஐ.பி., ஸ்டாலின்.


    * அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து,
    கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.


    * வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி
    பொருத்தப்பட்டிருந்தது.


    * காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும்
    திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது.
    சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி
    ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ
    முனையவில்லை. குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20
    நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை
    மோசமாகி இருக்கும்.


    * சரியாக காலை 10.26 மணிக்கு மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து
    வரப்பட்டனர். அதுவரை ஒலிபரப்பப்பட்ட மைய நோக்குப்பாடல் நிறுத்தப்பட்டு,
    நாதஸ்வர இன்னிசை துவங்கியது.


    * முதுமுனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி சக்கர நாற்காலியில் அழைத்து
    வரப்பட்டார். நாதஸ்வர இன்னிசையில் வாசிக்கப்பட்ட "மகா கணபதி' பாடலை
    தாளமிட்டு ரசித்தார்.


    * காலை 10.29 அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர
    வைக்கப்பட்டிருக்க நிதியமைச்சர் அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக
    கைகுலுக்கி வரவேற்றார்.


    * சரியாக 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மேடைக்கு சக்கர நாற்காலியில்
    அழைத்து வரப்பட்டார்; கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் அதேசமயம்
    மேடைக்கு வந்தார். முதல்வர் வந்ததும் "தமிழ் மொழி வாழ்க, செம்மொழி வாழ்க'
    என முதல்வரை வாழ்த்தும் வகையிலான பாடல் இசைக்கப்பட்டது.


    * ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 10.32 மணிக்கு வழக்கமான பாரம்பரிய உடையில்
    மேடைக்கு வந்தார்.


    * ஜனாதிபதிக்கு பொன்மஞ்சள் நிறத்திலான பொன்னாடையை முதல்வர் வழங்கினார்.


    * முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும்
    எழுந்து நின்றனர். முதுமையின் காரணமாக சிவத்தம்பி மட்டும் நாற்காலியிலேயே
    அமர்ந்திருந்தார்.


    * அதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை, சீர்காழி சிவசிதம்பரம்
    பாடினார். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க அறிவுறுத்திய அறிவிப்பாளர்,
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதுபோன்று சொல்லாததால், பொதுமக்கள் அமர்ந்து
    கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.


    * தேசிய கீதத்தை நின்றபடி பாடிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும்
    போது, அமர்ந்து விட்டார்; சிவத்தம்பியும் அமர்ந்தே இருந்தார்.


    * காலை 10.42 மணிக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.


    * துணைமுதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும், மாநாட்டுப் பந்தலில் உற்சாகச்
    சலசலப்பு.


    * ஜனாதிபதியை தமிழக மக்கள் சார்பிலும்; கவர்னரை, விழா தலைமைக்குழு
    சார்பிலும்; முதல்வரை தமிழக மக்கள் சார்பிலும் வரவேற்றார்.
    வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிகள், மொழி
    வல்லுனர்கள், பொதுமக்களை வரவேற்றார். அவரின் வரவேற்பு பட்டியலில்
    பத்திரிகையாளர்கள் மட்டும் ஏனோ "மிஸ்ஸிங்'


    * ஸ்டாலின் பேசும் போது, தேவநேயப்பாவாணரின் தமிழ் இனிமை, புதுமை என "மை'
    விகுதி அமையும்படி பேச, அரங்க முழுவதும் கரகோஷம். ஒண்டமிழ், தண்டமிழ்,
    தேன்தமிழ், தீந்தமிழ் என அடுத்தடுத்து தமிழை எப்படி எல்லாம்
    சிறப்பிக்கின்றனர் என அடுக்கு மொழியில் பேச, அரங்கத்தினரோடு, முதல்வரும்
    ரசித்துக் கேட்டார்.


    * ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு துணைமுதல்வர் நினைவுப்பரிசு வழங்க,
    மற்றவர்கள் அமர்ந்தபடி பெற்றுக் கொண்டனர். அன்பழகன், ஜார்ஜ்ஹார்ட்
    மட்டும் எழுந்து நின்று பெற்றுக் கொண்டனர்.


    * ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, சிவத்தம்பி, குழந்தைசாமி என சிறப்பு
    விருந்தினர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களின் வாழ்த்துரையை முடித்துக்
    கொண்டனர்.


    * வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் வணக்கம் சொன்னபோது, அரங்கத்தில் மீண்டும்
    கரவொலி; குழந்தைசாமி தவிர, மற்ற மொழி அறிஞர்கள் பெரும்பாலும்
    ஆங்கிலத்தில் பேசினர்.


    * குழந்தைசாமியின், "விருந்துக்கு பெயர் பெற்றது தமிழர் பண்பாடு; கொங்கு
    மண்டலம் அதில் கவிஞர் வைரமுத்து பேசும் போது, "முதல்வர் கருணாநிதி
    பாட்டாளிகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, கூட்டாளிகளை உள்ளங்கையில்
    வைத்துக் கொண்டு இருவரையும் கசக்காமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறார்'

    * , கோவையையும் ஐந்து நிலங்களையும் இணைத்து . குறிஞ்சிக்கு ஆனைமலை
    மலைகள்; முல்லைக்கு நீலகிரி மலைகள்; மருதத்திற்கு மருத மலை; நெய்தலுக்கு
    நெசவாளிகள்; பாலைக்கு நூற்பாலைகள்'

    * தூறல் மழை பெய்ததால், மழையையும் மாநாட்டையும் இணைத்து வைரமுத்து கவி
    பாடினார். "பந்தல் நனைந்தால் கார் மேகம் பொறுப்பு; பந்தலுக்குள் நனைந்
    ததால் கவிஞர்கள் பொறுப்பு' என்று கவி நயத்தில் பேசினார

    நன்றி; செம்மொழி நட்டு துளி ; தினமலர் வலைத்தளம்

    On Jun 25, 5:42 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
    > *கண்ணகியை ஆராயும் கிரேக்க அறிஞர் *
    >
    > கிரீசிலிலுள்ள தெஸ்ஸலோனிகி பல்கலைக்கழகப் பேராசிரியரும் மொழியியல் அறிஞர்
    > ஆன்ட்ரியாஸ் கடானிஸ் கண்ணகியைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
    >
    > இது குறித்து அவர் தெரிவித்த போது, "நான் தமிழகத்துக்கு இதற்கு முன்
    > வந்துள்ளேன். மாணவர்களுக்கு, பல வகுப்புகள் எடுத்துள்ளேன் இங்குள்ளவர்கள்
    > அன்பானவர்கள். எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் பற்றி படிக்கிறேன்.
    > சிலப்பதிகாரம் பற்றி ஆங்கில வழியில் படித்து வருகிறேன்.
    >
    > நான் கண்ணகியைப் பற்றியும் கிரேக்கத்தில் வாழ்ந்த அன்டிகோனே பற்றியும்
    > ஆராய்ந்து வருகிறேன்.
    >
    > இருவரும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள் என்பது என் ஆய்வில் தெரிய
    > வருகிறது.
    >
    > இந்த மாநாட்டில் அது பற்றி தெரிவிக்க வந்துள்ளேன்.
    >
    > இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Geetha Sambasivam

    unread,
    Jun 27, 2010, 1:37:55 AM6/27/10
    to mint...@googlegroups.com
    கண்ணகி சிலையுடன் சேரன் செங்குட்டுவன் பவனியை சித்திரிக்கும் மணியம் (இந்தப் பழைய படம் எப்படிக் கிடைத்ததோ?) வரைந்த படம், ..

    பழைய கல்கி தீபாவளி மலர்???

    2010/6/27 Kannan Natarajan <thar...@gmail.com>

    Innamburan Innamburan

    unread,
    Jun 27, 2010, 1:58:31 AM6/27/10
    to mint...@googlegroups.com
    '...வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி
    பொருத்தப்பட்டிருந்தது...'

    ஹூம்!

    2010/6/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

    Hari Krishnan

    unread,
    Jun 27, 2010, 2:45:59 AM6/27/10
    to mint...@googlegroups.com


    2010/6/27 tirumalainumbakkam <tnke...@gmail.com>



    * அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து,
    கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.


    * வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது. 
     
    * காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும்
    திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது.
    சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி
    ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ
    முனையவில்லை
    . குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20
    நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை
    மோசமாகி இருக்கும்.

    சாதாரண பக்தன், குளித்துத் தலைமுழுகி, நிறைந்த பக்தியுடன் நான்குநாள் வரிசையில் நின்று வெய்யிலிலும் மழையிலும் காத்துக் கிடந்து கடவுளை தரிசிக்கப் போனால், மூங்கில் தடியை வைத்துக் கொண்டு ஜருகண்டி ஜருகண்டி என்கிறார்கள்......ஏதோ கொஞ்சம் பணமும் புகழும் சேர்ந்துவிட்டவன் போனால் பூரண கும்ப மரியாதை கிடைக்கிறது.  இப்படித்தான் திருப்பதியில் நடக்கிறது என்பதனால் நான் பக்தன்தான் என்றாலும் கோவிலுக்கே போவதில்லை.

    --கம்பராமாயணப் பேரறிஞர் சிவகுமார் ஆற்றிய உரையிலிருந்து.  (அபாரமான மனப்பாட ஆற்றல்....)

    யாவரும் கேளிர் என்பதனால்தான் ‘கொஞ்சம் பணமும் புகழும் சேர்ந்தவர்கள் அடையாள அட்டையைக்கூடப் பொருட்படுத்தாமல் இருந்தார்கள்.  முண்டியடித்து ஓடிவந்த மக்களைப் போலீஸார் பொருட்படுத்தாமல் இருந்தார்கள்.  சமத்துவம் தெரியாட்டி பேசக்கூடாது.

    சமரசம் உலாவும் இடமே....

    --
    அன்புடன்,
    ஹரிகி.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:24:34 PM6/27/10
    to Min Thamizh
    நல்ல படைப்பை காலம் தீர்மானிக்கும்


    கருத்தரங்கு நிகழ்வில் (இடமிருந்து ) எழுத்தாளர் பொன்னீலன், கவிஞர் கனிமொழி, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், தமிழறிஞர் கா. சிவத்தம்பி, கவிஞர் மனுஷ்யபுத்திரன்

    நல்ல படைப்பு எது?

    இலக்கியங்களுக்கு நோக்கம் இருக்க வேண்டுமா அல்லது வெறும் அழகியல் மட்டுமே இலக்கியம் ஆகிவிடுமா?

    காலம் தீர்மானிக்கும் என்றால் அப்போது இருக்கப்போவது யார்?

    வெறும் பதிவுகள் மட்டுமே இலக்கியமாகிவிடுமா?

    சிக்கலான இந்த விவாதங்களை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்  ஞாயிற்றுக்கிழமை (27/06/10) கருத்தரங்க நிகழ்வில் முன்வைத்தனர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், தமிழறிஞர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர் பொன்னீலன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகிய ஐவரும்.

    கவிஞர் கனிமொழி
    :-

    இலக்கியங்களுக்கு நோக்கம் இருக்க வேண்டுமா?

    என்பது நீண்டகாலமாக எழுப்பக்கூடிய கேள்வியாக உள்ளது.

    இலக்கியங்கள் தனக்கான உரையாடலாக இல்லாமல் இன்ப, துன்பங்களின் வெளிப்பாடாக, தனி நோக்கும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டிருருப்பது அவசியம்.

    எழுத்து என்பதே எனக்காகத்தான் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.

    சொல்ல நினைத்ததை எழுதிவிட்டுப்போவது இலக்கியம் அல்ல.

    சாதாரண மக்களின் நிலையில் இருந்து படைப்புகளைக் கொடுக்க வேண்டும்.

    நான் முடிவு செய்ததுதான் தீர்வு என்று நினைத்து அதற்கு வாசகர்களை நிறுத்தும்போதுதான் அத்துமீறல் ஆகிவிடுகிறது.

    மக்களின் வலியைப் பகிர்ந்து கொண்டு உருவாகும் படைப்புகள் மட்டுமே காலத்தைக் கடந்து நிற்கக் கூடியதாக இருக்கும்.

    அதுவே, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

    பகிர்வு அடிப்படையில் உருவாக்கப்படும் இலக்கியங்கள்தான் காலத்தைக்  கடந்து நிற்கின்றன.

    ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ஆண்களின் கனவாக இருக்கிறது.

    ஆனால், பெண்களின் நிலையில் இருந்து யோசிப்பது கிடையாது.

    இலக்கியங்களில் கூட கண்ணகியின் துணிவு, மாதவியின் துறவு ஆகியவற்றை யாரும் பார்க்கவில்லை.

    நமக்கு வசதியான விஷயங்களை மட்டுமே இலக்கியங்களில் இருந்து கூட எடுத்துக் கொள்கிறோம். 

    திரைப்படங்களில் பெண்களை இழிவாகச் சித்திரிக்கும் போக்கு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், பெண் தனது வலிகளை எழுதும்போது அவற்றை ஏற்றுக் கொள்ளாத மனப்போக்குதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆகவே, பெண்கள் தங்களது வலிகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

    எழுத்து என்பது அதிர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இல்லாமல், சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்புகள்தான் நிலைத்து நிற்கும்.

    தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்:-

    சங்க இலக்கியத்தில் வந்த அத்தனை பேரையும் மேற்கோள் காட்டிப் பேசுவது இல்லை.

    அதேபோல் கம்பர் காலத்தில் வாழ்ந்த பல புலவர்கள், பாரதி காலத்தில் வாழ்ந்தவர்கள் பலர்.

    அவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை.

    எனவே நல்லவை என்றும் நிலைத்து நிற்கும், அல்லவை அழிந்துவிடும்.

    காலம் மட்டுமே அதற்கு உரைகல்லாக இருக்கும்.

    அண்மைக் காலமாக தமிழில் நல்ல சிறுகதைகள் வருவது இல்லை.

    சிறுகதைகள் எழுதுபவர்களும் சொற்பமாகவே உள்ளனர்.

    இப்படியே போனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கதை படிக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்று அண்மையில் எழுத்தாளர் கி.ரா. கூறினார்.

    அதை ஏற்றுக் கொள்ளும்படிதான் உள்ளது.

    புத்தகக் கண்காட்சிகளில் ஒரு சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே விற்பனை ஆவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    • ஜெயகாந்தன்
    • சுந்தர ராமசாமி
    • அசோகமித்ரன்
    • சாவி
    போன்றவர்களின் கதைகள் இன்றைய தலைமுறையைச் சேர முடியவில்லை.

    ஏனெனில் இன்றைய இளைஞர்கள் படிப்பதையே நிறுத்திவிட்டனர்.

    படைப்பிலக்கியங்கள் என்றால் நாவல், சிறுகதைகள் மட்டும் அல்லாமல் கவிதைகள், குறும்படங்கள், திரைப்படங்கள், ஒவியங்கள், சிற்பங்களும் இடம் பெறுகின்றன.

    அண்மையில் நான் பார்த்த "அங்காடித் தெரு" என்ற திரைப்படத்தில் சமுதாயச் சிந்தனை இருந்தது. இதுபோன்ற சமுதாயச் சிந்தனை உள்ள எந்தப் படைப்பாக இருந்தாலும் காலத்தால் பதிவு செய்யப்படும். 

    சங்க இலக்கியங்களில் அந்தக் கால வாழ்க்கை முறை பற்றிக் கூறியதால் அவை நிலைத்து நிற்கின்றன.

    அதேபோல் சமுதாயத்தின் பதிவுகள், பிரச்னைகள், சமுதாயம், மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதைக் கூறாத படைப்புகள் காலத்தால் இல்லாமல் போகின்றன.

    ஒரு படைப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை வாசகர்களும், காலமும் முடிவு செய்யும்.

    ஆனால், இப்போது ஒரு நோக்கமே இல்லாமல் எழுதப்படுவதால்தான் படைப்பிலக்கியம் சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.

    1960களில் தொடங்கி ஆங்காங்கே இலக்கியக் கூட்டங்கள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள் சந்திப்புகள் நடைபெற்றன, இலக்கிய வட்டங்கள், பேரவைகள் இருந்தன. ஆனால் இப்போது அந்தக் களங்கள் எதுவும் இல்லை.

    15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நாம் இலக்கியத்துக்காகக் கூடியுள்ளோம்.

    ஊடகங்கள் இலக்கியத்துக்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். 

    வீதி தோறும் இலக்கிய விவாதங்கள் நடைபெற வேண்டும்.

    இலக்கியம் செழித்தால் செம்மொழி செழிக்கும். தமிழன் செழிப்பான்.

    தமிழறிஞர் கா. சிவத்தம்பி:-

    படைப்பு இலக்கியத்தில் இரு நிலைகள் உள்ளன.

    மனதுக்குள் ஒன்றைப் பற்றி உள்ளூர நினைப்பது நிலைப்படுத்தல் எனப்படும்.

    நாம் நினைத்ததைக் கட்டுரையாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ கொண்டு வருதல் வெளிப்படுத்தல் ஆகும்.

    கவிஞர்கள் ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல நினைத்துவிட்டால் அவர்களுக்கு உள்ளுக்குள் தோன்றி, ஆழப்பதிந்து கிடக்கும் வார்த்தைகள் மட்டுமே வெளிப்படும்.

    அவர்கள் அதற்கான சொற்களைத் தேடிப்பிடிப்பது இல்லை.

    தமிழின் தொடர்ச்சி படைப்பாளிகள் தான்.

    கம்பன் விழாவில் ஒரு முறை எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் தான் கம்பனின் வாரிசு என்று அவர் கூறினார்.

    அது உண்மை தான்.

    படைப்பாளிகள் தான் கம்பனின் வாரிசுகள், இளங்கோ வாரிசுகள் இவர்கள் தான்.

    கடந்த கால வலிமைகளை தமதாக்கிக் கொண்டு, நாம் காண விரும்புவதைக் காட்டி, அதன் மூலம் வருங்காலத்துக்கு வழிகாட்டுகின்றனர்.

    படைப்பாளிகள் கடந்த காலத்தை உள்வாங்கிக் கொண்டு அதை நிகழ்காலத்துடன் இணைத்து எதிர்காலத்துக்கு வழிகாட்டுகின்றனர். 

    படைப்பைக் காலம் தான் முடிவு செய்யும் என்றால் அப்போது அதனைக் காண யார் இருப்பார்கள்?

    என்ற கேள்வி எழுகிறது.

    எழுத்தாளர் பொன்னீலன்
    :-

    21ம் நூற்றாண்டில் 10 ஆண்டுகள் சென்ற நூற்றாண்டின் தொடர்ச்சி தான்.

    ஆனால், அடையாள, பண்பாட்டு அரசியலின் தொடர்ச்சியாக இந்த நாவல்கள் தொடர்கின்றன.

    இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் எனக்குப் பிடித்த நல்ல நாவல்கள் வந்துள்ளன.

    "கூகை" என்னும் தலித் இலக்கிய நாவல். ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் பற்றிய நாவல் அது. சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டிருந்த அந்த சாதி, இந்த நூற்றாண்டில் எப்படி வீறு கொண்டு எழுகிறது என்பதை அந்த  நாவல் கூறுகிறது.

    கவிஞர் சல்மாவின் "இரண்டாம் ஜாமங்களின்" கதை ஒரு நல்ல நாவல். இஸ்லாம் சமூகத்தில் பெண்கள் பற்றிய நாவல் அது.

    ஜாஹீர் ராஜா எழுதிய "மீன்காரத் தெரு" நாவலும் நன்றாக உள்ளது.

    10 ஆண்டுகளில் நாவல்களில் சிறிய நாவல்கள் ஒடுங்கி போய், 1,000, 1,500 பக்கங்கள் என நாவல்கள் வளர்ந்து வருகின்றன.

    அனைத்து பாணிகளையும் உடைத்து வட்டார வழக்கு மொழியில் எழுதப்படும் நாவல்கள் கூட தரமாக உள்ளன.

    கடல்புற மக்கள் பரதர்களை பற்றிய "ஆழிசூழ் உலகு" என்னும் அழகான நாவல் வெளிவந்துள்ளது.

    உலக நாவல்களை போல தமிழிலும் தரமான நாவல்கள் உள்ளன. ஆனால், அதைப் படிக்க ஆள் இல்லை.

    இதையெல்லாம் தமிழர்கள் படிக்க வேண்டும்.

    மலைவாழ் மக்கள் பற்றிய "சோளகர் தொட்டி" நாவல் வெளிவந்துள்ளது.

    சமூகத்தின் ஒரு பகுதியை கூர்ந்து ஆழ்ந்து, நுழைந்து எழுதப்படும் நாவல்களுக்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும்.

    தமிழ் என்பது புத்தகத் தமிழ் அல்ல.

    கன்னியாகுமரி, நெல்லை, கொங்கு, திருவண்ணாமலை, தஞ்சை தமிழ் என பல தமிழ்கள் உள்ளன.

    இவற்றை நோக்கி இந்த நாவல்கள் தமிழர்களை இழுத்துக் கொண்டு செல்கின்றன என்றார்.

    கவிஞர் மனுஷ்யபுத்திரன்
    :-

    நம்முடைய சமகாலத்தில், சமகால இலக்கியத்தில் நோக்கு, போக்கு என்பதில் இருக்கக்கூடிய ஆழமான நீரோட்டம் இருக்கிறதா என்ற கேள்வியை வாசகனாக என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

    அப்படிக் கேட்கும்போது,"எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்" என்ற மெ
    னியின் கேள்வி எனக்குள் வருகிறது.

    எத்தனை பரிமாணங்களைத் தமிழ் வாழ்க்கை உள்ளடக்கியுள்ளது என்பதைப் படிக்க தமிழ் நாவல்கள் வாய்ப்புத் தருகின்றன.

    இந்த வாய்ப்பை நாம் ஒரு "இலக்கிய ஏற்றமாக" எடுத்துக் கொள்கிறோமா அல்லது ஒரு சமூக அறிவாக எடுத்துக் கொள்கிறோமா என்பது தான் நம்முன் நிற்கும் கேள்வி.

    சமூகம் முழுவதும் வேடிக்கை பார்க்கும் மனோபாவம் ஏற்பட்டுள்ளது.

    இலக்கிய வாழ்விலும் வேடிக்கை பார்க்கும் மனோபாவம் தான் வாசகர்களிடம் உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகள் என்பது உலகில் மிக முக்கியமான காலகட்டம்.

    சமூகம் சார்ந்த, இலக்கியம் சார்ந்த நம்பிக்கைகள், பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ள காலம்.

    எல்லா இடங்களிலும் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.

    ஓர் இடத்தில் இலக்கியம் பற்றி ஒன்றை பேசுவேன், வேறு இடத்தில் அதை மாற்றிப் பேசுவேன்.

    யாரும் இதை பற்றிக் கேள்வி கேட்க முடியாது.

    ஏனெனில் யாருக்கும் கேள்வி கேட்க முடியாத நிலை தான் உள்ளது.

    எல்லோரும் அப்படித் தான் பேசி வருகின்றனர்.

    எனது கொள்கை இது என அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலைதான் இன்று உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் மகத்தான கனவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மொழி சார்ந்த இனம் சார்ந்த கனவு வீழ்ச்சி அடைந்த காலம் இது.

    மொழி, இலக்கியம் பற்றி சமூக உணர்வு பற்றி உலக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பதிவு செய்யப்படுபவை எல்லாம் இலக்கியம் என்ற கருத்து இப்போது நிலவுகிறது.

    நீ என்னைப் பாராட்டு நான் உன்னைப் பாராட்டுகிறேன் என்பதாக இலக்கியச் சூழல் உள்ளது.

    இலக்கிய வளர்ச்சிக்கு இது உதவாது.

    எழுத்தறிவு உள்ளவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்ற சூழல் வந்துவிட்டது என்றார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:30:09 PM6/27/10
    to Min Thamizh
    தமிழறிஞர்களுக்கு சிறப்புத் தபால் தலை வெளியீடு



    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் சிறப்பு அஞ்சல் தலைகளை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டு, முதல்வர் மு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 3 சிறப்புத்  தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

    கோவையில் ஞாயிற்றுக்கிழமை (27/06/10) நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் சிறப்புத் தபால் தலைகளை மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.
    ராசா வெளியிட, தமிழக முதல்வர் மு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்.

    • செம்மொழி மாநாட்டுக்கான தபால் தலையும்
    • 17ம் நூற்றாண்டில் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் திருவைகுண்டத்தில் பிறந்து வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள்,
    • அயர்லாந்தில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்து தமிழில் பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்
    ஆகியோருக்கும் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

    இவற்றை வெளியிட்டு மத்திய அமைச்சர்
    ராசா பேசியது:-

    செம்மொழி அந்தஸ்து பெற்ற எந்த மொழிகளுக்கும் இதுவரை சிறப்புத் தபால் தலை வெளியிடப்படவில்லை, தமிழ் மொழிக்கு மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது. 

    அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்றபோது, ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

    மனித உரிமைக்காகப் போராடுகிற அமைப்புகளுக்கு அது மிகவும் பொருத்தமாக இருந்தது.

    உலகில் உள்ள அனைத்து மொழிகளின் கூறுகளையும் அமெரிக்கா பெற்றிருக்கிறது என்றார்.

    அந்த மொழிகளில் தமிழுக்கும் இடம் உண்டு.

    ஏனெனில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உயர்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியது இந்த மொழி.

    இந்தியாவில் இரு மொழிகள் உள்ளன.

    இந்த இரு மொழிகளுக்குப் பின்னால் இரு கலாசாரங்கள் உள்ளன.

    அது தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.

    ஆனால், "பிறப்பொக்கும்" என்ற உயர்ந்த சிந்தனை சம்ஸ்கிருதத்தில் இல்லை என்றார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:35:32 PM6/27/10
    to Min Thamizh
    என்றும் தமிழ்க் கவிதை வாழும்:- கவிஞர் வைரமுத்து

    பல நூற்றாண்டுகளைக் கடந்து, என்றும் தமிழ்க் கவிதை வாழும் என்றார் கவிஞர் வைரமுத்து. 

    தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சார்பாக "எதிர்காலத் தமிழ்க் கவிதை" என்னும் பொழிவரங்கத்தை வைரமுத்து தலைமை தாங்கி நெறிப்படுத்தினார்.

    தலைமையுரையில் அவர் பேசியதாவது:-

    பல்பொருள் அங்காடி என்னும் கலாசாரம் கவிதைக்கு வந்துவிட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் இருக்கிறது.

    இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் எதை உள்வாங்கிக் கொண்டிருக்கிறதோ அதுதான் எதிர்காலத் தமிழ்க் கவிதையின் அடையாளம்.

    இரண்டாயிரம் ஆண்டுகளாக எதைத் தமிழ் நிராகரித்ததோ அதுவும் எதிர்காலத் தமிழின் அடையாளம்.

    எதிர்காலத்தில் தமிழன் இருப்பான், தமிழ்க் கவிதை இருக்குமா என்பதற்கான பதிலை இந்தப் பொழிவரங்கம் சொல்லும் என்றார்.

    பேராசிரியர் செல்லப்பன் தனது உரையில்,

    "கடந்த காலம் தான் எதிர்காலத்தை உருவாக்கும். இன்றைய கவிதையை வைத்துதான் நாளைய கவிதையை கணிக்கவேண்டும்.

    மரபு, புதுக்கவிதை எழுதும் இரண்டு வகைக் கவிஞர்களும் வேண்டும்.

    மரணம் எனக்கு ஒருபோதுமில்லை... என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை, காலம் கடந்தும் நிற்கும்.

    எதிர்காலத்தில் வாழ்க்கையின் உணர்ச்சிகளை உணர்த்தும் மந்திரக் கவிதைகள், எதிர்காலத் தமிழ்க் கவிதைகளாக இருக்கும்", என்றார்.

    அடுத்து, பேசிய சிற்பி பாலசுப்பிரமணியம்,

    "நமக்கு 2,000 ஆண்டுகள் பாரம்பரியப் பெருமை இருக்கிறது. அதுவே சுமையாகவும் இருக்கிறது.

    சிறகை விரித்துப் பறக்க நினைக்கும் போது, இந்த மண் நம்மை இழுக்கிறது.

    காலம்தோறும் பல மாற்றங்களுக்கு உள்பட்டே கவிதை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    புதுப்பித்துக் கொண்டே இருப்பதில் தான் கவிதை நீடிக்கும்.

    தொன்மை உணர்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் கவிதைகள் எதிர்காலத்திலும் வாழும்", என்றார்.

    தொடர்ந்து பேசிய க.பஞ்சாங்கம்,

    "புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கவிதைகள், இன்றைக்கு சுய பச்சாதாபத்தை தூக்கிப் பிடிக்கும் தலித் இலக்கியங்கள் நாளை அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்தைப் பற்றிய பதிவாக மாறும்போதும், பெண்ணிய மொழிகள் பேசும் உணர்ச்சிக் கவிதைகளும் எதிர்காலத்தில் தமிழ்க் கவிதையை முன்னெடுத்துச் செல்லும்.

    குறிப்பாக நுகர்வுப் பொருளாக கவிதையை மாற்றி வரும் ஊடகத்தை எதிர்க்கும் திராணியை தமிழ்க் கவிதை வளர்த்துக் கொள்ள வேண்டும்",என்றார்.

    நிறைவுரை ஆற்றிய வைரமுத்து,

    இரண்டு அபாயங்களிலிருந்து மீளும் உபாயத்தைத் தெரிந்து கொண்டால் தமிழ்க் கவிதை எதிர்காலத்தில் செழிக்கும்.

    ஒன்று, தீவிரவாதம்.

    இதை எதிர்க்கும் உபாயத்தை, கம்பனிடமிருந்து எதிர்காலத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.

    இரண்டாவது, சுற்றுச்சூழல்.

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டதுதான் நமது வாழ்வியல் முறை.

    இதை எதிர்காலத் தமிழ்க் கவிதை கருப்பொருளாகக் கொள்ளவேண்டும்.

    எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்க் கவிதை வாழும்.

    எந்த வடிவத்தில், எந்தத் தடத்தில் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

    மனிதனுக்கு உணர்த்த வேண்டியதை, உணர வேண்டியதைச் சொல்லும் திறன் கவிதைக்குத்தான் உண்டு.

    சமீபத்தில் ஏ.ஆர்.
    ரஹ்மான் இசையில் ஒரு பாடல் எழுதினேன்.

    அது தலைவி தனது விரக தாபத்தை தலைவனுக்கு உணர்த்தும் பாடல்.

    பாடல் பதிவானவுடன், இந்தப் பாடலுக்கு முன்னால் பாடுவதற்கு தொகையறா இருந்தால் நன்றாக இருக்கும்.

    ஆனால் அதன் வரிகள் பழமையானதாக இருக்கவேண்டும் என்றார்.

    அப்படியானால் சங்கப் பாடல் ஒன்றையே சொல்கிறேன் என்றேன்.

    அந்தப் பாடலில் 2ம் நூற்றாண்டின் தமிழும், 21ம் நூற்றாண்டின் தமிழும் டிஜிட்டலில் கைகோர்த்திருக்கும்.

    இது இன்றைக்கு முடிந்திருக்கிறது என்றால், 25ம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை வாழாதா?

    என்றார்.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:40:57 PM6/27/10
    to Min Thamizh
    சீர்த்த நாகரிகத்தைப் பெற்றவர்கள் தமிழர்கள்:- ப.சிதம்பரம்

    தமிழர்கள் திருந்திய பண்புகளையும், சீர்த்த நாகரிகத்தையும் பெற்றவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (27/06/10) நடைபெற்றது.

    இதில் அவர் பேசியதாவது:-

    இந்த 5 நாள் மாநாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான நூற்றுக்கணக்கான ஆய்வுகள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், கலை, இலக்கிய நாட்டிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று, தமிழ் மொழி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

    பெருமைக்குரிய தமிழ் மொழிக்கு அளப்பறிய தொண்டாற்றியவர்களும், குறிப்பாக தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் என பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த தமிழ் மொழியை மீட்டு, தமிழர்களைத் தலைநிமிரச் செய்தவர்களுமான  உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகள், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தேவநேயப் பாவாணர், பரிதிமாற் கலைஞர், டாக்டர் மு.வரதராசனார், சிதம்பரம் செட்டியார்,
    ரா.பி.சேதுப் பிள்ளை, ச.வையாபுரிப் பிள்ளை, மயிலை சு.வேங்கடசாமி,  வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற அறிஞர்களுக்கு தமிழ்ச் சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டிருக்க வேண்டும்.

    இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி, தமிழ் மொழியின் தொன்மையையும், இந்திய மொழிகளில் தமிழே மூத்த மொழி என்பதையும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தார்.

    திராவிட மொழிகள் அனைத்திலும் "உயர் தனிச் செம்மொழி"யாக உயர்வு பெற்று விளங்குவது தமிழ் என்று 148 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறது.

    அன்று கால்டுவெல் கண்ட கனவு, மகாகவி பாரதியின் வாக்குக்கு ஏற்ப தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் மொழியைச் செம்மொழியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004  செப்டம்பர் 17ம் தேதி அறிவித்தது.

    ஒரு செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு என்பதை அறிஞர்கள் பல்லாண்டு காலமாக கூறி வந்ததை, தமிழ்கூறும் நல்லுலகம் பல்லாண்டு விரும்பி எதிர்பார்த்ததை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக்கொண்டது என்ற மகிழ்ச்சியில் நாம் திளைத்திருக்கிறோம்.

    ஒரு செம்மொழியின் தகுதிகள் என்ன என்று பார்க்கிறபோது, 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும்.

    1,500 ஆண்டுகளுக்கு முன்பே அந்த மொழியில் இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும்.

    அவை பிற மொழியைத் தழுவாமல் சுயமாக அந்த மொழியிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.

    தமிழ் மொழியைப் பொருத்தவரை இக் கூற்றை மறுத்தாரும், தடுத்தாரும் இல்லை.

    அதனால்தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது.

    ஒரு மொழியின் இலக்கியங்களும், இலக்கணங்களும் அந்த மொழிபேசும் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.

    ஆதி மனிதன் சைகையையும், உடல் அசைவுகளையும் மொழியாகப் பயன்படுத்தினான்.

    திருந்தாத பண்புதான் ஆதிமனிதன் வாழ்க்கை முறையாக இருந்தது.

    ஆதிமனிதன் திருந்தும்போது அந்த திருத்தங்களின் பிரதிபலிப்பாக ஒலி பிறக்கிறது.

    ஒலிக் குறிப்பு, சொல்லாகவும், வரி வடிவமாகவும் பிறக்கிறது.

    வரி வடிவம் பிறக்கிறபோது இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.

    இலக்கியம் பெற்ற மொழிக்கு இலக்கணம் வகுக்கப்படுகிறது.

    ஒலிக்குறிப்பு, வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் ஆகிய பண்புகளை ஒரு மொழி பெறும்போது செம்மைப்படுகிறது.

    பரிதிமாற் கலைஞர் கூறியதுபோல் திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய மொழிதான் செம்மொழி.

    அப் பண்புகளைக் கொண்ட மொழியைப் பேசும் மக்கள் திருந்திய பண்புகளையும், சீர்த்த நாகரிகத்தையும் கொண்டவர்களாக இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் பேசும் மொழி மட்டும் எப்படி செம்மொழியாக இருந்திருக்க முடியும்?

    ஆகையால்தான் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிகத்தைப் பெற்றவர்களாக தமிழர்கள் இருந்துள்ளனர். தமிழ் மொழியும் இருந்துள்ளது.

    தமிழர் நாகரிகம்தான் தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்படும் நாகரிகம்.

    பேராசிரியர் தமிழண்ணல் இதுபற்றி கூறுகையில், சமயம், தொழில்கள், மருத்துவம், இலக்கியம் போன்றவை தமிழ் இன அடிப்படையில் அமைந்தவை என்று எழுதியுள்ளார்.

    ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய, இலக்கணம் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைகளை பறைசாற்றும் சீரிய மொழி தமிழ் என்று முதல்வர் கருணாநிதியும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆக, அந்தக் காலம் உயர்வான காலம்.

    தமிழுக்கும், தமிழருக்கும் வசந்த காலம் என்றார் சிதம்பரம்.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:43:54 PM6/27/10
    to Min Thamizh
    கணினி மொழியாக தமிழை வளர்த்தெடுக்க வேண்டும்:- நடிகர் சிவக்குமார்

    தமிழைச் செம்மொழித் தகுதியுடன் நிறுத்தி விடாமல், அறிவியல் தமிழாகவும், கணினித் தமிழாகவும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் வலியுறுத்தினார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (27/06/10), "வித்தாக விளங்கும் மொழி" எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:-  

    உலகின் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ்மொழி.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு படைத்த இந்திய மொழிகள் சம்ஸ்கிருதமும், தமிழும்தான்.

    செம்மொழி  அந்தஸ்தை சம்ஸ்கிருதம் பெற்றிருந்தாலும், பேச்சுமொழியாக அது தனது பயணத்தைத் தொடரவில்லை.

    தொல்காப்பியர் காலம் என்பது 2,500 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

    இக்காலத்திற்கு முன்பே வட்டெழுத்து, பிராமிய எழுத்து எனத் தொடங்கி கல்வெட்டு, பட்டயம், செப்பேடு, ஓலைச் சுவடிகள் எனத் தொடர்ந்து வந்து இன்றைக்கு கணினி, கைபேசி வரை பயன்பாட்டு மொழியாகத் தமிழ் நமது வாழ்வில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பத் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது.

    பேரறிஞர் சபையிலும், பாமரர் பேச்சிலும் கலந்துவீற்றிருக்கிறது. 

    வித்தாக மண்ணிலே விழுந்து இன்றைக்கு விருட்சமாக வளர்ந்துள்ள மொழி, எண்ணற்ற இலக்கியங்களைத் தமிழ் மண்ணுக்கு வழங்கியுள்ளது. 

    தமிழைச் செம்மொழித் தகுதி பெற்றதோடு நின்றுவிடாமல், அறிவியல் மொழியாக, ஆட்சிமொழியாக மருத்துவ, நீதிமன்ற, கணினி மொழியாக வளர்த்தெடுக்கப் பாடுபட வேண்டும்.

    அப்போதுதான் சாகாவரம் பெற்ற மொழியாக இவ்வுலகில் தமிழைக் கொண்டு செல்ல முடியும் என்றார் அவர்.  

    இக்கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசினார்.

    மொழி வெறும் கருவி அல்ல. அம்மொழியைப் பேசும் மக்களின் பண்பாட்டுக்கு வித்தாக அமைகிறது. மொழிதான் ஓர் இனத்தின் பண்பாட்டைக் கட்டமைக்கிறது என்றார் அவர்.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:46:42 PM6/27/10
    to Min Thamizh
    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 4 நாள்கள் நடைபெற்ற ஆய்வரங்க அமர்வுகளில் 908 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    செம்மொழி மாநாடு புதன்கிழமை (23/06/10) துவங்கி ஞாயிற்றுக்கிழமை (27/06/10) நிறைவு பெற்றது.

    ஆய்வரங்க அமர்வுகள் வியாழக்கிழமை (24/06/10) துவங்கின.

    தினமும் முகப்பரங்கம், கலந்துரையரங்கம், பொழிவரங்கம், அமர்வரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.

    இதில் அமர்வரங்கம் முதல் இரு நாள்களில் மட்டும் 4 அமர்வுகளில் நடைபெற்றது.

    கடைசி இரு நாள்களில் 2 அமர்வுகளில் நடைபெற்றது.

    அமர்வுகளுக்காக கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்று கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

    இதைத் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டுரையாளர்களும், நோக்கர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.

    கடந்த 4 நாள்கள் நடைபெற்ற ஆய்வரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 239 அமர்வுகளில், 908 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    Kannan Natarajan

    unread,
    Jun 27, 2010, 8:52:14 PM6/27/10
    to Min Thamizh
    குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்:- பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள்

    குழந்தைகளிடமாவது பெற்றோர் தமிழில் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் (27/06/10) விழாவில் அவர் பேசியது:-

    தமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது.

    இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும்.

    ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான்.

    தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.

    வழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன.

    லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன.

    கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழ் வாழும் மொழி.

    ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும்.

    அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல.

    ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல.

    தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.

    குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும்.

    வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன.

    அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

    வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது.

    ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒரு மொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

    தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.

    அசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

    வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.

    தமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும்.

    அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும்.

    கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

    புதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும்.

    ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல.

    மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும்.

    லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இலக்கியத் தமிழ் போன்று,
    • மருத்துவத் தமிழ்
    • சட்டத் தமிழ்
    • பொருளாதாரத் தமிழ்
    • மேலாண்மைத் தமிழ்
    • அறிவியல் தமிழ்
    • தொல்லியல் தமிழ்
    • கணினித் தமிழ்
    என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.

    நான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை.

    தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது.

    ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.

    நூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள்.

    பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள்.

    பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.

    நூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம்.

    முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும்.

    நூலாசிரியருக்கு ரூ.5
    லட்சம் சன்மானம் தர வேண்டும்.

    பதிப்பாளர்களுக்கு ரூ.5
    லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு  லாபமாகவும் தர வேண்டும்.

    ஒரு நூலுக்கு ரு.10
    லட்சம் தேவைப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும்.

    தமிழக அரசுக்கும், தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல.

    ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும்.

    இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும்.

    அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.
    It is loading more messages.
    0 new messages