கும்பகோணம் அருகே உள்ளது தாராசுரம். அங்கு பிரசித்திபெற்ற ஐராவதீஸ்வரர்,
பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில்
கட்டப்பட்ட கலைநய மிக்க கோயில். யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய
சின்னமாக இந்த கோயில் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்
உள்ளது.
கோயிலை சுற்றி 15 ஏக்கர் பரப்பில் புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த
கோயிலுக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக
வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் இங்கு வருவார்கள். நேற்று
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இரவு 8 மணி வரை இங்குள்ள புல்தரையில் அமர்ந்திருந்தனர். இன்று காலையில்
பார்த்தபோது புல்வெளியில் கிழக்கு கோபுர பகுதி அருகில் இருந்த நர்த்தன
விநாயகர் சிலையை காணவில்லை. ஒன்றரை அடி உயரத்தில் கலைநயத்துடன் கல்லில்
உருவாக்கப்பட்ட இந்த சிலை பீடத்துடன் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குடந்தை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலை
மற்றும் போலீசார் வந்து சிலை கொள்ளையடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த
பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணக்கால் என்ற
கிராமத்தில் அபிமுத்தீஸ்வரர் கோயிலில் 5 அடி உயரம் உள்ள ஐம்பொன்சிலையும்,
அதன் அருகே பெருமாள் கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும் கொள்ளை போனது.
இப்போது 3 வது கோயிலிலும் சிலை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. எனவே 3
கோயில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா என்ற கோணத்தில் போலீசார்
விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
http://atheismtemples.wordpress.com/2009/09/30/விக்கிரங்கள்-பாதுகாப்பு/
http://vedaprakash.indiainteracts.in/2008/02/15/the-psychology-of-destruction-of-hindu-symbols/
//அதன் அருகே பெருமாள் கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும் கொள்ளை போனது.//
எங்க ஊர்ப் பெருமாள் கோயிலில் தான் ஐம்பொன் சிலைகள் நான்கு திருடப் பட்டுள்ளது.
கோட்டையில் தகர்க்கப்பட்டசிவலிங்கம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
தினமலர், அக்டோபர் 07,2009,00:00 IST
http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17636
கண்ணூர்: ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய, பழசி ராஜா பதுங்கி இருந்த
கோட்டையில், அவர் வணங்கி வந்த சிவலிங்கம், மர்ம நபரால் தூக்கி
எறியப்பட்டது; மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. கேரள மாநிலம்
கண்ணூர் மாவட்டத்தில், மாலூர் அருகே புரளிமலையில், அரிச்சந்திரக் கோட்டை
உள்ளது.
தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல், கேரள பகுதிகளில் ஆங்கிலேயரை
எதிர்த்துப் போரிட்ட பழசி ராஜா, இங்கு தான் பதுங்கி இருந்தார். அவர்
பதுங்கி இருந்தபோது வழிபட்ட சிவலிங்கம், இப்போதும் அங்குள்ளது. ஆனால்,
பராமரிப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில், 200 ஆண்டு காலத்திற்கு முந்தைய
சரித்திரச் சின்னங்களை, அம்மலையை கையகப்படுத்திய சிலர், அழித்து வருவதாக
கூறப்படுகிறது.
அச் சிவலிங்கத்தை மர்ம நபர்கள், சிதைத்து எறிந்து விட்டனர். இதையறிந்த
அம்மலையைச் சுற்றியுள்ள முருங்கோடி, மேல் முருங்கோடி கிராமங்களில்
வசிக்கும் மக்கள், சிவலிங்கத்தை தேடிக் கண்டுபிடித்தனர். ஒரு
குவிண்டாலுக்கும் அதிகமான எடையுள்ள சிவலிங்கம், கயிற்றால் கட்டப்பட்டு,
ஏற்கனவே இருந்த இடத்திலேயே மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
"இக்கோட்டையை சரித்திர சின்னமாக அறிவித்து, அரசு பாதுகாக்க வேண்டும்' என,
அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
On Oct 6, 7:01 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2009/10/6 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>