அருட்செல்வருடன் காலையில் பேசமுடியும். இப்பொழுது இந்திய
நேரம் 1:30 நள்ளிரவு!
மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், - என் வினாவுக்கு
விடையளித்துவிட்டது. சாத்திரியாரின் ஊர் திருச்சி அருகே பின்னங்குடி.
அவரது போட்டோ, அந்த கிராம அக்கிரகாரம், ... இதையெல்லாம்
பார்த்து, அவர் உறவினர்களைப் பேட்டி எடுத்து தமிழன்பர்கள்
எழுத வேண்டும்.
மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள்,
------------------------------------------------------------------------------------
17. அணிநூல் உரைகள்
தொனிவிளக்கு என்ற நூல் வடமொழியில் உள்ள த்வந்யாலோக
என்னும் நூலின் மொழிபெயர்ப்பாகும். அந்நூல் வடமொழியில் அலங்கார
இலக்கண நூல்களுள் சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. அது ஒன்பதாம்
நூற்றாண்டில், காஷ்மீரத்தில், அவந்தி வர்மன் அவையில் இருந்த
புலவர்களுள் ஒருவரான ஆனந்த வர்த்தனரால் இயற்றப்பெற்றது.
த்வந்யாலோக என்ற வடமொழி அணியிலக்கண நூலைத் தமிழில்
தொனி விளக்கு என்ற பெயரில் பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஜ்திரி
நூற்பாவால் மொழி பெயர்த்து (1944), உரையும் தாமே இயற்றி வௌியிட்டார்.
இலக்கணத்திற்குத் தேவையான மேற்கோள் பாடல்களை வடமொழியிலிருந்து
மொழிபெயர்த்துக் காட்டியுள்ளார்.
குவலயானந்தம் என்னும் அணி நூலை மாணிக்கவாசகர் என்பவர் (19
ஆம் நூற்.) இயற்றியுள்ளார்.
மு. இராகவ ஐயங்காரின் தந்தையார் முத்துச்சாமி ஐயங்கார்.
சந்திரலோகத்தை வடமொழியிலிருந்து ஆசிரியப் பாவால்
மொழிபெயர்த்துள்ளார். இது உரையுடன் மதுரைத் தமிழ்ச் சங்க வௌியீடாக
வந்துள்ளது.
---------------------------------------------------------------------------------
குவலயானந்தம் - இந்த அணியிலக்கண நூல் கொங்குநாட்டின்
தமிழ்க் கொடைகளுள் ஒன்று. கூனம்பட்டியில் மிகப் புராதனமான
மாணிக்கவாசகர் மடாலயம் உள்ளது. நெல்லைச் சிவாச்சாரியரிடம்
வடமொழி கற்ற சுவாமிநாததேசிகர் தமிழ் இலக்கண நூல்கள்
செய்ததை நினைவுகூர்க. கூனம்பட்டி கொங்குவேள் பெருங்கதையை
அரங்கேற்றிய விஜயமங்கலத்தின் அருகே உள்ளது கூனம்பட்டி ஆதீனம்.
http://www.viruba.com/final.aspx?id=VB0002383
புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயன் ஆரிதன் போல,
மு. ராகவையங்கார் போல, கூனம்பட்டி ஆதீன சிவாச்சாரியர்கள்
ஆரித கோத்திரத்தார். கூனம்பட்டி ஆதீனகருத்தர்கள் மீது
எழுதப்பெற்ற பிரபந்தங்கள் 7 (அ) 8 என்னிடம் உள்ளன.
பிற பின்னர்,
நா. கணேசன்
பின்னங்குடி திருச்சி அருகே உள்ள ஊர் எனத் தெரிகிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=21796&Print=1
”விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் திருச்சி அடுத்த பின்னங்குடி
கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன்(30) தப்பி ஓடி தலைமறைவானார். இவரை
மாத்தூர் போலீஸார் தேடிவந்தனர். “
> அரங்கேற்றிய விஜயமங்கலத்தின் அருகே உள்ளது கூனம்பட்டி ஆதீனம்.http://www.viruba.com/final.aspx?id=VB0002383
>
> புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயன் ஆரிதன் போல,
> மு. ராகவையங்கார் போல, கூனம்பட்டி ஆதீன சிவாச்சாரியர்கள்
> ஆரித கோத்திரத்தார். கூனம்பட்டி ஆதீனகருத்தர்கள் மீது
> எழுதப்பெற்ற பிரபந்தங்கள் 7 (அ) 8 என்னிடம் உள்ளன.
>
> பிற பின்னர்,
> நா. கணேசன்
>
> பின்னங்குடி திருச்சி அருகே உள்ள ஊர் எனத் தெரிகிறது.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=21796&Print=1
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil